கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2001.06

Page 1
எஸ். தில்
திரு.
: 20/-
Հեյքl)
வி
 
 

s s----TTT

Page 2
१
RANI GRINDING MILLS
ནི་
219, Main Street, Malatle, Sri Lanka.
Phone : 066-2425
SSS SSS SS SS S SS S SMS SM S SMSS SMS S SS S SMS SMSS SMSCSS SSekSkBS LLLBSBS SSSS SSS SLSSSkSS SS SS SSLSLSSSLS SSSSkLSSS SS SSSS
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS: AGROCHEMICAL, SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
No. 85, Ratnajothy Sarawananmuthu Mawatha, (Wolfendhal Street), Colombo 3.
Phone : 32701 1
 
 

ပြိးစား။ :၅၈၈ဂါးဓါ ́စ_၏ဧm;\* ''. ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
* 6 டுதல் பாடுதல் சித்திரம் கவி '
ய
முல்லிகை
క్ట
E-Mail: panthalasitnetik
縁
x
உண்மையிலேயே பிரமிப்பாக இருந்தது, எனக்கு
எனது பவள விழா ஞாபகார்த்தமாக நான் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இலக்கியச் சுற்றுப் பயணம் போய் வந்த சம்பவங்களை 'முப்பெரும் தலை நகரங்களில் 30 நாட்கள்' என்ற பெயரில் ஒரு பிரயாண நூலாக்கி அன்று வெளியிட்டு வைத்தேன். ஒவ்வொரு பிறந்த நாள் ஞாபகார்த்தமாகவும் ஒரு நூலை வெளியிட்டு வைப்பது எனது திட்டம்.
அதற்கமைவாகவே இந்த ஆண்டும் ஒரு புதிய நூலை வெளியிட்டு வைத்தேன். அது சம்பந்தமாக உள்ளங்கையளவு அறிந்ததை என்னை இதய பூர்வமாக நேசித்து வந்த இலக்கியச் சுவைஞர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
காலை 7.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை அந்தச் சந்திப்பு மல்லிகைப் பந்தல் காரியாலயத்தில் நிகழ்ந்தது.
பாராளுமன்ற அங்கத்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகத்தறையினர், எழுத்தாள நண்பர்கள், நட்புப் பெருமக்கள் அன்றைய தினம் கட்டம் கட்டமாக வந்து என்னை வாழ்த்தி வரவேற்றனர்.
அந்த வாரம் மட்டும் 200க்கு மேற்பட்ட புத்தகங்கள் நண்பர்களால் வாங்கப்பட்டது, ஓர் ஆரோக்கியமான முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
எனக்கே திகைப்பாக இருந்தது. எத்தனை எத்தனை வகையான மனிதர்கள் என்னைத் தேடி, மல்லிகைக் கந்தோருக்கு வந்து என்னை வாழ்த்திச் சென்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே என் நெஞ்சு நன்றியுணர்வால் விம்முகின்றது. வாழ்த்துக்கள் வெறும் சும்மா வசனங்களல்ல. அந்த ஆத்மார்த்திகமான இதயங் கனிந்த வாழ்த்துக்களின் வீரியத்தை எனது

Page 3
மணிவிழாவின் போது நான் நன்குணர்ந்து கொண்டவன்.
மணிவிழாவில் தொடங்கி வைத்த இந்த வாழ்த்து அலைகள் தான் இதுவரையும் எனது தேகாரோக்கியத்தையும் வாழ்வின் சுபீட்சத்தையும் இடையறாத உழைப்பையும் நல்கி வருகின்றதென்பதை மெய்யாகவே இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
எழுத்தாளன் என்கின்ற முறையில் இத்தனை நண்பர்களையும் ஒருங்கு சேர என்து ஆத்ம நேசர்களாகப் பெற்றிருப்பதே எனக்கு மிகப் பெரிய கெளரவம்தான். எனது கருத்துக்கு மாறுபட்ட பலர் கூட, நேரில் வந்திருந்து எனது உழைப்பை மேன்மைப் படுத்திக் கெளரவித்திருப்பதென்பது மற்றவர்களுக்குக் கிடைத்திருக்காத பெரும் பேறு என்றே கருதுகிறேன்.
நாட்டின் பல்வேறு திசைகளிலிருந்தும் இந்திய, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, கனடிய நாடுகளில் இருந்தெல்லாம் தொலைபேசியிலும் கடிதங்களிலும் என்னை வாழ்த்திய இலக்கியப் பெரு நெஞ்சங்களுக்கு நான் எப்படி எனது நன்றிகளைச் சொல்வது என்பது எனக்கே தெரியவில்லை.
இந்தப் பின் புலத்தில் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களது தலைமையில் 40 பேர்களைக் கொண்ட பவளவிழாக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ஒன்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்சி.
இந்த நாட்டுப் படைப்பாளிகளைப் பொது மக்களும் சமூகப் பிரமுகர்களும் எத்தகைய அளவிற்குத் தெரிந்து வைத்துள்ளனர் என்பதற்கு இந்த நிகழ்ச்சியின் பிரசித்தமே தகுந்த உதாரணமாகும். இந்த நாட்டுச் சிருஷ்டியாளர்களை இத்தனை பிரபலமாக்கியது அவர்களுடைய படைப்பாற்றல் மாத்திரமல்ல, தினசரிப் பத்திரிகைகள், வானொலித் தகவல்கள், தொலைக் காட்சிகளின் பங்குப் பணியை என நான் முக்கியமாகக் கருதுகிறேன்.
தனிமனிதர்களை உச்சிக்குச் சுமந்து சும்மா ஒப்புக்குப் புகழ்ந்து தள்ளுவது விரும்பத்தக்க ஆரோக்கியமான இலக்கியச் செயலல்ல என்பதை முழுமையாக ஒப்புக் கொள்பவன், நான். அதே சமயம் ஒரு துறையில் தனி மனிதர்களின் பங்களிப்பை அசட்டை செய்து ஒதுக்கித் தள்ளுவதும் சரியான செயலல்ல.
இந்த நாட்டுக் குத் தரமான படைப் பாளி ஓர் அரசியல் தலைவரது முக்கியத்துவத்தைப் பெற்றுத் திகழ்வதற்கு நமது ஊடகங்களே பெரிதும்
உறுதுணையாகக் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்துள்ளதைப் பலமேடைகளில்
பாராட்டி வந்துள்ளேன். அவைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இத்தனை மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைந்த எனது அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய மன மார்ந்த நன்றிகளைத் தெரிவிதுக் கொள்கின்றேன்.
டொமினிக் ஜீவா.

Eo DSS
தமிழ் சினிமாவில் ஆளுமையை வடிவமைத்த நடிகனர்
தமிழ் சினிமாவில் புராண, ராஜா ராணிக் கதைகள் வெளிவந்து, பாமர மக்களைப் பாமர மக்களகவே வைத்திருக்கும் முயற்சியைச் செய்து வந்திருக்கும் கால கட்டத்தில் தமிழ் திரையுலகில் பராசக்தி என்றொரு திரைப்படம் வெளிவந்து, கீழ்த்தட்டு ரஸிகள்களிடம் சென்றடைந்தது.
திரையுலகில் இப்படம் வியந்து பேசப்பட்டது. அதில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் சமீபத்தில் மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள்.
அவரது நடிப்பை மிகை நடிப்பு எனக் கூறி, விமர்சிக்கப்பட்டது, என்னமோ உண்மைதான். இதற்குக் காரணம் தமிழ் சினிமா ரஸிகள்கள் நவீன கண்டுபிடிப்பான சினிமாவையும் நாடக ரஸனைப் பாங்கில் ரஸித்துச் சுவைத்ததுதான். அதற்கமையவே அவரது நடிப்பு இடம் பெற்றது.
அவரது முதல் மரியாதை' என்ற திரைப் படத்தைப் பார்த்தவர்கள் அப்படியே பிரமித்துப் போய் விட்டார்கள்.
சுயநசிவுக்கு உட்பட்டிருந்த தமிழ் சினிமாத் துறையை நிமிர வைத்துப் புதுப் பலமூட்டிய கலைஞன். சிவாஜியிடம் உள்ள மிகை நடிப்புக்குக் கூட, தமிழ் சினிமாவின் நாடகத் தாக்கம்தான்அந்தச் சுவைஞர் கூட்டத்தின் பெருவிருப்பம் தான். உலகத் தரத்து நடிப்புக் கலைஞானாக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ள காரணத்தாலேயே இவருக்கு பிரான்ஸ் நாடு சிவாலியர் என்ற பட்டத்தைத் தந்து இந்திய நாட்டையே கெளரவித்து மகிழ்ந்ததை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஞபகப்படுத்துகின்றோம். காரணம் எனப் பின்னர் உணரக் கூடியதாக அமைந்தது.
தமிழ் சினிமா கண்டெடுத்த மகத்தான கலைஞன் தான் சிவாஜி கணேசன். அன்னாரது மறைவுக்காக இலங்கை ரஸிகர்களின் சார்பாக மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கின்றது.

Page 4
I. DAGOGO
இனிய சுபாவம் எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும் துவளாத மலர்ச்சியான முகம், கோபம் வரமாட்டாதோ என்று வியக்க வைக்கும் வகையிலான ஒரு பண்பு!
கடமைகளைச் சவால்களுக்கு மத்தியிலும் பொறுப்போடு செவ்வனே நிறைவேற்றும் செயலார்வத்துடன் கூடிய அரிய தன்மை நிருவாகச் செயற்பாடுகள், ஆள் புலம் தொடர்பான விபரங்கள் - நிலைமைகள் மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், நாடகம், ஆன்மீகம் என்று எந்த விடயமாக இருந்தாலும் எந்த வேளையிலும் எதுவித முன் ஆயத்ருமுமின்றி அழகாகவும் ஆழமாகவும் சூழ்நிலைக்கேற்ப ஆணித்தரமான கருத்துக்களைக் கூற்வல்ல திறமையை இயல்பாகவே வரப்பெற்றவர்.
இவ்வளவும் ஒருங்கே இணையப் பெற்ற அன்பர் - தில்லை நடராஜா! அவரோடு நெருங்கிப் பழகுபவர்கள், அவரை ‘தில்லை' என்று அன்பாக அழைப்பார்கள், கலை இலக்கியம், நாடகம் என்றால் போதும். நேரம் போவது தெரியாது. பசி தாகம் என்பவையும் ஏற்படாது. கலைத்துறை அவருடைய பொழுது போக்கு அம்சம் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டால் அதனைக் கொச்சைப்படுத்தியதாக ஆகிவிடும். இந்தத் துறைகள் அவருடைய உயிர் மூச்சு. எழுதுவார், நடிப்பார், நாடகங்கள் தயாரிப்பார். நன்றாக மேடைகளில் பேசுவார். இவற்றில் சமூக நலன்களுக்கான ஆழமான விசுவாசமும் கடின உழைப்பும் இழையோடியிருக்கும். இதுதான் அவருடைய அரச கடமைகளுக்கு அப்பால் உள்ள அவருடைய வேலைகள்,
அரச கடமைகளில் எவ்வளவு சுமையிருந்தாலும் கலைஞர்கள், எழுத்தாளர்களைச் சந்திப்பதென்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விடயம். அவரை அறியாத ஊடகங்கள் இல்லை. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி எனச் சகல உள்ளுர், வெளியூர் ஊடகங்களுக்கும் தில்லை நடராஜா நன்கு பரிச்சயமானவர்.
அவருடைய படைப்புகளும் ஆழமாக இருக்கும். இதன் காரணமாக அவருடைய படைப்புகள் பரிசுகளை வென்றுள்ளன. அவர் நடித்த நாடகங்களும், தயாரித்த நாடகங்களும் மேடைகளில்
 
 

சக்கைபோடு போட்டிருக்கின்றன. நாடகம் அரங்கேறுமி மணி டபங் களி லுமி மைதானங்களிலும் அவருக்காகவே கூட்டம் அலைமோதும்,
ஊடகங்களுக்கு அவரால் தெரிவிக்கப் படும் நிலைப் பாடுகள் தொடர்பான தகவல்களில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், பிரதேசங்களின் யதார்த்த நிலைமைகளைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் நிறையவே இருக்கும். முரண்பாடுகள் இருக்காது. தெளிவான விடய அனுபவக் கருத்துக்கள் அவற்றில் பிரதிபலிக்கும்.
அதனால் அவருடனான பேட்டிகள் அநேகமான  ைவ செய் தயாகவே ஊடகங்களில் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த வகையில், அவர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றியபோது இராணுவக் கட்டுப் பாடற்ற வன்னிப் பகுதியின் நிலைமைகள் குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு வழங் கய பேட் டி, கேட்போரைக் கலங்கி வருந்தச் செய்தது. பல்வேறு உணர்வலைகளைப் பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியது.
பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக அரச சேவையில இணைந்து, பின்னர் போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு நியமனம் பெற்றுக் கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றி முதன் முதலாக வவுனியாவில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளுக்கான பணிப்பாளர் பதவியையும் வகித்ததன் பின்னர், அரசாங்க அதிபர், மேலதிகச் செயலாளர் எனப் பதவிகளில் படிப்படியாக உயர்ந்து வாழ்க்கையில் முன் நிலைக்கு வந்தவர் தில்லை நடராஜா,
அவர் வவுனியாவில பொலிஸ்
திணைக் களத்தில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே நாடகத் துறை ரசிகர்களுக்கு நன்கு
மூலம்
அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒழுங்கு செய்த அல்லது நடித்த நாடகங்கள் மேடையேறும் போது சரி ல வேளைகளில இயறி கையரினி இடையூறுகள் காரணமாக ஏற்படுகின்ற தாமதம், தடங்கல்கள் என்பவற்றின் போது ரசிகர்கள் பொறுமையிழந்து நடந்து கொண டாலும் புனி முறுவலோடு நிலைமைகளைக் கையாளும் நிர்வாகத் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். இந்த ஆரம்ப கால அனுபவம்தான் பின்னர் அவர்
வவுனியாவில் அரசாங்க அதிபராகக்
கடமையேற்றபோதும் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச் சின் பிரதிச் செயலாளராகக் கடமையாற்றிய போதும் மாகாண மட்டத்திலான நிகழ்ச்சிகளை அழகாகவும் நேர்த்தியாகவும் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடனும் ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது என்று துணிந்து Gn 36) Tub.
அந்த அனுபவ முதிர்ச்சியின் ஊடாகவே, பாரிய பொறுப்புகளை ஏற்று லாவகமாக
நிறைவேற்றத்தக்க சிறந்த வினைத்திறமை
அவருக்கு கைவரப் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
கடந்த 1990 ஆம் ஆண்டு வவுனியாப் பிரதேசம் போரினால் சிதைந்து சின்னா பின்னமாகியது. இடம் பெயர்ந்த மக்கள் படிப் படியாகத் தமது இடங்களுக்குத் திரும்பி வந்து தமது வாழ்க்கையை ஆரம்பித்ததன் வவுனியா ப் பரிரதேசம் அழிவுக குளி எரிரு நீ து துளிர் விட தீ தொடங்கியபோது தில்லை நடராஜா அவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவின் கவனம் வவுனியா ப் பகுத மது திரும்பியிருந்தது. அவருடைய ஜனாதிபதி நடமாடும் சேவை நடைபெறுவதற்கு

Page 5
முன்னோடியாக அழிவுகளுக்குள்ளாகிய நகரப் பகுதி கட்டியெழுப்பப் பட்டது. அதில் தில்லை நடராஜாவின் பங்கு அளப்பரிய வகையில் வெளிப்பட்டது. புனர்வாழ்வுப் பணிகள் மிகவும் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன. கடிகாரத்தின் விநாடிக் கம் பியோடு போட்டியிட்ட நிலையில் அவருடய தல மையரில பணிகளி' மேற் கொளர் ளப் பட்டன. ஆடை தி தொழிற்சாலைகள், ரயில் நிலையம் , மணிக்கூட்டுக் கோபுரம் எனப் பல்வேறு முக்கிய அம்சங்களுக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப் பட்டு ஜனாதிபதியின் பாராட்டையும், பொது மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றன.
அரசாங்க உயரதிகாரியாக இருந்த அவர், அவ்வப்போது எழுதிய சிறு கதைகளின் தொகுப்பாக வெளிவந்த நிர்வாணம் என்ற நூல் பலரையும் வியக்க வைத்தது. அந்த நூலுக்கான பெயரும், அதன் அட்டைப் படமும் பலரையும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடச் செய்தது. சிங்கள மொழியிலும் மொழி மாற்றம் பெற்ற அந்த நூல் இந்தியாவில் பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப் பட்டு விருதளித்து அவர் கெளரவிக்கப்பட்டார். இதன் மூலம் தமிழ் இலக் கரிய த துறையிலி ஆழமான அடிச்சுவடொன்றை அவர் பதித்தார்.
பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக தில்லை நடராஜா நியமனம் பெற்றபோது, முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும் போர் நிகழ்ந்தது. அப்போது வேரோடு இடம் பெயர்ந்து ஸ்கந்த புரத்தில் கால் பதித்தபோது அவள் அப்பிரதேசத்தைக் கட்டுக்குலையாமல் இடம் மாற்றி நிர்வாகச் செயற்பாடுகளை பூஜ்ஜியத்திலிருந்து கட்டியெழுப்பினார். வயர் பாக் (Wire bag) ஒன்றும் அரசாங்க அதிபரின்
ரப்பர் முத்திரையையும் முக்கியமான சில கோவைகளையும் காவிக் கொண்டு நடமாடும் அரசாங்க அதிபராக கடமையாற்றினார். ஆரம்பத்தில் அவருடைய அலுவலகம் மரநிழலின் கீழ்ப் போடப்பட்ட மேசையுடன் அமைந்திருந்தது.
அரசாங்க அதிபராக இருந்து கொண்டே, ஆளணி பற்றாக் குறை காரணமாக அப்பகுதிக்குப் புதிய அரசாங்க அதிபர் மற்றும் முக்கிய உயர் பதவிகளுக்குத் தகுதிவாய்ந்த அதிகாரிகள் தேவையெனப் பகிரங்கமாக விளம்பரம் செய்த புதுமையான அனுபவம் அவருக்குக் கிடைத்திருந்தது. மரணத்துள் வாழ்ந்த அந்தக் காலப் பகுதியானது அவருடைய வாழ்க் கை வரலாற்றில் மட்டுமல்லாமல் - வன்னிப் பிரதேசத்தின் வரலாற்றிலும் மைல் கல்லாகத் தடம் பதித்துள்ளது. பலரையும் இணைத்துக் கொண்டு புதுமைகள் பல செய்ய வேண்டும் என்ற செயல்வேகமிக்க அவர்,செல்லும் இடங்களில் எல்லாம் தனியான தனது முத்திரையைப் பதித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச் சின் பிரதிச் செயலாளர், கலாசார அமைச்சின் இந்து கலாசாரப் பணிப்பாளர் என்ற பொறுப்புமிக்க பல பதவிகளின் வரிசைகளில் இப்போது கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றும் அவர் பாடசாலை நூலகம், இலங்கை எழுதி தாளர் களின் நுால் கொள்வனவு, பாடப் புத் தகங்களை வெளியிடுதல் ஆகிய பாரிய பணிகளில் தனது முத்திரைத் தடத்தைப் பதிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்ச் சமூகம் பெற்றெடுத்த தவப் புதல்வர்கள் பலரில் அவரின் பல்துறைப் பணிகள் மேலும் சிறக்க வேணி டும் . அதற்கு த தேவையான ஆரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் இறைவன் அவருக்கு அருள வேண்டும்.
 

க. சட்டநாதன்
எழுபதுகளில் அது நடந்தது. புத்தூரில் அவன் படிப்பித்த காலம். பாடசாலைக்கு பஸ்ஸில்தான் பயணம். அவன் போகும் பஸ்ஸில் அனேகமாக அவளும் பயணம் செய்தாள். அழகு அவளிடம் இருந்தது. இளமையும் இருந்தது. கண்கள் சற்றுப் பெரிதாகவும், பரிவு கொண்டவையாகவும் இருந்தன. படபடப்பற்ற நிதானம் அவளது இயல்பு போலும், அவளில் அவனது பார்வை தொடும் போதெல்லாம் அவளது முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் குதூகலத்தையும் அவன் கவனம் கொண்டான்.
ஒரு சமயம் தட்டி வானில் அவன் பயணம் செய்த பொழுது எதிலும் புதிருமாக,
அவளுக்கு முன்பாக அவன் உட்கார்ந்து கொண்டான். அவளது பெருமூச்சொலி கூட
அவனுக்குக் கேட்டது. இருவரையும் சூழ இங்கிதமில்லாத குளிரில் கூட, அவனுக்கு வேர்த்தது. ஏதோ தவறு செய்வது போல ஒரு தடுமாற்றம், ஓர் உறுத்தல்.
'இது தப்பா..? சும்மா பார்ப்பது கூடத் தப்பாகி விடுமா. அவனது மனசு நிலை கொள்ளாது தவித்தது.
அவனுக்கும் திருமணமாகி ஆறுமாதம் கூட ஆகவில்லை. அவன் பார்த்திருக்க மலர்ச்சி கொண்டு, மனுஷியாகி, அவனைப் பூவிதழாய் ஸ்பரிசிக்கும் அவனது லதாவின் ஞாபகம் ஏனோ அப்பொழுது அவனுக்கு வந்தது. கட்டற்ற காதலையும் அன்பின் பிரவகிப்பையும் உணர்த்தியவள் அவளல்லவா. ? அவளது நினைவுகளையும் மீறி மனசு சபலப்பட முடியுமா? சபலப் படுதல் மனசின் இயல்பு போலும்.
அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். அதன் பின்னர் அவள் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.
அவன் பார்க்காத வேளைகளில் அவள் பார்த்தாள். எதேச்சையாக அவனது பார்வையும் அவள் மீது படுவது உண்டு. அப்பொழுதெல்லாம் ஏன். என்ன. ஏன் இப்படி. ? என்ற ஆச்சரியம் மட்டும் அவளது விழிகளில் உறைந்து நிலைப்பட்டு விடுவதைக் கண்டான். "கேள்விகள் நிறைந்த கண்கள் அவளுடையது.? என நினைத்துக் கொள்ளவும் செய்தான்.
سبی
cسط۔

Page 6
சில நாட்கள் செலவாகின. அவள் இப்பொழுதெல்லாம் அவனுடன் பயணம் செய்வதில்லை. அவளும் ஆசிரியையாக இருக்க வேண்டும். மாற்றம் பெற்று, எங்காவது போயிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டான், இருந்தும் அவளது நினைவு மட்டும் மனசின் ஓரத்தில் ஈரப்பளபளப்புடன் கசியவே செய்தது.
அவனைப் பொறுத்த வரையில், அவனது வாழ்விலிருந்து ஒதுக் கம் கொண்டு, தொலைந்து போனவர்களில் ஒருத்தியாகவே அவளும் ஆகிவிட்டாள்.
ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னால், அவளை அவன் மீளவும் சந்தித்தான். அதுவும்
சநி த கி க முடியும் என அவ ன நினைத்திருக்காத வேளையில்.
அவனது வீட் டில் நடு ஹோலில்
செற்றியின் குஷன் புதைந்து போக அவள் உட்கார்ந்திருந்தாள். அவளது இயல்புகளுக்கு மாறாக கலகலப்பும் சிரிப்பும், "லதா ஏதாவது சு வார ஸ யமாக ச் G F T 65 6 இருப்பாளோ.
ஒடிசலாய் நெடு நெடு என்று இருந்தவள், உடல் பருத்து தசைக் குவியலாக இருந்தாள்.
பாடசாலையில் இருந்து வந்த களைப்பு அவனுக்கு. அவனைப் பார்த்ததும் அவள் சிரித்தாள். கண்கள் கூட முன்னர் போல இருக்கவில்லை. சிறிதாக இருந்தன. அவற்றின் கீழாக விடைத்த தசைதான் காரணமா? அந்தக் கண்களில் இருந்த பரிவு, பரவசம் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்து கொண்டது போலிருந்தது அவனுக்கு.
லதா
'ஆளைத் தெரியுமா. 9''
அவனைத்தான் கேட்டாள்.
‘தெரியும் . நீர் வேல யரிலை படிப் பரிக் கேகி கை பஸ் ஸரிலை பார்த்திருக்கின்றேன்." அவளது அவசரமான
பதில்.
இத்தனை வருஷங்களுக்குப் பின்னரும் அவளது நினைவில் நான். அவனுக்கு அது ஆச்சரியமாய் இருந்தது.
சற்றுத் தடுமாறியவனாய் லதாவைப் பார்த்தான்.
"மிஸ்ஸிஸ் மகேசன். என்னோடைதான் படிப்பிக்கிறா. போன மாதம் சடங்கு முடிச்சவ. மாப்பிள்ளை எஞ்ஜினியர். அடுத்த மாதம் கனடா போகப் போறா. y
அவள் மிதப்புடன், ஒரு வகைப் பெருமித உணர்வு பொங்க அவனைப் பார்த்தாள். அவளது பார்வையைச் சந்திக்கும் பலம் அற்றவனாய் அவன் தனது அறையை நோக்கி நடந்தான்.
முன்னர் பஸ்ஸில் சந்தித்த பெண் இவள் அல்ல - என நினைத்துக் கொண்டான். கழிந்த வருஷங்கள் அவளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன போலும்.
அவள் லதாவிடம் விடைபெறுவது இவனது காதில் விழுந்தது. Y
"அப்ப நான் வாறன். அவருக்கும் சொல்லுங்க."
அவன் நடந்து போன பொழுது, அவளது காலடி ஓசை அவனுக்குக் கேட்டது. அந்த ஓசை ஏனோ அவனுக்கு எரிச்சலூட்டுவதாய் இருந்தது.
 

