கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 1991.06

Page 1
密
 
 

3: 23. 3. ତୁ ୧୧:୧୯,
ந்ஞானக் காலாண்டிதழ்

Page 2
இந்த இதழில் இவர்()
பிரான்சின் முதலாவது பெண் பிரதமர்
வ்வருடம் மே மாத நடுப்பகுதியில் பிரான்ஸ் முதல்முறையாக ஒரு பெண் பிரதமராக எடித் கிரெசினைப் (Edith Cresson 57 ) பெற்றுள்ளது. இவர் 4. முன்னர் ஐரோப்பிய விடயங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றி வந்தவராவார். தான் எடுத்துக் கொண்ட காரியத்தைப் பின்வாங்காது செய்து முடிக்கும் இவரது இயல்பிற்கு இவர் விவசாய, வெளிநாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது எதிர் நோக்கிய சவால்கள் எடுத்துக் காட்டுகளாகும். இவரின் விடா முயற்சியே இவர் அப் பதவிக்கு வரக் காரணமாயிற்று. 1981இல் மிற்றறோங் பதவி ஏற்ற போது அவர் தனது மந்திரி சபையில் விவசாய அமைச்சராக கிரெசனையும், பெண்கள் விவகாரத்திற்கு என இன்னொரு பெண்ணையும் நியமித்தார். இவ்விரு நியமனங்களும், குறிப்பாக கிரெசனின் நியமனம் பிரான்சை, அதிலும் பிரான்சிய விவசாயிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. காரணம் இவர் சோசலிஸ்ட் என்பது மட்டுமல்ல அவர் பெண் என்பதுமாகும். பழமைபேணிகளும் ஆணாதிக்கவாதிகளுமான பிரான்சிய விவசாயிகளுக்கு பெண் விவசாய அமைச்சர் என்பது கிட்டத்தட்ட அவர்களின் ஆத்திரத்தைத் துாண்டிய ஒரு விடயமாயிருந்தது. கிரெசன் அடிக்கடி விமர்சிக்கப் பட்டதுடன் நோர்மண்டியில் நடைபெற்ற ஒரு ஆர்பாட்ட ஊர்வலத்தின் போது நகரகாவல் ஹெலிக்கொப்டர் மூலம் காப்பாற்றப் படவும் நேர்ந்தது. 19344 ல் பிறந்த இவர் பொருளியற் கல்வி பயின்றவர். 1959ல் திருமணமாகிய இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
தத்தியூன்-91(2)
 
 
 

Dஐரோப்பாவில் பெண்கள்()
அய்ரோப்பிய பொதுச் சமுகத்தில் நோர்டிக் பெண்கள்
இடிய்ரோப்பிய பொது சமுகத்தில் நோர்டிக் நாடுகள் இணைவதா இல்லையா என்பது பற்றி அரசியற் கட்சிகளும், அரசியற் சார்பற்ற குழுக்களும் பலவிதமான சர்ச்சைகளில் ஈடுபட்டு தமது வேறுபட்ட சார்புக்கருத்துகளைக் கூறிவருகின் றன. அவ் வரிசையில் 'பெண்ணின் பார்வையில் அய்ரோப்பிய சமுகம் என்பது பற்றிய கருத்தரங்கு ஒன்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மே மாதம் இடம் பெற்றது. பெண்கள் ஆய்வு மையம் ஒழுங்கு செய்த இக் கருத்தரங்கு எல்ச சொன்பர்க் என்பவரால் தலைமை தாங்கப்பட்டு அய்ரோப்பிய பொது சமுகம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அவரின் கருத்துக்கள், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விபதில்கள் ஆகியவற்றிள் சாரம் தொகுத்து வழங்கப்படுகிறது.
சம்பளம் பெறும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில் பெரும்பகுதி பாதுகாப்பற்ற, மோசமான சம்பளம் பெறும் தொழில்களிலேயே ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொழில்கள் உண்மையிலேயே "தொழிற் குணாம்சங்கள்" அற்றவை. அதாவது நிரந்தரமற்ற, பகுதி G5, தொழிற்சட்டங்களாலோ, தொழிற்சங்கங்களாலோ பாதுகாக்கப்படாதவை. இத்தகு தொழில்கள் அய்ரோப்பிய பொது சமுகத்தில் அதிகரிக்கும் போக்கினை காட்டுகின்றன. இன்றைய அபிவிருத்திப் போக்குகள் அய்ரோப்பாவை ஒரு வர்க்க பேதம் நிறைந்த சமூகத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. நோர்டிக் சமூக மாதிரியானது அய்ரோப்பிய நான்கு அம்ச சுதந்திரத்துடன் பொருந்தாது.
சொன்பர்க் அய்.பொ. சமுகத்தில் தொழிலாளரின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார். இவரின் ஆய்வு இரு அறிக்கைகளாக வெளி வந்துள்ளது. இதில் ஒன்றான ' தொழில் குணாம்சம் அற்ற தொழில்களில் பெண்கள். அய்பொ. சமுகத்தின் புதிய தாழ்த்தப்பட்ட வர்க்கம்" என்பது தொழிலாளரும்,
தத்தியூன்-916)

Page 3
Dஐரோப்பாவில் பெண்கள்
குறிப்பாக பெண்களும் எவ்வளவு நிர்க்கதியான நிலையில் உள்ளனர் என்பதை சித்தரிக்கிறது. உற்பத்தி செலவீனங்களைக் குறைப்பது என்பது தொழிலாளரின் சம்பளத்தைக் குறைப்பது என்பதன் மூலமே நிறைவேற்றப்படுகிறது. பெல்ஜியம் இன்னும் ஒருபடி மேலே போய் ஊழியச் சந்தையை ஒழுங்கு படுத்தி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களையும் விதிகளையும் நீக்கியுள்ளது. இத்தகைய சமூகத்தில் பெண்களின் பங்கை மூன்று விதமாகப் பிரிக்கலாம்: 1. பெண்களின் மூலம் சந்தையின் சமனிலை பேணப்படுகிறது. அதாவது உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும் போது வேலையில் ஈடுபடுத்தவும், தேவையற்றபோது வீட்டுக்கு அனுப்பப்படுக் கூடிய ஒரு ரிசேவ்' படையாக இவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். 2. பெண்கள் மூலம் லாபம் சம்பாதிக்கப்படுகிறது. பெண்களைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்துவதன் மூலம் மலிவு விலையில் லாபம் சம்பாதிக்கப் படுகிறது. 3. சமூகசேவை செலவீனம் தவிர்க்கப்படுகிறது. பெண்கள் வீட்டில் சம்பளமற்ற பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவதால் அரசு சமூக சேவைக்கு செலவிட வேண்டிய உயர் தொகை
தவிர்க்கப்படுகிறது.
இவ்வாறு வீட்டில் சம்பளமற்ற பாராமரிப்புத் தொழில்களில் பெண்கள் ஈடுபடுவதனாலேயே அவர்கள் வெளியில் குறைந்த சம்பளம் தரும், நிரந்தரமற்ற, பகுதி நேர வேலைகளில் ஈடுபட நேருகிறது. இத்தகு தொழிற் குணாம்சமற்ற தொழில்கள் பெண்களின் விருப்பதிற்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக வேலை வழங்குபவரின் மலிவு ஊழியத்திற்கான தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே
கேள்வி: பிரதமரான குறுா காலெம் புருண்லாந் நோர்வேயை அய்.பொ. சமுகத்தில் இணைப்பதில் முன் நிற்கிறார். ஹெல்கா ஹானஸ் அய்ரோப்பிய பொருளாதார சந்தையில் நோர்வே இணைவதிற்குச் சாதகமாக உள்ளார். இந்த இரு முன்னணியில் உள்ள பெண்கள் வித்தியாசமான கருத்துகளைக் கொண்டிருப்பது ஏன்?
பதில்: அவர்கள் வெறும் அரசியல்வாதிகள்தான். அய்.பொ. சமுக இணைவானது அய்ரோப்பிய வரிசையில் பல சுவையான விவாதங்களில் ஈடுபட வழிவகுக்கும். அது அதிகாரத்தைத் தராவிடின் பங்குபற்றலுக்கான
தத்தியூன்-914)

Dஐரோப்பாவில் பெண்கள் D
சந்தர்ப்பத்தை தரும். இவ் இணைவின் மூலம் அரசியல்வாதிகள் தமது சொந்த நாட்டிற்கான வளர்ச்சியினை ஏற்கும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பிரதமர் புருண்லாந்தின் தொழிற் கட்சியானது தொழிலாளரின் உரிமைகள், சம சம்பளம் போன்ற தனது கொள்கைகளிலிருந்து விலகிப் போவது ஆய்வாளருக்குத் சுவாரசியத்தைத் தருகிறது.
கேள்வி: அய்ரோப்பிய பொது சமூகத்தையும், அய்ரோப்பிய பொருளாதார சந்தையையும் ஒப்பிடுக
பதில்: பின்னையது முன்னையதின் ஒரு உப அங்கத்துவம் போன்றது. அய்ரோப்பிய பொருளாதார சந்தையானது நேரடியாக வரி, செலவீனம் போன்றவற்றையோ, அல்லது சமூகநலஅரசையோ (welfare state) பாதிக்காது. ஆனால் அய்ரோப்பிய பொது சமூகத்தின் 4.அம்ச சுதந்திரமான பொருட்கள், சேவைகள், முதல், ஊழியம் ஆகியன தடையின்றி சுதந்திரமாக நாடுகளுக்கிடையே அசைதல் என்பது சமூக நல அரசின் காலை உடைத்துவிடும். சந்தையில் பொருட்களுக்கிடையே போட்டி ஏற்படும் போது உற்பத்திச் செலவை குறைக்க எடுக்கும் நடவடிக்கையில் உற்பத்தி நிறுவனங்கள் கொடுக்கும் வரியைக் குறைப்பதும் ஒன்று. இது சமூக நல அரசின் நடவடிக்கைக்குத் தேவையான வருமானத்தைக் குறைப்பதன் மூலம் அரசின் சமூக நல சேவைகளைக் குறைக்கும்.
சொன்ஸ்பர்க்கின் அறிக்கையில் குறிப்பிடாத ஆனால் எமது அகதி வாழ்வின் அநுபவங்கள் காட்டும் விடயம் ஒன்றுள்ளது. அய்ரோப்பிய பொருளாதார சமூகம் தொழிலாளரை, குறிப்பாக பெண்களை மட்டும் கரண்டவில்லை. அய்ரோப்பிய பொதுச் சமூகத்தில் சேராத நாடுகளான (ஏனைய மூன்றாம் உலக நாடுகள்) இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அகதிகளாக, குடியேறியவர்களாக வருவோரை இன்னும் மோசமாக எவ்வித விபத்துக் காப்புறுதியோ ஓய்வூதியமோ இன்றி நினைத்தவுடன் வேலையால் நீக்கும் அதிகாரத்துடன் கசக்கிப் பிழிகிறது. ஆர்
தக்தியூன்-916)

Page 4
பூன் 1991 இதழ் 14
தொடர்கின்ற துயரங்கள் V தக்தி ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடையப் போகிறது. அதற்கும் முன் யூன் 90 இல் ஈழத்தில் தொடங்கிய யுத்தம் இன்னும் நீடிக்கிறது. பஞ்சம், பட்டினி, வைத்தியசாலைமருந்துகளின்மை, தமக்கு நினைத்த நேரம் தலையில் விழும் குண்டுகள், கிழக்கில் அகதி முகாம்களில் வாழும் தமிழர் அரச படையினரால் காடைத்தனமாக துன்புறுத்தப்படல் போன்றன நாளாந்த வாழ்வாகிப் போய்விட்டன. இவ்வாறு சாதாரணங்களாய் போன அசாதாரணங்களில் கூட அவ்வப்போது அசாதாரணங்கள் நடைபெறுகின்றன. ராஜீவ் காந்தி கொலை, கொழும்பு ராணுவ அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, கண்ணி வெடியிலிறந்த
தத்தியூன்-916)
 

கருத்து)
எட்டு ராணுவத்திற்காக பழிவாங்க முற்பட்ட இலங்கை இராணுவம் கொக்கட்டிச் சோலையில் பாடசாலை மாணவிகள் மீது பலாத்காரத்தைப் பாவித்ததுடன் கிட்டத்தட்ட 250 பொதுமக்களை படுகொலை செய்தமை என பட்டியல் நீளுகிறது. தாக்குதல், எதிர்தாக்குதல், பழிவாங்குதல் எதுவாயினும் சரி இறப்பது என்னவோ ளம் மக்கள்தான். அகதி முகாம்களிலும், அது பாதுகாப்பில்லை என காடுகளிலும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒரு புறம் இவை பாதுகாப்பில்லை என அகதிகளாக இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தோர் இன்னொரு புறம். ஆனால் பாவிகள் போன இடம் பள்ளமும் திட்டியும் என்று, எமது மக்கள் தஞ்சம்கோரிச் சென்ற இடங்களிலும் சோதனைகளும், வேதனைகளும் தொடர்கின்றன.
குறிப்பாக இந்தியாவில் அகதிகள் அநுபவிக்கும் துன்பம் சொல்லொணாதது. எல்லாவற்றிலும் மோசமாக ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமு.க வின் பெருவெற்றியும் அங்கு அகதியாக வாழும் எமது மக்களை துன்புறுத்தத் தொடங்கியுள்ளது. தினசரி ஏராளமான ஈழத்தமிழர்கள் கைது செய்து சிறையிலடைக்கப் படுவதாக பத்திரிகைச் செய்திகள் சொல்லுகின்றன. "ஈழத்தமிழரைத் திருப்பி அனுப்புவோம்" என்ற ஜெயலலிதா தற்போது அப்பாவி அகதிகளைத் திருப்பி அனுப்பப்போவதில்லை என்று சொல்லியிருப்பது ஒரு தற்காலிக ஆறுதலே. அகர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவின் பின்னணியில், ஈழத்தையும், ஈழமக்களையும் எப்போதும் அருவருப்புடன் பார்க்கின்ற தமிழக "உயர்சாதிப் புத்திசீவிகள்" இருப்பது, அகதிகளாக வாழும் எமது மக்களுக்கும்சரி, எமது தேச விடுதலைக்கும்சரி நிரந்தர அபசகுனமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
இதைவிட கிழக்கு ஜேர்மனி மேற்கு ஜேர்மனியுடன் இனைந்தபின் மாறிவரும் நிலைமைகள், ஈழத்தமிழ் அகதிகளில் ஒரு சாராரை (88க்குப் பின் வந்தவர்களை என்கிறார்கள், இடையில் இலங்கை சென்று வந்தவர்களை என்கிறார்கள்) திருப்பி அனுப்பும் முடிவுக்கு அந்நாட்டைத் துாண்டியுள்ளன. அய்ரோப்பாவில் ஒரு நாட்டின் தீர்மானம் ஏனைய நாடுகளுக்கும் பரவக் கூடும்எனும் சந்தேகத்தை 1992 ற்குள் அய்ரோப்பாவைப் பொதுமைப் படுத்துதல் தொடர்பான நகர்வுகள் தருகின்றன.
தலைக்குமேல் வெள்ளம் வந்துவிட்ட இந்த நிலைமையிலாயினும் நாம் இலங்கை அரசை இலங்கையிலோ, சர்வதேச அரங்கிலோ பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்காது ஒற்றுமையாக எமது மக்களை அவல வாழ்விலிருந்து விடுவிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுவோமா?
தத்தியூன்-917)

Page 5
OdaibD
"பொதுவாக எமது கட்டுரைகள், சிறுகதைகள் எப்போதுமே சீதனத்தை பற்றியே திரும்பத் திரும்ப பேசுவதாக குறிப்பிடலாம். ஆனால் சீதனம் என்பது நிலைத்து நின்று தொடர்ந்து பெண்களை நசுக்கும் வரை அதற்கெதிரான தாக்குதல்களும் தவிர்க்க முடியதே. சிலவேளை இந்த வாதங்கள் கேட்டு கேட்டுப் புளித்துப் போன தாக அல்லது சலிப்பூட்டுவதாக சிலர் கூறலாம். சரி அப்பிடித்தான் வலியுறுத்திய பின்பாவது பிரச்சனை தீர்ந்தா? இல்லையெனும்போது இன்னும் புதிய புதிய வழி முறைகளில் தாக்குதல்களைத் தொடுப்பது தவிர்க்க முடியாததே. அடிமையின் சுதந்திரத்திற்கான அடுத்தடுத்த கோரிக்கைகள் எசமானுக்கு சலிப்பூட்டலாம். அதற்காக எசமானை மகிழ்விப்பதற்காக அடிமை அடிமைத்தனத்தை வாழ்த்தியா பாடமுடியும்?"
சீதனம் பற்றி ஒரு கருத்து
அநாமிகா
*ဂိမ္ဗိ མཛད་ ண்மையில் சீதனம் தொடர்பான கட்டுரையொன்றை படிக்க ဒို့.......ဂျိ சந்தர்ப்பம் கிடைத்தது. அக் கட்டுரையான து
' ک T 4 |மாப்பிள்ளையின் தாயாரே சீதனம் கேட்டு வாங்கும் போது
அதனை எவ்வாறு பெண்ணொடுக்கு
முறையெனலாம்? எனவும் சில குடும்பங்களில் பெண்களே சீதனத்தை வலியுறுத்தி வாங்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தது. அந்தக் கட்டுரை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என
பெண்ணொடுக்கு முறையில் பெண்களும் சம்பந்தப் படுகிறார்களே, சீதனத்தை மாப்பிள்ளையின் தாயே கேட்டு வாங்கும் போது அதனை பெண்ணொடுக்கு
தத்தியூன்-91(8)
 

