கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலைக்கண்ணாடி 1987.01-02

Page 1
OS) 500
|he) եւ
நில்லுங்கள்
நில்லுங்கள்
சகோதரர்களே !
பெருக்கெடுத்தோடும் இந்த இரத்த நதியிஐ * கொஞ்சம் பாருங்கள் சற்று மெளனமாகிக் கேளுங்கள்
சுப்பிரமணியம், முருகேசு, கனகு குனடா"வ, ஜயரத்ன சோமே, நரங்கள் செய்து கொண்டிருப்பது என்ன? மேலும் அழவைப்பது பலனுகுமா? : இரத்த ஆயுதங்களே வையுங்கள் பு வைத்து விடுங்கள்
சிங்கள் மூலம் விமல் உடுபில

。
இது
ஈத்தியமான யுத்தமா ? ஒன்று சேர்வோம்; சின்னப் பிராயத்தில் போல்
கோர்த்துக்கொண்டு புத்தம் புரிவோம் ஒன்று சேர்ந்து
மனிதத் தவம் ஒழுங்கு - இவற்றைக் காக்க .
ாலத்தால் மரணிக்காத நிஜ புத்தம் இதுவே
தமிழில் இப்னு அஎபடிமத்
−==

Page 2

( )
மலைக் கண்ணுடி
ஏடு. 1 தை - மாசி 1987
இதயக் கண்ணுடியின் எதிரொளி.
ID&லயக மக்கள் உள்ளங்களில் புதிய சிந்தனைகளை தூண்டவும் தெளிவான, நிதானமான விழிப்புணர்ச்சியை உண்டாக்கவும் 'மலைக் கண்ணுடி' தன்னை தயார் படுத்திக்கொண்டு உங்கள் கைகளில் காட் சித்தருகின்றது.
மனிதாபிமான நியாய வெற்றிகளை நேசித்து, புனிதமான நெறி களின் வழியே அனைவரின் இதயத்தை ஐக்கியப் படுத்தக் கூடிய ஆக் கங்களுக்கு களம்தருவதே எம் நோக்கம்.
மலையகத் தொழிலாளர்களிடையே இன்றைய காலக்கட்டத்தில் சில மாற்றங்ஸ் ஏற்ப்பட்டுவருகின்றன. அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு ஐக்கியம், சமாதா னம், அபிவிருத்தி தோட்டத் தொழிலாளர்களிடையே U தான் ற வே ண்டும் என்பதே ‘மலைக்கண்ணுடி' யின் மகத்தான எண்ணம் ,
மலையக கலை இலக்கிய வாதிகற்க்குமட்டுமல்ல ஏனைய சகல படைப் பாளிகளுக்கும் களம் உண்டு. தரமான சமூகத்துக்கு உரமான படைப் புக்களை உள்ளடக்கி இதழை வெளிக்கொணரவே விரும்புகின்ருேம். மலையக சமூகம் பயன் பெற ஆரோக்கிய மான ஆக்கங்கள், கருத்துக் களை அனுப்பி ஒத்துழையுங்கள்.
உங்களால் இயன்றவரை ‘மலைக்கண்ணுடி' யை மற்ற நண்பர்க ளுக்கும் அறிமுகப்படுத்துங்கள் முடிந்தால் உங்கள் பகுதிகளில் விற்ப னைப் பொறுப்பேற்று இதழின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்புத் தாருங் கள் ‘மலைக்கண்ணுடி' மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கின்ருேம் அந்த மகிழ்ச்சி நிலைக்க உங்கள் நேசக்கரங்கள் ‘மலைக்கண்ணுடியை நோக்கி நீளட்டும்.
ஆசிரியர்

