கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனவு 1991.08

Page 1
岳
இலங்கை
இதழ்-1
 

ஆகஸ்ட் - 9.
சிறப்பிதழ்

Page 2
LSL L MLM LLLLLSS T L LLLS L M LSAS L L L LSS L MLM LLLLLSSLSLL L M LLLLLL0LLLL M LLLLSSSL L L L LSLSLL L0LM LSLSSSML LL LLL SSLLL LLLL LLSSSL L L 0 LL SLSSL L LSSL ML LSLS
g
ல வாாததைகள்.
LSLTLTL LSLSL L L LSL L M LSLSL LL LSLSL LMLL LSLSL LLLM LLLLLSSLL LSLSL ML LSLSL LML LSL LSL LSL LSL LSL 00 LLSL M LSSSLLL 00L LSLSLS
கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்து நவீன தமிழ் கலை, இலக்கிய உலகுடன் தமிழக கலை, இலக்கிய உலகம் ஒரு ஸ்நேகயூர்வமான தொடர்பினைக் கொண்டு வந்துள்ளது என்பதை கலை, இலக்கிய வரலாற்றை கற்றுக் கொள்பவர்கள் அறிவார்கள் அதிலும், குறிப்பாக தமிழகத்துச் சிறு சஞ்சிகை சூழல்காரர் களுக்கு ஈழத்து நவீன கதையான தமிழ் கலை, இலக்கியத்தைப் பற்றிய அறிவுபூர்வமான பிரக்ஞை என்றென்றும் இருந்துவந் துள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு எடுத்துக் காட்டாகவே, "கனவு" 17-வது இதழ் இலங்கை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
"கனவு’ இதழாசிரியர் இந்த இலங்கை சிறப்பிதழில் கொண் டிருந்த அக்கறையானது, இம்மலர் தயாரிப்பில் நாம் செலவழித்த உழைப்பைவிட அதிகமானது என்றே சொல்லவேண்டும். இந்த இதழ் தாமதத்திற்கு நாமும் நாம் சார்ந்த தேச சூழலுமே காரணமாக அமைகின்றன.
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் சந்திக்கும் எரியும் பிரச் சினைகளுக்கு மத்தியில் அவர்களது இலக்கிய முயற்சிகளும் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில்தான் நடைபெறவுள்ளன.
ஒரு தேச இலக்கிய சிறப்பிதழ் தயாரிப்பது என்பது வெறு மனே அத்தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை மையமாக வைத்து தயாரிக்க முடியாது. அத்தேசத்தின் எல்லா பிரதேசங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்-அம்மலரில் படைப்பு களை இட்டு நிரப்பும்பொழுதுதான் அப்பணி பூரணத்துவம் அடை யும். ஆனால், எமது இயலாமையின் காரணமாக கனவு 17-வது இதழ் இலங்கை சிறப்பிதழில் அப்பணி பூரணத்துவமாக உருவாக்கம் பெறாவிடினும், எம்மால் இயன்ற அளவுக்கு ஈழத்து நவீன தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை தொகுத்து அளித் துள்ளோம். இப்படைப்புக்களைப் பற்றிய குறை-நிறைகளை தாராளமாக விமர்சன கண்ணோட்டத்தில் பார்த்து நண்பர்கள் முன் வைக்கலாம்.
O மேமன் கவி
திரு. மேமன்கவி அவர்களுக்கு நன்றி. அட்டைக்கும், சேகர்-பூரண கவிதைகளுக்கும் தூண்டி"லுக்கு கன்றி.

*கணிதவியலாளன்”
அழகு சுப்ரமணியம்
பால்போல நிலவு காய்ந்து கொண்டிருந்தது. பட்டினத்து 40க்கள் முற்றவெளியில் மெதுவாக, ஒயிலாக ஊர்ந்துகொண்டு அதனை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே புதுமணத் தய பதிகளிருவரும் இருந்தனர். மனைவிக்கு அரையடி முன்னால் கணவர் நடந்து கொண்டிருந்தார். அவர்கள் படித்த வர்கள், பண்பாடு தெரிந்தவர்கள் இதனால் இந்த அரையடி வித்தியாசம் தவிர்க்க முடியாததாக இருந்தது.
சந்திரம் பாடசாலையொன்றில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பித்து வந்தார். பல்கலைக் கழகமொன்றில் கணித வியல் பேராசிரியராவதற்கான தகுதி அவருக்கிருந்தது. அதுவே அவருடைய லட்சியமும் கூட.
சுபத்திரா சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். முக்கியமான சம்பவ மொன்றை அவள் நினைவுகூர்வதாகத் தெரிந்தது.
*" என்ன, சிந்தனை பலமாக இருக்கிறதே?" சந்திரம் கேட்டார்.
'வேம்படிப் பாடசாலையில் நான் படித்த நாட்களை நினைவு கூர்கிறேன். அதோ, அந்தச் சுவர்களுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உங்களுக்குத் தெரிகிறதா?"
**ஆம். தெரிகிறது."
* அங்குதான் நான் படித்தேன்".
"ஓ! இப்போதுதான் ஞாபகம் வருகிறது. நீ ஒரு படித்த பெண்ணென்று திருமணப் பேச்சின்போது எனது பெற்றோர்கள் சொல்லியிருந்தனர். நிறையப் படித்திருக்கிறாயா?"
'மூன்றாம் பாரம் வரையில் படித்திருக்கிறேன். கனிஷ்ட கேம்பிறிஜ் பரீட்சையில் சித்திபெற வேண்டுமென்று விரும்பியிருந் தேன்; ஆனால் அதற்கிடையில் நமது திருமணம் முடிந்து விட்டதே?.
**இது உனக்கு ஏமாற்றமளித்திருக்கும், இல்லையா?*
இல்லையில்லை," அவள் சிரித்தாள். நிலவொளியில் பற்கள் பிரகாசித்தன.
'முத்துப் பல்லழகியே! நீ கணிதமும் படித்திருக்கிறாயா?"
**அட்சரகணிதம், கேத்திரகணிதம் ஆகியன செய்திருக் கிறேன்.""
"நல்லது, சமாந்தர வரைகளுக்கு வரைவிலக்கணம் கூறு LurrŤäi 56aUrb. ””

Page 3
4.
"எவ்வளவு தூரம் நீட்டினாலும் ஒன்றையொன்று சந்திக்காத வரைகளே சமாந்தர வரைகள்.'"
'நீ சொல்வது முற்றிலும் சரியல்ல, ஆரம்ப கணிதம் மட்டுமே அறிந்த ஒருவர் கூறும் வரைவிலக்கணத்தைத்தான் நீ கூறினாய்.""
'நீங்கள் என்ன வரைவிலக்கணம் கூறுவீர்கள்?' சுபத்திரா கேட்டாள்.
"முடிவிலியிற் சந்திக்கும் வரைகளே சமாந்தர வரைகள் எனப் படும். நான் ஓர் உயர்தர கணித சாஸ்திரியென்பதை நீ அறிந்து கொள்," சந்திரம் அமைதியாகக் கூறினார்.
"நீங்கள் நன்றாகப் படித்தவர்."
"நீயும் படித்தவள்தானே. ஆனால் அறிவிற்கதிகமான படிப்பு ஒரு பெண்ணுக்கு அவசியமென நான் எதிர்பார்க்கவில்லை. எனது படிப்பினைப் பதியவைக்கும் அளவிற்கு உனது கல்வியறிவு உள்ளது. ஆனால் எனது உணர்வுகளுடன் ஒன்றிப்போவதற்கு உனது கல்வியறிவு போதாது."
சுபத்திரா மெதுவாகச் சிரித்தாள். அவளுடைய முத்துப்பற்கள் மீண்டும் நிலவொளியில் பிரகாசித்தன. சந்திரம் மிகவும் திருப்தி யுடன் வீடுநோக்கி நடந்தார். சுபத்திரா அவரைப் பின்தொடர்ந் தாள் அரையடி பின்னால்.
கடந்த சில வருடங்களாக மனைவிய்ைவிடக் கணிதத் துறை யிலேயே அதிக கவனஞ் செலுத்தினார். அவருடைய இச்செயல் சுபத்திராவிற்கு எரிச்சலூட்டியது. ஆனால் தனது வெறுப்பைச் சொற்களிலோ அல்லது செயலிலோ அவள் வெளிப்படுத்தவில்லை. ஒழுங்காக, சில வருட இடைவெளிகளில் குழந்தைகளைப் பெற்றாள். அவளையோர் இயந்திரமாகவே அவர் கருதினார்.
ஒரு கவிஞன் தனது கவிதைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான். ஒரு பாடகன் தனது பாடல்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான். அவர்கள் சாதாரண மனிதஉணர்ச்சி களில், நடத்தைகளில் தவறியிருக்கலாம் இன்றேல் தோல்வி யுற்றிருக்கலாம். அவர்களை நாங்கள் அவர்களுடைய சொந்தத் துறைகளாகிய கவிதைத் துறையிலேயோ அல்லது இசைத்துறை யிலேயோதான் கணித்துப் பார்க்கவேண்டும்.
சந்திரம் ஒரு சாதாரண மனிதராகத் தென்படவில்லை. ஏனை யோரிடமிருந்து மூற்றிலும் வேறுபட்ட ஓர் அசாதாரண பிறவி யாகவே காணப்பட்டார். அடிக்கடி நீண்ட தூரம் உலவி வருவார். அப்போதெல்லாம் நண்பர்கள் யாரையாவது சந்தித்தீர்களா வென்று மனைவி கேட்டால்:
**இல்லை, அவர்களில் எனக்கு நாட்டமில்லை. நான் கணிதப் பிரதேசத்திற்குள் மட்டுமே அலைந்து கொண்டிருக்கிறேன்." என்று பதிலளிப்பார்.

5
அயலவர்களுடன் அடிக்கடி சச்சரவிடுவார். வேலையாட்களின் மீது எரிந்து விழுவார். தனது குழந்தைகளிடம்கூட அன்பு செலுத் தாமல் அவர்களை ஒதுக்கிவிடுவார். நுண்கணிதத்தில் மிகச் சிகக லான கணக்குகளை இலகுவாகத் தீர்த்துவிடும் அவரால் சாதாரண கடைக் கணக்குகளைத் தவறின்றிக் கூட்டிப் பார்க்க முடிவதில்லை. என்றாவது ஒரு நாள் தான் ஒரு நியூட்டனாகவோ அல்லது குறைந்தபட்சம் ராமானுஜமாகவோ வந்தே தீருவதென்ற எண்ணம் அவருடைய அடிமனதில வேரூன்றியிருந்தது.
சுபத்திரா இப்போது சந்திரத்தை ஓரளவு புரிந்துகொண்டார். சந்திரம் அயலவர்களிடம் சச்சரவிட்டால் ஆறுதலாக அவர்களிடம் சென்று அவர் நடந்து கொள்ளும் முறைக்காகத் தனது வருத்தத் தைத் தெரிவித்தாள். சந்திரத்தின் ஒவ்வொரு தேவையினையும் குறிப்பறிந்து பூர்த்தி செய்வதன் மூலம் அவருடைய வேலைகளை இலகுவாக்கினாள். குழந்தைகள் அவருக்குத் தொல்லை கொடுக் காதவாறு பார்த்துக் கொண்டாள்.
சந்திரத்தின் நடத்தைகள் மிக விசித்திரமாகக் காணப்பட்டன. ஒன்றிற்கொன்று பொருத்தமற்ற காற்சோடுகளை அணிந்து கொண்டு வெளியே செல்வார். நண்பர்களை வீட்டிற்குவரவழைத்து விட்டு அந்நேரம் பார்த்து எங்காவது கிளம்பிவிடுவார். பலத்த மழை பெய்யும்போது கூட கலைந்த தலையுடன் நீண்டதூரம் உலாவச் செல்வார்.
கணிதத் துறையில் கடுமையாக உழைத்தார். புதிய, இலகு வான வழிமுறைகளைக் கண்டுபிடித்து அவற்றை மாணவர்களுக்கு கற்பித்தார். கேத்திர கணிதத்தில் கணக்குகளின் சொல்லடுக்கு களைக் கண்டு கலங்கிவிடாது நன்றாக ஆழ்ந்து சிந்தித்து விடை களைக் காணவேண்டுமென மாணவர்களிடம் கூறுவார். கணித லச் சமன்பாடுகளெல்லாம் எக்கணமும் அவருடைய நா நுனி ဂိမှူး விரல் நுனியிலுமிருக்கும். (5 நா து
சந்திரம் தனது இலட்சியப் பாதையில் எந்தவொரு தடை யினையும் சந்திக்கவில்லை. கணிதவியலில் அகில Tஉட்லகப் பரிசொன்றைத் தட்டிக்கொண்டதன் மூலம் பெரும் புகழையும் கொழும்புப் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் பதவியையும் ஒருங்கே பெற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத்தின் பலதரப் பட்ட வாழ்க்கை முறைகள் பேராசிரியர் சந்திரத்திற்குப் பொருத்த மற்றவையாகக் காணப்பட்டன. போதனாசிரியர்கள் பலர் தங்கள் பாடங்கள், பாடத்திட்டங்கள் தவிர்த்த ஏனைய பல்வேறு துறை களில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். பேராசிரியர் சந்திரத்தின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு எவ்வளவோ வேறுபட்டதாக இருந்தது. கொழும்பு வாழ்க்கையில் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தன. மக்கள் பிறருடைய சொந்த விஷயங்களைப் பற்றி சிறிதுகூட அக்கறை காட்டுவதில்லை.
சந்திரம் ஏனைய பேராசிரியர்கள் மீது பொறாமை கொண்டார். சரித்திரப் பேராசிரியர் சுந்தரம் இசைக்கலை ஞானம் பெற்ற வராக இருந்தார். அவர் பல்கலைக்கழக விழாக்களுக்குத் தலைமை

