கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2005.01

Page 1
)L参 『 \\
()窦
()
s. WƆƆ 『---------- WTM
\\
|- |-Not:目----... . . . . .|-|-------) ! !! !! No. !!!—)『』『T■
 


Page 2
Zില്ലർ %ല്ല
ణీ
/ ? Ma് ീഗ്ഗരരർര
l la dar

vướì^gnevề ằ đgorzưỹ 2Oos
இதழில்.
கட்டுரை :
ஏ.ஆர்.வி செ. ஆயன் எஸ். அருணன் செ. நந்தன் பொ. கோபிநாத்
கவிதை :
மீநிலா
இ. சுபாரா
நாடகக் கலைஞர் பிரளயன்

Page 3
VýáVgá)av மாற்றங்களை ഖേജg
ஜனவரி 2005
மனவளததை
மீளக்கட்டுவோம்
புலர்ந்திருக்கும் புத்தாண்டில் இலட்சக்கணக்கான உயிர்களை ஆழிப்பேரலை அள்ளிச் சென்றுள்ள சோகத்துடன் உங்களை சந்திக்கிறோம். யாருமே எதிர்பாரத்திராத இவ்வனர்த்தம் எம் சொந்தங்களின் நிம்மதியை, மகிழ்ச்சியை மட்டுமன்றி சுமுக வாழ்வைகூட காவிச் சென்றுள்ளது.
இவ்வேளையில் அவர்கள் இழந்த உறவுகளை மீளப்பெற்றுக் கொடுப்பது இயலாதாயினும் அவர்களுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை மீளக்கட்டியெழுப்பும் பணிகள் மட்டுமன்றி, துன்பத்தைப் பகிர்ந்து கொண்டு மனவளத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது கடந்த நான்கு அறுவடைகளும் நான்கு வெவ்வேறான கோணங்களில் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டன. ஐந்தாவது அறுவடை இவ்வுலகையே உலுக்கிய குறிப்பாக எம் உறவுகளில் பல்லாயிரக்கணக்கானோரை காவுகொண்ட “சுனாமி சார்ந்த விடயங்களை கூடுதலாக தாங்கிவருகிறது. இத்தருணத்தில் மக்கள் மனங்களில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பயணப்படவேண்டிய கட்டாய சூழலில் தெளிவுடன் இருப்போமாக.
- ஆசிரியர் குழு -
/யில் திலA) ஜனவரி 2005 2
 

oiaisreoasis526) 96 rosfeasas 6assra32 552e to
ர்வதேசத்திலும் எங்கே எப்போது என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் அமெரிக்காவின் தாக்கம் அங்கேயிருக்கும் என்பது உறுதியாக நம்பப்படும் ஒரு விடயம். 18ஆம் நுாற்றாண்டின் இறுதி வரையில் ஆங்கிலேய குடியேற்றமாக (colony) இருந்த ஒன்றிணையாத நிலப்பரப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து பல நூற்றாண்டுகளாகப் பரவி வாழ்ந்த பழங்குடி சிவப்பு Sea--- 88y இந்தியரை அடித்து விரட்டி இல்லாதொழித்துப் புதிய ஒரு நாடாக உருவாகி 300 ஆண்டுகளுக்குள் உலகில் மிகப்பெரிய வல்லரசாகி இன்று உலகையே இயக்கும் கருவியாக மாறி இருக்கிறது.
யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அகர வளர்ச்சி! ஆங்கிலேயரின் குடியேற்றமாய் இருந்த வேளையில் ஒன்றோடொன்று இணையாமல் ஒவ்வொரு துண்டுகளாக சிதறிக்கி நத 13 குடியேற்றங்களையும் இணைத்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் (United States of America) என்று பெரியதொரு இராச்சியமாக ஜோர்ஜ் வாஷிங்டன் உ. பாக்கியபோது எப்போது இது உடைவு காணுமோ என்ற கேள்வியே தொக்கி :ன்றது பலருக்கு!
என்றாலும் பெரியதொரு உள்நாட்டு யுத்தத்தின் பின் (வட தென் அமெரிக்க யுத்த தொடர்) ஏற்பட்ட இணைவு இது என்பதால் பட்டறிவு அனுபவம் மீண்டும் ஒரு உடைவுக்கு வழிவகுக்க இடம் தரவில்லை. படிப்படியான வளர்ச்சியும் ஐரோப்பிய கண்டத்திலிருந்து விலகி (அத்திலாந்திக் சமுத்திர இடைவெளி) இருந்த வேறுபட்ட தன்மையும் அமெரிக்காவுக்கு ஒரு தனித்துவமான ஆனால் ஒரு துரிதமான வளர்ச்சியை வழங்கியது.
20ஆம் நுாற்றாண்டினை எட்டிய வேளையில் சூரியன் அஸ்தமிக்காத இராச்சியமான பிரித்தானியா மற்றும் கடல் வழியான பல்வேறு ஆதிக்கங்களை கொண்டிருந்த ஸ்பெயின் போர்த்துக்கல் பிரான்ஸ் போன்ற நாடுகளின் வலிமையை நெருங்கி, ஒத்து முந்துவதற்கு அமெரிக்கா தன்னைப் பலப்படுத்தியிருந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ஜனாதிபதி எனினும் இரண்டே பிரதான கட்சிகளும் உறுதியான ஜனாதிபதித்துவ நிர்வாகக் கட்டமைப்பும் மாற்றங்களுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் இடமளித்தது. ஆனாலும் உறுதியாக கொள்கைகளில் இறுக்கத்தைப் பேணும் அடுத்த கட்ட அமைப்பாக பொருளாதார கட்டமைப்பு: சமூகக் கட்டமைப்பும் உறுதியாகப் பேணப்பட உயர்வு நோக்கி விரைந்தது அமெரிக்கா.
vux-VSøvt k gør-Wö 2Oos 3

Page 4
20ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்த காலம், முதலாம் உலக யுத்த மேகங்கள் சூழ்ந்த வேளை அமெரிக்கா தன்னை இரகசியமாக பலப்படுத்திய காலகட்டம். பென்டகன் (Pentagon) உலகத்தில் அத்தனை இராணுவ இரகசியங்களையும் விரல் நுனிகளில் தனது கோப்புகளில் சேகரித்து உளவாளிகளை உலகெங்கும் துாவ ஆரம்பித்தது. தன்னைவிட பலம் வாய்ந்த ஏனைய நாட்டுஅரசுகளை பின்தள்ளி முன்வரும் முயற்சியில் அமெரிக்காவின் முதல் அடி கனடா, மெக்சிக்கோ, பனாமா, நிக்கரகுவா போன்ற நாடுகளிலும் இன்னும் ஏனைய மத்திய அமெரிக்க நாடுகள் கரிபியன் தீவுகளிலும் தன் ஆதிக்கத்தையும் ஊடுருவலையும் உறுதியாகவும் வெளித் தெரியாமலும் படர விட ஆரம்பித்தது. ஐரோப்பாவிலும் தனது இராஜதந்திர உறவுகளை நட்பின் கரம் மூலம் பலப்படுத்த ஆரம்பித்தது.
முதலாம் உலக மகா யுத்தத்தில் நேச நாடுகளின் அணியில் தலைமையாளனாக பிரித்தானியா இருந்தபோது அமெரிக்கா வல்லரசாக மாறிய விஸ்வரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. இரகசிய நவீன ஆயதங்கள், விரைவான ஆட்சேர்ப்பு, இரகசிய உள்ளிடுகள் என உறுதியான இராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியமை 1ஆம் உலக மகாயுத்தத்தின் போது தான் புலப்பட்டது. யுத்தம் ஆரம்பிக்கும் போதிருந்த நிலை மாறி யுத்தம் நிறைவடையும் போது ஐக்கிய அமெரிக்கா நேசநாடுகளின் தலைமையையேற்றிருந்தது. ஜேர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் காணப்பட்ட யுத்த முஸ்தீபுகள் 1912இல் ஒஸ்ரியா இளவரசனின் கொலையுடன் விதை துாவப்பட்ட யுத்தமானது விரிவடைந்து 1918வரை நீடித்து மாபெரும் அழிவுகளின் பின் முடிவடையும் வேளையில் பிரிட்டிஷ் பிரதமர் ஜோர்ஜ் லொயிட் அமெரிக்க seglugT6T 6 GJIT 66ö56ö6ö (Woodrow Wilson) 19189yb e6öTLq6ö syösu உரையின் அடிப்படையிலுள்ள 14 விடயங்களை அனுசரித்தே புதிய போர் முடிவு விதிகளை ஏற்றார் என்பது உலகில் பலரும் அறியாத இரகசியம் (e.g5TJib - World War II Official website).
முதலாம் உலகப்போர் ஏற்படுத்திய மாற்றங்கள் சிலநாடுகளைத் தனிமைப்படுத்தியிருந்தது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜப்பானும் புதிய வல்லரசுகளாய் ஏற்றம்பெற்றிருந்தன. தனி குடியேற்ற நாடுகளின் மீதிருந்த ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வதை பிரித்தானியா உணர ஆரம்பித்தது. அமெரிக்காவின் புத்தெழுச்சியும் பலமும் ஏனைய நாடுகளின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. எனினும் அமெரிக்காவின் புவியியல் அமைவும் பரந்த நிலப்பிரதேசமும் எந்தவொரு ஐரோப்பிய நாட்டினாலும் அடக்க முடியாததாக அமைந்தது.
ஒவ்வொரு தசாப்தத்திலும் அசுரவளர்ச்சியோடு மிகப்பெரும் வல்லரசாக மாறிய அமெரிக்கா 2ஆம் உலகமகாயுத்தத்துக்கு மறைமுகமாக காரணமாயிற்று. மறைமுக உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்தவேளையில் நேரடியாக அமெரிக்காவை வம்புக்கிழுக்கும் விதமாக 1941ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி ஜப்பானிய யுத்த விமானங்கள் அமெரிக்காவின் முத்துத்துறைமுகத்தைக் (Pearl Harbour) குண்டு போட்டு அழித்த சம்பவம் அமைந்தது.
பல்வேறுபட்ட இடங்களில் பரவியதாக சிலவேளைகளில் தொடர்பற்றும் உக்கிரத்தன்மை குறைந்தளவிலும் நடைபெற்று வந்த யுத்தம் அனைத்துக் கண்டங்களுக்கும் பரவி மிக உக்கிரமானது அந்தப்பொழுதில் தான்!
vướì^yâevỡ \. gorzuỹ 2OO5 4.

எதிர்பாராத இத்தாக்குதலில் 8 அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாசமானதுடன் 2344 பேரின் உயிரிழப்பானது அமெரிக்கா மீது உலகத்தின் பரிதாபத்தையும் கவனத்தையும் ஈர்த்தது. மறுநாளே அமெரிக்கா ஜப்பானின் மீதான யுத்தப்பிரகடனத்தை மேற்கொண்டு யுத்தத்தில் குதித்தது.
ஜேர்மனிய ஆதிக்கத்தை அழிப்பதுடன் ஜப்பானிய நிலவாண்மையையும் மட்டம்தட்டும் தேர்ச்சியுடன்
அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் e56roQ66 (Franklin Delano Roosevelt)(1882-1945) இன் பங்கு மிக முக்கியமானது! நேசநாடுகளின் /ஆதரவுடன் பெரியதொரு யுத்த வியூகத்தை அமைத்த W. 7 ரூஸ்வெல்ட் 1945 ஏப்பிரலில் தன் பதவிக் காலத்திலேயே Nஆரமரணமடைந்தாலும் அவரது அத்திவரம் ஜேர்மன் ஹிட்லரின் வீழ்ச்சிக்கும் ஜப்பானிய சாம்ராஜ்யத்தின் அழிவுக்கும் அடிகோலின. (1945 மே ஹிட்லர் தற்கொலை, ஜேர்மனிய வீழ்ச்சியும் பிளவும், 1945 ஆகஸ்ட் 6-9 இல் இடப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்கள்- யுத்த முடிவு)
1945இல் அமெரிக்காவின் பிரதான அனுசரணையுடன் தம் இராச்சியத்திலேயே அமைக்கப்பட்ட ஐக்கிய நாட்டு சபை இன்று வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வதேச அங்கீகார முத்திரை!
1945இல் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஏனைய நாடுகள் மீது மறைமுகத் தாக்கங்களை மேற்கொள்ளவும் துணையாக அமைந்தது. எல்லா நாடுகளும் அங்கத்துவம் வகிக்கவேண்டுமென உருவாக்கப்பட்ட அமைப்பில் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் வெற்றிபெற்ற நாடுகள் ஐந்தும் (அல்லது கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற நாடுகள்) நிறைவேற்று அதிகாரம் அல்லது வெட்டதிகாரமான வீற்றோ (Veto) அதிகாரம் உடையனவாக அங்கத்துவம் பெற்றமையும் பின் படிப்படியாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாக கட்டமைப்புகளும் அமெரிக்க சார்பு கொள்கை உடையனவாக அமைந்தமையும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு ஊட்டம் சேர்த்தனவாக அமைந்தன.
அத்துடன் ஹிட்லர், முசொலினி என்ற மாபெரும் ‘சர்வாதிகாரிகளின் இராச்சியங்களை நிர்மூலமாக்கி பலங்களை உடைத்து பலவீனமாக்கியதன் மூலமும் நேச நாடுகளின் பலத்தைக் கூட்ட உதவியதன் மூலமும் 2ஆம் உலக மகாயுத்தத்தின் நாயகனாகியது அமெரிக்கா! 30ஆண்டுகளில் உலகின் முதலாம் வல்லரசாகியது அமெரிக்கா, ஏகாதிபத்திய, இராணுவப் பலத்துடன் ஹிரோஷிமா,நாகசாகி அணுத்தாக்குதலும் அமெரிக்கா மீதான பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தியது.
அந்த எழுச்சியைப் பயன்படுத்திய அமெரிக்கா இன்றுவரை ஏகாதிபத்திய முதல்வனாகத் திகழ்கிறது. குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் கொள்கைகள் குறிப்பாக சர்வதேச மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் அப்படியே இருந்துவந்தன.
/யில்திலAல் ജങ്ങഖ് CCS 5

