கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பலம் 2003.11

Page 1


Page 2

tLrL YSKi i SiiSii ei i e eiei i u SA iA AKiS TTC-........................ 0.
"ளுககு, வணக்கம்
சற்று இடைவெளிக்குப்பிறகு, இது உங்களுடனான நான்காவது சந்திப்பு படைப்புக்களை பெற்றுக் கொள்வதில் இருந்த சிரமங்களும் படைப்பாளிகளுடன் தொடர்பினை வலுப்படுத்திக்கொள்வதில் எமக்கிருந்த திறமையின்மையும் தாமதத்திற்கான வலுவான காரணங்களாக உங்கள் முன் காட்டமுடியும். எனினும் இந்த இதழ் உங்களை திருப்தி செய்யும் வகையிலேயே தனி உள்ளடக் கதி தை கொண்டுள்ளது என நம்புகிறோம். வாசகர்கள் அம்பலத்தின் வெளியீடு தொடர்பாக தொடர்ந்து கேட்டவாறிருந்தீர்கள். உங்கள் அன்புக்கும் உரிமைக்கும் என்றும் நன்றியுடையோம். இப்போது இலக்கியம் சார்ந்த படைப்பாக்க முயற்சிகள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டு வலுவூட்டப்படுகின்றன. அதற்கு நாட்டில் நிலவும் அமைதிச் சூழல் பெரிதும் துணை நிற்கிறது. போர்க்காலத்தில் அதன் களங்களை சித்தரிக்கும் படைப்புக்கள் குறிப்பிட்டுக் கூறத்தக்கவகையில் பெருமளவில் குவிந்தன. எனினும் இன்று அவைபற்றிய மீளாய்வும் கருப்பொருள் பற்றிய ஆய்வுகளும் நிகழ வாய்ப்பாயிருக்கிறது. படைப் பாளிகள் பலர் தங்களை நேருக்கு நேர் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. பல முத்த படைப்பாளிகளை நேரில் கானும் சந்தர்ப்பம் புதியவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இக்காலத்தினை இலக்கியப்பக்கத்தின் பலமான நகள்வுக்கு ஓர் படிக்கல்லாகவே கொள்ளவேண்டும்.
அச்சுக்கலையிலும் பல புதிய நுட்பங்கள் அறிமுகத்துக்கு வந்துள்ளன. பல வர்ணக்கலவைகளோடு மிகவும் சாதாரண விலைகளிலும் ஏராளமான வெளியீடுகள் வந்தவண்ண முள்ளன. மீண்டும் சஞ்சிகைத்துறையும் பெரும் பிரயத்தனத் துடன் சுழல ஆரம்பித்து விட்டது. எனினும் நம்மிடையேயான வாசிப்பு பழக்கம் இன்னமும் சூடுபிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. பாடசாலை மாணவர்கள் பரீட்சையை மையப்படுத்தி நகர்வது பெரிய காரணம் தான், எனினும் ஆசிரியர்களும் பெரியவர்களும் அவர்களை வாசிப்பு நோக்கி நகர்த்த வேண்டும் என்பதே சரியான கருத்தாக அமைகிறது. எழுத்துலகும் தன்னுடைய வித்துவச் செருக்கினின்றும் சற்று இறங்கி மாணவர்கள், பாமரர்களுக்கு படைப்புக்களைச் செய்யவேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தே. எவ்வாறாயினும் எழுத்துக்கள் பெருக வேண்டும். அவை நல்ல சிந்தனைகளை எல்லோரிடத்தும் ஏற்படுத்தி வாசிப்புக்கலையை பெருக்கி செல்வாக்குப் பெறவேண்டும் என்பதே இன்றைய எம் தேசத்துப் படைப்புகளின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கூட
அன்புடன், அம்பலத்தான்.

Page 3
ந.னேவுகளின் மயான வெளியில் அன்பின் வரண்ட குருதி
நீ வருவதற் கில்லை நானும் அழைப்பதற்கில்லை
கருணாகரன்
மாலைச் சூரியனி மறைகின்றது பாடும் குரல்கள் முறிகின்றன
லா இலைகள் Հ* உதிர்ந்து காற்றில் அலைகின்றன.
இம்பல் வர்ண ேேகத்தின் UP660.60sful Ps) இரைப் பூக்கள் ஒளிகின்றன ஐவளவு அழகாக இருக்கின்றன தெரியுமா?
நீரில்லா வெளியில் இஇ
னில் இசையின்ஸ்நேகமுனை அடுத்த அறையிலிருந்து மெல்லப் பரவி வருகிறது
黏
ஜன்னலோரக் குரோட்ட்னிகளினூடே
ஓதிரில் ,'o இன்னொச்சிப் பூக்க்ளின் மீது இமும் மஞ்சளும் இணப்பந்வை தத்துகிறது இனி கரிய விழிகளில்
ழ்கிறது இ விழிகளின் நடனிம்
இலாவற்றையும் says
இனவுகளாகப் பெருக்கிவிட்டு
தலையும் உறிஞ்சிக்கோண்டு
தன் விட்டுச்சென்றாயா அனிபே?
ஆடம் என்ன்ை
 
 
 
 

நீயெறிந்த வார்த்தைகள் கிடந்து நாறுகின்றன. நானெப்போதும்
மினுக்கங்களிலிருந்தும் பூச்சுகளிலிருந்தும் வெளியேறுகின்றேனர் எணர்பதுண் கோபமெனில்
எளிமையினர்
அழகிய மலரின் இன்மையின் பரிண்னோடும் குழந்தையென நானிருப்பதுனக்குச் சலிப்பூட்டுதெனில் நானென்ன செய்ய?
கோபங்களின் பின்புறமும் சொல்லிக்கொள்ள இருக்கின்றன ஏராளம் சேதிகள் இார்த்தைகளை
இந்தக் காற்று அள்ளிச் செல்கிறது
உன் வரவினிறிய இவ்லுலர் பொழுதில் இனிந்தப் பூக்கள் பூத்தன்
னிந்த இசை அருவயர்கிற்று ஏனிந்தப் பறவை தத்துகிறது?
உடைந்த உறவினி கண்ணாடிச் சில்லுகளில் இன்பரினி வரண்ட குருதி நீம் கடந்த காலத்தின் எச்சமாயிருந்து நகைக்கிறதடி.
-us0pm

Page 4
アスフラスz行ー
っ スー@多。 அரவிந்தன்8.ւմl.634, − தென்னாட்டில் ஓர் ஓவியக்கண்காட்சி மண்டபச்சுவர்களில் மலர்ந்திருந்த இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் கருவண்டுகளாய் மொய்க்கிறது சுவைஞர் கூட்டம்.
ஏர்முனைகொண்டு இத்தரைகீறும் உழவர் முதல், வாய்வல்லமையால் வசீகரிக்கும் வணிகர்வரை வந்திருப்பது கண்டு ஓவியர்களின் உள்ளம் மகிழ்ச்சிப் பரப்பில் மிதப்பதில் வியப்பென்ன இருக்கிறது? -
மெதுவாகப் பாயும் ஆறுபோல அமைதியாகவிருந்த அவ்விடத்தில் திடீரென்று ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது.
பாண்டியன் அவையின் தலைமை ஒவியர்கள் ஆலவாயன்நம்பியும், வானவரையரும் உள்ளே நுழைகிறார்கள்.
இளம் ஓவியன் மணிமாறன் பணிந்து வரவேற்கிறான். “வருக ஐயன்மீர்! தங்கள் பொற்றிருவடிகள் இம்மண்டபத்தே படுவது யாம்பெற்ற பேறே!”
வானவரையர் தலையை நிமிர்த்துகிறார். அவருடைய கரம் மீசையை முறுக்குகிறது.
ஆலவாயன்நம்பியின் உதடுகளில் இளநகை நெளிகிறது. இருவரும் ஒவ்வொரு ஒவியமாகப் பார்வையிட்டுக்கொண்டு வருகிறார்கள் ஆலவாயன் நம்பி ஒவ்வொன்றையும் கூர்ந்துநோக்கி அவ்வப்போது பாராட்டுக்களையும், தேவையான இடங்களில் திருத்தங்களையும் கூறியபடி வருகிறார்.
வானவரையர் எல்லாவற்றையும் குறைகூறியபடி நகைக்கிறார். கசப்பை மாந்தியது போல அவருடைய முகம் கோணிக்கிடக்கிறது. "வானவரையா! இவ்விதம் கூறுதல் ஆகாது. வளரும் பயிருக்கு வெந்நீர் ஊற்றுதல் நன்றன்று. இவர்கள் என்றோ ஒருநாள் சிகரங்களைத் தொடப்போகிறவர்கள். ஆதலின் நிறைகளை நிச்சயம் பாராட்டவேண்டும். குறைகளை நோகாமல் கூறவேண்டும் அதுவே அவர்களுக்கு உரம் மேலும் நாங்கள் அறியக்கூடிய புதிய விடயங்களும் இங்கிருக்கலாம்"
ஆலவாயன்நம்பியின் வார்த்தைகள் மென்மையாக வெளிவருகின்றன. “ஆலவாயா! நீ இவ்வாறு விதந்துரைக்குமளவுக்கு இந்தக் கிறுக்கல்களில் ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தச் சிறுபிள்ளை விளையாட்டுக்களில் பங்கேற்கும் பொறுமையும் எனக்கில்லை. ஏதோ உன்பொருட்டே இங்கு வந்தேன்.” உடன் வந்த மணிமாறன் வானவரையரை அவன் விழிகள் சந்திக்கின்றன. "ஐயா! தாங்கள் புகழ்பெற்ற ஒவியர். மன்னவன் சபையில் மதிப்புடன் மிளிர்பவர். அக்காலத்தில் உயிர்ப்பான ஒவியங்களை அளித்தவர். தற்போது மிகுமுதிர்வில் நிற்கும் தாங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் அதி உன்னத ஓவியமொன்றைத் தீட்டும் தகுதி பெற்றவரல்லவா? அத்தகைய ஒன்றை இவ்வுலகுக்குத் தருவீர்களா?”

அம்பலம் டு
ஆலவாயன்நம்பி சிரிப்பை அடக்கிக் கொள்கிறார். வானவரையரின் விழிகள் சிவக்கின்றன. ஆத்திரத்துடன் தரையை உதைக்கிறார். ஆலவாயன்நம்பியைக் கூடத் திரும்பிப்பார்க்காமல் விருட்டென்று வெளியேறுகிறார்.
☆ ☆ 女 ஆதவனின் ஆர்ப்பரிப்பு அடங்கத்தொடங்கும் அழகான மாலைப் பொழுது. மல்லிகையின் குமிழ்கள் மெல்ல வெடித்து மணம்பரப்புகின்றன.
மாளிகையின் முன்னே தடாகத்தின் அருகில் சிந்தனையுடன் அமர்ந்திருந்த வானவரையரின் நெஞ்சம் கனன்று கொண்டிருந்தது.
"சிறுபயல்! எத்தனை இளக்காரமாகக் கூறிவிட்டான்! பத்து வருடங்களுக்கு மேலாகத் தூரிகையைத் தொடாதிருந்த என்னால் உலகளாவிய ரீதியில் பேசப்படக் கூடிய ஓவியத்தை வரையமுடியுமா? இதுவரை ஏன் நான் முயலவில்லை?"தனக்குள்ளே கேள்விகளைக் குவித்து விடைகளைத் தேடியவர்,
ஒவியந்திட்டவென எதிரில் நிறுத்தப்பட்ட சட்டத்தைப் பார்க்கிறார். ஈற்றில் துணிவுடன் தூரிகையை எடுக்கிறார். தூரிகை அசைகிறது. அசையும் கரத்தில் மெல்லிய நடுக்கம் தொற்றிக் கொள்கிறது. கோடுகள் கிறுக்கல்களாகின்றன. வெறுப்புடன் தூரிகையை தடாகத்துக்குள் எறிகிறார். உயரத்தொடங்கிய முழுமதி அவரைப்பார்த்து ஏளனத்துடன் நகைக்கிறது.
فالإعلامام) فصي)وعم2
எனக்குள் என்ன இருக்கிறது? கனக்கும் ஆசைகள் சுமந்த இதயமும் கண்டதையும் நினைக்கும் மனமும் தவிர வேறு என்ன இருக்கிறது எனக்குள்?
கூர்ப்பு விதிப்படி நானொரு விலங்கு - முன்னர் குறித்த முறைப்படி நானெனில் தெய்வம்
மனிதனாய் இருப்பதே எனது விருப்பம் M உள்ளிருந்து வருகிறதாம் ஞானம் யாரோ O சொல்லி வைத்தார், வெளியிலிருந்து வந்து గ్రీ 'உள்'ளைத் தாக்கிமீண்டும் புதிதாய் வெளிச்செல்வதே လ္လရွံ) உண்மை ஞானம் கண்டுதெளிந்தது என்மனம்!! SŞ உள்ளும் வெளியும் கலந்தியங்கிறது உலகம் ഉ
உள்ளிருந்து வெளியும் வெளியிருந்து உள்ளும் பரிரிகையிலே முடிகிறது பயணம்.
-ucdebonem

