கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2006.05-06

Page 1

திwம்

Page 2
“நேர்மையென்றால் ஹமாம் சேய், N தூய்மையென்றால் ரின் சோப், தாய்மையென்றால் மீரா ஷம்போ இப்படியே போனால் இதற்கு உதாரணமாக நிஜ மனிதர்கள் கிடையாதா அப்பா?”
“என் செல்ல மகளே! புரியாமல் பேசுகிறாயம்மா நீ இதற்கு பெயர்தான் சீர்திருத்தம், தாராளமயம், சந்தை, உலகமயம்! இதில் மனிதனே ஒரு பொருள் தான் அம்மா இந்த கலாசாரத்தில் எல்லாவற்றையும் பொருளாக்கி விற்பது மட்டுமல்ல, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என்று மனித உறவை, சமூக மதிப்புகளைக் கூட பொருளாக்கி விட்டார்கள்!”
VIHADAN PRINTER541/2 - C, Galle Road, Colombo-06. Tel: 2504370,2361329
 
 

இதழில் . Tയ്യsഞ്ഞുണ്ണ് (8്വൺ .
சிறுகதை: பக்கம்
2 நவீனத்துவம் 03
O O தனிமரத்து வெளவால்கள் 11 /யில்/திMல்
விடை தேடும் வினாக்கள் 26
மே - ஜூன் 2006 மாத இதழ்
கட்டுரை: பிரதம ஆசிரியர் - பொகோபிநாத். சூழலரசியல் 06 இரு கோட்பாடுகள் 20
யில் s பயில்நிலம் குழு யுத்தம் இல்லாத தேசம் 38
தெ. ஞா மீநிலங்கோ
தே. ஜனமகன் ந. பிரசாந்த் செ. நந்தமோகன் தே. அபிலாஷா ஸைரா கலீல்
8. கு. பாரதி கி. திவாகரன் க. அபிராமி
செ. கெளரி நா. ரவிச்சந்திரகுமார் i எமக்கும் வலிக்கும் 05
நேர்காணல்:
இசையமைப்பாளர் உதயா 29
கவிதை:
. பார்க்கிபன் த. பார்த்தி பெண்ணே நீ சாதித்து விட்டாய 10
க. நிரஞ்சனி பக்க வடிவமைப்பு: அது அபபடிததானா 17
மதிவதனி ஆ 伦飞霹 மழைநாள் 18 அச்சுப்பதிப்பு: 竖 2. முரணறிக்கை 19 விகடன் பிறின்ரேஸ் yyxy- இயற்கையோடு சினேகிக்க 23 கொழும்பு - 06
\ புரிதல் 23 கொ. பே. 2504370 i
് இனிய கானம் இசைத்திட 24 6 வோர்: . ۴ a . . . பயில்நிலம் மெளனத்தின் அர்த்தம் 28 59/3, வைத்யா வீதி r அமைதி தேடி 36 தெஹிவளை క్షే எதுவரை தோழி 37 தொபே, 5527074 * வாழத்தான் பிறந்தோம் 42
Gao - go பயில்நிலம்

Page 3
(origdiscssoss 88ssist to .....
மே - ஜூன் 2006 அறுவடை - 11
உன்னையே நீ அறிவாய்
மக்களுக்கிடையிலான கருத்துப்பரிமாறல் மிகவும் நலிவடைந்து காணப்படும் ஒரு காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கருத்துப் பரிமாறலுக்கான ஊடகங்கள் பொருளாதார தேடலை முன்னோக்கி நகரும் இயந்திரங்களாகி விட்டதனால் அவர்களிடமிருந்து சமுகத்திற்கு பயன்பாடான எவற்றையும் எதிர்ப்பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.அது தவிர அரசியலை அதிகமாக பேச முடியாத ஒரு தற்காப்புத் தேவையும் இருக்கின்றது. பிரன்ஸிய எழுத்தாளர் வோல்டேயர் கூறுவது போல “ஒருவருடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்,அவருக்கு அந்த கருத்தினை சொல்வதற்கான உரிமை மறுக்கப்படும் போது, அதை எதிர்த்து உயிர் கொடுக்கவும் தயங்கமாட்டேன்.” என்பது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் வீரியம்.
தனி மனித கருத்துப்பரிமாறல் என்பது இன்று அவசியமான ஒரு விடயமாக காணப்படுகிறது.எழுத்துக்கள் ஊடாக கருத்துக்களை எடுத்து சென்று சொல்வதிலும் பார்க்க வாய்மொழியூடான கருத்துப்பரிமாற்றம் மக்களை விரைவில் சென்றடைகிறது. தனி மனிதர்களுக்கிடையில் ஆரோக்கியமான கருத்துப்பரிமாறல்களும் கலந்துரையாடல்களும் நடைபெறும் போது மக்களுக்கிடையில் அறிவுட்டலும் விழிப்புணர்வும் இலகுவாக ஏற்படும்.
இந்த ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாற்றங்களையும் கலந்துரையாடல் களையும் மேற்கொள்ள மொழி, இனம், மதம், பிரதேசம், சாதி, பால் என்பன எல்லையாக இருக்கக்கூடாது.இவற்றைக் கடந்து இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை சிந்திப்போம், பரிமாறுவோம், கலந்துரையாடுவோம் , யுத்தத்திற்கு எதிராக ஒன்றிணைவோம். மக்கள் சிந்தனையை வளப்படுத்துவோம்.
இந்த இலக்கை முன்னெடுத்துச் செல்லும் பயில் நிலத்தின் பயணத்தில் நாம் அனைவரும் இணைந்து கொள்ளுவோம்.
ஆசிரியர் குழு
மே ~ ஜூன் - 02 - பயில்நிலம்

சின்னக் கதைகள்
‘நேற்றைய நாடகத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்படும் போது அதை தவற விட்டதற்காக நீங்கள் மிகவும் வருந்துவீர்கள்” என்று மிஸ்டர் ஓ தனது நண்பனிடம் சொன்னார்.
“எவ்வளவு முன்னேற்றமாக பிறநாட்டு நாடகங்கள் வருகின்றன என்பதை எண்ணிப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது’
“பரிசுவென்ற நவீனத்துவம்” என்ற வெளிநாட்டு நாடகம் நேற்றிரவு 7.30 க்கு தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது” என்று மிஸ்டர் ஒ சொல்லத் தொடங்கினார். ஆனால் நேரமோ இரவு 8.00 மணி ஆகிவிட்டது. திரைகள் திறக்கப்படவில்லை, சில பெரிய தலைகள் பிந்தி வருவதாலேயே நாடகம் இன்னும் தொடங்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இரவு 8.30 நிலைமைகளில் எதுவித மாற்றமும் தெரியவில்லை. காட்சி அமைப்புகளில் ஏதோ சிக்கல்களால்தான் நாடகம் இன்னும் தொடங்கவில்லைப் போலும் என எண்ணியபடியே அமர்ந்திருந்தேன். இரவு 9.00 மணியாகிவிட்டது. நாடகமோ இன்னும் தொடங்கவில்லை, ஏதோ ஏடா கூடமாக நடந்து விட்டது என நான் உணர்ந்தேன். நடிகர்கள் எவருக்கேனும் உடல் நலமில்லாமல் போய்விட்டதோ எனவும் நான் கவலைப்பட்டேன்.
இரவு 9.30 க்கு அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். அவருடைய அறிவிப்புக்காக எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். அவர் “நன்றி நாடகம் முடிந்து விட்டது” என்றார். உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா எவ்வளவு அருமை!’
நண்பரோ தேநீர் கோப்பையை கையிலேந்தியபடி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“அது ஒரு அற்புதம்” மிஸ்டர் ஓ தொடர்ந்தார். “எது நவீனமாக இருக்கிறதோ அது உண்மையில் அற்புதமானது, வெளிநாட்டவர்கள் நல்ல கெட்டிக்காரர்கள், இவ்வாறான கலைவடிவங்கள் புதியவை, அழகானவை, ரசிக்கக் கூடியவை, பின்பற்ற முடியாதவை.”
‘நேற்று நாடகம் பார்த்த சிலர் நாடகத்தைத் திட்டினார்கள், 2 மணி நேரத்தை வீணாக செலவழித்து விட்டதாக கோபப்பட்டனர். அவர்களுக்கு புதிய கலைகள் பற்றி எதுவுமே தெரியாது, இவற்றை விளங்கிக் கொள்ள நல்ல அறிவும் திறமையும் வேண்டும்.”
ഥേ - ജ് - 03 - பயில்நிலம்

Page 4
சிலநாட்கள் கழித்து நண்பர் மிஸ்டர் ஓ வின் வீட்டுக்கு வந்தார். தற்செயலாக மிஸ்டர் ஓ தனக்கு வந்த கடிதத்தை பிரித்துக் கொண்டிருந்தார். நண்பரைக் கண்டதும் மிஸ்டர் ஓ பிரித்த கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.
தோழர் ஓ,
நீங்கள் அனுப்பிய “புத்துணர்ச்சி” கவிதையை நாங்கள் பிரசுரிக்க இருக்கின்றோம் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கின்றோம். இத்துடன் உங்கள் கவிதை அடங்கிய இதழையும் அனுப்பியுள்ளோம்.
புதியமுறை ஆசிரியபிடம். “ஆகா என்னுடைய புதிய கவிதை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. நான் இதழொன்றுக்கு கவிதை அனுப்பிய முதல் தடவை இதுதான். நான் வெற்றியடைந்து விட்டேன்.”
“நான் ஒரு கறுத்த கடதாசியை “புத்துணர்ச்சி” என்று தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன். புத்திசாலியான ஆசிரியர் என்னுடைய எண்ணத்தை முழுமையாக விளங்கிக் கொண்டு விட்டார். நவீனத்துவம் என்பது சொற்சிக்கனத்தில் மிகுந்த கவனம் உடையது. அது மிகக் குறைந்த சொற்களுடன் வாசகர்களின் எண்ணங்களுக்கு வழி விடுகிறது. என்னுடைய ஆக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது நவீனத்துவமானது இல்லையா?*
“புதிய முறை” என்னைப் போன்றவர்களது பத்திரிகை என்ற கருத்தை நான் நீண்ட காலமாகக் கொண்டிருந்தேன். இந்த இதழில் அதிகம் பேசப்படும் ஒரு ஆக்கமாக எனது ஆக்கம் இருக்கும் என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும்.”
மிஸ்டர் ஒ இதழைத் திறந்து பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார். அதிலே தனது பெயரைத் தேடினார். அவரது கைகள் பதட்டத்தில் நடுங்கத் தொடங்கின. தொடக்கத்திலிருந்து இறுதிவரை கவனமாக பக்கங்களைத் திருப்பினார். ஆனால் அவரால் அவரது பெயரை காண முடியவில்லை.
“இதைப் பேசாமல் விட்டுவிடுங்கள்" என்று சொன்ன நண்பர், அவரது முதுகில் தட்டியபடியே “ஆசிரியர் உங்களைப் போலும்” என்றார்.
தமிழில்: பகலவனி epsuob : Tao Zeshi தெரிவு செய்யப்பட்ட குட்டிக்கதைகள் பாகம் - 5 ஜியான்சு மக்கள் வெளியீட்டகம்,1985.
gPsor - 04 - பயில்நிலம் سے 8o)

கவிதை OTLOõŪð OJOSðŪið
ශූ[L]ථිජfෙල්ඛවෙතITQ}| o) -U loOU 6JITTBOno|Io]DO ක_IQඊ56ඝGOfෙO 6ජ්Gවිජ්රිච් இ6Opத8தாம் நாம்?
නූ_Liff8ඊhTU5|fධ [filටතඛනෙuCC)[I 9) COOLLÓTÖD OLTODIČ UsbJL LJUČ55LOT தருதுவிடப் போகிறீT எமக்கு?
OGOTGiðG 66OL OOOOMD I6O Ool abLLOGÓGOT 8O6D 6ỦQQÕ ß5ābõT 6TIO COLD6.J65loOLLJ LOLCBIÓ இறிவாய் நோகதவ8த60?
இ_6Opத்து S_OOழத்து5 56O6ாத்து gLT 9)6O6ģ5ģ5 O) LLGOTLJU QOL QUAJTJ586AJCOM6T GOJ6fL நிறமிமாறி நினறால் சoட கழுத்து நெரிதது
இடைவிடாது ෂිබූIOඛCláONof 5]ඝ6) ආffතර්ඝෙl.
ක_[5]ඝෙl 8|nෙCfiඊළී 8.OBLbjd G66j5 8UT65 6Tr515606TLLÕ 6JToTLÕ LOTBC O ODđiloОoО ОЈОпDDÖ (обтођојој
61616.JCO)ő5 ókLJTUDP
OJU JJJa56T 6ODDBJ (Joඊ|GClo 6|offජ්ජාට) “ G5 கால்கள் பலமிழககும் 86வளை o)õõgLa 8öTbõ 55õõt – õTLÕ 8õTõõõõT U66õOTLaTõO lõTõOõ 8[5|TGuඝටl ඊ05ඛ|8ඝටCr?
da | |OTOOf_8[] O) babooTO 8LJT686) - Gd(DOLO)6 எமக்கும் வலிககும்
- DIrásario பிரபாஹர்ஹப்புத்தளையூர்
மே ~ ஜூன் - 05 - பயில்நிலம்

Page 5
கட்டுரை
சூழலரசியல்
தேவை கருதி சில குறிப்புக்கள்
“Labour is not the source of all Wealth Nature is just as much the source of all use values”
-Karl Marx
"நான் பெரியவனாகிய பிறகு மழைக்காடுகளில் உள்ள உயிரினங்களை ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். ஆனால் இப்போது அவை தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டால் காடுகள் இருக்க மாட்டாது. அதில் வாழும் உயிரினங்களும் இருக்க மாட்டாது. ஒரு தனி மனிதன், ஒரு முதலாளி ஒரு மில்லியன் டொலர்களையோ அதைவிட கூடுதலாகவோ பெறுவதற்காக இவர்வாறு செய்வது நரியாயமா'
-மலேசியப் பிரதமருக்கு பள்ளிச் சிறுவன் எழுதிய கடிதம்
மூன்றாமுலக நாடுகள் தான் அதிகளவில் சூழலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன. இந்த பிரச்சினைகள் அணி மையில் உருவானவை அல்ல. கொலனியாக்கலின் விளை வால் ஏற்பட்ட பாதிப்புக்களே இன்றும் மூன்றாம் உலக நாடுகளை பாதித்து வருகின்றன. இது போதா தென்று நவ கொலனியாக்கம் மூலம் ஏகாதிபத்தியங்கள் மூன்றா முலக வளங்களை சுரணி டிக் கொணி டிருப்பதும் நிகழ்ந்து கொணி டிருக் கினி றன. இநீத நிலையில் சூழலரசியல் (Political Ecology) தவிர்க்க முடியாதாகிறது. எம்மைச் சூழும் அபாயத்தை அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக் கும் இருக்கிறது. (rn - Pr
தொழிற்புரட்சிக்கு முன்னர் வணிகம் என்ற பெயரில் தென்ன மெரிக்காவில் காடுகள் அழிக்கப் பட்டு வணிகப் பயிர்களான புகை யிலை, கரும்பு, பருத்தி போன் றவை பெருமளவில் அறிமுகப்படுத் தப்பட்டன. இதற்கான உழைப்பிற் காக அடிமைகள் வியாபாரமும் மும்மரமாக நடந்தது. கொலனியா திக்கம் அறிமுகம் செய்த பயிர் களும் விலங்குகளும் பெருகின.
- 06 - பயில்நிலம்
 