Page 5
இதன் மூலமாக அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிரான வளர்ச்சிக்குத் தடையென கருதப்பட்ட அத்தனை நாடுகளும் ஏதொவொரு விதத்தில் அழிக்கப்பட்டோ உள்நாட்டு போர்கள் தூண்டப்பட்டுத் துண்டாடப்பட்டோ உள்நாட்டு பயங்கரவாதங்கள் உருக்குலையப்பட்டோ வந்திருக்கின்றன. இவையெல்லாவற்றின் பின்னணியிலும் அமெரிக்கா மறைமுகமாக இருந்து வந்துள்ளது அல்லது அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி ஐ ஏயின் ஊடுருவல் இருக்கும்.
0.
X
சோவியட் யூனியனின் உடைவு (90களின் ஆரம்பம்) இஸ்ரேல் உருவாக்கம்
ஆப்கானிஸ்தானின் அமைதி குலைவு சீனாவில் கம்யூனிச வீழ்ச்சி என்ற பெயரிலான சீனாவின் புதிய பொருளாதார போக்குகள் கொரியாக்களின் உடைவும் - சேராமையும்
等
«Х»
0.
2ஆம் உலக மகாயுத்தம் ஜேர்மனியை இரு துண்டுகளாக்கி இன்றும் ஜப்பான் இத்தாலி முதலிய நாடுகளை ஒதுக்கி ஒரு மூலையில் தள்ளியது. பிரித்தானியா எவ்வாறு மிகப் பெரியதொரு சாம்ராஜ்யமாக விஸ்வரூபம் எடுத்திருந்தததோ 1950களில் அமெரிக்கா அந்நிலையடைந்தது.
தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக சொற்ப காலமே பதவி வகித்தாலும் சர்ச்சைகளாலும் ஆளுமையாலும் பேச்சாற்றல் மற்றும் கவர்ச்சியாலும் உலகம் முழுதையும் ஈர்த்த ஜோன் எஃப் கென்னடி கையாண்ட வெளிநாட்டுக் கொள்கையும் அமெரிக்காவின் விரைவான வளர்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம்.
ஆயினும் தொடர்ந்து வந்த நீண்ட கால வியட்னாமிய யுத்தம் அமெரிக்க வரலாற்றின் ஒரு மிகப் பெரிய கறையாக அமைந்தது. வைத்த காலை வெற்றியின்றிப் பின் எடுக்க மாட்டேன் என அமெரிக்கா பிடிவாதம் பிடித்தாலும் பட்டுத் தெளிந்தது. ஆனால் ஏராளமான உயிரிழப்புக்களைப் பெற்ற அமெரிக்கா இன்னொரு வகையில் வியட்னமிய யுத்தத்தையே தன் பெருமையையும் வல்லமையையும் உலகமெங்கும் பரப்புவதற்கு உபயோகித்தது. அதாவது எங்கு தனக்கெதிராக ஒரு குரல் எழுந்தாலும் நசுக்குவதற்குத் தனக்கு உரிமையுடையது என்பதே!
அடுத்த கட்டமாக அமெரிக்கா மற்றும் அதன்பின் திரண்ட முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான சக்தியாக கிளர்ந்த கம்யூனிச அலைக்கு தலைமை வகித்த சோவியத் ரஷ்யா அமெரிக்காவுக்குத் தலையிடி கொடுத்தது. பல்வேறு முறைகளில் பனிப்போர்களால் சி ஐ ஏயின் உளவு வேலைகளால் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளைகளான சிறு நாடுகள் மற்றும் பயங்கரவாத குழுக்களால் திட்டமிட்டு சோவியத் யூனியனை சிதறடிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் படிப்படியான வளர்ச்சித் தன்மை ஜனநாயக பரவலாக்கல் என்ற போர்வையில் சி ஐ ஏ மற்றும் இதர அமெரிக்க ஆதரவு சக்திகளுடன் மிகெய்ல் கோர்பச்சேவின் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டமான 1980களின் பிற்பகுதியில் மாபெரும் சோவியத் யூனியன் சிறு சிறு குடியரசுகளாகத் துண்டு துண்டாகியது.
vuðétzgsleve { æðr-Ví 2OOS 6

இதற்கிடையே அமெரிக்க பிரித்தானிய நுண்ணிய சூழ்ச்சியினால் இரண்டாக்கப்பட்ட ஜேர்மனி ஒன்றானது. அமெரிக்க வல்லரசுக்கு ஒரு போட்டியாக தோன்றிய போதும் அதற்குள் மேற்கு ஜேர்மனியில் அமெரிக்கா படைத் தளங்களை ஊன்றிவிட்டதோடு பொருளாதார சமூககட்டமைப்பிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊறிக்கிடந்தது. எனவே ஜெர்மனிய எழுச்சியும் அமெரிக்க சாம்ராஜ்யத்துக்குள்ளே அடங்கியது
அதுபோலவே பின்னர் அமெரிக்க எதிர்ப்பாளர்களாக மாறலாம் எனக் கருதப்பட்ட அரபு நாடுகளை எண்ணெய் வர்த்தகம் என்ற அடிப்படையில் கூடுதல் எண்ணெய் கொள்வன என்ற பதவயுடன அமெரிக்க்ா தன் வசப்படுத்தியது. ஏனையவை எதிர்க்கத் திராணியின்றி அடங்கின. எனினும் அமெரிக்க சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கிளர்ந்து நின்றவர்களும் நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
கியூபா அதிபர் ஃபிடல் கஸ்ட்ரோ இன்றுமே ஒரு இரும்பு மனிதராகவே அமெரிக்க எதிர்ப்பு சக்திகளின் மொத்த வடிவமாக திகழ்கிறார். வியட்னாம் சறுக்கல் (1970கள்) அமெரிக்காவின் பங்கு மிகப்பெரிய கறையாகவே உள்ளது. லிபியாவின் (Gadafi), ஈராக்கின் சதாம் ஹ"சைன், சீனாவின் லீ பெங் (Lee Peng), பாலஸ்தீனத்தின் யசீர் அரபாத் போன்றோர் எழுந்து நின்றமையானது இப்பொழுதும் அமெரிக்க எதிர்ப்பாக தீவிரவாத வடிவில் தொடர்ந்து வந்துள்ளது.
கடைசியாகக் கிளர்ந்தது தான் ஈராக் அல்லது சதாமின் ஈராக் அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட கன்றே கடாவாக மாறி அமெரிக்கா மேல் பாய்ந்தது. யாரும் எதிர்பாராத சினிமாத்தனமான திருப்பம். 1991இல் குவைத் படையெடுப்புடன் ஆரம்பித்த வளைகுடா யுத்தம் இப்போதைய புஷ்ஷின் தந்தையாரின் சார்மை தன்மையுடைய இராஜதந்திரத்தினால் அமெரிக்கா தலைமை வகித்த கூட்டுப்படைகளுக்கு வெற்றியாக அமைந்தது. அந்த ஆரம்பம் இறுதியாக புதல்வன் புஷ் சதாமை வீழ்த்தி ஈராக்கை அடிமைப்படுத்தி சீர்குலைத்து சிதைத்து பழி தீர்க்கும் வரை தொடர்ந்துள்ளது.
அந்தவகையில் தான் நவீன ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றவுடன் பின்லாடனின் பெயரும் அல்காய்தாவும் தான் எமக்கு தெரிகின்றன. ஆனாலும் விரிந்து விரிந்து இன்று எந்தவொரு நாடும் தன்னை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுக்க முடியாத ஒரு இறுக்கமான சர்வதேச மறைமுகக் கட்டுப்பாட்டைப் போர்த்தி விட்டுள்ள அமெரிக்கா ஐக்கிய நாட்டு சபையையும் நேட்டோவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நீண்ட காலத்துக்கு அதை உறுதிப்படுத்தும் வாய்ப்பையும் கொண்டுள்ளது.
இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் உலகின் தலைநகராக வாஷிங்டனும் உலகநாணயமாக அமெரிக்க டொலரும் உலகத் தேர்தலாக அமெரிக்க ஜனாதிப
தேர்தலும் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை! in N -
ஏ.ஆர்.வி )ே
/யில்திwல் 3 ஜனவரி 2005 h− 7

Page 6
vഴങ്ങി * ஜனவரி 2005
வெண்மணலில் ‘வீர் என்றொரு வீணலை எழும்பி
வாரிச் சுருட்டி போயிற்றோ? நீயும் நானும் கட்டிய வீடும், சேர்த்த சிப்பியும் தான், தோண்டி எடுத்து விளையாடிய பள்ளமெல்லாம்
எம் நண்பர்களின் கைகளும், கால்களும். வழியும் கண்ணின் உப்பு சொல்கிறது.
“85L6) கொடுத்த
உப்பையெல்லாம் திருப்பி
கொடுத்துவிடு, உன் கண்ணிர் வற்றாத ஜீவநதி வாழ்வு முழுதும் தொடரும். என்று.
s
நிலையில்லா உலகில் நிலைக்கவேண்டி வேற்றுமை களைவோம் - ஏனெனில்
நாம் மனிதர்கள் ஏற்றத் தாழ்வு கடந்த புதியமனிதர்கள்! இயற்கையால் எஞ்சிவிடப்பட்ட எதிர்காலம் நாம்!
 
