கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளம்பிறை 1971.01

Page 1


Page 2
கே. நாவிங்கம்
-,、
॥ ॥
* —á
I
।
1 11 : 17:17:15+1 ܐܬܕܒ217ܲ - ܒ
 

எண்ணிய எண்ணியாங்கு எய்து ITALI TIM திண்னிய ராகப் பெறின்
DITERAJ 7 8 - 9
டிசம்பர் 1970- ஜனவரி 1971
நபி காவியம்
ஐ. சாந்தின் 配墨
IntETri 구
தை.அ. வெள்ளிவிழாக் சிறப்புக் கட்டுரை
-------------------
LITLAMIEPIERAI
Literary Monthly
Managing Editörı
M. A. RAHMAN O Fice: 231, Wolfendhal Street. Colombo-13 (Ceylon) bl: ARASU - COLDME
இளம்பிறை நிங்கள் வெளியீடு நிர்வாக ஆசிரியர்
TE T ரஹ்மான்
அதுவலகம் :31, ஆதிருப்பன்ரிங் தெரு கொழும்பு-13 இலங்கை 高画母:*吁卡 கொழும்பு
ஏழு அத்தியாயங்களில் ஜீவிய வரலாறு
இளம்பிறையிற் பிரசுரமாகும் ஆற்றலிவிக்கிய வகைகள் புனேவுகளே. கருத்துங்கள் ஒரயாளரின் சுயேச்ாச சொந்தம்.

Page 3
இலங்கையின்ஆம்ான சிகரெட்
፳፩ ሃኒጸ, ? 岛筠
 
 
 

ஒட்டுண்ணிகள் கவனம்!
பெரும் பணம் படைத்தோர் தாமுண்டு; மீண்டும் மீண்டும் பொருள் குவிக்கும் பேராசையுண்டு; சேர்த்ததைப் பூதம் போல காக்கும் கடின மனமுண்டு என்ற மரபினைப் பூண்டு வாழ்தலே பெரு வழக்காக உண்டு. மாருக, சமுதாயப் பணியிலும், கலை-கலாசாரஇலக்கியத் துறைகளிலும் தம்மைத் தொண்டராக அமர்த்திக் கொள்ளும் தனவந்தர் மிகமிகச் சிலரே. அவர்கள் முற்றிய பயன் தரும் நற்கனி மரத்தினை நிகர்த்தவர்கள்.
இந்த மரங்களை நாடி இரவலர் கூட்டம் மொய்த்து வருதலும் இயல்பே. கணிகளைத் தின்று களித்தலும் தக்கதே. இஃது இரவ லர்க்கு - யாசகர் கூட்டத்திற்கு - பிச்சைக்காரக் கும்பலுக்கும் பொருந்தும்.
ஒரு காலத்தில் இரவலர் புலவர்களாகவும் இருந்தார்கள். அது சேமம்; அதனல் தீமை நலிந்து நன்மையே குதிர்ந்தது. ஆனல், ஈழநாட்டினைப் பொறுத்த மட்டில் நிலைமைகள் தலைகீழாக மாறி விட்டனவோ என ஐயுறும் அளவிற்கு அண்மைக்கால அநுபவங்கள் அமைந்துள்ளள. கலே-கலாசார-இலக்கியத் துறைகளிலே "சேவை யாளர்கள்’ என்று சுயபட்டயஞ் சூட்டி, "நாம் இல்லாவிட்டால் இந்தத் துறையின் பெருமையே அஸ்தமித்துவிடும்’ என்று மறை வாகப் பழங் கதைகள் பேசுபவர்களிலே சிலர் பிச்சைக்காரக் கும் பலிலும் பார்க்கிலும் கேவலமான ஒட்டுண்ணிகளாக இருக்கிருர்கள். இவர்களை நற்கனி நாடிச் செல்லும் பறவை இனங்களுக்கு உவமை சொல்லல் பாவம். உண்மையில் இவர்கள் சமுதாயத்தின் ஆரோக் கியமான இரத்தத்தினை உறிஞ்சி வாழும் அட்டைகள். இவர்களால் கலை-கலாசார-இலக்கியத் துறைகளிலே நன்மைகள் நலிந்து தீமை களே சடைக்கின்றன. தீமைகள் களையப்படுதல் புனிதமான பணி.
அப்பணியினைத் துணிந்து செய்வதென "இளம்பிறை" புத் தாண்டுச் சபதம் இயற்றியிருக்கின்றது என்பதை அறியத் தருவ தேலே பெருமிதம் கொள்ளுகின்ருேம். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்! அதனை இயற்றும் தர்மமும் பெருமிதமும்.

Page 4
lub
PS:5Ig
அண்ணல்
வையத்து வாழ்வினையே - இன்ப வாரிதி என்றி ருக்கும் தையல் இலை எனினும் - ஆமின துயரச் சிலை யானர் 41
经 பூவுதிர்ந் தகொடி யாய் - இன்பப் புள்ளி ழந்தவ னமாய் பாவை அமர்ந் திருந்தார் - பலாப்பழம்
42
பாங்கில் கணு வுடையார்
தோற்றம்
அன்பின் உறை விடமாம் - நல்ல அழகின் பிறப்பிடமாம் பண்பின் உதாரணம் - அப்துல்லா பரம கதி அடைந்தார் வல்ல வனம் இறைவன் - விதி வசத்தில் உல கியங்கும் எல்லாரும் சோக முற்ருர் - அந்த ஏகனை யே துதித்தார் சோகத்தில் வீழ்ந் திருந்தார் - முத்தலிபு சிந் தை தளர்ந் திருந்தார் தோகை வயிற்றி னிலே - மகனது சின்னம் நினைத் திருந்தார் பூத்த மலர்க் கொடியார் - ஆமின பேரிருட் காட்டினிலே சேர்த்த விதிக் கொடுமை - நெஞ்சம் தீண்டத் துடித் திருந்தார் பூவுதிர்ந் தகொடி யாய் - இன்பப் புள்ளி ழந்த வனமாய் -- பாவை அமர்ந் திருந் தார் - வயிற்றுப் பாரம் வளர்ந் திடவே 47
 
 

பிள்ளைக் கனி யமுதை - வயிற்றில் பேணி வருகை யிலே கொள்ளை கொடுத்தவராய் - ஆமின கும்மி ருட் டில் கிடந்தார் 48
வையம் ஒளி பரப்ப - வரும் விடியற் பொழுதெனவே செய்ய நலம் பயக்கும் - குழவி சேர இருக் கையிலே
வானவப் பெண்கள் வந்தார் - மலக்குகள் வரிசை யாய் ச் சூழ நின்ருர் தேனித ழாமின வின் - பிரசவம் சேமமாய் காக்க நின்ருர்
திங் கட் கொழுந்தினைப் போல் - Sat) LD தீய்க்கும் சுடரினைப் போல் தங்கச் சிலையினைப் போல் - குழவியைத் தந்து மகிழ்ந் திருந்தார்
வையத் தருட் கொடையை - இந்த மாநில மணி விளக்கை
துய்ய அமிழ்த மென - மலக்குகள் துதிபாடி வாழ்த்தி நின்ருர் பாட்டனர் வந் திருந் தார் - உறவினர் பற்பலர் சூழ்ந் திருந்தார் பாட்டு மொழியு டையார் - ஆமின பாலகர் கைய விரித்தார்
ஏந்திய கைகளிலே - புகழ் ஏறிய முத்தலிபு சேர்ந்த னர் கஃபாவை - நன்றியைச் செப் பினர் அல்லாஹ்வுக்கே
மாட் சிமை மிக்க துவாம் - அந்த மா பெரும் கஃபாவில் சூட்டினர் நாமம் ஒன்று - புகழ் சேர்ந்த முகம்ம தென்றே
நாட்டுப் பெரு மக்ரை - அழைத்தொரு நல்விருந் திட்டிருந்தார் சூட்டிய நாமம் சொன்னர் - யாவரும் சூழ்ந்த தை வாழ்த்தி நின்றர் 56

Page 5
6
இளம்பிறை தை. அ. வெள்ளி விழாச் சிறப்பு மலரை, மிகக் குறுகிய காலத்திலேயே தயாரித்து வெளியிடும் பணி சற்றும் எதிர் பாராத விதத்திற் சடுதியாக விடிந்தது. காரணம், தை. அ. அவர்கள் தாயகம் செல்ல விருக்கின்ருர் என்ற செய்தி ஒரு வாரத்திற் கிடையிலேதான் இளம்பிறைக்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இந்திய முஸ்லிம் லீக் விவகாரங் களிலே, ஆணித்தரமான கருத்துக்களையும், அந்தரங்கச் செய்திகளையும், அந்தரங்க சுத்தியான ஆலோசனைகளை யும் இளம்பிறை" முன் வைத்து, தன் இன உணர்வினை நேரிய முறையிலே இயற்றியது. தை. அ. மீது யூனி யல் வீக்கர் பதவிப்பித்தும் 'அழுக்காறும் காரணமாக பழிப்புரைகள் சுமத்த முந்தி நின்ற பொழுதெல் லாம், சத்திய வழி நின்று, தை. அ. வின் தளத்தினை
த்தது. இதன் காரணமாக "இளம்பிறை" வாச குப் பொதுவாகவும், இளம்பிறை இலக்கிய வட் த்திற்குக் குறிப்பாகவும் அவர் நண்பரானர். நண் நீக்குத் தக்க முறையிலே பிரியா விடை கொடுப் பதற்கு இளம்பிறை இலக்கிய வட்டமும், சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடுவதற்கு இளம்பிறை ஆசிரியர் குழுவும் தீர்மானித்தன. அத்தீர்மானத்தின் விளைவு, இன்று கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் நடை பெறும் வெள்ளி விழாவும், அதிலே மணம் பரப்பும் இம்மலரும்.
தொண்டர் திலகம் - ஸாஹிபே மில்லத்
பொதுப்பணியில் தம்மைப் பிணைத்து நற்பணி புரிந்து வாழும் தொண்டர்கள், அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப் படுதல் வேண்டும் என்ற கொள்கையில் "இளம்பிறைக்குக் கட்டித்த உடன்பாடு இந்த உடன்பாட்டிற்கு இசைவாகவே நடைபெறும் தை, அ. அவர்களின் வெள்ளிவிழாச் சேவைப் பாராட்டு விழாவும் பட்டமளிப்பு விழாவும் அமைந்துள்ளன. குறுகிய காலத்திற்குள் என் சக்திக்கு உட்பட்ட வகையிலே என்னல் சாத்தியமான அள வுக்குத் தகவல்களையும் பொருத்தமான படங்களையும் சேர்த்து, ஏழு அத்தியாயங்களிலே அமையும் தை. அ. அவர்களின் சுருக்க வரலாற்றினை ‘தொண்டர் திலகம்- ஸாஹிபே மில்லத் என்னும் மகுடத்தில் எழுதினேன். நிறையை மட்டும் ஏற்க, «)
எம். ஏ. ரஹ்மான்
 
 
 
 
 
 
 

1940
-ஆம் ஆண்டளவிலே முஸ்லிம் லீக்கின் பெருந் தலை வரும், இந்திய துணைக்கண்டத்திலே உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடான பாகிஸ்தானைத் தோற்றுவித்தவருமான காயிதே ஆஜம் முஹம்மது அலி ஜின்ன அவர்கள் சென்னைக்கு விஜயம் செய்தார். தமிழ் நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் நெஞ்சங்களிலே அவர் புதிய எழுச்சியை உண்டாக்கினர். புதிய விழிப்பும், புத்துயிர் பெற்ற உற்சாகமும் பொங்கின. இதனல் தமிழ் நாட்டில் உயிர்ப்பின்றிச் சோம்பிக் கிடந்த முஸ்லிம் லீக் அமைப்பில் புத்தம் புதிய மலர்ச்சி ஏற்படுவதாயிற்று.
தமிழக முஸ்லிம்களுடைய அரசியற் போக்கில் ஏற்பட்ட மறு மலர்ச்சியினல் அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் பெரிதும் கவரப்பட்டதிலிருந்து அவருடைய அரசியல் வாழ்க்கை ஆரம்ப மாயிற்று. தமது ஜனனபதியான கீழக்கரையில் முஸ்லிம் லீக்கின் பலத்தை ஸ்திரப்படுத்தப் பாடுபட்டார். செயல் திறன் சார்ந்து உழைத்த அவரை 1940 ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் லீக்கின் கீழக்கரை பிரைமரியின் செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தனி முஸ்லிம் நாடு அமைத்தலே முஸ்லிம் லீக்கின் முழு முதற் கொள்கையாக அமைந்தது. 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் என்ற தனி முஸ்லிம் நாடு வென்றெடுக்கப்பட்டதுடன் அந்தப் பணி நிறைவுற்றது. அதே சமயம் தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானின் தோற் றம் புதிய தொரு ஞான விடிவினையும் ஏற்படுத்தியது. பல்வேறு காரணங்களினல், தெற்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களினல் மிக வடக்கே சிருஷ்டிக்கப்பட்ட பாகிஸ்தானுக்குச் சென்று குடியேற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி எல்லைபுறப் பட்டாணியர்களை
இ-2

Page 6
O
அனுதைகளாக விட்டதைப் போன்றே, தென்னட்டு முஸ்லிம் க்ளும் லீக்கினல் அனதைகளாக விடப்பட்டார்கள். பாகிஸ்தா னின் நிர்வாகப் பதவியை ஏற்க விரைந்த ஜின்னு, பெயரளவில் பாரதத்தில் எஞ்சிக் கிடந்த முஸ் லிம் லீக்கிற்கு, இஸ்மாயில் ஸாஹிபை காயிதே மில்லத் தாக்கிய பின்னர், வீக்கின் தலை வர் பதவிச் சுமையையும் சூட்டி விரைந்தேகினர்.
ஒரு மீள் பார்வை
இந்தக் கட்டத்தில் "பழைய வரலாறு: ஓர் அத்தியாயம்" என்ற மகுடத்தில் டாக்டர் எஸ். சுல்தான் அவர்கள் "இளம்பிறை (மீலாத் ஆண்டு மலர் - 70) யில் எழுதிய கட்டுரையின் சில பகுதி கள இங்கு தருதல் பொருத்தமானது.
பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின்னர், இந்தியா வாழ் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஓர் அரசியல் இயக்கம் இல்லாதிருந்தது. 'இல்லை" என்ற இந்த நிலை இரண்டு ஆண்டுகள் நீடித்தது. அகில இந்திய ரீதியில் இயங்கக் கூடிய சமுதாயக் கட்சி ஒன்று தோன்றுதல் வேண்டும்மற்ருெரு வகையிற் சொல்வதானல், செயலற்றுக் கிடந்த இந்திய முஸ்லிம் லீக்கிற்கு உயிர் கொடுத்தல் வேண்டும்என்ற எண்ணம் இலேசாக முளை கட்டியது. இதன் பயனுக, முஸ்லிம் பிரமுகர்கள் சிலர், 1949 ஆம் ஆண்டில் கல்கத் தாவில் கூடிஞர்கள். “பழைய முஸ்லிம் லீக் கொள்கைகளை யும் திட்டங்களையும் அநுசரித்து நடப்பதா? அன்றேல் புதிய கொள்கைகளையும் திட்டங்களையும் வரையறை செய்து நடப்பதா?’ என்ற பிரச்சினை எழுந்தது. பழையதை ஒரளவு அநுசரித்துக் கட்சியின் புதிய கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்படல் வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதனை இயற்றும் பொறுப்பு இஸ்மாயில் சாஹிப் அவர் களிடம் விடப்பட்டது.
புதிய கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்பட் டன. பம்பாய் நீங்கலாக, மற்றைய எல்லா வட நாட்டு மாநிலங்களும் கட்சியுடன் இணைந்து இயங்க மறுத்து விட்
 

டன. இந்நிலையில் நூர் முஹம்மது அஹ்மது சேட் பம்பாய் மாநில லீக் கன்வீனராக நியமிக்கப்பட்டார். ஆனல், கேரளாவின் நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அங்கு வாழும் முஸ்லிம் லீக்கர்கள் பிராந்திய அடிப்படை யில், கேரள மாநிலக் கட்சியாகவே இயங்கி வந்தார்கள். அகில இந்திய ரீதியில் செயற்படத்தக்கதாக இணையும்படி கேரளா முஸ்லிம் லீக் தலைவர் பாபகி தங்கலிடம் வேண் டுதல் விடுக்கப்பட்டது பம்பாய் பிரதிநிதியும், சென்னைப் பிரதிநிதியும் தனித் தனியே பாபகி தங்கலைச் சந்தித்துப் பேசிய போதிலும், இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதன் பின்னர், தமிழகத்திலிருந்து தூது கோஷ்டி ஒன்று கேரளாவுக்குச் சென்றது. இத்தூது கோஷ்டியினர் பத்துத் தினங்கள் கேரளாவில் தங்கி, அங்குள்ள பிரமுகர் பலரைச் சந்தித்து, அகில இந்திய ரீதியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர் கள். இத்தூது கோஷ்டியின் சலியாத உழைப்பு வெற்றி ஈட்டியது. கேரளா முஸ்லிம் லீக் அகில இந்திய முஸ்லிம் லீக்கில் இணைந்து கொண்டது. இந்த மகத்தான சாதனையை இயற்றிய தூதுக் திருப்பூர் மொஹிதீன் குழுவில் ஜனப்கள் எம் எஸ். அப்துல் மஜீது, ரஸாக்கான், திருப்பூர் மொஹி தீன், டாக்டர் ஹபீபுல்லா பேக், சேலம் அப்துல் பாஸிது ஆகிய ஐவரும் அங்கம் வகித்தனர்.
நிற்க, கேரளாவின் இணைப்பின் பின்னரே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தைக் கூட்டுவது சாத்திய மாயிற்று. இந்தக் கூட்டம் 1956 இல் ராஜாஜி மண்டபத் திலே கூடிற்று. அக்கூட்டத்திலேதான் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் கூட, 1958 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் லீக் கூட்டம் ஒன்றுதானும் தமிழ் நாட்டிற் கூட்டப்படவில்லை. எனவே, மக்கள் முன் செல் லக் கூச்சப்பட்ட, மக்களிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட, இதனுல் உயிர்ப்பே இல்லாத ஒரு நிறுவன மாகத் தமிழ் நாடு முஸ்லிம் லீக் இயங்கி வந்தது.
தமிழ் நாடு லீக்கிற்கு உயிர்ப்புக் கொடுக்கும் சரியான திசையில், முதலாவது நடவடிக்கையை மேற்கொண்டவர்

Page 7
12
பழம் பெருந் கொண்டரும், மறுமலர்ச்சி வாராந்திரியின் ஆசிரியருமான யூசுப் சாஹிப் ஆவர். பாரிய உழைப்புடனும் மிகுந்த பிரயாசையுடனும் 1958 இல், திருச்சியில், முஸ்லிம் லீக் ஊழியர்களின் முதலாவது கூட்டம் கூட்டப்பெற்றது. அது மிகச்சிறப்பாக நடந்தேறியதற்குத் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒருவருக்குக் கடைமைப் பட்டிருக்கிற தென்றல் அவர் யூசுப் சாஹிபாகத்தானிருப்பார். அடுத்த ஆண்டு, இரண்டாவது மாநாடுபோல ஒன்று, இராமநாதபுரம் இளை யான் குடியில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தினைக் காரிய சாதனையாக்கியவர் மெளலவி முஹம்மதலி நூரி அவர்களா வர். இவ்விரு மாநாடுகளுக்கும் பின்னரே தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக் பிரபலமடையத் தொடங்கிற்று.
லீக்குடன் தை. அ. வின் புதிய தொடர்பு
தென்னுட்டின் சூழ்நிலைகளுக் கேற்ப, தனித்து இயங்கவல்ல, தனித்துவக் கொள்கையும் இலட்சியமுள்ள கட்சியாகவும், முஸ்லிம் களின் நலன்களைச் செயல்திறன் சார்ந்து பேணும் இயக்கமாகவும் வளர்ச்சியுறுதல் வேண்டும் என்ற கட்டித்த அக்கறையினல், "மறு மலர்ச்சி ஆசிரியர் ஏ. எம். யூசுப் அவர்களும், தமிழக மக்களால் "தளபதி என விதந்தேத்தப்படும் திருப்பூர் மொஹிதீன் அவர் களும் செயல் திறனுடன் உழைக்க வல்லவரான கீழக்கரை தை. அ. செ. அப்துல் காதரை அணுகி, முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்காக அவருடைய ஒத்துழைப்பினைக் கோரினர்கள். இந்த இருவருடைய வேண்டுகோளையும் ஏற்று மீண்டும் முஸ்லிம் லீக் விவகாரங்களிலே அக்கறையுடன் தை. அ. செ. ஒன்றுபடலானர்.
இதன் விளைவாக, முஸ்லிம் லீக்கின் கீழக்கரைக் கிளையின் செயலாளர் பதவியை தை. அ. 1959 ஆம் ஆண்டில் ஏற்ருர். அப் பொழுது அக்கிளையிலே சுமார் 400 உறுப்பினர்களே இருந்தார் கள். அவருடைய நிர்வாகத் திறனின் சான்ருக அந்தக் கிளையில் இப்பொழுது 6000 பேர் அங்கத்துவம் வகிக்கின்றர்கள். தமிழ் நாடு முஸ்லிம் லீக்கில் சுமார் 27,000 அங்கத்தவர்கள் இருக்கிருர் கள் என்ற படுதாவில் இதனைப் பார்த்தல் விரும்பத்தக்கது
முஸ்லிம் லீக்கின் செல்வாக்கினை விரிவு படுத்துவதையும், லீக் கின் அமைப்பினைப் பலப்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டு, 1960 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சென்னை எஸ். ஐ. ஏ. மைதானத்தில் ஒரு சிறப்பு மகாநாடு நடத்தப்பட்டது. சென்னை மாநில முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் என்று இது பொது வாக அழைக்கப்பட்டது. இந்த மகாநாட்டின் வெற்றிக்கான மையக்கருவாகச் செயற்பட்டவர் ல்தை. அ. வே! இதனை, மகாநாடு

3
முடிவடைந்ததும், அன்றைய "மணி விளக்கு ஆசிரியர் ஆ. கா . அப்துஸ் ஸமது "மாநாட்டின் குறையை நிறை செய்தவர் தை. அ. செ. அப்துல் காதரே என்று தமது பத்திரிகையில் எழுதினர்."
தமிழ்நாடு முஸ்லிம்கள் மத்தியிலே வீக்கின் செல்வாக்கு வேக மாக வளர்ந்து வருவதை முதிய தலைவர்கள் அப்பொழுதுதான் உணரத் தலைப்பட்டார்கள். இதனல், முறையான மாநாடு ஒன்று கூட்டப்படல் வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது, மாவட்ட ரீதியாக மகாநாடுகள் நடத்தியும், பிரசாரஞ் செய்தும் லீக்கின் செல்வாக்கினை மக்கள் மத்தியிலே வேரூன்றச் செய்வதற்கான ஆக் கப் பணிகளை மேற்கொள்வதில் தை. அ. முன்நின்று உழைத்தார். மாவட்ட ரீதியான முதல் மகாநாட்டினை முஹம்மதலி நூரி, பி. ஏ. எஸ். அப்துல் ஹன்னன் ஆகியோரின் துணையுடன் தை. அ. சிறப்பாக நடத்தி முடித்தார்.
தை. அ. லீக்கின் பொருளாளராதல்
1946 ஆம் ஆண்டிலேதான் முஸ்லிம் லீக் மகாநாடு தமிழ் நாட்டில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒரு மாமாங்க காலத் திற்கு மேலாக முறையான மகாநாடுகள் நடத்தப்படவில்லை. 1961 ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்துள்ள காட்டூரில் லீக்கின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. பொதுச் சபை கூடி நிர் வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் வேளை வந்தது பதவியாளர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதும் தலைவர் பதவிக் கான போட்டி ஆரம்பமாகியது. "முஸ்லிம்’ நாளிதழின் ஆசிரியராக ஒரு காலத்தில் கடமையாற்றிய கே. டி. எம். அஹமத் இப்ராஹி மும், காயிதே மில்லத்தும் (இருவரும் சகோதரர்கள் என்பது குறிப் பிடத் தக்கது) தலைவர் பதவிக்கான மனுவைத் தாக்கல் செய்தார் கள். இருப்பினும், தலைவர் போட்டியின்றி ஒரு மனதாகத் தெரிவு செய்யப்படல் வேண்டுமெனத் தளபதி திருப்பூர் மொஹிதீன், தை. அ. போன்ருேர் விரும்பினர்கள். இவ்விருவரும் போட்டியைத் தவிர்க்கும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபடலாயினர். இறுதிவரை சகோதரர்கள் எவராவது போட்டியிலிருந்து வாபஸ் பெற முன் வரவில்லை.
காட்டூரில் மொத்தம் 167 பிரதிநிதிகள் கூடியிருந்தார்கள். தளபதி முகைதீனும், தை அ. வும் ஒவ்வொரு பிரதிநிதியையும் தனித் தனியாகச் சந்தித்துத் தமது கருத்தினை வலியுறுத்தினர்கள். இறுதியாக, "போட்டியைத் தவிர்ப்போம் தலைவர் பதவியைக் காயிதே மில்லத்திற்கு விட்டுக் கொடுப்போம்” என்ற பொருள்பட ஒரு மகஜரைத் தயாரித்தனர். இதிலே தளபதி முகைதீன் முதலா வதாகக் கையொப்பமிட, அதனை ஒவ்வொரு பிரதிநிதியிடமும்

Page 8
14
தை. அ. எடுத்துச் சென்று இசைவு ஒப்பம் பெறுவதில் ஈடுபடலா ஞர். 133 பிரதிநிதிகள் மேற்படி மகஜரில் இசைவு ஒப்பமிட்டனர். தை. அ. தமது ஒப்பத்தினை அதனடியில் இட்டு, அந்த மகஜரைச் சமர்ப்பிக்கையில், "தலைவர் பதவிக்குப் போட்டி இருக்குமானல், நான் முஸ்லிம் லீக்கில் எந்தப் பதவியும் வகிக்கப் போவதில்லை" என்ற தொனியிலே பேசினர். நிலைமை தனக்குச் சாதகமாக இல்லை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்த கே. டி. எம். போட்டியி லிருந்து விலக, காயிதே மில்லத் ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவற்றிலிருந்து கை. அ. வுக்கு முஸ்லிம் லீக் பொதுக்குழுவிலே இருந்த செல்வாக்கு நன்கு புலனுகும். இதை மேலும் உறுதிப்படுத்தப்படுவது போல, பொருளாளர் பதவிக்குத் தலைவர் கயிதே மில்லத்தே தை. அ. செ. அப்துல் காதரின் பெயரை முன்மொழிய, அப்துல் வஹாப் ஜானி வழிமொழிய ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சி அமைந்தது.
(அன்று தை. அ. வின் பெயரைப் பொருளாளர் பதவிக்கு வழி மொழிந்த அதே ஜானிதான் 1968 இல் சென்னை மேலவை உறுப் பினர் பதவிக்குத் தை. அ ஷடன் போட்டியிட்டவர் என்பது குறிப் பிடத் தக்கது. இந்த வரலாறு பின்னர் விவரிக்கப்படும்.)
லீக்கினைப் பலப்படுத்துவதில் தை. அ. வின் பங்கு
1962-ஆம் ஆண்டில் இந்தியப் பொதுத் தேர்தல் வந்தது. இத்தேர்தலில் தொகுதி நிர்ணயம் சம்பந்தமாக எதிர்க் கட்சிகளுக் கிடையில் ஒர் உடன்பாடு தோன்றும் நிலை உருவாகியது. இறு தியில் தி மு. க வும் முஸ்லிம் லீக்கும் தொகுதி நிர்ணயம் சம் பந்தமாக ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. இதன் பிரகாரம் சட்ட சபைக்கு ஏழு தொகுதிகளிலும், லோக சபைக்கு ஒரு தொகுதி யிலும் லீக் அங்கத்தினர் போட்டியிட்டார்கள் தேர்தல் முடிவில் எண்மரும் தொல்வியடைந்தனர். அத்தேர்தலில் பலர் கட்டுப் பணத்தையே இழந்தனர். இன்று இராம நாதபுரம் மாவட்டக் கிளைத் தலைவராக இருக்கும் எம் எஸ். அப்துல் ரஹீம் அவர்கள் மட்டுமே இத்தேர்தலிலே கணிசமான வாக்குகளைப் பெற்றுக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணங்களை ஆராய லீக்கின் காரியக் கமிட்டி கூடிற்று. அப்பொழுது நிதித் தட்டுப் பாடும், போதிய பிரசாரமின்மையுமே தோல்விக்கான காரணங்கள் என்ற பொதுவான கருத்து நிலை நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து லீக்கிற்கு நிதி திரட்டும் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவிற்கு தை. அ. அமைப்பாளராக (கன்வீனராக) நியமிக்கப் பட்டார். இக் குழுவின் திறமையான உழைப்பின் அறுவடை

