கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போரும் மனிதனும்

Page 1

SSSMSSSLS LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
IT II

Page 2

இது
இத்தேச மனிதாபிமான நெஞ்சங்களுக்கு
சமர்ப்பணம்!
எம். எம். வெளியீட்டகம்,

Page 3
Title:- War and the Man
( A NOVEL )
Author:- A. A. Jeyarajah
Publication:- M. M. PUBLICATION
Publisher:- A. A. Jeyarajah.
Address:- No. 1026/3, Riffle range road,
Hunupitya - WATTALA.
First Edition:- 1991 October.
C/r;- To author.
000L0L0MLL0JL0L0LS0L000L0L00MMLL0LLML0M0LS L0LL0LLMLLLLL
THANKS TO
DELIWATTAJOSEPH. THEVARAJA IBNU ASUMATH GONG TOTA PREMARATNE

தெளிவத்தை ஜோசப் DELIWATTA JOSEPH
LDET - 2-6on
மனிதர்கள் மதத்தால்; மொழியால்; இனத்தால்; வசிக்கும் பிரதேசத்தால் கூட பிளவுபட்டு வாழ்கின்றனர்! போரிட்டு மாய் கின்றனர்.
அந்தப் பக்கம் இத்தனை பேர் மடிந்தார்கள் என்று இவர் களும்! இந்தப் பக்கம் இத்தனை பேர் மாண்டார்கள் என்று அவர்களும் பெருமையே பேசும் அளவிற்கு மனிதன் தாழ்ந்தும் போர் உயர்ந்தும் நிற்கும் ஒரு காலகட்டத்தில்
சகல மக்களும் சகோதரர்களே என்னும் உண்  ைம  ைய நிலைநாட்டுவதற்காக நடத்த படவே ைடிய தே உண்மையான போர் அந்தப் போரிலே துப்பாக்கிகள் வெடிக்காது-காரணகாரிய மற்று மக்கள் செத்தும டியும் துர்ப்ப க்கியம் இருக்காது-மனித நேயமே இருக்கும் என்னும் ஒரு தத்துவ அடித் தள த்  ைத க் கொ , டு வாழ்வு பற்றிய சிந்தனைகளை-அ டிநிலை உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்துள்ளார் ஜெயராஜ்.
தமிழ்ப் பெண்களை-அதுவும் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ்ப் பெண்களை - அரசாங்கத் தொழில் நிமித்தம் அவ்வப் பகுதிகளில் வசிக்க நேரிடும் சிங்கள இளை ஞர்கள் ! காதலிப்பதும்; கண்கலங்கக் கைவிட்டு ஊர் திரும்பி விடுவதுமான கதைகள் நாம் ஏலவே எத்தனையோ தடவைகள் சந்தித்திருக்கின்றோம்.
இதிலே ஒரு போர் வீரன்-ஒரு யாழ்ப்பானத்துத் தமிழ்ப் பெண்ணை உளமாறக் காதலித்து-அவளை ஒரு குழந்தைச்கும் தாயக்கிவிட்டு வந்துவிடுகின்றான். அந்தத் தமிழ்த் தாயின் மகனும் இந்தச் சிங்களப் போர் வீரனி / மசனும்-இன் > றய போர்களில்-வடபுலத்து காடுகளில்-போரிட்டு ஒருவன் ர ஒருவர் கொல்ல முயல்கின்றனர். இது தான் கதையின் கற்பனை.
இந்தக் கற்பனையின் மூலம்; தனது சிந்தனையின் துணை கொண்டு மனிடவாழ்வின் அர்த்தங்கon ளத் தேட முயற்ச்சித் துள்ளதே ஜெபராஜின் வெற்றி-இப்படைபின் வெற்றி என நான் கருதுகின்றேன்.
தனது வீர தீரச்செயல்களால் கெளரவம் பெறும் போர்வீரன் இப்படித்தான் அறிமுகப் படுத்தப்படுகின்றான். **இவன் கப்டன் செலவியின் புதல்வன்’ "எந்தச் செனவி; போரே கூடாது என்று தனது பதவியை ராஜினாம ச் செய்து விட்டுச் சென்றனே. அந்தச் செனவியா?

Page 4
போரே கூடாது என்று உதறி எறிந்து விட்டுச் சென்ற ஒரு வீரனின் மகன் இன்று பெரிய போர்வீரன்-தனது சகோதரனை -அவன் ஒரு தமிழ்ப் போராளி என்பதால்-அவனது சாவே தனது கடமை எனக்கருதித் தேடி அலைந்து அவனைக் கொல்வதன் மூலம் வெற்றி பெறவும் செய்கிறான்.
பட்டாளத்துச் சட்டத்திற்கு எதிராக இறந்த தனது சகோ தரனின் உடலை அவனுடைய தமிழ்த் தாயிடம்-தனது தந்தை யின் மானசீக மனைவியிடம் சேர்ப்பிக்கின்றான்
மனிதனை மனிதன் கொன்று மாய்க்கும் இது போன்ற போர் அவசியம் தானா என்று உணரத்தெடுங்குகின்றான்.
இப்படைபின் மூலம் தனது சிந்தனையையும் அதைச் சொல்
வதற்காக தான் செய்து கொண்ட கற்பனையையும ஒரு கதை வடிவுக்குள் நேர்த்தியாகவே செய்து காட்டியிருக்கின்றார். கத சிரியர் கற்பனையின் பகைப்புலம் போர்க்களம்-வெறுமனே அம்மனிதர்களையும் அவர் தம் செயல்களையும் பார்க்காமல் அச்செயல்களின் அர்த்தங்களையும் அனர்த்தங்களையும் பார்க்க யத்தனிக்கினறார். உயிர்களின் இழப்பை போலவே மனங்களின இழபபும் கொடியது என்பதை உணர்த்துகின்றார்.
மகனின் கதையும் அப்பாவின் கதையும் மாறி மாறி வருகின்றன. வாசிப்பவர்கள் மிரள்வார்களே என்ற எண்ணமே படைப்பாளியின் மனதில் எழவில்லை. வாசிப்பவர்களை மன தில் வைத்துக் கொண்டு எழுதப்படும் எந்தப்படைப்புமே தீவி ரமானதாக இருக்க முடியாது என்று நம்புகிறவன் நான்!
இதன் அர்த்தமே வாசகர்களுக்காக எழுதக் கூடாது என்பதுதான். இன்று முக்கிமானதொரு வியாபாரப் பொருளாக எழுத்து மாறிவிட்டதற்கான காரணமே இதுதான்.
போரும் மனிதனும் என்னும் இச்சிறு படைப்பின் மூலம் ஈழத்து இலக்கிய பாரமபரியத்திற்கு வளம் சேர்க்க ஒரு புதி யகூர் - இளைஞர் வந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
பாராட்டுக்கள் !! மென்மேலும் வளம் பெற்றுயர வாழ்த்துகின்றேன்.
95, ரஐமல்வத்தை கொழும்பு - 15 16 - 9 - 91.

(ty A. A. JEYARAJAH
போரும் மனிதனும்
WAIR AND
THE MAN
- 1986 -

Page 5
நினைத்துப் பார்க்கிறேன்...
* டும் ஒரு சந்தர்ப்பத்தில் என்னை உங்கள் கரங்களில் தவழவிட்டிருப்பது காலத்தின் காட்சிக்கோர்வையிலே ஒரு "கிளிக்" ஷொட் ! உங்களை நான் மீண்டும் இப்படி ஒரு பொழுதில் சந் தித்திருப்பது நான் செய்த புண் ணியமோ, நீங்கள் செய்த பாவமோ இந்நாட்டு ஜனநாயகத்திற்கே அது வெளிச்சம்!
ஆம் 1979ம் ஆண்டிலான எனது "சேகுவேரா?வுச்குப்பின் கிட் டத்தட்ட 11 ஆ டுகள் இடைவெளிக்குப்பின், நாம் மீளவும் சந்தித்திருக்கின்றோம்.
இந்நாட்டிலே ஒரு பகிஸ்கரிக்கப்பட்ட எழுத்தாளன். இந் நாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகளினாலும் இன்னோரன்ன இலக் கிய வடிவங்சளி னாலும் எனது படைப்புகள் பகிஷ்கரிக்கப்பட் டன. நான் இவர்களுக்கெல்லாம் எதிர்த்தரப்பு வாதியா, நேர்த் தரப்பு வாதியா, எனக்குத் தெரியாது. தெரியும்; நான் ஒரு மக்கள் தரப்பு வாதி என்பது மட்டுந்தான். போகட்டும்! பழங்கதை கள் பேசி நமக்கென்ன லாபம்! புதுக் தைகள் பேசுவோம் இன்னுமொரு நேரத்தில் இதமான மற்றுமொரு களத்தில்.
நன்றி!
Je. Jo. GgujTg T. (AJ)

திங்கள் கடிதம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி? தோட்டத் துப் பலாமரங்கள் காய்க்கத் தொடங்கியிருப்பதால், இம்முறை யும் இரண்டு பழங்கள் அனுப்பிவிடுங்கள் அப்பா. இம்முறை வடமராட்சியின் புதியதொரு ஒப்பிரேசனுக்கான நிகழ்வு குறி த்து, நாம் தயாராகியும், ஒத்திகை பார்த்துக் கொண்டுமிருப் பதால், இவ்வருட விடுமுறைகள் பொதுவாக எல்லோ ருக்கு மாக ரத்துச் செய்யப்பட்டிருப்பதாலும், என் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கான எவ்வித ஏற்பாடும் செய்யவேண்டாம் எனக்குத் தெரியும்,
-மறுமுறை தங்கள் மடலில் - நானல்ல சியாமளா தான் இங்கே அதிகம் வருத்தப்படுபவள், என்று வரை வீர்கள். ஆனாலும் அப்பா, நமது சந்தோசங்களுக்காக அல்லாமல், நம் மண்ணின், மக்களின் சமாதானத்திற்காகவும் சுபிட்சத்திற்காக வுமே நாம் இங்கே போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் எவரும் மறந்துவிடக் கூடாது. நிற்க,
அண்மையில், வன்னிப் பகுதியில், நான் " அவர்கள்
முகாமொன்றின் மீது மேற்கொண்ட சிறப்புத் தாக்குதலும், அதிலே அவர்களில் பலர் இறந்ததும், முக்கியமாக அந்தப் பகுதி தளபதியை பேஸ் டு பேஸான தாக்குதலில் நான் சுட்டுக் கொன்றதையும் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அந்த தாக்குதலின் பொருட்டான சிறப்பு விருதொன்றினை நேற்று முன்தினம், நமது பெருமதிப்புக்கும் ” அன்புக்குமுரிய பிரிகேடியர் ரணதுங்க எனக்களித்தார்,

