கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

Page 1
را برابر
A PIA G
T
 


Page 2

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
வாழ்க்கை
வரலாற்றுச் சுருக்கம்
நூற்ருண்டு விழா ஞாபகம்
зо-в-1 в75 — зо-в-1975
ஆசீர்வாதம் அச்சகம்
யாழ்ப்பாணம்
1975

Page 3

முன்னுரை
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் 1947ஆம் ஆண்டு இறைவனடி எய்தின ரெனினும், 1975 ஆம் ஆண்டு அவர் பிறந்த நூருவது ஆண்டு என்பதினுல், அவரது தொண்டுகளை நினைவுகூருமுகமாக 30.8-14 தொடக்கம் 30-8-15 வரை உள்ள ஓராண்டு காலத்தை சுவாமியாரது நினைவு நூற்றண்டாகக் கொண்டாடுவது தக் கதேயாகும்.
சுவாமியாரது வரலாறுபற்றிய ஏதாவது பிரசுரங்கள் எடுக்க முடியுமா? என்று என்னிட்ம் பலர் கேட்டதினுலும், சுவாமியாரவர்களது முகாமையில் இருந்த உடுவிலைச்சேர்ந்த மல்வத்தை ருே. க. பாடசாலையில் நான் 1937 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் இருவருடங்கள் ஆசிரியனுகச் சேவைசெய்தபோது சுவாமியார் அவர்களுடன் நெருங்கிப் பழகி இருந்தமையிஞலும் அவரது நூற்ருண்டு நினைவாக, பாடசாலைப்பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அச்சிட முனைந்தேன்.
இச்சிறு நூல், சுவாமியார் அவர்களது வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு “படம் பிடித்துக் காட்டும்” என எண்ணுகிறேன்.
: : । மு. வி. ஆசீர்வாதம் , P. 49, கண்டிவீதி, யாழ்ப்பாணம்

Page 4
* திருமறைக் குரவர்
* சிறந்த எழுத்தாளர்
* ஒப்பற்ற பிரசங்கியார்
* கீர்த்திவாய்ந்த
டி வன்மொழி விற்பன்னர்
* சரித்திர ஆராய்ச்சி அறிஞர்
* சொல்லாராய்ச்சி வல்லுநர்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
தோற்றம் : 30 - 8 . 1875
மறைவு : தி. 1 , 1947

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
شنتیسیسی به هر بجایی بیبیسیسیینیم-سسسسسسسسس

Page 5

நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர்
யாழ்ப்பாணத்து மானிப்பாய் என்னும் பதியில்
வாழ்ந்துவந்த இராசசிங்கம் சுவாமிநாதபிள்ளை என்னும் ஆசிரியர்,அப்பதியில் வாழ்ந்த காடினர் சிற்றம்பலத்தின் புதல்வி தங்கமுத்துப்பிள்ளையைத் திரு மணம் செய்திருந்தார். இவர்களுக்கு 1875ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 30ஆந் திகதி (30 - 8-1875 ) ஒர் ஆண் குழந்தை பிறந்தது.
լՊյpւնւ
வேலக்கைப் பிள்ளையார் கோவில் 'பரிபாலகராகவும்" இருந்த சுவாமிநாதபிள்ளை தமது குழந்தைக்கு வைத்தி லிங்கம் என்னும் பெயர் குட்டினுர், குழந்தையின் இனசனர் *கனகரத்தினம்’ என்னும் செல்லப்பெயரால் அக்குழந்தையை
அழைத்து வந்தனர்.
வைத்திலிங்கம் என்னும் கனகரத்தினம் சிறு
பிள்ளையாக இருந்தபோதே சுவாமிநாதபிள்ளை அவர்கள் காலஞ் சென்றதனுல் குழந்தையின் தாயாராகிய தங்கமுத்துப்பிள்ளையை அச்சு வேலி யைச் சேர்ந்த செந்தமிழ்ப் புலவர் தம்பிமுத்துப்பிள்ளை அவர்க ளுக்கு மறுமணம் செய்து வைத்தனர்.
வளர்ப்பு
தம்பிமுத்துப்பிள்ளை கத்தோலிக்க மதத்தினராத லினுல் தாயாருடன் வைத்திலிங்கமும் கத்தோலிக்க மதத்திற் சேர்ந்து “ஞானப்பிரகாசம்’ என்னும் பெயரால் அறியப்பட்டு வந்ததோடு, சிறிய தந்தையாராகிய தம்பி முத்துப்பிள்ளையின் அன்பான வளர்ப்பில் அச்சுவேலியில் வாழ்ந்தும் வந்தார்.
கல்வி அச்சுவேலியிலும் மானிப்பாயிலும் ஆரம்பக் கல்வி பயின்ற ஞானப்பிரகாசம், பின்னர் யாழ்ப்பா ணத்துச் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல் வி பயின்று கல்வியை முடித்துக் கொண்டு சிறிய தந்தையா ருடனேயே சென்று அச்சுவேலியில் வாழ்ந்து வந்தார்.
5

