கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நோக்கு 1964 (4)

Page 1

○ 、 תה&st - B r_1 in 1
,妮

Page 2
நோக்கு பணிமுறை ஆசிரியர்: இ. இரத்தினம், இ. முருகையன். 1964 எண் 4 -செகசிற்பியர் இதழ்
முத்திங்களிதழ், செய்யுட்கள வெளியீடு. செய்யுட்கள அலுவலர்: தலைவர், புலவர் சிவன் கருணுலயபாண்டியனர் துணைத் தலைவர், அ. வி மயில் வாகனம், ம. முருகேசபிள்ளை; செ ய ல |ாள ர், இ. இரத் தினம்; துணைச் செயலாளர், இ. முருகையன் பொருளா ளர், ஆதி. கருப்ண்பயா; செயலகம், 149/3, காலி வீதி, கொழும்பு. ஆண்டுக் கட்ட்ன்ம் ரூபா 3-50.
பக்கம் உலகு முல்லை 1 புலவர் ப்ாண்டியனர் ஆங்கிலவாணி 2 வித்தியாரத்தினம்
நவாலியூர் சோ. நடராசன் உரோமியோவும் 5
யூலியற்றும். செ. வேலாயுதபிள்ளை
Կան 10 தண்ணளி 14 அம்லெற் 15 ஆசிரியர்
சொனற் 18 காமன் கைக்கனை 21 மஹாகவி வீனசும் அடோனிசும் 22 ஆசிரியர்
வ்ெரோணுவின் 23 பிரபுமாரிருவர்
ஒதல்லோ 24
அந்தணியும் 26 கிளியப்பெற்றவும்

தலைமொழி
உலகு முல்லை
இருசுடர்கள் விழித்துலவுங் கடலுடுத்த ஞாலத் தெந்நாடோ எம்மொழியோ எவ்வினமோ வீன்ற பெருமைதகும் புலத்துறைபோம் புலவர்பெருந் தகைகள் புதுக்கிய தொல் படைப்புலகப் பொதுவுடைமையன்ருே அருமையுறுTஉ மாங்கில மா மாரணங்கை யுலகின் அழகியெனப் படைத் தெங்கு மாடிவரச் செய்த திருவுடைய சேப்பியர்தஞ் சீர்த்திநில வொளியிற் றெள்ளறிஞ ருலகுமுல்லை வெண்மலர் பூத் ததுவே.
அவ்வவர்தம் பண்பு செயலாக்கமொடு பண்பா டாவியொடு போய்ப்புதையுண் டாரை நயச் சொல்லால் இவ்விவர்தா மென்னவுயி ருண்டாக்கிக் கொடுபோந் தென்றும் விழி முற்காட்டு மெழிற் கலைவலாளன் எவ்வகைய வெண்ணமுமெ டுத்தவற்றைச் சொற்கொண் டினியபிழம் பாக்கவல்ல வெளியமலர் முனிவன் செவ்வை மனச் சேப்பியர்தஞ் சீர்த்திநில வொளியிற் றெள்ளறிஞ ருலகுமுல்லை வெண் மலர்பூத் ததுவே.
அம்பலக்கூத் தாடிவழித் தோன்றலவன் போல ஆடுதலு மாட்டுதலு மாகியதற் கேற்ப வம்பமர்ந றுங்கதையு மக்கதைகட் கேற்ற வாயுரை யொ டாங்கிலவண் ணப்பாட்டு மாக்கிக் கும் பலுறு சேரிதொறுந் தீஞ்சுவையி னேடே கோதிலறி வூட்டுகலைக் கோமக்னு ளத்துச் செம்பரிவிற் சேப்பியர் தஞ் சீர்த்திநில வொளியிற் றெள்ளறிஞ ருலகுமுல்லை வெண் மலர்பூத் ததுவே.
- சிவன் கருளுவய பாண்டியனுக்.

Page 3
ஆங்கில வாணி - வித்தியாரத்தினம் நவாலியூர், சோ. நடராசன் -
('மாக்பெத்” என்ற நாடகத்திலிருந்து ஒரு கூற்று)
பேராசையினுல் உந்தப்பட்ட மாக்பெத், கூளிகளின் சினே. டைப் பேச்சைக் கேட்டுத் தன் சுற்றத்தவனும், அரசனுமான தங்கனைக் கொலை செய்ய முற்படுகிறன். ஆயினும் அறத்தின் அந்தரங்கக் கூவல் அவனுக்குக் கேட்கிறது. கொடுமை செய். யாதே என அலறுகிறது. ஆனல் மந்தரை போன்ற அவ னுடைய மனைவி அவனைத் தூண்டிவிடுகிறள். இருந்தும் நன் மைக்கும் தீமைக்கும் ஏற்படும் பிணக்கு அவனுள்ளத்திலே பெரிய புயலை உண்டாக்கிவிடுகிறது. தன்னில்லத்திலே விருந் துண்டு உறங்கிக்கொண்டிருக்கும் மன்னனைக் கொலை செய்யப் போகுஞ் சமயத்திலே அவன் உள்ளத்திலுண்டாகும் சிக்கலை ஷேக்ஸ்பியர் மகாகவி நாடகப் பண்பு நிறைந்த அழகிய பேச்சா கக் கூறுகிறர். அதன் மொழிபெயர்ப்புப் பின்வருமாறு:-
முடிந்ததும் அதனுடன் காரியம் முடிவுறின் முடித்திடல் வேண்டும் விரைந்திட, இக்கொலை விளைவுவே றின்றி வெற்றிகைப் படுமெனின் தழையுமிச் செய்கையே சகலமும், இங்கே கால மென்னுமிக் கரை தனி லிம்மையிற் சாலும்; மற்றம் மை தரு பயன் காண் பாம். ஆயின் - இப்புவியிடை ஆற்றிய செயற்கெலாம் போயினிப் பெறுபயன் புவியினிலன் ருே?? தாம்தாம் செய்வினை தாமே நுகர்வார்; கிளர்ச்சியும் புரட்சியும் கேடும் நாமே வளர்த்திடின் வந்தவை நம்மையே வருத்தும், நஞ்சினை யூட்டிட நயந்து வழங்கிய வியஞ்சனக் கலசம் நம் வாயிலே சேர்ந்தென; மன்னவன் நமது நாதியு மாவான். என் மனை விருந்தினன், இவனைக் கொல்வதோ? இருபடித் தெனது கடமையு மாகும்; உருவிய வாளொடு வருபவர்க் கெதிராய்க்

3.
காவல் செய்வதென் கருமமே யன்றே ,- நானே ஏவலில் வாளினை எடுப்பது கொடுமை. *தங்கனிம் மன்னன் தகவுகள் பெரிதே
பொங்கிய விநயமும் பொலிந்த நேர்மையும் கொண்டநல் அரசன் கொடுமையால் மடிந்திடின் அண்டமு நடுங்கும் ஐயகோ - பரிவு, பச்சிளங் குழந்தை போற் பரிதவித் தலறியே அச்சம் நிறைந்த திவ் வருஞ்செயற் றீமையைக் கண்ணிலாக் ககனக் காற்றிலே யலறி மண்ணெலா நடுங்கப் பரப்பும், கேட்டவர் கண் மழை பொழிந்து காற்றையு நிறைப்பர்; நோக்கம் வேறெனக் கில்லை - ஒன்றலால் - துரக்குபே ராசை துரந்திடப் பாய்ந்தேன்; பாய்ச்சல் தவறிட மண்ணிலே 1 -
(பேச்சு முடிவதற்கிடையில் மாக்பெத் சீமாட்டி வருதல்)
I
மாக்பெத், தன்னில்லத்திலே விருந்தாக வந்து தங்கிய மன்னனைக் கொலை செய்வதற்கு நள்ளிரவில் செல்கிறன், சேவகனிடம் செய்தியொன்று கூறிவிட்டுத் தனியணுகிறன், அப்போது அவன் மனநிலை சஞ்சலமடைகிறது. வாளொன்று தன் தலைக்கு நேரே தூங்குவதாகப் பிரமை கொள்கிருன். அச்சமயம் அவன் கூறிய கூற்று:-
பானம் த யாரெனிற் படுமணி யொலிக்கவென்று ஆன அம் மணியிட மறைந்திடு தூங்கு; போ;
(சேவகன் போதல்) கண் முன் தெரிவது கட்கமோ என்ன? என்முன் கைப்பிடி எதிர்ப்பட நின்றதே வா உனைப் பற்றினேன் வந்தா யிலையந் தோ உன்னுருவம் தோன்றிய தின்னும்
* Duncan தங்கன் - அரசனுடைய Golu uuriř.
1 மண்ணிலே - என்று பேச்சு முடியவில்லை. மண்ணிலே "வீழ்ந்த திட என்று முடியுமென்பதைப் பொருளெச்சத்தால் அனு மானிக்கலாம்.

