கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்லியல் ஆய்வும் ஆதிக் குடிகளும்

Page 1
யாழ் மாவட்டத்தின்
தொல்லியல்
୬,j,i,j;
98.
ஆசிரியர். T;
,誉
ஆக்கியோ கலாநிதி சி. க.
தொல்வியல் வி
ாழ் பல்கலைக்
 
 
 
 
 
 
 
 

அண்மைக்கால
சுரம்:
p i பல்கலைக் கழகம்
リー
சிற்றம்பலம் வுரையாளர்
பிரம் info.
Sssssssssssssssss%

Page 2


Page 3
J83rge点もsnnag
sae参) Œ}
qĝōış»H NQg
 
 

r
된회에희리회터제어T험5 왼제의괴디엔터의되혁「家的法學高城9* 뛰회공n더공5h당6ocou

Page 4
யாழ் மாவட்டத்தி தொல்லியல் ஆய்வு
கலாநிதி. ஒ. (தொல்லியல்
யாழ் பல்க
L06 sig வரலாற்றைக் கட்டியெழுப்ப உதவும் சாதனங்களில் வரலாறு, தொல்லி யல் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் வரலாற்று நூல் களோ வரலாற்று ஆசிரியரின் மனுேபாவத் திற்கேற்ப திரித்தும் மாறுபட்டும் பல கருத் துக்களைக்கூற தொல்லியல் சான்றுகளோ எனில் அன்ருட மக்கள் தமது வாழ்வில் உபயோகித்த பொருட்களாக இருப்பதால் வரலாற்று நூல்களை விட மனித வரலற்றைக் கட்டி எழுப்பும் கருவிகளில் தொல்லியல்
ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
இதனல் தொல்லியல் சான்றுகள் ஏனைய வற்றை விட மனித வரலாறு பற்றிய ஆய் வில் தனி இடத்தை வகிக்கின்றன என்பது வெள்ளிடைமலை, ཉི་
தென்னசியாவில் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கிலேய ரின் வருகை 19-ம் நூற்ருண்டில் தொல் வியல் ஆய்வில் ஒரு திருப்புமுனையாக

ன் அண்மைக்கால
ஆதிக்குடிகளும்
5. சிற்றம்பலம் விரிவுரையாளர்) லைக் கழகம்
அமைந்தது. இருந்தும் இலங்கையில் ஆரம்ப 956) நடவடிக்கைகள் அநுராதபுரம் பொலனறுவை போன்ற தலைநகர்களை மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட் டன. இதற்கான காரணங்களும் இல்லா மல் இல்லை, இப்பகுதிகளில் மலிந்துகிடந்த தொல்லியல் சான்றுகளின் அழிபாடுகள் முக்கியமாகக் கட்டிடங்களும் ஒரு பிரதான காரணிகளாக அமைந்தன. இத்தகைய பழைய கட்டிடங்களின் அழிபாடுகள் இவ் விதம் இங்கு மலிந்து காணப்படுவதற்கு இவை வெவ்வேறு காலகட்டங்களில் இலங் கையின் இராசதானியாக விளங்கியதும் அவ்வப்போது அரச ஆதரவுடன் கட்டிடங் கள் கட்டுவதற்கு ஏற்பட்ட வாய்ப்பும் இறுதியாகப் பெளத்தமதம் இப்பகுதிகளில் பெற்ற செல்வாக்கும் முக்கிய காரணங்க ளாகும். அத்துடன் இராணுவ நடவடிக் கைகளில் இப்பகுதி ஊடாகச்சென்ற பிரித் நானிய இராணுவத் தளபதிகள் ஆகியோர் நம் கடமைகளுடன் இச்சான்றுகளேயும் நமது குறிப்புகளில் எடுத்துக்காட்டத்

Page 5
தவறவில்லை. ப்ாளிநூல்கள்பற்றிய ஆய்வி கள் இக்கால கட்டத்தில் தலைஎடுத்ததால் இப்பகுதிகள்பற்றி ஆறியவேண்டும் என்ற அவாவும் ஆங்கிலேயரைத் தூண்டிய கார ணிகளில் ஒன்ருகும். இறுதியாக இப்பிரதே சங்களில் மலிந்து காணப்படும் கருங்கற் பாறைகள் இவ்விதபடைப்புக்களை இலேசாக ஆக்குவதற்கு உதவிய காரணிகளில் ஒன்று எனக்கூறினலும் பிழையாகாது எவ்வாருயி னும் இலங்கை வரலாற்றில் கட்டிடங்களை அழிப்பதிலும் மக்களை மதம் மாற்றுவதி லும் பெயர்பெற்ற போத்துக்கேயர் இந் நாட்டில் கால் வைத்தபோது இப்பகுதிகள் பாழடைந்த கவனிப்பாரற்ற பிரதேசங்க ளாக விளங்கியதும் இச்சின்னங்கள் கால வெள்ளோட்டத்தில் தப்பிப்பிழைப்பதற்கு வசதியாக அமைந்ததும் மறுப்பதிற்கில்லை. ஆனல் யாழ் மாவட்டத்தைப் பொறுத் கமட்டில் இங்கு நிலைபெற்ற தமிழ்பேரரசு கி. பி. 1619-ம் ஆண்டில் போர்த்துக்கேய ரால் வெற்றி கொள்ளப்பட்ட்போது இவ் வரசின் கலைச்சின்னங்கள் வரலாற்று ஏடு கள் ஆகியன அவ்வெறியரின் கொடிய கரங் களிலிருந்து தப்பிப்பிழைக்கவில்லை. இவ்வர சின் பல கட்டிடங்களைச் சிதைத்த இவர் கள் அவற்றைத் தமது கட்டிடடங்களைச் கட்டப் பயன்படுத்தியதால் இத்தமிழரசின் பல கல்வெட்டுக்கள் கூட அழிக்கப்பட்டிருச் கலாம் என எண்ணத் தூண்டுகிறது. இவ் வரசின் சின்னமாக சங்கிலித்தோப்பு ஒன்று மட்டும் அஃதாவது 13-ம் நூற்ருண்டின் பிற்பகுதி தொட்டு 17-ம் நூற்முண்டின் முற்பகுதிவரை தற்போதைய வடகிழக்கு மாகாணங்களையும் புத்தளம் சிலாபம் ஆகிய பகுதிக%ளயும் உள் ள டக் கித் தனிச் கொடியுடன் அரசுசெலுத்திய இப்பேரர சின் சின்னமாகமட்டும் விளங்குவது ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும். போத்துக்கேய ரின் கொடூரக் கரங்கள் மட்டுமல்லாமல் நம்மவர் மத்தியில் அருகிக் காணப்படும் வரலாற்று பாரம்பரியஉணர்வும் இத்தகைய தொல்லியல் சான்றுகள் அருகிக் கானட் படுவதற்கான காரணிகளில் பிரதானமான வை என்பது மறுப்பதற்கில்லை. வெளிமr வட்டங்களோடு ஒப்பிடுகையில் இம்மாவட் டத்தில் ஏனையவற்றில் கிடைப்பதுபோன்று

கருங்கற் பாறைகள் இருக்காததால் அழி' வற்ற பல கட்டிடங்களைக் கட்டமுடியவில்லை என்ற காரணத்தை பலர்கூறினலும்கூட பண்டைய இப்பேரரசின் சின்னமாய் விளங் கிய இதன் தலைநகராகிய நல்லூர் இராச தானி பற்றிக்கூட நம்மவர் அறிந்துகொள்ள முடியாதநிலை உண்மிையில் ஒரு துர்ப்பாக் கிய நிலையாகவே காணப்படுகிறது.
இவ்வாறு நோக்கும்போது யாழ்மாவட் டம் மட்டுமன்றி பொதுவாக வட மாகா ண்டே கூட தொல்லியல் துறையில் ஒரு புறக்கணிக்கப்பட்ட மா வட்டமாகக் காணப்படுகிறது. இம்மாகாணம்பற்றி ஆங் கிலேயர் வெளியிட்ட நூல்களில் இரண்டே இரண்டுதான் ஓரளவு இதன் பழமையைக் கூறுகின்றன. இவற்றுள் லூயிஸ் 1895-ல் வன்னிபற்றி எழுதிய நூலும் (Lewis J. P. 1895) போக் என்பவர் 1888-ல் மன்னர் பற்றி எழுதிய நூலும் (Boake W.J.S.1888) குறிப்பிடத்தக்கவை. இவற்றில் முன்னையது வன்னிமாவட்ட சமூக பொருளாதார தொல்லியல் அம்சங்களை விவரிக்க பின்னை யது மன்னர் மாவட்ட இடப்பெயர்களை வெறுமனையே விபரிக்கும் ஒருநூலாக அமை வதால் இவைகூட எமது மாவட்டவரலாறு தொல்லியல்பற்றிய ஆய்வில் ஏனைய பிராந் தியங்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது வேண்டிய தகவல்களை தருவனவாக அமைய வில்லை.
இம் மாவட்டத்தில் தமிழ்ப் பேரரர. நிலைத்த காலத்தின்பின்பு எழுதப்பட்ட இலக்கியநூல்களாகிய யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை, வையா பாடல் ஆகி யனவும்கூடத் தமிழ்ப்பேரரசின் வரலாறு பற்றியறிய உதவும் பிரதான சான்று களாக இருந்தாலும்கூட இப்பிரதேசத்தின் ஆதிக்குடியேற்றம் பற்றிப் போதியளவு தக வல்களைத் தரவில்லை.
காரணம் இவை எதுவித காலவரன் முறையின்றி வெறும் கட்டுக்கதை அம்சங் கள் சிலவற்றைக் கொண்டிருப்பதே. இந் நூல்கள்கூறும் யாழ்பாடி கதைகூட இம்மா வட்டத்தின் ஆதிக்குடியேற்றம் கி. பி. 9-ம் நூற்ருண்டிலேதான் நடந்தது என்பதை

Page 6
எடுத்துக்காட்டுகிறது. இக்கதையைத் gi/CISG ஆராய்ந்தால் யாழ்ப்பாணம் என்ற தேசத்தின் பெயரை விளக்க 16-ம் நூ ருண்டில் வாழ்ந்த அந்தகக் கவிவீரராகவ என்ற புல்வரை மையமாகவைத்து எழுந்: புனைகதை என்பது புலனகின்றது. இவ்வித இக்காலத்தில் வளர்ச்சிபெற்ற உக்கிரசிா கள மதருதப்புரவல்லி கதைகளிலிம் விஜ யன் கதையின் சாயல்படிந்திருப்பதால் எ6 வாறு விஜயன்கதை இந்நாட்டில் ஏற்பட்ட ஆதிக்குடியேற்றத்தை விளக்க மிகமிக பிற்பட்ட காலத்தில் சிருஷ்டிக்கப்பட்டதே அவ்வாறே உக்கிரசிங்கன் மாருதப்புரவல்ல கதைகளும் யாழ்ப்பாணத்தில் தோன்ற வளர்ச்சிபெற்ற ஒரு தனிப்பேரரசின் தோ றத்தைப்பற்றி மக்கள் நம்பிய கட்டுக்கதை களாகவே காணப்படுகின்றன.
இதே நேரத்தில் தமிழ்நூல்களை மைய மாகவைத்து இம்மாவட்டத்தில் எழுத tu -- Lu3V BITổv 5G5th இம்மாவட்டத்தின் ஆதிக் குடியேற்றம்பற்றிய சான்றுகளைத் தரத் தவறிவிட்டதோடு இக்குடியேற்றம் பற்றிக் கட்டுக்கதைகளையே தருகின்றன. இவ்வரிசையில் சைமன் காசிச்செட்டி(1847 -1848) ஜோன் (1879) சதாசிவம்பிள்ளை (1884) முத்துத்தம்பிப்பிள்ளை (1912) வேலுப்பிள்ளை (1918) ஆகியோர் எழுதிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இருந்தும் இம்மாவட்டம்பற்றி முதலியார் இராசநா யகம் (1926) சவாமி ஞானப்பிரகாசர் (1928ல்) ஆகியோர் எழுதிய நூல்களே முன்னையவற்றைவிட ஒருபடி முன்னேறிக் காணப்பட்டாலும்கூட ஆதிக்குடியேற்றம் பற்றி அறிவதற்கு நமக்குப் போதியஅளவு உதவவில்லை என்றே கூறவேண்டும்.
முதலி யார் இராசநாயகத்தைவிட ஞானப்பிரகாசர் விஞ்ஞான முறையில் வர லாற்றை ஆய்வதில் தேர்ச்சிபெற்றிருந்தார் என்பதை இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் கூரு மல் இருக்கமுடியாது. இருந்தும் இராசநாய கம் அவர்கள் இப்பிராந்தியத்தில் கி.மு. 15ம் நூற்ருண்டிற் தனியரசு ஒன்று இருந்தது என் றும், ஞானப்பிரகாசர் இவ்வரசு கி. பி. 7ம் நூற்றுண்டு தொட்டு இப்பகுதியில் தோன்றி வளர்ச்சிபெற்றதென்றும் கூறும் கருத்துக்

சுள் தொல்லியற் சான்றுகளால் நிரூபிக்கப்
படவேண்டிய தொன்று என்பதை நாம் கருத்தில் கொள்ளல்வேண்டும்.
இதனுல் இம்ம்ாவட்ட ஆதிக் குடியேற் ஹம்பற்றிய ஆய்வில் முழுக்க முழுக்க தொல் லியற் சான்றுகளிலே நாம் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இத் தொல்லியல் சான்றுகளிலும்கூட ஏற்கனவே
நாம் குறிப்பிட்டவண்ணம் இறுதிக் காலக்
கட்டிடங்கள்பற்றிய தகவல்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
கல்வெட்டுக்களோ எனில் இம்மாவட் டத்தில் கிடைத்த மிகப் பழைய தமிழ்க் கல் வெட்டுக்களும் கி. பி. 11ம் நூற்ருண்டைச் சேர்ந்த சோழர் காலத்தவையே. யாழ்ப் பாண ராஜ்யத்தில் செங்கோலோச்சிய தமிழ் மன்னர் கல்வெட்டு ஒன்றுகூட இற்றை வரை இப்பிராந்தியத்தில் கிட்டவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வெளி
யிட்ட கல்வெட்டுகளில் ஒன்றே ஒன்றுதான்
அதுவும் இம்மாவட்டத்திற்கு வெளியிலுள்ள கேகாலை மாவட்டத்தில் கிடைத்துள்ளது.
இருந்தும் இப்பிராந்தியத்தில் நாட்டின் ஏனைய மாவட்டங்களைப்போல் இயற்கை யான கருங்கற் குகைகள் இல்லாததால் ஏனையவற்றில் காணப்படுவது போன்று இங்
கும் இந்நாட்டு ஆதிக் கல்வெட்டு மொழியா
கிய பிராமி மொழிக் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை என்ற காரணத்தைக் கூறிய பரணவித்தான, இங்கு கல்வெட்டுக் கள் காணப்படவில்லை என்ற ஒரு காரணத் திற்காக இங்கு சிங்களவர் ஆதியில் குடியேற வில்லை எனக் கூறமுடியாது என்று சொல்லத் 56 paício3a. (Paranavitane 1970)
குகைக் கல்வெட்டுக்கள் காணப்படர் விட்டாலும்கூட இப்பிராந்தியத்தில் பிரா மிக் கல்வெட்டுக்கள் வழக்கிலிருந்த காலத் தில் பிராமி மொழி கூட மக்கள் மத்தியில் வழக்கிலிருந்தது என்பதை கடந்த ஆண்டு ஆனக்கோட்டையில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் மேற்கொண்ட் அகழ்வின்போது கிட்டிய வெண்கலத்தின லான ஒரு முத்திரையும், கந்தரோடையில் கிடைத்த பிராமி மொழியில் எழுதப்பட்ட

Page 7
மட்பாண்டங்களும் கிறிஸ்துவுக்குப் பின் 2ம் நூற்ருண்டைச் சேர்ந்த வல்லிபுர பொ சாசனமும் நாட்டின் ஏனைய மாவட்ட் களைப் போன்றே இங்கும் ம்க்கள் பிரா மொழி வரி வடிவத்தை அறிந்திருந்தன என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன.
இத்தகைய சான்றை இப்பிராந்திய தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களு உறுதிப்படுத்துகின்றன. இந்நாணயங்களி (*புராண") என அழைக்கப்படும் நாண வகை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளி ஆதி நாணயங்களாகும். இத்தகைய நா6 யங்கள் கி. மு. 3ம் நூற்றண்டு தொடக்க இப்பிராந்தியங்களில் வழக்கிலிருந்திருச் லாம் என அறிஞர் கருதுவர். கந்தரோடை வல்லிபுரம் ஆகிய இடங்களில் இந்நூற்ற6 டின் ஆரம்பத்தில் இவை கண்டுபிடிக்க
பட்டன. "
அண்மையில் நாம் மேலாய்வுக்கு குடத்தனை சென்றபோது இத்தகைய நா6 யம் ஒன்றை எமது குழுவில் ஒருவரான தி( தேவராசா அவர்கள் கண்டுபிடித்தன குட்த்தனையையும், வல்லிபுரம், கந்தரோை போன்று ஒரு தொல்லியற் களஞ்சியம1 ம்ாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நாணய வகையைத் தொடர்ந் கிறிஸ்துவின் ஆரம்பகாலத்தில் வெளியிட பட்ட நாணயங்கள்தான் குத்தப்பட் இலச்சினைகள் ஒன்ருக உருவாக்கப்பட் pBIT GOOTLu iš 35 GMT nr (5 lb (Diestruck-Coin இவை ஏற்கனவே கந்தரோடை போல் இடங்களில் சேர் போல் பீரிஸ் போன்( ரால் அடையாளம் காணப்பட்டது குழு பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் இப்பகுதிக்குத் தெ வியல் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற நாழு இத்தகைய நாணயமொன்றைக் கின வெட்டிய மண்ணை அரித்தபோதுபெற்ருே இத்தகைய நாணயங்கள் கிறிஸ்துவுக்கு ( பட்ட காலம் தொடக்கம் கி. பி. 3ம் நு முண்டுவரை இந்தியா, இலங்கை போ6 பிராந்தியங்களில் வழக்கிலிருந்தன. இ: 'றைத் தொடர்ந்து ருேம, அராபிய, சீ

:
r
ó
ற்
t
சிங்கள மன்னர் ஆகியோரின் நாணயங்களும் இறுதியாக யாழ்ப்பாண பேரரசின் நந்தி பொறித்து "சேது" என ஒரு பக்கத்தில் எழு தப்பட்ட நாணயங்களும் இம்மாவட்டத் தின் வரலாற்றில் நாணயங்கள்பெறும் முக் கியத்துவத்திற்கு அசைக்கமுடியாத சான்றுக ளாகும். இதைத் தொடர்ந்து போத்துக் கேய நாணயங்களும் டச்சு, ஆங்கில நாண யங்களும் இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, இம்மாவட்டத்தின் ஆதிக் குடி > யேற்றம் பற்றிய ஆய்வில் நாணயங்கள் முக் கிய இடத்தைப் பெறுகின்றனஎன்பது வெள் ளிடை மலை. இவற்றேடு இங்கு கண்டெடுக் கப்பட்ட பிராமி மொழியிலமைந்த மட் பாண்ட ஒடுகள், முத்திரை, பொற்சாசனம் ஆகியனவும் இம்மாவட்ட வரலாற்றில் தனி இடம் வகிக் கின்றன. கட்டிடங்களைப் பொறுத்தமட்டில் இவை அழிந்தும் அழிக்
கப்பட்டாலும்கூட இப்பிராந்தியத்தில் மேற்
கொள்ளப்பட்ட அகழ்வுகள் பண்டைய யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடியேற்றம் பற்றி மிக முக்கிய பிரதான தகவல்களைத் தரு கின்ற சான்றுகளாக அமையுமென்பது குறிப் பிடத்தக்கது.
இவ்வாறு தனியரசு செலுத்திய யாழ். மாவட்டமும் அது உள்ளடக்கிய வடகிழக்கு மாகாணங்களும் 1819ல் வீழ்ச்சி பெற்ருலும் கூட இப்பிராந்தியத்தின் தனிக் கலாசாா பாரம்பரியத்தை இங்கு ஆட்சிசெய்த போத் துக்கேயரும் டச்சுக்காரரும் உணர்ந்து இவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் அக் கறை செலுத்த, பின் வந்த பிரித்தானியர் 1933ம் ஆண்டில் நிர்வாக வசதிக்காக இதை ஒரு மாகாணமாக ஆக்கி ஏனைய மாகாண நிர்வாக அமைப்புக்களுடன் இணைத்தபோது இற்றைவரை இதுபெற்றிருந்த முக்கியமும் சிறப்பும் வலிகுன்றியது வரலாறு.
இத்தகைய ஒரு பிராந்தியத்தின் தொல் லியல் வரலாறு என்ன? -பாரம்பரியம் என்ன என்பத்ே நம்மை எதிர்நோக்கும் கேள்வி யாக அமைகின்றது.