Page 6
- இவனை - மிகச் சூடிகையான இந்த இளம் லெப்டின ண்ட்டை உங்களுக்கு தெரிந்திருக்கும் . . ? இவன்தான் நமது முன்னாள் கப்டன் செலவி ரத்ன வின் மகன். - என்று சற்று நிறுத்தினார் மேஜர் சிறிவர்தனா.
- அடடா! அதாவது இன்றைக்கு பதினைந்து ஆண்டுக ளுக்கு முன், இங்கே நான் மேஜராக கடமை புரிந்த நேரம், நமது ரெஜிமெண்டில் இருந்தானே செனவி. . .? அவனைத்தானே சொல்கிறீர்கள் ? - - ஆமாம் . அவனேதான். -- - என்ன ஆச்சர்யம்" என்னால் நம்பவே முடியவில்லை! இராணுவம் பிடிக்கவில்லையென்று தந்தை விலகிச் செல்கின்றான். தனயன் - என்று நிறுத்தி, பெருமி தமாய் இவனை ஊடுருவும் பிரிகேடியரின் விழிசளுக்கு, இவன் லேசாக சிரத் தாழ்த்திக் கொண்டான். x
- தந்லையல்ல இது அவனது தாயின் வேண்டுகோள். - - நல்லது. மிகவும் நல்லது. இவன் போன்ற இளம் சிங்கங்கள்தான் நாளைய சாந்தியும் சமாதானமுமிக்க இலங்கையை உருவாக்க வேண்டும். - என இவனை மென்மையாக தட்டிக்கொடுக்கவும் செய்தார்.
- எனக்கு நினைவிருக்கிறது . மேஜர் அவனுக்கு இங்கே ஒரு "கேஸ்" இருந்தது. அதை நான்தான் . - மேஜர் ஏதோ குறிப்புக் காட்டியிருக்க வேண்டும்; பேச்சு இடையில் நின்றுவிட அவர்கள் பிரிந்து கொண்டார்கள்.
2-வது
உன் கடிதம் கிடைத்தது. உண்மையிலேயே சியாமளா வைவிட எனக்குத்தான் மனவருத்தம். இந்த வருடம் வித்தி யாசமான பரிசினைத் தந்து உன்னை வியப்பில் ஆழ்த்தவேண்
டுமென்றிருந்தேன். கைகூடாமல் போயிற்று; பரவாயில்லை" மேலும்,
இந்தப் போர் போரென்று நீ மாய்வதுதான் எனது வேத னைகளில் அதிகமானது. நீ முகங் காணாத உன் தாயின் வேண் கோளை, ஏதோ ஒரு சமயத்தில் நான் கூறப்போக, அதற்கே போய்விடுவாபென்பது நான் சற்றும் எதிர்பாராத ஒன்றுதான். ஆனாலும்,

3
வளர்ந்தவன் என்ற ரீதியிலே உனது வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்வதிலும், தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் உனக்குள்ள உரிமையை தந்தை என்ற நிலை யில் நான் மதித்திருக்கிறேன். என்பது குறித்து எனக்கு மகிழ்ச் சியே. எனினும்,
நீ நினைப்பதைப் போல் இந்தப் போரென்பது, மானி டத்தின் பகைமை வடிவமல்ல. அன்பின் வடிவந்தான். அன் போ சுயநலத்தின்பாற்பட்ட ஒர் அம்சம். அப்படிப்பார்க்கப் போனால், அதன் ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் இந்த படுகொலைத்தனமிக்க, மனிதாபிமானம் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்காத, மனித குலத்திற்கே பாதகமான Gt frtf உருவாகிறது.
நமக்கெல்லாம் போரென்றதும், தீயின் செந்நாப் பிழம்புகளும் பயங்கர வெடி ஓசைகளும் படுபாதகமான மனிதப்படுகொலை களுமே, நெஞ்சில் அர்த்தமாகிறது. மெய்யாகவே எவனொரு வன இந்தப் போரின் சத்தடியினின்றெல்லாம் விலகி தனக்குள் சாந்தியையும் சந்தோஷத்தையும் உண்டுபண் ணிக்கொண்டு தன் னாலான சிறு சேவைகளை மக்களுக்குச் செய்துகொண்டும் அமைதியாக வாழ்வானாகில், அதுவும் ஒரு போர்தான்! ஆனால் நிச்சயமாக இந்தப் போர் உங்களுடைய போர் முறைகளை விடக் காத்திரமானது.
ஏனென்றால், இவன் உங்களுடைய அழிவுகளுக்கூடாக மனிதனின் புதிய கட்டுமானத்திற்கு வழிதேடுகின்றான். உண் மையாகவே, இவன் எந்த இனத்தை சேர்ந்தவனாக இருந்தா லும் சரி, எம் மொழி பேசுபவனாக இருந்தாலும் சரி, உங்களு டைய உண்மை எதிரி இவனேதான் ! உங்கள் வெற்றிக்கு முத லில் நீங்கள் "அந்தப் போரை வெற்றிக்கொள்ள - வெற்றி கொள்ளவே முடியாத 'அந்தப் போரை" - வேண்டும். இது முடியாவிடில், உங்களுடைய அழிவுப் போர் தொடரவே செய் պւծ.
இன்றைய உலகில் போருக்கென்றே ஒரு ஒநாயைப்போல் நாக்கினைத் தொங்கப்போட்ட வண்ணம் இரத்த வாடை தேடுப வர்கள் இதை மாற்றிச் சொல்லலாம். ஆயின் உண்மையில் நவீன தளபாடங்களை உருவாக்கிக் கொண்டும் உற்பத்தியை அதிகரித் துக்கொண்டுமிருப்பவர்கள் இந்த ஓநாய்களேயல்லாமல் "அந்தப் போரை நடத்துபவர்களல்ல!

Page 7
4.
உண்மை என்பது உறைக்க வெகு காலமாகலாம். ஆனால் அதனாலேயே அது சிறிது மாறிவிடும் - பின்வாங்கிவிடும் என்று எதிர்நோக்குவது என்னே பேதைமை! .
துப்பாக்கியிலிருந்து அதிகாரம் பிறக்கலாம் ; அதேவேளை அநீதியும் பிறக்கும். கூடவே மானிடத்தின் உயிரைக்குடிக்கும் தோட்டாக்களும் பிறக்கலாம், ஆனால் மனிதனை வாழவைக் கும் மனிதாபிமானமும், மனிதப்பண்புகளும் பிறக்க முடியுமா என் மகனே! தொடர்ந்து, மேஜர் சிறிவர்த்தனா உனக்கு ஒரு கதை கூறியதாக நீ தெரிவித்திருந் தாய் ' என்ன செய்வது விதியை நினைத்து சற்று விசனப்படுகிறேன். அந்தக் கதையை கூறவேண்டிய நேரமும் - அதை நீ தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இப்போது வந்துவிட்டது என்பதையும் உணர்கின் GAo sär.
3வது
நீண்ட நெடிதுயர்ந்த பனைகள், குட்டை யான வடலிகள், நீளமாய் - வெகு நீளமாய் - இலக்கின்றி, எங் கோ வெகு தொலைவு நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் புழுதி படிந்த வீதி: அப்பால் நீண்டு பரந்து கிடக்கும் தொடு வானம்; அதற்குமப் பால் அவர்களது கனவுகள் விரிந்து, விகசித்துக் கிடந்தன. அப் புறம் புழுதி கிளறும் ஒர் பகற் பொழுதில் - "இஞ்சை. பச் சைத் தண்ணியா கேட்டனிங்கள்?"
ஓ ஒவ் ஒவ். நீலங் இருக்கு ?" கொஞ்சம் மிருதுவாக முகம் சிவந்து போயிற்று.
"நல்ல தமிழ்..!’’-அவள் திரும்பிச் சென்றாள். இரவுக்கு இலக்கணம் படிக்கும் இவள் கேசம். அது பேசும்! இங்கே வா என்னைத் திரையாக்கு. அங்கே ஒரு செவ்வானம். கீழே ஒரு வண்ணத்தோட்டம். இந்தத் தோட்டத்துக் கணிகள் எவ்வளவு சுவையாக இருக்கும் தெரியுமோ ? " " இந்தாருங்கோ" - திறந்து விட்ட கார்ப்ரேட்டலிருந்து திபுதிபுவென்று வெண்ணிற நீராவி வெளியேறிக் கொண்டிருந்தது.
"இதென்ன. குடிக்க இல்லே இதுக்கு." என்று ஜீப்பின் ஆவென்று திறந்திருக்கும் முன் வாயைக் காட்டினான் அப்புறம். நீர் விட்டு வண்டியின் இக்னீசியனுக்கு உணர்வூட்டி, இவள் பக்கம் திரும்பிச் சொன்னான். ‘நாளக்கும் தண்ணி வேணுங்.." -தடாலென்ற சத்தம் பக்கத்து பனையிலிருந்து விழுந்த பனம்

