கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1995.01-02

Page 1


Page 2

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய நாகரிகம்
"కాళిverభాజపాఖ్యాఖాrఖళాశాr="";
10 - 02 - 1995 இதழ்: 31
சமத்துவமும் சமாதானமும்
போரின் கொடுமைகளையும் பாதிப்புகளையும் உணர்ந்து கொண்ட மக்களிடம் சமாதானத்துக்கான ஆவல் எழுவது இயல்பு அதன் ஒரு வெளிப்பாடே அரசு முன் 3 வத் த சமாதானக் கே ஷமும் அதற்கு தெற்கில் அளிக்கப்பட்ட அங்கீகாரமுமாகும். தேர்தல் க லத்தில் உரத்து ஒலித்த சமாதானத்துக்கான குரல் இன்று வேகம் தளர்ந்து தாழ்ந்த குர்லில் ஒலிப்பது விந்தையல்ல.
ஜனநாயகத் தேர்தல்களின் பின் மக்கள் நலன் சார்ந்த கோ ரிக் கைகளுக்கு எப்பொழுதும் ஏற்பட்டு வரும் கதி இது தான். நூற்றாண்டு காலமாக ஆளும் வர்க்கத்தினரிடம் வளர்ந்து வந்த பேரினவாத உணர் வுகள் ஒரு தேர்தல் கால அலையுடன் ஓய்ந்துவிடப் போவதில்லை. இதனால் நிலையான சமாதானத்துக் கும், நியாயபான அரசியற் தீர்வுக்குமான குரல்கள் தொடர்ந்தும் வலுப்படுத்தட்பட வேண்டும்.
'நிலையம்  ைசமாதானமானது சகல மனிதப் பிற விகளுக்கும் நீதியும் மதிப்பு கொடுப்பதன் மூலமே கட்டியெழுப்பப்படுகிறது" என இலங்கைக்கு வருகை தந்த பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் தமது உரை யி ல் குறிப்பிட்டுருந்தது மிச ப் டெ சருத்தமானதாகும்.
தாயக பt 31

Page 3
ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் சமாதானம என்பது அவ் ஏற்றத் தாழ்வுகளை அங்கீ கரித்து உறுதிப்படுத்துவதாகவே அமையும். ஒடுக்கு முறையின் தன்மையை ஒடுக்கப்படுபவர்களே புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்துகொண்டும் எதிர்க்க வலு வற்று இணங்கிப் போகும் ஒரு நிலையில் ஏற்படும் சமாதானம் நீதியற்றதும் நிலையற்றதுமாகும். இத்த கைய சூழலில் விடுதலைக்கான எழுச்சிகள் - எழுவது என்றும் நியாயமானதே.--இவைகளைக் கருத்தில் வைத்து தமிழ் தேசிய இனம் விழிப்படைந்து ஒரு நீண்ட விடுதலைப்போராட்டத்தை நடாத்திய பின்னர் ஏற்படவுள்ள சமாதானம் இனச் சமத்துவத்தை அடிப் படையாகக் கொண்டதாக அமைவதன் மூலமே நிலைத்து நிற்க முடியும்.
மனிதர் உரிமையை மனிதர் மதிப்பதே மானுடத் தின் உயர்ந்த பண்பு எனலாம். இதன் அடிப்படையி லேயே இணக்கமான தீாவு எட்டப்பட வேண்டும் இனங் களின் எண்ணிக்கையையும் விகிதா சாரத்தையும் வைத்து உரிமைகளை நிறுத்து வழங்க முடியாது. எல்லோ ர்க் கும் உரிமையும் நல் வாழ்வும் அடிப்படை வாழ்க்கை வசதிகளுமி நிறைந்த ஒரு சமூக அமைப்பில் தான் ஏற்றத் தாழ்வுகளின் எல்லைகள் குறுகி அழிக்கப்பட்டு நிரந்தர சமாதானம் நிலவ வழி பிறக்கும்.
ஆசிரியர் குழு
ఆణివోసిపుచ్మా
அரசியலும் ஆராய்ச்சியும்
திஞ்சையில் நடந்த 8வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் ஈழத் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டமை ஒரு வரலாற்றுக் கறையாகும். இதற்கான கண்டனக் குரல்கள் தமி ழகத்தில் எழுந்த அளவிற்கு இங்கு எழாதது வருத்தத்திற் குரியதாகும். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை என்பது உண் மையே. ஆனால் அறிவியல் விஞ்ஞானம் கலை இலக்கியம் போன்ற துறைகளில் அதன் எல்லை மீறப்படும் பொழுது அவை பின்னடைகின்றன. இதுவே தஞ்சையிலும் நடைபெற்றுள்ளது. இத்தகைய மீறல்கள் எதிர்காலத்திலாவது தவிர்க்கப்படவேண் டும்

சமாதானப் புறாக்கள்
88 ஸ்வப்னா
சிமாதான தேவதையை அதிகாலையிற் சந்தித்தேன். வாடிய முகத்துடன் w உழவர்களின் அரிவாள்களிற் குருதி படிந்திருக்கக் கனடதாய்ச் சொன்னாள். உன் வெண் புறாக்களை அவர்களிடம் அனுப்புவாய் என ஆலோசனை சொன்னேன்.
அனுப்பினாள். தங்களிடமிருந்த சொற்பத் தானியத்திற் பகுதியைப் புறாக்களிடம் கொடுத்தார்கள். உங்கள் அரிவாள்களில் இக்குருதி எவரதெனப் புறாக்கள் கேட்டன. எங்கள் விளைச்சலைப் பறிக்க வந்த ஏவலர்களின் குருதிதான் என்றார்கள். அது முறையா தவறா என்று விவாதித்தவாறு புறாக்கள் மீண்டன. சமாதான தேவதையை முற்பகலிற் சந்தித்தேன். முகவாட்டம் மாறாமல் ஆதி வாசிகளின் கைக் கோடரிகளில் குருதி வழியக் கண்டதாய்ச் சொன்னாள். உன் வெண் புறாக்களை அங்கேயும் அனுப்புவாய் என ஆலோசனை சொன்னேன். கிண்டியெடுத்த கிழங்குகளைப் புறாக்களுடன் பகிர்ந தார்கள், உங்கள் கோடரிகளில் வழிவது எவரது குருதிவெனப் புறாக்கள் கேட்டன. எங்கள் மண்ணைப் பறிக்க வந்த மூர்க்கர்களது குருதிதான்என்றார்கள். அது நியாயமா இல்லையா என்று தர்க்கித்தவாறு புறாக்கள் மீண்டன. சமாதான தேவதையை நண்பகலிற் சந்தித்தேன். சோக மிகுதியுடன் - தொழிலாளர்களது கருவிகளிற் குருதி உறைந்திருக்கக் கண்டதாய்ச் சொன்னாள். உன் வெண்புறாக்களை அவரிடத்தும் அனுப்புவாய் என ஆலோசனை சொன்னேன்.
அனுப்பினாள். தங்கள் மதிய உணவுக்கான ரொட்டிகளில் புறாக்களுக்கு ஈந்தார்கள்.
தாயகம் 31

Page 4
தொழிற் கருவிகளிலும் குருதி ஏது என்று புறாக்கள் கேட்டன. எங்கள் உரிமைக்கான போராட்டத்தை
உடைக்க வந்த உலுத்தர்களின் குருதிதான் என்றார்கள். கருத்து வேறுபாட்டுடன் புறாக்கள் மீண்டன.
சமாதான தேவதையை அந்தியிற் சந்தித்தேன் துயர் மிகுந்த முகத்துடன் உலகமெல்லாம் போர் மூண்டு மண்ணெல்லாம் குருதி பாய்ந்தோடப் பார்த்ததாய்ச் சொன்னாள். படைவீரர்களிடம் உன் வெண் புறாக்களை அனுப்பிப்பார் என்றேன். தங்கள் தானியங்கித் துவக்குகளை ஒருகணம் நிறுத்தி இது நமக்குத் தொழில் எங்கள் எசமானர்களிடம் பேசுங்கள் என்றார்கள் துவக்குகள் மீண்டும் இயங்கின. புறாக்கள் எசமானர்களிடம் பறந்தன. நிலவுடைமையாளர்களுடனும் முதலாளிகளுடனும் முதலீட்டாளர்களுடனும் ஆயுத வியாபாரிகளுடனும் விருந்தோம்பிக் கொண்டிருந்த எசமானர்கள் புறாக்களுக்கும் மதுபானத்தை பரிமாறினர். சமாதான தேவதையை நள்ளிரவிற் சந்தித்தேன். அழுத முகத்துடன் என் புறாக்கள் இன்னும் வரவில்லை என்றாள். தேடிப் போ வோம் என்றேன். வெண்ணிலவை விளக்காக்கி இரவு முழுமைக்கும் நாலு திசை களிலும் நன்றாகத் தேடினோம். விடியும்வரை சமாதான தேவதைக்குத் துணையாக நான் இருந்தேன். விடியலில் ஒரு சிறுவனும் சிறுமியும் தாம் கண்டெடுத்த வெண் சிறகுகளைச் சமாதான தேவதையிடம் நீட்டினர். சுவர்களின் பின்னால் எசமானர்களின் நாய்கள் புறா எலும்புகளை சுவைத்தன.
சமாதான தேவதை என்னிடம் அந்தக் காலைப் பொழுதில் ஒரு போர்வாளைத் தந்த்ாள். ★
h frust 31

இலையான்கள் இவ்வளவு எண்ணிக்கையில் மொய்த்துப் பிடித்ததை முத்து அவனது வாழ்நாளில் ஒரு பொழுதும் காணவில்லை. அதுவும் இரைச் சலற்று அங்குமிங்குப் பறந்த மர்ந்து ஊரும் ஒரு சில இலை யான்களைக் கண்டாலே வெறுப் பும் அருவருப்பும் அ4டைய ஆரம் பித்திருந்த அவனுக்கு, அந்தச் சூழல் பெரும் சினத்தை ஏற்ப டு கதியது. அந்த வேலையை விட்டே ஓடிவிடலாமா என அவன் நினைத்தான்.
தேரம் மதிய வேளையைத் தாண்டிவிட்டது. அப்பொழுது தான் கிளாலிக் கடற்கரையிலி ருந்து தரையை நோக்கி வெட் டப்பட்ட அந்த நீளமான அகன்ற வாய்ச் கால்களில் வரிசையாக நிறுத் தி வைக்கப்பட்டிருந்த தோணிகளுக்கு விறகுகளை ஏற் றிவிட்டு மதிய உணவிற்காக அவர்கள் வந்திருந்தனர். இது வரை சமையலுக்குப் பொறுப் பாக இருந்த இருவருடன், அந்த வ்ாய்ச்காலிலிருந்து சற் றுத் தூரத்தில் அமைந்திருந்த வாடிக் கொட்டில், நாற்பதுக்கும் மேற் பட்ட தொழிலாளர்களின் வரு கையால் சந்தைக் கூட்டமாக சலசலத்தது. கொதிக்கும் வெயி
3 T ug. h. 31
லையும் பொருட்படுத்தாது,
: Լմf7-Ա. t D : 668 . விறகுக் குற்றிகளை
தொலைவில் நின்ற தோணிக ளுக்கு எறும்புகளைப் போல தனித் தனியாகவும். கூட்டாகவும் தூக்கியும் இழுத்தும் வ ந்த களைப்பும் சோர்வும் அவர் * 6: g வயிற்றுப் பசியை மேலும அதி கரிக்க விTடிக்கு வெளியே இருந்த பிளாஸ்ரிக் பெரலைச் சரித்து கைகளை மட்டும் கழுவிவிட்டு அவர்கள் P. Git GG 6r வந்தி (莎应岛GTrf。
உணவு உண்பதற்கான 9/6) firகளின் அவசரத்தை அவர்களது 260DT t r ii) சத்தங்களும், کی WH5 னையும் மீறிக் கேட்,ம் وهى عنه L( னியக் கோப்பைகளின் 2- préF6; சத்தங்களும் வெளிபபடுத்தின. தமக்குரிய உணவை பெற்றுக் கொண்டு, கோப்டையைச் சுற் றிப் பறக்கும் இலையான்களைக் கலைத் தபடி ஒவ்வெ ாருவரும் தாம் நெருங்கிப் கிழகும் நண்பர் களுடன் சிறு சிறு (குழுக்களாக அங்குமிங்கும் தரையில் egy Lofj. கின்றனர்.
அவர்களது உ. வில் ஊறிக் காய்ந்த வியர்வையின் GBq. ஒவ்வொருவரிலும் வீசியது. மீண் டும் வேலையைத் தொடங்கும்

Page 5
அவசரத்தில் வந்தமர்ந்த அவர் களது கால்சளில் கடற்கரைச் சேறு அப்பிக் கிடந்தது. விறகு கள் குத்திக் கிளித்த சேட்டுகளுக் கூடாக பலரது முதுகுகள், ம77 புகள் வெளித் தெரிந்தன. சில ரது உடல்களில் ஏற்பட்ட காயங் களிலிருந்து இரத்தம் ஊறிக் கசிந்து கொண்டிருந்தது. புதிய புண்களிலும், பழைய புண்களி லும் மொய்த்த இலையான்கள் அவர்களது உணவுக் கோப்பை களிலும் வந்த அமர்ந்தன. அக் காட்சியைக் கண்ட அருவருப்பு டன் உணவுக் கோப்பையில் மொய்த்த இலையான் கலள சோற்றுக் கையால் வீசிக் கலைத் துவிட்டு, ஒரு கவளம் சோற்றை அள்ளி வாய்க்குள் போடுவதற் கிடையில் மீண்டும் இலையான கள் மொய்த்துக்கொண்டன.
இ சனியனுகள் சாப்பிட வும் விடுகு தில்லை”*
உணவுக் கோப்பையையும் தூக்கிக் கொண்டு, அதனைச் சுற்றிப் பறந்து தொடர்ந்த இலையான்களைக் கையால் வீசிக் கலைத்தபடி அந்த வாடிக் கொட்டிலை விட்டு வெளியேறி னான் முத்து.
"முத்து . 6Tš6)as u போறாய்? . டேய் நில்லடா ஃபான் போட்டு விடுறம். டேய் ராசன் உ ந் த ச் சுவிச்சைப் போட்டுவிடடா"
"வாய்க்குள் உணவை வைத் துக் கொண்டே வாடிக் கொட்
டிலுக்குள் அமர்ந்திருந்த ஒரு ன் அடைத்த குரலில் கத்தினான்.
* 'Loaailar t uG) p un .8a; as ... பகிடி விடுறிர் என்ன?”
வாய்க்குள் அவசரமாக எறிந்த சோற்றைச் சப்பியபடி ஆத்திரத்துடன் திரும்பிய அவன் தூசன வார்த் ை4 யையும் சேர் த்து உரத்துப் பேசிவிட்டு கொட் டிலுக்கு வெளியே உள்ள மரக்
குற்றியில் வந்து அமர்ந்தான். அந்த த் தொழிலாளர்களின் உரையாடல்களில் அ ப் படி ப்
பட்ட வார்த்தைகள் சர்வசாதா ரணமானவை தான். எனினும் முத்துவின் வாயிலிருந்து அப்ப டிப்பட்ட வார்த்தைகள் எளிதில் வருவதில்லை எப்பொழுதாவது வந்தால், எல்லை மீறிய கோப மும், அதனைத் தொடர்ந்து ஏதாவது விபரீதமும் நடக்கும் என்பது அவனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிந் திருந்தது.
*டேய் அவனோடை கொழு
வா தேங்கோடா - )لكن قا لـ ق கரைச்சலாப்போம்"
கொட்டிலுக்குள் இருந்து
ஒரு குரல் எச்சரித்தது. அந்தக் குரல் எச்சரித்தது போலவே அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் அவனை ஒரு முராைகவே பார்த்தார்கள். ஆனா லும் திரைப்படத்தில் வருவது போல முறுக்கு மீசையும் , உரு ண்ட கண்களும் உடைய பட்டி கட்டிய முரடன் அல்ல. அப்
தாயகம் 3.

பொழுதுதான் அவனுக்கு மீசை கறுக்கத் சிறு வயதில் வகுப்பு ஆசிரியர், மாணவர்களின் முன் வைத்து அவனைக் கேலி செய்தது பிடிக் காததால், பள்ளிக்குப் போக மறுத்த அவன், இன்னும் எழுத வாசிக்கத் தெரியாதவனாகவே இருந்தான். உடல் மட்டும் சிறு வயதிலிருந்தே உழைப்பில் ஈடு படுவதினால், உரூண்டு திரண்டு மரத்துப் போயிருந்தது. எந்த வேலையை ஏற்றுக்கொண்டா அலும், சோர்வின்றிச் செய்து முடிக்கும் ஆற்றலும் அவனிடம் இருந்தது.
அதனால் அந்த வேலைக்கு வந்தநாளிலிருந்தே அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவன்மீது ஒரு மதிப்பு ஏற்பட் டிருந்த 4 தூக்க முடியாத சுமை யாக இருந்தால் 'முத்துவிட்ட விடுங்கோடா'' என்பது இங்கு வழக்கமாகிவிட்டது. முத்துவுக் கும் அந்த வேலை மிகவும் பிடித் திருந்தது. எல்லோரும் சேர்ந்து உழைத்து, அதன் கூலியை சம மாகப் பகிர்ந்துகொள்ளும் அந்த முறையில், அவர்களுக்கிடையே மலர்ந்த ஒரு கூடி வாழும் மனப் பான்மை முத்துவின் மனத்தில் அவனை அறியாமலே ஒர் ஆத்ம திருப்தியை அளித்திருந்தது. வேலை செய்யும் பொழுது சில ருக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர்களது வேலை யில் மற்றவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். அப்படி உதவுப வர்களில் முத்து முதலாளாக நிற்பான்.
தாயகம் 31
தொடங்கியிருந்தது.
ஒரு சிலர் கடுமையான வேலைகள் வரும்பொழுது, ஏதா விதி காரணத்தைச் செல்லு ஒதுங்கி மறைந்து விட்டு, பின் வந்து சேர்த்து கொள்வர். அவர் களை துாசன வார்த்தைகளால் வைது விட்டு, மீண்டும் தங்களு டன் இணைத்துக் கொள்வர். சிேத்து மட்டும் வேலை தொடங் கியது முதல், முடியும் வரை இயந் திரமாகவே நிற்பான். அப்படிக் asigaw Lorras உழைக்கும் அவனை அந்த இலையான்கள் GSF Trial டைய வைத்துவிடும். என்று அவன் எண் ணினன்
"நாங்களும் இந்த இலையா இறுக்கைதானே இருக்கிறம் உவன் ஏன் எழும்பி அங்கை போய் இருக்கிறா "ை
“எட, அவன் சுகாதாரம் lot-FFSuQ6yspGa?''
"இஞ்சை . . நக்கல் விடா தை இஞ்சை பருப்புக் ை என்ன கிடக்செண்டு பார் . 67é தினை தாளைக்கு மணிசர் இப் பிடிச் சாப்டடுறது ?
வாடிக்குள் அமர்ந்து சோற் றுகி கைகளை விசியபடி இலை யான்களைக் கலைத்தவாறே வயிற்றை நிரப்பிக் கொண்டி ருந்த தொழிலாளர்கள் குடான
வார்த்தைகளைத் சுங்களுக்குள் பரிமாறிக் கெ ஆ ட எர். e勁@ " கள் முத்து ஏ3 த களை வி.
இலையான்களைக் க சன்டு வெறுப் படைகிறான் என்பதை அறியா மல் இருந்ததில் வியப்பில்லை.

