கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.07

Page 1
- 200
 


Page 2

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
'Mallikai' Progressive Monthly Magazine
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-111, Sri Kathiresan Street, Colombo - 13. Tel: 320721
தோளின் அழுத்தத்திந்குத் தோள் சிதாருங்கள்
உங்களுக்குத் தான் தெரியுமே. மல்லிகைப் பந்தல் வெளியீடு மூலம் காத்திரமான, தரமான நூல்களை இதுவரை வெளியிட்டு வந்துள்ளேன்.
அதன் விபரங்களைப் பிறிதோர் பக்கத்தில் நீங்கள் தெளிவாகக் காணலாம்.
சிற்றிலக்கிய ஏடொன்றைத் தொடர்ந்து 38 ஆண்டுகளாக வெளியிட்ட வண்ணம். இந்தத் தேசத்தில் கவனிப்பைப் பெற்றுக் கொண்ட படைப்பாளிகளின் புதிய புதிய ஆக்கங்களை நுT லாக வெளிக் கொணர்வதிலுள்ள பாரிய சிரமத்தை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.
மல்லிகையின் உழைப்புச் சுமையைக் குறைக்க நீங்களும் தோள் கொடுக்க விரும் பினால் , மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை வாங்கி ஆதரியுங்கள். அதுவே நமக்குப் பெரும் பலமாகும்.
உதவியுமாகும்.
மல்லிகையில் வெளிவந்த 71 சிறு கதைகளை மல்லிகைப் பந்தல் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. பாரிய இலக்கிய முயற்சி இது. அத்துடன் எனது சுயவரலாற்று நூல்.
சகல இலக்கிய இதயங்களும் எனது கோரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
- டொமினிக் ஜீவா

Page 3
4.
: NorMAl PicTURE FRAMING
Sumanatissa Mawatha,
our Street).
 
 
 
 
 
 
 
 
 

ஜனாதிபதி அவர்களுடனும் அவசியம் பேசவேண்டும்
பிரதமரா? - அல்லது ஜனாதிபதியா? என்ற அரசியல் அதிகாரப் போட்டிக் கயிறிழுப்பில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனத்தோர் சார்பு நிலை எடுக்கக் கூடாததுடன் கன்னை சேர்ந்துவிடவும் கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திரப் புத்தி நுட்ப நுணுக்கத்துடன் மிக நிதானமாகக் காய் நகர்த்த வேண்டிய காலகட்டம் இது. M
81-ல் அரசியல் பாஸிஸ்டுகளால் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது.
83-ல் கற்பனைக் கெட்டாத முறையில் தமிழ் மக்கள் இன வெறியர்களால் வேட்டையாடப்பட்டனர்.
‘போர் என்றால் போர்! . சமாதானம் என்றால் சமாதானம்' என முழு நாட்டினதும் ஜனாதிபதியே அன்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தினார்.
இத்தனைக்குப் பிறகும் அன்றைய ஆதிக்க சக்திகளின் இன்றையப் பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்றால், ஏன் இன்றைய ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது?
இன்றைய ஜனாதிபதி இன்றைய பிரதமரைத் தோற்கடித்து மக்களால் தெரிவு செய்யப்பட்டவராவார். அத்துடன் அவர் இந்த நாட்டின் ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சியின் தலைவருமாவார்.
எனவே, வடக்குக் கிழக்குக்கான இடைக்கால நிர்வாகம் பற்றி இன்றைய பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளைத் தொடருவதுடன் முஸ்லிம் மக்களினுடைய உண்மைப் பிரதிநிதிகளுடனும் சுமுகமாகப் பேசி முடிவுக்கு வரவேண்டும்.
முறுகல் நிலைக்குட்பட்ட சர்வதேசப் பிரச்சினைகள் கூட, இன்று பேச்சு வார்த்தை மேடைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை உலகம் நன்கறிந்துள்ளது

Page 4
CTA)
ஒழரும் தமிழர்களுக்கு
ưfrụ29ủD 9nioở !
முருகபூபதி
ஒரு எழுத்தாளனுக்கு பலதரப்பட்ட வயதிலும் வாசகர்கள் இருப்து அபூர்வம். அப்படி இருந்தால் அந்த எழுத்தாளனின் படைப்புகள் எந்த வயது வாசகனிடத்திலும் கவனத்தை ஈர்க்கும். m
கவிஞர் அம்பியின் வாழ்வும் பணியும் அத்தகையது.
கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப்பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், மருத்துவத் தமிழ் முன்னோடி, இவை தவிர - ஆங்கிலத்தில் LINGERING MEMORIES, SCIENTFICTAMILPIONEER
இறுதியாக வெளிவந்தது 'உலகளாவிய தமிழர். தமிழ் மக்களின் இடப் பெயர்வு - புலப் பெயர்வு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல்.
1950இல் எழுதத் தொடங்கினார். இன்று அரை நூற்றாண்டு கடந்தும் அயராது எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் இவர் தமிழ் உலகற்கு தரப்போவது 'சொல்லாத கதைகள் நூல்.
தினகரனில் “இலட்சியச் சோடி' - என்ற கதையுடன் அறிமுகமானார். இரசிகமணி கனகசெந்திநாதன் . தனது 'பேனா மன்னர்கள் வரிசையில் அம்பி குறித்து விரிவாகவே எழுதினார்.
தமிழ்நாட்டில் அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டினை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பரிசில் பெற்றார். இலங்கையின் சாகித்திய விருதும் - “கொஞ்சும் தமிழ் - என்ற சிறுவர் இலக்கிய நூலுக்கு பெற்றவர்.
ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளை என்று ஒரு சந்தர்ப்பத்தில் கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா இவரை வர்ணித்திருந்தது.
 
 

இயல்பாகவே - மென்மையான தனங்களைக் கொண்ட அம்பியை - ‘அன்புக்கோர் அம்பி' - என்றும் கூறலாம்.
வயது வித்தியாசம் பாராமல்
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் பலர் இவருக்கு நண்பர்கள். அம்பி தாத்தா - என்று அழைக்கும் குழந்தைகளையும், அம்பி மாஸ்டர் என்று விளிக்கும் அவரது மாணவர் களையும் - நான் பார்த்திருக்கிறேன்.
இவருக்கு கோபம் வந்து பார்த்த தில்லை. நகைச்சுவையுடன் பல்வேறு அர்த்தங்களுடனும் பேச வல்லவர்.
கொழும்பில் பாடவிதான அபிவி ருத்தி சபையிலும் பணியாற்றியவர். பல பாட நூல்களின் ஆலோசகராக விளங்கியவர். இதனால் - அவுஸ்தி ரேலியாவில் வதியும் தமிழ் மாணவர் களுக்கென பாட நூல்கள் உருவாக்கப் பட்ட பொழுது இவரது ஆலோசனை களும் பெறப்பட்டன.
தலைமுறை இடைவெளி தொடர் பான கருத்தாடல்களுக்கும் இவர் தலைமை வகித்துள்ளார். வயதில் முதிர்ந்திருந்தாலும் . இவர் - இளம் தலைமுறையினருக்கு சாதகமாகவே சிந்திப்பார். முதுமை என்பது வயதில் இருக்கலாம். ஆனால் எண்ணம் - சிந்தனை முதுமை தட்டிக்கழிக்கக் கூடாது என்பார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் சுற்றி வரும் இந்த வாலிபர் - தமிழுக்குச் செய்த அளப்பரிய பணி களில் ஒன்றுதான் மருத்துவத் தமிழ்
முன்னோடி டொக்டர் சாமுவேல்
பிஸ்க் கிறீன் அவர்களை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. w
கிறீனின் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்கபூர்வமாக ஆலோசனைகளை வழங்கி அதனை சாத்திய மாக்கியவர்.
அமெரிக்காவில் - மசாசூசெற் மாநிலத்தில் கல்லூறயில் உறங்கும் அந்த மருத்துவ தமிழ் முன்னோடியை தமிழ் உலகம் விரிவாக அறிவ தற்கு வழிவகுத்தவர் அம்பி.
மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீனின் மருத்து வமனை குறித்தும் - அந்த மருத்துவ மேதை மேற் கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் - ஆங்கி லத்தில் விரிவான நூலை அம்பி எழுதினார்.
இதனைக் கண்ணுற்ற கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அம்பியை அழைத்துப் பாராட்டிக் கெளரவித்தது.
இலங்கையில் இருக்கும் பொழுது
வானொலியையும் நன்கு பயன்படுத்தி பல
நிகழ்ச்சிகளை அம்பி நடத்தியிருக்கிறார்.
வேதாளம் சொன்ன கதை - கவிதை நாடகம் கொழும்பில் மேடையேறியுள்ளது.
உலகம் எல்லாம் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு - ஓடிடும் தமிழா - பாடிய தமிழை முட்டும் பாதையில் விட்டிடாதே என்று எழுதியுள்ள கவிதை நகைச்சுவை நயம் மிக்க அர்த்தமுள்ள ஆக்கம். அம்பி அயராமல் எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டுமிருப்பதே இயந்திர மயமான வெளியுலக வாழ்வில் அரிய பணியாகும்.
‘கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் செங்கை ஆழியானின்
சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

Page 5
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் எதிர்காலம்?
பாலா.சங்குப்பிள்ளை
அண்மையில் திருகோணமலை இலக்கிய ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மணிமேகலை பிரசுரமான "ஈழவரின் 27 சிறுகதைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பிரபல எழுத்தாளர் புரட்சி பாலனை தலைவராகவும் எழுத்தாளர் எஸ்.செல்வகுமாரை செயலாளராகவும் கொண்டு இயங்கும் திருகோணமலை ஒன்றியம் இதுவரை பல நூல்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மணிமேகலை பிரசுரத்தினால் பிரசுரமான இலங்கை எழுத்தாளர்களின் 24 சிறுகதைகள் என்ற தொகுப்பினை இவ்வொன்றியம் வெளியிட்டுள்ளது. இது இரண்டாவது தொகுப் பாகும். இவ்விரண்டு தொகுப்புகளிலும் இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. மணிமேகலை பிரசுரம் என்பது தமிழகத்தின் பிரபலமான ஒரு புத்தக வெளியிட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடுவதென்பது எண்ணிப் பார்க்க முடியாததொரு அதிர்ஷ்டமானதாகும். இந்த சந்தர்ப்பம் கிடைத்த திருகோணமலை இலக்கிய ஒன்றியம் இதன் மூலமாக இலங்கை எழுத்தாளர்கள் அனைவருமே பயன் பெற வேண்டுமென்ற நோக்கில் திறமையான அனைவருக்கும் வாய்பளித்தமை வரவேற்க்கத்தக்கது மட்டுமல்ல பெருமை படக்கூடியது மானதொரு விடயமாகும். இந்த இரண்டு தொகுப்புகளிலும் மலையக எழுத்தாளர் களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் உலகிலுள்ள அனைத்து தமிழர்கள் வாழும் இடங்களில் இவை சந்தைப்படுத்தப்படுவதனால் இவ்வெழுத்தாளர்களுக்கு இதுவொரு நல்ல அறிமுகமாகவும் அடையாளமுமாகி விடுகின்றது.
இன்று இலங்கை எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இன்னமும் சரியான களம் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. தென்னக எழுத்தாளர்களைப் பார்க்கிலும் இங்கே நமது எழுத்தாளர்கள் எந்த வகையிலும் யாருக்கும் சளைத்த வர்களல்லர். மிக தரமான, சிறந்த இலக்கிய அறிவையும், ஆற்றலையும் பெற்றிருக்கும் , நம்மவர்கள் யாரைப் பிடித்து என்ன செய்ய வேண்டுமென தெரியாமல்தான் இன்னமும்
 

இருட்டில் இருக்கிறார்கள். எப்போ தாவது ஒருமுறைவரும் சாஹித்ய விழா அல்லது ஏதாவதொரு விழாக்களில் பொன்னாடை, பொற் கிழி கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிநீ து விடுவதாக நினைக் கிறார்கள். அவர்களின் பொருளாதார நிலை மற்றும் பல பிரச்சினைகளைப் பற்றி யாருமே கண்டுகொள் வ தில்லையாதலினால் வறுமையி லேயே பிறந்த இலக்கியவாதி சரியான இலக்கில்லாமல் திரிந்து இறுதியில் வறுமையுடனேயே மடி கிறான்.
இன்று வெளிவரும் 6) சஞ்சிகைகள் முழுக்க முழுக்க வியாபார நோக்குடன் தரமில்லாத இலக்கியத்துடன் வெளிவருகின்றன. மல்லிகை’ ‘ஞானம் போன்ற குறிப்பிட்ட சில சஞ்சிகைகள் சுவா சிப்பதற்கு 'பொருளாதாரம் என்ற பிராணவாயு இல்லாமல் தடுமாறி தத் தளித்து வெளிவந்து கொண்டிருக் கின்றன. இவற்றின் மூலம் நல்ல
நீங்
ရှား ဦ
எழுத்தாளர்கள் இனங்காணப்பட்டு அவர் களின் ஆக்கங்களுக்கு களம் அமைத்து
கொடுக்கப்பட்டாலும் அது அவர்களின்
பொருளாதார சிக்கலுக்கு எந்த உதவி களையும் செய்யவில்லை. இதற்காக யாரையுமே குற்றம் சொல்லவும் முடியாது.
மேலும் தற்போது வாசிக்கும் பழக் கமும் அருகி வருகின்றது. வாசிப்பதைவிட பiப்பதையும், கேட்பதையுமே அநேகர் விரும்புகிறார்கள், வாசிப்பதன் மூலம் தங்களின் நேரத்தை வீணாக்க எவரும் விரும்புவதில்லை. அதனால் 'வாசிப்புதான் ஒருவனை முழு மனிதனாக்குகிறதென்பதை அவர்கள் உணர்வதில்லை. இப்படியான இக்கட்டான இன்றைய சூழ்நிலையில் : எழுத்தாளன் எதிர்நீச்சல் போடவேண்டிய நிலையிலுள்ளான். ஆனால் எதிர்காலம் இலங்கை எழுத்தாளர்களுக்கு எப்படி
* யிருக்கும் என்பதுதான் இன்றைய கேள்விக்
குறி. கேள்விக்குறி ஆச்சரியக்குறியாக மாறி அவன் நிலை உயர்வடைந்தால் அதைவிட என்ன மகிழ்ச்சி இருக்கப் போகின்றது?
தி
லுன் தொடர்புகொள்

Page 6
தேவகாந்தள்
தன் இருபக்க ஓரங்களிலும் வீடுகள் கடைகளின் வாசல்கள இறங்கி நிற்க விரிந்திருந்த வீதி அது. வீட்டின் சுவர்களே மதில்களாகவும் ஆன உருவாக்கம். சில பழைய மாடி வீடுகளின் சில உயர்ந்த சுவர்களில் அரச மரங்கள் முளைத்திருந்தன. சில இன்னும் அடுக்கு ஒடு போட்ட வீடுகளாயே அங்கே. காலத்தின் பழைமையை உக்கிரமாய் விலக்கும் நகரமாயினும், ஊடுஊடே இதுமாதிரி ஓரிரு வீதிகளையேனும் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாதபடி கொழும்பு மாநகரின் அந்த விதி அது மாதிரியானவொன்று.
வீதியின் மத்திய பாகத்தில் அமைந்திருந்த ஒரு லொட்ஜின் மாடியிலுள்ள தன் அறையில் ஜன்னலோரம் நின்றபடி வெளியில் பார்வை பதித்திருந்தான் தியாகராஜன். புலன் கடந்து அவனது சிந்தனை எங்கோ பரந்திருந்தது.
அந்தச் சின்னவீதியின் கலகலப்பும், அப்பாலுள்ள
பெருவீதியின் வாகனப் போக்குவரத்தும், அதன்
பின்னாலுள்ள துறைமுகத்து ராட்சத கிறேன்களின் அசைவு, கப்பல்களின் நகர்வுகளும் ஏறக்குறைய அலுத்துப் போயிருந்தன அவனுக்கு. அவன் அங்கே வந்து ஒரு கிழமை. நினைத்து வந்த காரியத்தில் ஓரளவு கூட நிறைவேறவில்லை. துவங்கக்கூட இல்லை. அக்காள் பார்வதி வரும் வரை எதுவும் சாத்தியமில்லை. வந்த காரியமும் ஒன்றாகவிருந்ததில் ஈடுபாட்டோடு செய்ய வேறு காரியம் இருக்கவில்லை. எல்லாம் ஒரு விரக்தியாய், எரிச்சலாய் அவனில் எரிந்து கவிந்து கொண்டிருந்தன.
அப்பாவுக்குத் தன் வருகையை அறி வித்துவிட்டுத்தான் கொழும்பு வந்திருந்தான்.
அவரோடு கலந்து பேசி செய்ய வேண்டியவைகளைச் செய்யலாம் என்பதே வரும் வழி முழுக்க அவனது எண்ணமாக இருந்தது.
ஆனால் அப்பா விமான
நிலையம் வரவில்லை.
லொட்ஜ் வந்ததும் யாழ்ப் பாணத்துக்குப் போன் எடுத்தபோது அப்பாவுக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமற் போனதை விளக்கி, தான் தான் இரண்டு நாளில் கொழும்பு புறப் படப் போவதாகச் சொன்னாள் அக்காள் பார்வதி. ரமேஷின் போட் டோவை மறந்து விட வேண்டாமென்று
سمع
 
 
 
 

கூறி விட்டு அவன் போனை வைத்து விட்டான்.
அது சாதாரண காரியமில்லை. கைக் குழந்தையோடு அதுமாதிரிப் பயணம் அவளுக்குச் சிரமம். சமயமும் சாதாரணமானதில்லை. ஏ-9 பாதை இன்னும் திறக்கப்படாதேயிருந்தது. தாண்டிக்குளம் தாண்டிவர அக்காவால் முடியுமா? ஆனாலும் போட்டோவுக் காகவாவது அவள் அங்கே வந்து தான் ஆகவேண்டும்.
'அக்காள் எப்ப வருவாள்?
அவனது யோசிப்புக்கள் பலவாறு பரந்து கொண்டிருந்தவேளையில், 'ஏய். ஏய். ஏய்.” என்ற திகைப்பி லும் அவசரத்திலுமான ஒலித்திரள் களின் தெறிப்பு அவனது செவியில் விழுந்தது.
திரும்பியவன் ஒருகணம் காட்சி யின் நிஜத் தன்மை புரியாமல் தடு மாறினான். அது புரிந்த பிறகு அந்தப் படியே உறைந்து போனான்.
சற்றுத் தொலைவிலுள்ள கடை கள் நிறைந்ததும், ஒட்டோக்கள் நின்றி ருந்ததுமான நாற்சந்தியிலிருந்து யாரோ ஒடி வந்ததுபோல அவனுக்குப் பக்கப் பார்வையில் விழுந்ததுதான். சிந்தனைச் சுழிப்புள் அவன் இழுப் புண்டு போயிருந்தான்.
கீழே நேரெதிர்க்க இருந்த அந்த அழகான ரோஸ் நிற வீட்டின் தெரு வோரச் சுவரில் அந்த வாலிபன் இன்னும் தன் மண்டையை ஓங்கி யோங்கி ஒரு வெறியில் போல் மோதிக் கொண்டிருந்தான்.
திசைகளும் பூமியும் வானமும் அதிரும் படியாய் தொம். தொம். என்று கிளர்ந்து கொண்டிருந்தன சத்தங்கள்.
சிறிதுநேரத்தில் மண்டையை இரு கை களாலும் அழுந்தப் பிடித்தபடி அலறிக்கொண்டு அவன் கீழே விழுந்தான்.
ஊகங்களுக்குக்கூட முன் நிபந்தனையாய்ச் சில தகவல்கள் வேண்டியிருக்கும். அந்தச் சம்ப வத்தைப் புரிய தியாகராஜனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
கணங்கள் கழிந்து கொண்டிருந்தன. அந்த வாலிபன் தடுமாறியபடி மறுபடி எழுந்தான். குறிப் பின்றி எங்கோ பார்த்து ஒருமுறை சிரித்தான். யாரையோ பழி வாங்குவது போன்ற ஒரு வன்மச் சிரிப்பு அது. பின் உடம்பைப் பின் வளைத்து தலையை ஓங்கி சுவரில் மோதினான். றோஸ் நிறச் சுவரில் சிவப்புப் புள்ளிகள் தெளிபட்டு அழுந்துப்பட்டுக் கொண்டிருந்தன.
அவனை அந்தளவில் சூழ்ந்து நின்றிருந்த சிறுகூட்டம் தடுக்கவும் வகையற்றதாய் திகைத்தும் பயந்தும் போய் சிலைபற்றியிருந்தது. கடைசியில்தான் தம் நிலையைச் சுதாரித்த சிலர் அவனைப் பிடித்துத் தடுக்க முனைந்தனர்.
ஆனால் அதற்கு அவசியமில்லாதபடி நிறையப் பூத்த நெடிய முள்முருக்கு மரம்போல்
இரத்தம் தோய இறந்தபடி படாரென 'அவ்
வாலிபன் நிலத்தில் வீழ்ந்தான்.
!...ولاك எங்கும் பரிதாபத்தின் முனகல்.
‘கடவுளே. என்றான் தியாகராஜன்.
அந்தக் காலம் நியாயங்களும் முகாந் திரங்களும் சாத்தியங்களும் அனுமானங்களும் , பிழைக்கிற அசாதாரணத்தனத்துடன் இருந்தது. மனநிலைப் பேதலிப்புகள் அங்கே சாதாரணமாய்

Page 7
நிகழ்ந்தன. அவற்றின் மூலம் பல தளங்களில் இருந்தது. காதல் தோல்வியினால், கல்யா ணத்தின் உடைவுகளால் அது ஏற்படலாம். ராணுவ சித்திரவதைகளினால் ஏற்படவும் வாய்ப் புண்டு. கண்ணிவெடி வெடித்து தப்பிப்பிழைத்த பயணங்களாலும் நிகழலாம். இன்னொருவரின் கோர மரணத்தை, உடல்களில் சிதைவுகளின் நிகழ்ச்சியைப் பார்த்தும் சம்பவிக்கலாம். சில நிகழ்வுகளின் அவலத்தை அதனதன் காரணங் கள் உச்சமெடுக்கின்றன என்பது சரிதான். ஆனாலும் அப்போது நடந்த சம்பவமோ, காரணம் தெரியாத நிலையிலும் எல்லோரது இதயங்களையும் உறைய வைத்து விட்டிருந்தது. அந்தப் பாதிப்பிலிருந்து அவர்கள் பல காலத்துக்கு மீளமுடியாதே இருக்கும்.
திடீரென அவனிடத்தில் ஒர் எண்ணம். அது
ரமேஷாக இருக்குமோ? தியாகராஜனுடைய தேகம் நடுங்கியது. இறங்கி ஓடிப்போய் பார்க்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் தான் அவனை ஆகிருதியாகவுமே பலகாலம் மறந்து இருந்து விட்டான் என்பது ஞாபகமாகி, அவன் ஆகிருதியை ஸ்தம்பிக்க வைத்தது.
தியாகராஜன் கனடா போய் பத்து வருஷங் களுக்கு மேலே. அவன் கனடா போன அடுத் தடுத்த வருஷம் ரமேஷம் ஏதோ ஒரு போராட்ட இயக்கத்தில் இணைந்து கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிறான். அக்காள் பார்வதியின் கல்யா ணத்துக்கு அவனுக்காகவே பத்திரிகை அறிவிப்புச் செய்தும் அவன் வராதிருந்து விட்டான். அவன் படிப்பைக் குழப்பியதில் ஏற்கனவே கடுப்பா கியிருந்த தியாகராஜன், ரமேஷின் குடும்பத்தில் கடுகளவு அன்பு பாசம் அக்கறைகள் காட்டாத தன்மையில் வெறுப்பே அடையத் துவங்கி விட்டான். அதன் இறுகிய நிலை மறதியாகிப் போனது.
ரமேஷை வழியிலே கண்டதாய் அம்மா
தான் ஒருநாள் தொலைபேசியில் பேசும் பொழுது, ‘நல்ல பொலிவாய் வந்திருக்கிறானடா ரமேஷ். இப்ப நல்ல நிறமும்’ என்று கூறிப் பரவசப் பட்டிருந்தாள்.
பன்னிரண்டு வயதில், பயித்தங் காய் போல் மெலிந்த தம்பியின் புதிய வடிவத்தைக் காண முடியாமை முற்று முழுதான மறத்த திரைக்குள் இழுத்து விட்டு விட்டது. அதனை அப்பாவின் ஆக்ரோஷமான மறுதலிப்பு நிரந்தப் படுத்தியது.
அவர் சொல்லியிருந்தார்: “முருக்குப் பெருத்து கப்புக்கு உதவாது என்பினம். தமக்கையின்ரை கலியான வீட்டுக்கே வராமல் விட்டவன், எங் கடை செத்த வீட்டுக்கும் வரமாட்டான் தான். அவனாலை ஒருத்தருக்கும் நன்மை இருக்கப்போறதில்லை. அவன்ரை பேச்சையே என்னோடை ஒருதரும் எடுக்கப்படாது.
ஒருபோது ரமேஷ"க்கும், அவன் சார்ந்திருந்த இயக்கத்துக்கும் வடக்கில் இருப்பு கேள்விக்குறியானது. பலர் இந்தியாவுக்கு ஓடினார்கள். சிலர் கொழும்புக்கு. அந்தச் சிலரோடு ரமேஷ் சேர்ந்து கொண்டான். தனது கொழும்பு வாழ்க்கைக் காலத்தில் ஒரிரு கடிதங்கள் அவன் தனக்கு எழுதியதை அப்போது அவன் நினைவு கொண்டான். அவை பெரும்பாலும்
அது வாங்க, இது வாங்க என்று
பணம் கேட்டு எழுதியவையே. காசு கேட்டு எழுதியதில் அவனுக்கு வெறுப் புத்தான் வந்தது. அதனால் பதில் எழுதுவதையே தவிர்த்துக் கொண்டான்.
 