பழங்குடி மக்களின் இயற்கை யோடிணைந்த வாழ்வு அழிக்கப் பட்டது. இயற்கை மாறுதலுக்கு உள்ளானது. கொலனியாதிக்கம் இயற்கை மீதான ஆதிக்கமாகவும் இருந்தது. கொலனியாதிக்கம் வெறுமனே பண்பாட்டுச் சிதைவை மட்டும் அரங்கேற்றவில்லை. இயற் கைச் சூழலையே முற் றாக அழித்து இயற்கையை இயலுமான எல்லா வழிகளிலும் கொள்ளை யடித்தது. தங்கம், வெள்ளி, முதலான இயற்கை வளங்களை மிச்சம் விடாமல் தோண்டி எடுப்பது, மரங்களை வெட்டுவது, பணப் பயிர்களை கொலனி நாடுகளில் பயிர் செய்து பணம் சம்பாதிப்பது, அங்கு கழிவுத் தொழிற்சாலை களை நிறுவுவது என எல்லா வகையிலும் உலகளாவிய மூல 6.67& Bij60iiL606)(Global Enclosure of Commons) b60d (yp6ODD ÜLuG6ë தியது.
கொலனியாதிக்கத்தில் இருந்து நாடுகள் விடுபடத் தொடங் கியவுடன் ஏகாதிபத்தியங்கள் வேறு வகையில் சுரண்டலையும் சூழல் கெடுதியையும் தொடர்ந்தன. 1980 களில் இலத்தின் அமெரிக்க நாடுகளில ஏற்பட்ட கடன் பிரச்சினையும் காடழிப்பும் பிண்ணிப் பிணைந்தவை. உலக வங்கி கடன்களை வழங்கி அந்நாடுகளின் காடுகளை வெட்டி மரங்களை ஏற்றுமதி செய்யுமாறு பணித்தது. காடுகள் வெட்டப்பட்டு மரங்கள் ஏகாதிபத்திய தேவைகளுக்கு அனுப்பப்பட்டன. வழங்கப்பட்ட
Go - goir - 07 -
கடனர்களோ மக் களுக்கு பயன்படாமல் ஏகாதிபத்தியக் கைக் கூலிகளுக்குப் போய்ச் சேர்ந்தன. மூன்றாம் உலக நாடுகளில் இந்த நிலை இன்னமும் தொடர்கிறது. தென் அமெரிக்காவில் நிலச் சீர் திருத்தங்களை ஒரு அரசு கொண்டு வரும் போதெல்லாம் அமெரிக்கா தலையிட்டு அவ்வரசை தூக்கி எறிகிறது. உலகில் மிகப் பெரிய மலைக் காடுகளான அமேசன் காடுகளில் பாதி இன்று இல்லை. இன்றைய நிலையில் முக்கி யமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக சூழலரசியல் மாறிவிட்டது. வேகமான திட்டமிடப்படாத நகரமயமாக்கல் பாலை வனமாதல் ஆகியன மிகப் பெரிய சூழலியற் பிரச்சனைகளை உருவாக்கு கின்றன. ஏகாதிபத்தியங்கள் தங்கள் பாவனைக்குதவாது எனக் கழித்துவிட்ட வாகனங்களை புதிய Guuu (Ob L 6oi (Reconditioned) மூன்றாம் உலக நாடுகளில் விற்பனை செய்கின்றன. அவை வெளியிடும் புகையிலுள்ள ஈயம் சுவாசத்தின் மூலம் உடலில் கலப்பதால் ஒவ்வாமை, அழற்சி முதல் கொண்டு புற்று நோய் வரையில் நோய்கள் உருவா கின்றன. இவ்வீயம் குறிப்பாக சிறு குழந்தைகளின் மூளையை பாதிக் கின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு வசதியாக சுதந்திர வர்த்தக வலையங்களையும் கைத்தொழில் பேட்டைகளையும் அமைத்து விட்டு வாருங்கள் வாருங்கள் என்று அழைத்துத் தொழிற்சாலைகளை
பயில்நிலம்

Page 6
ు
அமைக்க அனுமதிக்கிறோம். அவற்றின் மூலம் ஏற்படும் சூழலி யற் கேடுகளோ நீண்ட கால சுகா தாரப் பிரச்சினைகளோ இங்கு கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. அரசுகள் தங்களுக் கென திட்டங்களை அமைப்பதில்லை. ஏகாதிப்பத்தியங்கள் தருகின்ற திட்டங்களையும் கோட்பாடு களையும் கணி  ைண மூடிக் கொண்டு நடைமுறைப்படுத்து கின்றன. பொதுமையாக்கப்பட்ட சூழலியற் கோட்பாடுகள் எல்லா நாடுகளுக்கும் பொருந்தாதவை. அவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது. அதே போல உலக அளவில் தீட்டப்படுகின்ற இயற்கை பாதுகாப் புத் திட்டங்கள் மிகப் பயங்கரமான தோல்விகளைச் சந்தித்து வந்துள் ளன. அவற்றையே நிவாரணியாக தூக்கிப் பிடிப்பதை விட மடத்தனம் வேறெதும் இருக்க முடியாது.
ஒவ்வொரு நாடும் தமக் கென தனியான திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். கியூபா அரசு இயற்கை வேளாண்மை யையே தனது கொள்கையாகக் கொண்டது. அதைத்தான் ஊக்கு
(3o ~ 2g°sör
- 08 -
விக்கிறது. புரட்சிக்குப் பின்னர் கியூபக் காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது. முன்பு மொத்தப் பரப்பில் 14% இருந்த காடுகள் இன்று 21%. அவர்களது இலக்கு 27%. அவர்கள் பூச்சிக்கொல்லி களுக்கு மாற்றாக இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துகிறார் கள். வளர்ச்சி என்பது வளங் குன்றா வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்து கிறார்கள்.
ஏகாதிபுத்தியங்கள் சூழலர சியலை மரம் நாட்டுதல், வீதிகளை சுத்தப்படுத்தல் , ஆறுகளைத் துப்பரவாக்குதல், கிராமங்களை சுத்தமாக்குதல் என்ற அடிப்படை யில் அதனி உணி மையான நிலையை மறைத்து வருகின்றன. சூழலரசியல் இவை எல்லாவற்றை யும் விட பாரிய விடயப் பரப் புடையது. எமது இயற்கை மீதும் வளங்கள் மீதும் விடுக்கப்படுகின்ற ஒவ வொரு அச் சுறுத்தலுமி சூழலரசியல் தொடர்பானது. அது
உரிமை, நீதி என்பனவற்றையெல்
லாம் உள்ளடக்கியது. இதனால் சூழல் வள உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பயில்நிலம்
 

“மூன்றாம் உலக நாடு களின் சனத்தொகைப் பெருக்கம் காரணமாக மூல வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. இதனால சனத்தொகைப் பெருக்கம் ஒரு பாரிய பிரச்சினை” என மேலைத் தேய நாடுகள் சொல்லி வருகின்றன. உண்மையில் ஒரு அமெரிக்கன் ஒரு பங்களாதேஷ் குடிமகனைப் போல 30 மடங்கு மூலவளங் களைப் பயன்படுத்துகிறான். இதுதான் மேலைத்தேய நாடுகள் சொல லும் சனத் தொகைப் பெருக்கம்.
இன்று நாம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சூழலரசியல் அம்சம் தண்ணிர் தொடர்பானது. ஏனெனில் 20ம் நூற்றாண்டில் எண்ணெயப் பெற்றிருந்த முக்கிய இடத்தை 21ம் நூற்றாண்டில் தண்ணிர் கைப்பற்றிக் கொள்ளும். தண்ணிர் மிக முக்கிய நிலையைப் பெறுவதற்கு அடிப்படையான, சில தரவுகளை கீழே பாக்கலாம். 0 பயன்படுத்தக்கூடிய தண்ணிர் உலகத் தண்ணிர் இருப்பின் 1% விட குறைவானது. 9 ஒவ்வொரு வருடமும் 85 மில்லி யன் பேர் சனத்தொகையில் சேருகிறார்கள். 0 20 வருடத்துக்கு ஒருமுறை தண்ணிர்ப் பாவனை இருமடங் காகிறது. 0 துப்பரவில்லாத நீரைக் பருகுவ தால் 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை மரணமடைகின்றது. இது இப் படி இருக்க உலகில் என்னவெல் லாமோ நடக்கிறது.
றே - ஜூன் - 09 -
1. 1990 முதல் 2002 வரை குடி நீருக்காக உலக வங்கி கொடுத்த 276 கடன்களில் 84 குடிநீர் விநியோக தி தை தனியார்மயமாக்கும் நிபந் தனையோடு கூடியவை. 1996 முதல் 1999 வரை கொடுக்கப் பட்ட மற்றக் கடன்கள் 193ல் 112க்கு தண்ணிர் தனியார்மய மாக்கம் ஒரு நிபந்தனை.
2. உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் சபையும் தண்ணிர் அடிப்படை உரிமை அல்ல, அடிப்படைத் தேவை என்று சொல் லி வருகின்றன. உரிமைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம் முக்கிய மானது. தேவை என்பது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுவது. ஆதலால் விற்பனைக்கானது.
3. 2004ல் உலகம் முழுவதும் 90 பில்லியன் லீட்டர் தண்ணிர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடைந்த லாபம் 22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் . இதனால் மிகப் பாரிய அளவில் பிளாஸ்டிக் கழிவு உருவாகி உள்ளது.
எனவே தொடர்ச்சியாக எங்கள் நாட்டிலும் என்ன நடை பெறும் என்பதை சூழலரசியலை புரிந்து கொள் பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். இந்த இடத்தில் பொலிவியாவில் நடந்த ஒரு நிகழ்வை கட்டாயம் நினைவு படுத்த வேண்டும். 1998ல் உலக வங்கி பொலிவிய அரசிடம்
பயில்நிலம்

Page 7
கொச்சகம்பா நகரின் தண்ணீர் விநியோகம் தனியாரிடம் சென்றால் தான் 25 மில்லியன் டொலர் கடன் கிடைக் கும் எனிறது, அரசு பெக்டெல் என்ற அமெரிக்கக் கம்பனிக்கு 40 ஆண்டுகளுக்கு தண்ணீரை குத்தகைக்கு விட்டது. இதனால் அங்கு உணவை விடத் தண்ணிரின் விலை அதிகமானது.
"ஆஸ் கார் ஒலிவேரா" என்ற தொழிலாளியின் தலைமை யில் தனியார் மயமாக்கலை எதிர்த்து மக்கள் திரண்டனர். நான்கு இலட்சம் மக்கள் போராட் டத்தில் இறங்கினர். இறுதியில் போராட்டம் வெற்றி பெற்றது.
பெக்டெல் பொலிவியாவை விட்டே வெளியேறியது.
எமது உரிமைகளுக் காகவும் எமது இயற்கை வளங் களுக்காகவும் நாம்தான் போராட வேண்டும். நாம் அறிவுபூட்டப்படு வதும் தெளிவாய் இருப்பதுமே அவசியத் தேவை. சூழலரசியல் பற்றிய தெளிவான பார்வையும் நோக்கும் இவை சாத்தியமாக உதவும் என்பதில் சிக்கல் எதுவும் இருக்காது.
-அஸ்வத்தாமா
.. så இ?
\ ೨1ಠರೆrರDu න තස්ත-ශ්‍රජාවේ Qার্চ ○「○○T
“, indisabi ULL 8DUIn -
\, ෂිබඳථිඥා(DL] න_තොප්ලර්-6UGCC ආණ්l Inෆ්භීඝLLIGG|න
Oறய உலகில் நீ வடிநதாப் @ඥiෙතIDu+ ආepදාITLජ්ජාත බී. சுகநதிரமாப் பறக்கும் LDපොල් போன்று இருககிறாய் உணமையி3ல் நீ
ප්{Tෂ්ටීඝ|Gilt__L_ITU l!"
/**
சமூதாய்ததை நீ"உருவாககிலிட்டாய
UGOO 860Orl B O OU86IT alsTaboo. 6 LTD
குஸ்ணா மொகிதீன், தரம் 9, முஸ்லிம் மகளிர் கல்லூாரிமல்வானை.
மே - ஜூன்
- 10 س
மயில்நிலம்
 
 
 
 
 
 

இங்கால வாங் கோ ! அந்த பல கனி கூடா, இங்காலிப் பக்கம் பல கனி தான் அச்சா! இங்கால நிண்டா ரோட்டில போற காரெல் லாம் பார்த் து எ ண ன ல |ா ம எல்லா? மழலைக் குரலோடு 7 வயது பிரணேஷ் கூப்பிடு
கின்றான். %,? * 2%
வேலைத்தள அழுத்தங்களிற்குக் கொஞ்சம், கொஞ்சமாக மனதி லிருந்து விடை கொடுத்தபடி விசாகன், தர்ஷனியுடன் பல்கனியிலிருந்து பேசிக்கொண்டிருக்கின்றான்.
“வெள்ளவத்தையேதான் எண்டாலும், எங்கட அபார்ட்மன்ட் அமைதியான இடம். பக்கத்தில் இருக்கிறவயும் தாங்களும், தங்கட பாடும்.”
“ஓமப்பா அது சரிதான்! ஆனா இப்ப தானே மொத்தமா 4 குடும்பம் வந்திருக்கு. இனி மிச்ச வீடுகளுக்கும் ஆட்கள் வரத்தான் எல்லாம் தெரிய வரும்.”
“இதென்ன கையில . அ.? காயம்?”
விசாகனின் குரலில் பதற்றம். “உருளைக்கிழங்கு பொரிக்கேக்க, எண்ணெய் தெறிச்சிட்டுது! சின்னனா ஒரு புள்ளிதானே? அது டக்கெண்டு மாறிடும். உங்களுக்கு மைக்ரோ ஸ்கோப் கண்.”
“என்னம்மா, பொரிக்கேக்க பார்த்து செய்யிறதில்லையா? உப்புத்தண்ணி ஏதாவது போட்டீங்களா?” (to ~ - 11 - பயில்நிலம்