Page 4
6
தாங்க அழைக்கப்பட்டார். கணிதவியல் உதவிப் பேராசிரியர் தத்துவப் பிரசங்கங்கள் நிகழ்த்தினார். இதேபோது தத்துவப் பேராசிரியர் மங்களம் சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவருடைய தரமான சிந்தனைகளும் சிறப்பான சொற்பொழிவு களும் நகர்வாழ் மக்களாலும் மாணவர்களாலும் விரும்பப்பட்டன. பேராசிரியர் மங்களம் சென்றவிடமெல்லாம் வரவேற்கப்பட்டார், புகழ்ந்துரைக்கப்பட்டார்.
பேராசிரியர் சந்திரம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில் கூட வெற்றிபெற முடியவில்லை. கணிதத் துறையில் மட்டுமே அவர் திளைத்திருந்தார். ஆனால் தலைநகரிலோ அசல்களே அழிந்து போகும்படியான போலிகள் பல உலாவின. பலரகப்பட்ட மனிதர்களும் தங்கள் குறுகிய வட்டங்களிலிருந்து வெளியே வந்து வாழ்க்கை அரங்கில் கலைத்துறையிலோ இன்றேல் இலக்கியத் துறையிலோ அல்லது அரசியற் துறையிலோ ஈடுபாடு காட்டி 6Tss. ܐ
பல்கலைக்கழகப் பேராசிரியர் குழாம் அவர் மீது விசேஷ அக்கறையேதும் காட்டவில்லை. அவர்கள் தனக்குரிய அந்தஸ்தை வழங்கவில்லையேயென்று பேராசிரியர் சந்திரம் கவலைப்பட்டார். தன்னை ஒரு மன்றத்தின் தலைவராகும்படியோ அல்லது பதிவாள ராகும்படியோ யாரும் கேட்கவில்லையே என்ற கவலை பேரச் சிரியர் சந்திரத்தை வாட்டத் தொடங்கியது.
சந்திரத்தின் பார்வையில் சகபேராசிரியர்கள் நேர்மையற்ற பிறவிகளாகத் தோன்றினர் சிறந்தவொரு கணித சஸ்திரியென பதைத் தவிர வேறு தகைமைகள் ஏதும் அவருக்கிருப்பதாக அவர் கள் கருதவில்லை. ஈருறுப்புச் சூததிரம் போன்ற புதுவகையான சூத்திரமொன்றைக் கண்டுபிடித்துத் தனது மேதைததுவத்தைப் புலப்படுத்தியதன் மூலம் அவர்களிடமிருந்து பயங்கலந்த பக்தியை யும் மரியாதையையும் அவர் பெற்றுக்கொண்டார். தானொரு வெற்று ஜடமலலவென்பதை தனது விசாலித்த அறிவைக்கொண்டு மற்றைய பேராசிரியர்களுக்குப் புரியவைத்தார்.
அடுத்த சில வருடங்கள் பேராசிரியர் ஒய்வொழிச்சலின்றிக்
காணப்பட்டார். புதிதாக எதையாவது கண்டுபிடிகக வேண்டு
மென்று கடும் முயற்சி செய்தார். ஆனால் கண்டுபிடிப்புகள் அவ்வளவு இலகுவானவையாக இருக்கவில்லை.
**எனது முன்னோர்கள் கணிதவியல் சூத்திரங்களெல்லா வற்றையும் கண்டுபிடித்து விட்டார்கள், புதிதாகக் கண்டுபிடிப்ப தற்கு எதுவுமே இல்லைபோற் தெரிகிறது," என்று பேராசிரியர் சந்திரம் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார்.
**பேராசிரியரே, கரும்பலகையில் நீங்கள் சமன்பாடுகளைத் தீர்த்துக் கொண்டிருக்கும்போது உலகம் உங்களுக்கு முன்னால் எவ்வளவோ தூரம் சென்றுவிடுகிறது. நீங்கள் வாழ்க்கையில் ஏன் சிரத்தை காட்டக்கூடாது? அப்போதுதான் இப்படியொருவர் இருக்கிறாரென்பதை மக்கள் அறிந்துகொள்வர்," என்று நண்பர் கூறினார்.

7
"அப்படிச் சொல்லாதே, அப்படிச் சொல்லாதே," சந்திரம் சத்தமிட்டார். "நான் ஒரு மேதை, உனக்குத் தெரியுமா? நான் ஒரு மேதை" என்று கூறியவாறு நண்பரை முறைத்துப் பார்த்தார். பின்னர் ஒருவாறு தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டார். நண்பரை நோக்கி, "நீ கூறுவது சரியாக இருக்கலாம். இரண்டு விதமான கவர்ச்சிகள் இருப்பதை நான் கூட உணருகிறேன். ஒன்று கணிதக் துறை அடுத்தது பரந்து விரிந்த இந்த உலகு. என்னைப் பொறுத்தவரையில் கணிதத் துறையின கவர்ச்சிதான் பலமானதாக இருக்கிறது," என்று கூறினார்.
பேராசிரியர் சந்திரம் பல பேராசிரியர்களைப் போல மாணவர் 'களிடமிருந்து விலகியிருக்காமல் அவர்களுடன் ஒன்றிப் பழகினார். சிலபோது தன்னைட்பற்றி அல்லது தனது ஒரு டசன் பிள்ளை களைப் பற்றி விகடங்கள் செய்வார். ஒரு நாள் பலமான மழை பெய்தது, பல்கலைக்கழக விரிவுரை மண்டப ஒடுகள் ஊறிஒழிகின. அப்போது பேராசிரியர், 'விசேஷ வகுப்பில் சில மாணவர்கள்தான் இருக்கிறார்கள். இப்படியான நேரத்தில் அவர்களை எனது வீட்டிற்குக் கூட்டிச் சென்று பாடங்களைத் தொடரலாம். ஆனால் சுமார் நூறு மாணவர்களடங்கிய உங்கள் வகுப்பை அப்படி அழைப்பது சாத்தியமில்லை, ஏற்கனவே எனது வீட்டில் இடை நிலை வகுப்பொன்று உள்ளது' என்று தனது குடும்பத்தை கேலி செய்தார்.
இன்னொரு விரிவுரையின்போது, "எத்தனை வழிகளில் எனது பிள்ளைகளின் பிரவாகத்திலிருந்து இரண்டு சிறுமிகளையும் இரண்டு சிறுவர்களையும் வேறுபடுத்த முடியுமென்று யாராவது கூறுவீர்களா?" என்று கேட்டார் பட்டதாரிமாணவர்கள் இயற்கை யாகவே அவருடன் ஒன்றி அவருடைய வேடிக்கைகளிற் கலந்து கொள்வார்கள். சில மாணவர்கள் எல்லைமீறி விடுவதுண்டு.
பேராசிரியர் சந்திரம் தனது மாணவர்களுக்கு மிகச் சிறப்பாகக் கணித போதனையளித்திருந்தார் அடிக்கடி பரீட்சைகள் வைப்பார். பெளர்ணமி நாட்களில் மாணவர்களை அழைத்து அவர்களுடன் நிலவொளியில் நடந்துகொண்டே அடிப்படைச் சமன்பாடுகளை அலசி ஆராய்வார். பரீட்சைகளை அனேகமாக அவருடைய உதவி யாளர்கள்தான் நடத்துவார்கள். ஒருமுறை அவரே பரீட்சை யொன்றை நடாத்தினார். எல்லா மாணவர்களும் அக்கறையுடன் விடை எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரேயொரு மாணவன் மாத்திரம் விடைத் தாள்களை வெறுமையாக வைத்திருந்தான். அவன் கணித அறிவு இல்லாதவனாக இருக்கமுடியாது. வினாக் களுக்கு விடையளிக்கவேண்டும் அல்லது மண்டபத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். ஆனால் அவனோ அப்படிச் செய்ய வில்லை.
பேராசிரியர் சந்திரம் அவனைக் கவனித்துவிட்டார். மெது வாக அந்த மாணவனை நோக்கிச் சென்றார். மிரண்ட மாண வனைப்போல அவன் பயந்து கொண்டிருந்தான். அவனுடைய விடைத்தாளில் இரண்டு வரிகளைத் தவிர மீதி முழுவதும் வெறுமனே காணப்பட்டது. பேராசிரியர் தன்னை அணுகியபோது

Page 5
8
அந்தப் பட்டதாரி மாணவன் விடைத்தாள்களைக் கைகளால் மறைத்துக் கொண்டான். பேராசிரியர் சந்திரம் அவனுடைய கைகளை விலக்கிவிட்டு விடைத்தாளை நோக்கினார். முதல் வரி தெரிந்தது.
"பேராசிரியர் சந்திரம் + கணிதவியல் = முடிவிலி (Infinity)"
சந்திரம் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டார். அடிமேலடி வைத்து மண்டபத்தை வளையவளையச் சுற்றிவந்தார். மயிலின் கர்வத்துடன் மண்டபமேடை மீதேறினார். ஒருவித இன்பக் கிறுகிறுப்பு.
'நியூட்டன், இராமானுஜம், சந்திரம் - சந்திரம், நியூட்டன், இராமானுஜம்' பெயர்களைத் திரும்பத் திரும்ப வாய்விட்டு முணுமுணுத்தார்.
திடீரென்று ஏதோவொரு யோசனையுடன் மேடையிலிருந்து இறங்கி அந்த மாணவனை நோக்கி வந்தார். அவன் எழுதி யிருந்த அடுத்த வரியைக் காட்டுமாறு கேட்டார். அவனுடைய முகம் வெளிறியது. விடைத்தாளை மடித்துவிட்டான். அப்படிச் செய்வது சரியல்லவெனக் கூறிய சந்திரம் அதனைத் தருமாறு கேட்டார். அவன் விடைத்தாளைக் கொடுத்தான். பேராசிரியா வாசித்தார்.
"பேராசிரியர் சந்திரம்-கணிதவியல் க பூஜ்யம்'
சந்திரத்தின் முகம் இருளடைந்தது. மன உளைச்சலால் அவனைத் திட்டுவதற்குக் கூட முடியர்த அளவிற்கு அந்த ஒருவரி அவருடைய உள்ளத்தைப் பலமாகத் தாக் ட்டது. சகல சமபத் துக்களையும் பறிகொடுத்த ஒரு மனிதனைப் போல அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார். ஆரோக்கியமும் வலிமையும் பொருந் திய மக்கள் நிரம்பிய அறையில் தானொரு முடவனைப் போலிருப் பதாக அவர் உணர்ந்தார். தலைநகரத்துப் பல்கலைக் கழகம் அவரை இந்நிலைக்குக் குன்றச் செய்துவிட்டது.
பெளர்ணமி நிலவு பல்கலைக்கழக மைதானத்தில் வெள்ளை விரிப்பிட்டிருந்தது. சுபத்திரா முஸ்லீம் பெண்களின் உடையணிந் திருந்தாள். அங்கு உலாவிக் கொண்டிருந்த மக்கள் பகற்பொழு தைப்போல கனமான ஆடைகளை அணிந்திருக்கவில்லை, லேசான உடைகளையே உடுத்தியிருந்தார்கள். சுபததிரா கணவனுக்கு அரையடி பின்னால் நடநது கொண்டிருந்தாள். சட்டையைத் தளர்த்திக் காற்றைப் புகவிட்டாள். இரவு நேரத்துக் குளிர்காற்று உடலுக்குச் சுகத்தையளித்தது. திடீரென்று சந்திரம் அவளைக் கூப்பிட்டார்.
"சுபத்திரா, எங்கேயிருக்கிறாய்?"
"இங்கேதான், உங்களுக்குப் பின்னால்." என்றாள்.
"பேராசிரியர் சந்திரத்துடன் கணிதவியல் சேர்ந்தால் அதன் முடிவு என்னவாயிருக்கும்?"