Page 3
மோதிரத்தின் முத்தென, இலங்கையின் ரத்தினமான மலையகத் திலிருந்து, அதுவும் ரத்தினபுரியிலிருந்து மலைக்கண்ணுடி வெளிவருவது கேட்டு மகிழ்வடைகின்றேன்.
மலையகத்தின் இலக்கிய முயற்சிகள், சூடும் சுறுசுறுப்பும் பெற்று உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செயல்படத்தெடங்கிய காலகட் டங்களில் எல்லாம் இது போன்ற இதழ்கள் தோன்றின - பணி செய் தன - மறைந்தன - மலைமுரசு - செய்தி - மலைப்பொறி - ஈழமணி - குடில் பூங்குன்றம் - துல்லி - அஞ்சலி - மலைக்குருவி என்று எத்தனையோ ஏடு கள் மலையகத்தில் இருந்து வெளிவந்து நின்று விட்டாலும் அவைகளை வரலாறு மறப்பதில்லை.
மலைக்கண்ணுடியும் மலையகத்தின் கண்ணுடியாய் - மலையக இலக் கியத்தின் கண்ணுடியாய் வெளிவந்து மலையக இலக்கிய வரலாற்றில் சில ஆழமான சுவடுக்ளைப் பறிக்கட்டும். துணிவிடனும் உற்சாகத் துடனும் செயல் படட்டும்.
இதழின் ஆசிரியப் பொறுப் பேற்றிருக்கும் கலா விஸ்வநாத னுக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
தெளிவத்தை ஜோசப்
பார்த்தோர் முகத்தைப்பளிச்சிடக்காட்டும் வார்த்தை ஆடி யாய் "மலைக்கண்ணுடி' யைப் பார்த்தும் மலையகப் பணியைச் சீர்த் தியாய்ச்செய்க ! சிறப்புகள் கொள்கவே
**பெளர்ணமி" ஆசிரியர் அல் - அஸ்"மத்
“மலைக்கண்ணுடி' மழைக் காளான்கள் போன்று தோன்றி மறைந்து விடாது நீடித்து, நிரந்தரமாய், உண்மைகளை, சமூக சீர்கேடுகளை மறைந்து கிடக்கும் உயர்ந்த விடயங்ஃளை காலம் காலமாக பிரதி பலித்துக் கொண்டே பாரோர்யாவரும் கண்ணுறும் வண்ணம் நிலைத் திருக்கவேண்டுமென பேரார்வத்துடன் பிரார்த்திக்கிறேன்.
செல்வி. தாரிணிலஷ்மி பொகவந்தலாவ

ஒசைகளாக.
எங்கள் மலையக பாட்டாளர்; கற்பனைகள், காட்சிகள் எல்லாம் யானையின் உருவங்கள்; ஆனல்
அதன் விடிவுகள் கடுகுச்சேனையின் அறுவடை முடிவுகள்!
தாயக்ம்; தலை மன்னுருக்கப்பால் கப்பலில் கடந்து அதைக் காணத்துடிக்கும் நெஞ்சங்கள்.
அதன்; கற்பனைகள், காட்சிகள் கனவுகள், நனவுகள் நாளைய நினைவுகள்.
எத்தனை, எத்தனை இன்ப நினைவுகள், துன்ப கதைகள்.
அவர்களது - இதய கீதம் ஏழை வீணையின் சோக நரம்புகளின்
ஒசைகளாக...!
உடுதெனிய நஜ"தீன்
சூரியக் கைதிகள்
இவர்கள் சூரியக்கைதிகள் உதயம் தொட்டு அஸ்த மனம்வரை மலையின்
மைந்தர்கள்.
புசல்லாவை இஸ்மாலிஹா
கபளிகரம்
உங்கள் நெற்றிசிந்திய வியர்வை மணிகளை இயற்கை கொழுந்துருவில்
தேக்கிக்கொண்டது
அவைநிலத்தாய்க்கு அர்ப்பணமாயிருந்தால் பூமியையே
கபஸ்ரீகரம் செய்திருக்கலாம்..!
பாலா ஷர்மா
நிளை நிலமே
உன் செழிப்புக்கு அன்ருடம்
6 TLD !
வியர்வையை தருகின்ருேம், அது போதாதென்ரு எழ் கண்ணிரையும் செந்நீரையும் சீதனமா கேட்கின்ருய்?
எஸ். 6ggu unr.

Page 4
( 4.)
தெறிக்கும் துணுக்குகள் ಕಹಿಹಾಯ್ಕ್...
கலை, இலக்கிய எழுத்துத் துறைகளில் தனது பங்கை சிறப்பாக செய்து வரும் மலையகம் - தற்போது நாடகத் துறையில் மாத்திரம் சற்று பின் தங்கியிருப்பது மனிதிற்கு என்னவோ போல் இருக்கின்றது.
அன்றெல்லாம், திரு வீ. பீ. கணேசன் தனது திரைப்படங்க ளிலும், மாத்தளை கார்த்திகேசு போன்றேர் தங்களது நாடகங்களில் மலையகத்தை, அதன் கலை கலாச்சாரங்ாள், சமூக பிரச்னைகள் இவ ற்றை அழகாக கோடிட்டு காட்டினர்கள். இப்போதெல்லாம் அவற் றைக் காண முடியாதிருக்கின்றது.
சில மலையகத்தவர்களால் கொழும்பில் மேடையேற்றப்படும் நாடகங்களில் இன்று "கொழும்புஸ்டையிலை யே காணக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே தான் கொழும்பிலோ அல்லது ஏனைய நகரங் களிலோ மலையக பின்னணியில் நாடகங்களை பார்க்க முடியாதா என்று என் போன்ற நாடக இதயங்களின் ஏக்ககங்களாடும்.
ஜோய் பத்மகுமார்
சில தோட்டங்களில் கல்விக்கு முதலிட மும், முக்கியத்துவமும் கொடுக்கும் பெற்றேர் இருக்கிருர்ாேள். இவர்கள் தங்கள் வேலை, ளை தாங்களே செய்துக்கொண்டு (சிறுவர்களை உதவிக்கு ம ைக்ச கூட்டிக் செல்வது வழக்கம்) கல்வியறிலை தங்கள் குழந்தைகள் பெறுவதற்க் காக செலவழித்து காலத்திற்கு ஏற்றவாறு சுய தொழில் வேலை வr ய் ப்பையும் பெற்றுக்கொடுக்கின்றனர். நாளடைவில் இப்பெற்ருேர் சம் செல்வங்களின் நன்மதிப்பையும் பராமரிப்பையும் பெறுவதுடன் சமூ கத்தில் ஒர் மாற்றத்தை ஏற்ப்படுத்திய விவேகப் பெற்றேர்கள க மாறுகின்ருர் கள்.
அநேக தோட்டங்களில் ‘குசினி' இல்லாத லயன்கள்" இருக்கி ன்றன. சுகாதாரமற்ற முறையில் இருக்கும். பார்ப்பதற்கு பன்றி கெr ட் டில் போல் இருக்கும் வீட்டுமுன் முற்றங்களில் பூற்க்கள் வளர்ந்து பூக்கன்றுகள் கூட இல்லாது கவனிப்பாரற்று காட்சித்தரும்.
இங்கு சீதேவி தரிசனம் தரமாட்டாள் என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள் ஆகவே தொழிலாளர்கள் தாங் களாகவே சுகாதரத்திற்க்காக லயங்களை சுற்றி சுத்தமாகவும், திருத் திக்கொள்ள நினைக்கலாமே.

