கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.07

Page 1
| SHAONEVIES
File!
1st Floor, 229-1114, Main Street, Colombo - 11. Te: O11 2394512
Hot Line : O77 666,1336
 
 
 
 

|
Do 2COs

Page 2
KN
ܠܠ ༄།
ܠܠ
ܐ
Š ܡܬܐܠ N
NJ NSNS Ν Σ SOC SšSNS
ܠܟ
N
SS རུ།།
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடிப்பவர் பி றர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
50 -வது ஆண்டை நோக்கி. 8፰9ጨ06U
327
படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை
$8 எதிர்பார்க்கின்றது.
201/4, Sri KOfhireSOn Street
Colombo - 13. Te: 232O721
'தேடுதலை இன்னும்
கொஞ்சம் விரிவுபடுத்துவோம்.
நேரில் சந்திக்கும் போதும், கடிதங்கள் மூலமும் பலர் பல நல்ல கருத்துக்களைச் சொல்லி வைக்கின்றனர். ஆனால், அவர்கள் சொல்வதை நடை முறைப்படுத்திச் செயல் வடிவம் கொடுக் கும் போது சம்பந்தப்பட்டவர்கள் காணாமலே போய் விடுகின்றனர்.
இப்படியானவர்கள் பலரை நடை முறையில் நாம் பார்த்து வந்துள்ளோம். ஆரோக்கியமான ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றி இவர்கள் ஆழமாகச்
சிந்தித்துத் செயலாற்றவில்லையோ என்ற
சந்தேகம் எமக்கு அடிக்கடி ஏற்படுவ துண்டு. அந்தளவிற்கு இவர்களது செயற்பாடுகள் அமைந்து போயுள்ளன. மல்லிகையால் நடத்தப் பெறும் மிக முக்கிய இலக்கிய நிகழ்ச்சிகளுக்கெல் லாம் இப்படியானவர்களுக்கு மிகப் பொறுப்பாக அழைப்புகள் அனுப்பி வைத்திருப்போம். அதற்காககச் செல விடப்படும் பணம் பொதுப் பணம்.
ஆனால், தம்மைப் பொறுப்பான வர்கள் என நம்ப நடக்கும் இவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வ தேயில்லை. தகவல் தருவதுமில்ல்ை.
இதே தடத்தில் தொடர்ந்தும் இவர்கள் நடந்தால் எதிர்காலத்தில் இவர்கள் காணாமலே போய்விடுவார்கள்.
- ஆசிரியர்

Page 3
៣ហិចចំង៣៣ uffiញចាប៉ាលិ
២ffIphIn
திரு. ၈၏u. திவாகரன் - டொமினிக் ஜீவா
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அச்செழுத்தைக் கொண்டே மல்லிகையை அச்சுக் கோர்த்து மாதா மாதம் வெளியிட்டு வந்தேன். பின்னர் நிலம் பெயர்ந்து, கொழும்பிலேயே வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
அச்சுக் கலை அபார வளர்ச்சி கண்டுள்ள சூழ்நிலையில் மல்லிகையையும் கணினி மயப்படுத்தி வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்ட காலத்திலேயே நண்பர் எஸ்.திவாகரன் எனக்கு அறிமுகமானார்.
அபாரமான திறமைசாலி. நவீன அச்சகச் சாதனங்களை மல்லிகை பாவிக்க வேண்டும் என ஆரம்பகாலத்திலேயே எனக்கு அறிவுறுத்தியதுடன் அதைச் செயற்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிப்பவர் இவர்.
இலக்கிய ஆர்வமும் கலைப் பிரக்ஞையும் கைவரப் பெற்ற இவரது ஆளுமையின் வெளிப்பாடகவே மலர்ந்தவைதான், பல மல்லிகை மலர்கள். பல மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்.
கலை இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இவர், தொழிலாக இல்லாமல், கலைத்துவ உணர்ச்சிக்குட்பட்டே மல்லிகையின் வளர்ச்சிக்குப் பல்வகைகளிலும் உதவி செய்து வந்துள்ளார்.
கணினி தொழில் நுட்பத் துறையில் கொழும்பில் இயங்கி வரும் நிபுணத்துவம் மிக்கவர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
மிக மிக அடக்கமாக வாழும் இவரிடம் அபார திறமைகள் அடங்கிப் போயுள்ளதை இவருடன் நெருங்கிப் பழகியவர்களே சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.
 

பிச்சுற்ற Unர்வை
வெளிவரும் பத்திரிகைச் செய்திகளில் இலக்கியப்
பேட்டிகளைத் தொடர்ந்து படித்து வரும்பொழுது நமக்குச் சில மனக் கருத்துக்கள் உருவாகாமல் இல்லை.
நமது நாட்டுத் தினசரிகளின் தனிச் சிறப்பு என்னவென்றால், படைப்பாளிகள், ! கலைஞர்கள் பற்றிய செய்திகளை வெகு தாராளமாக இடந்தந்து பிரசுரித்து, வெகுசன மட்டங்களுக்கு அவர்கள் பற்றிய தகவல்களை எடுத்துச் சென்று தகவல் பரப்பி வருவதுதான்.
தமிழ்நாட்டில் இந்த முக்கியத்துவம் படைப்பாளிகளுக்குத் தினசரிப் பத்திரிகைகளில் கிடைப்பதேயில்லை! சினிமா நடிகைகளின் அழகு உருவங்கள் தான் அவர்களது இலட்சியம்!
எழுத்தாளர் சந்திப்புகளுக்கு வருவதேயில்லை. நூல் வெளியீடுகளில் கலந்து கொள்வதில்லை. சகோதர எழுத்தாளர்களைக் கனம் பண்ணுவதில்லை. வாரத்தில் ஒரு சில மணிநேரம் கூட, இலக்கியத்திற்காகச் செலவழிப்பதில்லை.
- ஆனால், பேட்டிகளில் கருத்துக் கூறும் போது மேதைகள் கணக்கில் கருத்துக்களைச் சும்மா தூக்கியெறிந்து கிளித்தட்டு விளையாடி விடுவார்கள்.
ஈழத்து இலக்கியம் நொந்து போய்விட்டதாம். தொய்ந்து போய்விட்டதாம். முன்னர் போல இல்லையாம். இப்படியெல்லாம் பேட்டியில் கூறித் தமது மேதைன்மயை இலக்கிய உலகில் நிலை நாட்ட முனைந்து விடுகின்றனர்.
தங்களது அநுபவங்களை அளவுகோலாக வைத்துக் கொண்டே இவர்கள் இந்த நாட்டு இலக்கிய வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அளவிடுகின்றனரோ என்ற எமக்கு சந்தேகம் ஏற்பட்டு விடுகின்றது.
வாரம் ஒரு நூல் வெளிவருகின்றது. இலக்கியக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா போன்ற சர்வதேச நாடுகளில் நம்மவர்களின் இலக்கியக் குரல் அடிக்கடி கேட்கிறது. இது முன்னர் நமக்கும் நமது மொழிக்கும் கிடைத்திராத வாய்ப்புகள். வசதிகள்.
இவர்களுக்கு நாம் கூறக் கூடிய ஆலோசனை இதுவொன்றேதான். தயவு செய்து கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருங்கள். இதுவே நமது மண்ணின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் செய்யக்கூடிய பேருபகாரமாக அமையும்.

Page 4
ergoLLIL)
மலையகத்தின்
இலக்கியத் தாரகை
நயிமா சித்தீக்
- நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரை
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்து சக்தியான வகிபாகத்தினை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதி முக்கிய விடயமாகும். அந்த வகையில் மலையக மூத்த பெண் படைப்பாளிகளான திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர், 'தூரத்துப் பச்சை' என்ற படைப்பைத் தந்த திருமதி. கோகிலம் சுப்பையா, திருமதி. சிவபாக்கியம் குமாரவேல் போன்ற தமிழ் பிரம்மாக்களின் வரிசையில் d660s முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவு செய்து இன்று அயராமல் எழுதிக் கொண்டிருக்கும் 'இலக்கியத் தாரகை கலாபூஷணம் நயிமா சித்தீக் முக்கியமானவராவார்.
மலையக இலக்கியத்தை நோக்கும் போது 60களின் பின் மலர்ச்சிக் காலம்' என்றே குறிப்பிடலாம். அதற்கு அடித்தளமாக விளங்கியது 'கலாபூஷணம்' க.ப.சிவம் இணை யாசிரியராக இருந்து வெளியிட்ட மலைமுரசு’ என்பதே ஆய்வாளர்களின் கூற்று. மலை முரசில் தனது ஆரம்ப எழுத்துருவை வெளிக்கொணர்ந்த பலர் இன்று மலையக மாணிக்கங்களாக மிளர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாகக் கூறுவதானால் பல்கலைக் கழகம் சென்று பட்டப் படிப்பை மேற்கொள்ளாத தேசபக்தன் கோ.நடேசய்யர் மலையகத் தமிழர் வரலாறு போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை மலையக இலக்கிய உலகிற்கு கொண்டு வந்த சாதனையாளர் சாரல்நாடன், அமைதியே உருவான ஆசிரியை திருமதி. லலிதா நடராஜா ஆகியோரின் வரிசையில் மலைமுரசில் முகிழ்ந்தவர்களில் ஒருவரே இன்றைய அட்டைப் படத்தை அலங்கரிக்கும் ‘இலக்கியத் தாரகை’, 'கலாபூஷணம்’ திருமதி. நயிமா சித்தீக் அவர்கள்.

பதுளை மாவட்ட அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், தற்போது கம்பளையை வதிவிடமாகவும் கொண்ட இவர், பசறை மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து, கலைமானி (பி.ஏ. சிறப்பு) பட்டத்தையும், கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டவர்.
சிறுகதைப் படைப்பாளியாக மலை யக இலக்கிய உலகில் முதன் முதலாக தடம் பதித்த நயிமா சிறந்த சிறுகதைகள் பலவற்றை வீரகேசரி, தினகரன், சிந்தா மணி, தினபதி, பிந்திய 90களில் தோன்றிய தினக்குரல், நவமணி மற்றும் தமிழக தீபம்
இதழ்களில் எழுதியுள்ளார். தனது எழுத்
துலகப் பணியோடு வானொலி நிகழ்ச்சி களையும் திறம்படச் செய்துள்ளார். வானொலி ஆக்கப் பிரதிகள், வானொலி நாடகம், உரைச்சித்திரம் என்பவற்றையும் படைத்துக் காற்றில் கலக்கச் செய்த பெருமைக்குரியவர்.
தனது இளமைக் காலத்தில் சிறு கதை, வானொலிப் பணிகளோடு நயிமா சித்தீக் சமூகப் பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு மலையக சமூக மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவரது எழுத்துக்களில் காணப்பட்ட வேகம் சமூக மாற்றத்திற்கான எண்ணக் கரு, மலையகப் பெண்களின் வாழ்க்கை அவலங்களைத் தனது மேடைப் பேச்சுக்
களிலும், படைப்புகளிலும் மிக வீறாப்புடன்
வெளிக்கொணர்ந்ததைக் காணமுடியும்.
இவரின் அருமை, பெருமை, ஆற்றல் களை அறிந்து இவரை ஜனநாயக
தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவுத்
தலைவியாக, மறைந்த தோழர் ஏ.அஸிஸ் நியமித்தார். இப்பணியின் மூலம் நயீமா மலையகத் தோட்டப் பெண்களின் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங் களைத் தீட்டி, அவற்றை செயற் படுத்தினார்.
மலையகச் சிறார்களின் கல்வி மேம் பாட்டினைக் கருத்திற் கொண்டு அப்புத் தளையில் "அசோக வித்தியாலயம்' எனும் பெயரில் கல்விக் கூடம் ஒன்றினை ஆரம்பித்து மலையகக் கல்வி அபிவிருத்
திக்குப் பங்காற்றியுள்ளார்.
படைப்பிலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நயிமா சித்தீக் பத்திரிகைத் துறையையும் விட்டுவைக்க வில்லை என்றே கூறவேண்டும். இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் அப்புத்தளைச் செய்தியாளராகப் பணி புரிந்து அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற சமூக அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மலையகத்தில் பெண்
பத்திரிகை நிருபராக முதன் முதலில்
தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அக்காலத்தில் வெளிவந்த 'தீப்பொறி
இதழின் பெண்கள் பகுதியைப் பொறுப்
பேற்று அதனுடாகப் பெண்களின் விடிவிற் காகப் பல கேள்விகளைப் படைத்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்த வருமாவர்.
கண்டி திருமதி. சிவபாக்கியம் குமார வேலு அவர்களோடு இணைந்து மங்கை என்ற பெண்களுக்கான இதழையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Page 5
படைப்பிலக்கியம், தொழிற்சங்கம், கல்வி என்று பல தளங்களில் தனது உழைப்பை வெளிக்கொணர்ந்த இவரின்
பத்திரிகைத்துறை சார்ந்த பங்களிப்பு தனி
யாக நாம் கவனிக்கத்தக்க விடயமாகும்.
தாம் இவ்வாறு தமிழில் பாண்டித் தியம் பெற வழி சமைத்த பசறை மத்திய கல்லூரியில் எமக்குத் தமிழைப் போதித்த நல்லாசான் அமரர் ஐ.சாரங்கபாணி ஐயா வையே சாரும். எனது ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் நெறிப்படுத்தி மலையகப் பெண் படைப் பிலக்கியவாதியாக மிளிரச் பெருமையும் அவரையே சாரும் என
மனந்திறந்து கூறுகிறார் திருமதி. நயிமா
சித்தீக்,
எனது அறிவு வியாபிக்கும் போது
"நான் வாழ்ந்த பெருந்தோட்ட மக்களின்
அவலங்கள் பலவற்றைப் போக்க நாம்
என்ன செய்ய முடியும்?" என்று என்னுள்
எழுந்த வினாவிற்கு விடையாகவே படைப் பிலக்கியங்களைப் பதிவு செய்யத் தொடங் கினேன் என்று கூறிப் பெருமைப்படும் இவர் அந்த மக்களின் ஏக்கங்கள், ஏளனப் பட்ட விடயம், சிறிய எட்டடி அறையில் வாழும் வாழ்க்கை, கூட்டுக்குடும்ப பாரம் பரியம், மிக வறுமையான சூழலிலும் நெறி பிறழாத வாழ்க்கை முறை, 10 மணித்தி யாலங்கள் தொடர்ச்சியாக மலையில் பாடு பட்டு வீடு திரும்பிய பின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன், அவர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கம், தொழிற்சங்கவாதி
களின் கபட நாடகம் என்பவற்றைக் கண்ட
தாலும் கேட்டதாலும் இவற்றுக்கெதிராக
செய்த
மேடைகளில் பேசவும் எழுதவும் முடிந்தது என்கிறார்.
இவரின் படைப்பிலக்கியப் பணி யின்ன பாராட்டிப் பல்வேறு சமூக, பொது நிறுவனங்கள் விருது வழங்கி கெளரவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு :
()
1986ம் ஆண்டு மலையக கலை
* இலக்கியப் பேரவை இவரது இலக்கியப்
பணிகளுக்காக விருது வழங்கிக் கெளர வித்தது.
* 1989ம் ஆண்டு மத்திய மாகாணத் தமிழ் சாஹறித்திய விழாவில் விருதுடன் சான்றிதழும், பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
9 1991ம் ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் தமிழ் சாஹித்திய விழாவில் இலக்கிய தாரகை எனும் பட்டமும் விருது சான்றிதழும், பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
() மான ஊவா மாகாண தமிழ் சாஹித்திய விழாவில் விருதுடனான சான்றிதழும், பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்
66
1994ம் ஆண்டு அவர் பிறந்த மாவட்ட
பட்டார்.
() பெற்ற அகில உலக இஸ்லாமிய தமிழ்
2002ம் ஆண்டு கொழும்பில் நடை
இலக்கிய மகா நாட்டில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
9 2002ம் ஆண்டு கண்டி மக்கள் கல்ல
இலக்கிய ஒன்றியமும், ஞானம் இலக்கியப்

பண்ணையும் இணைந்து நடத்திய ‘சுதந்திரன் சிறுகதைகள்’ நூல் அறிமுக விழாவின் போது யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அ.சண்முக தாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்தி விருது.வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
9 2002ம் ஆண்டு இலங்கை அரசால் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளர விக்கப்பட்டார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைத் துறையில் இவரின் பங்களிப்பு விசாலமானதாகக் காணப்படுகிறது. சமூகத்தின் அவலங்களையும், மூடநம்பிக் கைகளையும் தத்ரூபமாகச் சித்தரிப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது.
தனது படைப்புகளில் வாழ்க்கையின் உணர்வுகளை மிக அவதானமாகப் பல்
வேறு கோணங்களில் நோக்கியுள்ளார். அத்தளத்திலேயே அவர் படைத்த படைப்பு களான 'வாழ்க்கைப் படகு (நாவல்) வீர கேசரி வெளியீடு, ‘வாழ்க்கைச் சுவடுகள் சிறுகதைத் தொகுதி கல்வறின்ன தமிழ் மன்ற வெளியீடு (1987), ‘வாழ்க்கை வண்ணங்கள்’ (கண்டி சிந்தனை Gullவெளியீடு 2004), ‘வாழ்க்கை வளைவுகள்' (சிறுகதைத் தொகுதி ) மணிமேகலை பிர சுர வெளியீடு 2005, அந்தனிஜீவா தொகுத்த 25 பெண் பிரம்மாக்களின்
'அம்மா’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2005
(தமிழக கலைஞன் ugaluluasub) 6T6Tu6OT
படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க
தாகும். மற்றும் மலையக படைப்பாளி களின் தொகுப்புகளிலும் இவரின் சிறு
கதைகள் பல வெளிவந்துள்ளமை
மனங்கொள்ளத்தக்கது.
No
S
§
N

Page 6
8
சினிமா என்ற கலையை பலரும் அதை ஒரு பொது மொழியாக சர்வதேச ஊடாட்ட மையமாகக் கொள்வது வழமை. அமெரிக்காவில் வெளியாகும் ஜேம்ஸ் பொண்ட் திரைப்படங்கள் போன்ற ஹொலிவூட் படங்கள், நல்ல கருத்தாக் கங்களைத் தரும் ஈரானியப் படங்கள், எமக்கு அண்மையான நல்ல படங்களாக உருவமைக்கப்படுகின்ற மலையாளப் படங்கள் என எல்லா வகையான படங் களையும் பார்க்கிறோம். மொழி, பண்பாடு எல்லாம் கடந்து ஒரு திரைப்பட மாகத்தான் இவை குறித்துப் பேசுகிறோம், விவாதிக்கிறோம், விமர்சிக்கின்றோம். இதனால் சினிமா எல்லைகள் கடந்தும் எல்லோரையும் இணைக்கிறது என்று கூறிக்கொள்கின்றோம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாகிறதா? எல்லோரும் எல்லாவற்றையும் கடந்து சினிமா என்ற தளத்திலாவது ஒன்றுபட்டு நிற்கிறோமா? ஆங்கிலம் தவிர்ந்த பிறமொழிப் படங்களுக்கு ஒஸ்கர் விருதுகளில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற குறையை நாம் காலம் காலமாகச் சொல்லி வருகின் றோம். ஆனால் தொடர்ந்தும் படங்கள் அனுப்புவதும் தொடர்கிறது. விருது கிடைக் காதது குறித்ததுப் பெரிதும் கவலைப்படுகிறோம். இது ஒஸ்கார் விருதை தூக்கிப் பிடித்ததால் வந்த வியாதி! இன்றைய ஈரானிய சினிமா மிகப் பாரிய வளர்ச்சி கண்டிருக்கின்றது. அவற்றின் படைப்புத் திறனும், செய்நேர்த்தியும், கதைக்கருவும் வியக்க வைக்கின்றன. அவை ஒஸ்காரில் தலை காட்டுவதே குறைவு. இது குறித்து ஈரானியர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கலை எல்லோரையும் சேர்ந்து வாழ வழி வகுக்கின்றது என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ள முடிகின்றதா? என்ற கேள்வியை உயர்த்தியிருக்கின்றது ஒரு பிரபலத்தின் வாழ்க்கை. அவரை நான் பிரபலம் என்று அழைப்பதே சர்ச்சைக்குரியதாகலாம். அந்த வாழ்க்கை வேறு ய்ாருடையதுமல்ல. உலகின் முதலாவது பெண் திரைப்பட இயக்குநரான லெனி
ஒளிகொருத்த
ரைபென்ஸ்தால் உடையதே.
2003 செப்தெம்பரில் உலகை நீத்த இந்தப் பிரபல பழம்பெரும் நடிகை, dhசிறந்த இயக்குநர், பல ஆவணப் படங் f/70/D களில் தனது தனி முத்திரையைப் பதித் தவர், கலைப் படங்களில் புதிய உத்தி இன்கா களைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர். ஆனால் இவரது மறைவு உலகத்துக்குத் தெரியாமலேயே போய் விட்டது. இது போதாதென்று முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையை வேறு யாருக்கும் சேர்க்கலாம் என ஆராய்ச்சிகள் வேறு. உலகத் திரையுலகம் (என்று சொல்லப் படுவது) இவரை முற்றாக ஒரங்கட்டி விட்டது. ஏன் இத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு மனிதம் மறைக்கப்பட்டது? அதனது இருப்பு மறைக்கப்பட்டது? ம்னித நேயம் உள்ளவர்கள் எல்லோரும் காலம் காலமாய்க் கேட்க வேண்டிய வினா?, உலகில்

நிகழ்ந்த (நிகழ்த்தப்பட்ட) வரலாற்றுத் தவறுகளில் இதுவும் ஒன்று என்றே கருதவும் முடியும்.
1920களில் ஒரு திரைப்பட நடிகை யாக்வே ஜேர்மனிய மக்களுக்கு அறிமுக மானார் லெனி. அப்போது "மவுண்ட் மூவிஸ்" எனப்படும் மலைகளைப் பின்
புலமாக வைத்து எடுக்கப்படும் படங்
கள் அதிகளவில் புகழ்பெற்றுக் கொண்டிருந்தன. 1926இல் லெனி நடித்து வெளியான 'புனித மலை" திரைப்படம் பெரு வெற்றியைப் பெற்றது. ஜேர்மனிய மக்களின் மனங்களில் லெனி தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். 1932இல் அவரே gudi Sui da Gajafgarth' (The Blue Light) படம் வெளியானது. இதுவே இவர் இயக்கிய முதல் படம் என்பதால் உலக சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இது கருதப்பட்டது. மலை
களை பின்புலமாக வைத்துக் கொண்டு '
நீல நிறப் படிமங்கள், உருவகப்படுத்தப் பட்ட மனிதர்கள், மலைக் குகையின் இலாவகமான பாவனை என அற்புத மான யுத்திகளோடு எடுக்கப்பட்ட இப்படத்தில் சமூகத்தால் விலக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதா பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் லெனி. அக்காலத்தில் மேற்கில்
Lu L- ib.
வேகமாகப் பரவிக் கொண்டிருந்த
'சர்றியலியசம்” (Sirealism) கோட்பாடு
இதன் பின்புலமாக அமைவதைப் படம்
முழுவதிலும் தெளிவாகக் காணலாம்.
உலக ஆவணத் திரைப்பட வரலாற் றில் முக்கிய படைப்பாகக் கருதப்படும்
9
S 영 -g 9
முக்கியமானதும்,
'மன உறுதியின் வெற்றி (Triumph of the Will) GTGör go Gegii LD Gör Gudfrys6) யிலமைந்த படத்தை உருவாக்கிய சிற்பி இவர்தான். 1935இல் வெளியான இப்
படம் லெனியை உலக அளவில் புகழ்
பெறச் செய்தது. ஆவணத் திரைப்பட வரலாற்றின் முக்கியமான தடம் மன உறுதியின் வெற்றி என்பதாகும். இதற் கடுத்தபடியாக உலக சினிமாவின் உச்சி யில் லெனியை இருத்திய படம் 'ஒலிம்பியா” (Olympia). வெறுமனே ஓர் ஆவணத் திரைப்படமாக மட்டு மன்றி மக்கள் குழுக்களின் ஒழுங் கமைப்பு ஒத்திசைவு பற்றியும் குறிப் பாக ஒலிம்பிக் விளையாட்டுப் பற்றியும் முக்கியமான கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். சமூக ஊடாட்டத் தில் விளையாட்டின் முக்கியத்து வத்தையும், அதன் தேவைப்பாட்டையும்
வலியுறுத்தியது இத்திரைப்படம். 1938
இல் வெளியான ஒலிம்பியா விளை யாட்டுத் தொடர்பாக எடுக்கப்பட்ட முதலாவதுமான ஆவணப் படம் என்ற வகையில் வர லாற்றில் கால் பதிக்கவும் தவறவில்லை.
1936இல் பெப்ரவரியில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டியோடு எடுக்கத் தொடங்கிய படம் லெனியின் கடின உழைப்பாலும், அயராத தன்னம் பிக்கையாலும் 1938இல் வெளியிடப் பட்டது. இப்படத்தில்தான் பல கம ராக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப் பட்டன. இரண்டு ஆண்டு கால எடிட்டிங், 250 மைல் நீள ஃபிலிம் சுருள்கள் என அசாத்தியங்களுடன்

Page 7
தொடங்கி சாத்தியமாக்கிக் காட்டினார் லெனி. இந்த ஒலிம்பியா திரைப்படம் இரண்டு பகுதிகளாக வெளியானது. ஒலிம்பியா நாடுகளின் திருவிழா,
glyp5air Sosa Spit (Olympia Festival of Nations / Festival of Beauty) Taip, மிகுந்த செய்நேர்த்தியுடன் வெளி யிட்டார் லெனி.
ஒலிம்பியாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது திரைப்படப்
பாணியை மாற்ற விரும்பினார் லெனி, !
ஸ்பெயினில் டைவ்லான்ட் (Diefand) என்ற நாட்டிய வகைப் பாணியில் அமைந்த படத்தைத் தீவிரமாக எடுக்கத் தொடங்கினார். இக் காலப் பரப்பில் போர் மேகங்கள் மெது மெதுவாகக் கவ்வத் தொடங்கியிருந்தது. இறுதியில் 2ம் உலகப் போர் வெடித்தது. அது வேறு கதை,
லெனி மறைக்கப்பட்டதற்கும், மறுக்கப்பட்டதற்கும் என்ன காரணம்? திரையுலக பிரம் மாக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஹொலிவூட் திரையுலகத்தினர் லெனி யின் படைப்புகளைக் கண்டு திகைத்துப் போயினர். அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளவோ, வில்லை. எந்தவொன்றையும் நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோமோ
சகிக்கவோ முடிய
அதனது அடிப்படையிலேயே முடிவு
களும், தீர்மானங்களும் எடுக்கப்படும் என்பதற்கு லெனியின் வாழ்க்கை பார்க் கப்பட்ட முறை நல்லதொரு உதாரணம். அவர்கள் ஒரு கண்ணாடியை அணிந்த படி லெனியைப் பார்க்கத் தொடங்
10
比赛 S 명 *Թ
கினர். அது "லெனி - கிட்லர் - நாசிசம்" என்ற கண்ணாடி. அவர்களுக்கு லெனி யின் படைப்புகள் எல்லாமே அப்படியே தெரிந்தன. பத்திரிகைகளும் கூட்டுச் சேர்ந்து பிறநாடுகள் எங்கும் நாசி லெனியின் படங்கள் செய்கின்றன" என்றார்கள். லெனிக்கு ஜேர்மனிக்கு வெளியே வைக்கப்பட்ட மிகப் பெரிய ஆப்பு இது. லெனி ஹிட்லரின் வேண்டு கோளுக்கு இணங்கவே ஒலிம்பியா படத்தை எடுத்ததாகவும், முழுச் செலவையும் ஹிட்லரே வழங்கினார்
சத்தைப் பரப்புவதையே
என்றும் கதைகள் கட்டப்பட்டன. லெனி இயக்கிய முதலாவது படமாகிய நீல வெளிச்சம் நாசிச சிந்தன்ைகளை
விதைக்க எடுக்கப்பட்ட படம் என்று
விமர்சிக்கப்பட்டது. பாசிசத்தைப் பரப்புவதே இப்படத்தின் நோக்கம். அதைவிட இதில் எதுவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அந்தப் படத் தில் பயன்படுத்தப்பட்ட உத்திகளும், கலை நயமும் கவனத்தில் கொள்ளப் படவோ, மதிக்கப்படவோ இல்லை. ல்ெனியின் நீல வெளிச்சம்' படத்தில் நடித்த ஒரு முக்கியமானவர் பற்றிக் கூறுவது இங்கே அவசியம். அவர் இடதுசாரிச் சிந்தனையாளரும், யூதரு மான 'பெலா பலாஸ்" என்பவர். இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்தார். பின்னாளில் இவரிடம் லெனி குறித்து கேட்கப்பட்ட போது “பாசிசம் தொடர்பான எண்ணக் கருவே லெனியிடம் இருக்கவில்லை. அவர் ஒரு தேர்ந்த படைப்பாளி அவ்வளவுதான்” என்று பதிலளித்தார்.