[ ]á gamb[ ]
முறையென்று கூறலாமா? என்ற வாதங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முதலில் திருமனும் என்பது ஆண் பெண் ஆகியோருக்கிடையேயான மிக அந்நியோன்யமான உறவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஆண் பெண்களுக்கிடையே காணப்படும் காதல், மதிப்பு, நம்பிக்கை, பரஸ்பரம் புரிந்து கொள்ளல்போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் போதே அதன் உண்மையான அர்த்தத்ததைப் பெறும். பேரம் பேசி முன்பின் தெரியாதவர்களை பொருளாதாரக் காரணிகளால் இணைத்து விட்டு அந்த உறவில் புனிதத்தைத் தேடுவது வேடிக்கையானதே. இரண்டு மனிதர்களிடையே உறவு ஏற்படுத்தப்படும் போது பெண் சமத்துவமாக நடத்தப்படவில்லை. பெண்ணிடம் மாத்திரம் பணம், சீதனம் கேட்கப்படுகிறது என்பதே இங்கு பிரச்சனையாகிறது. மற்றெல்லா நிபந்தனைகளும் சமமாக இருக்க இந்த உறவைப் பொறுத்தவரையில் பெண் பணம் கொடுக்க ஆண் அதனைப் பெற்றுக் கொள்வது அடிப்படையானது, இதில்தான் பெண்ணொடுக்கு முறை தங்கியுள்ளது. பெண்ணின் தந்தையாகிய ஆண் பணத்தைக் கொடுப்பதோ, மாப்பிள்ளையின் தாயாகிய பெண் பணத்தைக் கேட்பதோ இந்த அசமத்துவத்தினை ஒடுக்குமுறையை மூடிமறைக்க அல்லது நியாயப் படுத்த பயன்படுத்தப் படுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறே மாப்பிள்ளை தான் பெற்ற பணத்தை தனது தங்கைக்கு மீண்டும் சீதனமாகக் கொடுப்பது. போன்ற எந்த நியாயமும் இந்த உறவிலுள்ள அசமத்துவத்தை அநீதியை முடி மறைக்க முடியாது.
சீதனம் தொடர்பாக தமிழ் சமுகத்தின் அணுகுமுறையைப் பார்த்தால் ஏதோ திருமணம் என்பது பெண்களுக்கு மட்டும் அவசியப்படுவது போலவும் பெண்களின் இந்த அத்தியாவசிய தேவையை ஆண்கள் மனமிரங்கிச் செய்வதால் இந்த சன்மானம் வழங்கப்படுவது போலவும் காணப்படுகிறது. எமது சமுதாயத்தில் காணப்படும் பெண்ணொடுக்கு முறை ஏற்கனவே பெண்ணை ஒரு ஆணைச் சார்ந்து நிற்கும்படி வைத்துள்ளது என்பது உண்மையே என்றபோதிலும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் திருமணம் என்பது அத்தியாவசிய தேவையாகும் ஒரு சமுதாயம் நிலைப்பதில் அதன் மறு உற்பத்தி இன்றியமையாதது. இந்த வகையில் திருமணம் என்பது சமுதாயத்தின் தேவையுமாகும்.
பொதுவாக திருமணத்தின் மூலம் ஆணுக்கு பல அனுகூலங்கள் கிடைக்கின்றன.
தக்தி-ஆன்-919)

Page 6
சீதனம்
1. அவனது உளவியல், பாலியல் தேவைகள் திருப்திப் படுத்தப்படுகிறது.
2. அவனது சந்ததிப் பெருக்க நோக்கம் நிறைவு பெறுகிறது.
3. வீட்டு வேலைகள் செய்வதற்கு ஒரு ஆள் கிடைக்கிறது.
பெண்ணிற்கு திருமணத்தின் போது இந்த அனுகூலங்கள் கிடைக்காமல் போவது மட்டுமின்றி ஆணுக்கு இவ்வாறான அனுகூலங்களை ஏற்படுத்துவதற்கு பல தியாகங்களையும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்களைப் பொறுத்தளவில்:
1. பாலியலானது வெறுமனே ஆணை திருப்திப்டுத்துவதாகக் குறுகி விடுகிறது.
2. கர்ப்பத்தின் தேவையை, காலத்தை, பிள்ளை வளர்ப்பு முறையினை தீர்மானிப்பது ஆணாக இருக்கிறான். பிள்ளை வளர்ப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் அவன் பங்கு கொள்வதில்லை. இதனால் பிள்ளை வளர்ப்புக் கூட பெண்களுக்கு சுமையாகி விடுகிறது.
3. வீட்டு வேலைகள் பெண்களுக்கே சுமையாகி விடுகிறது. இவற்றில் ஆண் பங்களிப்பு இல்லை. இந்நிலையில் திருமணத்தால் இலாபம் அடையவன் ஆனே.
ஆணாதிக் சமுதாயத்தில் பெண் நட்டமடைவதாக கூறினால் மிகையாகாது. ஆகவே திருமணம் தொடர்பாக ஏதாவது பணம் கொடுப்பனவுகள் நடை பெறுவதாயின் அதனை ஆண் பெண்ணிற்கு கொடுக்கவேண்டும் என்பதே தர்க்க ரீதியாக இருக்க முடியும். ஆனால் இங்கு மாறாக பெண்ணே பணத்தையும் சொத்தையும் கொடுக்க வேண்டியுள்ளது. பணத்தைக் கொடுத்து அடிமைத்தனத்தை விலைக்கு வாங்கும் மடைமை திருமணத்தில் மட்டும் தான் நிலவுகிறது. உலகிலுள்ள ஏனைய அடிமைத்தன உறவுகள் அனைத்துமே பணத்தைப் பெற்றுக் கொண்டு அடிமைப் படுவதாகவே உள்ளன.
பாலுறவு, சேவைகள், பிள்ளைபெறல் போன்றவற்றை தனித்தனியே ஒரு தடவை மட்டும் வழங்குபவர்களுக்கு பணத்தைக் கொடுக்க ஆண் தயாராக இருக்கிறான். விபச்சாரி, சாப்பாடுக்கடை, சலவ்ைக்கடை, இரவல்தாய் (surogate
தக்தியூன்-91(10)

Dசீதனம்
mother) போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் பணம் இந்த வகைப்பட்டதே. ஆனால் இவை அனைத்தையும் ஒருங்கே வாழ்நாள் முழுவதும் கொடுக்கத் தயாராக இருக்கும் பெண்ணிடம் பணம் கேட்பது ஒரு அநியாயமான பரிதாபத்திற்குரிய முரண்பாடேயாகும்.
சீதனத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்
1. பெண்களைப் பற்றிய தாழ்வான சமுக மதிப்பீட்டின் வெளிப்பாடே இது இந்த தாழ்வான மதிப்பீட்டை, சீதனத்தைக் கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் சமுகமும் அங்கீகரிக்கிறது.
2. இது அநீதியானது; பெண்ணையும் அவளது பெற்றோரையும், உடன்பிறப்புக்களையும்
துன்புறுத்துவது. பல சந்தர்ப்பங்களில் பெண்ணின் திருமணமே நின்று போக அல்லது பொருந்தாத திருமணங்களுக்கு (வயோதிபரை, இரண்டாம்தாரம்) இது காரணமாகி விடுகிறது. எனவே பொருளாதாரம் என்ற வகையில் சீதனம் என்பது மத்திய தர வர்க்கப் பெண்களின் பிரச்சனையே ஆகும். ஆனால் சமூக மதிப்பீடு என்ற வகையில் இது அனைத்துப் பெண்களின் பிரச்சனையாகிறது.
சீதனத்தை எதிர்ப்பவர்கள் சீதனம் கொடுப்பதில் எழும் பொருளாதாரப் பிரச்சனைகள் எனும் சொந்த நலன்களைப் பற்றி அக்கறைப் படுமளவிற்கு பெண்கள் பற்றிய தாழ்வான மதிப்பீட்டின் சின்னமாக இந்த சீதனம் விளங்குவதைப் கவனிப்பதேயில்லை. தான் சீதனம் கொடுக்காவிட்டால் போதுமென்றோ அல்லது தனது சகோதரன் வாங்கினால் பரவாயில்லை என்றோ கருதக் கூடாது. எந்த ஒரு பெண் சீதனம் கொடுத்தாலும் அது சமுகத்திலுள்ள பெண்கள் அனைவரையும் மறைமுகாகப் பாதிக்கவே செய்யும் சீதனம் கொடுப்பதன் மூலம் பெண் தொடர்பான சமூகத்தின் தாழ்வான மதிப்பீடு நிலைக்க ஒரு பெண் உதவுகிறாள். இந்த தரக்குறைவான சமுக மதிப்பீடானது அனைத்துப் பெண்களையும் பல்வேறு வழிகளில் பாதிக்கவே செய்யும். உதாரணமாக மாப்பிள்ளையின் தாய் சீதனத்தால் நேரடியாகப் பாதிக்கப்படாமல் போகலாம். ஆனால் இதனால் பலப்படுத்தப்படும் பெண் பற்றிய தாழ்வான மதிப்பீடானது விதவைன்ேற அடிப்படையிலும், பெண் என்ற அடிப்படையில் மற்றும் பல வகைகளிலும் பாதிக்கவே செய்யும். எனவே
glid-sir-91 (11)

Page 7
Πέρατιώ[ ]
சீதனம் என்பது திருமணமாகப் போகும் ஒரு பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல; திருமணமாகி விட்ட பெண்கள், மாப்பிள்ளையின் தயார் உட்பட அனைத்துப் பெண்களினதும் பிரச்சனையாகும்.
திருமணத்தின் போது சீதனம் வாங்குவதைக் குறை கூறும் பல பெண்கள் தமது திருமணத்தின் போது வர்க்க சமுதாயத்தின் சாதி, மதம், பொருளாதார, சமுக அந்தஸ்து, கல்வி போன்ற சமத்துவமற்ற மதிப்பீடுகளை அங்கீகரிப்பது கவனிக்கத் தக்கது. இங்கு பெண்ணின் போராட்டமானது குறுகிய சுயநல கண்ணோட்டத்திலிருந்து பிறக்கிறது. இந்த வர்க்க. ஆணாதிக்க சமுதாயத்தின் ஏனைய சமத்துவமற்ற மதிப்பீடுகளைத் தகர்க்காமல், பெண் தொடர்பான மதிப்பீட்டை மட்டும் மாற்றி விடமுடியாது. திருமணத்தின் போது ஒரு பெண் தன்னைப் புரிந்துகொண்டு, தனது சுயத்தை அங்கீகரித்து ஒத்துழைத்து வாழக் கூடியவனை தேட வேண்டுமே தவிர ஏனைய சமத்துவமற்ற மதிப்பீடுகளை அங்கீகரித்தால் அதன் தவிர்க்க முடியாத விளைவாக பெண் தொடர்பான ஏனைய மதிப்பீடுகனையும், சீதனத்தையும் அங்கீகரித்தாக வேண்டியேற்படும்.
முன்பு பெண் பெரும்பாலும் படிக்காமல் இருந்தாள். ஆண் படித்தவனாக இருந்தான். அப்போது ஆணைப் படிக்க வைத்த செலவு என சீதனத்திற்கு நியாயம் கூறப்பட்டது. இப்போது பெண்களும் படித்து முன்னேறி தொழில் புரியும் நிலையிலும் சீதனம் தொடரவே செய்கிறது. பெண் அதிகம் படிக்கப் படிக்க அவளது 'அந்தஸ்திற்கு ஏற்ற உயர் 'அந்தஸ்து" உள்ள மாப்பிள்ளை தேட வேண்டியுள்ளது. மாப்பிள்ளையின் அந்தஸ்து கூடக் கூட சீதனத்தின் அளவு கூடும். இங்கு பெண்ணின் அந்தஸ்து என்பது கருத்தில் எடுக்கப்படுவதே கிடையாது. பெண்ணின் படிப்பு அவளது உழைப்பு போன்றன சீதனத்தை மாற்றி அமைத்து விடவில்லை. பெற்றோரைப் பொறுத்தவரை பெண்ணைப் படிக்க வைப்பது இரட்டிப்பான செலவீனமாகும். இந்த வகையில் சீதனம் என்பது பெண்களின் கல்வியையே மறைமுகமாகப் பாதிக்க கூடியது.
இன்று ஆண்கள், பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கும் நிலையிலும் சீதனத்தில் இது அதிக மாற்றத்தை ஏற்படுத்தாதது கவனிக்கத்தக்கது.தமிழ்
தத்தியூன்-91(12)

சீதனம்)
மத்திய தர வர்க்க குடும்பமொன்றில் வாழ்க்கை முறை சீதனத்தால் பெரிதும் பாதிப்படைகிறது. கடுமையான உழைப்பில் ஈடுபடும் இவர்கள் மிக சிக்கனமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். தமது அத்தியாவசிய தேவையைத் தவிர்ந்த ஏனைய பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற மகிழ்வூட்டும் செயற்பாடுகளைத் தவிர்த்து பணத்தை சேமித்து பிள்ளைகளின் கல்விக்காகவும்,சீதனத்திற்காகவுமே செலவிடுகிறார்கள். சீதனத்தைப் பெற்றவன் கூட அதனை அநுபவிப்பதில்லை. அவனது அடுத்த தலைமுறையின் (அவனது பிள்ளைகள்) கல்வி, சீதனத் தேவைகளுக்காக கடின உழைப்பு சிக்கன வாழ்வு தொடர்கிறது. இப்படியாக தலைமுறை தலைமுறையாக தொடரும் நச்சுச் சுழலாக மனித வாழ்வானது அதன் அர்த்தத்தை இழந்து நிற்கிறது. சீதனம் என்பதை முடிவுக்கு கொண்டு வராதவரை தமிட் சமுதாயம் இந்த நச்சுச் சுழலிருந்து விடுபடவே முடியாது.
சீதனத்திற்கு எதிராகப் போராடுவது எப்படி?
சீதனம் கொடுத்து ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது என்பது தனது அடிமைத்தனத்திற்கு தானே துணைபோகும் செயல் என்பதால் முதலில்
பெண்கள் சீதனம் கொடுத்து திருமணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
விழிப்புணர்வு பெற்ற ஒவ்வொரு ஆண் பெண்ணும் தமது திருமணத்தில் சீதனத்தைக் கொடுப்பதையோ வாங்குவதையோ மறுப்பதுடன், தமது நெருங்கிய உறவினர் நண்பர் திருமணத்திலும் சீதனம் பரிமாறுவதைத் தீவிரமாக எதிர்ப்பதுடன் இப்படிப்பட்ட திருமணங்களைப் பகிஷ்கரிபபது என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
ஆண்களும் பெண்களும் சமுதாயத்தில் சம எண்ணிக்கையில் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணும் சீதனம் கொடுக்க மறுக்கத் தயாராகும் போது ஒவ்வொரு ஆணுக்கும் பெண் கிடைக்காமல் போவதால் இந்தப் பகிஸ்கரிப்பு முறை அதிக தாக்கத்தை விளைவிக்கக் கூடியது. ஆனால் இந்த சிறிய நடவடிக்கையை எடுப்பது இலகுவானதல்ல. ஆரம்பத்தில் பெண்களே அவர்களுக்கு ஏதிராகப் போட்டியிட்டு இதனை மீறவே செய்வார்கள்.
தத்தியூன்-91(13)

Page 8
Dசீதனம்D
எந்தவொரு போராட்டத்திலும் ஆரம்பத்தில் இப்படிப்பட்ட ஒற்றுமையின்மை, எதிரியின் சித்தாந்தத்திற்குப் பலியாகி போராட்டத்தை காட்டிக் கொடுத்தல் நிகழவே செய்யும். ஆனால் அமைப்புரீதியான தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமும், விரிவான பிரச்சாரம், விழிப்பூட்டும் நடவடிக்கைகள் மூலமும் ஆணாதிக்க சித்தாந்தத்தைப் பலவீனப்படுத்த, பெண்களை அமைப்பாக்க இந்தப் போராட்டம் பலம் பெறும். சீதனம் போன்ற பெண் ஒடுக்குமுறைகள் வெறுமனே பெண்களின் போராட்டத்தால் மட்டும் ஒழித்துக் கட்டப்படக் கூடியதா? வெறும் சீர்திருத்தப் போராட்டங்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு முடிவு கட்டிவிடுமா? என்பது போன்ற கேள்விகள் எழலாம். பொதுவாக சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகள் பலவும் ஒழித்துக் கட்டப் படுவதுடன் பெண்ணொடுக்கு முறையின் முடிவு சார்ந்துள்ளது என்பது உண்மையே. ஆயினும் பெண்ணொடுக்கு முறையின் குறிப்பான வடிவங்கள் இனங் காணப்பட்டு அவற்றிற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப் படுவதானது உடனடியான பெண்ணொடுக்கு முறையின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும் சமூக மாற்றத்திற்கான முயற்சியில் பெண்களை ஈடுபடுத்தவும் சமுக மாற்றத்தில் பெண் விடுதலையைப் பூரணப்படுத்தவும் அவசியமானது. பெண்ணொடுக்கு முறைக்கு எதிராக குறிப்பான போராட்டங்கள் இல்லாதபோது ஏற்படும் சமூக மாற்றம் கூட பெண்விடுதலையைப் பூரணப்படுத்தாமல் போய்விடும்
மாமியார் இந்தப் பெண்ணொடுக்கு முறையில் சம்பந்தப்படுவது பற்றி
மாமியார் ஒரு பெண்ணான போதும் சமுதாயத்தில் காலாதிகாலமாக பலம் பெற்று விளங்கும் ஆணாதிக்க சித்தாந்தத்திற்குப் பலியாகியுள்ளார். இதனால் பெண் என்ற வகையில் இந்த அநீதியை எதிர்ப்பதற்குப் பதிலாக தனது சொந்த நலன்களை முன்னிட்டும், சித்தாந்தத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட நிலையிலும் ஆணாதிக்க நிலைப்பாட்டையே மேற் கொள்கிறார். இது போலி உணர்வு எனப்படும். எந்தவொரு ஒடுக்குமுறையிலும் ஒடுக்கப்படுபவர்களில் ஒரு பகுதியினர் தமது நலன்களைச் சரியாக இனங்கண்டு கொள்ளாமல் ஒடுக்கப்படுபவரின் நிலைப்பாட்டை ஆதரிப்பது என்பது எல்லா வகையான ஒடுக்கு முறையிலும் போராட்டம் பலம் பெறாத வரையில் காணப்படுவது
தத்தியூன்-91(14)