Page 6
இக் காலத்தில் திரு. தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் தனது பெரு மகனுக்கு அச்சுத் தொழிலைப் பழக்கியதோடு வயலின் வாசிக்கவும் மத்தளம் அடிக்கவும் வசதி செய்து கொடுத்தார். பிரம்ம பூரீ சபாபதிக் குருக்களிடம் சமஸ்கிருதம் படிக்கவும் ஒழுங்கு செய்து கொடுத்தார். இவைகளினல் ஞானப்பிரகாசம் கத்தோலிக்க வேத கீர்த்தனைகளை இனிமை யாகப் பாடக் கற்றுக் கொண்டார்.
தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் தமது அச்சகத்தில் *சன்மார்க்க போதினி” என்னும் சஞ்சிகை ஒன்றை வெளி யிட்டு வந்ததினுல் ஞானப்பிரகாசமும் எழுத்துத்துறையில் வளர்ச்சி அடைய உதவியாக இரு ந் த து மட்டுமன்றி, புலவர் தம்பிமுத்துப்பிள்ளையின் செய்யுள் இயற்றும் வன் மையும் அவருக்கு பரம்பரைச் சொத்தாகக் கிடைக்கக் கூடியதாகவிருந்தது.
தொழில் ஞானப்பிரகாசத்துக்கு பதினெட்டு வயது * நடக்கும் போது நாவலப்பிட்டியில் இருந்த
அவரது தாய்மாமனுடன் சிறிது காலம் தோட் டத்தில் கணக்கு எழுதுபவராக வேலை செய்து வந்தார். - ஆனல் 1893 ஆம் ஆண்டில் அவர் றெயில்வே கிளறிக்கல்” பரீட்சையில் முதற்தரமாகச் சித்தியடைந்ததினுல் கடிகமுவ’ என்னும் இடத்தில் “ஸ்ரேசன் மாஸ்ரருக்கு” உதவியாளராக நியமனம் பெற்றர். பின்னர் அவரது வேலைத்திறனைக் கண்ட மேலதிகாரி ஒருவரால் கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலத்தில் வேலை செய்ய அனுப்பப் பெற்ருர்,
ーエ ம்பி(மத்துப்பிள்ளையின் ஒன்று விட்ட
துறவியாதல் శీర్ఘాత
. .: a ~• vc,,ʻ• • ur-J'v«�SXe-aCa* யார் அவர்கள், ஞானப்பிரகாசம் 69Cij குருவாக வர வேண்டும் என்னும் ஆவல் கொண்டிருந்தார். தனது எண்ணத்தை யாழ். மாட்டீன் குருமடத்தில் இருந்த அதி வண. யூல்ஸ் கொலின் சுவாமியாருக்குக் கடிதமூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார். சிறியதந்தையாருக்கு உதவி செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
6

