கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதைவளம் 1

Page 1


Page 2
செய்ய து
தொலைபேசி: 7 80
தரத்தில் தன்னிகரற்றது தலைநகரிலே தலைசிறந்தது தரணியெங்கும் புகழப்படுவது எல்லோரும் விரும்பிப் புகைப்பது விற்பனையில் முன்னணியில் நிற்பது
செய்யது பீடியே!
செய்யது பீடி டிப்போ
192, பழைய சோனகத் தெரு, கொழும்பு-12.
 
 

கதை வளம்
ரகுராமன
தினபதியின் தினம் ፵® கதைத் திட்டத்தின் கீழ் அக்டேர்பர் மாதம் பிரசுரமான கதைகளைப் பற்றிய விமர்சனம்,
வெளியீடு: மரபு நிலையம்
231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13.

Page 3
This book is the
January '68, Publication
of The Marapu Nilaiya
With due acknowledgement to "DNAPAH"
The Tam i Daily of The Independent Newspapers Ltd.
RAHURAMAN'S KATHAI WALAM
Part : O
price ; CENTS FIFTY
 

பதிப்புரை
UTT விரும்பினுலென்ன, விரும்பாவிட்டா லென்ன சிறுகதை உருவம் உலக மொழிகளின் ஆக்க இலக்கிய முயற்சிகளிற் சிறப்பிடம் பெற்றுவிட்டது என்ற உண்மையை மறைக்க முடியாது.ஏனைய மொழி களிலே நடைபெறும் இலக்கிய நன்முயற்சிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தமிழ் மொழி குறுகிய வேலி அமைத்துக் கொள்ளவில்லை யென்பதும் மகிழ்ச்சிக்குரியது. எனவேதான், கதை சொல்லும் மரபு தமிழுக்குத் தொன்மை சார்ந்ததாக அமைந்தாலும், உரைநடையிற் கதை எழுதுங் கலை யிலே மேஞட்டார் பயிலும் நெறிகளைத் தமிழ்க் கதைஞரும் ஏற்றனர். இதஞலும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வளம் பெறுவதாயிற்று. இருபதாம் நூற் ருண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் பாரிய பிரதம பாகத்தைச் சிறுகதை பெறுகின்றது. அதற்கு ஏற்ற அளவில், தமிழில் அது பற்றிய விமர்சனம் மேற் கொள்ளப்படவில்லை. கட்சி பிரிந்து வழக்குரைப் பதையும், தரமான படைப்புக்களை இருட்டடிப்புச் செய்வதையும், இஷ்டர்களின் தர மற்ற படைப்புக் களை இலக்கிய அந்தஸ்திற்கு உயர்த்துவதையும் இலக்கிய விமர்சனம் என்று நினைப்பவர்கள் நம் நாட்டில் அநேகர். இத்தகையவர்களுடைய வக்கிரப் போக்கினல், இங்கு நாட்டப்பட்டுள்ள கதைப் பண்ணையின் உண்மை விளைவுகளைத் தமிழ் கூறும் உலகம் செப்பமாக அறிந்து கொள்ளத் தவறுகின் றது. இந்தக் குறையை நன்குணர்ந்து, இக்குறை யைப் போக்குவான் வேண்டி, பொறுப்புணர்ச்சி யுள்ள நடுநிலைமை விமர்சனத்தை வளர்த்தல் வேண்டுமென்ற பணியை இயற்ற மரபு நிலையம்

Page 4
4.
என்ற நிறுவனம் நிறுவப்பட்டிருப்பதை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகின் ருேம். மாதந் தோறும் ஒவ்வொரு விமர்சன ஏட்டினை வெளியிடுவது நமது திட்டத்தின் முதலாவது அங்கமாகும்.
தினபதி நாளிதழின் ஆசிரியரும், சுயாதீனப் பத் திரிகா சமாஜத்தின் தமிழ்ப்பகுதித் தலைவருமான எஸ். டி. சிவநாயகம் அவர்கள் புதிய திறமைகளை இனங்கண்டு ஊக்கமளிப்பதில் முந்துபவர். யாழ்ப் பாணத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் எழுத்தா ளரையும், கிழக்கிலங்கை, மலைநாட்டு எழுத்தாளர் பலரையும் ‘சுதந்திரன்" பண்ணையிலே வளர்த்த பெருமையும் அவரைச் சாரும். இலக்கிய முயற் சிகளில் சிறுகதை வகிக்கும் முதன்மை இடத்தை நன் குணர்ந்துள்ள அவர், "தினம் ஒரு கதை’ என்ற மகத்தான திட்டத்தை அக்டோபர் மாதம் முதல் தினபதியிலே அமலாக்கியுள்ளார். அவர் இந்த வெளி யீட்டுக்கு முன்னுரையும் வழங்கியுள்ளார். அவருக்கு எமது உளங்கனிந்த நன்றிகள்.
பொறுப்புணர்ச்சியுடனும், நடுநிலைமை த வருத பார்வையுடனும் அக்டோபர் மாதம் வெளியான இருபத்தி யேழு சிறுகதைகளை திரு. ரகுராமன் விமர் சித்துத் தினபதியில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதினர். அதனை மேலும் செப்பனிட்டுச் சிறப் பித்து "மரபு நிலையம் தனது தை மாத வெளியீடாக வெளியிடுகின்றது. இதற்கு அனுமதி வழங்கிய தினபதிக்கும, சுயாதீனப் பத்திரிகா சமாஜத்திற்கும் நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
வணக்கம்.
மரபு நிலையம்

முன்னுரை
திரமான சிறுகதை இலக்கியம் வளர்ச்சியுற வேண்டு மாஞல், அதற்கு இரண்டு காரியங்கள் நடை பெற வேண்டும்:
1. திரமான நல்ல சிறுகதைகள் நிறைய எழு
தப் பட வேண்டும்.
2. தரமான சிறுகதைகளை இனம் கண்டு கொள்ளக் கூடியதாக நடு நிலை விமர்சனங் கள் வெகுவாக வெளி வரவேண்டும்.
தரமான சிறுகதைகளே எழுதக் கூடிய ஆற் றல் நம்மிடையே வாழும் இளம் எழுத்தாளர் பல ருக்கு இயல்பாகவே அமைந்திருந்தும், அந்த ஆற் றல் வெளி உலகுக்குத் தெரியப் போதிய வாய்ப் பும் வசதியும் இல்லாமல் இருந்தது.
நான் சுதந்திரன் ஆசிரியராக இருந்த போதும் வீரகேசரி ஆசிரியராக இருந்த போதும் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்று வதற்கு அவ்விதழ்களைக் கொண்டு ஓரளவு வழி செய்ய முடிந்தது. ஆயினும், நாட்டில் செழித்து வளரும் கதை வளத்துக்கு வாரம் ஓரிரு கதைகளைப் பிரசுரிப்பதன் மூலம் எந்த ஒரு பத்திரிகையும் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த தஞல், தினபதியில் தினம் ஒரு சிறுகதைத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டது.
தினம் ஒரு சிறுகதை பிரசுரிக்கும் அளவிற்கு கதைகள் கிடைக்குமா என்று சிலர் சந்தேகப் பட்ட னர். இன்று தினபதிக்கு கிடைத்து வரும் சிறுகதை யின் கொகையைப் பார்க்கும் போது, இடமும் வசதி யுமிருந்தால், தினமும் ஐந்து கதைகள் கூடப் பிர சுரிக்கலாம் என்று தோன்றுகிறது. தினபதியின் தினம் ஒரு சிறு கதைத் திட்டத்தின் மூலம் பல தரமான சிறுகதைகள் கிடைத்துவருகின்றன. மேலும் தரமான சிறுகதை உருவாவதற்கு நடு

Page 5
நிலைமை விமர்சனம் அவசியம் என்று பட்டது. அந்தப் பணியைப் பலரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிருர் திரு. ரகுராமன்.
கதை எழுதும் கலையை விருத்தி செய்து வரும் "தினபதி, விமர்சனக் கலையையும் கூடவே வளர்க் கிறது. இதனல் கிடைத்த ஒரு சிறந்த விமர்சகர் தான் திரு. ரகுராமன். அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளுள் ஒன்று இப்போது நூல் வடிவில் வெளி வருவதால் அது பாதுகாத்து வைக்கப் பயன் படுவ தாகும்.
நல்ல சிறுககைள் எழுத வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள், இந்த விமர்சனம் கட்டுரை யைக் கருத்தூன்றிப் படிப்பதன் மூலம் கதை அமைப்பில் ஏற்படக் கூடிய சிறு சிறு தவறுகள், குழப்பங்கள், குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் சிறப்பான சிறுகதைகளை எழுதும் ஆற் றலைப் பெறுவர் என்பது திண்ணம்.
விமர்சனம் என்ருல் அது உண்மையை ஒளிக் காமல், ஆனல் இதமாக எடுத்துக் கூறும் ஒரு கலை யாகும். "உண்மை கசப்பானது' என்பது ஒரு வாக் கியம். இதன்படி, விமர்சனம் சில சமயம் சிலருக்கு கசப்பாகவும் அமைந்து விடுவது உண்டு. அது தவிர்க்க முடியாதது. கசப்பான மருந்தையும் விருப் போடு உண்டால் தான் நோய் குணமாகும்.
தினபதி மூலம் அறிமுகமாகும் எந்த ஒரு சிறு கதை எழுத்தாளனும் தனது சிருஷ்டிகள் மூலம் சிரஞ்சீவித்துவம் பெற்று வாழ வேண்டும் என்பதே * தினபதி ஆசிரியர் என்ற முறையில் என்னுடைய நீங்கா த ஆசையாகும். உண்மையை உணரும் சகல எழுத்தாளரும் நூலுருவில் வெளிவரும் கதைவளம் வரிசையை பெரிதும் வரவேற்பார்கள் என்றே
ம்புகிறேன். நம புகறேன எஸ். டி. சிவநாயகம்
கொழும்பு ஆசிரியர் : தினபதி i-1 - 1968