லெனி தனது வெற்றிப் படமாகிய ஒலிம்பியா படத்தை உலகெங்கும் திரை யிட்டு விளையாட்டின் அவசியத்தையும், சமூக ஊடாட்டத்தின் தேவையையும் நிறுவிட விரும்பினார். அவர் ஒலிம்பி யாவுடன் உலகெங்கும் வலம் வர விரும்பி முதலில் அமெரிக்காவுக்குப் லெனியை ஏற்றுக் கொள்ளவோ அவரது ஒலிம்பியாவை
போனார்.
திரையிடவோ ஹொலிவுட் உலகுக்கு விருப்பமில்லை. தங்களது குறைகளை இப்படம் தெளிவாகக் காட்டி விடுமோ என்ற பயம் ஒருபுறம்! எனவே ஹிட்லர்
ஆதரவாளர் என்று கூறி இவரை புறக்
கணித்தனர் எல்லோரும். இவரை அமெரிக்காவில் வரவேற்ற ஒரேயொரு முக்கிய பிரமுகர் வால்ற் டிஸ்னி மட்டுமே.
ஊடகங்களின் மிகக் கடுமையான விமர்சனங்களும், அரசியலை மையப் படுத்திய பார்வையும் லெனியின் படங் கள் பிற நாடுகளில் வெற்றியடையாமல் போக முக்கிய காரணமாக அமைந்தன. ஒலிம்பியாவை உலகெங்கும் கொண்டு சென்று நாசிசத்தைப் பரப்பும்படி ஹிட்லர் கூறியதாகவும், அதன் அடிப் படையிலேயே லெனி இவ்வாறு பயணம் செய்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் எழுதின. இவை எல்லா வற்றையும் மீறி வெனிஸ் நகரில் நடை பெற்ற திரைப்பட விழாவில் ஒலிம்பியா மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இவற்றையடுத்துத் தமது பத்திரிகைத் தர்மத்தைக் காக்க அமெரிக்கப் பத்திரிகைகள் ஒரு
11
விடயத்தை எழுதின. அது "லெனி ஹிட்லரின் ஆசை நாயகி என்பதுதான். இவ்விடயம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் - இறக்கும் வரையில் இதனை மறுத்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்
தான்
குத் தள்ளப்பட்டார் லெனி. தங்களது
கருத்தை நிறுவ பின்னாளில் வெளி
யிடப்பட்ட ஹிட்லரின் மனைவியான
ஈவா ப்ரவுனின் டயறிக் குறிப்பிலும் லெனி பற்றிய குறிப்பும் இடம்பெறத் தவறவில்லை. இந்த டயறிக் குறிப்பின் உண்மைத் தன்மை குறித்து இன்றுவரை வினா இருக்கின்றது என்பதையும் இவ் விடத்தில் சொல்லியாக வேண்டும்.
2ம் உலகப் போர் முடியும் தறுவாயில் அமெரிக்கப் படைகளால் லெனி பிடிக்கப்பட்டார். நியூரெம்பேர்க் விசாரணையில் அவரும் விசாரிக்கப் பட்டார். எவ்வாறாயினும் அவரை குற்ற வாளியாக்கிவிட முயன்றனர். ஆனால் அவரை குற்றவாளியாகக் காணக்கூடிய எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.
அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்
னாளில் ஜேர்மனி பிரிந்தபோது மேற்கு ஜேர்மன் அரசால் நாசிகளின் கூட்டாளி? என அறிவிக்கப்பட்டு லெனி மூன் றாண்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். அவரது அடிப்படை உரிமை களும் முழுவதுமாகப் பறிக்கப்பட்டன.
அவரது சிறைவாசம் முடிந்தவுடன் அவரால் இயல்பாக இயங்க முடிய வில்லை. அவரைப் பற்றி வெளி உலகில் ஏற்படுத்தப்பட்டிருந்த பிம் பங்கள், மக்கள் அவரை வெறுக்கும்படி

Page 8
செய்தன. அவர் கடைசியாக எடுத்த
படமான டைவ்லான்ட் பிரான்சிய அரசிடம் இருந்தது. மிகுந்த சிரமப்பட்டு அதை அவர் பிரான்சிய அரசிடமிருந்து மீளப்பெற்றார். ஆனால் அதை அவரால் வெளியிட முடியவில்லை. ஆனால் அப் படத்தின் கலைத்தன்மை குறித்து மிக
நல்ல அபிப்பிராயம் இருந்ததன் விளை
வாக 1954 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒழுங்குகள் இடம்பெற்றன. இதை யடுத்து ஒரு பெரிய பூதம் ஊடகங்களில் கிளம்பியது. லெனி இப்படத்தில் நாசி சித்திரவதைக் கூடங்களில் இருந்த யூதர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதமளிக்கப்பட்டது. ஆனால் அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவே இதை திரைப்பட விழாவில் திரையிடக் கூடாது. இப்படம் திரையிட் டால் பல பிரமுகர்கள் விழாவுக்கு வரமாட்டோம் எனப் பகிரங்கமாக
அறிவித்தனர். கடைசி நேரத்தில் திரை
யிடப்படாமல் இரத்தானது லெனியின் வைட்லான்ட்.
இவற்றைத் தொடர்ந்து தனது வாழ்க்கைப் போக்கை மாற்ற விரும் பினார் லெனி. இவருக்கு ஆபிரிக்கா வில் இருக்கும் நூபா இன மக்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இது கிட்டத்தட்ட 35 வருடங்களாக நீடித்தது. அவர் நூபா இன மக்களின் அன்புக்குரியவராய் கடைசி வரை இருந்தார். நூபா இன மக்கள் அடிப்படையில் நாசிச உணர் வுடையவர்கள். அதனால்தான் லெனி
12
அவர்களுடன் தொடர்பைக் கொண் டுள்ளார். லெனியின் செயற்பாடுகள் ஹிட்லரின் நாசிசத்தின் தொடர்ச்சி என்றே விமர்சிக்கப்பட்டன.
தனது நூற்றியொராவது வயதில் இறக்கும்வரை சினிமா உலகால் மட்டு மல்ல சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டே வந்துள்ளார் லெனி. ஒரு சகாப்தம் வெற்றிகரமாக மூடி மறைக்கப்பட்டு விட்டது. இத்தனைக்கும் காரணம் அவர் தரமான, புதுமையான திரைப்படங்கள் எடுத்ததே. தனது திரைப்படங்கள் மூலம் திரைப்பட உலகுக்கு ஒலியூட்டிய லெனிக்கு ஒளி கொடுத்த சாபம் தான் இது.
லெனி ரைபென்ஸ்தால் (Leni Riefenstahl) 1902b 26öIG 2gssiv மாதம் 22ம் திகதி பெர்லினில் பிறந்தார். தொடக்கத்தில் ஒவியத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்த அவர் அதையே தனது கல்வியாகவும் மேற்கொண்டார். பின்னர் நடனமாடும் பெண்ணாகத் தனது வாழ்வைத் தொடங்கினார். நடன மாதுவாக மிகவும் பிரபலமடைந்திருந்த வேளை காலில் ஏற்பட்ட காயம் அவரது நடன வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பின்னர் அவர் திரைப்படத் துறையில் கால் பதிக்கத் தொடங்கினார்.
இவரது 'மனஉறுதியின் வெற்றி? ஆவணப் படம் 1935இல் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கப் பதக்கத்தை யும், 1937இல் பாரிஸ் உலகக் கண்காட்சி
யில் சிறந்த படத்துக்கான தங்கப்

பதக்கத்தையும் பெற்றது. அதே வெற்றியை அவரது 'ஒலிம்பியா" திரைப்படமும் பெற்றுக் கொடுத்தது. 'ஒலிம்பியா' திரைப்படம் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தினால் (IOC) 1938இல் "ஒலிம்பிக் விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டதுடன் 1956இல் உலகில் வெளியான தலைசிறந்த 10 படங்களுள் ஒன்றாகவும் தெரியப்
பட்டது. இது மிகுந்த புகழையும்
கெளரவத்தையும் லெனிக்குத் தேடிக் கொடுத்தது.
1962இலிருந்து 1977 வரை லெனி
சூடானிய அரசின் அனுமதியுடன் நூபா
பழங்குடியினருடன் வசிக்க அனுமதிக் கப்பட்டார். இவ்வாறு பழங்குடியின ருடன் வாழ அனுமதிக்கப்பட்ட முத லாவது வெள்ளைப் பெண்மணி இவரே ஆவார்.
வாழ்க்கைக் காலத்தில் படங்கள் எடுப்
தனது நூபா மக்களுடன்
பதுவும், அவர்களது செயல்களை ஒளிப் பதிவு செய்வதுமாகக் காலத்தைக் கடத்தினார். 1983இல் சூடானில் உள் நாட்டு யுத்தம் வெடித்தவுடன் அவர் அங்கிருந்து புறப்பட வேண்டிய தாயிற்று. பின்னர் தொடர்ச்சியான தொடர்புகள் அவருக்குத் தனது நூபா நண்பர்களுடன் இல்லாமல் போனது. 23 ஆண்டுகள் கழித்துத் தனது 97வது வயதில் தனது பழைய நண்பர்களைப் பார்க்க லெனி விரும்பினார். ஆனால் உள்நாட்டுக் கலவரம் சூடானில் நடந்து கொண்டிருந்ததால் அவரால் அங்கு செல்வது சாத்தியமாகவில்லை. கடுமை யான முயற்சிகளின் பின்னர் பெப்ரவரி
珀 S 영
g S
2000இல் சூடான் செல்ல அனுமதி
பெற்றார். அங்குள்ள போராட்டத்
தலைவருடனும் தொடர்பு கொண்டு
தனது பழைய நண்பர்களைப் பார்க்கச்
சென்றார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரது அநேக மான நண்பர்கள் உள்நாட்டுப் போரி னால் இறந்து போயிருந்தார்கள். எஞ்சி யுள்ள தனது நண்பர்களைத் தேடத் தொடங்கினார். இக்கட்டத்தில் போர் தீவிரமடைந்திருந்ததால் விமானப் நிறுத்தப்பட்டது. இதனால் இவர் உடனடியாக நூபா
போக்குவரத்தும்
மலைப் பகுதியிலிருந்து வெளியேறு மாறு பணிக்கப்பட்டார். இவர்களை வெளியேற்ற ஒரு ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டது. இன்னொரு பேரிடி தாக்கியது. இவர் பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியது. நல்லவேளை ஒருவரும் இறக்கவில்லை. பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார் லெனி. கடைசிவரை மீண்டுமொரு
முறை தனது நூபா நண்பர்களைச்
சந்தித்து விடுவது என்ற நம்பிக்கை யிலேயே இருந்தார்.
தனது நீண்ட நாளையக் கனவை,
ஆசையை லெனி தனது 71வது வயதில்
பூர்த்தி செய்து கொண்டார். அது கடலுக்கடியில் புகைப்படம் எடுப்பது. கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலையை முழுமையாகக் கற்று, அதில் சிறப்புத் தேர்ச்சி பெற்று அதில் வல்லு னராகவும் வந்தார். அவர் வெளியிட்ட
The Coral Gardens, The Wonders

Page 9
of' Under water” g6u. Stai 5air பெருத்த வரவேற்பையும், நன் மதிப்பையும் பெற்றன. இவற்றுக்காக பல விருதுகளும் இவருக்கு வழங்கப் பட்டன. 1987 இல் இவர் வெளியிட்ட நினைவுகள்’ (Memoirs) நூல் 13 நாடு களில் வெளியிடப்பட்டது. குறிப்பாக, யப்பானில் இது அதிகளவில் விற்பனை யானது. 1992இல் தனது வாழ்க்கையும்
தனது கலை உலகமும் குறித்த "Die
Macht der Bilder“ 2as897ü LL-b La சர்வதேச விருதுகளைப் பெற்றது. அதில் குறிப்பானவை அமெரிக்க எமி (Emmy) விருதும் யப்பானின் திரைப் பட விமர்சகர்களின் சிறந்த படம் என்ற விருதும் ஆகும்.
அவரது புகைப்படங்கள் பல நாடு களில் புகைப்படக் கண்காட்சிகளாக ஒழுங்கு செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டன. உலகின் 12 முக்கிய நகரங்களில் இவர்து புகைப்படக் கண் காட்சிகள் நடைபெற்றன. பல இலட்சம் மக்கள் இவரது புகைப்படங்களைப் பார்வையிட்டனர். இதற்கிடையில் தனது முதலாவது நீருக்கடியிலான திரைப் படத்தை எடுத்து முடிப்பது என்ற முடிவில் மிகவும் தீர்மானமாய் இருந்த லெனி தனது 94வது வயதில் கொஸ்டரீகா (Costa Rica) நாட்டில் Gas TiGsirau Safai (Cocos Island) கடலுக்கடியில் சென்று ஆபத்தான சுறாக்களையெல்லாம் படம் பிடித்தார். இவரது திரைப்படம் 2002இல் “Impression under Water” ar Gör go
A
தலைப்பில் வெளியானது. இப் படத்தின் சகல பொறுப்புகளையும்
லெனி தனியே ஏற்றிருந்தார் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது நூபா மக்கள் தொடர்பான கோப்புக் காட்சி
களை உள்ளடக்கிய படமொன்றும் 2003 இல் வெளியானது.
2003 செப்தெம்பர் 08ம் திகதி ஜேர்மனியில் பியொகிங் (Poeking) நகரில் இவர் இறக்கும் போது இவரால் தொடங்கப்பட்டு எடுக்கப்பட்டு வந்த படங்கள் அரைவாசியில் இருந்தன என்பது வேதனையளிக்கின்ற விடயம். øySaid ‘Along among the Nuba’ GTGŠap தனது நண்பர்கள் குறித்த ஒரு ஆவணப் Ll (plb, Coral Reefs - Impression under Water" என்ற பவளப் பாறைகள் தொடர்பிலான ஒரு ஆவணப் படமும் தவிர ஏனையவை பரந்த வேறு வேறு பார்வைகளுடன் எடுக்கப்பட்டவை. அவை புதிய அடிமை முறை, ஸ்பெயினின் கலாசாரப் பின்புலம், நைல்நதியின் வாழ்வும் பண்பாடும், உலகின் நாலு மூலைகள் நாலு நாடுகள் (இத்தாலி, சுவிற்சலாந்து, பிரான்ஸ், இந்தியா) ஆகியவை. ஏனையவை கலை சம்பந்தப்பட்ட படங்களே. கேள்வி இன்னமும் தொக்கி நிற்கிறது. கலை எல்லோரையும் சேர்ந்து வாழ வழி வகுக்கின்றது என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ள முடிகின்றதா? O

15
൫"
യ്പൂ
- வி.பி.சந்திரம்
தமிழ்நாட்டில் இருந்து கி.கஸ்தூரிரங்கன் 'கணையாழி என்ற அந்த மாத இதழை 30 ஆண்டுகள் நடத்திவிட்டு தசார' என்ற அமைப்பிடம் நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். ‘எழுத்து இதழை சி.சு.செல்லப்பா நடாத்தி வந்தார். கோமல் சுவாமிநாதன் "சுபமங்களா' என்ற மிகத் தரமான இலக்கியச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தார். "சரஸ்வதி சஞ்சிகையை விஜயபாஸ்கரன் வெளியிட்டார். தாமரையை ப.ஜீவானந்தம் உருவாக்கிவிடத் தற்பொழுது சி.மகேந்திரன் நடாத்தி வருகின்றார். சுந்தர ராமசாமியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 'காலச்சுவடு மாத இதழ், எஸ்.ஆர்.சுந்தரத்தை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. குமுதம் நிறுவனத்தினரால் 'தீராநதி, இரா.மணிகண்டன்ை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக இயங்கி வருகின்றது. மேலே கூறப்பட்ட இலக்கியச் சஞ்சிகைகளாகிய கணையாழி, எழுத்து, சுபமங்களா, சரஸ்வதி, தாமன்ர, காலச்சுவடு, தீராநதி ஆகிய இதழ்களை ஒர் அளவிலாவது பெற்று படித்த சில தேடல்களின் பயனாக ஜூன் 2006இல் வெளிவந்த தமிழ்நாட்டுச் சஞ்சிகையாகிய 'தீராநதியுடன் இலங்கையில் வெளிவந்து கொண்டிருக்கும் "மல்லிகை" கலை இலக்கியச் சஞ்சிகையை ஒப்பிட்டு ஒரு மதிப்பீட்டை நோக்கலாம் என எண்ணு கின்றேன். சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு வாசகனை எவ்வகையில் ஈர்த்துள்ளன என்பதே இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
1950களில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் இந்திய எழுத்தாளர்களினால் பேசப்பட்டன. இந்திய இலக்கியச் சஞ்சிகைகளில் எம்மவர்களின் படைப்புகள் வெளி வந்தன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் நவீன இலக்கிய ஆளுமையைக் கொண்டு விளங்கினார்கள். இடதுசாரிச் சிந்தனையாளர்களான முற்போக்கு எழுத்தாளர்கள் மக்களுக்காக மக்கள் இலக்கியம் படைத்தார்கள். பேராசிரியர் க.கைலாசபதி மார்க்சிய சிந்தனையில் நின்று விமர்சனத்தைச் செய்தார். வானமாமலை அவர்கள் அதைத்

Page 10
தமிழ்நாட்டில் முன்னெடுத்துச் சென்றார். இவை வரலாற்றுப் பதிவுகள்.
இந்தியாவிலும், இலங்கையிலும் தர மான இலக்கியச் சஞ்சிகைகளை வாங்கிப் படிப்பவர்களின் தொகை மிகவும் குறைந்து விட்டது. தரமான இலக்கியம் என்று சொல் லப்படுபவை பெரும் சிக்கலுக்குள் சிக்கி நிற்கிறது. இந்திய தமிழ் சினிமாவின் பெரும் தாக்கத்தில் நூற்றுக் கணக்கான சினிமா சஞ்சிகைகள் ஆபாசப் படங் களுடன் சினிமாக்காரர்களின் கிசுகிசுக் களையும் தாங்கி வெளிவருவதால் அவற்றை முண்டியடித்துக் கொண்டு வாங்குவதில் இல்லத்தரசிகளும், இள வட்டங்களும் பெருகி விட்டனர். இந்தத் தாக்கம் காரணமாக கல்கி, ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்றவை யும் அந்த வட்டத்துக்குள்ளேயே தங் களையும் உள்ளடக்கிவிட்டன. ஒருவழிப் பாதை இறக்குமதிக் கொள்கையினால் இந்திய சினிமாச் சஞ்சிகைகளின் பரவல் இலங்கையர்களையும் கவ்விப் பிடித்து விட்டது. இலங்கைப் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டு விட்டது. இத்தகைய தொரு சூழ்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் விரல் விட்டு எண்ணத்தக்க இலக்கிய ஏடுகளும், இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக வெளிவரும் ஓர் இரு சிற் றேடுகளும் அக்கினிப் பரீட்சையாகவே இருக்கின்றன. சிறிய தொகையினராகிய இலக்கிய ஆர்வலர்கள் தமிழ் இலக்கியச் சஞ்சிகைகளுக்கு ஆதரவு வழங்கி வருவது ஆரோக்கியமான நிகழ்வாக அமைந் துள்ளன. இருந்தும் இளம் சமுதாயத் தினரிடையே இன்றைய சூழலில் தாக்குப்
16
பிடிக்குமா? என்ற ஐயப்பாடும் தோன்றாம லில்லை. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்
வாழுகின்றவர்களின் இலக்கிய முயற்சி
கள் தற்போது ஆரோக்கியமாக இருந்த
போதிலும் வருங்காலத்தில் அந்த நாட்டு
மொழிகளில் கல்வி பயிலும் சந்ததி யினரின் நிலைப்பாடு எப்படி அமையப் போகின்றது என்று எண்ணும் போது எதிர் காலம் கேள்விக்குறியாகவே அமைந் துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், மேற்படிப்பை மேற்கொள்பவர்களின் கல்வி ஆங்கில மொழியிலே அமைந்துள்ளமை யால் அவர்கள் தமிழில் பேசும்போது கூடுத லான ஆங்கிலச் சொற்களையே உப யோகித்து வருகின்றார்கள். இந்த நிலை யில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு செல்லப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இலங்கையைப் பொறுத் தளவில் மாணவ சமுதாயம் கடிவாளம் கட்டிய நிலையில் கல்வியை மட்டுமே நோக்காகக் கொண்டு பாடசாலை, தனி
யார் கல்வி நிலையங்களை நோக்கி ஒடித்
திரிகின்றார்கள். வாசிப்புப் பழக்கம் வெகு வாகக் குறைந்து காணப்படுகின்றது. பாட சாலைகள் தோறும், நகரப்புறங்கள் தோறும், கிராமப்புறங்கள் தோறும் நூல்
நிலையங்கள் அமைக்கப்பட்டு பலவகை
யான நூல்கள் இருந்த போதிலும் வாசிப்புத் தேடல் ஆரோக்கியமானதாக இல்லை. பொதுவாக நோக்குமிடத்து, தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்விதம் அமையப் போகின்றது என்ற ஒருவித
ஏக்கம் மனதை வருடி நிற்கின்றது.
தோழர் டொமினிக் ஜீவா முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.

ஆர்வம்' என்ற மூலதனத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக மல்லிகை" என்ற கலை இலக்கிய சஞ்சிகையை நடாத்தி வரு கின்றார். அவர் சொல்வதுபோல இது ஒரு இமாலயச் சாதனை என்றே சொல்ல வேண்டும். பல எழுத்தாளர்களை ஊக்கு வித்து அவர்களின் படைப்புகளை மல்லிகையில் பிரசுரித்து ஓர் அந்தஸ்தை வழங்கியுள்ளார். சாதி அமைப்புக்கு எதி ராக, வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுத்து மனிதநேயத்தை வளர்த்தெடுப்பதற்கு மல்லிகையைக் களமாக்கினார்.
"மல்லிகை" சிறுகதை, கட்டுரை, கவிதை, அட்டைப் படத்தில் இடம்பெறு பவர் பற்றிய அவதானிப்புகள், கடிதங்கள், தூண்டில், தொடர்கள் என்று பல்வகைசார் அம்சங்களுடனும் வெளிவந்து கொண்டி ருக்கின்ற ஒரு கலை இலக்கிய ஏடு. ஜூன் 2006 இதழ் பற்றிய எனது அவதானிப்பை
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக
என் பேனாவைத் திருப்புகின்றேன். மனித நேயத்தை இலக்கிய மயமாக்கும் கதாராஜ் என்ற எழுத்தாளரை அட்டையில் தாங்கி நிற்க, அவரைப் பற்றிய அவதானிப்புகளை மேமன்கவி கண்டுள்ளார். நன்றி மறக்காத நெஞ்சத்துடன் கொடிக்கால்கள் வெளிவரு கின்றன. சொந்தப் புத்தகங்களை வெளி யிட்டு மனமுடைந்து போனோர். என்ற பகுதியில் 'தமிழகத்திலிருந்து இங்கு தினசரி வந்து குவியும் புத்தகங்களாலும் இதழ்களாலும் பாரிய பொருளாதார, கலா சார நெருக்கடியை நமது இலக்கிய உலகத்திற்கு ஏற்படுத்த முடிகிறது. இதைக் கட்டுப்படுத்தியேயாக வேண்டும்"
7
என்று சொல்லும் மனத்திடம் வரவேற்கப் பட வேண்டியதொன்று. கனிவுமதியின் “sosir திரும்புதல் கவிதையில். ‘லயங்கள் எல்லாம் ஏறி இறங்கினேன்' என்ற வரி யைக் கண்டதும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி ஏதாவது தெரி விப்பாரா? என்று எண்ணி ஏமாந்தேன்! கடிதங்கள் கனமாகத் தெரியவில்லை. ஸ்ரீபன் கிங் எழுதிய செல்' நாவல் பற்றிய இன்கா தெரிவித்த. "நாவலை வாசிக்கும் போதும் சரி, நாவலை வாசித்து முடித்த பின்னரும் சரி செல் பேசும் அனை வருக்கும் குலை நடுக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதை வாசித்த பின்னர் செல்களைக் கைவிட வேண்டிய நிலைக்குப் பலர் உந்தப்படுவதையும் தவிர்க்க முடியாது’ என்று கூறியிருப்பது சாத்தியமாகுமா? உலகமயமாக்கலும், பல தேசியக் கம்பனிகளின் ஆதிக்கமும் நம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கு
வதை யார் அறிவார்.
'செப்டம்பர் நினைவுகள் ஆவணப் படத்தின் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதி ரான தனித்த குரலொன்று ஓங்கி ஒலித் ததை அவதானிக்க முடிந்தது என்ற வரிகள் மனங்கொள்ளத்தக்கது. தொ.மு. சி.ரகுநாதன் பற்றி சில நினைவுகளை
அறிஞர் அ.முகம்மது சமீம் தந்துள்ளார்.
புதுமைப்பித்தனுக்கு அடுத்த நிலையில் தொ.மு.சி.ரகுநாதன் நிற்கிறார். ‘அரங் கேறும் அரைகுறைகளுடன் திக்கு வல்லை கமாலும் நிற்கின்றார். சி.சுதந்திர ராஜா நிழலில் நிஜம்' என்றாலும், சிறு கதைகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத் துவதாகத் தென்படவில்லை. அந்தக்

Page 11
குறைபாட்டில் ஆசிரியர் கவனம் செலுத்து வாரா? செலுத்தியே ஆக வேண்டும். தெணியானின் ‘பூச்சியம் பூச்சியமல்ல' 9வது தொடர் இந்த இதழில் ஆட்சி செய்கிறது. ஈழத்தின் புனைகதைப் படைப்பாளிகளின் வரிசையில் இந்த இதழில் அ.செ.முருகானந்தன், வரதர், அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ள்ை ஆகிய முதுபெரும் எழுத்தாளர்களை கண் முன் நிறுத்துகிறார் செங்கை ஆழியான் க.குணராசா. வரவேற் கத்தக்க காத்திரமான முயற்சி. கவிஞர் சோ.ப.வின் நினைவுச் சுவடுகள் கோகிலா மகேந்திரன் - ஒரு பார்வை தெரிகிறது. லெ. முருகபூபதியின் ‘வாழ்வின் தரி சனங்கள் இலக்கிய மடல் 15 பக்கங்களை உள்வாங்கியிருக்கின்றது. மடலா?.
துாண்டில் வாசகர்களால் தூண்டப்படு sé66T p 601 sum ? அல்லது வாசகன் தூண்டப்படுகின்றானா? யோசிக்க
வேண்டிய விடயம்.
அடுத்து ஜூன் 2006 தீராநதியை நோக்குகின்றேன். அட்டையின் ஒரு பகுதி யில் ஆணிகள் அடுக்கப்பட்ட சிறிய காட்சி யுடன் எளிமையாக இருக்கின்றது. சேராமானுஜம் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. தமிழ் நாடகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் இவர்
"நமது பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின்
கலைத் திறமையை வளர்த்தெடுக்க எதுவும் செய்யவில்லை’ என்கிறார். "எதிர் முகம்’ பகுதியில் வாசகரின் பதிவுகளைத் தரிசிக்கலாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச் செய லாளரும், தாமரை பத்திரிகை ஆசிரியரு
18
'காரங்கள்
மாகிய சி.மகேந்திரன் தென்றலும்' என்ற மகுடத்தில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை அலசுகிறார். சுட மங்களாவில் எழுதிய பிரபஞ்சன் இன்று
'வெப்பமும்
எங்கு நின்கின்றார்? ‘வாழ்தலும் வாழ்தல்
நிமித்தமும்’ என்ற அவரின் தீராநதி சஞ்சிகைச் சிறுகதை எதுவிதமான உந்து தலையும் ஏற்படுத்தாது. கனடாவில் வசித்துவரும் கவிஞர் திருமாவளவன் உள்ளத்தைத் தொடும் ஒரு கவிதையைத் தந்துள்ளார். உரைநடைக் கவிதைக்கு ஒரு விஷப் ராணிதிலக் உணர்ந்து கொள்வாரா? வாஸந்தி 'அம்மா
பரீட்சை,
வந்தாள்’ தொடரை நினைவில் பதிந்த
சுவடுகளாகத் தந்துள்ளார். நடப்பு விவ
யதார்த்தமாகப் பதியப்
பட்டுள்ளன. "அயல் சினிமா' என்ற மகுடத்தில் ஷாங்யுமு என்ற சீனத் திரைப்பட கலைஞர் திரைப்பட ஒளிப்பதி வாளராக அறிமுகமாகி இன்று சீனாவின்
பிரபல இயக்குனராக இருந்து கடந்த
இருபது ஆண்டிற்குள் பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இதழில் ஆரம்பித்த கட்டுரை அடுத்த இதழில் தொடரும். இத்தொடரை எஸ்.ராம கிருஷ்ணன் தொடருகின்றார். ‘தமிழ் முஸ்லிம்களும் அச்சு ஊடகமும் பதிப்பு முயற்சிகளும்’ அ.மார்க்ஸ் தந்துள்ளார். "சீறாப் புராணம்,
என்ற கட்டுரையை
"தாருல் இஸ்லாம்' என்ற நூல்களைப் பற்றிக் கூறி அடுத்த இதழிலும் தொடரு கிறார். அ.முத்துலிங்கம் பற்றி கேள்வி பதில் மூலம் வெற்றியும் தோல்வியும் காட்டு கின்றார். இந்திய பெண் எழுத்தாளர் மஞ்சு கபூரின் 'சாக்லேட் என்ற சிறுகதையை

திலகவதி தமிழில் தந்துள்ளார். மிகவும்
தரமான ஒரு சிறுகதை என்பதற்கு இக் கதை எடுத்துக் காட்டாக இருப்பதை அவதானிக்கலாம். முற்போக்கு எண்ணம் கொண்ட இச்சிறுகதை எழுத்தாளர் கதா பாத்திர வாயிலாகத் தன் கருத்தை வெளிப் படுத்துகின்றார். "இலக்கியம் என்பது கதைகளைப் பற்றியதாக மட்டும் இல்லை. எண்ணங்கள், வரலாறு, சூழல், மார்க்ஸிய - பெண்ணிய கருத்தாடல்கள் ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது” என்கிறார். புத்தகம் என்ற பகுதியில் நகுலன் நாவல்கள் பற்றி சங்கரராம சுப்பிர மணியம் அலசுகிறார். 'திறனாய்வு நோக் கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள்' பற்றி சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ளார். மேலும் 10 நூல்களின் புதுவரவு பற்றிய சிறு அறிமுகமும் தரப்பட்டுள்ளது. 'ஒளிந்திருக்கும் அதிசயங்கள் 6 т6йлар தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் பழைமை வாய்ந்த தேவாலயங்களைப் பற்றிப் பட்ங்களுடன் தான் பார்த்த அழகைப் பகிர்ந்து கொள்ளுகின்றார். ‘நவீன கலையின் தமிழக ஆளுமைகள்' என்று நடேஷ் படைத்துக் கொண்டிருக்கும் கோட்டோவியங்கள் பற்றி சி.மோகன் வர்ணிக்கின்றார்.
மல்லிகை பற்றியும், தீராநதி பற்றியும் மேலே என் தேடலை ஒரு சில வரிகளில் தெரிவித்துள்ளேன். இலக்கிய சஞ்சிகை கள் என்ற வகையில் தோற்றத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபட்டிருந்தாலும் ஒரு சில நிறைவைக் காணவேண்டும் என்ற ஆதங்கம் என் மனதில் தோன்றி யுள்ளது.
19
A தீராநதி, குமுதம் நிறுவனத்தினரால் பல பேர் சேர்ந்த கூட்டு முயற்சி. ஆனால் மல்லிகையோ தனிமனிதனுடைய ஆர்வத் தின் முயற்சி. இரண்டிலுமே நீண்ட தொடர் கட்டுரைகள் பிரசுரிக்கின்றனர். வாசகனுக் குச் சலிப்பு ஏற்பட இடம் உண்டு. சிறுகதை களைப் பொறுத்தளவில் இரண்டு இதழ்
களுமே பிரகாசிக்கவில்லை. கவிதை
களில் மக்களைப் பற்றிய சிந்தனை ஒட்டம் காணப்படவில்லை. இந்தியாவில் பழம் பெரும் எழுத்தாளர்கள் இன்றும் எழுது கிறார்கள். இலங்கையில் பலர் எழுது வதை விரும்பாதவர்களாக இருக்கின்றார் கள். இளம் எழுத்தாளர்களும் போட்டிக்கு
மட்டுமே எழுதுபவர்களாக மாறி விட்
டார்கள். அப்படி இருந்த போதிலும் கிடைக்கப் பெறும் ஆக்கங்களைத் தரம் பிரித்து அவற்றில் தேர்ந்தெடுத்துத் தரமான படைப்புகளை, சோர்ந்து விடாமல் தந்து கொண்டிருக்கும் மல்லிகையைக் குறைத்து மதிப்பிட முடியாது ஜூன் 27இல் தனது 79வது பிறந்த தினத்தை எட்டிய "மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவைத் தொடர்ந்தும் மல்லிகை மணம்
வீசவேண்டு மென்று வாழ்த்துகின்றேன். கு