ஆனந்தம் ஆரோக்கியம்!
SIDSTILIñ!
பனை வழியே வந்த.
இயற்கையின் கொடை
நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக
இன்று.
உங்கள் கைகளில்......... O O
111D.II 1601
பிளாய் உடன் பானம்
1#Tbil ujibu6opdf
ாவித்தம் ாருங்கள்பயன்பெறுங்கள்
நகரக் காரியாலயம் தலைமைக் காரியாலயம் 224, காலி வீதி, 53, கண்டி வீதி, கொழும்பு. யாழ்ப்பாணம். Tel: 586820, 449105 Tel: 021-2034

Page 7
:lfing b6)
கடந்த மல்லிகை ஆண்டு மலரில் நண்பர் மா. பாலசிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரையில் இளைய தலைமுறையினரிடையே வாசித்தல் பண்பை வளர்க்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான சூழலை உருவாக்க வேண்டிய தேவையையும் எடுத்து காட்டி இருந்தார். அக்கட்டுரையை படித்த பொழுது எனக்கு சில சிந்தனைகள் எழுந்தன.
இன்று எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கும் ஓர் இள்ைளுணுக்கும், அன்று அதாவது 40களில் தோன்றிய இலக்கியவாதியான இளைஞனுக்கும் இடையில் நவீன கலை இலக்கிய வரலாற்றைப் படிப்பதற்கான சுமையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக இலக்கியத் துறையில் ஈடுபடும் ஒருவர் இரண்டு விதமான இலக்கிய வரலாற்றை படிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று, பழந்தமிழ் இலக்கிய வரலாறு, மற்றும் நவீன தமிழ் இலக்கிய வரலாறு. பழந்தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொறுத்த வரை கல்வியியல் சூழலின் வழியாகவும், பாரம்பரிய குடும்பச் சூழலின் வழியாகவும், பெறக் கூடியதாக இருக்கிறது. ஆனால் நவீன இலக்கிய வரலாற்றைத் தாமே தேடி படிக்க வேண்டி இருக்கிறது. அன்று 40களில் தோன்றிய இலக்கிய ஆர்வமிக்க இளைஞனுக்குச் சுமார் 20 வருட கால நவீன இலக்கிய வரலாற்றைப் படிக்கின்ற சுமை இருந்தது. ஆனால், இன்று இலக்கிய ஆர்வங்கொண்டு நவீன தமிழ் வரலாற்றைப் பயில வரும் ஓர் இளைஞன் மீது சுமார் 70-80 வருட கால நவீன தமிழ் இலக்கிய வரலாற்றைப் பயில வேண்டிய சுமை இருக்கிறது.
இன்றைய கால இளைஞன் மீது வேறு பல அழுத்தங்களும் இருக்கின்றன. இயந்திர ரீதியான வாழ்க்கை முறை, நேரம் கிடைத்தல் என்பது குறைந்து போன நிலைமை அத்தோடு அவனது சமூக அரசியல் இருப்பினுடாக அவன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், இவைக்கு மத்தியில்தான், இலக்கிய ஆர்வம் காரணமாக நீண்ட கால அளவான நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை அவன் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதேவேளை, இன்றைய அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக நீண்ட கால அளவான நவீன தமிழ் இலக்கியத் தகவல்களை இலகுவான வழியாக பெறக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்து இருப்பினும் கூட, அச்சாத்தியங்களை அடைய முன் நிற்கும் செலவினங்களை இந்த இளைஞர்கள் எதிர் கொள்ள முடியாத நிலை.
 
 

இத்தனை பிரச்சனைகளின் மத்தியில் இன்றை இலக்கிய ஆர்வமிக்க இளைஞன் நவீன தமிழ் இலக்கியத்தைப் பூரணமாக அறிந்து கொள்வது என்பது பெரும் சோதனைதான்.
இந்த சோதனையிலிருந்து இளைய தலைமுறை விடுபட என்ன வழி?
யோசிக்க வேண்டிய விடயம் இல்லையா?
2
கலைஞர் களு கி கும் & T 5 T J 600T மனிதர்களுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? வித்தியாசம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் விஷேசமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சிலர் உரத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது சரியா? ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய சமூக கடமைகள் தங்களுக்கு இல்லையென்றும் தாங்கள் அசாதாரண பிறவிகள் என்றும் கலைஞர்கள் ஏன் எண்ணி கொள்கிறார்களோ எமக்குத் தெரியவில்லை. ஒருவேளை சாதாரண மனிதர்கள் செய்ய முடியாத, கலையைப் படைத்தல் என்ற பணியினை தாங்கள் செய்து முடிப்பதாக கர்வம் கொள்கிறார்களோ?
ஒரு சாதாரண மனிதன் ஒரு சில விடயங்களில் கொண்டிருக்கும் சிறிது அளவான அறிவைக் கூட எலி லாம் தெரிந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கலைஞர்கள் பெற்று இருப்பதில்லை. ஒரு சாதாரண மனிதன் சர்வ சாதாரணமாக செய்து முடிக்கும் பல விடயங்களை கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்கள் சார்ந்து நிற்கும் களத்தைப் பற்றி மட்டுமே
தெரிந்து வைத்து இருப்பார்கள். ஆனால், சாதாரண மனிதர்கள் போகிற போக்கில் அவரவர் அனுபவத்தைக் கொண்டு எந்த விதமான அலட்டல் இன்றி பல விடயங்களை தெரிந்து இருப்பதைக் கண்டு நாம் பல தடவை ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் இல்லையா?
கலைஞர்களாகத் தம்மை ஆக்க முயற்சி செய்பவர்களின் முதற் பணியாக இருக்க வேணி டியது சாதாரண மனிதனி பார்வையிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்குவதுதான். அப்பொழுதுதான், சாதாரண மனிதர்களின் கலையை இந்த கலைஞர்களால் படைக்க முடியும் . வாழ்வில் பல்வேறு பரிமாணங்களையும் தரிசிக்கவும் முடியும். இதனை கலைஞர்கள் நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.
3
தாமரை ஜூன் மாத இதழில் பொ. ஐங்கரநேசன் எழுதிய “புதுமைப் பித்தன்' தமிழ்ச் சொத்தா? தனிச் சொத்தா?" எனும் கட்டுரை காலச் சுவடு என்ற இலக்கிய வியாபார சக்தியின் அராஜக வெளிப்பாட்டை எடுத்துக் காட்டி இருந்தது. புதுமைப்பித்தனின் எல்லா படைப்புகளுக்கும் தாங்களே Sole Agent 616 utb slugu TST Sole Agent தனத்தை மீறியும் புதுமைப் பித்தனின் படைப்புக்களை யாராவது வெளியிட்டால், அப்படைப்புகள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் கால்ச்சுவடு அறிவித்து இருப்பதாக அக்கட்டுரை வழிப்பாக அறிய கிடைத்தது.
கலை இலக்கிய வரலாற்றில் மாற்றத்தை உருவாக்கிய எல்லாப் பெரிய படைப்பாளி களின் படைப்புகளுக்கும் இந்த நிலை தான்

Page 8
ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டு இருக்கிறது. ஓர் இலக்கிய வியாபாரி ஏதோவொரு பெரிய இலக்கியப் படைப்பாளியின் படைப்புகளை வெளியிடும் உரிமையினை பெற்றுக் கொண்டு தங்களுக்கான பணத்தையும் பேரையும் சம்பாதித்துக் கொள்வது என்ன வகையில் நியாயம்?
புதுமைப்பித்தன் சம்பந்தமான இந்த நிகழ்வு வாழும் படைப்பாளிகளுக்கு, முன் அறிவித்தலாக ஓர் செய்தியினையும் சொல்லி
இருக்கிறது. அதாவது தாம் வாழும்
காலத்திலேயே அப்படைப்பாளிகள் தங்களது சகல படைப்புகளை வெளியிடும் உரிமை இன்னா ருக்குத்தான் என உறுதியாகவும் Cut and right கவும் சொல்லிவிடுவது நல்லது.
4
மேமன் மொழி பேச்சு மொழியானாலும் அம்மொழியிலும் பழமொழிகளும் மரபுக் சொற்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களின் ரசனைக்கு முன் வைக்கின்றேன்.
'கிழடு தட்டினாலும் குரங்கு தாவுவதை மறக்காது"
“பூனையின் கனவில்
இறைச்சியின் கழிவு'
'குழந்தையோ கையில் ஊரெல்லம் ஆர்ப்பாட்டம் அதனைத் தேடி'
Wedding Portraits &
Child sittings
ΗAPPY PHOTO
300, Modera street Colombo-15 T-phone:526345
 
 
 
 
 
 
 

இ III did G
வேண்டிய ଝି) ܠܵܘܵܟ݂
ܠ� ̄ ܝ ܐ
பிறமொழிப்w)
நாம் பார்த்துப் பயனடையக் கூடிய பல பிறமொழிப் படங்கள் இருக்கின்றன. இவற்றுள் சிலவற்றைப் பட்டியல் போட்டுத் தருகிறேன்.
ஈரான், இன்று திரைப்படத் துறையில் நன்கு வளர்ச்சி பெற்ற நாடு. ஈரானியத் திரைப்படங்கள் இங்கு காட்டப்பட்டுள்ளன. ஜூன் மாத மத்தியில் ஈரானியத் திரைப்பட விழாவொன்று கொழும்பில் இடம் பெறவிருக்கிறது.
மொஹற்சென் மக்ஹமல்பாப் ள்னற நெறியாளர் உலகப் புகழ் பெற்றவர். இவருடைய படங்களுள் உழக்குபவன், இரு சில்லுமிதிப்பாளன், கஜார் வம்சத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட படிமங்கள், காதலுக்கு ஒரு வேளை, சலாம் சினிமா, கம்பளியிலான தரைவிரிப்பு, அறியாப் பருவத்தின் ஒரு கணம் - ஆகியன குறிப்பிடத்தக்கன.
1997-ல் திருவனந்த புரத்தில் நான் பார்த்த படங்களுள் சில மறக்க முடியாதவை. இவற்றை நீங்கள் விடியோவில் பார்க்க நேர்ந்தால், எனது கூற்றை ஏற்றுக் கொள்வீர்கள். எஞ்சியவை ஒரே தரத்தினையுடையதாகவும் இருக்கவில்லை.
படங்களின் பெயர், அடைப்புக் குறிக்குள் நெறியாளரின் பெயர், எந்நாட்டுக்குரியது என்ற விபரங்கள் கீழே தரப்படுகின்றன:
காமமும் பழிக்குப்பழியும். (போல் கொக்ஸ், அவுஸ்திரேலியா), டானிஸ் சார்மினின் சம்பவங்கள் (மைக்கல் க்ரைஹற்ஸல், ஒஸ்ரியா), லூலு (பூரீநிவாஸ் கிருஷ்ணா, கனடா) செஞ்செரி (யேயிங் சீனா), ஆண், பெண், பாவனையாளர் கையேடு (க்ளொட் லெறுாச், பிரான்ஸ்), கனவுகளின் கிராமம் (ஹிகாஷி யொய்ச்சி, ஜப்பான்), மலைகளின் சிறைக்கைதி (சார்ஜி பொட்ரொவ், கஸாக்கிஸ்தான்), குற்றவேளை (ஜோர்ஜ் ஸ்லூய்ஸர், நெதர்லாந்து), இளைய சகோதரி (ரொபர்ட் யான் வெஸ்டிஜிக், நெதர்லாந்து), வீட்டுக்கு விரையத் துடிப்பு (ஜோர்ஸ் ஸ்லூய்ஸர், கார்ளோங் டா சில்வா, நெதர்லாந்து, போர்த்துக்கல்), டாக்ஸி

Page 9
(கார்லோய் ஸெஸரோ, ஸ்பெயின்), கலைந்த மெளனம் (ஊல ப் காங் பன ஸர் , ஸ் விட் ஸர்லாந்து), இரகசியங்களும் பொய்களும் ( மைக்லேய், ஐக்கிய ராச்சியம்), மரித்த மனிதன் நடக்கிறான் (டிம் ரொயின்ஸ், அமெரிக்கா), பெருக்கம் (ஹரல்ட் ராமிஸ், அமெரிக்கா), மறைவுலகிலிருந்து சில குறிப்புகள் (கரிவோல்கெள், அமெரிக்கா).
நான் பார்க்கத் தவறிய படங்கள் சில அவற்றைப் பார் த தவர் கள் , சில நன்றாயிருந்தன என்றார்கள். 1.
திட்டமிட்ட கொலை, கன்ஸாஸ் மா நகரம், பிரஜை ருத், பஸ்கியாட், புனித வாரம், சிற்றின்பச் சார்பான கதைகள்.
ஆசியாவிலிருந்து பல படங்கள் காட்டப் பட்டன. சீனாவிலிருந்து அந்நியச் சந்திரன் பரீச் மலர்ச்சி, இந்தோனிஸியாவிலிருந்து மூனும் ஆடுகிறாள், ஈரானியிலிருந்து பாரி, மலேஷியாவிலிருந்து தீ கொழுத்தியவன், பிலிப்பீன்ஸிலிருந்து ப்ளோர் கொண்டெம்ப் ளேஷனின் கதை, சிங்கப்பூரிலிருந்து நூடிள்ஸ் விற்பவன், தென் கொரியாவிலிருந்து உறி ச வம் , முன று நண பர் களர் , தாய் வானிலிருந்து ஆசுங் , தெற்கே விடைபெறுகிறேன், தாய்லாந்திலிருந்து மயில் இல்லம், துருக்கியிலிருந்து கரப்பொத்தான், வியட்னாமிலிருந்து தாயக ஏக்கம்
இலத்தின் அமெரிக்க படங்கள் சிலவும் குறிப்பிடத்தக்கவை.
இரு நீ து
ப்ரொஸியி
பொ ள வரியா வரி ல நம்பிக்கைக்குரிய விஷயம்,
லிருந்து நால்வர், கொலம்பியா, மெக்ஸிகோ, வெனிஸ"வேலா நாட்டுத் தயாரிப்பான கறைகளின் கப்பல் வெனிஸ"வேயிலிருந்து தோடம் பழங் களுடன் நிர்வாணமும் , இப்படங்களாகும்.
தென்னாபிரிக்காவிலிருந்து டிங்காக்கா, ஜெமினாவும் , ஜொனியும் , கத்ரீனா, போஸ்மனும், லேனாவும், ஓர் ஆபிரிக்கக் கனவு, ட்பியல்லாவின் பிள்ளை, நான்காவது ரைச், சக்கரங்களும் சச்சரவுகளும் ஸர.. பீனா, நண்பர்கள், மஹாத்மாவின் உருவாக்கம், ஆகியன காட்டப்பட்டன்.
மறைந்த இத்தாலிய நடிகர் மார்ச் செல்லோ மஸ்ரோய்யான்னி நடித்த மூன்று வாழ்வுகளும் ஒரு மரணமும் என்ற படம் அவரை நினைவு கூரக் காண்பிக்கப்பட்டது.
அதேபோல, மறைந்த போலந்து நெறியாளர் க்ரிஸிஸ்டேஃப் கியஸ்லொவ்ஸ்கி நெறிப்படுத்திய பின்வரும் படங்களும் 1997ல் திருவனந்தபுரத்தில் இடம் பெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் காட்டப்பட்டன.
லொட்ஸ் மாநகரிலிருந்து நான் ஒரு போர் வீரனாய் இருந்தேன், எக்ஸ் கதிர் ஆளுக்குரிய முக்கிய விபரத்திரட்டு, மறு கரும்பலகை, வைத்தியசாலை, இராக்கண் காணியின் பார்வையில், எனத்குத் தெரியாது. வெவ்வேறு பருவப் பெண்கள் எழுவர், ஒளிப்பதிவுக் கருவியின் சாகஸம், ரயில் நிலையம், கதைக்கும் தலைகள், குருட்டு வாய்ப்பு, முடிவு இல்லை, தசாம்சக் கதைகள், கியோஸ்லோவ்ஸ்கி பற்றிய நான் இன்னார்.
சிலி நாட்டு நெறியாளர் மிகுவெல் லிட்டின்
நினைவாக கற்பற் சேதம் என்ற அவரது
ULLİb ö5 TÜLÜlulÜLğ5).
பி. ஏ. பக்கீர் என்ற மலையாளப் பட நெறியாளரும் நினைவு கூரப் பட்டார். அவ்வாறே ஸ்மிதா பட்டேலும்.
தபன் சின்ஹாவின் கதாம்யினி. அபாக்கி, சம்பியா ஆகிய மூன்று வங்காளப் படங்கள்
 

魏 :
அடங்கிய இந்நூற்றாண்டின் புதல்விகள்
படமும் நெறியாளர் நினைவாகக் காட்டப்பட்டன.
மலையாளப் படங்களின் மீட்டல் காட்சியாகப் பரின் வரும் படங்கள் காட்டப்பட்டன:
மார்த் தாண்ட வர் மா, செம் மீன்,
குருட்டின்டே ஆத்மாவு, ஒலவும் தீர்வும், நிர்மாலயம், எலிப்பத்தயம், ருக்மிணி, அனுபவங்கள் பலிச் சாக் கால் , 1921
தினக்கலாழ்ச நல்ல திவசம், மஞ்சசித்ர தழகு, பிறவி, ஓர் மகள் உந்தயிரிரக்கணம், அம்மா அறியேன், ஒரு வடக்கன் வீரகத்தா மக்ரிப், தெய்வத்தின்ர விக்ரிதிக்கள், உப்பு, அஸ்வத்தமவு, எஸ் தப்பன், நியூஸ்பேப்பர் போய், நீலக்குயில், அடமின்ட் வாரியேல்லு, ஒரோ தூவல், கழஹகோம, உன்னிக்கிட்டனு
必**委纥**选*葵娄然必数氹必娄多党蚁》
நம்ம தோழருக்கு D60ofsign
*፲. t நாம் மதித்துப் போற்றும் .ܬܸܐ .
பொன்னிலன் அவர்கள் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மணி விழாக் கண்டுள்ளார்.
அந்த உன்னத படைப்பாளிக்கு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் சார்பாக மனசு நிறைந்த பாராட்டுக்களை மல்லிகை தெரிவித்துக் கொள்ளுகின்றது.
ஜொலிகிட்டி, குமாரசம்பவம், கிளுக்கம், அமரம், பார்க்கவி நிலையம், சுக்ருதம், சம்மோளுமை.
இந்தப் படங்களின் திறனாய்வுக் குறிப்புகள் இதில் இடம் பெறவில்லை.
வெறும் பட்டியலே. பட்டியல் மூலமாகுதல்
வாசகர் களர் 8ી 6o படங்களினி பெயர்களையாகுதல் அறிந்து வைத்து, பின்னர் இப்படங்களை வீடியோ மூலமாகுதல் பார்க்கக் கூடும் என்பதற்காகவே இந்தத் தொகுப்பு.
இப்படங்கள் அத்தனையுமே கலைப் படங்கள் என்பார்கள். ஆனால் ஒரு சில மகத்தானவை.
1990-1997 காலப்பகுதியில் நிறைய
அனைத்துலகத் திரைப்படங்களை இந்தியத் திரைப்பட விழாக்களில் பார்த்து மகிழ்ந்தோம்.

