கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.10

Page 1
50வது ஆண்டை நோக்கி.
 

விலை - 35/=
95 சிறப்பு இதழ்
SlėšGLITLU 2OOG

Page 2
&&് &&ര
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்.
அன்புடன் அழைக்கிறது
66floodb
பொத்தகசாலை
49,50,52 பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு 11.
தொலைபேசி : 011 - 2472362 தொலைநகல் : 011 - 2448624 L566T607(6586) : Chemamadu Gyahoo.com
UG 50, 52, People's Park Colombo - 11. Sri Lanka
 
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
50 -வது ஆண்டை நோக்கி.
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல - அது ஒர் ஆரோக்கிய மான இலக்கிய இயக்கம்
20 l/4, Sri KothireSCIn Street, Colombo - 13. Te: 282O72
42-வது ஆண்டுமலர் தயாராகின்றது.
மலர் வெற்றிகரமாக வெளிவர ஒத்துழைப்பு வழங்க விரும்புபவர்கள் நேர காலத்தோடு எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது. ஏனெனில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் முன் ஏற்பாடாகவே இந்த வேண்டுகோளை மல்லிகை அன்பர்கள் முன்வைக்கின்றோம்.
உங்களுக்குத் தான் தெரியுமே, மல்லிகையின் மலர்கள் ஒவ்வொன்றும் எதிர்கால ஆய்வுக்காகப் பத்திரப்படுத்தி வைக்கும் சேமிப்புத் தேட்டங்கள்.
எனவே மலர் தேவையானோர் முன்கூட்டியே அஞ்சலட்டையில் தமது முகவரிகளைத் தந்துதவுங்கள். அத் துடன் ஆண்டு மலரை விரும்புகின்ற வர்களுக்கும் இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.
மலரில் தமது நிறுவன விளம் பரத்தைப் பதிய வைக்க விரும்பும் இலக்கிய ரசனை மிக்க வியாபாரிகள் முன்கூட்டியே எமக்கு உதவினால் காலங் காலமாக உங்களது நிறுவனத்தின் பெயர் நின்று நிலைக்கும்.
இதைத்தான் இப்போதைக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
- ஆசிரியர்

Page 3
Dõbli LiibÕlõT
| lawer fesur,
IphIិhរិ ۔ %2.Nصر
- டொமினிக் ஜீவா
அல்ஹாஜ் மல்லிகைச் சஞ்சிகையின் ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஏ.சுல்தான் ஒருநாள் ஒர் உற்சாகமான இளைஞர் என்னைத் தேடி, மல்லிகைக்கு வந்திருந்தார். எம்.ஏ.சுல்தான் எனத் தனது பெயரைச் சொல்லி, அநுராதபுரம் தனது ஊர் என விவரித்து எனக்கு முதன் முதலில் அறிமுகமானர், அமீர் சுல்தான் அவர்கள்.
கொழும்புக் கம்பனியொன்றின் விற்பனவுப் பிரதிநிதியாகக் கடமையாற்றி வந்த அவர், வியாபார நிமித்தமாக வானில் யாழ்ப்பாணம் வந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் என்னையும் மல்லிகையையும் பார்க்கத் தேடி வந்ததாகக் கூறினார்.
பெரிதும் மகிழ்ந்து போனேன், நான். தரமான இலக்கியவாதி மாத்திரமல்ல, சுல்தான். முதிர்ந்த, ஆழமான அரசியல் பார்வை கொண்ட ஒர் இடதுசாரியாகவும் அவர் திகழ்ந்தார். அன்றிலிருந்தே என் நெஞ்சில் அவர் ஆழமாகப் பதிந்து விட்டார்.
இந்த ஆரோக்கியமான தொடர்பை வெறும் தனிநபர் நட்பாக மாத்திரம் அவர் கைக்கொள்ளவில்லை. இலக்கிய நண்பர்களின் இணைப்புச் சங்கிலியாகவும் பயன்படுத்தி நாளடைவில் கருமமாற்றி வரத் தொடங்கினார்.
ஊரில் தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் மல்லிகையைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்தார்.
வியாபார நிமித்தமாக வாகனத்தில் யாழ்ப்பாணம் வரும் வேளைகளில் எல்லாம் கட்டுக் கட்டாக மல்லிகையை வாங்கித் தான் போகும் பிரதேசங்களில் எல்லாம் அதனது இலக்கியச் சிறப்பை வியந்து கூறி, அதன் பெயரைப் புதிய புதிய பிரதேசங்களுக்கெல்லாம் பரவச் செய்ததில் அறுபதுகளின் கடைசிப் பகுதிகளில் பெரும் பங்காற்றி உதவியவர்களில் சுல்தான் மிகவும் முக்கியமானவர்.
இலக்கிய நட்பைத் தோழமையுணர்வுடன் வளர்த்தெடுத்த இந்தத் தோழனின் திடீர் மறைவு, மல்லிகைக்கு மாத்திரமல்ல, அநுராதபுரப் பிரதேசத்துக்கும் பேரிழப்பு என்பதைத் தெளிவாக இன்றும் உணருகின்றேன்.
 
 
 

தொன்மை மிக்க மண்ணில் வாழம் தமிழ்ப் பேசும் மக்களின் இலக்கியச்சிறப்பிதழ்.
ஆரம்பகாலத்தில் மல்லிகை நீர்கொழும்புச் சிறப்பிதழை வெளியிட்டு அங்கு வாழும் தமிழ்ப் பேசும் மக்களைக் கெளரவித்து மகிழ்ந்தது. பெருமைப்பட்டது.
அதன் பின்னர் தென்னிலங்கையில் திக்வெல்லையில் வாழும் முஸ்லிம்களைக் கனம் பண்ணி திக்குவெல்லைச் சிறப்பிதழை வெளியிட்டு வைத்தது.
இப்பொழுது அநுராதபுரச் சிறப்பிதழை அங்கு வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் நினைவைச் சிறப்பிக்கும் சிறப்பிதழாக முழுத் தேசத்தின் முன்னும் சமர்பிக்கின்றது.
எத்தனை சிரமங்கள், இடையூறுகள், நெருக்கடிகள் வந்துள்ள போதிலும் கூட, நாம் - தமிழ்ப் படைப்பாளிகள் - எதிர்கால மனித சபீட்சத்திற்காகவும் சந்துஷ்டிக்காகவும் அயராது உழைப்போம்! - இது சர்வ நிச்சயம்!
தொன்மை மிக்க சரித்திர, வரலாற்றுப் பெருமை மிக்க பிரதேசம் அநுராத புரமாகும்.
அந்த அநுராதபுரப் பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் கலை, இலக்கியக் கருத்தோட்டங்கள் பலவும் கலை இலக்கிய ஆவணங்களாக ஏற்கனவே எழுத்தில் பதியப்பட்டு விட்டன.
அந்தப் பிரதேசமெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் பேசும் மக்களின் கலை இலக்கியக் கருத்துக்கள் இன்றுங்கூட, எழுத்தில் பதியப்படாதவையாகவே இருந்து வருகின்றன. .
இலவசக் கல்வியின் அறுவடைப் பயன்பாடாகவும், சிந்தனையாளர் பதுருதீன் மொகமட் அவர்களினது கல்விச் சிந்தனையின் பிற்காலப் பெறுபேறாகவும் இன்று பின் தங்கிய பிரதேசங்கள் அனைத்திலும் ஒரு புதிய அறிவு விழிப்புணர்ச்சி மேலோங்கி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அதன் வெளிப்பாடு இன்று இலக்கிய உலகில் வெகு துலாம்பரமாகத் தெரிகிறது. பல இளைஞர்களும் யுவதிகளும் இன்று இந்த மண்ணில் தமது புதிய சிந்தனையை எழுத்தில் பதிய வைத்து தரமான ரசிகர்களையெல்லாம் பிரமிக்க வைத்து வருகின்றனர்.
அதன் வெளிப்பாடுதான் இந்த அநுராதபுரச் சிறப்பு இதழாகும்.

Page 4
பிறப்பதற்கு ஓர் ஊர், வாழ்வதற்குப் பிரிதோர் ஊர். என்னைப் பொறுத்தமட்டில் இது மிகவும் பொருத்தமாக இருந்தது.
அநுராதபுரம்
நான் நீண்ட காலமாக வாழ்ந்த ஊர். இன்றைய தமிழருக்கு அவ்வுபூர் ஒரு சிம்ம சொப்பனம்'. ஆனால் ஒருகாலத்தில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்". அந்நாளில் இங்கு வாழ்ந்த தமிழரின் வாழ்வும் வளமும் இன்று பழங்கதைகளாகி விட்டன. இருப்பினும் என் போன்றோரின் நெஞ்சிருக்கும் வரை அவை நீங்கா நினைவுகளே! என் நினைவுகள் நாளைய தலைமுறைக்கு ஒரு பதிவாகும் என்ற நோக்கில் இங்கு சில பதிவுகளைத் தர முயல்கிறேன்.
வன்னி எல்லையில் இருக்கும் அநுராதபுரம் முன்னொரு காலத்தில் ஒர் இராசதானி யாகவும், இராஜரட்டையின் தலைநகரமாகவும் விளங்கியது. தென்னிந்தியப் படை யெடுப்பால் இந்நகர மக்கள், தென் திசைக்குப் புலம் பெயர்ந்தனர். அதனால், அதன் நீர் வளமும், நில வளமும் தூர்ந்தன. நாடு காடாயிற்று. இது முடிமன்னர் காலத்திற்குப் பின் வந்த வரலாறு.
கால மாற்றத்தில், ஐரோப்பியர் வருகையின் பின், குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது வளங்குன்றி வரண்டு கிடந்த வன்னிப் பிரதேசம், புனருத்தாபனம் பெற முன்னுரிமை பெற்றது. அதன் பயனாகத் தூர்ந்த குளங்களும், நீரணைகளும் மீளமைப்புப் பெற்றன. காடுகள் அழிக்கப்பட்டன. பயனுறு கழனிகளுடன் மக்கள் குடியமர்வுகளும் தோற்றுவிக்கப் பெற்றன. அதேவேளையில் இம்மண்ணில் மறைந்திருந்த தொல்கலை, கலாசாரச் சின்னங்கள் அகழ்ந்து ஆராய வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இப்பணிக்கு திரு. பெல் என்னும் ஆங்கிலத் துரைமகனார் தொல்
பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரி
நாணலை யாக வந்து, அநுராதபுர நகரையும் அதன் சூழலையுந் தன் ஆய்வுகளுக்கு உட்.
படுத்திக் கொண்டார். இவ்வேலைகளுக்கு
வருடும் கூலியாட்கள் தேவைப்பட்டனர். அதற்காக மலேரியா நுளம்பு மண்டிய அக்கால
供 கட்டத்தில் வன்னிக் கிராமத்துச் சிங்கள
Si)6O856 வரும், வடக்கு கிழக்கு மாகாணத் தமிழரும் இங்கு வந்தேறு குடிகளாயினர்.
தமிழரைப் பொறுத்தமட்டில் குறிப்பாக அநு.வை.நாகராஜன வடமராட்சித் தமிழர் தமது வியாபார

நோக்கிலேயே இங்கு வந்திருந்தனர். கால கதியில் இவர்களே இந்நகரின் சொத்து சுகம் உள்ளவர்களாக மாறினர். 'பழைய நகர் என இப்பொழுது அழைக்கப்பெறும் அநுராதபுரத்து பழைய நகர்ப் பிரதேசம் ஒரு காலத்தில் குட்டி வடமராட்சி எனப் பெருமை பெற்றிருந்தது. அந்நாளில் இங்கு குடியேறிய தமிழர், சிங்கள மக்களோடும் ஏனைய இனங்களோடும் இணைந்து வாழ்ந்தனர். ஆயினும், தமக்கே உரித் தான கலை - கலாசாரப் பின்னணியை நழுவ விடாதும், கல்விக் கேள்விகளை
I5(Լք6Հl வாழ்ந்தனர்.
விடாதும் தனித்துவமாக
இந்நாளில் இலங்கை முழுவதும் ஆங்கில மொழியே அரச கரும மொழியாக வும் இருந்தது. சிங்களக் கிராமங்களில் பிரிவெனாக்களும் (பெளத்த மத பீடங்கள்), அரச ஆரம்ப (தமிழ், சிங்கள) பாடசாலை களும் ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்த போதிலும் ஆங்கில உயர் கல்லூரிகளோ, பாடசாலைகளோ அக்கிராமங்களில் இருக்கவில்லை. அநுராதபுர நகரில் மட்டும் உரோமன் கத்தோலிக்க மத பீடத்தின் கல்வி நிறுவனங்களான புனித வளனார் as6oT fuqub (St. Josep's College), திருக்குடும்ப கன்னியர்மடப் பாடசாலையும் (Holly Family Convent) g(b55607. 3& கல்வி நிறுவனங்களில் தனித்தனியாக தமிழ், சிங்கள ஆரம்பக் கல்வியோடு, உயர், இடைநிலை வகுப்பின் ஆங்கிலக் seisslub (Secondary Education) போதிக்கப்பட்டது. இக்கல்வி வாய்ப்பும் அன்றைய பண வசதி உள்ளோருக்கும், அரச மத செல்வாக்கு உடையோருக்கும்
5 மட்டுமே கிடைத்து வந்தது. மேலும் வட மத்திய மாகாணம் முழுவதுக்குமாக இருந்த இக்கத்தோலிக்க மதக் கல்வி நிறுவனங்கள் மன்னார், வவுனியா போன்ற ஏனைய வன்னி நகர்ப் பிள்ளைகளுக்கும் உதவின. இந்நிலை இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் வரும் வரை நீடித்தது.
இலங்கையின் சுதந்திர நாளை (1948) அடுத்து வந்த தேசிய அரசாங்கங்கள் வன்னிக் கிராமங்களில் ஏராளமான வித்தி யாலயங்களையும், மகா வித்தியாலயங் களையும் அமைத்தன. அத்தோடு அநுராத புரத்தின் சிங்கள - பெளத்த புனிதத்தைப் பேணும் பொருட்டு 'புனித நகர்த் திட்டம்" ஒன்றினையும் அவை கொண்டு வந்தன. இத்திட்டத்தின் பிதா மகன், காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆவார். இத்திட்டத்திற்காக இடைக்காலத் தில் பழைய நகராக விளங்கிய அநுராதபுர நகர் புதியதோர் இடத்திற்கு புதிய நகர் என்ற மகுடத்தோடு 1956இல் புலம் பெயர்ந்தது.
இப்புதிய புலப்பெயர்வு இடைக்காலப் பழங்குடிகளான தமிழர் வாழ்வில், பொருள் வளத்திலும், சமூக வளத்திலும் ஒரு திருப்பு முனையாக விளங்கியது. இவர்களது சொந்த நிலங்கள், வயல்கள், தோட்டங்கள், கடைகள், சாலைகள் என்பன மாற்றீடு செய் வதாகக் கூறி சுவீகரிக்கப்பட்டன. இவற் றோடு இவர்களின் ஒரேயொரு பாடசாலை யாக இருந்த விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், ழுநீ கதிரேசன் ஆலயம், விவேகானந்த சபை, இஸ்லாமிய மசூதி போன்றவையும், புதிய நகர்க்குப் புலம்

Page 5
s பெயர்க்கப்பட்டன. மேலும் பழைய நகரில் கொடி கட்டி நின்ற மாவடி, சிற்றம்பலம் வீதி, ஒட்டுப்பள்ளம், நாலேக்கர், ஐந்தேக்கர், குருநகல் வீதி போன்ற தமிழர் வாழ் குடி யமர்வுகள் யாவும் சிதைக்கப்பட்டன. அத்தோடு நகராட்சிமன்றம் போன்றவற்றில் பேருறுப்புரிமை பெற்று மேலாண்மை செய்த இவர்களது முதன்மையும் ஒழிக்கப்பட்டது. இவையனைத்துக்கும் உறுதுணையாக 958ஆம் ஆண்டு இனக்கலவரமும் பெரு மளவில் உதவியது. இதனையடுத்து 1965 ஆம் ஆண்டு வரை நிகழ்த்திய புதிய நகர்த் திட்டத்தின் கீழ் ‘கஞ்சிக்கு பயறு போட்டது' போல் தமிழர் குடியமர்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிங்களக் குடிகளுக்குள் இடம்பெற்றன. இவையும் 1977ஆம் ஆண்டு பேரினவாத இனக்கலவரத்தில் சிதைந்தன. எஞ்சியிருந்தவையும் 1983 இல் முற்றாகச் சிதைக்கப்பட்டன.
இங்கு இன்று தமிழ் பேசும் முஸ்லிம் கள் தவிர்ந்த தமிழரோ அவர் தம் குடிமனை
களோ, கோயில்களோ, கல்விச்சாலை
களோ, சமூக நிறுவனங்களோ இல்லை. பல்லாண்டு காலமாக தேசிய இனங்களில் ஒன்றென வாழ்ந்த தமிழரின் வாழ்வும், வள மும் இன்று அங்கில்லை. அவர்களின் எச் சங்கள் த்ாம் இன்று அங்கு அழிந்த சின்னங் களாக நிற்கின்றன. இங்கு ஒரு காலத்தில் மேலாண்மையுடன் வாழ்ந்த தமிழரின் சமூக - பொருளாதார - அரசியல் மேன்மை கள் இவ்வாறு இருக்க இதேகாலத்தில் இவர்கள் ஈடுபாடு கொண்ட கலை இலக்கிய கலாசார முயற்சிகள் எவ்வாறு இருந்தன என்பதையும் இனி இங்கு நினைவு கூர்வது நல்லது.
1950களுக்கு முன்பு இங்கு வாழ்ந்த தமிழரின் கலை - இலக்கிய முயற்சிகள் எதுவும் தெளிவாயில்லை. அந்நாளில் யாழ்ப்பாணத்திலிருந்து கோயில் திரு விழாக்களின் போது இங்கு இறக்குமதி செய்யப்பட்ட மேளக் கச்சேரிகள், சதிர்க் கச் சேரிகள், சப்பறக் கச்சேரிகள், அலங்கார சிகர வளைவுகள் தவிர வேறு தமிழ்க் கலைகளை இவர்கள் காணவும் இல்லை. படைக்கவும் இல்லை. இலக்கிய முயற்சி யில் தானும் எதனையும் இங்கு நினைவில் வைக்கக் கூடியதாக இல்லை. பழைய கதி ரேசன் ஆலய முருகன் மீது பாடிய ஒர் ஊஞ்சற் பா நூல், பருத்தித்துறை பண்டிதர் ஒருவரால் பாடப்பெற்றிருக்கிறது. அதே போல் இஸ்லாமியருக்கும் ஓர் வரகவியாக இருந்த மீரா சாகிபுப் புலவர் என்பவர் இஸ் லாமிய நூல்களான "விதி அறிவு விளக்கம்", 'சிக்கந்தர் மகத்துவக் கும்மி என்பவற்றை 1930களில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ நகருக்குச் சென்று தாயகம் திரும்பும் வழி யில் கொழும்புக்கும் வந்து சென்றார். அவ் வேளையில் ஈழத்திலும் இந்து மத அருட்டு ணர்வு மேலோங்கியிருந்தது. அவர் நினை வாக அநுராதபுரத்தில் வாழ்ந்த சிலர், அநு ராதபுரம் விவேகானந்த சபை எனும் ஒரு சபையைத் தோற்றுவித்தார்கள். இச்சபை இந்து மதப் பணியோடு தமிழ்க் கல்விப் பணியையும் செய்ய முனைந்தது. விவே கானந்த வித்தியாலயம் என்ற ஒரு தமிழ்ப் பாடசாலையையும் தொடக்கியது. சபை யின் சிறிது கால முகாமைத்துவத்தின் பின், இப்பாடசாலை அரசாங்க உதவி பெறும் பாடசாலையாகி, 1966ஆம் ஆண்டளவில்
அரச உடைமையாயிற்று.

இச்சபை குறிப்பாக வித்தியாலயம் மூலம் தமிழ்க் கல்வியையும், சபை மூலம் தமிழ்ப் பெருவிழாக்கள், சொற்பொழிவுகள், கலை இலக்கிய நிகழ்வுகள் என்பவற்றை யும் அவ்வப்போது செய்தது. இக்காலத்தி லேயே (1951இல்) அ / புனித வளனார் கல் TýNuesởT (St. Josep's College) (&Lo6io வகுப்புத் தமிழ் மாணவர்கள் சிலர், பாட சாலைக்கு வெளியே 'தமிழ் மன்றம் ஒன் றினை அமைத்து சமய வேறுபாடின்றி தமிழ்க் கலை முயற்சிகளில் ஈடுபட்டனர். இம்மன்றம் பாடசாலை மாணவர்களால் தோற்றுவிக்கப்பெற்ற போதிலும், நாளடை வில் அதன் முழுப் பொறுப்புகளையும் வெளியில் பல்துறை சார்ந்த இளைஞர் களும், முதியவர்களும் ஏற்று 'அநுராதபுரம் தமிழ்க் கழகம்’ என்ற பெயரில் தமிழின் இயல், இசை, நாடகம், சமூகத் துறைகளில் பணிகள் பல புரிந்தனர். இக்கழகமே இலங்கைத் தமிழ்மறைக் (கொழும்பு) ஆண்டு தோறும் பல இடங் களில் நடத்தி வந்த 'திருக்குறள் மாநாடு' களில் மூன்றாவது மாநாட்டை 1953 இல் பொறுப்பேற்று அநுராதபுரத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்ற தமிழ் பேரறிஞர் பலர்
85p 5 Lb
இம்மாநாடு காரணமாக வந்து, சோழர் கால் பதித்த அநுராதபுர மண்ணை மணந்து சென்றனர். மேலும் இசைத்துறையில் கர்நாடக இசை வகுப்புகளும், நடனத் துறையில் நடன வகுப்புகளும், நாடகத் துறையில் நாடகங்களையும் இக்கழகம் அன்றைய ஆர்வலர்களுக்கும் கலைஞர் களுக்கும் அளித்துப் பெருமை கொண்டது.
7
இக்கழகத்தின் தொடக்க கால உறுப் பினர்களுள் ஒருவராக இருந்ததோடு அதன் செயலாளராகவும் 1964 - 1971 வரை இருக் கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.) இதே போல் அநுராதபுரம் வாலிபர் முன்னேற்றக் கழகம் (1959இல்) என்ற ஓர் அமைப்பும் சமூக சேவைப் பணிகளோடு தமிழ்க் கலை கலாசார இலக்கியப் பணிகளையும் செய்து வந்தது. இக்கழகம் முத்திங்கள் சஞ்சிகை யான "அன்னை' எனும் சிற்றேடு ஒன்றினை யும் வெளியிட்டு வந்தது. "எல்லாந் தமிழ்", ‘எல்லாந் தனித் தமிழ்' என்ற முனைப்பில் இயங்கிய இச்சிற்றேட்டில் இன்றைய பிரபல ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும் எழுதி னார்கள். இதில் பண்டிதர் க.பொ.இரத் தினம், யாழ்ப்பாணம்' தேவன், மட்டுநகர் அருள் செல்வநாயகம், குன்றக்குடி அடி களார் போன்றோர் தொடர்ந்து எழுதினார் கள். அன்னையின் முதன்மை ஆசிரியராக வும் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத் தது. இதன் துணை ஆசிரியராகத் திரு. ஜோவலன் வாஸ் (தற்பொழுது தமிழக எழுத்தாளர்) இருந்தார். இச்சிற்றேடே நான் அறிந்த வரையில் அநுராதபுரத்தில் இருந்து அச்சில் வெளிவந்த முதற் கலை இலக்கி யச் சஞ்சிகை.
இதன் பின்னர் அநுராதபுரம் முற் போக்கு வாலிபர் சங்கம் என்றோர் அமைப் பும் இருந்தது. இச்சங்கம், இளைஞர் குரல்" என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டது. இதழாசிரியர்களாக திருவாளர்கள் எம்.ஏ. சுல்தான், பி.ஏ.சி.ஆனந்தராசா என்போர் இருந்தனர். இவர்களுக்கு முன்னர் இங் கிருந்த ஜனாப். முஹம்மது ஹனிபா (அன்பு தாசன் புதுக்கவிதையாளர், அன்பு ஜவஹர் வடிாவின் தந்தை) திரு. க.மெய்யழகன் என்

Page 6
8 போரும் கவிதை, சிறுகதை, கட்டுரை என்ப வற்றை எழுதினார்கள்.
இதனையடுத்து 1960ற்குப் பின் புனித வளனார் கல்லூரி, விவேகானந்த மகா வித்தியாலயம் என்பவற்றிலிருந்த எழுத்தார் வங் கொண்ட ஆசிரியர்களின் வழிநடத்தல் களால் ஓர் இளைய கலை இலக்கியத் தலைமுறை துடிப்போடு சில செயற்பாடு களைச் செய்தது. இவர் தம் முனைப்பால் மாணவர் குரல்", "புதுமை ஒளி', 'தமிழ்ச் 'கலைமதி', 'வீரத்தமிழன்’, ‘பெட் டகம்", "செங்கொடி', 'புத்தொளி போன்ற பல இதழ்கள் கையெழுத்துப் பிரதிகளாகவும், கல்லச்சுப் பிரதிகளாகவும் வெளிவந்தன. 1968இல் இங்கு இளம் எழுத்தாளர் சங்கம்" என்ற ஓர் அமைப்பு உருவாகியது. அந் நாளில் தென்னிந்தியாவில் இருந்து தரமற்ற நூல்கள், சஞ்சிகைகள் இறக்குமதி செய்யப் படுவதைத் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு குரல் இலங்கையில் எழுந்தது. இக் குரலின் முதல் ஒலி பேரொலியாக அநுராத புரத்தில் எழுந்தது. இதற்கான தீர்மானங் களை இச்சங்கம் நிறைவேற்றிப் பன்முனை
சுடர்',
களிற் செயற்பட்டது.
அறுபதின் பின்கூற்றில், ஆரம்பிக்கப் பட்ட அ / ஸாஹிரா மகா வித்தியாலயத்து மாணவர்களின் 'இளந்தளிர்கள் இலக்கிய 6ILLub’, ‘SlsoogpQuurTess’ 676örp SQ6ošśluuë சஞ்சிகையை கல்லச்சில் வெளியிட்டது.
மேலே கூறிய அநுராதபுரம் தமிழ்க் கழகம், வாலிப முன்னேற்றக் கழகம், இளம் எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக் களின் கலை இலக்கியச் செயற்பாடுகள் வளங்குன்றி நின்றபோது, அநுராதபுரம் கலைச்சங்கம் என்ற ஒரு புதிய அமைப்பு
i
S.
鼠
இளந்தலைமுறையினரால் 1972இல் தோற்றுவிக்கப் பெற்றது. இச்சங்கம் 'களம்' என்ற சஞ்சிகையை 1972இல் வெளியிட்ட தோடு ஈழத்துப் புதுக் கவிதையாளர்கள் சிலரின் 44 படைப்புகளை பொறிகள் என்ற பெயரில், அன்பு ஜவஹர்ஷாவைத் தொகுப் பாசிரியராகக் கொண்டு ஒரு நூலையும் வெளியிட்டது. இங்கு முன்பு வெளியாகி நின்று போன "அன்னை'யின் பெயரில் இப்பொழுது ஜனாப் எப்.ஆர்.பரிட்வுற் ஒரு சஞ்சிகையை வெளியிடுகிறார். என் காலத் தில் திரு. ஜோவலன் வாசும் பத்திரிகைத் துறையோடு சில ஆக்கங்களையும் படைத் தார். எம்மையடுத்து, எனது மாணவர்களிற் பலர் எழுத்துத் துறையில் ஈடுபட்டனர். இந்த வகையில், இளந் தலைமுறையின் இளங் குருத்துக்களில் ஒரிரு காத்திரமான தளிர் கள் முகிழ்ந்தன. அவர்களுள் இரா.வி. மூர்த்தி, இரா.நாகராசன், அன்பு ஜவ ஹர்வடிா, சிவா தம்பையா, பேனா மனோ கரன், ஆசி.ஞானம், ஹேமாமாலினி மெய் யழகன், க.குமாரசுவாமி என்போர் அவ்வப் போது துலங்கிய போதிலும், அன்பு ஜவஹர் வடிாவும் யானுமே இன்று எழுத்துத்துறை யில் எமது சுவடுகளை ஆழமாகவும் அகல மாகவும் ஈழ எழுத்துலகில் பதித்துக் கொண்டிருக்கிறோம்.
கால நீரோட்டத்தில் அன்றைய அநுராதபுரத்துத் தமிழரின் வாழ்வும் வளமும் இன்று நீர்க்குமிழிகளாகி விட்டன. ஆயினும் அவர்கள் பதிவின் நினை வலைகள் என்றும் ஒயா அலையென அன்னார் ஊன்றிய நாணல்களை வருடிக் கொண்டிருக்கின்றன.
நாணல்கள் தாழும், நிமிரும்

9
மெல்லிய வளையோசை காதில் கேட்டது. ஷமீர் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
கூந்தலை மறைத்த முக்காடும், முகத்தை மறைத்த நாணமும் ஏந்திய இரண்டு திரைகளுடன் அந்தப் பெண் தோன்றினாள்.
ஒருகணம் மட்டுமே அவனை ஏறிட்டுப் பார்த்தாள். மிரட்சியும், செவ்வரியும் கலந்த கண்களில் ஒட்டு மொத்தமாகப் பயம் தெரிய, சட்டென விலகிச் சென்றாள். ஷமீர் பின்னால் ஒடிச்சென்று அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் சடாரென அவனது தோள்களில் விழ.
“வேணாம் வேணாம். எழும்புங்க போவோம்."
கர்ண கடுரமான குரல். தாய் கோபாவேசத்துடன் நின்றிருந்தாள்.
"ஏன்?" பார்வையால் வினவினான்.
பசிக்கடி உருங்டின்.?
- கெகிறாவ ஸ்ஹானா
“இந்தப் பொண்ணு அவ்வளவு அழகாயில்லை. அதோட நிறமும் குறைவு."
ஷமீர் ஸ்தம்பித்து அப்படியே நின்றிருந்தான். அந்தப் பெண்ணைக் காண வில்லை.
தூக்கம் கலைந்து விழிகளை அகலத் திறந்தான் ஷமீர். கண்டது கனவா? அசூசையாக இருந்தது.
இன்று மாலை நேரில் கண்ட அந்தப் பெண்ணை, மீண்டும் எப்பொழுதுமே காண முடியாதா? கனவில் மட்டும்தானா காண முடியும்? அதுவும் இன்றைய கனவில். நாளைய கனவில் வேறொரு பெண்ணா? இதயத்தை முழுதும் நனைத்துச் சென்றது ஏக்கம். ஒரு வகையான பரிதாப உணர்ச்சி உடம்பை போர்த்துக் கொண்டது.
இப்போது நிஜமாகவே வளையொலி கேட்டது. கனவல்ல என்று உணர்ந்து காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். அடுத்த அறையில் இருந்து வந்தது அஸ்ரிபாவின் வளையொலி. அஸ்ரிபா தம்பியின் மனைவி. இருவரும் காதலித் தார்கள். கைப்பிடித்து குடித்தனமும் நடத்துகிறார்கள்.