15
தொடர்ந்து லீக் அடைந்த தேர்தல் வெற்றிகளுக்குப் பெரிதும் உதவின என்பதை இன்று அப்பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட மறுக்க முடியாத ஒன்ருகும்.
1964-ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை கார்ப்பரேசன் தேர்தலில், கூட்டுத் தேர்தல் உடன் பாட்டின் பிரகாரம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. லீக்கின் ஐந்து வேட்பாளர் களும் வெற்றியீட்டினர். சென்னை கார்ப்பரேஷன் தேர்தலில் மடடு மின்றி, தமிழ் நாடு பூராகவும் நடைபெற்ற மாநகரசபைத் தேர் தல்களிலும் லீக் நேரடியாக ஈடுபட்டு சுமார் 150 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.
இவ்வுறுப்பினர் சகலரையும் பாராட்டும் விழா ஒன்று சென்னை யிலே கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையின் மிக நவீன ஹோட்டலான இம்பீரியல் ஹோட்டலின் ரீகல் கார் டனில் இவ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர் காயிதே மில்லத், முஹம்மது கோயா (கேரளா அரசின் கல்வி அமைச்சர்), சி. பா. ஆதித்தனர் (தற்பொழுது தமிழ் நாடு அரசின் அமைச்சர்), அன்பில் தர்மலிங்கம், முனு ஆதி போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொருளாளர் தை. அ. செ. அவர் கள் வெற்றி பெற்ற கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு தங்க மோதிரமும், விழாவிற்குச் சமுகமளித்த மாநகரசபை உறுப்பினர் சுமார் 100 பேர்களுக்கும் கதர் சால்வை யும் வழங்கிக் கெளரவித்தார்.
லீக்கின் வளர்க்சி கண்டு முதியவர்கள் மகிழ்ந்தார்கள் பலர் தை. அ. செ. வின் அயராத நல்ல உழைப்பைப் பாராட்டினர்கள் • அவருடைய நிதித் திறனல் சென்னையில் லீக்கின் பணிமனை நெடி துயர்ந்து அமைந்தது. இந் நிலையில் வீக்கின் மூன்றுவது மாநாட் டைக் கூட்டவேண்டும் என்ற அபிப்பிராயம் பரவலாகத் தொன் றியது.
1967-ல் பொதுத் தேர்தல் வந்தது. லீக்கின் நிலையை ஆராயும் முகமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐயம் பேட்டையில் லீக்கின் காரியக் கமிட்டி 1966-இன் பிற்பகுதியில் கூடியது. தேர் தல் நிதி திரட்டும் நோக்கத்துடன் மீண்டும் தை. அ. அவர்களை அமைப்பாளராகக் கொண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக் குழு வில் டாக்டர் ஹபிபுல்லா பேக், கே. பி. ஷெய்குத் தம்பி, ஜானிபாய், மியான் கான், ஆ. கா. அப்துஸ்ஸமது ஆகியோர் அங்கம் வகித்தனர், மேலும் இக் குழுவில் உறுப்பினர்களைச் சேர்த்

Page 9
16
துக் கொள்ளும் அதிகாரம் கன்வீனருக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் தோறும் நிதிக் குழுவினர் நேரிற் சென்று நிதி திரட்டி னர்கள். எதிர்பார்க்கப்பட்ட தொகையை விடக் கூடுதலான நிதி திரண்டது. நிதிக்குழு உறுப்பினர் ஆ. கா. அப்துஸ் ஸமது மட்டும் எந்த மாவட்டத்துக்கும் செல்லவு மில்லை; ஒரு பைசா தானும் தேர்தல் நிதிக்குத் திரட்டிக் கொடுக்கவுமில்லை என்பது ஓர் அந்தரங்க உண்மையாகும்.
தோழமைக் கட்சிகளுக்கிடையிற் போட்டி தவிர்ப்புப் பற்றிய பேச்சு எழுந்தது. லீக் சார்பில் தை. அ. செ அப்துல் காதர், டாக்டர் ஹபிபுல்லா பேக், சாரணபாஸ்கரன், ஆ. கா. அப்துஸ் ஸ மது ஆகியோர் தோழமைக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். லீக், சட்டசபைக்கு நாலு தொகுதிகளிலும், லோக சபைக்கு ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. இதில் மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும், ஒரு லோக சபைத் தொகுதியிலும் லீக் வெற்றி பெற்றது. லீக்கின் வெற்றி பல துறையினராலும் பாராட்டப்பட்டதுடன், தமிழ் நாட்டின் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகளுள் ஒன்ருக லீக்கும் உயர்ந்தது; மக்களால் மதிக்கப்பட்டது. இந் நிலைக்கு முஸ்லிம் லீக்கை தமிழ் நாட்டில் உயர்த்தி வைத்த பெருமை தை. அ. செ. அவர்களைச் சாரும். இதற்காக அவரை முஸ்லிம் லீக் செயற் குழு தீர்மானம் போட்டுப் பாராட்டியதுடன் தமிழ் நாடு அரசு லீக்குக்கு வழங்கிடும் முதல் கெளரவப் பதவிக்கு தை அ. செ வைச் சிபார்சு செய்வது என்றும் முடிவாகியது. செயற் குழுத் தீர்மானத்தின் படி 23 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் நாடு மீன்பிடித் துறை ஆலோசனைச் சபை உறுப்பினராக (பதவி சிறி யதாயினும்) தை , அ. செ. நியமிக்கப்பட்டார். இதுவே லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட முதலாவது அரசாங்கப் பதவி என்பது நினைவில் இருத்தத்தக்கது.
மேலவை உறுப்பினராவதற்கான போட்டி
மீண்டும் லீக்கின் மூன்ருவது மாநாடு பற்றிய பேச்சு எழுந்தது. 1968-இன் நடுப்பகுதியில் மாநாட்டை நடத்துவது என்று காரியக் கமிட்டி தீர்மானித்தது. இம் மாநாட்டுக் குழுவுக்கு ஆ. கா அப்துஸ் ஸ்மது தலைவராகவும் மாநாட்டு நிதிக்குழுவிற்கு தை. அ. அவர்களே தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள். இந்நிலையில் சென்னை மேலவை உறுப்பினர் பதவிகளும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவி களும் சில காலியாகின. தேர்தல் உடன்பாட்டின் படி தோழ மைக் கட்சிகளில் ஒன்றன முஸ்லிம் லீக்கிற்கு ஒரு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியும், ஒரு சென்னை மேலவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இஸ்மாயில் ஸாஹிபு, தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணு, இஷா அத்துல் இஸ்லாம் தலைவர் அப்துர் ரஹ்மான் சாஹிப், சுதந்திரக்கட்சிச் செயலாளர் எஸ். எஸ். மாரிசாமி, ‘மணி விளக்கு அப்துஸ் ஸ்மது, சென் ஆன கார்ப்பரேஷன் கமிஷனர், அமைச் சர் என். வி. நடராசன்,சென்னை மேயர் டாக்ட ஹபீபுல்லா பேக் ஆகியோர்
அமர்ந்திருக்கும் மேடையிலே தை. அ. சொற்பொழிவாற்றுகின்ருர்,
காங்கிர அமைச்சர் "ே 8 வெங்கடாசலம் அவர்களுக்கும், சென்ஜன சட்டசபையின் சபாநாயகர் செல்லப்பாண்டியன் அவர்களுக்கும் அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் தை. அ. செ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றர்.

Page 10
8
சென்னை மேலவை உறுப்பினர் பதவிக்கு தை. அ. செ. அப்துல் காதரைப் போட்டியிடும்படி பல அபிமானிகள் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க, அவ்வாறு செய்தல் தக்கது என்ற முடிவுக்கு வந் தார். இந்தச் செய்தியை அறிந்த தலைவர் அரசியல் சூதாட்டத் திலே முனைப்புக் கொள்ளத் தொடங்கினர். தை. அ. வை நேரில் அழைத்து, 'நீ போட்டியில் கலந்து கொள்ளாதே. நீயே ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி செய்வேன்’ என்று தமது இல்லத்தில் வைத்து உறுதியளித்தார். தலைவரின் பேச்சினை நம்பிய தை. அ. போட்டிக்குப் பலம் சேர்க்கும் காரியத்தைக் கைவிட்டு வாளாவிருந்தனர்.
இந்நிலையில் முஸ்லிம் லீக் செயற் குழு காலை 10 மணிக்குக் கூடி யது. 2 மணிவரை மேலவை உறுப்பினர் பற்றிய விடயந்தவிர்ந்த ஏனைய விடயங்களே பேசப்பட்டன. மதிய உணவுக்கான இடை வேளை தரப்பட்டது. தை ,அ.வின் வீடு கூட்டம் நடந்த இடத் திலிருந்து சுமார் 4 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கு சென்று சாப்பிட்டுத் திரும்புவதற்கு நேரம் ஆகலாம் என்ற விளக்கத்தின் பேரில், தை. அ. வை ஆ. கா. அப்துஸ் ஸமது மதிய உணவு அருந்தத் தமது இல்லத்திற்கே அழைத்தார். இந்த மதிய போஜன விருந்துகூட திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகளின் ஓர் அங்கமே என்ப தைப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபித்தன.
நிர்வாகக் குழு மீண்டும் மூன்று மணியளவிற் கூடியது. தலைவர் காயிதே மில்லத் தாம் மேலவை உறுப்பினராகச் சிபார்சு செய்வ தற்கான பெயரைப் பிரேரிக்கப் போவதாகக் கூறினர். தை. அ. வும் அவருடைய ஆதரவாளர்களும், தலைவர் தாம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் முகமாக தை. அ. வின் பெயரையே பிரேரிப்பார் என நிச்சயமாக எதிர்பார்த்தார்கள். ஆனல், அப்துல் வஹாப் ஜானியின் பெயரையே தலைவர் பிரேரித் தார். தமது இல்லத்தில் வைத்தே தலைவர் அளித்த வாக்குறுதி இவ்வாறு நாணயமற்ற முறையிலே காற்றில் வீசப்பட்டதைக் கண்ட தை. அ. வின் ஆதரவாளர்கள், வேறு வழியின்றி தை. அ. வின் பெயரைப் பிரேரித்தார்கள். நிர்வாகக் குழு இரு வருடைய மனுக்களையும் ஏற்று, வாக்களிப்பு நான்கு மணிக்கு நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.
*எனது வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டால் நானே தோற் கடிக்கப்பட்டேன் எனக் கருத இடம் உண்டு" என்று நடுவு நிலைமை வகிக்க வேண்டிய தலைவருக் குரிய சாதாரண பண் பினைத்தானும் மறந்து, கால்களைப் பிடித்துக் கெஞ்சாத குறை யாக, வாக்கு வேட்டையிலே காயிதே மில்லத் ஈடுபட்டார். அதன் பின்னர் வாக்குப் பதிவு நிகழ்ந்தது. தலைவரின் வேட்பாள

19
ரான ஜானிக்கு 18 வாக்குகள் பதிவாகியிருந்தன (இந்த 18 வாக் குகளில் தலைவரின் விசேட வாக்குக்கூடப் பதிவாகியிருந்தது என் பதும் குறிப்பிடத்தக்கது.) தை. அ. செய்யிது அப்துல் காதருக்கு 16 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஓர் அரசியற் கட்சியின் புனித வரலாற்றிலே தலைவர் தாம் கொடுத்த வாக்குறுதிக்கு மாமுக இப் படிப் பகிரங்கப் பிரயத்தனத்துடன் நடந்ததைக் கண்டு கொதிப்படைந்த அங்கத்தினர் பலர் உடனடியாக வெளிநடப்புச் செய்தார்கள்.
1961 ஆம் ஆண்டில் காட்டூரிலே, முஸ்லிம் லீக்கின் பலத்தினை அதிகரிக்கும் முகமாக எந்தத் தலைவரும், எந்த ஜானியும் தை. அ. வின் பெயரை லீக்கின் பொருளாளர் பதவிக்கு முறையே முன்மொழிந்து வழிமொழிந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படு வதற்கு வழி ச ைமத்தார்ளோ, அவர்களே ஏழு ஆண்டுகள் கழித் துத் தை. அ. வின் முதுகிலே குத்தும் கபட நாடகத்தை இவ்வாறு நடத்தி முடித்தார்கள்,
தடை உத்தரவு நாடகம்
தலைவர் என்ற பதவியில் அமர்ந்து கொண்டே காயிதே மில் லத் பக்கச் சாய்வாக நடந்து கொண்டமை அரசியல் இயக்கத்தின் சகல பாரம்பரியங்களுக்கும் முரணுன ஒன்ருகும். தலைவரின் பக்கச் சாய்வான போக்கினைக் கண்டிக்கும் முகமாக, தை. அ. தாம் லீக் கில் வகித்த பதவிகளையும், லீக் மூலமாகக் கிடைத்த பதவிகளையும் துறப்பதாக நிர்வாகக் குழுவுக்குக் கடிதம் எழுதினர். தை. அ. தமது ராஜினமாவைச் சமர்ப்பித்த போதிலும், லீக்கின் நிர்வாகக் குழு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் அவரை தாஜா பண்ணி அவர் முடிவினை மாற்றி விடலாம் என்ற ஓர் அபிப்பிராயம் நிலவியது.
அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் 3 ஆம் நாள்களிலே லீக்கின் நிர்வாகக் குழு சென்னையில் கூடியது. தை. அ. வுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. 2 ஆம் நாள் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குத் தை. அ. சென்றிருந்தார். அன்றைய கூட்டத்தில் தை. அ. வின் ராஜினமா பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
பல்வேறு காரணங்களினல் 3 ஆம் நாள் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தை. அ. செல்லவில்லை. அன்றைய தினமே தை அ. உட்பட ஏழு உறுப்பினர்மீதான தடை உத்தரவுத் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இம்முடிவு சம்பந்தப்பட்டவர்கள் சமூகமளிக்காத நிலையிலே எடுக்கப்பட்டது என்பது கவனத்திற் குரியது.

Page 11
20
நான்காம் நாள் பத்திரிகைகளில் செய்தி வெளியான பொழுது தான் சம்பந்தப்பட்டவர்கள் இப்படியொரு முடிவு எடுக்கப்பட் டிருப்பதை அறிந்தார்கள். செய்தி வெளியாகியதும் வீக்கின் சிபார் சினல் தாம் வகித்த தமிழ் நாடு மீன்பிடித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
தை. அ. வகித்த பதவி
நேரிய இன உணர்வு, சலியாத கடும் உழைப்பு, எடுத்த காரி யத்தைத் தொடுத்து முடிக்கும் திறன் இத்தனையும் தை. அ. வுக்கு நிறைவுடன் பொருந்தியுள்ளன. அத்துடன், நிதி விடயங்களில் பொதுமக்களின் மிக நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் திகழ்ந்தார்.
1959 ஆம் ஆண்டில் தை அ. முஸ்லிம் லீக் அரசியலிலே தம்மை அக்கறையாகப் பிணைத்துக் கொண்டார். 1968 ஆம் ஆண் டிலே யூனியன் முஸ்லிம் லீக்குடன் தமக்குள்ள பந்தத்தினைத் துண் டித்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இடைப்பட்ட சுமார் ஒரு தசாப்த காலம் தை. அ. செ. அப்துல் காதர் அவர்கள் பின் வரும் பதவிகளை வகித்துள்ளார்:
1 முஸ்லிம் லீக் கீழக்கரைச் செயலாளர்
முஸ்லிம் லீக் கீழக்கரைப் பொருளாளர் 3. தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக் பொருளாளர் 4. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகக் குழு உறுப்பினர் 5. தமிழ் நாடு முஸ்லிம் லீக் கட்டடக் குழுத் தலைவர் 6. தேர்தல் நிதிக் குழு அமைப்பாளர் 7. மாநாட்டு நிதிக் குழுத் தலைவர் 8. புலவர் ஆப்தீன் நிதிக்குழு உறுப்பினர் 9. அட்ஹாக் குழு உறுப்பினர் 0. தோழமைக் கட்சிகள் இணைப்புக் குழு உறுப்பினர் 11. தமிழ்நாடு மீன்பிடித்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் 12. கிறசென்ட் மருத்துவ மனைப் பொருளாளர்
'கமிட்டி இருந்தால் அதில் தை அ. இருப்பார். தை. அ. இல்லாவிட்டால் கமிட்டியே இருக்காது' என்ற ஒர் அபிப்பிராயம் அக்காலத்தில் நிலைத்தது. இன்று கிறிசென்ட் மருத்துவமனைத் துணைத் தலைவர் என்ற பதவியைத் தவிர்ந்த ஏனைய பதவிகள் அனைத்தை யும் துறந்து விட்டார்.

தமிழ் நாடு முஸ்லிம் லீக்கின் உதயம்
பிளவுபட்ட பின்னர் யூனியன் முஸ்லிம் லீக்கிலே மக்களுக்கு நம்பிக்கை குறையலாயிற்று. காரைக்கால்-புதுவைத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வீதம் அது தோல்வி கண்டது. பஞ்சாயத்துகளிலே யும் லீக்கின் செல்வாக்குச் சட சட வெனச் சரியத் தொடங்கியது. யூனியன் முஸ்லிம் லீக் அவ்வப்போது கடைப்பிடித்த நிதானமற்ற போக்கிற்குக் கண்டனம் எழும்பலாயிற்று. அத்துடன், தை அ செ அப்துல் காதர் உட்பட லீக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மணி யான தொண்டர்களுக்கு ஆதரவு கிராமங்கள் தோறும் பெருகலா யிற்று முஸ்லிம் மக்களுடைய பரந்த அளவிலான நலன்களைப் பேணும் முகமாக இந்த ஆதரவினை ஒரு முகப்படுத்தி ஓர் அணி யிலே திரட்டுதல் தவிர்க்க முடியாத சரித்திர நியதியாக அமைந் தது. இவ்வாறு தமிழ் காடு முஸ்லிம் லீக் என்ற தனித்த ஸ்தாபனம் தோன்றலாயிற்று.
தமிழ்நாடு முஸ்லிம் லீக்கின் முதலாவது மகாநாடு 1969 ஆம் ஆண்டில் சேலத்தில் கூடியது. அதன் பின்னர் கீழக்கரையிலே கூடியது. இவ்வாறு எல்லா மாவட்டங்களிலும் த. நா. மு. லீக்கின் கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டக் கூட்டம் யூனியன் லீக் தலைவர் இஸ்மாயில் சாஹிபு பிறந்த ஊரான பேட்டை
லே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு முஸ்லிம் லீக்கின் கன்வீனராக முஹம்மது சுல்தான் B.A. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் குழு உறுப்பினர்க ளாக, தை அ.செ. அப்துல் காதருடன் மற்றும் டாக்டர் ஹபிபுல்லா பேக், சேலம் அப்துல் பாஸித், திருச்சி ஏ. எம். யூசுப், கே. பி. செய்குத் தம்பி, எஸ். ஏ. ஹன்னுன் சாஹிபு, சாரணபாஸ்கரன் (டி.எம். அஹமது), 'டார்பிடோ' அப்துல் அளிஸ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிர்வாகக் குழுவின் செயலாக்கம் நிறைந்த நடவடிக் கைகளினல் தமிழ் நாடு முஸ்லிம் லீக் வேகமாக வளர்ந்து வருகின் றது என்ற உண்மையை அவதானிக்க முடிகின்றது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதற் கிடையிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலே கணிசமான் வெற்றியை ஈட்டியுள்ளது. முத்துப்பேட்டை, கீழக்கரை, இணுங் குளத்தூர் போன்ற உள்ளூராட்சி மன்றங்கள் பல த. நா. மு. லீக் கைக்கு வந்துவிட்டன. பேரூராட்சி மன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு லீக்கினைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி ருர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அனைத்து பாரத ரீதியிலே யூனியன் முஸ்லிம் லீக் செல்வாக்கிழந்து வருகின்றது.

Page 12
22
யூனியன் முஸ்லிம் லீக்குடன் எந்தத் தேர்தல் உடன்படிக் கைக்கும் வரமுடியாது என்று பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிராகரித்துள்ளார். பதவிப் பித்தர்களின் சூழ்ச்சியினல், பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்த தினுல் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
யூனியன் லீக், இந்திய அரசியல் வானிலே தன்னுடைய சகாக் களை மாற்றிய வேகத்தில், வேறு எந்த அரசியற் கட்சியும் மாற் றிக் கொள்ளவில்லை. சுருக்கமான முறையில், வீக்கின் தேர்தல் கூட்டணிக் குறுக்கு முகவெட்டை நோக்கினல் இந்த உண்மையைத் துலாம்பரமாகக் காணலாம். ஆரம்பத்தில் கேரளாவில் பிரஜா சோஸலிஸ்டுகளுடன் "கூட்டுச் சேர்ந்தது லீக் காங்கிரஸ் கட்சியை உதவாக்கரைக் கட்சி என்று ஏ சித் திரிந்த லீக் குடியாத்தம் தொகுதியில், காமராஜரை ஆதரிக்க முந்தி நின்றது. அப்பொழுது, 'திருக்குர்ஆன் பொருந்தாது என்று சொல்லும் தி. மு. க. வுக்கு ஆதரவு கொடுக்க முடி யாது’ என்று நியாயம் கற்பிக்கப்பட்டது. அதன் பின்னர் *காங்கிரஸார் முஸ்லிம்களுடைய உரிமைகளைத் தர மறுக்கிருர்கள்’ என்று ஒப்பாரி வைத்து தி.மு.க வுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். **கம்யூனிஸ்டுகளை நாஸ்தீகக் கட்சியினர்' என்று கேரளாவில் கங் கிரஸுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தார்கள் கம்யூனிஸ்ட் கூட் டணியில் கசப்புத் தோன்றவே, “கம்யூனிஸ்ட் கட்சி நாஸ்தீகக் கட்சி" என்ற பழைய பாட்டினைப் பாடி மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். காங்கிரஸ் மந்திரி சபையில் பதவி கிடைக்காமற் போகவே மார்க்ஸிஸ் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க முன் வந்தார்கள். இந்தக் கூட்டணியிலும் மனக்கசப்புத் தோன்றவே, மார்க்ஸிஸ்டுகளுடைய ஆட்சியைக் கவிழ்த்து, இந்திரா காங்கி ரஸுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இவ்வாறு சடுதி சடுதியாகப் பதவிப் பித்துக் காரணமாகத் தமது கட்சி சகாக்களை மாற்றிக் கொள்ளும் யூனியன் முஸ்லிம் லீக்குடன் ஏனைய கட்சிகள் கூட்டுச் சேர மோகம் காட்டாமல் இருத்தல் இயல்பானதாகும்.
இந்நிலையிலே, தமிழ் நாட்டில் வாழும் 40 லட்சம் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடைய நலன்களைப் பேணும் வகையிலே தமிழ்நாடு முஸ்லிம் லீக் செயலாற்ற வேண்டும் என்பதிலே தை. அ. செ. அப்துல் காதர் கட்டித்த அக்கறை கொண்டு, தமது அரசியல் பணியைத் தொடர்ந்து இயற்ற முன்வந்திருப்பது நற்சகுனமாகவே அமைந்துள்ளது. அவருடைய அரசியற்பணி மேலும் ஒளிமயமாக அமைதல் வேண்டுமென "இளம்பிறை LorrGOT FIGLDmts வாழ்த்துகின்றது!

