கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எங்கள் மலையகம் 1997.05-07

Page 1
All Oil II Allili II,
عup
மலையகம்
இது ஒரு மக்கள் கலை இலக்கிய ܠ .
 
 
 

பேரவைகள்:ளவெளியீடு

Page 2
  

Page 3
GÈ NGOGUDå
மலையக மக்களது வாழ்வின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் எனும் நோக்கிலேயே நாம் எமது “எங்கள் மலையகத்தை” வெளியிடுகின்றோம்.
எந்த ஒரு அரசியல் தொழிற்சங்கத்தின் பக்கம்சார்ந்தும், எந்த ஒரு அரசியல் தொழிற்சங்கத்திற்கும் மத்தாளமிடும் இதழாக எமது “எங்கள் மலையகம்" அமையாது என்பதையும் உறுதியாக நாம் மக்களுக்கு வெளிப்படுத்துகின்றோம்.
எந்த ஒரு தனி மனிதனையோ, அமைப்பையோ இழிவு படுத்தும் வகையிலும் மாசுபடுத்தும் புண்படுத்தும் வகையிலும் எமது சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்பி எம்மை சங்கடத்திற்குள் வீழ்த்த வேண்டாம் என எமது அன்பு படைப்பாளிகளை நாம் வினயமாக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆக்கங்கள், விமர்சனங்களை பக்கச்சார்பின்றி நடுநிலை நின்று நாம் பிரசுரிப்போம் என படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் உறுதி கூறுகின்றோம்.
மலையக மக்கள் வளர்ச்சிக்கு உதவுவதற்காகவும் புதுப்புது கலைஞர்களின் உருவாக்கத்திற்கு தளம் அமைக்கும் நோக்குடனும் இயங்கும் நாம் எவரது வீழ்ச்சிக்குக் காரணியாக அமையமாட்டோம் என எம்மக்களுக்கு உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.
(ஆசிரியர்குழு)
போற்றுவார் போற்றட்டும்-புமுத வIரித் துாற்றுவார்துாற்றட்டும் ஏற்றதொரு கருத்தென்றால் எடுத்துரைப்போம் எமன் வானும் நீலிலோம், அஞ்சோம்.
-பாரதிதாசன்
O2 எங்கள் மலையகம்

கலைஞர் அறிமுகம் - 1
மக்கள் கலைஞன் முத்து சம்பந்தர்
தற்போது 47 வருடங்களினால் தனது வயதை உயர்த்திக் கொண்டு சமூக சேவை செய்து வாழ்ந்துவரும் முத்து சம்பந்தர்மத்தியதரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர்
இவரது தந்தையார் பெயர் முத்துக்கருப்பன். தாயார் பெயர் மாணிக்கம்மாள் இவரது தந்தையார் தேயிலைத்தோட்ட கணக்குப்பிள்ளையாக வேலைசெய்தவர்.5 ஆண்பிள்ளைகளையும் 3 பெண்பிள்ளைகளையும் கொண்ட குடும்பத்தில் 7வது பிள்ளையாக இவர் பிறந்தவர்.
இவரது தந்தையார் அந்தக்காலத்தில் நடிப்புத்துறையிலும்,பாடுவதிலும் வல்லவர்.தனது பள்ளிப்பருவம் முதல் பாடல், நடிப்புத் துறையில், எழுத்துத் துறையில் ஈடுபட்ட முத்து சம்பந்தர் சிறுவயது முதலே சிறுமை கண்டு குமுறும் மனம் படைத்தவராக விளங்கினார்.இவரது வர்க்கப் போராட்டம் தமது குடும்பத்திலேயே ஆரம்பமானது.இதனால் குடும்ப உறவினர்களது பகைக்கும். வெறுப்புக்கும் இலக்கானர்.
சாதி, இன, மதபேதங்களையும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் சிறுவயது முதலே வெறுத்து ஒதுக்கிய இவர் ஏழைமக்களின் சொந்தக்காரனாகவே இன்றும் வாழ்ந்துவருகின்றார். ஆசிரியராகவும் அதிபராகவும்.போல்ஸ் அதிகாரியாகவும்,சாரணஉயர்விருதுபெற்ற சாரணியப் பயிற்சியாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், பாடகராகவும், பேச்சாளராகவும், தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகியமும்மொழி பாண்டித்தியம் பெற்றவராகவும் விளங்கும் இவரது திறமை கண்ட அரசு இவருக்கு மத்தியஸ்தர் சபை உறுப்பினர் பதவியும், சமாதான நீதவான் பதவியும் வழங்கி இவரை கெளரவித்துள்ளது.
தனதுமூத்த சகோதரரான கண்டி எம்.இராமச்சந்திரன் (கவிஞர், கலைஞர்) அவர்களதும் தற்போது மத்திய மாகாணசபை உறுப்பினரும் முன்னைய பாடசாலை அதிபருமான கெளரவ வீடிதருமலிங்கம் அவர்களதும் வழிகாட்டல்மூலமாக முத்துசம்பந்தர் இடதுசாரிக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கத்தொடங்கினர்.
இவரது ஆக்கங்கள் விடிவு.மக்கள்மறுவாழ்வு. (தமிழ்நாடு) சிந்தாமணி, தினபதி,வீரகேசரி தினகரன், தென்றல், நவரோஜா,கலைமுரசு,பிறைக்கவசம், தடாகம்,இனிமை, காங்கிரஸ்.குன்றின் குரல், தாக்கம், மலைமடல், தூண்டில் (சுவிஸ்சர்லாந்து), சூடாமணி ஆகிய உள்நாட்டு வெளிநாட்டுப்பத்திரிகைகளிலும் ரூபவாஹினி,வானொலி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் 1986 ல் "முத்துத்துளிகள்” என்ற கவிதை நூலையும், 1990ல் "பாட்டாளிக்குப் பரிசு” என்ற கவிதை நூலையும் 1994ல் "நிஜங்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பு நுாலையும் வெளியிட்டுள்ளார். இவர், முத்துசம்பந்தர்,சானமுத்து, மலைக்குயில், சஜ்ரா,முகம்மது சம்பந்தர், என்ற புனைப்பெயர்களில் ஆக்கங்களை வெளியிட்டு வருகின்றார்.
எங்கள் மலையகம் O3

Page 4
1994ல் கண்டியில் நடைபெற்ற"நிஜங்கள்" சிறுகதைத்தொகுப்புநூல்வெளியீட்டுவிழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர் கெளரவ அ. கருப்பையா அவர்கள் முத்து சம்பந்தருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து "மக்கள் கலைஞன்” என்ற பட்டத்தையும் வழங்கினார்.
1996ல்மலையக கலை கலாசார சங்கம் இவர் எழுதிய சிறுகதைகளைப்பாராட்டி இவருக்கு "இரத்தின தீபம் - 96”எனும் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
மக்கள் கலை இலக்கியப் பேரவையின் தலைவராக விளங்கும் இவர் எழுதிய "நிஜங்கள்” என்ற சிறுகதையும் "கருவறை தற்கொலை” என்றஉருவகக்கதையும் இவருக்குநாடளாவியரீதியில் பரிசையும். பாராட்டையும் பெற்றுக்கொடுத்துள்ளன.
இவரது உருவகக் கதைப் படைப்புகள் புதிய உத்தியாகவும், சிறந்த நவீன படைப்பு முறையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுபல்கலைகழக புத்திஜீவிகள்முதல்பாமரவாசகர் வரை இவரைப் பாராட்டி வருகின்றனர். இவரது சிறுகதைப் படைப்புகளின் வெற்றியைப் பற்றி இவரிடம் வினவிய போது முத்து சம்பந்தர் கூறியதாவது, -
“நான் பசி, பட்டினி, ஏழ்மை, வறுமை, துன்பம், துயரங்களை அனுபவித்து பாட்டாளி மக்களுடன் மக்களாய் வாழ்ந்து வருபவன்.இதனால் எனது படைப்புகள் உண்மையானவையாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் இயற்கையாகவே அமைந்துவிடுகின்றன. கண்டியில் வாழ்ந்து கொண்டு கொழும்பைப் பற்றி கற்பனை செய்து போலியாக என்னால் எழுதமுடியாது” என்று பதிலளித்தார்.
"நீங்கள் ஒரு இந்து. உங்கள் துணைவியார் இஸ்லாமியர். வாழ்வில் சமூக சிக்கல்கள் உண்டா” என்று நான் கேட்டபோது, (முத்து சம்பந்தர் சிரித்த வண்ணமாக) "எனது மனைவியை நான் முதன் முதல் கண்டபோது எனது மனதிற்கினிய ஒரு அழகிய பெண்ணாக அவள் எனக்குத் தோற்றமளித்தாள்.
நான் விரும்பினேன்.அப்போது அவளது சாதி, சமயம்,இனம்,மதம், பேதம் ஒன்றும் என்னுள் தோன்றவில்லை. இப்பொதும் அவள் என் அன்புமனைவியாக மட்டுமே என்னுள் இணைந்துள்ளாள். சந்தோஷமாக குடும்பம் நடக்கின்றது.வருடம் தவறாது குழந்தைகளைப் பெற்றோம். டாக்டர் போதும் என்றதால் தற்போது மூன்று ஆண்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழுகின்றோம். ஆன்பெண்ணையும்,பெண் ஆணையும்தானே வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்ளமுடியும்! ஏற்றுக் கொள்ள முடியும் வித்தியாசமாக நாங்கள் ஏதும் செய்யவில்லையே எனறு கூறினார்.
மனிதநேயத்துக்கும், மனித உறவுக்கும் தடையாக இருக்கும் எதுவுமே வேதமுமாகாது. தர்மமுமாகாது. சமயமுமாகாது. அப்படி அவை தடையாக இருக்குமேயானால், அவை தீயிலிட்டுக் கொழுத்தப்பட வேண்டியவை."அன்பே சிவம்" இதுவே எனது சமயமும். சாத்திரமுமாகும் என்றார்.
இன்று கண்டி கலைமகள் அதிபர் விடுதியில் தனது மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் முத்து சம்பந்தர் இன்னும் பல தரமான ஆக்கங்களை எமது சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
O4 6risisir naoaguUash