Page 6
இராணுவத்தினரின் ஆக்கிர
மிப்புக்கு உட்பட்டிருந்த முத்து
வின் சிறிய கிராமமும் கடலோ ரத்தில் தான் அமைந்திருந்தது. ஆழமான அந்தக் கடற்கல்}ர மணலுக்கு அப்பால், வளமான வயல் நிலங்களும், " கென்னந் தோப்புகளும், பனங்கூ. ல்க்ளும் நிறைந்த, இயற்கை அழகுமிக்க அக் கிராமத்தில் அவனது வாழ்க் கை கடினமாக இருந்த போதும் இனிமையாக இருந்தது. குடிசன அடர்த்தியற்ற அக் கிராமத்தில் வருடத்தில் எப்போதாவது ஒரு காலத்தில் இலையான்சள் பறக் கும். 'பனம்பழக் காலம் அது தான் இலையான் பறக்குது’’ என்று தாயார் சொல்லுவது இப்பொழுதும் அவன் நினைவில் இருந்தது. அப்பொழுதெல்லாம் இப்படி இலையான்கள்மீது வெறு ப்பைக் கொண்டிருக்கவில்லை.
இராணுவத்தின் கொடுமை யால் இடம் பெயர்ந்து, அந்த நெருக்கமான சிறிய முகாம் கொட்டில்களில் ஒன்றில் குடியி ருக்கவந்தபோதுதான் அவனுக்கு அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந் தது. அவனது அருமைத் தங்கை யும், வேறு சிலரும் முகாமில் ஏற்பட்ட வயிற்றோட்ட நோயி னால் இறந்தபோது, ஆழமாகப் பதிந்துவிட்ட அந்தத் துயர நினைவுகளிலிருந்து இன்றுவரை அவன் மீளவேயில்லை. அப்பொ ழுதுதான் பாலர் வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்திருந்த அவளி டம் அளவற்ற பாசத்தை அவன் கொண்டிருந்தான். எழுதப் படிக் கத் தெரியாதவன் என்று தன்
უ3
னை ஏளனமாகப் பார்க்கும் சமூ கத்துக்கு முன்னால், தன் தங் கையையாவது படிப்பித்துவிட வேண்டும் என்ற உணர்வு அ:ெ னிடம் இ*ந்தது. தல்ை சீவி. ட்ொட்டிட்டு முகாமுக்கு அருகில் அமைந்திருநக டாலர் பாடசா ல்ைக்கு அவளைக் கொண்டு சென் று விட்டுவிட்டுத்தான் அவன் வேலைக்குச் செல்வான். இடம் பெயர்ந்து வந்ததிலிருத்து முகாமிலுள்ள சிறுவர்கள், தான் சிறுவயதில் கல்வியில் அக்கறை கொள்ளாமல் இருந்தது போல வே இருப்பதைக் கண்டு மனம் வருநதின ன்.
‘‘அமுகா நான் தான் படிக் கேல்லை, நீயாதல் படிச்சு நல்லா வர வேணு மம்மா"
சிறுமியான அமுதாவுக்கு அவனது ஆவல புரிந்ததேஈ புரிய வில்லையோ அடிக்சடி இந்த வரி களை கொஞ்சும் தோரணையில் மூத்து அவளிடம் சொல்வான். எங்காவது கூலி வேலைகளுக்குச் சென்று திரும் டம் ளூர்க் கடைகளில் ஏகாவது தின் பண்டங்களை வாங்கிச் சுருட்டிக் கொண்டு வருவான் p காமின் சிறிய முற்றத்தில், மற்றப் பிள் ளைகளுடன் விழையாடிக்கொண் டிருக்கும் அமுதா, தூரத்தில் வரும்பொழுதே அவனைக்கண்டு விட்டு துள்ளிக் குதித்து ஓடி வந்து வரவேற்கும் அந்தப் பிஞ்சு முகத்தின் சிறிய விழிகளில் ஏற்படும் மலர்ச்சியின் அழகைப் பார்த்து மகிழும் வாய்ப்பும் அவ ளது இறப்போடு அவ னுக் அற் றுப் போனது.
\போது உள்
؛ لذا فقد ب y : tم طن

அந்த முகாமில் வயிற் றோட்ட நோய் ஆரம்பமான போது, அது சாதாரணமானது என்றுதான் அவர்கள் நினைத் திருந்தார்கள். முகாமில் அந்த நோயால் இறந்த இருவரைப் போலவே அவனது தங்கையை யும் மரு த் துவ மனைக்குக் கொண்டு சென்ற போதும், படிப் படியாக சோர்வுற்று, மயக்க முற்று, விறைத்துப் போன போது, முரட்டுச் சுபாவமுடைய அவனே வாய்விட்டுக் கதறி அழு தான். அத்துடன் அவன் தங் கைக்காக அன்போடு வாங்கி வந்த தின் பண்டங்களே அவளது சாவுக்குக் காரணமானது என்று மற்றவர்கள் சொன்ன போது அவனது துன்பம் பன்மடங்கா னது. அவளது மரணச் சடங்கு கள் முடிந்த பின்றும் பல நாட் களாக தனிமையில் இருந்த போதெல்லாம் அவளை நினை த்து அழுதான்.
அவனது தங்கை இறந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் ஒருநாள் மாலை ஊரின் ஒதுக்குப் புறக் தில் அமைந்த அந்த முகாமுக்கு வீதி நாடகக் குழுவொன்று பாட்டுக்கள், தாளங்களுடன் சையிக்கில்களில் வந்து இறங்கி யது. சிகப்பு, மஞ்சள், பச்சை என்று பல வண்ண நிற ஆடை களுடன் வந்த இளம் பெண்க ளும், ஆண்களும் முன்பின் அறி முகமில்லாதவர்களாக இருந்த போதும், அங்கு வந்த சிறிது நேரத்தில் ஆடிப்பாடி, உறவாடி அந்த முகாமிலுள்ள அனைவரு டனும் மிகவும் நெருக்கமாகி
5 Ar uu8sub 31
விட்டனர். முகமூடிகளை அணி ந்துகொண்டு அங்குள்ள சிறுவர் களையும் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் ஆடியபோது, அந்த முகாமே குதூகலித்தத. தமது கிராமங்க ளைப் பிரிந்த 51u(15. dv G15(15áš கடியான வாழ்வையும் எதிர் நோக்கி இறுகிப் போய்க் கிடந்த அவர்களது முகங்களெல்லாம், முதியவர் இளையவர் என்ற பேதமின்றி பற்கள் வெளித் தெரிந்ததை முத்த அன்றுதான் கண்டான். அவனது தங்கை அமுதா இகந்தாலும் இப்படித் தான் அவர்கள் தோள்களில் தூக்கிவைத்து ஆட. சின்னப் பற்களைக் காட்டிச் சிரித்கிருப் டாள் என்று அவன் நினைதத போது, அவனது முகத்தில் கவ லையின் கோடுகள் வெளிப்பட் டன. ஒதுங்கி, ஒரு ஒரத்தில் நிற்க முனைந்த அவனைக்கூட, அவர்கள் முகம் சுளிக்க விட வில்லை. மேளத்தை அடித்து எல்லோரையும் அழைத்து, பெரு வட்டமாக ஓரிடத்தில் கூட் டினர்.
"பீ இருக்கா பீ., கக்கா இருக்கா கக்கா., குமிந்தைப் பிள்ளைக் கக்கா?"
கூட்டத்துக்கு வெளியேயிரு ந்து இலையானின் தலைபோன்ற பெரிய முகமூடியை அணிந்தபடி கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு நடிகர் அந்த வார்த்தைகளை உரத்துப் பாடி, ஆடிக்கொண்டு வந்தபோது, முத்துவிடம் ஏற் பட்ட கூச்ச உணர்வு, அந்தக்

Page 7
கூட்டத்தவர்களிடமும் ஏற்பட் * ألقيسيا
"ஊத்தைத் தண்ணி இருக் கா ஊத்தைத் தண்ணி" என்று நுளம்புத் தலை முகமூடியுடனும் ஒருவர் ஆடிக்கொண்டு வந்த போது தான் நிலைமையைப் புரிந்து கொண்ட கூட்டத்தில் உள்ளவர்கள் "இஞ்சை ஒண்டு மில்லை" என்று கத்தியபடி இலையானையும் நுளம்பையும் விரட்டினார்கள். அவர்கள் ஒடிச் சென்று ஒதுக்குப் புறமாக அமர்ந்து கொண்டன. சுருட்டை வாயில் வைத்துச் சப்பியபடி மது போதையில் தள்ளாடிக் கொண்டு கூ ட் டத் து க்கு ஸ் நுழைந்த ஒருவர், வயிற்று வலி யால் அவதிப்பட்டு பொது இடத் தில் மலம் கழிக்க முயல, இலை யானும், நுளம்பும் உற்சாகத்து டன் எழுந்து ஆடின. கூட்டத் திலிருந்தவர்கள் அவரை விரட் டிய பின், தொடர்ந்து நடந்த ஆடல் பாடல்களிலிருந்து உயிரி ழப்புக்குக் காரணமாகும் இவை களுக்கெதிராக மக்கள் பொறுப் புணர்வுடன் செயற்படவேண்டும் என்ற கருத்து வெளிவந்தது.
அந்த நாடகத்தை பார்த்த பின்னர்தான், அந்த முகாமின் திறந்த மலக் குழியில் நெளிந்த புழுக்களும், அவை குடம்பியாகி இலையானாக மாறுகின்ற விட யமும் முத்துவுக்கு தெரிய வந் தது. அதுவரை தங்கையின் சாவுக்கு தானே காரணமென்று வேதனைப்பட்ட அவ னு க் கு அந்த முகாமின் சுகாதாரமற்ற
சூழலே காரணமென்பது தெரிய வத்தது. அன்றுமுதல் முகாமைத் துப்பரவாக வைத்திருக்கும் நட வடிக்கைகளில் அவன் உணர்வு பூர்வமாக உழைத்தான்.
அந்த நாடகம் முடிந்து ஒரிரு கிழமைகளில் மூடிய மல கூட வசதியை ஏற்படுத்தும் வேலை முகாமில் ஆரம்பம னது. ஆழமான குழிகளை வெட டும் வேலையில் முகாமிலுள்ள ஒவ்வொருவரது பங்களிப்பும் கோரப்பட்டத. பலர் அப் பணி யில் பின் நின்றனர். முத்து தனது டங்கைச் செய்த முடித் தகோடு, குழி வெட்டும்போது காலில் ஏற்பட்ட காயக்கையும் பொருட்படுத்தாது, மகந்கைக் கட்டிக்கொண்டு, தனக்ா ஒப் வுள்ள நேரமெல்லாம் குழி வெட் டுவதில் உற்சாகமாக உழைத் தான். தங்கையைப் போன்று இன்னும் இருக்கின்ற சிறுவர்க ளையாவது இழக்காமலிருக்க உதவ வேண்டும் என்ற உணர்வு டன் தான் மூத்து அவ்வாறு சேய்தான். அவனது செய்கை யை மற்றவர்கள், பிழைக்கத் தெரியாத ஒரு ஏமாளியின் கிசய லாகவே பார்த்து கொடுங்புக் குள் சிரித்துக் கொண்டனர். முத் துவுக்கும் அந்த நாடகத்தில் காட்டியது போன்று தங்களைக் கொல்லும் சூழலுக்கெதிராக ஏன் இவர்கள் உழைக்க மறுக் கின்றனர் என்பது விளங்கவே இல்லை. அதிலும் முகாமில் இருந்த ஒன்றிரண்டு படித்த இளைஞர்களே இத் த  ைக ய வேலைகளில் பின்நின்றமை அவ னுக்கு வியப்பாக இருந்தது.
தாயகம் 31

"மூத்து எனக்காண்டி ஒருநாள் வேலை செய்து விடன் ரா காசு தாறன்"
அந்த முகாமில் இருக்கும்
ரு வியாபாரி இப்படிக் கேட்ட
போது, அங்கு பெரும் சண்டை யே மூண்டுவிட்டது.
'ஏலாதவனுக்கு நான் சும் மாவும் செய்து குடுப்பன். மலை மாதிரி தேகத்தை வைச்சுக் கொண்டு. மற்றவனைக் காசுக்கு
வி ரா நீ க ப் ப ா க் கி ற |ா ர் .
மசிராண்டி**
மு கா மி ல் உள்ளவர்கள் அனைவரும் கூடி சமாதானப்
படுத்தியபோதும், முத்த ஆவே சத்துடன் கத்தினான். அங்குள்ள பல ரி ன் பொறப்பற்ற த ன் மைக்கு எதிரான கலகக்குரலாக அது ஒலித்தது.
மற்றவர்களை விட இலை யானை அவன் வெறுப்பதற்கு அவனது வாழ்வில் ஏற்பட்ட இத் தகைய சம்பவங்களே காரண மாயின.
அன்று காலையிலும் அவர் கள் வேலைக்குப் புறப்படும் போது, சமையலுக்குப் பொறுப் பாக இருந்த சோதி, வாடிக்கும் பின்புறம் குந்தியிருந்துகொண்டு இறைச்சியைக் குற்றி ஒன்றில் வைத்து கக்தியால் துண்டுகளாக வெட்டியபடி அவசரமாக முத் துவை அழைத்தான். விரித்துக் கிடந்த உரைப்பையில், இறைச்சி மீது மொய்த்துக் கிடந்த இலை
"h, Tuu S5 is 31
யான்கள், அதன் நிறத்தையே கருமையாக்கியிருந்தது. கத்தியி லும், கையிலும் இரத்தத்தைப் பூசிக்கொண்டிருந்த அவனது மூக்கு, முகங்களெல்லாம் இலை யான்கள் ஊரிந்து உறவாடின. எதுவும் செய்ய முடியாமல் அவற்றிலிருந்து தன்னை விடுவிக் கவே முத்துவை உதவிக்கு அழைத்தரின். நிலைமையைப் புரிந்துகொண்ட முத்து, பக்கத் தில் நின்ற பாலை மரக்தின் கிளையை (புறித்த, அதன் குழைகளால் வேகமாக வீசிவீசிக் கலைத்தான். வீசும் போது பறந்த இலையான்கள் அவன் ஒய்ந்ததும் மீண்டும் வந்து அமர்ந்தன. வேலைக்குச் செல்வதற்கு அவர்கள் அவனை அழைத்தபோது, தனது முயற்சி யில் தோல்வி கண்டவனாக சினத் துடன் கினையை தூர வீசிவிட்டு போயிருந்தான்.
வளைத் து
இப்பொழுதும் வாடிக்கு வெளியே வந்து அந்தக் குற்றி யில் அமர்ந்தும், இலையான்கள் அவனை விடவில்லை. அவன் அமர்ந்திருந்த மரக்குற்றிக்குச் சற்றுத் தூரத்தில், பாலை மர மொன்றில் கட்டப்பட்டிருந்த மாட்டையும் அவைகள் தொல் லைப்பதித்திக் கொண்டிருந்தன. புற்களை மேய விடாமல் முகத் திலும், உடலிலும் ஊர்ந்த இலை யான்களை விரட்ட, வாலை ஓயாமல் சுழற்றியும், உடம் வைச் சிலுப்பியும், தலையை உலுப்பி யும் மிரண்டுகொண்டிருந்தது.
10 (9)

Page 8
முத்துவுக்கு அவனது தங்கை யின் கிழிந்துபோன பாலர் வகுப் புப் புத்தகத்தின் ஒற்றையில் ஈ என்ற எழுத்துக்கருகே பெரிதாக சீறப்பட்டிருந்த இலையானின் உருவப்படமும், அந்த வீதி நாடகக் தில் அணிந்து வந்த முக மூடியில் கீறப்பட்டிருந்த இலை யானின் பெரிய கண்களும் நினை வுக்க வந்கது. அந்க உருவம் மேலும் விசுவரூபமாகி, அந்த மாட்டுக்கு மன்னாலும், கலை க்க முன்னாலும் நின்று ஆடுவது போன்று அவனுக்கத் தோன்
றியத.
மூன்று நாட்களுக்க முன்பு தான் அவனுடன் வேலை செய் யும் ஒரு தொழிலாளிக்கு வயிற் றோட்டம் ஏற்பட்டத. ததி கைக்க நேர்ந்க அனுபவத்கை
மறக்காமல் முத்ததான் முன்
எச்சரிக்கையாக அவனை அக் கரைக்கு அனுப்பியிருந்தான். அன்ை விாம்பாத போதும், அங் தக் தொழிலாளியின் மரணம் afrro96, J;/Ras rr(?) ardija) rruh. gjaj னது கற்பனையில் வந்தது.
வெறுப்புடன் ருந்து எழுந்து, பாதிக்கமேல் sp.sirovsodi கோப்பைக்கள் இருந்த சோற்றை சினத் கடன் தாா வீசினான். அதுவரை கோப் பையைச் சுற்றிய இலையான்கள் மனலில் சிதறிய சோற்றுப் பாதக் கைகளை நோக்கிப் பறந்தன. ங்சி இன்னும் அரைவாசி வயிற் றைப் பிடுங்கிக் கொண்டிரு ந் தது. அன்றிரவே அக் கரைக்குச் சென்று வீட்டுக்குப் போய்விடு
(5j pou769
19(勃)
வது என்ற முடிவுடன் கோப்பை யைக் கழுவி தண்ணிப் பரலுக்கு அருகில் கவிழ்த்தான்.
பகல் முழுவதும் ஆளரவமற் றுத் தூங்கிக் கிடக்கும் கிளாலிக் கடல், இரவானதும் களைகட்டி விடும். பத்து மைலுக்கு மேல் நீண்டிருந்த அந்த ஒரே கடல் பாதையும், இராணுவத்தால் த  ைட செய்யப்பட்டிருந்கத. மணிகத் தேவைகள் மரணங்க ளையும் மீறி அப் பாகையைத் கிmந்க வைத்திருந்தன. வெளிச் சங்கள் இன்றி இாளைக் கிழித் கபடி எந்திர வள்ளங்கள் அதி ஈாலைவரை அங்குமிங்கம் உறு மிச் செல்லும் . கடலில் நிகழ்ந்த தயர நிகழ்வுகளை இடைமன 56 goo) truEl Luuq Luugo Trisair தொடரும். ஐந்தாறு படகுகள் முன்பின்னாக இணைக்கப்பட்டு புகைவண்டித் சொடர் போல சாமான் வள்ளங்கள் செல்லும்.
அந்தக் கடலைப் போலவே இலையான்களின் தொல்லை யற்ற அக்க இாவுநேரங்கள் (மக் தரவுக்கு மிகவும் பிடிக் சிகந்க க. அதுவும் நிலாச் சாலங்களில் அக் கடற்காையில் நின்று வேலை செய்யும்போக அவனக பலம் இரட்டிப்பாகிவிடும். இரண்டு மைல்க"ளக்கு அப்பால் தொக விலே நின்றுவிடும் ரொலிகளிலி ருந்து, ராக்ராக்கம், ராக்ரரிவி ருந்து தோணிக்கும் குடாநாட்டு மக்களுக்கான உணவுப் பொருட் களை இறக்கி ஏற்றும் அந்த வேலையின் முக்கியத்தவத்தை உ ண வு த் தட்டுப்பாடுகளின்
தாயகம் 31