ஒரு போட்டோவாவது அந்தக் கடிதங்கள் ஏதாவதொன்றில் அவன் அனுப்பியிருக்கலாமென்று அப்போது ஆதங்கப்பட்டான் தியாகராஜன்.
சில காலத்தின் பின் சூழ்நிலை மாறி ரமேஷ் வடக்கு செல்ல, காத் திருந்தது போல அக்காள் ரமேஷின் பிரஸ்தாபத்தை வெகு அக்கறையோடு ஆரம்பித்தாள்.
அவளுக்கு ரமேஷ் மீது அவன் குழந்தையாய் இருக்கும்போதிலிருந்தே வாஞ்சை அதிகம். அவனும் அவள் பேச்சுக்கே பெரும்பாலும் கட்டுப்பட்டு அவளில் வலு வாரப்பாடாய் இருந்தவன்.
‘ரமேஷை கனடா கூப்பிட விருப்ப மில்லாட்டி, வேறை எங்கையாவது போறதுக்காவது அவனுக்கு உதவி செய். ஒரு சகோதரமாய் நினைச்சு அவனுக்கு இந்த உதவியைச் செய் யாட்டியும், நான் பொறுப்பு நிக்கிறன். கடனாயாச்சும் பணம் குடுத்து உதவி செய் என்று அக்கா நாண்டு நின்றாள்.
அப்போதும் தவசிப்பிள்ளை அவனுடைய அப்பாதான் குறுக்கே நின்றார். "இஞ்சை வாணியெண்ட பெட்டையை சைக்கிள்ல ஏத்திக் கொண்டு ஊரெல்லாம் திரியிறது தான் அவன் ரை வேலை. அதுகளும் எங்கேயோ ஆனைக்கோட்டைப் பக்கத் திலயிருந்து வந்ததுகளாம். என்ன ஆக்களெண்டும் தெரியாது. நீ ரமேஷை வெளிநாட்டுக்குக் கூப் பிட்டால், ஒருதருக்குமில்லை, அது
களுக்குத்தான் கொண்டாட்டமாய்
இருக்கும்.
பிறகும் அக்காதான் இடை நின்று விஷயத்தை முன்னெடுத்தாள். எல்லாவற்றையும் ரமேஷ் விட்டுவிடுவானென்று உறுதி கூறினாள்.
அக்காவுக்காகவே ஒருநாள் ரமேஷோடு பேசினான் அவன். ‘விட்டிடு. எல்லாத்தையும் விட்டிடு. அந்தப் பெட்டையோடை ஒரு தொடர்பு கதை பேச்சு இருக்கக்குடாது. ஆறு மாசம். பாப்பன். அந்த ஆறு மாசத்திலை ஒழுங்காய் நடந்தியெண்டாத்தான் கனடா கூப்பிடுவன். விளங்குதே?
மெளனம் எதிர்முனையில் விரிய அவன் கத்தினான். "இஞ்சை கார்ட் வீணாய் முடிஞ்சு கொண்டிருக்கு. வாயைத் துறந்து , மறு மொழியைச் சொல்லன் நாயே. ஒமோ. இல்லையோ?
அக்காள்தான் தூண்டியது போலிருந்தது. ரமேஷ் "ஓமண்ணை’ என்றான்.
என்ன யுக்தியில் அக்காள் அதைச் சொல்ல வைத்தாளோ?
சுமார் ஒரு மாதம் கடந்த அளவில் அக்காவின் கடிதம் வந்தது. 'அவன் விரும்பின பிள்ளை, தன்னை அவன் ஏமாற்றி விட்டானென்று நினைத்து கொழும்புக்குப் போய் விட்டது. அங்கே சொந்தத்துள் கல்யாணம் நடக்க இருக்கிறதாம். ரமேஷ், கேட்ட நாளிலிருந்து தன் கோலம் போக்கு எல்லாம் மாறி அலைகிறான். ஒன்று கேட்க, ஒன்று சொல்கிறான். அவனது மனநிலை என்ன ஆகுமோ வென்று நினைக்க எனக்குப் பயமாக இருக்கிறது. யாராய் இருந்தாலென்ன, அவன்ரை காதலை நாங்கள் அங்கீகரித்திருக் கலாம். அவனுடைய மனநிலைக்கு ஏதாவது நடந்த பிறகு நாங்கள் வருத்தப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லை' என எழுதியிருந்தாள்.
ஆறுதலாய் ஒருநாளைக்கு அவனோடு கதைக்க வேண்டுமென்றிருந்த நிலையில், அப்பா விடமிருந்து தகவல் வந்தது. ரமேஷ் பழையபடி

Page 8
வீட்டைவிட்டுப் போய் விட்டான், தியாகு.
அப்பா சொன்ன விதமோ தொனியோ
அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏன் அவருக்கு
அவனிடத்தில் அவ்வளவு வைரம்? கொண்டு வந்தால்தான் தந்தையோ! அவன் காணாமல் போய்விட்டதை, வீட்டை விட்டுப் போய் விட்டதாகச் சொல்ல எப்படி முடிந்தது அவரால்?
அது ரமேஷின் ஒரு தொலைவு. அவனே தொலையவில்லை. மற்றவர்கள் தொலைய வைத்தனர். குறிப்பாக அப்பா. அவர் பேச்சைக் கேட்டு தியாகராஜனும்.
அவள் யாராய் இருந்தாலென்ன என்று நினைக்க அதிகம் படிக்காத அக்காளால் முடிந் திருக்கிறது. VK.
மனது மிகமிகக் கனதியாகப் போய் விட்டது தியாகராஜனுக்கு. ஒவ்வொரு நினைப்புமே வலி செய்தது. தாங்க முடியாமற் போனது மட்டு மில்லை, வேலை செய்ய, சாப்பிடக்கூட இயல வில்லை. அப்போதுதான் தானே நேரில் போய் ரமேஷ் குறித்து ஏதாவது செய்தால் தவிர, தன் சொந்த நிம்மதியைத் தான் திரும்ப அடைய முடியா தென்று எண்ணிக்கொண்டு அவன் ஓர் அவசரத்திலாய் இலங்கை வந்தது.
"அது ரமேஷாக இருக்கலாமோ?
W இரண்டாவது தடவையாகவும் அந்தக் கேள்வி விடைத்தெழுந்தபோது அவனால் தாங்க முடியவில்லை.
ஒடிப்போய்ப் பார்த்து என்ன செய்ய? அவனால் ரமேஷா இல்லையாவென்று கண்டு பிடித்துவிடவா முடியும்? ஒரு பிரயத்தனத்தில் பழைய முகத்தை அவன் நினைவுக்குக் கொண்டு வந்தாலும், அது நிகழ்கால முகத்தின் நிஜத்தோடு ஒத்துப் போகவா போகிறது?
அவ்வாலிபனின் இறப்பின் அடையாளமான துடிப்பைப் பார்க்க முடியாமல் தியாகராஜன் திரும்ப முனைகிற சந்தர்ப்பத்தில், அந்த றோஸ்
கலர் வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு பெண் குறிப்பாய் பார்வையைக் கவர்ந்தாள்.
யார் அந்தப் பெண்?
கர்ப்பிணியாயும் இருந்தாள்.
அவளில் ஏன் அத்தனை அழிவு?
ஓடிப்போய் அந்த வாலிபனைத் தூக்கியெடுக்கத் துடிப்பது போலும், அப்படிச் செய்ய முடியாத சூழ் நிலைக் கனங்களால் தவிப்பது போலுமான ஒர் அந்தரம். உடன்சதிக்குப் போல் ஓர் உக்கிர அடைவு. ஆனாலும் முழுச் சிதைவின் விளிம்பில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு மீண்டு கொண்டு மிருந்தாள்.
அது அபூர்வமான ஒருநிலை.
சாதாரணத்தில் அது சாத்தியமே யில்லை.
அவளுள் ஏதோவொன்றிருந்து அவ்வாறு செய்தலைச் சாத்தியப் படுத்திக் கொண்டிருந்ததோ?
அவள் மேலே அதிக நேரம், அந்த இடத்தில் நிற்கவில்லை.
சாதாரண ஒரு பார்வையாளியாய்த்
திரும்பி உள்ளே நடந்தாள்.
அப்போது அவளுள் எரிந்த இன்னொரு நெருப்புத் தெரிந்தது.
சடாரென அவனுக்கு எல்லாமே விளங்கிற்று. மறுகணம், ரமேஷ் என நெஞ்சுக்குள்ளாய்க் கூவியபடி மாடிப்படிகளில் தாவி இறங்கினான் தியாகராஜன்.
g€)
 
 

எழுத்தாளர் தெணியான் 1968ல் பண்டாரவளை அட்டம்பிட்டிய பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பிக்கும் போது, இன்றைய பிரபல கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவருக்கு எழுதி அனுப்பிய கவிதையைச் சமீபத்தில் பைலில் தட்டுப்பட்ட போது தெணியான் அவர்கள் அக்கவிதையை மல்லிகையின் பார்வைக்கு அனுப்பியிருந்தார். அக்கவிதைதான் இது.
ஆசிரியர்
புகையிலை விடு துது
ಕ್ಲೆಕ್ಟ್ರ H u jsù ĠLITÃ என் கதையைப் படித்தானாம் : ** | ஏற்றங்கள் கண்டானாம்
ಏJu!' நம்பவைத்துப்பித்தாக்க பிரிக்காதசிற்பத்துப் சொல்வலையாளிக்கின்றான்? புகையிலையே பாதையதன் சுந்தானின் கண்களிலோர் மருங்கேற்றப்பிட்டியுண்டு / ல்ெலியலாள் தட்டுற்றால் மறக்காதே ஒரு தூது / UGGIATGITT? தப்புவளோ?
காதல் தன்னில் என்னைக் ଗର୍ଭିr))ରୀ ରାଣୀ)ର ରା]$ର୍ତ୍ତୀ கன்னியரும் விழுத்தாத ଷ୍ଟିଚ୍ୟf $3୍í ଶ})ରilit&ର୩ଦ୍ଦ) §ಗಟ್ಝಙ್ಗಥೆಗಣಿ அண்ணன்மரிடம் சொல்வேன் புதுக்கதைத் திட்டத்து - z::4:ပ္ပ္ပ္ပ္ပ္ပ္"r AO WW அழைப்பேன் அருவிதவழ் முதிர்ந்த எழுத்தாளனென I $୍]] முடிபெற்றதெனியானம், ! மிழர்களை இவன் கதை சதிசெய்துவிட்டானோ 7 சொ၍၍# சிரிப்பேன் frijp Lsji.T&GOTT! சொல்வாய் |ವಾಹിഞ്ഞു:]]
ܠܪܗܘܡܝܗܙܕܙܺܗ،،، :ܗ݈ܗܙܟܪ LAATSLI JITILITAT - திங்களொன்றுதப்பாமல் பல்வண்டிப்பயணத்தில் சேதிவர வேண்டுமென ಇಂಗು பணி பாதி துங்கிந்தா போல் எழிலார் இருக்காது என்னிதயம் துங்குளையே சொல்லங்கே GJITTIPATÍN GLITRATA jifað எங்கும் விரவியங்கள் ରାର୍ଯ୍[ଫୀରist $TI୍ଡୀ ». | கள் ஒன்றிழைந்து
|##kii வசிக்கும் திருவிடமோ! பொங்கிடவேவேண்டுமெனப்
1 - - - - - - - surfit 5

Page 9
நவாலியம்
லுமாலாவும்
சி. சுதந்திரராஜா
இடம் பெயர்ந்த பின்னால் கொத்துக்கட்டி றோட்டில் நவாலிப் பக்கத்தில் கெளரி குடும்பம் ஒட்டிக் கொள்ள இடம் கிடைத்தது. இடிபாடுகளுடன் தேவாலயம் அமைந்ததோர் சூழலில் சோகை வருத்தம் பலமாகப் பீடித்த கெளரியின் அக்காக்காரி உடல் தடித்துப் பருத்து ஒரே படுக்கையாகிக் கிடந்தாள்.
மூச்சிழுக்க முடியாமலேயே அல்லல் படுந் தங்கைக்காரி கெளரியின் ஒத்தாசையில் ஓரளவு நடமாடி
மூவரையும் மெய்ப்பித்தாள். அக்கா நடமாடாத நிலைப்பாட்டில் தத்தளித்தாள். ஒரு சோடிக் காப்புகளைத்
தந்து கெளரியை விற்றுத் தள்ளிடச் செய்தாள். கெளரியின் யோசனை பலமாகிப் போயிற்று. இந்தக் காசும்
தீர்ந்து போனால் கைச் செலவுக்கு வேறு வழியேயில்லை. அக்காக்காரியின் ஏராளமான மருந்துக் குளிசைகளுக்குக் கூட அவள் திண்டாடித் திரிந்திட வேண்டியே நேரிடும். த்ங்கை ஈரல் அடைப்புடன் மூச்சிழுக்கப படுந் திண்டாட்டம் கெளியை ரணவேதனைப் படுத்தி வேதனையிலிருந்து வெக்கைக்குள்
தள்ளி புடம் போடும்.
கெளரி சிறீலங்கா ரெலிகொம் அனுப்பிய மாசக் கட்டண அறிக்கையை ஆயாசத்துடன் அணுகினாள். இணைப்புத் துண்டிலே ஐக்கிய ராச்சியம் ஐம்பத்தைந்து ரூபாய் எனக் கணிப்பொறி அளவீடு செய்திருந்தது. இரட்டிப்பு மடங்காக நூற்றுப்பத்து ரூபாய்களைத் தொலைபேசுந் தொடர்பகங்கள் எல்லாம் நிமிடந்தோறும் அறவிடுவதை அவள் அறிந்திருந்தாள். மூலை முடுக்கு களிலே முளைத்திருக்கின்ற தொடர்பகங்கள் சந்து பொந்து இடுக்கு அந்தர இடையிறுகளைத் தவிடு பொடியாக்கி தனித்த சர்வாதிகாரியாகி நிமிர்கின்ற நாய்க்குண ருசி அவள் நாக்கிலேயும் புலப்பட்டது. வயிற்றுப் பசி போக்கவும், சகோதரிகளின் நோய்ப்பிணி
அகற்றிடவும் கெளரிக்கு வேற்று வழி தெரிவதாயில்லை.
சின்னப்புவின் மூத்தவன் கொமியுனிக் கேசன் வைத்திருப்பதை கெளரி அறிவாள். அதனால் சின்னப்புவிடமே கொமியுனிக்கேசனில் வேலையும் அதற்குப் போய்வர லுமாலாச் சயிக்கிளுக்கான கடனையும் ஒன்றாகவே கேட்டாள். புளியடி முடக்கு ஒழுங்கையில் கொமியுனிக்கேசன் வைத்திருப்பது போதாதென்று
எங்கேயோ வயிரவப் புளியங்குளத்தில் கொமியுனிக்கேசன் வைக்கப் போயிருந்தான் அவரின் மூத்தவன் சிறீரங்கன். சின்னப்பு கெளி கேட்டதுமே சிரிப்புக் காட்டியதில் விழுந்து போன பல்லெல்லாம் இடைவெளியான முரசு வெளித் தெரிந்தது. சின்னப்புவின் மரு மகனும் கொம்பியூட்டர் வியாபாரிதான். ஆனால் வேறு குடும்பம். கெளரியைப் போன்றவர்கள் தென்படின் கொம்பியூட்டர் படித்திடச் சொல்லுவதில் சளைக்கவே
மாட்டார் அவரது மருமகன்.
சின்னப்பு சயிக்கிளைச் சாத்தி வைக்கக் கூடக் காசு கேட்ட ராணித் தியேட்டர்க் காரரோடு எல்லாம் சண்டித்தனம் காட்டியவர். அந்தக்காலம் பெண்குலத்தோர் பைசிக்கிள் ஓடாத காலமாக அவர் மனத்திரையில் ஒடிற்று. சயிக்கிளுக்கு என்னத்துக்கு ரிக்கற் என்ற அவரது கேள்விக்கு தியேட்டர்க்காரன் மாறுப்படாமலிருக்க என்ற பதிலுக்கு
4 Set
 
 
 
 

அவரால் கொதிப்பைத்தான் காட்ட அன்று முடிந்தது. சுற்றிவர முள்ளுக்கம்பி வேலியில் வேகா வெயிலுக்குள் முன்சில்லுக் காற்றுப் போய் அவர் சயிக்கிளைப் படம் பார்த்தபின் உருட்டியபடி வந்ததுண்டு. காசையும் கொடுத்து கவலையையும் உள்வாங்கி ராணிக்காரனைத் திட்டி மனதில் வெம்பி அழுது உருட்டியவர். குதிக் காலால் மாத்திரமே பிறேக் பிடித்து றலியின் றிம்மில் உள்ள உருக்குக் துடைத்துத் தள்ளியிருக்கிறார். பிறேக் கட்டையிலோ ரப்பர் துண்டுந் தேய்ந்து வெறுந் தகடு மட்டுமே தெரியும். ஏழெட்டுப் பிள்ளைகள் பெற்ற ராணித் தியேட்டர்காரன்
கருக்களைத்
அடிவேர் மண்ணெல்லாம் கிளறியெடுத்து ஐக்கிய ராச்சியத்தில் மீள்நடுகை செய்து முழுசாகவே குடும்ப மெல்லாம் ஐக்கியமாகி விட்டதும் சின்னப்பு அறியாததல்ல. வெறுந் தகரக் கொட்டகையினாலும் சரிவர இருக்க முடியாத வாங்குகளிலும் ராணிக்காரன் அப்போது அமைத்திருந்த அந்த மடுவம்
ܐ ܐ ര
மல்லிகை ஆண்டுச் சந்தா N محصے
- - - -
a
அத்தனை குடும்பச் சொகுசை வாரிசுகளோடு சீமைக் குளிர்மையில் குளித்தெழ வைத்த போதும் சின்னப்புவால் வெறுமணச் சயிக்கிள் சண்டைகள் போட்டிடத்தான் முடிந்தது.
கெளியை ஏமாற்றிடவும் சின்னப்பு விரும்பவில்லை. அகதிகளாகி அயலுக்குள் வந்திருக்கின்றவர்களிடம் பரிவே காட்ட விரும்பினார்.
அட்டியலை அவர் பலகாலமாகப் பேணிக்காத்து வைத்தருக்கிறார். சிந்தா மணிப் பிள்ளையார் கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவோமா என்றெல்லாம் எண்ணியுமிருக்கிறார். கடன் கேட்ட கெளரியின் புனிதவதன மனம் புண்பட்டுச் சிதைவுற அவர் அப்போது விரும்புவதாயில்லை. அட்டியலை விற்றாவது கெளரி ஒரு புதுச் சயிக் கிளையேனும் வாங்கி வேலைக்கும் போய்வரத் துணையாகிட வேண்டும் என்கிற துடிப்பே அவரிடம் மேலோங்கி நின்றது.
குடும்பத்தின் பாரம்பரியப் பொருளான அந்த
அட்டியல் அவரிடம் இருப்பதை மறைக்கிற கபடம்
எங்கேயோ ஒடி ஒளித்தது.
N
ܓ ܠ
ܠ
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் N
37வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க.
ஆண்டுச் சந்தா 250/- V
தனிப்பிரதி 20/- Λ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13.
தொலைபேசி: 320721 A. F-Gunuss); panthalG)sitnet.ik.
N (காசுக் கட்டளை அனுப்புவோர்
صبر Dominic Jeeva, Kotahena. P.O ܓܠ
N எனக் குறிப்பிடவும்) سمیعے
N
N
N~r - - — - = = r 1

Page 10
திருமதி பத்மா சோமகாந்தனின ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ கட்டுரைத் தொகுப்பு
ப. ஆப்டீன்
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி பத்மா சோமகாந்தன், இலங்கைத் தமிழ் பேசும் மகளிர் சிலர் பன் முகத்துறைகளில் ஆற்றிய வியத்தகு சேவைகளை உள் ளடக்கி ஈழத்து மாண்புறு மகளிர்’ என்ற தலைப்பில் அரிய கட்டுரைத் தொகுப் பொன்றை நூலாக வெளியிட் டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட பெண்களின் வர்ணப் புகைப் படங்கள் முன் அட்டையை அலங்கரிக்கின்றன. இருபத்து மூன்று மாண்புறு மகளிரோடு தொடர்பு கொண்டு விபரங் களை சேகரிக்கவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு களை ஆய்வுக் கட்டுரைகளாக ஆக்கவும் தான்பட்ட சிரமங் களை அவரது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அவரது தாராளத்தன்மையை இலக்கிய உலகு பாராட்டு மென நினைக்கிறேன்.
 
 

தொகுப்பு 'அம்மா’ என்ற கட்டுரையுடன் ஆரம்பமாகின்றது. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்களைப் பற்றிய ஆய்வு. “அன்னை தங்கம்மாவின் உள்ளம் தங்கமான உள்ளம். தங்கத்துக்காவது விலை மதிப்புண்டு. ஆனால் அன்னை தங்கம்மாவின் பணிகள் விலை மதிக் கப்பட முடியாதவை என்று அன்னாரது சேவையைப் பல கோணங்களிலி ருந்தும் ஆய்வு செய்துள்ளார் திருமதி பத்மா சோமகாந்தன்.
அடுத்து முன்னோடி என்னும் தலைப்பில் திருமதி புென்மணி குலசிங்கம் ஒரு பாடகியாக இருந்து இலங்கை வானொலியில் இசைத் துறைக்குப் பொறுப்பாளராக பரிண மித்த அவரது இசைப்பணியின் சிறப்பு களைப் பற்றி ஆராய்கிறது. இரண் டாவது கட்டுரை பெண்ணிய ஆய்வ றிஞர் தலைப்பில் கலாநிதி திருமதி செல்வி திருச்சந்திரன் பெண்களுக்குச் 860 துறைகளிலும் நீதியும் சம சந்தர்ப்ப வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் சிறந்த சிந்தனைவாதியான இவரது பங்களிப்பு பற்றி விரிவாக எடுத்துரைக் கப்பட்டிருக்கிறது.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபராகவும் பற்பல கல்வி சார் பதவிகளிலிருந்தும், கொள்கைப் பிடிப்புடனும், உயர்ந்த இலட்சியங் களுடனும் பணியாற்றிவரும் திருமதி ஜெஸிமா இஸ்மாயில் அவர்களின் சல சலப்பில்லாத பணிகள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார் கட்டுரை ஆசிரியை.
*அருள்மொழி அரசி தலைப்பில்
வித்துவான் திருமதி வசந்தா வைத்திய நாதன் தஞ்சையில் பிறந்து வளர்ந்து கல்விகற்று, ஆசிரியப் பயிற்சி பெற்று, ஆசிரியையாக தொழில் ஆரம்பித்து, சமய இலக்கியத்தில் ஆர்வம் காரண மாக சென்னை சர்வகலா சாலையில் வித்துவான் பட்டம் பெற்று நாடு திரும்பியவர். அவரது சேவை களைப் பற்றி ஆராயப்பட்டிருக்கிறது.
தேசபந்து வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை அவர்களின் துணைவியார் சிதம்பரத்தம்மாள் அவர்களின் சேவைகளை “பாச ஊற்று தலைப் பின் வாயிலாக காண்கிறார் பத்மா சோமகாந்தன் அவர்கள்.
*வைத்தீஸ்வரி தலைப்பில் வைத்திய கலாநிதி கலைவாணி உக்கிரப் பெருவழுதிப் பிள்ளை கெட்டிக்கார டாக்டர் மட்டுமல்ல, கைராசிக்காரருமாவார். இந்த யுகத்தில் இப்படியும் ஒரு வைத்திய நிபுணரா’ என்று நோயாளிகளின் பாராட்டையும் பெற்றவர்.
அடுத்து ‘சோஷலிசப் பெண்ணிலைவாதி' தலைப்பில் பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு பெண் உரிமைகள் பற்றிய பிரக்ஞையை ஊட்டிவரும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் பெண்களில் பிரசித்தம் பெற்றவர் என்று மதிப்பீடு செய்கிறார்.
தொகுப்பில் ஒன்பதாவதாக வரும் கட்டுரை ‘நக்கீர வாரிசு தலைப்பில் சட்டத் துறையிலும், நீதித் துறையிலும் சிரேஷ்ட அதிகாரியாக நிர் வாகம் புரியும் செல்வி பாலா சபாரட்ணம் அவர்களைப் பற்றியது.
"இசைக்குயில் தலைப்பில் திருமதி சத்தியபாமா இராஜலிங்கம் அவர்களின் சிறப்பு களை ஆய்ந்துவிட்டு, ஐம்பது வீணைக் கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் அமரவைத்து வீணை வாத்தியம் மூலம் புதுமை யான ஒரு நிகழ்ச்சியை அமைக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கலாசூரி அருந்ததி ரீரங்க
=سمه
●叉