9
சுபத்திரா திகைத்தாள். "முடிவிலி' என்ற சொல் அவளுக்குப் பரீட்சையமில்லை அவளுடைய கணித அறிவு அவ்வளவு தூரம் விசாலித்திருக்கவில்லை. ஆனால் அவருடன் கணிதவியல் சேர்ந் தால் அளவிட்டுக் கூறமுடியாத ஏதோவொன்று தோன்றுமென அவளுக்குத் தெரிந்திருந்தது. சுபத்திசா தனக்கு இயல்பான பாணியில் அதனை விவரித்தாள்.
**அது இந்த உலகத்தையோ அ விட மிகப் பெரியதொன்றாக இருக்கும்."
லது சமுத்திரங்களையோ
"ஓ! மிகச் சிறப்பான விளக்கம்," சந்திரம் பாராட்டினார். பிரியமிக்க பார்வையொன்றினால் அவளைத் தழுவிக் கொண்டார். சுபத்திரா தலைகுனிந்தாள். பொது இடங்களில் அடக்கமாக நடந்துகொள்ளவே அவள் விரும்பினாள். சந்திரம் அவளைத் தீண்டிக் குறும்பு செய்தார். அவளுடைய முகம் நாணத்தாற் சிவந்தது.
** என்ன, இன்று இவர் புதுவிதமாக நடந்து கொள்கிறாரே!" என்று சுபத்திரா நினைத்தாள். 'ஒ1 இல்லையில்லை" உடனடி யாகத் தன்னைத் திருத்திக் கொண்டாள். "அவர் ஒரு மேதை, அதனாற்தான்."
** sir Luis yr ar”*
என்ன பேராசிரியரே?”*
**இப்போது சொல்லு, பேராசிரியர் சந்திரத்திலிருந்து கணித வியலைக் கழித்துவிட்டால்?"
**சுலபமாகப் பதிலளிக்கலாம்" இதழ்க்கடையில் புன்னகை தவழ அவருடைய அழகிய மனைவி கூறினாள்: **எனதன்பான பேராசிரியரே கணிதவியலில்லையென்றால் நீங்கள் ஒன்றுமே யில்லை." தனதுபதிலால் திருப்தியடைந்து சந்திரம் தன்னைப் பாராட்டுவாரென்று அவள் எண்ணினாள் ஆனால் அவள் எதிர் பார்த்ததற்கு நேர்மாறான தாக்கம் நிகழ்ந்தது. சந்திரத்தின் உடல் கோபத்தால் நடுங்கியது. வாய்க்கு வந்தபடி சுபத்திராவைத் திட்டினார். கைகளை வீசிக் கொண்டு அவளைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்.
அங்கிருந்த சிலர் பேராசிரியரைச் சூழ்ந்துகொண்டார்கள். சந்திரத்திற்குப் பைத்தியம்பிடித்துவிட்டதாக ஒருவன் சொன்னான். மேதைகளின் மாறுபட்ட மன உலைச்சலால் ஏற்படும் தற்காலிக நிகழ்வுகளிலொன்றே இது என்றார்கள் சிலர். பேராசிரியர், சிவ பெருமானின் ஊழி நடனத்தை ஆடிக்கொண்டிருக்கிறாரென்று சில இளவட்டங்கள் நையாண்டி செய்தன.
சிநேகிதியொருத்தி சுபத்ராவை இழுத்தெடுத்துக்கொண்டாள். சந்திரம் சுற்றியிருந்தவர்களை விலக்கிக் கொண்டு உபவேந்தரிடம் ஓடிச்சென்று தனது இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கைகளையும் கால்களையும் வீசிக்கொண்டு புராணகாலக் கதாநாயகர்களின் அபிநயங்களுடன் அவர் நடந்து

Page 6
10
கொண்டவிதம் வினோதமாக இருந்தது. உபவேந்தரால் பேரா சிரியர் சந்திரத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை. பயத்தினால் நாக்கு அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது. சொற்கள் வெளிவர மறுத்தன . உபவேந்தரின் மனைவி வீரிட்டலறினார்.
உபவேந்தர் ஒருவாறு தன்னைச்சுதாரித்துக்கொண்டு வேலைக் காரர்களை அழைத்தார். சந்திரத்தை வெளியேற்றுவதில் அவர் கள் பெருஞ்சிரமப்பட்டார்கள். இறுதியாக வேலையாட்கள் அவரைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று வாடகை காரொன்றில் ஏற்றினார்கள். உபவேந்தர் சாரதிக்கு அருகில் அமர்ந்துகொண் டார். நேரே மனநோயாளர் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சாரதியிடம் கூறினார். குளிர்ந்த நிலவொளியில் சுபத்திராவை அவளுடைய சிநேகிதிகள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது சந்திரத் திற்குத் தெரிந்தது. காது செவிடுபடக் கத்தினார்.
"ஓ! சுபத்திரா, சுபத்திர ச!'"
'நீர் அவளை இப்போது பார்க்கமுடியாது’’ உபவேந்தர்
கடுமையான குரலில் சந்திரத்தை எச்சரித்தார்
""மிகவுஞ்சரி, நான் அவளை முடிவிலியிற் சந்தித்துக் கொள் கிறேன். ' பேராசிரியர் அமைதியாகப் பதிலிறுத்தார்.
கருமுகிலொன்று நிலவை மறைத்தது. இருள் கவிந்து பாதையை மூடியது. இருளினால் வெகுண்டு வெறுப்படைந்த பேராசிரியர் ஆவேசம் கொண்டு துள்ளினார். சாரதி அசுரவேகத் தில் மனநோயாளர் மருத்துவமனைக்கு காரைச் செலுத்தினான்.
குறிப்பு:
அழகு சுப்பிரமணியம்.ஆங்கில இலக்கியத் துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழன். சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் புரித்தார். இருந்தபோதிலும் சட்டத்துறையைவிட இலக்கியத் துறையே தன்னைப் பெரிதும் கவர்ந்திருப்பதாக அடிக்கடி கூறுவார்.
நீண்டகாலமாக இலக்கியத்தில் வாழ்ந்த இவர் "இன்டியன் றைற்றிங்'" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக வும் "இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க லண்டன் கிளை" செயலாளராகவும் பணியாற்றினார். இவருடைய தந்தையார் புகழ்பெற்ற நீதிபதி, பேரனார் இலக்கிய ஈடுபாடு கொண்டவர். அழகு சுப்பிரமணியமோ பேரனாரின் இலக்கிய ஆர்வத்தையும் தந்தையாரின் சட்டப் புலமையையும் ஒருசேரக் கொண்டவராகத் திகழ்ந்தார்.
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான வால்ரன் அலன், "எனது கருத்துப்படி அழகு சுப்பிரமணியம் ஓர் அற்புதமான எழுத்தாளராவார். இவரைப் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர் மூலமே மேற்குலகில் வாழும் நாங்கள் கீழைத்

தேசங்களைத் தரிசிக்கிறோம். இவருடைய படைப்புகள் பெரும் பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோது ஆங்கிலேய வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர் களுக்கே சவால்விடக்கூடிய முறையிலும் இவர் சில கதைகளை எழுதியுள்ளார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இலக்கியப் படைப்புகள் ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய மேற்கத்திய மொழிகளிலும் பல இலக்கிய மொழி களிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. "த பிக் கேர்ள்"" (The Big Girl) என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1964ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'குளோ frá 60» b gesäT * 95ř 6iv . Tổsiv”” (Clossing Time and other Stories) இவருடைய மறைவிற்குப் பின்னர் இவருடைய மனைவி திருமதி செல்லக்கண்டு அழகு சுப்பிரமணியம் அவர்களால் வெளி யிடப்பட்டது. அழகு சுப்பிரமணியத்தின் ஒரேயொரு நாவல் ""மிஸ்டர் மூன்" (Mr. Moon) இன்னும் கையெழுத்துப் பிரதி யாகவே உள்ளது. ஆனால் இது ராஜ பூரீகாந்தனால் தமிழாக்கப் பட்டு 'மல்லிகை" மாத சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளியிடப் பட்டது.
*உலக இலக்கியத்தின் உன்னதச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஹைடல்பேர்க் நகரில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற "த மதமற்றிஸன்” என்ற சிறுகதையின் தமிழாக்கம் இங்கு பிரசுரமாகியுள்ளது. தமிழாக்கமும், குறிப்பும் திரு. ராஜழரீகாந்தன். O
சிறு சஞ்சிகைகள்
இலங்கை இலக்கிய வளர்ச்சியில் சிறு சஞ்சிகைகளின் பணி மகத்தானது. தமிழகத்தின் "மணிக்கொடி'யைப் போல மறு மலர்ச்சி" என்ற இலக்கியச் சிற்றிதழ் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளது. காலத்திற்கு காலம் சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளன. கடந்த கால் நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவரும் இலக்கிய சஞ்சிகை "மல்லிகை". இதன் ஆசிரியர் தமிழ் எழுத்தாளர் களுக்கு நன்கு அறிமுகமான டொமினிக் ஜீவா. "மல்லிகை" இலக்கிய இதழின் இருபத்தைந்தாவது வெள்ளி விழா மலர் 1990-ல் வெளிவந்தது. தமிழக எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. மற்றும் அலை கொழுந்து, முனைப்பு, என்ற இலக்கியச் சிற்றேடுகள் வெளிவருகின்றன.

Page 7
தண்டனை
எஸ். ஜி. புஞ்சிஹேவா
சென்ற சித்திரையில் மழை, புயல் என்பவற்றோடு முடிவின்றி இடியு இடித்தது. சும்மா ஆகாயத்தில் இடிஇடித்து நின்று ட்டால் போதாதா? ஏழையொருவனின் குடிசையில் விழுந்த பேரிடியினால் சுவர்கள் சரிந்துவிழ எஞ்சியிருந்தவை புயற்காற் றுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. கரையக்கூடியவையெல்லாம் மழை நீருடன் சங்கமித்தன.
குடிசையின் ஏழைகள் ஒரு சுண்டு அரிசி தேடி வெளியே போயிருந்தமையால் அவர்கள் இழந்தது அந்தக் குடிசை மாத்திரமே. ஆனால் அவர்களுக்கு இருந்ததும் அது மாத்திரமே.
ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைக் கூறத் தவறிவிட்டேன். து நண்பன் ஒருவன் எனக்குக் கனவில் சொன்ன கதை, அவனும் கனவொன்றின் மூலம் கேள்விப்பட்டதாக அந்தக் கனவி லேயே எனக்குச் சொன்னான். அந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாம் வர்ணபகவானிடம் போக நினைத்தோம்.
ஆகாயம் முழுதும் அலைந்த நாம் வர்ணபகவானை கண்டோம். அவர் எந்தப் பேச்சுமின்றி தனது காரியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். தேவையானபோது தயாராய் வைத்திருப்ப தற்காக இடிகளைத் தயாரித்துக் கொண்டிருந்த அவர் எம்மிடம்
னவினார் :
"நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்"
"அந்த ஏழை மனிதனின் வீட்டுக்கு ஏன் இடியை ஏவினிர்கள்"
நாம் கேட்டோம்.
"ஏழையானாலும் செல்வந்தரானாலும் தவறு தவறுதான்" வர்ணபகவான் கூறினார்.
"அந்த அப்பாவியினால் என்ன தவறுதான் செய்யமுடியும்?" "இடி விழவேண்டிய தவறு' "அப்படியானால் அவன் ஏதாவது ஊழல் செய்துள்ளானா?" * அப்படியொன்றை நான் கேள்விப்படவில்லை" "அப்படியென்றால் அவன் லஞ்சம் எடுத்ததற்காகவா?" * 'இல்லை"
'அவ்வாறென்றால் அவன் பொய் சொல்லி அதிகாரத்துக்கு வந்தவனா?"
'இல்லை, இல்லை"
"அதுவும் இல்லையென்றால் அவன் தனது சுயலாபத்துக்காக சட்டத்தையும் அதிகாரத்தையும் உப்யோகித்தனா?"