Page 7
O
அவள் கிசுகிசுவென்று ஏதோ கேட்பதும், தம்பி பதில் சொல்வதும் கேட்டது. இந்த அர்த்த ராத்திரியில் என்ன பேசிக்கொள்கிறார்கள்?
நானும் யாராவது ஒரு பெண் ணைக் காதலித்திருக்கலாமோ என்று அவனுக்குள் திடுமென கேள்வி எழுந்தது. காதலிக்காதது என் குற்றமா? எனக்கொரு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைக்க வேண்டிய பொறுப்பை என் தாயிடம் விட்டது தப்பா? என் இளமையை இன்னும் எவ் வளவு காலத்திற்கு இப்படி சுட்டெரித் துக் கொள்வது? உம்மா ஏன் இதைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார் கள்? ஒருவேளை, வாப்பா இருந்திருந் தால் எல்லாம் சரியாக நடந்திருக்குமோ?
எழுந்து மின்விளக்கை ஏற்றி நேரத்தைப் பார்த்தேன். விடிகாலை நான்கு மணி.
இதுவரை எத்தனையோ பெண் களை பார்த்தாயிற்று. ஒவ்வொரு பெண் ணைப் பார்க்கும்போதும், இவள்தான் என் மனைவி என்று நினைத்துக் கொள் வதும், பின் உம்மா அவளை மறுதலிக் கும்போது மனம் உடைந்து போவதும், அன்று பார்த்த பெண்ணை இரவெல் லாம் எண்ணி ஏங்குவதும், அவளைக் கனவில் கண்டு தூக்கம் கெடுவதும் என்ன வாழ்க்கை?
அவனுக்கு வெறுப்பாக இருந்தது. வேலைக்குச் சென்றாலும் மனதை ஒரு நிலைப்படுத்தி ஈடுபட முடியுமா என்ற
கேள்வி நெஞ்சையும், அரித்தது.
s2. LibGod Luuquib
'தஹஜ்ஜத் தொழுது தனது மனக் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக எழுந்து கொண்டான்.
பின்கட்டில் மணக்க மணக்க உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வேலைக்குச் செல்வதற்குத் தயாராகி விட்ட ஷமீர், காலை உணவை எதிர் பார்த்து அமர்ந்திருந்தான்.
மெல்ல அடியெடுத்து ஒரு பெண் உணவுத் தட்டைக் கையில் கொண்டு வருகிறாள். உடம்பில் பரிமள சுகந்தம் காந்தியாக. ஏறிட்டுப் பார்த்தான்.
அஸ்ரியா சாப்பாட்டு மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். சட் டென ஒரு குற்ற உணர்வு உடம்பை உராய்ந்து சென்றது. இவள் என் மதினி. தம்பியின் மனைவி. சோ..!
'யா அல்லாஹ்! பாவத்திலிருந்து என்னைக் காப்பாற்று."
“எனக்கு சாப்பாடு வேணாம்."
எழுந்து வேகமாக வெளியே சென்றான்.
•
பஸ்ஸினுள், ஜன்னலோர இருக்கை யில் அமர்ந்திருந்தான் ஷமீர். குளிர்ந்த காலை நேர இளங்காற்று இதமாகத்

தழுவிச் சென்றது. லேசாக உற்சாகம் பற்றிக் கொண்டது. எனினும், தூக்க மற்ற கண்கள் எரிந்தன.
கண்களை கசக்கிவிட்டுக் கொண் டான். முன் சீட்டில் ஒரு இளம் புத்த பிக்கு அமர்ந்திருந்தான். ஏறத்தாழ தனது வயதுதானிருக்கும் என ஷமீர் அனு மானித்தான். நான் முப்பத்தெட்டு வயது துறவி; காவியுடை அணியாத துறவி; விரும்பாமலே துறவறத்தை ஏற்றுக் கொண்ட துறவி. அவன்.?
அவன் மீது ஏனோ ஒரு பரிதாபம் ஏற்பட்டது. என்னென்ன காரணங் களால் இவன் துறவியானானோ? விரும்பியே ஏற்றுக்கொண்டானோ? இல்லை நிர்ப்பந்தம் காரணமாக இருக் கலாமோ? அவனுக்கும் ஏதோ ஒருவித ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறதே...!
எனக்கும்,
சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி யில் முகத்தைப் பார்த்துக் கொண்டான்.
மீண்டும் நிமிர்ந்து பார்த்தபோது அந்த பிக்குவின் தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருந்தன. பின்புறம் நீளமான வால் இருந்தது. சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டான். கொஞ்ச நேரம் வெளியே பார்வையை ஒடவிட்டு மீண்டும் திரும்பிப் பார்த் தான். அந்த பிக்கு கையிலிருந்த குறிப் பேடு ஒன்றை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு கொம்புகளும் இல்லை. வாலும் இல்லை.
11 அந்தப் புத்த பிக்குவிலிருந்து கவனத்தைத் திருப்ப வேண்டும். அவனை மீண்டும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றிற்று. பஸ்ஸி னுள் அமர்ந்திருந்த அத்தனை பிரயாணி களையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
எல்லா பயணிகளும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியவர்களாக அமர்ந் திருந்தனர். முகங்களில் அன்றைய கேள்வியின் பிரதிபலிப்பு. சிலர் முகங் களில் நீண்ட நாளைய கேள்வி.
திடீரென்று பயங்கர சிரிப்பொலி கேட்டது. அவ்வளவு பிரயாணிகளுக்கு உள்ளேயிருந்தும் ஒவ்வொரு பேய்கள் எழுந்தன. சிரித்தபடி அவனை நோக்கி அணிவகுத்து வந்தன. ஷமீர் தலையை உலுக்கிக் கொண்டான்.
மீண்டும் பஸ்ஸினுள் பார்வையை ஒடவிட்டான். இப்போது ஏதும் வித்தி யாசமாகத் தெரியவில்லை. தனக்குள் ஏதோ நிகழ்வதை உணர்ந்தான். கண் ணாடிக் குமிழொன்று படீரென வெடித்துச் சிதறினாற் போல்...!
"அல்லாஹ்வே, நான் வேலைக்குப் போய்ச் சேரும் வரை என்னைக் காப்
பாற்று” கலவரத்துடன் பிரார்த்திக்கத் தொடங்கினான்.
'இந்தா ஷமீர், இதப்பாரு. இன்னைக்கு இந்தப் பொண்ணப் போய்

Page 8
12 பாத்துட்டு வருவோம்.' போட்டோவை நீட்டினாள்.
உம்மா
கையில் எடுத்துப் பார்த்தான். ஏதும் குறை தெரியவில்லை. இந்தப் பெண்
ணாவது உம்மாவுக்குப் பிடிக்கணும். பிரார்த்தித்துக் கொண்டான். தனது
வேண்டுதலை தொழுது முறையிடு வதற்காக உள்ளே சென்றான்.
•
பெண்ணின் சகோதரன் கொண்டு வந்த தேநீரைச் சுவைத்தபடி, பெண் ணின் தாயாரிடம் உம்மா பெருமை பேசிக்கொண்டிருந்தாள்.
"ஏன்ட மகனப் போல ஒரு நல்ல எளந்தாரிய நீங்க இந்த உலகத்திலேயே காணமுடியாது. அவ்ளோ ஒழுக்கம். பக்தி. இப்ப ஆம்புளப் புள்ளைகள் என்ன மாதிரி கெட்டுப் போயிருக்காங்க. பாக்குறீங்கதானே. நா அவன அப்புடி வளக்கல்ல."
பெண்ணின் தாய் அகலச் சிரித்து தலையாட்டியபடி கேட்டுக் கொண்டி ருந்தாள்.
பெண் வந்து கதவோரம் நின்றது. உம்மா ஏற இறங்கப் பார்த்தாள். தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஷமீர், அவளது தலைக்கு மேலே ஒரு பேய் எட்டிப் பார்ப்பது கண்டு திடுக் கிட்டான்.
பக்கத்தில் பெண் வீட்டார் யாரும் இல்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு
-9ð
உம்மா அஸ்ரிபாவிடம் குசுகுசுத்தாள். "பொண்ணுட முகம் சிறுசாயிருக்கே. பரக்கத் இருக்காதுன்டு சொல்லுவாங்க. அதோட கட்டையான பொண்ணு குடும் பத்த நடத்த சரிவராது. என்ன சொல்ற
ஷமீர்..?
தாயை ஏறிட்டுப் பார்த்தான். அவளது முகத்தில் சதைகள் கிழிந்து வெறும் மண்டையோடும், கோரப் பற்
களும் தெரிந்தன. அவளைப் பார்க்கப்
பயமாக இருந்தது. கண்களை கசக்கி விட்டுக்கொண்டு மறுபடி பார்த்தான். மீண்டும் (p(g? எலும்புக்கூடாக நின்றது தாயின் உருவம்.
ஷமீர் திகைப்புடன் எழுந்து நின்றான். தன்னைச் சுற்றிலும் மண்டை யோடுகள் நிறைந்திருப்பதையும், ஒரு மயானத்தின் நடுவே தான் நிற்பதையும்
i
ந்தா
“எனக்கு இனி கல்யாணம் நடக் காது” அவனது உதடுகள் மெல்ல முணு முணுத்தன.
உம்மா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் வேகமாக நடந்து வெளியிறங்கி, மெயின் விதியில் நிறுத்தி யிருந்த பஸ்ஸில் ஏறினான்.
* * *
1. தஹஜ்ஜத் - நடுநிசித் தொழுகை
2. பரக்கத் - விருத்தி

13
கண்ணில் உயிர் வாழும்
கண்ணிர் கானலாய் வலம் வரும் கற்பனை.
சில ஆத்மாக்களிட்கு
இதுவொன்றும் புதிதல்ல. கன்னில் வண்ணப்பூங்கா போல் ஜீவன்களில் தேன் உறிஞ்சும் விஷ ஐந்துகளுக்கு f arl இதுவே வாழ்க்கை.
கண்ணாடி போல் வாழ்க்கையில் ηαησή
வார்த்தைகள் நொருங்கும் 最 சன்னங்கள் பீறிட்டுப் பாயும் - அநுராதபுரம சமான உயிருடன் மேனியை பதனிட
மேலைத்தேய மொழிகளில் அழகான சொற்கள் செல்" என்றும் ‘கிளைமோர் என்றும் இவை பேய் போல் துரத்துவதெல்லாம் பாமர மக்களையே
பாவம் பேய்கள்
பட்டாளத்தோடு
உயிர் பிரிப்பது மெய் விழிகளுக்கு
எட்டவில்லை போலும். அசட்டை செய்கிறது இவ்வுலகம். கண்ணில் உயிர் வாழ்வதெல்லாம் கண்ணிர்

Page 9
14
நூற்றுக்கணக்கான வருட காலமாக அநுராதபுரம் பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், இவர்களின் வரலாறு முழுமையாக எங்கும் பதியப்படவில்லை. விழா மலர்களிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டுரைகளிலும் மட்டுமே சில பதிவுகள் காணப்படுகின்றன. அநுராதபுரப் பழைய நகரம் முழுமையாக தமிழ் - முஸ்லிம் மக்களின் நிரந்தர வாழ்விடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. சில பெரும்பாலான இன வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை திரிபுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்தும்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் இலக்கியத்தைப்
அநுராதபுரப பிரதேச பொறுத்தவரையில் அநுராதபுரம் தமிழ் பேசும் மக்களின் இருப்பை பதிவதற்கு £0äbu குறிப்பிடத்தக்க ஒரு ஆவனமாக
மல்லிகை அநுராதபுரப் பிரதேச மலர்
മീരഗ്രീqääത്രമ இருக்கப் போகின்றது. இங்கு நூற்றாண்டு
கால இலக்கிய வரலாறு தொடர்பான
தகவல்கள் மீள நோக்கப்பட்டு ஒரு பதி
രബീന്ദ്രമ வாக பின்வருமாறு பதியப்படுகின்றது.
எழுத்துத் துறையில் ஈடுபட்டு உள்ளவர்
களின் பெயர் பட்டியலாக இக்கட்டுரை
அன்பு ஜவஹர்ஷா தொகுக்கப்படவில்லை. நூல்கள் மூலம்,
ஆக்கங்கள் மூலம் நம்பிக்கைக்குரியவர்
களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இக்குறிப்புக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
அநுராதபுரப் பிரதேச இலக்கிய படைப்பாளிகள் என்ற தலைப்பில் இவர்கள் ஆவணம் ஆக்கப்படும் போது இதைவிட விரிவான விபரங்கள் சேர்க்கப்படலாம்.
எப்.எப்.சப்ரினா கருத்தரங்கு ஒன்றுக்காக தொகுத்த 45 பக்க ஆய்வுக் கட்டுரை ஒன்றில் மேற் சொன்ன எழுத்தாளர்கள் தொடர்பான விபரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. அக்கட்டுரையில் விடுபட்ட பழைய தகவல்களும், புதிய தகவல்களும் இப்பகுதி தமிழ் இலக்கியவாதிகள் தொடர்பான முழுமையான தகவல்களும் சேர்க்கப்பட்டு நூலுருப் பெறும்போது இந்தப் பணி பூரணமாகும் என எண்ணுகின்றேன். இக்குறிப்பின் தலைப்புக்கு ஏற்ப நாம் ஆராய முற்படும் போது இப்பிரதேசத்தில் பழம்பெரும் பாடசாலைகளாக தலை சிறந்து விளங்கிய புனித வளனார் கல்லூரி இப்பகுதி இலக்கிய வளர்ச்சியின் கால் கோளாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. பிற்காலத்தில் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் போன்றவையும் இக்கரிகொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், நேகம முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள்

இந்த வகையில் இலக்கிய முயற்சிகளுக்கு அத்திவாரம் இட்டுள்ளன.
மகா வித்தியாலயம் ஒட்டுப்பள்ளம் என்ற பகுதியில் முகாந்திரம் மொஹிதீன் தம்பி மரைக்காரின் பொருள் உதவியால் 1900 - 1948 காலப்பகுதியில் வாழ்ந்த இப் பகுதியின் மூத்த வரகவியான முஹம்மது மீரா லெப்பை ஆலிம் சாய்பு அவர்களால் சித்தி லெப்பை அரபு கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது. இந்த மூத்த கவிஞரின் மூன்று கவிதைத் தொகுதி தொடர்பாக தகவல்கள் உள்ளன. 1929ம் ஆண்டு சிக்கந்தர் மகத் துவக் கும்மி என்ற நூலும், 1938ம் ஆண்டு விதி - அறிவு - விளக்கம் என்ற நூலும் அச் சேறின. இக்கவிஞரால் 1935ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்ட ‘அவுற்காமுத்தீன் என்னும் தீன் நெறி நியமம் என்ற நூல் இன்னும் அச்சேறவில்லை. கிழக்கு மாகா ணத்தில் அக்கரைப்பற்றைப் பிறப்பிட மாகக் கொண்டு அநுராதபுரம் பள்ளி வாசலின் பேஷ் இமாமாக (கதீப்) கடமை யாற்றிய அ.லெ.உமரு லெப்பை ஆலிம் சாய்பு அவர்களால் இயற்றப்பட்ட கைப் புட்சிசு மாலை என்ற கவிதை நூல் 1930 ஆம் ஆண்டு அளவில் வெளியிடப்பட்டது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி இவைகளே ஆரம்ப கால இலக்கிய வெளி யீடுகளாகும். இத்துடன் பழைய நகர கதிரேசன் ஆலய முருகன் மீது பாடப் பெற்ற 'ஊஞ்சற் பா" என்ற நூல் தொடர்பாக தகவல் ஒன்றும் உள்ளது.
இன்றும் எம்மோடு 78 வயதிலும் இலக்கிய நிகழ்வுகளுக்கு வருகை தரும் அல்ஹாஜ் எம்.எஸ்.விறைைசன் 1945 - 1948 காலப்பகுதியில் அநுராதபுரம் புனித
15 வளனார் கல்லூரியின் கையெழுத்துச் சஞ்சிகையான தமிழ்மணி என்ற சஞ்சி கையை ஆசிரியராக இருந்து நடத்தி usTSTITT.
1951ம் ஆண்டு புனித வளனார் கல் லூரியின் மேல் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து அமைத்த தமிழ் மன்றம் பின்னர் அநுராதபுரம் தமிழ் கழகமாகி கல்ை இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு தமிழ்க் கழகம் நடத்திய திருக்குறள் மகாநாடு பெரும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட காலம் செயலாளராக அநு. வை. நாகராஜனும், மறைந்த அதிபர் ரோ.ஸ்ரனிஸ்லொஸ் அவர்களும் கடைமையாற்றினர். 1958ஆம் ஆண்டளவில் இவர்கள் நடத்திக் காட்டிய நாடகம் தொடர்பான தகவல் ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. இக்காலப்பகுதி யில் மறைந்த எம்.அமீர் சுல்தான் (இளந் தீரன்), பி.ஏ.சி.ஆனந்தராசா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 'இளைஞர்
தலைவராக
குரல்" என்ற சஞ்சிகை வெளியிடப்பட் டுள்ளது. 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட அநுராதபுரம் வாலிப முன்னேற்ற கழகம் பிற்காலத்தில் பல கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டது. அத்தோடு அநு ராதபுரத்தின் முதல் அச்சு சஞ்சிகையான 'அன்னை என்ற மும்மாத இதழ் அநு.வை. நாகராஜனை (அநுராஜன்) ஆசிரியராகக் கொண்டு வெளியானது.
பிற்காலத்தில் புலம் பெயர்ந்த, தமிழக எழுத்தாளராகிய ஜோவலன் வாஸ் இச் சஞ்சிகையின் துணை ஆசிரியராக இருந் தார். 1965ஆம் ஆண்டு புனித வளனார் கல்லூரியின் உயிரியல் பட்டதாரி ஆசிரிய

Page 10
16
ரான அன்டன் ஞானராஜா அவர்களால் மாணவர் குரல் சஞ்சிகை பொறுப்பாக நின்று 65ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட ஐந்தாண்டு காலப் பகுதியில் கையெழுத்து சஞ்சிகை முயற்சி கள் வேகமாக நடைபெற்று வந்தன. புதுமை ஒளி, தமிழ்ச்சுடர், கலைமதி, வீரத்தமிழன், பெட்டகம், செங்கொடி, அன்பன் போன்ற
வெளியிடப்பட்டது.
கையெழுத்து சஞ்சிகைகள் மாதா மாதம் வெளியிடப்பட்டு வந்தன. மூன்று வருட காலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த தமிழ்ச்சுடர் என்ற சஞ்சிகையின் 36வது
இதழ் வவுனியா வல்லிபுரம் அச்சகத்துக்கு Sð
ஊடாக 1969ஆம் ஆண்டு அச்சுப்பிரதி யானது. மேற்படி சஞ்சிகைகள் பலவற்றில்
இணையாசிரியராக சஞ்சிகை பணியில் ஈடு
பட்ட அன்பு ஜவஹர்ஷா (தமிழ் வேந்தன்), புரட்சி இளைஞன் என்ற புனைப் பெயரைக் கொண்டு எழுதி வந்த எம்.ஏ.எம்.இப்ராஹிம் அவர்களோடு இணைந்து புத்தொளி என்ற பெயரில் இரண்டு இதழ்கள் அச்சு சஞ்சிகை வெளியிட்டனர். மேற் சொல்லப்பட்ட கை யெழுத்து சஞ்சிகைகள் ஆசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும் திகழ்ந்த பலர் இன் றும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே. இரா.வி.மூர்த்தி, இரா.நாகராசன், சிவா, தம்பையா, பேனா மனோகரன், ஆ.சி. ஞானம், ஹேமாமாலினி மெய்யழகன், க.குமாரசுவாமி, எஸ்.எச்.எம்.சஹறிர், எஸ். சேவியர் குலாஸ், இலங்கை மன்னன், அமிராண்டா, பெ.ஆறுமுகம் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகும். ஆசிரியரான இரா.நாகராஜன், ராவயா' தமிழ் பதிப்பான ஆதவன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற் றிய ஆஇசி.ஞானம், அநுராதபுரத்தின் முத லாவது முஸ்லிம் சட்டத்தரணியான எஸ்.
S á
Sa
-b
r ゴ
எம்.எம்.சஹிர் ஆகியோர் இன்று நம் மிடையே இல்லாமை வருந்தத்தக்க
செய்தியே.
இப்பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு கொழும்பில் வர்த்தகத்தில் ஈடு பட்ட வித்தகன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த எஸ்.எம்.ஸாலிவுற் அவரது சிருஷ்டி இலக்கிய வாசகர் வட்டத்தின் சார்பில் "பேரறிஞர் அண்ணாவின் தேன் துளிகள் என்ற நூலைத் தொகுத்து வெளி யிட்டுள்ளார்.
1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் எழுத்தாளர் சங்கம் இப்பகுதியில் பல இலக்கிய நகர்வுகளை நிகழ்த்தியது. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியால யத்தில் 1971இல் ஆரம்பிக்கப்பட்ட "இளம் தளிர்கள் இலக்கிய வட்டம்' பிறையொளி சஞ்சிகையைத் தொடர்ந்து கல்லச்சு பிரதி யாகவும், அச்சுப் பிரதியாகவும் வெளியிட்டு வந்துள்ளது. அத்தோடு இந்த இலக்கிய வட்டத்தால் இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கவியரங்குகள் போன்றன நிகழ்த்தப்பட்டன.
அநுராதபுரம் இலக்கிய வரலாற்றில்
இங்கு குறிப்பிடத்தக்க பணிகளை குறுகிய
காலத்தில் அசுர பணிகள் ஆற்றிய அநுராத புரம் கலைச் சங்கம் நூல் வெளியீடு, சஞ்சிகை வெளியீடு, இலக்கியக் கூட்டம், நாடகம் என்ற வகையில் 72ஆம் ஆண்டு தொடக்கம் 75ஆம் ஆண்டு வரை பல பணி களை ஆற்றியுள்ளது. மாவை.தி.வித்தியா னந்தன், க.குமாரசுவாமி ஆகியோர்களை தலைவராகவும், அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன் ஆகியோர்களை செயலாளர் களாகவும் கொண்டு இயங்கிய நாலு வருட

காலத்தில் தம்பு சிவா, தங்கரட்னம், ஆ.சி. ஞானம், எம்.ஏ.எம்.இப்ராஹிம், மாத்தளை பாலா, த.குமாரலிங்கம், இரா.சுகுன சபேசன் போன்றவர்களின் கூட்டு முயற்சி யால் பின்வரும் இலக்கிய முயற்சிகள் செய்யப்பட்டன. இச்சங்கத்தின் ஆதரவில் களம் என்ற மூன்று மாத சஞ்சிகை 1972 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடப்பட்டு வந்தது. இலங்கையில் முதன் முறையாக கவியரங்கு கவிதைகளை கவியரங்கின் போது தொகுப்பாக வெளியிடும் முயற்சியாக அன்பு ஜவஹர்ஷாவால் "சிதைந்து போகும் சிறப்புகள், ‘புத்துலகம் படைப்போம்" என்ற இரண்டு தொகுதிகள் 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இலங்கையில் பல பாகங்களில் வசிக்கும் புதுக் கவிதையாளர் கள் 44 பேரின் கவிதைகளைத் தொகுத்து அன்பு ஜவஹர்ஷா வெளியிட்டார். இதுவும் இலங்கையின் புதுக் கவிதை வரலாற்றில் முதல் முயற்சியாகும். இச்சங்கத்தின் ஆதர வில் 1975ஆம் ஆண்டு பல்வேறு சஞ்சிகை களில் வெளியான அன்பு ஜவஹர்ஷாவின் புதுக்கவிதைகள் காவிகளும் ஒட்டுண்ணி களும்' என்ற பெயரில் கலைச் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
1976ஆம் ஆண்டு அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது தமிழ் நாடு காவல் துறையில் உதவி காவல் அதிபராகக் கடமையாற்றும் பேனா மனோ கரனின் புதுக்கவிதைகளை தொகுத்து "சுமைகள்' என்ற பெயரில் கலைச்சங்கம் வெளியிட்டது. 70ஆவதுகளின் பிற்பகுதி யில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளின் காரணமாக ஆர்வமாக பணியாற்றிய பலர் அநுராதபுரத்தை விட்டு புலம்பெயர இச் சங்கத்தின் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன.
17 இக்காலகட்டத்தின் விமர்சனம், அகவய சிந்தனைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக் காக இயங்கிய தேன் துளி இலக்கிய வட்டம் பல பயன் உள்ள நிகழ்வுகளை மாதா மாதம் நடத்தி வந்தது. அ.யேசுராசாவின் தொலைவும் இருப்பும்" என்ற சிறுகதைத் தொகுதி, செங்கை ஆழியானின் 'வாடைக் காற்று' என்ற நாவல், வன்னியூர் கவி ராயரின் 'ஈழத்துத் காவிய தீபகம்’ என்ற சிறு கதைத் தொகுதி போன்ற நூல்கள் தொடர் பாக பல கலந்துரையாடல்களை இவ் வமைப்பு நடத்தியுள்ளது.
1987ஆம் ஆண்டு எப்.ஆர்.பரிட்வுற் "அன்னை' என்ற பெயரில் சஞ்சிகையின் சில இதழ்களை வெளியிட்டார். இன்றும் இவரின் முயற்சியால் குடா நெலுபாவ அல் மதீனா முஸ்லிம் வித்தியாலய வெளியீடாக அல் - மதீனா என்ற சஞ்சிகை வெளியிடப் படுகின்றது. இடைப்பட்ட காலத்தில் இலக் கிய அமைப்பு ரீதியாக வெளியீடுகள் நடை பெறாத போதிலும், கல்வி நிறுவனங்கள், கலாசாலை சஞ்சிகைகள் தமது ஆண்டு இதழ்களை வெளியிட்டு வந்தன. ஆசிரியர் களுக்காக நடத்தப்பட்ட தொலைக்கல்வி நிறுவனம் தொலைச்சுடர்' என்ற சஞ்சிகை யின் ஏ.சி.ஜன்சியை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டது. கனேவல்பொல சமூக அபிவிருத்தி மன்றம் "விம்பம்" என்ற சஞ்சிகையும், விழிப்பு' என்ற மலரையும் வெளியிட்டது. தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தி யாலயத்தின் சஞ்சிகையான பிறையொளி, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய ஆண்டு வெளியீடான விவேகானந்தன், சிறிது காலம் வெளியிடப்பட்ட விவேகி, நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்

Page 11
18
முழுமதி, அழகபெரும கம முஸ்லிம் வித்தி யாலய சஞ்சிகை ஆகியவற்றில் படைப் பிலக்கியம் தொடர்பான நிறைய விடயங்கள் இடம்பெற்று வந்தன. நாச்சியாதீவு பகுதி யில் வெளியான நாச்சியா தீபம், தூரிகை போன்ற கையெழுத்து சஞ்சிகைகளும் குறிப்பிடக் கூடியவைகளாகும். இவைகள் அனைத்தும் எமது பார்வைக்கு கிட்டியமை யால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவை களை விட, வேறு சஞ்சிகைகள், கை யெழுத்துப் பிரதிகளாக வெளியிடப்பட்டு இருக்கலாம். இலக்கிய விடயங்களை உள் ளடக்காது பாடசாலை பாட உள்ளடக் கத்தைக் கொண்டு பாட நூல்கள் பல வெளி யிடப்பட்டுள்ளன. இவை, கல்வி தொடர்
பானவையால் இங்கு குறிப்பிடப்பட
வில்லை.
1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப் பகுதியில் நூல் சஞ்சிகைகள், இலக்கிய முயற்சிகள் தொடர்பாக அமைப்பு ரீதி யிலும், தனிப்பட்ட ரீதியிலும் வேகமான பல முயற்சிகள் இடம்பெற்றன. இளம் எழுத் தாளர்களின் ஆர்வம் இங்கு அதிகமாக காணப்படுகிறது. ஐ.ரவுற்மத்துல்லாவை தலைவராகவும், சாஹிரா சரீப்தினை செய லாளராகவும், நாச்சியாதீவு பர்வினை அமைப்பாளராகவும் கொண்டு இயங்கிய அநுராதபுரம் கலை இலக்கிய வட்டம் எப். ஆர்.பரீட்வுற், ஜன்ஸி கபூர், ஏ.பி.எம்.அன் சார், எஸ்.சாஜஹான் ஆகியோரை ஆசிரி யர்களாகவும் கொண்டு அநு-ராகம் என்ற கலை இலக்கிய மும்மாத சஞ்சிகையின் நான்கு இதழ்களை வெளியிட்டு உள்ளது. இன்று இச்சஞ்சிகை ஜன்ஸி கபூரை ஆசிரி யராகவும், அநுராதபுரம் ரஹம்மத்துல் லாவைத் தலைவராகவும், எம்.ஆர்.பரிட்வற்
ஐ செயலாளராகவும், ஏ.எஸ்.முஸம்மிலை பொருளாளராகவும் கொண்டு அநுராகம் கலை - இலக்கிய மும்மாத இதழ் வெளி யிடப்படுகிறது. ஏ.எஸ்.ஷர்மிலா பேகத்தை ஆசிரியராகவும், எல்.வளிம் அக்ரமை உதவி ஆசிரியராகவும், எம்.சி.நஜிமுதீன், ஜே.எம்.எப்.சமான், எம்.ஐ.பிர்னாஸ், எம். சவற்ரின் அஹமட் ஆகியோரை சஞ்சிகைக் குழுவாகவும் கொண்டு அநுதாரபுரம் நட் சத்திர நற்பணி மன்றம் என்ற அமைப்பு "படிகள்' என்ற சஞ்சிகையின் 11 இதழ் களை வெளியிட்டு உள்ளது. படிகள் சஞ்சி கையை இப்பகுதியில் இன்று தொடர்ந்து வெளியிடப்படுகின்ற ஆர்வமுள்ள இலக்கிய முயற்சியின் வெளிப்பாடாகக் குறிப்பிடலாம். இவைகளே அநுராதபுரத்தின் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் ஆகும். இப்பிரதேச எழுத்தாளர் ஆக்கங்க ளோடு வேறு பிரதேச எழுத்தாளர் ஆக்கங்க ளோடும் சிறப்பான மறு பிரசுரங்களும் இச் சஞ்சிகைகளில் இடம்பெற்று வருகின்றன.
கெக் கிராவையை பிறப்பிடமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாள ரான கெக்கிராவ சஹானாவின் ‘ஒரு தேவதைக் கனவு சிறுகதை நூல் வெளி யிடப்பட்டுள்ளது. இதனை இப்பிரதேசத்தில் வெளியிடப்பட்ட முதலாவது சிறுகதைத் தொகுதியாகக் கொள்ளலாம். கவிப்பேரரசு பத்மழுநீவைரமுத்துவின் வாழ்த்துரையோடு சென்னை மாங்குயில் பதிப்பக வெளியீடாக 2005ஆம் ஆண்டு கெக்கிராவ சஹானா வின் கவிதைகள் இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்' என்ற தலைப்பில் வெளியிடப் பட்டது. அண்மைக்கால அநுராதபுரம் பகுதி இலக்கிய வெளியீடுகளுக்கு கணினி அடிநாதமாக இயங்கி வரும் எம்.ஏ.எம்.

டில்ஷானை தலைவராகக் கொண்டு இயங் கும் ப்ரிஸ்ம் சமூக அபிவிருத்தி அமைப்பு ப்ரிஸ்ம்' என்ற கல்வி சஞ்சிகையை வெளி யிட்டு உள்ளதோடு நாச்சியாதீவு பர்வீன் கவிதைகளை சிரட்டையும் மண்ணும்" என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளது. இந்த மண்ணின் பின் தங்கிய கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ள, ஒரு காலத்தில் இப்பகுதியில் ஆசிரியராகக் கடமையாற்றிய ப. ஆப்தீன் எழுதிய 'கருக் கொண்ட மேகங்கள்’ என்ற நாவலை இப் பிரதேச முதல் நாவலாக உரிமை கொண் டாடுவதில் தவறு இருக்க முடியாது என்று எண்ணுகின்றேன்.
இப்பிரதேசத்தில் சுமார் 30 வருட காலத்துக்கு மேல் வாழ்ந்த 73 வயதான பழம் பெரும் எழுத்தாளர் அநு.வை.நாகராஜன் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதோடு இப்பகுதியில் முதன் முதலாக சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர் என்ற பெருமையையும் அவர் படித்த, தொழில் செய்து வாழ்ந்த அது ராதபுரம் மண் சொந்தமாக்கிக் கொள்வதை அநு.வை.நாகராஜன் அவர்கள் கூட மறுக்க மாட்டார் என்று சொல்லத் தோன்றுகின்றது. இத்தோடு சைவப்புலவர், இலக்கிய வித்தகர் போன்ற கல்வி, கெளரவ விருதுகளையும் இப்பகுதியில் முதன் முறையாக பெற்றுள்ள இவரது ஒருகாலத்துச் சிறுகதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியின் சிறுகதைகள் அனைத்தும் இவர் இங்கு வாழ்ந்த காலத் தில் எழுதப்பட்டவையாகும், அண்மையில் நடைபெற்ற அநுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலய வைர விழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்
19
ܢ -- -- -- -- -- -- -- -- -- -- -- 2
அதுரருபுரம் என்ற பெயர்
அநுராதபுரம் என்ற பெயர் வந்த விடயம் தொடர்பாக பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. 'அநுராத' என்ற அமைச்சர் இப்பிரதேசத்தைக் குடியேற்றப் பிரதேசமாக ஆக்கிய தன் காரணமாக இப்பிரதேசத்திற்கு 'அநுராத கிராமய என்று பெயர் சூட்டப்பட்டதாக மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு இடத்தில் 'அநுராத" என்ற இளவரசன் இங்கு வசிக்க வந்ததாக சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு ஆட்சியாளர்களும் வசித்து அபிவிருத்தி செய்தமையால் அநுராதபுரம் என்ற பெயர்
வந்ததாக மகா வம்சம் சொல்லுகின்றது.
مح ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ ------------
பட்ட இவர், இன்றும் இந்த மண்ணையும் இப்பிரதேச இலக்கியத்தையும் ஆர்வத்தோடு நேசிப்பதை இங்கு குறிப்பிடவே வேண்டும்.
இங்கு பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த பின்னர் இம்மாவட்டத்தில் உள்ள 64 முஸ்லிம் தமிழ் பாடசாலைகள் தமிழ்தின விழாக்கள், கல் லூரி வெளியீடுகள் போன்றவற்றின் ஊடாக இலக்கிய நிகழ்வுகள் தொடர்கின்றன.
இன்று இப்பகுதியிலும், தேசிய அள விலும் வெளியாகும் சஞ்சிகைகளிலும், வெளியீடுகளிலும் நூற்றுக் கணக்கில் எழுதி வரும் இப்பிரதேச எழுத்தாளர்களின் ஆர் வத்தைப் பார்க்கும் போது அநுராதபுர பிர தேச இலக்கியம் இன்னும் வளர்ச்சி பெறும், செழுமையாகும், விருத்தியுறும் என எதிர் பார்ப்பது ஆரோக்கியமான எதிர்வு கூறலாக இருக்கும் அல்லவா?

Page 12
20
எண்ணியவையனைத்தும் நீர்க்குமிழியாய் பொசுக்கென்று உடைந்து விடுமென்று யார்தான் நினைத்திருப்பார்கள்?
ஏன்தான் என் வாழ்வில் இத்தனை தோல்விகளோ..?
பிறந்தது முதல் எதை நான் அநுபவித்தேன்? உறக்கம் மட்டும் சலனமில்லாதிருக்கும் கனவுகளில் மட்டும் அதிர்ஷ்டம் குடிகொள்ளும். விழித்ததும் அவை விபத்துக்குள்ளாவதுதான் ஏனென புரியவில்லை.
ஏன் நான் நேசித்தது மட்டும் நெருங்காமல் போனது? தொட முடியாதவைகளில் மட்டுமா என் பிரியம் பிறக்கிறது?
அருவமாகி.
- ஏ.எஸ்.ஷர்மிலா
நான் எப்படி பழைய நானாவேன்? எதைப் போட்டு எனைக் கழுவுவேன்? பழையது போலவே எப்படிச் சிரிப்பேன்?
ஏன் என் வானத்துச் சூரியன் மட்டும் இடிந்து விழுந்து போனது?
என் சூரியன் எதற்காக எனை சாம்பலாக்கியது?
ஒர் பீனிக்ஸ்ாய் மீளவும் எப்போது உயிர் பெறுவேன்?

21 தீயாய்த் தகித்தது மனசு, கவிழ்ந்து படுத்தாள் நிசாயா. கண்ணிர் தங்கு தடையின்றிப்
பொங்கிப் பெருகி தலையணையை நனைத்தது. சுற்றியிருந்த எல்லாமே சுத்த சூன்யமாய், பொட்டல் வெளியாய். கட்டாந்தரையாய், வெறு நிலமாய் ஆகிவிட்ட மாதிரியிருந்தது.
ஏன். ஏன் பிறந்தேன்?
ஏன். ஏன் வளர்ந்தேன்?
ఉb
நெஞ்சுக் கூட்டுக்குள் எரிமலை * 涉 烧 ፳) ‰ வெடித்துச் சிதறிற்று. ea
அவள் போய்விட்டாள்
à là 2
போயே விட்டாள்! 密 NVü2 . & 6آکاک அவள் لساك *
• لا6 அருமைத்தாய். ع
மார்புச் சூட்டில் குளிர் நிறைந்த தாய். மடியில் கிடத்தி. மணிக்கணக்காய் தலை கோதி. வழிந்த விழி நீரைத் துடைத்த அருமைத் தாய்!
அவளை விட்டுப் போய்விட்டாள்.
இப்போ.
அவள் தாய் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கப்பால் எங்கோ ஒரு மாளிகையின் அடிப்படிக்குள், நெஞ்சில் நெருப்போடு, பம்பரமாய்ச் சுழன்று, சுழன்று வேலைகளைச் செய்துகொண்டிருக்கக்கூடும்
நிசாயாவின் அடிவயிற்றிலிருந்து நெருப்புப் பந்தொன்று எழுந்து. வளர்ந்து நெஞ்சை அடைப்பது போலக் கனன்றது.
நேற்றைய இரவின் கடைசி நிமிஷங்களில் கூட.
தாயின் காலடியில் விழுந்து கதறினாள் நிசாயா,
'உம்மா. ஏன்ட தங்கம்மா.. என்னயும் தம்பியையும் இங்க விட்டுட்டுப் போயிராதீங்கம்மா. ஒங்கள விட்டா எங்களுக்கு யாரும்மா இரிக்கா..? ம்மோவ். என்ட உம்மா நாங்க தனிச்சுப் போயிருவம்மா. நீங்க இல்லாட்டி யாரும்மா எங்களுக்கு சோறு தருவா? இனி எதுவுமே கேட்டு ஒங்ககிட்ட கரச்சல் பண்ணமாட்டேம்மா. என்ன விட்டுட்டு போவ வேணாம்மா. ஏன்ட தங்கம்மா போவ வேணாம்மா."