Page 11
நாதன் அவர்களை 'வசந்த கோகிலவாணி தலைப்பில் ஆராயப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக சிறந்த நடனக் கலையரசி
கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆற்றல்களைப் பற்றியும் வானொலிக் குயிலாக நாடறிந்த திருமதி இராஜேஸ்வரி சண்முகம் பற்றிய ஆய்வும். ‘நிர்வாகத் தலைவி திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.
வாசகர் உள்ளங்களில் புதிய சிந்தனை களைப் பதிய வைக்கும் நாடறிந்த இலக்கிய கர்த்தா திருமதி கோகிலா மகேந்திரனுக்கு விளம்பரம் தேவையில்லை. 'பல்துறைப் படைப்பாளி என்ற பொருத்தமான தலைப்பிட்டு ஆராய்ந்துள்ளார் திருமதி பத்மா சோமகாந்தன்.
தொகுப்பின் 120ம் பக்கத்தில் ‘அச்சக வித்தகி தலைப்பில் திருமதி மீனா கணேசலிங்கம் பற்றி விரிவாக ஆராய்ப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையின் தலைப்பு மனையியற்
கலை வல்லுனர் திருமதி மல்லிகா யோசப்பின்
திறமைகளை எடுத்துக் கூறுகின்றன. 'பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது தமிழப்
பெண் என்ற தலைப்பு திருமதி இராஜமனோகரி
புலேந்திரன் சேவைகளைப் பற்றி எடுத்துரைக் கின்றது.
* மக்கள் சேவகி' தலைப்பு திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் பற்றிய ஆய்வுக் கட்டுரை. திருமதி லலிதா நடராஜாவை 'செஞ்சொற் செல்வி' என்றும், சுமார் நாற்பது ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு பிர காசிக்கும் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை சாதனைகள் பற்றி விரிவாக 'அநுபவம் மிக்க இதழாளர் என்ற தலைப்பில் ஆராய்ந்து ஆற்றல் மிக்க படைப்பாளி, ஆளுமை மிக்க இதழாளர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரையின் அரும் பணிகள் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறார், ஆய்வாளர்.
செல்வி விஜயகெளரி பழனி யப்பன் அவர்களை 'சிறந்த வழிகாட்டி என்றும், திருமதி சாந்தி சச்சிதானந்தம் "மேம்பாட்டுச் செயற்பாட்டாளர்' என்றும் கண்ட திருமதி பத்மா சோமகாந்தன் தனது இலக்கியப் பயணத்தைப் பற்றி கூறுவதுடன் தொகுப்பு முடிவு பெறுகிறது.
இதுபோலவே எமது நாட்டில் நூற்றுக் கணக்கான சகோதரிகள் பல்வேறு துறைகளில் அயராது சேவை செய்து முத்திரை பதித் துள்ளனர். நாடளாவிய ரீதியில் அல்லது பிரதேசவாரியாக முழுமை
யான பெயர்பட்டியல் ஒன்றையும்,
விபரத் திரட்டுகளையும் பெற்றுக் கொள்ள முடியுமானால் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களால் இன்னும் பல தொகுதிகள் வெளியாக வாய்ப் புண்டு.
தமிழ் இலக் கரியத் தரில் பெண்ணியம் வீரிட்டு எழுச்சி கொண்டு வரும் இக்கட்டத்தில் எமது நாட்டுப் பெண்கள், கலை இலக்கியம், அரசியல், மருத்துவம், சமூகம்
போன்ற துறைகளில் முத்திரை பதித்து வருவதை இந்நூல் அரிய ஆவண மாக்கியுள்ளது. இதற்காக திருமதி பத்மா சோமகாந்தன் இலக்கிய உலகில் என்றும் மறக்கப்படாத வராகிறார்.
 

ஒதெல்லோ. ஓர் ஒப்பற்ற காவியம்
- அந்தனிஜூவா
உலகம் அறிந்த நாடக மேதையான வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் மிக முக்கியமான நாடகங்களில் ஒன்று ஒதெல்லோ சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1591-ல் தொடங்கி இன்று வரை மேடையேற்றப்பட்டுவரும் நாடகங்களில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மிக முக்கியமானதாகும்.
ஷேக்ஸ்பியரின் படைப்பாற்றல் சிறப்புத்தான் அவரது நாடகங்கள் பல மொழிகளில் மேடையேற்றம் காண்கிறது.
ஷேக்ஸ்பியர் இலண்டனில் ஆரம்ப காலங்களில் நாடக, நடிகராகவும், நாடக நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பவராகவும் பணியாற்றியுள்ளார்.
ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களில் மிக முக்கியமான நாடகங்கள் இன்றும் மேடையேறுகின்றன. அதிலும் அவருடைய துன்பியல் நாடகங்கள் தான் தொடர்ந்து மேடையேறியுள்ளன. அவைகளில் மிக முக்கியமானது ஒதெல்லோ' நாடகமாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பு டவர் மண்டபத்தில் ஒதெல்லோ நாடகம் தமிழ் வடிவமாக மேடையேறியது.
ஒதெல்லோ கறுப்பு நிறமும் அருவருப்பான தோற்றம் கொண்ட ஆண்மை மிகுந்த வீரன். டெஸ்டிமோனே, குழந்தை உள்ளங் கொண்ட பேரழகி. இவர்களிடையே காதல் மலர்கிறது. இருவரும் தம்பதிகளாகின்றனர்.
டெஸ்டிமோனோவை எப்படியாவது அடைந்து விடத் துடிக்கும் றொப்றிகோ, தனது நம்பிக்கைக்கு உரிய நண்பனான இயாகோவிடம் ஆலோசனை கேட்கிறான் வஞ்சக எண்ணமும், நரித்தனமும் கொண்ட இயாகோ டெஸ்டிமோசீனாவை எப்படியும் ரொட்டிக்கோவுக்கு சொந்தமாக்குவதாக வாக்களிக்கின்றான்.
ஒதெல்லோவின் நம்பிக்கைக்குரிய துணைத்தளபதி கெஸியோவுக்கும். டெஸ்டிமோனோவுக்கும் தொடர்பு இருப்பதாக இயாகோ ஒதெல்லோவிடம் கூறி, அதனை நிரூபிப்பதாக வாக்களிக்கின்றான். இதனை உண்மை என நம்பி ஒதெல்லோ டெஸ்டிமோனோவை கொலை செய்துவிடுகிறான்.
இதனையறிந்த இயாகோவின் மனைவி எமிலியா உண்மையைப் பகிரங்கப்படுத்துகிறாள் -

Page 12
இதனால் கோபங்கொண்ட இயாகோ எமிலியாவை தனது கட்டாரியால் குத்தி கொலை செய்கிறான். உண்மையறிந்த ஒதெல்லோ தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றான்.
ஒதெல்லோ' நாடகத்தை நாடகத்துறையில் நடிகர் கலைச்செல்வன் நெறிப்படுத்தி, ஒதெல்லோ நாடகப் பாத்திரத்தை ஏற்றுச் சிறப்பாக நடித்தார். அவருக்கு செய்யப்பட்டிருந்த ஒப்பனை அவரின் பாத்திரத்தை
நீண்ட கால அனுபவம் கொண்ட
மேலும் மெருகூட்டியது.
நாடகத்தில் நடித்த நடிகர்கள் டெஸ்டிமேனே (ராஜரீ) எமிலியோ (ரஞ்சனி ராஜ்மோகன்) ரொட்றிகோ (வீர புஷ்பநாதன்) இயாகோ (யூரீதரன்) கெஸியோ (மோகன் குமார்) மற்றும் தங்கவேலாயுதம் மூத்த
asunamino maramo gramom aan
s
ܠ பிறந்ததின வாழ்த்து مصر
தலைமுறைக் கலைஞர் எம்.எம்.ஏலத்தீப், பிரியங்காவாக நடித்த பிரவீணா, ஏனைய பாத்திரங்களை ஏற்றிருந்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள்.
ஒதெல்லோ நாடகத்தின் மிக முக்கிய பாத்திரம் இயாகோ. அவனே நாடகத்தை வழி நடத்தும் சூத்ரதாரி. இந்தக் கதா பாத்திரத்தை ஏற்று நடித்த பூரீதரன் மிகச் சிறப்பாக நடித்தார் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
நாடகத்துறை நான்கு தஸாப்த கால அனுபவமிக்க நடிகர் கலைச்செல்வன் தனது ஆளுமை முழுவதையும் இந்த நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
༤།
N
N
N
ܓܠ
N
N S.R.பாலச்சந்திரன் N
மல்லிகைக்கு மணம் சேர்ப்பவன் நீ V மல்லிகையால் பணம் சேர்க்காதவனும் நீ V துல்லியமான கொள்கை கைவிடாதவன் நீ V
பல்லாண்டு வாழவேண்டும் உடல்நலம் பேணி
பொன்னை மதிக்காமல் கொள்கை மதித்தவன் V பண்பை உணர்ந்த பாவலன் - தமிழினம் /
தன்னை மதிக்காத சமூகத்தை உதறியவன் V
V உன்னை அறிந்து வாழ்த்தட்டும் என்றும் /
N உழைப்பை உணர்ந்தவன் - வயிற்றுப் M
N பிழைப்புக்கு மனம் மாறாதவன்
N களைப்பென்று அறியாதவன் - தமிழ் محبر
سمصے இளைப்பது கண்டு பொறுக்காதவன் ܓܠ ܓܠ
محصے !வாழ்க வாழ்கவே ܓܠ
۔۔۔۔۔ Tris - - - - -
 
 

குந்தவையின் “யோகம் இருக்கிறது’
சிறுகதைத்தொகுதி
அறிமுகவிழா
வ.காந்திமதிநாதன்
கட்.ைவேலி - நெல்லியடி ப.நோ.கூ.சங்கம் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் நடாத்திய புகழ் மீக்க படைப்பாளி குந்தவை (இரா.சடாட்சர தேவி)யின் யோகம் இருக்கிறது சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா கட்டைவேலி ப.நோ.கூ.சங்க காரியாலய மண்டபத்தில் 15.05.2003 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 1000 மணிக்கு சங்கத் தலைவரும், கலாசார கூட்டுறவு பெருமன்றத் தலைவருமாகிய திரு.த.சிதம்பரப்பிள்ளை ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை திரு. செ.சதாநந்தன் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்ற அமைப்பாளர் நிகழ்த்தினார். வாழ்த்துரை நிகழ்வினை திருமதி. ப.பத்தினிப்பிள்ளை பண்டிதை. சங்க மகளிர் குழுத் தலைவி. திரு. கும்பிளான் சண்முகன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து தலைவர்'
அவர்கள் தலைமையுரையினை நிகழ்த் தினார். “சமுதாய வளர்ச்சிக்காக வெளி வருகின்ற சிறந்த படைப்பாளிகளின் படைப்புகள் பெருமளவுகளில் வாசிக்கப் படுவதில்லை. சிறந்த படைப்புகளைப் படிப்பதுடன் படைப்பாளிகளையும் ஊக்கு வித்தல் வேண்டும் எனவும், குந்தவையின் L). ro Gordi: obégi f) கதைத் தொகுதி சமுதாய வளர்ச்சிக்கான பல சிறப்பம்சங்களுடன் கூடியதாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
செங்கை ஆழியான் அறிமுகவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கட்டை.வேலி. - நெல்லியடி ப.நோ.கூ. சங்க கலாசார கூட்டுறவு பெருமன்றத்தால் நிகழ்த்தப்படும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை வரவேற்றுப் பேசினர்.
தொடக்கவுரை செம்பியன் செல்வன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில் தமிழ் இலக்கியப் போக்குகள் பற்றி எடுத்துக் கூறியதுடன் 1967ல் குந்தவை அவர்கள் பல்கலைக்
கழகத்தில் சிறந்த எழுத்தாளராகக் கணிக்கப்பட்டவர் எனக் கூறினார்.
எழுத்தாளர் குந்தவையினால் வழங்கப்பட்ட சிறப்புப் பிரதிகளை சபையோர் ஏற்றுக் கொண்டனர்.
“அலை ஆசிரியர் திரு. அ.யேசுராசா. எழுத்தாளர் தெணியான். வளர்ந்து வரும் எழுத் தாளர்களான திரு. இராஜேஸ் கண்ணன், திரு. ச.இராகவன் ஆகியோர் நூல் ஆய்வினை பேற் கொண்டார்கள்.
சிறுகதைகளின் வடிவமைப்புகள் அதன் வகைகள், நோக்கங்கள் பற்றியும், இவை ஒவ்வொரு வகையில் சமுதாய வளர்ச்சிக்கு உதவுகின்றன எனவும். தமிழ்நாட்டிலேயே ~மதிக்கப்பட்ட இரு எழுத்தாளர்களில். குந்தவையும் ஒருவராவார் என் நூல் ஆய்வு செய்த திரு. அயேசுராசா குறிப்பிட்டார்.
நூலாசிரியர் உரை நிகழ்த்துகையில் எழுத்தாளர்களின் முயற்சிகளுக்கு கலாசார கூட்டுறவு பெருமன்றம் ஆற்றுகின்ற நற்பணியைப் பாராட்டிப்
பேசினார்.
சங்க. கல்வி உத்தியோகத்தர் திரு. வ.காந்தி மதிநாதனின் நன்றியுரையுடன் அறிமுகவிழா இனிது நிறைவேறியது.
63 ge):

Page 13
ஈழத்து வாய்மொழிப்பாடல் மரபு என்ற நூலின் வரவும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் புதிய அடையாளப்படுத்தலும்
சி.சந்திரசேகரம்
ஆங்கில இலக்கிய மரபில் ‘Semi oral என்றும் சிங்கள மரபில் 'கவிகொள’ என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலக்கிய மரபு தமிழிலும் நீண்டகாலமாக நிலவிவரினும் அதுபற்றி அக்கறை செலுத்தப்படவில்லை. ஈழத்துத் தமிழ்ச் சூழலில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை போன்ற பிரதேசங்களில் இத்தகைய மரபு நீண்ட பாரம்பரிய முடையதாகவும் தொகையில் அதிகமாகவும் பாடப்பட்டு வருகிறது. இப்பாடல்களை வெளிக் கொணர்வதற்கான முன் முயற்சியாக கலாநிதி செ.யோகராசா அவர்களால் தொகுக்கப்பட்டு வடக்கு. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள வெளியீடாக ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு எனும் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.
இப்பாடல் மரபினைச் சுட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு தமிழ்ச் சொற் பயன்பாடு இல்லாத நிலையிலேயே நூலுக்குத் தலைப்பிட்டுள்ள போதும் முற்பகுதியில் உள்ள பதிப்பாசிரியரதும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களதும் இரு ஆய்வுக் கட்டுரைகள் இப்புலமைத்துவ மரபின் பகைப்புலத்தையும் குணாம்சங்களையும் தெளிவுபடுத்துவது வாசகனுக்கான திறவுகோலாகவே அமைகின்றது. w
பிரதேசரீதியாகப் புலவர்களைப் பிரித்து அவ்வொழுங்கில் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்
வொரு புலவர்களதும் பாடல்களைத் தருவதற்கு
முன்பாக அவர்கள் பற்றிய சிறு அறிமுகத் தினையும் தந்துள்ளார். இட்பாடல்கள் ஒவ்வொன்றும் பெறப் பெற்றமை பற்றிய தகவல் கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. பொலநறுவை, திருகோணமலை, மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலவர்களது சில பாடல்களும் இடம் பெற்றுள்ள போதும் மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசப் புலவர்களது பாடல களே
முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய தமிழ்ப் பகுதிகளோடு ஒப்பிடுமிடத்து இப்பகுதியில் இம்மரபு
அதிக செல்வாக்குப் பெற்றுள்ளமை இதற்கொரு காரணமாகலாம். '
இப்பாடல்கள் அடிப்படையில் வாய் மொழிப் பாடல் தளத்தில் நின்றே பாடப் பட்டுள்ளமையினை அவை கட்டப் பட்டுள்ள அமைப்புர விலேயே தெரி கிறது. பாடல் வடிவங்கள் கிராமிய மக்களுக்கு நன்கு பரீட்சயமான அம்மானை, காவியம், கும்மி போன்ற வடிவங்களிலேயே அமைக் கப்" பட்டுள்ளன. இதனால் இட்புலவர்களைத் தொகுப்பாசிரியர் வாய் மொழிப் புலவர்கள் என்றே குறிப்பிடுகின்றார். tuisgerði
2
2
 
 
 
 
 

இத்தொகுதியிலுள்ள பாடல் களின் முதன்மைப்பாடு அவை பாடு பவனின் சொந்த அனுபவ வெளி யீடுகளாக உள்ளமையாகும். இதில் முக்கியமானதுதான் பாட்டதை அதே நிலைக்கு உட்படுபவருடன் பகிர்ந்து கொள்கின்ற உளவியல் தொழிற் பாட்டை இங்கே காணமுடிகின் றமையாகும். சூறாவளி, வெள்ளம். தீவிபத்து போன்ற அனர்த்தங்கள் பற்றிய பாடல்களெல்லாம் அவை நிகழ்ந்த அவலச் சூழலில் இயற்றிப் பாடிக் காட்டிய பாடல்களாகும் பாடிக் காட்டல் என்பது இம்மரபின் பிரதான மானது. இது தாம் உற்ற கொடூர அனுப வங்களின் பகிர்வாக அல்லது உளரணத்துக் கான வடிகாலாக அமைபவை எனலாம். பெரும்பாலான பாடல்களின் உள்ளிடுகள் உளத்தாக்க அடிப்படையில் இங்கு அமைவது குறிப் பிடத்தக்கது. அந்தவகையில் இப் பாடல்களின் முக்கியத்துவம் அவை மக்கள் நிலைப்பட்ட தன்மையைப் பெற்றுள்ளமையாகும்.
தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அனுபவங்கள் கூடுதலாக அவர் களது பாடல்களிலே அமைந்து விடுகின்றன என்பதற்கு மருமகள் மாமிக்கு எழுதிய கடிதம். தென் கதிரை முருகன் பேரில் சிறைமீட்ட கும்மி போன்ற பாடல்கள் உதாரணங்களாகின்றன. மதநிலைப் பாடல்களில் கூட சொந்த சமூக அனுபவங்கள் வந்துவிடுகின்றன.
இத்தகைய அனுபவப் பாடல் களின் பொருள் நிலை முக்கியத்துவம் என்னும் போது ஒவ்வொரு சிறு கிராம வட்டப் பகைபுலத்தினுள்ளும் அதன்
சமூக அரசியல் நிகழ்வுகளை, உணர்வுகளை பதிவு செய்தல், செந்நெறிப் புலவரின் கவித்துவ எல்லை யினுள்ளும், வரலாற்றாய்வாளரின் கவனிப் பினுள்ளும் அகப்படாத அம்சங்களை முன்னிலைப் படுத்தல் என்ற இரு அம்சங்கள் பிரதானப் படுவதைக் காணமுடிகின்றது.
தமது சிறுசிறு கிராமத்தினுள்ளும் தமக்குக் காலத்துக்குக் காலம் நடந்தேறிய அனர்த்தங் களையும் முக்கிய நிகழ்வுகளையும் உணர்வுப் பூர்வமாகக் காட்டும் பாடல்கள் இத்தொகுதியில் முதன்மை பெறுகின்றன. 1978ம். 1979ம் ஆண்டு களில் வீசிய புயல், 1957ம் ஆண்டு பெரும் வெள்ளம் பற்றிய பல பாடல்களும் மற்றும் தீயால் எரிந்த காவியம், முதலைக்காவியம் போன்ற பாடல்களும் நெருக்கடிமிக்கதொரு சூழ்நிலையின் சமூக வரலாற்றினை. வாழ்வியலை சம்பவ விபரிப்புக்களுடாக கதைகூறும் பாங்கில் தரு கின்றன. பிராந்தியத்தில் பொதுவான அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து ஒருவருக்கொருவர் தொடர்பற்ற இப்புலவர்கள் பொது நிலைப்பட்ட உருவ. உள்ளிட்டுக் கட்டமைப்புடன் ஒரே காலத்தில் பாடும் போக்கினைக் குறித்த பாடல்கள் வெளிப் படுத்துகின்றன. ஒரு வகையில் கிராமிய மக்களின் குறித்த காலகட்ட வரலாற்றுப் பிரஞையினால் பாட்டுப் பாடுவதன்றி மனகிலேச வெளிப்படுகைக்
கானதே. இவை செந்நெறிக் கவிஞரதும்
வரலாற்றாய்வாளரதும் கவனிப்புக்கு உட்படாதவை.
அதேவேளை எழுத்து நிலைப்பட்டவற்றை தமக்குள்ளேகுறைந்த எழுத்தறிவின் துணையுடன் அம்மானை. காவியம் போன்ற வடிவங்களில் அமைந்து மக்களிடம் பாடிக்காட்டும் போக்கிற் குட்பட்ட சில பாடல்களையும் இங்கு காணலாம். மட்டக்களப்பு வரலாற்று அம்மானை எனும் பாடல் பிரதேச வரலாற்றை சாதாரண மக்களிடம் எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. இது முன் கூறியதற்கு விதிவிலக்காக வரலாற்றுப் பிரக்ஞைக் குட்பட்டதாகும்.

Page 14
தமது கிராமங்களுக்குள்ளான சமூக நிகழ்வுகளை மட்டுமன்றி சமகால அரசியல் நிகழ்வுகள், செயற்பாடுகள். சார்புகளையும் மற்றும் தேசிய அரசியல் குறித்த தம் உணர்வுகளையும் கூட அவ்வப்போது பதிவு செய்து வந்துள்ளமையினை பாராளுமன்ற தேர்தல் பாட்டு, சுதந்திரப்பா போன்ற பாடல்கள் காட்டுகின்றன. சமூக, அரசியல் நிகழ்வுப் பதிகை எனும் போது அவை தொடர்பாக எதிர்கொண்ட சீர்கேடுகளுக்
வரலாறும் , உனர் வுகளும் இ ப' ப ா ட ல க ள  ேல உள்ளீர்க்கப்பட்டுள்ளமை இவற்றின் சமூக முக்கியத்துவத்தை உணர்த்து கின்றன. இம்முயற்சியைத் தொடர்ந்து மேலும் பல தொகுதிகள் வெளி வருவதுடன் அவற்றை அடிப்படையாகக் கொண்ட இம்மரபின் இலக்கியத் தகுதிப்பாடும் நிறுவப்படவேண்டும்.
கெதிரான வன்மமான அவர்களது குரலும் வெளித்தெரிவது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலம் வரை புறக் கணிப்பிட்டு வந்துள்ள கிராமிய மக்களின் வாழ்வியலும்,
/ འདོད༽ 15 ஆணர்டுகள் வாடாமலிருக்கும் மிகப் பெரிய பூ ஜெர்மனியில்
ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் வளர்க்கப்படும் இந்தோனேஷய நாட்டு தாவரத்தின் மலர் உலகிலேயே மிகப் பெரிய பூவாகத் கருதப்படுகிறது. ஜெர்மனியில் பான் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் தோட்டத்தில் இந்தோனேஷயாவில் உள்ள சுமாத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட "புட்ரீத் என்ற ராட்சத மலர்ச்செடி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த அபூர்வ தாவரத்தின் மலரின் உயரம் 274 மீற்றர். இந்த மலர் 78 கிலோ எடை கொண்டது. இம்மலர் 15 ஆண்டு காலமாக வாடாமல் உள்ளது. ஆனால் இந்த பூ நறுமணத்தை அளிப்பதற்கு பதில் துர்நாற்றத்தை வீசி வருகிறது. அழுகிய பிணத்தின் வாடையை இந்த மலர் பரப்பி வருகிறது. இந்த பூவின் மகரந்தங்கள் துர்நாற்றத்தை பரப்புவதாக பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக இப்பூவை சுமத்ராதீவு மக்கள் நாற்றமடிக்கும் பூ என அழைக்கின்றனர். இதனுடைய தாவரவியல் பெயர் டைட்டான்' அரும் பூச்சிகளை வசீகரிக்கவே இந்த பூ துர்நாற்றத்தை பரப்புவதாகவும். பூச்சிகளின் மூலம்தான் மகரந்த சேர்க்கை நடைபெறுவதாகவும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பூவின் செடி 40 ஆண்டு காலம் வாழக்கூடியது. இதுவரை இத்தாவரம் இது போன்று இரண்டு பூக்களை மட்டும் ராட்சத அளவில் பூத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் பூத்த பூ தற்போதைய பூவைவிட ஏழு சென்ரி மீற்றர் உயரம் குறைவு
சுமாத்ரா தீவில் இந்த புத்ரித் தாவரம் முதன் முறையாக ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
\S
 