ImamallaðajanavæðamðsíldatíðlÍ 36, குறுக்கு வீதி, கண்டி போன் - 08-225010
எமது இலங்கைத் தீவிலே பல்லின மக்களின் ஐக்கிய அமைப்பான மலையக கலை கலாசார சங்கம் தனது 1997 / 98 வருட நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளோர்.
தலைவர் : திரு. டீ. எச். பத்திரன (ஆங்கில எழுத்தாளர்)
இணைத் தலைவர் : திரு. ராஜாஜேங்கின்ஸ்
சிங்கள எழுத்தாளர், நடிகர், கை வினைஞர்
செயலாளர்: h− திரு. எல். எச். ஹரிஸ்சந்ர (சிங்கள எழுத்தாளர் )
இணைச் செயலாளர் : திரு. கண்டி எம். ராமச்சந்ரன் (தமிழ், சிங்கள, ஆங்கிலக் கவிஞர். தமிழ், ஆங்கிலச் சிறுகதை, நாடக, பத்திரிகை எழுத்தாளர். “வீக் எண்ட்" பத்திரிகையின் கண்டி மாவட்ட நிருபர் )
நிதிக் காரியதரிசி : திரு. எல். "பர்னாந்து (பிரபல புகைப்படக் கலைஞர்).
பொது ஜன தொடர்பாளர்கள்
1.முத்து சம்பந்தர் (தமிழ்க் கவிஞர், சிறுகதை, நாடக எழுத்தாளர், பாடகர், பத்திரிகையாளர், பாடசாலை அதிபர், சாரணர் இயக்க நெறியாளர், இணக்கச்சபை அங்கத்தவர், சமாதான நீதவான்) 2.ரோஹித மான்னகே
(சிங்கள திரைப்பட நடிகர், பாடகர்)
எங்கள் மலையகம் OS

Page 5
முன் வருவீர்
எஸ்.பி.செல்வராஜா
மண்டிய காட்டை இங்கே
மழித்தவர்யார்? எம் முன்னோர்கள் - அங்கே அண்டிய மிருகத்துக்கே - இரை
ஆனவர் ஆம் எம் முன்னோர்!
கண்டிக் குக்காட் டுவழி
கால்நடை நடந்த எம்மோர் - பின்னர் வண்டிகார் ஒடும்பாட்டை - இங்கே
வகுத்தவர் ஆம் எம் மோரே !
சென்றளம் காதை பேசல்
சிறப்பே இல்லை ஆனால் - இங்கே அன்றுபோல் மாற்ற மின்றி - துயர்
இன்றுமே தொடரே தானே ?
அவலமே தொடரச் செய்தோர்
ஆக்கினைக் காளே ஆனோம் - ஆம்
தயவுதாட் சன்யமின்றி - எம்மைச்
சப்பினார் 1 சக்கையானோம் !
அரசியல் பகடைக் காயாய் ஆக்கினார் அந்நியரானோம் 1 - ஆம்
சிரசிலாத் தலமையாலே - நாம் சீரழிந்தசமுகமானோம் !
கல்வியில் பின்னடைந்த காட்சியே எங்கும் ஆட்சி - எம்மை வில்லா கவளைத் தவர்கள் - எங்கும்
மிக்குயர் பதவி மாட்சி
விடியலை நோக்கி நாங்கள் விரு நடைபோட்டுஎற - முதல் அடிஇனி எடுத்தே வைக்கப் - புதுத் தடமிட முன்னே வாரீர்
மலையகம் கலையகமாய் மாட்சியைக்கண்டிடவே - இளந் தலைமுறைதலை நிமிர - நவ
தடமிங்கு சமைக்க வாரீர்
இந்து சமுத்திர முத்துத் தீவின் எங்கள் மலையகத்தின் இன்னல் களைய உதித்த “எங்கள் மலையகமே” Tổ குன்றின் மேல் இட்ட தீபமாக என்றும் பிரகாசிக்க எனது இனிய வாழ்த்துக்கள்
எங்கள் மனயைகத்துக்கு எழுச்சிவழித்து t
இளம் எழுத்தாளரின்
சமுதாய எழுச்சிக்கு வழிகாட்டு வாயாக
இதயக் குமுறலை என்றும் சுமந்தே
-அ. லெட்சுமணன் இம்புலிபிட்டி, கல்லோயா, நாவலப்பட்டி
O6
எங்கள் மலையகம்

LOEUNGDuitsjölei) இந்து மதம்
சுவாமி சிவயோகச் செல்வர் த. சாம்பசிவம் பெரிய கல்லாறு -01
உலக சமயங்களை , வளர்ச்சியுற்ற சமயங்கள் வளர்ச்சியுறாத சமயங்கள் என இரண்டாக வகுக்கலாம். வளர்ச்சியுற்ற சமயங்கள், சமய நூல்கள் பலவற்றைப் பெற்றனவாகவும் கோடிக்கணக்கான மக்களால் தம் சமயமென போற்றப்படுவனவாகவும் அமைந்துள்ளன.
இந்த வரையரைக்குள் இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய நான்கு சமயங்களும் அடங்கும்.
உண்மையைச் சொல்லப் போனால் உடம்பெல்லாம் வலிதான் என்ன செய்யலாம். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய காலத்தில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
உண்மையாகவே இந்து சமயம் தவிர்ந்த ஏனைய மூன்று சமயங்களையும் பின்பற்றுவோர்கள் தமது சமயத்தைப் பற்றி மற்றவருக்கு பூரண விளக்கம் அளிக்கக் கூடியவராக இருக்கின்றனர். இந்து சமயிகளை அவ்வாறு கூறமுடியாது.
இந்து சமயத்தைப் பிறசமயங்களுடன் ஒப்பிடும் போது இந்துக்கள் யார் என்பதை வரையறை செய்து கூறினால் வில்லங்கம் ஏற்படும்.
இந்தியாவிலே தோன்றிய சமயங்களைப் பின்பற்றுவோரே இந்துக்கள் என்றால், சமணர், பெளத்தர் முதலியோரையும் இந்துக்களாகக் கொள்ள வேண்டும். வேதத்தை மையமாக ஏற்பவர்கள் இந்துக்களாயின் வீர சைவ சமயத்தை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ள முடியாது. இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் யாவர் என வினவினால், சிவம், சக்தி, மால், என பல பெயர்களைக் கூறவேண்டியிருக்கும்.
இதுபோல் இந்து தத்துவ நூல் எது வென்றால் வெவ்வேறு நூல்களைக் கூற வேண்டி வரும்.
பிற சமயத்தவர்கள் மாற்றுச் சமயத்தைச் சார்ந்தவர்களை தமது சமயத்திற்கு மாற்றுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இந்து சமயத்தவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுவதில்லை. இதனையும் தற்கால அரசியல் சூழ் நிலையையும் சாதகமாக்கி ஏனைய சமயத்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்து ஏமாற்றுகின்றனர்.
6TPä6sir LQGupGaJLuzsub O7