Page 13
22
விம்மி, ஏங்கி, கண்ணிர் வழிய வழிய கதறிக் கசிந்தாள் நிசாயா.
உம்மா மசிவதாயில்லை.
ஒருவேளை எல்லா உணர்வுகளுமே கல்லான பின்னால்தான் பெண்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுச் செல்கிறார்களோ? இல்லை கல்லான பெண்கள் தாம் ஜடமாகிப் போகின்றார் களோ? பெத்த மனம் கல்லாகிப், பிள்ளை மனம் பித்தாகிய நிலையில் இன்று ஒரு
las rur?
***
கந்தல் சேலைக்குள் ஒரு பந்து போலச் சுருண்டு கிடக்கின்றான் தம்பி. ஐந்தே வயது நிரம்பிய பிஞ்சுப் பாலகன். இந்த வருஷம்தான் உம்மா அவனைப் பள்ளியிலே சேர்த்துவிட்டா. இன்னும் பச்சைக் குழந்தையாட்டம் முகம்.
தாயின் பரிவும், பிரிவின் கொடுமை யும் அவனைக் கொஞ்சங்கூடத் தாக்க வில்லை போலும். கனவிலும் சிரித்துக் கொண்டிருக்கின்றான்.
தம்பியின் தலையைக் கோதி இறுக அனைத்துக் கொண்டாள் நிசாயா.
அழுகை அழுகையாக வந்தது.
இன்னும் வாப்பா வரவில்லை.
இப்போ எத்தனை மணியிருக்கும். எழுந்து நேரத்தைப் பார்க்கும் துணிவும் அவளுக்கில்லை. சின்னலாம்பு தந்த
வெளிச்சம் அந்தக் குடிசையின் இருட்டைப் போக்கத்தக்கதாய் இல்லை.
சுற்றிலும் ஒரு அமானுஷ்ய மெளனம்.
6JITUT -
உம்மாவைப் பிரிந்த சோகத்தை இப்போ கள்ளுத் தவறனையில் போக்கிக் கொண்டிருப்பார்.
'உம்மா நீங்க இல்லாம இனி நான் என்ன செய்வேன். என்ற எண்ணம் ஒரு கூரிய அம்மைப் போல் அவளது உயிரைத்
தைக்க கண்ணிர் நிறைந்த உம்மாவின்
முகம் அவள் கண்களுக்குள் எழுந்தது.
உம்மாவை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கத் தோனும் நிசாயாவுக்கு.
கருணையை, கணிவை, பாசத்தை தவிர அந்தக் கண்களில் வேறு எதனையும் அவள் கண்டதில்லை.
“இன்னிக்கும் சோறாக்கலியாம்மா." புத்தகப் பையை எறிந்துவிட்டு பசியோடு அடுப்படிக்கு ஓடி வந்தாள் நிசாயா.
"இல்லம்மா. பின்னேரத்துக்கு வாப்பா வந்திருவாரு. உடன அரிசி வாங்கி ஆக்கித் தந்துருவேன்.”
"என்னம்மா எனக்கு ரொம்பப் பசிக்குதும்மா."
*ஏங் கண்ணில்ல. கொஞ்சம் பொறுத்துக்க. இப்ப வாப்பா வந்துருவாரு"
“D boprsil'

‘என்ன நிசாயா?"
"இன்னிக்கு ஸ்கூல்ல நல்ல வேலை யொன்று நடந்திச்சில்லையா."
'ssö16011ðDm 51-sögléél..."
"தம்பி இண்டவெல்லுக்கு மடி நிறைய கொவ்வக்காய்கள வச்சு திண்ணுட்டு இருந் தாம்மா, புள்ளகல்லாம் கிளி. கிளின்னு இவனுக்கு பட்டஞ் சொல்லி கிண்டல் பண்ணிட்டிருந்தாங்கம்மா."
"ஏண்டாம்பி இப்படிச் செஞ்சே."
“ரொம்பப் பசிச்சிதும்மா. அன்சார்ட பாண் தான்னு கேட்டேன். ஏன்டா நீ எனக்கு எப்பயாச்சும் தந்திருக்கியான்னு திருப்பிக் கேட்டான்மா. பைப்புல வயிறு நெறயத் தண்ணி குடிச்சும் பசி போவ லம்மா. யாருகிட்டயும் கைநீட்டி வாங்கக் கூடாதுன்னு நீதானேம்மா சொல்லி யிருக்கே. அதான் பேசாமப் போயி கொவ்வப்பழம் பிச்சு தின்னேம்மா"
பெற்ற வயிறு சுட்டது. வாப்பா வரட்டும்.
மெய்தான் நாலு நாளா சோற்றுப் பானை அடுப்பில் ஏறவில்லை. இன்னிக் காவது யாஅல்லாவற்!
"இந்தப் புள்ளையல்ட பசியாவது அடங்க வழி பிறக்காதா' தாய் மனசு பதறிற்று.
வாப்பா வந்தார். தள்ளாடித் தள்ளாடி.
‘அடியே செலயா. சாப்பாட்ட
கொண்டு வாடீ. ஏய் செலயா. செவிடீ."
23
"புள்ளங்க கூடப் பட்டினிங்க. கூலி வேல செஞ்சு கெடக்கிற காசக் கொண்டு போய் குடுத்து சாராயத்தைக் குடிக்க எப்படிங்க மனசு வருது." அவளால் நினைக்கத்தான் முடிந்தது. வார்த்தைகள் வெளியே விழுந்தால் அவள் தொலைந் தாள்.
வறுமையின் கூர்மை வாழ்க்கை யைக் குத்திக் கிழித்து ரணகளமாக்க. பசியும், பட்டினியும், இல்லாமையும், இயலாமையும் பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு உயிர் வரைக்கும் வலித்தது. அவளால் பொறுக்க முடியவில்லை.
முடிவில்.
பன்னிரண்டே வயதான நிசாயாவிடம் முழுக்குடும்பப் பாராத்தையும் போட்டுவிட்டு நெஞ்சைக் கல்லாக்கி அவள் புறப்பட்டு விட்டாள். இல்லை போவதற்கு நிர்ப்பந்திக் கப்பட்டாள்.
* :
நான்கு வருடங்கள்.
ஒட்டக ஊரிலிருந்து, ஒட்டகமாய் உழைத்துழைத்து அக்கறையாய்ச் சேர்த்த ஆறு லட்சங்களோடு இன்று செலயா.
ஊருக்கு வரும் அந்த எயார்போர்ட் வானில் விலையுயர்ந்த பொருட்கள் கண்களில் கோடிக் கனவுகள்.
பாகை வளைவில் தெரிந்தது அவள் வீடு. எந்த மாற்றமுமில்லாமல் அதே பழைய தோற்றத்தோடு வீற்றிருக்கின்றது

Page 14
24
அந்தக் குடிசை. படபடத்துத் துடிக்கின்ற இதயத்தின் ஒலி அவள் காதுகளுக்குக் கூட நன்றாகக் கேட்கிறது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இறங்கிய வளுக்கு எதிரே வந்தாள் பக்கத்து வீட்டு
6.
*செலயாம்மா. செலயாம்மா. ஒம் மவ நிசாயா கெமறிப் புள்ளையாகி. எப் பிடிம்மா வாயால அத நான் சொல்வேன்.? அந்த நாசமாப்போன பய வெறவு வெட்ற மொய்தீன் புள்ளய நாசமாக்கிப் போட் டாம்மா. அவளு இப்ப சின்னப்புள்ள நன்னடத்தைப் பள்ளியில் இருக்காளாம்."
நிலை குலைந்து தடுமாறி விழப் போன செலயா குடிசையின் நிலைப் படியைப் பற்றிக்கொண்டாள்.
D-6TC36T -
மல்லாந்து ങ്കങ്ങഖങ്ങി.
படுத்துக்கிடந்தான்
பின்னால்.
நின்ற தென்னையிலிருந்து 'கள்ளுப் பானையை இறக்கிக் கொண்டிருக் கிறான் அவள் சின்ன மகன்.
அவளைப் பொறுத்தவரைக்கும் அவளும் பூமிக்குள் இறங்கிக் கொண்டிருக் கிறாள்.
வெளிவந்து விட்டது
நாச்சியாதீவு பர்வீனின்
சிரட்டையும் மண்ணும் கவிதை நூல்
ப்ரிஸ்ம் 87/24, தர்மபால மாவத்தை, அநுராதபுரம்
 
 
 
 

25
இவக்கியம்
- சிறு அறிமுகம் -
- ஹொரவபொதான எம்.சி.றஸ்மின்
(அ) இலக்கியம்’ எனும் பதத்தை எளிதில் வரைவிலக்கணப்படுத்துவது அல்லது வரையறை செய்வது சாத்தியம்ானதல்ல. சிலர் இதனை நல்ல பண்பை வளர்ப்பதற் கான ஊடகம் என்பர். மெக்சிம் கார்க்கி போன்றோர் மனித அழகுணர்ச்சி, அறி வாற்றல் என்பனவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரம்சமாகக்
கருதுவர்.
18ம் நூற்றாண்டின் தலைசிறந்த திறனாய்வாளரான கலாநிதி, சாமுவெல் ஜொன்சன் "இலக்கியம் என்பது ஒளியைப் போன்றது. எல்லோரும் ஒளியென்பதை அறிவார்கள் என்றாலும் ஒரு சிலரே அதைப் பற்றிச் சொல்வார்கள். நாம் கற்பனா வளம் பொருந்திய கவிதை, நாவல், நாடகம் போன்றவற்றைப் படித்துவிட்டு அவற்றை இலக்கியம் என அடையாளப்படுத்துகின்றோம். இவை மனித அனுபவத்தினைப் பிரதிபலிக்கின்றன” என்பார்.'
இலக்கியம்’ எனும் ஒன்று உண்டு எனும் பொது முடிவில் ஒற்றுமைப் படுபவர்கள் அதற்கு ஒரு வடிவம் இருப்பதனை மறுக்க முடியாது. இலக்கியம் வெவ்வேறு அடிப்படைகளில் மனித விழுமியங்கள், வரலாறு, உலகம் தொடர்பான புறத்தோற்றம் போன்றன பற்றிப் பேசும் இலக்கியத்தில் “மொழி’ எனும் அம்சம் மிக முக்கியமானது. அது பயன்படுத்தப்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டே சாதாரண எழுத்துக்களில் இருந்து இலக்கியம், கவிதை, நாவல், சிறுகதை என்பன வற்றை இலகுவாகப் பிரித்தறிகின்றோம்.
உருவவாதிகள் (Formalist) குறைந்த அல்லது கூடிய இரட்டைத் தன்மை G)55mtañsTL- 36gp15563)6NT gQgSI Luuu6öTLu(6gögsjub 6T6öigpulib (Imagerry, Rhythm, SynteX, Metre, Rhyme, Narative, Techniques) gyep6 5lölóla)LGu 52(5 alaps a Girarsi தொடர்பைக் கொண்டிருக்கும் எழுத்துருவே இலக்கியம் என்றும் சொல்வர்.”
குறிப்பிட்ட கலாசாரப் பாரம்பரியங்களை அடியொட்டி ஏதோ ஒரு கருத்தினை அழுத்திச் சொல்வதாகவும் இலக்கியங்கள் அமையும். உதாரணமாக சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றை குறிப்பிடலாம். மாற்றமடையக்கூடிய மரபு முறைகளை உள்வாங்குவதுடன் அமைப்படிப்படையிலும் அது மாற்றமுறும்.

Page 15
26
01. LITERATURE AS EXPERIENCE - AN ANTHoLoGY - 1979. HAR coUT BRACE JovANovicн, INC - NEw voRк. (Р- 1-2)
02. LITERARY THEORY AN INTRUDUCTION, (TERRY EGLECTION) BLACKwELL, USA - 1983 (P-
2,3)
ஆ) எழுத்தாளனின் சமுகப்
பின்னணி
பிரெஞ்சு எழுத்தாளர் அன்று udtreouTeš6iv (Andre Malrlaux) araöruanui மனிதர்களிடையே மொழிசார் உந்துக் கள் இருப்பதாகக் கூறுகின்றார். கதை சொல்வதனூடாக அல்லது மனனழுச்சி களை வெளிப்படுத்துவதனூடாக மனித அனுபவத்திற்கான ஆழமான துலங்கல் களை அவன் ஒழுங்குபடுத்திக் கொள்வ தாகவும் அவர் கருதினார். (Organizing Our Deepest responses)
ஒவ்வொரு எழுத்தாளனும் சமுகப் பின்னணி’ எனும் வட்டத்தினுள் நின்றே தன் படைப்பை வெளியிடுகின்றான். சமுகப் பின்னணி எனும் போது அவன் வாழும் சூழல், அதில் வாழும் மக்கள், அவர் பின்பற்றும் சமய, பண்பாட்டு அம்சங்கள், அவர்களிடையே நிலவும் அரசியல், பொருளாதார முறைமைகள் என்பன இதில் அடங்கும்.
எழுத்தாளன் முன்னர் குறிப்பிட்ட “சமுகப் பின்னணி எனும் அம்சத்தி லிருந்து விடுபடுகின்ற பட்சத்தில் எழுத் தாளன் எனும் தகுதியும் அவனை விட்டும் நீங்கி விடுகின்றது. எனவே அரிஸ்டோட்டில் சொல்வது போன்று
மனிதன் ஒரு சமுகப் பிராணி எனக் கொண்டால் சமயம், பண்பாட்டம் சங்கள், மரபுகள், அரசியல், பொருளா தார முறைமைகள் என்பனவற்றின் கட்டுப்பாடு அவனிடம் இருந்தே ஆகும்.
3) பின்னணியே அவனுடைய
எழுத்தாளனின் சமுகப்
இலக்கியத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது.
"பண்பாடு, சமயம், ஆழ்ந்த கருத் 3 துக்களைத் தருதல், வேகமான உணர்ச்சி
களையும் பலனையும் அடங்கச் செய்தல், வாழ்க்கையின் நன்மைகளை மிகுதிப்படுத்துதல் இவையெல்லாம் இலக்கியத்தின் பணிகள்” என்று ஐ. ஏ.ரிச்சர்ம்ஸ் என்பவர் குறிப்பிடுவார்.”
அதேவேளை வில்லியம் டெம்பிள் எனு மறிஞர் "சமூகத்திற்குப் பயன்படாத இலக்கியம் வெறும் ஒலிக்கூடமே? என்பார்." இவ்விரு கருத்துகளும் இலக் கியத் சமுகத்திற்கானது என்பதும், சமுக மொன்றைப் பின்புலமாகக் கொண்டி
ருக்க வேண்டும் என்பதும் புலனாகும்.
03. (1992) இலக்கிய ஏந்தல்கள் / நறுமலர்
பதிப்பகம், சென்னை, பக்கம் 09.
O4. läsas Lb 10.
சமூகப் பின்னணியொன்றினைக் கொண்டிராமல் எழுத்தாளன் தோன்று வது சாத்தியமற்றது. அவ்வகையில் எழுத்தாளனின் சமூகப் பின்னணியே அவன் படைக்கும் இலக்கியத்தின்

தன்மையினைத் தீர்மானிக்கின்றது என்றும் கொள்ளலாம். எடுத்துக் காட் டாக பாரதியை எடுத்துக் கொண்டால் நவீன கவிதையின் தோற்றுவாயாகவும், கவிதையை சமூக மேம்பாட்டிற்குப் பயன்படுத்திய திகழ்ந்தமைக்கு அவனுடைய சமூகப் பின்னணி காரணமாய் அமைந்ததைக்
முன்னோடியாகவும்
குறிப்பிடலாம்.
பாரதி காலத்தில் இந்தியா அந்நிய ராட்சியின் கீழிருந்தது. மக்கள் சுதந்திரத் துடன் கூடிய வாழ்வை வேண்டி நின்றனர். அவர் காலத்திலும் அவருக்கு முற்பட்ட காலத்திலும் பெண்கள் போதிய சமூக அந்தஸ்தினைப் பெற்றி ராத துரதிஷ்ட நிலை காணப்பட்டது. அச்சியந்திரத்தின் தோற்றத்துடன் நவீன கருத்துக்களை அச்சுவாகனமேற்றுவதற் கான சூழல் ஏற்பட்டது. சுதேசிகள் விதேசிகளுக்கு விசுவாசமாக நடக்கத் தலைப்பட்டனர். இவை பாரதியின் எழுத்துக்களுக்கு பின்னணியாய் அமைந்த விதத்தை பேராசிரியர் வீஅரசு எடுத்தெழுதுகின்றார்.'
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவது போன்று சங்க காலத்திற் குச் சற்றுப் பிற்பட்டதாகவும், மணி மேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற் றிற்கு முற்பட்டதாகவும் திருக்குறள்" கொள்ளப்படும் பட்சத்தில் வள்ளுவர் தாம் வாழ்ந்த சமுகச் சூழ்நிலையே அத் தகைய இலக்கியத்தை அவர் படைப் பதற்கு காரணமாய் அமைந்ததென்பது இலகுவாகிவிடும்.
27
வள்ளுவர் காலத்துச் சமுகப் பின் னணியைச் சுருக்கமாக நோக்கினால் இல்லறத்தை நல்லறமாகவும், சமூக ஒழுங்கீனங்களை நல்லொழுக்கமாகவும் மாற்றியமைக்க வேண்டிய தேவை அப் போது இருந்தது. அற்ப சடங்கு முறை கள் வெகுவாக மதிக்கப்பட்டதால் பெண்ணுயிர்கள் பலிகொள்ளப்பட்ட மடமையை மாற்றியமைக்க வேண்டிய
அவசியம் இருந்தது. ஒரு மணப் பெண் டிரைப் புகழ்ந்து பேசும் வள்ளுவர்,
'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே (திருக்குறள் - 57) என உயர்த்துகின்றார்.
தலை'
கல்வி, அரசியல், குடும்பம், பொரு ளாதாரம், சமயம், உளவியல் என வாழ் வின் சகல கோணங்களையும் வள்ளுவர் நோக்கியிருக்கின்றார். அவர் நோக்கி வெளிப்படுத்தும் அத்தனை இடங் களிலும் அக்காலச் சமூகத்தின் பின் புலத்தைக் காணலாம். சுமார் இதே கண் ணோட்டத்தில் சித்தர் பாடல்களின் உள்ளடக்கத்தையும், அவற்றை அவர் காலச் சமூகமும், அவர்களின் வாழ்க்கை முறையும் தீர்மானித்த விதத்தையும் ஆராயலாம்.
வீ. அரசு (2001) தமிழியல் ஆய்வுகள் -
இளவழகன் பதிப்பகம் - சென்னை. பக்கம் -
சிறுகதையுலகில் (தமிழ்) அழியாப் பெயர் பெற்றவர் புதுமைப்பித்தன். சிற்பியின் நகரம், சாப விமோசனம், செல்லம்மாள் போன்ற கதைகளின் மூலம் வாசகர் மனதில் அழியா இடம்

Page 16
28 பிடித்தவர். தர்மம், ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளையும், தேசியம் தெய்வீகம் சார்ந்த மதிப்பீடுகளையும் சமூகக் கட்டுப்பாடுகள் சார்ந்த மதிப்பீடுகளை யும் எவ்விதமான சார்பும் தயக்கமும் அற்ற விதத்தில் கேள்விக்குட்படுத்தி யவர் புதுமைப்பித்தன்.
அவர் எழுதத் தொடங்கிய கால கட்டம் இந்திய அரசியலில் மிகவும் பர பரப்பானது. காந்தி தலைமையில் விடு தலைப் போராட்டம் தீவிரமடைந்த கால கட்டம். சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு சமூக நீதிகள் தீவிரமாகப் பேசப்பட்ட காலம். கவிதைத் துறை யிலும் கூட புராண அல்லது புராதன மதிப்பீடுகள் - கேள்விக்குறியாக்கப் பட்ட காலம். ஆங்கில மொழி மூல மான, கல்வியின் வாயிலாக மேற்குலகச் சிந்தனைப் போக்குகளின் தாக்கம் காரணமாகப் புதிய சமூகச் சூழல், இலக் கிய முறை என்பன ஏற்பட்ட கால கட்டம். ஆக, இவற்றின் தாக்கத்தை புதுமைப்பித்தனின் படைப்புகளில் காணலாம். துன்பக்கேணி, காலனும் கிழவியும், பொன்னகரம் போன்ற கதைகளை உதாரணங்களாகக் குறிப் பிடலாம்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சோழர் காலம் சகலவிதத்திலும் பொற் காலம் எனப்படுகின்றது. அரசியல்துறை சிறப்பாகச் செயற்பட்டது. ஆட்சிபுலம் விரிவடைந்தது. மக்கள் சுயாதீனமாக வாழ முடிந்தது. சமயங்கள் வளர்வதற் கான, வளர்ப்பதற்கான சூழல் ஏற்
பட்டது. அரசர்கள் வள்ளல்களாகவும் இருந்தனர். அறிஞரவைகள் செயற்பட்டன. நெல்
ஒவ்வொருவர் ஊரிலும்
தானியங்கள் பல்கிப் பெருகின. வீரம் போற்றப்பட்டது."
மேற்குறிப்பிட்ட சமுகப் பின்னணி யின் தாக்கத்தினை சோழர் காலக் காப்பியங்களில் காணலாம்.
"அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்.' பெரிய புராணத்தில் விருந்துபசாரத்தில் திறம் படச் செயற்படும் இல்லத்தரசியினைச் சிறப்பித்துக் காட்டுகின்றார் சேக்கிழார். இத்தகைய அர்ப்பணிப்புள்ள பெண் அக்கால சமூகத்தில் இருந்திருக்கிறாள். இதே தரத்திலான சமூகச் சூழ்நிலையை
'பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்து மன்றி விளைவன யாவையோ" எனும் பாடலினூடாக கம்பனிடத்தேயும் காணலாம்.
来
ராஜமாத்தாண்டன், புதுமைப்பித்தனும் கயிற்றருவும், தமிழினி பதிப்பகம். சென்னை. (2000)
Läs asb - 11.
சோழர் காலச் சமுதாய நிலை, (ஆய்வுக்
கோவை) கார்த்திக்கேயணி - பக்கம். 57.
கலைஞனின் அனுபவத்தை கலைப் படைப்பிலிருந்து முழுமையாக உணர்ந்து கொள்ளும் போது நிறைவான கலை
இன்பத்தை நுகர முடியும். எனவே,
படைப்புக் கலைஞன் கலை அடிப்படை

யில் பெறும் வெற்றி அவனது அனுபவ உலகமாகும்." இக் கருத்து இலக்கியத்தி னுள் மனித அனுபவத்தின் கலப்பு இருப்பதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. அனுபவம் எனும் போது அவன் வாழும் சமூகப் புலத்திலிருந்து அவன் பெற்றுக் கொள்ளும் அறிவையே அது குறிக்கின்றது. எம்.வேதசகாயக் குமார் இன்னொரு இடத்தில் 'கலைஞர் களைச் சூழல் உருவாக்குவதில்லை. ஆனால் அவர்களின் கலைச் சாதனை யைத் தீர்மானிப்பதில் அது ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது" என்கின்றார்.
இலக்கியத்திலே பழைமைக்கு ஒவ் வாத அளவில் புதுமை சாத்தியமாகிறது. இந்தப் புதுமை இந்தத் தலைமுறைக்குத் தான் புதுமையே தவிர, அடுத்த தலை முறைக்குப் பழைமைதான். அதற்குக் காரணம் அடுத்த தலைமுறை தோன்று கின்றபோது இன்னுமொரு புதுச் சமூகப் பின்புலம் தோன்றுவதேயாகும். எனவே சமூகப் பின்னணி இலக்கியத் தின் தன்மையை தீர்மானிக்கிறது எனும் வாதம் நியாயமானதே. எடுத்துக் காட் டாக மேலும் சில உதாரணங்களை நோக்கலாம்.
ஒர் கடல் சார் கிராமத்தின் போராட்டமிகு வாழ்க்கைச் சூழலில் ஏழைக் குடும்பம் கடலோடி ஒட்டித் தவிக்கும் தவிப்பின் வெளிப்பாடாக கைலாசநாதனின் கடற்காற்று அமை கின்றது. முற்றிலும் ஒரு கிராமத்தின் உயிர்த் துடிப்பாக கதை அமைந்துள்ளது. கதையில் வரும் தோமஸ், ஜேக்கப் போன்ற பாத்திரங்கள் உயிருள்ள
கற்பனைப் பாத்திரங்கள். சமூகத்தில் |
29 ஆசிரியர் அவதானித்த பாத்திரங்கள்.
கசின் ஆசிரியத் தொழிலோடு நெருக்கமுடையவர். அன்ரன் செக் கோவ் தன்னுடைய இலக்கியங்களில் வைத்தியத்துறை சார்ந்தவர்களையே பாத்திரங்களாக நடமாட விட்டார். அது போல அவர் கல்வியோடு தொடர்புடை யவர்களை நடமாட விட்டார். அவர் வாழ்ந்த சமூகத்தில் படித்தவர்களும் தொழிலின்றி அல்லலுற்றனர். வறுமை யும் மக்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றியமைத்தது. மக்கள் குறித்த தொழிலொன்றுக்காகவே தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர். தன்னம் பிக்கை அவர்களிடம் குறைவாகக் காணப்பட்டது. இந்தச் சூழல் அவ ருடைய 'சகட யோகம்’ நாவலின் உள் ளடக்கமாக அமைந்திருக்கிறது. அதில் வரும் சதாசிவம் - சந்திரா, மகாதேவன் - சாரதா, சண்முகம் - ராஜேஸ்வரி ஆகிய மூன்று காதல் ஜோடிகளின் அசல்களை அன்றைய சமூக அமைப்பில் கசின் கண்டுகொண்டார்.
எம். வேதசகாயக்குமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும். (2000) தமிழினி பதிப்பகம் - பக்கம்
S.
பக்கம் 05
க.நா.சுப்ரமணியம், இலக்கியத்திற்கு ஓர் இயக்கம். காவ்யா, (1985) பக்கம் 05.
ஒரு படைப்பைத் திறனாய்வு செய்ய முற்படும் ஒருவன் எழுத்தாள னின் காலம் பற்றியும் சமுகத்திலிருந்து அவன் பெற்ற பாதிப்புக்கள் பற்றியும் அறிந் திருக்க வேண்டுமென்பார். இங்கு காலம்

Page 17
30 சமுகப் பாதிப்பு என்பன எழுத்தாளனின் சமுகப் பின்னணியையே சுட்டுகின்றது. எனவே படைப்பொன்றில் சமுகப் பின்னணி என்பது மிகவும் இன்றியமை யாதது.
ஈ) சமுகப் பின்புலமற்ற
படைப்புக்கள்
இலக்கியம் தொடர்பான சமுக வியல் அல்லது சமுதாயவியல் அணுகு முறை இலக்கியத்தின் உருவாக்கத்திலும், அதன் பொருள் அமைவுகளிலும், மக்கள் மத்தியிலே அதன் நடமாட்டத்திலும் சமுதாயத்திற்கு முக்கியமான இடமும் பங்கும் உண்டு" எனக் கூறும். இலக் கியம் என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடாகப் பிறக்கின்றபோது
அல்லது கற்பனாவாதத்தின் பிரசவமாக அமைகின்ற போது கனவு நிலையில் படைப்புக்கள் ஆக்கப்படுவதுண்டு. நவீன கவிதைகளில் காதலைச் சுட்டி ஆக் கப்படும் கவிதைகளில் இத்தன்மை களைக் காணமுடியும். அவை வெறும் வார்த்தை ஜாலங்களாகவும் அணிச்சிறப்பு
மிக்க வரிகளாகவுமே அமைகின்றன.
இவ்வாறான படைப்புக்கள் எழுத்தாள னின் சமுகப் பின்புலத்தைப் பிரதிபலிப்ப தாகச் சொல்ல முடியாது. பின்னவீனத் துவ சிந்தனைகளின் தோற்றத்துடன், பின்னமைப்பியல் சிந்தனைகளின் வளர்ச்சியுடனும் எழுத் தாளனின் சமுகப் பின்னணியே எழுத்தைத் தீர்மானிக்கின்றது எனும் எடுகோள் பிழைத்து விடுகின்றது.
சுந்தரராமசாமி
அவன்
அநுராதபுரம் மாவட்ட மண்ணிலிருந்து தொடர்ந்து வெளிவரும் சிற்றிதழ்
Ulpescir
- இரு மாத இலக்கிய இதழ் -
The Editor PHOH!. 30. Jayanthi silaubatha.
Anuradhapura Te: 05 - 223BBl

அரைக்கை பெனியனணிந்து கொண்டு
கோட்டுச் சாரமுடுத்துக் கொண்டு தலையிலொரு லேஞ்சி கட்டி
தன்கிழட்டு சைக்கிளிலே விறகுமேற்றி
அதிலேயேறி யமர்ந்தபடி. பாதமூன்றியுழக்கையில் உடலில் வியர்வையூற்றெடுத்து ஆறாய்ப் பெருகி வழிந்தோடுமே...!
விறகு விறகென்று கூவி வீடு வீடாய்க் கொண்டு சென்று விற்றுப் பணம் சம்பாதித்து தன்மனைவி மக்களுக்கு கஞ்சித் தண்ணி ஊத்தி வந்த
ஹசன் காக்கா மெளத்தாகிவிட்டார்
எல்லாரும் வந்துடுங்க இந்த மையத்தையடக்கம் செய்ய.
வறுமை வாழ்வில் குடிகொண்டாலும்
வள்ளல்களைத் தேடிச்சென்று வாசற்படியில் வளைந்து நெளிந்து கரமேந்தி யாசித்ததில்லை. தன்கரத்தால் விறகுவெட்டி g5m (360Tu60) is uscotLDIT issé பிள்ளை குட்டி காத்து வந்த
ஹசன் காக்கா மெளத்தாகிவிட்டார்.
இருக்கும்வரை இந்த ஊரில் நல்லதையே செய்து வாழ்ந்தார் ஏழையாக விருந்த போதும் - அவர் கோழையாக வாழ்ந்ததில்லை.
31
எங்களுர் ஹசன் காக்கா.
- ரஹற்மத்துல்லா
கோள்மூட்டித் திரிந்ததில்லை - பிற குடும்பங்களைக் கலைத்ததில்லை. வம்பு தும்பு பேசமாட்டார் - பிறர் மனம் கோண நடக்கமாட்டார் இப்படித்தான் வாழ்ந்து வந்தார் எங்களூர் ஹசன் காக்கா.
ஏழை பணக்காரனென்ற ஏற்றவிறக்கமேதுமில்லை. சாதிமதப் பிரிவினைகள் அவரிடத்தில் துளியுமில்லை. எந்த மத மனிதனானாலும் புன்னகையையுதிர்த்திடுவார்

Page 18
32 கள்ளம் கபடமேதுமின்றி சிரித்து மகிழ்ந்து பேசிடுவார்.
ஊனுண்ணத் தவறினாலும் இறைபணியை மறக்கமாட்டார் ஐவேளைத் தவறாமல் அல்லாவற்வைத் தொழுதுடுவார். முஅத்தினில்லாத பொழுதுகளில் அதான் கூறியழைத்திடுவார் மஸ்ஜிதைப் பெருக்கியவர் குப்பை கூழமகற்றிடுவார்.
மையத்து வீடுகளில் ஒடியோடி வேலை செய்வார் - கபுறுக்குழி வெட்டுவதில் அவரை வெல்ல ஆளுமில்லை.
கலியான வீடுகளிலும் முதலாளாய்ப் போய் நிற்பார். சோறுகறி சமைத்தலிலும் ஆள்பெரும் ஜாம்பவான்தான்.
நோன்பு மாசம் பூத்துவிட்டால் ஒன்றேனும் தவறாமல் நேர்த்தியாக நோற்றிடுவார். நோன்புக் கஞ்சி காய்ச்சுவதிலும் அவரைத் தோற்கடிக்க யாருமில்லை. அப்படி வாழ்ந்த ஹசன் காக்கா
எங்களை விட்டுச் சென்றுவிட்டார்.
எல்லாரும் வந்துடுங்க
இந்த மையத்தையடக்கம் செய்ய.
- - - - - - - - - - - - - - - - -
66libliTbÚĎTB 6fThlíblfjúSII blšldhj bluÔObliffibD6II
மனமார வாழ்த்துகின்றோம்.
NA
முதலில் சாஹித்திய ரத்னா’ விருது பெற்ற ப்ண்டிதர் சச்சிதானந்தன்
அவர்களையும், சிறுகதைக்கு விருது பெற்றுள்ள திரு. நீ.பி.அருளானந்தன் அவர்களையும், நாவலுக்கு விருது பெற்றுள்ள சுதந்திரராஜா, ஜூனைதா
விருதைப் பெற்றுள்ள கவிஞர் நீலாவணன் அவர்களையும், சிறுவர்
செரீப் அவர்களையும், கவிதைக்கு விருது பெற்றுள்ள கவிஞர் ஜின்னா சரிபுதீன், கனகசூரியம் யோகானந்தன் அவர்களையும், நாடகத்திற்கான
இலக்கியத்திற்கான விருது பெற்றுள்ள திக்குவல்லை கமால் அவர்களையும் இந்த நாட்டின் படைப்பாளிகள் சார்பாக வாழ்த்துகின்றோம். மகிழ்ச்சி
அடைகின்றோம்.
- ஆசிரியர்
N m - 1

33 இலக்கியத்தின் பிரதான கூறுகளில்
அநுராதபுர நாட்டாரியலும் (Folk) ஒரு குறிப் பிடத்தக்கதாக முகிழ்கிறது. மொழி உரு வான கணமே வாய்மொழி இலக்கியங் களும் கருக்கொண்டு விட்டது. இவ் DTbJo L வாய்மொழி இலக்கியங்களே நாட்டாரி யல்" என்ற வரையறையில் அமைகிறது. இது ஏறுத்தாள 3200 ஆண்டுகள் வரை O காலத்தால் பழைமையானது.
O bT • LITT இன்று, சர்வதேச இலக்கியத்தின் கவனிக்கத்தக்கதொன்றாக இவ்விலக் O O கிய ஆய்வுகள் இருந்து வருகின்றன. இலக்கியம் எழுத்திலக்கியத்தின் பூர்வீகத்திற்கு அத்திவாரமிட்ட இவ்விலக்கியங்கள், நவீன இலக்கியத்தில் அசாதாரணமான
ass ൬ഗ്രa് A - இடங்களை கைப்பற்றியிருக்கின்றன.
வாய்மொழி இலக்கியங்கள் (Folk . . . Lore) பிரதேச மொழி நடைக்கேற்ப - எல்.வளிம் அ5ரLP தனித்துவத்தை காட்டி நிற்கின்றன. எனினும் ஆய்வு ரீதியான நோக்கும் போது அவை பொதுமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பினை (Structure) கொண்டிருக் கின்றன. சர்வதேச இலக்கியத் தளத்திலிருந்து 'ஈழத்து நாட்டாரிலக்கியங்களை’ எடுத்து நோக்கும் பொழுது அது குழந்தை நிலையில் இருப்பது மறுப்பதற்கண்று. அதேவேளை ஈழத்து நாட்டாரியலிலும் கிராமங்களில் சீவிக்கும் மக்களின் பண் பாட்டு விழுமியங்கள் எவ்வெவ் கோணங்களில் ஊடறுத்து பிரவகித்ததோ அதற் கேற்ப ஒழுங்கமைய பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என இலக்கியக் களப் படைப் பாளிகள் நிறுவியிருக்கின்றனர். இந்த நிலையிலிருந்து அநுராதபுர மாவட்ட நாட்டாரியல் சார்ந்த அறிமுகங்களை நோக்குவதே சிறப்பானது.
அநுராதபுரம், முடிமன்னர் காலத்தில் ஒர் இராசதானியாக, பெளத்த கலாசார பூமியாக இருக்கும் இடம். இன்றும் சர்வதேச ரீதியாக புகழ்பூத்த வண்ணம் இருந்து வருகிறது. பெளத்த மதத்தின் பூர்வீகத்தை தந்த புனித, புராதன மண். கிராமியமாக இன்றும் காட்சி தரும் இந்த பூமியில் தமிழ் மொழியின் வளம் செழித்து வேரூண்டி நிற்பது வியப்பானதே! அநுராதபுர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களும், ஒரிரு நகரங்களும் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் சிங்கள மொழி பேசும்