நன்றிக்கடனர்
குறிஞ்சி இளந்தெணிறல்
சின்னப் பெட்டிக்கடை நடத்தி வாழ்ந்து கொணர்டிருக்கிறேனர்
பழம் புதுசா? எவ்வளவு என விற்க வைத்திருக்கும் வாழைப்பழத்தை நசுக்குவோரிடம்
ஒருவாய் வெற்றிலை தா! என காசு தராமல் வாங்கி வாய் சிவக்க போட்டு - என் கடைக்கு முன்னே துப்பிவிட்டு போவரிடம்
இப்படி பலர்
இவர்களிடம் கோபத்தை காட்டுவதில்லை வெறும் சிரிப்புத்தானி
* அப்பா பீடி வாங்கி வர சொன்னிச்சு பக்கத்து லயத்து குரல்
9
'' thffö.
பிறவு தருமாம்
இப்படி பல தடவைகள்
கடன் இல்லை என்றால் கடை நடத்த முடியாது
நாங்க என்ன ஒடியா போயிடுவோம்.! சண்டை சத்தம்!
இந்தத் தோட்டத்தில் எல்லாம் கடன்தான்
tipgi gebs

Page 15
குடியிலிருந்து கோழி முட்டை வரை
எல்லா பாக்கியும் சம்பளம் போட்டாதாணி கிடைக்கும்.
சம்பள நாளென்றால் கடை முழுக்க நிறைந்திருக்கும் சனங்களும், சாமானிகளும்
இந்த மாசம் தருகிறேன் சொல்லிச் சொல்லி
மாசம் மூணாச்சு கடன் வாங்கிய சனங்களை நினைத்து அழுது புலம்பும்
560 L D60TEF,
சாமான் வாங்கியிருக்க கடனை எப்படி கட்டுவது?
மறுபடியும் மறுபடியும் கடனர் கொடுப்பார்களா.
தோட்டத்தில் ஒழுங்கா வேலையில்லை சொன்னால் நம்புவார்களா? எதைச் சொல்வது காரணமின்றி முணுமுணுத்தது மனசு,
கடனோடு கடனாக கடனர்காரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேனர்
எது எப்படியோ வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போனால் கடைக்கார தம்பி வருதுணர்னு
எனி
கையில் அரைமுடி தேங்காயும், பழம், வெற்றிலை, விபூதியும்
இன்னும் தருகிறார்
கோயில் பூசாரி
 

கிழடு தட்டாத அறுபது
எம்.கே.முருகானந்தனி
Glarufuna LoDossign Loapň
படைப்புலகில் நாற்பது வருடங் களாக ஒருவர் தொடர்ந்து எழுதி வருவது ஒரு சாதனையா இல்லையா என்பது பற்றி உறுதியாகச் சொல் வதற்கு என்னிடம் தரவுகள் ஏதும் இல்லாதபோதும், அந்த நாற்பது வருடங்களும் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளனாக இருப்பது சாதனைதான் என் பதில் மறு கருத்து இருக்க (D19 UT 35.
அத்துடன் சோதனைகள் வந்த போதும் தான் வரித்துக் கொண்ட கொள்கைகளுக்கு துரோகம் செய்யாது பற்றுதியோடு இயங்குவது ஆயுதக் காலாசாரம் வெறிபிடித்தாடும் இன்றைய ஈழத்து அரசியல் மற்றும் இலக்கியச் சூழலில் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய ஒரு செயல்தான்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட காலம் தொடர்ந்து எழுதிவரும் போது படைப்பாற்றல் நீர்த்துப் போகாமல் இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய கைங்காரியமாகும். ஒரு காலத்தில் எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் கனவுத் தேவனாக இருந்த ஜெயகாந்தன் கூட ஜெயஜெய சங்கர எழுதும் காலத்தில் மருந்தில்லாத துப்பாக்கிக் குண்டாக சிதைந்து விட சு.ரா. போன்ற ஒரு சிலரின் படைப்பாற்றலே கால ஓட்டத்தால் நீர்த்துப் போகாமல் எம் மனதோடு பேசுகின்றன.
— I g; GS) 8;
N92

Page 16
இவை போன்ற அத்தனை ஆளுமை களும் உள்ளவராக. இன்னும் அதற்கு மேலான சிறப்புகளும் கொணர் ட ஒருவராக நாம் நினைத் துப் பார்க்கக் கூடிய ஈழத்து எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது நிச்சயமாக தெணியானாக மட்டுமே இருக்க (Մ)ւգեւյմ),
அவர் சமகால தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை மீள்மதிப்பீடு செய்வது
போல வந்திருக்கிறது "தெண்யான் - மணிவிழா
என்ற மலர்.
மணிவிழா மலர் என்றால் என்ன? மனத் தோடு ஒட்டாத வாழ்த்துக்கள், மிகையான பாராட்டுக்கள். மற்றும் தகுதிக்கு மீறிய புகழ்ச்சிகள் அடங்கிய கதம்பமலர் என்ற எமது வழமையான மனப்பதிவுகளை உடைத் துக் கொணர்டு வந் திருப்பதுதான் இந்த தெணியான் - மணிவிழா மலர்.
அவரது சமகாலப் படைப்பாளிகளும்
கல்வித்துறை சார்ந்த படைப்பாளிகளும்.
கல்விமான்களும், தரமான இலக்கிய ஆர்வலர் களும் அவரது ஆளுமையையும், சாதனை களையும் ஏன் சில போதாமைகளையும் கூட எவ்வாறு காண்கிறார்கள் என்பதைத் தொகுத் துத்தரும் ஒரு ஆவணமாக மலர்ந்திருக்கிறது இந்த நூல்.
தெணியான் எப்படி எழுத்தாளன் ஆனார்? டொமினிக் ஜீவா பதிலளிக்கிறார்.
"அவருடைய எழுத்து மொழியைப் போலவே அவரும் பாசாங்கற்றவர், எளிமை யானவர் என்ற தலைப்பிட்ட தனது கட்டுரை யிலேயே அப்பதில் வருகிறது.
'அன்று வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்த பண்டிதர் ஐயா அவர்கள் மாணவர்களைப் பார்த்து ஓர் ஆச்சரியம் கலந்த செய்தி
ஒனி றைக் கூறி மகழ் நீ தார். “உங்களுக்கு புதினம் ஒன்று சொல்லப் போகிறேன். இந்த வருஷம் நா வி தனி ஒருவனுக் கல் லோ சாஹித்திய மண்டலப் பரிசு கிடைச் சிருக்காம்,' "
கேட்டுக் கொணர் டிருந்த நடேசன் அந்த நிமிடமே தெணியா னாக மலர்ந்து விட்டார்.
இவ்வாறு தெணியான் படைப் புலகத்திற்கு வந்த வரலாற்றை ஜீவா சுவைபட கூறுகிறார்.
பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை பெறுமதியானது. அக் கட்டுரையில் தெணியான் பற்றி மாத்திர மன்றி அவர் சார்நீத மார்க்சியம், முற்போக்கு இலக்கியம் ஆகியவை பற்றிய இன்றைய நிலை பற்றியும் குறிப்பிடுவது முக்கிய மானது. அவை தேங்கிய குட்டைள் அல்ல என்பதையும். அவை கால மாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி யடைவன என்பதைத் தெளிவு படுத்துவதுடன், அம்மாற்றத்தை தெணியான் புரிந்து செயற்படு வதையும் சுட்டிக் காட்டுகிறார்.
அவரது படைப்புகளின் உள்ள டக்கத்தைப் பற்றிப் பேசும்போது தெணியானுடைய ஆக்கங்கள் பெரும் பாலும் சாதியமைப் பின் கொடுமைகளுக்கான கருத்துநிலை, ஆள்நிலைப் பின் புலங்களை விபரிப் பதாகும் எனக் கூறும் பேராசிரியர் கா.சிவத்தம் பி, 'இவரது எடுத் துரைப் புமுறை வெறுங் கதை சொல்லியின் உலகமல்ல. கதை
 
 
 

சொல்லிக்கும் பாத்திரங்களுக்கு மிடையிலுள்ள உறவு முக்கிய மானது. தெணியான் என்ன படைப்பாளி இந்த அம்சங்களை மேலும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். எனவும் கருத்துக்கூறுகிறார்.
மேலும் தனக்கும் அவருக்கும் தனது கட்டுரையில் தெணியானின் சிறுகதைகள் சமூகத்தின் அடி வேரைச் சுட்டி நிற்கும் சமூக விமர் சனங்கள். அவரது படைப்புகளுடாக இந்தச் சமூகத்தின் பல்வேறு கோணத்து வெட்டு முகத் தோற்றங் களைக் கண்டு கொள்ளலாம் எனத் தெணியானின் சமூகப் பார்வையை சிலாகித்துக் கூறுகிறார்.
என்னைப் போல எழுதக் கூடிய பொடியன் என தெணியானில் நம்பிக்கை வைத்திருந்த மறைந்த நாவலாசிரியரான டானியல் தெணி யானின் சமூகப் பார்வையை இன்னு மொரு விதமாகக் காணர்கிறார். தெணியான் அவர்கள் ஒரு நடு நிலமை இலக்கியக்காரன் அல்ல என்பதனை இக் கதைகளைப் படிக்கும்போதே நீங்கள் உணர் வீர்கள். வர்க்கம் சார்ந்த ஒருவனாக இக் கதைகளில் உலாவி வரும் பாத்திரங்களோடு, நசுக்கப்படும் வர்க்கப் பாத்திரங்களின் பங்காள னாக அவர் நிற்பதைக் காண்பீர்கள்.
எம்.கே.முருகானந்தன் தனது கட்டுரையில் 'சாதிப்பிரச்சினையை LDLo (8 LĎ எழுதுபவர் எனிற எல்லையைத் தாண்டி, சமூகத்தால்
வஞ்சிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனது பேனாவினுTடாகக் குரல் எழுப்ப இடம் கொடுத்தார். இதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேசிய அதே தெணியான், சாதி யமைப்பின் உச்சத்தில் இருந்த போதும் பொருளாதார ரீதியாக உறிஞ்சப்பட்ட பிரா மணர்கள் பற்றி ‘பொற்சிறையில் வாழும் புனிதர்கள் என நாவலாக உரைக்க முடிந்தது என கூறுகிறார்.
அதே நேரம் பிரபல விமர்சகரும் விரி வுரையாளருமான செ.யோகராசா தமிழ் நாவல் களின் வரிசையில் முக்கிய இடம் பெறக்கூடிய "மரக்கொக்கு. இதற்கு மலையாள நாவல்கள் (எ - டு அண்டைவீட்டார்) வாசித்தது போன்று உணர்வினைத் தருவதையும் மறுப்பதற் கில்லை’ என தெணியானின் மற்றொரு நாவலை நயந்து கூறுகிறார்.
தெணியான் வெறும் பெயருக்காகவும் புகழுக்காகவும் எழுதுபவர் அல்ல என்பது தெளிவு. தான் எடுத்த விடயத்தை நுணுக்க மாகவும் கூர்மையாகவும் சொல்வது அவரது இயல்பு. "வெள்ளாடு கடிப்பது போல அணுகி பலவற்றை எழுதிக் குவித்து ஆவணப்படுத்தும் சில எழுத்தாளர்கள் போல அல்ல' என புலோலியூர் க.சதாசிவம் குறிப்பிடுவதும் இதைத்தான்.
அறுபது வயது கடந்த போதிலும் தனது வெளித்தோற்றத்தில் மாத்திரமல்ல தனது உள்ளுணர்விலும், படைப்புகளுடாகக் கிளறி விடும் உணர்வலைகளிலும், தெணியான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார். இதை ஆங்கில ஆசிரியரும் விமர்சகருமான ஆ.கந்தையா. நுணுக்கமாகத் தனது கட்டுரை யில் சுட்டிக் காட்டுகிறார். இப்பொழுதுதான் தெணியானின் எழுத்தில் இளமை திரும்புகிறது. இப்பொழுதுதான் அவரது எழுத்துகளில்
raisasa,

Page 17
மற்றுமொரு புதிய பரிமாணம் உதயமாகிறது.
இவற்றை அவரது அண்மைக்காலச் சிறுகதை
களில் கவனிக்க முடியும். உதாரணமாக அவரது "பெத்தாச்சி', 'மீட்சி”, “மனசோடு பேசு. “ஆதங்கம்’ போன்றவை களைக் கூறலாம் என்பது அவரது பார்வை.
வயது 60தைத் தாண்டிவிட்ட போதும் அவரது தோற்றத்திலோ உடையலங் காரத்திலோ அக்கறையினத்தை ஒருபோதும் காணமுடியாது. வெளிர்க்காத முடி, மடிப்பு கலையாத சேட். எண்ணெய் வடியாத முகம் என எப்பொழுதும் இளமைத் தோற்றத்துடன் பளிச்சென இருப்பார்.
‘தெணியானின் தோற்றமும், அவரின்
மணரிஸங்களும் உடைகளும் என்னை அவரை எப்போதும் ஆர்வத்துடன் பார்க்க வைத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி' என அவரது மாணவனும் இப்போது இலணர்டனில் வதிபவருமான தம்பையா தயாபரன் கூறுவது முற்றிலும் உண்மையே.
ஆனால் அதே நேர்த்தியை இந்த மணிவிழா மலரின் அட்டைப்படத்திலும் நூலின்
பக்க வடிவமைப்பிலும் காணமுடியவில்லை.
கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்த அதே கவனிப்பை மலர்த் தயாரிப்பிலும் காட்டி
யிருக்கலாம். இதற்கு நாம் தெணியானில்
குற்றம் காண முடியாது. பதிப்பித்தவர்களும் அச்சகத்தினரும் கூடிய கவனம் எடுத்திருக் கலாம் என எண்ணாமல் இருக்க முடிய வில்லை.
இருந்த போதும் நூலை வெளியிட்டதுடன் மணிவிழாவை ஒழுங்கு செய்த மணிவிழாக் குழுவினரின் தன்னலங்கருதாத சேவையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியன. அவர்களின் பங்களிப்பு இன்றி இப்பாரிய பணி இனிதே
நிறைவு பெற்றிருக்காது என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. மல்லிகையும் தனது பங்களிப்பாக தெணியானுக்கு மணிவிழாவை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடியதும் நினை
விருக்கலாம்.
பிறப்புக் காலம் முதலான உருவாக்கத்தையும், இன்றைய 8 TopLib 6j60) Ju i T6OT U6OLL) q6)85 வாழ்க்கையையும், அவரது ஏனைய சாதனைகளையும் இன்னும் பலர் தத்தமது பார்வையாக பல்வேறு கோணங்களில் எடுத்துக் காட்டும் கோவையாக இந்நூல் எமது கை களில் தவழ்கிறது.
தெணியான் என்ற படைப் பாளியை பார்ப்பதுTடாக ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்ட தி  ைதயும் காணும் வாய்ப்பை இந்த நூல் தருகிற தென்று சொல்வது மிகையாகாது.
"தெணியானின் சமூகப் பார்வை
யின் விசாலமும், எழுத்தின் முதிர்ச்சி
யும் கணிணியமும் தொடர்ந்து கொண்டே வருகிறது என டொக்டர் (போராசிரியர்) நந்தி பாராட்டுவதற்கு இணங்க அவரது வளர்ச் சி தொடர்ந்து அவர் தமிழ் இலக்கி யத்திற்கு மேலும் வளம் சேர்க்க நாமும் வாழ்த்தலாம்.
 

ஜூன் 27
- 6) /Iúkaflé agfai/r
உண்மையிலேயே நான் பிரமித்துப் போய் விட்டேன். எனது 7-வது பிறந்த தினத்தன்று அதிகாலையிலேயே மல்லிகைக் காரியாலயத்திற்கு வந்து விட்டேன்.
ஏனோ தெரியவில்லை, அன்றைய தினம் வழக்கத்தைவிட, அதிக உற்சாகமும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. காலையில் பேப்பரை விரித்தால் வீரகேசரியில் இரண்டு இடங்களில் எனது பிறந்த தின வாழ்த்து விபரங்கள் இடம் பெற்றிருந்தன.
மெத்த மகிழ்ச்சியாக இருந்தது.
வீரகேசரிக் குறிப்பு ஒன்றை அன்னலஷமி லஷ்மி என்ற பெயரில் எழுதியிருந்தார். மற்றைய குறிப்பை நண்பர் விஜயன் எழுதி, எழுத்திலேயே வாழ்த்தியிருந்தார்.
அன்றைய தினம் எந்த வேலையாக இருந்தாலும் வெளியே போகக் கூடாது என்ற மன எச்சரிக்கையுடன் தொலைபேசிக்கருகிலேயே இருந்து கொண்டிருந்தேன்.
காலையில் முதன்முதலாக எனது மகன் திலீபனின் மனைவி வாழ்த்தி விட்டு, மதியபோஜனத்தை நேரகாலத் தோடேயே திலீபனிடம் கொடுத்து அனுப்புவதாகவும் சொன்னார். ஒவ் வொரு பிறந்த தினத்தன்றும் தன் கைப்படச் சமைத்த உணவையே சாப்பிட வேண்டுமென்பது அவரது அன்புக் கட்டளை.
இப்படியே இருந்து பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த சமயம் நீண்ட கால நண்பராக இருந்த குலேந்திரன் வெள்ளவத்தையில் இருந்து கோயில் பிரசாதத்துடன் வந்து என்னை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
தொலைபேசியை விட்டு அன்று
அங்கு இங்கென நகரக்கூடாது என்ற நிலையில் ஒரே இருப்பில் இருந்து கொண்டிருந்த எனக்கு வாழ்த்துகளுக்கு மேல் வாழ்த்துகள் வந்து சேரத் தொடங்கின.
தேசம் பூராவும் இருந்து மாத்திரமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தெல்லாம் தொலைபேசி வாழ்த்துக்கள் வரத் தொடங்கின.
மனசுக் குளிர் எணணிப் பார்த் து வைத்திருக்கிறேன். எல்லாமாக 63 தொலைபேசி வாழ்த்துக்கள் என்னை நோக்கிச் சொல்லப்பட்டு
விட்டன.
இடையிடையே பல நண்பர்கள் நேரில் வந்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். இவர்களில் கம்பன் கழக ஜெயராஜ், ரீதரசிங், பாலேந்திரா நீண்ட நேரம்

Page 18
என்னுடன் உரையாடி மகிழ்ந்தனர்.
இலக்கிய உலகைச் சேர்ந்த மேமன்கவி, ஆப்டீன், தேவகாந்தன், கேதாரநாதன் ஆகியோர் வந்திருந்தனர். இந்தக் கட்டத்தில் எனது மகன் திலீபன் நேரில் வந்து வாழ்த்தினார். அத்துடன் தனது ஸ்டுடியோ கமராவைக் கைவசம் வைத் திருந்தார். அதன் மூலம் நம்மையெல்லாம் ஒன்றாக நிறுத்தி ஞாபகார்த்தப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்தப் புகைப்படமே அடுத்த நாளுக்கு அடுத்த நாள் வெளிவந்த தினக்குரல் வாரமலரில் இடம் பெற்றது. இதற்கு ஏற்பாடு செய்தவர் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் நிலாம் அவர்கள்.
ஆட்கள் வருவதும் தொலைபேசி வாழ்த் துக்கள் இடையிடையே தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுமான சம்பவங்கள் தொடர்ந்த படியே இருந்தன. இடையே வந்த தபால் கட்டுகளைப் பிரித்துப் பார்த்தபோது ஏராள மான வாழ்த்து மடல்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து மெய்யாகவே புளகாங்கிதம் அடைந்து போனேன். Ҹ)
அன்று முழுவதும் மல்லிகை ஒரு திருமண வீடு போலவே காட்சி தந்தது.
ஒரே மனமகிழ்ச்சியாக இருந்த போதிலும் கூட, ரொம்பவும் களைப்படைந்து போய் விட்டேன். நேரம் நெருங்க நெருங்க மனசு சங்க டப்பட்டது. அன்று சீக்கிரமாகவே நேரம் போய் விட்டதாகத் தெரிந்தது. வழக்கமாக பிற்பகல் 530க்கு மேல் காரியாலயத்தை விட்டு வெளியேறி விடுவேன்.
நான் தினசரி தங்கும் மகனது மோதரை ஸ்டுடியோவுக்குப் புறப்பட்டு போய் விடுவது வழக்கம். அங்கு தொலை பேசியும் உண்டு. ஆனால், யாருக்குமே பகிரங்கமாகத் தெரியப்படுத்துவதில்லை. இதில் நான் கண்டிப்பு.
காரணம் காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் ஐந்தரை மணிவரை - ஞாயிறு உட்பட - என்னை இலக்கிய நண்பர் களுக்காகவே ஒப்புக் கொடுத்து ஒழுகி வருபவன், நான்.
ஒய்வு கொண்டு தூங்கப் போன தன் பின்னர் யாருமே என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற கடுமையான கொள்கையைக் கடந்த காலங்களில் வெகு ஒழுங்காகக் கடைப்பிடித்து வருகின்றேன். ஒய்வு என
விட்டுக்குப் போனதன் பின்னர் யாருமே
இடையில் குறுக்கீடு செய்து என்னைத் தொந்தரவுபடுத்தக் கூடாது என்பதற் காகவே தங்குமிடத் தொலைபேசி இலக்கங்களை நான் எவருக்குமே தெரியப்படுத்துவதில்லை.
வழமையான நேரத்தை விடச் சற்றுக் கூடுதலான நேரம் அன்றைய தினம் தாமதிக்க வேண்டி ஏற்பட்டது. திடீரெனக் கீழ்த்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நான் இருப்பது, இயங்கு வது மாடியில். பரபரப்புடன் கீழே இறங்கி வந்து பார்த்தால் கெளரவ அஸ்வர் ஹாஜியார் வந்து கொண்டி ருக்கிறார்.
அவருடைய அலாதியான குணமே இப்படிப்பட்டதுதான். தனது நெஞ்சுக்கு நெருக்கமான கலைஞர் களை நேரில் சென்று கனம் பண்ணிக் கெளரவிப்பார். சென்ற ஆண்டு பிறந்த தினத்தன்றும் நேரில் மல்லிகைக்கு வந்து என்னை வாழ்த்தினார். இந்த ஆண்டும் நேரில் வாழ்த்த மல்லி கையைத் தேடி வந்திருக்கிறார்.
அவர் விரும்பினால் மற்றவர் களைப் போல, தொலைபேசியில்
 

வாழ்த் தியிருக்கலாம். அவரது குணமும் இயல்புகளுமே விசித்திர மானவை. ஒர் அரசியல்வாதியையோ, ஒர் அமைச்சரையோ நான் அவரிடம் காண்பதில்லை. ஒரு மகத்தான மனிதனை, இன்னும் கூர்மையாகச் சொல்லப் போனால் ஒரு தனிப்பெரும் கலைஞனையே அவர் உருவில் தரிசிக் கின்றேன்.
நான் இயங்குவது ஒரு தோட்டத் தின் முன் பகுதி. அங்கு வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இது ஓர் அதிசயம்! இத்தனை பென்னாம் பெரிய மனுஷர்களெல்லாம் நாள் முழுவதும் வந்து வந்து இந்த மனுஷ ணுடன் கொண்டாடி விட்டுச் செல்லு கின்றனரே என்றுதான் ஆச்சரியம்!
நான் மாத முதல் வாரத்தில் வெளிவந்திருந்த மல்லிகையின் ஆரம்பப் பக்கத்திலேயே ஜுன் மாதம் 27ந் திகதியை முன்கூட்டியே ஞாபகப் படுத்தி எழுதியிருந்தேன். இந்த எழுத்து அழைப்பு கூட, இந்தத் தினப் பர பரப்புக்குக் காரணமாக இருந்திருக் கலாம்.
எனக்கு அநுபவரீதியாக ஒரு உண்மை தெரிய வந்திருந்தது. இதற்கு அமைவாக எனது மணிவிழாக் கூட, அமைந்து போயிருந்தது.
அந்தக் கால கட்டத்தில் என்னை இதயபூர்வமாக வாழ்தியவர்களின் மந்திரச் சொற்கள் உண்மையாகவே என் நல வாழ்வுக்கு உந்து சக்தி யாகத் திகழ்ந்து வந்துள்ளதை நான் மெய்யாகவே இன்று நம்புகின்றேன்.
அந்த மணிவிழாக் கால நல்
இதயங்களின் வாழ்த்துக்கள் உயிர்த் துடிப்புடன் என்னைச் சூழ்ந்து, என் ஆரோக்கியத்தை நெறிப்படுத்தி வந்துள்ளதைக் கட்டம் கட்டமாக உணர்ந்து செயல்பட்டு வந்துள்ளேன்.
வாலிபம் மாத்திரமல்ல, வயோதிபமும் உயிர்ப்புள்ள சாதனைகள் செய்வதற்கேற்ற பருவ முதிர்ச்சிதான் என எனது ஒவ்வொரு நாட் செயலிலும் புரிந்து கொண்டேன்.
வயோதிபம் செயல் திறமைக்கு எப் பொழுதுமே இடைஞ்சலாக இருந்துவிட முடியாது என்பதை எனது செயல்களே இன்றுவரை நிரூபித்துக் கொண்டு வருகின்றன.
மனத்தத்துவ ரீதியாகவும் விஞ்ஞான பூர்வ மாகவும் இந்த மந்திர வாழ்த்து ஒலிகளுக்குள்ளே மறைந்திருக்கும் ஆரோக்கியமான அம்சங் களைப் புரிந்து கொண்டுள்ள காரணத்தால்தான் என்னை நேசிக்கும் நெஞ்சங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்களை யாசித்து நிற்கும் தோரணையில் அந்தக் குறிப்பில் வேண்டி நின்றேன்.
தூர இருந்தும், சமீபத்தில் இருந்தும் நேரடியாக வந்து என்னை வாயார வாழ்த்தி மகிழ்ந்த அனைவருக்கும் எனது அடுத்த அடுத்த கட்டச் செயல்கள் மூலம் அந்த பிரதி பலனை நல்கி மகிழ்வேன் என உறுதி கூறுகின்றேன்.
உங்களது நல்லெண்ண வாழ்த்துக்கள் தொடரட்டும்.
‘இந்த வயதிலும் இத்தனை துடிதுடிப்புடன், சுறுசுறுப்பாக இயங்கி வருகிறீர்களே? எனப் பலர் என்னிடம் நேரில் கேட்பது வழக்கம்.
அதனது சூட்சும சக்தியே இதுதான்.