13
அதற்கான தகவல் எதுவுமில்லை"
*அல்லாவிட்டால் அவன் சொந்த நாட்டை விதேசிகளுக்கு அடகு வைத்த தேசத் துரோகியா?"
இல்லை, இல்லை"
இந்தக் கட்டத்தில் எமது பொறுமையின் வரம்பு மெல்ல உடையலாயிற்று கடுமையான குரலில் சொன்னோம்:
இனி இடி விழுத்தாட்ட வேண்டியவர்கள் இந்த அளவுக்கு இருக்கையில் நீங்கள் செய்திருப்பது அநியாயம் அல்லவா?"
அதற்கு வர்ணபகவான் இடிஇடிப்பது போன்ற குரலில் ஆத்தி ரத்துடன் சொன்னார்: "பேயனே நீ சொன்ன அநியாயங்களெல் லாம் நடக்கையிலே இவர்கள் சும்மா வாளாவிருந்தார்களே, இந்தத் தவறு போதாதா இடி விழ"
உண்மையிலேயே அந்த இடிப் பேச்சைக் கேட்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்த பின்புதான் நான் கண்டது கனவென்பது புரிந்தது. என்றாலும் அது ஒரு கனவா என்று இப்போதுதான் எனக்குச் சந்தேகம்.
சிங்களத்திலிருந்து மொழிபெயர்ப்பு : எம். எச். எம். ஷம்ஸ்
குறிப்பு : எஸ். ஜி. புஞ்சிஹேவா
இடதுசாரி இயக்கங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை களிலும் தீவிர ஈடுபாடு காட்டிவரும் புஞ்சிஹேவா 1973இல் வெளி யிட்ட் "அஹேத்து வட்ட ஹேத்துவ" (அகாரணத்தின் காரணம்) அவரது முதல் அறுவடை உருவகக் கதைத் தொகுதியான இது அடுத்த மதிப்பையும் கண்டுள்ளது. ஆசிரியராக இருந்து அரசியற் பழிவாங்கல்களை அனுபவித்த அவர் தற்போது சட்டத்தரணியாக உள்ளார். மனித உரிமைகள் விவகாரத்தில் நிறைய பங்களிப்பு செய்து வருகிறார். 'வெகுஜனங்களும் பத்திரிகையும்", "மனித உரிமை", "தண்டனை' என்பன அவர் வெளியிட்டவை. O
இலங்கையின் முதல் நாவல் அசன்பே கதை
இலங்கையின் முதல் தமிழ் நாவல் "அசன்பே சரித்திரம்" இதன் முதற் பதிப்பு 1885-ல் நூலுருவில் வெளியாகியுள்ளதுஇதன் ஆசிரியர் சித்திலெவ்வை மரைக்கார். அசன்பே சரித்திரம் என்ற முதல் தமிழ் நாவல் இலங்கையின் சிங்களமொழி நாவலனின் தோற்றத்திற்கு பல ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்நூலைப் பற்றி கலாநிதி கைலாசபதி குறிப்பிடுகையில் "இலங்கையில் எழுந்த முதலாவது நாவல் எதுவென்பது விவாதத்திற்குரியதா யினும் இதுவரை நாம் அறிந்துள்ளவற்றிலிருந்து சித்திலெவ்வை யின் அசன்பேயுடைய சரித்திரமே முதலாவது வெளியிடப்பட்ட தாகும். இந்நாவல் 1885-ம் ஆண்டில் வேதநாயகம் பிள்ளையி னுடைய முன்னோடியாக்கத்திற்கு ஆறே ஆண்டுகளின் பின் தோன்றியது.

Page 8
இலங்கை தமிழ் இலக்கியத்தில். இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு
-அந்தணிஜீவா
இலங்கையும் இந்தியாவும் வெகு நெருக்கமான உறவுகளைக் கொண்ட அண்டை நாடுகள். இதனால் இலங்கையின் அரசியல் பொருளாதார கலை இலக்கிய முயற்சிகளில் இந்திய செல்வாக்கு இருப்பது தவிர்க்க முடியாததே. இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியங்கள் மூன்றிலும் இச் செல்வாக்கை கண்டு கொள்ளமுடியும், இச் செல்வாக்கு இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த இந்திய வம்சாவளியினரின் இலக்கிய முயற்சிகளில் எவ்விதம் பாதித்துள்ளது. எத்தகைய வளர்ச்சிக்கு அடிகோலியது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கையும் இந்தியாவும் பிரித்தானிய குடியேற்ற நாடு களாக இருந்த காலம் வரை இந்தியாவின் செல்வாக்கு இலங்கை யில் அதிகமாயிருந்தது.
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசம். இந்தியாவில் தென்கோடியில் செறிந்துவாழ்ந்த தமிழர்கள் இவர்களுக்கு இடையில் கடல் பிரித்தாலும் மிக அண்மையில் வாழ்ந்த அண்டை நாட்டவராவார். எனவேதான் இந்தியாவைத் தாயகமாகக் கருதும் பழக்கம் மிகச் சமீப காலம் வரை இவங்கையிலிருந்தது. கலாயோகி ஆனந்தகுமார சுவாமி போன்றவர்கள் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவுடனேயே இலங்கைத் தனது தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இலங்கைச் சமூக சீர்திருத்த சபையின் 1907-ம் ஆண்டு கூட்டத் தலைமையுரையில் இதனை வெளிப் படுத்தி இருந்தார்.
இந்தியாவின் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்ட முயற்சி களில் ஈடுபடுவதற்காக இங்கு அழைத்து வரப்பட்டு ஏராளமாக இலங்கையின் மத்திய மலைநாட்டில் குடியமர்த்தப்பட்டார்கள். இவர்களை மலையக மக்கள் என்றும் குறிஞ்சிநில மக்கள் என்றும் இன்றும் இனம் காட்டப்படுகிறார்கள். இவர்களைப் பற்றியதும், இம்மக்களிடையே தோன்றிய இலக்கியப் படைப்பாளிகளின் ஆக்கங்களும் 'மலையக இலக்கியம்' என்று குறிக்கப்படுகிறது. இவ்விதம் வரையறுத்துக் குறிக்கப்படுவது இலங்கை தமிழ் இலக்கியமே.
இந்திய மண்ணில் வாழ்ந்து பழகிய இம்மக்கள் இலங்கையில் குடியேறிய பின்னர் சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்ப புதிய புதிய அனுபவங்களைப் பெற்றார்கள். இந்திய மண்ணின் தொடர்பை முறறாக அறுத்துக் கொள்ளாமல், அத் தொடர்பை குடியேறிய புதிய இடத்தில் தங்களின் புதிய முயற்சிகளுக்கு உதவுகிற விதத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இதுவே இவர்களின் முதற் பங்களிப்பாகும்.

15
இந்திய வம்சாவளியினரான மலையக மக்கள் இலங்கையில் 160 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். 1824-ம் ஆண்டு 14 குடும்பங்களின் வருகையோடு இவர்களின் குடியேற்றம் இலங் கையில் ஆரம்பமானது. இவர்களின் ஆரம்பகால இலக்கிய வெளிப் பாடுகள் வாய்மொழி இலக்கியமாகவே அமைந்தன.
கிராமிய பாடல்கள், நாட்டார் பாடல்கள், நாடோடிப் பாடல் கள் தோட்டப் பாடல்கள், கதைப்பாடல்கள் தெம் மாங்குப் பாடல்கள் என்றெல்லாம் இவ்வாய்மொழி இலக்கியம் வகுக்கப்பட்டும் தொகுக் கப்பட்டும் இருக்கின்றன. இலங்கையின் ஏனைய பிராந்திய வாய்மொழி இலக்கியம் அம்மக்களின் சமூக வாழ்க்கை முறை களையும், பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தி அமைகின்ற போது, இந்த மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் அம் மக்களின் வரலாற்றின் பல நெளிவுசுளிவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றதையும் கண்டு கொள்ளலாம். இது இலங்கை இலக்கி யத்துக்கு இந்த மக்களின் இன்னொரு பங்களிப்பாகும்.
எனினும், ஆரம்பகால குடியேற்றமும் அதை ஒட்டிய வாழ்க்கையும் கரடு முரடானதாக இருந்து. இம்மக்களின் கனவு களையும், நினைவுகளையும், ஆசைகளையும், நிராசைகளையும், நிச்சயமற்ற ஒரு வாழ்க்கைப் பாதையை அமைப்பதற்கு உதவின. இலக்கிய மனப்பாங்கு இவர்களிடையே தோன்றுவதற்கு பலகாலம் பிடித்தது. இவ்விதம் தோன்றியபோது மேலும் அது கவிதை வடிவிலேயே அதிகமாக வெளிப்பட்டது. அதற்கு இந்த பாரம் பரியமே பாரிய காரணம் என்று கூறலாம்.
கடந்த அறுபது ஆண்டுகால இடைவெளியில் பெருந்தோட்ட சமுதாய அமைப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய பொருளாதார உறவுகளையும் புதிய சமூக உறவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. இப்புதிய உறவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்மொழி இலக்கியம் வலுவற்று இருந்தது. புதிய ஆக்க இலக்கிய முயற்சிகள் பிறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் பரிச்சயம் பெற்ற இந்திய வம்சா வளியினர் இத்துறையில் தங்கள் கவனத்தை செலுத்தினர்.உண்மை யிலேயே இவர்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள், இந்தி யாவிலேயே கல்வி கற்றவர்கள், இந்தியப் பண்பாட்டில் ஊறிய வர்கள். இலங்கையில் 1930-ல் வீரகேசரியும், 1932-ல் தினகரனும், பின்னர் சுதந்திரனும் செய்திப் பத்திரிகையாக வெளி வரத் தொடங்கியபோது இவர்களில் பலரும் இதில் பணியாற்றும்
வாய்ப்பைப் பெற்றனர்.
இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ் ஆசிரி ய ர ர ன கோ. நடேசய்யர், பாரதியின் சீடரான வ. ரா, எச். நெல்லையா, கே.வி எஸ். வாஸ் நாகலிங்கம், லோகநாதன், வி.கே.பி. நாதன் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்பத்திரிகைகளில் நிறைய எழுதிய இந்திய எழுத்தாளர் களின் படைப்புகள் இந்திய வாழ்க்கையை வெளிப்படுத்தின.

Page 9
6
இலக்கியக் கூட்டங்களுக்கும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் இந்தியத் தலைவர்களின் வருகை அவசியமாகக் கருதப்பட்டது. 8 டல்கடந்து குடியேறிய எல்லா நாடுகளிலும் மலேயா, பிஜி, மொரிஸியஸ், அந்தமான், தென்னாப்பிரிக்கா ஆகிய அனைத்திலும் இந்த உண்மையைக் காணலாம். s
ஆரம்ப காலங்களில் இவர்கள் எழுதிய ஆக்க இலக்கிய முயற்சி களில் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களைப் பற்றி குறிப்பிடப் படவில்லை. அந்நேரத்தில் தங்கள் படைப்புகளில் இந்த மக்களின் பிரச்சினைகளை ஒரளவேனும் தொட்டுக் காட்டிய கோ. நடே சய்யர், சிதம்பரநாத பாவலர், எம். ஏ. சுப்பாள், டி. எம், பீர் கம்மது ஆகியோரை குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர்களில் கா. நடேசய்யர் பத்திரிகை தொடர்போடு, இந்த மக்களின் துன்ப துயரங்களிலும் பங்காளியானார். இந்த மக்களுக்காக முதன் முதல் தொழிற்சங்கம் அமைத்தவர். அடிமைகளைப் போல வாழ்ந்த மக்களை தட்டியெழுப்பியவர். பாரதி பாடல்களை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். இவரே மலையக ஆக்க இலக்கியத்தின் முன்னோடியாவார்,
இந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதற்கு அடுத்த இரண்டு தசாப்தங்களிலும் இலங்கையின் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற் றங்கள் ஏற்பட்டன. இம்மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் அரசியல் அனாதைகளாக்கப்பட்டார்கள், மிகப் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இந்நிலையின் தாக்கத்தில் உருவான ஓர் இலக்கிய கலைஞனே சி.வி வேலுப்பிள்ளை. இவர் ஒரு இந்திய வம்சாவளி தமிழர். இந்த மக்களிடையே வாழ்ந்து, அவர்களின் துன்பங் களையும் துயரங்களையும் கவிதைகளின் மூலம் துலாம்பரமாக வெளிப்படுத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத வரப்பட்ட இவரது ப3டப்புகள் இந்திய வம்சாவளி மக்களின் இன்னல் நிறைந்த வாழ்வை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அகில உலகின் அனுதாபப் பார்வையும் இம்மக்களை நோக்கி செலுத்தப்பட்டமைக்கு இவரது "n Ceylon's Tea Garden' of six so கவிதை நூலே மூலகாரணம் என்பது உலகறிந்த உண்மையாகும்.
1963-ல் ஆசிய ஆப்பிரிக்க கவிதைகளின் முதலாந் தொகுப்பு வெளிவந்தபோது இலங்கை, இந்தியா, சீனா, கொங்கோ, இந்தோனேஷியா, கொரியா, சூடான், தங்கனிக்கா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த எழுபது கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. இதில் இடம் பெற்ற ஒரே தமிழ் கவிஞரின் கவிதை இந்திய வமசாவளியினரான சி. வி. வேலுப் பிள்ளையுடையதாகும்.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பில் பெரும் பகுதி இவருடையதே எனலாம். அதுமாத்திர மல்ல படைப்பாளிகள் பரம்பரையை வழிநடத்திய பெருமை இவரையே சாரும். பல்கலைக்கழகப் பட்டம் பெறாத எழுத்தாளர்

