கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1997.07

Page 1
- - |-
 


Page 2
219, Main Street, Matale, Sri Lanka.
Phone : 066-2425
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS: AGROCHEMICAL SPRAYERS, FERTILIZER & VEGETABLE SEEDS
No. 85, Ratnajothy Sarawanamhuthu Mawatha, (Wolfendhal Street), Colombo 13.
Phone:- 327011
 
 
 
 

“ஆடுதல் பாடுதல் சித்திரம்
கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்”
255 tegrapa-1997
ஒரு புதிய அனுபவம் எனக்கு
சொல்லமுடியாத மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு.
கொழும்பிலிருந்து மல்லிகையின் 254வது இதழை வெளிக் கொணர்ந்து நாடு பூராவும் உலவவிட்ட போது நெஞ்சுக்குள் ஒரு வித சங்கடம் இல்லாமல் இல்லை. மல்லிகைச் செடியை வேரோடு பிடுங்கிவந்து இன்னொரு மண்ணில்- வேறொருபிரதேசத்தில் நட்டு தண்ணிர் ஊற்றி. வளர்க்க முயற்சிக்கின்றேனே, இது வேர்விட்டுத் தளைக்குமா என சந்தேகப்பட்டபடியே என் ஆரம்ப வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தேன்.
மல்லிகைச் சஞ்சிகையைவிட, மல்லிகை என்ற நாமம் எத்தனை
தூரம் சுவைஞர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை
இந்த இதழ் வெளிவந்த பின்னர்தான் என்னால் சரிவர புரிந்து கொள்ள முடிந்தது.
பல பிரதேசங்களில் இருந்தெல்லாம் மல்லிகை கேட்டு எழுதுகின்றனர் அவர்களின் விருப்பத்தை என்னால் பூர்த்திசெய்ய இயலவில்லை. வரையறுக்கப்பட்ட பிரதிகளே தாயாராகின்றன. புதியசுவைஞர்கள் முன்கூட்டியே தொடர்பு கொள்வது நல்லது. நேரடியாக மல்லிகையுடன் தொடர்பு கொள்வது சாலச் சிறந்தது.
கணணி அமைப்பில் மல்லிகையை வெளியிடுவது புதிய அனுபவம் எனக்கு. போகப்போக இன்னும் சிறப்பாக மல்லிகை இதழ்களை வெளியிடு
வேன் என உறுதி கூறுகின்றேன்.
~ டொமினிக் ஜீவா,
2
DGCSOs 1
ܓ

Page 3
With Best Compliments:
IMPORTERS & DISTRIBUTORS OF
AUTOMA
EVERWEAR
ΜΥΡOL
LION HEAD TYRES & TUBES
109, Wolfendhal Street, Colombo - 13
T"Dhone: 432761 / 432885 FaX: 43 4348
ہسن இமலகை
 

IDIö(Dö óÍLið 36లైర్ 66)6O2
அன்றைய யாழ்ப்பாணத்து வலிமை மிக்க. அரசியல் தலைமை வலுவாக எதிர்த்து வந்த போதிலும் கூட, யாழ்ப்பாணத்துக்கெனத் தனியாக ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்திப் போராடி வெற்றி பெற்றவர்கள் அந்த மண்ணை நேசித்த பாமரமக்கள். தமது எதிர் காலச் சந்ததியினரின் உயர்கல்வித் தகுதிக்காக அந்த உழைக்கும் மக்கள் அன்று பெற்றெடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாகிய மருத்துவ பீடம் தொடர்ந்து இயங்கமுடியாத
சூழ்நிலைக்கு ஆட்பட்டுள்ளது என்ற ஆழமான பதற்றச் செய்தியைச் சொன்னவர் பிரபல எழுத்தாளர் "நந்தி அவர்கள்.
இது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதொரு தகவல். மூன்றாம் வருடப்பரீட்சை நடத்த முடியாது எனத் தீர்மானித்துள்ளதாம் மருத்துவபீட நிர்வாகக் குழு. இப்போது பயிலும் மாணவர் குழுவைத்தவிர, இனிமேல் இறுதியாண்டுப் பரீட்சைகள் நடத்தமுடியாத அவலமான சூழ்நிலையாம் இன்று. தொடர்ந்தும் புதிய மாணவர்களை அனுமதிக்க இயலாத நிலையாம்.
இவையனைத்துக்குமே அடிப்படைக் காரணம் தகுந்த பேராசிரியர் களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தட்டுப்பாடாம். சில முக்கிய பாடங்களைப் போதிப்பதற்கு யாழ் பல்கலைக் கழக மருத்துவபீடத்தில் ஒருவருமே கிடையாதாம்.
இந்த அவலநிலையைக் கேள்விப்பட்டு மெய்யாகவே மன வருத்த மடைகின்றோம், நாம்.
எத்தனையோ சிரமங்கள், கஷ்டங்கள், பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தோன்றி வளர்ந்த யாழ் பல்கலைக் கழகத்திற்கு - அதிலும் மருத்துவ பீடத்திற்கு - இப்படி அவல நிலை தோன்ற அடிப்டைக் காரணங் களாக அமைந்துள்ளவை எவை? - எவை?
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தைத் தொடர்ந்து இயக்க ஆவன செய்யப்பட வேண்டும்.
இதற்கான மாற்றுத் திட்டத்தைப் பற்றிக் கல்விமான்கள் ஆழமாக யோசித்துத் தகுந்த முடிவொன்றைக் காண முயல வேண்டும்.
- ஆசிரியர்
ک SK LoggSeO35 3 NZ

Page 4
த்திரை வைகாசி மாதங்களில் குயில் சீராகக் கூவுமொலி தேன் நித்திரை வேளையும் நினைவினிலே குரல் நீளமாய்ப் பரவுமொலி காண் அத்தனை இனிமையி லாழ்ந்த பின்னே குயில் ஆனியில் கூவும் குரல் வீண் சித்தமே கலங்கிய செய்கையாலே குரல் சிறிதுமே இனிமையற்ற தேன்?
அற்றதோ வாழ்வென அலறிடும் குரலினில் ஆதரவற்ற நிலையேன்? பெற்றவர் குரலினில் இனிமையைப் பெற்றவர் பேதலித்திடச் செய்ததேன்? நிற்கதியாக்கிய அலறலில் குயிலினி நீள்துயர் ஒலிப்பதுமேன்? பற்றினைக் காட்டியே பற்றிய தெதனையோ பார்த்தொரு முடிவு தாரும் உத்தமர் என்பவர் உன்குரல் மயங்கினார் உன்னிலை தனிமைதானோ? சுத்தமென யிங்கு தூய்மைகள் கண்டபின் சூழ்ச்சிகள் பின்தெரிவதா? மெத்தப் படித்துனர் மேன்மைகள் கண்டவர் மேலுனைத் தள்ளியதேன்? எத்தனை யெத்தனை எழில்பெறு ஜீவன்கள் இழப்புதான் முடிவுதானா?
சுதந்திரம் பெறுதற்கும் சுந்தரம் காணற்கும் சுத்தமாய்ப் பயன்படுத்தினார் நிதந்தர வாழ்வுக்கும் நெடிய நற்சீர்வுக்கும் நித்தியம் காலில் வீழ்ந்தார்: விதந்துமே போற்றினார் வீறுடனேற்றினார் விட்டுவிட்டார் தனிமையில் இதந்தரும் இனிமையை உன்னிலே பெற்றபின் எறிந்திடல் நீதிதானா?
கூ" வென்ற குரலினிக் கூக்குரலானது கூவிய காலம் வினே! நா வின்று சரிந்தது நல்லதைக் கொட்டினாய் நாசம் உனக்கானதே ஏனென்று கேட்பதற் கிருப்பவர் யாவரும் இது நீதில்லை யென்றனர் ஆ வென்று அலறிடும் நீதிக்கு நிலையாக ஆண்டிடும் இடந் தேடுவாய்!
 

சிமகால ஈழத்திலக்கியத்தில் முத்திரை பதித்துள்ள நோர்த் மாத்தளை மலரன்பன் அறுபதுகளின் பிற்பாதியில்- 1967 இல் தினபதியில் வெளியான "பார்வதி” என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த மலையகப் படைப்பாளியாவார்.
SPILL6ODLÕI LILIñ சமகால தமிழ்ச் சிறுகதைக்குத் காத்திரமான பங்களிப்பைச் செய்து வரும் மலையகப் படைப்பாளி மலரன்பன்.
பன்னாமத்துக் கவிராயர்
தமது முதல் சிறுகதை மூலமே கவனிப்பும், கணிப்பும் பெற்ற பெருமைக்குரியவர் மலரன்பன்.
ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைத் தொகுதியொன்றுக்காக அதுவரை (1967) வெளிவந்த மிகச்சிறந்த பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதாயின் அவற்றுள் மலரன்பனின் "பார்வதி” நிச்சயம் இடம்பெறல் வேண்டுமென இளம்பிறை ரஹற்மானின் அரசு வெளியீடான கதைவளம் என்ற விமர்சன நூலில் கருத்துத் தெரிவிக்கின்றார் ரகுமான்.
இச்சிறுகதை தமிழமுது சஞ்சிகையில் "அவளொன்று நினைக்க”என்ற தலைப்பில் 1970 இல் மறுபிரசுரமானபோதே அதனை நான் படிக்க நேர்ந்தது.
மேட்டு லயத்து அண்ணாவிக்கங்காணியார் எழுத்துக் கூட்டி சுருதிசேர்த்துப் படிக்கும் பெரிய எழுத்து இராமாயணக்கதை தொடர்ந்து கொண்டிருக்க, அத்தோட்டத்தில் அந்த நான்கு நாட்களாய் பணிய லயத்துப் பார்வதியின் அந்தரங்க வாழ்வில் புயல் கிளப்பி உச்சம்பெற்று தணியும். புராணக்கதைக்கு எதிர் நிலையான- யதார்த்த நிகழ்வொன்றினைக் கலைத்துவம் குன்றாமல் கூறும் சிறந்த சிறுகதை இது.
பின்னர் நான் படித்த மலரன்பனின் "உறவுகள்” அஞ்சலி என்ற சஞ்சிகையில் மலையகமலரில் வெளிவந்த சிறுகதையாகும். மாத்தளை கார்த்திகேசு தயாரித்து அரங்கேற்றிய "காலங்கள் அழுவதில்லை" மேடை நாடகமும் "காலங்கள்" டெலிநாடகமும் மலரன்பனின் உறவுகள் சிறுகதையைத் தழுவியதாகும் என்ற உண்மையை கார்த்திகேசு பற்றி மல்லிகையில் எழுதும்போது தெளிவத்தை ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தின் வட வாயிலான மாத்தளைக்கு வடக்கே நோர்த்மாத்தளை எஸ்டேட்டில் பிறந்தவர் மலரன்பன். இவர் நோர்த் மாத்தளை
t oggers 5 RN

Page 5
மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு மலையகப் படைப்பாளியான மாத்தளை வடிவேலனின் மூத்த சகோதரர் ஆவார்.
நோர்த் மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன் இருவரும் தம் சுயம்காட்டும் தனித்துவமான ஆளுமைகளுடன் மண்வாசனை வீசும் சிறந்த சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கும் வீறும் விறலும் கொண்ட மலையகப்படைப்பாளிகளாவர்.
இவ்விருவருடன் மாத்தளை சோமுவும் சேர மூவரினதும் மூர்த்திகரம் வாய்ந்த சிறுகதைத் தொகுதியாக தோட்டக்காட்டினிலே எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்தது. "இலங்கை தமிழ் இலக்கியத்துக்கு மலையகம் புதிய இரத்தம் பாய்ச்சுகிறது" எனக்குறிப்பிட்ட காலஞ் சென்ற பேராசிரியர் கலாநிதி கைலாசபதியின் முன்னுரையோடு வெளியான இத்தொகுதியில் மலரன்பனின் பார்வதி, உறவுகள், தார்மீகம் முதலிய சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்விகற்று ஐந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்துவிட்டு, தற்போது தனியார் நிறுவன மொன்றில் நிர்வாகியாகப் பணிபுரிந்துவரும் மலரன்பனின் சிறுகதைகளில் கணிசமானவை பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவை. இவை யாவும் சிகரம் வைத்தாற் போல மாத்தளை சிவஞானத்தின் பெரு முயற்சியால் சுஜாதா பிரசுரம் வெளியிட்ட இவரது “கோடிச்சேலை” சிறுகதைத் தொகுதி 1989 ஆம் ஆண்டுக்கான சாகித்திய பரிசை சுவீகரித்துக் கொண்டது. இலக்கிய வித்தகர் என்ற பட்டத்தையும் வழங்கி இந்து கலாச்சார அமைச்சு இவரை கெளரவித்தது.
கோடிச்சேலைக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சி. தில்லைநாதன் “இத்தொகுப்பில் மிகவும் சிறந்ததென பாராட்டத் தக்கது “கறிவேப்பிலைகள்” ஒருமைப்பாடு, பாத்திரப் படைப்பு, நடை, தலைப்பு யாவும் நன்கமைந்துள்ளன. ஆசிரியரின் அவதான சக்தியும், சிருஷ்டியாற்றலும் இக்கதையிலும் கோடிச்சேலை, சுயம்வரம் ஆகியவற்றிலும் மெச்சத்தக்க வகையில் காணப்படுகின்றன. ஒரு தொகுப்பில் ஒரு நல்ல சிறுகதை தேறினாலே அது விதந்துரைக்கப்பட வேண்டியதாகும்.” என்கிறார்.
கொழுந்துக் கூடைக்குள் இந்த தேசத்தையே சுமக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளியின் "துன்பக்கேணி" யான வாழ்வை அதன் பன்முக விலாசங்களோடு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தினூடாகக் கலையாக்கித்தரும் மலரன்பன் என்ற சமூகப் பிரக்ஞை கொண்ட இம்மனித நேயப் படைப்பாளி சமகால சிங்கள கலை இலக்கியங்களோடும் ஓரளவு பரிச்சயமுள்ளவர்.
பிரபல சிங்கள எழுத்தாளர் ஜி.பி.சேனநாயக்கவின் "பலி கெனிம” என்ற கதையை தமது துணைவியாரின் உதவியுடன் தமிழில் மொழியாக்கஞ்
6

செய்துள்ளார். “பலி” என்ற தலைப்பில் இக்கதை மல்லிகையில் பிரசுரமாகியது.
மலரன்பனின் தார்மீகம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “விவரண” சஞ்சிகையில் வெளியாயிற்று. இபுனு அசுமத் மொழிபெயர்த்த சிறுகதைத் தொகுப்பான "காளிமுத்துகே புருவேசிபாவய" (காளிமுத்துவின் பிரஜாவுரிமை) என்ற தொகுதியில் மலரன்பனின் "உறவுகள்” இடம் பெற்றுள்ளது. இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் சுநந்த மகேந்திர உறவுகள் சிறுகதையை சிலாகித்துக் கூறியுள்ளார்.
நண்பர்களின் நச்சரிப்பு காரணமாக மலரன்பன் 1975 ல் எழுதிய “உலகம் யாருக்காக" என்ற திரைக்கதை வசன கையெழுத்துப் பிரதிக்கு திரைப்படக் கூட்டுத்தாபனம் "B” “பி” தரம் வழங்கியது. (B தரம் கணிப்பு பெறும் திரைக்கதையைப் படமாக்குவதெனில் அதற்கு திரைப்படக் கூட்டுத் தாபனத்திடமிருந்து அன்று 50% நிதிக்கடன் பெறமுடியும்) எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
மலையக சிறுகதை சிற்பி காலஞ் சென்ற என்.எஸ்.எம். ராமையா வழங்கிய உற்சாகமே தன்னை நல்ல சிறுகதைகள் உருவாக்க வழிகோலிற்று என நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறார் மலரன்பன்.
இசைத்துறையில் ஈடுபாடு காட்டிவரும் இவரது மெல்லிசைப் பாடல்கள் பிரபலமானவை. இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியிலும் ஒலி(ஸ்ரி) பரப்பாகி வருகின்றன.
வீரகேசரியில் வெளியான மலரன்பனின் “பிள்ளையார் சுழி” இருநூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட மலையகத் தோட்டத் தொழிலாளரின் வருகையைப் பிள்ளையார் சுழியிட்டுக் காட்டும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதொரு சிறுகதையாகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களது நல்வாழ்வில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இவ்வாக்க இலக்கியவாதி கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்களினால் உருவாக்கப்பட்ட கலாச்சார மேம்பாட்டுக் குழுவிலும் ஓர் உறுப்பினராவார்.
மலரன்பன் தமிழுக்கு மேலும் பல நல்ல சிறுகதைகளைத் தரவேண்டு மென்பது இலக்கிய நேசங் கொண்டோர் அனைவரதும் எதிர் பார்ப்பாகும்.
-------- HAPPY PHOTO)------ ༄༽
Excellent Photographers for Wedding, Portraits ce. Child Sittings i 300, MoDERA STRE ET, CoLoMBo - 15. TEL: 526345

Page 6
தெளிவத்தை ஜோசப் -
அந்த சின்னஞ் சிறிய
சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்
கின்றார்கள்.
இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று வாழைச்சீப்புப் போல் வரி வரியாக வீடுகள்.
வீட்டுக்கு முன்னால் வேலியேதும் இல் லா திறந்த வெளிகள் , செடி வளர்ந்து மறைப்புக்கள், முட் கம்பி வேலிகள்; மூங்கில் பிளாச்சடிப்புகள்; காம்பவுண்ட் சுவரும் கேட்டுகளுமாக தரத்திற்கேற்ப பாது காப்புக்கள்.
எல்லா வீட்டுக்காரர்களுமே அந்தச் சந்துக்குள்ளாகத்தான் நடக்க வேண்டும். வெளியே றோட்டுக்குப் போவதென்றாலும். உள்ளே வீட்டுக்கு வருவதென்றாலும்!
சநீ தடிமரிக் கதான அநீதச் சந்துக்குள்தான் இவர்கள் பந்த டிக்கின்றார்கள்.
தாங்கள் ஏதோ அர்ஜுனா ரண துங்க.சனத் ஜெயசூரிய போலவும் இந்தச் சந்து என்னவோ ஈடன் கார்டன் போலவும்.! அப்படி ஒரு நினைப்பு!
8
ஆட்களைப் பார் .போதை மாத்திரைகள் போட்டவர்கள் மாதிரி.தறுதலைகள் இதுகளுக்கு கிரிக்கட் ஒரு கேடு.
இப்படி முணுமுணுத்துக் கொள் ளாமல் யாரும் அந்தச் சந்துக்குள் நடப்பதில்லை.
இந்த முணு முணுப்புக்களை அவர்களும் சட்டை செய்வதில்லை. வேக வேகமாகப் பந்தெறிவார்கள். வீசி வீசி அடிப்பார்கள். விரட்டிக் கொண்டோடிப் போய் பிடிப்பார்கள். சந்துக்குள் நடப்பவர்கள் பாடு தர்மசங்கடம்தான்! போலீசில் புகார் செய்தாவது இதை நிற்பாட்டியாக வேண்டும் என்று கருவிக்கொள் வார்கள். திடீரென்று கள்ளச் சாராயம் பிடிக்க ஓடிவரும் போலீஸ்காரர்களே இவர்களுக்கு பந்தெடுத்துக் கொடுத்து விட்டுப் போகும் சங்கதிகள் எல்லாம் இவர்களுக் கெங்கே தெரியப் போகிறது.
இவர்களில் ஒருவன் நாளைக்கே களு வித தாறணையாகவோ, சனத்தாகவோ வந்து விடலாம் என்னும் தேசிய எதிர் பார்ப்பு அவர்களுக்கு. யார் கண்டார்கள். வீசிய பந்தை விளாசுகிறான் ஒருவன். தண்டவாளத்தில் ரயில் ஒடுவதுபோல் சந்துக்குள் மட்டும் நேராகவா பந்தோடும். எதிர் வீடு பக்கத்து வீடு, மூலை வீடு என்று எல்லா வேலிகளுக்குள்ளும் தான் பாய்ந் Gg, sI (6. Lö . கதவைத் தட் டும் . ஜன்னல்களை ஆட்டும் டமடம வென்று கூரைத்தகரத்தில் கூத்தாடும். ஹாலுக்குள் நுழைந்து சோபாக் களில் பதுங்கிக் கொள்ளும் . முள்கம்பிகளை நெம்பித்துக்கிக்
 

கொண்டு நுழைவார்கள். செடிகளை நீவி நெரித்துக் கொணி டு பாய்வார்கள், மூங்கில் பிளாச்சின் இடுக்கு வழியே இறங்குவார்கள். சுவரேறிக் குதிப்பார்கள்.
பந்து தேடித்தான்!
உள்ளே இருந்து கத்திக்கொண்டு ஓடிவருவார்கள் வீட்டுப் பெண்கள். இவர்கள் உள்ளே நுழையுமுன் பந்தைத் தூக்கி வெளியே வீசிவிட்டு ஏசித்துரத்துவார்கள்.
உள்ளே நுழைந்துவிட்டால் பந்து மட்டுமா தேடுவார்கள். கொய்யா மரத்தில் காய் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். குடாப்புகளில் கோழிகள் நிற்கின்றதை கவனிப்பார்கள், பாத்திரம் பண்டங்கள் வெளியே கிடக்கின்றதை நோட்டம் இடுவார்கள். ஆகவே கூடுமான வரைக்கும் இவர்களை உள்ளே விடாமல் இருக்கவே வீட்டுக்காரர்கள் விரும்பி செயல் படுவர்.
"எங்காவது கிரவுண்டுல போய் அடிங்களேன். பொழுது விடிஞ்சா உங்க எழவே பெரிய எழுவாப் போயிறுது” என்று குமுறுவார்கள்.
இது என்ன அதிசயம்! இவர்கள் பந்தடிக்கும் இந்தச் சின்ன சந்துக்குள் மனித நடமாட்டம் மட்டுமே இருக்கிறது. கார், பஸ், லொறி, என்றோடும் மெயின் றோட்டுச் சந்திகளிலும் பந்தடிக்கின்றார்களே? யார் என்ன செய்தார்கள் எந்தக் காராவது எந்த லொறியாவது எந்த பஸ்ஸாவது இவர்களில் ஒருவனை ஏறி நசித்துக் கொன்றது என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கின் றிர்களா!
சடன் பிறேக்கடித்து வெட்டித் திருப்பி, ஒடித்து மடக்கிக் கொண்டு அவர்களும் ஓடுகின்றார்கள் . இவர்களும் ஆடுகின்றார்கள்.
இப்போது இது ஒரு தேசீய வியாதியாகிவிட்டது!
அதுவும் உலகக் கோப்பை இங்கே வந்து விட்ட பிறகு சந்துக்குள் பந்தடிப்பவர்களைக் கூட யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாது.
பந்தாடி விடுவார்கள்!
ஆபீசுக் குப் போகவென்று வெளியே வந்த அவன் கேட்டடியில் நின்று சந்தை எட்டிப் பார்த்தான்.
அளவாக வெட்டபட்ட மூன்று தும்புக்கட்டைக் கம்புகள் அவர்கள் வீட்டுக் கேட்டுக்கு முன்னால் ஊன்றி இருக்கின்றது.
"அங் கிட்டெல்லாம் ஊணிக் கிட்டா என்னவாம் எங்க வீட்டுக்கு முன்னுக்குத் தானா ஊணணும் ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கிறது மாதிரி இந்த ஊருக்கு எளைச்சவங்க நாங்க தானே தமிழன்னா, தமிழ் வீடுன்னா ஒரு எளக்காரம்."
எரிச்சல் அவனுக்குள் புகை புகையாய் மண்டிக் கிளம்பியது.
சிக்ஸ் என்று கத்தினான் ஒருவன். வீசியவனை வக்கார் யூனிசாகவும் அடித்தவனை சனத்தாகவும் கற்பனை பண்ணிக் கொண்டிருந்திருப்பான் அவன்.
"நாங்களும் ஒரு வகையில் இந்தப் பந்தைப் போலத்தான்! விக்கட்டைக் காப்பாற்றிக் கொள்ள
ğZDCCD 9