( 5.)
பல தோட்டப் பாடசாலைகளில் தொழிலாளர்களுக்கு லீவு இருக்கும் நேரங்களில் பெற்றேர் ஆசிரியர் அல்லது பாடசாலை அபி விருத்திச் சங்கக் கூட்டம் நடக்கும். பெற்றேர்கள் அனேகமாக போக மாட்டார்கள். இதனுல், ஆசிரியர்களின் அக்கறை யின்மையும், சிறு வர்களின் கல்வி வளர்ச்சியும் தடைபட ஏது வாகின்றது.
தோட்டமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த இன் னும் எத்தனை ஆண்டுகள் எடுக்குமோ தெரியாதென்று பெரும் பாலன சமூக சேவையாளர்கள் குறைப்பட்டுக் கொள்கின்ருர்கள்.
மலைமணி
தோட்டத்து மக்கள் வீட்டை, பற்றியும் தோட்டத்தை பற் றியும் நாட்டைப் பற்றியும் உலகைப்பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டும். தோட்ட எல்லைக்குள் மாத்திரம் சுற்றி வந்தால் மற்ற சமூகத்தவர்களோடு கைகோர்த்து செல்ல எப்படி முடியும்.
உனது கைகள் ஒய்ந்து விட்டால்.
எஸ். டேவிட் - பசறை
*உரிமை' என்று கேளடா! உழைக்கும் "சக்தி நீயடா!! கரி படிந்த "காம்பரு' வில் *காய்ந்த' வாழ்வு ஏனடா?
மலைகள் ஏறிக் காடழித்துப் பயிர்கள் நட்டதாரடா? களையிழந்த கடையணுகக் காட்சி தருவதேனடா?
ஊமையாக பேதையாக
உறங்கிக் கிடப்பதேனடா? ஆமையாக அறிவு கெட்டு அடங்கிக் கிடப்பதேனடா?
உலகமெங்கும் உனது தோழர் உரிமைக்காகக் சாகிருர்.! பலமிருந்தும் அடிமையாகப் பதுங்கி வாழ்வதேனடா?
உனது வாழ்வும் உனது சாவும் இந்த மண்ணில் தானடா! உனது கைகள் ஓய்ந்து விட்டால் a. Googpu'lu Lugdig unrTL-T?