கதை வளம்
தினபதி"யின் தினம் ஒரு கதைத் திட்டம் அக்டோபர் முதலாந் தேதியன்று அமலாக்கப்பட் டது. அம்மாதத்தில் மொத்தம் இருபத்தியேழு கதைகள் பிரசுரமாகியிருந்தன. இக்கதைகளை அவ் வப்போது வாசித்த பொழுது நினைவில் வைத்துக் கொண்டவற்றையும், நினைவில் வைத்துக் கொள்ளத் தவறியவற்றையும் ஆதாரங்களாகப் பற்றி, விமர் சன அபிப்பிராயம் எழுதுதல் முறையன்று என்ற கரி சனையிஞல், அக்கதைகள் அனைத்தையும் கூட்டு மொத்தமாக மீண்டும் படித்து முடித்தேன். அப் பொழுது என் மனதில் எழுந்த உணர்ச்சிகளினலும், அவ்வுணர்ச்சிகளிலெழுந்த எண்ணங்களினலும் உரு வான அபிப்பிராயங்களை ஈழத்து வாசகர்களுக்குப் பொதுவாகவும், "தினபதி மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் குறிப்பாகவும் அறியத் தருதல் பயனுள்ள இலக்கி யப் பணியாகும் என்ற எண்ண விதையின் விளைவு ତ୍ରିଣ୍ଡ •
** தினபதி துணிவான ஒரு திட்டத்தை முன் வைத்தது; இதனல், அது தமிழகத்து நாளிதழ்களை யும், ஆங்கிலத் தினசரிகளையும் சிறுகதை ஆக்கத் துறையில் ஊக்கந் தருவதில் விஞ்சி விட்டது" என்று பலரும் ஒரு முகமாகப் பாராட்டினர்கள். அத்துடன், "இளம் எழுத்தாளர்களுக்கு இவ்வளவு விரிந்த களம் அமைத்துக் கொடுப்பது உண்மையில் வரப்

Page 6
8
பிரசாத மாகும்’ என்று பிரசுர களமின்றித் த வித்த இளவல்கள் குதூகலித்தார்கள். தினபதியின் துணிச்சலென்ற ஒரு புறமும், விரிவான களம் அமைத்துக் கொடுத்தது என்ற மறுபுறமும் இரண்டு இலக்கிய நன் முயற்சிகளாம். இம்முயற்சிப் பெறு பேறுகள் பிரசுரமான கதைகளின் தரத்திற்கு அப் பாலும் உயர்ந்து நிற்கின்றன.
கதைகளின் தரத்தைப் பொறுத்துத் தினம் ஒரு கதைத் திட்டம் சாதித்தது என்ன? ஈழத் தமிழிலக் கிய உலகில் அதனல் ஏற்படக் கூடிய தர்க்கம் என்ன? இளம் எழுத்தாளரின் கன்னிப் படைப்பு களிலே தரமானவை தேறுகின்றனவா? ஏன் அவை தரமான படைப்புக்களாகக் கருதப்படல் வேண்டும்? இலக்கியப் பற்றினல் ஏற்படும் இத்தகைய விஞ க் களுக்கு விடை காணுதலும் பயனுள்ளதே.
என் நோக்கம்
முதற் குழந்தையை ஈன்றெடுத்த தாயின் களிப் பிற்கும். தனது முதலாவது கதையை அச்சிலே பார்க்கும் இளம் எழுத்தாளனின் களிப்பிற்கும் ஒற் றுமை இருப்பதாகச் சாதாரணமாகக் கூறுவார்கள். தன்னுடைய கன்னி அறுவடையே ஓரளவிற்கு இலக் கிய தரத்தையும் எட்டிப் பிடித்துள்ளது என்பதை ஓர் ஆரம்ப எழுத்தாளன் அறியும் பொழுது, அவ னுடைய ஆக்க இலக்கிய ஊற்று, உற்சாகத்துடனும் செழுமையுடனும் சிருஷ்டி இலக்கியக் கழனியிலே
பாயத் தொடங்கும் என்பது நிச்சயம்.
அவ்வாறு இளேய சந்ததியினரை உற்சாகப் படுத்துவதும் இலக்கியகாரரின் கடமையாகும். உற் சாகப் படுத்துகின் ருேம் என்ற எண்ணத்தில், இலக்கி

9
யத் தரம் எய்தத் தவறும் சிருஷ்டியைத் தப்பிதமாகப் போற்றுவதும் மோசடியாகும்; போலியான இலக்கிய மதிப்பீடுகளைக் காமிக்கச் செய்யவும், இதனல் இவ் விளம் எழுத்தாளர்களை வம்புப் பிஞ்சுகளாக உதிர்ந்து விடச் செய்ய ஊக்கும் அலுவலாகவும் அமைந்துவிடக் கூடும். ஆரம்பத்தில், ஆக்க பூர்வ
மான ஆலோசனைகள் எல்லோருக்கும் இனிப்பாக இருக்க மாட்டாது. இளம் ஆர்வத்தினைச் சிதைக்க வேண்டுமென்ற குறுகிய எண்ணமும் எனக்குக் கிடை யாது. குறைகளைப் புரிந்து கொண்டு, இளம் எழுத் தாளர்கள் மேலும் நல்லனவற்றைப் படைத்துத் தரல் வேண்டுமென்ற நன்னேக்கத்திற்காகத் தான் குறைகளையுஞ் சுட்டிக் காட்ட விழைந்தேன் என்ப தைச் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் அறிந்து கொள்ளுதல் நன்று. கன்னிப் படைப்புகள் எல்லாம் சாமுத்திரிகா இலட்சணங்கள் அனைத்துமே பெற்று முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்ப் பதும் தப்பு.
இந்தப் பிரமேயத்தை நமது விமர்சனத் தள மாக அமைத்துக் கொண்டால், விசாரணைக்கு எடுத் துக் கொண்ட கதைகளை அக்கு வேறு ஆணி வேருகப் பெயர்த்துப் பார்த்து, நமது விமர்சன மேதைமையை நிலைநாட்ட வேண்டுமென்ற அர்த்தமுமில்லை. சுய மேதைமையை நிலைநாட்ட எழுதப்படும் விமர்சனங் கள் பெரும்பாலும் அழிவு விமர்சனங்களாக அமைந்துவிடுகின்றன என்பது என் கட்சி. அத்தகைய வித்துவ வியர்த்தமான அலுவலில் எனக்கு ஈடு பாடுங் கிடையாது. எனவே, ஆக்க பூர்வமான விமர்சன ஆலோசனைகளை எழுதுவதுதான் நான் வரித்துள்ள முயற்சியாகும், அக்டோபர் மாதக்
ш0- 2

Page 7
0.
கதைகளை நான் எத்தகைய விமர்சனத் தளத்தி லிருந்து நோக்குகின்றேன் என்பதை விளக்குவதற்கு மேற்போந்த விளக்க முந் தேவைதான்.
பிராந்திய அடிப்படையில் முயற்சிப் பெறுபேறுகள்
சிறுகதையின் குண நலன்களை ஆராய்வதற்கு முன்னர், 'தினபதி’க் களம் நிரூபித்துள்ள சில பொதுவான உண்மைகளைக் குறித்து வைப்பது நல் லது. இதற்காக நான் வட்டாரங்களாகப் பிரித்து வைத்து வழக்குரைக்கின்றேன் என்று யாராவது குறை கூறுதல் பொருந்தாது. பிராந்தியத்தில் வேரூன்றி முளை கொள்ளும் அதே வேளையில், உல கிற்குப் பொதுமையான தொனிப்பொருளை ஒலிக் கும் இலக்கியமே காலத்தை வென்ற இலக்கியமாக உயருகின்றது என்பதை ஒப்புக் கொண்டால், இந்த வட்டாரப் பகுப்பு முறை கூட, குறுகிய வட்டார நலன்களுக்கு அப்பாற்பட்ட இலக்கிய விசாரணையே என்பதையும் ஒப்புக் கொண்டுதானக வேண்டும்.
தினபதி மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் பட்டியலில் அறுபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர் களுடைய பெயர்கள் சாணப்படுகின்றன. (இவர் கள் அனைவரும் சிருஷ்டி ஆற்றலில் ஒத்த தரத்தின ரல்லர் என்பது யாவரும் அறிந்த உண்மை.)இவர் களுள் ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் யாழ்ப்பாண எழுத்தாளராவர். கடந்த தலைமுறை களிலே, சிறுகதை எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டுக் கணிசமான வெற்றியை ஈட்டியவர்களுட் பெரும் பாலானேர் யாழ்ப்பாணத்து எழுத்தாளரே யாவர் என்ற உண்மையை இது நிலை நாட்டுகின்றது. சென்ற தலைமுறையிலே தோன்றிய அளவிற்கு

யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் புதிய எழுத்தாளர்கள் தோன்றத் தவறி விட்டார்கள் என்ற உண்மை அக்டோபர் மாதக் கதைகளைக் கூட்டு மொத்த மாக வாசிக்கும் பொழுது, துலக்கமாகத் தென் படுகின்றது.
அக்டோபர் மாதக் கதைகளுள், ஐந்து கதைகளை யார் சிபார்சு செய்தார்கள் என்ற விபரம் அறி விக்கப்படவில்லை. இவற்றுள், மூன்று கதைகளை அறிமுகப்படுத்தியவர்கள் வேறு பத்திரிகைகளிற் கடமையாற்றுவதினுல், அவர்களுடைய பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற குறிப்புக் காணப்படுகின்றது. மீதமுள்ள இருபத்திரண்டு கதை களைச் சிபார்சு செய்தவர்களுடைய பெயர் விவரங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. கிழக்கு மாகாண எழுத் தாளர்களான வ. அ. இராசரத்தினம் மூன்று கதை களையும், நவம், அ. ஸ . அப்துஸ் ஸ்மது ஆகி யோர் இவ்விரண்டு கதைகளையும் சிபார்சு செய் துள்ளார்கள். மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் மூன்று கதைகளைச் சிபார்சு செய்துள்ளார். ஏனையோர் தலா ஒவ்வொரு கதைகளை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவற்றை அவதானிக்கும் அதே வேளையிற் பிறிதொரு உண்மையும் புலணுகின்றது.
பிரசுரமான கதைகளுட் பேர்பாதிக் கதைகள் கிழக்கு மாகாணத்து இளம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும். அவற்றிலும் பேர் பாதிக் கதைகள் முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட னவாம். எஸ். எல். எம், ஹனிபா என்பவர் மட்டுமே ஒரே மாதத்தில் இரண்டு கதைகளை எழுதிப் பிரசுரித்துள்ளார். *
அடுத்து அதிகமான சிறு கதைகளை எழுதிய பெருமை மலையக எழுத்தாளர்களைச் சாருகின்

Page 8
2
றது. திருச்செந்தூரன் அறிமுகப்படுத்திய கதை யையுஞ் சேர்த்து மொத்தம் ஐந்து சிறுகதை கள் மலையகத்தைக் களமாகக் கொண்டவை, மலை யக எழுத்தாளர்களுடைய கதைகளிலே புதிய வீறும், தமது மக்களின் அவலங்களுக்கு இலக்கிய வடிவம் கொடுக்கவேண்டுமென்ற துடிப்பும் மண் டிக் கிடப்பதைக் காணலாம். செங்கை ஆழியான், கே. எஸ். ஆனந்தன், சொக்கன், உதயணன் ஆகிய யாழ்ப்பாண எழுத்தாளர்களாற் சிபார் சு செய்யப்பட்ட எந்தக் கதை தானும் யாழ்ப்பாண *மண்வாசனையையும், யாழ்ப்பாணக் கலாசாரத்தை
பும் பிரதிபலிக்கவில்லை.
‘எஸ். பொ.வின் தீர்க்கதரிசனம்
இவற்றை ஒட்டு மொத்தமாக அவதானிக்கும் பொழுது, 1963-ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் விழாவில், ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் திரு. எஸ். பொன்னுத் துரை வெளி யிட்ட கருத்தொன்று இப்பொழுது ஞாபகத்திற்கு வருகின்றது, அவர் அன்று பின் வரும் சாரப்படப் பேசினர்:
* ஈழத்தின் சிறுகதை இலக்கிய முயற்சிகளின் முன்னே டிகள் யாழ்ப்பாண எழுத்தாளர்களேயா வர் ‘சுதந்திரனின் சிறுகதை இலக்கிய சகாப்தத் தின் போது, கிழக்கு மாகாண எழுத்தாளர்களும் யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் எழுத் தாளர்களும் தலையெடுத்தார்கள். 1960-ஆம் ஆண்டுவரை வ. அ. இராசரத் தினம், "பித் தன் ஆகிய ஒரு சிலரின் நல்ல கதைகளைத் தவிர, ஏனைய நல்ல சிறுகதை ஆக்கங்களை யாழ்ப்பாணத்து எழுத் தாளர்களே படைத்தார்கள் என்பது மறுப்பதற்

13
கில்லை. ஆனல், சமீப காலத்தில் ஒரு தேக்கத்தைக் காணக் கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்து எழுத்தாளர்கள் பலர் புதிய பிரகரணச் சுருதி பேதங் களை அவதானிக்க மறுத்து, அரைத்த மாவையே அரைக்கும் விவகாரத்தில் ஈடுபட்டிருக்கின் ருர்கள். இந்தப் புதிய பிர கர ண ஒலிகளை அவதானித்து நல்ல சிறுகதைகளை ஆக்கித் தரக் கிழக்கு மாகாண எழுத்தாளர்கள், குறிப்பாக இளம் முஸ்லிம் எழுத் தாளர்கள் முந்து கிருர்கள். குடியுரிமை மறுக்கப் பட்டு, ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் இதயக் குமுறலைச் சித்திரித்து ஈழத்தின் தமிழ் இலக்கியத் திற்குப் புதிய வீறினைப் பாய்ச்சும் பணியில், மலை யக~இளைஞர் ஈடுபட்டிருக்கிருர்கள். இந்த எழுச் சிக்கு இனிய நண்பர்கள் இர. சிவலிங்கம், திருச் செந்தூரன் ஆகியோர் தளபதிகளாகத் தலைமை தாங்குகின்றர்கள் . இன்னும் பத்து வருட காலத் தில், காலத்தை எதிர்த்து வாழ வல்ல சிறுகதை களைப் படைத்துத் தருவதில் முஸ்லிம் எழுத்தாளர் களும், மலையக எழுத்தாளர்களும் முன் வரிசையிலே நிற்பார்களென்பது திண்ணம்."
ஐம்பதுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாண எழுத் தாளர்கள் குழுமியிருந்த அவையிலேதான் இதனை எஸ். பொ. கூறினர். பின்னரும் நாட்டின் பல பாகங்களிலும் நடை பெற்ற கூட்டங்களிலும் இந்தக் கருத்தினை வலியுறுத்தி வந்தார். தினபதியிற் பிர சுரமான இருபத்தியேழு கதைகளையும் ஒன்ரு கப் படித்து முடித்ததும் அவர் அன்று வெளியிட்டது தீர்க்கதரிசனமான கருத்து என்ற உண்மை புலன குகின்றது.
இலக்கியத்தில் தாலி
இனி, அக்டோபர் மாதக் கதைகளின் குண நலன்களைப் பார்ப்போம்.

Page 9
4
பா. பாலேஸ்வரி அறிமுகப் படுத்தி, முதலா வது கதையாகப் பிரசுரிக்கப்பட்ட புரட்சிபால னின் மன்னிப்பு', கே. எஸ். ஆனந்தன் அறிமுகப் படுத்திய விநோதினியின் "தாலி’ ஆகிய இருகதை களும் ஒரு வகையில் நல்ல கதைகள். காலங் கால மாகத் தாலி என்னும் ஆபரணத்திற்குத் தமிழ்ச் சமூகம் ஏற்றியுள்ள புனிதத்துவத்தையும், அதற்கும் கணவன் - மனைவியின் தாம்பத்திய உற வுக்குமுள்ள தொடர்பையும் இவ்விரு கதைகளும் புதிய கோணத்தில் அணுகுகின்றன. இன்றைய நாடக உலகத்திலும் தாலி பற்றிய சர்ச்சை வலுத் g Git smrg. The Doll House 6T 6ör smo - g)' GM) Gof Gör அமர நாடகத்தைத் தழுவி "பெண்பாவை’ என்ற நாடகத்தை தேவன் - யாழ்ப்பாணம்" அமைத்துள் ளார். "மதமாற்றம்' என்ற தரமற்ற நாடகத் தைப் பிரசார பலத்தினலாவது பிரபலப்படுத்த வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையை மறைத்து, வட்டார நலம் பேணும் ஒரு கோஷ்டி, "பெண் தன் தாலியைக் கழற்றிக் கணவனிடம் ஒப்படைத் தல் தமிழ் மரபா?" என்று கூச்சல் போடுகிரு ர்கள். இதில் விசேடம் என்ன வென்ருல், கூச்சல் போடுபவர்கள் சமய ஆசாரத்தைப் பேணுபவர் களுமல்லர் தாலிக்குப் புனிதத்துவம் இருக்கின் றது என்று ஒப்புக் கொள்பவர்களுமல்லர் பெண் னின் உணர்ச்சி நிலையில் தாலிக்குள்ள மதிப் புத்தான் முக்கியமானது. கணவன் கட்டிய தாலியைக் கழற்றி வைத்து விட்டு, இன்ஞெரு இஷ்டனுடன் சோரம் போகும் ஒருத்தியைப் பற்றி எஸ். பொன்னுத்துரை ஒரு கதை எழுதியிருக்கின் ருர், தாலிக்குக் கொடுக்கும் மதிப்பை, அதனைக் கட்டிய புருஷனுக்குக் கொடுக்காத விசித்திர பாத் திரம் அது வழக்கிலுள்ள நாடோடிப் பாட லொன்று, "...இந்தாடா, உன் தாலி!” என முடிகின்