Page 4
全
மாரகத் தோற்றமே! மற்றென் காட்சியில் தேரநின் றது போற் கையிற் தென்படாய் கனல் படு சிந்தையின் கற்பனைக் கோலமோ அனல்படு மனத்திடை யமைந்த பொய் யுருவமோ உறைகழித் திட்டவிச் சுரிகை போல நீ மறுபடி கண்முன் மாருதெழுந்தனை? செல்லும் நெறிதனைச் செப்பினை போலும் கொல்லும் வழியினைக் குறித்தனை போலும் கண்ணிணை வஞ்சனைப் பட்டதோ கருத்தால் எண்ணிய வேனைப் புலன்களை வென்றதோ மீண்டுமுன் தோற்றம்; மின்னிய அலகிலே பூண்டகைப் பிடியிலே புதுக்குரு தித்துளி! கருத்தினில் நிறைந்த விக் கடுஞ்செயல் நினைவின் உருவெளித் தோற்றமே உற்றதென் கண்ணில் யாவதும் வேறிங் கில்லை ஆவது கருதுவன். ஆழிகு முலகின் பாதியிப் போது படுதுயி லாழ்ந்தது. நீதியில் கனவுகள் நித்திரை குலைக்கும். கொற்றவை வேள்வியிற் கூளிகள் பரவும் வற்றிய கொலை மிக வேகமா யடிபெயர்த் திந்திர னகலிகைக் கேகிய தன்மைபோல் சந்தடி யின்றியே தன் கருத் தியற்ற உளறிடு மோநாய் ஊளையால் வேளைகண் உளறிய பேயென அசைந்து செற்றிடுமே மாளா வியல் பின் மண்டினி நிலமே! கேளா திருப்பாய் கிளருமென் சுவட்டொலி எத்திசை நடந்தன பாதமென் றறிந்தால் அத்திசை பரந்தவுன் கற்கள் கரைந்தெனைக் காட்டிக் கொடுத்தே காலத் தோடியல் கேட்டின் கொடுமையைக் கெடுத்திடு மிங்கே பேச் சொடு பிசங்கினன் பேதை, மற்றங்கே மூச்சொடு கிடந்தான் மன்னவன் - பேச்சுச் செயலெனும் வெப்பஞ் சிதைத்திடும்; போகிறேன்
(மணி ஓசை கேட்கிறது) + செயல்முடிந் திட்டது; சிறுமணி யழைத்தது சாமணி, தங்கனே! செவி சாய்க்காதே சேம நிரயமோ துறக்கமோ சேர்வாய்.
+ உறுதியும்-விரைவும் நோக்கி இறந்த காலத்தால் கூறினன்; கொலை இனித்தான் நிகழும். *

செகப்பிரியர் சித்திரிக்கும் சில காதற் காட்சிகள் --செ. வேலாயுதபிள்ளே
உரோமியோவும் யூலியற்றும் விருந்து மனையில் யூலியற்றைக் கண்ட உரோமியோ நெஞ்சொடு கிளத்தல்)
உரோமி: கங்குற் கதுப்பிற் கணங்குழை யென்னத் தொங்குவள் போலுந் துரநகை யிவளே விளக்கொளி சுடர்ந்து விளங்கப் பயிற்றும்; அளப்பரு மழகே! அவனிக் கரிதே! கன்னியர் பிறரெலாங் காக்கையே யாக அன்னவர் நாப்பண் அனமெனப் பொலிவாள்; இன்றிங் கிவளை எதிர்ப்படு முன்னம் ஒன்று மழகைக் கண்டில ஞதலின காத லெனமுன் கருதிய தெல்லாம் பேதைமை யன்றிப் பிறிதிலை நெஞ்சே,
(களம் 1, காட்சி 4, வரி 42 - 51)
Yr
கங்குற் பொழுதிற் கன்னிமாடத்தில் நின்று காதலனை நினைந்து யூலியற்று இரங்கல்)
யூலி: உரோமி யோ வென் உயிரே ஏனே - உரோமி யோவெனும் பெயரினைப் பூண்டாய்? தந்தையை மறுப்பையோ! பெயர்தனைத்
(துறப்பையோ! இந்த வகை செய இசையா யென்னில், என்னை யன்பால் ஏற்றருள் வாயேல் இன்னே என் குலம் இகப்பேன் யானே.
உரோமி: (மறைவில்) இன்னுங் கேட்பனே ? விடையிதற் கிறுப்பனுே?
யூலி: உன்பெய ரொன்றே என்பகை யாகும்,
அன்பே, அந்தப் பெயரிலென் னுளதே? கையுங் காலுங் கண்ணும் முகமும்

Page 5
உரோமி:
உரோமி:
உரோமி:
மெய்யே யந்தப் பெயர்க்கிலை யாதலின் இப்பெயர் எவனே கொண்டனை ஏந்தால்? எப்பெய ராணும் எனக்கினி யாயே; உரோசா என்னும் ஒரு மல ரது தான் மற்றெப் பெயரில் வழங்கினுந் தனது நற்பண் பொன்றும் நந்தா தாகும்; ஆதலின் அன்பா அப்பெயர் துறந்து காதலின் என்னைக் கையேற் பாயே.
நின்னுரை மெய்யெண் நெஞ்சங் கொண்டேன். என்னை அன்பனென் றேற்பா யென்னில் இன்ன வென்பெயர் இன்னே விடுத்துப் பொன்னே, புதுப்பெயர் பூண்பன் யானே.
யார் நீ இந்த யாமத் திங்கனம் மறைவிடத் திருந்தென் மறைசெவி மடுத்தாய்?
என்பெய ரதனுல் என்னை யாரென அன்பே, உணர்த்தும் ஆற்ற லெனக்கிலை; நினக்கது பகை யாய் நேர்ந்துள தாகலின் எனக்கு மென் பெயர் இன்னு தாமே: எழுத்தில் அதனைக் காண்பே ஞயின் கிழித்தெறிந் திடுவேன் கிளிமொழி யாளே.
இவ்வாய் மொழிநூ றின்னுமென் செவியாற் பருகில ஞயினுங் குரவிது தேர்வன்; உரோமி யோ நீ? மொந்தே கலையோ ?
இல்லை, இல்லை; மெல்லியல் நினக்கவை அல்லல் செயுமேல் ஆகா வெனக்கே.
எங்ஙனம் வந்தாய் ? ஏன்வந் தாயோ ? கடிமதில் உயர்ந்தன, கடத்தற் கரியன, கொடிய ரெம்மவர் ஈங்குனைக் காணின் இடமிது கொலைக்கள மாகுமால் இன்னே!
காதற் சிறகாற் கடி மதில் கடந்தேன் கற்சுவர் காதற் கொரு தடை யாமோ? காதலெத் தடையுங் கடந்திட வூக்கும் ஆதலின் நுமரெனத் தடுத்தலு மரிதே.
எம்மவர் காணின் ஈங்குனைக் கொல்வார்.

2 GT5:
அம்ம யானவர்க் கஞ்சேன், அவர்தம் இருபது வாளினுந் திருவே யுன்றன் இருவிழி யென்னைக் கலக்கிடும் பெரிதே; அன்பு நோக்கால் அருள் செய் வாயேல் துன்புறுத் தாதெனத் துன்னலர் பகையே.
காணு ராகதில் பேணு ருனையே;
இருளெனும் போர்வை என மறைத் திடலாற் கருதலர் காணுர்; காணினு மென்னே? − நின்னன் பின்றி நெடிதுழந் திறத்தலில்
அன்னவர் பகையால் அழிவது நன்றே;
ஆர்வழி காட்ட அடைந்தனை இவனே?
ஆரென வுனை முன் அறியத் தூண்டிய ஏரு று காதலே என்வழிப் படுத் கது; நல்லறி வெனக்கது நல்கிய தாங்கே மெல்லியல், அதற்கு விழியளித்தேன்யான்; சேனெடுந் தொலையில் திரை பொரு கரையில் வாணுதல் மங்கை வதிவா யாயினும், மாலுமி யல்லே ஞயினு மந்த அரும் பெறற் பொருளை அடைவான் வேண்டிக் கருங்கடல் தனையுங் கடப்பென் துணிந்தே.
இருளென் முகத்தினை மறைக்கும தறிவாய்; இலையேல் இன்றியான் சொல்லிய மொழிக்கா நாணுவ தென்றன் கதுப்பினிற் காண் பாய், ஒப்பொடு நிற்றற் கொருப்படா துள்ளம் தப்பெனச் சொன்னவை மறுத்தலு மிலனே; பேதை யென்னைக் காதலிக் கின்றையா? ஆமெனச் சொல்வாய், அதனையா னறிவேன்; உன் சொல் லதனை உறுதியாக் கொள்வன்: சூளுரைப் பாயெனிற் பொய்ப்பினும்
[ Go Lurr uiuuu unrui; காதலர் பொய்ப்பிற் கடவுளர் நகுவர்; ஆதலின் உரோமியோ அன்புளத் துண் டெனில் நெஞ்சந் திறந்து நேர்படக் கூறுதி; அன்றி யெளிதில் வென்றனை யெனையென் றெண்ணுவை யேல் யான் ஏதிலர் போலப் பொதுநோக் கோடு பொருந்துவன்; பொருந்தின்