Page 5
(6):
சிறுகதை : ஒரு தோட்டத்துப்பெண்.
செல்வராஜ்
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ராமையா, ராமாயி இரு வருமே தோட்டத் தொழிலாளர்தான் ராமையா கொஞ்சம் படித்தி ருந்தான். ஐந்தாம் வகுப்புதான்! அது அன்றைய பெரிய படிப்பு! நல்ல சிந்தனையாளன் வருங்காலத்தில் பிள்ளைகளை நன்றக படிக்க வைக்கவேண்டுமென்று தன் மனைவியிடம் அடிக்கடி சொல்லிக்கொள்
6 GÖT
நகரில் ஒர் தமிழ்க் கடை. அதில் தான் வீட்டுக்குத் தேவை யான சாமான்கள் வாங்குவான். இவனுடைய படிப்பும் நற்குணமும் முதலாளிக்கு நன்ருக பிடித்திருந்தது. காணும் போதெல்லாம் புத்தி சொல்வார். மதுபானம், புகைபிடித்தல் இல்லாததுதான் பிடிப்பு போலும், சிக்கனத்தை கடை பிடிக்க சொல்வார். அவர் ஒரு நல்ல முதலாளி. பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு ஏற்ற பெயர் வைக்க காட் டிக் கொடுத்தவர், அவர்தான்!
அன்று ராமையா வழக்கம் போல எழுந்தான். பிரட்டுக்குப் போனன். உரம் போடும் வேலை. உயர்ந்த மலை. எட்டாம் நம்பர் மலை. டிரக்டரில் தான் உரம் கொண்டு போவார்கள். மலை உச்சிக்கு போக பல வங்குகள். ஒரு ஆள் உயரத்திற்குமேல் உர மூட்டைகள்: ட்ரெக்டரில் . பின் பெட்டியில் ஏற்றப்பட்டுள்ளது. ஒழுங்காக அடுக் கப்பட்டிருந்தன. ராமையா சற்று உசாரானவன் அவன் அன்று கிளி னர். உரமூட்டைகள் மீது உட்கார்ந்தான். யானை மீது செல்வது போன்ற எண்ணம்; சந்தோஷம் ஆரும் நம்பர் (மலையில் இருந்து பார்த்தால் எட்டாம் நம்பர் மலை அழகாகத் தெரியும். ட்ரெக்ட ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அது அழகான காட்சியாய் இருந்தது. மலை உச்சியை அண்மிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய வளைவு கியர் மாற்றப்பட்டது. என்ஜினும் பெட்டியும் இணைந்துள்ள துவாரத்தைச் சுற்றி சிரியதோர் வெடிப்பு இருந்துள்ளது. அதிகாரிகளோ எவரோ கவனிக்கவில்லை. கவன யீனத்தால் அன்று அது உடைந்தது என்ஜின் தப்பியது.
பெட்டியும் உரமும் ராமையாவும்?
எத்தன்ையோ காரணங்கள்!
அந்தோ பரிதாபம்! அவன் அவ்விடத்திலேயே பாதாளமும் போய் பரலோகமும் போய் விட்டான்.
தோட்டத்தின் பிரதான இயந்திரமொன்று இயங்காமல் நின்று விட்டது.

ராமாயி ரொம்பவும் கஸ்டப்பட்டாள். கஸ்டத்தோடு கஸ்ட மாசு குழந்தைகளையும் தோட்டப் பாடசாலைக்கு அனுப்பினள். ஓய் வான நேரங்களில் புத்தி புகட்டுவாள். தாயும் தந்தையுமாக இருந்து கவனித்தாள், மற்ற குடும்பத்தினர் பொருமை பட்டனர். அவள் கவ னத்திற்கு எடுக்க மாட்டாள்; சகித்துக் கொள்வாள். படிக்காதவளாய் இருந்தாலும் கடவுள் பக்தியும் அவரின் உதவியும் புத்தியும் இருந்தது.
கrளையர் வலை விரித்தனர்; இணங்க மறுத்தாள், சகோதரராக எண்ணினுள், தன்னை சகோதரியாக எண்ணும்படி கேட்டுக் கொள் வாள். தோட்ட மேற்பார்வையாளர்களின் வலை வீச்சு வேறு. தைரிய மாக எதிர்த்தாள் மறுத்தாள், தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்
T6.
தோட்டத்தில் பிள்ளைகள் எல்லோருமே பள்ளி செல்வது குறைவு பிரதீப், சசிகலா நாள் தவிருது சென்றனர். கல்வியில் ஆர்வம் காட் டினர். வகுப்பில் முதல் பிள்ளைகளாக வருவர் ராமாயிக்கு பணத் தேவை அதிகரித்தது நண்பிகளிடம் பணம் கேட்பாள்; கிடைக்காது உறவினர் உதவியும் இல்லை.
இவளுடன் வேலை செய்பவள் ரொசலின் நோனு, கிராமத்துப் பெண் ராமாயியின் நல்ல நண்பி அவள் வெள்ளென எழும்புவாள் அப்பம் சுடுவாள். பிரட்டுக்கு கொண்டு வருவ்ாள், விற்பாள், அது அவளுக்கு மேலதிக வருமானம். அவளும் ஏழைதான்! குடும்ப செல வுக்கு அது சரியாகி விடும்.
ராமாயி பிள்ளைகளின் கல்விக்கு பணத் தேவையை ரொசலினி டம் சொன்னுள் அவளிடம் போதிய பணம் இல்லாததால் உபாய மொன்று சொன்னுள் ராமாயி நீ அப்பம் சுட்டு தோட்டத்தில் விற் றுக் கொள். நான் உனக்காக அத்தொழிலை விட்டு விடுகிறேன். எல் லோரும் தமிழ் ஆட்கள் தானே. உனக்கு ஒத்துழைப்பு தருவார்கள் நீ தைரியமாக நம்பிக்கை யோடு செய்' என்று உற்சாகம் கொடுத்தாள் பிரதீப், சசிகலா இருவரும் உதவி செய்வார்கள். செலவுக்கும் சரி வரும் அதுவும் நல்லது தான் என நண்பிகள் இருவரும் திட்டமிட் டுக் கொண்டனர் . . . .
சம்பளத்திற்கு மறுதினம். கொஞ்சம் பணம் ஒதுக்கினுள் ராமாயி வெள்ளென மூவரும் எழும்பினர் அப்பம் சுட்டனர். பிரதீப், சசிகலா, ராமாயி மூவருக்கும் மகிழ்ச்சி படிப்போடு வருமானம் தானே பிரதீப் நினைத்துக் கொண்டான்.
பிரட்டுக்களம் போனன் பிரதீப், அப்பத்தோடு! ராமாயி வேலைக்கு ஆயத்தமாய் அவனேடு போனள். ஒரு அப்பப் கூட ஒருவரும் வாங்கவில்லை ஏமாற்றம் தான்!