Page 10
(உடுவை எல். தில்லை:தட்ராஜா
எனது ஆசிரியர்கள், மேலதிகாரிகள், நண்பர்கள் காட்டிய வழிகள் உயர்ந்த நிலை பெற உதவினாலும் இன்னுமொருவர் படிப்பித்த பாடங்கள் நாளாந்த நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு உதவுகின்றன. அவர் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஐந்தாறு வயதில் இரண்டு மூன்று மைல் தூரம் நடந்து சென்று தொழில் பார்த்து தினக்கூலியாக இரண்டு சதம் பெற்று, எட்டு வயதில் பெற்றோரையும் பிறந்த ஊரையும் விட்டு வெகு தொலைவுக்கு அப்பால் தொழில் தேடிக் கொண்டவர். சொந்த முயற்சியால் எழுத்துக் கூட்டிப் பத்திரிகை சஞ்சிகை வாசிப் பின் மூலம் பல விடயங்களைக் கிரகித்து நல்லவற்றையும் நல்லவையல்லாதவற்றையும் எடைபோடத் தக்க தகமை பெற்றவரானார்.
அவர்
திரு. சிங்காரம்பிள்ளை - எனது தந்தையார். -யாழ்ப்பாணத்தில் ஒரு சாதாரண சாப்பாட்டுக் கடையில் சமையல் அவரது தொழில்.
இரண்டாவது வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த வேளை புகைப்படம் பிடித்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் வாஸன் ஸ்ருடியோவுக்கு அழைத்துச் சென்றனர்.
படப்பிடிப்பாளர் - "கண்வெட்டாமல் பார்க்க வேணும்; அச்சாப்பிள்ளை ஸ்மைல் பிளிஸ்” - எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கமராவைப் பார்த்த வண்ணம் அதற்கு முன்பாக என்னை இருத்திப் படம் பிடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தந்தையார், புகைப்படக் கருவியில் பொருத்தப்பட்டிருந்த வட்டக் கண்ணாடியைக் காட்டி, 'தம்பி சிரித்துக் கொண்டே இந்தக் கண்ணாடியைப் பாருங்கோ. இதிலையிருந்து ஒரு குருவி பறந்து வரும்”, என்றார்.
குருவி பறந்து வரும் என்ற எண்ணத்துடன் சிரித்த முகத்தடன் இருந்தேன். படப்பிடிப்பாளர்,
 
 
 
 

'ரெடி', 'தாங் யூ' சொன்னது எனக்குக் கேட்கவில்லை. சில நாட்களில் அழகான புகைப்படம் கிடைத்தது.
பின் வரும் சில சந்தர் ப் பங்களில் புகைப்படக் கருவியிலிருந்து குருவி பறந்து வரும் எனக் காத் திருந்தேன், குருவி வரா விட்டாலும் படங்கள் நண் றாக அமைந்துவிட்டன.
கல்லூரி நாட்களில் தந்தையாருடன் கடையில் தங்கியிருந்திருக்கின்றேன். காலை ஐந்து மணிக்கு முன்பாகக் கடமைகளை ஆரம்பித்துவிடுவார். சாதாரணமாக இரவு பத்து மணிவரை கடையில் வியாபாரம் நடைபெறும். அதன் பின் தந்தையார் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிப்பார் . யாராவது 'பகல் பொழுது முழுவதும் வேலை செய்வதால் சிறிது ஓய்வு எடுக்கக்கூடாதோ? என்று கேட்டால் - முழுவதும் வேலை செய்கின்றேன். வாசிப்புத் தான் எனக்கு ஓய்வு' என்பார். சாதாரணமாக அவர் வேலைசெய்யும் வேளைகளில் கடையில் வேலை செய்வோர் மட்டுமல்ல - வேறு பல முதலாளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், எனப் பல தரத்தவர் அவருடன் உரையாடி நாட் டு நடப் புகளை த தெரிந்துகொள்வார்கள். தந்தையாரும் மற்றவர் களும் உரையாடும் போது தெரிந்துகொணி டவை தான் பொது
அறிவையும் விவேகத்தையும் என்னுள்
உருவாக்கியது.
கல்யாணக் காலங்களில் விசேட பலகாரங்களை தயாரிக்கும் பொறுப்புத் தந்தையாருக குக் கொடுக் கப் படும் . வழமையான வேலகீைகுப் பின்பே அதாவது இரவு பத்து மணிக்குப் பின் விசேட வேலைகள் ஆரம்பமாகும். இடையில்
மின்சாரம் தடைப்பாட்டாலும் கடமை
'பகல்
தொடர்நது நடைபெற வேண்டுமென்பதற்காக பெற்றோ மக்ஸ்’ 'அரிக்கன் லாம் பு என்பவை மட்டுமல்ல - பற்றறியுடன் கூடிய மின்விளக்கும் தயாராக வைத்திருப்பார். உணவுகளைத் தயாரிக்கும்போது எந்த இடையூறுகளாலும் சுவையும் தரமும் கெட்டுவிட்க்கூடாது என்பார். அவரிடம் கற்ற பாடம் தான்’ கடமைகளைச் செய்யும்போது எந்தெந்த இடையூறுகள், தடைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மாற்று ஒழுங்குகள் பலவற்றைத் தயார் செய்தால் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று மூலம் நோக்கங்களை அடையக் கூடியதாயிருக்கும்:
குறிப்பாக வன்னியில் கிளிநொச்சி நகரில் போர் மேகங்கள் சூழ்ந்த போது பாதுகாப்பான பகுதிகளுக்கு அலுவலகங்களைக் கொண்டு சென்றதும் பெறுமதியான கோவைகள், கடிதங்கள், சாதனங்கள். சேதமின்றித் தக்க
வைத்திருப்பதற்கும் முன்கூட்டியே மாற்று
ஒழுங் குகளை தி தர் மானித துச் செயற்படுத்தியதுதான் காரணம்.
1961 ஆம் ஆணி டு யாழ்ப் பாணச் சத்தியாக்கிரகத்தை அடுத்து இராணுவத்தினர் குறிக்கப்பட்ட நேரத்தில் - ஒரு விருந்துக்காக இரண்டாயிரம் உழுந்து வடைகள் தயாரிக்கும் பொறுப்பு தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடவே ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
நிபந்தனை இது தான் 'ஒவ்வொரு வடைக்குள்ளும் ஐந்து துண்டு மிளகாய் இருக்க வேண்டும்'.
சாதாரணமான கடையில் மிளகாய்த் துண்டுகளை எண்ணி வடையில் வைத்துச் சுடுவதும் இராணுவத்தினர் தொடர்பும் பிரச்சினை என்பதால் இந்த ஒடரை எடுத்துக் கொள்ள முதலாளி விரும்பவில்லை. ஆனால் தந்தையார் துணிந்து விட்டார்.

Page 11
இரண்டாயிரம் வடையையும் வாங்கிச் செல்ல வந்த இராணுவ அதிகாரி, "ஒவ்வொரு
வடையிலும் சரியாக ஐந்து மிளகாய்த்
துண்டுகள் இருக்குமா?" எனக் கேட்டார்.
ஓ. அதெல்லாம் சரியாக இருக்கும் என்று - தந்தையார் பதிலளித்ததுதான் தாாதம் - இராணுவ அதிகாரி வடையை மெதுவாகக் கிள்ளி மிளகாய்த் துண்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு, கோபமாக “நாலு துண்டுகள் தான் இருக்கு" என்றார்.
தந்தையார் சிறிதும் பதட்டப்படாமல். “இரண்டொரு வடையில் நாலு துண்டு வைத்ததாக நினைவு மற்றதெல்லாத்துக்கும் சரியாக ஐந்து துண்டு மிளகாய்” என்று சொல்லிக் கொண்டே ஒரு வடையை எடுத்து, மெதுவாக நுள்ளி மூன்று மிளகாய்த் துண்டுகளை அதிகாரியின் கையில் கொடுத்து. மிகுதி வடையைத் தனது வாயில் போட்டு. 'அம்மா உறைக்ததே. நாலு அ. ஐந்து. ஸ்." என்று கணக்குக் காட்டினார். பணம் கொடுத்து முதலாளியின் வயிற்றில் பால் வார்த்தார்.
“தொழிலைச் சரியாகச் செய்கிறோ மென்றால் ஆமிக்கு மட்டுமில்லை - யாருக்குமே பயப்பிட வேண்டாம்” என்பது தந்தை கூறியது. போராட் ட் பிரதேசங்களில் பொறுப்பான வேலைகளைச் செய்யும் போதும் இராணுவத்தினருடன் உரையாடுவம் போதும் நினைவுக்கு வரும் அப்பேச்சு.
சில வேளைகளில் பெரிய விருந்துகளில் கலந்துகொள்ளக் கூடிய +ந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. எலது நலன்பர்கள் oîų hibọżbjbj +II 'JUîBoy: "bit. “MIST ENJoY THE MEA S” o jiji do 5) ob*bli;
(63 lü U 6 din L 1 gbi öi öi (o 138 8: I Lğ
(3+7 bč8) l'obbi. 5851531' [13boissy)Johbbbliqut,
அடிக்கடி கழிப்பறைகளையும் நாடுவதையும்
கண்டிருக்கிறேன்.
இரண்டொரு தினங்கள் வெளியூரில் தங்க வேண்டிய வேளைகளிலும், பிரயாண நேரங்களிலும் தந்தையாரின் விக்கினமில்லாச் சாப்பாடு - வாழைப்பழமும் - அக்காலத்தில் பரவலாக அறிமுகமாயிருந்த ஒரேஞ் பார்லி சேIடவும் அவை ய60தில் தோன்ற கவிதாக சீரணமாகக் கூடிய இரண்டெTரு கறிகளுடன் விருந்தை முடித்துக் கொள்வதால் வேறு வில்லங்கங்களை வாங்கிக் கொள்வதில்லை.
மட்டக்களப்பில் கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றியபோது, திறந்த வெளியரங்கில் காலை ஆறு மணிக்குக் கொடியேற்ற நிகழ்வுடன் சர்வதேச கூடருறவாளா விழாவை ஆரமபிபபதாக ஒழுங்குகள் செய்யப்பட்டன. திறந்த வெளியரங்குக் குக் காவலாளிகள் இல்லாததால் காலை ஐந்து மணிக்குக் கொடிமரம், கயிறு இதர பொருட்கள் *4,33) Up) is றை லெறியில் கொண்டு Gaj 65 GT3 iut.
ஆறு மனிக்குச் சில நிமிடங்கள் இருக்கையில் பல உத்தியோகத்தர்கள், பொது மக்கள் வந்துவிட்டனர். சிற்றுாழியர் ஒருவரும் வரவில்லை. ஒவ்வொருவரது .lفoرہ:بھارف:'L1 I سti|| 1 ارب (o۵رفہb:رل)
ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்தவரை - வராத சிற்றுபூழியரை இடைநிறுத்துவது. சேவையிலிருந்து விலக்குவது பற்றிக் கதைத்தார்கள்.
எனது நினைவு தந்தையா' வேலைசெய்த சாப்பாட்டுக் க ை ைநோக்கிச் சென்றது. ஏதோ பிரச்சனை. இரண்டு நாட்கள் நகர கத்தித் தொழிலாளர் வரவில்லை. எச்சில் »)) na ih so bi u lợi u fhů: 6 j iii . f . I jni' hini bl. மாற்றுவழி இல்லாததால் கடை பை)
 

பூட்டுவோம் என்றார் முதலாளி.
“தேவையில்லை’ என்று சொன்ன சிங்காரம்பிள்ளை ஒரு பெரிய காட்போட் பொட்டியை எடுத்து வந்து இலைகளை அள்ளிப் பின்புறம் கொண்டுசென்றார். குழி வெட்டி அவற்றைப் புதைத்தார். முதலாளிக்கு ul (6u) o: b) - 6.Lgi etu) tej . வருபவர்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.
சிங்காரத்தின் மகனல்லவா - தில்லை: கையிலிருந்த மணிக்கூட்டைக் கழற்றி
ஒருவரிடம் கொடுத்துவிட்டு, அலவாங்கை
bடுத்துக்கொண்டு நிலத்தில் குத்தினேன். எத்தனை போ என்னைச் சுற்றி வந்தார்கள் என்று தெரியாது. கணப் பொழுதில் கொடி
மரங்கள நாட டபபடடுக கட்மை கள முடிவடைந்தன. இச் சம்பவத்தின் பின் இக்கட்டான வேளைகளில்.
3gol oy.b 129003ıyo) 1801 Golgibi iğol. - 81’i 193 .
ᎶᎯ ᏗliᏍlg5j?
Đb . (ou fuu (3668M) ölü Luiş 3 செய்வது? -
- öl 6Ꭰ! " எண் ணுவதில் லை. முந் தரிக் கொள் வேன் . 6)ft 11 | LČ பூர்த்தியாகிவிடும்.
ѣт 5әї Ђт uf வகுப் பரில Ъ т 60ї படித் துக் கொண்டிருந்த போது, தந்தையருக்குக் கொதிக்கிற கண்ணெய் கண்ணில் தெறித்துக் காங்களுடன் ஆலத்திரியில் இருக்கும் செயதி அறிந்து அirth) என் ஆஸ்த்திரி சென்றேன்.
வழமையாகப் பெரிய பத்திரமொன்றில்
தேங் காப் எண்ணெயைச் சூட b கி
பலகாரங்கள் செய்தபின், பத்திரத்திலுள்ள தேங்காய் எண்ணெய்யை ஒரு தகரத்தில் 22ll 1313 of L. b
1 (oز رزهٔ نادا (نزه (3b) را رز: ((2ی.
ஆரம்பிப்பது வழக்கம். அன்றைய தினம்
gb bulgb où il ob Li ւ 1 bÙ ծt, Ii J (Էd is 60) bit ւն பாத்திரத்தினுள் போட்டபோது கொதிக்கின்ற எண் னெய் தெறித்து தந்தையார் கணகளிலும முகததிலும படடுவிடடது. யாரும் கிட்ட வரவேண்டாம் என்று சொல்லிய தந்தை, பாத்திரத்தைத் தூக்கிச் சூடான எண்ணெயைத் தகரத்தில் ஊற்றிவிட்டு எண்ணெய் பாத்திரத்தைக் கிணற்றடியில் வழமையாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நடந்ததைச் சொல்லி, மற்றவர்களின் துணையோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.
கொதி எண்ணெய் தெறித்து, பார்க்க முடியாத நிலையிலும், தந்தையாரின் செயல் பலருக்கு வியப்பைக் கொடுத்தது. அவர் சென்னார். “அடுப்பிலிருந்து ஏழு அடி தள்ளி எண்ணை ஊற்றி வைக்க வேண்டிய தகரம்.
பின்ன இடது புறம் திருமபி நாலு அடி
நடக்க வாசல் - பின்னரும் இடது புறமாக நடக்கக் கிணற்றடி’.
து ) ய் , திலக ஆகியவற்றைக் கவனித்தால் இருட்டிலும் நடக்க முடியும் 616TUTI.
மகாத்மா காந்தியின் போதனைகளாலும் செய்கைகளாலும் கவரப்பட்ட அவர் நாலு முழ வேட் டிதான் உடுத்துவார். அதுவும் 6) i 600 db bb))) bt bloquLi. 3 «bbi (Sb) (?, அறுபது எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் கதர் வேட்டி அருமை. ITன பொருளாகிவிட்டது. “சுதந்திரத்துக்குப் பிறகு கதா வேட்டி வாங்கக் கூடிய சுதந்திரமில்லை'ன்னறு சொல்வார்.
"நான் உழைக்கின்றேன். நல்ல வேட்டி சட்டை வங்கித் தருகிறேன்’ சொன்னால் - ”உடுப்பு சுத்தமாக இருக்க வேலரும. வடிவக இருக்க வேண்டும. பெருமை தர வேண்டும். விலை கூடினதாக அலங்கரமானதாக இருக்கக் கூடாது” என்று
6.
ჩ1 იპ!!!}]

Page 12
அப்பா கடை வேலையிலிருந்து நீங்கிய பின்பு விரும்பிக் கேட்கும் பொருட்கள் இரண்டு.
ஒன்று பத்திரிகைகள்
இரண்டாவது - 'நாலு முழவேட்டி 1990 ஜனவரி மாதம் அவராகக் கேட்காமல் நான்கு வேட்டிகள் வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு மகிழ்ச்சி.
- 'வாசிப்பதற்குச் சில
மீண்டும் 1990 பெப்ரவரி மாதம் அவரைப் பார்க்கச் சென்றபோது, 'தம்பி இரண்டு வேட்டி”, என்றார்.
"நான்கு வேட்டிகள் எடுத்துக் கொடுத்து ஒரு மாதமாகவில்லை. பிறகும் வேட்டியா?” எனது சிந்தனையைப் புரிந்துகொண் பு தநதையாா
'தம்பி அந்த வேட்டியள் இருக்கு. அது அங்காலை போறபோது தேவைப்படும்' என்று சொல்லிய தந்தையாரின் கண்கள் வானத்தை நோக்கின. அவை மீண்டும் கீழிறங்கின.
'இப்போ கட்டுகிறதுக்கு இரண்டு வேணும்', என்றார்.
"இரண்டு வேட்டிகள் கொடுத்தேன். அவை தான் தந்தையாருக்கென நான் வாங்கிக் கொடுத்த கடைசி வேட்டிகள்,
1990 மார்ச் மாதம் தந்தையார், அவருக்கு விருப்பமான நாலு முழ சாதாரண வேட்டியுடன் தனது யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டாலும் தினமும் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு பாடத்தைப் படிப்பித்துக் கொண்டிருக்கிறார்.
வாழ்த்தகிறோம்.
பிரபல எழுத்தாளர் புலோலியூர் சதாசிவம் தம்பதியினரின் மகள்
திருநிறைச் செல்வி
கலைவாணி அவர்களுக்கும்
தும்பளை திரு.
திருமதி. அமரசிங்கம் அவர்களது மகன்
திருநிறைச் செல்வன்
அருட் செல்வன் அவர்களுக்கும்
சமீபத்தில் வெள்ளவத்தையில் இனிதே திருமணம் நிறைவெய்தியது. இன சனம், சுற்றத்தார், நண்பர்கள் பெருமளவில் வந்திருந்து இத்திருமணத்தைச் சிறப்பித்து மகிழ்ந்தனர்.
மல்லிகையின் சார்பாக மணமக்களை வாழ்த்தி
வரவேற்று மகிழ்கின்றோம்.
-ஆசிரியர்
 

சிலை வடிவிற்
கண்டேன்
தில்லைச் சிவன்
இக்கேள்விக்குப் பங்குனி மாதம் பகல் வழிப் பயணம் செய்பவன் பாவி என்பது பழைய ண்டுபிடிப்பு. பங்குனி மாதம் பகல் வழிப்போகும் பாவிகளின் பாவ விமோசனம் கருதிய எமது முன்னோர் கோடையிலே இளைப்பாற்றும் குளிர் தருக்களை வீதிகளின் இருமருங்கிலும் வரிசையாக நட்டுவைத்திருந்தனர். பூவரசு, வேம்பு, ஆல், அரசு, புளி என நின்ற பல வகை மரங்களில் இன்று ஆங்காங்கே சில மரங்களை மட்டுமே காணலாம். வேக வாகனங்களின் பிரயாண வசதிகள் வந்து விட்டதால், பாவ விமோசனம் பெற்ற மக்கள் தமது தேவைகளுக்காக வீதி மரங்களையும் கொண்டுபோய் விட்டனர்.
UT 6 VUIT ?
காற்றுக்கும், மழைக்கும், புயலுக்கும் மனிதர், கண்களுக்கும் தப்பிப் பிழைத்த குளிர் தரும் மரங்களில் ஒன்று பருத்துச் சடைத்து வளர்ந்து எங்கள் வீட்டு வளவின் முகப்பில் நின்றது.
கருக்கரிவாள் போன்ற வளைந்த நெருங்கிய இலைகளையும், நெற்கதிர் போன்று நீண்ட அலக்குகளில் கொத்துக் கொத்தாக மலர்ந்து சிறிய முக்குத்தி வடிவோடு மணம் கமழும் பூக்களையும், குலை குலையாகக் காய்த்துத் தொங்கும் பசுமையான காய்களையும், காக்கை உவக்கும கனிகளையும், எண்ணெய் விதைகளையும் தரும் வேம்பு மரம் அது.
அன்று பகல் பதினொரு மணியளவில் வெப்பும் வெயர்வையும் வீட்டுக்குள் இருக்கவிடாது விரட்ட, ஒருதடுக்குப் பாயை எடுத்துக் கொண்டு, வீட்டு வளவின் முகப்பில் உள்ள வேம்பின் நிழலின் கீழ் விரித்து, வேம்பின் புடைத்த வேரையே தலையணையாக்கிச் சரிந்து கிடந்தேன். வேம்பின் நறுமணத்தோடு கூடிய உயிர்ப்பின் சுவாசம் உடலுக்கும் மனதுக்கும் இதம் செய்தது. காகம், கரிக்குருவி, கிளி, குயில் போன்ற குருவிகளும் அணில், ஓணான் போன்ற பிராணிகளும் வெயிலுக்கு ஒதுங்கி வந்து மரக்கிளைகளிலிருந்து சரசமாடின. அப்பிராணிகளின் சரசசல்லாப விளையாட்டுகளில் மனசு இலயித்திருக்க, மெல்லெனச் சுதந்தம் சுமந்த தென்றல் வருட, மகிழ்ந்திருந்த வேளையில், எனக்கு முன்னால் விரிந்து கிடந்த வயல் வெளி என் பார்வைக்குப் பட்டது.
வெயிலால் உலர்ந்து, பசுமை இழந்து மணற் காடாகிக் கிடந்த அந்த நிலத்தின் ஊடாக

Page 13
அந்தக் காலத்தில் போடப்பட்ட விவசாய வீதி ஒன்று போனது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த வீதியின் முகப்பில் கானல்
நீர் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரில் நீந்திக்
கொண்டு, ஒரு உயர்ந்த உருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மணலிற் புதையுணி ட காலை த துT க்குவதும் குதிப்பதுமாகத் தள்ளாடிக் கொண்டு, தோள்கள் இரண்டிலும் சுமைகள் தொங்க வரும் அந்த மனிதனைப் பார்த்ததும், இவர் ஒரு பாவியோ என என் மனம் வியசுகித்தது.
பங்குனி மாதம், நண்பகல் நேரம்,
உச்சியரிவி வெய்யரில் கொளுத் திக்
கொணி டிருக்க நிழலற்ற நெடுமணற் பாதையில் , தோள்கள் இரண்டிலும் சுமைகளுடன் கால்களிற் செருப்புமின்றி இட்ட அடி எரிய, எடுத்த அடி கொப்பளிக்க அவரும் வந்து எமது குளிர் தருவின் கீழ்க் குந்தி விட்டார். அவரின் உயர்ந்த அகன்ற மேனி 'குப்” பென்று வெயர்த்துத் கொட்டியது. தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த ஈரிழைத் துணி டை அவிழ்த்து உதறி முகத்தையும் நெஞ்சையும் துடைத்துக் கொண்டு எமது வீட்டு வாசலைப் பாாத்து "அம்மா நாச்சியார்” என்று குரல் கொடுத்தார்
குரல் கேட்ட முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு வந்த எனது தாயார்
'பிள்ளையான் உனக்கு நேர காலம்
தெரியாதா? இந்த அகோர நெருப்பு வெய்யிலுக்குள் வெளிக்கிட்டாயே,’ என்று கொண்டே பொறு பொறு! மோர்க் கொண்டு வருகிறேன் என்று குசினிப் பக்கம் சென்றார்.
எனது வாய் சும்மா இருக்கவில்லை. "பங்குனி மாதம் பகல் வழிப் போபவர்களைப் பாவி என்பார்களே' என்றேன்.
"மெய் வருத்தம் பாரார். கண் துஞ்சார், கருமமே கணிணாகனார் ' என்றும்
தோள்களிலும்
சொல்லியிருக்கிறார்களே' என்றதோட மையாது, 'பெருங்குளம் அம்பாளுக்கு, கமக்காரர் கொடுக்க வேண்டிய உரிமத்தை வசூலித்துக் கொடுக்கும் எனது தொண்டு மழையாலோ வெயிலாலோ விடப் பூச்சிகளாலோ தடைப்பட்டு விடாது' என்று அடித்துக் கூறினார்.
சமையற் கட்டிற்குள் புகுந்த என் தாயார் வடித்த கஞ்சியுள் சோறும் மோரும் விட்டு ஊறுகாயும் உப்பும் பிசைந்த பானகப் பானையுடன் சிரட்டையும் கையுமாய் வந்து அமர்ந்தார்.
பானத் துடன் அம் மா கொடுத் த பனாட்டையும் சுவைத்துத் தின்ற பிள்ளையான் ஆயா சந் தணியச் சற் றிருந்த பின் , துடித்தெழுந்து நாச்சியார் என்கவும், என் தாயார் கொண்டு வந்த ஒரு இலாச் சம் நெல்லையும் தான் கொண்டு வந்திருந்த இரு சாக்குகளிலும் மாறி மாறிக் கொட்டப் பெற்றுக் கொண்டு, "என்ன தம்பி பார்க்கிறார், ஒருசாக்கு பிள்ளையானின் கூலி நெல், மறு சாக்கில் உள்ள நெல் தான் அம்பாளுக்கு’ என்று கொணர் டே, இரு சாக் குகளை இரணர் டு பேரட் டுக் கொண்டு, வெயிலையும் பொருட்படுத்தாது, கருமமே கண்ணாகப் புறப்பட்டு விட்டார். மேலும் எத தனை வீடுகளில தணி டலோ! வெகுவேகமாக நடக்கிறார். அன்று கண்டது தான், அதன் பிறகு அவரை நான் காணவில்லை.
காலங்கள் ஒடிச் சென்றன. காலவெள்ளம் பல நூறு பேரோடு பிள்ளையானையும் அள்ளிச் சென்று விட்டது. அவர்களைத் தகனஞ் செய்த சுடலைகளும் புல் முளைத்துப் புதர் மண்டிக் காடாகிப் போயின. எல்லாரும் மறக்கப் பட்டவர்களான நிலையில் ஒரு நாள்;
 