இருந்த ஞானப்பிரகரசம், கொலின் சுவாமியாருடைய புத்தி மதியைக் கேட்டு குருவாக வர ஒப்புக்கொண்டார். எனினும் சிறிய தந்தையார் விரும்பாததினுல் மனம் சோர்ந்து சிறிய தந்தையாருடன் அவரது அச் ச க த் தி ல் வேலைசெய்து அவருக்கு உதவியாக இருக்க எண்ணினர். ஆனல் யூல்ஸ் கொலின் சுவாமியாருடைய சகோதரன் சாள்ஸ் கொலின் சுவாமியாருடைய புத்திமதியால் மனம் மாறி குருமடத்துக்குப் போகத் தீர்மானித்தார். s
இதன்பின்பும் சிறிய தந்தையாரின் துயரத்தைக் காணமுடியாதவராய் குருமடத்துக்குப் போவதில்லை என்று தீர்மானித்தாரெனினும் கொலின் சுவாமியாரின் அழைப் பின் பேரில் யாழ்ப்பாணம் சென்றவர், மேற்றிராணியாரின் ஆலோசனைப்படி துறவியாவதற்கு குருமடத்தில் சேர்ந்தார். சிறிய தந்தையாரும் மனம் மாறி, மடத்திற்குச் சென்று சிறியமகன் ஞானப்பிரகாசத்தை ஆசீர்வதித்துச் சென்ருர்,
二 ப்பட்டம் 1893 இல் குருமடத்தில் சேர்ந்து ஆறு (55 வருடங்கள் குருத்துவக் கல்வி பெற்ற ஞானப் பிரகாசம் தமது 26ஆவது வயதில் அஃதாவது
1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி ஒரு குரு வாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
சுவாமி ஞானப்பிரகாசர் குருவாகப்
பட்டம் பெற்றபின், ஊர்காவற்று
றையில் முதன் முதல் தொண்டு செய்யத் தொடங்கினர். அங்கே கத்தோலிக்க நூல் நிலையம் ஒன்றை நிறுவி, நூல்களை இரவலாக கொடுத்து வாங்கி, மக்கள் இலகுவாக நூல்களைப் பெற்று வாசிக்க வழிகோலிஞர். இதுவே ஊர்காவற்றுறையில் முதல் முதல் ஏற்பட்ட நூல் நிலையமாகும். -
சமயத் தொண்டுகள்
சுவாமி ஞானப்பிரகாசர் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணத்து ஆசனக்கோவிலில் சில மாதங்கள் சேவை செய்தபின் நல்லூரைச் சேர்ந்த திருநெல்வேலி 7

Page 7
சான்னும் பதியை தமது தலைமைத் தானமாகக் கொண்டு 1902ஆம் ஆண்டு தொடக்கம் சமயத் தொண்டை விரிவாகச் செய்யத் தொடங்கினுர்,
திருநெல்வேலி, நல்லூர், கொக்குவில், கோண்டாவில், நீர்வேலி, வடகோப்பாய், தென்கோப்பாய், உரும்பிராய், மல்வத்தை (உடுவில்), கூரம்பன் (உடுவில்), சண்டிலிப்பாய், மானிப்பாய், மூளாய்,கச்சாய், மந்துவில், முகமாலை முதலிய இடங்களில் தேவாலயங்கள் நிறுவி அவற்றுடன் பாடசாலை களையும் ஆரம்பித்து நடாத்தி இவை மூலமாக ஏழை மக் களையும் தாழ்த்தப்பட்டமக்களையும் உன்னத நிலைக்குக் கொண்டுவர அரும்பாடு பட்டார்.
இவற்றுடன் சமய சம்பந்தமான நூல்கள் பல வற்றை எழுதி வெளியிட்டு, மக்களுக்குத் திருமறை அறிவை பூட்டி, திருமறை அனுட்டானங்களையும் சரிவரச் செய் வதற்கு உதவிபுரிந்தார்.
சுவாமியாரவர்கள் தமிழ், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், மலையாளம், லத்தீன் கிறீக், ருேமன், போத்துக்கீசம், ஜேர்மன், பிரான்ஸ் ஆதியாம் முப்பதுக்கு மேற்பட்ட மொழிக2ளக் கற்று இவைகளின் உதவியுடன் தமிழ் மொழிக் கும் பிறமொழிக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமை கஜள ஆராய்ந்து அறிந்து தமிழ் மொழியின் தொன்மைஇனிமை என்பவற்றை ஆதாரபூர்வமாக உலகறிய எடுத்துக் காட்டினுர்,
பிறதேசங்களில் இருந்து இலங்கை வந்த பல பேரறிஞர்கள் பழங்காலக் கல்வெட்டுக்களை வாசித்து அறி வதற்கு சுவாமி ஞானப்பிரகாசரின் பன் மொழியறிவு தவியாக இருந்தது. இதனுல் அவருக்கு பெருங் கீர்த் தியும் ஏற்பட்டது
பன் மொழிக் கல்வி
இவரது பன்மொழியறிவையும் சொல்லாராய்ச்சித் திறனையுங் கண்டு ஈழத்துத் தமிழ்ப்புலவர்.மன்றம் இவரைப் பாராட்டி சொற்கலைப்புலவர் என அழைக்கலாயிற்று. 8