Page 19
ஒரு கடிதம்
சி.மகேந்திரராஜா மானிப்பாய
மல்லிகையைத் தொடர்ந்து வாசித்து வரும் தொடர் வாசகர்களில் நானுமொருவன்.
மல்லிகையில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆக்கங்கள் சம்பந்தமாக எனக்குள்ளும் எனது நெருங்கிய, இலக்கியத்தைப் பற்றி நன்கு அறிமுகமான நண்பர்கள் மத்தியிலும் விவாதித்து வந்திருக்கிறேன்
தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றோடு என்பது உண்மைதான். இதை நாம் மனந்திறந்து பாராட்டலாம்தான். ஆனால், கொழும்பிலிருந்து கொண்டு, ஓர் அறைக்குள் முடங்கிப் போயிருந்து கொண்டு மல்லிகையை வெளியிடுவதால் மாத்திரம் மல்லிகையின் நோக்கங்களை வெற்றியின் பக்கம் கொண்டு சென்று விடமுடியுமா? என வெளிப்படையாகவே எனது யோசனையை உங்கள் முன் எழுத்தில் வைக்கிறேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளிவந்த காலத்தில் உங்களைத் தேடிப் பல வகைப்பட்டவர்கள் வந்து போவதை நான் அவதானித்து வைத்திருக்கிறேன்.
அத்துடன் யாழ் பல்கலைக் கழகம் உட்பட பல பொது இடங்களுக்கும் நீங்கள் அடிக்கடி வந்து போவீர்கள். பலருடன் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவீர்கள். நாமும் வழி தெருக்களில் உங்களைக் கண்டு விட்டால் உங்களைத் தெருவில் நிறுத்தி வைத்தே கதைப்போம்.
எங்களுக்குள் அதாவது வாசகனுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும் அத்தனை நெருக்கமிருந்ததை இந்த இடத்தில் சொல்ல வருகிறேன்.
ஆரம்ப காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்த இலக்கிய இலக்கிய இதழல்ல. இன்றைய மல்லிகை என்பதும் எனக்குத் தெரியாதல்ல.
புலம் பெயர்ந்து போனதன் பின்னர் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளுக்கு நீங்கள் முகம் கொடுத்து வருகிறீர்கள் என்பதை நான் அறிந்துதான் வைத்திருக்கிறேன்.
இருந்தும் மனதில் ஏதோ இழப்பின் குமைச்சல். மல்லிகையில் தரமான இலக்கிய சர்ச்சைகளை ஆரம்பியுங்கள். தேசம் அடர்ந்த இலக்கிய விவாதத்தைத் தொடருங்கள். கருத்து முரண்பாடு கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் ஆக்கங்களைப் பெற்று மல்லிகையில் வெளியிடுங்கள். தமிழக எழுத்தாளர்களில் நமது எழுத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். அவர்களது கருத்துக்களை, அபிப்பிராயங்களை எங்களுக்குச் சொல்லி மகிழுங்கள்.
கருத்துப் பகிர்வுகள் மூலம்தான் நாம் தரமான இலக்கியங்களைப் படைக்க முடியும்!
is gets):
3 4 s

மல்லிகைப் பந்தல் சமீபத்தில் மலை வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநாபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) விலை: 2so/F 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் of pso: I4 of 3. அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் விலை: 180/=
4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் Soso: 175/F
5. மண்ணின் மலர்கள் >
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 15 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) விலை: 110/= 6. நானும் எனத நாவல்களும் ~ செங்கை ஆழியான் 606): 8o/F
கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்துல்லாஹற் 6ής)6υ: I oo/-
முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா 6ứson6uo: II o/= 9. முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன் 650so: Iso/F 10, ഥങ്ങിങ്ങ് பிடிக்குள் (ஹைக்கூட) ~ பாலரஞ்சனி விலை: bo/= 11. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' 6גjko(65ך 1 :ט/= 12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) விலை: 175/= 13. சேலை ~ முல்லையூரான் விலை: 1SO/- 14 மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் asps): 275/F
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு)
16. நிலக்கிளி > பாலமனோகரன் விலை: 140/= 17. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா விலை:150/= 18. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) வெளிவந்து விட்டது விலை: 350/=
தொகுப்பு ~ செங்கை ஆழியான் 19. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: 150/= 20. தரை மீன்கள் ~ ச.முருகானந்தன் விலை: 150/=
21. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் ~ செங்கை ஆழியான் விலை: 150/-
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு

Page 20
கடிதங்கள்
மே, இதழில் வெளியாகியிருந்த யுகதர்மனின் கடிதத்தை இன்று வாசித்தபோது நேற்று என் மகள் கூறிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
உயர்தரக் கல்விக்காக என்மகளை சென்றவாரந்தான் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு பெரிய பாடசாலையில் சேர்த்தேன்.
தமிழ்மொழி மூலம் உயர்கல்வி கற்கும் அவளின் வகுப்பிலுள்ள எந்தப் பிள்ளையுமே தமிழில்
கதைப்பதில்லையாம் என் மகளுக்கு ஆங்கிலம் தெரியும், ஆனாலும் தேவையில்லாத இடங்களில் ஆங்கிலம்
பேசக்கூடாது என்றும் தமிழை. Tamil ஆகப் பேசக்கூடாது என்றும் நான் சொல்லி வைத்திருப்பதால், தன் சகதமிழ் மொழிமூல மாணவிகளுடன் அவள்படும் சங்கடங்களைக் கூறிச் சிரித்தாள்.
“Yற்கு X 500 ரூபாய் கொடுத்தாள்’ என்று கணக்கியல் ஆசிரியை விளங்கப்படுத்த முற்பட்டபோது ஒரு பிள்ளை குறுக்கிட்டு இப்படிக் கேட்டதாம்.
"Teacher! How much X has given to Y?"
பிற்குறிப்பு:
இது யாருடைய தவறும் அல்ல.
ஒரு காலத்தில் தம் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுகிறார்களில்லையே என்று கவலைப்பட்டு வாப்பாவை
Dadaவும் உம்மாவை Mamaவும் ஆக்கிப் பழக்கியவர்களே இப்போது நம் பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்களில்லையே என்று கவலைப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை
ரவூப் ஹஸிர்
மல்லிகை சஞ்சிகையை தொடர்ந்து வாசித்து வருகின்றவர்களின் நானும் ஒருவன். பல குழுவாக இயங்கிய சஞ்சிகையின் வாழ்க்கை காலம் குறிப்பிட்ட அளவுடன் நின்று விடுகின்றன. ஆனால், தனிமனிதனால் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றால் பாராட்டப்பட வேண்டிய விடயம்.
அண்மையில் மல்லிகை பந்தலின் வெளியிடான 'மல்லிகை’ சிறுகதை தொகுப்பு வாசிக்க கிடைத்தது. 41 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்று இருந்தன.
இந்த 41 எழுத்தாளர்களில் எத்தனை பேர் இலக்கிய உலகினை விட்டு மறைந்து விட்டனர். இலக்கியத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர். இன்னும் சிலர் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு சவாலாக செங்கைஆழியான், மல்லிகை நிறுவனத்தின் அதிபர் ஆகியோரின் இம்முயற்சி சிறந்தது.
290வது சஞ்சிகை வாசித்தேன். கவிஞர் சு.முரளிதரனை அறிமுகம் செய்து முன் அட்டையாக வெளிவந்துள்ளது. குறிப்பிட்டு கூறும்படியாக சமுருகானந்தன் எழுதிய மண்ணின் மைந்தர்கள், உடுவை தில்லை நடராஜா தொடராக எழுதி வரும் படிக்காதவர் படிப்பித்த பாடங்கள். சிசுதந்திரராஜாவின் கவிதையின் ஒளிநகல் என்பன சிறப்பாக அமைந்துள்ளன.
க.தே. புரட்சிதாசன
 

சென்ற இதழில் தங்கள் படைப்புக்களில் சிறந்த படைப்பு தங்கள் மகன் திலீபன் என்று ஒரு வாசகர் கேள்விக்குப் பதில் கூறியது எமது வாய் நிறையத் தேன் அள்ளி ஊற்றியது போல சுவையாய் இருந்தது. பெரும்பாலான மக்கள் தந்தையின் பாசத்தைப் புரிந்து கொள்வதில்லை. புராணத்திலும் இலக்கியத்திலும் கூட முறையாக தந்தை பாசம் வர்ணிக்கப்படவில்லை. (இராமாயணம் மட்டும் விதிவிலக்கு - மகனைப் பிரிந்து 14 வருடம் கோசலை தயாராய் இருந்தாள். ஆனால் இராமனைப் பிரிந்த மறுநிமிடமே தசரதன் உயிரை விட்டான்) இப்படி தந்தைமாரின் பாசத்தை எடுத்துக் காட்டியதற்காக எல்லாத் தந்தைமார் சார்பில் நன்றி கூறுகின்றேன்.
எஸ். ஆர். பாலச்சந்திரன
தங்களுக்கு 77 வயதா நம்பமுடியவில்லையே! இந்த வயதிலும் இளமைத் துடிப்புடன் மல்லிகை மூலம் இலக்கியப் பணிபுரிந்தவரும் தாங்கள் அவ்வப்போது இடம்பெறும் இலக்கிய நிகழ்வுகளிலெல்லாம் உற்சாகமாகக் கலந்து கொள்ளுவதைப் பார்க்கும்போது பரவசம் ஏற்படுகின்றது.
தாங்கள் நீடுழி வாழ்ந்து மேலான தமிழ்ப்பணியைத் தொடர எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
டி.வி. டேவிட்ராஜ
காலந்தாழ்த்தியே மல்லிகையின் ஜுன் இதழை நுகரக்கிட்டி மகிழ்ந்தேன். அட்டையில் கவிஞர் சு.
முரளிதரனின் படம் எமக்குப் பெருமை சேர்க்கிறது. அவர் பற்றிய மூத்தவர் சாரல்நாடனின் வரிகள்
முரளியார் அவரின் பெறுமதி என்ன என்பதை மல்லிகை வாசகர்களுக்கும் - இளஞ்சந்ததியினருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.
தெணியானின் தீராவிலை வரதட்சினைக் கொடுமைக்கு சவால் விட்ட மற்றொரு. உஷாவைக் கண்முன் நிறுத்தியது. மேமன்கவியின் முணுமுணுப்புக்கள் நம்மவர் பற்றி மற்றவர்களின் கணிப்புக் குறித்து முணுமுணுக்கச் செய்தது. ப. ஆப்டின் இலக்கியச் சந்திப்பில் தேவகாந்தன் நாடு திரும்பியதையும் - ஒரு மாலைப் பொழுதில் இனிய இலக்கியச் சந்திப்பில் எழும் இனிய நினைவுகளைத் தந்தது.
இவற்றோடு பங்கேற்க மல்லிகையின் ஆரம்பக் கால எழுத்தாளரான எனது சகோதரர் நாவல்நகர் பிமகாலிங்கம் தற்போது இல்லையே என அங்கலாய்த்தேன்.
அச்சுத்தாளின் ஊடான அநுபவம் ஜீவாவின் வாழ்க்கைப் பயணம் - சிந்திய வியர்வைக்கு வயது 77 ஜீவாவின் எனக்கு வயது 77 தலைப்பு வரிகள், தூண்டிலில் ஜீவமான பதில்கள், வேறெந்த படைப்பிலும் காணப்படாத சிறப்புக்களாகும்.
பழைய வாசஷகர்களை மீண்டும் மல்லிகை ஈர்த்து நுகரத் தூண்டி வருகின்றது. வாழ்த்துகின்றோம் ஆசிரியரின் நன்றிக் கடன் வேறுயாருக்கும் வராதது.
- பெ.ராமானுஜம் நாவலப்பிட்டி

Page 21
படிக்காதவர்
Lu Ig?ü ıligig5
பாடங்கள்
உடுவை.தில்லைநடராசா
அந்த நாட்களில் வெள்ளிக்கிழமையென்றால் யாழ்ப்பாண நகரைச்சேர்ந்த பிச்சைக்காரருக்கு சிறிது மகிழ்ச்சி. காலையிலிருந்து மாலைவரை கடைகடையாக ஏறி இறங்க கையில் கொஞ்சம் காசு சேரும்; பெரிய மனது படைத்த மிகமிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் தருமத்துக்கு ஓர் அளவுகோல் வைத்திருந்தார்கள். ஒருசதம் தருமம் செய்து புண்ணியம் சம்பாதித்துக் கொள்வார்கள். அளவுகோல் விஷயத்தில் சில தருமவான்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அதிகாலையில் ஒருவருக்கு ஒரு சதம் கொடுக்கும் போதே மனக்கணனியில் உரிய பதிவுகளைச் சேமித்து வைத்து விடுவார்கள். தப்பித்தவறி காலையில் 'ஐயா பிச்சை என ஒலித்த குரல் மீண்டும் ஒலித்தால் - தோன்றிய உருவம் மீண்டும் தோன்றினால் தருமவான்கள் ஏசும்போது அகராதியில் இல்லாத சொற்களும் சேர்ந்திருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நாட்களைக் கடையில் கழிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் முதலாளி என்கையில் சில்லறைக் காசுகளைத் தந்து பிச்சைக்காரருக்கு தருமம் செய்யும் புண்ணியவானாக என்னை மாற்றி விடுவார். முதலாளி தரும் சில்லறைகளைத் தருமம் செய்யும் போதும் கவனமாக இருக்க வேணும். இரண்டுசத ஐந்துசத நாணயங்களை அப்படியே பிச்சைக்காரருக்குக் கொடுக்கக் கூடாது. அவர்கள் ஒருசதம் தான் தருமம் பெறத்தகைமையிருந்தும் சிலவேளை இரண்டுசதம் ஐந்து சதநாணயங்களுடன் கம்பி நீட்டிவிடக்கூடும். அவர்களைப்பின் தொடர்வதும் ஒரு சதம் கழிந்த மிகுதிப்பணம் பெறுவதும் சாத்தியப் படாத காரியங்கள். எனவே ஐந்துசத நாணயம் வைத்திருக்கும் போது பிச்சைக்காரர் இரண்டொருவர் வந்ததும் கொடுக்காமல் சரியாக ஐந்து பேர் வந்த பின் அவர்களுள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஐந்துசதத்தைக் கொடுத்தால் அவர்கள் பிரித்துக்கொள்வார்கள். சில நேரம் அடிபடுவார்கள். பிரித்துக் கொடுப்பதாலோ கொடுக்காமல் விடுவதாலோ அடிபடுவதாலோ தருமவான்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். யாராவது ஃபிச்சைக்காரர் ஒரு சதநாணயக்குற்றிகள் அதிகமாக வைத்திருந்தால் அவற்றை லூங்கிக்கொண்டு பெரிய நாணயக் குற்றிகளைக் கொடுக்க வேண்டும். நாணய மாற்றம் செய்யும் போது செல்லாத நாணயங்களும் அழுக்கேறிய நாணயங்களும் எங்கள் கைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 

பலவிதமான பிச்சைக்காரரைப் பார்த்த பின்பு அப்பா என்னை அவதானிக்கும்படி,சுட்டிக் &Tւլգայ வனின் பெயர் ‘பிச்சை. ஏறக் குறைய தோற்றம் வயது எல்லாம் நடுத் தர மிருக்கும். சுத்தமான வேட்டியென்று சொல்ல முடியா விட்டாலும் அழுக்கான வேட்டி யென்றும் சொல்ல முடியாது. முழங்காலுக்குக் கிழே நீளும் வேட்டி பாதத்திலிருந்து முக்கால் அடிக்கு மேல் உயர்ந்த முக் காலகட்டு வேட்டியாக இருந்தது. ஒரு சிறிய துவாய் கழுத்தில் - துவாயின் தலை பிரண்டும் வழமைக்கு மாறாக கழுத்திலிருந்து முதுகை நோக்கிய படியிருந்தது.
அப்பாவின் அவதானிப்பு சற்று வித்தியாசமானதாக இருந்தது. எந்தக் கடையாக இருந்தாலும் பிச்சை போதியளவு இடைவெளி விட்டு "ஐயா’ என மூன்று தரம் குரல் கொடுப்பான். சில பிச்சைக் காரரைப் போல ‘புண் ணியம் கிடைக்கும் g5(5LDub பிச்சை போடுங்கோ மூன்று நாளாகச் சாப்பிடவில்லை என எதுவுமே சொல்லமாட்டான். மூன்று தரம் அழைத்தும் யாரும் வரவில்லை யானால் மீண்டும் ஒரு தரம் அழைப்பதில் நேரத்தை சக்தியைச்
செலவிடாது அடுத்த கடைக்கு
நகர்ந்துவிடுவான். யாராவது ஒரு ருபா கொடுத்தால் 99 சதம் மிகுதி கொடுத்து விடுவான். ஒரு சதத்துக்கு மேல் ஒருவரிடம் பிச்சையெடுக்கக் கூடாதென் பதில் கணி டிப்பாக
இருப்பான். இந்தப் பிச்சையை நன்றாகப் புரிந்து கொண்ட புடவைக்கடை முதலாளி யொருவர் தினமும் இரவுச் சாப்பாட்டுக்காக ஐந்து இடியப்பங்கள் வழங்கும் படி அப்பாவின் முதலாளியிடம் ஒழுங்கு செய்தார். அப்பா வின் முதலாளியின் மனமும் நல்லதென்பதால் இரவுச் சாப்பாடாக தினமும் பத்து இடியப்பம் பிச்சையின் வயிற்றை நிறைத்தது. அப்பா சுட்டிக்காட்டி உணர்த்திய பின்தான் ஒரு பிச்சைக் காரனால் கூட மற்றவர்களின் வெறுப் பைச் சம் பாதிக் காமல் தன் தேவைகளை கெளரவமாகவும் ஒழுங்காகவும் பெற முடியும் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகரிலிருந்து
இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்
களுளர் நானும் ஒருவன் . ஆனாலும் இலங்கையில் மிக முக்கிய பதவியான அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இருபத்தைந்து பேரில் நானும் ஒருவன். ஒரு மரத்துக்கு கீழ் மக்களின் அவலங்கள் பற்றி கவலையோடிருந்தேன். வழமையாகக் கச்சேரி நீதிமன்றம் போன்ற அரச அலுவலகங்களுக்கு அருகில் தட்டெழுத்துப் பொறியுடன் இளைப் பாறிய உத்தியோகத்தர்கள் உழைக்கும் காட்சி மனக்கண்ணில் தோன்றியது. ஆரம்ப நடவடிக்கையாக ஒரு மேசையும் கதிரையும் இரவலாகப் பெற்றுக் கொணி டேன் பேனாவைத்தவிர எழுதுவதற்கு கடதாசி கூட இல்லையே என எண்ணிக்கொண்டிருக்கையில் பாரதியாரின் வறுமை வாழ்க்கை பற்றி அப்பா எப்போதோ சொன்னது நினைவில் தோன்ற உடுப்பைச் சுற்றிக்கொண்டு வந்த பழைய செய்தித்தாளின் நிலை உயர்ந்தது. அச்சிடப் பட்ட செய்தித் தாளின் அச்சிடப்படாத
O 21 og R3);

Page 22
ஓரங்களில் பாரதியார் கவிதைகள் எழுதிய தாகவும் தெரு விளக்கின் கீழ் இருந்து படித்த தாகவும் அப்பா சொன்ன கதைகள் மனதில் தோன்றின. கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பிதா ஜெப நேசனுக்கு செய்தித்தாள் ஓரத்தைப் பயன் படுத்தி எழுதிய கடிதத்துக்கு பதிலாகக் கிடைத்த தென்னோலைக் கடுகுகள் கிளிநொச்சி கச்சேரியாக மாறி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வேலையைச் செய்தது.
சிறுவனாக இருந்த என்னையும் கூட்டிக் கொண்டு அப்பா உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அலங்காரமாக வளைத்துக் கட்டிய சீமேந்து மதில் வண்ணப் பூ வேலைகளுடன் செய்யப்பட்ட இரும்பு கேற். அந்தக் கேற்றுகளை தாங்கி நிற்கும் துான களுக்கு இணைக் கப் பட்டிருந்த வட்டவடிவான மின் குமிழ் எல்லாம் மனதில் ஆசையை ஏற்படுத்த அது போல எங்கள் காணிக் கும் மதில் கட்டி கேற் போட வேண்டுமென்றேன். மதில் கட்டு வதற்கு முதல் கிணறு. கக்கூஸ் , வீடு' என்று அப்பா சொன்னதன் அர்த்தம் முழுமையாக விளங்க சில நாட்கள் தேவைப்பட்டன. நாங்கள் பயன்படுத்தும் கிணறு சீமேந்தினால் கட்டப் படாத பழைய கிணறென்றாலும் பங்காளிகள் பலர். கிணற்றின் அருகே எதி ரெதிராக நான்கு பூவரசமரங்கள் வளர்க்கப் பட்டிருந்தன. சுமாரான உயரத்தில் இரண்டு பூவரசமரங்கள் வேறு தடிகளால இணைத் துக் கட்டப்பட்டிருந்தன. இணைத்துக் கட்டப் பட்டிருந்த தடிகளுக்கு ஆடுகால்’ எனப் பெயர். இரண்டு பூவரச மரங்களுக் கெதிர்ப் புறமாக வளர்ந்த மற்ற இரு பூவரச மரங்களில் இன்னுமொரு ஆடுகால். நீளமான பனை
மரத்தைச் செதுக்கியெடுத்து துலா வடிவம் கொடுத்து துலாவின் இடையே அச் சுல கி கை புகுத் தப் பட்டு அச் சுலக் கை இணைக்கப்பட்ட துலா ஆடுகால் மேல் வைக் கப்பட்டி ருந்தது. துலாவின் அடிப் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் பாரமான கற்கள் கரிணற்றில் தணி னிர் அள்ள வாளியை உள்ளே விடும் போதும் அள்ளிய தண்ணீரை வெளியே கொண்டு வரும்போதும் சமநிலை பேண உதவும். கிணற்றின் அருகே நின்று நீர் அள்ளுவதற்கு வசதியாக கிணற்றின் குறுக்கே சில தடிகள் வைக் கப்பட்டிருந்தன. பங்குக் கிணறாகையால் எல்லாப் பங்காளி களும் உடன்பட்டால் தான் ஏதும் செய்யலாம். உடன்படாவிட்டால் ஓரங்குலக் கயிற்றைக்கூட போட முடியாது. செலவு செய்யும் பணம் கடைக் காமல் போய் விடுவது மட்டுமல்ல, கிராமக்கோட்டிலிருந்து உயர் நீதிமன்றம் வரை வழக்கு களில் கலந்து கொள்ளக்கூடிய அனுபவமும் கிடைக்கும்.
மதில் கட்டியிருந்த உறவி னரைச் சந்தித்துத் திரும்பி வந்து சில நாள் இருக்கும். குடிப்பதற்கு தண்ணிர் அள்ளச் சென்ற எனது சிறியதாயார் கணற்றினுள்ளே தத்தளித்து அபயக்குரல் எழுப்பிய போது ஊரே திரண்டோடி வந்தது. துலாவில் கயிற்றால் பிணைக்கப் பட்டிருந்த கல் அறுந்து விழ சம நிலை தளும்பிய சிறிய தாயார் தடுமாறி நின்று தண்ணிர் அள்ள
 
 

கிணற்றின் குறுக்கே வைக்கப் பட்டிருந்த தடிகளின் மீது வேகமாக ஒரு புறம் ஒதுங்க தடிகளின் மறுபுறம் மேலெழும்ப குடிப்பதற்கு தண்ணிர் அள்ளச் சென்ற சிறிய தாயார் கிணற்றினுள்ளே விழுந்து குளிக்க வேண்டிய நிலை. துன்பத் தினுள் ஓர் இன்பம். பங்காளர் ஒன்று சேர்ந்து பலமான கற்கள் சீமேந்து பயன்படுத்தி கிணற்றை சரியாக நீர்மாணித்ததால் உயிராபாய மில்லை. பிள்ளைகளின் கெளரவம் சுகாதாரம் மனதில் தோன்ற அப்பா வின் கையில் சிறிது பணம் சேர பனை வடலிகளிடையே மறைந்த காலம் மாறி மலசலகூடம் சீமேந்தி னால் கட்டப்பட்டது. கடன்வாங்க அப்பா அம்மா விரும்பாததால் கணிசமான தொகை சேர்ந்தபின்பே வீட்டுக்கு அத்திவாரம் அமைக்கப் பட்டது. மதில் ‘அலங்காரமாக இல்லாமல், வண்ணப் பூக்கேற்றாக இல்லாமல் சாதாரணமாக அமைக் கப்பட்டது - பல வருடங்களுக்குப் பின்னர், சாதாரண வாழ்க்கை - கட னற்ற வாழ்க்கை எவ்வளவு சந்தோ ஷமானது என்பதை இப்போது உணர்கின்றேன்.
க.பொ.த.உயர்தர வகுப்புக்கு வந்த பின்பு கட்டைக் காற்சட்டை யுடன் நான் கல்லுாரி செல்வதை விரும்பாததால் நீளக்காற் சட்டையும் சப்பாத்தும் கிடைத்தது. புதுக்காற் சட்டையும் சேட்டும் என்னோடு அளவாக அழகாக உறவாடின.
சப்பாத்துக்கு மாத்திரம் என்மீது
சரியான கோபம். காலிரண்டையும் வெட்டியும் கடித்தும் படாதபாடு படுத்தின. சிறிது நேரத்துக்குப்பின் வகுப்பறைக் கதிரையுடன் ஒட்டிக் கொண்டேன். நடந்து திரிந்து ஏன் புதுச் சப் பாத் திடம் கடியும் வெட்டும் வாங்குவான்? ஏறக் குறைய எல்லோரும் போன பின் காலணிகளைக் கையில் காவிக் கொண்டு வீடு வாசல் வரை சென்று காலfல் மாட்டிக்கொண்டு சென்ற போது பாதங்களைப் பார்த்த அப்பா சொன்னார்: “முகத்துக்குப் போடுற பவுடரைக் கொஞ்சம் எடுத்து குதிக் காலுக்கு மேலையும் சப்பாத்து நல்லாகக் கடிக்கிற சின்னவிரல் பெருவிரல் மாதிரியான இடங் களிலை தடவிப் போட்டு சப்பாத்து போட்டால் சப்பாத்து கடிக்காது.”
மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே உடுப்பிட்டிக் கிராமத்திலிருந்து தனியாக பஸ்சிலோ அல்லது அந்தக் காலத்தில் ஓடிய தட்டிவான்களிலோ ஏறி பதினைந்து மைல் துாரத்திலுள்ள யாழ்ப்பபாண நகர் சென்று அப்பா தரும் சம்பளக் காசைக் கொண்டு வந்து அம்மா கையில் ஒப்படைக்கக்கூடிய சூழல். பயமற்ற பாதுகாப்பான காலம் அக் காலம்.
அப்பாவின் மாதச் சம்பளம் 100 ரூபா. ஒவ்வொரு மாதச் சம்பளமும் அடுத்த மாதம் முதலாம் திகதி கிடைக்கும். காங்கேசன்துறை வீதியில் "லக்ஷ்மி விலாஸ்’ கடை என்பதை விட “தில்லைப்பிள்ளை கிளப்' என்றால் பலருக்குத் தெரியும், தில்லைவனம்பிள்ளை என்ற முதலாளிக்குச் சொந்தமான கடையில் சிங்காரம் பிள்ளை ஒரு தொழிலாளி. சிங்காரம் பிள்ளையின் தந்தையான சிவகாமிநாத பிள்ளையின் தந்தை பெயரும் தில்லைவனம் பிள்ளை. இருவரும் வேறு வேறு தில்லைவனம்பிள்ளை.

