கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலர் 1971.10

Page 1


Page 2

அகில இலங்கைத் தமிழ்த்தின விழா தேசிய ஒற்றுமைக்கு வித்தாகட்டும் கெளரவ கல்வி அமைச்சா
அல்ஹாஜ் டாக்டர் பதியுதீன் மஹ்மூத்.
இந் நாட்டில் வாழும் முக்கிய ச மூ க ங் க ளி ல் தமிழ் சமூகமும் ஒன்று. அச்சமூகத்தவரின் தாய் மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்குமுகமாக நடாத்தப்படும் பாடசாலைகளின் தமிழ்தின விழா வில் அகில இலங்கையிலுமிருந்து தமிழ் மாணவர்கள் பங்கு பற்று வது இந் நாட்டின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மொழியால் வேறுபட்டாலும் இந் நாட்டு மக்களனைவரும் ஒருமைப்
பாடுடையவரே. இந்த ஒற்றுமையே எமக்கு மிகவும் வேண்டுவது. இவ் வொற்றுமை உணர்வோடு அனை வரும் நா ட் டு க் கு உழைத்தால் அவர் தம் உரிமைகளும் இயல் பாகவேகிடைக்கும்என்பது உறுதி.
,ང་ཆེན་སོགས་ (1970ம் ஆண்டு ஆகஸட் மாதம் மட்டுநகரில் நடைபெற்ற தமிழ்த்தின
விழா வின் போது கெளரவ கல்வி
அமைச்சர் வழங்கிய ஆசியுரையின் ஒரு பகுதி)
அகில இலங்கைத் தமிழ்த்தின விழா இவ்வாண்டும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறு கிறது. திருமலையில் நடைபெறும் இவ்விழாவைத் திறந்துவைக்கும் கெளரவ கல்வி அமைச்சர் அல்ஹாஜ் டாக்ட்ர் பதியுதீன் மஹ்மூத்.

Page 3
சரித்திரப் பிரசித்திபெற்ற திருமலையில் நடைபெறும்
கிழக்கு மாகாணத்துக்கு இரண்டாவது
ിക്കെ இலங்கைத் தமிழ்த் தினவிழா இவ்வாண்டும் கிழக்குப் பிராந்தியத்திலேயே நடைபெறு வதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி யடைகிறேன். கடந்த ஆண்டு மட் டக்களப்பில் நடந்ததைவிட, திரு கோணமலையில் இவ்வாண்டு சிறப் பாக ந  ைட பெறும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. எமது மதிப்பிற்குரிய கல்வி அமைச் சர். டாக்டர். அல்-ஹாஜ். பதியுத் தீன் மஹ்மூத் அவர்கள் இவ்விழா வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதனல் இவ்விழா இன்னும் சிறப்படைகிறது.
கிழக்கு மாகாணம் புண்ணியம் செய்த பூமி. பண்டைய காலத்தில் மதுரை மாவட்டம் தமிழை வளர்த் தது. அதற்கொப்ப இன்று கிழக்கு மாகாணம் தமிழுக்கு மென்மேலும் அணி செய்கிறது. தமிழுக்கு அணி செய்வதால் தமிழ்ப் பண்பாட்டை, மரபை, பாரம்பரியத்தை, வளர்க் கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அத்தி வாரமான சமாதானத்தையும், சம தர்மத்தையும் வளர்க்கிறது. எமது தாய்நாடான ஈழமணித்திருநாடு இன்று சமாதானத்தையே தேடி அல்கிறது. அந்த சமாதானத்தை உருவாக்குவதற்கு - கிழக்கு மாகா ணம் முயற்சிகள் செய்து முன்னணி யில் நிற்கிறது என்பதைக் கூறிக் கொள் வ தி ல் பெருமையடை கிறேன்.
இன்றைய இளம் சந்ததியின ருக்கு நாம் வழங்கும் கல்வியின்
Fls|ss)sil ෆි (22.
SMP)
2s.
2
முக்கிய நோக்கம் என்ன? பண் டைய பராம்பரியத்தை, மரபை, பண்பாட்டைப் பாது காத்து சமூ கக் கட்டுக் கோப்பை சின்னு பின்ன மாக்காமல் புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய `அ றி  ைவ வழங்குவதுதான் இன்றைய கல்வி யின் முக்கிய நோ க் க ம |ா கு ம். காலம் காலமாக எம் முன்னேர் களிஞல் பாதுகாக்கப்பட்டு வந்த பண்பாடு - புதிய மாற்றங்களினுல் சீர் குலையக் கூடாது.
வரலாறு எமக்கு எ டு த் து க் காட்டும் உண்மையெல்லாம் சாம் ராச்சியங்கள், வீழ்ந்தன, நாகரிகங் கள் அழிந்தன என்பவைதான். இந்த உண்மை, பழைய நாகரிகத் தின் அத்திவாரத்தில் புதிய நாக ரிகம் எழுந்த கதையையே எடுத் துக் காட்டுகிறது.
இன்றைய மனிதனின் வாழ் வில் - பல்லாயிரம் வருடங்களின் வளர்ச்சியிருக்கிறது. அவனுடைய உருவ அமைப்பிலும் சரி, அன்ருட வாழ்க்கையிலும் சரி, அறிவிலும் சரி. இந்த வளர்ச்சியைத் தான் நாம் காண்கிருேம், வளர்ச்சிகளி ஞல் நாம் பெற்ற சமூகக் கட்டுக் கோப்பை உடைத்து, சமுதாய மாற்றத்தை ப ல வ ந் த மா க க் கொண்டு வர எத்தனிப்பது - நம் முடைய கண்ணை நாமே குத்திக் கொள்வதற்கொப்பாகும். இது வரலாறு தெரியாதவர்களின் சிறு பிள்ளைத் தனமான செய்கையாகும். மாற்றங்கள் - சமுதாயம் என்ற
SSSSS

அகில இலங்கைத் தமிழ்த்தின விழா !
தடவையாகக் கிடைக்கும் கெளரவம்.
அமைப் பிலேயே தோன்றவேண் டும். அப்படித் தோன்றும் போதுபழையது மாறி புதியது அமைவது இயற்கை.
பண்டைய காலத்தில் தோன் றிய எத்தனையோ மொ ழி க ள் இன்று அழிந்தொழிந்துவிட்டன. ஆணுல் - தமிழ் மோழி இன்றும் தன் மரபோடு உருவம் மாரு மல் பசுமையாக இருப்பதற்குக் கார ணம் - அது வளர்த்து வந்த பண் பாடாகும். தமிழ் வளர்த்த நாடு களில் சாம்ராச்சியங்கள் தோன்றி யிருக்கின்றன, அழிந்திருக்கின்றன. ஆணுல், தமிழ் நாகரிகம், பண்பாடு என்றும் அழியாமல் மென்மேலும் வளர்ந்து வந்திருக்கின்றது. சமா தானத்தின் மூலமே இந்தப் பண் பாடு வளர்ந்திருக்கிறது.
போர் க ஞ ம் , யுத் தங் களும், மன்னர்களிடையேதான் ஏற்பட்டிருக்கின்றன. ஆனல், அப் போர் கள் சமுதாயத் தைப் பாதிக்கவில்லை. ஆழ்கடலில் புயல் வீ சின லும், கடலின் அடியில் அமைதி தோ ன் று வது போல, தமிழ்ச் சமுதாயம் அமைதியாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்தச் சமாதானம் எமக்கு இன்று மிகவும்
கிழக்குப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்
ஜனுப், எம். சமீம்
So.
Eb
3.
அவசியமாகும். நம் ஈழ நாட்டு இளம் சந்ததியினர், எதிர்காலத் தில் அறிவில், ஆற் ற லில், ஏறு நடை போட வேண் டு மா கி ல், அவர்களிடையே ச மா த 1ா ன ம் தேவை. இந்தச் சமாதானத்தை இளம் சந்ததியினரிடையே புகுத்த வேண்டியது நம் பொறுப்பு. கல்வி யின் மூலமும், சமாதானத்தையே அடிப்படையாகக் கொண் டு ஸ் ள எமது பண்பாட்டை வளர்ப்பதன் மூலமும்; இந்தச் சமாதானத்தை நிலவச் செய்யலாம்.
ஆகவே தமிழை வளர்ப்பதன் மூலம் தமிழ்ப்பண்பாட்டை வளர்க் கிருேம். தமிழ் ப் பண்பாட் டை வளர்ப்பதன் மூலம் சமாதானம் என்ற பண்பைப் போற்றி வளர்க் கும் சமுதாயத்தை வளர்க்கிருேம். அந்த வளர்ச்சியை ஏற்படுத்து வதில் இத் தமிழ்த் தினவிழா ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் நான் பெரிதும் பூரிப்படைகிறேன்.
வணக்கம்.
HAIG S.

Page 4
தமிழ்த்தினவிழாப் பிரமுகர்கள்
பிரதம கல்வி அதிகாரி ஜனுப். எம். ஷரிப்.
கிழக்கிலங்கையின் நான்கு கல்வி மாவட்டங்களுள் முக்கிய இடம் வகிக்கிறது திருகோணமலை. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நிர்வகிக்கும் இக் கல்வி மாவட்டத்தின் பிரதம கல்வி அதி காரி ஜனுப். எம். ஷரீப் அவர்கள், அமைதியான சுபாவமும் அற்புத மான நிர்வாகத்திறனும் உடைய வர். இவ் வாண்டு தமிழ்த் தின விழாவை திருமலையில் நடாத்த முன்வந்தது ஒன்றே இவரது திற மைக்குத் தக்க சான்ருகும். வழக்க மாக இத்தமிழ்த் தினவிழா கல்விப் பிராந்தியங்களில் ந்  ைட பெற்று
வந்தது. ஆனல் ஒரு கல்வி மாவட் ;
டத்தில் இந்த விழா நடைபெறு வது இதுவே முதல்தடவையாகும். இவ்விழாவைத் திறம்பட ஒழுங்கு செய்த பிரதம கல்வி அதிகாரி ஜனப். ஷரீப் அவர்களுக்குப் பக்க பலமாக நின்று சகல ஏற்பாடுகளை யும் கவனித்த திருமலை ஆசிரியர் களையும், கல்வி அலுவலக உத்தி யோகத்தர்களையும் நாம் நினைவு கூராமல் இருக்கமுடியாது.
ஒலிபரப்பு உதவி அமைச்சர் ஜனுப். ஏ. எல். ஏ. மஜீத்.
ഴികെ இலங்கைத் தமிழ்த்தின விழாவை இரண்டாவது தடவை
4.
யாக கிழக்குமாகாணத்தில் இடம் பெறச் செய்வதற்கும், கெளரவ கல்வி அமைச்சரைக் கொண்டே இவ்விழாவைத் திறந்து வைப்பதற் கும் பின்னணியில் நின்று உழைத்த பிரமுகர்களில் ஒருவர் ஒலிபரப்பு உதவி அமைச்சர் ஜனுப். ஏ. எல். ஏ. மஜீத் அவர் கள். இளமைத் துடிப்பும், சேவை மனப்பான்மை யும் எவருடனும் சகஜமாகப் ԼԱՔ கும் சுபாவமும் கொண்ட ஜனுப் மஜீத் அவர்கள், இந்த விழாவை ஒழுங்கு செய்வ தி லும் பெரும் பங்கு ஏ ற் று ள்ளார் என அறி கிருேம். இவர் ஏற்கனவே, மூதூரி லும், கிண்ணியாவிலும் நடந்த பல
இலக்கிய விழாக்களில் முக்கிய பங்
கேற்றிருந்தார் என்பதும் இச்சந் தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. அவரது தமிழபிமானமும் தளரா உழைப்பும் இத் தமிழ்த்தின விழா வின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது.
R 0 0 0 0 0
காந்தி மொழி - 1
கடவுள்
அன்பே கடவுளாக இருந்தா லும், எல்லாவற்றையும்விட சத்தி யமே க ட வுள் என்றுதான் என் உள்ளத்தின் ஆழத்தில் சொல்லிக் கொண்டு வருகிறேன். கடவுளைக் குறித்த முழு வருணனையையும் மனிதர் வாக்கால் செய்து விட முடியும். கடவுனோ சத்தியம் என் பதே அந்த முழு வர்ணனை கட வுளே சத்தியம் என்பதற்கும், சத் தியமே கடவுள் என்பதற்கும் நுட் பமான வேறுபாடு இருக்கிறது.
0000

வெளியீட்டுக்குழு
இரா. நாகலிங்கம் ஏ. ஜே. மங்களராஜ் எஸ். சேதுகாவலர் மு. கணபதிப்பிள்ளை என். விவேகானந்தன் எம். எஸ். எம். ஹூசைன்
ஆலோசகர்கள் அ. ஸ். அப்துஸ்ஸமது திமிலைத்துமிலன் ரீ. பாக்கியநாயகம் மு. ஹ. சேகுஇஸ்ஸதீன் கு. இராமச்சந்திரன் சிவம்
ஒவியர்கள்
கிருஷ்ணு, ரமணி, செள,
முரளி, ஜனனி, மணி.
அட்டை
மட்டுநகர்க் கோட்டை
சந்தா விபரம் ஆறுமாதம் - ரூ. 3-00 ஒருவருடம் - ரூ. 6-00
விளம்பர விகிதம் அரைப்பக்கம் - ரூ. 50-00 முழுப்பக்கம் - ரூ. 100-00 உள்அட்டை - ரூ. 125-00 பின் அட்டை - ரூ. 150-00
முகவரி மலர் 21, மத்திய வீதி, மட்டக்களப்பு.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்.
Qst:2 săGLui 1971 | Inai: 10
மகரந்த ம்
கருதது:-
வணக்கம் 6 படைப்பிலக்கியம் 7
கதை:-
காரணுகாரியம் , 3. 14 கன்னத்தில் நீ அறைந்தால் 22
பால்காரச் செல்லத்தம்பியார் 31
கடவுள் நீதி -> 39 வீட்டில் நடந்தது 43 தியாகி s 51
கட்டுரை:- -
தமிழ்த்தின விழ 2 தென்னகத்தில் 0. குத்துவிளக்கு 16 கைலாசபதியின் 20 தென்னிலங்கை பேச்சு வழக்கு 28 பெண்பால் 55
கவிதை
அன்பு மனத்திலே வாழ் 9 இறைவனைத் தேடினேன் 18 களித்தோய வேண்டுமடா 19 பிள்ளைகாள் ஓடிவாரீர் 35 வித்தும் விளைவும் 42 இழப்பு 47
பிற:- \
ஜெயகாந்தன் பார்வை 5 மாணவர் சிறுகதைப் போட் 36 விகடமன்னர் ゾ 38 ரசனைக் கடிதம் 48 பூங்கா 52
கதைகள் யாவும் கற்பனை, கட்டுரை, கவிதை களில் உள்ள கருத்துக்கள் அவற்றின் படைப்பாளி களின் சொந்தம், -ஆசிரியர்,
5

Page 5
வணக்கம்
YNSANAKKINNNNNNNNNNNNNNNNNAS
தமிழக சஞ்சிகைகளின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட் டிருந்த சில மாதங்களில் ஈழத்து ஏடுகளின் விற்பனை கூடி யிருந்தது. ஆனல் மீண்டும் அவற்றி ன் இறக்குமதியைத் தொடர்ந்து ஈழத்து ஏடுகளின் விற்பனை வீழ்ச்சியடைந்து விட்டது. இதற்குக் காரணம் ஈழத்து வாசகனின் கவர்ச்சி மோகம்தான்.
இந்தக் கவர்ச்சியை மேற்கொள்வதற்கு எமது இலக்கிய ஏடுகளினுல் முடியாது. ஆகவே ஜனரஞ்சக ஏடுகளைப்போல் விற்பனையாகும் வசதி நமது இலக்கிய ஏடுகளுக்கு இல்லை. ஆனகாரணத்தால், ஆசிரியர்களும், மாணவர்களும், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும், இலக்கிய மன்றங்களும், ஈழத்து இலக்கிய ஏடுகளைப் பெருமளவில் வாங்கி ஆதரிக்க வேண்டும், 'மலர்' உட்பட.
மாணவ உலகம் இதை ஒரு முக்கிய கடமையாகச் செய்ய முன்வர வேண்டும்.
மாணவர்களின் இலக்கிய ஆற்றலை வளர்க்கு முகமாக "மலர்', மாணவ இலக்கிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன் முதற்படியாக மாணவர்களுக் க்ான சிறுகதைப்போட்டி, கவிதைப்போட்டி முதலியவற்றை நடாத்துகிறது. இதுபற்றிய விபரங்களே உள்ளே காணலாம்.
அகில இலங்கைத் தமிழ்த்தினவிழா இவ்வாண்டிலும் கிழக்கு மாகாணத்திலேயே நடைபெறுகிறது. திருகோணமலை இவ்வாண்டு இப்பெருமையைத் தட்டிக்கொள்கிறது. தமிழ்த் தினவிழாப் போட்டிகளில் இடம்பெருத சிறு க  ைத, கவி தைப் போட்டிகளை மாணவர்களுக்காக 'மலர்' நடாத்து வது இத்துறையில் ஈடுபாடுள்ள மாணவமணிகளுக்கு மகிழ்ச் சியளிக்கும் என நம்புகிருேம்.

படைப்பிலக்கியம் பாடத்திட்டத்தில்
இடம்பெற
படித்தவர்கள் படைப்பிலக்கி யத்தில் அக்கரை செலுத்தவில்லை என்பதை யும் படைப்பிலக்கியம் பாடசாலைகளில் உரிய இடத்தைப் பெறவில்லை, என்பதையும் முந்திய ஒரு தலையங்கத்தில் இலேசாகக் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.
வருங்காலத்தில் படித்தவர்கள் சமுதாயத்தை உருவாக்கப் போகி றவர்கள் மாணவர்கள் ஆகையால், படைப்பிலக்கியம் பாடசாலையில் இடம் பெறவேண்டியதன் முக்கி த்துவத்தையிட்டுச் சற்று அழுத் திக் கூறவேண்டியது அவசியமாகி றது. அகில இலங்கைத் தமிழ்த் தின விழா நடைபெறும் இச் சந் தர்ப்பத்தில் இதையிட்டுக் கூறு வது பொருத்தமாக இரு க் கு மென்று நம்புகிருேம்.
நமது பாடசாலைகளில் "தமிழ் பாஷை" ஒரு கட்டாய பாடம். இப்பாடத்தில் கட்டுரை எழுதல், கடிதம் எழுதல், சுருக்கி எழுதல் முதலிய எழுத்துப் பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. ஆனல் இதில் சிறுகதை எழுதுதல், கவிதை எழு துதல், நா ட கம் எழுது த ல் போன்ற விஷயங்கள் ஏனே இடம் பெறுவதில்லை. இந்த விஷயங்கள் இப்பாடத்தைப் பொறுத்த வரை தீண்டத்தகாதவை"யாகக் கருதப் படுகின்றன.
மாணவர்களில் யாராவது இத் துறையில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் ஆசிரியர்க
வேண்டும்.
ளுக்குத் தெரியாமல் ஒளித் து மறைத்து, இவ்விஷயத்தில் ஈ டு படவேண்டியுள்ளது. சிறு க  ைத கவிதை எழுதுவது, படிப்பது முத லியன படிக் கும் பிள்ளைகளுக்கு அழகில்லை என்பது போன்ற ஒரு மனுேபாவம் வகுப்பறையில் நிலவு கிறது. மிகவும் போற்றப்படவேண் டிய ஒரு விசேட திறமை, பாடத் திட்டத்தில் இ ல் லா த காரணத் தால் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. பாராட்டப்படவேண்டிய மா ண வர்கள் ஆசிரியர்களின் கண்டனத் துக்கும் சக மாணவர்களின் கிண் டலுக்கும் ஆளாகிருர்கள். வளர வேண்டிய இலக்கிய ஆற்றல் மழுங் கடிக்கப்படுகிறது. படித்தவர்கள் சமுதாயத்தில் படைப்பிலக்கியத் தைப் பற்றிய அறியாமை வளர்
கிறது.
பாடத்திட்டத்தில் மற்ருெரு முக்கிய பாடம் இலக்கியம். இலக் கியம் என்றவுடன் ஏதோ பழங் 'காலச் சங்கதிகள்தான் அதில் இடம் பெறவேண்டும் என்ற மனுேபாவம், நமது பாடத்திட்டத்தை உருவாக் குபவர்களுக்கு இருந்து வருகிறது. *கும்பகர்ணன் வதைப்படலம்' , *கிருட்டினன் தூது", "ம யா ன காண்டம்", "குசேலோ பாக்கியா னம்”, “திருவிளையாடற் புராணம்’ மற்றும் இன்ஞேரன்ன காண்டங் களும், நீண்ட காலமாக ந ம து இலக்கிய பாடத்தை ஆக்கிரமித் துக் கொண்டிருக்கின்றன. மிகச் சமீப காலமாக 'ம ல ரும் மாலை
7

Page 6
யும்', 'அலையும் கலையும் போன்ற இரண்டொரு நூல்கள் இதற்குள் நுழைந்துள்ளன. ஆன லும் இக் கால ப் படைப்பிலக்கியத்துக்கு இலக்கியப்பாடத்தில் உரிய இடம் கிடைத்துவிட்டதாகச் சொல் ல முடியாது. குறிப்பாக ஈ ழ த் து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உரிய இடம் கிடைக்கவேயில்லை.
ஈழத்து எழுத்தாளர்களிடம் இலக்கியத்தரமான படைப்புகள் இல்லையா? ஈழத்துப் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க் க்ப்படலாம், பிற நாடுகளில் பரி சுகள் பெறலாம். பிற தேசங்களில் பாடப்புத்தகமாக அமையலாம். ஆணுல் ஈழத்துப் பாடசாலைகளில், பாடப்புத்தகமாக இடம் பெறக் கூடாதா? கட்டாயமாக இ ட ம்
பெற வேண்டும்.
ஈழத்தில், படித்தவர்கள் மத்
தியில் ஈழ த் து எழுத்துலகைப்
பற்றி நிலவும், அறியாமையையும்,
அசட்டையையும் ஒரளவுக்காவது
நீ க் க வேண்டுமானல், வளர்ந்து வரும் சமுதாயத்தைப் பிரதிபலிக் கும் படைப்பிலக்கியத்தின் மகத் துவத்தை இ வ. ர் க ள் தெரிந்து கொ ள் ள வேண்டுமானுல் (i) படைப்பிலக்கியத்தைப் பற்றிய முறையான பயிற்சி, (i) ஈழத்துப் படைப்பிலக்கிய கர்த்தாக்களின் தரமான படைப்புகள், பா - த் திட்டத்தில் இடம் பெற வேண் டும்,
பழைய இலக்கியங்கள், இலக் கியப் பாடத்தில் இடம் பெறக் கூடாது என்பது நமது வாத மல்ல. கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் இலக்கியச் செல்வங்களையிட்டு ந ம து மாண வர்கள் தெ ரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆஞ ல் அதற்காக இக்கால இலக்கியத்தைபடைப்பிலக்கியத்தைப் பற்றி த் தெரியாமல் இருப்பது கூடாது என்பதுதான் நமது கருத்து.
குறைந்த பட்சம் 50% இட மாவது ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம் இலக்கிய பாடத்தை நமது நாட் டிற்கு ஏற்றதாக, ந ம து இலக்கி யத்தைக் கட்டியெழுப்பக் கூடிய தாக அமைக்கலாம். மாணவர்கள் நமது நாட்டின் எழுத்தாளர்களைப் ப ற் றித் தெரிந்து கொள்ளவும், ந ம து இலக்கியப் படைப்புகளை விமர்சன க் கண்ணுேட்டத்துடன் அணுகவும், அதன்மூலம் வருங்கா லம், படித்த மக்கள் சமுதாயம ஈழத்து இலக்கிய உலகில் பிடிப்புக் கொள்ளவும், ஈ ழ த் து இலக்கிய உலகின் மேல் அக்கரை காட்டவும், வழி பிறக்கும்.
இப்படிச் செய்வதன் மூலம், நமது ம க் க ளி டையே உள்ள ஜனரஞ்சக வாசகர்களை இலக்கிய வாசகர்களாக மாற்றலாம். நமது மக்களிடமுள்ள வாசிக்கும் பழக்கம் நல்லிலக்கியத்தின் பால் திருப்பப் படும். ஜனரஞ்சக ஏடுகளின் பூதா கார வளர்ச்சிகட்டுப்படுத்தப்பட்டு, இலக்கிய ஏடுகளின் வளர்ச்சி ஏற் படும்.
அரசாங்கம் நாட்டின் தேவை ;
களுக்கேற்ப கல்வித் திட்டத்தை மாற்றியமைக்கும் முயற் சிகளை மேற்கொண்டுள்ளது. பு தி ய கல் வித் திட்டத்தில் படைப்பிலக்கி யத்துக்கு உரிய இ . ம் அளிப்ப தற்கு இதுவே ஏற்ற தருணம்.
இக்திட்டத்தில் முக்கியமாகக் கருத்டு. கொள்ளவேண்டிய விஷ யம் ஒன்றுள்ளது. அதா வ து, பாடத்திட்டம் என்பது மாணவர் களை மனிதர்களாக ஒரு தர்ம நெறி. இதில் அரசிய யோ, பக்கச்சார்வான விடயங் களையோ புகுத்து வது தர்மமா காது. நேர்மையுடனும், நடுநிலை மை யு டனும், சத்தியத்துடனும் இதில் ஈடுபடவேண்டும் பாடத் தி ட் டத் தி ல் படைப்பிலக்கியத் தைப் புகுத்துபவர்கள் இ  ைத மறந்து விடக்கூடாது.
உருவாக்கும்

அன்பு மனத்திலே வாழ்!
குமார இராமநாதன்
பாரதீ! நீயும் பாடி மறைந்து ஆண்டுகள் பற்பல ஒடி மறைந்தன; நீண்ட கனவுகள் நெஞ்சத் திருத்தி மாண்டே விட்டாய்!
- ஆமா (ம்) அவற்றுள் உன்றன் உள்ளம் உண்மையில் விழைந்த உயர்ந்த கனவுகள்
- எத்தனை எத்தனை!! தமிழன் இந்தத் தரணியில் வாழ; உயர்வு தாழ்வு பேதம் நீங்க நீ பாடிய கவிதைகள் பற்பல -
- அவற்றை அச்சி லிட்டும் அழகுகள் செய்தும் மெச்சு கின்ருர் மேதினி யுள்ளார்!
- ஆனல் ஒன்று! நெஞ்சில் அவற்றை நிறுத்தி யுன்றன் நினைவைப் போற்றும் பாரே உள்ளார்! எல்லாம் வேடம்!!
'ஜாதி மதங்களைப் பாரோம்-இங்கு ஜன்ம மெடுத்தவர் ஒன்றே" என, ஒதி மறைந்து விட்டாயே- இங்கு உற்றதை நீயறி வாயா? தெய்வம் பொது வென்ருய்
* அதைத்* தேடி அலைகின்ருர்; தெய்வத் திருக் கோயில் - இங்கு தீண்டா தோர்க்" கில்லை.
3-9-71 பாரதி நினைவு இனம்.
தமிழை வளரென்று - நீ சாடிய பாக்களெல்லாம் எருமை முதுகினிலே - மழை என்னுங் கதையாச்சே! புன்மதி யாளருக்கே - அடபாரதி! போதித் திளைத்து நின்ருய். "உண்மை" எடுத்துரைத்தே - நீ ஊனின்றி(த்) துன்ப முற்ருய். செவிடன் காதினிலே - சங்கூதி
- அட பாரதி நீ செத்து மடிந்து விட்டாய்! வருடந் தவருமல் - உனக்கு மாபெரும் விழாவெடுப்பு! சுதந்திர வித்தூன்றி, சுதந்திர நீரூற்றி, பயனைக் காணுது, பாடி மறைந்திட்ட, உன்னைப் புரிந்து கொண்டோ ஊதுகின்ருர் 'தமிழ்ச் சங்கம்” ஐயோ பாரதி!
உனக்கு . . . . . 'பொய்யர்” எடுக்கின்ற ஆயிரம் விழாக்கள் வேண்டாம்
நீயொரு
'அன்பு மனத்திலே” வாழ்!
ரசனைக் கடிதம்
'மலர்' சஞ்சிகையில் நீங்கள் ரசித்துச் சுவைத்த படைப்பு எது? பூள்ஸ்காப்’ காகிதத்தில் ஒரு பக்க த் திற்கு மேற்படாமல் எழுதி அனுப்புங்கள். சிறந்த ரச னைக் கடிதத்திற்கு ஈழத்து நூல் அன்பளிப்புச் சய் யப்படும்.

