கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.09

Page 1
50வது ஆண்டை நோக்கி.
屬 (XS (
ஆவியாபிளிச்
: :
 
 

செப்டெம்பர் 2008

Page 2
சர்வதேச புத்தகக் கண்காடீஇயும், விற்பனையும்
B.M.C.H - 2006 16.09.2006 - 24.09.2006
Hal : D No 1 D176ம் இலக்கத்தில் அமைந்துள்ள எமது புத்தக நிலையத்தில் அனைத்து துறைசார்ந்த புத்தகங் களையும் விசேட சலுகை விலையில் நீங்கள் பெற்றுக் Gasmeitsteomb.
அன்புடன் அழைக்கிறது
MZ (8&LDLDG Gurt 5585&IT606)
EFKrono
49,50,52 பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு 11.
தொலைபேசி : 011 - 2472362 தொலைநகல் : 011 - 2448624 L566T607(6556) : Chemamadu (Dyahoo.com
UG50, 52, People's Park Colombo - 11. Sri Lanka
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
影響 imgTsubsisti sisarissau இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியச்சஞ்சிகை விதந்து பாராட்டப்பட்ட பெறுமதி மிக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. Báčs. mgr i séásenis uosissers. ése a girl-rgyteát pü uglast-tér ஹன்னர் பதிவு செய்ததுடன் எதிர்காலச்
சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியமுள்ளது.
5O - வது ஆண்டை நோக்கி.
Gly (Los
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல - அது ஒர் ஆரோக்கிய மான இலக்கிய இயக்கம்
201/4, Sri KothiresOn
Street, Colombo - 13. Te: 232O721
அர தின்gநினைத்துப் பார்க்கின்றே!ே
ஆண்டு முடியப் போகின்றது.
42-வது ஆண்டு மலருக்குத் தயாராகி வருகின்றோம். இந்த நிலையில் மல்லி கையை உளமார நேசிக்கும் இலக்கியச் சுவைஞர்களுடன் உரையாட விரும்பு கின்றோம்.
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் - இங்கும் சரி, தமிழகத்திலும் சரி - தொடர்ந்து 41 ஆண்டுகள் ஒர் இலட்சிய இதழ் வெளி வருகின்றதென்றால் அது மல்லிகை ஒன்று தான்! - மல்லிகை ஒன்றேதான்!
இந்த மகத்தான் வரலாற்றுப் பெருமையை மல்லிகைச் சிற்றேட்டுக்குப் பெற்றுத் தந்தவர்களே நீங்கள்தான் - உங்களினது தளராத ஒத்துழைப்புத்தான்!
இதற்கு நாம் கொடுத்த விலையோ அதிகம்.
சிற்றேடொன்று தனக்கெனத் தலை நகரில் ஒரு அலுவலகத்தை நிறுவி, பக்கம் பக்கமாக மல்லிகைப் பந்தல்" நூல் வெளி யீட்டு அமைப்பொன்றையும் உருவாக்கி, இத்தனை நீண்ட காலமாகத் தாக்குப் பிடித்து, இன்று உலகப் புரப்பெங்கும் நமது மண்ணின் இலக்கிய வீரியத்தைப் பரப்பி வருகின்றதென்றால் அதன் அன்றிட்ட அடிப் பசளையை இன்று தூர நின்று நினைத்துப் பார்க்கின்றோம்.
இதற்கெல்லாம் மூல காரணமாகத் திகழ்ந்த சுவைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.
- ஆசிரியர்.

Page 3
IIth uពិញថាប៉ាងបិ
கொழக்காய்கள்
- டொமினிக் ஜீவா
திரு. எஸ்.ராமன் அவர்கள் மிக இளம் வயதிலேயே
பிறந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து கொழும்பிற்கு வந்துவிட்டார்.
அந்தக் காலத்திலிருந்தே சுய உழைப்பின் மூலம் முன்னேறி, முன்னேறி இன்று "ஹோல்டன் கபே என்ற சைவ ஹோட்டலுக்கும் சென்னையில் இன்னொரு ஹோட்டலுக்கும் சொந்தக்காரராகத் திகழ்ந்து வருகிறார்.
இவர் பொதுவாகக் கலைஞர்களிடம் தனி அன்பு பாராட்டி வருபவர். மல்லிகை ஆரம்பித்த காலத்திலிருந்தே பல வழிகளிலும் அதன் வளர்ச்சிக்குத் தன்னாலியன்ற உதவி, ஒத்துழைப்பை நல்கி வருபவர்களில் இவரும் ஒருவர்.
இவரது நூல் ஒன்று கடந்த ஆண்டு வெளிவந்துள்ளது. ‘சிதறிய முத்துக்கள்" என்பது அதனது பெயர். உலகப் பெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் நிறைந்த பொன்மொழிகளை ஒருங்கு சேரத் தொகுத்து, அந்த நூலை வெளியிட் டுள்ளார். அந்த நூல் சிறப்பாக வெளி வருவதற்கு நானும் என்னால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளேன்.
மாணவர்களுக்கு அறிவு தரும் பய னுள்ள நூலிது.
நானிவரை ‘ராமண்ணா” என்றே அழைத்து வருவேன். ராமண்ணா” என்ற பெயரில் பிரபலமான தமிழ் சினிமா டைரக்டரும் இருந்துள்ளார். இனிமையாகப் பழகும் இவரை நெஞ்சார நினைக்கும் பொழுது எனக்குத் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவே ஞாபகத்திற்கு
d
வரும.
 
 

நடக்க இருக்கும் புத்தகச் சந்தையும் தேங்கிக் கிடக்கும் நமது தமிழ் வெளியீடுகளும்
இந்த மண்ணில் நானா பக்கங்களில் இருந்தெல்லாம் கிழமைக்கு ஒரு நூல் என்ற கணக்கில் புதிய புதியப் புத்தகங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
செய்திப் பத்திரிகைகளில் வெளிவரும் தகவல்களைத் தவிர, வெளியே தகவல்களாகக் கசியப்படாது வெளிவந்த புத்தகங்கள் இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம்.
இத்தனை இத்தனை வெளியீடுகள் புத்தம் புதிதாக இங்கு வெளி வந்திருப்பினும் கூட, இவற்றைச் சந்தைப்படுத்த வசதியில்லாமல் திகைத்துப் போயுள்ளனர் தனிநபர் வெளியீட்டாளர்கள்.
பணத்தையும் ஆர்வத்தையும் உழைப்பையும் முதலீடாகக் கொண்டு தத்தமது படைப்புகளை நூலுருவாக்கித் தந்த இந்தச் சுய வெளியீட்டாளர்களுக்கு ஆக்க பூர்வமான ஒத்துழைப்பைத் தர வேண்டுமெனப் புத்தகச் சந்தையில் விற்பனவுக் கூடமமைக்கும் தமிழ்ப் புத்தக விற்பனையாளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
சிங்களப் புத்தக வெளியீட்டாளர்களுக்கு அந்நியச் சந்தைப் போட்டி இல்லை. எனவே, அவர்கள் நூல் வெளியீட்டுத் திட்டத்தினாலும், இப்படியான புத்தகச் சந்தை விற்பனவுகளினாலும் அதிக அதிகமாகப் பயனைப் பெறுகின்றனர்.
இந்த வாய்ப்பு வசதி இந்த நாட்டுத் தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களுக்கு இல்லவேயில்லை.
இது இந்த மண்ணின் பெரிய துரதிர்ஷ்டங்களில் ஒன்று.
கட்டுக்கடங்காமல் இங்கு வந்து குவியும் தமிழக நூல் விற்பனவுப் போட்டியிலிருந்து நமது மண்ணில் ஒரு புதிய புத்தகக் கலாசாரத்தைப் பாதுகாத்து
நிறுவ விளையும் சகலருக்கும் - குறிப்பாக நமது தமிழ்ப் புத்தக விற்பனையாளர்களுக்கும் - இந்தக் கருத்தை வற்புறுத்திச் சொல்லுகின்றோம்.

Page 4
இeஒUUUUடு
தனது நாடிருக்கூத்துக்களால் மக்களை இன்னமும் ஈர்க்கும் கலைஞர்
கலாபூஷணம் குழந்தை
- பி.பி.அந்தோனிப்பிள்ளை
'குழந்தை' என்ற பெயரால் அழைக்கப்படும் ஆசிரியர் கலாபூஷணம் செ.செபமாலை அவர்களின் கலை ஆற்றல் பல துறை தொடர்பானது. எனினும் நாடகத்துறையில் பாட்டு, பேச்சு, நடிப்பு, கூத்து எல்லாம் அடங்கியிருப்பதால் இவரை நாடகக் கலைஞன் என்று அழைப்பதே பொருத்தமானதாகும்.
மன்னார் மாவட்டத்தில் மட்டுமன்றி அகில இலங்கை ரீதியிலும் நாடகத்துறை தொடர்பான பேச்சு எழும் பொழுது கலைஞர் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது.
ஐம்பதுகளிலே முருங்கன் மகாவித்தியாலயத்தில் மாணவனாக இருந்த காலத்திலே பாடசாலையின் இசை, நாடக நிகழ்ச்சிகளிலே பங்கு பற்றித் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர், இவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டப்பா, சின்னப்பா, தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியவர்களின் பழைய பாடல் களைக் கேட்டு அப்படியே பாடும் ஆற்றலுள்ளவராக விளங்கினார். ஒலிப்பதிவுச் சாதன வசதியற்ற அந்தக்காலத்தில் எப்போதோ வானொலியில் கேட்கும் பாடல்களை அப்படியே பாடிப் பிரமிக்க வைத்தார். பாடசாலையில் நிகழும் கலை நிகழ்ச்சிகளில் இசை தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பாக இவரையே ஆசிரியர்கள் விட்டு விடுவார்கள்.

1940ம் ஆண்டு ஆவணி மாதம் 3ந் திகதி பிறந்த ஆசிரியர் குழந்தையின் தந்தையார் நன்கு மத்தளம் வாசிக்கும் அண்ணாவியார். இவருடைய சகோதரர் கள் மூவர் நன்கு பாடக்கூடிய இசைக் கலைஞர்கள். பாடசாலையில் தொடங் கிய குழந்தையின் கலைப்பயணம், கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் அதன் பின்னர் ஆசிரியராக வெளியேறிய பின்னரும் வேகமாக வளர்ச்சியடைந்தது. ஆரம்ப காலங்களில் இவரது இசை நாடகங் களில் தமிழ்நாட்டின் பழம்பெரும் பாடகர் களின் சினிமா மெட்டுக்கள் இடம் பெற்றன. பிரபலமான இம்மெட்டுக்களை Q6nuff ge60T Tuum as LDT as äs 6oo asuur 6oT தாலும் பொருத்தமாகப் பயன்படுத்திய தாலும் இவரது நிகழ்ச்சிகள் சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் கவர்ந்தது.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரை சனச் செறிவு குறைந்த இடமாக இருந்தபடியால் கலையார்வம் உள்ள வர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்
படுத்தும் வகையில் கலைக்குரிய களம்
விரிவடைந்திருக்கவில்லை. இங்கு இந்துக்களால் ஆடப்படும் காத்தவராயன் என்ற கூத்தும், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் ஆடப்படும் புனிதர்களின் வரலாறுகளைக் கொண்ட கூத்துக்களும் கிராமத்துக்குக் கிராமம் ஆடப்படுவது வழக்கம்.
Ø (සංයෝගය অ
ஐம்பதுகளில் பேராசிரியர்களான வித்தியானந்தன், சிவத்தம்பி ஆகியோ ரின் முயற்சியினால் நாட்டுக்கூத்துக் கலைக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. ஆசிரியர் குழந்தை இதேகாலத்தில் இத் துறையில் ஈடுபட்டபோது, கத்தோலிக்க புனிதர்களின் வரலாற்று நாடகங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன. சிறந்த தாள அமைப்புடைய பாடல்கள் இருந்தன. ஆனால், பல்வேறு நாடகங் களிலும் பாடல் மெட்டுக்கள் சிலவே மாறி மாறி வந்துகொண்டிருந்தன. ஆகவே கலைஞர் குழந்தை தமது இசையாற் றலை முழுமையாக வெளிப்படுத்த இராகங்கள், மெட்டுக்களில் புதுமையைப் புகுத்த வேண்டியிருந்தது. மன்னார் மாவட்ட நாட்டுக் கூத்துக்கு புது மெரு கூட்டிய பெருமையும் கலாபூஷணம் அவர்களையே சாரும். எந்தச் சமூகத் தையும் புண்படுத்தாத வகையிலும் இசையின் அடிப்படை மரபுகளை மீறாத வகையிலும் புதுமை என்ற வகையில் ஆபாசத்தைப் புகுத்தாமலும் இவர் நாடகத் துறைக்குப் புதுமையைச்
சேர்த்துள்ளார்.
சிறந்த பேச்சாளரான கலைஞர் குழந்தை, மாணவப் பருவத்திலேயே தமி ழரசுக் கட்சிக் கூட்டங்களிலேயும், தமிழ் எழுச்சி மாநாடுகளிலும் பங்கு கொண்டு உரையாற்றித் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளார். பின்னர் அரசியலில் ஏற்பட்ட விரும்பத்தகாத போக்குகளி னால் அரசியல் சாக்கடையில் இருந்து இவர் கழன்று கொண்டது கலைத்

Page 5
DeGeo: KNS
துறையின் அதிர்ஷ்டமாகும். கலா பூஷணம் குழந்தை தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் மொழிப் பற்று, இனப்பற்றுள்ள ஒரு கலைஞனாகவே வாழ்ந்து வருகிறார். இவரது படைப் புக்கள் பலவும் இவற்றை அடிப்படை யாகக் கொண்டவையே.
1964ம் ஆண்டு இவரால் ஆரம்பிக் கப்பட்டு இன்று வரை நாடகங்களையும் இதர கலை நிகழ்ச்சிகளையும் வழங்கி வரும் "முத்தமிழ் கலா நாடக மன்றம்' இவரது ஆற்றலுக்கும் உழைப்புக்கும் சாட்சியாக விளங்கி வருகின்றது. கலைஞர் குழந்தை அவர்கள் எழுதி நடித்து மேடையேற்றிய நாடகங்களை யும், அவர் பெற்ற விருதுகளையும் அட்டவணைப்படுத்துவதாயின் அதற் கான தனியான சிறப்பு மலர் வெளியிட வேண்டிவரும். முக்கியமான சிலவற் றைக் குறிப்பிடுவதாயின்,
1998ல் அரச இலக்கிய விழாவில் இவரது பரிசு பெற்ற நாடகங்கள் என்று நூலுக்குச் சாஹித்திய விருது வழங்கப் பட்டது. 1999ல் கொழும்பில் கலாசாரத் திணைக்களத்தினால் கலாபூஷண விருது வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். 2000ம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கப்பட்டது. இப்படிச் சாஹித்திய விருது, கலாபூஷண விருது, ஆளுநர் விருது ஆகிய மூன்றை யும் மன்னார் மாவட்டத்தில் பெற்றவர் இவர் ஒருவரே.
ஆன்மீகப் பற்றுள்ள கத்தோலிக்க ரான குழந்தை செபமாலை அவர்களின் கலையை ஊடகமாகக் கொண்ட சமயப் பணிகள் மாவட்டமெங்கும் பிரசித்த மானவை. தபசு காலத்தில் பாடப்படும் கிறிஸ்துவின் திருப்பாடுகள் பற்றிய பசானை இந்த வயதிலும் களைப்பின்றிப் பாடுவார். காலஞ்சென்றவர்களுக்கான கல்வெட்டுகளை இன்றளவும் இயற்றிப் பாடி வருகின்றார். இவருடைய சமயப் பணியின் பொருட்டு 02.09.2000 அன்று மன்னாரில் இடம்பெற்ற நாடக விழாவில் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ‘திருக்கலை வேந்தன்' விருது அளித்துப் பொன் னாடை போர்த்திக் கெளரவித்தார்.
பரிசு பெற்ற நாடகங்கள், யாகப்பர் இன்னிசைப் பாடல்கள், மரபுவழி நாடகங் கள், மாதோட்டம் கவிதைத் தொகுதி இவரது நூலாக்கங்களில் சிலவாகும். உலக நாடக விழா 2005ல் கிழக் கிலங்கைப் பல்கலைக் கழகம் சிறந்த கூத்துக் கலைஞராக கலைக்கோல் விரு தளித்து இவரைக் கெளரவித்தது. இவ ரது கலைப் பணியை ஐரோப்பிய நாடான பிரான்சில் இவரது இரு புத்திரர்கள் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கூட, இசை மெட்டுக்களில் புதிய புதிய மாற்றங்களைப் புகுத்திவரும் வேளையில், கலைஞர் குழந்தையின் நாடகங்களுக்கு இன்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வம் காட்டுவது
அவரது திறமைக்குச் சான்றாகும். ப

தன்னையொரு பத்தி எழுத்தாளரெனப் பிரசித்தம் செய்துவரும் கே.எஸ்.சிவ குமாரனின் "இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்" என்ற நூல் குறித்து அபிப்பிராயம் வெளியிடு வதற்குத் தயக்கம் தடையாக எழு கின்றது. இதற்குத் தக்க காரணத்தையும் சொல்ல முடியும் சில தசாப்தங்களுக்கு
முன்னர் இலக்கியம் குறித்த இரசனைக்
குறிப்புகள் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் மிக ஒறுப் பாகவே பிரசுரம் பெற்றன. உரிய தகை மைகள் உடைய கல்விமான்களே ஒர் எழுத்துரு சம்பந்தமான நயநட்டத்தைக் கூற முடியுமென்ற ஒரு மாயை அப் பொழுது இலக்கிய உலகை வழி நடத்தியதே இந்நிலைக்கு நீர் வார்த்தது. தீவிர இலக்கிய வாசகர்கள் கூட நமக்கேன் சோலி" என்ற போக்கில்
ஒதுங்கி இருந்தனர். நேயர் கடிதப் பகுதி
களில் பாராட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டன. அத்தி பூத்தாற் போல் பிரசுரம் பெற்ற இரசனைக் குறிப்புகளுக்குக் கூட, இன்னொரு படிப்பாளியின் பொழிப் புரையை நாட வேண்டி இருந்தது! இவை தெளிவற்றவையாகவும், மிக இறுக்க மான மொழிநடை யிலும் இருந்தன. இலக்கியப் பகுப்பாய்வை இந்நிலையிலிருந்து நகர்த்திய பெருமை கே.எஸ்.சிவகுமாரனையே சாரும். எவ்வித தயக்கமுமின்றி இவர் இலக்கியப் படைப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்பவை குறித்த தனது சுவைக் குறிப்புகளை அடிக்கடி அச்சு ஊடகங்கள், வானொலி என்பவற்றின்
மூலமாக அன்றைய வாசக னுக்கும் இலக்கிய அபிமானி களுக்கும் அளித்தார். புத்தக விமர்சனம், திரைப்பட விமர் சனம் ஆகிய அச்சு ஊடகப் பத்திகளைத் தானே முழுமை யாக ஆக்கிரமிக்கத் தொடங் கினார். இந்த எழுத்துருக்கள் எளிமையாகவும், தெளி
- LDT.Lum6vérolæub

Page 6
ஒ Datasa)85
வாகவும் இலகு தமிழில் இருந்தன. இவைகளைப் படித்தவர்கள் பகுப் பாய்வு "பொல்லாத அலுவல்" என்ற மருட்சியிலிருந்து விடுபட்டனர். கே. எஸ். சிவகுமாரனை வழிகாட்டியாகக் கொண்டு தாமும் இத்தகைய எழுத்துருக் களை எழுத முனைந்தனர். இதனால் ஈழத்துத் தமிழ் விமர்சனத் துறைக்கு விமர்சகர்கள் குவிந்தனர். இதற்காகத் தமிழ் இலக்கிய உலகு அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!
அன்றிலிருந்து இன்றுவரை - ஏறத் தாழ அரை நூற்றாண்டுக்கு மேலாக - தனது தடத்தை இழக்காமல் இலக்கியப் பணி செய்கிறார். தமிழகத்திலும் இலங் கையிலும் வெளியாகிய கணிசமான நூல்களுக்குப் பகுப்பாய்வு எழுதிய பெருமை இவரையே சாரும். திரைப் படங்களுக்கும் இரசனைக் குறிப்புகளை எழுதுகிறார். காலகட்டமொன்றில் இலங்கை வானொலியின் தமிழ்த் தேசிய ஒலிபரப்பின் ஆஸ்தான விமர்சக ராகவும் இருந்தவர் இவரெனலாம்! இந்த ஆளுமைதான் பத்திரிகைகளில் இவருக்கென தனிப் பத்திகளை ஒதுக் கச் சகாயித்ததெனலாம். ஆங்கிலப் பத்தி களும் இவருக்குக் கிடைத்தன. இருப திற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இருமை இவரது சிறுகதைத் தொகுப்பு. இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகங் களில் தமிழ் கலை இலக்கியம் சம்பந்த மாக எழுதி வருபவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். அதையே தொழி லாகவும் கொண்டு வாழ்ந்தவர்.
ஒலிபரப்பாளர். பிரதிகள் மூலமாக வானொலி ஈடுபாடு கொண்டு - அதன் ஆங்கில, தமிழ் சேவைகளில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் இயங்கி, கால வோட்டத்தில் தமிழ்ச் செய்திப் பிரிவில் இணைந்து பின்னர் அப்பிரிவுக்குப் பொறுப்பாளராகவும் நியமனம் பெற்றவர்.
இவரது பெறுமதிமிக்க சேவை களை அங்கீகரிக்குமுகமாக வடக்கு - கிழக்கு மாகாண சபை இவருக்கு ஆளுநர் விருதை வழங்கிப் பாராட்டி யது. கனடாவின் தமிழர் தகவல் விருதும் இவருக்குக் கிடைத்தது.
ரேவதி' என்ற புனைபெயரிலும் எழுதியவர். "ஈஸ்வர புத்ர" என்பதும் இவரதாகவே இருக்க வேண்டுமென்பது
ஊகம்!
'பழைமையில் காலூன்றிப் புதிய மெருகு பெறும் புத்தாக்கங்களே சிறிது காலத்திற்காகுதல் நிலை கொள்ளும். புது வளர்ச்சிக்கு உதவி நிற்கும்" எனக் கருத்துரைக்கும் இவரை நற்போக்கு இலக்கியவாதி எஸ்.பொன்னுத்துரை யின் இலக்கியச் சிந்தனைகளுக்கு எனச் சிந்திக்க வைக்கின்றது! "மரபு வழித் திறனாய் வாளனாக இருக்க விரும்புகிறேன்" என
உடந்தையானவரா?
வும் சொல்லிக் கொள்கிறார். இவரது
பத்தி எழுத்துக்கள் இதுவரை எதுவித காரசாரமான சர்ச்சைகளையும் ஏற்படுத்
தாதது குறிப்பிடத்தக்கதாகும்!
பத்திகளில் தான் எழுதிய சில எழுத்துருக்களை "இந்திய - இலங்கை

இலக்கியம் - ஒரு கண்ணோட்டம்" என்ற நூலில் ஒன்றிணைத்து தற் பொழுது வெளியிட்டிருக்கிறார்.
இந்நூலை வாசித்த பொழுது உண்மையொன்று வெளித்தது! அப்ப வும் இப்பவுமாக - அங்கொன்றும் இங் கொன்றுமாக எழுத்துக்களைப் படித்துப் பெறும் பயனை விட நூலொன்றில் திரட்டி வாசிக்கும் பொழுது பெறும் புரிதல் வித்தியாசமானது! கட்டுரையாள ரின் கருத்து நிலை, மொழிச் செழுமை, விஷய அளிக்கையின் நுட்பம் என்ற அலகுகளில் படைப்பாளியின் ஆளு மையை அறிந்து கொள்ள. இத்திரட்டு நூல்கள் சகாயிக்கின்றன.
இந்நூலில் 57 தலைப்புகளில் பத்தி எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை ஆசிரியர் சுவைத்த நூல்கள், கட்டுரைகள், வானொலி, இலக்கியப் பிரமுகர்கள் - ஆகிய விஷயங்கள் குறித்தவை.
கே.எஸ்.சிவகுமாரன் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் அபி மானியென்பது அவர் இந்நூலில் சுவாமி களுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்து வத்தில் அறியக் கூடியதாக இருக்கின் றது. சுவாமிகள் குறித்த அவரது எழுத் துக்கள் அபாரமாக இருக்கின்றன. சுவாமிகள் பற்றி அறிய முனையும் தேட லர்களுக்கு அவர் சம்பந்தமான நூல்கள், கட்டுரைகள் என்பவற்றைத் தனது சுய பார்வையோடு தந்தள்ளார் - இந்நூலில்.
சுவாமி விபுலானந்தர் நினைவு மலர், அவரது ஆக்கங்கள் தொகுதி 1,
F 666):
তত্ত্ব
2, சுவாமி விபுலானந்தரின் அடிச் சுவடி
கள், சுவாமி விபுலானந்தரும் ஆறுமுக நாவலரும், சுவாமி விபுலானந்தரின் சிந் தனை நெறிகள், முஸ்லிம் நேசர் சுவாமி விபுலானந்தர், காலமும் கருத்தும், விபுலானந்தர் தரி சனம் ஆகிய சுவாமிகள் குறித்த ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் எழுதப்
சுவாமி விபுலானந்தர்
பட்ட மேற்படி நூல்களின் சாரத்தைப் பிழிந்து தந்துள்ளார். ..
சுவாமிகளின் இருப்பைத் தமிழ் அறிஞர் வட்டத்தில் நிலைக்கச் செய் தவை அவரது நூல்களான யாழ் நூல்,
மதங்க சூழாமணி என்பனவாகும். செந்
தமிழ், தமிழ் பொழில், செந்தமிழ் செல்வி, கலைமகள் ஆகிய தமிழக ஏடு களில் சுவாமிகளின் அரிய கருத்துக் களைக் கொண்ட ஆக்கங்கள் வந்ததாக சிவகுமாரன் தகவல் தந்துள்ளார். யாழ்ப் பாணத்தில் புகழ் பூத்த ஈழகேசரியும் சுவாமியின் எழுத்துருக்களுக்குத் தக்க மரியாதையை கொடுத்திருப்பதையும்
அறிய முடிகிறது.
தனது திறமையை வெளிப்படுத்தும் முகமாக அடிகளார் எழுதிய கட்டுரைக ளான இலக்கியச் சுவை', 'ஐயமும் அழ கும், ஆங்கிலச் செய்திகளை அடக்கும் ஆங்கில வாணி', 'சோழ மண்டலத்துத்
தமிழும் ஈழத்துத் தமிழும்", கலைச்
சொல் விளக்கம், தென்னாட்டில் ஊற் றெடுத்த அன்புப் பெருக்கு வடநாட்டில் பெருகிய வரன்முறை ஆகிய அடிகளா ரின் கட்டுரைகளையும் ஆய்வுக் கண் ணோட்டத்தில் வாசித்து ஆசிரியர் தனது கண்ணோட்டத்தை வாசகருக்குக்
கொடுத்திருக்கிறார்.