15
றது என்று ஒரு நாடோடிப் பாடலை மக்கள் கவி * மணி மு. இராமலிங்கம் அவர்கள் நயம் பட எடுத் துக் கூறிய சம்பவம் இப்பொழுதும் நன்ருக ஞாபக மிருக்கின்றது. நாட்டுப் பாடல் பாடிய பெண்ணின் தளத்தில் தாலியைக் கழற்றி எறிவதுகூட விர சமான தல்ல. இவற்றைச் சிந்தித்துப் பார்க்காமல் வெறும் உமியைக் குற்றும் வியர்த்தத்தில் சர்ச்சைக்காரர் கள் ஈடுபட்டிருக்கின்றர்கள்.
வளர்ந்த எழுத்தாளர்களிலும் பார்க்கச் சற்றே துணிச்சலுடன், "மன்னிப்பு", "தாலி" ஆகிய கதை களை இளம் எழுத்தாளர் இருவர் எழுதியுள்ளார்
567.
சபாபதிக் கிழவர் என்ற அருமையான பாத்தி ரத்தைப் படைப்பதில் புரட்சிபாலன் நல்ல வெற்றி பெற்றுள்ளார். 'நீர் தொட்டுத் தாலி கட்டிய பெஞ்சாதி” என்று திரும்பத் திரும்ப ஞாபகமூட்டி, அந்த ஞாபகச் சரட்டிலே சபாபதிக் கிழவரின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பின்னியிருப்ப தும் நன்ரு க இருக்கிறது. "மன்னிப்”பை எழுதிய புரட்சிபாலனுக்கும், இத்தகைய ஒரு பிரச்சினைக் கதையைத் துணிவுடன் அறிமுகஞ் செய்த பெண் எழுத்தாளர் வரிசையில் முன்னணியில் நிற்கும்
பா. பாலேஸ்வரிக்கும் என் பாராட்டுக்கள்.
'தாலியில், கணவன் - மனைவிக் கிடையிலுள்ள தாம்பத்தியப் பிணக்கின் ஒரு பயங்கர உண்மையை, மிக அநாயாசமாகக் கூறுவதில் விநோதினி வெற்றி பெற்றுள்ளார். இக்கதையின் இறுதி இரண்டு பந் திகளையும் நீக்கியிருக்கலாம். அவை பிரசாரத் தொனி மிகுந்த கட்டுரையின் அமைப்பிலே இடம் பெற்று, கதையின் அழகிற்கு ஊறு விளைவிக்கின்றன.

Page 10
மலையகத்தின் ஒலி
திருச்செந்தூரனற் சிபார் சுசெய்யப்பட்ட விடக்கு மாத்தளை வடிவேலனின் ‘கண்கள் என்ற கதையும், தெளிவத்தை ஜோசப் பினல் அறிமுகஞ் செய்யப் பட்ட பூரணியின் பிள்ளை மடுவத்திலே." என்ற கதையும் பிறிதொரு வகையிற் சிறந்த கதைகளாக விளங்குகின்றன. இவ்விரு கதைகளும் மலையக மக் களின் உணர்ச்சிக் குமுறல்களை யும் , மன அவசங் களையும் நேர்மையாகச் சித்திரிக்கின்றன. மலையக மக்களின் மத்தியிற் பயிலப்படும் சொற்களும் கலைத் துவ அழகுடன் கையாளப்பட்டிருக்கின்றன.
இவ்விரு கதைகளிலும் கண்கள்’ ஒரு மாற்று உயர்வானது. ‘முழுச்சாக்கு’, ‘புளிமூட்டை ஆகிய பாத்திரங்கள் மனதிற் பதியும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளன. "முழுச் சாக்"கைக் குறும் புக்காரச் சிறு வர் வேடிக்கையாகச் சாகடிக்கும் திருப்பம் நன்ருக வுள்ளது. V−
* பிள்ளை மடுவத்திலே." கதையில் வரும் பழநி, வள்ளி ஆகிய இரு பாத்திரங்களும் சராசரியான மலைநாட்டுத் தொழிலாளர்களைப் பிரதிபலிப்பன வாக அமைந்துள்ளன; இயல்பான பிரதிபலிப்புகளைச் சமைப்பதில் பூரணி வெற்றி பெற்றுள்ளார். குழந் தையின் மரணம் சற்றே செயற்கையாகவும், வலிந்து புகுத்தப்பட்டதாகவுந் தோன்றுகின்றது. சாதாரண மிருகங்கள் கூட அனுபவிக்கும் சந்ததி பெருக்கும் சுகத்தைத் தானும் தோட்டத் தொழி லாளர் அனுபவிக்க வசதியற்றவர்களாக வாழ்கிருர் களென்ற அதீத உணர்ச்சிப் பலிதத்தை வாசகர் மனத்திலே ஏற்படுத்துதல் வேண்டும் என்ற எண்ணத்திலே இது புகுந்து கொண்டது போலும்!

17
gT6TJ is 6iT
எஸ். எல். எம். ஹனிபா "பொம்மைகள்', "உல கில் ஒரு குழந்தை” ஆகிய இரண்டு கதைகளை எழுதியுள்ளார். முன்னதை எஸ். பொன்னுத்துரை யும், பின்னதை எம். ஏ. ரஹ்மானும் அறிமுகஞ் செய்துள்ளார்கள். இந்தக் கதைகளில் ஒரளவு முதிர்ச்சியான வாழ்க்கைக் கண்ணுேட்டத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. வாழைச்சேனைக்கு அண்மையிலுள்ள மீருவோடைக் கிராமத்தை இக் assanás scit பகைப்புலங்களாகக் கொண்டுள்ளன. பணக்காரருடைய போலி ஆசாரங்களைச் சாடுவதி லும், ஏழைகளின் சோகக் குரலுக்கு இரங்குவதி லும் ஹனிபா ஈடுபாடு காட்டுகிருர், கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு ஏற்ற இரு சாளரங்களாக இக்கதைகளை அமைப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் முஸ் லிம்களின் பேச்சுத் தமிழை வண்ண முடன் கையாண் டுள்ளார். கதையின் பகைப்புலத்தை இவர் மிகவும் விரிவாக விபரிப்பதினல், அதன் பளுவில் கதை நிகழ்ச்சிக் கூறுகள் சற்றே நசிந்து போய்விடுகிறன. இந்தக் குறையை நிவர்த்தி செய்து எழுதினல் கதைகளின் தரம் உயர வழியுண்டு. "பொம்மைகள்" உருவகஞ் சார்த்த பொருத்தமான தலைப்பு. ‘உலகில் ஒரு குழந்தை" என்ற கதையில் வரும் பணக்காரப் பெண் - அதுவும் ஒரு முஸ்லிம் பெண் - சோரம் போய் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விவாகஞ் செய்கின்ருள் என்பது பொருத்தமானதாக இல்லை. இருப்பினும், காதர் சாய்பு மறக்கமுடியாத சிறுவன் - அருமையான பாத்திர வார்ப்பு.
காதர் சாய்புவை நினைக்கும் பொழுது,
Lo-3