 

2004"ஆண்டு டிசம்பர் மாதம் 26 திகதி உலக மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தெற்காசிய கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குத் துக்க தினமாக மாறிவிட்டது. இந்து சமுத்திரத்தில் 1883க்குப் பின்னர் ஏற்பட்ட சுனாமி (Tsunami) பேரலை தெற்காசிய கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் சுமார் 2 இலட்சம் உயிர்களை அள்ளிக் கொண்டு போய்விட்டது. இந்தோனேஷியாவின் கடற்பரப்பில் சுமாத்ரா தீவுக்கு அருகே 30 அடி ஆழத்தில் 65 தடவைகள் ஏற்பட்ட நிலநடுக்கம் தோற்றுவித்த சுனாமி பேரலைகள் 2000km பயணம் செய்து 11 ஆசிய நாடுகள், 4 கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் அழிவை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்திருக்கிறது.
இதுவரை, சுனாமி என்பதை பசுபிக் பெருங்கடலை ஆழ்ந்துள்ள பிரதேசங்களில் ஏற்படும் பேரலை என்றே அறிந்திருந்தோம். அத்தோடு “கடற்பெருக்கு”, “கடற்கோள்” என்கிற பதங்களால் இத்தகைய அழிவுகள் பற்றி அறிந்திருந்தோம். ஆனால் இப்போது நம்மையும் இந்த சுனாமி அலைகள் தாக்கியழித்த பின் தான் சுனாமி பற்றிய எச்சரிக்கை இந்து சமுத்திரத்தை கைப்பிடித்திருக்கிறது.
இந்த ஆழிப்பேரலைக்கு சுனாமி என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போமாயின், சுனாமி என்பது ஒரு ஜப்பானிய மொழிச் சொல். அம்மொழிப்படி அது துறைமுக அலைகள் (Harbour Wave) என பொருள்படும். இப்பேரலைகள் அடிக்கடி பசுபிக் பெருங்கடலில் உருவாகி ஜப்பானிய கரையோர பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருவதால் சுனாமி (Tsu-harbour, nami-wave) என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ஆங்கில அகராதிகள் Tsunami என்பதற்கு இராட்சத அலைகள் (Tidal waves) எனற பொருளை காட்டுகின்றன.
இந்த சுனாமி கடலைகள் எவ்வாறு தோன்றுகின்றன?
தரைப்பகுதியில் ஏற்படுவது போலவே கடலின் அடிப்பரப்பில் நில அதிர்வுகள், எரிமலைக் கக்குகை என்பன ஏற்படுகின்றன. அச்சந்தர்ப்பங்களில் நீரப்பரப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் அப்போது கடல் மட்டத்தின் உயரம் திடீரென அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது சுனாமி ஏற்படும். பெரிய சுனாமிகள் ஈர்ப்பு விசைகளினாலும் தோற்றுவிக்கப்படும். சாதாரண கடல் அலைக்கும் சுனாமி அலைக்கும் வித்தியாசமுள்ளது.
கற்றின் காரணமாக சாதரண அலைகள் ஏற்படும் சாதாரண அலைகள் இரண்டிற் கிடையிலான நேர அளவு 5-20 விநாடிகள். அலைநீளம் 100-200m ஆனால் சுனாமி அலைகள் இரண்டிற் கிடையேயான நேர அளவு 10 நிமிடங்கள் தொடக்கம் 2மணித்தியாலங்கள். அலைநீளம் 500km. இதன் வேகம் கடலின் ஆழத்தைப் பொறுத்தது.
/யில்/தில/C 6 ஜனவரி 2005

Page 7
6km ஆழமான கடலில் சுனாமி அலை மணித்தியாலத்திற்கு 890km வேகத்தில் நகரும். இது ஜெட் விமானத்தின் வேகத்திற்கு ஒப்பானது. கரையோரத்தில் ஆழம் குறைவு என்பதால் வேகமும் குறைவடையும். இதனால் அவ்வலை கரையில் அல்லது ஏதேனும் தடுப்பில் மோதும் போது அலையின் உயரம் அதிகரிக்கிறது. அப்போது கடல் மட்டத்திலிருந்து 30-35m க்கு அவ்வலை உயரும். ஆனால் ஆழ்கடலில் பாரிய வித்தியாசங்கள் ஏற்பட வாய்ப்பில்லை, ஆழ்கடலில் இருப்பவர்களுக்கு கடல் அமைதியாகவே இருக்கும். இவ்வாறு சுனாமி அலைகளை தோற்றுவிக்கும் கடல் பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள், எரிமலைக் கக்குகை என்பன பற்றிய தெளிவைப் பெறுவதற்கு பூமியின் அடித்தள அமைப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
s பூமியின் அடித்தளம் 1220 வித்தியா சமான தட்டுக்களால் ஆனது என்று 錢 3. : ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். , ; மேற்பகுதியில் ஒரே நிலத்தொடராக இருக்கும் கண்டம், அடித்தளத்தில் வெவ்வேறு தட்டுக்களாய் பொருத்தப் பட்டிருக்கும்.
இத்தட்டுக்கள் பூமியின் கீழ்ப் புறத்திலுள்ள திரவப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிறிது சிறிதாக நகரும் அப்போது இரு தட்டுக்கள் இணையும் இடத்தில் பூகம்பம் ஏற்படும். இதனால் சமுத்திரங்களிலுள்ள இணைப்புக்களில் அதிர்ச்சி ஏற்பட்டு கடலடி மட்டத்தில் உயர்வு தாழ்வு ஏற்படுவதால் சுனாமி எனும் பேரலைகள் தோன்றுகின்றன. (7.0 ரிச்டர் அளவை விட அதிக அதிர்வுள்ள பூகம்பங்களே சுனாமியை தோற்றுவிக்கும்) டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலைகள், இவ்வகையில் உருவானவை. இது தவிர விண்கற்கள் எரிமலைக் கக்குகை, நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பம், மலைச் சரிவு, பனிச் சரிவு, நிர்மாணப் பணிகள், அணுகுண்டு வெடிப்பு என்பவற்றாலும் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது.
26.08.1883- இந்தோனேஷியாவில் க்றகாட்டோ எரிமலை வெடிப்பு, 135 அடி உயர சுனாமி அலை. (இந்தோனேஷியாவின் ஜாவா, சுமாத்ரா தீவுக் கரையோரங்களில் 36417 பேர் பலி)
கி.மு 1490- ஏஜியன் கடல் சண்டோரியன் எரிமலை (கிறீஸின் மினோவன் மக்கள் அழிவு)
1980, பிரான்ஸ் தென் கரையோரத்தில் விமான ஒடு பாதையை அமைக்க மேற் கொள்ளப்பட்ட நிர்மாணப் பணியின் போது ஏற்பட்ட கடலடிவார மண்சரிவினால் உருவான சுனாமி அலைகள் தீபஸ் துறைமுகத்தைத் தாக்கின.
/யில்திலAல் ஜனவரி 2005 O
 
 
 

பாரிய விண்கற்கள் சமுத்திரங்களில் விழுவதால் சுனாமி அலைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் விண்கற்கள் பூமியை அடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. இறுதியாக 6.5 கோடி வருடங்களுக்கு முன்னர் விண் கற்கள் பூமியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரிய அணுகுண்டு வெடிப்புக்கள் சுனாமி பேரலையை தோற்றுவிக்கலாம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனைகள் சுனாமியைத் தோற்றுவிக்காதபோதும், சக்தி வாய்ந்த அணுகுண்டுப் பரிசோதனைகள் சுனாமியைத் தோற்றுவிக்கும் என புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இ భ 0.
இலங்கை நேரப்படி அதிகாலை 6.30 க்கு இந்தோனேஷியாவுக்கு அருகில் கடலுக்குள் பூகம்பம் ஏற்பட்டது. இது 89 ரிச்டர் அளவு என்று பதியப்பட்டது.(பின்னர் அமெரிக்க புவியியலாளர்கள் பூகம்பத்தின் அளவு 9.0 என்று தெரிவித்திருந்தனர்) 07.00 மணிக்கு தாய்லாந்தினுள் கடலலை நுழைந்தது. 09.30 க்கு இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் சிறு அதிர்வு ஏற்பட்டது. 10.00 மணிக்கு தாய்லாந்தில் பூகம்பத்தால் உண்டான கடலலை 1600 கடல் மைல் பயணம் செய்து இலங்கையின் கரையோரங்களைத் தாக்கியது. 1140 க்கு கடலலை சென்னையைத் தாக்கியது. 1145 க்கு பங்களாதேஷினுள் கடலலை புகுந்தது. 12.00 மணிக்கு மாலைதீவின் பெரும்பகுதி கடலலையால் மூழ்கடிக்கப்பட்டது. 1240 க்கு மலேசியாவின் கடற்கரைப் பகுதியில் எச்சரிக்கை விடப்பட்டது. 1640 க்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடலலை தாக்கியது. பத்து இலட்சம் அணுகுண்டு சக்திக்கு சமனான இந்த சுனாமி கடலலை தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கக் கூடிய உயிரிழப்பு விபரங்கள் வருமாறு:
※
இந்தோனேஷியா - 75,981
இலங்கை 3O882
இந்தியா r. 88OO அந்தமான் நிக்கோபார் 1316 (இவ்வுயிரிழப்பு தாய்லாந்து 5300 புள்ளி விபரங்கள் மாலைதீவு 82 கட்டுரை எழுதப்பட்ட மலேஷியா ra 68 காலப்பகுதியில் UDT • 39 வெளிவந்தவை) பங்களாதேஷ் 2 சோமாலியா - 300
GasóFurt a
தான்சானியா 1O
do
/யில் திலAல் ஜனவரி 2005 1.

Page 8
இந்தப் பாரிய சுனாமி கடலலை அனர்த்தத்தினால் பூமியின் உயர் சமநிலையில் மட்டுமல்லாது பூமியின் அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சுனாமி கடல் கொந்தளிப்பு காரணமாக பூமி சுற்றும் வேகம் 3 மைக்ரோ விநாடிகளால் அதிகரித்திருப்பதோடு பூமியின் மைய அச்சுப் பகுதியிலும் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. உலகின் வரைபடத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிறு தீவுகள் சுமார் 20 மீற்றர் நகர்ந்துள்ளன. சுமாத்ராவுக்கு தென்மேற்கேயுள்ள தீவுகள் நகர்ந்துவிட்டன. சுமாத்ராவின் தென்மேற்கு முனை 36 மீற்றர் நகள்ந்துள்ளது. அத்துடன் பூமி தனது அச்சிலிருந்து ஆட்டம் கண்டுள்ளது.
இவ்வாறு சுனாமியின் உருவாக்கம் பற்றியும் இழப்புக்கள் பற்றியும் பார்க்கும்போது நாங்கள் தவறவிட்ட காப்பு முறைகள் பற்றிய அவதானமும் தேவைப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை அமைப்பு
பாரிய சமுத்திரங்களில் ஏற்படும் இந்த . சுனாமி அலைகள் கரையை அடைவதற்கு சில 烹调 மணித்தியாலங்கள் தேவைப்படும். இதற்கு முன்னர் சுனாமி அலைகள் கடலில் உருவானதை அறிந்து கொண்டால், கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்து சமுத்திரத்தில் சுனாமி கடலலையைக் கண்டறியும் வசதிகள் இல்லை. பசுபிக் சமுத்திரத்தில் 1949 இல் அமைக்கப்பட்ட பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் மிகுந்த பயனுடையதாகக் காணப்படுகிறது. இப்போது இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள சுனாமி கடலலைக்குப் பின்னர் ஆசியநாடுகள் இந்து சமுத்திரத்தில் சுனாமி எச்சரிக்கை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
&assifilisastaatsiosdir
அகோர சுனாமி அலையினால் பூமி அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களானது தொடரும் பூகம்பங்கள் பற்றிய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அதனால் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாக இருக்கின்றது.
Wu?ákováhavičy - agaraj ĵ 2oos 2
 
 
 

4FM424145.MAŠTANJA ZJAQA'ÁDaya) (TAIA545
கவலையுமில்லை - அதனால் சாவதொன்றும் பயமில்லை!
அடுத்தவேளை பசிக்காது வேலையின் அலுப்பு இருக்காது போ(f)ன் - கிரெடிட்காட் பில் வீட்டின் லோன் வேண்டிய கடன் வங்கவேண்டிய கொடுத்தது கேட்டும் கவலை எந்த ஒரு அவதியுமிருக்காது!
"அடுத்தவேளைக் கவலை
அடுத்தவர் பற்றிக் கவலை எதுவுமே இனியில்லை - எனினும் அம்மாவின் முகமும் அன்போடு உண்மையாக சிரித்துப்பேசும் ஒரு சிலரும் அடிக்கடி வந்துபோவதாலும்
நித்திரைக் குறைவு நேரத்துக்கு சாப்பாடில்லை நாளைய நிகழ்ச்சிகள் அடுக்கவேண்டிய அலுமாரி 酸釜 அடித்தடித்தே அலுப்புத்தரும் செல்பேசி கண்டங்கள் வந்து
Sms கவலையிருக்காது! காற்றோடு கரைந்ததிலும் அம்மாவின் திட்டு - சாவென்ற ஒன்று அறுத்துக் கவிழ்க்கக் இப்போதில்லை - எனவே காத்திருப்போரின் முகங்கள் சாவதொன்றும் பயமில்லை எனக்கு!
' – ጥy - ぐ〉ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ〉ぐ>ぐ〉ぐ〉
நிமலமாய் நிமிடத்திற்குப் பலதடவை
எனை முத்தமிட்டுச் செல்வாயே! 岛T நூறாயிரமாண்டுகளாகியும்
நானாக நாடிவராதது
உனைச் சீற்றம் கொள்ளச் செய்ததுவோ. U
இதமாய் இதயம்வருடி
இமைப்பொழுதில் இராட்சசியானாயே! v எல்லையில்லா எம் பழம் பெரும் காதலில் Ř) நிதம் உன்னில் லயித்திருந்தோரும் நிர்க்கதியாவது தகும் எனக் கண்டாயோ.
ஷமிஷ்
Wužnáčováhavičy - agaraj ĵ 2oos 13