Page 23
பத்து வயதில் இந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக அப்பா சொல்லுவார். நல்ல முதலாளி என்பது அப்பாவின் முடிவு தில்லைவனம் பிள்ளைக்குப் பின் அவரது மகன் முறையானவர் முதலாளியான போதும் அப்பாவின் முடிவு மாறவில்லை. புதிய முதலாளி அப்பாவை "ஐயா!' என கெளரவ மாகவே அழைப்பார். அப்பாவின் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்ல மாட்டார்.
வேறு சில கடைகளில் அதிகரித்த சம்பளமும் வேறு சலுகைகளும் தருவதாகச் சொன்ன போதும் அப்பா மறுத்து விட்டார். பணத்தின் அருமை தெரியும் அறிவு எனக்கு வந்ததும் அப்பாவுக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதம். ‘அதிக சம்பளம் தருவதாக சொல்லிய முதலாளிகளின் கடையில் வேலை செய்யதால் என்ன? இது என் கருத்து. அப்பாவின் அபிப்பிராயம் வேறுவிதமாக இருந்தது. காசு தேவைதான். ஆனால் எல்லா விஷ யத்தையும் காசைக் கொண்டு மதிப் பிடக்கூடாது. கடை முதலாளி என்னைப் அறிஞ்சு என்னை மதிப்பாக நடத்துறார். நானும் இந்தக் கடையிலை முப்பது வருஷத்துக் கு மேலை செய் திட்டன் பேயோடை கூட பழகியிட்டா விட்டிட்டு போயிட மனம் வராது. பணத்துக்காக நல்லமனிசரை விட்டிட்டு போறதுக்கு எனக்கு இஷடமில்லை சந்தர்ப்பம் கிடைக்கும் சிலநேரங்களில் வீட்டுக்கு வந்தால் விடுதலை நாட்கள் வாரங்கள் மாதங்களைக் கடந்த சம்பவங்களும் உண்டு. அவர் வேலைக்குப் போகாது விட்டாலும் சம்பளம் ஒழுங்காகக் கிடைக்கும். அவரது இடத்துக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படமாட்டார். இவற்றையெல்லாம் பார்க்கிறபோது அப்பா சொன்னதெல்லாம் சரியென எண்ணத் தோன்றும். க.பொ.த.
உயர்தர வகுப்பில் படிப்பதற்கு தோழர்.
கார்த்திகேசு மாஸ்டரின் சிபார்சில் யாழ் .இந்துக் கல்லுாரியிலும் விடுதியிலும் இடம் கிடைத்தது. இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. விடுதிக்கட்டணம் இதர செலவு களை எண்ணி முதலாளியிடம் முதன் முதலாக 'தம்பி! மகன் மேல் வகுப்புக்கு போறதாலை செலவு.”
“இந்த மாதத்திலையிருந்து 200 ரூபா சம்பளம்.” முதலாளியால் அதிகரிக்கப்பட்ட 100 வீத சம்பள உயர்வு பின்னர் குறைக் கப் படவில்லை.
காங்கேசன்துறை வீதியும்
ஸ்ரான்லி றோடும் சந்திக்கும் இடம்.
முட் டாஸ் க ைடச் ச நீ த. அக்காலத்தில் முட்டாசுக் கடை உரிமையாளர் திரு.செல்லையாவுக் கும் அப்பாவுக் கும் இடையே எழுதாத உடன்படிக் கையொன்றி ருந்தது.
வெற்றிலை போடுவது என்று சொன்னால் அப்பாவின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். தொடர்ச்சியாக அடுக் களையில் நெருப்பருகே நிற்பதால் வெற்றிலை குளிர்ச்சியைத்தரும் என நம்பினார். ஒரு வெற்றிலையை இரண் டாக்கி பாதி வெற்றிலை தான் போடுவார். ஆனால் சில நிமிடங்களுக்குள் வெற்றிலையின் சாற்றை உள்ளி ழுத்து சக்கையை துப்புவதற்குள் அடுத்த வெற்றிலை போடுவதற்கு
 

ஆயத்தமாகிவிடுவார். வெற்றிலை என்றால் நிறமும் சுவையும் ஊட்டிய பாக்கு. மிக மெல்லியதாகச் சீவிய தேங்காய்ப்பூ மங்கள விலாஸ் வாசனைப் புகையிலை இவையெல் லாம் சேர வேண்டும். இந்தப் பொருட் கள் எல்லாம் முட்டாசுக் கடைச் சந்தியிலுள்ள செல்லையா கடை யில் தான் வாங்குவார். ‘வாங்குவர் எனச்சொல்வது தவறு. பின்னேர வேளைகளில் செல்லையா கடைக் குச் சென்று தனக்கு விருப்பமான அளவு வெற்றிலை பாக்கு புகை யிலை இத்தியாதி எல்லாம் எடுத்துக் கொண்டு வருவார். சில நேரம் அப்பாவுடன் நானும் செல்வேன். கடையிலிருந்து வெளியே வரும் போது வர்றன் சொல்லுவார். என்ன பொருள் எவ்வளவு எடுத்தது எவரும் கணக்கு வைப்பதில்லை.
அப்பா தனக்குத் தேவையான வற்றை தானாகவே எடுக்கலாம். மாதம் தோறும் தனக்கு கிடைக்கும் 100 ரூபா சம்பளத்தில் 15 ரூபாவை செல்லையா கடையில் கொடுத்து விடுவார். இதில் ஒரு விடயம் என்ன வென்றால் தொடர்ச்சியாக மூன்று மாதம் வேலைக்குச் செல்லாத வேளைகளிலும் அப்பாவின் சம் பளத்தை வாங்க உடுப்பிட் டி யிலிருந்து நான் யாழ்ப்பாணம் செல்வேன். சம்பளம் வாங்கியதும் செல்லையா கடையில் 15 ரூபா கொடுத்து விட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பான கட்டளை. அப்பா வேலைக் குப் போகா
விட்டாலும் சம்பளத்துடன் கூடிய
விடுதலைதான். வெற்றிலை வாங்காவிட்டாலும் முழுமையான கொடுப்பனவு செய்யப்படும்,
இந்தக் கனவான் ஒப்பந்தம்’ ஒரு புறமிருக்க, 1965 ஆண்டு உடுப்பிட்டியிலிருந்து யாழ். இந்துக் கல்லுாரி சென்றதும் 100 ரூபாவாக இருந்த அப்பாவின் சம்பளம் 200 ரூபாவாகியதும் அப்பா செல்லையா முதலாளி யிடம் 30 ரூபா கொடுத்தார். பணத்தை எண் னிய முதலாளிக்கு சம்பள அதிகரிப்புக்கான காரணத்தைச் சொன்னேன். மகிழ்ச்சியால் செல்லையாவின் முகம் மலர அப்பா கொடுத்த 30 ரூபா எனது சட்டைப் பைக்குள் திணிக்கப் பட்டது. "மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு. நீங்க வாற மாதிரி வந்து போங்க. முந்திக் கொடுக்கிற காசையே கொடுங்க. போதும்.”
鬱 攤 攤 *
கோவில் கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். கோவிலுக்குப் போகாதோரைக் காண் பதரிது. வழிபடச் செல்வோர், பொருள் வாங்கச்செல்வோர். பொழுது போக்கச் செல்வோர். புதினம் பார்க்கச்செல்வோர். என ஏதோ ஒரு வகை யிலோ ஒன்றுக்கு மேற்பட்டவகையிலோ பலரைச் சேர்த்துக் கொள்ளலாம். அதிக துாரம் நடக்க வலுவற்ற சிறுவனாக இருந்த என்னை அப்பா தோளில் துாக்கி வைக்க நான் அவர் தலையை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு குதிக்காலால் அவர் நெஞ்சில் தாள மிட்டுக் கொண்டே சுமார் மூன்று கிலோமீற்றர் துாரத்திலுள்ள செல்வச்சந்நிதி ஆலயத்துக் குச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பின் கோவிலுக்குச் சென்றதைக் காணாததால் காரணம் கேட்டேன்.
அடுப்படி தான் எனக்கு கோவில்
செய்யிற தொழில் தெய்வம். நெருப்புதான்

Page 24
என்ர தெய்வம். காலமை வேலை தொடங் கிறதுக்கு முதலும் வேலை முடிஞ்சதும் நெருப்பை மனதாலை கும்பிடுறன். பகல் பொழுதெல்லாம் கோயிலிலேயே இருக்கிறன். போதாதா?’ சற்று ஆச்சரியத்தில் ஆழ்த் தினாலும் 20 வயது முடிவதற்கு முன்பாகவே பொலிஸ் தலைமைக் காரிலயத்தில் எழுது வினைஞன் வேலை கிடைத்த போது ஆசீர் வதித்தார்: “நீ வேலை செய்யப்போற இடம் தான் உனக்குக் கோயில் வசதிப்படுற நேரமெல்லாம் கோயிலுக்குப் போக வேணும். மேசையும் கதிரையும் பேனையும் தான் உனக்குத் தெய்வங்கள். கதிரையை நீ காப் பாற்றினா கதிரை உன்னைக் காப்பாற்றும். முடிஞ்ச வரைக்கும் பேனையை நல்ல விஷயத்துக்கு மட்டும் பாவிக்க வேணும்.”
எனக்கு நன்றாகத் தெரியும் - காலையும் மாலையும் நான் மேசையைத் தொட்டுக்
கும்பிடும் போது ஒட்டி நின்று பார்த்து தங்க
ளுக்குள் சிரித்து மகிழும் ஊழியர்களைப் பற்றி, அவர்களின் சிரிப்புக்கஞ்சி என்வழி பாட்டை நிறுத்தத் தயாரில்லை. என்னைப் பொறுத்தளவில் எனது மேலதிகாரிகளின் பேனா இதுவரை எனக்குக் கெடுதல் செய்த தில்லை.
அப்பா எவ்வளவு சீரியஸாக் கதைப்பாரோ
அதே போல நோகாமல் பகிடிக் கதைகளும் சொல்லுவார். சீனிப்பாணி காய்ச்சி மாவுடன் வண்ணப்பொடி வாசனைத் திரவியங்கள் சேர்த்து நெய்யையும் விட்டுக்கிளற உரு வாகும் மைசூர்ப் பாகு நாவில் நீரை ஊற வைக்கும். வாசனையால் கவரப்பட்டு தங்க ஆபரணங்கள் வடிவமைக்கும் ஒருவர் நாவூற குசினிக்குள் நுழைந்தார்.
அப்பா இரும்புத்தாச்சியில் இளகிக் கொண்டிருந்த மைசூர்ப் பாகுக் குழம்பை 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட தட்டில் ஊற்றினார். வெகு நிதானமாக ஊற்றியபோதும் சிறிதளவு குழம்பு கட்டுப்பாட்டைமீறி தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் வடிந்து திரண்டது. அவரின் கைகளுக்குள் புகுந்த அளவு கோலும் கத்தியும் 2 அங்குல நீளம் 1அங்குல அகலம் என கோடுகளைக் கிற மைசூர்ப் பாகுக்கட்டிகள் உருவாகின. தட்டின் நான்கு பக்கமும் மேலதிகமாக இருந்த குழம்பை கத்தியால் சீவ அதுவும் தட்டின் கீழே விரிக்கப் பட்டிருந்த பேப்பரில் விழுந்தது. அது வரை பொறுமையாக இருந்த நகை வடிவமைப்பவர் மைசூர்ப்பாகுத் தட் டித்த னருகே பேப் பால விழுந்திருந்த மைசூர்ப்பாகுத் துகள் களைப் எடுக்க முனைந்த அவர் கைகளை அப்பாவின் கைகள் தடுத்தன.
“இது சரியில்லை. நீங்கள் நகை செய்யிற போது கீழே சிந்திற தங்கத்தை இன்னொரு ஆள் எடுக்க விடுவீங்களா? இந்த சாப்பாட்டுச் சாமான்கள் என்னுடைய முதலாளிக் குத் தங்கம் மாதிரி. அவர் சொன்னா நான் தர்றன்.’ சிரித்துக்கொண்டே சொன்ன நியாயத்தை உணர்ந்த வரும் அசட்டுத்தனமாகச்சிரித்தார். “நான் சுடச்சுடச்சாப்பிட்டுப் பார்க்க நினைச் சன்’ அடுத்த தடவை அப்பா சிரித்தார். “நல்லது. நாலு
மைசூர் பாகு காசு கொடுத்து
 

வாங்கிட்டுப் போங்க. சொல்லி வேலையில்லை, அந்த மாதிரி மணியாயிருக்கும்’
அருகாமையிலுள்ள ஆலயத் துக்கு புதிய கோபுரம் கட்டும் போது தூண்கள் தெய்வச் சிலைகள் செதுக்க வந்த கலைஞர்கள் கடைக்குச் சாப்பிட வரும்போது அப்பாவுடனும் அளவளாவிச் செல் வது வழக்கம், கோவிலில் சிலைகள் செய்வதைப் பார்க்க விரும்பிய என் னை அப் பா அழைத்துச் சென்றார். வேறு வேறு உளிகளும் சுத்தியலும் கலைஞர்களின் கை களில் சுழன்று வர உருவாகும் தெய்வச் சிலைகளின் அழகில் மெய் மறந்து நின்றோம். தலைமைக் கலைஞனின் ஏளனச் சிரிப்பு:- “சிலை செய்யிற தொண்ணும் D 60T வேலையில் லை. மண்ணையும் கல்லையும் கலந்து சாப்பாடு செய்யிற மாதிரியில்லை,
உப்பையும் புளியையும் கூடக் குறையப் போடுற சமையல் மாதிரி யில்லை.”
அப்பா சர்வசாதாரணமாகச் சொன்னார்:- “சிலை செய்யீறதுக்கு முந்தி நீங்க ஆண் கல்லு பெண்கல்லு அலிக்கல்லு பார்க்கிற மாதிரி அரிசியையும் மாவையும் வாங்கிற போது கவனமாக இருப்பம். நீங்க ஒவ்வொரு விஷயம் செய்யிற போதும் பிரமாணம் அளவு பார்க்கிற மாதிரி அளவு பார்த்துத்தான் உப்பு புளி போடுவம். நீங்க ஒனணு செய்யிற போது கொஞ்சம் பிழைச்சா அதை இன்னொனர்ணா மாத்தியிடுவீங்க. சாப்பாட்டை அப்பிடி மாத்த முடியாது. துாக்கித் தூர வீசிட வேண்டியது தான். சாப்பாட்டை வீசியிட்டா முதலாளி எங்களைத் துாக்கி வீசியிடுவார். சற்றும் எதிர் பாராத பதிலால் தலைமைக் கலைஞர் திகைத்தார்: "எப்படி உங்களால் பட்பட்டென பதில் சொல்ல முடியுது? அப்பாவின் முகத் தில் புன்சிரிப்பு மின்னல். “முட்டாள்த்தன மான கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமாக பதில் சொல்ல முயற்சிக்கிறன்.”
எழுதப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம்

Page 25
ஒலுவில் அமுதன்
இஸ்மத்தைப் போன்ற ஒருவனை நான் இதுவரை க்னடதில்லை. பொறாமையின்
மொத்த வடிவம். அவனை
முதன்முதலாகக் கண்டபோது கள்ளம் ஏதுமின்றி நல்லவனாக இருப்பான் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் கள்ளத்தின்
இருப்பிடம்தான் அவனுள்ளம் என்பதை தெரிந்து வேதனைப்படுகின்றேன்.
எனது வீடு அமைந்திருந்த சுற்று வட்டாரத்தில்தான் திருமணம் செய்து வாழ்ந்தான்
வீட்டுக்கு அருகாமையில் இருப்போரிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கும் நான் திருமணம் செய்து வந்த அடுத்த தினமே அவனது வீட்டுக்குப் போயிருந்தேன். மணமக்களை வாழ்த்தி பரிசுப்பொருட்களும் கொடுத்து விட்டு வந்தேன். அதன்பின் சுமார் ஒருவருடம் இஸ்மத்தும் அன்பாகத்தான்
இருந்தான்.
நாளடைவில் அவனது நடை முறையில் மாற்றத்தைக் கண்டேன். பேசுகின்ற போது
வெறுப்பாகவே பேசுவான். முகம் கொடுத்து பேச மாட்டான். எதைப் பேசுகின்றோமோ
அதற்கு எதிர்மாறாக பேசுவான்.
அன்றொரு நாள் அவளை முன் தெருவில்
கண்டேன். "கண்டு கொள்ளவே முடியல்ல. சொகமா இருக்கீங்களா?" என்று கேட்டேன். பேசாமல் நின்றிருக்கலாம். முறையல்லவே என்றுதான் பேசினேன்.
"சொகத்துக்கு என்னையாம் குறை? ஆயிரம் வேலை. எப்படி காணப்போறிங்க?" என்று சற்று உறைப்பாகவே சொன்னான். நான்
அதை பொருட்படுத்தவில்லை. வீட்டில் ஆயிரம்.
இருக்கும் என்று அத்தோடு விட்டு விட்டேன். அதன்பின்னர் காணும் போதெல்லாம் முகத்தை வெட்டிக்
கொண்டு போய்விடுவான்.
இப்போதெல்லாம் என்னைக் கண்டால் நிமிர்ந்தும் பார்க்க மாட்டான். என்னைவிட தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவனோடு பேச ஏன் நான் ஆசைப்பட வேண்டும்? அடுத்த வீட்டுக்காரன் என்பதால் அடிமையாக வேண்டுமா? இஸ்மத் எலிஸபெத் மகாராணியின் கணவன்
போலல்லவா எண்ணி நடக்கின்றான்.
இப்போது இஸ்மத்தோடு பேசுவதை
 
 
 
 

தவிர்த்துக் கொண்டேன்.
அன்று எண் முகத்துக்கு முன்னே நின்றான். நான் பேசினால் ஏதாவது பேசுவான். அல்லது பேச விரும்பாதவன் போல போய் விடுவான். இதனால நானாக பேசுவதில்லை என்ற முடிவுடன் நனி றேனர் . இஸ் மத காறி உமிழ்ந்துவிட்டு சென்றான். எனக்கு செயப் வது போல இருந்தது. முட் டாளுடனர் வாக் குவாதப் படக்கூடாது என்று ஒன்றும் பேசாமலே விட்டு விட்டேன். இப்போதெல்லாம் சண்டைக்கு வலிய இழுப்பவன் போலிருக்கிறான் இஸ்மத்.
பக்கத்து வீட்டுக்காரன் என்று எவ வளவு அணி யாக பழக நனைத் தருந் தேனி அவனி எதிர்மாறாக நடக்க முனைந்தான். நான் வார்த்தையால் கூட வதை செய்யவில்லை. ஏன் இப்படி மாறினானி என பது புரியாத புதிராகவே இருந்தது.
இரணிடு வீடுகள் தள்ளி இருக்கும் சாஹிர் நேற்று என் வீட்டுக்கு வந்தான்.
“இவன் இஸ்மத் இரிக்கானே, சரியான பொறாமை பிடிச்சவன். அல்லையல்காரன்களோட எரிச்சலா இரிக்கான். என்னைப்பத்தி கூடாம முஸம்மிலிடம் பேசி இருக்கிறான். உன்னைப்பத்தி கூடாம என்னிடம் சொல்லி இருக்கான். நான் ஒரு நானுளுக்கு நேரடியா கேட்கத்தான்
இரிக்கன். நாமெல்லாம் உத்தியோகம் பார்க்கிற அவனுக்கு எரிச்சலா இருக்கு. பத்தாம் வகுப்புக் கூட ஒழுங்கா பாஸ் பணி ண முடியாதவனை தெருக்கூட்டுற வேலைக்கும் எடுக் கமாட் டாங் க. இது தெரியா ம லோங்ஸோடும் பைல்களோடும் திரிஞ்சாரு” என்றான் சாஹிர்.
“நானி நெனைச் சிற்றனர் வேலை கிடைக்கப் போகுதாக்கும் எண்டு. பத்தாம் வகுப்பும் ஒழுங்காக பாஸ் பண்ணமுடியாதவன் என்று எனக்கு தெரியாதே. அவர்ர லோங்ஸம் பேச்சும் டிகிரி முடிச்சவன் போல காட்டும்" என்றேன் நான்.
“சமீர் மடையன்களுக்கு நடிப்புத்தானே மிச்சம்” என்றான் மீண்டும் சாஹிர்.
மக்கன்களுக்கு நடிப்பு மட்டும் இருந்தால் பரவாயில்லை. கூடவே பொறாமையும் இரிக்கே” என்றேன் நான்.
"அந்த பொறாமைதான் அவர்களை அழிக்கும் ஆயுதம்' என்றான் சாஹிர். இது எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தை,
“நமக்கு அந்த பொறாமை வேணாம். நாம நல்லா இரிப்போம். இஸ்மத் அவனைப் பத்தி பெரிசா நெனைச்சதுதான் மிச்சம். ஒழுங்கா மனைவி மக்களுக்கு சாப்பிட கொடுக்கவும் முடியாதவன். நம்மைப் போல உழைக்க தெரியாதவனுக்கு பொறாமைதான் மிச்சம். பொண் டாட்டியை சொந்தக்காரர்களின் வீட்டுக்கு கூட்டிக்கு போய் திண்டு திரியிறவன். ரோஷமில்லாதவன்” என்றேன்.
"சூடு சொரணை இல் லாதவனி அப்படித்தான் இரிப்பான். நம்மால அப்படி இருக்கமுடியுமா?" கேட்டான் சாஹிர்.