Page 11
8
இன்னெரு சிறுவனின் ஞாபகமும் வருகின்றது. அவன் பெயர் மோகன். அவனை "இப்படியும் ஒரு சித்தி" என்ற கதையிலே சந்திக்கலாம். இக்கதை கிளிவண்ணனல் எழுதப்பட்டு, தெளிவத்தை ஜோசப் பினற் சிபார்சு செய்யப்பட்டது. "சித்தி யின் உள்ளம் விளாம்பழம் போன்றது; பார்வைக் குக் கடினம், உள்ளே கனிவு” என்பது தான் இக் கதையின் தொனிப் பொருள். கூட்டுக் குடித்தனத்தி லெழும் மனப் புகைச்சல்களை மூடி மறைக்கச் சம் பந்தப்பட்டவர்கள் எடுக்கும் பிரயத்தனங்களைக் கலாநயத்துடன் கிளிவண்ணன் எழுதியுள்ளார். அதீத உணர்ச்சிப் பலிதத்தை ஏற்படுத்தும் ஏகக் கதைகளுள் இது நல்ல கதையாக அமைந்துள்ளது.
* பிள்ளை மடுவத்திலே.", "இப்படியும் ஒரு சித்தி’ ஆகிய இரண்டு தரமான சிறுகதைகளை அறிமுகஞ் செய்த தெளிவத்தை ஜோசப்பினுல் அறிமுகஞ் செய்யப்பட்ட பிறிதொரு கதை "நேசம் மறக்க வில்லை நெஞ்சம்" என்பதாகும். இதனை எழுதியவர் மொழிவாணன். இதன் கதை நிகழ்ச்சிக்கூறு நிறை வேரு த காதல். *. பேசக் கூட நா எழவில்லை. அம்மலரை என் மனைவியின் கைகளில் திணித்தான்" என்ற இடத்திலே கதையை முடித்திருக்கலாம்: அதற்குப் பின்னரும் கதையை நீட்டி, சுமதியையும் கதிரவனையும் சாகடித்திருக்கத் தேவையில்லை. எழுத்தாளனுக்கு நீதிபரிபாலனஞ் செய்யும் அதி காரங் கிடையாது என்பதைத் தேர்ந்த எழுத்தாளன் ஒப்புக்கொள்ளுகின்றன். R
ஒரளவு தரமான கதைகள்
எஸ். சண்முகநாதன் சிபார்சு செய்த திருமலை அ. சந்திரனின் “சோதனை', ஆ. தங்கத்துரை சிபார்சு

19
செய்த லீலா கனகசூரியத்தின் "வாவாச்சி", அன்பு மணி சிபார்சு செய்த செ. குணரத் தினத்தின் "தடுமாற்றம்’, செரிக்கன் சிபார்சு செய்த க. கண பதிப்பிள்ளையின் "உறவுக்கு ஒருத்தி, அ. ஸ். அப்துஸ் ஸமது சிபார்சு செய்த பொத்துவில் ஜெளபர் மெளலானவின் "ஜெஸிமா ஏன் சிரித்தாள்?' ஆகிய ஐந்து கதைகளும் ஒரளவு தரமான கதைகள் என்ற வகையைச் சார்ந்தன. அதற்காக, இவையனைத்தும் ஒத்த தரத்தன என்று கொள்ளத் தேவையில்லை. தரத்திற்கேற்ற வரிசை இவற்றிலும் இருக்கத்தான் செய்கின்றது.
இவற்றுள் முதலிடத்தை திருமலை அ. சந்திரன் எழுதியுள்ள "சோதனை' என்ற கதை பெறலாமென நினைக்கின்றேன். அக்டோபர் மாதத்தில் இக்கதை மட்டுமே கத்தோலிக்கச் சூழலைப் பிரதிபலிப்பதாக எழுதப்பட்டுள்ளது. மடு மாதா ஆலயத்தையும் அங்கு குழுமும் திருவிழாக் கூட்டத்தையுஞ் சுற்றிச் சுழல் கின்றது கதை. பிள்ளை காணுமற் போவதும், "இரக் கத்தின் ராக்கினியான” மடுமாதாவின் மேலுள்ள கெட்டியான விசுவாசத்தினுல் பிள்ளை மீண்டுங் கிடைப்பதும் மிகச் சாதாரணக் கதை நிகழ்ச்சிக் கூரு கத் தோன்றுகின்றது. தெளிவும், எளிமையும் சார்ந்த கதையின் உருவ அமைப்பு அந்த மெல்லிய கதை நிகழ்ச்சிக் கூறுக்குப் பொலிவூட்ட உதவுகின்றது:
லீலா கனகசூரியத்தின் "வாவாச்சி நிறை வேரு த காதல் என்ற சாதாரண நிகழ்ச்சியைச் சுற் றித்தான் பின்னப்பட்டிருக்கின்றது. இருப்பினும், "வாவாச்சி" என்ற பாத்திரம் மனத்தில் நிற்கக்கூடிய விதத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. நந்தினியினுடைய மூட நம்பிக்கையுடன் கதையைத் தொடங்கி, அவ ளுடைய மூட நம்பிக்கையுடனேயே அதனை முடித்

Page 12
20
திருப்பது அழகாக அமைந்துள்ளது. நாய் கடித்த அதே வாரத்தில் வாவாச்சி இறந்து போனது நம்ப முடியாததாக இருக்கிறது. ஒருவன் தலையிட்டுத் தவிர்க்கக்கூடிய வேருெரு நம்பத் தகுந்த விபத்தில் வாவாச்சி இறந்திருப்பதாகச் சித்திரித்திருந்தால் கதையின் கட்டுக் கோப்பு மேலும் வலுப்பெற்றி ருக்கும்.
செ. குணரத்தினம் எழுதியுள்ள “தடுமாற்றம்" என்ற கதையின் சிறப்பு ஓ ஹென்றி பாணியில் அமைந்துள்ள திடீர் முடிவிலே தான் தங்கியுள்ளது. திடீர் முடிவுடன் பூர்த்தியாகும் கதைகளுக்கு ஒரு காலத்தில் நிரம்பவும் "மவுசு இருந்தது. "திடீர் முடிவு' என்பது இலக்கிய தரத்திற்கு அப்பாற்பட்ட ஒருவித ‘ஏமாற்று வித்தை’ என்று கருதும் இலக்கிய விமர்சகர்களும் இருக்கிருர்கள். ஆஞல், இடைத் தட்டு வாசகர்கள் - குறிப்பாகப் பெண்கள் - இந்த ரகக் கதைகளை விரும்பி வாசிக்கிருர்களென்பது மறுப்பதற்கில்லை. திடீர் முடிவுக் கதைகளே நன்ற க அமைகின்றன என்ற அபிப்பிராயத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் அன்புமணி இக்கதையைச் சிபார்சு செய்திருப்பது மிகவும் பொருத்தமானதே!
சொக்கஞற் சிபார்சு செய்யப்பட்ட "உறவுக்கு ஒருத்தி." என்ற கதையிலே ஓரளவிற்கு யாழ்ப் பாணக் கலாசாரத்தின் சாயல் விழுந்திருக்கிறது. ஒரளவிற்கு என்ற சொல்லை நியாய பூர்வமாக உப யோகித்துள்ளேன். சரிந்து கொண்டு வரும், ஆசாரத்தின் ஆதிக்கக் கொடுமையைச் சித்திரிக் கும் ஒரு வகை "மணம்’- ஒரு குறிப்பிட்ட இலக்கியக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களுடைய கதைகளிலே வீசும் ‘மணம்'- இக்கதையிலே வீசுகின்றது.

21
இதனை க. கணபதிப்பிள்ளை தன்னிலையில், அதாவது பாத்திரமே தன் கதையைக் கூறும் உத்தியில் அமைக்காமல், படர்க்கையில், ஆசிரியர் பாத்திர த் நிற்குப் புறம்பாக நின்று எழுதுவதாக அமைத் திருந்தால், இக்கதையின் தரம் எவ்வளவோ உயர்ந் திருக்கும் என்பது என் அபிப்பிராயமாகும். தன் னிலையிற் சொல்லும் பொழுது மிகப்படு கூற்ருக வும், விர சமாகவும் தோன்றக் கூடிய விடயங்களை, ஆசிரியர் கூற்ருக அமைக்கும் பொழுது நயம்படச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கிய வட்டத் தைச் சேர்ந்தவர்கள் ஜாதிக்குள்ளேயே ஜாதி பாராட்டும் பண்பைச் சுட்டிக் காட்டிக் கதைகள் எழுதுவதில் அண்மைக் காலத்தில் அதிக அக்கறை காட்டி வருகிருர்கள். புவனேஸ்வரி அந்தஸ்திலே தாழ்ந்த வளாக இருப்பினும், அவளுடைய ஜாதி எங்குமே குறிப்பிடப்படாமல் இருத்தல் கவனத் திற்குரியதே!
பொத்துவில் ஜெளபர் மெளலான எழுதியுள்ள "ஜெஸிமா ஏன் சிரித்தாள்?’ என்ற கதை, 'சூதாடு வது இஸ்லாத்திற்கு முரணுனது ஐந்து வேளைத் தொழுகை இஸ்லாமியரின் கட்டாயக் கடமை; சூதாட்டத்தினுல் குடும்பத்திற் சண்டைகளும், ம்ன முறிவுகளும் ஏற்படுகின்றன’ என்பவற்றைப் பிர சாரஞ் செய்கின்றது. இலக்கியத்திற்குப் பிரசார நோக்கம் இருக்கக் கூடாது என்பதல்ல என் கட்சி. ஆளுல் அது கலா லளிதத்துடன் செய்யப்படலாம். இக்கதையிலே அத்தகைய கலைத்துவத்தைக் காண முடியவில்லை. இதற்கு ஏதோ ஈடு செய்யும் வகை யில் பொத்துவில் பிராந்தியத்தைச் சித்திரிப்பதில் ஒரளவு வெற்றி பெறுவதில் ஆசிரியர் தவறவில்லை.