5
பழமொன்று வெடித்துக் கொண்டது. சம்மென்ற நறுமணம் பரவியது. அப்புறம்.-அந்த நாட்கள் வெகு இனிமையானவை. தோட்டத்து கணிகளுக்காய் முகத்துள் முகங்கள் புதைந்து போயின.
大 ..உங்களுடைய கருத்துக் குறித்து நான் ஆச்சர்யப்படுகிறேன். துக்கப்படுகிறேன். இதுகாறுமான உலகப் போர்களுக்கு, கோடிக் கணக்கான மக்கள் இரையாகியிருக்கிறார்களே எ த னால் 1 முசோலினி ஹிட்லர் போன்றோர் பல இலட்சக்கணக்கில், நிரா யுதபாணிகளான அப்பாவி மக்களை கொன்று குவித்தார்களே எதனால்?
தென்னிந்தியர்கள் காலத்துக்கு கால ம் இங்கே படை யெடுத்து, ஆயிரக் கணக்கில் நமது மக்களைக் கொன்று. தமது ஆட்சியை நிலைநிறுத்தினார்களே, எதனால்? இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது. மானிடத்தின் மீது அவர்கள் கொண்ட அன்பையா. வேடிக்கையாக இருக்கிறது!
நீங்கள் ஒரு சந்நியாச வாழ்க்கையை போதிக்க முயலுகி நீர்கள்; சமூக வாழ்க்கையல்ல. இங்கே போர் கூடாது. என்று நமது மத குருமார்கள் சொல்கிறார்களா? அல்லவே மதத்திற் காகவும் தேசத்திற்காகவும் உயிர்களைக் கொல்வது பாவமல்ல என்று நமது பெளத்த உபநிடதங்களில் சூத்திரங்கள் உள்ளதாகத் தானே இவர்கள் போதிக்கிறார்கள். சிங்களத்தின் தனித்துவம் பேணப்படவேண் டும் என்பதிலே அவர்களும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். புத்தபெருமானார் விரும்பியிருக்க மாட்டார் தனது நிழலை தானே மிதிக்க வேண்டுமென்று. ஆனால் ஒளிப் புலம் அவருக்கு நேர் பின்னாலென்றால், அவரால் என்னதான் செய்ய முடியும் ?
நேற்றைய தினம் மேஜர் சிறிவர்தனாவுடன் கீரிமலை வரை சென்றிருந்தேன். சென்றிகளின் குறைப்பாடுகளைக் கவனிப்பதற் காக. இங்கேயான பயணங்கள் எப்போதும் கத்தி முனையில் நடப்பதைப் போன்றது.
மேஜரிடம் தங்கள் மடல் குறித்துப் பேசினேன். அப்பா! தமிழர்கள் எனக்கு எதிரியல்ல; தேசத்தை பாழ்படுத்தும் பயங் கரவாதிகள் தான் எனது எதிரிகள். இனத்தையும் மொழியை யும் காப்பது என் கடமை.
எனக்கு போர்தான் வேண்டும். அதுதான் எனது இலட்சியம் தொழில், வாழ்க்கை, ஆதர்சம், எல்லாம். முகங்கால்னாத எனது அன்னையின் ஆத்மாவுக்கு இவை சமர்ப்பணங்கள்! மேலும்,

Page 8
6
சியாமளா எப்படி இருக்கிறாள்! சின்னப்யா வீட்டு வேலை களையெல்லாம் ஒழுங்காக கவனித்துக் கொள்கிறானா? அவ னைக் கேட்டதாகவும் என் பிறந்த நாளுக்காக வழக்கம் போல் அவனுக்கொரு பரிசை, என் பொருட்டு வாங்கியும் தாருங்கள் உங்களுக்கான இஞ்ஜக்சன்களை தவறாது எடுத்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கிணற்றடிப் பக்கமிருக்கும் செவ்விள நீர் மரங்களிரண்டும் சியாமளா வைத்தது தானே அப்பா? இப்போது அது பூத்திருக் கிறது. என அறிகையில், மிகவும் சந்தோசமாயிருக்கிறது.
இங்கே நமது ஒப்பிரேசனை மேற்கொள்ளும் பல்வேறு நட வடிக்கைகளும் பூர்த்தியான நிலையில் உள்ளன. நான் வெகு விரைவில் ஒரு படைப்பிரிவோடு கூட வவுனியா செல்ல வேண் டிய அவசியம் உள்ளது. எனது அடுத்த மடலை அங்கிருந்தே எழுதுவேன். அதுவரை..
4வது
மறுபடியும் மறுபடியும் உயிர் கொடுத்துப் பார்த்தான் முடி யவில்லை. அவனது முகம் கறுத்துப்போயிற்று. நேரமானால் . அண்ணன் விரட்டுவான்; அம்மாவுக்கு பதில் சொல்லி மாளாது இரவுத் துாக்கத்திலும், நடுச் சாமத்திலும் அம்மா விடாது கேட்பாள்.
-எடியே கொப்பரிட்ட குணமும், கொண்ணர்ட குணமுந்
தெரியுந்தானே.அக்கா ஏதேனும் கேள்விப்பட்டா துடிச்சுப் போவாள்..ம் சொல்டீ.ஏதும் வித்தியாசமான
- அம்மா என்னைத் துாங்க விடனைமனசுக்குள் கிடந்து துடிக்கும் உணர்வுகள் என்ன கண்டறி யாத சமூகம்! என்ன சனங்களோ திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள்ள ஓடுதுகள்; தப்பித் தவறி எவராவது, அந்த வட்டத்த விட்டு ஒடி ப் போ ன ர , அவர திரத்திப் பிடிச்சி சாகாட்டிறது. இல்லாட்டி திரும்பவும் இதே வட்டத்துக்குள்ள கொண்டாரது. சும்மா ஒரு பேர் மனிசரெண்டு அவ்வளவுதான். அப்போதான், அந்தக் கார் ஹோர்ன் அடித்ததோடு கூட இவர்கள் ஜீப்புக்கருகில் வந்து நின்றது.
-ஹலோ டாக்டர்! எங்கிருந்து?-.
-குட் ஈவ்னிங் கப்டன்! யாரிந்தப் புது அந்தியாயம்.?-

-டொக்டர் இந்த ஜீப் தகராறு பண்ணுகிறது.-- டாக்டர் சிவராம் மெதுவாக முறுவலித்தார்.
-இருக்கலாம். ஆனால் வேறு தகராறுகள் அதிகமாகிவிடக் கூடாது-ஒன்றும் ஆகாது.ஒருசின்ன உதவி.?- -என்ன சொல்லுங்களி?- -இந்தப் பெண் ணை வீட்டில் சேர்ப்பித்து விட வேண்டும் சரியான நேரத்திற்கு.-- -அவ்வளவுதானா.வீட்டில் என்னை ஏதும் கேட்டால்..?-- --ஐயோ! டொக்டர் இது கூடத் தெரியாதா? போகிற வழியில்-சரி சரி! இந்த அத்தியாயத்தின் பேரென்ன..?- -மீனாட்சி! டொக்டரோடு போனால் பத்திரமாய் வீடு போய்ச் சேரலாம்.சந்தோஷந்தானே!- -நீங்கள்...?- -எக்கேடாவது கெட்டுப் போகிறேன்.- என்று இவள் கன்னங்களை நிமிண்டப் போனவன். டாக்டர் இருப்பது நினைவு வர வே, சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொஸ் டான். காருக்குள் ஏறிக் கொண்டதும், மீனாட்சி சொன்னாள்
-நீங்கள் கவனம்.-- -ஒரு இராணுவக்காரனைப் பார்த்து-கவனம்கூறும் முதல்ப் பெண். 1?-இவன் சிரித்தான். -தமிழ்ப் பெணகள் அப்படித்தான்- என்றார் டாக்டர். -எனக்குத் தெரியும் டொக்டர்: நான் அந்தத் தனித் தன்மையை அதிகம் நேசிக்கின்றேன்.அதனால். - -நாளைக்கு டிஸ்பென்சரிக்கு வருகிறீர்களா?- -கட்டாயம் .உங்களுடைய நேரம்.-- -மூன்று மணியளவில்...?- கார் தனது உடலை ஒரு தடவை குலுக்கிக் கொண்டது. கைகள் அசைத்து, கண்கள் ஏக்கங்களை பறிமாறிக் கொள்ள, பாதை நீண்டு கிடந்தது.
5வது
கப்டன் வசந்தன் தனது காலைப் பயிற்சிகளை முடித்து விட்டு, தன் கீழான படைப் பிரிவை பார்வையிட்டுக் கொண் டிருந்த போதுதான், அந்த உத்தரவு வந்தது.
-தலைவர் உங்களை அழைக்கிறார்.--

Page 9
-.நல்லது.- அவன் புறப்பட்டுச் சென்றான். அந்த புத்தம் புதிய காலைப் பொழுதிலே, அடர்ந்த அக் காட்டினுள் கள்ளத்தனமாய் புகுந்த ஒளிக் கற்றை ஒன்று, தலைவரின் உடலிலே கோடு போட்டது. 1ோலமிட டது. சற் றைக்கொருதரம் அவரை விட்டகன்று, கள்ளன் பொ லிஸ் விளையாட்டுக் காட்டியது.
- கப்டன்.வணக்கம்!-- -வணக்கம் தலைவரே ..-- --கப்டன்...?- -சொல்லுங்கள்.?- -இன்று காலை 30பது பிளட்டூன்களைக் கொண்ட படைப்பிரிவொன்று வவுனியா முகாம் நோக்கிச்செல்கிறது. - - தெரியும்.அவர்கள் இன்று ஆனையிறவில் தரித்து மீண் டும் நாளைக் காலை புறப்படுகிறார்கள்.-- -ஓம்.அவர்கள் வவுனியா முகாமைச் சந்திக்கக்கூடாது.-- - அவ்வளவுதானே.ஒரு சந்தேகம்.-என்று இவன் நிறுத்த தலைவர் கேள்விக் குறியே டு நோக்கினார்.
-அவர்களை ஏன் ஆன ண யிறவைக் கடக்க விட வேண்டும்தலைவர் அமுக்கமாகச் சிரித்தார்.
-நமக்கு வன்னி முகாமில் ஏற்பட்ட தாக்குதலை மறந் திருக்க மாட்டாய்.- -ஓமோம், பாரிய இழப்பு மறக்கிற சம்பவமா அது-அந்தத் தாக்குதலை, கச்சிதமாகத் திட்டமிட்டு. அதிலே மூர்க்கமாகவும் தீர்க்கமாகவும் போரிட்டானே, ஒரு இளம் லெப்டினென்ட்.ஞாபகமா..?- -ஓமோம் தற்போது அவனைப் பற்றிய விபரங்கள் நம் கைவசம் உள்ளன. பெபர் ரஞ்சன். வ பது 30 தாயில்லை, உடன் பிறப்புகளும் இல்லை. தகப்பன் மட்டும் இருக்கிறார். நல்ல சொத்துள்ள உயர் குடும்பமொன்றின தவப்புதல்வன் -என்ற வசந்தன மெதுவாக புன்னகைத்தான். -அவன்தான இந்தப் படைப் பிரிவை வழி நடத்தி செல் கிறான்.- இரண்டு கப்களில் டீ வத்தது.
-புரிகிறது, நமது இலக்குகளில் ஒன்று.-- -அதுமட்டுமல்ல, வடமராட்சிக்குள் இதை நடத்தினால் அரசு உசாராகி விடும். புது ஒப்ரேஷனுக்கு அவர்கள் தயா ராகிக் கொண்டிருக்கும் நேரம்.--