Page 5
டு
அம்பலம்
இனிது இனிது கவிதை இனிது
ந. சத்தியபாலன் (அனுபவன்) கிழக்கிலங்கையில் பாண்டிருப்பு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவராகிய திருசண்முகம் சிவலிங்கம் ஒரு முக்கியமான கவிஞர். "இந்தக் கவிதைகளில் இன்பமும் உண்டு துன்பமுமுண்டு. வேதனையும் விரக்தியும் உண்டு, அவைதந்த வெளிச்சங்களும் உண்டு. இந்த வெளிச்சங்களைத்தான் நான்’ முக்கியமானதாகக் கருதுகிறேன். இன்பத்தினூடும் துன்பத்தினூடும் வேதனையினூடும் விரக்தியினூடும் எனது வெளிச்சத்தைக் கானுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை.
வெளிச்சம் ஒன்றைத்தருவதுதான் ஒரு கலைப்படைப்பின் வாழ்தலுக்கான நியாயமெனநான் கருதுகிறேன் ...”
என்று கூறுகின்ற திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்களின் நீர்வளையங்கள் தொகுப்பில் இடம்பெற்று என்னைப் பெரிதும் ஈர்த்த கவிதைகளிலொன்று "பிள்ளைக் கறி" இது எழுதப்பட்டது 1985இல், அன்றைய அரசியல் சமுக சூழ்நிலையில் நேர்ந்த கொடுர நிகழ்வொன்றைத்தான் கவிஞர் பிள்ளைக்கறியினுடாக எடுத்துக் காட்டுகிறார். அக்கால பின்னணியை நினைவில் நிறுத்தி இந்தக் கவிதையைப் பார்க்க வேண்டும்.
பிள்ளைக் கறி
சாப்பரிடக் குந்துகிறேன் பீங்கான் நிறைய அவித்த ரத்தம். நிமிர்ந்து அவளைப் பார்க்கிறேன் அசைவற்றுப் போன என்விழிகளில் அவள் எதனைப் பார்க்கிறாள்! பாடசாலை வெண்புறாக்கள் தெருவில் சடசடக்கும் நிறை மதியம் சந்திக்குச் சந்தி காக்கிச் சட்டைகள் துப்பாக்கிகளுடன் கரும் பச்சை வாகனங்களின் யுத்த நெருக்கடி முற்றுகை - ஒட்டம் - முகமூடி ... تالیا ... بالا ... تاریو ... تزیی சற்று இடைவெளி தலை உயர்த்த எண்ணுகையில் திடீரென
படீச். படீச். படீச்.எஸெம்ஜி

- டு சரி. முடிந்தது கொக்கு. நாரைகளுடன் எத்தனை குருத்து வெண்புறாக்களோ..? ரத்தப் பூக்களில் இந்நேரம் ஈமொய்த்திருக்கும் தனிந்து மீண்டும் உண்ணப் போகையில் மீண்டும் அவித்த ரத்தம்!
-985 யுத்த மேகம் எமது பிரதேசங்களைச் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் ராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த நெருக்கடி சூழ்ந்த ஒரு நிலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்தக் கவிதைமுலம் எமது கண்முன் படமாய் விரிக்கப்படுகிறது.
கவிதையின் தலைப்பு விழிகளிற்பட்ட கணத்திலேயே அறிவில் உறைந்து * கவனி. இதை எண்கிறமாதிரி இருக்கிறது. (புராணத்தில் பக்தனிடம் பிள்ளைக்கறி கேட்டு இறைவன் அவனது பக்தியைச் சோதித்த சம்பவம். ஞாபகத்துக்கு வருகிறது. )
தர்ம நியாயங்களுக்கு அப்பால் ஆதிக்கமும் அதிகார வெறியும் மனித உயிர்களைத் துரசென மதித்த அந்தக் காலத்தில் வெகு சகஜமாய் நிகழ்ந்தேறிய ஒரு சம்பவம் மனச்சாட்சியுள்ள ஒரு மனித இதயத்தை எப்படித் தொட்டு உலுப்பிக் கலங்கவைத்திருக்கும் என்பதை உணர்த்துகிறது கவிதை. எங்கள் பிள்ளைகளை பலிதந்து எமது வாழ்வைக் காத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கும் கொடியகாலம் - நாம் உண்பது உணவல்ல - அது பிள்ளைக்கறிதான் தட்டில் இருப்பது சோறல்ல பிள்ளைகளின் - எமது பிள்ளைகளின் இரத்தம். வேட்டைக்குப் புறப்பட்டுவந்து முற்றுகையிட்டுத்தேடும் அரக்கர்படை அதன் கொக்கு நாரை வேட்டையில் எமதுகுருத்து வெண்புறாக்களும் " ஏதுமறியாக் குழந்தைகள்ையும் பலியாக்க... எல்லாம் முடிகிறது.
உணவுத் தட்டில் குனிபவனுக்கு மீண்டும் தெரிகிறது அவித்தரத்தம்...! * கவிஞனின் குமுறல் - ஏதும் செய்ய இயலா இதயத்தின் துடிப்பு - வேதனை. . . தவிப்பு இவையெல்லாம் பதிவாகவில்லையா
இந்தக் கவிதையில்?
இன்னும்.

Page 6
" மின்னலில் தெரிந்தவை
- ஆதாங்கன்
எம்மத்தியில் கிடைக்கின்ற படைப்புக்கள் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள் அவ்வப்போது வெளிக்கிளம்பிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் “படைப்பு" பற்றிய ஒரு தெளிவான பார்வை நல்ல வாசகரிடத்தில் காணப்படவே செய்கிறது. அதிலும் பல கருத்து நிலைகள் உலவுகின்றன. அவற்றில் படைப்பாளியின் ஆத்மார்த்தமான உணர்வின் வெளிப்பாடாகவே படைப்புக்கள் அமைகின்றன என்ற கருத்தையும் படைப்பு ஒன்றினை பகிர்வதன் போது படைப்பாளி ஒர் திருப்தியைப் பெறுகிறான்; தன்மனக்குமுறலை வாசகரிடத்தில் பகிர்ந்து கொள்கிறான் என்ற கருத்தினையும் எமது வாதம் கருதி இங்கே குறிப்பிட முடியும், இவ்வாறு வெளிப்படும் படைப்புக்களில் தரமானவை, நல்ல படைப்புக்கள் என்ற பார்வை ஒவ்வொரு வாசகனையும் பொறுத்தே அமைகிறது. அவ்வாறே மிகவும் நுட்பமான புதுமையான படைப்பம்சங்களுக்கான அங்கீகாரமும் வாசகரிடத்தில் தங்கியுள்ளதால் படைப்பின் அங்கீகாரத்தையும் சமூகத்தில் வாசகரிடம் இருந்து மட்டுமே ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்பார்க்க முடிகிறது. இதுவே சான்றோர் வழக்கு.
இவ்வாறு வாசகனோடு கொள்கிற மானசீக உறவினால் ஒவ்வொரு படைப்பாளியும் பூரித்துப் போகிறான் என்பது மறுக்க முடியாததே.
எனினும் அண்மைக்காலமாக எமது இலக்கிய உலகம் துரைத்தனம் கொண்ட சில அமைப்புக்களுக்கு கட்டுப்பட்டுவிடும் அபாயம் உள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் நாம் யாரையேனும் தரக்குறைவாக குறிப்பிடும் நோக்கத்தில் இதனை இங்கே குறிப்பிடவில்லை. பொது நோக்கில் சில படைப்பாளிகளின் மனப் போக்கில் காணப்படுகின்ற மாற்றங்கள் குறித்து சமூகம் கொண்ட குழப்பத்தினாலேயே எழுதுகிறோம். அந்தவகையில் அண்மையில் அறியக்கூடிய ஒருசில சம்பவங்களை இங்கே பார்வைக்குத் தருகிறேன். W
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை அவர்கள் பல நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், மேடைநாடகங்கள், நாவல், சிறுகதைகள், பல கட்டுரைகள் மூலம் வாசகரிடத்தில் பிரபலமானவர். ஆயினும் சமீபகாலமாக தனக்கு சாஹித்திய விருது கிடைக்கவில்லை என அங்கலாய்த்து கூட்டங்கள் பலவற்றிலும் கூறி ஆதங்கப் படுவதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
கடுகுக் கதைகள் மூலம் ஈழத்து சிறுகதை உலகத்தில் ஒர் புதிய சிந்தனையை ஊன்றியவர் திரு.ஐ.சாந்தன்.
அவரது இலக்கிய அனுபவமும் பணிகளும் இங்கே சொல்லி வாசகர்கள் அறியவேண்டியதில்லை. வாசகரிடத்தில் மட்டுமன்றி இலக்கிய வாதிகள் பலரிடத்தும் நன் மதிப்புள்ள ஒருவர். இவர் அண்மையில் காலம் சஞ்சிகையின் 17ஆவது இதழில் ஒர் குறிப்பை எழுதியிருந்தார். “இந்திய தமிழ் வாசகனின் பார்வையில் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை" என்ற தலைப்பில் ந. வேதசகாயம் என்பவள் எழுதியிருந்த கட்டுரையில் தன்னை இருட்டடிப்புச் செய்ததாக குறிப்பிட்டு அக்கட்டுரை அர்த்தமிழந்து போவதாய் கருத்துக் கூறியிருந்தார். vn
"தேம்ஸ் நதிக்கரையில்” உட்பட பல தரமான நாவல்களை எழுதிய

திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் ஒரு கலந்துரையாடலுக்கு சமூகந்தந்திருந்தார். இரண்டு பிரபலமான இலக்கிய சஞ்சிகைகள் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இனி 2000 என்ற மாநாட்டுக்கு தன்னை ஏன் அழைத்திருக்கவில்லை? என்று மிகக் காட்டமாக குறைகண்டார்.
முன்னொரு நாளில், அறிஞர்களை கெளரவிப்பதன் மூலம் பல பட்டங்கள் சமூகத்தில் கெளரவம் பெற்றிருந்தன. இன்றைய நிலையில் படைப்பாளிகள் பலர் அப்பட்டங்களை அடைய பிரயத்தனம் செய்கிறார்கள். திறமையின் நிமித்தம் பட்டம் தரப்படவில்லையாயின் அப்பட்டத்தினைக் கேட்டுப்பொற்றுக்கொள்வதில் என்ன பெருமையிருக்கிறது? உண்மையில் திறமையானவர்களுக்கு அப் பட்டங்கள் கிடைக்கவில்லையாயின் அப் பட்டங்கள் தானே மதிப்பிழந்து போகும். இந்த விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
பட்டங்கள் கேட்பதையும் தம்மை விழாவுக்கு அழைக்கவில்லை என்று குற்றம் கூறுவதையும் கெளரவமாகக் கருதி இலக்கிய கூட்டங்கள், பத்திரிகை கட்டுரைகளில் அதிக நேரம் விரயம் செய்துவிட்க்கூடாது. அப்பட்டமாகச் சொன்னால் இவை சிறுமை உடைய செயலே. ܫ
"பணியுமாம் என்றும் பெரும்ை சிறுமை அணியுமாம் தம்மை வியந்து"
இண்ணும் பலம் சிபற . வீண்பலமாகுங்கள் ஒருவருடச் சந்தா - டுமா உபுO.OO ஆறுமாதச் சந்தா ருபா உO.OO çoué érase e úl) − சந்தாவினை காசோலைாகவோ 尊 காசுக்கட்டளையாகவோ பணமாகவோ அனுப்பி வைக்கலாம் அதன்பின் மாதம்தோறும் அம்பலம் உங்கள் விரு தேடி வரும் స్థితి
(ஆடர்) (a gస్త్రజ్ఞజీళ్ల شختھی مشہو ജ്ജ് ്ട తి శ్రీ ച്ച് ソ <。ーづ 三リエ" 三エー< ஆ பூஜந்தி لا<عو (