Page 13
22
வ. அ. இராசரத்தினம் அறிமுகப்படுத்தும் கதைகள்
வ. அ. இராசரத்தினம் பிரபலமான சிறுகதை ஆசிரியராவர். மூதூர்ப் பகுதியின் எழிலுக்கு இலக் கிய உருவங் கொடுத்த பெருமை அவரைச் சாரும். பூரீ லங்கா சாகித்திய மண்டலத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசில் பெற்ற "தோணி’ (அரசு வெளியீடு, கொழும்பு) என்னுஞ் சிறுகதைத் தொகுதியை நமக்குத் தந்துள்ளார். மக்களுடைய மிக மெல்லிய மன அவசங்களைக் கூட நேர்த்தியாகச் சித்திரிப்பதில் வல்லவர். அத்தகைய எழுத்தாளர் மூன்று சிறுகதை களைச் சிபார்சு செய்துள்ளார். எம். ஐ. எம். மஷ் ஹஜூர் எழுதிய “எனக்கும் இதயம் உண்டு’, அ. இராசேந் திரம் எழுதிய "அவள் தான் அவள்', வீ. ஏ. எம். லத்தீப் எழுதிய "நான் ஒரு ..." ஆகியனவே அக் கதைகள்.
மஷ் ஹானரின் கதை நிறைவேருக் காதலையும், இராசேந்திரத்தின் கதை நிறைவேறிய காதலையுஞ் சித்திரிக்கின்றன. 'எனக்கும் இதயம் உண்டு" என்ற கதையில் ஏமாற்றத்தின் பயனுக பரீதா தற்கொலை செய்து கொள்ளுகின் ருள். ஜமீலின் மனத்திலே பரீதாவை விவாக ஞ் செய்வதில்லை யென்று கனிந் துள்ள முடிவுக்கு வலுவான காரணம் கற்பிக்கப் படவில்லை ஆனல், முஸ்லிம் சமூகத்துக் கதை யொன்றின் பின்னணியைச் சித்திரிப்பதில் மஷ்ஹஸீர் ஒரளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்.
* அவள் தான் அவள்’ என்ற கதையை அ. இரா சேந்திரம் இலக்கிய நடையில் எழுதியுள்ளார். "யாழ் ஒலி கேட்ட பொதியமலை நெகிழ்ச்சியைப் போல தந்தை கமலநாதரின் இதயமும் மகனின்

23
உரையால் நெகிழ்வு பட்டது. ’’ ‘எங்கள் அன்புக் குரிய ஏகன் நீ ஒருவனே” ஆகிய இடங்களை அவரு டைய இலக்கிய நடைக்கு உதாரணங்களாகத் தரலாம.
ந புஞ்சகமான ஒருவனைப் பற்றி "நான் ஒரு.
என்ற கதையில் வீ. எம். ஏ. லத்தீப் துணிச்ச லாகப் பிரஸ்தாபிக்கிருர், பாலுணர்ச்சிச் சிக்கல்களைத் துணிவுடன் கதைகளாக்கியிருக்கிருர்கள் ‘புதுமைப் பித்தன்", தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகி யோரும்:- நம்நாட்டில் எஸ். பொன்னுத்துரையும். இவர்களுடைய ஆழமான பார்வையும், தனித்துவ நடையழகும் கொடுக்கும் அழுத்தத் தில் துணிச்ச லான கருத்துக்கள் வலுவான கதைகளாக உருப் பெறுகின்றன. "நான் ஒரு. கதையின் முற்பகுதி யில் அளவுக்கு அதிகமான மன உளைதல்கள் திரும் பத் திரும்ப வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. "உறவுக்கு ஒருத்தி." என்ற கதையைப் போலவே , பாத்திரம் கதையைச் சொல்வதான உத்திமுறை இக் கதைக்கு வலுவூட்டத் தவறி விட்டது.
தவறன தளங்கள்
ச. அ. செபரத்தினம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட நற்பிட்டிமுனை நல்ல ரெத் தினத்தின் "அப்பா" என்ற கதை, இளைஞர்கள் இயற்கையாக எழுதும் காதலில் மனமுறிவு - காதலில் மண முடிப்பு என்ற தடத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கின்றது. போலியான, ஆடம்பரமான நாகரி கத் தி லே மூழ்கி ஏழ்மை நிலையிலிருக்கும் பெற் ருே ரை உதாசீனம் செய்யும் எத்தனையோ பல்கலைக் கழக மாணவரை நாம் கண் கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. போலியைக் காமிக்காது,

Page 14
24
மாணவர்கள் உண்மை நிலையை விசுவசித்து நடத் தல் வேண்டும் என்ற தொனிப் பொருளைக் கதை யிலே கொண்டு வரல் வேண்டும் என்ற நல்லரத் தினத்தின் நோக்கம் நல்லது. தமது நோக்கத்தினை நல்ல கதையாக உருவாக்கித்தர அவர் தவறி விட் டார் என்றே தோன்றுகின்றது அதீத உணர்ச்சிப் பலிதத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக எழுதப் படுங் கதைகளில், அதீத கற்பனையை எவ்வளவு தாராளமாகவும் புகுத்தலாம் என்று நினைப்பது தப்பு.
செங்கை ஆழியானுல் சிபார்சு செய்யப்பட்ட கலையமிர்தனின் "இறுதி அவா’ என்ற கதை சர்வ தேசப் பிரச்சினை ஒன்றைச் சுற்றிச் சுழல்வதினுல் தனித்துவமாக இருக்கிறது. இத்தனித்துவத்தில் வெற்றியீட்டத் தவறியமைக்குப் பிரதான கார ணம் பிழையான கருத்தொன்றினைக் கலையமிர்தன் வரித்து வைத்திருப்பது தான். அன்றேல், பத்திரி கையிலே வெளி வந்த செய்தி ஒன்றிற்கு அவர் தவருன விளக்கம் தர முற்பட்டதாகக் கூட இருக் கலாம். ஜனநாயகத்தின் மீதுள்ள பற்று, நாட்டுப் பற்றினையும், தேசிய உணர்ச்சியையும் விழுங்கி விடும் என்பதை எந்தக் கற்பனை வாதத்திலும் நிலை நாட்ட முடியாது. பண ஆதாயம், அன்றேல் மன விரக்திதான் நாட்டுப் பற்றினை இழந்த ஐந்தாம் படை யினரை உருவாக்குகின்றது. ஜனநாயகம் என்பது என்ன? அதனை அழிக்கும் தீய சக்திகள் எவை? இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்கர்கள் மத்தியிற் கூடப் பல தரப்பட்ட விடைகள் கிடைக்கின்றன. "ஆசிய நாடான வியட்நாம் மீது அமெரிக்கா வலு வந்தப் போர் நடத்துகின்றது' என்பது பேரறிஞர் களான பேட்ரண்ட் ரசல், ஜீன் போல் சாட்டே ஆகியோரின் கருத்தாகும். அப்படியிருக்கும் பொழுது,

25
ஆசியஞன இலங்கைத் தமிழன் ஒருவன், அமெரிக்க ராணுவத்திலே சேர்ந்து ஜனநாயகத்தைக் காப் பாற்றுவதற்காகச் செத்து மடிவது அப சுரமாக மட்டுமல்லாமல், ஆபாசமாகவும் இருக்கிறது. சர்வ தேசப் பிரச்சினைகளை வைத்து மனித உயிருக்கு மதிப்புக் கொடுத்து எழுதப்படும் இலக்கியமே வாழ வல்லது . மற்றைய பிரசாரங்கள் இலக்கிய அந்தஸ்துப் பெறத் தவறுகின்றன.
சாதாரணக் கதைகள்
"கல்கி’ப் பத்திரிகை நடாத்திய ஈழத்துச் சிறு கதைப் போட்டியிலே முதலாவது பரிசுக் கதையை எழுதிய பெருமைக்குரியவர் நவம். இலக்கியத்திற் கட்சி சேராது எல்லோருடனும் பழகும் இனிய சுபாவத்தினர். அவர் ஆரையம்பதி ஆ. தங்கராசா எழுதிய "மாலதி, நிந்தவூர் ஏ. எல். எம். அமீன் எழுதிய ‘சுழல்" ஆகிய இரு கதைகளைச் சிபார்சு செய்துள்ளார். இக்கதைகளில் வரும் பெண் பாத் திரங்களான மாலதியும், பெளசியாவும் காதலர் களால் ஏமாற்றப்படுகிறர்கள். காதலர்கள் வேறு காரிகையர்களைக் கைப்பற்றுவதைக் கண்ணுற் பார்க் கும் அபாக்கியவதிகள் அவர்கள்! இத்தகைய கதை நிகழ்ச்சிக் கூறுகளை வைத்துக் கொண்டு எழுதுவது செத்த பாம்பையே அடிப்பதாக முடியும் என் பதற்கு இக்கதைகளே தக்க சான்றுகள். ஆ. தங்க ராசா, அமீன் ஆகிய இரு வரும் பயிற்சியுள்ள எழுத்து நடையைக் கையாண்டிருப்பதிஞல், வேறு கதை நிகழ்ச்சிக் கூறுகளை வைத்து நல்ல கதைகளை எதிர் காலத்தில் எழுதித் தருவார்களென்று நம்பு கின்றேன்.
O-4