17 களை உதாசீனப்படுத்திய விமர்சன உலகில், இவரது ஆளுமை இந்த உதாசீனத்தை விஞ்சி வளர்ந்து நின்றது.
அறுபதுகளில் இந்த மக்களிடையே ஓர் இலக்கிய ஆர்வம் வெறிகொண்டது. கடல்கடந்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் எழுத்துகளை வெளியிட்டு மலையகத்திற்கும் இலங்கை இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தனர். தமிழகத்து "கல்கி"யில் வெளியான திருச்செந்தூரனின் உரிமை எங்கே? என்ற சிறுகதை இச்சிறப்பைப் பெற்றது. மலையக மக்களைப் பற்றிய ஆக்க இலக்கியங்கள் நூல் வடிவில் வெளிவந்து பலரின் பார்வைக்கு உள்ளாயிற்று. புனைக் கதை நூல்கள் இலங் கையின் அதியுயர்ந்த சாகித்திய அகடெமி பரிசில்களைப் பெற்றி ருககிறது.
இந்திய வம்சாவளியினரான கோகிலம் சுப்பையா, சி. வி. வேலுப்பிள்ளை, சிக்சன் ராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நாவல்கள் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன.
இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி நந்தி (டாக்டர் சிவஞான சுந்தரம்) தி. ஞானசேகரன், புலோலியூர் சதாசிவம், யோ. பென டிக்ற்பாலன், கே. ஆர். டேவிற் முதலானோர் தமிழிலும், ராஜா புரக்டர். ஆங்கிலத்திலும் நாவல்களை நூறு நாவல் தந்திருக் கின்றனர்.
ஆக்க இலக்கிய முயற்சிக்கு மாத்திரமின்றி மலையக மக்களின் நிர்மாண சிற்பியான கோ. நடேசய்யர் பற்றிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்' என்ற ஆய்வு நூலை எழுகி 1986-ம் ஆண்டிற் கான சாகித்திய விருதை எழுத்தாளர் சாரல் நாடன் பெற்றுள்ளார்.
மலையக தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒரம்சம்இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் வேறெங்கும் காணமுடியாத அளவில் இந்தியத் தமிழரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளாகும். இந்திய வம்சாவளித் தமிழரின் சிறப்பான குணாம்சமாக எண்ணப்படும் அளவுக்கு இந்த நடவடிக் கைகள் எல்லா நாவல்களிலும் குறிக்கப்படுகின்றன. இன்று நாட்டு அரசு அவர்களின் தோட்டத் தொழிலுக்கு ஒரு முதலாளி யாக மாறிவிட்டிருக்கின்றது. குடியுரிமை இழந்த இந்த மக்களுக்கு இந்த நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாக ஆகிவிடுகின்றன. இந்த நாவல்கள் எல்ல வற்றிலும் தொழிற் சங்க நடவடிக்கைகள் பேசப்படுவதன் காரணம் அதுவே எனலாம்.
இந்த நடவடிக்கைகள் பல்கிப் பெருகி தேசிய உணர்வையும்
வுர்க்க உணர்வையும் வளர்த்தெடுக்கும் நிலைக்கு வரும்போது மொழி இனம் கடந்த தொழிலாளர் உலகம் உருவாகிறது.
நந்தியின் 'மலைக்கொழுந்து" நாவலில் வள்ளி என்ற தமிழ்ப் பெண் எதிர்வீரசிங்க என்ற சிங்கள வாலிபனை காதலிப்பதையும், தி. ஞானசேகரனின் "குருதிமலை"யில் செந்தாமரையைக் காதலித் துப் பியசேனா மணப்பதையும் காணலாம். 'இனி படமாட்டேன்" என்ற சி.வி.வேலுப்பிள்ளையின் நாவலில் இன்னும் ஒரு படி மேலே

Page 10
8
நின்று தமிழ்த் தாய்க்கும், சிங்கள தந்தைக்கும் பிறந்த ஒரு வாலிபன் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்கும் கதை பேசப்படுகிறது.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை துயரம் மிகுந்தது இம் மக்களின் வாழ்க்கை. இவர்களைப் பற்றிய இலக்கியங்களில் இதைக் காணலாம். தொடர்ந்து நித்தியம் இல்லாமை தங்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க இவர்களுக்குப் போதிய பலத்தை கொடுக்கவில்லை. எனவே இப்படைப்புகளில் மனிதன் துயரப்படுவதற்கென்றே பிறந்ததாகச் சித்தரிக்கப்படுவதே அதிக மாகவே காணலாம். மனித நேயம் பாடுவதாக அமைந்த எழுத்துக் களே அதிகம்.
பிரச்சினைகளை இனம் காட்டவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் மார்க்கமும் காட்டுவதான படைப்புகளை இவர்கள் எழுதவில்லை. அத்தகு முயற்சிகளில் இவ்விந்திய மக்களைப் பற்றி எழுதிய வடபுலத்து எழுத்தாளர்கள் ஓரளவுக்குச் செய்திருக்கின்றனர். அச் செயலில் அவர்கள் இம்மக்களைப் புரிந்துகொண்ட அளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவைகள் யதார்த்தத்தை மீறிய கற்பனைக் கதைகளாக உருவெடுக்கும் அளவுக்கு நீண்டு விடுகின்றன.
விமர்சன வட்டத்தின் மீறிய செல்வாக்கு வடபுலத்து எழுத்துக் களை வழிநடத்தி வந்திருக்கின்றது. எனவே இது தவிர்க்கமுடி யாதது. இதிலும் இந்திய வம்சாவளித் தமிழ் இலக்கிய கர்த் தாக்கள் வேறுபட்டு நின்று தம் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். மலையக இலக்கியம் விமர்சன கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிs ருக்கவில்லை. முறையான பட்டப்படிப்பு இல்லை என்ற காரணம் காட்டி இவர்களை விமர்சகர்கள் ஒதுக்க முனைந்தபொழுது, அதுவே சுதந்திர போக்கில் அவர்கள் வளர்வதற்கு வழிவகுத்தது.
"இலங்கையின் தமிழ் இலக்கியத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சு வது மலையக இலக்கியமே" என்று பேராசிரியர் க. கைலாசபதி கூறியது இதனாலேயாகும். O
தேசபக்தன் கோ. நடேசய்யர்
இலங்கையின் முதல் தமிழ் தினசரியான தேசநேசன்" பத்தி ரிகையின் ஆசிரியர் கோ. நடேசய்யர். இவர் இலங்கையில் வாழ்ந்த காலப் பகுதியில் (1920-1947) இவர் இலங்கையின் தொழிற்சங்க வாலாற்றிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் பத்திரிகை வெளியீட்டுத் துறையிலும், மலையக தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் பங்களிப்பை முத்திரை பதிப்பித்துக் கொண்டவர். தஞ்சாவூரில் பிறந்து இலங்கையில் மறைந்த கோ. நடேசய்யர் பற்றிய தகவல்கள் ஒரு தசாப்த காலத்திற்கு முன்னால் ஒரு சிலர் மாத்திரம் "தொழிற்சங்கவாதி" என்றுதான் அறிந்து வைத்திருந் தார்கள், எண்பதுகளில் சாரல்நாடன் எழுதிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்" மூலமே இவர் அனைவராலும் அறியப்பட்டார். -தகவல் : ஜீவா

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இலக்கிய முயற்சிகள்
ஒரு சிறு குறிப்பு O க. நவம்
பல்வேறு சமூக அரசியற் பொருளாதார காரணிகளின் விளை வாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலகின் பல பாகங்களிலும் பரவிக் குடியேறியிருக்கும் தமிழ் மக்களிடையே காணப்படும் படைப்பாளிகளின் ஆக்கங்களே ‘புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் இலக்கியம்" எனப் பெயர் பெற்றுள்ளது. எண்பதுகளின் முற்பகுதியிலிருந்து இற்றை வரை, ஈழத்தமிழரில் கணிசமான தொகையினர் ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் சென்று தஞ்சமடைந்துள்ளனர். இந்நாடு களில் ஈழத்தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில், தமிழ்ச் சமூக மானது புதியதொரு கலாச்சாரப் பரிமாணம் கொண்டதாகப் பரிண மித்து வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. மாறிவரும் புதிய கலாச்சார வெளிப்பாடுகளின் ஒரு முக்கிய அம்சமாகப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இலக்கியம் விளங்குகின்றது.
ஈழத்தில் இன்று தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சுதந் திரங்களுள் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் அனேகமானோர் எமது தேசத்தின் இன்றைய அரசியற் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு துணிச்சலுடன் ஆக்க இலக்கியங்களையும் விமர்சனங்களையும் படைத்து வருவதற்கு அந்நாடுகளில் அவர் களுக்குக் கிடைக்கப் பெற்றுவரும் கருத்துச் சுதந்திரம் ஒரு பிரதான காரணியாகும். மேலும் அந்நாடுகளில் உள்ள நவீன தொழில் நுட்ப வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இலகுவாக இவ்விலக்கி யங்களுக்குப் பிரசுர களங்களும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. லம் பெயர்ந்தோர் இலக்கியங்களின் பிரசுர களங்களான பத்தி கைகள், சஞ்சிகைகள் மீது பணத்தினை முதலீடு செய்வதில் ப்ாரிய பொருளாதாரச் சிக்கல்கள் வெளிநாடுகளில் இல்லை. புகுந்த நாடுகளின் மொழித்தேர்ச்சியின்மையாலும், அங்குள்ள வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் செயற்கையான அமுக்கங்களினாலும் அலுப்புச் சலிப்படைந்துபோயிருக்கும் எம்மவர் மத்தியில் இயல் பாகவே எமது மொழிவாயிலாகப் பிறக்கும் இலக்கியங்களுக்குச் சிறிது சிறிதாகவேனும் வரவேற்பு ஏற்படத் தொடங்கியுள்ளமை யும் அங்கு இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவோர்க்கு உற்சாக மூட்டுகின்றது. இவை போன்ற இன்னோரன்ன காரணிகளே இன்று ‘புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இலக்கியம்' என்றொரு இலக்கிய வகைபற்றி பேசப்படுவதற்கு வழிவகுத் துள்ளன எனலாம்.

Page 11
20
புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் ஈழத்தமிழர் மத்தயில் அறுப துக்கும் அதிகமான சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இப்போது வெளிவந்து கொண்டிருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி யிலிருப்பது மட்டும் துர ண்டில், புதுமை, சிந்தனை, சமர், தேனி, அக்னி, நமது குரல், சிறுவர் அமுதம் போன்ற பல சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்றன இவற்றுடன் நோர்வேயிலிருந்து சக்தி, சுவடுகள்; அவுஸ்திரேலியாவிலிருந்து மரபு அக்கினிக்குஞ்சு; சுவி சர்லாந்திலிருந்து மனிதம், விடுதலைப் பாதை; நெதர்லாந்தி லிருந்து சுமைகள்; டென்மார்க்கிலிருந்து சஞ்சீவி; பிரான்சி லிருந்து ஓசை, தேடல்; இங்கிலாந்திலிருந்து பனிமலர்; கனடாவி லிருந்து தேடல், பார்வை, தமிழ் எழில், காலம் போன்றவை புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரின் இலக்கியங்களுக்குப் பிரசுர வாய்ப்பளித்து வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளாகும். கனடாவிலிருந்து வெளிவரும் தாயகம், செந்தாமரை, தமிழோசை உலகத்தமிழர் போன்று, ஏனைய நாடுகளிலிருந்து வெளிவரும் செய்திப் பத்திரிகைகளும் புலம் பெயர்ந்தோர் இலக்கியங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன. அத்துடன் இவ் வாறான பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரிக்கப்பட்ட ஆக்கங்கள் சில தொகுக்கப்பட்டு நூலுருப்பெற்று வருவதனையும் அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகின்றது.
!' ஈழத்தில் இயங்கிவந்த போராளிக் குழுக்களின் செயற்பாடு களுக்கு ஊட்டமளிப்பதற்கென வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது ஆதரவு தேவைப்பட்டபோது, பல்வேறு குழுக்களின் பிரச்சார சாதனங்களாகவே ஆரம்பத்தில் சில சஞ்சிகைகளும் பத்தி ரிகைகளும் தோற்றுவிக்கப்பட்டன. ஆயினும் புகுந்த நாடுகளில் கிடைக்கப் பெற்றுவரும் கருத்துச் சுதந்திரம் காரணமாக இயக்கங் களின் போக்குகளைக் கடுமையாகக் கண்டித்து விமர்சிக்கும் பத்தி ரிகைகளும் காலப்போக்கில் தோற்றம் பெறலாயின. இயக்கங்களின் செயற்பாடுகளை நியாப்படுத்தி, கொள்கைப் பிரச்சாரங்களில் ஈடு பட்டு எதிரணியினரைச்சாடி ஒருவகைப் பத்திரிகைகள் ஆக்கங் களைப் பிரசுரித்துவர, இன்னொரு வகைப் பத்திரிகைகளோ சகல இயக்கங்களுக்கிடையேயும் காணப் படும் குறைபாடுகளைக் கண்டித்து விமர்சிக்கும் ஆக்கங்களைப் பிரசுரித்து வருகின்றன. அதே வேளை இத்தகைய பிச்சுப்பிடுங்கல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஈழத்தில் சாவை வரவேற்றுக் காத்திருந்த வண்ணம் வறுமையிலும் துண்பத்திலும் பசிபட்டினியிலும் கிடந்து வாடிக் கொண்டிருக்கும் எமது மக்களின்பால் மனமிரங்கி, அவர் களது வாழ்வில் விடிவை வேண்டிப் பிறிதொரு வகைப் பத்திரிகை கள் எமது சமூகத்துக்குத் தமது பங்களிப்பினை செய்துவருகின்றன. ஆயினும் பொதுவாக ஈழத்தில் இன்று வாழ்ந்துவரும் எழுத்தாளர் களால் வெளிப்படுத்த வகையற்றுப் போயிருக்கும் அனுபவங்களை யும் மனனழுச்சிகளையும் எண்ணங்களையும் உள்ளடக்கமாகக் கொண்டதாகவே புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தவர் இலக்கியம் காணப்படுகின்றது எனக் கூறலாம். அத்துடன் புகுந்த நாடுகளில் பெறப்படும் புதிய வாழ்க்கை அனுபவங்களுக்கும் இலக்கிய வடிவம் கொடுக்கப்படுகின்றது. எமது சொந்தக் கலாச்சாரப் பின்னணியில், புகுந்த நாடுகளில் பின்பற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து