Page 7
ஆம்பலம் O)
O ளிக் கவிஞர்களின் தமிழ்ப் போராளிக்க ஞாகளன. இலக்கியம் என்பது காலத்தின் கோலத்தினை வரையறுப்பதென்பது பொதுவான
கருத்து. சமுதாய விழுமியங்கள், பிரதிபலிப்புகள் அக்கால இலக்கியங்கள் ஊடாக பல்வேறு பட்ட வடிவங்களில் வெளிக்கொண்டுவரப் படுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வு; எங்கள் தேசத்தின் திசைகளிலும் எத்தனையோ ஆயிரம் இலக்கிய கர்த்தாக்கள் பிறந்து மறைந்துள்ளனர். அவர்களால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வசனங்களும் ஒவ்வொரு காவியங்களாக கருத்தரித்து காட்சியளிக்கிறது. மக்களில் பலர் அவர்களை மறந்துபோனாலும் தேசத்தின் ஒரு மூலையிலாவது அவர்களின் நினைவுகள் உயிர்வாழும்
பொதுவாக எங்கள் தாயகத்தில் நாங்கள் பிறந்த காலத்திலிருந்தே போர்ப்பறையின் ஒலிகளே அணி செய்தன. தேசத்தை நேசித்த எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட கணங்களின் காலத்தில் உதயமான உரிமைப்போரின் சுயமுகவரிக்குள் ஏராளமாக முகங்கள் மறைந்துபோனது. விடுதலை உணர்வை உள்வாங்கிய வீரக் கொழுந்துகள் சுடுகலன் ஏந்தியதால் சுதந்திரதேசம் துல்லியமானது. ஆயிரமாய் அணிதிரண்ட அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளில் உருப்பெற்ற கருப்பொருட்கள் காவியமாகி காகிதங்களில் நிறைந்தன.
அந்த உயிருள்ள உணர்வுகளுக்கு எம்மால் உருவங்கொடுக்க முடியாது. ஓரிரு வார்த்தைகளில் ஓரிருவரின் கவிவரிகள் எனும் உயிர்வரிகளை தொட்டுச் செல்வது பொருத்தமானது. ஆரம்பகாலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிக் கவிஞர்கள் இருந்தாலும் அவர்களின் உணர்வுகளில் நூலுருப்பெற்றவை மிகச் சிலவே. அவற்றில் நாம் அவதானிக்கக் கூடியவை கஸ்தூரியின் கவிதைகள், வானதியின் கவிதைகள், பாரதியின் கவிதைகள் (காதோடு சொல்லிவிடு) மலரவனின் ஆக்கங்கள் (போருலா) கு.பரதனின் கவிதைகள், (கனவில் நனவு) அடம்பனுர் செ.திருமாறனின் கவிதைகள், சுதாமதி, புரட்சிகா, மேஜர் நிலவன் போன்றவர்களின் கவிதைகளினை குறிப்பிடலாம். இவர்களில் பலர் தாயகக் கனவோடு சாவினைத் தழுவியவர்கள்.
மண்ணை, மக்களை, தலைவரை, ஊரை, உணர்வை நேசிக்கின்ற இவர்களின் கவிதையின் கருப்பொருட்கள் உன்னதமானவை, எளிமையானவை. இத்தன்மைகளின் பொருத்தப்பாட்டினை மேஜர் பாரதி (விஸ்வலிங்கம் சத்தியபாமாயின் கவிதைகளில் அவதானிக்கமுடியும். 1992இல் நூலுருப்பெற்ற 'காதோடு சொல்லிவிடு” என்ற இவரின் கவிதை நூல் போராட்ட விழுமியங்களை மட்டும் சித்தரிக்காது சமூக வடிவங்களையும் உரைத்து நிற்கின்றது.
‘சாவா? நாம் சந்திப்போம்
வாழ்க்கையில் எமக்கென்ன
பூவா? நாம் போராடுவோம்’
என்று சமூகத்தின் பெண்ணியத்தை நோக்கி கூவல் விடுக்கிறார். தேசத்தினை

«öLQð G) நேசிக்கின்ற கணங்களில் குழந்தையாய் உருகிப்போகிறார். அவர் ஒடித்திரிந்த தேசத்தின் தெருக்கள் அவரின் கவிதைகளின் ஊடாக எம் கண்முன்னே விரிகின்றது.
“நீண்ட தெருக்களில்
தென்னைமர நிழல்களில்
முட்கிளுவை வேலிகளுக்கிடையில் நின்று
இ.போ.ச. பஸ்ஸைமறித்ததும்
சூரியன் மறைவதை சற்றேனும் சிந்திக்காது.”
என்ற வரிகளினூடாக உணரமுடிகின்றது. எளிமையான சொல்லாட்சியையும் மரபுகள் மீறிய வசன நடைமுறைகளினையும் கையாண்டாலும் வாசிக்கும்பொழுது சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றது. தாயின் இனிய நினைவுகளில் இந்தப் போராளிக் கவிஞன் நினையும் பொழுது வாசிப்பவரின் விழிகளும் கசிந்துபோகும் நிலை காணப்படுகிறது. அந்த வரிவடிவங்களில் தாய்மையின் உன்னதம் உயிரோட்டமாக விளக்கப்பட்டுள்ளது.
‘அம்மா. இன்னும்
அதிகாலைப் பொழுதில் .
உண்ணவும் நேரமில்லாத .
என் இயந்திரவாழ்வில் .
படிக்கவைக்க வேண்டும் என்பதற்காய்.
மண்ணென்னை விளக்கின் ஒளியை
காற்றுமறைக்கவும் - எத்தனை இரவுகள்
மழையில் நனைந்தும் இரவில் என்னை
கூட்டிவந்த அந்த மெலிந்த உருவத்தை
எப்படி நான் மறக்க."
என்ற துல்லியமான வரிகளினூடாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. கரும்புலிகளின் திண்ணிய எண்ணற்ற தியாகத்தின் தீர்க்கத்தினை எண்ணி நெக்குருகிப்போகின்றார்.
“எம் - அன்னை பூமியில்
அழிவுகளை மட்டுமே
பிரசவிக்கத் தெரிந்ததாய்
தரித்துநின்ற தாய்க்கப்பலை
தகள்த்தெறிந்த இலட்சியவீரரின் -இறுதிமூச்சின்
வெப்பத்து வீச்சில்
இந்துசமுத்திரம் இன்னுமொருதரம்
பொங்கித்தணிந்தது.”
“தானைத்தலைவனின் பாசப்பகிர்வின் பின்
பாதி இரவும் மெதுவாகக் கழிய
கரிய இருளில்
காற்றோடு காற்றாய்.

Page 8
அம்பலம்
கரைந்து போனதை. என்ற உணர்ச்சி மிக்க சொல் ஆரங்களைக் கொண்டு சாவைச் சுமந்த சந்தனமேனியரின் தியாகத்தை செப்புகின்றார். மாவீரர்களின் மாண்பினை உரைக்கின்றபொழுது இவரின் உணர்வின் வடிவங்கள் அனைத்தும் அவர்களுக்கே அள்ப்பனமாகின்றது.
“விடுதலை உணர்வை விதியால் சுமந்தபடி. ஆலயத்துக்கு வருகிறது அலங்கரிக்கப்பட்ட தேர். . விடுதலை விதைகள் வீழ்ந்துபோயிருக்கிற எங்கள் நந்தவனத்துக்கு.”
என்று உரைக்கின்றார். மேலும் இவரின் 'காதோடு சொல்லிவிடு” நூலின் தியாகச் செம்மல்களான தியாகி திலீபன், அன்னைபூபதிபற்றியும் குறிப்பிட்டுள்ளார். VA
“அங்கீகரிக்கப்படாத எனது தேசமோ. பூபதி என்ற கோளை. தியாகச் சுடராய்.
என்றும் திலீபன் என்ன தமிழினத்தின் தனிமகனா?. இல்வே இல்லை உலகத்தின் தோள்களில் உலாவரும் சூரியக் குழந்தை. ”
எனவும் தியாகத்தின் சிகரங்களின் தார்ப்பரியங்களினை உரைத்துநிற்கிறார். மேலும் சமூக அநீதிகள், சாதி, தீண்பாமை, மானுடம் மறுக்கப்படல், கல்வி, உலக நிகழ்வுகள் என்ற பல்வேறுபட்ட நிலமைகளினையும் தனது கவிதைகளினூடாக உரைத்துநிற்கின்றார். இத்தகு ஒரு இனிய போராளிக்கவிஞர் ஒரு சிறந்த கல்வி அறிவாளரும்கூட. இவர்களின் இலட்சியங்கள் செழுமைகள் எங்கள் தேசத்தில் தடுத்து வைக்கப்படவேண்டியது. ஆயினும் விடுதலை மூச்சினை உள்வாங்கியதால் இவரின் சுவாசம் சுதந்திரத்திற்காய் துடிப்படங்கிப் போனது. ஆயினும் இவர்களின் கனவுகளும் நினைவுகளும் இந்த தேசத்தின் புலர் பொழுதுகளாய் என்றும் உயிர்வாழும்.
in. It flaíl
யாழ். பல்கலைக்கழகம்
-adrosa
உங்கள் ஆக்கங்கள் விமர்சனங்கள் என்பவற்றை ஆர்வத்தோடு அம்பலம் எதிர்பார்க்கின்றது. அவற்றை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி ;~
அம்பலம், 305, பலாலி வீதி, யாழ்ப்பாணம், திருநெல்வேலி.

4&w AFAN/AVyaamy
அந்தக்கணத்து அதிசயங்களின் நிகழ்தலிற்கான சாத்தியங்கள் பற்றி இப்போதும் மலைப்பாயிருக்கின்றது! அலாவுதீனின் அற்புத விளக்கோ, இறைதூதர்களின் அருட்கடாட்சமோ சூனியக்கிழவிகளின் மந்திரக்கண்ணாடியோ பறக்கும் தட்டுமனிதர்களின் கதிர்வீசலோ, எதுவுமேயில்லாது அவைகள் நிகழ்தலாயின. என் சுயத்திற்குள் இருந்தவைகளெல்லாம் உனக்கானதாக மாறியது. என் கண்ணிமைப்பும்
இருதயத்துடிப்பும் நரம்பூடான குருதிப்பாய்ச்சலும் உணர்ச்சி விளைவுகளும் எனி கட்டுப்பாட்டுக் குள்ளிருந்து எல்லை மீறத் தொடங்கின அவைகளெல்லாம் உனது ஏவுதலின் அடிமைகளாய் இருந்த போது மனதுக்குள் மதுரம் சொட்டிக்கொண்டிருந்தது. என்னைப் போலவே
உனதானவைகளும் எனக்கானவையாக மாறியதாய் இயங்கிக் கொண்டிருந்தாய் அதுவே உனக்குள் ஒடிக்கொண்டிருக்கும் மனக்கடலினடியில் உறைந்திருக்கும் உண்மைத்தரையாயிருக்கலாம். இருப்பரினும் அதைச்சுழியோடித் தொடுவதற்கான மூச்சடக்குந்திறனி
எந்த நாசிகளுக்கும், எந்த சுவாசப்பைகளுக்கும் இருக்கப்போவதில்லை. கசக்கி வீசப்பட்ட இரவுக் குப்பையின் மீது Վ. பகல்வந்து குந்திக்கொண்ட நேரத்தில்

Page 9
அம்பலம் () எனக்கானதாக நீமாறிய
அதிசயங்களையெல்லாம்
அரிதாரப் பூச்சுக்களாக்கினாய்!
யாருக்குத் தெரியும்?
உண்முகம் பூச்சியவெளியாகவும்
அரிதாரமே உன் உண்மை முகமாகவும்
இருந்திருக்கலாம்!
எனினும்* அதிசயத்திற்கான மூலப்புள்ளியை இருட்டுக் கானகத்துக்குள் தனித்துத் தேடுவதற்கு நான் தயாராயில்லை உன் மொழியில் நடந்தவையெல்லாம் அரிதாரமாகவே இருப்பினும், என்னைப் பொறுத்தவரையும் அது அதிசயமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். 21.04.2003
தபின்.
 