Page 8
இந்த வார்த்தைகள் வழமை போல் தர்ஷ்னியை கட்டி அரவணைத்து சிறைப்பிடித்து விடும். திருமணமாகி இப்போது ஒன்பது ஆண்டுகள். 95ம் ஆண்டு ஜீலை 21ம் திகதி அதுதான் திருமணமாகி அடுத்த நாள் எப்படி இருந்தானோ அதே அன்பு மாறாத கணவன். காதலிக்கும் போது இருந்த துடிதுடிப்ான, கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமான விசாகன் திருமணமான பின்பு ஆறு மணிக்கு வேலை முடிந்தால் ஆறு முப்பதிற்கு வந்து நிற்பான் என்று யாராவது அந்தக் காலத்தில் தர்ஷினிக்கு சொல்லியிருந்தால் அவள் நம்பியிருக்க மாட்டாள்.
“அப்பா இந்த பல்கனி வேண்டாம்.” பொறுமையிழந்த பிரணேஷ் கையைப் பிடித்து இழுத்தான். “ஏன் பிள்ளைக்கு ஏன் வேண்டாம்?”
22
“அந்த மரம் . குட்டி பிரணேஷ் பக்கத்துக் காணியில் பத்தைகள், புதர்களுக்கு மத்தியில் தனியனாய் இருந்த மரத்தைக் காட்டினான்.
GG
ஒ . அந்த மரம். அது கூடாதா?” “இல்லையப்பா அந்த மரத்தில வெளவால் இருக்குதாம்
“வெளவால்! வாவ் குட்! சா. பிள்ளைக்கு; இப்ப வெளவாலும் தெரியும் என்ன? அம்மாவா சொல்லித்தந்தவா?”
“ஓம். அண்டைக்கு நான் 15 ரன் அடிச்சனான் எல்லா?” '6'U'
“என்னப்பா! நான் சொன்னன் கிரி போல் போட நான் ஓங்கி அடிச்சதெண்டு எல்லாம் சொன்னன்.”
“ஒமோம்! ஒமோம்! சுரேஷ் அண்ணான்ர போலுக்கும் அடிச்சு!!”
“அ. அண்டைக்குத் தானப்பா! அப்ப சுரேஷ் அண்ணா சரியான Fast ஆ ஒரு போல் போட நான் அதை இறுக்கி Six அடிக்க அது போய் இந்த மரத்துக்குப் பக்கத்தில விழுந்திட்டுது.”
தாராளமாகப் பொய்கள் கலக்கப்பட்ட கற்பனைக் கதை ஒன்றைத் தான் கேட்பது புரிந்தும் விசாகன் தலையாட்டியபடி இருந்தான். கற்பனைத்திறன் வளரட்டுமே.
“ஒருத்தரும் வரல்லயப்பா! எல்லாருக்கும் பயம். நான் தான் பத்தைக்குள்ளால எல்லாம் பாய்ந்து போய், போல் எடுத்தனான். அப்ப நான் நினைச்சன் இந்த மரத்தில ஏதோ பழம் காய்ச்சு இருக்கெண்டு. பிறகு அம்மாதான் சொன்னவ அது வெளவாலாம். பகல்ல தலைகீழா நித்திர கொள்கிறது எண்டு. எனக்கு வெளவாலே பிடிக்கேல்லயப்பா! அதைப் பார்க்கப் பயமா இருக்கு!”
மே - ஜூன் - 12 - பயில்நிலம்

“இதில என்ன பயம்? மற்ற விலங்குகள் மாதிரி வெளவாலும் ஒரு விலங்கு. அவ்வளவுதான்! அ. Hand Work ஐப் பார்த்திட்டு teacher என்ன சொன்னவ?”
“அம்மாவும், அப்பாவும் help பண்ணினவையா எண்டு கேட்டா! Very good எண்டு 2 தரம் சொன்னா அப்பா!. எனக்கு எல்லாரையும் clap பண்ண சொன்னா”
“பார்த்தீங்களா என்ர பிள்ளை அச்சாப்பிள்ளை” தர்ஷினி சொல்லியபடியே பல்கனியை விட்டு அகல, விசாகனும், பிரணேஷம் தொடர்ந்தனர்.
“இண்டைக்கு ஒரு Home Work உம் இல்லையா?” “இல்லையப்பா! அப்பா ஏனப்பா வெளவால் பகல்ல நித்திரை கொள்றது?”
மீண்டும் வெளவால்!!! “பிரணேஷ் காலம School க்குப் போறிங்கள், பின்னேரம் Cricket Prictise, அம்மா, அப்பா பகல்ல வேலை செய்யிறம், நாங்க எல்லாரும் பகல்ல இப்பிடி எல்லாம் செய்யிறதால இரவில நித்திரை கொள்கிறம். அதப்போல வெளவால் இரவில பறந்து திரிஞ்சு சாப்பாடெல்லாம் தேடுறதால பகல்ல நித்திர கொள்ளுது.”
பிரணேஷ் ஆழமாகத் தலையாட்டினான். பதில் திருப்தியளித்திருக்க வேண்டும். . M
வானத்தில் பொம்மர் வட்டமிடுகிறது! நிலத்தை நோக்கிக் குனிந்து பறக்கிறது.
“குண்டு போடப் போறான். போடப் போறான்” அம்மா கத்துகிறாள்! “ஐயோ நீங்கள் கத்தாம பங்கருக்குள்ள வாங்களன்’ விசாகன் அடித்தொண்டையில் அலறுகின்றான். “பொம்” நிலம் எல்லாம் அதிரும்படி இடியெனக் குண்டுச் சத்தம்!
திடுக்கிட்டு விழித்தால், சுற்றிலும் இருட்டு யுத்தம் நின்று 3 வருடங்கள் இப்போது. இப்படியொரு கனவு ஆச்சரியமாக இருந்தது. கட்டிலை விட்டு எழுந்தான்.
"அப்பா நித்திர வரேல்லயா?” கனவை விட ஆச்சர்யம் தந்த பிரணேஷின் குரல், திடுக்கிட்டு நேரத்தைப் பார்த்தால் இரண்டு பத்து.
“என்ன செல்லம்? பிள்ளை நித்திர கொள்ளேல்லயா? “அப்பா இல்லையப்பா.” Gro - gostir - 13 - பயில்நிலம்

Page 9
“என்ன யோசினை?”
“வெளவால் ஏனப்பா தலைகீழா நித்திரை கொள்ளுறது?”
விசாகன் ஜன்னல் வழியே பார்த்தான். பல்கனி தாண்டி அந்த மரம் தெரிந்தது. ஆங்காங்கே வெளவால்கள் பறந்து கொண்டிருந்தன.
“வெளவாலின்ர உடலமைப்புக்கு அதால நிற்கிறது கஷ்டம், மரத்தின்ர கிளையில இருக்கிறது கூட கஷ்ரம். அது தான் அப்பிடித் தொங்குகிறது.”
முன்பு புத்தகங்களில் வாசித்தது, பிள்ளைக்கு பதில் சொல்ல உபயோகமானது. வெளவாலைப் பற்றி அடுக்கடுக்காய்ப் பல கேள்விகள். எல்லாவற்றுக்கும் பதில்கள். சளைக்காத இந்த வினா, விடை விளையாட்டில் அம்மாவும் தூக்கம் கலைந்து இணைய, பின் மூவரும் நித்திரையாக அதிகாலை நான்கு மணியாகிவிட்டது.
அடுத்தடுத்த வாரங்களில் பிரணேஷிற்குப் பிடித்த விலங்குகளில் வெளவாலும் ஒன்றாகிவிட்டது. மாலையில் கிரிக்கட் முடிந்தால் அந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு நன்கு பிடித்த காரியமாகிவிட்டது.!
“அம்மா ஒரு வெளவால் பறக்குது.” “எல்லா வெளவாலும் நல்லாக் கத்துது அம்மா.” பல்கனியிலிருந்து நேரடி வர்ணனை நடக்கும். கார்ட்டுன் என்றால் Bat-man கார்ட்டுன் பிடிக்கும் அளவிற்கு வெளவால் விருப்பம் கூடியது.
இதையெல்லாம் அவதானித்த விசாகன் ஒரு சனிக்கிழமை பிரணேஷை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்கும் அழைத்துச் சென்றான்.
இப்படி இருந்த காலத்தில்தான் அந்த வியாழக்கிழமை வந்தது. பாடசாலை விட்டு வந்த பிரணேஷிற்குப் பெரிய ஏமாற்றம். அவனது வாழ்க்கையில் அவன் அடைந்த முதலாவது பெரிய தாக்கம்.
வெளவால்கள் வசித்த அந்த மரத்தைக் காணவில்லை. வெட்டப்பட்ட மரத்தின் அடிக்குற்றி மட்டும் இருந்தது.
“அம்மா. வெளவால் . மரம்.
அப்போது ஆரம்பித்த பிரணேஷின் அழுகை மாலையில் விசாகன் வந்த பினபும் அடங்கவில்லை.
“சரி நாங்கள் விக்டோரியா பார்க் போவம்! அங்க நிறைய வெளவால் இருக்கு”
மே - ஜூன் - 14- பயில்நிலம்

“இல்லை எனக்கு என்ர வெளவால் தான் வேனும் கூடாத ஆட்கள். ஏன் இப்பிடி அந்த மரத்தை வெட்டினவ? பாவம் தானே வெளவால்? அது இருக்க இடம் இல்லாம இனி எங்க போகும்? அப்பா பாவம் எல்லா soùUn ?” Ay
ம். பாவம் தான்! அந்த வெளவால் எல்லாம் எப்பிடியும் நல்லா இருக்கும். சரியா?”
விசாகன் எவ்வளவோ ஆறுதல் கூறினான். வெளவால் தொடர்பான பேச்சுக்களை மாற்றினான். நாய்க்குட்டி, பூனைக்குட்டி பற்றியெல்லாம் கதை சொன்னான். ம்ஹீம் தாக்கம் வடிய நிறைய நாள் எடுத்தது.
அதீத ஆசை வைத்திருந்தததை அடித்தல்லவா பறித்து விட்டார்கள்? என்ன செய்வது? கொழும்பில் தமிழர் வாழம் பகுதிகளில் அப்பார்ட்மன்ட் இருந்தேயாகவேண்டும் என்பது விதியாகிப் போய்விட்டது.
முன்பெல்லாம் பறக்கின்ற காகத்தைப் பார்த்தாலும் “வெளவால் மரத்தை வெட்டிட்டாங்க” என்று புலம்பிய பிரணேஷ் கொஞ்சம் மாறி அவ்வப்போது மறுபுறத்தில் கட்டும் அப்பார்ட்மன்டைப் பார்த்து பெருமூச்சு விடுவதோடு சரி என்ற அளவிற்கு முன்னேறினான்.
அன்றிரவு மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க பிரணேஷ் கத்தினான். "அப்பா வெளவால்.”
ஆம். உண்மையாகவே வெளவால் தான்! கீச், கீச் என்று கத்தியபடி வீட்டிற்குள் பறந்தது. தர்ஷினி நன்கு பயந்து விட்டாள். விசாகனுக்கோ குழப்பம். பிரணேஷ் மட்டும் நீண்ட காலம் பிரிந்த நண்பனைக் கண்ட சந்தோஷத்தில் குதிப்பவன் போல துள்ளிக் கொண்டிருந்தான்.
வெளவால் ஒரு வட்டம் அடித்துவிட்டு மறுபுற பல்கனியால் வெளியேறி விட்டது.
“ஐயோ. பொயிற்றுது, பொயிற்றுது, பார்த்தீங்களா அப்பா! அது பாவம் தன்ர மரத்தைத் தேடுது. அந்த ஞாபகத்திலதான் இவ்வளவு நாளாகியும் சுத்தி சுத்தி வருகுது.”
உண்மைதான்! பிள்ளையின் கூற்று நூற்றுக்கு நூறு சரி! ஆனால் அவனது ஏக்கத்தைத் தனிக்க விரும்பிப் பொய் கூறினான் விசாகன்.
“இல்லை பிரணேஷ். அது தன்ர Friend பிரணேஷைப் பார்க்க வந்தது. அவ்வளவும்தான்.”
பாவம் பிள்ளை நம்பி விட்டது! அந்த சம்பவத்தின் பின்பு வெளவால் நினைவுகள் கொஞ்சம், கொஞ்சமாக பிரணேஷிடமிருந்து மறைய ஆரம்பித்தன. விசாகனும், தர்ஷினியும் மனதிற்குள் மகிழ்ந்தனர். மே ~ ஜூன் - 15 -س மயில்நிலம்

Page 10
“வெளவாலைப் பற்றி அவன் FFA கதைச்சு எட்டு நாளாகப் போகுது. இனி மறந்திடுவானப்பா.” ۔۔۔۔۔ “உஷ். கேட்டிடப் போகுது!” டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறை, விசாகன் , தர்ஷிணி விடுமுறைகளை பயன்படுத்திக் கொண்டு ' யாழ்ப்பாணம் பயணித்தனர்.
“அப்பா டிவியில பார்க்கிற மாதிரி துவக்துெலாம் ধ্ৰুংuঙ্গঙ্গ
கள்.”
இங்கயெல்லாம் சண்டை நடந்ததா.? பொய் சொல்
“உண்மை தான் மகன்! அப்ப உங்களுக்கு 3 வயசு!சின்னூப்பிள்ளை ஒண்டும் தெரியாது”.
விசாகன் 7 வயதுச் சிறுவனுக்கு ஏற்ற விதத்தில் நாட்டின் யுத்த வரலாற்றை தெரிய வைத்தான். யாழ்ப்பாணம் வரும் மட்டும் சண்டை பற்றி எத்தனையோ கேள்விகள். ஆனால் எல்லாவற்றுக்கும் விசாகனின் பதில்கள்.சவாகச்சேரியில் பஸ் சென்று கொண்டிருந்தது.
“அப்ப ஏனப்பா அவை எங்கட இடத்துக்கு வந்தவ?”
பிரணேஷ் ஆதங்கத்தோடு சத்தமாகக் கேட்டதால் பஸ்ஸிலிருந்த பலர் திரும்பிப் பார்த்தனர்.
“அதுதானப்பன் எங்கள் ஒருத்தருக்கும் இத்தின வருஷமாகியும் தெரியுதில்ல. எங்கட எங்கட பாட்டில விட்டிருக்கலாம்தானே?”
விசாகன் அமைதியாகப் பதிலளித்தான். திரும்பிப் பார்த்தோர் முகத்தில் மெல்லிய புன்னகை.
ஒன்றரை வாரம் யாழ்ப்பாணத்தில் எல்லா இடமும் பார்த்தாயிற்று.
“அப்பா யாழ்ப்பாணம் சுப்பர் அப்பா! இந்த இடத்தை விட்டுட்டு ஏனப்பா கொழும்புக்குப் போனீங்கள். சீ! எனக்குப் பிடிக்கவேயில்ல. நீங்கள் செய்தது!”
“நாங்கள் என்ன பிரணேஷ் செய்யிறது? நாங்கள் பேசாம இருக்க எங்கட வீட்டையெல்லாம் பொம்பர் குண்டு போட்டு உடைச்சிட்டுது. அப்ப வீடில்லாததால யாழ்ப்பாணத்தை விட்டுப் போனம்.”
“அந்த மரத்தை வெட்டின உடன வெளவால் எல்லாம் போச்சுது அதப்போல என்னப்பா? சட்டென்று வந்த பிரணேஷின் கேள்வியில் விசாகனும் தர்வினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
-ஏ.ஆர்.திருச்செந்தூரன
Grp ~ 9* - 16- மயில்நிலம்
 