9
-ஓம் இம்முறை வெளிநாட்டு மூளை வளங்கள் சில இதற்கு உறுதுணை என்பதும் கேள்வி நேற்றுக் கூட கோட்டையின் முகப்பு வீதியில் ஸ்கிரின் செய்யப்பட்ட வண்டி ஒன்று சென்
றது - தலைவர் டீயில் ஒரு மிடறு உறிஞ்சினார். -படைப் பிரிவு புறப்பட்டதும் ஹெலிகள் கண்காணிக் கலாம் ஆகவே, தாக்குதலை மிகக் கவனமாக திட்டமிட வேண்டும். -
என்று சற்று நிறுத்தியவர். தொடர்ந்தார்.
-காலை ஆறுமணிக்குத்தான் வவுனியா வழிப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதனால், பொது மக்கள் நுழையாத இடைவேளை உனக்கிருக்கு.-- - அது போதும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அனைத்தும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்"- -இருந்தாலும், மனித மனப்பாங்குகள் சில சமயங்களில் விசித்திரமாக இருக்கும்.?- -நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள். ?-
அவர் அவனைச் சில கணங்கள் ஊடுருவினார். தொடர்ந்தார்.
-உன் வாழ்க்கைச் சிக்கலொன்றை தெளிவுபடுத்தும் நேரம்
எங்கோ தொலைவில் நரியொன்றின் ஊளைச் சத்தம் கேட்டது. தனித்திருந்த பறவையொன்று, சடசடவென்று சிறகு களை அடித்த வண்ணம் வெகு தொலைவுக்குப் பறந்து சென்றது.
6வது
இவன் வீட்டுக்கு வந்திருந்தான். ஆயாசமாக ஆடைக
ளைக் களைந்துவிட்டு சாரம் கட்டிக் கொண்டான். அம்மா தேநீர் கொண்டு வந்திருந்தாள்.
- தேநீர் அருந்தி. இளைப்பாறிவிட்டு, அப்புறம் குளிக்கலாம். - - நல்லது. ஏனம்மா என்னை உடனடியாக வரச்
சொன்னது.? - - எல்லாம் காரணமாகத்தான்.? - காரணம் என்ன? --
- காலாகாலத்தில் நடக்க வேண்டியவைகள் நடக்க வேண்டும் . ? پے

Page 10
10
அம்மா ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஒட்டினாள். முற்றத்து "ஜம்புவில் அணில்கள் இரண்டு ஒன்றையொன்று மேலும் கீழுமாக - மாறி மாறி விரட்டிக் கொண்டிருந்தன. அவ்வற்றின் கீச்கீச்சென்ற சப்தம் இவனையும் கவர்ந்தது.
- அம்மே. -
- கி பண்ட புதே. H -بس
- அம்மே மட சமாவென்ட ஒன. -
அணில்களில் ஒன்று தொப்பென்று கீழே விழுந்தது. பெரிதாக கீச்சிட்டது.
O
- அப்பச்சி .? - - ஒவா ஹான்ட மங் கமதி நா! - அவர் முள்ளுக் குத்தாமல் மாதுளங்கனிகளை வெகுகவ னமாக ஆய்வதில் கவனம் செலுத்தினார்.
- எல்லாம் உங்கள் இஷ்டப்படிதான் நடக்கும் என்கிறீர்களா..? அதையுந்தான் பார்த்துவிடுவோமே! ... - - இதுவெல்லாம் வீண் பேச்சு ஆராய்ச்சி மாத்தய்யா வும் உன் மாமாவும் நாளைக்கு வருகிறார்கள். அவர்க ளுடன் பேசி முடிவெடுக்கலாம். - - எவர் வந்தாலும் நடக்கப்போவது ஒன்றுதான். - விறுக்காக பதிலிறுத்திவிட்டு விரையும் மசனுக்காய் சிரம் நிமிர்த்தியதில் நெற்றிபபொட்டை மாதுளை முள்ளொன்று பதம் பார்த்தது.
- ஸ் - என்று நெற்றியிலே கை வைத்து அழுந்தத் துடைத்தார். லேசான இரத்தக்கசிவு.
- ஆமினே - அங்கிருந்தே அவர் குரல் வைத்தாரி.
7வது
- இதோபார் எமது uprubu6oprá Gasm“, ஐாதிக்கோ ஒத்துவராத, இழுக்கான தொழிலைத் தேர்ந்தெடுத்து எப்படியோ இன்று நல்ல முறையில் மிளிர்கின்றாய். ஆனால் அது வேறு விசயம் இது அப்படியல்ல உனக்கு வயதும் ஆகிவிட்டது. . - என்று சற்று நிறுத்திய ஆராய்ச்சி மாத்தய்யா பித்தளைப் படிக்கப் பக்கமாய் குனிந்து அப்புறம் தாம்பூழ உதடுகளை தோள் துண்டால் துடைத்துக் கொண்டார்.

11
- இதனால் அன்று விட்டுப் போன உறவுகள் அநேகம் இன்று உன் தங்கைக்கு ஏதாவது பேசப்போனாலும், பிரச்சனை வருகிறது. - இவன் ஒன்றும் பேசவில்லை. வெகு அமைதியாக நின்றான். வ ன் எத்துனை நிர்மலமாயி ருக்கிறது என்று சணக்குப் பண்ணினான். சற்றுத் தள்ளி, முற்றத்தில் தனது ரோஜாச் செடிகளின் தேவையை அவதா னித்து. அவ்வற்றை சரிப்படுத்திக் கொண்டிருக்கும் தங்கை நந்தாவையும் இவன் கவனித்தான்.
- இந்தமுறை .உனக்கு எதுவும் கொண்டு வரவில்லை- பரவாயில்லை .ஆனால்..?
- அண்ணன். ?
- ஆனால் என்ன ? - நந்தா மண்ணிலே கோடு கிழித்தான். இவனுக்கு அப்பால் சற்றுத் தாழ்வாக எங்கோ பராக்குப் பார்த்தாள். - நந்தா!. என்ன வேண்டும்...? - - உங்களுக்கு முடியும் . ? - - அட! இன்னும் என்ன இழுத் தடிப்பு? சொல்லம்மா - இவன் கண்களைச் சிமிட்டினான். - போ.அண்ணா!. - என்ற சினுங்சளில் அவள் முகத்திலும் மாதுளம் பூக்கள் பூத்தன. தானொரு இறுதிவருட பழ்கலைக்லழக மாணவி என்பதையும் மறந்து சிட்டாகப் பறந்து செல்லும் அவளை, இவன விழி வெட்டாமல் பார்த்தான். அந்த வெட்டாத விழிகளில் தங்கையின் மீதான பாசம் துளிர்த்து நின்றது. O
- இனிமேலும் இப்படியான விவகாரங்கள் நடக்கக் கூடாது.அது நமது கெளரவம், பெருமை. ஊரில் உன் அப்பாவுக்குள்ள பேர், அனைத்தும் கெட்டுவிடும் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம் நீ அல்ல. தனி மனிதனின் ஆசைகளுக்காக ஒரு முழுக் குடும்பத்தின் நலனையும் பாதிக்க விரும்புகிறாயா..? - - அதுவும் அவர்கள் யார்? . பறத் தமிழர்கள் - என்றார் கூட இருந்த கோரள மாத்தய்யா,
- காட்டத கிவ்வே "பற தெமலா" கியலா..? - என்று ஒரடி ஆவேசமாகப் பாய்ந்தவ0 ன, மாமாவின் கரம் தடுத்து நிறுத்தியது. புட்டுவத்தினின்றும் ஆாாய்ச்சி மாத்தய்பா சட்டென எழுந்து நின்றார். அப்பச்சி பாய்ந்து அவன் தோள்க ளை இறுகப்பற்றினார்.

Page 11
12
இந்த அசம்பாவிதத்தினால் திடுக்குற்று - முள்ளொன்றின் தையலில், விரலிலிருந்து இரத்தம் கசிவதையும் - வேதனை யையும் கூட சட்டை செய்யாது அதிர்ந்து நின்றாள் நந்தா. அடுக்களையில் அலுவலாக இருந்த அம்மா, இவ்வரவத்தினால் விரைந்து முகப்புக்கு வந்தாள். இவன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டாண்.
-மட சமாவென்ட! - என்று கைகளை குவித்துக் கொண் டான். அவரவர் பழைய நிலைக்குத் திரும்ப,-
- புதா மே கன கனகாட்டு வென்ட எபா ! - என மிருதுவாக புன்னகைத்தார் கோரள மாத்தய்யா. வெளியே தரித்து நிற்கும் கோச் வண்டியின் காளையின் தலை அசைவி ல் நேரும் சலங்கை ஒலி இங்கு வரை கேட்கிறது. விரலை வாயில் வைத்து, சிவப்பாய் நந்தா துப்புவதைக் கண்டு அம்மா முற்றத்தில் தரையிறங்கினாள்.
- இது உண்மையில் நான் வெட்கப்படும்படியான நிகழ்ச்சிதான். - - ஆனால் உனக்கென்று ஏதும் அபிப்பிராயங்கள் இருந் தால் சொல் மகனே! - @应 - ஒரு சின்ன விடயந்தான். தமிழர்களை மட்டும் நாம் பறத் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. "பற? என்பதற்கு நமது தேசப்பிதாவான அநகாரிக தர்மபால அக் காலத்திலேயே வெள்ளையணுக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார். (பற - வெளியாள், வெளியிலிருந்து வந்தவன், வெளி நாட்டான். ) ஆம்! அவர்கள் மட்டு மல்ல நாமுந்தான பறச் சிங்களவர்கள். எந்தச் இங்ள வனும் மறுக்க முடியாது. இதுதான் சத்திய வரலாறு - அவனுக்கு தொண்டை லேசாக அடைத்தது. கண்கள் கலங் கிற்று. கலங்கிய விழிகளில் தங்கை மங்கலாகத் தெரிகிறாள். அபபுறம் மீனாட்சி
- கொஞ்சம் பார்த்துச் செய்யக் கூடாதா ? கண்ணிர் கூட வந்துவிட்டது அம்மா ஆதரவாக விரலை நீவிவிட்டாள். ஆனால், நந்தாவின் கலக்கம்..?
8வது
காலை பரேட் கவனிக்க வந்திருந்த மேஜர் ரணதுங்க அன்றைய கடமை லிஸ்டிலிருந்து இவனுடைய பெயரை நீககிக் Gasm76ño7untriřo. "