Page 6
இந்நிலை மலையகப் பகுதிகளிலே வெகுவாக நடைபெற்று வருவது வேதனையானதும் வெட்கப்படக் கூடியதுமான செயலாகும்.
இம்மதமாற்றத்தின் அடிப்படைக் காரணிகளை நாம் ஆழமாக நோக்கினால் மேலும் பல தரவுகள் எமக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ளது.
அவற்றுள் சாதி முறைமை, இயலாமை, இல்லாமை போன்றனவும் அடங்கும். சாதி முறையை ஒழிக்க எழுந்த சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இன்று வரையும் வெற்றி பெறவில்லை. மேலும் மலையகத்தில் இன்றுவரை அவர்களை மதநெறியில் வழுவாது வாழ வைக்க எந்த இந்து சமயச் சங்கங்களும் முழுமையாக ஈடுபடவில்லை.
பொய்யான அரசியலை வளர்க்கப்பாடுபடும் முதலாளித்துவம் கூட சமய நெறிகளைப் பாதுகாக்க முற்படாதமை வேதனைக்குறியது தான்.
இந்து மகாசபை, இந்து மாமன்றம் என்ற நகர்ப்புற அமைப்புக்கள் மலையகத்தின் அடிநாதமாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களின் இந்து சமய நெறி வளர்ச்சிக்கு உதவாது வெறுமனே உயிர் அற்ற உடலாகவே அவை கொள்ளப்படும். இந்து சமய மறு மலர்ச்சி மலையகப் பகுதிகிளில் உயர்வாகக் காணப்படவில்லை.
பொதுவாக இந்து சமயத்தவர்களுக்கு சமய அறிவை ஊட்டக் கூடிய நிறுவணங்கள் மலையகப் பகுதிகளில் இல்லை. அறநெறிப் பாடசாலைகள் தற்போது இயங்கி வந்தாலும் முழுமையாக அதன் பங்கு மலையகத்திற்குக் கிடைப்பதில்லை. இந்துக்களே ! நம் சமயத்தின் பழமை, புதுமை என்று சிந்திக்காமல் அதன் முழுமையை உணருங்கள். இந்துக்கள் ஒவ்வொருவரும் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்புங்கள்.
அரை நிமிட நேரமாவது தவமுறை தியானம் வைக்க முயற்சிக்கும் அதேவேளை நமது அருகில் உள்ள எம்மிலும் வசதியற்ற ஒருவருக்கு உதவ முற்படுங்கள். சமய நெறிகளில் முழுமையாக நம்பிக்கை வையுங்கள். பிறமதத்தவரின் குறைகளையும் அவர்கள் நமக்குச் செய்யும் குறைகளையும் பேசிக் காலம் கழிக்காமல் நமது சமயம் வாழ நான் என்ன பங்கைச் செய்தேன் என சிந்தித்துச் செயலாற்றுங்கள். இந்து சமயத்தில் குறைகள் காணப்பட்டால் அவற்றைக் களைய முற்படுங்கள் சமயம் வெறும் சடங்குகளுக்காக்கப்பட்டதல்ல என்ற சுவாமி விவேகானந்தரின் தாரக மந்திரத்தை மலையகமெங்கும் சிந்திக்க வையுங்கள்.
songs அரங்கம் எங்கள் மலையகம் உங்கள் கருத்துக்களை
எங்கள் வரவேற்கின்றோம். உங்கள் கருத்துக்களை
கீழ்வரும் பகுதியை வெட்டி தபால் விலாசமாக
ՈՅՍՈՍԱԱt;IՈ ஒட்டி அனுப்பப்படும் கருத்துக்களுக்கு
மாத்திரமே வாசகர் அரங்கம் பகுதியில்
3/3 A. A. தர்மசேன மாவத்தை இடமளிக்கப்படும் . கருத்துக்கள் தாளின் ஒரு
disaofag. பக்கத்தில் மாத்திரமே எழுதப்பட வேண்டும் .
O3 எங்கள் மலையகம்
 
 

மத்திய மாகாண
இலக்கிய மதிப்புரைக்குழுவிற்கு ஒர் வேண்டுகோள் நாவல் நகர் நக்கீரன்
மத்திய மாகாண இந்து, கல்வி கலாசார அமைச்சில் திரு டி. வி மாரிமுத்து அவர்கள் தலைமையில் இயக்கும் மத்திய மாகாண இலக்கிய மதிப்புரைக்குழு 1995ம் ஆண்டு சாகித்திய விழாவை ஹட்டன், நுவரெலியா ஆகிய இடங்களில் நடத்தி எழுத்தாளர்களுக்கு, கலைஞ்ர்களுக்கு பொற்கிலியும் ,விருதும், சிறந்த நூல்களுக்கு விருதும் வழங்கி கெளரவித்தது.
1996ம் ஆண்டு சாகித்தயவிழா நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆகஸ்டில் சாகித்தியவிழா நடைப்பெறவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விழாவில் 1995 -1996ம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த மத்திய மாகாண எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பரிசும், மூத்த கலை இலக்கியவாதிகளைக் கெளரவிக்கப்பட உள்ளதாக அறிகிறோம்.
இதோ , மதியுரைக்குழுவிற்கு ஒர் வேண்டுகோள் இந்த ஆண்டு கெளரவிக்கபடுபவர்களை 1995 ம் ஆண்டு கெளரவித்தைப் போல் தகுதியும் திறமையும் கொண்டவர்களைத் தெரிவுசெய்ய வேண்டும் அமைச்சருக்கு வேண்டியவர்களை “நான் இல்லாவிட்டால் இலக்கியம் இறாது." என நடமாடும் "போலிகள்” “நாலு" வரிகள் ஒழுங்காக எழுத முடியாதவர்களை மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை தன் பெயரில் பிரசுரித்துக் கொள்பவர்களை இணங்கண்டு ஒதுக்கி அர்ப்பணிப்புமிக்க கலை இலக்கிய வாதிகளைக் கெளரவியுங்கள்.
எங்கள் மலையகம் O9

Page 7
1958ஆம் ஆண்டில் கெளரவஎஸ்.டபிள்யூஆர் டீ.பண்டாரநாயக்காபிரதமராக ஆட்சிசெலுத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழர் சிங்களவர்இனக்கலவரம் மலையக மக்கள் மத்தியில் இன்றும் புரையோடிக்கிடப்பதை நாம் சகலரும்
காடையர்கள் பூரீ எனும் சிங்கள எழுத்தை தமிழ் மக்களின் பின்புறத்தில் தாரினால் எழுதியமை, சுடச்சடத் தாரைக் காய்ச்சி தமிழ் மக்கள் மேல் ஊற்றி துன்புறுத்தியமை போன்ற கோரக்காட்சிகள் என்பனறிலங்காசுதந்திரக்கட்சிமீது மலையக மக்கள் வெறுப்பு கொள்ளக் காரணிகளாக அமைந்துவிட்டன.
நீலநிறத்தையும், “கை”சின்னத்தையும், பூரல. க. கட்சியையும் தமிழருக்கு எதிரான கட்சியாகவேமலையக மக்கள் நம்பிவந்தனர் காலப் போக்கில் பழைய தலைமைகள் மாற புதிதாக கெளரவ சந்திரிகா பண்டாரநாயக்க அம்மையார் அரசியல் களத்தில் குதித்த போது மலையக மக்கள் மனதில் ஒரு புதிய தெம்பு ஏற்பட்டது.
தோழர் விஜயகுமாரதுங்க ஓர் இனவாதி அல்ல. ஏழைமக்களின் தோழர் தமிழ் மக்களை, குறிப்பாகமலையகத்தமிழ்மக்களைநேசிப்பவர் இவர்மூலமாகநாட்டில் ஓர்சந்தோஷமான வாழ்வு அமையும் என மலையக மக்கள் நம்பினர்
அநியாயமாக தோழர்விஜயகுமாரத்துங்க கட்டுக் கொள்ளப்பட்டதும் அனுதாப அலைகள் சந்திரிகாகுமாரதுங்க அம்மையாரைச்சாரலாயின.
தோழர் விஜயகுமாரதுங்க அவர்களது பாரியார் என்பதாலும், திறந்த மனங் கொண்ட ஒரு அம்மையார்என்பதாலும் இவர்மூலமாக விடிவு ஏற்படும் என்ற
நம்பிய மலையக மக்கள் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாபண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாருக்குதமது அமோக ஆதரவைச் செலுத்தினர்
அம்மையாரின் போக்கு மலையக மக்களுக்கு இதமானதாக அமைந்த போதும் அவரைச்சூழ்ந்த ஒரு சில அரசியல்வாதிகளின்போக்குமலையக மக்களை மீண்டும் ஐ.தே.கவின்பக்கம் இட்டுச் செல்லத் தொடங்கிவிட்டது.
இ தொ. கா. தலைவர்செள தொண்டமான் அவர்கள்மலையக மக்கள்மீது பற்றுள்ள ஓர் தலைவர் என்றாலும் அவரைச் சூழ்ந்துள்ளவர்களில் சிலர் தான் தோன்றித்தனமாகவும் எதேச்சாதிகாரமாகவும்,நடக்கமுற்பட்டதனால் விளைந்த விளைவே அண்மையில்நடைபெற்ற உள்ளுர்ஆட்சித் தேர்தல்முடிவுகளாகும்.
O எங்கள் மலையகம்
 

படித்துப்பாருங்கள்
ஆசிரியர்
சிu. மூத்துலிங்கம் 612Jaffb சமூக அபிவிருத்தி நிறுவகம் 3, முல்கம்பளை வீதி,
கண்டி
எழுதாத வரலாறு இதுவரை எழுதப்படாத வரலாறு தான் இலங்கை தராவிடர் இயக்கத்தரின் செயற்பாடுகள் இன்றைய தலைமுறையினர்க்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. அதனை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதுமான வரலாற்றை ”எழுதாத வரலாறு” என்ற விமர்சன ஆய்வு நூலரின் மூலம் பெ. முத்துலிங்கம் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்துள்ளார். பத்திரிகையாளரும் ஆய்வாளருமான பெ. முத்துலிங்கம் எழுதிய இந்த நூாலை அனைவரும் படிக்கவேண்டியது அவசியமாகும்.
எங்கள் மலையகம் 13

Page 8
இதோ வாசகர்களின் கவிதை ஆற்றலை வளர்க்க ஒரு சந்தர்ப்பம் மேலே உள்ள படத்தை நன்கு அவதானித்து படத்துக்குப் பெறுத்தமான கவிதையும் கவிதைத் தலைப்பும் எழுதி கீழ்வரும் விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்பவும் சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அதேவேளை எமது அடுத்த இதழில் அவை பிரசுரிக்கப்படும்.
கவிதைப்பூங்கா - 01 “எங்கள் மலையகம்” 3/3. A .A. 5ildC.) GOT DITG) 60.5 கண்டி.
14 brithíor Iman GUUčính
 
 