Dசீதனம்
இயல்பானதே. சமுதாயத்தில் பலம் பெற்ற குழு தன்னிடமுள்ள அனைத்து சாதனங்களையும் பயன்படுத்தி தன்னால் ஒடுக்கப்படுபவர்களையும் கூட தனது சித்தாந்தத்திற்கு அடிமைப்படுத்திக் கொள்வது இங்கு மட்டும் நிகழ்வதல்ல. இன முரண்பாடு, வர்க்க முரண்பாடு, காலனி ஆதிக்கம், சாதியம் போன்ற பல ஒடுக்கு முறைகளிலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். சில குடும் பங்களில் திருமணமாகும் பெண்களே சீதனத்தை வலியுறுத்துகிறார்கள். ‘அந்தஸ்து" உள்ள மாப்பிள்ளையை அடைவதற்கு உதவும் என்பதாலும், பெற்றோரின் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்யும் ஒரு வடிவம் இது என்பதாலும் இப்படி செய்கிறார்கள். ஆணாதிக்க சமுதாயத்திற்குப் பலியாகிப் போனவர்கள் இவர்களே.
பொதுவாக எமது கட்டுரைகள், சிறுகதைகள் எப்போதுமே சீதனத்தை பற்றியே திரும்பத் திரும்ப பேசுவதாக குறிப்பிடலாம். ஆனால் சீதனம் என்பது நிலைத்து நின்று தொடரந்து பெண்களை நசுக்கும் வரை அதற்கெதிரான தாக்குதல்களும் தவிர்க்க முடியாதே. சிலவேளை இந்த வாதங்கள் கேட்டு கேட்டுப் புளித்துப் போன தாக அல்லது சலிப்பூட்டுவதாக சிலர் கூறலாம். சரி அப்பிடித்தான் வலியுறுத்திய பின்பாவது பிரச்சனை தீர்ந்ததா? இல்லையெனும்போது இன்னும் புதிய புதிய வழிமுறைகளில் தாக்குதல்களைத் தொடுப்பது தவிர்க்க முடியாததே. அடிமையின் சுதந்திரத்திற்கான அடுத்தடுத்த கோரிக்கைகள் எசமானுக்கு சலிப்பூட்டலாம். அதற்காக எசமானை மகிழ்விப்பதற்காக அடிமை அடிமைத்தனத்தை வாழ்த்தியா பாடமுடியும்? எசமானை மகிழ்விக்காத அடிமையின் சுதந்திர கோசம் அவனுக்கு சலிப்பூட்டுவது மட்டுமின்றி சிலவேளையில் அச்சுறுத்தவும் செய்கிறது. அதற்காக யாரும் இரக்கப்பட முடியாது. இன்னும் ஈவிரக்கமற்ற முறையில் பலமாகத் தாக்க வேண்டும். காலகாலமாக வந்த கவிஞர்கள் முதல் இன்றைய "குடும்ப' பத்திரிகைகள் வரை பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக வர்ணித்து வெவ்வேறு காட்சிப் பொருளாய் காட்டியும் வருகின்றன. இன்றுவரை இது யாருக்கும் சலிப்பூட்டவில்லை. ஆனால் பெண்களின் விடுதலைக்கான கோசங்கள் மட்டும் சலித்து விட்டதாம் எனவே உண்மையில் பிரச்சனை சலிப்பு பற்றியதல்ல. ஆணாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்தக் கோசங்களை அடக்கிவிட முயலும் தந்திரமே இது எனலாம்
தத்தியூன்-91(15)

Page 9
கவிதைD
பணியும் வெப்பமும் பெண்ணாக காலங்களுக்கேற்ப PCD5
DMT stupomrsió
வந்திடும் பொழுதுகளில் s& 5தி
விரிந்து நெளிந்து செல்லும் பாதையோரங்களிலும் விரைந்து செல்லும் பஸ் வண்டியிலும் மலர்களை விரும்பும் பூஞ்சோலைகளிலும்
கடந்து செல்கையிலும் தரித்து நிற்கையிலும் காட்சிப் பொருளென முகத்திலிருந்து பாதங்கள் வரைக்கும் என்னைப் பல கண்கள் அளக்கும் அகதியாதலால். ஆடையிலிருந்து உறுப்புகள் வரைக்கும் பார்வைகளால் விசாரிக்கப்பட்டு வயோதிபரிலிருந்து இளைஞர் வரைக்கும் பஸ் கண்ணாடிகளில் கண்களைச் சொருகி பிராயசத்துடன் என்மேல் வீசி காமப்பார்வையை என் மேல் பதிப்பர் பெண்ணாதலால்.
தேசங்கள் தாண்டினும் வாழ்நிலை மாறினும் அகதியாகவும், பெண்ணாகவும் என்னைக் கண்கள் நோக்கிய வண்ணமே
பிரியதர்சினி
தத்தியூன்-91(16)
 

Dமரபும் பெண்களும்D
நமது இலக்கிய மரபும் பெண்ணடிமைத்தனமும்
சிவசேகரம்
ண்ணின் மேன்மையையும் பெருமையையும் நமது பண்டைய மரபு பேணி வந்தது என்று நாம் இடைக்கிடை பாசாங்கு செய்வதுண்டு. நமது சடங்கு சம்பிரதாயங்களாயினும் புராண இதிகாசங்களாயினுங் காவியங்களாயினும் பல ஆயிரம் வருட பெண்ணடிமைத்தனத்தின் பதிவுகளே. பெண்விடுதலை தொடர்பான பிரச்சனைகள் எழும்போது நம்முட் சிலருக்கு (ஆண்களுக்கு மட்டுமல்ல மரபு பற்றிய இந்த உண்மையை அனுமதிக்க மனம் வருவதில்லை. சடங்கு சம்பிரதாயங்களுக்கு நடைமுறை வியாக்கியானங்கள் தரும்போதும், புராண இதிகாசங்களுக்கு தத்துவ விளக்கங்களை முன் வைக்கும் போதும், நமது மரபில் பெண்கள் முதன்மைப் படுத்தப்பட்டதாகக் கூறக்கூடிய புறநடையான உதாரணங்களை முன்வைக்கும் போதும், பொதுவான விதிகளை மறந்து சமுதாய நடைமுறைக்கும் இலக்கியத்திற்குமுள்ள தொடர்பைத் திரித்துப் பேச இவர்கள் தயங்குவதில்லை. இவ்வாறான போக்கை சாதி ஒடுக்குமுறை தொடர்பாகவும் நாம் கண்டிருக்கிறோம். வரலாற்றை விளங்கிக் கொள்வதன் அவசியம் நமக்குண்டு. நடந்ததை மாற்றும் வலிமை எமக்கில்லை என்பதனால் வரலாற்றை நியாயப்படுத்தும் நிர்ப்பந்தம் நமக்கில்லை. நமது இலக்கிய மரபு ஆணாதிக்கத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. அவ்வை போன்று நாலைந்து பெண்புலவர்கள் இருந்ததால் ஆணாதிக்கம் இல்லாது போய்விடவுமில்லை; அந்தப் பெண் புலவர்கள் பெண்ணுரிமை பற்றிக் குரல் எழுப்பினோருமல்லர். நெடுங்காலமாக ஆணாதிக்கம் வடிவத்தில் வேறுபட்டுக் காணப்பட்டதே யொழிய எந்த விடத்தும் ப்ெ ண் ணுரிமை தலையுயர்த்த அனுமதிக்கப்பட்டதில்லை.
தத்தியூன்-91(17)

Page 10
Dமரபும் பெண்களும்
சங்க இலக்கியங்கள் கூறும் எளிய சமுதாய அமைப்புகளில் இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற் போன்று குருரமான பெண்ணடிமைத்தனம் இல்லாவிடினும் ஆணை முதன்மைப்படுத்தியே சகல ஒழுக்க நெறிகளுஞ் சமுதாய விதிகளும் அமைந்திருந்தன. நிலமானிய சமுதாயம் நிலைபெறுவதற்கு முன்னிருந்த ஒரு எளிய சமுதாய அமைப்பில் எவ்வளவு துாரம் ஆணாதிக்கம் நிலைபெற முடியுமோ அவ்வளவு துாரத்திற்குத் தமிழ் சமுதாயத்திலும் நிலை பெற்றிருந்தது. தமிழ்ச் சமுதாயத்தின் பிற்கால விருத்தி வடநாட்டின் தொடர்புடன் நிகழ்ந்தது. பெண்ணடிமைத்தனத்தின் வருகையை ஆரியக் கலாச்சாரத்தின் விளைவென்று தனிமைப்படுத்தி விட முடியாது. தமிட் சமுதாயம் தனக்குள் விருத்தியடைந்து வந்த சமுதாய அமைப்புக்களையும் உறவுகளையும் ஸ்திரப்படுத்திக் கொள்ள அயற் கலாச்சாரங்களின்று பெற்ற சிந்தனைகளைப் பயன்படுத்தியதே யன்றித் தமிழர் மீது அயலார் இந்த ஒடுக்குமுறைகளைத் திணிக்கவில்லை. தமிழர் சமுதாயத்தின் பொருளாதார விருத்தி சிக்கலான சுரண்டல் முறையொன்றை எவ்வாறு நடாத்தியிருக்க முடியும்?
சாதி, பெண்ணடிமை போன்ற விடயங்களில் ஆரியர் மீது பழியைச் சுமத்துவது தப்பியோடும் ஒரு முயற்சியே. பெளத்தம் சமணம் இந்துமதம் என்பவற்றுடன் வந்த விழுமியங்களை தமிழ் சமுதாயம் தனக் கேற்றவாறு உள்வாங்கிக் கொண்டது. சாதிமுறைக்கும் பெண்ணடிமைத் தனத்திற்கும் தமிழ் சமுதாயத்தினுள் தேவை இருந்திராவிடின் அந்த அமைப்புகள் தமிழ் சமுதாயத்தினுள் விருத்தி பெற்றிருக்க முடியாது. இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பிற் தெரியும் சமுதாய விழுமியங்கள் தமிழ் சமுதாயத்தின் வரலாற்றின் விருத்தியின் பாற்பட்டவை. இதிலுள்ள ஆணாதிக்கத்தை அடையாளங் காண்பதில் அதிக சிரமமில்லை யெனினும் நமது இலக்கிய மரபினுட் காணப்படும் ஆணாதிக்கத்தின் கூறுகளை மூடிமறைக்கும் முயற்சிகளையிட்டு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
நிலமான்ய சமுதாயத்தின் வர்க்கப் பிரிவுகளும் சுரண்டல் முறைகளும் உறுதியாக நிலை பெற்ற சூழ்நிலையில் பெண்ணுடைய சமுதாய அந்தஸ்து மேலும் ஒருபடி கீழிறங்கியது. சங்க இலக்கியங்களில் காணக்கூடிய காதல்
gig-ir-91 (18)

மரபும் பெண்களும்()
உணர்வின் வெளிப்பாட்டிற்கும் பெண்மை பற்றிய வரைவிலக்கணங்கள் தளையிட்டன. தமிழ்சமுதாயத்தின் பொற்காலம் என்று கொண்டாடப்படும் சோழ சாம்ராச்சியத்தின் காலம் நிலமான்ய சமுதாயத்தின் உச்ச நிலையாகும். சாதி அடிப்படையிலான வர்க்க சுரண்டலும் பெண்ணடிமை முறையும் இக்காலத்தில் மேலும் இறுக்கமடைந்தன. இதற்குப் பிற்பட்ட காலத்தில் தமிட் பேரரசுகள் வலுவிழந்து சிதைந்து போன பின்னரும் சாதி அமைப்பும் பெண்ணடிமை முறையும் அவற்றின் இறுகிப்போன வடிவில் தொடர்ந்தன. நில மான்ய சமுதாய விழுமியங்களே அச் சமுதாயம் இற்று விழுந்து போகும் நிலையிலும் நமது சடங்கு சம்பிரதாய மூலமும், மரபு சார்ந்த இலக்கிய சிந்தனைகளுடும் தொடர்கின்றன. தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் கலாச்சாரத்தின் மேம்பாடு என்பவற்றைப் பேணுவதாகக் கருதிச் செய்யப்படும் பலகாரியங்கள் மொழி இலக்கியம் சமுதாய வழக்குகள் போன்றவற்றின் இயங்கியற் தன்மையை நிராகரிப்பன. இவை மரித்து விறைத்துப் போன ஒரு மரபின் சில கூறுகளின் யாந்தீரிகமான பின்பற்றல்களே பன்றி வேறல்ல.
தமிழ் கலைவடிவங்களுக்குப் புத்துயிருட்டும் முயற்சிகள் இன்று பரவலான அளவில் மேற்கொள்ளப் படுகின்றன. முக்கியமாக அய்ரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற தமிழர் தஞ்சம் புகுந்த பிரதேசங்களிலும் வாழும் நடுத்தர வர்க்கத்தின் பொருள் வசதிகள் இசை நடனம் போன்றவற்றைக் கற்பிக்கவும் ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இக் கலைவடிவங்கள் சமகால சமுதாயத்துடன் ஒட்டி விருத்தி செய்யப் படுவதற்கான சாடை எதுவும் இல்லை. மரபு கூறும் கதைகளையே கூறி மரபின் சமுதாய விழுமியங்களையே வலியுறுத்தும் போக்கை அவதானிக்க எவர்க்கும் கூரிய விமர்சன நோக்கு அவசியமில்லை. இக் கதைளிலும் சமுதாய விழுமியங்களிலும் பொதிந்துள்ள பெண்ணடிமைச் சிந்தனைகள் பற்றி நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். மரபின் படிமங்களின் று பெண்ணுரிமையையும் பெண்களின் எழுச்சியையும் குறிக்கும் புதிய படிமங்களை நம்மால் விருத்தி செய்ய முடியாதா? ஆரியக் கலாச்சாரத்தின் பாதிப்பை நிராகரித்துத் தமிழர் தொன்மையைக் கூறும் சங்க இலக்கியங்களையும் சங்கம் மருவிய இலக்கியங்களையும் தழுவித் தமிழரின் புதிய கலைவடிவங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்துவோர் உண்மையிற்
தத்தி-ஆன்-91(19)

Page 11
Dமரபும் பெண்களும்()
பெண்ணுரிமையின் சார்பாகக் குரலெழுப்புவோர் அல்லர் என்பதை இங்கு நினைவூட்டுவது தகும். தமிழ் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பரிமாணங்களை நாம் அரைகுறையாக அறிந்துள்ள ஒரு தொன்மைக்குள் அடைத்துவிட முடியாது. பெண்ணுரிமையின் படிமம் சங்க இலக்கியத்தின் வீர மறத்தியை விட விசாலமானது.
இன்றும் கண்ணகியைப் பெண்ணுரிமையின் படிமமாகக் காட்டுவோர் உள்ளனர். கண்ணகியின் மேன்மை கற்பு பற்றியதும் ஒரு ஆணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக எழுந்த பெண்ணின் தர்மாவேசம் பற்றியதுமாகும். அதே பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிப் பொங்கி எழுந்திருந்தால் அது பெண்ணுரிமை பற்றிய கதையாக இருந்திருக்கும். ஆணாதிக்க சமுதாயத்தின் விழுமியங்களை ஏற்று ஆணாதிக் முறைசார்ந்த தருமத்தையும் நியாயத்தையும் நிலைநாட்டப் போரிட்ட பெண்ணைப் பெண்ணுரிமையின் படிமமாகக் கொள்வது பொருந்தாது. இது நியாயம் கோரிக் குரல் எழுப்பிய கண்ணகியின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடாது ஆயினும் கண்ணகியின் முக்கியத்துவத்தை ஒரு எல்லைக்கு அப்பால் விஸ்தரிக்க முடியாது என்பதை இங்கு வலியுறுத்த வேண்டியுள்ளது.
பத்தினி, பதிவிரதை என்ற பெயரில் நியாயம் மறுக்கப்பட்ட பெண்கள், தமக்கு மறுக்கப்பட்ட மனித உரிமைகளை மறந்து, அந்த உரிமையற்ற நிலையையே தருமமென்று கொண்டாடுமாறு வலியுறுத்தும் மரபின் அநீதியை மட்டுமின்றிச், சபிக்கப்பட்டு இன்றுவரை ஒவ்வொரு அம்மி மிதிப்பிலும் அவமதிக்கப்படும் அகலிகைக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் நாம் கேள்விக்குட் படுத்தவேண்டும். அகலிகைக்கு இடப்பட்ட சாபம் பெண்களின் பாலுணர்வின் மறுப்பு. மேனகைக்கு இடப்பட்ட சாபம் பாலுறவைக் குற்ற உணர்வுடன் நோக்கிக் குற்றத்தைப் பெண்மீது சுமத்தும் முயற்சி. மரபுவழி வந்த இக் கதைகள், தம் நோக்கத்திற்கு முரணாக அவற்றின் எதிர் மறைகளையும் இன்று துாண்டி விடுகிறன.
ஏகலைவனுக்கு துரோணர் இழைத்தது முழு அநீதி என்ற நோக்கில் பாரதக் கதை கூறப்படவில்லை. ஆயினும் அந்த அநியாயத்தையே சமகாலத்து வியாக்கியானங்கள் அதிகம் வலியுறுத்துகின்றன. இவ்வாறான நியாயஞ்
நத்தியூன்-9120)