Page 15
26
இந்தப் பட்டியலில் “கீதா'வை எழுதிய ஜாபீ ரையும், "துணைவியை எழுதிய புத்தளமூர் ஏ. இ. ராஜக்கோனையும் சேர்த்துக் கொள்ள வேண்டி யிருக்கின்றது. முன்னவர் அப்துஸ்ஸமதுவினலும், பின்னவர் 'உதயணனுலும் சிபார்சு செய்யப்பட்ட வர்க ளாவர். s
“கீதா' என்ற கதையிலே கீதாவை ஒடும் ரயி லில் வைத்துக் கற்பழிக்க வேண்டும் என்ற எண் ணம் ஏன் மூர்த்திக்குத் தோன்றியது? கற்பழித்த சூழல் யதார்த்தமானதா? ஓர் அரசாங்க நிறுவ னத்தை இவ்வளவு , கேவலப்படுத்தலாமா? மனம் திருந்தி அவளைக் கரம் பற்ற நேசக்கரம் நீட்டிய மூர்த்தியை அவள் நிராகரிக்கக் காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு “கீதா' எவ்வித பதிலுந் தரவில்லை.
வி. ஸ. காண்டேகரின் மொழி பெயர்ப்பு நூல் களிலே தமிழிலே முகங்காட்டி, பின்னர் அகிலன் போன்ற சிலராற் கையாளப்பட்டுப் 'பரிதாபமாகக் கைவிடப்பட்டதுமான கதை சொல்லும் உபாய முறை ‘துணைவி'யில் இடம் பெறுகின்றது. இந்த உபாய முறைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்படவில்லை என்பதை உணராது, 'துணைவி எழுதப்பட்டிருக் கின்றது. கண்ணகி - மாதவி - கோவலன் வழி வந்த முக்கோண மோதல், சுமதி - சுவர்ணு - மோகன் மோதலாகத் "துணைவி'யில் இடம் பெறு கின்றது. கதையில் ஒருமைப்பாடு கூட இல்லை. சுவர்ணு கூறும் பகுதி, மோகன் கூறும் பகுதிக்கு முரணுக உள்ளது. சுவர் ஞ என்ற பாத்திரத்தைப் பேச வைக்காமல் அந்த நிகழ்ச்சிகளை மற்றிரு பாத் திரங்களின் வாய்களுக்குள் நுழைத் திருந்தாலாவது இந்த முரண்பாடுகளைத் தவிர்த்திருக்கலாம்.

27
மனேவிகாரக் கதைகள்
மூன்று சிறுகதைகள் வேறு பத்திரிகாலயங்களிற் பணி புரியும் 'தினபதி மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்களாற் சிபார்சு செய்யப்பட்டிருக்கின் றன. அவை செ. இளவழுதியின் "எந்தப் புற்றில் ாந்தப் பாம்பு? இந்திராவின் "அவன் மனிதனு?" மூ. வீ. சுமதியின் நிராசை" ஆகியன. காதலனுண ாகுவை ஏமாற்றி விட்டுக் கோமதி வேறு யாரு டஞே ஓடி விடுகிருள்; “பெண்ணே மாயம், அவள் புற்றில் வாழும் பாம்பு நிகர்த்தவள்’ என்று ரகு சோகக் குரல் எழுப்புகின்றன் இதுதான் ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு’வின் கதை. அவள் எதற்காக ஓடினுள் என்கிற மர்மம் விளங்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், “பெண்கள் எல்லோ ரும் காமப் பிசாசுகள்’ என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது! அன்னையின் வயிற்றில் சகோதரிகளுடன் கூடப் பிறந்தவர்களால் இதனை ஜீரணிப்பது கஷ்டமானதாக இருக்கும்.
"அவன் மனிதனு?’ என்னும் கதையில் காம வெறி கொண்டலையும் சுந்தர் நடத்திய இருபத் தெட்டுக் கற்பழிப்புச் சம்பவங்களிலே சிலவும், மனச் சாட்சியின் உறுத்தலினல் - கவனிக்கவும், மனச் சாட்சியின் உறுத்தலினல் - சுந்தர் கத்தரீனக் கொலை செய்த நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றன. தற்கொலை செய்து கொள்ளக் கொலை செய்வது தான் சிறந்த வழி என்பதுதான் இக்கதையின் தொனிப் பொருளோ என நாம் மண்டையைப் போட்டு உடைக்க வேண்டியும் இருக்கின்றது.
அண்ணியின் சொத்திலும், அவர் மனைவியிலும் ஆசை வைத்தார் வேலப்பர். அண்ணி தமது இஷ்

Page 16
28
டத்திற்கு இடந் தராதபடியால் அவளைக் கொன்று புதைத்து விட்டு, அண்ணனையும் விசித்திரமான முறையிலே வே லப்பர் கொலை செய்கின்றர். இது தான் மூ. வீ. சுமதி எழுதியுள்ள "நிராசை’ என் னுங் கதையின் சுருக்கம். 'அவன் மனிதன?’ கதை யில் வரும் சுந்தரைப் போன்று, வேலப்பர் கோட் டிலே நிறுத்தப்படவில்லை. வேலப்பரும் இறந்து
கிடக்கின்றர். அவருடைய கொலையை அண்ணனின் *ஆவி செய்திருக்கலாமா என்பதுதான் , இக்கதை யின் மர்மம்.
‘மேரி மஞறளன்" எழுதிய 'அனுதாபம்" என்ற கதையும் சோம.நடராசன் எழுதிய “நீ என் மனைவி" என்ற கதையும் சாதாரணமாகப் பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப எழுதப்படும் பத்திரிகை ரகக் கதைகளின் தரத்தைச் சேர்ந்தன. அத்துடன் தென் னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகளிலே வெளியாகும் சாதாரண க் - கதைகளின் சாயலிலும் நடையிலும் அமைந்திருக்கின்றன. 'அனுதாபத்தில் மீன மணிப் புரிச் சேலையின் கொள்ளை அழகுடன் ஓடிப் போவதாக வரும் திருப்பம் சற்றே ரசிக்கும்படியாக இருக்கின்றது. 'நீ என் மனைவி' என்ற கதையை வாசிக்கும் பொழுது பல தடவைகளிலே எங்கேயோ வாசித்த ஒரு கதையைத் திருப்பி வாசிப்பதான உணர்ச்சி தவிர்க்க முடியாது ஏற்படுகின்றது.
சோர்வு வேண்டாம்!
சில கதைகளைப் பற்றி எழுதும் பொழுது, குறை களைத் தாராளமாகவே சுட்டிக் காட்ட நேர்ந்தது. இதனுல் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களிடம் எழுத் தார்வமோ, எழுத்தாற்றலோ இல்லையென நான் சுட்டுவதாகச் சோர்வடையத் தேவையில்லை. இன்று

29
பிரபல எழுத்தாளர்களாக விளங்கும் பலரும் ஆரம் பத்தில் வெகு சாதாரணமான காதற் கதைகள் தான் எழுதியும் இருக்கிறர்கள். தனக்குத் தெரிந்த அல்லது பழக விரும்பும் பெண்ணின் பெயரை வைத்து ஒரு காதற் கதை எழுதி, அதனை அச்சிலே பார்க்க வேண்டும் என்பது சாதாரணமான இள வயதுக் கனவாகும். அது நிறைவேறிய பின்னரும், அவர்கள் அந்தக் கனவிலேயே நிலைத்து நின்று விடக் கூடாது என்ற அக்கறையினலே தான் அத்தகைய குறைகளைச் சுட்டினேன். அவர்கள் புதிய கதை நிகழ்ச்சிக் கூறுகளையும், தேர்ந்த தொனிப் பொருள் களையும் தமது கதைகளிலே புகுத்த முயற்சி எடுத்துப் பயிற்சி பெறல் வேண்டுமென்பதுதான் ஆசை.
நல்ல சிறு கதைகள் எழுதியவர்கள் என்று
பாராட்டுப் பெறுபவர்கள், தாம் "முத்திரைக் கதை சள்" எழுதி விட்டதாக அகம்பாவங் கொள்ள வேண்டாம். ஏனென்ரு ல், இக்கதைகளின் குண
நலன்களை இளம் எழுத்தாளரின் கன்னி அறுவடை என்ற தளத்திலும் நின்று கொண்டுதான் எடை போட்டுள்ளேன். அக்டோபர் மாதத்திற் பிரசுரமான கதைகளுள் "மன்னிப்புத் தான் முதலாவது இடத்தை வகிக்கின்றது என்பது என் கணிப்பு. ஆணுல், அதே கதையை ஒரு முதிர்ந்த எழுத்தாளர் எழுதியிருப் பாரேயானல் “கதையில் இடம் பெறும் உரை யாடல்களில் ஒருமைப்பாடு கிடையாது; பல சந்தர்ப்பங்களில் பற்பல பிராந்தியங்களிலே நின்று பேசுகின்றர்கள்" என்பது தொடக்கம், “சின்னச்சி மனுஷி இந்துவாக இருப்பதினல், தகனம் செய்வது தானே பொருந்தும்? சபாபதிக் கிழவருக்கு மண் அள்ளிப் போடும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காகப் பிரேதத்தைப் புதைப்பது முறையா?” என்று