Page 9
கடந்த இதழில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்
1. அல்பேனியா வினாக்கள் 10 2. து.உருத்திரமூர்த்தி
1. இஸ்ரேலிய பாராளுமன்றம் என்ன 3. இரா.கிருஷ்ணமூர்த்தி
பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது? 4. ஜூலியஸ் பியூசிக்
| 5. .பிடல் கஸ்ரோ
2. உலகின் மிகப் பெரிய தீவுக் 6. சுவிட்சர்லாந்து
8L956T 660)6) 7. 6666)rt 3. சுமாத்ராவின் தலைநகரம் எது? 8. ஜிப்ரால்டர் ஜலசந்தி
9. டொனமூர் யாப்பு (1931)
காமினி பொன்சேகா
அதிக வினாக்களுக்கு விடைகளை 5. சுனாமி அலையின் சராசரி வேகம் | எழுதி பரிசு பெறும் வாசகர் :
uJITg5!? ச.வினோதா
20, கொலிங்வுட் பிளேஸ், வெள்ளவத்தை.
1.
0.
4. “தாய்’ என்ற நூலின் ஆசிரியர்
umfr?
6. G.S.M. என்பதன் விரிவாக்கம் யாது?
7. சுனாமி ஆய்வு மையம் எங்கு
அமைந்துள்ளது?
8. தமிழில் வெளியான முதலாவது வண்ணத் (Colour) திரைப்படம் எது?
9. இலங்கையின் முதலாவது தமிழ்
பேராசிரியர் யார்?
10.2004 இல் நடைபெற்ற Tour De
France சைக்கிள் ஒட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?
மேற்தரப்பட்ட 10 வினாக்களுக்கும் சரியான பதிலை எழுதி அ முதல் ஐந்து அதிர் ஷடசாலி
வாசகர்களுக்கு நூல்கள் பரிசாக |வழங்கப்படும்.
/யில்/திலAல் கி ஜனவரி 2005 14
 

V
|Best Wishes
O
285/C, Galle Road, Wella vatte, Colombo -06
空 0094112554933
N
ZZص
vuvezzavo i: gareui 2oos
5

Page 10
All kinds of Sarees, Shalwar
Kameez, Sarara Kits,
Fancy items, Kits and Indian litems etc.
No. 27/32, Perakumba Plaće Wellawatte, Colomb04/06
ിദ്ദിഖ്) { ജൂഖ് ഉഠഠട 16
 
 
 
 
 

நோ எனக்கு உடனே வேணும்! இதுக்கு மேல தயவு பண்ண ஏலாது" கண்டிப்பாக கறாராக ஓங்கிக் கத்தினார் அந்தப் பெரிய மனிதர்! அவரது விரல்களில் தஞ்சம் புகுந்து காதோடு உரசிக் கொண்டிருந்த புத்தம் புதிய நவீன மொடல் * செல்பேசிக்கு மட்டும் உயிரிருந்தால்
பயந்து அலறியிருக்கும்!
“ஐசே.உமக்குத் தரவேண்டிய காலம் தந்து முடிஞ்சுது! காசு வேண்டுறதுக்குத் தெரிஞ்ச உமக்குத் திருப்பித் தரவேணும் எண்ட அறிவு ரோசம் இருக்கவேண்டாமே.வீடு கட்டுறாராம் வீடு!” ஓங்கி மறுபடி வசை பாட ஆரம்பித்தார் அவர்!
மறுமுனையிலிருந்த அந்த அப்பாவியின் கெஞ்சல் முனகலாக வந்தது. “ஐயா. கஷ்டப்பட்டுத் தான் ஐயா இந்த வீட்டைக் கட்டினனான்.உங்களிட்டை வாங்கின கடனாலதான் முழுக்கப் பூர்த்தியாச்சு!.ஆனா.ஆனா.நீங்க கேட்ட உடன் கடனில கொஞ்சத்தைத் தான் திருப்பித் தர முடிஞ்சது மிச்சத்தை எப்பிடியாவது தாறன் ஐயா! தலையை வச்சாவது!" வேகமாக விம்மி வந்த அழுகையுடன் வார்த்தைகள் முறிந்தன! "
கடன் கொடுத்த கடுப்புடன் கோபமான பதில் “தலையை வைப்பியோ எதை வைப்பியோ..எனக்கு உடனே காசு வேணும்!" உறுமியது!
கடன் பெற்ற தாழ்மை இயலாமை கலந்த கலக்கத்துடன் “ஐயா கொஞ்சம் தவணை தாங்களேன் ஐயா! பிள்ளையள் இப்பதான் புது வீட்டிலை கொஞ்சம் சந்தோசத்தோட இருக்குதுகள்" என இழுத்தது அந்த அப்பாவியின் குரல்
இரக்கமேயற்றதாய் ஒலித்தது மறுபக்க பணக்கார அதிகாரக்குரல் “நோ! நோ! எல்லாத் தவணையும் தந்து முடிஞ்சுது! இன்னும் 3 நாள் தாறன்! அதுக்குள்ளை காசு வராட்டி.” ஒரு சிறு மெளனம்.சின்ன இடைவெளி!
கடன் வாங்கியவனுக்கு அந்த ஒரு சில செக்கன்கள் ஒரு யுகாந்திரமாயின. சின்ன மெளனத்தின் பின் தெளிவாக ஆனால் கொடுமையாக ஒலித்தது மறுபக்கப் பணக்காரக் குரல் “நீ புதுசாக் கட்டின அந்த வீட்டை நான் எடுப்பன்!”
துண்டிக்கப்பட்ட தொடர்புடன்.இடிந்து போனான் அந்த அப்பாவி!
wயில்திwல் * ஜனவரி 2005 17

Page 11
வீட்டின் வெளியே வந்து கடற்காற்று முன்னந் தலையில் விழும் முடிக்கற்றையை நீவிவிட கண்கலங்கித் தன் புது வீட்டை அண்ணாந்து பர்த்தான்! அவனைப் பொறுத்த மட்டில் அது வீடல்ல! அவன் வெறித்தனமாக பாடுபட்டு கட்டிய நீண்டகாலக்கணவு!
இலங்கையின் கிழக்கு கரையோர அலைகள். வந்து நலம் விசாரித்துச் செல்லும் கிராமிய கடல்மணற்பரப்பிலே அடக்கமாக அழகாக எழுந்து நிற்கும் அந்தப் புதிய வீடு அன்பாக வாழும் நான்கு சிறு ஜீவன்களின் கூடு!
சற்றுமுன் தொலைபேசியில் கெஞ்சிய அதே அப்பாவியின் குடும்பம் மனது கடும் பாரத்துடன் பின்னோக்கிய நினைவுகள் சுழல ஆரம்பித்தன!
மழையில் நனைந்து இற்றுப் போகும் ஒலைக் குடிசையில் வாடி வதங்கிய காலங்கள்! ஒரு வேளை உணவைக் கூட மிச்சம் பிடித்து வயிற்றைக் காயவிட்டு சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் கட்டத் தொடங்கிய இந்த அழகிய வீடு! அத்திவாரமிட்ட நாள் படிப்படியாக வைத்த கல்! கட்டி முடிக்கும் வேளை பணம் முழுக்க முடிந்து போக தன் முதலாளிப் பெரியமனிதரிடம் பத்து லட்சம் கடனாகப் பெற்றது! புத்தம் புது ரூபா நோட்டின் வாசம்! தரும்போது நிறைவாகச் சிரித்த அவர் முகம் ஆனால் அதன் பின்னால் மறைந்திருந்த கபடமும் கண்டிப்பும் வீடு கட்டி முடித்துப் பெருமையுடன் ஒரு சாதனை புரிந்த திருப்தியுடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டதினம்! அந்த வீட்டில் அசதியுடன் சாய்ந்து படுத்த முதல் நாள் &
ॐ
மாறி மாறி வந்த நினைவுகள் அலைபோல மனதில் அடித்துச் சென்றன! நொறுங்கிப்போன மனதுடன் எப்படிப் பணம் புரட்டுவது யாரிடம் கடன் பெறுவது என்று கடுமையான யோசனை! வீடுகட்டி முடிக்கும் வேளை முதலாளியென்ற அந்தப் பெரிய மனிதரிடம் தயங்கித் தயங்கிக் கடன் கேட்டு கூனிக் குறுகி நின்ற அந்தவேளை -
மீண்டும் ஞாபகம் வந்த அந்த நேரங்களை உதறித் தள்ளியபடி இனி என்ன செய்யலாம்? எப்படிக் கடனடைக்கலாம்? என்ற கேள்விகளை மனதில் எழுப்பலானான்! பெரிய மனிதரின் முகமும் சற்றுமுன் பேசியவார்த்தைகளின் அச்சுறுத்தலும் மீண்டும் மீண்டும்.
தன் அருமையான வீட்டை நினைத்தால் மனதே நொருங்குகிற மாதிரியுணர்ந்தார்! அதற்கிடையில் நாளைய தினம் நத்தார் தினம்! புத்தம் புதிய வீட்டில் நிம்மதியாக சந்தோஷமாக நத்தார்க் கொண்டாட்டம் என நம்பியிருந்தவனின் மனதில் நத்தாருக்கு அடுத்த நாள் எப்படிக் கடனடைப்பது என்ற ஏக்கம் தான் இப்போது நிறைந்திருந்தது.
ஊரெல்லாம் உற்சாகமான கொண்டாட்டமாக இருந்த நத்தார் இவன் குடும்பத்துக்கு மட்டும் ஆரவாரமின்றி ஒரு ஆழ்ந்த அமைதியுடன் கிடந்தது.
MuÝMMgavo k; gairauß 2oo5 18

நான்கு ஜீவன்களும் அடுத்த நாளில் தாங்கள் அன்போடு நேசிக்கும் வீட்டை விட்டு வெளியேறப் போகிறோம் என்ற வேதனையில் ஒவ்வொரு மூலைகளில் உயிரற்றுப் போன மாதிரி!
அடுத்த நாள் 26ஆம் திகதி காலை பெரியமனிதர் தன் அடிவருடிகள் சகிதம் அந்த அழகிய வீட்டின் முன்னால் எந்த விதமான வன்முறையுமின்றி விட்டிலிருந்த நான்கு ஜீவன்களும் கலங்கிய விழிகளுடன் கன்றுகள் தாயைவிட்டுப் பிரிவது போல திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே இயலாமையுடன் வேடிக்கை பார்க்கும் அயல் அண்டை அயலவரை நிமிர்ந்து பார்க்காமல் மணலில் கால்கள் புதையப் புதைய கையில் சுமக்கக் கூடிய அத்தியாவசிய தட்டுமுட்டுச் சாமான்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தன! குழந்தைகளும் மனைவியும் மெது மெதுவாக முன்னேற கடைசியில் கண்ணித் திரை மறைக்கத் தன்னுடைய கனவான அந்த அழகான வீடு கை விட்டுப் போனதைத் தாங்க முடியாமல் அப்படியே மணலில் குந்தியிருந்து விம்மி விம்மி அழலானான்!
மறுபுறம் பெரியமனிதர் மகா திருப்தியுடன் “டேய் சுரேஷ் இதுதாண்டா பிஸ்னஸ் டிரிக் பத்துலட்சம் குடுத்து நினைச்சதை எடுத்திட்டன்.” என்றார் ஒரு அடக்க முடியாத சிரிப்புடன்!
பெயர் கொண்டு அழைக்கப்பட்டவன் எதுவே புரியாமல் "பொஸ் இந்த வீடு உங்களுக்கு எதுக்கு பெரிய பங்களாக்கள் நாலஞ்சே இருக்கே." என இழுக்க.இடி போன்ற சிரிப்புடன் இடைமறித்தார். “வீடு சின்னதுதான் ஆனா இப்பிடியான ஒரு இடம்.ஹாஹாஹா.இந்த நாலு வீட்டை இடிச்சிட்டு இங்கேயே ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டுவன்! இதுதாண்டா சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கிறது” தன் சாதுரியத்தைத் தானே பெருமிதப்பட்டு ஒரு கள்வப் பார்வையுடன் அடியாட்களை நோக்கினார்! ஆமோதிப்பது போல அவர்களின் சிரிப்பும் எழுந்தது.
நேரம் காலை 9.20
துாரத்தே கடலில் மண்தரையில் நடந்த அநியாயம் கண்டு கடல்கொந்தளிப்பது (T60 பின்வந்த நாட்களில் செய்திகளுக்குத் தீனிபோட்ட சுனாமி கடலில் கொந்தளித்து பனையளவு உயரத்தில் கரையைக் குறிவைத்து விரைந்து வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வரும் நாட்களில் எத்தனை ஆயிரம் உயிர்களை பலியாக்கப் போகிறது என்பது பற்றி அறியாமல் அந்த வீடும் சிதைந்து போகப் போகும் பல்லாயிரம் வீடுகளில் ஒன்றாகப் போகிறது என அறியாது அதே கரையோர வீட்டுக்குள்ளே தமது சந்தோஷத்தைக் கொண்டாடத் தயாராகினர்.
அடுத்த நாள் காலை தலைப்புச்செய்திகள் “சுனாமி இலங்கையின் கடற்கரையோரப்பகுதிகளில் காலை 9.26க்கு தாக்கி பெரும் அனர்தங்களை ஏற்படுத்தியது!”
தலைமகன் g
walamb & garauli 2oos 19