Dமரபும் பெண்களும்
சார்ந்த பார்வை அகலிகை மேனகை போன்ற சபிக்கப்பட்ட பெண்கள் மீதும் காட்டப்பட வேண்டும். விமர்சனங்களும் புதிய கலை ஆக்கங்களும் அறஞ்சார்ந்த புதிய வினாக்களை எழுப்ப வேண்டும் . இவை எவ்வாறு அமைய வேண்டும் என்று விதி வகுக்கவோ வரையறுக்கவோ முடியாது. ஆயினும் பலவாறான சாத்தியப்பாடுகள் இன்றைய படைப்பாளிகட்கு
உள்ளன.
உதாரணமாக பீற்றர் புறுக்கின் மகாபாரதத்தில், பாஞ்சாலியின் பாத்திரம் மல்லிகா சாராபாய் அவர்களால் சித்திரிக்கப்பட்ட விதம் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். தனக்கென்ற ஒரு சுயாதீனமான மனமும் தன்மானமும் சமத்துவ உணர்வுடைய ஒரு பெண்ணாகத் தோன்றும் அந்தப் பாஞ்சாலி மரபின்று வேறுபட்ட ஒரு படிமம் இந்தச் சித்தரிப்புப் பற்றிய ஆட்சேபணைகள் எதிர்பார்க்க வேண்டிய திசைகளின்று வந்தன. பெண்ணுரிமை பற்றிய மரபின் நிலைப்பாட்டை மரபின் மூலமே எதிர்த்துப் போரிடுவது பலவிதமான எதிர்ப்புக்களையும் சந்திக்கும் நம் முன்னுள்ள பணி மகத்தானது எனவே எதிர்ப்புக்களும் பலமானவையாகவே இருக்கும்.
எவ்வாறாயினும் மரபின் விழுமியங்களை மரபின் படிமங்களுடு புதிய கலை ஆக்கங்களிற் கேள்விக்குட் படுத்துதன் மூலம் சமுதாய நீதிக்கான போராட்டம் மட்டுமின்றி நமது கலாச்சாரமும் செழுமை பெறும் என எதிர்பார்க்கலாம்
பெண்கள் சந்திப்பு மலர் 1991
cslood 5 DM வெளியீடு பெண்கள் சந்திப்புக் குழு
QSML سے جٹ *
Pennkal Chanthippu, Fraum Treffen
nformation Zentrum Dritte Welt
Overwegstr. 31, 4690 Herne 1, GjMANY.
தத்தியூன்-91(21)

Page 12
ascídas
Ο
- حبیبیسی تحت حS "
உன்னோடு O. O.
இயற்கையே உன்னோடு எப்போதும் கைகுலுக்கிக் கொள்ளவே விரும்புகிறேன்
ஆறுகள்
நதிகள் எல்லையின்றி இருப்பதைப்போல எப்போதும்
எல்லையில்லாது.
இந்த அண்ட வான் வெளியில்
ஏதோ செய்தியாய்
ஒளி சிமிட்டும்
ஒற்றை நட்சத்திரமாய் எல்லையில்லாது செய்தி சொல்லி.
காலங்கள் தங்களுக்குள் கைகுலுக்கி கொள்கையில் எங்கள்
மத்தியில் வளர்ந்து விட்ட எனது பொம்மை அக்காமார்கள்
எமது சகோதரிகளுக்கு மட்டும் இயங்கியல் விதிகள் பொய்த்துப் போகையில்.
காலச் சக்கரத்தின் கண்காட்சி சாலையில் தலையாட்டும் பொம்மையாய். வேண்டாம்
எப்போதும் குழந்தையாய் இருக்கவே
இயற்கையே பின் நோக்கிக் கொஞ்சம் நகர்ந்து கொள்.
உன்னேடு எப்போதும் கைகுலுக்கி கொள்ள இந்தக் குழந்தைக்காய்
இ. வசந்தி
தத்தியூன்-91(2)

Dஒரு குறிப்புD
சிமோன் தி பூவா போல் சாத்ரே
அடுத்த பக்கத்தில் உங்களுக்காக ஒரு சிறு கதை இருக்கிறது. இதனை ஒரு வெறும் சிறு கதையாகவே கருதிவிடமுடியாதெனத் தோன்றியதனால் இப்படி ஒரு குறிப்பு அவசியமாயிற்று. இக்கதையில் இடம் பெறும் கதாமாந்தர்களின் கதைக்கு காரணமாயிருக்கும் இரண்டு மனிதர்களைப் பற்றி ஒரு சின்ன விளக்கம் சக்தி வாசகர்கள் பலருக்கு உபயோகமாயிருக்கக்கூடும் என்பது எமது எண்ணம்.
சிமோன் தி பூவா(1908 -1986) பெண்நிலை வாதத்தின் முன்னோடிகளில் மிகமுக்கியமானவராக கருதப்படும் பிரெஞ்சு எழுத்தாளர். பெண்களுக்கு உயர்கல்வி வாய்பளிக்க விரும்பாத அக்காலச் சமூகத்தின் நிர்ப்பந்தங்களை மீறி தன்னை உருவாக்கிக் கொண்ட, இருப்பியல் வாதத்தை எழுத்துருவாக்கியவர்களில் ஒருவராக மிளிர்ந்த இவர் இருப்பியல் வாதத்தின் தந்தை என்று கருதப்படும் பூரின் போல் சாத்ரேயை வாழ்க்கைத் துணையாக வரித்துக் கொண்டவர்.
"மனிதனை மனிதன்ாகக் காட்டுவது தான் ஒரு எழுத்தாளனின் முயற்சியாக இருக்கவேண்டும்" என்று சொன்ன மீன் போல் சாத்ரே(1905-1980) இலக்கிய உலகிற்கு ஒரு புதிய கோட்பாட்டினைத் தந்தவர். பிரெஞ்சு நாவல்நாடக இலக்கியத் துறையில் தனியிடத்தைப் பெற்றுக் கொண்டவர். சிமோன் தி பூவாவுடனான உத்தியோகப் பற்றற்ற இவரது வாழ்வுபற்றி பலவிதமான விமர்சனங்கள் உண்டு. இவர்களின் வாழ்வு இரண்டு தனிமனிதர்களின் தனிப்பட்ட வாழ்வாக அல்லாமல் பெண்ணிலைவாதிகளால் பல்வேறு காரணங்களால் விமாசிக்கப்படும் ஒன்றாயிற்று. இச்சிறுகதையின் ஆதாரமே இது என்று சொல்லலாம்.
காவேரி என்ற புனைபெயரில் சிறுகதை, கவிகித, விமர்சனம் என்று எழுதிவரும் கலாநிதி லட்சுமி கண்ணன் டெல்லியில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளராவார். சக்தியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இவர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இதுவரை பன்னிரண்டு நுால்களைப் படைத்திருக்கிறார்.
தத்தியூன்-91(23)

Page 13
Légsas
தத்தியூன்-9124)
 


Page 14
சிறுகதை
"உண்மையிலேயே உமா ஒருநாள் நீ சிமோன் தி பூவா போல." அதைத் தாகத்துடன் குடித்தாள். இன்னும் வேண்டும் போல அவனை முகம் மலர நிமிர்ந்து பார்த்தாள். "ஆமாம் உன்னையே நம்பு. உன் எழுத்துக்கு அவசியமானது சரியான சீதோஷ்ண நிலை. மற்றும் ஒரு பொருத்தமான கூட்டாளி சூழ்நிலை என்பது ரொம்ப முக்கியம். பிறகு பார் எப்படி பூத்துக் குலுங்கும் உன் எழுத்து" அவனுடைய முப்பத்தேழு வயதுப்பேச்சு திடமாக வெளி வந்தது. அது துாண் போல அவள் இளம் முதுகைத் தாங்கிக் கொண்டது. மேசை மீதிருந்த அவள் கையை மெல்லப் பற்றிய அவன், "உன்னைப் போலவே உன் எழுத்து மிகமிக மென்மையானது. அதற்கு ஆதரவு தேவை" அதையும் தாகத்துடன் குடித்தாள். "ஆமா சும்மா குடும்பம், பெற்றோர்கள், வீடு, வாசல், மாமா, அத்தை உறவு, கல்யாணம் போன்ற இரைச்சல்களின் நடுவே உன் எழுத்து பட்டுப் போய்விடும். உமா உன்னையே காப்பாற்றிக் கொள். சரியான கூட்டாளியிடம் ஒப்படைத்துக் கொள், சிமோன் செய்தது போல” இரண்டு முழு நாவல்கள், ஒரு நாடகம், நிறைய சிறு கதைகள் எழுதி பிரபல்யமான சேகரா இவளை, இவள் எழுத்தை மதித்துப் பேசுகிறான்? மூளை ஒரத்திலிருந்து ஒரு சின்னக் குரல் அறிவுறுத்தியது. சிமோன் எங்கே? நீ எங்கே? அவர் கால் துாசிக்கு சமமா? சிமோனைப் போல வளர்சியடைய நீ இன்னும் நிறைய உழைக்கணும், படைக்கனும், வாழ்க்கையில் கரையனும், இன்னும் எத்தனையோ கசப்பான உண்மைகளைத் தோண்டி எடுத்துப் போடணும், தைரியமாக, நீயோ இன்னும் "அழகிய கவிதைகள்' என்ற குறுகலான பரிமாணத்திற்குள் மாட்டிக் கொண்டு சிறைப்பட்டிருக்கிறாய். உனது அல்ப இலட்சியங்களை, குட்டிக் குறிக்கோள்களை நீயே சந்தேகப்பட கற்றுக் கொள். அவை உன்னைச் சுற்றிப் பாதுகாக்கும் குட்டிச் சுவர்கள். அவைகளைத் தகர்த்து எறிந்து, துணிந்து கழுத்தை நீட்டி, வெளியே போ.உம் "என்ன உமா நான் ரொம்பவும் மிகைப்படுத்திப் பேசுவதாக நினைக்கிறாயா? வா நாம் இருவரும் இணைந்து, எழுத்தில் ஒரே மூச்சாக ஈடுபடுவோம். உனது பெற்றோர்களையும், என் மனைவியையும் பெரிய தடைகளாக நினைக்காதே. அவர்கள் அவரவர் இடங்களில் இருந்திட்டுப் போகட்டும், பின்னணிப் பாட்டு இசைப்பது போல, சிருஷ்டிக்கும் சக்தி வாய்ந்தவர்களான
தத்தியூன்-9126)

DசிறுகதைD
நீயும், நானும் வித்தியாசமானவர்கள். நாம் சாதாரண, சமூக கலாசாரங்களிலிருத்து விலகி, தனியே சுதந்திரமாக இருக்க வேண்டியவர்கள்" என்றான் உறுதியாக
நான்தான் அப்பவே சொன்னேனே. நம்ப சுந்தரம் மாமனார் வீட்டுப் பையன், அதான் அந்த ராஜன் நல்ல வரன். உயர்ந்த படிப்பு. நல்ல பதவியில் இருக்கான். பார்க்க நன்னா இருக்கான். அவாத்துலே ஆர்வமா கேட்டா பெண்ணை கொடுங்கன்னு. நீங்க ஒண்ணு, மச மசன்னு.
'உமா பி.எச்.டி பண்ணனும், பிறகு ஸ்காலர்சிப்பில வெளிநாடு போகணும்னு ஆசைப்படுறா மங்களம், அதான். பி.எச்.டி யை கலியாணம் பண்ணிக் கொண்ட பிறகு முடிச்சுக்க சொல்லுங்கோ. வெளிநாடும் ஒரு தலைச்சனைப் பெத்த பிறகுதான் போக விடுவோம்னு சொல்லுங்கோ." - சேச்சே அப்புறம் எத்தனை சிக்கல் வரும் மங்களம். எல்லாம் எனக்கு நன்னா தெரியும். நம்ப உமா ஒரு ஆயிரங்காலத்துப் பயிர். படித்து வேலை பார்க்கும் பெண்ணுக்கு இன்னும் பலமான்னா பாதுகாங்பு வேண்டும்? அப்பனா இருந்து இது தெரியலையே. உங்களுக்கு துளியும் விவேகமில்லை. * வழக்கமான ஓசைகள். இப்போது தேய்வுடன் கேட்டன. இவன் சொல்வதுபோல எல்லாம் ஏற்கனவே பின்னணிப் பாட்டாகப் போய் விட்டதோ? இனிமேல் இலக்கியத்திற்காக, எழுத்திற்காக வாழனும் "உமா வாழ்க்கை மிக குறுகிய காலம் கொண்டது. நேரத்தை வீணடிக்காதே" என்றான். தாழ்ந்த குரலில் அவன் கைக்குள் பிடிபட்ட தன் கையை அவள் இழுத்துக் கொள்ளவில்லை. தலையாட்டியபடி புன்னகைத்தாள்.
"வீணடிக்க மாட்டேன் சத்தியமாக” என்றாள். கற்பனையில் பக்கம் பக்கமாக எழுதிய தாள்கள் பறந்தன. வெகு நேரம் வரை கண்விழித்து தீவிரமாக எழுதுவது. நாடெங்கும்ர்ே" போட்டுக் கொண்டு சுற்றி அனுபவம் பெறுவது, எல்லா பேப்பர் பத்திரிகைகளிலும் "உமா' என்ற பெயர் பளிச் சென்று பிரகாசிப்பது, இந்த சேகர் போலவே தானும் ஒன்றன் பின் ஒன்றாக முழுப்
தத்தியூன்-9127)

Page 15
Dégsans D)
புத்தகங்களைப் படைப்பது.
வேலை முடித்து வீடு திரும்பும் உமாவிற்கு சாப்பிட்டு ஒய்வெடுக்க நேரமில்லை. நிம்மதியாக உக்காந்து சிந்தித்து எழுத முடியவில்லை. வீடு வந்ததும் எப்போதும் விடாமல் ரெலிபோன் ஒலித்தது. மறுபக்கம் சேகரின் பொறுமையிழந்த குரல் கேட்கும். "எப்போது சந்திக்கலாம் ? எங்கே ஒளித்துக் கொண்டிருக்கிறாய்” பிறகு வீடு திரும்பும் போது வழி மறித்தபடி உதித்தான். பல்கலைக்கழகமும் அவளுக்கு அடைக்கலம் தரவில்லை. அங்கும் தோன்றி நச்சரிக்கத் தொடங்கினான்.
"நாம் சந்தித்து நாளாயிற்று. எப்போதும் அப்பா கோபிப்பார் என்று அவசரமாய் வீடு திரும்புகிறாய். சீ. இது என்ற வாழ்வு. வா. இந்த ஊரைவிட்டே வெளியே போய்விடுவோம். நான் அடுத்த மாதம் வேலையாக ஜம்மு போகிறேன். மேலே காஸ்மீரில், பெகாமில் ஒரு காட்டேஜ் எடுத்துண்டு இருப்போம் வா, நான்கு நாட்கள்" " என்ன சேகர் இப்படி, போகாத வழியைத் தேடிண்டு நான் இப்போ மும்முரமாய் ஒன்றை எழுதத் தொடங்கியிருக்கேன். நீங்களே அதைக் குலைப்பது." "கிடக்கட்டும் உன் எழுத்து, பெரிய எழுத்து என்னைவிட முக்கியமோ உனது அசட்டுக் கிறுக்கல்கள்?? w அதிர்ந்து போனவள் உடனே தன்னையே நொந்து கொண்டாள். சிமோன்சார்திர ஜோடியை பற்றிக் கனவு காணும் தனது அரைவேக்காட்டு ஞானத்தைக் கடிந்து கொண்டாள். ஏதோ ஒரு உந்துதலில், அடுத்த சில நாட்கள், இந்த தம்பதியைப் பற்றி நுால்கள், வாழ்க்கை வரலாறு, சுய சரிதம் மற்றும் அர்கள் படைப்புக்களில் மூழ்கினாள். ரெலிபோன் ஒலித்தது. அதை எடுக்கவில்லை. விடயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அகோர பசியுடன் நுால்களில் தெளிந்த விபரங்களை விழுங்கினாள். "ஏண்டி உமா இப்படி கண்ணை கவிச்சுண்டு ராவெல்லாம் படிக்கிறே? நீ உடம்பைக் கெடுத்துண்டு ரிஸர்ச் பண்ணவேண்டாம், போ. முகமெல்லாம் வாடிப் போச்சு"
“உமா, எங்கேயாவது சினேதிகளுடன் காற்றாட வெளியே போயேன். உன்
தத்தியூன்-91(28)


Page 16
Dánsas)
முடியாது இனியும் என்னால் இந்த தவிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது. நீ சார்திரவுக்கு முழுவதுமாய் உடமையாகி விட்டாய், எனக்கு ஏதோ காய்ந்த ரொட்டித் துண்டங்களை நொறுக்கி கொறிக்கப் போடுவது போல போட்டு என்னை ரொம்பவும் சிறுமைப் படுத்துகிறாய். *நான் எப்படி சார்திர வை விட்டுவிட்டு ."
* பார்த்தாயா நான் சொன்னது சரிதானே. என்னமோ அவனைக் கட்டிண்ட மனைவி போல பேசுகிறாயே? சிமோன் நீ சார்திரவை மறந்துவிடு. இங்கு அமெரிக்கா வந்து, என்னுடன் நிரந்தரமாக இரு. இது உனக்கு சம்மதமில்லையென்றால், மறுபடியும் இப்படி அரை குறையாக வந்து என்னை சித்திரவதை செய்யாதே. நாம் இனிமேல் சந்திக்க வேண்டாம் சிமோன், எனக்கு முக்தி கொடு பிளிஸ்"
மனதைக் கல்லாக்கிக் கொண்டு, இனிமேல் ஆல்கிரனை சந்திப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் பாரிஸ் திரும்பினாள் சிமோன். வழியெல்லாம் கேள்விகள் அவளை விரட்டின. சார்திரவுடன் இருப்பது ஒரு பிணைப்பா, அல்லது. வெறும் பழக்கமாகிப் போன ஒன்றா? இது என்ன பந்தம்? சிமோனுக்கு கிடைத்த விடைகளை அவள் அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் சமாதானம் செய்யும் யுக்திகள் கண்ணை சிமிட்டின. உண்மையை இயற்கை வெளிப்பட வைத்தது. அவள் உடம்பில், அது 'தி மேண்டரின்ஸ்' என்ற நாவலில் பூடகமாக வெடித்தது. அந்த நாவல்: நடுத்தர வயதை நெருங்கும் அந்தப் பெண்மணிக்கு ஒரு வயது வந்த மகள் இருக்கிறாள். அந்த அம்மா தனது காதலனிடம் கடைசியாக விடை பெற்றுக் கொண்டு, இனி என்றும் சந்திக்க மாட்டோம் என்று உறுதியுடன் வீடு திரும்பி வந்தவள் சில நாட்கள் ஏகாந்தமாக தத்து அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளுரப் புழுங்குகிறாள். இதைக் கவனித்த மகள் தனக்கு முடிந்தவரை அம்மாவுக்கு உணவளித்து ரீ மற்றும் வயின் ஊற்றிக் கொடுத்து ஆறுதலாய் பேசுகிறாள். ஒரு இடைவெளிக்கும் பிறகு ஒரு நாள் கதவைத் திறந்து கொண்டு அறைக்கு வெளியே மீண்டும் தன் வேலைகளைக் எப்போதும் போல் கவனிக்க வந்த அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். நாற்பத்திரண்டு வயதுவரை இளமை குன்றாமல் வசீகரமாக இருந்து கொண்டு வந்த அம்மா எப்படி நான்கு நாட்களில் பாழடைந்த கட்டிடம் போல இப்படி முப்படைந்து போனாள், அய்யோ என்ன நேர்ந்து விட்டது எனக் கலங்கிப் போனாள்
தத்தியூன்-9130)