Page 19
34 சமூகமாக இருந்து வருகின்றனர். எனினும் இதற்குள்ளும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து தொன்று தொட்டு இலக்கியச் செல்நெறிக்கு வளம் சேர்த் திருக்கின்றனர். இந்தப் பின்னணியி லிருந்து அவர்களின் நாட்டாரியலும் அமையப் பெறுகிறது. மாவட்டத்தின் நாற்றிசையெங்கும் தமிழ் பேசும் சமூகம் இருக்கிறது. ஆனாலும் ஒப்பீட்டளவில் மிக சொற்பமான குடிகளே இருக்கின்ற மையும், இவர்களின் கல்வி, கலாச்சாரம், சமூக, பொருளாதார, அரசியல் நிலமை கள் மிக கீழ்மட்டத்தில் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
அநுராதபுர மாவட்ட நாட்டார் இலக்கியங்கள் இதுவரை ஆய்வு செய் யப்பட்டதற்கான ஆவணமேதுமில்லை. இதுவும் பூரண ஆய்வுக் கோவையு மல்ல. இயலுமானளவு தேடலுக்குக் கிட்டிய விடயங்களைப் பகுத்து, தொகுத்து தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
எமது மக்களின் பெரும்பாலா னோர் விவசாயத்தினையே ஜீவனேயாய மாக செய்து வருகின்றனர். தவிரவும் மந்தை மேய்த்தலும், சிறு சிறு வீட்டுக் கைத்தொழில்களும் இவர்களின் வாழ் வாதாரமாக இருந்து வருகின்றன. இவர் களின் வாழ்வானது கிராமங்களுக்குள் ஒரு நெருக்கமான உறவை வளர்த்திருக் கிறது. இந்த வெளிப்பாடுகளுக்கூடாக அமைந்த தொழில் (விவசாயம்) நிலை களில் இவர்களுக்கான நாட்டார் இலக் கிய கூறுகள் பிறந்திருக்கின்றன.
நாட்டாரிலக்கியத்தின் பொதுமைப் படுத்தப்பட்ட கூறுகளான பின்வரும் அம்சங்கள், அநுராதபுர மாவட்ட நாட் டாரியல் அம்சங்களுக்கூடாக வெளிப் படுவதை நோக்கலாம்.
நாட்டார் பாடல்கள்
நாட்டார் இலக்கியத்தின் அடி நாதம், இந்த நாட்டார் பாடல்களாகும். நாட்டார் பாடல்கள் இம்மண்ணின் விவ சாய நில வேலைகளிலும், குழந்தை களை தாலாட்டும் சந்தரப்பங்களிலும், காதலன் - காதலி இருவருக்குமான தொடர்புகளிலும் பாடப்பட்டிருக் கின்றன. தவிர்த்தும் வேறு சில சந்தர்ப் பங்களில் பாடப்பட்டதாகவும் சிலர் றிப்பிடுகின்றனர். (உதாரணங்களுக்கு இரண்டு பாடல்களைக் காட்டலாம்.)
"துண்டுப்பிலாவே கண்கலங்கி ஏனழுதாய் நிண்டழுதேன் கண்மணியே நினைவு வந்த நேரமெல்லாம்"
இப்பாடலானது துயரத்தை கூறி னாலும் தன் காதலனை விளிக்கும் சொற்பிரயோகம், உயிரோட்டமுடையது. இக்கவிதையின் துண்டுப்பிலா என்ற உருவகம் பலாச் சுவையை அடிக் கோடிட்டு உருவகிக்கப்பட்டது. கிரா மியச் சொல்லாக துண்டுப்பிலா என்ற சொல் இருக்கின்றது.
பள்ளியலங்காரம் மானே அதைப் பார்த்துவரும் தேனே பாரினில் நாகம் ஊரினிலே

நாயனருள் பெரும் நாயகியே எட்டி நடந்து வாடி என் பெண்ணே
ஒரு குழந்தையை தாய் விரைவாக வரச்சொல்லிப் பாடப்படும் பாடல். இப் பாடலிலும் அங்கதச்சுவை மிளிர் கின்றமை குறிப்பிடத்தக்கது.
பழமொழிகள்
ஒரு சமூகத்தின் அனுபவச் சுவை யும், புத்திக்கூறுகளையும் உள்ளடக்கி யனவாக பழமொழிகள் அமையும். இந்த அடிப்படையிலே எமது மண்ணில் வாழ்ந்தோரால் வழங்கப்பெற்று வந்த பழமொழிகளை இங்கு அடையாப் LIG5santib. (alth)
'நெருப்ப திண்டவன் கறுப்பா போவான்"
"குட்டியோடு கொழுத்தாலும் வழு வழுப்பு தீராது"
"ஆனையிர தலையில தானே மண்ணையள்ளிப் போட்டது"
இந்தப் பழமொழிகள் கிராமங்
களில் இயல்பாக நடக்கும் விடயங் களைக் கண்டு. அநுபவித்து அதற்காகச் சொல்லப்பட்டவை. ஒவ்வொரு பழ மொழிக்குப் பின்னும் ஒவ்வொரு சம்பவம் இருக்கின்றமை கவனிக்கத் தக்கது. நகைச்சுவை ஆதிக்கம் நிறைந்தவை.
35 விடுகதைகள்
மனித சமூகத்தின் பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை எடுத்துக் காட்டும் கூறுகளுள் விடுகதைகளும் ஒன்று. இது பொழுதுபோக்காக முதி யோரால் சிறுவர்களுக்கு விடுக்கப்படும் கேள்விக்கணை. முதியோர் தமது இயல் பான மொழியில் இதனை நெறிப் படுத்தியிருப்பது பின்வரும் உதாரணம் மூலம் துலங்கிக் கொள்ளலாம்.
“ஒரு குப்பில ரெண்டெண்ணை'
(முட்டை)
தட்டு வீட்டுல முட்டுப் பலகை" (நாக்கு)
இவை எமது மக்களின் சிந்தனை வெளிப்பாடாகவும், அறிவு விசால மாகவும் இருக்கின்றமை கண்கூடு. இந்த விடுகதைகளிலும், கற்பனை ஆளுகை இருக்கின்றமை நயக்கத்தக்கது.
கதைகள்
நாட்டார் பாடல்கள் போன்று, நாட்டார் இலக்கியத்தில் அடுத்து
முக்கியமானதாக இருப்பது நாட்டார் கதைகளாகும். பல நூற்றாண்டு கால
தொடர்ச்சி வாய்வழிக் கதைகளுக் குண்டு. இவை மனிதன் தொடர்பாக, பேய் தொடர்பாக, மிருகங்கள் தொடர் பாக எனப் பல்வேறு வகைகளில் இருக் கின்றன. இவையும் பொழுது போக் காகவே அதிகம் கூறப்பட்டு வருவதாக அவதானிக்கப்பட்டது. மேலும் சில

Page 20
36 கதைகள் நகைச்சுவையானதாக இருக் கும். இந்த நகைச்சுவை பாங்கு கிராமிய மொழிநடையில் மேலும் உயிர்பெறும், மெய்சிலிர்க்க வைக்கும் திகிலான முடிவுகளைத் தரும். உதாரணமாக பின் வரும் கதைகளின் தலையங்கங்களைக் குறிப்பிடலாம்.
1. மிருகக் கதை - ஒணானும்
புலியும்
2. மனிதக் கதை - ராஜாவும் ஏழு
பிள்ளைகளும்
3. பேய்க்கதை - ரொட்டியும், சிறுவனும், ஆவியும்.
nama
அநுராதபுரம் பிரதேச மலருக்கு
வாழ்த்துக்கள்
நாட்டாரியலின் கூறுகளுக்குள் உட் படுத்தி சேகரிக்கப்பட்டிருக்கும் மேற்படி விடயங்கள் அநுராதபுர மாவட்ட (தமிழ்) நாட்டாரியலுக்குரியவை. தனித் துவமானவை. மக்களின் மனங்களில் கல்வெட்டாக பதிந்து நிற்பவை. யதார்த்தமானவை.
எமது மாவட்டத்தில் இருந்துவரும் நாட்டார் இலக்கியம் மக்களின் சொத் தாகவும் கருதலாம். இதனை சரியாக தொகுத்து வெளியிட எதிர்காலத்தில் திட்டமிட வேண்டியிருக்கிறது. இல் லாதுவிடத்தின் எமது பண்பாட்டு ஆவணம் அழிந்து விடவும் நேரிடும் என்பது இலக்கியச் சூழலில் அவதானிக் கப்பட வேண்டும்.
an ww.
 
 
 
 

37
s அநுராதபுரத்தில் பிறந்து, படித்து, வளர்ந்த பேனா மனோகரன் 70ಗಿತು! இப்பிரதேசத்தில் ஆர்வமாக இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட கவிஞர். அநுராதபுர கலைச்சங்கம் இவரது கவிதைகளை "சுமைகள்" என்ற பெயரில் 1976ஆம் ஆண்டு வெளியிட்டது. இக்காலக்கட்டத்தில் இந்திய தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த இவர் தற்போது தமிழக காவல் பிரிவில் டி.எஸ்.பி.யாகக் கடமை யாற்றுகிறார். அத்தோடு கவிதை படைப்பது உட்பட வானொலி கவியரங்கம் போன்ற படைப்பிலக்கிய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
0. 4. 0 d d
grör blug bleFivbyrŘE55.
மாமரங்களில் மைனாக்களின் - பேனா மனோகரன் மதனோற்சவங்கள்.
இப்படியாக. தோப்பும் துரவுமாக தோரணக் கோலாகலம்
தென்னை மரங்களில் கிறீச்சிடும் கிளிகளின்
கலாசேத்திர நர்த்தனங்கள். எங்கள் தொலைதூரக் கிராமம்.
கொய்யா மரங்களில் இப்போது.
இறுகிப் போன காங்கிரீட் கட்டுமான
குருவிகள், குஞ்சுகளின் குருகுலப் பயிற்சிகள்.
வழிந்தோடும் வாய்க்காலில் அறைகளில்
சின்னஞ்சிறார்களின் நீர் விளையாட்டு.
கெண்டைக் குஞ்சுகளின் அணிவகுப்பு.
நாவல் மரத்தடியில் நாகங்கள் காவல் இருக்குதென்று மணியக்காரன் மனைவி மர்மக்கதை சொல்வதை மயங்கியபடியே கேட்போம் நாங்கள்.
கண்ணாடித் தொட்டிகளில் வண்ண மீன்களும் கம்பிக் கூண்டுகளில் காதல் பறவைகளும் சிறைப்பட்டிருக்க.
தொலைக்காட்சிப் பெட்டிகளில் தொலைந்து போயிருக்கின்றன நான் பெற்ற செல்வங்கள்.

Page 21
38
Night ofThe New Moon" என்ற நூலானது மிகப் புகழ்வாய்ந்த பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள Aneez Jung - அனிஸ் ஜங் சிறப்புற தொகுத்தளித்த ஒரு ஆங்கில நூலாகும். சமீபத்தில் இந்நூலை வாசிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தியத் துணைக் கண்டத்திலே பரந்து வாழும் முஸ்லிம் பெண்களைக் கண்டு கலந்துரையாடி, அவர்தம் கண்ணீர் அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். பெண்ணியம் பற்றிய சிந்தனைகள் அதிகரித்து வெளிப்படும் இக்காலத்தே, இந்நூல் பேசும் கருத்துக்களை வாசகர் முன் வைக்கவெண்ணி இக்கட்டுரையை நான் எழுதவிழைந்தேன்.
Unveiling India - A Woman's Journey”- Saog sapayuyub giSun - g(5 பெண்ணின் பயணம் என்கிற AneeZJung இன் இதற்கு முந்தைய நூல் விற்பனையில் உச்சத்தைத் தொட்டது. இன்று தம் குரலை உலகமே கேட்குமாறு திசை திருப்பி விட்ட ஒரு மெளனப் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் பற்றி, தெளிவுற விளக்கும் இந்நூலானது, இந்தியாவில் பெண்ணாகவிருப்பது என்பது எதைக் கருது கிறது என்பதையும் சிறப்பாகக் சுட்டிக் காட்டுகிறது. திருமணம், விதவை நிலை, வறுமையில் குழந்தைகளைச் சுமப்பதிலும், வளர்ப்பதிலும் உள்ள பிரச்சினைகள், பாலியல் அடிமைத்தனம், மதப்பாகுபாடு பற்றியெல்லாம் Aneez Jung பெண் களுடன் கலந்துரையாடியிருக்கிறார். மட்டுமன்றி, உறவுகளைப் பேணல், திருமண வாழ்விலும், குழந்தைகளிலும் அனுபவிக்கிற சந்தோஷங்கள், மதத்தினதும், பழைய கலாச்சாரத்தினதும் இணைப்பையுடைத்து வெளிவரும் சாகஸங்கள் பற்றியும் அந்நூலிலே கலந்துரையாடியிருந்தார் Aneez Jung;
NIGHT OF THE NEW MOON
சிந்தப் புதுப்பிறையிரவு
- நூல் கண்ணோட்டம் -
தமிழில் கெகிராவ ஸ்ைைலஹா

Night of The New Moon' propa) யெழுத தன்னைத் தூண்டிய காரணி எது வென்று அந்நூலின் முகவுரையிலே Aneez Jung குறிப்பிடுகின்றார்.
"நீ ஒரு முஸ்லிம் பெண் போல யில்லை" என்று தன்னை நோக்கி ஒரு தடவை ஐரோப்பிய தோழியொருத்தி "நிஜம்தான்; ஒரு சராசரி முஸ்லிம் பெண் வாழ்கிற வாழ்வைப்
கூறியபோது,
போல நான் வாழவில்லைத்தான்" என விடை பகர்ந்தேன். விடை பகர்ந்து விட்டபோதும், அந்தக் கூற்று மறுபடி மறுபடி என்னை சிந்திக்கத் தூண்டியது. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கான அடை யாளம் என்ன என்பது பற்றியும், மற்றப் பெண்களுடைய வாழ்வு முறையி லிருந்து வித்தியாசப்படுகின்ற ஒரு வாழ்வு முறை முஸ்லிம் பெண்ணுக் குண்டா என்பது பற்றியும் நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
நூலினைத் தன் அன்னைக்குச் di Lu 677 udrosou Aneez Jung இப்படிக் கூறுகிறார். "தான் என்றுமே அனுபவித்திராத சுதந்திரத்தை, நாமனு விக்குமாறு செய்திட்ட நம் தாய்க்கு."
அவரது தேடலின் பயணம், பல பெண்களின் அனுபவங்களைப் பகிர வும், உணரவும் உதவுகிறது. நரை தட்டும் வரைக்குமே துப்பட்டியைக் கைவிடாத மஹ்பூபு நிஸா, இறை வனால் அன்பு கூர்ந்து அளிக்கப்பட்ட அழகெனும் அருளை மறைப்பது பாவம் எனக் கருதி துப்பட்டியைத் தவிர்த்துக் கொண்ட வஜீதா, தன் பொற்கூண்டி
39 லிருந்து என்றைக்குமே வெளியே வர விரும்பாத பேகம், நகரின் வாடகை வீடொன்றில் தானே சம்பாதித்து தனியே வாழும் கணவனால் கைவிடப் பட்ட பேகமின் மருமகள், நவீன பெண் மணியானாலும் நாணம் கெட்டவளல்ல எனவும், பர்தாவை அணிந்து கொண்டு களத்தில் போராடவும் தான் தயார் எனவும் கூறும் கல்லூரிப் பெண், தன் சொந்த ஊராகிய ஹதராபாத்திலே ஒரு வயது போன அறபியுடனான திருமண வாழ்வுக்கு எதிராகப் போராடி வென்ற அமீனா, தான் வாழும் போபால் நகரை தன் அறிவினால் பிரகாசப்படுத்துகின்ற, கடின முயற்சியும், மதப்பற்றும் மிக்க, ராஜ்ய சபையின் உபதலைவியான நஜ்மா ஹப்துல்லா. இப்படிப் பல பெண்களைக் கண்டு உரையாடி, இஸ்லாத்தின் மீது நின்று நிலைக்கின்ற அவர்களது பொது அனுபவத்தை நம் மோடு பகிர்ந்து கொள்கிறார் அனிஸ் ஜங். தத்தம் சொந்த முடிவைக் காப் பாற்றிக் கொள்வதற்காக மதத்தின் கட்டளைகளை வசதிக்கேற்ற மாற்றியும், சிதைத்தும் நடைமுறைப்படுத்துகின்ற ஆண்களாலும், பெண்களாலும் விலங் கிடப்பட்டாலும் தமது உறுதியையும், தனித்துவத்தையும் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் நடத்தும் போராட் டத்தை விளக்கி, இந்தியப் பெண்களின் நிலைப்பாடு மீதில் உலகம் கொள்ள வேண்டிய கவனத்தை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
“என் தேடலை என் தாயிடமிருந்து நான் ஆரம்பித்தேன். என் சொந்த வீட்டி

Page 22
40
லிருந்து, என் சொந்த ஊரிலிருந்து என்
பயணம் தொடர்ந்தது. லக்னோ, போபால் போன்ற நகரங்களுக்கெல்லாம் நான் சென்றேன். கேரளாவில் நான் கண்ட இஸ்லாம் பசுமையானது. குடிசை யிலும், பெரிய விஸ்தாரண வீடுகளிலும் இஸ்லாம் அழகுற வியாபித்துக் கிடந்தது.
இஸ்லாத்தை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்த பெண்களையும் நான் கண்டேன். குர்ஆனையோ, ஹதீஸை யோ வாசித்தறியாத போதும் இஸ்லாத் தின் மீது நிலைத்திருந்த பெண்களையும் நான் கண்டேன்.
செல்வ நிலையிலாகட்டும், ஏழ்மை நிலையாகட்டும். எந்த நிலையிலும், எப் பகுதியிலும் முஸ்லிம் பெண்கள், தன்னை நிரூபித்துக் கொள்ளாத வெறும் வடிவங்களாக வெறுமனே இருக்கவில்லையென்பதையும், முத்திரை களுக்குப் பின்னே முகம் மறைத்துக் கொண்டாலும், தோற்றத்தில் தெரிந் ததை விட தன்னை உண்மைப் பிரகிருதி களாக இனம் காட்டிக் கொண்ட மன வுறுதி மிக்கப் பெண்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதையும் நான் என் தேடலில் கண்டுகொண்டேன்’ என் கிறார் அனிஸ் ஜங் தன் முன்னுரையில்.
அவரது அனுபவப் பகிர்வுகள் ஒவ் வொன்றும் கட்டுரைகளாக பின்னே தொடர்கின்றன.
ஹைதராபாத்தின் கதவுகளுக்குப் பின்னே கண்ணிரை சுமக்கும் பல
கதைகள். தந்தையை, கணவனை,
மகனை, சகோதரனை இழந்துவிட்ட பல பெண்களின் துயரக் கதைகள்.
ஒரு பெருங் கும்பலினால் அடித் துக் கொல்லப்பட்ட தன் கணவனை இழந்துவிட்ட மாதொருத்தி, ஒரு சின் னக் குடிசையில் ஆணியில் தொங்கும் தன் அன்புக் கணவனின் சாம்பல் நிற சேர்ட்டைப் பார்த்து வெறித்தபடி சொல் கிறாள், “தொழுகைக்காக அவர் நடந்து
வருவதை நான் நினைவு கூர்கிறேன்.
அவர் வருவார்."
தனக்கு மகனாக மட்டுமன்றி, ஒரு சகோதரனாகவும், நண்பனாகவும் மிக விஷேசமான மனிதனாகவும் எப்போதும் இருந்த தன் மகனை - பதினொட்டு வயதேயான தன் மூத்த மகனை, பொலிஸ் சுட்டுச் சாகடித்த பின்னர் தன் பெரிய சிவந்த கண்களில் பொங்கும் கண்ணிரை நிறுத்த முடியாமல் அழுது கொண்டேயிருக்கும் ஸாஹிதா இப்படிக் கூறுகிறாள், “என்னால் உறங்க முடிய வில்லை. காலைத் தொழுகைக்கான அதான் கேட்கும்வரை, பிறகு மாலை யாகும் வரை நான் விழித்தே கிடக் கிறேன். என் கனவுகளிலேனும் அவ னைக் காணுகின்ற பேராவலுடன் நான் உறங்க முயற்சிக்கிறேன். பல மாதங்க ளாகியும் அவனை நான் கனவில் கூடக் காணவில்லை.” கிழிந்து போன தன் முகத்திரையில் பொங்கும் கண்ணிரைத் துடைத்தபடி அவளது ஞாபகங்களை அவள் நினைவு கூர்கிறாள். “இத்தனை பெரிய சோதனையை இறைவன் என் மேல் போடும் அளவுக்கு நான் பெரியவ ளேயல்ல; நான் ரொம்பச் சிறியவள்."

அனிஸ் ஜங் தொடர்ந்து எழுது கிறார், மாலைத் தொழுகை - மஹ்ரிபு முடித்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த தன் சட்டத்தரணி மகன் கத்தியால் குத் தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின், குறித்த தாயிடம் "உங்களுக்கு கோபம் வரவில்லையா?" என நான் வினவி னேன். “யாருடன் நான் கோபிப்பது.? எனக்கிருப்பது ஒரே இறைவன்தானே. அவனைக் கோபித்து விட்டு எதன் பக்கம் நான் திரும்புவேன்.? கடவுள் என்ன முதல் மந்திரியா நினைத்தபோது மாற்ற?" என திருப்பி என்னைக் கேட்டார் அப்பெண்.
இப்படிப் பல கதைகள்; கண்ணீரி னதும், துயரத்தினதும், இழப்பினதும், ஆழமான அவஸ்தையினதும் கதைகள்; ஆறுதலுக்கான வழியை வணக்கத்தில் மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள். பயத் துக்கோ, அச்சங்களுக்கோ, ஐயங் களுக்கோ இடம் கொடுக்காத, ஆழ்ந்த நம்பிக்கையினால் விழைந்த தைரியமும், பொறுமையும் அவர்களைக் காக்கிறது. ஈமான் என்கிற நம்பிக்கையினதும், உறுதி மொழியினதும் வெளிச்சக் கீற்று களை அவர்கள் தம் வாழ்வின் அவலத் தூடும் தான் காண்பதாக அனிஸ் ஜங் குறிப்பிடுகிறார்.
இறையச்சமுள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து, நவாப் ஒருவரது மாளிகைக்கு குறித்த நவாபின் நான் காவது மனைவியாக வாழ்க்கைப்பட்டுப் போன பேகம் சொல்கிறார்,
தந்தையும் மாமாமார்களும் மதப்பற்று
**crar
4. மிக்கவர்கள். என் தாய் படித்தவளில்லை யாயினும், புத்திசாலி. என் தந்தையின் மடி மீது உட்கார்ந்து, என் நான்காம் வயதிலேயே குர்ஆனை நான் கற்கத் தொடங்கினேன். வாழ்க்கையின் தத்து வங்களை, அன்பை, பொறுமையை, ஒழுக்கத்தை என் தாயிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
கல்யாணத்துக்கு முன்னர் நான் என் கணவரை ஒரு தடவை கூடப் பார்த்தது கிடையாது. முதலிரவில் அவர் என் னறைக்குள் நுழைந்த போது, தலை முதல் கால் வரை நான் விறைத்துப் போனேன். சுமார் ஆறு மாதங்கள் வரை என்னால் அவரோடு பேசமுடியவில்லை. விருப்பமின்மையால் அல்ல. பயம்தான் காரணம். இந்த மாளிகையில் பெண்கள் எப்போதும் என் காவலாளிகளாக வலம் வந்தனர். அவரது நான்காம் மனைவி யாக நானிருப்பினும், அவரது அபி மானத்தை நான் வென்றிருந்தேன். என் றாலும், குர்ஆனின்படி மற்ற மூவரை யும் சரிசமமாக மதிக்க நான் அவரை எப்போதும் வற்புறுத்தி வந்தேன்.
'உன்னை இது காயப்படுத்த வில்லையா?” என்று அவர் அடிக்கடி கேட்பார். “இல்லை" என்பேன்.
கடவுளின் கட்டளை, என் காயத்தை விட பெரிது என நான் நம்பினேன். அனைத்தையும் பொறுமையுடன் சகிக்க நான் பழகிக் கொண்டேன்.
ஒரு குழந்தையை சுமக்கின்ற பாக் கியம் என் வாழ்வின் என்றுமே எனக் குக் கிடைக்கவில்லை. அழ வேண்டும் என்று தோன்றும் பொழுதெல்லாம்

Page 23
42 நான் என் அறைக்குச் சென்று இறை வனின் முன் மண்டியிட்டு அழுவேன். என் சிவந்த கண்களை சிலவேளை அடையாளம் கண்டுகொண்டு, அவர் அடிக்கடி வினவுவார், இந்தப் பொறு மையை எங்கிருந்து நீ கற்றுக் கொண்டாய்?" என்று.
நான் மனிதர்களை விட்டு விலகி, ஈமானோடு மிக நெருங்கி எப்போதும் இருக்கிறேன். இது ஒன்றே எனக்கான பாதுகாப்புக் கவசமாக இருக்கிறது. என் தொழுகையும் என் பிரார்த்தனையும் என்னை வாழ வைத்திருக்கின்றன. அல்லாஹ் தந்த உயிரை மாய்த்துவிட எந்த மனிதனாலும் முடியாது. எனக் கெதிராக சதி செய்த பலர் இறந்து விட்டனர். நான் இன்னும் அதே பழைய பேகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நம் விதி தாயின் கருவறைக்குள் நிர்ண யிக்கப்படுகிறது. இறைவன் தந்த பரி சோடு நாம் வந்திருக்கிறோம்."
“இவ்வுலகுக்கு இறைவன் உங் களை அதே பழைய வாழ்வை வாழு மாறு சொல்லி மீள அனுப்பி வைத் தால், அந்த வாழ்வை ஏற்பீர்களா?” என்று திருப்பிக் கேட்டபோது, பேகம் சன்னமாய், மறுக்கிற தொனியில் இல்லை" என்கிறாள். அதே மனிதரை உங்கள் கணவராக...? தீர்மானமான பதில் பேகமிடமிருந்து வருகிறது 'இல்லை". ஒரு சிறு கணப்பொழுதில் ஒரு முகமூடி கலைகின்றது. வயது போனமையால் பேகம் தளர்ச்சியாக இருக்கிறாள். திரை மூடிய யன்னலூடு தொலைவை வெறித்தபடி அவள்
சொல்கிறாள், "எனக்கு என் தனியை வேண்டும்; எவரது கண்களுக்கும் புல னாகாத அளவு நான் ஏழையாக வேண்டும். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காலம் விரைந்தோடு கிறது."
சுமார் நூறு கி.மீ.க்குக் குறைந்த தூரத்திலே ஒரு வாடகை வீட்டில் தங்கி யிருக்கிற, ஒரு பிரயாண முகவர் நிலை யத்தில் கடமை புரிகின்ற பேகமின் மரு மகள் ஒருத்தியை அனிஸ் ஜங் அடுத்து சந்திக்கிறார். கூர்மையுடனும் தெளிவு டனும் ஒலிக்கிற அவளது குரல் இப்படிப் பேசுகிறது,
“எனக்குப் பதினேழு வயதாக யிருந்தபோது நான் மாளிகையை விட்டுச் சென்று ஒரு பாடசாலை விடுதி யில் தங்கிப் படித்தேன். ஒரு குழந்தை யாகயிருந்தபோது கண்களுக்கு அழ காய்த் தெரிந்த மாளிகையும், வண்ண வண்ண ஆடையணிந்த பெண்டிரின் அழகுத் தோற்றங்களும் திரும்பி நான் வந்து பார்க்கிற போது என் கண்களுக்கு மாறித் தோன்றின.
பெருத்த குரலோடு, பலமாய்ப் பேசிக்கொண்ட பெண்களைக் கண்டு நான் அதிர்ச்சியானேன். அவர்களது ஜோக்குகளும், கேலிகளும் மிகக் கொடுரமானவையாகத் தோன்றின. ஆபாசமாக இருந்தன. அவர்களில் பெரும்பாலார் தத்தம் ரகசியச் சந் தோஷங்களுக்காக ஒழுக்கமில்லாத வாழ்வை வேற்று ஆண்களுடன்
பரிமாறினர்.

ஆனால், என் கான்வென்ட் வாழ்வு பற்றி நான் பேசியபோது, அவர்களில் பலர் அதிர்வதைக் கண்டேன். மாளி கைக்கு வெளியே ஒரு வாழ்வை அவர் களால் எண்ணிக்கூடப் பார்க்க முடிய வில்லை. கெட்டதிலிருந்து நல்லதை அவர்களால் பிரித்தறிய முடியவில்லை. தங்கக்கூட்டிலிருந்து தம்மை யாரேனும் வந்து மீட்டுச் செல்வர் என்ற எதிர்ப் பார்ப்போடு சிலர் காத்திருந்தார்கள். ஒரு வருஷம் அங்கேயிருந்து அவர்கள் வாழ்வு முறையை அவதானித்த பின்னர் இவற்றை விட்டு விட்டு ஓடிவிட வேண் டும் என்று நான் சிந்திக்க ஆரம்பித் தேன். திருமணம் செய்வது நல்லது என முடிவு செய்தேன். கேள்வியானது. அடிக்கடி அங்கு வந்த மைத்துனர் ஒருவரிடம் மனம் பறி கொடுத்தேன். ஒருவகையில், கடவுளால் அனுப்பப்பட்டவர் போல அவர் என் கண்களுக்குத் தோன்றினார். திருமணம் செய்ய நான் தீர்மானித்த போது என் தாய் அதை எதிர்த்தார். அவரது நடை முறை வாழ்வு சொல்லும்படியாக இல்லை என்று காரணம் சொல்லிய என் தாயாரையெதிர்த்து, அவரைத் திருமணம் செய்த ஒரு வாரத்தின் பின் என் தவறை
“யாரை" என்பது
நான் உணர்ந்தேன்."
குறுகிய, குழப்பகரமான மண வாழ் வில் அவளுக்கு இரண்டு மகன்கள். இன்னொரு பெண்ணுக்காக கணவன் தன்னைக் கைவிட்டபோது, அவள் அவனை விவாகரத்துச் செய்யவில்லை. ஒரு தொழிலைத் தேடிக்கொண்டு நகருக்கு இடம்பெயர்ந்தாள். "அவ்வப்
43 போது அவர் விஜயம் செய்த போது குடும்பத்தின் கெளரவம் கருதியும், குழந்தைகளின் நன்மைக்காகவும் அவ ருடன் விருந்துகளில் கலந்து கொண் டேன்” எனக் கூறும் அவ்விளம் பெண், தன் விதியை ஏற்றுக்கொண்டிருக் கிறாள். தனக்குள் வேர் பதித்த பலத் துடனும், உறுதியுடனும் இருந்தாலும் அவன் தன் பெரியன்னையை -
A
பேகமை அச்சில் வார்க்கிறாள். "நான் பொற்கூண்டிலிருந்து வெளிக் கிளம்பிப் பறந்துவிட்டேன்’ என்று தைரியச் சிரிப்
போடு அவள் கூறுகிறாள்.
அனிஸ் ஜங் காணும் இன்னொரு உலகம் எப்படியிருக்கிறது தெரியுமா? அனிஸ் ஜங் அதை இப்படி விளக்கு கிறார். "மத்திய கிழக்கிலிருந்து வந்த ஒரு வயதுபோன அரபியுடனான தன் திருமணத்தை எதிர்த்த அமீனாவை ஹைதராபாத்தில் நான் சந்திக்கச் சென் றேன். ஐந்து லட்சத்திற்குமதிகமான முஸ்லிம்கள் வாழும் அந்த வறுமையால் பீடிக்கப்பட்ட நகரில் அமீனாவின் வீடும் ஒன்று. இரண்டு அறைகள் கொண்ட சின்னஞ் சிறிய குடிசை அது. ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேண்டு மானால், இளம் பெண்களை அவர் களது வீடுகளுக்கு வெளியே சந்திப்ப தென்பது அசாத்தியமான ஒன்றாக இருந்திருக்கக்கூடும். ஆனால், இன்று அவர்கள் குழுவாக வெளிக்கிளம்பி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மத்திய நிலையங்களிலே கைத்தொழில் பயில்
கிறார்கள். அமீனாவின் விவகாரம் ஏற்
படுத்திய பின்விளைவு அது. பொருந் தாத திருமண பந்தங்களால், காயப்பட

Page 24
44
நேருகையில் இப்பெண்களுக்கு அவர் களது நன்மை கருதி பயிற்சியளிக்க வென்று இந்திய அரசு, ஆந்திரப் பிர தேசத்து பெண்கள் கூட்டுறவு நிலை யத்துக்கு, இருபத்து நான்கு நிலை யங்களை பழைய நகரத்தில் அமைக்க உதவி வழங்கியிருக்கிறது. அரச சார் பற்ற திணைக்களங்களால் நடாத்தப் படும் இவ்வாறான பதினாறு நிலையங் களில் இரண்டுக்கு நான் விஜயம் செய் தேன். முதலாம் நிலையத்தில் அறுபத்தி யிரண்டு பெண்கள். இரண்டாம் நிலை யத்தில் ஐம்பத்தியிரண்டு பெண்கள். தையல் வேலைகள் மற்றும் நவீன சித்திரக் கலை பற்றி இவர்கள் கற்பிக் கப்படுகிறார்கள். அதிலே அரைவாசிக் கும் அதிகமானோர் திருமணமானவர்கள் என அறிந்தேன். “அறயிகளால் பாதிக் கப்பட்ட பெண்கள் கையை உயர்த் துங்கள்” என நாம் வேண்டியபோது, சுமார் ஒரு டசின் கைகள் உயர்ந்தன.
அப்ஸால் பேகம். இரண்டு வருடங் களுக்கு முன்னர் 62 வயதான ஒரு அரபியை மணந்த அவளுக்கு இப் போதுதான் 16 வயது. “அவரை நான் மணந்தால் என் சகோதரர்களின் நல் வாழ்வுக்கு வாய்ப்பொன்று கிடைக் கலாம் என நான் நம்பினேன்” எனச் சொல்லும் அப்ஸாலுக்கு மொத்தம் ஆறு சகோதரிகள், ஏழு சகோதரர்கள். உணவுக்குக் கூடத் திண்டாடும் அக் குடும்பத்துக்கு இவ்வரன் கொணரப் பட்டபோது, அவள் தந்தை சட்டென ஒப்புக்கொள்கிறார்.
"அவர் திருமணம் முடித்ததும் என்னை ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றார்" எனச் சொல்லும் அப்ஸா லிடம் நான் கேட்டேன், “கூட்டிப்போய் என்ன செய்தார்?" அழுகையோடு அப்ஸாலிடமிருந்து பதில் வருகிறது, "அனைத்தையும். எனக்கு அவர் மீது விருப்பம் வரவேயில்லை” எனச் சொல் லிய அப்ஸால் மீண்டும் சொல்கிறாள், "ஒருநாள் இரவின் பின் சென்ற அவர் மீண்டும் திரும்பவேயில்லை." "மறு மணம் செய்துகொள்வாயா?" என நான் அவளைக் கேட்டேன். “இல்லை நான் என் சொந்தக் காலில் நிற்க விழை கின்றேன்' என உறுதியான பதில் வரு கிறது அவள் வசம் இருந்து.
"அவருக்குப் பல கடிதங்கள் எழுதி னேன். பதிலேயில்லை" எனச் சொல் லும் நஸிம், திருமணமாகி இரண்டு மாதங்களின் பின் கைவிடப்பட்டவள். "அவர் சவூதியைச் சேர்ந்தவர் என் றுதான் அவர் தந்த முகவரி சொல் லிற்று. ஆனால், அவர் இப்போது யெம னில் வசிப்பதாக தரகர்கள் சொல்கிறார் கள். ** அக்குடும்பத்தில் திருமண வயதில் இருந்த ஒன்பது பெண்களில் நஸிமும் ஒருத்தி. குருடான தாய். சாரதி தொழில் செய்யும் தந்தை. இரண்டு மாதங்கள் அரபியுடன் ஹோட்டல் அறையொன்றில் வாழ்ந்த நஸிம், தந்தையை வாழ்நாளில் என்றுமே கண்டி ராத ஒரு குழந்தைக்குத் தாய்!
ஆறு மாதங்கள் கணவனுடன் வாழ்ந்த ஆதியா இன்று ஒரு மகனுக்குத் தாய். ஒருமுறை போய் திரும்பி வந்த