சுவாமியாரின் பன்மொழியறிவு, ஆராய்ச்சி என் பனபற்றி மேல் நாடுகளிலும் இவரது புகழ்பரவியது. ஜேர் மணி தேச அரசு சுவாமியவர்களின் உருவத்தைப் பொறித்த முத்திரைகள் வெளியிட்ட தென்ருல் அவரது புகழைப்பற்றிப் பேசவும் வேண்டுமோ ?
சமய சம்பந்தமாகவும் மொழி சம்பந் தமாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய கட்டுரைகள் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆயிரக் கணக்காக வெளிவந்தன என்று கூறலாம். சுவாமியார் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக் கணக்கான நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில பிரதானமான நூல்களின் பெயர்கள் பின் வருவன வாகும் :
நூல்கள் ஆக்கம்
(1) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் (2) ஆதிகாலப் பாப்புமார் சரித்திர சங்கிரகம் (3) தமிழ் அமைப்புற்ற வரலாறு (4) தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி (5) சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி (6) தருக்க சங்கிரகச் சுருக்கம் (7) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (8) செகராசசேகரன் (ஒரு சரித்திர நாவல் ) (9) தமிழரின் ஆதியிருப்பிடமும் பழஞ் சீர்திருத்தமும்
( அச்சேறவில்லை ) (10) ஆண்டவர் சரித்திரம் (11) சுப்பிரமணியார் ஆராய்ச்சி (12) பிள்ளையார் ஆராய்ச்சி (13) India's Ancient Chinorology and Culture (14) The origin of caste among the Tamils (15) A History of the Catholic Church in Ceylon
(16) Twenty Five years of Catholic Progress in
the Diocess of Jaffna.
9.

Page 8
(17) The Historical aspect of Christianity and
Buddhism. ' (18) Kings of Jaffna during the Portuguese
Period of Ceylon History. (19) Ctholicism in Jaffna (20) Philosophical Saivism
சமயப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்ப. வைகளால் தூண்டப்பெற்று இரவு பகல் என்று பாராது உழைத்து வந்ததினுல் உலகம் முழு வதிலும் பாராட்டுப்பெற்று வாழ்ந்து வந்த பன்மொழிப் புலவரும் துறவியுமாகிய சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் தமது எழுபத்திரண்டாவது வயதில், அஃதாவது 1947ஆம் ஆண்டு சனவரி மாதம்,8ஆம் திகதி இறைவன் திருவடி எய்தினுர்.
O