வேலணைப் பெருங்குளம் மாரியம்மன் “கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் விடுவதாக அறிந்து சென்றேன். அங்கே பிள்ளையான் பிள்ளையானே தான்! ஆஜானுபாகுவான தோற்றப் பொலிவோடு, இரண்டு தோள்களிலும் இரு தோணிப் பைகளைச் சுமந்து கொண்டு, புத்தம் புதிய
மணித் தேரில் சித்திரித்த சிலையாக வீதி
வலம் வந்து கொண்டிருந்தார். என் மனதை அந்த வயல் வெளியும், பங்குனி மாதப் பாழ் வெய்யிலையும் எண்ணி எண்ணி மகிழ வைத்ததுடன் கங்கை வார் சடையர் அன்பரெல்லாம் கடவுளைக் கண்டேன்.
1. எழுதப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம்
2. எழுதப்பட்ட அத்தியாயங்கள்
(சிறுகதைத் தொகுதி) 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான்
5. மண்ணின் மலர்கள்
6. நானும் எனத நாவல்களும்
7. கிழக்கிலங்கைக் கிராமியம்
8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
(பிரயாணக் கட்டுரை)
VN NAM7 LaRMsOldri sóðsV)
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் வெளியிட்டுள்ள நூல்கள்
(இரண்டாம் பதிப்புல புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
(13 யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்)
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
65606): 250/=
சாந்தன் விலை: 140/=
சிரித்திரன் சுந்தர் 6oo6o: Ibo/=
66oo6o: II o/=
செங்கை ஆழியான் விலை: 80/=
ரமீஸ் அப்துல்லாஹ் விலை; 100/=
டொமினிக் ஜீவா
6oo6o: II o/=

Page 14
மீண்டும் பூத்த மலர்
அவள் தேனை அறிந்திருந்தாள். சுவைத்துப் பார்க்கும் ஆசையும், இயற்கையின் உந்தலால் அவளுக்குள் இருந்தது. காலம் கனிந்த போது, பெற்றோர்களே அதனைத் தேடியுந் தந்தனர். ஓரிரு மாதங்கள்தான். அதன் சுவையை, உடலுக்கும், உள்ளத்துக்கும் அது தந்த தெம்பை அவளால் அணு அணுவாக அனுபவிக்க முடிந்தது.
பூரித்துப் போனாள். வாழ்நாளெல்லாம் இது போன்ற நாட்களாகவே இருக்கக் கூடாதா என மனம் அங்கலாய்த்தது. இத்தனை நாளும் நான் இதனை அறியாதிருந்தேனே.
சட்டென மனதுக்குள் ஒரு ஏக்கம். அவளறிய எத்தனை இள நெஞ்சங்கள் இதனை உணராது, அனுபவிக்காது வாழ்நாளை வெறுமையாய்க் கழித்து வாடிப் போயின.
மனத்துள் மாறியோர் இனம் தெரியாத பூரிப்பு. நான் சுவைத்து விட்டேன். சுவைக்கப் போகின்றேன். சுவைத்துக் கொண்டே இருப்பேன்.
நம்பிக்கை மேலோங்க உடலுக்குள் கிடந்து ஊஞ்சலாடும் மனத்தின் துள்ளாட்டம் அவள் செவிகளுக்குள் மல்லவா கேட்கின்றன.
"ஆண்டவனே, என்னை எப்போதுமே இப்படியே வைத்துக் கொள்”. அவள் ஏங்கினாள். புலன்களையெல்லாம் ஒன்றாக அடக்கிப் பிராத்தித்தாள். கண்கள் முடிக் கொண்டன. அந்த இருள்மைக்கள்.
அது யார்? பூதாகரமான அந்த வெளிச்சத்துள் தோன்றுவது! ஆம் அது அவர். அவரே தான். அவள் கண்கள் மூடியே கிடந்தன.
ஒரு மங்கிய மெல்லிய இருளுள் அவனும், அவளும் அங்கு நடப்பது என்ன! கண்களை முடிக் கொண்டாலும் அனைத்தும் தெரிகின்றனவே. சட்டெனக் கைகள் முகத்தை மூடிக் கொள்ள, நாணத்தால் முகம் வியர்க்க உடல் நடுங்கியது.
தனிமையில் ஒரு தனியறையுள் மின்விசிறியின் தென்றலுக்குப் போட்டியிடும் மெல்லிய
 

இளங்காற்றில் எண்ணங்களின் பேதலிப்பில் அவள் கிடந்தாள்.
米米米
புதிதாகக் குடிவந்த வீட்டுத் தோட்டத்தில் வாடிக் கிடந்த பூஞ் செடிகளுக்கு, நீண்ட குழாய் கொணி டு நீர் பாய் ச் சரி கி கொண்டிருந்தவள் சட்டென உயர்ந்த தலையைக் கண்டதும் துணுக் குற்றாள்.
வீட்டுச் சுற்று மதிலைத் தாண்டி ஓரிரு அடிகளுக்குள் நனைந்து போன தோற்றத்தில் ஒரு முகம். கடுங் கோபம் நிழலாடத் தரித்தது.
புரிந்தது அவளுக்கு தனி னா ல தவறொன்று நடந்து விட்டதாக. கோபத்தால்
வெடித்திருக்க வேண்டும். ஏனோ அவளைக்
கண்டதும் அரை வேக் காட்டில் சினம் தணிந்தது.
வார்த்தைகள் எழவில்லை. தாமதித்துச் சொற்களைக் கூட்டி மன்னிப்புக் கேட்டாள். சினம் பணியான போது தலையும் தணிந்தது.
米米米
அவன் எவ்வளவு அழகான இளைஞன் முகப் பொலிவே, அவன் உருவத்தைக் கற்பனைக்குள் வடிக்கச் செய்தது.
கற்பனை உருவம் சமைந்த அவன், கண்ணுக்குள் நின்றான். தெளிந்த நீரில் தோன்றும் கழங்கமில்லாப் பிம்பம்போல.
"சீ என்ன இது' அவள் உள் மனம் சொன்னது. கல்லொன்றை எறிந்து தேகத்தைக் குழப்பியது போல அவள் மனம் கலங்க அவன் மறைந்தான்.
எதி தனை நேர மி ஒரு சரி ல நிமிடத்துளிகளே. மெல்ல மெல்ல. மெல்ல மெல்ல. நினைவுகள் தெளிவடைய,
அவள் அச் சாக
மீண் டும் அதே ... அவன் . மனத் திரையில் பதிவானான். அழியாத கோலமாக,
米米米
கட்டிலில் தனித்துப் புரண்டாள். தூக்கம் தூர நின்றது. இப்போதெல்லாம் அவளுக்கு இரவில துT க க ம வருவதல  ைல. முன்பெல்லாம் ஆடிய கலைஞன் போல், அடித்துப் போட்டது போல் உறக்கம் தழுவி நிற்கும்.
இன்றோ கட்டிய மனக் கோட்டைகள் காணாமற் போனபோது. தினமும் இனிமேல் தேனருந்தும் இன்பம் தான் என்று திடமாக நம்பிய தன் எண்ணத்தில் மண் சரிந்த போது, அவள் என்ன செய்வாள்.
மூன்றோ நான்கோ மாதங்கள் தான். அவள் சற்றேனும் எண்ணிப் பார்க்காத வேளை. எண்ணியும் பார்க்க இயலாத தொலைவில் அவள் கற்பனையின் தளமே பிரிந்து போனது.
தூண்டி விடாத விளக்காக அவள் இருந்திருந்தால், சுற்றிவரத் தான் அனுபவித்த இருள்மைக்குள் தன்னைப் பிறர் போல் நிரந்தரப் படுத்திக் கொண்டிருப்பாள். சட் டெனத் துTண் டப்பட்டு, தன்னைச் சுற்றியொரு ஒளி இன்பத்துள் மூழ்கித் திளைக் கையில் அணைக்கப் பட்டால் அவளால் தன்னை ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்ள முடியாத சூனியத்தள் தவிக்க விடச் செய்தால்.
தேனின் சுவை தந்தவன் தொலை தூரத்தில் தன்னை நிரந்தரப் படுத்திக் கொண்டதை அவளால் தாங்கிக் கொள்ள இயலாதிருந்தது.
கணி களை இறுகவே மூடினாள் .

Page 15
சுற்றியுள்ள அவன் அடையாளங்கள் அத்தனையும் பழைய நினைவுகளைத் தூண்டாதவாறு தடுத்துக் கொள்ள எட்டாக் கனியவன் என்பதால் ஏமாற்றத்தின் பலனாய் எண்ணத்திலிருந்து மெல்ல அகன்று போனான்.
கண்கள் மூடிக் கிடந்தன. ஒரு சிறிய தூண்டுதலால் முற்றிலும் மாறிவிடும் கணினித்
திரைபோல அவள் மனத்திரையில்.
966.T.
ஆம். அவனேதான். முகத்தை மட்டும் வைத்து உருவத்தை அவள் உருவகம் செய்ய மனத்துள் நிலைத் துவிட்ட மதிலுக்கப்பால் தெரிந்தவன்.
நெருப்பாய்த் தகித்தது உடல், சட்டென ஏற்பட்ட அந்த மாற்றத்தின் காரணம் அவளுக்குத் தெரிந்தது. அவள் மீண்டும் கண்களை இறுக்கமாக முடிக் கொண்டாள்.
முன்பொரு நாள் தெரிந்த பேரொளியுள் ஒரு மெல்லிய இருளுள் அவள் கண்ட காட்சி அங்கே அவள் இருந்தாள். அதே வெறுமைக் கோலத் தரில் ஆனால் முனி பிருந்த அவனில் லை. அவனுக்குப் பதிலாயப் வேறொருவன். முகத்தை மட்டும் வைத்து அவள் உருவகம் செய்த மதிலுக்கப்பால் தெரிந்தவன்.
மனம் அதிர்ந்து போனது. விழித்துக் கொண்டாள். அவளை அறியாமல் உடல்
எழுந்து கட்டிலில் தன்னை உட்கார வைத்துக்
கொண்டது.
Skekk
W இன்று தான் தோன்றுவான் போல் இளமைக் கோலத்தில் கதிரவன் கிழக்கில் தோன்றினான். வரவர வேகம் குன்றி
மாலையில் மேற்கு வானுள் புதைந்து மறைந்தவன்,
புதியவனாய் ப், புத்தம்
புதியவனாய் உருவெடுத்தே.
சுள்ளென முகத்தைச் சுட்ட அவன்
செங்கதிரால் அவள் விழித்துக் கொண்டாள்.
தலை கனத்தது. தெளிவில்லாத ஒரு மன
உணர்வினால் அவள் குழம்பிப் போய்
இருப்பது அவள் முகத் தோற்றத்தில்
பிரதிபலிப்பானது.
பிரிவின் துயர் மெல்ல மெல்ல மறைந்துபோய் தனிமை தான், சா வரும்வரை வாழ்வு என்று மனத்தைச் சவமாக்கிக் கொண்டு நான்கு ஐந்து மாதங்களாகிவிட்டன. இரவின் தனிமை பழகிப் போனாலும், இடையிடையே ஏற்படும் இளமையின் வேண்டுதலுக்கு அவளால் தீனியிட முடியாது தவித்த நாட்களில் அன்றும் ஒன்றானதால் ஏற்பட்ட மாற்றமே அது.
காலைக் கடன்களின் போது குளிர்ந்த நீரில் உடலை ஊறவைத்துக் கொண்ட அவளுக்கு மனதில் ஓரளவு பாரம் குறைந்தது.
ekekek
வெளி நாட்டு மோகம் இன்று எத்தனை இளம் உள் ளங் களை இ வி வாறு ஏங்கவைத்துக் கொண்டிருக்கின்றது. போரின் கொடுமையால் குருத்திலேயே கிள்ளப்பட்ட வாழ்வின் முடிவுகள் ஒன்றிரண்டா, இல்லாத போது இல்லையென்றானாலும் இருந்தும் இல்லாத நிலை தோன்றும் போது. ஏமாற்றத்திற்கு அளவே இல்லையே.
பணம் தேடும் ஆசை, அதனை விட மேனாட்டின் நாகரீகம் எனத் தோன்றும் பொய்யான வாழ்வு முறை இளைஞர்களைப் பல இலட்சங்களாகப் பறக்க வைக்கின்றன.
தனித்துப் பறந்தவர்கள் போகத்
துணைகளைத் தவிக்கவிட்டுப் போனவர்களும்
அங்கு துணை தேடிக் கொள்வது மிகச்
 

சாதாரணமே,
பசுப்பால் குடிக்கப் பசுவா வளர்க்க வேண்டும் மேல் நாட்டில், வீதிக்கு வீதி பணி  ைணகள் மலரிநீத நாகரீக மி , இளைஞர்களைப் பிறந்த மண்ணை மறக்கச் செய்கிறது என்றால் பொய்யேது. அவளின் துணையும் அவ்வாறு தான் புதிய வாழ்வுக்குத் தன்னையும் பழக்கிக் கொண்டிருக்கும்.
ckckck
மாலையரின் மங்கலான கருமை வானத்தில் படர, சூரியன் தன்னை அதற்குள் புதைக்கலானான். தோட்டத்துப் பூஞ்செடிகள் நீருற்ற அவளை அழைப்பதுபோல் தங்களைச் சேர்ர்வாக்கிக் கொண்டன.
நீண்ட நீர்க் குழாயின் வேகமான நீர்ப் பாய்ச்சல் செடிகளை ஸ்னானம் செய்வித்தது. நீர்பட்டதும் சட்டென அவற்றில் தோன்றும் மலர்வு அவள் நெஞ்சத்தைக் கிளற தலை தானாக உயர்ந்தது. கண்கள் எதையோ தேடின. தேடாதே என்பது போல் தெரிந்த உருவத்தில் அவள் பார்வை குத் திட, அவனும் நோக்கினான்.
வைஞர்களுக்கு ஒ வண்டுகோள்
ல்லிகையுடன் தொடர்புகொள்ளுங்கள்
35வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க.
*ঃ
ශ්‍රේනේ ඉෂ් சந்தா 250/- தனிப்பிரதி 20/-
தொடர்பு கொள்ள ண்டிய முகவரி 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13 தொலைபேசி 320721
(காசுக்கட்டளை அணு Giri Dominic Jeeva, Kotahena. Post Sri (35i
நாட்கள் நகர்ந்தன. தினமும் அவள் பூஞ்செடிகள் நீரில் மிதந்தன. கண்களும், மனமும் கொண்ட களிப்பும் தொடர்ந்தது.
தன்னைச் சுற்றி மீண்டுமோர் ஒளியின் மலர் வினை அவள் உணரும் போது, இழந்துபோன எல்லாமே அவளுக்குக் கிடைக்கலாயின.
அடிக்கடி அவள் செய்கைக் காய் உள் மனம் உறுத்தும் "ஒருத்திக்கு ஒருவனே' என்ற அதன் தீர்மானத்தால் அவள் நொந்தே போவாள். இருப்பினும் அதனைப் பேணும் மனவலுவை இழக்கச் செய்தது யார் குற்றம், என்ற வினாத் துளிர்க்கும் போது, தான் செய்யும் செய்கைக்குரிய யதார்த்தத்தை அவளால் மறுக க இயலவில்  ைல. இயற்கையை வென்று எத்தனை பேரால் வாழமுடியும். அந்தச் சாதாரணத்தில் ஒன்றாய் அவளர் தனி  ைனயும் சேர் த துக கொண்டபோது. தவிக்க விட்டவர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளாகத் தோன்றினர்.

Page 16
யாரிடமும் கூற முடியாத
எவராலும் நம்ப முடியாத" & ::::::::: - இரகசியங்களும் நினைவுகளும் தான் அங்கு நடப்படும் ஆமணக்குச் செடிகள் எத்தனை. எத்தனை காற்றில் அசைந்தபடி
அவ் இரகசியங்களை யெல்லாம்
இரைமீட்டி மகிழும்.
உதடுகளுக்குக் கூடத் தெரியக் கூடாத X 荔 இரகசியங்களும் (all . . . . . . . . . . . . . . . . . Aாறைகளில் மோதி அத்தனையும் a காற்றுக்குள்
மலைகளின் மீது சத்தியமாக சமுத்திரங்களின் மீது சத்தியமாக அவை அனைத்தும் அனைத்தும்
அவற்றை அனுபவித்த படி இரைந்து செல்லும்.
உயிருள்ளவரை A கற்களும் மண்களும் தங்கள் தங்கள் இதயத்தில் மாத்திரமே : மொழிகளில் வீற்றிருக்கும். உன் புகழ் பற்றிப் பேசி /* ஆச்சரியப்படும். அவை என்றுமே வெளியfகாத வரம் பெற்றவை. .ޑަޗުލީ இறந்தவர்கள் என்ற வகையில் / நானும் ஒரு நாள் உயிர்த்தெழுவேன் அவை அனைத்தும் இறுதியில் இவ் இரகசியங்கள் அனைத்தும் என்னுடலோ:ே நியாயத் தீர்ப்புக்காக மயானம் வரை எடுத்துச் செல்லப்படும். இறைவனிடம் போய்ச் சேரும்
எனக்கு முந்தியே.
 
 
 
 
 
 
 

III. s Fg6 606
இன்று மலையகத்தில் இலக்கியம் என்பது வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு இனிப்பாகவும் மற்றவர்களுக்கு எட்டிக்கனியாகவும் இருக்கின்றது. மலையகத்தில் வசிப்பவர்களில் பாதிக்குமேல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் சாதாரணத் தோட்டத் தொழிலாளர்களாகும். இவர்களின் பிரதான பொழுது போக்காக முன்னர் இருந்தவை வானொலியும், திரைப்படங்களுமாகும். ஆனால் இப்போது அவர்களுக்கு பொழுது போக்கு என்று எதுவும் இல்லை. ஒய்வு ஒழிச்சலில்லாமல் எந்நேரமும் உழைத்தால் தான் கால்வயிறு கஞ்சியாவது கிடைக்கும். இந்நிலையில் அவர்களால் இலக்கியத்தைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?
மேலும் மலையகத்தைப் பொறுத்தமட்டில் இலக்கிய விழாக்கள் என்பதெல்லாம் வெறும் கசப்பு மருந்துகளாகும். அவை படித்தவர்களுக்கு மட்டுமே உரியது. நமக்கு தேவையில்லாதது என்பது அவர்களின் திடமான எண்ணமாகும். எனவே தான் இலக்கிய விழாக்கள் எவையுமே இங்கே வெற்றியடைவதில்லை. புத்தக வெளியீடுகள், ஆய்வுகள், விவாத அரங்குகள் யாவுமே போதுமான கூட்டமேயில்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பதாகவே முடிந்து விடுகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் லிங்கன் பதிப்பகத்தாரின் மறைந்த க. ப. லிங்கதாசனின் குறிஞ்சித்தேன்' இலக்கிய விழாவானது மிகவும் பிரமாண்டமான முறையில் எதிர்பார்த்ததை விட அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது. இதுவரை அட்டன் பிரதேசத்தில் இப்படியான வெற்றிகரமானதொரு இலக்கிய விழா நடந்ததில்லை. இவ்விழா சிறப்பாக வெற்றிகரமாக நடந்தமைக்கான காரணங்கள் எவை என ஆராய்ந்த போது முதலாவது விழாவை ஏற்பாடு செய்தவர்கள் கவிஞரின் அதாவது க. ப. லிங்கதாசனின் பிள்ளைகள். அனைவரும் நல்ல வசதி மிக்கவர்கள். இப்படியான விழாவிற்காக எவ்வளவு பணமும் செலவழிக்கும் சக்தி

Page 17
மிக்கவர்களாக இருந்தார்கள். மேலும் நல்ல வசதி படைத்த இவர்களின் வியாபார நண்பர் கள் மற்றும் உறவினர் கள் இவர்களுக்கு வேண்டியளவு ஆதரவும் , பொருளாதார உதவியும் செய்தார்கள். ஊடகத்துறையினரையும் இவர்கள் மிக நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.
மொத்தத்தில் இவ்விழா மலையகத்தில் நடந்த இலக்கிய விழாக்களுக்கு ஒரு முனி மா தாரியாக, முனி னோ டியாக விளங்கியமை இங்கே கவனிக்த் தக்கதாகும். போதுமான பணபலமும் வர்த்தகர்களின் பேராதவும் இருந்தால் இலக்கிய விழாவைக் Bn Lc மரிகவும் ஜனரஞ சக மாக, ஜனக் கூட்டத்துடன் வெற்றிகரமாக நடாத்த முடியும் என்பதற்கு அட்டன் லிங்கன் பதிப்பகத்தார் ஒரு உதாரணமாகும்.
இன்று மலையக வசதிபடைத் த இலக்கியவாதிகள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களின் சொந்தச் செலவில் புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பதிப்பித்த புத்தகங்கள் விலை போகாமல் கையிலேயே தங்கி கையையும் கடித்து விடுகின்றன. ஆனால், தாங்கள் ஒரு எழுத தாளணி என பதறி கு இப் படி பதப் பரிக் கப் பட்ட புத் தகங்களே ஆவணங்களாக திகழ்வதால் நஷ்டத்தைப் பற்றி இவர்கள் பெரும் பாலும் கவலைப் படுவதில்லை.
ஆனால், நல்ல இலக்கியவாதிகள் தங்களின் படைப்புகளைத் தாங்கள் வாழும் காலத்தில் வறுமையின் காரணமாக வெளியிட முடியாமலும் மறைந்த பின்னும் அவற்றை வெளிக் கொணர வாரிசுகள் இல்லாமலும் அவை அவர்களுடனேயே
மறைந்து மண்ணோடு மண்ணாகி விடுகின்றன,
உதாரணத்துக்கு குறிஞ்சித் தென்னவன்; குறிஞ சிப் பாலன் போன்றவர்களைச் சொல்லலாம். மலையகத்தின் அவலங்கள்ை, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் வறுமையைப் பற்றி கவிதை வடித்தவர்கள் கடைசியில் அவர்களின் மரணம் அவர்க" h மறக்கடித்து விட்டது. காலத்துக்குக் இந்தக் கவிஞர்கள் விருது வழங்கி oயளரவிக்கப்பட்ட போதும் இவர்களின் வறுமையைப் போக்கிட யாரும் எவ விதமான நடவடிக் கை களு மி எடுக்கவில்லை. எனவேதான் வெறும் இலக்கிய வாதிகளாக இருந்து வறுமையில் வாடித் தங்களின் குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் கண்ணிருடன் காலத்தைக் கழிப்பதைவிட கண்ணியத்துடன் கிடைத்த வேலையைச் செய்துகொண்டு தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போக முடிவு செய்து விட்டார்கள். இதுதான் அவர்களுக்கும் நல்லது. அவர்களின் எதிர் காலத்துக்கும் பாதுகாப்பு.
சந்தா செலுத்தி விட்டீர்களா p
யவு செய்து மல்லிகையுடன் த்துழையுங்கள். N
 