அவளது கணவன் மறுமுறை வரவே யில்லை. பம்பாய்க்குப் பறந்து
விட்டானாம்.
துயரம் தொனிக்கும் இக்கதைகள் ஒரே மாதிரியானவை எனக் குறிப்பிடும் அனிஸ் ஜங் தொடர்ந்து எழுதுகிறார். அமீனாவின் வீட்டை நான் சென்றடைந் தேன். அமீனாவின் தந்தை பிள்ளை களை வெளியே செல்ல அனுமதிப்ப தில்லை. எனவே, அமீனாவின் வீட்டில் அவளைக் காணமுடிந்தது. "சுமார் 16,000 முஸ்லிம் பெண்களுக்கு படிக்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத் தவள் நீ" என அமீனாவைப் பார்த்து எதுவுமே பேசாது மெளனமாகயிருக்கும் அமீனா, வெறுமையோடு பார்க்கிறாள். அவர் களிடம் விடைபெற்று நான் வெளியே வந்தபோது, என்னை வழியனுப்ப வாசல்வரை வந்து நின்ற பலரில், ஒரு
அது
நான் சொன்ன போது,
முகத்தை மட்டும் காணோம். அமீனா!
பேகம் அக்ஹாவின் கதையென்ன? இஸ்லாத்தின் மீது உறுதியாய் நின்று நிலைத்த அவள் தன் தாயை இழக்கை யில் பத்து வயது. தந்தை பேசிவந்த வரனுக்கு இசைந்து வாழ்க்கைப்பட்ட அவள் தன் கணவனுடனான திருமணம் பற்றிக் குறிப்பேட்டில் பதிந்து வைத் துள்ள சோகம் ததும்பும் வாக்கியங்கள் இப்படி அமைந்திருக்கின்றன. முதலிரவின் போது, நான் சுகக்குறை வாக இருந்தேன். அவரோடு படுக் கையை பகிர்ந்து கொள்ள முடியா நிலை; ஒரு வார்த்தையேனும் நான் பேச
“Grøör
45 வேண்டுமென்று அவர் எதிர்பார்க்க வில்லை. அவரும் பேசவில்லை. மிரு கத்தைப் போல வந்து தன் வெறியைத் தீர்த்தபின் காலைவரை உறங்கினார். ஒரு கல்யாண வாழ்வு பற்றிய என் கனவுகளின் ஆரம்பமும் முடிவும் அது தான். என் வாழ்வு முழுதுமே நான் தனியே இருக்கிறேன்."
சேனார் நகரில், ஒரு ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்து, பின் கல்வி உயரதிகாரியாக தரமுயர்த்தப் பட்ட பேகம் அக்ஹா கூறுகிறார், “ஆண்மை பெண்மையை புறக்கணிக்க வழங்கப்பட்டதல்ல. உதவிக்கரம் நீட்ட வழங்கப்பட்டது. விவாகரத்து இறை வனுக்கு ரொம்ப வெறுப்பானது.” நம் மால் விளங்கிக் கொள்ள முடிந்த மொழியில், குர்ஆனியக் கருத்துக்களை விளங்கிக் கொள்ள வற்புறுத்தும் அவள், ஆண்களின் சுயநலம் நிறைந்த சாகலங்களை நிறுத்த பெண்கள் சரி யாகத் தயார்ப்படுத்தப்படவில்லை என்கிறார்.
இதைப் புரிந்து கொள்ள தனக்கும் நீண்ட காலம் எடுத்ததாக பேகம் அக்ஹா கூறுகிறார். தன் ரூபி காத ணியை ஒரு குளத்தில் தொலைப்பதாக வும், படகோட்டி மக்களான ஹன் ஜானிப் பெண்ணொருத்தி அதைப் பொறுக்குவதாகவும் ஒருதடவை கனவு கண்டு சிலநாளில், ஹன்ஜானிப் பெண் ணொருத்தியை தன் கணவன் மறுமணம் செய்தாராம். பின்னர், நோய்வாய்ப் பட்டு தன்னிடம் மீளவந்த அவரை தான் இருபது வருஷங்களாகப் பராமரித்தா
JITLD.

Page 25
46
அடுத்து, உருதுவில் பல காதல் கதைகளை எழுதிவரும், சினிமாவுக்கு வசனங்களும், பாடல்களும் எழுதும் வஜீதா தபஸ்ஸுஜூம் என்ற பெண்மணி யுடன் தன் அனுபவம் பகிர்கிறார் அனிஸ் ஜங், கனடா, அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் போன்ற பல நாடு களுக்கு விஜயம் செய்துள்ள வஜிதா அந்த அனுபவங்கள் பற்றியும் தன் M.A. பட்டம் பற்றியும் நீண்ட நேரம் அளவளாவினார். பர்தாவோ துப் பட்டியோ அணியாத வஜீதாவின் பல நூல்கள் முஸ்லிம் வட்டாரத்தில் தடை செய்யப்பட்டவை. ஆனால் தன் இஸ் லாத்தின் மீதான வாழ்வு பற்றி வஜீதா இப்படிச் சொல்கிறார்.
"நான் தீமையை எழுதுகையில் என் இடப்பக்கத் தோள் பக்கம் உள்ள மலக்குகள் என் தீமையைப் பதிவர் என்றும், என் நற்செயல்களுக்கான பதிவு எனது வலது தோளிலும் நிகழும் என்பதையும் நான் நன்கறிவேன். எட்டு வயதிலிருந்து நான் ஒரு நேரத் தொழு கையைக்கூடத் தவறியதில்லை. இறை வனைத் தொழுவது, காதலுக்குச் சமான மானது. நான் தொழுகையின் மூலம் அவனை இன்னுமின்னும் அறிகிறேன். இஸ்லாத்தின் மூலம் நான் கற்றவை ஏராளம். உயிரோட்டத்தையும், பலத்தை யும், ஏழைகள் மீது அன்பு செலுத்து வதையும், மறப்பதையும் மன்னிப்ப தையும் இஸ்லாமே எனக்குக் கற்றுத் தந்தது. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கான இஸ்லாத்தின் உன்னதமான பரிசு, ஈமானே என நான் நம்புகிறேன். என்
எழுத்துகளூடு நான் காட்ட விரும்பி யவை மட்டகரமான அம்சங்கள்" என உலகம் விமர்சிக்கின்றது. என் வாழ்வில் நான் கண்டவற்றையே நான் எழுத் தாக்கியிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் நிகழ்ந்த அட்டூழியங்கள், மதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு நயவஞ்ச கத்தைச் செயலில் காட்டும் பிடிவாதம் என்பவற்றை என் கதைகள் தடுக் கின்றன. பர்தாவை அணியாத பெண் களைவிட, அணிந்து கொண்டு இஸ் லாத்துக்கு விரோதமான செயல்களைப் புரியும் பல பெண்களை நான் கண்டிருக் கிறேன். 'மட்டரகம்" என விமர்சிக்கப் பட்ட எழுத்துக்களை எழுதியதாகக் குற்றம் சாட்டப்படும் நான், என்னைப் பொறுத்தவரை மிக நேர்மையானவள். என் நேர்மையின் காரணமாகவே பர்தா அணியாதிருக்கத் தீர்மானித்தேன். இறைவன் அளித்த அழகென்னும் கொடையை மறைப்பது பாவம் என கடவுளுக்கும் பெண்ணுக்குமிடையே ஏது திரை?
நான் கருதுகிறேன்.
வேதனை ைகள அறிந்திருப்ப தாலேயே நான் இன்னும் இன்னும் இறைவனை நெருங்குகிறேன். என்றோ ஒருநாள் நான் என் முகத்தை இறை வனுக்குக் காட்ட வேண்டியிருக்கிறது என்பதை நான் நன்கறிவேன்” எனக் கூறும் வஜீதா கணவனுடனன்றி வெளியே செல்வதில்லையாம். தனியே பயணிக்கும் பெண்களைக் கண்டு, தான்
பயப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
பானுபேகம் ராதையையும் கிருஷ்
ணனையும் மீராவையும் பற்றிய பஜன்

களை, மக்கா, மதீனா பற்றிய பக்திப் பாடல்களைப் பாடும் பானுபேகத்துட னான அனீஸ் ஜங்கின் அனுபவப் பகிர்வு அடுத்து! தோற்றத்தில் முதுமை யையடைந்து விட்டாலும், இளம் பெண்ணுக்குரிய இனிமையான குரல் பானுவுக்கு ராஜ்பூரில் சன்ட்போல் பஸாரில் வசிக்கும் அவள், அனிஸ் ஜங்கை ஸலாம் கூறி வரவேற்கிறார். பக்கத்திலிருக்கும் பெண்ணை தன் சகோதரியென்றும், முன்னாள் பாடகி யென்றும் அறிமுகப்படுத்திய பானு பேகம், இரண்டு வருஷங்களுக்கு முன்னர் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்த பின்னர் அவள் பஜன்கள் பாடுவதைக் கைவிட்டு விட்ட சேதியையும் சொல்கிறார்.
"நானும் பாடுவதைக் கைவிடவே எண்ணினேன். ஒருதடவை சுகமீன முற்று இருபத்தெட்டு வருடங்களாகப் பாடுவதால் திடீரென நிறுத்தியதே சுகயினத்துக்கான காரணம் என வைத் தியர் கூறியதால், என் ஆரோக்கியத்தின் பொருட்டு தொடர்ந்து பாடிக் கொண்டி ருக்கிறேன்."
"இஸ்லாத்தில் பாடுவது தடுக்கப் பட்டதில்லையா?" என்ற அனிஸின் கேள்விக்கு 'இஸ்லாம் அருளினது மார்க்கம்" என விடை வருகிறது அவளிடம் இருந்து.
பானு சொல்கிறார், “என் பதி னொராம் வயதில் நான் இஸ்லாத்தைத் தழுவினேன். நாளாந்தம் ஐவேளை
தொழும் போதும், ரமழானில் முப்பது
47 நாட்கள் நோன்பிருக்கும் போதும் நான் மிக உற்சாகம் கொள்கிறேன்.”
தனக்காகப் பாட அவளைத் தான் கேட்ட போது, சம்மதித்துத் தலை யசைத்த பானு, அது மஹ்ரிபுக்கான நேரமாகையால் தொழுதுவிட்டுப் பிறகு வந்து ஒரு மீரா பஜனைப் பாடிக் காட்டியதாக 'அனிஸ் ஜங் குறிப்பிடு கிறார்.
"முஹர்ரம் ஆரம்பித்து விட்டால், பத்து நாட்களுக்கு நம் இசைக்கருவி களை நாம் தொடமாட்டோம்” எனக் கூறிய பானு, மதீனாவின் மீதான தன் விருப்பத்தை ஒரு பாடலூடு விளக்கு கிறார். இசை என் வணக்கம்" என சொல்லும் பானுவிடமிருந்து விடை பெறுகிறார் அனிஸ் ஜங்.
தற்போது தன் ஐம்பதுகளில் ருக்கும், ஹிந்தி சினிமா உலகில் கும் கும் என்ற பெயரோடு நிலைத்த, பம் பாயில் வாழும் ஸேபுன்னிஸாவை அனிஸ் ஜங் சந்தித்து, அதுபற்றி எழுது கிறார்.
இ
"நடிகையாகயிருப்பது எந்த விதத் திலும் என் மத நம்பிக்கையை, மார்க்க அனுஷ்டானத்தைப் பாதிக்கவில்லை. என் சிறு வயதிலிருந்தே ஆழமான மத உணர்விலே நான் நின்று நிலைத்தேன். என்றாலும் ஆடலும் பாடலும் என்னை மிகக் கவர்ந்தன. என் தாய் என்னை
அதிலிருந்து தடுக்கவில்லை.
குருதத் என்னை நடிகையாக அறி முகப்படுத்தினார். ஏழாம் வகுப்போடு

Page 26
48 பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டேன். என் தந்தை நம்மைக் கைவிட்டு பாகிஸ்தான் போய்விட்ட பின்னர், நாம் பம்பாய்க்கு இடம்பெயர்ந்தோம். என் தாய் எப்போதும் பர்தா அணிவார். திரையுலக வாழ்வில் நான் கொடி கட்டிப் பறந்த போதிலும், வீடு வந்து விட்டால், சராசரி பெண்ணைப் போலக் கருமங்கள் ஆற்றி வந்தேன். நம்மை தவறின் பாதையில் படங்கள் கொண்டு செல்லும் என்பதை நான் மறுக்கிறேன். நாம் பலவீனப்பட்டுக் கிடந்தால், எந்த இடத்திலும் நாம் வழிதவற வாய்ப் புண்டு. நம் நடத்தையிலேதான் அது தங்கியிருக்கிறது. என் எட்டு வயதி லிருந்து நான் தொழுகிறேன். ஸ்டுடி யோக்களில் தொழ முடிவதில்லை. வீடு வந்த பின் தொழுவேன். பொய் பரவிக் கிடந்த காதல் வசனங்களைப் பேசி நடிக்கை யில் என்னால் நோன்பிருக்க முடிவதில்லை. என்னை மன்னிக்குமாறு நான் அன்பு நிறைந்த இறைவனிடம் அடிக்கடி பிரார்த்திப்பேன்.
வாழ்வையும், மனிதர்களையும் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை சினிமாப் படங்கள் எனக்கு அளித்தன. பெயரையும், புகழையும், பணத்தையும், சுயமரியாதையையும் சினிமாவே எனக்குத் தந்தது.
சினிமாவில் இணையாதிருந்தால், வீட்டுக்குள்ளே ஒரு சாதாரணப் பெண்ணாக - தன்னைப்
வளரும்
பற்றித் தானே புரிந்து கொள்ள முடியாத ஒரு சராசரிப் பெண்ணாக,
நானும் வளர்ந்திருப்பேன்’ என்கிறார் கும் கும் எனப்படுகின்ற ஸேபுன்னிஸா.
“அவள் விரும்பிய வரைக்கும் அவள் நடிக்கலாம். தடையில்லை’ எனச் சொல்லும் கும் கும்மின் கணவன் மேலும் சொல்கிறார், “பல விடயங் களில் பெண்களுக்குப் பலம் இருக் கிறது. விசுவாசமும், தன்னையடக்கும் திறனும் இருந்தால், எந்தத் தொழிலும் பெண்களுக்குத் தடையன்று. இஸ்லாம் சிந்திக்கவும், செயலாற்றவும் மக்களைத்
தூண்டும் மார்க்கமாகும்” என்று உறுதி
* штs!
ஒரு திருமண வீட்டில் பாரிலாத் என்ற பெண்மணியைக் கண்டு பேசிய அனிஸ் ஜங் அந்த அனுபவத்தை எழுது கிறார். “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதெனில் ஏன் இந்த க் மணப்பெண்கள் தனிமை போல, ஒரு வகைச் சோர்வுடன் காணப்பட வேண்டும் ??? ஸாத்தைக் கேட்டபோது, “ஏன் நான்
என்று நான் பாரி
சந்தோஷமாகயிருப்பது போலத் தெரிய வில்லையா?” என அவர் என்னைத் திருப்பிக் கேட்டார், சிரித்துக் கொண்டே
சந்தோஷமாகயிருப்பதும், அப்படி இருப்பதாகத் தெரிவதும் இரு வேறு வித்தியாசமான அம்சங்கள் எனக் கூறும் அனிஸ் ஜங், தொடர்ந்து பாரிலாத் கூறுவதை எழுதுகிறார்.
"தன் பன்னிரண்டு பிள்ளைகளில்
என் தந்தை ஏனோ என்னை வெறுத்

தார். சிறுவயதில் பெரிய கறுப்புப் பூனை ஒன்றுடன் என்னை ஒரு தனி அறைக்குள் அவர் அடைத்து வைப் பார். சிலவேளை, நான் காதலின் பொருட்டன்றி, கட்டாயத்தின் பொருட்டு பிறந்திருக்கலாம். ஒரு யூனானி வைத்தியரான என் தாய், அதையே தன் முழு நேரத் தொழிலாகச் செய்து வந்தார். வீட்டிலிருந்தே தனது கிளினிக்கை அவர் கவனித்து வந்தார். எப்போதுமே என் தாய் பர்தா அணி என் தந்தை அவரது விருப் பங்களை மதிக்கவேயில்லை. ஒரு
வார்.
தந்தையால் மிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட - எப்போதும் "ஹொண்டா" காரில் சுற்றித் திரிகின்ற ஒரு மகன்தான் என் தந்தை.
பெண்கள் தன் பதினாலாம் வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற என் தந்தையின் கோட்பாட்டை என்னால் மறுக்க முடியவில்லை. என் திருமணமும் அதேவயதில் நடந்தது. ஏற்கனவே கண்டோ கதைத்தோயிராத ஒரு புது மனிதருடன், முதலிரவில் புத் தகம் வாசிப்பதிலேயே கவனம் கொண்டிருந்தார், என் கணவர். நான் அழகில்லையோ, சிலவேளை அவர் எதிர்பார்த்தளவு நான் பொறுமதியில் லாதவளோ என்றொல்லாம் எண்ணி வியப்புற்றேன். அவர் ஒரு நல்ல மனிதர்; ஆனால், நல்ல துணையல்லர். என் தாயிடம் கதையைச் சொல்லி நான் அழுதபோது, "எனக்கு நேர்ந்ததுதான் மகளே உனக்கும் நேர்ந்திருக்கிறது" என் என் தாய் சொன்னார். இரண்டு
S qट्रन
sa @ e
s 国 35
S
g
49 குழந்தைகளுக்கும் தாயானமையால், விவாகரத்து பற்றி சிந்திக்கவும் முடியவில்லை. கணவர்
என்னால்
நோயில் விழுந்த போது, அவரை நான் பராமரித்தேன். 'உன்னை நான் சிதைத்து வதைத்து விட்டேனே" என அவர் கேட்டார். எனக்குத் தேவை யானதையெல்லாம் செய்ய, அவர் என்னை அனுமதித்தார். எனினும், ஒரு கணவனது அன்பு எப்படியிருக்கும் என நான் உணருவதற்கு அவர் வாய்ப் பளித்தாரில்லை. நட்பென்ற பெயரில்
இன்னொரு ஆணுடன் பழகுவதில்
எனக்கு நம்பிக்கையிருக்கவுமில்லை. இருபது வருட இல்வாழ்வில் நான் நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறேன். என்னால் மகிழ்ச்சியிலிருப்பது போல, சிரிக்கவும், செயற்படவும் முடிகிறது. இஸ்லாம் தந்த உள்ளார்ந்த பலம் அது.
என் இரு மகன்மாரும் என் நல்ல தோழர்கள் என்பேன். என் முன்னே நான் ஆற்ற வேண்டிய பணிகள் நிறை யவே இருக்கின்றதாய் நான் தெளிவாக உணர்கிறேன்” எனக் கூறும் பாரிஸாத் ஏழைப் பெண்கள் கல்வி பயிலும் ஒரு முதனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை. “வீட்டிலே என்றுமே பெறாத மரியாதையை, இங்கே இந்தப் பள்ளியிலே பெறுகின்றேன்’ என்று சொன்ன பாரிஸாத்தை மீண்டும் ஒரு திருமண வீட்டில் ஹைதராபாத்தில் ஒரு வருடத்தின் பின் வெண்ணிற ஆடை யில் குழிவிழுந்த கண்களுடன் அனிஸ் ஜங் காண்கிறார். அவரது கரங்களைத் தோழமையுடன் பற்றிக் கொண்ட பாரி

Page 27
50 ஸாத் சொல்கிறார், "என் கணவர் போய் விட்டார்." ஆழமான துயரத் தோடு ஒலித்தது அழுகை, “என்றாலும் இது விடுதலை என்று எண்ண முடிய வில்லை." வெளியே கல்யாணச் சிந்தாள் முழங்கும் அந்த வீட்டிலே வெறுமை படர்ந்து கிடந்த அவரது கண்களை ஏறிட்டுப் பார்த்து, “மீண்டும் திருமணம் முடிப்பீர்களா நீங்கள்?" என்ற கேட்கத் தோன்றிய கேள்வியை கேளாமலேயே திரும்பியதாக அனிஸ் ஜங் குறிப்பிடுகிறார்.
இப்படிப் பல பெண்களுடன் அனுபவம் பகிர்ந்து, அழகுற தொகுத்
தளித்து அவற்றை ஒரு தரம் வாய்ந்த நூலாக வெளியிட்டிருக்கிறார் அனிஸ் ஜங். இலக்கியம் கொஞ்சி விளையாடு கின்ற அழகிய ஆங்கில எழுத்துநடை கண்ணயராமல் நம் மைக் கட்டி வைத்திருக்க உதவுகின்றது.
புத்தகத்தைப் படித்து முடிக்கை யில், பெருத்த ஓசையோடு மனத்தரை மீது புயல் விசிய மாதிரி ஒரு உணர்வு மேலிடுகிறது. முழுப் குலத்துக்குமான விடிவு வேண்டி இறை
பெண்
யோனைப் பிரார்த்தித்துக் கிடக்கிறது
மனசு
7
ܡܓܠ
அநுராதபுர மாவட்ட விரதேச மலர் சிறப்புற அமைய நல் வாழ்த்துக்கள்
கெகிறாவ சுலைகா சகோதரிகள்.
ཡོད།
கெகிறாவலஹானா
کس=

51
கிழக்கின் ஒளிக்கீற்றுக்களின் தகதகப்பு மெதுவாக வீட்டிற்குள் தடம் பதித்தது.
திறந்திருந்த ஜன்னலினூடு எட்டிப் பார்த்த காற்று, சுவரில் மாட்டப்பட்டிருந்த
கலண்டரை அசைத்தது. அந்த படபடப்பை கவலையோடு பார்த்தேன். சாம விழி
களில் தன் தூக்கத்தை தொலைத்துவிட்டு சற்று நேரத்துக்கு முன்னர்தான்
கண்ணயர்ந்த ஹேமாவின் உறக்கம் கலைந்து விடுமோ எனும் ஆதங்கம் நெஞ்சைப் பிறாண்டியது.
ஹேமாவின் அரவணைப்பில் மல்லிகைப்பூ! எங்கள் வைரக்குஞ்சு இரண்டு நாட்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறான். என் கண்கள் பிழியப்பட்டு கண்ணிர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது. அவசரமாய் துடைத்தபடி என் பார்வையை வேறு திசையில் நகர்த்த முயன்றேன், முடியவில்லை. ஞாபகம் என் மனைவியின் புலம்பலுக்குள் ஆணி அறைந்தது.
"ஐயோ! யார் கண் பட்டதோ! என் குஞ்சு இப்படி இருந்து நான் பார்க்கலையே. பச்சைத் தண்ணி கூட பல்லில படாம"
அவளின் விசும்பல் எனக்குள்ளும் பரவும். யாரை யார் ஆறுதல்படுத்துவது?
சோக முட்களின் அதிர்வுகளால் மனசு ஒடிந்து போக திண்ணையில் உட்கார்ந்தேன். வெறித்த என் பார்வை எங்கெங்கோ மோதிக் கொண்டே இருந்ததே தவிர, வெறித்த மனசுக்குள் இரண்டு வயது மகன்தான் வீழ்ந்து கொண்டிருந்தான்.
“மகன். வேற டொக்டர்ட்ட புள்ளய காட்டுவோமே! புள்ளட கலகலப்பு இல்லாம விடே பாழடைஞ்ச மாதிரியல்லா கிடக்கு!"
அப்பாவின் சோக பிரதிபலிப்பு வார்த்தைகளாய் கசிந்தது.
“சரிப்பா. நாளைக்கு ஸ்பெஷலிஸ்ட காட்டுவம்.”
ஹேமா தேநீரை கொண்டு வந்தாள். தேநீர் உஷ்ணத்தில் கூட எம் சோகம் காயாதா!
அப்பா எம்மை தனிமைப்படுத்தி LFeb. விட்டு தேநீரை உறிஞ்சியவாறு மறைந் தார். மெளன நிமிடங்களுக்குள் நாம்!
o yrr o - ஜன்ஸி கபூர் - - - - - - - - - - - - - - - گ گ
என்ர புள்ளைக்கு ஏதும் நடந்திச் சென்றால் நான் உசிரோடு இருக்க
tom Ler.'

Page 28
52
"ஷ.. அப்படியெல்லாம் ஒன்னும் நடவாது! விஷர் கத கதைக்கிறீர். பேச் சுக்குக்கூட பிள்ளைய பிரிவோமொன்று சொல்லாதையும்."
என் உஷ்ணத்தில் ஹேமாவின் நகர்வு தெரிந்தது. மீண்டும் தனிமை படுத்தப்பட்டேன். ஹேமா பெண் தன் உணர்வுகளை அவ்வப்போது வெளிப் படுத்துகிறாள். ஆனால் என்னால்!
குழந்தையின் அழுகுரல் பலமாய் கேட்கிறது. ஹேமா தலைதெறிக்க அறைக்குள் ஒடுகிறாள். "என்ர குஞ்சு. கனவு கண்டனீங்களோ' அழும் குழந்தையை ஆசுவாசப்படுத்த முயல் கிறாள். நானோ அவளருகில் நிழலாய்.
வாசலில் ஆட்டோ சப்தம் ! றினோஸா! சோகத்தின் மொத்த வடிவமாய்!
"அன்ரீ” குலுங்கிக் குலுங்கி அழு கிறாள். "உங்க மெஸேஜ் கிடைச்சதும் உடனே ஒடி வாறம். என்னால தாங்க முடியல அன்ரீ."
றினோஸாவின் ஈரம் என் உணர்வு களை நெருடியது. கல்யாணமாகி எத் தனையோ வருஷமாச்சு. எங்கட வாரிசா ஒரு புழுபூச்சி கூட வரல. புள்ளைக்காக பாசத்தில வெந்து கொண்டிருந்த எங் களுக்கு பால் வார்த்தது றினோஸாதான். ஜாதி, மத பேதம் எல்லாம் கடந்து, மறந்து றினோஸா காட்டின பரிவில அவள் குழந்தை எங்க குழந்தையாகவும் எங்க வீட்டில்!
குழந்தையை அள்ளியெடுத்து முத்த மழையில் நனைக்கும் அந்தத் தாய்மை
-E) S.
யின் நெருடல் என் மனைவியின் கண்ணீரை துடைத்திருக்க வேண்டும்.
“மக.
காலைல உன்ர முகத்தில விழிக்கிற புள்ள இரவு தூங்கிறது என்ர மடியிலதானே ராசாத்தி. என்ர கைக் குள்ள இருந்த புள்ளைக்கு இப்படி ஆச் சேம்மா!' மனைவி மீண்டும் குலுங் கினாள்.
பக்கத்து வீட்டு றினோஸா உற வினர் வீடொன்றுக்கு பயணம் போகப் போகிறாள் எனும் செய்தியை உள் வாங்கிக் கொண்ட ஹேமா துடித்த &lւգւնւյ... !
"ஐயோ. புள்ளய பார்க்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடி யாதே." அவளின் பாசத்துடிப்பு றினோஸாவிடம் கெஞ்ச வைத்தது.
"மக. குழந்தைய நான் வைச்சு கொள்றேம்மா" றினோஸா மறுக்க வில்லை. அந்தத் தாயின் தாய்மைக்காக கட்டுப்படுத்திக்
தன் பாசத்தை
கொண்டாள்.
றினோஸாவின் அரவணைப்பில்
கிடந்த குழந்தையின் மென்னுடலை
மெதுவாக வருடிக்கொடுத்தாள் ஹேமா. எடுத்திட்டு போகட்டா. சொகமானதும் கொண்டு வந்து தாறன்."
றினோஸா விடைபெற, வோ என் மார்பில் முகம் புதைக்கிறாள்.
'அன்ரீ... புள்ளய
ஹேமா
அவளின் விசும்பல் என் இருதயத்துக் குள்ளும் குத்திட்டு நின்றது. இருவரும் ஈரமான விழிகளுடன் பிள்ளை போகும் திசையை பார்த்துக் கொண்டு நின் றோம். பு

53 நான்கு திரைப்படங்களும் பதின்மூன்று அங்கங்கள் கொண்ட ஒரு மெகா தொடரையும் தந்து இவைகளுக்காக சர்வதேச விருதுகளை வென்ற ஒரு திறமை வாய்ந்த இயக்குநரான அசோக ஹதகமகேவின் அக்ஷரய திரைப்படத்தினை இலங்கை தணிக்கைச் சபை "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற லேபலுடன் திரையிட அனுமதித்தாலும் கலாசரா அமைச்சர் இந்த அனுமதியை மறுத்துரைத்து பொதுமக்கள் பார்வையிடுவதை தடை செய்துள்ளார். அத்துடன் இலங்கை சிறுவர் பாதுகாப்புப் பிரிவு இத்திரைப்படத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. தேசத்தின் நன்நடத்தை, கலாசாரம், சீர்கேடு போன்ற நோக்கங்களை கருத்திற் கொண்டு இத்திரைப்படத்தை திரை பிடுவதை அமைச்சர் விரும்பாததை தொடர்ந்து அக்ஷர அனைவராலும் பேசப்படக்கூடிய ULLDITs LDITg5uisite Tg5).
Sh க் ճւք രഗ്രസ്ത്ര 3/27.7/lta
- அநுராதபுரம் டில்ஷான்
கலை என்பது மனிதன் பெற்றுள்ள இயற்கைச் செல்வமாகும். மனிதன் எதனையும் கலை உணர்வுடன் ரசிக்க வேண்டும். திரைப்படங்களின் மூலம் மனிதன் நன்மை களையும், தீமைகளையும் பெற்றுக்கொள்வது அவனவன் நோக்கும் போக்கிலேயாகும். நல்ல நோக்கில் பார்க்கும் திரைப்படங்களில் அநேக நன்மைகள் உள்ளன. ஒரு படைப் பாளனுக்கு இயற்கை கொடுத்த படைப்பு ஆக்கத்திற்கு உருகொடுப்பது படைப்பாளியின் சுதந்திரம். தான் விரும்புகின்றவற்றை ரசிப்பதும் விமர்சிப்பதும், விரும்பாததை வெறுப்பதும் ரசிகனின் உரிமையாகும். இவ்வுரிமைகளுக்கு தடை போட யாருக்கும் உரிமை கிடை யாது என்ற கருத்துக்களை அக்ஷரவின் தடை ஓர் உரிமை பாதிப்பு எனக் கருதியவர்கள் சுட்டிக்காட்டுதலாகும்.
அநுராதபுர விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கேட்போர் கூடத்தில் கடந்த 08.07.2006ஆம் திகதியில் அக்ஷ்ர திரைப்படத்துக்கு மட்டுமல்லாமல் மக்களுக்குத் திரை வடிவங்கள், கலைவடிவங்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக சிந்தனைக் கிளர்ச்சியை உண்டு பண்ணுவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற சமூகச் செயற்பாட்டுக் குழு' அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட திரைப்பட நெறியாளர் திரு. தர்மசிறி பண்டாரநாயக்க மற்றும் பேராசிரியர் சுசரித கம்லத் போன் றோரின் கருத்துக்களும் அக்ஷரவின் தடை பிழையானதொன்று என்பதாகவே காணப் Ull-5.