Page 12
20 கவிஞர் முருகையன் ஒரு செவ்வியல்வாதி
- பேரா, எம்.ஏ.நுஃமான்
ஈழத்து இலக்கியத்திற்குப் புதியதொரு முகத்தைக் கொடுத்த, முற்போக்கு இலக்கியத்தின் ஆழம், விசாலம் என்பவற்றை பகுப்பாய்வு செய்யும் முனைப்போடு நடைபெற்றுவரும் கருத்தரங்குத் தொடரின் மற்றுமொரு அமர்வு கடந்த 25.06.2006இல் கொழும்பு, தர்மராம மாவத்தையில் இடம்பெற்றது. இதற்கு சஞ்சிகையாளர் தெ.மதுசூதனன் தலைமை வகித்தார். தமிழ்க் கவிதா உலகின் நீண்டகாலப் பயணியான கவிஞர் முருகையனின் கவிதைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வுரையை ஈழத்தின் மற்றுமொரு கவிஞரும், இலக்கிய விமர்சகருமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் நிகழ்த்தினார். இதை விபவி கலாசார மையம் + முற்போக்கு இலக்கியப் பேரவை என்பன ஏற்பாடு செய்திருந்தன.
கவிஞர் முருகையனைத் தெரியாத தமிழ் இலக்கியவாதிகள் இருக்க முடியாது. விஞ்ஞானக் கல்விமான். தமிழ் + ஆங்கில மொழி பெயர்ப்பில் துறை போனவர். மொழிபெயர்ப்பில் ஈடுபாடு காட்டும் இளைய சந்ததிக்கென "மொழிபெயர்ப்பு நுட்பம்" என்ற அருமையான நூலொன்றைத் தமிழில் தந்திருக்கின்றார். ஒரு சில விதி செய்வோம், கவிதை நயம், மேல்பூச்சி, அது அவர்கள், நாங்கள் மனிதர், நெடும்பகல், மாடும் கயிறுகள் அறுக்கும், ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் என்பன இவரது நூல்கள். யாழ். பல்கலைக் கழகத்தின் பதிவாளராகச் சில காலம் சேவை புரிந்தார். கல்வி அமைச்சின் பாட விதான சபையிலும் சேவையாற்றியவர்.
தலைவர் மதுசூதனன் கருத்துரைத்த பொழுது, 1930ശ്ശൂൺ யாழ்ப்பாணத்து ஈழகேசரி பாரதி கவிதையைப் பிரசுரித்த்து. சொல் புதிது. கருத்துப் புதிதாக இருந்தது. கவிதையின் பேச்சோசைப் பண்பே மக்களைச் சென்றடையும். முருகையன் கவிதைகள் வெகுசனங்களைச் சென்றடையவில்லை. மனிதனும் விஞ்ஞானமும் ஒன்றுதான். இதன் அடிப்படையிலேயே கவிஞர் பேசுகிறார். ஏராளமான காதல் கவிதைகள், அத்தோடு இயக்கப் பாடல்கள் என்பவற்றையும் பாடி இருக்கிறார். அவரது கவிதைகளின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். சமகால நிலையிலிருந்து ஒரு புதிய குரல் எனவும் தனது நிலைப்பாடுகளுக்கு கவிதா வடிவம் கொடுத்துள்ளார். அவைகளைப் புரிந்து கொள்வதன் மூலமாகக் கவிஞர் முருகையன் கவிதைகளின் ஆழத்தையும் அவரது சிந்தனைத் தன்மைகளையும் புரிந்து கொள்ள முடியும். - என்றார்.
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஆய்வுரையைத் தொடங்கி கவிஞர் முருகையனின் சில கவிதைகளை ஏறத்தாழ அரைமணி நேரம் வாசித்துக் காட்டினார். அகிலத்தின் மையம், கூற்றுவன் கொலு, 2000 ஆம் பழைய சுமை எங்களுக்கு, வேலியின் காவலன் என்பன அவைகளின் தலைப்புகள்.
ஆதர்சமாக இருக்கும் தகைமைக்குரியவர் முருகையன். தமிழ் கவிதை உலகைத் திணற வைத்த ஈழத்துக் கவிஞர்களான மஹாகவி, நீலாவணன் ஆகியோர் வெவ்வேறு போக்குடையவர்கள். முருகையன் பற்றிய மதிப்பீடுகள் பலவகைப்படுகின்றன. ஈழத்தில் முற்போக்கு இலக்கியத்தை வளர்த்தெடுத்த பேராசிரியர் க.கைலாசபதி முருகையனைக்

'கவிஞருக்குக் கவிஞர்" என்கிறார். சமகாலக் கவிஞரான செல்விந்தியன் 'முருகையன் கவிஞரேயல்ல - அவர் எழுதுவது கவிதை யல்ல" எனத் தூக்கி எறிகிறார். என்னைப் பொறுத்தமட்டில் (நுஃமான்) தற்காலக் கவிதை வளர்ச்சிக்கு உன்னதமான பங்களிப் புச் செய்பவர்களுள் முருகையனும் ஒருவ ரென்பேன். கவிதையில் பொதுப்பண்பு களுக்கு வலுவூட்டியவர்களுள் இவருமொரு வர். தனிப் பண்புகளே அவரது பலமும் பலவீனமும்!
தற்காலக் கவிதைகளின் பொதுப் பண்புகளாவன - சமூக சார்பு, பாரதி மூலம் தமிழ்க் கவிதையை இகலோகத்துக்குக் கொண்டு வந்த கவிஞன் பாரதிதான்! சமூக விமர்சனம் முருகையன்
என்பவாகும்.
கவிதைகளின் பொதுவான பண்பு. நாங்கள்
மனிதர்" என்ற கவிதை மனிதகுல மேம்பாடு பற்றிய உந்துதல், இடையறாத பரிசீலனை கள் என்பவற்றின் ஆவணமாகின்றது. கவிதைகளின் பொதுப் பண்பு விமர்சனங் களாக, அறிவுறுத்தல்களாக, நையாண்டி களாக (நாடகப் பாணி) கருத்தை வெளிப் படுத்துகின்றன. பொதுமைப்படுத்தும் கவி தைகளில் மனித சமூகம், விடுதலை பற்றிய அக்கறை என்பன காணப்படுகின்றன. அடுத்த அம்சம் செய்யுள்களின் தளர்ச்சி - கட்டுடைப்பு, தற்காலக் கவிதை எளிமையை அடிப்படையாகக் கொண்டது. நவீன கவிதை யாப்பு மரபை உடைப்பது. முருகை
யன் சித்தாந்த ரீதியில் புதுக்கவிதையை நிரா கரிப்பவர். மரபு வழி யாப்பைக் கையாண்
டார். பேசுவது போன்ற தோரணையில் யாப்பைப் பயன்படுத்தினார். இவரது பல கவிதைகள் பேச்சோசையில் யாக்கப்பட் f_డl- இவர் சாராம்சத்தில் செவ்வியல் வாதி. சொல் வடிவங்களைக் கையாள்வார். யாப்போசை தூக்கலாக இருக்கும். வெண் பாவைப் புதுக்கவிதைப் பாணியில் எழுதிக் காட்டியவர்.
2
S 密 g
கவிஞர் முருகையன் பற்றி பேராசிரிரியர் சி.சிவசேகரம் கூறுகையில், "அவரது கவிதைகளில் தேன் எப்போதும் சிந்து கிறது” என்கிறார். விஞ்ஞான செவ்வியல் பாங்கான நடை. முருகையனுக்குச் செவ்வி யலாளன் எப்போதும் இடைஞ்சலாகவே இருக்கிறான். m
தனது காவியங்களில் முற்போக்குச் சிந்தனைகள் சிந்துவதை இவரால் விலக்க முடியவில்லை. நவீன காவிய மரபை வளர்த் தவர். நவீன விஞ்ஞானத்தின் அழிவுத் தன்மையை முதன்மைப்படுத்துகிறார். மனித குலத்தைப் பொதுமைப்படுத்துகிறார். உருவ
கப் பாணியில் மனித வளர்ச்சிக்கு ஆன்
மீகத்தை இழுக்கிறார்.
முருகையனின் கவிதா உலகிற்குள் இலகுவாக நுழைவது கஷ்டம்! மொழி, பொருள் என்பன இறுக்கமானவை. தமிழ் நாட்டில் புதுக் கவிதைக்கு இரண்டு போக் குகள் இருக்கின்றன. சுந்தர ராமசாமியின் கவிதைகள் கருத்திலிருந்து விடுபட்டவை! “நேரடியானவை" என ஈழத்துக் கவிதைகளை தமிழ்நாடு ஒதுக்குகின்றது. இதனால் இந் நாட்டுக் கவிஞர்களான முருகையன், மஹா கவி, நீலாவணன் ஆகியோர் அவர்களுக்குக் கவிஞர்களாகப்படுவதில்லை.
முருகையனின் சுவாசக் காற்றுக் கவிதையாக இருந்தாலும், தமிழ் சூழலில் இவர் நாடகத்திற்கும் கணிப்பைப் பெறு கிறார். கவிதை நாடக வளர்ச்சியில் இவரது பங்குப் பணி சிறப்பானது. ஆரம்பக் காலத் தில் வானொலிக்கென பல கவிதை நாட
கங்களை எழுதினார். கடுழியம், அப்பரும்
சுப்பரும் என்பன அரங்க ஆற்றுகைகள். கடுழியத்தில் தொழிலாளர் போராட்டத்தை குறியீட்டுப் பாங்கில் வெளிப்படுத்துகிறார். அப்பரும் சுப்பரும் பாராளுமன்ற அரசி யலை நக்கல் செய்வது. தெளிவின்மை உண் டென்பது பொதுவான குற்றச்சாட்டு. விஞ்

Page 13
ஞான உண்மைகளைக் குறியீட்டு முறையில் விளக்குவார். யதார்த்தத்திற்கும் குறியீட்டு வடிவத்தைக் கொடுப்பார். அடாத்துக் கவிதை இதற்கொரு வரைவிலக்கணமாக அமைகின்றது. உணர்வுகளுக்கு அறிவுசார் நோக்கைக் கொடுத்து வெளிப்படுத்துவார். கருத்து ரீதியாகப் பார்க்கும் தன்மை பொது மைப்படுத்துவது அவரது பலவீனமென லாம். அவரது பாணி வித்திய சமானது. பன் முகக் கவிதைகள் அவரின் வளர்ச்சி அதி கரித்து கொண்டே வந்தது. பேச்சோசையை அறிமுகப்படுத்தினார். செய்யுளை இலகு படுத்தினார். நுஃமானின் ஆய்வுரை கவிஞர் முருகையனின் கவிதா ஆளுமையை இப்படி யாகத் தரிசிக்க வைத்தது. ஆய்வுரை கலந் துரையாடப்பட்டது.
ஒரு கவிஞனின் ஐம்பதுக்கும் மேற் பட்ட கால அறுவடையை - குறுகிய கால மான ஒன்றரை மணித்தியாலத்திற்குள் அடக்க முடியுமா? முருகையன் ஒரு சித் தாந்தவாதி. அவரது சிந்தனா புலத்துக்குள் இலகுவாக நுழைந்துவிட முடியாது. எனவே இத்தகைய ஆய்வுரைகளின் நகல் பிரதிகளை மண்டபத்தில் முன்னதாகவே வழங்கி இருப் பின் கலந்துரையாடல் செழிப்பாக இருந் திருக்கும்! எல்லோருக்கும் எல்லாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை! எனவே கருத்துப் பரிமாற்றம் செய்வோர் தம்மை அறிமுகப்படுத்த வேண்டும்.
கலந்துரையாடலில் கேட்டவை -
முருகையன் உள்ளொளி மிகுந்த கவிஞர். தீர்க்கதரிசி. அவரது "வாயடைத்துப் போனோம் மல்லிகைக் கவிதை வித்தி யாசமானது. தனது சக கவிஞர்களுக்கு
முரண்பாடாக இருக்கும் சுமைகளை இலகு
வாக இறக்குவார்.
பாரதியின் இதயம் சுவைஞரோடு பேசு வதாக இருந்தது. முருகையன் பொருள் குறித்து மூளைகளுக்குத்தான் பேசுகிறார்.
22
இதயத்திற்குப் பேசவில்லை! எவ்வளவுதான் நிறைய எழுதி இருந்தாலும் இதயத்தைத் தொடவில்லை. * பாரதி தீர்க்கமான முடிவுக்கு வரு கிறார். அவர் மனித சமூகத்தை நேசித்தவ ராக இனங்காணப்படுகிறார். இத்தொடரின் கருத்தரங்குகளில் முழுமை இல்லை! முரு
கையன் ஓர் இடதுசாரிய கலை, இலக்கிய
வாதியென்பதை இக்கருத்தரங்கு நிரூபித் திருக்க வேண்டும்! * முருகையனின் கவிதைகளில் ஆணித் தரமான சொல்லாட்சி இல்லை. தாக்கம் இல்லை. இடதுசாரிய முற்போக்கு இருந் ததா! அதற்கமைய யாத்தாரா? * முருகையன் காலகட்டத்தை பல பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டும். * ஆன்மீகவாதியெனப் பாரதியை ஒதுக்கிய காலமிருந்தது.
முருகையன் கவிதைகளில் 60களில் நையாண்டித் தன்மை, 90களில் ஆன்மீகத் தன்மை. O போதனை வழங்கல், கருத்தை எடுத் துரைத்தல் கவிதை அல்ல. பிரசாரத்துக்குக் கவிதையைப் பாவிக்கக் கூடாது. இருமையைக் கொண்டுவருவதுதான் புதுக் கவிதை.
போராட்டக் கவிதைகள் கவிதை கள்ல்ல என ஒதுக்குகிறார் பிரபல தென் னிந்திய விமர்சகர் வெங்கட்சாமிநாதன்.
கலந்துரையாடலில் பிரபல நாவ லாசிரியர் தி. ஞானசேகரன், விமர்சகர் ஏ.எம்.சமீம், சண்முகலிங்கம், தேவராசா, பத்திரிகையாளர் கே.விஜயன், கவிஞர் ஏ.இக்பால் ஆகியோர் கருத்துரைத்தனர். தொகுத்து எழுதியவர் :
- எம்.பி.எஸ்.

koos '.*' ' an **** Isis ges :
ད།
si di sia Maya si to . . e. e. e. ei of he is ベ一
機象*象畿錢線線緣線
-- preM8*** ******* Wie iš 3888. w . 後談響緣。發線
- டொமினிக் ஜீவா
27.06.2006 செவ்வாயன்று எனது 79வது பிறந்த தினம்! இந்தப் பிறந்த நாள் ஞாபகார்த்தமாக ஒரு வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தார், திரு. கே.எஸ்.மணியம் 6T6öTLusuf.
மல்லிகைக் காரியாலயம் இருக்கும் வீதியிலுள்ள கதிரேசன் கோயில் கல்யாண மண்டபத்தில் மாலை இவ்விழா ஆரம்ப மாகியது. மில்லர்ஸ் கே.எஸ்.பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஏராளமான இலக்கிய நண்பர்கள் இதயமுருகி வாழ்த்திப் பேசினர்.
மேடையில் வீற்றிருந்த நான் எனக்குள்
நானே யோசித்தேன். இந்தச் சூரியன் சரிந்து
போன வயசுக் காலகட்டத்தில் இந்தப் பிறந்த நாள் வைபவமெல்லாம் அவசியம்தானா? என எனக்குள் நானே தர்க்கித்துக் கொண்டேன்.
ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது.
இந்தப் பாராட்டு, விழா அமைப்பு, நண்பர்கள் சந்திப்பு சகலதும் எனக்கு இந்தக் காலகட்டத்தில் தேவை போலப் பட்டது. காரணம் அடுத்து அடுத்து வரும் காலகட்டங்களில் இன்னும் இன்னும் உற்சாகமாக, ஆரோக்கியமாக நான்
செயலாற்றுவதற்கு இத்தகைய மனந்திறந்த பாராட்டுக்கள் தேவை போல என்
நெஞ்சுக்குத் தெரிந்தது.

Page 14
குறிப்பை வரைந்து எனக்கு இந்த வேளையில் கூட, அதன் பெறுமதியை
இந்தக் கொண்டிருக்கும்
என்னால் மனதாரப் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் எழுத்தாளனாக இருக்க
Lb. மல்லிகை ஆசிரியராகவும்חט6 இருக்கலாம். வயது முதிர்ந்த ஓர் அநுபவசாலியாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் குதூகலத் துடனேயே இந்தப் பாராட்டு நிகழ்ச்சியை மன நிறைவுடன் ஏற்று மகிழ்கிறேன்.
பிறந்த நாள் அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தொலை பேசி மூலமும், கடிதங்கள் மூலமும் வாழ்த்திய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்ளுகின்றேன். போக்கு வரத்துச் சிரமங்களுக்கு மத்தியிலும் நேரில் கலந்து எனது இலக்கிய உழைப்பைக் கனம் பண்ணிய சகல ருக்கும் எனது மனமார்ந்த நன்றி களைத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன்.
எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. ஆச்சரியமாகவுமிருக்கிறது.
வாழ்த்துக் கடிதங்கள் ஏராளமாக வந்து குவிந்தன. வாழ்த்து அட்டைகள் வேறு. தேசத்தின் நானா பகுதிகளில் இருந்தும், உலகத்தின் பல்வேறு
24
出 3 영
·3 9
திசைகளில் இருந்தெல்லாம் தொலை பேசி வாழ்த்துக்கள் வந்த வண்ணமே யிருந்தன.
பகல் சாப்பாட்டைக் கூட நான் தவிர்த்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட என் மகன் திலீபன் மதிய
போசனத்தைப் பார்சலாகக் கட்டிக்
வேர்க்க விறுவிறுக்க
கொண்டு வந்து தந்தார். உரிமையுடன் சிறிது கோபிக்கவும் செய்தார்.
உண்மையாகச் சொல்லுகின் றேன். நான் இதையெல்லாம் எதிர் பார்க்கவேயில்லை. ஆனந்தங் கலந்த அதிர்ச்சியாகவே இருந்தது.
நண்பர் மணியம் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த வேண்டி அனுமதி கேட்டபோது நான் இந்த நிகழ்ச்சி இப்படியொரு கலியாண மண்டபத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கவே யில்லை.
இந்தத் தேசத்தில் ஒரு பெருமை மிக்க சம்பவம் என்னவென்றால் தினசரிப் பேப்பர்கள் அனைத்தும் கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுக் கெல்லர்ம் பாரிய முக்கியத்துவம் கொடுத்துப் பிரபலப்படுத்துவதுதான்.
முடிவாக ஒரு தகவல். எனது எண்பதாவது வயதை நோக்கி நான் ஆக்கபூர்வமாக நகர்ந்து கொண்டிருக் கின்றேன்.

25 சர்வதேசத் தமிழ் வானொலி (கனடா) ஜேர்மன் கலையகம் 11.06.2006 இல் வண்ணை தெய்வம் தயாரித்து வழங்கும்
‘ஏடும் எழுத்தாணியும் என்ற நிகழ்ச்சியில் மல்லிகை’ பற்றி ஒலிபரப்பான பகுதி
ஈழத்தின் இலக்கிய வரலாற்றின் பதிவில் 'மல்லிகை" என்னும் இலக்கியச்
சஞ்சிகைக்குத் தனியான ஒரு இடம் இருக்கின்றது என்பது எவராலும் மறக்க முடியாத உண்மையாகும்.
நாட்டில் போர்ச் சூழல் காரணமாகக் காகிதத் தட்டுபாடுகள் நிலவிய காலங் களிலும், பெரும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் சிரமங்களை யெல்லாம் சவாலாக ஏற்று மல்லிகையைத் தொடர்ந்து வெளியிட்டுச் சாதனை படைத்து வருபவர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள்.
நாற்பது ஆண்டுகளைத் தாண்டி ஐம்பதாவது ஆண்டை நோக்கி கம்பீரமாக பயணித்துக் கொண்டிருக்கும் மல்லிகையின் மே மாத இதழினை இன்றை "ஏடும் எழுத்தாணியும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகின்றோம்.
இந்த இதழின் அட்டையை அலங்கரிப்பவர் வன்னி மண்ணின் வாழ்வைச் சொல்லும் வலிமை மிக்க படைப்பாளி சமுருகானந்தம் அவர்கள். சஞ்சிகையின் நான்காம் பக்கத்தில் பிரபல எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் முருகானந்தம் அவர்களைப் பற்றிய சிறப்பானதொரு கட்டுரையையும் பதிவு செய்திருக்கின்றார்.
பத்திரிகைகள் சஞ்சிகைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்துக் கொள்பவர்கள் விளம்பரத்தாரர்கள்தான்! இப்பொழுது 'முல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள் என்னும் புதிய பகுதியை ஆரம்பித்து ஆரம்ப காலத்தில் இருந்து மல்லிகையை வளர்த்த அந்த விளம்பரத்தாரர்களை அறிமுகப்படுத்தி நன்றி சொல்லி வருகின்றார் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள். அந்த வகையில் இந்த இதழின் இரண்டாம் பக்கத்தில் யூனியன் பார்சல் சேர்விஸ் உரிமையாளர் திரு. ஏ.கந்தசாமி அவர்களை அறிமுகப்படுத்தி மல்லிகையின் வளர்ச்சியில் அவருக்கு இருக்கும் பங்கை நன்றியுடன் தெரிவித்திருக்கின்றார்.
சஞ்சிகையின் எட்டாம் பக்கத்தில் பிரமிளா செல்வராஜா என்பவர் எழுதியிருக்கும் 'மெளனக் கண்ணீர் என்னும் கவிதையை பிரசுரித்து, கவிதைக்குக் கீழே அடைப்புக்

Page 15
குறிக்குள் இக்கவிதை வேறு பத்திரிகை யில் பிரசுரிக்கப்பட்டது என்றும் குறிப் பிட்ட ப் பட்டிருக்கின்றது !
பத்திரிகைகள், சஞ்சிகைகள் எவை யாயினும் ஒரு பத்திரிகையில் பிரசுர மானதை மறுபடியும் பிரசுரிக்க
மாட்டார்கள். ஆனால் இங்கு கவிதை யைப் பிரசுரித்துவிட்டுப் பின்னர் இது வேறொரு பத்திரிகையில் பிரசுரமானது என ஏன் பிரசுரித்தார்கள்? என்பதுதான் எமக்குப் புரியவில்லை!
கவிதையின் தரம் கருதி மறுபிரசுரம் செய்திருக்கின்றோம் என்பதனை தெரி விப்பதற்காக இருந்தாலும் இப்படி குறிப் பெழுதமாட்டார்கள். முதல் பிரசுரித்த பத்திரிகைக்கு நன்றிதான் தெரிவித்திருப் பார்கள். இன்னொரு காரணமும் இருக் கின்றது. வேறு பத்திரிகையில் பிரசுர
மானதை நாம் பார்க்கவில்லை என
நினைத்து நமக்கும் அனுப்பியிருக் கின்றார் என்பதனை படைப்பாளி தெரிந்து கொள்வதற்காகவும் இப்படி குறிப்பு எழுதியிருக்கலாம். உண்மையான காரணம் ஆசிரியருக்குத்தான் தெரியும்.
22ம் பக்கத்தில் ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதியுள்ள 'மண்ணின் மணம்' என்னும் சிறுகதை பிரசுரமாகியிருக்கின்றது. அழகிய கிராமமொன்று நகரமாக மாறி யிருப்பதை ஒர் உரைச்சித்திரம் போல அழகாகச் சித்திரிக்கின்றார் படைப்பாளி நவாஸ் அவர்கள். முடிவில் கிராமம் அழகா? நகரம் அழகா? என்ற கேள்விக்கு கிராமம்தான் அழகு என்று நிறைவு செய் திருக்கின்றார்.
26
30ம் பக்கத்தில் அண்மையில் அமர
ராகிப் போன எழுத்தாளர் சோமகாந்தன்
அவர்களுக்கு அந்தப் பக்கம் நிறைய அவரின் சிறப்புக்களை எழுதி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. அதேபோல 51ம் பக்கத்தில் அமரர் முல்லையூரான் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப் பட்டிருக்கின்றது.
செங்கை ஆழியான் தொடராக எழுதிவரும் 'ஈழத்தின் புனைகதைப் படைப்பாளிகள்’ என்னும் கட்டுரையில் ஆனந்தன், சி. வைத்தி லிங்கம், கோ.நடேசையர் ஆகியோர்
சம்பந்தன்,
பற்றியும், அவர்களின் புனைகதைகளின் வரலாறுகள் பற்றியும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கின்றார். இதுபோன்ற கட்டுரை களின் பெறுமதி இன்னும் சில தசாப்தங் களின் பின்னர்தான் எங்களுக்குப் புரிய வரும் என்பது நிதர்சனம்.
இதேபோல 41ம் இலங்கை வானொலியின் புகழ் பெற்ற
பக்கத்தில்
ஒலிபரப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப் பாளருமான எஸ்.புண்ணியமூர்த்தி பற்றி பாலா அவர்கள் எழுதிய கட்டுரையும் சிறப்பானதாக இருக்கின்றது. இவரைப் பற்றி கட்டுரை சில வருடங்களுக்கு
முன்னரும் மல்லிகையில் படித்ததாக
எனது ஞாபகத்தில் வருகின்றது.
43ம் பக்கத்தில் கவிஞர் காரை
சுந்தரம்பிள்ளை அவர்களின் பிரிவை
மனமுருகிக் கவிதையில் வடித்திருக்கின்
றார் கவிஞர் குமாரசுவாமி அவர்கள்.
ஆய்வுக் கருத்தரங்கு என்னும்
தலைப்பில் நீர்வைப் பொன்னையன் சிறு
கதைகளும், என்.கே.ரகுநாதன் அவர்

27 களின் சிறுகதைகளும் படைப்பாளி 70ம் பக்கத்தில் கிளிநொச்சியைச் களால் ஏற்பட்ட ஆய்வை கட்டுரை சேர்ந்த எஸ்.தயாபரன் என்பவர் சமீ வடிவமாக்கித் தந்திருக்கின்றார்கள். அதே பத்தில் நீங்கள் படித்து வியந்த புத்தகம் நேரம் அண்மையில் அமரர் டானியல் என்ன? என்று கேட்ட கேள்விக்கு அவர்களின் படைப்புகள் அனைத்தையும் “லண்டனைச் சேர்ந்த வண்ணை ஒன்று திரட்டி ‘டானியல் படைப்புகள் தெய்வம் என்பவர் தொகுத்து வெளி என்னும் தலைப்பில் வெளியான நூலை யிட்ட காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் மா.பாலசிங்கம் அவர்கள் 'பிரச்சினைகள் கலைஞர்கள் என்ற நூலைப் படித்துப் தொனிக்கும் சிலருக்குப் பிரச்சினை பிரமித்துப் போய்விட்டேன். பெரும் யான நாவல்கள் என்ற தலைப்பினில் உழைப்பு. விடாமுயற்சி” என்று பதில ஒர் ஆழமான கட்டுரையை பதிவு வித்திருக்கின்றார். பாரிஸை லண்டன் செய்திருக்கின்றார். என அவர் குறிப்பிட்டிருந்தாலும் மிக குறுகிய காலத்தில் இப்புத்தகத்தைப் படித்து முடித்து தன்னுடைய கருத்தையும் கேள்விக்கு பதில் அளித்ததன் மூலம் பதிவு செய்ததற்காக ஜீவா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு தி மல்லிகையின் அறிமுக நிகழ்ச்சியை 器 நிறைவு செய்து கொண்டு தொடர்ந்து ஐ லண்டனில் வாழ்ந்துவரும் எங்கள்
இதைத் தவிர, மல்லிகையில் எல் லோரும் விரும்பிப் படிக்கும் பகுதி தூண்டில்’ என்னும் தலைப்பில் வெளி யாகும் கேள்வி பதில் பகுதியாகும்.
மேடைப் பேச்சானாலும் சரி, எழுத்து நடையானாலும் சரி நம்மோடு கதைப்பது போலவே அனேகமாக அனைத்தும் சாதாரண மொழிநடையிலேயே தரும் ஜீவா அவர்களின் இந்த கேள்வி பதில் பகுதியும் அப்படித்தான் சுவாரஸ்ய
மானது.
செவாலியர் கலாநிதி அமுது ஐயாவின் 'இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்” என்னும் நூலுக்குள்
நுழைவோம். O
/ 司 0 w 0 A ༄༽
மல்லிகை ஆண்டுச் சந்தா.
மல்லிகை மாத இதழ் வியாபாரச் சஞ்சிகையல்ல. அது ஒரு வரலாற்று இலக்கிய ஆவணம், 41வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு.
ஆண்டுச் சந்தா : 300.00 ஆண்டு மலர் 150 தனிப்பிரதி 25.00 தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721 assrs, as L606Tssoul (36 Tir (Dominic Jeeva, Kotahena P.O.) 6T607ás குறிப்பிடவும்.