 

டொமினிக் ஜீவா
அராலி ஆனந்தனர்
அன்பு வாசகர்களுக்கு - உங்களைப் பற்றி உங்களுக்குள்ளேயே எத்தனை தலைக்கனமான நினைவுகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த ஏனைய பலரைப் பற்றியும் உங்களுக்குள்ளேயே எத்தனைவிதமான அபிப்பிராயங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்குள்ளே என்னைப் பற்றி எத்தனை திமிர்த்தனமான எண்ணங்கள் என்னிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். எனக்குள்ளே உங்களைப் பற்றி எத்தகைய அபிப்பிராயங்கள் என்னிடம் உண்டு என்பதை நான் அறிவேன். ஆனால், எங்களுக்கு உள்ளேயான இந்த வேறுபட்ட, மாறுபட்ட உணர்வுகளை, அபிப்பிராயங்களை உள்ளது உள்ளபடிய்ே அப்படியே வெளிப்படுத்தும் துணிவு நேர்மை எங்களிடம் இருக்கின்றதா..?
மனச் சாட்சியுடன் மேற்படி கேள்விக்குப் பதிலளிப்போமானால் எம்மில் 99.9 வீதமானோர் 'இல்லை’ என்றே பதிலளிப்பர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டொமினிக் ஜீவாவால் மட்டும் நான் அறிந்தவரை இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க முடியும் எனத் திடமாக நம்புகிறேன். நான் அறிந்த மனிதர்களில் நல்லதோ கெட்டதோ, தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே பகிரங்கமாக மேடையில் நின்று திறந்து காட்டும் துணிவு, நேர்மை, சுயநம்பிக்கை டொமினிக் ஜீவா அவர்களிடமே உண்டு. இன்றைய உலகில் இது ஒரு வியக்கத்தக்க மனித பலம் என்பதில் சந்தேகமில்லை.
டொமினிக் ஜீவா அவர்களைப் பற்றி என்றுமே என்னிடம் மனக் குழப்பம் இருந்து வருகின்றது. பாடசாலையை ஒழுங்காக, எட்டிப் பார்க்காத ஒரு சாதாரண தொழிலாளியான இவரால் இன்று தமிழ் இலக்கிய உலகில் எப்படி முடிசூடா மன்னனாக, கொடிகட்டிப் பறக்க முடிகின்றது. சிறந்த கல்விமான்கள் பலராலும், ஒரு மாதாந்த இலக்கிய மலரை ஒரு ஐந்து வருடம் கூடத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலையில் கல்வியிலும், பொருளாதாரத்திலும், மக்கள் பலத்திலும் பலவீனமான பின்னணி கொண்ட ஜீவாவால் மல்லிகை என்ற இலக்கிய சஞ்சிகையை இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட முடிகின்றதே. இது எப்படி..?

Page 18
இந்தக் கேள்வி என்றுமே என்னுள் ஜீவாவைப் பற்றி ஒரு பிரமிப் பையே ஏற்படுத்தி வந்துள்ளது. கல்வியற்ற இந்தக் கனவானுடன் இன்று எத்தனை கல்வி கற்ற கனவான்கள் புத்திஜீவிகள், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் கைபிணைத்து நிற்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
ஜீவாவைப் பற்றிய இத்தகைய பிரமிப்புகள் என்னிடம் இருந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அவரது சில நடவடிக்கைகளைக் கண்டு “இவருக்கு ஏன் இந்தச் சின்னத் தனங்கள்’ என நான் பல சந்தர்ப்பங்களில் மனம் குமைந்துள்ளேன். அவரது மேடைப் பேச்சுக்கள் ஒவ்வொன்றிலும் நான்தான் என்ற அகங் காரம் , ஆணவம் கூச் சமின்றிக் கொப் பளிக் கும் . பல வனங்களை ஆக ரோ சத தோடு அம்பலப்படுத்துவார். இவை எந்தளவிற்கு நாகரீகமான நடைமுறை என நான் குழம்புவதுண்டு.
சமீபத்தில் பாரிஸ் நகரில் ஐரோப்பிய நாடுகளில , பரவலாக வாழ் நீ து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் நடாத தப் பட்ட தமிழ் இலக கசிய விழாவொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஜீவா பெற்றிருந்தார். பாரிஸ் சென்ற அவர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பேர்ளின், லண்டன் ஆகிய நகரங்களுக்கும் விஜயம் செய்து திரும்பியதும் 'முப்பெரும் தலை நகரங்களில் 30 நாட்கள்’ எனும் நூலில் தன் பயண அனுபவதி தை வெளிப் படுத்தியுள்ளார். அந்த நூல் பற்றி நானும் என் நண்பரொருவரும் விவாதித்தபோதும், எம்மால் ஜீவாவின் நிறைகளை விட குறைகளே அந் நூலில் அதிகளவாக அனுமானிக்கக் கூடியதாயிருந்தன. தன்னைத் தானே கொம்பனாக மேடைகளில் கர்ஜிக்கும் ஜீவா, லண்டன், பாரிஸ், பேர்ளின் மண்களில்
அடுத் தவர் களின்
நின்று கொண்டு சிறு குழந்தைபோல் - இந்த அற்பனுக்கும் இந்த மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் கிடைத்ததே - என வியக்கின்றார். இந்த மண்ணில் தன்னைக் கொம்பனாக கர்ஜிப்பவரால் அந்த மண்ணில் தன்னை எப்படி ஒரு அற்பனாகத் தாழ்த்தி எடைபோட முடிந்தது?
சமீபத்தில் தம் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஜீவாவிற்கு, கொழும்பில் ஒரு பாராட்டு விழா நடந்தது. வழமையான பாணியிலேயே ஜீவா தன்னைப் பற்றியே தன் வளர்ச்சி எழுச்சி பற்றியே கூட்டத்தில் விழாசினார். இறுதியில் அவர் பேசிய ஒரு விடயம். எனக்குள் எங்கோ இருந்த ஒரு பெரிய அடைப்பை உடைத்து விட்டது போன்ற ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. அந்தப் பேச்சு அவரைப் பற்றிய இதுகாலவரை பதில்
கண்டறியப்படாது எனக்குள் குமைந்து
கொண்டிருந்த பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அற்புதமான பதிலை தந்தது. தாழ்ந்த மனிதனாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னால் பார்க்கப்பட்ட ஜிவா, என் கண் முன்னால் எட்ட முடியா இமயமாக நிமிர்ந்து நின்றார். அப்படி ஜீவா என்னதான் பேசிவிட்டார்.?
“வேலை முடிந்து வீட்டிற்கு வருவேன். வாசலிலேயே என் செருப்பையும் என் பிரச்சனைகளையும் கட்டி விட்டுட்டுத்தான் நான் வீட்டிற்குள் போவேன். நான் என்றுமே என் செருப்புகளையும் என் வெளிப்
பிரச்சனைகளையும் வீட்டுக்குள் கொண்டு போவது கிடையாது. படுக்கையில் படுத்த உடனேயே உறங்கிவிடுவேன். காலையில் திரும்பவும் வேலைக்குப் புறப்படும் போது என் செருப்புக்களையும் மாட்டிக் கொள்வேன். என் பிரச்சினைகளையும் சுமந்து கொள்வேன். ஜீவாவின் இந்தப் பேச்சால் எனக்குள் பாரிய
 

விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. உண்மையிலேயே எனக்குள் ஜீவா மாமனிதனாக நிமிர்ந்து நின்றார்.
ஜீவாவின் ஆணவம் பற்றி, அகம்பாவம் பற்றி, திமிர் பற்றி இரை மீட் கதி தொடங்கினேன். அற்புத நீரூற்றாக, தெளிந்த நீரோடையாக ஜீவாவைப் பற்றிய என் கேள்விகளுக்கு எனக்கு உள்ளேயிருந்து பதில்கள் வெளிவரத் தொடங்கின. எனக்குள் அதிர்ச்சி.
இது எ ப் படி ஜூவா விற்குச் சாத் தரியமானது. ? ஜவா வே தன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளாரா..?
நாணி பெரு வரியப் புட னி அவரை உயரி ருடனேயே போஸ் மோட் டமி செய்கின்றேன்..!
உலகின் பிரமாண்டமான கோடீஸ்வரர்கள், மாபெரும் அரசியல் தலைவர்கள் தொடக்கம் மிகச் சாதாரண நிலையில் இருக்கும் பாமர மக்கள், பேரறிஞர்கள், புத்திஜீவிகள், இவர்களெல்லாம் இன்று எதற்காக ஏங்கித் தவிக்கிறார்களோ அது ஜீவாவிடம் உண்டு! இந்த அற்புத நிலைக்காக ஏங்கிய எத்தனை கோடீஸ்வரர்கள் அது தமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்ற ஏக்கத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ! செருப்பைக் கழட்டுவது போல் சகல பிரச்சினைகளையும் வி'ட் டு வாசலிலேயே கழட் டிவிட் டு வருவதென் பது சாதாரண மனிதப் பக்குவமா..? ஜீவா பொய் சொல்லவில்லை. அதனை உறுதிப் படுத்தும் நிரூபணங்களை
என்னால் முன்வைக்கக் கூடியதாக உள்ளது.
இந்தப் பக்குவம் பலகோடி மக்களில் ஒருவருக்கு இருப்பதே அபூர்வம். இந்தப் பக்குவ நிலையை அடைய வீடுகள் விட்டு காடுகள் சென்று தவம் செய்தும் ஏமாந்த ஞானிகள் எத்தனை பேர். ? இன்று என்னால் காணப்படும் ஜீவாவைப் போன்ற
ஒரு மனிதனை பிரான்சிய வரலாற்று ஏடுகளில் கண்டுள்ளேன். "இந்த உலகத்தில் மனிதனால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை” என்ற,
ஈடு இணையற்ற மகத்தான தன்நம்பிக்கை
கொண்ட நெப்போலியன் தான் அந்த மனிதன். யுத்த களத்திலும் வீரர்களை ஒதுக்கிவிட்டு 'பத்து நிமிடத்தில் எழுந்து விடுவேன்’ எனக்கூறி வெறும் கட்டாந்தரையில் படுக்கும் நெப்போலியன் பத்து நிமிடத்தில் நன்கு அயர்ந்து உறங்கி சரியாகப் பத்தே நிமிடத்தில் புதுத் தெம்புடன் எழுந்து நிற்பானாம். இது சாதாரண விடயமா? தன்னையே அடக்கி வெற்றி கொள்ளும் மாவீர புருஷர்களுக்கு மட்டுமே தான் இது சாத்தியம்!
தன்னையே அடக்கியாளும் மகத்தான இநீ த நலையை ஜூவா வெறி றி கொண டுள்ளார். இதுதான் மனித சமுதாயத்தின் உச்சக் கட்டப் பக்குவ நிலை.
இந்த உச்சக்கட்டப் பக்குவ நிலையில் எம்
மத்தியில் ஒரு மனிதன் மிகச் சாதாரணமாய் நடமாடிக் கொண்டிருக்கிறார் 1 இந்த மாமனிதனைப் பற்றி எத்தனை தவறான கருத்துக் கள் என்னுள் புரையோ டிப் போய்கிடந்தன.? வீதியால் போகும் போதும் வரும்போதும் காலம் காலமாக காலுக்குள் இடறுப் பட்டுக் கெண்டிருந்த ஒரு சாதாரண கல், இன்று ஈடு இணையற்ற அற்புத வைரமாய் இருப்பது கண்டு திகைத் து நிற்கின்றேன்!
ஜீவாவின் குறைபாடுகளே அவரது இணையற்ற பலம்!
ஜீவாவின் மேடைப் பேச்சுக்களின் போது அவரது ‘நான்’ என்ற அகங்காரம், ஆணவம், திமிர் சிறிதளவும் அடக்கமின்றி, வெட்கமின்றி மூடிமறைப்பின்றி முழு நிர்வாணமாகவே அவரால் வெளியே கொட்டப் படுவது கண்டு ஏராளம் பேர் முகம் சுழிப்பதை, குறைபட்டுக்

Page 19
கொள்வதை நான் அறிவேன். அவர்களில் நானும் ஒருவன் என்பதையும் ஏற்றும் கொள்கின்றேன். ஆனால், இன்று ஜீவாவின் வெளிப்படையான பேச்சுக்கள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜீவாவின் பேச்சுக்களில் அவர் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள தற்பெருமையான நினைப்பை அப்படியே வெளிப் படுத்துவது கண்டு முகம் சுழிப்போர் தம் உணர்வுகளை கட்டுப் படுத் தி சற்று ஆழமாகவும் , புத்திபூர்வமாகவும், விழிப்புணர்வுடனும் யோசிக்க வேண்டும். மனச் சாட்சியுடன் சிந்திக்க வேண்டும்!
ஜீவா இந்தளவிற்குத் தன்னைப் பற்றி
இத்தனை தற்பெருமை கொண்டுள்ளாரே என
அங்கலாய்க்கும் நாங்கள். நமக்குள் எம்மைப்
பற்றி நாம் எத்தனை இமாலய நினைப்புகள்
கொண்டிருக்கின்றோம் என்பதை மறுக்க முடியுமா? ஜீவாவினால் தன்னைப் பற்றி தான் கொண்டுள்ள நினைப் புகளையெல்லாம் அப் படியே பொதுமேடைகளிலேயே வெளிப்படையாக முழுமையாக கவிழ்த்துக்
கொட்டிவிட முடிகின்றது. அதற்கு மேல்
அவரிடம் அவரைப் பற்றி மறைபொருளாக எதுவுமே கிடையாது. ஜீவாவைப் போல் எம் மால எமக குள் ளே தேக க வைக்கப்பட்டிருக்கும் பெருமை மிக்க
நினைப் புக் களை வெளிப் படையாக
கொட்டிவிடும் துணிவு, தைரியம், நேர்மை எம்மிடம் உண்டா..? எம்மைப் பற்றி நாமே எமக் குள்ளேயே எந்தளவு தமிரான எண்ணங்கள் கொண்டவர்களாக நாம் இருக்கின்றோம் என்ற இரகசியம் எமக்கு மட்டுமே தெரியும். ஆனால் எமக்குள் உள்ள திமிரை முடி மறைத்து நாம் மிகவும் அடக்க ஒடுக்கமான அப்பாவிகளாக வேடம் போட்டு நாமே எம்மையும் உலகத்தையும் ஏமாற்றிக் கொணி டிருக் கண் றோம் . ஜூவாவின்
வெளிப்படையான பேச்சுக்களையிட்டு முகம் சுழி க குமி நாம் அவரிடம எதை எதிர்பார்க்கின்றோம்.? அவரும் எம்மைப் போல் உள்ளொன்று வைத்து வெளியே வேறொன்று பேசும் வேடதாரியாக இருக்க வேண்டும். எம்மையும் ஏமாற்ற வேண்டும். தம் மையும் ஏமாற்ற வேண்டும் என்றா விரும்புகின்றோம். ? .
ஜீவா அதைச் செய்வேன் இதைச் செய்வேன், சாதனைகள் செய்து குவிப்பேன் என மேடைகளில் கர்ஜிக் கன் றார் . அவைபற்றி நான் எதுவும் சொல் ல வேணி டியதில் லை. ஆனாலி , அவர் உள்ளொன்று வைத் துப் புறமொன்று பேசவில்லை. வெறும் கற்பனை உலகில் நீச்சலடிக்கவில்லை. நான் செய்து முடிப்பேன் எனத் திடமாக, உறுதியாக நம்புகிறார். அதை வெளிப்படையாகவே சொல்லுகின்றார். அவரிடம் மூடி மறைப்பதற்கு எதுவுமே இல்லை. இவை அசைக்க முடியாத அவரது உறுதி வாய்ந்த தன் நம்பிக்கையின் பட்டவர்த்தனமான வெளிப்பாடு. மனிதனால் செய்ய முடியாதது உலகில் எதுவுமே கிடையாது என முழங்கிய நெப்போலியனின் தன் நம் பிக் கை போன்றதே ஜூவா கொண்டிருக்கும் தன் நம்பிக் கையின் உறுதியாகும்.
தன்னைப் பற்றி ஈடு இணையற்றவனாகக் கள்ஜிக்கும் ஜீவா, பெர்ளின் மண்ணிலே, பாரிஸ் மணி ணரிலே, லணி டண் மணி னிலே, மொஸ்கோ மண்ணிலே நின்று பச்சைக் குழந்தையாக குதூகலிக்கும் போது, அங்கே அவரது அப் பழுக் கறி ற வெளி ளை உள்ளத்தைக் காண முடிகின்றது! சாதாரண ஏழைத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்த நானா இந்த மண்களில் கால் ஊன்றும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன் என
உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்குகின்றார்.
 

பாடசாலையை பார்க்க வாய்ப்பில்லாமல் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜீவாவைச் சுற்றி இன்று எத்தனை புத்திஜீவிகள் எந்த நேரமும் மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்து முதலமைச்சர் அழைக்கின்றார். தமிழகப் பத்திரிகை உலகம் அழைக்கின்றது. மொஸ் கோ வரில ஆட சரியாளரே அழைக்கின்றனர். புலம் பெயர்ந்த தமிழர் கூட்டம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வாவா என அழைக்கின்றனவே. ஏன்?
ஜூவா வினி தன்நம்பிக்கை, உழைப்பு, நேர்மை, ஜீவா இன்று இமயமாகி நிற்பதற்கு இவற்றைத் தவிர வேறு காரணங்கள் கிடையாது!
ஜீவா ஒரு ஞானி!
உலகில் மனிதர்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை. அதற்கான ஒரே காரணம் அவர்களது இரட்டை வேடமே. உள்ளுக்குள் வேறொரு மனிதராகவும் வெளியே வேறொரு மனிதராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைப் பற்றியும் , தங் களைச் சூழவுள்ளவர்கள்ைப பற்றியும் விதவிதமான கருதி து கி களி அUப் பரிரா யங் களி கொண்டிருக்கும் அவர்களால் தாங்கள் கொணி டிருக குமி கருத துக் களை அபிப்பிராயங்களை அப்படியே வெளியில் கொட்டிவிட முடிவதில்லை. அப்படி வெளியே கொட்டுவதற்கு நிறைய நேர்மை வேண்டும். நிறையத் துணிவு வேண்டும். நிறையத்
தன்நம்பிக்கை வேண்டும். இவை எம்மிடம் இல்லை. எனவே எம்மால் எம் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளியில் கொட்டமுடியவில்லை. நெஞ்சு நிறைய
அ ைசகி க முடியாத
வெளியேற்றவே முடியாத நினைவுகளை எந்நேரமுமே அடைத்து வைத்துள்ளோம். ஆனால் ஜீவாவிடம் நேர்மை உண்டு, துணிவு
உண்டு, உறுதியான நம்பிக்கையுண்டு,
சரியானதாகவுமி இரு கி கலா ம பிழையானதாகவும் இருக்கலாம். எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம். எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். தம்மிடம் உள்ளதை அப்படியே ର ଶu 6t') (୫ uu கொட் டிவிடு கறார் . எல்லாவற்றையுமே வெளியே கொட்டிவிடும் ஜூவாவின் நெஞ சும் வெறுமையாக விடுகின்றது. நெஞ்சை, இதயத்தை வெறுமையாய் வைத் திருப்பதென்பது இலகுவான காரியமா? உலகில் ஒரு மனிதன் அடையக் கூடிய அதி உன்னத நிலை இந்தப் பக குவ நரி லையே தனி  ைன வெறுமைப்படுத்திக் கொள்ளவே. தன்னை வெறுமைப்படுத்திக் கொள்ளும் உன்னத சக்தி கொண்ட ஒரு மனிதனால் மட்டுமே செருப்பை கழற்றிவிடுவது போல் உடுப்பைக் களை நீ து விடுவது போல , தனி பிரச்சினைகளையும் கழற்றி விட முடியும். இந்த மகத்தான வரப்பிரசாத்ம் ஜீவாவிற்கு இயற்கையாகவே கிடைக் கப்பட்டதா? செயற்கையாகவே கிடைக் கப்பட்டதா? என்பதை ஜீவாவே அறிவார். இந்தப் பக்குவ நிலையைப் பெற ஏங்கித் துடிக்கும் கோடானுகோடி கோடீஸ்வரர்கள், ஈடு இணையற்ற கல்விமான்கள், ஒப் பற்ற அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தலைவர்களையெல்லாம் நாம் காண்கிறோம். இதுவே ஜீவாவின் மகத்தான சொத்து. ஜீவா ஒரு ஞானி.