போது, அவன் பெற்ற அனுப வங்களிலிருந்தே உணர்ந்திருந் தான். பாரமான மூட்டைகளைச் சுமக்கும்போது கூலிக்காரனாக இல்லாமல், ஒரு பணியாளனா கவே தன்னைக் சகுதிக்கொள் வான். ஊரில் தனியாகவும், ஒரிரு தொழிலாளர்களுடனும் இணைந்து வேலை செய்த அவ னுக்கு, பெருந் தொகையான தொழிலாளர்களுடன் சேர்ந்து செய்யும் அந்த உழைப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருந் தது. ஆனாலுப் பகலுணவின் போது அங்கு பறக்கும் அந்த இலையான்களின் தொல்லை அவ னை சோர்வடையச் செய்தது.
"டேய் முத்தன் வீட்டை போப்போறானாம்"
"ஏன் ரா! அவனுச் கென்ன
கோதாரியே? மலைமாதிரி இருக் கிறான்"
**இலையானோ ட கோபப் பட்டுக்கொண்டு போறானாக் கும்! அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது’
முத்து தன் முடிவை தனது நண்பனொருவனிடம் வெளி யிட்டபோது அது தொழிலாளர் களிளையே பரவி அபிப்பிராயங் களை ஏற்படுத்தியது. அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில், அவன் செல்வதனால் ஏற்படும் இழப்பை உணர்ந்தனர். முத்துவுக்கும் அவர்களைப் பிரி வது மனதை உறுத்தியபோதும் முடிவை மாற்றாமல் புறப்பட
5 rusif 31
ஆயத்தமானான். கணக்கு முடிப் பதற்கு இன்னும் நாட்கள் இருந் ததால், ஊர் நண்பன் ஒருவனி டம் சிறு தொகையை கைமாற் றாகப் பெற்றுக்கொண்டு, கடை சியாகச் சென்ற படகுசஞக்கு நெல் மூட்டைகளை ஏற்றிவிட்டு அதே படகில் அவனும் ஏறி அமர்ந்தான். ܫ
நள்ளிரவுக்குப் பின்னர் அக் ଥsଙ୩pt சேர்ந்து, அங்குள்ள ஸ்டோர் சொட்டிலில் சாக்கை விரித்துவிட்டு படுத்துத் தூங்கி னான். காலையில் வெய்யில் வந்து சூடாக்கியபோது தான் கண் விழித்தான். அங்குவந்து செல்லும் லொறிஒன்று இரைந்து கொண்டு புறப்பட ஆயத்தமான போதுதான் அவசர அவசரமாக ஓடிஏறுவதற்கு சேட்டை சரிசெய் தான். பைக்குள்கைவைத்த அவன் அதிர்ச்சி அடைந்தான். வீட்டுச் செலவுக்காகக் கொண்டு வந்த பணம் காணாமற் போயிருந்தது. லொறி உறுமிக் கொண்டு புறப் பட்டுவிட்டது. படுத்த இடத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்தான். இரவு பையைத் தடவிப் பார்க் கும்போது இருந்ததாக நினைவு இருந்தது. அங்கும் தொழிலா ளர்கள் மூட்டைகளை இறக்கி அடுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நடந்ததைக் கூறி னான். அடையாளந் தெரியாத அந்தஒருவனை வாய்க்குவந்தபடி எல்லோரும் திட்டினார்கள்.
அவனது கையைப் பார்த்தி ருக்கும் தாய், தந்தை முன்
1η (3)

Page 9
எதிர்பார்ப்பு
ஆளரவம்ற்று துர்ங்கிக் கிடந்த் கிராமத்து மணற்பாதைக்ளில் மீண்டும் தடம்பதித்தபடி மாட்டு வண்டில்கள். இறுதிக் காலத்தில்
இரவல் பெறாமல் தன் உடலை வளர்த்துதற்கு பாட்டனார் செய்து வைத்த பழம் வாங்கு கால்கள் முறிந்தபடி வண்டிலில்
கவிழ்ந்து கிடக்கிறது. பின்னல் லிட்ட கதிரை பழம் பாய் பெட்டி கடகம் சட்டி பானைகள் அவைகளுக்கு நடுவே விரல் சூப்பும் கடைக் குட்டியை கையால் அனைத்தபடி பிரித்து வந்த கிராமத்தின் அழகை ரசிக்கிறாள் மூத்த பெண் பிரியா.
éပြဲ cijf uur
தட்டியில் நிமிர்ந்த தடியைப் பிடித்தபடி 李r$夺ü 衡TL母 . எழுந்து நிற்கிறான் அவள் தம்பி. முன்பு ஒருமுறை சேன்று திரும்பியபோது இப்படி எழுந்து நின்ற மூத்தவன் இன்று இல்லை. கூலியைக் கூட்ட பேரம் பேசியதில் வண்டிக் காரரின் முகத்தில் விழுந்த முகச் சுருக்கம் இன்னும் மறையாமல் மாட்டுக்கு வீசும் கம்பில் உறைய வண்டித் தடத்துக்குள் வழுக்கி விழும் சக்தரம் போல் வாழ்க்கை உருள்கிறது. சமாதானத்தின் வரவை எதிர்பார்த்து பின்னால்
அனுைம் அவளும் . 會
வெறுங் கையோடு போலது?
எப்படிப்
"முத்து உப்பிடிப் புதினம் பாத்தா நாங்கள் சிவிக்கேல்ாது! எங்களுக்கும் அரியண்டந்தான். என்ன செய்யிறது . வையித் தைப் பாக்கவேணும்'
10 (3)
இரவு நண்பன் சொன்ன வார்த்தை அவனது நினைவில் வந்தது. அந்த வார்த்தைக ளோடு அவனால் உடன்பட முடி யவில்லை. இருந்தும், இரவுத் தோணியின் வருகை க் காக கடலை வெறித்துப் பர்ர்த்தபடி அந்தக் கொட்டில் கப்புடன் சாய்ந்திருந்தான்.
தாயகம் 31

நசவல் பக்கங்கள் 428 செவ்வந்தி எழுதியவர்: அலெக்ஸ் ஹேலி
தமிழில் (சுருக்கப்பட்ட தெலுங்குப் பதிப்பிலிருந்து) ஏ. ஜி. எத்திரா ஜூலு
வெளியீடு: சவுத் ஏசியன் புக்ஸ் - சென்னை
Dனிதகுல வரலாற்றின் நீண்ட பயணத்தில் மனிதர்களை மனிதர்களே அடிம்ைப்படுத்தி வந்த துன்பியல் நிகழ்வுகள் ஒவ் வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்று வந்துள்ளன. அத்தகைய அடிமைத்தனத்தின் மிக மோசமான நிகழ்வாக வரலாற்றில் இடம்பெற்றதே ஆபிரிக்காவிலிருந்து கறுப் பின மக்கள் அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டு அடிமைக ளாக விற்கப்பட்டமையாகும். 1819ல் இருபது பேரோடு ஆரம் பித்த ஆபிரிக்க - அமெரிக்க அடிண்ம வியாபாரம் 180 ஆண்ட ளவில் பத்து லட்சத்தைத் தாண்டி நின்றது. இத் ை ஆபிரிக்க மக்கள் தான் இன்றைய அமெரிக்க நீக்ரோ மக்களா,
நவீன உலகின் நாகரீகமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க வெள்ளையர்கள் தமது செல்வங்கள் அனைத் தையும், தாம் அனுபவிக்கும் சுக போகங்களையும் சிறுப்பு ஆபி ரிக்க மக்களின் இரத்தத்தையும், வியர்வையையும் உறுஞ்சிய அடிமை உழைப்பாலேயே பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமன்றி ஆபிரிக்காவின் செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றே தமது மூலதனத்தையும் பெருக்கிக் கொண்டனர். அதே வேளை கறுப்பின மக்கள் அடிமைகளாக - விலங்குகளை விடக் கே. நடாத்தப்பட்டனர். அவமானத்தின் மேல் அவமானங்களைத் தாங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இம் மக்கள் பல திலைமுறைக ளாக அடிமைக் குறியுடனேயே அமெரிக்காவிற்கு தம் உழைப்பைக் கொடுத்து வந்தனர். 1865 ஏப்பிரலில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்த தருவாயில் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் அடிமை முறை ஒழிப்பை அறிவித்துக் கெ: ண்டதன் மூலம் அடிமை வியாபாரத்திற்கும், அடிமைகளைக் கொண்டிருப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் கறுப்பின நீக்கிரோர் மக்கள் பெயரளவில் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை அவர்களது அடிமை வாழ்வின் ஆழப் பதிந்த அடையாளங்கள் மாற்றப்படவில்லை, பழைய அடிமை
தாயக 31 1 I

Page 10
முறை நீக்கப்பட்டு நவீன முதலாளித்துவ கூலி அடிமை முறை வலுவடைந்த சூழலிலும் நீக்கிரோ மக்கள் இரண்டாம்தரப் பிர ஷைகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இன நிறப் பாகுபா டும், அதன் அடிப்படையிலான புறக்கணிப்புகளும் அமெரிக்க வாழ் வின் சகல துறைகளிலும் நிலைத்து நீடித்து வருவதைக் காணலாம்.
இத்தகைய மக்கள் பெரும் கூட்டத்தின் துன்பியல் வரலாற்றி னைத்தான் அலெக்ஸ் ஹேலி, றுாற்ஸ் (Roots) என்னும் நாவலாக வடித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் எழுநூறு பக்கங்களைக் கொண்ட மேற்படி நாவல் தமிழில் நாநூற்றி இருபத்தெட்டுப் பக் கங்களாக வெளிவந்துள்ளது. இது தெலுங் த மொழியில் சுருக்கப் பட்டதன் தமிழ் வடிவமாகும்,
இந் நாவலைப் படித்த போது அமெரிக்க - ஆபிரிக்க மக்களின் இருநூறு வருடகால அடிமைச் சுமையின் பாரம் நெஞ்சினை அழுத்தி நின்றமையை உணர முடிந்தது. இயற்கையோடு இணைந்த வாழ்வையும் அதன் அடிப்படையில் தமக்கென உருவாக்கிக்கொண்ட உயர்ந்த பண்பாட்டையும் கொண்ட ஆபிரிக்க கறுப்பின மக்களின் ஒரு பகுதியினரே வெள்ளைக் கொலனித்துவ வாதிகளினால் பலாத் காரமாகக் கடத்திச் செல்லப்பட்டவர்களாவர். காம்பியா என்னும் நாட்டின் ஜப்பூர் என்னும் கிராமத்தில் குண்ட்டா கிண்ட்டே என்ற பதினாறு வயது இளைஞன் காட்டுப் பகுதியில் இருந்து வெள்ளையர்களாலும் அவர்களது கறுப்; அடியாட்களான குண் டர்களாலும் கடத்தப்படுவதிலிருந்து இவ் வரலாற்று நாவல் ஆரம் பமாகின்றது. அதற்கு முன்பாக அச் சின்னம் சிறு ஐம்பூர் ஆபி ரிக்கக் கிராமத்தின் அமைதியான மக்களின் வாழ்வும், வளமும் ஒழுக்கமும், பண்பாடும், நம்பிக்கைகளும், வாழ்வியல் நடைமுறை களும் தத்துரூபமாக விபரிக்கப்படுகிறது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பல இளைஞர்கள், யுவதி கள், சிறுவர்கள் கொடூரம் நிறைந்த மூன்றரை மாதக் கப்பல் பயணத்தின் பின் அமெரிக்காவில் இறக்கப்பட்டு ஏற்கனவே சுடப் பட்ட அடிமைக் குறிகளுடன் அடிமைகளாக விற்கப்பட்டனர். அவர்களை விலைக்கு வாங்கிய வெள்ளை எசமானர்கள் விபரிக்க முடியாத சுரண்டல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதன் ஒவ்வோர் அம்சத்தையும் இந் நாவல் உணர்வும் உணர்ச்சியும் பொங்க விப ரித்துச் செல்கிறது. குண்ட்டா கிண்ட்டே என்ற இளைஞனுடன் ஆரம்பித்த வரலாறு ஏழு தலைமுறைகளாக நீடித்து வந்த தொடர் கதைகளின் சோக நிகழ்வுகளை இந் நாவல் எடுத்து விளக்கி நிற் கின்றது. சோகத்தை மட்டுமன்றி, ஆபிரிக்க மக்களின் உடற் பலம் உள்ளத்தின் உறுதி, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை என்பவற் றுடன் தமது இனம் நிறம், தமது மூதாதையர்களுடைய நாட்
தாயகம் 31

டின் மீதான ஆழ்ந்த பற்றும் அக்கறையும் இந் நாவலினூடே வெளிச்சமாகி நிற்பதைக் கண்டு கொள்ளலாம்.
தமிழ் நாட்டிலிருந்து ஏற்கனவே சரித்திர நாவல் என்ற பெய ரில் பல நாவல்கள் வந்துள்ளன. அவை யாவும் அரசர்கள், அரசி கள், அந்தப்புரங்கள், தளபதிகள் போர்கள் இவை யாவற்றையும் போற்றிப் பாடிய புலவர்கள் போன்றவர்களை அதீத கற்பனைக ளுடன் சித்தரித்த ஆளும் வர்க்க துதி பாடும் நாவல்களேயாகும். ஆனால் ஏழு தலைமுறைகள் நாவல் அடக்கி அடிமைகளாக்கப் பட்ட மக்களின் யதார்த்த வாழ்வினை நமக்கு வழங்கும் அற்புத மான ஒர் படைப்பாகும். வரலாற்றில் வெள்ளை இனத்தவர்கள் உயர்ந்த நாகரீகமும், மேன்மையும், புத்திக் கூர்மையும், தூய்மை யும், அழகும் வாய்ந்தவர்களென்றும், கறுப்பினத்தவர்கள் நாகரீக மற்ற காட்டுமிராண்டிகள், அசிங்கமும் அவலட்சணமும் கொண்ட வர்கள், உடற்பலம் மட்டும் கொண்ட முரடர்களென்றும் தாம் எழுதி வந்த ஒரு பக்க வரலாற்று மோசடி மூலம் ஏற்படுத்திய பல நூறு வருட தவறான மனப்பதிவினை இந் நா6 ல் உடைத்தெறிந்து நிற் கிறது. கறுப்புத் தோல் படைத்தவர்கள் இழிவானவர்கள், வென் ளைத் தோல் கொண்டவ்ர்கள் மேன்மையானவர்கள் என் னும் மனப் பதிவு கறுப்புத் தோல் கொண்ட மக்களிடம் கூட ஓர் தாழ்வுச் சிக்கலாக ஏற்படுவதைக் காண வரலாற்றுக் காரணம் இன்னும் வலுவுடையதாகவே இருந்து வருகின்றது. ஆரியர்கள் திராவிடர் களை வெற்றிகொண்ட காலகட்டத்திலிருந்து ஆரம்பித்த இத்தகைய ஒருபக்க மனப்பதிவு பின் மேற்கத்தைய கொலனித்துவ வாதிகளால் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க மக்கள் வெற்றி கொள்ளப்பட்ட போது மேலும் வலுவடைந்து முழு "உண்மை"யாக்கப்பட்டது. இவ் வரலாற்று அபத்தத்தை இந் நாவல் மறுத்துரைத்து அம்பல மாக்குகின்றது. ஆபிரிக்கக் கண்டமும் அங்குள்ள கறுப்பின மக்க ளும் அழகானவர்கள், உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் படைத்த வர்கள், தமது மண்ணின் மீதும் மக்கள் மீதும் ஆழ்ந்த பற்றுடை யவர்கள், மனித நேயத்தை வளர்த்து மனிதத்துவத்தை நிலை நாட்டி வந்தவர்கள் என்பதையும் இந்த நாவல் எடுத்துரைக்கின் றது. கறுப்பர்கள் தாம் கறுப்பர்களாக இருப்பதற்காகவோ அன்றி ஆபிரிக்காவைத் தமது வம்ச ஊற்று மூலமாகக் கொண்டதற்கா கவோ வெட்கப்படுவதை நிராகரித்து நிற்கும் இந் நாவல் அதன் ஒவ் வோர் அம்சத்திலும் கறுப்பினத்தின் ஒவ்வொரு மேன்மையையும்
உயர்த்தி நன்று மகிழ்ச்சி கொள்கின்றது.
இந் நாவலை எழுதிய நாவலாசிரியர் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றமை நோக்கு தற்குரியதாகும். "அச்சமூம் சந்தேகமும் கொண்ட என் பார்வை என்னுடைய சிவப்புக் கைகளின் மேல் வீழ்ந்தது. உடலில் சுத்தமான ரத்தம் பாயும் தூய்மையான மனி
தாயகம் 31 13

Page 11
தர்களின் மத்தியிலே கலப்பின ரத் தத்துடன் பிறந்த கலப்பட மனிதன் நான் ! களங்கமற்ற மனிதரிடையே களங்கமுற்ற மனிதன் நான்! வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்கிற பயங்கர அனுபவம் இது'
இந் நாவலை எழுதிய அலக்ஸ் ஹேலி ஒர் ஆபிரிக்க அமெரிக் கர் என்பது மட்டுமன்றி இந்த ஏழு தலைமுறைகள் நாவலின் ஆரம்பகதாநாயகனான கிண்ட்டே வம்சத்தின் ஏழாவது தலைமுறை யைச்சேர்ந்தவர் என்பதுதான் முக்கியமானது. ஏழு தலைமுறைகளாக தனது மூதாதையர்கள் வாய்மொழியாகக் கூறிவந்த உண்மைகளை ஆராய முற்பட்டதன் விளைவே இந் நாவலாகும். அதற்காகப் பனனிரண்டு ஆண்டுகள் கடும் முயற்சி செய்து உழைக்க வேண்டி யிருந்தது. ஐந்து லட்சம் மைல்கள் பிரயாணம் செய்து ஆதாரங்க களையும், அனுபவங்களையும், உண்மைகளையும் தேடவேண்டியி ருந்தது என்றும் கூறுகின்றார். எவ்வித ஊக்கமும் உழைப்பும் இன் றியே “வரலாற்று ந வல்" எழுதும் நம்மவர்கள் இந் நாவலாசிரி யரிடம் படித்துக்கொள்ள ஏராளம் உண்டு.
அவர் நாவலின் இறுதிப் பக்கத்தில் கூறுகின்றார் "உங்கள் கைகளில் இருக்கும் இந் நூலில் ஏழு தலைமுறைகளின் கதையை வர்ணித்துள்ளேன். இதில் உண்மை எவ்வளவு கற்பனை எவ்வ ளவு என்று யாராவது கேட்கலாம். வம்சத்தைப்பற்றிய ஒவ்வோர் அம்சமும் ஆபிரிக்க குடும்பங்களும், அமெரிக்க குடும்பங்களும் பரம் பரையாக சொல்லிக் கொண்டிருக்கும் வரலாற்றுடன் தொடர்பு கொண்டது தான். நான் அவற்றுடன் சரித்திர ஆதாரங்களை இணைத்து விட்டேன். மூன்று கண்டங்களிலும் சுற்றித் தி,சிந்து ஐம்பதுக்கும் அதிகமான நூல் நிலையங்களிலும், தொல் பொருள் ஆராய்ச்சி சாலைகளிலும், பழம் சுவடி ஆவணங்களிலும் நான் திரட்டிய ஆபிரிக்க வாழ்க்கைமுறை, பண்பாட்டு வரலாறு இந்த "ஏழு தலைமுறைகளுக்கு ரத்த மும் சதையுமளித்து உயிரூட்டின.
சிறு கதைகளிலும், நாவல்களிலும் நவீனத்துவம் தேடி நின்று பல்வேறு இலக்கிய இஸங்கள் கண்டு, அதனையே தத்தமது இலக் கிய அளவுகோல் எனக் கொண்டு, தமக்கும் விளங்காத வாசகர் களுக்கும் புரியாத இலக்கியப் புதிர் காட்டும் வித்துவ சிரோன் மணிகளுக்கு இந் நாவல் ஒரு பலத்த அடியாகும் என்பதில் ஐயமில்லை
இந் நாவலின் இறுதி வாசகம் அதன் உள்ளார்ந்த உறுதிமிக்க
பிரகடனத்தைக் கூறி நிற்பது நம்மைப் போன்ற அடக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகின்றது.
1 A. 3. fusio 31.