வெளிநாட்டுப் பயணங்களும்
அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் வெளிநாட்டுப் பய ணங்களை மேற்கொண்டு இஸ்லாமிய சமூகப் பணியிலே மேலும் நீளக்கத்துடன் ஈடுபடுவதற்கான தமது அநுபவங்களை அகலித்துக் Qasrr6ötl miri. y
1953 ஆம் ஆண்டில் இஸ்லாமிய சமூக வளர்ச்சி கருதி மலாயா நாட்டுப் பயணத்தினை மேற்கொண்டார். (அக் காலத்தில் மலே சியா, சிங்கப்பூர் ஆகிய இருநாடுகள் தோற்றுவிக்கப்படவில்லை.) மலாயா நாட்டிலுள்ள கிராமங்களுக்கும் சென்று இஸ்லாமிய உணர்வினைத் தட்டி எழுப்பினர். இவருடைய இஸ்லாமிய உணர் síðarš 356ốoTG , LDGvint Lumr y 6ňvaớlub Friši jsib (MALAYA MUSLIM ASSOCIATION) இவருக்குத் தக்க வரவேற்பு உபசாரம் அளித்துக் களரவித்தது. மலாயா மக்களின் அன்பினல் கட்டுண்ட தை. அ. அவர்கள் 1961 ஆம் ஆண்டிலும் அந்நாட்டிற்கு விஜயம் செய்தார். அப்பொழுது பிரபல எழுத்தாளர் ஆர். பி. எம். கனி அவர்களுடன் சேர்த்து தை. அ. வுக்கும் ஒரு பொதுவரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் கிழக்கு - தூரகிழக்கு மக்களுடைய கலை - கலாசாரப் பண்பாடுகளை நேரிலே கண்டறியும் விருப்பம் பிடர் பிடித்து உந் தவே, அங்கிருந்து தாய்லாந்து, ஹொங்கொங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் சென்றர். ஜப்பான் நாடு தொழிற் துறையிலும், கலைத் துறையிலும், அடைந்து வரும் முன்னேற்றங்களை நுணுக்க மான முறையில் நேரிற் கண்டறியும் வாய்ப்பு இதனல் தை. அ. அக்குச் சித்தித்தது. இதனலும், அவருக்கு உள்ளூர்க் கலைகளின் அபிவிருத்தியிலே ஈடுபாடு அதிகரிக்கலாயிற்று.
1965 ஆம் ஆண்டில் மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற் நாக மக்கா சென்ருர். அங்கு ஹஜ்ஜினை உரிய முறைப்படி நிறை வேற்றியதும், மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய சமூகப் பணி ராவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிய அவாவினர். இதன் காரணமாக லெபனன், சிரியா, பாலஸ்தீனம் ஜெரூஸலம் இங்கு தான் மஜ்திதுல் அக்ஸா புனித பள்ளி வாயல் அமைந் துள்ளது.) ஆகிய நாடுகளுக்குச் சென்று, கிராமங்களிலே கூடத் தங்கியிருந்து இஸ்லாமிய வாழ்க்கை முறையின் ஆன்மாவை ஓரளவு தரிசித்தார்.
-தொடர்ச்சி 65 ம் பக்கம்

Page 13
t
லப்பான் நாட்டிலே தை. அ. அவர்கள் தங்கியிருக்க பொழுது? அந்நாட்டின் சுதேசியக் கலைகளைப் பற்றி நுணுக்கமாக அறிய
ஆல் காட்டினர். இங்கே, தை. அ. ஜப்பானிய கலேஞர்கள் gia Z
-ன் காணப்படுகின்ருர், an
1959 ஆம் ஆண்டில், இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்களுக்கு நொரிஸ் வீதியிலுள்ள பெளத்த மண்டல மண்டபத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் தை அ அவர்கள் மலர் மாஃப் சூட்டி வரவேற்கின்ருச்.
rap
>
 
 
 
 
 

அரசு வெளியீடு
231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, இலங்கை
தோணி - சிறுகதைகள் იმში). ლეხ.: 2/00 வாழையடி வாழை - சரிதம் விலை, ரூ. 200 பகவத்கீதை வெண்பா ! - იმში): ლნ. 3/50 இளமைப் பருவத்திலே! - சிறுவர் நூல் விலை. ரூ. 1/25 மரபு - உருவகக் கதைகள் 6მში). გენ. 2/50 ஈழத்து இலக்கிய வளர்ச்சி - வரலாற்று நூல் விலை. ரூ. 3/00 அண்ணல் கவிதைகள் விலை. ரூ. 2/25 பரியாரி பரமர் - பேணுச் சித்திரம் விலை. ரூ. 1/90 இலக்கிய உலகம் - கவிதை விலை. ரூ; 1/40 காப்பியச் சொற்பொழிவுகள் விலை. ரூ. 3/50 புதுயுகம் பிறக்கிறது - சிறுகதைகள் விலை. ரூ. 2/75 மஹாகவியின் குறும்பா 6)მში). ტენ. 1/85 ரசிகர் குழு போட்டிக் கதைகள் விலை. ரூ. 1/30 வீ - சிறுகதைகள் விலை, ரூ. 4/40 கபிமொழி காற்பது - கவிதை விலை. ரூ. 1/50 முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம் விலை, ரூ. 3/00 இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் விலை. ரூ. 6/00 ஞானப் பள்ளு விலை, ரூ. 4/00 தீபன் - உருவகக் கதைகள் იმბს. ლტ. 2|50 ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு விலை. ரூ. 5/50 மாணுக்கரின் காந்தி விலை, ரூ. 1/50 காந்தி தரிசனம் விலை, ரூ. 2/50 காந்தி பாமாலை 6მში). ლენ. 3/00 காந்தீயக் கதைகள் 6)მში). ღწ. 3/00 காந்தி போதனை விலை. ரூ. 3/75 மத்து - கட்டுரைக் கோவை விலை. ரூ. 6/00 அவாந்தி கதைகள் விலை. ரூ. 2/00 எஸ். பொ. அறிக்கை விலை ரூ. 3/50
鷲盤靈疆
4

Page 14
அன்ப,
உயர்ந்த நெறிகளை நிலைநிறுத்தும் உன்னத களத்திலே மதங் கள் தோன்றின. வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கி, மனித குலத் தைக் கடைத்தேறச் செய்தல் புனித பணியன்ருே? இப்புனித பணியை இயற்றுவதற்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித் தவர்கள் மகான்களன்ருே? காலத்திற்குக் காலம் மகான்கள் தோன்றி மனித குலத்தின் உய்வுக்கும் உயர்வுக்கும்ாக வாழ்ந்திருக் கிருர்கள் இவர்களைச் சாதனங்களாகப் பற்றிப் பரம்பிய மதங்கள் சாற்றும் உண் ைமகள் வெளிப் பார்வைக்கு ஒன்றுடன் ஒன்று முரண் பட்டவையாகத் தோன்றிய போதிலும், மாரு த - சகலவற்றிற்கும் ག . சக ல மு மான :് "t ஏகத்துவமான
క్వేక్త్వ  ைம க ஸ் 然漆 இவற்றிற்கிடை f ༦་ யில் ஊடுபாவாக
ஒரங்க நாடகம் , இழைந்து மிளிர்
வதைத் தரிசிக் எம். ஏ. ரஹ்மான் கலாம். மலை
களிலே உற்பத்தி نها யாகும் ஆறுகள் பல திசைகளிலும் பாய்ந்தோடுகின்றன. ஈற்றிலே பெயர்களால் வேறுபட்டாலும் சர்வ நீர்ப்பரப்பான சமுத்திரத்திலே சங்கமிக் கின்றன. ஏக இறைவனன சமுத்திரத்துடன் சங்கமிக்க உதவும் பல்வேறு ஆறுகளே பல்வேறு மதங்களும் எனப் பெரியோர் இந்த உண்மையை உவமித்துக் கூறுவர்.
enre w
இந்து மதம் மிகவுந் தொன்மையானது அதன் தத்துவத் திரட்சியே பகவத் கீதை எனலாம். அதன் சாரமாக அமைதல் வேண்டுமென்ற பேராசையுடன் "கானம்' என்ற ஓரங்க நாடகத் தினை எழுதினேன். அஃது இளம்பிறையின் சென்ற பூவிலே பிர சுரமாகி, இந்து சமய அபிமானிகள் மத்தியிலே நல்ல வரவேற் பினைப் பெற்றது. மேற்கு நாகரிகத்துடன் இரண்டறக் கலந்துள்ள கிறிஸ்தவ மதத்தை இயேசுநாதர் போதித்தார். அவர்தம் சீடர் களிஞல் அஃது உலகம் முழுவதும் பரம்பியது. கிறிஸ்துநாதரின் மரணத்தினை மையமாக வைத்து "ஞானம்' என்ற ஓரங்க நாட கத்தினை எழுதினேன். 25-3-70 இல் அது விசேட நிகழ்ச்சியாக வானெ வியில் ஒலிபரப்பப்பட்டதுடன் இளம்பிறை ஏப்ரல் மாதப் பூவில் பிரசுரமாயிற்று. சித்தபரிசுத்தத்தின் மூலம் அரஹத் நிலை யடைந்து நித்திய நிப்பாண சுகம் சுகிக்கும் பெளத்தம் புத்த பக வான் காட்டிய வழியாகும். நான் மதங்களை வைத்து எழுதும் ஓரங்க நாடகத் தொடரில் "தானம்' என்னும் பெளத்தம் சார்ந்த நாடகத்தினை இந்தப் பூவின் மூலம் தமிழ்ச் சுவைஞர்களுக்குத் தரு வதில் உளம் மிக மகிழ்கின்றேன்.
 
 
 

-sensees ^*: "M**r...***-MK:x4hs.ws--.** .
u ாத்தி ரங்கள் !
பிக்கு
வணிகன்
8 கல்யாணி
ஊர்மிளா
GLDGION Lulu SDN LDůL:
நகரசோபினி கல்யாணியினுடைய வீட்டின் அலங்காரமான ஒர் அறை, மேடையின் பின்னணியில், கானுநருக்கு இடப்பக்கமாக பகவான் புத்தரின் பெரிய சிலையொன்று அமைந்திருக்கின்றது. நாடக நிகழ்விலே புத்தரின் போதனைகள் அசரீரிக் கூற்ருக ஒலிக் கும் பொழுது, அந்தச் சிலேயின் முகத்தில் மட்டும் ஒளி விழக் தக்கதாக ஒளி அமைப்புக்கள் இடம் பெறல் வேண்டும்.
காணுநருக்கு வலப்புறமாக வாசல் ஒன்று அமைந்துள்ளது. அது வெளிவாசல், மேடைக்கு நடுவில், சற்றே வலப்புறமாக உள்ளே யுள்ள அறைக்கான வாசல் தென்படுகின்றது. அந்த வாசல் வேலைப்பாடுகள்மைந்த திரைச்சேலேயால் மறைந்தும் மறையாம லும் காணப்படுகின்றது. மறைக்காமலிருக்கும் பகுதியினூடாக உள் அறை சப்பிரமஞ்சத்துடன் கூடிய சயன அறை என்பதைக் காணுநர் மனத்தில் நிலை நிறுத்துதல் வேண்டும்.
திரைச் சேலைக்கு இரண்டு அடிகள் இப்பால் பெரிய நிலைக் கண்ணுடி ஒன்று காணப்படுகின்றது. மேடையில் மூன்று ஆசனங் களில் சாய்வதற்கேற்ற திண்டுகள் உள.
(மெல்லிய இசை, பின்னணியிலே ஒலிக்கத் திரை விலகுகின் றது. நகரசோபினி அள்ளிச் சொருகிய கூந்தலுடன், வெள்ளைக் கலை உடுத்தி, பகவான் அஞ்சலியில் ஈடுபட்டிருக்கின் ருள். பின் னணியில் பகவானைப் பற்றிய பாளிமொழித் துதிப் பாடல் இசைக்கப்படுகின்றது.
அது முடிவடைய.

Page 15
28
கல்யாணி (தற்கூற்ருக) முடமான இளமறியைத் தோளில் ஏந்தி, சகல உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும்படி போதித்த போதி மாதவனே! அன்பின் அறவழி போதித்த அண்ணலே! நீங்கள் கற்பித்து நிலை நிறுத்திய சீல வழி நடக்கும் அந்தப் பிக்குவான வர், என் வேண்டுதலின் பிரகாரம், இன்ருவது என் இல்லம் வந்து தானம் ஏற்றுக் கொள்வாரா? முன்பு ஒரு சமயம் - நீங் கள் பரிநிப்பான அடைவதற்கு முன்னர் - நீங்களே நகரசோபினி ஒருத்தியின் இல்லத்திற்குச் சென்று, அவளிட்ட தானத்தைத் தங்களுடைய பிட்சா பாத்திரத்தில் ஏற்று, பிறப்பால் உயர்ந் தோர் - தாழ்ந்தோர் இலர் என்ற போதனையைச் சாதனை யாகப் பயின்றீர்கள். உங்கள் முன் மாதிரியை ஏற்று (சிந்தனை வேறு திசைகளிலே திரும்ப உள் வாசலின் பக்கமாகத் திரும்பி) ஊர்மிளா ஊர்மிளா! ዶ
ஊர்மிளா: (உள்ளே இருந்து குரல் கொடுத்தல்) வந்தேன் அம்மா. (உள்வாசல் வழியாக ஊர்மிளா மேடையிலே தோன்றல்) அழைத் தீர்களா அம்மா?
கல்: அழைத்தேன் ஊர்மிளா என் மனத்திலே அமைதியில்லை. குருவளியின் வசப்பட்ட துரும்பாக என் சித்தம் தத்தளிக்கின் றது . என் இல்லத்திலே தானம் ஏற்க வேண்டு மென்று புனித ராம் பிக்குவை அழைத்தாயல்லவா? ס
ஊர் அழைத்தேன். நேற்றுடன் மூன்ருவது தடவையாக
விஹாரஞ் சென்று ஞாபகமூட்டினேன்.
கல்: என்ன சொன்னர்? அழைப்பினை ஏற்ருரா?
ஊர்: மறுக்கவில்லை; முறுவலித்தார். “பெண்ணே உன் எஜமானி
யிடம் கூறு" என வருமாறு புகன் ருர் தானம் ஏற்க நிச்சயம் வருவேன். இன்றே, நாளையோ என்று வேளையைக் குறித்துச் சொல்ல முடியாது. அதற்கான வேளை வரும் நானும் வருவேன். அது அதற்கு அந்தந்த வேளை.
கல்: அது அதற்கு அந்தந்த வேளை (பெருமூச்செறிந்த வண் ணம்) அந்த அரிய வேளை எப்பொழுதுதான் வரப்போகின்றதோ?. பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்த புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கின்றது? பகவானே! எனக்குக் கடைத் தேறும் பாக்கியம் கிட்டாதா? (உள் வாசல் ஊடாகக் கல்யாணி மேடையிலிருந்து மறைதல்.)
ஊர்: (எஜமானி அம்மாள் சென்று விட்டாள் என்பதை ஊர் ஜிதப்படுத்திக் கொண்டு, சபையோரை நோக்கி, தற்கூற்ருக)

29
ானத்திற்காக உடலின்பம் நல்குவதில் என்ன இன்பம் இருக்கி றது? இப்படிக் கேட்டுச் சலிப்புக் கொள்ளுகின்ருள் என் எஜ மானியம் மாள் பரத்தமைத் தொழிலைக் குலநெறியாகப் பயிலும் அவள்தான் இப்படிக் கேட்கின்ருள்! எனக்கு மட்டும் அவளுக் கிருக்கிற வனப்பும் வாளிப்பும், வீங்கு கட்டும் பொங்கு கவர்ச்சி யும், தளுக்கும் மினுக்கும் இருக்குமேயானுல்.நாடிவரும் ஆட வரையெல்லாம் வேல் விழியால் வீழ்த்தி, மயக்கு மொழியால் மஞ்சத்திலே புரட்டி, குருத்துடலின் பட்டுத் தழுவலிலே அடி பணிய வைத்து, அவர்களை விடுதலை செய்வதற்குத் திறையாகச் சொத்துக்கள் முழுவதையும் சூறையாடும் பண்பே அவளுடை யது! ஒரு வகையிற் பார்த்தால், நகர சோபினிகளும் க்ஷத்திரிய வாழ்க்கையைத் தான் மேற்கொண்டிருக்கிருர்கள். கூடித்திரிய வீரன் எதிரியைச் செருக்களத்திலே சந்திக்கின்றன்; பொருதுகின்றன்; வெற்றி கொள்ளுகின்றன். அந்த வெற்றியே அவனுடைய இன்ப மாகவும் அமைந்து விடுகின்றது. நகரசோபினிகளுடைய செருக் களம், உறுத்தாத மென்பஞ்சு மஞ்சளங்கள்! அதிலே ஆணின் ஆண்மையைச் சாய்த்து வெற்றி கொள்ளுகின்றர்கள்! அந்த வெற்றி கசக்கவா செய்கின்றது? .
கல்யாணியின் குரல்: (பின்னணியில்) பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக் கின்றது?
ஊர்: இப்படிக் கேட்கிருள் அவள் என் எஜமானி! தான் பெறும் இன்பத்திற்குப் பரியப் பணமும் பெற்றுச் சுகிப்பதினல், இன்பம் இரட்டிப்பாகின்றது இடையிலே, பற்றுக்கள் இற்ற துறவியைப் போன்று வார்த்தைகளை வீணே வீசுகின்ருள். இதுவும் ஒருவகை அகம்பாவமே. எங்கே சம்பத்துக்கள் குவிந்து கிடக்கின்றதோ, அங்கே அகம்பாவமும் மண்டிக் கிடக்கின்றது இளமை குலையாத எழில் பிழியும் கட்டுடல் என்ருல் கொஞ்சமோ சம்பத்து!
(கதவு தட்டப்படும் ஒசை வலப்புற வாசற் பக்கமாகக் கேட்கின்
றது.) இன்பந் தேடி யாரோ வந்திருக்கிறர்கள் போலிருக்கிறது. வீடு நாடித் திரண்டு வரும் இந்த இன்பம் கசக்கின்றது எனக்கூறி என் எஜமானியம்மாள் துரத்தி விடுகிருளா பார்ப்போம்!
கல்யாணியின் குரல் (எதிரொலிப்பதைப் போன்று கேட்கின்றது) பணத்திற்காக உடல் இன்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க் கையில் என்ன இன்பம் இருக்கின்றது?
ஊர்: வீடு தேடி ஓடி வருகின்றது இன்பம்! இது கூடக் கசக்கப்
போகின்றதா?

Page 16
3C)
ஒர் அறிவித்தல்
ம்றுவதற்கு என்ற மாாயில் - 1 ܐܬܪ̈ܝܐ ܒܢTL_I1, ܠܵܐ
'-T ---- - r, - பூக்களின் பி:
"s
। -
கோர ਸੰਘ ਨੇ
அரங்கேர்ப்படா
எம். ஏ. ரஹ்மான்
LLLL0LL0LL0LLLLSL0L0L00L0L00SL0LLLLLLYL0SL0S00SL000LASLLALLLLSLLLSLLLLLLAAYYLLLLSLSLLLLLAALLLLLLLL0SLLLSLLLL0SL0LYYLLL
(வலப்புற வாசல் வழியாக ஊர்மிளா செல்லல், மேடையிலே ஒளி குறுகி, உள் வாசல் வழியாக மேடைக்கு மீண்டும் வரும் கல்யாணியின் உருவத்தின் மீது மட்டும் விழுகின்றது. சிகை யலங்காரமும், சேலேயலங்காரமும் பாறியிருப்பது காணுநரு டைய மனத்திலே சட்டெனப் பதிய வேண்டும். ஆடையலங் காரத்தில் கவர்ச்சியும், ஓரளவு அம்மனப் பாங்கும் பின்னி யிருக்கலாம்.)
கல் (தற்கூற்று) யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டதே. யாராக இருக்கலாம்?. யார்? கடன் கேட்கவா கதவைத் தட்டு வார்கள்? எனக்கு எப்பிறப்பிலோ செலுத்த வேண்டிய சுடனே இப்பிறவியில் இறுக்கத்தானே இங்கு வந்து சேருகிருர்கள். கடனே வசூலிப்பதே தொல்ஃபயாகிவிட்டது. (புறக்கூற்ருக) நளர் மிளா டி ஊர்மிளா (தற்சுற்ருக, வலப்புற வாசஃல நோக்கி நகர்ந்து) கன்னங்கரிய தன் மேனியழகில் மயங்க மாட்டார் களா என்று யாரைப் பார்த்தாலும் பல்லிளித்துப் பேசுவதே அவள் வாழ்க்கையாகி விட்டது. (புறக்கூற்ருக) ம. ஊர் மிளா யாருடன் அங்கே பேசிக் கொண்டிருக்கிருய்?
(வலப்புற வாசல் ஊடாக, ஊர்மிளா அவசரம் அவசரமாக மேடைக்கு வரல்) ஊர்: அழைத்தீர்களா அம்மா?
கல்: முள் முருங்க மரம் போல வந்து நின்று அழைத்தேனு என்று கேட்கின்ருள். (ஒளி மேடை மீது சகஜ நிலேயடைதல்) எத்தனே தடவை அழைத்தேன் டீ இவ்வளவு நேரமும் அங்கே நின்று யாருடன் சரளமாடினுப்?
ஊர் சரளமாடுவதா? யாருடன் அம்மா நான் சரளமாடுவேன்;
கல் சரளமாடுவதற்கு ஒரு தடியனுவது கிடைக்கமாட்டானு என்று பறக்கின்ருய்.பென்னென்ருல் கொஞ்சம் அடக்கமுந் தேவை.
ஊர் அச்சம்-மடம்-நானம்-பயிர்ப்பு ஆகிய குனங்கள் நாய்கட்கு வேண்டுமாம் எனத் துணிந்து, அவற்றைத் துறந்த படியாற்ருன்
 
 
 

31
இந்த உல்லாச மாளிகையும், ஒய்யார வாழ்க்கையும், சிங்காரச் சிறப்பும் கிடைத்திருக்கின்றது.
கல்: வர வர உனக்கு நாக்கு நீண்டுவிட்டது வாசலிலே யார்? ஊர் உஜ்ஜேனியிலிருந்து இங்கு வாடிக்கையாக வரும் தன வணிகன்.
கல் உஜ்ஜேனியிலிருந்து வரும் தன வணிகளு? அவனுே பெருஞ் செல்வந்தன். இவ்வளவு நேரமும் அவனே வாசலிலே காத்திருக்க LSG) ist, Frr Infrs, F "ಸ್ಧಿ நடந்து கொள்வதற்கு நீ இன் ன மும் சுற்றுக் கொள்ளவில் ேேய.அவன் அறிவுள்ளவனுக இருந் தாலும், அவசரக்காரன்.என்மீது மெத்தவும் பித்தங் கொண்டு நத்தி வந்தாலும், :ெே சத்தான இன்பம் சித்திக்க வைக்கும் உத்தி தெரிந்த இளமையும் அழகின் இறுக் கமும் கொண்ட எத்தனையோ நகாசோபினிகள் இங்கே வாழ்க் கின்ருர்கள் என்பதையும்ஆன் அறிந்து வைத்திருக்கின்றன்.
TIL AT -.2163) iridi, A.Taiferli Ali, தாமதிக்காது அ 4க்கு
ܢܐܙܠ
navuramatičar குரல் (σήφθη தைப் போன்று கேட்கின்றது) பணத்திற்காக உடல் இன்பம் ம் இந்தப் புல்விய வாழ்க் கையில் என்ன இன்பம் இருக்கின்றது?
ஊர் (வலப்புற வாசல் ETAAN
சற்று முன்னர்தான் இi து? பேசினுள்.ஆனுல், இப்பொழு வந்துவிடும். இன்பம்மாந்தில் வா என்று அவசர கம் மேடையிலிருந்து செல்லுல்'
கொண்டு, தற்கூற்றுக) திமர நிழலின் வேதாந்தம் ட அடி நொந்தால் நட்டம் இட்டமுடன் அழைத்து பிறப்பிக்கின்ருள். (ஊர்மிளா
*「鳶 கல் (தற் சுற்ருக) என்: வாடகைக்கு விட்டு வாழும் இந்த வாழ்க்கையை நான் முற்ருத வெறுக்கின்றேன். காம சுகத் திலே ப்ேரின்பச் சுவை இருப்பதாக நடித்து நடித்து சலிப்பு வந்துற்றது. என் மஞ்சத்தில்ே தவழ்ந்து, என் பாதங்களேயே முத்தமிட்டு, சுயத்தை இழந்த கிறுக்கிலே என் அழகினேப் புகழ்ந்து கொண்டே இன்பசுகம் மாந்துகின்றர்கள். என் உடல் தழுவித் தமது உடலின் தசைவெறியைத் தீர்த்துக் கொண் டவர்கள் கூட, என்னே வீதியிலே கண்டதும் முகத்தைச் சுழித்துக் கேவலாகப் பேசுகிருர்கள். இந்தப் போலி மனிதரும் போளி வாழ்க்கையும். (பெருமூச்செறிதல்) ம். என் உடலே விரும்பி ஒருவன் வாச பிலே நிற்கும் பொழுது யாக்கை நிலேயான" பற்றி
-* ܫ ܝ*
நினேப்பது தவறு. என குல தர்மம் இது. மலர் இப்படி இருந்தால் எடுப்பாக இருக்கும்.

Page 17
32
(வணிகன் வெளிப்புறமிருந்து கல்யாணியின் வீட்டுக்குள் நுழை வதாகக் காணுநருக்குத் தோன்றுகின்றன் .1
வணிகன்: (வந்து கொண்டே) கயல் விழியே! மயல் தேனே! கொஞ்சு கிளியே! என்றென்றைக்கும் இளமையாக இருப்பதற்கு ஏதாவது காயகற்பம் சாப்பிட்டு வருகின்ரு யா? கால ஓட்டத்திலே மூப்பு வந்து சேருகின்றது என்பது' உலகத்தோர் அநுபவம். ஆனல், நீ? காலத்தை எதிர்த்து எதிர் நீச்சலடிக்கும் பாங்கிலே என்றுமே உடையாத வாலை இளமையைப் பிழிந்து காட்டு
கல்: உஜ்ஜேனியிலுள்ள உல்லாசி ஒருத்தியுடன் பேசவேண்டிய
வசனங்களை இடம் மறந்து இங்கே ஒப்புவிக்கின்றீர்களா?
வணி: (கோபித்தவனக) உஜ்ஜேனியையும், வணிகத்தையும் மறந்து
இன்பம் அநுபவிக்கலாமென்று இங்கு வந்தால்.
கல்: மூக்கின்மீது தான் உங்கள் கோபம் வாசஞ் செய்தாலும், அது முனிந்து கணியும் பொழுது உங்கள் முகத்திலே தனி அழகு படர்வதை அவதானித்திருக்கிறீர்களா? காத்து நின்று கால் கடுத்ததால் இந்தக் கோபமா?. அமருங்கள். (வணிகன் ஆசனத்தில் அமருகின்றன். இவ்வளவு நேரமும் வணிகனின் அழகை விழுங்கிவிடுபவளைப் போல பார்த்து நிற்கும் ஊர் மிளாவை வெறுப்புடன் நோக்கி) ஊர்மிளா இல்லாத புதுமை எதனைக் கண்டு அப்படி மலைத்து நிற்கின்முய்? (ஊர்மிளா உள்ளே போகத் திரும்புகின்ருள்) ஆ, நம்மிடமிருக்கும் மதுவகையுள் சிறந்ததை எடுத்து வாடீ! (ஊர்மிளா செல்லல்) அங்கவஸ் திரத்தை இப்படி வையுங்கள். உங்கள் பரந்த மார்பிலே சிலிர்த்து நிற்கும் ரோமம்.(சிங்கார நகைசிந்தி) நேற்று ஆழ்ந்த தூக்கத் திலே இனிய கனவொன்று கண்டேன். -
வணி: இனிய கனவா? நீ கண்டால் அஃது இனிமையானதாகத் தான் இருக்க வேண்டும். பொற்சிலையே, எனக்கு அதைச் சொல் ?זחu_j ח{(6
கல்: சொல்வேன்! (கனவு காண்பவள் போல அபிநயித்து) பல நாள்கள் கழித்து, வசந்தருது வந்து சேருகின்றது. நான் அதன் எழில் பருகி மெய்ம்மறந்து நிற்கின்றேன். என் பின்னல் யாரோ வந்து நின்று ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து என் கண்களைக் குருடாக்குகின்ருர். அந்தக நிலை நீங்கிப் பார்த்தபொழுது என் கழுத்திலே முத்து மாலை ஜொலிக்கிறது. பக்கத்தில் நிற்பவர் சிரித் தவாறே என்னத் தழுவுகின்ருர். இப்படி ஒரு கனவு கண்டால் இனிக்காதா என்ன?