Page 20
66th
புத்தக சாலை
4.
~
இலங்கை - இந்திய - புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்
பூபாலசிங்கம் புத்தகசாலை (இலங்கை) - விடியல் பதிப்பகம் (கோவை) தாமரைச்செல்வி பதிப்பகம் (சென்னை) - காந்தளகம் பதிப்பகம் (சென்னை) காவ்யா பதிப்பகம் (பெங்களுள்) மற்றும் அன்னம் - க்ரியா - கீழைக்காற்று - அலைகள் - வேர்கள் இலக்கிய இயக்கம் - சென்னை புக்ஸ் நியூ செஞ்சரி - காலச்சுவடு மணிமேகலை போன்ற மிகப் பெரிய புத்தக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தரமான நூல்கள்
டானியல்-டொமினிக் ஜீவா - அந்தனி ஜீவா - செங்கை ஆழியான்- செ. கணேசலிங்கன் - சாரல் நாடன் - பெனடிக்ற் பாலன் - தெளிவத்தை யோசப் - அனுராதா ரமணன் - சுஜாதா - பாலகுமாரன் - அகிலன் - கண்ணதாசன் - கைலாசபதி - சிவத்தம்பி - எம். ஏ. நுஃமான் - சண்முகதாஸ் போன்றவர்களின் இலக்கிய ஆய்வு நூல்கள்
பெண்ணியம் - தலித்தியம் - மார்க்சியம் - பின் நவீனத்துவம் - பெரியளியம் தொடர்பான வெளியீடுகள் நவீன சினிமா தொடர்பான ஆய்வுகள் இலங்கை - இந்திய தமிழ் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் இலங்கை - இந்திய பத்திரிகைகள் - சஞ்சிகைகள் மற்றும் நவீன வாசிப்புப்புக்கான அனைத்து வெளியீடுகள்
பாடசாலை - அலுவலகத் தேவைக்கான உபகரணங்கள் அனைத்துத் தொலைபேசி அட்டைகள்
இவை அனைத்துக்கும்
PARS ARWALLAYAM 7 Rue Perdonnet, 75010 Paris, France. (M: la Chapelle/Gare du Nord) Tel: O 14472 O334 Fax: 0 1 4472O335
E-Mail: arivaalayam(37.com
2
ينتي
 
 
 
 

USقالقافلاق
t
கடல் நண்டு భ• இன்றைய வாழ்க்கைச் செலவுகளை கரையில் குறிக்கிறது. மரக்கறி வாங்கிய செலவு மீனுக்குக் கொடுத்தது. வாழைப்பழத்திற்கு இழுத்து வீசியது
ச்சிக்காய்
பூசைக்குத் தின்ற பலாப்பழம் என்று
செலவினையும் பதிகிறது.
லாளி அவன் என்றும் இப்பழத்தான் றந்தது * . ட்சையைக் கழத்தபடி அல்லது இனிக்கும் தோடம்பழத்தை உரித்தபடி தான் கனவில்கூட வருவான்
ான்று நினைத்தாய்
ாதிரம் இல்லாத தன் கையால்

Page 21
மல்லிகை
நூலகம் மதிப்புரைக் குறிப்புகள்.
566 foi
கருக்கொண்ட மேகங்கள ப. ஆப்டீன் நாவல் பேசும் பேனா வெளியீடு 131/9, தெமட்டகொட வீதி, கொழும்பு-09
பக்: 202+18-22) விலை; 150
நாடறிந்த சிறுகதை எழுத்தாளர் ப. ஆப்டீனின A 7 முதல் நாவல் கருக்கொண்ட மேகங்கள் ஈழத்து நாவலி VN 7 லக்கியத்திற்குப் புதியதொரு வரவாகும். புதிய தொரு வரவென்று A 27 கூறுவதறி குக காரணமுள்ளது. ஏனெனில், கருக் கொண்ட 5 تیبة بن یحیی மேகங்கள் ஈழத்தில் இதுவரை வெளிவந்த நாவல்கள் போன்று స్కీ * கதாம்சம் கொண்ட தன்று. கதையினூடகத்தில் எடுத்துக் கொண்ட ཚོ་ཚེ་ சமூகச் செய்தியைக் கூறுவது ஆப்டீனின் குறிக்கோளகவில்லை. சமூகச் செய்திகளைக்கூறுவதற்கு நிகழ்வுகளைத் துணை கொண்டிருப்பதாகப் படுகின்றது. அதனால் இது ஒரு புதிய வடிவமாகவும் வரவேற்கக் கூடிய முயற்சியாகவும் இருக்கின்றது. இன ஒருமைப்பாட்டினை வலியுறுத்துகின்ற நாவல் என்ற வகையில் காலத்தின் தேவை கருதிய பணியாகவும் கருக் கொண்ட மேகங்கள் விளங்குகின்றது என்று செங்கை ஆழியான் இந்த நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளமை சரியான மதிப்பீடாக அல்ல என்பேன். அனுராதபுர மாவட்டத்தில் ஆசிரியனாகக் கடமையாற்றிய வாய்ப்பினை ஆப்டின் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவரது அனுபவமும் மானிட நேசிப்போடு கூடிய பரிவும் இந்த நாவல் எங்கும் தேங்கி நிற்கின்றன. முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான உறவு நிலைகளைப் பலத்தோடும் பலவீனத்தோடும் இந்த நாவலில் பாத்திரங்களாக நடமாட விட்டுள்ளார். இந்த நாவலூடாக ஆப்டீன் சொல்ல வரும் செய்தி மிக மிக வலுவானது. ஒருவகையில் அனுராதபுரத்தின் பகைப்புலத்தில் இலங்கை முழுவதுக்குமான செய்தியைக் குறியீடாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறியுள்ளார். உறவு நிலைப் பிணைப்பினையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்திவிடலாமென்ற கருத்து நிலை ஈழத்தின் முன்னைய சில நாவல்கள் சுட்டிச் சென்றன. அது தவறு. அவரவர் தத்தமது பணப்பாட்டினையும் இனத் தூய்மை ஒழுக்க நெறிகளையும் பேணிக் கொண்டு ஐக்கியமாக வாழமுடியும் என்பதை ஆப்டீனின் இந்த நாவல் நிரூபிக்கின்றது. ரீலங்கா தேசிய நூலக சேவைகள் சபையின் புத்தக வெளியிட்டு உதவித் திட்டத்தின் கீழ் வெளிவரும் இந் நூல் நுணுகிய ஆய்வுக்குட்படுத்த வேண்டிய நாவலாகும்.
விஷ்ணுவர்த்தனன்.
அழியும் கோலங்கள. சிறுகதைத் தொகுதி - புலோலியூர் க. தம்பையா மீரா பதிப்பகம், 19123. ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு - 06. 686306): 2001- Uë: 44+xviii=162 நவம்பர் - 1999
1960களிலிருந்து சிறுகதைகள் எழுதிவரும் புலோலியூர் க. தம்பையா ஈழத்தில் புனைகதை வரலாற்றில் குறிப்பிட வேண்டியவராகவிருந்தும், விமர்சகர்களின் பார்வைக்குள் இதுவரை சிக்காதவராக இருந்துள்ளார். சிறுகதைப் போட்டிகள் பலவற்றிலும் முதற் பரிசில்களைத் தட்டிக் கொண்ட சிறப்பு இவரது சிறுகதைகளுக்குள்ளது. சிதறலாகக் கிடந்த இவரது சிறு கதைகளைத் தொகுத்து (பதினான்கு சிறுகதைகள்) ஒரு தொகுதியாக மீரா பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். அதனால் புலோலியூர் க. தம்பையாவின் சிறு கதைகளை ஒருங்கே கணிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
'அழியும் கோலங்கள்’ என்ற இச் சிறு கதைத் தொகுதி மிகத் தரமான கட்டமைப்பில் வெளி வந்துள்ளது. * மிக்க சிரத்தையோடு இந்த நூலை மீரா பதிப்பகம் வெளியிட்டு ள்ளமை புலனாகின்றது. நாடறிந்த சிறுகதை எழுத்தாளர் * தெளிவத்தை யோசேப் இத் தொகுதிக் குத் தக்க \ * முன்னுரை வழங்கியுள்ளார். 'ஒரு சிறுகதைக்காகக் கனமான ثة يمية விஷயங்களைத் தேடிக் கொண்டும் இருக்காயல் சின் லச் சின்னர் ܠܵܐ ܥ(أو افلانة انطلاo) طفيلمدير المحلة طبره الطلبربريوعي சம்பவங்கள் மனித அவலங்கள். M Y *, மன உணர்வுகள் போன்றவற்றை ஒரு சிக்கலில்லாத நடையுடன் w 婆% 、空 ダ வாசிப்புச் சுவை குன்றாமல் சிறுகதையாக்கிக் காட்டும். x} بعضی வல்லமை தம்பையாவிடம் இருந்தது எனத் தெளிவத்தை ஆதித்தி* யோசேப் குறிப்பிடுகிறார். 'ஒரு சில சிறுகதைகள் புத் திரிகைத் து தேவைக்கான சாதாரண கதைகளாக
இருந்தபோதிலுங் கூட ஒழுக்கம் குடும்பத்தின் கட்டமைப்பு, தெய்வ நம்பிக்கை, மனித நேயம் போன்ற பொதுவான தார்மீகக் கோட்பாடுகளை வற்புறுத்துவனவாகவே

Page 22
அமைந்துள்ளன என்ற கருத்தும் யோசப்புடையதே.
1964க்கும் 1999க்குமிடையில் நூற்றுக்குமதிகமான சிறுகதைகளை எழுதிய புலோலியூர் க. தம்பையா என்ற எழுத்தாளன், ஈழத்து இலக்கியத்தின் ஆரோக்கியமான கருத்தியல் நிலைகளைப் புரிந்து கொண்டு தன் சிறுகதைகளை எழுதியிருந்தால் கனதியானதாக அன்னாரின் படைப்புக்கள் அமைந்திருக்கும். இலக்கியப் பாதையில் தனிமைப்பட்டுள்ளார் என்பது அவரது சிறுகதைகளிலிருந்து புலனாகும் உண்மை. கதை சொல்லத் தெரிந்திருககும் புலோலியூர் க. தம்பையாவால் கலைத்தரமான கருத்தியற் படைப்புகளையும் தரமுடியும். அதற்கு அவள் நல்ல படைப்புகளுக்குப் பரிச்சயமுள்ளவராக மாற வேண்டும் போலத் தெரிகிறது.
அமரதாஸ்.
சிவாவின் சிறுகதைகள்
சிறுகதைத் தொகுதி. வண்ணை சே. சிவராஜா. யாழ இலககிய வட்ட வெளியீடு, விலை: 127;= us: 1216+xvi=137. B6)ILbLjT-1999
வண்ணை சே. சிவராஜாவின் பதினாறு சிறுகதைகளின் தொகுப்பாகச் சிவாவின் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. வண்ணை சே. சிவராஜா ஒரு மூத்த எழுத்தாளர். 1960 களில் சிறுகதைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர். எனவே இத் தொகுதியில் அன்னரின் மூன்றரை தசாப்தச் சிறுகதைகள் 59 Lib Ellisi ST 63f. F 6, 6ft 6i சிறுகதைகளின் கருத்தியல் பெண்ணியம், - சூழலியம் இன்னோரன்ன பிரச்சினைகளுள் தலை நுழைக்காது மிக அவதானமாக சமூக த்துவம், இனத்துவம் பற்றிய கருத்தியல் V * நிலையில் தன் சிறு கதைக ைஎாப் படைத் துள் எ11 * 5ں۔[ பொதுமையான மானிட 9 - 6)}} “ỉ 6)ị đb 6i சிவராஜா விண் *வர் சிறுகதைகளில் பொதி ந்துள்ளன. இத்தொகு தியிலுள்ள {{ பதினாறு சிறுகதை களில் உறவுவரும், வடிகால், பெற்ற தாயும், இன்ஷா அல்லாஹற் ஆகிய நான்கு சிறுகதைகள் மிகத் தரமானவை. இவற்றில் மிக உச்சமானது வடிகால் ஆகும். " عن பெற்ற பரிள் ளைகள் அனைத்தையும் வெளிநாட்டிற்கு S. அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் வயோதிபத் தம்பதிக்குத் தனிமை போக்கும் வடிகாலாக அமைந்த இளைஞன்
S is
ஒருவனை வெளிநாட்டு மகன் குடும்பம் திரும்பி வந்ததும் தூக்கியெறிந்து விடுகின்ற யாழ்ப்பாணத்து வயோதிபரை அற்புதமாக வண்ணை சே. சிவராஜா வடிகாலில் சித்தரித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற நேர்ந்து விட்ட துப்பாக்கிய அவலத்தினை மிக மனதில் தைக்கும் விதமாக "இன்ஷா அல்லாஹற் என்ற சிறுகதையில் சித்தரித்துள்ளார். இத் தெகுதியின் முன்னுரையில் செங்கை ஆழியான் குறிப்பிட்டிருப்பது போல.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இச்சிறுகதையைப் படித்து முடிந்ததும் மனதில் பெரும் துயரச் சுமை ஏறிவிடுகின்றது. எளிமையான உரை நடை, சிறப்பாகக் கதை சொல்லும் பண்பு: சமூகத்திற்கு அவர் சொல்லும் செய்தி என்பன சிவாவின் சிறுகதைகளைக் கணிப்பிற்றுள்ளாக்குகின்றன.
கமலநாதன்.
அக்கினிப் பூக்கள் நாடகம் அந்தனி ஜீவா. ஞானம் பதிப்பகம், 1997, பேராதனை வீதி, கண்டி ஏப்ரல் 1999 பக்: 112 விலை: 115.
கடந்த மூன்று தசாப்தங்களாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு, சிறப்பாக மலையக இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகப் : 2 பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் அர்ப்பணித்துள்ள அந்தனி ஜீவாவின் . . . . ." நாடக நூல் அக்கினிப் பூக்கள் ஆகும். அக்கினிப் பூக்கள். தொழிலாளர் வர்க்கப் பிரச்சினைகளை அடிநாதமாகக் கொண்டது. இயல்பான பேச்சுவழக்கோடு, சுவையாக, அக்னிப் பூக்களை அந்தனி ஜீவா நகர்த்துகிறார். தொழிலாளரின் பிரச்சினைகளை வெகு இயல்பாகவும் தத்ருபமாகவும் இந்த நாடகத்தில் எழுதியுள்ளாா தோட்ட முதலாளிக் கெதிராக வேலை நிறுத்தம் செய்யும் தொழிலளர் மன நிலை, குரல்கள் என்பன இந்த நாடக நூலில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. படித்துப் பார்க்க வேண்டிய ஒரு நாடக நூல் அக்கினிப் பூக்கள்.
கமலன்
வேலி
கே. வி. நடராஜன் சிறுகதைத் தொகுதி மித்ரா வெளியீடு. சென்னை -2000 பக்:312. விலை
யாழ்ப்பாண மண்ணின் இதயத்தைத் தேடும் 22 சிறுகதைகளின் தொகுப்பு எனவும், மனித நேயத்தை ஆராதனை செய்யும் சிறுகதைகள் எனவும் பதிப்பாசிரியரால் முத்திரை குத்தப்பட்டு, மூத்த புனைகதையாசிரியர் கே. வி. நடராஜனின் சிறுகதைத் தொகுதி 'வேலி வெளிவநதுளளது. இச சிறுகதைத தொகுதியைச செனனை மிதரா வெளியீடாக அதின உரிமையாளர் டாக்டர் பொன், அனுரா வெளியிட்டுள்ளார். ஈழத்தின் இன்னோர் முத்த படைப்பாளி. எஸ். பொன்னுத்துரை இச்சிறு கதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ளார். ‘தலித்

Page 23
இலக்கியம்' பற்றிய முன்னீடாக அது அமைந்துள்ளது. டானியலே தலித் இலக்கியத்தின் பிதாமகள் என்ற கருத்தினை உள்வாங்க முடியாத ஒரு வித அசுகையில் இந்த முன்னுரை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. தலித் இலக்கியத்தின் பிதாமகர் எஸ். பொன்னுத்துரையாகவோ, கே. வி. நடராஜனாகவோ இருப்பதாகக் கொள்வதில் தவறில்லை. டானியல் மீது மீண்டும் சேறு வீசும் கருத்துக்களை கொண்ட 'வேலியின் முன்னுரை தனித்து நோக்கத் தக்கது.
நிற்க, கே. வி. நடராஜனின் பதினொரு சிறுகதைகள் கொண்ட யாழ்ப்பாணக் கதைகள்' எனும் தொகுதி 1965 இல் வெளிவந்து, 1995 இல் இரண்டாம் பதிப்பும் கண்டது. யாழ்ப்பாணக் கதைகள் தொகுதி, யாழ் இலக்கிய வட்டம் வெளியீடு செய்த முதலாவது நூலாகும். அத் தொகுதியில் இடம் பெற்றிருந்த சில சிறுகதைகள் 'வேலி தொகுதியிலுமிடம் கொண்டுள்ளன. 'ஈழத்தில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுடைய வாழ்க்கையின் யதார்த்த அனுபவங்களை வைத்து அற்புதமான சிறுகதைகள் எழுதிய கே. வி. நடராஜனின் முழுமையான தொகுதி ஒன்று வெளிவருதல் வேண்டும் என்ற அவாவினால் இத்தொகுதி வெளிவருகிறது என்கிற எஸ். பொ. வின் கருத்துக்கு எதிர்வாதமில்லை.
'வேலியில் அடங்கி படித்தவிட்டு நிமிரும் போது தரிசித்த உணர்வு ஏற்படு யாழ்ப்பாணப் பேச்சு வழக்கை தன் சிறுகதைகளில்
உள்ள 22 சிறுகதைகளையும் யாழ்ப்பாணத்தின் ஆத்மாக்களைத் கின்றது. மணியான சிறு கதைகள். உயிர்த்துடிப்போடு கே. வி. நடராஜன்
கையாண்டு உள்ளார்.
கே. வி. நடராஜனின், வடிவு, ஒன்றுக்குள் ஆயிரம், தேள் ஆகிய கதைகள் மூலம் தனது பார்வையை விரிவாக்கி உலகத்திலுள்ள பல வர்ணங்களையும் காண விளைகின்றார். இக்கதைகள் சிலவற்றில் ஓர் எதிர் மறைத் தன்மையையும், யன்னலுக் கூடாக எட்டிப் பார்த்து, காணக் கூடாதவற்றைக் கண்டுவிட்டு. இன்பங்காணும் ஓர் உளப் பாங்கினையும் நான் காண்கின்றேன். யதார்த்தப் பண்பும், உருவகப் பாணியும், கலந்திருக்கும் 'வேலி' என்ற கதை ஒரு கால கட்ட யாழ்பாணத்தை வெற்றிகரமாகப் படமாக்குகின்றது. சமூகம் அறியப்படாத - நிச்சயம் அறியப்பட வேண்டிய ஒரு கதாசிரியரின் சிறு கதைத் தொகுதி என ஏ. ஜெ. கனகரட்னவின் குறிப்பு கதாசிரியரை நன்கு மதிப்பிடுகின்றது. V
வேலி சிறுகதைத் தொகுதி ஈழத்தின் சிறுகதை துறைக்கு மேலதிகக் கனம் சேர்க்கின்றது. - இச்சிறுகதைகள் எழுதப்பட்ட காலங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அக்கதைகளின் சமூகச் செய்திகளின் காலகட்ட அவசியத்தை புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 

செ. யோகநாதர்
இலக்கியம் யாருக்காக எழுதப்படவேண்டும் என்ற கேள்விக்கு விடை எழுதப்பட்டு எத்தனையோ காலமாகிவிட்டது. ஆயினும் காலத்திற்குக் காலம் இந்தக் கேள்வி வெவ்வேறு வார்த்தைகளில் குரல்களில் கேட்கப்பட்டுக் கோண்டே வருகின்றது. அதுவும் அண்மையில் இக்கேள்விக்கான பதில் குழப்பங்களின் குவியலாகக் கூறப்பட்டு வருகிறது. இது தமிழில் மட்டுமல்ல சர்வதேச அளவிலேயும் உள்ள நிலைமை.
மக்கள் இலக்கியத்தை நேசிப்பவர்கள், அதன் சித்தாந்த வலுவினை ஏற்றுக் கொண்டவர்கள், "நாங்கள் சாதாரண மக்கள், தொழிலாள விவசாயிகள், ஒடுக்கப்படுவோர் பற்றி அறிந்து இவர்களுக்காக, இவர்களின் மேன்மைக்காக எழுதி வருகிறோம்" என உறுதியாகக் கூறினார்கள். இந்த முற்போக்கான பார்வையினூடாகத் தமது படைப்புகளை ஆக்கி வருகின்றார்கள். அவர்களின் எழுத்துக்கள் இவ்விதத்திலே அந்தந்த மொழிகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. வருகின்றன. இந்தப் போக்கிற்கு எதிரான கருத்துடையோர் இந்த இலக்கியங்களுக்கும் எதிராக பல கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இவை ஏற்கெனவே கூறப்பட்டு, பதிலளிக்கப்பட்டவை. ஆயினும் "கோயபல்ஸ் பாணியில் இப்போது மீண்டும் இக்குரல் எழுப்பப் படுகின்றது. மார்க்ஸியத்தின் பின்னடைவு என்பது ஒரு புறமும், மார்க்ஸியம் பேசி அறிமுகமாகி - நன்மைகள் பெற்று - இப்போது தன்னலங் கருதி அதற்கு புதிய வியாக்கியானம் கூறுவோர் இணைப்பும் சர்வதேசரீதியாகவே பிற்போக்கு வாதிகளை மக்கள் இலக்கியத்திற்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வைத்திருக்கின்றன. இந்தக் குழு இலங்கையிலும், வெவ்வேறு உதிரிக் கருத்துக்கள் வைத்திருப்பினும் ஒரே வேலிக்குள் சேர்ந்திருக்கிறது. வெவ்வேறு தளங்களினூடே மாய்ம்மாலக் கருத்துக்களைக் கூறி இடம் பெற முயல்கிறது. தாமே இனிவரும் இலக்கிய, கலை அகல்வுகளுக்கு மூலகர்த்தாக்களென்று கூறிக் கொள்ளுகின்றனர்.
இந்தப் போக்கு புதிய தலைமுறையைக் குழப்ப நிலைக்குத் தள்ளலாம். ஆனால், இந்த