エ للی بالا لا إنک
சிப்படியே இரு
65 Fattit Ag) மெல்ல சிரித்தபடி கமராவை நோக்கி க்ண்களைத் திருப்பு!
அப்படியே இரு உடலை சுற்றியிருக்கும் மினுமினுக்கும் பட்டு மடிப்புக் குலையாது இருக்க
és Log trák கண்களுக்கு காட்சி கொடு!
அப்படியே இரு வேடம் புனையும் நாடக நடிகர் அப்பும் பூச்சு அப்பி
இரு
9ே அழ பகீரதன்
கமராக் கண்களுக்கு
கலராய் இரு!
அப்படியே இரு
அங்கம் எங்கும் தங்கம் மின்ன தலையில் இருந்து பாதம் வரையில் முன்பின் பக்கத் தோற்றம் அத்தனையும் கச்சிதமாய் இருக்க கமராக் சு களுக்கு காட்சி கொடு!
நீ சமைந்துவிட்டாய் ஆகையால்
அப்படியே பதுமையென இரு! உன் சுயத்தை இழந்து அப்படியே இரு. YA
*?tpగొ 'ं४; was ഞ്ഞ് 赣
"வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதா யத்தை உடைத்தெறிவதற்காக இந்த என் மக்களின் கதை உதவி டும் என நம்புகின்றேன்." அந்த நம்பிக்கையை இந் நாவல் உறு திப்படுத்தி நிற்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. வெற்றி கொண்டவர்களை எதிர்க்கும் ஒவ்வொரு அடக் கப்பட்ட மனிதனும் இந் நாவலைப் படிப்பது அவசியமாகும். இது போன்ற இலக்கியங்கள் மேன்மேலும் மொழி பெயர்க்கப்படுவது அவசியம். இதனை வெளியிட்ட சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத் தின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. ★
'' TF 5 : * 3.

Page 12
மலயைக இலக்கியம் அன்றும் இன்றும்
8 ஜெ. சற்குருநாதன்
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் ஒரு பகுதியான மலையக இலக்கியம் தனக்கென சிறப்பான கூறுகளைக் கொண்டுள்ளது. மலையக இலக்கிய செல் நெறியினை நாம் இரண்டு முனைப்பான அம்சங்களில் அவதானிக்க முடியும் . 1956ற்கு முன்பு தோன்றிய இலக்கியப் போக்குகள் ; அதற்குப் பின்னர் தோன்றிய தேசிய இலக்கிய ரீதியான வளர்ச்சி எனக் காண முடியும். மலையக தேசிய இலக்கிய வளர்ச்சி எனும் போது அண்மைக் கால பரிணாம வீச்சினையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்விரண்டு போக் குகளையும் அடிப்படையாகக் கொண்டே மலையக இலக்கியம் அன்றும் இன்றும் என்ற அர்த்தத்தில் இக் கட்டுரை நோக்கப்படு கின்றது.
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலையக தோட்டத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த பொழுது தங்களுடைய கலை, இலக் 'யப் ப ரம்பரியங்களோடு குடியேறினர். உழைப்பு ஒன றே மூலதனமாகக் கொண்டு மலையக பிரதேசங்களில் இருண்ட லய வாழ்க்கையை அனுபவித்து னர். தமது உழைப்பையும், உதிரத்தை யும், வியர்வையையும் கொட்டி இம் மண்ணை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றினர். ஏகாதிபத்தியவாதிகளாலும், கங்காணி மார்க னாலும் மிக கொடூரமான முறையில் சுரண்டப்.ட்டனர், வஞ்சிக் asů u L-60ř. மலைப் பிரதேசங்களில் தங்களது கடுமையான உழைப்பையும் பொருட்படுத்தாது தமது இலக்கியப் பதிவுகளை வாய்மொழிப் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தினர்.
s 'றப்பர் மரமானேன்
நாலு பக்கம் வாதானேன் எரிக்க விறகுமானேன் இங்கிலீசுக் காரணுக்கு ஏறிப் போக காரானேன்" தமது உள்ளத்துக் குமுறல்களை இப்படியான பாடல்கள் மூல மாக புலப்படுத்துகின்றனர். தொழிலாளர் வர்க்க உணர்வு பெறாத காலப் பகுதியில் இப்படியான ஏகாதிபத்து ய எதிர்ப்புணர்வுப்
5 Tuu S tíð 31

பாடல்களை பாடியிருப்பது வியப்பிற்குரியது. காலனித்துவ ஆட்சி யாளர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகியும் தங்களது நிலைப் பாட்டை இப்படியான வாய்மொழி பாடல்கள் மூலமாக வெளிப் படுத்தியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கொத்தடி மைகளாகக் கொண்டுவரப்பட்ட இம் மக்களின் உணர்வுகள் அவர் களது நாட்டுப் பாடல்களில் எதிரொலிப்பதை நாம் காண முடி கின்றது. நிர்க்கதியான நிலைகளிலும் இவ் வாய்மொழிப் பாடல் கள் மூலமாக மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் வெளிப் படுத்தினர். சோர்வு வாதம் தலை தூக்காமல் தங்களது அடிமன உணர்வுகளை துல்லியமான முறையில் இப் பாடல்கள் மூலமாகப் பதிவு செய்தனர். அவை இன்றும் இம் மக்கள் மத்தியில் உயிர்த் துடிப்புள்ளதாக விளங்கி வருவதைக் காணலாம். இப்படியாக ஆரம்ப கால மலையக இலக்கியம் வாய் மொழிப் பாடல்கள் மூலம் வெளிப்பட்டன.
1920களுக்கப் பின்னர் ஏட்டில் பதிவு செய்யும் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரசியல் விழிப்புணர்வினை தோற்றுவிப்பதாக சிலர் இலக்கிய முயற்சிகளில் இறங்கினர். இவர்களில் முக்கியமானவர்கள் நடேசய்யரும் அவரது மனைவி மீனாட்சியம்மையாரும் ஆகும் நடேசய்யர் காந்திய அஹிம்சா வாத கொள்கையாலும், இந்திய தேசிய வாதத்தாலும் பீடிக்கப்பட்டிருந்தார். இவரது இலக்கிய செயற்பாடுகள் அக்காலத் தில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. அவரது "வெற்றி யுனதே", "நீ மயங்குவதேன்’ ஆகிய இரு நூல்கள் இம் மக்களின் அவல நிலையினை புலப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதே போல இவரது மனைவியாரும் தமது எளிமையான சீட்டுக் கவிதைகள் மூலம் இம் மக்களது அரசியல் உணர்வினை தட்டியெ ழுப்ப முயன்றார். ரஷ்யப் புரட்சியின் தாக்கமும், உலகெங்கும் பாஸிச - நாஸி சங்களுக்கும் எதிராக உழைப்பாளி மக்கள் நடத் திய போராட்டங்கள் இல் ரை ஒரளவே பாதித்திருந்தது. இந்திய காந்திய சிந்தனை வெளிப்பாடாக இவரது இலக்கியப் பார்வை பெரும்பாலும் காணப்பட்டமையே இவரது பலவீனமாகும்.
1930களில் தமிழ் சிறுகதை மன்னன் என்று குறிப்பிடப்படும் புதுமைப்பித்தன் தமது துன்பக்கேணி சிறுகதை மூலம், புலம் பெயர்ந்த இம் மக்களின் அவல நிலையினை எடுத்துக் காட்டி னார். அதற்கு முன்னர் மகாகவி பாரதியார் தனது "தேயிலைத் தோட்டத்திலே’ என்ற கவிதையில் இலங்கையில் இந்தியர்கள் படும் அவஸ்தையை எடுத்துக் காட்டினார். அவரின் பாடல் வரி களில் பாதிக்கப்பட்டே புதுமைப்பித்தன் இக் கதையினை எழுதி னார் என கூறப்படுகின்றது. ஆனாலும் யதார்த்த வாத சிந்தனை
r u , i,

Page 13
யும் இந்திய தேசிய உணர்வுமே இவரது கதையில் இழையோடிக் காணப்பட்டன. இதே காலப் பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து இங்கு யாத்திரைகளுக்கு வந்த சிலர் தமது கவிதைகள் மூலம் இம் மக்கள் நிலையினை எடுத்துக் காட்டினர். இவைகள் பெரும்பாலும் கும்மி, பஜனைப் பாடல்களாகவே காணப்பட்டன. எப்படியிருப் பினும் இவையனைத்தும் தவிர்க்க முடியாதபடி இந்திய தேசிய வாதத்தின் வெளிப்பாடாக இருந்ததை மறுக்கமுடியாதுள்ளது.
1930க்குப் பின்னர் சர்வசன வாக்குரிமையின் வாயிலாக இலங்கையில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இது மலையகத்திலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்து டன் இடதுசாரி கருத்துக்களும் அதனை நடைமுறைப்படுத்த பொதுவுடமைக் கட்சிகளும் தோன்றி மலையக மக்சளுக்கு விழிப் புணர்வினை ஏற்படுத்த முயன்றனர். அத்துடன் உலகளாவிய ரீதி பில் பாஸிச-நாஸிச ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராட் டங்களை தொழிலாள வர்க்கமும், முற்போக்குச் சக்திகளும் முன் னெடுத்துக்கொண்டிருந் தன இதனது தாக்கம் மலையக இலக்கியங் களில் தாக்கத்தினை செலுத்தத் தொடங்கின. இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியினூடாக் மலையக இலக்கிய செல் நெறி ஒரு தேசிய தகைமையை நோக்கி நகரத் தொடங்கியது.
இதனது ஆரம்ப வித்துக்கள் மலையகத்தில் தொழிற்சங்க அர சியலில் ஈடுபட்ட சி. வி. வேலுப்பிள்ளை போன்ற மூத்த எழுத் தாளர்களால் போடப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அ. செ முருகானந்தம், அ. ந. கந்தசாமி போன்ற ஆரம்ப கால எழுத்தாளர்கள் தமது சிறுகதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கையினை பிரதிபலித்தனர். மலையகத்தைச் சார்ந்த கே கணேஷ் அவர்கள் ஏனைய எழுத்தாளர்களுடன் இணைந்து 1947ல் இலங்கை எழுத்தாளர் சங்கத்தினை ஆரம்பித்தனர். இதற் குப் பின்னர் இந்த அமைப்பானது இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கமாக மாறியது. இது இப்படியிருக்க 1948ல் இம் மக் களுக்கு இருந்த வாக்குரிமை பறிக்கப்பட்டதும் புதிய அரசியல் அலைகள் மலையகத்தில் வீசத் தொடங்கின இத்தகைய அம்சங் கள் எல்லாம் மலையக இலக்கியம் ஒரு தேசிய தன்மையை எடுத் துச் செல்லும் பரிணாம வளர்ச்சியினை காட்டி நின்றன.
2
1956க்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு அரசியல்
சமூகப் புரட்சிகள் புதிய சிந்தனைகளை தோற்றுவித்தது. விதே' சிய எதிர்ப்புணர்வும் சுதேசிய நாட்டமும் இக் காலப் பகுதியில்
8 தாயகம் 31

இலங்கையில் வளரத் தொடங்கியது. இதனது அலைகள் இலக்கி யத் துறையினையும் பாதிக்கச் செய்து 1954ல் உருவாக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கை தமிழ் இலக்கியத்தினை புதிய வழியில் இட்டுச் சென்றது. இந்தியா மேற்கத்தைய இலக்கி வங்களை தமது தத்துப் பிள்ளையாக கொண்டிருந்தது. இலங்கை தமிழ் இலக்கியம் "மண் வாசனை, சோசலிஷ சிந்தனை” ஆகிய கோட்பாடுகளை மையமாகக் கொண்டு நகரத் தொடங்கியது. இன வர்க்க, மொழி வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுதாய மாற்றத்திற் கான இலக்கிய முயற்சிகள் இக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தத்துவம் பிரிவுகளாலும், கோஷ்டி மனப்பான்மையாலும் பின்னர் இது படிப்படியாக வலுவிழந்தது. ஆனாலும் இவ்விடயத்தில் மு. எ. சங்கத்தின் பணி மதிக்கத்தக்கதாகும்.
மு. எ. சங்கத்தின் தோற்றமும் இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார முரண்பாடுகளும் எல்லாச் சமூகங்களையும் பாதிக் கத் தொடங்கியது. மலையகமும் தவிர்க்க முடியாதபடி பாதிப்பிற் குட்பட்டது. மலையகத்தில் படித்த சில விரல் விட்டு எண்ணக் கூடிய இளைஞர்கள் முற்போக்கான கருத்துக்களை மலையக இலக்கியம் வாயிலாக வெளிப்படுத்தினார்கள். மலையகத்தினை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை போன்ற பல்வேறு இலக்கியக் கூறுகள் மலையக மண் வாசனையை எடுத்தியம்பின. ஆழமான பார்வைகளைக் கொண்ட ஒரு தொழி லாளர் வர்க்கத்தினை அடிப்படையாகக் கொண்ட இலக்கியம் வளர ஆரம்பித்தது. சி. வி. வேலுப்பிள்ளை, கோகிலம் சுப்பையா, திருச் செந்தூரன், தெளிவத்த ஜோசப், பன்னீர் செல்வம், பெனடிக் பாலன், எம். எஸ். ராமையா, சாரல் நாடன், மாத்தளை வடி வேலன், மலரன்பன் போன்ற ஆளுமை மிக்க படைப்பாளர்களும் மலையக மக்களின் இதயத்துக் குமுறல்களை எண்ணங்களை வெளிப் படுத்தினர். இக் காலப் பகுதியில் மன்றங்கள், நாடக அரங்குகள் என்பனவும் தோன்றி திராவிட பாரம்பரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. 1972ல் பெருந் தோட்டங்கள் தேசிய மயமாக்கத் தினைத் தொடர்ந்து இம் மக்கள் எதிர்பார்த்த கனவுகள் புறக் சணிக்கப்பட்டவுடன் நிர்க்கதியானார்கள். இதனது தாகமும் மலை யக இல3 கியங்களில் பிரதிடலிக்கத் தொடங்கியது. இன ஒற்றுமை வர்க்க வேறுபாடு, சாதி வன்செயல், பே ராட்ட உணர்வு போன்ற வற்றினை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் உருவெடுத்தன. இவையனைத்தும் மீ லயக இலக்கியம் தனி இலக்கியமாக வளர்ந்து மேலோங்கி வருவதைக் காட்டி நின்றன.
1978ற்கு பிறகு அதிக எண்ணிக்கையில், மலையக இளைஞர்
கள் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லத் தொடங்கினர். இவர்கள் பலவேறு அரசியல் கருத்துக்களை உள்ள ரங்கி மலையக மக்கள்

Page 14
அரசியல் எதிர்காலத்தினை பற்றி சிந்திக்கத் தொடங்கினர், இம் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகின்ற ஒரு வித தேசிய உணர்வினை காணத் தலைப்பட்டனர். சிலர் தீவிர கண்ணோட்டத்திலும், சிலர் ஏனைய இன ஐக்கியத்தோடு இணைத்தும் நோக்கினர். எனவே இதனைச் சார்ந்த இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம் மக்களுக்குள் இருந்த புல்லுருவிகளை படம் பிடித்துக் காட் டக் கூடிய இலக்கியங்களும் உருவாகின. அடிக்கடி இம் மக்கள் தேசிய உணர்வு இந்திய மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டாலும் தாங்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்ற நிலையில் வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்திய  ைம்சா வழியினர் என்ற வர ல 1ற்று வரையறையில் மலையகத் தமிழர் என்ற பதம் நடை முறை ரீதியாக பயன்படுத்தப்பட்டது.
இதனது விழைவுகள் மலையக இலக்கியங்சளில் பிரதிபலிக்கத் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் வாய்மொழி இலச்கியம் ஊடாக ஆரம்பித்த மலையக இலக்கியம் பின்னர் இந்திய தேசிய வாதத்தில் வளர்ந்து மலையக இலக்கியம் அதனது பரிணாம போக்கில் தனித்தன்மை வாய்ந்த மலையக இலக்கியத்திற்கு இட் டுச் சென்றது. அண்மைக் காலங்களில் இம் மக்கள் மத்தியில் ஏற் பட்ட சமூக அரசியல் பொருளாதார பாதிப்புக்கள் புதிய சிந்தனை களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. ஓயாத போராட்ட வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கும் மலையக தொழி லாள வர்க்கத்தின் இலக்கியம் என்ற ரீதியில் இன்று வளரத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் ஒரு அம்ச மாக மலையகம் தனக்கென தனித்துவமான பண்புகளை வளர்த் துக் கொண்டிருக்கிறது. ஆர்வமிக்க புதிய தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் இதனை முன்னெடுக்கக் கூடியவர்களாகக் காணப்படுகின்றனர்.
இலங்கைத் தமிழ் இலக்கியம் மூன்று விதமான போக்குகளைக் கொண்டது. மட்டக்களப்பு யாழ்ப்பணத்தை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர் பாரம்பரியத்தில் உதித்த இலக்கியம், கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய இலக்கியம், இந்திய வம்சாவழியினை அடிப்படையாகக கொண்ட மலையக இலக்கியம். இத்தகைய போக்கு அண்மைக் காலங்களில் ஏற்பட்ட தாகும். இதில் மலையக இலச்கியம் தொழிலாளர்களை மையமா கக் கொண்டிருப்பதால் அது ஏனைய இலங்கைத் தமிழ் இலக் கியத்திற்கு புதிய இரத்தத்தினை பாய்ச்சக் கூடியது.
மலையக தேசிய வாதம் என்பது குறுகிய பிரதேச வாதமோ, அலலது தீவிரவாதமோ அல்ல. அதனது வளர்ச்சிப் போக்கினை
2 () . . தாயகம் 31