Page 6
உரோமி:
குறையிரந் தன்புரை கூறுவை பலவும்: எளிய ளென்றென எண்ணிலை யாயின் உலகுடன் பெறினும் உள்ளத்தை ஒளியேன்" உண்மையில் அன்பென் உளநிறைந் தொழுகும் " நாணிலி யென்றென எண்ணினு மெண்ணுவை; ஆயினு மென்னை நம் புதி ஐய, காதலை யொளித்தங் கேதிலர் போல நடிக்குநங் கையரினும் நான் மெய் யுடையேன்” இத்தனை யெளிதில் இசைந்ததென் பெண்மைக் கொத்த தன்றே; ஒருவரு மிலையெனுந் துணிவால் உள்ளத் துணர்ச்சியை உரைத்தேன்; ஒளித்திருந்ததனைக் கேட்டனை, கெட்டேன்; ஆதலின் என்பிழை பொறுப்பாய் காதற் கெளிய ளென்றெனை இளிவுசெய் யாயே.
ஆருயிர் அணங்கே, அவ்வா றுரையேல்; ஏருற இம்மரத் திலைமுடிக் கொளிதரும் அங்கண் வானுள மதிமேல் ஆணை
திங்கள் தோறும் திரிபுறு மதனுல் ஓஒ மதிமேல் உரையே லாணே; மாறும் மதிபோல் மற்றுன் காதலும் மாறு மென்றே மாழ்குமென் நெஞ்சம்;
எதன்மீ தாணை இடுகேன்? சொல்வாய்;
ஆணை வேண்டா; வேண்டுமேல் அன்பா உன் மீ தாணை உரைப்பாய்; உனை யே என்னருந் தெய்வ மென் றேத்தித் தொழுவேன்; நம்பி, உன்மொழி நம்புவன் யானே.
என்று மென்னுளத் திணிக்குங் காதல்
நன்று, சூளுரை வேண்டா " நானுன் அன்பு மொழியில் மகிழ்வே யிைனும் இன்று செய்த விக் காதற் பொருத்தனை ஒன்று மகிழ் வெனக் கூட்டா தன்பா, எண்ணித் துணியாச் செயலதை நினைக்கின் விண்ணில் தோன்றி விரைந்துடன் மறையும் மின்னல் போலும்; மீண்டு நீ வருக; இன்று முகிழ்த்தவிக் காத லரும்பு

a Gig III rfl:
9.
நன்று வளர்ந்து மறுகாற் காண்கையில் நன்மணங் கமழும் பொன்மல ராகும்; சென்று வருக; செவ்வனந் துயில்க; எனக்குள வ ைமதி நினக்குமா குகவே.
நிறைவு செய்யாமல் நீங்குதல் நன்ருே? நிறைவென் பெறுவையில் விர வினில் அன்பா? என்சூள் கேட்டன; எனக்கது தந்திலை;
கேட்கு முன்னே கொடுத்தேன்; ஆயினும் மீட்டுங் கொடுக்க விழைவேன் யானே;
கொடுத்ததை மீட்டுக் கொள்ளுவை கொல்லோ? மடத்தகு நல்லாய் மறிப்பது மெவன் கொல்?
மறித்துந் தரவே; மற்றென் றில்லை;
மடவேன் யானென் னிடமுள வதையே அடைய விழைந்தேன், அள்ளித் தருவேன்
கடல்போல் வண்மை கரையில தன் புங்
உரோமி:
கடல்போ லாழ்ந்தது காதல, இரண்டுங் கொடுக்கக் கொடுக்கக் குறையா; கூப்பிடும் குரலொலி யொன்று கேட்கிற துள்ளே விரைவில் வருவேன் சற்றுநிற் பாயே.
(யூலியற்று மறைகிருள்
வாழிய இரவே! வாழிய காதல்! கனவோ நனவோ கண்டது மெய்யோ? கங்கு லாதலிற் கலங்குமென் நெஞ்சே.
(யூலியற்று மீளத் தோன்று கிருள்
மூன்று வார்த்தை மொழிந்தபின் என்னின்" நீங்க விடையான் நினக்கின் றளிப்பேன்; என்னருங் காதல் மன்னவ கேண் மோ; நின்னது காதல் விழுமிய தாயின், நின்னுடை நோக்கம் கடிமண மாயின், எங்கே எப்போ தென்னை மனக்க எண்ணினை யென்னுஞ் செய்தியை நாளைத், திண்ண மெனக்குத் தெரிவிப் பாயேல்

Page 7
、厦0
என்னுடை மையெலாம் நின்னடி வைத்துத் தலைவ, நீயிம் மலர்தலை யுலகிற் படரு மிடமெலாந் தொடருவன் யானே.
(களம் 2, காட்சி 2. வரி 33 - 1471
2
புயல்
பேடினந்து என்னும் தலைமகன் மிராண்டா என்னுந் தலைவியைத் தலைப்பட்டுக் காதலித்த காட்சிகளிற் சில பகுதிகள்
(தொலைவிலே வந்த பேடினந்தைத் தந்தை காட்ட Lôlgsr GöoTL-T வியத்தல்)
மிராண்டா: அண்ணல், அவ்வுரு யாதோ? வலிமை
கண்ணிய வுருவம் காட்சிக் கினிதால், திண்ண மஃதொரு தெய்வத மாமே.
[களம் 1. காட்சி 2. வரி 409 - 12
(அவன் மண்ணுலகத்துள்ள ஒருவனேயெனத் தந்தை உணர்த்திய போது அவள் வியத்தல்)
afy st: பூவில் இந்தப் புண்ணியற் கண்டிலேன்
தேவன் இவனெனச் செப்புவன் யானே
[ களம் 1, காட்சி 2. வரி 4 17 - 18
(மிராண்டாவைக் கண்ட பேடினந்து வியத்தல்)
பேடினந்து: தெய்வம் நீயெனத் தேருவன் இவனி
வைகுவை யாயின் வர மெனக் கருள் வாய், புதியன் யானிவன் வதியுமா றறியேன் அதிசயப் பொருளே அறிவுரை சொல் வாய்; முன்னம் யானுனை வேண்டுவ திது கேள்: கன்னியோ? அன்றிக் கற்புடை யாயோ?
மிரா: ஐய, யானேர் அதிசயப் பொருளலேன்
மெய்யே கன்னி; மேவிலன் கற்பே.
(களம் 1, காட்சி 2, வரி 421 - 4 281

பேடி:
建翼
கன்னி நீயெனிற் காதலை யொருவற் கின்னு மளித்திலை யென்னில் அணங்கே நேப்பிள் இராணி யாக்குவன் நினையே.
(களம் 1, க ட்சி 2, வரி 447 - 491
(காதலன் மரக்குற்றி காவுவதைக் கண்டு கன்னி கலங்குதல்)
L5 Jir:
பேடி:
ablј п.:
பேடி:
மிரா,
அந்தோ கொடுமை! ஆவென் செய்தீர்! நொந்தீர் உடலம்! நோ குமென் னுளமே! எந்தை குவியென ஏவிய விறகிதை அந்த மின்னல் அழித்திட விலையே! ஆறுக சற்றே அமருக; குற்றியை நிலத்தி லிடுக; நெருப்பினில் எரிகையில் நலத்தகு மும்மை நலிவுசெய் தற்கே கண்ணிர் வடித்தழுங் கட்டை யிதுவே: எந்தை கல்வியில் ஈடுபட் டுள்ளார்; இந்த வேளை வாரார் ஈங்கே.
என்னருந் தலைவி, என் கடன் செயுமுனம் துன்னிருள் சூழச் சுடர் மறைந் திடுமே.
அவ்வாருயின் ஆங்கப் பணியைச் செவ்வனம் யானே செய்குவன்; என்னிடம் குற்றியைத் தருக குவியலிற் சேர்ப்பேன், சற்றிவ ணிருந்து தளர்வகற் றுக வே.
இல்லை, இல்லை என்னரும் பொருளே, புல்லிய தொழிலிதை மெல்லியல் நீசெய வறிதே பார்த்திங் கிருப்பன் கொல்லோ? முறிக வென் முதுகே! அறுகவென் நரம்பே
நுமக்கிது தகுமேல் எனக்குந் தகுமே,
நுமக்கு வெறுப்பாம் இப்பணி; இதை யான் அருத்தியிற் செய்வன் ஆதலின் நும் மினும்
திருத்த மாகச் செய்குவன் எளிதே.
புரசுபரோ (மறைவில்)
நொய்ய புழுவே, நோயுற் றனையித் தெய்வ தண்டனை தெரிக்குமுன் நோயே.
இளைத்தீர் போலும்;