33
வணி: அது சரி, கனவிலே கண்ட அந்த ஆடவன் யாரோ?
கல்: உங்களைத்தவிர வேறு எந்த ஆண் மகனை நான் கனவிலே கண்டிருப்பேன்? அந்தக் கனவை நிசமாக்குவது போல நீங்கள் என் எதிரில் வந்து நிற்கின்றீர்கள், (தோழி மது கலசத்துடன் மேடைக்கு வரல்) மதுக் கலசத்தையும், கிண்ணத்தையும் இதிலே வைத்துச் செல். (அவ்வாறே செய்து, ஊர்மிளா திரும்புகின்ருள்.) இனி உள்ளே உனக்கென்ன வேலை? (வலப்புற வாசலைக் காட்டி) வெளியே சென்று தோட்டத்தில் இரு. யார் வந்து கேட்டாலும், நான் வெளியூர் ஆலயம் ஒன்றுக்கு நடனமாடச் சென்று விட்ட தாகவும், நாளைக்குத்தான் திரும்புவேன் என்னும் ஒரே பதிலைக் கூறித் திருப்பி அனுப்பிவிடு.
ஊர்: யார் வந்து கேட்டாலுமா அம்மா?
கல்; உன் போக்கே மாறி வருகிறது. உனக்குப் புரியாதா மண்டு?
ஊர்: புரிகிறது. (ஊர்மிளா வலப்பக்க வாசலுக்கு நடந்து கொண்டே, (தற் கூற்ருக) நன்முகப் புரிகின்றது. புனிதராம் புத்தரின் சிலையின் கீழ் மதுவின் மயக்கமும், மங்கையின் சுவை யும் ஊட்டும் உன் போக்குப் புரியாதா? (செல்லல்)
வணி கல்யாணி! நீ நகரசோபினியாக இருந்தாலுங்கூட மிகவும்
இனிபள்! மன மறிந்து இன்ப சுரக்கவல்ல சுந்தராங்கி.
கல்: (கிண்ணத்தில் மது ஊற்றி) நீண்ட பயணம் சற்றே களைப் புடன் காணப்படுகின்றீர்கள். இந்த மதுவை அருந்தி, சோர்வு நீக்குங்கள்.
வணி: (மதுவை அருந்தி) நனி சுவை தரும் மது! ஆனலும், உன் தேன் இதழ் நிகர்த்த F6ð) 6.16ð) L} இப்பூவுலகில் வேருெரு பொருளும் தரமாட்டாது.முத்துமாலை ஒன்று கொண்டு வரலா மென்றுதான் நினைத்தேன். இந்த மரகதமணியின் மாந்தளிர் கழுத்திற்கு மரகத மாலைதான் எடுப்பாக இருக்குமென என் எண் ணத்தை மாற்றினேன். (மரகத மாலையைக் கொடுத்து) இந்தா.
கல்: ஊஹ"ம்.நீங்கள் கையால் அணிந்து விடுவதற்குத்தானும்
பாக்கியமற்றவளா?
(வணிகன் அதனை அணிந்து, கல்யாணியின் இடையைத் தழு வுகின்றன். அந்தப்பிடியிலிருந்து தன்னை லாவகமாக விடுவித்துக் கொள்ளும் அவள், நிலைக்கண்ணுடி முன்பாக நின்று பார்த்து
இ-5

Page 18
34
கல்: உண்மையில் இந்த மாலை என் கழுத்துக்கு என்று சொல்லிச் செய்தது போல அவ்வளவு அழகாக இருக்கின்றது. என்னிட முள்ள எதனைப் பார்க்கிலும், இதனைப் பெருநிதியமாக நான் பாதுகாப்பேன்.
வணி: இவ்வளவு நேரமும் நின்று கொண்டே பேசுகின்ருய். உன் பாரிஜாதப் பாதகங்கள் நோகாதா? மஞ்சத்திலே நீ சரிந்து படுத்திருக்கும் ஒயிலே வாழ் நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
கல்: என் ராஜாவுக்கு அவசரம் வந்துவிட்டது. சரி, வாருங்கள்
மஞ்சத்திற்குச் செல்வோம்.
(இருவரும் உள் அறைக்கு நுழையும் சமயம்.)
பிக்கு (பின்னணியில், தூரத்திலிருந்து அணித்தாக வருவதாகக்
குரல் இசைக்கப்படல் வேண்டும்.)
புத்தங் சரணங் கச்சாமி சங்கம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
கல்: (நின்ற இடத்தில், தன்னையும் மறந்தவளாக) இனிமையும் கம்பீரமும் சொட்டும் குரல். நிச்சயமாக அவருடைய குரலே தான்.
வணி: பிட்சாபாத்திரம் ஏந்தித் திரியும் யாரோ ஒரு பிக்குவின் குரல் (ஏளனமாக) அவர்கள்கூட உன்னைப் போன்ற ஒருத்தியை ஆதரித்துப் போஷிக்கின்றர்களா? அப்படியானுல் அவர்களுடைய உதடுகள் எவ்வாறு புத்தரின் புனித நாமத்தைக் கூசாமல் உச் சரிக்கின்றன? *
கல்: அபசாரம். இந்த பிக்கு தாமரையிலை நீராக இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் புனிதர்-புண்ணியர். என் தானத்தை ஏற்று அருளும்படி எத்தனையோ தடவைகள் வேண்டினேன். வேளே வரும்போது வந்து ஏற்றுக் கொள்வதாக வாக்குத் தந் திருந்தார். அவர் நியமித்த வேளை வந்து விட்டது போலத் தோன்றுகின்றது. m
வணி: வேளையாம், வேளை மனம் ஒன்றி, கலவி பயின்று களிப்பு மாந்த இருவரும் படுக்கையறைக்குள் செல்லுஞ் சமயந்தான் அந்தப் பிச்சாண்டிக்கு வீேளை வந்ததா?

35
கல்: அப்படியும் இருக்கலாம்.
வணி: நான் பரியந் தந்தேன். நீயும் ஏற்றுக் கொண்டாய். உன்
உடல் இன்று என் சொத்தாகியது.
கல்: என் உடல் இன்றைய தினம் உங்களுடையதுதான்! நான் மறுக்கவில்லை. ஆணுல், எந்த விலை மாதரும் தன் உடலுடன் சேர்த்துத் தன் ஆன்மாவையும் விற்பது கிடையாது.
வணி நீ ஆன்மாவைப் பற்றிப் பேசுகின்ருய்! புத்த பகவான்
சித்த பரிசுத்தத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிருர்,
கல்: அப்படியானுல், நான் உங்களிடம் என் சித்தத்தை அடைவு
வைக்கவில்லையென்று வைத்துக் கொள்ளலாம்.
ஊர்மிளா: (வலப்புற வாசல் வழியாக மேடையிலே அவசரமாகத்
தோன்றி) அம்மா!
கல்: என்ன?
ஊர்: பிக்கு வந்துள்ளார்.
கல்: நீ என்ன செய்தாய்?
ஊர்: நீங்கள் சொன்ன பிரகாரமே நீங்கள் வெளியூர் சென்றிருப்
பதாகக் கூறினேன்.
கல்: ஏண்டீ, அவரிடம் பொய் கூறினய்?
ஊர்: நீங்கள் எஜமானி. நீங்கள் சொன்ன பாடத்தைத்தானே
"நான் ஒப்புவித்தேன்?
கல்: அவர் போய் விட்டாரா?
ஊர்: இல்லை; சாமி வலுத்த கட்டையைப் போலத் தெரிகின்றது! நான் சொல்வது பொய்யென்பதைப் புரிந்து கொண்டு என்ன சொன்னர் தெரியுமா?
கல்: என்ன சொன்னர்?
ஊர்: “பெண்ணே! ஏன் இப்படிக் கூசாது பொய் கூறுகின்ருய்? உன் எஜமானி உள்ளே இருப்பதும், அவளுடன் உஜ்ஜேனியிலிருந்து

Page 19
36
வந்துள்ள வணிகன் இருப்பதும் எனக்குத்தெரியும் தானம் ஏற்க இப்பொழுதுதான் எனக்கு வேளை வந்தது. இதனை அவளிடம் அறிவித்து வா’ என்று கூறினர்.
கல்: ஊர்மிளா ஒடிப்போய்.வேண்டாம், நானே அழைத்து வரு கின்றேன். நான் செய்த அபசாரத்திற்கு நானே மன்னிப்புப் பெற வேண்டும். (அவள் வலப்புற வாயிலாகச் செல்லல் )
வணி: (தற் கூற்ருக) செய்வதோ உடல் வணிகம் பணம் கொடுத் தவர்களுக்கெல்லாம் உடலைக் கொடுப்பது அவளுடைய குலதர்மம். இவற்றை மறந்து யாக்கை நிலையாமை பற்றிப் பேசும் பிக்கு களுக்குப் பின்னல் இவள் இப்படிப் பைத்தியம் கொண்டு அலைகின்ருளே!
ஊர்: அப்படிப்பட்ட பைத்தியங்களைத்தானே நீங்களும் தேடி பைத்தியங் கொண்டலைகிறீர்ாள்?.என்னைப் போன்ற ஒரு குல மகள் காலடியில் வீழ்ந்து கிடந்தாலும் துச்சமாக மதிக்கின்றீர்கள்.
வணி: ஊர்மிளா ஒன்றை அறிந்து கொள்ளக் கடவாய். பசித்
தாலும் புலி புல்லைத் தின்பதில்லை.
அலூர் மாமிசத்தைத்தான் தின்னும் என் மேனி மட்டும் மாமிச
மில்லையா?
வணி: பெண்கள் எல்லோருமே மாமிச கோளங்களினலான உரு வங்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றேன். வைரத்தின் மதிப்பு எப்போதும் நிலக்கரிக்கு ஏற்படுவது கிடையாது. நிலக்கரி அடுப் பிலே எரிக்கத்தான் உதவுகின்றது.
\ ஊர்: நிலக்கரி கறுப்பாக இருக்கலாம். அடுப்பிலே எரியலாம். ஆனல் பிறருக்குச் சக்தியூட்டுவதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் உயர்ந்த தியாகத்தின் உந்நத சத்தியத் திருட்டாந்த மாக அது திகழ்கின்றது.
வணி சாமர்த்தியமாகப் பேசுகின்ருய். கொவ்வை வாய்ப் பாவை யரின் தத்தை மொழிதான் தித்திக்கிறது. தத்துவங்களை ஞானி யர் வாய் மூலங் கேட்கும் பொழுதுதான் தெளிவு பிறக்கின்றது உன் எண்ணம் புரிகிறது. ஆனல், கோல மயிலின் ஆட்டங் களிக்க வந்தவனுக்கு.
ஊர்: உஸ் ஏஜமானி. அம்மாள்.
(மேடையில் நகரசோபினியும், பிக்குவும் வலப்புற வாசல் வழியாகத் தோன்றல்)

37
கல்: வாருங்கள் சாதுக்களே! இந்த வீட்டின் கதவுகள் எப்பொழு தும் தங்களுக்காக அகலத் திறந்திருக்கும். உங்களுக்கு எது வேளையோர், அதுவே எனக்கும் வேளை இவ்வாசனத்தில் அமருங் 95GT...
வணி: ஸாதுக்களே! உங்களுக்கு மட்டுமல்ல கை நிறைய பரியப் பனங் கொண்டு வரும் யாவருக்கும் கதவுகளையும், மனங்களை யும், ஏன் எதையும் அகலத்திறந்து வைக்க வேண்டியது நகர சோபினிகளின் குல ஆசாரமாகும்.
பிக்கு நகர சோபினியே! என் வருகை புரை தீர்ந்த நன்மை
பயத்தல் வேண்டும். இன்னுெரு சமயம் வருகின்றேன்.
கல்: சினந் தவிர்த்த அண்ணலின் வழிவந்த மேலவரே! தங்கள் வருகையால் யாருக்கும் துன்பமில்லை. இடக்காகப் பேசும் இவர் உஜ்ஜேனியிலிருந்து வந்திருக்கிறர்.
பிக்கு அறிவேன்.
456) ஆயகலைகள் அனைத்தும் கற்றவர் என் நண்பர்
வணி: வணக்கம், ஸாதுக்களே! இதில் அமருங்கள்.
பிக்கு: வணிகனே, வணக்கம். (கல்யாணி பக்கம் திரும்பி) உன் நண்பர் வந்திருக்கும் நோக்கமும், நான் வந்ததின் நோக்கமும் வெவ்வேருனவை. ஆனல், இருவரும் ஒரே வேளையைத்தான் தேர்ந் தெடுத்திருக்கிருேம், அது தான்.
கல்; புனிதரே! யாருக்கும் எதுவித சங்கடமும் இல்லை. இதிலே
அமருங்கள்.
(பகவான் புத்தர் சிலைக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஆசனத்தில் அமருகின்றர்.) - 2 *
வணி: ஸாதுக்களே! நீங்கள் கோபித்துக் கொள்னமாட்டீர்கள்
என்ருல் ஒன்று கேட்கப் பிரியப்படுகின்றேன்.
பிக்கு: நீ கேட்பாயென்று தெரியும். நானே சினந் தவிர்த்தோன்.
தாராளமாகக் கேட்கலாம். a
கல்: ஊர்மிளா! பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வாய் பார்த்துக் கொண்டிருக்காதே என்று எத்தனை தடவைகள்
சொல்லியிருக்கின்றேன். உள்ளே போ (ஊர்மிளா செல்லல்)
வணி: இந்தப் பணிப்பெண்கள் இப்படித்தான். உன் வீட்டு இர

Page 20
38
கசியங்களை நாலு பேர் மத்தியில் கந்தப் பார்ப்பதுதான் இவர் களுக்கு இன்பமான பொழுது போக்கு.
பிக்கு: சிரங்கைச் சொறிவதின் மூலம் இன்பம் அனுபவிப்பவர்களும் இருக்கிருர்கள். இன்பம் என்பது மனத்தின் மயக்கமே. அதைப் பலரும் பல வழிகளிலே நுகர முந்துகின்றர்கள். பார். இதோ மதுக் கலசத்தைக் காண்கின்றேன். இயற்கையாகக் கிடைப்பது கணி. அதிலே சுவையுமிருக்கிறது. மனிதன் தனது யுக்தியினல் அதனை மதுவாக வடித்து, மதுவைக் குடிப்பதிலேதான் இன்பம் இருக்கிறது என ஏமாற்றிக் கொள்ளுகின்ருன் நிற்க, உனது வின என்ன?
வணி: நீங்கள் புனிதர்; புண்ணியர், பற்றுக்கள் எல்லாவற்றையும் கடந்தவர். கையிலுள்ள பிட்சாப் பாத்திரமும், மேனியை மறைக் கும் சீவர ஆடையுமே சொத்துக்கள் என அலையுந் துல்லியர். அத்தகைய தாங்கள் தானங் கேட்டு இந்தப் பொது மகளின் வீட்டிற்கு வரலாமா? தானம் தேவையென்று கூறினுற் போதும், ஆயிரம் உயர் குலத்தோர் உங்கள் விஹாரத்திற்கே அனுப்பி வைப்ாார்கள்.இந்த வேசியின் வீட்டிற்கு வருவது கேவலமாகத் தெரியவில்லையா?
பிக்கு சநாதன தர்மப்படி நீ உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசு
கின்ருய். கேவலம் என்று கூறுகின்ருய். எது கேவலம்?
வணி: பெண்ணசை துறந்த நீங்கள் பெண் இன்பத்தை அங் காடிப் பொருளாக்கிவிட்ட இந்த வீட்டுக்கு வருவது தான் கேவலம் என்றேன்.
பிக்கு: நீ உன்னை உயர் குலத்தவன் என்று பெருமையாகப் பேசிக் கொள்ளுகின்ருய். அப்படியிருந்தும், இங்கு வருவது உனக்குக் கேவலமாகத் தோன்றவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிருயா?
வணி: ஒப்புக்கொள்ளுகின்றேன்! நான் வந்திருப்பதின் நோக்கம்
வேறு.
பிக்கு: நோக்கம் எதுவாக இருந்தாலும், உனக்குக் கெளரவமாகத் தோன்றும் ஒரு செயல் ஏன் எனக்கு மட்டும் கேவலமாகத் தோன்ற வேண்டும்?
வணி: சாதுக்களே! உங்கள் தளம் வேறு; என் தளம் வேறு; இவள் தளம் வேறு. ஒவ்வொரு தளத்தில் உள்ளவர்களுக்கும் ஒவ்வொரு தர்மம் நெறியாக அமைகின்றது. ஒரு தளத்தில் உள்

39
ளவனுக்குத் தர்மமாக அமையும் நெறி, பிறிதொரு தளத் தானுக்கு ஏற்ற நெறியாக அமைவதில்லை.
பிக்கு தளமும், தர்மமும்!
வணி: ஆம்; நீங்கள் உயர்ந்த சில நெறி போதிப்பவர்கள் உங்கள் தளம் மிக மிக உயர்வானது. இவள் கேவலம் பரத்தை இவள் தளம்.
கல்: (சினம் கொண்டவளாக) கேவலம் பரத்தையா? இந்தப் பரத்தையைத் தேடித்தானே உஜ்ஜேனியிலிருந்து வந்திருக்கின்
நீர்கள்?
வணி: கல்யாணி கோபந் தவிர். நான் உன் ஒருத்தியைப் பற்றித் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசுவதாகப் பிழைபடக் கருதத்தேவையில்லை. உன் குலத்தின் தர்மத்தைப் பற்றித்தான் இங்கு பேச்சு எழுந்திருக்கிறது. நான் வைசியன். என்குல ஆசா ரத்தின்படி உன்னிடம் இன்பம் நுகர்வது தர்மமானது. நீ எதனையும் எனக்கு பிட்சாபாத்திரத்தில் இட்டுத் தரவில்லை. நீ கேட்கும் பரியப் பணத்தை நான் தந்துவிடுகிறேன். இன்னெரு வழியில் பார்க்கப் போனல், வேசிக் குலத்தை உருவாக்கியதே, குல மகளிரின் கற்பு நெறியைக் காப்பாற்றுவதற்காகத்தான். குல மகளிர் சோரம்போனல் ஜாதிக் கலப்பு ஏற்படும். ஜாதி முறைமைகளும், ஆசாரங்களும் தர்ம முறைப்படி நடப்பதினலே தான் உலகம் உய்கின்றது என்று பரமாத்வே பகவத் கீதையிலே போதித்திருக்கிருர்,
கல்: “கீதா போதகம், ஆகமத்திலே சொல்லப்பட்டிருக்கிறது, உபநிஷங்கள் இவற்றை வலியுறுத்துகின்றன’ என்று கூறி மக் களுள் ஒருசாராறை பிறிதொரு சாரார் என்றென்றும் அடிமை களாக வைத்திருக்கும் சஞதந தர்மத்தை நான் வெறுக்கிறேன். அவற்றினுல் வருங்காலத்தில் உலகம் உய்யப் போவதுங் கிடை யாது. (மேடையில் இருள்சூழ புத்த பகவானின் சிலை மீது மட்டும் ஒளி படிகின்றது.) எதிர்காலம் போதி மாதவர் போதித்த அன்பு நெறியிலேதான் உய்யப் போகின்றது. (ஒளி மேடையில் மண்டும் மெதுவாகப் பரவல்) ஒரு யானை அளவு பொன்னுடன் ஒர் இளவரசனே என் வாசலில் வந்து நின்றலும், அவனை உள்ளே அனுமதிப்பதும் அனுமதிக்காது விடுவதும் என் சுயேச்சை ஆணுல், பிட்சா பாத்திரதாரியான இந்தச் சாதுக்கள் வருவதும் போவதும் அவர் சுயேச்சை அவர் சுயேச்சையே என் பாக்கியம்.
மிக்கு: நீங்கள் இருவரும் வேறு விதமான பேச்சுக்களிலே சுவை பருக வேண்டிய வேளையில் இவ்வாறு வாது செய்து மோதிக்

Page 21
4.
கொள்வது அழகாக இல்லை. நகர தானத்தைக் கொண்டு வா!
கல்: என் பாக்கியம், ஸாதுக்களே! இதோ கொண்டு வருகின்
றேன். (உள்ளே செல்லல்)
பிக்கு: வணிகனே! நீ கல்வி கேள்விகளிலே சிறந்து விளக்குகின் ருய் கேவலம் பற்றிய விவகாரத்திற்கு மீண்டும் வருவோம். பிச்சை எடுப்பது கேவலமாகத் தோன்றலாம்; ஆனல், பிச்சை எடுத்து வாழ்வதையே நாங்கள் வாழ்க்கை முறைமையாக ஒழுகுகின்ருேம். இதனையும் அறிந்துகொள். கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் ஒரேயளவு மன நிறைவினை ஏற்படுத்துவதுதான் உண்மையான தானம். அந்த நிறைவு இங்கு சம்பவிக்கலாமென உணர்ந்துதான் இங்கு வந்துள்ளேன். இதிலே எங்கே கேவலம் புகுந்தது?
வணி: நான்கு வர்ணத்தாருள் இவள் கடைக்குலத்தவள்!
பிக்கு அப்படியாயின், இந்தக் கடைக் குலத்தவளிடம் உடலின்பம்
நுகர்வது மட்டும் ஈனமாகத் தோன்றவில்லையா?
வணி: அதுதான் சொன்னேன்! நான் வணிகன். வியாபாரம் என் குல தர்மம். இங்கு நான் வந்திருப்பதுவும் வியாபார நோக்க மாகத்தான். நான் பணம் கொடுக்கின்றேன். அவள் உடல் தரு கின்ருள். என் போன்றவர்கள் இக்குலத்தாருடன் வியாபாரஞ் செய்ய முற்படுவதினலேதான், இவர்களுடைய குலத்தவர்கள் வாழ்கிருர்கள்.
பிக்கு: வணிகனே! நீ சொல்லும் கோட்பாடுகள் காலாவதியாகி விட்டன. அவற்றைத் தகர்த்தெறிந்து மானிட குலம் கடைத் தேறுவதற்குத்தான் புத்த பகவான் அவதரித்தார்.
(ஒளி புத்தர் சீலைமீதும் பிக்குவின் மீதும் மாறி மாறி விழுகின் றன. ஈற்றில் ஒளி புத்தர்சீலைமீது மட்டும் நிலைத்து நிற்கும் பொழுது அசரீரியின் வார்த்தைகள் ஒலிக்கின்றன.
அசரீரி: தொழிலினக் கொண்டு ஜாதிகளை வகுக்கும் வர்ணசிரம முறைகள் வேருடன் கல்லியெறியப்படல் வேண்டுமென நம்புவன் நான். பழைய வைதீக முறைமைகள் என்பதற்காக, கிளிப் பிள்ளை களைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்வதினல் நாம் சித்த பரிசுத்தம் அடையமுடியாது. பழையன கழிகின்றன; புதியன பிறக்கின்றன.

41
(ஒளி பரவி பிக்குவின் மீதும், வணிகன் மீதும் படிகின்றது)
பிக்கு நீ இப்பிறவியில் வணிகளுக இருக்கின்ருய். முற் பிறப்பில் என்னவாக விருந்தாய்? அடுத்த பிறப்பில் என்னவாய் பிறப் பாய்? சொல்ல முடியுமா? யோசித்துப்பார். இந்த நகர சோபினி ஏன் பரத்தையானள்? மனம் ஒப்பியா? அன்றேல் குல ஆசாரம் என்ற வரன் முறையினலா? உன்னுடைய வார்த்தைகளினல் சொல்வதானல், அவளுடைய உடல் அழுக்குகள் படிந்ததாக இருக்கலாம். ஆணுல், அவளுடைய உள்ளம் சக்கரவாகப் புள்ளன் மினத் தூய்ம்ையானதாக இருக்கின்றதே! ததாதகர் இதனையும் தெளிவாகப் போதித்திருக்கின்றர்.
(ஒளி சடுதியில் மறைந்து புத்தருடைய சிலையின் முகத்தின் மீது மட்டும் நிலைத்து நிற்கின்றது.1
அசரீரி: ஒருவன் பிராமணனுகப் பிறப்பதுமில்லை; சண்டாளனகப் பிறப்பதுமில்லை. ஒவ்வொருவனுடைய செயல்களே ஒவ்வொரு வனையும் பிராமணனுகவும், சண்டாளஞகவும் ஆக்குகின்றன.
(ஒளி மேடையில் பரவல்]
வணி: நடைமுறையிலிருக்கும் தர்மங்களை உடைத்தெறியப் புறப் பட்ட புரட்சியாளர் என்ற வகையில் புத்தரைப் பொற்றுகின்றீரா? அல்லது, உலகினை இரட்சிக்க வந்த புண்ணியர் என்ற எண்ணத் தில் புத்தரை மதிக்கின்றீரா?
பிக்கு புரட்சியாளர், இரட்சகர் போன்ற அடைமொழிகள் போதிமாதவருக்கு - துன்பந் துறந்த அந்தத் துல்லியருக்குப் பொருந்தாது.
(ஒளி சடுதியில் மறைந்து, புத்தருடைய சிலையின் முகத்தின் மீது மட்டும் நிலைத்து நிற்கின்றது.1
அசரீரி: நம்மைப் பற்றி அறிந்து கொள்ளவும், பிறவிச் சக்கரத் திலிருந்து கடைத்தேறவும் சித்த பரிசுத்தம் தேவையென்று நம் புவன் நான். ஒவ்வொருவனுடைய சித்தமே அவனவனுடைய இரட்சகர்.
(ஒளி வணிகனின் முகத்திலும் இலேசாக விழுகின்றது)
வணி; சித்தத்தின் இயக்கத்தினை எவ்வாறு அறிந்து கொள்ளுதல்
சாலும்?
இ-6

Page 22
42
அசரீட்: சித்தத்தின் இயக்கத்தினை நிறம்-சுவை-மணம்-ஒலி-தழுவல்
என்ற புலனறிந்த வழிகளால் அறிய முடியாது
(ஒளி மேடையிலே பரவல். கல்யாணி தட்டு நிறைய மலர் களையும் கனிவர்க்கங்களையும் கொண்டு வந்து, ஸ்ாதுக்களைப் பவ்வியமாக வணங்கி.]
கல்: தானத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் ‘ாதுக்களே. பிக்கு மகிழ்ந்தோம்; ஏற்ருேம். ஏற்பதிலும் மகிழ்ச்சியே.
வணி: மலர்களை உங்கள் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்து கிருர்கள். மலரின் அழகிலே உங்களுக்குள்ள பிரீதியினலேதான் அவ்வாறு செய்கின் ருர்கள் எனக் கூறுதல் பொருந்துமா?
பிக்கு ஒவ்வொருவனும் தன் மனப் பக்குவத்திற் கேற்பச் சிந்திக் கின்றன். நகர சோபினியே! உனக்கு மலர் எதை நினைவூட்டு கின்றது?
கல்: எனக்கா? அது எனக்குத் தியாகத்தின் மகத்துவத்தை நினை வூட்டும். பிறருடைய இன்பத்திற்காக மலர் தன்னையே அழித்துக் கொள்ளுகின்றது.
பிக்கு: பார்த்தாயா வணிகனே! நீ வியாபாரம் என்கின்ருய். இவளுடைய மனேபக்குவம் பிறருடைய இன்பத்திற்காகத் தன் னேயே அழித்துக் கொள்ளும் மலரைப் போன்றது. பகவான் புத்தர் உயிருடன் இருந்த பொழுது மலர்களை விருப்புடன் காணிக்கைப் பொருளாக ஏற்ருர்,
(ஒளி சுருங்கி, புத்தருடைய சிலை மீது மட்டும் படிகின்றது)
அசரீரி மலர்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன. எந்த அந் தஸ்தில் உள்ளவனுலும், மனக்குறை எதுவுமின்றி அவற்றைத்
தர முடியும். அத்துடன், அநித்திய வாழ்வின் தத்துவத்தை மலர் கள் செப்பமாக விளக்குகின்றன,
(ஒளி மேடையிற் பரவல்) பிக்கு: வணிகனே! மலர் உனக்கு எதை நினைவூட்டும்? வணி: கலவி இன்பத்தை! ஆணும், பெண்ணும் மனங் கலந்து இல்
லற இன் பத்திலே தோய்ந்து ஒரு குழந்தையைச் சிருஷ்டிக்கும் சுவையை! நீங்கள் துறவற நெறியென்று இயற்கையின் உணர்ச்