13
- செனவிரத்ன. -- - யெஸ் சேர்! - - நீ. ஒபீஸ் போய்க் காத்திரு. -- இறுக்கமான சலூட் விழப்பண்ணி, மறுபுறம் திரும்பி அலுவலகம் நோக்கினான். O
மேஜர் ஒரு சில கணங்கள் இவனை ஊடுருவினார். பின், மே ஐயை ரவுண்டப் பண்ணி இவன் பக்கமாக வந்தார். - செனவி நீ இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறாய் - இவன் எதுவும் பேசவில்லை. அவர் தமது வலுவான கரத்தை இவன் தோளில் மிருதுவாக வைத்தார்.
- இதோ பார் பையா !. ராணுவ வாழ்ச்சையிலே முடிந் தளவு ஜொலியாக இருச்கக் கற்றுக் கொள். காதல் கட%A ம என்றெல்லாம் கணக்குப் பண்ணாதே! . . நீ இனிமேலும் முட்டாளாக இருக்கக் கூடாது என்பது என் விருப்பம். - அவர் விரைந்து மே ஜக்கருகே வந்து, இவனுக் (ான "கட்டளையை எடுத்து நீடடினார். பவ்யமாக அதனைப் பெற்றான்.
- சென்று வா!. தொடர்ந்து வரும் நாட்கள் சந்தோச மாக இருக்கட்டும். - மீண்டும் சலூட்! காதலுக்கு, கடமைக்கு, இனிமேல் வரும் க.ை னிருக்கும். .க. ந்து போன வாழ்க்கைககும் கூட, ஒரு சலூட் 11.
9வது
யாழ் தேவி புறப்படத் தயாராக இருந்தது. ஒரு "மனிங்" மார்க்கட்டைப் போல வெகு சுறுசுறுப்பாக காட்சி தரும் ய ழ்ப் பண புகையிரத நிலையம், மனசுக்கு உற்சாகமளிப்பத! யிருக் கிறது. ஆனால் இவனுக்கு, vn
கம்பாட்மெண்டின் கதவுப் பக்கமான 'கொரிடோரின் மெல் லிய இருட்டில் இவன். அருகில் திலக்,
- செனவி அழுகிறாயா...? -
- இல்லையே..! -
- இதோ பார்! கடந்தகால வாழ்க்கையை மறந்து விடு!
துக்கப்படுவதை நிறுத்தி விடு. --
- திலக்!. எனக்கு துக்கமுமில்லை, சந்தோசமுமில்லை. --

Page 12
14
- அப்படியானால். ஏன் ஒன்றுமே பேசாமல் இருக்க
வேண்டும் .? - இவன் மெதுவாகச் சிரித்தான். மெல்லிய -வெகு சன்னமான அவ்வோசை குடா நாட்டின் குளிரில் கரைந்து மறைகிறது.
- எனது சந்தோசங்களையும் சிரிப்பையும் எனது பெற்றோ
ருக்கும். - என்று சற்று நிறுத்தி தொடர்ந்தான். - . எனது துக்கங்களையும் கண்ணிரையும் மீனாட்சிக்கு மாக விற்றுவிட்டேன். - அப்போதான் கண்டான்;
அவர்கள் கம்பாட்மெண்டை கடந்து நகரும் அவ்வுருவத்தை. அவன் சட்டெனக் கீழிறங்கினான்.
- . டொக்டர். - - .யெஸ். கப்டன் செனவி. - - ஆமாம்.டொக்டர்!..தாங்கள்...? -- - எனது மைதுனரை வழியனுப்ப வந்தேன். ஒரு விச யம் தெரியுமோ..? நேற்று, மீனாட்சி டிஸ்பென்சரிக்கு வந்திருந்தாள். -- இவன் கம்பாட்மெண்ட் பக்கம்
திரும்பிப் பார்த்தான். திலக் அங்கேயே நின்று இவர்களைப் பார்த்தவாறிருந்தான். டாக்டரை நெருங்கி வந்தான்.
-- கொஞ்சம் அசதியாக இருக்கிறது. ஒரு பொடி டெஸ்ட்
செய்யுங்களேன் என்றாள். கப்டன் நீங்கள் ஒரு குழந்
தைக்கு தந்தையாகியிருக்கிறீர்கள்...! - யாழ்தேவி விசில் வைத்தது. இவன் விதிர்த்து நின்றான்.
-- டொக்டர். -- என ஏதோ பேச வாயெடுத்தான்.
அதற்கிடையில் டாக்டரின் மனைவி வந்து சேர, டாக்டர் சிவராம் இவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
-- மீண்டும்.சந்திப்போம். - யாழ்தேவி தனது சக்க ரங்களை உருளவிட்டது. சிலையாக நின்ற இவனை திலக்தான் கூவியழைத்தான். சுய நினைவுக்குக் கொண்டு வந்தான்.
10வது
அம்மா என்ன செய்வாள்? இந்த வாழ்க்கை பிடித்துப் போய்விட்டதோ. ? அவள் இந்த களனி வாழ்க்கைக்குப் பழகி வெகு காலம. இந்தக் களனிக குடியிருப்பில் மீனாட்சி அம் மாள் இலலாமல் நல்லது கெட்டது எதுவுமே நடக்காது. யாரும் அவளைக் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அந்தச் சேவை மனப்பான்மையும், சலித்துப்போகாத, சுறுசுறுப் சுபாவமும யாருக்கு வரும் என்பதாக பேசிக் கொள் 6V siffé86T.

15
புழுதியை அலைந்தபடி, வசந்தன் ஓடி ஓடி விளையாடுவான். Syub LDT, போகுமிடமெல்லாம் ஒடுவான். களனியின் ஏனைய பிள்ளைகள் இவனைக் கேலி செய்யும்.
-- ஹய்யா. அங்க பார்.அம்மா புள்ள.. அம்மா புள்ள -- -- ஏண்டா. அவன் அப்பா புள்ள இல்லயா. w -- அவனுக்கு அப்பா இல்லடா ? -- -- டேய் வசந்தன். ! இஞ்ச வாடா. உன்ர அப்பா எங்க ? - - ..எனக்குத் தெரியா. அம்மாவக் கேளு ...? -- - நீ போய்க் கேளுடா.
அம்மா வசந்தனுக்கு ്, ஊட்டினாள் -அம்மாண எனக்கு சோறு வேணாம்-ஏண்டா.பிள்ளக்கி என்ன வேணுமாம்? ம் அச்சாப் பிள் ளயாம் சொல்லுடா..?- -. எனக்கு அப்பா வேணும்.-- -அப் பா - அப்புறம் அந்தக் கேள்வி ரொம்பத்துாரம் நீண்டுபோனது. அடேயப்பா எப்படிப் போய்ச் சேர்வது ?
நிறைய நிலவுகள் வந்து போனது. ஒவ்வொன்றும் தேய்ந்து மறைந்தது; அப்புறம் வளர்ந்தது. இடையே அமாவாசை வந்து இருட்டு நின்றது.
நிலவுக்கால நினைவுகள் வந்து நெஞ்சிலே மோதும் அலை அலையாக எழுந்து தணியும். செனவி அடர்ந்த கூந்தலை லகு வாய் கோதிவிடுவான்.
-என்ன அழகான இருட்டு இது.1 -இருட்டிலும் அழகு வேறா..?!. -கறுப்பும் அழகான கலர்தான்.-- -நல்ல கண்டுபிடிப்பாளர். 1- f -நிலவு ஒரு மேகத்துள் ஒளித்துக் கொண்டு விட்டது மரங்களெல்லாம் வெறும் நிழல்களாயின. இருட்டிலோவென்றால் எல்லாம் ஒரே நிறம். பேதமேயில்லை!
-எனக்கு ஒரு மகன் பிறந்தா அவன ஒரு புரட்சியாளனா வளர்க்க வேண்டும். .
-துவக்கு துாக்கவா..?- -துப்பாக்கி துாக்கிறவனெல்லாம்.புரட்சிக்காரனல்ல.--