Page 26
“முந்தநாள் யாருக்கோ ஏசிக்கிற்று இருந்தான். காது கொடுத்து கேட்டேன். யாருக்கென்று தெரியல்ல. பேசுகின்ற வசனம் காதில் விழுந்திச்சு. இவங்கெல்லாம் பெரிய ஆட்கள். பெரிய ஆபிஸ்ரா இருந்தா எங்களுக்கென்ன? என்று சொன்னான். என்னையும் மறைமுகமாக சாடுவது போல் இருந்தது. நேரடியாக பேசாததினால எதுவும் நான் பேசவில்லை. கோழையின் பேச்சுக்கு பின்னால போகேலாதே!” என்றேன் நான்.
"அப்போ. அவனுக்கு சற்று தள்ளி நான் நிண்டதை நீ கண்டியா?” சாஹிர் கேட்டான்.
"ஆமா நான் கண்டன். யாருக்கு அவன் ஏசின?" நான் கேட்டேன்.
“கோழைகள் மறைமுகமாக ஏசினா நாம ஏதும் கேட்கப்போடா. உனக்கு ஏசல்லியே என்பான்.” என்றான் சாஹிர்.
‘இவனெல் லா மீ இப் படி பேசி பெரியவங்களாகிட முடியுமா? உயர உயர பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகா. அவங்கட பேச்சாலே தரமிழந்து போறாங்க." என்றோன் நான்.
வானம் கறுத்துக் கொண்டு வந்தது. காற்று இசையெழுப்பியது. சூரியனின் கண்ணை மழை இருள் கவ்வ சூரியன் ஒளி இழந்தான். சிலநிமிடங்களில் மழை பெய்யும் போல தோன்றியது. சாஹிரும் நானும் உரையாடலை முடித்துக் கொண்டு அவரவர் வீடுகளுக்கு விரைந்தோம்.
இஸ்மத் மழை பெய்யப் போகின்றது என்ற எண்ணம் இல்லாமல் வீதியில் நின்றான். அவ்விதம் அவன் நிற்பதென்றால் ஒன்று யாரையாவது பொறாமைப்பட்டு ஏசுவதற்காக இருக்கும். அல்லது பெண்கள் வருவது
தெரிந்து உரையாட நிற்பதாக இருக்கும். அந்நியப் பெண்கள் என்றால் அவனுக்கு கரும்பு, பேச பேச ஒரு விருப்பு. அவனது மனைவி அதனை தடுப்பதில்லை. அவளுக்கு அந்நிய ஆடவனோடு உரையாடுவதில 960Ť ULĎ. இருவருக்கும் அக்கரை பச்ன்ச.
மிஸ்ரியா ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தாள். அவளது பெயர் மிஸ்ரியாவாக இருந்தாலும் ராணி என்பதுதான் எல்லோரும் அழைப்பார்கள் பெற்றோர்கள் அவ்விதம் அழைப்பதால் அதுவே எ ல லோரும் அழைக் குமி பெயராகியது. ராணியின் கணவன் சவூதியில் வேலை பார்க்கிறான்.
&G
ஆ. ராணி உன்நடையில்
நாட்டியம் இருக்கே’’ என்றான் இஸ்மத்.
' ' 5 Tւ լգ եւ լճ LDL (B6 LDT ?
எல்லாம்தான் இருக்கும். பெண் என்றால் கவர்ச்சி இருக்கனுமே” என்றாள். ராணி, இஸ் மத்தின் அருகே நின்று கொண்டாள்.
‘கவர்ச்சி இருந்து என்ன செய்ய? கட்டியணைக்க கணவன் இருக்கணுமே! ஏங்கி ஏங்கி ஒல்லியா போனாய்’ என்றான் இஸ்மத்,
"எனக் கொரு ஏக் கமும் இல்லை. பெண் என்டா ஒல்லியாத் தான் இருக்கணும். உங்க பொண்ட ாட்டி கொழுத்து வாறா. எதுக்கும் நல்லமில்லே' என்றாள் ராணி.
 
 
 

‘'நல ல மரிலி  ைலதி தானி , கொழுத்து போறாள். என்ன செய்யலாம்? நீ அழகாகத்தான் இருக்கே. பயனில்லாம சும்மா இருக்கியே!” என்றான் இஸ்மத். கணவன் யாரோ பெண்ணுடன் பேசுவது கேட்டு ஓடிவந்தாள் இஸ்மத்தின் மனைவி. சிரித்தவாறு நடையை தொடர்ந்தாள் ராணி.
“இந்த சிறுக்கியோடு நீங்க பேசக்கூடா. உள்ளுக்கு வாங்க.
இவளுகளுக்கு புருஷன் ஒரு கேடு
புருஷன் சவூதிக்கு போனா கண்ணி யமான முறையிலே இருக்க வேண்டியது தானே! அதில்லாம தெருவுக்கு தெரு திரிவாங்க. ஆம்புளைகளை கண்டா இழிச்சுக் கொண்டு நிற்பாங்க சந்தர்ப்பம் கரி டைச் சா மான தி தையும் இழப்பாங்க, இனி இவளோட பேசுவதைக் கண்டா கெட்ட கோபம் வரும். புருஷன் சவூதியிலே இருக்க இங்கு மச் சானோடு படுத்தவளாயிற்றே' என்றாள் இஸ்மத்தின் மனைவி.
மனைவிக்குத் தெரியாமல் அவளது வீட்டுப்புக்கம் போய் உறவாட வேண்டியது தான் என தீர்மானித்தவனாய் வீட்டுக்குள் வந்தான் இஸ்மத், மழை வேகமாக பொழிய தொடங்கியது.
“அதிருக்கட்டும். முன் வீட்டுக் காரன் சமீர் இருக்கிறானே, இவர் பெரிய ஒபிஸர் என்டா நமக்கென்ன? அவரை மதிச்சு நடக்க வேண்டிய ஆவூசியம் நமக்கில்ல' என்றான்
கூறிவிட்டு கேட்டான்
இஸ்மத்,
“அதுக்கென்ன இப்போ?”
"அவனை இனி நான் மதிக்கமாட்டேன்.”
“உங்களுக்கு என்ன நடந்தே?”
"நடந்தது நடக்காதது உனக்கு தேவல்ல. நான் சொல்றன். உன் கணவன் சொல்றன். அவனோட இனி பேசப்படா. அவனிட
பொண்டாட்டியோடயும் பேசப்போடா. என்ன?” என்று கூறி பேச்சை நிறுத்தினான் இஸ்மத்.
“ஏன் வெறுப்பா பேசிறீங்க?" இஸ்மத்தின் மனைவி ரபீக்கா கேட்டாள்.
‘அவர் பெரிய ஒபிஸர் என டா எனக் கென்ன? அவரை மதிச்சு நான் நடக்கணுமா? நான் தொழிலாளி. அவரை கும்பிடு போடணுமா?’ என்றான் மீண்டும் இஸ்மத்.
“அவன் அப்பிடி சொன்னானா? இல்லியே. ஏன் கோபப்பட்டு குழம்புநீங்க?' என்றாள் ரபீக்கா.
"நான் ஒண்டும் கொழம்பல்ல. பெரிய பணக்காரங்க பெரிய பதவியில இருக்கிற வங்க அவரோட உறவாடுறாங்க. எங்களை மதிக்கப் போறல்ல. இப்படியானவனோடு ஏன் உறவு வைக்கணும்?” என்றான் இஸ்மத்.
“உங்களை மதிக்காம சமீர் நடந்தாரா? எப்போ? எப்படி?” கேட்டாள் ரபீக்கா,
“அதுகளை தவிர்க்கத்தான் இந்த முடிவு. நான் அவனோடயும் அவன்ட மனைவியோடும் பேசிறல்ல. அவனோட நீ பேசிறதையும் நிறுத்தி வைச்சாய். இனி அவன்ட மனைவி யோடும் பேசக்கூடா. என்ன சொல்றாய்?”
இஸ்மத்,

Page 27
வைச் சுக் கொணி டவ. அந்த காமப்பேய்ர கதை நமக்கு தேவல்ல" என்றேன் நான்.
இனி ஏதும் பேசினால் இஸ்மத்துக்கு கோபம் வரும் என்று வாய் மூடினாள் ரபீக்கா.
இஸ்மத்தின் மனைவி இப்போது எனது மனைவியுடனும் பேசுவதில்லை. ஒரு குடும்பத்தின் நிலை ஆணிகளின் மன நிலையை பொறுத்திருக்கும் என்பது எவ்வளவு உண்மை. இஸ்மத் எல்லோரின் வெறுப்பையும் பெற்று வருகின்றான்.
‘'இஸ் மதி கெட் ட மனமுள்ளவன். கெட்டவனோட சேர்ந்த நல்லவளும் கெட்டுப் போக இடமிருக்கு. இஸ்மத்தின்ர மனைவி ரபீக்கா வீடுகளெல்லாம் மேஞ்சு திரியிறாளாம்” சாஹிர் சொன்னான்.
மிஸ்ரியா என்கின்ற ராணியின் வீட்டுக்கு இரவு நேரங்களில் இஸ்மத் சென்று வருவது பலருக்குத் தெரியும். இக்கதை இஸ்மத்தின் மனைவி ரபீக்காவிற்கும் எட்டியது.
‘ஒருவனி மனைவரி க கு துரோகம் செய்து வாறப்போ மனைவி நிச்சயம் அவனுக்கு துரோகம் செய்யிற நிலை வரும்.
“என் கணவர் கூடாத முறையில் நடக்க இப்ப இல்லாட்டியும் எப்பேயாவது மாட்டார். சும்மா கதைச் சிருப்பார். ஊர்தானே வந்து சேரும். ரபீக்கா மிச்சம் கதைக் கட்டும்” என்று அலட்சியமாக மரியாதையானவள். இஸ்மத்தின் பிேனாளட இஸ்மத்தின் மனைவி ரபீக்கா. திரிச்சலால் ரபீக்காவின் திரிச்சல் இதனால் இஸ்மத் தடையின்றி ராணியோடு எங்கு போய் முடியுமோ?” என்றேன் பழகினான். கணவனில்லாத குறை அவளுக்கு நான். எங்கே இருக்கப்பபோகின்றதென ஊரவர்கள் பேசிக் கொண்டார்கள்.
சாஹிர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் என்னை சந்திக்க வந்திருந்தான்.
“கேட்டியா சங்கதியை?’ என்று கேட்ட வாறு வந்தான் சாஹிர்.
“GBTIQÜJ(BUITLITLD Ga#T6ð”
“சமீர் ஊர் கெட்டுப் போச்சு. உதுமான் ரைவர்ர மகள் ராணி என்ன மோசமானவள். இஸ்மத்தின் வைப்பாட்டியா இருக்காளே! பாவம் புருஷன் வெளியே இருந்து சுளை சுளையாக அனுப்புறான். நன்டி இல்லாம இவ இங்க நடக்கா” என்றான் சாஹிர்.
“புருஷன் இருக்கிறப்போ மச்சானையும்
 
 
 
 

அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவய் பயணம்
- டொமினிக் ஜீவா
திருநாவுக்கரசு அவர்களுடைய அழைப்பை ஏற்று நான் கொழும்பிற்குப் புறப்பட ஆயத்தமானேன். மல்லிகைக்குச் சொந்தமாக அச்சக வசதிகளைத் தேடிக் கொள்வது மாத்திரம் என்னுடைய நோக்கமாக இருந்துவிடவில்லை. கொழும்பு சென்று திரு அவர்களின் கடித அழைப்புச் சம்பந்தமாகப் பேசி ஒரு முடிவுக்கு வருவதுடன், அப்படியே தமிழகம் சென்று சில நாட்கள் அங்கு தங்கி, எனது நீண்ட கால இலக்கிய நண்பர்களையும் நேரில் பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், குருசுவாமி அண்ணாச்சியின் மூத்த மகனுடைய திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வருவதுதான் எனது நோக்கமாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ஓராண்டுக்கு இரண்டு தடவைகள் நான் தமிழகம் போய் வருவது வழக்கம். அப்படிப் போய் வருவதால் பல இலக்கிய நண்பர்களின் நேரிய நட்புக் கிடைப்பது மாத்திரமல்ல, பல இலக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டும். அது சஞ்சிகை வளர்ச்சிக்கும் பெரும் பயனாக இருக்கும். எழுத்தாளன் என்கின்ற முறையில் பல இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் இடையிடையே சித்திக்கும்.
எனவே இந்த இடைக் காலத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும்
என என் மனதில் ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டேன். இத்தனை தீர்மானங்களையும் உள்ளடக்கிக் கொண்டு கொழும்பு மாநகருக்குப் பயணமானேன்.
பாங்ஷால் வீதியில்தான் திருநாவுக்கரசு அவர்களுடைய அலுமினியக் கம்பெனி பொழுது இருந்தது.
ஒருநாள் காலை பத்து மணியளவில் விலாசத்தை மனனம் செய்து கொண்டு

Page 28
அவரது கம்பெனியைச் சென்றடைந்தேன்.
கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த அவர், என் முகத்தைக் கண்டதும் எழும்பி வந்து வரவேற்றார்.
உள்ளே சென்று அமர்ந்த சமயம், ஒரு பக்கம் வீற்றிருந்த இளவயசுக்காரர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். ‘இவர் மிஸ்டர் ராஜலிங்கம்..” என்றார். எனக்கு முன்னரே ராஜலிங்கம் அவர்களை நன்கு தெரியும். இவர் இந்த நாட்டின் பிரபல பாடகி சத்யபாமாவின் கணவர் என்பதும் ஏற்கனவே எனக்குத் தெரியும். பிற்கால கட்டங்களில் மல்லிகை வளர்ச்சிக்கு இவர் பலவழிகளிலும் எனக்கு உதவி செய்து வந்துள்ளார். அது வேறு கதை.
எங்களது சுமுகமான அறிமுகங் களுக்குப் பின்னர் நான் அவருக்கு எழுதிய கடித வாசகங்கள் சம்பந்தமாக நேரடியாகப் பேச்சை ஆரம்பித்தார்.
நான மல்லிகையைத் தற்காலிகமாக ஏன் நிறுத்தி வைத்துள்ளேன் என்ற சிரமமான நெருக்கடி நிலையையும் அவரிடம் விஸ் தாரமாக எடுத் துச் சொனி னேன் . அத் துடன் “உங்களுடைய உதவியைக் கோரும்படி ரசிகமணி கனக செந்திநாதன் தான் ஆரம்பத்தில் ஆலோசனை சொல்லித் தந்தவர் என்ற உண்மையையும் ஒன்றும் விடாமல் ஒளிக்காமல் சொல்லி வைத்தேன்.
'அப்படியானால் ஒன்று செய்வம். மல்லிகைக்குத் தேவையான அத்தனை அச் சுச் சாமாண் களையும் நீங்களே தீர்மானித்து, எடுத்துள்ள சாமான்களுக்கான பில்லை என்னட்டைத் தந்து விடுங்கோ. நான்_பில்லுக்குரிய காசைக் கொடுத்துக்
எனது சூழ்நிலை யையும்
கொள்ளுறன்.”
நான் இத்தனை சுலபமாகவும் சாதகமாகவும் இந்தப் பிரச்சினை மிகக் கச்சிதமாகத் தீரும் என உணர் மையிலேயே நம் பரியரி ருக்கவில்லை.
என் நெஞ்சில் புத்துாக்கம் பிறந்தது.
"எடுத்த சாமான்களுக்காகக் கஷடப்பட வேண்டாம். எங்கட லொறியிலை அவைகளை யாழ்ப் பாணத்திற்கு அனுப்பி வைக்கிறம். சரிதானே?”
இத்தனை சாதகமான சூழ் நிலையை என்னால் சீரணிக்கவே சற்று நேரம் இயலவில்லை.
மலிபன் வீதியில் அப்பொழுது
பிரபல அச்சக சாதன நிலையம்
ஒன்றிருந்தது.
நடந்து போகக் கூடிய தூரம் தான்.
எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் தனி னம் பிக் கையுடனும் அந்த நிறுவனத்தை நோக்கி நடையைக் கட்டினேன். அன்பளிப்பாகக் கிடைத்த போதிலும் நான் ஆவலா திப்படவில்லை. மிகப் பொறுப் புணர்ச்சியுடன் மல்லிகைக் குத் தேவையானவைகளை எழுத்தில் அவர்களிடம் சேர்ப்பித்தேன்.
“பில்'லில் எல்லாவற்றையும் பதிந்து கொணி ட அவர்கள், எல்லா வகையான சாதனங்
 
 
 

களையும் ஒருங்கு சேர்த் து இணைத்துத் தர ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் செல்லும் என்று சொன்னார்கள்.
எனக்கும் அது வாய்ப்பாக இருந்தது. இந்தத் தாமதம் எனது தமிழகப் பயணத்திற்கு வாலா ujLDT3 si60)LD55g).
திரும்ப வந்து 'பில்லைத்
திருவிடம் சமர்ப் பரிதி தேனி , * உங்களது விலாசம் தான் அங்கு கொடுத் திருக் கிறேன். பாரமான ஈயப் பொருட்கள் . எல்லாம் இங்கேதான் அனுப்பு வார்கள் . இவைகளை ஒன்று விடாமல் யாழ்ப்பாணத்துக்கு எனக் கு அனுப்பி வைப் பது உங்கடை பெரும் பொறுப்பு!” என்றேன்.
திரு மகிழ்ச்சியுடன் பில்லைப் பெற்றுக் கொண்டார். “நாளைக் காலையிலை பத்து மணி போல வாரும். காசைத் தந்துவிடுகிறன்’ என்றார். பில்லில் கணிசமான தொகை பதியப்பட்டிருந்தது.
அடுத் து குருசுவாமி அண்ணாச்சியின் மகனது திரு மணத்திற்குப் பாழையங்கோட்டை செல் ல வேண்டும் . ஆயத் த LDITs (360T6.
தான் நேர காலத் தோடு ஊருக்குப் போக வேணடும் .
எனவே விமானத்தில் போகலாம் என என்னையும் அழைத்தார்
“சேர்ந்து போகலாமே”
அவர்.
அணுகி, மிக நட்பாக
விமானத்தில் பாழையங் கோட்டைக்குப் போவது சுற்று வழி. அத்துடன் அது அலுப்புப் பிடித்த பிரயாணமும் கூட. எனக்குத் தமிழ் நாட்டுக்கு 'ராமாநுஜம் கப் பலரில் போவது தான் பிடிக் கும் . சந்தோஷமான பிரயாணம் மாத்திரமல்ல சனங்களையும் பார்த்துப் பேசலாம்.
ფ9 ([b Ꮽ5 Ꮮ- 60Ꭰ 6Ꮒl நான் uff Ö L பாணத்திலிருந்து புறப்பட்டுத் தலைமன்னார் ஊடாக ராமாநுஜம் கப்பலில் ராமேஸ்வரம் சென்றிருந்தேன்.
கப்பல் புறப்பட்டுச் சில மணி நேரம் இருக்கலாம். கப்பல் சிப்பந்திகளில் பலர் என்னை நோக்கி நேசபூர்வமான புன்முறு வலுடன் வரவேற்றார்கள். சிலர் நான் எதிர்பார்க்காமலே வலிய வந்து உதவி னார்கள். அன்பு செலுத்தினார்கள்.
எனக்கென்றால் பெரிய ஆச்சரியம்.
இந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என யோசித்து யோசித் துப் பார்த்தேன் . எனக்கொன்றும் விளங்கவில்லை.
மதிய நேரம். ஓர் இளைஞன் என்னை 'மத்தியானச் சாப்பாடு எங்களுடையதாக இருக்கட்டும். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டு. எங்களது ஆசையை நிறைவேற்ற வேண்டும்!” என வெகு பவ் வியமாக என்னுடன் உரை யாடினான். அத்துடன் 'நானும் ராமேஸ் வரத்தில்தான் இருக்கிறேன். நீங்க இரவு ராமேஸ்வரத்தில் தங்கினால் அருகேயுள்ள என்னுடைய விட்டுக்கும் நீங்க ஒரு வாட்டி வரவேணும். அங்கே எனது மனைவிக்கு உங்களை அறிமுகப்படுத்த வேண்டு மென்பது எனது விருப்பம்!” என்றான்.
‘நூற்றுக் கணக்கான பிரயாணிகள்

Page 29
இந்தக் கப் பலரில பரிரயாணம் செய் கரின் றார்கள் . இதில uu Typ li பாணத்தவர்களும் அநேகர் வருகின்றனர். இவர்கள் அத்தனை பேர்களையும் விட, என்னிடம் ஏன் இந்த அதே கரிசனை காட்டுகின்றனர்?’ என நினைத்து ஆரம்பத்தில் நான் குழம்பித்தான் போய்விட்டேன்.
எனக்கு இது புதிர் கலந்த மர்மமாக இருந்தது.
மதிய உணவும் கொண்டு வந்து தந்தார்கள்.
ராமாநுஜம் கப்பல் காப்டனுக்குத் தயாரித்த சாப்பாட்டில் ஒரு பகுதி எனச் சொல்லி, அந்தச் சுவையான உணவு வகைகளை எனக்குப் புசிக்கத் தந்தனர்.
இத்தனை உபசாரங்களும் எதற்காக என்றே முதலில் எனக்குப் புரியவில்லை.
சாப்பாட்டு நேரத்தில் வற்புறுத்திக் கேட்டதற்குப் பின்னர்தான் அந்த உண்மை எனக்குத் தெரியவந்தது.
சில காலத்திற்கு முன்னர் குமுதம் தீபாவளி மலர் ஒன்றில் எனது நூலான அநுபவ முத்திரைகளின் ஒரு பகுதியை எனது புகைப் படத்துடன் மறுபிரசுரஞ செய்திருந்தனர்.
அதைப் பார்த்துப் படித்திருந்ததின் பின் விளைவுகளே இந்த இராசோபசார வரவேற்பென்பதை - இறுதியில் உணர்ந்து கொண்டேன்.
இப்படியான ஓர் அநுபவம், கடந்த முறையும் ஒரு சம்பவம் ராமேஸ்வரம் சுங்கக் காரியாலயத்தில் எனக்கேற்பட்டிருந்தது.
அந்தப்
பயணத் தில்
மறைந்த
எழுதி தாளர் காவலுTர் ஜெகநாதனும் என் கூட வந்திருந் திருந்தார்.
நாங்கள் இருவரும் கப்பலை விட் டிறங் கரி சுங் கப் பரிசோ தனைக்காக நீண்ட "கியூ வரி சையில் வெகு பொறுமையாகக் காத்திருந்தோம்.
இந்த நீண்ட வரிசையில் போய் சுங்கச் சோதனைகளை முடித்துக் கொண்டு மதுரைக்குப் போவதென்றால் ரெயிலைத் தவற விட்டு விடுவோம்.
என்னதான் செய்வது எனத் தெரியாமல இருவரும் யோசனையில் மூழ்கிப் போய் வரிசையில் மெல்ல மெல்ல ஊர்ந்து கொணி டிருந்த சமயம் , சுங் க அதிகாரி ஒருவர் குளியலறைப் பக்கம் போய்விட்டு எம்மைக் கடந்து காரியாலயம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தவர், சற்று நின்று என்னை உற்றுப் பார்த்தார். ‘என்ன ஸார், நீங்க எல்லாம் இந்தப் பூப்பாட்டிகளோடு நிக்கிறீங்க? என் பின்னே வாங்க வாங்க. நீங்க மாத தரம் தானி தனியாக வாரீங்களா?’ என எண் னைப் பார்த்துக் கேட்டார். ‘பூப்பார்ட்டி’ என்றால் அங்குமிங்கும் சாமான் களை எடுத்துவிற்கும் கும்பல்.
நான் அசட்டுச் சிரிப்புடன் பக்கத்தே வந்த நண்பரைச் சுட்டிக் காட்டி, 'அவரும் என் கூட வருகிறார்!’ என்றேன்.
 