43
சிகளை மறுதலிக்கின்றீர்கள். அதனை இயற்கைக்கு முரணுன ஆணவ வழி என நான் கருதுகின்றேன்.
பிக்கு: கலவி இன்பமும், இயற்கை வழியும் கலவியின் மூலம் ஒரு ஜீவன் தோன்றலாம். அந்தப் பிறப்புக்கூட பிரக்ஞை பூர்வமாக நடைபெறுவதில்லை. ஜீவ உற்பத்தி என்ற ஒரேயொரு நோக்கத் திற்காகத்தான் கலவி நெறி பயிலப்படுகிறதா? உன்னையே சுய விசாரணை செய்துபார். ஜீவ சிருஷ்டி நோக்கத்துடன நீ இந்த நகரசோபினியை நாடி வந்திருக்கின்ருய்? கலவியென்பது மாமிச இச்சைகளைத் தீர்க்கும் பிறழ்வு வழி. அவ்வளவு தான். புதிய ஜீவனின் வளர்ச்சிக்கு இன்றிமையாத சித்தத்தினைக் கலவிக் கலை யாற் படைத்தல் சாலாது. எதற்கு ஆரம்பம் உண்டோ, அதற்கு அழிவும் உண்டு. சித்தத்தினை எந்த மனிதனலும் படைக்க முடி யாது. எனவே, அதுவே நித்தியமானது. சித்தத்தின் நித்தியத்து வத்தை அறிதல் ஆணவமா? அலோப-அதுவேச-அமோக ஆகிய நற்குணங்கள் சித்த பரிசுத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவனுக்கே சித்திக்கின்றது.
கல்: முக்தரே! உடலிச்சையை நாடுவோர் இன்ப ஊற்று இங்கு தான் பொங்கி வழிகின்றது என்று கூறிக் கொள்கின்றர்கள். அஃது அநுபவத்திற்கு முரணுனதா?
ஒளி புத்தரின் சிலை மீது மட்டும் திடீரெனக் குவிய
அசரீரி: உடலுக்கு வயதுண்டு. அது மூப்பு- பிணி-சாக்காடு என்ப வற்ருல் துன்பப்படுகின்றது. எனவேதான், உடல் சார்ந்து எழும் உணர்ச்சிகள் புல்லியமானவை.
(ஒளி சகஜநிலை அடைகின்றது.1
பிக்கு உடல் என்பது என்ன? கேசம்-ரோமம்-நகம்-தந்தம்-தோல் உதிரம்-மாம்ஸம்-என்பு- நரம்பு - குழலட்டை - எச்சில் - பித்தம்சிலேற்பனம் - சலம் - மலம் என வரும் முப்பத்திரண்டு அழுக் குப் பொருள்களால் ஆனது. இந்த நிலையற்ற யாக்கையின் இச் சைகளினல், சம்சார சக்கரமென்ற பிறவிப் பெருங் கடலில் அழுந்திப் பெருந்துயர் அனுபவிக்க நேரிடுகின்றது.
கல்: (மேடையிலே ஒளி சிறுத்து, இருள் பரவ) இந்தப் பிறவிப் பெருங்கடல் என்ற பெருந்துயரிலிருந்து கடைத்தேறப் போதி
மாதவன் போதித்த மார்க்கம் என்ன?
(ஒலி புத்தர் சிலை மீது மட்டும் நிலைத்து நிற்கின்றது)

Page 23
44
அசரீரி: துக்க - சமுதய நிரோத - மார்க்க ஆகிய சதுராதிய சத் தியங்கள். இவ்வுலகம் துக்கமயமானது. அதனற்ருன் துக்க நிலை ஏற்படுகின்றது. துன்பத்திற்குக் காரணம் இச்சைகளே என்பதை உணர்தல் சமுதய. இந்த இச்சைகளை அழித்தோ - விரோ தித்தோ - விலகி நிற்கும் நிலையே நிரோத, இச்சைகளை அழிப் பதற்கான வழிகளை அறிதல் மார்க்கம்.
கல்: அந்த மார்க்கங்கள் எவை?
அசரீரி: அவை ஆரிய அஷ்டாங்க மார்க்கம் எனப்படும். நற் காட்சி - நல்லூற்றம் - நல்வாய்மை - நற் செய்கை - நல் வாழ்க்கைநல்லூக்கம் - நற்கடை பிடி - நல்லமைதி ஆகிய எட்டுமாம். இந்த எட்டினையும் ஒழுகித் தியானத்திலே நல்லமைதி பெற்ருல் சித் தத்தை உணரலாம்.
(ஒளி மேடையில் பரவுதல்
வணி: (தன் நிலை மறந்தவனக) சித்த பரிசுத்தம் கிட்டினல் ?
பிக்கு: அரஹத் நிலை எய்தி நிப்பாண மடைகின்ருேம். அதுவே நித்தியப் பேரானந்தம், தானத்தை ஏற்ருகி விட்டது. நான் வருகின்றேன்.
வணி: ஸாதுக்களே! நானும் உங்கள்கூட வருகின்றேன். அனுமதி
தாருங்கள்.
பிக்கு: என் கூடவா? எங்கே?
வணி: தாங்கள் வதியும் விஹாரத்திற்கு!
பிக்கு: ஏன்?
வணி அமைதி தேடி இங்கே நகர சோபினியிடம் வந்தேன். அந்த நல்லமைதியை பகவான் புத்தர் வழி நடந்து, விஹாரத் திலே பெற முடியுமென்று நம்புகின்றேன்.
பிக்கு: இந்த நம்பிக்கையில் நீ சரியான மார்க்கத்தில் எடுத்து வைத்த முதலாவது காலடி என்று எனக்கும் தோன்றுகிறது.
(மேடை ஒளி மிக மெதுவாகக் கரைந்து கொண்டு வர.
கல்: ஸாதுக்களே! நானும் விஹாரத்திற்கே வர விரும்புகின்றேன்.
பிக்கு: நகர சோபினியே! அதற்கான வேளைவரும். அப்பொழுது

ஜூலை பூ-தொடர்ச்சி
நாவலர் எழுந்தார்
ou auff பெருமான் கற்கவேண்டியவற்றைக் கற்று நிற்கவேண்آ5f டிய நிலைக்கு எழுந்தார். எழுந்து :
பொருட்டுத் துறக்க வேண்டியவற்றை முதலிற் துறந்தார். 1848 ம் ஆண்டு புரட்டாதி மாதம் பேர்சிவல் ஐயரின்/ சேவை யினைத் துறந்தார். முதுசொம் முதலியவற்றைத் துறந்தார். வேறு உத்தியோகம் தேடியலைவதைத் துறந்தார். வீடு விளைநிலம் தோட் டந்துரவு நகைநட்டு வாங்கிச் சீதனத்தையே நம்பிவாழும் வாழ்க்
சங்கத்தின் பிரதிநிதி வருவார்.
கல்: இவருக்கு மட்டும்.
பிக்கு உஜ்ஜேனி வணிகனுக்கு வேளை வந்தது; அந்த வேளை உன் இல்லத்திலே தான் சங்கமிக்கும் என்பதும் எனக்குத் தெரியும். அதனுலேதான் வந்தேன்.
(ஒளி புத்தர் சிலையின் தலை மீது மட்டும் விழுகின்றது திரை இலேசாக விழத் தொடங்க.)
பிக்கு புத்தங் சரணங் கச்சாமி
பலகுரல்கள்: புத்தங் சரணங் கச்சாமி
பிக்கு சங்கம் சரணங் கச்சாமி
பலகுரல்கள்: சங்கம் சரணங் கச்சாமி
பிக்கு தம்மம் சரணங் கச்சாமி
பலகுரல்கள் தம்மம் சரணங் கச்சாமி
(திரை)

Page 24
46
கையாகிய இல்லறத்தைத் துறந்தார். உலக வாழ்க்கைப் பேறி னைத் துறந்ததும் நிற்கவேண்டிய நிலையில் எழுந்து நின் ருர்,
சைவசமயத்திற்கு இடையூறு புரிந்துவந்த வெசிலியன் பாதிரி மாருக்கு எதிராக முதலில் எழுந்தார். சமய அறிவற்ற பாமர மக்களை நேசபாசங் காட்டிச் சமய மாற்றஞ் செய்பவர்களுக்கு எதி ராக எழுந்தார். தங்கள் போதனை மூலம் மதமாற்றஞ் செய்கின் ருர்களே யென்று கொதித்தெழுந்தார். கோயில்களிலும் மன்றங் களிலும் நின்று பிரசங்கஞ்செய்து, சைவ நன்மக்களுக்கு மதமாற் றஞ் செய்யும் உபாயத்தை அஃதாவது புற சமயத்தினர் கையாளும் உத்தியை மேற்கொள்ளத் தொடங்கிக் கோயிலிற் பிரசங்கிக்க முதலில் எழுந்து நின்றர். சரித்திரப்பிரசித்தி வாய்ந்த வைத்தி யலிங்கச் செட்டியார் கட்டி எழுப்பிய வைத்தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்திலே 1847 ம் ஆண்டு மார்கழி மாதம் 31 ந் தேதிச் சுவாதி நட்சத்திரச் சுபவேளையிலே தமது முதற் பிரசங்கத் தினைச் செய்ய எழுந்து நின்ருர், ஏறுபோற் பீடுநடைபோட்டு எழுந்து நின்ருர், சொன்மாரி பொழிந்து நின்றர்.வெள்ளிக்கிழமை தோறும் சொன்மாரி பொழிந்தது. நாவலருக்கு நல்ல காவலராகத் தோன்ருத் துணைவராக அவரது சகபாடியாகிய நல்லூர் வெங் கடேச ஐயர் மகன் கார்த்திகேய ஐயரும் நாவலரோடு சேர்ந்து பிரசங்கஞ் செய்து வந்தார்.
பரசமய கண்டனத்தோடு சுயசமய நெறிகளின் அனுட்டானத் தவறுகளையும் எடுத்தியம்பி மக்களை மதவழிநின்று ஒழுகச் செய்ய முனைந்தெழுந்து நின்ருர், பணத்திற்காகவும் படிப்புக்காகவும் மத மாறுதல் அலுவல்களை ஒழித்துக் கட்ட விழிப்புணர்ச்சியோடு எழுந்து நின்றர். சைவசமயத்தை இழித்துக் கூறி நல்வழிகாட்டு வோமென்று கூறித்திரிந்த மிசியோன்மாரை எதிர்த்து அவர்கள் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள், கண்டன வெளியீடுகள் இவற்றிற்கு மறுப்பாக கண்டன நூல்களும் பத்திரங்களும் எழுதி அச்சிட எழுந்து நின்றர்.
சைவாகமங்களின் விதிப்படி நடவாது அவற்றிற்கு மாருக நித் திய நைவேத்தியங்கள் நடக்கும் கோயிலிலும் அவற்றைப் பராமரிக் கும் மணியகாரர் மேலும் கைவைக்க எழுந்து நின்றர். கோயில் மணியகாரரும் அவர்களைச் சேர்ந்தோரும் விட்ட துண்டுப் பிரசுரக் கண்டனங்களைச் சண்டமாருதமாகப் பிய்த்துப்பிடுங்கி அக்குவேறு ஆணிவேருகக் கிழித்தெறிய எழுந்து நின்றர்.
நேர்மைத்திறனேடும் நெஞ்சிலுர்த்தோடும் வஞ்சனைச் சிந்தனை யற்ற உள்ளத்தெழுந்த வாய்ச்சொலை வீரத்தோடும் விழிப் போடும் நயமாக எடுத்துரைக்க எழுந்து நின்முர் , தம்.ை1 ஆதரித்

47
துத் தமக்கு ஆங்கில நல்லறிவூட் டிய பேர்சிவல் ஐயரையும் அவ ரைச் சார்ந்தோரையும் தாக்க வேண்டிய கால நேரங்களிற் தாக்க எழுந்து நின்றர். சமய குரோத வீண்வாதங்களை எழுப் பிய தமது சொந்தச் சகோதர ருக்கு எதிர்ப்புக்காட்டி அவரைத் தாக்கக் கத்தியொடு எழுந்து நின்றர்.
கூட்டேகு கைலாயம் என்ற சமய வாத அடிப்படையில் சமயப் பிரசாரஞ் செய்த இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அருட்பாக்களல்ல என்றும் அவை மருட்பாக்கள் என்றும் வாதிட எழுந்து நின்ருர், மருட்பா வாதங் காரணமாக எழுந்த பூசல்கள் கோடு மட்டுஞ் செல்ல அங்கு சாட்சியமளிக்க எழுந்து நின்ருர், ஏன்? இராமலிங்க சுவாமிகள் ஆரூட்ராய் விபூதி உருத்திராட்ச மாதியாம் சிவசின்னதாரியாய் கோடேறியபோது நாவலர் பெரு மான் அவரிற் சிவவேடங் கண்டெழுந்து நின்றர்.
வசனநடை கைவந்த வல்லாளர் என்று தமிழுலகம் போற்றும் வண்ணம் தமிழுரைநடை எழுத எழுந்து நின்ருர் . பற்பல உரை களும் உரைநடை நூல்களும் எழுதி தமிழுக்கும் சைவத்திற்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார். மற்றுமெந்த மொழிக்கும் அமை யாது தமிழ்மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள இயல் இசை நாடக நூல்களை எழுத எழுந்து நின்றர். திரிகரண சுத்தியோடு தாமாற்றும் பணிகளுக்கெல்லாம் பிள்ளையாரை வணங்க எழுந்து நின்ருர், எழுதும் எழுத்துக்கெல்லாம் பிள்ளையார் சுழி போடுவார். செய்யுஞ் சற்பிரசங்கங்களுக்கு உறுதுணைத் தோத்திரமாகப் பிள்ளை யார் காப்புப்பாட எழுந்து நிற்பர். நாவலர் பெருமானின் இதயத் துடிப்பால் எழுந்த விநாயகர் காப்பு வருமாறு: சீர் பூத்த கருவிநூல் உணர்ச்சி தேங்கச்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் பார்பூத்த புறசமய விருள்க Eங்கப்
பரம்பூத்த சைவ நிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவானந்தத் தினிது துரங்கப்
பிறை பூத்த சடைமெளலிப் பிரானுர் தந்த கார் பூத்த அறிவிச்சைத் தொழிலென் ருேதும்
மதம் பூத்த விநாயகன்ருள் வணங்கி வாழ்வாம்.

Page 25
48
இதுபோன்ற பலபாடல்களை யாத்துப் பாடிக்காட்ட எழுந் தார். இயற்றமிழ்க் கவிபாட எழுந்தது போல் இசைத்தமிழ்க் கீதம் பாடவும் எழுந்து நின்றர். நாடகத்தமிழை வளர்க்கவும் எழுந்து நின்றர்.
அச்சுக்கூடம் வைப்பதற்காக அரசாங்க அதிபரிடம் உத்தரவு பெற கச்சேரிக்குப் போய் அங்கு அதிபரின் முன்னிலையில் எழுந்து நின்ருர், தைரியசாலியாக ஆசானுபாகனக எழுந்து நின்ற நாவ லரை ஏற இறங்கப் பார்வையிட்ட அதிபர் ஒன்றும் பேசாது சென்றுவாரும் என்று அனுப்பிவிட்டு, "வேண்டுவார் வேண்டு வதை ஈவான் கண்டாய்’ என்று அனுதினமும் ஒதும் பழக்கமுடைய நாவவர் பெருமானுக்கு வேண்டிய உத்தரவை அனுப்பி வைத்தனர்.
‘என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டி நின்ற தவசிப்பிள்ளையைக் 'களவுங் கூத்தியும் ஆளைக்கொல்லும்' என்று கூறி ஆட்கொள்ள எழுந்து நின்றர் நாவலர்.
ஈசுர வருடத்திலே யாழ்ப்பாணத்தில் பஞ்சமும் பேதியும் மக்கள் அஞ்சும் வகையில் வாதை செய்யலாயின. பிள்ளையார் விடைகொடுத்தும் பூசாரி விடைகொடுக்காத மாதிரி அரசினர் விரும்பியும் உத்தியோகத்திர்-Nமுறைப்படி செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டிக் கிளர்ச்சி செய்யு)எழுந்தார். இலங்கை நேசன் உதயபானு என்ற பத்திரிகைகள் மூலம் தமது கிளர்ச்சியை எழுதி வெளியிட்டு மக்களின் துயர்களைய எழுந்தார்.
கற்றறிந்தடங்கினரின் தனிப்பெருந்தலைவனுக சட்ட நிருபண சபையில் அவர்களின் பிரதிநிதியாகத் தெரிந்தெடுக்கப்படுவதற்குப் போட்டியிட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் சார்பிற் பிரசாரஞ் செய்யவும் எழுந்தார் நாவலர்.
நாட்டின் நற்பணிக்காக மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழித் தொண்டிற்காக சைவசமயத்தை முறைப்படி வளர்ப் பதற்காக நாவலர் பெருமான் எழுந்தார். இவ்வாறு எழுத்து நின்ற நாவலர் பெருமானைத் திருவாவடுதுறை ஆதீனச் சந்நிதானம் எவருக்கும் எழுந்திராத சந்நிதானம், நாவலரை முன்னிட்டுப்பின் எழுந்து சென்றமை வியப்பன்று. நாவலருக்குச் சந்நிதானம் எழுந்தது; ஏன் இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவரும் நாவலரை உபசரிக்க எழுந்து நின்றர்.
-வளரும்

"ஈழகேசரி’ ‘வீரகேசரி’ ஆகிய பத்திரிகைகளின் மூலம் 1942 ஆம் ஆண்டு தொடக்கம் ஆற்றல் இலக்கியத் துறையிலே பணி புரியும் எஸ். ராதா
கிருஷ்ணன் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர்களுள் ஒருவராவர்.
சில
காலம் "இந்து சாதனம்" பத்திரிகையின் உதவியாசிரியாகவும் பணி புரிந் துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், ஆலயப் பிரவேசப் பிரச்சினையைப் பற்றி இக்கதையிலே அணுகு
Saif (lit. <笠ーIT・
SSSS SSS S S SS SLSSSS SSSS
"இழுத்துப்
it. சொல்லு”.
*முதலியார்! கோவிலைப் பூட்டுவதா!'
*"சீ! வாயை மூடும். வரவரக் கலி முத்திப் போய் விட்டது. முந்தாநாள் வரை சேரியில் ஒதுங் கிக் கிடந்தவங்க ளெல்லாம் இப்போ பெரிய நந்தனர் ஆகி விட்டார்கள். இவையெல்லாம் இப்ப புதிதாகக் கிளம்பியிருக் கிருர்களே கொஞ்ச வெடிவால் முளைத்தவர்கள். புரட்சியும் கத் தரிக்காயும். என்னிடம் இந்தப் பாச்சா பலிக்காது பரம்பரைக் கோவில்! நான் தான் முறையான உரிமைக்காரன். எது வந்தாலும்
விடமாட்டேன். சுப்ரீம் கோடும்.
எனக்குத் தெரியாததல்ல. இழுத்து மூடச்சொல்லு கோவிற் கதவை" " இந்த வசனங்களை
வாயால் பொரிந்து தள்ளி விட்டு விர்ரென்று உள்ளே போய் விட் டார் முதலியார் அருணசலம்.
அவரைப் பேட்டி s வந்த கூட்டம் வாயடைத்து நின் றது. அதில் இரு கட்சியும் இருந் இ-7
கதவு திறந்தது
- Ssil). ராதாகிருஷ்ணன்
தன. அவர் நியாயம் பேசினல் எதிர்த்துப் பேசிக் காரியத்தைச் சாதிக்க வந்த இளைஞர் கோஷ்டி "திறந்துவிடும் கட்சி"யைச் சேர்ந்தவர்கள். அவரை எதற்கும் மசிய விடாது தூபம் போட்டு அவரை உருவேற்ற வேண்டும் என்று வந்திருந்த வைதீகர்களே
"திறந்து விடாக் கட்சி. "கமக் காரக் கட்சி" என்றும் இது அழைக்கப்படலாம். இரு கட்சி
யினருக்கும் நா அசைக்கும் அவ காசந்தானும் கொடுக்காது தமது முடிவை அடித்துச் சொல்வி விட்டு உள்ளே போய்விட்டார் முதலியார்.
வந்தவர்கள் தமக்குள் சண் டையைத் தொடங்கினர்.
"என்னவென்ருலும் மணி தன் சைவப் பழந்தான். வைதீக முறைகளில் சிறிதும் மாறமாட் டார் என்று நான் அப்பவே சொன்னேனே!”*
“சரிதான் நிறுத்தும் இந்த வைதிகக் கோட்டைகள் எல்லாம் வெகு விரைவில் தகர்க்கப்படப் போகின்றன. இந்தியாவில் இல்

Page 26
50
லாத கோவிலா, சமயமா இங்கு வந்து விட்டது? அங்கு எந்தக்
கோயில் திறந்து விடப் பட வில்லை?"
'திறந்து விட்டபடியால்
தானே இந்தப் பஞ்சமும் அழி வும்.'
'ஒஹோ இந்தியா அழிந்தே போய் விட்டதோ? கடல் மட்ட மாகி விட்டது! அடடா"
"உனக்குத் தெரியாத விஷ யங்களைப் பற்றியெல்லாம் நீ பேசாதே! இது யூனிவர்சிட்டியில் வேலைநிறுத்தம் செய்யும் விளை யாட்டல்ல." சர்வகலாசாலை மாணவன் ஒருவனை மட்டந்தட் டிய நினைப்புடன் ஒரு பெரியவர் பேசினர்.
"யூனிவர்சிட்டிக்குப் போயி ருந்தால் ஏன் உமக்கு இந்த மூளை? அந்த காலத்தில் பள்ளிக் குப் போகிறேன் என்று கூறிவிட்டு வடலிக்குள் ஒளித்திருந்தீர்கள். அதுதான் இப்போது இப்படி மூளை போகிறது! இப்ப மாத்தி ரம் என்ன? கந்தனின் பனை வட விக்குள்தானே காலையிலும் மாலை யிலும் நிற்கிறீர்கள்? அதற்கு மாத்திரம் சாதியுமில்லை சமய முமில்லை . "
ஊரெல்லாம் ஒரு கலக்குக் கலக்கிய ஆலயப் பிரவேசம் அந்தக் கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கிருந்தது ஒரேயொரு பிள்ளையார் கோவில் தான். அங்கு முறைப்படி பூசை
கள் நடந்து வந்தன. வருடத் துக்கு ஒரு முறை வரும் உற்சவ காலம் அந்த மாதம் ஆரம்ப மாக இருந்தது. அக்கோவிலின் உரிமையாளர் முதலியார் அருணு சலம் . பரம்பரையாக அக்கோ விலை அவர் குடும்பம் மேற் பார்த்து வந்தது. ஊர்ச்சனங் கள் பணஞ் செலவு செய்து திரு விழாச் செய்தாலும், பெயரும் புகழும் முதலியார் குடும்பத்துக் குத்தான். நல்ல பழுத்த சைவர் கள். "சுண்டி எடுத்த** வேளா லர் குலத்திலகங்கள். அருளு சலம் அந்தக் காலத்தில் பெரிய உத்தியோகம் வகித்தவர்.கடைசி யாக முதலியாராகக் கடமை யாற்றி இளைப்பாறியிருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் டாக்டராகப் பிற ஊரில் கடமையாற்றினன். முதலியா ரின் மனைவி எப்போதோ இறந்து விட்டாள். வீட்டில் ஒரு சமை யற்காரர் அவருக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தார். முதலியார் தமது குல ஆசாரத் தைத் தவற விடாது, வேருெரு வீட்டில் "செப்புத் தண்ணியும்?? எடாது வைதீகமாக வாழ்ந்து
வந்தார். தருமம், திருப்பணி யெல்லாம் அவர் கிரமமாகச் செய்து வந்தார். ஏழைகளிடம்
அவருக்கு இரக்க முண்டு. ஆனல்,
சாதி முறையில் அபார நம்
பிக்கை.
"அவங்கள் அவங்களை வைக்
கிற இடத்தில் வைக்க வேண்
டும்’ என்று அடித்துச் சொல் லிக் கொள்வார். இந்த ஆலயப் பிரவேச விஷயத்திலும் ஒரு தீர் மான முடிவுக்கு வந்திருந்தார், * என்ன தான் வரட்டும்; என்

கோவிலை ஆலயப் பிரவேசத் துக்குத் திறந்து விடுவதில்லை.’
அவர் முடிவை அப்படி அடித்துக் கூறியது பற்றி அவருக்கு வெகு திருப்தி.
கோவிலில் தி ரு விழா ஆரம்பமாவதற்கு இன்னுஞ் சில வாரங்களே இருந்தன. இரு கட்சிகளும் யுத்த சந்நத்தரா யினர். இளைஞர்களெல்லாம் ஒரு பக்கம் வரிந்து கட்டிக் கொண்டு தொண்டர் படை ஒன்று அமைத் தனர். எவ்விதத்திலும் ஆலயப் பிரவேசம் நடத்தியே தீருவ தென்று பிடிவாதமாகச் செயல் பட்டனர். பழமை பேணும் முதி யவர்களும் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு 'முந்த நாள் முளைத்ததுகளுக்கு’ ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று கங் கணங்கட்டி நின்றனர். ஊரே அல்லோலகல்லோலப் பட்டது. கிராமசேவகரின் முறைப்பாட் டுப் புத்தகத்திற்கு ஒய்வே இல்லை. போலீசும் ரோந்து சுற்றிற்று.
(UPதலியார் கண்ணைத் துடைத்துக் கொண்டு மீண்டு மொருமுறை அக்கடிதத்தை வாசிக்கலானர். அவரால் தம் கண்களை நம்பமுடியவேயில்லை. மகன் அவருக்கு ஞானுேபதேச மல்லவா செய்கிருன் . அதை யெல்லாவற்றையும் தூக்கியடிப் பது போல் இருந்தது, அவனு டைய திருமணச் செய்தி! இரண் டும் ஒரு கடிதத்திலேதான் இருந்
5.
தன. முதலில் உபதேசம் முடி வில் ஏதோ சாதாரணச் செய்தி போல் அவனது திருமணச் செய்தி!
*"அப்பா வீணுக இந்த ஆல யப் பிரவேச விஷயத்தில் உங் கள் பிடிவாதத்தைக் காட்ட வேண்டாம். சங்கர விஜயம் வாசித்த உங்களுக்கு ஆதிசங்கரர் சண்டாளனிடம் தோற்த கதை தெரிந்தது தானே? எதை எட்ட நிற்கச் சொல்கிருய்? இந்த உட லையா ஆத்மாவையா? என்ற தத்துவக் கேள்விகளைக் கேட்டு அவரை நாணச் செய்தான் அல் லவா! அதுபோல உங்கள் ஆண வமும் அடங்கும் நாள் வரலாம், நீங்கள் மரியாதையாக முன் கூட்டியே கோவிலைத் திறந்து விடுதல் நல்லது. நிற்க, எனது திருமணம் நிச்சயமாகி விட்டது. என்னுடன் கடமையாற்றும் இன் னுமொரு பெண் டாக்டரே என் மனைவியாகப் போகிருள். உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க் கின்றேன்."
விவாகத்துக்கும் 5frCar நாள் குறிப்பிட்டிருந்தான். திரு மணம் முடிந்தவுடன் இருவரும் மேல்நாடு செல்ல வேண்டுமாம்.
முதலியாருக்கு இரத்தங் கொதித்தது. "தலை தெறித்த பயல்! சங்கர விஜயமும் ராமா னுஜர் பாஷ்யமும் வைத்தியங் கற்க விட்டேன வேதாந்த விசா ரம் நடத்தச் சொன்னேன? இந்த நாளைப் பையன்களுக் கெல்லாம் என்ன வந்து விட்டது? உலகமே தலைகீழாகத் திரும்பு

Page 27
52
கின்றதா..? அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதை முழுக்கக் கொட்டி மகனுக்கு ஒரு கடிதம் எழுதினர்.
*உன் திருமணம் DGT சொந்த விஷயம் தானே! அப் படியானுல் நான் வரப்போவ தில்லை. உன் தாயார் இருந்திருந் தால். அவள்தான் புண்ணிய வதி இக்கர்மங்களை எல்லாம் கண் ஞல் பார்க்காமல் போய் விட் டாளே. நீ தகப்பன் சாமி ஆகி விட்டாய். இனி உன்பாடு. நீ எனக்குக் கடிதம் எழுதத் தேவை யில்லை. உன் உபதேசம் எனக்கு வேண்டாம். நீ என் மகனு lfsdio2 * மனதை வைராக் கியப் படுத்திக் கொண்டு அந்தக்
கடிதத்தைத் தபாலில் சேர்த்
5mrri.
ஏதோ ஆத்திரத்தை எங்கே யாவது தீர்த்துக் கொள்வது மனித சுபாவம். மகன் கொடுத்த ஏமாற்றத்தைச் சகிக்க முடியாத
முதலியார் ஆலயப்பிரவேசத் தைத் தடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டார் வைத்தியர்களின்
கட்சியை பலப்படுத்தினர். சட் டப்புலிகளை நாடினர் அதில் தன் கவலைகளை மறப்பதற்காகத்
தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டார். அவர் வீட்டுக்கு வந்த, யாராவது ஏழைக்கு ‘அள்ளி வைக்கத் தூபம்
போட்ட நாசகாரக் கும்பலின் பேச்சைக் கேட்டு தன் தோட் டங்கள் வயல்களிலிருந்த தலை முறை தலைமுறையாகச் சாகுபடி செய்து வந்த 'கீழ்சாதிகளை" யெல்லாம் அடித்து விரட்டினர்.
இத்தனைக்கும் பாவம் அவர்கள் ஒரு குற்றமும் அறியாதவர்கள். பகலில் ஆத்திரத்தில் உந்தப் பட்டுச் செய்யும் இக்காரியங்கள் இரவில் அவர் நித்திரையைக் கெடுத்தன. அவர் செய்வது சரிதான என்று அவருடைய மனச்சாட்சியே அவரை அறுத் 应岛·
“முதலியார்
முதலி urri !”o urri segu?”
"நான் தான் ??
'புருேக்கர் கந்தையாவின்
குரல் போல் இருக்கிறதே? இவன் ஏன் இங்குவருகிருன்? என் மகன் தானே !??
"என்ன முதலியார், வந்த வன வாவென்று கூட அழைக் srTLogij Gurray &OT * *
“ஒன்றுமில்லை. எங்கே கா% யில் இந்தப் பக்கம்???
* 'இல்லை!
இன்று L Garsif'
கொழும்பால் காலை தான் திரும்
"கொழும்பாலேயா?" தன் மகனைப் பற்றி ஏதாவது சொல் லுவாரா என்று அவர் எதிர்
பார்த்ததை புரோக்கர் அறிந்து கொண்டார்.
"என்ன செய்வது தலைவிதி யாரைத்தான் விட்டது.' ஒரு பெருமூச்சையும் விட்டு வைத்தார் புரோக்கர்.