மொழிபெயர்ப்புக் கவிதை அது அப்படித்தானா
அது பைத்தியக்காரத்தனம் என்கிறது காரணம்
அதுவேதான் அது என்கிறது அன்பு
அது மகிழ்வளிக்காது என்கிறது கவனம்
அது ஒன்றுமில்லை வலியே என்கிறது பயம் அதற்கு எதிர்காலம் இல்லையென்கிறது உள்ளுணர்வு
அதுவேதான் அது என்கிறது அன்பு.
அது கேலியானது என்கிறது பெருமை அது மடத்தனமானது என்கிறது கவனம் அது முடியாதவிடயம் என்கிறது அனுபவம் அதுவேதான் அது என்கிறது அன்பு.
தமிழில் : சீராளன் pGOid : 6rfå iIGOorb (Erich Fried) - 1921 - 1988
N யாழ்ப்பாண அகராதி ஆசிரியர்கள் : சந்திரசேகரப் பண்டிதர்
சரவணமுத்துய்பிள்ளை இலங்கை விலை : ரூபா 3900/= கிடைக்கும் இடம் : சேமமடு புத்தகசாலை
யு.ஜி49, 50, 52, பீய்பிள்ஸ் பார்க் கொழும்பு 11.
தொ.பேசி: 2331475
1842 ல் யாழப்பாணத்தில் வெளியிடப்பட்ட “யாழ்ப்பாண அகராதி” எனும் நூல் 163 வருடங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த தமிழ்மண் பதிப்பகத்தினரால் மீள் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்நூலை விற்பனை செய்ய சேமமடு பொத்தகசாலை முன்வந்துள்ளது. 1842 ல் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிமார் களால் தொகுத்து வெளியிடப்பட்ட இதுவே தமிழில் வந்த முதலாவது அகராதி என்று சொல்லப்படுகிறது. இந்நூலில் 58500 சொற்கள் உள்ளன. ஈழத்து தமிழில் உள்ள பல சொற்கள் பிற தேசத்து தமிழர்களுக்கு ).புதியவை. அவ்வகையான பெருந்தொகை சொற்கள் இடம் பெற்றுள்ளன ܢܠ
Go - g’sor - 17- பயில்நிலம்

Page 11
மழை நாள்
இராமன் மீண்டும் படையெடுத்துவிட்டானா எனத்தோன்றியது கரியவானம்! அசோக மன்னனின் அமைதியை குலைத்து மீண்டும் படையெடுக்க வைத்தது போல் பேரிரைச்சலுடன் மழை!
கும்பகர்ணன் மது அருந்தியது போல் நின்றன மரங்கள்! பீரங்கிகளில் புறப்படும் குண்டுகளைப் போல் இருந்தன இடியும் மின்னலும்!
செம்புடையன் பாம்புகள் புற்றை நோக்கிச் செல்வது போல் ஆற்றை நோக்கிச் சென்றது நீர்! இந்து சமுத்திரக்கடல் போல் காட்சியளித்தது வயல்வெளி!
அந்நாள் மீண்டும் வந்திடுமோ எனத்தோன்றியது எனக்கு
-ஊடுருவி
rー
ܢ
உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான்.மாறாக கடமையிருக்கும் பாதையைத் தான் தேடுவான். அவன்தான் செயல் திறனுள்ள மனிதன். அவன் வரலாற்றின் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பார்க்கிறான். காலத்தின் கொப்பரையில் எரிந்து வரும் மக்கள், இரத்தம் தோய்ந்தபடி பொங்கி வருவதை அவன் காண்கின்றான். எனவே சிறிது கூடத்தயக்கமின்றி எதிர்காலம் கடமையின் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதை அறிகிறான்.
-ஜோசே மாட்டி
مصر
மே - ஜூன் - 18 - மயில்நிலம்
 

சமுத்திரம் கண்டு வணங்கும் ஆறுகள் ஓடைகள் எனக்குள் சல சலத்தபடி சங்கமிக்கும்
நின்று பறக்கும் நினைவுகளுக்கு நடுவே உன் மின்சார சங்கீதம் ரீங்காரமாய்ப் பிறக்கும் வாழ்ந்து களித்தவை யெல்லாம் வாழத் தெரியவில்லையென ரத்தம் சிந்தி மாய்கையில் உனக்கும் எனக்குமான உடன் படிக்கை உறுதி பூக்கும் உன் மூக்கின் வழியே வழிந்த சீழை
உன் வாலிபம்
வழித்து விட என்னை மோகினி பிடித்து ஆட்டும் மரணத்தை வால்பக்கம் வைத்துக் கொண்டு
மே - ஜூன்
முரணறிக்கை
ペ?ーム
- 19 -
கவிதை
தீண்டித் தீர்த்துவிடுகிற அரவத்தின் அகங்காரத்தை என் பாடல்களில் கண்டு உன் வறுமை கதறும் பிரபஞ்சத்தை விழிகளுக்குள் அடக்கிச் சிரிக்கின்ற கலையின் மேகதாகம் சுருண்டு விழுந்து சாம்பராகிப் போகும் இத்தனைக்குள்ளும் முச்சந்தி மண்ணெடுத்து மிளகாய் உப்புச் சேர்த்து தீயிலிட்டுக் கொழுத்தி நெடியேற தலைசுற்றி சுவாசித்த பின் மீண்டும் எழும் சொப்பன வாழ்வுக்காய்
GOE) நிசப்தமான கதறலுடன்.
- வெதமுல்லையூர்
கந்தையா கணேஷமூர்த்திபயில்நிலம்

Page 12
வரலாறுச் சொல்லி தந்தவை
இரு கோட்பாடுகள் - எதிரும் புதிரும்
அது 2ம் உலகப் போருக் கான ஆயத்தங்கள் மிகவும் மும் முரமாக நடந்து கொண்டிருந்த காலம. ஹிட்லர் தன் சகாக்களுடன் உலகைக் கைப்பற்றி ஆள்வது பற்றிய கலந்துரையாடலிலும் கனவிலும் இருந்தார்.
இக்காலப் பரப்பில் ஸ்பானி யாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொணி டிருந்தது. ஸ் பானிய ஜெனரல் ..பிராணி சிஸ் கோ ..îJT6ð G8a5T (Francisco Franco) தனது பாசிச அரசு நண்பர்களின் உதவியுடன் அரசுக்கெதிரான கிளர்ச்சியை தொடங்கினார். இவரது கிளர்ச்சிக்கு எதிர்ப்பு பாஸ்க் (Basque) | g (35 g LD& E6fluf இருந்து கடுமையான தாக இருந்தது. பாஸ்க் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் பிரான் கோவுக்கு பாரிய பின்னடைவைக் கொடுத்தது. பிரான்கோ தனது நண்பர்களிடம் இப்பிரச்சனையை
தீர்த்துத் தருமாறு வேண்டினார்.
உலகை ஆள்வதையே இலட்சிய மாகக் கொண்ட கிட்லர் பிரான் கோவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
1937 - ஏப்பிரல் 26 மாலை 4.30 மணி இருக்கும். பாஸ்கின் தலைநகரான குவேனிக்காவின் சந்தை களை கட்டியிருந்தது. திடீரென அவர்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க கசா டி யுன்டாஸ் (Case de Juntas) (856m6uuujiggi மே ~ ஜூன்
மணி ஒலித்தது. மக்கள் அல்லோல கல்லப்பட்டு பாதுகாப்பான இடங் களை தேடி ஓடிக் கொண்டிருந் தனர். ஜேர்மனிய குண்டு வீச்சு விமானம் வானில் தாழ்வாகப் பறந்தது. வாழ்விடங்கள் மீது 6 குணி டுகளை வீசியது. சில நிமிடங்களில் 2 வது விமானமும் அதேயளவு குண்டுகளை வீசிச் சென்றது. இரண்டு விமானங்களும் சென்ற பிறகு மக்கள் காயப் பட்டவர்களையும் இறந்தவர் களையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்து 3 விமானங்கள் வந்து மீதமிருந்தவற் றையும் அழித்து அந் நகரை முற்றாக நாசம் செய்தன. இறுதி வரை உண்மையாக உயிரிழந்த மக்கள் தொகை தெரியவில்லை. அண்ணளவான கணிப்பின்படி 1700 க்கு அதிகமானோர் உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் மரண மடைந்தனர். இதைவிட அந்நகர மக்கள் யாவரும் அகதிகளாயினர்.
உலக வரலாற்றில் இந்தத் தாக்குதல்தான் போராளிகள் பொது மக்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் மரணம் (DEATH FOR ALL) 616örp (385T UIT'60)L உருவாக்கியது. இதன் பின்னர் உலக அரங்கில் போரியல் முறைமைக் கோட்பாடுகளில் பாரியளவு மாற்றம் ஏற்படத் தொடங் கியது. அதுவரை போரின் போது
- 20 - பயில்நிலம்

மக்கள் தாக்கக்படக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால் குவேனிக்கா சம்பவத்திலும் அதன் பின்னரான 2ம் உலகப் போரின் போதும் எல்லோருக்கும் மரணம் என்ற கோட்பாடு தொடர்ச்சியாக பயன் படுத்தப்பட்டது. அது இன்றுவரை யும் மக்களை அடிபணிய வைக்க அச்சுறுத்த என பல தேவைகளுக் காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குவேனிக்கா சம்பவமே இதை தொடக்கி வைத்தது என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
இந்த சம்பவத்தால் பாதிக் கப்பட்ட பிக்காசோ ஒரு ஓவியத்தை வரைந்தார். அதுதான் பிக்காசோ வின் தலைசிறந்த ஓவியமாகக் கருதப்படும் குவேனிக்கா ஒவியம். இது வெறுமனே ஒவியமாக மட்டு LD6ôgû célu4îls-Lb (CUBISM) 616ôp ஒரு புதிய ஓவியக் கோட்பாட்டையே உருவாக்கியது.
கியூபிசம் ஒரு விடயத்தை கேத்திரகணித உருவங்களின் அமைப்பாக அவற்றின் தொகுப்பாக ஓவியங்களை வரைவதைக் குறிக்கும். இவ்வாறு வரையப்பட்ட ஒவியங்கள் சதுரங்கள், முக் கோணங்கள், கூம்புகள் என்பவற் றைக் கொண்டே பொருளை விளக் குவனவாக அமையும். உருவச் சிதைப்பு மூலம் ஓவியத்தின் பரிமாணத்தை மாற்றியவர்கள் இந்த கியூபிஸ்டுகள் எனலாம். இவை இருதளப் பரிமாணம், முப் பரிமாணம் என்பவற்றின் முந்திய அமைப்புக்களாகக் கொண்டு விளங்கின. கியூபிசத்தின் வளர்ச்சி யில் உருவான பகுப்பாய்வுக் கியூபிசம் பொருள் முக்கியத்துவத் தைக் குறைத்தது. நிறம் கூட அவசியமில்லாதாகி விட்டது. இத்தனை அம்சங்களையும் குவேனிக்கா ஒவியத்தில் நாம் காணலாம். இந்தக் கியூபிசத்தின் பாதிப்பு

Page 13
சிற்பக்கலை, கட்டிடக் கலைக்கும் பலமுறை கேட்டபோதும் பரவத் தொடங்கியது. இதற்கு பல கேத்திரகணித உருவ சிற்பங் களையம் கட்டிடங்களையும் காண
குவேனிக்கா ஒவியத்துக்கான விளக்கத்தை கடைசி வரையில்
லாம். இதைப் பயன்டுத்தி இசைக் பிக்காசோ சொல்லவில்லை. இதனால் கருவிகள் உருவாக்கப்படல் இலக் வேறுபல கியூபிச ஓவியங்கள் போல் கியம் படைத்தல் என எல்லாத் குவேனிக்கா ஒவியமும் பலகதை
திசைகளிலும் பாதிப்பை ஏற்படுத் தியது கியூபிசம். இதற்கு காரண மாக மூலமாக இருந்தது குவேனிக்கா நிகழ்வே. கள் உருவாகவும் வழிவகுத்தது.
களை பொருட்களை எடுத்துக் கொள்ளவும் வேறுவேறு விளக்கங்
குவேனிக்கா நிகழ்வை தெரிந்து கொண்ட பின்னரும் புரியாத ஒன்றாகவே குவேனிக்கா ஓவியம் இன்றுவரை இருந்து வருகிறது என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
-அ.செஞ்ஞாயிறு
N மாறிவரும் உலகிலிருந்து
விஞ்ஞானத்தையும் தொழில் இத்தனை சிறப்புக்களை நுட்பத்தையும் விலக்க முடியாது கொண்ட கியூபிசம் சில குறைபாடு என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், களையும் தன்னகத்தே கொண்டி ந்தது. அது சாதாரண மனிதரின் ಅಜ್ಜೈ ஃ : சரியான திசையில் கொண்டு வகையில் ஒவியங்கள் வரையப்படு செல்லப்படுகின்றனவா என்பதி வதை தொடக்கியது. இதனால் 郎 காலப் போக்கில் நவீன ஒவியம் 1°"விதி உறுதியாக இருக்க சாதாரண மக்களால் விளங்கிக் வேண்டும். கொள்ளப்பட முடியாததாக மாறிப் − போனது. மே - ஜூன் - 22 - பயில்நிலம்
ஆகக் குறைந்தது அம்மாறுதல்கள்
-ஸ்ரீபன் ஹோக்கிங்- ܢ
 

இயற்கையோடு சினேகிக்க...!
பூகோளமயமாதலில் காணமல் போவதென்னமோ ஏழைநாடுகளின் இயற்கையும் எழிலுந்தான்
அழியாவரம் பெற்ற பிளாஸ்திக் கழிவுகள்.
ஆலைகளும் சாலைகளும் ஆங்காங்கே சாலைகளும் அலுக்காமல் விடுகின்ற புகைமூட்டம்
நிறைத்திருக்கும் விண்ணுனக்குத் தெரிகிறதா.
சோலைகளும் வனங்களும் சோக்கான காற்றும் சொந்த வளங்களும் போகுமிடம் புரிகிறதா.
விழிகள் விழிக்கட்டும் விரல்களெல்லாம் வெளிக்கிடட்டும் இரைச்சல்களால் மூடிக்கிடக்கும் செவிகளெனித் திறக்கட்டும்
அருவிகளின் குருவிகளின் அசைகின்ற இலைகளின் ஒலிகேட்க ஒன்றிணைவோம்.!
-நிலாமகள்
புரிதல்
நான் நான் நானே
நீ நீயே
என்றேன்
É நீயே நான்
நானே நீ என்றாய்
நான்தான் நீ நீதான் நான் என்றால்?
நான் இனி நீ நீ இனி நான் ஆகவே நாம்.
நாம் என்றால்? நாம் தான் இனி நானுமில்லை நீயுமில்லை.
DIT. BölGaSGOTGör
பேராதனை வளாகம்
ஜூன் 05ம் திகதி - உலக சுற்றாடல் தினத்தையொட்டி
Gro - go soir - 23 -
பயில்நிலம்

Page 14
எங்கள் வாழ்வை எரித்து குளிர்காயும் புருஷர்களே கலவிக்கு மட்டுமான
கருவியல்ல நாங்கள்.
ஓசோன் படலங்களை காபன் வாயுக்கள் ஓட்டையிடுவதாய்
எம்மைத்துளைக்காதீர்.
புறஊதாக் கதிர்கள் எங்களை மட்டுமல்ல உங்களையும் கூட ஊடுருவித் தாக்குமன்றோ
எமக்குள்ளும் ஓர் அழகான இதயமுண்டு அதற்குள்ளும் பல உணர்வுகளுண்டு.
உனக்காகப் பிறந்தவள் நானென்பதெல்லாம் உமது போர்வை போர்த்திய
போலிக் கவி வரிகள்.
வீட்டு வேலை செய்யும்
இயந்திர உபகரணமும்
பிள்ளை பெறுகின்ற
சாதனமுமல்லநாங்கள்.
GBmo - gogor
கவிதை
64zílu ajfizetű
நினைத்தபோதெல்லாம் எம்மை சிதைத்து சத்திர சிகிச்சை செய்ய
மருத்துவரா நீங்கள்?
வெற்றிடத்தில் அடைப்பதாய வீட்டுச் சிறைக்குள்ளிட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதை தடுக்காதே.
எம் சுயங்களை நாம் மேம்படுத்த முடியாது முள்வேலி அமைத்து
எம்மை ஒடுக்காதே!
எம் ஆளுமைகளை கண்டு அஞ்சி நின்று எமை ஏன் அகங்காரி
என்றுரைக்கிறீர்?
எம் ஆற்றல்களை
எம் முன்னேற்றங்களு முட்டுக்கட்டையிடுகிறீ
பூதம் காத்து நிற்கும் புதையலைப் போல எம்மை எந்நேரமும் ஏன் கண்காணிக்கிறீர்?
- 24- பயில்நிலம்
 