Page 8
வடமாகாணத்தைப் பொறுத்தமட்டில் மன்னுரிலுள்ள திருக்கேதீஸ்வரத்தில் போக் என்பவர் 1887ல் மேற்கொண்ட அகழ்வு தான் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தொல்லியல் நடவடிக்கை யாகக் காணப்படுகிறது.
இவர் இவ்வாய்வில் இப்பிராந்தியம் தென்னகத்திலிருந்து வந்த மக்களால் ஆதி யில்குடியேறப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டியதோடு இதிற்கிடைத்த தொல்லி யல் சான்றுகளில் குறிப்பாக மட்பாண்டங் கள் இலங்கையின் தென்கோடியிலுள்ள திசைமகராமாவில் பாக்கரால் (Parker 1885) அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங் களோடு ஒத்துக்காணப்பட்டுள்ளள ତtଶot qub கூறத் தவறவில்லை. இருந்தும் யாழ்மாவட் டத்தைப் பொறுத்தமட்டில் 1917-ம் ஆண் டில்தான் முதன்முதல் திட்டமிடப்பட்ட முறையில் தொல்லியல் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இவ்வாய்வை நடத்தியவர் சேர் போல் பீரிஸ் என்ற அறிஞராகும். (Paul Pieris 1917-1919) போக்கைப்போல இவரும் தொல்லியலில் ஈடுபாடுடையவரா கக் காணப்பட்டாலும்கூட பயிற்சிபெருத ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந் தும் இவரது கண்டுபிடிப்புக்கள் இம்மாவட் டத்தின் தொல்லியல் பழமையையும் பாரம் பரியத்தையும் பறைசாற்றுவனவாக அமைந் ததோடு இவர்சேகரித்த பழைய நாணயங் கள் இம்மாவட்டம் கிறிஸ்துவிற்குமுற்பட்ட பலநூற்ருண்டுகட்கு முன்பே மக்கள் வாழ் விடமாக விளங்கியது என்பதையும் எடுத் துக் காட்டியது. இவரது ஆய்வின் பெறு பேருக கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்கள் இப்பிராந்தியத்தின் தொல்லியல் களஞ்சியங்கள் என்பதும் புலனகியது.
இச்சந்தர்ப்பத்தில் இவர்கூறிய கருத்துக் கள் மிக மிக அண்மைக் காலத்தில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் பெறு பேருகக் கிடைத்த சான்றுகளைப்பற்றித் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட கருத்துக்க ளாக அமைந்ததால் அவற்றை இங்கு நாம் கூறுவது அவசியமாகிறது. இற்றைக்கு அரை நூற்ருண்டுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக அவர் கூறிய கருத்துக்கள் இவைதான். அப்

போது அவர் இந்நாட்டின் சிங்கள மக்களின்
மூதாதை என நம்பப்படும் - விஜயன் (கி.மு.
6ம் நூற்ருண்டில்) இந்நாட்டிற்கு அடி
யெடுத்து வைப்பதற்கு முன்பே வட
இலங்கை மக்கள் நடமாட்டத்திற்குச் சிறப்
புப் பெற்ற இடமாக இருந்ததென்பதைக்
கூறி கிறிஸ்துவை அடுத்த சகாப்தங்களிலும்
இதே நிலைதான் காணப்பட்டதென்றும்,
இலங்கையில் தொல்லியல்நடவடிக்கைகளுக்
குப் பொறுப்பாகத் தொல்லியற் பயிற்சி
பெற்றவர் இருக்கும்போது தமிழ்ப் பகுதி
*ளைப் புறக்கணிக்கமாட்டார் எனத் தாம்
நம்புவதாகவும் எடுத்துக்காட்டி, இப்பிராந்
தியம் தென்தமிழ்நாட்டு மீனவர்களால் காலையில் மீன்பிடிக்கச் செல்லும்போது தின
மும் காணப்படும் ஒரு பகுதியாதலால் அம் மக்கள் கடலில் பிரயாணம் செய்வதுபற்றி
அறியத் தொடங்கியதும் இப்பகுதி அம்மக்க
ளால் ஆதியில் குடியேறப்பட்டிருக்கும் என
வும் கூறினர்.
பீரிஸின் தொல்லியல் நடவடிக்கைக்குப் பின்பு கிட்டத்தட்ட அரை நூற்ருண்டுவரை இப்பிராந்தியம் தொல்லியலாளரால் புறக் கணிக்கப்பட்ட பிராந்தியமாகவே காணப் பட்டது. இதற்கும் முக்கியமாக இங்குள்ள அழிபாடுகள் ஏனைய மாவட்டங்களோடு ஒப் பிடுகையில் எண்ணிக்கையில் குறைந்து காணப்பட்டதும், தொல்லியற் று றை யில் "அகழ்வியல்" ஒரு முக்கிய இடத்தைப் பிடிக் காததும், பிரதான காரணிகளாக அமைந் தன.
எவ்வாறயினும் இக்குறைபாட்டை நிவர்த்திசெய்யும் நோக்கமாக 1966ம் ஆண் டில் இலங்கைத் தொல்லியற் துறையினர் இப்பகுதியில் அகழ்வை மேற்கொண்டு இங்கு பல ஸ்தூபிகளின் அழிபாடுகளை வெளிக் கொணர்ந்து அநுராதபுரம் போன்று கந்த ரோடையும் பெளத்த மதத்தின் இருப்பிட மாக அமைந்தது எனக் கூறினர். கந்த ரோடை ஸ்தூபிகளின் காலம் கி. பி. 5ம்- 6ம் நூற்ருண்டுகளே என்பதை நாம் மனதில் கொள்ளல்வேண்டும். \
எவ்வாருயினும் இத்தூபிகளுக்குக் கீழ் உள்ள படையில் வேறு என்ன கலாசார அம் சங்கள் உள்ளன என்பதை அறிய இவர்கள்
முற்படவில்லை,

Page 9
(இத்தகையதொரு குறையை 196 ஆண்டில் இப்பகுதியில் மேலாய்வுநடத் திருமதி விமலா பேக்லே என்ற தொல் லாளர் நிவர்த்தி செய்தார். (Begley-1 இம்மேலாய்வின்போது கிறிஸ்துவிற்கு பட்டகால் மட்பாண்ட ஒடுகள் இவ அடையாளம் காணப்பட்டதுடன் இப்ப நிச்சயமாக அகழ்வு மேற்கொள்ளட் வேண்டிய இடம்என இவரை உணரன தது. திருமதி விமலா பேக்லே அவர்கள கந்தரோடையுடன் வல்லிபுரம், ந1 கோயில் குடத்தன்ை ஆகிய பகுதிக மேற்4ொள்ளப்பட்டமேலாய்வும் இப்பிர சங்களின் தொன்மையை விளக்கின. இ தும் இங்கே சேகரிக்கப்பட்ட மட்பாண். களைக்கொண்டு இவற்றின் காலத்ை கூறுவது கடினம் என்பதை இவர் கூ தவறவில்லை. கந்தரோடை அகழ்வுப குறிப்பிடமுன்பு தொல்லியல் துறை ஆர்வங்காட்டிய அறிஞர்களாகிய மு. யார் இராசநாயகமும் (1926) ஞானப் காச சுவாமிகள் (1928) C. S. நவர னம் (1958) ஆகியோரைக் குறிப்பிடா இருக்கமுடியாது. யாழ் குடாநாட்டி கிழக்குப்பிரதேசத்தின் முக்கியத்துவத்ை விளக்கினமையே இம்மூவருக்கும் இல யிலே காணப்படும் ஒற்றுமையாகும். உ ரணமாக முதலியார் இராசநாயகம் அ கள் ஆரம்பத்தில் வடபகுதியின் தலை ராக கந்தரோடை (கதிரமலை) விளங் பின்பு கிழக்குக் கரையிலுள்ள சிங்கை ரும் இறுதியில் நல்லூரும் விளங்கின ( வாதாடினர்.
இவரது கருத்தை ஆதரித்த ஞா பிரகாசரும் சிங்கைநகர் கிழக்குக் கரை அதுவும் வல்லிபுரத்துக்குக் கிட்டவுன் பகுதியில் அமைந்திருந்ததுஎன வாதிட னர். எவ்வாருயினும் யாழ்ப்பாண அ ரின் சேது நாணயங்களில் மன்னர் பெயர் குறிப்பிடப்படாத நேரத்தில் மு முதல் இவை யாழ்ப்பாணப் பேரர நாணயங்களென அடித்துக்கூறிய பெரு முதலியார் இராசநாயகம், சுவாமி ஞா பிரகாசர் ஆகியோரையே சாரும்
பதை நாம் மறக்கமுடியாது. கிழக்குக்க

7-h ந்திய }லிய 967)
тп, 6ip
குதி
ll. Il
வத் TIT GJ Tகர் ளில் rதே }ருந்
தக்
மல் ισότ தை
Ot
தா "זהות
நக கிப்
நக
føði"
Tui பில்
யில் காணப்படும் தொல்லியல் சான்றுகளை மையமாவைத்து நவரத்தினம் அவர்களும் சிங்கைநகர்பற்றி இவர்கள் கூறிய கருத்தை ஏற்றதோடு சிங்கை நகரிலிருந்து குடா நாட்டின் நடுப்பகுதிக்கு ஒரு பிரதானபாதை சென்றிருக்கவேண்டும் எனவும் கூறி அம்பன் நாகர்கோவில் குடாரப்பு, செம்பியன் பற்று, முள்ளியான், வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களிலுள்ள தொல்லியற் சின்
னங்களையும் குறிப்பிடத்தவறவில்லை.
w கந்தரோடை அகழ்வை அடுத்து அனு ராதபுரத்தின் பழைய தலைநகர் பகுதியிலும் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. (Deraniya , "gala S. 1972) இவ்வகழ்வின்போது இப் பகுதியில் ஆரம்பத்தில் வேடர்களின் முன் னேடிகளாகிய குறுணிக்கற்கால மனிதர் உபயோகித்த கல்லாயுதங்களும், இடை வெளிக்குப்பின்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கறுப்புச்சிவப்புநிற மட்பாண் டங்களும் இவற்றைத் தொடர் த் து வரலாற்றுக்கால மட்பாண்டங்களும் ஏனைய சின்னங்களும் வெளிக்கொணரப்பட்டன. இவ்வாய்வை நடத்திய திரு. சிரன் தெரணி யாகலை என்ற அறிஞர் இப்பெருங்கற்காலம் கி. மு. 400ம் ஆண்டளவில் இங்கு ஆரம் பித்திருக்கலாம் என்றும் வரலாற்றுக்காலம் கி. மு. 200-ம் ஆண்டில் தொடங்கி இருக்க லாம்எனவும் கருத்து வெளியிட்டார்.
முதன் முதல் பெருங்கற்கால மக்களே இப்பகுதியில் குளந்தொட்டு நெல்விவசாயம் மேற்கொண்டதற்கான சான்றும் கிட்டியது. இவ்வாய்வு பலவிதத்த்திலும் முக்கியம் பெற் றது, இதன்மூலம் இலங்கையில் முதன் முத லில் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மட்டுமின்றி இந்நாட்டின் நாகரி கத்தை உருவாக்கியவர்கள் பெருங்கற்கால மக்களே என்பதும் வரலாற்றுக் காலம் இம் மக்களின் நாகரிகத் தொடர்ச்சி என்பதும்
வெளியாயிற்று. இவ்வாய்வில் திட்டவட்ட
மாக வட இந்தியாவிலிருந்து இங்கு சிங்கள மக்கள் குடியேறியதிற்கு எதுவித சான்றும் கிடைக்கவில்லை என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கது.

Page 10
பரணி நதிதீரத்திலமைந்த ஆதிச்ச நல்லூ ருக்கு நேர் எதிரில் அமைந்திருந்ததென்ப தும் குதிப்பிடத்தக்கது.
இப்பொம்பரிப்புச் சான்றுகளை விரி வாக நாம் ஆராய்ந்தபோது இரு தாழிக் காடுகளுக்குமிடையே காணப்பட்ட தொல் லியற் சான்றுகளில் நெருங்கிய ஒற்றுமை யைக் காண முடிந்தது. (Sitrampalam S. K. 1980) இத்தகையதொரு ஒற்றுமை விமலா பேக்லேயின் கருத்தையே மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ィ
இச்சந்தர்ப்பத்தில் பெருங்கற்கால பண் பாடு என்ருல் என்ன? என்ற கேள்வி 67(ιρ கிறது. இப்பண்பாட்டை உருவாக்கியோர் ஒரு கால கட்டத்தில் இறந்தோரை அடக் கம் செய்வதற்கு பெரிய கற்களை உபயோ கித்ததால் பெருங்கற்காலம் என்ற பெயரை இது பெற்றது. M
எனிலும், இவ்ஈமச்சின்னங்களை அமைக் கும்போது கற்கள் மட்டுமன்றி தாழிகள், குழிகள் ஆகியவற்றில் பெரிய கற்களை உப் யோகிக்காமல் மே ற் கொ ள் ள ப் பட்ட அடக்கமுறைகளும் இப்பண்பாட்டில் அடங் கின. இதற்குக் காரணம் இவற்றுள் காணப் பட்ட பொருட்களிலுள்ள பிரதான ஒற்று மையாகும்.
இவ்வம்சங்களில் இரும்பு ஆயுதங்கள் முக்கியம் பெற்றதால் தொல்லியலாளர் இக்காலத்தை இரும்புக் கால'மெ ன வும் அழைப்பர். அத்துடன் கறுப்பு, சிவப்பு நிற முடைய மட்பாண்டங்களும் இப்பண்பாட் டுக்குள்ள இன்னெரு சிறப்பு அம்சமாகும். இவற்றேடு நீர்ப்பாசனம், மந்தை வளர்ப்பு,
நெல் விவசாயம் ஆகியவற்றிலும் இம்மக்
கள் பயிற்சிபெற்றிருந்தனர். பொதுவாக
இப்பண்பாட்டின் முக்கிய காரணிகளாக நான்கு அம்சங்கள் விளங்கின. அவையா
வன மக்கள் இருப்பிடங்கள், அவர்கள் ஆக் கிய ஈமச்சின்னங்கள், படைத்த குளங்கள், தொழில்கள் மேற்கொண்ட வயல்கள் ஆகிய நான்கும் இப்பண்பாட்டின் பிரதான அம் சங்களாக விளங்கின. இன்று தென்னிந்தியா வில் திராவிட மக்கள் வாழ் பிரதேசங்களில்

இவ்ஈமச் சின்னங்கள், படைத்த குளங்கள்,
தொழில்கள் மேற்கொண்ட வயல்கள் ஆகிய் நான்கும் இப்பண்பாட்டின் பிரதான அம்
சங்களாக விளங்கின, இன்று தென்னிந்தியா வில் திராவிட மக்கள் வாழ் பிரதேசங்களில்
இவ் ஈமச்சின்னங்கள் பரந்து காணப்படுகின்
றன. இவற்றை விரிவாக ஆராய்ந்த அறி ஞர் இவை திராவிடருடையதே என்றும்,
கி. மு. 1000 ஆண்டளவில் இவர்கள் இத்
தகைய ஈமச்சின்னங்களைப் படைக்கத்
தொடங்கினலும் கூட இப்பண்பாட்டு அம்
சங்கள் சிறிஸ்துவிற்குப் பிற்பட்ட ஒரு சில
நூற்ருண்டுகளுக்கும் தொடர்ந்து வளர்ச்சி
பெற்றன எனவும் கருதுகின்றனர்.
கந்தரோடையில் கிடைத்த பெருங்கற் கால ச் சான்றுகளும் அனுராதபுரத்தில் கிடைத்த பெருங்கற்காலச் சான்றுகளும் மக்கள்வாழ் இடங்களில் கிடைத்த சான்றுக ளாகவே அமைந்துள்ளன. கந்தரோடையில் இப்பழைய ஆதிக் குடியேற்றம் நிகழ்வதற்கு வழுக்கை ஆறும் ஒரு பிரதான காரணியாக இருந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக் கது. ஆதிகாலத்தில் சிறு சிறு வள்ளங்கள் மூலமாக மக்கள் இப்பகுதியை அடைந்தனர் என்றும், கந்தரோடையில் கிடைத்த ருேம நாணயங்கள்.மட்பாண்டங்கள் போன்றவை அரிக்கமேடு போன்று இங்கும் ஆதிவர்த்த 5ம் சிறப்புப் பெற்றிருந்தது என்பதை ாடுத்துக் காட்டுகின்றது, அத்துடன் இப் பகுதி மக்கள் பலவகை மீன்கள், மாடு, ஆடு போன்ற மிருகங்களை வளர்த்தும், உண்டும் மகிழ்ந்தனர் என்பதை மிருகங்களின் எலும் புகள் உறுதிசெய்கின்றன. இவ்வெலும்பு 5ளில் குறிப்பாக பன்றி, மாடு ஆகியவற் ரின் எலும்புகள். அக்கால மக்கள் இவற் றைத் தமது உணவுக்காகப் பயன்படுத்தி னர் என்பதை விளக்குவனவாக அமைந்துள் ான. இதனல் மாட்டைக் கொலைசெய்து உண்ணுதல் பாவம் என்ற உணர்வு நம்மவர் }த்தியில் பிற்காலத்தில்தான் வளர்ச்சி பற்றதொரு மரபு என நாம் எண்ணத் ாண்டுகிறது. இங்கு கிடைத்த பொருட் ளில் இரும்பு ஆயுதங்கள்: வெண்கலப் பாருட்களில் சூலம் ஒன்றும் குறிப்பிடத் }க்கது.