Page 7
வென்று ஆட வரும் ஒவ்வொரு வருமே ஆள் மாற்றி ஆள் என்று எங்களைத்தான் அடிப்பார்கள்.
ஓடிவிடவும் விடமாட்டார்கள்! எல்லையைத்தாண்டவும் விடமாட் டார்கள்! விரட்டி விரட்டி பிடித்து அமுக்கிக் கொள்வார்கள் . பிறகு அடிப்பார்கள்.”
கேட்டிடம் நின்றவன் தனக்குள் குமுறினான் எக்கச்சக்கமாக மேலே எழுந்த பந்து எதிர் வீட்டுக் கூரையில் போய் விழுந்தது.
“கண்ட்றோல் கறலா காப்பாங்கோ .உம்பம கணிங்.." என்று அலுத்தபடி சுவரோரத்தில் அமர்ந்து கொண்டான் பந்து வீசியவன்.
அது சிங்கள வீட்டுக்கூரை. ஆகவே கொஞ்சமாகத் தயக்கம் காட்டுகின்றனர்.
வீட்டுக்குள்ளிருந்து ஆக்ரோஷ மான சத்தமோ கறேயுறே என்று கத்திக்கொண்டு பெண்கள் கூட்டமோ இன்னும் வெளியே ஓடிவரவில்லை. ஆட்கள் யாரும் இல்லை போல் இருக்கிறதே என்று யோசித்து முடிப்பதற்குள் "நாசமாய்ப் போக மாட்டீர்களா” என்று கத்திக்கொண்டு
ஓடி வருகிறது வீட்டுக்காரக் கிழவி.
கிழவிக்கு ஐம்பது வயது என்று யாரால் கூறமுடியும் செக்கச் செவேல்
என்று கையில்லாத கிமோனாவும்
தானுமாக.
வேலியோரம் வந்து நின்று கேலியாக அவர்களை முறைத்து விட்டு கையைத் துாக்கி ஆட்டிக் கத்துகையில் கெண்டைச் சதைகள் அழகாக ஆடிக் குலுங்குகின்றன.
1O
"ஓடெல்லாம் நகர்கிறது . உடை கிறது மழை பெய்தால் வீடெல்லாம் ஒழுகிறது” என்று கிழவி கத்திக் கொண்டிருப்பதை இவர்கள் யாரும் சட்டை செய்ததாகத் தெரிய வில்லை.
மற்ற மற்ற வீடுகளின் வேலிச் சந்து . சுவர் இடுக்கு இத்தியாதி களில் எட்டி எட்டிப் பார்த்து, பந்து ஏதோ இங்குதான் விழுந்துவிட்டதைப் போன்ற பாவனையில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
கிழவியைத் தொடர்ந்து அழகழ கான முகங்களுடனும் உடல்க ளுடனும் மகள்கள் மருமகள்கள் என்று வரிசையாக வந்து வேலியிடம் நின்று சத்தமிடுகின்றனர்.
அவர்களின் அணிவகுப்பைப் போலவே அவர்களுடைய கோபக் குரல்களும் அழகாக இருக்கின்றன. சிங்கள மொழிக்கொரு செழுமை இருக்கிறதுதான். ஒருசில வார்த்தை வீச்சுகள் இந்த மொழியிலன்றி வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு ஜீவனுடன் கிளம்புவதில்லை. வீறுடன் ஒலிப்பதில்லை.
கத்தி முடித்து அவர்கள் உள்ளே போய்விட்ட மறு வினாடி, சுவற்றில் ஏறி தொத்தி மடமடவென்று வேலி யோரப் பலாமரத்தில் ஏறி கிளை வழியே வழித்திறங்கி மெதுவாகக் கூரையில் காலூன்றி பந்து தேடுகின் றான் ஒருவன்.
பழம் தேடிக் கிளை தாவும் அணிலை ஞாபகப்படுத்துகிறது அவனது லாவகமான மரமேற்றம்.
கேட்டடியில் நின்று வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் ஏக்கத்துடன் உள்ளே வந்தான்.
 

அவனை வழியனுப்ப வந்த மனைவியும் மகளும் என்ன உள்ளே திரும்பி வருகின்றீர்கள்” என்பது போல் ஏறிட்டுப் பார்த்தனர்.
காலம்பெறவே தொடங்கிட்டா ணுக. கவனமா இருங்க. உள்ளே ஏதும் பந்து விழுந்துச் சுன்னா பேசாமத் தூக்கி வெளியே வீசிட்டு “கப்சிப் புன்னு இருந்துறுங்க. அவனுக்கிட்ட வாய்கீய் குடுத்துடா தீங்க அதுகளே அந்த பாடு படுதுக நாம எந்த மூலை . பந்துல தொடங்கி வேறு எதுல போய் முடியும்னு சொல்லேலாது. ஏன்னு கேக்க ஒரு நாதி இருக்காது.”
"நீங்க பயமில்லாமப் போங்க . நாங்க பாத்துக்கிடறோம் . எந்த நாளுந்தான் அடிக்குறானுக. நாங்க சமாளிக்கலே .”
மனைவியும் மகளும் கையாட்டி
விடைதர அரை மனதுடன் அவனும்
வெளியேறி நடக்கின்றான்.
வெளியே போகும் ஆண்கள் விக்கினமேதுமின்றி திரும்பிவரும் வரை வீட்டிலிருக்கும் பெண்களும், வீட்டிலிருக்கும் பெண்கள் வில்லங்கம் ஏதுமின்றி இருக்கவேண்டுமே என்று வெளியே போகும் ஆண்களும் ஏங்கி . ஏங்கி. மனம், குமுறிக் குமுறி.!
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த "சீ” பட்ட வாழ்வு.
அரசும் புலிகளும் மறுபடியும் அடித்துக்கொள்ளத் தொடங்கிய பிறகு . . .
"வடக்கின் பெரும் பகுதியை நாங்கள் பிடித்து விட்டோம் கொடி ஏற்றிவிட்டோம் என்று பாதுகாப்பு
வட்டாரங்கள் பலமாக விளம்பரம் படுத்தி பெரும்பான்மை மக்களை உளரீதியாக உற்சாகப் படுத்தத் தொடங்கி விட்டதன் பிறகு . . .
கொழும்பு, மலையகம் போன்ற மற்றப் பகுதிகளில் பரம்பரை பரம் பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தழிழ்மக்களின் பாடுகூட பெரும் சங்கடத்துக்குள்ளாகித்தான் போய் விட்டது.
பஸ்ஸில், பாதையில், கடைத் தெருவில் என்று தமிழர்களை ஒரு ஏளனத்துடன் தான் பார்க்கின்றார்கள் .பேசுகின்றார்கள். என்ன செய்வது. இத்தனைக்கும் மத்தியில் இவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின் றார்கள்.
அந்தம்மாள் சொன்னது போல்
ஒவ்வொரு நாளும் சமாளித்துக் கொண்டு.
வேறு என்னதான் செய்யமுடியும்?
தமிழ் நாட்டுக்கா ஓடிவிட முடியும்! இந்திய வம்சாவளித் தமிழர்களே
புகுந்தவீட்டுக் கொடுமைகள் தாங்
காது பிறந்த வீடென்று எண்ணி அங்கே ஓடிப் பட்ட அவஸ்தை களையும், கூறும் கதைகளையும் கேட்டால் .அப்பப் பா...அம்மா கொடுமைகளை விட மாமியார் கொடுமையே பரவாயில் லை போலிருக்கிறது.
பந்தடிக்கும் சத்தம் சந்துக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சமையலை க் கவனிக் க குசினிக்குள் நுழைகின்றாள் அம்மா * நீ போய் குளிச்சிறு. வெய்யிலும் உசாராய் இல்லை. ஒனக்கோ ஓவியக்கூந்தல் ஒரு மணிநேரமாவது
ܠܓ

Page 8
வேணும் உலர்த்த . . நீ வெய்யில்ல நிற்கயில நீான் குளிச்சிறலாம்."என்று மகளை பாத்ருமுக்கு விரட்டுகின்றாள்.
சமையலறைக்குள்தான் எத்தனை வேலைகள்!
பைலும் கையுமாக ஆபீஸ் போய் அமர்ந்திருக்கும் ஆண்கள் செய்வ தைப்போல் ஒரு வேலையா இரு வேலையா. சமையலறை இருப்பது வீட்டின் மூலையில் என்றாலும் முழு வீட்டின் ஜீவனுமே அதற்குள் தான்.
ஒன்றொன்றாய் ஒன்றொன்றாய் வேலையில் ஒன்றிவிட்ட அம்மாவை "அய்யய்யோ அம்மா” என்று மகள் போட்ட கூச்சல் பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போய் குளிய லறையில் நிறுத்துகிறது.
9ub upТ விட்டார்கள்!
பதறித்தான் போய்
"மேலே கூரையைப் பார்த்தபடி, பேயைக்கண்டவள் போல் நடுங்கிக் கொண்டு. பாதிகுளித்த உடலுடன் மகள் நிற்கும் கோலம் . . கூரையில் ஓடு நகர்ந்து மூடிக்கொள்கிறது ஒட்டுக்கு மேல் நாலைந்து கால்கள் நடமாடி மறைகின்றன.
"கவுத உட" என்று கத்தியபடி வெளியே ஒடியவள் பேயென எழுந்து நின்றாள்.
கூரை மேல் நாலைந்து பையன்கள் நிற்கின்றனர்.
கேட்மூடியபடியே இருக்கிறது. கேட்திறபட்டால், அல்லது ஆடினால், சிணுங்கினால் கூட குசுனியில் இருக்கும் அம்மாவுக்குத் தெரிந்து விடும். ஆகவே இவன்கள் சுவரேறித் தான் குதித்திருக்க வேண்டும்.
2 čitociety.
RN
அம்மாவால் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள முடியவில்லை.
மகளின் அலறலும் அவள் நின்றகோலமும், குளியலறைக் கூரையில் ஒடு நகர்ந்த விதமும், சூழலை மறக்கடித்து விட்டன.
“எறங்க கீழே எல்லாரும்.என்று கத்தினால் சிங்களத்தில்.
அவளை சட்டை செய்யாமல் ஒட்டுமேல் நடந்த அவர்கள் பந்து தேட இவள் குரலுயர்த்திக் கத்த . .அவர்கள் ஏதோ பதில் சொல்ல.
கேட்டைத்திறந்து கொண்டு வாட்ட சாட்டமான ஒருவன் எட்டிப் பார்த்தான். பிறகு உள்ளே நுழைந் தான். கையில் பேட்டுடன்.
ஏளனமாக அவளை ஒருமுறை ஏறிட்டுப்பார்த்து விட்டு "அகப்பட்டதா" என்று மேலே கேட்கின்றான்.
"பந்து தேடிக்கிளிச்சது போதும் எறங்கு” என்று அவர்களுக்கும் "நீ வெளியெ போ” என்று இவனுக்குமாக சுத்தமான சிங்களத்தில் கத்தினாள் அவள்.
இது தமிழர்களின் வீடு என்பது தெரியும் அவர்களுக்கு. அது தான் அத்தனை தைரியமாக உள்ளே நுழைகின்றனர்.
கைகளை பிசைந்தபடி ஒரு மூலையில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்து விழித்துக் கொண் டிருப்பார்கள் அம்மாவும் பெண்ணும் என்பது தான் அவனின் கணிப்பு.
ஆனால் இந்தம்மாள் இப்படி, இத்தனை சரளமாகச் சிங்களத்தில் கத்துவார்கள் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.

சற்றே திடுக் கிட்டாலும் தன்னுடைய திகைப்பைக் காட்டிக் கொள்ளாமல் "சும்மா கத்த வேண்டாம்.நாங்கள் வேறு எதற்கும் உள்ளே வரவில்லை பந்து தேடத் தான்.” என்றான்.
* நீ எதுக்கு வந்தாலும் எனக்குத் தேவயில்லை. மொதல்ல வெளியே போ. என்னைக் கத்த வேண்டாம் என்று சொல்ல நீ யார்.” என்று மறுபடியும் சத்தம் போட்டபடி மேலே பார்த்தாள்.
கூரையில் ஒருவரையும் காண வில்லை, பந்தைக் தூக்கி மெதுவாக
சந்துக்குள் எறிந்து விட்டு சுவரோடு நடந்து கொண்டிருக்கின்றனர்,
வெளியே குதித்துக் கொள்ள.
"நான் ஏன் வெளியே போவணும் . நாங்கள் எங்கே வேண்ணாலும் நிப்போம் , உக் காருவோம் . பந்தடிப்போம். இது எங்கள் நாடு. நீங்கள்ளாம் எங்களுக்கு அடங்கித் தான் இருக்கணும்..” என்றான் அவன்.
அடிமட்டத்தினர் வரையிலும்கூட இந்த அரசியல் நினைவுகள் எத்தனை ஆழமாகப் பதியப்படுகின்றன, பதிந்திருக்கின்றன.
"நாடு உன்னுதா இருக்கலாம் இந்த வீடு என்னது. அதுனால மரியாதையா வெளியே போயிடு . என்று பொரிந்து தள்ளினாள் அவள். எல் லாரும் வெளியெ போய் விட்டதையும் கவனித்துக் கொண்ட அவன் மெதுவாக கேட்டைத் தாண்டி வெளியேறினான். வெளியேறும் போதும்” பந்தடிச்சா உள்ளே விழும் தான் . . . எடுக்க வருவோம் தான்
” என்றான்.
"இன்னொரு தரம் பந்து விழட்டும் உள்ளே அப்பப்பார்” என்றாள் அவள்.
*விழுந்தா” என்றபடி வெளியேறி னான் அவன் “விழட்டுமே” என்றபடி கேட்டை மூடினாள் அவள்.
இந்தச் சத்தம் கேட்டு எல்லா வீட்டுப் பெண்களும் வெளியெ வந்து நின்று எட்டிப்பார்த்தார்கள்.
"துணிந்து யாராவது இப்படிக் கொடுத்தால் தான் சரிப்பட்டு வருவார்கள்” என்று மகிழ்ந்து கொண்டார்கள்.
"இனி பந்து விழுந்தா உள்ளே நான் போக மாட்டேன்” என்றான்
ஒருவன்.
"மட்டத் பே" என்றான் இன்னொ ருவன்.
“ஏண்டா பயந்து சாகின்றீர்கள?” என்றான் இன்னொருவன்.
"நீ தைரியசாலி மாதிரி பேசிட்டு வெளியே நின்றுவே. இவர்களோ தமிழர்கள்.யாருக்குத் தெரியும். ஏதாவது வச்சிருந்தா.”என்றான் ஒருவன்.
இதொன்றையும் கவனியாமல் உள்ளே ஓடி வந்த அம்மா " ஊறா தேம்மா. சட்டுபுட்டுன்னு குளிச்சுட்டு வந்துறு." என்றவாறு கூரையைப் பார்த்தாள்.
ஓடு சரியாகவே இருந்தது.
வெளியே பந்தடிக்கும் சத்தம் நின்றுபோய் இருப்பதை அம்மா கவனிக்கவில்லை. சமையலறைக் குள் நுழைகின்றார்கள்.
PGGScos 13

Page 9
1945 ஆம் ஆண்டு. எஸ் எஸ்.ஸி சோதனையில் தேறி, ஆங்கிலம் படிக்க யாழ்நகர் சென்று, ஆங்கிலமும் இன்றித் தமிழும் இன்றி, இரண்டும்கெட்ட நிலையில் தட்டழிந்த 86T6AOLD.
மனிதவாழ்வின் தேவைகளை மனங்கொண்டு, சாத்தியப்படாத வைகளில் எல்லாம் முயற்சித்த துணி டு. இம் முயற்சிகளின் அதிதீவிரத் தை, இலக் கியப்
அக்காலப் பரப்பில் வெளிவந்து கொண்டிருந்த திராவிட ஏடுகள், நூல்கள், ஆனந்த விகடன், கல்கி பொன்னி, கிராம ஊழியன் போன்ற சஞ்சிகைகளையும் இலங்கை ஏடுகளான வீரகேசரி தினகரன் என்பனவற்றோடு சுதந்திரன் , ஈழகேசரி என்பனவும், வரதரின் "மறுமலர்ச்சி"யும் எனது இலக்கியப் பயிற்சிக்களங்களாகின. அக்காலப் பொழுதில் தோன்றி மறைந்த "புயல்” உதயன், சோதி, தமிழ்மணி முதலிய சிறிய பெரிய ஏடுகளும் இந்து
கவிதை பிறந்த கதை
தில்லைச் சிவன் அ
பயிற்சியும் என்னுள்ளே எனது எதிர்காலத்தைப் பற்றி இருந்த நம்பிக்கையும் தடுத்திருக்காது போனால், நான் எத்தனையோ சிறைக்கூடங்களைச் சந்தித்திருக்கக் கூடும்.
எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை எனது அடிமனதில் இருந்து கொண்டு, எனது நண்பர்கள் காட்டிய பாதைகளின் அவலங் களைத் தவிர்த்துவிடவே, பொழுது போக்காக எனது மனம் இலக்கியப் பயிற்சிகளை நாடியது.
இலக்கியப் பயிற்சி என்ற போது, பண்டிதக் கல்வியை அறியும் தொல்காப்பிய இலக்கணங்களையும். சங்கத் தமிழ் இலக்கியங்களையும், பார்த்துக் கூட இருக்கமாட்டேன்.
14 ŞECEca
KAN
சாதனமும் ஒவ்வொரு வேளை எனக்கு இடந்தந்தன.
அடைய முடியாத எனது ஆசைகளும் கனவுகளும், அதனாற் பெற்ற தோல்விகளும், தோல்வி களால் பெற்ற விரக்தியினையும் பிரதிபலிக்கக் கூடிய பலகவிதை களையும் கதைகளையும் சஞ்சிகை களிற் கண்டு, அவை எனக்காகவே எழுதப் பெற்றனவாக நினைத்ததும் Ф 60ӧї06.
இவ்வாறாகவே எனது பசிக்கு இலக்கியம் தீனிபோட்டுக் கொண்டிருந்த காலவேளையில், எனது தோல்வி களுக்கும், ஏமாற்றங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வடிகாலாகச் சில கவிதைகளையும் , கதைகளை யும் எழுதத் தொடங்கினேன். அதன்
 

முதற் சுற்று, அந்தாதியைப் பார்த்து அந்தாதியும் விருத்தத்தைப் பார்த்து விருத்தமும், வெவ்வேறு பொருள் களில் பாடிய போலிக்கவிதைகள், எனது சகமாணவத் தோழர்கட்குப் பாடிக் காட்டி மகிழ்ந்தவைகள். அவைகள் தாம் வகைகள் பல. நடராசா காதற்காவியம், இளநீர்ப் புராணம் என விரியும் .இவை இவ்வாறாக அடுத்த சுற்றில் முதன் முதலாக, மறுமலர்ச்சி திங்களேட்டில் அச் சுருப் பெற்ற கவிதை, "பட்டணத்து மச்சினி.”
எனது ஆசைகளும் உணர்வு களும் வெளிக்காட்ட முடியாத அப்போதைய நிலையில் முயற்சி களின் உந்துதலினால் , ஒரு சவாலாகவே சில கவிதைகளும் கதைகளும் உருவாகியதுண்மை.
அக்காலத்தில் நான் எழுதிய கவிதைகளும் கதைகளும் காதலையே தொனிப் பொருளாகக் கொண்டிருந்தன. அடைய முடியாத வைகளை அடைய முயன்று தோல்வியைத் தழுவிய விரக்தியால் படைக்கப் பெற்றவை. இவ்வாறான கவிதைகளில் “பட்டணத்து மச்சி னியும்" கதைகளில் "பவானி" யும், பலரால் பாராட்டப் பெற்று, இன்றும் அவற்றின் சிறப்பு மாறாது பேசப் படுகின்றபோதும், அன்று அவை சில எதிரிகளையும் தேடித்தந்தன. இவ் வெதிரிகளுக்குப் பயந்து சில சந்திப்புக்களைத் தவிர்த்ததும் நினைவில் வருகிறது.
இலக்கியம் எதார்த்தமாக இருக்கவேண்டும், கற்பனை புழுகு கள் காலத்துக் கொவ்வாதன என்று சிலர் சொல்வர். உண்மையைச் சொன்னால் உடம்பு நோகும், என் பதை அறிந்து சொன்னார்களோ என்னவோ! ஐம்பதுகளில் சில இலக்கியவாதிகள் எழுத்துக்களில்
எதார்த்தம் இருக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நின்றார்கள். இப்போதுள்ள சிலர் இலக்கியத்தில் எதார்த்தமா? கூடவே கூடாது என்று கூறுகிறார்கள்.
ஒரு கதையையோ கவிதை யையோ எழுதும் போது, முதலில் வருவது அதற்குரிய நிலம். நிலத்தின் மரங்கள் மிருகங்கள் பட்சிகள் மக்கள் சமூகம் என்பனவும் அவைகள் ஒன்றினுக் கொன்றுள்ள தொடர்பு களும், பேர்களும் சூழல் அனுபவத் துக்குட்பட்டனவாகவே அமையும், இன்று ஒரு கதாநாயகனின் நற் செயல்களை மட்டும் கூறினால் அது கதையாகாது. அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் அவற்றிற்குக் காரணமானவர்களையும் அடை யாளம் காட்டுவது எதார்த்த மாகத் தான் இருக்கும். படிப்போர், வேறு ஊரவர்களாக இருந்தால் நல்லகதை என்று புகழக்கூடும். ஆனால் கதை தோன்றிய இடத்தில் கதாசிரியன்
ட்பாடு.? நிர்க்கதி. நான் உண்மை
யைத் தான் எழுதினேன் என்று வாதிட்டு ஆவதென்ன? எதார்த்தவாதி வெகுசன விரோதி என்பது எதார்த்தம் வேண்டாம் என்பவர்களின் கூற்றாயினும். எனது பட்டறிவும் இக் கருத்துக்கு இயைபுடையதாகவே இருக்கிறது.
இவ்வாறானதொரு கால கட்டத்தில் , படித்தவர்கள் பண்டிதர்கள் எழுத்தாளர்கள் என்ற மட்டத்தில், எனக்குத் தெரிந்த சிலரின் நட்பையும் உதவியையும் பெற விழைந்தேன். அவர்கள் என்னை விரைந்தேற்றுக் கொள் வார்கள் என்று நம்பினேன். ஆனால் அவர்கள் எனக்கு வெகுதூரத்தில் நின்றார்கள். அவர்களிடத்தில் பட்டக் கடதாசி இருந்தது. சமூக அந்தஸ்து இருந்தது. மனம் இருண்டு கிடந்தது.
ğDC Coa 15 N