இசைத்திட
உமக்கே அனைத்தையும்
தாரை வாககும படி நினைத்த போதெல்லாம் கோரிக்கை விடுப்பதில் ஊதவும் திறக்கவும் எந்த நியாயமுமில்லை. நாங்கள் ஒன்றும்
விளையாட்டுப்பலூன்களல்ல.
‘உதிரமும் தசையும்
உணர்வும் உயிர்ப்பும் உன்னைப் போன்றே எமக்கும் உண்டு.
மீட்சி பெற முடியாத இருண்மைக் குகையில் எம்மைத் தள்ளிவிட்டு இல்லறம் நல்லறமென்கிறீர்.
துளைகள் அடைத்த புல்லாங்குழல்களால் எப்படி இனிய கானம் இசைக்க முடியும்? உள் அடைப்புகளை நீக்கி விட்டால் . அப்போது கேட்கும்
இனிதாய் பல பாடல்
- சந்திரகாந்தா முருகானந்தன் -
மே - ஜூன் - 25 - பயில்நிலம்

Page 15
சிறுகதை
விடை தேடும் வினாக்கள்
வழமை போல அலுவல கத்திற்குள் புன்னகை பூத்த
முகத் துடண் காலடி எடுத் து வைத்து இன்முகம் காட்டி, காலை வாழ்த்துக்களுடன் தனக்கான “வங்கி’ முகாமையாளர் எனும் ஆசனத்தில் வந்து அமர்கிறாள் சிஹாரா.
வழமைபோல வாடிக்கை யாளர்கள், கடன், மேலதிகப்பற்று என வேலை விரிகின்றது. இதற் கிடையில் கையொப்பம் கேட்டு நிற்கும் ஊழியர்கள் வேறு. “மேடம், இன்று ஜனவரி 9, இன்று இந்த ரிப் போட்ஸ் அனுப்ப வேண்டிய கடைசிநாள், அதனால் இதைக் கொஞ்சம் பார்த்து கையொப்பம் இடவேண்டும்” என வேண்டி நின்றான் ஓர் ஊழியன். "ஆமாம்” என்று தலையசைத்த போது அவளது சிந்தனை சிறகுகளை விரித்து எங்கோ பறந்து
மே - ஜூன்
சென்றது. காரணம் அவளது தாயின் பிறந்த தினம். வாழ்த்த லாமா? வேண்டா மா? இப்ப எட்டு வருடங்களாக வாழ்த்தவே இல்ல, வாழ்த்தி ஏதாவது கூறிவிட்டால்..? அவர் களை ஏன் இந்நன்னாளில் சங் கடப் படுத்த வேணடும்? தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.
ஒரு இஸ்லாமியக் குடும் பத்துப் பெண்பிள்ளையை வளர்ப்பது போல சிஹாராவை அவளது பெற்றோர் வளர்க்கவில்லை. அவளும் மிகுந்த கெட்டிக்காரி, தைரியமானவள், எதையும் சாதித் துக் காட்டக் கூடியவள். அவளது பெற்றோரைப் பொறுத்த வரை அவள் செய்த மிகப்பெரிய மன்னிக்க முடியாத தவறு ஆனந் தைக் காதலித்ததுதான் இவர்களது காதலை அறியும் வரை சிஹாரா வின் பெற்றோர் ஆனந்த் மிகக் கெட்டிக்காரன், நல்ல மனிதன் என்பதை அறிந்திருந்தார்கள். அவன
தம்முடைய மதத்தைச் சார்ந்த
வனாக இருந்திருந்தால் அவர்களே இவனை தம்முடைய மருமகனாக் கியிருப்பார்கள். சின்னத்திரையிலும் சினிமாவிலும் காதலை ஆதரிக்கும் மனிதர்கள் நிஜவாழ்க்கையில் ஆதரிக்க மறுக்கின்றார்கள். கலப் புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். மதம் கடந்த மானுடம் வேண்டும் என மேடைகளில் மகள் முழங்கியதைக் கேட்டு கைதட்டிய தகப்பனார் கடைசியில் கைவிரிப்
பார் என சிஹாரா கனவில் கூட
நினைக்கவில்லை.
- 26 - பயில்நிலம்
 

பெற்றோரின் மிரட்டலோ, கண்ணிரோ அவளது காதலை கரைத்துவிடவில்லை. கடைசியில் ஆனந்த்துடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டுவந்து அவர்கள் முனி நின்றபோது கதவுகள் மூடப்பட்டன.
ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள் என்பது இவர் களுக்காகத் தானே எழுதப்பட்டது என்று இவர்களைப் பார்க்கும் அனைவருமே எண்ணும் அளவிற்கு ஆனந்த், சிஹாராவுடைய இல் வாழ்க்கை மிகவும் இன்பமயமாகச் சென்றது. இருவரும் புரிந்துணர் வுடன் தத்தம் மதங்களை கடைப் பிடித்து வாழ்கிறார்கள். இவர்களது உறவிற்கு சாட்சியாய் அழகான மகன் பிறந்தான். அவனை கொண்டு சிஹாரா தன் பெற்றோரிடம் சென்ற போது கூட தாழிடப்பட்ட கதவுகள் திறபடவில்லை.
Q (5 பெருமூச்சுடன் ரிப் போட்ஸை புரட்டிப் பார்த்து கையொப்பமிடும் போது மணி 11 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. கைப்பையை எடுத்துக் கொண்டு உதவி முகாமையாளரிடம் வந்து இன்று மகன் முதன் முதலாக பாடசாலை சென்றிருக்கிறான். அவனை அழைத்துவர வேண்டும். அரைமணி நேரத்துக்குள் வந்து விடுவேன். நாளையிலிருந்து கூட்டிவர ஸ்கூல் வான் சேவையை யும் ஒழுங்கு செய்ய வேண்டும். கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நகர்கிறாள்.
பாடசாலை முன் கார் நிறுத்தப்பட்டது. வெண்புறாக்களைப் போல் காட்சிதரும் சிறுவர்களை
மே ~ ஜூன் - 27 -
பார்க்கையிலே தனக்கும் தன பெற்றோருக்குமிடையில் எப்போது மனப்போராட்டங்கள் நிறைவு பெற்று சமாதானம் வரும் என மனம் ஏங்கியது. வகுப்பறையை அடைய வும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. தாயைக்கண்ட சேய் ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறான்.
அவனை அழைத்துக் கொண்டு ஒரு உணவகத்தில் சில தின்பண்டங்களையும் வாங்கிக் கொடுத்து வீட்டை நோக்கி காரை செலுத்துகையில் , சிஹாரா கேட்கிறாள். “பிள்ளைக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா”,“ம்ம்ம்”, “பிரெண்ட்ஸ் எப்படி?” “மீ ம் ... எனினோ ட எல்லாரும் விளையாடினாங்க” “டீச்சர் என்ன சொன்னாங்க? அவன் மெளனமானானி . எனி னடா செல்லம். டீச்சர் அச்சா இல்லையா?” எனக் அவள் கேட்டாள். “மம்மி என்ட பெயர் என்ன?’, ‘அதுதான் உனக்கே தெரியுமே” “சொல்லுங்க மம் மி என் ன’ ‘முஹமது நாராயணன’.
“டீச்சர் கேட்டாங்க நான் இந்துவா முஸ்லிமா என்று”.
சிஹாரா மெளனமானாள். “சொல்லுங்க மம்மி நான் இந்துவா?முஸ்லிமா?”
சிஹாரா தீர்க்கமாகச் சொன்னாள். “நீ மனிதன்”, “அப்ப மம்மி நான் ஸ்கூல்ல இந்து சமயம் படிக்கிறதா? இல்லாட்டி இஸ்லாம் படிக்கிறதா?’. இதற்கு விடை சொல்லத் தெரியாதவளாய் அவள் திகைத்தாள்.
- திருமதி. வசீ -
பயில்நிலம்

Page 16
கவிதை
மெளனத்தின் அர்த்தம்
பூங்காற்று வீசுகின்ற வேளையிலே என்தேகம் சிலிர்க்கின்றது. கானம் கேட்கும் பொழுது என் காதுகள் வலிக்கின்றன. காரணம் தெரியவில்லை.
கனவுகள் வருகின்றன
கண்கள் இமைக்க மறுக்கின்றன இயற்கையைரசிக்க மனம் தூண்டுகிறது கவிதை எழுத ஆசை வருகின்றது இனம் புரியாத ஏக்கம் என் மனதில் எழுகின்றது. காரணம் புரியவில்லை
வானம் பூமியை காதலிக்கும் போது இடி இடித்து மழை பொழிந்து தன் காதலை கூறுகின்றது. கடல் அலையை காதலிக்கும் போது பாறையில் மோதி தன் காதலை தெரிவிக்கின்றது
ஆனால். பூக்களில் வண்டுகள் உட்கார்ந்து தேன் குடிக்கும் போது வண்டுகள் சந்தமிடுமே தவிர பூக்களின் தாய் மொழி மெளனம் அதுபோல் அல்ல என் மெளனம்
- அ. கார்த்திகா - *
மே - ஜூன் - 28 - பயில்நிலம்
 

நேர்காணல்.
இசையமைப்பாளர் 2-5unogud arissis(8:5mud சந்தித்தவர்கள
35. G3583Ir
ந. பிரசாந்த
இசைத்துறையில் உங்களுடைய ஆர்வமும், ஆரம்பமும் எப்படியிருந்தது?
நான் முதலில் சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியில் இளமாணி பொறியியல் துறை மாணவன். கல்லூரியில் எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் கவிஞர் மு. மேத்தா. அவர் என்னுடைய இசையார்வத்துக்கு நிறைய உற்சாகம் அளித்தார். மேடைக் கச்சேரிகள் ஊடாகத்தான் என்னுடைய இசை வாழ்க்கையை ஆரம்பித்தேன். தொடர்ந்து இந்தியாவின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னர்தான் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். நான் உண்மையில் ஒரு Guitar இசைக்கலைஞன், Guitar இசை கற்று பின்னர் ஆர்மோனியமும் வாய்பாட்டும் படித்துவிட்டு இப்போது மேற்கத்தைய இசை படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தோடு இசை சம்பந்தமான நிறைய ஆராய்ச்சிகளையும் செய்துகொணடிருக்கிறேன்.
இசைத்துறைக்கு உங்களுடைய பங்களிப்புகள்?
1991,எனக்கு (என்னுடைய 25 வயதில்) முதலாவது வாய்ப்பு கிடைத்தது. இலங்கைப் படைப்பாக வெளிவரவிருந்த தேவதாசனின் “மாநகரக் காதல்’ திரைப்படத்துக்குத்தான் முதலில் இசையமைத்தேன். பொருளாதார சிக்கல் காரணமாக அந்தப்படம் வெளிவரவில்லை. ஆனால் என்னுடைய வெற்றிகளின், சிகரங்களின் அனைத்துப் பங்கும் தேவதாசனுக்குத்தான். மாநகரக் காதல் திரைப்படம் வெளிவராத போதும் உலகெங்கும் அந்த திரைப்படப் பாடல்கள் வெளியாகி எனக்கொரு அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.
நான் இதுவரை மூன்று படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். (மாநகரக் காதல் இல்லாமல்) “மாநகரக் காதல்’ க்கு அடுத்ததாக “உறவுக்கு மரியாதை’ எனும் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படமும் வெளிவரவில்லை. அடுத்தாக விக்ரம், செளந்தர்யா நடித்த “கண்டேன் சீதையை’ திரைப்படத்துக்கு இசையமைத் திருந்தேன். அடுத்து நடிகர் ரஞ்சித் தயாரித்து இயக்கி நடித்த “பீஷ்மர்” திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தேன். அதுதவிர இதுவரை 50 3ro - agosó - 29 - பயில்நிலம்

Page 17
இசைத்தொகுப்புகளுக்கு மேலாக இசையமைத்திருக்கிறேன். அத்துடன் கிறிஸ்தவ மதப்பாடல்கள், இந்துமதப் பாடல்கள், வானொலி, தொலைக் காட்சி, விளம்பரங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். சில திரைப்படங் களுக்கு பின்னணி இசையும் செய்திருக்கிறேன்.
நீங்கள் கையாளும் இசைவகை?
என்னுடைய இசைக்கென்று தனியான அடையாளம் கிடையாது. ஆனால் சிலர் என்னுடைய மெட்டு போடும் பாணி இளையராஜாவைப் போன்றதாக இருக்கிறது என்கிறார்கள். இசை ஒழுங்கமைப்பு A. R. ரஹற்மான் போன்றதாக இருக்கிறது என்கிறார்கள். இன்னும் நிறைய இசையமைப்பு களை செய்யும் போதுதான் இசைக்கான என்னுடைய தனிப்பட்ட அடையாளம் வெளிப்படும்.
இசையில் புதிய தொழில்நுட்ப பாவனை?
ஆரம்பத்தில் என்னுடைய பாடல்களுக்கான இசையை Guitar மூலம் தான் உருவாக்கினேன். பின்னர் ஆர்மோனியத்தை பயன்படுத்தினேன். g) (Surig, latest work station keyboard g uuj6 LIG$glas(3D6i. 3gs எப்படியென்றால் 8 மணிநேரத்துக்குள் 60/65 இசைக் கலைஞர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் இசைப் (Notes) பயிற்சி செய்து பாடல் பதிவினை முடித்து விடும் முறை. மாநகரக்காதல் திரைப்படத்துக்கான இசையும் இந்த வகையில் அமைக்கப்பட்டதுதான். இப்போது Orchestra வின் ஆதிக்கம் குறைந்திருக் கிறது. 2/3 பேர் மட்டும் சேர்ந்து கணனி மென்பொருள்களை பயன்படுத்தி இசையமைக்கிறோம். இசைக்கருவிகளின் தேவை ஏற்பட்டால் அந்த இசைக்கருவி கலைஞரை மட்டும் அழைத்து ஒலிப்பதிவு செய்துவிட்டு Lilai Golf (38 figsgl 6 (6a (Sprtib. Music composing, music arrangements என்பவற்றைக் கடந்து இப்போது Music editing என்றொரு முறையும் இசையமைப்பில் முக்கியம் பெற்றுள்ளது. என்னுடைய பாடல்களில் இந்த music editing ற்கு அதிக அக்கறை காட்டுகிறேன். நான் மமதையால் கூறுவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். A.R. ரஹற்மானின் வெற்றி பெற்ற பாடலொன்று வெளிவரும். அந்த பாடல்களுக்கு அஸ்திவாரத்தை நான் ஏற்கனவே போட்டு வைத்திருப்பேன். ஆனால் அவருக்கு நிறைய வாயப்பு கிடைக்கிறது. அதனால் பயன்படுத்திக் கொள்கிறார். எனக்கு வாயப்பு கால தாமதமாகவே கிடைக்கிறது.
இலங்கை இசைத்துறை தொடர்பில் உங்கள் கருத்து?
பிறப்பினால் நான் ஒரு இலங்கையன். கடந்த 25 வருடங்களாக
இந்தியாவில்தான் வசித்து வருகிறேன். இங்கே இலங்கையில் நிறைய
திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் வரை
மே - ஜூன் - 30 - பயில்நிலம்

கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். நான் 19 வயதில் இசைத்துறையில் காலடி வைத்தேன். 41 வது வயதில் தான் உலகுக்கு என்னை அடையாளம் தெரிகிறது. 22 வருடங்களை நான் இதற்காக செலவு செய்திருக்கிறேன். என்னோடு படித்த நிறைய நண்பர்கள் வெவ்வேறு துறையில் சென்று இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அண்மையில் ஒரு நண்பனை சந்தித்த போது நான் அவர்கள் பெறாத ஒரு விடயத்தை சாதித்து விட்டதாக கூறினார்.
இலங்கையில் இசைத்துறை பின்தங்கி இருப்பதற்கு காரணம் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இலங்கையில் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பது குறைவு இந்தியக் கலைஞர்களுக்கு இலங்கையில் உள்ள வரவேற்பு இலங்கை கலைஞர்களுக்கு இலங்கையில் இல்லை. உதாரணமாக இந்திய ஜேசுதாஸ?க்கு ஈடாக ஈழத்து ஜேசுதாஸ் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். எங்களால் தனித்து முடியாது. அவர்களைப் போல் பாடிப் பிரசித்தி பெறலாம் என நினைக்கிறார்கள். இசையைப் பொறுத்தவரை நாங்கள் அமைக்கும் இசையில் ஓர் ஒழுங்கு இருக்கும். இங்கு அந்த ஒழுங்கு குறைவு. அதற்கு வளங்கள் குறைவாக இருக்கின்றமையும் காரணமாகும். நிறைய முதல் போட்டு இசைத் தொகுப்பை வெளியிட்டு லாபம் பெறவும் முடியாது. இவற்றை நிவர்த்தி செய்தால் இலங்கையில் இருந்தும் பல இசைக் கலைஞர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய இசை மக்களுடைய வாழ்வியலையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இசையாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இதற்குரிய காரணம் எதுவாயிருக்கலாம்?
வாழ்க்கை பொருளாதாரத்துடன் இணைந்தது. பொருளாதாரத்தை தங்கித்தான் ஒரு கலைஞன் வாழமுடியும். ஒரு சினிமாப்பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியம் போலவே பாடி ஒரு கலைஞன் பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். புதிதாய் ஒரு பாடலுடன் கிராமம் ஒன்றில் அல்லது நகரத்தில் இருந்து உருவாகும் கலைஞனுக்கு பொருளாதார ரீதியில் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த சமூகம் உத்வேகம் அளிப்பதில்லை. இதனால் சமூகம் அங்கீகாரம் தரக்கூடிய சினிமாக் கூண்டுக்குள் விரும்பியோ விரும்பாமலோ போகவேண்டியதாயிருக்கிறது.
இசைத்துறையில் உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?
காதல் கடிதத்தில் உள்ள யாழ்தேவியில். பாடலில் ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அதுபோல நிறைய பேருடைய வாழ்க்கை புலங்களை பாடலாக கொண்டு வரவேண்டும். காதல் தவிர உலகத்தில் *மே - ஜூன் - 31 - மயில்நிலம்

Page 18
எவ்வளவோ உணர்வுகளும் விடயங்களும் இருக்கின்றன. புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும். நிறையப் பேருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இசையில் புதிய விடயங்களைச் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த அடிப்படையில் 160 வரிகள் கொண்ட கவிதையை பாடலாக்கியிருக்கிறார்கள். மழைத்தேன் எனும் அந்த இசைத்தொகுப்பிற்கு நான் இசையமைத் திருக்கிறேன். இன்னும் சிலநாட்களில் அது வெளியாகும்.
காதல் கடிதம் திரைப்படம் உருவான கதை?.
நானும் வசீகரனும் ஒரு இசைத்தொகுப்பாக மட்டும் தான் இதை அமைத்திருந்தோம். திரைப்படம் எடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் பாடல்கள் எல்லாம் வெற்றிபெற்ற போது அதை ஒளிவடிவிலும் மாற்றும் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நிறைய இடங்களில் முயற்சி செய்து அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வந்தது. என்னுடைய மனைவி ஒரு எழுத்தாளர். அவர் ஒரு அழகிய கதையை எழுதித் தந்தார் அதற்குப் பிறகுதான் இதை திரைப்படமாக எடுக்கும் யோசனை வந்தது. அதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்களை தேர்ந்த பின்பு தயாரிப்பாளரை தேடி ஒரு வருடம் அலைந்தேன். யாரும் கிடைக்கவில்லை. யாரும் நம்பவில்லை சென்னையில் நிறைய தமிழ் படங்களுக்கு நிதியுதவி வழங்கும் இலங்கைத் தமிழர்களே உதவ முன்வரவில்லை. இந்தப்படத்தில் சூர்யா நடிகனா? ஜோதிகா நடிகையா? எப்படி புதியவர்களை நம்பி படமெடுப்பது? என்ற கேள்விகளைத்தான் கேட்டார்கள். இந்தக் கொழும்பு வீதிகளில் அலையோ அலையென்று அலைந்து ஒரு தயாரிப்பாளரை கண்டு பிடித்தேன். 27 வயதான T தில்லைவாணன் water fal movie makerS சார்பில் என்னுடைய ஆர்வத்தையும் கதையில் அவருக்கு ஏற்பட்ட பிடிப்பையும் கொண்டு படமெடுக்க முன் வந்தார். இதற்காக இலங்கைத் தயாரிப்பாளர்களிடம் மட்டும்தான் முயற்சி செய்தேன். காரணம் இது இலங்கை சம்பந்தப்பட்ட கதை. திரைப்படக் கூட்டுத்தாபன உறுப்பினர் தேவதாசன் மூலம்தான் இந்தத்தயாரிப்பாளர் அறிமுகம் கிடைத்தது. என்னை திரைப்பட இசைத்துறைக்கு அறிமுகம் படுத்தியவரும் தேவதாசன்தான், இந்த திரைப்படம் ஊடாக ஒரு மாறுபட்ட அடையாளத்தை பெற்றுத்தந்த வரும் தேவதாசன் தான்.
இந்த திரைப்படத்தின் முலம் சொல்ல வருகின்ற செய்தி என்ன?
இலங்கைத் தமிழ்ர்களை மையப்படுத்தி தமிழ்நாட்டில் இருந்து
நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவையெல்லாம் குறிப்பிட்டு
பேசிய விடயம் இலங்கையின் அகதிப்பிரச்சனை. ஆரம்பத்திலேயே கதையில்
மே - ஜூன் - 32- பயில்நிலம்

அகதிப்பிரச்சனை இடம்பெறக் கூடாது. வேறு பிரச்சனைகளை காட்ட வேண்டும். என தீர்மானித்து விட்டோம். ஒரு சிட்டுக்குருவியை போலிருக்கும் பெண் , அவளுக்கும் அவளுடைய தகப்பனாருக்கும் இடையில் இருக்கக்கூடிய அற்புதமான நட்பு. பொதுவாக இலங்கையில் மகனுக்கும் தந்தைக்கும் இடையில்தான் இவ்வகையான உறவு இருக்கும். ஒரு தந்தை மகளை படிக்க அனுப்புகிறார். அவள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் தந்தையிடம் இருக்கும். அதே எண்ணம், நாம் பத்திரமாக திரும்பிப் போக வேண்டும் என்று பெண்ணிடம் இருக்க வேண்டும். எங்களுடைய கலாசாரம் அங்கே தங்கியிருக்கிறது. சிட்டுக்குருவியைப் போல நேசித்த தன் மகள் எப்படி சென்னைக்குப் போய் அங்கு ஒரு இளைஞனை சந்தித்து அவனுடன் நட்பு கொண்டு எவ்வாறு இலங்கை திரும்பி வந்தாள். இலங்கைத் தமிழர்களின் கலாசாரம் மேலோங்கும் விதமாக காதலில் என்ன முடிவு செய்கிறாள் என்பது தான் கதை. இந்தப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு தந்தைக்கும் தன்னுடைய மகளும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். அதே போல மகள்மாருக்கும் தன்னுடைய தந்தை இப்படி இருக்க வேண்டும் என்றும் நினைக்கத் தோன்றும் 20 - 25 வருட தமிழ் மக்களின் வாழ்க்கை வலியை ஒரே காட்சியில் சொல்லியிருக்கிறோம்.
வவுனியாதான் கதையின் பிரதான கதைக்களம். இதுவரை எந்தப்படத்திலும் வவுனியா காட்டப்பட்டதில்லை. கண்டி, நுவரெலியா, றம்பொடை நீர்வீழ்ச்சி, தலவாக்கலை, ஹெட்டன், பண்டாரவளை, காலி, பேருவளை, கொழும்பு என்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடாத்தியிருக்கிறோம். படத்தின் இறுதிக்காட்சி வவுனியா புகையிர நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
படக்குழுவினரை தெரிவு செய்ததிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் வரை.
தயாரிப்பாளரை கண்டு பிடித்தவுடன் நான் ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருந்த படப்படிப்பு குழுவினருடனும் சேர்ந்து படப்பிடிப்பு முழுவதையும் இலங்கையிலேயே எடுப்பது என்று திட்டமிட்டோம். இலங்கையில் படப்பிடிப்பு தளங்களை பார்வையிட்டு முடிவு செய்து விட்டு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்தோம். டிசம்பர் காலப்பகுதியில் இலங்கை மிக அழகாக இருக்கும் பணி பெய்யும். மழை விட்டு விட்டு பெய்யும். அவற்றையும் படத்தில் பயன்படுத்துவதற்காக டிசம்பர் 21 படப்பிடிப்பை தொடங்கினோம். எமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் நான் ஒரு இசையமைப்பாளன். இதுவரை இது போன்ற படப்பிடிப்பில் பங்குபற்றியது கிடையாது. ஒரு அறையில் இருந்து இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகள் பாடலாசிரியர்கள் ஆகியோருடன் மட்டும் என் வேலை முடிந்துவிடும். முதன்முறையாக நான் இசையமைத்த இசைக்கும்
So - EgoPsar - 33- பயில்நிலம்

Page 19
வரிகளுக்கும் படப்பிடிப்பு நடைபெறுவதை கண்கூடாக பார்த்தேன். இங்குதான் படப்பிடிப்பு குழுவினரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.
இலங்கைக் கலைஞர்களின் பங்கு ஏன் குறைக்கப்பட்டிருக்கிறது?
கதை வவுனியாவில் இருந்து வரும் ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை. இந்தப் பெண் பாத்திரத்துக்கு ஒரு இலங்கைப் பெண் கிடைக்காதா என்று எனக்கும் வசீகரனுக்கும் பேராசை, நாங்கள் தமிழ்நாதம் இணையத்தளத்தில் இந்த படத்துக்கு கதாநாயகி தேவை. என்று ஒரு மாதம் வரை விளம்பரம் அளித்திருந்தோம். ஆனால் எது விதமான பதில்களும் கிடைக்கவில்லை. காரணம் யாரும் எங்களை நம்பவில்லை. அப்போது நாங்கள் என்ன செய்வது? இந்தப்படத்தில் இலங்கையிலிருந்து செல்வன் எனும் ஒரு உதவி இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். மற்றது நடன அமைப்புக்கு இலங்கை நடன ஆசிரியர் நந்தகுமார் என்பவரையும் மல்லையா கீர்த்தி என்பவரையும் பயன்படுத்தியிருக்கிறோம். இலங்கைக்கு வந்து படமெடுத்தவர்கள் முன்னெடுக்காத துணிச்சலான காரியத்தை காதல் கடிதம் குழு செய்திருக்கிறது. முதன்முறையாக இந்தியாவில் இருந்து கேமரா கொண்டு வராமல். இலங்கையில் டில்மன் எனும் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் சினிமாஸ்கோப் கேமராவை பயன்படுத்தியிருக்கிறோம். எமக்கு வேறு எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை. இப்படி நிறைய புது முயற்சிகளை துணிந்து செய்திருக்கிறோம்.
இலங்கையைப் பொறுத்தவரை கொழும்பு மற்றும் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் மட்டுந்தான் இணையத்தளங்கள் இருக்கின்றன. அதனால் இலங்கை பத்திரிகை வாயிலாக முயற்சிசெய்திருக்கலாமே?
தெரிந்த நிறையப் பேருக்கு வாய் வழியாக கூறியிருந்தேன். அத்துடன் தனியார் வானொலி ஊடகமொன்றில் நேர்காணலின் போதும் இந்த விடயத்தை தெரிவித்திருந்தேன். ஆனாலும் எமக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
நடிகர்கள் தேர்வில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள்?
நிச்சயமாக நிறையவே பிரச்சினைகள் இருந்தன. ஆனால் நடிக்க வைக்கும் போது பிரச்சினைகள் இருக்கவில்லை. காரணம் நடிகர்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இடையில் மிகுந்த பொருத்தப்பாடு இருந்தது. மற்றது இந்தியாவில் இருந்து இலங்கை வந்து படப்பிடிப்பு செய்யும் போது இலங்கை கலைஞர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். முதன்முறையாக அந்த நிலை மாறி முற்றிலும் புதியவர்களை அறிமுகம் செய்திருக்கிறோம். புதியவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது நிச்சயமாக வித்தியாசமான ஒரு படைப்பாக இருக்கும்.
மே - ஜூன் - 34 - பயில்நிலம்

இந்தப் படப்பிடிப்பின் போது நீங்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் அல்லது நடந்த சுவாரசியமான சம்பவங்கள்?
படப்பிடிப்பு நேரத்தில் எமக்கு எதுவிதமான பிரச்சனைகளும் இருக்கவில்லை.4 நாட்கள் புகையிரதத்தில் படப்பிடிப்பு நடந்தது. புகையிர தத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. புகையிரதத்தின் ஊடாக கதாபாத்திரம் பேசப்படும். ஆனால் இங்கு புகையிரதமே ஒரு கதாபாத்திரமாக காட்டப்பட்டிருக்கிறது. யாழ்தேவியில் பயணம் செய்யும் அனுபவத்தை தத்ரூபமாக தரவேண்டும் என்று 16/17 மணித்தியாலங்கள் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கும் வவுனியாவில் இருந்து கொழும்புக்கும் பயணம் செய்து மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடாத்தினோம்.
இந்த யாழ்தேவி படப்பிடிப்பு முடியும் போது உதவி ஒளிப்பதிவாளர் (சிங்களவர்) ஒருவர் இது போன்ற படப்பிடிப்பை வாழ்க்கையில் செய்ததே இல்லை என்று கூறினார். இந்தப் பாடல் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருப்பதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள். நானும் சிறுகதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பி விட்டு தபால் காரனை நேசிக்கும் எழுத்தாளனைப் போல காதல் கடிதம் திரைப்படம் வெளியிடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
இந்திய நடிகர்களோடு இலங்கையில் இருந்து A, B மனோகரன், தேவதாசன் ஆகியோரும் புதிதாக இன்னும் நிறையப் பேரையும் அறிமுகப் படுத்தி இருக்கிறோம். நடிப்பு என்பது சிறந்த விடயம் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறோம். எதிர்காலத்தில் நல்லபடங்கள் வெளிவரவும் தயாரிப்பாளர்கள் உருவாகவும் இந்தக் “காதல் கடிதம்’ நல்ல வாசலாக அமையும்.
படத்தின் இறுதியில் பார்ப்பவர்களுக்கு ஒரு வலி இருக்கிறது. ஆதை படத்தில் பாருங்கள். தயவுசெய்து இந்தப் படத்தை திருட்டு CD யிலோ DVD யிலோ பார்க்காது திரை அரங்குகளுக்கு போய்ப் பாருங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கை வலிகளை படமாக எடுத்த குழுவுக்கு நீங்கள் தரும் மரியாதை.
யாழ் தேவி பாடல் படப்பிடிப்பின் போ
3rp ~ * - 35 -