21.
கிடைக்கப்பெறும் அனுபவங்களின் வடிகாலாகப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் அமைந்து விடுகின்றது. இரு வேறுபட்ட கலாச்சாரங் களுக்கிடையிலான முரண்பாடுகளும், போராட்டங்களும், வெற்றி தோல்விகளும் தனித்தன்மை வாய்ந்த இலக்கியங்கள் தோன்ற வழிவகுக்கின்றன. மேலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இன்னமும் ஈழத்து அரசியல் அலங்களிலிருந்து விடுபடமுடியாமற் தவிப்பதையும், புகுந்த நாடுகளில் ஏற்படும் விரக்திகளையும், நிறப் பாகுபாடுகளையும், மொழிச் சிக்கல்களையும், புதிய வாழ்க்கை முறைகளையும், இயக்கக் குரோதத் தொடர்ச்சிகளையும், நவீன வர்ணம் பூசப்பட்ட சாதிமத பேதங்களையும், ஆண்-பெண் உறவு களுக்கிடையிலான புதிய வடிவங்களையும் புலம் பெயர்ந்தோர் இலக்கியங்களின் கருவூலங்களாகப் பெரும்பாலும் காணமுடி கிறது.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல காத்திரமான இலக்கி யங்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் தோன்றி வளரத் துவங்கியுள்ள ஆரோக்கியமான சூழல் ஒன்று தென்படுகின்ற போதிலும், புகுந்த நாடுகளில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் மட்டரகமான பொழுது போக்குச் சாதனங்களினாற் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கும் எம்மவர் மத்தியில் இந்த இலக்கியங்கள் எதிர் நீச்சலடித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும, வெளிநாடுகளில் தமிழ் வீடியோ கலாச்சார மாயையினுள் மூழ்கித் திளைத்திருக்கும் ஈழத்தமிழ் சமூகத்தினரிடையே பயன்மிக்க கலை இலக்கியங்களைப் பிரபலப்படுத்துதல் இலகுவான காரியமல்ல என்பதையும் ஒப்புக் கொண்டேயாகவேண்டும். இவ்வாறான சூழ்நிலையிலும், வெளி நாடுகளிலுள்ள இயந்திர மயமான அன்றாட வாழ்க்கை ஒட்டப் போட்டிகளுக்கு மத்தியிலும் மனித நேயமிக்க படைப்பாளிகள் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை பாராட்டுக்குரியது. புதிய வாழ்க்கை முறை அனுபவங்களின் பெறுபேறாகவும், வேற்று மொழி இலக்கியத் தொடர்புகளின் விளைவாகவும் புதிய உயிர்மூச் சுடன் கூடிய படைப்புக்களாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் இலக்கியம் நிச்சயம் கணிப்பினைப்பெறும் என நம்பலாம். ஆயினும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வரும் இந்தப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தவர் இலக்கியம் பற்றி இந்தத் தலை முறையையும் தாண்டி அடுத்த தலைமுறையின் போதும் பேசப்படு வதற்கு இந்நாடுகளில எமது மொழி தொடர்ந்து உயிர் வாழ
வேண்டுமே! O தணிக்கை -பண்ணாமத்துக்கவிராயர் நாசித் துளை நுழையும் கும்மாளம் வாசத் தளிர் முனையில் கூத்து ஊசித் துவார மிட்டு தாங்காது மேடையெனில் உள்ளோடிப் பார்த்திட்டால் தயக்க மேன் யோசனையின் தூரத்தே யோசனையேன் ஒற்றை விழி துருவ- தளிர் முனையைக் கிள்ளி விடு
பட்டதெல்லாம் கருத்தரித்துப் குச்சிக் கொலை விரல்கள் பழுத்து விட்ட பாவனையில் நோகாமல் கொட்ட மடிக்கும் ஒடித்துவிடு.

Page 12
மலையக் கவிதை:
ஐயம் கொள்ளுக!
-அல் அஸுமத
ஆண்டொன்று போனால் வயதொன்று சேரும்!
[玮
உயிர்போன பின்னாலும் த்மிழிங்கு வாழுவதால் தமிழெங்கள் உயிருக்கு நேரல்ல
அழுகையென் தாய்மொழியாய் அமைந்திருக்கையில் அழுகையின் தாயான இடுக்கண் வந்தக்கால் அந்நிய மொழியின் முகமூடியிட்டு நகுதல் செய்வதோ யதார்த்த வாழ்க்கை?
O
இங்ங்ண்
முன்வாக்கில் குற்றங்கள்; முரண்பாடுகள் எதிர்மறையென் பார்வையாய் இருப்பதனால் யானும் எதிர்மறையாய் ஆவேனோ? புதியன எழுதுவதால் புண்பட்டுப் போவேனோ? பேனாவை, நாவைப்
பேச்சிழக்கச் செய்வேனோ?.

களனி 89
-- --asir موق8)-سے
புகையிரதப் பாலத்தின் இரும்புக் கேடர்கள் இளகி உருகும்வரை அழுத்தும் அதிகாலைப் பணியிலும் சூரியன் சுட்டு வெந்த தார்ச்சாலைகளில் மானுடர் தவிக்கும் பகற் பொழுதுகளிலும் கொங்கிறீற் பாலத்தில் நின்றபடி சோடியம் விளக்குகள் இருளைக் கொறிக்கையிலும் இரண்டாயிரம் வருட அரசியல் கண்ட களனி கங்கை பாயும்
கம்பீரமாக நிதானமாக.
வேனிலில் மணல் சுமக்கும் ஒடங்கள் மெல்ல மிதக்கையிலும் மழைக்கால வெள்ளத்திற் குடிசைகள் அமிழ்ந்து வாழைகள் விழுந்து மானுடர் குளிரில் நடுங்குகையிலும்
களனி கம்பீரமாக நிதானமாக,
மனித உடல்கள் நாள் தவறாது மிதந்துவரும் இன்றைக் காலங்களிலும் களனி சந்திக்குச் சந்தி மோனத்தமர்ந்திருக்கும் போதிசத்துவர் போல கம்பீரமாக நிதானமாக,
1971 ஏப்ரல் கிளர்ச்சிக் காலத்தே புராதன புத்தர் சிலை ஒன்றன் பீடத்தில் கிளர்ச்சிக்கார வாலிபன் ஒருவன் எழுதியதாகச் சொல்லப்பட்ட வசனம்:
"இரண்டாயிரம் வருஷம் அமர்ந்திருந்தது போதும் இனியாயினும் எழும்!"

Page 13
அதிகம் அறியப்படாத ஈழத்து நாவல்கள்
O கே. எஸ். சிவகுமாரன்
இலங்கையைச் சேர்ந்த செ கணேசலிங்கன், செ. யோக நாதன், கே. டானியல், பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் தமது நூல்களிற் சிலவற்றை வெளியிட்டிருப்பதனால், அவர்கள் பற்றிக் காத்திரமான சில தமிழ்நாட்டு வாசகர்கள் அறிந்து வைத்திருக்கக் கூடும்.
இலங்கையில் நாவல் எழுதுபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களிற் சிலருடைய நாவல்கள் பற்றி இலங்கை வாசகர்கள் கட்ட அதிகம் அறிந்து வைத் திருக்கவில்லை. அத்தகையவர்களில் ஓரிருவர் எழுதிய நாவல்கள் தொடர்பான சிறு அறிமுகத்தைத் தருவதே எனது நோக்கம்.
வ. அ இராசரத்தினம்-கொழுகொம்பு (1959)
இது ஒரு காதல் கதை. குடும்பப் பகை காதலுக்குத் தடையா கிறது. பொறுத்திருக்குமாறு நாயகி கனகம், நாயகன் நடராஜ னிடம் வேண்டினாலும் அவன் நம்பிக்கையிழந்து பிலோ மினா என்ற வேறோர் பெண்ணைக் கல்யாணஞ் செய்கிறான். சில காலத்தின் பின் மனைவிக்குத் தன் கணவனின் பழைய காதல் விவகாரம் தெரிய வருகிறது. கனகம் மாறாக் காதல் கொண்டுள்ளாள் என்றறிந்த பிலோமினா தன் உயிரையே தியாகம் செய்கிறாள். ஆக, இது ஒரு தியாகக் கதையுமாகிறது.
ஆண்கள் பெண்களின் கொழுகொம்பு என்று கூறும் ஆசிரியர், ஈழத்தில் வடகிழக்குப் பகுதியின் பண்பாடுகளையும் இயற்கை வனப்பையும் கதையோடு இணைந்ததாக வருணித்துச் செல் கிறார். ஐம்பதுகளின் பிற்பகுதியில் வந்த முக்கிய ஈழத்துத் தமிழ் நாவல்களில் இதுவும் ஒன்று.
வ. அ இராசரத்தினம் எழுதிய ஏனைய நாவல்கள்:
துறைக்காரன் (1959), கிரெளஞ்சப் பறவைகள் (1978). எஸ். பொன்னுத்துரை- (1961)
இந்த நாவலில், மனோதத்துவ, தத்துவார்த்த, சமூக யதார்த்த, சிருங்காரப் பார்வைகளையும் உடலுறவு சம்பந்தமான விளக்கங்களையும் காணலாம். இவற்றில் எந்தவொரு பார்வையும் மேலெழுந்து நிற்கவில்லை. நாவலாசிரியரின் சொந்த அனுபவங் கள், அபிலாஷைகள், கற்பனைகள், கனவுகள் போன்றவற்றின் எழுத்து வடிவப் பதிவாகத் தீ அமைந்திருக்கின்றது. அதில் கவிஞனின் கலைப்பாங்கு இருக்கின்றது. அதே வேளையில் கொடூர

25
மான துல்லிய இயற்பண்புப் பார்வை மெருகில்லாமல் இடை யிடையே அப்பப்பட்டு இரசனையை அருவருக்கச் செய்கின்றது.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சித்திரிப்பும் சம்பவங்
களும், உடலுறவையும் உடலின்ப வேட்கையையுமே சுற்றிச் சுழல்கின்றன. இக்கதையில் சித்திரிக்கப்படும் சம்பவங்கள் உதிரி உதிரியாக யதார்த்தபூர்வமானவை என்றால், சம்பவத் தொடர்பு கள் இயற்கைக்கு முானானவை எனலாம். அதாவது நிஜவாழ்வில் மக்களிற் பெரும்பாலோர் உடலின்ப அனுபவமே உலக அனுபவம் என்று மயங்கிக் கிடப்பதில்லை. பாத்திரச் சித்தரிப்பும் சம்பவங் களும் உடலின்ப வேட்கையைச் சுற்றிச் சுழன்றாலும், நாவலின் கதைப்பொருள் அதுவல்ல. திலகா என்ற பாத்திரம் நன்கு உருப் பெற்றிருக்கின்றது எனலாம். 'குழி" என்ற அதிகாரம் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருக்கின்றது.
இவருடைய மற்றொரு நாவல்: சடங்கு (1971). செ. சிவஞானசுந்தம் (நந்தி) .மலைக்கொழுந்து (1964)
இது ஒரு மலைநாட்டுக் காதற்கதை. இங்கு காதலுக்குத் தடையாக இருப்பது தோட்டத்திலுள்ள தொழிற்சங்கிங்களுக் கிடையிலான போட்டா போட்டியாகும், கதையைவிட மலையக மக்களின் வாழ்க்கை முறையை ஏனைய பிரதேச மக்களுக்குத ப்ெபடுத்த உதவும் விதத்தில் அமைந்த விவரனை பாராட்டுக் குரியது.
நந்தியின் ஏனைய நாவல்: தங்கச்சியம்மா (1977), கம்பிக்கை (1989).
யோ. பெனடிக்ட் பாலன்-சொந்தக்காரன் (1988)
தோட்டத் தொழிலாளர் பிரச்சினையைத் தீட்டும் இந்நாவல் குறிப்பிடத்தகுந்ததொரு நாவல் தாம் வசியும் காம்பராக்களில் தாம் படும் கஷ்டத்தை எடுத்துக் கூறிப் போராட்ட கதை மேற் கொள்ளும் சின்னக்கலப்பன் என்ற தொழிலாளி, தானே தனக்கு வசதியாக ஒரு வீட்டறை கட்டுகிறான். ஆனால் அதனைத் தவிடு பொடியாக்குகின்றனர் தோட்டத் துறையின் ஆட்கள். ஆனால் போராட்டம் தொழிற்சங்கம் மூலம் தொடர்கிறது. பிரச்சாரவாடை அதிகமாக இருப்பதனால் கலைநயம் குன்றிவிடுகிறது. இருந்த போதிலும், உண்மையான பிரச்சினைகளை அவ்வாழ்க்கை முறையை அறிந்திராத வாசகர்களுக்கு இந்நாவல் அறியத் தருகிறது.
யோ. பெனடிக்ட் பாலன் எழுதிய மற்றொரு நாவல்:
குட்டி (1963).