நிதானமாக எடைபோட வேண்டும். ஏனைய இனங்களோடு ஐக்கி யப்படவும், தமது உரிமைக்குரலை உரத்து ஒலிக்கவும் மலையக தேசிய இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானதாகும் இத்தகைய பாட் டாளி வர்க்க புதிய ஜனநாயக கலாச்சாரத்தினை நோக்கிய ஒரு தேசிய இலக்கிய சிந்தனை மலையக இலக்கியங்களுக்கு அவசியமா கும். இது மலையக மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவசியமாகும். இதனை முன்னெடுத் துச் செல்ல மலையகத்தில் வளர்ந்து வருகின்ற ஒருவித தேசிய தன்மையினையும் கருத்திற்கொள்ள வேண்டியநிலையில் மலையக மக் கள் உள்ளனர். இத்தகையபோக்குகளின் விளைவாகத்தான் ம்லையக இலக்கியம் ஏனைய இலக்கியங்களை விட தனித்தன்மை பெற்று வருவதை அறிந்துகொள்ள வேண்டும்.
எனவே மலையக இலக்கியம் அதனது வளர்ச்சியில் தனது எதிர்கால இலக்கை அடையக் கூடிய நிலையினை நோக்கி நடைபோட வேண்டியுள்ளது. தமது பாரம்பரியம் , தனித்தன் மை, ஐக்கியம் போன்ற மையக் கருக்களை கொண்ட மலையக இலக்கியத்தினை கட்டி எழுப்ப் பாரிய ஐக்கிய முன்னணி தேவையாகும். அது மலையக இலக்கிய வாதிகளையும், இலக்கிய நிறுவனங்களையும் பொறுத்தது. அண்மைக் காலங்களில் மலையகத்தில் படித்த ஒரு மத்திய தர வகுப்பினர் தோற்றம் பெற்றுள்ளனர் இதனது தாக் கம் மமையக இலக்கியங்களில் வடிவம் சம்பந்தமான பிரச்சனைக ளைத் தோற்றுவித்துள்ளது. ஏனைய இலக்கியங்களோடு ஒப்பிடும் போது மலையக இலக்கியங்களில் அழகியல் பண்புகள் குறைவாக உள்ளது. ஆனால் சம காலங்களில் இது இடம்பெற்று வருகின்றது. இது தனியாக ஆராயப்பட வேண்டியவை.
جرج و بسیبریایی هم متهمتناع مخذ۱۹۹ ; :\,.?**?)، بہت :"* 30یھتوٹھہ
عمل تعدادوشمن، جنھیق ہو:
தலை
‘விடு, என்ற பகுதியிலிருந்து "வீடு' என்ற சொல் வந்தது. வீடு என்பது விடுதலை. இதை வடமொழியில் மூக்தி என்கிறார்கள். இந்த நிலைமையை இறந்துபோனதன பின்பு பெறவேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இவ் வுலக வாழ்க்கையிலேயே, இப்போதே, அந்நிலையை விரும்பு தல் நன்று. ܬܐ
விடுதலையே இன்பத்திற்கு வழி; விடுதலைபெற்றோர் வறு மையிலிருந்து மாறி செல்வமடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கிப் பெருமைகாண்பார்கள். துன்க்ங்கள் நீங்கி இன்பம் எய்துவஈர்கள்.
மகாகவி பாரதியா ர்.

Page 15
சற்றே கண்திற
※ நாவலன்
விேஞ்! மோனக் கனவுகளில் மூழ்காதே சற்றே கண் திற! ஞாலக் கொடுமைகள் உன்னுட் புகும்.
காற்று வெளியிடையேயும்
நித்திலம் கொழிக்கும்
நீலக் கடலலையேயும்
நீத்தி மனம் குளிர்ந்தாயோ?
வானத் தனிப் பந்தல் உனது s Tudur TuG DIT? கானப் பறவை ககன வெளியில் ஒறகசைத்துத் தான் செல்லும்.
சிட்டாய் பூஞ்சிற9 சைத்து மன வெளியில் திரிந்தனையோ?
கவிஞ!
மேனக் கனவுகளில் மட்டும் மூழ்காதே மே னத்தில் மூழ்கி
முத்தெடுத்து --
சற்றே கன திற!
ஞாலக் கொடுமைகள் உன்னுட் புகும்.
பிரிய முடன் ஏதேதோ பிசிற்றும்
இலக்கடலலைகளை நோக்கி வெள்ளி ,ள் சிரிக்கும் பங்காய்
நேச ۵ آقق . با புன ை ை*த்து , கையன் சக்த விரைவே ன், சூரியன ய்க் கெ விேழிச் சுடர் விரித் து வானிற் பாய்வேன்.
பின்னர் என்ன !
புதி பூமியின் g M &à: ti 1 ܐܶܬ݂ܶ ݂ܵܐ ܟܼܿܕ݂

எலுமிச்தைத்தோம்
தென்னாபிரிக்கச் சிறுகதை
ஆங்கில மூலம்:
நீண்ட வரிசையாக நின்ற மரங்களினிடையே அவர்கள் நடந்து வந்தார்கள். குளிர்காலம் இன்னும் முற்றாகப் போய்விட வில்லை. காற்று சில்லென்றிருந் தது. அழுக்கடைந்த பஞ்சுபோல் வானில் இழுவுண்டு கிடந்த முகில் களின் பின்னால் நிலா மறைந் திருந்தது. வந்தவர்களில் ஒருவ னைத் தவிர, மற்றெல்லோரும் இரவின் குளிரைத் தாங்கக்கூடிய ஆடைகளை அணிந்திருந்தார் இரவும் நிலவும் ஈரலித்தி (நந்தன. அவர்களின் காலணிகள் ஈர மண்ணில் அச்சொட்டான அடையாளங்களை ஏற்படுத் தின. இருளில் அது தெரிய வில்லை.
கள்.
மின்கலத்தால் இயங்கிய  ைசக் கி ஸ் விளக்கொன்றைக் கையில் பிடித்தவாறு, அவர்களில் ஒருவன் முன்னே நடந்துகொண் டிருந்தான். மரங்களினிடையே வழிகாட்டி வந்த அவன் பின் னால் மற்றவர்கள் இருளில் தொடர்ந்தார்கள்.
தாயகம் 31
அலெக்ஸ் லா (G) குமா
தமிழில்: சாந்தன்
சு வ ர் க் கோழிக்கும் தம் குரலை நிறுத்தியதில் அவர்களை சூழ்ந்திருந்த இரவு இப்போ அமைதி கொண்டது. ஆனால், தொல்ைவில், மனித அசுகையை அறியாதவை இன்னமும் தமது ஒரே விதமான ஒலியைக் கிளப் பியவாறிருந்தன. எங்கோ இன் னுந் தொலைவில், உரத்துக் (கரைக்கத் தொடங்கிய ஒரு நாய், இருந்தாற் போல நிறுத்திக் கோண்டது. அந்த ஆட்கள் எலு மிச்சைத் தோட்டமொன்றினுT T நடந்துகொண்டிருந்தார் கள்; காற்றில் அச் செடிகளின் வாசனை பரவியிருந்தது.
'அவ்வளவு கெதி யாசு பி போகாதே’ குழுவின் கடைசியில் வந்துகொண்டிருந்தவன், விளக் குக்காரனுக்குச் சொன்னான். "இங்கே பின்னால் ஒரே இருட் டாக இருக்கிறது, asmrlʻü uS?rf? Lorrg)f)**
இருளில் மெல்லத்தான் பேச வேண்டுமென்பது போல அவன்
23

Page 16
பேசினான். அந்த ஆள், பெரிய உடம்பு படைத்தவன். காக்கிக் காற்சட்டையும் பூட்சும் அணிந் திருந்தான். அவனது மேலங்கி
யின் வலது மார்பிலும் முழங்
கைகளிலும், தோலால் ஒட்டுப் போடப்பட்டிருந்தது.
அவன், தோட்டாக்கள் நிரப் பிய வேட்டைத் துப்பாக்கி வைத் திருந்தான். இருளில் முகம் சரி வரத் தெரியவில்லை. பின்னால் வந்துகொண்டிருந்தாலும் (F (Lp வின் தலைவன் அவன்தான். மற் றவர்கள் த ன் னுடன் வந்து
சேர்ந்து கொள்வதற்காக விளக்.
குக்காரன் வேகத்தைக் குறைத்
தான். ʻʻayF rf? uu nr 63r குளிர், ஊம் ." என்றான் இன்னொ ருவன். "குளிரோ?" துப்பாக்கி
யுடன் வந்தவன் கிண்டலாகக் கேட்டான் "இங்க நிக்கிற இந் தப் பயலிலும் பார்க்க உனக்குக் குளிருதா?*
அவர்களின் நடுவே கடுமா றிக்கொண்டு நடந்த - கதகதப் பான ஆடை அணியாக - அந்த ஒருவனைத் சன் தப்பாக்கியால் காட்டியபடி இதைக் கேட்டான்.
அவனால் சொல்லப்பட்ட அந்த மனிதன், காற்சட்டையும் வீட்டிலனியும் மேற்சட்டையும் அணிந்திருந் கான். அவனை அவன் தங்கியிருந்த இடத்திலி (கந்து இவர்கள் பிடித்துக் கொண்டு வந்த போது, ஒரு மழைக்கோட்டை மட்டுமே மாட் டிக் கொள்ள விட்டிருந்தார்கள்: வாய் கிடுகிடுப்பதைத் தவிர்ப்பு
24
தற்காக பற்களை இறுகக் கடித் தவாறு அவன் இப்போ குளி ரால் நடுங்கினான். அவனுடைய சப்பாத்துக்களைக் கட் டி க் கொள்ளக் கூட அவர்கள் விட வில்லை. இப்போது, நடக்க நடக்க, நாடாக்களின் முனைகள் சரசரத்தன. "உனக்குக் குளி ரு கா, டேய்?** விளக்குக் காரன் பகிடி விட்டான்.
அந்தக் கறுப்பு மனிதன் பதில் பேசவில்லை. அவன் பயந் திருந்தான் ஆனால் அந் கப் பயத்தோடு சேர்ந்திருந்த பிடி வாதம் அவனைப் பதில் சோ
மல் தடுத்தது. "அவனுக்குக் குளிரில்லை?” ஐந்தாவது ஆள் சொன்னான். "அவன் பயந்து
நடுங்கிறான் என்னடா?"
கறுப்பு மனிதன் ஒன்றுமே சொல்லவில்லை. அச் சிறு விளக் கின் அரைகுறை ஒளியை ஊடுரு வித் தன் னெ தி ரே அவன் வெறித்து நோக்கினான். விளக் குக்காரனின் நிழலுரு அவனுக் குத் தெரிந்தது. ஆனால், தன் இருபுறமும் வந்துகொண்டிருந்த
வர்களைப் பார்க்க அவன் விருமி
பவில்லை. அவர்களிலொருவன் குளிரைப்பற்றிச் சொன்னவன். மற்றவன் பயத்தைப் பற்றிக் குறிப்பிட்டவன். அவர்களிருவ ரும் ஆளுக்கொரு தோற் சவுக்கு வைத்திருந்தார்கள். ஒருவன் இடைக்கிடை அதை இவன் காலில் வீசிக்கொண்டிருந்தான். "இவனால் பேசவும் முடியாது போல’* கடைசியாகப் பேசிய வன் சிரித்தான்.
தாயகம் 31

'நில் அன்ட்றீஸ். ஒரு நிமி சம் பொறு" வேட்டைத் துப் பாக்கியுடன் வந்த அவர்களின் தலைவன் சொன்னான். எல் லோரும் மர வரிசைக்கிடையில் நின்றார்கள். விளக்குக்காரன் திரும்பினான். அவர்கள் மேல் வெளிச்சம் படுமாறு விளக்கைப் பிடித்தபடியே, *என்ன சங் கதி? என்று கேட்டான். "ஒரு நிமிசம் பொறு" இசைச் சாதா ரணமாகச் சொல்வது போல் சொல்ல தலைவன் கஷ்டப்பட வேண்டியிருந்தது . **இவன் ஊமையில்லை. ஆள் பொல்லாத அள். படிச்ச கறுப்பன். இந்தா டேய்." அவன் கறுப்பு மனி தனைக் கூப்பிட்டான் , தேட முற்ற குரலில் சொன்னான்; "உன்னோட ஒரு பெரியவன் பேசினா, நீ மறுமொழி சொல்ல வேணும். விளங்கதா?
கறுப்பு மனிதனின் மணிக் கட்டுகள் பின்புறமாக கோல் srrarrrei) கட்டப்பட்டிருக்கன. கைகளிாண்டும் சந் சிக்க இடத் தக்க மேலே, முதசில் துப்பாசி கியால் அன்ை அழுத்தினான்.
'''G**(5Ærr_rr? 67ørrter LDff மொழி சொல்லு . சொல்வர விட்டா உன்ா ஆஉள்ள ந் தண்டில ஒட்டை துளைப்பன்'
கைகள் கட்டப்பட்டிருந்த மனிகள், களர்ந்திருந்த தனது மழைக்கோட்டினூடாக, த ப் .TAS o so6OTu5air sear Drr67 உலோக வட்டத்கை உண்ாமுடிந் தது. பற்களைக் கடித்தக்கொண் டான். அவனுக்குக் குளிராயிருந்
தாயகம் 31.
தது. நடுங்கி விடாதிருக்க முயன் றான். பயத்தினால் தான் நடுங் குவதாக அவர்கள் நினைத்து விடக்கூடும். துப்பாக்கியை வைத் திருந்தவன் அதன் கொழுவியை விரலால் அழுத்தியதால் எழுந்த லேசான கிளிக் ஒலி அவனுக்குக் கேட்டது. அந்தக் குளிரிலும் அவன் மேலுதட்டில் வியர்வைத் துளிகள் அரும்பின. **புண்ணி யம் கிடைக்கும், அவனைச் சுட்டுவிடாதை” விளக்குக்காரன் சொன்னான். லேசான பயத்து டன் மெல்லச் சிரித்தபடி 'அவன் இதைச் சொன்னான். *நாங்கள் எந்தக் கொலையிலும் சம்மந்தப் பட விரும்பவில்லை. ” “என்ன சொல்லுறாய்? தலைவன் கேட் டான். மின் விளக்கின் ஒளி இப் போது அவன் முகத்தில் விழுந் த கில், நிழல்கள் அகன்று, முகத் கில் படர்ந்திருந்த ஏராளமான ரேகைகளும் சுருக்கங்களும் செளி வாய்த் தெரிந்தன. செங்கல்லின் நிறத்திலிருந்த அம் முகத்தில் அவை, ஒரு தேசப்படத்தில் தெரிகிற ஆறுகள், தெருக்கள், இருப்புப் பாதைகள் போலத்
தோன்றின. அந்தக் சோதிசள்
அவனுடைய மோவாய் விளிம்பு களைச் சுற்றிவந்த, முசம் முழு வதும் பரவியிருந்தன. கடுமையு டன் கூடிய அவன் விழிகள், உறைந்து போன ஏரிகள் போல் நீலமாய்த் தெரிந்தன.
"இவன் சரியான ஆள்" அவன் திரும்பவும் சொன்னான். “ஒரு பள்ளிக்கூடத்தில படிப்பிக் கிறான். அதுக்கு நாங்கள்தான் படியளக்கிறம். எங்கட வியர்வை
25

Page 17
யில வாழ்ந்து கொண்டு, எங்கட
தேவாலயக் குருவான வரோட துடுக்குத்தனமாயும் அநாகரிகமா யும் நடந்து கொள்ளுற அளவுக்கு இவனுக்குத் திமிர் இருக்கு. ஆனா, நான் இருக்கிற வரை, எந்தப் பயலும் வெள்ளையன்க ளோட வாலாட்ட முடியாது”
'உண்மைதான்" விளக்குக் காரன் ஆமோதித்தான்.
'நாங்கள் இவனைச் சரியா னபடி கவனிக்கத்தான் போறம் .
ஆனா, சுடத் தேவையில்லை. அந்தப் பிரச்சனைகள் வேண்
nrub””
"நான் நினைச்சா, எந்தப் கயலையும் எந்தக் காப்பிரியை யும் சுடுவன். பிரச்சனை வரட் டும் பாப்பம்? இவங்கள் என்னை ID if? Li nr 60) 5 பண்ணத்தான் வேணும். எனக்கு மறுமொழி சொல்லித்தான் ஆகவேணும்"
கறுப்பு மனிதனின் முதுகில்
அவன் திடீரென துப்பாக்கி முனையால் இடித்தான். கறுத் தவன் நிலை குலைந்து தடுமா றினான்.
"கேக்குதா, in 39) - ur... நான் உனக்குத்தான் சொல்லு றன்." பயம் பற்றிக் கிண்டல் பண்ணியவன் இப்போது முன் னால் வந்து அவன் முகத்தில் குத்தினான். கன்னத்து எலும் பில் ஓங்கி அடித்த அந்த முஷ் டியில் பிடித்தபடி சவுக்கு இன்ன
மும் இருந்தது. இந்தத் தாமதம்
26
அவனுக்குக் கோபமூட்டியது. பிடிபட்டிருப்பவன் பணிந்துவிட் டால், தங்களுடைய வேலைக
ளைப் பார்க்கலாம்.
"நாய்ப் பயலே?" அவன் கத்தினான்.
"ஏன் நீ வாயே திறக்கிறா
யில்லை?"
அந்த மனிதன் தள்ளாடி னான். தன்னை சமாளித்துக் கொண்டு ஒரு எலுமிச்சை மரத் தின் அசையும் நிழலோடு நின் றான். விளக்கொளி, திரும்பி அவன் மீது வீசியது. வையை விலக்கிக் கொண்டான்.
rrfחנן ז&356.
துப்பாக்கிக்காரன் தன்னை சுட்டு விடக்கூடுமென் அவன் பயந் தான். அவனுக்குச் சாவகற்கு விருப்பமில்லை. அவன் நிமிர்ந்து நின்றுகொண்டு அவர்களை தவிர் த்து அப்பால் நோக்கினான்.
af "சொல்லு? * அடித்தவன்
கேட்டான்.
"சரி, ஐயா” என்றான் கறு ப்பு மனிதன். அத் தொனியில் மரியாகையுடன் வெறுப்பும் கலந் திருந்ததை, அவனைச் சூழ்ந்து நின்றவர்கள் கவனிக்கவில்லை.
*அப்படிச் சொல்லு" விளக் குக்காரன். சொன்னான்.
"உனக்குப் பிரச்சனை வரா
மல் பார்த்துக்கொள். அடுத்த முறை இது நினைவிருக்கும். சரி,
தாயகம் 3