Page 10
பாட்டென்றால் பண்டிதருக்கே உரிமை யென்றிருந்த என்னுார்ப் பண்டிதர் சிலர் சாவீடு, (மரணவீடு) திருமண விழா போன்ற பொது வைப வங்களில் எனது கவிதைகளைத் தமது மட்டத்தில் விமர்சிக்கவும் செய்தனர். அவர்களின் விமர்சனங் களில் முக்கியமாகக் கூறப்பட்டது இலக்கணத் தரம் குறைவென்றதே. கொஞ்சமாவது இலக்கணம் படித் திருக்கவேண்டும் என்பதே அவர்களின் கவலையாக வெளிப்படுத்தினர். அவர்களது கூற்றை அப்படியே கெளவிக் கொண்டு வந்த சிலர், பண்டிதர்களின் கருத்துக்களை எனக்கு கூறிவைத்தனர். அவர்களின் கூற்றைப்பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை.
கிழமை தோறும் இல்லா விட்டாலும், திங்களுக்கு குறைந்தது எனது இரண்டு கவிதைகளாவது வெளிவந்த காலமது. இதனைச் சுட்டிக் காட்டி எங்கே உங்கள் பண்டிதர்களின் படைப்புக்களைக் காண வில்லையே? என்று கேட்ட போது தான், பாட்டுப் பண்டிதர்களின் சொத்து என்று சொன்னவர்கள், அவர்களின் ஆக்கத்திறனை அறிந் திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வகையினராகவே, பல எழுத்தாளர்களும் இருந்தார்கள். இரண்டொரு கதைகளை எழுதிய வுடன் கடிதத் தலைப்புகளை அச்சிட்டு எழுத்தாளர், கவிஞர், என்று போட்டுக் கொண்டு திரிபவர்கள், சக எழுத்தாளர்களின் கதைகளையோ கவிதைகளையோ, படிக்கவல்ல, பார்த்தேன் என்று கூடச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சிலரிடமிருந்து பாராட்டைப் பெறமுடியாது போனது போலவே, வசையையும் பெற முடியாது போனது ஓரளவுக்கு ஆறுதலான விடயம்.
தனிப் பட்ட முறையிலி இத்தகைய ஒருவரின் வாழ்க்கை முறைவேறாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பண்டிதரும் நானும் ஒருமதவின் மேல் இருந்து சம்பாசித்துக் கொண்டிருந்தோம். நேரம் இரவு எட்டு மணி இருக்கும். அப்போது எனது கதையில் வந்த பெண் கதாபாத்திரத்தைப் பற்றி பேச்செடுத்தார். நான் அதிர்ந்து போனேன் என் கதா பாத்திரத்தின் பாதாதிகேச வர்ணணையை அவர் செய்த அளவை நோக்கினால், எனது வர்ணனை, நூற்றுக்குப் பத்துத் தானும் தேறாது. இவ்வாறே அவளின் கண்களின் தோற்றத்தை முகச்சாயலை, முலையின் எடுப்பை வர்ணித்து முடிக்காமலே, உனக்கும் அவளுக்கும் எப்படி உறவேற்பட்டது என்று கேட்டுகொண்டே எனக்குப் பக்கத்தில் நெருக்கமாக அரக்கி வந்தார். அவரதுகை எனது முதுகை நீவிக் கொண்டிருந்தது. நான் கூச்சப்பட்டேன். அந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லை. எனது கதாபாத்திரத்துக்கு ஒரு பேர் தேவைப்பட்டதால், அந்தப் பெயரைக் கையாண்டேனே தவிர, அந்தப் பேர்வழிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்போதைய நிலையில் உண்மையைச் சொல்லிப் பண்டிதரை நம்ப வைக்கமுடியாது, என்று தெரிந்து கொண்டு, அதற்கு நான் முயற்சிக்க வில்லை. சிரித்துக் கொண்டே இது சும்மா வெறுங் கற்பனைக் கதை என்று சொன்ன நேரத்தில் எனது தொடையை வருடிய பண்டிதரின் கை எனது உணர்ச்சியைத் தொட்டு விட்டது தான், மதவில் இருந்து கீழே குதித்துவிட்டேன். பண்டிதர் அருண்டு போனார். என்னடாப்பா இவ்வளவு கூச்சமா, என்று அவரெழ நான் என் வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்
தேன்.ള്
6 D956)5
RINN

ஒரு நாயும் சில மனிதர்களும்
அன்னமேரி ஆச்சி தன் கால் கை இரண்டையும் நீட்டி, முதுகை மட்டும் சுவரில் சாய்த்து "ட" வடிவத்தில் ஒருபக்கமாக ஒருக் களித்து, தென்னஞ் சிரட்டையில் காய்ந்துபோன வெற்றிலைச் சருகுகளை ஒரு இரும்பினால் இடித்துக் கொணி டிருந்தாளர் முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களிலும் ஆறாத புண்கள் இலையான்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு பழைய துணியால் கால்கள் இரண்டையும் மூடியிருந் தாள் சில நேரங்களில் அன்னமேரி ஆச்சியின் அசிரத்தையால் கால் களை மூடியிருக்கும் துணித்துண்டு விலகிவிடும் . உடனே இந்த இலையான்கள் வந்து மொய்த்து விடும். அப்போது ஏற்படும் வலி
புண்களை மூடியிருக்கும் துணித்
’துண்டு விலகும் என்று வேவு
பார்த்துக் கொணி டிருப்பதாக அன்னமேரி ஆச்சி நினைத்தாள். அவள் அப்படி நினைப்பது கூட சரிதான். இல்லாவிட்டால் துணி விலகியவுடன் விருட்டென்று இந்த இலையான்கள் எப்படி பறந்து வந்து அவருடைய கால் புணர் களை மொய்க்க முடியும்?
ஒரு பழைய துணியால் கால்கள் இரண்டையும் மூடிக் கொண்டு அன்னமேரி ஆச்சி வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள். துணிக் குக் கீழ் ஒரே சீரான லயத்தில் கால் களை ஆட்டிக் கொண்டிருந்தாள். அப்படி கால்களை ஆட்டிக் கொண் டிருப்பதில் ஒரு சுகம் இருந்தது.
இருக்கிறதே, அது அன்னமேரி கோட்டம். வரி ஆச்சிக்கு மட்டும் தான் தெரியும். அது ஒரு தோடடம. வ சையாக அ  ைத பத்துவீடுகள். 够 வீடு (ਸ ல் நீர்கொழும்பூர் - முத்துலிங்கம் °"' வபி ள ங் க (U9s து க  ைள யு ம
இரு பக்க
வைக்க முடியாது. புண்களின் மீது குண்டுசியினால் குத்தியது மாதிரி இருக்கும். அன்னமேரி ஆச்சியின் வாயில் இருந்து உதிரும் கெட்ட வார்த்தைகளின் அழுத்தத்தைக் கொண்டு, அவருடைய கால் வேதனையை அளவிடலாம்.
இந்த இலையான்கள் எல்லாம் ஒவ்வொரு புறமாக அமர்ந்து கொண்டு, எப்போது அன்னமேரி
ஆச்சியின் கால்களில் இருக்கும்
சுவர்களே பிரித்துக் கொண்டிருந்தன. அந்த வீடுகளின் சுபசோபனங் களையும், துயரங்களையும் யாரும் யாருக்கும் சொல்ல வேண்டிய தில்லை. வீடுகளை பிரிக்கும் சுவர்களைத் தாண்டி எல்லா விபரங்களும் விஸ்தாரமாக வெளியே போய்க் கொண்டிருந்தன.
முதல் வீடு கருவாட் டுக்
கடையில் கருவாட்டு சிப்பங்களை
7 KON

Page 11
லொறியில் ஏற்றி இறக்கும் தொழில் புரியும் ராமசாமியினுடையது, இரண் டாவது அன்னமேரி ஆச்சியின் வீடு, இப்போ அன்னைமேரி ஆச்சி தளர்ந்து விட்டாள் மகன் வயிற்றுப் பேரன் கடற்கரையில் தெப்பம் இழுத்து -
போட்டுக் சிகரெட் குடித்துக்கொண்டு திரிகிறான். அன்னமேரி ஆச்சியின் மகன் இப்போது இல்லை. மீன்கடைப் பக்கம் பெருநாள் முசுப்பாத்தியில்
நான்கு இஞ்சி கத்தியினால் சொர்க்க
லோகம் போய்விட்டான்.
"அம்மோவ் ஜூலிக்குப் பயித்திய மாம்” . சொல்லிக் கொண்டே வாசலில் இருந்து வீட்டிற் குள் பாய்ந்த அன்னமேரி ஆச்சியின் பேத்தி லீலாக்குட்டி அவசரத்தில் தவறிப் போய் ஆச்சியின் புண்காலை மிதித்து விட்டாள்.
"என்ட சோமால மாதாவே! இந்த வேசக்குட்டி" அன்னமேரி ஆச்சி யினால் பேசமுடியவில்லை கால் புண்
"ஆருக்கிடி பயித்தியம் ?”. அடுப்படியில் இருந்த அன்னமேரி ஆச்சியின் மருமகள் எரிச்சலுடன் தன் மகளைப்பாத்துக் கேட்டாள்.
"எங்கட ஜூலி நாய்க்குட்டிக்கு பயித்தியம் புடிச்சாம்" - லீலாக்குட்டி மூச்சிறைத்தவாறு தன் தாயிடம் விசயத்தை விளக்கினாள்.
இப்போ அன்னமேரி ஆச்சிக்கு கால் புண்வலி போன இடம் தெரிய வில்லை. ஒரு புதிய செய்தி வந்து
அவருடைய புண்ணின் வலியை
மாற்றிவிட்டது. யாருக்குப் பைத்தியம்? மீண்டும் காதுகளை கூர்மையாக்கிக் கெட்டாள்.
18 Kğca
"6T It is L J TLD & Tid LDm DL நாய்க்கி" - லீலாக்குட்டி முன்புறம் வந்து அன்னமேரி ஆச்சிக்கும் ஒரு தடவை விசயத்தைக் கூறினாள்.
அன்னமேரி ஆச்சி எழுந்து வாசலுக்கு வந்தாள் எலி லா வீடுகளுக்கும் முன்புறம் ஒரு சிறிய முற்றம். சுற்றிவர வேலி - முன்புறம் பலகை அல்லது தகரக் கதவு கிழவி வீட்டுக்கு முன்புறம் இருந்த தகரக் கதவை திறக்கவில்லை. தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள்.
வெளியே, அங்கிருக்கும் பத்து வீடுகளுக்கும் பொதுவான பெரிய மணல் வெளி மறுபுறம் வீடுகள் - குடிசைகள் முன் புற மணல் வெளியில் எப்போதும் அந்த பத்து வீடுகளின் சிறிய வாரிசுகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது அங்கே ஒருவரையும் காணவிலி லை மணல வெளி வெறிச்சோடிக்கிடந்தது.
நாய்க்கு பைத்தியம் பிடித்து விட்டால் பிள்ளைகள் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்களா? பைத்தியம் பிடித்த நாய் கடித்தால் சும் மாவா? தொப் புளை சுத் தி இருவத் தி யொரு ஊசிகள் போடவேண்டுமே! பத்துவீடுகளும் தங்கள் தங்கள் வீடுகளில் பதுங்கிக்கொண்டன.
அன்று ஞாயிற்றுக் கிழமை. எல்லாவீடுகளிலும் புருஷர்கள் இருந்தார்கள் கருவாட்டு கடையில் மூட்டை சுமக்கும் ராமசாமி மட்டும் வேலைக் குப் போய் விட்டான். ஞாயிற்றுகிழமை அந்த ஊரில் சந்தை கூடும் தினம். ராமசாமிக்கு நிறைய வேலையிருக்கும்.

அந்தப்பத்து வீடுகளிலும் தொழில் முறையில் விதி தியாசமான மனிதர்கள், குடும்பங்கள்.
டெய்லர், சுருட்டுத் தொழி லாளி, கடிகாரம் ரிப்பேர் செய்பவர், தண்ணிர்வண்டி ஒட்டுபவர், செங்கல் சூளையில் வேலைசெய்பவன், தகரக் கடையில் பணிபுரியும் தொழிலாளி இப்படி இத்யாதி.
அன்னமேரி ஆச்சி கண்களினால் அந்தப் பெரிய மணல் வெளியை, தூரத்து வீட்டுப் பகுதிகளைத் துழாவினாள் பைத்தியம் பிடித்த நாய்க்குட்டியைக் காணவில்லை அந்த வெளியில் தினமும் பிள்ளை களுடன் தாச்சியாக விளையாட்டில் பங்கு கொள்ளும் ஒற்றை விளா மரம் மட்டும் மகத்தான சோகத்துடன் நின்று கொண்டிருந்தது.
இப்படித்தான் ஒருதடவை அவர் முண் தோட்டத்து சிமியோனி அண்ணாவியாரை பைத்திய நாய் கடிக்க அவர் வெறிமுற்றி நாயைப் போல் குரைத்துக் குரைத் து செத்தாராம்.
அன்னமேரி ஆச்சி சற்றுத் திரும்பி பக்கத்து வேலியால் ராம சாமியின் வீட்டை நோட்டமிட்டாள். வீட்டின் முன்புறம் ராமசாமியின் மனைவி பொன் னம் மா இடுப்பில் கைக்குழந்தையுடன் நின்றுகொண் டிருந்தாள். முகத்தில் கலவரம் ஏனெ னில் அவள் புருஷன் மீன்மாக்கட்டில் இருந்து தூக்கிக் கொண்டு வந்த ஜூலி என்ற நாமகரணம் சூட்டப் பெற்ற நாய்க் குட்டிக்குத் தான் பைத்தியமாம் ஏதாவது எக்கச்சக்க மாக நடந்தால் மிகுதி எல்லா வீடுகளும் அவளையும், அவள்
புருஷனையும் துளைத்து எடுத்து விடுவார்கள்.
அன்னமேரி ஆச்சி வேலியால் எட்டிப்பார்ப்பது பொன்னம்மாவிற்கு தெரிந்தது. "ஆச்சி” என்றாள், குரலில் பயத்தின் வெளிப்பாடு, அன்னமேரி ஆச்சிக்கு பொன்னம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது.
"அவங்களுக்கு சொலி லி யனுப்பியிருக்கு" - தன் கணவன் ராமசாமிக்கு தகவல் அனுப்பியதை பொன்னம்மா ஆச்சிக்கு கூறினாள்.
"அந்தா அந்தா நாய் ஓடுது" யாரோ பக்கத்து விட்டில் அலறும் குரல் அன்னமேரி ஆச்சி அவசரமாக எட்டிப் பார்த்தாள். கறுப்பும் வெள்ளையும் கலந்த ஜுலியென்ற அந்தக் குட்டி நாய் ஒரு பூனையை விரட்டிக் கொண்டு ஓடியது. பூனை முன் விட்டு ஒலைப்படலையில் தாவி ஏறியது. நாய்க்குட்டி படலையில் ஏறிய பூனைக் குட்டியை சற்று நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பியது. திறந்த வாயில், நீண்டநாக்கில் வீணிர் ஒழுகியது.
மழைகாலம் பொய்த்து விட்டது. அக்கினி வெயில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.
நாய்க்கு நன்றாகப் பைத்தியம் பிடித்துவிட்டதுபோலும் ஆச்சி மீண்டும் வந்து தன் வீட்டு இஸ்தோப்பில் அமர்ந்தாள். புண்கள் நிறைந்த கால் களை மீண்டும் துணியால் மூடிக் கொண்டாள். இலையான்கள் வெகு கரிசனையோடு வேவுபார்க்கத் தொடங்கின.
பக்கத்து வீட்டில் பொன்னம்மா தன் கணவனோடு சண்டை பிடிக்க
E 19 RN

Page 12
ஆரம்பித்துவிட்டாள். ஆம் ராமசாமியும் வந்துவிட்டான். இடையிடையே அவனது பேச்சுக்குரலும் கேட்டது.
ராமசாமி நாய்க் குட்டியை கொண்டுவந்த தினம் பொன்னம்மாவும் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி னவள்தான். ஏன் ஜூலி என்று பெயர்வைத்ததே பொன்னம்மாதான் இப்போது நாய்க்குட்டிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லாம் பழியும் ராமசாமியின் தலைமீது இப்போது.
அணி ன மேரி ஆச்சிக்கு இருப்புக்கொள்ளவில்லை மீண்டும் எழுந்து தகரகேட்டால் எட்டிப் பார்த்தாள் பக்கத்து வேலியால் ராமசாமியும் மணல் வெளியை எட்டிப் பார்ப்பது புரிந்தது. நாய்க் குட்டி முனகிக் கொண்டு பெரிய முற்றத்தால் ஓடியது, அதன் காதில் இருந்து இரத்தம் வடிந்து கொண் டிருந்தது யாரோ கல்லால் அல்லது தடியால் அடித்திருக்க வேண்டும்.
ராமசாமிக்கு பாவமாகவும் , அதேசமயம் ஆத்திரமாகவும் இருந்தது. நாய்க்குட்டி யாரையாவது கடித்துவைத்தால் .? சுற்று வட்டாரம் முழுவதும் மீனவக் குடியிருப்புகள். அடேய் தமிழா என்று ஆட ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் பேசுவதும் திட்டுவதும் தமிழில் தான் அவர்கள் அப்படித்தான் ஏசுவார்கள். அவர்கள் பேசும் அர்த்தங்கள் அவர்களுக்கே புரிவதில்லை.
ராமசாமியின் வீட்டுக்கு பக்கத்தில் பெரிய சுற்றுமதில் ஒவசீயர் கந்தையரின் வீடு. மதிலுக்க மேலால் தலையை நீட்டி ராமசாமியைக் கூப்பிட்டார்.
2O
KS
கந்தையர்
"பொலீசுக்கு டெலிபோன் பண் ணிட்டம். பகல்பிந்தி பொலிஸ் வருவின மாம். ஒருக்கா எப்படி யெண்டாலும் நாயப் புடிச்சி விளா மரத்துல கட்டிப்
" போடு - சொல்லிவிட்டு ஒவசீயர்
தலையை இழுத்துக் கொண்டார்.
கருவாட்டு சிப்பம் கட்டும் நீண்ட கயிற்றை எடுத்து ராமசாமி சுருக்கு கயிறு ஒன்றைத் தயாரித்துக் கொண்டான். நாயை பிடித்து விளா மரத்தில் கட்டவேண்டும் நாயின்
பின்னால் ஒட மாட்டான் நாயைப்
பிடித்து கட்டியாகவேண்டும். பிடிக்கும் போது கடித்துவிட்டால்..? என்ன செய்வது இனி நாய் மட்டும் வளர்க்கக் கூடாது சே! அதைப் பிறகு யோசிக்கலாம். ராமசாமி இப்போது துணிந்துவிட்டான்.
தனியாக, அந்தப் பத்து வீடுகளுக்கும் உரிய பெரிய மணல் முற்றத்தில் கயிற்றுச் சுருளை பின்னால் மறைத்துக் கொண்டு இறங்கிவிட்டான் ராமசாமி. இப்போது எல்லா வீட்டுப் படலைகளுக்கும் கேட்டுகளுக்கும் மேலாக தலைகள் முளைத்துவிட்டன. ராமசாமி எப்படி நாயைப் பிடிக்கப் போகிறான் என்பதை பார்ப்பதற்காக, வழக்கமாக ராமசாமியைக் கண்டால் வாலை ஆட்டும் நாய்க்குட்டி இப்போது ராமசாமியகிை கண்டதும் வேறு பக்கம் ஒடவாரம்பித்தது. தூரத்தில் மீனவ குடியிருப்புகளின் பக்கம் சிலர் பெரிய கம்புகளோடு நின்றுகொண் டிருந்தனர். சில வீட்டு முற்றத்தில் நாய்க்குட்டிக்கு எறிந்த விறகுக் கட்டைகள், செங்கல் துண்டுகள்.
தங்கள் தங்கள் வேலிக்குள் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து

கொண்டிருந்த சிலர் அங்கிருந்த படியே ராமசாமிக்கு எப்படி நாயின் கழுத்துக்க சுருக்குக் கயிற்றை வீசுவது என்பதைப் பற்றி உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எனினும் எவரும் வெளியே வர வில்லை. நாலைந்து தடவை சுருக்கு கயிற்றில் இருந்து நாய் தன்னை வெகு லாவகமாக விடுவித்துக் கொண்டது. எனினும் அன்றைய தினம், காலம் ராமசாமிக்கு துணை நின்றது. ஒரு தடவை வீசிய கயிறு சரியாக நாயின் கழுத்தில் விழுந்தது. ராம சாமி கயிற்றை இழுக்க கயிறு நாயின் கழுத்தை இறுக்கியது.
இழுத்து கொண்டு ஒட எகிறிக் குதித்த நாயை ஒரு மாதிரியாக விளாமரத்தில் கட்டி விட்டுத் திரும்ப, அந்தப் பகல் நேர உச்சிவெயிலில் ராமசாமி வியர்வையில் குளித்து விட்டிருந்தான். பொன்னம்மாவிற்கு இப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது. ராமசாமிக்கு ஒன்றும் ஆகவில்லை.
இப்போது அந்த பத்துவிட்டு சனங்களும் வெளியே, பெரிய முற்றத்துக்கு வந்து விட்டனர்.
"நாயப் புடிச்சி கட்டியாச்சோ?” ஒவசீயர் மீணி டும் மதிலால் தலையை நீட்டிக் கேட்டார். ராமசாமி "ஓமய்யா! என்றான்.
"சும்மா பொல்லால கல்லால அடிச்சுக் கொல்லாதீங்கோ, பொலிஸ் காரன் வருவான். வெடி வச்சுப் போட்டா ஆக்கின இல்ல" - ஒவசீயர் சொல்லிட்டுப் போய்விட்டார்.
வெடிவைத்தால் உடனே நாய் செத்துவிடும் கல்லால் தடியால
அடிக்கக் கூடாது. அப்படி செய்வது பாவம். சுருட்டுக்கார சின்னப்பு ஒவசியர் பேச்சை தட்டில் வைத்து ஏந்தினார்.
அந்தப்பெரிய முற்றத்தில் ஒரு பொது கிணறு. கழிவு நீர் செல்லும் வழியில் அடர்த்தியாக வாழை மரங்கள். அந்த வாழைமரத்து நிழலில் ஒரு சின்ன மகாநாடு கூடிற்று. விசர்நாய்க்கடி பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறின. மகாநாட்டுக்கு டெய்லர் தலைை வகித்தார்.
பழைய கால சம்பவங்கள் மீண்டும் கிளறப்பட்டன. முன்னர் அண்ணாவியார் விசர்பிடித்து குரைத் ததை அதே அபிநயத்துடன் சின்னப்பு நடித்துக் காண்பித்தார். தங்கள் தங்கள் பங்கிற்கு சில கற்பனைக் கதைகளும் அங்கே சிருஷ்டிக்கப் பட்டன. எனினும் பகல் ஒருமணிவரை பொலிஸ்காரர் வரவில்லை.
நரின றுகொணி டேயரிரு நீத அன்னமேரி ஆச்சிக்கு கால் கடுத்தது இஸ்தோப்பில் போய் அவருக்கே உரிய "ட" வடிவதில் அமர்ந்து கொண்டாள்.
டெய்லர் மிக அவசரமாக அருகாமையில் இருக்கும் கள்ளுக் கடைக்கு ஒட்டமும் நடையுமாகப் போய்விட்டு வந்தார். பொலிஸ்காரன் நாயை சுடும் காட்சியை தவற விட்டு விடக் கூடாது என்கின்ற மகத்தான கவலை அவருக்கு.
ஜூலி விளாமரத்து நிழலை நாடாமல் கயிற்றை இழுத்துக் கொண்டு வெயிலிலேயே நின்று கொண்டிருந்தது. அதன் நாக்கு இப்போது சற்று நீளமாக இருப்ப
21

Page 13
தாக தகரக் கடையில் வேலை செய்யும் ஹம்சு நானாவுக்கு தோன்றியது.
"பயித்தியம் புடிச்ச நாய் எனல்ல நிக்காது” சொல்லிவிட்டு ஹம்சு நானா சாப்பிடப் போய்விட்டார். போகும் போது ஒரு சிறுவனைப் பாத்து "பொலிஸ்காரன் வந்தா சொல்லுங்கோ மவன்” என்று சொல்லிவிட்டே போனார்.
நேரம் போகப் போக கிணற்றடி நிழல் மறைந்தது. சபையும் கலைந்தது. இப்போது ஒரு சில சிறுவர்களைத் தவிர ஒருவரும் இல்லை. வரப்போகும் பொலிஸ்கார னுக்காக ஜூலி விளாமரத்தினடியில் காத்துக் கொண்டிருந்தது.
O O O O
மதியம் இரண்டு மணி பிந்தி தான் ஒரு கிழட்டுப் பொலிஸ்காரர் அந்தத் தோட்டத்திற்கு வந்தார். அனேகமாக சிறுவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். அன்ன மேரி ஆச்சியும் வீட்டு இஸ்தோப்பு சுவரில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டிருந்தாள் முன் னேறி T தனது பேத்தியிடம் பொலிஸ் காரன் வந்தால் தன்னை எழுப்பும் படி கூறிவிட்டே சாய்ந் திருந்தாள். ஆச்சியின் பேத்தி லீலாக் குட்டியின் “பொலிஸ் காரன் வர்றான்” . என்கின்ற கத்தல் கிழவியை மட்டுமல்ல பல வீடுகளையும் தட்டி எழுப்பிவிட்டது.
ஒரு கிழட்டு பொலிஸ்காரரும், அவருக்கு துணையாக இன்னொரு காக்கி உடுப்புகாரனும் தோட்டத்
22 DSS)
KN
திற்கு வரும் ஒழுங்கையால் வந்து கொண்டிருந்தனர். காக்கி சட்டை
போட்டவன் கீழே சாரம் அணிந்
திருந்தான். பொலிஸ்காரர் கையில்
ஒரு நிறம் மங்கிய ஒற்றைக் குழல் துப்பாக்கி காணப்பட்டது.
எலி லா வீட்டு சனங்களும் இப்போது பெரிய முற்றத்துக்கு வந்துவிட்டனர். தூரத்து வீடுகளில் இருந்து ஓரிரண்டு மீனவர்கள் வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள்.
முதல் வீட்டு ராமசாமி மிக அவசரமாக ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து பொலிஸ்காரனுக்கு பக்கத்தில் வைத்தான். பொலிஸ்காரர் அதில் அமர்ந்தார். அன்னமேரி ஆச்சியும் கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டாள். சிறு பிள்ளைகள் சற்றுப் பீதியுடன் பொலீஸ்காரரையும் அவர் மடியில் இருக்கும் துப்பாக்கியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பொலிஸ்காரருக்கு பக்கத்தில் நெருங்கி நின்று கொண்டிருந்த டெய்லர் வெகு நேரம் கேட்போமா வேண்டாமா என்று யோசித்து விட்டு சற்றுக் குனிந்து பொலிஸ்காரரிடம் "நாய்க்கு பைத்தியம் தானே! - என்று கேட்டார். குரலில் அளவு கடந்த மரியாதை. பொலிஸ்காரர் மெளன மாக ஆமாம் என்கின்ற பாவனையில் தலையை மேலும் கீழும் ஆட்டினார்.
இதற்கிடையில் தகரக் கடை ஹம்சு நானா ஒரு ஒரஞ்சு பார்லி போத்தலையும் இரண்டு கிளாசு களையும் கொண்டு வந்து நீட்ட பொலிஸ்காரரும், அவரது சிஷ்யனும் தாகசாந்தி பண்ணி கொண்டனர்.