LaTaMavullargjøflið gaffa56faf ஆதிக்கம் மேலும் தொடருமாP
ஆனடான அடிமை நிலையில் பெண்கள்
இன்று ஆண்களின் ஆதிக்கத்துக்கு எதிராக உலக நாடுகளில் பெண்கள் விடுதலைப் போராட்டம் நடத்துவதை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வாயிலாக அறிக்கின்றோம்.
இந்தச்சந்தர்ப்பத்தில் எமது மலையகப் பெண்கள் இன்னமும் ஆண்களின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு வேதனையுடனேயே வாழ்ந்து வருவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
பிறந்த நாள் முதல் மலையகத்தின் பெண் ஜீவன்கள் வெந்து வெதும்பி, வேதனையில் வாடியே செத்து மடிக்கின்றன.
தாய்க்குக் குழந்தை பிறந்து விட்டால், பள்ளி செல்லும் பெண் குழந்தை அவருக்குத் துணையாக வேண்டியிருக்கின்றது. எனவே பள்ளி வாழ்கையை அத்துடனேயே முடித்துக்கொள்ள வேண்டிய நிலை அவளுடையதாகிறது. ஜயாமார்களின் குத்தகை
பெண் குழந்தைகள் 10,12 வயதை அடைந்து விட்டால்ப் போதும், தோட்டத்து ஐயாமார்களும், வசதி படைத்த வெளியிட ஐயாமார்களும் தோட்டத்து தொழிலாளியிடம் ஒரு தொகைப் பணத்தை ஒப்படைத்து விட்டு பெண் குழந்தைகளை குத்தகைக்கு எடுத்துச் சென்று விடுவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.
காலை முதல் இரவு வரை மாடாக உழைக்கும் அந்தப் பிஞ்சுப் பெண் குழந்தைகள் தாம் வேலை செய்யும் வீடுகளில் உள்ள கிழவர், எஜமான், இளைஞர் ஆகியோரால் மானப்பாங்கம்மேலும் தொடருமா செய்யப்படுகின்றனரே.
இவ்வாறு கொடுமைகளை அனுபவித்து வாழ்ந்துவரும் பெண்கள் 1820 வயதை அடைந்ததும் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து தோட்டங்களில் பெயர் பதிந்து விடுகின்றனர். துன்பம் தொடர்கின்றது.
தோட்டங்களில் வேலை செய்து, முடிந்தவரை பெற்றோருக்கு உழைத்துக்கொடுக்கும் இவர்கள் குடும்பபந்தத்தினுள் இணைக்கப்படுகின்றனர். அங்கேயும் இவர்களுக்கு துன்பமே தொடர்கின்றது.
இவ்வாறு உழைத்து உழைத்து சோர்ந்து போன பெண், இளவயதிலேயே முதுமைப்பருவம் அடைந்து விடுகின்றாள்.
தனது வாழ்வில் முழுகாலப்பகுதியும் ஓய்வின்றியே வாழும் இவர்களின் நிலை இருபதாம் நூற்றாண்டிலாவது இல்லாதொழியுமா? ஆண்கள், மாலையானதும் கிராமப்புறங்களுக்குச் சென்று வேலைக் களைப்பை ஆற்றிக்கொள்ள கிராமத்துக் கள்ளுத் தண்ணியையும் சாராயத்தையும் மூக்கு முட்ட குடிக்கின்றனர்.
sragar namaJuJaših 1S

Page 9
குடிவெறியில் வரும் கணவனுக்கு பணிவிடை செய்ய பெண்கள் தயங்கக் கூடாதாம். இது என்ன நியாயம்? Li600flofol (5560.6/LIT 2
தான் தோன்றத்தனமாக நடந்துக்கொள்ளும் ஆண்களுக்குப் "பணிவிடை என்ற ஒன்று தேவைத்தானா?
அதுமட்டுமல்ல, பிரயாணம், வந்து விட்டால் ஆண்களுக்கு தனியான குஷிவந்து 6ჩ(Bub.
பெண், பிள்ளைகள் பின்னால் வர ஆண் கம்பீரமாக வேட்டி, சட்டை, சால்வையுடன் கைகளை வீசி நடப்பார்.
பெண் கையில் ஒரு குழந்தையுடனும் மடியுள் ஒரு குழந்தையுடனும் மற்றொரு பிள்ளையை கையிலும் பிரயாணப் பொதிகளை தலையிலும் சுமந்து ஆண்ணுக்கு பின்னால் வியர்க்க விறு விறுக்க ஓட்டமும் நடையுமாய்ச் செல்ல வேண்டும்.
மலையகத்தில் இப்படியும் ஒரு நியதி . இந்த வகையில் தோட்டப்புறப் பெண்களும் தமது இழிநிலை பற்றிசற்று சிந்திக்க முன் வர வேண்டும்.
இத்தகைய அவல நிலைமையை மாற்ற எமது படித்த மலையகப் பெண்களும், சமூக நிறுவனங்களும் முயல வேண்டும். பாதுகாப்புப் பிரிவு
இன்று ஆண்களால் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளைப் போக்க தனியான பாதுகாப்புப் பிரிவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான அநியாய அட்டுழியங்களைச் சட்டம் மூலம் தடுப்பதற்கு இன்று சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தனக்குத் தனது கணவனால் இழைக்கப்படும் அநியாய அட்டுழியங்களை மனைவி, பெண்கள் நலவுரிமை அதிகாரிகளிடம் முறையிடலாம்.
தம்முடன் ஒத்துழைத்து வாழமுடியாத, பொறுப்பற்ற கணவன்மார்களிடமிருந்து தயங்காது விவாகரத்து பெற்று வாழ பெண்கள் துணிய வேண்டும்.
தமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பத்திரிகை, சஞ்சிகைகள், நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை எமது மலையகப் பெண்கள் விருத்தி செய்துக்கொள்ள வேண்டும். .
தோட்டங்கள் தோறும் மாதர் நலன்புரி இயக்கங்களை அமைத்து அதன் மூலமாக கலந்துரையாடியும் குடும்பப்பிரச்சினைகளை சக பெண்களுடன் கலந்துரையாடியும் தீர்வுக்காணலாம்.
எமது மலையக பெண்கள் விழிப்புணர்வு பெறும் போது, நமது சமூகமே அதன் மூலம் பயன்பெற முடியுமல்லவா?
-எஸ் மெஹருன்நிஸாநன்றி சூடாமணி
16 - 6riðir Inabauäh

சிறு கதை
a u lës (b
டேய் ஒத்தக் காற்சட்டை வாறான். ஒத்தக் காற்சட்டை வாறான் எல்லோரும் "ஊ" வைங்கடா. இது சுரேசின் கூக்குரல். இதனைத் தொடர்ந்து அவனோடு இருந்த சக தோழர்களும்ஒத்த காற்சட்டை ஊ. ஒத்த காற்சட்டை ஊ. ஒத்தகாற்சட்டை ஊ. என்று சத்தமிட்டுக் கை தட்டிப் பலமாகச் சிரிக்கின்றனர். அப்போது இராமன் பாடசாலை கேட்டைத் தாண்டிப் பாடசாலை வளவுக்குள் காலடி எடுத்து வைக்கின்றான்.
சுரேசும் அவனது நண்பர்களும் ஒத்தக்காற்சட்டை ஊ. ஒத்தக்காற்சட்டை ஊ.
என்று தன்னை கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கின்றனர் என்பதை உணர்ந்து மனதுக்குள் வெதும்பியவனாய் ஆனால் வெளியில் தன் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாதவனாக இராமன் வகுப்பறையை நோக்கி நடக்கிறான்.
தற்போது ஆண்டு பத்தில் கல்வி கற்கும் இராமன் ஒரு தோட்டத்தொழிலாளியின் மகன். தந்தை குடும்பத்துக்காக உழைத்து உழைத்து வறுமை காரணமாக உடலுக்குத் தேவையான போதிய உணவு பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் மாரடைப்பினால் இறந்துவிட்டார்.
பிள்ளைகளின் வயிறு வளர்க்க அம்மாவும், இராமனது அக்காவும் தோட்டத்தில் கொளுந்து பறிக்கும் வேலை.
குடும்பத்தில் பாக்கியாக இப்போது இருப்பது ஆறு ஜீவன்கள். அதிலும் குடும்பத்துக்கு ஒரே ஆண் ஜீவனைப்படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதே அம்மா மங்கம்மாவின் ஆசை. ஆனால் தோட்டத்துப் பள்ளியில் இராமனைச் சேர்ப்பதை விட நகர்ப்புறத்துப் பாடசாலையில் இராமனைச் சேர்த்து விட்டாள் மங்கம்மா.
பள்ளி வாழ்க்கை இராமனுக்கு ஒரு போராட்ட வாழ்க்கையாகவே அமைந்து விட்டது. -
பட்டணப்பிள்ளைகள் நாளுக்கு ஒரு உடுப்பு, இடை வேலை நேரத்தில் வகைவகையான உணவுகள், கைச்செலவுக்கு வேறு நுாற்றுக்கணக்கான
எங்கள் மலையகம் 17