Page 7
6696)
অস্ত্ৰ
பதிவாகி இருக்கும் இந்தப் பத்தி எழுத்துகளை வாசிக்கும் இன்றைய இளைய சந்ததி நிச்சயமாக இதன் மூலங் களைத் தேடி தமது விபுலாநந்தர் குறித்த அறிகையை மேலும் விருத்தி செய்ய முனையுமென்பதற்கு இரண்டு கருத்து களிருக்க முடியாது!
'இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்" என்ற இந்த நூலில் இன்றைய வாசகருக்கு, புதிய சுவையைத் தரும் வாசிப்புகளைத் தரும் மூன்று எழுத்தாளர்களை ஆசிரியர் தனது பத்தி எழுத்துக்களின் மூலமாக இனங்காட்டி இருப்பதை அறிய முடிகின்றது. அகளங் கன், பாலவைரவநாதன், வைத்திய கலா நிதி. எம்.கே. முருகானந்தன் ஆகியோரே அவர்கள்! பழந்தமிழ் இலக்கியங்களின் வாசிப்பைப் பெருக்க வேண்டுமென்ற அவாவில் எழுதியும், மேடைகளில் பேசி யும் வருபவர் அகளங்கன். அரைத்த மா வையே திருப்பி அரைத்தும், கூறியவை களையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுமிருக்காது, பழந்தமிழ் இலக் கியங்கள் கூறும் விஷயங்களை தற்கால விஞ்ஞான உலகுக்கு இயைந்த வகையில் ஆய்ந்து நவீன கருத்துக்களைப் படைக் கும் சிந்தனையாளர். 'பாரதப் போரில் மீறல்கள்’ என்ற இவரது நூலை கே.எஸ். சிவகுமாரன் வாசித்துப் பத்தியில் எழுதிய எழுத்துருவையும் இந்நூலின் மூலமாக வாசிக்க முடிந்தது.
நடைமுறை வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் வழிகாட்டல் நூல் களையோ, கட்டுரைகளையோ தற்கால எமது எழுத்தாளர்கள் படைப்பது மிகக் குறைவாகவே இருப்பதை, வாசிப்பை
10
நித்திய ஊழியமாகக் கொண்டிருக்கும் எமது ‘புத்தகப் பூச்சிகள் அவதானித் திருப்பர்! இத்தகைய எழுத்தில் பிரபலம் பெற்றவர்களாக தூரன், அப்துற் றஹிம், தமிழ்வாணன், உதயமூர்த்தி ஆகிய தமிழக எழுத்தாளர்களைச் சுட்டலாம். தற்பொழுது இலங்கைப் பத்திரிகை களும், சஞ்சிகைகளும் இத்தகைய எழுத் துருக்களுக்குப் பத்திகளை ஒதுக்கு வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த ரகக் கட்டுரைகளை மிக வேகமாக எழுதித் தமிழ் வாசகருக்காகப் பிரசுரித்து இவரது கட்டுரைகளின் தொகுப்புத்தான் "வாழ் வின் வசந்தங்கள்'. இந்நூலைப் படிக்க
வருபவர் பாலவைரவநாதன்.
வேண்டுமெனச் கட்டும் கட்டுரையொன் றும் நூலில் இடத்தைப் பிடித்துள்ளது.
கலைத்துறைக்கு அப்பாற்பட்ட கல்வியைப் பெற்றும் கலை, இலக்கியத் துறைகளில் நாட்டம் கொண்டிருக்கும் கல்விமான்களும் எமது நாட்டிலுண்டு! வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர் கள் ஆகியோர் தமிழ் படைப்பாளிகளாக வும் கலை இலக்கிய சேவை புரிகின் றனர். இவர்களுள் இலக்கிய உலகின் அதி விசாலமான கவனத்தைப் பெற்றி ருப்பவர் வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன். சிறுகதைப் படைப்பாளி. விமர்சகர். அத்தோடு தனது வைத்தியத் தொழில் சார்ந்த கட்டுரையாளர். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற கண்ணோட்டத்தோடு தன் முன் இயங்கிக் கொண்டிருக்கும் மனித குலத்தை நல்ல தேகாரோஃகியத்துடன் வாழ வைப்பதற்காக அதற்கான வைத்திய ஆலோசனைகளைக் கூறும் அரிய நூல்களை வெளியிட்டுக் கொண்டி

ருக்கிறார். இவைகள் நாமெல்லாம் அடிக் கடி வைத்தியசாலைகளின் படிகளை மிதிப்பதைத் தவிர்க்கக் கூடியவை!
இப்பணியில் முகைத்த இவரது அண்மைக்கால அறுவடைதான் 'ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. தன் தன் தொழில், வாழ்வு பாதிக்கப்படாத வகை யில் அவைக்கு உதவக்கூடிய வகையில் அவைகளோடு சம்பந்தப்பட்ட குறிப்பு களைத்தான் டயரிகளில் பதிவது
வழக்கம்! ஆனால் வைத்திய கலாநிதி,
எம்.கே.முருகானந்தன் தன்னை நாடி
வரும் வாடிக்கையாளரிடமிருந்து தான் |
பெற்ற விநோதமான கருத்துப் பரிமாறல் களையும், தவறான போக்குகளையும் தன் டயரியில் பதிந்து, அவைகளைக் கலா ரூபப்படுத்தி வாசகருக்கு வாசிக்கத் தந் திருக்கிறார். அவரொரு இலக்கியவாதி யல்லவா! இந்நூலைப் பற்றிய கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துருவும் பதிவாகி
இருக்கின்றது. “புத்தகத்தைப் படித்துப்
பாருங்கள்! அநுபவமும் அறிவுக் பெருக் கமும் பெற்றே தீர்வதுடன், சுவையான
கதை சொல்லும் பாணியையும் அனு |
பவிப்பீர்கள்" என்கிறார் இந்தப் பத்தி எழுத்தாளர் சிவகுமாரன்.
"ஒரு பிள்ளையின் உடல், உள மன வெழுச்சி, சமூக நன்னடத்தை, அழ கியல், ஆன்மீகம் ஆகியவற்றில் பூரண விருத்தி ஏற்படும் பட்சத்திலேயே அவன் முழு மனிதனாகின்றான்.” சிறுவனொரு வனைப் பக்குவமான மனிதனாக்குபவை எவை? என்பதற்கு மேற்படி வழிகாட் டலைச் சொல்லும் திவ்வியராணி சிதம் பரநாதனின் சிறுவர் இலக்கிய நூல் "கதையும் கருவும்". இதில் திருக்குறள்
g;66);  །
கருத்துகளோடு உளவியற் கருத்துக் களையும் ஒன்றிணைத்து புனையப்பட்ட 20 கதைகள் இருப்பதாக கே.எஸ்.சிவ குமாரன் தனது பத்தி எழுத்தில் சொல்லி இருக்கிறார். அத்தோடு "சிறுவர் இலக் கியத்திற்கு அணி சேர்க்கும் மிக முக்கிய மான நூல்" எனவும் சிபாரிசு செய்கிறார். வாடி வதங்கிக் கொண்டிருக்கும் நம் நாட்டு சிறுவர் இலக்கியத்திற்கு முண்டு கொடுக்கட்டும்! வாழ்க!
இத்தொகுப்பு நூலில் சில ஆங்கில நூல்களுக்கும் சிவகுமாரன் எழுதி இருக்கும் கண்ணோட்டங்கள் இடம் Gupg5(53&airport. "You are being Lied"
(உங்களுக்குப் பொய் சொல்லப்படு
Spg), Rain Raising' (udsop HTCupé-SA), News Read by S. Punniyamoorthy' (செய்திகள் வாசிப்பது எஸ்.புண்ணிய மூர்த்தி) இவைகளே அவைகள்.
இன்றைய தகவல் ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் பெயர்தான் நிருபமா மேனன்ராவ். இவர் இலங்கைக் கான இந்தியத் தூதுவர். கேரளத்தவர். இவர் யாத்த கவிதைகளின் தொகுப்பே Rain Raising’ (iDayp group&S). ggai திரட்டப்பட்டுள்ள கவிதைகளில் அங் கொன்றையும் இங்கொன்றையும் பொறுக்கித் தனது பகுப்பாய்வுக்கு உட் படுத்தி தனது புரிதலை வெளிப்படுத்தி யுள்ளார் கே.எஸ்.சிவகுமாரன். "ஆங்கில மொழியின் அர்த்த புஷ்டியான சொற்கள் கவிஞருக்குச் சேவகம் புரிகின்றன. அவர் கையாளும் அசாதாரணமான சொற் பிரயோகங்கள் புதுப்புதுப் படிமங்களை நம் கண்முன் கொண்டு வருகின்றன" எனத் தீர்ப்பெழுதுகிறார் சிவகுமாரன்.

Page 8
ク
உலகின் கவனத்தை ஈர்த்த ஆய் வாளர்கள் ஆங்கிலத்தில் எழுதிய
கட்டுரைகளின் தொகுப்பே You are being Lied'. Ggirgi'urgri Russel Kick.
இத்தொகுப்பு நூல் எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுள்ள தாம்! ஊடகத் திரிபுகள், வரலாற்றை மூடி மறைத்து மழுப்பும் செயல்கள் என்பவற்றை ஊடறுத்து, ஊடகங்களின் ஆத்மாவைத் தரிசிக்க வைக்கின்றதாகச் சிவகுமாரன் தகவல் தருகிறார்.
இப்படியாக இக்கண்ணோட்ட காத்திரமான இன்னும் சில நூல்களை வாசித்து, அதன் மூலமாகத் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பெய்
நூலில்,
துள்ள குறுங்கட்டுரைகளையும் நூலா சிரியர் சிவகுமாரன் சேர்த்திருக்கிறார்.
தான் வாசித்த - ஆய்வாளர்களுக்கு உதவக் கூடிய விசேட மலர்களில் வெளி யான கட்டுரைகளையும் தனது கருத்துக ளோடு பட்டியலிட்டிருக்கிறார். இவ்விட யத்தில் தமிழ் நூல் நயம் - 1996, களம் - மே 1998 மலர் 9, பார்த்தேன் (தமிழ் மொழித்தின விழாமலர் -1996- வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்), கலாநிதி. ஆனந்த குமாரசாமி நூற்றாண்டு மலர், செ.இராசதுரை மலர், இன்னு மொரு காலடி, கலைச்செல்வி ஆண்டு மலர் - 1959 ஆகிய விசேட இதழ் களுக்கு ஆய்வாளர்களின் கவனத்தை தேடுவோரது சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு அக் கறையோடு சுவடித் திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளும்படியும் வழிகாட்டி இருக்கிறார். இவையெல்லாம் எத்
ஈர்க்க வைக்கிறார்.
12
தனையோ கல்விமான்களுக்குப் புதிய செய்திகளாக இருக்கலாம்!
சிங்களச் சிற்றேடுகள் சிலவற்றில் தமிழ்க் கல்விமான்களின் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமாகி இருப்பதையும் சுட்டியுள்ளார். இது தமிழ் அறிவாளிகளின் வித்துவத்தை சிங்கள மக்கள் மத்தியிலும் பரம்பல் செய்ய அரிய வழி! இப்பாரபட்சமற்ற பணியை 'மாவத" என்ற ஏடு நடைமுறைப்படுத்தி
யதாகப் பிரசித்தப்படுத்துகிறார். இது
வொரு இடதுசாரீயக் கொள்கை சார்ந்த ஏடாக இருக்க வேண்டும்!
குறுகிய வட்டங்களுக்குள் சுருக்கிக்
கொண்டிருக்கும் சிற்றிதழ்களாக இருப்
பினும் அவை தமிழுக்கு அழகு சேர்க்கும் நல்ல பல கட்டுரைகளை வெளியிட்டிருப் பதைப் பட்டியலிட்டுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளர் தெணி யானின் மணிவிழா மலரில் வெளிவந்த அறிஞர்களது கட்டுரைகள் பிரமிப்பைத் தருகின்றன. அம்மலர் குறித்த சுருக்கக் குறிப்புகள் ஆறு பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
காலக் குறி, ஆரண்யம், தமிழினி மஞ்சரி (லண்டன்)
சஞ்சிகைகளான
என்பன சிவகுமாரனின் பார்வையில் கைதாகி இருக்கின்றன. "காலக்குறி இல் அமரர் கோ.கேசவனின் "பின் நவீனத்து வம்" பகுப்பாய்வைச் சிலாகித்திருக்கிறார் சிவகுமாரன், ஆரண்யம் (3) சஞ்சிகைத் திரைப்பட இலக்கிய மென முன் மொழிந்து, உள்ளடக்கத்தை விபரித்து அதன் கலைத்துவக் கனதியை வாசகருக் குப் புகட்டுகிறார். தமிழினி மஞ்சரி (ஒக் ரோபர் 2004) இதழில் தான் படித்துச்
 

சுவைத்த கட்டுரைகளாக, தமிழ் உலகின் முதல் வரலாற்று நாவல் 'மோகனாங்கி",
தாவீது அடிகளார்', 'சக்தி ஒரு அதிசயம் |
என்பவற்றை இனங்காட்டியுள்ளார்.
'இரும்புத் திரை நாடுகளென அடையாளம் குத்தப்பட்ட நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை, நாடு கடத்தப்படுவதை நாமறிவோம்! இக் கலாசாரம் இன்று எமது நாட்டிலும் புழக் கத்திற்கு வந்திருப்பது சுதந்திரப் பிரி
யருக்கு கவலையே! பல தமிழ் ஊடகவிய லாளர்கள் இங்கும் கொல்லப்பட்டிருக்
கின்றனர்! ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவந்த புகழ் பெற்ற தகவல் ஊடக வியலாளர் தராக்கி’ என்ற தர்மரத்தினம் சிவராமும் இதிலொருவர். அவரைச் சந்தித்ததையும், அவரது எழுத்துக்கள் குறித்தும் தானுமொரு ஊடகவியலாள ரென்ற கரிசனையோடு கே.எஸ்.சிவ குமாரன் ஒரெழுத்துருவைப் படைத் திருக்கிறார். அதுவும் இந்நூலில் அடக்கம் பெறுகிறது.
எமது இளைய சந்ததியினருக்கு மட்டுமன்றி மூத்த சில இலக்கியவாதி களுக்கும் தருமு சிவராமு என்றால் இன் னாரெனத் தெரியாது! அவரது இலக்கிய ஆளுமை ஆழமானது! படைப்புகளில் படைப்பின் இலக்கியக் கனதியைத் தெள்ளி எடுப்பவர். தமிழகத்து இலக்கிய ஊற்றுகளுக்குத் 'தண்ணி” காட்டியவர். தனது இலக்கிய எழுத்தாற்றலை விற்க எண்ணாதவர். பிரமிள் என்ற புனை பெயரிலும் இலக்கிய வலம் வந்தவர். ஏற்கனவே இரத்தினசபாபதி ஐயர் இவர் குறித்து மல்லிகையில் எழுதி இருக் கிறார். தருமு சிவராமுவின் கடிதங்கள்,
W கட்டுரைகள்,
கவிதைகள், பேட்டிகள்
13
č page) Q
அடங்கிய நூல் குறித்துப் பத்தியொன்றில் சிவகுமாரன் எழுதிய குறிப்பொன்று இத் தொகுப்பில் காணப்படுகிறது. வாச கருக்கு எட்டாத பல விடயங்கள் இக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளன. இலக்கியவாதிகளுக்கு மிகப் பயனான கட்டுரை. தருமு சிவராமுவின் நூலைத் தேடிப் படிக்க ஏவுகிறார்.
ஆக, தமிழ் மொழியின் ஏற்றத்திற் கும் அம்மொழியின் இலக்கிய வளர்ச்சிக் கும் துணை நின்ற சில கல்விமான்களது பணி குறித்தும், தமிழுக்குப் பொக்கிஷ மான சில நூல்கள், கட்டுரைகள் குறித் தும் இந்திய - இலங்கை கண்ணோட் டம்" என்ற நூல் பேசுகின்றது. இவை ஆய்வாளருக்கும், இளைய சந்ததியினருக் கும் உதவக் கூடியதாக இருக்கின்றன. இனப்பற்றாளர்களது இல்லங்களில் இதன் இருப்பு அவசியம்! அத்தோடு நாளைய சந்ததிக்கும் இது உதவிக் கரம் நீட்டும்.
இந்திய - இலங்கை இலக்கியம் கண்ணோட்டம்" என்ற இந்த கட்டுரைத் தொகுப்பு நூலூடாகச் சிவகுமாரன் தனது இலக்கிய நூல் பேழையைத் திறந்து காட்டி இருக்கிறார். அவரொரு நடமாடும் நூலக மென்பதைப் பத்திகளின் இத் தொகுப்பு நூல் பிரசித்தமிடுகிறது! இர வலுக்கு வருவார்கள் ஜாக்கிரதை!
தனது பெறுமதியான காலத்தையும், பணத்தையும் செலவழித்துச் சக எழுத் தாளர்களதும், அறிஞர்களதும் ஆற்றல் களைப் பரம்பல் செய்திருக்கும் இந்நூலா சிரியர் நிச்சயமாகக் கொடாக்கண்டராக இருக்கமாட்டார்! தேடலிலும் பகிர்விலும் அவர் இன்பம் காண்பவர்! அவரைப் பாராட்டுவோமாக!

Page 9
வீட்டுக்கூரை தவறி விழுந்துவிடும் நம்பிக்கையில் முட்டு வைக்கிறோம்
O O ...'ಜ ஐந்து கவிதைகள் வெளிகள்தோறும்
வீடுகளும் மனிதர்களும்
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒடிக்கொண்டிருக்கும் அருவியின்
ஒசைக்கடியில் மூழ்கிக் கிடக்கிறது அமைதி பூத்திருந்த முந்தைய ஊர்
உள்ளம் தெளிவாகயிருந்தது அந்த உச்சிமலைக்கு ஏறிப்போனேன். மீண்டும் அடிவாரம் வந்தேன் என்னுள் மலையின் Lrryub
அந்த மஞ்சள் வான் ரசிக்க கடற்கரை போயிருந்தோம் எல்லோர் முகத்திலும் மஞ்சள் பூசியது அந்தி
மரபில் எழுதிக்காட்டினால் நாகரிகம் தெரியாதவனெனத் திட்டுகிறீர்கள்
புதுசில் எழுதிக்காட்டினாலோ மொழியைச் சிதைத்து N கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறீர்கள்.
பிறகு எப்படித்தான் புரியவைப்பது உங்களுக்கு என்நிலை. o கனிவுமதி
4
 
 
 
 

என் நிலையும்.
- கு.பிரகாஷினி
அநாதியாய் இருந்த வானத்தின் தனிமையைக் கண்டு துயருறுகிறேன் என் நிலையும் அதுவே என எண்ணி.
சூரியத்தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த கதிர்களின் சிதறல்களைக் கண்டு துயருறுகிறேன் என் இதயத்தின் நிலையும் அதுவே என எண்ணி.
அழகிய கடற்பரப்பிலே தனியாய் நின்று காவியம் கிறுக்கிச் செல்லும் நண்டின் சோகத்தைக் கண்டு துயருறுகிறேன் என் நிலையும் அதுவே என எண்ணி.
ஆ. மறைந்த நிலவு மெல்ல மெல்ல வெளிப்பட்டுத் தெரிகிறதே இன்று பெளர்ணமியல்லவோ. அந்த வானத்தாயின் வட்டத்திலகம் கண்டு இன்று பரவசமடைகிறேன் என்றாவதொருநாள் என் நிலையும் அதுவே என எண்ணி.
15

Page 10
கவிஞர்
பசுபதி கவிதைகள் ஆய்வரங்கு
தொகுப்பு - செல்லக்கண்ணு
வர்க்க பேதத்தினால் ஏற்றத் தாழ் வுற்றுத் தாறுமாறாகக் கிடக்கும் சமூக அமைப்பை - ஒரு சிலருக்கு எல்லா வற்றையும் மிகப் பலருக்கு இல்லாமை யையும் திணித்து வாழ்க்கையில் கோணற்தனத்தையும், கொடுமையையும் நிலவச் செய்திருக்கும் இச்சமூக அமைப்பை மாற்றி வர்க்க பேதமற்ற, ஏற்றத் தாழ்வற்ற ஒரு சுபீட்சமான சமூக அமைப்பை, ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையினால் உந்தப்பட்டு, அதற்கமைய இலக்கியம் படைப்ப வர்கள்தான் மக்கள் எழுத்தாளர் ஆவர்.
இந்த எல்லைக்கு அமைவாகத் தனது கவிதை யாப்பை நெறிப்படுத்திக் கவி பாடி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற கவிஞர் அமரர் பசுபதி. இக்கருதுகோளுக்கு மேலும் வலு ஏற்றும் பொருட்டு அமரரின் சமகாலக் கவிஞரான சுபத்திரன் இப்படி
விழிக்கிறார்.
“யாழ்ப்பாணத்துக் கவிராயர் என்று - புரட்சி
யாப்புக்குள் கவி செய்த தோழா வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் - நீ வைத்திங்கு சென்ற கவி வாழும்"
தமிழுக்கு வாய்த்த தனமென அமரர் பசுபதியைப் பெறுமானம் செய்யும்
தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசன் -
"உலகினைப் புதுக்கி, மூசி உழைப்பவர்க்குடைமையாக்கி அலகிலாப் பொதுமை வையம் அமைத்தின வேதச் சாதி அலகைகள் அனைத்தும் மாய்த்திங் கறத்தினை, அழகை ஒம்பப் பல சுவைப் பாக்கள் யாத்துப் படைத்துளான்; படித்துப் பாராய்!”
16

எனவும் கவிதை
யாப்பைச் சிலாகிக்கிறார்.
அமரரின்
கவி கந்த முருகேசனாரிடம் பழந் தமிழ் இலக்கியங்களைக் கற்றுப் பண் பட்ட ஒரு கவிஞராக முகிழ்ந்தவர் பசுபதி. தான் வாழ்ந்த காலத்துக் கவிதை மரபுகளைப் பேணி, அக்காலம் ஊட்டிய அவலங்களைச் சுட்டெரிக்கும் விசையோடு கவி பாடிப் புதியதோர் உலகைக் காண எத்தனித்தவர். பாட்டில் மட்டும் தன் எழுச்சியைச் பரம்பல் செய் யாது உடல் உழைப்பாலும் அடிமட்ட மக்களது விழிப்புக்காக உழைத்தவர்.
ஈழத்திலுள்ள ஏனைய பொது வுடைமைவாதிகளைப் போல் தோழர் மு.கார்த்திகேசனின் சுவட்டைப் பற்றி மக்கள் சேவைக்கு வந்தவர். பசுபதி கவிதைகள் குறித்து தோழர் மு.கார்த்தி கேசன் - அவரது கவிதைகள் கருத்தற்ற வையாகவோ, அன்றிக் கேளிகைக்குரிய வையாகவோ அமையவில்லை. அவை கருத்தும் குறிக்கோளுமுடையவையாக விளங்கின; விளங்குகின்றன - என் கிறார்.
சாதியப் போராட்டங்களை ஒரு முகப்படுத்தி ஓர் அணிக்குள் கொண்டு வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிமிர் வைக் கொடுத்த தோழர் எம்.சி.சுப்பிர மணியம் - நிலப் பிரபுத்துவத்தின் சாபக் கேடான சமூகக் கொடுமைகட்கும், முத லாளித்துவச் சுரண்டலுக்கும் உட்பட்டுச் சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நல்வாழ்விற்கு
17
čo Op 656GDE: மாகத் தன் இளம் பராயம் தொடக்கம் உழைத்து வந்தவர் காலஞ்சென்ற பசுபதி அவர்கள் - என்கிறார்.
கவிஞர் பசுபதியை நிரந்தரமாகக் குடத்துள் விளக்காக்கி விடாது, அவரது கவிதைகளை நூலாக்கி வெளியிடுவ தற்கு முன்னின்றுழைத்தவர்களுக்கு கைகொடுத்து, தனது கடைசிக் காலத் தில் “கொஞ்சப் பாட்டுக்களையாவது புத்தகமாகப் போடப் பாருங்கோ’ என யாசித்த பசுபதியின் வேண்டுகோளுக்கு உயிர் கொடுத்து நூல் வெளியிட முன் வந்தோருடன் ஒத்துழைத்த பஞ்சமர் இலக்கியத்தின் பிதாமகர் கே.டானியல்; அமரர் பசுபதியின் சேவையை, சமூக முன்னேற்றம் குறித்த பணிகளை இப் படியாக நினைவு கூர்கிறார் - மரணம் தன்னை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதை அறிவுபூர்வமாக உணர்ந்து கொண்டு, அதற்காகத் துளியேனும் கலக்கம் கொள்ளாமல், எமது பாதையில் அணிவகுத்து நிற்கும் ஆயிரமாயிரம் தோழர்களுக்கு நாளை நம்முடையதே!" என்று தன்னையும் உள்ளடக்கி ஒருமைப்படுத்தி, எதிர்கால நம்பிக் கையை ஊட்டி, உலகெங்கும் தமது விடுதலைக்காகப் போராடி நிற்கும் கோடானு கோடி மக்களை நினைவு படுத்தி, நிலையான இடத்தைப் பெற்றுச் சென்றுள்ளார் தோழர் பசுபதி - என்கிறார்.
கவிஞர் பசுபதி (யாழ்ப்பாணத்துக் கவிராயர்) தனது நாற்பதாவது வயதில் புற்றுநோய் வியாதியால் 5.7.1965இல் மரணித்தார். சுயவிளம்பரமும் ஆடம்பர

Page 11
page); St முமற்ற பசுபதியின் கவிதைகளை இலங்கை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப் பகம் 11.9.1965இல் புதிய உலகம் என்ற தொகுதியாக வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன், சென்னை - ஜூன் 2000இல் வெளியிட்டது.
கவிஞர் பசுபதியின் கவிதா ஆற்
றலை எதிர்கால சந்ததி அறிகை செய் வதற்கு இன்று இந்த ‘புது உலகம்" என்ற தொகுப்பே கைவசமிருக்கின்றது. இது கவிஞருக்குச் செய்த பாரிய அஞ்சலியெனலாம்.
முற்போக்கு இலக்கியத்தில் ஆழக் கால் பதித்த படைப்பாளிகளின் ஆற்றல் களை மறுவாசிப்புச் செய்து, ஆய்வுக் குட்படுத்திப் பரம்பல் செய்யும் நோக் கோடு விபபி கலாசார மையமும், முற் போக்கு கலை இலக்கியப் பேரவையும் பத்து இலக்கிய ஆளுமைகளைத் தெரிவு செய்து ஆய்வுக் கருத்தரங்குகள் நடத்தி வருவதைத் தமிழ் இலக்கிய ஆர்வலர் கள் அறிவர். அப்பத்தில் கவிஞர் பசுபதி யையும் ஒருவராக மேன்மைப்படுத்தி இருக்கின்றனர்! இது முற்போக்கு கலை இலக்கியவாதிகளுக்குத் தித்திக்கும் செய்தி! இக்கருத்தரங்கு 13.08.2006இல் கொழும்பு, தர்மராம மாவத்தையில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட் போர் மண்டபத்தில் நிகழ்ந்தது.
பிரபல விமர்சகரும் கல்விமானு மான ஏ.எம்.சமீம் தலைமை வகித்தார்.
18
பஞ்சமர் இலக்கியத்திற்குப் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்த 'நில விலே பேசுவோம்’ என்ற சிறுகதை யையும், 'கந்தன் கருணை" என்ற சமூக சீர்திருத்த நாடகத்தையும் படைத்த நாடறிந்த எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் கவிஞர் பசுபதியின் கவிதைகளை ஆய்ந்து தான் கண்டடைந்த உணர்வு களைக் கட்டுரையாக்கி அனுப்பி இருந் தார். என்.கே.ரகுநாதன் தற்பொழுது கனடாவில் வாழ்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது! அவரது ஆய்வுக் கட்டு ரையைத் தினகரன் பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் அரங்கிலிருந்தோருக்கு வாசித்துக் காட்டினார்.
என்.கே.ரகுநாதனின் ஆய்வுக் கட்டு ரையில் கவிஞர் பசுபதியின் வாழ்க்கைச் சரிதம் கூறப்பட்டது. கவிஞர் பருத்துறை யிலுள்ள கிராமமான வராத்துப்பளை யைச் சேர்ந்தவர். இக்கிராமத்தில் அக் காலத்தில் கள்ளிறக்கும் தொழிலாளர் களே பெரும்பான்மையினராக வாழ்ந் பஞ்சமர் சமூகத்திற்கு மறுக்கப் பட்ட கல்வி கவிஞரையும் விட்டுவிட
தனர்.
வில்லை! பெரும் முயற்சி எடுத்து அங்கு மிங்குமாக ஓடிப் படித்துத் தமிழ் ஆசிரியர் பயிற்சிப் பரீட்சையில் சித்தி பெற்றார். கற்க விடாத அன்றைய சமூ கம் கற்பிக்க விடுமா? ஆசிரியத் தொழி லைச் செய்வதற்கும் பாடசாலை கிடைக் காது கவிஞர் சோகித்தார். இரத்மலானை யிலுள்ள குருடர், செவிடர் பாட சாலையே அவரை ஆசிரியப் பணிக்கு அழைத்தது. இளமைக் காலத்தில் கவிஞர் மீது ஏவப்பட்ட தீண்டாமை அனுட்டா னமே கவிஞரைப் பொது பணிக்கு இழுத்ததென என்.கே.ரகுநாதன் கூறு

கிறார். பஞ்சமர்களது துயர் துடைக்க | அமைக்கப்பட்ட சன்மார்க்க ஐக்கிய சங்கத்தில் உறுப்பினராகி கவிஞர் தீவிர மாக உழைத்தார். தன்னையொரு பகுத் தறிவுவாதியாகச் சமூகத்தில் நிறுவினார். அன்று யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரோக்கியமான ஈடுபாடு கொண்டிருந்தார். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து அது எடுத்துக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி என்பவற்றில் பெரும் முன்னேற்றத்தைக் கொடுத்த திட் டங்களுக்கு ஆக்கபூர்வமான ஊழியத் மகாசபை 1959இல்
பொருளாதாரம்,
தைச் செய்தார்.
வெளியிட்ட மலருக்கு ஆசிரியராக இருந் தார். பொதுவுடைமைக் கட்சியில் 1956 இல் இணைந்தார்.
யாழ்ப்பாணம், பலாலி விதியில் சன் மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் அமைய ஊக்கம் காட்டினார். இச்சங்கத்திற்கு எம்.சி.சுப்பிரமணியம் தலைவராக இருந் தார். அன்று இயங்கிய கள் இறக்கும் தொழிலாளர் சங்கமே பின்னர் சிறுபான் மைத் தமிழர் மகாசபையாக மாறியதாக ரகுநாதன் ஆய்வுரை குறிப்பிட்டது. நல் வழி ஐக்கிய சேவா சங்கம் என்ற சமூக சீர்திருத்த அமைப்பிலும் இணைந்து பின் தங்கிய சமூகங்களின் எழுச்சிக்காகப் பாடுபட்டார்.
கவிஞர் பசுபதி கவி கந்த முருகேச னாரிடம் யாப்பிலக்கணம் கற்று கவி பாடத் தொடங்கியவர் யாழ்ப்பாணக் கவி ராயர் என்ற புனை பெயரில் தனது படைப்புகளை எழுதினார். ஆரம்பத்தில் எழுத்து ஊடகங்களில் வெளியான பாலர்
19
ge):
PS
பகுதிகளில் சிறுவருக்கான கதை, கட்டுரை, கவிதை என்பவற்றை எழுதி னார். அவரது படைப்புகளுக்கு வீரகேசரி பத்திரிகை பிரசுர களத்தை நல்கியது. தென்னிந்தியப் பகுத்தறிவுவாதியான ஈ. வே. பெரியாரின் தலைமையில் அன்று இயங்கிய திராவிடக் ‘விடுதலை’ இதழிலும் தனது ஆக்கங் களை வெளியிட்டார். பாரதிதாசனை
கழக ஏடான
ஆதர்சமாகக் கொண்டு கவி பாடினார்.
- ஆய்வுக் கட்டுரையில் என்.கே.ரகு நாதன் மேற்படி உணர்வுகளைப் பெய்திருந்தார்.
D கவிஞர் பசுபதியின் கவிதைகளின் ஆழத்தையும் விசாலத்தையும் கொழித் தெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் அவரது பாடல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரையில் அடக்கி வாசிக்கப் பட்டிருந்தது கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தோருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது! பசுபதி வாழ்வின் அசை வியக்கங்களை தனது கவிதையில் பிம்ப மாக்கியவர்.
"சென்றொருவன் சமவுரிமை சொல்லுகின்ற துண்டு; செயவில்லை; சீர்திருத்தம் பேச்சுருவில் LD6007Gub"
- இப்படியாகத் தான் வாழ்ந்த காலத்தில் நடமாடிய போலி மனிதர்களை வார்த்தைகளால் சுட்டெரித்தவர். மக்கள் தொண்டரெனப் பிரகடனப்படுத்திய வர்களையும் தோலுரித்தவர்.
"ஊன் தீண்டும் உத்தமரே உம்மைத் தானே!