Page 11
கந்தரோடையின் பழமையை, கடந்த ஆண்டு இப்பகுதிக்கு தொல்லியல் ஆய்வுக் காகச் சென்றபோது நாம் நேரே காண முடிந்தது. இப்பகுதியில் இன்றும் வெட்டப் படும் மல சலசுடக் கிடங்குகள், கிணறுகள் ஆகியவற்றுள் தொல்லியல் சான்றுகள் பல வற்றைக் காணக்கூடியதாகவுள்ளது. நாம் சென்றபோது ஒரு வெட்டப்பட்ட கிணற் றையும் அதன் உட்புறக் கரைகளில் காணப் பட்ட எலும்புகள் சாம்பல்கள் ஆகியவை நிலத்துக்கடியில் ஆதிக் குடியேற்றம் பற்றிய அசையாத சான்றுகளை நகரம் அடக்கிவைத் திருப்பது தெரிந்தது. இக்கிணற்றில் வெட் டப்பட்ட மண் சுன்னுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அங்கு சென்று எமது பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு அவற்றை அரித்துப் பார்த்தோம். அப் போது சதுர வடிவிலமைந்த ஒரு செம்பு நாணயம் கிடைத்தது.
இதன் ஒரு புறத்தில் யானை, மரம், தண்டில் அமைந்த சுவஸ்திகா, மலை அல்லது ஸ்தூபியும் காணப்பட்டது. மறு பக்கத்தில் மலையும் தண்டிலமைந்த சுவஸ்திகாவும் காணப்பட்டது, இத்தகைய சின்னங்களில் தண்டிலமைந்த சுவஸ்திகா போன்றவை இலங்கையில் காணப்படும் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களிலுண்டு.
அதேபோன்று மலை அல்லது ஸ்தூபி, tun?aðr, மரம் ஆகியவை ஆதி நாணயங்களில் காணப்படுகின்றன. இதனுல் இவை அக் காலத்தில் வணக்கத்திற்குரிய பொருட்க ளாக விளங்கின என்ற கருத்து பொதுவாக ஏற்பட்டிருந்தாலும் இலங்கையிற் சிலர் யானை, மரம், சுவஸ்திகா, மலை ஆகியவை புத்தரது வாழ்க்கையில் நடைபெற்ற நான்கு முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்து கின்றன எனக் கூறி, இவை முறையே புத் தர் பிறப்பு, ஞான ஒளி பெறுதல், தர்ம போதனை, பரிநிர்வாண நிலை அடைதல் ஆகி யனவற்றைக் குறிக்குமெனவும் வாதிட்டுள்ள னர். இதனுல் இவை கி. மு. 2ம் நூற்றண்டு தொடக்கம் வழக்கிலிருந்ததால் புத்த மதக் கோட்பாடுகளை வெளிக்காட்டும் சின்னங் களே இவை என்பது இவர்கள் வrதம்.

எவ்வாருயினும் இத்தகைய நாணயங்கள் கந்தரோடையின் ஆதிக் குடியேற்றத்திற்கு மறைக்கமுடியாத சான்றுகளாகும். கந்த ரோடையில்தான் சேர்போல் பீரிஸ் மீன் வடிவு பொறித்த பாண்டியர் நாணயங் களைப் பெற்ருர், இத்தகைய மீனையே குறி யீடாக குறிக்கும் விதத்தில் எட்டுவடிவில் மேலிரண்டு கோடுகளும் விரிந்த் அசோக பிராமி 'ம' வடிவிலமைந்த மட்பாண்டத் திலமைந்த குறியீடு ஒன்றும் 1978-ம் ஆண் டில் இப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது நமக்குக் கிட்டியது. இத்தகைய குறியீடுகள் இலங்கையில் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக் களிலும் காணப்படுவது ஈண்டு குறிப்பிடத் தக்கது.
U 1980-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வழுக்கையாற்றுக் கழிமுகத்துக் கிட்ட உள்ள தும் கடற்கரையோரமாக உள்ளதும் காக்கை தீவு வளை குடாவிற்கு நேரே எதி ராக அமைந்ததுமான ஆனைக்கோட்டை மண்கும்பிகளில் ஒன்றில் பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த கலாச்சாரப் பொருட்கள் கிட்டின. இம் மண் கும்பியில் உள்ளமண் வெட்டி எடுக்கமுற்பட்டபோதே இத்தகைய சான்றுகள் வெளிவந்தன. இவற்றை இப்பகுதியில் மேலாய்வில் ஈடு பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக் குழுவினர் கண்டபோது இவற்றின் முக்கியம் புலப்பட்டது. இக்குழுவில் வர லாற்றுத்துறை துணை விரிவுரையாளர்களா கிய திரு. பொ. இரகுபதி, திரு. செ. கிருஷ்ணராசா ஆகியோரும் மாணவர்
களான செல்வன் பொ. சிறீகாந்தா, மு. குணசிங்கம், பொ. புஸ்பரத்தினம், செல்வராசா, நடராசா ஆகியோரும்
மாணவிகளான அஞ்சலாதேவி, இந்துமதி, ஈஸ்வரி, விஜயலட்சுமி. ஆகியோரும் வர லாற்றுத்துறை ஆராய்ச்சியாளரான செல்வி வசந்தமாலாவும் இடம் பெற்றனர். இதன் முக்கியத்துவத்தைக் கண்ட வரலாற்றுத் துறை பேராசிரியர் கா. இந்திரபாலாவும் ாமும் இவ்விடத்தைச் சென்று பார்த்த புடன் இங்கு அகழ்வு நடத்தப்பட வேண்டும் *னத் தீர்மானித்து இவ்வகழ்வில் பேராசிரி ர் கா. இந்திரபாலா அவர்கள் தலைமையில்

Page 12
நாமும் திரு. பொ. இரகுபதியும் சேர்ந்து ஈடுபட்டிருந்தோம். இது நமது வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு நல்லதொரு பயிற் சிக் களமாகவும் அமைந்தது.
இங்கு வெளிக்கொணரப்பட்ட தொல் லியற் சின்னங்களில் பெருங்கற்கால பண் பாட்டின் சிறப்பம்சமாகிய கறுப்புசிவப்பு "நிற மட்பாண்டங்களும் சிப்பிகள், சங்குகள், ருேம மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள், லட்சுமி நாணயம் ஒன்றும் ஒரு வெண் கலத்திலமைந்த முத்திரை, இரண்டு மனித எலும்புக் கூடுகளும் குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு பற்றி முழு அறிக்கையும் வெளி வராத நிலையில் முழுவிவரத்தையும் தர முடியாவிட்டாலும் ஏற்கெனவே பிரஸ் தாபிக்கப்பட்ட இம்முத்திரை, இவ்விடத் தில் காணப்பட்டுள்ள இரு மனித எலும்புக் கூடுகளின் முக்கியத்துவம் ஆகியனபற்றி நாம் கடந்த ஆண்டு (23-3-81-ல்) கொழும் பில் ஜெர்மனிய தூதரகம் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் கூறிய கருத்துக்களையே இங்கு தர விரும்புகிறேன்.
ஆெனக்கோட்டை அகழ்வின்போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வடமாகாணத்தைப்பொறுத் தமட்டில் இங்கு கிடைத்த இரண்டாவது எலும்புக் கூடுகள் இவைதான். முதலாவது எலும்புக்கூடு திருக்கேதீஸ்வரத்தில் மறைந்த திரு. சண்முகநாதன் மேற்கொண்ட அகழ் வாராய்ச்சியின்போது கிடைத்தது. ஆனைக் கோட்டை எலும்புக்கூடுகள், மண்பிட்டியில் நான்கு அடி ஆழத்தில் காணப்பட்டுள்ளன. இப்பிட்டி எல்லாமாக நான்கு மண்படை அமைப்புக்களை கொண்டுள்ளது. முதற் படையில் அண்மித்த வயல்களைத் திருத்து வதற்காக அவற்றை அகழ்ந்தபோது தூக்கி மேலே போடப்பட்ட ஊரியும், இரண்ட வது படையில் செம்மஞ்சள் மண்வகையும் மூன்ருவது படையில் ஒருவித இருவாட்டிச் களிமண்ணும், நான்காவது படையில் கடற் கரையில் காணப்படும் இயற்கை ஊரியும் காணப்பட்டுள்ளது. இவ்வெலும்புக் கூடுகள் கடைசிப் படையில் தங்கி, இருவாட்டிட படையிலே புதைக்கப்பட்டுள்ளன. இவற்ை

வசதிக்காக A, B என இரு அடக்கங்களுக்
கும் பெயர் சூட்டப்பட்டது. இவ்விரு அடக்
கங்களும் சுமார் 10 அடி இடைவெளியில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் வெலும்புக் கூடுகளின் நீளமும் சுமார் 5 அடி யாகும். இவற்றின் A எலும்புக் கூட்டின் முழுப்பாகமும் பூரணமான நிலையில் கிடைக்கவில்லை. இடைமட்டுமுள்ள பகுதி பூரணமான நிலையிலும் ஏனையவை பாகங் களாகவும் கிடைத்துள்ளன. ஆனல் B எலும்புக்கூடோ எனில் பூரணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவற்றுள் A எலும்புக் கூட்டைப்பற்றி சற்று விரிவாக ஆராய்ந் திால் இதன் இட்ைடவரை கைகள் நீளவிடப் பட்டு கைகட்டிய நிலையில் காணப்பட்டு
இதன் தலை இடப்பக்கம் சரிந்தும் காணப்
படுகிறது. B எலும்புக்கூட்டைப் போன்றே இதனின் தலைப்பக்கம் மேற்குத் திசையிலும் கால்ப்பக்கம் கிழக்குத் திசையையும் நோக்கி காணப்படுகிறது. A எலும்புக் கூட்டின் தலைமாட்டில் ஒரு மட்பாண்ட வட்டிலில் சுரு மாலையையும் ஒரு வெண்கல முத்திரை யையும் கொண்ட கறுப்பு சிவப்புநிற வட் டில் காணப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் திருக்கேதீஸ்வரத் திலும் இத்தகைய்தொரு எலும்புக்கூடு 1950-1953-ம் ஆண்டுக் காலப் பகுதியில் திரு. சண்முகநாதனல் அகழ்ந்தெடுக்கப்பட் L-5). (Shanmuganathan S. 1960) by 67626) lib அது அமைந்திருந்த திசையை பொறுத்த
மட்டிலும் ஏன் ஆனக்கோட்டை A எலும்
புக்கூட்டைப்போல் கைகட்டியநிலையிலும் ஒத்துக்காணப்பட்டுப் பூரணமான நிலையில் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் வெலும்புக்கூடு அமைந்த மண்படைக்குச் சற்று மேலுள்ள படையில் கிறீஸ்தவ சகாப்தத்தை அண்டிய ரோம மட்பாண் டங்களும் காணப்பட்டுள்ளது. இத்தகைய நிலையே ஆனக்கோட்டையிலும், திருக்கே தீஸ்வர எலும்புக்கூட்டைச்சுற்றி ஒருசில மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.ஆனைக் கோட்டையிலும் சிப்பிப்படையில் மேலே தாக்கப்பட்ட இவ்வெலும்புக்கூடுகளைச்சுற்றி சங்குகளும் உடைந்தநிலையில் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள், சிவப்புநிற மட்பாண் டங்கள் ஆகியனவும் காணப்பட்டுள்ளன.

Page 13
இவற்றில் காணப்படும் மிருக எலும்பு குறிப்பாக ஆடு, மாடு, பன்றி போன்றை இவை உணவுப்பொருட்களாக இக்கால களால் பயன்படுத்தப்பட்டதுடன் இடுக டில் கூட இக்கால மக்களால் இறந்தோ குப் படைக்கும் முறைகளுக்குப் பயன்ப( தப்பட்டதையும் வெளிக் காட்டுகின்றன.
இவ்வாறு இறந்தோரைக் குழிகள் புதைக்கும் வழக்கத்தைச் சிந்துவெளி ந ரிக காலம்தொட்டுக் கண்டாலும் தென்ன திய்ாவில் புதிய கற்காலத்திலும் அதன்பி வந்தபெருங்கற்காலத்திலும்இவ்வழக்கம் களின் அடக்கு முறைகளில் கடைப்பிடிக் பட்டதை புறநானூற்றில் வரும்;
'இடுகவென்றே, சுடுகவென்ருே படுகுழிப்படுக்க' என்ற குறிப்பும்
மணிமேகலையில்:
'இடுவோர் சுடுவோர் தொடுகுழிப் படுப்போர்’
போன்ற சான்றுகளும் உறுதிப்படுத்துகி றன. இத்தகைய வழக்கம் பெருங்கற்கால பண்பாட்டு மக்களால் பேணப்பட்டதோ வரலாற்றுக் காலத்திலும் இக்கலாசார நீடித்தபோது இதுவும் நிலைத்திருந்தது எ பதை ஆணைக்கோட்டை, மாந்தை போன் இடங்களில் கண்டுெக்கப்பட்ட மனித எலு புக் கூடுகள் உறுதிப்படுத்துகின்றன. திருக் தீஸ்வரத்தில் கிடைத்த மனித எலும் கூட்டை ஆராய்ந்த அறிஞர் இது தென்ன திய வர்க்கத்தைச் சேர்ந்தது எனக் கருத்து G5 foldiggiróT607 it. (Chanmugam and Ja wardane 1956) பொம்பரிப்பில் கிடை மனித எலும்புக் கூடுகளும் தென்னிந்தி பெருங்கற்காலப் பண்பாட்டை உருவாக் திராவிடருடையதே என்ற கருத்தை செ னடி அவர்கள் வெளியிட் டு ஸ் ள |ா ர் க (Kennedy - K. A. R. 1975) is is Gigital மட்பாண்ட கலாசாரச் சான்றுகளு இதையே உறுதிசெய்கின்றன.
இப்பின்னணியில் நோக்கும்போது ஆ% கோட்டை மனித எலும்புக்கூடுகளும் தெ னிந்திய கலாசாரத்தை இங்கு புகுத்

}u
திராவிடருடையதே என்று கொள்வதுதான் பொருந்தும். இவற்றை விரிவாக மானிட இயல் ஆய்வுதான் எடுத்துக் காட்டும். இருந் தும் இத்தகையதொரு முடிவை எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்ட வெண்கல
முத்திரை ஒன்றும் எடுத்துக் காட்டுகின்றது.
இதை வாசித்த பேராசிரியர் கா. இந் திரபாலா இதுவொரு இருமொழிச் சாசனம் என்றும், முதல் வரியில் சிந்துவெளியை ஒத்த சித்திர எழுத்துக்கள் காணப்படுகின்றன . என்றும் இத்தகைய சித்திர எழுத்துக்கள் பெருங்கற்கால மட்பாண்டங்களிலும் உண் டெனவும் எடுத்துக்காட்டி இதன் கீழ்வரும் பிராமி எழுத்துக்களின் உதவிகொண்டு இச் சித்திர எழுத்துக்களை வாசிக்க முற்பட்டு இம்முத்திரைக்கு கோவேதன், கோவேந்தன் என்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளார். (Indirapala K. 1981)
எமது ஆய்வுக்குழுவில் இன்னுெரு அங் கத்தவராக திரு. பொ. இரகுபதி இம்முத் திரை வாசகத்தைப் பின்வருமாறு வாசித் துள்ளார். அவையாவன கோவேதம், கோவேத (இரகுபதி பொ. வீரகேசரி
14.6. 1981), இவ்விளக்கத்தில் முக்கியமாக
நாம் கவனிக்கவேண்டிய அம்சம் யாதெனில் முதல் வரியில் வரும் சித்திர எழுத்துக்கள் மூன்ருக உள. முதலிரண்டும் திரிசூலவடி விலும் கடைசி எழுத்து பிராமி 'ம' வடி விலும் உள்ளதேயாகும். சூலவடிவிலமைந்த முதலிரண்டு எழுத்துக்களும் 'கோ' எனவும் *வே" எனவும் உச்சரிக்கப்பட்டமை ஈண்டு நோக்கற்பாலது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முறையில் இவ்விதம் இவற்றை உச்சரிக்க லாம் எனத் தற்காலிய ஜப்பானிய சீன மொழிகளின் உதாரணங்களைக் கொண்டு கூறினுலும்கூட "கோ"வையும் "வேயையும் குறித்து நிற்கும் இந்த திரிசூலம் மட்பாண் டங்களிலும், இலங்கையின் ஆதிப்பிராமிக்
கல்வெட்டுக்களிலும், நாணயங்களிலும்,
மந்தைகளின் பட்டிக்குறியாகவும் காணப் படுவதை நோக்கும்போது இத்தகையதொரு வாசிப்பு உண்மையில் பொருந்துமா என்ற கேள்விதான் எழுகின்றது. மட்பாண்ட ஒடு களில் கூட மற்றைய தெளிவற்ற குறியீடு களுடன் சில இடங்களில் முதலிலும் சில இடங்களில் இடையிலும் சில இடங்களில் கடைசியிலும் காணப்படுவது இதன் உச்