விளக்கை மீண்டும் அவன்
Q3.-urr6nj ub ' ʼ
முன்னால் நடந்தான்.
தலைவன் கறுப்பு மனிதனை முன்னே தள்ளினான். அவன் தனக்கு இருபுறமும் வந்தவர்க ளிடையே தட்டித் தடுமாற வேண்டியிருந்தது.
**இதிலை அதிசயமென்ன வெண்டால், தனக் குச் சவுக்கா லை அடிச்சதுக்காகப் பாதிரியா ரைக் கோட்டிலை ஏத்தி நட்ட ஈடு கேட்கிற அளவுக்கு இவனுக் குத் துணிவு வந்திருக்கு" தலை வன் பொதுவாக சொன்னான்.
"இந்தக் கேடுகெட்டதாய்!
என்ர வாழ்நாழிலையே நான்
இப்பிடியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை'
"சரி, இப்ப நாங்கள் அதி லும் திறமான சவுக்கடி கொடுத் தால் சரியாப் போய்விடும்’ அன் ட்றீஸ் என்பவன் சொன்னான்.
**இந்தமுறை இவனுக்கு ஒரு unr - b படிப் பிக்கத் தான் வேணும், ஊம்! தாங்கள் கொடுக் கப் போறதுக்காக இவன் ஒருத ரிட்டையும் நட்ட ஈடு கேட்கே லாது"
'அதுக்குப் பிறகு ஆளும் இங்க இருக்க முடியாது. தன்ர மூட்டை முடிச்சுகளோட நகரத் துக்குப் போய்ச் சேரட்டும். அங்க தான், மட்டுமரியாதைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத
ይኔ በr ሀ ፡ & ህዕ 31
ஆட்கள் இருக்கினம் கேட்கு
5fTL mr?ʼ°
இம்முறை பதிலொன்றைப் பெறுவதில் அவர்கள் அக்கறைப் படவில்லை. தலைவன் தொடர் ந்து சொன்னான்; *"எங்கட இடத்திலை இந்தப் படிச்ச காட் டுமிராண்டிகள் ஒரு த் தரும் வேண்டாம்?"
'வெள்ளைக் காரர்களாகி விட்ட கறுப்பன்களும் வேண் டாம்" மற்றவர்களில் ஒருவன் சொன்னான்.
சிறிய பள்ளத்தாக்கின் அடுத்த பக்கத்து மலைச்சரிவில் இருளில் மூழ்கிக் கிடந்த பண்ணைக் கட்டிடத்திலிருந்து மீண்டும் நாய் குரைக்கத் தொடங்கியது. "அது ஐக்ரர் தான். ஏன் குைேலக்குதெண்டு தெரியேலை. அது ஒரு நல்ல நாய். மெனிர் மறைசுக்கு, அஞ்சு பவுண் தாறனெண்டு சொல்வி யும், அவன் அதை விக்கமாட்டே னெண்டிட்டான். அதுமாதிரி G5 நாய் வைச்சிருக்க வேணும், நான் எவவளவு கவனமாய் வளர்ப் பன் தெரியுமா???
இரவின் இருள் சைத் தோட்டத்தில் இன்னும் இறுகக் கவித்தது. செடிகளின் இலைகள், கோபத்தில் இPறுமுறுப் பவை போல் ஒலி கிளப்பின. 67) மிச்சையின் இனி, மணத்திற்கும் இந்த ஒலிக்ம்ே ஒத்துவரவில்லை. காற்றில் குளிர் அதிகரித்தது. தூரத்தில் கேட்ட சுவர்க் கோழி
எலுமிச்
27

Page 18
ஈழத்தின் தனித்துவம்
ஏறத்தாழ, கடந்த பதினைந்தாண்டு கால ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியில் அவதானிக்கத்தக்க சில பண்புகளுள் இவற்றை மதிப்பீடு செய்யும் போது, தமிழ் நாட்டுப் புதுக் கவிதைப் போக்கிலிருந்து வேறுபட்ட சில பண்புகளையும், தனித்துவப் போக்குகளையும் இனங்காண முடிகிறது.
இன்றைய ஈழத்துப் புதுக்கவிதையாளருள் பெரும்பாலா னோர் எழுத்து' சஞ்சிகையின் தாக்கத்தால் எழுதத் தொடங் கியவர்களே. ‘எழுத்தில் வெளிவந்த புதுக்கவிதைகளே புதுக் கவிதை எழுதும் உந்துதலையும் ஏற்படுத்தின. எனினும், "எழுத்து காட்டிய வழியில் இவர்கள் செல்லவில்லை. எழுத்தில் பெரும்பாலானோர் எழுதியதுபோன்றோ, அல்லது இன்னும் எழுத்துப் பரம்பரையினர் சிலர் எழுதுவது போன்றோ, தனி மனித அக உளச்சல்கள் கனவுகள், ஏமாற்றங்கள், மரணம் விரக்தி, காமம் போன்ற விசயங்கள் ஈமத்துப் புதுக்கவிதையின் உள்ளடக்கமாக அமையவில்லை, மாறாக, சமுதா! நோக்கு டைய - ஏதோ ஒரு விதத்தில் சமுதாயக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கிற - புதுக்கவிதைகளே இங்கு மிகுதியாக வெளி வருகின்றன ஈழத்து நாவல், சிறுகதை என்பவற்றில் காணப் படும் Seriousness தன்மை ஈழத்துப் புதுக்கவிதைகளிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நன்றி: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (பதிப்பு 77)
களின் ஒலிகள் எல்லாம் ஒன்றாகி உரத்த தொனியில் கேட்டன. நிலா முகில்களின் பின்னாலி ருந்து வெளியே வந்தது. அதன் தன்னொளி, இலைகளில் வெள்ளி முலாம் பூசிற்று. எலுமிச்சை இலைகளை யாரோ கசக்கி விட் டாற்போல அதன் நறுமணம் இன்னும் அதிகரித்தது.
அவர்கள் நிலவொளியில் இன்னும் சிறிதுதுரரம் சென்றார் கள். **இதுவும் நல்ல இடந்தான், ஊம்” என்றான் விளக்குக்காரன்
à 8
பழத்தோட்டத்தின் நடுவில்
வெளியாயிருந்த ஓரிடத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். நறு மனம் கமழும் செடிகளால்
சூழப்பட்ட அவ்விடம் ஒரு சிறிய அரங்கு போலிருந்தது அங்கே எல்லோரும் நின்றார்கள்.
நிலவொழி, எலிமிச்சை இலைகளில் பட்டு மின்னிய போது அவற்றின் விளிம்புகளி
லும் நுனியிலும் படிந்திருந்த ஈரம், சிந்திய பாதரசம யப்ப் பளபளத்தது. r
தாயகம் 31

ஏக்கம்
இந்த மனிதர்கள் ஏனின்னும் திருந்தவில்லை மானிடத் துயரின் தாக்கம் புரியாது தானிடர் வீழ்ந்ததும் துடிந்துக் கதறி
சத்தியம்
மனசாட்சி . மனிதாபிம roo மென்ற முத்திரைக் கோசங்கள் வைத்துப் புலம்பும் இந்த மனிதர்கள் ஏனின்னும் திருந்தவில்லை!
துதிபாடிப் பதவிபெற்று குரோதம் தமை வளர்ப்பார் கதியிலாரெனுங் கருணை தாரா மதியாது மானிடத்தை மிதித்து சாதி எனும் தீயை உள்வளர்த்து சாகாது காப்பதில்தான் நாட்டம் முழுதும் வே காத வேள்வித் தீயிதை வளர்த்தால் ஆகாது என்றோதி அதுவே குறி நிற்றல் .
தாயகம் > 1
வளவை வளவன்
சொல்லுக்கும் செயலுக்கும் காதவழி இடைவிடுதல் மரபோ? மறந்து போவதாக நினைத்து மல்அலுக்கட்டி மனிதமுரைப்பதுவும் நாற்கால் விலங்குகளின் நயமான வாழ்வு கண்டும் பொய்க்கால் குதிரைகளில் புறப்பட்டு வருபவர்கள் சாக்கால வேளை வந்தால் தத்துவங்கள் விற்பார் சித்து விழை பாட்டால் சிறைகொள்ளும் ஆன்மீகச் சித்தர் தம் ஆளுமை போல் வித்தகங்கள் செய்யுமிவர் அம்புலியில் மனிதன் தன் அடிச்சுவடு வைத்தபின்பும் இங்கிதமாய் வாழ இவர் ஏனின்னும் கற்கவில்லை.
இந்த மனிதர்கள் ஏனின்னுந் திருந்தவில்லை! சொந்த மதி இவற்கு சுடுகாடாய் போனதுவோ?

Page 19
வீடுதேடி.
9ெ சு. திருகேஸ்வரன்
தேவாரத்துக்கு மணிய டிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் கான் இருக்கிறேன, சந்தியிலை போக்குவரத்தைக் கண்காணிச் கும் காவல்துறையினர், நான் போ ய் க் கொண்டிருக்கின்ற பாதையால் ச் செல்பவர்களைத் தான் சந்தியைக் கடக்க அனும திக்கின்றனர். எப்பிடி ஊன்றித் தான் சைக்கிளை உழக்கினா லும் சந்தியை அடைவதற்கு முன்னர் பாதை தடைபட்டுவி டும் என்பதைத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தாலும் அ வ ச ர மா க உழக் வேதைப் பார்த்து, என்னையும் போகவிட் டுத்தான் தடுப்பார்கள் என்ற நப்பாசையின7 ல், சைக் கிளை வேகமாக உழக்கினேன்.
அது ஒரு முக்கியமான நாற் சந்தி, எந்த ஒரு இராணுவ முகாமில் இருந்தும் ஏவப்படும் எறிகணைகளின் சாதாரண வீச் சுக்குள் அந்தப் பகுதி அமைய வில்லை. அத்துடன் பல அரச, தனியார் திறுவனங்கள் அந்தச் சந்தியை அண்டித்தான் அமைந் துள்ளன. இந்த மாவட்டத்தி லுள்ள பெரும்பான்மையான மக்களின் ஏகோபித்த தெய்வ
3 O
to go முருகன் கோயிலும் சொற்ப தூரத்தில்தான் உள் ளது. ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று நான்கு மாடிக் கட்டிடங் களுடன் "ஒ வென்று’ உயர்ந்து நின்ற, அந்த மகாவித்தியாலய மும் ஒரு நூறு அடி நீளமான கொட்டகையிலை, பக்கத்திலை தான் இயங்குகின்றது.
முன்னம் பள்ளிக்கூட நேரங் களிலை, இந்தச் சந்தியை கடப் {...! ቇኽ] என்பது உண்மைவலை பெரும்பாடுதான். பத்துப் பதி னைந்து வருடங்களாய் சைக்கி ளோடுகின்ற எனக்கே சிரமமென் றால் புதிசாய்ச் சயிக்கில் பழகி னவர்களுக்கு எவ்வளவு சிரம மாய் இருக்கும்.
இன்றைக் கு எப்பிடியும் தேவாரம் முடிந்த பிறகுதான் பள்ளிக்கூடத்துக்குள்ளை போக முடியும். நான்தான் கடைசியா ள ஈ யும் கையொப்பம் இF வேண்டி வரும் என்று மனம் அந்தரப்பட்டுக் கொண்டு நின்ற எனக்கு, பக்கத்து வீதியாலை வந்துகொண்டிருந்த விமலா ரீச் சரைக் கண்டதும், பெரும் ஆறு தலாக இருந்தது.
தாயகம் 31

விமலா ரீச்சர்தான் வழமை யாக அதிபருக்கு அடுத்த ஆளாய் கையொப்பம் வைக்கிற வா . ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக் குது. மொத்தம் முப்பது வருசம் முழுமையாகச் சேவையாற்றிப் போட்டா. ஆனால் இண்டைக் கும் கடமையிலை ஒரு சிறு பிச கும் கிடையாது. தமிழ்ப் பாடத் தில்த் தான் விசேட பயிற்சி பெற்றவா. ஆனால் ஆசிரியர்கட் குத் தட்டுப்பாடு நிலவும், எந்தப் பாடத்தையும் முழு முயற்சி யோடு திறமையாகக் கற்பிப் பார். வருடத்தி6ை) ஒரு பத்து நாள் லீவுகூட எடுக்கமாட்டா. இவ்வளவு காலம் கற்பித்த அனு பவம் இருந்தும், பாடத்திட்டம் பாடக்குறிப்புக்கள் ஒழுங்காக எழுதித்தான் எந்தப் ப: டமும் படிப்பிப்பா.
அப்பிடியான ரீச்சர் இன் றைக்கு எப்பிடியும் எனக்குப் பிந்தித்தானே கையொப்பம் வைக்கப் போகின்றா என்பதை நினைக்க சிறு சந்தோசம்தான். அவா நடந்து வருகிறதுக்கிடை யிலை நான், எப்பிடியும் கை யொப்பம் வைச்சுப் படிப்பிக்க வும் தொடங்கிவிடுவன்.
நான் நினைத்ததற்கு மாறாக, அவர் பள்ளிக்கூஉப் பக்கB திரும்பர்மில் கோயில் பக் கம் திரும்பிப்போறr.
பள்ளிக்கூடித்துக்குக் கண்ட
படி லிவு எடுத்தாதிமூளிசிகலிங்க போகுதேர்!
தாயகம் 31
வெள்ளிக்கிழமை
தானே கோயிலுக்கு ப்
போறாவேரி
சீ. புள்ளிக்கூடத்துக்கு லீவு எடுத்து, அவா கோயிலுக்குப் போகமாட்டா!
ஒல நேரம் வீடு விசாரிச்சுப் போறாவோ? அப்பிடியும் இநக் காது. தனக்கு இப்ப ஒரு வீடு வசதியாகக் கிடிைச்சிருக்குது என்டு அண்டைக்கத்தானே சொ ன்னவா. அந்த வீட்டுக்கக் குடி போயும் இருக்கலுேணும் வீட் டுப்பிரச்சனையாயும், இருக்காது.
இப்ப விசாரிச்சுக்கொண்டு இருந்
தால் பள்ளிக்கூடத்துக்கு இன் னும் நேரம் போய்விடும்.
விமலா ரீச்சரின் குஇழ்த் துக்கென தீவுப்பகுதியிலை இன் னம் பெரிய வளவிலை, கிரிகத்தி மாளிகை போல ஒரு வீடுல் இகுக் கின்றது. பனையும் தென்னை யும் நிறைந்த கடல் வணிவு வளவுக்குள் இருந்து பெறும் மூரு மானமே, வாழ்க்கைச் இசலவுக் குப் போதும். அவர்களின் வீட் டின் பின்புநத்தில் இஞ்ந்து, நண்டு பரந்திருக்கும் அத்தக்
கடற்கரை ഖഎിഴിൽ {് ഔ-്
காற்றுப் போகத்துக்கு, கு" நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து வரும் மின்வர்கள் வாடி புரழைத்து வாழ்வார்கள். தீர்ம நிவந்து வாடியமைக்க இட இதுத் தலிப்போர்க்கு, கங்சி து வளவுக்குள்ளும் விர8! ஒழக்கு அனுமதிப்பார்கள்.
s 31

Page 20
விமலா ரீச்சரின் கணவன் பரமநாதன் மாஸ்ரர் சென்ற வருடம்தான் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றாலும், தனது இடத்துக்கு இன்னும் ஒரு வரூம் நியமிக்கப்படாததால், தொண்டு அடிப்படையில் இன் றும் திணைக்கள அனுமதியுடன் கடமையாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்.
அவர் தன்னை ஒரு சமூகத் தொண்டன் என வெளியே காட் டிக்கொள்ளாவிட்டாலும், அந் தக் கிராமத்தின் முன்னேற்றத் திலை பெரும் அக்கறையுடைய வர். வெளியூர்களில இருந்து அங்கு சேவையாற்ற வருகின்ற எந்த அரச ஊழியர்களுக்கும், இருப்பிட வசதி, சாப்பாட்டு வசதி என்பனவற்றை ஏற்படுத் திக் கொடுத்து அவர்களையும் அந்த ஊரவர்களுள் ஒருவர்க ளாக்கி விடுவார். நெருக்கடியான காலத்தில் சாமம் ஏமம் என்றும் பாராது, வீட்டுக்கு வருபவர்க ளுக்கு தயக்கமின்றி திடீர் விருந் தளித்த, அந்தக் கிராமத்தவர் களுள் அவரும் முதன்மையான வர். பரமநாதன் மாஸ்ரரின் எந்த எடுப்புக்கும் முகம் கோ ணாது தோள் கொடுப்பவள் தான் விமலா ரீச்சர்.
தொண்ணுற்றோராம் ஆண் டின் பிற்பகுதியிலை, திடீரென கடற்கரையூடாக, அந்தக் கிரா மத்திற்குள் ராணுவம் புகுந்தது. ஒருவாறு அங்கிருந்து வெளியேறி இந்த நகரத்துக்கு வந்து சேர்ந் தார்கள். வந்த புதிசிலை, அவர்
32
களின் மகள் ஏற்கனவே படிப்ப தற்காகத் தங்கியிருந்த வீட்டில் அவசரத்திலை தங்கினார்கள். அவர்கள் மொத்தம் ஐந்துபேர். வீட்டுக்காரரும் நாலு பேர், ஒரு அறையும், ஒரு சிறிய விறாந் தையும், வெளியே ஒலையால் வே யப்பட்ட சிறிய குசினியும் கொண்ட மட்டுமட்டான வீடு. உடுத்த உடையுடனும், வெறும் கைகளுடனும் வந்த அவர்களை அந்த வீட்டுக்காரர் அன்போடு வரவேற்றனர். தங்க ளிடம் இருந்த சமையல்ப் பாத்திரங்க ளில் சிலவற்றை அவர்களுக்குக் கொடுத்துத் தனியாகச் சமைப் பதற்கும் வசதி செய்தார்கள்.
இரண்டு ஆண்டுகள், எந்த வித சலிப்புமின்றி அந்த வீட்டில் இரண்டு வாரங்களுக்குரிய அணு பவத்துடன் இனிதே கழித்தது. வீட்டுக்காரரின் மகளுக்குத் திரு மணம் நடப்பதற்கான ஏற்பாடு கள் நடைபெற்றன. மூன்று குடும்பங்கள் அந்த வீட்டில் வாழ் வது கடினம் என்பதால், அவர் ஆள் அன்போடு தடுத்தும் வேறு @తీ வீட்டுக்கு பிரவேசித்தார் $ଈ •
அது ஒரு தேவைக்கு அதிக மான அறைகளைக் கொண்ட ஆடம்பரமான வீடு. இரண்டு மாபிள் பதிக்கப்பட்ட சமையல றைகள், பெரிய மாநாடுகள் நடாத்தக் கூடியளவுக்குப் பிர மாண்டமான இரண்டு மண்ட பங்கள். நம்மடை கிராமத்தவர் அனைவருமே இங்கு முகாமிட லாம். வயது முதிர்ந்த தம்பதி
5 Tuu sist 31