Page 12
ஒUகை
உடல் தீண்டல் தீதென்பீர், தீண்டாச் சாதி மான் விழியாள் ஒருத்தி வந்து மயக்க மேற்ற மறுப்பதில்லை, முயக்க முண்டு முடிவில் இன்பம் ஏன் இந்த அநியாயம்? சாதி இல்லை எள்ளவும் குருதியிலே ஏற்றம் 26to GSLIT2'
- இத்தகைய விதத்தில் கவி பாடி மூடத்தனத்தால் மண்டிக் கிடந்த அன்றைய சமூகத்தை விழிக்க வைத்துப் புதியதோர் உலகைக் காணத் துடித்த கவி ஞர். அன்றைய கவிதா உலகை அனு சரித்து அதற்கமைய தனது பாடல்களை இயற்றியவர். அவைகள் வெறும் சொல் லடுக்களாக இருக்காது அர்த்தமுள்ள வரிகளாக வாசகனின் சிந்தனையை விரிபுபடுத்தின. சாதீயம், தொழிலாளர் மொழிப்பற்று என்பவற்றோடு தத்துவம், இயற்கை குறித்தும் உவமை நயங்க ளோடு அரிய கவிதைகளைப் பாடியிருக் கிறார். தன் உணர்வில் மார்க்சியத்தின் கோட்பாடுகளை உள்ளடக்கி ஏராளமான தனிப் பாடல்களைப் பாடினார். இவை அக்கறையான சமுதாய நோக்கைக் கொண்ட பாரதி பரம்பரைக் கவிதைக ளென கல்விமான்கள் வியந்தனர். இவை சீரான ஓசை நயத்தைக் கொண்டவை. எளிமையான சொற்களால் அலங்காரம் பெற்றவை. இசை அமைத்துப் பாடுவதற் கும் ஏற்றவை. அவரது பாடல்களை எமது சிறுவர்கள் படித்துப் பயன்படும் வகையில் பாடப் புத்தகங்களில் அக் கவிதைகள் இடம்பெறுவது கவிஞருக்கு
20
நாம் செய்யும் மரியாதையாகும்.
"நாளும் உழைத்திடும் மனிதர் - தினம் நலிந்து மடிவதைக் கண்டு பாழும் துயரினை வென்று - உயர் பணி செய்வதே நலத் தொண்டு’
- இப்படியாகத் தொண்டின் சிறப்பை, அதன் தாற்பரியத்தை கவிஞர் இனங் காட்டுகிறார்.
வாழும் காலம் அவருக்குக் கொஞ்ச மாக இருந்தாலும் அவரது கவிதைகள் காலத்தால் சாகாதவை. அத்தகை சிறப் பான கவி இன்பத்தை ரகுநாதனின் கட்டுரை தந்திருக்க வேண்டும்! அது நடக்கவில்லை! இதற்காக என்.கே. ரகுநாதன் பொருத்தமற்றவரென கூற வில்லை. பசுபதியின் கிராமத்தவர் சிறந்த இலக்கியவாதி! 'புது உலகம் தொகுப்பு கைவசம் இல்லையாக்கும்!
தமிழின் மாண்பு உச்சமாகிக் கொண்டு வரும் இக்காலத்தில் இளைய சந்ததியினரில் பலர் தமிழை ஆராய்ச்சி முறையில் படித்துக் கொண்டிருக் கின்றனர். காற்றுப் புகா இடத்துள்ளும் கவிதை புகுமென்பர். அத்தகைய சக்தி வாய்ந்த தமிழ்க் கவிதையைக் கவனிக் காதிருப்பரா இத்தகைய ஒருவரையாவது இப்பணிக்கு இழுத்திருப்பின் ஏற்பாட் டாளர்கள் தம் இலக்கை வென்றிருக் கலாம் ! விட்டதே!
வெறும் கண்துடைப்பாகி
- ஆய்வுக் கட்டுரை விவாதத்துக்கு விடப்பட்ட பொழுது, தன்னையொரு
சமூகப் பணியாளரும், நெடுநாள் சாதியப் போராட்டங்களின் அவதானியுமெனக்

கூறிய வடிவேல் என்பவர், சாதீய எதிர்ப்பு மூன்னோடியான யோவேல் போல் என்பவரது பங்குப் பணியைக் கூறி, ஆய்வறிக்கையில், கள் இறக்கும் சங்கமே பின்னர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாகப் பெயர் மாற்றப்பட்ட தாகக் கூறியதை மறுத்துரைத்தார். ஒடுக் கப்பட்ட தமிழ் ஊழியர் சங்கமே இத் தகைய மாற்றத்தை பெற்றதெனவும் சொன்னார். இன்றைய பல்கலைக் கழகங் களில் கணிசமான அளவு தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் கற்பதற்குப் பல முன் னோடிப் போராட்டங்களை நடத்திய மகா சபையைச் சிலாகித்தார்.
யான வரலாறு எழுதப்பட வேண்டும். இது சாத்தியப்பட்டால் தமிழரது சமூக வாழ்வியலின் பரிமாணத்தை இளைய தலைமுறை கற்க முடியும். அவர், இவர் சொல்லட்டுமே என இவைகள் சம்பந்த
சாதீயப் போராட்டங்களின் உண்மை
மான தகவல்களைத் தம்மோடு காவித் திரியும் மூத்தோர், பின்னடிக்காது அவை களை வெளிப்படுத்துவது இனத்தின் பாரிய தேவையை நிறைவுபடுத்தும்,
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தான் கவிஞர் பசுபதியை ஐந்து வகையில் பார்ப்பதாகச் சொன்னார். பசுபதி (1) ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பயிற்றப்பட்ட ஆசிரியர். (2) பொது வுடைமைக் கட்சியின் இறுக்கமான - உற்சாகமான உறுப்பினர். (3) சிறு பான்மைத் தமிழர் மகாசபையின் மிகப் பொறுப்பு வாய்ந்த சேவகர். (4) முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர். (5) கவிஞர்.
21
É page): শু தொடர்ந்து கருத்துரைக்கையில் மல்லிகை ஜீவா -
சாதீயப் போராட்டங்களில் தாழ்த் தப்பட்டோர் மட்டுமே முன்னின்று போராடவில்லை. அப்போராட்டங்களில் யாழ்ப்பாணத்தின் உயர் சாதியினரும் அக் கறையோடு பங்கு பற்றினர். தென்னிந் தியச் சாதீயத்தைக் காட்டிலும் யாழ்ப் பாணத்துச் சாதீயம் கொடுரமானது! பசு பதி சலுகைகளுக்காகத் தன்னை விற்ற வரல்ல! கிறிஸ்தவ பாடசாலைகள் மத மாற்றத்தை நாடித் தமது ஆதரவைப் பஞ் சப்பட்ட மக்களுக்கு கொடுத்த போதும் பசுபதி அதற்கு மசிந்து போகவில்லை. மதத்தை மாற்றவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கே.டானியல், என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி ஆகியோர் அர்ப்பணிப்போடு உழைத்தனர். கவிஞர் பசுபதி ஒரு விடுதலை வீரர். பல்கலைக் கழகத்தில் இன்று நாற்பதுக்கும் மேற் பட்ட நாவித மாணவர்கள் பட்டப் படிப்பை பெறுவதாகவும் ஜீவா கூறினார்.
தினகரன் SF) onu ir
ஆசிரியர்
சுப்பிரமணியம் -
சாதீயப் போராட்டங்களுக்குத் தமது ஆதரவும் உண்டென அன்று போக்குக் காட்டிய உயர் சாதியினர் அப்போராட்டங் களில் தாம் நேரடியாகப் பங்கு கொள் ளாது தமது எடுபிடிகளையே முன் தள்ளி விட்டனர். இந்த எடிபிடிகள் அடிமட்ட மக்களாகவே இருந்தனர் என ஒரு போடு போட்டார்! அன்று பசுபதி வாழ்ந்த சமு தாயம் நில, முதலாளித்துவ மிடுக்கை உடையதாக இருந்தது. அதைத் தகர்க்க அவரது எழுத்துக்கள் சேவித்தன.

Page 13
665);
ஆய்வு கட்டுரையில் பசுபதியின் கவிதா வல்லமை குறைவாகவே பேசப் பட்டதை உள்வாங்கிய அவர் கவிஞரின் கவிதைகளான - பாட்டாளி துயரம், தொழிலாளர் சபதம் என்பவற்றை வாசித்துக் காட்டினார்.
பிரபல சிறுகதை எழுத்தாளர் நீர்வை பொன்னையன் பாட்டாளி வர்க் கத்தை மலையகத்தில்தான் காண முடியு மெனவும் தாழ்த்தப்பட்ட" என்ற பதப் பிரயோகத்திற்குப் பதிலாக 'ஒடுக்கப் பட்ட" என்ற பிரயோகமே சிறப்பான தெனவும், தலித்’ என்ற பதம் மக்களைப் பிரிக்கும் நோக்கோடேயே பாவனைக்கு வந்ததெனவும், இது சில சமூகங்களை ஒரங்கட்டுவதாகவும், இலங்கையில் சமூக மாற்றம் 1956இலேயே ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய கலை, இலக்கியப் பேரவை யைச் சேர்ந்த சோ.தேவராசா கருத் துரைக்கையில் -
பசுபதி கவிதை மந்திரம் அவரது கவித்துவச் சிறப்பு உரிய முறையில் பிரசாரப்படுத்தப்படவில்லை. எமது கவி ஞர்களது கவித்துவ வீச்சுகள் இன்னமும் சாதாரண மக்களைச் சென்றடைய ociaa). Our Words are Weapons என்பர். பசுபதியின் கவிதைகள் ஆதர்சன மானவை. காலத்தால் வெல்லப்பட்டவை. தமது சாதியைக் குறிப்பது கெளரவமென எம்மில் பலர் நினைப்பதில்லை. அது பஞ்சம சாதிகள் மத்தியிலும் நிலவு கின்றது. சாதி வெறி, தீண்டாமை என்ப வற்றைப் போக்கடிக்க கொம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள் மேலானவை.
22
எமது ஆற்றல்களைப் பற்றிய நடுநிலை யான மதிப்பீடு இன்னமும் எம்மிட மில்லை. பசுபதியை போற்றுதற்குரிய கவிஞராக நாம் காண்கிறோம். அவரது சில கவிதைகள் தொகுக்கப்பட்ட நூலொன்று ‘புது உலகம்’ என்று வெளி யாகி இருக்கின்றது. அதில் காணப்படும் கவிதைகள் அவரது கவிதா ஆளுமையை யும் பார்வையையும் வெளிப்படுத்தக் கூடியவை. அவைகளை வாசித்த பின் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டிருந் தால் இந்நிகழ்வைக் கனதியாக்கி இருக்க லாம். மார்க்சிய சிந்தனைகள் வல்லா திக்கத்திற்கு எதிரானவை. ஏகாதிபத்திய இறுமாப்பு, பாட்டாளிகளின் துயர், சாதிய ஒடுக்குமுறை என்பவற்றைக் களைய மார்க்சியம் மனிதனைத் தூண்டும். மக்கள் போராட்டம் காலத் தோடும் கருத்தோடும் பிணைந்ததாக இருக்க வேண்டும் - என்றார்.
ஆக, ஆளுமைகளை அம்பலப் படுத்த முனையும் பொழுது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதாக இருக்கக் கூடாது! கோயில் மேளங்களாக்கும் "புதுப் பழக் கங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அரங்கேற் றப்படக்கூடாது! புதுப் புது முகங்கள் தோன்ற வேண்டும். புத்தம் புது சிந்தனை இத்தகைய சிந்தனைகளையே கவிஞர் பசுபதியின் கருத்தரங்கு மண்டபத்தில் கூடியிருந்தோர் மனதில் விதைத்தது. இருந்தாலும் ஒரு மூத்த கவிஞரை நினைவுபடுத்தியதற்காக அமைப்பாளர்களது பணியைப் பாராட்டு
பிரமுகர்களைக்
கள் மலர வேண்டும்.
வது இலக்கிய அக்கறையாளரது கடமை யாகும்.

சர்வதேச தமிழ் வானொலி (கனடா) ஜேர்மன் கலையகம்
ஏடும் எழுத்தானியும்
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் - வண்ணை தெய்வம்
புதிய இலக்கிய வரவுகளைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து இன்று நிகழ்ச்சியில் அறிமுகமாவது இலங்கையிலிருந்து நாற்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வெளிவரும் ஒரேயொரு இலக்கியச் சஞ்சிகையான "மல்லிகை"யின் யூன், யூலை மாத இதழ்கள்.
நேயர்களே, வழமை போல நெருக்கடி காரணமாக யூன் மாத இதழ் மேசையில் காத்திருக்க யூலை மாத இதழும் வந்துவிட்டது. ஆதலால் இன்று இரண்டு இதழ்களையும் சுருக்கமாக அறிமுகம் செய்ய இருக்கின்றேன்.
யூன் மாத அட்டை மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பொறியியலாளர் கதாராஜ் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கியிருக்கின்றது. உள்ளே அவரைப் பற்றிய விபரங்களைத் திருவாளர் மேமன்கவி அவர்கள் எழுதியிருக்கின்றார். சுதாராஜ் பற்றிய கட்டுரையைப் படித்ததும் இவரைப் படைப்பாளியாக மட்டும் பார்க்காமல் மிகப் பெரிய புத்தகப் பண்ணையாகவே பார்க்க முடிந்தது!
மார்ச் மாத மல்லிகையில் பூபாலசிங்கம் புத்தகசாலையின் அதிபர் திரு. பூரீதரசிங் அவர்களைப் பற்றிக் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படித்த போது ஒரு புத்தகசாலைக்குள் இவ்வளவு பெரிய மனித இதயம் ஒன்று இருக்கின்றதா? என வியந்த நான், இப்பொழுது சுதாராஜ் என்ற இலக்கியவாதி பற்றிய கட்டுரையைப் படித்த பின்னர் இவர்களைப் போல் இன்னும் எத்தனை இலக்கியவாதிகள் இலைகளுக்குள் மறைந்திருக்கும் கனிகளைப் போல் என் போன்றவர்களுக்குத் தெரியாமலேயே இருப்பார்களோ? என வியந்து கொண்டேன்.
மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள் பகுதியில் இந்த இதழில் இடம் பெற்றி ருப்பவர் திருமதி. மரகதா சிவலிங்கம் அவர்கள். ஒரு படைப்பாளியின்
23

Page 14
g: பார்வைக்குள் பதியப்படுபவர்கள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் அவரின் பேனாவுக்குள் சிக்குண்டு வெளிச்சத்திற்குள் இழுக்கப் படுவார்கள் என்பதற்கு இந்த அறிமுகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மல்லிகைக்குச் சந்தா செலுத்துவ தோடு நின்றுவிடாது, மல்லிகையின் குடும்பத்திலும் நேசமுள்ளவராக விளங்கிய திருமதி. மரகதா சிவலிங்கம் அவர்கள் உண்மையில் மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்தான்.
"சொந்தப் புத்தகங்கள் வெளியிட்டு மனமுடைந்து போனோர்" என்ற ஆசிரியர் தலையங்கத்தைப் படித்த பின்னர் புத்தகம் எழுதி வெளியிட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் போல நிறையப் பேர் இருக்கின்றார்கள் எனத் தெரிய வைத்திருக்கின்றது.
கடிதங்கள் பகுதியில் ஊடகவிய லாளரும், சிறந்த இலக்கியவாதியுமான எனது நண்பர் இளைய அப்துல்லாஹ் அவர்கள் எழுதிய ஒரு பக்கக் கடிதத் தில் மே மாத இதழை முழுமையாக அடக்கியிருந்தார். முடிவில் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் என்னைப் பற்றி குறிப்பிட்ட ஒரு செய்தியில் தவறுதலாக லண்டனில் வாழும் வண்ணை தெய்வம் என எழுதியதைத் திருத்தி அவர் வசிப்பது பாரிசில் என குறிப்பிட்டு முடித்திருக்கின்றார்.
சி.சுதந்திரராஜா அவர்கள் எழுதி யிருக்கும் 'நிழலின் நிஜம்' என்ற சிறு கதை சின்னஞ்சிறு கதையாக இருந்
24
தாலும் ஒரு பெரிய நாவலுக்கான கரு அதனுள் அடங்கியிருக்கின்றது. ஆனால் இந்தக் கதையின் நிஜத்தை எத்தனை வாசகர்கள் புரிந்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியே?
அதே நேரத்தில் திக்குவல்லை கமால் எழுதியிருக்கும் அரங்கேறும் அரைகுறைகள்" என்னும் சிறுகதை முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கு நடையில் எழுதியிருந்ததால் கதையைப் புரிந்துகொள்வது மிக மிகச் சிரமமாக இருந்தது.
செங்கை ஆழியான் அவர்கள் தொடராக எழுதிவரும் 'ஈழத்தின் புனை கதைப் படைப்பாளிகள் மல்லிகைக்கு ஒரு மணிமகுடம்! இந்த இதழில் அ. செ.முருகானந்தன், வரதர், அ.ந.கந்த சாமி, இரசிகமணி கனகசெந்திநாதன், சு.வே. என்ற சு.வேலுப்பிள்ளை ஆகி யோரைப் பற்றிய ஆவணக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. படித்து முடிந்த பின்னர் என்ன ஐந்து பேர்களுன் முடித்து விட்டார்களே என்ற ஏக்கத்தை வரவைத்துவிட்டது.
முருகபூபதி அவர்கள் "வாழ்வின் தரிசனங்கள் இலக்கிய மடல் பாடசாலை மாணவர்கள் வரலாற்றுக் கட்டுரைகளைப் படிக்கும்போது ஏற் படும் மனக் கசப்பைப் போல இலக்கிய வாசகர்களுக்கும் சோதனைக்குரிய கட்டுரை. இலக்கியப் பதிவிற்கான கட்டுரையாக இருந்தாலும் பதினைந்து பக்கங்களில் கட்டுரையை எழுதிய
முருகபூபதி அவர்களும், அதனைப்

பிரசுரித்த ஆசிரியர் அவர்களும் வாசகர் களைக் கடுமையாகச் சோதித்திருக் கின்றார்கள் என்பதே எனது கருத்து. ஆசிரியர் ஜீவா அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் இது.
நேயர்களே, யூலை மாத இதழும் அறிமுகத்திற்கு எடுக்கப்பட வேண்டி இருப்பதனால் யூன் மாத மல்லிகையின் அறிமுகத்தை இத்துடன் நிறைவு செய்து கொண்டு யூலை மாத மல்லிகைக்குள் நுழைகின்றேன்.
யூலை மாத மல்லிகையின் அட்டை யில் இடம்பிடித்திருப்பவர் மலையகத் தின் இலக்கியத் தாரகை நயிமா சித்திக் அவர்கள். உள்ளே இவரைப் பற்றிய கட்டுரையை எழுதியிருப்பவர் நாவலப் பிட்டி கே.பொன்னுத்துரை. நயிமா சித்திக் அவர்களைப் பற்றிய தகவல் களோடு மலையகப் படைப்பாளிகள் பலரையும் இன்றைய இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக் கின்றார் கட்டுரையாளர்.
நாம் நயிமா சித்திக் அவர்களை வெறுமனே புனைகதைப் படைப்பாளி என்று மட்டும்தான் அறிந்திருந்தோம். ஆனால் இவர் வானொலியிலும் தனது எழுத்தாக்கங்களை வெளிப்படுத்தி யிருப்பதோடு சமூகப் பணியாளராகவும் இருந்திருக்கின்றார் மல்லிகை மூலமாக தெரிந்துகொள்ள முடிந்திருக்கின்றது.
என்பதனை
மல்லிகைப் பந்தலின் கொடிக் காலாக இந்த இதழில் இடம்பிடித்திருப்
பவர் திரு. எஸ்.திவாகரன் அவர்கள்.
25
IᏋᏕ ᏓᎬᏘᎸᏍᎬᏘ
ஒவ்வொரு கொடிக்கால்களும் வெறும் தூணாக மட்டும் நிற்காது அதற்கும் வேர்கள் இருக்கின்றது என்பதனை ஆசிரியர் அவர்கள் இந்தக் கணனி விற்பன்னர் திவாகரனை அறிமுகப்படுத் தியதன் மூலம் வெளிப்படுத்தியிருக் கின்றார்.
திரைப்படங்களைப் பற்றி இன்கா அவர்கள் ஒரு நீண்ட கட்டுரையை ஏழு பக்கங்களில் எழுதியிருக்கின்றார். இக் கட்டுரையை எத்தனைப் பேர் படித் திருப்பார்களோ?
வி.பி.சந்திரம் எழுதியிருக்கும் 'இதழ்கள் பற்றி ஒரு மதிப்பீடு" என்ற கட்டுரையைப் படித்த பின்னர் எனக்குத் தோன்றியது,
எல்லாச் சஞ்சிகைகளையும் வாசிக்க
எல்லா வாசகர்களும்
முடியாமல் போயிருந்தாலும் தீராநதி
போன்ற தரமான இலக்கியச் சஞ்சிகை யுடன் மல்லிகையை ஒப்பீடு செய் திருப்பது எல்லாச் சஞ்சிகைகளையும்
படித்திராத மல்லிகை வாசகர்களுக்கு
மல்லிகையை மீள்பார்வை செய்வதற்கு வசதியானதாக இருக்கும்.
நடந்து முடிந்த மல்லிகை ஆசிரி யரின் 79வது பிறந்தநாள் விழாச்
செய்தியை 23, 24ம் பக்கத்தில் ஆசிரி
யரே பதிவு செய்திருக்கின்றார். இந்த விழா பற்றி ஜீவா அவர்கள் சொல்லி யிருக்கும், "இந்தப் பாராட்டு விழா அமைப்பும், நண்பர்கள் சந்திப்பும்
எனக்கு இந்தக் காலகட்டத்தில் தேவை
பட்டது போலப்பட்டது. காரணம்
அடுத்துவரும் காலகட்டங்களில்

Page 15
Ecco:
இன்னும் இன்னும் உற்சாகமாக, ஆரோக்கியமாக நான் செயற்படுவதற்கு இத்தகைய மனம் திறந்த பாராட்டுக்கள் தேவை போல் என் நெஞ்சுக்குத் தோன்றுகின்றது" என்ற வரிகளும், யூலை முப்பதாம் திகதி வெளிவந்த தினக்குரல் வார மலரில் இளைய
அப்துல்லாஹ் எழுதியுள்ள ஆழ்மனத்
தூறல் பகுதியில் ஒரு தொலைக்காட்சிச்
செவ்விக்காக ஜீவா அவர்களிடம் “இந்த 79வது வயதில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’ என்ற இளைய அப்துல்லாஹ்வின் கேள்விக்கு
"என்னை யாரும் காதலிக்க மாட்டா
ளவையா?” என ஜீவா அவர்கள் கூறிய
பதிலையும் படித்த போது, மனிதர் களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறு கின்றார்கள் என்று எங்கோ ஒரு புத்த
கத்தில் படித்த கருத்து என்னிடத்தில் |
மின்னலாகத் தோன்றி மறைந்தது.
25ம் பக்கத்தில் இருந்து 27ம் பக்கம் வரை 11.06.2006ல் இதே ஏடும் எழுத் தாணியும் பகுதியில் நாம் மல்லிகையின் மே மாத இதழை அறிமுகப்படுத்தி யிருந்ததை அப்படியே முழுமையாகப் பிரசுரித்திருந்தார்கள். மல்லிகையில் இது பற்றிய செய்தி வந்த பின்னர் ஈழத்தில் வாழ்கின்ற எமது இலக்கிய நண்பர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் மல்லிகையை ஐரோப்பாவில் அறிமுகம் செய்வதனால் மல்லிகைக்குப் புதிதாக ஒரு விளம்பரமோ அல்லது மல்லிகையில் இந்த விபரங்கள் பிரசுர மாவதால் ஈழத்தில் இருந்து நேயரொ ருவர் எமது நிகழ்ச்சியைக் கேட்பதற்
கான வாய்ப்போ நிச்சயமாக இருக்கப் போவதில்லை. ஆனால் நம்மவர்களின் செயற்பாடுகள் உலகம் முழுவதும் தெரிய வருவதற்கு நாமும் விதையாக இருக்கின்றோம் என்பதில் நாங்கள் திருப்தியடைகின்றோம். இதேபோல ஈழத்தில் இருந்து மட்டுமல்ல இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் எமக்குக் கிடைக்கும் சஞ்சிகைகள், நூல் கள் என்பவற்றையும் நாம் அறிமுகம் செய்துதான் வருகின்றோம் என்பது எமது நேயர்கள் அறிந்ததே.
வாசகனை நெறிப்படுத்தும் நாவல் என்ற தலைப்பில் மா.பா.சி. என்ற பெயரில் மா.பாலசிங்கம் அவர்கள் பாரி சில் வாழ்ந்துவரும் இலக்கிய நண்பர் மா.கி.கிறிஸ்ரியன் அவர்களின் "புயலுக் குப் பின்" சனத்தை எழுதியிருந்தார்.
என்ற நாவலின் விமர்
இந்த விமர்சன முறை எனக்கு நன்றாகப் பிடித்திருந்தது. காரணம் ஒரு படைப்பை விமர்சிக்கும் போது படைப் பாளியின் முகத்தைத் தெரிந்திருக்காமல் இருப்பது ஆரோக்கியமான விமர்சனத் திற்குரிய ஊன்றுகோலாகும். எழுத்தை மட்டும் படித்துவிட்டு கருத்துச் சொல் வதுதான் உண்மையான விமர்சனமாகும். பாரிசில் சில விமர்சகர்கள் படைப்பாளி யின் எழுத்தைப் படிக்காமலேயே விமர் சனம் என்ற பெயரில் எழுத்தாளர்களை வறுத்தெடுத்து விடுகின்றார்கள். அப் படித் தோலுரிப்பதுதான் விமர்சனம் என்றும் கருத்திக் கொள்கின்றார்கள். அதற்கு எதிர்மாறாக வெளிவந்த இந்தப் புதிய முறை விமர்சனம் வரவேற்கத்
26 தக்கது.