Page 17
30
மயிரைப் பிளக்கும் விவகாரம் வரை பிய்த்தெறி வதும் சாத்தியமே
நமது பணி
இச்சந்தர்ப்பத்தில், தினபதி மதிப்பு வைத்திருக் கும் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எல்லோருக்கும் அல்ல: ஒரு சிலருக்காவது கூறத்தான் வேண்டும். சத்தியக் கடுதாசியிலே கையொப்பமிடும் சமாதான நீதவானைப் போன்று, முகத்துக்காகக் கதைகளைச் சிபார்சு செய்து அனுப்புவதிற் பயனில்லை. 'தினபதி ஆசிரிய பீடம் நம் மீது ஒர் உன்னத பொறுப்பினைச் சுமத்தி இருக்கிறது. தர மற்ற கதையை ஓர் இளம் எழுத்தாளன் நமது சிபார்சுக்குச் சமர்ப்பிக்கும் பொழுது, یW5{ பிரசுரத்திற்குத் தகுதியற்றதெனக் காணின், ஏன் அது தகைமையற்றது என்பதை அவ்வெழுத்தாள ருக்கு விளங்கப் படுத்துதல் வேண்டும். வெட்ட வேண்டிய பகுதிகள், திருத்த வேண்டிய பகுதிகள் என்பனவற்றையும் விளக்குதல் வேண்டும். முதிர்ந்த எழுத்தாளர்களே தாம் எழுதுவது அத்தனையும் பொன் என்று நினைக்கும் பொழுது, இளம் எழுத் தாளர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, நீளமாக எழுதி, அதனை வெட்டிக் குறுக்கும் பொழுது விடயம் இறுக்கம் பெறுகின்றது என்பதை அறிஞர் பெர்ஞட்ஷா அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். அக்டோபர் மாதக் கதைகள் பல இன்னும் குறுக்கம் பெற்று இறுக்கம் பெற்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். "வீண் பழி, நேர விரயம்” என்ற காரணங்களைக் காட்டி, இளைய சமுதாயத்தை வளப்படுத்தும் புனித கடமையை இயற்றத் தவறக் கூடாது. இந்த எழுத்தாளரிற் சிலரேனும், சில ஆண்டுகளிலேயே வளர்ந்த எழுத்தாளர்களையும்

3.
முந்திக் கொண்டு வளருவார்கள் என்பது உண்மை. அப்படி அவர்கள் வளர்வதும் நம் தலை முறை எழுத்தாளரின் வெற்றி என்று கூட நான் சொல் வேன். நம் தோளில் ஏறி நின்று, இலக்கியப் படைப்பு முயற்சியை புதிய உயரத்திலிருந்து அணுக நாம் வழி சமைத்துக் கொடுக்கின் ருேம்,
இளம் ஆசிரியர்கள் கையாண்ட கதை நிகழ்ச்சிக் கூறுகளைப் பற்றிய குறிப்பொன்றினை இங்கு சேர்த் துக் கொள்ளுதல் பொருத்தமானது. புராணிகக் கதைகளை ஆதாரமாக வைத்து "சாப விமோசனம்’ என்ற கதையைப் "புதுமைப் பித்தனும், "வென் றிலன் என்ற போதும்’ என்ற கதையை சிதம்பஏ ரகுநாதனும் எழுதியுள்ளார்கள். சரித்திர நிகழ்ச்சி களைக் களங்களாகக் கொண்டு ந. சிதம்பர சுப்பிர மணியம், அரு. ராமநாதன் ஆகியோர் நல்ல சிறு கதைகளைப் படைத்து உள்ளார்கள். இத்தகைய கதைகளைப் பற்றி இளம் எழுத்தாளர்கள் சிந்திக்கத் தவறுகின்றர்கள் போலவும் தெரிகின்றது. கதைக்கு ஆரம்பம், உச்சி, முடிவு ஆகிய அம்சங்கள் முத்திரை யிட்டதாக அமைதல் வேண்டும் என்ற பத்தாம் பசலிக் கொள்கை ஒன்றை அவர்கள் காமிப்பதாகத் தெரிகிறது. தொணிப் பொருளை மட்டுமே கதை நிகழ்ச்சிக் கூருக உயர்த்தியும் கதைகள் அமைக்க லாம். இவை பற்றிய பொதுவான பிரச்சினைகள் சில வற்றைப் பற்றியும் எழுதலாம் என்று தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆணுல், இக்கட்டுரை நீண்டு விட்டபடியால், அவற்றைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்ற எண்ணத்திற் தற்போதைக்குத் தவிர்த்துள்ளேன்.
சிறுகதைத் தொகுதி ஒன்றை நூலுருவிற் பிரசுரிக்க இந்த இருபத்தியேழு கதைகளுள் ஒரு

Page 18
பத்துக் கதைகளைத் தெரிவு செய்ய முடியுமா என்பது தான் இறுதியான விசாரணை. நான் ஒரு பிரசுர கர்த்தா என்பதினலும், இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் இதுவரையிற் பல நூல்களைப் பிசுரித் துள்ளமையினுலும், இந்த விசாரணையை அந் நியோன்யமாகவும், அந்த ரங்க சுத்தியாகவும் நடத்துகின்றேன்.
பெரும் பரிசு , தொகை அறிவிக்கப்பட்டு நடாத் தப்படும் சிறுகதைப் போட்டிகளிலே கூட நூறு கதைகள் பரிசீலனைக்கு வந்தால், தரமான ஐந்து கதைகள் தேறுவதே அபூர்வமாக இருக்கின்றது. அப்படியிருக்கையில், தினபதியின் தினம் ஒரு களம் அறுவடை செய்துள்ள இளம் எழுத்தாளரின் கதை கள் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். அத் துடன், ஈழத்து இலக்கிய நன்முயற்சிகளின் உண்மை உருவங்கள் நூலுருவம் பெற்று, வருங்கால இலக் கிய வரலாற்று ஆசிரியர்களுடைய ஆராய்ச்சிகளுக் காகப் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பது என் அபிப்பிராயம். அவ்வாறு மாதா மாதம் பிரசுர மாகும் கதைகளுட் தரமான கதைகளைத் தொகுத்து வெளியிடுதல் நல்ல கருமம். "அக்டோபர்’ மாதக் கதைகளைத் தர வாரி வரிசையிற் பிரசுரிப்பதானல், பின் வரும் வரிசையைப் பின்பற்றுதல் ஏற்றமுடை யது என்பது என் அபிப்பிராயமாகும்.
மன்னிப்பு - புரட்சி பாலன் கண்கள் - மாத்தளை வடிவேலன் தாலி - விநோதினி பிள்ளை மடுவத்திலே - பூரணி உலகின் ஒரு குழந்தை - எஸ். எல். எம். ஹனிபா

33
இப்படி ஒரு சித்தி - கிளிவண்ணன் சோதனை - திருமலை அ. சந்திரன் வாவாச்சி - லீலா கனக சூரியம் தடுமாற்றம் - செ. குணரத்தினம் பொம்மைகள் - எஸ். எல். எம். ஹனிபா
ஹனிபாவின் இரண்டு கதைகளைச் சேர்க்கத் தேவையில்லை என்று நினைத்தால், இன்னுெரு இஸ் லாமியக் கதையான "ஜெஸிமா ஏன் சிரித்தாள்?" என்பதைப் பத்தாவது கதையாகச் சேர்த்துக் கொள் ளலாம். கணபதிப் பிள்ளையின் "உறவுக்கு ஒருத்தி’ என்ற கதை படர்க்கையில் மீண்டும் எழுதப்பட் டால், பத்துக் கதைகளுள் ஒர் இடத்தைப் பெறும் என்பதும் உண்மை. ஆனல், இந்தக் கதைகள் நான் குறித்துள்ள திருத்தங்களுடனேதான் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன என்பதும் கவனத்
ம்குரியது. திற்குரியது Ο
Printed at the Rainbow Printers, 231, Wolfendhal Street, Colombo-13.

Page 19

AL St.COLOM E3 95