Page 12
9-60Lul சிறுகதை / கவிதை இந்த அட்டைப்படம் தொடர்பில் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை கவிதையாகவோ சிறுகதையாகவோ வடிவம் கொடுத்து அனுப்பிவைத்தவர்களின் ஆக்கங்கள்
5ண்கட்டி வித்தை
வாய்பொத்தி பூஜை கைகட்டிப் பணிவு ஆடைக்கா! உடலுக்கா! மலிவு விற்பனை? கேள்விக்குறிபோல உடல்வாகு பற்றைக்குள் பல பூச்சிக்கடி பின்னாலோ அந்நியநெடி. இத்தனை அத்துமீறல்கள் இருந்தும், காற்றுக்கும். மூக்குக்குமிடையில் சலனமிலாத சஞ்சாரமாய் விடியலுக்கும் நம்பிக்கைக்குமிடையில்
வெகுதுாரமில்லை. கோ.சித்தன்
கண்கள் கட்டப்பட்டு 瀏 வாய்கள் பொத்தப்பட்டு ன தெரியப்பட வேண்டுமென பெயர் பலகை தொங்கவிடப்பட்டு ந
துப்பாக்கி முனையில் துர்ப்பாக்கிய நிலையில் ஜனநாயகம்! O
/யில்திM ை* ஜனவரி 2005 20
 
 
 
 
 
 
 

ଉ#Q Quó'' ജ്രാറ്റ%ഖuീൺ ஆழிப் பேரலை எழுந்து வந்து ஊழித் தாண்டவம் ஆடிய சோகம் ஆசியாவையே அதிர வைத்துள்ளது. சுமத்திராத் தீவுப்பகுதியில் இருந்து உருக்கொண்டு புறப்பட்ட பேரலைகளுக்கு நேரடியாக முகம் கொடுத்தது இலங்கையின் கிழக்குக் கரையோரமே. இருந்தும் வடக்கு,
தெற்கு, மேற்குக் கரையோரக் கிராமங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
வெறும் எண்ணிக்கையில் மனித உயிர்களின் இழப்பு நாற்பதினாயிரம் வரையில் என்று கூறப்பட்டாலும் அவை இன்னும் அதிகரிப்பதற்கு அவகாசம் உள்ளது. அதை விட பொருளாதார, உடமை இழப்புகள் மதிப்பிடப்படுவது என்பது இன்னமும் சிக்கலான விடயம் ஆகும்.
அதற்கு முன்னால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்குரிய நிவாரணங்கள், பொருளாதார, ஆளணி உதவிகள் பல்வேறு வழி வகைகளில் இலங்கைக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.
அவற்றை முறையாக நிர்வகிப்பது உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல், பொருளாதார, சமூக, தார்மீக மட்டங்களில் திருப்தி பெறும் வகையில் மீளக் கட்டமைக்கப்படுவார்களா என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
காரணம், இந்த பன்முகப்பட்ட உதவிகளின் பின்னால் உள்ள சுதேச, சர்வதேச அரசியல் பின்னணிகள் அத்தகைய சந்தேகங்களை எழுப்புகின்றன. அதற்கு கால்கோலும் வகையில் நமது நாட்டில் சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் மனதை உறுத்துவனவாக உள்ளன.
அதாவது வடக்கு, கிழக்கு, வன்னிப்பகுதிகளுக்கு நிவாரணம் செல்வதில் ஏற்பட்ட தடங்கல்கள், தாமதங்கள், பற்றாக் குறைகள், முரண்பாடுகள் ஒரு புறம். மறுபுறத்தில் தேவைக்கு அதிகமாக நிவாரண வழங்கல்களும், வழிப்பறி, கொள்ளைகள், சுரண்டல்கள், ஊழல்கள், என அதிர்ச்சிதரும் பல விடயங்கள் சாதாரண மனிதரையும் சிந்திக்கக் தூண்டுவனவாக உள்ளன.
vwles/glevð Y ger-Ví 2OOS 21

Page 13
இந்த நிலைபரங்களின் பின்னணியில் சுனாமிக்குப் பின்னான சமூக நிலைமைகளை ஆழமாக ஆராய்வது கட்டாயமானதாகும். பயில் நிலத்தின் பக்க எல்லைகளைக கருத்திற் கொண்டு ஒரு மேலோட்டமான எண்ணப் பதிவு களைத் தருவது இக்கட்டுரையின் பணியாகின்றது. 838 ஆழிப் பேரலை அழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் யாவரும் அடங்குகின்றனர். அவர்களது சமூக, பண்பாட்டு பழக்க வழக்க பின்னணிகளினூடேயே பிரச்சினைகளை அணுக வேண்டும். அத்துடன் அக்குக்கிராமங்களின் தொழில் துறை சார்பான அணுகு முறைகளும் அவசியம்.
ஆயினும் பொதுவான அடிப்படையில் அவர்களது சமூகப் பிரச்சினைகளை ஆராயலாம்.
1. உளவியல் பிரச்சினை.
பாதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். அவை உயிர் இழப்பு, உடமை இழப்பு, தொழில் துறை இழப்பு என்று எதுவாக இருப்பினும் அவர்களின் மனங்களில் ஓர் உணர்வு கலந்த அதிர்ச்சி நிறைந்திருக்கும். அதனை இலகு படுத்தி அவர்களை வெளியே எடுப்பது என்பது மிகுந்த பிரயாசையும், காலத்தேவையும் உள்ள காரியம் ஆகும்.
அதாவது ஒரு சில கணப்பொழுதுகளில் எள்ளளவும் எதிர்பாராத வகையில் தமது பெற்றாரையோ, பிள்ளையையோ, மனைவியையோ, கணவனையோ, சகோதரரையோ இழந்திருப்பர் அல்லது காணவில்லை என்று இன்னும் நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருப்பர். இவை அடித்த, அழிந்த அதிர்ச்சிக்கும் மேல் உயிர் இழப்புகள் பற்றிய ஏக்கம் மிக ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கும்.
இதனால் அவர்கள் மனம் பேதலித்தவர்களாகவோ அல்லது பேச முடியாதவர்களாகவோ அல்லது தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளத் துணிபவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள் தினமும் சந்திக்கும் ஒவ்வொரு முகமும் ஏதோ ஓர் இழப்பைச் சந்தித்ததாக இருக்கும் அல்லது இவர்களை காட்சிப் பொருளாக வைத்து புதினம் பார்க்கும் கூட்டமாக இருக்கும்.
ധിഴ്ച { garra2 gido 2oos 22
 

எனவே இவர்களது உளவியல் நெருக்கீடுகளைத் தளர்த்துவதற்கு பண்பட்ட உளவளத் துணை தேவை. அவ்வாறான வளாளர் ஒருவர் ஓரிரு நாட்களில் அப்பணியைச் செய்து விட முடியாது. குழும அடிப்படையில் அல்லது குடும்ப அடிப்டையில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு குறைந்தது சில மாதங்களுக்காவது அவர்களுடன் தங்கியிருந்து மனநலத்துணை வழங்க வேண்டும். அப்போது தான் அப்பணி சாத்தியம்ானதாகும்.
2. தொழில் சார் பிரச்சினைகள்
இங்கு பாதிக்கப்பட்டவர்களில் 90% ஆனவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், வறுமை நிலையில் வாழ்ந்தவர்களும் ஆவார்கள் . அதிலும் அனேகமானோர் கடற் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். இன்னும் பலர் கைத்தொழில், விவசாயம் என்பவற்றைச் சார்ந்தவர்கள் அல்லது மாதாந்த வருமானத்தை நம்பிச் சீவிக்கும் பொருளாதாரக் கட்டமைப்பை உடையவர்களாக உள்ளனர்.
இவர்கள் தமது ஆயுட் கிால வாழ்வின் சேமிப்பை சில நிமிடங்களுக்குள் முற்றாக இழந்துள்ளனர். தமது தொழிற்துறையை மீண்டும் தொடங்க முடியாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். தாம் இழந்தவற்றை இனி உழைத்துத் தேடுவது அல்லது ஈடு செய்வது என்பது எந்த வகையிலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு விடயமாகும்.
எனவே அவர்கள் புனர் நிர்மாண வாழ்வுக்குள் உட்படுத்தப்படும் போது ஓரளவுக்கேனும் அவர்கள் சுனாமிக்கு முன் இருந்த சமூக பொருளாதார நிலையில் அமர்த்தப்பட வேண்டும்.
அதாவது மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தில் ஒவ்வொரு
சிறுவிடயமும் உள்ளடக்கப்பட்டு அவர்கள் அந்த இடத்தில் இருந்து
தமது அன்றாட சீவயத்தைத் தொடர முடியுமானதாக இருக்க வேண்டும்.
3. சட்டப் பிரச்சினை
இது முற்றிலும் மனிதாபிமான ரீதியில் அணுகப்படவேண்டிய கவனயீர்ப்பை வேண்டி நிற்கும் பிரச்சினை ஆகும். எமது நாட்டின் அரச நிர்வாக இயந்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கும் வகையில் அல்லது
Yumegawo : garajố 2oos 23

Page 14
நடைமுறைப்படுத்தப்படும் வகையில் பல சங் கடங்களை ஒவ்வொரு சாதாரண மனிதனும் சந்திக்க நேரிடுகின்றது.
குறிப்பாக எந்த குடிசார் விடயத்திலும் அடையாள அட்டை, பிறப்புப்பதிவு, மரணப் பதிவு, திருமணப்பதிவு, சத்தியப் பிரமாணக் கடிதம் என்று இன்னோரன்ன விடயங்கள் தடைக் கற்கள் ஆவதுண்டு. அவை சில %X'x சந்தர்ப்பங்களில் வெறும் சம்பிரதாயங்களாக அல்லது இலஞ்ச ஓடைகளின் கதவுகளாக அல்லது ஊழல்களின் வழி காட்டிகளாக அமைந்து விடுகின்றன.
அந்த நெருக்கடிகள் இந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் தலையில் இறங்கவிடாது பார்த்துக் கொள்வது அரச இலாகா அதிகாரிகளின் நேர்மையில் தங்கியிருக்க வேண்டும். காரணம் ஏற்கனவே நிவாரணப்பணிகள் ஆரம்பித்த வேளையில் இருந்து மானுடப்பண்புக்கு மாறான செய்திகளையே அறியும்படி கிடைப்பதுதான் எமது மண்ணினதும் மக்களதும் துரதிஷ்டமாகும்.
இது போல் கல்விப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினைகள், போக்குவரத்துப் பிரச்சினை, சுற்றுச் சூழற் பிரச்சினை, சிறுவர், பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் என்று சமூக வாழ்வியலின் அத்தனை அம்சங்களும் பிரச்சினையாக உருவெடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து நெருக்குதலுக்கு உள்ளாக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அவற்றை சாதகமான முறையில் எதிர்கொள்வது என்பது மிகுந்த திட்டமிடல் சிறந்த அமுல்படுத்தல் என்பவற்றின் ஊடாகவே வெல்லப்படக் கூடிய ஒன்றாகும்.
அதைவிட இதில் பாதிக்கப்படாத ஏனைய பிரதேச மக்களினதும், ஊடகங்களினதும் , அரசியலாளர்களினதும் பங்களிப்பு மிக அவசியமானதாகும். அதுபோலவே சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவோர் அரசாங்க கொள்கைகளை, திட்டங்களை அமுல்படுத்துவோர் என்று அத்தனை பேரினதும் இதய சுத்தமான அர்ப்பணிப்பும் பங்களிப்பும்
அவசியமானதாகும்.
எஸ்.அருணன்
wujawsślavo i gataj 2005 24
 