நாங்கள் கூட கிறிஸ்ரியனின் இந்த நாவலை ஏடும் எழுத்தாணியும் நிகழ்ச்சி யில் இன்னமும் அறிமுகம்கூட செய்ய வில்லை! காரணம் 448 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை முழுமையாக படித்து முடிப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. முழுமையாகப் படித்து முடித்த பின்னர் விரைவில் இந்த நாவலின் அறிமுகம் ஏடும் எழுத்தாணி யும் பகுதியில் கண்டிப்பாக இடம் பெறும்.
மல்லிகையில் இந்த விமர்சனம் இடம்பெற்ற பின்பு ஒரு இலக்கிய விழாவில் நண்பர் கிறிஸ்ரியனைச் சந்தித்த போது அவர் சொன்னார், "நான் மல்லிகைக்கெனத் தனியாக இப் புத்தகத்தை அனுப்பி வைக்கவில்லை. ஆனால் ஈழத்தில் உள்ள சில இலக்கிய நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். மல்லிகையின் தேடலின் நிமித்தம் அவர்கள் தேடியெடுத்து விமர்சனம் செய்திருக்கின்றார்கள். மல்லிகைக்கு எனது நன்றிகள்” என்று கூறினார்.
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடம் இருந்து நாவல்கள் வருவது மிக மிக அரிது. அப்படி அரிதாக வெளிவரும் படைப்புகளை மல்லிகை போன்ற இலக்கியச் சஞ்சிகைகள் விமர்சனம் செய்து அறிமுகப்படுத்துவது பாராட்டு தற்குரியதாகும்.
செல்லக்கண்ணு அவர்களின் சில்லையூர் செல்வராசன் கவிதைகள் ஆய்வு என்னும் கட்டுரை மிக வித்தி யாசமானதாக இருந்தது. கடந்த 11.06.
27
Ş (සෆරිි.
2006ல் ஆய்வு செய்யப்பட்ட சில்லை யூரானின் ஆய்வுத் தொகுப்பு இது. பல இலக்கிய ஆய்வாளர்களின் பார்வையில் அமரர் சில்லையூர் செல்வராசனின் கவிதைகள் மீள்பார்வை செய்யப் பட்டிருப்பதை அழகாகத் தந்திருக் கின்றார் செல்லக்கண்ணு அவர்கள்.
ஒரு சபாஸ் போட வைக்கின்றது செங்கை ஆழியான் அவர்களின் ஈழத்தின் புனைகதைப் படைப்பாளி களின் அறிமுகம். இந்த இதழில் இராஜ அரியரத்தினம், கசின் சிவகுருநாதன், சொக்கன் என்று அழைக்கப்பட்ட க.சொக்கலிங்கம் ஆகிய மூவரின் அறிமுகத்துடன் இந்த மாத அறி முகத்தை நிறைவு செய்திருக் கின்றார்கள்.
இவை மாத்திரமல்ல இன்னும் பல இலக்கியச் செய்திகள் இந்த யூலை மாத இதழில் இடம்பெற்றிருக்கின்றது. நேரத் தட்டுப்பாடு காரணமாக மல்லிகையின் அறிமுக நிகழ்ச்சியை நிறைவிற்குக் கொண்டு வருகின்றோம். ப
ந்தா செலுத்தி
otersonIT
தயவுசெய்த രക്ഷ

Page 16
கணவனின் கூற்றை அவள் கடைசிவரை நம்பவில்லை. இருபத்திமூன்று வயது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறாராம். இந்தக் காலத்தில் நடக்கின்ற காரியமா இது சனம் சிரிக்கப் போகின்றது. ஆயிரம் கேள்வி கேட்டுத் துளைக்கப் போகின்றது.
பெண்பிள்ளைகளென்று பிரச்சினை இல்லாதது வேறு சங்கதி.
இதுவரை எவருமே கல்யாணம் கேட்டு வந்தது கூடக் கிடையாது.
"அந்தந்தக் காலத்தில செஞ்சி போட்டா லேசேன்."
அவள் விழுந்து விழுந்து சிரித்தாளே தவிர, பதிலுக்கு ஒன்றும் சொல்ல வில்லை.
"நீங்க கலியாணம் பேசிப் பெண் பாத்து வெச்சீக்கா? நகைச்சுவை இழை யோட அவள் கேட்டாள்.
O O முலாம் பூசிகள்
- திக்குவல்லை கமால்
“எங்கியாலும் போகத்தேவில்ல. எங்கட குடும்பத்துக்குள்ள எத்தின பொண்ணிக்கன்.
பொடியன்ட வயஸலக்கு ஏத்த மாதிரி ஒன்டப் பாத் தெடுக்கியதானே?
"புதினமான கலியாணந்தான் நீங்க செய்யப்போற. எனக்கெண்டா ஒண்டுமே ഖണssേ.'
உண்மையிலேயே அவளுக்கு எதுவுமே தெரியவில்லைதான். இதில் மாற்றுக் கருத்து அவளுக்கு நிறையவே இருந்தாலும், அப்படித் தெரிவிக்கும் பழக்கம் ஆரம்ப முதலே இருந்ததில்லை.
இதுவொரு புதிரான புதுமையான ஏற்பாடாக இருந்தது.
ஊர் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றது?
Y Y Y
ஐந்து வயதிலேயே தனது மகனையும் இங்கிலிஸ் பேசக்கூடிய பாடசாலைக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்து விட்டார் நூர்தீன் ஹாஜி.
28

'சின்னப் புள்ளய அனுப்பப் பய மில்லையா? ஒருவித பய உணர்வோடு தான் சித்தி ஸாலிஹா கேட்டாள்.
‘தணியவா அனுப்பிய. இப்பவே நாலஞ்சி புள்ளியள் போற. வேன் புக் பண்ணப் போறாம். எல்லப் பெரியெடத்துப் புள்ளயஸ். எங்கட புள்ள யேம் அனுப்பாட்டி மணிசரு கணக்கியா? எச்சிப்பீயென்டி யொண்டும்"
ஒவ்வொரு நாளும் வாகனத்தில் போய் வரவேண்டும். அதிகாலையில் எழும்ப வேண்டும். சாப்பாடு. தூக்கம். இதையெல்லாம் நினைத்துக் கலங்கினாள் தாய்க்காரி.
"இங்க பாருங்கொ. இந்த கஸ் கெடி புள்ளயளோடயா எங்கட புள்ள யேம் படிக்கச் செல்லிய. இங்கிக்கிய டீச்சர் மாருக்கு இங்கிலிஸ் தெரிமா. ம். ஒரெழுத்தாலும் தெரிய. அவனவன்ட அந்தஸ்த வெச்சிக் கொளோனுமேன்"
ஹாஜியார் வென்று விட்டார்.
பிள்ளை நாளாந்தம் பயணிக்க ஆரம்பித்து விட்டது.
காலப்போக்கில் இடையிடையே ஆங்கிலச் சொற்களை உச்சரிக்க ஆரம் பித்தபோது, இருவருக்குமே உச்சி குளிர்ந்துவிடும். பிள்ளை ஆங்கிலம் பேச வேண்டுமென்பதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த இலக்கும் இருக்க வில்லை.
காலம் ஒடிக்கொண்டிருந்தது.
29
PŠ 665); S2
தொட்டது பிடித்ததற்கெல்லாம் எக்கச் சக்கமான செலவு ஆரம்பித்து விட்டது. ஏன்தான் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டோமோவென்று கவலை ப்பட்டார்கள். எப்படி கழன்று கொள்வ தென்று திண்டாடினார்கள். இதற்கிடை யில் எவராவது "பொடியன் இங்கிலிஸ் காரன் மாதிரி" என்று சொன்னால் போதும் உலகமே அவர்களது கைகளுக்குள் வந்துவிடும்.
பத்தாம் தரத்தில் ஒருவித திக்கு முக்காட்டத்துடன் அன்வர்தீனின் படிப்பும் ஸ்தம்பித்துவிட்டது.
சரளமாக ஆங்கிலம் பேசும் அவன் டீவியில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்ப்பான். வி.சி.டீ.போடுவான். ஆங்கிலப் பத்திரிகை, சஞ்சிகைகளோடு வருவான்.
ஆங்கில கடிதங்களை வாசித்து விளக்கம் சொல்வான். கடிதங்கள் எழுதிக் கொடுப்பான். குடும்ப வட்டாரத்தில் அவன் பெரும் படிப்பாளியாகவே கருதப்பட்டான்.
வாப்பாவின் கடையே அவனது எதிர்காலமாகப் படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது.
ஒய்வு நேரங்களில் நண்பர்களு டனேயே அவனது சகவாசம் தொடரும். மெச் பார்க்கவென்று கொழும்புக்கும், அங்குமிங்கும் போய்வரத் தொடங்கினான். கடைக்கு இன்ரநெட் இணைப்பெடுத்து, இரவில் ஸ்போட்ஸ் என்று சொன்னாலும் இன்னும் நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தான்.

Page 17
অ
நூர்தீன் ஹாஜிக்கு காதுகளைப் பொத்திக்கொண்டு திரிய வேண்டிய நிலை.
"இவன ஊரிலே படிக்குடிந்து'
ஒருநாள் ஞானம் பிறந்து இப்படிச் சொன்னார்.
“எளந்தாரியானாப் பொறகு நாங்க
சொல்லியத்தக் கேக்கியா" சித்தி ஸாலிஹா நியாயப்படுத்தினாள்.
செல்வாத்த கேக்காதவனாக
அன்வர்தீன் தலையெடுத்துக் கொண்டி ருந்தான்.
Ny Y N/
பள்ளிவாசலில் நிக்காவற் மஜ்லிஸ் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இருபத்து மூன்றே வயது மாப்பிள்ளை யின் பால்வடியும் முகத்தைப் பார்ப்பதில் சனத்துக்கொரு குதூகலம்.
"உரிய வயதை அடைந்துவிட்டால் திருமணம் செய்து கொடுப்பது அவசிய மானதாகும். அப்படிப்பட்ட ஒரு சுன்னத்து இங்கே ஹயாத்தாகிறது. இந்த முன் மாதிரியான பெற்றாரை நாங்கள் பாராட்ட வேண்டும்" பள்ளி ஹஸ்ரத் வெகுவாகப் Lпут цр GuésотпT.
விடுவார்களா? இனி அதைக் காவிக் கொண்டு கண்ட கண்ட இடங்களி
லெல்லாம் சொல்லித் திரிய இன்னொரு
sin”LLb.
30
LD&F T 6üT''
கலந்துகொண்ட அத்தனை பேருக் கும் பேரித்தம் பழமும் பால் தேநீரும் வழங்கப்பட்டது.
மாப்பிள்ளையோடு ஸ்லாம் சொல்ல முந்தியடிக்கத் தொடங்கி விட்டனர்.
N/ Ny Ny
“sumri 6n 6ooo ஹோட்டலில் திருமண விருந்து பெரும் ஏற்பாடாக
(5 @归受n (5
நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அன்வர்தீனும் மனைவியும் வியா பாரிகள், உறவினர்கள், நண்பர்களென்று வரவேற்ற வண்ணமிருந்தனர்.
பெரிய இடத்து விருந்தென்றால் ஆலிம் உலமாக்கல் விதிவிலக்காக என்ன?
சாப்பிட்டவர்கள் பாரம் தணிக்க குறுவட்டமாகப் போடப்பட்டிருந்த கதிரைக ளிலே அமர்ந்திருந்தனர்.
நிக்காவற் மஜ்லிஸில் பயான் பண் ணிய நிதார் மெளலவியும் அவரைச் சூழ்ந்து சிலரும் சுவாரஸ்யமான பேச்சில் மூழ்கிப்போயிருந்தனர்.
பக்கத்துக் கதிரையில் இரண்டு பேர் வந்தமர்ந்து கொண்டனர்.
“சின்னப் பொடியனுக்கு கலியாணம்,
எனக்கெண்டா ஒன்டும் வெளங்கல்ல
ஒருவர் ஆச்சரியப்பட்டுச்
சொன்னார்.
'ம். ஒனக்கும் ஹஸ்ரத்மாருக்கும் தான் வெளங்கில்லாத. ஊரில மத்தெல்

petse):
STZ லாருக்கும் ஜாதியா வெளங்கிக்கி’ சரிவரல்ல போல. இப்ப கலியாணத்த அடுத்தவர் விஷயத்தோடு பேசி வார்த்தை முடிச்சிக் குடுத் தீக்கு. இதுக்குப் பொறகு களை அம்பு முனைகளாகப் பாய்ச்சினார். சரி நல்ல புத்தி வரோணும்.”
ஹஸ்ரத்தின் தலைப்பா சரிந் 'சரி சரி அப்பிடியா விஷயம்.
திருந்தது. பேயறைந்தது போல ஜிம் தாருக்கன் தெரிஞ்ச இந்தக் கத்தமியள்”
ഥങ്ങ് 66 stir.
று நின்ற இதற்கிடையில் ஏப்பம் விட்டபடி
*செல்லே செல்லே" எழுந்த ஹஸ்ரத்தும் சகபாடிகளும் மெல்ல
参见 மெல்ல ரோட்டுப் பக்கமாக நடந்தனர். 'பொடியன்ட 6 is 60 சல்லி
பொழங்கிய, நடத்த மிச்சம் மோசம். பெரிய அதற்கு மேலும் அமர்ந்திருந்தால் பெரிய ஹோட்டலியஞக்காம் போற. அவர்களின் பேச்சு எந்தப் பக்கம் போகு வெளிநாட்டு ஐடங்களாம் பாக்கிய. மென்ற பயம் அவர்களை உந்தித்
வெளிங்கினா? செல்லிச் செல்லிப் பாத்து | தள்ளியது போலும் 0
42-வது ஆண்டுமலர்குயாராகின்றது!
இந்த ஆண்டு மலர் சிறப்பாகவும், நேர்த்தி யாகவும் மலர உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை.
மலருக்கு விளம்பரங்கள் தந்துதவுவோர் தமது கவனத்தை நமது பக்கம் திருப்புவது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது.
படைப்பாளிகள் தொடர்ந்து எழுதிவர வேண்டுகின்றோம். தமது ஆகச் சிறந்த ஆக்கத்தை எமக்கு முன்கூட்டியே அனுப்பி உதவி னால் எமது உழைப்புப் பாரத்தைப் பகிர்ந்து கொண்டவராவீர்கள்.
42-வது ஆண்டுமலர் தேவையானோர் முன்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
- ஆசிரியர் محصـــــــــــــــ ܢܠ
31

Page 18
எனது தங்கையின் திருமணம் நடைபெற்று முடிந்து ஓராண்டின் பின்னர், குடும்பத்து மூத்தவர்கள் முன்னின்று 22.05.68இல் எனது திருமணத்தை நடத்தி வைத்தார்கள். எனது திருமண வைபவத்தில் அதிபர் எம்.எஸ்.சீனித்தம்பி தலைமை வகிக்க, சைவப்புலவர் சி.வல்லிபுரம் திருமண முறைகளைச் செய்து வைக்க, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா வாழ்த்துரை வழங்கினார். ஜீவாவுடன் இளம் எழுத்தாளர் அ.கதிர்காமநாதன் திருமணத்துக்கு வருகை தந்திருந்தார். திருமணம் நடைபெறுவதற்கு முதன்நாள் பிற்பகல் ஜீவா எனது வீடு வந்து சேர்ந்தார். ஜீவா, கதிர்காமநாதன், நான் மூவரும் தேவரையாளி இந்துக் கல்லூரிக்குச் சென்றோம். அன்று மாணவர்கள் மத்தியில் ஜீவா நீண்டதொரு சொற்பொழிவை ஆற்றினார். காலை விடிந்தால் எனக்குத் திருமணம், திருமண அலுவல்களைக் கவனிக்காது இலக்கியக் கூட்டத்தில் வந்து நான் நிற்பது கண்டு சிலர் அதிசயப்பட்டார்கள். என்னிடம் அது பற்றிக் கேட்டார்கள். அப்பொழுது அவர்களுக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் மெல்லச் சிரித்தேன். ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்கு முதல், இலக்கியத்தை மணந்து கொண்டவன் நான் என்பதைச் சொன்னாலும் அவர்கள் விளங்கி ஏற்றுக் கொண்டிருப்பார்கள் எனச் சொல்வதற்கில்லை.
19. பூச்சியம் பூச்சியமல்ல
- தெணியான்
சிறுவயது முதல் எனது ஆதர்சமாக இருந்தவன் மகாகவி பாரதி. ஆரம்ப காலத்தில் கவிதை மீது நான் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். நிருத்தன்” என்ற பெயரில் இடையிடையே கவிதைகளும் எழுதி வந்திருக்கின்றேன். பின்னர் சிறுகதையே எனது மனக்கருத்துக்களைச் சொல்வதற்குத் தகுந்த இலக்கிய வடிவம் என்பதனைத் தீர்மானித்துக் கொண்டேன். ஆயினும், கவிதைகள் மேல் - குறிப்பாக பாரதி மேல் நான் கொண்ட பற்றுதல் கொஞ்சமும் மனதில் இருந்து குறையவில்லை. அதனால் நான் இருக்கும் பாடசாலைகளில் பாரதிக்கு விழா எடுப்பதில் எப்பொழுதும் நான் முன் நின்றேன்.
பண்டாரவளை, அட்டம்பிட்டிய மகா வித்தியாலயம் உண்மையில் ஒரு சிங்கள வித்தியாலயம். அதில் தமிழ்ப் பகுதியும் இருந்தது. அதனால் தமிழ்ப் பகுதியில் பெரிதாக விழாக்கள் நடைபெறுவதில்லை. அங்கே எனது எண்ணம் போலப் பெரிய அளவில் பாரதி விழா ஒன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆசிரி யர்கள் சேர்ந்து செய்தோம். பதுளை, பண்டாரவளை நகர்ப் பகுதிகளில் இருந்து பேச்சாளர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தினோம். அந்த விழாவில் எழுத்தாளர் இரா.சரசுவதியை அழைத்துப் பேச வைத்தோம். வித்தியாலயத்தில் படித்துக்
32

கொண்டிருந்த மாணவர்களின் பெற் றோர்கள், சூழவுள்ள தேயிலைத் தோட் டங்களில் பதவிகளில் இருந்த கங்காணி மார், கிளாக்கர்மார், கணக்கப்பிள்ளை ஆகியோருக்கும் அழைப்புகள் அனுப்பி னோம். எங்கள் அழைப்பினை ஏற்று பலர் அந்த விழாவிற்கு வருகை தந்திரு ந்தார்கள். அந்த வித்தியாலயத்தின் தமிழ்ப் பகுதி அதுவரை காணாத ஒரு பெருவிழாவாக அந்தப் பாரதி விழா நடைபெற்றது.
அந்த விழாவில் எங்கள் வித்தியால யத்தில் இருந்து நான் அன்று பேசி னேன். விழா முடிந்த பின்னர் பெரிய கணக்கப்பிள்ளை என்னைத் தேடி வந்து கையைப் பற்றிக் குலுக்கினார். "நீங்கள் ஒரு போராட்டக்காரனாக இருக் கிறியள்’ என ஆங்கிலத்தில் கூறி மெல் லச் சிரித்தார். பின்னர் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார்.
ஒரு வார காலத்தின் பின்னர் ஒரு
சனிக்கிழமை காலையில் ஆசிரியர்கள்
தங்கியிருந்த தனியார் விடுதிக்கு எங்களைத் தேடி வந்தார். அவருடைய பிள்ளைகள் எங்கள் வித்தியாலயத்தில்
படித்துக் கொண்டிருந்தார்கள். அவர் |
தனது பிள்ளைகளின் படிப்புச் சம்பந்த மாகத்தான் எங்களுடன் பேசுவதற்கு வந்திருக்கின்றார் என நான் எண்ணி னேன். ஆனால் அவர் தமது வீட்டில் அன்றிரவு எங்களுக்கு ஒரு விருந்து தரு வதற்காக அழைப்பு விடுத்தார். மாண வர்கள் வீடுகளுக்குச் செல்வது, விருந் துண்பது என்பவற்றைப் பொதுவாக - முடிந்தவரை நான் தவிர்த்து வந்தேன்.
33
čo DeGeo: VN
விடுதியில் இருந்த சக ஆசிரியர்கள்
முன்னரே அவர் இல்லத்துக்குப் போய் வந்திருக்கிறார்கள். நான் ஒருநாள் தானும் அங்கு சென்றதில்லை. அதனை அவர் மனதில் கொண்டு, “உங்களை அழைக்கிறதுக்காகத்தான் நான் நேரிலே வந்திருக்கிறன். தவறாமல் நீங்கள் வர வேணும்" எனத் தனிமையில் எனக்குச் சொன்னார்.
கணக்குப்பிள்ளை வயதில் மூத்த வர். எனக்குத் தகப்பன் போலக் கணிக் கத் தகுந்தவர். அவருடைய பிள்ளைகள் என்னிடத்திலும் படித்துக் கொண்டிருந் தார்கள். அதனால் அவர் விடுத்த அன் பான அழைப்பினைத் தட்டிக் கழிக்க இயலாது ஏனைய ஆசிரியர்களுடன் நானும் புறப்பட்டுப் போனேன். பெரிய கணக்குப்பிள்ளை, மனைவி, பிள்ளை கள் எங்கள் வரவை எதிர்பார்த்திருந்து அன்புடன் எல்லோரையும் வரவேற் றார்கள். மொத்தம் எட்டு ஆசிரியர்கள் அங்கு போயிருந்தோம்.
மாலை ஆறுமணிக்கே அங்கு இருள் வந்து முற்றாகச் சூழ்ந்துவிடும். அத்தோடு குத்தும் பனிக்குளிர் உடலை உலுப்பிக் கொடுக வைக்கும். ஏழு மணி யானால் வீதியில் சன நடமாட்டம் குறைந்து போய்விடும். இரவு ஒன்பது மணிக்கு முன்பு உணவு முடிந்து படுக்கைகளில் போய் விழுந்து விடுவார் கள். அதனால் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தவுடன் எங்கள் விருந்து ஆரம்ப மானது. கணக்கப்பிள்ளை சாராயப் போத்தலைத் தூக்கி வந்து மேசை மீது வைத்தார். போத்தல் மூடியைக் கழற்றி

Page 19
GSG)
கிளாஸ்களில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித் தார்கள். நான் குடிப்பதில்லை. இருந் தாற் போல அவர்கள் மத்தியில் நான் தனித்துப் போனேன். குடித்துக் கொண் டிருந்த அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் சற்று விலகி இருந்து
கொண்டேன்.
கணக்கப்பிள்ளையின் மனைவி சூடான கோப்பி ஒன்றைக் கொண்டு வந்து தந்துவிட்டு என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். நேரம் நீண்டுபோய்க் கொண்டிருந்தது. வெளியே பணி கொட்டிக் கொண்டிருந்தது. வீட்டுக் குள்ளே போத்தல் மூடிகள் உடைந்து காரமாக, சூடாக, கொறிக்கும் இசை வுடன் சாராயம் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை இழக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு எங்கே தெரியப் போகின்றது, நேரம் கடந்து போய்க்கொண்டிருக்கின்றது என்பது? கணக்கப்பிள்ளையின் மனைவி தான் அதனை நினைவுபடுத்தினார். இறுதியில் வற்புறுத்தி, எல்லோரையும் சாப்பாட்டு மேசைக்கு அழைத்து வந்தார்.
சாப்பாட்டு மேசையின் நீளப் பாட்டில் இரு வரிசைகளிலும் ஆசிரி யர்கள் எதிர் எதிரே அமர்ந்திருந்தோம். குறுக்குப்பாட்டில் தனி ஒருவராக கணக்கப்பிள்ளை அமர்ந்திருந்தார். அவருக்கு நேர் எதிரே மேசை ஒரத்தில் அவர் மனைவி அடக்கமாக நின்று எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து உணவு பரிமாறினார். நான் அந்த மேசை
34
யின் ஒரு தொங்கலில் கணக்கப்பிள்ளை மனைவிக்கு அருகில் போய்ப் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். மதுபோதை யில் தங்களை மறந்துபோய் இருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அருகில் அமர்ந்திருக்கின்றவர்களின் சாப்பாட்டுக் கோப்பைக்குள் கை வைக்க மாட்டார் கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அத்தகைய சிக்கல் நிலைமையொன்று உருவாகாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே நான் சற்று விலகி இருந்து கொண்டேன். எனக்கருகே நண்பர் இராசலிங்கம் அமர்ந்திருந்தார். நான் மற்றையவர்கள் போலச் சாராயம் பருகாது வெறும் கோப்பி மாத்திரம் குடித்து விட்டிருந்ததால் கணக்கப் பிள்ளை மனைவி மனதில் என்னைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றி இருக்க வேண்டும். அவர் உணவு பரி மாறிய வண்ணம் என்னோடு மெல்ல உரையாடிக் கொண்டு நின்றார். அந்த உரையாடலின் போது, நீங்க பெரிய கிளாக்கர் விட்டுக்கு போறனிங்
“ஸார்,
களா?" எனக் கேட்டார்.
பெரிய கிளாக்கரும் அவர் மனைவி யும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய கணக்கப்பிள்ளை மலை யகத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி கிழக்கு மாகாணத்தில் பிறந்தவர்.
யாழ்ப்பாணத்துப் பெரிய கிளாக் கரும் மனைவியும் இளக்காரமாக எண்ணி இவர்களை மதித்து நடப்ப தில்லை என்பதும், அதனால் இரு குடும் பங்களுக்குமிடையே மனப்பூசல்
உள்ளூர இருந்து வந்ததும் நான் முன்

னரே அறிந்து வைத்திருந்தேன். அதனால் 'ஏன், அப்படிக் கேட் கிறியள்?’ என அவரைப் பார்த்து நான் 'நீங்க
வெல்லாம் அங்கிட்டுப் போகக் கூடாது
கேட்டேன். அப்பொழுது,
ஸேர், தோட்டத்துப் பள்ளன் அவுக வூட்டு குசினிக்கே போவான் ஸேர்" என அவர் அருவருப்பது போல முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறினார். நான் "அப்படியா?" எனக் கேட்ட வண்ணம் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்துக் கொண்டு தொடர்ந்து விருந்து உண்டேன்.
மறுநாள் காலை படுக்கை விட்டு எழுந்த பிற்பாடு, நண்பர் இராசலிங்கம் என்னைத் தேடிக்கொண்டு எனது அறைக்கு வந்தார். "நேற்று இரவு கணக்கப்பிள்ளையின்ரை மனிஷி என்ன சொன்னவ?” என்று என்னிடம் வினவி "நீங்கள் பக்கத்தில் இருந்து கேட்டுத்தானே இருக்கிறியள்" என் றேன் நான். யிலே அடிச்சிருக்க வேணும்' என்றார்
னார்.
“கோப்பையால மூஞ்சி
சினத்துடன்,
“ஏன் அடிக்க வேணும்? தோட்டத் துப் பள்ளன் குசினிக்குள்ளே போகக் கூடாது எண்டுதானே சொன்னார்! யாழ்ப்பாணத்துப் பள்ளன் போகக் கூடாது, எண்டு சொல்லவில்லையே!” என்று சொல்லி நான் பலமாகச் சிரித் தேன்.
எனது பகடியைக் கேட்டு அவர் மனதில் எழுந்த சினம் ஆறி, அவரும் என்னோடு சேர்ந்து அப்பொழுது உரக்கச் சிரித்தார்.
35
ŘS gases শু
அவர் மனைவி ஒர் ஆசிரியை. மாத்தளை பலாத்பல தமிழ் வித்தியா லயத்தில் அவர் மனைவி அப்பொழுது ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டி ருந்தார். விடுமுறை நாட்களில் அவர் போய் வருவார். மாத்தளை சென்று அந்தப் பிரதேசத்தைப் பார்த்து வருவதற் கர்க, ஒரு தடவை தன்னுடன் வருமாறு அவர் என்னைப் பல தடவைகள் அழைத்தார்.
அங்கே சென்று வருவதில் உள்ளூர மனதில் எனக்கொரு விருப்பம் இருந் தது. எழுத்தாளர், நண்பர் "மலரன்பன்' சொந்த இடம் மாத்தளை. அங்கு சென்றால் அவரைக் கண்டு பேசலாம் என்பதுதான் எனது மனவிருப்பம். அவருக்கும் எனக்கும் அப்பொழுது கடிதத் தொடர்பு இருந்து வந்தது. மிக நீண்ட கடிதங்களை இலக்கிய நயத் துடன் அவர் எனக்கு எழுதுவார். தினபதி? பத்திரிகையில் அவர் எழுதி இருந்த 'பார்வதி என்னை மிகவும் கவர்ந்த ஒரு சிறுகதை. எனது தம்பி க.நவம் 'விரதம்" என்ற நல்ல சிறுகதை ஒன்றைத் தினபதியில் எழுதி இருந் தான். நான் எழுதிய, "அவள் ஒரு மனைவி', 'விடிவை நோக்கி ஆகிய இரு சிறு கதைகள் வெளிவந்திருந்தன. ‘விடிவை நோக்கி’ சிறுகதை வெளி வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னரே, ‘விடிவை நோக்கி’ என்ற எனது முதல் நாவல் வெளிவந்தது.
இந்த ‘விடிவை நோக்கி தொடர் பாக பிற்காலத்தில் நடந்த சுவாரசிய மான இலக்கிய விவகாரம் ஒன்றினை

Page 20
অ
நான் இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு சமயம் யாழ். மாகாணக் கல்விக் கந் தோரில் நடைபெற்ற ஆசிரிய ஆலோச கர் நேர்முகப் பரீட்சைக்கு நான் சென் றிருந்தேன். மாகாணக் கல்விப் பணிப் பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாள ரான ஒருவரும் அந்த நேர்முகப் பரீட்சையை நடத்தினார்கள். அந்தக் கவிஞர் பரீட்சகராக அங்கிருக்கின்றார் என்பது எனக்கு நம்பிக்கையையும் LO6ðf மகிழ்ச்சியையும் கொடுத்தது. அவருக் கும் எனக்கும் இடையே முன்னரே பழக்கம் இருந்தது. நட்பிருந்தது.
எனது ‘விடிவை நோக்கி’ நாவல் வெளிவருவதற்கு முன்னர் அதே தலைப்பில் அவர் ஒரு நெடுங் கவிதை எழுதி இருக்கின்றார் என்பதனையும் நான் அறிந்திருந்தேன். அந்த நேர்முகப் பரீட்சையில் என்னிடம் ஒரேயொரு கேள்விதான் கேட்கப்பட்டது. "விடிவை நோக்கி நாவலை எந்த ஆண்டில் எழுதினிர்?' என்பதுதான் அந்தக் கேள்வி. அந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாருமல்ல, கவிஞர்தான்!
தனது கவிதைத் தலைப்பினை நான் கையாடி விட்டேன் என அவர் உள் ளத்தில் ஓர் எண்ணம் இருப்பதனை நான் உணர்ந்து கொண்டேன். இருவரும் நேரில் சந்தித்துப் பல தடவைகள் முன்னர் பேசி இருக்கின்றோம். அந்தச் சமயங்களில் எல்லாம் கேட்காத அந்தக் கேள்வியை இப்பொழுது அதிகாரி என்னும் தளத்தில் இருந்து கொண்டு கேட்கின்றாரே என என் மனதில் சினம் மூண்டது. அவர் வினாவுக்கு நேரே
36
பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டு, "அந்த நாவல் எழுதுவதற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் ‘விடிவை நோக்கி’ என்ற தலைப்பில் நான் சிறு கதை ஒன்றினை எழுதி இருக்கின் றேன்” எனக் கூறினேன். அதன் பின்னர் எந்தவொரு வினாவையும் அவர் என்னி டத்தில் கேட்கவில்லை. அப்பொழுது அவர் என்னை விளங்கிக் கொண்டார் என்பதனை நான் அவதானித்துக் கொண்டேன்.
தினம் ஒரு சிறுகதைத் திட்டத்தின் கீழ் தினபதி’யில் வெளிவந்த சிறு கதைகளை மூத்த எழுத்தாளர் ஒருவர் சிபார்சு செய்வது அப்போது நடை முறையில் இருந்து வந்தது. எனது ‘விடிவை நோக்கி" சிறுகதையை அ.செ.முருகானந்தன் அவர்கள் சிபார்சு செய்தார். அ.செ.மு. அப்பொழுது ‘ஈழ நாடு’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனது நண்பர் பாமா ராஜகோபாலும் அப்பொழுது ஈழ நாட்டில் இருந்தார். எனது ‘விடிவை நோக்கி சிறுகதையைப் படித்த அ.செ.மு., “தெணியானின் கதைகளுக் குச் சிபார்சு தேவையில்லை. அவரேன் சிபார்சுக்காக அனுப்புகிறார்?’ என ராஜ கோபாலிடம் தெரிவித்த கருத்தினை அவர் என்னைச் சந்தித்த போது நேரில் சொன்னார்.
அதன் பிறகு நம் நாட்டில் வெளி வந்து கொண்டிருந்த பத்திரிகைகளின் வாரப் பதிப்புகளுக்கு நான் சிறுகதை எழுதத் தீர்மானித்தேன். 'தினபதி’யின்
வாரப் பதிப்பு ‘சிந்தாமணி’ என்ற

பெயரில் அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்தது. முதலில் மணி’க்கு ஒரு சிறுகதை அனுப்பி வைக்கத் தீர்மானித்தேன். சில தினங் களின் பிறகு 'பெருமூச்சு" என்ற சிறு கதையை அனுப்பி வைத்து இரண்டு வாரங்கள் கழிந்த பிறகு, "சிந்தாமணி’ ஆசிரியர் தமது கைப்பட எழுதிய கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. எனது சிறுகதை நன்றாக இருப்பதாகப் பாராட் டியதுடன் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அந்தக் கதை அடுத்த வாரம் வெளிவருகிறது எனவும் தெரிவித்திருந்தார். இறுதியில் எனது எதிர்காலம் சிறக்க வாழ்த்து கூறி இருந்தார். அவர் தெரிவித்தது போல அடுத்த வந்த ஞாயிறு ‘சிந்தாமணி"யில் எனது சிறுகதை வெளிவந்தது.
"சிந்தா
அதனைத் தொடர்ந்து "சிந்தாமணி'யில் நான் சிறுகதைகள் தொடர்ந்து எழுதி னேன். நான் ஒரு சிறுகதை அனுப்பி வைத்தால் மூன்றாவது வாரத்தில் தவறாமல் அது "சிந்தாமணி"யில் வெளி வரும் நிலைமை உருவாகி இருந்தது. சாதியம் பற்றிய எனது சிறுகதையை முதன் முதலாகச் “சிந்தாமணி"தான் வெளியிட்டு வைத்தது.
இன்று எனது இலக்கிய அனுபவங் களை எழுதிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஆரம்ப காலத்தில் வாழ்த்துக் கூறி, உற்சாகம் ஊட்டி எனது வளர்ச் சிக்கு வழி சமைத்துத் தந்த 'சிந்தாமணி” ஆசிரியர் இராஜ அரியரத்தினம் போன்ற பெரியவர்களை நன்றியுடன் நினைவு கூராமல் என்னால் இருக்க முடியாது.
37
666):
ஆரம்ப எழுத்தாளனாக நான் இருந்த காலத்திலேயே நல்ல மேடைப் பேச்சாளன் என்ற பெயரைப் பெற்றி ருந்தேன். எனது பேச்சாற்றல் காரண மாக எழுத்தாளன் என்ற நிலையில் விழா ஒன்றில் மாத்தளைக்கு வருமாறு எனக்கொரு அழைப்பு வந்து சேர்ந்தது. நண்பர் இராசலிங்கம் அப்பொழுது பண்டார வளையில் இருந்து மாத்தளைக்கு மாற்றலாகிப் போய் இருந்தார். எனக்கு விடுக்கப் பெற்ற அழைப்பின் பின்னணி யில் அவர் இருந்தார். அந்தச் சமயம் அவர் மனைவி ஆசிரியையாக இருக்கும் பலாத்பல தமிழ் வித்தியாலயத்தில் நடைபெறும் கலைமகள் விழாவில் கலந்து கொண்டு "சிறுகதை இலக்கியம்’ பற்றிப் பேசுமாறு வித்தியாலய அதிபர் அழைப்பு விடுத்திருந்தார்.
பேசுவதற்காக
மாத்தளைப் பகுதிக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைப் பார்க்க வேண்டும்; நண்பர் மலரன்பனை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என மன விருப்புடன் இருந்து வந்த நான் அதிபரின் அழைப்பினை நிராகரிப் பேனா!
மாத்தளைப் பயணம் எனது இலக்கியப் பயணத்தில் நான் என்றும் நினைவு கூர வேண்டிய மிக முக்கிய மான ஒரு பயணமாக அமையப் போகின்றது அப்பொழுது நிச்சயமாகத் தெரியாது.
என்பது எனக்கு
வளரும்.