ாடு .........--منس................................................................': '.' ۔۔۔۔۔۔
طنت غ۹/لمہر عضلیملٹن
* Üama'
ஜனநாயகம்.பயங்கரவாத எதிர்ப்பு.பேரழிவு ஆயத ஒழிப்பு:என்றெல்லாம் கோஞ்சக்காலமாய் 8.8). 'ഗ്ഗീകി கேவிக்கூத்த ாடிக் கொண்டு.தண்ணுடைய விடிக் கொடுக்குகளை மூவை முடுக்கெல்லாம் பரப்பிய அமெரிக்காவின் அரிதாப்பூச்சுக்கள் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருக்கின்றன.தன்னுடைய ஏகாதிபத்தரியக் கணவனை நிறைவேற்றுவதற்காக மனத உயிர்களைப் பகடைக்காய்களாக்கி பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோம் என்ற போர்வையில் தனக்கு வக்காவத்து வாங் ) பிரிட்டனோடு கைகோர்த்துக் கொண்டு அமெரிக்கா செய்கின்ற அட்டூழியங்கள்தான் 'உலகப் பங்கரவாதங்கள் எல்லாவற்றிலும் பயங்கரமானது.
உவகம் முழுதையும் தமது ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் கொண்டுவரவேண்டுமென்ற ஆசை இன்று நேற்று வந்ததல்ல.ஜீவியல் சீசர் அவெக்ஸாண்டர். நெப்போவியன் ஹிட்லர் பிரித்தானியா என நீண்டுகொண்டு சென்ற பட்டியவில் இப்போது அமெரிக்காவும் இணைந்திருக்கின்றது. இப்பட்டியலில் உள்ள மற்றையவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசமொன்று இருக்கின்றது. அதுதான் இத்தனைநாளும் அது எடுத்துவைக்கின்ற அடிகள் ஒவ்வொன்றும் சறுக்காமல் இருப்பதற்காக முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மற்றைய எல்வோருமே பிறநாடுகள் மீது போதிய காரணிகள் இன்றி வவியச் சென்று தம்வசப்படுத்திக் கொள்ள. அமெரிக்காவோ தருணம் பார்த்திருந்து தான் மூக்கை நுழைப்பதற்கான காரணிகளை நியாயப்படுத்திக்கொண்டுதான்தன்னுடைய ஆதிக்க எவ்வையை அகலித்துக் கொள்கின்றது.இதில் வேடிக்கைஎன்னவெனில்,அமெரிக்காதன்னை நியாயப்படுத்திக்கொள்ள கூறுகின்ற காரணிகளை அது பலிகொள்ள நினைக்கும் நாடுகளே ஏற்படுத்திக் கொடுப்பதுதான் எனினும் உவகத்தை தன் உள்ளங்கையுக்குள் கொண்டுவரறினைத்து.மன்கவ்விய மற்றையவர்களின்நிவை அமெரிக்காவிற்கும் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
"செப்ரெம்பர் 1'தாக்குதலானது ஒலாமா என்ற பயங்கரவாதியின் பழிவாங்கவின் உச்சக் கட்டமென அமெரிக்காஎன்னவில்லை. மாறாக அமெரிக்கப் பயங்கரவாதத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகவே கருதியது. “அமெரிக்க எதிரிகளை இரக்கமின்றி அழிப்பதும்.உலகவிவகாரத்தில் மேவாதிக்கத்தை நிறுவுவதும்தான் அமெரிக்கவெளியுறவுக்கொள்கையின் அடிப்படை வழிகாட்டியாக இருக்கமுடியும்" என்ற மைக்கல் கெவ்விபோன்ற ஆதிக்கவாதப் பத்திரிகையாளர்களின் கருத்துக்களையொத்த சிந்தனைப்போக்கின் விளைவாக நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஆப்கானிஸ்தானில் பின்வேடன் ஒளிந்திருப்பதாகக்காரனங்காட்டி அமெரிக்காதனது ஆதிக்கவேட்டையைத் தொடங்கியது.(அமெரிக்காவின் ஊதுகுழற் பத்திரிகையாளனான மைக்கல் கெல்வி ஈராக்கிலேயே பலியானது வேறுவிடயம்).
அதைப்போவவே தன்னுடைய வேட்டையின் அடுத்த இரையாக அது தன் நீண்ட நாள் இலக்கான ஈராக்கை ஆக்கிக்கொண்டது.அதற்கு அமெரிக்காகூறிக்கொண்ட காரணம் “ஈராக்கில் உவகை அச்சுறுத்தும் பேரழிவு ஆயுதங்:

Page 10
அம்பலம் டு இருக்கின்றன” என்பதுதான். ஆனாலும் ஆப்கானிப்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா என்ன காரணத்தைச்சொல்லிக்கொண்டுதன் சண்டித்தனத்தைக்காட்டியதோ,அதை நிறைவேற்றமுடியவில்லை என்பது அமெரிக்காவைப் பொறுத்தளவில் ஒரு பாரியபின்னடைவுதான்.ஆப்கானிஸ்தானில்ஒலாமாவைப் பிடிப்பதென்பதும். ஈராக்கில் உவகை அச்சுறுத்தும் பேரழிவு ஆயுதங்களையும். சதாம்ஹரசேனையும் கண்டுபிடிப்பதென்பதும் இன்றுவரை. போர்முடிந்து விட்டதென பென்ரகன்நெஞ்சைநிமிர்த்திக்கொண்டு கொக்கரித்த பரின்னரும் - இயலாததாகவே இருக்கின்றது. இவ்விரு நாடுகளிலும் (ஈராக், ஆப்கானிஸ்தான்) சாதாரன மக்களின் குடிசைகளே இராணுவமையங்களாகவும். அப்பாவி பொதுமக்களையே உலகப் பயங்கரவாதரிகளாகவும் சித்தரித்துக்கொண்டு. அமெரிக்கா ஆடிய வெறிபாட்டம் இப்போதுதான் கசியத் தொடங்கியிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டதால், ஒலாமா அங்கிருந்து தப்பியோடியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தமைக்கான எந்தவொரு தரும்பும் இதுவரை கிடைக்கவில்லை.ஒருவேளை அமெரிக்க வல்லூறான'அபாச்சி'ஹெவியைசுட்டுவீழ்த்திய அந்த ஈராக்கிய விவசாயியின் வேட்டைத் துப்பாக்கியைத்தான் அமெரிக்கா பேரழிவு ஆயுதமென்று எண்ணுகின்றதோ வெனத் தெரியவில்லை.
என்னதான் அமெரிக்கா தனது இராணுவயந்திரத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தி விட்டதாகப்பூச்சாண்டி காட்டினாலும் இத்தனை'அமெரிக்கப் பயங்கரவாதங்களிற்கும் மூவவேராக ஒளிந்திருப்பது அமெரிக்கப் பயவாதமேயாகும். எங்கே இன்னொருமுறை பயங்கரவாதிகள் தாக்கினால் உள்ளதும் கெட்டானாம்நொள்ளிக்கண்ணன்'என்கிறமாதிரிஉலகாளும் ஆசையும்போய்,சொந்த நாடும்
స్టో+ அழிந்து போய்விடுமோ ::s St. ஆலு என்ற அச்சத்தினால் . “ሎ x: விளைந்த &2Qტ Սաatf
:தமே அமெரிக்காவை
&3ܙܖ
s
அமெரிக்காவின் அந்தக் கணிப்புச் சரியென்பது
போலவே அண்மைக் காவச் சம்பவங்களும்
'ಛೆ... <魔 t நடைபெற்றுக்கொண்டி .ஆ (ருக்கின்றன - ح۹
鑫、、 ఇక్ష్యా" ஈராக்கில் 6լյմif
s: Seee eeSZSeee S eee eee eee eAeAee SS S S SSS eeS eeSeMTTTSTTT TMM
அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்தபின்னர் அங்கு இதுவரை இழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டிவிட எத்தனித்துக் கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் தாக்குதல்கள் தலைதூக்கியிருக்கின்றன. உவகப் பொலிஸ்காரனான அமெரிக்காவின் வீட்டிவேயே இப்போது நடக்கலாம். அப்போது நடக்கவாம்' என்று தீவிரவாதிகளின் அடுத்த தாக்குதல் பற்றிய ஆருடங்கள்புவனாய்வுப்பிரிவினரால் அடிக்கடி சொல்வப்பட்டுவருகின்றன. இது போதாதென்று செப்ரெம்பர் 11 தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி அல்ஜெசீரா தொவைக்காட்சியில் ஒளிபரப்பானஒலிஒளிநாடாக்களில் “அமெரிக்கா மீதான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்ற சாரப்பட ஒலாமாவும் அவரது சகாவும் கூறியிருப்பது உலகப் பேரரசின் வயிற்றில் புளியைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ObLGADAð G)
கரைத்து விட்டிருக்கின்றது.
அமெரிக்க ஏகாதிபத்தரியமானது ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் தற்காவிக
இராணுவவெற்றியை ஈட்டி " ܵ யிருக்கலாம். எனினும் அங்குள்ள 2. மக்களின் மனதை அமெரிக்கத் தாக்குதல்களால் மாற்ற اللاهضة வரில்லை. மாறாக அமெரிக்க எதிர்ப்பவைகள் இன்னும் பெ தளவில் அங்கு உருவாகிக் கொண்டிருக்கின்றன. அக எதிர்ப்பு அவைகள் இன்னும் வலுப்பெற்று ஒருநாள் பொங்கி யெழும்போது உண்மையிலேயே அன்று அமெரிக்காவால் ஒன்றுமே செய்யமுடியாத நிவையே ஏற்படும். அமெரிக்கா தனது நவீன துப்பாக்கிகள், படைக்கவங்கள். பிளாஸ்ரர் குண்டுகள் என்பனவற்றைக் கொண்டு சாதிக்கமுடியாதவற்றை ஒலாமாபரின் வேடனும், சதாமும், இன்னும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடுபவர்களும் வெகு எளிதாகச் சாதித்து வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. போரினால் ஏற்படும் உடற்தாக்கங்களைக் காட்டிலும், உளரீதியான தாக்கங்கள் மிகப்பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.அத்தகைய உளவியல்ரீதியான பாதிப்பை ஒவ்வொரு அமெரிக்கப்பிரஜையிடமும் "அமெரிக்க எதிர்ப்புக் கூட்டணி ஏற்படுத்தி விட்டதென்றே கூறவேண்டும். தம் சொந்த நாட்டில் . விமானத்தை தாள். கடுகு போன்ற அத°நவீன ஆயுதங்களால் கடத்துவார்களோ? அதைக்கொண்டு எந்தக் கட்டிடத்தைத் தகர்ப்பார்களோ? என்ற அச்சம் கலந்த ஆராய்ச்சியும், ஆப்கானிஸ்தான். ஈராக் போன்ற நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் தம் உறவுகளான அமெரிக்கப் டைவீரர்களுக்கு என்ன நிகழுமோ என்ற பீதியும்ஒவ்வொரு அமெரிக்க குடிமகனின் மனதிலும் 2 ந்தியிருக்கவே செய்கின்றது. அத்தோடு எப்போது தாக்கப்படுவோம் என்பது தெரியாமல் ஒவ்வொரு செக்கனும் தம்மீதான தாக்குவை எதிர்பார்த்து மனதளவில் செத்துக்கொண்டிருக்கும் மனோநிலை, ஆக்கிரமசிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அமெரிக்கப்ப(க)டை வீரர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. இத்தகைய உளவியற் பாதிப்புக்கள் உச்சத்தை அடையும்போது என்ன நடைபெறும் என்பதைக் கற்பனை பண்ணிக்கூடப்பார்க்க இயலாததாகவே இருக்கின்றது. சில வேளைகளில் இந்த உள நெருக்கீடுகளால் அமெரிக்க மக்களே அமெரிக்காவை அழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்வை,
-த.பிரபாகரன்.
-subpoenau

Page 11
மருதம் - கேத்லஜ் எள்னை நோக்கி
அது அசைந்து வந்தது அதன் கண்களிலும் | /* tரின் வளைவிலும் 4. முன்னால் என்னிடம் எறிந்து விட்ட / محرم நம்பரிக்கையின் எதிர் பார்ப்பு.
* 。
Æ። இன்னும் அருகில் வந்தது. *4 ஆக்ரோசமாய் சீறிய என்னைக் கண்டு
.மெளனமாக வெளியேறியது ... {{~ޗަ؟
அதன் ஒட்டிய உடலும் ஆங்காங்கே குட்டை விழுந்த தோற்றமும் எனக்கு அசிங்கமாய் தெரிந்தது. பரின்னொருநாள் - அது பேபரிக்குட்டியின் மடியில் கட்டிப் புரண்டு கொண்டிருந்த போது ஆத்திரமுற்ற எனக்கு யாரை அடிப்பது என்ற கேள்வி. என் பதட்டத்தைக் கண்டு பேபரிக் குட்டி விலகிக் கொள்ள அதுவும் நகர்ந்தது எனது நாக்கு வளைந்து ஓசை வர மாட்டாதா என்ற ஏக்கத்துடன். நான் வீசி எறிந்த பொருள் அதில் பட்டிருக்க வேண்டும் காது கேட்கும் மட்டும் அதன் அழுகை ஒயவில்லை. முதனி முறையாய் மனமும் நோகும் படியாகி விட்டது. முந்தநாள் நடு றோட்டில் மூச்சிழந்து அது கிடந்தது. அருகில் சென்றேன் அதன் கணிகளில் அதேபரிவு ஆனால் நம்பரிக்கையில்லை. இப்பொழுது என்னை ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பெயர் 'நாய்”.
۴ر
 
 