Page 16
28 களத்து மேட்டில் காதல் காணாமல் போச்சு
கணினி உலகில்
காதல் குடியேறியாச்சு ඌ2 மடல் எதிர்பார்த்த காலம்
மலையேறிப் போச்சு
கைபேசி விரல்களுக்குள்
1N
காதல் கண்ணாமூச்சியாச்சு 22ܘܟ O T~~? மலையடிவாரத்தில் பார்த்து, ஆத்தங்கரையோரத்தில் பார்த்து, வயல்வரப்பில் பார்த்து, வாய்க்காலோரம் பார்த்து, கடைவீதியில் பார்த்து, b இ ڈا திருமண வீட்டில் பார்த்து, ggsnu იაუგჯე) இப்படிப் பார்த்துப் பார்த்து
காதல் செய்த காதல் கனிவுமதி இப்போது எங்கே?
பேசுவதற்கே உடலெல்லாம் உதறல் எடுத்து பேச வந்ததை பேசாது தொண்டைக் குழியிலேயே சொருகிக் கொண்டு திரும்பிய காதல் எங்கே?
O
காதல் ஒருபோதும் தன் சுயமுகம் காட்டுவதில்லை அரிதாரம் பூசியே வரும்; நம்மை மாற்றும் அசந்திருந்தால் ஏமாற்றியும் விடும்.
காதல் கூடக் கலப்படமாகியவுலகில் உண்மைக் காதலை உணர்ந்து கொள்ளல் அத்தனை எளிதல்ல.

பார்வையில் உருவாகிற காதல் பாதியில் புறப்பட்டு விடுகிறது
அடி உள்ளத்தில் புகுகின்ற காதல் ஒன்றே ஆயுள் வரை நம்மோடு வருகிறது.
O
இன்றெல்லாம் வெட்கம் பூத்த முகங்களோடு கதைக்கும் காதலர்களைக் காணக் கண்கள் மூடி தவம் செய்ய வேண்டியுள்ளது. கையெழுத்து அழகில்லையென நண்பர்களின் கவிதைகளையும் கையெழுத்தையும் கடன் வாங்கி காதல் செய்த காலமெல்லாம் தலைமூழ்கிப் போயின.
கை நடுங்கி கொடுத்த காதல் மடல்கள் கைபேசி உரையாடலாக மாறிப் போயின நினைத்த இடத்திற்கு நினைத்தவுடனே நினைத்தவர்கள் வருகிற மாதிரி விஞ்ஞான தொழில் நுட்பங்கள் நவீனமாகி நம்மையெல்லாம் மிரட்டுகின்றன.
இப்போது எல்லோர் கனவிலும் கணினி உலகம்.
O
29
கடிதங்களில் காதலை எதிர்பார்த்து காத்திருந்த காலம் மலையேறி மின்னஞ்சல்களில் தொடர்கின்றது இன்றைய நவீன காதல். காதலர்களை நினைத்து நினைத்து
முகவரியிடாத கடித உறைகள் கண்ணிர் விட்டுக் கதறுகின்றன.
எழுதிய கடிதங்கள் படிக்காமலே கிழிக்கப்பட்டு விட்டன. எல்லாத்துக்கும் மேல் காதலர்களின் கடவுளாக தெரிந்த தபாற்காரன்
தன்னை எவரும்
மதிப்பதில்லையெனத் தவிக்கிறான்.
கைவிடு நிலையிலுள்ள கடிதக் காதலை நினைத்து வீதிகள் எங்கும்
அனாதையாக அலைகிறான்.
உண்மைதான் யார் இப்போதெல்லாம்
காதலியின் அல்லது காதலனின்
கடிதங்கள் எதிர்பார்த்து வாசல்களில் தவம் இருக்கிறார்கள்.
எல்லாம் மாறிவிட்டன.
கதைக்கக் கூடப் பயப்பட்ட இடத்தில்
இப்போது கைபேசிகள்
அஞ்சல்கள் எதிர்பார்த்த இடத்தில் இப்போது மின்னஞ்சல்கள்.
O

Page 17
காத்திருந்து காதல் செய்த stepGLD6)6)Turb காலமாகிப் போச்சு.
கணினி இயக்கத் தெரிந்தவனுக்கும் கைபேசி உள்ளவனுக்கும்தான் காதல் கைகூடும் என நம்மை கேலி செய்கிறது நவீன காதல்.
O
கணினி உலகில் யாரும் கைகூட முடியாக் காதலை நினைத்துச் சோகத்தில் ஏங்கி கண்ணிர் விட்டு அழுவதில்லை.
உண்மையாகக் காதல் செய்து மரண வலியில் துடிக்கும் காதலர்கள் குறித்து ஒருபோதும் கணினிகள் கவலைப்படுவதில்லை.
lق59H தன் காதல் வலை எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியிலேயே முழுக் கவனம் செலுத்துகிறது. O
கடிதங்கள் எழுதிப் பழகிய காதல் கண்களைக் கட்டிக்கொண்டு கணினி இருட்டில் கண்ணாமூச்சியாடி
30
கணினி புதைகுழியில் சவம் ஆகிவிட்டன எனக்
கண்கள் கலங்கி நிற்கும் வேளையிலும்
மென்காற்று மெல்ல இதயக்காட்டை வருடிச் செல்லும் சுகம் போல,
இன்றும்
உண்மைக் காதல்
உயிரோடு இருக்கின்றன.
O
கதவு தட்டிக்
கடிதம் தரும் தபால்காரரை எதிர்பார்த்து வாசலில் காத்திருக்கும் உள்ளங்கள் இன்னும் உள்ளன.
எத்தனை எத்தனை நவீன தொழில் நுட்ப வசதிகள்
நம்மை ஆட்டிப் படைத்த போதும்.
இன்றும் தொலைந்த காதலை நினைத்துத் தினம் தினம் உயிர்க்காற்றில் கசியும் ஈரத்தோடு எத்தனையோ இதயங்கள்
கிராமங்கள் தோறும் ஈரம் காயாது உயிரோடு வாழ்ந்து வருகின்றன.

3.
கழகுங்கள்
தங்களின் மே மாத மல்லிகை" பார்த்தேன் - படித்தேன் தூண்டில் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தயாபரன் என்னும் வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு எனது காலங்கள் வாழ்த்தும் 300 கலைஞர்கள் என்ற நூலைப் படித்தது பற்றிக் குறிப்பிட்டுப் பதில் எழுதியிருந்தீர்கள். தங்களது கவனத்தையும் அந்தப்புத்தகம் ஈர்த்தது குறித்து எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி
அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சாதாரணமாகக் குறிப்பிடாமல் "பிரமித்துப் போனன். பெரும் உழைப்பு விடா முயற்சி” என்று குறிப்பிட்டிருந்தது என்னை நெகிழ வைத்தது. தாங்கள் ஒரு பதிப்பாளன் என்பதனால் இப்படியான ஒரு புத்தகத்தை உருவாக்குவது எப்படியான சிரமம் என்பதனை உணர்ந்து பதிலளித்திருக்கின்றீர்கள்.
இது பத்து வருடங்களுக்கு மேலான தேடுதல் கடைசி இரண்டு வருடங்களும் கடுமையான உழைப்பு அத்துடன் நண்பர்கள் அந்தனி ஜீவா, சிவானந்தராஜா போன்றவர்களின் மானசீகமான ஒத்துழைப்பு, இவைகள் அனைத்தும் இணைந்தது தான் அந்த நூல் கேள்வி பதில் மூலம் அந்நூலுக்கு அறிமுகம் தந்ததிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் கனடாவில் இருந்து ஒலிபரப்பாகிக் கனடா, ஐரோப்போ எங்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘சர்வதேச தமிழ் வானொலியின் ஜேர்மன் கலையகம் மூலமாக நான் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் *ஏடும் எழுத்தாணியும்’ என்னும் நிகழ்ச்சியின் மூலமாக எம்மவர்களின் சஞ்சிகைகள், நூல்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரித்து வழங்கி வருகின்றேன். கடந்த 11.06.06 ஞாயிற்றுக் கிழமை கலாநிதி செவாலியர் இளவாலை அமுது ஐயா அவர்களின் இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள் என்னும் நூலும்,

Page 18
தங்களின் 'மல்லிகை"யும் அறிமுக
மானது. அதில் மல்லிகையின் அறிமுக
மான பகுதியின் பிரதியாக்கத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
வண்ணை தெய்வம்
பிரான்ஸ்.
ஈழத்தின் நிகழ்காலப் புதினங்கள் பற்றி அவ்வப்போது ஊடகங்களில் அறியக் கிடைக்கின்றது! காணாக் குறைவுக்கு தினமும் வேலை வாய்ப்புக் காக இந்த கட்டார் மண்ணை மிதிக்கும் பலரை அவ்வப்போது சந்திக்க நேரிடு கிறது. அவர்களிடமிருந்து கிடைக்கின்ற தகவல்களும் மீண்டும் நமது மண்ணில் போர் எழக்கூடிய ஓர் அபாயகரமான நிலைமையைச் சுட்டுவதாய்த்தான் அமைகின்றது. கடந்த காலங்க்ளில் இனத்துவ ரீதியில் மோதிக் கொண்டதன் அடையாளமும் வடுவும் காயாமல் நம்மை வேதனைப்படுத்திக் கொண்டி ருக்கும் இந்தத் தறுவாயில் மீண்டுமொரு யுத்தம் வலிந்தே திணிக்கப்படுகின்றது என்பதை நினைக்கும் போது மனசு
ரொம்பவும் வலிக்கின்றது. புரிந்துணர்வு
அற்ற ஒரு கொடூரமான சூழலில் சிக்கித் தவிக்கும் அப்பாவி ஜீவன்களின் ஆயுள் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதுகளில், நாமும் கையா லாகாதவர்களாக இருப்பதுதான் நமக் கான நியதியா? எதுவுமே புரியவில்லை. சில கேள்விகளுக்குப் பதில்கள் கிடை
யாது என்பது நூறு சதவிகித உண்மை
32
கின்றேன்.
யாகும்,
ஏப்ரல் மல்லிகை கிடைத்தது. எல்லா அம்சங்களும் நிறைவாய்த் தானிருந்தது! எல்.வசீம் அக்ரமின் ‘நானும் நீயும் கவிதை மிகுந்த அவதானத்தையும், ஆழத்தையும் கொண்டது! "பூச்சியம் பூச்சியமல்ல' தொடர் அற்புதமாய் செல்கின்றது! தவிரவும், லெ. முருகபூபதி அவர்கள் சுட்டியிருந்த கூறியது கூறல் பற்றிய கருத்தை அவதானத்தில் கொள்வது நல்லது என்பது என்து தாழ்மையான கருத்தாகும்.
அநுராதபுரம் சிறப்பு மலர் பற்றிய விபரங்களை படிகள்" மூலமும், எல்.வசீம் அக்ரம் மூலமும் பெற்றுக் கொண்டேன். மல்லிகை போன்ற மிகக் காத்திரமான, ஒரு தரமான சஞ்சிகை எமது மாவட்ட இலக்கிய வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைவதையிட்டு எனது மனமார்ந்த நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள் அதுமட்டுமன்றி எமது மாவட்ட இளம் எழுத்தாளர் பரம்பரைக்கு ஒரு பரந்துபட்ட அங்கீகாரத்தை மல்லிகை வழங்கி வருகின்றமையும் மெச்சத்தக்க விடயமாகும்.
மல்லிகையின் தொடர் வருகைக்கு சவால் விடுவது நிதி நிலைமைதான் என்பதை நான் அறிவேன். எதிர்வரும் காலத்தில் மல்லிகைக்கு ஆரோக்கிய மான ஓர் உதவியை நான் செய்ய

ஆவலாயிருக்கின்றேன். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது கட்டாயம் வழி வகைகளைச் செய்வேன். இது சர்வ நிச்சயம். காற்றிலும், கடும் புயலிலும் தளர்ந்து போய்ச் சோர்ந்து விழுந்து விடாமல் கம்பீரமாய் நிற்கும் ஓர் ஆல மரமாய் உங்களை எண்ணி இன்னும் நான் வியக்கின்றேன்.
உங்கள் சாதனைகள் நிச்சயம் நாளை மேம்படும்.
நாச்சியாதீவு பர்வீன்
sleLITs
மல்லிகையின் அட்டைப்படக் கெளரவிப்பாளராகக் கடந்த 'மே' மாத இதழில் நண்பர் ச.முருகானந்தன் தெரிவாகியிருப்பதும் ஒரு வகையில் மனநிறைவைத் தருகிறது. படைப்பாளி என்பதற்கப்பால் அவர் தான் வாழும் சமூகத்தைப் பற்றிய புரிந்துணர்வுள்ள சிந்தனையாளர் என்பதைத் தாமரைச் செல்வி, கருணாகரன் இருவர் பார்வைப் பதிவுகளும் துல்லியமாக நிழற் கோல மிட்டன.
நண்பர் ச.முருகானந்தன் இயல் பிலேயே மென்மையான இனிய சுபாவம் கொண்டவர்; கூச்ச சுபாவியும் கூட. ஆனால் இன்றுவரை அதிர்ந்து பேசி அறியாதவர். அவரது இன்னொரு முகத்தைப் பற்றி - பங்களிப்பு பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமென நினைக்கின்றேன்.
33
கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி யில் அவர் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்த காலத்தில் அவர் ஏற்று நடித்த "சோக்கிரட்டீஸ்” பாத்திரம் இன்றும் என் கண்முன் நிழலாடுகின்றது. திரையில் சிவாஜிகணேசன் பேசி நடித்த அதே வசனங்களைத்தான் அவர் பேசி நடித்த போதும், சிவாஜியின் சிம்மக் குரலுக்கும், நடுங்கும் தன்மை கொண்ட இவரது குரலுக்குமிடையே நிறைய இடைவெளி யிருந்தது. உண்மையான ஒரு கிழவரின் தோற்றத்தையும், குரலையும் இவரிடம் காண முடிந்தது. அப்போது அவரது தோற்றம் ஒரு நோஞ்சான் போன்ற தென்றால் அவர் கோபிக்க நியாய மில்லை. இவரது தளர் நடையும், நடுக்க
மான குரலும் கூடத்தான் ஒத்தாசை
கொடுத்த தென நினைக்கின்றேன்.
முருகானந்தன் வன்னி வாசியாகி அந்த மண்ணின் - சமூகத்தின் பதிவை வெளிக்கொண்டுவரும் அதேவேளை, எங்கள் சொந்த மண்ணின் - ஒரு வகையில் கரிச்சல் உவர்ப்பைக் கொண்ட கரவெட்டியின் - வாசனை யைக் கொண்டு ஒரு முழு நாவலைத் தரவேண்டுமேன்று யாசிக்கிறேன். இது எனது வேணவா, தான் நேசிக்கும் மல்லிகைத் தளத்தையே இதற்கென அவர் பயன்படுத்தலாமென்பது எனது
அபிப்பிராயம். நிறைவேற்றுவாரா?
கண,மகேஸ்வரன் கரவெட்டி

Page 19
34
@/\.മഞ്ചങ്ങ
>ெறிUUருத்தும்
/l@lരl
LDT.LIT.é.
சொந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளரான மா. கி.கிரிஸ்ரியன் தனது புகலிடத்தி லிருந்து "புயலுக்குப் பின்’ என்ற நாவலை இலக்கிய உலகிற்குப்
படைத்துள்ளார். இது சென்னை
அக்னி வெளியீடாக நூலாக்கப் பட்டுள்ளது. இந்நாவலாசிரியர் இதைத் தவிர வேறும் சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் திரட்டுகள், குறுநாவல்கள் என்பனவற்றையும் தமிழ் வாசிப்பிற்குத் தனது பங்களிப்பாகத் தந்துள்ளார். தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினக்குரல் என்பன வற்றிலும் விடயதானங்கள் செய்துள்ளார். அரங்க நாடகங்களையும் எழுதியிருப்பதாக அறியப்படுகிறது. எனவே இவர் கலை இலக்கியத்திற்குப் புதியவரல்ல!
குருநகரின் (கரையூர்) மண்ணின் மைந்தர். புயலுக்குப் பின் நாவலில் 1964ஆம் ஆண்டில் கரையூரைக் கடந்த சூறாவளியின் தாக்கங்கள், அழிப்புகள் ஆகியவற்றின் பின்னணியில் இணைத்து அவ்வூர் மக்களது வாழ்வின் அசைவியக்கங்கள், ஒரு மனோரதியப் புனைவின் ஊடாகப் பார்க்கப்பட்டுள்ளது.
அணுகுண்டால் படுமோசமாக இயல்பு நிலை குலைந்த கிரோஷிமா, நாகசக்தியை உள்ளடக்கிய ஜப்பான், இன்று சகல வளங்களிலும் தன் நிறைவைக் கண்ட உலக நாடுகளில் இரண்டாவதாக நிற்பது சர்வப் பிரசித்தம்! இவ்வரலாற்றுக் கற்பிதத்தை உள்வாங்கி, புயல் கடந்த குருநகருக்கு, அவ்வூர்ப் புத்திஜீவிகளான முதியோர்களும், இளைஞரும் அவ்வூர் இழந்து விட்ட முகத்தைத் திரும்பவும் கொடுக்க எத்தனிக் கின்றனர். இந்த எழுச்சியின் முனைப்பில் அவர்களுக்குப் பல்வேறு அநுபவங்கள் கிடைக்கின்றன. தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல ஆதாரமான தொழிலைப் பறி கொடுக்கின்றனர். உயிராக மதித்த தலைமையை இழக்கின்றனர். காதல் மலர்வு கொள்கின்றது. இவைகளோடு சொந்த மண்ணில் நிம்மதியாகக் காலூன்றித் தமது இலட்சியங்களை நிறுவ முடியாத நிலை பலிக்கின்றது. ஜீவதாஸ், லோறன்ஸ், ரதி
 

ஆகியோர் துடிப்பான இளைஞர்கள். சூறாவளி கற்பிதம் செய்த பாடத்தின் வழிநடத்தலால், உதிரியாகவில்லாது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சங் கத்தை உருவாக்கி, அதன் மூலமாகச் சூறாவளியால் இழப்புகளைக் கண்ட மக் களுக்கு மட்டுமல்லாது தமது ஊருக்கும் மறுவாழ்வு கொடுக்கத் திட்டமிடு
கின்றனர்.
"கூ’க் காட்டினால் கேட்கக் கூடிய
தூரத்தில் இருக்கும் - மக்களால் தெரிவு
பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு மக்களது வரிப் பணத்தில் இயங்கும் மா நகர சபை
- மாதங்கள் பல கடந்து வருடங்களாகியும் இம்மக்களது துயர்
துடைக்க விழிப்புக் கொள்ளவில்லை!
சூறாவளியின் தழும்புகளை நீக்கு வதற்கு நிதி திரட்டும் பொருட்டு, மக்கள்
திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன், கன்னடத் , துட் பைங்கிளி B,சரோஜாதேவி ஆகி
யோரை இங்கு வரவழைத்தும் நிதி திரட் டப்பட்டது. அந்நிதிக்கு என்ன நடந்தது? பனையால் தவறி விழுந்தவனை அம்மரத்தின் அடியில் காணலாம். ஆனால் மீனவனை ஆழ்கடல் சென்று திரும்பாவிட்டால், கரையில் கூட அவனது சடலத்தைக் காணமுடியாது.
அத்தகைய ஆபத்தான தொழில் கடல்
தொழில்! அப்படியிருந்தும் இத் தொழிலைப் புரிவோருக்குக் காப்புறுதி இல்லை!
இவைகளைத் தட்டிக் கேட்டு, பரம்பல் செய்து, மீனவ சமுதாயத்துக்குப்
பெற்றுக் கொடுப்பதே இச்சங்கம்
அமைப்பதன் நோக்கம்.
35
மக்கள் குறைபாடுகளை வெளிப் படுத்தும் நோக்கோடு "புரட்சி" என்ற ஏடும் மலருகிறது. இச்செயற்பாடுகளில் தம்மை அர்ப்பணித்துள்ள இளைய சக்தியை வழி நடத்தும் தத்துவாச்சாரியர்க ளாக சின்னையாக் கிழவன், தம்பர் மாஸ்டர், அதிபர் றோமான், அப்புக்
காத்தர் புண்ணியமூர்த்தி ஆகிய பாத்திரங்
கள் செயற்படுத்தப்படுகின்றன. அந்தச் சமூகம் சார்ந்த மனிதநேயப் பணிகளுக்கு எதிர்வினை காட்டும் வில்லன்களாகத்
தனிநாயகம், புஸ்பநாயகம், தாசன் ஆகிய
பாத்திரங்கள் இயக்கம் கொள்கின்றன. தொண்டு செய்யும் தோழர்களின் உழைப்
பின் புனிதத்தை ஆராதிப்பது போல்
ஜீவதாசன், லோறன்ஸ் ஆகியோருக்குக் காதல் விரிப்புகள் பெருகுகின்றன. ஜீவ தாசனை லூர்த்துவும், லோறன்ஸை ஜீவ ராணியும் விரும்புகின்றனர். ஜீவராணி யின் காதல் ஒருதலைக் காதல்! லோறன்ஸ் சிங்களப் பொலிஸ் சிறி சேனாவை நம்பி ஏமாற்றம் கண்ட ரதிக்கு வாழ்வு கொடுக்கிறான். தம்பதிகள் வெளிநாடு இந் நாவலின் கதைப் புனைவு இப்படியாக
இருக்கின்றது.
புறப்படுகின்றனர்.
கீழ் மத்தியதர வர்க்க நாவல் ரகத்துக் குள்ளேயே இதை நிரல்படுத்த வேண்டி இருக்கின்றது. புனைகதை நிகழும் காலப் பகுதி வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சிக்குப் பொற்காலமாக இருந்தது. “எங்களது தந்தை செல்வநாயகத்தின் தலைமை பேறு பெற்றது” எனக் கூறிய சின்னையா கிழவனின் சடலத்தில் தமிழரசுக் கொடி போர்த்தப்படுகிறது. கதாபாத்திரங்கள் தமிழரசுக் கட்சியின் மொழிக் கொள்கையின் தாக்கத்தைப்

Page 20
பெற்றிருப்பது அவர்கள் பேசும் மொழி யில் தெறிக்கும் செழுமையில் காணப் படுகிறது. கீழ் மத்தியதர நாவலாக இருந் தாலும் மனோ ரதிய வாடை மேலோங்கி நிற்கிறது. "வீணையின் நரம்பினை மெலி தாய் வருடினாற் போல் தேனிலும் இனி தான மென்மையான குரலைத் தவழ விட்டாள்" - "கிளிதானா அல்லது குயில் தானா கூவியது" - "மீன்விழி', . "செவ்
விதழ்" - "மலராய் இல்லை, நிலவாய்
அதுவுமில்லை, கதிராய்' - இவ்வார்த்தை வலை விரிப்புகள் பெரும்பாலும் மனோ
ரதிய நாவல்களுக்கே சொந்தமானவை
யென்பது குறிப்பிடத்தக்கது!
இவ்விடயத்தில் படைப்பாளி கூறியி ருப்பதும் நோக்கற் பாலது. "வார்த்தை ஜாலங்களும், சொற் சிலம்பங்களும் கெட்ட வரலாறு கொண்ட சொற்களும் மங்கலான பொருள்
தெளிவற்ற
கொண்ட சொற்களும் மக்களிடையே
மனத் தெளிவை உண்டாக்குவதில்லை. மாறாக மதிமயக்கத்தைத் தோற்றுவிக் கின்றன.” எனவே தன்னால் மறுக்கப் பட்ட அதே தடத்தை மேற்படி மனோ வசிய வார்த்தைகளை சேர்த்திருப்பதன் மூலமாகப் படைப்பாளி அத்துமீறி இருப்பது தெரிகின்றது.
தன்குஞ்சு பொன் குஞ்சு என்ற தடத்தை நேர்மைக்கு மாறாகப் பின் பற்றி னால் எக்காரியத்திலும் முன்னேற்றம் காணமுடியாது! எனவே பக்கச் சார்பற்ற மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டும். இந்த வகையில் இந்நாவலில் ஏதோ வகையில் புகுந்து விட்ட குறை களை வெளிப்படுத்தவே வேண்டி இருக் கின்றது. மக்கள் சார்ந்த இலக்கிய அக்கறையின் நிமித்தம்!
36
时
영
6
9
கதாமாந்தரது உரையாடல்கள் எவ் விடயத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் நீண்ட விரிவுரைகளாகவே இருக்கின்றன.
மு.வரதராசனின் நாவல் பாணியை அது
மனதில் நிறுவுகின்றது. மு.வ. வின்
நாவல்கள் தமிழ் நாவல் உலகில் உச்சம்
பெறாததை வாசகர்கள் அறிந்திருப்பர்.
'.ணும்.” என்ற தொனியுடன் முடிகின்றன. எடுத் துக்காட்டிற்கு 'புதைக்கணும்'. இது கரை யூரின் வட்டார வழக்கைச் சிதைக்
அநேக உரையாடல்கள்
கின்றது. "தாக்கப் போறம்” இதுவே வட
புல வழக்கு. நாவலாசிரியரின் தென்னிந்
தியப் படைப்புகளோடான பரிச்சியத் தைத் துல்லியமாகப் புலப்படுத்துகின்றது.
தன் கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் எதிர்பார்ப்போடு படைப்பாளி சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள், சிக்மன்ட் பிறைற், இராமலிங்கர், விவேகானந்தர்.
ஆகியோரையும் துணைக்கு இழுத்துள்
ளார். இந்த உத்தி ஏற்கனவே தென்னிந் திய ஆக்க இலக்கியவாதிகளால் பயிலப் பட்டதுதான்! இது நாவலாசிரியரின் அக லித்த வாசிப்பிற்கும் கட்டியமிடுகிறது. இருந்தும், குறைவாகக் கற்ற வாசகன் இவைகளுக்கான பொழிப்புரைகளைத் தான் தேடுவான். எனவே, மெத்தப்
படித்த கல்விமான்கள், மரபுவாதிகள்
ஆகியோருக்காகவா இந்நாவலெனக்
கேட்கத் தோன்றுகிறது!
தனது இலக்கியப் படைப்புகளில் விபசாரத்தைக் கக்கியதால் நாடறிந்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ். பொ.)க்கு இலக்கிய உலகு கொடுத்த வரவேற்பை அக்கறையுள்ள வாசகன் இன்னமும் மறந்திருக்க மாட்டான். இருற தும் இந்நாவலும் அதற்குப் புத்தூக்கம்

கொடுக்க முனைந்திருப்பதை வாசிக்க
முடிந்தது. இங்கே குறிப்பிட முடியாத
சில சொற்பிரயோகங்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இயல்பாக இருந்தாலும் எமது இன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையில் இவை தேை தானா?
கடல் தொழிலைப் புரிவதற்குப் புதி தாக முன்வரும் தொழிலாளிக்கு என்ன விதமான சம்பளப் பங்கீடு மற்றும் இறந் தோரது ஞாபகார்த்தமாக வழங்கப்படும் மேசைச் சாப்பாடு என்பவற்றில் கரையூ ரின் பண்பாடு, கலாசாரக் கோலங்களைக் STS முடிகின்றது. இருந்தும் இத்தகைய தொரு நீண்ட நாவலுக்கு இது போதாது! கரையூரின் வரலாற்றுத் தகவல்கள் பெறும்மானம் மிக்கவை. நாவலின் பலத்தை உயர்த்துபவை. சின்னக்கடைச் சந்தையின் கள விபரிப்பு அபாரம்.
அந்தச் குறுநிலத்தின் வரை படத்தையே
ஆசிரியர் வரைந்து விடுகிறார்.
அப்பக்காரி பாத்திரத்தை மேலும் வளர்த்திருப்பின், போதாமையை உணர்த் தும் - கரையூர் அடிநிலை மக்களின் வாழ்வு; அதோடு சேர்ந்த பண்பாட்டு, கலாசாரக் கோலங்கள் நாவலின் போக்கை மாற்றி இருக்கும்!
அகலித்த வாசிப்பைப் பெற்றவரா கத் தன்னைக் கணிக்க வைத்தவரது இம் மட்டு எழுத்துப் பிழையா? வாசிப்பைத் தொய்ய வைப்ப தோடு கருத்து மயக்கத்தையும் தோற்று விக்கின்றதே! சில இன்றைய வாசகர்
படைப்பில்
புதிய நூல்களைப் பார்த்து, கவர்ச்சியாக, வழு வழுப்பாக இருக்கின்றதென வாயூ றுவதுண்டு! புத்தகங்கள் வாசிப்பதற்கே
37
தவிர முகம் பார்ப்பதற்கல்லவென்பதை இவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஈழத் தமிழ் வாசகன் Box Board இல் அச்சிடப்பட்ட பத்திரிகையையும் படித் தவன்தானே! எனவே வாசிக்கும் விடயம் அதன் ஒழுங்கமைப்போடு இருக்க வேண்டும். எந்தவிதத் சிங்காரிப்பும் தேவையில்லை. "நாங்கள் இந்தியாவை வேண்டினும் இழப்போம். சேக்ஸ்பியரின் காவியங்களை ஒருபோதும் இழக்கோம்" எனப் பிரித்தானியரைக் கூறவைத்தது சேக்ஸ்பியரின் படைப்புகளில் காணப் பட்ட காலத்தால் அழியாத கருத்து வளமே. இது நாவலாசிரியரின் கவனத் திற்கு வந்திருக்க வேண்டும். எனவே படைப்புகளின் பெறுமதியை உணர்ந்து அவைகளின் நூலாகத்தைச் செயல்படுத்த வேண்டும்.
ஆக, இந்நாவலைச் சமகாலத் தளத் திலிருந்து பார்க்கும் பொழுது, மக்களால் போற்றத்தக்க பாரிய உண்மையொன்
றைப் புகட்டுகின்றது. கற்பைப் பெண்
ணின் அரணாக நிறுவுபவன் தமிழன். இன்று பயங்கரவாதத்தின் கொடுர பிடிக்குள் அகப்பட்டு அக்கற்புச் சூறை யாடப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக இம்மண்ணுக்குள் தம் மூச்சை அடக்கிக் கொண்ட பெண்கள் ஏராளம். இத்தகைய வர்களில் சிலர் ஏதேதோ காரணங்களுக்
காக இன்னமும் நடைப்பிணங்களாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர் களையும் லோறன்ஸ் கரம்பிடித்த ரதியாக இச்சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டு மென்ற சமுதாயத் தேவையை இந்நாவல் நிறுவுகின்றது. இந்த மனித நேயப் பண்பால் - புயலுக்குப் பின் நாவலோடு மா.கி.கிரிஸ்ரியனும் வாழ்வாரென எதிர்
பார்க்கலாம்! O