Page 7
:
ஆ
پېيمREی
O
膳
YA
ခြုဝံ့ဝံ့ဝံ့ဝံ့ဝံ့ဝံ့ဝံ့ဝံ့ဝံ့ဝံ့ခံ့ငြာခဲ့ပြီ
பழநிப்பத் | 1 = }
Hi, 蔷 της δή வரை திண்டுக்க: சாத்துநின்று பழநி வண் டியில் ஏறினுேம் பழநி, வண்டியில் தாங்கள் பேசிய தமிழைச் செவி மடுத்த ஒரு ஆன் பர்
யாழ்ப்பான் த்தவர்
என்ரன் சுத்துடன் உரை யாற்றத்தொடங்கிஞர் பின்னர் நமது தென்னிந் நிய'யாத்திரைக்கு நீத வியாகச் சில வழிக்குறிப் புக்களேயும் தந்துதவிஞர் அவருடைய குறிப்புக் களே ஏற்றுக்கொண்டு பழநிக்குச் சென்ருேம் நாம் பழநியில் இறங்கு வதற்குப் பதினேந்து நிமி டங்கள் முன்னதாக அப் பதியில் தங்க ரதத்தில் ஆண்டர் நவாவதி திருந்தார். மிகவும் EMIGA LEGGETT FÄNGrif?) Lro டுமே இந்த தங்க ரதம் வெளியில் எடுக்கப்படு மாம். துத்தரிசனம் நமக்கு கிட்ைக்கவில்.ே
 
 
 
 
 
 
 
 

பழநியில் தசத்திரத்திலேயே தங்கிக்கொள்போம். மறுநாள் :
அதிகாலே எழுந்துஸ்நான்செய்து இ :e: புறப்பட்டோம் பழநி, பின் மறுபெயர்திருவாவிநன்குடி தங்கத்தினுலான் மூலஸ்தான்த்தில் முருகன் ஆண்டித்திருக்ே காலத்தில் எழுந்தருளியுள்ளான் மற்றும் மே பில்" விநாயகர் இடும் பர் திஷ்டை செய்யப்பட்டுள் ான்ர் வழி நெடுகிலும் படிகளா ஒான புதிப் பாதை அதை விடுத்து பழைய பாதையை நாம் தேர்ந் தெடுத்துச் சென்ருேம்
பாதையின் ஒரு பக்கம் மலுச் சாதவ்,அங்கே முருகன் திருவிளே பாடல்கள் ஒவ்வொன்றும் சிற்பு வடிவில் எம்ம்ை வரவேற்றன. இக் காட்சிகள் நமக்கு அதிகம் களப்புத் தெரியவிடாமல் வழிநடத்தின. 蓋牆劃雕蓋制
அபிஷேகங்கள் முடித்துக் கொண்டு 10-30 மண்சியளவில் அடி வாரம் திரும்பி விட்டோம் ஆ படை விடுகளில் ஒன் ருகிய பழநியில் எம்து தரிசனத்தை முடித் துக்கொண்டு குருவா பூர் செல்வ பெட்டி படுக்கையுடன் பஸ் நிஃபத்தை அடைந் தோம், 12 மணிவரை
T
FH
վիքիի
Gürreirajñānī'ā 败
வ ரே டிஸ்' "
எதிர் நோக்கிய மாதிரி
ಛೀ... ချွံခြုံငုံခြုံငုံခဲ့ပြီ 米※米 ချွံချွိမွီရွှဲ
11.
'திருச்சூர்' வண்டி

Page 8
DucloucouloudQu வாசகர் கருத்தரங்கு
சாதாரண வாசகனை இலக்கிய வாசகனுக
மாற்றுவதற்கு வழி என்ன?
கட்டுரைகள் 'பூஸ் ஸ்கா ப்' காகிதத்தில் ஒரு பக்கத்திற்கு மேற் படக்கூடாது. பிரசுரமாகும் ஒவ் வொரு கட்டுரைக்கும் ஈழத்துநூல் அன்பளிப்புச் செய்யப்படும். முடிவு திகதி 31-10-71. கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி:
வாசகர் கருத்தரங்கு,
(Bolu r. ““ osvíř*"
21, மத்திய வீதி, மட்டக்களப்பு. (கருத்து உதவியவா ‘வேதாந்தி') DOHOHOHDOHCimramom
. உடனே பிரம்புக் கூடைக்குள் பதுங் கி யிருந்த பிஸ்கட் பெட்டி வெளி வந்தது. வசந்தி உடைத் துப் பரிமாற அது எல்லோரது வயிற்றையும் நிறைத்தது.
ஒடி க் கொண்டிருந்த வண்டி யிலே "கடார்" என்று ஒரு சத் தம், உடனே வண்டி ஓரத்தில் ஒதுங் கிக் கொண்டது. டிரைவர் பரபரப் பாக இறங்கினர். பழுது பார்க்க தாங்களும் பரபரப்பாக இறங்கி ஒடிளுேம். பழுது பார்க்க அல்ல. பசியைப்போக்க. அருகில் தெரிந்த ஒரு கீற்றுக் கொட்டகை எம்மை வரவேற்றது. ஒரு கிளாஸ் பசும் பால் அருந்தி பசியைத் தீர்த்துக் கொண்டு வண்டி ஏறினேம்.
குருவாயூர் எமது பிரயாணம் மலைப் பிர தேசத்தினூடாகத் தொடர்ந்து
சென்றது. மலைச்சரிவுகளிலே ரப்பர் தோட்டங்களும் பசிய வயல்களும் கரும்புச் சோலைகளும் தென்னந் தோப்புகளும் அழகான இயற்கை வளம் நிறைந்து ம&ளயாள தேசத் தின் செழிப்பை எடுத்துக் கூறின. 6.30 மணிக்கு திருச்சூர் நிலையத் தில் எமது மலையாளி டிரைவரே "அதோ குருவாயூர் வண்டி ஏறிக் கொள்ளுங்க!" என்று வழி காட்டி ஞர். நாம் சந்தித்த நல்ல மனிதர் களில் அவரும் ஒரு வர் என்பது குறிப்பிடத் தகுந்தது. அடுத்த வண்டி எங்களைக் குருவாயூரில் 7-30 மணிக்குக் கொண்டுபோய் சேர்த் தது. மொழி வேறுபட்ட மாநிலம் அது. எப்படியோ சென்று விட் டோம். ந க் ஸ ல் பாரி க ளின் கலாட்டா வேறு அந்த ஆட்சியில் நடைபெற்று வந்தது. இரவு நேரம் தயங்கித் தயங்கி சத்திரத்தில் இடம் விசாரித்தோம். இடமில்லை என்றவர்கள் 'சிலோன்” ஆட்கள் என்று தெரிந்த பின் அறை ஒன்று கொடுத்தார்கள். பெண்கள் அறை யிலும் ஆண்கள் வெளியேயும் படுத் து ற ங் கி ைே ம். அதிகாலை 2-30 மணிக்கு எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு 3 மணி உதய காலப் பூஜைக்குச் சென்ருேம்.
ஆலயத்தில் ச ன க் கூ ட் டம் என்று சொல்ல முடியவில்லை. மக் கள் வெள்ளம் என்றே சொல்லத் தோன்றியது. எங்கும் உரத்த குர லில் " சுவா மியே! ஐயப்பா! ஐயப்பா! சுவாமியே’’ என்ற பக்த கோஷம் காதைப்பிளந்தது. எல் லாம் கறுப்பு மயம் என்று நான் சொன்னல் வாசகர்கள் நம்பமாட் டார்கள், வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் அத்தனை பேரும் கறுப்பு வேட்டி, பெண்கள் கறுப்புச்சேலை அணிந்திருந்தார்கள். இது வும் ஊருக்குப் புதியவர்களான எங்க ளுக்கு பக்தியுடன் கூடிய ஒரு அச் சத்தைத் தோற்றுவித்தது. இங்கு உதய தரிசனத்தில் மூர்த்தி மிகச் சிறிய பால சொரூபத்தில் காட்சி தருவதாம். மதிய பூஜைக்கு விஸ்வ
2

சொரூப தரிசனமாம். எத்துணை அற் புத தரிசனம். இத்தலத்தில் உள் மண்டபத்திற்கு ஒரு குறுகலான பாதையில் பக்தர்களோடும் இரு ளோடும் அடிபட்டு, மூச்சுத் திண றப்பின் தொடர்ந்து ஒரே ஒரு
வினடிகால தரிசனத்தின் பின் மக்
கள் வெள்ளத்தில் அலைப்புண்டு பிரகாரத்திற்கு வந்து சேர்ந்தோம். பிரகாரத்தில் 'கேசவன்' என்ற கோயில் யானையில் சுவாமி உலா வையும் கண்டு களித்தோம்.
இத்துணை நெருக்கடிக்கிடையி லும் சில பெண்களும், பிராமணர் களும் வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு தலைக்கு மேலே குடை போன்ற ஒலையால் நெருக்கப்பட்ட தட்டொன்றைப் பிடித்துக் கொண்டு கோயிலுக்குள்ளே சென்று வந்தார் கள். இவர்கள் யார்? என்ற எண் ஓணம் தோன் றிய வுடன் அருகில் நின்ற ஒருவரிடம் விசாரித்தோம். அவர் ** அவர் கள் ஜாதியிலே டியர்ந்த நம்பூதிரி ஜாதியாராம். அவர்கள் ரொம்ப ஐதீகமானவர் கிளாம். மற்ற வர் கள் தங்களை இனம் கண்டு வழிவிலக்கவே குடைப் பிடித்துக் கொண்டு வீ ட் டி ற் கு வெளியே போவார்களாம்.' விளக்கினர். ஆச் ச ரி யத் துடன் செய்தியை அறிந்து கொண்டு புறப்பட்டோம்.
தமிழ் நாட்டுக் கோயில் கலை மாதிரி இங்கு கோபுர அமைப்புக் கிடையாது. பெளத்த, யப்பானிய அமைப்பிலே, எமது கண்டி தலதா மாளிகை ரூபத்தில் கூரை தாழ் வாக உட்புறம் அமைந்திருந்தது. கோயில் பிரகாரம் என்று சொல் லப்பட்டது சட்ட விளக்குகளும் தூண்டாவிளக்குகளும் நிறைந்தது. அங்கு மொத்தமாக லட்சம் விளக்
குகள் உண்டு என்ருர்கள் விசேட தினங்களில் அவை எல்லாம் ஏற்
றப்படுமாம். இத்தனை தல விசே டங்களையும் காணத்துரண்டி வழி காட்டிய பாலகிருஷ்ணனை மன காரப் போற்றிவிட்டு திருச்சூர் பஸ் எடுத்தோம்.
13
என்று
திருச்சூரில் எமது மதிய போச னத்தை முடித்துவிட்டு 2-30 மணி யளவில் புகைவண்டியில் எர்ணு குளம் புகையிரதச் சந்திக்கு பயண மானுேம், வண்டியில் ஏறியதும் தூக் கம் நம்மைப் பிடித்துக் கொண்டது. எர்ணு குளத்தை அடைந்த தும் வண்டியை விட்டு இற ங் கி க் கொண்டு பெட்டி படுக் கைகளை ஆண் களின் பொறுப்பில் விட்டு விட்டு பற்களைச் சுத்தம் செய்து முகம் கை கால்களை நன்ருக சோர்வு நீங்கக் கழுவிக் கொண்டோம் பின் னர் என் கணவரும் வசந்தியின் அப்பாவும் முகத்தை அலம்பிக் கொண்டார்கள். அங்கேயே பிர யாணிகள் தங்குமிடத்தில் உடை ாலங்காரம் தவிர்ந்த ஏனைய அலங் காரங்கள் ஒருபடியாக ஒப்பேறி யக. திருவானந்தபுரம் வண்டியை
எதிர்நோக்கியிருந்தோம்.
(தொடரும்)
OCOOOOO
இலக்கியத்தில்
*செக்ளின் பங்கு எழுத்தாளனுக்குச் சமுதாயத் தை உருவாக்குவதில் ஒரு பொ றுப்பு இருக்கிறது என்று எண்ணு கிறேன். அவனது படைப்புக்கள் எல்லாம் சமுதா யத் தை மேல் நிலைக்கு உயர்த்துவதற்குத் துணை செ ய் யக் கூ டி ய வை க ளா கவே அமையவேண்டும். இந்நிலை யில் "செக்ஸ் பற்றி எ மு த ப் புகும் போது, அதை எழுதுபவருக்கு அவ் விஷயத்தைப்பற்றிய தெளிவான ஞானம் வேண்டும். ஏனெனில் இது நூல் பாலத்தில் நடப்பதோடு ஒத் தது. இலை மறைவு - காய் மறை வாகச் சொல்லவேண்டியவைகளை அவ்வாறே கூறவேண்டியது அவசி யம்தான். எனவே இதற்கு ஒரு வரையறை அமைவது அவசியமே. -திருமதி ராஜம் கிருஷ்ணன் (நன்றி: "தீபம்’ ஜூலை, 71)
OOOOOOO

Page 9
I
瀬 リ:リー、:リ:
ཕྱི་ཕྱོན་ காரணு
S2
žRS
X
சீதா தெய்வ அனுஷ்டானங் களில் மூழ்கிக் கிடக்கும் அவ ன் ஜீவனனத்தையும் தனதா கவே நேசித்தான். வாழ வழியற்று-நாதி யற்று பாலையாய் வரண்ட வாழ் வினையுடையோரின் கண்ணிரைச் சகியாதது போல் 'இதோ எ ன் தர்ம வாயில் திறந்து கிடக்கிறது வாருங்கள்’ என்று வாரி வழங்கிய பாரியாய் நின்ற போது இதரர்க ளின் அமானுஷப் பிறவியென்ற புகழ்ச்சியில் அவன் கொடி கட்டிப் பறந்தான்.
ஒய்வொழிச் சலின்றி அலு அணுவான காரியங்களிலெல்லாம் தன் பார்வை படியவேண்டுமென்ற நிர்ப்பந்த சூழ லில் இ யங் கி க் கொண்டிருக்கும் கடவுளுக்கு அன் றும் அந்த ம னி த னி ன் நினைவு ராகங்கள் நெஞ்சில் எழுந்தன. எப் படியாவது அவனை ஸ்பஷ்டத்தில் சந்திக்க வேண்டுமென்ற எண் ணத்தில் வயோ தி ப வேடம் பூண்டு, பூலோகப் பி ர வே ச ம் செய்து அவனைக் கண்ட வேளை, அவனே சமாதி நிலையுற்ற ஏகாந் தத்தில் உள்ளரங்க தெய்வ அர்ச் சனை நிகழ்த் தி க் கொண்டிருந்த தால், புற லோ க சஞ்சாரமற்று எங்கோ தன் இ னி ய பீடத்தில் லயித்திருந்தான்.
அவனை மிக ஆதூரத்துடன் அண்டிய கடவுள், "அப்பனே, என்
Kes
ချွံချွံချွံချွံချွံခြုံငုံခြုစ္ဆိဒ္ဓိ
காரியம் تھی انتہائی
žlŠzilszlNZNZlSzRSN ::●::○::●ー:★
னுடன் சற்றுப் பேசிக்கொள்ளச் ச ம் ம தி க் கி ழு யா?’ என்ருர், அவனே மோனத்தில் சூழ் ந் து போனதால் மெளனியாய் இருந் தான். எந்த சலனமும் அவனில் நிகழவில்லை.
* உன்னைத்தானப்பா கேட்கி றேன்' எ ன மீண் டு ம் கடவுள் குரல் கொடுத்ததில் அவன் தடு மாறிப் போய் த ன் னு ல கு க்கு மீண்டான்.
கிழமாயிருந்த கடவுளின் தரி சஞர்த்தம் புரியாத அவன் பார் வையில் கேள்விக் குறிகள் அ லை மோத, ஏதோ ஒரு தனக்குப் பழ கிப் போன நிலைமையாய் உணர்ந்து * பெரியவரே, இப் படி யா ன தியான சந்தர்ப்பங்களில் வ ரு வ தைத் தவிர்த்துக் கொள்ள வேண் டும். ம். பரவாயில்லை. எதாவது. உதவியா? அவன் கண்களில் எவ் வளவு ஆவலும் கனிவும். அவன் அருள் மயமாக ஜொலித்தான்.
* கடவுளாகிய நான் வாழ்வில் நசிந்து போன கோடானு கோடி மாந்தரின் வேண்டுதல்கட்குப் பாரா முகம் செய்யும் போது என் அரு ளெனும் அன்பூம்றின் ஒரு துளி யாகிய இவன் என்னையே விஞ்சி விட்டானே. எனக்கும் இவனுக்கு மாகிய சக்தி விகிதத்தில் இவனே என்னைவிட அருளாளன்' எ ன் ற நிச்சயச் சுடர் அவரின் மனத்தைத் தகித் துக் கொண்டிருந்தது.
14
 

'உதவி கோரி நான் வர வில்லை. உன் மீதுள்ள அபிமானத் தில்" உன்னைப் பார்த்துப் போகவே ; வந்தேன்’ என்ருர் கடவுள்.
‘என்னை உங்களுக்குத் தெரி
uyud IT?”
*உன் புனித நாமமொலிக்காத ஊருண்டோ உலகுண்டோ, அது வும். போய். என்னிடமா இக் கேள்வி. போகட்டும். மனிதர்க ளின் அல்ப உணர்வுகளைத் தாண்டி அசாதாரண மானிஷத்துவத்தில் ச த் தி யம் வழு வா வாழ்க்கை நடாத்துகிருயே, எல்லாம் எமைக் காக்கும் ஏகனுக்காகத்தானே? ' கடவுள் பார்வையில் பெருமையின் களிப்பு.
'சே! இது என்ன பெரிய முட் டாள் தனம் ? ஆண்டவனுக்காக என்னை இத்தனை தூரம் வருத்திக் கொள்ள அப்படி என்ன எனக்குப் புத்தி மழுங்கி விட்டதா? நரகப் பயமல்லவா இத்தனை தூரம் இறை வழி வி ல் துரத்துகிறது' அவன் கண்களில் தொனிக்கின்ற அலட்சி யத்தின் கரு கடவுளா?
"அப்படியாயின் சுவர் க் க, நரக பூமிகளின் ஜனிப்பு ஏற்பட் டிருக்காவிடின் உன் அதீத - அபரி மிதமான தெய்வாராதனைகளும் நெறி பிறழா வாழ்க்கையும் உன் னில் ஏற்பட்டிருக்காதா?’ கடவு ளின் குரலில் தொண்டை அடைத்த மாதிரி. அதனுள்ளே ஏ க்க மு ம் கரகரப்பும்.
"அதிலும் சந்தேகமா? நிச்சய மாக நரகப்ப்யந்தான். என் காரி யங்களின் காரணுவூற்றின் தாத்ப ரியமே இதுதான்' அவன் வார்த் தைகளின் வக்ரத்தொனிப்பில் கட வுள் அச ந் து போய், துயரமும், ஏமாற்றமும் நெஞ்சில் அடையாக அப்பிக்கிடக்க, அங்கிருந்து மறைந்
தார். 蓉
KODHEDSOEDD ORDIKOJEDI
ஜெயகாந்தன்
TT606)
வாழ்க்கையில் ஒரு வ  ைர ப் பற்றி ஒருவர் த ங் களு க் குத் தெரிந்த ஒரு கோணத்தில் இருந்து ஒரு பாகத்தை மட்டும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து அதுவே
முழுமையான முடிவு என்று சாதிப் பது தவருனதொன்ரு கும்.
梁 兹 பேச்சுத்தான் மனிதனின் பல வீனம். அது எந்த அளவு பலவி னமானதோ அந்த அளவு அதுவே அவனுக்குப் பலமிக்க ஆயுதமுமா கும்.
※ ※
வாழ்க்கை எப்போதும் மந்த மாக இருப்பதில்லை. மனிதன்தான் சில பிராயங்களில் மந்தமானவ ஞக இருந்து விடுகிறன்.
兹 姿 蓉 ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இதயத் தில் அவளுடன் விபசாரம்"செப் தவனுகிாழன்.
类 ※ 姿 ਗਟੈਰ மூடிடும் போது மட் டும் இருட்டாக இருப்பதில்லை. இருட்டில் கண்ணைத் திறக் கும் போதும் இருட்டாக இருக்கும்.
奖 兹 桑
ஒரு நியாயத்தின் அடிப்படை யில்தான் நிர்ப்பந்தங்கள் ஏற்படு கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிடங்கள் அழிந்து போனலும் அதன் நியாயங்கள் நிலை த் தே விடுகின்றன.
(தொகுப்பு: ச. ஏ. பிரதாபர்1
OEDOKOKO-o-daDiDiDina
15