Page 20
அமைதி G59.
இரததம் தெறிககும் தேசம்
|ou in Töආ|Tෙවිච්ෙl Gür5|ෆ
O56OTCOOOTULOsijkLUTO) diffDJIẾT BLđDŪ5Õ GOULLJOOT,
பேருந்து நெரிசலில் ܠܐ GJjTGO)6.Df505) 8UTCOT
ஒரு மாத Sயாவை, 66CO, soofdbOO6T 8UITL Loaf,056Osnai or GరౌITLTOTLQ రెLTLQL 66Tరేర్రెరౌ6f.
658 IT objJ Sol)
8LJITOS LIGÖTOOTGODāD, O ODO ODJÖÖO GOOOOOULJ OOOOD, ලිඛිටීඊෙCOCIථිවීම්lඩි loඊජ්u]ඛර õLDõbGOLJ DTo UuJõCOflõÜõ öTõõõõT
ԾT[D[D 8ԾLQ.
தற்கால புதிய முன்னேற்றங்களால் வரும் செல்வப் பெருக்கங்கள் அனைத்தும், பெருஞ்செல்வர் செல்வத்தைப்பெருக்கவும் இனிய வாழ்வினர் இன்பமாய்யிருக்கவும், உடையோர் இல்லோர் வேற்றுமை நிலையையும் மாறுபாட்டையும் அகலமாக்கவும் மட்டுமே பயன்படும் வரை, முன்னேற்றங்கள் உண்மையான முன்னேற்றமாகவோ நிலையான
முன்னேற்றமாகவோ இருக்க முடியாது.
-வெறன்றி ஜோர்ஜ்
மே - ஜூன் -36- மயில்நிலம்
 

oTGOGOT DLQ5GaroOTD சி86Orதிதிககு ©[[58ඝ [57) 6 ULa 5 Qbó5a DTL?
O COõOT LITTő555 O GÖTGALOFT 8aðL G6 O) of LIGOTOOTOOODulo 5 lbf Sol 6T656O)6OT effortaboTTOOTOP or 6ଠୀ ଜୋ0@5ଠୀ apoordiolorToof 8 JITGOTO
ஒரு தெருவில் பிறந்து GĐD LJбTofulob LLOčђOD LIGHඝෙතතඊජ5oඊColó 6]ජrGCTID] @DUJO DTñ 8ơTBókD5D பொழுதுகள் 65656O)6OT Goofootou Tooro P
LJLLÓ GUIDDI DDTIE LinflD5ජා! 6ජrGDෙතඝu flex) நமியில் எஞ்சிநினறது UT5 oUTC)TõOT.
இருவருக்கும் இருவேறு தேசதது (pLaర్రోరేర్ర్రf p6OTB இல்லறம் நடத்த . LJID[5ỞI 8_ITGOÖII ÎloÖ Sour 686OTIT 6).JL LOCLITL CDLO5OO
Ꮆro - 89ᏉᏍᎣr
- 37
56COT66Ö, ŐC6lÖLJtŐ, Lilටlෙතoll, @@වීකෞතIn 6JLL LOTAD
DLL Gd5(650. 56t6TITLoD 8UTOOTO).
56D TO65 65t 6.JIT5ő5) g|LőOLő5(OblŐ அவ்வப்போது சிaOOறுங்கும் GToõ8ud pojuJõ CBT68UT65d565
DTOOOFTta65 8LJ Tooral
Tõ 8õT55 õT6D5õõtfo OT__efী 60 T656০ aðõOM DULJITOOT gorfčjõJð ஒட்டோகிறாட்பம்
நிழற்படங்களும்.
எண் 8தாட்டதது மரத்தில் 6936ODĴ UAB6OD6J [5/Tෙෆ් ක-ෙතෙET DE|ෙතෙCTඊඡ8|DOථl.
ක_Gථl Gun TෙCIඊජ්lඛවී (PsDēGODD BLIJỞ5JLÕ ß 6 GODGOT GONCOT.
GILJOOXOTa56föOT DLCU ©lඊ|ඛJෙත[I 8ඊ|Tici?.
- ரதிமதன்
A.
ノ
பயில்நிலம்

Page 21
aമൃശ (ിസ്ത്ര 6p?t്
இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் ஜெனீவாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையி லான இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை தொடங்கியது.
2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக்
கட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தப் பட்ட போர் நிறுத்தத்திற்கு பிறகு இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடை பெற்றிருந்தன. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நின்று வெற்றி பெற்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே (கடந்த 1 1/ 2 வருடங்களாக) நாட்டில் சமாதானப் பேச்சுக்கள் தடைப் பட்டன, 29کH 35[ இலங்கை மக்களிடையே பெருமளவு யுத்தப் பீதியினை உருவாக்கியிருந்தது. அத்துடன் வன்முறைச் சம்பவங்கள் துளிர் விட தொடங்கின. அதனால் இலங்கைப் பிரச்சனையில் ஜனாதிபதியின் அடுத்த கட்ட நடவடிக் கை எவ்வாறானதாக இருக்கப் போகிறது என்று முழு உலகுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் ஜனாதி பதியாக பதவியேற்ற ஆரம்ப காலத்திலேயே ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சினை சேர்ந்த குழுவினர் இந்திய, மே - ஜூன்
பாகிஸ்தான் நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு பேச்சுக்களை நடாத்தினர். இது மக்கள் மத்தியில் இன்னொரு யுத்தத்திற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதாகவே இருந்தது. இலங்கை மக்களின் அன்றைய
தேவை சமாதானமாகவே இருந்தது.
- 38 -
இதை கால நீ தாமதிப் பது நாட்டினை ஒரு இக்கட்டான சூழ் நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதனை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி சமாதான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஆனால் அது அத்தனை இலகு வான ஒரு விடயமாக இருக்க
வில் லை. அதற்கு பல வேறு காரணங்கள் இடையூறாக அமைந் திருந்தன.
9 2005ம் ஆண்டு இடைப் பகுதியில் இடம்பெற்ற லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைக் குப் பிறகு, ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடு தலைப் புலிகளை தடை செயப் திருந்தது. இது ஐரோப்பிய நாட்டில் பேச்சு வார்த்தை யினை நடாத்துவதற்கு
இடையூறாக இருந்தது.
பயில்நிலம்
 

0 அரசின் பங்காளிக் கட்சி கள், பேச்சுக்கள் ஆசிய நாடொன்றில் தான் நடை பெற வேண்டும் என்று கூறிக் கொணி டிருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகள் ஆசிய நாடொன் றில நடைபெறும் பேச்சுக் களுக்கு வரப் போவ தில்லை என்று தெரிவித்தி ருந்தனர்.
0 பேச்சுக்களை புதிதாக ஆரம்பிப்பதா அல்லது ஐ.தே.க நடாத்திய பேச்சுக் களில் இருந்து ஆரம்பிப் பதா என்ற குழப்பம் இருந்தது. அரசு புதிய குழுவொன்றினை பேச்சுக் களுக்காக அனுப்புவதாக இருந்ததால் விட்ட இடத் தில் இருந்து பேச்சுக்களை ஆரம்பிப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.
0 இரு தரப்பினருக்கு இடை யிலும் பேச்சுக் களில இருந்து எட்டப் போகும் முடிவுகள் தொடர்பில முரண்பாடுகள் இருந்தன.
இவ்வாறான பல சிக்கல் கள் இருந்த போதிலும், இவற்றிற் கெலி லாம் தற்காலிகமான சமாதானத்தை ஏற்படுத்திக் கொணர் டு பேச் சுக் களை ஜெனிவாவில் தொடருவதற்கான ஒப்புதல் ஆனது. ஆனால் இந்தப் பேச்சானது எப்படி சமாதானப் பேச்சுக்களை நடாத்துவது, மேலே
மே ~ ஜூன் - 39 -
குறிப்பிடப்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகளை தெரிவது என்பத னையே பிரதான மாக கொண்டி ருந்தது.
ஐரோப்பிய தடை இருந்த போதும் சுவிற்சர்லாந்தில் பேச்சுக் கள் நடை பெற்றதும், அதற்கு நோர்வே ஆதரவு (நோர்வே, சுவிறசர்லாந்து என்பன ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்காத நாடுகள் . அதனால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை தங்களை ஒன்றும் செய்யப் போவ தில்லை என்று பேச்சுக்களுக்கு
பயில்நிலம்

Page 22
உதவ முன்வந்திருந்தன.) வழங்கி யிருந்தாலும் முழு உலகத்தின் ஊடகங்களும் சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவை முற்றுகையிட்டி ருந்தன. அடுத்த பேச்சுக்கான திகதி குறிக்கப்பட்டு நிறைவடைந்த பின்னர் இலங்கை மக்கள் மனங் களில் தற்காலிக சந்தோஷம் உருவெடுக்கத் தொடங்கியது. ஆனால் மீணி டும் நாட்டில தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் இந்த நிலை வலுக்கத்தொடங்கியது. மீண்டும் பல வேறு முரணி பாடுகளுக்கு மத்தியில் அடுத்தகட்டப் பேச்சுக் களுக்கான தேவை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையில் பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக் கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் மிகுந்த அக்கறை காட்டி வரு கினி றன. இந்த நாடுகளின் கரிசனை இலங்கைக்கு எத்தகைய விளைவுகளை தரும் என்பது உலக சரித்திரம் தெரிந்தவர் களுக்கு வெட்ட வெளிச்சமானது. இலங்கையின் பொருளா தாரம் அத்தனை முன்னேற்ற
மானதா? என்று கேட்டாலும்
இல்லை, இருபது முப்பது வருடங் களாக இலங்கையில் நடைப்பெற்ற கோரயுத்தம் இலங்கைச் சொத்துக் களுக்கும் வளங்களுக்கும் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பெருமளவு நிலங் கள் பயன்படுத்தப்படாமலேயே இருப்பதாகவும் அறியக் கிடக்கிறது. (வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்த சூனிய பிரதேசங்களாக
*
Co -
அறிவிக்கப்பட்டிருக்கும் நிலங்கள், கண்ணிவெடி புதைக்கப் பட்டுள்ள நிலங்கள்) இவை மட்டுமல்லாமல் வரவை மிஞ்சிய செலவுகள், கடன்சுமை,வேலை வாய்ப்பின்மை, வேலை நிறுத்தங்கள் என்று இலங்கை மக்களின் நிலை மிகவும் அவலத்துக்குரியதாகவே இருக்கிறது. இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பும் கைங் கரியத்தை வெளிநாட்டு (இந்தியா) சினிமா கி களும் , தொலைக் காட்சினுாடாக வரும் சின்னத்திரை தொடர்களும், வெவ்வேறு நிகழ்ச்சி களும் செவ்வனே நிறைவேற்றி வருகின்றன. மேலைத் தேய கலாசாரங்களுக்கு அடிமையாகிப் போன, பழக்கப் பட்டுப் போன இனி றைய இளம் சமுதாயத் தினரிடையே எதிரிகாலம் பற்றிய மாயையான கனவுகளையும் இது தோற்றுவித்திருக்கிறது. இவற்றி லிருந்து விடுபட்டு நிரந்தரமான அமைதியையும் , நிறைவான பொருளாதாரத்தையும் பெற்றுத் தரக்கூடிய கடமையும் தேவையும் இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கின்றது என்பதனை நாம் நினைவுகொள்ள வேண்டும். இந்த பங்களிப்பு எவ்வாறானதாக இருக்க வேணி டும் என்ற தெள்ளிய நோக்கும் எமக்குத் தேவை. எல்லோரும் உணர்ந்து கொள்ளக் கூடிய புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் யுத்தம் எவற்றையும் தீர்மானிக் கப் போவதில்லை என்பதைத்தான். யுத்தத்தினால் வெல்லப்படபோவது உயிர்க்கொலைகள் மட்டுந்தான்.
- 40 - பயில்நிலம்

அதனால் இனியொரு யுத்தம் நடைபெற அனுமதிக்கப் போவ தில்லை என்ற உறுதியுடன் இரு தரப்பினரும் பேச்சு மேசைக்கு வரவேண்டும்.இது தவிர இன்னுஞ் சில முக்கிய விடயங்களும் இளைஞர்கள் மத்தியில் கவனத் தில் கொள்ளப்பட வேண்டியனவாக இருக்கின்றன.
e இலங்கையில் இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீ கரிக்கப்பட வேண்டும்.
9 மக்களின் ஜனநாயக
மனித உரிமைகள் கெளர விக்கப்படவேண்டும்.
0 இரத்தம் சிந்தாத யுத்த மான அரசியல் மக்கள் மயப்பட வேண்டும்.
இவ்விடயங்களை கருத் தில் கொண்டு ஆரம்பிக்கப்படும் மக்கள் பயணம் யுத்தமற்ற அமைதியான இலங்கையை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.
-செ. ஆயன்
மே ~ ஜூன் - 41 -
ஒரு காலம் இம்மண்ணிலும் மக்கள் எழுவர் யுத்தங்கள் முடியும் அப்போது, ஐயா உங்கள் ‘கலாசாரம் இங்கு செல்லாது.
ஏனெனில் w மக்கள் ஆட்சியுடன் கூடவே புதியதொரு கலாசாரமும் பரிணமித்துவிடும்
-சிவகாமி
(வெளிநாட்டு கடிதங்கள்
கவிதையில் இருந்து)
أص பயில்நிலம்

Page 23
வாழத்தான் பிறந்தோம்
பிறப்பே புதைகுழியாய் கருவறையே கல்லறையாய் எதிர்காலமே மரணமாய்
இருக்கும் குழந்தையின்
அழுகுரல்.
கைகளில் துப்பாக்கியும்
மனசாட்சியே விரோதமாகவும்
காணப்படும் சிறுவனின்
பரிதாபக்குரல்.
புத்தகங்களாய் படித்து தூக்கத்தை கைவிட்டு
பெறுபேறுகளை பெற்றுக்கொண்டு
வீதி வீதியாய்
வேலை கேட்டுத்திரியும்
இளைஞனின்
போராட்டக்குரல்.
ஒரு கையில் மதுவும் மறுகையில் மாதுவுமாக இருக்கும் அரக்கன் கையில் சிக்கிய
கிழிந்த சேலையுடன் காட்சி தரும்
கன்னிப் பெண்ணின்
அவலக்குரல்.
மே - ஜூன் - 42 - பயில்நிலம்
 
 
 
 
 
 
 
 