Dசிறுகதை
இளம் மகள். நாவலுக்கு வெளியே சிமோனும் சார்திரவும் இந்த மாற்றத்தை கவனிக்கத் தவறவவில்லை. அவர் இன்னும் வேகத்துடன் நிறைய இளம் பெண்களை வேட்டையாடித் தேடினார். எக்சிஸ்டென்சலிசம் பற்றி பரவலாக எழுதினார். நோபல் பரிசை நிராகரித்து இன்னும் பிரபலமானார். பிறகு நோய் வாய்ப்பட்டுக் கிடந்த சார்திரவை சிமோன் ஒரு தாய் போல, சகோதரி போல, மனைவிபோல விசுவாசமுள்ள வேலைக்காரி போல பார்த்துக் கொண்டாள். கேள்விகள் எழும்பின. பிறகு அடங்கின. இது என்ன உறவு? இப்படி "சுதந்திரம்" கொண்டாடுவதற்கும் மற்ற எல்லோரும் 'கணவன். மனைவி என்ற ஒப்பந்தத்துள் வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்? ஆண்பெண் உறவே ஆதி நாளிலிருந்து ஒரே வடிவமெடுத்து வருகிறதோ? கேள்விகளை விடைகளை தனது பின்வரும் தலைமுறைகளுக்கு அர்பணித்து விட்டு அத்துடன் தனது நூல்களையும் அளித்த பின் சிமோன் மறைந்தார். "தி செக்கண்ட் செக்ஸ்", "தி ப்ரைம் ஒவ் லைப்", "ஃபோர்ஸ் ஒஃப் சர்கம்ஸ்ரென்ஸ்' போன்ற அருமையான படைப்புக்களை வருங்காலத்திற்கு
இலக்கிய களஞ்சியமாக அளித்த பின்னரே துாங்கினாள் சிமோன்.
“ஏண்டி உமா இப்பிடி குருவி போல கொறிக்கிறாய்? இந்த வயதில் நன்னா நெய், பால், தயிர் என்று சாப்பிட வேண்டாமா? உடம்பு இளைத்து கறுத்துப் போச்சு. சே! இதென்ன ரிசார்ச்7 "ஏன் உமா என்னவோ போல் ஆகிவிட்டாய்? லீவ் எடுத்துக்கோ வா ஊருக்குப் போகலாம். கோவில் குளம் என்று சுற்றலாம் வா" "எல்லாம் உங்களால் தான். சீக்கிரம் தை மாதத்தில் முடியுங்கோ, நல்ல படித்த பையன் என்றேன். நீங்க என்னமோ மெதுவாக."
இன்னும் யோசனை" என்று கத்தினான் சேகர். "என்னோட காஷ்மீர் வரல்லையா? டிக்கட் காட்டேஜ் எல்லாம் புக் பண்ணியாச்சு'என்றான் எரிச்சலுடன்
"அது முடியாத காரியம்" என்றாள். " என்னது ! நீ ஒரு பெரிய சிமோன் தி பூவா போல எழுத்தாளராகப் போகிறாய் என்று. கோட்டை கட்டினேன். ஒ நீ ஒரு சாதாரண பெண், எல்லோரும் போல ரொம்ப சாதாரணம்*அவன் குரலும் ரெலிபோன்
தத்தியூன்-91(31)

Page 17
Oépsos)
அடிப்பதும் பின்னணி ஒசையாக தேய்ந்து பின் வாங்கியது. எழுபது இறுதியில் பெண்ணியம் தலைகாட்டத் தொடங்கியது. பொருளியல், சமுதாயவியல், உளவியல் என்று பிரிவுகளில் அரங்குகள் அமைக்கப்பட்டு விவாதங்கள், சர்ச்சைகள் நடைபெற்றன. இலக்கியப் பிரிவில் அடிக்கடி ஜெர்மன் க்ரியர், சிமோன் தி பூ வா, கேட் மில்லட், கிளோரியா ஸ்டைனம் போன்ற பிரபல பெயர்கள் அடிபட்டன. இலக்கிய அறிஞர்கள் சிமோன் தி பூவாவை ஒரு உன்னத உதாரணமாக எடுத்துக்கொண்டு அவர் எழுத்தை அவர் வாழ்ந்த ஒப்பற்ற வாழ்க்கையைப் புகழ்ந்தார்கள். பேப்பர். பத்திரிகைகளிலும் எழுதினார்கள். இதில் சில ஆண்களும் சேர்ந்து கொண்டார்கள். சந்தீகர் மற்றும் புனாவில் நடைபெற்ற மாநாட்டில் இப்படித்தான் மோஹன் மேஹதாவை சந்திக்க நேர்ந்தது. ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் நறுக்கென்று நேர்த்தியான வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து அதற்குப் பின்னால் சுலபமாக ஒழிந்து கொள்ளும் தந்திரத்தை நன்கு பயின்றவர். بر உங்கள் கதைகளை நான் படித்திருக்கிறேன். உமாஜி உங்கள் கவிதைகளையோ நான் மனப்பாடமாகக் கூட கற்றதுண்டு என்ற மேஹதா சில வரிகளை பிழையில்லாமல் சீராக சொல்ல ஆரம்பித்த போது உமாவிற்கு மயிர் கூச்சலெடுத்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். உஷ் போதும் வேண்டாம் என்றாள். உடனே நிறுத்திக் கொண்ட மேஹதா *நீங்க சொல்வது சரி. இங்கு யாரேனும் கவனிக்கப் போகிறார்கள். நாம்
சாவகாசமாய் லவுன்ஞ்சில் உக்கார்ந்து பேசலாமே" என்றார். தேநீரை வரவழைத்தவுடன், " உங்களுக்கு இந்த மாநாடு பிடித்ததா? எழுந்து நின்று இந்தப் பேச்சாளர்களை ஒரு விடயம் கேட்கனும்னு க்ரியர், சிமோன் தி பூவா, கேட் மில்லட் போன்ற உதாரணங்களை
சொல்வானேன்? ஏன் நம் நாட்டுப் பெண்களுக்கு என்ன குறைச்சலாம்?" என்றார் ஆவேசமாக "நம்நாட்டில் இன்னும் சர்வதேசப் பரிமாணங்களை அடையும் அளவிற்கு யாரும் இதைப் பற்றி எழுதவில்லையே. சமுதாயவியல் துறையில் புள்ளிவிபரங்களைத் தவிர மக்கள் சிந்தனையைத் துாண்டும்படி யாரும் தைரியமாக எழுதக் காணோம்" என்றாள் உமா.
" தப்பு. உமாஜி சமயம் காட்டும். பொறுத்திருங்கள். எனக்கு நம்பிக்கை
தத்தியூன்-91(32)

இருக்கிறது. இப்ப உங்களைப் போன்றவர்களையே எடுத்துக் கொள்ளலாமே. நீங்கள் முயற்சி செய்தால் முடியும். ஏனென்றால் நீங்களும் ஒரு சிமோன் தி பூவா போல "
வைத்தாலும் உடனே சமாளித்தபடி, "ஏன் சிரிக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு சார்திர கிடைக்கவில்லையா? " என்றார். உமாவிற்கு இன்னும் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது. "ஆச்சரியமாயிருக்கு நீங்களே இப்போ அயல் நாட்டு உதாரணங்கள் என்று ஆட்சேபித்து பிறகு அதைப் பற்றிப் பேசுவது " "ஹி ஹி என்ன சொல்ல வந்தேன் என்றால் நமது இலக்கியத்திற்கு கலைக்கு நாம் வாய்ப்பு கொடுக்கணும் இல்லையா? சிமோன். சார்திர வாழ்வைப் பார்த்து கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கு ஏதோ ஒரு விபத்து நேர்ந்தாற் போல நாம் இந்தியர்களாகப் பிறந்துவிட்டோம் ஆனால் நம்மைச் சுற்றிக் கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்த பின்னும் நம் எழுத்திற்காக, கல்விக்காக நம் தனித் தன்மையை கொஞ்சம் காப்பாற்றிக் கொள்ளணும், இல்லையா? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்."
இருபத்தைந்து வயதிற்குப் பின் எத்தனையோ பிறந்த நாட்கள் வந்து போயாச்சு. இந்த இடைவெளி அவளுக்கு தேடலாக அமைந்து விட்டது. சந்தேகங்களைத் துாண்டும் விபரங்கள். நிறம் மாறும் பொய்-மெய்
வார்த்தைகள் பேசும் மேடைப் பேச்சாளர்கள், வேடதாரி அரசியல்வாதிகள், பிறகு வேலை, உழைப்பு, ஆய்வு தன்னைச் சுற்றி சுழலும் விசைகளின் நடுவே தனித்து நிற்பது போல பிரமை, பிறகு எழுபது எண்பதுகளின் பத்தாண்டில் தேங்கிய குழப்பங்கள். அந்த மேஹதாவிற்கும் அப்படித்தானே இருந்திருக்கணும்? "எனக்கு உங்கள் தயக்கம் புரிகிறது உமாஜி காரணம்? நீங்கள் நிறைய முறை இந்தப் பெயருடன் ஒப்பிடப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்" "ஆ நான் கனவிலும் சிமோனுக்கு ஈடாக முடியாது" "நான் மட்டும் என்ன சார்திரவா? இருந்தாலும் நாம் மனசு வைத்தால்."
− தத்தியூன்-91(33)

Page 18
சிறுகதைD
எழுபதுகளை விழுங்கிய எண்பதுகள், தொள்ளாயிரத்தைத் தொட்டன. பெண்ணியம் ஒரு சீற்றம் கொண்ட இயக்கமாக மாறியது. உளவியல், மனிதவியல், பொருளியல், சமுதாயவியல், இலக்கியம், கலை என வெவ்வேறு திசைகளிலிருந்து புதிய உண்மைகள் எழும்பி சுடர் பொறிகள் போல தெறித்தன. மூன்று பத்தாண்டுகளின் மதிப்பீடுகள் , கலாச்சார மரபுகள், ஸ்தாபனங்களின் கொள்கைகள், கல்வித் துறையின் பாடத்திட்டங்கள், எழுத்தாளர்களின் படைப்புக்கள், சினிமா எல்லாமே இரக்கமற்ற மறுபார்வைக்குள் அலசப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. இந்த மறு
"லெவை ஜீன்சுக்குள், பாண்ட். டாப்பிற்குள், கவுனிற்குள், சல்வார் சூட்டிற்குள், வெட்டி விடப்பட்ட தலைமுடிக்குள் இளம்பெண்மை விழித்துக் கொண்டது. இளம் மாணவிகள், ஆய்வாளர்கள், வெவ்வேறு உத்தியோகங்களுக்கு பயிற்சி பெற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். "கேட் மில்லட் எங்கள் கண்களைத் திறந்து விட்டார். இனிமேல் எங்களுக்கு டி.எச். லாரென்சை, கென்றி மில்லரை.ஜான் கென்னட்டை வேறு விதமாகத்தான் பார்க்க முடியும். அந்தப் பார்வையில் இந்த எழுத்தாளர்கள் பாதுகாப்பற்று நிர்வாணமாய் நிற்கிறார்கள் என்றார்கள் இளம் பெண்கள். இளம் ஆண் கூட்டாளிகளுடன் சேர்ந்து படித்து பொறியியல், மருத்துவம், எம் பி ஒ. பி எச் டி, ஐ ஏ எஸ் என்று முடித்துக்கொண்டு வேலை பார்த்தார்கள். இவர்கள் நடுவே சிமோன் தலைகாட்டியபோது "சிமோன் தி பூவா அப்படி சார்திரவிற்கு தன்னையே ஒப்படைத்துக் கொண்டது ரொம்ப தப்பு" என்றார்கள் உஷ்ணமாக, “கலைக்கு எழுத்திற்கு, வளர்ச்சிக்கு யாருடைய உதவியும் ஊன்றுகோல் போல் தேவைப்பட வில்லை. சிமோன் தனிகே, சுதந்திரமாக இருந்திருந்தால் இன்னும் நவீன முறையில்
"ஆமாம். அவர் ஒரு சிறந்த அறிவுஜீவி. சிறந்த படைப்பாளி. அவருக்கு ஊன்று கோல் அவசியமில்லை. சார்திரவினால் சிமோனுக்கு கிரகணம்
நேர்மையானவர். அவரை சிமோன் மணந்து கொண்டு விலகியிருக்கணும். அப்போது தெரிந்திருக்கும் சார்திரவிற்கு சிமோனின் அருமை" "கரெக்ட். நாம் நாளாந்த வாழ்க்கையிலும் இந்த விசித்திரத்தைப் பார்க்கிறோம். ஒருத்தன் ஒரே முச்சாக நம்மைத் துரத்தியடித்தபடி, நம்
தக்தி-யூன்-9134)

DசிறுகதைD
பின்னால் கெஞ்சி நச்சரிக்கிறான். ஆனால் அந்தப் பெண் நன்றாக யோசித்த பின் அவனுக்கு காதலியாக இருக்க சம்மதித்தவுடனேயே மறுவிநாடியே அவன் கண்ணில் அந்தப் பெண் ரொம்ப மலிவான மதிப்புக் குறைந்த பெண்ணாகக் கருதப்படுகிறாள். சே ஆண்கள் தங்களுக்குள் போராடும் இந்த முரண்பாட்டை எப்படி சமாளிக்கிறார்கள்? பிளவுபட்டுப் போன அவர்களின் போக்கு அவர்களையே கஷ்டப்படுத்தாது” "அப்படியிருந்தும் இப்பவும் கேட்டுப் பாரக்கிறார்கள். நான் மஸ்ஸரி அக்கடமியில் பயிற்சிக்குப் போனபோது ஒருத்தன் ஆ நீரொம்ப திறமை வாய்ந்தவள், அது இதுன்னும் சொன்ன பிறகு நாம் இருவரும் இணைந்தால் சார்திர- சிமோன் போல சமுகத்திற்கு வாழ்ந்து காட்ட முடியும் என்றான் வீராப்புடன். அவன் முன்னால் சார்திர சிமோனைப் சுற்றிப் போர்த்திருந்த அந்தப் புராணக் கட்டுக்கதையை உடைத்தெறிந்தேன். அதற்குப் பிறகு அவன் என்னைப் பார்த்தால் ஹலோ கூட சொல்வதில்லை" என்று சிரித்த இந்தப் பெண்ணுடன் மற்றப் பெண்களும் சேர்ந்து கலகலவெனச் சிரித்தார்கள். இன்றுவரை சிமோன் இறக்குமதி செய்யப்பட்டு வெவ்றுே கோணங்களில் அலசப்பட்டு சர்ச்சிக்கப்படுகிறாள். பெண்ணியம், இயக்கம், தேடல், ஈடுபாடு உழைப்பு உத்தியோகம், குடும்பப் பொறுப்பு, படைப்பு என்று நானாவிதத்தில் அழுத்தங்களால் இழுக்கப்பட்டு திக்குமுக்காடும் பெண்கள் சிமோன் என் AD அறிவு கூர்மையுள்ள எழுத்தாளர் சார்திரவுடன் ஒரு தர்ம பத்தினி போல கண்மூடிய விசுவாசத்துடனும் அவசியமில்லாத அளவிற்குப் பொறுமையுடனும் வாழ்ந்ததைக் கவனித்து கோபமாக வெகுண்டெழுகிறார்கள். சமயம் மெல்ல மெல்ல உருட்டிவிடும் பிண்டங்களில் நிறம் மாறியபடி வெகு துாரம் நகர்ந்து போன சிமோன், இன்னும் அந்தத் தொலைவிலிருந்து உருளும் பிண்டங்களின் நடுவே - வாய்ப்பு கிட்டிய போதெல்லாம் . ஒரு சேகரையோ, ஒரு மேஹதாவையோ, அல்லது மஸ்ஸரி அக்கடமியில் பயின்று வரும் ஒரு வருங்கால அரசாங்க அதிகாரியையோ சபல முட்டுகிறாள். லெவை ஜீன்சுக்குள், பாண்ட்- ஸ்லாக்கிற்குள், சர்வார். சூட்டிற்குள், கவுனிற்குள் விழிப்புடன் வளர்ந்துவரும் பெண் புலிகளைப் பார்த்து நீயும் ஒரு சிமோன் தி பூவா போல என்று வாயைத் திறக்கிறார்கள்த
தத்தியூன்-91(35)

Page 19
DகவிதைD
<ブ திருமணம்
மாப்பிள்ளைக்கோர் தோழன் பெண்ணுக்கோர் தோழி
வேட்டி தலைப்பாகை வழமையான கூறைப்பட்டு
எட்டோ பத்தோ பொருத்தங்கள் பார்த்தபின்
釜、マプ
வீடியோ வெளிச்சங்கள்
மின்னுகின்ற கமாராக்கள்
பந்தல் மணவறைகள் விழுங்கிய காசுக்கு நேர்மையாய் விழித்திருக்கும்
சாதியும் சாறியுமாய் பிரச்சனை அலசும் பெண்கள் கண்ணிவெடிக்கு காதும் முக்கும் வைத்தபடி ஆண்கள்
எல்லாம் இனிதே நிறைவுபெற ஏறும் அவள் கழுத்தில் ஒரு பொற்பாரம் தாலியென
வந்தவர்கள் செல்வார்கள் கொண்டு வந்த பரிசுக்குக் கணக்காக அறுசுவைகள் உண்டு களித்துத் தெளிந்து நிமிர்ந்து வெற்றிலையும் மென்று
அருகமைந்துர் ஆய்ந்து தெளிந்த நல்லதொரு முகூர்த்ததில் அய்யர் வந்தமர்வார்
இழுத்துக் கட்டிய கொடுக்குடன் போட்ட சாம்பிராணி ஆனாலும் ஆரும் அவதியுறார்
ஆண்டொன்றானபின் அவனுக்கும்
அவளுக்கும் தனித்தனியாய் தெரிந்தது
இளவாலை விஜயேந்திரன். 04.01.1991
தத்தியூன்-9136)
 