Page 21
இலக்கியச் சுதந்திரம்
- V.P. sigub
சுதந்திரம் பெற்ற நமது நாட்டிலே இலக்கியச் சுதந்திரம் இருக்கின்றதா? என்ற ஒரு கேள்வி பல ஆண்டுகளாக என் மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கல், பல்தேசியக் கொம்பனிகளின் வருகை, தாராள இறக்குமதிக் கொள்கை ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளும் எமது நாட்டு எழுத்தாளர்களின் இலக்கியச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை இலக்கிய உலகம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நாம் சுதந்திரமாக இயங்க விடாமல் பல வழிகளிலும் நாம் சுரண்டப்படு கின்றோம். சிறந்த ஒரு சமுதாயத்தைச் சிருஷ்டிக்கும் குறிக்கோளுடன் செயற்படும் மனிதனுக்கு அதற்கு அவசியமான அறிவு ரீதியான வளங்களை இலக்கியத் துறை யிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். எமது சமூகத்தில் இலக்கிய சிருஷ்டி களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரச நிறுவனங்களுக்கு ஒப்படைக்க முடியாது. அரச நிறுவனங்கள் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் அரசியல் கருத்தியலையே பிரதிபலிக்கின்றன.
ஒரு இலக்கிய கர்த்தா அல்லது ஒரு கலைஞன் எப்படி இனங்காணப்படு கின்றான் என்று நோக்கும்போது - அவனுடைய முயற்சிகள் எத்தரமாக இருந்த போதிலும் - தனது சுயவிளம்பரம் மூலமும், உரியவர்களைப் பந்தம் பிடிப்பது மூலமும், விண்ணப்பப் பத்திரங்களை நிரப்பி அனுப்புவது மூலமும் விருதுகளைப் பெறும் நடைமுறை நமது நாட்டில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. . ஆகவே இந்த நடைமுறை இலக்கியச் சுதந்திரத்தைப் பாதிக்கும் ஒரு நிகழ்வாகவே அமைந்து விடுகின்றது. ஈழத்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியவர்கள் விருது களை நாடி ஒடாமல் அமைதியாக இருக்கின்றார்கள். அவர்கள் சுதந்திர இலக் கியத்தை விரும்புகின்றவர்கள். எதற்கும் கட்டுப்படாத படைப்பாளிகளாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். முதலாளித்துவ வியாபாரம் உட்பட எல்லாவற்றையும் அதிகாரத்தால் அமுக்கிக் கொண்டாலும், மக்களின் அபிலாசைகள் சுதந்திர கலாசார வாழ்க்கைக்கும், அடிமையற்ற நிலைக்கும் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டி ருப்பதை அவதானிக்கலாம். புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களின் இலக்கியங்களில் சுதந்திரப் போக்கு இருப்பதைக் காணலாம்.
38

இந்தியாவிலிருந்து தரமற்ற சஞ்சிகைகள் எம்மண்ணில் மலிந்து காணப்படுகின்றன. இதுபற்றி ஆகஸ்ட் 2006 மல்லிகையில் மட்டுப்படுத்த வேண்டும் அல்லது தடைசெய்து, கட்டுப்படுத்த வேண்டும் என்ற மகுடத்தில் ஆசிரியரின் கருத்து இந்த இடத்தில் மனங் கொள்ளத்தக்கதாய் அமைந்துள்ளது. எமது நாட்டு இலக் கியங்களின் சுதந்திரச் செயற்பாட்டுக்கு இறக்குமதித் தடை அவசியமாகின்றது. எமது வருங்கால சமுதாயத்தின் நலன் கருதி எம்மை நாமே ஏமாற்றுபவர் களாக இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையை விடுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.
č9 666):
எமது இலக்கியம் குறுகிய இன வாதப் போக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். உயர்மட்டத்தில் அதனை பாதுகாப்பதற்கும், அவசியமான மதிப் பீடுகளை உறுதிப்படுத்துவதற்கும் இலக்கிய விழாக்களில் ஆக்கங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதே சமயம் அரச செல்வாக்கிலிருந்து விடு வித்துக் கொள்வது முக்கிய குறிக் கோளாகும். சுதந்திர இலக்கிய வளர்ச் சிக்குப் பாதகமாக இருக்கின்ற எல்லாக் காரணிகளையும் வென்றெடுக்கக் கூடிய மனத்திடம் படைப்பாளிகளின் எல்லா மட்டங்களிலிருந்தும் வெளிப்பட வேண்டியது அவசியம். s
வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராடிடுகின்றோம்.
'சிற்பி அறக்கட்டளை ஆண்டு தோறும் வழங்கி வரும். கவிஞர்களுக்கான விருதை இந்த ஆண்டு ஈழத்தின் புகழ் வாய்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பெற்றுள்ளார்.
மிகக் கவித்துவம் வாய்ந்த கவிஞராகத் திகழும் ஜெயபாலனின் அனைத்துக் கவிதைகளும் தொகுக்கப்பெற்று "பெருந்தொகை" என்ற பெயரில் பெருநூலாகச் சமீபத்தில் வெளி
கவிஞரை மல்லிகை மனமாரப் பாராட்டுகின்றது.
- ஆசிரியர்
39

Page 22
தங்களது 79ஆவது அகவையினை
அண்மையில் கொழும்பில் பிரமாத
O O மாகக் கொண்டாடிய செய்திகளை
கடிதங்கள பத்திரிகைகளில் படித்தேன். மிக்க
மகிழ்ச்சி. 79 வயது முதுமையில் ஒருவர்
என்ன செய்வார்? மூலையில் முடங்கிக்
கிடப்பார். ஒரு வேண்டத்தகாத,
தீண்டத்தகாத பிராணி போல மற்றவர் களால் நோக்கப்படுவார். அவர் கதைப்
பதற்கு ஆள் தேடித் திரிவது பார்க்கப் பரிதாபமாக இருக்கும். மேற் சொன்ன
அறிகுறிகள் ஏதுமில்லாமல் தாங்கள் இன்னமும் பம்பரமாய்ச் சுழன்று இயங்குவது
உண்மையில் ஒரு வரமே! அதிலும் நம்மவர் ஒருவர் தமிழ்ச் சமுதாயத்தில் எமக்கு
எந்தவித அங்கீகாரத்தையும் அளிக்காத கத்தியையும் சீப்பையும் தூர வீசிவிட்டு,
எந்தவித பொருளாதார வளமும் தராத இலக்கியத் தொழிலில் நான்கு தசாப்
தங்களைத் தாண்டி நிற்பது பிரமிக்கத்தக்கதொரு சாதனையே! அதற்காகத் தங்களைப் பாராட்டுகிறேன். இப்பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
நான் மட்டக்களப்பில் பிறந்தாலும் புகுந்த இடம் அக்கரைப்பற்று. இங்கு நம்மவர்களின் குடும்பங்கள் 150 வரை உள்ளன. தொழிற்றுறையிலும் கல்வியிலும் வெகு முன்னேற்றம். 'மக்கள் அபிவிருத்தி முற்போக்குச் சங்கம்" (PPDS) என்ற பெயரில் ஒர் அமைப்பாக முழுக் குடும்பங்களுமே ஒரே குடையின் கீழ் நிற்கின்றன. எல்லாக் குடும்பங்களுமே சங்கத்தில் கடன் பெற்று ஒவ்வொரு சுயதொழிலை மேற்கொள்கின்றன. சவரம், சிகையலங்காரத் தொழில் இன்னும் சொற்ப நாளில் மறக்கப்பட்டுவிடும் போலத் தோன்றுகிறது! அப்படியொரு தன்முனைப்புப் பெற்ற இளைய சமுதாயம் தோன்றிப் பாகுபாடு காட்டும் இதர சமூகங்களைப் பிரமிக்கவும், முன்னுதாரணம் காட்டிப் பேசவும் வைத்துள்ளது.
இச்சங்கத்தின் மூலம் தங்களை அழைத்து ஒரு பாராட்டு அல்லது கலந் துரையாடல் நடத்த ஆயத்தம் செய்து வருகிறேன். அநேகமாக ஆவணி மாதத்தின் பிற்பகுதியில் அது நடக்கும். அச்சமயம் தாங்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
நிற்க, தங்கள் பத்திரிகை (மல்லிகை) இதழ்களை வழக்கம் போலத் தொடர்ந்தும் அனுப்பி வையுங்கள். இதுவரை வெளியான மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் அனுப்பி வையுங்கள்.
- எஸ்.ஜோன் ராஜன்
மட்டக்களப்பு
40

ஈழத்தின் புனைகதைப் படைப் பாளிகள் எனும் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆகஸ்ட் 2006 இதழில் 20. தாளையடி சபாரத்தினம் எனும் தலைப்பில் எழுதியுள்ள குறிப் பில் செங்கை ஆழியானால் தொகுத்து வெளியிடப்பட்ட 'மறுமலர்ச்சி சிறு கதைகள்' என்ற தொகுதியில் என்றும், 22. செ.சி.பரமேஸ்வரன் (பரணி) எனும் தலைப்பில் எழுதிய குறிப்பில் செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட மா பெரும் சிறுகதைத் தொகுதியான 'ஈழகேசரி சிறுகதைகள்' என்னும் இரண்டு தொகுதிகள் பற்றிக் குறிப் பிட்டுள்ளார். உண்மையில் திரு. செங்கை ஆழியான் அத்தொகுதிகளை தொகுத்திருந்தாலும் அதனை வெளி யிட்ட பெரும் பொறுப்பு வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் கல்வி அமைச்சுக் குமே சாரும். இதனை திரு. செங்கை ஆழியான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது எமது ஆதங்கமாகும்!
- என்.ழுநீதேவி உதவிப் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடக்கு கிழக்கு மாகாணம் - திருகோணமலை
நண்பர் இளைய அப்துல்லாஹ் மூலம் நீங்கள் அனுப்பிய மல்லிகை 327வது இதழ் கிடைத்தது. மிக்க நன்றி. தனிமரம் தோப்பாகாது" என்ற தத்து வத்தை தகர்த்தெறிந்த உங்கள் சாதனை கள் மீது மதிப்பு மேலிடுகின்றது. 327
41
வது வரை ஒரு இலக்கிய இதழைத் தொடராக வெளியிடுவதென்பது ஒர்ம மான காரியமன்று. மல்லிகையின் ஆக் கங்கள் மீது மதிப்பீடுகள் செய்யப்படு கின்றமை ஆரோக்கியமான விடயம். சிறுகதைகளில் வாசிப்பனுபவமும், நேர்த்தியும் கைகூடி வரவில்லை என்பது என் இரசனை.
தங்களுடன் தொலைபேசியில் பேசும் போது இலக்கியவாதிகளுடனான தொடர்பினைப் பேணுவது குறித்துச் சிலாகித்தீர்கள். இலக்கிய கூட்டங்களில் என்னைக் காண்பதில்லை என்பது கூட உங்கள் ஆதங்கம்! ஏற்கனவே பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம். அக்கூட்டங்கள் தொடர் பான எனது அனுபவம். நேரத்திற்கு ஆரம்பிக்காமை, விருப்ப மானவருக்கு முதுகு சொறியும் விமர் சனங்கள், நூலாசிரியரின் நூலை வாசிக் காமலேயே கருத்து சொல்லும் பல் கலைக் கழக மேதைகள், விமர்சகர்கள் இவர்களின் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் பொறுமை எனக்கில்லை. இப்போது கூட்டங் களுக்கு நான் வருவது, நீண்டகால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை அத்தகைய கூட்டங்கள் ஏற்படுத்தித் தருகின்றது. . . . . .
- அரபாத்
gll-LDIT6) lig
உலகம் சுற்றித் திரியும் இளவல் எனும் வாசகத்துடன் இளைய அப்துல் லாவின் நிழற்படம் ஆகஸ்ட் மாத

Page 23
g:
তত্ত্ব மல்லிகையின் முகப்பட்டையை அலங் கரித்தது. ஒட்டமாவடி அரபாத் இளைய அப்துல்லா பற்றிச் சுவைபட எழுதி யிருந்தார். அதன் மூலம் இளைய அப்துல்லா இலக்கியத்தில் பல துறை களில் தினமும் முன்னோக்கி நகர்ந்து வரும் துடிதுடிப்புள்ள இலக்கியவாதி என்பதை அறிந்து கொள்ளக் கூடியதா யிருந்தது.
"இளம் படைப்பாளிகளுக்கான இலக்கியத் திண்ணை’ என்றொரு இளம் படைப்பாளிகளுக்குப் பயனளிக்கக் கூடிய ஒன்றுகூடலொன்று மல்லிகை ஆசிரியர் அறிமுகம் செய்திருப்பது அவ தானிக்கக் கூடியதொன்று. தகுந்த வழி காட்டலின்றிச் செயற்படுகின்ற இளம் படைப்பாளிகளுக்கு இம்மாதிரியான ஒன்றுகூடல் சிறந்த பயனைக் கொடுக் கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஜோன்ஸ் என்றொரு நண்பன் எனும் சிறுகதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. கதாசிரியர் இக்கதை மூலம் புலப்படுத்தவது மக்களை ஆட்கொண்டி ருக்கும் சாதியத் திமிர் இன்னும் அடங்க வில்லை என்பதுதான். இன்றைய நிலைப்பாடும் இவ்வாறுதானுள்ளது. சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி வியாபிக்கக்கூடியது நட்பு. அதே நட்புச் சொந்தம், உறவு சம்பந்தம் என்று புறப்படும் போது அதை விரும்பி ஏற்போரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே உள்ளது.
கவிஞர் எம்.ஏ.நுஃமானின் கவிதா வல்லமை ஆய்வுக் கருத்தரங்கு பற்றி
42
மா.பாலசிங்கம் எழுதிய கட்டுரை மூலம் கவிஞர் அவர்களின் கவிதைகளின் ஆழ
அகலங்கள் தெளிவாய் உள்வாங்கப்
பட்டன.
- ரவுற்மத்துல்லாவுற் அநுராதபுரம் மடீடுப்படுத்த வேண்டும்.
ஆகஸ்ட் (2006) மல்லிகையில் மட்டுப்படுத்த வேண்டும்’ என்ற ஒரு கருத்து சொல்லப்பட்டிருந்தது. இஃ தொரு காலத்தில் அமுல்படுத்தப் பெற்றிருந்தது.
இலங்கை எழுத்தாளர்களின் கதை களில் கையாளப்பெறும் சொற்களுக்கு அடிக்குறிப்பு தேவைப்படுகின்றதென்று கிண்டல் செய்யப்பட்ட காலமது.
இந்தியாவிலிருந்து வெளிவரும் அனைத்து அச்சுத்தாள்களும் தடை செய்யப்பட வேண்டுமென்ற போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தோழர் எச்.எம்.பி.மொஹிதீனுடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. எச்.எம். பி.யின் அழுத்தத்தைக் கண்ட எதிர்க் கட்சித் தலைவர் திரு. அ.அமர்தலிங்கம், தாம் வாசிக்கும் புத்தகங்களை - பத்தி ரிகைகளைத் தெரிந்து வரவழைக்கும் உரிமை தமிழ் மக்களுக்கே உரியது. ஒரு கம்யூனிஸ்டான ஜனாப் மொஹிதீன் எந்த உரிமையில் தமிழ் மக்கள் வாசிக் கும் புத்தகங்களைத் தெரிந்து எடுக்க முடியும்?" என்று கேள்வி கேட்டார்.

எச்.எம்.பி.யின் தடைப் பிரேர “இந்தியாவி லிருந்து இறக்குமதியாகும் சாக்கடைப் பத்திரிகை, சஞ்சிகைகள் தடைசெய்யப்
னையை வரவேற்று
பட வேண்டியது மிகவும் அவசியம். ஜனாப் எச்.எம்.பி.யின் அறிக்கையில் குறிப்பிட்டது போல ஒரு தடை ஏற்பட் டால், அத்தடை சிறிது காலத்திற்கு நம்மை பாதித்தாலும் கூட, ஒரு கணிச மான முன்னேற்றத்தைச் சகல துறைகளி லும் ஏற்படுத்துவது மத்திரமல்லாமல், "நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் எழுத்தாளன் இலங்கையனாக இருந் தாலும் வியப்பதற்கில்லை” என்று முது பெரும் எழுத்தாளர் திரு. எஸ்.வைத்தி லிங்கம் குறிப்பிட்டுக் காட்டியிருந்தது நோக்கற்பாலதாகும்.
இறுதியில், அமைச்சர் குமாரசூரியர் அவர்களின் ஒத்துழைப்போடு இந்திய எழுத்துத் தாள்கள் தடைசெய்யப் பட்டன.
இக்காலகட்டத்தில், இலங்கையில் எதிர்பார்க்காத அளவுக்கு பத்திரிகை களும், சஞ்சிகைகளும், நூல்களும் வெளிவந்தன. நட்சத்திர மாமா, வெற்றி மணி போன்ற சிறுவர் பத்திரிகைகளும் வெளிவந்தன. "வீரகேசரி" வெளியீடாக சிறுகதைத் தொகுப்புகளும், நாவல் களும் வெளிவந்தன.
திறந்துவிட்ட பொருளாதாரம் காரணமாக மீண்டும் எல்லா எழுத்துக் குப்பைகளும் வரத்தொடங்கிவிட்டன. இவை வர்த்தக நோக்கில் பார்க்கப்படுவ தால் கவர்ச்சியும், களிப்பும் ஊட்டுவன வாய் அமைந்துள்ளன.
665);
இலங்கை வெளியீடுகளைப் புத்த கக் கடைகளுக்கு அனுப்பி வைத்தால், அவை பிரித்துப் பாராமலே சில நாள் கழித்து, 'விற்பனையாகவில்லை என்ற பல்லவியோடு திருப்பித் தந்து விடுகின் றார்கள். இதற்கு இறக்குமதி நூல்களே காரணமாகும். இந்த அனுபவம் 'ஜீவா? வின் வரலாற்றைப் படிக்கும்போது நன்கு புலனாகும்.
எனவே, கட்டுப்படுத்த வேண்டும். அல்லது தடை செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்துக் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைக் காப்பாற்ற முடியும்.
- சாரணா கையூம் L.gഞണ്
43
ܢܠ
N గీn:Jan høOmen ఏసిడీఏబడి 9్మరొagn? ത്തമ ഉക്രേsഞ്ച
له خ)خريجوال
Gunnಬಹಿನಿ'.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத் திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட, பொது நூல கங்களுக்கும் தேவையான நூல் களையும், மல்லிகை ஆண்டு மலர் களையும் மல்லிகைப் பந்தலில் பெற்றுக் Gisreitensort b.

Page 24
மிலான் நகரத்துச் சிற்றுண்டிச் சாலையிலே எடுபிடித் தொழில் பார்த்தவன் குபேரப்புளுகு காட்டி இத்தாலிக்கு ஆட்திரட்டல் பண்ணிக் கொண்டிருந்தான். வசீகரனை அதுவொன்றும் ஆட்டிப் படைப்பதாயில்லை.
மாட்டின் மலவாயிலில் தனது வாயை வைத்து உறிஞ்சுகின்ற எலும்புந் தோலும் கடைவாயுமில்லா மிக நோஞ்சானாகி நின்றிடக் கூட வலுவில்லா மனிசப் பதரேயான ஒர் உருவத்தைக் கொண்டிருந்த ஒளிப்படமொன்றே அவனை இடியேறு வீழ்ந்த பாழ்நிலமே போலாக்கி உசுப்பியது.
சோமாலியக் கரைகளில் கடற்கொள்ளை குழுக்களின் கோரத் தாண்டவம் குரூர வடிவெடுத்து உலகிலே இதுவரை எங்குமே கண்டறியாத பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடுவதை வசீகரன் கேள்விபட்டிருக்கிறான். அதுவே சிந்தனையைக் குடைந்து கொண்டிருந்தது. மாற்று வழியொன்றைத் தேடி மனது அலுத்துப் போயிருந்தது. காணச் சகிக்க முடியாக் கொடுமையைத் தகர்த்தெறியும் வேட்கை அடிமனதில் ஒரேயடியாகக் கனன்று கொண்டிருந்தது. இந்து சமுத்திரத்தை நேரடியாகக் கடந்து மேற்கு நோக்கிப் பரவியது.
மிலான் நகரவாசி சோமு. பரம்பரை பரம்பரையாக மாட்டு வண்டிலே sջւգա வருமானத்தில் நிலைக்கவே முடியாத குடும்பப் பொருளாதாரச் சித்திரவதைகள் பல கடந்த நிலை. அவன் ஊட்ாக இத்தாலி போய்ச் சேர்ந்தவர்கள் பலர்.
சோமு வீட்டுக்காரர் அடுத்த வீடுகளின் சமையல் பதார்த்தங்களை ஏங்கிப் பார்த்துக் கெஞ்சி இரவல் யாசிப்பதுண்டு. சோமுவோ இத்தாலியில் விடாக் குடியன். பலத்த பன்றி இறைச்சி விழுங்கித் தீர்ப்பவன். அதன் சிறுதுண்டு எலும்பு கூட வீட்டாருக்கு யாசிப்பவன் அல்லன். தனிக்காட்டு ராசாவாகி வீட்டாரை நட்டாற்றில் தவிக்கவே விட்டபடி வாழ்பவன். ஒரேயொரு அனுமார் படத்தை வைத்துத் தன்னோடு துணையாக்கி பக்தியிலும் சிற்சில சமயங்களில் திளைப்பவன். நேரத்துக் கொரு உடுபுடைவை. ஆடம்பரம் கொடிகட்டிப் பறக்கும்.
சோமுவின் ஆதி காலத்துத் தேவாரப் பண்ணிசைகள் இத்தாலியில்
மறந்து மறைந்து போயிருந்தன.
By-TDTb) JT
சோமுவோடு மிலான் போக முன்னர் மோகடிஸ்ஸஸூக்கு வழிமாறிட - சி.சுதந்திரராஜா வசீகரன் எத்தனித்தான். பெரியல் முல்லை தங் கொட்டுவ கடலோர வீடுகளில் மாறி மாறி மூட்டை முடிச்சு
44

களுடன் முஸ்லிம் சிங்களவர் பேத மின்றிக் காத்திருந்த கும்பலில் வசீகரன் இருந்தான். இயந்திரப் ப்டகுகள் எப் போது வரும் என்று எவருக்குமே சோமு சொல்லுவதாயில்லை. வானம் பார்த்த படியே சரமாரியாக வெடியெழுப்பும் சோமாலியாச் சிந்தனையில் மூழ்கியிருந் தான். புதுமைப் பிறவி.
ஆயுதக் குழுக்கள் வெடிமருந் தோடு முரட்டுப் பிடியில் உலகிலே கண்டும் கேட்டிராத பஞ்சத்தை உரு வாக்கிய குரூரத்தை நிர்மூலமாக்கித் தகர்த்தே புரட்டும் பெரும் பிரவாகம் அவனில் பீறிட்டது. வேற்று நாட்டவர் வேற்று மொழி பேசும் கறுப்பினர் களிடம் தலையெடுக்க முடியாது என்ற வாதம் அவன் முன்னால் தவிடு பொடி யாகி விடும் போலவே தென்பட்டது.
இளநீல டெனிம். கடுஞ்சிகப்பு ஜக் கெற். இளமஞ்சள் Rப். அள்ளி முடிந்த கருங்கொண்டை. ஆண் உடுப்புப் போட்ட அழகி. மெல்லிய உடலம். மானெல் முதல் பார்வையிலேயே காந்த மாகிக் கவர்ந்து கொண்டாள். கடற்கரை முழுவதுமே சுற்றித் திரிந்தாள். எந் நேரமும் சிரித்தபடியிருந்தாள்.
வத்தாகல என்கின்ற அவளின் ஊர்ப்பேரை அன்றுதான் முதலில் செவி யுற்றான். அவளின் கண்ணிலேயிருந்த கவர்ச்சியில் கட்டுண்டு சோமாலியா ஆசையை விட்டே விடுவான் போல் சோமுவுக்குத் தோன்றியிருக்கிறது.
45
Ø (සංසාගය
உப்பலாக ஊதிய மூன்று ஹான்ட் பேக்கில் அவளுக்கு வேண்டிய துணி மணி காவியபடி தான் அங்கு வந்திருந் தாள். அங்கக் குழைவுகள் எல்லாமே சோமாலியாவைத் துறக்கும் துறவிப் பார்வைக்குத் தூபமிட்டபடி தெரிந்தன.
தரையின் சுண்ணாம்புப் பாளங் களையும் பொடியாக்கி உணவாக்கி உண்ணும் சோமாலியாப் பிரசைகள் இப்போது மின்னலடித்தனர்.
பாவித்துக் கழித்த பழைய மணி பேர்ஸின் வெடித்து உலர்ந்த தோலைக் கூடத் தின்னத் துடிக்கிற எலும்புக்கூடு ஜீவராசிகள் அதே தருணத்தில் தோன்றி மறைந்தனர். சோமாலியா கேவலமான உல்லாசச் சுற்றுலா எண்ணத்தையே அவனுக்குள் உடன் மறைத்தெடுத்தது.
மொகடிஸ்ஸ அக்குத் தனித்தேனும் உயிர்ப் பணயம் வைத்துக் கூடப் போய் நின்று ஒட்டிய உயிரையே உடலோடு வைத்திருக்கிற உலகம் காணாத ஜீவ ராசிப் பிறப்புக்களைக் காத்திட உதவும் திராணி ஒன்றே தோன்றிது. மற் றெல்லாம் அவன் கண்களிலிருந்தே மறைந்தது.
தங்கி நின்ற கடலோர வீட்டிலே கட்டியிருந்த ஊஞ்சலில் ஒய்யாரமாக ஏறியுந்தி ஆடியபடி மதுக் குரலில் முணு முணுத்தாள். மானெலின் மொழி வசீ கரனுக்குப் புரியாத போதிலும் குரலின் இனிமை இதழுட்டியது.