Page 8
盈之
பேடி:
மிரா:
பேடி:
பேடி:
இல்லை, இல்லை, எம்பெரு மாட்டி என்னரு கிருக்கையில் கங்குலும் நல்ல காலையாம் எனக்கே; இங்கொரு வரம் யான் வேண்டுவன் நின்பால், இறைவழி பாட்டில் இயைத்துப் பரவற் கறிய விழைவேன் அம்மநின் பெயரே.
என் பெயர் மிராண்டா- என் செய்தேன் எந்தா
மீறினன் ஆணை; சிறுவிர் கொல்லோ?
வியத்தகு மிராண்டா, வியப்பின் முடியே! நயத்தகு பொருளிலை நானிலத் துனைப்போல்; நங்கையர் பலரை நயப்பொடு பார்த்துளேன். அங்கவர் குதலை அஞ்செவி மடுத்துளேன், பல நலங் கருதிப் பலரை மதித்துளேன், இலரவர் தம்முள் இதய நிறைந்தார்; திருந்தெழில் மடவார் செம்மை நலத்தொடு பொருந்தாப் பண்பும் போரிடக் கண்டேன்; ஆயின் நீயோ அழகெலாந் திரண்டே நேய நெஞ்சொடு நிறைகுணம் பூண்டுளை: ஈடு மெடுப்பும் இல்லாய் நீயே பீடுறு பெண்மைப் பிழம்பென லாமே.
என்னை யன்றி இப்புவி தனில் யான் என்பா லாருள் எவரையு மறியேன்;
என்முக மாடியிற் கண்டதை யல்லாற்
பின்னுெரு பெண்முகம் பேதை யான் கண்டிலன்; என்னருந் தந்தையும் ஏந்தலு மல்லால் இந்நிலத் தாடவர் எவரையுங் கண்டிலன்; மற்றை மாந்தர் எத்தகை யாரெனச் சிற்றறி வுடையேன் தேரேன்; ஆயினும் நாண மென்னும் நல்லணி பூண்டேன் ஆணினத் தும்மலால் ஆரையும் விழையேன் மற்ருெரு வடிவை மனத்தால் மதிக்கக் கற்பனை செய்துங் காண்கிலன் - என்னே பற்பல சொல்லிப் பிதற்றுவென்! எந்தை கற்பனை தனையும் மறந்துவிட் டேனே!
என்னுடை நாட்டில் இளங்கோ யானே, மன்ன னென்றென மதித்தலும் தகுமே; குற்றி சுமக்குங் கொடுந்தொழி லிதுதான்

மிரா:
3uւգ:
цБЈ т:
பேடி:
Lf6 TT:
பேடி:
:Lô UT:
மற்றென் மனத்துக் கொவ் வா தாயினும், என்னுயிர் உரைக்கும் நன்மொழி யிதுகேள்: அன்பே யுன்னைக் கண்டவக் கணமே உன் பணிக் கென்றன் உள்ளம் விரைந்தங் கோடி யுன்பால் உறைதலின் அடிமை நாடி யுனக்குச் செய்குவன் யானே.
ஐயவென் மீதுமக் காதரமுண்டோ?
வானமும் இந்த வையமும் இரண்டும் நானுரைப் பதற்கு நற்கரி யாகுக, பாலொத் திணிக்கும் பணிமொழி கேளாய், ஞாலத் துள்ளவை யாவினு மேலாக் கருதி யுன்னைக் காதலின் மதித்துப் பொருவி லன்பாற் போற்றுவன் யானே.
女
திருமணம் புரிந்தென் செங்கரம் பற்றின்’ பெரும, நும் மனையாம் பெரும்பே றடைவேன்; பணமிங் கிலையெனில் மடியுங் காறும் பணிபுரிந் துமக்கே பாங்கி யாவேன்; பாங்கி யாகும் பான்மையு மின்றேல் நீங்கா வடிமை யாகுவென் நுமக்கே.
ஆருயிர்த் தலைவீ, அடிமையா னு னக்கே.
அப்போY தென்றன் ஆளன் நீரே.
ஆமாம்; அன்புப் பிணிப்புக் கிசைந்தேன் இந்தா என்கை தந்தேன் உனக்கே.
காத லுளத்தொடென் கையுந் தந்தேன் போதும், பிரிவேம் அரை மணிப் போதே.
களம் 3, காட்சி 1, வரி 15 - 11

Page 9
4
தண்ணளி (வெனிசு வணிகன்)
தண்ணளி யென்பது த கைத்தல் இலாதது; விண்ணின் றிழியும் மென் மழை போல
ஈர நெஞ்சில் இயல்பிற் சுரப்பது;
ஈவோன் ஏற்போன் இருதிறத் தார்க்கும் தாவில் பெரு நலந் த ரூஉந் த கையது; வலிமை சான்ற வல்லார்க் கெல்லாம் வலிமைக் கதுவே வரம்பா யமைவது; அரியணை யமரும் அரசற் கவனது விரிகதிர் முடியினும் விழுத்தக வுடையது; மற்றவன் கோலெனில் மண்ணுல காளுங் கொற்றங் குறிப்பது; குரிசிலர்க் குரிய உட்கு மச்சமும் உறைதற் கிடமாயது: அஞ்சுதக வுடையவக் கோலோன் ஆணையின் விஞ்சிய தண்ணனி விழுமிதே யம் ம; உலகாள் வேந்தர் உள்ளத் தவிசில் உறையு மதுவே இறைவற் குரிய ஒரு பெரும் பண் பென் ருேதவும் படுமே; தண்ணளி தழிஇத் தகவொடு முறை செயின் மண்ணக மாளும் மன்னவன் ஆற்றல் கடவுள தென்னக் கவினு மா லிங்கே ; ஆதலின் யூத, அறநெறி வழுவா நீதி யொன்றே வேண்டுதி யாயினும் உறுதி மொழியிதை உளங்கொள் வாயே; கண்ணுேட்ட மிலாது முறை செயின் வாழ்விற் கடைத்தே றேமிது திண்ணம்; கடவுள் இன்னருள் வேண்டி இரப்பேம் பிறருக் கன்னதை மறுப்பின் அவனருள் பெறேமே.
களம் 4, காட்சி 1. "வரி 179 - 1973
-செ. வேலாயுதபிள்ளை

அம்லெற்
எல்சினுேர் மாளிகையில் அம்லெற் தன் விதியை எண் ணிப் புலம்புகிறன். இது அவனின் ஒரு புகழ்பெற்ற தனி மொழி. அம்லெற் தென்மாக்கின் இளவரசன், அரசனுன அவன் தந்தை அண்மையில் இறந்தனன். அரசனின் ஆவி அவனுக்குத் தோன்றி தான் தன் தம்பியால் கொல்லப்பட்ட தாகக் கூறுகின்றது. அரசனின் தம்பி அரசன் அரியணையை யும் அரசியையும் கவர்ந்திருந்தான். ஆவி மகனை வஞ்சம் தீர்க்குமாறு கட்டளையிடுகிறது. அம்லெற்றிற்கும் பல ஐயங் களும் இடையூறுகளும் தோன்றுகின்றன. இத்தனிமொழியில் அவன் வாழ்வில் தான் கொண்ட கசப்பையும் தாய்மீது கொண்ட வெறுப்பையும் கூறுகிறன்.
ஓ! திண் திணி ஊனிது உருகி நீர்த்துப் பனியெனத் துணியிலோ? நித்தன் தனுணை, தற்கொலை தனைத்தடை செய்யாது அமையிலோ? இறைவ! உலகிதின் பெறுதியில் எத்துணைக் சிறுமை. மெலிவு புன்கண், சிதை வென என்னுளம் எண்ணுதே. என்ன? சீச் சீ! களையருக் கழனியில் வுலகு வித்திட வளர்வது; இயற்கையின் இழிவும் சட்டமும் முழுமையும் இதனைக் கெழு மின; விதியிதோ? மாண்டிரு மாதமே! இல்லை, அவ்வளவு இல்லை! இரண்டிலை; எத்துணை மாண்புடை மன்னன்! காட்டேரிக் கமைந்த ஞாயிற்று அண்ணல் என்றன் ஆயினில் அத்துணைக் காதலோன்; விண்வளி தானும் அவள்முகம் நோதக மேவ நெஞ்சம் பொறுக்கான். இவற்றை என்னுளம் இருத்தவோ? இறைவனே! ஞாலமே! என் சொல, பசிதன் மிசைவினல் மேலும் மிகைத்தெழு மாறுபோல் அவளவர் தோள் மிசை தூங்குவள். எல்லாம் ஒருமதி தாண்டுமுன்; சிந்தையில் ஊன்றவோ இதைநான்! மெலிவே நின் பெயர் மெல்லியல்; அளியர் எந்தை கண்மழை சிந்தி நீலிபோல் அவருடல் தொடர்ந்த அடிமிதி ஒருமதி தேயுமுன், அவள் ஏன்? அவளோ - இறைவா!