Page 6
( 8)
ரொசலினுக்கும் கவலையாய் இருந்தது. "ராமாயி இளக்க சாதி" யாம். அப்பப் பெட்டி அப்படியே திரும்பியது. தோட்ட மக்களின் கிசு கிசுப்போடு ராமாயி தோல்வி கண்டாள். பாமர தோட்ட மக்கள் புத்தி புகட்டினர்.
"புள்ளைங்கள படிக்க வச்சி எண்னத்துக்கு உத்தியோக மெல்லா இந்த காலத்துல எவெங் ஒனக்கு குடுக்க போருன். என்ன செய்ய போறயோ தெரியாது. கொழும்புக்கு அனுப்பு புள்ள, அங்க பங்களா காட்டுல சரி வேல செய்யுங்க அப்பரம் வேணும்னு பெரிய புள்ளங் களா வந்தோன்ன கொண்டாந்து தோட்டத்துல போட வேண்டி யது தானே மத்த வீட்டுங்கள் மத்த தோட்டத்துல் 7ள போய் பாத் தாத்தானே ஒனக்கு நல்லது கெட்டது தெரியும் அந்தமேல நாட்டுல (வளவுள) இருந்து இங்க வேல பாக்க வாராரே, சிரிபால மாத்தியா அவுருகிட்ட கேட்டு பாரு புள்ள, அவுங்க வீட்டுக்கு கொழும்புல இருந்து வாருங்க பெரிய பெரிய காருல, ஜிப்புல, வேனுலன்னு கணக்கு இல்லபுள்ள. பெரிய பெரிய மாத்தியா மாரு நேன மாரு என்னுத்த சொல்லுற எல்லா வருவாங்க ஞாயித்து கெழம வேல இல்லாட்டி நா அங்கதா புள்ள இருப்பென் அந்தி வரக்சி வேல செஞ்சி குடுத்துட்டு வருவென் இல்லாட்டி எனச்குஎங்க தெரிய போவுதுவிசயங்க நீ ஒன்னு' இப்படி அடுத்த வீட்டு அங்கம்மா சொன்னுள். நண்பிகள் எல்லாரும் ஆமோதித்தனர்.
பக்கத்து லயத்து ஜானகி “யேங் புள்ள, அத்த :* கணக்குல இருந்து வாராரே புண்ணியம் கணக்க புள்ள, அவுரு கிட் சரி கொஞ் சம் சொல்லி கிள்ளி பாக்குறது அவுரும் நல்லா படிச்சவிருதானே? என்ன சரி ஒரு வழிய எதும் சொல்லமாட்டா சும்மா சரி சொல்லி கேட்டு பாக்குறதுதானே என்ருள்.
அங்கம்மா "ஆமா, ←ቌሠጋff அவுரு படிச்சி கிழிச்சவருதா. ஹி..ஹி. ச்சி நீ ஒன்னு அவனும் நம்ப மாதிரி லைத்துல இருக்கிறவென்தா ஒனக்கு ஒன்னும் தெரியாது. நொட்ட பயா
அவுங்க அம்மா பணிய கணக்குல கொழுந்து எடுக்குறது தெரியாது.
அக்சாவும் கொழுந்து எடுக்குரு, ஒரு நோஞ்சங் குட்டி, கறுப்பி கன் பனங் கரேன்னு இருப்பா திங்க இல்லாததுங்க பணிய கணக்குல கொழு ந்து இல்லாதன்னைக்கி இங்க தானே வாராளுங்க, நம்மசுட கொழுந்து எடுக்க தெரியாது. ம் அவுங்க எளக்க ஜாதியrம்மா. நம்ப ஆளு ங்க ஒருத்த குடே அந்த மாத்தியாவ கணக்கு எடுக்குற மாதிரி அந்த மனுசன் கணக்கெடுக்க மாட்டாங்க.