Page 25
灰 esse).
எதனையோ கொறித்தபடி வாத் சல்யமாக அவனுக்கும் நீட்டினாள். மெல்லிய பூங்கரங்கள். கிளுகிளுப்பை ஊட்டும் பார்வை.
பிறகு பசுந்தரை மேல் உட்கார்ந்த படி செல்போனில் அவள் வம்பழைத் தாள். தீயிலிட்ட நெய் போல் அவள் செய்கைகள். இத்தாலி போகுந் துடிப்பு. இளங்கன்று பயமறியா மமதை. ஸ்பி றேச் சரும மணம்.
சோமுவிடமே சோமாலியா பற்றி யெல்லாம் வசீகரன் விசனப்பட்டான்.
'உப்பிடித்தான் உதையெல்லாம் ரீவியிலை பாத்தவுடனை அமரிக்கர் தங்கடை கெயர் பால்மா தொன்களாய் வாரி வாரி இறைச்சவை. பட்டினிகள் மாய்ஞ்சுதே"
“மாற்றேலாதா?
“நீயென்ன கொம்பனே மாற் றுறதிக்கு? அங்கை போகக்கு முந்தியே கடற்கரையிலை வைச்சே நீ வெளி நாட்டாள் எண்டு சொல்லி வெட்டிப் போடுவாங்கள். அங்காலை போகவே விடாங்கள்."
சோமு படகில் இத்தாலிக்கு போகின்றவர்களை மேலும் அணியப் படுத்தினான். இத்தாலிக் குழுவில் வசீகரன் அல்லல்படாமல் இருக்கவிட வில்லை. மானெலின் நெருக்கம் அவ னுடைய அக்கனவையும் கலைப்ப தாயில்லை. மகோன்னதத்தை அவன் மனத்திலிருந்தும் எடுப்பதாயுமில்லை.0
46

புரவலர் இல்லத்தில் கூடிய கலை இலக்கிய உள்ளங்கள்
- ஏ.எஸ்.எம்.நவாஸ்
"மனிதநேயம் வளர வேண்டுமென்றால் இவ்வாறான ஒன்றுகூடல் அவசியம்தான்" என்று கடந்த 12.08.2006 அன்று கொள்ளுப்பிட்டி, ஆனந்தகுமாரசாமி வீதியில் அமைந்துள்ள புரவலர் ஹாஸிம் உமர் இல்லத்தில் ஒரு மாலைப் பொழுதொன்றில் இடம்பெற்ற கலை, இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் நிகழ்வின்போது மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் -
‘இன்றைய நிகழ்வு எனக்கு அக்கால இலக்கிய நண்பர்களோடு ஏற்படுத்திக்கொண்ட ஒன்றுகூடல் நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. இவ்வாறான ஒன்றுகூடல் அடிக்கடி இடம்பெற வேண்டுமானால் அதற்கு ஒரு அமைப்பான இடம் தேவை. அதையும் ஹாஸிம் உமர் அவர்கள் செய்துதர வேண்டும். இது நான் அவரிடம் பலமுறை விடுத்த கோரிக்கை" எனவும் தெரிவித்தார்.
சுமார் 40இற்கு மேற்பட்டோர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆரம்ப உரையைத் திரு. வைத்தமாநிதி நிகழ்த்தினார்.
"பல சோலிகளுக்கு மத்தியில் இதில் கலந்து கொள்ளும் பலசாலிகளே’ என்று ஆரம்பித்தவர் தான் நேரில் பார்த்த ஒரு விடயத்தை இங்கு கூறி அந்த அநுபவத்தை ஒரு நாடகமாக மேடையேற்றுமாறு கலைஞர் கலைச்செல்வனிடம் தெரிவித்தார்.
மனிதன் ஒழுங்காக இருந்தால் உலகம் சரியாக இருக்கும்! என்ற அழகான தத்துவத்தினை ஒரு வரைபடத்தின் கதை மூலமாக சுவைபடக் கூறி, சபையினரைக் களிப்பில் ஆழத்தினார் தெளிவத்தை ஜோசப்.
சமூக ஜோதி ரபீக்கின் "மடல்’ தொடர்பான அவரது நீண்ட உரை சுமார் 45 நிமிடங்களை விழுங்கியது. எனினும் இலக்கியச் சுவைஞர்கள் அதனை ரசிக்கவே செய்தனர்.
47

Page 26
O page):
இன்னும் என்.கே.ராகுலன் - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாது தமிழ் இலக்கிய உலகில் சஞ்சரிக்கும் மேமன்கவி, ஹாஸிம் உமர், ப.ஆப்டீன் உள்ளிட்டவர்களைக் கூறிய திரு. டொமினிக் ஜீவா தமிழ் மீது பற்று வைத்த இந்த மலையாளியை மறந்துவிட்டார் என்று நகைச்சுவை ததும்பக் கூறிய அவர், தன் நாவில் என்றும் உலவுவது தமிழ் சரஸ்வதியே என்று விளித்தார்.
பெண் எழுத்தாளரான நூறுல் அயின் நஜ்முல் ஹைைசன் “பெண் எழுத் தாளர்கள் எழுதி நூல் படைப்புகளில் முதல் பிரதியாக புரவலர் வாங்கியது தனது நூலான பண்பாடும் பெண்" என்ற நூலைத்தான். அதையும் ஒரு பதிவாகக் குறித்துக் கொள்ளுங்கள் என்றார்.
சே. சந்திரசேகரன் 'கோமாளிகள் சினிமா காலத்துச் சிறு
கலைஞர்
அனுபவமொன்றை இங்கு நகைச்சுவை யாக விபரித்தார். அந்தனி ஜீவா, கோவை அன்ஸார் போன்றோரும் சுருக்கமாகப் பேசினர்,
அந்தனி ஜீவா தனது உரையின் போது புரவலர் ஹாஸிம் உமரின் கொடை வள்ளல் தன்மையைப் பற்றி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அநேகரின் கருத்து இதுபோன்ற ஒன்று கூடல் நிகழ்வை மூன்று மாதத்துக்கொரு முறையாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதாகும். கலைச்செல்வன் நன்றி யுரை நிகழ்த்தினார்.
 
 
 

l( ണ്ട്. ഇിu്ഞു?
ஆங்கில மூலம் : ரெவிஸ் ரஞ்சன் பெரேரா
தமிழாக்கம் : கந்தையா குமாரசாமி
மனித வாழ்வின் வெற்றியோ தோல்வியோ, நாம் எமது மனவோட்டத்தில் உச்ச அளவான சிந்தனைக்கும் மாறு நோக்குக்கும் இடைப்பட்ட நடுநிலையை எப்படி அறிவுபூர்வமாகவும், கூருணர்வுடனும் கையாள்கின்றோமோ அதிலேயே பூரணமாகத் தங்கியுள்ளது. அதாவது எதிர்கால சுபீட்சத்துக்காக நாம் என்றுமே சாகாமல் வாழ்வோம் என்றெண்ணிக் கொண்டு பேரவாவுடன் முன்கூட்டியே திட்டங்கள் தீட்டுவது ஒருபுறமும், மறுபுறம் நாம் விரைவில் மரணமடையப் போகின்றோம் என்ற வாழ்க்கைத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு அதை எதிர்நோக்கிய வண்ணம் சுயநலமின்றியும், அமைதியான வழியிலும் அன்றாட வாழ்வைக் கொண்டு செல்லும் வழியிலும் செல்கின்றோம்.
நாம் முன்னர் ஒருகாலத்தில் குழந்தைகளாக வாழ்ந்துள்ளோம். குழந்தைகள் பொதுவாக கவனக்குறைவு, அப்பாவித்தன்மை, அறியா நிலையுடன் காணப் படுவார்கள். உலகம் குழந்தைகளை அப்பாவிகளாகவே ஏற்றுக் கொள்கின்றது. குழந்தைகளிடம் பொறுப்புக்களைச் சுமத்துவதோ அல்லது அவற்றுக்குப் பதில் கூறும் பொறுப்பையோ எவரும் எதிர்பார்ப்பதில்லை. நான் எப்பொழுதும் குழந்தை யாகவே இருந்திருந்தால் எவ்வளவு அருமையானதாயிருக்கும்" என்று எங்களில் சிலர் சொல்ல ஆசைப்படுகின்ற காரணம் அதுவாயிருக்கலாம்.
குழந்தைப் பராயத்தில் நாம் எத்தனையோ கனவுகள் கண்டிருக்கின்றோம். எமது வாழ்வின் மெய்மைதனை - உயிர்த்தோற்றங்களை - அறியாமல் - தெரியாமல் சிலசமயங்களில் குழந்தைகள் செயல்வடிவில் நடக்க முடியாததற்கும் தவிப்பதுண்டு. நிறைவேறும் எனக் கனவு காண்பதுண்டு. குழந்தைகள் அவ்வாறு நடைமுறைச்
49

Page 27
665);
তত্ত্ব சாத்தியமில்லாத கனவுகளில் திளைத்து ஆசைப்படுவதையிட்டு அவர்களிடம் எவரும் குற்றம் காண்பதில்லை. இத் தகைய எண்ணங்கள், ஆசைகள், கனவு கள், நம்பிக்கைகள் சூழ்ந்த குழந்தைப் பராயம் எத்துணை இனிமை கலந்த அற்புதமானது என்பதை நாங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்,
1799 - 1845 வரை வாழ்ந்த புகழ் பெற்ற ஸ்கொற்றிஷ் புலவரான Gs it do ID 9' (Scottish Poet, Thomas Hood) 6r6õLaui "grusib வருதே, ஞாபகம் வருதே" (1 remember, 1 remember) என்ற பாடல் மூலம் குழந்தைப் பராயம் முதல் வாலிப பராயம் வரையான காலத்தை எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள் -
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!
ஊஞ்சல் ஆடும்போது பறவையாகி என் சிறகுகளைத் தென்றல் காற்றானது வாரியனைத்து உயரத் தூக்கிச் செல்ல எனது எண்ணங்கள் வானுயர அன்று சிறகடித்துப் பறந்து சென்றதெல்லாம் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
இன்று சிறகுகள் பாரம் மிகுந்து கோடையில் ஒடைகள் குளிர் இன்றி வெப்பம் கூடி உச்சி ஒரம் தகிக்கின்ற ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!
வான் முகட்டில் முட்டும் அளவு உயர்ந்த அடர்ந்த மரங்களின் ஒடுங்கிய மேற்பரப்பின் அழகிய தோற்றங்கள் சிந்தையில் வருதே ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!
50
அவை பிள்ளைத்தன அறியாநிலை அந்தப் பழைய எண்ணங்கள் சிறிதளவு சந்தோஷம் தருதே சிறுவனாயிருந்த காலத்துச் சொர்க்கத்திலிருந்து வெகுதூரம் நான் இறங்கி வந்துவிட்டேன்
என்பது நன்றாக விளங்குகின்றது
இந்தப் பாடல் அண்மையில் நாம் கேட்ட தமிழ் சினிமாப் பாடல் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றதல்லவா?
மனித வாழ்வின் வெற்றியோ தோல்வியோ எமது மனவோட்டத்தில் உச்ச அளவான சிந்தனைக்கும் மாறு பட்ட நோக்குக்கும் இடைப்பட்ட நடு
நிலையை எப்படி அறிவுபூர்வமாகவும்,
கூருணர்வுடனும் கையாள்கின்றோமோ அதிலேயே பூரணமாகத் தங்கியுள்ளது. அதாவது எதிர்கால சுபீட்சத்துக்காக நாம் என்றுமே சாகாமல் வாழ்வோம் என்றெண்ணிக் கொண்டு பேரவாவுடன் முன்கூட்டியே திட்டங்கள் தீட்டுவது ஒருபுறமும், மறுபுறம் நாம் விரைவில் மரணமடையப் போகின்றோம் என்ற வாழ்க்கைத் தத்துவங்களைப் புரிந்து கொண்டு அதை எதிர்நோக்கிய வண்ணம் சுயநலமின்றியும், அமைதி யான வழியிலும் அன்றாட வாழ்வைக் கொண்டுசெல்லும் வழியிலும் செல்கின் றோம்.
உயிர்மூச்சு ஒருநாள் எம்மை விட்டுப் போகலாம். ஆனால் ஆத்ம ஞானம் ஒருபோதும் மடியாது - அகலாது. L

உச்சி வெய்யில் எனது மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. முகம் சுழித்து நடந்து கொண்டிருந்தேன். மாபோளையை நெருங்கிய பிரதான பாதை வழியாக, பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் வெளியேறும் நேரமாக இருந்தது. பிரதான பாதையில் அமைந்த மாபோளை முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்தும் மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஐந்தாம், ஆறாம் வகுப்பின் மாணவ மாணவிகள் தம்மை அழைத்துச் செல்வதற்கு தமது பெற்றோரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அழைத்துச் செல்லும்வரை சில மாணவர்கள் அந்தப் பாடசாலை முற்றத்தில் உச்சி வெய்யிலையும் உணராது விளையாடிக் கொண்டிருந்தனர். சில சில மாணவர்கள் துணிச்சலாகப் பாதையைத் தாண்டியபடி தம்மில் முதலிடம் பெற முந்திக் கொண்டிருந்தனர்.
சின்ன மனதுகள் சின்னச் சின்ன துரோகங்களில் தம்மில் அங்கே அடிபிடி செய்து கொள்ளவும் தவறவில்லை.
அவனுக்கென்றொரு நிழல்
- ஏ.எஸ்.எம்.நவாஸ்
அப்போதைய நேரம் சரியான சனநெரிசல் மட்டுமல்ல. வாகனப் போக்குவரத்தும் மிக இறுக்கமானதாக இருந்தது. அந்நேரம் வத்தளையை அண்டிய மாபோளைப் பகுதி இயந்திர இரைச்சல் மயமாகவே இருப்பது வாடிக்கை. சில "கை"கள் அடை யாளம் காட்டினால்தான் வாகன விபத்தில்லாமல் தப்பி மறுதெருவுக்கு தாண்டிச் செல்ல முடியும். இவ்வேளைகளில் எல்லாம் ஓர் ஆச்சர்யமான விஷயத்தை தரிசித்துக் கொண்டிருப்பேன். அது அந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காவலாளியாகப் பணிபுரியும் சிங்கள இனத்தவரான விஜேதாசவின் மனதோடு மானசீகமாக விளை யாடும் அந்த மனிதாபிமானத்தைத்தான். அவன் பாடசாலைக்கு மட்டும் காவல்காரன் அல்ல! எவரோ பெற்ற பிள்ளைகளுக்கும் பாதுகாவலன். பிள்ளைகளோடு பழகும் வாஞ்சையை நான் பலதடவை அவதானித்துள்ளேன். பெற்றால் மட்டும் பிள்ளை இல்லை. பெறாவிடினும் பிள்ளைகள் பிள்ளைகள்தான் என்பது அவனது மனோ பாவமாக இருக்கலாம்.
அவன் அந்தச் சிறு மாணவர்களின் கைகளைப் பிடித்தபடி பாதைக்கு அழைத்துப் போய் மறு பகுதிக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு மீண்டும் அதே நடையில் எதிரே வரும் வாகனங்களை தன் கை கொண்டு சமிக்ஞை செய்து மீண்டும் அவன் தன் இலவசப் பணியைத் தொடர்வான். இப்படியே சிறு மாணவர்களை பாடசாலைக் கேற்றிலிருந்து அழைத்துச் செல்வதும், பாதை மாற்றி விடுவதும், பாதை கடப்பைக் குறிக்கும் மஞ்சள் கோடுகளுக்கு நடுவே ஓடுவதும், அந்தப் புழுதி, வெப்பம், வாகனப் புகை என்பவற்றையெல்லாம் அவன் தாங்கிக் கொண்டு உழைப்பதைப் பார்த்ததும் அது சாதாரணமான ஒரு பணியாக நம்மில் பலருக்குத் தெரியும். என்னில் அவன்
51

Page 28
geot
தியாகத்தின் உச்சியில் நின்று கொண்டி ருந்தான்.
அவன் ஏன் இப்படிச் செய்ய வேண் டும்.? அந்தப் பிள்ளைகளுக்கும் இவ னுக்கும் என்ன உறவு.? ஜாதி பேதம் பாராத அவனது அர்ப்பணிப்பு. ஜாதி பேதம் பார்க்கும் வியாதிக்காரர்களுக்கு இது ஒரு குறிப்பு. மனிதர்கள் மனிதர் களை மனிதனாக மதிக்காத தன்மை யொன்றே இவ்வகையான சில அர்ப் பணிப்பு உள்ளங்களை நம் கண் முன்னே காலம் கணக்கெடுத்துக் காட்டுகிறது.
அன்றொரு நாள் - அடைமழை பொழிந்து பாதையை ஈரப்படுத்திக் கொண்டிருந்தது. மழையாய்ப் பெய்து கொண்டிருந்தாலும் வாகனப்புகை வாசம் மட்டும் மழைநீர் வாசத்தோடு என் நாசி யைத் தொட்டது. எனக்குப் பிடிக்காத இயந்திரப் புகை வாசம். சிறு கைக் குட்டையால் வாய், மூக்குகைப் பொத்திக் கொண்டேன். மாபோளை பிரதான விதி யால் நடந்து வருகிறேன். பள்ளி வாசலுக் கருகே நிற்கிறேன். ஏதோ உணர்வுதட்ட அங்கே நான் கண்ட காட்சி!
அந்த விடாத மழையிலும் பாட சாலைக் கதவுக்கு வெளியே நின்று கொண்டு, ஒரு சிறு குடையைப் பிடித்த வண்ணம் விஜேதாச சிறுவர்களை பாதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். வானம் தன் மோசமான இடியுடன் மழை யைப் பொழிவித்துக் கொண்டிருக்க,. விஜேதாச எந்த இடி, மின்னலுக்கும் கலங்காதவனாய் இயங்கும் இயந்திரம் போல் தன் பணியைச் செய்து கொண்டி ருந்தான். அவன் மீது இன்னும் இன்னும் அனுதாபமே எனக்கேற்பட்டது. அந்தப் பாடசாலையில் ஒதுங்கி நிற்கக்கூட
அவனுக்கு ஒரு நிழல் இல்லை. அவன் காவலாளிதான்! என்றாலும் அவனும் மனிதனே! அவன் மேனியைத் தாக்கும் வெயில், மழைக்கு ஈடுகொடுக்கும் ஒரு ஒதுங்கிடமோ, அமர்ந்து உண்ண ஒரு தரையோ கிடையாது. இத்தனைக்கும் அவன் உடையைக் கழற்றி வைப்பதற்குக் கூட மரக்கொப்பு ஒன்றுதான் பயன் பட்டது. மதம் செய்யா. மனித மனம் செய்யாதொன்றை மரம் செய்கிறது.
விஜேதாச என்னைக் கவர்வதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. என் பிள்ளைகளான நாஜிதாவும், நாஸிக்கும் அங்கேதான் கல்வி கற்கிறார்கள். சில சமயங்களில் என் பிள்ளைகளையும் தன் பிள்ளையாய் எண்ணி ஆதரித்ததுண்டு.
இவனுக்கு எப்படியாவது பாட சாலைப் பகுதியின் ஒரு ஒரத்திலாவது சிறு ஒதுங்கிடமொன்றைக் கட்டிக் கொடுத்தே தீரவேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்ததைத் தவிர்க்க முடி யாமல் விஜேதாசவிடம் சொல்ல முற்பட் டேன். இதைக் கேள்விப்பட்ட விஜே தாசவின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி யைக் கண்டதும் எனக்கும் மகிழ்ச்சி யாகவே இருந்தது. ஆனாலும் அவன் ஒன்றைச் சொன்னான்.
"இது சரிவராது தொர. ஏற்கனவே சில தாய்மார் இந்த விஷயத்த பேசி னாங்க. பேசினது போல சில உதவிகளை யும் செஞ்சாங்க. அவங்க இங்க கொண்டு வந்து போட்ட கற்கள் எல்லாம் காணாமல் போயிடுச்சு. யார் தூக்கிட்டுப் போனாங்களோ தெரியலை!" என்றவாறு கவலையுடன் அவன் கூறியதைக் கேட்ட தும் எனக்கும் கவலையாகத்தான் இருந்
தது. இன்னுமொன்றையும் சொன்னார்,
52

"வெயில்லே காய்றதையும், மழை யில நனையிறதையும் நான் பெரிசா நெனைக்கல்ல! எனக்காக இந்த மனுவு சாதிகள் கொஞ்சம் கருணை வச்சா அதுவே போதும் தொர' என்றான் அவன்.
புத்தன் ஞானம் போதி மரம் என் றால், இவனுக்கு எந்த மரம்.? ஒரு அலரி மரம் அங்கே இருந்தது. அதுவோ? இன்றைய பொருள் தேடும் யுகத்தில் எந்தக் காவலாளியானாலும் "சம்திங்" வாங்குற ஆசை விட்டதில்லை. இவன் நடப்பது - நடவாதது எதுவானாலும் மெய்யானவற்றுக்குச் சம்மதிப்பவனாக வும், பிறரை சம்பாதிப்பவனாகவும் இருக் கிறானே! அதிலும் இவனுக்கு கிடைக் கிற தினச்சம்பளம் இன்றைய பொருளா தாரச் சிக்கலுக்குப் போதுமானதாக இருக்க முடியாது. வெறும் நூற்றி எழு பத்தைந்து ரூபாய் தினச்சம்பளத்தில் இவனால் திருப்தியாக வாழ முடிகிறதா? விட்டின் மாத மின்சார, நீர் கட்டணத் திற்கே அவன் சம்பளம் சரியாகி விடும். சும்மா இருந்தால் ஒன்றும் கிடைக்காது என்பதால் இத்தொழிலை மனதார ஏற்றிருக்கிறான். அவனுக்குத் திருமணம் முடித்த பிள்ளைகளும் இருப்பதால் அந்தப் பிள்ளைகளுக்கு ஏன் தானும் ஒரு பாரமாக இருக்க வேண்டும் என்ற நிர்ப் பந்தத்திலும் அவன் இந்த புனிதத் தொழிலை ஏற்றிருக்கலாம்! ஆம். இது புனிதமான தொழில்தான். மற்றவர்கள் நினைப்பது போல் இது கேவலமான பணியல்ல! உயிர்களுக்கு உயிர் கொடுத்து அர்ப்பணிப்போடு செய்யற்படுகின்ற "செக்குருட்டி வேலை பல திருட்டு, ஏமாற்றுத் தொழில்களை விட மேலானது.
53
s 666):
இரவு தூங்கும் நேரத்தில்; ஊசலாட் டம் இல்லாத நிசப்தத்தில் தங்கள் முகங்களைக் காட்டிக் கொள்ள, முதுகு சொறிந்து கொள்ள முன்வரிசையில் நிற்பர்.
பாடசாலையில் அன்றோர் தினம்! பெற்றோர் கூட்டம். நான் போட்டு வைத்த திட்டம் நிறைவேறுமா? என என் சிந்தனை ஒட்டம். எவராவது விஜேதாச பற்றிப் பேசுவார்களா? என்று எதிர் பார்த்து நானும் ஒரு இருக்கையில் குந்திக் கொண்டேன். “பேச்சுக்கள்" வெறும் பேச்சுக்களாகவே நீண்டு கொண் டிருந்தன. கூச்சல்கள் உயர்ந்தது. குறிக் கோள் கீழே நின்றது. அதிபர் கேட்ட ஒத்துழைப்புகளுக்கு பெற்றோர் தரப்பில் 'மறுப்பு" என்றது. சம்மதிப்பு என்ற வடி வம் சயனித்தது. பேசிப் பயனில்லை. பேசிப் பேசி இந்த நாட்டில் என்ன நடந் தது? சரிநிகரான சமாதானம் ஏற்பட்டதா? இக்கூட்டத்தில் பிழைகள் சரி செய்யப் படப் போவதில்லை என்பதை உணர்ந்த நான் கூட்டத்திலிருந்து வெளியேறினேன்.
மறுநாள் - கொழும்பு செல்வதற் காக மாபோளைப் பள்ளிவாசலுக்கருகில் நின்று பஸ்ஸுஜூக்காக காத்திருந்தேன். அதே பகல் உச்சி வெய்யில் நேரம், அந்த முஸ்லிம் பாடசாலையிலிருந்து மாணவர் கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். சிறு மாணவர்கள் கைபிடித்துப் பாதை மாற மஞ்சள் கோடுகள் நடுவே நடந்து கொண்டிருந்தான். விஜேதாச
o யாரும் சிந்திக்காத விஜேதாசவைப் பற்றி நான் மட்டும் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். ப

Page 29
ஈழத்துச்
சஞ்சிகைகள்
எனது
tibiotB6DDTITto Lib.
- V.P.ssögylb
54
பொதுவாக நோக்குமிடத்து இலங்கையில் வெளிவரும் சஞ்சிகை களில் ஆக்கங்களுக்கு ஒருவித வறட்சி தென்படுவதை அவதானிக்கலாம். "நாங்கள் எவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில், பொருளாதாரப் பிரச்சினை களுக்கு முகம் கொடுத்து? எமது ஆத்ம திருப்திக்காக, 'ஆர்வம்' என்ற மூல தனத்தை முன்னிறுத்தி வெளியிடும் சஞ் சிகைகளுக்கு யாரோ ஒருவன் இப்படி யெல்லாம் கூறுகிறானே? என்று நீங்கள் எண்ணலாம். ஆம்! உண்மைதான். உங்க ளால் வெளியிடப்படும் சஞ்சிகைகளைப் பணம் கொடுத்து வாங்கிப் படித்து எனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுகின்றவன் என்ற வகையில், ஒரு வித பங்களிப்பு இருக்கின்றது என்ற நோக்கில், எனது கண்ணோட்டத்தை தெரிவிக்க உரிமையுள்ளவனாக இருக் கின்றேன்.
இலக்கியம் மக்களுக்காகவே" என்ற கோட்பாட்டை முன்னிறுத்துகின்ற அதே வேளை, மார்க்ஸின் கூற்று இங்கு பொருத்தமுடையதாக இருக்கும். "விமர் சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல. அது சிறு கத்தியல்ல. அது ஒரு பெரிய ஆயுதம்" என்ற நிலையில் “தத்துவ ஞானம் அறிவைப் பயன்படுத்துகின்றது. கலை உணர்வைப் பண்படுத்துகிறது’ என்பதை உணர்ந்து.
அதன் நோக்கில் ஜூலை 2006இல் வெளிவந்த மல்லிகை, ஞானம், மறுகா ஆகிய மூன்று சஞ்சிகைகளையும் எனது கண்ணோட்டத்திற்கு உள்படுத்த எண்ணு கின்றேன். மூன்று சஞ்சிகைகளின் அட்டைப் படங்களும் வெவ்வேறு

அமைப்பில் அமைந்துள்ளன. மல்லிகை யின் அட்டையில் மலையகத்தின் இலக் கியத் தேனி நயிமா சித்திக் அவர்களின் படமும், அவர்களைப் பற்றி நாவலப் பிட்டி கே.பொன்னுத்துரை எழுதிய விபரக் கட்டுரையும் சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளன. ஞானத்தில் கவிஞர் அம்பி யின் படமும், குருவிக் கூட்டுடன் கண் திறக்காத குஞ்சும் அட்டையைத் தாங்கி வர, கவிஞர் அம்பியைப் பற்றி முருக பூபதியின் கட்டுரையும் அட்டைப்பட அதிதிக்காக எழுதப்பட்டுள்ளது. மறுகா வில் அட்டையில் நவீன சித்திரம் (Modern Art) Lisu sanagpapistrait உடைப்பாக வெளிவந்துள்ளது.
அடுத்து முக்கியமான உள்ளடக் கத்தைப் பற்றி எழுத முனைகின்றேன். மல்லிகை ஆசிரியர் 'தேடுதலை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தவோம்" என்ற மகுடத்தில் "ஆரோக்கியமான ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றிச் சொல்வதை நடைமுறைப்படுத்திச் செயல் வடிவம் கொடுக்கும் போது சம்பந்தப் பட்டவர்கள் காணாமலே போய்விடு கின்றனர்” என்று தனது ஆதங்கத்தைக் கூறி நிற்க, ஞானம் ஆசிரியர் "நேர்மை யான விமர்சகர்களும், விமர்சனங்களும் தோன்றாதவரை நமது நாட்டின் படைப் பிலக்கியம் உயர்வடையும் என எதிர் 1950 களுக்குப் பின் ஈழத்து நவீன இலக்கியம்
பார்க்க முடியாது" என்கிறார்.
முற்போக்கு எழுத்தாளர்களால் உயர் நிலையடைந்து பேராசிரியர் க.கைலாச பதி,
இ.முருகையன் போன்றவர்களால் விமர்
பேராசிரியர் கா.சிவத்தம்பி,
சனத்துறை மார்க்சிய சிந்தனையில் முன் னெடுக்கப்பட்டு உச்சநிலை அடைந்ததை
55
page);
অ வர்க்க உணர்வு காரணமாக ஞானம் ஆசிரியர் மறைக்க முற்படுகின்றார் போலும். பேராசிரியர் க.கைலாசபதியின் மார்க்சிய விமர்சனப் போக்கை இந்தியா வில் வானமாமலை முன்னெடுத்துச் சென்றார் என்பது வரலாறு.
ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பு கள் பற்றி இந்திய எழுத்தாளர்களின் கண்ணோட்டத்திற்கு ஆப்பு வைத்த ‘பிச கற்ற பார்வை மல்லிகையின் தனித்து வம். "ஒளி கொடுத்த சாபம்" ஜேர்மனி மக்களுக்கு அறிமுகமான பிரபல திரைப் பட இயக்குநரும், நடிகையுமாகிய லெனி பற்றிய இன்காவின் கட்டுரை பல தெரியாத் தகவல்களைத் தந்திருப்பது சிறப்பு. அதேவேளை ஞானத்தில் பழம் பண்டிதர் சேடமிழுக்கிறார். அத்துடன் லண்டனிலிருந்து என். செல்வராஜா எழுதும் புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகளும், த.சி.அருந்தவன் எழுதும் சமகால கலை இலக்கிய நிகழ்வுகளும் காலம் கடந்த செய்திகளாக உள்ளன. அதேநிலையில் இல்லாமல் கவிஞர் இ.முருகையன் எம்.ஏ.நுஃமான் செல்வராஜன் நிகழ்வும் விமர்சனப் போக்கில் சுடச்சுட
படைப்புகள் பற்றிய ஆய்வும், சில்லையூர் கவிதைகள் ஆய்வு
மல்லிகை தந்துள்ளது.மேலும் சர்வதேச தமிழ் வானொலியில் வண்ணை தெய்வம் தயாரித்து வழங்கிய ஏடும் எழுத் தாணியும்" என்ற நிகழ்ச்சியில் மல்லிகை பற்றி ஒலிபரப்பான விடயம் மல்லிகை யின் வளர்ச்சியின் படிக்கல் என்றே ஞானத்தில் பேரா அரசியலும் இலக் கியமும்’ என்னும் ஒரு ஆழமான கட்டுரையைத் தந்துள்ளார். வருங்
சொல்ல வேண்டும். சிரியர் அ.சிவராசா