Page 14
சரிப்புப் பற்றி மேலும் ஐயத்தை எழுப்பு கிறது. சிந்துவெளி நாகரீக எழுத்தை இற்றைவரை பலர் வாசிக்க முயன்றும் வெற்றிபெறவில்லை. இவ்விதம் வாசித்தோர் கூட திரிசூலமாக வரும் குறியீட்டுக்கு வேறு பல உச்சரிப்புகளைக் கொடுத்துள்ளனர் எனவே இம்முத்திரை ஒரு முக்கிய தொல் லியல் சான்ருக அமைந்தாலும்கூட இதில் ~காணப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருப்பதாலும் இவை பற்றி ஐயந்திரிபுற வாசிக்கமுடியாத நிலை யில் இருப்பதாலும் எகிப்திய நாகரீகத்தின் எழுத்தை வாசிக்க ருெசெற்ருக் கல்வெட்டு உதவியதுபோன்று இதுவும் சிந்துவெளி பற் றிய புதிரைத் துலக்க வைக்க உதவும் என் பது பற்றித் திட்டவட்டமாக எதுவும் கூறு முடியாத நிலையில் இருக்கிருேம். எவ்வாரு யினும் கீழ்வரியில் வரும் பிாாமி வரிவடிவப் பற்றிய பேராசிரியர் கா. இந்திரபாலாவின் வாசிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இல் வாருன பின்னணி திராவிட மக்கள் அது வும் கி. மு. 3-2ம் நூற்ருண்டுகளில் பிராப மொழியை அறிந்திருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதனுல் வட பகுதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் காணப்படுவதுபோன்று பிராமிக் கல்வெட் டுக்கள் காணப்படாவிட்டாலும் இங்கு சிங்களமக்கள் வாழவில்லை என்பது பொரு ளல்ல என விசனிக்கும் பரணவித்தாளு போன்ருேருக்கு (Paranavitana - 1970) இ தகைய சான்று வடபகுதி மக்கள் திராவிட மொழி பேசிய மக்கள், பிராமி மொழியை பும் அறிந்திருந்தனர் என்பதை எடுத்து காட்டுகின்றது. இதையே கந்தரோடை மட்பாண்டங்களில் இதே காலத்தில் வருட பிராமிவரி வடிவங்களும் வல்லிபுரப் பொன சாசனத்தில் வரும் கி. பி. 2-ம் நூற்ருண் டைச் சேர்ந்த பிராமி வரிவடிவங்களுட எடுத்துக்காட்டுகின்றன. ஆனைக்கோட்டை அகழ்வின்போது கிடைத்த சான்றுகள் குறிப்பாக சட்டிகளி”காணப்பட்ட மிரு எலும்புகள். சங்குகள் போன்றவை சங்
இலக்கியங்களில் இறந்தோருக்கு இடப்படு

பலிப்பொருட்களை நமது கண்முன்னே
நிறுத்துகின்றன. புறநானூற்றில்,
நோகோ யானே தேய்கமாகாலை பிடியடியன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண்டனன்
கொல் உலகு புகத்திறந்த வாயிற் பல ரோடுண்டன் மரீஇயோனே. -
(புறம்-234) எனவரும் குறிப்பில் இறந்தோருக்கு சோற் றுத்திரள் பலிப்பொருளாக படைத்தலும் அகநானூற்றில்,
நடுகள் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோம்பிக் கன்னெடு துரூஉப்பலி
கொடுக்கும் A (அகம் 35-8-9) எனவரும் செய்யுளில் ஆடுபோன்றவை பலி இட்டதையும் உணர்த்துகின்றது. மனித எலும்புக் கூடுகளுடன் காணப்படும் சுரு எலும்புகள் அக்காலத்தில் இவர்கள் வாழ்க் , கையில் மீன்பிடித்தல் ஒரு முக்கிய இடத் தைப் பெற்றதால் சுழுவை ஒரு வணக்கத் திற்குரிய பொருளாகக் கொண்டு அதன் எலும்புகளை இம்மக்கள் அணிந்திருந்ததை யும் எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தொரு வழக்கம் சங்கத்தமிழ் மக்கள் குழு வினராகிய பரதவர்' இடையே காணப் பட்டது. இதையே பட்டினப்பாலையில் வரும்,
சினைச் சுருவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினல் மடற்ருழை மலர் மலைந்தும் பிணர் பெண்ணைப் பிழிமாந்தியும் புன்றலையிரும் பரதவர் பைந்தழை மா மகளிரோடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ்
சொல்லாது உலவு மடிந்துண்டாடியும்.
(பட்டினப்பாலை-86-93)
என்றகுறிப்பில் பெரும்பாற்ைறல் படையில் சுறவுவாய் அமைந்த சுரும்புகழ் சுடர்நுதல் (பெரும்பானுற்றுப்படை 385)

Page 15
என்ற குறிப்பும் எடுத்துக் காட்டுகின்றது.
சுரு வணக்கம், சுரு எலும்புகளை மாலை யாகக் கோர்த்துச் சூடுதல் சங்க காலத்தில் பாண்டி நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த பரதவர் மத்தியில் காணப்பட்ட வழக்கமா கும். தமிழ் நாட்டிலும் தென்கோடியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் அமைத்த ஈமச்சின்னங்களில் குழியில் அடக்கம் செய் தல் பெருவழக்கமாக இருந்ததும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு நேரே இருந்த வடமாகா ணக் கரையிலும் கற்கள் பரவலாகக் காணப் tut -ng காரணத்தால் இவ் வழக்கம் காணப்பட்டதெனக் கொள்ளலாம். அத் துடன் பரதவர்பற்றிய குறிப்பு சங்க இலக்கி யங்களில் வருவதுபோன்று ஈழத்தின் ஆதி பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுவ sirá) (Sitrampalam S. K. 1980) ஆனைக் கோட்டை, மாந்தைக் கரையேரரங்களிலும் இவர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கொள் ளக் கிடக்கின்றது.
இப்பகுதிகளில் குறிப்பாக காக்கைதீன் வளைகுடா, மாந்தை போன்றவை துறை முகங்களாக விளங்கின எனவும் கொள்ள லாம். இக்கருத்தையே இங்கு கண்டெடு கப்பட்ட ருேம மட்பாண்டங்கள் எடுத்து காட்டுகின்றன. மாந்தைபற்றி சங்க இலக் யங்கள் பேசுகின்றன. இவற்றில் இது "குட் வன் மாந்தை" என விளிக்கப்படுகிறது. ஏ6 மகா தீர்த்தம் எனவரும் பாளிப் பெய மாந்தையையே குறித்தது. மகாதீர்த்த உண்மையில் பெருந்துறையின் பாளி மொ பெயர்ப்பு எனக்கொள்ளலாம்.
பாண்டி நாட்டிலும் திருப்பெருந்துை என அழைக்கப்பட்ட துறைமுகம் இருந்த வரலாறு. ஈழத்திலும் ஆதியில் பாண் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தோர் இங்குள் துறைமுகத்துக்குப் பெருந்துறை என் பெயரை வழங்க அது பாளி நூலோரா பாளி நூல்களில் மகாதீர்த்த என அழை கப்பட்டதெனக் கொள்வதே தர்க்கரீதியா கருத்தாகும்?

ஏனெனில், அண்மையில் இங்கு கண்டெ டுக்கப்பட்ட பெருங்கற்கால கலாசாரத்தின்
சிறப்பம்சமாகிய கறுப்பு, சிவப்பு நிற மட்
பாண்டங்களும்; கடந்த நூற்ருண்டில் இதில் அகழ்வுசெய்த போக் என்ற அறிஞ ரும் ஆதியில் இப்பகுதி தென்னிந்திய மக் கள் குடியேறிய பகுதி எனக் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. (Boake 1887): மாந்தைபற்றி ஆராய்ந்த செனரத்தின Senaratne s, p, f 1965) இதுவும் தமிழ்நாட் டில் உள்ள அரிக்கமேடு போன்று ஒரு பெயர் பெற்ற துறைமுகம் என்பதை எடுத்துக் கூறத் தவறவில்லை. இதன் சிறப்பை பின் வந்த விமலா பேக்லேயும் விளக்கியுள்ளார்.
வெளிநாட்டு வர்த்தகத்தில் தமிழ்நாட் டில் புகார், அரிக்கமேடு போன்று ஈழத்தி லும் மாந்தை போன்ற துறைமுகங்கள் சிறந்து விளங்கியதை இங்கு காணப்படும் ருேம, சீன மட்பாண்டங்களே எடுத்துரைக் கின்றன.
இச்சந்தர்ப்பத்தில் அகநாநூற்றில் மாமூலனர் இத்துறைபற்றிக் கூறுவது மேலும் இதன் சிறப்புக்கு அசையாத சான் ருகும்.
"நன்னகர் மாந்தை முற்றத்தொன்னர் خصيص
பனிதிரை கொணர்ந்த
பாடுசேர் நன்கலம் பொன் செய்பாவை
alungt GolontLItubig லொண்ணுவால் நிறையக் y குவை இயன்றவ ணிலத்தினத் துறந்த
நிதியத்தனன்" (அகம் 127) மாந்தை நகரின் அழிபாடுகளான வீதி கனச் சண்முகநாதன் தன் ஆய்வில் எடுத் துக் கூறியுள்ளார். இன்றும் விமானத் படத் தில் அகழிகளுடன் கூடிய இத்திரு நகரின் படம் தெட்டத் தெளிவாக இதன் தொன் மையைப் பறைசாற்றுகின்றது.

Page 16
தமிழகத்திற்கும் இ த ற் கு மு ன் ள தொடர்பை இன்று இங்கு இதனருகில் ஒடிக்கொண்டிருக்கும் நதியாகிய மல்வத்து ஒயா எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. மகா வம்சம்போன்ற பழைய பாளி நூல்களில் இது கடம்பந்தி என அழைக்கப்படுகின்றது, தமிழக சமூகப் பிரிவில் கடம்பர் பெற்ற இடத்தை புறநாநூறு
துடியன் ப்ாணன் பறையன் கடம்பனென்றின் நான்கல்லது
குடியுமில்லை’
(புறம் 335) எனக் கூறுவதை நோக்கும்போது கடம்ப ரால்தான் இப்பெயர் இந்நதிக்கு இடப்பட் டதோ அன்றி தமிழர் போற்றிய முருகனின் கடம்ப மரம் இப்பகுதியில் செறிந்து காணப் பட்டதால் இப்பெயர் இதற்குக் கிட்டியதோ என ஐயுறவேண்டியுள்ளது. எவ்வாருயினும் பண்டைய தமிழகம் இப்பகுதியுடன் நெருங்கி உறவாடியது தெளிவாகிறது. சங்க இலக்கி யங்கள் பேசும் குட்டுவன் மாந்தைகூட ஒரு சமயம் சேரர் இப்பகுதியில் கொண்ட மேலா திக்கத்தைக் குறிக்கலாம். -
ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப் பட்ட சிப்பிகள், சங்குகள் போன்றவை இப் பகுதி மக்கள் கடலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும், மட்டி போன்ற உணவு வகைளை இவர்கள் உண்ட தையும், சங்குத் தொழிலில் இவர்கள் ஈடு பட்டதையும் நமக்கு எடுத்துக் காட்டுகின் -றின. பாண்டி நாட்டிலும் பரதவர் குலத்த வர் இத்தொழிலில் ஈடுபட்டதைச் சங்க இலக்கியங்கள் விபரிக்கும்.
ஆனைக்கோட்டையில் கிடைத்த இரும்பு ஆயுதங்களில் ஈட்டிகள், கத்திகள், வேலை ஒத்த கருவிகள் குறிப்பிடத்தக்கவை. வேலை ஒத்த ஒருதலைச் சூலம் பொம்பரிப்பிலும் காணப்பட்டது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இஃது இந்நாட்டில் வேல் வணக்கத்தின் தொன்மைக்கு அசையாத சான்று. பாண்டி நாட்டில் ஆதிக்க நல்லூரிலும் இத்தகைய
வேல்கள் காணப்பட்டன.

இலங்கையில் வரலாற்றுக் கால தொல் வியல் படைகளில் காணப்படுவது போன்ற 'லட்சுமி நாணயத் தகடு ஒன்றும் ஆனைக் கோட்டையில் கிடைத்துள்ளது. இதன் ஒரு பக்கத்தில் இலட்சுமியின் உருவமும் மறுபக் கத்தில் தண்டின் மேலுள்ள சுவஸ்திகாவும் காணப்படுகின்றது.
இத்தகைய தகடுகள் கந்தரோடை, முல் லைத்தீவு, அனுராதபுரம் போன்ற இடங் களில் காணப்பட்டுள்ளன. தண்டுடன்கூடிய சுவஸ்திகா பொதுவாக இலங்கையின் ஆதி நாணயங்களில் குறிப்பாக செப்பு நாணயங் களின் பின்பக்கத்தில் காணப்படும் ஒரு குறி யீடு மாத்திரமல்லாமல் ஆதிப் பிராமிக் கல் வெட்டுக்களிலும் இத்தகைய குறியீடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
மட்பாண்டங்களைப் பொறுத்தமட்டில் இங்கே காணப்பட்டுள்ளவற்றில் பெருமள விற்குக் கறுப்புச், சிவப்புநிற மட்பாண்டங் களே காணப்படுகின்றன. இத்தகைய மட் பாண்டங்களே தென்னட்டுப் பெருங்கற் கால மட்பாண்டங்களிலும் காணப்படுகின் றது. பெரும்பாலும் எல்லா மட்பாண்டங் களும் உடைந்த நிலையிலேதான் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இவை தோற்றத்தில் கிண் னங்கள், வட்டில்கள், பானைகளாகவுமுள. கிண்ணங்களும் வட்டில்களும் பலவித வடிவி லும் தடிப்பிலும் காணப்பட்டாலும் இவற் றின் தோற்ற அமைப்பு இவற்றுக்கும் கந்த ரோடை, அனுராதபுரம், பொம்பரிப்பு, திஸமகாராம போன்ற இடங்களிலுள்ள மட் பாண்டங்களுக்குமிடையே இளைவிட்டோ டும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது. இருந்தும் பானைகளில் சிவப்புநிற மட்பாண் டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் சில உள்ளே கறுப்பும் சில முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தாலும் ஆனவையாகும். வெளிப்பகுதிகளில் பலவித வண்ணக் கோடு களினல் அலங்கரிக்கப்பட்டும் இவை காணப் படுகின்றன.
ருேம மட்டங்களில் குறிப்பிடப்தக் கவ்ை லவுலட் கோடுடை மட்பாண்டங்களாகும். பொதுவ்ாக மட்பாண்டங்களில் குறியீடு

Page 17
(5
களின் எண்ணிக்கை குறைவாகவே காணப் பட்டாலும் சிலவற்றில் வழக்கமாகக்காணப் படும் இரு கரமும் விரிந்த பிராமி "ம வடி வில் காணப்படும் குறியீடு குறிப்பிடத்தக் கது. இது உண்மையில் மீனை உருவகப்படுத் தப்படும் குறியீடேயாகும். இத்தகைய குறி யீடு கந்தரோடை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண் டங்களிலும் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக் களிலும் காணப்படுகிறது.
இவ்வாறு நோக்கும்போது ஆனைக் கோட்டை ஈழத்தின் வரலாற்றுக்காலம் இடு காடுகளில் ஒன்ருகவே காணப்படுகிறது.சங்க இலக்கியங்கள் இத்தகைய அடக்குமுறை களைத் தொடுகுழிப்படுப்போர் எனப் பேசு கின்றன.
பெருங்கற்காலப் பண்பாடு விவசா யத்தை மையமாக வைத்து வளர்ந்தாலும் இம்மக்கள் விவசாயத்தோடு தம் பிரதான தொழிலாகக் கடற்ருெழிலையும், வாணிபத் தையும் மேற்கொண்டனர் என அறியமுடி கிறது.
இம்மக்கள் வாழ்ந்த இல்வாழ்விடம் பற்றி தற்போதைய நிலையில் அறியமுடியாம லிருக்கிறது. ஆனைக்கோட்டை மண்மேடுகளி லன்றி அண்டியுள்ள குடியிருப்புக்களிலோ இதற்கான சான்றுகள் இற்றைவரை கிட்ட வில்லை. ஒரு சில இடங்களில் மட்பாண்டங் கள் காணப்படுகின்றன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்ருண்டுகளுக்குட் பிந்தியதாகவேயுள.
கடந்த ஆண்டு நாமும் புவியியல்துறை விரிவுரையாளரான நண்பர் அ. கணபதி பிள்ளையும் வழுக்கையாற்றுக் கழிமுகத்தில ருந்து மே லா ய் வு மேற்கொண்டபோது வழுக்கையாற்றுக்குச் சிறிய தூரத்திலுள் மேட்டில் தற்போது களையோடை அம்மன் கோயில் இருக்கும் இடத்திற்கருகாமையி மட்பாண்ட ஒடுகள். இரும்பு. கழிவு பொருட்கள் ஆகியவற்றைக் கண்டெடு தோம். இருந்தும் இம்மட்பாண்டங்களு ஆனக்கோட்டையில் கிடைத்த மட்பான

)
டங்களைப் போன்று காணப்படாது கிறிஸ் தவ சகாப்தத்தை அண்டியுள்ள மட்பாண் டங்களாகவே காணப்படுகிறது.
கரையோரமாக மேற்கொண்ட ஆய்வில் புன்னலை கிருஷ்ணன் கோவிலின் மேற்குப் பகுதியில் சில கறுப்பு சிவப்புநிற மட்பாண் டங்கள் கிடைத்தன. இவற்றில் கிண்ணங் களின் பாகங்களும் வட்டில்களின் பாகங் களும் அடங்கும். இருந்தும் தற்போதய நிலையில் பெருமளவு இவை காணப்படாத நிலையில் ஆதிக்குடியிருப்புக்கள் இங்கிருந்தன என நிச்சயமாகக் கொள்ள முடியாவிட்டா இம்கூட கடந்த ஆண்டு நாமும் வரலாற் றுத்துறை துணை விரிவுரையாளர் திரு, பொ: இரகுபதியும் இக்கரைக்கு அப்பால் உள்ள கள பூமியில் கண்டெடுத்த கறுப் சிவப்புநிற மட்பாண்டங்களை நினைவுகூரும்போது இப் பிராந்தியம் பெரும் கற்கால மக்கள் நட மாட்டத்திற்கு உட்பட்டதொன்ருகவே இருந்திருக்கவேண்டும் எனக்கொள்ளலாம். கந்தரோடையில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களில் உள்ள மினுமினுப்புத் தன்மை புன்னுலை மட்பாண்டங்களில் காணப்படுவது. இவை நிச்சயமாக கிறிஸ் தவ சகாப்தத்தின் சில நூற்றண்டுகளுக்கு முன்னதாக வழக்கில் இருந்தன எனக்காட் டுகின்றது. சங்க இலக்கியம் குறிக்கும் மாய வன் வழிபாடுதான் பின்வந்த கிருஷ்ணன் வழிபாட்டோடு சங்கமித்தது வரலாறு. தற்போதய திருவடி நிலைக்கு அருகிலுள்ள மழுவையிலும் ஆதிக்குடியேற்றத்திற்கான எச்சங்கள் தென்படுகின்றன. இவற்றில் கூரையோடுகள், பெளத்த கட்டிடங்க அமைக்க பயன்படுத்தப்பட்ட துணையுடைய தூணின் அடித்தளங்கள் சிவப்பு மட்பாண் டங்கள், கறுப்பு சிவப்புநிற மட்பாண்டங் கள், கழிவு இரும்புப் பொருட்கள் குறிப் பிடத்தக்கவை. இருந்தும் இங்கு காணப் படும் கறுப்புநிற மட்பாண்டங்கள் புன்னலை அல்லது களபூமி மட்பாண்டங்கள்போன்று பழமையானவையாகக் காணப்படவில்லை. ஜாதகக் கதைகளில் குறிப்பாக அகிதஜாத கவில் காரைதீவு குறிப்பிடப்படுவதால் இப் பிராந்தியம் கடல்வாணிபத்தில் அக்காலத் தில் சிறப்புப்பெற்றிருந்தது எனலாம். ஏன்