மீனவர் குடியிருப்புப் பக்கமிருந்து ஆமிக்கார அந்தோனியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். ஆமிக்கார அந்தோனி என்றோ ஒருகாலத்தில் ராணுவத்தில் இருந்தவர், அவருடைய யுத்த காலப் பெருமைகளை அவரே சொல்லிச் சொல்லி தளர்ந்துவிட்டார். அவர் இப்போது செல்லாக் காசு. பென்ஷன் வரும் நாளில் மட்டும் அவருக்கு அவர் குடும்பதில் சற்று மரியாதை அவ்வளவுதான். சில நேரங்களில் அந்தப் பக்கத்து சிறுவர்கள்கூட நக்க லடித்து அவரைச் சீண்டுவார்கள்.
எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்த தருணம் வந்து விட்டது. பொலிஸ்காரர் எழுந்து நின்று, துப்பாக்கியில் தோட்டாவைப் புகுத்தி, விளாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஜூலியை நோக்கி குறிபார்க்கத் தொடங்கிவிட்டார். சிறு பிள்ளைகள் தங்கள் காதுகளை பொத்திக் கொண்டார்கள். அன்னமேரி ஆச்சி சிலுவைக் குறியிட்டு “சோமால மாதவே" என்று உச்சரித்துக் கொண்டாள். பொன்னம்மா வெளியே வரவில்லை. தங்கள் நாய் வெடிபட்டுச் சாவதை பார்க்க முடியாத உணர்வு.
அடுத்த கணம் துப்பாக்கியில் இருந்து வெடிச் சப்தம் எழுந்தது நாய் ஒலம்மிட்டது. எல்லோரும் நாயைப் பார்த்தார்கள் நாய் துள்ளிக் குதித்து விளா மரதின் ஒரு பக்கமாக கயிற்றை இழுத்துக் கொண்டு நின்றது. குண்டுபாயவில்லை ஆம்! குறிதவறிவிட்டது.
பொலிஸ்காரர் இன்னும் ஒரு தோட்டாவை எடுத்து துப்பாக்கியில் புகுத்தி சிறிது நேரம் வெறுமனே
குண்டுக்கு தப்பிய அந்த நாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
"பைத்தியம்புடிச்ச நாய்க்கு காவல் செய்ய ஒரு குட்டிச் சாத்தான் அதுட முதுகுல இருக்கும் மா. வெடிவச்சா வெடிபடாம அந்த சாத்தான் காப்பாத்தும்மா " - டெய்லர் இப்போது அந்த நாய்க்குட்டிக்கு ஏன் வெடி படவில்லை என்பதற்கான காரணத்தைவிளக்கினார்.
ஒரஞ்சு பார்லி கொடுத்த தைரியத்தில் “மெய்யா ராலாமி? ” என்று தகரக் கடைக்காரர் கேட்க அதற்கு பொலிஸ்காரர் மெளனமாக தலையை மேலும் கீழும் ஆட்டினார். தன் துப்பாக்கியின் குறி தவறிய மைக் கு காரணம் கற்பித் து டெய்லரைப் பார்த்து மிகக் குறைந்த அளவிலான சிரிப்பொன்றையும் சிந்திவைத்தார்.
அன்னமேரி ஆச்சி உற்றுப் பார்த்தாள் அவள் மங்கிய கண்க ளுக்கு ஒரு சிறிய குட்டிச்சாத்தான் நாயின் மேல் ஆரோகணித்து இருப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது.
இரண்டாவது முறையும் துப்பாக்கி வெடித்தது. இம்முறையும் குட்டிச் சாத்தான் நாயைக் காப்பாற்றி விட்டது. நாய் மறுபுறம் துள்ளிப் பாய்ந்து கூட்டத்தை முறைத்தது.
பொலிஸ்காரருக்கு இப்போது ஏகப்பட்ட கவலை. இன்னும் ஒரே ஒரு தோட்டா மட்டுமே கையில் உண்டு. அதுவும் வீணாகி விட்டால்? “மே ஐ ட்ரை ? நான் முயற்சி பண்ணவா என்று ஆங்கிலத்தில்
23

Page 14
கேட்டபடி ஆமிக்கார அந்தோனி முன்னால் வந்தார்.
சுற்றிநின்ற இரணி டொரு மீனவர்களுக்கு சந்தோசம்.ஏனெனில் ஆமிக்கார அந்தோனியும் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்.
எங்கட அந்தோணி அய்யா வுக்கு துவக்கால சுட ஏலாதா? ஆளும் பழைய ஆமிக்காரன்தானே! ஒரு மீனவன் அந் தோணியை சிலாகித்தான்.
பொலிஸ் காரர் ஆமிக்கார அந்தோனியை ஏறிட்டுப் பார்த்தார் ஆமிக்கார அந்தோனி அப்போதும்
அணிந்திருந்தது. கிழிந்து போன
ராணுவ உடையைத்தான். ராணு வத்தில் இருந்தவர்தானாம் பொலிஸ் காரர் இப்போது சற்று யோசித்தார். சட்டப்படி ஒரு பொலிஸ்காரர் தன் துப்பாக்கியை இன்னொருவருக்கு பாவிக்கக் கொடுக்கக் கூடாது. அது தான் நியதி. இருந்தும் . . . ?
ஆமிக்காரருக்கு துப்பாக்கி யைக் கொடுத்தால் இரண்டு விசயத்தில் லாபம். ஒன்று அவரின் கையாலும் குறி தவறி விட்டால் இறுதிப் பழியை அவர் மீது போடலாம்.
மற்றது நாய் செத்துவிட்டால் சனியன் விட்டது என்று போய்ச் சேரலாம் பொலிஸ்காரர் தன்னோடு கூடவந்தவரைப் பார்த்தார். அவரும் கொடுத்தால் பரலாயில்லை என்கிற மாதிரி தலையை அசைத்தார். அவருடைய தலையசைப்பு பரவா யில் லை கொடுங்கள் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்பது மாதிரி இருந்தது.
24 'GS upgga,
S22
ஆமிகார அந்தோனி தோட்டா நிரம்பிய துப்பாக்கியை வாங்கிக் கொண்டார். அவர் அதைப் பிடித்த விதம், குறிபார்க்கும் நேர்த்தி இவைகளெல்லாம் பொலிஸ்கார ருக்கு திருப்தியாக இருந்தது. முண்டி யடித்துக் கொண்டு நின்ற சிறுவர் களை பின்னால் போகும் படி பொலிஸ்காரர் அதட்டினார், ஏதோ பிள்ளைகள் முணி டியடித்துக் கொண்டு நின்றதினால் தான் தன்
குறி தவறிப் போயம் விட்டது
என்கின்றமாதிரி.
அந்த ஒரு கணத்தில
செல் லாக் காசு ஆமிக் கார
அந்தோனிக்கு மவுசு கூடிவிட்டது, சுற்றியிருந்தவர்கள் ஆமிக்கார அந்தோணியை வியப் போடும் மதிப்போடும் பார்த்தார்கள். சற்று எதிர்பாராதவாறு ஆமிக் கார அந்தோனி "சட்டென்று ஒரு காலை மடித்து தரையில் முழங்காலை ஊன்றி, பொலிஸ்காரர் காட்டாத அபிநயத்தைக் காட்டி குறிபார்க்கத் தொடங்கினார்.
சில மீனவர்கள் "எங்கோர்!” என்று சிலாகித்தனர். பொலிஸ்காரர் வெறுமெனே நிகழ்வைப் பார்த்துக் கொடிருந்தார்.
இந்தத் தடவை குட்டிச்சாத்தான் தோற்றுவிடும் என்று அன்னமேரி ஆச்சி பூரணமாக நம்பினாள்.
மூன்றாவது தடவையாக துப்பாக்கி வெடித்ததது. வெள்ளைய்ம் கறுப்பும் கலந்தஅந்த குட்டி நாய் மேலே துள்ளிப் பாய்வது மாதிரி இருந்தது. அடுத்தகணம் விளாமரத்தி னடியில் நாயைக் காணவில்லை.

தூரத்தில் ஒழங்கையைத் தாண்டி பெரிய பாதைக்கு அப்பால் கம்பி வேலிக்கு மேலாக எழுந்து பாய்ந்து மறைந்தது. w
வெடி பட்டிரிச்சி சொல்லிக் கொண்டே ஆமிக்கார அந்தோனி துப்பாக்கியை பொலிஸ்காரரிடம் நீட்டினார் குண்டடிபட்ட நாய் வெகு தூரம் ஓடி விழுந்து சாகுமாம் சிலநேரம் நீர் தேடித் திரியுமாம் நீர்க்குழியில் விழுந்து செத்துப் போகுமாம். இப்படி குண்டடிபட்டு பாய்ந்தோடிய நாய் எப்படியெப்படி யெல்லாம் சாகும் என்று விபரமாகக் கூறிவிட்டு பொலிஸ் காரரும் அவருடன் வந்தவரும் போய்விட்டனர்.
பொலிஸ்காரர் சொல்லியது பொய்யில்லை என்பது போல் இரண்டு நாள்கள் கழித்து பெரிய பாதைக்கு அப்பால் ஓடிய டச்சக் கால்வாயில் கறுப்பும் வெள்ளையும் கலந்த ஒரு நாய் செத்துப்போய் நீரில் மிதந்தது அதன் உடல் ஊதிப் போயிருந்தது அதன்மேல் உல்லாச மாக இரண்டு காகங்கள் பயணித்துக் கொண்டிருந்தன. இதை ஆற்றுக்கு குளிக்கப்போன ஆமிக்காரஅந்தோனி பார்த்துவிட்டு வந்து எல்லோரிடமும் கதைகதையாகச் சொல்லிக் கொண் டிருந்தார். அவருடைய கதை ஆரம்ப மாகும் போதெல்லாம் பொலிஸ் காரரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய இடத்தில் இருந்தே அவரின்
கதை ஆரம்பமானது.
0. O O O
மூன்றாம் நாள் காலை ராமசாமி எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வரும்போது பக்கத்து வீட்டு அன்னமேரி ஆச்சியின் இந்தா! இந்த என்கின்ற கொஞ்சல் குரல் கேட்டது ராமசாமி வேலியால் எட்டிப்பார்த்தான் கிழவி இஸ்தோப்பில் சாய்ந்து கொணி டு பாணி சாபிட்டுக் கொண்டிருந்தாள் தானும் சாப்பிட்டு தனக்கு முன்னே படுத்திருந்து வாலை ஆட்டிக் கொண்டிருந்த ஒரு நாய்க் குட்டிக்கும் பாண் துண்டு களை போட்டுக் கொடிருந்தாள். அந்த நாய்? பைத்தியம் பிடித்ததாக சொல் லப் பட்ட - ஆமிக் கார அந்தோனியால் வெடிவைத்து ஓடியஆற்றில் செத்து வயிறு வீங்கி மிதந்த சாட்சாத் ராமசாமியின் நாய்க்குட்டி ஜூலிதான்.
ஆச்சி! அந்தோனி அய்யா வெடி வச்ச . ஆச்சி பயித்தியம் புடிச்ச நாய்? - சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்ட ராமசாமியை தலை நிமிர்ந்து பார்த்த அன்னமேரி ஆச்சி "ங்ே" என்று இழுத்தாளர் . அப் படி பேசுவதற்குமுன் அன்னமேரி ஆச்சி "ங்ே" என்ற இழுத்தால் கிழவிக்கு மகா கோபம் வருகின்றது என்று பொருள். தொடர்ந்து "நாய்க்கு இல் லடா பயித்தியம்" என்று சொல்லிவிட்டு வேறு ஏதோ சொல்ல ஆயத்தமானாள். அதுசரி! யாருக்குப் பைத்தியம்?
நன்றி. 27-6-97ல் என்னுடைய 70வது வயது பூர்த்தியாகியதையும் 71வது வயது பிறந்ததையும் பாராட்டி என் இதயங் கனிந்த நண்பர்கள் நேரில் வந்து பாராட்டியதற்காகவும், கடிதங்கள் தொலை பேசி வாழ்த்தட்டைகள் மூலம் வாழ்த்துத் தெரிவித்ததற்காகவும் எனது மனசு நிறைந்த நன்றிகள்.
- டொமினிக் ஜீவா.
it occo 25 RN

Page 15
நின்கு பருத்த கமுக மரங் கள் சுற்று வட்டாரத்திலிருந்தன. போதாக்குறைக்கு கரும்புச் செடிகள் அங்குமிங்கும்விரவி வளர்ந்திருந்தன. வியாபித்த மங்குஸ்தான் மரம் ஒன்றும் கனி தள்ளித் தந்தது. தயா வதிக்கு இவை போதுமாயிருந்தன. மூக்கையாவின் பெட்டிக்கடைக்கே இவ்வாறு விளையும் பாக்கை வெட்டி துண்டாக்கி விற்பாள். திஸ் பனைக்கோ மேலே நயப்பனைக்கோ கருப்பந் தடிகளை எடுத்துச் சென்றாள் என்றால்
திரும்பி வரும்போது பருப்பும் அரிசியும்
சுமந்தபடியே தான் வருவாள்.
அலரிப் பூக்களைத் தூய
தண்ணிரின் மேல் மிதக்க விட்டபடி அந்த விதுருப் போத்தலை பெட் டிக் கூண்டினுள் வைத்து இறை வந்தனம் செய்வது அவளுக்குப் பாட்டி காலத்திலிருந்தே பழகிப் போன தொன்று. நெஞ்சுயரத்தில் தேக்கு மரத்தின் வெட்டுத் துண்டில் அந்தப் பெட்டிக் கூண்டு ஆண்டாண்டு காலமாயிருந்தது. உள்ளே பிச்சா பாத்திர மேந்திய புத்தரின் பழைய காலப்படமிருந்தது. மழையும், புயலும், வெயிலும், பனியும் படத்தை எதுவுஞ் செய்ததில்லையே. பாரிய இயந் திரங்கள் உறுமியபடி அங்கே வந்து சோலைகளை எல்லாம் தரைமட்ட மாக்கி உலுக்கியெடுத்து சாந்து பூசிய இராட்சத அணைக்கட்டு மாத்திரமே எழுப்பி அரசுக்கட்டிலில் அமர்ந்திருந் தோரின் இறுமாப்பையும் மூர்க்கத்தனத்தையும் எடுத்துக் காட்டும் சாதனைக்கு முத்தாய்ப்பாக மலைக் குன்றினில் புதிய பெளத்த கோபுரமும் உருப் பெற்றிருக்கின்றது. தாயாவதியின் பொட்டல் சோலைக ளிருந்த அடையாளமே தெரியாதபடி புதிய இராட்சத அணைக்கட்டு மல்லாந்து கிடந்தது.
26 AğDECE:
கொட்டும் பணியில் மெய் வருந்த உழைத்து உண்ணப் பழகிப் போனவளுக்குத் திக்குத் தெரியாக் காட்டில் விட்டதைப் போலிருந்தது. மூக்கையாவின் பெட்டிக் கடையின் மத்தியிலே கொலு பொம்மைத் தோற்றத்திலே அப் பழைய வானொலி என்றென்றும் உளறியபடியே இருந்தாலும் பக் கென்று இவள் மனதைப் பற்றி ஈர்த்துப் பகீரென்ற பெரும் பேரொளிச் சுவாலை தன்னை அந்த இசை வரிகள் ஒரே கணத்தில் ஊட்டிற்று. “சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?”
பாடலின் மற்றைய அடிகள் எதுவும் தயாவதியின் சிந்தனைக்குள் சிறகடிக்கவில்லை. பாடல் பின்னர்
அவளைப் பொறுத்தவரையில் கேட்கவில்லை. /
தகரக் கொட்டகையாயிருந்து பின் தரையெங்கும் சீமேந்து பூசிய திரையரங்கமாக சந்தியா மாறிய தருவாயில் தயாவதி முதன் முதலாகப் பார்த்த அந்தச் சலன அற்புதத்தில் சின்னஞ் சிறு நெஞ்சில் ஆழப் பதிந்து போன அந்தத் தமிழ் வரிகள் . அழகியின் குரலில் வர்ணனை செய்வதற்கு முற்றிலும் தகுதியானவரே என்று அன்றே தாயாவதி அநுகூலித்தாள்.
பிணி னாளில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே அதி பிரபலமாகி நெஞ்சுகளில் நிறைந்தது போல் நாட்டிலும் அரசுக்கட்டிலிலும்
 

நிறைந்த தாற்பரியத்தை எண்ணி மலைத்திட தயாவதிக்கு பிரத்தியேக தமிழறிவு வேண்டியிருக்கவில்லை. இயல்பாகவே அவளுக்குள் இலகு வில் ஜொலித்தது.
கிராம உத்தியோகத்தன் அங்கே குழுமியிருந்த குடும்பங் களுக்கெல்லாம் வந்து வரிசைப் படி மகாவலி அமைச்சிலிருந்து வெளி யேற்ற நிர்ப்பந்தக் கட்டாய அறிவிப்பை விநியோகித்தான். பலர் அவனோடு சண்டையிட்டனர். நிலவுக்குப் போனாலும் எம்மை வெளியேற்ற முடியாது இதெல்லாம் எங்கள் பாரம்பரிய பரம்பரைப்பூமி என்றெல் லாம் வாக்கு வாதங்கள் செய்தனர். ஜீவனில்லாத வெற்றுடலை மாத்திரமே உங்களால் இங்கிருந்து வெளி யேற்றிக் காட்ட முடியும் என வாலி பர்கள் பலரும் மார்தட்டித் தம்பட்டம் அடித்தனர். புல்டோஸர்கள் வந்ததும் அவை காற்றோடு கலந்தன.
அங்கே மகாவலி துயில் கொள்ள வருகின்றாள். அதன் ஓங்கா ரத்தின் முன்னால் வாய் இல்லாப் பூச்சிகளின் பஞ்சைப் பராரிகளின்
ஒலங்களும் பிலாக்கணங்களும்
அடங்கித்தான் போகவேண்டும் என்று நியதி. தயாவதிக்கு ஹரங்கல தோட்டத்திற்குள் குடியிருக்கலாம் என்று உத்தியோகத்தன் அறிவித் தலைக் கொடுத்தான்.
"கள்ளக் கொழுந்தக் கிள்ளித் தின்னுக்க” மூக்கையா கேலியாகச் சொன்னான். ஆயிரஞ் சம்மட்டிகள் கொண்டு அடிவாங்கிய அவள் மனதில் கேலி எடுபடவில்லை.
கொத்மலைச் சாரலின் வனப்பிற்கு வளம் குவிக்கின்ற குஞ்சுபெரி கொலப்பத்தன ஹரங்கல தேயிலைத் தோட்டங்களே அணைக் கட்டின் அமைப்புக்குள் அகப்படும்
கிராமத்தவர் குடியேறத் தகுந்த இடங்களென நிர்வாகம் தேர்ந் தெடுத்து விட்டது. அதனோடு மோதியவர் கரும் பாறையோடு மோதியவரை விட மோசமான நிலைக்கே இட்டுச் செல்லப்படுவர். ஒரே கிளஸ்டர் நிர்வாக மான படியாலும் ஹரங்கல தேயிலையின் வருமானம் வீழ்ச்சியானதாலும் அநேக குடியானவர்களை ஹரங் கலவிலே தான் குடியமர்த்துதல் தகும் என்பதும் அரசு மட்டத்திலே முடிவாயிற்று. தயாவதியின் பூர்விக நிலைப்பாடு அதன்முன் எம்மாத்திரம்? பதினெட்டு கிலோ கொழுந்து ஒரே நாளில் கொய்யும் திறமையை குஞ்சுபெரித் தோட்டத்தின் சாமி கும்பிடு பார்த்த போது அறிந்திரு ந்தாள். மண்ணைத் தொட்டு கோவில் முன் மண்டியிட்டு அதிகாலைப் பணி மூட்டத்தினுாடு கொழுந்துக்குப் போகிற உழைப்புப் பற்றியெல்லாம் அறிந்திருந்தாள். ஆனால் செய்த தில்லை.
கட்டபோலாக் கங்காணம் காளிமுத்து பிரம்பு வாங்க முற்பணம் தந்திருக்கின்றான். அதிலே அவள் எத்தனை எத்தனையோ தேயிலைக் கொழுந்துக் கூடைகளைப் பின்னி விற்று விட்டிருக்கிறாள்.
இப்போது ஹரங்கலவின் புதிய சூழலில் பசுமை கொஞ்சும் தேயிலைச் செடிகள் மத்தியில் கால நிர்ப்பந்தத்தில் அவள் எதற்கும் தயா ரான நிலையில், நிர்க்கதி நிலையில், கொழுந்து கிள்ளப் பழகத் துடித்த முதுகன்னியாக வலம் வருகின்றாள். "ஒன் பேரு செக்றோலில் கிடையா" தயாவதிக்கு ஹரங்கல தோட்ட அலுவலர்கள் அப்படித் தான் சொன்னார்கள்.
ğZDEC 27 N

Page 16
டானியலின் தலித்தியமும் மாக்ஸியமும் ஒரு குறிப்பு
அட்டனில் நடைபெற்ற "டானியல் ஆய்வரங்கு தொடர்பான கட்டுரையை திரு. எம். எஸ். இங்கர்சால் சரிநிகர் 91 இல் எழுதியிருந்தார். பெரும்பாலும் இக்கட்டுரை ஆய்வரங்கு தொடர்பான அறிமுகத்தை நடுநிலையுடன் முன் வைத்திருந்தது. இக் கட்டுரையில் இடம் பெற்ற சில கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அது தொடர் பான குறிப்பொன்றினை சரிநிகர் 96 இல் திரு. தங்கரூபன் எழுதி யிருந்தார். அவரது குறிப்பில் காணப்பட்ட சில கருத்துக்கள் சுருக்கமானதொரு பதிலெழுத என்னை நிர்பந்தித்துள்ளது.
முதலில் இன்று தலித் இலக்கியம் குறித்து காணப்படுகின்ற போக்குகள் பற்றி நோக்குதல் பயன் மிக்க ஒன்றாகும்.
"தலித்துகளால் தலித்து களுக்காக எழுதப்படுவதே தலித் இலக்கியம்” என்ற போக்காகும். இப் போக்கானது தலித் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த உயர் சாதியரை, நிராகரிப்பதுடன், தலித் தீவிரவாத சிந்தனையை முன்வைக்கின்றது. உதாரணமாக பாரதி ஒரு தலித் இல்லை என்பதற் காக அவன் சாதிய எதிர்ப்பு தொடர் பாக முன் வைத்த முற்போக்கான கருத்தையும் மறுப்பது இதன்
28 ğDC Cola
அடிப்படையாகும். இது சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளை நிராகரிப்பதுடன். தலித் மக்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி, குறுக்கி, இறுதியில் படுதோல்வி காணச் செய்வதாகும். இன்று தமிழ் நாட்டில் தலித் மக்களின் பிரதிநிதிகள் என்ற பிரகடனத்தின் மூலமாக தனது கம்பீரத்திற்கும், பிழைப்புக்கும் வழிதேடிக் கொண்ட புத்திஜீவிகளான அ.மார்க்ஸ், I.S.A.சிவகாமி போன்றோர் இப்போக்கினை நிலைநிறுத்த முயற் சித்து வருகின்றனர்.
தலித் இலக்கியத்தின் பிறி தொரு போக்கு அதனை வர்க்கச் சிந்தனை யுடன் இணைத்துப் பார்ப்பதாகும். அதாவது தலித்
லெனின் மதிவானம்
மக்களின் உணர்வு களை புரிந்துகொண்டு அம்மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க முனையும் எவராலும் தலித் இலக்கியம் படைக்கலாம் என்ற கோட்பாடாகும். இவ்வம்சமானது சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டு, சுரண்டல், வறுமை, போன்ற ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரவும், அவர்களை இயக்கரீதியாக இணைக்கக் கூடிய தாகவும் இருப்பது இக் கோட்பாட்டின்