 
 
 

@ဈေ0ဖါ'
நித்தார் பரிசு சற்றுத் தாமதமாக
நரகத்திலிருந்து
நமக்கு வந்தது! பட்டாசுக்குப் பதில்
றிச்டர் 9 இல்
பூமியே வெடித்தது!
அன்னை எனப் போற்றி அலைகள் தாலாட்டில் தினமும் கண்ணயர்ந்தோர் அனைத்தையும் இழந்தனர் உயிரையும் சேர்த்து! அன்னை அணைத்தே கொன்ற அவலம்!
கடலுக்குள்ளே மீன்பிடிக்கும் மனிதரையெல்லாம் கடல் வந்து ஊருக்குள்ளே பிடித்திழுத்தது! வலை விரித்தவரெல்லாம் அலையின்
மரண வலைகளில்!
அன்னையின் மடிகளில் தவழ்ந்த மழலைகள் அலைப்பால் குடித்து மீன்களாய் மிதந்து கருவாடர்கிய கோலம்!
படகுகள் நீந்தியதெல்லாம் L്യpട്! புதிதாய் பஸ்கள் கார்கள் வான்கள் ரயில்கள் ஏன் வீடுகளும் மிதந்து சிதைந்து காணாமல் போயின!
/7ல்திலAல் 3 ஜனவரி 2005
பிணந்தின்னிப் பிசாசாய்க் கடல் மாறி லட்சம் உயிர்களைப் பிடித்துத் தின்றும் பசியாறாது
மண் தின்று
மரம் தின்று நுாறு தீவுகள் ஆயிரம் ஊர்கள் மற்றும் பல்லாயிரம் சந்தோசங்கள்
அடடT கடலே உனக்கேன் இந்த அகோரப்பசி?
கடலின் திக் விஜயம்! எங்கு பார்த்தாலும் கடலின் வதைமுகாங்கள் கோரமுகம் காட்டி வாட்டி வதைத்த சர்வாதிகாரத்தனம்!
அன்று முதல் இன்று வரை
மேற்கிலிருந்து கிழக்காகவே படையெடுப்பு வரலாறு அலெக்சாண்டர் முதல் அமெரிக்கா வரை
ஆனால்
அழிவொன்று கிழக்கிலிருந்து மேற்காகப் படையெடுத்த முதல் தடவை! மேற்குக்குப் போட்டியாய்ப் பன்மடங்காய் உயிர்ப்படையல் படைத்து கிழக்கின் புகழை நாட்டிப் பெருமை பூண்டாய் சுனாமி!
25

Page 15
உனக்கொரு மறக்க முடியாமல் செய்த
விசேட நன்றி! உனக்கு தம் பற்றி மட்டுமே ஒன்றேயொன்று சொல்வேன் சிந்திக்கும் எம்மவரைக் போய்த்தொலை! கொஞ்சமாவது வரவே வராதே இனி! மற்றவருக்கு மீண்டும் வந்தால் உதவச் செய்தாயே எம்மிடமிருந்து அதற்குத்தான் அள்ளிச் சென்றவற்றை என் விசேட நன்றி! அழைத்துச் சென்றவரை எனினும் அழித்த எம் இன்பத்தை இனிவரும் மறுபடி கூட்டி வா! ஒவ்வொரு நத்தாரையும் மீண்டும் உன்னைக் புது வருடத்தையும் கடலன்னை என்போம்!
வாலோ ?
(S
G என்னுடைய வாழ்க்கை
எலியுடன் - என்றே ஆகிவிட்டது
அதைத் Sw தள்ளுவதும் 6) இழுப்பதும்
நசுக்குவதும்
நெரிப்பதுவும் - என எல்லாம் தொடராய்த் தொடர
இறு வயல்வெளிகளில் நெல்மணிகளை உண்டுகளித்து ஒடித்திரியும் எலிகளைக் கண்டபோதும் அலுவலகங்களில் பலரது வாழ்க்கையையே தீர்மானிக்கும்
G)) Lபத்திரங்களையே கொறித்துவிட்டு
பிடிபடாமல் திரியும் எலிகளைக் கண்டபோதும் எனக்கு என்னுடைய எலிகுறித்த
கவலை பிறக்கிறது. இவ்வளவும் நான் செய்யும்போதும் பதிலெதுவும் பேசாமல்
சொன்னதைத் தட்டாமல் செய்வதை நினைத்தால்
Vuynaviglavub k garauli 2005 26
 
 
 

፵ሾmፋፈ
-ܡܝܢ
烹
她-鹦
NRK
ܨܸà
线
i
With Best compliments from flay00ra
ENTERPRISES
2A-2N SECOND FLOOR, BUILDING B. 115, WEMBLEY COMMERCIAL CENTRE EASTLANE, NORTH WEMBLEY, MIDDLESEX HAQ 7UR, LONDON.
BUZZ : 0208 9083218
德
ஃக
థ్ర్యోషి *
vướ)ognevề $ gorzuỹ 2OO5

Page 16
கருத்துமேடை
பெண்ணியம்
கருத்துமேடை
டங்குகளும்,சம்பிரதாயங்களு பெண்களை அடக்கியொடுக்கியும், அந்நிய நாட்டு உதவிகள் அவற்றின் மூலம் அவர்களின் ● ● *、* 制 ị0ịíì6ốI (Upộ ரஜின மூலம் மீண்டும் நம் பொருளாதாரத்தைக் கட்டி
சுதந்திரம் மறுக் கப்பட்டும் இருக்கிறது. சினிகள் இங்கிலி எழுப்புதல் சாத்தியமா?
B606 உடைத்து வெளியே வர் மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்ா? X ☎လ်ဇံ gاف மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி
அவ்விலங் கள்ை
இது தொடர்பான உங்கள் சார் வாத பிரதிவாதங்களை சுருக்கமாக எமது பயில்நிலம் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.
பயில்நிலம் 59/3, வைத்தியா வீதி, தெஹிவளை.
பெண்ணியம் கருத்துமேடை −
பெண்கள் தாமாக அம்மூடநம்பிக்கைகளை உடைத்தெறிவதென்பது கடினமான ஒன்றாகும். ஏனெனில் அவ்வாறு முயற்சிக்கும் பெண்களை சமூகமே சேர்ந்து ஒதுக்கிவிடும். ஆகையால் எப்போது சமூகம் விழிப்படைகின்றதோ அப்போதே பெண்களின் மீது சுமத்தப்படுகின்ற மூடநம்பிக்கைகள் மட்டுமன்றி அனைத்து மூடநம்பிக்கைகளும் சமூகத்திலிருந்து அகற்றப்படும். எனவே சமூகம் விழிப்படைய வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.
ம.கார்த்திகா, பம்பலபிட்டி.
விழிப்புணர்வென்பது ஒரு சில நாட்களில் உருவாகிவிடுவதல்ல. அது ஒரு நீண்டகாலச் செயன்முறை. பெண்கள் தங்கள் மத்தியிலேயே முதலில் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டு தாங்கள் தாங்கள் விழிப்படைந்து சங்கிலிகளை உடைத்தெறிந்த பின் சமுதாய விழிப்புணர்வை நோக்கி பயணிக்க வேண்டும்.
வி.திலீப், கொழும்பு - 05
Muýhávégénavíð - agaraj ĵ 2oos 28
 
 
 
 
 
 
 
 
 

Aftirsriðldsö
atsréFll:b
கிடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆசிய நாடுகளில் ஏற்பட்ட கடற்கொந்தளிப்புக் காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டது. இதில் இலங்கையின் கரையோர பிரதேசங்கள் பலமாகப் பாதிக்கப்பட்டன. இதில் தென்பகுதி, வடக்கு, கிழக்கு உட்பட முழுநாடும் பாதிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் இப்படி எப்போதும் நிகழவில்லை. s
இது நாட்டின் பொருளாதாரம், கலாசாரம், அரசியலில் பல கொந்தளிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசியலில் உள்நாட்டில், நிவாரணப்பணிகள் என்றவகையில் வெளிநாடுகளின் வருகையும் முக்கியமானது. பலநாடுகள் தமது நலன்களைப் பாதுகாக்க நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
எனவே சுனாமி என்ற அலை அரசியலில் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையகம் என்று அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டதாக இல்லை. ஆனால் மக்கள் ஒன்றுபட்டு சக மனிதனைக் காப்பாற்றும் மனிதநேயம் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்திருப்பது, அரசியல்வாதிகளின் சுயநல அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தவகையில் அரசியல் தலைமைகள் தமது ஆட்சியையும், கதிரைகளையும் காப்பாற்றுவதற்கு துடித்துக் கொண்டு முதலைக் கண்ணிர் வடிக்கின்றன. இத்துடன் அரசாங்கம் தனது பதவிக்காலத்தையும் ஆட்சியையும் நீடிப்பதற்கு முயற்சிக்கிறது. அடுத்த ஆட்சியையும் ஜனாதிபதி பதவியையும் எப்படி இந்த சுனாமியைப் பயன்படுத்தி பெறலாம் என்பது எதிர்கட்சியின் அவாவாகும். இந்தவகையிலேயே அரசியல்வாதிகளின் வடக்கு, கிழக்கு, தெற்கு விஜயங்கள் அமைந்திருந்தன. மக்களின் அவலத்திலும் அரசியல் நலன்களுடனேயே செயற்பட்டு வருகின்றனர். தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிலர் மெளனமாகவும் சிலர் கிழக்கிலும் நின்று ஏதோ செய்தாலும் அரசாங்கத்துடன் ஒரு சமரசப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வெளிநாட்டு சக்திகளும் பிராந்திய ஆதிக்கக்காரரும் ஏகாதிபத்தியவாதிகளும் இங்கு மீட்புப்பணி என்ற போர்வையில் இறக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக உடனடியாக இந்தியா, அமெரிக்கா என்பன தமக்குள் உள்ள போட்டிப் பலப்பரீட்சையை இலங்கையில் நிகழ்த்த வந்துள்ளன. அமெரிக்கா ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தையும் பொருள்களையும் இறக்கி என்ன நடக்கிறது என்றால் திருகோணமலை இராணுவ முகாம் புனரமைக்கப்படுகிறது.
vu70eoZlav) : 24r- 2OCS 29

Page 17
இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஆதிக்க சக்திகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த உறவை கொலின் பவலின் வருகை வெளிப்படுத்தியுள்ளது.
கொட்பிஅனான் வருகையில் வடக்கு புறக்கணிக் கப்பட்டுள்ளது. எல்லோரும் திருகோணமலை மீது இருக்கும் தமது காதலை எடுத்துக் காட்டுகின்றனர். இதைவிட தனியார், அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO)சுனாமியால் நன்றாக கொழுத்து இருப்பதுடன் ஏகாதிபத்தி க்கூலிகளாகவும் செயற்படுகின்றனர். இவர் க்ள் யுத்தத்தை காரணம் காட்டி சம்பாதித்தவர்கள். இன்று சுனாமி இவர்கள் வசமாகிறது. எனவே ஒட்டு மொத்தத்தில் சுனாமி م. بي....... من مؤن . . . . பற்றி முன்னறிவித்தலை அமெரிக்கா தெரிந்தும் அறிவிக்காமல் விட்டது. அதுகூட ஒரு சதியா? இதற்கு இலங்கையின் வடக்கு கிழக்கு போராட்டப் பிரதேசம், இந்தோனேஷியாவின் அசே மாநிலத்தில் அரசுக்கு எதிராகப் போராடிய பிரதேசம், இந்தியா, இலங்கை என்பன சுனாமிக்குட்பட்டமை அமெரிக்காவுக்கு உள்ளூர மகிழ்ச்சி என்பதை அமெரிக்காவின் வேகமான மனிதாபிமானத் தலையீட்டு வருகை எடுத்துக்காட்டுகிறது. அரச ஊடகம் வீண் வதந்திகளையும் பொய்ப் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருவதுடன் தனது பக்கச்சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. சுனாமி, அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்களையும் அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்திய அரசின் அணியாகிய ஜே.வி.பியினர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்ட முடியாது உள்ளனர். இது கையாலாகாத்தனம். மக்கள் மனதில் அமெரிக்காவின் வருகை பல கேள்விகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு பதில் கூறப்போவது யார்? ஊடகங்களின் பங்கு எவ்வாறு அமையப் போகிறது? சுனாமி, இலங்கைப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் வெளிநாட்டுச் சக்திகளை இலகுவாக உள் நுழையவிட்டுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள், இன்னும் மக்களை ஏமாற்றவும் ஊழலுக்கும் வழி திறந்துள்ளது. எனவே சுனாமி, அரசியலில் பல விரிசல்களையும் சமாதான முன்னெடுப்பில் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. சுனாமியின் வருகை சாதாரண உழைக்கும் மக்களுக்கு துன்பத்தையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி பிற்போக்கு அரசியல் சக்திகளுக்கு நல்ல நீடித்த ஆயுளை வழங்கியுள்ளது என்பதுவே s 60360)LD. ܫ
豫
செ. நந்தன்*
/யில்திலAல் 4 ஜனவரி 2005 30
 