Page 14
26
க. செர்க்கலிங்கம் (சொக்கன்) -
செல்லும் வழி இருட்டு (1973)
அரசாங்கம் தனி பார் பாடசாலைகளைப் பொறுப்பேற்குமுன் நிலவிய சீர்கேடுகளைச் சித்தரிக்கும் ஒரு சுவையான நாவல். பாடசாலை ஆசிரியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை நேர்த்தி யாகக் கொண்டு வருகிறார் ஆசிரியர்.
இவர் எழுதிய மற்றொரு நாவல்: சீதா (1974).
நாடகாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், பாடலாசிரியர் ஆகவும் ஆசிரியர் தனது பங்களிப்பைச் செய்துவருகிறார். இலங்கையின் முக்கிய எழுத்தாளர்களில் சொக்கன் பெயர் விடுபட மாட்டாது.
ஏ. ரி. நித்தியகீர்த்தி - மீட்டாத வீணை (1974)
ஏ. ரி. நித்தியகீர்த்தியின் மீட்டாத வீணை மனதிற் பதியத் தக்க ஓர் இனிய நாவல், நித்தி பகீர்த்தி பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இதுவே அவருடைய முதல் நாவலாகும். ஓர் இளமி எழுத்தாளரின் முதல் நாவல் என்ற முறையில், இதன் வடிவமும் வண்ணமும் சிறப்பாக அமைந்துள்ளன. சுவையான கதை ஒன்றை உள்ளடக்கும் நாவல் என்ற விதத்திலும் வளரிளம் பருவத்தினரின் சாதனையை யதார்த்தப் புனைகதையாகப் படைப்ப திலும மீட்டாத வீணை"யை ஓர் உன்னத விவரணைப் பாடலாக வருணிக்கலாம்.
ஆம், இது மற்றுமோர் இளைஞர் நாடகக் கதையே. ஆனால் வெறுமனே அது இளைஞர் காதற்கதை மாத்திரமன்று. அந்த விதமான இலக்கிய வடிவ எல்லைக் கட்டுக்குள் நின்றுகொண்டே, ஆசிரியர் உள்ளிடாக ஏதோ ஒன்றை உணர்த்து விக்கிறார். அது என்ன? மாகாண ரீதியான நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் தொடர்ந்தும் இருந்துவர அனுமதிக்கப்படின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதையே இந்த நாவல் உணர்த்தி நிற்கிறது. அந்த விதத்தில் இது ஒரு சமூக நாவலே. ஆனால் நாவலாசிரியரின் உண்மையான நோக்கம் இதுவல்ல என்பதை நாவல் அமைக்கப் பட்ட நிகழ்ச்சிச் செறிவு முறை காட்டிவிடுகிறது. நாவலில் நடமாடும் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையை ஒட்டியதாக அமைய வில்லை. மாறாக உளவியல் அடிப்படையில் (ஆனால் உணர் வூற்றுப் பாத்திரங்களாக பெரும்பாலும் தேவியும் செல்லமும், ஏன் இளங்கோவும் ஏனையோரும்) இயங்குகின்றனர். இப்படிக் கூறு வதனால் நாவலாசிரியர் கற்பித்தக்கதை ஒன்றைத் தந்திருக்கிறார் என்றில்லை. எந்த ஒரு நல்ல நாவலும் சமூகத் தளத்திலிருந்தே உயிர்ப்பைப் பெறுவது போன்றே இந்த நாவலும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது. அதாவது யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் தாழ்ந்த நடுத் தர வர்க்கத்தினரின் சமூக நிலையை இளைஞர்கள் காதல் சம்பந்தப்பட்ட வரையில் இது சித்திரிக்கிறது. ஆயினும் சமூகப் போக்கிற்கான காரணகாரியம் ஆழமாகவும் பகுத்தா ராயும் போக் கிலும் தீட்டப்படவில்லை.

27
தெளிவத்தை ஜோசப் காலங்கள் சாவதில்லை (1974)
இலங்கையின் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையின் சில அம்சங்களை மாத்திரம் சுவையாகத் தீட்டும் ஒரு நாவல் காலங்கள் சாவதில்லை. ஆனால், நாவலில் அவர் எழுப்பும் பிரச்சினைகள் முழுமையாக அலசி ஆராயப்படவில்லை. சம்பளக் கொடுப்பன முறை பற்றியும், நிர்வாகப் பகுதியினரின் பொருந்தாக் காமம் பற் யும், அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியுமே நாவல் பேசுகிறது. பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தோட்டமே நாவலின் நிலைக் களன். உண்மையான அடித்தளங்கள் அல்லது அடிப்படையான உண்மைகள் நாவலில் காட்டப்படவுமில்லை, நாவலாசிரியரினால் சுட்டிக்காட்டப்படவுமில்லை, எமது தோட்டங்களில் அல்லலுறும் இந்திய வம்சாவளியினரின் அவல வாழ்க்கையைச் சித்திரிக்க முயன்ற நாவலாசிரியர், மத்திய கருவினின்றும் விலகி, அநாவசிய அம்சங்கள் பற்றியும் எழுதுகிறார். ஆறுமுகம் என்பவன் இந்த நாவலின் நாயகன். அவன் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினை யாகக் கருதாமல், தனி மனிதத் துயரமாகவே கருதுகிறான். சுரண்டும் வர்க்கத்தினருக்கு எதிராக, வர்க்க உணர்வுடன் போராடு வதை விடுத்து, தோட்டச் சொந்தக்காரர் மீது மாத்திரம் தனது தாக்குதலை அவன் மேற்கொள்கிறான். பெரிய துரையிடம் முறை யிடுவதுடன் அவன் திருப்தியடைகிறான். ஈற்றில் தோட்ட நிர்வாக பீடத்தின் ஆளுகைக்கு அவனும் பலியாகிறான். அது மாத்திர மன்றி, போராட்ட உணர்வு கொண்ட ஏனைய தொழிலாளர் களையும் அவன் அடக்க முற்படுகிறான். சகதொழிலாளி கண்ணம்மாவின் காதலனாக ஆறுமுகம் விளங்கி, அந்த மனோரதிய பாங்கிலேயே நாவலும் முடிவடைகிறது. தெளிவத்தை ஜோசப், திறமையுள்ள ஓர் எழுத்தாளர். உள்ளூரிலுல் வெளியூரிலும் அவருடைய எழுத்து பிரபல்யமடைந்துள்ளது. ஆனால் அவர் இயற்பண்புவாத எழுத்துக்களைத் தவிர்த்து, சமூகப் பிரச்சினை களுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வாராயின் (சமுகத்தின்மேலோட்டமான வாழ்க்கைப் போக்குகளை மாத்திரம் பதிவு செய்யாமல்) சமுகத்துக்கு அவர் பயனுடையவராக இருப் ugrif.
"புதிய காற்று" திரைப்படக் கதை வசனகர்த்தாவும் இவரே.
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறையைப் பொறுத்தமட்டில் இந்தப் படம் சில வளர்ச்சிப் போக்குகளைக் காட்டி நின்றது.
எஸ். பூநீ. ஜோண்ராஜன்
போடியார் மாப்பிள்ளை (1976)
மட்டக்களப்புப் பகுதியிலுள்ள கண்ணன்குடாப் பகுதியின்
திருமணச் சம்பிரதாயங்களை அழகாக விவரிக்கும் ஒரு காதற் கதை
இது. போடியார்கள் எனப்படும் நிலவுடைமையினர் வாழ்க்கைப் போக்கு விவரிக்கப்படுகிறது. (1982)

Page 15
26
வை. அஹ்மது-புதிய தலைமுறைகள் (1976)
கிழக்கிலங்கையிலுள்ள வாழைச்சேனைப் பகுதியில், தலை முறை இடைவெளியைக் காட்டும் இந்த நாவல், சமூகப் பிரக்ஞை யோடு எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறை பற்றிய பல தகவல்களைத் தருகிறது இந்த நாவல் வர்க்கப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாகவும் இதனை க் கொள்ளலாம். (1982)
ஞானரதன்-புதிய பூமி (1976)
ஞானரதன் என்ற புனைபெயரில் எழுதும் வீ. சச்சிதானந்த
சிவம் முன்னர் எழுதிய நாவலை (ஊமை உள்ளங்கள்) விட புதிய பூமி ஒருபடி உயர்ந்த யதார்த்தப் படைப்பு எனலாம். நில அளவை யாளர் முகாம் ஒன்றில் ரவீந்திரன் என்ற இளைஞன் பெறும் அனுபவமே நாவலின் மையப்பொருள். தமிழரான நில அளவை யாளர் ஒருவரின் கீழ் பணிபுரியும் சிங்கள-தமிழ் தொழிலாளர் களிடையே காணப்படும் மனித உறவை விபரிக்க முன்வரும் ஆசிரியர் நில அளவையாளர்களும் தொழிலாளர்களும் நடத்தும் நாளாந்த வாழ்க்கை முறையைக் காட்டுவதுடன் தொழிலாளர் களின் வர்க்க நலனையும் எடுத்துக் காட்டுகிறார் இனப் பிரச்சினை ஒரு வர்க்கப் பிரச்சினையே என்று நாவலாசிரியர் சுட்டிக் காட்டு கிறார்.
ஞானரதன் புதிய நாவலாசிரியர்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு படைபபாளியாக உருவாகி வருகிறார்.
இவருடைய மற்றைய நாவல்: ஊமை உள்ளங்கள் (1976).
தொடர்பு சாதனங்களில்.
இலங்கையில் பொதுசன தொடர்பு சாதனங்களான பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி எழுத்தாளர்களுக்கும் அவர்களது ஆக்கங்களுக்கும் போதிய 'களம் அமைத்து தருகின்றது. பத்தி ரிகைகள் ஞாயிறு தோறும் இலக்கிய களஞ்சியமாக சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்ற பல்சுவை படைப்புகளையும் தாங்கி வருகின்றன. வானொலியும், தொலைக்காட்சியும் எழுத் தாளர்களின் பேட்டிகள், உரை நிகழ்ச்சி, புத்தக விமர்சனம், போன்றவற்றை ஒலி, ஒளி பரப்பி வருகின்றன. தமிழகப் பத்தி ரிகைகள் சினிமா நடிகர்களுக்கு இடமளிப்பதைப் போல இலங்கைப் பத்திரிகைகள் எழுத்தாளர்களுக்கு மதிப்பளிக்கின்றன.
-6 if
עיר

o·munmegoཙg| ཚg| s@gogoș@@→- o mijnmogoko segi sog)?1991»
 ாேமுrெe· メs@ąs-icos monos pop qisisogi mgt等引阁唱可
的闽999鸣4时5点49
g isa’ıgogo@gs qisĜņæ0 og urīgo
---usassoự1ūā q91couços; m&#h goso
spurno«soy usog) -nuos@s@ @ uso preko
‘6) upoustojęs@$rp sı Çırmonoascaog quidoop 19 poļinsk?
sĩ ŋomɔ ogsgogs usiso uso (9ș&##4, ung) 1991.gs a9c89109 1995.
1@199.49
***ņıldırılı oyn seq'onn pun s@ąffisố 119.gs.orgusof) go 1119og nægs s@qsono și scossohņstūristo s@quocsko qo&#ffortsg) inguolęs 51 ņ um gorngs m.th soportsg) fi uro ņumousțđi urs fog)(?@
:09@@@mtf)的滑明电
ustessosos po oqofisi qis Rog)
ngắmẹ sù6 gif@@@ro uosąsis.
49日占领9949495 qisĜEnŲ un “qir@gi-los usos, – įdogo
‘’’ascosqøss
nqig) 99 oș@ Joe şırngen»»
qi@qsolęs irretorpég
·119s uns caso do hrī£đơnosisięso ohņușợę 33saQ』 g』」g』も 5g』『G博gg』コD
•«sqoyssopus.wsg? muon-io a’qong-w 十响oskP
:8969&영rmg9명 병행+m(6) oooo @ snuoriņtifi) qis@uncţius -gsriq o mgos ipsi ,??圈的唱了与哈9明ou的电gs回 qosorosos pura o pogoroso-mostoj ceg
49归9与唱9șGorginoso qismaïsos qsuroegség
领唱曲ns函工
qo u is 19° 5ì sẽ los is