Page 18
(
மழுவை அமைந்த பகுதியும் ஒரு வளைகுடா வாகவே தற்பொழுது காட்சிதருகிறது. வேலணையிலுள்ள சாட்டிபோன்று கப்பல் கள் தரித்து நிற்பதற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளதால் பாளி நூல்களில் குறிப் பிடப்படும் ஜம்புகோளபட்டினம் இப்பகுதி யில் அமைந்திருக்கலாம் என எண்ண இட மிருக்கிறது. வட இந்தியாவோடு இலங்கை கொண்டிருந்த கலாச்சார தொடர்பில் இத்துறைமுகம் முக்கியமாகக் குறிப்பிடப் படுகிறது. இதற்கப்பாலுள்ள மாதகல்துறை காங்கேசன்துறைப் பகுதி ஆகியவற்றேடு ஒப்பிட்டு நோக்கும்போது மழுவைப் பகுதியே கிறிஸ்தவ சகாப்தத்தில் முக்கியம் பெற்ற இடமாக விளங்கியது தெரிகிறது. எவ்வாருயினும் விரிவான அகழ்வாய்வு தான் இத்தகைய கருத்தை மேலும் உறுதி செய்யும்.
தீவுப்பகுதிகளில் ஆனைக்கோட்டைக்கு நேரெதிரிலுள்ள வேலணை குறிப்பிடத்தச் கது. வேலணையிலுள்ள கும்புறுப்பிட்டி மண் கும்பானிலுள்ள சாட்டி காரந்தனையிலுள்ள தும்பாசிமால், மஞ்சள்கேணி ஆகிய இடங் களில் கூரைஒடுகள், கறுப்புசிவப்புநிற மட் பாண்டங்கள், கழிவு இரும்பு ஆகியவை சிறப்பாகக் காணப்பட்டாலும் இம்மேலாய் வில் கிடைத்த தகவல்களை மட்டும் மைய மாக வைத்து ஆராயும்போது இவற்றை கிறிஸ்தவ சகாப்தத்தை அண்டியுள்ள கா6 மாகவே கொள்ள இடமுண்டு. இச்சந்தர் பத்தில் அல்லைப்பிட்டியில் கி. பி. 8, 9நூற்ருண்டைச் சேர்ந்த சீனமட்பாண்ட கள் காணப்பட்டதும் இப்பிராந்தியம் ஆ வர்த்தகத்தில் பெற்ற முக்கியத்துவம் தெ6 வாகிறது. கும்புறுப்பிட்டியிலுள்ள சிலபகு யில் பெளத்த தாதுகோபுரத்தின் அழிபா டிற்கான சான்றுகள் காணப்படுகின்றன இத்தகைய சான்றுகள் காரைநகரிலுள் வேரப்பிட்டியிலுள்ள இதைஒத்த சான், களை ஒத்துக்காணப்படுவதும் ஈண்டு குறி பிடத்தக்கது. புங்குடுதீவு, நயினதிவு சான்றுகளும் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு சில நூற்ருண்டுகளாவது பிந்தியவையே. அறிஞர் மகாவம்சத்தில் குறிப்பிடப்படு "புயங்குதீவ' என்பதுதான் புங்குடுதீவு எ

9)
கொண்டு மகாவம்சம் குறிக்கும் சம்பவம் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முற்பட்ட கால மாக இருக்கிறது எனக் கொண்டாலும்கூட இதை உறுதிப்படுத்தும் தொல்லியற் சான் றுகள் இங்கு காணப்படாதது குறிப்பிடத் தக்கது. நயினதிவும் இவ்வாறே. நெடுந்தீ வில் உள்ள வெடியரசன் கோட்டை என நம்பப்படுமிடத்தில் காணப்படும் பெளத்த தாதுகோபுரங்களின் அழிபாடுகள் கந்த ரோடை தாதுகோபுரங்களை நினைவூட்டி, காலத்தாலும் இவற்றை பிற்பட்ட அநுரா தபுரகாலம் அல்லது அதற்குச் சற்று பிந் தியகாலமாகவே கொள்ள முடிகிறது.
அடுத்தாற்போல் பூநகரிப் பகுதியில் மேற்குக் கரையோரத்தில் கல்முனைவரை யுள்ள பகுதிகளில் மேலாய்வு மேற்கொண் டோம். இச்சந்தர்ப்பத்தில் கிரேக்க அறி ஞர்கள் கல்முனை பற்றிக் குறிப்பிடுவதும் இங்கு லட்சுமி தகடுகள் எடுக்கப்பட்டது பற்றி இராசநாயகம் முதலியார் தமது நூலில் எடுத்துக் காட்டுவதும் நினைவுகூரற் பாலது.
கிறிஸ்துவை அடுத்த சகாப்தங்களில் வணிக க் கப்பல்கள் இக் கல்மு50 யைத் தொட்டு யாழ் குடாநாட்டையும் கிளி நொச்சிப் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் வழியாக சுண்டிக்குளம் மூலமாக கிழக்குத் திசையை அடைந்ததை முதலியார் இராச நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதனுல் சுண்டிக்குள பகுதி பிற்காலத் தில்தான் கிளிநொச்சிப் பகு தி யு டன் இணைந்ததென்பர் அறிஞர். பூநகரிப்பகுதி யில் மண்ணித் தலை, வினுசி ஒடை, வெட் டுக்காடு போன்ற இடங்கள் நம்மால் ஆரா யப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மண்ணித் தலையில் பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த ஈமக்கிண்ணங்களில் ஒன்றன கல் வட்டமும், இலட்சுமி தகடுகள், மணிகள் போத்துக்கேயர் உபயோகித்த சுங்கான் ஆகியவையும் காணப்பட்டுள்ளதாக திரு. பொ. இரகுபதி அறிவித்துள்ளார். (Daily News 6-10-81) இருந்தும் இக்கல்வட்டம் உண்மையில் பெருங்கற்கால ஈமச்சின்னங்

Page 19
களிலொன்றன கல்வட்டம் என்பது கேள் விக்குறியாகவே இருக்கிறது.
மண்வளம் நிரம்பியுள்ள இப்பகுதிகளில் குழிகளில் அடக்கம்செய்து ஈமச்சின்னமாக கல்வட்டத்தை அடுக்கிவிடுதல் நடந்திருக் கலாம் எனக்கொண்டாலும்கூட சரியான ஆய்வின்றி ஒருவட்டத்தை மட்டும் எடுத் துக்கொண்டு இதை உறுதிப்படுத்தும் வேறு சான்றுகளின்றி இவற்றை கல்வட்டம்என விரித்துக்கூறல் பிழையான முடிபுஎன்பதை இப்பகுதியில் நாம்மேற்கொண்ட மேலாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. வெட்டுக்காட்டில் நமக்குப்பல நாணயங்கள் கிடைத்தன. இவற்றை அளித்தவர் திருமதி சோமாவதி வடிவேலு அவர்களாகும். இவற்றில் பழை யது ஒரு வட்டவடிவினதாகிய ருேமநான யமாகும். கந்தரோடை, மாந்தை போன்ற இடங்களோடு ஈழத்தின் பலபகுதிகளிலும் ருேம நாணயங்கள் கிடைத்திருப்பதால் இங்கு இவை கிடைத்தது ஆச்சரியப்படத் தக்கதொன்றன்று. அடுத்தாற்போல் பெண் சிங்கத்தை ஒருபக்கத்திலுள்ள ஒரு நாண யமும் கிடைத்தது. "கொட்றிங்கன்" போன்ற நாணயவியல் மேதைகள் இதை மகாசே னன் காலத்தவை எனக்கூறி இதன் காலம் கி. பி. 4-ம் நூற்ருண்டென்பர். இத்தோடு 12-ம் 13-ம் நூற்ருண்டு சிங்கள மன்னர் கள் நாணயங்களும் நமக்குக் கிடைத்துள் ளன. இவற்றுள் சாகசமல்ல, புவனேகபாகு விஜயபாகு, பராக்கிரமபாகு ஆகிய்ோர் காலத்து நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு நாணயங்களைமட்டும் சான்ருக வைத்து இப்பகுதியின் ஆதிக்குடியேற்றம் பற்றி ஆராய்ந்தால் கிறிஸ்தவ சகாப்தத் திலிருந்தே இங்கு மக்கள் குடியேறியதை இலட்சுமி த சடுகள் பின்வந்த ருேம, சிங் கள காசுகள் எடுத்துக்காட்டுகின்றன. துர் அதிஷ்டவசமாக இங்கு காணப்பட்டுள்ள மண்மேடுகளில் மிக அழகாக உள்ளனவற் றில் கண்டெடுக்கப்பட்டனவற்றில் உள்ள பானை ஒடுகள், இரும்புக் கழிவுப் பொருட் கள் ஆகியவை ஈழத்து மத்தியகாலத்தை சேர்ந்த சின்னங்களாகவும் பிற்காலத்தில் போத்துக்கேயர் நடமாடியதற்கான சான்று களாகவும் உள. h−

வினுசி ஒடையில் பெளத்த உருவத்தை உள்ளடக்கும் மண்டபத்திற்கான கால்களை நாட்டுவதற்காக துளைகள்கொண்ட கற்க ளும் காணப்பட்டுள்ளன. எவ்வாருயினும் இப்பிரதேசத்தில் சில பரீட்சார்த்தக் குழி கள்மூலம் அகழ்வு மேற்கொள்ளுதல் அவ சியம். அத்துடன் சிறுசிறு மலைகளாகக் காணப்படும். இம்மண்மேடுகளின் தோற் றம், செயற்பாடுபற்றி புவிசரிதவியல் கண் ணுேட்டத்தில் ஆய்வதும் அவசியம்.
அடுத்தாற்போல் நமது ஆய்வில் முக் கியம் பெறுவது கிழக்குக் கரையாகும். இதிலும் வடமராட்சிப் பகுதியிலமைந்த வல்லிபுரம், குடத்தனை, நாகர்கோவில் ஆகி யவை முக்கியமானவை. வழுக்கையாற்றில் கந்தரோடை எவ்விதம் தொல்லியல் களஞ் சியமாகத் திகழ்கின்றதோ அவ்விதமே கிழக்குக்கரையில் வல்லிபுரமும் ஒரு தொல் லியல் களஞ்சியமாகும். இவ்விடத்தில் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒருசில நூற்ருண்டுகளில் வழக்கிலிருந்த புராண நாணயங்களை போல்பீரிஸ் தமது ஆய்வில் கண்டெடுத்தது. இப்பகுதி கிறிஸ்தவ சகாப் தத்துக்கு முன்பு ஒருசில நூற்ருண்டுகளா வது மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாக விளங்கி இருத்தல் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இத்தகையதொரு கருத்தினை அண்மையில் நாம் குடத்தனையில் மேற்கொண்ட ஆய்வின்போது கண்டெடுக் கப்பட்ட "புராண நாணயமொன்று எடுத் துக் காட்டியுள்ளது. வல்லிபுரத்தின் பழ மைக்கு இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆதி நாணயங்களோடு கி. பி. 2-ம் நூற்ருண் டைச் சேர்ந்த பொற்சாசனமும் உறுதி பகர்கிறது. இவற்றைவிட இவ்வல்லிபுரத் திருத்தல வழிபாட்டு முறையும் இப்பிரதே சத்தின் பழமைக்கு சிறந்த உரைகல்கூட நிகண்டில் வல்லியம் என்ருல் ஆயர் என்ற பொருளுண்டு. புரம் என்ருல் கோவில் என்ற பொருள்தரும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்கள் கோவில்அமைந்த இட மாகும். இவ்வாயர் பெருமான் வேறுயாரு மல்ல - மாயவனே. இம்மாயவன்தான் சங்கத்தமிழ் இலக்கணமாம் தொல்காப்பி

Page 20
பம்கூறும் தமிழரின் முதற்க-அள் Drujo ரும். வடநாட்டு ஆரிய செல்வாக்கின6 இம்மாயவன்தான் பின்பு விஷ்ணுவோ( சங்கமமாயினன் என்பது வரலாறு. @r』 கனவே குறிப்பிட்டது போன்று புன்னலை கோவிலுக்கு அண்மித்துக் காணப்படு கறுப்புசிவப்புநிற மட்பாண்டங்களும் இத எதிரே காரைநகரில் கண்டெடுக்கப்பட் கறுப்பு சிவப்புநிற மட்பாண்டங்களு இ ஆலப் பகுதியில் பெருங்கற்கால திராவிட நடமாட்டத்திற்கான மறுக்கமுடியாத த யங்கள். புன்னலே மாயவன்போன்றே வல் புர மாயவனும் கடற்கரையில் கோய கொண்ட வள்ளங்கள்.
ஈழத்தின் பிராமிக் கல்வெட்டுக்கள் "ஆயர்" என்ற இடையர் வகுப்பின் அய’ என வந்ததை குறிப்பிடத்தக்க (Sitrampalam S. K. 1980) சங்ககால ச பிரிவில் ஆயர் ஒரு முக்கியபகுதியில் எனவே இன்று இப்பிராந்தியத்தில் மேல் வில் ஈடுபடும்போது மந்தை மேய்ச் கூட்டத்தினர் எம் கண்ணெதிரே தென் தல் பொது வழக்கு இத்தகைய:ெ கூட்டமே ஆதியில் கிறிஸ்து சகாப்தத்தி முந்திய ஒருசில நூற்ருண்டுகளில் வ திருக்கலாம் என்பதை இங்கு நிலைத்; கும் கிருஷ்ணன் வழிபாடும் ஏனைய கால நாணயங்களும் எடுத்துக்காட்டுகி
செல்வச் சந்நிதியும் வடமராட் ஒரு முக்கிய பகுதியாகும். இங்கு கரையில் கோவில்கொண்டிருக்கும் னுக்கு நடைபெறும் வழிபாடு சங்க! தில் “வேலன்' எனப்பட்ட குரும மேற்கொள்ளப்பட்ட கந்தழி வழிபா அறிவுறுத்துகிறது. இவ்வழிபாட்டி கதிர்காம வழிபாட்டிற்கும் நெருங்கி றுமை உண்டு. செல்வம் என்பது ெ என்பதின் திரிபு எனக்கொண்டால் படர் இடமாக கதிர்காமத்தைப்போ வும் விளங்கியது என்பது.தெளிவு. ( ஒளிக்கடவுள் அல்லவா? தொல்கா மாயவனுக்கு அடுத்து சேயோனையே கடவுளாக விழிக்கிறது. ஈழத்து ஆ வுளரினும் மகாவம்சத்தில் விஜயன் யில்வரும் உப்புலவன் (நீலத்தாமை

ໄກີ່ປີ
ருக
தவன்) உண்மையில் இங்கு நிலைபெற்ற
மாயவன் வழிபாடு பற்றிய குறிப்பே.
மாயவனுக்கு அடுத்து இன்றும் சிங்கள மக்கள் முக்கிய கிடவுளாக வழிபடுவது கதிர்காமக் கடவுளையே. இவ்வாறு நோக் கும்போது பெருங்கற்கால பண்பாடு வழி வந்த சங்கத்தமிழர் வழிபாட்டுத் தெய்வங் களின் ஆதிவணக்கத்திற்கான சான்றுகளை இவ்விடத்தில் நாம் காணமுடிகிறதெனக் கொண்டால் பிழையாகாது.
குடத்தனையின் பழமையை GTLD5 மேலாய்வின்போது கிடைத்த புராண நாணயமொன்று எடுத்துக்காட்டியுள்ளது. இந்நாணயம் ஏனைய நாணயங்களைப் போன்று கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒருசில நூற்ருண்டுகளில் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் புழக்கத்தில் இருந்த பழைய நாணயமாகும். இதன் ஒருபக்கத் தில் சக்கரம் மிருகம்போன்ற சின்னங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மறுபக்கத்தில் எதுவித சின்னங்களும் இல்லை. பொதுவாக மறுபக்கத்தில் சின்னங்கள் இல்லாத நாண யங்களை காலத்தால் முந்தியவை என்பர் அறிஞர். இப்பின்னணியில் பார்க்கும்போது குடத் தனையின் வரலாறுகூட கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கி யிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். எமது ஆய்வில் பள்ளிக்கூட சிறுவர்கள்
அதிக அக்கறை காட்டியுள்ளனர். பல வகை
யான பலவித அளவுள்ள டச்சு, ஆங்கில அரச கால நாணயங்கள் &லவும் எமக்குக் கிட்டியது. இச்சேகரிப்பில் குறிப்பிடத்தக் கது. யாழ்ப்யாண ராட்சியத்தின் நாணய மாகிய "சேது நாணயமாகும் இம்மாவட் டத்தின் பல பகுதிகளிலும் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்நாணயம் இப் பிராந்தியத்தில் தனிக்கொடியுடன் நந்தியை தமது நாணயத்தில் பொறித்து அதன்கீழ் "சேது" என்று தமிழில் வாசகம் எழுதி வைத்த தமிழரசின் ஒப்பற்ற அழிவற்ற நா ன ய சான்ற கும். இம்மன்னர்கள் ராமேஸ்வரப் பகுதியிலுள்ள சேதுவை தமது புனித பூமியாக கருதியதால் போலும்