Page 10
ரூபாய்களுடன் பள்ளினுள் உலா வரும் போது இராமன் ரொட்டித்துண்டுடனும் சம்பலுடனும் பாடசாலைப் பைப் தண்ணிருடனும் ஒத்தக் காற்சட்டையுடனும் உலா வருவது அவனைக் காட்சிப் பொருளாகவே சூழல் மாற்றிவிட்டதில் வியப்பொன்றுமில்லைத்தான்.
அவனிடம் பணமும் பகட்டுமில்லாததனால் அவனுக்கு நண்பர்களுமில்லை. ஆதரவாளர்களுமில்லை.
ஆனால் நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதனாலும், ஒழுக்கமுள்ள மாணவன் என்பதனாலும் ஆசிரியர்களது அன்பையும், நட்பையும், உதவிகளையும் உயர்வாகப் பெற்றுக் கொண்டான்.
வகுப்பில் அமைதியாகச் சென்று அவனது ஆசனத்தில் உட்கார்ந்தான் இராமன்.
முன்னர் வாசலில் நின்று கூச்சலிட்ட அதே சுரேஸ் குழுவினர் இப்போது வகுப்பறையிலும் வந்து .
” ஒத்தக் காற்சட்டை ஊ . ”ரொட்டித்துண்டு ஊ. என்று பலமாகக் கூச்சலிட்டனர். கண்கள் குளமாகிய இராமன் அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனது கண்களிலுருந்து மாத்திரம் தாரைத் தாரையாக கண்ணி, வழிந்தோடிக் கொண்டிருந்தது.
அப்போது வகுப்பாசிரியரும், பகுதித் தலைவரும் வகுப்பறையினுள் நுழைகின்றனர். அழுது கொண்டிருக்கின்ற இராமனை அரவணைத்து அன்புடன் தட்டிக்கொடுத்து நடந்த விடயத்தை வினவுகின்றனர்.
இராமன் கவலையுடன் நடந்தவற்றை அவர்களுக்குக் கூறுகின்றான்.அவர்களும் அவனுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.
எல்லாவித செல்வத்திலும் மேலானது கல்விச் செல்வம் தீயினால் சுட்டெரிக்க முடியாதது. கள்வர்களால் கவர முடியாது. பகட்டினால் பெற முடியாது. சாகும் வரையிலும் துணைப்புரிந்து நிற்பது, கல்விச் செல்வம் மாத்திரமே, என்று இராமனுக்கு அவர்கள் புத்தி கூறுகின்றனர்.
சிறிது நேரத்தின் பின் ஏதோ ஒன்றை உணர்ந்து கொண்டவனாக தனது கண்களைத் துடைத்துக் கொண்டு படிப்பில் கவனத்தைச் செலுத்த தொடங்கினான், இராமன்.
அன்றிலிருந்து எவர் எதைச் சொன்னாலும் சிரத்தை செய்யாது தனது முழு நேரத்தையும் படிப்பில் செலவழித்தான் இராமன்.
காலம் உருண்டோடி முழுமையாகத் தற்போது 20 வருடங்களை விழுங்கித் தீர்த்து விட்டிருந்தது.
(21ம் பக்கம் பார்க்க)
1& எங்கள் மலையகம்

பண்பாலர் திரு.எஸ். முத்தையா ஜே. ரி
உயர்திரு எளம் முத்தையா ஜேபி அவர்கள் குண்டசாலை லக்கிலேண்ட் பிளப்கட் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். பணத்தை விட மனித நேயத்தை உயர்வாக மதிக்கும் திரு. முத்தையா அவர்கள் எனறும் எழுத்தாளர்களை மதித்து உபசரிக்கும் சிறந்த பணிபுடைய பெருந்தகையாளர்
பணத்தை விட தாய் நாட்டின் புகழ் உலகலாவிய ரீதியில் கீர்த்தியடையச் செய்வதே மேலெனக் கருதி தனது அருமை மகன முத்தையா முரளிதரனை (இலங்கைக் கிரிக்கட் குழுவினர் சுழல் பந்து வீச்சாளர்) தாய்நாட்டுக்கு ஒப்படைத்துள்ள பெருமகன் திரு. முத்தையா .
உங்கள் கேள்விகளுக்கு எநகள் கலைஞர்கள் பதிலளிக்கவுள்ளனர்.எமது சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள வில7சத்தை வெட்டி தபால் அட்டையில் முகவரிப் பகுதியில் ஒட்டி அனுப்பப்படும் கேள்விகளுக்கு மட்டுமே 3/3ஏ.ஏ. தர்மசேன மாவத்தை, பதில் அளிக்கப்படும். (b6009.
“எங்கள் மலையகம்”
எங்கள் மலையகம் 19

Page 11
முகில் தழுவும் மலை முகடுகளில்
வென் முகில் தழுவும் , மலை முகடுகளில் , பசுமை மிகுந்த மலையக மண்ணில் நுவரெலியாவில் ரம்பொடை வெவண்டன் சிகரத்தில் பூரீ ஆஞ்சநேயர் ஆலயம் சின்மயா மிஷன் ஆதரவில் அடிக்கல் நாட்டு விழா 23.04.1997 கோலாகலமாக நடைபெற்றது.
இவ்வாலயத்தில் 17 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலாவிக் சிரகம் பிரதிஷ்டை செய்யப் பட உள்ளது. ஆலயத்தின் நிர்மானப் பணிகளை தமிழக ஆஸ்தான சிற்பி ஸ்தபதி ழரீ முத்தையா பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சர் எஸ் தொண்டமான், நுவரெலிய எம். பி. க்கள் திரு எஸ். சதாசிவம்,திரு. முத்து சிவலிங்கம்,கண்டி எம்.பி எஸ்.இராஜரட்ணம், மத்திய மாகான இந்து கலாசாரஅமைச்சர் திரு.வி புத்திரசிகாமணி, லக்கிலேண்ட் திரு எஸ் முத்தையா , திரு. என். சோமகாந்தன், எம். மொறியியஸ் போன்ற பலரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தார்கள். - கம்பன் கழக அமைப்பைாளர் திரு. ஜெயராஜ் சிறப்புரையாற்றினார்.
2O எங்கள் மலையகம்
 

(18ம் பக்கத் தொடர்)
டாக்டர் இராமன், வைத்தியசாலை டாக்டர்களின் ஒய்வறையில் இரண்டு சத்திரசிகிச்சைகளைத் திருப்த்தியாக முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
”டாக்டர் . டாக்டர். எக்சிடெண்ட், நான்கு பேர் கை, கால் முறிந்து ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். " . என்று நர்ஸ் டாக்டர் இராமனிடம் கூறுகின்றார்.
டாக்டர் இராமன் அவசர அவசரமாக ஆப்பரேஷன் தியேட்டரை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைகின்றனர்.
அங்கே சுரேசும், அவனது நண்பர்களும் அலங்கோலமாக ஆடையின்றி இரத்த வெள்ளத்தில் ஆப்பரேஷன் தியேட்டரில் போடப்பட்டுள்ளனர்.
தனது சகபாடிகள் என்பதால் டாக்டர் இராமன் தனது டாக்டர் நண்பர்களை எல்லாம் அவசரமாக வரவழைத்து விரைவாக ஆப்பரேஷன் நடத்தி முடிக்கின்றார். ஆப்பரேஷன்வெற்றியாக முடிவடைந்து விட்டது சுரேசும் அவனது நண்பர்களும் மயக்கம் தெளிந்து கண்களை விழித்துப் பார்க்கின்றனர்.
அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் இராமன் "ஸ்டெதஸ் கோப்புடன்" நிற்கின்றான். நண்பர்கள் கண் விழித்து எழுந்தது கண்டு டாக்டர் இராமன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடுன்கிறது.
இதே வேளை சுரேசும் அவனது நண்பர்களும் வெட்க்கத்தால் நாண அவர்கள் கண்களில் நீர் சோர டாக்டர் இராமனை நோக்கிக் கைகூப்புகின்றனர்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”
-குறள்
ஷா. சம்பந்தர் ஆண்டு - 10
நன்றி
கலைஞானி 1996/1997 புனித சில்வெஸ்டர் கல்லுாரி கண்டி
எங்கள் மலையகம் 21

Page 12
மாகியாவ
தந்த ஓவியக்
கலைஞன்
எழில் ததும்பும் மலையக மண்ணில் மாகியாவ கிராமத்தில் பிறந்த (28.09.1950 ) திரு. எம். முத்தையா சிறு வயது தொடக்கம் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார்.
நகரசபையின் வீதிகளிலுள்ள பெயர்ப் பலகை வரைபவராக தொழில் புரிந்து வந்தஇவர்,பிறந்த கிராமத்து மங்கையை மணந்துள்ளார். “மது” என்னும் புனைப் பெயருடன் சிறந்த ஓவியங்களைத் தந்துள்ளார். கடந்த 27 வருட காலமாக ஒரு சிறந்த ஓவியக் களைஞராகத் திகழ்ந்து வரும் இவர் கண்டி நகர சபையிலிருந்து ஓய்வு பெற்றாலும் வாழும் வரை ஒரு ஓவியக் களைஞராக வாழ வேண்டும் என்ற கலை எண்னத்துடன் இன்னும் பல ஒவியங்களைச் செய்துள்ளார். v
கண்டியில் சிறந்த வியாபாரப் பெயர் பலகைகள், ஓடியன், வெம்ளி, வேல்ஸ் நியூசீகிரி (கட்டுகள் தோட்டை ) எரீனா (கட்டுகள் தோட்டை) துசதா (பேராதனை) அசோகா (கொழும்பு) நியு ஒலிம்பியா (கொழும்பு) ஆகிய சினிமா திரையரங்குகளில் வர்ணப் படஒவியங்கள் வரைந்து வெளி இடங்களிலும் “மது” என்னும் பெயர் பதித்துள்ளவர் முத்தையா .
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? என்பது பழமொழி ஆனால் சுவருள்ளது சித்திரம் தீட்டவே என்பது மதுவின் புதுமொழி. வேளை செய்து
22 எங்கள் மலையகம்
 