Page 13
16
-அப்ப நீங்கள்..?!- -நாங்களெல்லாம் கொலைக்காரர்கள்- என்று பெரிதாகச் சிரித்தான் செனவி.
-கேள் பெண் னே! மெய்யான ஒர் புரட்சியாளனின் ஆயு தம் துப்பாக்கியும் தோட்டாவுமல்ல. அவனுடைய மெய்யான தேடுதல் சத்தியமும் நீதியுந் தான்; ஆயுதம் மக்கள்தான்! மக்க ளுக்காகத் தான் புர சி! வேறு எதற்காகவும், யாருக்காகவும் அல்ல! புரட்சியின் ஒரே ஆயுதம் மக்கள் .--
- போதும். போதும். இதென்ன புரட்சிக்கு புது இலக் கணமா.- -ஆமாம். கண்ண்ே1-உங்கள் மகன் பிறந்து என்ன செய்ய வேண்டுமாம்.-- -மக்களை ஒன்றினைத்து, அவர்களைக் கொண்டு புரட்சி செய்து, இந்த இனப்போரையும், இன்னோரன்ன பேதங்களை யும் களைந்து புதியதோர் சமூகததை உருவாக்க வேண்டும், என்ன சொல்கிறாய்.--
-பிறகு, ஒரு நாள் வசந்தன் காணாமல் போனான்.
11வது
- அம்மா என் அப்பன் ஒரு சிங்கள வெறி ய னா மே .. மெய்பா ! - அம்மா ஒன்றும் பேசவில்லை. அரிசி களைவதில் கவனமாயிருந்தாள்.
-என்ன நான் கேக்கிறன் நீ ஒண்டும் பேசாம சும்மா இருந்தா எப்பிடி?.என்னனை சொல்லு! நான் சிங் கள سائنسe G368Trr .. P
-என்ன சுடப் போறியா - -ஒமோம்! உன்னையும் சுட்டு; நானும் சுட்டுக் கொண்டு சாகப்போறன்.-
அவனுடைய விழிகளுக்குள் அந்கக் குரோதம் கொப்பு ளித்துக் கொண்டிருந்கது. வெறி மின்னிக் கொண் டி ரு ந் த து. வேண்டாம் இந்த விளையாட்டு.
அம்மா மெதுவே எழுந்து நின்றாள். அவனருகே வந்து நின்றாள். களனிப் பாதையில் புழுதிகிளறிய வண்ணம் விரைந்து வரும், வாகனமொன்றின் இரைச்சல் கேட்டது. அதை விட

17
இரைச்சல் அவள் இதயத்துள் கேட்டது. இருவரும் ஒருவரை யொருவர், ஊடுருவிக் கொள்ளும் சில நிமிட இடைவெளிகள்எங்கோ வெகு துார இட்டுச் செல்கின்றன.
அவன் பழ்கலைக் கழகத்திலிருந்து திரும்பிய முதல் நாள்; அம்மா என்றும் போல், அவர்களின் போஷகரும், உறுதுனையு மான டாக்டர் சிவராமிடம் அவனை அழைத்துப் போயிருந்தாள்.
- வசந்தன் டாக்டரையா வர்றார். - அவன் சட்டெனக் குனிந்து அவர் கால்களைத் தொட்டான். அவர் சற்றே பதறிப் போனவராக சிறிது விலகிப், பின் அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்ட்ார்.
- இது ஒண்டும் பெரிதல்ல. உனக்காக உன் தாய் ஆற்றியுள்ள கடமைத ன் பெரிசு. - அவன் குறுக் கிட்டான்.
- ஒமோம் . நான் அப்பனில்லாப் பிள்ளைதானே..?- அவன் கண்களில் கலக்கம். டாக்டர் முறுவலித்தார். அம்மா மெளனித்தாள்.
-இல்லையப்பா . அது ஒரு பெருங் கதை. காலம் வரு ம்போது நீயே தெரிந்து கொள்வாய். ஆனா உன்ர. அம்மாவின் பணியை நீ மறுக்க மாட்டாயே..!- - இல்லை டொக்டர் .நிச்சயமாக இல்லை. -- என்றவாறே அம்மாவை நெருங்கி, வழியும் கண்ணிரை தனது சுட்டுவிரலால் வழிததெறிந்தான். மென்மையாக, அவள் வரண்ட கன்னத்தில் முத்தமிட்டான்.
- வசந்தன் உன்ர அம்மாவின்ட விருப்பம்.- -டொக்டர்.?- w -என்ன தயக்கம்..ம்.சொல்.- -ட்ொக்டர். நான் ஒரு போராளியாகத்தான் வர வேண் டும்!.-இவன் சிரந் தாழ்த்திக் கொண்டான். அவர் எதுவும் பேசவில்லை. அந்த மெளனத்தின் கனத்தை அம்மா தான் உடைத்தாள்.
-நீ.வளர்ந்தவன்! உன் வாழ்க்கையை தீர்மா னித் துக் -ொள்ளும் உரிமை உனக்குத்தான்- அம்மா நிதானித்தாள் -எனக்கு ஒரு மகன் பிறந்த7, ஒரு புரட்சிபாளனாகவே - -.அம்மா ! எனச் சட்டெனக் கூவி, அவள் அணைப்புக் குள் சரிந்தான். டாக்டரின் விழிப் பிரதேசங்களில் பனிபடர்ந்து திரையிட்டது. விதி எங்கே போகிறது.

Page 14
18
பிறசென்ன காணாமல் போன வசந்தன் ஒரு நாள் கண்டு பிடிக்கப்பட்டான்.
12வது தோல்வி ஒன்றும் கனதியானதல்ல. வாழ்க்கையே தோல்வி யின் விதி எனறால், அதைச் சகித்து இதுகாறும் வாழ்ந்த வாழ்க்கைதான் வெற்றியின் ரகசியமா..!
இருக்கலம். இல்லாமலும் போகலாம். எதுவாக இருந்தாலும் அது சம்மந்தப்பட்டவன் தான் அதன் மெய்யான வேதனையை யும், பாதிப்பையும் உணருகின்றான்.
தத்துவங்கள் இங்கே செயலற்றுப் போகின்றன. கண்ணிர் எல்லாம் ஒரே நிறந்தான். ஆனால் எல்லா விழிகளும் ஒரே வடிவமல்லவே!
சூரியன் மயங்கிக் கொண்டிருந்தான். .ொழுதும் சாய்கிறது சின்னய்யா தேநீர் கொண்டு வந்தான்.
- மாத்தய்யா. - சட்டென யோசனையினின்றும் விடுபட் டவராகி தன்னை நிதானித்துக் கெ.ண்டார். தேநீர் கைமாறி lUS.
-சியாமளா. ஆவத ..! -ஒவ் மாத்தப்பா - தேநீரை லேசாக உறிஞ்சிக்கொண்டார் செனவிரத்ன். -எங்கள் "ரஞ்சி புதாவிடமிருந்தும் கடிதம் சு ண க்க ம் தானே..?- -வவுனியாவுக்கு வந்துதானே எழுதுவான்- எ ன் ற வர் லேசான நெடுமூச்செறிந்தார். மீண்டும் தேநீருக்காய் முகங் கவிழ் கையில்
அந்த ரோஜாச் செடி பார்வையில் மீண் டும் பட்டது! அப் பாடா! எத்தனை வருடங்கள் எவர் கவனிப்புமின்றி வளர்ந்த காட்டுச் செடி போல், வெகுவாக அடர்ந்து, முதிர்ந்து, அந்த முதிர்ச்சியின் தன்மையை வெளிப்படுத்தும் செழிப்பின்மையோடு கூட. ஆனால் இன்னும் நான் வாழ்கிறேன் என்று துளிர்த்து நிற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமான பச்சிலைகள். இப் போவெல்லாம் இச்செடியில் மலர்கள் வெகு அபூர்வமாகவே பூக்கின்றன. இருந்தும், அவை அற்புதமாகவே இருக்கின்றன:

19
இந்தச் செடி பூக்காமலே இருந்தால் என்ன வென்று ஒரு காலத்தில் அவர் நினைத்தார். ஆயின், இயற்கையின் யின் தனித்தன்மையை மாற்ற மனிதன் எம்மாத்திரம் என்ற வினா அவருக்குள் எழுந்து கண்ணிரை மட்டும் அம்மலர்களுக்குச் சமர்ப்பணமாக்கிவிட்டு அமைதி கொண்டு விடும்.
மகே நங்கி.ரத்தரன் நங்கி, - அண்ணன் ?-- -இம்முறை உனக்கு எதுவும் கொண்டு வரவில்லை.
பரவாயில்லை.ஆனால்..? -ஆனால் என்ன ?- நந்தா! என் தங்கமான தங்கையே! உனக்கு என்ன வேண்டும்.
நேற்றுப் பூத்திருந்த மலரொன்று இன்று வாடிப் போய்க் கிடக்கிறது. இன்னும் அந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் சப்திக் கின்றன.
-செணி! நீங்கள் நினைக்கவேண்டாம், நாங்கள் வெறும் எலும்பையும் சதையையும் கூறுபோடுபவர்கள் என்று. இவைகள் மூடியிருக்கும் இதயத்துடிப்பும் நமக்கு மட்டும் சொந்தமான தல்ல. முழு மனித குலத்திற்கும்.? என்று இடையே நிறுத்தி மேசைமேலிருந்த தனது ஸ்டெதஸ் கோப்பை எடுத்துக் கொண் டார், டாக்டர் சேகர். w -.ஒவ்வொரு மனிதனிடமும், மனிதாபிமானம் எனும் ஸ்டெதஸ் கோப் இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் அன்பு எனும் பவித்திரத்தையும் தமிழன், சிங்களவன் என்று நிறப்படுத்தியே காட்டும்.?
-சேகரி!.--செனவியின் விழிகளில் நீரருவி! இதயப் பாச றையில் பேரொளி!
நந்தா!-நந்தா!!. மகே ரத்தரன் நங்கி!!! அவர் விறுட்டென்று எழுந்தார் நேராக நந்தாவின் அறை நோக்கிச் சென்றார்.
136 g5
வட மராட்சியின் ஒரு காலைப் பொழுது ஆணையிறவின் அந்தப் பரந்த வெளியைக் கடந்து ஒர் இராணுவ ப் பிரிவு நகர்ந்து கொண்டிருந்தது