Page 21
சேது" என நாணயங்களில் வாசகத்தை பொறித்தனர்.
அடுத்தாற்போல் முக்கியம் பெறுவது தான் நாகர்கோவில் ஆய்வாகும். நாகர் வடபகுதியில் வாழ்ந்ததையும் அவர்களின் ஆதிவழிபாடு நாகவழிபாடு என்பதையும் இன்றும் எடுத்தியம்பும் தலம்தான் இதுவா கும். நாகவழிபாடு பின்பு 'தம்பிராணுன’ சிவவழிபாட்டோடு சங்கமித்து வளர்ச்சி பெற்ருலும்கூட நாகவழிபாடு இப்பிராந் தியத்தின் அசையாத ஆதிவழிபாடு. பண் டைய சேரநாடாகிய இன்றைய கேரளத் தில் இன்றும் செல்வாக்கு பெற்றது இவ் வழிபாடு என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இப்பகுதியிலும் பல்வகையான டச்சு நாண யங்கள், விஜயபாகு நாணயம், மீன்பொ றித்த பாண்டியகாசு, ஆங்கிலேய நாண யங்கள் பலவும் எமது ஆய்வின்போது அன் பர்கள் தந்துதவினர்.
வல்லிபுரம், குடத்தனை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு யாதெனில் இவை மணல் மேடுகளாக - வெண்ணிற மணற்கும்பிகளாகப் பல மைல் தூரத்தில் காட்சி தருவதே. இத்தகையதொரு நிலை யைத்தான் மேற்குக் கரையிலும் மண்ணித் தலை, வெட்டுக்காடு போன்ற இடங்களிலும் காணமுடிகிறது.
இவற்ருேடு ஒப்பிடும்போது வேலணைப் பகுதியிலும் விசேடமாக சாட்டி பகுதியும் மேலாய்வுக்கு உட்படும்போது இவற் றிடையே இன்றும் இழைவிட்டோடும் ஒரு பொதுத் தன்மையைக் காண முயலலாம். தென்மராட்சியில் வெற்றிலைக் கேணி, சுண் டிக்குளம் ஆகியவையும் இத்தகையவையே. இருந்தும் இங்கெல்லாம் பொதுவாகக் கறுப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்புநிற மட்பாண்டங்கள், சாம்பல் நிற மட்பாண் டங்கள் போன்றவை சாதாரணமாகக் கிடக்
கின்றன.
இக்கறுப்பு சிலப்புநிற மட்பாண்டங்களை ஆராயும்போது இவை கலாசார ரீதியில் பெருங்கற்கால பண்பாட்டிற்குப் பிந்திய தொரு நிலையையும் வரலாற்றுக் காலத்தில்

கிறிஸ்தவ சகாப்தத்தின்போது வழக்கிலி ருந்ததையும் காட்டுகின்றன. பெருங்கற் காலப்பண்பாட்டு ம ட் பா ன் டங் களி ல் காணப்படும் வினைத்திறனையோ அல்லது அவற்றில் சிறப்பு வாய்ந்த வடிவங்களையோ இவற்றில் காணமுடியவில்லை. எனவே, கறுப்புச் சிவப்பு நிறம் வரும் வண்ணம் சுடும் முறை வழக்கிலிருந்ததைக் காட்டும் அதே நேரத்தில் இப்போதைய ஆய்வில் இவற்றை பெருங்கற்காலப் பண்பாட்டோடு சே ர் ப் பது ஒரு கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது.
இவ்விதம் சேர்ப்பது ஈமச்சின்னங் களோடு தொடர்புடைய இப்பண்பாட் டுக்கு நாம் கொடுக்கும் தவருன வியாக்கி யானத்தையே எடுத்துக் காட்டும். வெறும் மட்பாண்டங்களை மையமாக வைத்து, ஈமச் சின்னங்கள் காணப்படாத இடத்து எடுத்த எடுப்பின் பெருங்கற்காலம் எனக் கூறுவது அறிஞர் உலகினல் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தன்று,
அத்துடன் குறிப்பாக மண்ணித்தலை, குடத்தனை ஆகிய இடங்களில் போத்துக் கேயர் உபயோகித்த சுங்தான் போன்றவை கிடைத்தன. போத்துக்கேயர் காலம்வரை இவை மக்கள் நடமாட்டத்திற்குரிய பிரதே சங்களாக விளங்கியவை தெளிவாகிறது. இருந்தும் இப்பகுதியில் கிடைத்த நாணயங் கள் குறைந்தது கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்திலாவது மக்கள் நடமாட்டம் இப் பகுதி யி ல் ஆரம்பமாகிவிட்டதென்பதிை எடுத்துக்காட்டுவதும் இவற்றை இன்னும் மட்பாண்ட ஆய்வுமூலம் நிரூபிக் வேண்டின் குறிப்பிட்ட இடங்களில் பரிசோதனை ஆய் வும் குழிகள் இட்டு அகழ்வாய்வு மே ற் கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும். வெறும் மேலாய்வுமூலம் திட்டவட்டமான எந்த முடிவுக்கும் நாம் வந்துவிடமுடியாது.
இச்சந்தர்ப்பத்தில் வல்லிபுர பிரதேசத் தில் கடந்த நூற்றண்டில் குறிப் பாக 1846ல் கிடைத்த 7000 நாணயங்கள்பற்றி நாம் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. (J. R. A. S. K. I. 1 No3) இவை ஒரு மனித

Page 22
சடலத்தோடு முட்டியில் புதைக்கப்பட்டிருந் தன. இதுபற்றிய விபரமோ அல்லது இந் நாணயங்கள் எங்குள்ளன என்பது பற்றிய விபரமோ நமக்குக் கிடைக்கவில்லை. இஃ தெல்லாம் நம்மவர் நம் பாரம்பரியத்தில், பழமையில் கொண்டுள்ள அசிரத்தையை யும் பாராமுகத்தையுமே காட்டுகின்றன.
இத்தகைய அசிரத்தையினுல்தான் வல்லிபுரம். மணற்காடு, குடத்தனை, நாகர் கோவில் தீவுப்பகுதிகளில் சாட்டி போன்ற இடங்களிலுள்ள மண்மேடுகளும் அவற் ருேடு சேர்ந்துள்ள வரலாற்றுப் பொக்கிஷங் களும் நம்மவர்களால் தினம் தினம் அழிக் கப்படுகின்றன.
இத்தகையதொரு அழி வி ன் போ து கிடைத்த ஒரு வரலாற்றுச் சான்றுதான் ஆனக்கோட்டை மண்மேடு. இதில் பெரும் பாகம் அழிக்கப்பட்டுவிட்டது. இதனுல் இக் குடாநாட்டிற்கான பழமையான தடயங்கள் பலவும் அழிக்கப்பட்டன என்பதை யார் உணர்வர்? யாழ்ப்பாணப் பேரரசின் தலைநக ரான நல்லூர் இன்று அழிக்கப்படுகிறது. வரலாற்று உணர்வுடன் ஒரு சமூகம் வாழும் போதுதான் அதற்கான எழுச்சியும் உண்டு என்பதை யார் மறுப்பர். இனியாவது இத் தயை சின்னங்களோ அன்றி நாணயங்களோ கிடைக்கும்போது யாழ். வரலாற்றுத்துறை, யின் ஒர் அங்கமாகிய தொல்லியற் துறைக்கு அறியத்தரின் இம்மாவட்டத்தின் உயர்கலைப் பீடத்திலுள்ள நூதனசாலையில் இவற்றைப் பேணிப் பாதுகாப்போம் என்றும் உறுதி தருகிருேம்.
- இத்தகையதொரு நிலை வரும் போது தான் இச்சின்னங்கள் நம் எதிக்கால சந்ததி யினருக்கு நல்ல வழிகாட்டியாய் அமையும்.
முடிவுகள்
எமது மேலாய்வின் மூலம் ஒரள்வு சில முடிவுகளைக் கூறக்கூடியதாக உள்ளது. இம் மாவட்டத்தின் ஆதிக் குடியேற்றம் பெருங் கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்க ளோடுதான் தொடங்குகிறது. இவர்களுக்கு முன்பு யக்சர்கள் என மகாவம்சம் விளிச் கும் குருணிக்கற்கால மக்கள் இந்நாட்டில்

வாழ்ந்ததற்கு பெருங்கற்காலப் படைக்குக் கீழ் இவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் பற்றி அனுராதபுரத்தில் கிடைத்த தகவல் கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாயுதங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த குருணிக்கற்கால மக்களோடு பெருமளவு ஒத்துக் காணப்படுவதால் தமிழ்நாட்டு குரு னிக் கற்கால மக்கள் ஈழத்திலும் பரந் திருக்கலாம் எனக் கொள்ளலாம். தமிழ் நாட்டின் தென்கோடிக்குக் கிட்டவுள்ள பிராந்தியம் மட்டுமல்லாமல் சீதோஷ்ண நிஜலயிலும் அதோடு ஒத்த ஒரு பிராந்திய மாக யாழ். மாவட்டம் காணப்படுவதால் இம்மக்கள் ஏன் யாழ். மாவட்டத்தில் கால் வைக்கவில்லை என்பது இற்றைவரை ஒரு புதி ராகவே காணப்படுகிறது. இதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று இதுபற்றிய முடிவான ஆய்வு இற்றைவரை நடைபெருமை. இரண்டாவது இம்மக்கள் உபயோகித்த கல்லாயுதங்களின் மூலப்பொருட்களாகிய குவாட்ச் எ ன் ற கணிப்பொருள் இப்பகுதியில் காணப் படாமை; அல்ஜின் தம்பதிகள் இம்மாவட் டத்தில் இவ்வாயுதங்கள் ஓரிடத்தில் காணப் பட்டதாகக் கூறும் தகவல்கள் உண்மையில்
திருகோணமலையை மனதில்வைத்தே கூறி
யுள்ளனர் என்பதை திரு. செரன் தெரணி யாகலை அவர்கள் நமக்கு அறியத்தந்துள் GrT ri .
இதற்கு அடுத்தாற்போல் வருவதுதான் பெருங்கற்காலம். யாழ். மாவட்டத்தின் வழுக்கையாறு இதன் மையப் பிரதேசமாக அமைந்துள்ளது. கந்தரோடை, ஆனைக் கோட்டை ஆகியவற்றில் கிடைத்த சான்று கன் பி. மு. 4ம் - 5ம் நூற்றண்டுகளிலாவது இப்பகுதியில் இம்மக்கள் நடமாடினர் என் பதை உறுதிப்படுத்துகின்றன.
இக்காலத்தை அண்டிய குடியிருப்புகள் புன்னலை, களபூமி, மழவை ஆகிய இடங் களில் ஆரம்பித்திருக்கலாம் எனக் கொள்ள லாம். வேலணை, சரவணை ஆகியவை ஆனைக்
கோட்டைக்கு நேர் எதிரில் இருப்பதால்
ஆனைக்கோட்டை போன்றே இப்பகுதியிலும்
ஆரம்பக் குடியேற்றங்கள் நடைபெற்றிருக்க

Page 23
லாம் என்றுகொள்வது தர்க்கரீதியாக ஏற் றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தாக இருந் தாலும் கூட இங்கு காணப்படும் தொல்லி யல் சான்றுகள் (அதுவும் மேலாய்வின் மூலம் பெறப்பட்டவை) கிறிஸ்துவ சகாப்தத்தை அண்டியுள்ள காலப்பருதியில்தான் இங்கு குடியிருப்புகள் தோன்றியிருக்கலாம் என் பதை வலியுறுத்துகின்றன.
இத்தகையதொரு நிலையே மண்ணித் தலை, வெட்டுக்காடு, நாகர்கோவில். குடத் தன. வல்லிபுரம்போன்ற கரையோரப்பகுதி யிலும் வெற்றிலைக் கேணி போன்ற இடங் களிலும் கிடைத்த சான்றுகள் உறுதிப் படுத்துகின்றன. எனினும் இத்தகைய முடிவு கள் மேலாய்வுமூலம் பெறப்பட்டவையே. வெறும் மேலாய்வை மையமாகவைத்து அவ சரமாக எந்த முடிவுக்கும் நாம் வருவது பிழை. பரீட்சார்த்தரீதியான அகழ்வுகள் இவைபற்றி மேலும் பல விபரங்களைத் தரும்.
எமது மேலாய்வின் பெறுபேருக ஆரம்ப குடியேற்றங்கள் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியிருந்ததையும், நீர் வசதி, சுலபமா கப் பண்படுத்தக் கூடிய மண் ஆகியவை இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடத்தைப் பெற்றதையும் உறுதிசெய்கின் றன. செம்மண் பிராந்திய குடியிருப்புகள் மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் நடை பெற்றிருக்கவேண்டும் என்பதை இங்கு அரு கிக் காணப்படும் தொல்லியல் சா ன் று களோடு யாழ்ப்பாண வைபவ மா லை கைலாய மாலை போன்ற இலக்கியச் சான்று களும் எடுத்துக்காட்டுகின்றன.
கடின மண்ணும் மிக ஆழமாகப் பெறப் பட்ட நீர்நிலைகளும் போதிய வசதிகளற்ற ஆதிகாலத்தில் மக்களால் ஆக்கிரமிக்கப் படாத பிரதேசங்களாகவே இருந்தன. பொதுவாக பெருங்கற்காலமக்கள் குளத்தை மையமாகவைத்து வாழ்வை வளம்படுத்தினு லும்கூட யாழ். மாவட்டத்தின் தரைத் தோற்றம் இயற்கையாக ஒரு பகுதியில் நீர் தேங்கிவந்து நிற்கவும் மிகக் குறைந்த சிரமத் தில் இந்நீரைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் இல்லாத பிரதேசமாக இருந் தது. இதனல்தான் கிணற்று நீரில்மட்டும் வாழவேண்டிய மக்களுக்கு கரையோரப் பிர

தேசம். செம்மண் பிரதேசங்களைவிட வாய்ப் பான ஒரு இடமாக அமைந்தது. ஆனல் இத்
தகையதொரு நிலை அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் காணப்படவில்லை.
செம்மண் பிராந்தியமாகிய இதில் இயற் கையாகவே நீர் தேங்கிநிற்கக்கூடிய விதத் தில் தரைத் தோற்றம் அமைந்திருந்ததால் ஆரம்பத்திலே இருந்து முழுக்க முழுக்கக் குளங்களை மையமாக வைத்து இச்செம்மண் பிராந்தியத்தில் மக்கள் பரவல் ஏற்படத் தொடங்கின.
இப்பின்னணியில் இலக்கிய ஆதாரங் கள் இம்மாவட்டக் குடியேற்றம் பற்றி க் குறிப்பிடும் தகவல்களைச் சற்று விரிவாக ஆராய்வது பலனுடையதாகும்.
யாழ்ப்பாண வைபமாலை போன்ற நூல் கள் இப்பிராந்தியத்தின் குடியேற்றம் கி.பி. 8-ம் நூற்ருண்டில் வாழ்ந்த யாழ்பாடியி ஞல் ஆரம்பிக்கப்பட்டது எனக்கூறுவது பொருத்தமற்ற தொன்ருகவே காணப்படு கின்றது. இவ் யாழ்பாடிக்கதை கி. பி. 16ம் நூற்றண்டில் வாழ்ந்த அந்தகக் கவிவீரரா கவர் கதையைப் பின்பற்றி எழுந்தது மட் டுமன்றி 13-ம் 14-ம் நூற்ருண்டுகளில்தான் இம்மாவட்டத்திற்கு இடப்பட்ட மணவை மணற்றிடர் போன்ற பெயர்களையும் இணைத்து எழுந்தது என்பர் அறிஞர். (இந்திரபாலா - கா. 1972) அத்தோடு ஏற் கனவே ஆராய்ந்த தொல்லியல் சான்றுகள் ஆதிக் குடியேற்றம் யாழ்பாடியோடோ அன்றி கி.பி. 8-ம் 9-ம் நூற்ருண்டுகளில் வாழ்ந்ததாக நம்பப்படும் - உக்கிரசிங்கன் மாருதப்புரவல்லி கதைகளிலோ இல்லை என் பது தெளிவாகின்றது. எனினும் பாளி நூலாகிய மகாவம்சம் இப்பிராந்தியத்தின் பழமைபற்றித்தரும் ஆகப்பழைய இலக்கிய சான்றை நாம் ஆராயாமல் விடமுடியாது.
மகாவம்சத்தில் கி. மு. 6-ம் நூற்றண் டில் இங்கு (நாகதீபத்தில்) மகோதர சூளோதர என்ற அரசர்கள் சிம்மாசனம் வேண்டிப் போரிட்டதையும் அப்போது புத்தபிரான் தமது இரண்டாவது விஜயத் இன்போது இவர்கள் சண்டையை சமாதா னப்படுத்தியதாகவும் கூறுகிறது. இத்தகைய

Page 24
தகவல்களைத்தான் ஒருவிதத்தில் கி. பி. 3-ம் நூற்றண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் மணிமேகலையும் தருகிறது. மணிமேகலையில் மணிபல்லவம்பற்றி பேசப்படுகிறது. இம் மணிபல்லவம் யாழ்மாவட்டத்தைக் குறிக் கிறதென்பர். இராசநாயகம் முதலியார், மணிமேகலையிலும் மணிமேகலை புத்தபீடியை வணங்கியது பற்றிய குறிப்பு வருகிறது. அத்துடன் மணிமேகலையில்
‘மணிபல்லவத்திடை மணிமேகலை தா வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையுங் தண்புனற் பொய்கையுந் தாழ்ந்தன நோக்கி எனவரும் குறிப்பும்
*துறையும் துறைசூழ் நெடுமணற் குன் றமும்’ எனவரும் குறிப்பும் இப்பிராந்தி யத்தில் நாகர்கோவில், வல்லிபுரம்,வேலணை காரைநகரிலுள்ள வேரப்பிட்டி போன்த இடங்களை எம்மனக்கண் நிறுத்துகின்றன. வல்லிபுரத்திற்கூட கி. பி. 2-ம் நூற்ருண் டைச்சேர்ந்த பொற்சாசனம் ஒரு பெளத்த ஸ்தூபிபற்றியே பேசுகிறது. வேலணையி லுள்ள குறும்பிட்டியா காரைநகரில் உள்ள வேரப்பிட்டி ஆசியவற்றின் அழிபாடுகளும் இக்காலத்தில் பெளத்த ஸ்தூபிகள் இங்கு இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. எனவே மணிமேகலைச் செய்தி திராவிட மொழி பேசிய மக்களில் ஒருபகுதியினர் பெளத்தி மத செல்வாக்கிற்கு உட்பட்டதை தெளி வர்க எடுத்துக் காட்டுகின்றது.
இந்தநாட்டில் வாழ்ந்த தமிழ்க்குடிகள் எவ்வாறு பெளத்த மதத்தை ஆதரித்து பாளிமொழி செல்வாக்கால் தமது பெய ரையே மாற்றினர் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்தில் கிடை துள்ள பிராமிக் கல்வெட்டு சான்றுபக கின்றது. இக்கல்வெட்டின் காலம் கி. மு 2, 3-Lö Jb/TAöG?GöTL IT G5b(Paranavitame 1970 இதில் தமிழ்வணிகனகிய விசாகன் பெளத் மதத்திற்கு கொடுத்த கொடைபற்றி கூறப்பட்டுள்ளது. வணிகன் "தமிழ’ என இக்கல்வெட்டில் அவன் பேசிய வொழியில் பெயரால் அழைக்கப்படுவதை நோக்கு