நல்லூர் ኅ። சுவாமி ஞானப்பிரகாசர் மீது அந்தாதிப் பதிகம்
தோற்றம்: 30.8-1875 b60p6 : 31-1947
வெண்பா
பாரோங்கு நல்லூரிப் பதிய்மீர்ந்து தொண்டாற்றிப்
பேரோங்கு ஞானப் பிரகாசர் - சீரோங்கு
மந்தாதி பாடுதற் கன்னைமரி யீந்தசுதன்
தந்தாசி செய்வ்ார் துணை.
கட்டளைக் கலித்துறை 1. குலவுநல் மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோவிலாண்ட
குலசே கரமு தலியார் குலவிளக் காயமைந்து பலமொழி தங்கு கலையெலா மாய்ந்தறி பண்டிதன்யார்? நில்வுல கேத்திடு ஞான்ப் பிரிகாச நீள்குருவே.
2. குணமொன்று செல்வ னுயர்சாமி நாதக் குரிசிலன்பால்
மணமொன்று செல்வியாம் தங்கமுத் தின்ப மதலையாகிப் பணமொன்று முத்யோகம் நீத்துத் துறவது பற்றினன்யார் ? புணரொன்று மிப்பூவில் ஞானப் பிரகாச பொற்குருவே.
3. குற்றமில் ல்ாண்டா வணியெண்ணுாற் றேழ்பத்துக் கொள்ளுமைந்தில்
நற்றவத் தோடுதித் தோர்நாற்பத் தாருண்டு நற்குருவாய் மற்றுவல் நாற்பத்தேழ் தைமதி தற்பரன் மாணடியைப் பெற்றவன் யாரம்மா ? ஞானப் பிரகாச பேர்குருவே.
4. குணமென்னுங் குன்றேறி நின்று நிலையில் குரம்பைதனை
மணமொன்று மொன்ற மயல்களைந் தின்பமாம் வாழ்வதுற்றுக் கண்மொன்று வீண் போக்கா வின்தமிழ்த் தொண்டினிற் கண்ணயரா துணவொன்ரு நின் ருேன்யார்? ஞானப் பிரகாச ஒண்குருவே.
5. குவலயங் கொண்டாடு தத்துவ தர்க்கக் கொடுமுகட்டின் நவஞான வல்லப மாமுனி யென்ற நல் நாவலன்யார் ? நவமான நுண்ணறி வோங்கியே நல்லூர் நகருறைந்த தவவடி வானவன் ஞானப் பிரகாச சற்குருவே.

Page 9
6. குத்திர மான விகட விளுக்கள்தான் கேட்டுநிற்கும்
சத்துரு வாயினு மன்பு விடைதன்னுற் சத்தியங்காண் மித்துரு வாக்கிநல் லானந்த மூழ்கிய மேலவன்யார் ? சத்திய மாமறை ஞானப் பிரகாச சற்குருவே.
7. குன்ற வருட்தாய் பிலோமி னெனுமம்மை கோவிலென் ருந்
பொன்ரு வளமிகு நாடு முகமாலைப் பூம்பதியாம் என்ருல் முனமகந் தோன்றி மறைவோ னெவன்மறுகிச் சென்றேன் பரன்பாதம் ஞானப் பிரகாச சீர்குருவே.
8. குறிப்பிட்ட நீர்வேலி மானிப்பாய் கோண்டாவில் கூறுகோப்பாய்
அறிபட்ட மாகியப்பிட்டி யுரும்பிரா யோடுடுவில் நெறிபெற்ற நல்லூர் முகமாலை மந்துவில் நாடியோடி நெறியார் நிறுத்தினன் ? ஞானப் பிரகாச நீள்குருவே.
9. குன்றிடைத் தீப மெனவே யிலங்கிக் குவலயத்தே
குன்றத் தமிழ்த்தொண்டு கொண்டுயர் தன்மை குறித்ததனுற் குன்ருத சொற்கலைச் சீர்புல மைப்பெயர் கொண்டவன்யார் ? குன்றப் புகழ்பெற்ற ஞானப் பிரகாச கோன்குருவே.
10. குருவே! குருமா மணியே! கலைக்கடல் கொண்முகிலே!
தருவே! தயாநிதி யண்டினுேர்க் கன்பே தரித்திரர் பொற் திருவே! புலவா மறையோய் ! என நாம் திகைத்தரற்றப் பொருளா யினனெவன் ? ஞானப் பிரகாச பொற்குருவே.
கலி விருத்தம்
பரனென யேசுவைப் பார்தனி லேத்திட உரனுடன் தொண்டுசெய் தோங்கிய ஞானமென் குரவரின் ஆத்துமம் கோதகல் மோட்சமாம் பரகதி யுற்றுநற் பேற்றுடன் வாழ்கவே.
(1960ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளியான "விவேகி" -6T6 மலரில் இருந்து எடுக்கப்பட்டது).
ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்


Page 10
。 。 。 ,