(, è )
நாங் கூட பணிய கணக்கு தம்பின்னுதா கூப்புடுவெங் இல்லாட்டி பேரு சொல்லித்தான் கூப்புடு வெங் அவுங்களுக்கெல்லா மரியாத வச்சி கூப் புட்ட நம்ப மனம் மரியாத் காத்துல தான் 'பறக்கும். பொழப்பு கிழிஞ்சி பொயிரும்.போ!'
இப்படியே பெண்கள் தங்களுக்குள் ஏதேதோ வம்பளந்து கொண்டு கொழுந்து கொய்து கொண்டிருந்தார்கள். ராமாயி எத்ை யுமே காதுக் கொடுத்து மனதுக்கு எடுப்பதாய் இல்லை. அவளுக்கு முக்கியம் பிள்ளைகளின் படிப்பு ! எது எப்பிடி போனலும் பரவா இல்ல அவுரு நெனச்ச மாதிரி புள்ளெங்கள படிக்க வச்சிரனும் இலலாட்டி அந்த பாவம் நமக்குத் தான் அதுங்க உத்தியோகொ பாத்தாலும் சரி பாக்காட்டியும் சரி நம்ப கடமய நம்ப செஞ்சீற வேண்டியது தான் ! என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வேலை செய்தrள் : -
சில வாரங்களில் ராமாயி பின் சோதனைக் காலம் ஆரம்பித்தது. வேலை செய்ய முடியவில்லை. உடல் சோர்வு; உளைச்சல், மயக்கம், வயிற்றில் கட்டி, தோட்ட ஆசுப்பத்திரியில் மருந்து இல்லை தோட்ட டாக்டருக்கு காசு கட்டினல் பங்களாவில் இருந்து மருந்து தந்துவிடுவார். அதற்கும் அவளிடம் வழி இல்லை. ஐந்து கிலோ மீற்றர் தூரமுள்ள நகரின் அர சாங்க மருத்துவ மனைக்குதான் போக வேண்டும். தோட்டத்து லொறி யும் எதோ உடைந்து கராஜில் போட்டிருந்தார்கள் வேறு வாகனமும்.
ரொசலின், ராமாயி இருவரும் நடந்தார்கள். அரசாங்க ஆஸ்பத்திரியில் ஆபரேசன் நடந்தது. கட்டி அகற்றப்பட்டது ! *கஸ்டமான வேலை செய்யக்கூடாது' டாக்டரின் உத்தரவு. ராமாயி ஒரு மாதம் ஆசுபத்திரியில் பிள்ளைகள் ரொசலின் வீட் டில் போதாமைக்கு அவர்களை பாடசாலைக்கும் அனுப்பி வைத்தாள். ரொசலின்.
தோட்டமும் கிராமமும் அடுத்தடுத்து இருந்தது வசதியாய்! போப் விட்டது அந்த ஏழைகளுக்கு !
ரொசலினுக்கும் இரண்டே பிள்ளைகள் தான். அவளின் கணவன் நகரில் சிறிய தேனீர்க்கடை வைத்திருத்தான். சொந்தக் கடை அது அவனுக்கு வாசுன விபத்தொன்றில் ஏற்கனவே இறந்து விட்டான். பிள்ளைகளின் கல்விக்கு உறவினரும் உதவி செய்கிறர்கள்; நல்லவள்; துவேசமாக பேசமாட்டிாள்
ராமாயி ஆஸ்பத்திரியில் இருந்து வந்தபின் ரொசலின் தான்