பலமான அம்சமாகும். தலித் போராட்டமானது சாதித் திமிர் கொண்ட உயர்சாதியினருக்கும், சொத்துடைய வர்களுக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்தலாகும். தெளிவாக நோக்கிக் சகல ஒடுக்கு முறை களுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான பூர்வமான சமூக தளத்துடன் இணைத்து செயற்படுத்தல் இக் கோட்பாட்டின் சாராம்சமாகும்.
யாழ்ப்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமானது 1960களில் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது. இவ்வியக்கமானது கிளை பரப்பி, வளர்ந்து வேர் பிடித்த போது
பல்வேறு ஆளுமைகளை-புத்தி
ஜீவிகள், விவசாயிகள், தொழி லாளர்கள், மாணவர்கள் என தன் நோக்கி வேகமாய் ஆகர்சித் திருந்தது. இதன் விளைவாக தலித் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டமானது புதிய உத்வேகத் தையும் உணர்வையும் பெற்றிருந்தது, எதிரி யார்? நண்பர் யார்? என்பதில் தெளிவான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். இத்தகைய காலப் பின்னணியில் இப்போராட்ட இயக் கங்களில் பங்கேற்று அவை தோற்று வித்த இலக்கிய படைப்பாளிகளில் ஒருவரான அமரர் டானியல் இத்தகைய பண்புகளை எந்தளவு தனது படைப்புகளில் உள்வாங் கினார் என்பதை ஆய்வு செய்வதன் மூலமாக அவரது மேதாவிலா சத்தையும் ஆளுமையையும் இனங் காணலாம்.
இவ்விடத்தில் டானியல் தொடர்பான திரு.ந. இரவீந்திரனின் விமர்சனத்தை வாசகர்களின் நலன்
கருதி இங்கொரு முறை குறித்துக் காட் டுவது விரும் பத்தக் க தொன்றாகின்றது.
"டானியல் அடக்கியொடுக்கப் பட்டு சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டவுணர்வுகளை வெளிக்கொணர்வதில் முக்கியத்துவம் உடையவராக காணப்படுகின்றார். கடைசிவரை தலித் மக்களுக்காகவே எழுதியவர். ஆயினும் டானியல் சாதியத்திற்கு அளித்த முக்கி யத்துவத்தை வர்க்க சிந்தனைக்கு அளிக்க வில்லை என்பது சமூவியல் நிலைப்பட்ட ஆய்வாகும். அவரது "கானல்" நாவலானது இத்தகைய போக்குகளிலிருந்து வித்தியாசப் பட்டதாகக் காணப் படுகின்றது. இன்று தலித் இலக்கியத்திற்கான முன்னோடி நாவலாக “கானல்” காணப்படுவதுடன் தமிழில் தோன்றிய சிறந்ததொரு நாவலும் ஆகும். டானியலின் ஏனைய நாவல்கள் யாவும் கானல் நாவல் எழுதுவதற்கான பயிற் சிக் களமாகவே அமைந்திருந்தது” என்றார்.
இரவீந்திரனின் கானல் நாவல் குறிந்த கருத்தை திரு. இங்கர்சால்ஸ் தனது குறிப்பில் குறிப்பிடவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இது தொடர்பில் திரு. தங்கருபனின் குமுறல் பின்வருமாறு வடிவெடுத்திருக்கிறது.
"திரு. இரவீந்திரன் என்பவர் அவர் (டானியல்) சாதியதிற்கு அளித்த முக்கியத்துவம் வர்க்க சிந்தனைக்கு அளிக்கவில்லை என்று பேசியதாக திரு. இங்கர்சால்
த்மலகை 29

Page 17
எழுதியுள்ளார் சாதிய அமைப்பு என்பது உலகில் எங்கும் காணாத கொடுமையான அமைப்பு முறை வட பகுதியல் உழைக்கும் மக்களில் பெரும்பான்மை மக்கள் (விகிதாசார அடிப்படையில்) இவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது சமூக ஆய்வாளரான ரவீந்திரனுக்கு புரியவில்லை என்பது சிரிப்புக்குரிய
என்று கூறும் இவர்கள் தாங்களே ஒரு நாவல் எழுதிக் காட்டினால் எலி லோருக்கும் உதவியாக இருக்கும்"
திரு. தங்கருபனின் கூற்றுப்படி உழைக்கும் மக்களில் பெரும் பாலானோர் தாழ்ந்த சாதியினர் என்பதற்காகவே தாழ்ந்த சாதியினர் அனைவரையும் உழைக் கும் வாக்கமாக கருதுவதா? சொத்து உடமையற்ற உழைக்கும் உயர் சாதியினரை எந்தவர்க்கத்தினுள் சேர்ப்பது? தலித் ஒருவர் முதலா ளியானால் அல்லது தலித் முதலாளியை எந்தவர்க்கத்தினுள் சேர்ப்பது? எண் பன பற்றிய தெளிவீனங்களே திரு. தங்கரூபனை இவ்வாறான கோமாளித்தனமான கருத்திற்கு இட்டும் சென்றது எனலாம். இப்புரிந்துகொள்ளலின் அடிப்படையில் நோக்குகின்ற பொழுதுதான் திரு. ந. இரவீந்திரனின் விமர்சனம் எத்தகைய ஆழம் கொண்டதென்பதை புரிந்து கொள்ள (Up9ub.
"இன்றைய யாழ்ப்பாண இயக்கங்களின் பலவீனமான போக்கிற்கு டானியலின் படைப் புகளும் காரணம்” என்ற ஜெ. சற்குருநாதனின் (தங்கருபன் தனது
30 ğDECO
குறிப்பில் ஜெ. சற்குருநாதன் என்று பெயர் குறிப்பிடாது திரு இரவீந்திரன் பேசியதாக அமையட்டும் என்ற உள்நோக்குடன் எழுதியதாக இருந்தது) கூற்றுத் தொடர்பாக கருத்துக் கூறவேண்டியது அவசிய மான ஒன்றாகின்றது.
இது குறித்து நோக்குவற்கு முன்னர் டானியல் படைப்புகளை இரண்டுவிதமாக நோக்குதல் அவசியமாகின்றது. ஒன்று அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது. மற்றது இன்று டானியலின் படைப்புகளின் பாதிப்பு என்ன என்பதாகும்.
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் என்பன வீறுபெற்றெழுந்த காலக் கட்டத்தில் அத்தகைய இயக்கம் வரித்து வளர்த்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான டானியல் தலித் மக்களின் பல்வேறுபட்ட எழுச்சிகளையும், போராட்டங்களையும் இலக்கிய படைப்பாாக்கி தந்தார் எண் பதில் இரு நிலைப் பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இன்று அதனுடைய தாக்கம் பற்றி நோக்குகின்ற பொழுது இயக்கங்களில் காணப்படுகின்ற சாதிய போக்கை விமர்சிப்பதாக அமைந்துள்ளதுடன், தலித் இலக்கியத்தின் முன்னோடி முயற்சியாகவும் டானியலின் படைப்புகள் விளங்குகின்றன.
தவிரவும் 1960 களில் சாதிய போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்றே தேசிய இன விடுதலை உணர்வும் வலுப்பெற்றி ருந்தது. தமிழ் இனவாத சக்திகள் இவ்வுணர்வை இனவாதத்தினுள்

அமிழ்த் தி சென்றனர். இச் சந்தர்ப்பத்தில் தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்கு
முறைக்கு எதிராக அந்த அணியை
நாட வேண்டியவர்களாக இருந்தனர். இடது சாரி இயக் கமானது பேரினவாதத்திற்கு எதிரான விழிப்புணர்வை கொண்டிருக்க வில்லை என்பது சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேணி டிய ஒன்றே. சிங் கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்த பக்கமாக பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுதல் என்பதையும் இணைத்திருப்பின் அந்த ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினரை வென்றெடுத் திருக்க முடியும் . இருப்பினும் இன்று இயக்கங்களின் தவறான போக்கிற்கு அமிர்தலிங்கம்
போன்ற பிற்போக்கு தலைமைகளே
காரணம் என்பது நூற்றுக்கு றுாறு உண்மையாகும்.
எனவே இயக்கங்களின் தவறான போக்கிற்கு டானியலின் படைப்புகளும் காரணம் என்ற சற் குருநாதனின் விமர்சனம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்கு தலைமைகளுக்கு வக் காலத்து வாங்கும் வலதுசாரி பாங்கை கொண்ட விமர்சனமாகும். இது சில இளைஞர் இயக்கத்தையும், ஏனைய பிற்போக்கு சக்திகளையும் நியாயப் படுத்துவதுடன் முகிழ்க்க கூடிய இடதுசாரி பண்புகளை கூட இல்லா தாக்குகின்ற, இதனை இன்னுமொரு தளத்திற்கு எடுத்து செல்கின்ற விமர்சனமாகும்.
இத்தகைய தெளிவான பார்வையை அவ்விமர்சனத்தின் மீது
வைக்க தெளிவற்ற திரு. தங்கரூபன் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமே இன்று இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது சரி என்பதை உணர்த்தியது என்ற கறாரான முடிவுக்கு வருகின்றார்.
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டங்கள் யாவும் பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை வலியுறுத்தி நின்றதுடன் தமிழ் இளஞர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியிருந்தது. ஆனால் குறுகிய தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுத்த தமிழ் பிற்போக்கு சக்திகளின் தவறான செயற்பாடே இளைஞர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு தள்ளப் பட்டனர். இப்போக்கு தாழ்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை நிராகரிப்பதாகவே அமைந்தது. இப்போராட்டமானது தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக் கப் போராட்டத்திலிருந்து குணாம்ச ரீதியாக வேறுபட்டது என்பதை புரிந்து கொள்ள தவறியமையா லேயே திரு. தங்கரூபன் இத்தகைய தவறான முடிவுக்கு வருகின்றார்.
முடிவாக நோக்குகின்ற போது டானியலின் இலக்கியப் படைப்புகள் சமூகவியல் அடிப்டை யில் ஆய்வு செய்யப்படல் அவசியம். அவ்வாறு ஆய்வு செய்கின்ற போது டானியலின் வெற்றிகள் மட்டுமல்ல, தோல்விகள் கூட அடுத்த தலை முறையினருக்கு ஆதர்சமாக அமையும்.

Page 18
கெக்கிராவ
ஓர் இலக்கிய உதயம்
மண்ணில்
热
Dல்லிகைப் பந்தல் வெளி யீபாக கெக்கிராவ ஸஹானாவின் "ஒரு தேவதைக் கனவு சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா அண் மையில் (20.06.1997) கெக்கிராவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் திருமதி. என்.பி. ரஹ"மா உம்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வட மத்திய மாகாணத்தைப் பொறுத்த வரை 70களில் அன்பு ஜவஹர்ஷா, அனுவை நாகராஜன், பேனா மகேந்திரன் இன்ன பிற இலக்கிய ஆர்வம் மிக்கவர்களால் இலக்கிய முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஆன பொழுதும் வட மத்திய மாகாணத்திலிருந்து தமிழ் சிறுகதை தொகுதி ஒன்று, இதுவரை கால மும் வெளிவந்திருக்காத சூழலில் கெக்கிராவ ஸ்ஹானாவின் "ஒரு தேவதைக் கனவு" சிறுகதைத் தொகுதி அம்மாகாணத்திலிருந்து வெளிவரும் முதலாவது தமிழ் சிறுகதைத் தொகுதி எனும் பெருமையை பெற்றுக்கொண்டது.
அதிலும் குறிப்பாக கெக்கிராவ மண்ணில் இதுவரை காலம் நடை பெறாவண்ணம் ஓர் இலக்கிய விழா வாக ஸஹானாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா அமைந் தது எனலாம். மாணவ மாணவிகள் மற்றும் அதிக அளவில் பெண்
32 GK DGGEDE
S22
மணிகளும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்ட இவ்விழா கெக் கிராவ முஸ்லிம் மகாவித்தியால யத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்றது எனலாம். இதைக் கண்டு ஊரே மகிழ்ச்சி யடைந்தது. இளைய தலைமுறை யினர் பெருமைப்பட்டனர். ஸஹானா தான் படித்த, படிப்பித்த பாடசாலை யிலேயே தனது முதலாவது சிறுகதைத் தொகுதியினை வெளி யிட்டதன் மூலம் அவர் பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டார்.
திரு.என்.எல். கஜாஉன் அவர் கள் கிராத் ஒத, ஸஹானாவின் உடன் பிறந்த சகோதரி கலை ஹாவின் வரவேற்பு உரையுடன் தொடங்கிய அவ்விழாவில் ஸஹா னாவின் எழுத்துத் துறைக்கு விளக்கம் கொடுத்த மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஸஹா னாவுக்கு ஆங்கிலம் கற்பித்த பண்ணாமத்துக் கவிராயர், மற்றும் ஸ்ஹானாவின், சிறுபிராயந் தொடக் கம் அவரது வளர்ச்சியில் பங்கு கொண்ட கெக்கிராவ ஜனா எனும் பேரில் எழுத்துப் பணியில் ஈடுப்பட்ட மூத்த ஆசிரியை ஆகியோர் வெளியீட்டுரை மற்றும் வாழ்த்துரை களும் வழங்கியமை அவ்விழாவின் சிறப்பம்சங்களாக திகழ்ந்தன.
 

அனுபவமிக்க இலக்கியப் படைப்பாளிகளான மலரன் பன் அன்பு ஜவஹர்ஷா போன்றோர் ஸஹானாவின் இலக்கிய ஆற்றலை மதிப்பீடு செய்யும் வகையில் உரையாற்றியமை அவரது இலக்கிய ஆற்றலை கெக்கிராவ ஊர் மக்கள் இன்னும் ஆழமாக உணரும் ஓர் இனிய சந்தர்ப்பமாக அமைந்தது.
ஸ்ஹானாவுடன் ஆசிரியப் பணியாற்றும் திருமதி. சித்திகா ஸகரியா அவர்கள் ஸஹானாவைப் பற்றி ஆற்றிய ஓர் அழகிய அறிமுக உரையும் சரி செல்வி. விமலாடீன் ஆற்றிய கருத்துரையம்சரி ஸஹானா வைப் பற்றி ஊர் மக்கள் கொண்டி ருக்கும் அபிமானத்தை எடுத்து இயம்பியது எனலாம். மேமன் கவியின் கவிதா வாசிப்பு சமீபத்தில் மறைந்த ஸஹானாவின் தாயார் மர்ஹ"மா ஹஜ்யாணிகைருன் நிசா அவர் களை நினைவுகூரும் வகையில் உணர்ச் சிகரமாய் வெளியிடப்பட்டது. ஸஹானாவின் ஏற்புரை மூலம் அவர் உருவாகிய விதத்தை நாம் இனங் காணக் கூடியதாக இருந்தது.
கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறமைகளையும் அவ்விழாவில் இடம்பெற்ற சில நிகழ் வுகள் மூலம் அறியக் கிடைத்தது.
எதிர்காலம் நன்கு அமையும். மொத்தத்தில் கெக்கிராவ மண் ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஊர்ப் பிரமுகர்களும் மக்களும் கலந்து கொணி ட கெக்கிராவ ஸஹானாவின் “ஒரு
தேவதைக் கனவு" சிறு கதைத் தொகுதி வெளியீட்டு விழா ஸஹானாவின் இலக்கிய வளர்ச் சிக்கு ஓர் ஊக்கியாக அமைந்த தோடு, முடங்கிக் கிடந்த வடமத்திய மாகாண தமிழ் இலக்கிய முயற்சி களுக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
தொடர்ந்து இந்த நூலின் அறிமுக விழா 2 - 7 - 97 அன்று அனுராதபுரம் ஸாஹிரா மகாவித்தி யாலயத்தில் "இளந்தளிர்கள்" இலக்கிய வட்டத்தின் சார்பில் இடம் பெற்றது.
ஸாஹிரா அதிபர் ஏ.எச்.எம். சித்திக் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். மெளலவி எச்.எம். முஸ்தபா (பாரி) கிரா-அத் ஒத, ஏ.பி.எஸ்.ஹமீட், எஸ்.ஏச்.எம்.ஸாஹிர், எம்.எஸ் லத்தீப், ஏ.எச்.தாஸிம் ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள். ஜனாபா பாத்திமா சப்ரினா கவி வாழ்த்துப் பாட, நூலாசிரியை ஸஹானா ஏற்புரை வழங்கினார்.
இறுதியாக "ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கவிஞர் கலைவாதி கலீல் சொற்பொழி வாற்றினார்.
கூட்டத்திற்கு ஏராளமான பிரமுகர்களும், பெண்களும், மாணவ - மாணவிகளும் வந்திருந்து சிறப்பித்தது மிக மகிழ்ச்சியுடன் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- அஸ்மா பானு
ogggggs 33 RN R

Page 19
சிறுகதைகளும்
தொகுதியாக்கடும்
சாரல் நாடண்
இன்று சிறுகதை இலக்கியம் மத்தியதரவர்க்கத் தமிழரின் வாழ்வின் பிரிக்க முடியாத ஓரங்கமாக வளர்ந் திருப்பதை காண்கிறோம்.
ஒரு நுாற் றாணி டுக் கும் மேலாக உடல் உழைப்பை நல்கும் தொழிலாளர்களாகவே ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்து வந்துள்ள, இலங்கை வாழ் இந்தியவம்சாவழித் தமிழர், இன்று மலையத் தமிழர் என தம்மை இனம் காட்டிக் கொள்ளும் விதத்தில் ஓரளவுக்கு விழிப்படைந் துள்ளனர். حضی
இச்சமூகத்தினரின் மத்தியில் தோன்றியுள்ள மத்தியதரவர்க்க உருவாக்கத்தை வெளி உலகுக்குப் பறை சாற்றும் வித்தில் சிறுகதைகள் கடந்த நாற்பதாண்டு காலமாக படைக்கப்பட்டு வந்துள்ளன.
இங்கொன்றும் அங்கொன்று மாக இடம்பெற்ற இத்தகு படைப் புக்கள் தமிழகத்து கலாமோகினி, கிராம ஊழியன், மணிக்கொடி, கலைமகள், குமுதம், கல்கி, முல்லை, சரஸ்வதி, எழுத்து, கணை யாழி, தாமரை போன்ற தமிழ் சஞ்சிகைகளிலும் மெட்ராஸ் மெயில், ஹிந்து, இல்லஸ்ட்டிரேட் வீக்லி என்ற ஆங்கில வெளியீடுகளிலும் வெளிவந்துள்ள உண்மை இன்னும் பரவலாக அறியப்படவில்லை.
இலங்கையிலும் தேசிய ஏடுகளான தினகரன், வீரகேசரி இதழ்களில் வெளிவந்து பரந்துபட்ட
34
RN
வாசகர்களைக் சென்றடைந்த சிறு கதைகள் சில . அவை வெளியான காலப்பகுதியில், விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துப் பெரிதாகப் பேசப்பட்டதும், இலக்கிய அரங்கு களில் சிலாகித்து மேற்கோள் காட்டப்பட்டதும் உண்டு. உதாரணத் துக்கு என்.எஸ்.எம். இராமையாவின் "ஒரு கூடை கொழுந்து" (தினகரன்) தெளிவத்தை ஜோசப்பின் "அழகு தெரிந்தது" (வீரகேசரி) சாரல் நாடனின் "எவளோ ஒருத்தி” (தினகரன்) ஏ.எஸ். வடிவேலன் “செங்கரும்பு" ந.அ. தியாகராஜனின் "குருடர் செவிடர்” ஆகிய சிறுகதை களைச் சொல்லலாம்.
பத்திரிகைகளில் வெளிவந்து பரவலாக பேசப்பட்ட இக்கதைகளை நூல்வடிவில் வெளிவராத காரணத் தால் இன்றைய வாசகனால் வாசித் தறிய முடியாது போய்விட்டது.
பத்திரிக்கைச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூலுருவில் வெளி வருகையில் பலருக்கும் - பல தலை
முறை இடைவெளிக்குப் பின்னரும்
வாசித்தனுபவிக்க முடிகிறது.
கடல் கடந்தும் மலையக தமிழ் இலக்கியம் பற்றி இன்று விவாதிக்கப்படுவதற்கு காரணம் அந்த பிரதேசத்திலிருந்து அச்சில் வெளிவருகிற படைப்புகள்தாம்.
ஒரு கதாசிரியனின் சிறுகதை களை பல்கலைக்கழக டாக்டர் பட்டத்துக் குரிய ஆய்வுப் பொருளாக

எடுத்துக் கொள்ளும் போக்கு தமிழ் நாட்டில் இன்று அதிகமாகவே காணப்படுகிறது.
கு.ப.ரா. அகிலன், ஜெகசிற்பியன், ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, தி.ஜானகிராமன், அறிஞர் அண்ணா, மு.வரதராசனார், கி.ராஜநாராயணன் ஆகியோர் படைத்தளித்துள்ள சிறு கதைகள் தனித்தனியாக ஆராயப் பட்டுள்ளன.
அத்தகு ஆயப் வுகளை முறையே இரா.மோகன், சு.வேங்கட ராமன், வெ.கனகசுந்தரம், மீனா குமாரி, இரா.பாலசுப்ரமணியம், வெ.சிவனுபாண்டியன், ச.ஆறுமுகம், இரா.சேது, அ.சிவக் கண்ணன், ச.பாரதி ஆகியோர் மேற் கொண் டனர். தமிழகத்தைச் சார்ந்த இந்த அனைவருமே தமது டாக்டர் பட்டத்தை இந்த “சிறுகதை"ஆய்வின் மூலமே பெற்றுக் கொண்டுள்ளனர். சிறுகதைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இந்த உண்மை புலப்படுத்துகிறது எனலாம்:
கூடவே, மேற் குறித்த எழுத்தாளர்களின் சிறுகதை படைப் புகள் தொகுதிகளாக வெளிவந்து ஆய்வு மேற்கொள்பவர்களின் பணி யினை இலகுவானதாக்கியிருப்பத னாலும் இது சாத்தியமாகியது என்றும் எண்ணலாம்.
அகிலன் எழுதிய சிறு கதைகள் 16 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அதே விதத்தில் கு.அழகிரிசாமி. 9, தி.ஜானகிராமன். 7, கி. ராஜநாராயணன் - 6, சி.சு.செல்லப்பா. 5, ந.பிச்சமூர்த்தி 5 கு.ப.ராஜகோபாலன். 4, அறிஞர் அண்ணாதுரை- 3, மு.வரதராசன்- 2 என்ற வித்தில் சிறுகதை தொகுப்புக கள் வெளியாகியுள்ளன.
தமிழ் கூறும் நல்லுலகுக்கு அதிகமாக அறிய கிடைக்காதிருந்த போதும் - நூலுருவில் வெளிவந்த காரணத்தால் மலேஷிய நாட்டு தமிழ் நாவல்களைப்பற்றி தமிழ் நாட்டிலே ஒருவர் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற முடிந்திருக்கிறது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக, காரைக்கால் மையத்தைச் சார்ந்த
டாக்டர் ம.மதியழகன் இவ்விதம்
டாக்கடர் பட்டம் பெற்றவராவர்.
படைப்புகள் நூலுருவில்
வெளிவரும் போது அவைகளுக்கு
கிடைக் கும் வரவேற் பையும் ,
முக்கியத்துவத்தையும் வெளிக்காட்டு
வனவாகவே மேற்குறித்த உதாரணங் களை எடுத்துக்கொள்ளலாம்.
இலங்கையில், மலையகத்துச் சிறுகதைகளைப் பற்றி உரியமுறையில் நமது விமர்சகர்கள் அறியாது போனமைக்கு மிகப் பிரதானமான காரணமாக நூலுருவில் அவை கிடைக்காதிருப்பதையே குறிப்பிடல் வேண்டும்.
மலையகச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று “கதைக் கனிகள்” என்ற தலைப்பில் 1971ம் ஆண்டு வெளியானது. வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட இத்தொகுப்பு அச்சிடப்பட்ட இரண் டாண்டுகளுக்குள்ளேயே, மலையகச் சிறுகதைகளைப்பற்றிய விரிவான விமர்சனத்தை மலேசியாவை சார்ந்த - மலேயாப் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றும் டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள் மேற் கொண்டார்.
உணி மையில் , தனது படைப்புக்களை நூலுருவில் தராத படைப்பாளி, விமர்சகர்கள் தம்மைப் புறந்தள்ளி விட்டதாக குறைபட்டுக் கொள்வதில் எந்தவித நியாயமு
மில்லை.
ča ogger 35 N