Page 10
யதார்த்தரீதியான ஒரு திரைப்படம்
"குத்துவிளக்கு"
ஆ. த. சித்திரவேல்,
“F
ழ த்திற் கென ஒரு கலை யுண்டு. தனிக்கலாச்சாரமுண்டு, அதை வளர்க்க எமது உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப் பணம் செய்யத் தயங்கக்கூடாது’ என்று மேடைகளில் வாய்கிழியக் கத்துவார்கள். பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுவார்கள். கட் டுரைகள் எழுதுவார்கள். பேட்டி யளிப்பார்கள். ஆனல், அவர்களி டம் அணுகி, ""நான் ஒரு திரைப்
படம் எடுக்கப்போகிறேன். உங்கள்
ஆதரவு தேவை' என்று சொல்லிப் பாருங்கள். "ஏனய்யா உனக்கு இந்தக் கெடுபுத்தி வந்தது. சும்மா பணத்தைச் செ ல வ பூழி க் கா ம ல் இருக்க முடியவில்லையா?" என்று தான் நிச்சயம் சொல்வார்கள்.
அந்த அளவில்தான் ஈழத்தில்
திரைப் படத் துறையில் காலடி வைப்பவர்களுக்கு வர வே ற் புக் கொடுக்கிருர்கள் எம் ஈழத்தவர் கள். இவற்றையெல்லாம் கண் ணுலே கண்டும், காதாலே கேட் டும் கூட ஒருவர் திரைப்படம் எடுக் கும் அபாயகரமான தொழிலில் ஈடுபட முன்வந்துள்ளாரென்ருல் அவர் ஒரு தியாகியாகத்தானிருக்க வேண்டும்.
அவர் வேறுயாருமல்ல. "குத்து விளக்கு திரை ப் படத் தயாரிப் பாளர் திரு. துரைராஜாவேதான்.
'குத்துவிளக்கு முழுக்க முழுக்க
கிராமியச் சூழலை  ைம ய மாக க்
கொண்டு எடுக்கப்பட்ட படமென் பது பலவழிகளில் துல்லியமாகத் தெரிகிறது. கதையோட்டம் யாழ்ப் பாணத்தில் நிகழ்கிறது. யாழ்ப் பாண மக்களின் சாதாரண பேச்சு வழக்கைக் குத்துவிளக்கில் கேட்க of
எந்தெந்தப் பிராந்தியத்தில் கதையோட்டம் நிகழ்கிறதோ அந் தந்தப் பிராந்தியத்தின் பேச்சு வழக்குத்தான் கதையில் கையாளப் படவேண்டும். அது தவிர யாழ்ப் பாணத்தில் வாழும் கதாபாத்திரம் தென்னிந்தியத் தமிழையும் மலை நாட்டில் வாழும் கதாபாத்திரம் மட்டக்களப்புத் தமிழையும், மட் டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத் தமிழையும் திரை யில் பேசில்ை அதில் ஒரு செயற் கைத் தன்மையை அன்றி, யதார்த் தத்தைக் காணமுடியாது. இதைத் திரைப்படத் தயாரிப்பாளர்களான லும் சரி. நாடகத் தயாரிப்பாளர் களானலும் சரி கவனத்திற்கு எடுத் துக்கொள்ளவேண்டும்.
பாத்திரத் தன் மை க் கும் மொழிக்கும் எவ்வளவு சம்பந்த மிருக்கவேண்டுமோ அவ்வளவு சம் பந்தம் பாத்திரத்திற்கும் உடைக் கும் இருக்கவேண்டும். V−
16

சில தென்னிந்தியத் திரைப் படங்களில் கிராமத்து வாலிபன் - அது வும் கமக்காரன் - வெள்ளை வேட்டியுடன் ஈவினிங் சேர்ட் அணிந்து வயலுக்குச் சென்று களை பிடுங்குகிருன், வயலில் இருந்து கரையை அடையும்போது அவன் கைகளில் பட்டிருந்த சேற்று மண
லையோ ஈரத்தையோ காணமுடி
யாது. ஆடையிலும் சிறிதுகூட
அழுக்கும் ஏற்படாது.
தென்னிந்தியாவில் ஒருசில முத்
திரை பொறிக்கப்ப்ட்ட நடிகர்கள் நடித்த படங்களைத்தவிர மற்றைய படங்கள் எத்தனை நாட்களுக்கு ஒடுகிறது? அண்மை யில் வெளி யாகிய “ துலா பாரம் " இதற்கு உதாரணமாகும். "துலாபாரம்’ ஒரு நிறைவான படம் என்பது எனது முடிவு. அப்படத்தில் வறுமையின் கோரத்தனத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறர்கள். மாடமாளிகை களையும், ஆபாச நடனங்களையும் காணமுடியாத ரசிகப் பெருமக்கள் அந்தப் படத் தி ற் கு ஆதரவு கொடுக்கவில்லை. இந்த இடத்தில், மேல்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்ன வாக்கியம்தான் நினை வுக்கு வருகிறது. ** யதார்த்தமான கலை சிறு பான் மை க் கலையாக இருந்துவிடட்டும் என்ருர், அதே போல ஈழத்தின் திரைப்படக் கலை பும் சிறு பா ன் மை க் கலையாக
ருந்து தரமான படைப்பாக
ருக்கட்டுமென்று வேண்டுகிறேன்.
ஈழத்தில் இதுவரை எடுக்கப் பட்ட படங்களின் தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்
657.
1. ஈழத்து வாழ்க்கையைத் தத் ரூபமாக சித் திரி ப் பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
2. யாழ்ப்பாணப் பேச்சுவழக் கும், தென்னிந்தியத் திரைப்
OOOOOOOOOOOOOOOOOOOOOOO
ஒற்றுை
பினிதன் விண்வெளியில் பறக் கவும் சந்திரமண்டலத்தை அடை யவும் கற்றுக்கொண்டே இருக்கி முன். ஆனல் தான் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை. இந்த அள வில் மனிதன் மிகவும் கீழ் நிலையில் தான் இருக்கிறன் எ ன் று கருத வேண்டியிருக்கிறது.
மனிதனல் மிக அற்பமானது என்று கருதப்படுகின்ற தேங்காய் நார்த் தும்பு சேர்ந்து வாழக் கற் றுக் கொடுக்கிறது. பல தும்புகள் சேர்ந்து இழைகளாகி, மூன்று இழைகள் சேர்ந்து சிறு கயிருகி, அது மூன்று சேர்ந்து பந்தற் கயி முகி, அது மூன்று சேர்த்து நீர்
இறைக்கும் துலாக் கயிருகி, அது
மூன்று சேர்ந்து தேர் இழுக்கும்
வடக் கயிறகித்தானே தேங்காயை
உடைக்கும் அளவு க் கு வெற்றி பெற்றிருக்கிறது.
மிக அற்பமான இத் தும்பினி டத்திலிருந்து சேர்ந்து வாழு ம் அறிவை மனிதன் பெறலாகாதா? பெற்றல் அவ ன் வாழ்வு சிறக் காதா?
DD8D8DDDDEDDDDD;" |
17

Page 11
கும் கலந்து பிரயோ
■。 LJLT LEs ri. @ リ 3. செல்வாக்குப் படைத்த
படப் பாணிப் பேச்சு வழக்
“ சிலர் தமது பணத்தைச் கொடுத்து நடிக்க முயன்றது ரசிகர்களின் தாழ்வுச் சிக் EE ால், தென்னிந்திய நட்சத்
திரங்களே மனதில் வைத்துக் ଜିଘାଂ 嵩 கொண்டு ஈழத்துத் திரைப்
: படங்கள்ே இரண்ட்போடுவது
莒
தேசிய உணர்ச்சியின்மை
இந்தியப்படங்களே 100 நாட்களுக்கு மேல் ஒட்டி நல்லது ஒட்வைத்து வெற்றி விழாக் கொண்டாடும் பட முதலாளிமார் ஈழத்துத் தமிழ்ப்படங்களுக்கு ஆதரவு கொடுக்காமை 7 முறையற்ற நடிக நீடிவிசி
பார் தேர்வு
கடுஇநீ
வஞ்தி இன்ஜ்ஜிரித்தில் இவை எல்லாவற்றிற்கும்
T
மேலாக இன்னுமொரு காரணமும் இருக்கிறது. ஒருமுறை திரைப் பட்ம் எடுக்கும் தயாரிப்பாளர் டைரக்டர் நடிக நடிகையர்கள் மீண்டும் திரைப்படமெடுக்கத் துணி யாதது, 'அனுபவம் மிக்கவர்கள் மீண்டும் படமெடுக்கும் போது நெளிவுகழிவுகளைப் புரிந்துகொள்ள் வாம் அல்லவா?
குத்துவிள்க்கைப் பொறுத்தி வரையில் நடிகர்கள் யாவும் தெரிந் தெடுத்தநன் முத்துக்களே. இவர் கள் கஃபார்வத்தால் உந்தப்பட்ட வர்கள் என்பதற்குப் பவ சான்று
தி கள் உள்ளன. நடனக் கலையில்
தேர்ச்சி பெற்றவர்கள் மேனிட் ஒரும்விழியில் நாடகங்களில் நடித்துப் பழக்கப் التي لا : : ୋ{ பிட்டவர்கள் ஓரிருவர் சினிமாப் ခြု႔ညှိုနှံ့ է եվ: படங்களில் நடித்துப் பண்பட்டவர் இத்தே வாழ் கள். இவற்றை எல்லாம் கூட்டு
மொத்தமாகப் பார்க்கப்போனுல் குத்துவிளக்கு ஈழத்துத்திரைப்படி "1உலகுக்கோர் ஒளிவிளக்கு ஆகும் **-_ TGRT Garrıfı.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சட்டையின் பாணி சரியில்லே என்றவுடன் பெட்டிக்குள் போட்டுப் பிறிதொன்று வாங்குகிருேம் சட்டங்கள் சுடச் சமூகநிரேக் கொவ்வாதேஸ் விட்டுப் புதிதாய் விதித்தும் விடுகின்ருேம் ஆட்சி அமைப்பும் அன்று தொட்டு வெவ்வேறுப் காட்சியளித்துக் கழிகிறதே ஆண்டவனே!
அடிநாள் மனிதன் அனுசரித்த கொள்கைகளும் அடடா இதற்குள் ஆயிரங்கால் மாறின்வே காலந் தமக்கும் காலத்தின் தேவைக்கும் சாலப் பொருந்தச் சகலமுமே மாறிவந்தும் இயலாதே அப்பா இனிவாழல் எப்படித்தான் செயலாற் நிடினும் சிதையுலகை ம்ேல்ழோய் மாற்றி விடினும் மனிதன்போல் வாழ்வில்லே சோற்றுக்குப் பஞ்சம் தொலேயும் வழியில்ல்ே மனிதன் புரியும் மாற்றமினிப்போத்ாது ஆகவே எம்மை அமைப்பவனே ஆண்டவனே மாற்றிப் படைக்கும் மாண்புமிகு வேலேயின் ஏற்றருள வேண்டும் இனிமேல் மனிதருக்குப் பதிக்காத இன்பம் பரிந்தளிக்க வேண்டுகிருேம் பசிக்காத கொஞ்சப் பணக்காரர் ஏற்க வரார் பாரெங்கும் பங்கும் பஞ்சைக்குலங்களெனில் ஈரங் கொள் நெஞ்சோப் ஏத்திவர வேற்றிடுவர்
,
அப்பா'இறைவா அநியாயப் பேய்ப்பசியை ஏற்ற வயிறே இடிந்தாலும் சம்மதமே!
ஆவாய்ப் பறக்கும் அணுக்கட்ட மானிடவர் கர்லெறிந்து வீழ்ந்து களித்தோய வேண்டுமடா!
J.
-

Page 12
கைலாசபதியின்
"IIGRISOLj
தமிழர்
வாழ்வும் வளமும்."
கிலாநிதி கை லா சபதி யின் நூல்களைப் படிக்கும்பொழுது அவர் ஒரு சுய சிந்தனை யாளர் என்ற உண்மை புலப்படுகிறது. அவரு டைய ஆய்வறிவு மு ய ந் சி க ள் வெறும் ஒய்வுநேர அப்பியாசங்கள் அல்ல. மேலெழுந்துவரும் தமிழ் அறிவாளர் கூட்டத்திற்கு வழிகாட் டல்களாக அவை அமைகின்றன.
வரலாற்று உணர்வுடன் "அவர் எழுதுகிருர். அவர் எடுத்துக்கொள் ளும் விஷயங்களைப் பகுத்து ஆரா ய்ந்து விளக்குகிருர், இலக்கியம், கலை, மெய்யியல், சமயம், மொழி போன்றவற்றின் வடிவங்களைத் தீர்மானிப்பது சமூகத்தின் பொரு ளாதாரப் பின்னணிதான் என்பது ஆசிரியருடைய பொது நம்பிக்கை. அத்துடன் கலை, இலக்கிய, நெறி முறை, சமயம் போன்றவற்றின் ஆய்விற்கும், சமூக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள உறவை மாணவர் கள் புரிந்துகொள்ள வேண்டிய அவ சியத்தை நிறைவேற்று வதிலும் அவர் அக்கறை கொண்டுள்ளார்.
பூர்வீக தமிழ் இனம், சமயம் பற்றிய எட்டு ஆய்வுக் கட்டுரை கள் அடங்கிய நூல் ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்', சோ ழர் கால இறுதி வரையுமுள்ள விஷயங்கள் இந்நூலில் ஆராயப் படுகின்றன.
பல்லவர் கால இலக்கியம் பற் றிய தனது விவரணையில், கலாநிதி
M پسك
கே. எஸ். சிவகுமாரன்.
கைலாசபதி சைவ சித்தாந்தத்தில் நிறுவப்பட்ட சில கருத்துக்களுக் குச் சவால் விடுகிருர். இந்து சம யத்தின் ஒர் பிரிவாகிய சைவ சித் தாந்தம், பக்தி யை மையமாகக் கொண்டது. பக்தி காரணமாக, பழைய கர்ம வினையில் இருந்து ஒரு வர் தன்னை விடுவித்துக் கொள்ள லாம் என்றும், மோட்சத்தின் கத வுகளை பக்தி திறந்துவிடுகிறது என் றும், சைவ சித்தாந்திகள் நம்புகின் றனர். ஆனல் வர்க்கப்போராட்டத் தின் துணை விளைவே சைவம் என்ற கலாநிதி கைலாசபதியின் குறிப் புணர்த்தல் ஆராய்வுக்குரியது. சம ணத்தைத் தழுவிய பொருளாதார பலம் பொருந்திய வர்த்தகர்களுக் கும், சைவத்தைப் பின்பற்றிய நில உடைமை கொண்ட விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற போ ராட்டத்தின் விளைவு பல்லவர் கால இலக்கியம் என்று ஆசிரியர் கூறு கிருர்,
தர்மம் அரசியல் ஆகிய பொ ருள்கள் பற்றிய கட்டுரையில் சிலப் பதிகாரம், மணி மே கலை ஆகிய இரட்டைக் காவியங்கள் ' உதார ணம் காட்டப்படுகின்றன. இவை எழுதப்பட்ட காலத்தில் இருந்து வந்த சமூக இழிவுகளை, இவை சித் தரித்துக் காட்டியதுடன் இவற்றின் நிவர்த்திக்கான வழிவகைகளையும் இந்தக் கா வி யங் கள் காட்டுகின் றன. ஆனல் காவிய கர்த்தாக்க ளின் சமூக சீர்திருத்தத்திற்கான முயற்சிகள், தோல்வியடைந்தன,
O

காரணம், அவர்கள் தமது கருத் துக்களை கர்மம், அல்லது துறவின் அடிப்படையில் உருவாக்கியது தான். உண்மையில் சமூக அநீதி
யும் சம உரிமையின்மையுமே சமூ
கக் குறைபாடுகளின் நோய்களாக இருந்தன. இவை ஆசிரியர் காட் டும் கோணம்,
பக்தி வ்ழிபாடு, சோழர் காலம் உருவாக வழிவகுத்தது. இக்காலத் தில் எதிர்க் கேள்வியின்றிப் பக்தி செலுத்துவது சம் பிரதாயமாக இருந்தது. தெய்வீகப் பிரதிநிதி மன்னன் என்ற கொள்கை நிலவி வந்தது. இங்குதான் ஆண்டான்அடிமை உறவுகளும் நிலச்சுவாந் தர் முறைகளும் வளர்ச்சியுற்றன.
கலாநிதி கைலாசபதியின் கருத் துப்படி, காவிய க ர் த் தா க் கள் ஆளும் வர்க்கத்தினரின் ஊது குழல் களாக விளங்கினர். புகழ்ந்தும் செறிவூட்டியும் உள்ள னர். யுத் த த் தி ன் அவலநிலையில் வீரத்தையும் அழகையும் கவிஞர் கள் கண்டனர். மன்னர்களின் பிரச்
சாரகர்களாக அவர்கள் விளங்கி
பொருட் தேவையும் த அழி'
"Görri. கியல் சார்ந்த இலட்சியங்களும் கவிஞர்களுக்கு இருந்தன.
வீர வணக்கம் உறுதி யான
மன்னராட்சி முறைக்கு அடிகோ லும் சந்தர்ப்பத்தை அளித்தது. தெய்வத்தன்மை கொண்டவராக வீரர் ஒருவரை மதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பொதுமக்களின் அறி யாமையும், நியாய அளவுக்கு மீறிய அதிக செயற்கைப் பண்பு வாய்ந்த உணர்ச்சி மேலீடும் இதற்கு வழி வகுத்தன. வரவிருந்த சமூக மாற் றத்திற்கு இவையெல்லாம் அடிப் படையாக விளங்கின.
மனிதனில் ஆன்மா பற்றிய பிரக்ஞை எழத்தொடங்கிய கால த்தை எழுதப்புகுந்த ஆசிரியர், ஆன்மாவைப் பற்றி மனிதன் சிந் தித்துச் சிந்தித்து படிப்படியாக கடவுள் பற்றிய பி ர க் ஞை யை
2
போரை ப்
பெறத்தொடங்கினன் என்று கூறு கிருர்,
மந்திர தந்திர கிரியைகளைப் பின்பற்றி இறுதியில் சகல நிறைவு களுக்கும் வித் தா க விளங்கும் அன்னை வழிபாடு உருவாகத் தொ டங்கிற்று.
அன்னை, முருகன் மற்றும் பெய ரில்லாத இந்து நதிப்பள்ளத்தாக்கு நாகரிக கடவுளரின் வழிபாட்டு மூலங்களை ஆசிரியர் ஒரு கட்டுரை யில் விளக்குகிருர். இந்து நதிப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஆண் கடவுள் முதலில் உள்ளூர் தாய்க் கடவுளை (கொற்றவை) மனைவியாக வும் முருகனை (உள்ளூர் குழு ஒன் றின் தலைவன்) மகனுகவும் கொண் டதாக நம்பிக்கை உருவாகியது என்கிருர் ஆசிரியர்,
காத்திரமான வ ர ல |ா ற் று மாணவனுக்கு, கலாநிதி கைலாச பதியின் இந்த நூல் பழமையைக்
குறிக்கோளுடன் மறு பரிசீலனை
செய்வதாக அமைகிறது. ஆயினும், இது பக்கச் சார்வுடையது. மார்க் சிய பொருள் முதல்வாத வரலாற்று நோக்குடன் மாத்திரம் பார்வை விழுந் திரு ப் வத ஞ லும், அந்த நோக்கிலேயே யாவும் காணப்படு கின்றன எ ன் ப த ன லும் பக்கச் சார்வு உடையது எனலாம். ஆயி னும் தமிழ் இலக்கிய மாணவனுக்கு ஒரு சில அடிப்படையான விமர் சனப் பண்புகளை நூல் ஆசிரியர் இந்த நூலில் அற்புதமாக அறி முகப்படுத்தியிருக்கிருர்,
என்னைப் பொறுத்தவரையில் சமூக, மெய்யியல் விஷ யங் கள் தொடர்பாக வியத்தகு விதத்தில் எழுதப்பட்ட இலக்கிய விமர்சன மாகும் இது.
இந்த ஒரே காரணத்தினல் ஆராய்ச்சி நோக்குடன் படிப்ப தற்கும், புதிய ஆராய் ச் சிகளை மேற்கொள்வதற்கும் ஏற் றதா க
அமைகிறது இந்நூல்.

Page 13
6. கன்னத்தில் நீயறைந்தால் !
உணர்விழந்து கிடந்த வீராயியை, கிழவனின் உதவியுடன் உள்ளே கொணர்ந்து கிடத்தினுள் மீனுட்சி.
இரவு ஒருமணிக்கு:மெல்ல விழிகளைத்'திறந்தாள் வீராயி. அப் போதுதான் மீனுட்சிக்கு உயிர் வந்தது போலிருந்தது. நனைந்த ஆடையை இன்னும் அவள் மாற்றிக் கொள்ளவில்லை. அவிழ்ந்த கூந்தலை இன்னும் அவள் அள்ளிமுடிக்கவில்லை மீனுட்சி மலைப்பாறையிலிருந்து குதித்த போது ஏற்பட்ட படபடப்பு இப்போதுதான் சற்றுத் தணிந்தது.
ஆம்; மீனுட்சியின் உள்ளம் மாத்திரமல்ல உடலும் கூடமாறியிருந் தது. அப்பப்பா; வீராயியைக் காப்பாற்ற அந்தப் பூவுடல் பட்ட வேதனை. !
வீராயியின் முகத்தை அன்புகனிய நோக்கினுள் மீனுட்சி. அவள் கண்களிலிருந்து அரும்பிய நீரைத் தன் பஞ்சு விரல்களால் துடைத்து விட்டாள், மீனுட்சியின் உருக்கமான குரல் கண்ணிரோடு சேர்ந்து கனிந்து கிடந்தது.
மீன வீராயி! வீராயி! என்ன மன்னிச்சிடு வீராயி. இந்தப் பயங் கர முடிவுக்கு நீ வருவேயெண்ணு கனவுலேயும் நான் நினைக் கல்ல. இந்தா எம் மொவத்துல நீ வேண்டுமட்டுமடி. ஒன் கிோவம் தணியுமட்டும் அடி.நீ மன்னிச்சுட்டேண்ணு சொன் ஞ்த்தான் னின் மனசு கேக்கும் வீராயி. வீராயி! வீராயி! என்னுேட பேசமாட்டியா? வீராயி ஒனக்கென்ன செய்யுது armu?. என்னப் பார்வீராயி. வீராயி! மறுமுறையும் மயக்கம் வந்துட்டுதா? ஐயோ!...”
※*
 

ஆம், வீராயி மறுமுறையும் மயக்கமடைந்துவிட்டாள். மீனுட்சிக்கு மீண்டும் குலைநடுக்கமெடுத்தது. நல்லதுபோல ஒரு கெட்டது நடந்து விட்டால்?. நினைக்கவே பயமாயிருந்தது அவளுக்கு. எண்ணியெண்ணி மனம் புண்ணுக நடுங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
மீண்டும் கண்விழித்த வீராயி சற்று நன்ரு கவே காணப்பட்டார். தாத்தாவிடம் அவளைக் கவனிக்கும் பொறுப்பை மன்ருடிக் கொடுத்து விட்டு அப்போதுதான் தன் வீட்டை நோக்கி நடந்தாள் மீனுட்சி.
மறுநாள்; கொழுந்தெடுக்கச் செல்லும் பெண்கள் கூட்டத்திலே விராயியை மாத்திரம் காணமுடியவில்லை. மீனுட்சி, சாந்தமாக, அடக்க ஒடுக்கமாக அன்று நடந்து கொண்டது பெண்களிடையே பரபரப்பை உண்டாக்கியது. ஆனலும் அதை அவளிடம் கேட்க யாருக்காவது துணிவு பிறக்கவில்லை.
IDIa நேரம்;
எல்லோரும் கொழுந்தை நிறுத்துக் கொடுத்து விட்டு லயின்களை நோக்கி நடந்தார்கள். மீனுட்சி கடைசியாக நின்றுகொண்டிருந்தாள்.
வேலு : “ பேரென்ன?
மீன : மீனச்சி. வேலு : எத்துனருத்தல். நிறுத்துமுடிஞ்சுதா?. ’ .م. மீனு ஆமா, நாப்பத்தாறு. ** r -
வேலு என்ன; இண்ணைக்கு இத்தனை கொறஞ்சி போச்சி?
அப்ே ாதுதான் வேலு தலையைக் கிளப்பிப் பார்த்தான். . நற்று முலைச்சரிவிலே காப்பாற்றிய அதே பெண்! இவள்தான மீனச்சி’
ஆம்; உண்மைதான்.
Ké அந்தத் தோட்டத்துக்கு வந்தும், ஒருவாரமாகி விட்டது ான். வேலையாட்களின் பெயர்களைத் தெரியுமேதவிர அவ்ர்களை பார்யாரென்று மதிக்கத் தெரியாது. அதுவும் பெண்களென்ருல் தலை நிமிர்ந்து பார்க்கவே கூசிஞன்.
அவன் தலையை மீண்டும் கவிழ்ந்து கொண்டான். வேலு : .'உம்.சரி. பதிந்துகொண்டேன். போகலாம்.'
அவள் இன்னும் நின்றுகொண்டுதாணிருந்தாள். வேலு நிமிர்ந்து பார்த்தான். மீண்டும் குனிந்து கொண்டான். அவளை நேருக்கு நேர்