Page 10
I 6
உய்த்தறி உணர்விலா விலங்கும் நோற்கும் துயரினை மிகுநாள் - அவளோ! என் சிறு தந்தையை எந்தையின் தம்பியைக் கூடினள். எந்தைக் கவனிணை, ஏக்குளிசு' தனக்குநான் கொள்ளிணை; ஒரு மதி கழியுமுன்; உரிமை எள் அளவுமில் கண்ணிர் உப்பெலாம் அவள் கண் ஒளியினைத் துறக்குமுன்; வேட்டனள் ஒருவனை. மறங்கூர் கதியே! முறையில் அமளியில் திறம்படச் சேர்த்தனை. நன்றன்று இது; இனி நன்று தருவது மன்றிது. எனினுமென் நெஞ்சே! பொன்றுக; என்ன? என் நாவினைக் காத்தல் என்பணி அல்லவோ.
பாழ் பிடித்த தன் அரண்மனையில் அம்லெற் தன்னுள் பேசிக்கொள்கிறன். தன் தந்தை கொலைபண்ணப்பட்டார் என் பதை ஆவியுருவில் வந்த தன் தந்தையிடமிருந்து அறிந்த பின் பேசிய பேச்சிது. ஆங்கில மொழியில் மிகச்சிறந்த பகுதி யிது. மனிதனின் கயமை தன்னைச் சூழ்ந்துநிற்பதை அவன் காண்கிறன். தன் கடமை வஞ்சம், என்பதை அவன் உணர்ந் ததும் அவன் மனம் தளர்ந்துவிடுகிறன்.
வாழவோ மாளவோ? கேள்வி அதுவே! பாழ்த்த ஊழின் அம்புஎறி அனைத்தையும் பொறுத்தலோ, துன்பப் பெருங்கடற் கெதிராய் கரம் கலம் பற்றிப் பொருதவை அழித்தலோ, யாது உள விழுமை? இறத்தல்; துயிலல்; போதும்; துயிலெனின் இதயநோ, ஊனியல் ஆயிரம் இயல்பதிர்பு அனைத்தையும் இறுத்தல் ஆயின், பற்றெடு அவாத்தகு நிறைவது என்க; இறத்தல் துயில லே, துயிலல் கனவலாம்; அதில்தான் அராவல்; சாத்துயில் அதனில் இச் சாவியல் குரம் பையைக் கழற்ற எதிருறும் துயில் நமக்கு ஒய்வு நல்கிடும். ஒரு வாழ் நாளினை நிரய மாக்கு மானமும் உண்டு; மானிடன் எவன்தான்
I Hercules.

காலக் கறுவல், கசையடி, ஆள்வார் கொடுங்கோல், கயமை, மிடுக்கின் அவமதி, ஒறுத்த காதல், உழந்த வேதனை, நீதியின் தாமதம், பதந்தரு பெருமிதம், தகைவிலார் பொறைகொள் தகைமை சேர் வெறுப்பு என்றிவை எல்லாம் ஏற்பன்: தனிஓர் துன்னுளி தன்னுல் தன் முடிபு ஒடுக்கும் ஒய்வழி ஓர்ந்தவன்; தேய்வளி வாழ்வில் தேம்பி வியர்த்திடச் சேர் சுமை யாவும் ஏற்பவர் யாரே? எனினும் இறப்பின் வழிமீள்பு அறியா வம் பலர் புலத்தின் பின்னிகழ்பு ஒரா இன்னலின் அச்சம் ஏய்க்குமே உளத்தின; ஏய்த்து,நாம் முன்னரே ஆய்ந்து தேர்ந்திடா ஆரஞர் புகுதலில் இன்றுள வற்றை ஏற்றிட வைக்குமே! இங்ங்னம் மனச் சான்று எம்மைப் பேடிகள் ஆக்கும்; அவ்வழி ஆன்ற துணிபின் இயல்தகை தானும் ஏற்றமில் சிந்தனை தன்னுல் நொடித்திடும்; தனி உயர் கதியும் ஆர்வும் சார்ந்த ஆழ்வினை தாமும் திசைதிரிந் ததனுல் நெறிமிகப் பிறழ்ந்து வினைகெடல் உண்டு; சூழ்க அமைதி ! இனியை, ஒபிலியா! இன்னர மகளே!
என்பிழை யாவுநின் தொழுகையில் நிலவுக.
V ്രട്ടൂള
r6iiiir I u I isir I u fal,
பாணடியன் பரிசுப் போட்டிக்குக் கிடைத்த பாக்கள் பரிசிற் குத் தகுதியில் லாதிருப்பதை மிக ம ன வ ருத்தத்துடன் அறிவித்துக் கொள்கிகுேம்.
.5f ifiugirي س--

Page 11
செகசிற்பியரின் சொனற்றுகள்
சொனற்று ஆங்கிலப் பாவகை ஒன்று. 10 அசைகள் கொண்ட 14 அடிகள் கொண்டது. இதன் இயைபில் ஒர் ஒழுங் குண்டு. அது அஇஅஇ, உஎஉஎ, ஐஒஐஒ, ஆஆ என்ற ஒழுங் கில் வரும். 'ኳ
சொனற் எண்
அழகிய உயிரவை ஓங்கல் அவாவுவம் வளமலர் அதனுல் புலராது இலங்க; பழுத்தவர் நாள் கழிந்து இலராய் மாளவும் இளம் அவர் குழகர் அவர் நினைவு ஒம்புவர். எனின் உன் ஒண் கண் உன்சுவை நுனித்தே தனைத்தகி எரியிஞல் உயிரொளி ஊட்டி புன்மைகூர் புலத்தில் பாழ்மை விளைத்திடும். உன்பகை நீயே நீயே உன் ஊறு. பன்னிற வேனிலின் தனியொரு தூதிஞய் அவனியின் யாணர் அணியென விளங்கி உனதரும்பு அதனில் உன்னுறை புதைத்தனை: இவருல் அழித்தனை, மெல்லியல் உலோபி!
உலகிற்கு அருள்; இலை, ஊணி ஆகுவை; கல்லறை உடலால் உலகுணு உண்ணலால்.
6)
eta
நாற்பது மாரிநின் புருவம் சூழ்ந்து நின்னெழிற் புலத்தில் ஆழ்குழி போழவும் மாற்கண் கொள்நின் மைந்தின் புகழிசை புன்வினைச் சிதைகளை எனப்பொலி விழந்திடும். பின் உன் எழிலின் புகலிடம் யாது? புகழ் ஒளிக் காலப் புதையல் எங்குளது? எனவும், என்ற ன் குழி தாழ் கண்ணெனப் பகரு ரை யனைத்தும் பாழ்வசை, பயனில் புகழுரை யாகுமே. என்சிறு மகவிது என்நிலை கூறும் , என் மூப்பும் விளக்கம்

9
ஆகையது எனில், நின் சாயல் மிகுசிர் :) விண்னுமே; அவனெழில் உனதனைத் தொடர்ந்து:
முதுமையில் புதியது முகிழ்க்க, நின் குருதி கசியவும் மற்றது காயவும் காண் குவை.
3
ஆடிபார்த்து அங்குறும் முகங்கண்டு இன்னுென்று ஆக்குநல் வேளை இதுவென மொழிகுவை: நாடிநீ மீள் புதிது இயற்றத் தவறின் பார்க்கு வஞ்சம் ஒர் தாய்க்குச் சாபம் நேர்ந்ததாம்; என்னேநின் ஏர்வினை ஏலா உழவிலாக் கருவக அழகுளாள் எங்குளாள்? சார் மரபு அறுக்கும் தன்பாற் காதற் கல்லறை, அவாவும் புல்லன் யாரோ? நீயுநின் அன்னையின் ஆடியே, அன்னவள் தன்னிள வேனிலை உன்னுலோ கண்ணுறும். ஆயின் உன் ஆயுட் பல கணி வழியாய்ப் :ன்திரை சூழினும் காண் குவை உனது இப்
பொன் பொழுது; நினைவற வாழிலோ மாள் குவை தனியே உடன்நின் படிவமும் மடியும்.
4
:இசையில் எழிலோய்! நின்ன்ெழில் உரிமையை
உன்னில் அழிப்பது நன்முே? இயற்கை உதவுவாள் அல்லால் அளிப்பவள் அல்லள். என்னை? அளியவள் அளிப்பார்க் களிப்பாள்;
ஆக எழில் சேர் இவறி! அளிக்கென அளித்த வளக்கொடை இழித்தல் அழகோ! ஆக்கமில் வட்டியாய்! ஆள்நிதி கொண்டும்நீ இளிவர வாழ்வது இயைபோ சொல் வாய்! உன்னுேடு நீயே தனித் திருந்து இயலல் உனக்கு நீ வஞ்சனே புனேந்தது அல்லவோ! எனவே இயற்கை ஏகுதி என்றுனைப் பணிப்பின் ஏற்றநற் கணக்கெது காட்டுவாய்?
பயன்படாது உன்னுேடு புதைபடும் நின்னெழில் பயன்படின் நின்றுன் பழநலம் ஒம்புமே.
c:

Page 12
29
53
கோடி மாயம் கொள்நிழல் பணிந்திட ஆயநின் திரவியம் ஆம்பொருள் யாவோ ! கூடும் யார்க்கும் ஒரு நிழல்; ஒருதனி நீயோ இசைத்தனை சாயல் அனைத்தையும். அடோனிசை வரைந்திடில் படிவது உன்றன்" வறியவோர் விம்பமே; எலனின் கதுப்பினில் கடி யழகு அணியெலாம் தொடுப்பினும் புதுமைநின் கிரேக்கப் புனைவு; உரைத்திடும் ஆண்டின் வசந்தம் விளைவிவை உளங்கொளில் ஒன்று நின் எழிலின் நிழலையே மொழியும்; மற்றதோ இசை சேர் வண்மையை இயம்பிடும். என்றும் ஒளிநிறை வடிவெலாம் உன்னையே உணர்ந்தனம். புறத்தழ கெலாம் நீ பங்கு கொள்ளினும் நிறையகம் தனக்கோர் இணையுனக் கில்லையே.
54.
வாய்மை ஈந்திடும் இன்னணி தன்னல் எழிலின் எழிலும் எத்துணை ஓங்கும்! சாயல் உண்டு உரோசிற்கு ஆயினும் அதில் வாழ். செழிவிரை கண்டு அதன் எழில் மிக என்போம். பினிமலர் பல தாம் உரோசின் நறுமண நிற நேர் நிறைவளச் சாயல் கொள்ளும், முண்மிசை படுக்கும்; கோடை மூச்சினில் மறைபோது அவிழ் பொழுது இசையோ டாடும் காட்சியே அவற்றிற் கணிகலம்; காதல் கன மற் றவை வாழ்ந்து வாடி மடிய மாட்சிசேர் உரோ சுகள் மடியா; அவற்றின் இன்னறுஞ் சாவினில் இன் மணம் கமழும்.
ஆரெழில் இளைஞ! நின் ஏர் கவின் மடியின் என்: சீரியல் கவிநின் மெய்ம்மை வடிக்கும்,
116
உண்மை உளங்கள் புணர்தற்கு இடையூறு அளிப்பவன் அல்லன் நான்; அவற்றிடை மாற்றம் அணையவும் மாற்றுறும் காதல் காதலோ! இளைத்தார் இளைக்கச் சளைப்பதோ காதல்!