Page 20
மலையகத்தில் கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன. தேசிய பத்திரிகை களிலும், சிற்றேடுகளிலும் இவைகள் வெளியாகியுள்ளன. இலங்கை வானொலியிலும் சில ஒலிபரப்பாகி யுள்ளன. குத்துமதிப்பாக ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதபட்டிருக்கலாம் என்று கூறலாம். டி.எம்.பீர்முகம்மது, என்.எஸ்.எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், மலரன்பன், நயீமா ஏ. சித்திக், மொழிவரதன், சாரல் நாடன் , கோவிந்தராஜ், ஏ.பி.வி. கோமஸ் ஆகியோர் தலா ஒரு தொகுதியை வெளியிட்டு உள்ளனர்.
மாத்தளை சோமு "அவன் ஒருவனல்ல" (1991) ‘நமக்கென்றொரு பூமி” (1984) "அவர்களின் தேசம்”
(1995) ஆகிய தொகுதிகளை அச்சில்
கொண்டுவந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்ட பெருமை மலையகப் படைப்பாளி களில் இவர் ஒருவருக்கே உண்டு. ஒரே எழுத்தாளரின் சிறு கதைகளை உள்ளடக்கிய தொகுதியாக இதுவரை மலையகத்தில் 13 தொகுதிகள் வெளியாகி உள்ளன.
se 606 JU T66OT.
"ஆறு சிறுகதைகள்", "நாமிருக்கும் நாடு", "ஒரு கூடைக் கொழுந்து", "நமக்கென்றொரு பூமி”, “வாழ்க்கைச் சுவடுகள்”,
"மேகமலை ராகங்கள் ”, “கோடிச்சேலை”, “மலைகளின் மக்கள்”, “அவன் ஒருவனல்ல",
"வாழ்க்கையே ஒரு புதிர்", "மலைக் கொழுந்து", "அவர்களின் தேசம்", “பசியாவரம்”.
இவற்றினின்றும் வேறுபட்டு, பல எழுத்தாளர்களின் சிறுகதை
36 је осноa
களை உள்ளடக்கிய தொகுப்பாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு களும் உள்ளன.
1971ல் வெளியான "கதைக் கனிகள்” தொகுதியில் 11 பேரின்
1979ல் வெளியான "தோட்டக் காட்டினிலே” தொகுதியில் 3 பேரின் 1994ல் வெளியான "மலையகப் பரிசுக்கதைகள்” தொகுதியில் 16 பேரின்
1995ல் வெளியான “தீர்த்தக் கரைக் கதைகள்” தொகுதியில் 5 பேரின் சிறுகதைகள் இடம்பெற் றுள்ளன.
இந்த வரிசையில் 1997ல் வெளிந்துள்ள தொகுப்பு மலையகச் சிறுகதைகள் என்ற நூலாகும். "மலையகச் சிறுகதைகள்” என்ற சிறுகதைத் தொகுப் பில் 33 மலையகப் படைப்பாளிகளின் எழுத் துக்கள் இடம் பெற்றுள்ளன.
அழகிய முறையில், கண் ணைக் கவரும் விதத்தில் 322 பக்கங்களில் இந்தியாவில் அச்சிடப் பட்ட இந்த நூலை "துரைவி" பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பதிப் பகத்தின் உரிமையாளர் இலங்கை வாழ் தமிழ் கலைஞர் களுக்கும், இலக்கிய வாதிகளுக்கும் நன்கு பரிச்சயமான இலக்கிய ஆர்வலர் துரை. விஸ்வநாதன் அவர்களாவர்.
மலையகச் சிறுகதைகளில் வெளிவந்துள்ள சிறுகதைகள் நூலின் தலைப்புக்கேற்ப மலையகத் தைப் பற்றியவைகளாக மாத்திரமல்ல மலையகத் தவர் களுடையதாகவும் அமைந்துள்ளன.
அதாவது, இந்நூலில் இடம் பெற்றுள்ள படைப்பாளிகள் மலையக சமூகப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நேரடி அநுபவத்தைக் கொண்டவர்கள்.

பட்ட அநுபவத்தைப் படைப்பாக்கித் தந்துள்ள அவர்களின் எழுத்துக்களில் அழுத்தமும், வேகமும், பின்னிப் பிணைந்து கொண்டு வெளிவருவதை இத்தொகுப்பை வாசிக்கும் எவராலும் இலகுவில் கண்டு உணர்ந்துகொள்ள (Up9ub.
ஏற்கனவே தொகுப்புக்களாக வெளிவந்துள்ள "கதைக்கனிகள", "மலையகப் பரிசுக் கதைகள்", "தீர்த்தக்கரைகதைகள்", ஆகிய வற்றிலும் மலைய வாழ்கையை மையமாக்கி மலையகப் படைப் பாளிகள் எழுதிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன என்ற போதிலும் அவைகளுக்கில்லாத சில சிறப் புக்கள் - சிலாகித்துக் கூற வேண்டிய சில சிறப்புக்கள் இந்த தொகுப்புக்கு உண்டு.
இத்தொகுதியில் காணப்படும் கதைகள் ஏறக்குறைய 60 ஆண்டு இடை வெளிகளுக்குள் எழுதப்பட்ட வைகளாகும்.
மலையகத்தின் முதல் படைப் பாளியான கோதண்டாராம நடே சையரின் சிறுகதை 1931 ல எழுதப்பட்டது. இந்த நூலின் கால வரிசையில் ஆக கடைசியாக 1990ல் எழுதப்பட்ட அல் அயித்தீன் சிறுகதை இடம் பெற்றுள்ளது.
தொகுப் பில் கதைகள் எழுத்தாளர்கள் படைப்புலகுக்கு அறிமுகமான வரிசையை வெளிப் படுத்தும் விதத்தில் அமைக் கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. நடேசையரில் ஆரம் பித் து பொ.கிருஷ்ணசுவாமி, த.ர.பேல், இரா.சிவலிங்கம் , செந்தூரன், என்.என்.எம்.இராமையா தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ.வி.பி. கோமஸ் , ராம.சுப்பிரமணியம் , பி.மரியதாஸ், பி.பன்னீர்ச் செல்வம்,
எம்.வாமதேவன், அ.சொலமன்ராஜ், நயீம்.ஏ.பவர், மலரன்பன், மல்லிகை சிவகுமார். பரிபூரணண், பூரணி, மாத்தளை சோமு, நுாரளை சணி முகநாதன் , மாத்தளை வடிவேலன், மு. தவலிங்கம் , மு.நித்தியானந்தன், மொழிவரதன், அல்.அஸ"மத், கே. கோவிந்தராஜ், ஸயப் யத் முஹம்மத் பாரூக் , ஆனந் தராகவன் , கேகாலை கயிலைநாதன், க.ப.லிங்கதாசன் என்பவர்களின் கதைகள் இடம் பெற்று, மலையத்தில் குடியேறிய விதம் , இந்தியா திரும் புதல் ஏமாற்றமாக அமைந்தமை, இலங்கையில் குடியுரிமை பிரச்னை யாக உருவெடுத்தமை என்று வளரும் கதைக் கருக்கள் பின் னாளில் தொழிலாளர்களின் நாளாந்த தொழில் பிரச்சினைகளை, அவர் தம் குடும்பப் பிரச்சினைகளை, குழந்தைகளின் பிரச்சினைகள் என்று விரிவடைவதைக் காண்கிறோம்.
தொழிலாள மக்களிடையே . ஏமாற்றத்துக்குட்பட்ட பரிதாபத்துக்குரிய ஒரு அதிர்ஷ்டம் கெட்ட ஜீவனாக வளரும் ஒரு குடும்பத்தைச் சித்தரிக் கும் கதைகளைக் காண்கின்றோம். தங்கள் வாழ்க் கையில் நிகழ்ந்துவிட்ட துயரம் மிகுந்த சம்பவங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்து அசாத்தியத் துணிவோடு எதிர்கா லத்தை சந்திக்க முயலும் கதா பாத்திரங்களைக் காணுகிறோம்.
நாளாந்தம் விரிசலடைந்து வரும் இனப் பகைமைக் கூடாக மனிதநேயம் பேசும் மானுடர்களைச் சந்திக்கிறோம்.
ஒரே தொகுப்பில் இவைகளை ஒன்றாக வைத்து வாசிக்கையில் மலையக சமூகத்தில் கலை
KğTC5%5Colca 37

Page 21
வளர்ச்சியோடு ஏற்பட்டு வந்த கருத்து மாற்றம் துள்ளலாகவே வெளிப்படுகிறது.
ஐம்பதுகளிலிருந்து சிறுகதை களைத் தொகுத்துக்காணும் முயற் சிகள் தமிழ் இலக்கிய உலகில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் - இந்திய அரசின் இலக்கிய நிறுவனங்களும், தனிப்பட்ட இலக்கிய ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும் தொகுப்புக் களை வெளியிடுகின்றன.
சில சித்தாந்த போக்குகளைப் பிரதிபலிக்கிற படைப்புகளின் தொகுப்புக்கள், சில அடிப்படை தேர்வு முறைகளுக்கு ஒத்துவருகிற படைப்புகளின் தொகுப்புக்கள், என்ற வகையில் அமைகின்ற இத்தொகுப் புக்களில் இருந்து மலையகச் சிறுகதைகள் என்ற தொகுப்பு வேறுபடுகிறது.
எந்த சித்தாந்தப் பிடிக்குள்ளும் அகப்படாது, எந்தவித தேர்வு நிபந்தனைகளுக்கும் உள்ளாகாது மலையக எழுத்தாளர்கள் என்ற ஒரு தகுதியை மாத்திரம் அடிப்படையாக வைத்து இந்தொகுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றிருக்கும் கதைகளை வாசிக்கும் எவரும் மலையக மக்களின் வாழ்வை நேரில் தரிசிக்கும் அநுபவத்தைப் பெறுவர். அநுபவிக்கும் உள்ளத்தோடு வாசிக்கக் கூடிய கதைகளாக இவைகள் அமைந்துள்ளன.
LD &b T g5 LD T காந்தியை முன்னிறுத்தி அகிம் சையை நிறுவுதற்கு வரலாற்றாசிரியர்களே போதும், கதாசிரியர்கள் தேவை யில்லை என்பர். சாதாரண மனிதர் களை வைத்து இதை நிறுவு பவன்தான் எழுத்தாளன். அந்த
38 ğDE KAN
ஆற்றல் அவனுக்கு மாத்திரமே உண்டு.
சாதாரண படிப்பறிவில் குறைந்த பலவகைகளிலும் வஞ்சிக்கப்பட்ட தோட்டத் தொழிலா ளர்களை முன்னிறுத்தி - ஏழ்மையில் மிளிறும் நேசத்தையும், சத்திய வேட்கையையும், உண்மைக்கு கட்டுப்படும் உள்ளத்தையும் நிறுவ முயலும் சிறுகதை படைப்பாளிகளை இத்தொகுதியில் காண்கிறோம்.
வாழ்க்கை நெருக்கடிகள் - சமூக நெருக்கடிகள் - பொருளாதார நெருக் கடிகள் அரசியல் நெருக்கடிகள் அதிகார நெருக் கடிகள் என்று திரும்பும் திசை யெல்லாம் போராட்டம் மிகுந்த ஒரு வாழ்க்கையை மேற்கொண்டு வாழும் தோட்ட மக்களைப்பற்றி தமது எழுத்துக்களால் கிளர்ச்சி செய்தவர் கோதண்டராம நடேசையர். 1930 ம் ஆணி டளவிலி அவர் எழுதி வெளியிட்ட "நீ மயங்குவதேன்" என்ற நூலில் உள்ள ஓர் அத்தியாயம் “இராமசாமிசேர்வையின் சரிதம்” என்ற முதற் சிறுகதையாக இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி வரவழைக்கப்பட்ட ஒரு சிறுவன் - அவனை ஏமாற்றுவதற்கு கையாண்ட முறைகள் - அவ்விதம் ஏமாற்று செய்த கங் காணி என்பவைகளையெல்லாம் தத்ரூ பமாக எழுதும் நடேசையர் கடுதாசி தோட்டம், கருவானை தோட்டம், பசுமலை தோட்டம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். இவைகள் (p6)p(3u LITTLE WALLY KIRAWANA, CASTLE MLK 6T6öip esEd6og5g56ö குறிக்கப்பெறும் தோட்டங்களின் தமிழ்ப்பெயர்கள் . மிகச்சமீப காலம் வரையில் - குறிப்பிட்டுச் சொல்வ

தென்றால் தோட்டங்கள் அரசாங் கத்தால் கையேற்கப்படும் வரை யிலும் தொழிலாளர்கள் தமது தோட்டங்களை தமிழ் பெயர்களா லேயே தெரிந்து வைத்திருந்தனர் என்ற வகையில் - உள்ளடக்கத் தாலும், எழுத்து நடையாலும் ராமசாமி சேர்வையின் சரிதம் ஒரு வரலாற்று ஆவணமாக அமைகிறது. ஐந்தாவதாக இடம்பெற் றிருக்கும் "முன்னவன் சொத்து" என்ற சிறுகதை இரா. சிவலிங்கம் எழுதியது. எனக்கு விபரம் தெரிந்த மட்டில் இவரது இரண்டு சிறு கதைகள் "மலைப்பொறி” சஞ்சி கையில் வெளியானது. அந்த சஞ்சி கைக்கு சிறப்பாசிரியராக இரா. சிவலிங்கம் அவர்களே இருந்தார்கள். இரண்டு சிறுகதைகளுமே மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளைப்பற்றிய உள்ளக் குமு றல்களே ஆகும்.
சிறுகதை என்ற வடிவில் விமர்சகர்களின் பாராட்டையும் கல்கி பத்திரிகை நடத்திய போட்டியில் பரிசினையும் பெற்ற திருச் செந்தூ ரானின் “உரிமை எங்கே"என்ற படைப்பு தான் மலையக எழுத்தாளர்களி டையே உந்துதல் ஏற்படுத்திய படைப்பு ஆகும்.
ரஷ்ய சிறுகதை மரபு குறித்து எழுதுகையில் நாங்களெல்லாம் கோகேலின் "மேல் அங்கி" சிறுகதையில் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் துர்கனேவ் என்ற ரஷ்ய எழுத்தாளர்.
தமிழ் ச் சிறுகதை மரபு குறித்து எழுதுகையில், நாங்க ளெல்லாம் வவேசு அய்யரின் குளத்தங்கரை அரசமரத்திலிருந்து பிறந்தவர்கள் என்று கூறுகிறார் மா. இராமலிங்கம்.
மலையகச் சிறுகதை ஆசிரியர்கள் நாங்களெல்லாம் திருச்செந்துTரானின் "உரிமை எங்கே” யிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் தவறிருக்க முடியாது. அவர் எழுதிய "நடுக் கடலில்” என்ற சிறுகதை இத்தொகு தியில் இடம் பெற்றுள்ளது.
இன்றைய இளம் வாசகனுக்கு கிடைக்கும் என்று கனவுகூட கண்டிருக்கமுடியாத சிறுகதைகள் - இரா. சிவலிங்கம், பொ.கிருஷ்ண சுவாமி, த.ர.பேல் , ராமசுப்ர மணியம், பூரணி ஆகியோரின் சிறுகதைகளும் நடேசையரின் அபூர்வபடைப்பும் இந்த நூலின் பெறுமதியை அதிகரிக்க வைத் துள்ளன என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் தொகுப்பு நூலால் விளையும் பயன் என்ன என்பதையும் நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.
1. ஒப்பீட்டு நோக்கில் மலையகச் சிறுகதைகளை வாசித்து விமர்சிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை. 2. மலையக படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகம் தரப்பட்டுள்ளமை. 3. மலையகச் சிறுகதை வளர்ச் சியின் பரிணாமத்தை உணர்ந்து கொள்ள முடிகின்றமை, 4. பரவலாக இன்று பேசப்படுகின்ற மலையகச் சிறுகதைகளின் வளர்ச்சித் தன்மைபற்றி ஒரே பார்வையில் அறிந்துகொள்வதற்கு தளம் அமைக்கும் நூலாக இது விளங்குவது.
மொத்தத்தில் மலையகச் சிறுகதை இலக்கியத்தை புதிய எல்லைநோக்கி வளர்த்திடவும் . புதிய திசைநோக்கி நகர்த்திச் செல்லவும் செய்யப்படும் முயற்சி uJIT(5tb. இ
ğŽDCCC 39

Page 22
நீண்ட இடைவளிக்குப் பின்பு மல்லிகை இங்கு வந்தது, மணக்கிறது. அனுப்பி வைத்த ராஜரீகாந்தனுக்கு நன்றி. தேசிய இலக்கியம், முற்போக்கு இலக்கியம் எனப் பேசப்பட்ட காலங்கழிந்து, புலம் பெயர் இலக்கியம் பற்றிப் பேசப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தாயகம் விட்டுப் புறப்பட்டு விட்ட படைப்பாளிகள் தணியாத இலக்கியதாகத்துடன்தான் இருக்கின்றனர். இதை நிரூபிக்கும் விளைவே
- முருகபூபதி
இந்தப் புலம் பெயர் இலக்கியம். சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து பத்மநாத ஐயர் தொகுத்துத் தந்த 'கிழக்கம்-மேற்கும்’ நம்பிக்கை அளிக்கிறது. பாரிஸிலிருந்து சிறுகதைக்கென்றே வெளியா கின்றது ‘அம்மா’ என்ற சிற்றிதழ். "படைப்பாற்றல் இல்லாத சமூகம் எழுச்சி கொள்ள முடியாது' என்ற குரலை எழுப்பியுள்ளது. அம்மாவின்
40 t pages
RN
 

இரண்டாவது இதழ் இவ்விதம் தெரிவிக்கின்றது: “புலம் பெயர் இலக்கியம் என்றோ அல்லது வேறுபனர் விரித்தோ அதன்கீழ் இருந்து கொண்டு எழுதுவது இலக்கியத்திற்கு அப்பாற்பட்டது. ஆயினும் சொந்த வாழ்விடத்தை விட்டு, புலம்பெயர்ந்தவர்களால் படைக்கப்படும் இலக்கியம் புலம் பெயர் இல்கியமாகக் கொள்ளப்படுகிறது. இவ்விலக் கியம் பற்றி "வெறுமனே துன்பம், துயரம், சோகம், போன்ற ஒப்பாரிக ளாகவே அமைகின்றன. வாழ்வின் மீது நம்பிக்கை தரும் படைப் பெதை யுமே காண முடியவில்லை' என்ற கருத்தை முன் வைக்கிறார் ஒருவர்
நாட்டைவிட்டு வெளியேறி,நம்பிக்கைகள் பொய்த்துப் போனவர்கள் தத்துவப் பிடிப்பின்றி, அதன் மீது கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக் கின்றவர்களிடமிருந்து எப்படி ஆரோக்கியமான படைப்புக்களை எதிர்பார்க்க இயலும்? இது உசிதமானதுமல்ல. இது புலம்பெயர் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, சகல இலக்கியங்களுக்குமே பொருந்தும். ஆயினும் துன்பப்படும் மனிதர் மீதான மனிதாபிமானப் பார்வையும் உண்மையின் தேடல் மீதான நேர்மையான இலக்கியங்களும் ஆரோக்கிய மானவையே. தவிர, 'வெளிநாட்டார் எமைப் பார்த்துத் தலை வணக்கம் செய்திடல் வேண்டும்’ எனப் பிறருக்காக இலக்கியம் படைக்கும் போக்கினை விடுத்து எமக்காக இலக்கியம் படைக்கும் போக்கினை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை 'அம்மா’ கோருகின்றாள்.
அம்மா இப்படிச் சொல்ல நீண்டகாலமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஜெயகாந்தன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? அதென்ன ஐயா புலம்பெயர்ந்தோர் இலக்கியம்? புலம்பல் இலக்கியமல்லவா? என அவரைச் சமீபத்தில் சந்தித்த மாத்தளை சோமுவிடம் கூறியிருக்கிறார்.
மாத்தளை சோமு அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். எவர் என்ன சொன்ன போதிலும் - இயந்திரமயமான, இரண்டக வாழ்வுக்குப் பலியாகிக்கொண்டே இலக்கியம் படைத்துக் கொண் டிருக்கின்றனர், புலம் பெயர்ந்த இலக்கியவாதிகள்.
X × X
UE0Ea 41

Page 23
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
உலக உக்கிர யுத்தத்தின் நடுப்பகுதி, ஹிட்லர் தான் சர்வதேச ஹிரோ. அவனது நாஸிஸத்தின் கொடுங்கோன்மையை விளங்கிக் கொள்ளாத, யூதமக்களை நச்சுப் புதை குழிகளில் அடைத்து அவர்களைச் சாகடித்த ஹிட்லரை வழிபட்டு, ஏற்றிப் போற்று வதற்கும் ஒரு கூட்டத்தினர் யாழ்ப்பா ணத்திலும் இருந்தே வந்தனர்.
“ச்சா!.எப்படிப்பட்ட வீரனவன்!" எனப் புகழ்ந்து பேசுவதுடன் தினசரி அவனது வெற்றியைத் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகை வாங்கிப் படிப்பவர்கள் அநேகர் அன்று இருந்தனர்.
மாஸ்கோவுக்கு முப்பதாவது மைலில் ஜெர்மன் படைகள் தரித்து நின்றபோது, அன்றைய பிரபல சினிமா நடிகர் தியாகராஜ பாகவ தருக்கும் சினிமா இயக்குநர் ராஜா சந்திரசேகருக்கும் ஒரு பந்தயம்கூட நடைபெற்றதாகப் பத்திரிகையில் தெரிந்து கொண்டிருந்தேன். ரஷ்யத் தலைப்பட்டினம் மாஸ்கோ விரைவில் ஹிட்லரிடம் சரணாகதியடைந்து விடும் என்பது இயக்குநர் கட்சி. “இல்லை!மாஸ்கோவை ஜெர்மானிய படையினர் பிடித்துவிட மாட்டார்கள்” என்பது பாகவதர் அபிப்பிராயம். இந்தப் பந்தயத்தின் வெற்றி தோல்விகளை நீங்களே அறிவீர்கள். சோவியத் செஞ்சேனை அங்கிருந்து ஹிட்லர் படைகளை விரட்டி அடிக்கத்
42 Sei
இலட்சக்கணக்கான
10
தொடங்கி ஜெர்மானியத் தலைப் பட்டினம் பெர்லினைக் கைப்பற்றி வென்றது என்பது சரித்திர வரலா றாகும்.
எனக்கும் பத்திரிகை படிக்கும்
ஆர்வம் மிகுந்தது. ஜோசப் சலூனின்
குட்டி நிர்வாகியாக இயல்பாக நான் வந்தடைந்ததும் எனக்குப் படிக்கக் கூடிய நேரம் அதிகரித்தது. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, பூனைக் கண் சோமுவினுடைய சைக்கிள் கடைமுன்னால் இருந்தது. வாடகைச் சைக்கிள்களை வரிசையாக நிறுத்து வதற்கமைந்த பெரிய விறாந்தை. இரண்டு பக்கீஸ் பெட்டிகள் அரு கருகே கிடந்தன. ஒரு பெட்டியில்
சிக்காராக நான் இருந்து கொண்டு
வீரகேசரி தினசரியை வாய்விட்டுப் படித்துக் கொண்டிருப்பேன்.
ஒரு நாள் ஒரு முதியவர் நாலு முழவேட்டி, உடல் போர்த்த சால்வை சகிதம் வந்து சேர்ந்தார்.
நல்ல பொலிவான தேககாந்தி.
கண்களில் அறிவுத் தீட்சண்யம், பார்த்தவுடன் ஒரு மரியாதை தரத் தக்க தோற்றப் பொலிவு. பக்கத்தே யுள்ள அடுத்த பக்கீஸ் பெட்டியில் அமர்ந்து கொண்டார். "ம். பொடியா, கொஞ்சம் பெலத்து வாசி, எனக்கும் கேக்கிறதுக்குப் படி” என உத்தர விட்டார்.
 