Page 29
54
அக்ஷரவுக்கு எதிராக முன்வைக்கப் பட்ட விமர்சனங்களில் ஒன்று அது பெளத்த மத கலாசாரத்துக்கு எதிரானது என்பதாகும். பேராசிரியர் சுசரித கம்லத் இது தொடர்பாக பேசும் பொழுது பெளத்த மதமானது எந்த கொள்கையையும், கொள்கைவாதியின் கருத்துச் சுதந் திரத்தையும் புறக்கணிக்கும் ஒன்றல்ல. எனவே படைப்பாளியின் கருத்துச் சுதந் திரத்தை கட்டுப்படுத்த நினைக்கும் சபை யினர் தாம் பெளத்த மதத்துக்கு எதிரான வர்கள் என்ற அடையாளத்தை நிரூபிக்க பெளத்த மதத்திலேயேயுள்ள பல ஆதாரங் களைச் சுட்டிக்காட்டினார்.
இத்திரைப்படத்தில் வருகின்ற காட்சி களில் ஒன்றாகிய தாயும் 7 வயதான ஒரு மகனும் (நிர்வாணமாக) குளியல் அறைத் தொட்டியில் நீராடுவதுடன், மகன் தாயின் மார்பு அவயவங்களைப் பார்த்துக் கொண் டிருப்பதும் மற்றும் திரைப்படத்தில் சிற்சில சந்தர்ப்பங்களில் பேசப்படுகின்ற ஆங்கில தூவடிண வார்த்தைகளும் இப்படத்தினை தடை செய்ய காலாய் அமைந்துள்ளன என்பதை தடை செய்தவர்கள் தெரிவிக் கின்றனர். சிங்களவர்களும், தமிழர்களும் பாதத்தில் விழுந்து வணங்கும் தாயை, கிறிஸ்தவர்கள் புனிதமாக மதிக்கும் தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உண்டு என்று கருதும் இஸ்லா
மாதாவை,
மியர்கள் என்றெல்லாம் உயர்வாக நினைக்கும் தாய்மையை அகெளரவப் படுத்தும் இக்காட்சிகள் கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தில் அக்ஷரவுக்கு எதிராக கொடி தூக்கு பவர்கள் பலர். மேலே கூறப்பட்ட தடை
செய்யப்படக்கூடிய காட்சிகளுடன் உள்ள திரைப்படத்தினை பொதுமக்களுக்கு பார்வையிடுவதற்கு எவ்வாறு அனுமதி அளிப்பது என்பதை கேள்வியாகக் கேட் கிறார் அமைச்சின் செயலாளர் விமலதாச சமரசிங்க அவர்கள்.
இந்நாட்டின் பெண்கள் சர்வசாதாரண மாக விரும்பிய உடையணிவதும், குளங் களிலும், ஆறுகளிலும் அரை நிர்வான மாக நீராடுவதும், பசித்த குழந்தைக்குப் பல சமயங்களில் திறந்த வெளிகளில் பாலூட்டுவதும் இந்நாட்டில் பிழையான விடயமாகத் தென்படுவதில்லை. எனவே இவற்றினைக் காட்சிகளாக எடுத்தது எந்த வகையில் பிழையாக அமையும் என்பது அக்ஷரவிற்காக குரல் கொடுப்பவர்களின் மற்றொரு வாதம்,
இது வினோதமான வாதம். எவ் வாறிருக்கின்றதென்றால், பெண்களும், ஆண்களும் திறந்தவெளியில் நீராடுவதும், அரை குறை ஆடைகளுடன் உலா வரு வதும் திருத்தப்பட வேண்டிய விடயமல்ல. திரைப்படங்கள் போன்ற சாதனங்களால் வளர்க்கப்பட்டு, சிறுவர்களினால் ரசிக்கப் பட்டு, சிறுவயதிலேயே பாலியல் சம்பந்த மான பகிடிகளில் ஈடுபடத் தூண்டப்பட வேண்டும்' என்று கூறாமல் கூறுவதாக அமைகிறது என்பது அக்ஷரவின் எதிர்க் கட்சியின் வாதம்.
இது கலாச்சார விழுமியங்களால் மக்களை அடிமைப்படுத்தும் காலமல்ல. மனிதன் சுதந்திரமானவன். அவனது
சுதந்திரமான செயற்பாடுகளுக்கு தடை
போடுவது உரிமை மீறல் ஆகும். இன்

றைய நிலையில் தன் குழந்தையைக்கூட அடிக்கத் தந்தைக்கு உரிமை கிடையாது. அவ்வளவிற்கு உரிமைகள் பாதுகாக்கப் படுகிறது. ஆனால் இலங்கையில் ஒரு கற்பனை கலந்த திரைப்படத்தினைக் கூட வெளியிடுவதற்குத் தடை போடுவது பெரும் குற்றம் என்று கருத்தும், இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளை பின்பற்றுவது எவ்வகையிலும் பொருந் தாது. அதிக பட்ச உரிமை ஆதால பாதாளாத்திற்கே இட்டுச்செல்லும், அமெரிக்காவில் 1960களுக்குப் பின்னர் விவாகமாகாமல் குழந்தை பிறக்கும் தொகை 35% மாக உயர்வதற்கு கட்டுப் பாடற்ற சமூகமே காரணம் என்ற கருத்தும் ஒன்றையொன்று மோதுகிறது.
எதனையும் கலையுடன் ரசிக்க வேண்டும். அதில் பல நல்ல படிப்பினை கள் உள்ளன என்ற கருத்தும், உனது தாயை நிர்வாணமாக நடிக்க வைத்து நீ அணுவணுவாக அவளது கலையை ரசிப் பாயா? என்ற கேள்வியும் ஒன்றையொன்று மோதுகிறது.
சிறு குழந்தை சிறுநீர் கழிப்பதனை இன்று புகைப்படமாக்கி கலையம்சச் சித்திரமாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதனை யாரும் எதிர்ப்பதில்லை. வீடு களுக்கு கொண்டு சென்று சுவர்களில் அழகுக்காக தொங்க வைக்கிறார்கள் என்ற யதார்த்தக் கருத்தும் இன்று சிறுநீர் கழிக்கும் குழந்தையின் படம், நாளை இளைஞனின் அல்லது யுவதியின் படம், மறுநாள் உடலுறவுப் படம் என வியாபித் தால் இதனையும் வீடுகளில் தொங்க
55 விடுவது சரியா என்ற கேள்வியும் ஒன்றை யொன்று மோதுகிறது.
ஆபாசக் காட்சிகள் இல்லாமல் அக்ஷர பட்டிருந்தால் அது தடையுத்தரவுக்கு உள் ளாக எந்தக் காரணமும் இல்லை என்ற
திரைப்படம் தயாரிக்கப்
வாதமும், ஆபாசக் காட்சிகள் என்று எதுவுமே அதில் இல்லை. பால் ஊட்டும் மார்பினை ஆபாச பகுதி எனக் கூறுவது எந்த வகையிலும் அறிவுடைமையாகாது என்ற வாதமும் ஒன்றையொன்று மோது கிறது.
சிறுவயதிலேயே பாலியல் பற்றிய படிப்பினை வழங்குவதினால் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் குறைக்கப் படும் என்ற வாதமும், ஆபாசக் காட்சிகள் விதையிலேயே கிள்ளி வேண்டும் என்ற வாதமும் ஒன்றை யொன்று மோதுகிறது.
எறியப்பட
கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்து முரண்பாடும் இல்லை.
சமூகம் ஒழுக்கத்தை மறக்கக் கூடாது என்பதிலும் எந்தக் கருத்து முரண் பாடும் இல்லை.
எது எப்படியோ, யாரும் பார்க்காத இன்னும் திரையிடப்படாதத் திரைப் படத்துக்கு இவ்விமர்சனம் கூறும் கருத்துக் களும், திரைப்படம் திரையிடப்பட்டதும் எழுகின்ற விமர்சனங்களும் ஒன்றை யொன்று எந்தெந்த வகைகளில் மோதும் என்பதும் இன்றய நிலையில் ஓர் கேள்விக் குறியே

Page 30
56
என் வறிருதயம்
ertieslaugsglei) : Pygmy (Africa) பிக்மி (ஆபிரிக்கா)
தமிழில் கெகிராவ மும்தாஜ் முபாரக்
என் ஹிருதயம் நிறைந்த மகிழ்ச்சியில் களிக்கிறது. அந்த வனத்தே,
மரங்களினடியில்
என் ஹிருதயம் பாடுதலில் சிறகு கட்டிக் குதூகலிக்கிறது. அந்த வனம்
எங்கள் வசிப்பிடம். இன்னும் சொல்வதாயின், எங்கள் தாய்.
என் நூலிழை மீதில்
ஒரு சிறிய
சின்னஞ்சிறிய பறவையை நான் எடுக்கிறேன். என் ஹிருதயம் அந்த நூலிழை மீதில் இணைக்கப்படுகிறது, மறுமுனையில் அந்தப் பறவையுடன்!!!

57
“மாரிமுத்து ஐயா. என்ன? மிச்சம் நாளா. உங்கட பாக்கிக் கணக்கு இருக்குது. போன வருஷத்தல எங்கிட்ட சாமான் வாங்கினதுதானே? கணக்கு முடிக்கிறது இல்லியா..?”
“ஓம் முதலாளி. இந்தப் பயணம் சூடு மிதிச்ச உடன கடன தந்து போடுறன். பொறுத்ததோடக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க.."
“சரி சரி சொணக்கம் வாணாம்! இப்ப என்னத்துக்கு இந்த நேரத்துல வந்தது.?”
"அதுதான் முதலாளி. இண்டைக்கு பின்னேரம் சூடு மிதிக்கப் போறன். மாடு வேணும்."
“மாடா? ம். சரி சரி எத்தின மாடு வேணும்?
"நாலு புணையல் தாங்க முதலாளி. இந்தப் பயணம் விளைச்சலும் நல்லா இல்லை. இருக்கிறத புது வருஷத்துக்கு முந்தி மிதிச்சுப் போடலாம் எண்டு
பார்க்கிறேன்."
“சரி சரி மாடு தாரன். ஆனா, இந்தப் பயணம் புணையலுக்கு அரப்பூசல்
நெல்லு கூடத்தரவேணும் தெரிஞ்சுதா நெல்லு வெதக்கிற சமயமும் எங்கிட்டத்
தானே மாடு கொண்டு போனது. அதுக்கும் சேத்து புணையலுக்கு அரப்பூசல் நெல்லு கூடத் தரவேணும். நெனவு இருக்குத்தானே?"
பழைய கணக்கெல்லாம் புதுக்கணக்காக முதலாளி சொன்னதும், மாரிமுத்துவின் தலை சுற்றியது. என்ன செய்கிறது?
அந்நாளில் முதலாளியை விட்டால்
அந்தக் கிராமத்தில் அவருக்கு உதவி செய்யக்கூடியவர் யார் இருக்கிறார்கள்? O
அந்தக் கிராமம் குடியேற்றவாசிகள் O SM9گ" வாழும் ஒரு சிறிய கிராமம். நகரத்தில் s இருந்து இருபது மைல் கல் தொலை გw0) வில் இருக்கிறது. கிராமத்தில் அர CS) னோளிஸ் முதலாளியின் கடை ஒன்று (ტý தான் இருக்கிறது. அந்தக் கடையில் கிராமவாசிகளுக்கு வேண்டிய புகை كلونو” யிலை, சுருட்டு, உப்புக்கருவாடு, கொறக்காய்ப்புளி போன்ற அன்றாடம்

Page 31
58 தேவைப்படும் சாமான்கள்தான் இருக் கும். மற்றும் பெரிய தேவைகளுக்கு அவர்கள் வண்டிலைக் கட்டிக்கொண்டு நகரத்துக்குப் போய் வந்தால்தான் உண்டு.
இந்தச் சாமான்களையும் அவர்கள் அவ்வப்போது அரனோளிஸ் கடையில் "பண்டமாற்றுக் கணக்கில் பற்று வரவு செய்து கொள்வார்கள். கையில் தானியங்கள் இல்லாத போது, கடன் சொல்லி நெல் அறுவடைக் காலத்திற் கணக்குகளை அடைத்துக் கொள் வார்கள்.
கடன் வைப்பில் அரனோளிஸ் முதலாளி வைப்பதுதான் கணக்கு, அவர் காட்டுங் கணக்குகளுக்கு யாரும் அங்கு அப்பீல்' செய்வது கிடையாது.
* :
குடியேற்றவாசிகளில் ஒருவராக வந்து குடியேறிய அரனோளிஸ், ஆரம் பத்தில் ஒரு சிறு மேசையை மட்டும் வைத்து புகையிலை, சுருட்டு என்று விற் றார். நாளடைவில் கொஞ்சம் கொஞ்ச மாக நகரில் இருந்து பல சரக்குகளைக் கொண்டு வந்து பெட்டிக் கடையாக்கி இன்று பெரிய கடையாக்கி, 'கடே மொதலாளி” என்ற கெளரவப் பெய ாேடு வெகு நடப்பாக இருக்கிறார். நெல் விதைப்புக் காலத்தில் சில்லறைச் சாமான்களாகவும், வட்டிக்குப் பணமாக வும் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து, அறுவடைக் காலத்தில் வட்டியும் முதலு மாகக் கறந்து கொள்வார். கிராமத்துச்
சந்தியில்தான் முதலாளியின் வீட்டு முகப்பில், கடை இருக்கிறது. அவரிடம் ஏராளமான எருமை மாடுகளும் இருக் கின்றன. விவசாயிகளின் கமங்களில் வேலை செய்ய எருமைகளை வாடகைக் குக் கொடுத்து ஒன்னுக்குப் பத்தாக கணக்கெழுதி அறுவடையின் போது நெல்லாகக் கடனை வசூல் செய்து கொள்வார் முதலாளி.
அவருடைய சுரண்டலை அந்தப் பாவப்பட்ட ஏழை விவசாயிகளும் கண்டுகொள்வதில்லை. அவரை எதிர்த்து நிற்க அவர்களிடம் திராணி இருக்கவில்லை.
கண்டாலும்
அந்த 'மதிப்பார்ந்த பிரஜைகளில் ஒருவர்தான், மாரிமுத்து. தலைக்கு மேல் ஏறிய கடன் சுமையுடன் அதற்கு மேலும் சுமை ஏற்ற அன்று காலை யிலேயே அரனோளிஸ் முதலாளியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்.
“மாரிமுத்து ஐயா. பட்டிக்குப் போய் குடாபண்டாகிட்ட நான் சொன் னேன் எண்டு நாலு புணையலைக் கேட்டு வாங்கிக் கொண்டு போங்க. ஆனா ஒண்டு சொல்லிப் போடுறன். இந்தப் பயணம் பாக்கியில் மிச்சம் வய்க் காம குடுக்க வேணும். தெரியுமா?" என்று கறாராகச் சொல்லிக் கொண்டு எங்கோ அவசர அவசரமாகப் புறப் பட்டுச் சென்றார்.
கடனுக்கு மேல் கடன் பெருகி யிருக்க, இந்த முறையும் மாடு தரு வாரோ என்று ஏக்கத்தோடு வந்த மாரி முத்துவுக்கு முதலாளியின் பதில் நெஞ்

சில் பால் வார்த்தது. மிகுந்த மகிழ்ச்சி யோடு தோளில் இருந்த சால்வைத் துண்டை எடுத்து தலையைச் சுற்றி வரிந்து முண்டாசாகக் கட்டினார். வேட் டியை மடித்து முழங்கால்களுக்கு மேல் உயர்த்தி இறுக்கிக் கட்டினார். கையில் தான் கொண்டு வந்த காட்டுக் கறிவேப் பிலைக் "கேட்டிக் கம்பையும் எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த உதவியாளர் பின் தொடர ஒழுங்கை வழியால், காட்டுப்பக்கமாக இருந்த முதலாளியின் மாட்டுப் பட்டியை நோக்கி உற்சாகமாக நடந்தார். பட்டிக்கு வந்ததும் குடா பண்டாவைத் தேடிப்பிடித்து பட்டிக்குள் நின்ற நல்ல வாட்டசாட்டமான நான்கு நாம்பன் எருமைகளை நான்கு எருமைப் பசுக்களுடன் வரிசைப்படுத்திப் பிணைத் துக் கொண்டு மீண்டும் ஒழுங்கை வழி யால் உதவியாளருடன் தன் வயக் காட்டுக்குப் புறப்பட்டார், மாரிமுத்து.
பின்னுக்கும் பக்கவாட்டிலும் உதவியாள் மாறி மாறி வர மாரிமுத்தர் மாடுகளுக்குப் பின்னால் அவற்றை ஒட்டிக்கொண்டு வந்தார்.
மாடுகள் முதலில் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும், பின்னர் அவர் களின் வழிநடத்தலுக்கும், "ஒவ். ஒவ்.” என்ற அதட்டலுக்கும் அடங்கி அமைதியாக முன்சென்றன.
உச்சி வெய்யில் தலைக்கு மேல்
ஏறிக்கொண்டிருந்தது. மாடுகள் அந்தரப் படாமல் ஆறுதலாய்ப் போய்க் கொண்டிருந்தன.
அப்பொழுது -
59
மாரிமுத்தரின் சிந்தனை அவரின்
கடந்தகால நினைவலையில் ஊர்ந்து வர,
அவர் இனந்தெரியாத சுகாநுபவத்தில் மிதந்தார்.
அந்த நாளில்,
நாட்டில் வெள்ளைக்காரன் ஆட்சி நடந்தது. கிராமங்களும் நகரங்களும் அர சாங்க ஏஜன்ட் துரைமாரால் நிருவாகஞ் செய்யப்பட்டு வந்தன. இலஞ்சம் ஊழல் என்று இல்லாவிட்டாலும் ஆங்கிலம் படித்த சுதேசியத் துரைமார்களின் கெடு பிடிகளில் நாட்டு ஏழைகள் தூணில் இருந்து கம்பத்துக்கும், கம்பத்திலிருந்து துணுக்கும் பந்தாடப்பட்டார்கள்.
அப்பொழுதுதான், அரசாங்க சபை யில் நிறைவேறிய காணி அபிவிருத்தித் திட்டங்களும், குடியேற்றத் திட்டங் களும் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப் பட்டன. அதன் பயனாக வடமத்திய மாகாணத்தில் தூர்ந்து போன பழைய மன்னர்களால் கட்டிக் காத்த குளங் களும், வரண்டு கரடுபற்றித் தேடுவார் இல்லாமல் இருந்த தரிசு நிலங்களும் புனருத்தாரணம் பெற வாய்ப்பேற் பட்டன. அதன் பேரில் கலாவெவக் குளத்தின் யோதல என்ற இராட்சதக் கால்வாய் துரரெடுக்கப்பட்டு, வாவியின் நீர் அதன் மூலம் நாச்சியாதீவு எனுங் குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்தப் பெருங்குளத்தில் இருந்து மேற்கு முகமாக மேலும் ஒரு பெருங் கால்வாய் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு

Page 32
60 அதனின்று இரு புறங்களிலும் பதி னொரு சிறு கால்வாய்கள் காணி அபி விருத்திக்காக அமைக்கப்பட்டன. அந் தக் கால் வாய்களை மையமாகக் கொண்டு ஒரு புதிய குடியேற்றம் உரு வாகியது. அப்புதிய குடியேற்றம் கிதோ கம என்ற கிராமத்தை உருவாக்கியது. இந்தக் குடியேற்றத்துக்கு அநுராதபுரம் நகரை அண்டிய கிராமங்களிலும், மலை யகம் மற்றும் கடற்கரையை அண்டிய கரையோரப் பிரதேசங்களிலும் இருந்து காணி இல்லாதவர்களுக்கு தொண்ணுாற் றொன்பது வருடக் குத்தகையில் (99 Year Lease) G5 frGraf 35 Gir Lu SR i fjög அளிக்கப்பட்டன.
இதிற் பெரும்பாலும் பெரும் பான்மைச் சமூகத்தவரான சிங்களவர் களே கூடிய பங்கைப் பெற்றனர். நாட் டின் சிறுபான்மையினரான தமிழருக்கு அங்கொன்றும் இங்கொன்று மாக கிள்ளித் தெளிக்கப்பட்டன.
ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஐந்து ஏக்கர் பள்ளக் காணியும் இரண்டு ஏக்கர் மேட்டுக் காணியும் என காட டர்ந்த பிரதேசங்கள் கிடைத்தன. நீர்ப் பாசனக் கால்வாய்கள் முழுமையாக நிருமாணிக்கப்படாத அக்காணிகளில் காட்டு யானை, கரடி, நரி போன்ற வன விலங்குகள்தான் வாழ்ந்தன.
காடுகளை அழித்து அவற்றைக் கழனிகளாக மாற்ற அந்தக் குடியேற்ற வாசிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். சிரமத்தைத் தாங்க முடியாதவர்கள் பலர், வந்த வழியே திரும்பிப் போக, எஞ்சியவர்கள் மட்டும் சிரமங்களுக்குள்
·으
s 。
·亡评 Sa @
•b bM
S
நிலையூன்றினார்கள். அவர்கள்தான் தம் முயற்சியால் தமக்குக் கிடைத்த காணி களில் காடுகளை அழித்து கழனி பெருக்கி, கால்வாய் நீருடன் வான் மழையையும் பெற்று கிதோகம என்ற புதுக் கிராமத்தைப் பொன் கொழிக்கும்
மாற்றிய
பூமியாக சிற்பிகளாக
விளங்கினர்.
அநுராதபுரம் நகரில் இளங் குடும் பத்தினனாக சிறு தொழில்களிலும், சின்னஞ் சிறு வியாபாரங்களிலும் இருந்த மாரிமுத்துவுக்கு கிதோகம குடி யேற்றத் திட்டத்தில் காணி கிடைத்தது. ஆரம்ப நாளில் இரத்தத் துடிப்பில் முன் பின் விவசாயத்தில் ஈடுபடாத அவன் முழுக்க முழுக்க அந்தக் காட்டுப் பிர தேசத்தில் தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்டான். தன்னந் தனிய னாக அத்திட்டத்தில் ஒன்பதாம் வாய்க் காலில் பெரும்பான்மைச் சமூகச் சூழ லில் ஒரு தமிழனாக வாழத் தலைப் பட்டான் மாரிமுத்து.
அவனுக்கு அந்நாளில் சிரமம் எதுவும் இருக்கவில்லை. உடன்பிறவாச் சகோதரர்கள் போல் அவனுக்கு அங்குள்ள எல்லோரும்
egunT. . . .
நட்பாகவும்
"ஐயா... " என்று மரியாதையாகவும், இருந்தார்கள். முத்துவும் அவர்களுடன் இன மத பேதம் எதுவும் இல்லாமல், வேறு பாடின்றி "சகோதர விவசாயி’ என வாழ்ந்தான்.
மாரி
மற்றவர்கள் போல் தனக்குக் கிடைத்த காட்டுக் காணியை இரண்டு ஆண்டுகளுக்குள் காடழித்து, எரித்து

நிலத்தைக் கொத்தி, வான் மழையில்
முதலில் விளைவித்து வாழ்ந்தான், மாரிமுத்து. அதனையடுத்து நாலைந்து ஆண்டுகளில் காணியில் எரிந்த மரக்கட்டைகளைப் பிடுங்கி, விளைவிக்க வரம்புகள் அமைத்து, நீர் பாசனத்துக்கு வாய்க்கால்களும் அமைத் தான். மேட்டுக் காணியையுந் திருத்தி பலா, தென்னை, கமுகு போன்ற வான் பயர்களையும் நட்டுத்
ஈரமாக்கி "சேனைப்பயிர்"
பள்ளக் காணியில் நெல்
நல்ல மா,
தோப்பாக்கினான். அத்தோடு தோப் புக்கு மத்தியில் காட்டு மரந்தடி களாலும், களிமண்ணாலும், வைக் கோலாலும் நல்லதொரு குடிசையையும் அமைத்து "அசல் கிராமத்துக் கமக் காரன்’ ஆனான், மாரிமுத்து.
நகரில் அவனுடைய மனைவி நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்தாள். இவன் அடிக்கடி நகருக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்து வந்தாலும், அவனுடைய சீவியம் நாளும் பொழுதும் கிராமத்தில் இருந்த வயற்காட்டிலும் தோட்டத் தோப்பிலுமே இருந்தது. ஆரம்பத்தில் வயலும் தோட்டமும் மாரி முத்துவின் அயரா முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் ஏற்ற பலனைத் தரா விட்டாலும் நாளடைவில் பலனைத் தந்தன.
இந்த இடையில்தான் இரண்டாம் மகா யுத்தம் ஏற்பட்டு நாடு யுத்த கெடு பிடிகளுக்குள் அவலப்பட்டது. அதிலும் நகரங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து நகர மக்கள் கிராமத்துக்குள்ளும், காடு
61 களிலும் ஒதுங்கினார்கள். இந்தவேளை யில் மாரிமுத்துவின் குடும்பமும் நகரி லிருந்து நிரந்தரமாக கிதோகம கிரா மத்திற்கு இடம்பெயர்ந்து கொண்டது.
'மழை ஓய்ந்தும் தூவானம் ஒய வில்லை" என்ற கதையாக நாலைந்து ஆண்டுகளுக்குள் உலகப் போர் முடிந்தும் நாட்டு மக்களின் அவலம் ஒய வில்லை. உணவுப் பஞ்சம் எங்கும் தலைவிரித்தாடியது. நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் "ரேஷன்” என்ற கூப்பன் பங்கீட்டு முறையைக் கொண்டு வந்து உள்ள உணவைப் பகிர்ந்து விற் பனை செய்தது. அந்த நாளில்தான் நாட் டில் "கூப்பன் மா” என்றும் அமெரிக்கன் மா’ என்றும் கூறி, கோதுமை மாவை அறிமுகப்படுத்தி இருந்தது. நெல்லரிசி மா, குரக்கன் மா, மரவள்ளி மா, ஒடியல் மா என்று தமது அன்றாட உணவில் பழக்கப்பட்ட மக்கள் "கூப்பன் மா? என்ற விதேசிய மாவைத் தமது உணவுத் தேவைக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள
ஆளானார்கள்.
இதேகாலத்தில் தான் வான் மழை யும் பொய்த்து விவசாயம் எல்லாம் படுத்துக் கொண்டது. ஆறு, குளம், குட்டை எல்லாம் வற்றி நீர்ப் பஞ்சமும் சேர்ந்து கொண்டது.
இந்த நிலையில் கிதோகம குடி யேற்றத் திட்டத்திற் குடியேறிய விவ சாயிகளும் தமது புதிய வாழ்வில் பஞ் சம், பசி, பட்டினி, நோய் நொடிகளில் மிகவும் துன்பப்பட்டார்கள். அப் பொழுது மாரிமுத்துவும் சொல்ல முடி யாத பொருளாதாரக் கஷ்டத்தில் மூழ்

Page 33
62 கியதோடு தனது அருமைக் குழந்தைகள் இரண்டைக் காலரா நோய்க்கும் பறி கொடுத்தார்.
பல ஆண்டுகள் ஒன்றன் பின் ஒன் றாகப் பல கஷ்டங்களுக்குள் சிக்கித் தவித்த மக்களுக்கு கடைசியாக கடந்த மாரி காலத்தில் வானங் கறுத்து ஓரிரு மழைத்துளிகள் பொழிய மனங் குளிர்ந் தார்கள். ஆறு குளங்களில் ஒரளவு நீர் நிறைந்து இருக்க விவசாயிகள் தூர்ந்த கால்வாய்களை செப்பமிட்டு பாதிக்குப் பாதி வயல்களில் நெல்லை விதைத்து இப்பொழுதுதான் அறுவடையைக் காணுகிறார்கள்.
அவர்களில் ஒருவராக மாரிமுத்து வும் இருக்கிறார். இப்பொழுது மகப் பேற்றை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் தாயைப் போல் மகிழ்ச்சியும் ஏக்கமும் முன்னிற்க, தன்னை மறந்து ஒழுங்கை யில் மாடுகளை ஒட்டிக்கொண்டு வந்தார்.
திடீரென்று "ஒவ். ஒவ்.” என்ற கூக்குரலுடன் கத்திக்கொண்டு ஒழுங்கை யில் இருந்து பக்கவாட்டில் காட்டுப் பக் கம் ஒடிய மாடுகளை உதவியாள் முன் னாள் ஒடி மறித்து மடக்க முயன்றான்.
அந்தத் திடீர் கூக்குரலில் திடுக் கிட்ட மாரிமுத்துவும் தன்னை சுதாகரித் துக் கொண்டு முன்னால் ஒடி, தடு மாறிய மாடுகளை மடக்க முயன்றார்.
இருவரும் மாடுகளை நிதானப் படுத்தி சாலைக்குக் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டார்கள். பின்னர் ஒரு
வாறு அவற்றை வரிசைப்படுத்தி, சாலைக்குக் கொண்டுவந்து தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
உச்சிப் பொழுது நன்றாகச் சரிந்து கொண்டிருந்தது. வெயிலின் அகோரம் தாங்க முடியாத மாடுகளும் களைத்து, அடிக்கடி முரண்டுபண்ணிக் கொண்டி ருந்தன.
மாடுகளுடன் தமது வயலுக்கு வந்த மாரிமுத்துவும் உதவியாளும் மாடு களை வயலுக்குள் இருந்த குட்டைக் குள் விட்டார்கள். தண்ணிரைக் கண்ட எருமைகள் ‘இனி இல்லை என்ற புளுகத்தில் குட்டைக்குள் மூழ்கிப் படுத்துக்கொண்டன.
* :
அன்று மாலைப் பொழுது சாயும் நேரத்துக்குள் சூடு மிதிக்க எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டு, களத்து மேட்டுக்கு வந்த மாரிமுத்து சுறு சுறுப்பாக இயங்கினார். உதவிக்காக வேலை ஆட்களும் ஒவ்வொருவராக “வேலைக்காரன் கம்புகளுடன் களத் துக்கு வந்தார்கள். அதற்குள் மாரிமுத்து களத்து மேட்டுப் பிள்ளையாருக்குப் பொங்கலிட்டு "பொலியோ பொலி? என்று கூவி எல்லா நெற்போர்களிலும் இருந்து ஒவ்வொரு பிடி நெற்கதிர்களை இழுத்து எடுத்து பிள்ளையாருக்கு முன் னால் வைத்து நெஞ்சுருகத் தேவாரம் பாடி பயபக்தியாகக் கும்பிட்டு எழுந் தார். அதன் பின் வேலைக்காரருடன் ஒரு பெரிய நெற்போரைப் பிரித்து

அதில் பாதிக்கு மேல் கதிர்களைக் களத்து மையத்தில் குவித்தார்கள். குவியல் இரண்டால் உயரத்துக்கு மேல் உயர்ந்து நிற்க மாடுகள் சுற்றிச் சுற்றி வர அவற்றைப் பிணைத்துக் கட்டிச் சூட்டடிக்கத் தொடங்கினார்கள்.
களத்து மேடு இப்பொழுது நன் றாக இருட்டி விட்டது. "சிம்லி லாந்தர் விளக்குகள் பக்கத்துக்கு ஒன்றாக நாலா புறமும் ஏற, மாடுகளும் தாமும் அயர் வில்லாமல் வேலை செய்ய, வேலைக் காரர் தமது ‘சுரஞானம் கணிரென்று ஒலிக்க கிராமியப் பாடலை மாறி மாறி பாடத் தொடங்கினார்கள்.
இவ்விதம், இரவு பகலாக மூன்று தினங்கள் தொடர்ந்து வேலை செய்து நெல்லையும் பதரையும் கதிரிலிருந்து பிரித்து எடுத்துக் குவித்தார்கள். பின்பு நான்காம் நாள் நெல்மணிகளைப் பதரில் இருந்து வேறாகத் தூற்றி களத்து மையத்தில் நீளவாட்டில் குவித்தார்கள். அதன் பின் களத்தில் பாவித்த வேலைக் காரன் கம்புகள், பொலி கூட்டுமாறுகள், தட்டுப் பலகைகள், சுளகுகள் போன்ற பொருட்களை மிகவும் பயபக்தியோடு வைத்தார்கள். அத்தோடு நெல் அளக் கும் பூசல் அளவுப் பெட்டியையும் வைத்தார்கள். கடைசியாக, நீளவாட்டில் குவிந்திருந்த நெற்குவியலுக்கு இரு மருங்கிலும் இரண்டு களகில் பிள்ளை யாரை வணங்கி பிள்ளையார் நெல்லைக் கோலி எடுத்து வைத்துவிட்டு, விளைந்த அறுவடையை அளந்து கோணிப் பைகளில் கட்டினார்கள்.
63 அறுவடை, இருநூறு பூசல்களைத் தானும் எட்டவில்லை. மாரிமுத்துவின் முகம் வாடிச் சோர்ந்தது.
அப்பொழுதுதான் களத்து மேட்டை அண்டிய தெருவில் இரண்டு இரட்டை மாட்டு வண்டிகள் வந்து நின்ற ஆரவாரம் கேட்டது. அதனைத் தொடர்ந்து வயல்களுக்கு ஊடாக ஒரு வெள்ளை வேட்டி உருவம் வந்து வைக் கோல் குவியலுக்கு மேலாக நிமிர்ந்தது.
அது வேறு யாருமில்லை. மாரி முத்துவுடன் கொடுக்கல் வாங்கல்
-8ð 始 S. செய்யும் தும்பளை வியாபாரி. சபாபதிப்
பிள்ளை தான் அவர்.
அவர் மாரிமுத்துவின் நீண்ட நாள் நெருக்கமான மனிதர். அடிக்கடி வரு வார். வரும்போது நட்புக்காக நல்லெண் ணையும், எள்ளுப் பாகும் வடமராட்சி யில் இருந்து கொண்டு வருவார். அவை அவரின் நட்பின் அடையாளச் சின்னங் களாக இருந்தாலும், "இறால் போட்டு சுரா பிடிக்கும் இரைகள்!” சபாபதிப் பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கும் அதற்கு இப்பாலும் வந்து கிராமங்களுக்குள் விவசாயிகளிடம் தவிச்ச முயல் அடிப்பது போல் நெல், எள், குரக்கன், தேன், வத்தல் போன்ற பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிக்கொண்டு போவார். சில சமயங்களில், விவசாயி
மானிறைச்சி
களுக்கு வட்டிக்குப் பணமும் கடனாகக் ஒன்றுக்கு பத்தாகக் கணக்கு வைத்துக் கடனையும் கறாராகக் கறந்து கொள்வார். அப்படிப்பட்டவரு டன்தான் மாரிமுத்து பழகியிருந்தார்.
கொடுப்பார்.