2.
இல்லை கலங்காத நிலைகொள் விளக்கது.
புயல் பல காணினும் பெயராத் தகை யது. கிலேயுயர்பு அளப்பினும் நல வுயர்பு அறிவரும் பெயர்வியல் படகிற்கு அமைந்த உடுஒளி. கவுளொடு செவ்விதழ் கால வாட் படினும் காதலைக் காலம் காய்தல் கூடுமோ! தவறுமோ காதல் பொழுதொடு மதியொடும், மீதூர்ந் தோங்குமே தீர்ப்பு நாள்வரை;
ஒதுமிவ் வென்னுரை வழுவென நிறுவிடின் காதலு மில்லையிக் கவிபு மில்லையே.
காமன் கைக் கணை
(சொனற் - 154 )
மஹாகவி'
நெஞ்சைத் தகிக்கும் நெருப்பு மலர்க் கணையைக் காமன் அயல் வைத்துக் கண்ணுயர்ந்தான்
முன்னுெரு கால்
கொஞ்சமும் காமம் விழையாத கொள்கையினுேர் நாம் என்று கூறி நடந்தங்கு வந்த தொரு கன்னியர் கூட்டம். இவருட் கடுஞ் சிவப்பி எத்தனையோ உண்மை இதயம் குளிர்வித்த அன்னதைக் கையில் எடுத்தாள். அதனுலே நித்திரையில் ஓர் குமரி பாற் தன் நெடுங்கணையை இச்சைகளின் மன்னன் இழந்தான். இவள் அதைக் கிட்ட இருந்த கிணற்றுள்ளே தோய்த்துவிட, அச் சூட்டில் வெந்த நீர் அன்றிருந்தே ஆடவர், நோப் :பட்டார், குளித்தாற் பரிகாரம் ஆயிற்றம்!
நாரி "இவ*ளால் நானும் குளித்தேன். ஆம்,
நீர் நனைக்காக் காமன் நெருப்பந்த நீர்ச் சுடுமே!

Page 13
22
வீனசும் அடோனிசும்
ஊதா முகத் தொடு ஆதவன், காலை அரற்ற, இறுதியிற் பிரியுங் காலை; செங்கவுள் அடோனிசு துரத்தினள் அவனே. வேட்டை விரும்பவன் வேட்கையை எள்ளினன்.
நோவுள வீனசு தாவினள் அவன் பால், விறல் மன வரனென வேண்டினள் காதல்.
"என்னிலும் மும்பை) எழிலோய்! புலந்தரு நன்ம லார், உவமனில் இன்பே, அர மகள் நானே! ஆணவன் வெள் கிடும் அழகினய், புறவினில் உரோசினில் வெண்மையோய்
செம்மையோய்: உன்னைப் படைத்த உறழியல் இயற்கை உன்னுேடு உலகு பொன்றும் என்னுமே.
வெளிற்றுத் தந்தஇவ் வளைவினுள் உன்றன வளைத்தனன், வாஞ்சையாய்", என்றவள்
தொடர் வாள். “நானுேர் சோலைநீ அதன் இன் உயிர்மான் கயத்திலும் தடத்திலும் கண்ணிய சுவைக்கலாம்
எயிற்றினில் அயிலலாம்; குன்றிவை
- பொன்றிடில் இன்சுனை துயிலும் கீழ்ப்புலம் தோயலாம்.
எல்லே இதனுள் இன் வரை பலவுள. கனிக் கீழ்ப் புல்லொடு நனிமகிழ் தருவெளி சுழன்றுயர் குன்றம், மறைததர் துாறு, மழை புயல் நின்றிவை மறைத்துக் காக்கும்.
காநான் எனில் நீ யதன் மான் காண்க, கோடிநாய் குரைக்கினும் ஒன்றுனை அணுகுமோ !”

வெரோணுவின் பிரபுமாரிருவர்
உன்றன் தியாகம், கண்ணிர், மூச்சு, உன்னகம் யாவையும் அன்னவள் எழிலின் சந்நிதி முன்னர்ச் சாற்றுக பணிவுடன்; உன்மை யுலரும் வரையும் வரை க, பின்னர் கண்ணிர் கொண்டதை நனைக்க: அன்ன நேர்மை இயம்பும் உணர்ச்சி தேக்குநல் வரிசில யாக்க என்னை! பாவலர் நரம்பினில் படைத்த வீணையின் பொன்னிசை, உருக்கினைக் கற்களை உருக்கும்; புவியினை ஒடுக்கும்; ஒலிபுகா க் கெவிகளைத் துறந்து நீர் வாழ் பெரு விலங் கதனை மணலினில் ஆடப் பணிக்கும்; உன்விதி நோகும் இரங்கற் பாக்களின் பின்னர், இன்னெலிப் பல்லியம் ஒன்றுடன் உன்னக மெல்லியல் துயிலறைப் பல கணி தனை நீ நள்ளிர வதனில் நண்ணுக, பல்லியம் தன்னில் கவலும் இசையொன் றிணைக்க: இரவின் சாநிகர் அமைதி இத்தகை இரங்கும் இன்னிசை முறைப்பா டதற்குதல் வாய்ப்புடைத் தாகும். இதுவழி யன்றி . அவட்பெற வேறு வழியிலைக் காண்க.
I .
2
73.

Page 14
24
ஒதல்லோ
சைப்பிரசுப் படையின் ஆணேயாளனுன ஒதல்லோ தெசத மோனுவை மணந்தபொழுது தன் காதலே அவளுக்குக் கூறு கின்றன்.
நினக்கு நான் மறுப்பதொன்றில்லை. மேதகுபேதாய்! காதலில் தவறின் பேரழிலென்னை ஆட்கொளும் கண்டாய். ஆயினும் நானுனைக் காதலிக் கின்றேன்; காதலில் தவறும் போதெல்லாம் என்றன் ஆகம் பாழ்மையில் மூழ்குதல் காண் பாய்.
ஒதல்லோவின் துணையான இயாகோ ஒதல்லோ வின் லெப் றின்ைற் கசியோவில் பொறுமை கொண்டவனுயிருக்கிறன். கசியோ தெசதமோனுவுடன் கள்ளக் காதல் கொண்டுள்ளான் என்று இவன் புனைந்துரைக்க ஒதல்லோ அதை நம்பிவிடுகி றன். அதற்கு ஒரு சான்று கேட்கிறன். இயாகோ தான் கவர்ந்த ஒரு கைக் குட்டையைக் காட்டுகிறன். இது ஒதல்லோ தெசதமோனுவிற்குக் கொடுத்த கைக்குட்டை, ஒ த ல் லே ர அதைக் கண்டதும் மனேவியிற் சந்தேகம் கொள்கிறன். மனைவி யிடம் கைக்குட்டையைக் காட்டும்படி கேட்கிறன். அவளிடம் அது இல்லை, அவன் வெகுண்டு சொல்கிறன்.
எகித்தியன் ஒருவன் என்ருய்க் களித்த எழில் சேர் குட்டை, அதன். அதன் நெசவெலாம் மாந்திரம் கொழிக்கும்; அதுதான் ஞாலத்தில், ஞாயிற்றின் இருநூறு சுழற்சிக் காலத்துக் கட்டுரைப் பாடினி ஒருத்தி, தன் பாடுரை திறத்தில் தைத்தணி மூட்டிய கைத்திறன்; அதனின் பட்டிழை வளர்த்த புழுக்கள் தைவிகம் கெழுமிய; கைபுனை வல்லார் கவின் பெறச் சமைத்த கன்னியர் ஆகக் குழைவினில் வண்ணம் கொண்டதக் குட்டை. R