Page 21
38
வெள்ளவத்தை சந்தைக் களத்தின் மீது, ஒற்றை நிழல் தெறித்து, முற்றிலும்
k૭ களை இழந்து போன ஒரு தனி
SM மனிதனாக அவன் வந்து கொண்டிருந்« ܠ ܐܬܠ ܐܘ @నో کلمه o 8) தான். இது புறப்பிரக்ஞையாக வருகின்ற வெறும் பார்வைக்கு மட்டுமே மன ?$ شRK۵
ఫ్రాకో தளவில், உள்ளார்ந்த உயிரோட்ட நினைவு ٹھلاڑی SÉ - களில் அவன் பெரியவன். KEM
இதை வெளிப் பிரகடனமாய்க் காட்டிக் கொள்ள என்றுமே அவன் விரும்பியதில்லை. சராசரி மனிதர்களினின்றும் மாறுபாடுகின்ற வித்தியாசமான, உயர்ந்த குணப் போக்குள்ளவன் அவன். பேதமின்றி, எல்லா உயிர்களையும் தன்னிச்சையாக, இரக்கக் குணம் காட்டி நேசிப்பவன். சிறுவயதிலிருந்தே ஆத்மார்த்தமான ஒரு கலை யோக தவ வாழ்க்கை அவனுடையது. கலைக்காகவே அவனின் உயிர் வழிபா டெல்லாம். அவன் ஒரு கைதேர்ந்த நாடக நடிகனாகவும், சிறந்த மேடைப் பேச்சாள னாகவும் இருந்தான்.
அவனைச் சுற்றிலும், பக்கவாட்டிலும், முன்னும் பின்னுமாய் கூட்டம் அலை மோதியது. எல்லாம் இருப்புகள் மறந்து போன தமிழ் முகங்களாய் அவன் உணர்ந்தான். இத்தாக்கத்தின் உள் சூடு தணிய வெகுநேரம் பிடித்தது அவனுக்கு. சொந்த மண்ணைத் துறந்து, நாதியற்று அலையும் இவர்களுக்காக, அவன் மனம் வருந்திச் சிலுவை சுமப்பது இதுதான் முதற்தடவையல்ல! மண்ணின் விழுக்காடு தொடங்கிய நாளிலிருந்து தோன்றிய அவனது இந்த மனவருத்தம் இனி எப்போது தீருமோ தெரியவில்லை.
குடும்ப வாழ்வைப் பொறுத்தவரை, உறவினர் விலங்கு அறுந்து போன சுதந்திர மான ஒரு தனி மனிதன் அவன். நரேந்திரன் என்ற பெயருக்கேற்ப நிலை குலையாத மனஒருமைப்பாடும், மானஸிக உயிர் வழிபாடுமே அவனின் தனிச் சிறப்புகள். அவன் பஸ் தரிப்பிடத்தை அடையும் போது, மாலை மணி நான்காகி விட்டிருந்தது. பொரளை போகும் பஸ்ஸை எதிர்பார்த்து, அவன் காத்து நிற்கும் போது, பின்னாலிருந்து @(5 பெண் குரல் கேட்டது.
“நரேன்..!"
அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான். நிழலொன நீர்க்குமிழியென மறைந்து போகும், சராசரிப் பெண் முகங்களினிடையே, அவர்கள் போலன்றி, முற்றிலும் மாறுபட்ட ஒரு துருவத்தில் தோன்றியவளாய், அவனெதிரே துளசி நின்றிருந்தாள்.
யார் இந்தத் துளசி? ஒ! அவளை அவன் எப்படி மறந்து போவான்! அவன் எவ்வளவு ஆத்மார்த்தமாகத் தான் பிறந்த மண்ணைச், சிரஞ்சீவியான அதன்

இருப்புகளை நேசித்து உயிர் வாழ்ந் தானோ, அது போலத்தான் இவளும் தான் பிறந்த மண்ணே உயிரென வாழ்ந்து, ஒப்பற்ற ஒரு கிராம தேவதை. தேவதை யென்றால் வெறும் மேனியழகால்
கலை மூச்சுக் கொண்ட
மட்டுமல்ல. உயிரிலும், உணர்விலும் கிராமத்துப் பாமரத்தனங்களின் பெருமை களைப் பிரதிபலிக்கும், கள்ளம் கபட மற்ற ஒரு காட்சித் தேவதையாய் தன்னைப் பிரகடனப்படுத்தி, மிடுக்கு மாறாத ஒரு கம்பீரக் களையுடன் அந்த மண்ணெங்கும் வியாபித்து நின்றவள். அவள் ஒரு வாழ்க்கை வழிகாட்டியான கலைத் தேவதை. சில சமயம் ஆசை களை முழுவதும் துறந்த ஒரு தபஸ்வினி போலவும் தோன்றுவாள். அவளின் அகன்று விரிந்த பெரிய கண்கள், புறத் தோன்றுதலான வாழ்வின் நிஜமற்ற பிரமைகளுக்கப்பால், உள்நின்ற உத் வேகத்துடன், சதா உயிர்ப் பிரவாகமான சத்தியத்தின் காட்சித் தரிசனங்களுக் கேற்பமைந்து நிற்பது போல், ஒளிச் சுடரின் சாந்தி ஏந்தி உள்ளத்தைக் குளிர்விக்கும்.
அவளின் காலடியில் மண் தின்னும்
எத்தனையோ அற்ப நினைவுகளுக்கப் பால் தன்னையே அவளில் இனம்கண்டு மெய்சிலிர்த்துப் போவதாய் அவன் உணர்வான்.
அது ஒர் அவர்கள் வாழ்ந்த கலை யுலகப் பொற்காலம். அந்தக் காலத்தின் பொன்வார்ப்புகளில், தம்மையே புடம் போட்டுக் கொண்டு, இறக்கை முளைத் துப் பறந்த பரவசத்தை அவர்களால் எப்படித்தான் மறந்து போக முடியும்?
39
அவளுக்குக் கவிதை பாடுந் திறன் இயல் பாகவே வந்தது. அவள் வாய் திறந்து அதிகம் பேசாவிட்டாலும், ஒரிரு சமயம் அவள் வாய் திறக்கும் அந்த வார்த்தைக ளெல்லாம் கலைநயம் கொண்ட கவிதை
முத்துக்களாகவே கொட்டும்.
அந்தக் கவிதைக் கடலின் உயிர் ஒன்றாகிப் போன மற்றுமொரு துருவ சோதி அவன். அவன் அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித் திருந்தாலும், சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்ததோடு, நிறைய அறிவுப் புத்த கங்களும் வாசிக்கும் பழக்கமும் இருந்த தால், அவன் ஒர் ஆன்ம நேயம் கொண்ட சிறந்த புத்திஜீவியாகவும், சமூகப் பற்றுக் கொண்ட ஒரு நேர்மையான இலட்சிய வாதியாகவும் திகழ்ந்தான். அதுமட்டு மல்ல, அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன். கலை ஆர்வம் மிக்க நாடக நடிகன். சிறுவயதிலிருந்தே அவன் ஒரு கலா ரசிகன். கிராமத்தின் இயல்பான, உயிரோட்ட வாழ்வு நிலைகளிலிருந்து விடுபட்டு விலகிப் போக முடியாத உயிர்மூச்சு அவனுடையது.
இவ்வளவு பெருமைகளையே தனது
நிறைவாக அவன் கொண்டிருந்தாலும்,
சராசரி மனிதர்களோடும், அவர்களின் வாழ்வோடும் ஒன்றிக் கலந்து, களிப்புக் கொண்டாட முடியாதபடி, மறைக்கும் ஒரு கனத்த இரும்புத்திரை போல், அவன் வெகு தொலைவில்
அவனை
வெறும் நிழல் புள்ளி போல் மறைந்து
போக நேர்ந்துவிட்ட கொடுமை பற்றித்
துளசி நிறையவே மனம் நொந்து வருந்தி யிருக்கிறாள்.

Page 22
சிறுவயதில் தூரத்து உறவு முறை யினால் அவனது காலடியைச் சுற்றி ஓடி விளையாடி வலம் வந்தவள்தான் அவள். அவனுக்கென்று உறவு எதுவுமில்லை. தாயும் சிறுவயதிலே இறந்து போனாள். தகப்பன் பெயர் தெரியாது. தெரிந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. அப்படியொரு அவலநிலை அவனுக்கு. அதுவுமின்றி, ஒரு பலசரக்குக் கடையில் ஒர் எடுபிடி வேலை அவனுக்கு.
எனினும் செய்யும் தொழில் மட்டமாக
இருந்தாலும், நேர்மை தவறாத ஒரு நற் பணியாளன் அவன். பார்ப்பதற்கு நேரிலும் ஒரு கர்மயோகி போல் அவுன் எளிமையாகத் தோன்றுவான்.
துளசி வயதுக்கு வந்தபின், ஊரிலே சுற்றித் திரிந்து, அவன் முகம் காண முடி யாமல் அவள் முற்றிலும் சிறகொடிந்து போயிருந்தாள். அது பெண்ணைப்
பூட்டுச் சிறைக்குள் அடைத்து வருத்திய i
அப்படியொரு காலம்! காலத்தின் கதவு பூட்டப்பட்ட நிலையிலும், அவள் மனக் கதவு திறந்து, உயிர் உச்சி வானில் பறந்து போகத்தான் எத்தனை வாசல்கள்!
அது, அவள் மனம், னிறக்கை கட்டி அவனிடமே போய் நிலைக்கொண்டு நிலைத்தது. வாசலில், விதியெங்கும் நிறைந்த ஒளி முகமாய், அவனையே இரகசியமாய் எதிர்பார்த்து அவள் தவம் கிடந்தாள். ஊரெங்கும் மேடையில் உச்ச உணர்ச்சிக் குரல் எடுத்துக் கம்பீரமாய் அவன் தன்னை மறந்து பேசும் குரல் காற்றில் அலை பாய்ந்து கணிரென்று ஒலிக்கும் போது, நாழிகைக் கணக்காய் அவள் தன்னை மறந்து அதைக் கேட்டு ரசித்தபடியே அவனோடு ஒன்றிப் போயிருப்பாள்.
பொன்
40
8 8 영
வெறும் உடம்பாகவே வாழ்ந்து மறைந்து போக நேர்கின்ற மனிதர் களிடையே, ஆத்மார்த்தமான உணர்வு உறவில் நம்பிக்கை கொண்டு, அவள் அவனை விரும்பியது போலவே அவனுக் கும் அவளொரு இலட்சியக் காதலி யானாள். அந்த மண்ணை நேசித்து, அதற் காகவே உயிர் வாழ்கிற பெருமை மாறா மல், அவள் எழுதி வடிக்கும் கவிதைகள் ஓரிரு பத்திரிகைகளில் மட்டுமே அவ்வப் போது வெளிவந்தாலும், அவற்றை யெல்லாம் ஒன்றும் விடாமல் படித்து மனம் நெகிழ்ந்து போனவன் அவன். இது தவிர, நெருங்கிய ஒரு தோழி மூலம் அவள் தனது கவிதைகளை மட்டுமல்ல, கடிதங்கள்ையும் கூடக் கொடுத்தனுப்பு வாள். அதில் அவன் காணும் ஒளி ஒன் றாகவே படும். இந்த மண்! அவர்களிரு வரினதும் இந்த மண்ணின் நேசிப்பு மிகவும் பரந்துபட்டதாய், ஆழம் காண முடியாத ஒன்றாய் இருந்தது. அவர் களின் வாழ்க்கைக் கனவுகளெல்லாம் அதற்காக மட்டுமே.
இயற்கை எழில் கொஞ்சும் அந்தச் சின்னஞ்சிறு கிராமமே, அவளுடைய உலகமாக இருந்தது. சிரஞ்சீவித்தனமான, உயிர்க்களை கொண்டிருக்கிற அதன் மறு வார்ப்புப் போல் தன் முன்னால் தேஜஸ் மிக்க ஒரு சத்திய புருஷனாக நரேந்திரனை இனம் கண்டு அவன் மீது அவளுக்கொரு உன்னதமான உணர்வுக் காதல் ஏற்பட்டதில் தவரொன்று மில்லையே!
எனினும் சமூகப் பார்வையில் வேண்டாத ஒருவனாகக் கரை ஒதுங்கி, உயிர் மறைந்து வாழும் அவனின் நிழல்

கூட அவள் மீது படுவதை விரும்பாத பெற்றோரின் மனநிலை ஆரம்பத்தில் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் விருப்பத்திற்கு உடன்பட்டு, அவள் தன்னை மாற்றிக் கொண்டு ஊன வாழ்வில் இடறுண்டு, அள்ளுண்டு போகின்ற வெறும் துரும்பு போலானாள். சமூக அந்தஸ்தும், Gö வசதியும் படைத்த ஒரு சராசரி மனிதன் அவளுக்கு வாழ்க்கைத் துணையாக வந்த பின், நரேந்திரன் மீது அவள் கொண்ட அந்தக் காதல் அடியோடு மறந்தே போனது. ஆனால், தொடர்ந்து அவன் எழுதிவரும் கவிதைகளில் மட்டும் இன்னும் அவன் உயிர் வாழ்ந்தான்.
அவளைச் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒரு யுகமே முடிந்து போன மாதிரி அவன் உணர்ந்தான். அப்படியான பிறகும், அவள் மாறாமல் தனது மெய் யான ஊர் மண்ணையே தரிசிப்பது போல் அவளின் அந்த அகன்று விரிந்த கண்கள் சத்தியப் பிரகாசமாய் ஒளி கொண்டு திகழ்வதைக் கண்டு அவன் புல்லரித்துப் போனான். முதுமையின் சாயல் படிந்து, அவளிடம் சிறிது தளர்ச்சி தோன்றி னாலும், ஒளி படர்ந்த அழகான அந்தக் கண்களில் மட்டும் இன்றும் இளமை தெரிந்தது. அவள் ஒன்றும் பேசத் தோன் றாமல் அவனின் முகத்தையே. பார்த்துக் கொண்டிருந்தாள். அவன்தான் மிக மிருதுவாக முதலில் பேசத் தொடங் கினான்.
“எப்படியிருக்கிறாய் துளசி???
“எனக்கென்ன வந்தது? வாழ்க்கை கேள்வி மாதிரி ஒடிக்கொண்டிருக்குதே?”
41
"நீ இன்னும் இதை நம்புகிறியே?
“எதை...?”
"உன்ரை இருப்பை சத்தியத்தின் பெருமையை?”
"நான் வாழ்வோடு கரைந்து, நிழ லாய் மறைந்து விட்டதுபோல் தோன்றி னாலும், அது இன்னும் என்ரை நெஞ்சுக் குள்ளே இருக்கு. எங்கடை மண்ணுக்குள் அழியாத மறைபொருளாய் இருக்கு."
"அதுதான் போய்விட்டதே! பற்றி யெரியுதே!" என்றான் அவன் சினங் கொண்டு.
அவள் அதைக் கேட்டுப் பெரும் துயர் எய்தியவளாய் தாங்க முடியாமல் அழுது விட்டாள்.
"எனக்கு இதுதான் பெரிய மன வருத்தமாக இருக்கு. எங்கடை மண்ணின் அவலங்களை நினைத்தால், ஏன் இந்த வாழ்க்கை என்று தோன்றுது! அதை மறந்து இந்த உலகத்தோடு, நிஜமற்ற அதன் இருப்புகளோடு ஒன்றிப் போகலா மென்றால், என்னாலே அது முடி யேலையே நரேன். எப்ப எங்கடை மண் வெளுக்கப் போகுது? நானும் நீங்களும் சேர்ந்திருந்தால் ஒருவேளை இந்த மண் வாழ்ந்திருக்குமோ?”
"எங்கே வாழ விட்டார்கள்? நல்ல வர்களின் கண்களிலே குருதி 6նւգա வைத்தால்தான் இவர்களுக்குச் தோஷம். இதுதான் நாங்கள் விட்ட
பெரிய தவறாக இருக்கலாம். இதுக்கான
சாபத்தை நாங்கள் தானே சுமக்க
வேணும்."

Page 23
"நீங்கள் என்ன சொல்லுறிய ளென்று எனக்குப் புரியுது நரேன். இதுக் குப் பாவ முழுக்குப் போட ஒரேயொரு வழிதான் இருக்கு!”
“என்ன? எல்லோரும் தீக்குளிக்க வேணுமென்று சொல்லுறியே?”
"நான் அப்படிச் சொல்ல வரேலை.
உயிர் வழிபாடு மூலம் இதுக்குப் பரி காரம் தேடுவம்!”
“இப்ப இதை யார் நினைக்கினம்? வழிபடுவதெல்லாம் போலிக்குத்தான். உண்மையான உயிர் வழிபாடே, தறி கெட்டுத் திரிந்து போனபின், சாத்தியமே?”
“ “ rašt முடியாது? நான் ஒன்று சொல்லுவன்! சிரிக்க மாட்டியளே?
“சிரிக்கேலை சொல்லு துளசி!"
"கலி முற்றும் போது கடவுள் வந்து அவதரிப்பாரே! அப்படியொரு கடவுள் அவதாரம், ஒரு புண்ணிய புருஷன் வந்து
எங்கடை மண்ணிலே அவதரித்தால்
எங்கடை பாவம் போகுமென்று நான் நம்புகிறன். இதுக்காகத் தவம் கிடக்க வேண்டியது நானல்ல! இப்ப பிள்ளை பெறத் தயாராகிக் கொண்டிருக்கிற, எங்கடை பெண்களில் ஒருத்திதான் இதுக்காகத் தவம் கிடக்க வேணும்.”
"துளசி! நீ எந்த உலகத்திலே இருக்
கிறாய்? இப்ப இதெல்லாம் சாத்தியப்
படுமே? எங்கடை நினைப்பெல்லாம் எங்கை போய் முடிந்திருக்கு? வெறும் இதுக்காகத் தமிழ் மூச்சு நின்றாலும் பரவாயில்லை என்றல்லவா
u Got tibi !
இது
42
நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறம். இதிலே இப்படித் தீக்குளிக்க நீயொருத்தி..!"
"அப்ப இதுக்கு வேறு என்னதான்
வழி?
“எனக்குப் புரியேலை!"
“வேண்டாம் விடுங்கோ! நான் எல் லாத்தையும் மறந்து போறன். நெருப்புத் தின்னுகிற எங்கடை மண், எப்படியாவது எரிந்து அழிந்து நன்றாகவே பற்றியெரியட்டும்.
போகட்டும். எல்லாம் நான் போறன்."
அவள் அழுகை குழறி, ஆவேசம் கொண்டு பேசி விட்டு, நிழலென மறைந்து போனாள். அன்பு வழிபாடு செய்யப் பிறந்த அவள் பாவம்! அவள் பிறப்பு இந்த மண்ணுக்கு உதவ முடி யாமல் போனதே! இனி வாழ்க்கையை எங்குதான் போய்த் தேடுவது? வாழ்க்கை யென்றால் என்ன? அன்பு வழிபாடு என்
றால் என்ன? கடவுளுக்கே வெளிச்சம்.
அவனுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. அகத்தை மயக்கும் இருட்டில், தள்ளி விடும் பெர்ய்யான புறச் சூழலின் இருப்புகளையே அடி யோடு மறந்து போனவனாய் அவன் பஸ்ஸை எதிர்ப்பார்த்து வெகு நேரமாய் தவம் கிடந்தான். இப்படித் தவம் கிடக் கிற அற்ப பொழுதுகளுக்கு மட்டுமே.

43
ÈkyÖls)] மலையக மக்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கும் கலை களில் பறை இசையும் ஒன்று. தென்னிந்தியாவிலிருந்து ஆசை U 曲 காட்டி இங்கே மலையகத்துக்குத் தமிழர்களை அழைத்து வரும் TEH BF போதே இத்தகைய கலைகளும் அவர்களுடனேயே பயனப்
. . பட்டு வந்து சேர்ந்து விட்டன. செல்லும் ஆனால், வந்த வேகத்தில் இத்தகைய கலைகள் மிக . வேகமாக மறைந்து அழிந்து வருவதுதான் Db01hUU JBL இன்றைய உண்மையான நிலை. மன்னர்கள் . காலத்தில் தென்னிந்தியாவில் பறை பாரம்பரிய இசையை மிக உன்னதமாக வைத்திருந் தனராம் அவர்களுக்கு அரசவையில்
555 IST முதல் மரியாதை செய்யுமளவுக்கு இக்கலைஞர்கள் மிகச் - செழிப்பாக இருந்தனர். இப்போது வெளிநாட்டு இசைக்கிருக்கும் மதிப்பு, L60) Elsa மரியாதை இத்தகைய பாரம்பரிய இசைக்கு இல்லா - பாலா.சங்குபிள்ளை திருப்பது மிகவும் வருந்தத் தக்க விடயமாகும்.
இப்போதெல்லாம் எப்போதாவது வரும் திருவிழா மற்றும் மரண வீடுகளில் மட்டுமே இந்த பறை இசையை ஒலிக்கக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் இந்த இசையை இசைக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகின்றது. இதற்கு என்ன காரணம்? இந்த இசைக் கலைஞர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. யாருமே இவர்களை மதிப்பதுமில்லை! எனவே இவ்விசையை நன்றாக அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கூட இதில் அதிக ஈடுபாட்டினை காண்பிக்காமல் உழைப்பதற்குச் சென்று விட்டார்கள். மலையகப் பாரம்பரிய கலை கலாசாரங்கள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்வோர் கூட இந்தப் பறை இசை சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் விடயங்களைத் தேடித் தெரிவதில் அதிக சிரமத்தினை எதிர்நோக்குகிறார்கள்.
அண்மையில் ஒரு மரண வீட்டில் மிக அற்புதமாக இந்த இசையினை வழங்கிக் கொண்டிருந்த ஓர் இசைக் கலைஞரை நான் கண்டு பேசிய போது அவர் மிக மன வேதனையுடன் இப்படிச் சொன்னார்.
'இந்தப் பறை இசையை வாசிப்பவர்கள்ை மிகவும் கேவலமாக மற்றவர்கள் பார்க்கிறார்கள். சாவுக்கு மட்டும் இசைக்கக் கூடிய இசையில்லை இது. ஆனால் இப்போது அப்படித்தான் நடக்கிறது. பாரம்பரிய கலை, கலாசாரம் பற்றி மேடைகளில் பேசுபவர்கள்

Page 24
இந்த இசையின் இப்போதைய இழிவு நியைப் பற்றி பேசுவதில்லை. பறை இசையைப் பாடசாலைகளில் பாடமாக்க வேண்டும். அரச விழாக்களில் இந்த பறை
இசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை யிலிருக்கும் என்னைப் போன்ற கலைஞர் கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால்
இதெல்லாம் நடக்குமாவென்று தெரிய
வில்லை. அரச சாஹித்திய விழாக்கள் போன்றவற்றில் மற்றக் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவம் எங்களுக்கு
அளிக்கப்படுவதில்லையென்பது உண்மை
யிலேயே மிகவும் வருந்தத்தக்கதொரு விடயமாகும்.”
44
இன்றைய நவீன உலகில் புதியன புகுதலும் பழையன கழிதலும் வரவேற்க் கத்தக்கதொரு விடயம்தான். ஆனால் அதற்காக காலத்தால் அழியாத இத் தகைய பண்பாட்டுக் கலைகளும் அழிவ தென்பது ஏற்புடையதல்ல. "படிப்பது கட்ட பொம்மன் நூல். பிடிப்பது எட்டப்பன் வால்"
'என்ற ரீதியில் அரைகுறைக் கலைஞனாக
இருக்கும் சிலர் திறமையானவர்களுக்கு வழிவிடாமல் தங்களின் செல்வாக்கினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வால் பிடித்துத்
தனி வழி செல்லும் போது உண்மையான
கலைஞர்கள் எப்படித்தான் ஒளி
வீசுவார்கள்?
স্ত্ৰ
N
N N
N
N
N
 
 
 
 
 

45
குழந்தைகளுக்குப் பாவிக்கும் மருத் தெண்ணைக்கு எவ்வண்ணம் சில்லாலை gf s பிரசித்தமோ அதற்கும் மேலாக கவிதைக்கு சில்லையூர் அவ்வூர் தமிழ் உலகில் தனக்கென ஒர் இடத்தை வகித்துள்ளது. இத்தகைய மேன்மையை அவ்வூருக்குத் தந்தவர் தான் தோன்றிக் கவிராயர் எனப்படும் சில்லையூர் செல்வராஜன். அவரது கவின்த ஊற்றுத் தமிழ் இலக்கிய மண்ணைச் செழிப்பாக்கி செலவராஜன் இருக்கிறது. 'தான் தோன்றி நான் சொல்வேன்’ என அவர் கவிதை அரங்கு களில் பாடத் தொடங்கினால், கேட்டுநர்கள் நிமிர்ந்து தமது கண்களை அவரில் பாய்ச்சுவர். செவிகளைக் கூர்மைப்படுத்திக் கவிை தள் 氯臀、 கொள்வர். சபையினரை மெளனம் கெளவி ரூகு அவர்களைப் பரவசப்படுத்தும். அரங்கி லிருக்கும் ஏனைய கவிஞர்கள் அவர் சிந்தும் நுட்பமான முற்போக்கான கருத்து களுக்கு எதிர்வினையைத் தேடிச் சுழல்வர். எழுபதுகளில் அத்தானே அத்தானே' என்ற «9ՆԱՍ6) வரிகள் எப்பொழுது காற்றலைகளில் மிதக்குமென வானொலி நேயர்கள் துரு துருத்துக் கொண்டிருப்பர். அந்த மகுடப் பாடலோடுதான் கே.எம்.வாசகரின் நெறியாள்கையில் ‘தணியாத தாகம்’ நாடகம் ஒலிபரப்பாகும். இந்த வரிகளை கமலினி பாட அதைத் தொடர்ந்து அமரர் சில்லையூர் செல்வராஜன் "திருமணம் ஆனதும் ஒரு மனை வேண்டுமென்கிறாய் அதுதானே.” ள்னத் தனது மோகனக் குரலை ஒலிப்பார். அதன் பின்னரே மக்கள் வங்கியின் அனுசரணையில் ஒலிபரப்பான, யேசுரெட்ணம் போன்ற புகழ் பெற்ற வானொலி நடிகர்கள் சேர்ந்து நடித்த தணியாத தாகம்’ நாடகம் ஒலிபரப்பாகும். இதை யாழ்ப் பாணத்து மண் வாசனை கமழ எழுதியவர் செல்வராஜன். கமலினியோடு சேர்ந்தும் நடித்தார். இலங்கை வானொலி வர்த்தக சேவையின் விளம்பரங்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தந்தவர். சொற்ப வார்த்தைகளில் அர்த்தமும் ஆழத்தையும் பிழியும் விளம்பர வரைவிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவர். 'குமிழ்முனைப் பேனா போன்ற புதிய சொற்களைத் தமிழ் நாக்களை உச்சரிக்க வைத்தவர். மெல்லிசைக்கு ஒரு முகத்தைக் கொடுத்தவர். தேசிய ஒலி பரப்பில் அறுபதுகளில் ஒலிபரப்பாகி செல்லக்கண்ணு வந்த 'கலைக்கோலம் கலை மஞ்சரிக்கு

Page 25
ஒரு நிமிர்வைக் கொடுத்தவர். சிங்கள சினிமாவை விமர்சித்தது மட்டுமன்றி அப்பொழுது தயாரிப்பாளராகப் பணி புரிந்த சி.வி.இராசசுந்தரத்தின் அனு சரணையோடு அமரர் காமினி பொன் சேகா போன்ற பிரபல சிங்கள நடிகர் களையும் பேட்டி கண்டு ஒலிபரப்பினார். உரைச் சித்திரங்கள், கவிதை நாடகங்கள் என்பன அடிக்கடி வானொலியில் ஒலி பரப்பாகக் கை கொடுத்தார். உரிய நடுவர் களால் அறிவிப்பாளராகத் தெரியப்பட்டி ருந்தும் தனது சுயகெளரவத்தை உத் தேசித்து வெளிக்களக் கலைஞராகவே செயல்பட்டார்.
இவர் எழுதிய 'ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி’ (1967) என்ற ஆய்வு நூல் குறித்து தமிழ் நூல் பகுப்பாய்வளார் எஸ்.கே.சிவகுமார் இப்படி எழுதுகிறார். 1891 - 1962 காலப்பகுதியில் இலங்கை யில் வெளியாகிய சில நாவல்கள் பற்றிய அரிய பல செய்திகளையும் தகவல்களை யும் திரட்டித் தந்ததுடன் அப்படைப்பு களிலிருந்து சிலபகுதிகளை எடுத்துக் காட்டியிருக்கும் சில்லையூர் செல்வராஜன் மகத்தான ஒரு பணியைச் செய்துள்ளார்.”
(பக். 258 - இந்திய - இலங்கை
இலக்கியம் ஒரு கண்ணோட்டம்.)
முற்போக்கு இலக்கியத்தில் ஆழக் கால் பதித்த படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வுக்குட்படுத்தும் நோக்கோடு - கடந்த சில மாதங்களாக - விபவி கலாசார மையம் + முற் போக்கு கலை இலக்கியப் பேரவை என்பன ஒன்றிணைந்து புனைகதை இலக்கியம் சம்பந்தமான ஆய்வரங்கு களை நடாத்தியதை இலக்கிய நேசர்கள்
46
S 영
3 d
அறிவர். அதை மேலும் விரிவுபடுத்தி
இந்நாட்டின் கவிதா மண்டலத்தின் முற்
போக்கு வீச்சைத் தற்பொழுது திறனாய்
வுக்கு உட்படுத்தி இருக்கின்றன. இத்
தொடரில் முற்போக்குக் கவிஞர்களான
சில்லையூர் செல்வராஜன், இ.முருகை
யன், எம்.ஏ.நுஃமான், பசுபதி (யாழ்ப்
பாணக் கவிராயர்), ஏ.இக்பால், சுபத்
திரன் போன்றோரது கவிதை ஊற்றுக்
கள் தக்க இலக்கிய திறனாய்வாளர் களால் ஆய்வு செய்யப்படுமென அறி
விக்கப்பட்டுள்ளது. கடந்த 11.06.2006 இல் பல்கலை வேந்தர் அமரர் சில்லை
யூர் செல்வராஜனது கவிதைகள் திறனாய்வு செய்யப்பட்டன. வழக்கம்
போல் இந்நிகழ்வு வெள்ளவத்தையி லுள்ள தர்மாராம மாவத்தையிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில்
நடைபெற்றது. நிகழ்வுக்கு கவிஞர் ஏ.இக்பால் தலைமை தாங்க, பிரபல
விமர்சகர் ஏ.முஹம்மது சமீம் ஆய்வுரை நிகழ்த்தினார்.
g5606)6OLDuSOU
கவிஞர்களாலும் ஆக்கப் படைப்பு களைப் படைக்க முடியுமென்பதற்கு சில்லையூரின் ‘தணியாத தாகம் தக்க சான்று. சினிமா பிரதி எப்படி எழுத வேண்டுமென எழுதினார். இது கவிஞர் கண்ணதாசனின் பாராட்டைப் பெற்றது. அறிவு வீரியத்தை அநுபவ ரீதியாக வெளிப்படுத்தினார். தற்பொழுது வானொலியில் பேட்டி காண்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தாமே அனைத்தையும் கூறித் தமது மேதா விலாசத்தை அம்பலப்படுத்துகின்றனர்.