ObLisabé டு)
9-lt 223-st 2بصام2ބެއެެއްް ފެހާ
 ̄列 ?--??ധത് ܡܚ இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு. சூன்யம் தடவிய கறுப்பு வெளி நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழிமணிக்குள். அந்த காரமான அமைதிக்குள் டிக், டிக்கென்று காதுகளைச் செவிடுபடுத்தும் ஓசை விர்ரென்று அமைதிப் பிரவாகத்தைச் சிதறடித்துக் கீறலுண்டாக்குகின்ற காற்றின் கூவல். ஏதோ இம்சிப்பதாய். ஏதோ ஒன்று மனதை ரனப்படுத்துவதாய்...
ஹ. ஹ...ஹய்யோ. சலனங்களைக் கடக்க மாட்டாத தவிப்போடு முடிக்கிடந்த சிவசம்புக் கிழவரின் இடுங்கிச் சுருங்கிய வாயிதழ்கள் கொஞ்சம் முனகலாய்த் தொடங்கி, விக்கலின் ஆங்காரத்தோடு முடிவுறுவதாய் வீறிட்டுக் கத்தின.
ஒருகணம் வீட்டுக்குள்ளிருந்த அமைதியின் பரிமாணம் சட்டென்று சிதறிப்போயிற்று. "அப்பா... என்னப்பா...?’ தூக்கம் குழம்பிப்போயிற்றென்ற எரிச்சல் இறை முயன்றாலும் அதை ஒருபுறம் தள்ளிவிட்டுத் தந்தையின் பீதியூட்டும் குரலினால் அருட்டப்பட்ட வாமதேவனின் அனுசரணையான குரல்.
"விமலி. விமலி...எங்கை...?" அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. இருப்பினும் தந்தையின் படுக்கைப்பாடு தந்த பரிவுணர்வில் பொறுமையாய்ப் பதிலளித்தான். "இதென்னப்பா, விமலி நித்திரையெல்லோ..?” "அவளைக் கூட்டிவா, அவளை நான் பாக்கோனும், அவளின்டை கால்லை விழோனும்."
"ஏதோ கெட்ட கனாக் கண்டு புசத்துது மனிசன்..." பின்னோடு வந்து நின்று தூக்கக் கண்களேடு பார்த்தபடியிருந்த புவனா காதுக்குள் குசுகுசுத்தாள்.
"நித்திரைக் குளிசை குடுத்ததே இண்டைக்கு."
"ஒமோம் அதெல்லாம் குடுத்தாச்சு.” "விமலி. விமலி. நான் பாவி.” "எண்ணப்பா நாங்கள் பக்கத்திலைதானை யிருக்கிறம் நீங்கள் ஒண்டுக்கும் யோசிக் காமல் படுங்கோ.” ஆறுதல் தர விழைகின்ற வாமதேவனின் குரல்
"நான் கன நாள் இருக்கமாட்டன். அதுக்கிடையிலை. அதுக்கிடையிலை..." "தாசனோடையும், மாதவனோடையும் நான் கதைச்சனான் அப்பா. அவங்கள் கட்டாயம் வந்திடுவாங்கள். இப்ப பாதையும் திறம்தாச்சுத் தானை, எல்லாரையும் ஆசை

Page 12
h (20)
தீரப் பார்க்கலாம்.
அந்த வயோதிபச் சுருக்கங்களேறிய முகம் வேதனையில் மேலும் சுருங்கியது. "அவங்களைப் பற்றி எனக்கென்ன கவலை. ஆனா. விமலி...” "அவளைத் தானை நெடுகப் பாக்கிறியள் நீங்கள்...” "நான். பா. க். கிறன். ஓம். ஒ. ம் நெடுகப்பாக்கிறன் தான். ஆனா... ஆனா. விமலி அவள் பொம்பிளைப்பிள்ளையெல்லே. அவளைக் கவனமாகப் பாத்துக்கொள்ளப்பு.”
வாமதேவன் சிரித்தான். ‘இதென்னப்பா நீங்கள் விமலிக்கு இன்னும் பத்து வயது ஆகேல்லை. அதுக்கிடையிலை நீங்களும் உங்கட கதையும்.”
"இல்லையெடாப்பா. இல்லை.” சடசடவென்று அவரது குரலை முழ்கடித்து மழைத்துளிகள் கூரையில் விழும் ஓசை துல்லியமாய்க் கேட்கத் தொடங்கியது.
"மழை வருதப்பா. நீங்கள் ஒண்டும் யோசிக்காமல் படுங்கோ.” போர்வையால் அவர் உடலை கழுத்துவரை பக்குவமாய்ப் போர்த்தி விட்டு அவன் ஆறுதலாய்ச் சொன்னான்.
"விமலி எங்கட சொத்தப்பா.. அவளை ராசாத்திமாதிரிப் பாப்பம்." லாம்பை மீண்டும் தணித்து வைத்துவிட்டு வாமதேவன் தனது அறையை நோக்கிச் சென்றான்.
பன்னிரெண்டும், பத்துமாய் அறைக்குள் படுத்துக்கிடந்த நிர்மலாவையும், விமலியையும், பாசத்தோடும் பரிவோடும் பார்த்துவிட்டு மனைவியிடம் திரும்பினான்.
“என்னவோ தெரியா மாமா ஆகலுந்தான் பயப்பிடுறார்.” புவனா பிள்ளைகளுக்குப் போர்வை எடுத்துப் போர்த்தியபடி தனக்குள் முன்னுமுனுைத்தாள். வெளியே மழையின் ஆங்காரம் நிமிஷத்துக்கு நிமிஷம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. ச்சல். ச்சல். என்ற சலங்கை ஒலிகளின் கலீரிடலாய் மழை கசிந்து கசிந்து கூரையைத் தடவிக்கொண்டிருந்தது. இனி இந்த மழைத்துளிகள் மெல்ல நழுவிக் கூரையில் ஏற்பட்ட இடுக்குகளின் ஒழுக்குகளின் வழியாய் உள்ளிறங்கலாம்.
எச்சரிக்கை உணர்வு சட்டென்று புவனாவின் உள்ளத்தை தாக்கிற்று. இனி, படுக்கப்போய் இந்த மழை வலுத்து ஒழுக்கூறுகின்ற ஒரு தருணத்தில் திரும்பவும் தூக்கம் கலைப்பதென்றால் அதைப்போல் அலுப்பு வேறொன்றில்லை. இப்போதே ஒழுக்குகளுக்கு பாத்திரம் வைத்தால் பிறகு எழுவதைத் தவிர்த்துவிடலாம்.
"நீங்கள் படுங்கோப்பா. வாறன்..." அவள் அடுக்களையில் நுழைந்து பாத்திரங்கள் தேடி பழைய மழை காலங்களில் படித்திருந்தபடி ஒழுங்குகளின் மறைவிடத்தைக் குறிப்பால் துளவி பாத்திரங்களை வைத்துவிட்டு படுக்கைக்கு வந்தாள்.
அதற்கிடையில் வாமதேவன் உறங்கிப்போயிருந்தான். இடையிடையே தொடரும் முனகலோடு கிழவரின் பிதற்றல் தொடர்ந்தது. "முந்திப் பொம்பிளைப்பிள்ளை இல்லாததாலையாக்கும் விமலியிலை அவ்வளவு

ohňLexuĎ (g) பட்சம்...”
தூக்கத்தில் முறுவல் சிந்திய சின்னவளை அனைத்துக்கொண்டு புவனாவும் படுத்துக் கொண்டாள்.
மழை இப்போது வலுத்துவிட்டது. காற்றும் . . இன. ஊவென்று இனளையிட்டது. கிழவரின் காதில் அந்த அழுகை ரீங்காரம். மழையின் வீறிடலாய் மாறி மாறிக் கேட்டது. தலைமாட்டில் ஒழுக்குச்சட்டியில் பட், பட் டென்று விழுகின்ற மழைத்துளிகளின் வேகம் தலையில் ஓங்கி அறைகின்ற சம்மட்டி ஓசை ஆயிற்று.
கத்தவேண்டும் போலிருந்தது. இந்த மழையை நிறுத்தச் சொல்லி. அது முடியாது. அவ்வாறெனின் இந்தக் கட்டிலை மாற்ற வேண்டும்; ஒழுக்குகள் இல்லாத இடம்பார்த்து. அதுவும் முடியாது. விடெங்கும் பரந்துபட்ட ஒழுக்குகள். அவர் எப்படித்தான் விலகிப் போக முயன்றாலும். . . அவரது அமைதியை வேரறுத்து உயிர்வளையை நெரிக்கப் போவதாய் அச்சுறுத்தி. அச்சுறுத்தி. மனதை இறுக்கிக் கொண்டிருக்கின்ற அந்த நரக வேதனை. . . அந்தச் சத்தம் தருகின்ற துன்பம்.
”.மீண்டும். மீண்டும் * * مالا * * * كالا" ஐயோ... இது என்ன வேதனை. . கட்டில் விளிம்புகளை நடுங்கித் தளர்ந்த விரல்களால், இறுகப் பிடித்தபடி வாழ்க்கைச் சூழலில் அகப்பட்டு மீளமுடியாமல் Asai NüUajUnTaŝo. . .
"தாத்தா. தாத்தா.." இது விமலியின் குரலா..? "விமலி... நீ எங்கேயிருக்கிறாய்...?” தொண்டைக்குழிக்குள் இடறுண்டு தவிக்கின்றாளே... பக்கத்தில். பக்கத்தில். யாரது...? அவன். அவன். யார்? கிழவரைப் போல. கிழவரின் இளமைத்தோற்றம் போல், தோன்றுகின்ற அவன். பத்திரமாய் அவளைக் கொணர்ந்து வந்து சேர்த்து விட்டதாய்ப் பேர் பண்ணிக் கொண்டு. செய்த குற்றத்தின் சுவடு மாறாமலே. இன்னும் அவிழ்ந்த காற்சட்டையின் பொத்தான்கள் பூட்டாமலே.
ஒ. என் விமலி. நாங்கள் என்ன பாவம் செய்தோம்...? ஒடிப்போய் அவளை வாரியெடுத்துக் கத்த முற்படுகையில் கண்கள் விடுபட்டன. இறுக்கமாகப் பூட்டுப் போட்டு இதுவரை அவர் கண்களைக் கட்டியிருந்த ஏதோ ஒன்று கனவென்று பேர் சொல்லித் தளர்ந்து போக. லேசான மங்கல் வெளிச்சம் தெரிந்தது.
மழை இப்போது கசிந்தபடியிருந்தது. பட்... பட்டென்ற சத்தம் ஓய்ந்து போயிருந்தது. அந்தச் சம்மட்டியால் ஓங்கிய ஒலி அவரை மயக்கத்துள் ஆழ்த்திற்றோ..? ம்ாங்கல் ஒளியில் பாயை விட்டு விலகி வெறும் நிலத்தில் விமலி புரண்டிருந்தது தெரிந்தது. வாமதேவனும், புவனாவும், நிர்மலனும் கூட ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது திறந்திருந்த கதவினூடே தெரிந்தது.
போர்வை விலகி, ஆடை கலைந்து அவள் கிடக்கிற கோலம். 65 GuD6öun...? 6ftd6ö5mson Si

Page 13
Бөпшрт60 வருசங்களுக்கு முன்பு . அவள் கிடந்தாள்.
வெறுந்தரையில். . . ஒரு மங்கல் வெளிச்சத்தில்... பன்னிரண்டும் கடவாத பால்யத்தில்... பூப்பை உணராத ஒரு பிஞ்சின் துவக்கத்தில் குழந்தமை படித்த அவள். வெம்பிப் போகிறோம் என்று என்று உணர்ந்தும், உணராமலும். . . சத்தமாய் அழலாமா...? கூடாதா...? என்பது புரியாத மாதிரி அழுது. . . அவள்...?
செல்வநாயகியா... அவள் பெயர்...? அதுபோல் தான் ஏதோ ஒன்று. செல்வி என்று கூப்பிட்டதாய் ஞாபகம், முல்லைத்தீவிலே எங்காவது ஒரு முலையிலே இன்றும் அவள் வாழ்ந்து கொண்டிருப்பாளா..? இல்லாவிட்டால் பட்ட காயத்தின் ஆழத்தை உள்ளுக்குள்ளேயே அறிந்து குமைந்து அவமானத்தால் செத்துப்போயிருப்பாளா..? எப்படியாயினும் அவள் அவளைப் பற்றி அறிந்திருக்கவேண்டுமா? தவறு செய்து விட்டாரா..? முன்னதே ஒரு பெருங்குற்றம். அதற்கான பிராயச்சித்தம் இல்லாத போது இன்னும் ஒரு தவறா...?
செல்வி. ஒ. சொல்வி... முதன் முதல் அங்கு அவர் ஒரு வாலிபனாய் அங்கு போனபோது. அந்தக் காட்டு வாழ்க்கைக்குள் அவர் மனதை இனிமைப் படுத்தியது அவளல்லவா...? அந்த முதற்கணங்கள். . . இவர் தொழில் ஏற்று அங்கு போயிருந்த அடுத்த கணமே, அவருக்குள் கிடைத்த இனிய கனவல்லவா அவள். -
"உஸ். உஸ்.” புதிய அறைக்குள் தன் இருப்பை உறுதிசெய்து கொண்டு ஆயாசமாய்ச் சாய்ந்து கொண்டிருந்த வேளையில் தான் ஜன்னலுக்குள் விதவிதமான மருட்டல் ஓசைகள், கீச்சுத் தொனிகள். யாரது..? இவன் கேள்விக்குறியாய் நிமிர்கையில் ஜன்னலை ஒட்டித் தெரிந்த முகம் திடுமென்று மறைந்தது. மறுபடியும் எட்டி இவனை அழைத்துக் கூவிவிட்டு மறைந்துவிடும் வேகம் இவனுக்கு புரிந்தது. யாரோ ஒரு வால் வந்து அவனுக்குச் சண்டித்தனம் காட்டுகிறதென்று, அடுத்தகணம் கண்முடித் தூக்கமென நடித்தான். அந்தக் குரல் பதுங்கிவரும் நேரத்தைக் கணிப்பிட்டு அதற்குள்ளாகவே வீட்டின் மறுவழியால் வெளிப்பட்டு ஜன்னல் கரையோரமாய் பதுங்கிக்கொண்டிருந்த அவளை அலாக்காய்த் தூக்கி விசிப் பயமுறுத்தினான்.
"ம். ஹ ம். ம். ஹ ம்..” அவள் பிடிவாதமாய்த் திமிறிக் கத்துகையில் அவளை மெதுவாய்க் கீழிறக்கினான். பிடித்த கையை விடாமல் இறுக்கப் பற்றியபடி சொன்னான்.
“ம். என்னோடை இனி சேட்டை விட்டால் கைகால் மிஞ்சாது தெரியுமோ...? காத்திலை வீசி எறிஞ்து போடுவன்.”
போலியாய் பயமுறுத்தினான். திமிறிக் கைகளை விடுவித்தவள், “என்ரை கைகாலை உடைச்சால் நான் சும்மா விடுவனோ, பொலிசிட்டைப் போவன்...” என்றாள்.
“பொலிசிட்டைச் சொல்லவே ஏலாமல் நாக்கைப் புடுங்கினால்.’ "எங்கை புடுங்குங்கோவன் பாப்பம்." அவள் அப்பால் ஓடிப்போய் ஈயென்று பற்களைக் காட்டிவிட்டு ஓடினாள்.
அது தான் முதல் அறிமுகம் பக்கத்து வேலியோடு அவள் விடு. வாய்த்துடுக்கு அவளை வயதுக்கு அதிகமான வளாய் ஒரு கணமும், சிறுபிள்ளைத்தனம் மாறாதவளாய்