Page 24
நிலைமை நீடிக்கப் போவதில்லை. எதை எழுத வேண்டும் என்பது பற்றிய ஆராய்ச்சிக்கு
இன்று அவசியமில்லை. ஏனெனில் எதை
எழுத வேண்டும் என்பது பற்றிய தீர்க்கமான முடிவை முற்போக்கு சிந்தனையுள்ள மக்கள் இலக்கிய வாதிகள் எப்போதோ மேற்கொண்டு விட்டார்கள். தம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வை அவதானித்துப் பயின்று அவர்களின் சிந்தனையைத் தூண்டிச் செயற்படுத்தும் விதத்திலே எழுத்து அமைய வேண்டும். அதுவும் மக்களின் மொழியிலே எழுதப்பட வேண்டும் மென்பதை அவர்களின் எழுத்து அடிநாதமாகக் கொண்டிருந்தது. மக்களுக்கு எதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுதுவதே இத்தகைய படைப் பாளி ஒருவனது பணியாக இருக்கும். இத்தகைய எழுத தனை ப் பறி றிய சரியான தறனாய் வையே இத் தளம் சார்ந்த திறனாய்வாளர்கள் மேற்கொள்வார்கள். பேராசிரியர்கள் நா. வானமாமலை, கைலாசபதி ஆகியோரின் திறனாய்வுகள் இதைச் சாதித்தன. வக்கிர இலக்கியம், தனிமனித ஆன்மீகப் புலம் பல கள் என்பவற்றை இவர்கள் கடுமையாகக் சாடியதற்கு ஆழமான காரணங்கள் இருந்தன. இத்தகைய திறனாய்வுப் போக்கே இன்று வேண்டப்படுகிறது. இந்த விதத்தில் எஸ். கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் சி. சிவசேகரத்தின் இலக்கியப் பார்வை முன் கூறிய போக்கைத் தொடர்கிறது.
இலக்கியத்தின் போக்கென்பது வர்க்க நிலைப் பாடு சார்ந்ததே. தாம் நேசிக்கின்ற மதிக்கின்ற மக்கள் யாரென்பதை இதுவே தீர்மானிக்கின்றது. மாவிட்டபுரத்திலும், மட்டுவில் பகுதியிலும் ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு அதனால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக் கத்தின் களர் ச் சி
پگنتقسط
வெடித்தெழுந்தது. இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் போராட் டம் ஓயவில் லை. மக்கள் இலக்கியவாதிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். எழுத்தே இயக்கமாக மாறிற்று. இதேவேளையில் ஆன்மீகத் தளம், தன் இனத்தளம் சார்ந்தோர் எனக் கூறிக் கொண்டிருந்தோர் மெளனமாக மறைந்து தமது
இயல்பான நிறத்தைக் காட்டி ஒடுக்கப்பட்ட
மக்களின் விரோதிகளாக அம்பலப்பட்டனர். அவர்கள் இப்போது இன்னொரு குரலில் பேசுகின்றனர். எந்தப் புள்ளியிலிருந்து எழுதத் தொடங்குவதென்று சிந்திப்பதாகப் பாசாங்கு செய்கின்றனர். அடிப்படையில் இவர்கள் அராஜக வாதிகள் தான்.
அணி மையரி ல நணி பர் gါ , மெளனகுருவுடன் பேச நேர்ந்தது. இன்று இலங்கையில் உள்ள நாட்டாரியல் துறையில் உள்ள அறிவாளி. பல்கலைக் கழகத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகப் பயின்றபோதே மெளனகுருவின் நாட்டாரியல் ஆர்வம் எவரையும் வியப்பில் ஆழ்த்திற்று. தானே கூத்தாடியாய் ஆகி, அதில் தேர்ந்து, இத்துறையில் ஆய்வுசெய்து பயனுள்ள ஆய்வை ஆக்கி 'கலாநிதி” ப் பட்டத்தை அதன் தகுதியுடன் பெற்றவர். இப்போது நுண்கலைப் பீடாதிபதி. என்னிடம் அவர் சொன்னார்: "பின் நவீனத்துவக் கண்ணோட்டப் பார்வையூடாக நான் பாரதக் கூத்தை ஆராயப் போகிறேன். அது பற்றி ஒரு ஆய்வும் எழுதியுள்ளேன். உங்களுக்குத் தருகிறேன்" இதைக் கேட்டதும் நான் திகைத் துப் போய்விட்டேன். மெளன குரு இன்றைக்கும், பேராசிரியர் கைலாசபதியே தன்னை உருவாக்கி நெறிப்படுத்தியவர் என்று கூறிக் கொண்டிருப்பவர். நாட்டார் இயல் என்பது சாதாரண மக்களின் கலை, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் கலை,
 
 

இதை இதற்கு முற்றிலும் எதிர்த் தன்மை கொண் ட கருத்திற் கூடாக எப் படிப் பார்க் கமுடியும் ? பின் நவீனத்துவம் ஒடுக்கப்பட்ட, சாதாரண மனிதர்களை விழிப்பு மனிதராக ஏற் காதது. பிறழ் நிலை உளவியலினர், கெட்டுப் போனோர், பொருந்தா உறவினர் என்போரே இவர்களின் விழிம்பு மனிதர். இதை விட பின் நவீனத்துவவாதிகள் வர்க்க நிலைப்பாட்டை மறுப்பவர்கள், அராஜகவாதிகள். நாட்டாரியல் உழைக்கும் மக்களின் கலை, வர்க்கம் சார்ந்த கலை. எப்படி இந்த முரண்பாடுகள் ஒன்றை ஒன்று அளவீடு செய்ய முடியும்? நாட்டாரியல் தளம் சார்ந்த ஒரு கலைஞனால் இதை எப்படிச் சிந்திக்க முடிந்தது?
இதற்கான பதல் இலகுவானது, அறிவாளி களி தமது கருத த ல உறுதியாயிருப்பதை அவர்களின் வர்க்க நேசம் மட்டுமே தீர்மானிக்க முடியும். பேராசிரியர்கள் வானமாமலை, கைலாசபதி, கேசவன் என் போரின் பார்வையில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்ததற்கான காரணம் இதுதான்.
புதிதாகப் பேசப்படும் கருத்துக்களை தாங்கள் கூறாவிடில் தமக்குச் சிறப்பில்லை என்று பல அறிவாளிகள் கருதுகிறார்கள். எனவே அவர்களும் அதைக் கூறுவார்கள்.
அது பற்றிய தெளிவின்றியே! கிட்டத்தட்ட இது ஒரு 'பாஷைனப் போலப் பின்பற்றப் படுகின்றது. மார்க்ஸிய சிந்தனையாளர் என்று கூறிக் கொண்ட சிலரும் இத்தகைய பொய்மைக்குள் சிக்கிக் கொண்டது பெரிய சோகம். மார்க்ஸியத்தால் நிராகரிப்பப்பட்ட பல கருத்துக்களை இவர்களும் இன்று பேசிக் கொண்டிருப்பது இந்த மயக்கத்தின் விளைவாகவேயே.
மக்கள் இலக்கியமென்பதே இன்றைய மானிட நேயமுள்ள படைப்பிலக்கிய வாதியின் கோட்பாடு. சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகவே இந்தப் படைப்பாளி எழுதுவான். மக்கள் மொழியிலே, அவர்களிடமிருந்து பயின்றதை அவர்களுக்கு இந்தப் படைப்பாளி தனது செழுமையாக்கலோடு கொடுப்பான். இவை தவிர்ந்த மற்ற எழுத்தோ அதன் பன்முகப் போக்குகளோ எவ்விதத்திலும் மக்கள் விரோதப் போக்குடையனவே. இன்றைய கால கட்டம் ஒன்றைத் தெரிவிக்கிறது. கலை யாருக்காக என்ற பழைய கேள்வி இப்போதும் முனகுகிறது. இதனால் எழும் வாதப் பிரதிவாதங்கள் கலை மக்களுக்காகவே என்ற கருத்தினையே ஓங்கிய குரலில் முடிவாகச் சொல்லப் போகிறது; சொல்லியுள்ளது. இனியும் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.
சுதாராஜின் சிறுகதைகள்
ஏழு நண்பர்கள் - செ. யோகநாதன்
58/3, அநுராதபுர வி

Page 25
8 திலகத்தை
இழந்தது தமிழ்
சினிமா!
41 1/I. 1628flgi di
தமிழுக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்று கூறுகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே! இதில் ஒவ்வொன்றிலும் விழுமியம் பெற்றுத் தமிழ் பொலிவோடு திகழ்கிறது. ஒவ்வொரு கூறும் அந்தந்தத் துறையில் வல்லமை பெற்ற வல்லாளரால் உச்சம் பெற்றுத் தமிழ் இனத்தை அகில உலகமும் சங்கைப் படுத்தும் உயர் நிலைக்கு உயர்த்தியுள்ளது. அவ்வகையில் நாடகமும் இன்று உயர்ந்திருக்கின்றது. நாடகத்திற்கு ஊட்டத்தைக் கொடுப்பது நடிப்பு. அந்த நடிப்பில் இமயத்தைத் தொட்டவர் தான் சிவாஜி கணேசன். கூத்தாடுவதும் குண்டி நெழிப்பதும் ஆத்தாதவன் தொழில் என்று தொன்மமாய்ப் புழக்கத்திலிருந்த கருத்து நிலை மாறுவதற்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் சிவாஜி. நாடகத்தின் பரிணாமம் தான் சினிமா, சினிமாவிற்கு, ஆரம்பத்தில் வரவேற்பு இருக்கவில்லை. அதை உதாசீனப் படுத்தியவர் ஏராளம். ஆனால் தனது அபார நடிப்பின் மூலம் சினிமாவை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தவர் சிவாஜி. நவரசங்களும் சிவாஜியின் நடிப்பில் மற்றெந்த நடிகருக்கும் முடியாத வகையில் முத்திரையிடப்பட்டன.
ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சினிமா வெறும் பாட்டு மயமாகவே இருந்தது. குரல் வளம் மிக்கவர்களின் இசையைக் கேட்பதற்காக சினிமாவைப் பார்த்தனர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நாடகத்தோடு சினிமாவைத் தங்களது செயல்பாடுகளோடு இனைத்தபடியால் சினிமாவின் போக்கு மாற்றம் கண்டது. மக்கள் பிரச்சினையை மையப்படுத்தும் சமூகக் கதைகளை இவர்கள் எழுதிச் சினிமாப் படமாக்கினார். இதன் விளைவாக வேலைக்காரியும் பராசக்தியும் திரைக்கு வந்தன. பராசக்தி வரலாறு காணாத வரவேற்புப் பெற்றது. இதன் கதாநாயகனாக சிவாஜி நடித்தார். பெரியாரின் பருத்தறிவுப் பாசறையிலிருந்து வீறு கொண்டு வெடித்த கலைஞர் கருணாநிதியின் பகுத்தறிவுக் கருத்துக்களை உள்ளடக்கிய - அந்தக் காலத்துப் பாஷையில் சொல்லப்பட்ட அடுக்கு மொழி வசனங்கள் - எழுத்துப் பிரளாமல் சிவாஜி கணேசனின் சிம்மக் குரலில் ஒலித்தது. சினிமா ரசிகர் கூட்டம் பெருகியது. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. அத்தோடு தமிழ்
 

இளைஞர்களின் பிரக்ஞையில் புதிய விறு விறுப்பொன்று துலங்கத் தொடங்கியது. சினிமாவில் சிவாஜியின் பிரவேசம் தி.மு.காவை மட்டும் வளர்க்கவில்லை. பல குடும்பங்களின் வாழ்க்கையையும் மலர வைத்தது.
சிவாஜி கணேசன் தனது நடிப்பின் மூலம் திரையில் பல சாதனைகளைப் புரிந்தார். அவரது நடிப்பை கறந்தெடுப்பதற்காக வித்தியாசமான பல கதாபாத்திரங்கள் இவருக்காக உருவாக்கப்பட்டன. பராசக்தி, தரும் பரிப் பார் , ரங் கோன் ராதா, திருவிளையாடல் , உத்தம புத் திரன், புதையல், தெய்வ மகன், மக்களைப் பெற்ற மகராசி, கெளரவம், பாகப் பிரிவினை இத்தகைய அநேக படங்களில் மாறுபட்ட
கதாபாத்திரங்களில் நடிக்கும் அரிய வாய்ப்பு
சிவாஜிக்குக் கொடுக்கப்பட்டது. இது அவரது நடிப்பிற்குக் கிடைத்த வெகுமதி. இவரது படங்களில் ஓரங்க நாடகங்கள் புகுத்தப் பட்டன. இவரது நடிப்பை மையமாக வைத்தே இது செய்யப்பட்டது. சோக் கிரட்டீஸ் , அனார்கலி, சாம்ராட் அசோகன் ஆகிய இந்த ஓரங்க நாடகங்கள் சிவாஜியின் தனி நபர் நடிப்பால் ரசிகனை கவர்ந்திழுத்தன. இவர் ஆண் வேடத்தில் மாத்திரமல்ல பெண் வேடத்தைக் கூட ஏற்று நடித்து அசத்தி இருக்கிறார். மனோகரா நாடகத்தில் இவரது பத்மாவதி வேஷம் கச்சிதமாக இருந்து அனைவராலும் பேசப்பட்டது. சிவாஜி நடித்த படங்கள்தான் முதல் முதல் திரைக் கதை வசனப் புத்தகங்களாகவும் தட்டிலும்
வெளிவந்தன. இவரது பெயரில் அனேக ரஸிக மன்றங்கள் எழுந்தன. ஆறுவயதில் நடிக்கத் தொடங்கிய வி.சி.கணேசனை சிவாஜி கணேசன் ஆக்கியவர் பெரியார். கணேசன் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் சிவாஜி ஆக நடித்தார். தனது
நடிப்பால் அந்தப் பாத்திரத்தை துலங்க வைத்ததால் பெரியார் இவரை சிவாஜி கணேசன் ஆக்கினார். சிலர் ஆங்கில நடிகர் மார்லன் பிராண்டோ தான் சிறந்த நடிகர் எனப் புகழ்ந்தனர். அறிஞர் அண்ணா சிவாஜி கணேசனின் நடிப்பை மர்லன் பிராண்டோ வந்து பார்க்க அழைக்குமாறு சவால் விட்டார். பாசமலரை வாசமலராக்கிய சிவாஜி தன்னோடு இணைந்து நடிப்பவர்களையும் நடிக்கவைப்பார். இதை உறுதிப்படுத்துவது போல் ஒரு சமயம் குமுதம் சஞ்சிகை, எங்கிருந்தோ வந்தாள் என்ற படத்திற்கு விமர்சனம் எழுதிய போது சிவாஜியோடு நடிக்கும் போது மட்டும் தான் செல்வி ஜெயலலிதாவுக்கு இப்படியான சிறந்த நடிப்பு எங்கிருந்து தான் வருகின்றதோ! என வியந்து விமர்சித்தது. நடிகவேள் எம்.ஆர். ராதா, எஸ்.வி. சுப்பையா, ரி.எஸ். பாலைய்யா போன்ற பல்வேறு குணச்சித்திரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நடிப்பில் ஆளுமை கொண்டிருந்த நடிகர்களோடு சவாலிடும் வகையில் நடித்து வெற்றி கண்டவர் சிவாஜி. சக நடிகர்களின் திறமையை மதிக்கும் பக்குவமுடையவர். பீம்சிங் தயாரித்த சாந்தி என்ற படத்தில் நடித்த சமயம் ஒரு பாட்டிற்கு நடிக்க வேண்டி இருந்தது. பதியப்பட்டு அந்தப் பாட்டு சிவாஜிக்கு இசைக்கப்பட்டது. மறு நாள் சிவாஜி அப்பாட்டிற்கு நடிக்க வேண்டும். அவர் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கு திரும்பவில்லை. டைரக்டர் பீம்சிங் அன்னை இல்லத்திற்குச் சென்று விசாரித்தபோது அத்தகைய சிறந்த பாட்டிற்கு போதிய ஒத்திகை செய்த பின்னர் தான் படப்பிடிப்பை
தொடங்க வேண்டுமென அடக்கமாகச்
சொன்னாராம் இந்த நடிப்பின் இமயம்.
நடிப்பு சிவாஜூக் கு ஏராளமான
விருதுகளைக் குவித்தது. 'சிவாஜி கணேசன்
அளிக்குமெனப் படங்களுக்கு விளம்பரம்

Page 26
செய்யப்பட்டது. இத்தகைய விளம்பர
உத்தியை முதல் முதல் பெற்ற தகமை இந்த செவாலியருக்கே தேறியது.
கலைகளின் தொட்டிலாக இன்றும் பெருமைப் படுத்தப்படும் பிரான்ஸ் நாடு நடிப்புக்குக் கொடுக்கும் பெருவிருதான செவாலியர் விருதை சிவாஜிக்கு வழங்கிக் கெளரவித்தது. எகிப்தும் பாராட்டியது. இலங்கைத் தினசரியான தினகரன் “கலைக் குரிசில்' என்ற பட்டத்தை இந்த நடிப்பு மேதைக்கு சூட்டியது. தங்கக் கிரீடம் அணிவித்து இலங்கை ரஸிகர்கள் இனமானங் காத்தனர். இலங்கையிலும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதை, இலங்கையரான அமரர். ரீசங்கரை ராஜராஜ சோழன் திரைப்படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் நிரூபித்துக் காட்டியவர் எமது கலைக் குரிசில் அல்லவா!
இயல பு நடிப் புச் கைவரா தெனச் சிலர் கூறுவதுணி டு. அனேகமாக இத் தன்மையான நடிப்பை கலைப் படைப் பாக எடுக் கப் படும் படங் களிலேயே காண முடி கறது. இப்படங்களைத் தயாரிப்பவர்களால் சிவாஜி போன்ற "பிசி நடிகர்களைக் கட்டியவிழ்க்க முடியாது. கூடிய சம்பளம். டைரக்டர் தாங்கள் நினைத்த பாட்டிற்கு சிவாஜியை ஆட்டி வைக்க முடியாது. இதனால் இத்தகைய படங்களைத் தவிர்த்து வணிக நோக்கை மையப்படுத்தும் படங்களில் சிவாஜி நடித்திருக்கலாம். ஆனால், சிவாஜிக்கு இயல்பு நடிப்பு வராதென்பது தவறாகும். இருந்தும் எஸ். பாலச்சந்தரின் வித்தியாசமான போக்குடைய அந்தநாள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு பாரதிராஜாவின் முதல் மரியாதைைையயும் செய்திருக்கிறார். இவைகளில் சிவாஜியின் நடிப்பு மிகவும் வேறுபட்டதாகவே இருந்தது.
புகழ் பெற்ற தமிழ் நாவல்கள்
சிவாஜி க்கு
படமாக்கப்பட்ட பொழுது அனேகமானவை தோல்வியையே தழுவின. ஆனால், கலைஞர் மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் சிவாஜியின் நடிப்பில் படமாக்கப்பட்ட லக்ஷ்மியின் பெண் மனம் என்ற நாவல்
இருவருள்ளம்' என்ற சினிமாப்படமாகி பெரு
வெற்றியைத் தந்தது. இதே போல் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் திரைப் படமாக்கப்பட்டும் சக்கை போடு போட்டது. இதிலும் சிவாஜியே நடித்திருந்தார்! இவைகள் சினிமாவில் சிவாஜி பதித்த தனித்துவ முத்திரைகள்.
1928- 10 - 01 ஆம் திகதி விழுப்புரம் மண் தந்த இந்த மைந்தனின் தந்தையார் சின் னையா மன்றாயர் , அன்னையார் ராசமணியம்மாள்.
தனது இல்லத்திலே கூட்டுக் குடும்பம்
ஒன்றை அமைத்து பந்தங்கள் குலையாமல்
காத்தவர். இந்திய தேசியத்தை நேசித்தவர். இதனி விளைவு தானி வீரபாணி டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிவந்த LD6007.
மதிய போசன நிதிக்கென ஒரு லட்சம்
ருபாய் அள்ளிக் கொடுத்து இந்திய
மாணவர்களைப் போசித்தார். தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பிறமொழிப் படங்களிலும் நடித்தார்.
நடிப்பில் இமயமான சிவாஜியின் பிறந்ததினத்தை நடிகர் தினமாக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. மிகவும் நியாயமான வேண்டுகோள். செல்வி ஜெயலலிதா அரசு இதைக் கவனிக்குமா!
கடந்த 21-07-2001 ஆம் திகதி சிவாஜியை இழந்து தமிழ் சினிமா அலை ஓய்ந்த
கடலாகியது. அகில உலகத்திலும் உள்ள தமிழ் மக்கள் கண்ணிர் வடித்தனர். இந்த யுக புருஷனை இனி எப்போது காண்பது!
 

ஆவணப் படுகொலையைச் சுட்டிக்காட்டல்
சஞ்சிகை உலகில் ஏழத்தாழ 36 ஆண்டுகளாக சலிப்பும் களைப்புமின்றி 'மல்லிகை ஆற்றிவரும் வேவை மகத்தானது. இமாலய சாதனை மிக்கது. எத்தனையோ பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தோன்றிக் காணாமற் போயுள்ள வேளையிலே ஆரம்பித்தது முதல் இன்று வரை இடையீடின்றி இலக்கியப் பணி புரிந்து வரும் மல்லிகையையும், மல்லிகை ஆசிரியராகிய தங்களையும் நான் மட்டுமல்ல யாருமே பாராட்டாமல் இருக்கமுடியாது. உங்களது இப்பணி மேலும் தொடர என் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மல்லிகையை வாசிக்கும் போது தேடியலைகின்ற இலக்கியத் தகவல்கள் பல நேரிலே கிடைக்கின்றதே என்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது. தீவிர வாசகன் என்றவகையில் நான் தேடிய எத்தனையோ இலக்கியத் தகவல்களை மல்லிகை மூலம் பெற்றிருக்கின்றேன், என்பதை என்னால் மறுக்க முடியாது. "எம்மைப் பொறுத்தவரை தேடல் தான் எமது தலையாய நோக்கம். தேடல்கள் மூலம் தேடியலையும் உண்மைகளையும், தகவல்களையும், பெறுபேறுகளையும் வாசகர் முன் சமர்ப்பித்து மல்லிகையையும் உங்களையும் செழுமைப்படுத்துவதே மலரில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மையானதே. ஆனால், இத்தகைய உன்னத நோக்கம் கொண்ட நீங்கள் இப்படியொரு ஆவணப் படுகொலை செய்திருப்பதை இங்கு சுட்டிக் காட்டாமல் இருக்கமுடியாது. இந்த 36-வது ஆண்டு மலரில் வ. அ. இராசரத்தினம் பற்றி செங்கை ஆழியான் எழுதிய கட்டுரையில் அவர் கூறியிருப்பதைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியும், அதிர்ப்தியும் அடைந்தேன். இம்மலரின் 101 ஆம் பக்கத்தில்.
‘வ. அ. இராசரத்தினத்தின் பவள விழாவின் போது அவரது பணிதனைத் தொகுத்து பவள விழா மலராக வெளியிட்ட கேணிப்பித்தன் அருளானந்தம் ஆற்றிய சேவை மூலம் படைப்பாளி ஒருவரின் படைப்பாற்றலையும் தரிசனத்தையும் தமிழுலகம் அறிய முடிகிறது”
என்று எழுதியிருப்பது ஆவணப்படுகொலையை அப்பட்டமாகவே செய்துள்ளதைக்