Page 34
64
நெல் விதைப்புக் காலத்தில் விவ சாயிகள் பெரும்பாலும் பணமுடையில் இருப்பார்கள். அவ்வேளைகளில், அவர் கள் மனைவிமாரின் காதில் கழுத்து களில் இருக்கும் நகை நட்டுக்களை விற்றோ அடகு வைத்தோ அல்லது நம் பிக்கையின் பேரில் கைநோட்டு எழுதி வட்டிக்கு பணம் வாங்கியோ தமது விதைப்பு வேலைகளைச் செய்வார்கள். அறுவடைக் காலத்தில் நகைகளை அடைவுகளில் இருந்து மீட்பார்கள். அல் லது நகைகளை மீட்க முடியாத போது அவற்றை வந்த விலைக்கு விற்று விடு வார்கள். சிலவேளைகளில் வட்டி ஏறி நகை அறுதியாகி விடும்.
இவைதான் அன்றைய ஏழை விவ சாயிகளின் நித்திய வாழ்வு. இவர்களில் ஒருவராக மாரிமுத்துவும் இருந்தார்.
சபாபதிப்பிள்ளை மாரிமுத்துவுக்கு எதுவித பொறுப்பும் இல்லாமல் கடன் கொடுப்பார். இந்த முறை அவர் மாரி முத்துவுக்கு பதினைந்த பவுண் (நூற் றைம்பது ரூபா) கடன் கொடுத்து இருந் தார். அதற்கு நெல் அறுவடையின் போது யாழ்ப்பாணக் கணக்குப்படி ஐம் பது மூடை நெல் கொடுக்க வேண்டும் என்பதே கனவான்கள் ஒப்பந்தம். அதா வது வன்னிக்கு இப்பால் இருபத்தெட்டு கொத்த ஒரு பூசல் ஆக இருக்க, யாழ்ப்பாணக் கணக்கில் முப்பத்தி ரெண்டு கொத்தே ஒரு பூசலாகக் கணிக் கப்படும். இவ்விதம் கணிக்கும் மூன்று பூசல் கொண்டதே அங்கு ஒரு மூடை யாகவும் இருக்கும். கடைசியாக சபாபதி யிடம் பெற்ற கடனை நாட்டில் ஏற்
பட்ட பஞ்சத்தாலும் வரட்சியாலும் விவ சாயம் முடங்க மாரிமுத்துவால் நீண்ட காலம் அடைக்க முடியவில்லை.
வயலில் வேலை ஆரம்பித்து அறு வடை நடந்து கொண்டிருப்பதாகத் தும்பளைக்குச் செய்தி எட்டிய கை யோடு திடுதிடுப்பென்று கிதோமாவுக்கு பயணப்பட்டு வந்திறங்கினார், சபாபதி யார். அவரை களத்து மேட்டில் திடீ ரென்று கண்ட திகைப்பில் மாரிமுத்தர் கலங்கினாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு -
“வாங்க சபாபதி அண்ணே.!” என்று வரவேற்றார்.
“ஓம் மாரிமுத்து. நான் நேற்று ரெயிலில் வந்திட்டன். நீயும் இண் டைக்கு சூடு மிதிச்சுக் கரை ஏறிப் போடுவாய் எண்ட நினைப்பில் டவனில வண்டியப் புடிச்சுக்கொண்டு வந் திட்டன். நெல் எல்லாம் ஏத்தலாம் தானே.?” என்று வந்ததும் வராதது மாகக் கடன் வசூலை நினைவூட்டினார், சபாபதியார்.
"அது எல்லாம் சரிப்படாது மாரி முத்து..! நானும் இப்ப மூண்டு வரியத் துக்கு முந்தி உனக்கு காசு தந்தனான். எனக்குத் தெரியா. எப்படியும் எல்லாக் கணக்கையும் இப்ப முடிச்சுப் போடு.” என்று கடுகடுப் போடு சொல்லிக் கொண்டு, களத்து மையத்தில் அடுக்கி இருந்த நெல்லு மூட்டைகளை நோக்கி வந்தார், சபாபதிப்பிள்ளை.
மாரிமுத்துவால் வாய் திற்க்க முடிய வில்லை. பட்ட துன்பங்கள் கொஞ்ச

மில்லை. அறுவடை ஈடுகொடுக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்த மாரி முத்துவுக்குப் பெருத்த ஏமாற்றம். அது ஒரு புறமிருக்க, பெற்ற கடன்கள் எல்லாம் ஒரே சமயத்தில் பூதாகாரமாக எழுந்து நின்றன.
அரனோளிலின் கடன்கள் - வேலை செய்த வேலைக்காரரின் கூலிகள் - சபாபதியாரின் நீண்டநாள் கடன்கள் - வீட்டுக் கஷ்டம். என்று எல்லம் களத்து மேட்டை விட்டு வெளி யேற முன் மாரிமுத்துவைச் சூழ்ந்து கொண்டன.
65
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சபாபதியாரின் கணக்குக்காக ஐம்பது மூடை நெல்லு போக எஞ்சி யதில் அரனோளிளின் மாட்டு நெல் லும், அளந்து கொடுத்து விட்டு இருந்த மிச்ச சொச்சத்தில் வேலை செய்தவர்களுக்கு கூலியாக இருந்த நெல்லையும் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார், மாரி முத்தர்.
கடைக் கணக்கால் நெல்லும்
களத்தில் அவருக்காகப் பதரும் கந்துகளத்துச் சப்பிகளும் அவரைப் பார்த்துப் புன்னகை பூத்தன.
Dith Best Compliments of.
INSTITUTE
M.C.Saboordeen 5O4, Aluthgama, Gambirigaswawa, Anuradhapura Tel: O785 - 455941

Page 35
66
இமைகளற்ற ஓர்
இரவில்
வண்ண வண்ணக்
கனவுகள் எனை கொத்திப் பழி தீர்த்துவிட்டுப்
போக.
எத்தனை முறைதான் என் சுயம்
இறந்து போகும்?
என் ஆளுமையைப் பற்றிய அறிவின்றி நானே உலவும் போது அவர்கள் - என் முன்னேற்றத்தில் குறுக்கே நிற்கிறார்களா?
ஏன் நான் முரண்களை மட்டும் உடுத்திக் கொள்கிறேன்?
இன்னும் - வண்ண வண்ணக் கனவுகள் கொத்திப் பழி தீர்த்துவிட்ட பின்னும் -
என் சுயம்
பெரு 6sb’as LDTuiu உருமாறுங் காலம் எப்போதென்றே காத்துக் கிடக்கிறேன்.
காத்திருத்குல்.
- ஏ.எஸ்.ஷர்மிலா

67
தலைநகரின் அந்தப் பிரதான புகையிரத நிலையத்தின் இரண்டாம் மேடைக்கருகில் வடக்கு நோக்கிப் பயணமாகத் தயாராகும் "கடுகதிப் புகையிரதத்தின் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றின் வாசலருகில் நின்று கொண்டிருந்தான், அவன். பொழுது பகலுக்கு விடை தந்து அந்திக்கு அழைப்பு விடுக்கும் ஐந்துமணியைத் தொடத் தயாரானது. புகையிரத நிலைய அதிகாரியின் ஊதல் ஒசையால் துணுக்குற்றதைப் போல வண்டி திடீரென உலுக்கிக் கொள்ள, புகையிரத மேடையில் உணவு வண்டியொன்றில் தண்ணிரும், உணவுப் பொட்டலமும் வாங்கிக் கொண்டு ஓடிவர முயன்றாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. ஆனால் அவளது வேகத்தை அவளது உடற்பருமன் தடுக்க வண்டியில் ஏற சிரமப்பட்டாள். வாசலில் நின்ற அவன் அவளது பொட்டலங்களை ஏந்திக் கொண்டு கையைப் பிடித்து ஏற்றிவிட்டான். பின் நகர்ந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்ள அந்த மாதுவும் தனது பயணச் சீட்டைப் பார்த்து இலக்கம் தேடி அவனது ஆசனத்துக்குப் பக்கத்திலேயே அமர்ந்தாள்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவளுக்கு தனக்கு உதவிய 6) Y52) அவனே பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி - யைக் கொடுத்திருக்க வேண்டும். மலர்ச்சி யுடன் அவனுக்கு நன்றி தெரிவிக்கிறாள். ණanනීතnnථි9 அந்த முகம், அந்தச் சிரிப்பு இதற்கு முன் அவன் எங்கேயோ கண்டவை போல் தோன்றின. எதற்கும் அவளிடமே பேச்சுக் கொடுத்துப் பார்ப்போம் என நினைக்கை
9n8ேul யிலேயே,
அவள் முந்திக்கொண்டு, 'தம்பி t Ց|ԼԱֆl6ՀՈDI எங்கே போறிங்கள்?' என வினவ, வடக்குக்கு முன்னால் அமைந்துள்ள அதன் மத்திய மாகாண நகரைச் சொல்கிறான். அந்த மாதிடமிருந்து ஓர் தீடீர் மகிழ்ச்சியும், கூடவே பெருமூச்சும் வெளிப்படுகிறது. "உங்கட ஊர், நான் கடந்து செல்லும் ஊர் மட்டுமல்ல, உயிர், மானம் காத்த உறவுகளும் வாழுமூர். என்ட டீச்சிங் உத்தியோகத்தின்ர இடைநிலை உங்கட நகரத்திலதான் தொடர்ந்தது. நல்ல பள்ளிக்கூடம், நல்ல சனங்கள், நல்ல பிள்ளையன். சந்தோசமாத்தான் வேலை செய்தனான். நடுவில உந்தக் கலவரம் வந்து எல்லாத்தையும் சிதறடிச்சுப் போட்டுது. இப்ப நினைச்சாலும் உடம்பு சிலிர்க்கிது. நான் குழப்பமெண்டு லீவு’ கேட்டுட்டு போடிங் போகேக்கை காடையன்கள் துரத்தி வந்தவங்கள். நல்ல காலம் எங்கட பள்ளிக்கூடம் பக்கத்துல இருந்ததாலை எங்கட ஸ்ராபும், பிள்ளையஞம் முன்னின்று காப்பாத்தினவங்கள்."

Page 36
68
மூச்செடுத்து மூச்சு விட்டு அக் கதையை அம்மாது தொடர்ந்தாலும், அவனது மனச்சஞ்சிகையில் வந்த புதிருக்கு விடை கிடைத்தாயிற்று. அந்த ழாது வேறு யாருமல்ல. அவனது ஆறாம், ஏழாம் வகுப்புகளில் வகுப்பாசிரியை யாகவும், விஞ்ஞான ஆசிரியையாகவும் இருந்தவர். அவனது ஆர்வத்தை வளர்த்து, வளம் குறைந்த அந்தக் கல்விச் சூழலிலும் அன்னையாய்ப் பரிவு காட்டி, ஆசிரியை யாய் சிரத்தை எடுத்து, பல தரமான பாட சாலை மாணவர்களுக்கு நிகராய் அவனைப் பதப்படுத்தி பாராட்டுகளுக்கும், பரிசில்களுக்கும் சொந்தக்காரனாகிக்கிய பெருமகள்.
மனம் தனது மாய இறக்கையை விரித்து உடனேயே இருபது வருடங்கள் பின்னோக்கிப் பறந்தது. அன்று காலையிலேயே வடக்கில் இராணு வத்தினர் பலி, தலைநகரில் குழப்பச் சூழல் எனக் கதை உலவியது. அவனது ஆசிரி யையும் அன்று பாடம் எடுக்காது சோகம், பீதி, பரபரவென இருந்ததோடு, வகுப்புக்கு வந்து 'பிள்ளையன் முந்திய பாடங்களைக் கவனமாகப் படிக்க வேணும். குழப்பம் வரு மாப்போல கிடக்கு. நான் வீட்டை போறன்’ எனச் சொல்லிக் கொண்டே பிரத்தியேக மாக அவனையழைத்து, "நல்லாப் படிக்க வேணும்" என்று சொல்லி தலையைத் தடவி விடைபெறுகிறார்.
செல்லும் ஆசிரியையை கூப்பிட்டு நிறுத்திய பக்கத்து வகுப்பு முக்காடு இட்ட ஆசிரியர் 'டீச்சர் ரோட்ல போறன்டா நெத்திப் பொட்ட அழிச்சிட்டுப் போங்க.
பிரச்சினையெண்டா எங்கட வீட்டுக்கு வந்திடுங்க" என்று சொல்ல, "பாப்பம்" என்றவாறு விடைபெற, அவனது வகுப்பு ஆசிரியர் இன்மையால் சுதந்திரமானது. வகுப்புத் தலைவனான அவன் இதர மாணவர்களைக் கட்டுப்படுத்த முயல, அவனைச் சீண்டும் எண்ணத்துடன் 'பாவம் பொடியன். அவன்ட உம்மா அவன உட்டுட்டுப் போறா' என்று கிண்டல் செய்ய, ஆத்திரம் கவலையாகி அழுகையாய் வெடித்தது. ஆனாலும், "ஆண்பிள்ளை அழக்கூடாது' என்று ஆசிரியர் முன்பு கூறிய அறிவுரை அவனை ஆசுவாசப்
C
த்
தி
ULU
gl
அப்போதுதான் அந்த ஆரவாரம் கேட்டது. அவனது வகுப்பறையிலிருந்து பார்த்தால் தெரியும் அந்தப் பள்ளிக்கூடத் தின் பிரதான வாயிலில் கம்பு, கத்தி களுடன் ஒரு வன்முறைக் கும்பல் உட்புக முயற்சித்துக் கொண்டிருந்தது. உயர்தர வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் கிரிக்கெட் மட்டை, கதிரையின் பாகங் களோடு கும்பல் உள்வராது காத்துக் கொண்டிருக்க, நழுவிய முந்தானை, அவிழ்ந்த கொண்டை சகிதம் அவனது டீச்சர் பயத்தில் விறைத்துப்போய் பாட சாலை மைதானத்தில் நின்றுகொண்டி ருந்தார். பக்கத்து வகுப்பு டீச்சர் "என்ட உம்மா காடையனுகள் விஞ்ஞான டீச்சர ரோட்ல கண்டு வெரட்டி வந்து இப்ப ஸ்கூலுக்குள்ள வரப்பாக்கானுகள். புள்ள களெல்லாம் சேர்ந்து கல்லால அடிச்சா ஓடுவானுகள். அதுக்குள்ள "பொலிச அழைப்பிக்கேலும்" என்று சக ஆசிரியர் சொல்ல, அவனும் அவன் வகுப்பு

மாணவர்களும் பாடசாலை மைதானத் திற்கு விரைந்து எல்லைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கற் துண்டு களைப் பொறுக்கிச் சென்று காடையரை நோக்கிக் கல்லடி நடாத்த ஏலவே கல் மாரியால் காயப்பட்ட கும்பல் பின்வாங்கு கிறது. ஆசிரியரின் கலைந்த கோலம் மனதுக்கு வர ஆவேசமாக மன்னாக் கத்தி யுடன் நின்ற ஒரு முரடனின் தலையை நோக்கி கல்லை எறிகின்றான். முரடனின் வாயில் இருந்து ஒரு சிவப்பூற்று ஆரம்ப மாகிறது. "யக்குன்கே பெட்டவ் (பேயின் பிள்ளைகள்) உம் பலா ஒக்கோம எக்கய் (நீங்களெல்லாம் ஒன்றுதான்) ஹிட்டப் பல்லா, ஆய எனவா இருங்கட திரும்ப வருவம்) காடையர் குழு பின்வாங்கிச் சென்றது. அதற்குள் பொலிசும், இராணு வமும் வந்து ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அவரவர் வீட்டில் சேர்த்தனர். அவனது 'டீச்சரும் சேமமாக ஊர் போனதாகக் கேள்விப்பட்டு மகிழ்ந் தாலும், அந்தச் சம்பவம் இயல்பில் சாந்த மான அவனைக் கொஞ்சம் துணிச்சல் காரனாக்கியிருந்தது. பாடசாலையும் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டது.
மீண்டும் பாடசாலை ஆரம்பமான போது மாணவர் தொகை நன்றாயிருந்தது. ஆனால் முக்கியமான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாதிருந்தனர். அவனது அபிமானத்துக்குரிய ஆசிரியரும் வந் திருக்கவில்லை. விஞ்ஞானப் பாட வேளைக்குப் பாடசாலை மணி ஒலிக்கும் போதெல்லாம் ஆழ்மனதில் இனம்புரியா 6p(Ib வலி தோன்றியது. ஒரு வெறுமை வருடியது.
69
காலம் சில மாதங்களைக் கழித்து கணக்கெழுத ஒரு அரை வருடம் ஒடிப் போன சமயத்தில், ஒரு புதன் கிழமையின் பகற் பொழுதில் அந்த ஆசிரியர் நிலா அவன் வகுப்புக்குள் தலைகாட்டியது. கொஞ்சம் பருமனாகி, முன்னைவிட மஞ்ச ளாகி, தலை உச்சிவகிடில் செந்தூரம் வைத்து பளிச்சிடும் தாலியுடன் காட்சி யளித்தார் அவனது ஆசிரியை. கூடவே சூரியனைப் பிரதிபலிக்கும் வழுக்கு மண்டையுடன் ஒரங்களில் கறுப்பும், நரையுமாய் மயிர்களுடன், தொப்பை வயி
றுடன் அகலமாய் ஒரு மனிதர். ஆசிரியைக் குத் திருமணமாகி விட்டதாம். கணவர் ஒரு பொறியியலாளராம். ஐரோப்பிய நாடொன்
@ ஆ றில் வதிவிட வசதி பெற்றுப் போகப் போகி
இறார்களாம். விடைபெற்றுச் செல்லவே இ இந்த வருகையாம். கண்ட கணத்தே * ஏற்பட்ட அந்த திடீர் புளாங்கிதம் உட னேயே அடங்கிப் போனது. ஆசிரியையை விரட்டி வந்த அந்த காடையர் கும்பல் மேல் ஆத்திரம் வந்தது. அவர்களையெல்லாம் சுடனும். அவனுக்
பெரியவனாகி
குள்ளேயே சொல்லிக் கொண்டான்.
"ராசா’ அவனை ஆசிரியை விளிக் கிறாள். "அச்சாப் பிள்ளை! நல்லாயப் படிக்கணும். நீர் மற்ற பிள்ளெயல விடக் கெட்டிக்காரன்! உன்ன மாதிரிப் பிள் ளையை நான் முந்திய பள்ளிக்கூடத்தில கானேல்ல. நான் எங்க போனாலும் உன்னப் பத்தி,உன் புத்திசாலித்தனம் பற்றி சொல்லுவன். எதிர்காலத்தில நான் உன்னைச் சந்திக்கேக்கை நீ ஒரு புகழ் பூத்த விஞ்ஞானியா இருப்பே இருக் கணும் ஆசிரியை விடைபெறுகிறார். அவர்

Page 37
70 கண்கள் கலங்கியிருக்கின்றன. அவன் கண்களும் அப்படித்தான்.
காலங்கள் கடந்தன. ஆனால் முக்கிய பாடங்களுக்கு மட்டும் தகுதியான ஆசான்கள் அவன் வகுப்புக்குக் கிடைக்க வில்லை. ஆயினும் க.பொ.த. சாதாரண தரத்தில் மிகத் திறமையாக அவனது மொழி மூலத்தில் பிரகாசிக்குமளவு தேறுகிறான், நகரத்தில் அமைந்திருந் தாலும், அவனது பாடசாலை மற்றைய கிராமப் பாடசாலைகளை விட தரத்தில் மட்டமாகவே இதுவரை இருந்து வந்தது. ஆனால் அம்முறை அவனதும், அவனது சக மாணவர்களதும் பெறுபேறுகள் அனைவரையும் அப்பாடசாலையைத் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் நாமம் மாகாணத்திலேயே சுடர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. அவனதும், அவனது பெற்றோரது, ஆசிரியர்களது ஆசைப்படியே உயர்தரம் படிக்க அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கி னாலும், கலவரங்கள், வளங்களை இல்லா மலாக்கி, ஆசிரியர்கள் விரட்டியடிக்க மறுபுறம் குடும்பப் தலையை அழுத்தத் தொடங்கியது.
பொருளாதாரம்
அனைத்து அழுத்தங்களும் இறுதி யில் அவனது கல்வியின் கழுத்தை யறுத்தது. சில மாதக் கற்றலின் அநுபவத் தோடு உயர்தரப் பரீட்சை எழுதி சாதாரண முறையிலேயே தேறி, விரக்தியடைந்து விமானம் ஏறி உடன்பிறப்புக்களைக் கல்வியிலும், வாழ்க்கையிலும் கரை சேர்த்து பெற்றோர் மனம் குளிர மணம் செய்து பொருளாதாரத்தையும் உயர்த்திக்
கொண் டாலும், தன் பாடசாலைக் கனவு, இலட்சியம், தனது ஆசிரியர்களின் எதிர் பார்ப்புகள், முக்கியமாகத் தன் அபிமானத் துக்குரிய ஆசிரியரின் நம்பிக்கை; அது மட்டும் அடையப்படவில்லை. அந்த நிலைமையில் தன்னை அறிமுகப்படுத்தத் தயங்கினான். 'தம்பி என்ன யோசிக் கிறீர்?" அவரது அழைப்பு அவனை நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது. "ஒன்று மில்லை டீச்சர்" தன்னையறியாமலே சொல்லிவிட்டான்.
"அப்போ நான் உமக்கு டீச்சரா?” எனச் சிரிக்கிறார் அவர்.
♥ሙ
"தொழிலால் நீங்கள் டீச்சர்தானே. துதான் அப்படிச் சொன்னேன்” என்றான்
6Դ]
6.
"பரவாயில்லை. ஆனால் உமது முகம் எனக்குப் பரிச்சயமான முகம் மாதிரிக் கிடக்கு. நீர் எங்க படிச்சனிர்?" எனக் கேட்க வேறொரு பாடசாலையைச் சொல்லித் தப்பிக்கிறான்.
"அப்போ உம்மைக் கண்டிருக்கச் சான்ஸ் இல்லை. ஆனாலும் என்ர ஒரு மாணவன் இருந்தவன். வலு கெட்டிக் காரன். நாங்க யுரோப்' போனதாலே தொடர்பு விடுபட்டுப் போயிற்று. இருவது வருசமாயிட்டுதல்லே. அவன்ர அறிவுக் கும், வேகத்துக்கும் படிச்சு, முன்னேறி இப்போது வெளியில’ ஏதாவது ரிசேர்ச் சென்டரில’ (ஆய்வு மையம்) இருப்பான். இது அவசர உலகம். என்னையெல்லாம் ஞாபகம் இருக்குமோ என்னவோ? நான் பெற்று வளர்த்த ஒரே மகன் யுரோப்'

கலாசாரத்தில வளர்ந்து, படிச்சு கோயில் சாமியெல்லாம் நம்பாம வெள்ளக்காரி களோட கத்தேக்க, எப்பவோ சந்திச்சது களுக்கு நினைவிருக்க ஞாயமில்லை தானே. கட்டினவரும் போய்ச் சேர்ந் திட்டார். அதான் ஒண்டும் வேணாம் எண்டு ஊருக்கே திரும்பிப் போறன். "சன்' கொழும் பிலிருந்து ஊருக்குப் போக "வேன்' இல்லாட்டி 'பிளைட் ஒழுங்குபண்ணித் தரப் பார்த்தவன். ரெண்டும் வேணான்டிட்டு முன்னைய மாதிரி ட்ரெயின்'ல போறன்."
அவன் உள்மனம் உங்கள மறக்கல டீச்சர் என அழுதது.
கற்பித்த ஆசிரியரிடமே பொய் சொல்லவும், நடிக்கவும் வேண்டியிருக் கிறதே என அவன் மனம் வேதனையில் துடித்தது. ஆனாலும் வசந்தம் தேடித் தூரப் போய் இந்த இலையுதிர் காலத்தில் தனிமை, விரக்கி, வெறுமைகளெனச் சுமைகளோடு திரும்பும் தன் அபிமானத் துக்குரிய அந்தக் கல்வித் தாயின் மனதில் தன் கதை மூலம் இன்னும் ஏமாற்றங்கள் அதிகரிக்க வேண்டாமே என அதே மனம் தான் அவனை அடக்கியும் வைத்தது. அவனுக்குள் ஏற்பட்ட இந்த எண்ணங் களின் போராட்டம் விரையும் அந்தப் புகை யிரதத்தின் வேகத்தைக்கூட மந்தமாகவே காட்டியது. இன்னும் கதை வளர்ந்தால் எங்கே தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விடுவானோ என்ற பயத்தில் கண்களை மூடித் தூங்குவது போல் நடிக்கத் தொடங் கினான். புகைவண்டியின் சப்தமும் அவனுக்கு மட்டும் "நடிப்பு - நடிப்பு” என்பது போல் கேட்கத் தொடங்கியது. O
*x
སྔགས་སྔགས་སྔགས་
ềìNằ ܠ ܐ ܠ
N
SN
NNS ူဇိုးဇုံ
N N
N
NNNNNNNNNNNN N N
NNNNNNNNNS NSN ܬܬܐ
S.
১২২২ ဖြုံဇုံ
NSNS
N N N V S
SINN SAS
ડ્ઝિ ŘSN N

Page 38
72
விமான நிலையம் என்னைப் பயமுறுத்தியது. இது எனக்கு முதல் பயணம். மனசு திக். திக். என்று வேகமாக அடித்தது! மிகுந்த சனத்திரள் போவோரும் வருவோருமேன ஆரத் தழுவி வழி அனுப்புவோரும், அள்ளி அணைத்து வரவேற் போரும் என்று மிகுந்த பரபரப்பில் கொழும்பு சர்வதேச விமான நிலையம்! என் கால்களுக்குச் சக்தியில்லை! என் தாயகத்தை விட்டு நான் பறக்கப் போகின்றேன். என்னைச் சுமக்கக் காத்திருக்கும் அந்த ராட்சத அலுமினியப் பறவை, அதோ தயார் நிலையில் நிற்கின்றது. எனக்குள் பிரமிப்பு. எத்தனை பிரமாண்டம், எத்தனை அழகு. இருந்தும் என் மனசு இது எதிலும் ஒட்டவில்லை. ஒடையில் குளிப்பதாயும், வரம்பில் நடப்பதாயும், காடுகளில் அலைந்து திரிவதாயும்தான் அவ்வப்போது என் ஆன்மா நினைத்துக் கொண்டது! இந்தப் பாழாய்ப்போன அறிவிப்புக்களும், விமானம் ஏறி இறங்கும் சத்தமும், மக்களின் கூக்குரல்களும் அவ்வப்போது என்னை சுயநினைவுக்கு இழுத்து வந்து பலவந்தமாய் நிறுத்தியது. இடைக்கிடையே நினைப்பேன், இப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுவோமா என்று. நொடி நேரத்தில் வாழ்க்கையைப் பயமுறுத்தும் எதிர்காலம் அரக்க உருவில் என் முன் தோன்றும். எனவே முடிவை மாற்றிக் கொள்வேன். விமான நிலையச் சம்பிரதாயங்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டேன்.
பேனாவால் பேசுகிறேன்!
- கட்டாரிலிருந்து நாச்சியாதீவு பர்வீன்
என்னோடு இன்னும் பலரும் நான் போகும் இடத்திற்கே வேலைக்கு வரு கிறார்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளை அவதானித்தும், அவர்களோடு பேச்சுக் கொடுத்தும் அறிந்து கொண்டேன். நேரம் நெருங்கி விட்டது! அலுமினியப் பறவையின் வயிற்றிலிருந்து ஒரு வழி உருவாகியது. கால்கள் மெல்ல விமானப் படிகளில் சோர்வோடு ஏறுகின்றன. ஊர், உறவு, நண்பர்கள் என்ற சராசரி நினைப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டேன். மெதுவாக எனக்கான ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன். இமைப் பூட்டுக்களால் என் கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசுக்குப் பூட்டுப்போட முடியவில்லை. மனது அசை போட்டது ஒரு வண்டி மாட்டைப் போல. மீண்டும் அறிவித்தல். அலுமினியப் பறவை ஆகாயத்தை நோக்கிப் பறக்க இன்னும் சில நிமிடங்கள்தான். மீண்டும் அனசில் அழுத்தம். எண்ணற்ற சிந்தனைகள், ஒரு நிலைக்கு வரமுடியாத எண்ணங்கள் என்னோடு நானே போராடிய பொல்லாத பொழுது அது என்

நெஞ்சுக்கூடு நொருங்கிக் கொண்டி ருந்தது. உடம்பிலிருந்து உயிர் உரித் தெடுக்கப்படுகின்றது. பரபரப்பு அடங் காத அந்தப் பொழுதிலும் என் கிரா மத்துக் குளக்கரையில் நின்று அலைக ளோடு பேசிக்கொண்டிருந்தது மனசு. பாறைகளிடம் பயணம் சொல்லியது. பூக்களிடம் விடைபெற்று, இரண்டா வது அறிவித்தலில் மீண்டும் சுய நினைவுக்கு வருகிறேன்.
இன்னும் குறுகிய நேரத்தில் நான் என் தேசத்தைப் பிரிவது உறுதியாகி விட்டது. மனசுக்குத் தாள் போட்டேன். வலிந்து வந்த நினைவுகளை வாசலைத் தாண்டி வரவிடவில்லை. எல்லாப் புலன்களும் என் கட்டுப்பாட்டில். மனசு மெல்ல மெல்ல அமைதி நிலைக்கு வந்தது. தாயின் தாலாட்டில் உறங்கும் சின்னக் குழந்தை போல சில நொடி களில் விமானம் பறக்கப் போகின்றது, நானும் தான். இறக்கைகள் இன்றியே நானும் பறக்கப் போகிறேன். அது எனக்குச் சந்தோஷமாகயில்லை. கண் களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டேன். மனசு ஒய்வுக்கு வந்து விட்டது. இதயம் படபடப்பு இல்லாமல் இயங்கியது. எல்லாப் புலன்களும் என் கட்டுப்பாட்டில். ஒடு பாதையில் விமானம் நகர ஆரம்பித்து விட்டது. என் கடைசி நிமிஷம் மனித வாழ்க்கை நிரந்தரமற்றது! இன்றோ - நாளையோ! இந்தத் தத்துவத்தை நான் தெரிந்து வைத்திருந்தேன். எனவே, கடைசியாய் என் தாயகத்தை தரிசிக்கக் கண்களை மெல்லத் திறந்தேன். மடை திறந்த வெள்ளமாக என் கன்னங்களில் பெருக்
73 கெடுத்து ஒடியது கண்ணீர். கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. ஓவென்று ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போலிருந்தது. அதற்கு வாய்ப்பில்லை என்று அறிவு சொல்
லியது. இப்போது என்னால் என்
கண்களைக் கட்டுப்படுத்த முடிய
வில்லை. கண்கள் வரண்டு போகும்
மட்டுக்கும் கண்ணிர் வழிந்தது. பக்கத்தி லிருந்தவர்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர்களைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை. அப்படியே தூங்கிப் போனேன்.
ஒய்வில் நிற்கும் ஒடம் போல விமானம் தரித்து நின்றது. நான் கண் விழித்த போது ஆட்டமில்லை, அசைவும் இல்லை. பொதி களாக மேகக் கூட்டங்களைத் தவிர என் பார்வை வீச்சுக்கு எதுவுமே தென்ப டவில்லை. இன்னொரு கிரகத்துக்கு வந்துவிட்டோமா? என் என் சிந்தனை
பஞ்சுப்
களைத் திருப்பியது மீண்டும் விமான அறிவிப்பு. கட்டார் சர்வதேச விமான நிலையத்தில் இன்னும் சில நிமிடங் களில் கால்பதிக்கப் போகிறோம்." நேரம் பார்க்கிறேன். புறப்பட்டு நாலு மணி நேரம் கடந்திருந்தது. விமானம் மெல்ல சரிந்து இறங்குகிறது. இப்போது நீலக்கடல் தெரிகிறது. இன்னும் சில
நிமிடங்கள் கரைய, வகுடெடுக்கப்பட்ட
விதிகள், கட்டாந்தரைகள், தரிசு நிலங் கள், சிற்றெறும்புகளாய் வாகனங்கள்,
ஆற்றங்கரையில் கட்டு விளையாடும் சின்ன மண் வீடுகளைப் போல் கட்டி நிமிடங்கள் விரையமாக விமானம் தரையிறங்கியது. கட்டாரின்
டங்கள்.

Page 39
74 சுயமான தோற்றம் மெல்ல வெளிப் பட்டது. கம்பீரமான கட்டிடங்கள் கை யசைத்தன. விமான நிலையம் பரபரப் பில் களைகட்டியிருந்தது. மனதிலிருந்த பழைய கவலைகள் இப்போது இல்லை. கண்களிலிருந்து கண்ணீர் காணாமல் போயிருந்தது. புதிய சூழல், புதிய தேசம், புதிய மொழி, புதிய மனிதர்கள் என்று எல்லாமே புதுமையாகத் தென் பட்டது. இந்தப் புதிய உலகை புலன் கள் புது உற்சாகத்துடன் வாசிக்கத் தொடங்கிவிட்டன. கனவுகள், இலட்சி யங்கள், எதிர்காலத்தின் மீதான வலு வான நகர்வுகளுக்கு அடித்தளமிட நம்பிக்கையோடு கால் பதித்தேன் கட்டார் மண்ணில்.
விமான நிலையம் துடைத்துவிட்ட கண்ணாடி போல பளிச்சென்றிருந்தது. உயர்மட்ட தொழில்நுட்பத்தின் வாசனை அடித்தது. பளிங்குத்தரையில் நடப்ப தாய் கால்கள் உணர்ந்தன. மனசு சோகங் களையும், சோர்வுகளையும் துடைத்து எறிந்துவிட்டு இந்தப் புதியப் பிரதேசத் தில் பதியமாகிப் போனது. அழகான கட்டிடங்கள், நேர்த்தியான வேலைப் பாடு, திட்டமிட்ட செயற்பாடுகள் என்று நிறைய அம்சங்கள். என் மனதைத் திறந்து வைத்துக் கொண்டேன். புதிய விடயங்
வியக்க வைக்கும்
களை, புதிய அநுபவங்களை சேமிக்க ஆயத்தமானேன். ஒவ்வொரு நிமிடமும் புதுமையாகப்பட்டது. ஒவ்வொரு விநாடியும் புதுமையை யாசித்தது. விமான நிலைய சம்பிரதாயங்கள் விரை விலே முடிந்தது. பயணிகள் தரிக்கும் பிரதேசத்தில் புதிதாய் வந்திறங்கிய
நாங்களும் புகுந்து கொண்டோம். இப்போதுதான் பசியை உணர்கின்றேன். தாகமாய் இருக்கிறது. அந்நிய பூமியில் படும் முதலாவது அவஸ்தை இது. வெயில் கொளுத்தித் தள்ளியது. சூரிய கதிர்கள் சுள்ளென்று தைத்தது தோலினை. கண்களை திறக்க முடிய வில்லை. வெளியே சென்று உள்ளே நுழைந்த ஐந்து நிமிட இடைவெளியில் ஆடை முழுவதுமாக நனைந்து விட்டிருந்தது. சூடு குறைகின்ற கால மென்று நின்றவர்கள் சொன்னார்கள். உடை மாற்ற வேண்டும் என்று உள் மனசு சொன்னாலும் இன்னும் சில நிமிடங்களில் எமக்கான வாகனம் வந்து
விடும் என்று அறிவு அடிக்கோடிட்டது.
வாகனம் வரும்வரைக்கும் காத் திருந்தோம். அரைமணி நேரம் எங்கள் ஆயுளில் கடந்திருந்தது. இன்னும் வாக னத்தைக் காணோம். நான் சும்மா இருக்கவில்லை. புதினம் பார்க்க ஆரம் பித்தேன். சுவாரசியங்களைத் தேடி என் மனம் அலைந்தது. இந்தியா, பாக்கிஸ் தான், நேபாளிகள் என்று எண்ணற்ற புதுமுகங்கள். நம்நாட்டு முகங்களையும் அங்கே சுத்திகரிப்பு வேலை செய்யும் கட்டத்தில் அடையாளம் கண்டுகொண் டேன். ஒரு இனம்புரியாத உறவு அவர் களுக்கும் எனக்கும் இருப்பதாய்ப் காத்திருந்தேன். அவர்கள் என்னைக் கடந்துசெல்லும் போது
பட்டது.
பேச்சுக் கொடுத்தேன். அதிசயமாகப் பார்த்தார்கள். கைகுலுக்கி குசலம் விசாரித்தேன். சந்தோஷப்பட்டார்கள். அடிக்கொரு தடவை அண்ணா என்று அன்பொழுகப் பேசினார்கள். பன்

னிரண்டு மணி நேர வேலை, குறைந்த வேதனம். வேதனையோடு தகவல் தந் தார்கள். நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஈழத்துப் போர்தான் நாங்கள் இங்கே வரக் காரணம் என்றார்கள். சமாதானப் பேச்சுவார்த்தை பற்றிப் பேசினார்கள். அன்றாடச் செலவின் அசுர மாற்றங் களைப் பேசினார்கள். பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டு உயிரைக் காத்துக் கொள்ளத்தான் இந்த உத்தி என்றார்கள். இருபதையும் தாண்டாத இந்த இளசுகள் புள்ளி விபரத்தோடு புரியும்படி பேசினார்கள். அவர்களின் பள்ளிப்படிப்புக்கு கொள்ளி வைத்த யுத்த அரக்கனை வைதார்கள். இறுதி யில் எங்களை விடவும் கஷ்டப்படும் கூலிகள் ஏராளம் பேர் வெளியில் உள் ளார்கள் என்று வெளிப்படையாய் சொல்லிவிட்டுச் சென்றார்கள். என் சிந்தனை சுழன்றது. முதல் நிமிடத்திலே முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். அன்றாட வாழ்க்கையை அவஸ்தையுடன் கழிக்கும் ஜீவன்களை சந்திக்க ஆசைப்பட்டது மனசு.
நாங்கள் வந்து சேர்ந்து ஒருமணி நேரம் கடந்திருந்தது. வாகனம் வந்து கொண்டிருப்பதாக நண்பர்கள் கூறி னார்கள். ஆம். தனிமையில் வந்திறங் கிய எனக்கு இப்போ இந்த ஒரு மணி நேரத்தில் சில நண்பர்கள் கிடைத் திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் ஒரே கம்பனிக்குத்தான் போகின்றோம். தமிழ், இருபத்தொன்பது பேர் எங்கள் குழு வில். கிடைத்த இடைவெளியில் ஒரு
சிங்களம், முஸ்லிம் என்று
75 வரைப் பற்றி ஒருவர் அறிந்து கொண் டோம். அங்கே எங்களிடம் இனப்பாகு பாடு இருக்கவில்லை. இலங்கையர் என்ற ஒருமைப்பாடே மேலோங்கி நின்றது.
விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டி ருந்த நிமிடங்களில், நான் அவளைக் கண்டேன். இருபத்தைந்து வயதிருக்கும். அளவான, அழகான தேகம். வெயிலில் வாடிய வெற்றிலையாய் அவள் முகம் வாடி களையிழந்து போயிருந்தது. மெல்லப் புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தாள். நிமிடங்கள் கரைந்து போயின. பேச்சுக் கொடுத்தேன். ஊர் கேட்டேன், சொன்னாள். பெயர் கேட் டேன், சொன்னாள். கைகளிலும், கன் னங்களிலும் காய்ந்து வெடித்துப்போய்க் கிடந்த காயங்கள் பற்றிக் கேட்டேன். எஜமானியின் அன்புப் பரிசு என்றாள். ஐந்தாண்டுகள் வேலை செய்துவிட்டு அரைவாசி சம்பளத்தோடு வீடு செல் கிறாள். வயதான பெற்றோர், உதவாத உறவினர்கள், ஒழுகும் வீடு, சீதனம் கேட்கும் மாப்பிள்ளை. இவைகள்தான் இந்த நரகத்தில் ஐந்தாண்டு சிறையிருக்க காரணமென்றாள். நான் உள்ளுக்குள் உடைந்து போனேன். மேற்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு அவளது கண் கள் கண்ணிரால் பதில் சொன்னது. நான் கலவரப்பட்டுப் போனேன். நம்பிக்கை வார்த்தைகளைத் தவிர என்னிடம் எது வுமே இல்லை அப்போது. ஆறுதல் சொன்னேன். அழுதவள் தலை உயர்த்தி புன்னகைத்தாள். அவள் ஒரக்கண்ணில் ஈரம் ஒட்டியிருந்தது. சொன்னேன் துடைத்துக் கொண்டாள். திரும்ப வர