யர் இருவரும் தான் இப்போ தைய வீட்டின் பராமரிப்பாளர் கள். அவர்களது நான்கு பிள்ளை களும், வெவ்வேறு நான்கு ஐரோப்பிய நாடுகளில் நிரந்தர அகதி அந்தஸ்துடன் வாழ்கி றார்கள்.
முதல் இருந்த வீட்டுக்கு மகள் தனியாகச் செலுத்தி வந்த வாடகைத் தொகையைத்தான் தொடர்ந்தும் அறவிட்டார்கள். இந்த வீட்டுக்கு இருபதினாயிரம் ரூபா முற்பணம் அத்துடன் மாதம் ஐநூறு ரூபா வாடகை
வீட்டைப் பாவிப்பதற்குப் பல நிபந்தனைகள். கிணறு பாவிப்பதற்கு, மலசல கூடத்
தைப் பாவிப்பதற்கு எல்லாம் நிபந்தனைகள். 'என்ன கார ணம் கொண்டும் நீங்கள் ஐந்து பேரையும் தவிர, வேறு எவரும் ஒரு மணித்தியாலத்துக்கு மேல்த் தங்க முடியாது’’ விட்டுக்கார அம்மா, மனனம் செய்து ஒப்பு விப்புவது போல் ஒழுங்காக எ ல் ல 7 நிபந்தனைகளையும் ஒப்புவித்தாள்.
மாதாந்தம் எப்படிவாவது பத்தால் திகதிக்கு முன்னர் வாடலகப் பணம் செலுத்தியாக வேண்டும். ஓரிரு நாட்கள் தாம தித்தால், அந்த அம்மாள் நாள் வட்டியையும் சரியாகக் கணித்து அறவிட்டும் கொள்வா வட்டி அறவிட்டாலும் *நச்சு நச்சு" er ar glir" öd 2 காது அடைக்கப் பஞ்சப் பாட்டும் பாடித்திரிவா. பிள்ளைகள் வெளிநாட்டில்
தாயகம் 31
இருந்து அனுப்பிய gCurt இனக் கல் குலேட்டரில் இரண்டு தரம் அமத்தியமத்திக் கணக்குப் பார்த்தாலும், கொப்பியில் எழுதி செய்து பார்த்துத்தான் திருப்தி அடைவா.
நாட்கள் செல்லச் செல்ல வீட்டுக்காரர் வயது முதிர்ந்த வர்கள் என்பதற்காக, பிள்ளை கள் செய்து கொடுத்த உதவிகள் எல்லாம், கட்டாயக் ச மைகள் ஆகின எவ்வளவு தான் விட இக் கொடுப்புகளுடன் அந்த வீட்டில் தொடர்ந்து வதிய விமலா ரீச் சர் குடும்பம் முயற்சித்த போதும் வீட்டுக்காரரின் நச்சரிப்புகளும், புறுபுறுப்புகளும் அதிகரித்தது. சகிக்க முடியாத அளவுக்கு தலை வலியை ஏற்ப்படுத்தியது.
அந்த வீட்டில் இருந்து மூன் றாவதாக வீடு ஒன்று தேடிக் குடி புகுந்தார்கள். அங்கும் வீட்டு உரிமையாளர்களின் உரு வங்கள் மாறியதே தவிர அதே நச்சரிப்புக்களும் நாள் வட்டியும் தான். அத்துடன் சகிக்க முடி யாத இன்னும் பல பிரச்சனை
s
இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவோமா என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு, நான்காவ தாக வீடு ஒன்று தேடி வந்தது. பெரும்பாலான வீட்டுச் சொந் தக்காரர்கள் எதிர்பார்க்கும் சிறு பிள்ளைகள் இல்லாமை, நோய் வாய்ப் பட்ட முதியோர்கள் இன்மை, அத்துடன் மாதச் சம் பளகாரர் என்பதால் மாத வாட
33

Page 21
கையும் தாமதிக்காது. இருவரும்
ஆசிரியர்கள்; பிள்ளைகளும் படித்தவர்கள் என்பதால், தங் கள் பிள்ளைகளுக்கும் பாடம் சொல் விக் கொடுப்பார்கள் போன்ற பல எதிர்பார்ப்புகளு டன் அவரது பழைய மாணவன் ஒருவன் தனது வீட்டில் இடம் கொடுக்க முன்வந்தான்.
மாதவாடகை, முற்பணம் , மற்றும் வீட்டைப் பாவிப்பதற் கான வழமையான நிபந்தனை கள் போன்றவற்றை அவனது மனைவியே பேசித் தீர்த்துக் கொண்டாள். அவன் தனக்குப் படிப்பித்த மாஸ்ரரின் குடும்பம் என்பதால், பணம் மற்றும் தொடர்புகளுக்கு மனைவியை யே பொறுப்பாக்கிக் கொண் டான். மாஸ்ரர் குடும்பத்துக்கும் அப்பிடி ஒரு வீடு கிடைச்சது பெரும் சந்தோசம் தான்.
வீட்டுக்காரற்றை சலசலப்பு கள் குறைவு. அத்தோடை எங் கடை ஊரவை. இளம் குடும்பம் தானே, அதாலை வலு மரியா தையாய்த் தான் எங்களை நடத் துகினம்" என்றெல்லாம் நேற் றுத்தான் விமலா ரீச்சர் பெரி சாய்ப் புழுகினவா. பிறகு இண் டைக்கு எங்க போறாவோ?
இடைவேளைக்காக மணி அடித்தது. மாணவர்கள் ஓடிப் பிடித்து விளையாட இடமின்மை பால், அந்த நூறு அடி நீளமான கொட்டகையைச் சுத்திச் சுத்தி இழுபட்டார்கள். அவர்களின் இரைச்சலைத் தாங்காது, அதி பர் கம்பையும் தூக்கிக்கொண்டு
a 4
வெளியே வந்தார். நான் அந்தக் கோழிக்கூட்டின் அமைப்பிலுள்ள அலுவலகத்தில் நுழைந்தேன். வாங்கில் இருந்த தூசியைத் தட்டி, நான் அமரவும், விமலா ரீச்சரும் கையில் வீவுத் துண்டு டன் அலுவலகத்துள் வந்தா.
"என்ன ரீச்சர் இண்டைக் கும் லீவோ???
"ஓம் தம்பி. பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுக்கொண்டிருக்கேக்க பெரியவள் குளிச்சுக் கொண்டு நிண்டவள்; கப்பி கொழுவியி ருந்த தீராந்தி நல்லாய் உக்கித் தான் இருந்தது; வீட்டுக்காரத் தம்பியும் அதை மாத்தவேணு மெண்டுதான் சொன்னவர்; எங் கடை காலத்துக்கு, இவள் குளிக்கேக்கை அது முறிஞ்சு, வாளியும் கிணத்துக்கை விழுந்து போச்சுது. நல்ல காலம் பிள்ளை தள்ளி நிண்டு அள்ளியபடியாலை தப்பிவிட்டாள்"
"எப்பிடிபும் நான் வாளி எடாமல் பள்ளிக்கூடம் வந்தி ருக்கமாட்டன்; அது க் குள் ள வீட்டுக்காரப் பிள்ளை, சீ. சனி யனுகள், தரித்திரங்கள், வெள் ளிக்கிழமை நாளிலை வாளியைக் கிணத்துக்கை போட்டுவிட்டு நிக்குதுகள் எண்டெல்லாம் வாயி லை வந்தபடி ஏசத் தொடங்கி விட்டா. அதுதான் ஐநூறு ரூபா வுக்கு ஒரு தீராந்தித்துண்டு பக்கத்து மரக்காலையில வாங்கி ஒரு தம்பியைக் கூலிக்குப் பிடிச் சுப் போடுவிச்சுப் $ல் tேiரட்டு வாறன்" Ar
5 ru5 ub "1 و

அந்த விளையாட்டுகள்
நமக்குக் கட்டுப்படிய ாகுமா?
8 முருகையன்
அவர் புகழ் பேற்ற எழுத்தாளர். நாடக மன்றம் ஒன்றுக்கு ஆலோசனை வழங்க வந்திருந்த 'ர். நாடக மன்றத்தினர் நேற்றி ரவுதான் ஒரு புதிய நாடகத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித் த களிப்பில் மிதந்துகொண்டிருந்தனர். இலவச ஆலோசனை சொல்ல வந்த எழுத்தாளர், நாடகப் பிரதியைக் கையில் எடுத் தார். அதன் நீள அகலங்களையும் நிறையையும் மதிப்பிடும் பாவ னையில் அந்தக் கொப்பியைப் பரிசீலனை செய்தார். நல்ல காலம்: மணந்து பார்க்கவில்லை! பிறகு சொன்னார்
"இது ரொம்ப கம்மியா இருக்கு ஐசே. ஒரு நூறு, இருநூறு பக்கம் எண்டாலும் இகுக்க வேணும். பிறகு நாங்கள் தேவை இல்லாத பகுதிகளை வெட்டிக் குறைச்சு "எடிற் பண்ணிச் சரிப் படுத்தலாம். அப்பதான் ஒரு பத்துப் பதினைஞ்சு டக்கமெண்டா லும் தேறும் இப்பெல்லாம் சினிமாவுக்கு கதை வசனம் எழுதிற வங்க அப்பிடித்தான் செய்யிறாங்க"
எழுத்தாளர் இலங்கை ஆள் தான். ஊரெழுவோ உடுப்பிட் டியோ- ஏதோ ஒர் ஊர். ஆனால் இப்பொழுது சில காலமாக இந்தியப் பாணிப் பேச்சின் அழுத்தங்கள் அவருடைய கதைப்புக ளிலே ஆங்காங்கே தலை காட்டுகின்றன. சென்ற சில ஆண்டுகளாக அவர் சென்னையிலே தங்கியிருக்கிறார். ஏழெட்டுக் கதைப் புத்த கங்கள் அங்கு அச்சேறி உள்ளன. இப்பொழுதெல்லாம் மற்றவர்க ளுக்கு ஆலோசனை சொல்லக் கூடிய தகுதி தமக்கு வந்துவிட்டது என்பது அவருடைய கணிப்பு.
"கதை வசனத்திலை மாத்திரமல்ல, படம் எடுக்கிற போதே, ரொம்ப தாராளமாய்த்தான் ஃவில் மைச் செலவு பாண்ணி எடுக்கி றாங்க, அப்புறமாப் பாத்து, எல்லாம் 'வட்டிக் 1ொட்ட ச் சரிப் பண்ற து தான்.'"
நாடகம், சினிமாவில் மாத்திரமல்ல, இன்று கலைத் துறைகள் எல்லாவற்றிலுமே இந்தத் தாராண்மைக் கோட்பாடு நடைமுறை யில் இருக்கிறது. எழுத்து முயற்சிகளில், "வள வள" என்று எதை
தாயகம் 31 35

Page 22
யாவது எழுதி எழுதிக் கொண்டே போவது: சொற்களை வாரி இறைப்பது; எந்த விதமான நோக்கமோ, நெறிமுறைவோ இல் லாமல் இயந்திரம் போல எழுதிச் செல்வது; பிறகு ஒரு கட்டத் திலே எழுதுதலை நிற்பாட்டி விட்டு, "இது கதை ; இது கவிதை; இது நாவல்- இந்தா கொண்டு போ!' என்று எடுத்தெறிந்து விட்டுத் தாங்கள்தான் பெரிய கலை மேதைகள் என்று மார்தட் டிப் பெருமை பேசிக்கொள்வது. இந்த விதமான மனப்பாங்கு சில வட்டாரங்களிலே பரவி வகுவதை நாங்கள் காணுகிறோம்.
பொறுப்புள்ள நிதானமான கனதியான கலைஞர்களுக்கும் இங்கு நாம் குறிப்பிட்டுப் பேசும் "ஏனோ தானோ? பேர்வழிகளுக் கும் இடையிலுள்ள தூரக் மிகவும் பெரிது பொறுப்புள்ள கலை ஞர்களிடம், தாம் ஏன் எழுதுகிறோம் என்ற தெளிவு இருக்கும். தம் திறமை பற்றி ஓரளவு செப்பமான சுயகணிப்பு இருக்கும்; தம் கலைச்சாதனத்தின் ஆற்றல்கள் பற்றியும், அவற்றின் மட்டுப்பாடு கள் பற்றியும் சரியானதொரு மதிப்பீடு இருக்கும். எல்லாவற்றுக் கும் மேலாக, அவர்கள் "கணக்கு வழக்குகளை" அறிந்தவர்களாக இருப்பார்கள். தம் வசமுள்ள திறன்கள் அபூர்வமானவை என்ற விளக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால், அந்தத் திறன்களைக் கட்டுமட்டாகவே அவர்கள் பயன்படுத்துவார்கள். பனங்கிழங்கு கிழிப்பதற்கு ஆப்பையும் வல்லிட்டுக்குத்தியையும் தேடி அவர்கள் போகமாட்டார்கள். பனங்குற்றியைப் பிளக்கும்போது தான் அந்த ஆயுதங்கள் அவர்களுக்குத் தேவைப்படும் சுருக்கமாகச் சொல்வ தானால், அவர்களின் முயற்சிகளிலே செட்டும் சிக்கனமும் இருக் கும். பொறுப்பில்லாமல் மூலவளங்களை வீண் விரயம் செய்யும் ஊதாரித்தனம் அங்குதலைசாட்ட மாட்டாது.
(2) நடப்பியல் வாழ்நிலையிலே ஊதாரித்தனம் என்றால் என்ன என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எழுத்துலகில் ஊதாரித்தனம் என்பது சொற்களின் ஆற்றல்களை நன்கு உணராமல் அவற்றை எழுந்தமானமாக-கண்மண் தெரியாமல்-வகை தொகை இல்லா மல்-அள்ளி வீசுவதாகும். சனத்தொடர்புச் சாதனங்கள் பெருகி விரிந்துள்ள இன்றைய காலகட்டத்திலே எழுத்தியல் ஊதாரித்தன மும் பெருகி விரிவதற்கான ஆபத்து அதிகமாயுள்ளது. கலை மேம் பாட்டிலும் இலக்கிய மேம்பாட்டிலும் அக்கறை உள்ளவர்கள் இந்த ஆபத்தின் தன்மைகளையிட்டு ஊன்றி யோசிப்பது அவசியமாகும்
எழுத்துலகிலே ஊதாரித்தனம் தோன்றுவதற்கு. நம்மிடையே உள்ள விமரிசர்களும் ஒரு வகையிலே காரணமாவார்கள். பல் கலைக்கழக மட்டங்களிலும் பிற நிலைகளிலும் உள்ள ஆய்வறி
36 5 Tuu s h 31

ஞர்கள். ஆராய்ச்சி வல்லுநர்கள், வித்தகர்கள். 'வ்ாரிதிகள்: சர்க ரங்கள். கோமான்கள். கொண்டல்கள். கோளரிகள், பல்வீேறு வகைப்பட்ட மணிகள். மணியங்கள் எல்லாருமே-எல்லாமே?-வெவ் வேறு அளவுகளில் இந்த நிலைபரத்துக்குப் பொறுப்பு என்று கருத் வேண்டியுள்ளது. ஏன்?
எந்த ஒரு படைப்பாளியும் ஏதோவொரு வாசகர் கூட்டத்தை மனத்தில் வைத்துத் தான் தமது படைப்புத்தொழிலில் இறங்கு கிறார் அந்த வாசகர் கூட்டத்தின் பிரதிநிதிச்ள்யார்? அந்த நுகர்ச்சியாளர் பற்றிய எண்ணக்கரு இவரிடம்-இந்தப் படைப்பாளியிடம்-எவ்வாறு தோன்றுகிறது?
இந்தப் படைப்பாளி தம் படைப்பை நுகர்வோர் அத்தனை பேரையும் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவது இய லக்கூடிய காரியமா? இல்லை. வெளியீட்டு விழாக்களும் கலந்துரை பாடல்களும் ஒரு படைப்பாளி தமது ஆக்கங்கள் பற்றி மற்றவர் கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிவதற்கு ஓரளவு உதவி யாய் அமையக் கூடும். அப்படிப்பட்ட சம்பிரதாயபூர்வமான நிகழ் வுகளில், "அறிஞர்கள் அல்லது பிரமுகர்கள் ஒப்ப சாரமாகவும் முகமனாகவும் சில போலிக் கருத்துகளை வெளியிடக் கூடும். அவற் றுக்கெல்லாம் கழிவு கொடுத்த பிறகும் ல இலச கிய நுகர்ச்சி யாளரின் உண்மையான அபிப்பிரஇயங்களின் ஒரு சிறு பகுதியை மாத்திரம் தான் படைப்பாளி அறிந்து கொள்ளல ப ஆனால் அது கூட, படைப்புத் தொழில் நிகழ்ந்த பிறகு தோன்றும் எதி ரொலிகளின் பேறுதான். படைப்பாளி கலையாக்சத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சமயத்தில் அவரை வழி நடத்துவன, தமது வருங்கால நுகர்ச்சியாளரின் எதிர்பார்ப்புகள் பற்றி, அல்லது அவர்களின் பக்குவ நிலை பற்றி இந்தப் படைப்பாளி தமது மன தில் ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கற்பனைப் புனைவு மாத்திரமே.
இந்தப் புனைவுக்கு அடிப்படையாக உள்ளது யாது? படைப் பாளியைச் சூழவுள்ள கருத்தியல்களும், அவை பற்றி அவர் பெற் றிருக்கும் எண்ணக்கருவும் தான் இங்கு அடிப்படைகள் ஆகின்றன.
இந்தக் கருத்திடல்கள் - குறிப்பாக கலை இலக்கியம் பற்றிய கோட்பாடுகள் - விமரிசன நெறிமூறைகள் - வெளிப்படையாகவும் உட்கிடையாகவும் உள்ள விழுமியங்கள் - இவை எல்லாம், பிரதா னமாக இரு வழிகளில் அறியப்படுகின்றன: (1) விமரிசகர்கள் அல். லது ஆய்வாளர்கள் இவை பற்றிப் பேசுவன அல்லது எழுதுவன : (2) ஏனைய நுகர்ச்சியாளர்கள் தரும் ஆதரவுச் செயல்கள் அல் லது எதிர்ப்புச் செயல்கள். w
gi, rru I«gi5 ub 3l 37