 
 

கொண்டிருக்கும் நேரங்களில் ஓய்வு கிடைக்கும் பொழுது பல கவர்களில் எரிந்து முடிந்த கரிதுண்டுகளை எடுத்து மற்றவர் மனம் கவரும் அழகு முக வடிவங்கள் வரைந்து இளைஞர்கள் மனதில் நின்ற கலைஞன் மது.கண்டி மசியாவ பூரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பபிஷேகம் (23.04.1997) நடை பெற்றது. பூரீ முத்துமாரியம்மன் (3emafejeó முதன் முதலாக கோபுரம்,ராஜகோபுரம் வடிவமைத்துள்ளார். அந்த கோபுரங்களையும், ஆலயத்தின் தெய்வ உருவங்களையும் தத்ரூபமாக என்றும் காலத்தால் அழியாத வகையில் வர்னம் தீட்டி தனது ஒவியத் திறமைகளைக் காட்டி மக்களை மகிழ்ச்சியால் மலரச் செய்துள்ளார். இவரின் திறமைகளுக்கு ஓர் எடுத்துக் காட்டு மகியாவ பூரீ முத்துமாரியம்மன் ஆலய வர்ணம் தீட்டியுள்ள அழகுக் காட்சி.
இவரைப்போல் எத்தனை தமிழ் இளைஞர்கள் கலைத் திறமையுடன் முடங்கி மூடிக் கிடக்கின்றார்கள். நமது இலக்கியத் தமிழ் சமூதாயம் ஏள்
இவர்களை வெளிக் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றது. விளம்பரம் தந்தவர் என்றால் அவர் எவராயினும் பட்டம் குட்டி பாராட்டி பறக்கவைத்து விடுகின்றனார் எங்கள் கலைஞர் சமூதாயம் விழித்தெழும்ப இனியும் ஒரு புது uaeth eum ym (325m ?
என்) மாற்றம் P
குறித் தீ குமர
O ஏற்றம் என வரும் போது கொழுந்த
ஏமாற்றம் சிலருக்கு
toffựìptô tư6ì) &ng
மதியில் குழப்பம் வருவதேன் ?
மலையக இலக்கரிய வளர்ச்சிக்காக வெளிவரும் "கொழுந்து” சஞ்சிகை இது வரை பத்து இதழ்களை வெளியிட் டுள்ளது. இதன் பத்தாவது இதழ் ஜனவரி - பெப்ரவரி இதழாக சிறப்பாக அழகான அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ளது. எழுத்தாளரும், பத்திரிக்கையா ளருமான அந்தனிஜூவாவை ஆசிரியராக கொண்டு வெளி வரும் கொழுந்து மலையக கலை இலக்கிய பேரவையின்
சிற்றம் கொள்ள தேவையில்லை - உன்
சிந்ததையை கொஞ்சம் புரட்டி பார்தன்
சுற்றம் பார்த்து படித்து விட்டால்
சுடர் விடுமா உலகிற்கு ?
உணர்மை சொலி
உனக்கென்ன தெரியும்
கனிந்தவர் இலக்கியம் - வைத்து
கதை சொல்ல வேண்டாம்?
மாற்றாண் மதியை
வெளியீட்டாகும். மனதார திருப்பி தொடர்பு "கொழுந்து" மற்றவர் மனதை மாற்றம் -உன் 57, மகிந்த பிள்ேஸ்,
மனதுக்கு ஏ(ண்) மாற்றம் வராதோ ? கொழும்பு - 6
2 எங்கள் மலையகம்

Page 13
பூரணவருகை கண்டு பூரணவத்தைபூரிக்கின்றது. జ్ఞాళ్లడా? కాసాగి, శ్" #2
*", " ❖«X°°ጇ
་ ༦, ༡༡་༡༢ ޗެ،
2%.%%;
,్నట్టు ఫ్య్న్యి : " கனடி நகர எல்லைக்குள் ஒரு ஓரமாக அமைதியாக அமைந்துள்ளது எழில் மிகு கிராமம்மான பூரணவத்தையில், தமிழ்,சிங்கள முஸ்லிம்,கிருஸ்தவர் என பல மொழி இன மக்கள் எந்த ஒரு இன மத பேதமுமின்றி சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பூரணவத்தை என்னும் புணர்ணிய பூமியில் ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்திருவிழாகடந்த 274.97 ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக பவனிவந்தது. அன்று வாழைமரம், மாவிலை தோரணங்களுடனர் பூரித்துப் புதுமணத்தோற்றம் கொண்டு வழிமேல் விழிவைத்து அன்னை பூரீ முத்துமாரியம்மன் வருகையை எதிர்ப்பார்த்து நின்றது.
திருவிழாக் கோலம் கொண்ட அந்த இரவு மெல்ல மெல்ல நகர, கதிரவனும் தன் கரம் வீசிச் சிரித்தான். மக்கள் வெள்ளம் மகிழ்ச்சியுடன் கும்பம் வைத்து விளக்கேற்றி ரீ முத்துமாரியம்மன் வருகையை எதிர்பார்த்துநின்றது கதிரவனும் அன்னையைத் தன் கரம் நீட்டி வரவழைக்க விநாயகர் , முருகன்சகிதம், ரீ முத்துமாரியம்மன், முதன் முதலாக வாசலுக்கு வந்து , பூரணவத்தை மக்களின் நீண்ட நாள் ஆசையை முறி முத்துமாரியம்மன் தேர் ஊர்வலம் வந்து நிறைவேற்றியது.
மாகியாவ பூரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா வருகை தர "பூரணவத்தை மக்கள் சேவை மன்றம்” எடுத்தமுக்கிய முயற்சி வெற்றி அளித்தது. அந்த மன்றம் பூரணவத்தை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து விட்டது. இனி வளர்ந்த வரும் புதிய தலைமுறைக்கும் இ மத, பேதமின்றிபல நற் பணிகளை செய்ய வேண்டும்.
எங்கள் மலையகம்
 
 
 
 
 
 

உண்மை அறிவோமே!
எஸ் - ஷா
பிரட்டுச்சங்கு ஊதியதும்
மலைக்கு விழுந்து ஒடுறோம் பெரியதுரை சின்னதுரைக்கு
சலாம் சாமி போடுறோம் நாயைப் போல நாளும் நாம் ஓய்வின்றியே உழைக்கிறோம்
நல்லரக உணவுகளை கனவில் மட்டும் காண்கிறோம்
பிள்ளைக்குட்டி புருஷன் எல்லாம் மறந்தே நாமும் வாழ்கிறோம் புல்லுவெட்டி முள்ளுக் குத்தி பொழுதெல்லாம் மாய்கிறோம் கொழுந்தைப் பறித்து கூடை நிறைக்க குன்று குழி தாவுறோம்
கொஞ்ச நேரம் பிந்தினாலும் அன்ரப் பெயரை இழக்கிறோம்
(69)
இருக்கும் விடு உனக்கே சொந்தம் என்றே சொன்னார் மந்திரியார் எம்விட்டோடு தோட்டம் ஒன்றும் சொந்தம் என்றார் தந்திரியார் ஓட்டை லயம் இன்னும் எங்கள் சொந்தமாக வில்லையே ஓட்டைக் கேட்டோர் எங்கே போனார் ஒருவருமே இல்லையே
பாடுபட்டுப் பாடுபட்டுப் பாழாய் நாமும் போனோமே கேடு கெட்டோர் சொல்லை நம்பி கேவலமாய் ஆனோமே காலன் நம்மை அணுகி வந்து கணக்கைத் திர்க்கும் முன்னமே காணி, விடு, மாடு சொந்தம் ஆகும் வழியைக் காணுவோம்
(6)
கட்சிச் சண்டை ஒழித்து நாமும் கூட்டு சேர்ந்து வாழ்வோமே காலமெல்லாம் ஒருங்கிணைந்து கூழக்குரல் கொடுப்போமே உழைப்போர் எல்லாம் ஓர் இனமே என்றே கூறி எழுவோமே உரிமைப் போர்கள் தோற்றதில்லை என்ற உண்மை அறிவோமே
breilassir IngoguuIzich
23

Page 14
கலாநிதிநியுட்டன் பெயரால் ஒரு பயிற்சி நிலையம்
தகவல் புசல்லாவ ராஜாராம்
கலாநிதி நரியுட்டன் குணசிங்கா மலையகத்தை நேசித்த ஒரு சமூகவியல் பேராசிரியர் மனித நேயமிக்கவர். நாவலப்பட்டியில் ஏப்ரல் 5ம் தகதி பிறந்தார். பேராதனைப்பல்கலைக்கழக பட்டத்தாரியானவர்.
இலங்கையின் முதலாவது மானிடவியல் மார்க்ஸ்பிய அறிஞரான அவர் இனவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். 1983 ம் ஆண்டு அக்டோபர் 31ம் திகதி அமரரானார்.
இவரின் பெயரால்" நரியுற்றன் குணாசசிங்கா ஞாபகார்த்தப் பயிற்சி நிலையம் "எனற ஒரு கருத்தரங்கு மண்டபம் 19.04.1997ல் கண்டியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நரிலையத்தரின் தறப்பு விழாவிற்கு சமூக அபிவிருத்த நரிலையத் தலைவரும் , கலாநிதி நியுற்றன் குணாசல்வாவாலி வெளிப்படுத்கப்பட்டவருமான திரு. பெ. முத்துலிங்கம் தலைமை வகித்தார். திரு. நரி ஹெட்டியாராய்ச்சி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் எம். சின்னத்தம்பி, செல்வி மேனகா கந்தசாமி மத்தரிய மாகாணசபை உறுப்பனர் திரு. ராஜாஉளம் வெட்ட கெய்யாவ,கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா ஆகியோர் கலாநிதி நியுட்டன் குணசிங்காவின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்தார்கள்.
24 spitalisir napGJush
 