Page 14
பார்ப்பது கஷ்டமாயிருந்தது. அவள் அங்கிருந்து சீக்கிரமே நகர்ந்து விடவேண்டுமென்று ஒருவிதமான உணர்ச்சி.
வேலு : என்ன வேணும்? ஏதாவது சொல்லுறதெண்ணு கங்காணி
கிட்ட சொல்லிடலாமே!. இன்னும் ஏன் நிக்கணும்? து: வர்ற நேரமாச்சி.
மீன : இல்லங்க (தொண்டையடைக்க). நேத்து. வேலு : ஒ; அதுவா அதுல ஒண்ணுமில்ல.
மீன அதுக்கில்லிங்க (துக்கம்) நான் செஞ்சது. தவருக நடந்
திரிச்சிங்க. அதுக்காக.
வேலு : அது தகுந்த பரிசுதான். நீ மாத்திர்மல்ல; வேறெந்தப்
A பெண்ணுயிருந்தாலும் அந்த மாதிரிப் பரிசுதான் கொடுத்
திருப்பா , அதுக்காக ஆபீசிலவந்து இப்படி அழவேணுமா? பரவாயில்ல; இன்னுமேன் நிக்கிறே?.
மீனு : இல் லிங்க வந்து, ஒங்கப்பா ஒங்களநிண்ணு கூட்டிக்கிட்டு
y y
வரச்சொன்னுங்க. அவன் திகைத்தான்! ‘என் அப்பாவா? இவளுக்கெப்படித் தெரி
யும்? . . ஒருவேளை சொல்லியிருப்பாரோ??? தனக்குள்ளேயே சமாதான மும் சொல்லிக்கொண்டான். '
வேலு சரி; நீ போய் வெளியே நில்லு வந்திடறேன்.
அவள் போய் சிறிது நேரத்தின் பின் ஆபீசிலிருந்து புறப்பட்டான் வேலு. வழியிலே விழி வைத்துக் காத்திருந்தாள் அவள் அவனைக் கண்டதுமே அவளுக்கு அழுகைதான் வந்தது. ஆனல் அவள் அழவில்லை. கண்கள் குளமாயின. கண்ணிர்தான் முத்துமுத்தாக உருண்டது.
வேலு : மீனச்சி! என்ன இது? ஏன் அழுகிருய்?
மீன என்னை மன்னிக்க மாட்டீங்களா? நான் செய்த பாவத்துக்கு
மன்னிப்பே கிடையாதா? (அழுகை) வேலு என்ன மீனச்சி உன்பேச்சு? பாவமன்னிப்புக்கு நானென்ன
பாப்பாண்டவரா? நான் ஏன் உன்னை மன்னிக்கணும்? மீளுற : ஒங்க காலப் புடிச்சிக் கெஞ்சிறன். என்ன மன்னிச்சுட் டேண்ணு ஒரு வார்த்தை சொல்லுங்க. அப்படில்லேண்ணு, ஒங்க காலை எங்கழுத்திலே வச்சி; நெரிச்சிக் கொண்ணுடுங்க. வேலு : ஐயையோ இதென்ன அநியாயம்? எழுந்திரு மீனுச்சி! எங் காலை விட்டுடு, உனக்குக் கோடிபுண்ணியமுண்டு. மீனு : நான் செஞ்சி அக்கிரமத்துக்கு ஒங்க கால எங் கண்ணிரால கழுவுறன். நீங்க மன்னிக்கல்லீங்கண்ணு, ஒங்க காலடி யிலேயே என் உசிரு போவட்டும் (விம்மல்)
24

வேலு : மீனச்சி! இதென்ன மடத்தனம் ஆராவது பாத்துட்டாங் கோண்ணு என்ன நினைப்பாங்க எழுந்திரு எழுந்திரு மீனுச்சி!
பாவம்; அவனது பரிதவிப்பு மீனட்சியிடம் பலிக்கவேயில்லை. அவ னது காலைக் கெட்டியர்கப் பற்றிக்கொண்டு பொருமிப் பொருமி அழுது கிடந்தாள் அவள். உண்மையிலேயே; அவளது குவளை விழிகளிலிருந்து பெருக்கெடுத்த கண்ணிர், அவனது பாதங்களை நனைத்துக்கொண்டு நிலத்திலும் கலந்தது. அந்த நிலையிலே அவளது இதயபாரம் சற்றுக் குறைவதாக உணர்ந்தாள். அப்படி அழுது கண்ணிர் வடிக்கும் அந்த நிலையே ஒரு தனித்த இன்பமாகவும் பட்டது அவளுக்கு. யாருமடை யாத ஒரு அமர நிலைக்குள்ளே முக்குளிப்பதுபோன்ற பரவசநிலையை அந்த இன்பமயமான அழுகை அவளுக்குத்தந்தது. அப்படியே காலம் முழுக்க அழுது கிடக்கவேண்டும் போலுமிருந்தது. ஆனல்; அவன் பட்டபாடு! அவனது நெஞ்சம்பட்ட வேதனை!- அவனது உள்ளம் துடித்த துடிப்பு!
அவன் தவித்தான்
வேறு வழியேயில்லை!
கடைசியிலே, அவளது இரு தோள்களையும் பற்றி, அவளைத் தூக் கித் தன்னெதிரே நிறுத்தினுன் வேலு. அவளது பொலிவிழந்த முகத் திலே சற்று ஒளிபிறந்தது. கண்கள் முத்துமுத்தாக நீரை உகுத்தன. நீர் நிறைந்த அந்த வண்டு விழிகள் இரண்டோடு அவனது வட்ட விழி கள் இரண்டும் ஒன்றையொன்று விழுங்கின. உண்ணவும் நிலையற்று உணர்வும் ஒன்றி. •
அண்ணலும் நேக்கினன்.
அவளும் நோக்கினுள்!
ஒரு கணம் . இரண்டு கணம். அவள் குனிந்து கொண்டாள். நாணம் பொங்கி வழிந்தது.
அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.
அவர்கள் கிழவனின் குடிசையையடைய நன்ற க இருட்டிவிட்டது. அப்போதுதான் அரிக்கன் லாந்தரைக் கொழுத்தித் தூக்கிக் கொண் டிருந்தான் கிழவன். அடுப்பங்கரையிலே குந்தியிருந்து, ஏதோ செய்து கொண்டிருந்தாள் வீராயி. வேலு : அப்பா! யாரப்பா இந்தப் பொண்ணு?
வேலு குடிசையுட் புகுந்ததும் புகாததுமாக இதைத்தான் கேட் டான்.
கிழ இவதானப்பா, மீனுச்சியோட மச்சாள்.
மீனு என்னங்க நான் அப்போதே சொன்னேனே அந்த வீராயி
இவதான்.
வேலு : அடுப்பங்கரையிலே விட்டுட்டீங்களே! அப்புறம் மயக்கம்
வந்துடப்போவுது.
வீராயி : அப்படியொண்ணும் வராதண்ணு; நான் ஒண்ணும் வண்டில்ல
மயங்குற்துக்கு. ஒங்களப்போல .
25

Page 15
வேலு
வீராயி
மீனு
விராயி :
வேலு
மீனு
வேலு
மீனு கிழ
அடடே நல்லாப் பேசத்தெரியும் போலிருக்கே .
ஆமா, அவக்கிப்ப ஒண்ணுமில்லப்பா. நான்தான் சொன் னேன், இண்ணைக்கு நிண்ணு நாளைக்கு நாளைக்கு வூட்டுக்குப் போகலாம்ணு. என்னம்மா வீராயி; சமயலெல்லாம் முடிச் சிட்டாப் போலிருக்கே.
ஆம்ாப்பா முடிஞ்சமாதிரித்தான். வீராயி! நீ சும்மாயிரு. இனி எல்லாம் நான் கவனிச்சுக் கிட்றன். என்ன இருக்கிங்க கவனிக்க ? அண்ணு அப்பா எல்லாரும் இருங்க. ம். இந்தாங்க. மீன. இந்தா தண்ணிய வார்த் தெடு . ம்.
என்ன எலையெல்லாம் பெரிய தடல்புடல்? இன்னும் ஏழு
மணியாகல்ல; ஹொட்டலுல வேறே காத்துக்கிட்டிருப்
urš 5. .
வேலு! அந்த ஒட்டல் சாப்பாட்ட இண்ணேயோட கை கழுவிடு.
ஒட்டலாம், ஒட்டல்; சும்மா உக்காருங்க. நான்தான் ப.
மாறப் போறேன். (எல்லோரும் சாப்பிட உட்காருகிறர்கள்.
மீனுட்சி பரிமாறுகிருள்)
போதும் போதும்; எல வழியவழியக் கொட்டுறியே!. போதுமம்மா...ம் பொண்ணுப் பொறந்த புண்ணிய வதி, யோட கையால, சாதம் படைக்கத் திண்ணு எம் மாத்தம்'
காலம்? இண்ணைக்குத்தான் குடுத்துவச்சான் ஆண்டவன். ஆமாப்பா; எனக்கந்த அனுபவங்கூட இல்லையே! என்ன சுவையாயிருக்கு வீராயிக்கு சமயற்கலையில பஸ்ட் பிறைஸ் கொடுக்கலாம். மீன! எனக்கொரு சந்தேகம்; இது வீராயி சமைச்சதால வந்த சுவையா? அல்லது ஒன் கையால எடுத்து வச்சதால வந்த சுவையா?
போங்க. சும்மா சாப்பிடுங்க.
ரெண்டுந்தானப்பா.
ஆகா பஞ்சாமிர்தம்! பாஞ்சாமிர்தம்! தின்னத்தின்னச் சுவைகள் மாறுது
தீர்ந்திடாத இன்பம் மூளுது!
-(தின்னத்.)
என்ன சோத்து எலையோட பாட்டு வேறேயா? பாடலா? ஆடலும் கூடத் தானகப் பொறக்குமம்மா
போட்ட சாதத்து ருகியில. என்னம்மா வீராயி உண்ை யாகத்தான்.
26
y

வேலு : அப்பா...!
தின்னத் தின்னச் சுவைகள் மாறுது தீர்ந்திடாத இன்பம் மூளுது
(.م. وقrة 66 (5) முத்துச் சம்பாச் சாதமாக்கி
முருங்கையோடு பருப்புச் சேர்த்து கத்தரிக்காய்த் துவையலோடு
கறிகள் ஆறு ஏழு வைத்து
(தின்னத்.) பாலினேடு நெய்பழங்கள்
பார்த்து ஊட்டும் செங்கரங்கள். நாலுவார்த்தை பேசிநங்கை
நாணமோடு வைத்த சாதம்,
(தின்னத்.) வட்டம்ான திங்கள்மீது
வந்து மொய்த்த வண்டுரெண்டு நுட்பமான தேவைகண்டு
* நொய்ய காந்தள்வைத்த சாதம்
(திண்னத்.) மாறிடாத இன்பவாடை
வந்துமோது கங்குல் மீது ஊறுகின்ற அன்பு கண்டு
உள்ளமுண்டு துள்ளுதின்று
(தின்னத்.)
முற்றும்
ஆக்ரா மூவிஸ்
fழத் தமிழ்ப்படத் துறையில் ஒரு புதுமையை உண்டு பண் ணும் நோக்குடன் பசறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆக்ரா மூவி சார் தமிழ்த் திரைப்படமொன்றைத் தயாரிக்கவுள்ளனர்.
விரைவில் ஆரம் பி க்கப்பட விரு க் கும் இப் படத் துக் கு நாட்டின் பலபாகங்களிலிருந்தும் நடிப்புத் துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பச றையில் நடைபெற்றுவரும் நடிகர் தெரிவு நடிகர்களை கூர்மையாக அவதானிக்கின்றது.
மேற்படி இந் நடிகர் தெரிவிலிருந்தே இவர்களின் படம் தர மானதாக அமையும் என்று சொல்லத் தோன்றுகிறது.
மலையக மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படவிருக்கும் இப்படத்துக்கான கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பை திரு. அருள்ராஜ் அவர்கள் ஏற்றுள்ளார்.
இவர்களின் முயற்சி ஈழத் தமிழ்த் திரைப்படத் துறையை திசைதிருப்பி ஒரு புதிய சகாப்தத்தை உண்டுபண்ணுமென எதிர் பார்க்கப்படுகிறது. - அருள்பிரகாசம்.
27

Page 16
(சென்ற இதழ் தொடர்ச்சி)
தெனினிலங்கைப் பேச்சுவழக்குத் தமிழ்
مر
எம். எச். எம். சம்ஸ்.
சில புதிய ஒலிகள்
பொதுவாகத் தமிழெழுத்துக் களுக்கு உரித்தற்ற சில ஒலிகள் இடத்தைப் பொறுத்து பி ற ப்ப துண்டு. பஞ்சம் சங்கம், அந்தம், செம்பகம் ஆகிய சொற்களின் டையில் வரும் மெல்லின மெய் களின் பின்னுள்ள வல்லின எழுத் துக்கள் முறையே Ja, Ga, Dah, Ba ஒலிகளைப் பெறுகின்றன. இவற்றை மொழியியல் வல்லார் "கு ர 65 in ஒலிகள்’ என்பர். w S.
இப்பிரதேசப் பேச்சுவழக்கில்
இப்பொது இயல்பையும் தாண்டி, குர லி ய ஒலி கள் தாராளமாக இடம் பெற்றுள்ளன. கிணறு, ாக்கி, துரை, தர்மம் போன்ற சொற்களின் முதலெழுத்துக்கள் குரலிய ஒலிகளாக உச்சரிக்கப்படு இன்றன. இதே போன்று * வயிறு என்பதன் முதலொலி "ப" என்ப தன் குரலிய ஒலியைப் பெற, அதற் கேற்ப இட்ையெழுத்தாகிய 'பி'; ஹ்' ஆக மாறி ஓர் அர பி ச்
ச எழுத்து வழக்கிலும்
சொல்லே போன்று உச்சரிக்கப்படு கின்றது. இது சிங் கள, அர பி மொழி ஆதிக்கத்தின்" விளைவாயி ருக்கலாம்.
பிறமொழிச் சொற்கள்
தமிழிலே வடமொழி, போத் துக்கேய, ஒல்லாந்த, அரபி, ஆங் கில, உருது மொழிகள் காலத்துக் குக் காலம் ஆதிக்கம் செலுத்தின. இரண்டறக் கலந்து தமிழே போன்று காட்சி யளிக்கும் பிறமொழிச் சொற்களும்
ஏராளம் உண்டு.
இலங்கையைப் பொறுத் த வர்ையில் ஒரே பதம் சிங்களத்தி லும், தமிழிலும் வழங்கப்படுவ தைக் காண்கிருேம். இதன் கார ணமாக தமிழிலிருந்து சிங்களத் துக்கு வந்ததா? சிங்களத்திலிருந்து தமிழிற் புகுந்ததா? என்ற சர்ச் சைகளும் சிலபோது எழுவதுண்டு. பெரும்பாலான சொற்கள் பிற மொழிகளிலிருந்து ஏக காலத்தில் இருமொழிகளிலும் புகுந்து இடம் பிடித்தவையாகும். சூரியன், சாத் திரம், விசேஷம், புத்தகம் போன்ற வடமொழிக் கிளவிகள் ஏராளமாக இரு மொழிகளிலும் கலந்துள்ளன. மேசை, க ட த ரா சி, கோப்பை, பீப்பா, க ரு வாடு, சப்பாத்து பீரங்கி, பகா போன்ற போத்துக் கேயச் சொற்களும் இ லே சா ன ஒலித்திரிபுகளுடன் இரு மொழிக ளிலும் இடம் பெற்றுள்ளன.
ஆட்சி மன்றங்கள் ஏற்படும் போது அந்தந்த ஆட்சி மொழிச் சொற்கள் மற்ற மொழிகளில் ஆதிக்கம் செலுத்துவது சரித்திரம் காட்டும் சான்ற கும். வர்த்தகத் தொடர்பின் காரணமாகவும் இவ்
வாறு ஏற்படுகின்றது.
சிங்கள மொழி
தென்னிலங்கையைப் பொறுத் தவரையில் சிங் கள மக்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்ட
28

தன் வாயிலாக பல சொற்கள்
தமிழில் கலந்துள்ளன. குறிப்பாக
தென்னிலங்கையில் முஸ்லிம் மக் கள் நகரப் புறங்களிற் குடியேறி வர்த்தகம் செய்ய, அயலிலிருந்த கிராமப் புற ங் களி ல் விவசாயம் செய்தவர்கள்-செய்கிறவர்கள் சிங் களவர்களே. (ஹம்பாந்தோட் டைப் பகு தி இதற்கு விதிவிலக் காகும்) தோட்டப் பயிர்ச் செய்கை மீன் பிடித்தல், வீடுகட்டுதல், மர வேலை போன்ற தொழில்களில் ஈடு பட்டுழைப்பவர்களும் அவர்களே. எனவே இவ்வாருணி தொழில்களில் தொடர்புறும் பெரும்பாலான சிங் களச் சொற் கள் முஸ்லிங்களின் பேச்சுவழக்கில் இடம் பெற்றுள் 63.
வீடுகட்ட உதவும், தீராந்தி, வளை, செங் கல் போன்றவற்றின் சிங்களச் சொற்களான பராலை , (B) பாள் க்கை, கடோல் என்பன இங்கு சாதாரணமாக வழங்குவன வாகும். இவ்வாறே மீன் வகைக ளின் பெயர்களும் சிங்களத்திலேயே பெரிதும் வழங்கப்படுகின்றன. கறி வகைகளிற் சிலவும், மருந்து மூலி கைகளிற் பலவும் சிங்களத்திலேயே வழங்கப்படுகின்றன. இவை தவிர அங்கா டி ச் சொற்களும் கேலிப் பதங்களும் அண்மைக் காலத்தில் சிங்கள மொழியிலிருந்து தமிழ்ப் பேச்சுவழக்காகப் பயிலப்படுகின் றன.
வாசி (அதி ருஷ்டம்) குனு (அழுக்கு) பிஸ் ஸன் (பைத்தியக் காரன்) அமுட (கோவனம்) பள் (கெட்ட) (B) பொல் (வெ று, ம்) ஹொ ல் ம ன் (ஏ மா ந் த வ ன்) கைவாறு (அரட்டை) தெ ரிச் ச (மெலிந்த) புச்சி (பூஞ் சனம்) த டா வ த தை போரை (பசளை) சாத்து (உபச ரணை) (B) பாங்கட்டை (மஞ்சற் கொடி) பாப்பீஸ் (கால்மிதி கம்ப
ளம்) புரு க் கு (கணு) போன்ற
 ெசா ற் கள் சிங்களத்திலிருந்து இலேசான ஒலித்திரிபுகளுடன் புகுந் தவையாகும். "அ தோ? எ ன் ற
(கட்டாக்காலி)
தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக * அன்ன" என்ற சிங்களப்பதப் பிர
யோ கம் இங்கு சாதாரணமாக உண்டு.
ஏனைய பிரதேசங்களைப்
போன்றே அரசாங்க காரியாலய தொடர்புடைய இலக்ஷன், ஒபீஸ் ஹெட்மாஸ்டர், டொக்டர், பெட் டிஷன் போன்ற ஆங்கிலச் சொற் கள் மாற்றமின்றி அ ப் படி யே வழங்கப்படுகின்றன. "ஹெ ல் ப்" எ ன் ப  ைத ‘ஹல்பு' எ ன் ம் “ட்ரிக்ஸ்" என்பதை 'திரிகிஸ்" என் றும் "வொரண்ட்" என் ப ைத 'விராந்து' என்றும் திரித்து வழங் குவோரும் உண்டு.
அரபி மொழி
முஸ்லிம் மக்களின் சமயத்தோ டொட்டிய சொற்களுட் பல அரபி மொழியிலிருந்து வந்தமை யால் அப்படியே மாற்றமின்றி எடுத்தா ளப்படுகின்றன. சீ ரு ப் புராணம் போன்ற இஸ்லாமிய இலக்கியங்க ளிலும் இவை இடம் பெற்றிருப் பது தவிர்க்க முடியாததாகும்.
இந்தியா வில் மொகலாயர்
ஆட்சிக் கால்த்திலேயேதான் தமி ”ழிலே அரபிப் பதங்கள் கலக்கலா
யின, குமாஸ்தா, ஜ மின் த ர ர், அமுல், அ மீ ர், ர த் து, ஆஜர், இலாக்கா, பாக்கி, வசூல் போன்ற அரபிச் சொ ற் க ள் ஆட்சி த் தொடர்புடையன. இலங்கையில் இவற்றில் பல சொற்கள் எழுத்து வழக்கில்கூட இருந்து வருகின்றன.
இவை த விர அரபித்தமிழ் நூல்கள் (அரபி அட்சரங்களை உப யோகித்து தமிழில் எழுதப்படும் நூல்) மூலம் பேச்சு வ ழ க் கி ல் இடம் பெற்ற சொற்களோ அனந் தம். கிருபை (அன்பு) ஈடேத்தம் (மீட்சி) வருசை (சிறப்பு) ஊசாட் டம் (எண்ணம்) தத்துவம் (ஆற் றல்) தங்கடம் (அபாயம்) பார வான்கள் (பெரியார்கள்) போன்ற சொற்களுடன் கணக்கற்ற அரபிச்
29

Page 17
சொற்களும் கலந்து மணிப்பிர வாள நடையிலேயே அவ்வாருன அரபித்தமிழ் கிதாபுகள், நூல்கள் எழுதப்படுகின்றன.
தற்காலத்தில் தூய தமிழ்
நடையில் சமய நூல்கள் வெளிவ
ருவதனல் அரபித்தமிழ் நூல்களில் பயின்று வந் த க ல் பு (உள்ளம்) றஹ்மத் (அருள்) பாயிதா (பயன்) துன்யா (உலகம்) இல்மு (அறிவு) நப்ஸ் (ம ன ம்) அஸ்ராறு (ரகசி யம்) ஹலாக் (அழிவு) ரி ஸ் கு (ஆகாரம்) மு த லிய சொற்கள் பேச்சு வழக்கிலிருந்து அரு கி க் கொண்டு வருகின்றன. எனினும் முதியோர்களிற் சில ர் பேசும் போது இவ்வாறன அரபிச் சொற் கள் விரவி வருவதைக் கேட்கலாம்.
மெ ள த் து, ஆ லி ம், ஜின், செய்த்தான், ஹ த் யா, கப்ரு, ஹயாத்து, முஅஸ்ஸின், லெப்பை, ஹாசியார், ரு ஹ த் து போன்ற சொற்களோ பொது வாக முஸ் லிங்களுள் எல்லாத் திறத்தவரும் வழங்குவனவாகும். இவற்றுட் பல பிறமதத்தவரும் புரிந்து கொள் ளும் அளவுக்கு பேச்சு வழக்கில் மாத்திரமன்றி எழுத்து வழக்கிலும் இடம் பெற்றுவிட்டன. அர பித் தமிழ்க்கிரந்தங்களிலோ, முஸ்லிம் இலக்கியங்களிலோ இடம் பெருது இப்பகுதிப் பெண்மணிகளின் பேச் சில், ஹரபாகுதல், (8) பதணு, பளி ஹத்து போன்ற சொற்கள் வழங் கப்படுகின்றன. முறையே அழிவு, கட்டுக்கதை, துன்பம் ஆகிய கருத் தில் இவை வழங்குகின்றன.
செந்தமிழ்ச் சொற்கள்
யாழ்ப்பாணம், மட்டக்களப் புப் பகுதிகளில் வழக்கிலில்லாத பல தூயதமிழ்ச் சொற்கள் இப் பகுதியில் வழங்கி வருதலைக் கண்டு வியப்போர் பலர். இங்கு மாத்திரம் எப்படி இச் சொற்கள் வழங்கின எ ன் று விஞ எழுகின்றது. ஆம், " ஆராய்ச்சிக்குரிய விஷயமிது.
கடப்பு (மிகுதி) கவடி (சோகி) குப்பி (சீசா) கையடை (லஞ்சம்) கொடுங்கை (மடித்தகை) கோட்டி (பகிடி) சந்தாபம் (துன்பம்) சந்து (பொருத்து) சள் ளே (தொல்லை) அசடு (குற்றம்) இடம்பாடு (விரிவு) ஏ த ண்  ைட (பலகைத் தூக்கி) புழை க் கடை (கொல்லைப் புறம்) உளம்புதல் (ஊறுதல்) ஈறல் (துரக் கம்) குறடு (சுவர்) இவை எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள்; இன்றும் வழக்கில் உள்ளவை. பொரித்த வறு த் த பண்டங்களை “புருட்டு என்பர். கரண்டியை 'சம்சா' என் றும், மண்கூசாவை "பூக்கிர்" என் றும், கூட்டு மாற்றை "வாரக்கட்டு? என்றும், தேநீர்த் தட்டை (Tray) மரவை’ என்றும் வழங்குகின்ற னர். இவ ற்  ைற ப் பிறமொழிச் சொற்கள் என்ருே, திரிபு என்ருே தீர்மானிக்க முடியவில்லை. இவற்
றை இத்துறையில் ஈடுபடும் மொழி
ஆய்வாளரின் கவனத்திற்கு விடுகி றேன்.
மதமானியம் (கஷ்டம்) கொசு வம் (சுருக்கு) மூணுமுக்கா நாளில் , (புதிதில்) ஒலத்துதல் (தேடுதல்) தொ டு த் த ல் (தண்டுவலித்தல்) நாம நாத்தம் (தொடர்பு) வெகு சாரம் (துக்கம்) போன்ற சொற் ருெடர்களும் ஆராய்ச்சிக்குரியன. இவை கொச்சை மொழிகள் என்று , தள்ளிவிடக் கூடியவையல்ல. எந்த அடிப்படையுமின்றி ஒரு ப த ம் வழக்குக்கு வர நியாயம் இல்லை. இக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள எனது கருத்துக்கள் சில போது தவருகவுமிருக்கலாம். இது தென்னிலங்கைப் பேச்சு வழக்கை ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலே யன்றி தீர்க்கமான மு டி வ ல் ல. நுனிப்புல் மே யு ம் பான்மையில் சில சொற்கள் எ ன் தி டீ ர் முடி வு க் கு இலக்காகியுமிருக்கலாம். ஆதாரத்துடன் அ வ ற் றை எடுத் துக் காட்டும்போது தென்னிலங் கையின் வழக்குத் தமிழாராச்சியில் ஈடுபடுவோர்க்கும் எனக்கும் உறு
துணை புரியும்! O'
30