அவரது அந்தக் கோரிக்கை எனக்கு உத்தரவிடுவது போலவும் தெரிந்தது. தமது பேரனுக்குக் கட்டளையிடும் தொனிபோலவும் இருந்தது. நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு அவரை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். "என்ன பார்க்கிறாய் மோனை? கொஞ்சம் ஊண்டிப் படியன், நானும் கேக்கிற துக்கு” என நேசம் நிறைந்த குரலில் ஒரு கணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டார். சொல்லிக் கொண்டே மடியில் வைத்திருந்த வெற்றிலைப் பையை எடுத்து வைத்துக் கொண்டு வெற்றிலையை எடுத்துச் சுண்ணாம்பு தடவிக் கொண்டார்.
எனக்கு எனது பாட்டனாரின் - அப்பாவினுடைய அப்பா - ஞாபகத் திற்கு வந்தார். அவரும் இப்படியான ஒரு வெற்றிலைப் பிரியர்தான்.
அவரது நேசமான நெருங்கிய குரல் என் மனசை அரவணைத்தது. வெகு உற்சாகமாகக் குரலெழுப்பி பேப்பர் வாசிக்கத் தொடங்கினேன். அவர் காது குளிரக் கேட்டு ரசித்துக் கொண்டு தலையாட்டி வந்தார்.
இது தினசரி நிகழ்ச்சியானது. ஒரு வாரம் சென்றிருக்கும். அவரது பேச்சும் செயலும் அடிக் கடி பகிடிவிடும் குணமும் தாராளமாகச் சிரித்து வைக் கும் பாங் கும் என்னையும் தன்னில் ஒருவனாகக் கருதி அபிப்பிராயம் கேட்கும் சுபாவமும் அவர் மீது ஒருவகைப் பரிவையும் பாசத்தையும் ஏற்படுத்தி விட்டன.
முன்னர் எனக்காக வீரகேசரி படித்து வந்த நான் இப்பொழுது அவருக்காகவும் சேர்த்துப் படிப்பதில் தனி ஆர்வத்தைக்காட்டி வந்தேன். பக்கத்தேயுள்ள கறுத்தப்பா கடையில்
அவருக்கென்றே மாவிட்டபுரம் வெற்றிலையும் சரவணைப் புகை யிலையும் வாங்கி வைக்கத் தொடங்கினேன். இத்தனைக்கும் அவராரென்றே எனக்குத் தெரியாது. மனசிற்குள் "அவர் எங்கட பாட்டா!" என்றே கருதி வந்தேன்.
நான் அவருடன் சரளமாகக் கதையடிக்க ஆரம்பித்தேன். நானும் சேர்ந்து பகிடி விடத்தொடங்கினேன். இப்படியாக இருவரும் கதையளந்து கொண்டிருக்கும் வேளைகளில் நான் ஏடாகூடமாக ஏதாவது சொல்லி யிருப்பேன் போல இருக்கின்றது. பூனைக்கண் சோமு நான் தொழில் செய்து கொண்டிருக்கும் சமயம் என்னை ரகசியமாகக் கூப்பிட்டுச் சொன்னார். "எட தம்பி, உன்னோடை என்ரை கடையிலை கதைச்சுச் சிரிக்கிறவர் ஆரெண்டு தெரியுமா? அவர்தான்ரா பபூன் செல்லையா! பெரிய நாடக நடிகன். ஆக்களைத் தெரிஞ்சு கொண்டு பழகு!" என அறிவுரை சொல்லிச் சென்றார்.
இளம் வயசு அறியாமை, அதுவும் சென்ற தலைமுறை நாடகம் பற்றித் தெரியாமை. சினிமாவின் ஆதிக்கம் இளம் தலைமுறையை ஆட்டிப்படைக்கிற காலம். பாகவதர் - சின்னப்பா கட்சி கலையுலகில் இளந்தலைமுறையினரிடம் ஆதிக் கம் செலுத்திவந்த காலத்தில் எப்போதோ மேடையைக் கலக்குக் கலக்கிய பபூனைப்பற்றி நான் பெரிசாக ஒன்றும் மனசிற்குள் எடுத்துக்கொள்ள வில்லை.
அதற்காக இன்று நெஞ்சார வருந்துகின்றேன். எப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பம் என்னைத் தேடிவந்தது அந்தச் சந்தர்ப்பத்தை நான் சரிவரப் பயன்படுத்தத் தவற விட்டுவிட்டேன். இதற்கு இளவயசு
ğDCCCOa 43 NSYLMINDEN

Page 24
அறியாமைதான் காரணம். ஒரு காலத்தில் யாழ்ப்பாண நாடக மேடை களை தமது நடிப்பாற்றல் மூலம் பொறி பறக்க வைத்த நகைச்சுவை நடிகர் பபூன் செல்லையா, ஸ்திரி பார்ட் கன்னிகா பரமேஸ்வரி, கிறிஷ்ணாழ்வார் போன்றோரின் கலை வரலாறே இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விட்டதே! எத்தனை பெரிய இழப்பு இது நஷ்டம்!
பயூன் செல்லையாவுடன் நெருங்க நெருங்க, கதைக்கக் கதைக்க என்னையறியாமலேயே அவருடைய நெருங்கிய ரசிகனாகி விட்டேன், நான்.
பின்னாளில் நகைச்சுவை என மகிடமிடப்பட்டு மதிக்கப்பட்டு வந்த கலை, ஆரம்ப காலங்களில் பபூன் என்றே கொச்சையாக அறிமுகப் படுத்தப்பட்டது. ராஜபார்ட் - ஸ்திரி பார்ட் என மதிக்கப்படும் பிரதம நடிகர்களுக்கு எந்த விதத்திலும் குறைவுபடாமல் தமது திறமையாலும் ஆற்றலாலும் சமயோசித புத்திக் 'கூர்மையாலும் ரசிகர்களின் பேரா தரவைத் தக்கவைத்துக் காப்பாற்றி வந்தவர்தான் இந்த பபூன் செல்லையா அவர்கள்.
அவர் ஏராளமாக தகவல் களை எனக்குச் சொல்லிச் சென்றார். நகைச்சுவையான சம்பவங்களை எனக்கும் சொல்லிச் சொல்லி என்னைச் சிரிக்க வைத்துள்ளார். தானும் சேர்ந்து என்னுடன் சிரித்தார். பிற்காலத்தில் எழுத்தாளனாக மலருவேன் எனக் கனவு காணாத காலமது. இப்படி சுயவரலாறு எழுத முற்படுவேன் எனச் சிந்திக்கவே முனைந்திராத இளம் பிராய வயசது. எனவே எந்தவிதமான குறிப்புகளோ ஆவணத் தகவல்களோ இல்லாமல்
44 işticles/soca
RN
வெறும் ஞாபகப்பெட்டகத்தைத் திறந்து வைத்துக் கொண்டேதான் இவைகளை இங்கு பதிவு செய்து
வைக்கின்றேன்.
தகரக் கொட்ட கை என அன்றைய பாமர நாடக ரசிகர்களால் அழைக்கப்பட்ட றோயல் தியேட்டரின் அதிபர்தான் துரைராஜா அவர்கள். இவரைப் பெரிய துரைராஜா என்றும் அழைப்பார்கள். அன்றைய சினிமா ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் மேடை நாடகங்களே மக்களிடம் அதிக பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தன.
மூன்றுபெரும் புள்ளிகள் அன்றைய
நாடக அரங்கை கைவசப்படுத்தி யிருந்தனர். இவர்களது கைதான் நாடகக் கொட்டகை அதிகாரத்தில் ஓங்கியிருந்தது. ஒருவர் பெரிய துரைராஜா. அடுத்தவர் கொட்டடிச் சீனிவாசகத்தார், மற்றவர் புத்து வாட்டிச் சோமு. இவர்களில் கொட்டடிச் சீனிவாசகத்தாரைப் பிற்காலத்தில் நான் சந்தித்திருக் கின்றேன். மற்றைய இருவரையும்
எனக்குத் தெரியாது.
இந்த மூன்று நாடக அரங்கத் தினருக்குள்ளும் ஏகப்பட்ட தொழில் போட்டி நிலவிய காலமிது. புத்து வாட்டிச் சோமு என்பவர் நடத்திய நாடகமேடையில் வள்ளி திருமணம் நாடகம் அரங்கேற இருந்ததாம். பிரமாண்டமான விளம்பரம் செய்யப் பட்டிருந்ததாம். நாடகநேரம் நெருங்க நெருங்க அங்கே ராஜபார்ட்டான எம்.ஆர்.கோவிந்தனை ஒப்பனை அறையில் காணமுடியவில்லை. குதிரை வண்டிலில் ஆட்கள் தேடப் புறப்பட்டனர். நாடக மண்டபம் சனத் திரளால் நிரம்பி வழிந்தது. ஆனால் ஹிரோ எங்குமே தென்பட வில்லை. கடைசியில் ஒரு கள்ளுக் கொட்டி லில் மரண வெறியில் தள்ளாடிக்

கொண்டு இருந்த அவரைக் கண்டு பிடித்து வண்டிலில் கூப்பிட, கோவிந் தன் மறுத்து வெறித் தத்துவம் பேச ஆரம்பித்து விட்டாராம். அரங்கச் சொந்தக்காரரால் அழைக்கப்பட்டும் அவர் மறுக்க குதிரைச் சவுக்கைப் பறித்து அந்த இடத்திலேயே கதறக் கதற விழாசி விட்டாராம் அரங் கத்தார். முடிவில் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து குளிப்பாட்டிக் குளிர வைத்து மேடையேற்றினார்களாம்.
நாடக அரங்கமேறிய அந்தக்
கலைஞன் மேடையில் வைத்தே
அறம் பாடினாராம். தான் ஒரு கலைஞன் என்றுகூடப் பாராமல் மிருகத்திற்கு அடிக்கும் சவுக்கைக் கொண்டு தான் அடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து மனமுருகி அறம் பாடி முடித்தானாம்.
6) ஆணி டுகளுக்குப் பின்னரும் அந்த மேடை உய்வு பெறவில்லையாம். கடைசியில் எருக்கு முளைத்து அந்தக் காணியே பாழ்பட்டுப் போனதாம்.
இது பபூன் செல் லையா அவர்கள் சொன்ன கிளைக் கதை களில் ஒன்று. இப்படி எத்தனையோ குறுங் கதைகள்; தகவல்கள்; வரலாறுகள். ம்
இவருக்கு உற்சாகமூட்டி ஆதரவுதந்து, மேடை கொடுத்து உதவியவர் பெரிய துரைராஜாதான். துரைராஜா இந்தியாவிலிருந்து காலத்திற்கு காலம் பிரபலமான நாடகக் கோஷ்டிகன்)ள இங்கு தருவித்து பலவகையான நாடகங் களை மேடையேற்றுவித்தார். அக் குழுவினருடன் பபூன் அவர்களையும் இணைத்து நடிக்க வைத்தார். பபூன் செல்லையாவின் நடிப்பாற்றலைக் கண்டு இந்திய நடிகர்கள் வியந்தனர். வந்திருந்தவர்களில் பபூன் சண்முகம்
பிள்ளையும் ஒருவர். திறமான நடிகர். இவரது நடிப்பு ஆற்றலைப் பாராட்டி "றோயல் பபூன்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவருடன் சேர்ந்து நடிக்க நமது செல்லையாவையும் தெரிவு செய்திருந்தார், துரைராஜா. றோயல் சண்முகம்பிள்ளை வித்துவச் செருக்கு நிரம்பியவர். தனது அபாரதிறமைகளில் நம்பிக்கை கொண்டவர். இவரைத் தனது சமயோசித நடிப்பால் மட்டம் தட்டிவிடலாம் என நம்பினார். தமது பயிர்ச் செய்கையைத் துஷ்ட மிருகங்கள் அடிக்கடி அழித்து வருவதை மன்னரிடம் முறையிட மக்கள் விரும்பினர். தங்களில் ஒருவரை நியமித்து மன்னரிடம் முறையிடும் காட்சி, றோயல் பபூன் முறையிடுபவராக நியமிக்கப்பட்டார். நமது பபூண் தனது நடிப்பால் றோயலைத் தலைகுனிய வைத்து விட வேண்டும் எனச் சபதமேற்றார்.
அரச சபைக் காட்சி ஆரம்பிக்கும் நேரம். ஒரு பக்கம் றோயல் தயாரானார். சீன் இழுக்கக் காத்திருந்தார். சீன் இழுத்ததும் மறுபக்கம் காத்திருந்த பபூண் செல்லையா உடன் மேடைக்குள் பிரவேசித்து மக்கள் கஷ்டங்களை மன்னரிடம் முறையிட்டார். அரசரும் தானி உடனடியாக மக்கள் குறைகளைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி கொடுக்க, இவர் திரும்பிச் சென்றார். செல்லும் சமயம் மேடைக்குள் பிரவேசிக்கிறார், றோயல் பபூன். உடன் அவரை மறித்து விவரத்தை அறிகிறார் செல்லையா. அறிந்ததும் தாம் ஏற்கனவே மன்னரைச் சந்தித்து நிவாரணம் கோரியதையும் கூறி றோயலைத் திரும் பிப்போகும் வண்ணம் கேட்டுக் கொள்ளுகின்றார்.
ROCCOLa 45 RN

Page 25
இதைப்பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததுடன் பபூண் செல் லையாவின் சமயோசித நடிப்பையும் பாராட்டிக் களித்தனர். றோயல் சண்முகம்பிள்ளை இங்கு தொடர்ந்து நடிக்காமலேயே தாயகம் திரும்பிவிட்டார்.
அந்தக் கால நாடக அரங் கில் பல விசித்திர சம்பவங்கள் இடம்பெறும். பாத்திர அமைப்போ, சம்பாஷணையோ மீறப்படும் . காட்சியமைப்பில் சமயோசித திறமை முன் நின்று தலை காட்டும். ஆலோலம் பாடும் திணைப்புனத்து வள்ளி கைக்கடிகாரத்துடன் காட்சி தருவார். முருகப்பெருமான் தேசியப் பாடல்கள் பாடுவார். பவளக்கொடி இங்கிலீஸ் பேசுவார். இன்னும் இன்னும் எத்தனையோ வேடிக்கை கள் எல்லாமே நடந்தேறுமாம்.
ரசிகர்கள் கூட தர்க்க ரீதி யாகச் சிந்திக்கமாட்டார்கள்; பகுத் தறிவு கொண்டு யோசிக்கப் பின் நிற் பார்கள். யார் கரகோசம் அதிகம் பெறுகிறார்களோ அவர்களே சிறந்த நடிகர்களாக மதிக்கப்பட்டனர்.
வள்ளி திருமண நாடகம். பிற்காலத்தில் பாகவதருடன் சேர்ந்து சினிமாவில் நடித்துப் புகழ்பெற்ற எஸ்.டி.சுப்புலட்சுமி நாரதராக நடிக்கும் காட்சி, நமது பபூன் வள்ளியின் அண்ணனாக நடித்தார். இவர் தினைப் புனத்தில் அங்குமிங்குமாக நடந்து திரிகிறார். இதைக்கண்ட நாரதருக்கு எரிச்சல் ஏற்பட்டு விடுகின்றது. "என்ன காவல்காரரே; மணிக்கூட்டு பெண் டுலம்போல, அங்குமிங்கும் ஆடுகிறீர்?" என நகைச் சுவையாகக் கேட்டார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதற்கு பபூன் செல்லையா: "ஏன் கீழே ஆடுகிற சாமானைப்
46 S5
பார்க்க வேண்டும்? மேலே பாருங் கோவன்” எனப் பதிலடி கொடுத்தார். உள் அர்த்தம் விளங்கிய ரசிக மகா சனங்கள் எழும்பி நின்று ஆரவாரித்து
கைதட்டி மகிழ்ந்தனர்.
வார்த்தைகளால் உரிக் கப்பட்ட சுப்புலட்சுமி வெட்கத்துடன் தலைகுனிந்தபடி மேடையை விட்டு உள்ளேபோய் விட்டார்.
எப்படியும் எந்த விரசமான சம்பாஷணைகளைக் கூறியும் பார்வையாளர்களைத் திருப்திப் படுத்துவதே அன்றைய மேடைத் திறமையாகக் கருதப்பட்டு வந்தது. இப்படியான விரசமான வக்கிர
உரையாடல்களை ரசிப்பதற்கும்
மேடையேற்றுவதற்கும் அன்று நிலவிய சமூக அமைப்பே காரண மாகும். ஊருக்குள் பெரிய மனுஷன், கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த தலைவன் ஒருவன் ஒன்றுக்கு மேற் பட்ட வைப்பாட்டிகளைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் அன்றைய சமுதாய அந்தஸ்து. ஆண்களை விடுங்கள். பெண்களை எடுத்துக் கொண்டால் கூட ‘என்ரை அவருக்கு வட்டுக் கோட்டையிலை ஒரு வைப்பு உண்டு. சங்கரத்தையில் இன்னொரு தொடுப்பு உண்டு உன்ரை மனு ஷனைப் போலை உன்னையே கதி எண்டு கிடப்பவராடி என்ரை புருஷன்?" எனப் பக்கத்து வீட்டுக் காரியுடன் வாய்த் தர்க்கம் நடத்தும் போது தனது குலப்பெருமைகளைப் பேசும் “தர்ம பத்தினி” களை பரக்கக் காணலாம் . அன்று நமது பிரதேசத்தில் குடும்பப் பெருமை களில் குறிப்பிடக் கூடிய பெருமை களில் இதுவும் ஒன்று.
இந்தத் தகவல்களெல்லாம் எனக்கு பபூன் செல்லையா சொல்லித் தான் தெரியவந்தன. இந்தியாவில்

ராஜபார்ட்டாகப் பெரும் புகழ் படைத் தவர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ். இவர் சிகை அலங்காரத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எத்தனையோ அவ மானங்களைப் பட்டவர். 1911 ல் காந்தியடிகளைத் தூத்துக்குடியில் சந்தித்த பின்னர் நாடக மேடையை, சுதந்திரப் பாடல் மேடையாக்கிப் பாடியதால் வெள்ளை யர் ஆட்சியில் 29 முறை சிறை சென்ற தேசபக்தர். பல தேசியத் தலைவர்கள் இவரது நாடகம் என்றாலே முன் வரிசையில் இருந்து ரசிப்பார்கள். இந்தத் தேச பக்தருடன் நாடகமாடிய அனுபவம் பற்றிச் சொல்லும்படி கேட்பேன்.
பழன் செல்லையா சொண் டுக்குள் சிரித்துக் கொண்டே “மகா கலைஞன் அப்பா விஸ்வநாதன், மிகப்பெரும் கலைஞன்” என்றார், ஒருநாள். இதைச்சொல்லிக் கேட்கும் போது எண் தேகம் எலி லாம் புல்லரித்தது.
தகரக் கொட்டகையில் கோவலன் நாடகம். கோவலன் விஸ்வநாததாஸ். மாதவியின் மாமா நமது செல்லையா. கண்ணகியிடம் பணம் பெற்றுவர மாதவியின் வீட்டி லிருந்து கடிதமெழுத முற்படுகிறார், கோவலன் விஸ்வநாததாஸ். பபூன் செல்லையாவிடம் காகிதம் எழுதப் பத்திரம் ஒன்று தரச்சொல்லிக் கேட்கும் காட்சி. பபூன் செல்லையா ஒரு சிறிய கடதாசித் துண்டைக் கொண்டு வந்து நீட்டுகின்றார். கோவலன் கேட்டார்: "உனக்கு மூளை கீழை இல்லையா? இத்தனை சிறிய பத்திரத்தில் எப்படிக் கடிதம் எழுதுவது?" என்றார்.
உடனே பபூன் செல்லையா பதில் சொன்னார்: "உங்களது தேவைக்கு இது போதுமென்று
எண்ணினேன்.” எனக் குறிப்பால் விஸ்வநாததாஸின் சாதியைக் குறிப்பாக உணர்த்திக் கிண்டல் பண்ணினார். அதாவது ஷேவெடுத்த பின்னர் சவர்க்கார நுரை துடைப்பதற் கேற்ற துண்டுக் கடதாசி என்பது இதன் உள் அர்த்தம்.
கூட்டம் இந்த உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு பெருங்கூச்சலிட்டுச் சிரித்தது. எனது தகப்பனாரும் ஒரு தரமான நாடக ரசிகர். இந்த இழிந்த தாக்குதல் அவரது நெஞ்சைப் புண்படுத்திவிட்டது. ஒரு சாதியைத்
தாழ்த்துவதல்ல இங்கு பிரச்சினை.
ஒரு கெளரவமான தொழிலை இப்படி கேவலமாக ஒரு பொது மேடையில் கிண்டலடித்து விட்டார்களே என ஆத்திரப்பட்டார்.
அடுத்த சனிக்கிழமை அடுத்த நாடகம் பவளக்கொடி. இதே ராஜ பார்ட்தான், இதே ஸ்திரிபார்ட்தான்,
இதே பபூன்தான்.
ஜோசப் சலூனில் மூன்று துடிப்பான, தரமான, தொழிலாளிகள் இருந்தார்கள். அந்தோனிப்பிள்ளை, ராஜேந்திரம், சுவலைக்கந்தையா என்பவர்கள். இவர்கள்தான் நாடக நடிகர்களுக்கு மேக்கப் போடுவதற்கு முன்னர் முகச்சவரம் செய்து விடுவது. இவர்கள் நான் முந்தி நீ முந்தி என அவசரப்படுவார்கள். இலவச டிக்கட் கிடைப்பது மாத்திர மல்ல, இப்படியான பிரபல கலைஞர் களைத் தொட்டுப் பார்த்தோம் என வெளியில் பெருமை பேசுவதற்கும் இது உதவியாக அமைந்திருந்தது.
அப்பா அவர் களுக்குச் சடுதியான உத்தரவு ஒன்றைப் போட்டு வைத்தார். “இண்டைக்குப் பின்னேரம் நாடகம். என்னைக் கேக்காமல் ஒருத்தரும் கொட்டகைப் பக்கம் போகக்கூடாது; கவனம்!"
ğDCCoa 47 RN