 
 

மகளிரும் மாதவிலக்கும்
திருமதி. என். ஜெயந்தி - கண்டி
மாதவிலக்கு என்பது ஒரு புனிதமானதும் இயற்கையானதுமான நிகழ்வாகும். மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்து வழமையான தமது சகல காரியங்களையும் செய்யலாம். இறைவழிபாடு, புனித பயணங்கள், சகலருடனும் ஒட்டி உறவாடுதல் ஆகிய காரியங்கள் சந்தோஷமாக நிகழ்த்தப்படலாம். இன்று மாதவிலக்கு ஏற்படுவது என்பது "தீட்டு” என்று விலக்கப்பட்டுள்ளது. புனித காரியங்களில் இருந்து மாதவிலக்கு ஏற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தவறான செயலாகும். இந்து ஆலயங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள தெய்வங்கள் பலதும் பெண் உருவம் கொண்டவை. அம்மன் கோயில், கண்ணகி அம்மன் கோயில், சீதை அம்மன் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய சகல கோவில்களிலும் பெண் தெய்வங்களே குடி கொண்டு உள்ளன. இந்தக் கோவில்கள் எதுவும் எப்போதுமே மாதமொரு முறை தெய்வத்தின் மாதவிலக்குக் காலமாகக் கருதி மூடப்பட்டதில்லை, மூடப்படுவதுமில்லை.
மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில் வழிபாட்டுக்கு மக்கள் வருவதைத் தடுக்க மூடப்படுவதுமில்லை, ஆண்கள் வழிபாட்டுக்காக வருவதை தடை செய்வதுமில்லை. இந்த ஒரு விளக்கம் மாத்திரம் போதுமானது மாதவிலக்கு என்பது ஒரு புனிதமான செயல் என்பதை நிரூபிக்க, மற்றும் மாதவிலக்கு ஏற்படுவதனால் தான் பெண்கள் பெரும்பாலும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதில்லை என்றும் மாதவிலக்கு ஏற்படுவதனால் பெண்களது உடல் ஆரோக்கியமும், உள ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகின்றன என்றும் டாக்டர்கள் பரிசோதனை மூலம் கண்டு பிடித்துள்ளனர்.மாதவிலக்கு பெண்களுக்கு இறைவனால் அருளப் பெற்ற ஒரு கொடை என்றே கருதி நாம் சந்தோஷப்பட வேண்டும். மாதவிலக்குக் காலங்களில் பெண்கள் சுத்தமாக சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்து தமது அன்றாட சகல நடவடிக்கைகளையும் தயங்காதுநடாத்த வேண்டும்.மாதவிடாய் ஏற்பட்ட தாய் மாதவிடாய்க் காலங்களில் தெய்வமாகக் கருதப்படும் குழந்தைகளுக்குப் பாலுட்டுவதில்லையா? அதுவும் ஆண் குழந்தைகளை தமது மடியில் கிடத்தி ஆரத்தழுவி அன்புடன் பால் கொடுப்பதில்லையா ?
எங்கள் மலையகம் 25

Page 15
அப்படியே, மாதவிலக்கு என்பது ஒரு தீட்டான காரியமாக இருந்தால் மாதவிலக்குக் காலத்தில் தாயிடம் பால் குடித்த குழந்தைகளையும், விஷேடமாக ஆண் குழந்தைகளையும் தீட்டுப் பெண்ணின் பால் குடித்து வளர்ந்தவர்கள் என்று கூறி நாம் அவர்களை வாழ் நாள் முழுவதும் ஒதுக்கி வைக்க வேண்டும் அல்லவா ? 静 பெண்களை இழிவுபடுத்தி, அவர்களை சட்டங்கள் மூலம் அடக்கி ஒடுக்கி ஆண்களின் கைப்பாவைகளாக ஆக்கி வைத்துக் கொள்ள ஆண் இனவாதிகளால் ஆக்கப்பட்டள்ள சடங்கு, சட்டம், சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து புதுமைச் சமுதாயமொன்றை கட்டியெழுப்பஉலகப் பெண்களே நாம் ஒன்று கூடுவோம்.
பெண்கள் சமுதாயம் விடிவு பெறும் போது இந்த உலகமே (ஏன் இந்த ஆண்
சமுதாயம் கூட) விடிவு பெறும் என்பதை நாம் சகலரும் ஏற்றுக் கொண்டு பெண்களை மதித்து வாழ்வோமாக.
6A/II t d 6060lfa
மலையக தமிழாராய்ச்சி மாநாடு கடந்த ஆண்டு மிகச்சிறப்பாக கொட்டகலையில் ரீ பாத கல்வியல் கல்லுரரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய மலையகத் தமிழாய்சசி செயலகம் ஒன்று விரைவில் கொட்டகலையில் நிறுவுவதாக அமைச்சர் வி புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். இந்த செயளகம் , மலையகத்தின் ஆவணகாப்பகமாகவும், ஆராய்ச்சி நிலையமாகவும், தகவலி மையமாகவும் திகழும்.
-&gju Jit
1. செல்வி இ. தமிழரசி
ஈச்சாந்தீவு - கிண்ணியா 2. இறாகலை விஸ்வா
எங்கள் மலையகம்
 
 
 
 

вам у Б0šлis
aðalrige 67ti. Tamálafjøflyabi
ஊர் முழுவதும் இப்போ ஏராளமான கட்டாக்காலி நாய்கள், ஆட்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலெல்லாம் வாலாட்டிக் கொண்டும், குரைத்தக் கொண்டும் தெருவில் திரிவத தெரிகிறது. திறந்துக்கிடக்கும் வீடுகளுக்குள்ளேயும் அவைகள் புகுந்த குடும்பம் நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கும்இல்லை.
"ஆகையினாலே, அவரவர் வீட்டுக் கதவுகளை அவரவர்களே கவனமாக மூடி வைத்துக் கொள்ளாது கோட்டை விட்டுவிட்டுப் பிறகு யாரையும் குறை கூறாதீர்கள்" என்றே கூவி வீதியில் நின்ற சிலருக்கு விரிவுரை நிகழ்த்தி விட்டுப், வீரய்யா வீடு நோக்கி விரைந்த வருகிறார்.
அவரத மனைவி செல்லம்மா வீட்டு வாசலில் நின்று கொண்டு, திறந்த கிடக்கும் தனது வீட்டுக் கதவினுாடாக உள்ளே பார்த்துக் கொண்டே.
இந்த நாசமாப்போன மனுஷன். வீட்டுக் கதவே ஒழுங்காச் சாத்தாமே தொறந்து போட்டுப்புட்டு போயி ரோட்டுரோட்டா நாயா அலஞ்சி திரியிறதுனாலே, இந்தப் பொட்டைச் சனியன் வீட்டுக்குள்ளே புகுந்து, பிரசவம் பண்ணிச்சி "
"இண்ணைக்கி வீட்டுக்கு வரட்டும். இந்த ஆளுவுட்டு வட்டக் குடுமியெப்
புடிச்சி அறுக்குறேன்" என்றே அவள் தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பதை அவர், அவள் பின்னாலே வந்து நின்று கேட்டக் கொண்டே.
‘என்னடீ செல்லம்மா! நீ ஓவராக் கதை அளக்குறே என்றே அவர் கேட்பதற்கு (gp65656).............. வீட்டுக் குள்ளிருந்து நான்கு நாய்க் குட்டிகள் முனங்கிக் கொண்டே, கன்னி நடை பயின்று, வெளியே காலார வருவதைக் காண்கிறார். ஆளரவம் கேட்டு, செல்லம்மா பின்னே திரும்பியததான் தாமதம், அவளை ஒரு வார்த்தையும் பேசவிடாது, அவள் வாயைத் தனது வலதகையால் இறுக மூடிக் கொண்டு.
எங்கள் மலையகம் 27