நடைச் சித்திரம்.
அந்த த் தெரு வின் இரு மருங்கு வேலிகளிலும் கிடுகுகள். கிடுகு வேலிகளைத் தாங்கி-சடைத்து நிற்கும் முள் முருங்கைக் கதியால் கள் அங்கு ஏராளம். விடியற் காலை யின் மந்தமான இருட்டு மறைந்து ஒளி கொஞ்சம் கொஞ்சமாக பர விக்கொண்டிருக்கும் சமயம் - சட சடவென்று மு ரு க் கை இலைகள் ஒடிந்துவிழும் ஓசை கேட்டால், அப் பொழுது சரியாக நாலு மணியா
கத்தான் இருக்கும். அம் முருங்கை
இலைகளை மிகவும் சிரத்தையோடு ஒடித்து க் கொண்டிருப்பது வேறு யாருமல்ல . . . பால்காரச் செல்லத்
**சும்மா சும்மா வந்து ஒவ் வொரு நாளும் கொள்ளை கொள் ளையா இலையெல்லாம் வெட்டிக்
கொண்டு போருனே, எப்பவாவது இந்தா பிள்ளை ஒரு கால் போத் தில் பால் குடியன் எண்டு சும்மா தந்திருப்பான' என்றெல்லாம் அவருக்குக் கேட்கும்படியாகவே
சிலேடை பே சி விடும் திறமை
படைத்த 'சினக் கிழவிகள்’’ அங்கு இருக்கிருர்கள். ஆனல் அச் சமயங் களில் எல்லாம் செல்லத் தம்பியர் வேண்டுமென்றே செவிடனுக மாறி விடுவார். ヘッ Ko
அரசாங்க உத்தியோகத்தில்
ருந்திருந்தால் வந்திருக்கின்ற சட்டத்தோடு வெகு விரை
பால்காரச் GeF66)65 bilus's
தம்பியர்தான். கொக்கைச் சத்தத் தின் உதவியோடு ஒவ்வொரு கெட் டாக ஒடி த் துக் கொள்ளும் அள விற்கு அவர் பொறுமை சா வி. பொறுமையுணர்ச்சிகுறைந்து அவ சரம் கூடி நிற்கும் சமயங்களில் - முருங்கைக் கதியால்களின் உயரக் கிளைகவை அப்படியே முழு தா க வெட்டிய நாட்களும் உண்டு. அப் பொழுதெல்லாம் விழித் தெ ழும் வீட்டுச் சொந்தக்காரரிடம் சர மாரியாக திட்டுகளும் வாங் கி க் கட்டிக்கொள்வதுண்டு. அவருக்கு வேண்டியதெல்லாம் முரு ங்  ைக இலைகள் தானே தவிர திட்டுகள் அல்ல. ஆதலால் அதையிட்டு அவர் துன்பப்படுவதில்லை. ・ 。
31
வில் பென்சன் வாங்குகின்ற வயசு அவருக்கு. அகலமான ஏறிய பெரிய நெற்றி, காதோரம், பிடரி தவிர் ந்த மற்றைய தலையெல்லாம் ஒரே மொட்டை, வழு க் கையால் ஏற் பட்டுவிட்டஒளிப்பிரவாகம்காணுது என்று காலை வெள்ளணையில் உச்சந்
தலையில் , நல்லெண்ணைத் தப்பல்
வேறு. பிடரியிலே இரண்டே இர ண்டு மயிரில் தொங்கிக் கொண் டிருக்கும் ஒரு புளியுருண் டை க் குடுமி. காதிலே கடுக்கன். சின்னப் பிள்ளையிலே போட்டது. இன்னும் கழற்றி சுத் தப்படுத்த வில்லை. அரையிலே ஒரு முழத்துண்டு. புதி தாக அதை வாங்கியபோது, அது வெள்ளை நிறமாகத் தா ன் இருந்

Page 18
திருக்கவேண்டும். இப்பொழுதோபழுப்பு நிறம் நிரந்தரமாகக் குடி கொண்டுவிட்டது. ரின் சோ கொ ண்டு பல முறை து  ைவ த் து த்
தோய்த்தாலும் அதன் தற்போ,
தைய நிறத்தை மாற்றுவதற்கில்லை.
மொத்தத்தில் உரு த் திரா ட் சங்
கொட்டை ஒன் றை ப் போட்டுக் கொண்டால் திருநாவுக்கரசரின் கோலம். (உள்ளத்தில் அல்ல, உட லில்தான்). ஆணுல் அவருடைய கண்கள் இருக்கிறதே. வெள்ளைக் காரக் கண்கள். பார்த் தவர்கள் ஆச்சரியப்படுவதுண்டு. இந்த ஆண் டிக் கோலத்தில்கூட அவரை மற்ற வர்கள் விரும்புவதற்கு இந் த க் கண்கள்தான் கா ர ன ம் என்று சொன்னல் அது மி  ைக யா கி விடாது. இரவு எட்டு மணி இருட் டிலும், விளக்கைப் பற்ற வைக் காமல்ே ஜன்ன லோ ரத் தோ டு இருக்கும் களுத்துறைப் போத்தலை கஷ்டமில்லாமல் எடுத்து இரண்டு
டோஸ் அடிப்பதற்கு கண்களின்
சக்தி அவருக்கு பே ரு த வியா கி இருந்துவருகிறது. தன் அழகான கண்கள்பற்றி அவருக்கு சிறிய. இல்லை. இல்லை. பெரிய பெருமை. e . . . . ன்ை விட்டுவிட்டேன். இடுப்பில் தொங்கிக்கொண்டிருக் கும் துண்டிற்குள் ஒரு கச்சை. வெளியே தெருவில் போகும் நேரம் தவிர்ந்த மற் றை ய நேரங்களில் அவரது ஒற்றை நாடி உ ட லில் ஒட்டிக் கொண்டிருப்பது அந்தக் கச்சை ஒன்று தான். மாட்டுத் தொழுவத்தில் மட மட வென்று கடமை புரியும்போது துண்டைக் கவனமாக அவிட்டுக் கொடியில் போட்டுவிடுவார். அழுக்குப் பட்டு விடுமாம் அதில்,
நான்கு பசுக்கள். மூன்று கன்று கள். கொஞ்சம் பெரிய அளவிலான கோழிக்கூடு போன்ற கு டி சை. மாட்டுத் தொழு வ ம். அதிலே குவித்து விடப்பட்டிருக்கும் இரண் டொரு சாணத் தட்டுக்கள். வள விற்குள் ஒரு பெரிய கிணறு.
இவைகள் தான் செல்லத்தம்பியா
சிறிய கிணறே போதுமே,
கொள்வார்.
ரின் உடைமைகள். அது சரி. அவ ருக்கு பெரிய கி ண று எதற்கு. FIT, சா. பாலில் நன்முக தண்ணி ர் கலக்க வேண்டுமே.
விடியற்காலை நாலரை மணிக்கு
இலை ஒ டி த் து முடித்துவிடுவார்.
ஐந்து மணிக்கு தொழுவத்திற்குள் இறங்கிவிட்டாரென்ருல் . சிறி து நேரத்திற்குள். சர்க். புர்க். சர்க். புர்க். என்று பால் கறக் கப்படும் சத்தம் மட்டுந்தான் கேட் கும். செம்பிலிருந்து தேவையான ரகப் போத்தலுக்குள் புனலில்லா மலே பாலை விட்டு விட் டு (இது வரை ஒரு துளிகூட வெளியே சிந் தியது கிடையாது). அந்தச் செம் பிற்குள் மிகுதியாக ஒட்டிப் படர் ந்து இருக்கும் பாலை - சிறிது தண் ணிர் விட்டு அப்படியே சுழாவும் லாகவம் இருக்கிறதே. அப் பப்பா. எல்லோரும் கட்டாயம் காணவேண்டிய ஒரு காட்சிதான். பால் வாங்கும் வாடிக்கையா ளர் கண்டுபிடிக்க முடியாத அள விற்கு தண்ணீர் கலக்கும் திறமை. அவருக்கு இந்த இருபத்தைந்து வருட அனுபவத்திலே கை வந்து விட்ட ஒரு கலையாகிவிட்ட்து.
"சீ.உன்னை நம்பி பால் வாங் கிற ஆக்களுக்கு துரோகஞ் செய் யிறியே, பாலில் தண்ணி கலக்கி றது பாவமல்லவா' என்று அவ ரது மண்ட்சாட்சி எப்போதாவது இருந்துபோட்டு உறுத்துவதுண்டு. அம்மாதிரியான இ க் க ட் டா ன நேரங்களில் பக்கத் துத் தெருப் பால்காரன் கந்தப்புவை மனதில் நினைவுபடுத்தி - தன் மனச்சாட்சி யின் உறுத்தலை சாந்தப்படுத்திக் "அவன், தண்ணி, பால் பவுடர் எண்டு எத்தினையோ கலக்கிருன், நான் தண்ணி மட்டுந் தானே கலக்கிறன். இப்படியாக தங்கள் இருவருடைய தண்ணிர் கலக்கலையும் மனதிற்குள்ளேயே சீர் தூக்கிப் பார்த்து தான் செய் வது கொஞ்சம் பாவந்தான் என்று
32

திருப்திப் பட்டுக்கொள்வதில் அவ ருக்கு ஒரு நிம்மதி.
ஆறு மணிக்கெல்லாம் பால் போத்தல்கள் டெலிவரிக்கு ரெடி யாகிவிடும். தெருக்கோடியில் புதி தாக குடிவந்திருக்கும் நீதவானுக்கு மட்டும் ஸ்பெஷலாக செம்பிலேயே பால் சப்ளை செய்துவிடுவார். அந் தப் பாலில் தண்ணீரும் கலப்ப தில்லை. உள்ள தள்ளிவிடுவார் என்று உள் ளுக்குள்ளே ஒரு சின்னப் பயம்.
ஆறு மணிக்கு வெளிக்கிளம்பும் போது கொடியில் காய்ந்து கருவா
டாய் போயிருக்கும் துண்டு அரை
யில் ஏறிவிடும். திருநீறு நெற்றி யில் கீறப்பட்டுவிடும். படங்கினல் தைக்கப்பட்டு பல அழகான வேலைப் பாடுகளமைந்த பால்போத்தல்ப்
பை தோளில் மாட்டப்பட்டுவிடும்.
வேலைப்பாடுகள் என்ருல் வேமுென் றுமில்லை. அதில் ஏற்பட்டுவிட்ட பீத்தல்களுக்கு அவரே போட்டுக் கொண்ட பச்கள் என்னும் பலநிறக் கந்தல்கள்.
சரி. எல்லாம் ரெடி. வெளிக்கிட்டு விட்டார். சந்திமுனை யில் கிருஷ்ணன்குட்டிக் கடையில் முதலாவது ஹோல்ட். அப்படியே ஒரு ஒசி வெற்றிலைக் குதப்ப் ல், "அப்ப, குட்டி அண்னே?". இரண்டொரு
துளி வெற்றிலைச் சாறு வெளியே
தெறிக்க, கிருஷ்ணன் குட்டிக்கு போட்டு வாறன்' சொல் லி ப் போட்டு புறப்பட்டு விடுவார். கிருஷ்ணன்குட்டிக்குப் பார்க்கிலும் செல்ல த் தம்பியருக்கு வயது அதிகம். ஆனல் செல்லத் தம்பியர் அவரை "அண்ணே" என்றுதான் கூப்பிடுவார். அப்படியொரு ԼվՖil மையான பழகுமுறை.
“செல்லத்தம்பி, கோணேச ருக்கு நேர்த்திக்கடன், பின்னேரம்
ஆறுமணிபோல இரண்டுபோத்தல்
பால் வேணும்". வாடிக்கைக் காரரிடமிருந்து மே ற் ப டி யா ன
கண்டு பிடித்துவிட்டால்
i Lu Gub
பின்னே ரமா வாறன் ,
ஸ்பெஷல் ஒடர்களும் அவ ருக்கு வருவதுண்டு. கடவுளுக்கு கொடுக் கும்போது தண்ணீர் கலக் கப்படாது என்ற ஆசை இருந்தாலும், கை கள் தண்ணீரை வழமைபோலக் கலந்துவிடும். வாடிக்கையாளர் லிஸ்ற்றிலே, நீதவான் போன்ற இரண்டொரு பெரிய த லைகள் தவிர்ந்த மற்றைய ஒடினறி விட்
டுக் காரருக்கு ஓடினரி 35штаі)
போலவே டெலிவரி செய்யப்படும். எக்ஸ்பிறசாக டெலிவரி செய்யப் இடங்களும் லிஸ் ற் றில் உண்டு. காலை எ ட் ட ரை மணிக் கெல்லாம் டெலிவரி முடிந்துவிடும். வெறும் போத்தல்களோடு வரும்
போது, அப்படியே. 'மோகன விலாசில்’ இரண்டு பணிஸ், இர ண்டு ரீ.. பணிசில் ஒரு கடியும்
அதைக் கரைத்து உள்ளே அனுப்ப
ரீயில் ஒரு மிடரும் . ஐம்பது சதத்திற்குள் காலை உணவு முந் றுப் பெற்றுவிடும். உள்ளே போய் விட்ட ப்னிஸ், ரீ. தரும் உற் சாகத்தில் தன் அரண்மனைக்கு எட்டி நடைபோடுவார்.
சாணத்தைக் கட காசாக்கு வதில் oflorišgrř.: அதை எண்ணித்
DOUDOOOO
சிலுவைகள்
காதற் பந்தலின் கீழ் சொரியும் இனிய நினைவுப் படுக்கையில் உனக்குத் தந்த முத்தங்கள் தித்திக்கும் வாழ்வின் காவியச் சின்னங்கள் என் மனக் கல்லறைச் சிலுவைகள்.
--மு. கனகராசன்.
OOOOOOOO
33

Page 19
HDITH Omni Dum Druim Drum DL
காந்தி மொழி-1
அஹிம்சை
அஹிம்சையே சான்ட் கடவுள் சத்திப்மே என் கடவுள். அநறிம்
பை நான் தேடும்போது மூலம் அதைக் sisateltin' Tir II சத்தியம் கூறுகிறது. சத்தியத்தை நான் தேடும் போது ஏன் மூலம் அதைக் i TRI GJIT E T si nji தீஹிம்சை கூறுகிறது.
"DDDDDim Dull Dinas D. Jim DowDim Du
தாஞேஎன்னவே இவருக்குசானி பர்? என்ற நாமகரணமும் உண்டு.
மாடுகளுக்கு புண் ணு க் குக் களனி காட்டுவார். (சில வேளே வில், கொஞ்சம் இடைப்பசி வந்து விட்டால் புண்ணுக்குக் கட்டிகளில்
சிலவற்றை உள்ளே தள்ளிக்கொள்
வதுமுண்டு)
பக்கன்றை மடியில் கிடத்தி: அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக் கும் ஜீவசந்துகளே தேடிப்பிடித்து
:என்ற சத்தி த் தோடு அவற்றின் உயிர்களே ாங்குவதில் அவருக்கு அலாதிப் பிரியம். இக் காரியமும் அவருடைய in Englls
ரில் இன்ன ஒரு நிரந்தரக் கட்சி! பாதிஜிட்டது.
மதியச் சாப்பாடு கரிய வில் வந்துவிடும் அதற்கு முன்னர் ஜி ஒTள் போட்ட்ால்தான் ரரப் பிடமுடியும் அவரால் ஆவருண்ட் உழைப்பின் முக்கால் LI (35,51 610) ILI களுத்துறைதான் விழுங்கிக்கொன் டிருந்தது. சிறிதுசிறிதாக கச் கறிந்து போட்டுபட்ட் தண்ணீர் இடையிடையே எறியப்பட்ட கரி சாப்பாடு வயிற்றின் சு: யைக் கூட்டிவிட்டு இரண்டிலிருந்து நாலு மணி வரை ஒரு குட்டித் துரக்கத்திை அவருக்குக் கொடுத்து
போத்தல்கள் கழுவல் தெர்ட்ர்ந்து சர்க்.புர்க் 萱、
டு கர். புர் என்று பலவித
Tii:: தயங்களே குற: என்னும்
ப்ோது ஒரு காலமும் குறு: விடுவ்து இல்லோன்று எத்தின்பே ப்ேருக்கு பெருமையாகச் சொல்லி யிருக்கிருர் அவர்
இரால் விட்டுவிட்டு சீரியாக நாலு மணிபோல் எழுந்து விடுவார் தான் துயில்கொள்ளும்
திரும்பவும் நிTஐ as irão
ாடுத் தொழுவத் துப்பதிவு: அன்தத்
பாவ் போத்த in Fiti (E. ஒவ்வெ TI
இட்டுப் படிக்கட்டுகளிலும் ஏறி
இறங்கிவிட்டு நின்னேரம் ஆறு னிேக்கு தன் குடிசைக்கு வந்து விடுவார்
அவரது வளவிற்குள் இருக்கும் இபரிய கிண்று - பாவில் தண்ணீர் கலப்பதற்கு மட்டும் உதவுவதில்லே பொழுதாவது இருந்து விட்டு குளிப்பதற்கும் அவருக்கு தீவில் துண்டு. குளித்து :பப் பிறவி ஆக்கிக்கொண்டாராஜல் காத்துக்
ாேண்டிருக்கும் அதைப் போத்தல் களுத்துறையும் காவியாகும் வரை
வெளியே இவரிக்கிடமாட்டார்.
Tal மணிக்கெல்லாம் வெற்றிலக்கடை கிருஷ்ணன் கடே யைப் பூட்டிக்கொண்டு முற்றத்தில் பரவிக் கிடக்கும் குது ர்ேவிங் துர்ப்ந்துவிடுவார். செல்லத்தம்பி பரின் ஒரேயொரு நண்பர் ஆவர் தான்) நல்ல இய்ோடு அவரிடம் வருவர் செல்லத்தம்பியர் இரவு
பத்து வரை அவரோடு நன்ருகக் கதைப்பார். இல்ல்ே. சுத்துவர்
: உரையாடவின்போது Slight) :ங்கள் "அவர் வாயிலிருந்து வழமைபோல் வந்துவிடும்'
"குட்ப அண்ண்ே ானக்குச் கோபம் வராது வந்துது
IJFTIGHTij ரியாதியைப் பற்றி 臀山市 சிக்கமாட்டன். :ன ஆரெண்டு
LIrri "Lirir. ) *r::-:- நான் நல்லவனுக்குநல்லவன் தே டவனுக்கு கிெட்ட்வன்.ஆ'
 
 

யாரை இப்படியெல்லாம் பேசு திருரென்று அவருக்கே தெரியாது. ஆஞ்றல் ஒவ்வொரு நாளும் அப்ப டிப்பேசி மறப்பதில்லை."
...ទោះជានាyprឆ្នាំ மான காரியங்களே
'குட்டியிட்ம் கதைக்கும்போது
அவர் கூறிய ஒரு விஷயம் அவரது
உள்ளத்தின் தெளிவை எல்லோ ருக்கும் எடுத்துக் காட்டிவிட்டது. "அண்ணே எனக்கு பெண்
ராதி, பிள்ளே குட்டியெண்டு ஒரு
வருமில்லை. ஆருக்கு ச் சேர்த்து
வைக்க நான் ஒருவருக்கும் நல்லது
செய்யேல்லே, நானும் என்ர'பாடும்
ாண்டுதான் இருக்கிறன், சாகிற துக்கு முன்னூல நல்லது செய்பாட் டிலும், செத்தரப் பிறகு நல்லது செய்து போட்டுத்தான் போவன்.' என்ர கண்ணோட்டாரண்னே. அதுதான் என்ர உடம்பிலேயே ஒரு cmarcmrリrriamリ、リ தானம் குடுக்கப்போதன் யாரா வது ஒருவர் என்ர கண்ண்ே ப் போட்டு ஆகுப்ார்க்க வேணு மென்றதுதான் என்ர ஆசை'
இந்தச் சின்னப்பால்காரருக்கு ப்படிப் பெரிய, உயரியலட்சியம் இருக்கிறதேயென்று ஆச்சரியப்பட் | Larratit IEJ RK GL ri.
இரவு பதினுெரு மணிக்கு மூட்டைகள் உறையும் கிழி ந் த பரயை விரித்து விட்டாரென்ருல்
தக்ேகு இருக்கவே இருக்கிறது
என்னேயில் குளித்துக் குளித்து அழகும், அழுக்கும் பெற்றுவிட்ட 2.
心、 நான்கு மனிபோல் முருங் கைக் கிரேகள் ஓடிக்கும் சட்சட்வென்ற சப்தம் தெருவில் வழமைபோலக்
கேட்கத் திெட்ங்கிவிடும்'
சின்னத்தன. அவர் செய்து கொண்டிருந்தாலும், இரண்டொகு நாட்களுக்கு முதல் கிருஷ்ணன்
一*
பள்ளியில் படிக்கும் பிள்ளை
படிப்பினில் கருத்தை ஊன்ற தெள்ளமு தனய கல்வி
செம்மையாய்ப்பதியும் பாடம் கள்ளகுய் கவனம் விட்டு
கருத்தினேச் சிதற விட்டால் உள்ளத்தில் ஒன்றும் நில்லா
ஒடியே ஒழிவு மப்பா!
பற்றுவை கல்வி மீது
பக்திவை தெய்வம் மீது கற்றிடு உயர்ந்த கல்வி
リー』リリGcm பற்றதற் கல்வி ஒதி
உயரிய சேவை செய்தால் சுற்றதின் பயனேப் பெற்று
கருணேயாய் வாழலாமே!
படித்திடும் அறிவு பாலாய்
马rf、山r凸画、一。 எடுத்திடுவிடாமுயற்சி
என்றுமே தோல்வி யில்லே பிடித்திடு உறுதி யுள்ளம்
பெண்மையை மதித்து வாழு வடித்திடு கவிதைத் தேனே மக்களேச் சேர்த்து வாழு
பார்தளில் பண்பு ஓங்க
பார்வையில் கருணே பொங்க ஏர்தன்ே ஏந்தி வாழ்வில்
ஏழ்மையைப் போக்கி அன்பு றாரெல்லாம் வளர என்றும் உண்மையே பேசி நாளும் பேரெல்லாம் பெற்று வாழ பிள்ளேகாள் ஓடி வாரீர்
-சேனேயூர் அ. அரசரெத்தினம்.