Page 26
அந்தக் காலத்தில் வேறு சலூன்களும் இல்லை; இக்காலம் போல, சுயசவரம் செய்யும் சாதனங் களும் இல்லை. நேரம் போனது. கொட்டகையிலிருந்து ஆளுக்குமேல் ஆட்கள் வந்து கொண்டிருந்தனர்.
"ஷேவெடுக்க ஆட்கள் வர ஏலாதாமெண்டு போய்ச் சொல் லுங்கோ” இது அப்பாவின் விடை. கடைசியாக முடிவுரையைத் தொகுத்துச் சொன்னார் பபூண் சண்முகம். "நேரமோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் கொட்ட
கைக்குள் வந்துகொண்டிருந்தனர்.
ஆனால் ஒப்பனை முடிந்தபாடாய்க் காணவில்லை. சங்கதி நாடக முதலாளி துரைராஜா காதுக்கு எட்டிவிட்டது. அவசரமாக என்னைக் கூப்பிட்டார். உன்ரை அப்பரையும் ஆள்விட்டுக் கூப்பிடுவித்தார். நடந்த வற்றை விளக்கமாக எடுத்துச் சொன்னார் உன்ரை அப்பன்.
முடிவென்ன - தெரியாத்தன மாக, அறியாமையிலே மேடையில் பகிடிவிட்டுச் சொன்னதுக்காக நான் உன்ரை அப்பனிடத்திலே மன்னிப்புக் கேட்டுக் கொண்டன். பிறகென்ன, நாடகம் ஜாம் ஜாமென்று நடந் தேறியது. இது எனக்கொரு பெரிய அனுபவம். பெரிய பாடமொன்றை அன்றைக்குப் படிச்சுக் கொண்டன்.” தொடர்ந்து சிறுபிள்ளையின் உற்சாகக் கோலத்துடன் அவர் தங்களைப் பற்றியே சொல்லத் தொடங்கினார்.
"சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் அந்தக் காலத்திலை யாழ்ப்பாணத் திற்கு வந்த சமயம். நானும் கூட அவையளோட ஒரே மேடையில்
O O
48 S5
இந்தத் தகரக் கொட்டகையில் பவுனாக நடிச்சவன்தான். ரெண்டு மூண்டு மாசத்துக்கு முன்னம் கூட, சுந்தராம்பாள் யாழ்ப்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்கு வந்திருந்தா. அப்ப நான் சுகமில்லாமல் பெரியாஸ் பத்திரியிலை கிடந்தனான். அவ அப்ப ஒரு நாள் என்னைப் பாக்க ஆஸ்பத்திரிக்கு வந்தவ. அத்தோடை ஜந்நூறு ரூபாக் காசும் தந்திட்டுப் போனவ” என்றார்.
இளைஞனான எனக் குக் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கம் ஏற்பட்டது. என்னோடை கதைச்சுக் கொண்டிருக்கிற இந்த ஆள் பெரிய ஆசாமிதான் என மனசுக்குள் முடிவெடுத்துக் கொண்டேன்.
"அப்ப விஸ்வநாத தாஸைப் பற்றி இனி னும் கொஞ சம் சொல்லுங்கோவன்.” என எண் ஆவலை கி கேளிர் வியாகப் போட்டேன்.
நான் விஸ்வநாததாஸைப் பற்றி இத்தனை அக்கறையாக விசாரித்ததற்கு அர்த்தமுண்டு. என்னைப் போலவே அவரும் நாவித சமூகத்தைச் சேர்ந்தவர். எத்தனை எத்தனையோ சிரமங்களை, அவமானங் களைத் தாங்கிக் கொண்டு நாடகத் துறையில் காலூன்றி வளர்ந்தவர் என்பது ஒரு முக்கியமான காரணமாக அமைந்த தெனலாம். இப்பொழுது யோசித்துப் பார்க்கும் வேளையில் அவர்தான் எனக்கு ஆதர்ஸமாகத் திகழ்ந்து என்னை ஊக்குவித்தவர் எனச் சொல்லத் தோன்றுகின்றது.
(வாழ்வு தொடரும்)
O O


Page 27
புதுப் பொலிவுடன் மலர்ந்துள்ள மல்லிகை கிடைத்தது, மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
பட்டமரம் துளிர்த்தது போன்ற, தொலைந்து போன பொருள் கைக்குக் கிடைத்தது போன்ற பரவச உணர்வடைந்தேன். எத்தனையோ கஷ்டங்கள், இடையூறுகள் ஏற்பட்ட வேளையிலும் சோர்ந்து போய், செயலற்றுப் போய்ச் சோம்பியிருக்காத இயல்புகளைக் கொண்ட தங்களால்தான் இப்டியொரு செயலைச் செய்யமுடியும்.
நாட்டின் நிலைமையில் விரக்தியின் விளிம்பில் வாழும் செயலற்ற நிலையில் நின்று கொண்டிருக்கும் எமது மக்களுக்குச் செயலூக்கம் தருவதாகவே தங்களது இம்முயற்சி அமைந்துள்ளது. இதுவரை காலமும் சென்ற தடத்திலேயே தொடர்ந்து மல்லிகை பீடு நடை போடுவதையும் படைப்புகள் யாவும் மல்லிகையின் தனித்துவத்தைப் பேணுவதையும் புதிய வரவில் தரிசிக்கின்றேன்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இதயபூர்வமாக ஈடுபட்டுள்ள தங்களுக்குச் சுவைஞர்கள், கலைஞர்களின் கருத்துக்கள் உற்சாகம் அளிப்பதாக அமையட்டும்.
க. சதாசிவம். புலோலியூர்.
LDல்லிகை கிடைத்தது. கொழும் பிலிருந்து அதை வெளியிடுவது சாலச் சிறந்தது. இன்றைய சூழ்நிலை சரியான நிலத்தினை மிக்க கடினமயமாக்கி, அடித்தளம் இட்ட இலக்கிய விற்பன்னர்களை வரலாறு தெரியாதோர் அப்படியே அகற்றி விடப்பார்க்கின்றனர். இலக்கியச் சிந்தனைகளிலும் தடுமாற்றங்கள் செவ்வனே தைரியமாக நிலை நிறுத்தச் சில ஜாம்பவான்கள் பயப்படுகின்றனர். இக்கட்டத்தில் மல்லிகை வரவு நல்லதே,
"உரைகல்” எனும் கைலாஸ் போன்றோர் இல்லாதிருந்தால் பெறுமதியற்றதும் சந்தையில் ஜொலித்திருக்கும். விற்பனை யாகியிருக்கிறது. அது வேறு விடயம்.
ஏ. இக்பால்.
LDல்லிகையின் மீள் வருகை மனதுக்குத் தெம்பாய் உள்ளது. மிகச் சிரமங்களை உள்வாங்கி கொழும்பிலிருந்து புதுப் பொலிவுடன் வந்திருந்த மல்லிகையின் ஆக்கங்களும் சோடை போகவில்லை. ராஜ ரீகாந்தனின் "எரிதணலில் வாழும் மனிதம்” என்னை வெகுவாகப் பாதித்தது.
ஒட்டமாவடி - அறபாத்.
一ン
50 čo 6555
N
 
 
 
 
 

மல்லிகையை காண்பது, ஸ்பரிசிப்பது, வாசிப்பது, அது பற்றிச் சிந்திப்பது எத்தனை நிறைவானது. குமுதம் சஞ்சிகையை முன்பு திறந்தால் வாசனை குப்பென்று முகம் துளைக்கும். ஆனால் எமது மல்லிகையை நினைத்தாலோ மணம் மனதை நிறைத்து விடுகின்றது.
எத்தனை துன்பங்களை, இழப்புக்களை இடம்பெயர்வுகளை நாம் எல்லோரும் (மல்லிகை உட்பட) சந்தித்து விட்டோம். ஆனால் இம்மாத தலையங்கத்தில் நீங்கள் "வாழ்வுத் துடிப்புள்ள ஓர் இனம் தனது இருப்பை இந்த வண்ணம் வெளிக்காட்டி வருவது நம்பிக்கை யூட்டுகிறது, எனவும் சூழ்நிலைத் தாக்கத்தினால் துவண்டு போய் விடாமல் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு உயிர்ப்புடன் செயல்பட்டு உழைத்துவரும் அனைவரையும் பாராட்டுகிறோம் எனவும் நாடகத்துறை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். s
நாடகத்துறை பற்றி நீங்கள் எழுதியது மல்லிகைக்கும் எவ்வளவு பொருந்துகின்றது. இழப்பீடுகளுக்கு மத்தியிலும் துவண்டுவிடாது, நமிர்ந்து நின்று செயலாற்றும் உங்களைப் போன்றவர்களால் எமது இனம் நிச்சயம் தழைத்து வளரும். தெணியானின் கடிதம் அவரை நேருக்கு நேர் கண்டு கதைத்தது போன்ற திருப்தியைத் தந்தது. மல்லிகை குடும்ப அங்கத்தவர் ஆக்கங்கள் வாழமைபோல நன்றாக இருந்தன. கொழும்பில் நவீன அச்சக வசதிகளைப் புதிய மல்லிகையில் காணக்கூடியதாக இருந்தது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டாக்டர். எம். கே. முருகானந்தன்.
வெள்ளவத்தை
ン ܢܠ
opg|Ga 51

Page 28
N ளியீடுகள்
0.
1.
2.
14.
15.
16.
೪.
மீன்குஞ்சுகள் - ச.முருகானந்தன் பித்தன் கதைகள் m கே.எம்.எம்.ஷா அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம் தலைப்பூக்கள் - டொமினிக் ஜீவா (65 மல்லிகைத் தலையங்கங்கள் ) துண்டில் - டொமினிக் ஜீவா இரண்டாம் பதிப்பு )
அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில கைலாசபதி - டொமினிக் ஜீவா (தொகுப்பு நூல், இரண்டாம் பதிப்பு)
மீறல்கள் - மு.பவர் விடை பிழத்த கணக்கு - திக்குவல்லை கமால் மாத்து வேட்டி - தெணியான் எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் - தேவகெளரி
டொமினிக் ஜீவா - சிறு கதைகள் (ஆசிரயராலேயே தேர்ந்தெடுக்கப் பெற்ற 50 சிறுகதைகளின் - தொகுப்பு)
. மல்லிகை முகங்கள்
(55 தகைமையாளரின் அட்டைப்படத் தகவல்கள்)
தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் ஒரு தேவதைக் கனவு - கெக்கராவ ஸஹானா அந்தக் காலக் கதைகள் - தில்லைச் சிவன்
201, 1/1, றுநீகதிரேசன வீதி, கொழும்பு - i3
 
 
 

டொமினிக்ஜீசா
நானொரு உயர் கல வி மாணவன். எனக்கொரு சந்தேகம், அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்ததாம்! இந்தப் பழமொழியை நினைத்து நினைத்து நான் யோசிப்பதுண்டு. இந்தப் பழமொழி சொல்லும் கருத்துக்கள் சரியானவைதானா?
ம. ராஜேந்திரன்
பதுளை.
இந்தப் பழமொழியின் உண்மை வடிவம் இப்படித்தான் உள்ளது. பின்னர் காலப் போக்கில் திரிபடைந்து விட்டது. அப்பழ மொழிக்கு வேறு அர்த்தமும் கற்பிக்கப்பட்டுவிட்டது. "அறவடித்த முன் சோறு, கழுநீர்ப் பானைக்குள் விழுந்தது போல்." இதுதான் அர்த்தமுள்ள பழமொழி யாகும்.
O O O 0
முன்னர் ஒரு பேட்டியில் மல்லிகை யின்வேர் யாழ்ப்பாணத்தில் சிக்கார மாக வேரூன்றியுள்ளது. எனவே
யாழ் மண்ணில் இருந்துதான் மல்லிகை தொடர்ந்து வெளிவரும்” எனச் சொல்லியிருந்தீர்களே, இப் பொழுது கொழும்பில் மல்லிகை வெளிவருவதையரிட் டு எண் ன சொல்லப் போகிறீர்க்ள்?
எஸ். தவேந்திரன் வவுனியா.
நான் பேட்டியில் அப்படிச் சொன்னது உணி மை தான் . இலட்சியம் வேறு, நடைமுறை யதார்த்தம் வேறு; யாழ்ப்பாணத்தில் இருந்து மல்லிகையை வெளியிட வேண்டும் என்ற மன ஓர்மத்துடன் தான் வேலை செய்து வந்தேன். ஒரு வருடமாகக் காத்திருந்தேன். நிலைமை சாதகமாகவில்லை. கொழும்பில் வாழ்க்கைப் பிரச்சினை வேறு சிரமத்தை அதிகப்படுத்தியது. “உங்களை மல்லிகை ஆசிரியர் என்றுதான் மக்கள் ஞாபகத்தில் வைத்துள்ளனர். அதைக் காலப் போக்கில் போக்கடிக்கப் போகிறீர் களா?” என என்னை நேசிக்கும் நண்பர்கள் கேட்டனர். இது ஒரு நிலைமை.
மல்லிகைப் பந்தல் மூலம் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளம் படைப்பாளிகளின் நூல்களை இந்தப் புலம் பெயர்வுக் கால கட்டத் தில் வெளியிட்டுக் கணிசமான பணத்தை முதலீடு செய்துள்ளேன். இதை அங்கிருந்து சந்தைப் படுத்த இயலுமா? அதற்கான வாய்ப்பு வழிகள் அங்குண்டா? இது அடுத்த பிரச்சினை.
இதைப் பற்றி ஆழமாகப் பல இரவுகள் யோசித்துப் பார்த்தேன். எங்கிருந்து செய்கின்றோம் என்பது
ético 53 Sa Lam

Page 29
முக்கியமல் ல, என்னத்தைச் செய்கின்றோம் என்பதே கவனிக்கத் தக்கதாகும் என்ற முடிவுக்கே கடைசியில் வந்துள்ளேன்.
சீர்தூக்கிப் பார்க்கும் போது எனது இன்றைய முடிவு சரியானதாகவே எனக்குப்படுகின்றது. விமர்சிப் பவர்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும்!
0 O O O மல்லிக்ைக காரியாலயம் யாழ்ப் பாணத்தில் இன்று என்ன நிலையில் உள்ளது?
என. பதமநாதன கொழும்பு-6.
மல்லிகையின் அத்திவாரமான சகோதரர் சந்திரசேகரம் அவர்கள் இன்றும், இந்த நிலையிலும் மல்லி கைக் காரியாலயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அடிக்கடி தகவல் சொல்லி அனுப்புவார். எப்படியும் மல்லிகையைப் பழையபடி இங்கிருந்து வெளியிட வேண்டும் மென்பதே அந்தத் தகவலின் பெரும் பாலான கோரிக்கையாகும்.
O O O O யாழ்ப்பாணத்தில் மல்லிகை யை வெளியிட்டதற்கும் கொழும்பி லிருந்து மல்லிகை வெளிவரு வதற்கும் உள்ள சாதக பாதகமான அம்சங்கள் என்னென்ன?
ஆர். சிவனேசன் ஹட்டன்.
என்னை உருவாக்கி, சிந்திக்க வைத்து, சிறப்படைய வைத்தது .ந்த யாழ்பாணத்து மண்தான். முப்பது வருஷங்களுக்கு மேலாக அந்த மண் ணின் காற்றைச் சுவாசித்து, நீரை அருந்தி, அம் மண்ணில் விழுந்து புரண்டு வளர்ந்து
54
R
வந்திருக்கின்றேன். அது தனி அனுபவம். ஆனால் அச்சுக்கலையும் தொடர்பு சாதன வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க வகையில் உலகம் பூராகவும் வளர்ந்து வருகின்றன. அந்த அசுர வளர்ச்சிக்கு நாம் நம்மை ஈடுகொடுக்காமல் பின்தங்கி விட்டால் இயல்பாகவே பின்தள்ளப் பட்டு விடுவோம் என்றபயமும் எனக் குண்டு. அங்குள்ள சூழ்நிலை வேறு, இங்குள்ள சூழ்நிலை வேறு, வேலை செய்பவனுக்கு சூழ்நிலை முக்கியம். சாதனங்களின் தொடர்பு அதைவிடப் பிரதானம். இரண்டிற்கு முள்ள வித்தியாசங்கள் இவைகள் தான்.
O 0 O O சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றைப் பற்றிச் சொல்ல முடியுமா? த. மோகன் கொழும்பு-2
தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழரசு இலக்கிய மலர் பார்த்தேன். பொதுவாக அரசு அமைப்புக்கள் வெளியிடும் புத்தகங்கள் உப்புச் சப்பில்லாமல் இருப்பதுதான் அரச நியதி. மாறாக அருமையான சிறுகதை, கட்டுரை, கவிதைகளுடன் மலர்ந்துள்ள அந்த மலரை படிக்கும
‘போது மனசுக்கு இதமாக இருந்தது
100 பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் மலரை அழகு செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இலக்கியச் சாதனை இது என்றே கூறலாம்.
O 0 O O யாழ்பாண மல்லிகைக் காரியா லயத்திற்கு வந்து போகின்றவர்களும் கொழும்பில் மல்லிகைக்குவந்து போகின்றவர்களும் ஒரே தரத்தினரா? ஒரே வகையினரா?
எம். சுரேந்திரன் வெள்ளவத்தை,

அப்படிச் சொல்லிவிட முடியாது. அங்குள்ளவர்களின் மனப்பான்மை யையும் இங்குள்ளவர்களின் மனப் பான்மையையும் ஒப்பிட்டுக் கூற முடியாது. யாழ்ப்பாணத்தில் உரு சைக்கிள் வாகனம் இருந்தாலே போதும். ஊரைச் சுற்றி சுழன்று வந்துவிடலாம். அப்படித்தான் சைக் கிள் வாகனமொன்றை வைத்துக் கொண்டேதான் அரைநூற்றாண்டு காலம் யாழ்ப்பாண வாழ்க்கையில் தினசரி இயங்கி வந்தேன். இங்கு அப்படி வாழ முடியாது. இது தலை நகர். தலை நிறைய வேலை பரந்த பிரதேசம், மூலைக்கொருவர் வாழும் வாழி க் கை . சாவகாசமாகச் சந்திப்பதே அபூர்வம். போக்குவரத்தில் பிரச்சினை வேறு. இவைகள் அத்தனையையும் தாண்டி, என்னை நேசிக்கும் நண்பர்களும் என்னால் நேசிக்கப்படும் நண்பர் களும் அடிக்கடி வந்து போகின் றார்கள். இது எனக்கு நிறைவைத் தருகின்றது.
O O O O கொழும் பிலி வாழ்க்கைச் செலவை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? இலக்கியம் சோறு போடுகிறா?
ஆர். சோமதேவன் வவுனியா.
உண்மையை நம்புங்கள். இது நம்புவதற்குச் சிறிது கஷ்டமாகத் தான் இருக்கும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அங்கும் இங்கும் எனக்கு இலக்கியம்தான் சோறு போட்டு வருகின்றது. என் குடும்பத்துக்கும் சோறு போட்டு வருகின்றது. அந்த மன நிறைவு எனக்கு எப்போதும் உண்டு.
O O O O கெக் கிராவ ஸஹானாவின்
சிறுகதைத் தொகுதி ஒன்றை
நணி பர் களைச்
மல்லிகைப் பந்தல் வெளியீடாக அந்தக் கெக்கிராவையில் நீங்கள் வெளியிட்டு வைத்ததாகப் பத்திரி கையில் படித்தேன். அந்தச் சமயத்தில் உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?
எம். லத்தீப் - மாவனல்ல
விழாவில் நண்பர் அன்பு ஜவஹர்ஷா சொன்னது என் மனசைத் தொட்டது. வட மத்திய மாகாண வரலாற்றில் . கெக் கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றிலும் கூட இப்படி ஒரு படைப்பு இலக்கியம் வெளிவந்தது இதுவே முதல் தடவை எனக் கூறினார். இதைக் கேட்டு என் மெய் சிலிர்த்தது. மல்லிகை அல்லது எனது உழைப்பு ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல, அது இந்த நாடு பூராவும் பரந்தது என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.
O O O O நீங்கள் புலம் பெயர்ந்து வந்து கொழும் பில் வேர் பிடிக்கத் தொடங்கியதும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?
எஸ். ராஜன் நீர்கொழும்பு
ஏறாலமான அனுபவங்களைக் கற்றுக்கொண்டேன் பல புதிய இலக் கிய நெஞ்சங்களின் புதிய உறவுகள் கிடைக்கப்பெற்றன. மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் நான் முன்னர் எதிர் பாராத பிரதேசங்களுக்கெல்லாம் சென்றடையக்கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்பட்டன. மல்லிகைக்கும் கொழும்பில் புதிய காரியாலயம் திறக்கப்பட்டுள் ளதைக் கேள்விப்பட்டுப் பலர் பல பிர தேசங்களில் இருந்தெல்லாம் மகிழ்ச்சிநிரம்பிய கடிதங்களால் என் நெஞ்சைக் குளிப்பாட்டி வரு கின்றனர். வெளிநாடுகளுடன்
ğDC-Cola 55
ئر

Page 30
குறிப்பாகத் தமிழ் நாட்டு நண்பர் களுடன் தொடர்பு கொள்ளச் சுலபமாக முடிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடப்பட்டது என்னமோ உண்மை தான். இன்று புதிய நம்பிக்கை என் நெஞ்சில் பிறந் துள்ளது. சகலதும் மல்லிகைக்கே உரியது.
0 . 0 O 0 நான் ஒரு தடவை யாழ்ப்பாணம் வந்திருந்த சமயம் மல்லிகைக்கு வந்து உங்களைச் சந்தித்திருக் கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ என்னமோ தெரியாது. இப்பொழுது உங்களைப் பார்த்துப் பேச ஆசைப்படுகின்றேன். எப்பொ ழுது வரலாம்?
என். ரகுவரன் - ஜாஎல.
5Tலை 8 மணியில் இருந்து பகல் 12 மணிவரைக்கும் அப்புறம் 1 மணியிலிருந்து 5 மணிவரைக்கும் நான் காரியாலயத்தில் தான் இருப்பேன். சாவகாசமாக வந்தால் சந்திக்கலாம். அப்புறம் ஒன்று
யாழ்ப்பாண மல்லிகைக் கந்தோ
ருக்குத் தினசரி ஏராளம் பேர்கள்
வந்து சந்திப்பார்கள். அவர்கள் எல்லாரையும் என்னால் ஞாபகத்தில் வைத்திருக்க இயலாது. நேரில் வாருங்கள் ஒருவேளை உங்கள் முகத்தைப் பார்த்ததும் ஞாபகம் வரலாம் . எதற்கும் நேரில் வாருங்கள்.
O 0 O O
யாழ்ப்பாண மல்லிகை வாச கர்களுக்கும் கொழும்பு வாசகர்க ளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
எஸ். செல்வகுமார் - மருதானை.
30 ஆணி டுகளாக இடைவிடாமல் தொடர்பு கொண்ட வாசகர்கள் யாழ்ப்பாணத்துச் சுவை ஞர்கள், என்னை ஆதரித்தவர்கள், வளர்த்தெடுத்தவர்கள், அன்புகாட்டிய வர்கள், என்னைக் கோபப்படுத்திய வர்கள். இங்குள்ளவர்களில் ஒரு பகுதியினரைத்தான் ஏற்கனவே தெரி யும். மற்றுள்ளோரை இப்பொழுது தான் பார்க்கின்றேன், பழகுகின்றேன். தெரிந்துகொள்ள முற்படுகின்றேன். காலம் செல்லட்டும். அதன் பின்னர் எனது கருத்துக்களைச் சொல்ல முற்படுகின்றேன்.
ارمنس
201-1/1, பூறி கதிரேசன் வீதி கொழும்பு - 13 முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும் வெளியிடு பவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கலர்டொட்ஸ் நிறுவனத்தில் கணனி அச்சுக் கோர்வை செய்யப்பட்டு, "பிறஸ்மார்க்" 115 புளூமென்டல் வீதி, கொழும்பு -13 அச்சகத்தில்
அச்சிட்டு வெளியிடப்பெற்றது
56 ğDESCO
RN
 
 
 
 

சுத்தமான சுவையான சுகாதார Y843úug SW/rféð5úuÚvசிற்றுண்டி வகைகளுக்கு
சிகாழும்பு மாநகரில் பீரசீத்தி பெற்ற ஹோட்டல்
லீப்பொழும் நினைவில் வைத்திருக்கத் தக்க பெயர்
98, பாங்ஸால் எப்ட், oldfillTylidly - II GldТЕЛЕВLIf:-2á47на

Page 31
لأرايا
Expor :Non Tit Sri /Ca1uKa
30, Sea , CO|| Onn e - 5
it, F
تپLi==i+i
݂ ݂ ݂ |-
. ܚ
 
 

ters of lditional 魯 an Foods
:
A Wern Lue, |DO –Յ.
SSS SDS SS F
15 1
- 円
།
in ി
ܨܢܕܘ.
- :
- ད། །