<0éLaorð (23) மறுகணமும் மாற்றிக்கொண்டிருந்தது.
அவளையும், அவள் பேச்சையும், செயல்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல அவனுக்குத் தோன்றும். பொழுது போகாத வேளைகளிலும் வேலை முடிந்து வருகின்ற மாலைப் பொழுதுகளில் அவன் அவளோடு அரட்டையடிப்பான். வயோதிபத்தாய் தந்தையருக்குக் கடைக்குட்டியாய்ப் பிறந்து விட்டவள். அவள் சகோதரர்கள் குடியும், குடித்தனமுமாய்ப் பிரிந்து போனபிறகு வீட்டில் தனித்திருந்து நேரம் கழிக்கத் திண்டாடுவாள். இடையிடையே அக்காவீடு, அண்ணாவீடு என்று கொண்டாடித் திரிந்தவளுக்கு இவன் வந்த பிறகு எல்லாம் மறந்துபோயிற்று. இவன் அவளது பொழுது போக்குகளின் பங்காளியானான். வயலோரங்களில் மாலைப் பொழுதுகளில் இவனோடு உலவிவருவதும், பறந்து திரிகின்ற கொக்குகள், நாரைகள் உதிர்த்துப் போகின்ற சிறகுகள் சேர்ப்பதுமாய் அவள் தன் பொழுதுகளுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருந்தாள். இடையிடையே தாய் செய்து கொடுக்கின்ற சிற்றுண்டிகளை இவனுக்கு எடுத்து வருவதும் அவளே.
இவனுக்குச் செல்வி இல்லாவிடின் வேலை ஓடாது. அவளுக்கும் அஃதே. அவள் மலர்வதற்குத் தயாராகி வளர்ந்தாள். ஆனால் மலர்வதற்கிடையில்... அந்த நாள். அது வந்தே இருக்கக்கூடாதோ...? அவளுடனான இனிய பந்தத்தைக் கொலைவாளாகி அறுத்த அந்த மாலைப்பொழுது வராமலே இருந்திருக்கலாமோ...?
ஒரு வியாழக்கிழமையாய் இருந்திருக்க வேண்டும். அவள் உற்சாகமாய்த் தான் வந்திருந்தாள்.
வழமை போலவே சூரியன் பொன்னிறம் மங்கி கடலுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். இவனுக்கு காலையில் இருந்து மனம் குரங்காகியிருந்தது. சில்வாவின் வார்த்தைகள் அப்படியே யூதாகாரமாகித் தன்னுள் வெடிக்கும் என்பதை ஒருபோதும் அவன் நினைத்திருக்கவில்லை. w
சில்வா கொஞ்சம் உல்லாசப் பேர்வழி, கம்பகாவிலிருந்து முல்லைத்தீவிற்கு வேலை நிமித்தம் வந்ததில் சினேகமாயிருந்தான்.
"உங்கட யாழ்ப்பாணத்தவங்களுக்கு என்னதான் தெரியும்” ஒரு சிகரெட்டை நாசூக்காகப் பற்றியபடி சொன்னான்.
"இதைப்பிடித்து அடிச்சுப்பார் மச்சான்...” என்று அவன் நீட்டிய சிகரெட்டை மறுத்ததுதான் அப்படியெல்லாம் பேசத்தூண்டிற்றோ...? ስ "ஒருசதம் சிலவழிக்க மாட்டீங்கள், ஒரு சந்தோசம், உல்லாசம் ஒண்டும் இல்லை. என்னத்துக்குத் தான் சேர்த்து வைக்கிறீங்களோ..? என்ஜோய் பன்ன வேனுைமடா, என்றோய்... என்னைப்பார் எவ்வளவு சந்தோசமாயிருக்கிறன். நினைச்சநேரம் தண்ணி, என்னைப்பாத்து ஆரும் வருவாளுகளடா... உன்னட்டை ஒருத்தி, ஒருத்தியாவது வருவாளா..? ...ம். 'அது' வெண்டால் என்னவெண்டாவது தெரியுமாடா..? சரியான பயந்தாங்கொள்ளிகளடா நீங்கள். சரியான முட்டாள்.”
ஒருவனுக்கு ஆத்திரமுட்ட வேண்டுமெனில் அவனது ஊரைப்பற்றி மோசமாய்ச் சொன்னால் போதும், கிளர்ந்து போய்விடுவான். இவனுக்குள் பொங்கிய ஆத்திரத்தையும்,

Page 14
கோபத்தையும் வெளிக்காட்ட முடியவில்லை. பழக்கமுமில்லை. அத்துடன் சில்வாவின் பக்கத்தில் கேலியாய்ச் சிரித்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் அவன் கூட்டாளிகள். அடிபடும்போது அவன் பக்கம் நிற்பார்கள். ஆனால் இவன் பக்கம் இவனது ஊரவர்களாவது நிற்பார்களா? என்பது சந்தேகமாய்ப் போனது.
பற்கள் கெட்டித்ததில் உதடுகள் கடிபட்டு ரத்தம் கசிந்தது. மெல்ல சில்வாவின் பேச்சினின்றும் ஒதுங்கி வந்துவிட்டபோதும் பறைகளின் இடுக்குகளில் எதிரொலிக்கின்ற வார்த்தை மோதல்களாய் அவன் குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது. M
"முட்டாள்களடா நீங்கள்.” இவன் முஷ்டியை இறுகக்குத்தினான். “சே.ர்.” யாரோ கூப்பிடுவதுபோல் அந்தக் கீச்சுக்குரல் கொஞ்சம் இருமல் சேர்த்துக் கூப்பிட்டது. யாரோ வந்தாற்போல நடித்துக் காட்டுகிறாளோ...? யாராயுமிருக்கட்டும் இப்போது இவன் மனம் யார் அழைப்பிலும் கரையவில்லை.
இறுகிய கல்லாய் கதிரையில் சாந்திருந்து வெற்றுவெளியை வெறித்தபடியிருந்தான். என்றாலும் அவன் எவ்வளவு மோசமாய்க் கேலி செய்தான். பதிலுக்கு அவனையும் கேலி செய்ய வார்த்தைகள் இல்லாமலில்லை. ஆனால் அவனைக் கட்டிப்போட்டது எது?
பின் கழுத்தில் லேசாய் ஏதோ கிசுகிசுவென்று ஊராய்ந்தது. புறங்கையால் தட்டிவிட்டு உட்கார்ந்தான்.
மீண்டும் கழுத்தில் கிசுகிசு லேசான பறவைச்சத்தம். படக். மறுபடி திரும்பினான். மெல்ல கதிரைக்கடியில் மறைந்துகொள்ளப் பார்க்கிற செல்வி. கிடுகிடுவென்று கோபம் தலைக்குமேல் ஏறிற்று. சட்டென்று கதிரையைத் தள்ளி அலளைப்பிடித்து இழுத்துப் பார்த்த போது கையில் வெண்ணிறச் சிறகுகள். அதைக்கொண்டுதான் கழுத்தில் கிசுகிசு முட்டினாளே...? இவள் என்ன அவனை முட்டாள் என்று எண்ணிக்கொண் டாளோ? சில்வா மேலிருந்த கோபமனைத்தும் அவள் மீது பாய்ந்தது.
இந்தச் சின்னன் கூட என்னை முட்டாளாக்கப்பார்க்கிறதோ? அவளை நோக்கி அடிப்பதற்காக நீண்ட கை சட்டென்று அந்தரத்தில் நின்றது.
“அதென்டால் உனக்கு என்னவெண்டாவது தெரியுமா...?” மனதுக்குள் சில்வா எக்களித்தான்.
“இனிமேல் இல்லை, இனிமேல் இல்லை." பயந்தபடி கெஞ்சுதலாய் மிழற்றிய அவளை நோக்கி இவன் கண்கள் அபூர்வமாய் மின்னின. Հ
"இனிமேல் இல்லை, இண்டைக்கு மட்டும்தான்...ம்..” அடிக்கக் கொண்டுபோன கை அவள் கன்னங்களின் வழுவழுப்பை வருடிப்பார்த்தது. அது வரைக்கும் அவன் அறியாத மிருதுத்தன்மை அவனுள்படர, அந்த மலரின் மென்மையை வருடி வருடி அவன் அளைந்தான்.
கண்ணனுக்குள் மயக்கம் ஏறிக்கொண்டிருந்தது. இந்த சில்வா என்னை என்ன நினைத்துக்கொண்டான்...? இவள் என்ன என்னை எப்பவும் பேய்க்காட்டுறது...? வெளியே இருள் தாவித்தாவி மங்கல் ஒளிக்குள் இளடுருவ் முயன்றது. மொட்டைப் பிய்த்துக் தேனுண்ட வண்டாய் அவளுக்குள் நுழைந்து எதையோ

eDhab இ தேடியவன் அவளைத் தரையிலேயே விட்டுவிட்டு :ாழுந்தான். மனதில் துருத்திநின்ற ஆங்காரம் திருப்திப்பட்ட நிலையில் மனதினின்றும் ஏதோ கழன்று விழுந்து விட்ட உணர்வு விழித்துப் பார்த்தபடி செல்வி கிடந்தாள். உடையின் அலங்கோலத்தைக் கவனித்து ஒழுங்காக்கும் வயது இன்னும் வரவில்லையோ..? எதுவென்றால் என்ன வென்று தெரியா நிலையில் கிடந்தாள். மனச்சாட்சி பொறுக்க முடியாக் கனத்தில் இவன் எழும்பி அவள் ஆடை சரிப்படுத்தினான். அவள் எழும்பியிருந்து விசும்பினாள். உள்ளெழுந்த வியாபகமான கேள்விகளுக்கு விடைதெரியாமல் அவள் தவித்தாளா..?
“செல்வி..” இவன் உயிரில்லாமல் கூப்பிட்டான். "விட்டிலே விடுறன் வா..” கூட்டிப்போய் விட்டில் விட்டு விட்டு உள்ளே போகாமல் திரும்பி வந்தான்.
இனியென்ன அவளுக்கு பாதுகாப்பு. எல்லாமே போனபிறகு. ஆனால்,செல்வி அதொன்றும் கேட்கவில்லை. இப்போதுதான் உலகின் விகாரம் புரிந்து മീഥേൽ தான் அவள் தனியே போகும் நாள்களுக்குப் பயப்படநேரிடுமோ..? இனி அவள் தன் குறும்புப் பேச்சுக்களை ஒழித்து விடுவாளோ?
அன்றிரவு முழுவதும், அவனுக்கு நித்திரையில்லை. அந்தப் பிஞ்சு முகம், நெருடி நெருடி உள்ளத்தை எதுவோ செய்துகொண்டிருந்தது. இன்னொருதரம் செல்வியின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லை. இந்த இடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. கொடிய பாவமொன்று. செய்து விட்டதாய் அன்றிரவு முழுவதும் நெட்டுயிர்த்தான். அந்தப் பூ முகத்தின் கேள்விக்குறிகள் இவன் மனதை ரணப்படுத்தின. இனி அவளைப் பார்க்க நேரின் அவள் வேதனை தனக்கு எமனாகி விடுமெனப் பயந்தான். உறங்குதல் இல்லாமலே கழிந்த அந்தப் பொழுதில் அவனைச் சலனங்கள் ஆட்கொண்டன.
சொல்லிவிடுவாளே..? விட்டில். ஊரில்..? பொலிசில்...? எங்கேனும் ஓரிடத்தில் awana Tay 6evTsioso a6anTeamT. . . ?
அதன் பின் இங்கு இதனால் தலைநிமிர்ந்து உலவத்தான் முடியுமா? இரவிரவாய்த் தள் சாமான்களை முட்டை கட்டினான். விடிவதற்கிடையில் அங்கிருந்து கிளம்பி விட்டான். யார் யாருடையதோ கையையும், காலையும் பிடித்து ஊருக்கு மாற்றலானான். இடைப்பட்ட உழைப்புக்களிலும், ஓட்டங்களிலும் சில்வாவையோ, செல்வியையோ, முல்லைத்தீவையோ பற்றி நினைப்பதையும், பேசுவதையும் தவிர்த்தான். தெரிந்த யாரிடமாவது அவற்றைப் பற்றி விசாரிக்ககூட அச்சமுற்றவனாய். . . அவற்றை மறந்துவிட்டதாயே. அவை நடவாததாயே நினைத்துக்கொண்டான். தொடர்ந்து வந்த வாழ்க்கையின் பாரமும், சஞ்சலங்களும், அந்த நிகழ்ச்சியின் பெறுமானத்தைக் குறைத்து ஒதுக்கிவிட நாட்கள் வேகமாய் நகர்ந்து அவன், அவராகி நரைதிரைகளுடனான அவரது முதுமை தொடர்கையில் விமலியின் உருவிலே அவரை வாட்டி வதைக்கும் செல்வியின் நினைவுகள். விமலியைத் தூக்கி அணைக்கின்ற போதெல்லாம் அந்த வழுவழுப்பான மேனியும், பூ முகமும் செல்வியாய் மாறி அவரை
befesas. . . Bibafass. . .
"ஓ. விமலி. விமலி..." இது மரண வாதனையா? மனதின் ரோதனையா? கூரையில் சடசடவென்று மரக்கிளைகள் உராயும் சத்தம். பட் பட்டென்று காற்றில் அடிக்கின்ற ஜன்னல் சத்தம்,