இதனால் பேட்டி கொடுக்கும் பிரமுகர் இந்நிலை
ஏமாற்றம் காண்கிறார்.
கவிஞர் நாவற் குழியூர் நடராசன்
காலத்தில் இருக்கவில்லை.
ஆய்வுரை - ஏ.முகம்மது சமீம்
அமரர் செல்வராஜனுக்குத் தமிழ் வளைந்து கொடுத்தது. அவரது கவிதைகள் சொல் இன்பம், பொருள் இன்பம் என்பவற்றை பிழிற்றின. தமிழ் கவிதைகளுக்குச் சொல்நயம், தாள லயம், ஓசை நயம் என்பன இருக்க வேண்டும். இசையும் சேர்ந்திருக்க வேண்டும். கவி ஞர்கள் பாடிய காவியங்களைப் பொக் கிஷங்களாக நாம் மதிக்கிறோம். தனிப் பாட்டு ஒரே அநுபவத்தையே பேசும். தான்தோன்றிக் கவிஞரது கவிதைகள் இத் தகைய தனிப் பாட்டுகளே. பாரதி இன்ன
மும் தமிழ்ச் சமுதாயத்தில் சாகாவரம்
கொண்டு வாழ்ந்து வருவதற்கு அவரது நெடுங் காவியங்ளே துணை நிற்கின்றன. சிறந்த தத்துவப் பற்று, குறித்து உன்னதமான பார்வை, மனித
வாழ்க்கை
நேயத்தைக் கொப்பழிக்கும் கொள்கை என்பன செல்வராஜனிடம் இருந்தும் அந்த வளங்களைப் பாய்ச்சி அவர் காவியமொன்றைப் பாடாது போய் விட்டார். கவிஞர்களை நிழல் போலத் தொடரும் வறுமை செல்வராஜனையும் விட்டுவிடவில்லை. புலமையும் வறுமை யும் நாணயமொன்றின் இரு பக்கங்களே! இதுவே அவரைக் காவியம் பாடாது முடக்கி அவரைத் தனிப்பாடல்களில் வைத்திருக்க வேண்டும். அவருக்கு நிரந்தரத் தொழில் இருக்கவில்லை. ஏமாற்றங்கள் அவரது
ஊக்கம் கொள்ள
மனச்சாந்தியைக் குலைத்தன. அவர்
47
காவியமொன்றைப் பாடாது விட்டது ஈழத்து இலக்கியத்திற்கு மட்டுமன்றித் தமிழ்க் கவிதா உலகிற்கும் பேரிழப்பென் பேன். அவரது கவிதா வல்லபங்கள்
தமிழுலகெங்கும் பரம்பலாக வேண்டும்.
செல்வராஜனிடம் புதுமைப்பித்தனது தாக்கத்தைக் காணக்கூடியதாக இருக் கின்றது. அவர் கவிதைகளில் கேட்கிறது. எழுத்
பாரதியின் தொனிப்பொருள்
தாளன் சூழலைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற நோக்கர். வரலாற் றுச் சூழலிலிருந்து மனிதன் பெற்ற
அநுபவம் ஏராளம் என்பார்.
மனித நேயத்துக்கு இலக்கணமாக
விளங்குவது இராமாயணம் மனித நேயம்
இலக்கியத்தில் இருக்க வேண்டும். இலக்
கியம் கற்பனைக் கதை அல்ல. சாதிப்
பாகுபாட்டால் இன்னல் படும் மக்களைக்
கவிஞர் ஆத்மார்த்தமாகப் பார்த்தார். சாதி அழிப்பை கலை வனப்போடு அங்கத மொழியில் அவர் சாடி இருக்கிறார். சமு தாயத்தில் நிகழ்ந்து வரும் அநியாயங் களை அழித்தொழிக்க அவர் கடவுளிடம்
யாசித்தார். அறங்கள் தீர்க்காயுசோடு
வாழத்தான் காத்தல் கடவுளாக வேண்டு
மென்றார்.
அங்கதக் கவிதை பாடு வதில்
அவருக்கு நிகராக எவரையும் சுட்ட
முடியாது. தமிழ் இலக்கியத்தில் இக் கவிதைகளால் மக்களைப் பரவசப் படுத்தியவர் புலவர் காளமேகம். பச கோவிந்தத்தை பசி கோவிந்தம் எனப் பாடி ஏழைகளை மேன்மைப்படுத்தினார். சுதந்திர இலங்கையின் முதல் தேசாதிபதி ஒலிவர் குணதிலக்கா, முன்னாள் பிரதமர் களான டட்லி செனநாயக்கா, S.W.

Page 26
R.D.பண்டாரநாயக்கா ஆகியோரை நை யாண்டி செய்யும் அங்கதக் கவிதை களைப் பாடி வாசகரை விழிப்புற வைத்தார். "சண்டாள இராவணன் சாதித் தமிழனை." எனப் பாடி பண்டார நாயக் காவைச் சாடினார். சேக்ஸ்பியர், செல்லி போன்றோரது ஆங்கிலக் கவிதைகளை அவைகளின் கருத்துக்கள் அட்சரம் பிசகாது தமிழ்மொழியில் தந்தவர்.
தான் மரணித்தாலும் தனது கவிதை கள் வாழும் என்ற நம்பிக்கை செல்வ ராஜனுக்கு இருந்தது. தமிழ் கவிதையில் பாய்ந்த புதிய அலைகளுக்கும் முகம் கொடுக்கும் முகமாகப் புதுக்கவிதை களையும் பாடினார்.
இந்த ஆய்வுரை கலந்துரையாடப் பட்ட பொழுது கேட்டுநர்கள் வெளி யிட்ட கருத்துக்கள் கீழே பதிவாகி
யுள்ளன. -
கவிஞர் மாவை வரோதயன் -
அமரர் செல்வராஜன் மலை போல் எழுதிக் குவித்தார். அவரது படைப்பு களுக்கான இந்த ஆய்வுரையில் போதாமை தென்படுகின்றது. இன்ன மும் அவரது உன்னத படைப்புகள் நூலாக்கப்படவில்லை. இலக்கியத்தின்
காப்பாளர்களெனத் தம்மை இனங்
காட்டியவர்கள் செல்வராஜனைத் திட்ட மிட்டு அழித்தனர். பத்திரிகை நறுக்குகள் அழிக்கப்பட்டன. தமிழனுக்குத் தேவை யான, ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய, இவரால் எழுதப்பட்ட தொடரான 'பாரதி ஒரு பத்திரிகையாளன்’ என்ற கட்டுரைத் தொடர் இன்னமும் நூலாக்கம் பெறவில்லை. கவிஞரது சகல படைப்பு
48
களும் நூலாக்கப்பட்டு, அந்நூல் திற னாய்வு செய்யப்பட்டால், நிச்சயமாக ஒரு யுகத்தின் பெரும் கவிஞன் எம்மோடு இந் நாட்டில் இருந்தானென்ற உண்மையைத் தமிழ் இலக்கிய உலகு அறிய முடியும்.
கமலினி செல்வராஜன் (மனைவி - வானொலி, தொலைக் காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்.)
தனது குடும்பத்தின் ஏழ்மை காரண மாகப் பதினான்கு வயதில் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். உயர்தர பாட சாலைச் சான்றிதழுக்காக (H.S.C.) படித்துக்கொண்டிருந்த பொழுது ரியூசன் கொடுத்தே தனது படிப்பையும் மேற் கொண்டார். அவரொரு இடதுசாரியாக இருந்தமைக்கு இந்த ஏழ்மை நிலை யையும் ஒரு காரணமாகச் சுட்டலாம். அவர் திருமலையில் இருந்த காலத்தில் இவரது மேடைப் பேச்சுக்களால் ஈர்க்கப் பட்ட தமிழரசுத் தந்தை S.J.V.செல்வ நாயகம் ‘சுதந்திரன்' பத்திரிகையோடு அவரை இணைத்தார். சுதந்திரனில் வெளியாகி மக்களுக்குப் பரபரப்பை ஏற்படுத்திய தலைப்புகள் அவரது உரு வாக்கங்களே. இருந்தும் அவரது திறமைக்கேற்ற வாய்ப்புகள் பலிக்க வில்லை. முட்டுக் கட்டைகளே எதிர் கொண்டன. இலங்கையின் தேசிய சின் னத்தில் சிங்கம் வாளை ஏந்தியிருப்பதை விமர்சித்தார். எழுத்தைத் தனது வாழ் வாதாரமாகக் கொண்ட அவரது சேமிப்பு அவரது உற்றாராலும் பங்கு போடப் பட்டது. இந்தியாவில், கோபல் நகரில் நடைபெற்ற சர்வதேசக் கவிஞர்கள் மகா

நாட்டில் கலந்து கொண்டு கவி பாடினார். வீரகேசரி பத்திரிகையும் அவரது பணி யைப் பெற்றது. ஞாயிறு பதிப்பிற்குப் பொறுப்பாகவும் இருந்தார். அச்சந்தர்ப் பத்தில் கதையொன்றை எழுத்தாளர் என். கே.ரகுநாதன் எழுதுவதாக அறிவிப்புச் செய்து விட்டு, அதன் பின் என்.கே. ர.விடம் கூறி சிறுகதையை வாங்கினா ராம். இதேபோல் டொமினிக் ஜீவா, கே.டானியல் ஆகிய எழுத்தாளரது சிறு கதைகளையும் வெளி யிட்டு அவர்களை இலக்கிய உலகிற்குப் பிரசித்தப்படுத்தி னார். அன்று வளர் இளம் எழுத்தாளராக இருந்த சாந்தினி என்பவரை எழுத வைப் பதற்குப் பரம பிரயத்தனப்பட்டார். வீர கேசரியில் ஈழத்துப் படைப்புகள் வெளி வருவதற்கு களமமைத்துக் கொடுத்தார். இவருக்கு பெயரை எடுத்துக் கொடுத்த எழுத்துருக்கள் - சேக்ஸ்பியர் என்னும் ஜீவநதி, ஊரட்ங்குப் பாடல்கள், நா ஆயுதம், மெளனம் கலக நாஸ்தி தவறு என்பனவாகும். நான் அவருக்கு மனைவி யாக வாழ்ந்த காலம் என் வாழ்வில் மிகவும் சந்தோஷமானது. கடைசி வரை அவர் தனது மன ஓர்மத்தை இழக்காது வாழ்ந்தார். "காலா இங்கே வாடா உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என மரணத்தைச் துச்சமாக நினைத்தார்.
தி.ஞானசேகரன் (ஆசிரியர் "ஞானம் இலக்கிய சஞ்சிகை)
இசையோடு பாடுவதே செல்வ ராஜனின் பலம். இன்று எழுதப்படும் கவிதைகள் அப்படியானவையல்ல. அவரையொரு மரபுக் கவிஞர் எனலாம். இசையோடு பாடக் கூடிய கவிதைகள்
49
யும் இயற்றியுள்ளார்.
மரபைச் சார்ந்தவையே மக்கள் மனதில் ஆழமாகப் பதிவதற்கும் இவையே காரண மாகும்! அவர் மெல்லிசைப் பாடல்களை அவைகளுள் கவனத்தைப் பெறுபவை - ஞாயிறென வந்தாள், சிக்கனம் செல்வமடி என்பவை. ஆய்வுரையில் இவைகள் கூறப்பட வில்லை. தமிழ் தேசிய உணர்வு மிக்கவர்.
சில்லையூர் செல்வராஜன் ஒரு மகாகவி!
சோ.தேவராசா (கலை இலக்கியப் பேரவை)
கவிதைகளை நகைச்சுவையாகப் படைத்தவர் சில்லையூர் செல்வராஜன். அவரது விகடத் துணுக்குகள் பிரமாத மானவை. அவரொரு சிறந்த நடிகர். பல துறை ஆற்றல் கொண்ட விற்பன்னர். விபரணப் படங்களில் கிராமியச் சூழலைக் காட்சிப்படுத்தினார். நடித்தார். தனது பணிமனையைக் கணனி முறையில் ஒழுங்குப்படுத்திப் பேணினார். சில்லை யூர் செல்வராஜன் “ஞான செளந்தரி", கூத்து நூலுக்கு எழுதிய முகவுரை கவனத்திற்குரியது. புதுக் கவிதைக்கும் தன்னால் இலக்கணம் வகுக்க முடியு மென்றார். அரங்கப் பண்பாட்டில் இன்றைய சஞ்சிகைகள் விடுப்புகளைத்தான் பேசு
புதுமையைக் காட்டினார்.
கின்றன. முற்போக்கு ஆக்கங்கள் பாது காக்கப்பட வேண்டும். அத்தோடு பகிர்வு செய்யப்படவும் வேண்டும்.
பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜனை அவரது அபிமானிகள் இன்னமும் மறக்காதிருப்பதை மண்டபத்
தில் குழுமி இருந்த பார்வையாளர்கள்
நிரூபித்தனர். தேநீர்ச் சுவையோடு
கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Page 27
50
இரண்டாண்டு கால ஆசிரிய கலா sk LU 事 சாலை வாழ்வு முடிந்து, பண்டார்வளை 1O. பூச்சி 0
அட்டம்பிட்டிய மகா வித்தியாலயத்
திற்கு ஆசிரியராக மாற்றம் பெற்று பூச்சியமல்ல் 05.01.1964 அட்டம்பிட்டிய வந்து
சேர்ந்தேன். அட்டம்பிட்டிய, பண்டார
வளை நகரில் இருந்து சுமார் பதினைந்து தெணியான் கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் சிறிய ஒரு பட்டினம். அந்தப் பட்டினத்திற்கும் பண்டாரவளை நகருக்கும் இடையே அடிக்கடி பஸ் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பசுமையான தேயிலைத் தோட்டங்கள் நான்கு திக்குகளிலும் சூழ்ந்திருக்கும் அழகிய சிறிய பட்டினம் அது. அந்தப் பட்டினத்துச் சேலைக் கடை "சரோஜா ஸ்ரோஸ் மாடியில் நான் தங்கி யிருப்பதற்கு முதலில் இடம் கிடைத்தது. கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் என்னோடு படித்த மூத்த ஆசிரியர் வீ.கே.செல்லையா அங்கு வந்து சேலைக் கடை மாடியில் உடன் தங்கினார்.
அட்டம்பிட்டிய போய்ச் சேர்ந்த மறுநாள் (06.01.1964) மதிய உணவை முடித்துக் கொண்டு இருவரும் மகா வித்தியாலயம் சென்றோம். அந்த மகா வித்தியாலயத்தில் காலை நேரம் சிங்களப் பிள்ளைகளுக்கும், நடுப்பகலின் பின்னர் தமிழ்ப் பிள்ளை களுக்கும் ஒரே கட்டடத்தில் மாறி மாறி வகுப்புகள் நடைபெற்றன. பகல் வேளை கடுமையான வெயில் எறிக்கும். இரவு வந்துவிட்டால் கொடுமையான குளிர் வருத்தும். எந்த நேரத்தில் மழை பொழியுமென்று சொல்ல இயலாது. திடீரென மழை கொட்டும். அடுத்தகணம் வெயில் வந்து காயும்!
அந்த வித்தியாலயம், அந்தப் பிரதேசத்தின் சீதோஷ்ணம் எல்லாமே எனக்குப்
புதிதாக, புதுமையாக இருந்தன. அந்தப் பிரதேசத்தின் சூழலுடன் நான் இயைந்து போவதற்கு, எனக்குச் சில காலம் தேவைப்பட்டது.
எனக்கு ஒரு வருடம் முன்னதாக ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டு கலாசாலையில் இருந்து வெளியேறிய திருகோணமலையைச் சேர்ந்த நண்பர். தா.பி.சுப்பிரமணியம் பண்டாரவளை நகரிலுள்ள மகா வித்தியாலயம் ஒன்றில் அப்பொழுது ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அக்காலத்திலேயே பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்து விட்ட ஓர் எழுத்தாளர். நான் ஆசிரிய கலா சாலையில் இருக்கும் பொழுது இடையிடையே எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டி ருந்தார். அந்தத் தொடர்பு அறுந்து போகாத நிலையில் நான் அட்டம்பிட்டிய வந்து சேர்ந்த பின்னரும் அவர் கடிதங்கள் எழுதினார். அவரது கடிதம் எப்பொழுதும் ஓர் அஞ்சலட்டையாகத்தான் இருக்கும். அஞ்சலட்டையில் பச்சை அல்லது ஊதா

வண்ண மையினால் மணி மணியான
எழுத்துக்களில் அழகாக எழுதுவார். அவர் கையெழுத்தில் வரும் அஞ்ச லட்டைகளை கையில் எடுத்துக் கண் களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போல இருக்கும். அப்படியொரு நேர்த்தி; புனிதம்; அழகு. அவர் எழுதும் அஞ் சல்கள், வழமையாக எனது இலக்கிய ஆர்வத்தைத் தூண்டி விடுகின்றவை களாக இருந்து வந்தன.
நான் அங்கு வந்து சேர்ந்து ஆறு
மாத காலத்தின் பின்னர் அவர் எழுதிய ஓர் அஞ்சலில், ஒய்வு நேரத்தை வீணாக்காது, அதனைப் பயன்படுத்தி இலக்கியம் படைக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்.
நான் உள்ளே கனன்று கொண்டி ருந்தவன்.
'நாவிதனுக்குச் சாஹித்தியப் பரிசு கிடைத்திருக்கிறது” எனச் சாதி சொல்லி இழிவுபடுத்தக் கேட்டிருந்தேன்.
கலாசாலை சஞ்சிகை ஆசிரியராக வருவதில் இருந்து தடுக்கப்பெற்று உதாசீனப்படுத்தப்பட்டேன். கலாசாலை விட்டு வெளியேறிய பேனாவைக் கையில் தூக்குகின்றேன் எனச் சபதமெடுத்திருந்தேன்.
பின்னர்
நெஞ்சில் பட்ட மனக்காயங்களி னால் உள்ளே கனன்று கொண்டிருந்த எனது உணர்வுகளை நண்பர் சுப்பிர மணியம் ஊதிப் பெருப்பித்தார். அவர் தந்த தூண்டுதலின் பிறகு, "இனி, நானும் எழுதுவோம்" எனத் தீர் மானித்துக் கொண்டேன்.
51
நான் தங்கியிருந்த சேலைக்கடை மாடியில் அமர்ந்திருந்து எழுதுவதற்கு வசதியாக மேசை, கதிரைகள் இருக்க வில்லை. படுத்து எழும்புவதற்கு, எனக் கும் என்னுடன் தங்கியிருந்த ஆசிரி யருக்கும் ஒவ்வொரு கட்டில்கள் மாத் திரம் இருந்தன. இந்தச் சூழ்நிலையில் நான் படுத்துறங்கும் கட்டிலில் அமர்ந் திருந்து, எனது மடியின் மீது தலை
யணையை வைத்து, அதன் மேல் ஒரு
பயில் வைத்து, அதில் காகிதத்தை வைத்து எனது முதற் சிறுகதையை எழுதி முடித்தேன். அதனை 15.07.1964ம் திகதி தபாலில் இட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த 'விவேகி" சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தேன்.
நான் பண்டாரவளை சென்று சிறிது காலத்தின் பின்னர் எனது தந்தை யாரின் இடதுகால், கை இரண்டும் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு அவர் நிரந்தர நோயாளி ஆனார்.
பாடசாலை இரண்டாந் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டது. நான் 13.08.1964 காலையில் பண்டாரவளை அட்டம்பிட்டியவில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன். நான் வந்திறங்கும் கொடி காமம் புகையிரத நிலையத்துக்கு, சற்றுக் காலதாமதமாகவே அன்று புகையிரதம் வந்து சேர்ந்தது. அதனால் நான் வீடு வந்து சேருவதற்கும் தாமதமானேன்.
நான் வீடு வந்து சேர்ந்து சிறிது நேரத்தின் பின்னர், எங்கள் வீட்டுப் படலையில் தபாற்காரனின் சயிக்கிள்

Page 28
மணியோசை கேட்டு நான் வெளியே
போனேன். தபாற்காரன் எனது கையில் அந்த மாத 'விவேகி"யைத் தந்துவிட்டுச் சென்றான். அந்தச் சஞ்சிகையைச் சுற்றி முகவரி எழுதப் பெற்ற காகிதத்தைக் கிழித்து, சஞ்சிகையைத் திறந்து புரட்டிப் பார்த்தேன். அப்பொழுது எனது கண் களையே எனக்கு நம்ப முடியவில்லை. நான் சிறுகதை அனுப்பி முழுமையாக ஒரு மாத காலங்கூட இன்னும் ஆக வில்லை. அந்த நிலையில் எனது முதற் சிறுகதை 'பிணைப்பு விவேகியில் பிரசுரமாகி இருந்தது.
அப்பொழுது எனக்குண்டான
மகிழ்ச்சியைச் சொற்களினால் வெளி
யில் எடுத்துச் சொல்லிட இயலாது. அப்படி ஒர் ஆனந்தம்; இல்லை பேரா னந்தம் எத்தனை தடவைகள் அந்தச் சிறுகதையை நான் படித்தேனோ எனக்குத் தெரியாது. பொதுவாக நூல் களைத் திரும்பத் திரும்ப படிக்கும் வழக்கம் இல்லாதவன் நான். அப்படிப் படித்துக் கொண்டிருப்பது எனக்குச் சலிப்பாக இருக்கும். ஆனால் எனது முதற் படைப்பில் அப்படி என்னதான் இருந்ததோ! சலிக்காமல் படித்தேன்; படித்தேன்; மீண்டும் மீண்டும் படித்தேன்.
அந்த எனது முதற் சிறுகதையைத்
தெணியான்" என்னும் பெயரிலேயே எழுதி அந்தப் பெயரை எழுத்தில் பதிவு செய்தேன். இன்று தமிழ் இலக்கிய உலகில் தான். ஆனால் உண்மையில் எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும்
'தெணியான்" என்பது நான்
52
扮 3 영
·장 S
தெணியார்தான். இந்தத் தெணியார் களின் முதல்வனாக ஒரு தெணியான் இருந்தார். அவர் பரம்பரையில் வந்த அவருடைய வாரிசுகள்தான் நாங்கள். அந்தத் தெணியான் இல்லாது எழுத்
தாளர் தெணியான் பிறந்து, வளர்ந்து
வந்த குடும்பப் பின்னணியை முழுமை யாக விளங்கிக்கொள்ள இயலாது!
எனது வீட்டுக்கு வடக்குத் திசை யில் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் பாக்கு நீரிணை இருக்கின்றது. அந்தக் கடற்கரை ஓரமாக பருத்துத்துறையில் இருந்து காங்கேசன்துறை வரை பிரதான வீதி ஒன்று நீண்டு செல்லுகிறது. பொலிகண்டி கந்தவனக் கோயில் சந்திக் குக் கிழக்கே, இப்பொழுது கடற்கரை யோரத்தில் மீன் வியாபாரம் நடை பெறும் சந்தைக்கு நேர் எதிரில், பிர தான விதிக்குத் தெற்குப் புறத்தில் சிதைந்து போன நிலையில் இன்றும்
ஒரு மடம் இருக்கிறது. அந்தப் பகுதி
யில் வாழும் முதியவர்களால் இப் பொழுதும் 'பள்ளன் மடம்' என அது
அழைக்கப்பட்டு வருகின்றது.
அந்த இடத்தில் முதன் முதலாக மடத்தைத் தாபித்தவன் பள்ளன் மடந்தையன், மடத்துக்குப் பின்னே யுள்ள நிலத்தில் மடந்தையன் குடும்பத் துடன் வாழ்ந்து வந்த வீடு இருந்தது. மடந்தையன் பிரதான விதி அருகே வீடு, மடம் கட்டி வாழ்ந்த பதின்நான்கு பரப்பு நிலமும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. அந்த நிலம் 1819ம் ஆண்டு ஆடி மாதம் 15ந் திகதி நொத்தாரிசு சிதம்பரநாதர் கதிர்காமத்தம்பியினால்

உறுதி முடித்து மடந்தையனுக்குச் சொந்தமாக வழங்கப்பட்டது. அங் கிருக்கும் மடம் பள்ளன் மடந்தை யனால்தான் நிறுவப் பெற்றது என் பதனை அக்காலத்தில் வழங்கிய பின் வரும் கப்பற் பாடல் தெளிவுபடுத்து கின்றது.
"பருத்ததொரு சக்கோட்டை திக்கமும் காண்க பள்ளன் மடத்தடியும் சோலைவனம் தோன்ற ஒருத்தசிவ வாலயமாம் கந்தவனக் கடலையும் பிள்ளையா கோவிலும் வன்னிமரமும் தெரிகுது ஒருத்தனை இருத்திய ஊரணிக் கரையில் ஒடியே வருகுது போடடா நங்கூரம் 6JC3so(3u(3son...'
மடந்தையன் வாழ்ந்த அந்த நிலத்தின் பெயர் நீத்துவான் தெணி. துரும்பதுறை என்ற ஒரு பெயரும் அதற்கு வழங்கி வந்திருக்கின்றது.
இரண்டு நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் பொலிகண்டி கடற்கரையில் பிரதான விதி அருகே தனது சொந்த நிலத்தில் மடம் அமைத்து, வீடு கட்டி வாழ்ந்த மடந்தையன், பின்னர் அவருக்கு உண்டான ச்மூக நிர்ப்பந்தம் காரணமாக, தனது வீடு நிலம் என்ப வற்றைக் கைவிட்டு விட்டுக் குடி பெயர்ந்து, கிராமத்துக்குள்ளே வந்து புதிதாகக் குடியேறி வாழ்ந்த இடந்தான் நாங்கள் பிறந்த வீடு. நீத்துவான்
53
தெணியில் இருந்து வந்து குடியேறிய தனால், அவர் வாழ்ந்த இடம் தெணி எனவும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் - பரம்பரை பரம்பரையாக - இன்றுவரை தெணியார் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றார்கள். அந்தத் தெணியாரில் ஒருவன்தான் நான். தெணியான் என்பது எனது குடும்பப் பெயர். இலக்கிய உலகில்
அது எனது புனைபெயர்.
இரண்டு நூற்றாண்டு காலத்துக்கு
முன்னர் இந்த மண்ணில் இழைக்கப்
பட்ட சமூகக் கொடுமையின் - சாதிக் கொடுமையின் - தெணியான் என்னும் எனது புனை பெயர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இரு நூறு ஆண்டுகால வரலாற்றின் ஒரு பகுதி எனது புனைபெயரின் பின்னே
அடையாளந்தான்
மறைந்து கிடக்கின்றது.
அந்த வரலாற்றின் தலைமகன் தான் புதிதாக வந்து குடியேறிய இடத்தில் - எங்கள் வீட்டுக்கு முன்னே, ஈசானத்தில் கிணறொன்று தோண்டி னார். எங்களுக்குச் சொந்தமான அந்தக் கிணறுதான் நான் அறிந்த காலம் வரை எங்கள் கிராமத்துப் பெரும்பகுதி மக்கள் பயன்படுத்தும் பொதுக் கிணறாக இருந்து வந்தது. அந்தக் கிணற்றை தெணியிற் கிணறு' என்றும், ஆழக் கிணறு எனவும் பெயர் சொல்லி அழைத்தார்கள். கிணறு தோண்டிய துடன் மாத்திரம் அமையாது எங்கள் வீட்டுக்குத் தெற்கே செட்டிதுரை என்னும் இடத்தில் அண்ணமார் வழி காட்டுத்தலம் ஒன்றினை அவர் நிறு