போது தமிழுக்கே உரிய சிறப்பான எழுத் தாகிய ‘ழ’ கரத்தை உச்சரிக்கும் மக்கள் இப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்பது தெளி வாகிறது. இங்கே குறிப்பிடப்படும் "தமிழ" என்ற பதம் உண்மையில் தமிழின் முதல் வடிவமாகும். எனவே இக்கல்வெட்டில் இருந்து திராவிடர்கள் அவர்களில் தமிழை
தாய்மொழியாகக் கொண்ட ஒரு பகுதி
யினர் பெளத்தத்தை ஆதரித்தது தெரிகி றது. வல்லியுர பொற்சாசனம் ஒரு பெளத்த விகாரையைக் குறித்தாலும்கூட ஆதில்வரும் ‘படகரை” என்றபதம் உண்மையில் வட கரை' என்றதன் பிராகிருத வடிவம் என் பதும் இசிகிரிய என்றபெயர்கூட ராயன்' போன்ற பெயர்கள் பெற்ற திரியின் வடி வமே எனக்கொண்டால் பிழையாகாது. எனவே இக்காலத்தில் வடகரை முக்கியமாக வல்லிபுரத்தை மையமாக வைத்து தனி சிற்றரசாக விளங்கியிருக்கலாம் எனக்கொண் டால் பிழையாகாது. எனவே வல்லிபுர பொற்சாசனமும் தமிழர் பெளத்தத்தைத் தழுவியதை எடுத்துக்காட்டுகின்றது எனக் கொள்ளலாம்.
எமது தோல்லியல் மேல் ஆய்வும் வழுக்கை ஆற்றுப் பகுதியில் ஆனைக் கோட்டை கந்தரோடை ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வும் யாழ்மாவட்டம் குறைந்தது கி. மு. 4-ம் நூற்ருண்டிற்கு முன்பே திராவிட மக்கள் வாழ்ந்த இட மாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றது. இதனல் ம்காவம்சத்திலும் மணிமேகலையி லும் இப்பிராந்தியம்பற்றி வரும் குறிப்புகள்
இங்கு நிலைபெற்றிருந்த ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட சிற்றரசுகள் பற்றிய ஒரு மரபையே பிரதிபலிக்கின்றன எனக் கொள்ள இடமிருக்கிறது. இச்செய்திகள் ாட்டுமன்றி சம்மோக வாகினி என்ற மிகப் பழைய பாளி நூலில்கூட கி. மு. 4-ம் நூற் முண்டில் நாகதீபத்தைக் கண்ட ஒருகண் குருடுடைய மின்னன்பற்றிக் குறிப்பு வரு
கின்றது.
மணிமேகலை இப்பகுதியை * நாக நாடு’ என அழைக்க மகாவம்சமும் வச
பனின் கல்வெட்டும் ‘நாகதீப" என அழைக்

Page 25
4. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத் தைச் சேர்ந்த மிகுந்தலையில் உள்ள பிராமிக் கல்வெட்டொன்று 'தீபராஜ பற்றி பேசு கிறது. இக்கூற்று ‘நாகதீப" மன்னனையே குறித்து நின்றதென்பர் பரணவிதான, அத் துடன் நாம் பேசும் ஆதிக்குடியேற்ற காலத் தில் பரந்த அளவில் நாகதீபம் தற்போதய வடமாகாணம் அநுராதபுர மாவட்டம் புத்தளம், சிலாபம் ஆகிய பிராந்தியங்களைக் குறித்து நின்றது என்பதை பாளிநூல்கள் ள்டுத்துக் காட்டுகின்றன. இப்பகுதி நாக தீபம் "என அழைக்கப்பட இதன் தென் ப்ாலுள்ள பகுதி 'இரத்தின தீப்ம்' என அழைக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்தில் அநுராதபுரநகரில் ஆட்சிசெய்த சிங்கள மன்னர் பட்டியலில் ‘நாக" என விகுதியுடன் முடிவடையும் பெயர்கள் பலவும் காணப் படுகிறது. ஏன் ஈழத்தின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களில் கூட நாகர்கள் பெயர்கள் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.
V
மேற்கூறிய கருத்துக்கனை மனதில் கொள்ளுவது அவசியம் மென்டிஷ் (Mards 1965) பரணவிதான போன்றேர் இவர்களை அம்ாஷ்யர்கள் அதாவது மனிதரில்லாத கூட்டத்தினர் எனக் கூறியது வியப்பாக உள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் பற்றிக் கூறவந்த பரணுவிதான இப்பிராந்திய ஆதிக்குடிகளான நாகர்கள் பற்றிக் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் மகாவம்சம், மணிமேகலை போன்ற நூல்களில் மட்டுமன்றிப் பொதுவாக பழைய பாளி சமஸ்கிருத இலக்கியங்களில் நாகர்கள் மனிதர்களாக சித்தரிக்கப்பட வில்லை என்றும் உண்மையில் இவர்கள் அமாஷ்யர்களாகவே சித்தரிக்கப்பட்டு பாதாள உலக வாசிகளாகவும் குறிப்பிடப் பட்டு இவர்களின் இயல்பான தோற்றம் ப்ர்ம்பாக இருந்ததாகவும் ஆனல் நினைத்த ம்ாத்திரத்தில் எத்தோற்றம் பெறும் சக்தி படைத்திருந்தார்கள் எனவும் எடுத்துக் காட்டி ஈழத்தில் உள்ள நாகதீபம் கல் யாணி போன்ற இடங்கள் இவர்கள் வாழ் இடங்களாக குறிப்பிடப்பட்டாலும் இவர் கள் மனித பிறவியினரல்லர் என்பதை க்ெள்தம புத்தர் இங்கு மேற்கொண்ட

விஜயங்களின் போது இங்கு பிறவியினர் இல்லாதிருந்தனர் என மகாவம்சத்தில் வாழ் கூற்று உறுதிப்படுத்துகின்றது என் றும் இன்றேர் இடத்தில் நாகர்களை மனித பிறவியினர் எனக் கொண்டாலும் கூட எக் காரணம் கொண்டும் இவர்களை திராவிடர் எனக் கொள்ள முடியாதென்றும் விளக்கி யுள்ளார் (Paramaviana 1961). ஆனல் இவருக்கு ஈழத்தின் ஆதிக்குடிகள் பற்றி யிருந்த தடுமாற்றத்தை இலங்கை பல்கலைக் கிழக வரலாற்று நூலில் எழுதிய கட்டுரை யொன்று எடுத்துக்காட்டுகின்றது. அதில் இந்நாட்டில் இன்று சிங்களம், தமிழ்மொழி பேசியோரின் பெரும்பான்மையினர் இந்தக் கற்கால ஆதிக்குடிகளின் வழித்தோன்றல் கள் என்றும், இவர்கள் பற்றி விரிவான தகவல் எமக்குக் கிடைக்கவில்லை என்றும் எடுத்துக் காட்டித் தமக்குக் காணப்பட்ட மயக்கத்தைப் புலப்படுத்தி உள்ளார் (Ray 1959).
ஆணுல் இந்நாகதீபத்தில் திடைத்த தொல்லியல் சான்றுகனை விரிவாக ஆராயும் போது நாகர்கள் வாழ்ந்த பிராந்தியம், (ஏன் மகாவம்சம், தீபவம்சம் போன்ற பாளி நூல்களில் விஜயன் ஆதியில் வந்து கால்வைத்துப் பின்பு அநுராதபுரத்தில் அரசமைத்ததாக கூறப்படும் இப்பகுதி) ஆதிகாலம் தொட்டு மனித நடமாட்டத் திற்கு உட்பட்ட பகுதியாகவே காணப்படு கிறது. இற்றவரை நமக்குக் கிடைத்த மனித எலும்புக்கூடுகள் விசேஷமாக பொன்பரிப்பு மாந்தை ஆகியன இரண்டும் தெட்டத் தெளிவாக தென்னிந்திய மக்கட்கு பூவி னரினதே என்பதை உணர்த்தி உள்ளன. ஆனைக்கோட்டை எலும்புக்கூடு மானிட இயலாளரால் இன்றும் விரிவாக ஆராயப் வடி வேண்டி இருந்தாலும் கூட அதில் மாந்தை எலும்புக் கூட்டின் சாயல் இருப் பதும் அவ் எலும்பு கூட்டோடு கிடைத்த முத்திரை குறிக்கும் பெயர் ஆதி திராவிடச் சொல்லாக இருப்பதாலும் மானிட இயல் சான்றுகளை ஒப்பிட்டு ஆராயும்போது நாகர் கள் மனிதர்களே என்பதும் ஆதி திராவிடர் என்பதும் வெள்ளிடை மலை. இன்றும் யாழ் மாவட்டத்தின் பல பகுதியில் வழக்கிலிருக்

Page 26
கும் சங்ககாலத் தமிழர் வழக்கிலிருந்த சொற்கள் பல இந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இதுபற்றி விரிவான ஆய்வு நடத்தப்படவேண்டும், என்ருலும் ஒரு சில உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம். ஐந்து, உது, உவன், அதன் வந்தாரே போன்ற சங்ககால சொற்கள் தமிழகத்தில் வழக்கில் இல்லாவிட்டாலும் கூட இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் பேசப் படுகின்றன. ஏன் தொல்காப்பியத்தில் பெண்குழந்தையைக் கூட "மகனே' என அழைத்த வழக்குண்டு. இன்றும் இத்தகைய தொரு வழக்கு யாழ்ப்பாணத் தமிழில் உள்ளது. (Ray 1959:43) நாம் மேலாய்வில் ஈடுபடும்போது புங்குடுதீவு, வேலணை போன்ற இடங்களில் பண்டைய சங்கச் சொற்கள் வழக்குபற்றி பல அறிஞரால் எமக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்தால் நல்ல பலன் கிடைக் கும். இப் பின்னணியில் நோக்கும்போது கடைச்சங்கப் புலவர்களான ஈழத்துப் பூந்தேவனர், முடிநாகராயன் போன்றேர் வடமாகாணத்திலிருந்து தமிழ் வளர்த்த மதுரைக்குச் சென்றிருக்கலாம் என்பது புலனுகின்றது. முக்கியமாக மாந்தை பற்றிச் சங்ககால நூல்கள் குறிப்பதும், சமூகப் பிரிவில் சங்கத் தமிழரின் ஒரு பகுதியின ராகிய கடம்பரை ஞாபகமூட்டும் விதத்தில் மல்வத்து ஓயா என இன்று அழைக்கப்படும் நதி அன்று பழைய பாளி நூல்களில் விளக் கப்படுவதையும் மேலும் உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம். வவுனியா மாவட் டத்தில் கிடைத்த இரண்டு பிராமிக் கல் வெட்டுகளில் (கி. மு. 2-ம்3ம்நூ. சேர்ந்தது) தமிழ் வணிகன் விசாகன் பெளத்தமதத் திற்குக் கொடுத்த கொடை பற்றிக் குறிப் பிடுகின்றன. இதே காலத்தைச் சேர்ந்த அநுராதபுர கல்வெட்டிலும் தமிழ் வணிகர் பேசப்படுகின்றனர். வவுனியா மாவட்டத் தில் ஏற்கனவே குறிப்பிட்ட பெரியபுளியங் குள கல்வெட்டில் தமிழுக்கே சிறப்பாக அமைந்துள்ள 'ழ' என்று எழுத்து காணப் படுவது தமிழைப் பேசிய மக்கள் கூட்டம் பெளத்தமதத்தை அனுஸ்டித்தவர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என எடுத்துக்காட்டு கின்றது. ஏன் மகாவம்சம் குறிப்பிடும் வர

i லாற்றுச் சம்பவங்களான கி. மு. 29-ம் நூற்றண்டைச் சேர்ந்த சேனன், குட்டிகளும் பின் வந்த எல்லாளன் ஆட்சியும் அன்று கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு இ பிராந்தியத்தில் தமிழ் மொழி பேசியோர் வாழ்ந்த தை உறுதிப்படுத்துகின்றன: வவுனியாவில் உள்ள "மாமடுவ" என்ற கிராமத்தில் காணப்படும் பெருங்கற்கால ஈமசின்ன வகைகள், கற்பதுக்கைகள், கல் வட்டங்கள் ஆகியனவும் இம்மாவட்டத்தில் பழந்தமிழர் பெற்ற செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றன. முல்லைத்தீவில் கண்டெடுக் கப்பட்ட ஆதி நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம், குடத்தனை, மாந்தை, அநுராத புரம் போன்ற இடங்களில் காணப்பட்ட ஈழத்தின் ஆதி நாணயங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சின்னங்களிற்கும் பெருங்கற்கால பண்பாட் டைச் சேர்ந்த பானை ஒடுகளில் உள்ள குறி யீடுகளிற்கும் இடையே இளைவிட்டோடும் ஒற்றுமைய்ைக் குறிப்பிடத்தக்கது. இதனுல் ஈழத்தில் இன் நாணயங்களை வெளியிட் டோர் ஆதிதிராவிட மக்களே என்பது புலனுகிறது. அண்மையில் மாந்தையில் மேற் கொள்ளப்பட்ட பரீட்சார்த்த அகழ்வு இப் பகுதியின் ஆதிக்குடிகள் பெருங்கற்காலப் பண்பாடு வழிவந்த திராவிடரே என்பதை உணர்த்தியுள்ளது. ஏன் மகாவம்சம் குறிக் கும் ஈழத்தின் ஆதிப்பெயரான தாம்பிபர்ணி கடத் தமிழகத்தில் உள்ள பாண்டிநாட்டு நதியாகிய தென் பொருணை அல்லது தண் பொருணையின் பாளி வடிவமே என்பர் அறிஞர். இதனல் ஆதிக் குடியேற்றம் இப் பகுதியிலிருந்து இங்கு நடைபெற்றிருக்க லாம் என்பது வெளிப்படை. புத்தள மாவட்டத்தில் உள்ள பொன்பரிப்பு ஆதிக்க நல்லுருக்கு நேரெதிரிலமைந்துள்ள தும் இவை இரண்டுக்குமிடையே உள்ள நெருங்கிய ஒற்றுமையை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
இவ்வாறு நோக்கும்போது ஈழத்தின் ஆதிக்குடியேற்றத்தில் பாண்டிநாடு முக்கிய இடத்தை வகித்தது தெளிவாகிறது. பாண்டி நாட்டில்தான் பழந்தமிழர் நாகரிகம். (P5 லில் செழித்தது என்பதை கொற்கை

Page 27
போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் உறுதிப்படுத்துவதால் இத் தகையதொரு கருத்து ஏற்கக்கூடியதாகவே இருக்கிறது. விஜயன் கதையிலும் ஏனைய இடங்களிலும் 'பண்டு" என வரும் பதம் பாண்டியரேயே குறித்தது என்பதை நிக்லஸ் போன்ற அறிஞர்கூட ஏற்பதாலும் ஈழத் தின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களின் பிராமி வடிவம் க்கூட தென்னுட்டு வரிவடிவ வழிவந்தது என அறிஞர் ஏற்பதாலும், பெளத்தமும் வடஇந்திய பிராமி வரிவடிவ மும் இங்கு புகுத்தப்பட முன்பு அமாஷர் கள் என விபரிக்கப்படும் நாகர் திராவிட மொழி பேசியோராக இருந்தனர் என்பது தெளிவாகிறது. வரலாற்றுக் கால சிங்கள மன்னர் பலர் நாக என விகுதியுடன் முடி வடையும் பெயர்களைச் சூடியிருந்ததை உற்று நோக்கும்போது இக்கால சிங்கள மக்களின் மூதாதையர்கூட ஆதிதிராவிடமொழி பேசி யோர் என்பது தெளிவு. இதைத் தற்கால சிங்கள மொழி தன்மையும் எடுத்துக் காட்டு கிறது. சிங்களம் என்று நாம் காணும் இனம் பற்றி ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களில் குறிப்பு இல்லை. இந்நாட்டுக்கு இடப்பட்ட பெயராக இது பழைய பாளி நூல்களிலும் இந்திய இலக்கியம் கல்வெட்டு ஆகியவற் றிலும் கி. பி. 3-ம் நூற்ருண்டுக்குப் பின்பே கிாணப்படுகிறது.
இவ்வாறு பிந்திய நிலையில் காணப்படும் சிங்களம்" என்ற சொல் ஈழத்தின் வழி வந்த சொல்லாகும். எலு என்ற மொழி பேசியதால் ஈழம் என இந்நாடு அழைக்கப் பட்டது. இதனைப் பட்டினப் பாலையில் வரும் "ஈழத்துணவும் காழத்து ஆக்கமும் என்ற குறிப்பும், தமிழ் நாட்டில் திருப்பரம் குன் றத்தில் காணப்படும் ஈழத்துக் குடுமிகள் என்ற குறிப்பும் எடுத்துக் காட்டுகின்றன. எனவே இந்த ஈழத்துக்குச் "சிறீ என்ற அடைமொழியைச் சேர்த்ததன் விளைவாகத் தான் 'சிங்களம்' என்ற சொல் பிறந்து, இது முதலில் நாட்டையும் பின்பு ஒரு மக்கள் கூட்டத்தையும் குறித்தது என்பது தெளிவு. மக்கள் கூட்டத்தைக் குறித்த நேரத்தில் சிங்கத்தைக் கொன்றவன் (சிங்+கல) வழிவந்த இனமே சிங்கள இனம்