25
பின் ஒருநாள் ஒதல்லோ தெசதமோனுவைக் கொல்லும் நோக்கத்துடன் அவள் துயிலும் அறையுள் போகிறன். அவள் துயின்று கொண்டிருக்கிறள். அவன் கையில் விளக்குடன் பிரவேசிக்கிறன். கதவைச் சாத்துகிறன். சொல்கிறன். (5.2)
காரணம், காரணம், அதுதான் முக்கியம் இறைவா! நிறையொளி உடுக்காள்! அது எது என்று நான் கூறேன்; எனினும் அவள்தன் குருதி சிந்தேன்; குளிர் பனி அதனிலும் வெள்ளிதாய், சிலை சேர் பளிங்கினும் பசுந்தாய் அமைந்த அவள் தோல் மறுகொளப் பொறேன்நான், ஆயினும் அவள் இனிச் சாதல் வேண்டும். இல்லையேல் ஆடவர் பலர்க்கவள் இரண்டகம் இழைப்பள். ஒளியினை அவிக்க, பின்னர்
ஒளியினை அவிக்க, ஒளிவிடு ஏவல! உனை நான் தணிக்கின் நின்னுெளி மீள ஏற்றல் கூடும் என் மனம் தவிக்கின். மேம்படு இயற்கையின் சூழ்நிறை கோலமே உன்னுெளி ஒருமுறை ஒடுக்கின் மீள நின்னுெளி ஒளிர்க்கும் வன்மைச்ேர் தீயினைக் காணலும் கூடுமோ!
(விளக்சினத் தணித்தல்)
உரோசினைப் பறித்த பின் மீண்டும் அதற்கு வாழ்வு நான் அளித்தல் இயலுமோ! அதுதான் கயங்குமே! கொம்பரில் அதை நான் மணப்பன். விரை கமழ் மணமே!
( முத்தமிடல் ) அறத்தின் கோலினைப் பிறழ்நெறி உய்க்கும் திறன்மிகக் கொண்டனை. இன்னுமொன்று.
இன்னுமொன்று. இறப்பினும் இந்நிலை இயல் க. கொன்றபின் காதல் கொள்வன் நான். இன்னென்று. இதுவே இறுதி; இத் துணை இன்புமுன் இத்துணை மறலி யான தில்லையே! ஆயினும் கதறுவன்; கண்ணிர் இவைதாம் கொடியவை. துயரிது தைவிகம் தோய்ந்தது. காதல் பயப்பதைக் கொல்வது; விழித்தனள் அவள்தான்.

Page 15
அந்தனியும் கிளியப்பெற்ருவும்
அந்தணி, ஒக்தேவியசு சீசர், லெப்பிடசு என்போர் ரோமப் பேரரசை ஆண்ட மும்மூர்த்திகள். கிளியப்பெற்ற கிரேக்க அரசி. பிலோ, டெமெற்றியசு, ஈரோசு என்போர் அந்தணிக்கு நண்பர். சாமியன், ஈராசு ஆகியோர் கிளியப்பெற்றவுக்குப் பணிப்பெண்கள். புல்வியா அந்தணிக்கு மனைவி. சீசருக்குத் தங்கை,
அங்கம் 1
களம்-1 அலெக்சான்ட்றியா. கிளியப்பெற்ருவின் அர மனேயின் ஓர்" அறை .
(டெமெற்றியசும் பிலோவும் வருகின்றனர்.)
பிலோ- சே! நம் தளபதியின் முற்றற் சிறு காமம்
எல்லை கடந்தே இழிகிறது. போர்க் களத்துப் பேரணிகள் மீது பிரபை மிகு செவ்வாய் போல ஒளிர்ந்தவிழிகள் பொது நிறத்துத் தோலில் திரும்பித் தொழும்பு புரிந்திறைஞ்சும். நெஞ்சவார்ப்பூட்டை நெருடித் தெறிக்க
(வைத்து விம்மிப் புடைத்து வெகுளும் அவர் இதயம் தன்னடக்கம் கெட்டது. சீ! தாழ்ந்த ஒரு குறத்தி கொண்டிருக்கும் காமம் குளிர்த்தும் விசிறியாய், ஊதும் துருத்தியாய் உள்ளதடா.
(உள்ளே ஆரவாரம்)
பார் அங்கே, அன்னுேர் வருகின்றர். ஆணுலும் உற்றுப்பார். வையகத்தின் மூன்றில் ஒரு துரண் இழிந்த
(மையலினுல் வே சிக்கு வாய்த்த விகடனுய் விட்டமை பார்.
(அந்தணியும் கிளியப்பெற்ருவும் பரிவாரத்துடன் வருகின்றனர்; பேடி கள் அவளுக்குச் சாமரை இரட்டுகின்றனர்)
Ba: காதலே யானுலும் அதன் அளவு கூறீர்.

அந்:
கிளி:
-oi is:
அந்:
fe
2.
அளக்கத் தகும் காதல் பிச்சையிடப் போதாதே!
காதற் படுவதற்கோர் எல்லையை நான்
(கற்பிப்பேன்.
பூதலமும் விண்ணும் புதிதாக வேண்டுமடி.
(ஒர் ஏவலாள் வருகிறன்) செய்தி ஐய ரோமி லிருந்து.
சிறிதாக்கிச் சொல்லு. துளைக்காதே.
சொல்லட்டும், கேளுங்கள் புல்வியா கோபம் பொழிந்திருப்பாள்-அல்லது சில் மயிர்த் தாடியுடைச் சீசர், “இதனைச் செய் அவ்வரசைக்கொள் வாய். இதனை விடுதலை செய், செய். அன்றேல் நாங்கள் சிதைப்போம் உனை’’ (என்றே அச்சுறுத்திச் செய்தி அனுப்பி இருப்பானே?
எவ்வாறு கண்ணே இயலும்?
சில வேளை உங்களையே சீசர் உதறிவிட்டால் இங்கேயே நின்றுவிடக்கூட நேரலாம். கேளுங்கள், சீசரின் -அல்ல, அல்ல, புல்வி. இருவரதும கட்டளை யா? நான் எகிப்தின் மாதேவி ஆதலின் நீர் வெட்கமா கொண்டீர், வெருட்டுகிற புல் வியா கீச்சுக் குரலிலே வைதவற்றைக் கேட்ப தற்கு? தூதர்களே, வாருங்கள். சொல்லுங்கள் என்னவென்று.
தை பரிலே ரோமே உருகட்டும். பேரரசின் பாவு முகடிரிந்து பாழ்படட்டும். என்புகலோ இங்கே உளதாம். இராச்சியங்கள் துரசெனக்கு, சாணி நிலம் எம்மை, விலங்கை ஒருங்குண்ணும். இவ்வாறு செய்வதுதான் ஏற்றம். எமைப்போல ஒன்றுக்கொன் ருகி உறுவதொரு சோடி எனில் ஒப்பிலா தோங்கி உயர்ந்து விட்டோம் என்பதனை இந்த உலகம் அறிக.

Page 16
28
அந்:
இனி:
இனிய பொய்கள்.
புல்வியா தன்னை, மணந்தவளைக் காதலிக்க வில்லே அவர். ஏனும்? நான் பேதை அல்லளே! ஆணுலும் அவ்வாறு தோற்றுவேன். அந்தணியும் தானு வார்.
ஆயின், கிளியப்பெற் ருவின் கிளர்ச்சியால்-அன்பே, எம் கேளிக்கை
(நாழிகைகள் வீணுகக்கூடாது-வெஞ்சொல் உரைகளிஞல். காதல் இன்பம் இன்றிக் கணம் ஒன்றும் நீளற்க. இன்றிரவின் ஆடல் எது?
தூதைக் கேளுங்கள்.
போ நீ! நெடுகப் பொருகின்ரு ய், மா ரா னி. ஏசல், அழுதல், இளித்தல் எது எனினும்
சும் சுவைகள் உனை அவைகள் மே விவிடின். உன்னையன்றித் தூதெதுவும் வேண்டேன்.
தனிமையில் நாம் வீதி வழியே உலாவி, மனிதர்களின் பண்புகளைப் பார்ப்போம். கடந்தஇரவும் இதைத் தான் விழைந்தீர் தேவி. வருக, ஒன்றும் பேசாதீர்
(அந்தணியும் கிளியப்பெற்ருவும் பரிவாரங்களுடன் செல்கின்றனர்)
ଦ୍ବିଜ LGuid fr:
டெமோ
அந்தணிக்குச் சீசர் அவளவுக்குத் துச் சமா?
அந்தணிக் கேற்ற அருமை இழந்தவராய் அந்தணிஅல் லாமல் அவர் அமையும் போதுகளும் உண்டு சில வேளை.
ரோமில் இதே வகையாய்ப் பொய்யுரைக்கும் அந்தப் பொதுவர்களை
ஒப்புவது போல்தான் அவர் உள்ளார். உள்ளம்
f வருந்துகிறேன், நாளை நலங்கள் நடக்கும் என்று நம்புவோம்.
(செல்கின்றனர்)
களம் 2- அலெக்சான்ட்றியா கிளியப்பெற்ருவின் அரமனையில் வேருேர் அறை.
கிளியப்பெற்றவின் பரிவாரத்தினர் வம்பளத்து கொண்டிருக்கின்றனர்)