Page 27
காட்டுகிறது. ஏனெனில் வ. அ. அவர்களின் பவள விழா சிறப்பிதழைத் தொகுத்து வெளியிட்டவர். கலாவிநோதன் த. சித்தி அமரசிங்கம் ஆவார். இதனை யாவரும் அறிவர். இந்த நிலையில் இப்படியொரு தவறான தகவல் வெளிவந்துள்ளதைச் சுட்டிக் காட்டாமல் இருக்கமுடியாது. தவிர செங்கை ஆழியான் அப்பவள விழாச் சிறப்பிதழுக்கு வ. அ. அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதி அருக்கிறார். அப்படியிருக்க இவர் யாருக்குத் தனது கட்டுரையை அனுப்பிவைத்தார்? அருளானந்தனுக்கா..? இவருகி குப் 6 T விழா நுாறி தொகுப் பாசிரியரைப் பறி றி தெரியவில்லையா..? அந்நூல் வெளிவந்த போதாவது இதனை அறிந்திருக்கலா மல்லவா. ? தவிர, அந்நூல் பற்றி பத்திரிகைகளில் வந்த விமரிசனங்களின் மூலமாவது தெரிந்திருக்கலாமல்லவா. p ஆக மொத்தத்தில் இவர் இப்பவள விழா சிறப்பு இதழையோ, இந்நூல் பற்றிய விமரிசனங்களையோ வாசிக்கவில்லை என்று சொல்வதில் நியாயமுண்டல்லவா. இப்படிப் பட்டவர்கள் எப்படித் தகவல் தரமுடியும்.? மற்றும் தாங்கள் கூட பவள விழா சிறப்பு மலருக்கு கட்டுரைகள் எழுதியுள்ளிர்கள். உங்களுக்குக் கூடச் சரியான தகவல் தெரியாமல் போயுள்ளதை நினைக்கும் போது அது விசனத்தைத் தருகின்றது. V
இவ்வாறான பெரும் ஆய்வாளர்கள் இத்தகைய தவறான தகவல்களைத் தருகின்றபோது பிற்காலத்தில் வருகின்ற இளம் ஆய்வாளர்கள் கொடுக்கின்ற மேற்கோளும் பிழையாகப் போகும் சாத்தியக் கூறுகள் ஏற்படும். இது இலக்கிய உலகிற்குச் செய் கன ற பெரும் தவறாகவும் ஆகிவிடுமல்லவா..? இந்த ஆவணப்
சம்பந்தமான
படுகொலை பற்றிய பொருத்தமான பதிலைத் தருமாறு இத்தகைய தவறான தகவல் ஏற்படாது பார்த்துக் கொள்ளுமாறும் தயவாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
இன்னுமொரு விடயமும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அதாவது அண்மைக் காலமாக
திருகோணமலை மாவட்ட இலக்கியத் தகவல்
பற்றிய புறக்கணிப்பு மல்லிகையில் இடம் பெற்று வருவதாகும். ஏனெனில் வ. அ. அவர்களின் பவள விழா இதழ் வெளியானதன் பின் வெளிவந்த சண்முகதாஸ் அவர்களின் மணிவிழாமலரான 'சண்முக தரிசனம்' என்ற நூலை மல்லிகை நூலகம் பகுதியில் அறிமுகம் செய்த நீங்கள், இந்தப் பவள விழா நூலை அறிமுகம் செய்யவில்லை. ஏன் இந்த இலக்கியப் பாரபட்சம்..? என் ப ைதயும் பணிவுடன் கேட் டுக கொள்கின்றேன்.
மூதூர் திலீப் ஏ சமது.
(திரு. வ. அ. அவர்களது பவள விழா பிழையான தகவல் இடம் பெற்றுள்ளமைக்காக வருந்துகின்றோம். அத்துடன் திருமலை மாவட்டத்தைப் புறக்கணிக்கின்றோம் என்ற குற்றச் சாட்டு மல்லிகையைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. திருகோணமலையின் இலக்கியப் புதல்வன் தருமு. சிவராமு பற்றி மல்லிகை பலரும் மெச்சத்தக்கதான கட்டுரையை 3-வது ஆண்டு மலரில் பிரகரித்துள்ளதைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
-ஆசிரியர்) 米米米
பவள விழாக் கொண்டாடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல லான டுகள் நீங்கள் வாழ் நீ து கொண்டேயிருக்க வேண்டும். மல்லிகை என்றென்றும் குன்றாது மணம் பரப்பிட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
பல்கலைக் கழகம்
யாழ்ப் பானப்
 

ஆரம்பித்து 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் - பல்கலைக் கழக மாணவப் படைப் பாளிகளின் கனதிமிக்க சிறுகதைத்
தொகுதியான "மண்ணின் மலர்கள்' முதன்
முதல் வெளிவருவதற்கு அதனைப் பதிப்பித்துச் சிறப்பானதொரு பதிப்புரையையும்
வரலாற்றுத் தடங்களோடு வழங்கியமைக்கு
எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பிட்டுச் சொல் லக் கூடிய முக்கிய விடயம் இத்தொகுதி 27-06-2001 அன்று வெளியிடப் பட்டமை ஆகும் . கலாநிதி எஸ் . சிவலிங்கராஜா சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் "மல்லிகைப் பந்தல் ஜீவாவின் 75 வது பிறந்த தினத்தில் இத்தொகுதி வெளியிடப் படுவது அவரைக் கெளரவப் படுத்த எமக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகும்” என்றார். மண்ணின் மலர்கள் படைப்பாளிகளில் நானும் ஒருவன் என்ற ரீதியில் உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. உங்கள் இலக்கியப் பணியை எழுதுவதற்கோ வார்த்தைகள் வசப் படவில்லை.
ச. இராகவன்.
கொழும்பில் 20 நிமிடம் மட்டுமே சந்திக்க முடிந்தது. பல மணி நேரம் பேச வேண்டும் என்ற நீண்ட கால ஆசை நிறைவேறாமல் சில நிமிடங்கள் என்பது எனக்கு மிகுந்த வேதனை. இருந்தும் விரைவில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை. உங்கள் நேரங்கள் மிகவும் வெகுமதியானவை. பலவற்றையும் செய்து முடிக்க வேண்டும்-எழுத வேண்டும் என்பதால் நாம் உங்களுக்கு நேரத்தினை ஒதுக்கித் தரவேண்டும், அந்தப் பெறுமதியான நேரத்தை நாம் பறித்துவிட முடியாது. நீங்கள் அப்படி மனிதர்களுடன் பேசாமல் எழுதுபவர் அல்ல, என்பது எனக்குத் தெரியும். இருந்தும், நாம்
தான் உங்கள் நேரத்தைப் பெறுமதியாக மதிக்கின்றோம். உங்கள் திட்டங்கள் செயற்பட எமது ஒத்துழைப்புப் பல வழிகளாலும் தேவை என்பது எனக்குப் புரியும்.
உங்கள் பவள விழாக் காணும் பிறந்த நாளை மனதார வாழ்த்தத் தயாராக இருக்கின்றோம். அங்கு வர மனம் துடிக்கிறது. முடிந்தால் வருவேன். உங்களிடம் நிறையப் புத்தகங்கள் வாங்க இருந்தேன். இடம் போதவில்லை. நீங்கள் அவசரமாகத் தந்த புத்தகங்கள் முக்கியமானவை. ஏற்கெனவே பரீஸ் இலக்கியச் சந்திப்பில் வாங்கிய புத்தகம் கை மாறிவிட்டது. நீங்கள் பரீஸ் வந்தபோதுதான் முதன் முதல் சந்தித்தேன். அதற்கு முதல் அடிக்கடி கேள்விப் படும் பெயர்தான். உங்களை நான் வாசித்ததிலும் பார்க்க, அதாவது பெரிதாக வாசிக்க நூல்கள் கிடைக்கவில்லை. உங்கள் சிநேகிதர் அல்லது ஒத்த கருத்துக் கொண்டவர்களின் நூல்களே வாசித்துள்ளேன். எனக்கு நன்கு பிடித்த எழுத்தாளராக செ. கணேசலிங்கன் பற்றி 97-ல் இலக்கியச் சந்திப்பில் அவரது இரு நூல்கள் விமர்சனம் செய்தேன். வாழ்க்கையில் நான் சந்திக்க வேண்டிய முக்கியமானவர்களில் ஒருவராக அவரைக் கருதுகிறேன்.
இப்போது என் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெரும் பொக்கிசமாக உங்களை நான் கருதுகிறேன். நேசிக்கின்றேன். எல்லாமே நீங்கள் போல், எனது கருத்து, சிந்தனை, எண்ணம் எல்லாமே நீங்கள் போன்று முழு உருவம் அப்படி உணர்வு வந்து சந்தோசப்படுவேன். இவ்வளவு பெரிய ஒரு மனிதரை நான் சிறு வயதில் இருந்தே கண்டு கொள்ளவில்லை, வாசிக்கவில்லை என்பது மிகப் பெரும் கவலை. நீண்ட காலமாக எனது முணு முணுப்பு எனக்கு

Page 28
ஒரு நல்ல ஆசிரியர் (பாடசாலையில்) கிடைக்கவில்லையே என்பது. இதுவே நான் இறக்கும் வரை மறக்க முடியாத கவலையும் கூட. நான் சிறுவயதில் சிந்தித்த பலவற்றுக்கு சரியான விளக்கம் யாரும் தரவில்லை. திரும்பத் திரும்ப ஆராய்ச்சி செய்து நானே கணி டுபிடிப் பேணி . நான் அரச உத்தியோகத்திற்காக படிக்கவில்லை என்பது ஆசிரியர்களுக்கும் தெரியாது. எனது
பெற்றோருக்கும் தெரியாது. அறிவுக்கு
என்றுதான் படித்தேன். பல்கலைக் கழகம் சென்றாலும் கிராமத்திலேயே விவசாயம் செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
இலட்சியம் (தொழில் இலட்சியம்). எவ்வளவு படித்தாலும் எந்த தொழிலையும் செய்யலாம்
என்பதை இன்று ஐரோப்பாவில் அறிகிறார்கள்.
அன்று அதனை நான் சிந்தித்தேன். நீங்களும்
அப்படிசிந்தித்தவர் என்பதை அறிகிறேன்.
உங்களை எண் வீட் டுக் குள் ளே வைத்துள்ளேன். 1998ம் ஆண்டு பிராங்போட் (ஜேர்மனி) இலக்கியச் சந்திப்பில் இளைய அப்துல்லாஹற் அங்கிருந்தே இங்கு வந்து முன் வைத்த நிகழ்ச்சி உங்கள் எழுத்துக்கள்
பற்றியதே. பல சிறுகதைகள் முன் கொண்டு
வந்து சமூகக் கொடுமைகளையும் அநீதி களையும் காட்டினார். எமக்கு முன்னே டொமினிக் ஜீவா சுருக்கமாக வாசிக்கப்பட்டது. கிணறு பின் இறைக்கப்பட்டது.
இதில் முக்கிய விடயம் வாடிய பயிர் ஒன்றுக்கு நீர் ஊற்றும் போது சிறிய பசளையுடனும் சேர்த்து நீர் ஊற்றுகையில் செழிப்பாக வளரும், முதலில் நஞ்சு கலந்து ஊற்றினால் எப்படி? களைத்துத் தண்ணிர் விடாயில் வருபவருக்கு முதலில் நீர் கொடுக்க வேண்டும். அல்லது பழச்சாறு கொடுப்பது நல்லது. அப்படியானவையல்ல இந்த இந்தியச் சினிமா சார்புச் சஞ்சிகைகள். வெறும் நஞ்சை விதைக்கின்றன.
பெர்லின் - செ. தனபாலன்
கூர்ந்து அன்னாரது இழப்பை ம்பத்தின
 

翻 ரீத்தேன். இத்த (၈ချွံ
மலைப்பாக இருக்கிறது. ஏன்
பசறை ரா. மாதவன்
ஒவ்வோர் ஆண்டு பிறந்த தின ஞாபகமாக ஒரு நூலை வெளியிட்டு வைப்பது எனது நீண்ட நாளையப் பழக்கம். இந்த ஆண்டு பவள விழா ஆண்டு. எனவே ஒரு புதுப் புத்தகத்தைச் சுவைஞர்கள் பார்வைக்குச் சமர்ப்பித்தேன். ஞாபகார்த்த ஓர் ஆவண வெளியீடே தவிர , எந்த அவசர நோக்கமும் எனக்கு இல்லை.
ராகமை ச. சடகோபன்
இந்த வகையில் கைது செய்தது தமிழக அரசாங்கத்தின் அவசர கோலத்தையே காட்டுகிறது. அதே சமயம் அரசியல் கைதுகள் இப்போது மாத்திரம் நடைபெற்ற சம்பவங்களல்ல, முன்னமும் பல பெரும் பெரும் தலைவர்கள் நட்ட நடு நிசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கலைஞரும் மாறனும் சன்டிவியும் இத்தனை தூரம் நாடக மாடி நடந்திருக்கக் கூடாது. இது மிகைப்பட்ட அரசியல் நடிப்பு. அந்த இடத்திற்கு சன் டிவி ஏன் உள் நுழைந்தது?
断
தலையங்கம் படித்தேன் ஏ
ప్రేళ్లభ్ళ భ
க. தவசீலன்
அதில் எந்த விதமான ஆவேசமுமில்லை. எதார்த்தமான இலக்கிய நிகழ்வுகளைத் தான் சுட்டிக் காட்டியிருந்தோம். படிப்பவர்களின் கருத்துக் கண்ணோட்டத்தைப் பொறுத்தே அதன்

Page 29
கருத்துக்கள் விமர்சிக்கப் படலாம்.
ஆண்டு
நிகழ்ச்சிகள் என்னென்ன?
கண்டி
எம். ராஜன்
பவள விழாவுக்கு என நாடு தழுவிய 38
எழுத்தாளர்களைக் கொண்ட குழுவொன்று அமைந்துள் ளது. மேலும் தகவல் தேவையெனில் கவிஞர் மேமன்கவியுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர் மேலும் g5 a6 6J 6ù gö (Ob 6JT ff . i 340, Sea Street, Colombo-11. தெடர்பு கொள்ளும் முகவரி.
தேசத்தில் இத்தனை அரசியல் நெருக்கடி நிலவுகின்றதே, இது தீரவே தீராத
அ. அன்ரன்
வெள்ளவத்தை
இதை விடப் பாரிய நெருக்கடிகளைக்
கண்டு தீர்தத்துதான் இந்தத் தேசம். எனவே சோர்வடையாதீர்கள், பதட்டப் படாதீர்கள்.
எத்தனை பெரிய நெருக்கடிகள் வந்தாலும்
நாளை நல்ல தீர்வே வரும். கடும் இரவுகள் விடிந்தே தீரும்!
அடிக்கடி ஊடகங்களில் உங்களது பெய்ர் அடிபடுகின்றதே, நீங்களும் இன்று தலை கரில் ஒரு பிரமுகராகக் கணிக்கப்
இடுகிறீர்களா?
பசறை.
褒魏婆楼
இந்தப் பிரபலம் என்ற பாரச் சிலுவையை என் தோள்கள் மீது ஏற்றாதீர்கள். என் தேகம் தாங்காது. நான் வெகு வெகு சாதாரணன், கடைசிக் காலம் வரை ஈழத்து இலக்கியத்தின் சுபீட்சத்திற்காக உழைப்பதுதான் என் அறுதி
தெகிவளை
எம். தேவராஜன்.
இறுதியான நோக்கம். இந்தப் பரபரப்பான பிரபலமெல்லாம் என்னைத் தடம் புரள வைக்காமல் இருந்தால் சரி.
పళ్లజోళ్ల
இந்தத் தேசத் தி
பெருமைப் படுவதில்
எம். அஷரப்.
நான் இந்தப் பெருமையைக் காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டேன். இதைப் பற்றி எண்ணிப் பார்ப்பது எனது வேலையல்ல. என்னுடைய இலக்கியக் கடமைகளில் இதுவும் ஒன்று. அது விடுத்து இது சம்பந்தமாக அலட்டிக் கொள்வதில்லை.
ப. நவநீதன்
கொழும்பு-9
ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். தலைக் கனம் வேறு, தன்னம்பிக்கை வேறு. என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பற்றி அடிக்கடி வதந்தி பரப்பப்பட்டு வருவது இயல்பேயாகும். இதைப் : பற்றி நானே கவலைப் படுவதில்லை. நீங்களேன் ஆதங்கப்படுகிறீங்கள்? இது சம்பந்தமாக இந்த இதழில் அராலி ஆனந்தன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள். இக்கட்டுரை என் சம்பந்தப்
பட்டிருந்ததால், ஆரம்பத்தில் இக் கட்டுரையை
மல லரிகை யரில நாண் பரிரசுரிக க.
விரும்பவில்லை. அதே சமயம் இந்தப் பவள விழா ஆண்டில் இப்படியான சுவைஞர்களின் கருத்துகளுக்கும் நான் தடை போட விரும்பவில்லை. எனவே என்னைச் சுற்றிப்
 
 
 
 
 
 
 
 
 
 

பல கருத்தக்கள் வலம் வரலாம். ஆனால், நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.
உங்களை இப்பொழுது இலக்கியக் கட் டங்களில அடிக் கடி ாணமுடியவில்லையே, என்ன காரணமாக
இருக்கும் ': *##if:ఖః
கல்கிசை, சி. தங்கராஜ்
கொழும்பிற்கு வந்ததன் பின்னர் நான் முக்கிய பிரமுகர் ஆக்கப்பட்டு விட்டேன். இது ஒரு பெரிய சங்கடம், படு சிரமம். எங்கோ ஒரு மாடி மூலையில் இருந்து கொண்டு, மல்லிகை மூலம் எனது கருத்துக்களை எழுத்தில் பதிய வைப்பதுதான் எனக்கு வாலாயமான வேலை. இதை விடுத்து, மேடைகளுக்கு அடிக்கடி போய் தொலைக் காட்சிகளில் காட்சி தருவது நான் செய்யும் வேலைகளுக்கு இடைஞ்சல் தருவதாகும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டால் இப்படிச் சிரமப்படத் தான் வேண்டும் என்பது எனக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் எனக்குள் நானே ஒரு கட்டுப்பாடு வைத்துள்ளேன். காற்றுடன் போராடுவது காற்றுடனே போய் விடும். பேனா அப்படிப் பட்டதல்ல. எனவே எனது எழுத்து நேரத்தை யாருக்காகவும் இழந்துவிட, நான் என்றுமே தயாராகவில்லை. யார் மீதும் பகையில்லை. இதற்கு அலட்சியமும் காரணமல்ல. இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், சரி.
நீங்கள் யாழ்ப்பாணத்தையே மறந்து விட்டீர்களா?
ఛ:ళ:
யாழ்ப்பாணம். எஸ். பூபாலன்.
இதென்ன கேள்வி? நான் அங்கிருந்து செய்யும் வேலைகளைத்தான் இங்கிருந்தும் தொடர்ந்து செய்து வருகின்றேன். செய்யும்
இடமல்ல, இங்கு முக்கியம். செய்யும் வேலை
யாருக்குச் சேர வேண்டுமோ அந்த வேலைதான் இங்கு முக்கியம். நான் இங்கிருந்து செய்யும் ஒவ்வொரு இலக்கிய வேலையும் அந்த மண்ணுக்குச் சுவறவே செய்யும். அந்த அசையாத நம்பிக்கை எனக்கு என்றுமே உண்டு.
மறைந்த சிவாஜி கணேசன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜா-எல. ஆர். கணேசன்,
சிவாஜியின் எலி லாத் திரைப்
படங்களையும் நான் விரும்பிப் பார்த்து ரஸித்தவன். தமிழ்த் திரையுலகில தனக்கென்றே தனி நடிப்பு முத்திரையைப் பதிப்பித்துச் சென்றவர். தமிழ்ச் சினிமாவை தனது நடிப்புத் திறமை மூலம் உலகில் பேச வைத்தவர். அவருடைய முதல் மரியாதை நடிப்பு மறக்க முடியாத ஒன்று. அது போலவே தேவர் மகன் பாத்திரம் என்றுமே நினைவில் நிற்கும் பாத்திரமாகும்.
戀。窪
ணம் பற்றி நீங்கள் தினகரனில் எழுதி த தொடர் எனக்குத் திருப்தி தரவில்லை. த இலக்கியச் சுற்றுலா பற்றி இன்னும் ன்னும் விரிவாக அறிய 孙
& ឍ வி XXX88
எம். மாணிக்கம்,
8 A
சிலாபம். எஸ்.
தினகரனில் எழுதிய அந்தப் பிரயாணக்
கட்டுரைத் தொடரை விரித்து 'முப்பெரும்
தலை நகரங்களில் 30 நாட்கள்’ என்றொரு நூலையே எழுதி வெளியிட்டுள்ளேன். அந்தப் புத்தகம் 27-06-2001 அன்று எனது பவள விழா ஆண்டுத் தொடக்க ஞாபகமாக வெளியிட்டுள்ளேன். தயவு செய்து படித்துப் பாருங்கள்.

Page 30
-- தொலைக்காட்சியில் உங்களைப் பற்றியும் மல்லிகையை
|ற்றியும் அறிமு றிப்புகள் ჯ23: நேரடியாக
கல்முனை எம். இன்ஸாப்
ஒருவேளை என்னுடைய பவள விழா ஆண்டு ஞாபகார்த்த முன்னோடியாக அந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம். எல்லா நிகழ்ச்சிகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. தேவையேற்பட்டிருந்தால் நான் அவர்களுக்கு கண்டிப்பாக ஒத்துழைப்பு வழங்கியிருப்பேன்.
லிகைப் பந்தல் ధ:చXX: ரிதமாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவே, இவைகளைப் பற்றி மல்லிகையிலும் புத்தக அறிமுகக் குறிப்புக்களிலும் தான் பார்க்க முடிகிறதே தவிர, புத்தகங்களைக் கண்ணால் கூடப் பார்க்க முடியவில்லையே. அந்தப்
錢
is du'assrootpra (go
நெல்லியடி,
ஆர். குணசீலன்
இவ்வளவு ஆர்வமாகப் புத்தக வெளியீடு சம்பந்தமாக விசாரிக்கும் உங்களைப் போன்றவர்களை நினைத்து மனதுக்குள் பூரித்துப் போய் விடுகிறேன். மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் உங்களுக்குத் தேவையானால், அதற்குரிய பணத்தைக் காசோலையாக அனுப்ப நினைத்தால் கொட்டஹேனா, தபால் கந்தோர் முகவரி மூலம் பணம் அனுப்பலாம். அல்லது
கழக கு
யாராவது நண்பர்கள் கொழும்பில் இருந்தால் அவர்கள் மூலம் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மந்திகை ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஆர். ரீதரன் புத்தகசாலையில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். வசதிப்படி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நீர்கொழும்பு க. கிருஷ்ணராஜா
நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் இந்தப் பிரச்சினை பற்றி நானும் பல தடவை யோசித்து வந்துள்ளேன். என்னிடம் பலர் இப் படி விசாரிதி துள்ளனர் . வெளி யீட்டாளர்களுக்கும் புத்தக சாலையினருக்கும் தொடர்பில் லை. சிலர் வெளியிடும் நூல்களைத் தமது பிரதேசங்களுக்குள்ளேயே மட்டுப் படுத்தி விடுகின்றனர். யாழ்ப்பாணம், மாகாண மி , மலை நாடு பிரதேசங்களில் புத்தகங்கள் வெளி வந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவை கொழும்பில் கிடைப்பதில்லை. புத்தகம்
வெளியிடுபவர்கள் இதைக் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
201 - 1/1, பூறி கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில்வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, எண் U.K. பிரினர்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல்லிகை இலக்கிய இதழ் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வெளி வந்து கொண்டிருக்கும் இலக்கிய சஞ்சிகை. அதன் வளர்ச்சி கண்டு மன மகிழ்ச்சி அடைகின்றோம்.
TEXTILES & MILLS (PVT) LTD.
32/34, 3rd Cross Street,
Colombo-ll
F:P336977,
Fax.438 43.8494. 44905
S
3

Page 31
மல்லிகைக்கு எம
S. PARA EXPO PRO)
濠
2γαστ Wー رM///O'ዶ? 7.  ീ?Zn&
(ଠି 多
30, Sea 影 Colom (9. Te:
 
 
 
 
 
 
 
 

JUNE 2001
து வாழ்த்துக்கள்
DUCTS (PVT) LTD
S)
蜘 侬
酷塑
新
が2を4 oj zationa/
7/ 'fob
Avenue. 山0一3。一·一一
7377
χΣΟχο)OO