Page 23
ஆகவே இன்று நம் எழுத்தாளர்களிடையே, "எழுத்தியல் ஊதாரித்தனம் பெருகி வருகிறது என்றால், அதற்கு நமது விமர் சிகர்கள் அல்லது அறிஞர்கள் அடிக்கடி பேசி வரும் இலக்கிய, விமரி சனக் கோட்பாடுகளும் துணை ஏதுக்களாக உள்ளன என்று ஊகிக் கலாம். இது எப்படி என்று பார்ப்போம்.
இலக்கியத் திறனாய்வு தமிழுக்கும் புதியது என்று சொல்லி மேற்குலகிலிருந்து அறிஞர் சிலர் அதனைக் கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தினார்கள். இது இந்த நூற்றாண்டின் தொடக்க காலங்களில் நடைபெற்றது. ஒரு புறத்திலே சிதம்பர ரகுநாதன், க. ந. சு, சி. சு., செல்லப்பா போன்று சமகால எழுத்தியக்கத்து டன் நேரடித் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டனர். மறு புறத்தில் அ. ச. ஞானசம்பந்தன், ந. சுப்புரெட்டியார், மு. வரத ராசன் முதலியவர்கள் - பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்க ளோடு பழகிய படைப்பாளிகள் - இலக்கிய ஆக்கம் பற்றியும் மதிப் பீடு பற்றியும் எழுதலாயினர்.
அந்தத் தொடக்க கால முயற்சிகளுக்குப் பிறகு, காலத்துக்குக் காலம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தலையெடுத்த பல்வேறு இலக்கியக் கோட்பாடுகளும் திறனாய்வுக் கோட்காடுகளும் அவ்வப் போது சிற்சிலரால் துண்டும் துணுக்குமாகத் தமிழர்களுக்கு அறி முகம் செய்யப்பட்டன. இந்தக் கோட்பாடுகளிலே சில, அந்த மேற் குலகிலே நிகழ்ந்த மெய்யியற் சிந்தனைகளின் வளர்ச்சியோடும் வரலாற்றோடும் நெருங்கிய தொடர்பு பெற்றிருந்தன. சில, அவற் றிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட பெறுதிகளாக இருந்தன ஆகை யால், அந்த மெய்யியல் முறைமைகளிலே கையாளப்பட்ட பதங்க ளும் சொற்கோவைகளும் சொல்லாட்சிப் பழக்கங்களும் அந்தந்த மரபுகளோடும் இரண்டறக் கலந்தும் இருந்தன. இவற்றின் வழி வந்த விமரிசனங்களும் மேற்படி சொல் வழக்குகளையும் மரபுக் கூறுகளையும் தழுவியவையாய் இருத்தன. இது இயல்பு தானே!
ஆனால், இவ்வாறான புதிய எண்ணங்களையும் செயல் வழி களையும் நமக்கு அறிமுகப்படுத்த முற்பட்டவர்கள் அவற்றை முழு மையாகவும் முறைப்படியும் செய்யவில்லை. இவ்வாறு செய்யாமல் விட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தமிழ்க் கலைகளை யும் பண்பாட்டையும், தமிழ் தழுவிய அறிவியலையும் வளர்த்தெ டுப்பதற்கு, அதிகார வலிமையுடைய ஆட்சிக்கட்டமைப்பும் ஆர்வ மும் தமிழரிடையே ஏற்படாமற் போய்விட்டமையும் ஓர் ஏதுவ கும். சிற்சில வட்டாரங்களில்-தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் முதலியவற்றில்-இருத்த உணர்ச்சிமயமான ஆர்
38 தாயகம் 31

வத்தைத் தாங்கிக்கொள்ளக் கூடிய திட்மான கட்டுமானிங்கள் தமி ழர்களிடையே இருக்கவில்லை. இந்தக்குறைபாட்டினால். உலகியல் வாழ்விலும் மனவியல்வாழ்விலும் தமிழர்கள் எப்பொழுதுமே வேற் றவர்களை அண்ண7ந்து பாத்துக் கையேந்தும் நிலைக்குள் ஒதுங் கிக் கொண்டார்கள் ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள். இந்தியாவிலே இந்திச்சார்பும் ஆங்கிலச் சார்பும் வடமொழிச் சார்பும்; இலங்கை யிலே சிங்களச் சார்பும் ஆங்கிலச்சார்பும்; தமிழன் போய் ஒதுங் கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொன்று!
புதிய எண்ணங்கள் நம்மை முழுமையாகவும் முறையாகவும் வந்த டையாதபடியால், அந்தத் துறைகளிலே குழப்பங்களும் மயக்கங் களும் நிறைந்து விடுகின்றன. இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டால், மேற்படி மயக்கங்களும் குழப்பங்களுந்தான் எழுத்தி யல் ஊதாரித்தனத்தை மிகுவிக்கின்றன என்பதை நாம் உணரலாம்.
ஒரு காலகட்டத்திலே சொன்னார்கள் - "இலக்கியத்தில் விஷயமல்ல; உருவமே பிரதானமென்று. பிறகு வேறு சிலர் சொன்னார்கள் -
"இல்லை, இல்லை. உள்ளடக்கம் தான் பிரதானம்; இலக்கியம் சமுதாய யதார்த்தத்தின் விளக்கச் சித்திரிப்பாக இருப்பது தான் நல்லது என்று.
ஒரு சார: ர் கூறினார்கள் - "இலக்கியத்தில் வரும சொற்பின்னலை மட்டும் பார்; சொற் களின் உள்ளுறவுகளை மாத்திரம் உற்று நோக்கு ; அவற்றின் தாக்க மறு தாக்கங்களையே பரிசீலனை செய்; அவற்றுக்கு வெளியாலே "மெய்ம்மை" என ஒன்று உண்டோ, இல்லையோ தெரியாத மெய் பொய்கள் பற்றி அக்கறைப்படத் தேவை இல்லை"
மற்றொரு சாரார் கூறினார்கள் - "இலக்கியம் பேசும் மனித நடத்தைகளைப் படித்தறி. வரலாற்றை யும் நடப்பியலையும் துணைக்குக் கொண்டு வா அவை இல்லை யானால், படைப்பாளி கருதியும பாராத விபரீதமான கருத்துகளை அவர் மீது ஏற்றிவிடுவாய்; ஆனபடியால். மெய்யியல். நீதி. ஆர சியல். சட்டம் அறம். ஒழுக்கம்-எல்லாவற்றையும் துணைக்கு அைேழ அப்பொழுது தான் படைப்பாளியின் உள்ளக்கிடக்கையை ஓரளவுக்கென்றாலும் உணரலாம் வேறொரு சாரார் விளக் கினார்கள்
படைப்பாளியின் கருத்து என்று ஒன்றும் இல்லை. மொழிக்கு ஒரு கட்டமைப்பு உண்டு அதிலே சிக்கி முடங்கித் திணறுகிறவர் தான் படைப்பாளி என்று சொல்லப்படுகிறவர். தாமாகவே எதை யும் சொல்லும் வல்லமையோ சுதந்திரமோ அவருக்கு இல்லை.
பிறிதொரு சாரார் முழங்கினார்கள் -
தாயகம் 31 39

Page 24
"படைப்பாளி என்று ஒருவர் இல்லவே இல்லை; அவர் செத் தொழிந்து போய்விட்டார்"
வேறொரு சாரார் விளங்கப்படுத்தினார்கள் -
இலக்கியப் படைப்பை அடித்து நொருக்கு உடைத்துத் துண் டாடு; அதன் மூட்டுகளைக் கழற்று; பூட்டுகளைத் திறந்து பார்: நடுக்கருவை பிய்த்து நீக்கு மையத்தை பிடுங்கி எடு; அதைத் திற னாய்வு செய்வதற்குரிய சிறப்பான முறை இதுவே தான்"
கோட்பாடுகளை எடுத்துக் கொண்டால். அவை ஒன்றை ஒன்று பழிக்கின்றன; திட்டுகின்றன; நிராகரிக்கின்றன; மெருகூட்டுகின் றன; நிறைவு செய்கின்றன; குறை காண்கின்றன. ஆனால் எந்த ஒரு கோட்பாடும் ஏனையவற்றைக் கீழ்ப்படுத்தி வென்று மேலோங் கவே முயல்கிறது.
இவற்றிடையே மேல்-கீழ் முறையான படிநிலை அடுக்குவரிசை ஏதும் உண்டா? இருக்கலாம்"
ஆனால், இவற்றுள் எந்த ஒன்றும் தீர்ந்த முழு மெய்ம்மை ஆகாது என்பது வெளிப்படை
இருப்பினும், பொதுப்படையான ஓர் உண்மையை நாம் அவ தானித்துக்கொள்வது நல்லது. புதியதாய்த் தோன்றும் கோட்பாடு பெரும்பாலும், பழையவற்றையும் தன்னுள் ஒரு பகுதியாக அடக்கி அவற்றை மேவிக் கடந்த ஒர் ஒருங்கிணைவாக அமைந்து விடுவ துண்டு. வீம்புக்காக இட்டுக் கட்டப்படும் புதிய எதிர்ப்புக் கோட் பாடுகள் இந்தக் கூற்றுக்கு விதிவிலக்கு என்பதை மாத்திரம் நாம் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு எதிரும் புதிருமான வீம்புக் கோட் பாடுகளுக்கிடையே உள்ள பிணக்குகளுக்கு முடிவே கிடையாது. மன்மதன் எரிந்துபோனான் என்று ஒரு கட்சிவாதாட மற்றொருகட்சி இல்லை, இல்லை அவன் எரியவில்லை என்று வாதாடுமாம். அதே போன்ற ஒரு நிலைதான் நீடிக்கும்.
(4)
இவற்றுக்கிடையிலே நடை முறையில் எங்கள் எழுத்துலகம் கடைப்பிடிக்கக்கூடிய, கடைப்பிடிக்க வேண்டிய செயல்வழி என்ன?
புத்தம் புதிய, மேலும் மேலும் திருத்தமான கொள்கை ஒருங் கிணைவுகளை நாம் கண்டறிய வேண்டும். இது கொள்கை நிலை யிலே நாம் ஆற்றவேண்டிய முடிவில்லாத நெடும் பயணம்.
இந்தத் திருத்தமெல்லாம் கொள்கையை மேலும் செழுமைப் படுத்தும் என்பது உண்மையே. ஆனால், இந்த மாற்றங்கள் நேர் கின்றனவே என்பதற்காக நாம் எமது கோட்பாட்டுப் பிரயோக மாகிய நடைமுறையைக் கைவிட்டுச் செயலற்று உறைந்து போய் விடத் தேவையில்லை.
40 | * 7 tu đã ư • 1

புதியனவாக வருகின்ற அனைத்தையும் ஏற்று அப்படியே மாறி மாறி நமது படைப்புகளின் தன்மையையும் மதிப்பீட்டின் தன்மை யையும் ஏறுமாறாக மாற்றிக்கொண்டிருக்கவும் வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்தப் புதுமைகளிற் பெரும்பாலானவை சாராம் சத்தில் அற்பமானவை; வெளித் தோற்றத்துக்கு அவை பாரியவை போலவும் புரட்சிகரமானவை போலவும் தென்படலாம். ஏனென் றால், புதிதாக ஒன்றைச் சொல்ல வருகிறவர் அதனை மிகைப் படுத்தி வற்புறுத்தி வலியுறுத்த ஆசைப்படுகிறார். அதனால் புரட் சிகரமான கடும்போக்கான பண்புகளை அந்தப் புதுமையின்மேல் ஏற்றிப் பேசுகிறார். அந்தப் புதுமையின் வீச்சும் பகட்டும் காலப் போக்கிலே நீங்கிய பின்னர் அதன் உண்மையான இயல்பு நுனித்து நோக்கப்படும் போது , ஏற்கெனவே நிலைநாட்டப்பட்ட மெய்ப் மை களின் ஒரு புறத்தில் ஒதுங்கியோ ஆழத்திலே புதைந்து போயோ உள்ள, ஒப்பீட்டளவிலே அற்பமான, ஒரு சிறு விகற்பமாக அந்தப் புதுமை அடங்கிப் போய் விடுவதை நாம் அநுபவத்திலே காண்கி ாோம். அப்படிப்பட்ட அற்பங்களுக்காகத்தானா இத்தனை பூசல் களும் வாதப் பிரதிவாதங்களும் நடத்தன என்று ஆச்சரியப்பட வேண்டிய தருணங்களும் உண்டு.
ஆகவே உள்ளார்ந்த பெறுமதி குறைந்த, அற்பமான சங்கதி களின்பொருட்டு எங்கள் ஆற்றலையும் நேரத்தையும் வீணடிக்கும் ஊ காரித்தனத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு நாம் பயின்று கொள்ள வேண்டும் இவ்வாறு செய்வதற்கு நமது புத்தி நுட்பத் தி கன :ாஸ் இயலுமளவு திறமையுடன் கையாளவேண்டி இருக் கும. நாம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டுமானால், வெளி யுலகிலே சில வட்டாரங்களில் நடக்கும் பயன்குறைந்த வெற்று நுணுக்கவாத விநோதங்களில் அள்ளுப்பட்டுப் போகும் பலவீனத் துள் அசப்படாமல் நாமே நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
ஆடம்பரங்களில் முழுகிய புளிச்சல் ஏப்பக்காரர்களுக்கு, கலை யுல் இலக்கியமும் வெறும் திருவிழாக் காலத்துச் சின்ன மேளங்க ளாகவும் வாண வேடிக்கைகளாகவும் இருக்கலாம். ஆனால் மீட்சி யின் பொருட்டுட் பாடுபட்டுப் பதகளிக்கும் ஒரு மக்கள் கூட்டத் துக்கு அந்த விளையாட்டுகளும் பகட்டாரவாரங்களும் கட்டுப்படி ஆகுமா? யோசிக்க வேண்டிய சங்கதி.
(5)
ஒரு சின்ன உதாரணம்: ஒருவர் ஒன்பது வரியிலே ஒரு கவி தை எழுதுகிறார். அவருடைய ஆக்கத்தை ஐந்து கோணங்களிலி ருந்து அலசி ஆராய்ந்து ஒரு விமரிசகர் மதிப்பீடெ முதப் புறப்படு கிறார். ஒவ்வொரு கோணத்துக்கும் பன்னிரண்டு, பதினைந்து, இருபத்தைந்து பக்கங்கள் செலவழித்து மதிப்பீடு நீண்டு கொண்டு போகிறது. இப்படி ஏழெட்டு விமரிசகர்கள் விழுந்தடித்துப் போட்டி
). Arubb 3l 41

Page 25
போட்டுக்கொண்டு எழுதித் தள்ளுகிறார்கள். கடைசியிலே பார்த் தால் ஒன்பதுவரிக் கவிதைக்கு ஓராயிரம் வரிகளிலே மதிப்புரைகள்.
இவ்வளவு பெரிய முயற்சி தேவையா? பயனுண்டா? இவ்வளவு பாரியனவாக மதிப்பீடுகளை எழுதவேண்டுமா? எழுதலாமா?
எழுதலாம். எழுதத்தான் வேண்டும்-அந்த ஒன்பது வரிக் கவி தையிலே அரும்பொருள்கள் பல புதைந்து சிடக்குமானால்! ஆனால் நடப்பது என்ன? முக்கி முக்கி முயன்று தோண்டிப் பார்த்துத் தேடி எடுத்தவர்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான கண்டுபிடிப்புசளாக இல்லை; சராசரி அறிவுள்ள ஒருவருடைய புத்திக்கும் அதிக முய றசி இல்லாமலே தட்டுப்படக்கூடிய சில சில்லறைச் சங்கதிகள்தான்,
ஒன்பது வரிக் கவிதையை மதிப்பீடு செய்யவே முயற்சி தேவைப் பட்டால், ஒரு முன்நூறு பக்க நாவலுக்கு இதைப்போல எத்தனை மடங்கு முயற்சி தேவைப்படும்?
"பார் கிகிறவன் கண்ணுக்குப் பண்ணுமாப்போலே பண்ணுறது" என்று தமிழிலே ஒரு பழந் தொடர் வழங்குகிறது. அப்படி ஒரு "பண்ணல க” எங்களுடைய எழுத்துலக முயற்சிகள் இருப்பது நல் லதா? இல்லை என்றுதான் எல்லாரும் சொல்லுவார்கள்.
உன்னதமான கலை முயற்சிகள் உருவாகுவதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். ஆனால் எங்கள் சுற்றத்தாரின் இடைஞ் சல்களையும் இக்கட்டுகளையும் உணராத ஊதாரிப் பிள்ளைகளாக நாம் இருக்கக் கூடாது.
(6) உலகும் காலமும் இடம் பொருள் ஏவல்களும் போதிய அளவு தாராளமாக எம்மிடம் கையிருப்பில் இருக்குமானால் சாவகாசமாக அந்த வேடிக்கைகளின் பொருட்டும் நாம் நிறையச் "செலவு செய் யலாம் ஆனால், இன்று, இங்கு எங்களுடைய எல்லைகளையும் மட்டுப்பாடுகளையும் நிச்சயம் நாங்கள் கணக்கெடுத்தே ஆகவேண் டும். எங்கள் மூலவளங்களைக் கண்டபடி எழுந்தமானமாக வீசி எறிந்து விளையாடுவது புத்தி ஆகாது.
இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்க இடத்தராத சூழல்களில் இருந்து எழுதும் அறிஞர்களும் ஆய்வாளர்களும், "கண்ணைச் செருகிக் கலைபண்ணும் மேதாவிகளும் காட்டும் செப்படி வித் ைக களோடு எடுபட்டுப் போகும் போக்கு எங்களுக்குக் கட்டுப்படி ஆகாது. அத்தகைய மேதாவிகள், நாங்கள் அருமை பெருமையா கப் பெற்றெடுத்த ஒரு புத்தம் புதிய கலை இலக்கியப் படைப் பினை தமது மாடியறை யன்னலூடாக மதிலுக்கப்பால் அலட்சிய மாக வீசி விடவும் நேரலாம்.
தமக்கே சரியாகப் பிடிபடாத ஏதோவொரு "மீபுதுமைக்" கோட்பாட்டின் பேரிலே. இப்.டிப்பட்ட பிழைபாடுகளை அந்த மேதாவிகள் இழைத்து விடலாம்.
இவைபற்றி எல்லாம் நாம் அவதானமாக இருக்கவேண்டும். -- 46 食 தாயகம் 31


Page 26
செய்திப் பத்திரிகையாகப் பதிவு
Racintered as I New paper
DANE MEMOR
■、 、
AIL வர்த்தக
கணக்கியல் பொருளியல் வர்த்தகம்
அளவையியல்
இசஞ்சியை தேசிய கலை இலக்கிய ாம் 15 மின்சார வைய வி அவர்களால் யாழ்ப்பானம் 40 பாக அச்சகத்தின் சிட்டு வெளி
 
 
 
 

சப்பப்பட்டது.
I STLD
AL INSTITUTE
ܕ ܡ .
| לו.
D. SAM
இராஜேஸ்வரன்
g
சோதிலிங்கம்
ப் பேரவைக்காக யாழ்ப்பா யிலுள்ள் சு. தணிகாசலம் நச்சுனா விதியிலுள்ள யாழ்ப்
டப்பட்டது.