"அவனைப்பற்றிப் G3 u ge G36 v GðoT rrò. அவன் என் மகனல்ல! கந்தையா காலையில்
வேறு ஏதாவது வேலேயிருந்தாற் சொல்லுங்கள் ”*
* நானும் நீங்களும் பேசா விட்டால் என்ன? ஊர் நாளைக்கு இதைப்பற்றித்தானே பேசப் போகிறது.ம் உங்கள் குலம் என்ன? கடைசியில் இப்படியா நடக்க வேண்டும்."
இது என்ன புதிர் போடு கிருன் இவன்!
"என்னதான் நடந்துவிட் டது கந்தையா? இந்த நாளைப் பையன்கள் செய்வதைத் தானே அவனும் செய்து விட்டான். அதற்கும் குலம் கோத்திரத்துக் கும் என்ன சம்பந்தம்?"
அங்கும் இங்கும் பார்த்து விட்டு தன் கதிரையில் இருந் தெழுந்து வந்து முதலியாரின் காதோடு தன் வாயை வைத்
5 mrrit கந்தையா. *அந்தப் பெண்.என்ற சாதியைச் சேர்ந் தவள்’ ‘ தீண்டத்தகாதவர்
என்று கருதப்பட்ட ஒரு சாதி
யின் பெலரை உச்சரித்தார்
அவர்.
பாம்பை மிதித்தவர் போல் துள்ளி எழுந்த (p555uirri 'உமக்கெப்படித் தெரியும்? சும்மா கதைக்கட்டுகிறீர் . உமது குணம் எனக்குத் தெரியாதா. ஊரைக் கழுத்தறுக்கிறது தானே உமது தொழில்." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தினர் அவர்.
53
""முதலியார் கோபப்பட வேண்டாம்! கொழும்பில் பண மும் உத்தியோகமும் இருந்தால், குலம் கோத்திரம் தெரிய வரு வதில்லை. நான் அடிக்கட்டை வரை தேடிக் கண்டு பிடித்து, விட்டேன். அவள் எங்கட வைத் தியின்றை. காதலுக்கு கண் ணில்லை பாருங்கோ!...”
முதலியாருக்குத் தலை சுற்றத் தொடங்கியது. கதிரையை இரு கையாலும் இறுகப் பற்றிக் கொண்டு உட்கார்ந்து விட் டார். கூடவே தானும் கொஞ்ச
நேரம் பேசாதிருந்து விட்டு மீண்டும் ஆரம்பித்தார் கந்தையா.
“Glp535 until நீங்கள்
எதற்கும் பயப்பட வேண்டாம், இந்தக் கந்தையா ஒருத்தனுக்
குத்தான் இந்த விஷயந் தெரியும்." --
முதலியார் கந்தையாவின் இரு கரங்களையும் இறுகப்பற்றிக் கொண்டார். ** என் மானத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.அதுவும் இந்தச் சம யத்தில்.’ உள்ளே Gurrur வெளியே வந்த முதலியார்
கையில் ஒரு நூறு ரூபா நோட்டு இருந்தது. மறுவிநாடி அது கந் தையாவின் கையில் திணிக்கப்
• التي حساسا لا
இரண்டு தினங்கள் சழித்து மறுபடி புரோக்கர் கந்தையா வந்து தனக்கு அவசரமாக ஒரு ஆயிரம் ரூபா தேவை என்று

Page 28
S4
கூறிய போதுதான் முதலி யாருக்கு மூளை சிறிது துரிதமாக வேலை செய்தது. மனுஷன் "பிளாக் மெயில் ?? செய்ய,
அதாவது பயமுறுத்திப் பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தான் என்பதை அவர் அறிய அதிக நேரம் எடுக்கவில்லை 'இப்போ ஆயிரம்.நாளை இரண்டாயி ரம். மறுநாள் ஐயாயிரம் இது எங்கு முடியுமோ? அதை அவர் வெளியே காட்டிக் கொள்ள வில்லை. 'அதற்கென்னி புரோக்
கர் கந்தையா? உமக்கில்லாத பணமா? ஆஞல், இப்போ கையில் காசாக இல்லை. சனிக்
கிழமை வாரும் தருகிறேன்."" அவரை அனுப்பி விட்டு ஆழ்ந்த சிந்தனையிலீடுபட்டார் முதலி யார். 'இதென்ன சாதி, குலம், கோத்திரம். யாருக்காக உதை யெல்லாம் கட்டிக்காத்தேனே அந்த ஒரு மகன் அவற்றையெல் லாப் தகர்த்தெறிந்து விட்டுப் போய் விட்டான். இதிலெல் லாம் என்ன உண்மையாயிருக் கிறது. பைத்தியக்காரத் தனந்
தான்.என் ஆணவத்தைப் போக்கக் கடவுள் ஒரு பாடம் Luli 9.5605&6lorurt?”
"சின்னத்துரை! துரை!”* சமையற்காரன் அவர் முன்பு வந்து நின்றன்.
சின்னத்
* *guurt!'
**GS unruit அந்த நாமுத் தற்றை பொடியனை நான் வரச்
சொன்னேன் என்று கையோடு கூட்டிவா."
'அந்தத் தறுதலையையா? அவன் தானே ஊரிலே இந்தக் குழப்பம் எல்லாம் கொண்டு திரிகிருன்.
செய்து அவனை
இந்தப் படலை திறக்க விடலாமா!
'வாயை மூடிக் கொண்டு அவனைக் கூட்டிக் கொண்டு வா. யூனிவர்சிட்டிப் படிப்பையும் விட்டுவிட்டு அவன் எவ்வளவு உபயோகமன காரியத்தில் மினக் கெடுகிருன் என்று உனக்குத் தெரியாது."
**Ꮑ5fᎢonᎪ4. ற்றை பொடிய னிடம் கோவி. நிறப்பைக் கொடுத்து விட்டார் முதலியார் நாளைக்கு உதுகளெல்லாம் கோவிலுக்க யோகப்போதுகள். இனி எங்களுக்கு அங்கே இட மில்லை.இந்த மாரில் இனி மழை பெய்யுமா..!" தன் வயிற் றெரிச்சல் தீர நாலு பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு கத் திக் கொண்டிருந்தrl புரோக்கர் கந்தையா! 并
 

“Hairsir, வாப்பா இவ் வளவு ராவாகியும் வரல்லயே? தெருவுக்குப் போய் கொஞ்சம் பர்ாத்திட்டுவா மன'
வாசலில் பாடப் புத்தக மொன்றை வாசித்துக் கொண் டிருந்த நான் உம்மாவின் குரல் கேட்டதும் விளக்கைச் சிறிது தனித்துவிட்டு முன் வாசலை எட் டிப் பார்த்தேன். உம்மா வாசற் படியில் அமர்ந்து கொண்டு வாப்பாவின் வரவுக்காக வழி மேல் விழி வைத்திருந்தாள்.
மெழுகுவர்த்தி ஒன்றைப் பற்றவைத்து சிரட்டையில் பதித் துக் கொண்டு வாப்பாவைப் பார்க்கப் புறப்பட்டேன். சிறிது தூரத்தில் குருட்டு வெளிச்ச மொன்று தென்பட்டது. அது வாப்பாவின் வாயில் புகையும் சுருட்டு வெளிச்ச மென்று ஊகித் துக் கொண்டேன்.
இருட்டைக் கிழித்துக் கொண்டு வந்த வாப்பாவின் முகத்தில் வழமைபோல் சிரிப் பைக்காணுேம். அமாவாசை இரவுபோன்று அவர் வதனம் இருண்டிருந்தது.
டுக் குதறத்
கையிலிருந்த மீன் கூடையை வாசலில் எறிந்துவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிந்தனை யில் ஆழ்ந்தார் அவர்.
உம்மா கோப்பி போட்டுக் கொண்டு வந்து வாப்பாவின் அருகில் வைத்துவிட்டு, நிலத்தில் குந்திக் கொண்டு வெற்றிலைத் தட்டிலிருந்த பாக்கை வெட் டித் துண்டாக்கி வாயில் போட் தொடங்கினுள். வெற்றிலையை மடித்து சுண்ணும் பைத் தேய்த்து மீதியை கதவு நிலையில் பூசிய வண்ணம் வாய்க் குள் திணித்துக் கொண்டாள்.
வெற்றிலைச் சாற்றைப் படிக்
கத்தில் துப்பிக் கொண்டே, "இது, கோப்பி ஆறுது’ என் ருள் உம்மா.
"ஆறினுல் ஆறட்டும்"
என்று சீறி விழுந்தார் வாப்பா.
உம்மாவுக்குத் தெரியும் வாப் − பாவுக்கு இன்று ஏதோ "கேந்தி’ என்று. அதனுல் அவள் மெள

Page 29
56
னித்துத் தலை கவிழ்த்துக் கொண்
L. TGT .
"அன்ன நான் சொல்லல்ல யெண்டு சொல்ல வேணும் உன்ற மகள் அந்த மீன் காரப் பயலோட அடிக்கடி கள்ளத்தன மாகக் கதைக்கிறதாகக் கேள்வி. அவலட்சணமே உருவான அந்தக் கிருக்கனேட ஏதாச்சும் உற வாடினுக்க, அவள்ர உசிரு இல் லாட்டி ஏன்ற உசிரு போகும். இதில ரெண்டில ஒன்று நிச்ச யமா நடக்கும். விளங்கின??? வாப்பா ரோசமாகக் கத்தினர். அவர் முகத்தில் ஆத்திரம் நர்த் தன மாடியது. எனக்கு ஒரே கிடுகலக்கம். அம்மாவின் வதனத் திலும் அச்சமிழையோடியது.
நான் கழுசான்கார மாப்பிள்ளை யொன்றைத் தேடி எடுக்கிறன். கொழும்பில எக்கசக்கமாக மாப் பிள தொரமார் இருக்கிருனுக. அவளுக்கு கொஞ்சம் பொறுமயா இருக்கச் சொல்லு."
நபீஸா ராத்தாவுக்கும் தோணிக்கார அமீருக்கும் இடை யிலுள்ள தொடர்பைப் பற்றி எனக்கு நல்லாகத் தெரியும். அமீர் காகாவிடத்தில் அழகில்லா விட்டாலும் இறுக்கமான உடல் கட்டுள்ளவர். குணம் படைத்தவர் அயராத உழைப் பாளி. அவருக்குச் சொந்தமாக ஒரு தோணியும், வலையும் உண்டு. எங்களுக்கு நெருங்கிய சொந்தக் காரராக இருந்தும் அவரை
gd turi
"தலை தெரிச்சுப் போனவள்.
இவளுக் கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஊரூட்டு இளந் தாரிகளோட கதச்ச இவளுக்கு வெக்கம்ரோசமில்லையா? புத்தி அறிஞ்சி ரெண்டொரு மாதத் திலேயே நிக்கா ஒன்று செஞ்சி வச்ச ரெடியான. அதுக்கு இந்த உம் மாக்காரி இடந்தரல்ல. அவன் எவ்வளவு சோக்கான ஆள். வயசு கொஞ்சம் ஏறினலும் அவன் கழுசானும் தொழிலுமாக இருந்தவன்தானே?.ம், அவளுக் குச் சொல்லு கண்ட நிண்ட மீன் காரணுகளோட கொஞ்சிக் குழா விக் கெடா p இருக்கச் சொல்லு,
வாப்பா வெறுப்பதற்குரிய கார
ணம் எனக்குத் தெரியவில்லை. ஆனல் வாப்பாவின் ஆசை ராத்தாவுக்குரிய கணவன் கழு சான் அணிபவராக இருக்க வேண்டுமென்பதே. உடையைக் கொண்டு மனிதனைக் கணிக்கும் மடையர் கூட்டத்தின் கடைப் பேர்வழிதான் அப்பா, எனக்கு இதை நினைக்கும்போது சினம்
பீரிடுகிறது.
நபிஸா ராத்தாவின் அழ (சக்கு ஒப்பான பெண் ஒருத் தியை எங்கள் கிராமத்தில் தேர்ந்தெடுப்பது அபூர்வம்.
 

தாழம் பூப்போல முகம். காய்ந்த கத்தாளை போன்ற கரும் கூந்தல். கடல் நீரில் தோய்ந்த ஈரமணல் போன்ற உடல். ராத்தாவின் சிரிப்பில் அந்திப் பொழுதின் செந்தூரக் கோலம் பரிணமிக் (95LD.
அந்த மோகனப் புன்னகை யில் லயித்து அமீர் காகா வலையில் சிக்கிய மீனகத் தவிப்பதில் வியப்பில்லை.
ராத்தாவும் அமீர் காகாவும் அந்தத் தாழை மரப் பொழி லில் கொஞ்சிக் குலாவு
வதை நான் LG) தடவை கண்டிருக்கி றேன். நான் இது வரை ஒருவருக்கும்
சொன் ன தி ல் லை. ஆணுல், வாப்பாவுக்கு து எப்படியோ வளிச்சமாகி விட்
• النمسا
அமீர் காகாவும் நபீஸா ராத்தாவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிற தென்றல் கல்யாணத்தை முடித்து வைக்கிறது தானே நியாயம்? வாப்பா ஏன் குறுக்கே நிற்கிருர்?
அமீர் காகா கடும் உழைப்
பாளி. வசதியுள்ள ஆள். செம் படவத் தொழில் இயற்றுவதால் அவரை வெறுப்பது ஆகுமா? வாப்பாவும் வலைஞர்தானே? இனம் இனத்தை இழிவாகக் இ-8
57
கருதுவதா? ஒருவரின் குண நலன்களை ஆய்ந்தோய்ந்து பார்க் காமல் வெறுமனே கால்சட்டை அணியும் ஒரே காரணத்துக்காக, கிராமச் சூழலுக்கு ஒத்து வராத ஒருவரை நாடுவது எவ்வளவு அபாயகரமானது? வாப்பாவுக்கு இதைச் சொல்லி உணர்த்த
வேண்டும் என்ற துணிச்சல் உந்து கிறது. ஆனல், ஏதோ அசமந்த உணர்வு எனது நாக்கை செயலி ழக்கச் செய்துவிடுகிறது.
இன்று வாப்பாவுக்குப் பெரும் கோபம் ஏற்பட்டிருக் கிறது. அவருக்கு யாரோ கோள் சொல்லி இருப்பார்கள், இந்தக் கிராமத்தில் இப்படியான கைங் கரியங்களுக்குக் குற்ைவேயில்லை.
சாப்பாட்டுக்குப் பின் shirur sp. ubior{36176 GL 6Fu வார்த்தைகளுக்கு நான் செவி மடுத்தேன். ஒரு வாரத்துள் கொழும்பு மாப்பிள்ளைக்கு ராத் தாவை 'நிக்காஹ்' செய்து

Page 30
58
ArwWYNY
சிங்கள -தமிழ்
மணிப்பிரவாளம்
தென்கரையோரங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள மக்களோடு ஒன் றிணைந்து வாழ்பவர்கள். இருப்பினும், அவர்களின் தாய் மொழி தமிழே. அவர் கள் சில சிங்களச் சொற்களேத் தமிழ்ச் சொற்களாகவே பயின்று வருகின்ற �0t if . உதாரணம்: கேந்தி-கோபம். இவ்வாறு வழங்கும் சொற்களே நேயர்கள் அனுப்பி பதவினல் இளம்பிறையிற் தொடர்ந்து வெளியிடுவோம். ஆ~ர்.
v^^^^ - WW*Y-MMMMNMNMM MMMNMNMMN
வைக்க அவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
முன்பு நடந்த சமாச்சாரங் களை ராத்தா கேட்டுக் கொண்டு தானிருந்தாள். இந்த ரகசியம் அவள் காதில் ஏறி இருக்காது.
திருமண ஏற்பாடுகள் தடல் டலாக நடந்தேறியது. திரு மணத்துக்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான்.
ராத்தாவின் முகத்தைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. இன்னுமொரு நாளைக் குள் அவள் ஆசைகள் - கற்பனை கள் - நம்பிக்கைகள் Gurruq'i Go) Lumiquum 55 சிதறி விழும். எனக்கு மன நிம்மதியில்லை. நான் கவலையைச் சுமந்து கொண்டு கடற்கரையில் நடக் கிறேன். ஈரத்தரையில் எனது பாதங்கள் புதையுண்டு தளர்கின் றன. தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றில் சோக கீதம் தொனிக்கிறது. நிலத்தில் இழுத்துப்போட் டிருந்த படகுகளுக்கு மருங்கில் அமர்ந்து கொண்டேன்.
ஏதோ
படகுகளுக்கு மறுபுறத் திலிருந்து இருவர் உரையாடு வது எனது காதில் துல்லியமாக விழுகிறது. நான் காதுகளை கூராக்கிக் கொண்டேன்.
"ஐயோ! பாபவம் ஒர் அப் பாவிக் குட்டிய படுகுழியில
தள்ளப் போருங்க??
" "6Tai 60T?”
**கொழும்பு ஐ. ஆர். ஸி. தரவளியொருவனுக்கும் இந்தக் கிராமப் பெட்டை ஒருத்திக்கும் திருமணம் நடக்கப் போகுது. குட்டிகளக் கெடுத்திப் போட்டு, அவள்களைக் கொண்டு விபச் சாரம் நடாத்தி ஜீவிக்கும் கொடி யவன் அவன். இந்த விஷயத்த
அம்பலப்படுத்தினல், எனக்கு ஆபத்துவரும் , அதனுல்தான் யோசிக்கிறன்.""
எனக்கு
ஒருவித உணர்வு கிளர்கிறது. மெதுவாக அந்த நபரை உற்று நோக்கி
அசுர
னேன். அவர் புதிதாக வந்த வாத்தியார் ஐயா. அவர் கூற்றில் எனக்கு அசைக்க முடியாத நம் பிக்கை. நான் வீட்டை நோக்கி ஒடுகிறேன். ராத்தாவின் வாழ் விலே விடிவைக் காண வேண்டும் என்ற ஆக்ரோஷம் என்னுள் துளிர்க்கின்றது. 女
 

High Class Printers
Colour Printing a Speciality
&s Calen Glar WS rks Under-taken
WISIT
TAs PREss
1/25, Mookathal Street, PURASAWALKAM, MADRAS-7
Tophone: 6 30 12 T'grams " " THAIYANNAP
ALSO,
TAS PRESS
KIL AK A FRA I
T' phone: 44 - T'Grams: " 'THAYANNA''

Page 31
இலக்கியச் சந்திப்பு - என் விளக்கம்
»AAAA
வேலைப்பளுக்களின் மத்தியிலும், இலக்கிய நண்பர் مغربی اLib கள் சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே 13.10-70 இல் மலிபான் வீதியில் நடைபெற்ற இலக்கிய நண்பர்கள் கழகச் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். எஸ். பொ. வும் மேற்படி சந்திப்புக்கு வந் திருந்தார். அவரும் நானும் இலக்கிய உலகின் இரட்டையர் என் பதை அறிந்தோர் அறிவர். நாங்களும், "மல்லிகை ஆசிரியர் டொமினிக்கும் ஒரே கூட்டத்தில் கலந்து கருத்துப் பரிவர்த்தனை செய்தமையினல், நடக்கக்கூடாத சந்திப்பு ஒன்று நடந்ததாகச் சிலர் மருண்டு விட்டதாகவுந் தோன்றுகின்றது.
ம்ேலும், டொமினிக்குக்கு ஏதோ "ஆதரவு” தேடும் நோக்கத் துடன் செய்திகள் திரிக்கப்பட்டுப் பிரசுரமாகியுள்ளன. இல்லாவிட் டால் நான் ஹோட்டல் தப்ரபேனில் 13-10-70 இல் நடைபெற்ற விழிச்சுடர் வெளியீட்டு விழாவிலே பேசிய பேச்சின் சாரம் இலக்கிய நண்பர்கள் சந்திப்பிலே பேசியதாகத் தினகரனிற் பிரசுரமாவதற்கு எவ்வித நியாயமுமில்லை. இன்னும் ஒன்று. இந்தச் சந்திப்பிலே நடந்த முக்கிய நிகழ்ச்சி தவிர்ந்த ஏனையன "மல் லிகை"யிலே பிரசுரமாகியிருந்தன. தனக்கு ஒர் அந்தஸ்து தேடும் அவதியில், டொமினிக் நேர்மையான செய்திகளைக் கருச்சிதைவு செய்யும் தொண்டிலும் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.
இளந்துடிப்பும் எழுத்தார்வமுமுள்ள "சாந்தன் மேற்படி இலக் கியச் சந்திப்பிலே நடந்த நிகழ்ச்சிகளின் உண்மையின் ஒரு பகுதி யையாவது வெளியிடச் சிந்தை கொண்டமை நல்ல சகுனம். இந்தக் கட்டுரையின் மூலப் பிரதி மல்லிக்கைக்கு அனுப்பப்பட்டுள் ளதாக அவருடைய கடிதத்தின் மூலம் அறியமுடிகின்றது. அவர் "இளம்பிறை க்கு அனுப்பியுள்ள நகலைப் பத்திரிகா தர்மம் பேணி இங்கு பிரசுரிக்கின்ருேம். மூலப் பிரதி இன்னமும் "மல்லிகை" யிலே பிரசுரிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.
எம். ஏ. ரஹ்மான்
ஆசிரியர், "இளம்பிறை" Ο
கடந்த 12-10-170 அன்று நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றிய குறிப்பொன்றினை அனுப்பியிருக்கிறேன். "இளம்பிறை" ஆசிரியர் போலவே, "மல்லிகை” ஆசிரியரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் இக்குறிப்பின் மூலப்பிரதி அவருக்கும் ("மல்லிகை யில் பிரசுரிப்பதற்காக) அனுப்பப்பட்டுள்ளது. இப் பிரதி, "இளம் பிறை'யிற் பிரசுரிப்பதற்காக.
ஐ. சாந்தன்

இரண்டு மாதங்களுக்கு முன் கொழும்பில் ஒர் இலக்கியச் சந்திப்பு நடந்தது. "எல்லோருங் கூடி ஏதோ பேசி விட்டுப் போயிருப்பார்கள்" என்று சாதாரணமாகச் சொல்லி விடக் கூடிய தாக இச் சந்திப்பு அமையவில்லை’ என்பது இதன் சிறப்பாக அமைந்த காரணத்தால், இதைப்பற்றி ஒரு விரிவான அறிக்கையும், அதன் மூலம் ஒரு விளக்கமுந் தேவைப்படுகின்றது, ஒரு கூட்டிந் தான் நடந்தது என்ருலும், கூடியவர்கள் இருபது பேரளவிற் தானிருந்தார்களென்ருலும், அக் கூட்டமும், அதன் நடப்புக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களிலுங் கண்ணேட்டங்களிலும் பார்க்கப்பட்டு, அத்தனைக் கத்தனை விதங்களில் விமர்சிக்கப்பட்டும், விளக்கப்பட்டும் வந்தது. ஆனல் இது பற்றி அறிக்கையாக, விரி வாக எந்த ஒர் இலக்கியப் பத்திரிகையிலும் வராததால், இந்தக் குறிப்பு அவசியமாகிறது. இதன் மூலம் "வீணுன கதைகள் ஒழிக் கப் படுதல் கூடும்’ என்ற நம்பிக்கையில் எழுதப்படுகிறது.
இந்தக் கூட்டம் இத்தனை விமர்சனத்திற்கும், பிரச்சினைக்கும் உள்ளானதன் காரணம் வெறுந் 'தவ்வல் கூட்டமாக இது நட வாமல், திருவாளர்கள் டொமினிக் ஜீவா, எஸ். பொ., ரஹ்மான் ஆகியோரும் ஓரிடத்தில் ஒன்ருகக் கலந்து கொண்டதுதான்.
மலிபன் வீதியிலுள்ள இலக்கிய அன்பர் திரு ஆ. குருஸ்வாமி அவர்களின் இல்லத்தில், 12-10-70 அன்று இச் சந்திப்பு நிசழ்ந்தது. இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு கொண்ட இவரே இச்சந்திப்புக்குக் காரணராய் அமைந்தார். இலக்கியச் சுவைஞர்களின் நாவிற்கும் அன்று சுவையளித்த குருஸ்வாமி அவர்களின் அன்புள்ளம் வாழ்க!
வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வங் கொண்ட சில இளைஞர்கள் - இவர்களுட் சிலர் - இதற்காகவே அழைக்கப்பட்டிருந்தனர். தவிர, மேற் சொன்ன பிரபல எழுத் தாளர் மூவரும், திரு குருஸ்வாமியுங் கூடக் கலத்து கொண்டனர்.
திரு. நெல்லை க. பேரன், தலைமை தாங் கினர். சமூகமளித்திருந்தவர்கள் அறிமுகம் வேண்டி, பரஸ்பரம் தம்மைத் தாமே அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
சந்திப்பின் முதல் நிகழ்ச்சியாக, இந்தியப் பத்திரிகைகளின் தடையும், ஈழத்துப் பத்திரிகை