 

0தாயகமும் அயலகமும்D
ஒரு கொலை - இரண்டு தேசங்கள்
வஜசஜெயபாலன்
டிடந்த மே மாதம் 21ம் திகதி இடம் பெற்ற பயங்கரவாத சம்பவம் ஒன்றில் திரு ராஜீவ் காந்தி படுகொலை dis செய்யப்பட்டார். இந்திய பொது தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்களிப்பின் முன் இடம் பெற்ற இவரது 41 ܢܠܛܐ
படுகொலை அகில இந்திய அளவில் பரவலான அநுதாப அலையை உருவாக்கியது. இந்தியப் பொது தேர்தல் பற்றி குறிப்பிடத் தக்க அக்கறை காட்டாத மேற்கத்தைய செய்தி தொடர்பு சாதனங்களில் மே மாதத்தின் இறுதி வாரம் முழுவதும் திரு ராஜீவ் காந்தியின் கொலையும் இறுதிச் சடங்குகளும் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. உண்மையில் முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையாகவோ அல்லது இடம் பெறும்
தேர்தலின் முன்னணி வேட்பாளளர் ஒருவரின் கொலையாக மட்டும் திரு ராஜீவ் காந்தியின் கொலை நோக்கப்படவில்லை. அரை நுாற்றாண்டுகளாக உலகின் பெரும் சனநாயக நாடாக குறிப்பிடப்படுகிற ஒரு நாட்டில் ஆட்சி செய்த ஆளும் வர்க்கத்தின் முடிவாகவும் ராஜீவின் கொலை புரிந்து கொள்ளப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதுவரை இடம் பெற்ற விசாரணைகள் வெளிக் கொணர்ந்த தகவல்கள் இக் குற்றச் சாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இந்திய உப கண்டத்தையும் இலங்கைத் தமிழர்களினது
தத்தியூன்-9137)

Page 20
Dதாயகமும் அயலகமும்
எதிர்காலத்தையும் இக் கொலைச் சம்பவத்தின் பின் விளைவுகள் எப்படிப் பாதிக்கும் என்பது பொதுவாக பலரது மனதில் ஏற்படும் கேள்வியாகும்
ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தின் பின் இடம்பெற்ற, இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்த தொகுதிகள் குறிக்கப்பட்ட இந்தியப்படம் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் படத்தை ஒத்திருப்பது தற்செயலான நிகழ்ச்சியல்ல. ராஜீவ் காந்தியின் மரணம் நாடு தழுவிய வாக்களார் மட்டத்தில் பரவலான அநுதாப அலையை உருவாக்கியுள்ளது. விருந்தாளிகளாக இருக்கும் ஈழப் போராட்ட அமைப்புகள் தமிழகத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளிலும், வன் முறையிலும் ஈடுபட்டு வருவது தொடர்பாக அண்மைக் காலமாக தமிழக மக்கள் மனதில் வளர்ந்து வந்த விரக்தியும் எதிர்ப்புணர்வும் தமிழகத் தேர்தல் முடிவுகளில் நன்றாகவே பிரதிபலித்துள்ளது. புலிகளின் நண்பர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான திரு கருணாநிதியின் தி.மு.க. வரலாறு காணாத படு தோல்வியை தழுவிக் கொண்டது. இந்நிலையில் செல்வி ஜெயலலிதா புலிகளை தமிழகத்திலிருந்து அப்புறப் படுத்துவேன். தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக்குவேன் என்ற கோசங்களோடு ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். எனினும் ராஜீவ் காந்தியின் கொலையைப் பயன்படுத்தி அ.தி.மு.கவும், காங்கிரசும் தமிழ் நாடு எங்கிலும் தி.மு.கவிற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். இதனைத் தடுப்பதற்கு தி.மு.க எதிர் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக்கின்ற நோக்கத்திற்கு நடந்த சம்பவங்கள் நல்ல சகுனமாக அமையவில்லை.
எம்.ஜி.ஆர் பல்வேறு வகைகளில் திராவிட இயக்கத்தின் பல்வேறு பிரிவினர்களோடும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே ஆட்சி நடத்தினார். ஈழவிடுதலை அமைப்புக்களோடு குறிப்பாக விடுதலைப் புலிகளோடு அவருக்கு இருந்த உறவும் திராவிடத் தமிழ்த் தேசிய இயக்கத்தின் மனக் கொதிப்புகளுக்கு பனிக்கட்டி ஒத்தடம் கொடுப்பதாக அமைந்தது. இதிகாச காலக் கனவுகளோடு வாழும் தமிழ் நாட்டு மக்களின் மனதில் காவிய நாயகனாக திகழும் வகையில் தொடர்பு சாதனங்களை ஆக்கிரமித்தும், மானியங்களுடாக சிறிதளவு வருமான மீள்பங்கீடுகளை செய்தும் அவர் சாதாரண மக்களோடு சமரசம் செய்து கொண்டிருந்தார்.
தத்தியூன்-9136)

Dதாயகமும் ೨Lಖಹq60
மக்களுக்கு கிலுகிலுப்பையும், திராவிட இயக்கப் பிரமுகர்களுக்கு பணியாரமும் தர எம்.ஜி.ஆர் ஆட்சி தவறவில்லை. இதைப் போல திராவிட இயக்கத்தின் பிரதிநிதிகளோடும் சாதாரண மக்களோடும் பரவலாக சமரசம் செய்கின்ற வாய்ப்புக்களும் வல்லமையும் ஜெயலலிதாவுக்கு உள்ளதா என்பது சந்தேகத்திற்கிடமானதே
வெளிநாட்டுக் கடன் சுமை, உள்நாட்டில் உற்பத்தி துறைகளின் திறமையின்மை, அரை நுாற்றாண்டுகால சுதந்திரம் சாதாரண இந்தியனின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமை, நிர்வாகக் குறைபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் இன்று இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியுள் சிக்கியுள்ளது.
புதிய நிதியமைச்சர் திறந்த பொருளாதாரக் கொள்கையினுடாக தென் கொரியாவைப் போல இந்தியாவைக் கட்டி எழுப்பும் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இத்தகைய மேல் மட்டத் தீர்வுகள் இந்தியாவை ஐஎம்எப். உலக வங்கி என்பவற்றின் பிடிக்குள் விரைவிலேயே விழுத்திவிடும் என்று தெரிகிறது. இத்தகைய பின்னணியில் மத்திய, மானிய அரசுகள் மானியங்களை நீக்குவது, வரியை அதிகரிப்பது, போக்குவரத்துக் கழகம் போன்ற பொதுத் துறை சேவைகளின் கட்டணங்கனை அதிகரிப்பது. வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக் குறையை சுருக்குவது, தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்புகளை மீள ஆராய்வது, பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவது போன்ற முடிவில்லாத வழுக்கற் பாதையில் காலடி எடுத்து வைக்க நேரிடும். ஏழை மக்களது ஆனைப்பசிக்கு சோளப்பொரி தருவதைக் கூட தடுக்கின்ற இப் பாதையில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஜெயலலிதா அரசுக்கு எற்பட்டுள்ளது. இத்தகைய பொருளாதாரப் போக்கு எதிர்காலத்தில் மத்திய, மாநில மட்டங்களில் வெகுசனக் கவர்ச்சி மிக்க சமரச திட்டங்கள் கைவிடப்பட உள்ளதையே காட்டுகிறது. இவற்றின் தாக்கம் கைத் தொழில் துறையும், தொழிலாளி வர்க்கமும், தேசியவாதமும், தரித்திர நாராயணர்களும் அதிகரித்துள்ள தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் வன்முறைச் சூழலையே ஏற்படுத்தும். இத் திட்டம் தென் கொரிய மாதிரியின் சாதகமான பகுதிகளை இந்தியாவிற்கு பெற்றுத்தர தவறினாலும் அதிகரிக்கும் வன்முறையும் ஒடுக்குமுறையும் உள்ள பாதகமான
தத்தியூன்-91(39)

Page 21
Dதாயகமும் அயலகமும்
பகுதிகளை விரைவாக ஈட்டித் தந்துவிடும்
இத்தகைய பொருளாதாரச் சூழலில் மாநில சுயாட்சிக் கோரிக்கைகளை அங்கீகரித்து மாநில மட்ட அதிகாரப் பரவலாக்கத்தினுாடாக, இந்தியாவின் பல் தேசிய இனப் பிரதேசங்களில் பலம் பெற்று வருகின்ற மத்திய வர்க்கத்துடனாவது சமரசம் செய்து கொள்ளும் திறமையும் இல்லாத மத்தியஅரசு உள் நாட்டில் மேலும் பஞ்சாப் காஷ்மீர நிலைமைகனையே உருவாக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் அமைப்பு ரீதியாகப் பலம் வாய்ந்த திமுக விரக்தியடையும் வகையிலான தோல்வியை பெற்றுள்ளது. மேற்படி விரக்தி நிலைமையை சமரசப்படுத்துகிற அரசியல் விவேகம் செல்வி ஜெயலலிதாவிடம் இதுவரை காணப்படவில்லை. சோ போன்ற அவரின் புதிய ஆலோசகர்களும் இதற்கு அவரை அனுமதிக்கப் போவதில்லை. தமிழகத்தின் அமைதியை விட திரு கருணாநிதி அவர்களைப் s பழிவாங்குவதே அவர்களுக்கு மிகவும் முக்கிய விடயமாகத் தெரிகிறது. இச் சூழலில் ஈழத் தமிழர்களது பாதுகாவலர் என்கின்ற முகத்தை இழந்து திராவிட இனத் துரோகி என முத்திரை குத்திக் கொள்ளாமல், ஈழத் தமிழ் போராளி அமைப்புக்களுடைய வன் முறைகளிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுகின்ற கடினமான பணி வேறு ஜெயலலிதாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் இழைக்கப்படும் தவறுகள் தமிழகத்தை நீண்ட கால அடிப்படையில் அமைப்பு ரீதியான வன்முறைக்கு இட்டுச் செல்லலாம். தேர்தலின்போது இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று திரு வாழப்பாடி ராமமூர்த்தியின் குரலில் செல்வி ஜெயலலிதாவும் கூறியிருந்தார். எனினும் வெற்றியின் பின் இலங்கை அகதிகள் மனிதாபிமானத்துடன் கவனிக்கப்பட்டு, அவர்களுக்குச் சகல உதவிகளும் வழங்கப்படும் என்றும், ஆனால் தமிழகத்தில் உள்ள ஈழப்போராளிகளை உடனடியாகத் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் பீபீசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி இட ஒதுக்கீடுகளில் தெரிந்தும் தெரியாமலும் கையை வைத்து, பூதத்தைக் கிளப்பிவிடும் ஆபத்தை வேறு எந்த முதலமைச்சர்களையும் விட
தத்தியூன்-91(40)

தாயகமும் அயலகமும்()
தீவிரவாத அரசியலமைப்புகள் ஏற்கனவே அவரது வெற்றியை சென்னை, டெல்லிப் பிராமண மேலோர்களின் வெற்றியாகவே கருதுகின்றன. இக்கருத்தை முறியடிக்கின்ற வல்லமை செல்வி ஜெயலலிதாவுக்குண்டா? பிராமண மேலோர்களுடன் சமரசத்தைப் பராமரித்த திரு.எம்.ஜி.ஆரையே ஏற்றுக்கொள்ள மறுத்த "பேனாச் சாணக்கியரான" திரு சோ போன்றவர்களுடைய ஆசீர் வாதத்தையும், வழிநடத்தலையும் நம்பியிருக்கும்வரை செல்வி ஜெயலலிதாவுக்கு மேற்படி வல்லமை கைகூடப் போவதில்லை. திராவிட இயக்கங்கள் தீவிரத்தன்மை பெற்றால் அவை தமிழ் நாட்டில் ஏற்கனவே இயங்கி வருகின்ற கீழ்மட்டச் சமுகப் பிரிவுகள் சார்ந்த தீவிரவாத அமைப்புகளுடனும், ஈழப் போராளிகளுடனும் ஒருங்கிணையும் சாத்தியங்கள் ஏற்படலாம். இது அகில இந்திய மட்டத்தில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளுக் குரல் கொடுக்கும் பல்வேறு அமைப்புகளுடைய ஒருங்கிணைவில் பிரதான சக்தியாக அங்கம் பெறும் அடுத்த கட்ட வரலாற்று வளர்ச்சியை நோக்கி திராவிட இயக்கத்தை நகர்த்தலாம். தமிழ்நாட்டில் மத்தியதர வர்க்கத்து பிராமண இளைஞர்களும் கூட தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமைகோரும் தீவிரவாத இயக்கங்களால் கவரப்படுகின்றனர். முன்னர் இத்தகையோர் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற மத்தியதரவர்க்க இடது சாரி இயக்கங்களை நோக்கிக் கவரப்பட்டனர்.
நேரு வம்சத்தின் முடிவு அகில இந்திய மட்டத்திலும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். அகில இந்திய கைத் தொழில் முதலாளித் துவங்களுடனான காதல் உறவுகளினால் 1920 இன் பிற்பகுதியிலேயே காங்கிரஸ் இயக்கத்தின் கருவறையுள் நேரு வம்சம் உருப் பெறத் தொடங்கி விட்டது. பாகிஸ்தான் பிரிவினையும், மகாத்மா காந்தியின் மரணமும், தொடர்ந்து கிடைத்த சுதந்திரமும் நேரு வம்சத்தின் எழுச்சிக்கு
தேசிய பிரதேச மட்டங்களில் காங்கிரஸ் ஆட்சிக்குள்ளும் வெளியிலும் உருவாகும் தலைமைகளை முளையிலேயே கிள்ளி எறிவது, காங்கிரஸ்
தத்தியூன்-91(41)

Page 22
Dதாயகமும் அயலகமும்()
கட்சியை வாக்கு கொள்முதல் செய்யும் தனியார்துறை நிறுவனமாகப் பராமரிப்பது, தேசத்தின் செலவில் இந்திய கைத்தொழில் முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பது, வெகுஜன சாதனங்களுடாகவும், மானிய திட்டங்களுடாகவும், சலுகைகளுடாகவும் கலாசார ரீதியாக புராண காலத்தில் வாழுகின்ற இந்தியப் பொது மக்களுடனும், மேலிருந்து ரட்சகர்களை தேடுகின்ற சிறுபான்மை இன மக்களுடனும் சமரசம் செய்து கொள்ளுவது என்கிறதே ஆரம்ப முதல் நேரு வம்சத்தின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. சனநாயக முகத்தை வெளியில் காட்டி, குடும்ப சர்வாதிகாரம் மொழிவாரி சமஷ்டி முகங்களைக் கண்ளே மன்றத்து. அதிகாரம், குவிக்கப்பட்ட ஒற்றையாட்சி என்கின்ற சக்கரங்களில் காங்கிரஸ் அரசியலை வெற்றிகரமாக ஒட்டுகின்ற கலை நேரு குடும்பத்திற்கே கை வந்த கலையாகும். இதுவே இந்தியாவை ஒருங்கிணைக்கும் கைத்தொழில் முதலாளித்துவ கலாசாரத்தின் அரசியலாகவும் உள்ளது.
பண்டிதர் நேரு 1959களிலேயே இந்திய காங்கிரசின் மூத்த தலைவர்களை ஒரம் கட்டி இந்திரா காந்தியை கட்சித் தலைமைப் பதவியில் அமர்த்தினார். காமராசருடைய “கர்மயோகி மனச்சிக்கலுக்குத் துாபம் போட்டு தனது மரணத்திற்கு பின் இந்திராவிற்கு குறுக்கே நிற்கக் கூடிய காங்கிர தலைவர்களை அதிகார பீடங்களில் இருந்து காலை வாரிவிடும் வகையில் 'காமராசர் திட்டத்தை தயாரித்தார். கர்மயோகி என்று புகழாரம் சூட்டப்பட்ட திரு காமராசர் தான் இத் திட்டத்தின் முதற் பலிக்கடா. நேருவின் மரணத்தின் பின் 1964களில் இந்திராவை ஒலிபரப்பு அமைச்சராக்கி, 1966களில் அன்றய பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் மரணத்துடன் அவருக்கு பட்டாபிசேகம் செய்து வைத்தது வரை நேரு வம்சத்திற்கு தனது சேவைகளை செய்தார். பதவியேற்றதும் முதலில் காமராசரின் காலைவாரி விட்டார் இந்திரா. முடிசூட்டு விழாவின் பின்னரும் அரசர்களை ஆக்கும் வல்லமை படைத்தவர்களை விட்டு வைக்கிற அளவிற்கு நேரு வம்சம் என்றும் முட்டாள் தனமாக நடந்து கொண்டதில்லை.
1939இல் நேரு ஆட்சியில் காங்கிரஸ் தலைவரான இந்திரா கேரளாவில் அமைந்த நம்பூதிரி பாத்தின் கம்யூனிஸ்ட் கட்சி அரசைக் கவிழ்த்து விட்டார். 1959இல் நம்பூதிரிபாத் அரசைக் கவிழ்த்ததிலிருந்து 1991 இல் தமிழகத்தில்
தத்தியூன்-91(42)