"அவரும் உங்களைப் போல, ஒரு எழுத்தாளர் தானா?”
‘ஆமா. ஆமா." என்றேன்.
‘சரி! நீங்க என் பின்னாலே வாங்க...' எனச் சொல் லிக் கொண்டே, அவரச அவரசமாக
நடையைக் கட்டினார்.
நாமிருவரும் ஓட்டமும் நடையுமாக அவரைப் பரிணி தொடர்ந்தோம்.
சுங்க அறைக்குள் நுழைந்த அவர், எனது பொருட்களை ஒரு
பக்கமாக வைக்கச் சொல்லிவிட்டு,
'' iòLDT UTri6p6È 35 T 5 D - 5 நண்பரின் பொருட்களை மே லோட்டமாக ஒருதடவை தட்டிப் பார்க்கிறேன்” என்றார். தொடர்ந்து * ஏதாவது விலை மதிப்பான பொருட்களை நீங்க வைத்திருக்க வில்லையா?” என்றார்.
என்னை முந்திக் கொண்டு காவலூர் ஜெகநாதன் ‘இல்லை ஸார். அப்பிடி ஒண்டுமே நாங்க கொண்டு போகவில்லை!" என்றார்.
உடுப்புப் பெட்டியை விரியத் திறந்து உடைகளை எடுத்துத் திருப்பித் திருப்பி ஆராய்ந்து பாாததாா.
ஒரு உயர்தரமான கைக் கடிகாரமொன்று உடுப்பு மறைவுக் குள்ளிருந்து "பட்டென்று கீழே விழுந்தது.
நானென்றால் அவமானத் தாலும் நம்பி உதவ வந்த
ஒருவரை ஏமாற்றிவிட்டோமே என்ற மனச்
சங்கடத்தாலும் பேச்சு மூச்சற்று நின்று கொண்டிருந்தேன்.
அதிகாரி என்னைக் கூர்ந்து பார்த்து முகத்தைச் சுழித்துக் கொண்டார். சற்று நேரம் மெளனம் காத்தார்.
‘ம். ம். சரி. சரி. நீங்க எழுத்தாளர் என்கிறதால்தான் இத்தனை மரியாதையாக நடத்தினேன். பரவாயில் லை. நீங்க மதுரையில் ரெயில் பிடிக்கலாம்’ எனச் சொல்லி, கையில் வைத்திருந்த வெண் கட்டியால் சரி போட்டுவிட்டு நகர்ந்தார்.
இன்றும் யோசித்துப் பார்க்கிறேன். அவர் எந்தத் தகவலரின் மூலம் என னை எழுத்தாளனாக இனங்கண்டு கொண்டாரோ என்பது தெரியவேயில்லை!
தன்னிடம் இப்படியான ஒரு பொருள் இருக் கரிறது என முன்னரே நண்பர் ஜெகநாதன் என்னிடம் சொல்லியிருக்கலாம். இதொன்றும் செய்யாமல் என்னையும் இந்தத் திடீர்ச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்ட காவலூர்
ஜெகநாதனுடன் தொடர்ந்து சென்னைக்குச்
பிரயாணம் செய்யவிரும்பவில்லை.
அவர் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார். நான் மதுரையுடன் எனது பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டேன்.
இத்தனை சுகமான, மனதில் பதிந்து வைக்கத் தக்கதான சுய அநுபவங்கள் எனக்கு ராமாநுஜம் கப்பல் மூலம் தமிழகம் சென்று வரும்போது அடிக்கடி ஏற்பட்டதுண்டு.
அத்துடன் பல்வேறு வகைப்பட்ட, துறை சார்ந்த மக்களைப் பார்த்திருக்கின்றேன். இப்படி மக்களைப் பார்ப்பதிலேயே எனக்கு அலாதியான ஆவலுண்டு. இப்படியான

Page 30
மக்களைப் பார்ப்பதிலும் அம் ம்க்களுடன் கலந்து பழகுவதிலும், தரிசிப்பதிலும் புத் துT க்கமும் புதுப் ս fr it 60) 6ն եւ լճ புதுப்பொலிவும் பெற்றுள்ளேன் என்பதைப் பல தடவைகள் நான் எழுத்து வடிவில் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
நெருக்கடி காலச் சூழ்நிலைகளால் ராமாநுஜம் கப்பலின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்படும் வரை எனது தமிழகப் பிரயாணம் இக் கப்பலின் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளதை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் பொழுதும் மனதை என்னமோ செய்கின்றது.
அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து, பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று, சென்னைக்கோ திருச்சிக்கோ போய் வருவது ரொம்பவும் சிரமப்பட்ட சுற்று வழிப் பயணம். பணச் செலவு வேறு.
ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு மினிபஸ் மூலம் தலைமன்னார் சென்றுவிட்டால் அடுத்த நாள் இரவே மதுரை நகருக்குப் போய்விடலாம். இது குறுக்கு வழி.
இதையொட்டியே நான் மதுரையூடாக திருமணத்தில் கலந்து கொள்வதின் நிமித் தம் பாழையங் கோட் டை சென்றடைந்தேன்.
வரும் விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதியாக பாழையங்கோட்டை நகரில்
ஹோட் டல வசதிகளைச் செய்து தந் தரிருந்தார், நணர் பர் குருசுவாமி அண்ணாச்சி.
இந்தத் தகவல்களை ஏன் இங்கு விஸ் தாரமாகச் சொல்லி வைக்கிறேன்
என்றால் அணி னாச்சி அவர்கள் தான்
தமிழகத்தினருக்கு ஆரம்ப கால கட்டத்தில் மல்லிகை இதழ்களை அறிமுகப்படுத்தி வைத்தவராவார்.
விடிந்தால் திருமணம்.
குருசுவாமி அவர்கள் ஊரில் செல் வாக்கு மிக்கவர். நிலச் சுவான்தார். பெரும் பண்ணையார். இன சனப் பெருக்கங் கொண்டவர். சைவப்பிள்ளைமார் பரம் பரையைச் சேர்ந்தவர். அத்துடன் புதுமைப் பித்தன் காலத்திலிருந்தே இலக்கிய ஈடுபாடு கொணி டவர். எழுத்
தாளர்கள் எங் கிருந்தாலும் நேசிக்கப் பழக்கப்படுத்தக் கொண்டவர்.
இப்படியானவரினது வீட்டு
மூத்த மகனது திருமணத்தைப் பற்றிச் சொல் லியா தெரிய
வேண்டும்?"
பல எழுத்தாளர்களை நான் நேரில் பார்த்துப் பழக்கம் செய்து கொண்டேன். சிலரை இந்தத் திருமணத்தில் தான் முதன்முதலில் சந்தித்து நட்புக் கொண்டிருந்தேன். இரவு முழுவதுமே பேசிப் பழகச் சந்தர்ப்பம் இதனால் ஏற்பட்டது.
எனது பெயரைச் சரஸ்வதி காலத்திலேயே அறிந்திருந்தனர், பலர். அத்துடன் மல்லிகையின் தொடர் தொடர்பு காரணமாக, எனது இலக்கிய ஆர்வத்தையும் விடா முயற்சியையும் பல தமிழக எழுத்தாளர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர். . . .
(மேலும் சந்திக்கிறேன்.)
 
 

ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள்
மேமன்கவி
சப்த ஸ்வரமும் இலங்கை கலைஞர்களும
சன் தொலைக்காட்சி நிறுவனம் ஒவ்வொரு ஞாயிறு தோறும் காலை ஒளிபரப்பும் “சப்த ஸ்வரம் எனும் இசை நிகழ்ச்சி பலரது கவனத்தைக் கவரும் நிகழ்ச்சி ஆகும். இது நம் நாட்டு சக்தி தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்படுகிறது. இசைத்துறையில் ஆர்வமுள்ள இளைய பாடகர்கள் கலந்து கொண்டு தம் இசைத்துறை சார்ந்த திறனை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியினை பாடகர் ரமணன் மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கிறார். பங்கேற்கும் இளையவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் வகையில் அவர் நிகழ்ச்சியினை தொகுத்து அளிக்கும் பாங்கு அவருக்குரிய ஓர் பாணியாக அவர் வளர்த்து இருப்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரபலமான இசைத்துறைச் சார்ந்த ஒரு பிரமுகர் நடுவராக கலந்து கொண்டு பங்கு பெறும் பாடகர்களில் திறனை மதிப்பீடு செய்கிறார். சினிமாப் பாடல்களை, நாட்டார் பாடல்களை, கீர்த்தனைகளை பாட வைப்பதோடு தாளம், ஸ்ருதி மாற்றங்களுடன் அவைகளைப் பாட வைத்து அப்பாடகர்களின் திறன்களை மதிப்பீடு செய்யும் முறை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடக இசைத்துறையில் பயிற்சிப் பெற்றவர்களுக்குத்தான் அந்த நிகழ்ச்சியில் பங்குப் பெற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பது தெரிகிறது.
கடந்த ஞாயிறு 15.06.2003 அன்று சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரம் நிகழ்ச்சியில் இலங்கை கலைஞர்கள் நான்கு பேர் கலந்து கொண்டார்கள். இலங்கையில் பல இசைக் குழுக்களில் பாடிய, பாடும் பாடகர்களான முருகேசு, -நிலுக்வி, யாதவன், அபர்ணா ஆகியோர் பங்கேற்று தம் திறமையை வெளிப் படுத்தினார்கள். தமிழக கலைஞர்களுக்கு இசைத்துறையில் நம் இசைக் கலைஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபணம் செய்தது. அத்தோடு எல்லாத் துறையிலும் தமிழகத்தாரின் கவனம் எம் பக்கம் திரும்பி இருக்கிற்து

Page 31
என்ற நமது கருத்துக்கு பலம் சேர்க்கும் ஒர் நிகழ்வாக சப்த ஸ்வரத்தில் இலங்கை கலைஞர்கள் பங்குப் பெற்ற நிகழ்வு அமைந்தது எனலாம்.
2. £360m 600Tucupith
நவீன தமிழ் கலை Seosau(up in
கணனித் துறிையில் தமிழின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழல் விரிவாகி வருகிறது. ஆங்கிலத்திற்கு பிறகு இணையத்தில் - அதிக அள வில் பயன்படும் மொழி தமிழ்தான் என்று சொல்லப்படுகிறது. பலதுறை சார்ந்த நிறு வனங்கள் தனிநபர்களின் முயற்சியினால் ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் ஒழுங் கமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை மூலம் தேவையான துறை சார்ந்த தகவல் களை தமிழில் பெறக்கூடியதாக இருக்கிறது. இந்த வரிசையில் நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியிலும் இணையத்தின் பங்கு விரிவு பெற்றுவருவதை அவதானிக்கக் கூடி யதாக இருக்கிறது. அவ்வாறான பங்கு நவீன தமிழ் கலை இலக்கியத்தில் தொடர்புடைய தனி நபர்களின் இணையத்தள பக்கங்களின் ஊடாகவும், இணையத்தளங்களின் நடத்தப் படும் தமிழ் மின்னிதழ்கள் மூலமும் செலுத்தப் படுகிறது அம்பலம். ஆறாம் திணை, திசைகள் மற்றும் இலங்கையிலிருந்தும், புலம் பெயர்ந்த நம்மவர்களின் இணைத்தள முயற்சிகளிலும், நவீன தமிழ் கலை இலக்கிய முயற்சிகளை காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறு சஞ்சிகை களை பல்வேறு இணையத்தளங்களின் முகவரிகளின் ஊடாக காணக் கூடியதாக இருக்கிறது. இலங்கையின் நமது தேசிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி,
தினக்குரல், சுடரொளி போன்றவை கூட தமக்கான இணையத் தளங் களை உருவாக்கி இருக்கின்றன. நான் அறிந்த மட்டும் ஞானம் சஞ்சிகை மட்டும்தான் இலங்கை யிலTருந்து வெளிவரும் சிறு சஞ்சிகைகளில் தமக்கான ஒரு இணையத்தள பக்கத்தை அமைத்து இருக்கும் ஒரே சிறு சஞ்சிகையாகும்.
இவ்வாறான இணையத்தள பக்கங்களில் நவீன தமிழ்கலை இலக்கிய சம்பந்தமான பல்வேறு
கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
பல நல்ல கலை இலக்கியப் படைப்புக்கள் இடம் பெறுகின்றன. இதன் நவீன கலை இலக்கிய வளர்ச்சியில் இணையம் பங்கு கொள்கிறது.
இணையத் தொடர்பில் இருந்து கொண்டே (online) மேற்குறிய இணைத் தளங்களைப் புர்வையிட வேண்டி இருக்கிறது. பொதுவாக இலங்கையின் தொலைபேசி கட்டண அமைப்பும் இணைய இணைப்பைப் பெறுவதிலுள்ள பொருள் செலவு போன்ற இறுக்கங்களின் காரணமாக இலங்கையில் இணையத்தின் பாவனை பரவலாக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேற்குறித்த இறுக் கங்கள் தளர்த்தப்படும் பட்சத்தில் இலங்கையில் இணை யத்தின் பாவனையாளர்கள் அதி கரிக்கக் கூடிய சாத்தியம் இருக் கிறது. அச்சாத்தியத்தின் மூலம் இணையத்தில் தமிழ் மூலம் நடந்தேறும் நவீன கலை இலக்கிய
 
 
 

முயற்சிகளைப் பற்றி இலங்கை தமிழ் வாசகர் களும் பரவலாக அறியக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.
3. கோவை ஞானியின் பணி
தமிழகத்து சிறுசஞ்சிகைச் சூழலில் மிகவும் பரிச்சயமானவர் கோவைஞானி அவர்கள், இன்றும் கண் பார்வை பாதிக் கப்பட்ட நிலையிலும் கூட ஓயாத கலை இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருபவர். பல துறை சார்ந்த சிந்தனையிட்ட தனது பார்வையைச் செலுத்தி வருபவர். மார்க்சியம், பெரியாரியம், பெண் ணியம் , அறிவியல், பின்-நவீனத்துவம், தலித்தியம் இப்படியாக பன்முகச் சிந்தனையரிட்ட இவர் முன் வைத்திருக்கும் கருத்துக்கள் மூலம் பல்வேறு விவாதங்களும் அறிமுகங் களும் ஏற்பட வழி வகுத் து இருப்பவர். பரிமாணம், நிகழ் போன்ற சிறுசஞ்சிகைகளை வெளியிட்ட தோடு, அச்சஞ்சிகைகளில் வெளி வந்த கவனத்திற்குரிய விவாதங் களையும் , கட்டுரைகளையும்
தொகுப்பு நூற்களாக வெளியிட்டு
இருக்கிறார். இவர் நடத்திய நிகழ் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை களை இவர் தொகுத்து காவ்யா வெளியீடாக வந்திருக்கும் 'அறிவி யல் அதிகாரம் ஆன்மீகம்' எனும் நூலில் இடம் பெற்று இருக்கும் கட்டுரைகள் தமிழ் சமூகச் சூழலில் மிகவும் கவனத்தைப் பெறக் சூடியவை. அந்த நூலின் முன்னுரை
யில் ஞானி அவர்கள்
18-19ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு உல கில் வளர்ச்சி பெற்ற அறிவியலும், தொழில் நுட்பமும் உலக மக்களுக்கு இனி ஒரு புதிய சொர்க்கம் உருவாகும் என்ற நம்பிக்கையை தந்தன. உலகில் இனி வறுமைக்கு இட மில்லை. போர்களுக்கு இனித் தேவையில்லை. சமத்துவம் தழைக்கும். இவ்வாறெல்லாம் நம்பிக்கைகளை வழங்கிய அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நம்ப முடியவில்லை. இவை உலக அளவிலான ஆதிக்கச் சக்திகளின் வசத்தில் செயல் படுகின்றன. மக்கள்மீது அடிமைத் தனத்தைத் திணிக்கின்றன. வறுமை முதவியவை தீரவில்லை என்பது மட்டுமல்ல, இனி அதிகரிக்கவும் செய்யும் ஆதிக்கங்களின் வசத்தில் அகப்பட்ட நிலையில் மனித வரலாறு இனிக் கேள்விக்கு உள்ளாகின்றது.
இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து சில பத்தாண்டுகளாக உலக அளவில் அறிஞர்கள் ஆய்கின்றனர். அறிவியலுக் குள்ளும், தொழில் நுட்பங்களுக்குள்ளும் ஆதிக்கங்கள் நுழைந்து தங்கி விட்டன. அறி வியல் என்பது நடு நிலையானது என்பது இன்று உண்மையில்லை. கருவிகள், இயந்
திரங்கள், நிறுவனங்கள் என்ற வடிவங்
களுக்குள் மட்டுமல்லாமல் அறிவியல் என்று சொல்லப்படும் கோட்பாடுகளுக்குள்ளும் ஆதிக்கம், அதிகாரம் தங்கியிருக்கிறது. இவற்றைக் களைந்தால் ஒழிய மக்களுக்கு இனி வாழ்வு இல்லை. விடுதலை இல்லை.
பசுமைப்புரட்சி, உயிரித் தொழில்நுட்பம், தகவல் புரட்சி, கணனி என்று வளர்ச்சி பெற்று வருவது அறிவியல்தான் என்றபோதிலும், இவற் றுக்குள் தங்கியுள்ள அசுரத்தனமான ஆதிக்கங்

Page 32
களை இன்று நாம் தெளிவாக உணரு கிறோம். இந்த ஆதிக்கங்களை யார் செலுத்துகிறார்கள் என்பது குறித்து இப்போது நமக்கு ஐயமில்லை' என கூறிச் செல்லும் ஞானி அவர்கள் தொடர்ந்து.
'அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம், மருத்துவம் ஆகியவற்றிற் குள் ஆதிக்க சக்தி தங்கியிருப்பது போலவே அறிவியலுக்குள்ளும், மதநிறு வனங்களுக்குள்ளும் தங்கியிருக் கின்றன.
என அந்த நூலில் இடம் பெற்ற கட்டுரைகளின் உள்ளடக்கங்களின் நோக்கத்தை அறிமுகப்படுத்தும் வகை யில் எழுதி இருக்கும் குறிப்புக்கள் தமிழ் சமூகச் சூழலில் புதிய சிந்தனைகளை யும், விவாதங்களையும் எழ வழி அமைக்கும் வகையானவை.
இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங் களில் கோவைஞானி அவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் நம் நாட்டுச் சூழலில் வைத்து விவாதிக்கபட வேண்டி யவை.
கோவைஞானி அவர்களின் எல்லாக்
கருத்துக்களுடன் நாம் ஒத்துப் போகி றோமா இல்ல்ையா? என்பது அவரது கருத்துகளிட்ட விரிவான விவாதங் களுக்கு பிறகு தீர்மானிக்க வேண்டி யவை. ஆனால் நீண்ட காலமாக தமிழ் சமூக சூழலின் அவதானத்தைப் பெறும் வகையிலான பல்வேறான சிந்தனை களை கிளரும் வண்ணம் சிந்தனைத் தளத்தில், தனிப்பட்ட பொதுவான இடர்வு களையும் மீறியும் செயற்பட்டு கொண்டி ருக்கும் இவரது ஓயாத பணியினை நாம் கெளரவித்துதான் ஆகவேண்டும். -
PHOTOGRAPHERS
RN CoMPUTERIZED
& CHILD SITTINGS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூண்டில்
சுணர்னாகம் க.நவநீதனர்
Y மல்லிகைச் சஞ்சிகையின் தொடர் வரவு எனக்குப் பெரிய ஆக்க பலமானது மல்லிகைச் சஞ்சிகை வாசகர்கள் என்னுடன் ஒத்துழைக்கிறார்கள். நான் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். நூல்களைச் சந்தைப்படுத்துவது என்னைப் பொறுத்தவரை அப்படியொன்றும் சிரமமானதொன்றல்ல.
வெளர்ளவத்தை நா. சகாதேவனர்
Y சகல நாடுகளிலிருந்தும் தொலைபேசியில் அடிக்கடி விசாரிக்கின்றனர், இலக்கிய நண்பர்கள். இவர்களில் சிலர் கொழும்பு வரும்போது மல்லிகையை நாடி வந்து, நூல்களைக் கொள்வனவு செய்து கொண்டு திரும்புகின்றனர். சொல்லப் போனால், புலம் பெயர்ந்த இலக்கியச் சுவைஞர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள சஞ்சிகை மல்லிகை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
மானிப்பாய் ம, கதிர்வேலனர்
Y மல்லகை தோன்றிய கால கட்டத்தில் பிறந்தவர்கள் இன்று திருமணம் செய்து மக்களைப் பெற்று, அந்த மக்களும் இன்று கல்லூரியில் படித்துக்

Page 33
கொண்டிருப்பார்கள். கைலாசபதி சொல்வார்: ஐந்தாண்டுக்கு ஒருதடவை ஓர் இலக்கியத் தலைமுறை மாறி வருவதாக. இந்த 38 ஆண்டுகளில் எத்தனை ஐந்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் எனக் கணக்கெடுத்துப் பாருங்கள். தொடக்க காலத்தில் எழுதியவர்கள் எழுதாதவர்களைப் பற்றிக் கணக்குக் கேட்கிறீர்கள். இன்று எத்தனை புதுமுகங்கள் எழுதி வருகின்றனரே, அதையும் கவனமெடுத்துப் பாருங்கள்.
ஹட்டன் எம்.சரவணனர்
Y தரமான இலக்கிய நூல்களைக் கருத்துான்றிச் சுவைத்துப் படித்து வந்தால் தேகத்தில் நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியம் மலரும். மனசும் இலேசாக இருக்கும் என நவீன விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
சாக வச்சேரி க.தவசலனி
Y பணப்பரிசு இரண்டுகோடி எழுபத்தொரு இலட்சத்து ஐம்பது ரூபாய். அத்துடன் லத்தீன் மொழியில் பொறிக்கப்பட்ட பாராட்டு வாசகம் கொண்டதும் மறுபக்கம் நோபல் அவர்களுடைய உருவம் கொண்டதுமான தங்கப் பதக்கம் ஒன்றும்.
மருதானை எம்.ரமணனர்
Y உண்மை. இன்று தரமான இலக்கிய சர்ச்சைகளில் யாருமே ஈடுபடுவதாகத் தெரியவில்லை. அப்படி நடந்தாலும் தனிமனித தாக்குதல்களும் பொச்சரிப்புகளும் வயிற்றெரிச்சல்களுமே இலக்கிய சர்ச்சைகளாக இடம் பெறுகின்றன.
இலக்கியத்தை - இலக்கிய வளர்ச்சியை - மனதார நேசித்து வரவேற்கத்தக்க
ஒரு பத்திருபது பேர்கள் ஓரிடத்தில் மாதா மாதம் சந்தித்து மனந்திறந்து --- سسسسسسسسسسسسسسسسسس-------س---
 
 
 
 

உரையாடிப் பிரிய வேண்டும். அந்த உரையாடல்களைத் தொகுத்து மல்லிகை யில் கட்டுரையாக வெளியிட்டு வரவேண்டும் என்பது எனது திட்டம். முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே!
நுவரெலியா எம்.வி.ராமநாதன்
Y நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. யாழ்ப்பாணமோ, கொழும்பு மாநகரமோ மாத்திரம் முழு நாடல்ல. பரந்து விரிந்து போய்க் கிடக்கிறது இந்த நாடு. இலக்கியச் சுவைஞர்கள் - தரமான இலக்கிய நேசிப்பு மனம் கொண்டவர்கள் நம்மைப் போன்றவர்களை அழைக்க வேண்டும். தத்தமது பிரதேசங்களில் இலக்கியக் கூட்டங்களை ஒழுங்கு செய்துவிட்டு, எம்மை யெல்லாம் கூப்பிடவேண்டும். இதைப் பொறுப்புள்ள இளைஞர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நமது எழுத்தாளர்கள் நாடு பூராவும் சுற்றி வரச் சம்மதிப்பார்கள்.
உரும்பிராயப் எஸ்.தவச்செல்வனி Y தயவுசெய்து அதுபற்றிக் கிண்டிக் கிழறிக் கேட்டு வைக்காதீர்கள். அந்தப் பெண் அப்படியே இடை நடுவில் எனது நினைவிலிருந்து மறைந்து போவதே நல்லது.
Y சுவிஸ் நாட்டுக்கு வரச் சொல்லி ஓர் அழைப்புக் கேட்டுக் கொள்ளுகின்றது.
அடுத்து கனடா வரச் சொல்லி அழைக்கின்றது. அவுஸ்திரேலியா வரச் சொல்லி அவுஸ்திரேலியா சிறப்புமலர் வெளிவந்த காலத்திலேயே நண்பர் முருகபூபதியால்

Page 34
கேட்கப்பட்டேன். இந்த அழைப்புகளுக்கெல்லாம் எனது இதயங் கனிந்த நன்றி களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வசதி வாய்ப்புகள் ஒப்பேறி வந்தால் போய் வரக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறேன். இவைகள் எப்படி இருந்த போதிலும் தமிழகத்திற்கு ஓராண்டிற்கு ஒருமுறை சென்று, அங்குள்ள இலக்கிய நண்பர்களைத் தரிசித்துக் கத்ைத்துப் பேசிவிட்டு வரும் அநுபவமே தனியானது தான்! மறக்கமுடியாதவைதான்.
அட்டாளைச்சேனை எம்.மிராணி சாயப்பு
Y மல்லிகைப் பண்ணையில் நாற்று விட்டு வளர்ந்தவர்கள் யாருமே சோடை போனவர்களல்ல. அவர்கள் இன்றும் இலக்கிய உலகில் பேசப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஒன்றை மட்டும் வெகு உறுதியாக நம்புங்கள். மல்லிகை வெறும் இலக்கியச் சஞ்சிகை மாத்திரமல்ல. அதன் வரவு ஒரு சகாப்தம். இன்று சிலர் அதன் சேவை பற்றி அலட்சியமாகக் கதைக்கலாம். நாள்ை என்றொரு நாள் வரவே செய்யும். அன்று நான் உயிருடன் இருக்கவும் மாட்டேன். ஆனால், அதன் சாதனைகள், அர்ப்பணிப்பு உழைப்பு வரலாறுகள், அதில் எழுதிய படைப்பாளிகளின் படைப்புத் தரங்கள் விதந்து பேசப்படவே செய்யும். அப்பொழுது அன்றைய தலைமுறைக்கு இதுவோர் அதிசயச் செய்தியாகவும் இருக்கும்.
கிளிநொச்சி எஸ்.பரஞசோதி Y தலித் என்ற சொல் "ஸ்தல்' என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது.
மராட்டியத்தில் ஒடுக்கப்பட்டோரைக் குறிப்பிட்டுச் சொல்லும் சொல் இது. கிண்டலடிப்பவர்கள் மொழியை மாத்திரமா கிண்டலடிக்கிறார்கள்? மலத்தைத் தீத்துகிறார்கள். சிறுநீரைப் பருக்குகிறார்கள். இந்த அயோக்கியக் கும்பலின் நேர் வாரிசுகளின் வரலாறு நாளை கிழித்தெறியப்படத்தான் போகின்றது. தலித் என்ற மராட்டியச் சொல், இன்று சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீட்டுச் சொல்லாகவும் மலர்ந்துவிட்டது.
201 - 1/1, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U.K. பிரினன்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
ー S tosiässä
 
 
 


Page 35
El Sea
es
 

July 2003
TS (PVT) LTD
tes of
actional |aკვე ესეევნა .
Aveリe。
●● - ○○。 7ー7軍7