Page 32
62
களின் வளர்ச்சியும் பற்றி ஆராயப்பட்டது. திரு. ஜீவாவும், திரு ரஹ்மானும் இங்கே பத்திரிகை நடத்துவதில் ஏற்படுஞ் சடங்கடங்களைக் கூறினர்கள். இளைஞர்களைப் பொறுத்தளவில், *சஞ்சிகைகளைக் கட்டுப்படுத்தல் மிக அவசியம்" என்ற ஏ கோபித்த கருத்தைத் தெரிவித்தனர். 'இந்தப் போர்க் குரல் முதல் முதலில் என்னுலேயே எழுப்பப்பட்டது' என்று இந்த இடத்தில் ஜீவா பெருமிதங் கொண்டார். 'இறக்குமதிக் கட்டுப்பாட்டால், உள் ளூர்ப் பத்திரிகைகளின் சிரமத்தை எவ்வளவோ குறைக்க முடியும்" என்று அவர் சொன்னர்
இதையடுத்து, "இளம் பிறை" ஆசிரியர் திரு எம். ஏ. ரஹ்மான் பேசும் போது 'அச்சாளன்” என்ற வகையில் தனக்குள்ள அநுப வத்தை வெளிப்படுத்தி, பத்திரிகை நடத்துவதிலுள்ள சிரமங்களை விளக்கினர்.
சங்கடங்களுள் ஒன்ருக "தரமான கதைகள் பிரசுரத்திற்கு வருவதில்லை’-என்பது கூறப்பட்டது. இதைக் கூறியவர், மல்லிகை" ஆசிரியர். 'ஈழத்தில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் எழுத்தாளர் களாயிருந்தாலும், ஒரு பத்திரிகைக்கு தரமான விடயதான ஞ் செய்ய எவரும் முன்வருகிருர்களில்லையே” என்ற உண்மை, அப்போது யாவராலும் உணரப்பட்டது.
'தரமில்லா விட்டாலும், எந்தப் படைப்பில் ஒரு இலக்கிய மூச்சு தென்படுகிறதோ, அதை நாங்கள் பிரசுரிக்கிருேம்' என ஜீவா குறிப்பிட்டார். இந்தக்கட்டத்தில், திரு சண்முகன் குறுக் கிட்டு, ‘ஒரு எல்லையைக் குறிப்பிட்டு, அந்த எல்லைக் குட்பட்ட பார்வையைக் கொண்ட கதைகளைத்தான் தேர்ந்து கொள்கிறீர் களா?' என வினவினர். இக் கேள்வி, ஜீவாவுடைய சத்தியத்தின் தளத்தினை சந்தேகிப்பதாக இருந்தும், அவர் பதில் திருப்தி தரவில்லை. தனக்காக அல்லாமல், இலக்கிய நயத்திற்காகவும் அல்லாமல், வேறு ஏதோ ஒரு கொள்கைக்காக - அந்த ஒன்றினை மட்டும் விளக்கத் தவறி-ஜீவா பேசி முடித்தார். எனவே, மேற்படி சஞ்சிகையில் தனது விருப்பத்திற்கு மாருகவும் நிர்ப்பந்தத்தின் பேரிலும் போடுவதான மகத்தான உண் ைமயை, அவர் சொல்லிய நேர்மைத் தொணியைப் பாராட்ட் வேண்டும்.
ஆனல், "என் விருப்பத்திற்கு மாருரன ஒரு வரியைத்தானும் எத்தகைய நிர்ப்பந்தத்தின் பேரிலும் என் பத்திரிகையில் நான் பிரசுரிக்க மாட்டேன்' என ரஹ்மான் இச்சமயத்தில் அடித்துக் கூறியது, ஜீவா நின்று பேசிய தளத்தை அடித்து நொருக்கியது போல அமைந்தது.
"ரோஜாப்பூ' ஆசிரியர் பிரேமகாந்தன் மட்டும், பட்டும் படா மலும் இருபக்கத்து நியாயங்களுக்கும் வெண்ணெய் தடவிப் பேசி னர். இந்தக் கட்டத்திலே தான், திரு. வே. சு. மணியம், 'தனித்

63
தனியே பத்திரிகை நடத்திச் சிரமப்படுகிறீர்களே, மூன்று பத்திரி கைகளையும் ஏன் ஒன்ருக்கி நடத்தக் கூடாது? உங்கள் பெயருக் காகவா தனித்தனியே நடத்துகிறீர்கள்?’ என மிக உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டார் (இது, ஓர் "அபூர்வக் கருத்தாக எல்லோரா லும் ஏற்றுக் கொள்ளப்பட்டது!). an
இதுவரையும் மெளனஞ் சாதித்துக் கொண்டிருந்த எஸ். பொ. ‘நான்தான் இந்தியப் பத்திரிகைத் தட்ைக்குக் காரணம்" என மார்பு தட்டிப் பேசிய ஜீவாவுக்குப் பதில் சொல்வது போல, ஒரு நிதா னமான கருத்தை முன் வைத்தார். "அங்கிருந்து வரும் பத்திரிகை களுக்குக் கதவடைப்புச் செய்வதிலும், எங்கள் பத்திரிகைகளுக்கு அங்கு சந்தை ஏற்படுத்துவது நல்லது' என்பது அவர் கருத்து. பேச்சு, சுற்றிச் சுழன்று "மல்லிகை" விமர்சனத்திற்குத் தாவி யது. இதில் எவ்வித அக்கறையுங் காட்டாததைப் போல் "தூங்கி வழிந்து கொண்டிருந்த எஸ். பொ. ஒரு கட்டத்தில் திடீரென விழித்து ஜீவாவைச் சாட்சிக் கூண்டில் ஏற்றியதைப் போல் வைத்து, தன்னை நியாயவாதியாகக் கற்பித்துக் கொண்டு, சுவாரஸ்யமான ஒரு குறுக்கு விசாரணையை நிகழ்த்தினர்.
எஸ். பொ: "ஒரு தேசத்தின் மனச்சாட்சி, கோபாவேஷத்துடன் குமுறுகிறது" என ஒர் இதழில் தலையங்கம் எழுதப் பட்டிருக்கிறதே! “கோபாவேஷம்" என்பது பிழையான சொல். இது ஆசிரியரின் தமிழறிவின்மையைக் காட்டும்,
ஜீவா அது பிழையென்பதை நானும் அறிவேன். இதழ் அச்சுக்குப் போன பிறகுதான் இது தவறென்பது தெரிந்தது.
எஸ்.பொ: எழுதும்பொழுது இது தவருக இருந்தது என்பது ஜீவாவுக்குத் தெரியாதிருந்தது குற்றமில்லை. இருப்பி னும், ஓரளவு தமிழைச் சரியாக எழுத ஓர் ஆசிரியருக் குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஜீவா: இனி, இவ்வாறன தவறுகள் ஏற்படாமல் கவன மெடுக்கப்
படும்.
எஸ்.பொ. நன்றி. தமிழில் எழுந்த, ஐந்து தரமான நாவல்களுள், தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்" என்பதும் ஒன்று" என்பது என் கட்டித்த அபிப்பிராயம். இந்து சமயத் தத்துவங்களிலே தோய்ந்த, ஆசார சீலமான பிராமணக் குடும்பத்திலே பிறந்த, எழுத்து நடை நன்ருகக் கைவரப் பெற்ற, ஜானகிராமனைப் போன்ற ஒருவரி னலேதான் அத்தகைய ஒரு நாவலை எழுத முடியும். தன்னை ஒரு விமர்சகராக உயர்த்திக் கொள்ளும் அவதி

Page 33
64
யில், நுஃமான் அதனைத் 'திருட்டுக் கதை" என்று எழு தியிருப்பது, ஈழத்துச் சுவைஞர்களையெல்லாம் அவம திப்பது போன்றது. அந்தக் கட்டுரை, ஏன் "மல்லிகை" யிற் பிரசுரமானது?
ஜீவர: உண்மையில், அந்தக் கட்டுரை படு அயோக்கியத்தனமாது.
எஸ். பொ; அத்தகைய அயோக்கியத்தனமான கட்டுரை ஏன்
பிரசுரிக்கப்பட்டது?
ஜீவா இந்த நுஃமானின் கட்டுரை வந்தபோது, நான் ஏ. ஜே. கனகரட்ணுவிடங் காட்டி, ‘என்னப்பா, இந்தக் கட்டுரை இப்படியிருக்கிறதே?? " என்றபோது, அவர் "இதை இப் படியே போடுங்கள் இதற்கு மறுப்புக் கட்டுரை நான் எழுதித்தருகிறேன். ஒவ்வொரு வாதத்தையும் அக்கக்காகத் தகர்த்து எழுதித் தருகிறேன்.' என்ருர், ஆனபடியால் அந்த மறுப்பை அடுத்த இதழிற் போடுகிற உத்தேசத்து டன், இது பிரசுரிக்கப்பட்டது. எஸ்.பொ: ஏன், அந்தக் கட்டுரை அடுத்த இதழிலோ அதற்கும் அடுத்து வந்த இதழ்களிலோ பிரசுரிக்கப்படவில்லை? ஜீவா கனகரட்னவை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவர் சர்வ
தேசியச் சோம்பேறி என்று.
எஸ்.பொ: மறுப்புக் கட்டுரையைப் பிரசுரிக்க எண்ணியிருந்த நீர், ‘என் கட்டுரைக்கு எவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனவே, என் குற்றச்சாட்டுக்கள் சரியானவை” என்று சுயமார்பு தட்டி, நுஃமான் எழுதிய கடிதத்தை ஏன் மறுபடியும் பிரசுரித்தீர்? இவ்வாறு எழுந்த விவாதச் சூட்டினைத் தணித்து, "மல்லிகை" ஆசிரியருக்கு உதவுவது போல, "இளம்பிறை' ஆசிரியர், "என் பத் திரிகையில் சர்ச்சைக்குரிய கட்டுரையொன்றைப் பிரசுரிப்பதானல், அதற்கான பதிலையுந் தயாராக வைத்துக் கொண்டுதான் பிரசுரிப் பேன்" என்று கூறி, பிரச்சினையை வேறு திசைக்கு மாற்ற முயன்ற போது,
'இவ்வளவு உணர்ச்சியுடன் நுஃமானின் கருத்துக்களை மறுக் கும் எஸ். பொ. தானே ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதியிருக் கலாமே?’ என்ற கேள்வி சிலரால் எழுப்பப்பட்டது.
எஸ்.பொ: என் மறுப்புக் கட்டுரைக்கு ஏற்ற அரங்கம் " Loguaiaos'
பத்திரிகையல்ல. மூன்று மணித்தியாலங்களுக்கும் மேல் நடைபெற்ற இச் சந் திப்பு, மிக விறுவிறுப்பாயிருந்தது.
女

1968 ஆம் ஆண்டில், சென்னையிலே கோலாகலமாக நடத் தப்பட்ட இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலே தமிழக முஸ்லிம் புலவர்கள் தமிழுக்குச் செய்துள்ள அளப்பரிய பங்களிப்பினைப் பிரகாசமிட்டுக் காட்ட வேண்டும் என்ற அக்கறை அல்ஹாஜ் தை. அ செ. அப்துல் காதரின் உள்ளத்தில் சுடர் விட்டது. இஃது அவர் தமிழ்மீது கொண்டுள்ள அபிமானத்தின் முனைப்பே என்று கூறினும் பொருந்தும்.
தமிழ் செய்து, தமிழ் வளர்த்த செந்நாப் புலவர்களைக் கெளர விக்கும் முகமாக சென்னை மெரிஞக் கடற்கரையிலே உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டினை ஒட்டிச் சிலைகள் நிலைநாட்டப்படல் வேண் டும் என்ற கோரிக்கை தமிழறிஞர் மந்தியிலே எழலாயிற்று.
அப்பொழுது, சீரு பாடிய உமறுப் புலவர், சதாவதானி செய்குதம்பிப் பாவலர், ஆசாரக் கோவை அப்துல் மஜீது புலவர், தமிழ் வளர்க்க வாரி வழங்கிய வள்ளல் சீதக்காதி போன்ற முஸ் லிம் பெருந்தகைகளுக்கு எந்த வகையிலே நினைவுச் சின்னம் நாட் டலாம் என்ற சிந்தனேயிலே தை. அ. மூழ்கிக் காரியமாற்றத் தொடங்கினுர்,
சிலை வைப்பது என்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணுனது எனவே, ஒரு ஞாபக ஸ்தூபி ஒன்றினை நிறுவி, தமிழ் செய்த முஸ் லிம் சான்றேர்களின் பெயர்களைப் பொறித்தல் பொருத்தமானது என முடிவு செய்யப்பட்டது. இத்தகைய ஒரு ஸ்தூபியை நிறுவ ரூ 25,000 செலவாகுமென கட்டடக்கலை நிபுணர்கள் மதிப்பிட் டார்கள், இந்தத் தொகையை நால்வரிடம் மட்டுமே வசூலிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்த தை. அ. அவர்கள், ஆ. மு. யாசீன், எல். கே. எஸ் ஜுவலர்ஸ், "சங்கு அபூபக்கர் ஆகிய மூவரையும் அணுகினர். அவர்களுடைய சம்மதம் கிடைக்கவே நான்காவது நன்கொடையாளராகத் தம்மையும் இணைத்து நிதி வசூலிப்பினைத் தை. அ. கனகச்சிதமாகச் செய்து முடித்தார்.
இ-9

Page 34
66
இந்த ஞாபக ஸ்தூபியை நிறுவும் விடயங்களைக் கவனிப்பதற்கு, பேராசிரியர் அப்துல் கபூர், அப்துல் வஹாப் M. A., B. Th., காதர் முஹிதீன் மரைக்காயர், யூசுப் பாகவி, 'மதனீ ஆகிய முஸ் லிம் கல்விமான்களும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றிலே கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது தை. அ செ. அப்துல் காதருடன், அப் பொழுது சென்னை மேயராக இருந்த டாக்டர் ஹபீபுல்லா பேக், கே. பி. செய்கு தம்பி, முன்னுள் மேயர் அப்துல் காதர், நாகூர் மீரான் M. C. ஆகியோரையும் உறுப்பினராகக் கொண்ட ஐவர் கமிட்டியாக அது நிறுவப்பட்டது.
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த மாதமே நிகழ இருந்ததினல், சுத்தமாக 28 நாள்களே கமிட்டி இயங்குவதற்கும், ஸ்தூபி நிறுவப் படுவதற்கும் அவகாசமாகக் கிடைத்தது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, சுறுசுறுப்பாக இயங்க வேண்டி இருந்தது.
அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணு துரை அவர்கள் இடைக்காலத் தேர்தலுக்காகச் சங்ககிரித் தொகு தியில் முகாமிட்டிருந்தார். சங்ககிரி சென்னையிலிருந்து சுமார் 300 மைல் தூரத்தில் இருக்கிறது. இந்தத் தூரத்தையும் பாராட் டாமல், இரவோடு இரவாகக் காரிலே சென்று, அண்ணுவைச் சந்தித்து நேரடியாக அனுமதி பெறுவதற்கு தை. அ. முன்னின்று உழைத்தார். பின்னர், சென்னை திரும்பியதும் மாநாட்டுச் செய லாளராகப் பணியாற்றிய பெருமாள் முதலியார், அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணநிதி ஆகியோருடனும் தொடர்பு கொண்டு அலுவல்களை முடுக்கி வைத்தார்.
ஆணுல், இவ்வளவு கரிசனையாகத் தை. அ. செயலாற்றியும் மேற்படி ஸ்தூபி நிறுவப்படவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகராகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள ஆ. கா. அப்துஸ் ஸ்மது தாம் ஸ்தூபி அமைப்புக் கமிட்டியில் அங்கம் வகிக்காத காரணத்தினல் முட்டுக்கட்டைகள் பல போட்டு இந்த நற்பணி நிறைவுரு மலிருப்பதற்கு உழைத்தார் என்று விஷயம் அறிந்த வட் டாரங்களிலே இன்றளவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
மூன்ருவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பாரிஸ் மாநகரில் 1970 ஆம் ஆண்டின் மே மாதம் நடைபெற்றது. அம்மாநாட்டிற் கலந்து கொள்ள ஈழத்து அறிஞர், மூவர் அழைக்கப்பட்டிருந் தார்கள். அவர்களுள் ஒருவர் முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியின் கூட்டணியிலுள்ள யூனியன் முஸ்லிம் லீக்கினுல், தமிழக முஸ்லிம் அறிஞர் ஒருவரை மேற்படி மாநாட்டிற்கு அனுப்பி வைக்க முடியாமற் போனது வெட்கக்கேடானதாகும்.

ஈழ வள. நாடும்
தை. அ. செ. வும்
ஈழநாடு அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் அவர்களுக்கு இரண்டாவது பிறந்தகமாக விளங்கியது. முதன் முதலாக அவர் 1940 ஆம் ஆண்டு ஈழத்துக்கு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை மூன்று தசாப்த காலமாக அவருக்கும் ஈழநாட்டு மக்களுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர் மக்களிடமிருந்து பிரிந்து வாழாது, ஈழத்து மக்களுடைய கலைஇலக்கிய-சமுதாய-மார்க்க நலன்களிலும் மிகுந்த அக்கறை செலுத் தினர். இதனுல், அவர் ஈழநாட்டில் பல்வேறு தளங்களிலே வாழும் மக்களுடைய ஏகோபித்த அன்பிற்குப் பாத்திரமானர்.
ஆரம்பத்தில் மார்க்க விடயங்களிலே காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் காலஞ் செல்லச் செல்ல கலை-இலக்கியப் பணி களுக்கு விரிவுபடுத்திக் கொண்டார். கலை- இலக்கியப் பணிகளிலே முஸ்லிம்கள் என்றும் தமிழர்கள் என்றும் பிரித்துப் பார்க்காத ஒரு பரந்த நோக்கினை அவர் கையாண்டார். இதன் காரணமாக ஈழம் வாழ் தமிழர்களுடைய அன்பினையும் நல்லெண்ணத்தையும் வெகுவாகச் சம்பாதித்துக் கொண்டார்.
பொங்கல் விழா, அண்ணு பிறந்த விழா, நாடக அரங்கேற்ற விழா, நூல் அரங்கேற்ற விழா ஆகிய தமிழர்கள் நடத்தும் விழாக் களுக்கு ஓர் அதிதியாகவும், பேச்சாளராகவும் தை. அ. அழைக் கப்படுதல் மரபாக அமையலாயிற்று. ஸாக்கிர் ஹசஸைன் பிறந்த தின விழாக்களிலேயும் அவர் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருக்கின்றர். அண்மையில், எகிப்திய ஜனதிபதி கமால் அப்துல் நாஸர் காலமானதைத் தொடர்ந்து, கொழும்பு நாராயண குரு மண்டபத்தில் பல்வேறு சங்கங்களினலும் கூட்டப் பெற்ற இரங்கற் கூட்டத்திற்கு அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஈழநாட் டின் நானுபகுதிகளிலும் நடைபெற்ற அதிகமான மீலாத் விழாக் களிலே உரையாற்றிய பேச்சாளர் என்ற பெருமை தை. அ. வையே சாரும
வெளிநாடுகளிலிருந்து ஈழம் வரும் மார்க்க அறிஞர்களையும், பிரசங்கிகளையும் உபசரிப்பதிலே அவர் எப்பொழுதும் முந்தி நிற்ப

Page 35
68
வர். இந்த விடயத்தில் அவர் குறுகிய கட்சிக் கண்ணுேட்டத்தினை என்றுமே பாராட்டிய்தில்லை. அவ்வாறே வெளிநாடுகளிலே இருந்து ஈழத்திற்கு வருகை தந்த அரசியல் தலைவர்களையும் வரவேற்று உப சரித்திருக்கின்ருர், காங்கிரஸ் பிரமுகரான கே. டி. ஜானகிராம் ஈழம் வந்திருந்த பொழுது அவரை உபசரித்தமை இதற்குச் சான்று. பாரத நாட்டின் மத்திய மந்திரியான தினேஷ் சிங் இலங்கை வந் திருந்தபொழுது தை. அ. பெரிய வரவேற்பு உபசாரம் ஒன்றினை அளித்தார். இந்த வரவேற்பு இலங்கை அரசின் செய்திப் படத் துறையினரால் படமாக்கப்பட்டுத் திரையிடப்பட்டது. அல்ஜீரியப் புரட்சித் தலைவர் பெர்ஹாத் அப்பாஸ் ஈழம் வந்திருந்திருந்த போது தை. அ. அவர்கள் அளித்த உபசாரமும் விசேடமாகக் குறிப்பிடத் தக்கது.
ஈழ நாட்டின் உள்ளூர் அரசியலில் அவர் என்றுமே ஈடுபாடு காட்டியதில்லை. ஈழத்து அரசியல் தலைவர்களை மதிக்கும் பண்பா ளராகத் திகழ்ந்தார். குறிப்பாக, அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைக்கப்பட்ட மக்கள் அர சாங்கத்தின் கீழ் முஸ்லிம்கள் அடைந்த துரித முன்னேற்றத்தை மனமாரப் பாராட்டினர். இதனைக் கெளரவித்தல் வேண்டும் என்ற எண்ணத்தினுல், 1959 ஆம் ஆண்டில் அவருக்கு தை. அ. அவர்கள் பொது வரவேற்பு ஒன்று அளித்து மகிழ்ந்தார். ஈழம் வாழ் முஸ் லிம்களின் உள்ளங்களிலே அவரும், அவருடைய பிதுரார்ஜிதமான அரசுகளும் செய்த நன்றியறிதலுக்குத் திருட்டாந்தமான உருவப் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த தை. அ. செ. அவர்கள் அவருடைய சிரார்த்த தினம் முஸ்லிம்கள் மத்தியிலே எவ்வாறு அனுஷ்டிக்கப்படுதல் உகந்தது என்ற முன்மாதிரியை வகுத்துக் கொடுத்தார். *
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எம். ஏ. அப்பாள் எழுதிய "கள்ளத்தோணி" என்ற நாவலை, கொழும்பு பிளவூள் ஹோட்டலில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் முன்னிலையில் வெளியிட்டு வைத்தார். ஹோட்டல் தப்ரபேனில் நடைபெற்ற அரசு வெளியீட்டு நிறுவனத்தினரின் பதினருவது நூல் வெளியீட்டு விழாவிலே தை. அ. வாழ்த்துரை வழங்கினர். மேற்படி விழாவிற்கு ஈழத்தின் முதல் சிவில் சேவையாளராகப் பணியாற்றிய கல்விமான் அல்ஹாஜ் எ. எம். எ. அஸிஸ் C.C.S. தலைமை தாங்க, அன்றைய தொழில்-வேலைவசதி அமைச்சர் அல்ஹாஜ் எம். எச். முஹம்மது வெளியீட்டுரை நிகழ்த்தினர் என்பதும், அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் மு. திருச்செல்வம் கலந்து கொள்ள, மாவட்ட நீதிபதி எம். எம். அப்துல் காதர் நூல் விமர்சனஞ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கன.

b
அரசு வெளியீடு நிறுவனத்தின் பதினருவது நூல் வெளியீட்டு விழா கொழும்பு - ஹோட்டல் தப்ரபேனில் நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்ட படம். விழாவிலே வெளியீட்டுரை நிகழ்த்திய அல்ஹாஜ் எம். எச். முகம்மது (தொழில் வேலே வசதி அமைச்சர்), தளபதி திருப்பூர் மொஹிதீன், சலேமை தாங்கிய அல்ஹாஜ் எ. எம். எ. அஸ்ரீஸ் (U. L. S, ஆசியுரை வழங்கிய தை அ செ அப்துல் காதர் ஆகியோர் அமர்ந்திருப்பதையும், மாவட்ட நீதிபதி அப்துல் காதர் நூல் விமர்சன உரை நிகழ்த்துவதையும் இங்கு காணலாம்.
அகில இலங்கை எம். ஜி. ஆர். ரசிகர் சங்கத்தின் ஆருவது ஆண்டு விழாவிலே படத்தயாரிப்பாளர் ஜி. நாராயணசாமி அவர்கள் உரை யாற்றிக் கொண்டிருப்பலையும், தை. அ. அவர்கள் அருகில் அமர்ந்திருப்பதையும் இப்படத்தில் காணலாம்.