 
 
 
 

২ইঞ্জিট্ৰ'ষ্ট 8 N 2004ம்ஆண்டு டிசம்பள் மாத இறுதியில் தெற்காசிய நாடுகளை உலுக்கிய சுனாமி கடற்புவி நடுக்க ஆழிப்பேரலை இலங்கையிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 882 பேர் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். 800 000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து பணமும், பொருளும், படைகளும் வந்து குவிகின்றன. இதனால் ஆறுதல் தரும் விதமாக இலங்கையின் நாணயப் பெறுமதி கூடியிருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஃபிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, ஜப்பான் என்று போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளுக்காக மட்டுமே இலங்கை வந்திருப்பதாகக் கூறுவதுதான் உண்மைத் தன்மையைக் குறைத்துக் காட்டுகிறது. சுனாமி கடற்புவி நடுக்க அலை இலங்கையின் கரையோரப் பகுதிகள், துறைமுகப் பகுதிகள் மற்றும் கடற்படையின் வளங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படியான சந்தர்ப்பத்தில், “உடுக்கை இழந்தவன் கைப்போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற பெயரில், துணைக் கண்டம் என்ற உரிமை பாராட்டிக் கொண்டு இந்தியா பெரும் மனதுடன் உதவிக் கரங்களை நீட்டியது. அதேவேளை, அமெரிக்க படையின் இலங்கை வருகையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இவற்றையெல்லாம் மீறி இலங்கையில் கால்பதித்துள்ள அமெரிக்க நிவாரணப்படைகள் கைகளில் The National Geospatial Intelligence Agency 616ird sióOLD L 6) prisiduigbigbijinlquj சக்திவாய்ந்த உளவறியும் செயற்கைக் கோள்கள் காணப்படுகின்றன. இராணுவ நிலையையும் இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்குகளையும் காட்டிக் கொடுக்கும் இச்செயற்கைக் கோள் நிவாரணப் படைகளிடம் எதற்கு?
3Lடகம் p
நழைநதி கூடாரம்
இவையெல்லாம் “காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள”முயற்சிக்கும் அந்நிய நாடுகளின் கைங்கரியமாக இருக்கிறது. ஆசியாவின் வல்லரசாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் முயற்சியில் இந்தியாவும், ஆசியாவில் நிலையான படைத்தளம் ஒன்றை நிறுவிக் கொள்ளும் முயற்சியில் அமெரிக்காவும் இறங்கியுள்ளன. இதைத் தவிர முல்லைத்தீவை ஜேர்மனியின் ஃபீலபெல்ட் நகரம் இணை நகரமாக அறிவித்துள்ளமை போன்ற நடப்புக்கள் நவகாலனித்துவத்திற்கான விதை தூவப்படுவதையே சுட்டிக்காட்டுகின்றன. இவற்றுக்கெல்லாம் ஆதரவு வழங்கும் ஓர் ஆறுதல் செய்தியாக உலகநாடுகள் இலங்கையின் மீதான கடன்களை மீள அறவிடாது இருப்பது தொடர்பாக பரிசீலித்து வருகின்றன. w
இப்படியான நிலைய்பாடுகளில் இலங்கை அரசின் நடவடிக்கைகளை ஆராயுமிடத்து பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் அவசரகால சட்டம் ஜனவரி 4ல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடல் தந்த அலையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடல் தாண்டி அபாயம் வந்துகொண்டிக்கிறதோ..?
பொ.கோபிநாத்
ഗീഴ്ത്തി ജങ്ങഖ് ഉOOS 31

Page 18
:్య
S$ரS W v ی W ی ருாேடகக்கலைஞர் பிரrேu)லுேடன் ஓர் ருள்ே
தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடகக் கலைஞர் பிரளயன் نکشتنشستضظسرعت sa அவர்கள் அணி மையில இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவர் கவிதை, குழந்தைகள் நாடகம், வீதி நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். வீதி நாடகத்துறையிலே அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘சென்னைக் கலைக்குழு’ என்ற அமைப்பினுடாக நாடக முயறி சிகளைச் செய்து வருகினறார் . அண்மைக்காலங்களில் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்டுள்ளார். ‘அன்பேசிவம்” படத்தில் இவருடைய வீதி நாடகத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இலங்கைக்கு வந்து இவர் யாழ்ப்பாணம், மலையகம், கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய இடங்களிலும் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியுள்ளார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இவருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துரையாடிய விடயங்களை பயன்கருதி சுருக்கமான வடிவத்தில் டிசம்பர் பயில்நிலம் வாயிலாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டோம். அதன் தொடர்ச்சி.
8. கடந்த ஒரு மாதகாலமாக இலங்கையின் பல பகுதிகளிற்கும் விஜயம் செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள (Մ)լդպլDI?
நான் முதலிலே மலையகத் தொழிலாளர் மத்தியிலேதான் வேலை செய்தேன். அங்கே புசல்லாவ என்ற இடத்தில் 'சமூக அபிவிருத்தி நிறுவகம் என்கின்ற தன்னார்வ அமைப்பு நாடகங்களைச் செய்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்குத்தான் பயிலரங்குகளை நடத்தினேன். அவர்கள் ஏற்கனவே செய்த நாடகங்களைப் பார்த்தேன். நாங்கள் எங்களிடத்திலே இருக்கிற அனுபவங்களைக் கொண்டு அங்கு தொழிலாளர்களிடையே இருக்கின்ற சில விஷயங்களைப் பற்றிய நாடகங்களைச் செய்யத் தொடங்கினோம். இவ்வாறு செய்யத் தொடங்கும் போது இம் மண்ணின் மரபுசார்ந்த சில அடையாளங்கள் தேவைப்படுகின்றன. அதனால் நாங்கள் காமன் கூத்து என்கின்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்து அந்த மொழியை, இசையை, அடவுகளையெல்லாம் உள்ளடக்கி நாடகத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். பிறகு நான் யாழ்ப்பாணத்தில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் பஞ்சவர்ண நரியார் என்கின்ற சிறுவர் நாடகத்தைப் பார்த்தேன். பிறகு மிதிவெடியைப் பற்றிய ஊனக்குரல் என்ற மேடைநாடகத்தையும் பார்த்தேன். பின்னர் வன்னிநிலத்தில் கிளிநொச்சியில் கிட்டத்தட்ட 3 நாட்கள் தங்கியிருந்தேன். அங்கே விஜயசேகரன், பாலாசிங், பாலா, புதுவை அன்பன், ரமேஷ் போன்றவர்கள் நடத்திய நாடகங்களையும் பார்த்தேன். அவையெல்லாம் புதிய தகவல்கள். போரினால் பாதிக்கப்பட்ட கெரில்லா தாக்குதல்களுக்குள்ளான கிளிநொச்சி போன்ற பகுதிகளிலெல்லாம் நாடகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் இதுபோன்ற நாடக முயற்சிகள் அங்கு இருந்து கொண்டிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அந்த நாடகங்களின் தன்மை அந்தச் சூழலில் இருந்து பார்க்கின்ற பொழுதுதான் புரியும்.
ഗങ്ങി.v o gareu, 2oos 32
 
 
 
 

அங்கே ஒரு நாடகம் புலம்பெயர்ந்தவர்கள் பற்றி விமர்சனம் செய்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றி பொதுவாக ‘போரினால் இடம்பெயர்ந்து, தமது சொந்த மண்ணிலே இருந்து பிரிக்கப்பட்டு வாழ்கின்ற மக்கள்’ என்று அவர்கள் மீதெல்லாம் எங்களுக்கு ஓர் அனுதாபம் உண்டு. அவர்கள் என்ன பொருளாதார வசதியிலே இருந்தாலும் அது வேறு பிரச்சினை. ஆனால் அந்நாடகம் அப்படிப் புலம் பெயர்ந்தவர்களை விமர்சனம் செய்கின்றது. விமர்சனம் என்றால் எள்ளி நகையாடுவதற்கு அல்ல. முக்கியமானதொரு வலியில், வேதனையில் இருந்து விமர்சனம் செய்கின்றது. போரின் சூழலிலே மருத்துவர்கள் யாரும் இல்லை. அப்போது போராளிகளே தங்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு சிறப்புப் பயிற்சிபெற்ற டாக்டர் ஒருவருடைய பெற்றோர் வைத்தியத்திற்கு யாரும் இல்லாமல் அநாதரவாகக் கிடக்கிறார்கள். நமது அறிவுச் செல்வங்களெல்லாம் நமக்கு தேவைப்படுகின்ற பொழுது இல்லாமல் போகின்றார்களே! என்கின்ற ஆதங்கத்தில் இருந்து வந்த விமர்சனம். இன்னுமொரு பரிமாணத்தைக் காட்டுகின்றது என்பதைப் புரிந்து கொண்டேன். இன்னுமொரு நாடகம் கரைதேடும் ஓடங்கள் புதுவை அன்பனுடைய மேடை நாடகம். வீதிச் சூழலிலும் நிகழ்த்தப்படக்கூடிய நாடகம். அது ஒரு போராளியினுடைய குடும்பத்தினர் படுகின்ற கஷ்டங்களை பற்றியது. இதெல்லாம் யாரிற்கும் தெரியாது.எனக்கு குற்றஉணர்வுதான் மேலிட்டது.
மற்றொன்று இந்த நாடகங்கள் பற்றி எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது! இங்குதான் நாடகத்தை வரலாறாக ஆய்வு செய்கின்ற மிகப் பெரிய நெறி இருக்கின்றது. மிகப் பெரிய புலமை சார்ந்தவர்கள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திற்குக் கூட நவீன நாடகத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திய பல காத்திரமான கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள் இலங்கையில் இருக்கக்கூடிய அறிஞர்கள்தான். இந்த நாடகங்கள் எல்லாம் பதிவு செய்யப்படவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமளிக்கும் உண்மையாகும். இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எல்லாம் கூட அதைத் தெரிந்தால் பதில் சொல்லலாம்.
அங்கிருந்து கேள்விப்பட்டவைகளைவிட இங்கே வந்தபோது பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது. செல்லுகின்ற பாதையிலே வருகின்ற பல நூற்றுக்கணக்கான தலையற்ற பனை மரங்கள் எனது நெஞ்சைக்கீறியது. அந்தச் சித்திரம் என்மனதில் இன்னும் ஆழமாக இருக்கின்றது. மனிதகுலத்தின் பலவிதமான பரிமாணங்களைச் சொல்லுகின்ற அனுபவங்கள்.
9. தமிழில் நாடகநடிகனின் நடிப்பைப்பற்றிய குறிப்புக்கள் இருக்கிறதா? மேடை நாடகத்திற்கு இருக்கிறதா? வீதி நாடகங்களுக்கு என்று எழுதுவதற்கு நீங்கள் ஏதும் முயற்சித்திருக்கின்றீர்களா? அப்படிப்பட்ட எழுத்துக்கள் தமிழில் குறைவுதான். என்றாலும் மொழி பெயர்ப்புக்கள உள்ளன. முக்கியமான மேல் நாட்டு நாடகர்களுடைய நூல்களில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன. தமிழில் தமிழ் அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை என்றும் வேறு பம்மல் கே.சம்பந்த முதலியார் , ஒளவை சண்முகி போன்றோர் எழுதியிருக்கிறார்கள் . *வையெல்லாம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப் !ட்டிருக்கின்றன. இவையெல்லாம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலான
/uÝMénawo : garreu 2oos 33