Page 15
யாரோ வரப்போகின்றார்களோ..? துப்பாக்கி முனையில் விமலியை இழுத்துப் போக...
வேண்டாம். வேண்டாம். அவளை விட்டுவிடு.
. விமலி. விமலி. ஓ. செல்வி. செல்வி அவளை விட்டுவிடச் சொல்.
விமலி. அய்யோ என் விமலி. இந்தக் கிழவனின் பழி உன்னிடமா..?
பீதியூட்டிய அலறல்களுக்கிடையே வாமதேவனும், புவனாவும் மட்டுமன்றி விமலியும் நிர்மலனும் கூட எழுந்துவிட்டனர். கிழவர் கால்களை உதைத்தபடி புலம்பினார். உதைத்துக் கொண்டிருக்கிற கால்களின் அடியில் தான் முடிவற்ற நரகம் பதுங்கியிருக்கிறதா...?
புதிய சம்பாத்துகள்
"அவை தான் அவனுடைய புதிய சப்பாத்துக்கள்" சொல்லியபடி பணிசெய்பவள் மேலும் தொடர்வாள்
"ஆயினும் அவை எப்போதுமே அணியப்பட்டதில்லை அவனால் மரம் போல் விறைத்தபடி சுவரில் தொங்கியபடி தானி"
மாரிகாலத்தில் அணியவெனிறேதானி வேண்டி வந்தான் அவன் அந்த நீர்புகாத் தோலினாலான சப்பாத்துகளை.
"ஏனவள் கணவன் அந்தப் புதிய சப்பாத்துகளை அணிந்ததில்லை எப்போதுமே?
அவளது அயலவரில் எனக்குத்தெரிந்த ஒருத்தியைக் கேட்டேன்.
"ஆ அந்தச்சப்பாத்துகள். மழைபெய்தால் தப்பாமல் அணிவதற்கேதான் கொண்டுவந்தான். ஆயினும் அவை எப்போதும் சுவரில் தொங்கினபடிதானி”

εΟ ίδι αυιό இ)
"ஆமாம் அவற்றைத் தொங்கவிட்டபடியே கலகலவென்றவன் சிரித்தாண்”
இறுதியாய் சோடி சப்பாத்துகளை கொண்டுவந்துவிட்டேன் இனி மழையின் நடுவே, பனி உருகிக் கரையும் பொழுதில் அழுக்குக் கேற்றின் நடுவிலும் நடந்து திரிவேணி நான்
எத்'ரென வருடம் இதற்காக
ரங்கிக் காத்திருந்தேன் எத்:tனை தூரம் நினைத்து நினைத்து
தவமிருந்தேனி.
ஆயினும் அவனி அந்தச் சப்பாத்துகளை
தொட்டதுமில்லை:
அங்கிருந்து அவற்றை அகற்றவுமில்லை. தொங்கியபடியேதான் கிடந்தன.
"ஹ ஹம் ஹம் ஹா ஈரத்தோயும் வழிநடைப் பயணம் போவேனி இந்த முரட்டுச் சோடியை அணிந்தபடி"
இப்படியாகப் பிரக்டனம் செய்தவன்
இறந்துபோன பரினினும்
இதோ அந்தப் புதிய சப்பாத்துகள் ஆங்கிலத்தில் : தோமஸ் ஹார்டி இனினும் சுவரில் தொங்கியபடி தமிழில் : சு.வில்வரத்தினம்
-an bebee Dama

Page 16
فالعnلعGخروج
இருண்ட பொழுதெல்லாம் 翻 蠟 அஸ்தமனமாகிக் கொள்கிறது. s/02.ÉfZნ37)/* விழிகளின் ஊடுகளில் ۔۔
உரசிச் செல்லும் கனவுகள்
பூத்துக் குலுங்குகின்றன.
உதடுகள் திறக்க மறந்த மனிதர்களுக்கு சூரியனின் மறைவு பற்றி கவலையில்லை. சூரியனின் உதித்தலும் அவர்களுக்கு விடியாமல் அமைந்து விடுகிறது நம்பரிக்கையின்மையால்.
இது உனக்கும் எனக்குமான காலம்.
* , மலர்களின் விரிதல் *్మ . பூஜைக்காய் ஆகிவிடுகிறது. ༩༤ A , , வாடிவிடுவோம் எனத்தெரிந்தும்
அது மலர்கிறது சந்தோச மிதப்பரில். அது அதற்கான காலம்.
്66. நதிகள் கூடிக் கடலில் ሖ; சங்கமித்துக் கொள்ளுகின்றது - உவர் 3% எனத்தெரிந்தும் சொந்தம் கொள்கிறது 2. உறவைச் சென்றடைந்ததால். Ά நீயும் நானும் மட்டும் - 须 ஏன்? இங்கு R. % f வாழ்க்கையை தொலைத்து விட்டு. / எவ்வித நம்பரிக்கையின்றி %് விடியும் பொழுதும் - சூரியன் ú மறையும் பொழுதும். ή / * é எனினும் இது உனக்கும்
எனக்குமான காலம்
A v-sus-siss sa
 

மருதர்க் கொத்தன் ~ சில குறிப்புக்கள்
தி.செல்வமனோகரன் ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிழக்கிலங்கைக்கு பெரும் பங்குண்டு. தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழும் இப்பிரதேசத்தினின்றும் வளமான பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன. தமிழ்த் தேசிய வகைப்பாட்டினுள் உள்ளடங்கும் முஸ்லிம்கள் தமிழ்க்கலை இலக்கிய செல்நெறிக்கு பெரும் பங்காற்றியுள்ளமை வெளிப்படை உண்மையாகும். ஈழத்தில் தமிழில் எழுகிற இலக்கியங்களை தமிழ் இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம் என்று பிரித்து நோக்குதல் ஓரளவு செல்வாக்குப் பெற்று காணப்படுகின்றது. அந்தவகையில் "இஸ்லாமிய இலக்கியம்" என, இலக்கியம் மதத்தின் பெயரால் சுட்டப்படுவதை எதிர்த்து மொழியின் பெயரால் (தமிழ் இலக்கியம்) என) சுட்டப்படவேண்டும் என்ற கருத்தை உடையவர்களில் மருதூர் கொத்தன் முதன்மையானவ்ர் எனலாம்.
மருதமுனையில் பிறந்ததால் மருதூர் என்பதை அடையாகக் கொண்டு "கொத்தன்' என்பதையும் இணைத்து மருதூர் கொத்தனாக விளங்கும் இவரின் இயற்பெயர் வி.எம்.இஸ்மாயில் ஆகும். சிறுகதை, கவிதை, நாடகம், ஓவியம் எனப் பல்துறையாளராக இவர் விளங்கினும் சிறுகதைகளே ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் இவரை அடையாளப்படுத்தி நிற்கிறதெனலாம். அவருடைய படைப்புக்கள் கிழக்கிலங்கை முஸ்லீம் பிரதேசங்களை, குறிப்பாக மருதமுனை, நீலாவனைப் பிரதேச மண் வாசனை கொண்டதாக விளங்குகின்றது. முஸ்லீம் மக்களிடம் உள்ள தமிழ் வழக்காற்றுச் சொற்களையும் மட்டக்களப்பு பிரதேச வழக்காற்றுச் சொற்களையும் கையாளுகின்றமை இவரின் படைப்புக்களை மெருகூட்டும் அம்சங்கள் ஆகும். பிறப்பால் முஸ்லீம் என்றவகையில் முஸ்லிம் மக்களின் வாழ்வு மற்றும் முரண்பாடுகள், சுரண்டல்கள், சமய சடங்காசாரங்களின் போலித்தனங்கள் அருகிவரும் பண்பாடு விழுமியங்கள், யுத்தஅவலம், சாதியம் எனப் பல்வேறு அம்சங்களை தன்படைப்புக்களில் பதிவு செய்கிறார்.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆரம்ப உறுப்பினராக இருந்து தீவிரமாகத் தொழிற்பட்டவர் இவர். ஆயினும் இன்று முற்போக்கு எழுத்தாளர்களால் ஆஸ்தான வித்தவான்களாகப் போற்றப்படுகின்றவர்கள் போல வெறும் கோஷங்களையும், பிரச்சாரத் தொனியையும் கொண்டதாக அமையாது, தமது படைப்புக்களை மிகுந்த கலை நயத்தோடு படைக்கின்றவர் கொத்தன். முற்போக்கு எழுத்தாளர் கூட்டத்தை சேர்ந்தவராக விளங்கிய போதும் அவர்களால் குறிப்பாக முற்போக்கு விமர்சகர்களால் இவரின் ஆளுமைகள் இனங்காட்டப்படாமை வியப்பிற்குரியதே. அதேவேளை இவரின் படைப்புக்களை எதிர்கூட்டத்தினர் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அயேசுராசா தனது அலை இதழின் பதிவுகள் பகுதியில் கொத்தன் கதைகள் பற்றிய நேர்த்தியான விமர்சனப் பதிவு செய்திருப்பது இதற்கு உதாரணமாகும். மு.சடாட்சரன் காலத்தை வென்ற கதைகளாக கொத்தனின் கதைகளை இனங்காண்கிறார். (2008-200 தினகரன்) வ.அ.இராசரத்தினமோ மலையாள இலக்கியத்தின் ‘வைக்கம் முஹம்மது பீருக்குள்ள இடம் போல தமிழில் இவருக்கு தனியிடம் உண்டு என்கிறார். (17.03.1963 தினகரன்)
மருதூர் கொத்தனுடைய கதைகளில் சுவாரஸ்யமான சித்தரிப்புக்கள், தத்ரூபமான வருணனைகள், கவித்துவமான மொழிநடை, சமூக யதார்த்தவியற்பண்பு நிறைந்தவையாகவும், தான் எடுத்துக் கொண்ட விடயத்தை மிக அற்புதமாகக் கொண்டுசெல்லும் அவருடைய திறன்களும் வெளிப்படுகின்றன. மேலும் வளமான உவமை உருவங்கள் நிறைந்த மொழிநடையும், சொல்லும் முறை, வெளிக்கிளம்பும் தொனி, இவற்றினூடாக கதையை கொண்டு செல்லும் திறன் போன்றன இவரின் தனித்துவமான இலக்கிய அடையாளங்கள் எனலாம். அவருடைய மொழி லாவண்யத்திற்கு உதாரணமாக 'சங்கிலித் தொடர்கள் அறுகின்றன’ எனும் சிறுகதையில்.
ஆசுறா உம்மா பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு மீண்டும் பழையபடி மடித்து பெளத்திரப்படுத்தி
பெட்டகத்தைத் திறந்தாள். ‘ஏங்கா புள்ளே பொட்டகத்துக வைக்காய். புள்ளை -களைக் கூப்பிட்டுக் கேட்டுடுகா' மேலகழுவி உடைமாற்றிக் கொண்டு வந்த
மேமன் மனைவியைத் தடுத்தார்.
"பொன்னுக்கு வாங்கிப் புதனுக்கு உடுக்கச் சொல்லி சும்மாவா சொல்லியிருக்காங்க” (பக்.30)