Page 36
70
அவர் ஆசியுரை வழங்கிய பிறிதொரு நூலின் அரங்கேற்ற விழா ஹோட்டல் நிப்பனில் நடைபெற்றது. தாழையடி சபாரத் தினத்தினுல் எழுதப்பட்ட "புது வாழ்வு" என்னும் மேற்படி நூலுக் குச் சென்ற ஆண்டிற்கான பூரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1970 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 31 ஆம் நாள், டாக்டர் ஆ. சதாசிவம் (இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) அவர்களின் "ஞானப் பள்ளு, வித்துவான் F. X. C. நடராஜா (தன் மொழித் திணைக்கள அத்தியட்சகர்) அவர்களின் "ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு', ஏ. ஜே. கனகரத்ன (ஆசிரியர்: Cooperator) அவர் களின் 'மத்து’, ஜனப் எச்.எம்.பி. முஹிதீன் (உறுப்பினர், இலங்கை வானெலி அதிகார சபை) அவர்களின் "அவாந்தி கதைகள்", ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர் களின் "எஸ்.பொ. அறிக்கை" என்ற ஐந்து நூல்களின் வெளியீட்டு விழாவை இளம்பிறை இலக்கிய வட்டத்தினர் கொழும்பு ஹோட் டல் சமுத்ராவில் நடத்தினர்கள். கலாசார அமைச்சர் எஸ் எஸ். குலத்திலக்கா, தகவல்- ஒலிப்பரப்பு அமைச்சர் ஆர். எஸ். பெரெரா, தபால்-தந்தித் தொடர்பு அமைச்சர் செ. குமார சூரி யர் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்திய இந்த விழாவிற்குப் பேரா சிரியர் ஏ. டபிள்யூ. மயில்வாகனம் தலைமை தாங்கினர். இவ்விழா விலே தை. அ. செய்யிது அப்துல் காதர் அவர்கள் அமைச்சர் ஆர். எஸ். பெரெராவிடமிருந்து முதற் பிரதி வாங்கிச் சிறப்பித்தார் என் பதும், இந்நிகழ்ச்சி இலங்கை அரசின் செய்தித்துறைப் படமாக வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. 1969 ஆம் ஆண் டில் நுண்கலைச் செல்வர் அ. இராகவன் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்த பொழுது அவருக்கு கொழும்பு மரின ஹோட்டலில் விருந்துபசார வரவேற்பு ஒன்றினைத் தை. அ. நடத்தி, எழுத்தா ளரின் இனிய சந்திப்புக்கு வழி சமைத்தார்.
தை. அ. அவர்களின் ஆதரவில் இலங்கையிலே வளர்ச்சியுற்ற நாடக மன்றங்கள் ஏராளம். அவர் தலைமையிலே நடந்த நாடக அரங்கேற்றங்களும் பல. தொகுத்துக் கூறினல் விரியும் என அஞ் சித் தவிர்க்கின்ருேம்.
மார்க்கத் துறையிலே பணிகளும் நன்கொடைகளும் ஏராள மாகத் தை. அ. அவர்கள் செய்திருந்த போதிலும், ஈழத்திலே அவர் இயற்றியுள்ள சமுதாயப் பணி ஒன்றினை இங்கு சுட்டிக் காட்டாவிட்டால், அவரைப் பற்றிய இந்த வாழ்க்கைக் குறிப்புப் பூரணத்துவம் அடையமாட்டாது. ஏருவூரில், அவரை ஆயுட் போஷகராகக் கொண்டு இஷா-அத்துல் இஸ்லாம் இயங்கி வருகின் றது. இந்தச் சங்கத்தினைக் கட்டி எழுப்புவதற்காக அவர் கடந்த

71
ஆறு ஆண்டுகளுக்கிடையில் அநேக தடவைகள் ஏருவூருக்கும் கொழும்பிற்குமாகப் பயணஞ் செய்துள்ளார். ஏருவூரிலே அமைந் துள்ள இஷா-அத்துல் இஸ்லாம் என்ற சங்கத்தைக் கட்டி வளர்ப் பதிலே அவர் காட்டிய பேரார்வத்தினுல், அவரை ஏருவூர் வாசி எனக் கருதியவர்களும் உளர். ‘ஏருவூர் பிரமுகர் தை அ செய்யது அப்துல் காதர்' என்று ஈழத் தினசரிகள் எழுதியமை இக்கூற்றினை நிறுவும். இந்த இயக்கத்திற்கு நிலையான நினைவுச் சின்னமாக, சங் கத்திற்கே சொந்தமான கட்டடம் ஒன்றினையும் அமைக்க இவர் வழிசெய்தார். இதற்காக ஏருவூர் வாழ் முஸ்லிம் மக்கள் சகலருமே தை. அ. வுக்குக் கடமைப்பட்டிருக்கின்ருர்கள் என்று கூறின் மிகை turrassrgil.
"மலையின் அடிவாரம் புழுதியிலே இருக்கின்றது. அதன் சிகரம் முகில்களுடன் குலவுகின்றது" என்ற ஓர் ஆங்கிலக் கவியின் உவமை அல்ஹாஜ் தை. அ.செ. அப்துல் காதர் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானது.
ஒரு தடவை, 1967 ஆம் ஆண்டில், இலங்கையில் டாக்டர் பீம்சென் சச்சார் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய பொழுது, அவரைத் தை. அ. அவர்கள் பேட்டி கண்டு, இலங்கை வாழ் இந் தியர்கள் அடையும் துயர வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி, அவர் களுக்கு விமோசனம் கிடைக்க வழி செய்தார்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில், அமைச்சர் மு. திருச்செல்வம் அவர் களின் முன்னிலையில், "இந்நாட்டிலே சம்பாதிக்கும் இந்தியத் தோழர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள் விடுக்க விரும்புகின் றேன். இந்திய நாட்டிலே மட்டும் பக்தி செலுத்துவதுடன் நின்று விடாதீர்கள். பிழைக்கும் நாட்டின் அபிவிருத்தியிலும் அக்கறை காட்டுங்கள்’ என்று உருக்கமாகப் பேசினர்.
இவ்வாறு ராஜதந்திரிகளுடனும், அமைசர்களுடனும் பழகும் அதே சமயத்தில், பாமர ரஸிகர்களுடனும் வெகு சரளமாகப் பழகும் இனிய சுபாயம் தை. அ ஷக்கு உண்டு. இதன் காரணமாக அவர் எம். ஜி. ஆர். மன்றங்கள், லிம்போ நடனக் கழகம் ஆகிய வற்றிற்கும் ஆதரவு அளித்துள்ளார்.
இவ்வாறு மக்கள் தொகையின் சகல தரத்தினருடனும் ஈழ நாட்டில் பழகித் தமது நண்பர் கூட்டத்தையும், செல்வாக்கினையும் வளர்த்துள்ளார். இவ்வாறு பல தரத்தினர் மத்தியிலேயும் தீம் முடைய செல்வாக்கினை வளர்த்துக் கொண்ட இந்திய வம்சாவழி வர்த்தகப் பிரமுகர் பிறிதொருவர் இலர் எனத் துணிந்து கூறலாம்.

Page 37
அரசு வெளியீடு
நூல் அரங்கேற்றம்
கொழும்பு ஹோட்டல் சமுத்ராவில் 31-10-1970 இல் நடைபெற்ற அரசு வெளியீடு ஐந்து நூல்கள் அரங்கேற்ற விழாவில் அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் கலந்து கொண்டு "அவாந்தி கதைகள்’ என்னும் நூலினுக்கு அறி முகவுரை நிகழ்த்தினர். அந்நூலினை வெளியிட்டு வைத்த மாண்புமிகு தகவல்-ஒலிப்பரப்பு அமைச்சர் இடக் கோடி யில் வாசிப்பில் ஆழ்ந்துள்ளார் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு" என்னுந் நூலின் முதற் பிரதியை மாண்புமிகு கலாசார அமைச்சர் எஸ்.எஸ். குலத்திலக்காவிடமிருந்து தை. அ. பெறுகின்றர். 70-ம் பக்கத்தில் அமைச்சர் ஆர். எஸ். பெரேராவிடமிருந்து நூல் வாங்குவதாக அச்சாகி யுள்ளது தவருகும் விழாத் தலைவர் பேராசிரியர் ஏ.டபிள்யூ. மயில்வாகனத்துக்கு அடுத்து, அமைச்சர் குமாரசூரியரும், பாராளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜாவும் அமர்ந் துள்ளனர்
 

இத்தகைய ஒரு சமுதாயத் தொண்டருடைய குடும்ப பாரம் பரியத்தை அறிய விருப்பப்படுதல் இயல்பான ஒன்ருகும்.
மார்க்க சேவையைத் தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் பெளத்திரனுகவும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் லெப்பை அவர்களின் பேரணுகவும், அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் பிறந்தனர். இவருடைய தந்தையார் பெயர் தை. அப்துல் ஹமீது ஆலிம் என்பதாகும்.
அப்துல் ஹமீது ஆலிம் அவர்கள் பல தைக்காக்களே (மதரஸாக் களை)க் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்ததின் காரணமாக அவர் * தையன்ன’ என்றும் "தைக்கா" என்றும் சிறப்பாக அழைக்கப் பட்டார். அவருடைய குடும்பம் தைக்கா குடும்பம் என அழைக் கப்படுகின்றது. ‘தைக்கா’ என்ற எழுத்து இன்னும் அவர்தம் மரபிலே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அப்துல் ஹமீது ஆலிம் மார்க்க சேவைகளை இயற்றியதுடன், வாணிபத் துறையிலும் ஊக் கத்துடன் உழைக்கலானர். இராமநாதபுரம் மகாராஜா சேதுபதி அவர்களிடம் தர்காஸ் (குத்தகை) எடுத்து நெல் வியாபாரத்தைப் பெரிதாகச் செய்து வந்திருக்கின்றர். அத்துடன், ஈழநாட்டிலும் தமது வாணிபத்தினை விஸ்தரித்தார். கொழும்பு. குருணுகல் ஆசிய இரு மாநகரங்களிலும் அவர் ஜவுளிக் கடைகளையும் செல்வனே நடத்தினர். அவர் சித்தி பாத்தும்மா என்னும் இனியவரை வதுவை செய்தனர். அவர்களுக்கு நான்கு புத்திரர்களும், ஒரு புதல்வியும் பிறந்தனர். அவர்களுள் கனிஷ்ட புத்திரரான தை. அ. செ. அப்துல் காதர் அவர்கள், கீழக்கரையில் 1924 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 10 ஆம் நாளன்று பிறந்தார். அப்துல் ஹமீது ஆலிம் தம்பதிகளின் மூத்த புத்திரருக்கு அப்துல் ஜப்பார் சாஹிப் என்பது பெயர். அவர் பல்லாக்கு ஒலி நாகயம் அவர்களின் மருமகளை வதுவை செய்துள் ளார். அடுத்தவரான அப்துல் ஹலீம் சாஹிப், அஹமது ஜலாலுத் தீன் அவர்களின் மகளை வதுவை செய்துள்ளார். மூன்ருவது மகனுன அஹ்மது முகைய தீன் வள்ளல் எனப் பெயர் பெற்ற வாப்பா சாஹிபு மரைக்காயரின் மகளைத் திருமணஞ் செய்துள்ளார். கனிஷ்ட புத்திரனன அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் "ஆத்மஞானி" எனப் பெயர் பெற்ற செய்யிது அஹ்மது கபீர் ஆலிம் அவர்களின்
g) 10

Page 38
74
சகோதரரான ஜஃபர் சாதிக் ஆலிம் அவர்களின் மகளாரான ஜெய்னம்புவை வதுவை செய்துள்ளார்.
தை. அ. வின் ஒரேயொரு சகோதரியான கதீஜத் s' சஹதியா பீவி அவர்கள் கீழக்கரையில் ‘வியாபாரத்தின் மேதை" எனப் பெய ருடன் திகழும் முஹம்மது இத்ரீஸ் அவர்களுக்கு வதுவை செய்து வைக்கப்பட்டனர். கீழக்கரையிலிருந்து முதன் முதலாக வியாபார நிமித்தம் அமெரிக்காவுக்குச் சென்று புகழ் நாட்டியவர் இத்ரீஸ் சாஹிபு என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் தம்பதிகளுக்கு மூன்று புத்திரர்களும், ஒரு புதல்வியும், உள்ளனர்.
. தை. அ. வும வணிகத் துறையும் ! س س س – – – – – – – – أ
6 Tணிபத் துறையில் நாட்டம் கொண்டு 1940 ஆம் ஆண்டில் ஈழநாட்டிற்கு வந்த தை. அ. செ. அப்துல் காதர் முதன் முதலில் மாணிக்கக் கல் வியாபாரத்தில் ஈடுபடலானுர். இத்துறையிலே ஆறு ஆண்டுகள் அநுபவம் பெற்ற பிறகு, சங்கு வியாபாரத்திலும் ஈடு படலானர். சங்குத் தொழிலிலே ஐந்து ஆண்டுகள் அநுபவம் பெற்ற பின்னர் தமது வாணிப முயற்சியை முத்து வியாபாரத் திற்கும் விஸ்தரித்தார். இலங்கையில் சிலாபத்துறையிலும், தமிழ கத்தில் தூத்துக்குடியிலும், குத்தகைகளை எடுத்துப் பல ஆட்களை வைத்துப் பெரும் அளவிலே நடத்தினர். 4M
பலருக்கு நிரந்தரமான தொழில் கொடுக்கும் வாய்ப்புள்ள தொழில் ஒன்றினைத் தொடங்க வேண்டுமென்று எண்ணினர். மாணிக்கம்-சங்கு-முத்து ஆகிய வணிகத் துறைகளுடன் எத்தகைய தொடர்புமற்ற அச்சகத் தொழிலிலே ஈடுபடத் துணிந்தார் அவர் பிறந்த ஊரான கீழக்கரையில் 1961 ஆம் ஆண்டில் TAS அச்சகம் என்ற பெயரில் ஓர் அழுத்தகத்தை நிறுவினர். இவ்வாறு அச்சுத் தொழிலில் ஒரு ஆண்டு அநுபவம் பெற்ற பின்னர், தமிழ கத்தின் தலைநகரான சென்னையில் இதே பெயருடன் மற்றும் ஒரு அச்சகத்தை ஆரம்பித்தார் இவ்விரண்டு ஸ்தாபனங்களும் பலருக்கு நிரந்தர வேலை கொடுக்க வேண்டும் என்ற அவருடைய ஆவலைப் பூர்த்தி செய்து, இன்றுவரை சிறப்பாக இயங்கி வருகின்றன,

ം m- ബി hm − ബl m - ബ
வெள்ளி விழாவும்
தை. அ. வும்
1970 ஆம் ஆண்டில் பூரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான கூட்டு முன்னணி அரசாங்கம் பதவியேற்றதும், தல வர்த்தகத்தையும் தேசிய மயமாக்கும் கொள்கையைத் தீவிர மாக அமும் நடத்தவும், வணிகத் துறையில் அரசாங்கத்தின் ஆதிக் கத்தை நிலைநாட்டவும் விழைந்து, மாணிக்கக் கல் வியாபாரத்தினை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் மாணிக்கக் கல் கூட்டுத் தாபனம் ஒன்றினை நிறுவுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள் ளது. முதற்படியாக, மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக வாச பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கு விஸா நீடிப்பு வழங்குவதில்லை என்றும், அவர்கள் எல்லோரும் குறிப்பிட்ட ஒரு
இலங்கை தேசிய கலாநிலையத்தின் பத்தாண்டு நிறைவு விழா ஹோட்டல் நிப்போனில் நடைபெற்ற பொழுது தை. அ. தலைமையுரை நிகழ்த்துகின்ருர். ஹாஜி உஸ்மான் பைலா சிவா பிலிம்ஸ் உரிமையாளர் எஸ். என். சிவசுப்ர மணியம், நடிகர் ரவீந்திரன் தம்பதிகள், திருமதி கலச் செல்வன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.

Page 39
76
கால எல்லைக்குள் தாயகம் ஏகிவிடல் வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பிக்கலாயிற்று. இவ்வாறு அறிவிக்கையில், அல்ஹாஜ் தை அ. செ. அப்துல் காதர் அவர்களுக்கும் இத்தீவினை விட்டுப் போகும்படியான உத்தரவு தவிர்க்கமுடியாத வகையில் அனுப்பப் பட்டது. இதனைக் கேள்வியுற்ற பல்வேறு சங்கங்களும் தை. அ. செ. அப்துல் காதர் அவர்களின் விஸாவை நீடித்தல் வேண்டும் என்று பிரதம மந்திரிக்கு மகஜர்கள் அனுப்பி வைத்தன.
இளம்பிறை இலக்கிய வட்டத்தின் மகஜர்
அவ்வாறு அனுப்பப்பட்ட மகஜர்களுள் இளம்பிறை இலக்கிய வட்டம் ஆங்கிலத்தில் அனுப்பி வைத்த மகஜரின் தமிழாக்கம் கீழே தரப்படுகின்றது:
இளம்பிறை இலக்கிய வட்டம் 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு-13. 2, ஜனவரி, 1971.
மாண்புமிகு திருமதி பூரீமாவே பண்டாரநாயக்கா அவர்கள் மூதவைக் கட்டடம், கொழும்பு 1.
பிரதம மத்திரி அம்மையார்,
மி, அண்மிய எதிர்காலத்தில் இத் தீவினை விட்டு வெளி யேறும்படி அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் அவர்களுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருப்பதை அறிந்து நாம் மிகவும் கவலைப் படுகின்ருேம். அவர் இந்திய வம்சாவழியில் வந்த வர்த்தகராக மட்டுமல்லாமல், நமது சமுதாய வாழ்க்கைக்கு அருங்கொடையா கவும் விளங்குகின்ருர் என்ற உண்மையின் வெளிச்சத்திலே இந்தத் தீர்மானத்தினைப் புனராலோசனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளு கின்ருேம்.
மனித நலனுக்காக இயற்றப்படும் 6த்தனையோ சமூக சேவைத் திட்டங்களுடன் தம்மைப் பிணைத்துள்ள அக்கறையுள்ள சமுதாய ஊழியராக அவர் திகழுகின்றர். இவற்றின் பயன் பழங்களை இலங்கையின் பெரும்பாலான குடிமக்களே சுவைக்கின்றர்கள். விளையாட்டு, இலக்கியம், கலை, கலாசாரம், மார்க்கம் ஆகிய எந்த ஒரு தனிப்பட்ட துறைதானும் அவருடைய பங்களிப்புப் பெருது விடவில்லை. அத்தகைய தனித்துவமான பங்களிப்பு புகழப்படாம லும், பாராட்டப்படாமலும், இந்து சமுத்திரத்திற்குள்ளே தூக்கி எறியப்படலாகாது.

77
அவர் தமது வணிக நிறுவனங்களை மூடிவிட்டார். ஆனல், அவராலே ஆரம்பித்து வைக்கப்பட்ட சமுதாய-மார்க்கப் பணிகள் சில முழுமையடையாதிருக்கின்றன. எனவே, அவர் நம்மிடமிருந்து செல்வது அவருக்கு எத்தகைய தனிப்பட்ட இழப்பாகவும் அமைய மாட்டாது என்பதும், இலங்கை நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதி யினருக்கே அஃது இழப்பாக அமையும் என்பதும் துலாம்பரம்.
தமிழ் இலக்கிய மரபுகளைச் சிங்களைச் சுவைஞருக்கும், சிங்கள இலக்கிய மரபுகளைத் தமிழ்ச் சுவைஞருக்கும் அறிமுகப்படுத்து வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நமது இலக்கிய வட்டத்துடன் அவர் நீண்ட இனிய தொடர்பு பூண்டுள்ளார். நமது இலக்கிய வட்டத்தின் நடவடிக்கைகளுக்கு அவர் ஊற்ருகவும், உற்சாகமளிக்கும் கோபுரமாகவும் திகழ்ந்துள், ளார். ஒரே ஒரு உதாரணத்தைச் சுட்டுவதானல், ஹோட்டல் சமுத்திராவில் நடைபெற்ற நமது புத்தக வெளியீட்டு விழாவிலே மாண்புமிகு எஸ்.எஸ். குலத்திலக்கா, மாண்புமிகு ஆர். எஸ். பெரேரா, மாண்புமிகு செ. குமாரசூரியர் ஆகிய மூன்று அமைச் சர்கள் பங்குபற்றிய பொழுது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனித்தின் அதிகார சபை உறுப்பினரான எச். எம். பி. முஹிதீன் எழுதிய நூலின் முதலாவது பிரதியைத் தை. அ. செ. அப்துல் காதர் வாங்கிச் சிறப்பித்தார்.
இந்த உண்மைகளைக் கருத்திலே கொண்டு, அவர் இன்னும் கொஞ்ச காலம் நமது தீவிலே தங்கியிருக்கச் செய்வதற்குத் தாங் கள் உதவுதல் வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்ளுகின்ருேம்,
தங்கள் அன்புள்ள தங்கள் உண்மையுள்ள பற்றிலியா பெர்ணுண்டோ எம். ஏ. ரஹ்மான்
பொதுச் செயலாளர் பிரதம அமைப்பு நிர்வாகி
ஏனைய மகஜர்களை அனுப்பிய சங்கங்களின் விபரம்
அல்ஹாஜ் தை அ. செ. அப்துல் காதர் அவர்களின் விஸாவினை நீடித்தல் வேண்டும் என்று பின்வரும் சங்கங்களும் கெளரவ பிரதம மந்திரி பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு இதே தொனி யில் அமைந்துள்ள பல 0 5 ஜர்களை அனுப்பி வைத்துள்ளன. பிர முகர் சிலரும் அனுப்பியுள்ளார்கள். "இளம்பிறை அறிந்த அளவில் பின்வரும் சங்கங்களும், பிரமுகர்களும் மேற்படி மகஜர்களை அனுப்பி

Page 40
78
வைத்துள்ளன. சில நிறுவனங்கள் அனுப்பி வைத்த தகவல் நமக்குக் கிடைக்காத காரணத்தினுல் விடுபட்டும் போயிருக்கலாம். பட்டியல் இதோ:
இளம்பிறை இலக்கிய வட்டம் கொழும்பு
கிண்ணியா இலக்கிய வட்டம் 6sốT GOofu unr இஷா அத்துல் இஸ்லாம் வாலிபர் இயக்கம் ஏருவூர் இக்பால் சனசமூக நிலையம் வாழைச்சேனை மட்டக்களப்பு மாகாண ஆசிரியர் குழு மன்றம் மட்டக்களப்பு லைலத்துல் மிஃராஜ் சமூக சங்கம் கொழும்பு வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம் கொழும்பு
சமாதான சன்மார்க்க சபை கொழும்பு ஜலாலிய்யத்துல் காதிரிய்யா சங்கம் ஏருவூர் டைனமைட் ஸ்போர்ட்ஸ் கிளப் சம்மாந்துறை மேகலாலயா நாடக மன்றம் கொழும்பு இஸ்லாமிய சோஸலிஷ முன்னணி அக்கரைப்பற்று காலி இஸ்லாமிய கலாசார சங்கம் காலி ஏ. எஸ்.ஆர். பிலிம்ஸ் கொழும்பு வாலிப முஸ்லிம் இயக்கம் இப்பகமுவ திரு. வி. க. நினைவுப் பள்ளி கொழும்பு கொழும்பு கலைச் சங்கம் s கொழும்பு அல் மத்ரஸ்துல் அரபியா ரசூல் மெளலூது சங்கம் கொழும்பு கிழக்கிலங்கைப் புத்தக சபை மட்டக்களப்பு கே. நாகலிங்கம் ஜே. பி. கொழும்பு செ. இராசதுரை எம். பி. மட்டக்களப்பு
மேலே தரப்பட்டுள்ள சங்கங்கள் எத்தகைய பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ளன என்பதை மனத்திலே பதித்துக் கொண்டு, பட்டியலை மீண்டும் ஒரு தடவை பார்வையிட்டால், ஒர் உண்மை துலாம்பரமாகப் புலனுகும். ஈழத்தின் நானுபகுதிகளிலும் வாழும் மக்கள், அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் அவர்கள் ஈழ நாட்டின் சமுதாய வாழ்க்கையின் பல்லேறு துறைகளிலும் ஆற்றியுள்ள பணியை மக்கள் நன்றியறிதலுடன் நினைவு கூர்ந்துள் ளார்கள் என்பதுதான் அந்த உண்மை.

79
தனித்துவ வரலாறு
ஏனைய வம்சாவழி வர்த்தகர்கள் ஈழம் வந்தார்கள்; பொருள் சேர்த்தார்கள்; சென்ருர்கள். இந்து சமுத்திரத்திலே வீசிய காற்றினைப் போன்று அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துவிடும்.
ஆனல், அல்ஹாஜ் தை. அ. வின் வரலாறு தனித்துவமானது. ஏனையோன்ரப் போன்றே அவரும் ஈழம் வந்தார்; வணிகத்தில்ஈடுபட்டார்; பொருள் சேர்த்தார். அதில் கணிசமான ஒரு பகுதியை ஈழ நாட்டின் சமுதாய வாழ்க்கையின் அபிவிருத்திக்காகச் செலவு செய்வதின் மூலம், தனித்துவமானவராக உயர்ந்தார். இதனல், அவர் என்றும் ஈழ நாட்டின் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்களிலே வாழ்ந்து கொண்டிருப்பார். தை. அ. ஈழ நாடு வந்தார்; நம்முடன் நம்மவராக வாழ்ந்தார்; நமது நெஞ்சங்களை வென்ருர் என்ற தனித்துவ வரலாறு தை. அ. அவர்களுக்கு மட்டுமே உண்டு.
தொண்டர் திலகம் ஸாஹிபே மில்லத்
அவர் ஈழநாட்டுடன் முப்பது ஆண்டு காலம் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளார். இந்த முப்பது ஆண்டுகளிலே இரு பத்தைந்து ஆண்டு காலத்தை அவர் ஈழ நாட்டின் சமுதாய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்துள்ளார். இச்சிறப்பினைக் கொண்டாடு முகமாக இன்று (23 - 1 - 1971) ஹோட்டல் தப்ர பேனில் அவருடைய சமூக சேவை வெள்ளிவிழா கொண்டாடப் படுகின்றது. இளம்பிறை இலக்கிய வட்டம் ஒழுங்கு செய்யும், இந்த வெள்ளிவிழாவிற்குப் சிலாபம் மாவட்ட நிதிபதி ஜனுப் எம். ஏ. எம். ஹ"ஸைன் அவர்கள் தலைமை தாங்குகின்றர். அப் பொழுது, அனைத் திலங்கைத் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதிர் அவர்களுக்குத் *தொண்டர் திலகம்’ என்ற பட்டத்தினையும், இளம்பிறை இலக்கிய வட்டம் 'ஸ்ாஹிபே மில்லத்* என்ற பட்டத்தையும் நின்று நிலைத்து வழங்கும் வகையில் அளித்து மகிழ இருக்கின்றன.
தொண்டர் திலகமே! ஸாஹிபே மில்லத்தே! அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் அவர்களே! நீங்கள் ஈழநாட்டின் சமுதாயப் பணிகளிலே செய்துள்ள பங்களிப்பிற்கு இந்நாட்டு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கிருர்கள். நீங்கள் எங்கிருந் தாலும் நீண்ட ஆயுளும் ஓங்கு புகழும் பெற்று வாழவேண்டுமென மானசீகமாக ஆகீர்வதிக்கும் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்கள் ஈழ நாட்டிலே இருக்கின்றன என்ற உண்மையின் ஒளியினைத் தங்கள் நெஞ்சமெல்லாம் நிறைத்துச் செல்லுங்கள்.

Page 41
கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் 1971 ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 23 ம் நாளன்று அனைத்திலங்கைத் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு
அல்ஹாஜ் தை. அ. செ. அப்துல் காதர் அவர்களுக்கு அவர்தம் சமூகசேவை வெள்ளி விழாவின்போது மனமுவந்து சூட்டிய தொண்டர் திலகம் பட்டத்தினை உளமாரப் போற்றி வாசித்தளித்த பாராட்டுப்பா
வெண்பா தைக்கியா சாஹிபுச் சான்றேர் குலத்தினிலே மிக்க புகழ்பூத்த மேதகைமைத் - தக்காராம் செய்யிதப்துல் காதிரெனு ஞ தொண்டர் திலகமேவும் மெய்யுழைப்புக் கோடி பெறும்.
கட்டளைக் கலித்துறை உள்ளங் கனிந்தே உதவும் உயர்ந்த குணப்பெரியாய் தெள்ளித் தெளித்த அமுத மனைய திருவகத்தால்
அள்ளிச் சொரியும் இனிய மொழியும் அருள் உணர்வும் வெள்ளம் எனவே வழியும் தொடர்ந்து வழங்குகவே.
அறுசீர் விருத்தம்
செந்தமிழ் ஒம்பும் நா ட்டுக் தென்னகத் தலைஎ றிந்து பைந்தமிழ் அரபு பாடும் பதிழேக் கரை யாம் அங்கே வந்தனே க் குரிய தைக்கா சாஹிபு வழியில் வந்த சிந்தையால் உயர்ந்த அப்துல் ஹமீதாலிம் தந்தை யர்க்கும்
பூக்கநற் பண்பு கொண்டு புனிதமே அணியாய் என்றும் காதுத் நம் சமயம் போற்றிக் கனிந்த பாத் தும்மாத் தாய்க்கும் நேர்த்தியால் கிடைத்த செல்வம் நீர்செய்ய தப்துல் காதர் மூத்த நற் புகழில் ஓங்கி வளர்ந்தனை வள்ள லாக
கவிதை:
இத்தகைப் பண் பு சார்ந்த எழிற் செய்யி தப்துல் காதிர் முத்திரை யாகத் தொண்டர் திலகம் என்(று) அழைக்கும் இத்தினம் அனைத்தி லங்கைத் தமிழ்எழுத் தாளர் கூட்டம் நத்திய தினமே யாகும் நலமுற்று வாழ்க நன்றே
கொடையிலே வள்ள லாகி கொள்கையோ பொது ந லத்துக் கிடையிலே பொருத்தி வாழும் தொண்டர் கே நாக லிங்கம் அடையாளம் ஜே. பி. பட்டம் அவர் தொண்டர் திலகம் என்னும் உடைமையை பரிசுத் தட்டில் உதவுதல் பொருத்த மாமே.
மூத்துர்க் கவிராயர்
Edited and Printed by M. A. Rahman at Rainbow Printers & Published
by S. Solvendhan residing at
85/12a Wofendhal Street, Colombo-l3.
Hony. Associate Editor: S. Ponnuthurai

Compliments from
P.S. K. V PALLAK LEBBE & CO.
COO BO

Page 42
ILAMPIRAI - December 70 -
--
- Pri nited at Rainbow Printers,
 
 

агу 197|
G15TE PLED A5 i NEWSPAPER IN CEYLN
-ட
Wolfendha street, Colombo-3. . ܐ ܕ