Page 19
முயற்சிகளே. இப்போதெல்லாம் வழமையாக நாடகத்தைப் பதிவு செய்வது மட்டும்தான் நடைபெற்று வருகின்றது. ஒரு வரலாறு போலத்தான் இவை எழுதப்பட்டிருக்கிறது.அப்படியும் சிலர் நடைபெற்ற நாடகங்களைப் பற்றி எழுதும் போது தங்களுக்குப் பிடிக்காத சிலரை விட்டுவிடுவார்கள். இப்படி 10, 15 பேர் எழுதியிருக்கிறார்கள். இதனால் 20ம் நூற்றாண்டின் தமிழ் நாடகங்கள் பற்றி அறிய வேண்டுமானால் 20 நூல்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் தமிழில் இருக்கின்றது. ஒரு பரந்த மனப்பான்மையோடு நாடகங்களைப் பார்ப்பதில்லை. இருவருக்கிடையே குரோதம் இருக்கும். என்ன காரணத்திற்காக மோதிக் கொள்கின்றார்கள் என்றே யாருக்கும் தெரியாது. கோட்பாட்டளவில் இருந்தால்கூட அது ஒரு ஆரோக்கியமான சண்டை என்று புரிந்து கொள்ளலாம். அண்மைக்காலத்தில் இப்படிப் பல சண்டைகள். ஆரம்பங்களில் பாதல் சர்க்கார் காலத்தில் மேடை நாடகங்களிற்கு தமிழ் அடையாளங் கொடுப்பதா என்பது ஒரு காத்திரமான விவாதமாக மாறியது. இளைய பத்மநாதன் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் செய்த நாடகங்கள், அவை எழுப்பிய கேள்விகள் பல சுபமங்களா நாடகவிழாவில் வெளிப்பட்டது. பிறகு சுபமங்களா நாடகவிழாவில் தலித்திய நாடகம், பெண்ணிய நாடகம் போன்றன பெரிய கேள்விகளை எழுப்பின. இவையெல்லாம் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பின. இவை பல ஆரோக்கியமான கருத்து மோதலை வெளிப்படுத்தின.
10. தமிழ்நாட்டு வீதி நாடகங்களிற்கும் இலங்கை நாடகங்களிற்கும் இடையில் நீங்கள் கண்ட வேறுபாடுகள் எவை? ஒப்பீட்டு ரீதியில் சொல்ல முடியுமா?
இங்கே மலையகத்தில் வீதி நாடகங்கள் செய்கின்ற ராஜேந்திரனுடைய நாடகங் களையோ, தேசிய கலை இலக்கியப் பேரவையின் நாடகங்களையோ, கொழும்பில் நடைபெறுகின்ற நாடகங்களையோ, யாழ்ப்பாணத்தில் முன்னர் நடந்த வீதி நாடகங்களையோ, திருகோணமலையின் ‘விடியல் குழு’ போன்றோரின் நாடகங்களையோ எல்லாம் நான் பார்க்கவில்லை. இவற்றையெல்லாம் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முடியாது. அவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அது எந்த மண்ணில் கால் பதித்திருக்கிறதோ அந்த மண்ணின் சூழலில், பின்புலத்தில் தான் அவற்றை மதிப்பீடு செய்ய முடியும். தனியாகப் பிடுங்கி அளவு கோல்களை எல்லாம் வைத்துக் கொண்டு அவற்றை மதிப்பீடு செய்ய முடியாது என்றே நான் கருதுகின்றேன். இங்கே நாம் பல பயிலரங்குகளை நடத்தினோம். அவர்களுக்கெல்லாம் பல விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. உடல் அசைவு இருக்கின்றது. நல்ல நடிகனுக்கேற்ற Flexibility உடம்பில் இருக்கின்றது. பாடுபடுகிறார்கள். சுருதிஞானம் இருக்கின்றது. தாளஞானம் இருக்கின்றது. இவையெல்லாம் ஒரு நவீன நாடகத்திற்குத் தேவையான கூறுகள். இவையெல்லாம் தாராளமாகவே இவர்களிடம் இருக்கின்றன. இதெல்லாம் பதிவு செய்யப்படவில்லை என்பது தான் எனக்கு அதிர்ச்சியான விடயமாக இருக்கின்றது.
11. உங்கள் நாடகம் பற்றி ஏதாவது பதிவுகள்.
நான் உணர்ந்திருக்கிறேன். ‘ஷப்தர் ஹாஷ்மி" யின் நாடகங்களைப் பற்றியெல்லாம் மொழிபெயர்த்துள்ளேன். நானும் சில குறிப்புகள் எழுதி
Munaraginavieo ( garra2 uö 2oos 34

வைத்திருக்கிறேன். அவையனைத்தையும் சேர்த்தால் 2 அல்லது 3 புத்தகங்கள் போடலாம். அத்தோடு எங்களுடைய சென்னை கலைக்குழுவின் 12வது நிகழ்வின் போது ஒரு மலர் வெளியிட்டோம். அதில் இந்தியா முழுவதிலுமிருந்து 17 பேரை நீண்ட நேர்முகப் பேட்டி கண்டிருந்தது. என்னையும் பேட்டி கண்டார்கள். அவையனைத்தும் அந்த மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
14. நீங்கள் சினிமாவிற்கு வந்ததன் மூலம் எதையாவது புதிதாகச் சாதித்துவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கின்றதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதையுமே செய்ய முடியாது. ஆனால் சினிமாவைப் புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவிற்கு என்று சில நியதிகள் இருக்கின்றன. இதற்குள் புகுந்து அதன் நியதிகளை உடைக்கலாம். அல்லது நியதிகளை உடைக்கிறேன் என்று சென்றுவிட்டு அதற்குள் மூழ்கிக் கரைந்தும் போய்விடலாம். இரண்டும் நடக்கலாம். ஆனால் அதனுடைய அடித்தளம் அல்லது இயங்குதளம் சாதாரண வெகுஜனமக்கள். சினிமா செய்கின்ற அனைவரும் சாதாரண மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டுதான் செயற்பட வேண்டும். ஆனால் தொலைக்காட்சி சீரியல்களில் அது கிடைக்கவே கிடையாது. அங்கு ஒரு றிக் ஷாக்காரனோ, செருப்புத்தைப்பவனோ, நடைபாதையில் கடை வைத்திருப்பவனோ என்று அடிநிலை மாந்தர்கள் எவராவது இருக்கின்றார்களா? அப்படி வந்தாலும் பின்னணியில் தான் வருவார்கள். குற்றம் செய்தோன், திருடன் என்றுதான் சித்தரிப்பார்கள். யார் வருவார்கள் என்றால் நடுத்தரவர்க்கமும், உயர்வர்க்கமும்தான். சினிமாவை இப்படி எடுத்தால் ஓடாது. தோற்றுவிடும். இங்குதான் சீரியலில் வந்துபோகும் கதாமாந்தர் கதாநாயகனாகவே வருவான். ஏனென்றால் அவனை வைத்துத்தான் அவர்களுக்கு வியாபாரம் செய்யவேண்டி இருப்பதால், அவனுடைய உணர்வுகளையும் உள்ளடக்கிக் கொள்கிறது. சினிமாவினது இந்த சமூகஅடித்தளம் முக்கியமானது. இரண்டாவது அத்தளத்திலே என்ன செய்யமுடியும், முடியாது என்பது. சினிமாவில் நல்ல விஷயத்தை சொல்லிவிட்டால் சமூகம் மாறிவிடுமா? அது சமூகத்தை பிரதிபலிக்கும். ஆனால் அதனால் ஒரு அழுத்தம் கொடுக்கலாம்.
ஏன் தொலைக்காட்சிகளில் அவனை அடையாளப்படுத்தும் முயற்சிகள் இல்லை. ஏன் என்றால் அதற்கு அவன் தேவையில்லை. தொலைக்காட்சிகள் நுகர்வோரை வைத்துத்தான் வியாபாரம் செய்கிறது. காசு இருப்பவன் தான் நுகர்வோன். அவனுடைய உணர்வுகள், வாழ்வியல் அம்சங்களை வெளிப்படுத்தி அவனை திருப்திப்படுத்தினால் போதும். ஏனையோர் 60% மக்களாய் இருந்தாலும் பரவாயில்லை. 20% – 30% தானே நுகர்வோர். எட்டுக்கோடியில் அதுவே பெரிய சந்தை. ஆகவே அவர்களை மையமாக வைத்துத்தான் அனுசரணை ' கிடைக்கிறது. அடிநிலை மக்களும் நுகர்வோராய் மாறினால் அவர்களையும் கதாமாந்தராக கொண்டு வரும்.
ஆனால் சினிமாவை அப்படி நடுத்தர மக்களை நம்பி எடுத்து விட முடியாது. சிலர் அதையும் தாணி டி படம் பணி னி கையைச் சுட்டுக்கொள்கின்றார்கள். சினிமாவிற்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
* முற்றும் *
தொகுப்பு :- க.தேஜா உதவி - கி.திவாகரன்
vu^^^âavỡ ằ gorzuỷ 2Oos 35

Page 20
X பயில்நிலம் அட்டைப்படத்தை வர்ணங்களில் காண்பது மகிழ்விக்கிறது. வெற்றித் திருமகன் கவிதை அற்புதம். உங்களின் பக்கவடிவமைப்பில் முன்னேற்றகரமான மாற்றம் தெரிகிறது. இல்மஸ் குனேயை அறியக் கிடைத்தது.
-ஜெ.மேகலா, ஹற்றன் X மாத இறுதியிலேயே உங்கள் இதழ் கரம் எட்டியது. சிவப்பின் கறுப்பு சிறுகதை அருமை. ‘நாளக’ இன்னும் மனதில் இருக்கிறார். எயிட்ஸ் கட்டுரையில் போதாமை தெரிகிறது. பிரளயனின் வித்தியாசமான பேட்டியையும் காணக் கிடைத்தது. ‘இயற்கையும் செயற்கையும் கவிதை பயில்நிலத்திற்கே உரிய தனித்துவம். வாழ்த்துக்கள். அடுத்த இதழ் காலக்கிரமத்தில் கைகளில் எட்டும் எனக் கருதுகிறேன்.
-ச.பவித்ரா, யாழ்ப்பாணம்
X பயில்நிலம் இதழின் “கவிதைக் காதலும் கண்டல் கத்தரிக்காயும்” எனும் கவிதை என் மனதை மிகவும் கவர்ந்தது. காதல் பற்றிய கற்பனையுடன் கவிதை எழுதாமல் மிகவும் யதார்த்தமாக அமைந்திருந்தமை அதன் சிறப்பம்சமாகும் இவ்விதழில் Font வடிவம் அழகாய் அமைந்துள்ளது.
-வி.காந்தன், வெள்ளவத்தை
வாசகர் கழதம் ” வேண்டுகோளர் வெறுமனே பயில்நிலத்தைப் பாராட்டி மட்டும் எழுதாமல் உங்களைக் கவர்ந்த கட்டுரைகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அவற்றின் சிறப்புக்களையும் அவசியமானால் குறைகளையும் கூடக் குறிப்பிட்டு எழுதுங்கள். நல்ல கருத்துரைகள் பயில்நிலத்தில் வெளியிடப்படும்."
பகுதிக்கு எழுதும் அணியர்களுக்கு ஒரு
Wu?angŝaavo : agarrasíĵ 2oos 36
 
 
 
 
 
 
 
 
 
 

2Jłk Besł2Jisles row
حس
(
O
分
(
踩
ി & /ീrg. Rat
«Ям" &s «Яме. Килим

Page 21
எழந்தால்
இயற்கை அன்ன உன்னில் இருந்ே எழுந்தவர் நாம் !
5. உன்னில் தேடி
ஐஉன்னை க் கற்று
இம் மாத இதழ் 13, சுதந்தியா விதி தெரிவளவ பான்றின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னையே தே 壹
嵩,郡ENGAL
ள்கிறாய் என்றுதற்காக
III
ந்தால்
5mInib!
খ্রিস্তু E. வலுச்சேர்த்து
மருழவினரால் விங்டன் பிரிண்டரில் ஆர்சிட்டு வெளியிடப்பட்டது