Dதாயகமும் அயலகமும்D
கருணாநிதி அரசைக் கவிழ்த்தது வரை மாநில அரசுகளை கவிழ்ப்பதும், உருவாகும் மாநில மட்ட தலைமைகளைச் சங்காரம் செய்வதும் என்கிற அரசியல் சதி நாடகம் நேரு வம்ச இருப்பின் அடிப்படையாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் பலம் பெறுகின்ற காங்கிரஸ் முதல் அமைச்சர்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. 1963ல் காமராசர் திட்டத்துடன் ஆரம்பித்து 1990களில் கன்னட காங்கிரஸ் முதலமைச்சரைப் பந்தாடியது வரை இடம்பெற்ற உட்கட்சிச் சதிகளும் நேரு வம்சத்தின் வெற்றிகரமான வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம் தான். இந்த வகையில் நேரு வம்சத்தை விட்டால் வேறு வழியில்லை என்கின்ற நிலைமை உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்று குறிப்பிடப்பட்ட இந்தியாவில் உருவாக்கப்பட்டது. தமக்கு தேவைப்பட்ட அளவுக்கு சர்வாதிகார தன்மையுள்ள மேல்வர்க்க சனநாயக ஆட்சியை வேண்டி நின்ற இந்திய கைத் தொழில் முதலாளித்துவம் நேரு வம்சத்தை இழப்பதற்கரிய சொத்தாக பேணிப் பாதுகாத்து வந்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
அதே சமயம் இன்று சிறு குழு நிலைமையில் தீவிரப்பட்டு வருகின்ற தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமைகோரும் கிளர்ச்சி மத்தியதர வர்க்கத்தையும் சிறு முதலாளிகளையும் இணைத்துக் கொண்டு மாநிலங்களின் பிரதான அரசியற் போக்காக மாறுகின்ற வாய்ப்புகளும் உண்டு. ஜெயலலிதாவின் திமுகவை விரக்தியடைய வைக்கும் அணுகுமுறை இத்தகைய போக்கை மிக விரைவிலேயே தமிழகத்தில் உருவாக்கலாம்
ஈழப்போராளி அமைப்புகள் எதுவும் தென்னாசிய முரண்பாடுகளைக் குறிப்பாக இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் இடையிலான முரண்பாடுகளை கையாளுகிற அரசியல் விவேகத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. இந்தியா தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமின்றி ஜே.வி.பி அமைப்யையும், பிரேமதாசா அரசுக்கெதிரான சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான கிளர்ச்சியையும் ஒடுக்கத்தக்க ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததிலும் சரி, முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம்
தத்தியூன்-91(43)

Page 23
தாயகமும் அயலகமும்()
முஸ்லிம் மக்களின் ஒரே ரட் சக ராக பிரேம சதா சாவை மேம்படுத்தியமையிலும் சரி முன்னணியிலிருக்கும் ஈழத்தமிழரது போராட்டத் தலைமை தமது அரசியல் விவேகமின்மையை இதுகாறும் வெளிப்படுத்தி யுள்ளது.
சக தமிழ் இயக்கங்களுடன் முரண்பட்ட போது தமிழ் மக்களுடன் மோதாமல் மேற்படி இயக்கங்களைத் தனிமைப்படுத்தி மோதிய இயக்கங்கள் அவ்வப்போது முஸ்லிம் இயக்கங்களுடனான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள முஸ்லிம் மக்களுக்கெதிராக போர் பிரகடனத்தை செய்துள்ளன. இதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு பொருத்தமான பதிலை ஒரு இயக்கத்தினாலும் ஒரு போதும் கூற முடியவில்லை. தமிழ் போராளிகள் தமது நோக்கத்தில் எவ்வளவு விசுவாசத்துடன் இருந்தாலும், எவ்வளவு வீரத்துடனும் வெற்றிகளுடனும் போராடினாலும் அரசியல் தவறுகள் மூலம் தேசிய சர்வதேச ரீதியாக தம்மை தனிமைப் படுத்துவார்களானால் பெற்ற வெற்றிகளை ஸ்த்திரப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கி மேற்செல்வது சாத்தியமின்றிப் போய்விடும். பயன்தராத ஓயாத மோதலே தமிழ் பேசும் மக்களது வாழ்வாகவும் வரலாறாகவும் மாறி விடுகின்ற ஆபத்தையே இது உருவாக்கும். இத்தகைய ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தியின் கொலைக்கான பொறுப்பையும் இவர்கள் ஏற்க வேண்டி ஏற்பட்டால் நிலைமை மோசமடையவே செய்யும்
இந்தியாவுடன் நிபந்தனையற்ற சமரசம் செய்து கொள்வதில் உள்ள சிக்கல்களை பிரேமதாசாவும் இலங்கை இராணுவமும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. தமிழ் போராளிகளை ராணுவரீதியாக ஒடுக்கிவிடும் சாத்தியங்களிலும் அவர்கள் நம்பிக்கை இழந்து போயுள்ளனர். வடமாகாணத்தில் சில ராணுவ ரீதியிலான வெற்றிகளை பெற்றபின் தமிழ் அமைப்புகளுடன் சமரசம் செய்து கொள்வதே இன்றைக்கு பிரேமதாசாவினதும் இராணுவத்தின்தும் அடிப்படை தந்திரோபாயமாக உள்ளது. முஸ்லிம் மக்கள் தொடர்பான இயக்கங்களின் தவறுகள் அரசியல் ரீதியாக பிரேமதாசாவின் அரசிற்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இந்திய அரசின் விரோதத்தையும் பரவலான தமிழக மக்களின் வெறுப்பையும் போராளிகள்
தத்தியூன்-91(44)

Dதாயகமும் அயலகமும்D
பெறுவார்களேயானால் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அவர்கள் தனிமைப்பட்டுப் போக நேரும். இதுவும் பிரேமதாசாவின் கையை அரசியல் ரீதியாக ஓங்க வைக்கும்.
மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டாலும் புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்கி விடுகின்ற சாத்தியங்கள் இல்லை. பெருவின் "சைனிங்பாத், பர்மாவின் “கரன்", "சான்" தேசிய இன ராணுவங்கள் போன்ற சில கெரிலா அமைப்புகள் மூடப்பட்ட நிலையிலும் நிலைத்து நின்று போர் புரிந்து வருகின்றன. கம்போ டியாவில் 'கமருச்", பிலிப்பைன்சில் என்பிஒ போன்ற அமைப்புக்களையும் இங்கு குறிப்பிடலாம். எனினும் மூடப்பட்ட நிலையில் போராடுகிற அமைப்புகள் யாவும் மிகக் கொாரமான சர்வாதிகார அமைப்புகளாக மாறியுள்ளமையை நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்
அரசியல் ரீதியான வெற்றிகளுடன் திருப்தியடைந்து விடுதலைப்புலிகளுடன் சமரசம் செய்வதற்கு இறங்கி வருவது பிரேமதாசவின் தரப்பில் விவேகமான முடிவாக அமையும். இதன் மூலம் மட்டும் தான் இந்தியாவின் பிடிக்குள் அகப்படாமல் நீடிப்பதும், சிங்களத்தரப்பில் வலுப் பெற்று வருகின்ற சனநாயக இயக்கங்களையும், மீண்டும் தலை துாக்க முனைகிற ஜேவிபியையும் ஒடுக்குவதும் சாத்தியம் என்பதை அவர்களுக்கு 1987-1989 வரையிலான அநுவங்கள் கற்றுத் தந்தேயுள்ளது.
இலங்கை அரசுக்கு இரு தெரிவுகள் ஏற்படலாம். ஒன்று புலி-இந்திய முரண்பாட்டைப் பயன்படுத்தி புலிகளை அழிக்க முனைவது. இம்முயற்சி பரவலான இனக் கொலைக்கே வழிவகுக்கும். இறுதிநிலையில் இலங்கை அரசை மீண்டும் இந்தியாவிற்கு அடிமைப் படுத்தும் முயற்சியாயே இது அமையும். இன்னமும் இலங்கை அரசிலும் இராணுவத்திலும் கடும்போக்காளர்களின் பலம் குன்றிடவில்லை. விடுதலை இயக்கங்களது அணுகுமுறைகள், குறிப்பாக மக்களது அடிப்படை சுதந்திரங்களில் கட்டற்ற தலையீடு, தமிழ். முஸ்லிம் விவகாரங்கள் என்பவை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருப்பினும் பெரும்பாலான தமிழ்மக்கள் தமிட் போராளிகள் பின்வாங்குதல் இனக்கொலைக்கே வழி வகுக்கும் என நம்புகிறார்கள். இயக்கம் பின்வாங்கிய இடங்களில் குறிப்பாக கிழக்கு

Page 24
5Tuscupů jsou jsosopib
மாகாண கரையோரம், வவுனியா நகரப் பகுதிகளில் இடம்பெற்ற பொதுமக்கள் படுகொலைகள் தமிழ் மக்களது கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றன. இலங்கை அரசுக்கும் இலங்கை அரசுடன் சார்ந்து நிற்கின்ற இயக்கங்களுக்கும் எதிராக வட-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் இலகுவான தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் மக்களது நிலை இதற்கு எதிர்மாறானது.
இரண்டாவது தெரிவு விடுதலைப் புலிகள். இந்திய முரண்பாட்டால் தோன்றியுள்ள சாதக நிலைமையைப் பயன்படுத்தி புலிகளுடன் சமரசத்திற்கு செல்வது. இத் தெரிவு இந்தியத் தொல்லைகளிலிருந்து விடுபட இலங்கை அரசுக்கு உதவும். தொடர்ந்தும் இந்திய- இலங்கைத் தமிழர்கள் முரண்பாட்டை கையாள்வதும் சாத்தியமாகும்.
முஸ்லிம் மக்களை தமிழ்பேசும் தனிஇனப் பிரிவாக நடைமுறையில் அங்கீகரித்து அவர்களது தலைவர்களுடன் பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளல், வடகிழக்கு மாகாணங்களிலும் எல்லைச் சிங்கள கிராமங்களிலும் தமிழர் தரப்பு மனித உரிமை மீறல்களை அனுமதிக்கா திருத்தல், சாத்தியமான வகைகளிலெல்லாம் சட்டவாட்சியை நிறுவி ஜனநாயக மரபுகளைப் பேணல், சிங்களப் பகுதிகளில் அரச எதிர்ப்பு, ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமான சூழலைப் பராமரித்தல் ஆகியவற்றினுாடாக சர்வதேச ரீதியாக அங்கீகாரத்தை பெறுதல் என்கிற பாதையை தெரிந்தெடுத்தால் மட்டுமே தமிழ்ப் போராளிகள் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டுப் போகும் ஆபத்திலிருந்து தப்பலாம்
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பு பாரிசில் நடைபெறும் போது சமரச நிலை இலங்கையில் உருவாகி உள்ளது என்று காட்டுவதற்கு பிரேமதாசா அரசு விரும்பக் கூடும். நிலைமைகள் 1987-89 சூழல் மீண்டும் உருவாகக் கூடிய வாய்ப்புக்களையே கோடிட்டுக் காட்டுகிறது. ፅ போராட்டம் அரசியல் ரீதியான வெற்றிகளை ஈட்டித் தந்தால் மட்டுமே துயரமும் துரதிர்ஷ்டமும் கொண்ட தமிழர் வாழ்வில் சிறிதளவு ஆறுதலாவது ஏற்படும். (யூன் 1991)
தத்தியூன்-91(46)

DசிறுகதைD
கணவன் என்னும்
மனிதன்
ரஞ்சன்
: இட ைல ஆ று ம ணி க் கே ངོ་ சூடாகிப்போன கோடைகாலச்
dis சூரியன் சா ள ரத் தி ன் |- 7 سال (لھولع بہانہ لگے , " *
கசியத் தொடங்க, க லா
விழிப்புக்கொண்டாள்.
வழமையாக ஆறரை மணிக்கு அலறுவதற்கு காத்திருக்கும் அலாரத்தை, ஐந்துநிமிடங்கள் முன்னராக எழுந்து செயலிழக்கச் செய்துவிட்டு, கலாவின் நித்திரை கலைந்துவிடாதிருக்க பூ  ைன போ ல் ந ட ந் து சென் று , அரைமணித்தியாலத்தில் சந்தடியில்லாமல் குளித்து வேலைக்குத் தயாராகி, "போயிற்று
இ வாறன் கலா" என்று மெதுவாகச் சொல்லி மிருது வாக அவளின் கன்னத்தில் முத்தமிட்டுச் செல்லும் நடேசன் - நிஷ்டையிலாழ்ந்த முனிவனைப்போல், சீரான மூச்சுடன், சிந்தாமல் சிதறாமல் சனிக்கிழமை நித்திரையை அனுபவித்துக்கொண்டிருந்தான்.
விடுமுறை நாட்களில் எட்டு, ஒன்பது மணிவரை நித்திரைகொள்வது நடேசனின் வழக்கம். தான் எழுந்து அவனின் நித்திரையைக் குழப்பிவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக எழும்பும் எண்ணத்தைக் கைவிட்ட கலா நடேசன் பக்கம் புரண்டு படுத்தாள். அவன் தலையைக் கோதிவிடத் துருதுருத்த கையை பலவந்தமாக அடக்கிவிட்டு, இன்னும் கொஞ்சம் நெருங்கிக்கொண்டாள். மூன்று மாதங்களுக்கு முன்னர், முச்சுக்
தத்தியூன்-91(47)

Page 25
DசிறுகதைD
காற்றுப்படும் துாரத்தில் தன்னருகில் இதோ படுத்திருக்கிறானே. இந்த மனிதன் யாரென்று அவளுக்குத் தெரியாது. ஆனால் இன்று.
கிட்டத்தட்ட தொண்ணுாறு நாளாகியும் கலாவுக்கு நடப்பதெல்லாம் ஏதோ அதிசயம் என்ற எண்ணம் அடிக்கடி வரத்தான் செய்கிறது. ஒருசில நாட்களில் இவ்வளவு அற்புதங்கள் ஒருவரின் வாழ்க்கையில் நடக்குமா என்ன.
யுத்த நிறுத்தம் - பேச்சுவார்த்தை என்கிறார்கள். பிரேமதாஸாவுக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதுதான் விருப்பம் அதனால் இனிமேல் சண்டையே வராது என்கிறார்கள். பள்ளிக்கூடமொன்றில் அகதியாக இருந்த கலா குடும்பத்தினர் இந்திய இராணுவத்தால் நாசமாக்கப்பட்டிருந்த தங்கள் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். "வீடு போனால் போகிறது. அதைத்திருப்பிக்கட்டலாம் . நீங்கள் எல்லோரும் உயிர்தப்பியதே புண்ணியம் . இத்துடன் ஐயாயிரம் டொலர்கள் அனுப்புகிறேன். வீட்டைத் திருத்துங்கள். சீதனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அக்காவிற்கு ஒரு நல்ல இடமாகப் பாருங்கள்" என்று கனடாவிலிருந்து தம்பியின் கடிதம் வருகிறது. அப்பா இரவில் பிந்திவரும் வழமையை புதுப்பிக்கிறார். "வயது வந்த குமர் வீட்டோட இருக்குது. அதுக்கு ஒரு வழி பார்ப்பமெண்டிலல. இந்த வயதிலயும் மேஞ்சிட்டு வருகுதே இந்த அறுந்த மனிசன். கும்பிடுபிட்டி வைரவரே இந்த மனிசன்ர காலக்கையையாவது வாங்கிவிடன். இவ்வளவு அநியாயங்களைச் செய்திற்றுப்போன இந்தியாக்காரங்கள் இந்த மனிசனை ஏன் சும்மா விட்டவங்கள்" என்று அம்மா அலற, "அங்கால பிள்ள படுத்திருக்கு . கத்தாதயடி. பிறகு என்ர குணம் தெரியுந்தானே" என்று அப்பா அம்மாவை வழமைபோல் மிரட்டுகிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு கலாவும் வழமைபோல் பெருமூச்சு விட்டபடி நித்திரையாகிறாள்.
ஒரு நாள் காலை வருகிறது. சீதனம் வாங்கவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் தம்பி நடேசனுக்கு நல்ல குணம் நடையுள்ள ஒரு அெண்ணைத்தேடிவரும் குணரெத்தினத்தின் வடிவில் அம்மா நாள்தோறும் வணங்கும் கும்பிடுபிட்டி வைரவர் நோர்வேயிலிருந்து வருகிறார். வெட்கப்பட்டபடி கலா குணரெத்தினத்துக்கு தேனீர் கொடுக்கிறாள்; இப்படி
தத்தியூன்-91648)

DசிறுகதைD
வெட்கப்படும் பெண் தான் குடும்பத்துக்கு ஏற்ற பெண் என்று திருப்தியடைந்த குணரெத்தினம் "மேற்கொண்டு அலுவல்களைப் பார்ப்பம்" என்று அப்பாவிடம் சொல்கிறார். நடேசனின் படத்தை அவளுக்குக் காட்டுகிறார்கள். "பெரிசா வடிவெண்டில்லை. ஆனா சீதனம் வாங்கக்கூடாது எண்டு நினைக்கிறவர் நல்ல குணமுள்ளவராக இருப்பார். பொதுவாக நல்ல குணமுள்ள ஆக்கள் வடிவாயிருக்க மாட்டினமாக்கும்" என்று கலா ஊகிக்கிறாள். "உன்ர அப்பாவின்ர வடிவில மயங்கித்தான் எனக்கு இந்தக் கெதி என்று அம்மா அடிக்கடி சொல்வதை நினைத்துப் பார்த்த கலா தனக்குச் சம்மதம் என்கிறாள். மகிழ்ச்சியினால் அம்மா கும்பிடுபிட்டி வைரவருக்கு வெள்ளிச் சூலம் செய்து தருவதாக வாக்களிக்கிறா. நிறைய வேலையுள்ள நேரம்; இரண்டு கிழமைதான் நிற்கமுடியும் என்றவாறு நோர்வேயிலிருந்து வந்த நடேசன் பெரிய பரபரப்பில்லாமல் தாலியைச்சூட்ட - வானத்திலிருந்து வெள்ளை மல்லிகைகளை வீசியெறிவதுபோல் பனித்துகள்களைச் சொரியும் குளிர்தேசத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த இந்தச் சிறுவிட்டில் கலா ராணியாகிறாள்!
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கலா கண்கலங்கியபடி பெற்றோரைப் பிரிந்தபோது அம்மா அவளிடம் தனியாகச் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.
"கலா ஆம்பிளயளெண்டா, அதுவும் ஐஞ்சாறு வருஷம் தனியா வெளிநாட்டில இருந்த பெடியன், சிலவேளை "அப்பிடி இப்பிடித்தான் இருப்பான். நீதான் பார்த்து அனுசரித்துப் போகவேனும் பிள்ள. "
கலா அதெற்கெல்லாம் தயாராகத்தான் வந்தாள். அப்பா அப்பிடி இப்படி நடந்துகொள்ளும்போது அம்மா எப்படி அனுசரித்துப் போனாவோ அது மாதிரியே அனுசரித்து வாழும் முடிவோடு வந்தவளை நடேசன்தான் ஏமாற்றினான்.
"வெளிநாட்டுக்கு வந்ததால கட்டாயம் ஒரு கார் வாங்கியே தீரவேணும் எண்டு நான் நினைக்கேல்ல. கார் வாங்கவேண்டிய ஒரு அவசியம் இருந்திருந்தா கட்டாயம் வாங்கியிருப்பன். ஆனால் அவசியம் ஒண்டும்
தத்தியூன்-9149)