Page 29
வினார். இன்று அந்த ஆலயம் செட்டி துறை சித்திவிநாயகர் ஆலயமாக மாற்றமுற்று வளர்ந்து விளங்குகின்றது.
எங்கள் தலைவன் மட்ந்தையனுக்கு மூன்று பெண்களும், ஒர் ஆணுமாக நான்கு பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். அவருடைய கடைசி மகளின் இளைய புத்திரன்தான் எனது தந்தை வழிப் பாட்டன். எனது பாட்டனாருக்கு மூத்த வரான அவர் தமையன் அந்தக் காலத் தில் பிரசித்தி பெற்ற ஒரு வைத்தியராக இருந்தார். அவரது மூத்தமகன் சபாபதிப் பிள்ளை தந்தையைப் போலவே சிறந்த ஒரு வைத்தியராக வாழ்ந்ததுடன், கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலையை 1916இல் நிறுவினார். அவரது பிள்ளைகள் வைத்தியர்களாக, ஆசிரியர்களாக விளங்கினார்கள். அதிபர், கவிஞர், பொலிகை.ச.திருப்பதி அவர்களுள் ஒருவர்.
வைத்தியம், சங்கீதம், கூத்து சார்ந்த தொடர்பு அறிவாற்றல் உள்ளவர்கள் எனது குடும்பத்தவர்கள். அவர்களி டத்தில் இருந்து வந்த ஆற்றல்களின்
வெளிப்பாட்டினைப் பின்னர் நோக்கலாம்.
எனது தந்தையார் பெயர்
நா.கந்தையா. தாயார் க.சின்னம்மா. தந்தையார் பொலிகண்டியில் எங்கள் இல்லத்தில் பிறந்தார். தாயாரின் பிறந்த ஊர் அல்வாய் வடக்கு, வயல். தந்தை யார் குடும்பத்தில் இளையபிள்ளை. அவருக்கு மூத்தவர்களாக ஒரு தமக்கை, இரண்டு தமையன்மார் இருந்தார்கள்.
குடும்பத்து மூத்த
54
S 영 6 S
அவருக்கு நேரே மூத்த தமையனார் இளம்பருவத்தில் காலமாகிவிட்டார்.
எனது பெற்றோர்கள் எனக்குச் சூட்டிய பெயர் நடேசு. நான் பொலி கண்டியில் 06.08.1942இல் பிறந்தேன். எனக்கு 2 Lair பிறந்தவர்களாகத் தமை
யனார் ஒருவர். தம்பி ஒருவன். அவன்
தான் எழுத்தாளர் க.நவம். அவனுக்குக் கீழே மூன்று சகோதரிகள்.
எனது தகப்பனார் அந்தக் காலத்
தில் ஏழாவது வகுப்பு வரை படித்திருக் கின்றார். பனையோலையில் எழுத்தாணி
கொண்டு எழுதியே தனது ஆரம்பகாலக்
கல்வியைக் கற்றார். இன்னுமொரு ஆண்டு கல்வி கற்று, தான் கிறிஸ்தவ னாக மதம் மாறி இருந்தால் ஆசிரியராகி இருக்கலாம் என்று அவர் கூறுவார். தனக்கு நேர் மூத்த தமையனாரின் இள வயது மரணத்துடன் தனது கல்வி தடைப்பட்டுப் போனதாகச் சொல்லிக் கவலைப்படுவார்.
எனது தகப்பனார் மற்றையவர் களுடன் உரையாடும்போது முகபாவத் துடன் கையசைத்து நல்ல தமிழில் பேசு வது அவர் இயல்பு. பேச்சு வழக்கிலும் "கிணற்றடி', 'இலட்சணம்' என்றுதான் சொல்லுவார். நல்ல இரசனை உள்ளவர். உள்ளத்தில் கருணை உள்ளவர்.
பிறருக்கு உதவி செய்வ்தில் முன்னிற்
கும் சுபாவம் அவரிடத்தில் இருந்து வந்தது. குடும்பப் பொறுப்புடன் எப்பொழுதும் அடக்கமாக நடந்து கொள்ளுவார். பிள்ளைகளாகிய எங்
களுக்காக உழைத்துச் சந்தனக் கட்டை

போலத் கொண்டவர்.
தன்னைத் தேய்த்துக்
எனது பெரிய தகப்பனார் எனது தகப்பனார் போன்ற ஒருவரல்லர். மிக வித்தியாசமான ஒரு மனிதர் அவர். நான் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்த காலத்தில் வில்லிபுத்தூரின் "கிருஷ்ணன் தூது"
எனக்குப் பாட நூலாக இருந்தது. அந்த
நூல் செய்யுள்களை மனனஞ் செய்ய எண்ணிச் சற்றுப் பலமாக வாய்விட்டுப் படிப்பதற்கு ஆரம்பித்தால், எனது பெரிய தகப்பனார் உடனே அந்தச் செய்யுளை முழுமையாகச் சொல்லி அதற்குப் பொருளும் சொல்லி முடிப்பார். "கிருஷ்ணன் தூது’ பாடல் முழுவதும் அவருக்கு மனப்பாடமாக இருந்தன. நிகண்டு, விவேகசிந்தாமணி, தோத்திரங்கள், நாடி சாத்திரம்
முதலியனவும், வைத்தியப் பாடல்கள்,
சித்தர் பாடல்கள் என எல்லாமே
அவருக்கு மனப்பாடமாக இருந்தன.
ஒரு நீோயாளியின் கைநாடியைப் பிடித்துப் பார்த்து நோயாளியின் குணங் குறிகளை அவதானித்து நிலைமையைத் தீர்க்கமாக நிர்ணயம் செய்வதில் அதிசயப்படத் தகுந்த நிபுணத்துவம் அவரிடத்தில் காணப்பட்டது.
அவர் சற்று வசதியாகவும் வாழ்ந் தார். அதனால் வட்டிக்குப் பணம் கொடுத்து கொஞ்சமும் ஈவிரக்கமின்றி வட்டி அறவிடுவார். அவரிடம் இருந்த மிக முக்கியமான குணம் யாருக்கும் தலைபணிந்து நடக்காத இயல்பு. உயர் சாதிக்காரன் என்று இருக்கின்ற
55
வனையும் எந்தவிதத் தயக்கமில்லாது பெயர் சொல்லிக் கூப்பிடுவார். எங்கள் கிராம மக்கள் மத்தியில் முதன் முதலாக, தனது திருமணத்தின் போது மனைவி கழுத்தில் தங்கத் தாலி கட்டியவர் அவர் தான். பல வேடங்கள் தாங்கி நாட்டுக் கூத்துகள் பல அக்காலத்தில் ஆடினார். கூத்தாட்டு அரங்கிற்கு வெள்ளை கட்டக் கூடாதென தடுக்கப்பட்ட சமூக ஒடுக்கு முறையை எதிர்த்து வெள்ளை கட்டி, அதனால் சண்டையிட்டு வழக்காடியவர் களுள் அவரும் முக்கியமான ஒருவர். பழைய பாடல்களை இசையோடு அவர் பாடும் சமயங்களில் மெய்மறந்து இலயித்துக் கேட்டுக் கொண்டிருக் கலாம். பிள்ளைகள் இல்லாத அவர் தம்பியின் பிள்ளைகளாகிய எங்களை வாஞ்சையுடன் பார்த்து வளர்த்தார். அவர் தனக்குச் சொந்தமான காணி பூமி, சொத்து யாவையும் எங்களுக்கே தந்து - போனார். 1960ട്ട്ല அவர் கால மானதுடன் எங்கள் குடும்பத்தின் ஒரளவு வசதியான வாழ்வு மெல்லச் சரிய ஆரம்பமானது.
வீட்டில் பெண்கள் இல்லாத ஒரு குடும்பமாக எங்கள் தகப்பனாரின் குடும்பம் இருந்தது. தகப்பனாரின் மூத்த சகோதரி ஒருவர் மாத்திரம் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தார். அதனால் எங்கள் தாயார் தான் பிறந்த ஊரை விட்டு வந்து பொலிகண்டியில் வாழ வேண்டி நேர்ந்தது. வெள்ளை உள்ளம் படைத்த அப்பாவி எங்கள் தாயார்.
உயர்சாதியார் என்று சொல்லப் படும் சமூகத்துப் பெண்களும் எங்கள்

Page 30
தாயாரிடம் வந்த அவரது தங்க நகை களை இரவலாகப் பெற்றுச் செல் வார்கள். தனது நகைகளை இரவல் கொடுத்துவிட்டுத் தான் நகை அணி யாது கோயிலுக்குச் செல்லும் பெருந் தன்மை எங்கள் தாயாரிடம் இருந்தது. அவருக்கு ஒரு தமையனார் இருந்தார்; எங்கள் தாய்மாமனார். எங்கள் தாய் மாமனாரின் நினைவு நெஞ்சில் எழுந் தால், “ராராரா. ரீ. டுடுரு. எனக் கந்தசஷ்டி கவசம் அவர் பாடுகின்ற போது சிறுவயதில் நான் கேட்ட அவர் குரல் இன்றும் செவிகளில் ஒலிக் கின்றது. அவர் ஒரு முருக பக்தர். வெள்ளிக் கிழமைகள் தோறும் தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் சென்று வழிபாடு
இல்லாது போனது வாழ்க்கையில் பெரிய ஒரு மனக்குறையாக அவருக்கு இருந்து வந்தது.
எனது பெற்றோர் திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாது வாழ்ந்தார்கள். தாயாரின் வழி படு தெய்வம் அல்வாய் வடக்கு சக்கோட்டை பிள்ளையார் மீது நேர்த்தி வைத்தே, தாகச் சொல்லுவார்கள். அந்தக் காலத்
எனது தமையனார் பிறந்த
தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படாத அந்தப் பிள்ளையார் கோயிலில் இப்பொழுதும் உள்ள பிள்ளையார் மூலவிக்கிரகம், பிள்ளைப் பாக்கியம் வேண்டி எங்கள் பெற்றோர் செய்து கொண்ட நேர்த்திக் கடனுக்காக எனது தகப்பனார் செய்து கொடுத்ததுதான்.
56
3 Ջ
எனது குடும்பம் பற்றி ஓரள வேனும் அறிந்து கொள்ளாமல் என்னை முழுமையாக விளங்கிக் கொள்ள இயலாது என்பதனால் எனது குடும்பம், சமூகம், கல்வி ஆகியவற்றை இதுவரை நான் கோடிட்டுக் காட்டி இருக்கிறேன்.
எங்களை எந்தவிதக் குறைவும் இல்லாது வளர்க்க வேண்டும் என்பது எனது பெற்றோரின் ஒரே நோக்காக இருந்து வந்தது. இரத்த உறவுகள் என்று இரண்டொருவர் தவிரப் பெரிதாக எங்களுக்கு யாரும் உறவினர்கள் இருக்க வில்லை. ஆறு பிள்ளைகளாளான பெரிய குடும்பம் நாங்கள். நான், தம்பி, சகோதரிகள் எல்லோரும் பாடசாலை களில் படித்துக் கொண்டிருந்தோம்.
செய்துவரத் தவறமாட்டார். குழந்தைகள் எனது தாயாரும் நோயாளியாகிப் போன
கஷ்டமான நிலை. குடும்பத்தைக் கொண்டு நடத்துவது தகப்பனாருக்குச் சிரமமாகவே இருந்தது. இந்த நிலை யிலும் எனது தமையனாருக்கு 01.02.1960இல் இளவயதில் திருமணஞ் செய்து வைத்து பெற்றோர்கள் ஆறுதல்
கண்டார்கள்.
எனது தகப்பனார் உள்ளத்தில் பிள்ளைகளாகிய எங்களை இலக்காகக் கொண்டு ஒர் இலட்சியம் இருந்து வந்தது. அதனை ஒருநாள் மனந்திறந்து என்னிடத்தில் எடுத்துச் சொன்னார்.
"மேனை, புயல், மழை, வெயில் எண்டு பார்ாமல் இந்தப் பனையிலே ஏறி இறங்கிக் கஷ்டப்படும் வாழ்வு என்னோடை போகட்டும். இனி, நீங்கள் ஆரும் பனையிலே கால் வைக்கக்
கூடாது.”

தந்தையார் சொன்ன இந்த மொழி களே எனக்குக் கூறப்பெற்ற கீதா உப தேசம். இந்த உபதேசத்திலும் மேலான சிறந்த கீதை மொழி எனக்கு வேறொன் றில்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை.
இதனை அவர் கூறும்பொழுது
தான் செய்த தொழில் கெளரவக் குறை வானது என்னும் எண்ணம் அவர் உள்ளத்தில் அப்பொழுது இருக்க வில்லை. அவர் மனம் அப்படிப்பட்டது. தொழிலை நேசிக்கின்றவர். சத்தியத் துடன் அந்தத் தொழிலைச் செய்தவர் அவர். அந்தத் தொழிலே எங்களை வாழ வைத்தது என விசுவாசத்துடன் நம்பியவர். ஆனால் தான் அனுபவித்த கஷ்டங்களை, துன்பங்களை நெஞ்சில் நினைத்து பிள்ளைகளாகிய நாங்கள் அந்தத் துயரங்களை அனுபவிக்கக் கூடா தென எண்ணி மனம் கசிந்தவர். அது தான் எனது தகப்பனார்.
எனது தகப்பனார் எண்ணம் போல அவர் பரம்பரையில் அவர் வழிவந்த
வாரிசுகள் யாரும் இன்று அவர் செய்த
தொழிலைச் செய்கின்றவர்களாக இருக்கவில்லை.
எனது தகப்பனார் எதிர்பார்த்தது போல அவர் வாழும் காலத்தில் நான் ஆசிரியராகி விட்டேன். ஆனால் நிச்சய மாக தெணியான் என்ற ஒர் எழுத்தாள னாக என்னை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். இனி, தெணியான் ஆன பின்னர் எனது இலக்கிய வாழ்வில் நான் பதித்து வந்த பாதத் தடங்களைப்
பார்க்கலாம்.
வளரும்.
57
\N
^^
શેક્સેઙ N
༄
Q
BòòNNIìòòdèờàNSừrèèÈN ೩ಖ್ಖನ್ದಿಟ್ಟ
N §§§§§§
INKANN

Page 31
தொடுபுள்ளி நோக்கிய அவசரப் பயணத்தில். தடுக்கி விழுந்ததால். தள்ளிப் போய்விட்டது w f இலக்கு.
முரண்பட்டுப் பிரிந்து முட்டி அழிவதில் நமக்கு நிகரில்லைதான்.
ஒப்பந்தக் கோப்புக்கள் இருட்டு அறையில் உறங்க இதயத்தைத் தொலைத்து மரபு வழிப் போராட்டத்தில் மனம் லயித்துப் போய்விட்டது. குலுக்கிக் கொண்ட கைகளிலிருந்து.
பரிமாறப்பட்ட வியர்வையின் ஈரம் காயும் முன். காயப்பட்டது நமது - மனு
smelb site)LDITi5 கதைக்கிறார்கள் விடுதலை பற்றியும், உரிமை பற்றியும்
dilurf LDLib உண்டு உறங்க. STS) அழிவதும், அழுவதும் அடிமட்டம் தான். O உயிர் காப்பதற்காய் லிசாலிலும் இனிப் புதிய யுக்தி தேவை
O தேசம் அழுகி நாறும் கணங்களில் SGO)95SST மூக்கில்லாதவர்கள்தான் வாழ்கிறார்கள் - நாச்சியாதீவு பர்வீன்
நம் மண்ணில்.
 

11.
12.
13.
4.
5.
16.
59
201/4, Sri Kathiresan
Street,
Colombo - 13.
*" 24ܔܛ
toసిన பூந்தல்
232O721
உங்களிடம் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய
டொமினிக் ஜீவாவின் நூல்கள்
டொமினிக் ஜீவா சிறுகதைகள் விலை : - டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத"சித்திரம் விலை : அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம்
வாழ்க்கை வரலாறு - இரண்டாம் பகுதி விலை : அநுபவ முத்திரைகள் விலை :
நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் 660so : முப்பெரும் தலைநகரங்களில் முப்பது நாட்கள் விலை : டொமினிக் ஜீவா கருத்துக் கோவை விலை : பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் விலை :
எங்களது நினைவுகளில் கைலாசபதி
தொகுப்பு : டொமினிக் ஜீவா * 6Ᏸl60Ꭰ6Ꭰ : அட்டைப் LuLilies6ir 66l6ט6קס : பத்ரே பிரசூத்திய - சிங்கள மொழிபெயர்ப்பு விலை : Undrawn Portrait For Unwritten Poetry
(சுயவரலாறு ஆங்கில மொழிபெயர்ப்பு) 660so : தூண்டில் (மல்லிகைக் கேள்வி - பதில்கள்) விலை : முன்னுரைகள் சில பதிப்புரைகள் விலை :
தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்கங்கள்) 66606) :
ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் விலை :
(விற்பனையாளர்களுக்குத் தகுந்த தள்ளுபடி உண்டு. கல்லூரி, பல்கலைக் கழக நூலகங்கள் மேற்படி நூல்களைக் கவனத்தில் கொள்வது ஆரோக்கியமானது.)
350.00
250.00
200.00
180.00
150.00
110.00
80.00
100.00
75.00
150.00
120.00
200.00
115.00
100.00
100.00 115.00

Page 32
60
பேந்தும் போய்ப் பெட்டியில் படுக்கலாமெனத்தான் சிற்றம்பலத்தாரின் மனம் உன்னியது. தேக அலுப்பும். ஆனால் சேதிப்பிள்ளையா சற்று முன் வாக்குக் கொடுத்தது மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
“எங்களைக் காக் காசுக்கும் நம்புற இல்லை அண்ணை. ஆக என்ர கொடிதான் கிடக்கு. நாளைக்கு வா வித்துப் போட்டு உன்ர பிசகை முடிக்கிறம்." படபடவெனச் சேதிப்பிள்ளையா இப்படிச் சொல்லி, குடுத்த கடனைக் கேட்டு வந்த கனகக்காசியரைச் சமாதானப்படுத்தி அனுப்பிப் போட்டா.
*காசி நாளைக்கு வரப்போறான். என்ன செய்யிறது. ஆரிட்டப் போய் மாறிறது? கொடியை விக்கத்தான் வேணும். அவள் வெறுங் கழுத்தோட திரியப் போறாள்.' சிற்றம்பலத்தாருக்குக் கெளரவப் பிரச்சினை இப்ப வெளிநாட்டு மாப்பிளையள், முடிக்கப் போற பெட்டையளின்ர வயதுக்குத் தக்கின நிறையான பவுணில கொடி செய்து கட்டிறாங்கள். ஆனால் சிற்றம்பலத்தார் அந்தக் காலத்தில இரண்டு பக்கமும் இவ்விரண்டு காசோட, பதினைஞ்சு தங்கப் பவுணில, சேதிப்பிள்ளையாவின்ர நாரைக் கழுத்தில வடம் மாதிரிக் கொடி கட்டியல்லோ பெண் எடுத்தவர் அந்த றைக் கோட்டெல்லாம் இப்ப போச்சு
20லே0இத&
LDrt. LT6vér56Lib - ܀ “எல்லாத்தையும் அனுபவிச்சவள் வெறும் கழுத்தோட திரியப் போறாள்.' ஆற முடியவில்லை! நினைச்சு நினைச்சுக் கண்களைக் கசக்குகிறார். பெருமூச்சு விடுகிறார்.
"அப்படி இருந்தவளுக்கு இப்படி வந்து போச்சு!”
தன்ர சோக்குச் சுதிக்காக அவர் இந்தக் கடனைப் படவில்லை. சொந்த மண்ணில இருக்க முடியாமல் போச்சு. இப்பவும் என்ன? அங்க ஆய்க்கினைதான் சீவிக்க நிம்மதி இல்லாமல் சனம் சமுத்திரத்துக்க விழுந்தெழும்பியும் அக்கரைக்கு ஒடுதுகள். வயது வந்த குத்தியனை வைச்சுக் கொண்டு எப்படி ஊருக்க இருக்கிறது. இதுகளாலதான் சிற்றம் பலத்தார் இடம்பெயர்ந்து தலைநகருக்கு வந்தவர். சேதிப்பிள்ளையாவின்ர கையில காதில கிடந்ததுகளை உருவி வித்து லெட்சம் குடுத்துத்தான் இந்தவொரு அறையையும் குசினியை யும் ரெண்டு வரிச அக்கிறிமெண்டில வாடைக்கு எடுத்தவர். பொஞ்சாதியும் புருசனுமாகக் கையெடுக்காக கோயிலெல்லாம் விழுந்து கும்பிட்டு, வெளிநாட்டில நிக்கும் மருமோனொருத் தன்ர காசில, கொண்டு வந்த பொடியை ஒரு மாதிரியா வெளிநாட்டுக்கு ஏத்திப் போட்டீனம்; மருமோனும் முழுக்காக குடுக்க இல்லை ஐம்பதாயிரம் குறைஞ்சு போச்சு. அதைத்தான் கனகக்காசியரிடம் மாறினவை. அதை இப்ப வையெண்டு காசியர் நிண்டேர்.

"பொடி போய் இறங்கீட்டா ஆரும் நம்பிக் காசு தருவீனம். எல்லாட்டி அவனுக் கொரு கலியாணத்தைப் பேசி, ரொக்கம் வாங்கி உன்ர கடனை முடிப்பம்."
‘போனவன் இன்னமும் சேர வேண்டிய இடத்தைச் சேரவில்லை. சோமாலியாவிலதான் நிக்கிறான்." இது களைச் சொல்லக்கூடக் கனகக்காசியர்
நம்பேல்லை.
"உதையெல்லாம் நம்பேலாது. தந்தும்
வருசமொண்டாகுது. ஆரிட்டையும் மாறி
Ulu T 6. g5 (1919 சித்தம்பலம்."
என்ரை கணக்கை
சேதிப்பிள்ளையா கொண்டு வந்து வைச்ச கூல் றிங்சைக் கூட காணாதவர் மாதிரி முகத்தைக் கடுகடுப்பாக வைச்சுக் கொண்டு கனகக் காசியர் ஆமியைக் கண்டவர் மாதிரி நிண்டேர்.
“என்னண்னை கூல் றிங்கும் உங்க ளிட்ட கடனே பட்டது.? எடுத்துக் குடியங் களன்.” தன்ர கதைக்கு மசிவா ரெண்டு சேதிப்பிள்ளையா விகடமாகச் சொன்னா.
இப்படிப்பட்டதுகளிட்டத்தான் தன்ர பிழைப்பை நடத்த வேணுமெண்ட சொட்டுக் கரிசனை கூட இல்லாம மனிசன் செடில் குத்தினவன் மாதிரி நிண்டுது.
'அவன் இறங்கினவுடன் மரு மோனைப் பிடிச்சாவது உன்ர காசை வட்டி யோட தாறன். அவனுக்கும் இனி வியாழ
சுகமாம்."
"என்ன சுகம் இருந்தாலும் இருக் கட்டும் சித்தம்பலம். அந்த யோகங்களை
61
நீங்க அனுபவியுங்க. வீடு வாங்க
வைச்சிருக்கிற காசில என்ரை காசைத் தாருங்க."
கனகக்காசியர் சொன்னதைக் கேட்ட சிற்றம்பலத்தாருக்கும் சேதிப்பிள்ளையா வுக்கும் நெஞ்சுக்க 'திக்" என்றது. ரெண்டு பேரும் ஆளையாள் மாறி மாறிப் பாத்தனர்.
‘என்னண்ணை வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்க உங்களிட்டக் காசு மாறிறம். புது
வீடு வாங்க எங்கால காசு வந்தது."
''ggiosort LD(36.) It சொன்னனியள்."
புறோக்கரிட்டச்
சிற்றம்பலத்தாரைப் பார்த்து, வடி சாராயம் குடித்தவன் போலக் கனகக் காசியர் முறுகல் கொண்டு, எடுப்பாகித் தனு வைச்சு இரைந்தார். பக்கத்து வீட்டில் கட்டில் கிடந்த நாய் கூடச் சத்தத்தால் தூக் கத்தைக் கலைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டது.
புறோக்கர் எண்ட சொல்லைக் கேட்ட
மாத்திரத்தில் சிற்றம்பலத்தார் நிமிர்ந்து
உட்கார்ந்து கொண்டார். அண்டு மதியத் திற்கு முன் நடந்தவைகளில் அவர் நினைவுகள் குவியத் துடங்கின.
சாமிப் படங்களைத் தொட்டு கும்பிட்ட பின் வெளியே வந்த சிற்றம்பலத்தார் முன் முழிவியளமாகப் பேரமகள் டெய்சி நின்றாள். பேரனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"இஞ்சை என்னட்டைக் காசு கீசு ஒண்டுமில்ல. கொட் டோக்கு, ஐஸ்சொக்கு, சுவிங்கம் வேணுமென்டாத." ஒரு பொய்க்
கோபம். பேர்த்தியாரோட சிற்றம்பலத்தார்
மழலை பொழிந்தார்.

Page 33
“காசு இருந்தாக் கூட எப்படி வாங்கப் போறியள் அம்மப்பா..."
‘ஏனெடி?.. லோகத்தைக் கூட வாங்கிப் போடலாமே."
"ஆ." அம்மப்பாவின் நெற்றியடியை டெய்சியால் தாங்க முடியாமல் போய் விட்டது. மெளனித்தாள் நாக்கை வெளியே தள்ளி நையாண்டி செய்தாள்.
"நடக்கத்தான் வேணும்.”
'ஆர் நானோடி. ரா முழுக்க உடம் பெல்லாம் ஒரே அலுப்பு. எப்பவும் போல நான் வசுவிலதான் போவன்."
'இண்டைக்கு st ஓடாது தெரியுமே." டெய்சியின் கால்கள் நாட்டிய
LDITL960T.
*ஏனடி..? சிற்றம்பலத்தாரை
ஆச்சரியம் கெளவிப்பிடித்துக் கொண்டது.
"ஸ்ரைக்கெல்லே."
"உனக்கெப்புடித் தெரியும்." அந்தர்ப் பட்டுக் கேட்டார்.
‘ரீவி நியூஸ் கேக்க இல்லயா
அம்மப்பா. உந்த அழுகுண்ணி நாடகங்
களைத்தானே நீங்கள் பாப்பியள்."
"மெய்யே.?" தன் வயதோடு மேலும்
பத்து வருசம் சேர்ந்து கொண்டதைப் போல்
சிற்றம்பலத்தார் உசாரைப் பறிகொடுத்தார். நின்றவர் உட்கார்ந்து கொண்டார்.
"நரகாலியில போற இந்த நாட்டில, ஒண்டில்லாட்டி இன்னொண்டு, இண்
டைக்கு பஸ் ஸ்ரைக்கெண்டா நாளைக்கு
காசு இருந்தா இந்த
62
றோட்டில வசுக்கள், திறி வீலர்களை மறிச்சு மணித்தியாலக் கணக்காக அயிடின்ரிக் காட்டை திருப்பித் திருப்பிப் பாப்பாங்கள். கிழடுகளிட்டக் கூடி நம்பர் கேப்பாங்கள்."
தனக்கும் கேட்கும்படியாக அம்மப்பா திட்டியதைக் கேட்ட டெய்சி ஒரக் கண் களால் அவரைப் பார்த்தபடி அறைக்குள்
நுழைந்து கொண்டாள்.
பாத் றுாமுக்குள் நிண்டு வந்த சேதிப்
பிள்ளையாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
காலத்தால வேட்டியைக் கட்டினா அவ
வின்ர மனிசன்ர கால் வீட்டுக்க நிக்காது.
சிற்றம்பலத்தார் வெளியே போகத் துடிச்சுக் கொண்டு நிப்பேர். அவரது இண்டைய போக்கு அவவுக்குப் புதினமாக இருந்தது
‘என்ன இருந்திட்டியள். நெஞ்சு வலியே. குளிசை தரட்டுமே நாக்குக்க வைக்க” அம்மம்மாவின் குரலைக் கேட்ட டெய்சி பேந்தும் விறாந்தைக்கு வந்தாள்.
"வலியொண்டுமில்ல. வசு ஸ்ரைக் காம். எங்க போறது." அசுவாரஸ்புமாக சிற்றம்பலத்தார் தரையைப் பார்த்தபடி
சொன்னார்.
"உதாரு சொன்னது." டெய்சி மேல் பார்வையை எறிந்து சேதிப்பிள்ளையா கேட்டா.
"உவள் ரீவியில கேட்டவளாம்."
"மெய்யேடி.." மிரட்டும் பாவனை யோடு சேதிப்பிள்ளையா பேத்தியாரைக்
(85L LIT.
“இல்லை அம்மம்மா! அம்மப்பாவுக்கு நான் ஏப்ரல் பூல் விட்டனான்." பேத்தி

யாரின் கால்களைப் பிடித்தபடி மெரிக்கோ றவுன்ட் சுத்தினாள் டெய்சி.
"என்னடி உனக்கு அம்மப்பாவோட பகிடியே. குசினியிக்க இருந்து நானும் செய்தி கேட்டணான்தான். இண்டைக்கு ஏப்ரல் முதலாம் திகதி எல்லே. ஏப்ரல் பூல் நாள்." சிரிப்புக் களை முகத்தில் துலங்கி யும் சிரிப்பை வெளிக்காட்டாமல் சிற்றம் பலத்தாரைப் பார்த்தபடி சேதிப்பிள்ளையா சொன்னா. அவர் கலண்டர் பக்கமாகப் பார்வையைத் திருப்பினார்.
“எடி தோறை என்னைப் பேய்க் காட்டி னனியா?" விறுக்கென எழும்பிய சிற்றம் பலத்தார் பேத்தியாரைப் புடிக்க எத்தனித் தார். குருவி போல் பறந்தோடி டெய்சி அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள்.
"அவளை ஒண்டுஞ் செய்யாதயுங்க. ஏப்ரல் பூல் அண்டைக்கு ஆருக்கும் என்ன பொய் சொல்லியும் ஏமாத்தலாம்."
சிற்றம்பலத்தாருக்கு நிம்மதியாப்
போச்சு. உசார் கொண்டு விட்டார். ஒழும்
பின கையோட தனது வழக்கமான உலா வுக்கு ஆயத்தமானார். நாலைஞ்சு கோயில் கள், பேப்பர் கடை, இடையில் காணும் கூட்டாளிமாரோடு சல்லாபம், நாக்கு வறண் டால் சைவக் கடையில் ஒரு பிளேன்ரி, வாசிகசாலை. அவரது உலா இப்படித் தேறும் இந்த உலா முன்னேற்றம் கண்டு கொண்டிருந்த பொழுதுதான் அவர் புறோக்கரைச் சந்தித்தார். பியர் போத்தலை வாங்கி கடைக்கு முன்னாலேயே பாதை யோரத்தில் நின்று அண்ணாந்து கொள. கெள." என வாய்க்குள் சரித்துக் கொண்டு நின்றான். அவன் வழுக்கல் மண்டையில்
63
S 영 g
பாஸ்போட் ஒப்பீஸ்.
சூரிய கதிர்கள் பட்டு மண்டையை மின்ன வைத்தன.
' പ്രി 8 ഞG இண்டைக்குக் கொத்தி இருக்காக்கும்!"
புறோக்கரின் போக்குவரத்தை நன் கறிந்தவர் சிற்றம்பலத்தார், புறோக்கர் நாளுக்கு நாள் புத்தம் புது அவதாரங் களைப் பெறுவார். ஒருநாள் சமாதான நீதிவான் வீட்டுக்கு முன். இன்னொரு நாள் மற்றொரு நாள் விற்பனைக்குப் போகும் வீடு. பேந்தொரு நாள் பேத்சேட்பிக்கேட் ஒப்பீஸ். புறோக்கர் சம்பந்தமான இவைகளை மனதில் தொகுத்துப் பார்த்த சிற்றம்பலத்தாரின் சிந்தனையில் பொறியொன்று சீறியது.
"ஏப்ரல் பூல் அண்டைக்கு ஆருக்கும் என்ன பொய் சொல்லியும் ஏமாத்தலாம்." சேதிப்பிள்ளையா சொன்னதை மனம் கிளிப்பிள்ளையாக ஒப்புவித்தது. முகத்தில் விகடச் சிரிப்புப் படர்ந்தது.
"என்னை டெய்சி ஏமாத்தின மாதிரி. ஏன்? நான் இந்தப் புறோக்கரை ஏமாத்தக் கூடாது? வைராக்கியம் கொண்ட மன
தோடு எட்டி நடந்தார்.
"தண்ணி விடாச்சுது. அதுதான்." எதிர்பாராத இடத்தில, நினைச்சிருக்காத சந்திப்பு. புறோக்கர் அசந்து போனார். அம்பிட்டு விட்ட கூச்சம். குழைந்தார். "،
"நடுவிட்டுக்க வைச்சு ஊரில குடிக்கிற நீங்கள், இப்ப பேமெண்டில நிண்டு குடிக் கிறியள்." இப்படித்தான் கேக்க சிற்றம் பலத்தாரின் "வெளி வாய் உன்னியது. இருந்தும்.