Page 20
"மலர்' மாணவர் இலக்கிய வளர்ச்சித் திட்டம் மாணவர் சிறுகதைப் போட்டி - 1971 முடிவு திகதி 31-12-71
፻
படைப்பிலக்கியத்தில் மாணவர்களின் ஈடுபாட்டையும், ஆற்றலை யும் வளர்க்குமுகமாக 'மலர்' மாணவர் இலக்கிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் முதற்படியாக, சிறுகதை, கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
அகில இலங்கைத் தமிழ்ததின விழாவையொட்டி இப்போட்டிகள் இடம் பெறுவது மிகவும் பொருத்தமானது என நம்புகிருேம்.
போட்டிக்கான நிபந்தனைகள்
x சிறுகதைகள் மாணவரின் சுய சிருஷ்டியாக இருக்கவேண்டும். அவை 'பூள்ஸ்காப்' காகிதத்தில் 8 பக்கங்களுக்கு மேற்படக் dial-figil.
x சமூகக் கதைகள், மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக, வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமைதல் வேண்டும். வரலாற்றுக் கதைகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட கற்பனைக் கதைகளாக அமைதல் வேண்டும் மாயா ஜாலக் கதைகளுக்கும் துப்பறியும் கதைகளுக்கும் இடமில்லை.
x போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதையுடன், பாடசாலை அதி பர்/தலைமையாசிரியரின் அத்தாட்சிப்பத்திம் (கீழுள்ள பத்திரத் தில்) இணைக்கப்பட வேண்டும்.
x மூவர் கொண்ட நடுவர்குழு சிறுகதைகளைப் பரிசீலனை செய்து
தேர்ந்தெடுக்கும் முதல் மூன்று சிறுகதைகளுக்கும் முறையே
1ம், 2ம், 3ம், பரிசுகள் வழங்கப்படும். பரிசுகள் பெறுமதி வாய்ந்த ஈழத்து நூல்களாக அமையும்.
x பரிசுபெறும் கதைகள் 'மலரி'ல் பிரசுரம் செய்யப்படும். த கு தி வா ய் ந் த ஏனைய கதைகளும் பிரசுரத்துக்கெடுத்துக் கொள்ளப்படும்.
一亲一
36

** மலர்”* மாணவர் இலக்கிய வளர்ச்சித்திட்டம் IDIGOJTaxi 36605Ë GJITI9 - 1971 முடிவு திகதி 31-12-71
நிபந்தனைகள்
கவிதைகள் மாணவரின் சுயசிருஷ்டியாக இருக்க வேண்டும். அவை 'பூள்ஸ்காப் காகிதத்தில் ஒரு பக்கத்திற்கு மேற்படக்கூடாது. கவிதைகள் எப்பொருள் பற்றியும் அமையலாம். அவற்றில் எளி
மையும் இறுக்கமும் இருத்தல் வேண்டும். யாப்பு விதிகளுக்கும் அமைதல் வேண்டும். பாடசாலை அதி பர்/தலைமையாசிரியரின் அத்தாட்சிப்பத்திரம் (கீழுள்ள பத்திரத்தில்) இணைக்கப்பட வேண்டும். மூவர் கொண்ட நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் மு த ல் மூ ன் று கவிதைகளுக்கு முறையே 1ம், 2ம், 3ம் பரிசுகள் ஈழத்து நூல்க ளாக வழங்கப்படும். بع பரிசு பெறும் கவிதைகளும், தகுதிவாய்ந்த ஏனைய கவிதைகளும் * மலரி'ல் பிரசுரமாகும்.
அதிபர்/தலைமையாசிரியரின் அத்தாட்சிப்பத்திரம்
'மலர்’ சிறுகதை / கவிதைப் போட்டி - 1971.
மாணவன்/மாணவி முழுப்பெயர்:- பிறந்த திகதி:- . வகுப்பு:-
Lirr frtaut Guturit:-
முகவரி;-
இத்துடன் இணைந்துள்ள. என்னும் சிறுகதை / கவிதை எனது பாடசாலையில் கல்வி பயிலும் பேற்படி மாணவனின் / மாணவியின் சுயசிருஷ்டி என இத்தால் அத்தாட் சிப்படுத்துகிறேன்.
மாணவர் கையொப்பம் அதிபர்/தலைமையாசிரியர்
கையொப்பம் திகதி.
37

Page 21
விகட மன்னர் வின்ஸ்டன் Gesté66)
ஒரு சமயம் வின்ஸ்டன் சேர்ச் சில் குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குளியலறையிலிருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்கவே, வெளியே நின்றிருந்த அவருடைய உதவியாளர், 'என்னையா அழைத் தீர்கள்?" எனக் கேட்டார். உடனே குளியலறையிலிருந்து பதில் வந்தது: ** நன் உங்களை அழைக்கவில்லை நண் பரே, இங்கே மக்கள் சபை முன் பேசிக்கொண்டிருக்கிறேன்.'
刹 爱 ※
பத்திரிகையாளர் மகா நாடு ஒன்றின்போது ஒரு யாளர் வின்ஸ்டன் சேர்ச்சிலிடம் ** இளம் அரசியல்வாதி ஒருவனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் எவை யென்று உங்களால் கூறமுடியுமா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார். சேர்ச்சில் வழக்கமான தமது கூர்மையான பார்வையை ஒருமுறை அங்கிருந்தோர் மீது வீசி ஞர். அங்கு கூடியிருந்தோர் அனை வரும் சேர்ச்சில் ஏதோ ஆழமான கருத்தை வெளியிடப் போகிமுர் என எண்ணிக் கொண்டார்கள். **ஆம் என்னுல் கூறமுடியும்? ஒரு இளம் அரசியல்வாதியிடம் இருக்க வேண்டியது ஆற்றல். அதாவது, நாளை நடப்பது, அடுத்த வாரம் நடப்பது, அடுத்த வருடம் நடப் பது எல்லாவற்றையும் முன்கூட் டியே சொல் லி விட க் கூடிய ஆற்
D.G. . . . . .
சேர்ச்சில் ஒரு கணம் நிறுத்திக் கொண்டு தாம் கூறியவற்றைப்
38
பத்திரிகை
பத்திரிகையாளர்கள் எல்லோரும் குறித்துக் கொண்டார்களா என் பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேல்ே தொடர்ந்தார்: "அதோடு, தான் கூறியபடி ஏன் எதுவுமே நடக்கவில்லை என்பதற்குப் பின்பு விரிவான விளக்கங் கொடுக்கக் கூடிய ஆற்றலும் அந்த அரசியல் வாதிக்கு இருக்கவேண்டும்.'
வின்ஸ்டன் சேர்ச்சில் ஒரு சம யம் அட்லாண்டிக் நாடுகளில் சுற் றுப் பயணஞ் செய்துகொண்டிருந்த பொழுது ஒரு பெண் அவரிடங் கேட்டாள்: ‘'நீங்கள் மேடையி லேறிப் பேசும் ஒவ்வொரு சமயமும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழி கிறதே, இதனைக் கண்டு நீங்கள் வியப்புணர்ச்சி கொள்வதில்லையா?”
சேர்ச்சில் அமைதியாகப் பதில் சொன்ஞர்: 'உண்டு அம்மணி. ஆணுல், அப்படி வியப்புணர்ச்சி கொள்ளும் அதே சமயம். மேடை
யில் நான் பேசுவதற்குப் பதிலாக
அதே மேடையில் என்னைத் தூக்கி லிடுவதாக இருந்தால் மக்கள் கூட் டம் இன்னும் இரட்டிப்புத் தொகை யாக இருக்கும் என்பதையும் நான் சிந்தித் துப் பார் க் கத் தவறுவ தில்லை."
狼
ஒரு சமயம் நண்பர் ஒருவர் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பார்த்து, 'நீங்கள் சாவைப்பற்றி என்ன நினைக் கிறீர் கள்?' என்று கேட் L-ÎfT,
சேர்ச்சில் பதிலுக்குச் சிரித்து விட்டுச் சொன்னர்: "நான் என் னைப் படைத்தவனைச் சந்திப்பதற்கு என்றை க்கு மே தயாராக இருக்
கிறேன். ஆணுல், என்னைப் படைத்
தவன் என்னைச் சந்திப்பதற்குத்
வேறு விஷயம்.'
- தொகுத்தவர்: அ. சோமாலன்.

இருளின் இதமான அரவணைப் பில் உலகம் ஸ்மரணையற்று உறங்
கிக் கொண்டிருந்தது. ஏதேச்சாதி,
கார தோரணையில் வானப்பரப்பில் உலவிக் கொண்டிருந்த வெள்ளி நிலா தன் எழுச்சிக்கு இடையூரு கத் தோன்றிக்கொண்டிருந்த கரு மேகக் கூட்டங்களுட் புகுந்து அவை களை நிர்மூலமாக்கிக் கொண்டு தன் எல்லையில் முன்னேறிக்கொண்டிருந் தது. எல்லைகாண முடியாதவாறு பரந்துவிரிந்த நீலத்திரைக் கடல், நிலவின் தண்ணுெளியிற் கட்டுண்டு "ஹாஹா' காரம் செய்துகொண் டிருந்தது. நெடுந் தூரத் தி ற் கு நெடுந்தூரம் விரவிக்கிடந்த வெண் மணற் கரையில் ஆங் கா ங் கே தோன்றிய சிலமணற் திட்டுக்கள் பூதாகாரமாய் தோன்றிக் கொண் டிருக்க, வானளாவ உயர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் கீழாக கடற்கரையையண்மித்து இரு மனித உருவங்கள் வீற்றிருப்பது நிலவின் மங்கிய ஒளியிற் தெரிந்தது.
பக்கத்துக் கி ராம மொன்றி லிருந்து எழுந்த தெரு நாய்களின் ஊளைச்சத்தம் கர்ண கடூரமாய் ஒலித்து ஒ ய் ந் த தை யடு த் து, தொண்டை கிழியக் கத்திக் கொண் டிருந்த சேவலொன்று மறுநாளு தயத்தை நினைவூட்டிக் கொண்டி ருந்தது. கடற்கரையில் இலேசாக வீசிக்கொண்டிருந்த குளிர்காற்று
சிலவேளை தன் சக்தியை அதிகரித் துக் கொண்டபோது அண்மித் திருந்த தென் ன ங் கீற்றுக் கள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந் தன. இத்தனை ஆரவாரங்களுக் கிடையில் தம்மையர்ப்பணித்துக்
கொண்டிருந்த அவ்விரு உருவங்
களும் எந்தவித சலனமுமின்றி தம் கண் ணுக் கெட்டிய தூரத்திற்கப் பால், அப்பாலுக்குமப்பால் சூன் யத்தை வெறித்து நோக்கிக் கொண் டிருந்தன. தம் வாழ்க்கையின் எல் லைக் கோட்டில் துன்பமும் துரதிஷ்ட மும் ஆடிய நிர்த்தாட்சண்ய நிலை யைக் கண்ணுற்ற அவ்விரு உருவங் களினதும் 'வைரத்தில்" கனல் பற்றியது. இருவரும் ஏககாலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டு நோக்கினர். பா வம் ! ஆணும் பெண்ணுந்தான் அவ்விரு உருவங் களும்.
பெண்களுக்கே இயல்பான பல வீனம் துன்பத்தின் கொடிய கரங் களை எதிர்க்கத்திராணியின்றி அப் பேதையின் கண்களிற் கண்ணிரைப் பிரதி பலித்தது. நிலவொளியிற் பளிச்சிட்ட அக் கண்ணிர் அவனது இதயத்தில் கூரிய முள்ளாகப் பாய்ந்தது. அவளை இறுக அணைத் துக் கொண்டான். “விஜி! எப்படித் தான் நம் மனதை நாம் திடப் படுத்திக் கொண்டாலும் இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் பலவீனம்
கடவுள் நீதி வழங்கிவிட்டார்
எம். ஏ. நஜ"முதீன்.
39

Page 22
தலை காட்டுவது இயல் பு தா ன் அழாதே!’ ஆறுதல் வார்த்தைகள் அவனின் குரலின் ஆழத்திலிருந்து மெல்ல ஒலித்தன.
என்ன இருந்தாலும் அவள் பெண். பலவீனப்பட்ட அவளது நெஞ்சத்தில் தொக்கிநின்ற இலே சான துணிவுகூட இப்போது எங் கோ ஒளிந்து கொண்டது. "வேண்
டாம் சந்துரு எனக்கென்னவோ பய மா யிருக்கிறது. வீட்டிற்கே போவோம்." இறுதிவரை அவ
ளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட சங்கல்பம் குலைய ஈனஸ்வரக் குர
லில் ஒலிக்கிறது இந்த வார்த்தை,
கள். மேற்கொண்டு உரையாடல் எழவில்லை. ஒரு கணநேரம் அமைதி,
அ டி வா ன த் தி ல் தெரிந்த தெளிவையடுத்து பக்கத்து கிராமத் திலிருந்து காற்றில் மிதந்துவந்த மாதா கோயில் மணியோசை இரு வரையும் நிலை கொள்ளச் செய் தது. உணர்ச்சிபெற்றுத் திடீரென எழுந்த சந் துருவும் விஜயாவும் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பில் உற் சாகமின்றி நடந்து கொண்டிருந் தனர், தத்தம் வீடுகளை நோக்கி.
米 米 米
புலர்ந்தது. இரவு بويه الا6 முழுமையும் நித்திரையின்மையால் சந்துருவின் கண்கள் சிவந்திருந்தன. பகற் பொழுது முழுவதும் சந்துரு தன் அறையிலேயே தூங்கினன். அவன் கண்விழித்தபோது மாலை ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது. அவனது சிந்தையிலும் மனதிலும் ஏற்பட்டிருந்த ஒரு தெளிவு தனது திருமண விடயமாகத் தந்தையிடம் ஒரு இறுதி முடிவு கோரத் தூண் Լգ-Ամ 5l.
அவன் தன் தந்தையிடம் செல் லும் பொழுது இரவு ஏழு மணிக்கு
மே லா கி யிருந்தது. மழைக்கால மாகையால் இடைய ரு து வீசிக் கொண்டிருந்த குளிர் காற் ருே டு மழையும் சிறு தூறலாக ஆரம்பித் தது. வானத்தில் கவிந்திருந்த கரு மேகக் கூட்டங்கள், பெருமழைக் குரிய சங்கேதத்தை நிதர்சனமாக் கிக் கொண்டிருந்தன. இடை யிடையே தோன்றிய மின்னெளி யும் இடிமுழக்கமும் பயங்கரமான ஒரு சூழ் நிலை யை உருவாக்கிக் கொண்டிருந்தன. இச்சமயத்தில் தன் அறையிலிருந்து வெளிவந்த சந்துரு பெரியதொரு பிரச்சினைக் குத் தீர்வு காணும் உணர்ச்சியோடு தந்தையை நாடினன். அவனது மனதில் வைரம் பாய்ந்திருந்தது.
தந்தையையண்மித்த அவன், 'அப்பா'! எ ன் மு ன் மிகவும் வரண்ட குரலில், ஏங்கோ பார்வை யைச் செலுத்திக் கொண்டு சிந் தனையில் ஆழ்ந்திருந்த சுப்பையர் குரல் வந்த திசையில் தன் பார்வை யைச் செலுத்தினர். களையிழந்து வரட்சியாகக் காட்சிதந்த அவர் முகத்தில் கவலையின் ரேகைகள் கப்பியிருந்தது பளிச்செனத் தெரிந் 凸gj, −
"ஏன்?" என்ற பாவனையில் சந் துருவை நோக்கினர்.
"அப்பா! விஜ யா  ைவ நான் மணந்து கொள்வது உங்களுக்கு இஷ்டமில்லை. காரணத்தையாவது கூறினல். ” விகஸத் தோடு தோன்றியொலித்த அவனது இத் தொனி முடியுமுன்னரே, சுப்பையர் ஆவேசமாகக் கத்தினர்; ‘சந்துரு ! எதுவுமே என்னிடம் கேட்காதே!” வலுவான வார்த்தைகள் சுப்பை யளின் வா யிலிருந்து வெடித்த போதும் அவன் விட வி ல் லை. தந்தையோடுவிவாதிக்கத் தொடங் கினுன் ,
40

நேரம் கரைந்தது!
சந்துரு இறுதியா க க் கூறினன். ** அப்பா! காரணம் எதுவுமே நீங் கள் கூருவிட்டால் என்னுடைய முடிவு இதுதான். ". வார்த்தை
கள் முடியுமுன்னரே அவன் சட்
டைப்பையிலிருந்த ஒரு சிறு புட்டி அவனது கைகளுக்கு மாறியது.
எதிர்பாராக நிகழ்ச்சியால் சுப் பையர் வெலவெலத்துப் போனர். உணர்ச்சி பெற்றுத் திடீரென எழுந்த அவர், அவன் கையைத் தட்டிவிட்டார். சற்று தூரத்தில் அச்சிறு புட்டி உருண்டு விழுந்தது.
** சந்துரு என்ன காரியம் செய் யத் துணிந்த ரா ப்? உனக்காகவே நான் வாழ்ந்துகொண்டிருப்பதை, நீ உணரவில்லையா? மகனே, நீ விஜ யாவை மணக்க முடியாத நிலையி விருக்கிருய்."
பரிதாபமான இந்த வார்த்தை கள் அவனுக்கு விசித்திரமாகத் தோன்றியது. " " ஏன்' என்று கத்தி னுன் பேய்பிடித்தவன்போல.
"அவள். அவள்.” சுப்பையரின் தொண்டையை யாரோ கண்ணுக் குப் புலப்படாத அரக்கனெருவன் நெரிப்பதான ஓர் உணர்வு அவ ருக்கு ஏற்பட்டது. மரணுவஸ்தை யில் சிக்கித் தவித்துக் கொண்டி ருந்தார். தந்தையின் இந்த விசித் திர நிலை அவனுக்குப் பேரதிர்ச் சியைக் கொடுத்தது,
தொடர்ந்த சுப்பையர், "அவள் நடத்தை கெட் ட. வ. ள்!?? என் ருர் திக்கிக் திணறி. அவரது தலை இலேசாக ஆடியது. அருகிலிருந்த தூணைக் கெட்டி யாகப் பற்றிக் Gd, T6ir LIT it.
சந்துருவுக்கு உணர்வே அழிந்து விட்டது. ஆயிரமாயிரம் சம்மட்டி
4.
கள் தன் தலையில் மோதுவதான உணர்வு அவனது இதயத்தில் சில் லிட்டது. அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அவ னது வாழ்வில் இப்படியொரு அழிய முடியாத அ வ மா ன ம் ஏற்பட் டதை அவன் என்ணியபோது, அவ னது உள்ளத்திலேறிய மிருகவெறி, எங்காவது ஒரு ஆழ்ந்த சமுத்திரத் தில் அவனை அர்ப்பணிக்கத்தூண்டி யது. தந்தையின் தோள்களைக் கெட்டியாகப்பற்றிக்கொண்ட சந் துரு, 'எப்படித் தெரியும்?” என் றன். அவனது தோற்றம் விகார மாகத் தோன்றியது.
சிறு தூறலுடன் ஆரம்பித்த மழை இப்போது பயங்கரமாக உருக்கொண்டது. மின்னலும் இடி யும் அந்நிலையை மிகைப்படுத்திக் கொண்டிருந்தன.
“எப்படித் தெரியுமா? அவள். தாய் ஒழுக்கம் கெட்டவள். அத
ஞல். அவள். அவளும் ஒழுக்கம் கெட்டவள்’ - சுப்பையர்
** அப்பா!' என்று அலறிஞன் சந்துரு - மயான அமைதி.
இப்போது சந்துரு பேசின்ை.
*அவள் தாய் ஒழுக்கம் கெட்ட
வள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
"எனக்கு நிச்சயமாகத் தெரி պլb 1’
* "நிரூபிக்க முடியுமா?"
'எனக்கு நிச்சயமாகத் தெரி யும் என்கிறேன்-'
**அதற்கு ஆதாரம்?”
'டேய்!” அதட்டிஞர் சுப்பை யர்' என்னடா குறுக்கு விசாரணை செய்கிருய்? நான் சொன்னல் உன் ணுல் நம்பமுடியாதோ?"
"அப்பா ! இது சாதார ண வார்த் தையல்ல. நெரு ப்பு. ஒரு

Page 23
வித்தும் விளைவும் 一藻一
பாவம் செய்வோர் இவ்வுலகில் பணத்தைக் கட்டி ஆளுகின்ருர்! தீபம் ஏற்றி உனைவணங்கித் திவ்விய பூஜை செய்திடுவோர் லாபம் இன்றி எந்நாளும், நலிந்தே இங்கு வாடுகின்ருர், சாபம் ஏதும்உண்டாமோ?
சமத்துவ மானநீதி இதோ?
உயிரை வதைத்து வாழ்ந்திடுவோர் உயர்ந்த நிலைக்கு வருவதுமேன்? பெயரை வளர்த்துவாழ்ந்திடுவோர் பெரிதும் நலிந்து வருந்துவதேன்? வயிற்றை நிறைக்க வழிதெரியா வாடும் நிலையைத் தந்ததுமேன்? உயிருக் குயிராய் இணைகின்ற உண்மை பேசச் செய்வதுமேன்?
அன்பிலா ரெல்லாம் அமைதியுடன் அவனியில் வாழுதல் முறையாமோ? அன்புளார் நோய்பிணிக் காளாகி அழிந்தே மாளுதல் அழகாமோ? இன்புடை வாழ்க்கை இவ்வுலகில் இருக்கும் செல்வர் தமக்காமோ? துன்பும் துயரும் ஏழைகளின்
துணையா யிருக்கும் சொத்தாமோ?
“இறைவா! இதற்குன் பதிலென்ன? இங்கென் மயக்கந் தீர்த்திடுக!’ இறைவன் இளநகைசிந்திட்டான்! **இகமதில் வாழ்ந்திடு மாந்தர்க்கு வரையிடும் "விதி’யொன்
றிருக்கிறது மனத்தால் வாழ்வே வாழ்வாகும் குறைவற முற்பகல் வித்திட்டால் குவியும்பிற்பகல் விளை" வென்ருன்
- புரட்சிபாலன்.
திருமலை.
*
|னையே அல்ல.
குடும்பத்தையே அழிக்கும் பெரு நெருப்பு. அதனுல்தான் இவ்வளவு தூண்டித் துரு விக் கேட் டேன் . போகட்டும். என் விஷயத்தைப் பொறுத்தவரையில் அது பிரச்சி தாய் இழைத்த பாவத்துக்கு மகள் பழியாக முடி யாது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.-**
'நிறுத்தடா இந்த விஷயத்
தில் தாய் செய்த பாவம் மக
யும் சாரும். அது கடவுளின் நீதி!??
*பளிர்!’ வெட்டியது மின் னல்
"அப்பா!' என்று அலறிஞன் சநதுரு
இடி இடி. இடி. இடி. இடி இடி இடி இடி இடி என இடித்து ஒயநதது வானம.
நீண்ட நேரமாக அலறிய சந் துருவின் குரல் இடியோசை அடங் கிய பின்னரே சுப்பையரின் காது களில் விழுந்தது.
*"ஐயோ என் கண்கள்! எங்கே என் கண்கள்!! எங்கே!? எங்கே!!?’’
கதறினன் சந்துரு.
கண்கள் பிதுங்கி வெளியேற விழித்தார் சுப்பையர்.
'சந்துரு சந்துரு மகனே சந் துரு ஐயோ சந்துரு! தாயின் பாவம் மகளைச் சேருவது கடவுளின் நீதி என்றேன். தந்தையின் பாவ மும் அப்படித்தான் என்பதைக் கட வுள் சரியாக உணர்த்திவிட்டார் கடவுள் நீதி வழங்கிவிட்டார் . சந்துரு கடவுள் நீதி வழங்கி விட் டார். மகனே கடவுள் நீதி வழங்கி விட்டார். ஹஹ் ஹாஹா ஹா!”
சுப்பையர் சிரித்துக்கொண்டே யிருந்தார். O
42

தீம்பையர் க று ப் புக் கரை யிட்ட நாலு முழக் கதர் வேட் டியைக் கட்டிக்கொள்கிறர். குறி யில்லாத ஆறுமுழச் சால்வை அவ ரது தோளை அலங்கரிக்கிறது. குடும் பியைத் தட்டி முடிந்து கொண்டு அனுபவத்தின் சா ய ல் படி ந் த வெளுறிப்போன குடையைக் கமக் க ட் டி னு ள் வைக்கிருர், அவர் மனைவி மாணிக்கம் அவசரம் அவ சரமாக மாவிட்ட புரத்து வெற்றி லையில் பத் து, குருநாகல் கழிப் பாக்கு, கொட்டைப்பாக்கு என்ப வற்றில் வகைக்கு நாலு, தாவடி யில் பு  ைகயிலை ஒன்று, ஏலம் க ர 7 ம் பு காச்சுக் கட்டி - இத்தி யாதி வஸ்துக்களை வல்லுவத்துள் வைக்கிருள். ‘சுண்ணும்பும் வைச் சிருக்கிறியோ?" எ ன் று அவர் தனது ஞான திருஷ்டியால் அறிந் தவர்போல் ஒரு விஞ  ைவ த் தொடுக்கிருர், ஏ தோ, பெரிய தொரு தவறைச் செய்துவிட்டவள் போலப் பதைபதைத்து வெங்க லத்தில் வார்த்தெடுத்த சுண்ணும் புக் கரண்டாகத்தையும் வல்லுவத் துள் வைக்கிருள். தொழிற்சாலையிலிருந்து கிளம்பும்
வீட்டில் நடந்தது
“முல்லைமணி”
சீமே ந் து த்
**இஞ் சரு ங் கோ உங்களைத் தான் எங்கள் வீ ட் டி லு ம் ஒரு குமர் கரைசேராமல் இருக்குதெண் டதைக் கொஞ்சமும் யோசிக்கிறி யள் இல்லையே' மாணிக்கம் முணு முணுக்கிருள்.
'எடியே மாணிக்கம் எனக்குத் தெரியும் என் ரை பிள்ளையின்ரை கலியான விஷயம்'
'இப்பிடித்தானே இ வள வு காலமும் சொல்லிவாறியள்'
எ ன் னை ச் சில் ல  ைற ஆளெண்டு நினைக் கா தே. இண் டைக்கு முற்ருகப் போற கொடி கா மத்துச் சம்பந்தத்தாலே ஐந் நூறு கிளம்பும் அடுத் த வேலை தங்கச்சியின் ரை கலியாணம்தான்” என்று கூறிக்கொண்டே மத மத வென்று வளர்ந்து விட்ட வெற்றி லைக் கொடிகளைப் பார்க்கிரூர்.
*சைரன்" ஒலி நேரம் காலை ஏழரை மணியென்று அவருக்கு நினைப்பூட் டுகின்றது. சா த க க் கட்டுக்கள், போட்டோக்கள், ப ஞ் சாங்கம் போன்றவைகளைக் கைப் பை யு ள் இட்டுக் கொள்கிருர். இத் தனை ஆயத்தங்களும் நடைபெறுகி ற தென்ருல தம்பையர் எ ங் கோ தொலையூருக்குத் தொழில் சம்பந் தமாகக் கிளம்புகிருர் எ ன் பது தான் அர்த்தம்.
அடுத்த வீட்டுச் சின்னத்தம்பி வெற்றிலைக்கொடிகளை முருக்கம்கதி யாலில் பிடித்துக் கட்டிக்கொண்டு நிற்கிறன். தானகப் படரமுடியாத கொடிக்கு ஆதாரம் தேடும் சின் னத்தம்பியைப் பார்க்கும் போது அவனது செயலைத் தனது தொழி லுடன் இணைத்துப் பார்க்கிருர், ஆம் 'அ' வ ரு ம் படரத் துடிக்கும் பருவ ககொடிகளுக்குக் கொழு கொம்பு தேடும் முயற்சியில்-தரகு
43