Page 17
அம்பலம் இ)
என்பதைக் கூறலாம். மேலும் பாத்திரத்திற்கேற்ற மொழி, அற்புதமான பாத்திரச்சித்தரிப்புக்களும் காணப்படுகின்றன.
அதேவேளை தீர்வு சொல்லியே தீரவேண்டும் என்ற பிரச்சார எழுத்தாளர்களின் பாணியில் ஒருசில கதைகள் இருந்தாலும் பெரும்பாலான கதைகள் இயற்கையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் சாதியம் உண்டு அது உழைக்கும் வர்க்கம்; ஏழை, மற்றயது சுரண்டும் வர்க்கம்; பணக்காரர்கள் என்கிறார். தமிழரிடத்தில் ஓங்கி நின்ற சாதிக்கட்டமைப்புக்கு எதிரான குரலை (சாதிகள் இரண்டே), சடங்காசாரங்களின் போலித்தனங்களுக்கு எதிரான குரலை (உதாரணம் - வேலி) கலைத்துவத்தோடு வெளிப்படுத்தியமையே முற்போக்கு எழுத்தாளர்கள் பலரினின்றும் இவரை வேறுபடுத்திக் காட்டும் சிறப்பம்சமாகும். விவரணத்தையும் சம்பவநகர்வையும் சிறப்பாக நடத்திச் சென்று கதையின் முடிவிலேயே கதைக்கான கரு, தொனிப் பொருட்களை படிப்பவர் அறிந்தின்புறத்தக்கவகையில் கதையாக்க முறையை பின்பற்றுவதையும் காணலாம்.
கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த 'களம் இதழில் பிரசுரமான இவரின் மரையாம் மொக்கு எனும் சிறுகதை ஏழை எளியவர்களின் துன்பத்தையும் அரச பயங்கரவாதத் தையும் சுட்டிநிற்கிறது. பணக்கார சிங்கள முதலாளி ஒருவர், குடியேற்றக் கிராமத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே துவேசமனப்பான்மையை தூண்டி, அவர்களை துரத்தியடிக்க திட்டமிடுவது உழைக்கும் வர்க்கம் எவ்வினத்திலும் ஒன்றே என்பதையும் "சாதிகள் இரண்டே” எனும் கதையினூடாக உணர்த்துகிறார்.
“கந்தையா இந்த உலகத்திலே ரெண்டு சாதிகள் தான் எண்டத்த இப்ப கண்ணாரக் கண்டிட்டன். ஒன்று பணக்காரச் சாதி, மற்றது என்னையும் உன்னையும் கரீமையும் போன்ற ஏழைச்சாதி”
- (usis.48)
என்ற வரிகள் குறிப்பிடத்தக்கவை. வெட்டுமுகம் கதையில் சக்காத்துக் கொடுக்கும் முறையில் உள்ள சீர் கேடுகளை அம்பலமாக்குகிறார்.
“சதக்காச் சக்காத்தா குடுக்காங்க? சும்மா ஒலகத்து
ஒப்பினக்கி காட்டாப்பு காட்டுறாங்க”
"நம்மட ஹக்க அல்லா ஹத ஆவா அவியளுக்கிட்ட
குடுத்திருக்கிறான் எண்டுதான் நாம போறம். நீ யென்ன
தந்து வெச்சது? எண்டு நமக்கிட்ட கேக்காங்க”
- (Lidš.- 05) எனும் வரிகள் சக்காத்துக் கொடுப்பவர் மனங்களையும் வாங்குபவர் மனங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது. அதேபோல வேலி "இத்தா இருப்பதில் உள்ள வெற்றுச் சம்பிரதாயங்களை படம் பிடிக்கிறது.
மேலும் சிறுகதைத் தலைப்பொன்று “?" என வினாக்குறியின் அடையாளமாக உள்ளமை அக்கதை வெளிவந்த காலத்தின் புதிய உத்தியே எனலாம். அக்கதை சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாரை யாத்திரைக்கு (மக்கா) கட்டாயப்படுத்தி அனுப்பும் மாப்பிள்ளையின் கதையாக அமைந் துள்ளது. மாப்பிள்ளை மருமூது வெவ்வையின் தோற்றம், உணவில், சொத்தில் உள்ள அவரின் ஆசையை வெளிப்படுத்தும் போது எள்ளல்சுவை நன்றாக அமைந்துள்ளது. உதாரணமாக
அந்த வீட்டில் முற்றிய தேமல் முதிரையில் கருங்காலி வைரத்தால் அழகுசெய்த பெட்டகங்களும் அலுமாரிகளும் இருக்கின்றன. அவற்றோடு பழகிய தோஷம், மகளுக்கு மாப்பிள்ளை எடுப்பதிலும் செல்வாக்கைப் பிரயோகித்து விட்டது போலும்" என மாப்பிள்ளையின் தோற்றத்தை நையாண்டி செய்கின்றார். இவ்வாறான ஆளுமை மிக்க மருதூர்க் கொத்தன் ஓய்வு பெற்ற அதிபர். சாகித்திய அக்கடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவள் இப்போது எழுதுவதை குறைத்துள்ளமை வருத்தத்திற்குரியது. சிறந்த படைப்புக்களை இவர் ஆக்கி இருப்பதும் பதினொரு கதைகளை மட்டும் கொண்ட "கொத்தன் கதைகள்' எனும் தொகுப்பு ஒன்றே வெளிவந்துள்ளது. மீதிக்கதைகள் தொகுப்பாக வெளிவராமை துரதிஷ்டமே.

அம்பலம்.
ക്- ക്രി/ கறுப்பு பரிரபஞ்சம் -
கனவு கண்டான பரிணி உண்டான இருட்டு இனினும் போகவில்லை. பரிரபஞ்சம் முழுதும் எஞ்சி நின்று ஆயிரம் நாகங்களின் விஷங்களை உறுமலுடணி துப்பரியது. கடல்களும், ஏரிகளும், குளங்களும் : வாய்க்கால்களும் - விஷத்தால் நிறைந்தன பரிரபஞ்சக் கனா வெறுங்காலுடன் பழஞ் செருப்புக்கும் வக்கின்றி செகிடம் இழுக்கத் தொடங்கிய பரிணி - பிரபஞ்சம் கறுப்பாயிற்று. வண்ணங்கள் பற்றிய பரிரக்ஞை யாபேர்க்கும் ஒருநாள் கறுப்பாய், கருங் கறுப்பாய் 6)ucssagicJust ... நிறக்குருடு ஆனோம். தாய்மார் சோறுட்ட காட்டிய நிலா கறுப்பு புள்ளியாய் காணாமல் போய்விட்டது.
பனி இரவில் மெளனவாசம் தரும் மல்லிகை கறுப்பு இதழ்களில் வெண்மை தொலைத்தது. வெண் சுவாசங்களின் மீது ஆயிரம் கறுப்பு குதிரைகளினி விசைகளில் கட்டிய கயிறு குறியை பறித்து தெருவில் எறிந்தது. கறுப்புப் பரிரபஞ்சத்தில் கறுப்புக் கனவுகள் கோரமாய் இனினும் எழுகின்றன.
கோகுல ராகவன்
6O6T

Page 18
ஆbடல* --மா." "32( --- ..............................................................--۔۔۔۔۔۔)
3ண்டி கலை இலக்கிய வட்டத்தின் கவிதை ஆய்வரங்கின் மீது சில பதிவுகள் கடந்த யூன்மாத இறுதியில் யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் தூண்டி கலை இலக்கிய வட்டம் இரண்டுநாள் கவிதை ஆய்வரங்கு ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்து, இவ்வாய்வரங்கு
காலை - மாலை இரு அமர்வுகளாக அமைந்திருந்தது. மாலை அமர்வுகளின் முடிவில் 'கவிதை நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை ஒழுங்கமைப்பின் சிறப்பம்சம் எனலாம்.
隱囊重錢 * శళ్ల** ** es.'s...scess. s سفين.
கலாநிதி திரு.இ.முருகையன், திரு.சு.வில்வரத்தினம் திரு.சோ.பத்மநாதன், கலாநிதி திரு.செ.யோகராசா, திரு.சண்முகம் சிவலிங்கம், திரு.பாஅகிலன், திரு.மு.பொன்னம்பலம், திரு.சு.யேசுராசா, பேரா.அ.சண்முகதாஸ் உட்பட பல மூத்த கவிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வு விடயங்களை முன்னெடுத்துச் சென்றனர். பேரா.எம்.துமானின் ஆய்வுக் கட்டுரை சபையில் தூண்டி ஆசிரியர் திருதிசெல்வமனோகரனால் வாசித்தளிக்கப்பட்டது.
இத்தகைய நிகழ்வுகளின் அவசியத்தை கலந்துகொண்ட அறிஞர்கள் பலரும் வலியுறுத்திப் பேசினர். உண்மையில் கடந்தகால இலக்கியப் போக்கு மீதான விளக்கங்களையும் தொடரும் காலங்களில் எமது பங்களிப்பையும் அறிஞர்கள் - ஆக்குனர்கள் கூடிப்பறைதல் மிகவும் பயனுள்ளதே. அந்தவகையில் தூண்டி கலை இலக்கிய வட்டத்தின் இப்பணி பாராட்டுக்குரியது. இந்நிகழ்வு பற்றி தூண்டி சஞ்சிகையின் ஆசிரியர் குறிப்பிடும்போது
"இன்றைய காலத்தில் எமது சமூகம் மீதான மீள்பார்வை அவசியமாகின்றது. கவிதை பற்றிய இவ்வாய்வரங்கும் அத்தகைய செயற்பாட்டில் ஒரு துளி என நின்ைக்கிறேன்" என்றார்.
1ஆம் நாள் கலை அமர்வில் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் நெறியாள்கையில் திரு.சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று நாடக உருப்பெற்றிருந்தது. இந் நாடகம் சபையில் அனேகரின் பாராட்டைப் பெறும் வகையில் தத்துருபமாக அமைந்திருந்தது.
2ஆம் நாள் காலை அமர்வு திரு.கெனத் அவர்களின் நெறியாள்கையில் உருவான “காற்றுவெளிக் கிராமம்" என்ற கவிதை நாடகத்தை திரு.க.வில்வரத்தினம் அவர்களின் கவிதையை அடிப்படையாக கொண்டு உணர்வு மிக்கதாக நிகழ்த்திக்காட்டி பாராட்டைப் பெற்றது.
திரு.தே.தேவானந்தத்தின் நெறியாள்கையில் செயற்திறன் அரங்க இயக்கம் "கருச்சிதைவு” என்ற பெயரில் திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்களின் "ஆக்காண்டி.." என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டு கவிதை நாடகம் ஒன்றினை வழங்கி 2 ஆம் நாள் மாலை அமர்வை நிறைவு செய்தது இவ் வாய்வரங்கு.
இந்நாடகம் வழமையில் இருந்து மாறுபட்டு ஒரு கவிஞரின் பல கவிதைகளை வசன பிரயோகங்களில் பயன்படுத்தியிருந்தமை ஒரு முன்னேடி நடவடிக்கை எனலாம். மேலும் கவிஞரின் சிந்தனைகளில் நின்றும் ஆக்காண்டிப் பாடல் வேறுபட்ட கருத்தினையே நாடகம் மூலம் தந்துநின்றது. கைதுகள், வதைகள் துண்டங்களைச் சொல்லவும் இக்கவிதை குறிப்பிடப்பட்டது. உண்மையில் ரசனைக்குரியதாக இருந்தது.
இத்தகைய பயன்மிக்க ஆய்வரங்குகளின் நிகழ்த்துகை இலக்கிய உலகிற்கு தொடர்ச்சியாக தேவை என்ற கருத்து பங்குபற்றிய அனைவரிடமும் வலுப்பெற்றிருந்தது. குலகூழ்மணன்.
 
 
 
 


Page 19
ஈழத்து இலக்கிய உ2
bcb 6.
- සී.ආර්‍යෂ්ඨිස්(Jø] எதிர்வரும் மார்கழிமாதம் மு கவிதைகளும், கவின் கட்டுரை விமர்சனங்களும்
எதிர்பார்க்கப்
தொடர்புகட்கு :-
bb 60.
305, 60s திருநெல் யாழ்ப்பா
Յոtքնւյն մյthTH ՑiեiքLuiեւելյtrր 450, கே.கே.எஸ்.வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கில் புதிய பிரசவம்
D6
2 இதழ் - மதல் வெளிவருகின்றது! தை தொடர்பான 'களும்,
தகவல்களும் படுகின்றன.
ாலி வீதி, வேலி,
ாணம்.
ாலை (கண்ணி அச்சகம்), ரீதி, யாழ்ப்பாணம்