Page 16
இலையுதிர்கால நினைவுகள்
O வ. ஐ. ச ஜெயபாலன் O
இன்பக்கனவுபோல் தோன்றி மறைந்தது கோடை காற்றுக் குதிரைகளில்
sféř சாட்டை சொடுக்கி வரும் வெய்யிற் சுகம் தேடி வடதுருவப் பறவைகளும் என் தாய்நாட்டின் திசைநோக்கி தங்களது இறக்கைக்கும் வான்நோக்கி கையுயர்த்தித் தொழுகின்ற கறுப்பர்களைப்போல இலையுதிர்த்து நிற்கும் ஒக் மரங்களின் கீழ் தனித்தலையும் மக்பை*
பறவை ஒன்று இழிவாக எனை நோக்கும்.
மக்பாய் மக்பாய்! எல்லாப் பறவைகளும் என்னுடைய தாய் நாட்டின்
திசைகளிலே சூரியனைத் தேடிப் புலம்பெயரும் குளிர்நாளில் w நீ மட்டுமிந்தத் துருவத்தில்
- தரித்ததென்ன?" மக்பையோ உனக்கிவைகள்
புரியாது என்பதுபோல் தலையசைக்கும். * எனக்கிவைகள் புரியாதா?* "உனக்கெப்படிப் புரியும்? துருவத்துப்பறவைகளே
தேடுமுந்தன் தாய்நாட்டை வழிப்போக்கன் குண்டிமண்ணைத்தட்டுவதுபோல் தட்டிவிட்டு வந்தவன் நீ" மக்பை சொல் தீக்கோலாய் மனதில் குறிபோடும்.
நில் மக்பாய்!” என்றேன். நாமறிவோம் இலங்கைத் தமிழருங்கள் நாகரிகம் பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை என்றேனும் ரசித்ததுண்டா நீங்கள்?" என்றபடி மக்பை எட்ட்ப் பறந்து செல்லும்.
வானில் ஒரு பரதேசிபோல குளிர்ந்துபோன சூரியனின்
பரிதாபம். மண்ணில் மஞ்சளாய் தலைநரைத்த
மரங்களின் கீழ்
பொன்னாய் இறகசைத்து வண்ணத்துப் பூச்சியாய்ப் பகட்டி "பேர்ச்" இலைப்பழுத்தல் ஒன்று புல்லில் தரையிறங்கும் ஒரு புது அகதி வந்ததுபோல். உலகெங்கும் வாழ்வை இழந்து வசதி
பொறுக்குகின்ற மனிதச் சருகுகளாய்ப்
புரள்கின்றோம் என்ன நம் தாய்நாடு ஓயாமல் இலை உதிர்க்கும் உயிர்ப்பிழந்த முதுமரமா? யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிறாங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ்
நாட்டில் நானோ வழி தவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம்போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையஒைனயா? பர்ட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலைதேசம் வந்தவன் நான் என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்?
*மக்பை: குளிர்காலத்திலும்இடம் பெயராத ஒரு வகைக் காக்கை
யினப் பறவை.

பிணங்களின் மறு பிறப்புத் தத்துவம்
எனதுரர்ச் சிறுமி கோட்டை மீட்பில் செத்தே போனாளாம். எனதுர் ஒழுங்கை நேற்றிலிருந்து இவளின் இன்னொரு பெயரால் வழக்கிற்கு வருகின்றது. "நேற்றிலிருந்து எங்களூர் ஒழுங்கையில் இவள் வாழ்கிறாள் பெருமிதம் அண்ணா" தங்கையின் அங்கலாய்ப்பு. எனக்குள் மட்டும்.? விம்மி அழுதேன் இறந்த உயிருக்காக உயிரின் இறப்பு இறப்புத்தானே, வாழ்ந்திருத்தல் அல்லவே. புதிய மேய்ப்பர்களின் வாழ்ந்திருத்தலுக்காக யுகங்களாக மனிதர்கள் வாழ்வை இறத்தல்
தீபங்கள் ஏற்றி மணியடித்து உக்கி..நமத்து.சூனியமாகி.
எனதுTர் ஒழுங்கை ஆழமாகவே கிளறப்பட்டது. வீர அஞ்சலிகள் பொறிக்கப்பட்ட எலும்புகள்
குவியலாக.
வாழ்வின் அர்த்தங்கள் அழிக்கப்பட்டேயிருந்தன. எனது குழந்தையை அவை எச்சரித்தன. வாழ்ந்திருத்தல் வீர அஞ்சலிகள் அல்ல. வாழ்ந்திருத்தல்
மளனங்கள் அல்ல. எனது குழந்தை பூமியை ஊடுருவி உரத்துக் கத்தியது. பூமியை இன்னும் இன்னும் ஆழமாகவே கிளறுவேன்.
O ராகுலன்
சுழிமாறிப் போகாமல்
5F Lib
சுண்டியிழுபட்டு
மூசும் உயிர் - அதற்கு
முச்சூடும் அமைதியில்லை
-தூங்குதல் போல் சாக்காடாம்
தூங்கி விழித்தல் போல் பிறப்பாம்.
வி
ப்
t
இரண்டுமற்ற
இரண்டுங்கெட்ட
இதற்கோ
இரண்டுமில்லை துருவ நக்ஷத்திரமான
திரிசங்குவின்
சொர்க்கம் போல் ஒரு திருஷ்டாந்த நரகம் -கொழுவுண்டுத் தொங்குது உயிர்
زن؟
O usurarrios glá a sóloruñ

Page 17
பெரஜா உரிம.
O இப்னு-அசோகம் O
அம்மாவோ..! நீ செத்துப் போட்டியா அம்மாவோ. பெரஜா உரிம கெடச்சிரிச்சே அம்மாவோய்!
அதக் ssist sor fra sir sort frto காட்டுக்குப் போறியே அம்மா!
உசிரோட இருக்கையில **பெரஜா உரிம பெரஜா உரிம"ன்னு ஒப்பாரிவைச்சியே அம்மோய்;.
அது வந்து சேரயில நீ போய் சேருரியே அம்மோய்;
*"காலம் பூரா கஷ்டப்பட்டு காயம்பட்ட மண்ணுல
Df6to Duísidsupro செத்துப்போனா ஓடு மண்ணுகூட உறுத்து மடான்னு' சொல்லுவியே அம்மா!
இப்ப அது கெடச்சிருக்க
முழிச்சிப் U Torsår
அம்மோய்; #
தாத்தாவும் இப்படித்தான் ஈந்தியா போயிட்டு தான் செத்தாலும் சாவேன்னு இரும்புப் புடி புடிச்சாரு, கடைசியா அவரும் பத்தாம் நம்பருக்குள்ளேயே பதுங்கிக் கிட்டாரு.
அம்மோய். அம்மோ til ! இப்பத்தான் இவங்க இந்த மண்ணு எங்களுக்கும் சொந்த மண்ணுன்னு சொல்றாங்க. எந்திரியம்மா!
அம்மோய் நீ எழும்ப மாட்ட? செத்துச் செத்துப் பொழச்சி இப்ப நீ பொழைக்காம செத்துப் போனியே!
அம்மோய். பெரஜா உரிம கெடச்சிரிச்சு அம்மோய்; கோடித் துணியோட
அதையும் சேர்த்து
பெட்டிக்குள்ளயே வைச்சிடுறேன் அம்மா!

புகைப்படத்து சட்டங்களில்
இ. வசந்தி
முறுக்கி விட்ட மீசை நீண்ட தாடி மிடுக்கான பார்வையில் கண்களிலேயே
பாஷையை
எழுதியபடி வீட்டுவாசல்களில் முன்னும், யன்னல்களின் மேலும் தொங்கும் படங்களை சிலவீடுகளில் பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும் வருட புழுதி நீக்கஞ் செய்து, மலர்மாலை அணிவித்து கெளரவித்த கடமையான நாட்கள்.
பால்வற்றாத
சொக்குகளும், குஞ்சுக் குரலே தடிக்காத புகைப்படச் சட்டங்களில் தொங்குகின்ற முகங்கள்.
சில வீடுகளில் வருடா வருடம் பூமாலை அணிவிக்க எஞ்சியாருமேயில்லை. வாலிபத்துக் கோடுகள்
என்றும் சமாந்தரமாகச் செல்லும்
புகைப்படத்தில் அமுங்கிய எமது தம்பிகள் தங்கைகள் தொடர்கையில். பதியலுக்கு காத்திராமல்
ஒவ்வொரு கக்கத்தில் மலர் கொடுக்கும்; வீட்டு வாசல்களிலும் செடிகள்அடுத்தடுத்த மரங்களாகி மாதங்களில் மரங்கள். அண்ணன் தம்பி F'lies6T Tas... தங்கைகளின் Ο
கனவு
இதழ் 17 விலை ரூ. 3-50
இலங்கையில் விலை ரூ. 7-00
SUBRABHARATH MANAN
9.-3-363 REGMENTA, BAZAR
SECUN DRABAD-500025,
ANDRA PRADESH

Page 18
ராட்சத
Ints
மீட்சியைத் தேடிப் புறப்பட்ட பாதங்களில் இரத்தச் சுவடுகள் திசை மாற்றிப் பார்வையை அனுப்புகையில்= ராட்சத பூதமாய் இன்றைய யுகம்;
தூசி தட்டிப் பார்த்த டயரிகளில் உதிர்ந்தன உனது ஞாபகங்கள் இலையுதிர் கால இலைகளைப் போல் மீண்டும்-பொறுக்கிப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்; ராட்சத பூதத்திற்கு LlሠዞjŠjl፡
உலர்ந்த இன்றைய இதயத்தின் ஈரத்தை DIGITATGES கடைசி நிமிஷத்தில்,
நான் இருக்கிறேன்" என-ஞாபகத்தை இறக்கியது
ராட்சத பூதம் இன்றின் உஷ்ணத்தோடு;
ஈரத்தின்
சாத்தியமின்மை உள்ளுக்குள் உறைந்தது!
விழியின் ஒளிபடைக்கு
முன்னேஎந்த ரூபத்தின் வடிவிலும், ராட்சத பூதம் அழிவின் ஆடைகளுடன் காதலி உன் புருவங்களின்
கூர்முனைகள்
ܩ
கிளாரா அச்சகம்,
 
 
 

பூதம்
g,67
புறப்படத் தயாராகி நிற்கும் T54 6262:TSGTITai;
ாத்திரியில்
நீயே-என்னை விழுங்கப் போகும் ராட்சத பூதமாய் கனா செய்தாய்
இன்ஜின்படிமத்தில் ான்னில் நீயே
பயம் செய்தாய்! அழிவின் வக்கிரத்துடன்
பூமியில்.
வீடுகள் நிறைந்த பிராதசங்கள்
DLLI ITGITTIERI 56TTITGI பிரகடனப்படுத்தப்பட்டன rrds பூதம். " தான் பிறந்த பயனை எண்ணிக் களித்த அன்றைய நாளில் நம்பியூட்டரின் உத்தரவுப்படி
முன்னொரு காலத்தில் மயானம் ஒன்றில் ஒற்றை வீடு கட்டிக் குடியேறியது
"மனுவும்"
உருத்ர தாண்டவத்தில், கடிவ்ாளத்தினைப் பற்றிய கரங்கள் அறுக்கப்பட்டன சகல வெறிக் கத்திகளால் அழிவுக் குதிரையின் குதூகலம் உலக நதியில் கரை புரண்டு
EPHU 45li i மனுஷ் ரத்தத்துடன்
| Tapiar Inpera 257