Page 15
20
ஹெலி ஒன்றின் இரைச்சல் கேட்டு, ஜிப்புக்கு வெளியே தலை நீட்டி வானை அண்ணாந்தான், லெப்டினண்ட் ரஞ்சன். ஹெலிதான்.
வோக்கிடோக்கி இரைச்சலிட்டு பின்னர் தெளிவாயிற்று.
-குட்மோர்னிங் சேர்!.மம சார்ஜன்ட் சரத்.--
-குட்மோர்னிங் ..நமது நிலை என்ன?-
--இப்போதைக்கு!. நீங்கள் பாதுகாப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.--
-நல்லது!...எதற்கும் நமது பிளட்டூன்கள் உடனடித் தாக்
குதலுக்கு தயாராகவே இருக்கின்றன.--
-.மிக நல்லது
★
தலைவரிடமிருந்து செய்தி வந்தது. -எப்படித் திட்டமிட்டிருக்கிறாய்.- -இருநூறு யாருக்குள் வரையரை செய்துள்ளோம் எல் லைசகுள் வாகனங்கள் வந்ததும் குண் டுகள் வெடிக்கும்.- தலைவர் குறுக்கிட்டார். -ஏதேனும் ஒன்று தவறினால்..?- -அதைச் சமாளிக்கும் படியாகவே போராளிகள் நிறுத் தப்பட்டிருக்கிறார்கள். தகுந்த ஆயுதங்களும் கைவசம் உண்டு - -கவனம்! . வாழ்த்துக்கள் !!.-- செய்தி கட்டாகியது. கப்டன் வசந்தன் மரக்கிளையோடு கிளையாக ஒன்றிய வண்ணம் கண்ணுக் கெட்டிய தொலைவு வரை நோட்டம் விட்டான். சற்றைக் கொருதரம் அப்பிரதே சத்தின் நிசப்தத்தை சீர் குலைக்கும் பட்சிகளின் கீச் மூச் ஒலி வோ. டோ.யில் ரவியை அழைத்தான்.
-வவுனியா வாகனங்கள் இன்னும் அரமணித்தியாலத்தில வந்திடுந்தானே.-- -சவலயவிடு! வசந்தன். அது க் குள் ள எங்கட கேம் Փւգ-Ավմo...- -பொம்பிங், லைனெல்லாம் திரும்பவும் செக் பண்ணித் தானே இருக்கு.?- -நீ பார் ! ஒரு துண்டு கூட மிஞ்சாது அவ்வளவுக்கு . ஆ1.வசந்தன் இராணுவம் நுழையுது!- வோ. டோ, நிறுத் தப்பட்டது. முதல் விசில் கொடுபட்டது ஹெலியின் மெல்லிய இரைச்சல் இவர்களுக்கும் கேட்டது.

21
14வது
-லெப்டினண்ட்.-- -யெஸ்.-! -இந்தப் பாதை உங்களுக்குப் பழக்கமானது தானே? -பழக்கந்தான் ? -நீங்கள் இந்தப் காட்டுப் பகுதியை கடக்க இன்னும் 500யார் துாரந்தான் இருக்கிறது. கொஞ்சம் வேகப்படுங்கள். சிறு சந்தேகமானாலும் விட்டு வைக்க வேண்டாம். உடன் தெரிவியுங்கள்.-- லெப்டினண்ட் ரஞ்சன் பிரதேசத்தை வெகு உன்னிப்பாக கவனித்தான். முன்னால்-தொலைவுக்கும் தொலைவு. நீண்டிருக் கும் பாதையிலும் பார்வையை ஆழப்பதித்தான்.
அடர்ந்த மரச் செறிவினால் ஹெலியின் இரைச்சலைத்தவிர வடிவம் மறைந்து விட்டிருந்தது. தொடர்ந்து வந்து கொண்டி ருக்கும், டிரக் வண்டிகளினதும், கவச வாகனங்களினதும் கட கட சத்தத்தை தவிர பிரதேசம் நிசப்தம 1க இருந்தது அந்த மோச மான பாதையிலும் முடிந்தளவு வேகத்தில் வா கன (ா திகள் ஒன்றையொன்று தாவிப்பிடிக்கும் போக்கில் சென்றன.
லெப்டினண் டின் கழுகு விழிகளுக்கு சட்டென அந்த மாற் றம் தெரிந்தது. ரோட்டில் இடையிடையே சிதறிக் கிடக்கும் புதி பமண் ? அப்படியானால் சடுதியாக அதிவேக மின்ன ழுத்தமொன்று உள்ளில் பாய்ந்த சிலிர்ப்பு.
-ஹலோ-தொடர்பு ஐந்து விநாடிகளைப் பறித்தது. -ஸ்பீங்.என்றது. -இங்கே பாதை.- வோ. டோ. ஒருமுறை அதிர்ந்து ஒய்ந்தது. திரும்பிய விழிகளில் காட்சிகள் தீய்ந்தன. தீயும் தீப் பிழம்புகளும் மட்டுமே உண்களுக்கு காட்சியாகின. அந்தப் பகுதி பூராவையும் கரும்புகை ஆக்கிரமிப்புச் செய்யலாயிற்று-வண்டி ஒடட்டும்.-- ; உரத்துக் கூவினான் கோப்ரல் ஷெ ல் டன். வண்டி ஓடிக் கொண்டுதா னிருந்தது.
-கூடாது! நமதுவீரர்கள்.நாம்.போரிடவேண் டும். --
எகிறிக் குதிக்க முற்பட்டான் லெப்டினண்ட். கூட இருந்த சார்ஜண்ட் இவனை இறுகப்பற்றிக் கொண்டான்.
-இது முட்டாள்தனம்! வேண்டாம் .நாங்கள் மட்டுந்தான் uflis ib.-

Page 16
22
-இல்லை நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.-
ஜீப்புக்குள் ஏற்பட்ட அமர்க்களம் வண்டியை தெருவின் ஒரத்திற்கே இட்டுச் சென்றது. மறுகணம், வண்டி பாதைச் சரிவில் தடம் புரண்டது. வண்டியின் இரண்டாவது சுழற்சியிலே உள்ளிருந்து மின்னெலென வெளிப்பட்ட ரஞ்சன், புகைக்கா ரையும் ஊடறுத்தபடி முன்னேறினான்.
ரவி திடுக்கிட்டான். முதல் வண்டி தப்பி விட்டது. ஒரு சில விநாடித் தாமத்தில் நேர்ந்த தவறு இது.
வாகனாதிகள் வெடித்தெறிந்தன. ஆங்காங்கே கப்பிப்பாய்ந்த சில இராணுவ வீரர்களும் பாதையில் இரு மருங்கிலும் காத் திருந்த போராளிகளின் இலக்குகளுக்கு இரையாகினர்.
வசந்தன் மூச்சிறைக்க ஓடி வந்தான்.
-ரவி ஜீப்.?-
-தப்பிட்டடா..!-
-தப்பவிடக்கூடாது. தோழர்களை அழைத்து முன்னேறச்
சொல்.--
ரவி தடுத்தான்
-இணிமுடியாது! மேலே பார்.--
ஆம்! ஹெலிகளினதும் பொம்பர்களினதும் ஏகோபித்த பேரி ரைச்சல்.
-இல்லடா. ஜீப் கணதுாரம் போயிருக்காது. நான் கவனிக் கிறன். தோழர்களை திரு பச் சொல்.-
--வேண்டாம்! இதுவிசர் வீணாகச் சாகப் போகிறாய் -
-இல்லடா . அந்த லெப்டினண்ட் தப்பக் கூடாது. அப் பிடியே தப்பினாலும் என்னால தலைவருக்கு முகங் கொடுக்க ஏலாது . என்னை விடு நீங்கள் திரும்புங்கள்.--
பதிலுக்குக் காத்திராமல் கப்டன் வசந்தன் வேகமாக அவ்விடத்தைக் கடந்து மறைந்தான்.
15வது
...காதல் என்பது இன்று ஒரு ஃபஷனாக இருக்கலாம். ஆனால் ஓர் ஆனும் பெண் ணும் ஒருவரையொருவர் உள்ளார நேசிப்பது. காதலுக்கு அப்பாற்பட்டதென நான் நினைக்கிறேன்.
மனுக் குலத்தின் அன்பு, பாசம் போன்ற சங்சதிகளும் கூட நாகரீகமாகிவிட்ட இக் காலத்தில், மனித உள்ளங்களின் உண் மை உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் யார்.?

23
எவரையும் நொந்து கொள்ளவோ, குற்றம் சாட்டவோ மனதில்லை. இதுகாறும் உலகில் நிகழ்ந்த மனிதனுக்கு வெளியி லான 'புறப் புரட்சிகள் சாதித்ததும் எதுவுமில்லை! மனிதனுக் குள்ளே "அகப் புரட்சியை" தோற்றுவிக்க வேண்டும். அப்போ தான் நம் பிரச்சனைகளுக்கும் விடிவுண்டு!
நீதியான உள்ளங்களும், அன்பான இதயங்களும் வாழும் வரை, அண்ணா! மனிதாபிமானம் சாகாது என்பது எமக்கு நினைவிலிருக்க வேண்டும். Ο Ο
இப்போது மடலின் எழுத்துக்கள் துளிதுளியாக மறைகின் றன. கண்ணிர் கணக்கிறது. அவ்வெழுத்துக்கள் ரொம்பப் பழ சாகி, காகிதம் இற்றுப்போன நிலையிலிருக்கிறது. எத்தனை வருடங்கள்! தினமும் அறையைச் சுத்தம் செய்கின்றபோது, கடிதமும் நந்தா வைத்துச் சென்றபடியே மீளவும் வைக்கப்படு கிறது.
ஒரு காலைப் பொழுதில், இன்னமும் விழித்தெழாத நந் தாவுக்காய் ஆமினே சத்தம் வைத்தாள்.
- நந்தா இன்னுமா துாக்கம்..? எழும்பு -
கைகளும் அவளைத் தொட்டுசுப்பின. ஆமினே துணுக்குற் றாள்! அந்தச் சில்லிப்பு அவளுள்ளும் பாய்ந்து, அவளையும் விறைக்கச் செய்தது.
- அனே தெய்யனே!.--
ஆமினே எத்தனை நாட்களுக்குத்தான் இந்த ரோஜாச் செடியை பார்த்துப் பார்த்து கண்ணிர் உகுப்பாள். ஆமு மாத்தய்யா எவ்வளவு காலந்தான் அந்த சாய்வு நாற்காலியில் விழுந்து கிடப்பார். ஒளியிழந்த "வளவ்வ". இருள்தான். இருள் கவ்வும் ஒரு மாலைப் பொலுது--
- புதே ...? --
செனவி அருகே வந்தான்.
- மட சமாவெண்ட புதே. --
- தாத்தே!!. --
இவனது கரங்களை இறுகப் பற்றினார். விழிகளின் சூடான துளிகள் உள்ளச் சூட்டை வெளியிட்டன்.
- ஒவ் புதே!. மட சம வெண்ட -
ஆனால், இந்த ஞானம் இனி யாருக்கு உதவும். "ரஞ்சி புதா’ எங்கிருந்தோ ஒடி வந்து காலுக்கிடையில் புகுந்த வண் ணம் சிய்யாவை" உற்றுப் பார்த்தான். இவனது கரம் பற்றி யிருந்த உருவம், சட்டென விடுபட்டு, ஒருக்களித்துச் சரிந்தது.