Page 7
(10)
வீட்டில் வைத்து அவளை பராமரித்தாள். w வயிறு வெட்டப்பட்டு கடின ஆபரேசன் ஆனதால் நடக்கவே கஸ்டம் ராமாயி தோட்டத் தலைவரை நாடினுள். இலேசான வேலை கேட்டு வாங்கித் தரும்படி —
முயற்கி வீணுனத, தொழிற் சங்க காரியாலயமும் கை கொடுக்க தவறியது. ஒன்டிக் கட்டைதானே தோட்ட அதிகாரிகள் கண்காணிப் பாளர்கள் ஏளனமாய் சிரித்தனர்.
ஏற்கனவே அவர்களின் விருப்பம் நிறைவேருமல் இருந்தது நினைவுக்கு வந்தது. அவளுக்கு இரண்டு பிள்ளைகளென்ருலும் இன்னும் கவர்ச்சியாகவே இருந்தாள். ஏனையோரின் ஏக்கத்திற்கு ஆளாயிருந்தால்,
இலேசான வேலை இல்லை என்று எல்லோரும் கை விரித்தனர்!
துணிச்சலும் ஆவேசமும் நிறைந்தவளாய் ரொசலினை நாடினள், அவளும் அன்போடு அவளுக்கு இல்லிடம் கொடுத்தாள். ஐம்பது ரூபா பணமும் கேட்டு வாங்கிக் கொண்டாள்.
ராமாயி பிரதீப், சசிகலா மூவரும் காலை மூன்று மணிக்கு துயி லெழுவர்.
ரொசலின், பியதாஸ, சுமன, அவர்களும் அப்படியே! அப்பம் சுடுவர்.
ரொசலின் சுடும் அப்பம் - பிரட்டுக்களம் !
ராமாயி சுடும் அப்பம் - நகர்ப்புறம் !
ரொசலின் உள்ளூர மகிழ்ந்தாள். பிரதீப்பையும் சசிகலாவை யும் நகரின் தமிழ்க் கல்லூரிக்கு அனுப்பி வைக்க ராம யிக்கு உடந் கையாயிருந்தாள். ரொசலின் ஏழை என்ருலும் தாய் வீட்டில் இருக் கும் போது கிராமப் பள்ளியில் ஓரளவு படித்திருந்தாள் எனவே கல்வி விசயத்தில் கொஞ்சம் அக்கறை அதிகம் !
ாமாயிக்கு நாளடைவில் ஆடர்கள் அதிகரித்தது.
டை, முறுக்கு, தோசை, பிட்டு. அப்பப்பா ! தமிழ் உணவு, நகரில் ருசி தட்டியது. பிரதீப், சசிகலா கல்லூரியில் திறமை சித்தி பெற்றனர். இன்று உத்தியோகம் பார்க்கின்றனர்.
ராமாயி தோட்டத்தில் தனக்கும் கணவனுக்கும் "*பிரவிடன் பன்ட்" பணத்கை எடுத்தாள். ரொசவினின் உசவியோடும் மகன் பிரதீப்பின் புத்தியோடும் நகரில் ஒரு பகுதியில் சிறிய வீடொன்றுக்கு உரிமையானவளாகிவிட்டாள்.
தோட்டத் தொழில் இல்லாவிட்டாலும் கன்னல் வாழ முடியும், ஏனைய சமூகங்களோடு சரி சமனக எாழமுடியும்; கல்வியறிவு இல்லா விட்டாலும் முடியும் ! என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டாள் ராமாயி! அவள் வேலைசெய்த தோட்டத்து மக்கள் அவள்மீது உரிமை கொண்டாடவும் அவளோடு உறவு வைத்துக்கொள்ளவும் அவளை புகழ்ந்து பேசவும் நீயா ? நான ? என்று முந்திக்கொள்கிறர்கள் !

(11)
ஒரு மாநாடு !
- சில மனபதிவுகள் - மேமன்கவி
பொதுவாகவே, ஒரு கூட்டத்தைப் பற்றியோ அல்லது ஒரு மாநாட்டைப் பற்றியோ எழுதப்படும் செய்தி விவரணங்களை கடந்து, அக்கூட்டமோ அல்லது மாநாடோ ஒரு சுவைஞனின் தனிமனித மண் அளவில் ஏற்படுத்தும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கன.
அந்த வகையில், என் மனதளவில் டிசம்பர் மாதத்தில் கண்டி மாநரில் கூடிய மலையக கலை, இலக்கிய பேரவையின் எழுத்தாளர் மாநாடு பாரிய தாக்கங்கள் ஏற்படுத்தியது. கடந்த 10 வருட காலங் களில் ஒரு சில மலையக படைப்பாளிகளை மட்டுமே சந்திக்க கிடைத் திருக்கிறதே என்ற மனகுறைவுடன், கைக்கு எட்டிய அளவான மலையகப் படைப்புகளைப் படித்ததன்மூலம், அதாவது மலையக எழுத்தாளர்களின் எழுத்து மும் மட்டுமே பார்த்திருந்த எனக்கு பல மலையகப் படைப் பாளிகளை நேரில் சந்திக்கக்கூடிய ஒரு ப. ரிய வாய்ப்பினை இம்மாநாடு ஏற்படுத்தியது. அத்தோ டு, சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதி களில் வாழும் எழுத்தாளர் நண்பர்களைப் போய் சந்திக்க முடியாத ஓர் இடைவெளி சோகத்தை ஓரளவு குறைக்க இவ்வெழுத்தாளர் சந்திப்பு உதவியது' எனலாம்.
அன்று நடந்த முழுநாள் மாநாட்டில் உரையரங்கு, எழுத்தாளர் கருத்து பரிமாறல்கள் போன்றவையோடு, மாலை நிகழ்ச்சியில் பத்து மஜல யசு படைப்பாளிகள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு நிழ்ச்சியாகும். வாழும்பொழுதே கலைஞனை கெளரவித்தலுக்கான இப் பாரிய பணிக்கு இம்மாநாடு உதவியிருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளித் தது. அன்று பிற்பகல் கூடிய எழுத்தாளர் உரையாடலின்பொழுது முன் வைக்கப்பட்ட விருத்துக்கள் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவ கூடியவையாக இருந்தன. அவ்வுரையாடலில் முன்வைக்கப்பட்ட முக்கியமானதோர் கருத்துருவம், மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி பூரணமான ஓர் ஆய்வு எழுத்துலகில் முன்வைக்கப்படவில்லை என்பதேயாகும். அதற்கு வழங்கப்பட்ட பதிலில் பேராசிரியர் அருணு சலம் அவர்கள் மலையக இலக்கிய வளர்ச்சிப்பற்றிய ஒரு ஆய்வினை செய்து வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது . அத்தகைய ஆய்வுகள் மலையகத் தைச் சார்ந்த இலக்கிய இயக்கங்களால் புத்தகங்களாக வெளியிடப்பட வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டது. மேலும் - சமீபகாலமாக பேராதனை வளாகத்தைச் சார்ந்த-பல-மாணவ-மாணவிகள் மலையக சமூக அரசியல், கலை, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதை அறியககூடிய தாக இருந்ததுடன்-அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுவதன் மூலம் மலையகத்தைப்பற்றிய பல்வேறு தளங்களிலான பூரண ஆய்வுகளை அம் மாணவ-மாணவிகள்மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தும் உறுதி செய்யப்பட்டது.