Page 30
St 666);
காலத்தில் பல்கலைக் கழகச் சமூகத் தவர்களின் ஆக்கங்கள் ஞானத்தில் வெளிவருமா? என்பது கேள்வியாகத் தொக்கி நிற்கின்றது. கனடாவிலிருந்து கலாநிதி நா.சுப்பிரமணியன் தமிழிலக் கிய. தொடர் கட்டுரையை எழுதி வரு கின்றார். மல்லிகையில் பூச்சியம் பூச்சிய மல்ல" என்ற தெணியானின் தொடர் கட்டுரை வாசகர்களுடன் பேசுவதாகவே அமைந்திருப்பது சிறப்பென்றே சொல்ல வேண்டும். சிறுகதைகளைப் பொறுத் தளவில் செங்கை ஆழியானின் அள வெட்டி மாமி', 'தோழமை" என்ற சிங் களச் சிறுகதை, திசை தெரியாத பயணம் ஆகிய மூன்று சிறுகதைகளும், ஐந்து கவிதைகளும் ஞானத்தைப் பிடித் துள்ளன. மற்றப்படி கோயில் மேளங்கள் தம்பட்டம் அடிக்கின்றன. இரண்டு சஞ் சிகைகளிலும் நூல் அறிமுகங்கள் வெளி வந்தாலும், மல்லிகையில் இடம்பெற்ற "புயலுக்குப் பின்” என்னும் நாவல் விமர்சனம் வாசகர்களைப் படிக்கத் தூண்டுவனவாக அமைந்திருப்பது சிறப்பு. இனியொரு விதி செய்வோம்? என்ற ஆனந்தியின் சிறுகதையும், 'காலோசிதம்’ என்ற மா.பாலசிங்கத்தின் சிறுகதையும் சமுதாயப் பார்வையுடன் பிரதிபலிக்க "காதல் இன்றும் என்ற கனிவுமதியின் கவிதையில் கடைசியாகக் ஏழைகளின் நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
கூறப்பட்ட வரிகள்.
"இதயங்கள்
கிராமம் தோறும்
ஈரம் காயாது உயிரோடு வாழ்ந்து வருகின்றன."
56
ஈழத்து புனைகதைப் படைப்பாளி கள் பற்றிய செங்கை ஆழியான் கட்டுரை பயனுள்ங்ள தரவுகளைத் தந்துள்ளது. பாரம்பரியக் கலையான 'பறை இசை' பற்றி பாலா. சங்குப்பிள்ளை தனது நோக்கை முன்வைத்துள்ளார்.
72 பக்கங்களில் மல்லிகையும், 64 பக்கங்களில் ஞானமும் வெளிவந்த போதிலும் சாதாரண வாசகனைத் தொடும் படியாக மல்லிகை கனதியாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஞானத்தின் இலக்கியப் போக்கை பார்க்கும்போது ஒரு சிலருக்கு மட்டும் முண்டு கொடுக்கும் நிலையே தென்படு கின்றது. அத்துடன் மேல்தட்டு வர்க்கத் தினருக்கே களம் அமைத்துக் கொடுப்ப தாகவே இருப்பதை அவதானிக்க முடி கின்றது. மல்லிகையில் ஆசிரியரின் நீண்டகால அனுபவ முதிர்ச்சியைக் காணலாம்.
'மறுகா மட்டக்களப்பு ஆரையம் பதியில் இருந்து ஒரு தனி மனிதனின் முயற்சியால் வெளிவந்து கொண்டிருக் கின்றது. 24 பக்கங்களில் வெளிவந் துள்ள இச்சஞ்சிகையின் விலை ரூபா 14/- மட்டுமே. ஒரு மனதைச் சிந்திக்க வைக்கின்ற, உள்ளத்தை நெகிழ வைக் கின்ற ஒரு நேர்காணல் முதலில் இடம் பெற்றுள்ளது. புதுவை பல்கலைக் கழகத்தில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமி கள் நிகழ் கலைத்துறையின் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகின்ற பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் தமிழ் நாட்டின் தலித்தியப் போராளிகளினுள்
முதன்மையானவர். நாட்டாரியல்

நாடகம், திரைப் படம், தலித் இசை வழியாக பரவலாக அறியப்பட்டவர். இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரை 'மறுகா" வுக்காகச் சந்தித்தவர் த.மலர்ச்செல்வன். இன்றும் நமது நாட்டில் (தமிழ் நாட்டில்) சாதியம் தலை விரித்தாடு கின்றது. "உலகத்திலுள்ள பல நாடு களுக்குச் சென்று வந்த நான், நான் பிறந்த மண்ணுக்கு செருப்பணிந்து போக முடியவில்லை." தலித் அரங் கியலை முன்னிறுத்தும் பேராசிரியருக்கு இந்த நிலை. மிகவும் காத்திரமான விட்யங்களை இந்த நேர்காணலில் இரவு என்னும் நதி' என்ற த.ஜெயசீலன் கவிதையும், 'மன
தரிசிக்கலாம்.
மந்திரம்’ என்ற கவிதையை அனாரும், "புதியதோர் நகரம் செய்வேன்' என்ற இடம் பெற்றுள்ளன. சிந்திக்க வைக்கின்றன. 'உலக இலக்கியத்தை நோக்கி ஈழத்து இலக்கியம்?" என்ற கேள்வியுடன் செ. யோகராசாவின் கட்டுரை பல
யோ. கர்ணனின் கவிதையும்
தகவல்களைத் தந்துள்ளது. மலையாள
Detse):
எழுத்தாளர் ரிக்ஷ ஜோனின் 30 வெள்ளிக் காசுகள்" என்ற சிறுகதையை வீ.ஆனந்தன் தமிழில் தந்துள்ளார். "அந்த நண்பன் தன்னுடைய சொந்தக் காரர்களை விட உங்களை நம்பினான். நீங்கள் நல்லவராக இருந்தீர்கள். நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்கள்
நேற்றுவரை' என்று கதையில் வரும்
சந்தர்ப்பம் வாசகர்களை ஈர்த்து நிற் கிறது. மு.பொ.வின் விசாரம் கட்டுரைத் தொகுதி பற்றி சஞ்சீவி - சிவகுமார் அலசுகிறார். சிறு பத்திரிகையாக இருந் தாலும் காரம் இருக்கிறது.
"ஞானம் எழுத்தாளருக்காகவா? அல்லது எழுத்தாளர் ஞானத்துக்காகவா என்பது புரியவில்லை. மக்களுக்காக மக்கள் இலக்கியம் படைக்கும்
"மல்லிகை" தன் ஆழத்தை அறியும்
பயணத்தில் முன்னிலை வகிக்கின்றது.
இது வெறும் புகழ்ச்சியாகக் கொள் ளாமல், என் ஆய்வின் பிரதிபலிப்பே என்று சொல்வதற்கு பல ஆதாரங் களைக் காட்ட முடியும். D
SR SANN NSNAä N SKN NK
N
§
སུགས་སུ་སྔགས་སུ་
১
১৯৯২ NANSINSRŠNS
S
২২

Page 31
தற்கால ஒலக்கிய வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு
- ரவுற்மத்துல்லாஹ
இலக்கியம் ஒரு தனிமனிதனின் வாழ்வில் கணிசமான தாக்கத்தினை உண்டு பண்ணுகிறது. மனிதனை நெறிப்படுத்திச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதில் இலக்கியத்தின் பங்களிப்பு அளப்பெரியது. மனிதனை ஊக்குவிப்பதிலும், உற்சாகமூட்டுவதிலும் இலக்கியத்திற்கும், பங்குண்டு என்றால் அது மறுக்க முடியாத கருத்தாகும். இவ்வாறு மனிதனை வழிப்படுத்துகின்ற இலக்கியம் சங்க காலம் முதல் இன்று வரை அதன் வளர்ச்சிப் போக்கில் மிகச் சுறுசுறுப்பாகவே செயற்படுகின்றது.
இலக்கியம் அதன் பயணப் பாதையில் வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஊடகங்கள் பங்களிப்புச் செய்யவில்லையென்றால் இலக்கியத்தின் போக்கு மிக மந்தகரமானதாகவே இருக்கும். இதனால்தான் ஊடகங்கள் அதன் வருகையிலிருந்து இன்று வரை இலக்கியத்தின் வ்ளர்ச்சிக்காக தம் ப்ணியினை மிகக் கரிசனையோடு செய்து வருகின்றன.
அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோடு பத்திரிகைத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அத்துடன் வானொலியும், தொலைக்காட்சியும் கண்டுபிடிக்கப்பட்டது இலக்கியத்துறையின் வளர்ச்சியில் மிகவும் தாக்கத்தினை ஏற்படுத்தின எனலாம். இன்றைய நவீன உலகில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் வளர்ச்சி கொடிகட்டிப் பறக்கின்றது. அதேபோன்று இலக்கியத்தின் வளர்ச்சியிலும் அவை போட்டியிட்டுக் கொண்டு நீ முந்தி நான் முந்தியென்று முண்டி யடித்துக் கொண்டு தம் ஆரோக்கியமான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றன.
58

நாட்டில் எந்த மூலை முடுக்கி லாயினும் இலக்கியச் செயற்பாடு மேற் கொள்ளப்படுகின்றதோ அவை சுடச்சுடவே ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்கு காண்பிக்கப்படுகின்றன. அரச ஊடகங் களாயிருந்தாலென்ன, தனியார் ஊடகங் களாயிருந்தாலென்ன தம் பங்களிப்பைச் செய்து நாடளாவிய ரீதியில் விசாலப்படுத் தப்படுகின்றன. இதனால் இற்றைக் காலத் தில் இலக்கிய உலகில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இன்று மூத்த இலக்கியவாதிகள் முதல் இளம்படைப்
பாளிகள் வரை, தம் படைப்புகள் மக்களை
ஈர்க்க வேண்டும் என்று எண்ணுவதால் மிக ஆவலாகவும் முனைப்பாகவும் இருக் கின்றனர். இதன் மூலம் இலக்கியமும் ஊடகங்களும் ஒன்டோடொன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது.
இன்று கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம் என்பவற்றை அவதானிக்கின்ற போது சாதாரண படைப்புகளுக்கும் O6IL கங்கள் இடம் தருவதை காணலாம். இதற்குக் காரணம் படைப்பாளிகளிடத்தில் வெறுப்பையும் சோர்வையும் தோற்றுவிக் காமல் ஊக்கமளித்து மேலும் தம் படைப்பு களைப் படைக்க வழிவகுப்பதாகும். ஆனால் தாம் படைப்பது சிறந்த ஆக்கம் என்று கருதுவோர் இவ்வாறான சாதாரண படைப்புகளைப் பார்த்து முகம் சுளித்து ஊடகங்களைக் குறை கூறுவதுண்டு. அதேசமயம் தனது படைப்புகள் வெளி வருவதில்லையென்றும் தன் ஆக்கங் களை விட, எளிய முறையில் படைக்கப் பட்ட ஆக்கங்கள் வெளிவருகின்றன.
59
iĝo page): வென்றும் ஊடகங்கள் பாரபட்சம் காட்டு கின்றனவென்றும் ஒரு சிலர் குறை கூறு கின்றனர். இவ்வாறு குறை கூறுகின்ற படைப்பாளிகள் தம் படைப்புகளுக்கும் ஏனையவர்களின் படைப்புகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அவதானிக்க வேண்டும்.
இன்றைய சமகால உலகில் மனி தனுக்குப் பயன்படுகின்ற ஆக்கபூர்வமான ஆரோக்கியமான படைப்புகளையே DL கங்கள் எதிர்பார்க்கின்றன. அவ்வாறான படைப்புகளுக்கு முன்னுரிமையளிப்பதை அவதானிக்கலாம். எனவே ஊடகங் களைக் குறை கூறுவதைக் காட்டிலும் தம் படைப்புகளைத் தரமானதாக படைக்க முயற்சித்தால் நிச்சயம் அவற்றுக்கு எந்த ஊடகத்திலும் இடம் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அதேசமயம் நாடளாவிய ரீதியில் வியக்கத்தகு படைப்பாளிகள் இன்னும் நம் மத்தியில் மறைந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அவர்களுக்குத்
தகுந்த வழிகாட்டல் இல்லாமல் தம்
படைப்புகளை வெளி உலகுக்கு அடை யாளப்படுத்த முடியாமல் அங்கலாய்க் கின்றனர். அவ்வாறானவர்களை இனங் கண்டு அவர்களின் இலக்கியத் தேடல் களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்ய ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. அவர்களுக்கெனத் தனி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து அவர்களின் ஆற்றல் களை வெளிக்கொணர முயற்சிக்கின்றன.
ஊடகங்கள் இவ்வாறு இலக்கிய
வளர்ச்சியில். பரங்களிப்புச் செய்வதால்

Page 32
t DeGe):
S இலக்கியத்தில் பயணிப்பவர்களின் உள விருத்தி ஏற்பட்டு மேலும் தமது பயணத் தைத் தொடர்வதற்கு வழிகோலுகின்றது. இலக்கியத்துறையில் ஒரு இரசனையும் பிடிப்பும் சூழ்ந்து கொள்கிறது. இலக்கிய ஒன்றுகூடல்கள், கலந்துரையாடல்கள், கவியரங்குகள் போன்ற செயற்பாடுகளை ஊடகங்கள் உள்வாங்கி அவற்றை வெளியிடுவதும் இலக்கியவாதிகளிடத்தில் சுறுசுறுப்பை உருவாக்கி விடுகின்றன.
இற்றைக் காலத்தில் நாளுக்கு நாள் எண்ணிலடங்காத நூல்கள் வெளிவரு
கின்றன. எல்லா நூல்களிலும் இலக்கியத்
தேடலும், இரசனையும், தரமும் புலப்படு கின்றதா என்று பலர் கருத்துத் தெரிவிக் கின்றனர். சிலர் இரவல் சிந்தனையில் நூல் வெளியிடுவதாகவும் அவை தன் நாமத்தை இலக்கிய உலகில் அடை யாளப்படுத்தவே என்றும், சில நூல்களில் எழுத்துக்கள், சொற்கள், வசனங்கள் இருந்த போதிலும் அவை எவ்விதப் பயனு
மற்ற வெற்று நூலாகவே தென்படுகின்றன என்றும் கூறி எரிச்சல்படுகின்றனர். ஆனால், இவ்வாறான நூல்களுக்கு ஊட கங்கள் இடமளித்த போதிலும் அவற்றின் குறைகளைச் சுட்டிக் காட்டத் தவறுவ தில்லை என்பதை நாம் அவதானிக்க முடிகிறது.
இதற்கு இலக்கியப் பாதையில் பயணிக்க களமிறங்கியோர் எவ்வித முதிர்ச்சியுமுன்றி நூல்கள் வெளியிடுவதும் அனுபவம் வாய்ந்த மூத்த இலக்கிய வாதிகளை அணுகி, குறைநிறைகளை நிவர்த்தி செய்யாமல் தன்பாட்டில் நூல்கள் வெளியிடுவதும் அவ்வாறான பிழைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் எனலாம். எது எப்படியாயினும் இன்றைய சமகால உலகில் இலக்கிய ஊடகங்கள் கணிச மான பங்களிப்பைச் செய்கின்றன என்றும் அவற்றின் தாக்கத்தால் இலக்கியம் இமய மேறுகின்றதென்றும் கூறினால் அதை
யாரால்தான் மறுக்க முடியும்.
r s
উস্ উস্তু
添{尝笼
స్టోస్టి'
*
密乙 வாழ்த்துகின்றோம் శ్రీ*
శ్కీ
கவிஞர் வேலணை வேணியன் அவர்களது 68-வது பிறந்த தினம் சமீபத்தில் அவரது அன்பர்களால் கொண்டாடப் பெற்றது. மல்லிகையின் மீது தனி அபிமானமும் அக்கறையும் கொண்டவர் கவிஞர் வேலணை வேணியன் அவர்கள். அவர் நீடுழி வாழ்கவென மல்லிகை நெஞ்சார்ந்த நிறைவுடன் வாழ்த்துகின்றது.
N
- ஆசிரியர்
60

மனதின் நிலையை எப்படிச் சொல்வது? சந்தோஷம், மகிழ்ச்சி, குதூகலம், ஆரவாரம், துள்ளல். எல்லாம் ஒரே பொருள் என்றாலும். தனித்தனியாகச் சொல்லி ஆனந்தமடைய வேண்டிய நிலை.
இன்று புதிதாக பிறந்த "சிசு போல மேசையில் பளபளப்புடன், மணத்துடன் எம்மால் படைக்கப்பட்ட ‘புதுச் சஞ்சிகைகள் பரவிக் கிடக்கின்றது. இதை உருவாக்க, கடின உழைப்பு தேவைப்பட்டது. பல பேரிடம் ஆக்கங்கள் பெற வேண்டி இருந்தது. மேலும் பெரியவர்களின் ஆலோசனைகள், அபிப்பிராயங்கள். விளம்பரங்களென.
அசுரத்தனமான உழைப்பு!
சஞ்சிகையைக் கையில் தூக்கிப் பார்க்கும் போது, மனதில் நாங்கள் பட்ட கஷ்ரங்கள் எல்லாம் ஒடிப்போவது போன்ற உணர்வு.
மனது நிறைவாக உள்ளது.
அடுத்தது. இவை மக்களின் கைக்குப் போக வேண்டும். அவர்கள் படிக்க வேண்டும். அபிப்பிராயம் சொல்ல வேண்டும். எமக்கு ஊக்கம் தரவேண்டும்.
asgopasya 61 yegoatsya
- சி.கதிர்காமநாதன் சஞ்சிகை உருவானதிற்குரிய நண்பர்கள் வருகிறார்கள். நாலு இடங்களுக்கு போனால்தான் சஞ்சிகையை விற்கலாம். அறிமுகப்படுத்தலாம்.
தளராத முயற்சி தேவை.
இன்னும் புதுமணம் குறையவில்லை.
நண்பர்களிடையே சஞ்சிகையை பங்கிட்டுக் கொள்கிறோம்.
"விலை இருபது ரூபாய். கூடியவரை சஞ்சிகையின் பெறுமதியை வாங்குபவர்களுக்குச் சொல்ல வேண்டும். உள்ளே படிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன.
“ஒவ்வொரு வீடு விடாய்ப் போய்க் சஞ்சிகையை குடுங்கோ. வாங்கக்
61

Page 33
G8 t சொல்லுங்கோ. சந்தாவை ஞாபகப்
படுத்துங்கோ."
முதல் முயற்சி ஆர்வமாக நண்பர்கள் புறப்பட்டார்கள்.
மாலை மற்றைய நண்பர்களுடன் நாம் இணைந்தோம்.
" கஷ்ரமாய்த்தான் கிடக்கு."
"எங்களக் கண்டு சனங்கள் பயப் படுதுகள்."
“நல்லா விசாரிச்சினம்.”
"உதை வாங்கி என்ன செய்யப் போறமெண்டு கேக்கினம்.”
"இதை வாசிக்க நேரம் வராதாம்.”
பல வகையான அநுபவங்கள்.
"சரி. முதல் முயற்சி. விக்க முயற்சிப்பம்."
அடுத்த இதழ் இரண்டு மாதங்
களின் பின் வெளிவந்தது.
மறுபடி சஞ்சிகையை விற்பதற் காக நீண்ட பயணம். அதே ஊர். அதே தெரு. அதே முகங்கள்.
ஒரு வீட்டில் சஞ்சிகையை கொடுத்து விட்டு திரும்பும் போது
அவர் கூப்பிட்டார்.
'தம்பி முகப்புப் படம். நல்லாயிருக்கு."
“நல்லது ஐயா. உங்கட விமர்சனம் எங்களுக்குத் தேவை. . . சொல்லுங்கோ."
'அப்படியே இன்னுமொரு
விசயம். இது கொப்பி சைஸ்சில போடுறியள். பேப்பர் சைஸ்சில போட மாட்டியளே? பிள்ளையஞக்குச் சாப் பாடு கட்ட உதவியாய் இருக்கும்.”
sー
DCCCII:
ஆண்டுச் சந்தா
தனி.
பேருதவியாக இருக்கும்.
குறிப்பிட்டு அனுப்பவும்.
மல்லிகை புதிய ஆண்டுச் சந்தா 300/- அத்துடன் ஆண்டுமலர் விலை 150/- இதுவரை சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவு செய்து உங்களுடைய சந்தாவைப் புதுப்பித்துக் கொண்டால் அது மல்லிகைக்கு
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். asT885 56o6 9güL(36umi Dominic Jeeva. Kotahena, P.O. 66Tä
Dominic Jeeva 201/4, Sri Kathiresan Street Colombo - 13
TP: 2320721
62
—Z

இரசனைக் குறிப்பு :
திக்குவல்லை கமாலின் நிராசை வானொலி நாடகத் தொகுப்பு
- LDIT.urt.á.
தொலைக்காட்சியில் நீண்ட தொடர் நாடகங்கள் நாளாந்தம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் கூட, வானொலி நாடகங்களுக்கான ஜனரஞ்சகம் இன்னமும் குறைந்துவிடவில்லை. இவைகளும் தினசரி வானலைகளில் மிதந்து கொண்டுதானிருக்கின்றன! தொலைக்காட்சியின் பரம்பல் முற்று முழுதாக நாட்டைத் தொட்டு விடாததும் இதற்கான காரணமாக இருக்கலாம்! நகரத்தில் ஏறத்தாழ 90% சதவீதத்தினரே தொலைக்காட்சியைப் பார்க்கின்றனரெனக் குத்து மட்டாகக் கூறலாம். ஆனால் கிராமத்தவர்கள் வானொலிப் பெட்டியையே நம்பி இருக்கின்றனர். அங்கு அன்ரனாக்களும் தென்படுவதில்லை! வானொலியில் குறிப் பிடத்தக்க இன்னொரு வசதி, செல்லும் போதெல்லாம் செல்போன்கள் மாதிரிக் கொண்டு செல்லலாம்!
எமது மண் சார்ந்த நாடகங்களைத் தொலைக்காட்சி அத்தி பூப்பது போன்றே , ஒளிபரப்புகின்றது. தொலைக்காட்சி நாடகத்துறையைத் தென்னிந்திய நாடகங்கள் ஆக்கிரமித்துள்ளமையே இதற்குக் காரணம். ஆனால் வானொலி நாடகங்கள் எமது மண் வாசனையை மட்டுமன்றி, அதன் சகல அலகுகளிலும் நம் நாட்டவரது கலை வல்லமைகளை உள்வாங்குகின்றன. இந்த மண் பற்றும் வானொலி நாடகங்களுக் கான விசிறிகளைப் பெருக்குகின்றன. எனவேதான் வானொலி நாடகங்கள் தொலைந்து போகாதிருக்கின்றன! சக்தி, சூரியன் போன்ற ஒலிபரப்புகள், தற்பொழுது இந்நாடகங்களுக்குக் காட்டும் கரிசனை உரத்துப் பேசப்படக்கூடியதாக இருக்கின்றது.
63

Page 34
Ex& Des66):
l தொலைக்காட்சி நாடகம், அரங்க ஆற்றுகை, சினிமா என்பன கட்புலனுக் கும் செவிப்புலனுக்கும் உரியவை
யாகும். வானொலி நாடகம் செவிப் புலனூடாகவே மனதைத் தொடுகின்றது.
இதனால் வானொலி நடிகர்களும், நாடகப் பிரதி ஆக்குநர்களும் இவ்வகை நாடகங்களுக்கு மிகவும் முக்கியமா
கின்றனர். வானொலி நாடகங்கள்
வாழ்க்கைக்குத் தேவையான, அதைச் செம்மைப்படுத்தும் செய்தியைத் தர வேண்டும். வசனங்கள் நேரடியானவை யாக இருக்க வேண்டும். நடிகர்களின் பாவங்கள் ஒலியில் அழுத்தமாக முத்திரை காட்ட வேண்டும். பாத்திரங் களை விழிக்கும் பொழுது பெரும் பாலும் அவைகளது பெயர்களைச் சொல்ல வேண்டும். இத்தகைய பண்பு களை உள்வாங்கி எழுதப்படும், நடிக்கப் படும் நாடகங்களே வானொலி நேயர் களின் மனதைக் கெளவும்!
இலங்கையின் ஒலிபரப்புக்கலை
பவள விழாவைக் கண்டுவிட்டது! இந்த
நீண்ட காலத்தில் வானொலி நாடக இரசிகர்களுக்கு மனதில் நிற்கக் ծռւգա நாடகங்களும் கிடைத்திருக்கின்றன. லண்டன் கந்தையா, மிஸ்டர் குகதாசன், பொன்னொச்சிக்குளம், தணியாத தாகம், விதானையார் வீட்டில், மட்டக் களப்பு மாப்பிள்ளை, ஒரு வீடு கோயி லாகிறது, கோமாளிகள் ஆகிய நாடக்ங் களை இன்னமும் வானொலி இரசிகர் கள் அசை போட்டுக் கொண்டிருக் கின்றனர். வானொலி நாடகங்கள் கால், அரை, ஒரு மணி அவகாசங்களைக் கொண்டவைகளாக ஒலிபரப்பப்
64
பட்டன. கோமாளிகள் திரைப்படமாகும்
பேற்றையும் பெற்றது. 97 நாட்கள் திரை
யிடப்பட்டது.
வானொலி நாடக நெறியாள்கை யில், 'சானா? சண்முகநாதனின் சாதனை இன்னமும் மங்கவில்லை. பிதாமகர் எனச் சுட்டுமளவிற்கு அவர் பணி இன் றும் கொண்டாடப்படுகிறது. அவரது சுவட்டைத் தொடர்ந்து கே.எம். வாசகர், பி. விக்னேஸ்வரன், ஜோர்ஜ் சந்திர சேகரன், இராஜபுத்திரன் யோகராஜன், எம்.எச். குத்தூஸ், எம்.எம். மக்கீன், எம்.அஷ்ரப்கான் ஆகியோரும் தமது திறமைகளால் இந்நாடகங்களின் தரத்தை மேன்மைப்படுத்தி இருக் கின்றனர்.
பேரா. கா.சிவத்தம்பி, கே.மார்க்
கண்டன், தாசன் பெர்னாண்டோ, பூரீதர்
பிச்சையப்பா, முகத்தார் யேசுரத்தினம், வேதநாயகம்,
மரைக்கார் ராமதாஸ்,
ஜவாகர், என்.தாலிப், வசந்தா அப்பாத்
துரை, இராஜேஸ்வரி சண்முகம், ஆனந்தராணி, செல்லம் பெர்னாண்டோ, விஜயாள் பீற்றர், கலிஸ்ரா லூக்கஸ், ஜெகசோதி, மணிமேகலை, சந்திரகலா,
சித்தி நிஹாரா இன்னும் ஏராளமான
வானொலி நடிகர்கள் வானலைகளில் தமது குரல்களை நடிக்க வைத்து இரசி கர்களை மெய்மறக்கச் செய்திருக்கின் றனர். தமக்குக் கிடைத்த பாத்திரங்களை வானொலி நேயர்களின் மனத்திரையில் நித்தம் உருவகித்து, வசனங்களை அவர் களது செவிகளில் நித்தம் ஒலிக்க வைத்துச் சாதனை படைத்த வானொலி நடிகரது பெயர்களோடு அவர்கள் ஏற்று

த்டித்த பாத்திரங்களின் பெயர்களும் ஒட்டப்பட்டு நடமாடிக் கொண்டுமிருக் ‘முகத்தார் யேசுரத்தினம், “மரைக்கார் ராமதாஸ், "உபாலி சந்திர சேகரன், அப்புக்குட்டி ராஜகோபால், "பண்டா” ஆறுமுகம், "காசிம் காக்கா" றொசாரியோ பீரிஸ் என்பவையே அவையாம்.
கின்றன.
காத்திரமான தமது வானொலி நாடகப் பிரதிகள் மூலமாக வானொலி நாடகக் கலைக்குப் பங்களிப்புச் செய்த வர்களாக, இலங்கையர்கோன், சி.சண் முகம், வரணியூரான், எஸ்.பொன்னுத் துரை, சு.வே, சில்லையூர் செல்வராசன், அன்புமணி, நடமாடி, பாலாம்பிகை நடராசா, அராலியூர் சுந்தரம்பிள்ளை, எஸ்.முத்துமீரான், எம்.அஷ்ரப்கான், எஸ்.ஐ.எம்.ஏ.ஜப்பார், "டீன்ஷா ஆர். என்சைபுதீன் சாஹிப் ஆகியோர் இனங் காணப்படுகின்றனர். வானொலி நாடகக் கலையில் - பிரதியாக்கம், நடிப்பு, நெறியாள்கை ஆகிய முப்பரி மாணங்களில் முத்திரை பதித்தவராக ஜோர்ஜ் சந்திரகேசரனைச் சுட்டலாம்.
தமது வர்த்தகப் பணியை விளம் பரப்படுத்தும் இலக்கோடு சில வர்த்தக நிறுவனங்கள் வானொலி நாடகங்களை வளர்த்துமிருக்கின்றன. குண்டன் மால்ஸ், பிறவுண் சன் கோப்பி மனுபக்ச ரேஸ், விமாகி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பன இந்த வகையில் கணிப்பைப் பெறு கின்றன.
தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்கள் இப்போதெல்லாம். விசிடி
65.
è De GSG): O
களில் பதிவாகி விற்பனைச் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அத்தகைய
வாய்ப்பு வானொலி நாடகங்களுக்கு
இன்னமும் கிடைக்கவில்லை! இரசிகர் களால் விதந்து பேசப்பட்ட வானொலி நாடகங்கள் சில - மறு ஒலிபரப்புச் செய்வதற்காக - இறுவட்டுகளில் பதி
வாகி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
காப்பகத்தில் இருந்ததுண்டு! இவை களை விஷமிகள் அழித்து விட்டதாகத் தெரிய வருகின்றது. அதிகாரிகள் எப் பொழுதும் தமிழ் நிகழ்ச்சிகளில் 'கழுகு'ப் பார்வையையே வைத்திருப்ப துண்டு! இதனால் பிரச்சினைகள் எழும் பொழுது மீள் பரிசீலனைக்காக நாடகங் களும் ஒலிப்பதிவாகுவதுண்டு. இக்கார ணத்தாலும் சில நாடகங்கள் காப்பகத் தில் இருந்ததுண்டு! அவைகள் கூட அழிக்கப்பட்டு விட்டதாக அறிய முடி கிறது. இதனால் எதிர்கால சந்ததி, இன் றும் சிலாகித்துப் பேசப்படும் சில பழைய முன்னோடி நாடகங்களைக் கேட்கக் கூடிய வாய்ப்பை இழந்துள்ளது வேதனைக்குரியதே!
இந்தச் சோக நிலை தற்பொழுது வேறொரு வகையில் தளர்த்தப்படு வதைக் காணமுடிகிறது. காற்றில் சவாரித்து நேயர்களை வந்தடையும் நாடகங்கள் அந்தந்தவுடன் அள்ளுண்டு போகாமல், அவைகள் நீடித்த ஆயுளைப் பெறும் பொருட்டு வானொலி நாடகங் கள் நூலாக்கப்படுகின்றன. இது வானொலி நாடக நேயர்களுக்கு மிகவும் உவப்பான செய்திதானே!