ஒரு மகனை போர்முனைக்கும்
ஒரு மகனை வெளிநாட்டிற்கும்
கணவனை கண்ணி வெடிக்கும்
பறிகொடுத்த
பாவப்பட்ட தையலின்
அனுதாபக்குரல்.
நாட்டிற்காக உயிரையும்
வீட்டிற்காக சம்பளத்தையும்
போர்க்களத்தில் இரத்தத்தையும்
பறிகொடுக்கத் தயாராகும்
தன்னையே உருக்கி
பிறருக்கு ஒளி கொடுக்கும்
மொழுகுவர்த்தியின் நிலையிலிருக்கும்
போர்வீரனின்
ః அடங்காத குரல்.
அனைவர் வாயிலும் ஓயாத குரல்
ஒலிக்கும் எக்காலமும்
முடியுமானால் அந்தச் செயல்களை
அடக்குங்கள்
வாழத்தான் பிறந்தோம் என்ற
எங்கள் சோகக்குரலை அடக்காதீர்கள்.
- பாத்திமா ரினோசா நசார் -
Bro ~ | °6b - 43- பயில்நிலம்

Page 24
ஐயா,
“பயில் நிலம்” என்றொரு இதழ் இலக்கிய வீதியில் நடை பயில்கிறது என்று அண்மையில் தான் அறிந்து கெர்ணடேன். தமிழிதழின் தரம் கண்டு மகிழ்கிறேன். யானும் அவ்விதழினை பெற்றுக் கொள்ள ஆவலாயுள்ளேன். எனது படைப்புகளும் பயல் நிலத்தில் விளைந்திட கனாக்காண்கிறேன். ஆகவே பெற்றுக் கொள்ளும் முறை பற்றி அறியத்தாருங்கள்.
கந்தையா கணேசமூர்த்தி,வெதமுல்லை,றம்பொடை.
அகரவரிசையில் பயில்நிலம்
அறிவுடமை சார்ந்த பயில்நிலம் படிப்பதனால் ஆக்கங்கள் கைகொடுக்கும் மனஆதங்கம் அகன்றுவிடும். இனிய விடயங்கள் இம்மலரில் இருப்பதனால் - இதற்கு ஈடினை கிடையாதென இறும்பூது கொள்ளமாட்டோம் உற்ற நண்பர் உற்சாகமூட்டி உருப்பட வழிசொல்வர் ஊக்கத்துடன் உழைத்தால் உறுதியாம் வெற்றிப்பாதை எடுத்த காரியத்தை எளிதினில் நிறைவேற்ற - விஞ்ஞான ஏர் பிடித்த கையால் பயில்நிலத்தை உழுதிடுவோம். ஐயந்திரிபற அறிஞர்க்கு வாய்ப்பளிப்போம். - நம்மிடையே ஒற்றுமை ஒளிபிறக்க அனைவரும் ஒத்துழைப்போம். ஒங்குக உலகமெங்கும் பயில்நிலம் பரவலாக ஒளடதமாகும் இந்நிலம் அகிலத்துக்குப் பயனளிக்கும்.
வள்ளியம்மை சுப்பிரமணியம்,சிங்கப்பூர்.
இப்போதுதான் உங்களுடைய இதழ் பற்றிய விபரம் கிடைத்தது. மிகவும் சிரமப்பட்டு கொழும்பிலிருந்து உறவினர்கள் மூலமாக உங்களுடைய விதைப்பில் 6 அறுவடைகள் வாசிக்கக் கிடைத்தன. ஆக்கங்கள் எளிமையானதாக இருக்கின்றன. உலக நடப்புக்களையே அதிகம் சேர்த்து இருக்கிறீர்கள். இலங்கை பற்றிய ஆக்கங்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இன்னுஞ் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் எங்கள்
மே - ஜூன் - 44 - பயில்நிலம்
 

பிரதேசத்திலும் உங்கள் இதழ் கிடைக்க ஒழுங்குகளை மேற்கொள்ள என்னாலான உதவிகளை செய்யமுடியும்.
பெ.நிசாந்தன்,மட்டக்களப்பு.
DTத இதழலாக வெளிவந்து இருமாத இதழாக மாறியபின் ஒரு
இதழ்தான் படிக்கக் கிடைத்தது. இலங்கையில் தோன்றி மறைந்த இதழ்களின் வரிசையில் பயில்நிலமும் சேர்ந்து விட்டதா?
கை.ரூபராணி, வெள்ளவத்தை, கொழும்பு.
பயில்நிலத்தின் தரம், புதுமையான விடயங்களைப் பொறுத்தவரை, தமிழ் சஞ்சிகைகளின் நீண்ட நாளைய சான்றாக இருக்கும். எல்லாக் கட்டுரைகளும் படிக்க்கூடியதாய் தரங்குறையாமலும் ஆழமானதாகவும் உள்ளன
சு.மோகன்ராஜ், கடியன்லேனை.
கிடந்த சில மாதங்கள் பயில்நிலம் இதழ் கைக்கு கிட்டவில்லை.இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் ஆசிரியர் குழு கவனஞ் செலுத்தி மீண்டும் பயில்நிலம் வெளிவருவதற்கு முயற்சி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். மாற்றங்களை வேண்டி புதுமையான தற்காலத்தேவைக்கு அவசியமான ஆக்கங்களை சுமந்து வரும் பயில்நிலம்
இடைவிடாது வெளிவர வேண்டும்.
ம.சிவச்சந்திரன், மாத்தளை.
பயில்நிலம் மாத இதழை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். இன்றைய கணனி காலத்தில் எத்தனையோ சஞ்சிகைகள் வர்ணஜால படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் பயில்நிலமே நீ வாழ்க! பயில் நிலத்தில் வரும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல் என்பன மிகவும் நல்லது. ஒவ்வொரு வாசகனையும் தன்னுடன் இழுத்துச் செல்லம் பாங்குடையது.
ஏ.சந்திரகலா, கிருலப்பனை, கொழும்பு.
பயில்நிலத்தின் பத்து இதழ்களையும் படித்தேன்.பல புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உலக வரலாற்றில் மே - ஜூன் - 45 - மயில்நிலம்

Page 25
இருந்து புதிய சம்பவங்களை அறியத்தரும் வரலாறு சொல்லித் தந்தவை கட்டுரைப் பகுதி பாராட்டுதற்குரியது. மேலும் பல புது அம்சங்களுடன் பயில்நிலம் வீறுநடை போட்டு மக்கள் உள்ளம் மலர ஒளி வீசட்டும் என வாழ்த்துகிறேன்.
கே.திருமால்,சாவகச்சேரி.
சீனாவின் சின்னக் கதைகள் பகுதி வாசிப்பவர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது. இவ்வாறான மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் உண்மையாகவே ஒரு ஆக்கபூர்வமான
இலக்கிய முயற்சிதான்.
இரா.சுஜீவ்,கொட்டாஞ்சேனை.
Lயில்நிலம் ஜூலை-ஒகஸ்ட் இதழில் வெளிவந்துள்ள ஆக்கங்கள் எல்லாமே சிறப்பு:கவிதைகள் அனைத்தும் சொல்லி வைத்த மாதிரி நேர்த்தி யாக அமைந்திருந்தன. “உலகப் பட்டினி பற்றிய பத்து புனைவுகள்’ கட்டுரை இன்றைய சூழ்நிலையில் பயனுடையதாகும்.
ஜி.கல்யாணி, யாழ்ப்பாணம்.
இளைஞர்களிடையே ஏற்றத்தாழ்வு, போட்டி, பொறாமையென்று முரண்பாடுகள் வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து இதழுக்கு இதழ் மாற்றங்களையும் செறிவான கருத்துக்களையும் இலகுவாக படிக்க கூடியதாக எழுதி வருவதும் மகிழ்ச்சியளிக்கிறது.அனைத்து இதழ்களையும் வாசித்தவன் என்ற வகையில் பயில் நிலம் இதழின் ஒவ்வொரு முன்னேற்றப்படிகளையும் பார்த்து வருகிறேன்.இதழுக்கு இதழ் பக்ககவடிவமைப்பு, அட்டைப்படத் தெரிவு என்று வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.இருந்தாலும் எழுத்துப்பிழைகளில் கூடிய
கவனம் செலுத்தினால் நன்று.
எம.அன்ரனிராஜ், யாழ்ப்பாணம்.
இயந்திர துப்பாக்கிகளை விட டப்பாக்களில் அடைத்து வரும் உணவு மிகவும் பயங்கரமானது என்பதை விரைவில் நாம் உணர்வோம்.
-ஜோர்ஜ் ஆர்வெல
GD ~ ఫ్లో - 46- பயில்நிலம்

9-фѣèc[Ф(ѣ ઈીo நிமிடங்கள். (ஒரு சுய வை
அன்புள்ள நண்பர்களே,
நீண்ட இடைவெளிக்குக்குப் பிறகு பயில்நிலமூடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் பயில்நிலம் இதுவரை தாமதமானதற்கான காரணத்தை கட்டாயம் கூறவேண்டும்.
இலங்கையில் தமிழ் சஞ்சிகைகள் பெருமளவில் தோற்றம்பெற்றும், தோன்றிய சுவடு தெரியாமல் தொலைந்தும் போயிருக்கின்றன. இதற்குரிய காரணங்களை தெரிந்து கொண்டு அவற்றை வென்று சமூகத்திற்கான அடையாளமாக பயில்நிலம் இதழ் அமைய வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் இதழை ஆரம்பித்தோம். எல்லா இதழ்களும் எதிர்நோக்கக்கூடிய பொருளாதார, விநியோக சிக்கல்களை நாங்களும் எதிர்நோக்கியிருந்தோம். அதனால் மாத மொருமுறை வெளிவந்து கொண்டிருந்த இதழை இரு மாதத்திற்கு ஒருமுறை என்று மாற்றியமைத்தோம். இருந்த போதிலும் சமூகத்திற்கான பார்வைக்கு பகிர முடியாத அளவுக்கு நேரத்தை கைப்பற்றி வைத்திருக்கும் பொருளாதார தேடல் தொடர்பான சிக்கல்களும் கல்விச் செயற்பாடுகளும் எமக்கு மென்மேலும் நெருக்கடியை தோற்றுவித்தன. அதனால் மீணடும் எங்களுடைய ஆசிரியர் குழு நேரக்கட்டமைப்பை சரி செய்து மீள வருவதற்கு அவகாசம் தேவையாயிருந்தது. அத்துடன் உள்ளூரிலிருந்து மட்டுமல்ல வெளியூரிலிருந்தும் பயில்நில வாசகர்கள் அளித்த பெருமளவு ஆதரவும் உற்சாகமும் மீண்டும் உங்களை சந்திக்க அழைத்து வந்துள்ளது. எமது இதழ் மீண்டும் வெளிவருவதற்கு பேருதவி புரிந்த விகடன் பிறின்ரேஸ் உரிமையாளர் திரு. சி. தயாபரன் அவர்களுக்கு பயில்நிலம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதுவரை வெளிவந்த இதழ்களில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டவை மிக முக்கியமானவை. சம கால சமூகச்சிக்கலில் தேவைப்பாடாய் கூட்டுத் தலைமையும் தனி மனித பொறுப்பும் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண் டோம். எல்லோரும் கூடி முடிவெடுத்து பொறுப்புக்களை தனித்தனி நபர்களாக பிரித்தெடுத்து செவ்வனே செயற்படுத்தும் போது காரியம் திருப்திகரமானதாக நிறைவேறுகிறது. ஆனால் இந்த தனிநபர்களின் செயற்பாட்டில் தொய்வு ஏற்படும் போது முழுக்காரியமும் பாழாகிவிடுகிறது. இவற்றில் இருந்து விலகி கூட்டுத் தலைமையின் வெற்றியையும், தேவைய்ையும் நிரூபித்துக்காட்ட வேண்டிய உறுதியுடனும் பயில்நிலம் மீண்டும் தனது அறுவடையை ஆரம்பித்திருக்கிறது. பயில்நில சந்தாதாரர்களுக்கும் வாசகர்களுக்கும் தாமதத்திற்கான மனவருத்தங்களையும், இனி பயில்நிலம் தொடர்ந்து வெளிவரும் என்ற உறுதிமொழி பிரகடனத்தையும் ஆசிரியர் குழு பரிமாறிக்கொள்கிறது.
சமூகத்தை படிப்போம். சிந்திப்போம். எல்லோரும் வாசிக்கும் வகையில் எளிமையாக எழுதுவோம். மாற்றங்களை வேண்டி தொடர்ந்தும் பயணிப்போம். அடுத்த இதழில் மீண்டும் சந்திப்போம்.
பயில்நிலம் குழு,
மே - ஜூன் - 47 - பயில்நிலம்

Page 26
அன்பும் மானுடமும்
கலை இலக்கியம் அனைத்திற்கும் அன்பு என்பது அடிப்படையாக இருக்கலாம்.ஆனால் அதையும் விட அடிப்படையாக ஒன்று உள்ளது. மானிட சமுகத்தின் மீது அன்பு என்று சொல்லும் போது, மனித சமுதாயம் இரு வர்க்கங்களாகப் பிரிந்த பின்னர் அனைத்துக்கும் பொதுவான அன்பு என்பது கிடையாது. ஆளும் வர்க்கங்கள் எங்கும் பரந்த அன்பை எடுத்து ஒதுகிறார்கள்.கான்பூசியஸ் எடுத்தோதினார். டால்ஸ்டாயும் இவ்வாறே சொன்னார். ஆனால் ஒருவர் கூட அதை அனுபவத்தில் காட்டவில்லை.ஏனெனில் வர்க்க சமுதாயத்தில் அது அடைய முடியாத ஒன்றாகும்.
உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகள் என்று ஒழிக்கப் படுகின்றதோ அன்றுதான் மனித சமுதாயத்தின் மீது அன்பு ஏற்படும். இன்று நம் எதிரிகள் மீது நாம் அன்பு காட்ட முடியாது. சமுதாயத்திலுள்ள கொடூரங்களையும் தீமைகளையும் நாம் நேசிக்க முடியாது. மக்களுக்கு இவை தெரியும். இதை நமது எழுத்தாளர்களும் கலைஞர்களும் புரிந்து கொள்ள முடியாதா?
-மா ஓ சேதுங்
Maruthi Money Exchan
ldid2(
224, 1st Floor, , , o jį Galle Road, Wellawatte, , , ; ; ; Colombo - 06. ༠༣, ༦ O11 - 2362086
墨负725”
- 48- பயில்நிலம்
 
 
 
 
 
 
 
 
 
 

a5MrøSỬ Ử`(GføNJudd
விழுதிறக்கி வேர் கொண்டு வீறுடை
வீரியமுடன் வெளித்தள்ளுகிறğöl காலம் சதைப்பிண்டங்களை 9 JU6)ITti சிதைந்து உருக்குலைந்து அருவமாய்
எச்சில் வடியும் நாக்கோடு மாமிச பிண்டம் தேடி காலம் கரைகிறது இன்னொன்று 876478,43 இன்னுமொன்று (ெIMS வேறொன்று * SKALAM

Page 27
J了丁 ട്ട With Best Com File:GTF-W -- - - - - - - - - -
سمې يې _ =ـــــــــــکشــــ====== இEnterprise - oSಿ މރ ’ ހރސަނފްރ |
ܐ. سیرت
22zná míná
COURIERC
N__
M 显
చేస్తా (త్ర
VIJEYA ENTERPRISE F
S.
Importers, Exporters, Sri
Freight Forwarders
No. 1 B13, Dr.E.A. Cooray M Te 2360926, 25598 E-mail : maharaja
í",
 
 
 

OOD PRODUCTS
ankan Fo0d Producers, I ||||||
Clearing Agents
49, Fax: 2з611з9 Qdialogsit.net