Page 8
(12)
சிந்திக்க இருசெய்திகள்
1987ம் வருடத்தின் இறுதிக்குள் மலையகத் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் (லயங்கள்) அசனைச் சுற்றியுள்ள காணித் துண்டுகளும் தொழிலாளருக்கே சொந்தமாகவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இ. தொ. கா. க ைவர் அ மச்சர் திரு. எஸ். தொண்ட மான் பேசிய பேச்சுக்கள் கவனிக்கப்பட வேண்டியது, நியாயமான இந்த உரிமை தொழிலாளருக்கு நிச்சயம் கிடைக்கவேண்டும். w
இ மாண்புமிகு பிரதமர் கிரு. ஆர். ரேமசாசா அவர்களின் வீடமைப்புத் திட்டம் ஒரு பெரும் சாதனையாக கருTப்பட்டுள்ளது. இந்த “வீடமைப்பு ஆண்டில்" தோட்டத் தொழிலாளருக் கென வீடுகள் சுட்டித் தோட்டப்புறத்தில் கிராமங்களை உருவாக்குவதாக பிரதமர்
கூறினர். பிரதமர் அவர்களின் பெரும் சாதனையில் தோட்டத் தொழி
லாளருக்கும் பங்குகிடைக்குமென எதிர்பார்க்கலாம் !
- செய்திகேசன் -
* பிரஜாவுரிமை வாழ்க்கை”
சுரேந்தர்-தருமலிங்கம்
( ஈழகணேஷ்) தோட்டத்தின்_/ ஒரு பகுதி எததியோபவியாவின், பட்டினி ஊர்வலத்தை இப்போது படம்பிடிக்கின்றது.
- -x -
பாவம் !
இந்த புண்ணிய ஜென்மங்கள்
பகல்களை
காட்டிவிட்டு - இன்னும் இருட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு நாங்கள் ள்த்த சேசத்தவர்கள் என்று பிரஜாவுரிமையில் வாழ்க்கையை பார்க்கிறது.
- பசி -
- 9 -
எங்களுக்கு
வயிற்றுப் பசியால் நாங்கள் தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்கிருேம் !
இனப் பசிக்காரர்களோ
குலக் கொழுந்துகளைப் பறிககிருர்கள் !
அருள் - கவி அமுதன்
 


Page 9
மானவ மணிகளே
இதோ- ஓர்
* ஆங்கில தம் * ஆங்கிலம் ே * தொழிநு
கவிதை
நாவ
ஆவலோடு தேடும் பழைய வெளியீடுகளான "மல்லின்
சுஃமுரசு' 'குன்றின் கு
॥
பெற்று ர் ெ
கோவை புத்
189 சென்றல் ரே
மங்காது பிரகாசி
இரத்தினபுரி நகரில் சகல விதம்
சஞ்சினைகள் தினசரி பத்திரிகை புத்துகங்கள் அறிவு நூல்கள் சாலே புத்த ந ப ர ன
கிடைக் கும்
U 60 to 6 13 A, GFY (SJ"
முகவரி - 32 குட் அச்சுப்பதிவு - கலா பிர் பதிப்பாசிரியர் - எப். மரி ஆசிரியர் - ஆள் வி

! வாசகர்களே!
நற் செய்தி!
ழ் டிக்ஸனரி பசுவது எப்படி ? ட்ப நூல்கள் ப் புத்தகங்கள்
ஸ்கள்
புத்திமிங்கள் மற்றும் ஈழத்து
சிரித்திரன் பெளர்ணமி றல் மலேக் கண் ணு டி
நேரி லும் தபாவிலும் 蔷 r rérórü
தக நிலையம்
ாட், கொழும்பு-12.
99 5ഞTബ്ര Qக்க வாழ்த்துக்கள் ! ன இந்திய இலங்கை மர்த வார கள் சினிமா இதழ்கள் பட்டுப் வாழ்த்து மடல்கள்" பாட ாங்கள் சகாய விலக்கு ஒரே இடம். iu (3 L I si 6iu) ாட், இரத்தினபுரி,
செட் ரோட் இரத்தினபுரி, 1ண்ட் கொழும்பு-15, ய சன்தனம்
ஸ்ங்நாதன்