Page 17
24
- தாத்தே. ! -- ஆமினே அத்தகைய ஒரு சம்பவத்தை புரிந்து கொள்ளும் உணர்வு கூட இல்லாமலிருந்தாள். கொஞ் சக் காலந்தான் - போய்ச் சேர்ந்தாள்.
போன வருடம் லண்டனிலிருந்து வந்திருந்த சேகர் இங் கேயும் வந்துவிட்டுத்தான் போனார். இருவரும் நீண்ட நாளைக்குப் பின் தோட்டப்பக்கமாக காலா ற நடந்தார்கள். - உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா. செனவி..? -
- மெய்தான். ! -- - ஆனால் மனிதர்கள்தான் அசிங்கமாக வாழ்கிறார்கள் - செனவி நின்றார்; சேகரும் நின்றார். சேகரின் சேசச் செறிவில் வெள்ளைச் சித்திரங்கள். குயிலின் இனிய குரலோ சையொன்று இவர்களை தழுவிச் செல்கிறது.
- சேகர்! . ஏனிந்த தனித்த வாழ்க்கை.? - - இல்லையே! மக்கள் சமூகத்தில்தானே வாழ்கிறேன். - - நான் குறிப்பிடுவது துணையில்லாத வாழ்க்கை.? - - துணை. ம். சிலருடைய இதயங்கள் பாறையைப் போல. செதுக்கப்பட்ட சித்திரங்கள் காலம் பூராவும் வாழ்கின்றன. - அன்று இரவு படுக்கையில் சாய்கின்றபோது, அக்கேள்வி அவருள்ளே துளிர்த்தது. நந்தாவினதும் சேகரினதும் மனத்து ணிவும், துாய்மைச் செறிவும் என்னிடம் இருக்கவில்லையா..? கோழையோ .1 மீனாட்சி..?
16 Shugs
" அப்பா டாக்டர் சிவராம் என்ன சொல்கிறார். தெரியு
மா. இதுவெல்லாம் வாழ்க்கையின் விதி என்கிறார். இல்லை
அப்பா ! இல்லை! . இவையெல்லாம் மனித தவறுகளின் கொடு மையான நிகழ்வுகள்.
உண்மைகளைச் சந்திக்கின்றபோது எம்மட்டு பயங்கரமாக இருக்கினறது. நீங்கள் எழுதச் சுணங்கிய கதையை மேஜர் சிறிவர்தனா கூறியபோது, நான் திடுக்கிட்டேன். ஆனாலும் என்ன நடந்து போனவற்றுக்காக வருத்தப்படுவதை விட, நடப் புகளைப்பற்றிச் சிந்தித்து நடக்க வேண்டிய நிகழ்வுகளுக்குள்

25
புகுவது நல்லதல்லவா.
இம்முறை என்னால் கொல்லப்பட்ட கப்டன்’ வசந்தனின் சடலத்தை அவளிடம் ஒப்படைத்தோம். இது நமது யுத்த விதி களுக்கு முரணானது. ஆனாலும், மனிதாபிமான வேண்டுதலுக்கு செவிசாய்த்தோம்.
அப்பா! அந்த "அவள் யாரென்று நினைக்கின்றீர்கள் ? உங் கள் மீனாட்சி! முன்னர் நான் குறிப்பிட்டபடி வவுனியா முகாமுக்குத் திரும்பு கையில், நேர்ந்த த7 க்குதலில், கொல்லப் பட்ட வசந்தன் யாரென்று புரிந்திருக்குமே.
ஆம்! எனது சகோதரனை நானே கொன்றேன்.
அப்பா எவ்வளவு பொய்யான உலகம்! எவ்வளவு அழகாக நாங்கள் வேஷமிட்டு வாழ்கிறோம்? இனம், சாதி, மதம், நிறம் என நமக்குள் நாம் பேதப்பட்டு நிற்பது ஏன் தெரியுமா? எல்லாமே நமது சுய லாபங்களுக்காகத்தான். w
அப்பா! தாங்கள் கடத்து வந்த பாதையிலே நீங்கள் ஒரு கோழை துரோகி! இன்பத் தேவைகளின்போது மட்டும் பேதங் களை மறப்பதும், பின்பு தமது இயலாமைகளுக்கு வடிவம் கொடுப்பதும் என்ன நியாயம் ? s
இதுகாறுமான எனது வாழ்வின் சகல அம்சங்களும் இந்த இடத்தில் முற்றுப் புள்ளியைப் பெறுகின்றன. சியாமளாவின் "புதிய வாழ்வுக்கு" என்றும் எனது வாழ்த்துக்கள்! ஆனால், நான் நீங்களல்ல! காத்திருப்புகள் வெற்றுக் கனவுகளாகக் கூடாது. வீணாக நாம் ஒருவருக்கொருவர் வேஷமிட்டுக் கொள் ளக் கூடாது. உண்மைகள் எதுவோ, அவ்வற்றை சந்திக்கும் திராணி நமக்குள்ளே உருவாக வேண்டும்.
சின்னப்யாவுக்கு எனது புதிய போரைக் குறித்து விரிவாகக் கூறுங்கள். இத்தகைய மாற்றம் குறித்து அவன் மிகவும் சந்தோ ஷப்படுவான். தங்களுடைய வார்த்தைகளிலே கூறப்போனால், இந்தப் போரின் சந்தடியினின்றெல்லாம் விலகி, தனக்குள்
சாந்தியையும், சந்தோஷத்தையும் உண்டுபண்ணிக் கொண்டு,
தன்னாலான சிறு சேவைகளை மக்களுக்குச் செய்து கொண்டு இந்த மிலேச்சத்தனமான அழிவுகளுக் கூடாக, மனிதனின்
புதிய கட்டுமானத்திற்கு வழி தேடும் போர் முறை இது. உண்
மையிலேயே "இந்தப் போர் ஆயுதப் போரை விடக் காத்திர
மானதுதான் அப்பா !

Page 18
26
அப்பா! மெய்யாகவே இன்றைய நமது பெரும் தேவை மனிதாபிமானம் மட்டுமல்ல; உண்மைகளுக்கு முகங் கொடுக் கும் உளப் பாங்கு கொண்டவர்களாகவும் மக்கள் மாறவேண்டும். கோழைகளாக வாழும் வரை மானிடக் கொடுமைகள் தொட ரவே செய்யும்.
இப்போது எனக்கு வெடிச் சத்தங்கள் கேட்கவில்லை; மனி தாபிமானத்தின் பேரிகை முழக்கமே கேட்கிறது. கெ 7  ைல ஆயுதங்களுக்கு மத்தியிலல்ல, மனித நெஞ்சங்களின் மத்யிலே நிற்பதாகவே உணர்கிறேன்.
உலகின் போர்ப் பேரிகையின் சப்திப்புக்கப்பால் எமது மனிதாபிமான எக்காளத்தின் தொனி கேட்காமல் போகலாம். ஆனால், இயற்கையும் வரலாறும் இந்தத் தொணியை நிராக ரிக்காது! ஏனென்றால் இது மனுக்குலத்தின் மெய்யான தேடல் சத்தியமான பிரார்த்தனை. அப்பா ! தங்களுடைய வார்த்தை கள் பொன் முலாம் பூசப்பட்டவைகளாக அல்ல. வைர வைடூரி யங்களாக ஜொலிக்கும்.
நீண்டு கிடக்கும் எனது பாதையில் என்னால் உடைத்தெ றியப்பட்ட, துப்பாக்கியையும், கிழித்தெறியப்பட்ட இராணுவ ஆடைகளையும் திரும்பிப்பார்க்க விரும்பவில்லை. மீனாட்சி எனும் தாயுள்ளத்தின் இழப்பை ஈடுசெய்யவும், புதிய போருக் காகவும் நான் தயார்! நமது புதிய முகவரி கூட தெரிவிக்க ம ைமில்லை. மனிதன் மனிதனைத் தேடவும் புரிந்து கொள்ள வும் முகவரிகள் தொலைந்து போகட்டும்! நான் வருகிறேன்.

* உரித்தைக் கேட்டு நில்! * உயிரைக் கொடுத்து நீல்
தமிழன்
* சஞ்சிகை வடிவம, * சகாப்த முழக்கம்!
எம். எம். வெளியீட்டகம்.

Page 19
அடுத்த வெளியீடு. . .
S9 La THE RATIII 3.
by A. A. JEYARAJA.
* எதிர்க் கூண்டிலே நிற்பவர் உங்கள் மகன்தானே.. , ? ”
* இல்லை! இல்லவே இல்லை! . . இத்தே சத்தின் மனிதாபிமானக் கொடுமைகளுக்கெதி ராகவும், ஜனாதிக்கத்தின் தனித்துவத்திற்காக வும் போரிட்ட ஒவ்வேiர் "பயங்கரவாதியும்’ எனக்கு மகன்தான். அந்த வகையிலே . . இவன் மட்டும் எப்படி எனக்கு மகனாவான் - . .? '
-அப்பா ! இந்நாட்டின் அதி உயர்ந்த சிகரங்க ளுக்கப்பால் தங்களது சிரந்தான் தெரிகிறது. இந்த நீளநதிக் கரையோரங்களிலே ஈெழித்துக் கிடப்பது தங்கள் இதயத்தின் பசுமைதான். . . .
எம். எம். பப்ளிகேஷன் வெளியீடு.


Page 20
விரைவில்,
எம். எம். பப்ளி
9 fa) ჭნჭ5
The phi
HUI

கேஷன் வழங்கும்,
அ ஜெயராஜாவின்
losophy of nan rights,