Page 34
"அவனவன் விருப்பம்." புறோக்கரின்
சுதந்திரத்தை அவர் விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை.
'சங்கதியொண்டு...' சொல்லிக்
கொண்டே பியர் கடைக்குச் சற்றுத் தள்ளிப்
போன சிற்றம்பலத்தாரைப் புறோக்கர் பின்
தொடர்ந்தார்.
“56T6OT...?'
'எனக்கொரு வீடு தேவை. ஒரு
இருவத்தைஞ்சுக்குப் பார்."
வீட்ட
வாறன்.” மதுசாரத்தில் தெம்பைப் பெற்ற
*வெல்லுவம்...! போங்க
புறோக்கரின் உடம்பு வழுவழுப்புக் கண்டி ருந்தது. சொற்களில் 'மப்பின் விறைப்புத் தொக்கி நின்றது. அட்டகாசமாகச் சொன் னார். கேசை உடன் ஏற்றுக்கொண்டார். நான்கு விரல்களையும் மடித்து கட்டை விரலை நீட்டி வெற்றி முழக்கமிட்டார்.
முகத்தைக் காட்டாது முதுகைக் காட்டியபடி டெய்சியை நினைச்சுச் சிரித்தபடி சிற்றம்பலத்தார் இடத்தை விட்டு நகர்ந்தார்.
புறோக்கர் வர்றதுக்கிடையில் கடன் குடுத்த கனகக்காசி வந்திட்டான் காசுக் கொடி தட்டான் பட்டடைக்குப் போகப் போகுது
‘என்ன சேதி காசிக்கு நீயும் ஏப்ரல் பூலே விட்டனி’ யோசனைக்குள் புதைந் திருந்த சிற்றம்பலத்தார் கேட்டார். அப்படி இருந்து விட்டால் நல்லதெண்ட நம்பாசை
'ஏப்ரல் பூல் இண்டைக்கு எண்டதால தான் நீ கனகக்காசிக்கு அப்படி சொன்னனி
எண்டு நினைச்சன்"
'ஒ. அந்தாளுக்கோ. அதுகும் உங்கட அண்ணன் தம்பிதான் உலகம் எக்
64
படிக்கவில்லையே
தினையோ மாதிரி மாறிப் போச்சு. நீங்களும் கனகக்காசியரும் இன்னும் உங்கட அப்பு ஆச்சியின்ர காலத்திலதான் நிக்கிறியள். இந்த டெய்சிப் பொட்டைக்கு இருக்கிற விளப்பம் கூட உங்களுக்கு இல்லை." காலத்துக்கு ஏத்த மாதிரித் தான் மாறி விட் டதை சேதிப்பிள்ளையா பிரகடனப்படுத் தினா. அந்தக் குஞ்சுப் பொட்டை டெய்சி யையும் சேத்துக் கதைச்சது சிற்றம்பலத் தாருக்கு மொக்கேனமாக இருந்தது.
"அப்ப கொடி இல்லாம வெறுங் கழுத் தோடயா திரியப் போற சேதி." சோகம் அப்பிய வார்த்தைகள் சிற்றபலத்தாரின் குழியை அடைத்தன. முகத்தில் கவலை படரத் தொடங்கியது.
தொண்டைக்
"என்னத்துக்குக் கவலை. கொஞ்ச நாளைக்குத் தாலியை மஞ்சள் கயித்தில கோத்துக் கட்டுவம்.
யெண்டு போய் இறங்கி காசு அனுப்பினா
எம் பெருமானே
ஆமான கொடியொண்டைச் செய்வம். இல் லாட்டித்தான் என்ன செய்யிறது? வயசுக் குத் தக்கின கொடி கட்டீனமாம், அவளவை யென்ன கழுத்தில போட்டுக் கொண்டா திரி யிறாளவை. வேணாமந்த பெக்கோ கனகக் காசியின்ர சங்காத்தம். அந்தாள் போடுற சத் தத்தைக் கேட்டா வீட்டை விட்டும் கலைச்சுப் போடுவீனம்." சேதிப்பிள்ளையா தொலுக் காரிச்சு ஆறினா. ஆத்திரத்தில் சேதிப் பிள்ளையாவின் உடம்பு சூடு கண்டுவிட்டது. மூச்செறிந்தது சிற்றம்பலத்தார் மெளனித் துக் கொண்டார்.
வீட்டுக்க இருந்த சேதிப்பிள்ளையா இந்த லோகத்தை 'படிச்ச அளவிற்கு தான் ses நினைச்சு
6:(þögleUTrfr! O

65 15. இராஜ அரியரெத்தினம்
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகள்ல் ஒருவராகக் கருதப்படும் இராஜ அரியரெத்தினம் ஈழத்தின் மூத்த பத்திரிகையாளருமாவார். ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாம்ணி முதலான பத்திரிகைகளின் ஆசிரியராக விளங்கிப் படைப்பாளிகளையும் படைப்புக்களையும் உருவாக்கி யுள்ளார். ஈழகேசரியில் பதினான்கு ஆண்டுகள் ஆசிரிய ராகப் பணியாற்றிய காலத்தில் ஈழத்தின் இலக்கிய மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிக அதிகம். * தமிழக எழுத்தாளர்களுக்கு ஈழத்து எழுத்தாளர்களையும் ஈழத்துப் படைப்புகளையும் அறிமுகம் செய்து வைத்ததுடன் இரு நாட்டு எழுத்துக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
ஊடகவியலாளராக விளங்கிய இராஜ அரியரெத்தினம் பத்திரிகைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு மிக அதிகமாயினும் புனைகதைத்துறைக்கு ஓரிரு சிறுகதைகள் மூலம் தன்னைப் படைப்பாளியாக இனங்காட்டியுள்ளார். பத்திரிகைத்துறையில் பூரணமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆக்கவிலக்கியத்துறையில் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர முடியாது போயிருக்கின்றது. இராஜ அரியரெத்தினம் தக்க உதாரணமாவார். .
1945ஆம் ஆண்டு வயலுக்குப் போட்டார்’ என்ற தரமான சிறுகதையுடன் ‘ஈழகேசரி’ மூலம் சிறுகதைத் துறைக்குள் இராஜ அரியரெத்தினம் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து ‘வாழ்வின் சாயை’ என்ற சிறுகதை ஈழகேசரியில் வெளி வந்தது. இவற்றினைவிடத் தங்கப்பூச்சி’ என்னும் நாவலையும், சோணாசலக் கவிராஜர் என்ற புனைப்பெயரில் சில கவிதைகளையும் எழுதியுள்ளார். 'கல்கி பிறந்தார்’ என்பது இவர் எழுதிய நூல். கல்கியின் எழுத்துக்கள் மீது இவருக்குப் பெரு ஈடுபாடிருந்தது.
ஈழத்தின் உன்னத சிறுகதைகளில்
ஈழத்தின் இராஜ அரியரெத்தினத்தின் வயலுக்குப் 酸 போட்டார்’ ஒன்றாகும். இச் சிறுகதை புனைகதைப கலைச்செல்வி சிற்பியால் தொகுக்கப்பட்டு
இந்தியாவில் பாரி நிலைய வெளியீடாக படைப்பாளி 5Tெ வெளிவந்த ‘ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற தொகுதியில் "வெள்ளம்’ என்ற பெயர் மாற்றத்தோடு இடம் பிடித்துள்ளது.
செங்கை ஆழியான் கிராமத்தில் வெள்ளம் போடுகிறது. அந்த

Page 35
66
மழையில் தனது வயலைப் பார்க்கச் செல்லும் கமக்காரர் வெள்ளத்துள் பலியாகும் சம்பவத்தினை மனதை உருக்குமாறு இராஜ அரியரெத்தினம் விபரித்துள்ளார். பகைப்புல வருணனை, உரையாடல், ஒரு கமக்காரனின் மனநிலை என்பன கலாபூர்வமாக அமைந்த சிறுகதை இதுவாகும். வாழ்வின் சாயையில் ஏழ்மையின் துயரத்தையும், முதலாளி தொழிலாளி பிரச்சினையின் வடிவங்களையும் இராஜ அரியரெத்தினம் அலசுகிறார். வாலிபன், தொழிலாளி, கிழவன், எழுத்தாளன் என்போர் ତ୯୭ தேவைக்காக ஒருத்தியின் வீட்டில் சந்திக்கிறார்கள். இதுதான் வாழ்வின் சாயல். கதையில்லாத சிறுகதை புதுமையானது.
இராஜ அரியரெத்தினத்தை ஒரு பத்திரிகையாளராகவும் கட்டுரையாளராவும் பல படைப்பாளிகளை உருவாக்கியவராகவும் பார்க்கிறார்கள். அவருக்குள் ஒரு புனைகதைப் படைப்பாளி உள்ளிருந்தமையால்தான் அவர் ஒரு சிறந்த பத்திரிகை யாளனாக விளங்க முடிந்திருக்கிறது.
16. கசின் க.சிவகுருநாதன்
ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் 'கசின்’ என்ற புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலைமுறைக்கு நன்கு அறிந்தவரான க.சிவகுருநாதன் ஆவார். 1946ஆம் ஆண்டிலிருந்து மூன்று தசாப்தங்கள் வரை ஈழத்துப் பத்திரிகைகளில் ஓயாது நிறையவே எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய முத்துறைகளிலும் கசின் ஆழமாகக் கால்களை ஊன்றியுள்ளார். கட்டுரைகளைச் சட்டம்பியார் என்ற புனைப்பெயரில் தந்துள்ளார். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் தனது ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த கசினுக்கு புனைகதைத்துறைப் பரிச்சயமானதாக விளங்கியது.
கசினை ஈழத்தின் நாவலாசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் இனங்காண முடியும். 1947இல் கசினின் முதலாவது ஆக்கவிலக்கியமாகவும் நாவலாகவும். ‘வண்டியில் வளர்ந்த கதை’ ஈழகேசரியில் வெளிவந்தது. இந்த நாவலில் அவர் கையாண்ட உத்தி அக்காலத்தில் புதுமையானது. புகையிரதத்தில் சந்திக்கும் இருவர் ஒருவரையொருவர் அறிய முடியாமையினால் காதல் கடிதங்களைப் பத்திரிகை மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். அதன் மூலம் நிஜ வாழ்வில் இணைகின்றனர். இவர் பின்னர் எழுதிய நாவல்களிலும் கடிதங்கள் மூலம் கதையை வளர்த்துச் செல்கின்ற பாணி நிறையவே காணப்படுகின்றது. சகடயோகம், இராசமணிச் சகோத ரர்கள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக் கால்,
 
 

67 கண்டெடுத்த கடிதங்கள் எனப் பல நாவல்களைக் கசின் எழுதியுள்ளார் என்பது இன்றைய தலை முறைக்கு ஒரு வியப்பான சங்கதியாகும்.
கசினின் சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு மெருகூட்டியுள்ளன. குஞ்சு மாணிக்கம், வனசஞ்சாரம், இது காதலல்ல, கதவைச் சாத்தினாள், ம்ணியோசை, யார் பேசுகிறது, ஒரு சொட்டுக் கண்ணிர், இராசமணி, ஆரம்ப சிகிச்சை, பரிமள சுந்தரி, நூலும் நூற்கயிறும், செய்ந்நன்றி, பிழைம் சரியும், மிஸ்.அன்னபூரணி என்பன ஈழகேசரியில் வெளிவந்த இவரின் சிறுகதைகள். இவற்றைவிடச் சிலந்தி வலை, பச்சைக்கிளி, தமிழன் தான், பஞ்சும் நெருப்பும் ஈழத்தின் பத்திரிகைகளான தினகரன், கலைச்செல்வி, வீரகேசரி என்பனவற்றில் வெளிவந்துள்ளன.
கசினின் சிறுகதைகளில் பொதுவாகக் காதல் தூக்கலாகவே காணப்படும். மானிட உறவின் பல்வேறு பரிசுத்த நிலைகளை அவர் தனது சிறுகதைகளில் கொண்டு வந்தார். அவருடைய சிறுகதைகளில் தமிழ்ச் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பேச்சு முறை என்பன சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்ணோடு ஒட்டிய விடயங்களைத் தனது ஆக்கங்களில் சலியாது எடுத்துக் காட்டியமை கசினுக்குரிய திறன். கசின் எழுதும்போது அவள் சிறுகதைகளில் சிக்கல்கள் அதிகம் இருப்பதில்லை. யதார்த்தவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்.
கசினின் சிறுகதைகளைப் படிக்கும்போது மனதில் தோன்றுகின்ற இலக்கிய மதிப்பு, ஆசிரியர் நல்ல வினைத்திறன் வாய்ந்த படைப்பாளியாகவுள்ளார் என்ற கணிப்பே அவர் கையாண்டுள்ள வசனநடையில் பொதிந்து கிடக்கும் எள்ளல், நையாண்டி, நகைச்சுவை படிப்போரைக் கதையோடு ஒன்றிவிட உதவுகின்றன. மிக நுட்பமான அவதானிப்பினை அவர் சிறுகதைகளில் தரிசிக்கலாம். அவருடைய சிறுகதைகளில் ‘குஞ்சு மாணிக்கம் ஈழத்தின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டியதாகும். அவரின் நாவல்கள் சிலவும், சிறுகதைகள் அடங்கிய தொகுதி ஒன்றும் வெளிவந்துள்ளன.
17 செ7க்கன் க.சொக்கலிங்கம
மூதறிஞர் கந்தப்பசெட்டி சொக்கலிங்கம் 1930இல் அச்சுவேலி தெற்கு ஆவரங்காலில் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை, நாவலர். பாடசாலை, ஸ்ரான்லிக் கல்லூரி, பலாலி ஆசிரிய கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் என்பனவற்றில் தனது கல்வியைப் பெற்றுக் கொண்டார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, வானொலிச் சித்திரங்கள், பாடசாலை நூல்கள் எனப் பல்பரிமாணங்களில் எழுதினார்.

Page 36
68 சொக்கன், வேனிலான், திரிபுராந்தகன், ஆராவமுதன், சுடலையூர்ச் சுந்தரம்பிள்ளை, சோனா, சட்டம்பியார், பேய்ச்சித்தன், திரு அள்ளுவர், பரிமேழகள், தேனி, கன்றுக்குட்டி, குறளன், ஞானம், ஜனனி, சாம்பவன், எதார்த்தன், பாலன் எனப் பல புனைப்பெயர்களில் எழுதிக் குவித்தவர் சொக்கனாவார்.
ஈழகேசரியில் 1947இல் 'கனவுக்கோயில் வரலாற்றுக் கதையுடன் அறிமுகமாகும் சொக்கன், அதனைத் தொடர்ந்து கவிஞன்பலி, ஞாபகச்சின்னம், தீர்ப்பு, கூனல், பனித்துளி, குட்டைநாய், மாணிக்கம், கற்பரசி, தாமரையின் ஏக்கம், மறுபிறவி, காதலும் உரிமையும், விநோத நண்பன், பிள்ளைப்பாசம் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளர். இவை அனைத்தும் ஈழகேசரியில் வெளிவந்தன. மறுமலர்ச்சியில் பொன்பூச்சு என்றொரு சிறுகதை வெளிவந்துள்ளது. இச்சிறுகதைகளில் கனவுக்கோயில், கவிஞன் பலி, ஞாபகச் சின்னம், தீர்ப்பு, கற்பரசி என்பன சரித்திரக் கதைகளாகவும் ஏனையவை சமூகக் கதைகளாகவும் உள்ளன. இதில் குறிப்பிட்டவற்றினை விட மாற்றம், மைத்திரி, அழைப்பு ஆலயமணி, கனவுகள் கலையட்டும், பப்பி, கோடு, சந்திப்பு, முதியோர் வாழ்க, கிழவரும் கிழவியும், அப்பாவுக்கு அறளை முதலான நல்ல பல சிறுகதைகளைத் தனது பிற்காலத்தில் ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். அவரின் பிற்காலச் சிறுகதைகளில் தன்னையே தன் சிறுகதைகளில் அடையாளங் காண முற்பட்டார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் சந்தித்த மனக்காயங்களைச் சிறுகதைகளாக்கினார். அவரின் சிறுகதைகளின் தொகுதிகளாக “கடல்', 'சொக்கன் சிறுகதைகள்’ என்றிரு தொகுதிகள் வெளி வந்துள்ளன. . .
செல்லும் வழி இருட்டு, சீதா, ஞானக்கவிஞன், சலதி என்பன சொக்கனின் நாவல்களாம். ஈழத்தில் சாதியத்தினை மையமாக வைத்து முதன் முதல் நவீன நாவல் "சீதாவைப் படைத்தவர் சொக்கனாவார். சலதி நாவல் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினைச் சுவீகரித்துக் கொண்டது. மேலும் சொக்கனின் படைப்பாற்றலை அவரின் நாடக நூல்களில் காணலாம். சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக் காவலன், தெய்வப் பாவை, மாருதப்பிரவல்லி, மானத்தமிழ் மறவன், துரோகம் தந்த பரிசு என்பன சொக்கனின் இனிய சுவை ப்யக்கும் தமிழ் விளையாடும் படைப்புக்களாம். இவற்றில் சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக் காவலன் ஆகிய இரு நாடகங்களும் இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகத்திற்கான பரிசில்களைப் பெற்றவை. ‘ஈழத்து நாடக வளர்ச்சி’ என்ற சொக்கனின் ஆய்வு நூல் அறிஞர் பலரினதும் கவனத்தினைக் கவர்ந்ததாகும். இதுவும் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினைப் பெற்றுள்ளது.
இவ்வாறு பல்துறைகளிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பதோடு சிறப்பாக ஈழத்துச் சிறுகதைத்துறைக்கும், நாடகத்துறைக்கும் சொக்கனின் பங்கு மிக
அதிகமாகும்.
(தொடரும்.

69
* முன்னர் மலையகத்தில் திறமையான எழுத்தாளர்கள் தரமான இலக்கியங்களைப் படைத்து வந்தார்கள். ஆனால், இன்று அவர்களின் தரமும் எண்ணிக்கையும் குறைந்து விட்டதே, என்ன காரணம்?
அட்டன். பாலா.சங்குப்பிள்ளை
9 முன்னர் மலையகத்தில் ஆத்மக் கொதிப்பொன்று இளம் சந்ததியினரிடம் நிலவி வந்தது. பிரஜாவுரிமை, வாக்குரிமையற்ற ஒரு மனிதக் கூட்டமாகவே மலையகத்து உழைக்கும் வர்க்கம் கணிக்கப்பட்டு வந்தது. எனவே, தங்களது இருப்பைக் காண்பிக்கப் பேனா தூக்கினார்கள், பல இளைஞர்கள். இன்றோ பிரச்சினை வேறு வடிவம் கொண்டு விட்டது. இளைஞர்களின் பார்வையும் வேறு திசை வழியில் சென்றுவிட்டது.
டொமினிக் ஜீவா
இன்று இந்த மண்ணில் பரவலாகக் கலை இலக்கிய ஆக்கங்கள் பெருகி விட்டது போலத் தோன்றுகின்றதே, இது நல்ல ஆரோக்கிய
மான வளர்ச்சியல்லவா?
மன்னார். ச.ஜெயந்தன்
0. வளர்ச்சியடைந்து வருவது என்னமோ உண்மைதான். ஆனால், தரமானவையாக உருவாகின்றதா என்பதே எனது சந்தேகமாகும். காத்திரத்தைத் தமது படைப்புகளில் பேணிப் பாதுகாக்கப் பலர் அதி கவனம் செலுத்துவதாக எனக்குப் படவில்லை. படைப்பாளிகள் இதில் கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

Page 37
* இலக்கிய உலகில் இத்தனை ஆண்டுக் காலமாக இயங்கி வருகிறீர்களே, இந்த உலகில் இயங்கி வருபவர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்துள்ளிர்களா? வவுனியா σ. சுந்தரேசன்
0 மிக மிக நுட்பமாகவே அவர்களைப்
பற்றி என் மனதில் ஒரு மதிப்பீடு வைத்துக்
கொண்டு, அவர்களினது ஒவ்வொரு செயலையும் கணிப்பீடு செய்து வரு கிறேன். இன்று எனது முன்னைய கணிப்
பீடுகளை ஒப்புநோக்கிப் பார்க்கும்
பொழுது நான் அவர்களைப் பற்றிக் கணிப் பீடு செய்தவைகள் பெரும்பாலும் ஒத்துப் போவதைக் கண்டு ஓரளவு ஆறுதலடை கின்றேன்.
e
o ஆரம்பத்தில் சும்மா "ஆகா ஒகோ.' எனப் பந்தா செய்தபடி இலக்கிய
வைத்தவர்கள் பலரை இன்று
உலகில்
இலக்கிய வெளியில் காணமுடிய வில்லையே, என்ன காரணம்?
LDITssfuti. எம்.முருகதாஸள்
9 இலக்கிய உலகம் ரொம்பவும் விசித் திரமான உலகம், ஆளை அவதானித்துக்
கொண்டு ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விடும். தொடர்ந்து அவரைப் பார்த்துக் கணித்தபடியே இருக்கும். அதனது
காலடி
70
பார்வைக் கணிப்பீட்டில் நின்று பிடித்தால் நிலைபெற்று புகழ் பெறலாம். இல்லாது போனால்.
? உங்களை நேரில் பார்க்கக் கொஞ்ச நேரம் பேச விரும்புகின் றேன். வந்து சந்திக்கலாமா? பேச முடியுமா?
தெஹிவளை. எம்.சயந்தன்
() முதலில் ஒன்றைப் புரிந்து கொள் ளுங்கள். நான் சினிமாக்காரனல்ல. எனக் கென எந்தவிதமான பந்தாவொன்றும் கிடையாது. வரலாம், பேசலாம். ஆனால், பொறுப்புள்ள ஓர் இலக்கியக்கார்னாக இருக்க வேண்டும். வருவதற்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டு வருவது மிகவும் விரும்பத்தக்கது.
O ஆரம்ப காலத்தில் மல்லிகை யுடன் தொடர்பு கொண்டவர் களுடன் இன்னமும் தொடர்பை பேணி வருகிறீர்களா?
நீர்கொழும்பு. செல்வி சுபமாலா
9 ஆரம்பகால மல்லிகை அபிமானிகளில் பலர் இன்று மறைந்து விட்டார்கள். இருப் பவர்களுக்குத் தொடர்ந்து மல்லிகை அனுப்பி வருகின்றேன். நேற்றுக் கூட, பிரபல எழுத்தாளர் வரதர் தொலைபேசியில் என் னுடன் தொடர்பு கொண்டார். பிறந்த நாள்

வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். கூடியளவு நான் அந்த நாளைய இலக்கிய
நண்பர்களை மறந்து போகாமல்தான்'
இயங்கி வருகிறேன்.
- O - O - O -
* இலக்கிய உலகில் இன்றும் என்றும் நீங்கள் வியந்து எதைப் பாராட்டுகிறீர்கள்?
புத்தளம். ஆர்.சுந்தரன்
() எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியிலும், நிலப்பெயர்வுகளுக்கு இை யேயும் தொடர்ந்து மல்லிகை இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேனே. இதை நினைத்துத்தான் மனசுக்குள் என்னை நானே பாராட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று நினைத்தால் கூட, நம்ப முடியாமல் வியப்பாக இருக்கிறது. பேப்பர் தட்டுப்பாடு. அச்சடிக்கப் பேப்பர் கிடைக்காத நிலை. அந்த அவலமான கட்டத்திலும் நான் மனச் சோர்வடைந்து விடவில்லை. பணப் புழக்க மற்ற நிலை வேறு. ஆனால் மனம் தளர வில்லை, நான். மாணவர்கள் பாவிக்கும் அப்பியாசக் கொப்பிகளைக் கட்டுக் கட்டாக வாங்கி, அவற்றைத் தரம் பிரித்து, அச் சடித்து, அந்த அந்த மாத மல்லிகை இதழ் களை வெளியிட்டு வந்தேன். இன்று அதைத் திரும்பி நினைத்துப் பார்க்கும் பொழுது கூட,
மலைப்பாக இருக்கிறது. மல்லிகை எதிர்
காலத்தில் பொன் எழுத்துக்கலால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் செய்தி இது.
71
வேறொந்த எழுத்தாளனுக்கும்
நடைபெறாத முறையில் உங் களது பிறந்த நாள் விழாக் கொண்டாடப்பட்ட சமயம் மன. தில் உண்மையாக என்ன நினைத் தீர்கள்?
கொழும்பு 6.
எஸ்.ராஜசுதன்
0 இத்தனை அன்புள்ளங்களும் என்னை ஓகோ என மனந்திறந்து வாழ்த்த இயற்கை எனக்குக் கருணை காட்டியது போல், தொடர்ந்தும் நான் இயங்கி வர இன்னும் ஒரு சில ஆண்டுகள் நான் பூரண தேக ஆரோக்கியத்துடன் சுக சேமமே வாழ,
இந்தப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
பின்புலமாக அமைய வேண்டும் என்றே நான் நினைத்துக் கொண்டேன்.
• O = 0 - D =
* யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகையை வெளியிட்டு வந்த தற்கும் அதன் பின்னர் கொழும் பிலிருந்து வெளியிடுவதற்குமான
வேறுபாடு என்ன?
ஜாஎல. எம்.எஸ்.மோகன்
9 அங்கு வெளியிடும்போது ஓர் ஆத்ம திருப்தி இருந்தது. இங்கிருந்து மல்லி கையை வெளியிடும்போது வியாபாரச் சூழ் நிலை சுற்றிலும் நிலவுகின்றது. அதேசமயம் நவீன சாதனங்களின் உதவியால் உலகத் தொடர்புகளைப் பேண வழி திறந்தது போல இருக்கிறது. பொருளாதார ரீதியாக அதிகம்

Page 38
சிரமப்படத் தேவையில்லை. சிற்றிலக்கிய ஏடு வளர வளரப் புதுப் புதுப் பிரச்சினைகள் தோன்றுவது இயல்பானதே. இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுதான் நான் தினசரி இயங்கி வருகின்றேன். ஒன்றை இங்கு பதிய
வெகு தெளிவாக
வைக்கின்றேன். மல்லிகைக்காக வேலை
செய்யும் போது வெகு வெகு சுகமாக இருக்கின்றது.
* ஒரு சிலர் இருக்கிறார்கள், எழுத்தாளர்களினது நூல் வெளி யீடுகளில் கலந்து கொள்ள மாட் டார்கள். இலக்கியக் கூட்டங் களுக்கு அறவே வரமாட்டார்கள். சகோதர எழுத்தாளர்களினது நன்மை - தீமைகளில் பங்கு பற்ற மாட்டார்கள். ஆனால், பேட்டி என வரும்போது வரிக்கு வரி எழுத்தாளர்களுக்கு ஞானரிஷிகளைப் போல, வாய்
6J Gob 60 t I
கிழிய உபதேசம் செய்வார்கள். இவர்களினது இந்தக் கையாலா காத் தனத்தைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
தெஹிவளை. எம்.எஸ்.ரமணி
இப்படியானவர்களின் கருத்துக்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அப்படியே காற்று வாக்கில் விட்டு விடுங்கள். இந்த நாட்டுத் தரமான வாசகன் நாலும்
72
8
S 영 -6
Գ
தெரிந்தவன். இப்படியான இலக்கியப் புலுடா விடுபவர்களின் வார்த்தை ஜாலங் களின் பின்னணியை ஏற்கனவே அவன் தெரிந்து வைத்திருக்கின்றான்.
* நானோர் இளம் எழுத்தாளன்.
படித்துக் கொண்டிருக்கின்றேன். இலக்கிய ஆர்வம் நிறையவுண்டு.
நான் இலக்கிய உலகில் பெயர்
பதிக்க நானென்ன செய்ய வேண்டும்?
வெள்ளவத்தை. சமனோகரன்
() நிறையப் படிக்க வேண்டும். நிறையக் கேட்க வேண்டும். வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டுள்ள நீங்கள் தமிழ்ச் சங்கத்தின் நூலகப் பகுதியைத் தாராள uDITIÐ பயன்படுத்துங்கள் தரமான நல்ல நூல்கள் அங்கு கிடைக்கும். அத்துடன் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடுங்கள். இலங்கையில் வெளிவரும் நூல்களைத் தொடர்ந்து படித்து வாருங்கள். இடையிடையே மனதில் தோன் றும் கருத்துக்களுக்கு எழுத்துருவம் கொடுங்கள். எல்லாவற்றையும் விட ஒழுங்
காகப் பாடங்களைப் படித்துப் பட்டதாரியாக மாறுங்கள். நாளை நீங்களொரு எழுத்தாள
ராக மலரும் போது பட்டப் படிப்புள்ளவர்
என்ற கெளரவமும் உங்களுக்கு இயல்
பாகவே வரும்.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

|ർപ്പു മറ്റdue
MAN ZATURZS
C Automatic dust & scratch correction
* Maximum Size: 12" x 8"Dil Pind
Output Resolution: 4oodpi *Film lnput Formats: 135, Ix24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
megative, Sepia mesative "
Compatible linput & Output Media:
Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia)
is Print to Print
Conduct sheet & lindex print
empates: Greeting Carda, Frame Prints, Calandar Prints,
Album Prints.
HAD OF Fior
BANCH
HAPPYDIGITAL CENTRE Apy photo
Da Al Kon As
subs
No. 64 Sri Sumanatissa Mw, No. 3oo, ModeraS
3OO era Street, Colombo - ul. Tel -o74-6τοόσα, ëélémf::6 - I5. Tel:-оп-252.645.