Page 24
வே லை யி ல் - ஈடுபடுபவர்தானே! தம்பையரின் ம க ள் ல தா வும் வாளிப்பாக வளர்ந்து நிற்கும் கொடியென்பதைத் தானே மாணிக் கமும் நினைவூட்டினுள். த ந்  ைத கடமையில் தவறும்போது சொல் லவேண்டியதைத்தான் மாணிக்கம் கூறினுள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எத்தனையோ கலியானத் தரகர் கள் இருக்கலாம். ஆனல் 'கல்யா ணத் தரகர்’ என்று கூறினல் அது தம்பையரைத்தான் குறிக்கும். அவ் வளவுக்கு அவரின் பெயரும் தொழி லும் பிரசித்தமானவை.
ஒ ங் கி வளர்ந்த ஒல்லியான தோற்றம்; துலாக் கொடி போல் நீண்டமுகம்; த ந் த வைத்தியக் க லா நிதி யி ன் உதவியின்றியே கழன்றுபோன பற்கள்ைத் த வி ர எஞ்சி நின்று நடனம் புரியும் வெற் றிலைக் கா வி யே நி ய பற்கள்; அகன்ற நெற்றியும் வழுக்கையும் சங்கமமாகிய பா வனத்தைச் சுற்றி இடையிடையே புடலம் பூ வைப் போல நரைத்துவிட்ட மயிர் களுடன் காணப்படும் ஐதான மயி ரின் கூட்டம்; தர்ப்பை முடிந்து விட்டது போன்ற குடுமி, அரை நூற்ருண்டைத்தாண்டிய அனு ப வத்தின் ரேகை நிறைந்த நெற்றி; பன்னினல் இழைக்கப்பட்டுக் காக் கித் துணியினல் உறையிடப்பட்ட கைப்பை - இத்தனையும் சேர்ந்தது தான் தம்பையரின் உருவம். அவ ரின் செவ்வாயிலிருந்து சிந்து ம் மோகனப் புன்னகைக்கு எவரை யும் - சிறப்பாகப் பெண்ணைப் பெற் றவர்களை - மயக்கும் சக்தியுண்டு தம்பையர் தலைப்போட்ட சம்பந் தம் நிறைவேரு மல் போனதில்லை. அவரின் பெயரும் புகழும் கடல் கடந்த நாடுகளிலும் - தீவுப்பகுதி களிலும் ஆனையிறவுக் கடல் கடத்த வன்னிப் பகுதிகளிலும் - பரவியி ருந்ததென்பது அணுவளவேனும் புனைந்துரையாகாது. ஏன்? தரகு தொழில் புரிந்து கல்வீடு கட்டிய பெருமை அவரையே சாரும்.
தரகு தொழில் இவரது பரம் பரைத் தொழிலன்று. மாவிட்ட புரத்தில் வசிக்கும் மற்றையவர்க ளைப் போலவே தம்பையரின் தந் தையும் வெற்றி ஃல ச் செய்கையி லேயே ஈடுபட்டிருந்தார். தந்தை யின் தொழிலை மைந்தனும் பின் பற்றி இரண்டு பரப்புக் காணியில் வெற்றிலை நட்டிருந்தான். லட்சுமி கரமான வெற்றிலைப் பயிர்ச் செய் கையால் வீட்டிலேயும் இலட்சுமி கடாட்சம் நிலவும் என்று தம்பை யரும் நம்பி வநதார். செம்மண் ணைக் கலக்கி வாய்க்காலில் ஒடிவ ரும் நீரை வெற்றிலைப் பாத்திக ளுக்குப் பாய்ச்சும்போது செழித்து விரிந்த கரும்பச்சை நிறத்து வெற் றிலையின் அழகிலே மனதைப் பறி கொடுத்து நின்ற நாட்கள்; பக்கு வமாகப் பிடுங்கிய வெற்றிலையைப் படைபடையாக அடுக்கித் தட்டுக் களாக்கி சுன் ணு க ச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்ற நினைவு இன்றும் அவர் மனதிலே பசுமை யாக இருக்கின்றது. இப்பொழுது பெயரையும் புகழையும் பணத்தை யும் கொடுக்கும் தரகு தொழில் தொடங்கியதும், அவர் இல்லத் தரசி மாணிக்கத்தின் தா யை ச் சந்தையில் கண்டதும், மகளை வீட் டில் பாராமலே ம ன ம் செய்து கொண்டதும் - எல்லாமே சுன் னு கச் சந்தைக்குச் சென்ற தன் பலன் தான்.
கூட்டுறவு இயக்கமும் கொம் யூனிசத் தக்துவமும் என்னதான் வளர்ந்த போதும் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் த ர க ர் களு க் கு மெளசு குறையாது எ ன் ப  ைத அறிந்துதானே என்னவோ தம்பை யர் இத் தொழிலைத் தேர்ந்தெ டுத்துவிட்டார்.
சுன்னுகச் சந்தையிலே காய் கறித் தரகை ஆரம்பித்த போது த ர க ர் வட்டாரத்திலேயிருந்து பல த் த எதிர்ப்புக் கிளம்பியது. கத்தரிக்காய்த் தரகர் கந்தசாமி யும் வாழைக்குலைத் தரகர் வடி வேலுவும் அவரை மிரட்டி உருட்
44

டிப் பார்த்தனர். இளமை முறுக் கும் எதற்கும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட தம்  ைப ய ர் மசிந்து கொடுக்க மறுத்து விட்ட பின்னர் தம்மினத்துடனே சேர்த் து க் கொண்டனர்.
உ ண்  ைம யி ல் சொ ல் ல ப் போனல் இந்தத் தொழிலிலுள்ள நெளிவு சுழிவுகளையெல்லாம் தம் பையர் கற்றுக் கொண்டது கந்த சாமியிடந்தான். காய்கறித்தரகர் புகையிலைத் தரகராக மாறி, ஆட் தித்தரகர் மாட்டுத்தரகராக உரு வெடுத்து இ ன் று வாழ்க்கையில் மிக உன்னதமான ஸ்தானத்தில் கல்யாணத்தரகராகப் பவனி வரு கின்ருர் தம்பையர்.
தம்பையர் இன்று கொடிகா மத்தில் பெண் ணு க் கு ப் பேசும் மாப்பிள்ளையும் தெல்லிப்பளையைச் சேர்ந்தவன்தான். சி மெ ந் துத் தொழிற்சாலையில் கிளா ர் க் 1 \வேலை பார்க்கும் நாதன், நாலு பேர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு மதிப்பு வாய்ந்த மாப் பிள் 3ள தா ன்! தம்பையருக்குத் ஆார த் து உறவுங்கூட. ஆனல், மூன்று தலைமுறைக்கு மு ன் ன ர் நாதனின் குடும்பத்தில் யாரோ ஒரு பெண் தாழ்ந்த சாதிக்காரன் ஒருவனுடன் ஓடிவிட்டாள் என்ற மாசு செவிவழிச் செய் தி யா க வந்து இந்தத் தலைமுறையையும் பாதிக்கிறது. இந்தத் தோஷத்தி ஞல் தெல்லிப்பழைப் பகுதி யில் பெண் கொள்வது கஷ்டம் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. தம் பையர் கொஞ்சம் முயற்சி எடுத் திருந்தால் இந்த மாப்பிள்ளையைத் தன் மகளுக்கு செய்திருக்கலாம். தன் விஷயத்தில் தம்பையர் மிக வும் கண்டிப்பானவர்; அது வு ம் சாதிசமய விஷயத்தில் மிக வும் நுணுக்கம் பார்ப்பவர், தம்பைய ரைப் பொறுத்த அளவில் அவ ருக்குப் பிடிக்காத சில பண்பாடுக ளும் நாதனிடம் உண்டு. கொஞ் சம் மொஸ்கோ வாடை, சமத்து
வப் பேச்சு - இவைகள்தான் தம் பையருக்குப் பிடிக் கா த அம்சங் கள். சோஷலிசம் பேசும் ஆசாமி கள் சில ர் கல்யாணம் செய்யும் போது மாத்திரம் உயர் சாதிப் பெண்ணையும் ஒரு லட்சம் ரூபா வையும் தேடுவதையும் அவர் அறி வார் . நாதன் அப்படிப்பட்டவன் போலக் காணப்படவில்லை. மூன்று தலைமுறைக்கு முந் தி ய இழுக்கு நாதனின் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்திருந்தது, தம்பையர் அறி யக் கூடியதாக அந்தக் குடும்பத் தினரைச் சபை சந்தியில் சேர்ப்ப தில்லை. இந் த நிலையில் சொந்த மகளுக்கு நாதனைத் தி ரு ம ண ம் செய்து கொடுப்பதென்பது நட
வாத காரியம்.
இந்த ரகசியங்களையெல்லாம் கொடிகாமத்துப் பெண் வீட்டா ருக்குச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம், அது "தரகர் தர் யமும்’ ஆக 1ா து. தப்பித்தவறி அவர்கள் இக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டுத் தம் பை யரைக்
OOOO
காந்தி மொழி - 2
உளத்துாய்மை
தன்னுயிரும் பிற உ யி ரு ம் ஒன்றே எ ன் கி ற உணர்ச்சியை அடைவதற்கு, முதலில் மனத்தில் தூய்மை வேண்டும். உள்ளம் துப் பரவாக இல் லா மற் போனுல், அஹிம்சை என்பது வெறும் கன வேயாகும். உ ஸ் ள த் தி ல் மாசு வைத்திருப்பவன் ஆண்டவனை க் காணமாட்டான். எல்லாக் காரி யங்களிலும், தூய்மையாக இருக்க வே ண் டு ம் , த ன் உள்ளத்தைத் தா ன் சுத்தப்படுத்திக் கொண் டால் சூழ்நிலை தாணுகவே சுத்தப் LuGB) b.
OOOOO
45

Page 25
கேட்டாலும் "பொருமைக்காரரின் புரளி என்ற சொற்ருெடரால் விளக்கி விடலாம்.
米、 米 : .
l கொ டி க n ம ம் "பஸ் ஸ்டான்டில் நின்ற பொழுதுதான் தம்பையரின் சிந்தனை தடைப்பட் டது. அவசரம் அவசரமாகக் கைப் பையையும் குடையையும் தூக்கிக் கொண்டு இறங்கினர். நூறு யார் துர ரத் தி ல் பெண் வீடு. பெண் பீ. ஏ. படித்த ஆசிரியை. தரக ருக்கு தடயுடல் வரவேற்பு.
'பிள்ளை பொற்கொடி தம் பையாண்ணைக்கு ‘அப்பிள் கிறஷ? கொண்டுவந்து கொடு" என்ற த ந்  ைத யின் கட்ட ளை  ையத் தொடர்த்து பொற்கொடியாள் வந்து தரகர் முன் தோன்றினுள். பெயரையும் உ ரு வ த்  ைத யும் பொருத்திப் பார்க்கிருர். ஐம்பது வீதம் பொருத்தம் - பொன்னிறம்; ஆன ல் கொடியென்று சொல்லி விடமுடியாது. மேலும் விமர்சனிம் செய்ய அவர் விரும்பவில்லை. தம் பையர் தன் தொழிலைத் தொடங் குகிருர்,
* பொடியன் குணமெண்டால் தங்கக் கம்பி பீடி சிகரெட் பழக் கமில்லை; சாதிவரவு உச்சம் அர சாங்க பா ஷை யி லே எட்டாம் வகுப்புப் பாஸ். சம்பளம் அல வன்ஸ் எல்லாம நா நூ று க் கு மேலே. இந்தச் சம்பந்தம் நிறை வேறினல் பெண்ணைப் பெற்ற ர் அதிர்ஷ்டசாலி" தரகரின் ஆலா வர்ணத்தைக் கழித் துப் பார்த் தால் அவர் கூறியதன் சாராம்சம்
இது.
வீடு வளவு இருபத்தையாயி ரம் ரொக்கம், பத்தாயிரத்துக்கு நகை, இருபது பரப்பு வயற்காணி. இவ்வளவும் சீதனம் கொடுப்பதா கப் பெண்ணின் தந்தை கூறியதன் பேரில் கல்யாணம் முற்ருகி விட் l-Sil.
**இந்தாருங்கோ இப் போ தைக்கு இதை வைச்சுக் கொள் ளுங்கோ’ மூன்று நூறு ரூபா நோட்டுகள் கைமாறுகின்றன.
'இதெல்லாத்துக்கும் இப் ப என்ன அவசரம்' எ ன் று கூறிய படியே அவசரமாக அவற்றைக் கொட்டைப் பெட்டியுள் வைக்கி ருர் தரகர்.
தலை நிமிர்த்த முடியgத அள வுக்கு நடைபெற்ற உபசாரித்தால்? தம்பையர் வீ டு செல்ல மு டி. ய வில்லை. பெண்ணைப் பெற்றவரின் வேண்டுகோளுக் கிணங்க தம்பை யர் அன்றிரவு அங்கேயே த ங் கி விடுகிருர்,
米 s
#
ി திரும்பிய தம்பையரைப்
பேரதிர்ச்சியொன்று எதிர் நோக்
குகிறது. மாணிக்கம் தலையில் கை வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக் கிருள். வளவு கொள்ளாத அளவு கூட்டம், அ வ ரின் ஒரே மகள் லதா, நாதனுடன் வீட்டைவிட்டே ஓடிவிட்டாள் என்ற செய்தி அவ ரால் சீரணிக்க முடியாததுதான். அவள் எழுதி வைத்த கடிதம்:
. சாதியைக் கா ட் டி ப் பேதத்தை வளர்க்கும் சமுதாயத் தின் அங்கமாகிய நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளமாட்டீர்கள். மாறி வரும் சமுதாயத்தின் பிரதிநிதிகள் நாங்கள். உங்களை விட்டுப் பிரிவது
துன்பந்தான். மன்னித்து ஆசீர் வதிக்க வேண்டுகிருேம்.
‘‘மன்னிப்பு. . “ கோபத்து
டன் பல்லை நெருமுகிருர் தம்பை
யர். 'எனக்குப் புத்தி சொல்லு
ருள் என்ரை மேள்"
"மாணிக்கம், வீட்டை கழுவி
விடு. எங்களின் ம க ள் செத்துப்
போய்விட்டாள் என்று நினைத்துக் கொள்வோம்’ ’
தம்பையர் வெறுப்பது காதல் கலியாணம்; விரும்புவது முதலா ளித்துவ சமுதாயம். எது நடக்கக் கூடாது என்று கருதினரோ அது நடந்துவிட்டது அவர் வீட்டில். கு
46

ՁՄllւյ!
துணையை இழந்த தனையே எண்ணி துடிக்கின்ருளே வாலையவள்!
உணர்வின் வடிவில் உதிரம் அதிர ஒடிவிழுந்தே அழுகின்ருள் கணவன் வாழ்வில் இறைவன் பிரிவால் கவலைக் கடலுள் ஆழ்கின்ருள் பிணமே கலங்கிப் பேசும் நிலையில் பெரிதாய் உயிரைப் பிழிகின்ருள் மண நாள் விட்டு ஒருநாள் செல்ல மாண்ட கணவன் துயராலே
துணையை இழந்த தனையே எண்ணி. துடிக்கின்ருளே வாலையவள்!
கூந்தல் கலையக் காந்தள் உயரக் கூவிக் கூவி அழுகின்ருள் ஏந்தும் மார்பில் இருகை கொண்டு எற்றி எற்றி ஆற்றினிலே, ܫ நீந்தும் ஒருவன் நிலையில் அன்னுள் நைந்து குலைந்து உருமாறி சாந்தம் ஒழித்த இறப்பின் கொடுமை தனையே கூறி அழுகின்ருள்?
துணையை இழந்த தனையே எண்ணித் துடிக்கின்ருளே வாலையவள்.
இட்ட உணவைச் சுவைக்குமுன்னம் இறைவன் செயலால் விபத்துண்ட கட்டு இளமை சொட்டும் தனது கணவன் பிரிவை அவளெண்ணி. கட்டுக்கடங்காத் துயராற் கொடிய காட்டில் இட்ட மகவாக; முட்டி மோதித் தட்டி வீழ்ந்து முடங்கிக் கிடந்தே அழுகின்றன்! துணையை இழந்த தனையே எண்ணித் துடிக்கின்ருளே வாலையவள்.
-- 6G6MGOOTGT.
47

Page 26
ரசனைக்
சிறந்த படைப்பு சிந்திப்பார்களா?
ஒரு சி ருஷ்டி கர்த்தாவி னுடைய படைப்பு சமுதாயத்தின் கூrண தசையடைந்த பகுதிகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் அமையப் பெற்றிருந்தால், அத்த கைய படைப்புக்கள் வாசகர்களது மனதில் சிறப்பான ஓரிடத்தை வகிக்கு மென் பதில் சந்தேகமே யில்லை. யதார்த்த பூர்வமான ஒரு சிருஷ்டி கர்த்தா எந்த நிலையில்,
அ. சோமபாலன்
அல்லது எத்தகைய அமைப்பில் கதைகளை உருவாக்கினுலும் அது தார் மிக வளர்ச்சியின் உயர்நிலைக்கு மக்களை இட்டுச் செல்லுமாயின், அந்நிலையிலேதான் அவனது சிருஷ் டிகள் உயிர்த்தெழுகிறது எனலாம். அன்றி 4 ம் அவ்விடத்திலேதான் படைப்பாளியின் சேவையும் பூர ணத்துவம் பெறுகிறது.
மார்ச் இதழில் அ. சோம பாலன் எழுதிய “சிந்திப்பார்களா’? என்ற சிறு கதை முழுக்கமுழுக்க மேற் போ ந் த கோட்பாட்டிற்
கடிதம்
கமைய, அமைவு பெரு விட்டாலும் அக்கோட்பாட்டின் பின்னணியில் ஸ்பஷ்டமாகத் தெ ரி யும் ஒரு படைப்பாக அ த னை யே தா ன் கொள்ள முடிகிறது.
இன்றைய உலகில், மனிதன் எவ்வளவுதான் நாகரிக முதிர்ச்சி பெற்றிருந்தாலும் சமூகத்தின் ஏற் றத் தாழ்வுகள் பற்றிய வரட்டு வேதாந்தங்கள் அவ னினி ன் று ப் இன்னும் நீங்கியபாடில்லை. இது சமுதாயத்தின் பெரும் துரதிஷ்டம் எனலாம். இறைவனது பார்வையில் அனைத் துயிர் களுமே சமமாகக் கணிக்கப்படுகையில், ம ணி த ன் மாத்திரம் அதற்கு முரண்டு பிடிப் பது அவனது மன, அறிவு ஆதி ய ன வ ற் றி ன் வளர்ச்சியின்மை யையே காட்டுகிறது.
ஆத்மபலம் அல்லது சமயங் கள், மனிதனை நல்வழியில் நடாத் திச் சென்று, இறுதியில் பேரின்ப வாழ்க்கைக்கு பற்றுக் கோடாயமை கின்றது எனும் தத்துவத்தையே பிரதிபலிக்கிறது. ஆகவே, மனிதன் பகுத்தறிவுக்குட்பட்ட கருத்துக் களைக் கொண்ட ஒரு சமயத்தைப் பின்பற்றுவதை நாம் குறைவாகக் கணிக்கமுடியாது. அப்படியானுல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று போதிக்கும் “இந்து சமயத்” துள் வி ர வி க் கிடக் கும் 'சாதி வெறிக் கொள்கை பகுத்தறிவுக் குட்பட்ட ஒரு கொள்  ைக யா? ** சாதிவெறி' இந்து சமயத்துள் பேணப்படவேண்டிய ஒரு அம்ச மாயின் நிச்சயமாக இந்து சமயம் ஒரு சமயமாக இத்தனை காலம் நிலைத்திருக்கமுடியாது.
இந்து சமயத்தில் உள்ள சாதி வெறியர்களுக்கு, சோமபாலனின் 'சிந்திப்பார்களா?’ சிறு க தை நல்ல சாட்டையடி கொடுக்கிறது.
48
 

**மனிதன் அனைவருமே சமம்’ என்ற இந்து சமய தத்துவம், அவர் களது மரமண்டையில் ஏற இன் னும் எத்தனை காலங்கள் செல் லுமோ?
-எம். ஏ. நிஜாமுதீன்,
மொஸ்க்வியூ, /க் கரைப்பற்று.
一女一
சோமபாலன் சிந்திக்கவைத்தார்
ஆறறிவு படைத்த மனிதன் "சாதி என்ற இரண்டு சொல்லுக் குள் அடிமையாகி, உணர்விழந்து அறிவிழந்து நிற்கும் நிலையை எண் ணும்போது - எ ம் பா ல் ஒருவித உணர்ச்சி உள்ளூற எழுந்து கொதிக் கிறது.
இதை மையமாகக் கொண்டு ‘சோமபாலன்’ எழுதியிருக்கும் - சிந்திப்பார்களா? - பலரை சிந்திக் கத் துரண்டும்.
தம்மை உயர்ந்த சாதிக்காரர் என்று சொல்லிக் கொள்வது ஒரு கெளரவம் என்றல்லவா நினைக்கி றர்கள். சாப்பாட்டுக்குத்தான் வழி இல்லா விட்டாலும் இந்த வரட்டுக் கெளரவத்திற்கு மட்டும் குறைச்ச லில்லை? இது ஒரு பார்வை.
இது போன்ற இன்னும் பல சம்பவங்களை மக்களின் அறியா மையை, கிண்டலாக தம் கதை, யில் இழையோட விட்டிருக்கிரு
சோமபாலன் அவர்கள்.
சிவாவும், துரையும் இறந்த வுடனேயே கதையை முடிக்காமல் அவர்களது உடலின் ஒரு பிடி சாம் பல் கடலிலே கரை க் கப் படு ம் பொழுது கூட அங்கே ஏற்றத் தாழ்வு இன்றி சங்கமமாகிருர்கள்
49
என்று கூறுகிருர் கதாசிரியர். உயி ரோடு உணர்வோடு அறிவோடு இருந்த போதே காணமுடியாத சமத்துவம் - கேவலம், அங்கே ஏற் படுகிறது! என்று எடுத்துக் காட்டும் கதாசிரியரின் எழுத்துக்கள் கண் : நம்மவர்கள் சிந்தனையில் இடம்பெறவேண்டும். தெளிவான, நேரான நடை, மயக்கம் ஏற்படுத் தாத கதை அமைப்பு - இவை, கதையை நன்கு மனதில் பதியச் செய்கிறது.
--தயா - இளஞ்செழியன்,
களுவாஞ்சிகுடி,
一★一
உபதேசகாண்டம் வாழ்க்கை
என்பது என்ன?
அது அன்றுமுதல் இன்றுவரை உண்
மைக்கும், பொய்க்கும் இடையே நடக்கும் போராட்ட மாக வே அமைந்துள்ளது. பொய்யைப் பின்" பற்றுபவர்கள் தொண்ணுரற்முென் ப5 சத விகிதமும், மெய்யைப் பின் பற்றுபவர்கள் ஒரு சத விகிதமு
*திலீபன்?"
மாக நமது சமுதாய அமைப்பு அமைந்துவிட்ட காரணத்தா ல்,

Page 27
இன்றைய சமுதாயத்தில் பாதிக் கப்படுவர்கள் யார் எ ன் ப தை விளக்கவேண்டியதில்லை.
பாவம் அப்பாவி வாத்தியார் ஆறுமுகம்!
"அகன்ற நெற்றியில் திருநீற் றுக் கோடுகளின் அழகு நகலெடுக்க முடியாத புன்முறுவல் உச்சந்தலை யில் உள்ளங்கை அக லத் தி ற் கு வழுக்கை; விழிகளில் அமைந்த ஆற் ருெழுக்குப் போ ன் ற சோகம்; அதில் ஒரு உறுதி. நெற்றியில் முப் பத்தைந்து ஆண்டுகளாகக் குடும்ப பாரத்தைச் சுமந்து ஒரே தடத்தில் ஓடி ஒடி அலுத்த அனுபவத்தின் முத்திரைகள் தூய வெள்ளைக் கத ராடை கையில் ஒரு புத்தகம். தி குக் குறளோ அல்லது சத்திய சோதனையோ அல்லது அற நெறிச் grrrC3pr”
இது வர்ணனை அல்ல ஒவியம்
உயிரோவியம் - சபாஷ் திலீபன்"
ஆறுமுகத்தின் உள்ளத் துடிப் புகளையும், இப்படியே படம் பிடித் துக் காட்டியதன் மூலம் உன்னத மான ஒரு கதையை - சமுதாயத் துக்குத் தேவையான ஒரு இலக்கி யத்தைப் படைத்துவிட்டார் திலீ பன்? பாத்திரங்கள் மட்டுமல்ல இடங்களும் பொருட்களும் கூட அவ்வாறே படம் பிடிக்கப்பட்டுள் 6.
"தேமல்படிந்த முகம் போல அழிந்தும், அழியாமலும், தோற்ற மளிக்கும் சுண் ணு ம் புப் பூ ச் சு; "வீட்டுமாலில் ஒரு சாய்வு நாற் காலி; மேலிடத்துத் தேவதை களின் கருணைக்கடாட்சம்; "வரவு செலவு அட்டவணையில் செலவுப் பகுதியில் விடயங்கள் நிறைகின் றன’ போன்ற வார்த்தைப் பிர யோகங்கள் கதையின் இறுக்கமான வார்ப்புக்குத் துணை செய்கின்றன.
நம் சமுதாய அ ைம 65 נן Lו மாற்றவேண்டுமானுல் அதற்குத்
தேவையானவை ஆயுதப் புரட் சியோ, வெடிகுண்டுகளோ, நாச வேலைகளோ அல்ல-மெய்யைப் பின் பற்றுவோர் தொகையை தொண் ணுாற்ருென்பது ச த விகித மாக உயர்த்தவேண்டியது ஒன்று தான். அத்தகைய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தக்கூடியவை திலீபன்? எழுதி யுள் ள **உபதேசகாண்டம்' போன்ற கதைகள்,
--க. செல்வநாதன், முகத்துவார வீதி, கொழும்பு.
இம்மூன்று ரசனைக் கடிதங் களுக்கும் ஈழத்துநூல் அன்பளிப் புச் செய்யப்படுகிறது. -ஆசிரியர்
000000000
காந்தி மொழி - 3
மதம்
கடவுள் ஒருவரே என்ற நம் பிக்கையே எல்லா மதங்களினதும் அடிப்படை. ஆனல் நடைமுறை யில் உலகில் ஒரே மதம் மாத்திரம் இருக்கும் காலம் ஒன்று வரும் என்று நான் எண்ணவில்லை. தத் துவ ரீதியில் பார்த்தால் கடவுள் ஒருவரே. ஆகையால் ஒரே ஒரு மதந்தான் இரு க்க முடி யும். ஆனல் அனுபவத்திலோ கடவுளைப் பற்றிய கருத்து எந்த இருவரிடத் தும் ஒன்று போல இருப்பதில்லை. ஆகையால் பலவிதமான ம ன ப், போக்குகளுக்கும், வெப் ப த ட் ப நிலைகளுக்கும் ஏற்ற வகையில் பல மதங்கள் எப்போதுமே இரு க் க வேண்டியிருக்கலாம்.
LGLLLLL LLLLLLL
50