Page 26
சிறுகதைD
வரேல்ல. அதனால நானும் வாங்கேல்ல. மற்றது இங்க இருக்கிற தமிழ்ப்பெடியள் எல்லாருக்கும் ஒரு வெள்ளைப் பொம்பிள இருக்கெண்டு உமக்கு யார் சொன்னது? இங்கத்தையப் பொம்புளயள் கனபேரோட எனக்குப் பழக்கம். ஆனா நீர் நினைக்கிற மாதிரியில்ல. மனம்விட்டுப் பழகிற நல்ல சினேகிதியள். இன்னொரு விசயம் கலா. நீர் எது வேணுமெண்டாலும் சுத்தி வளைக்காமல் என்னட்ட கேளும்." Y
நடேசனின் பேச்சு, நடத்தை எல்லாமே அவளுக்குப் புதிராக இருந்தது. ஒரு மனைவியுடன் பேசுவது மாதிரியாகவா பேசுகிறார்? ஆத்திரப்படுவதில்லை; அதட்டுவதில்லை; குரலை உயர்த்தி உறுமுவதில்லை; "நீ வா, போ" என்றெல்லாம் பேசுவதில்லை.
கலாவுக்குச் சந்தேகமாயிருந்தது.
"நடிக்கிறாரோ?”
ஆனால் மெல்லமெல்ல தான் ஒரு வித்தியாசமான மனிசன் என்று நடேசன் நிருபிக்கத் தொடங்கினான். "சமைக்கிறதையும் உடுப்புத்தோய்க்கிறதையும் ஒரு சுமையான வேலையா நான் நினைக்கிறேல்ல. ஊரில ஹொஸ்ரல்ல இருந்து படிச்ச காலத்திலயிருந்து போனகிழமைவரை இந்த வேலையள நான்தான் செய்யுறன். இந்த வேலயளச் செய்யிறதுக்காக உம்ம நான் கலியாணம் செய்யேல்ல. சமைச்சுத்தந்து, உடுப்புத் தோய்ச்சுத் தந்து , நான் சொல்லுறதெல்லாத்துக்கும் தலையாட்டிக்கொண்டு ஒரு சடம்மாதிரி வாழுற பெண்ணோட ஒரே வீட்டில இருக்கிறத என்னால நினைச்சுப் பாக்கேலாது கலா."
தான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நடேசன் எதிர்பார்க்கிறான் என்று கலாவுக்கு விளங்கவில்லை. சாப்பிட்ட கோப்பையில் தண்ணியை ஊற்றி கையைக் கழுவிவிட்டு அப்பா எழுந்துபோக அதை அம்மாதான் எடுத்துச் சென்று கழுவுவது வழக்கம். அப்படியெல்லாம் அம்மா நடறிதுகொண்ட படியால்தானே இன்றுவரை அப்பா அம்மாவுடன் வாழுகிறார். இல்லையென்றால் எப்போதே எங்கள் குடும்பம் உடைந்து போயிருக்குமே
ஆனால் நடேசன் அவளைச் சமைக்கவிட்டு பேப்பர் படிக்க மறுக்கிறான்;
தத்தியூன்-91(50)

DசிறுகதைD
அவளை உடுப்புத்தோய்க்க அனுப்பிவிட்டு ரெலிவிசன் பார்க்க மறுக்கிறான்; "உமக்கு "மூட் இருக்கா?" என்று கேட்காமல் அவளைத் தீண்ட மறுக்கிறான். இவர் என்ன கணவன்? இது என்ன வாழ்க்கை?
"எனக்குத் தணிய வாழ்ந்து அலுத்துப் போச்சு. ஒரு மனுசதுணை வேணும்போல இருந்திது. ஒண்டா வாழுற அளவுக்கு இங்கயுள்ள ஒரு பொம்பிளயளோடயும் மனசு ஒட்டேல்ல. ஒருநாள் அண்ணன் வந்து அண்ணியின்ர சொந்தத்தில கலா எண்டு ஒரு நல்ல பிள்ள இருக்குது. பேசுவமா எண்டு கேட்டார். எனக்கு உம்மைப் பற்றி ஒண்டும் தெரியாதுதான். ஒரு பெண்ணைப்பற்றி முழுசா அறிஞ்ச பிறகுதான் அவளோட வாழவேணும் எண்டால் சாகும்வரைக்கும் தனியத்தான் வாழவேணும். அதால உமக்கு என்னைப் பிடிச்சிருந்தா, நீர் எப்படிப்பட்ட பொம்பிளயாயிருந்தாலும் வாழ்ந்துதான் பார்ப்பமே என்கிறமாதிரி மன சில ஒரு தைரியம். அதுதான் அண்ணர் கேட்டவுடன ஓமெண்டு சொன்னனான்.என்ர வேலையளைக் குறைக்கிறதுக்காக எனக்கொரு துணை தேவையாயிருக்கேல்ல. மனசுக்கு, வாழ்க்கைக்கு, ஆளுக்காள் அன்பு காட் டுறதுக்கு ஒரு துணை வேணுமெண் டு தான் உம் மைக் கூட்டிக்கொண்டுவந்தனான். எனக்குப் பயந்து பயந்து பணிவிடை செய்யிற ஒருத்தி எனக்கு நல்ல ஒரு வேலைக்காரியா இருக்கலாமே தவிர ஒரு துணையாக இருக்கேலாதல்லா. நீர் சமைச்சுக்கொண்டிருக்க நான் கால ஆட்டிக்கொண்டிருக்கிறதிலதான் எனக்குச் சந்தோசமெண்டு நீர் ஏன்தான் நினைக்கிறீரோ தெரியேல்ல. நீர்தான் சமைக்கவேணும்; நான் குசினிப் பக்கம் வரக்கூடாதெண்டு எண்டு என்னை ஏதோ வலதுகுறைஞ்சவன் மாதிரி நீர் நடத்தேக்க எனக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். நான் வீட்டில இல்லாட்டி நீர்சமையும், நீர் வீட்டில இல்லாட்டி நான் சமைப்பன். ஆனா ரெண்டு பேரும் வீட்டில இருக்கேக்க ரெண்டுபேரும் சேர்ந்து வேல செய்யிறது எவ்வளவு முஸ்பாத்தி தெரியுமா."
வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு மனைவிகளாய் ஏற்றுமதி செய்யப்பட்ட பல பெண்களின் பரிதாபக் கதைகளைக் கலா கேள்விப்பட்டிருக்கிறாள். அர்த்தராத்திரியில் அந்நியதேசத்தில் மனைவியை வீட்டைவிட்டு வெளியே விரட்டியடிக்கும் கணவர்களையும், வாயில் அசிட் ஊற்றி மனைவியை
தத்தி-ஆன்-91(51)

Page 27
Odosans)
வதைத்த கணவர்களையும் பற்றி வாசித்திருக்கிறாள். நடேசன் அவர்களில் ஒருவனாக இல்லாமல் இருக்கவேண்டுமென்பதுதான் அவளினதும், அவள் பெற்றோரினதும் பிராத்தனையாக இருந்தது. மற்றும்படி, கெட்டிக்காரியான கலா, அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை அனுசரித்து குடும்பம் நடத்தி குடும்பத்தின் மானம் மரியாதையைக் காப்பாற்றி விடுவாள்! ஆனால் நடேசன்.
நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கலா நேரத்தைப் பார்த்தாள். எட்டாகிக் கொண்டிருந்தது. நடேசனின் நித்திரை இன்னும் குலையவில்லை. இன்றைக்கு அவனுக்குப் பிடித்த கத்தரிக்காய்ப் பொரியலும், பிட்டும் தயாரிக்கவேண்டும் என்று அவள் திட்டமிட்டது ஞாபகத்துக்குவர மெதுவாக எழுந்தாள்.
"ஏன்ரா நடேசன் கலாவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிறயாம். நேற்று அண்ணி அங்க வரேக்க கலாவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப்போட்டு நீ சமைச்சுக் கொண்டிருந்தாயெண்டு சொல்லி அண்ணி மனவருத்தப்பட்டாள் பெண்சாதிமாரைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி அவையின்ர விசாவிலதான் நீ வாழவேணும் எண்ட தலையெழுத்து உனக்கில்லையே. பிறகேன் இந்தத் தேவையில்லாத வேல பாக்கிற. "-அண்ணர் விஸ்கியை உறிஞ்சியபடி கேட்டார்.
அண்ணி சுடச்சுடப் பொரித்த கட்லட்டுகளை கொண்டுவைத்துவிட்டு மாயமாகிப்போனா.
"இல்லையண்ண. நல்லாப் படிச்சுக்கொண்டிருந்தவளைத் தகப்பன்காரன் "பொம்பிளப்பிள்ளைக்கு இதுக்கு மேல என்னத்துக்குப் படிப்பு? எண்டு நிப்பாட்டிப்போட்டார். இங்க எந்த வயதிலயும் படிக்கலாந்தானே. அதுதான் அவளைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னனான்"
"உனக்கென்னடா விசரா. ஒரு ஒழுங்கான சாப்பாடில்லாமல் அரைப்பட்டினி கிடக்கிறாய் எண்டுதானே அந்த அவலத்துக்குள்ள அங்கபோய் இந்தக்
தத்தியூன்-9152)

Lôpiso5
கலியாணத்தைப் பேசிமுடிச்சனான். நீயென்னண்டா அவளைப் படிப்பிக்கப்போறனெண்டு பேய்க்கதை கதைக்கிற அவளின்ர தகப்பனே தன்ர மகளுக்கு இனிமேல் படிப்புத் தேவையில்லையெண்டுதானே நிப்பாட்டினவர். நீ என்ன அவளைப் படிப்பிச்சு உத்தியோகம் பாப்பிக்கப் போறியே7. "
"உத்தியோகம் பாக்கிறதுக்காக மட்டும்தான் படிக்கவேணுமெண்டில்ல அண்ண. அறிவுக்காகவும் படிக்கலாம்" - நடேசனின் பொறுமை வற்றத்தொடங்கியது.
"அறிவுக்கோ." .அண்ணருடன் சேர்ந்து விஸ்கி அட்டகாசமாய்ச் சிரித்தது. அப்பச் சரி. அவள் பள்ளிக்கூடம் போய்ற்று வாறனெண்டு சொல்லி ஆடிற்று வருவாள். அவளுக்கு நீ வீட்டிலயிருந்து சமைச்சுப்போட்டுக்கொண்டிரு." அண்ணர் வெடிமருந்தின்மீது தீக்குச்சியைக் கொழுத்தி வீசினார்.
"நான் அவளுக்குச் சமைச்சுப்போடுவன். உடுப்புத்தோய்ப்பன். அது என்ர சொந்தப் பிரச்சினை. அதில தலையிட நீங்க ஆரு”
குசினியில் இருந்த கலாவும் அண்ணியும் அதிர்ந்துபோய் ஓடிவந்தார்கள்.
அண்ணர்” என்னடா சொன்னணி என்றபடி எழும்ப நடேசனும் எழுந்தான்.
"என்ன தம்பி வளர்ந்த குணத்தைக் காட்டுறீரா?. அவர அடிக்கவாற அளவுக்கு வந்திற்றீரா? - தடுமாறும் அண்ணரை தாங்கியபடி அண்ணி சீறுகிறா.
"நானொண்டும் அவர அடிக்க வரேல்ல அண்ணி. விழப்போறாரெண்டு பிடிக்கத்தான் எழும்பின்னான். ஆனா கலாவைப் பற்றி மரியாதயில்லாமல் கதைக்க அவருக்கு எந்த அதிகாரமுமில்ல. வெறி முறிஞ்ச பிறகு அவரிட்ட சொல்லி வையுங்க. நீர் வாரும் கலா." என்றவாறு திகைத்துப்போய் நின்ற கலாவை இழுத்துக் கொண்டு நடேசன்வெளியேறினான்.
"நான் படிக்கப் போனதாலதானே இந்தப் பிரச்சினையெல்லாம். இவ்வளவு பிரச்சினைப்பட்டு நான் படிக்க வேணுமா. நீங்க இனி என்ன சொன்னாலும் நான் இனிமேல் பள்ளிக்கூடம் போகமாட்டன்." - வீட்டுக்கு வந்ததும் கலா
தக்தியூன்-9153)

Page 28
DசிறுகதைD
அழுத்தமாகச் சொன்னாள்.
"நீர் ஏன் படிக்கூடாது கலா?. உம்மையும் தம்பியையும் படிப்பிக்க வசதியில்லாததால உம்மட அப்பா உம்மட படிப்பை நிப்பாட்டிப்போட்டு தம்பிய மட்டும் படிப்பிச்சார். ஆனா நீர் இப்ப என்ர பெண்சாதி. எனக்கு உம்மப் படிப்பிக்கிற அளவுக்கு வசதியிருக்கு. உமக்குப் படிக்கிறதில எவ்வளவு ஆசை இருந்ததெண்டு நீரே சொல்லியிருக்கிறீர். இந்த நாட்டில இருக்கிற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீர் படிக்கிறதில என்ன பிழை?" . என்ர அண்ணருக்கு நீர் படிக்கிறதில விருப்பமில்லையெண்டதால நீர் படிக்க மாட்டனெண்டு நிற்கிறீர். எனக்கு இதுதான் விளங்கேல்ல. என்ர அண்ணற்ற அபிப்பிராயங்கள நானே பெரிசா எடுக்கிறேல்ல. நீர் என் அவரைப்பற்றிக் கவலைப்படுகிறீர்?. அண்ணர்தான் உம்மை எனக்கு கட்டி வச்சவர் எண்டதுக்காக அவற்ற அபிப்பிராயங்களுக்காக நாம வாழேலுமா. இது எங்கட வாழ்க்கை; அண்ணற்றயில்ல. அண்ணியைத் தான் நடத்திற மாதிரி நான் உம்மை நடத்தவேணுமெண்டதுதான் அவற்ற விருப்பம். காத்துப்படவிடாம வீட்டுக்குள்ளயே அண்ணியைப் பூட்டிவச்சிருக்கிறமாதிரி உம்ம நான் வச்சிருக்கேல்ல எண்டுதான் அவருக்கு ஆத்திரம். சரி அவர் தன்ர வாழ்க்கையையும் அண்ணியின்ர வாழ்க்கையையும் குழப்பியடிக்கிறாரெண்டா எங்கட வாழ்க்கையையுமெல்லோ குழப்பப் பாக்கிறார். ஆனா அதுக்கு நான் அவர விடமாட்டன். இஞ்சபாரும் கலா, என்ர சந்தோசத்துக்காக நீர் ஏதாவது செய்யவேணுமெண்டு நினைச்சா வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு போகவேனும். "
ஐந்தரை மணிக்கு அலறுவதற்கு காத்திருக்கும் அலாரத்தை ஐந்துநிமிடங்கள் முன்னராக எழுந்து செயலிழக்கச் செய்துவிட்டு, நடேசனின் நித்திரை கலைந்துவிடாதிருக்க பூனைபோல் நடந்து சென்று, அரைமணித்தியாலத்தில் குளித்து பள்ளிக்கூடம் போவதற்குத் தயாராகிய கலா " என்று மெதுவாகச் சொல்லி மிருதுவாக நடேசனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, ஆறரை மணி பஸ்ஸைப் பிடிக்க அவசரஅவசரமாய்ப் புறப்பட்டாள்.
"போயிற்று வாறன்
தத்தியூன்-9154)

சக்தி
கலை, இலக்கியசமூக விஞ்ஞானக் காலாண்டிதழ்
கலை இலக்கிய சமூக விஞ்ஞானம் சார்ந்த ஆக்கங்களை தக்தி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறாள். ஆக்கங்கள் சிறுகதைகளாகவோ தொடர்கதைகளாகவோ கவிதைகளாகவோ கட்டுரைகளாகவோ சிறு துணுக்குகளாகவோ அமையலாம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்கு அவற்றின் படைப்பாளிகளே பொறுப்பாளிகளாவார். பிரசுரமாகாத ஆக்கங்களைத் திரும்பப் பெறவிரும்புவோர் சுய விலாசமிடப்பட்ட அஞ்சலுறை ஒன்றினை (நோர்வேயாயின் உரிய முத்திரையுடன்) தயவுடன் இணையுங்கள்.
SAKTH, PBoks99 Oppsal, 0619 Oslo 6, NORWAY.
தபாற் கணக்கு இலக்கம் (Postgro no):08240383676
ஆண்டுச் சந்தா விபரம்
இலங்கை இலவசம், ஸ்கன்டிநேவியா:NK100, ஏனையநாடுகள்:US$20
i Tamil Typeset : PeeNads GRAPHICS(Oslo)
நினைவூட்டுகிறோம்!
இந்த இதழுடன் ஒராண்டுக்கான உங்கள் சந்தா முடிவடைகிறது. உங்கள் சந்தாக்களை காலந் தாழ்த்தாது செலுத்துவதன் மூலம் சக்தி தாமதமின்றியும், தொடர்ந்தும் வெளிவர
ஆவன செய்யுங்கள். சந்தாக்களைச் செலுத்தும்போது மீட்கணிக்கப்பட்ட புதிய சந்தாத்
தொகையினைத் தயவுடன் கவனத்திற் கொள்ளுங்கள்.

Page 29
! ! ! ! ! !. 3 23.- 2, 3. - 23
:
 

::::::::::
----∞
----
::::';