இனுே:
as a f: .
இளி:
இனுே: கிளி;
affir fi:
fl:
ei:
29
பேசேல்; வருகிருர் அந்தணி.
GF ! grrr Gasohuumrti.
(கிளியப்பெற்ரு வருகிருள்)
கண்டீரா என்னர ைச?
இல்லை அம்மா.
இங்கன்னுர் வந்திலரா?
இல்லையே தேவி
மகிழ்ந்திருந்தார். பின்னர் திடும் எ ன் ருே ர் ரோம எண்ணம் கொண்டு விட்டார். இனுேபாபசு!
என்னரசீ!
எங்கென்று தேடி இங்கே இட்டுவா. எங்கே. அலெக்சாசு?
: இதோ தேவி! ஏந்தலார் வந்துவிட்டார்.
ஏறிட்டு நோக்கோம் நாம், வாருங்ள்ெ எல்லாரும். போவோம் ஒருமிக்க,
(கிளியப்பெற்றவும் பிறரும் வெளியேறுகின்றனர்) (அந்தனி வடுகிறன் தூதனுடனும், ஏவலருடனும்)
புல்வியா, தங்கள் மனையாள் முதல் களத்தே வந்தார்.
என் தம்பி லுசியன் தனை எதிர்த்தா?
ஆம். எனினும், போரோ அதிவிரைவில்
(முற்றிற்று. சீசர்க் கெதிராய்ச் சிநேகம் பிடித்தார்கள். இத்தாலி நாட்டால் இவரைத் துரத்தி
(விட்டான், சீசர் தன் சண்டைச் சிறப்பு மகிமையினுல்.
வேறும் என்ன தீய செய்தி?

Page 17
துர்த:
: is!لائے۔ ر
هٔ رق آن -ஓந்:
ஏவ1:
з} 3ац 2:
: ژi! % م
சொல்வதற்குக் கூசுகிறேன்.
அஞ்சாதே, சொல் க. அறிவீனர்-கோழைகளே சொல்வோரின் மீது சுரீர் என்று பாய்வார்கள். சாவோலம் ஆணுலும், சத்தியத்தைச்
(சொல் ~ோரைச் சீறவே மாட்டேன், நான். -
செய்தி இது தீது, லபியேணன் தன்னு,ை பாதியச் சேனை கொண்டு யூபிரற்றீசாறு முதல் ஆசியா பற்றிவிட்டான். சீரியா, வீடியா வென்முன்-அயோனியா பற்றி இங்கேயோ- (விட்டான்,
அந்தோனி
என் பிரபோ! சொல்லுவதைச் சொல்லு. சுருக்கி மழுப்பாதே, ரோமில் கிளியாள் உரைக்கப் படும் பெயரால், புல்வியா சொல்லால் புகல்க எல்லாம்.
கூர் மொழிகள்
கொண்டெம் குறையை உழுக. எங்கள்
Y- - சித்தங்கள் சும்மா கிடக்கக் களைகள் மிகுத்து விடும் ஆதலால் எல்லாம் அறைக. சற்றும் அஞ்சாதே. சற்றுப் பொறுத்துக்கொள்.
தங்கள் சித்தம் போல.
(வெளியேறுகிருன்) சிசிய னிருந்தென்ன செய்தி உண்டு, சொல்லுங் கள். 哆
ஆள் ஒருவன் உள்ளான, அந்த இடத்திருந்தும்? காத்துள்ளான் தங்களுக்காய். காண வரச்சொல்லு. இந்த எகிப்துத் தளைகள் அறுக்கேனேல்,
காமக் கிழச் சிறுமைக் காளாகிநான் ஒழிவேன் என்ன, சொல் க.
(இரண்டாவது தூதன் வருகிறன்)

bih 2:
-9 is:
தூத2:
அந்:
Lvin
A^
5) قد)
அந்:
இனுே:
புல்வியா, தங்கள் மனையாட்டி காலமாய் விட்டார்.
இறந்த இடம் யாது?
சிசியன். அவர் நோய் நீட்சி, செய்த பிறவேறும் தாங்கள் அறிதல் அவசியமாம். இங்குண்டு.
(கடிதமொன்றைக் கொடுக்கிறன்)
போகலாம்.
(இரண்டாம் தூதன்
அந்தோ, ஆ! போயிற்றேர் நல்ல உயிர். அவ்வாறு நானும் விழைந்தேன். வெறுத்தெறிந்த பண்டமே மீண்டும் விரும்புவோம். இப்போது வேண்டும் பொருளே வெறுக்கப் படும், காலம் சுற்றிப் புரளின். மறைந்தமையால், ந ல் ல ள் (அவள்.
s
வீசியகை அன்னவளை மீட்க விரும்புவது மாய அரசியிவள் மையல் விடவேண்டும். சோம்பல் கொடிது. தொலைத்து முடித்துவிடும்.
எங்கே இனே பாபசு?
என்ன உங்கள் சித்தம் ஐயா?
இங்கிருந்து நாம் போக வேண்டும், விரைவாக,
அதைவிட எங்gள் பெண்கள் எல்லோரையும்
கொன்றுவிடலாமே! ஈவிரக்கம் இல்லாவிட்டால் இவர்கள் செத்துப் போவார்கள். நாங்கள் இவர்கள் மடிவார்கள். பிரித்தால்,
போகத்தான் வேண்டும்.
அவசியம் வந்தால், பெண்கள் சா க ட் டு ம். சும்மா எறிந்து விடுவது பரிதாபம் தான். ஆணுல்* இலட்சியத்தின் முன்னிலையில் பெண்கள் சிறு துரும்பு. இதைப்பற்றிச்சிறு செய்தி எட்டினுலே, செத்துப் போவாள் கிளியப்பெற்ரு. இதிலும் துச் சமான தருணங்களில் அவள் இருபது தட வையாவது செத்திருப்பாள். நான் கண்டிருக்கி

Page 18
அந்:
இனுே:
றேன். சாவதில் அவளுக்கு அமோக ஆசை. சாவுக்கும், அவளுக்கும் காதலோ? ,
மனித கற்பனைக்கெட்டாத சாகசக்காரி.
சே! சே!! இல்லை, ஐயா. காதலின் மிக நுண்ணிய பதார்த்தத்தால் ஆனவைதான் அவளின் உணர்ச் சிகள். அவள் மூச்சும், கண்ணிரும், காற்றும், நீரும் என்று சொல்லக்கூடாது. பஞ்சாங்கச் சாத் திரிமாரும் முன்னறிந்து சொல்லாத புயலும் சூறைக்காற்றும் அவை. இது சாகசமா? அப்படி யானல் அவள் யூப்பிற்றர் தேவன் போல மழ்ை யும் பெய்விப்பாள்.
அவளை நான் பார்க்காமலே இருந்திருந்தால். வியத்தகு வேலைப்பாடு ஒன்றைக் காணும ல் இழந்திருப்பீர்கள், தங்கள் உலாவுக்கே இழி பெயர் தந்திருக்கும், அந்த இழவு.
புல்வியா காலமானுள்,
ஐய?
புல்வியா காலமானுள்.
புல்வியா?
காலமாஞள்.
ஏன், ஐய! தேவர்களுக்கு நன்றி செலுத்திச் செய்யுங்கள், ஒரு பெருவேள்வி. jత్తి தன் ஒருவனின் மனைவியை அழைத்துக் கொண் டால், தையல்காரர்களின் நினைவு அவனுக்கு வர வேண்டும். பழஞ்சட்டை கிழிந்தால், புதுச் சட்டை தைக்க வேண்டியது தான். புல்வியா தவிரப் பூமியிலே பெண்களே இல்லை என்ருல், புலம்பத்தான் வேண்டும். இப்போதைய துயரின் முடியிலே தேறுதல் மின்னுகிறது. பழஞ்சட்டை கழன்ருல், புதிய பெற்றிக்கோற் கிடைக்கும். இத்துக்கத்துக்கான கண்ணிரை வெளிப்படுத்தி யிருக்க வேண்டும், வெங்காயம் கொண்டு!
(தொடரும்)

"கடல் கடத்து துறைகளுள் \ளே
புலமையினைப் புலம்பெயர்க்கும்
பணி பெரிது, திரை மறிய அணுதுளைத்து
வானளந்த செந்தமிழ்க்கு
அது சிறிது. வம்டுன் நீர்,
இது மொழியாய் இது புலணுய்
இது செயலாய் அணி வகுப்பம்"
ace donated hy کے
SHAPMAN & Co.
TEA MERCHANTS,
69, Sea Street,
COLOMBO 11.

Page 19
'நம்புக நண்ப, என் க கடல்கடந் துறையும்; க காணநான் புல்லினப் விசுவன், துறைகள் ଗର୍ହ கண்டிடப் படமெலாம் முயலும் என்வினே மு
எப்பொருள் கண்டும் 6
இடம் அ6
ரு கிருஷ்ணு ே
si. If
தி பெ. எ
கொ
ਸ਼
 

ாதல் என்றுமே ாற்றுறை தலங்களைக்
பெயர்த்து விசும்பி டை திகள் களங்கள்
அணுகுவன்; 9LIIT றிக்க ஏதுவாம்
என்னகம் துயருறும்.'
வெனிசு நகர் வணிகன்
| = | – | 5 – 2:
ரித்தோர்
SI LI LI C: JT Gg Girl
G) DI
1286
ழும்பு
டாரநாயக வீதி, கொழும்புக1