என்ற நாடோடிக் கதை மரபு மூலம் ஈழத் தில் இருந்து வளர்ச்சியடைந்த சிங்களத் திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. சிங்கள தமிழ் மக்களிடையே மானிடவியலாளர், சமூகவியலாளர் காணும் ஒற்றுமையும் இதை மேலும் வலுப்படுத்துகின்றது.
இவ்வாருயின் சிங்களத்தின் ஆதிமொழி யாகிய எலுவும் தமிழைப்போல ஒரு திராவிட மொழியே. ஏன் தமிழ்நாட்டிற் கூடத் தொல்காப்பியர் காலத்தில் பற்பல பிராந்தியங்களில் பேசப்பட்ட 12 கிளை மொழிபற்றியும் குறிப்புண்டு. (MeenakshiSundaram T.P. 1968) இவற்றில் சில மொழி வழக்குகள் ஏனையோரால் விளக்கப்பட வில்லை. எனவே இந்த எலுவும் இத்தகைய ஒரு பிராந்திய மொழிவழக்காக ஈழத்தில் தமிழுடன் அல்லது வேறு திராவிட மொழி வழக்குகளுடன் புகுந்தது எனலாம். பெளத் தமும், பாளியும் இந்த நாட்டில் புகுத்தப் பட்ட பின்பு "எலு' இவற்றின் செல் வாக்கால் வட இந்திய சாயல் பெற்று தமிழ்போன்ற திராவிட மொழி தன்மையில் இருந்து வேறுபட்த் தொடங்கியது. இவ் வாறு பிறந்ததுதான் சிங்கள மொழியாகும்.
எனவே தொல்லியல் நோக்கில் நோக் கும்போது பரணவிதான குறிப்பிடுவது போல் யாழ் மாவட்டத்தில் காணப்படும் தொல்லியல் எச்சங்கள் இத்தீவின் ஆதி காலத்தில் ஏனைய மாவட்டங்களில் காணப் படும் தொல்லியல் எச்சங்களோடு ஒத்தே 5 IT GOOTLüuGSG63TpGOT. (Paranavitana 1961) ஆஞல் அவர் கூறுவதுபோலத் தீவின் ஏனைய பகுதியில் காணப்படுபவை வட நாட்டின் ஆதிக்குடியேற்றங்களின் எச்சங்கள் அல்ல, இவை தென்னக மக்களின் எச்சங்களே. இவற்றேடு யாழ் மாவட்ட, வட மாகாண ஆதிதிராவிட மக்களின் எச்சங்களும் ஒத்துக் காணப்படுவது ஆச்சரியப்படக்கூடியதொன் றல்ல.
எனவே தற்போதய நிலையில் அகழ் வுகள் விரிவாக மேற்கொள்ளப்படாத நிலை நமது மேலாய்வை மையமாகவும் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட முக்கிய இடங்களில் கிடைத்த தகவல்களை சான்ருகவும் வைத்து

Page 28
ஆராயும்போது யாழ்மாவட்டத்தில் நடை பெற்ற ஆதிக் குடியேற்றம் அநுர்ாதபுரம், மாந்தை, பொன்பரிப்பு, திஸமகாரகம போன்ற இடங்களில் நடைபெற்ற ஆதிக் குடியேற்றங்களை ஒத்ததே என்பதும் ஆகக் குறைந்தது கி.மு. 5-ம் நூற்ருண்டிலாவது இப்பகுதியின் சில முக்கிய இடங்களில் சங் கத் தமிழரின் மூதாதையரான பெருங் காலபண்பாட்டு மக்கள் வாழ்ந்தனர் என் பது உறுதி.
இத்தகைய ஆதிக் குடியேற்ற தலங் களில் வழுக்கையாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. கந்தரோடை ஆனக்கோட் டைத் தொல்லியல் சான்றுகள் யாழ்மா வட்ட ஆதிக்குடியேற்றத்தில் இதுபெற்ற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இராசநாயகம் முதலியார் ஞானபபிரகாசர் போன்றேர் கந்தரோடைதான் பண்டைய நாகர்களின் தலைநகர் என்றுகூறிய கருத் தும் கிழக்குக் கரையிலுள்ள சிங்கைநகர் கந்தரோடைக்குப்பின்பு இப்பிராந்தியத்தின் தலைநகரக எழுச்சிபெற்றது பற்றிய செய் தியும் தற்போதைய தொல்லியல் ஆய்வின் பின்னணியில் பரிசீலனை செய்யவேண்டிய கருத்துக்களாக அமைகின்றன. எவ்வாருயி இணும் இப்பகுதி ஆதி அரசியல் வளர்ச்சிபற் றியோ அன்றி ஏனைய அரசியல் சம்பவங் கள் பற்றியோ போதிய இலக்கிய <级应厅 ரங்கள் இல்லாதவிடத்து அறிந்துகொள்வது கடினமாக இருந்தாலும்கூட மகாவம்சத் தில் (கி.மு. 6-ம் நூற்றண்டு) நாகர் அரசு பற்றிவரும் குறிப்பும் மணிமேகலையில் (கி. பி. 3-ம் நூற்ருண்டு) நாகநாடுபற்றிய குறிப்
பும் விசேடமாக மணிபல்லவம் என அழைக்
கப்படும் இப்பிராந்தியத்தின் மன்னனுன
வளைவாணன் மகள் பீலிவளைக்கும் சோழ
மன்னன் கிள்ளிவளவனுக்கும் இடையே யுள்ள தொடர்புபற்றி வரும் Xn
நாகநாடு நடுங்கின்ருள் பவன் வாகை வேலன் வளைவாணன் றேவி வாகை மயிலை வியிற்றுட் தோன்றிய பீலிவளை . .
(மணி - காதை xxiw.11. 54) குறிப்பும் வசபன் கல்வெட்டில் கி. பி. 2ம்

நூற்றண்டில் அநுராதபுரத்திலாண்ட வச பன் காலத்தில் நாகதீபத்தை அவன் அமைச் சருள் ஒருவனகிய இசிகிரயன் என்பவன் மாகாண அதிகாரியாக இருந்து பரிபா லித்து வந்த காலத்தில் பியகுகதிசன் என் பவன் ஒரு விகாரை அமைத்ததுபற்றிவரும் செய்தியை நோக்கும்போது இப்பகுதி அர சிதுல்ரீதியாக தனிப்பிராந்தியமாக விளங் கியது தெரிகிறது. இத்தகைய பிராந்தியம் ஒரு பேரரசு நிலைக்கு எழுச்சி பெருவிட் டாலும்கூட ஒரு சிற்றரசாக விளங்கியிருக் கலாம். இத்தகைய அரசின் தலைநாராக ஆரம்பத்தில் கந்தரோடையும் பின்பு கிழக்கு கரையில் சிங்கைநகரும் விளங்கியிருக்கலாம் எனக்கொண்டால் பிழையாகாது. ஏன் அநு ராதபுர மன்னர் அரசியல் வரலாற்றைக் குறிக்கும் மகாவம்சத்தில்கூட தேவநம்பிய தீசன் ஆட்சிக்குப்பின்பு மூன்று நூற்றண்டு கட்கு மேலாக இப்பகுதிபற்றி எந்தவித செய்தியும் குறிக்கத் தவறியதில் இரூந்தே இப்பகுதி ஒரு தனிப்பிராந்தியமாக வளர்ச்சி பெற்றது என்பது வெள்ளிடைமலை. இத்த கைய சிற்றரசுகள் யாழ்மாவட்டத்தில் மட்டு மன்றி வடமாகாணத்தின் பல இடங்களி லும் குறிப்பாக மாந்தை, வவுனியா, முல் லைத்தீவு போன்ற இடங்களில் வளர்ச்சி பெற்றிருக்கலாம் எனவும் கொள்ளலாம். இவை பெரும்பாலும் அரசியல் ரீதியில் சுதந்திரமாகவே விளங்கியது என்பதை சிங் கள வரலாற்று நூல்களில் வரும் குறிப்புக் கள் மறைமுகமாக எடுத்துக்காட்டுவதோடு ஐரோப்பியர் ஆட்சியிலும் குறிப்பாக "வன் னிப்பகுதி சுதந்திர நிலையில் இயங்கிய தன்மையும் சான்று பகர்கிறது , சிங்கள வரலாற்று முதல் மன்ன்னுகிய தேவநம்பிய தீஸன் கூட வடபகுதி|மீது கொண்ட தொடர்பு அரசியல் ரீதியானது அன்று. இது வெறும் கலாச்சார தொடர்பே' இவனுக்குப் பின்பு மூன்று நூற்ருண்டுகளுக் குப் பின்பு கி. பி. 2-ம் நூற்ருண்டில் அது ராதபுர மன்னனகிய மகல்லநாக, கனிட்ட திஸ் போன்ருேர் மேற்கொண்ட பெளத்த கட்டிட பணிபற்றியே மகாவம்சம் குறிக் கின்றது. கி. பி. 3ஆம் நூற்றண்டில் இன் னெரு சிங்கள மன்னணுகிய வெகாரிகதிஸ்ஸ மேற்கொண்ட பெளத்த பணி பற்றிக்

Page 29
குறிப்பு வருகிறது. (M. V. 33-35) இதன் பின்பு கி. பி. 7-ம் நூற்ருண்டில் அநுராத புரத்தை ஆண்ட இரண்டாம் அக்கிர போதி இங்குள்ள பெளத்த நிறுவனத்திற்கு மேற் கொண்ட உதவிபற்றிப் பேசப்படுகின்றது. (C.W. 42-62) எனவே வடபிராந்தியத்தைப் பொறுத்தமட்டல் சிங்கள மன்னர் காலா காலங்களில் இப்பகுதியில் தளைத்த பெளத் தத்திறகு அளித்த உதவி பற்றிய சான்றுகள் காணப்படுவதாலும் அரசியல் ஆதிக்கம் பெருமளவுக்கு இவர்களால் மேற்கொள்ளப் படவில்லை என்றே கூறலாம். இதனுல் இப் பகுதி அரசியல் ரீதியில் சிறுசிறு சிற்றர்சு களாக இருந்திருக்கலாம் என எண்ணத் தூண்டுகிறது. இலக்கியக் கல்வெட்டு ஆதா ரங்களின் சான்றுகள் இல்லாத நிலையில் முழுக்கமுழுக்க தொல்லியல் சான்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வரசுகளின் அரசியல் வரலாறு பற்றி நாம் திட்டவட்ட மாகக் கூறமுடியாத நிலையில் உள்ளோம். எவ்வாருயினும் பெளத்த கலாச்சார அலை இப்பகுதி மக்களையும் கவர்ந்தது என்பதற் கான சான்றுகள் உள. இதனுல் ஒரு சில காலங்களில் மட்டும் இப்பகுதி மீது அரசி யல் ஆதிக்கத்தில் அநுராதபுரமன்னர் ஈடு பட்டிருக்கலாம், என்பது தெளிவாகிறது. இதற்குச் சான்ருக கி. பி. 2-ம் நூற்ருண்டில் இங்கு நிலைபெற்ற வசபன் ஆட்சியும் கி.பி. 8-ம் நூற்ருண்டில் அநுராதபுரத்தில் 2-ம் மகிந்தன் ஆட்சிசெய்த போது வட மாக ணத்தை உள்ளடக்கிய உத்தரபிரதேசத்தில் உள்ள மாவட்ட தலைவ்ர்கள் மேற்கொண்ட கிளர்ச்சி பற்றிச் சூளவம்சம் (C. v. 48; 83.84) தரும் குறிப்பும் அமைகின்றன. வட பிராந்தியம் ஒரு சில காலங்களில் JY5lUTré5 புர மன்னர் அரசியல் செல்வாக்குக்கு உட் பட்டிருந்தாலும் பெரும்பாலான காலத்தில்
இக்கட்டுரை யாழ் பல்கலைக் கழகத் தமிழ் ம ஆசிரியர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்
粪 ラ

இது சுதந்திரமாகவே விளங்கியது என்பதை அநுராதபுர மன்னர் தொடர்ச்சியாக இப் பகுதி|மீது மேற்கொண்ட அரசியல் ஆதிக்கம் பற்றி மகாவம்சம். தீபவம்சம், களவம்சம் போன்ற சிங்கள மக்களின் வரலாற்று நூல் களில் போதிய ஆதாரம் காணப்படாத தொன்றே எடுத்துக்காட்டுகின்றது. இருந் தும் இப்பிராந்திய மக்களின் ஒகு பகுதி யினராவது பெளத்தத்தின் வருகையாலும் பாளிமொழிச் செல்லாக்காலும் ' தங்கள் மொழி கலாச்சாரத் தனித்துவத்தை முற் ருகப் பேணமுடியவில்லை என்பதிை இங்கு காணப்படும் சிங்கள இடப்பெயர்களும் ஆங்காங்கே காணப்படும் பெளத்த சின்னங் களும் எடுத்துக் காட்டுகின்றன. எவ்வாரு யினும் கி. பி. 10ஆம் நூற்றண்டில் ஏற் பட்ட சோழப் படையெடுப்பு இப்பிராந்திய மக்களை தமிழ் இந்துமத வழியில் முழுச்க முழுக்க நெறிப்படுத்த கி. பி. 13-ம் நூற் முண்டில் ஏற்பட்ட மாகன் படையெடுப்பு சிங்கள மக்கள் அரசியல் செல்வாக்கிற்கு உலைவைக்க இக்காலம் தொட்டு ஐரோப்பி யர் வரும்வரையும் ஒரு தனித்தமிழ்ப் பேர ரசு நந்திக் கொடியுடன் இப்பிராந்தியத்தில் வளர்ச்சிபெற முடிந்தது.
எவ்வாருயினும் யாழ். மாவட்டத்தில் நாம் மேற்கொண்ட மேலாய்வு உண்மை யில் மேலோட்டமாகமட்டுமே மேற்கொள் ளப்பட்டவை. தொல்லியல் மேலாய்வு உண் மையில் கால் நடையாக பகுதி பகுதியாகச் சென்று விபரமான தகவல்களைத் தரும்வகை யில் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றே. இத்தகைய விரிவான ஆய்வு நடைபெறும் போது எமக்கு மேலும் மேலும் புதிய தக வல்கள் கிட்டலாம்.
ன்றக் கருத்தரங்கில் 16-6-82 ல் கட்டுரை

Page 30
உசாவியநூல்கள்
அகநானூறு 1961 (p. காசிநா இந்திரபாலா கா. 1972 யாழ்ப்பான இரகுபதி பொ. 1981 வீரகேசரி ( சதாசிவம்பிள்ளை வி. வி. 1884 யாழ்ப்பான புறநானூறு 1962-64 சு. துரைச்ச பெரும்பானற்றுப்படை 1962 பொ. வே. ஞானப்பிரகாசர் 1928 யாழ்ப்பான வேலுப்பிள்ளை க. 1918 யாழ்ப்பாண மணிமேகலை 1956 உ. வே. சுவ முத்துத்தம்பிப்பிள்ளை அ. 1912 யாழ்ப்பாண ஜோன் என். 1879 யாழ்ப்பாண
Begley, Vimala 1967
“Archaeological Exploration in No vol. 9 No. 4 Summer 1967. pp 2 ,, 1973
• Proto historical material from Sr in Kennedy. K. A. R. and Posseh of South Asian Pre-history pp 19 Boake W. J. S., 1887
““Tirukketiswaram, Mahatirtha, Mc (C.B.) vol. X No. 35. pp 107 - 1 1888 Männer A Monograph (Colombo) C 1954 Skeletal remains from Tirukk Section G. vol, V Pact-2
Cularamsa 1953
(Trans Geiger. W Colombo, Deraniyagala S. 172. ܝ
The Citadel of Anuradhapura 1969, E Ceylon No-12. PP 48-62, Indrapala K. 1981
The Hindu. April 26. J. R. A. S. (C. B.)
Journal of the Ccylon Branch of the R Kennedy K. A. R., 1975
The Physical Anthorpology of the Sri Lanka (Canberray

தச் செட்டியார் பதிப்பு (திருநெல்வேலி) ா இராச்சியத்தின் தோற்றம் (துண்டி) 14-6-1981) • w
வைபவம் (சென்னை) rமிப்பிள்ளை பதிப்பு (திருநெல்வேலி) சாமசுந்தரரும் பதிப்பு (திருநெல்வேலி)
வைபவ விமர்சனம் வைபவ கெளமுதி (வசாவிளான். யாழ்ப்) ாமிநாத ஐயர் பதிப்பு (சென்னை) ச் சரித்திரம் (யாழ்ப்பாணம்) ச் சரித்திரம் (யாழ்ப்பாணம்)
rthern Ceylon' Expedition 1-29
i Lanka (Ceylon) and Indian Contacts' il G. L. (ed) Ecological Back grounds 1 - 196.
otoddam or Mantoddai, in J. R. A. S.
14 سے "
hanmugam P. K., and Jayawardane F.L.W. etswaram in Ceylon Journal of Science.
"سمبر
Excavation ln the Gedig Area. Ancient
„oyal Asiatic Society.
f
Megalith builders of South India and

Page 31
Lewis J.P., 1895 -
Mannual of the Vanni District (Col Mahavamsa 1960 ベ
(Trans) Geiger W (Colombo) Meemakshisundaram T, P. 1965
. A History of Tamil language (Poona Mendis G. C. 1965
The Vijaya legend in Jayawickrama volume (Colombo) PP 263-279 Navaratnam C. S. 1958
Tamils and Ceylon (Jaffna) Parker H. 1885 V
Report of the Archacologeical disco prvoince in J. R. A. S. (C. B.) v III
Paranavitane C 1961
The Arya kingdom of North Ceylon Part (ii) PP 1-42 1970 Brahmi InscriPtions of Ceylon Pieris P, E. 1917
Nagadipa and Buddhist remains in Ja vol. (xxvi) No 70. PP 11-67 f : 1919
Nagadipa and Buddhist remains in J. vol. (xxviii) No. 72 PP 40-67
Ragupathy P. 1931
Daily News 6-10-1981 Rasanayagam S 1926
Ancient Jaffna Madras Ray H. C. 1959
History of Ceylon, vol. (i) Part (i)
Senaratne S. P. F. 1965
The Later Prehistory and Poto-histo in Journal of the national museum of
(3-19)
Shanmuganathan S. 1960
Fxcavations at Tirukketiswarm vảit (colombo) PP 83-84
Sitrampalam S. K. 1980
The Megalithnic culture of Srilanka (Unpuplished ph. D Thesis, Poona)

mbo)
)
M. A, (Ed.) Paranavitane Felicitation
veries of Tissmaharama in Th Southern - No. 27 PP 95-192
J. R. A. S. (C.B) N. S. vol. (vii)
(Colombo)
ffna Part (i) J. R. A. S. (C.B.)
affnaa. Part (ii) J. R. A. S, (CB)
Colombo
y of Ceylon, some preliminary problems ceylon vol (i) Part (i) colombo PP
ianthan K. (ed.) Tirukketiswaram papers

Page 32


Page 33