Page 40
ܥܬ
༽༄
மாட்டேன். திருமணம் என்றாள். இறுதி யாகச் சொன்னாள், மரம் ஏறி உழைத் தாலும், வெளி நாட்டுக்கு அனுப்பி விடாதீர்கள். நான் மெளனமாய் தலையசைத்தேன். அவள்
N N
உங்கள் மனைவியை
புறப்படும் நேரம் கையசைத்து விடை பெற்றாள். நானும் கையசைத்து விடை கொடுத்தேன். கூட்டத்தினுள் புள்ளியாய் அவள் மறைந்து போனாள். என் மனசு வலித்தது. புத்தகம் இல்லாமலே புதுப் பாடமொன்றைக் கற்றுக் கொண்டேன்.
வந்து ஓரிரு மணி நேரத்திற் குள்ளேயே எத்தனை அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன். எத்தனை கனவு கள், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், நிறைய ஆசைகள் என்று இந்த வெளி நாட்டு வாழ்க்கையின் வசீகரத்தில் வரு பவர்கள் ஒருபுறமிருக்க, போரின் அவ
லத்தால் புலம்பெயர்ந்து வாழும் பாதிப் பேரும், சீதனச் சிறைக்குள் சிக்குப்பட்ட மாப்பிள்ளை மாடுகளைத் தேர்ந்
தெடுத்து வாங்குவதற்கு காசு உழைக்க
வரும் இளம் பெண்கள் மீதிப்பேருமாக அரேபிய மண்ணில் வேலை செய்வதாக நான் கேள்விப்பட்டவைகள் நிஜமாகக் கண்டேன்.
ஒரு அவலம் சுமந்த வாழ்க்கை இங்கே அறியப்படாமலே நகர்கின்றது. நூறு விகிதம் இல்லையென்றாலும், ஐம்பத்தொரு விகிதமே அதிகம்தானே! இளமையையும், இன்பங்களையும் இங்கே தொலைத்து விட்டு ஆயுளின் அந்திமங்களில் அங்கே எதனைத்தான் அனுபவிக்க முடியும். முடிவெடுத்து விட்டேன், இங்கே என் பேனாவுக்கு வேலையிருக்கிறது. கு
 
 
 
 
 

நிலவொளி தூறும் இரவு ஒரு நீண்டயுகமாக
வீற்றிருக்கும்.
ஒவியங்களைத் தழுவிச்செல்லும் தூரிகையாக முறுக்கேறிய மேனியில் விரல்கள் தாண்டும்.
சுவாச உரசல் தாளாமல் உணர்ச்சி இரட்டிப்பில் திரள்கிறது. கண்களைக் கட்டிக்கொண்டு நாசச்சூழல் கொப்பளித்து மேவுகிறது.
சுமைகள் இறக்கி செருகப்பட்ட su65
எஞ்சியது, சுயம் அறுந்துபோன
நடுநிசியில். G3-c.g6
77
எல்லா சுகங்களின் - எல்.வளிம் அக்ரம்
முடிவிலும் தன் உரிமையை வென்றிருந்தது
எயிட்ஸ்’

Page 41
78
o
0ܘ
3.
i
ܘ
மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவங்கள் செய்திட வேண்டும் என்றும் பெண்னொன்று பூமி தனில் பிறந்து விட்டால் பெரும் பிழை இருக்குதடி தங்கமே தங்கம்! என்பதும் கவியரசர் பாரதியின் வாக்கு. உண்மைதான் பெண்ணென்று இந்தப் பூமியில் பிறந்து விட்டால் அவள் தன்னுடைய வாழ்நாள் முழுதும் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை? அப்பப்பா அதற்குள் அவள் ஆவியும் ஒடிந்துவிடும் போல் உள்ளது. அதற்குப் பின் அப் பெண்ணின் புதுமைகளையும், வீரச் சுதந்திரங்களையும் பாட்டிலும் ஏட்டிலும் எழுதி என்ன பயன்? திருவிழாக் களும், ஞாபகாஞ்சலி தினங்களும் கொண்டாடி நடை பெறப் போவது ஏதுமில்லை. அப்படியான ஒரு வீர சுதந்திரப் பெண்ணுக்கு பாராட்டு விழாக் காணும் இடந்தோறும் இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடக்கப்படுகிறார்கள். வாய் பேசா ஊமைகளாய், சமூகத்தின் சகதிகளாக ஏன்? இன்னும் ஆண்களின் இச்சை மேடைகளில் பச்சைக்கிளிகளாய் பறந்து வருகிறார்கள்.
இவ்வாறு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களின் நயமான, நுட்பமான பதிவினை இன்றைய புதுக்கவிதைகளில் துல்லியமாகக் காணமுடிகிறது. இன்றைய சமுதாயம் ஆண் குழந்தை பிறந்தால் அடை யும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெண் குழந்தை விடயத்தில் அடைவதில்லை. நாலாவது பெண் பிறந்தால் நாதங்கியை விற்றுண்ணும் போன்ற பழ மொழிகளும், ஆம்பிளைச் சிங்கம், பொட்டக் கழுதை போன்ற வழக்காறு மொழிகளும் பெண்ணியத்தை இன்னும் மண்ணியத்தையே நோக்கித் தள்ளப்படு கின்றன என்பதை அடையாளமிட்டுக் காட்டுகின்றது.
இதனை விளக்க பஞ்சுவின் புதுக்கவிதை ஒன்றே போதுமாக உள்ளது. இரும்பு அலுமாரியும், தொலைக் காட்சி நடிகையும், மாவு ஆட்டும் இயந்திரமும் வீட்டு வாசலுக்கு வந்தபோது பம்பரமாய் சுற்றிய மனைவி, பிறந்தது பெண் குழந்தை என்றபோது,

மின்சாரம் நின்று போன காற்றாடியாய் வீடு சுருங்கிச் சமாதியானது
என்று வீட்டில் உள்ளவர்கள் அடைந்த உத்வேகத்தை கவிஞரே கூறு கின்றார். பெண்மையின் பிறப்போடே இவ்வாறான ஒரு உக்கிரம் காணப்படு வதற்கு காரணம் எம் பெண் சமூகத்தில் ஒரு சாராரின் அக்கிரமமே என்று கூறினாலும் அது பிழையாகாது.
அவ்வாறான அக்கிரமக் கணைக ளோடு சமுதாயத்தில் பெண்களுக்கு ஆண்கள் பூட்டிய விலங்கு, பெண்ணை வாழ்நாள் தோறும் ஆணுக்கு அடிமை யாகவே இருக்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளிவிட்டது. இதனைக் கவிஞர் கந்தர்வன் இவ்வாறு கூறுகிறார். "தவழ்ந்த போது பெண் தகப்பனுக்கு அடிமை, கையைப் பிடித்ததும்
கணவனுக்கு அடிமை. கிழவியானதும்
மகனுக்கு அடிமை. ஆண்கள் பூட்டிய அடிமை விலங்கை அவளிடமிருந்து அகற்றிச் சென்றது மரணம் ஒன்று தான்."
உண்மையில் கவிஞர் கந்தர்வன் கூறுவது போல வெளிப்பார்வைக்கு அவள் அணிவது அணிகலன்களாக இருந்தாலும் அவை அவளுக்கு விலங்கு 'களே. இவ்வுண்மையை நுட்பமாகக் காட்டுகிறது, பின்வரும் கவிதை.
தலையில் பூ விலங்கு
கையில் பொன் விலங்கு காலில் வெள்ளி விலங்கு
79 சுவாசத் தடைக்கு மூக்கில் கல் விலங்கு ஒவ்வொரு மூச்சிலும் அவள் விலங்குகளை நுகர்கிறாள்.
மேலும் கவிஞர் மு. மேத்தா "இன்றைய பெண்ணின் விழிகள் வேண்டுமானால் நட்சத்திரங்களை வருடலாம். ஆனால் அவள் விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான் உறவாடு என்று கூறும் கருத்து முற்றிலும் உண்மையாகும்.
கின்றன’’
ஒரு பெண் இவ்வுலகில் பிறந்து வாழ்வை ஆரம்பிக்கும் பகுதியே திருமணம். அதன் பின்தான் அவள் இவ்வுலகத்துக்கு பெண்ணாக அவ தாரம் எடுக்கிறாள். சமூகத்தின் பொறுப்பான பெண்ணாகிறாள். மனைவி, தாய் இன்னும் எத்தனை எத்தனை பட்டங்கள் அவளைச் சுட்டிக் கொள்கின்றன. நெற்றியில் குங்கு மமும், விரலில் மெட்டியும் ஆண்களின் அட்டகாசங்களை குட்டித் தட்டி குனிய வைக்க பெண் சுதந்திர மூச்சுடன் தலை நிமிர்றாள். தாரகை நடுவண் தன் மதி போல் வாழ வேண்டியவள் பெண் பார்க்கும் படலம் எனும் போது தாண்டவப் புயலில் தள்ளாடுகிறாள். மாப்பிள்ளை வீட்டாருக்கு பாடிக் காட்டி பவ்யமாக காலில் விழுந்து வணங்கி அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு. அந்த வீட்டின் ஒரு வயதுப் பிள்ளையும் அவளுக்கு எஜமான். இவள் கைகட்டி வாய்ப்

Page 42
80
பொத்தி மெளனியாகிவிட வேண்டும். இவ்வளவு செய்தாலும் அவளுக்கு நல்ல பெயரா கிடைக்கும். நிச்சயமாக இல்லை. பெண் நடக்கும் போது வேக மாக நடந்தால் ஆண் பிள்ளை என் பார்கள். மெல்ல நடந்தால் நோயாளி என்பார்கள். உட்காரும்போது தொப் பென்று உட்கார்ந்தால் அடக்கம் கெட்டவள், சத்தமாய்ப் பேசினால் ஏன் பீரங்கி வேட்டு. பேசாமல் இருந்தால் பெருமைக்காரி,
ஒட்டைவாய்,
பரிமாறும் போது நிறையக் கொட்டி னால் சிக்கனம் இல்லாதவள். கொஞ்ச மாய்ப் போட்டால் பஞ்சப் பிசுனாரி என்பார்கள்.
பூப்பூவா பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ" இந்தப் பூக்கள் எல்லாம் நிறத்தினால், மணத்தினால், வடிவால் பல்வகைச் சிறப்பை பெறுகின்றன. இறைவனுக்கு பொய் சொன்ன தாளம் பூ கூட, சாவிட்டுக்கு வரம் பெற்றது. ஆனால் இன்று பெண் பார்க்கும்
படலத்தில் தலைவனுக்குப் பிடிக்காத
தலைவி சாக்கடைக்கு வரம் பெறு கிறாள். இவள் மூஞ்சை நாலு பேர் பார்க்க ரோட்டில் கூட்டிச் செல்ல லாமா? எனும் போலியான வெட்கம் கெட்ட கேள்விக்கு தலைவி சொல்லும் பதில் இதுவாக அமைகிறது. உன்னைக் கட்டிக் கொண்டு நான் விபச்சார சந்தையிலே பிரச்சாரம் செய்வதை விடப் பிணமாகவே வாழ்கிறேன் என்கிறாள். மேலும் அவள் தன் பெற்றோருக்கு உறுதியும் உணர்வும்
கலக்க ஒரு புதிய கட்டளை
பிறப்பிக்கிறாள்.
என் கல்லறையைக் கூட ஒரு ஆண்மகன் கல்லறைக்கு அருகில் அமைத்து விடாதீர்கள்.
என்கிறாள். இது புதுக்கவிதை செய்த சாதனை. கவிஞர் வைரமுத்து முதிர்கன்னியின் அவலங்களை கண் ணிரில் கண் மை மட்டுமன்றி இளமை யும் கரைந்த சோகத்தில் கனவுகள் எல் லாம் சமாதியாகிப் போன அவலத்தில்
ஜாதி, மதம், ஜாதகம், நிறம், தொழில்,
பொருள் என்பவற்றால் திருமணம் தள்ளிப் போன துயரத்தில்,
எங்கிருக்கிறாய் என் வடிாஜஹான் இறந்த பின்னே தாஜ்மஹால் வேண்டாம் இருக்கும் போதே ஒரு குடிசை கொடு
என்று கூறும் இவளின் அவலங்கள் தான் என்ன? வாழ்வில் இவளுக்கு. இருக்கும் நம்பிக்கை இவ்வாறு வாழத் துடிக்கும் எத்தனை தளிர்கள் வாழா மலே காய்ந்து கருகிப் போகின்றது. நடுத்தர வர்க்க குடும் பங்களில் வாழும், அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களில் ஏற் படும் விரிசல்கள், நெருடல்கள் அப்பப்பா. அடிக்கிக் கொண்டே போகலாம். இதனை,
பிரச்சினைகள்,

குடும்பத்திற்காக நீ உன்னை அழித்து உரமாக்க (366to LTlib. உன் அன்பெனும் அமுதை வரமாக்கினால் போதும்
என்று அலுவலகத்திலும், குடும் பத்திலும் போராடி துன்பத்திலே நீராடி நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் அவள் இருதயத்திற்கு அறிவுரை கூறுகிறார் வைரமுத்து. இவ்வாறு பெண்ணியச் சிந்தனைகளை கவிஞர்கள் பலர் நுணுக் கமாகச் சிந்தித்துள்ளனர்.
பெண்ணியம் என்பது இல்லற வாழ்க்கைக்கு முரணானது என்று
81 பேசுவதும், நடப்பதும் தவறானது. இவ் வாறு இன்றைய புதுக்கவிதைகள் ஊடுருவி இருக்கும் பெண்ணியச் சிந்தனைகள் திட்பமும், நுட்பமும் வாய்ந்தவை. புதுக்கவிதை காட்டும் நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி, நிமிர்ந்த ஞானச் செருக்கு ஆகிய பண்புகள் கொண்ட பேசும் மடந்தை, அழுவதை நிறுத்தி யாரையும் தொழுவதை நிறுத்தி, தன்னை உயர்த்தி தன் ஆற்றலை இந்த உலகிற்கு காட்டு வாள் என்பதே
பெண் நிமிர்ந்த நன்னடை,
இன்றைய புதுக்கவிதைகளின் காத்திர மான கருத்தாகும். O
s
வழங்கப்படுகிறது.
CD (இறுவட்டு)
வணிகக்கல்வியும், கணக்கீடும் தரம் 10, O/L பரீட்சைக்கு ஏற்ற வகையில் அமைந்த ஒளி, ஒலி CD கட்டம் கட்டமாக
தொடர்பு கொள்க !
S. Shriraam 111 - 4/3, College St, Colombo - 13.
TP : 0785 - 607466

Page 43
82
என் கிராமத்து
Deco Teust 60L
மணக்கிறது இன்னுமே. என் மனச்செடியிலே தூரத்தில் கடந்த ஞாபகச் சமிக்ஞைகள் ஒட்டிக்கிடக்கிறது அட்டை போல மனச்சுவரில்
நகரினுள்
குடியேறி நரி வாழ்க்கையோட்டினும், கிராமத்திலோட்டிய எறும்பு வாழ்க்கை எட்டிப்பார்க்கிறது இடையிடையே ஆமைத் தலைபோல.
ണ്ടിങ്കബ്രിൺ வைக்கோற் கொண்டு
G36nluÜLL'l- மண்வீடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன கானகத்துள்.
தெற்குப்புரத்தில் மாரிக்காலம் மட்டும் நிரம்பி வழியும் சிறு குளமும் அதையடுத்து
தூரத்து ஞாபகம்.
- அநுராதபுரம் ரவுற்மத்துல்லாவற்
பரந்து விரிந்த வயல்வெளியும், அதையண்டி
வளைந்தோடும்
மல்வத்தாறும், எமதுரின் எழில்மிகு மச்ச்ங்களாம்!
இரு தசாப்த இடைவெளியின் முன்னாலே பாலியல் பருவமதில்
பாதங்களில்
பாதணிகளுமில்லாமல் டயர் அடித்து விளையாடியதும்,

ஒற்றையடிப் பாதைதனில் தும்பி பிடித்து மீண்டும் ஆகாயத்தில் பறக்க விட்டு மகிழ்வுற்றதும், இன்றும் மறக்கவொண்ணா ஞாபகக் கீறல்களே!
எட்டுக் குடும்பம்
குடியிருந்த சிற்றுாரே என் கிராமம்.
அநுரபுர நகரின் மேற்கெல்லையில் முப்பது கிலோமீற்றர்
தள்ளி. மூர்க்கமாய் படுத்துக் கிடக்கும் பாசிவளையென
அதற்கு அழகிய பெயர்!
அக்காலத்தில் மாட்டுவண்டியும் மிதிவண்டியும்தான் நமது போக்குவரத்துச் சாதனங்கள்.
(8asm60)L a5Tsoub புழுதி படிந்த மண் தெருக்கள் அடுத்தடுத்த
D666
இணைத்திருக்கும். மழை நாட்களில் சேறும் சகதியும்
83 தோய்ந்த மிதிவண்டியில்
ッ வழுக்கிக் கொண்டே
Lusot (3LuTub!
இன்றும் அங்கு
இந்நிலைதான்!
குப்பி விளக்கு வெளிச்சமதில் பாடம் படித்ததும், நித்திரை மயக்கத்தில் விளக்குத் தட்டுப்பட்டு என் இளைய தம்பியின்
ا(260تک
பத்தியதும், அதையணைக்க வாப்பா ஓடிவருகையில் பாதம் பத்தியெரிந்ததும் நான் எப்படி மறப்பேன்!
குளக்கட்டில் தென்னம்மட்டையில் குந்தி. வழுக்கி விளையாடியதும், களிமண்ணெடுத்து வாகனம் செய்ததும், விளா மரமேறி பச்ச விளாங்காய் பறித்து உப்புச் சேர்த்துண்டதும், கூழாங்காய் பறிக்கப்போய்

Page 44
84
என் கூட்டாளி கால் தவறி சேற்றுக் குழியில் விழுந்ததும் இன்றும் விழிகளில் நிழலாடுகின்றன.
இலைகள் பிடுங்கி பணமென்று சொல்லி
கடை கட்டி விளையாடியதும், கம்புக் குச்சியை உதட்டில் வைத்து சிகரட்டென பாசாங்கு செய்து உறிஞ்சிய போது காக்கா கண்டு காதைத் திரிகியதும், கள்ளன் பொலிஸ் விளையாட காடு வழியே களைக்க களைக்க ஒடுகையில், மலைப்பாம்பைக் கண்டு பதறியடித்து
ஒடியதும், வீரமரமும் பால மரமுமேறி கனி பறித்துண்டதும், மிகிந்தலைக் குன்றும், ருவன்வெலிசாயவும் தெரியுதென விரல் நீட்டிக் காட்டியதும் எங்கனம் மறப்பது?
கண்கட்டி விளையாடுகையில் EsmeSG36)
முள்ளுக் குத்தி உதிரம் சிந்தியதும், கசாம்புளி இலை என் மச்சான் மேனியில் பட்டு துடிதுடித்து அழுததும்,
66T ESTESEST
தூக்கிச் சென்று சாம்பல் தேய்த்து விட்டதும் இன்றும்
இ இன்பமூட்டும் நினைவுகளே! C
·口
S @
தந்தையுடன் கூடி
塔 G86hJL"6od LuurTLë
S. E EM
சென்றவேளை
குழுமாடு துரத்தியதும்,
மானொன்று கண்டு சுட்டுப் பொசுக்கியதும், இறைச்சியைத் தடியொன்றில் கொழுவி தோளில் சுமந்து வந்ததும், தேனெடுக்கப் போய் பாம்பொன்று மரப்பொந்திலிருந்து சீறிப் பாய்ந்ததும், என் கிராமத்து மண்ணில் ஜீவித்த வேளை என் மனச்சுவரில் வரையப்பட்ட அழிக்கவொண்ணா அழகிய சித்திரங்களே!

85
அநுராதபுர மாவட்ட தமிழ் கலை - இலக்கியம் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தபட்டிருக்கிறது. அதனை கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், அறிவிப்பு (ஒலிபரப்பு) என அடையாளப்படுத்தலாம். இந்த வகையில் அறிவிப்பு
(ஒலிபரப்பு) சார்ந்த விடயங்களும் எமது அநுராதபுர மாவட்டத்தில் இருந்து வருகின்றமை அவதானத்திற்குரிய விடயமாகும்.
மொழி உருவான கணமே மனிதன் சிந்திக்கத் தொடங்கி நாகரீகம் வளர்ந்திருக் கிறது. மொழியின் வளர்ச்சிப் பரிமாணத்தால் இலக்கிய வகைகளும் கூர்ப்படைந் திருக்கிறது. இந்தப் பின்னணி மூலத்திலிருந்து நாம் மனித உறவையும் அணுக வேண்டியிருக்கிறது.
இன்றைய நவீன இலத்திரனியல் துறை பல்கிப் பெருகி பல்லேறு தளங்களில் ஊடறுத்து நிற்கிறது. இதில் ஒலியும் விதிவிலக்கில்லாமல் பல்வேறு துறைகளில் நவீன தொழில்நுட்பத்தினூடாகத் தனித்துவமான தளங்களில் பிரயோகிக்கப் படுகிறது. இஃது வானொலி பிரதான இடத்தை வகிக்கிறது. வானொலிகள் எமதான செயற்பாடுகளில் ஒரு மாறுபட்ட இடத்தையும், தேவையையும் உணர்த்தி நிற்கிறது. வானொலிகள் ஈழத்திலும் சரி இதர நாடுகளிலும் சரி பரந்துபட்ட அளவில் மனித உறவுகளுக்கிடையே குறிப்பிடத்தக்க தொடர்புகளை வலுப் படுத்தியிருக்கிறது.
மேற்சுட்டிய அடிப்படையில் எமது இலங்கைப் பூமியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கிளை வானொலி நிலையமான ரஜரட்ட சேவை புரதான நகராக விளங்கும் அநுராதபுர மண்ணில் அதன் சேவைகளை செவ்வனே செய்து வருகிறது.
ரஜரட்ட சேவையில் "சந்குேனவுச் சாரல்
- எம்.சி.நஜமுைதீன்
வானொலி நிலையங்கள் அதன் அமைப்பு விதிகளுக்கேற்ப ஏகத்துவ மொழி ஒன்றின் மூலம் நிகழ்ச்சிகளை வழங்குவதே மரபு. (விதிவிலக்காக B.B.C.)
ஆனால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கிளை வானொலி நிலையங்கள் இந்த மரபிலிருந்து விடுபாடாக செயற்பட்டு வருகின்றன. அதாவது சிங்களம்,

Page 45
86 தமிழ் ஆகிய இரு மொழிகளையும் இணைத்து சகல இனங்களுக்கும் உகிதமாக ஒழுகி நிற்கின்றன. இந்த அடிப் படையில் சிங்கள மொழி செறிவுக்குள்ளான அநுராதபுர மாவட் டத்தில் ரஜரட்ட வானொலி நட்புணர் வுடன் "சந்தோஷச் சாரல்’ எனும் தமிழ் நிகழ்ச்சியொன்றை பிரதி ஞாயிறு தோறும் 01.00 - 03.00 மணி வரை வழங்கி வருகிறது. சிங்கள வானொலி நிலையங்கள் மலிந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இலங்கையில் இந்த வியப்பான விடயம் ஓர் அவதானத் தைத் தந்துள்ளது.
ரஜரட்ட சேவையில் பிரதி ஞாயிறு தோறும், (102.4 F.M.) என்ற பண்பலை யில் ஒலிபரப்பாகும் சந்தோஷச் சாரல் நிகழ்ச்சி இன, மத, மொழி மறந்த அன்பின் சங்கமமாகும். இந்நிகழ்ச்சி யானது கல்வி, கலை - இலக்கியம், கலாசாரம், தேடல், பாடல், செவ்வி, நகைச்சுவை போன்ற பல சிறப்பான அம்சங்களை இரு மணி நேரத்துள் காற் றலையில் தவழச் செய்யும் ஓர் அருமை யான நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சித் தயாரிப்பாளராக திரு. சந்ரா ரத்ன என்ற சிங்க ளக் கலைஞர் இருப்பது இன்னொரு வித்தியாசமாகும். இந் நிகழ்ச்சியைப் பிரதானமாக U.நஹிம் என்ற இளம் அறிவிப்பாளருடன் இன் னும் சில இளம் அறிவிப்பாளர்கள் இணைந்து தொகுத்தளிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பம்சம் யாதெனில், சிங்கள மொழி பேசு வோரும் இதில் தொலைபேசி மூல
மும், தபால் மூலமும் கலந்து சிறப்பிக்
கின்றனர். சிங்களவர்கள் தமிழ்
இலக்கியப் பாரம்பரியங்களை அறிந்து
கொள்ளவும், அநுராதபுரத்திலுள்ள தமிழ் இலக்கியச் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளவும் ஓர் பாலமாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது. இனப் பிரச்சினை எமது நாட்டை ஆட் கொண்டு மக்களைப் பிரித்தாழும் இச் சந்தர்ப்பத்தில், சிங்கள - தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குமானதோர் உறவுப் பாலமாக இந்நிகழ்வு இருந்து வருவது வரவேற்கத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்ச்சி தொடர்பாக அடிக்கடி கருத்துரைக்கும் இந்நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இந்நிகழ்வை மேலும் விசாலப்படுத்த வேண்டுமென விதந் துரைத்து வருகிறார். இதற்குப் பிரதான காரணம் சிங்கள மக்கள் இந்நிகழ்வை மிக ஆர்வத்துடன் கேட்டு வரு கின்றமை என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்நிகழ்வானது ஆரம்பத்தில் 05 நிமிட நிகழ்வாக இருந்து இரண்டு
மணி நேர நிகழ்வாக வளர்ந்திருக்கிறது
எனவும் மகிழ்ச்சி பொங்கக் குறிப் பிடுகிறார்.
மேற்படி விடயங்களூடாக இந் நிகழ்வை நோக்கும்போது, எமது மண் ணிலிருந்து பிரவகிக்கும் தமிழ் இலக் கியச் செயற்பாடானது, சிங்களப் பிர தேசத்தில் தமிழ் மொழியை இருத்திக் கொள்ளும் அரும் வாய்ப்பாகும் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

87
01.10.2006 அன்று நமது பழம்பெரும் எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன்
அவர்களுக்கு 70 வயதாகின்றது. அன்னாரைக் கெளரவிக்கும் முகமாக இக்கட்டுரையை மல்லிகை பிரசுரிப்பதுடன், அன்னாருக்கு நீடித்த ஆயுள் அமைய
வேண்டுமெனவும் ஆசிக்கின்றது.
- ஆசிரியர் N - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ళ
స్లమ్డా శ
விமரிசனத்துறையில் ஒரு
விருடிகம் கே.எஸ்.சிவகுமாரன்
- பிரகலாத ஆனந்த்
இலங்கையின் நவீன கலை இலக்கிய விமர்சனத்தின் தாக்கம் இலங்கை எழுத் தாளர்களின் எழுத்துருவாக்கங்களில் பிரதிபலித்தமையை பல தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நவீன கலை இலக்கிய வடிவங்கள் பெரிதும் பரவலாகி வந்த அறுபதுகளிலேயே இலங்கை இலக்கிய வடிவங்கள் பற்றிய ஆய்வு விமர்சனங்கள் அரும்பத் தொடங்கின. ஒரு விமர்சகனால் இலக்கியவாதியை உருவாக்கிட முடியாது என்பது உண்மையே. ஆனால், ஒரு வளரும் எழுத்தாளனின் பார்வையைக் கூர்மைப் படுத்தி, அவனது இலக்கியப் பயணத்தின் பாதையை செப்பனிட விமர்சனம் ஒரளவுக்காவது உதவுகிறது என்பது மறுப்பதற்கில்லை. அத்துடன் வெறும் மேலோட் டமான வாசக விமர்சனங்களிலிருந்து, மிக ஆழமான ஆய்வு நோக்கிலான விமர் சனங்கள் வரை எழுத்தாளனின் படைப்புகளை வாசகர் முன் கொண்டு செல்லவும், எழுத்தாக்கத்தை - அதன் நோக்கை, ரசனையை, ஒப்பீட்டை எல்லாம் புரிந்து கொண்டு வாசகன் பயனடையவும் விமர்சனங்கள் பெரிதும் உதவின.
இலங்கையில் விமர்சனத்துறையின் வளர்ச்சி, பல்கலைக்கழகத் தமிழ்மொழி மூல கல்வியுடன் விருத்தியடைந்தது எனலாம். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மத்தியிலிருந்தும், படைப்பாளிகள் மத்தியிலிருந்தும் விமர்சகர்கள் உருவாகினார்கள். நவீன கலை இலக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த விமர்சகர்களாக கைலாசபதி, சிவத்தம்பி, சுப்பிரமணியம், அருணாசலம், தில்லைநாதன், நுஃமான், சிவசேகரம், செ.யோகராஜா, சிவலிங்கராஜா, சண்முகதாஸ் என பல்கலைக்கழக

Page 46
88 வட்டத்தில் வித்தியாசமான பார்வையுட னான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேவேளை பல்கலைக் கழகத்திற்கு வெளியே மு.தளையசிங்கம், எஸ்.பொன் னுத்துரை, கனக செந்திநாதன், ஏ.ஜே. கனகரட்னா, கணேஷ், கே.எஸ்.சிவ குமாரன் போன்றோர் அறுபதுகளிலேயே விமர்சகர்களாக இனங்காணப்பட்டனர். இந்த வகையில் வெளித் தெரிந்த கே. எஸ்.சிவகுமாரன் ஆங்கில் புலமையும், பரந்துபட்ட வாசக அறிவும், நடுநிலைப் போக்கும் கொண்ட ஒரு விமர்சகராக இனம் காணப்பட்டார்.
விமர்சகர்கள் என்றால் பல்கலைக் கழக சமூகமே என்ற மாயையை உடைத் தெறிந்த கனக செந்திநாதன், தளைய சிங்கம் வரிசையில் இன்று வரை நிலைத்து நின்று நேர்மையான விமர்சக ராக தன்னை நெறிப்படுத்தியபடி எழுபது களை எட்டும் அகவையிலும் மிகச் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் கே.எஸ்.சிவகுமாரன் என்றால் அது மிகையாகாது.
ஒரு படைப்பாளியாக இலக்கிய உலகில் கால் பதித்த அவர், விரைவி லேயே தனது துறை விமர்சனமே என் பதை தீர்மானித்து, ஆரம்பகாலம் உலர்தல் இன்றி படைப்புகளை மட்டும் நோக்கி குறை
தொட்டு காய்தல்,
நிறைகளை நேர்மையாகச் சுட்டியபடி விமர்சனம் செய்து வருகிறார். புதியவர், பிரபலமானவர், தெரிந்தவர் என்ற எல்லைகளுக்கு அப்பால் படைப்பைத் துல்லியமாக நோக்கி விமர்சனம் செய்து
-요) s Cट्र
•
@
வருவதால், இவர் எந்தக் குழுவிலும் சேராத ஓர் விமர்சகராக இருக்கிறார்.
இவரது பார்வை பக்கச் சார்பற்ற தாக இருப்பதையும், எந்த ஒரு தத்துவத் துள் சிக்கி நின்று அணுகாமலிருப்பதை யும், மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் தன்மையைக் கொண்ட தாகவும் உள்ளது. இவரது வாசிப்பு தேடலும் தேசத்திற்குள் மட்டும் நின்றுவிடாமல், சர்வதேசம் எங்கும் விரிந்திருப்பது இன்னொரு சிறப் பம்சமாகும். ஒப்பீட்டுப் பார்வை மூலம்
வட்டமும்,
உலக நவீன கலை இலக்கிய திசையை எமது எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது தரிசனமாக்கியபடியுள்ளார். அனைத்து முறையிலான விமர்சன முறைகளையும் தேவைகளுக்கு ஏற்றபடி பயன்படுத்தும் ஒரு சிறந்த விமர்சன நோக்கு இவரிடம்
2.
எளது.
கவிதை, சிறுகதை, நாவல் என்ப வற்றிற்கு அப்பால், சினிமா பற்றிய இவரது விமர்சனங்களும் குறிப்பிடத்தக் கவை. ஒரு படைப்பாளி எத்துறை சார்ந்த வன் எனினும், அவனது ஆளுமையை
விருத்தி செய்யக்கூடிய அம்சங்களைக்
கொண்டதாக இவரது விமர்சனங்கள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு அளவு கோலை மட்டும் இவர் வைத்திருக்க வில்லை என்பதால் இவரது பார்வை விசாலப்பட்டுள்ளது. தனது எழுபதாவது
வயதை எட்டும் இவரை ஈழத்து படைப்
பிலக்கிய வாதிகள் சார்பில் வாழ்த்து கிறேன்.
201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு - 13 முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

ർപ്പു മറ്റ്രlue
đga C 需 Automatic dust & scratch correction
HEAD OFFICE BRANCH
HAppy PÇACENTRE ĦAppy PHoTo
615 тиро No. 64 Sri Sumaňatissa Mw, No. 3oo, Modera Street, Colombo - I2. Tel -o74-6το652. Colombo - 15.Tel:-oII-256345.
m
MAN ZATURZS
* Maximum Size: 12" x 8"Disti Pind * Output Resolution: 4oodpi *Film lnput Formats: 135, Ix24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Bew
negative, Sepia negative
* Compatible linput & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia)
sk Print to Print * Conduct sheet & lindex print
se Temp lates: Greeting Cards, Frame Prints, Casandar Prints,
Album Prints.
Stupo A Portssonat. PorocAsi VotkMPits

Page 47
苯 Mallikai Special Issi
lith Best Conplinents (
lanka Pau
Dedles "Sin 6, PdIntdl
Specialist IT
Nը : , Maithreepala Sen NEW Bl
Anura
Tel : O25 - 45 Fax : O25

| Ը October 2006
pf.
Int (Centre ||
IluCD IJulu}{ te Pants
Auto Colous
King
521/20, anayaka Mawatha, 15 Stand, dhapura.
81023/ 2223760 - 222376O is