தென்றல் காற்று தவழ்ந்து கொண்டிருந்த ஏகாந்தமான வசந்த காலத்தின் மாலைவேளை. எழில் கொஞ்சும் ஒரு கி ரா ம த் தி ன் மையத்தே மதாளித்து நின்றது பசுமையான வாழைமரம். பசிய தன் அழகிலே மயங்கி மகிழ்ந்து கொண்டிருந்தது அது. ** என்றுமே அழிய விடாது என் குலத்தைப் பெருக்கி எ ன் னை யே அழித்துக் கொள்கிறேன். என் னை ப் போல தியாகி வேறு எவரும் இல்லை' எனச் சொல்லிக் கொண்டது அது.
அதன் அருகில் ஒரு பனை மர 9: நின்றுகொண்டிருந்தது. அது
ன்ழ மொழிந்தவற்றைக் கேட் டுக்கொண்டுதான் இரு ந் த து . 'வாழையைவிட நா ன் தானே பயன் த ரு வ தி ல் உயர்ந்தவள். இருந்தும்; இறந்தும் பயன் தருவது நானல்லவா? என்னை விடவா நீ தியாகி?’ என உரத்தே கேட்டு விட்டது.
வாழையின் கோபம் எல்லைமீறி யது 'அடியடியாக என் வம்சத் தைப் பெருக்கி வருகிறேன் தெரி யுமா?" பனையும் சளைக்கவில்லை. ** என் வித்து அழியாத வம்சமா கிறதே" என்றது. விவாதம் ஒய வில்லை.
இயற்கையில் ஒரு மாற்றம். தென்றலின் சீற்றம் புயலாக மாறி அக்கிராமத்தை அலங்கோலப்படுத் தியது. ஒரே பயங்கரம் பெருத்த மழையுடன் புயல் காற்று சுழன்று, சுழன்று வீசியது. மூன்று நாட்க ளின் பின் இந்தப் பயங்கர பேயாட் டம் ஓய்த்தது. வாழைமரமும், பனை மரமும் நிலத்தில் சரிந்து கிடந்தன. தென்றல் நகைத்த வண்ணம் வந் தது. வாழையும், பனையும் நினை விழந்து விட்டன.
கோடை க் காலம் ஆரம்பமா னது. தகிக்கும் வெயில் பசுமையை அழித்துப் பொசுக்குகிறது.
51
உருவகக்கதை.
தியாகி
செல்வி ச. பாலதேவி,
காலம் நகர்கிறது. மீண்டும் வசந்தகாலம் தலைகாட்டத் தொடங் கியது. மழை நீரால் பசுமைக் கோலம் அக்கிராமத்தை அழகுபட அலங்கரிக்கிறது. நிலத்தில் விழுந்து மண்ணுேடு, மண்ணுகிய வாழையின் கிழங்கிலிருந்து புதிய ஜீவன் உரு வாகியது. அதேபோல பனைவித்தி லிருந்தும் புதிய ஜீவன் உருவாகி யது. வசந்தகாலத் தென்றல் இனி மையுடன் தவழ்ந்தது.
அழகிய வாழைமரமும், சிறிய
பனை வடலியும் அருகருகே நின்றன.
தென்றல் கூறியது. 'மண் ணில் தி யா கி எவருமில்லை பயனுக்கே பணி. அழியாத ஜீவ வித் தை , நியதியைப் படைத்த இறைவனே தியாகி’ தென்றலின் "இனி மை அங்கு நிறைவைத் தந்தது. O
000000000
காந்தி மொழி - 4
பிரார்த்தனை
அ கங் கா ரம் கொண்டவனு டைய பிரார்த்தனையைப் பகவான் ஏற்றுக்கொள்ளமாட்டான். அவ னிடத்தில் வியாபாரம் செல்லாது. எந்தவிதமான வியாபாரமும். பய மின்றி, ச த் தே க மின்றி அவனை அணுகவேண்டும், தீனணுக அணுக வேண்டும். "நான் நீசன் என்னைக் கைவிடாதே" என்று தைரியத்து டன் அணுகவேண்டும். அவனுக்கு அனைவரும் சமம்.
000000000

Page 28
கலை அமுதம் 1970
அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையிலிருந்து ஆண்டுதோ றும் வெளிவரும் கலாசாலைச் சஞ் சிகையான 'கலை அமுதம்" இவ் வருடம் மிகச் யில் வெளிவந்துள்ளது சஞ்சிகை யின் கனத்திலும், தரத்திலும், அமைப்பிலும் கூட புதுமை பளிச் சிடுகிறது.
வழக்கமான “கற்பித்தல் கட்
டுரைகளுடன், தரமான இலக்கி யப் படைப்புகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. 'வ குப் பில்
போராட்டம் நடக்கி றது (சிறு
கதை) 'தமிழ் நாட்டுப் புனைகதை
யின் தோற் ற மும் வளர்ச்சியும்’ (விமர்சனம்) "புறப்படு புதுமை செய்வோம்’ (கவிதை) "இலக்கிய மும் வாழ்வு ம்’ (கட்டுரை) ஆகி யவை அவற்றுட்சில. இவை தவிர இஸ்லாத்தின் மகத்துவத்தை விளக் கும் பன்முகப்பட்ட கட்டுரைகள் பலவும் இம்மலரில் இடம் பெற் றுள்ளன.
கல்லூரி அதிபர் ஜனுப். ஏ. இஸ்ட், உம்ர்தீன், தனது செய்தி யில் 'நா ட் டி ன் தேவைகளுக் கேற்ப அமையாக் கல்வியானது, சஞ்சலம் நிறைந்த ஒரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்கி விடும் என்று குறிப்பிடுகிருரர். சகல ஆசி ரியர்களும், மாணவர்களும் வில் நிறுத்த வேண்டிய ஒரு முக் கிய விடயம் இது என்பதில் யாருக் கும் அபிப்பிராய பேதம் இருக்க Cup qum gil.
சிறப்பான முறை.
நினை
வழக்கமான பா ட் டை  ைய விட்டு புதுமைப் பாதையில் முதல் அடி எ டு த் து வைத்திருக்கிறது *கலை அமுதம்'. இலக்கிய நோக்கி லும் இலட்சிய நோக்கிலும் செல்ல
வேண்டிய தூரம் இன்னும் நிறைய
உண்டு. க வன த் தி ல் கொள்ள வேண்டிய சில விடயங்களும் உள. த மி  ைழ ஊ ட க மொழியாகக் கொண்டு தமிழ் ஆசிரியர்களே உரு வாக்கும் ஒரு கலாசாலையிலிருந்து வெளிவரும் சஞ்சிகையில் ஆங்கிலக் கட்டுரைகளும் சிங்களக் கட்டுரை
களும் இடம் பெறுவதன் பொருத்
தம் புரியவில்லை. வித் தியோதயப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் அ ல் ஹ T ஐ எம். எம். உவைஸ் அவர்கள் அல்-குர்ஆனைப் பற்றிய ஒரு கட்டுரையை சிங்க ளத்தில் எழுதியிருப்பதும் இதில் அடங்கும். í
பெருமுயற்சி எடுத்து இவ்வ ளவு சிறப்பாகத் தயாரித்துள்ள மலரின் அட்டைப்படம் மட்டும் ஏதோ ஒரு திருஷ்டிபரிகாரமாக அமைந்துவிட்டது "வில்க் ஸ்கிரீன் பிரின்டிங்" முறையில் இன்னும் எ வ் வள வோ கவர்ச்சியாகவும், புனிதமாகவும் அட்டையை அமைத் திருக்கலாம்.
நுட்பம், 1970
கட்டு பெத் தை, இலங்கை உயர் தொழில் நுட்பவியற் கலா
சாலை தமிழ் மன்றத் தி ன் “நுட் ,
பம்’ இரண்டாவது ஏடு தரமான ஒரு இலக்கிய ஏடாக அமைந்துள் GT gil.
மன்றத்தலைவர் மாவை தி, நித் தியானந்தன் அவர்கள் குறிப்பிட் டுள்ளது போல் “மன்றம் நடாத்த வேண்டுமென்பதற்காக மன்றங்க ளும், விழா எடுக்க வேண்டுமென் பதற்காக விழாக் களும் மலர் வெளியிட வேண்டுமென்பதற்காக
52
 

மலர்களும்' மலிந்துள்ள இக்கால கட்டத் தி ல், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல இலக்கி யச் செய்திகள் நிறைந்துள்ள் பய னுள்ள மலராக நுட்பம் அமைந் துள்ளது.
"நுட்பம் முதல் ஏட்டில் வெளி வந்த, கலாநிதி க. கைலாசபதி இரசிககிணி கனக, செந்திநாதன் * சந்திப்பு தொடரில் இவ்வேட்டில்
இ. இரத்தினம் - இ. முருகையன்
* சந்திப்பு நல்லதொரு நாடகக் கருத்தரங்காக அமைந்துள்ளது. 'தமிழில் திரைப்படங்கள்', 'ஈழத் தில் தமிழ்ப்பத்திரிகைத் துறை', *ஒற்றைச் செருப்புப் போதுமா?? முதலிய கட்டுரைகள் ஈ ழ த் துப் பாமர ரசிகர்களும், பத்திரிகையா ளரும் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டியபல கருத்துக்களைத் தருகி ன்றன.
"தங்கத்தின்ரை மகன் இன்சி னியர் (சிறுகதை) சி ல ம் பி ன் மாதவி’ (கட்டுரை) முதலியவும் நல்ல இலக்கியப் படைப்புகள்ாக அமைந்துள்ளன.
விஞ்ஞான தீபம், 1970
கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயத்தின் விஞ்ஞான மாணவர் கழகம் த மது கன்னி முயற்சியாக "விஞ் ஞான தீபம்’ என்ற மலரை வெளியிட்டுள்ளது. பெரும் கலாசாலைகளின் ஆண் டு மலரைப்போல் இம்மலரை மிகவும் கவர்ச்சியாக அ  ைம த் த இளம் மாணவர்கள் பாராட்டுக்குரியவர் கள். மாணவர்களாலும் மாணவர் க்கெனவும் எழுதப்பட்டுள்ள விஞ்
ஞானக் கட்டுரைகளே இம்மலரில்
பெரிதும் இடம் பெற்றுள்ளன. எஸ். பொ. வின் "நி னை வுகள்’ கவிதை இதில் அடங்க முடியாத *மு தி ர் ச் சி பெற்றுள்ள ஒரு படைப்பு. மாமூல் விவகாரமான வாழ்த்துச் செய்திகள் பல பக்கங்
களை விழுங்கி விட்டன. எஃது எவ் வாருயினும், விஞ்ஞான மாணவர்
கழகத்தின் வெளியீடாக அழகிய ஒரு மலரை வெளியிட்டுள்ள இளை ஞர்களின் ஆர்வமும் உழைப்பும் போற்றற்குரியதே!
பெண்ணே நீ பெரியவள் தான்
பிரபல நகைச்சுவை எழுத்தா ளர் பொ. சண்முகநாதன் அவர் களின் முதல் வெளி யீ டா ன * கொழும்புப் பெண்’ நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பை வாசித்த வர்கள் அவரின் அடுத்த நகைச்
SLLLLL S LLLLLL
விலை: ரூ. 1-25 தமயந்தி பதிப்பகம் அச்சுவேலி.
53

Page 29
சுவைத் தொகுப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் கள். இரண்டாவது தொகுப்பு "பெண் ணே நீ பெரியவள்தான்" அவர்களை ஏமாற்றவில்லை.
நமது குறைபாடுகள், நமது சமுதாயத்தின் குறைபாடுகள் பல நமக்குத் தெரிவதில்லை. காரணம் நாம் அவற்ருேடு ஊறிப் போய் விட்டது தான். எழுத்தாளர்கள் தமது எழுத்து என்ற கண்ணுடி மூலம் அவற்றைத் தெரியவைக்கின் றனர். இவர்களுள் நகைச்சுவை எழுத்தாளர்கள், இக்குறைபாடுகள் நம் மனதில் ஆழப்பதியும் வண்ணம்
சிரிப்போடு எடுத்துக் காட்டுகின்ற
னர். பொ. சண்முகநாதன் இதில் குறிப்பிடத்தக்க வெற்றி ஈட்டியுள்
οιτητή .
அன்ருட வாழ்க்கையில் நகைச் சுவையை அவதானித்த, அதைச் சுவையோடு வழங்குவது மிகவும் சிரமமான பணி. இத் தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரண்டு கட்டு ரைகளும் அப்பணிக்கு உரை கல் லாக விளங்குகின்றன.
இக் கட்டுரைகளில், நம்மோடு அன்ருடம் உறவாடும் பல பாத்தி ரங்களின் அவலம் சுவையுடன் பரி மாறப்படுகிறது. கு டு ம் பத் தி ல் நடக்கும் தில்லுமுல்லுகள், நாகரீ கப் போர்வையில் பிறரை ஏய்த் துப் பிழைக்கும் பேர்வழிகள், பேத் தல் பேச்சாளர்கள், அபத்தப் பத் திரிகைகள், ஐந்து ச த ம் "குருவி பிடிக்கும் பஸ்கண்டக்டர் வகுப்ப றையில் வேறு வேலை பார்க்கும் ஆசிரியர்கள், இப்படிப்பல விடயங் கள், சண்முகநாதனின் கட்டுரை களை வாசித்த பின் னர் த ர ன், நன்கு தெளிவு பெறுகின்றன.
நாடோடி, ரீ, பாக்கியநாயகம் வரிசையில் பொ. சண்முகநாதன் நிரந்தர இடம் பெறுகிறர். அவ
"பஞ்சாங்க"
ரது அடுத்த தொகுப்பை வாசகர் எதிர்பார்க்கும்படி செய் கி ற து, **பெண்ணே நீ பெரியவள்தான்'
கலைச்செல்வி - 1970.
மட்டுநகர் ஆசிரிய கவசாலை
யின் வருடாந்த வெளி ன
“கலைச் செல்வி"யின் 1970ம் ஆண்டு ஏடு, கலாசாலையின் வெள்ளிவிழா மலராக வெளி வந்து ள் ள து கல்வி, கற்பித்தல், உளவியல், முத லியன பற்றி ஆசிரிய மாணவர் களும், விரிவுரையாளர்களும் எழுதி யுள்ள ஏராளமான கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
கவிதையிலும் சிலர் தம் திறமை
யைக் காட்டியுள்ளனர். அவற்றுள் கலாசாலை விரிவுரையாளர்களைப் பற்றிய ஆங்கிலக் கவிதை நல்ல நகைக்சுவை விருந்தாக அமைந் துள்ளது. சிறுகதை இலக் கி யம்
ஏனே இம்முறை மலரில் இடம் பெறவில்லை.
வழக்கம்போலவே, இரண் டு
வருட கலா சாலை வாழ்க்கையில் இடம் பெறும் முக்கிய நிகழ்ச்சி களையும், நடவடிக்கைகளையும் சித் திரசகிதமாகப் பதிவு செய்துள்ளது இம்மலர். வாழ்த்துச் செய்திகளுக் கும் குறைவில்லை.
பல அரிய விஷயங்கள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கி வருவ 5 Tai) gp(5 Reference Book gas gg, பயன்படும் என்பதில் ஐயமில்லை. இததகைய ஒரு நூலை, வழக்கமான b அ  ைம ப் பிலிருந்து மாற்றி ஒரு இலக்கிய சஞ்சிகை யின் ஆண்டு ம ல ரை ப் போ ல் கவர்ச்சியாக அமைத்தல் ஒரு புது மையாகவும் மாற்றமாகவும் இருக் கும். இனிவரும் ஆண்டு மலர்கள் அவ்வாறு அமைதல் விரும்பத்தக்
கது.
54

பெண்கள் புரிந்து கொள்ள இயலாத பிறவிகள் என்று சாதா ரணமாகக் கூறுவார்கள். இது சரியோ மிகையோ தெரியாது. பெண் பால் இலகுவில் புரிந்து கொள்ள இயலாத அமைப்பு என் பதை என் அனுபவத்தில் கண்டேன்.
*னஃகான் ஒன்றே ஆடுஉ அறி சொல் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இது முற்றும் சரி. னக ஈறுபெற்று வராத ஆண்பால் சொற் கள் மிக அபூர்வம் ஆணுல் “ளஃ கான் ஒன்றே மகடூஉ அறிசொல்' என்று தொல்காப்பியர் எவ்வளவு இலகுவாகக் கூறினர்? விஷயம் அப் படியா இருக்கிறது?
ஐந்தாம் வ கு ப் பு மாணவி யொருத்தி, இறைவன் என்பதறகு "இறைவள்’ என்று பெண் பால் குறித்து எழுதி விட்டாள். அந்தப் பிள்ளைக்கு அது தவறு "இறைவி" தான் சரி என்பதை எப்படி விளக்கு வேன்? “ளஃகான்" என்ற சொல்லை பவணந்தியார் அள் ஆள், ள், என்று விரித்து, சிறப்பு விதியாக இ*யும் வரும் என்ருர், அதன்படி இறைவி, மூக்கி துணைவி, அரசி, என்று னகர ஈறுகெட்டு சிகரம் ஏறி வந்தன.
ஆனல் இதே முறையில் னகர ஈறுகெட்டு சிகரம் ஏறி, எல்லாப் பெண்பாற் சொல்லும் வரவில்லை. புலைச்சி, வேடுவச்சி, பொடிச்சி, என்று ஒருவகையாகவும், குறத்தி, ஒருத்தி, என்று மற்றேர் வகையாக வும், வாடி, போடி, என்று இன் னேர் வகையாகவும், குறத்தினி, பிக்குணி என்று பிறிதோர் வகை யாகவும் அ மை கின்றன. இது புணர்தல் விதியின் படி யு ள் ள சாரியை, இதிலும் மணவாட்டி, சீமாட்டி என்று வரும் புணர்தல் விதி ரொம் பச் சங்கடமானது. எப்படியும் இருந்து பெண் க ள் வாழட்டும்! இந்த "இகர விதிப்படி, துறவி, கருமி, உலோபி, என்பனவற்றை எல்லாம் நாம் பெண்கள் என்று
சந்தி விவகாரமாகும்.
பெண்(பால்)
புரிகிறதா?
"ஆஷா"
கரு தி விட க் கூடாது. இவை ஆணையே சுட்டிப் பொதுவாக நின் றன. மற்ருேர் விஷயம் "இ" விகுதி பெண்பால்தான். என்று எல்லா இடங்களிலும் நிறுவி நிற்கவும் இய லாது. உருவிலி, அறிவிலி என்பன இருபாலும் ஒழித்து நிற்கும் விகுதி
Lurrég5uD.
இந்த "இ விகுதி இத்தோடு முடியவில்லை. ஆசிரியை, பண்டிதை, வீராங்கனை என்று "ஐ" யில் வேறு
பெண்பால் முடிகிறதே! ஆமாம் ஐஒள இச் செறிய' என்ற சூத்தி
ரத்தில் "ஐ" யும் "இ"யும் இன எழுத் துக்கள் என்ருர் பவணந்தி. மாமன் மக்களாயின் அக்காவும் தங்கையும் மதினி முறைதானே. யாரைக் கட்டினலும் ஒன்று. எனவே "இ" இன "ஐ" யும் பெண்பால் விகுதி கொள்ளும்.
அதுசரி. கணவன். புருஷன் என்ற சொல்லுக்குப் பெண்பால் என்ன? "பத்தினி” என்ற பெண் பாலுக்கு ஆண்பால் என்ன?
இம்மூன்று சொற்களுக்கும் மறு பால் இல்லை என்பது தவழு காது. ஏனெனில் முதலிரு சொற்களும் தற்சம, தற்பவ வட சொற்களா கும். அவற்றிற்கு நாம் கொடுக் கும் மனைவி அல்லது இல்லாள்
என்ற பெண்பாற் சொல் நேர் பொருள் கொண்ட வையல்ல. செயற்கையானவை. கணவன் ’
55

Page 30
என்ருல் “கணம்” + அன் கூட்டத் தின் தலையாய ஆண்மகன் என்றும் புருஷன் என்ருல் புருடாத்துவ முள்ள ஆண் என்றும் பொருள்படும் இவற்றிற்கு, இல்லத்திற்கு, அல் லது மனைக்கு உரிய பெண் என்டிது எப்படி பெண்பால் ஆகும்? சங்க கால வழக் கி லு ஸ் ள தலைவன், தலைவி என்பதே இல்லற வாழ்வில் இணைந்து கொண்ட இருவர்க்கும் சரியான பால்தரும் பெயர்களாகும்.
"பத்தினி" என்ற சொல் ஒரு பெண்ணின் ஒழுக்கம்பற்றி வந்தது. கொழுநன் தொழுதெழும், கற் பொழுக்கம் பூண்ட இவளுக்கு, ஆண் பால் கொள்ளல் பொருந்தாது. பத்தா - பதிவிரதை என்று வட மொழி பால் இணைப்பையும் சிலர் கொள்வர். மனைவி, ' இல்லாள் என்ற சொற்களுக்கும் ஆண்பாற் சொற்கள் பொருந்தா. மனையான் இல்லான் என்ற வழக்கு இல்லை.
இல்லான் என்ற தொடர் வறுமை
யுள்ளவன்' என்று விபரீதமான கருத்தை யும் தருகிறதல்லவா? ஆனல் பெண்கள் பேச்சு வழக்கில் "வீட்டுக்காரர் வந்திற்ருர்' 'வீட்டுக் காரர் வரும் நேரமாயிற்று. இப் படிப் பேசுவார்கள்.
பெண் மட்டும் பிரச்னைக்குரிய வளல்ல. பெண்பால் கூட பிரச்னைக் குரியதே. பெண்களோடு, இணைந்து வாழ்ந்து இன்பம் துய்ப்பது எவ் வளவுக்குப் புரிந்து கொள்ள வேண் டிய விவகாரமோ? பெண்பாலைக் கூடப் புரிந்து கொள்வதும் அத் தகையதே.
இவ் வளவை யும் எண்ணிய நான்"என் மர்ணவிக்கு இதனை எப் படி விளக்குவேன்? அவளும் ஒரு புதிரல்லவா? என்ன பிள்ளை மாண
வன் - மாணவி என்பது போல’
இறைவன் - இறைவி என்று எழுத வராதா? என்று போ லி யாக க் கடிந்து கொண்டேன்.
56
கிய மன்றங்களிலொன்
amm•m• Amazsaat 09:0zamanzas
jଞ୍ଚ୍ ରା
மலையக இலக்கிய மாத இதழ்.
லயகத்தின் முக்கிய இலக் குறிஞ் சிப் பண்னையிலிருந்து **ன ஷ ”* என்ருெரு இலக்கியமாத ஏடு வெளி வந்து கொண்டிருக்கிறது. நமது ** மலர் ' ஏட்டுடன் தொடர்பு கொண்டவர்களும், மலையகத்தின் முக்கிய எழுத்தாளர்களுமான, குமார இராமநாதன், நெ. பி. பழனிவேல், கே கணேஷ், அ. க. ஜுனைதீன், பரிபூரணர், பசறையூர் க. கிருஷ்ணு முதலியோரின் படைப் புக்கள் முதல் இரண்டு இதழ்களி
லும் இடம்பெற்றுள்ளன. மலைய கத்தின் இதயத் துடிப்பாக, இலக் யக் குரலாக ஒலிக்கப்போகும்
'நினைவு' மாத இழழுக்கு ஈழத்து வாசகர்கள் அனைவரது ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கிருேம்.
'நினைவு' ஒரளவு கவர்ச்சி யாகவே வெளிவந்துள்ளது. காலக் கிரமத்தில் வளர்ச்சியின் மெருகு இன்னும் கவர்ச்சியைக் கூட்டலாம்.
அதுபோலவே இலக்கியப் படைப்
புகளிலும் கனத்தை ஏற்றலாம். மலையகத்திலிருந்து வெளி வந்த ஏனைய சஞ்சி கை களி னி ன் றும் ** நினைவு ' தனித்து நிற்பதால் தனித்துலமுள்ள ஒரு மலையக இலக் கிய ஏடாக இது அமையும் என எதிர்பார்க்கலாம்.
(நினைவு: தனிப்பிரதி சதம் -/25 ஆண்டுச்சந்தா ரு. 3-00 தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: **மல் லிகைவாசல்" 31 வலஸ்பெத்தை
பண்டாரவளை
m●m● sm •am●m:


Page 31