Page 35
665); SZ
இந்த வரத்தைப் பெற்ற நாடகங் கள் எவ்வெக் காலங்களில் படைக்கப் பெற்றனவோ அவ்வக் காலங்களில் மக்கள் வாழ்க்கையில் கோலமிட்ட பிரச் சினைகளை அலசி அவைகளின் தாக் கங்களை உணர்த்தி - அத்தோடு வாழ் வின் வளர்ச்சிப் படிகளையும் தொட் டுள்ளன. அத்தோடு இன்று இலக்கியப் படைப்புகளுக்கு மிக அவசியமெனக் கருதப்படும் வட்டார வழக்குகளுக்குத் தொட்டிலாகவும் இருந்திருப்பதைக் காணமுடிகின்றது. ஒலி வடிவில் இர சிக்க முடியாது விட்டாலும் வாசித்து இலயிப்பதற்கு இந்நூல்கள். துணை நிற் கின்றன. இத்தகைய பண்புகளைக் கொண்ட - வானொலி நாடகத்தை எழுதப் போகும் ஓர் ஆரம்ப எழுத்தாள னுக்கு துணையாக இருக்கக்கூடிய இரை தேடும் பறவைகள், இமயம், முள், எங்கள் நாடு, எனது வானொலி நாட கங்கள், கூவாத குயில்கள், மானுடம் சாவதில்லை ஆகிய வானொலி நாடகத் தொகுப்புக்கள் வெளிவந்திருப்பது வானொலி நாடக வளர்ச்சிக்கு உறு துணையாகின்றது.
இப்படியான சடுதியான வானொலி நாடகப் பற்றுக்குக் காரணமென்ன? என வாசகர்கள் தடுமாறலாம்! பிரபல எழுத் தாளர் திக்குவல்லை கமாலின் நிராசை’ என்ற வானொலி நாடகங்களின் திரட்டு கையில் உண்டு அதுவே இத்தகைய மீள் சிந்தனைக்கு விசை கொடுத்தது!
திக்குவல்லை கமால் நாடறிந்த புனைகதைப் படைப்பாளி. பதின்மூன்று நூல்களின் ஆசிரியர். தனது சூழலில்
66
தனது பார்வைக்கு எட்டிய கோலங் களை நெஞ்சுக்கு எடுத்து, யதார்த்தபூர்வ மாக முற்போக்குத் தடத்தில் கொழித் துப் பார்ப்பவர். இவரது தீர்வுகள் வாசகனைக் கட்டுடைப்புக்கு ஏவக்கூடி யவை! எக்காரணத்துக்காகவும் எழுத் தைச் சில 'எஜமானர்’களின் ஆளுகைக் குள் போகவிடாது சுதந்திரத்தோடு எழுதுபவர். புதுக் கவிதைகளையும் புனைந்தவர்.
இவர் எழுதி வானொலியில் ஒலி பரப்பாகிய ஏழு நாடகங்களின் தொகுப் புத்தான் நிராசை" ஆசிரிய உலகில் நிலவும் மனிதநேயமற்ற போக்கை நிராசை" அம்பலப்படுத்த - ஏனைய ஆறு நாடகங்களும் குடும்ப, தட்பு என்பன சார்ந்த முரண்பாடுகளைத் தொனிக்க வைக்கின்றன.
சமூகத்தில் ஆசிரியர்களது அந் தஸ்து மிகவும் உயர்ந்தது. தெய்வத்துக்கு நிகராகக் கூட இவர்களை எம் மூதாதை யர்கள் பார்த்திருக்கின்றனர்! இருந்தும் இவர்கள் சுயநல மாயைக்குள் விழும் சந்தர்ப்பங்களில் தமது கல்வி, மனித நேயம் என்பவற்றை காலில் போட்டு மிதிப்பதை நிராசை" அழுத்துகின்றது. ஏழைச் சிறுமிக்கு இழைக்கப்படும் அநீதி ஆசிரிய உலகிற்கே பேரிழுக்கு!
ஈகை செய்கிறோமென்பதற்காக அடிக்கடி பஞ்சப்பட்டவர்களை அழைத் துச் சிறிய பணத் தொகையை ஈகை செய்வதைக் காட்டிலும் அம்மக்களை யும் வாழ்வில் நிமிர வைக்கத்தக்க வகை யில் தொழில் வாய்ப்புகள், கல்வி வசதி என்பவற்றைக் காட்டுவதுதான் மிகப்

பெரும் ஈகை என்பதைச் "சத்தியங்கள் சாவதில்லை" உணர்த்துகின்றது. இதன் தொனிப்பொருள் ‘பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காதே. தூண்டிலைக் கொடு" என்று மாசேதுங்கின் கூற்றை உணர்த்துகிறது.
"தளரா வளர் தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் சொரிதலால்." இது பால பாடத்தில் படித்த செய்யுள் வரி பிள்ளையாக இருந்த காலத்தில் தனக்கு வார்த்த நீருக்குப் பிரதியுபகார மாகத் தென்னை தலைப்பட்டதும் இள நீரைத் தன்னை வளர்த்தவனுக்குக் கொடுக்கின்றது. இளமைக் காலத்து நினைவுகள் என்றும் சாதுவனமானவை யென்பதை இந்நிகழ்வு காட்டுகின்றது. தின்ற நண்பனும் குடித்த நண்பனும் எழுந்து படலையைத் திறந்த கையோட, தின்றதையும் குடித்ததையும் மறந்து விடு வான். ஆனால் சின்னக் காலத்தில் உதவியைப் பெற்றவன் அதை எப் பொழுது திருப்பிக் கொடுக்கலாமென்ற நினைவுகளைச் சுமந்து திரிவான். இப் பட்டறிவை மிகவும் அழகாகச் சித்திரிக் கின்றது, இந்நாடகம் இன்னுமொரு முக்கியமான வாழ்வியல் சங்கதியையும் உணர்த்துகின்றது. ஓர் ஆணின் முன்னேற்றத்திற்குப் பின்னால்
நண்பர்கள்".
எப்பொழுதும் ஒரு பெண் இருப்பாள்! அது மனைவிதான்! இது புதிய பாட மல்ல! ஆனால் ஆணாதிக்கவாதி களுக்கு முகச் சுழிப்பைத் தரும்!
"எங்க வாப்பா கூலிக்காரனெங் கிறதில எனக்கு வெட்கமில்லை. அதே போல் என் கணவனும் ஒரு கூலிக்கார
67
D Ge):
னாக இருக்கிறதில எனக்கு வெட்க
மில்ல." "விடிவுக்காக ஒரு முடிவு' இல் இப்படிக் கூறும் நிஷா சமுதாய விடிவிற்கான ஒரு விடிவெள்ளி! வர்க்க முரண்பாடுகளைத் தகர்க்கும் ஒரு போராளி!
வர்த்தகப் பெருச்சாளிகளைச் சட் டத்தின் காப்பாளர்கள் கைது செய்வது ஒரு வழக்கமான நிகழ்வு! இத்தகைய பெருச்சாளிகள் அடுத்த கணமே விடுதலையாவதையும் சட்டம் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது! இந்த வகையில் இதற்காகக் கலியாணமொன்று தடைப் படுமாவென்பது சிந்தனைக்குரியது! 'கண்ணாடி மாளிகை இன்னமும் முடிந்து விடவில்லை என்ற உணர்வே மிஞ்சுகின்றது!
ஒரு சதவீதமாக இருக்கும் மன நோயை, வருவோர் போவோரது பேச்சுக்கள் ஊதி நூறு வீதமாக்குமென்ற மருத்துவ இயல் உண்மையைப் ‘பைத்தியம்" தொனிக்க வைக்கின்றது. "நம்ம மனசிலயும் நோய்கள் வரும். குணமாகும். எங்க சமுதாயம், சம்பந் தப்பட்டவர்கள் விட்டுவிடப் போவ தில்லை. இதனால் பழைய நிலைக்கே மாறிப் போன பலரை எனது அனுபவத் தில் கண்டிருக்கிறேன்." இது மன வைத் தியரின் வார்த்தைகள். எனவே மன நோயாளிகளுடன் புழங்கும் பொழுது நா காக்க வேண்டும் என்ற உண்மை நாடகத்தில் தொனிக்கின்றது. மிகவும் நேர்த்தியான மானுட அக்கறை! வாழும் சமூகத்தின் "கட்டுப்பெட்டித் தனங்கள்

Page 36
666):
இன்னமும் சரிந்து விடவில்லையென் பதையும் இப்புனைவு உணர்த்துகின்றது.
வானொலி நாடகங்களில் மீள் islanarajagir (Flash Back) pyg islg. வருவதைத் தவிர்ப்பது நன்று. இவை இரசனைக்குப் பாதகமாகிவிடும்.
ஆக, புனைக்கதைப் படைப்பாளிக் குள் இத்தகைய சமூக மாற்றங்களை வற்புறுத்தும் வானொலி நாடக ஆசிரிய னும் இருக்க முடியுமென்பதை இத் தொகுப்புச் சாத்தியப்படுத்துகின்றது. தீவிர வாசகரது கவனத்தைப் பெற்றவர் திக்குவல்லை கமால். இவரது இலக் கியப் படைப்புகள் தனித்தன்மை வாய்ந் தவை! இதைக் கமால் நன்கு உள்வாங்கி இருப்பது போல், “எனது சிறுகதை, நாவல்களில் இடம்பெறும் பிரதேச மொழிநடையை எவரும் இதனோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டிய தில்லை." என இத்தொகுப்பின் திறவு கோலில் கூறுகிறார். முன்னுரை, திறவு கோல் என்பவற்றை வாசிக்காது நேரடி யாக நூலுக்குள் நுழையும் வாசகரும் உண்டு! அத்தகைய கமாலின் விசிறிக்கு இந்த நாடகங்களில் காணப்படும் பிர தேச வழக்கு நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தும்! இத்தகைய நிலைக்குள் தான் தள்ளப்பட்டதற்கான காரணத்தை "வானொலி நாடகக் கலைஞர்கள் பெரும்பாலும் கொழும்பு வட்டாரத் தைச் சேர்ந்தவர்களாக இருந்ததும் இதற் கொரு காரணமாகலாம்” எனச் சொல் கிறார் கமால். இது முஸ்லிம் நாடகப் பிரிவுக்கு மட்டுமே பொருந்தும் சந்திர
கலா கொழும்பு வட்டார வழக்கைத்
68
தவிர்ந்த வேறு பேச்சு வழக்குகளையும் பேசி நடிக்கக் கூடியவர்: இதேபோல மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வ சேகரன், பண்டா ஆறுமுகம், கலைச் செல்வன், இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் அவைகளின் சுயத்தன்மை யைச் சிதைக்காது வேறு வட்டார வழக்குகளையும் தமது வானொலி நாடக நடிப்பில் கையாண்டு சாதனை புரிந்துள்ளனர். பொதுவாக நோக்கும் பொழுது வானொலி நடிகர்கள் கொழும்புவாசிகள்தான். இவர்களில் பெரும்பாலான தமிழ் நடிகர்கள் தொழி லின் நிமித்தம் கொழும்பு வந்தவர்கள். எனவே யாழ்ப்பாண வட்டார வழக்கு வானொலி நாடகங்களில் கோலோச்ச முடிந்தது. களைப் பொறுத்த மட்டில் அவர்கள் கொழும்புச் சூழலில் பிறந்து வளர்ந்த வர்கள். எனவே கமாலின் வட்டார வழக்கு மாற்றம் நியாயமானதே. இது வும் நன்மையொன்றைச் செய்திருக்
முஸ்லிம் சேவை நடிகர்
கின்றதெனலாம். இப்பொது வழக்கு அனைத்து வானொலி இரசிகர்களையும் இந்நாடகங்களைக் கேட்பதற்கான வசதி அத்தோடு வாசனையையும் இலகுபடுத்துகின்றது.
யைச் சகாயித்துள்ளது!
உரிய திருத்தங்களோடு இந்நாடகங் களை அரங்க ஆற்றுகையும் படுத்த லாம். நூல் வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கின்றது.
தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் உதவியோடு ஃபரீதா பிரசுர மாக இந்நூல் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளக.

X வயது முதிர்ந்த காலத்தில் வரும் காதலைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? வரிய அறிவாளிகள் வயதான காலத்தில் இளம் பெண்களைத் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி யுள்ளார்கள். உதாரணம் ஈ.வே.ரா.பெரியார். முறையான பதிலை வேண்டுகிறேன்.
வெள்ளவத்தை. எஸ்.ஆர்.பாலச்சந்திரன்
[글 இது ஒரு மனத் தத்துவ ரீதியான கேள்வி. இளமைக் காலத்தை விட, வயது முதிர்ந்தவர் களுக்குத்தான் அவர்களைப் புரிந்து ஒத்துழைக்கத்தக்கத் துணை தேவைப்படுகின்றது. இது உடல் இச்சை சம்பந்தப்பட்டதல்ல. ஆத்மப் பரிவு மிக்கது. எனவே நீண்ட நெடுந்துாரம் வாழ்க்கையில் ஓடி வந்த சிறப்பானவர்கள் தங்களது பரிதவித்த வாழ்வில் தங்களைப் புரிந்து கொண்டு, அன்பு செலுத்தும் துணைகளை நாடுகின்றனர். இதை நாம் கொச்சைத்தனமாகப் பார்க்கக் கூடாது. வாழ்நாட்கள் பூராவும் மக்களைப் பற்றியே சிந்தித்துச் செயற்பட்டவர்களின் முதுமைக் கால ஆசையை நாம் அந்தக் கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.
X மல்லிகைக்கு இணை ஆசிரியர்களோ அல்லது உதவியாளர்களோ இல்லாமல் எல்லாமே நீங்களாகவே செயற்படுகிறீர்களே, தங்களது காலத்திற்குப்பின் மல்லிகைக்கென்று ஒரு வாரிசே
66061Tuir?
unTrfhshv). வண்ணை தெய்வம்
(= இந்தக் கேள்விகளைப் பலர் மல்லிகை ஆரம்பித்த காலத்தில் இருந்தே கேட்டு வரு கின்றனர். மல்லிகையின் ஆரம்ப காலத்தில் யாருமே மல்லிகை நாற்பது ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வரும் என நம்பவில்லை. கடந்த நாற்பத்தோராவது ஆண்டுமலர் வெளி யீட்டு விழாவில், எனது மகன் திலீபன் நன்றியுரை கூறினார். அதில் அவர் தெளிவாகத் தனது கருத்துக்களை வெளியிட்டார். "அப்பாவின் வெளியீட்டு, ஆசிரியத் தகைன்மக்குப் பின்னும் மல்லிகை தொடர்ந்து வரவே செய்யும். ஆனால் அது புதிய வடிவில், புதிய அச்சமைப்புக் கொண்டதாகவே இருக்கும்" என உறுதி கூறினார். இந்தத் தகவல்கள் போது
மென நினைக்கின்றேன்.
- டொமினிக் ஜீவா
69

Page 37
è page):
X மல்லிகையின் முதலாவது இதழ் உங்களது கைவசம் இப்பொழுது இருக்கிறதா? அதைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.
தெஹிவளை. ஆர்.இரத்தினஜோதி
(2) கைவசம் வைத்திருக்கின்றேன். மல்லிகைக் காரியாலயத்திற்கு நேரில் ஒரு முறை வந்தால் அதைப் பார்வையிடலாம்.
தரமான எழுத்தாளர்களை நீங்கள் எப்படி இனங்காணுகிறீர்கள்?
கொக்குவில். எஸ்.முகுந்தன்
அவர்களது படைப்புக்களை ஆற அமர வெகுநிதானமாகப் படித்துப் பார்ப் பதன் மூலம், தரமான எழுத்தாளனின் படைப்பை அவனது எழுத்தின் முதல், இரண்டாவது பந்தியிலேயே இனங்கண்டு 6ft 6Tib.
X சமீபத்தில் உங்களது பேட்டிஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ‘தீபம்’ தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாக ஒரு நண்பன் கடிதத்தில் தெரிவித் திருந்தார். கடைசியாக வந்த கனேடியச் சஞ்சிகை *களத்தில் கூட, உங்களது விரிவான பேட்டிகள் இரண்டு இதழ்களில் தொடர்ந்து வெளிவந் துள்ளன. இதன் மூலம் நீங்கள் நிரூபிக்க நினைப்பது என்ன?
வத்தளை. க.சொல்வேந்தன்
(= இந்த மண் வெறும் சர்வதேசச் சந்தைக்கடையல்ல! என்பதை நினைவூட்டு வதும், இந்த மண்ணில் இன்று ஆக்கபூர்வ
70
மான படைப்புக்களும் படைப்பாளிகளும் உருவாகி வருகின்றனர் என்பதை உலகத் திற்குப் பிரகடனப்படுத்தப்படுத்துவதுமே எனது நோக்கமாகும்.
X நவீன அச்சுக் கலையின் அசுர வளர்ச்சி இலக்கிய வார இதழ்களில் புது வனப்பை ஏற்படுத்தி வருகிறதல்லவா?
மருதானை. எம்.சரவணன்
(= உண்மை. அதீத கவர்ச்சியையும், புதுப் புது வண்ணங்களையும் அள்ளித் தெளித்து வெளிவருகின்றன. ஒன்றை வெகு நுட்பமாகக் கவனித்தீர்களா? இவற்றின் அதீத கவர்ச்சியில் சினிமா நடிகைகளின் தேக மினுமினுப்பும், அவர்களது கண்களின் மோகப் பார்வைப் பளபளப்பும்தான் வெளிப் படுகின்றன. இளந்தலைமுறை பார்த்துப் பார்த்துக் கிறங்கிப் போயுள்ளதையும் நீங்கள் பார்க்கத் தவறியிருக்கலாம்.
அந்தக் காலச் சிறுகதைகளின் ஆரம்ப வரி களில் ஒன்றை இப்பொழுதுநினைவூட்டமுடியுமா pries6IIITs)?
செ.ரவீந்திரன்
ஹட்டன்.
[근 முடியுமே! கோபாலன் வந்தான். கோட்டைக் கழற்றினான். கமலா காப்பி யைக் கொண்டு வந்தாள். இதுதான் அக் காலக் கதைகளின் ஆரம்பப் பந்திகள். இதை அடியோடு மாற்றியமைத்தவர்கள் இருவர். ஒருவர் விந்தன். மற்றவர் ஜெயகாந்தன்.

X இலங்கையில் இன்று பல பிரதேசங்களில் இருந்தெல்லாம் புதிய புதிய புத்தகங்கள் வெளி வந்தமுள்ளனவே, இவைகள் அனைத்துக்கும் சந்தை வாய்ப்புக் கிடைக்கின்றதா?
வவுனியா. எஸ்.தவசீலன்
글 அதற்காகத்தானே மல்லிகை விடாது ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டு வரு கின்றது. பலர் புத்தகங்களை வெளியிட்டு, ஒரு வெளியீட்டு விழாவையும் நடத்தி விட்டு, பின்னர் தமது நூல்களைக் கட்டுக் கட்டாகக் கட்டி, வீட்டு மூலைக்குள் வைத்துவிட்டு வீட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு சோகம் வழியப் படுத்துக் கிடக்கின்றனர். அச்சகக் கடன் வேறு பயமுறுத்துகின்றது. இதற்காகத் தான் இவர்கள் அனைவரும் ஒருங்குசேர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென மல்லிகை விரும்புகிறது. முடியுமானால் சென்ற ஆகஸ்ட் மாத மல்லிகை இதழின் தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.
Xa நீங்கள் இதுவரை படித்த சிறுகதைகளில் ஆகச் சிறிய கதையொன்றை உங்களது ஞாபகத் திலிருந்து சொல்ல முடியுமா?
நீர்கொழும்பு. ஆர்.கணேசநாதன்
இருட்டிலே இரண்டு உருவங்கள் சந்தித்துக் கொண்டன.
ஒரு உருவம் மற்ற உருவத்தைப் பார்த்துக் கேட்டது, "உனக்குப் பேய், பிசாசு களில் நம்பிக்கை உண்டா?
‘பேயாவது - பிசாசாவது? ப்பூ! மண் ணாங் கட்டி!" உடனே பக்கத்தில் வந்த உருவம் மறைந்து விட்டது. இந்தக் கதையை
71
up GGSG);
আৰু
முன்னர் ஒருதடவை தூண்டிலில் சொன்ன
தாக ஒரு ஞாபகம்.
X நீங்கள் இதுவரையும் வெளியிட்டநூல்கள் அத்தனையையும் ஒருங்கு சேரப் பெற்றுக் கொள்ள பெரு விருப்பமாக இருக்கிறது. அவை களைப் பெற்றுக் கொள்ள என்ன செய்யலாம்?
âleurrub. Fr.Majumur
[근 திட்டமிட்டு ஒருநாள் "மல்லிகைப் பந்தல் காரியாலயத்திற்கு வந்து போவது தான் சரியான மார்க்கம். முடியுமானால் ஒரு தடவை கொழும்பு வரும் சமயம் மல்லிகைக்கும் வந்து போகலாம்.
区 ஒரு கட்டத்திலாவது நீங்கள் வாழ்க்கையில்
விரக்தி அடைந்ததுண்டா?
பதுளை. சநவநீதன்
s இல்லை! - கிடையவே கிடையாது!
ஆனால், மரணங்கள் தெருத் தெருவாகச் சடுதியாக நடைபெறும் சம்பவங்களையும், இளந்தளிர்கள் அநியாயமாகக் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுவதையும் காணும் போது அப்படியே மனந்தவித்துப் போய், தற் செயலாகச் செயற்படாமல் மெளனித்துப் போய் இருந்து விடுவேன். இங்கு இத்தகைய கொடும் அழிவிலிருந்து இந்த நாட்டையும் வாழும் மனுக்குலத்தையும் எப்படியெப்படி யெல்லாம் மீட்டெடுக்க இயலும் எனச் சிந்திப் பேன். எந்தக் கட்டத்திலும் நான் விரக்தி அடைந்ததே கிடையாது.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்ட பத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில்

Page 38
666)
QN நடைபெறப்போகும் புத்தகச் சந்தையில் நமது நாட்டுத் தமிழ்ப் புத்தகங்களின் விற்பனை நிலைமை எப்படி இருக்கும்? இதற்கான முன் ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றதா?
வெள்ளவத்தை எஸ்.சுந்தரேசன்
பிரபல தமிழ்ப் புத்தக நிலையங்கள் அனைத்தும் ஈழத்துப் புத்தகங்களைக் காட்சிக்கு வைக்கவும், விற்பனவைப் பெருப் பிக்கவும் முயற்சி எடுத்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இங்கு நூல்களை வெளி யிட்ட தனிப்பட்ட எழுத்தாளர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளவேண்டும் எனச் சில புத்தக சாலையினர் மனமார விரும்புகின்றனர். எனவே, பரஸ்பரம் எழுத்தாளர்களும் விற் பனையாளர்களும் இந்த விற்பனைச் சந்தை வெற்றி பெற ஆவன செய்ய வேண்டும் என்பதே மல்லிகையின் பெரு விருப்பமாகும்.
X erör வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஒரே பிரச்சினையாக இருக்கிறது. வாழவேபிடிக்க வில்லை. விரக்தி தட்டிப் போய் வாழ்க்கையச் சுமக்கிறேன். என்ன செய்யலாம்?
நல்லூர். க.தேவநேசன்
s பிரச்சினைகள், கஷ்டங்கள் யாருக்குத் தான் இல்லை. மல்லிகையின் ஆரம்ப கால வருஷங்களில் என்னைச் சுற்றி எத்தனையோ பிரச்சினைகள், பண நெருக்கடிகள். இவை அனைத்திற்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்த வேளையில் யாழ்ப்பாணத்தை விட்டே ஊர் பெயர வேண்டிய சோக நிலை. புது இடம்.
புதுச் சூழல். இருந்தும் மனதில் தைரியத்தை முன் நிறுத்திக் கொண்டு விடாது முயன்றேன். உழைத்தேன். எந்தப் பிரச்சினைகள் உங் களை அலைக்கழித்தாலும் மிரண்டு விடாதீர் கள். துணிந்து அவற்றிற்கு முகங் கொடுத்து வாருங்கள். உங்களைப் போன்ற பலர் இன்று யாழ் மண்ணில் நிலை குலைந்தவர்களாகத் தான் காணப்படுகின்றனர். உங்களைப் போன்
றவர்களுக்கு நானொன்று சொல்வேன். எந்தச்
சிரமங்கள் எதிர்ப்பட்டாலும் வாழ முயற்சி யுங்கள்.
இன்றும் கூட, சில தமிழகத்து எழுத்தாளர் கள் நமது எழுத்தாளர்களது படைப்புகளை ‘நொட்டை சொல்லுகின்றனரே, இதைப் பற்றி உங்களது மெய்யான கருத்து என்ன?
கோப்பாய். கா.சிவசேகரன்
! இப்படிக் கவலைப்படுவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். இத்தனை இலட்சம் தலித்துக்கள் தமிழகத்தில் இருந்த போதிலும் கூட, நமது டானியல் அவர்களைத் தான் இலக்கியத்தில் தலித்துகளின் முன்னோடி! எனத் தமிழகப் புத்திஜீவிகள் ஒத்துக் கொண்டுள்ளனர். இன்று நமது மக்கள். தமிழை 32 நாடுகளில் பேச, எழுத சஞ்சிகை கள் நடத்த முன் முனைப்புக் காட்டி வருகின்றனர். இவர்கள் ஈழத்தவர்களே. எமது தமிழுக்கு அடிக்குறிப்புத் தேவை! என கலை மகள் ஆசிரியர் கி.வா.ஜ.அவர்கள் எழுதிய போது உங்களது அம்மாமித் தமிழுக்கு அடிக் குறிப்பிடுங்கள்!' என அவருக்கே கடிதம் எழுதிக் கேட்டவன், நான்.
2014, சூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, "இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

ളർഗ്ഗ മറ്റ്ര0 (e
Digual (Colouvladb, &o Sudio
MAN ZATURZS
digita o 0. G意 Automatic dust & scratch correction
* Maximum Size: I' x 18'osalpind - Output Resolution: 4oodpi *Film lnput Formats: 135, 1x240, Izo, APS a Film Types: Colour negative & positive, Baw
megative, Sepia negative * Compatible linput & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia)
se Print to Print * Conduct sheet & lindex print
Temp lates: Greeting Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
HEAD OFFICE BRANCH
HAppy B!!!!!!A!CENTRE HAppy PHOTO
Stuono ProFusional Photocarus Wutocharts
45ruplo No. 64 Sri Sumanatissa Mw, No. 3oo, Modera Street, Colombo - I2. Tel -o74-6το 652. Colombo - 15. Tel:-oII-2526345.

Page 39
『リ
O È DI CO) SOLD SOVERIN
Bangles, Chain Ear Tops, Guaran
Y "Santhosh Pla .1st F لیج؟ 7 229-1114, M. Colomb Te: O11 Hot Line : Ol
 
 
 
 
 
 
 
 

September 2006
s, Necklaces, teed Items Etc.
~_ ్యున్లో
Trading
za Complex' # Xğ loor, . தி" ain Street, O - 11. 239.4512