Page 16
நாய்க் குட்டிகள் நான்கும் வெளியே வரும்வரையிலும் காத்த நின்றுவிட்டுப், பட்டென அவளுடனேயே வீட்டுக்குள்ளே பாய்ந்து, கதவை இறுக்கி மூடுகிறார்.
வீட்டுக்குள்ளே மின்விளக்கை எரிய விட்டதுதான் தாமதம் . ர்ர்.ர்ர்ர் என்றே உறுமும் சத்தத்தைக் கேட்டு, வீரய்யா திகைத்த நிற்கிறார். செல்லம்மா, ஒரு ஏளன நகைப்புடன். 'நாய்க் குட்டி நாலயும் நைசா வெளியிலே உட்டுப்புட்டுக் கதவைச் சாத்துனது ஒரு பெரிய கெட்டித்தனமுன்னு தானே நெனச்சீங்க ጎ•
" அந்தாப் பாருங்க அதகவுட்டு அம்மா குட்டி போட்ட பொட்டை நாயி - ஓங்கவுட்டு மெத்தைக் கட்டில் மேலேயே ஏறிச் சுத்தமாப் படுத்திருக்கு ! "
சரி ! சரி ! அது கிட்டத்தலே போயித் தொலைஞ்சிறாதீங்க. பக்குண்ணு பாஞ்சிக் கடிச்சிக் கொதறிப்புடும் ! "
" அப்புறம். ஆசுப்பத்திரிக்கும் வீட்டுக்கும் நாயா அலெஞ்சி, தொப்புளெச் சுத்தி ஊசி குத்திப் போட்டுக்கிற, இப்ப ஓங்களுக்கு வயசு சரியில்லே ' என்கிறாள்.
"சத்தம் போட்டுப் பேசாதேடீ ! சண்டாளி செவருக்கும் காத இருக்கு" - வீரய்யா.
* ஒங்க வீட்டுக் கதவையே, ஒங்களுக்கு ஒழுங்காச் சாத்திக்கத் தெரியலே இந்த லெச்சணத்தலே. ஒங்க மொகறெக் கட்டைக்கு என்னாத்தக்குங்க ? இந்த ஊருக்கு ஒபதேசம் பண்ணுற வெங்காய வேலே ! " - செல்லம்மா.
* காதோடு வாயா, வேணுமுண்ணாயப் பேசித் தொலைடீ ! நாலு பேருவுட்டுக் காதலே விழுந்தா. அப்பறம் நான், நாலுபேரைப் போல, வீதிலே நடக்க ஏலாது. > மானம் போகும் ! வீரய்யா வெகுண்டெழுகிறார்.
பூனே அப்படித்தானாம் ! கண்ணே மூடிக்கிட்டுப் பாலே. களவுலே குடிச்சா. வெளியே ஒண்ணுமே. யாருக்கும் தெரியாதண்ணு நெனெச்சி. தம்புக்கட்டை அடி வாங்குனிச்சாம் ! " V * அப்படித்தான் இருக்கு, இப்ப ஓங்ககதையும் ! - செல்லம்மா உபதேசஞ் செய்கிறாள்.
* கதைய உட்டுப்புட்டு, வாடீ ! ரெண்டு பேரும் சேந்த யோசிப்பம். இப்ப எப்படி ? குட்டி பொட்ட இந்த பொட்டே நாயே வெளியே அனுப்புறதண்ணுா. "
பக்கத்த வீட்டாரை உதவிக்குக் கூப்பிடுவோமா ? " என்றே செல்லம்ம பயபக்தியுடன் கூறவும். வீரய்யா, செல்லம்மாவின் காதோடு தன் வாயாக கசு குசு வென ரகசியம் பேசுகிறார். அடியே ! அறிவு கெட்டவளே செல்லம்மா ! ஒனக்கு முளே கீழே இருக்காடீ ? அவனுக நம்ம வீட்டக்கு முன்னாடி வந்து கூடி நிண்ணு.
23. '. எங்கள் மலையகம்

* என்னா நடந்திச்சீண்ணு, கேட்டா. நீ என்னாடீ சொல்லுவே ? " * பொட்டெ நாயி ஒண்ணு எங்க ஊட்டுக்கு உள்ளே பூந்து. குட்டி நாலேப் போட்டுப்புட்டு. ஓங்கவுட்டுக் கட்டில் மேலே ஏறி. ஒய்யாரமாப் படுத்தக் கிட்டு. ஒங்களையும் என்னையும் கடிச்சிக். கொதறப்பாக்குத. தயவு செஞ்சி, அதே வெளியிலே வெரட்ட. ஒதவி செய்யுங்களேண்ணு கேப்பேன் ! "
* அடியேய் ! ஏன் மூஞ்சிலே கரியெப் பூசிப்பாப்கோணுமுண்ணு. நீ கங்கணங் கட்டிக்கிட்டு இருக்கிறியாடி ? ?
ஏன்யா ? மிஸ்டர் வீரய்யா ! ஒங்களுக்கோ, ஒங்க வீட்டுக் கதவையே, ஒழுங்கா மூடி வைக்கத் தெரியலே ! இந்த லெச்சணத்தலே தான். நீங்க, ஊருக்கெல்லாம் ஒபதேசம் பண்ணிக்கிட்டுத் திரிகிறீகளோ ? ஒங்க மூஞ்சியையும் மொகறைக் கட்டையையும் பாருண்ணு.
* எவனாச்சும், நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகிற மாதிரிக்கி, நறுக்குண்ணு கேட்டுப் புட்டாண்ணா. அப்புறம் நான் உயிரோடே இருப்பேனாடீ ? "
* நீ தாலி அறுத்துப்புட்டு. கம்மணாட்டி ஆகோணுமுண்ணா. அய் ஹேவ் நோ ஒப்ஜெக்ஷன் நீ, யாரெ வேணுமுண்ணாலும் ஒதவிக்குக் கூப்புடு : “ வீரய்யா சவால் விடுகிறார்.
* அப்ப, இண்ணெக்கி ராத்திரி, எப்புடிங்க ? நீங்க, படுத்துத் துரங்கப் போறிங்க !" செல்லம்மா கெஞ்சுகிறாள். வாயே முடிக்கிட்டு, நீ ஓம் பாட்டுலே, பாயெ விரிச்சி, அந்த மூலையிலே படுத்தத்தாங்கு !."
* நான் ஏமுட்டுத் தோளுத் தண்டெ தரையிலே விரிச்சி, இந்த மூலையிலே படுத்துப் பெரண்டு இரவெக் கழிக்கிறேன் "பெட்டை நாயும் குட்டிகளும் தாமா வெளியிலே போகிற வரைக்கும், நான் தரையிலேதான் படுப்பேன் ! இது சபதம் " என்கிறார் வீரைய்யா.
* சரி சரி டோண்ட் வரி முடிஞ்ச மட்டும் இரெண்டு பேருமே, இந்த ஒரே பாயிலே படுத்து மெனிஜ் பண்ணுவோம் ! என்னாங்க ? என்றே செல்லம்மா, இரண்டு மூன்று முறை குரல் கொடுத்தும், வீரய்யா மெளன விரதம் பூண்டு, தோள் தண்டைத் தரையிலே விரித்துப் படுத்து, செத்த சவம் போல கிடக்கிறார்.
* சரி : அப்ப, ஒங்க பிரியம் போலச் செய்யுங்க ! " * தயவு செஞ்சி, கோவிச்சுக்காமே நாயேதம் லபக்குண்ணு பாஞ்சி, ஓங்களே நறுக்குண்ணு கடிச்சாலும், கடிச்சுப்புடும் ! ஆமா ! பீ கெயாபுல் கவனம் - நைசா எழுந்திரிச்சி. சுவிச்சை ஒஃப் பண்ணி. லைட்டை அணைச்சுப்புட்டுப். படுங்க.
எங்கள் மலையகம் 29

Page 17
“எனக்குத் தாக்கமா - ஓங்களேப் பாத்தா, எனக்குத் தக்கமா இருக்கு ~ கண்ணெச் சொழட்டுத ! " Y
* தியரியே, ப்ரெக்டிசுலே போடாததனாலே, இனித் தெருவுலே போக முடியாததை. விடுங்க. "
* இப்ப, வீட்டுக் குள்ளேயே ஓங்களுக்கு நிம்மதியாத் தாங்க முடியலியே. பார்க்குறீங்கதானே : " செல்லம்மா ? - வீரய்யா
1. நாணயம் இல்லாத 4. உண்மை இல்லாத SLUTLITÎ LI3)LLITGif 2. நேர்மை இல்லாத 5. கொள்கை இல்லாத
அரசியல்வாதி பேச்சாளி 3. ஒழுக்கம் இல்லாத 6. அறிவு இல்லாத சீர்திருத்தவாதி படிப்பாளி
தொகுப்பு - ஆர். நீசேர
Computer Education & Training, Computer Sales & Maintenance Computer Type Setting & Printing
25811 D.S.Senanayake Street, Kandy
3O எங்கள் மலையகம்
 
 

மணிக் கவிதைகள்
பள்ளிக் கூடத்திலும் பல்கலைக் கழகத்திலும்
பட்டத்தைப் பெறலாம் படிப்பையும், பண்பையும் அல்லவே அல்ல
மனங்களைக் கவர்ந்து மனங்களை இணைத்து மகிழ்வைத் தருவதெதுவோ அதுவே மக்கள் கலைகளாகும்.
மற்றவரை நம்பாதவன் மற்றவரை மதிக்கதெரியாதவன் மற்றவருக்கு உதவாதவன் மக்கள் கலைஞனே அல்ல.
... figslist A
6/ժնj ?
சாமிமலை சு. சிவனு
" UTui ” (p-hjälsi விழித்து விட்டும் பயணம் போவது build (d6)TICTE
பாபர் சலூனில்
பயணம் போக 3.GJd Jë dogj
du déb603Fisi ?
நான், நாமாகும் போது
என் எமதாகும் போது நீதி நியாயமாகும் போது தண்டனை தண்டிக்கப்படும் போது மிருக நேயம் மாறியிருக்கும் s மனித நேயம் வளர்ந்திருக்கும் ! இவை எப்போது நடைபெறுமோ ? அப்போது உயிரினங்கள் யாவும் 3qGJTG அழிந்து போயிருக்குமோ ?
மாகியாவ ஆர். ருந்திரன்
எங்கள் மலையகம்

Page 18
ரத்ன தீபம்-1996
இருட்டடிப்புச் செய்து பல தசாப்தங்களாக மறைத்தே வைக்கப்பட்டிருந்த மலையகக் கலை இலக்கிய மாணிக்கச் சுடர்களை இனங்கண்டு கெளரவித்த பெருமை "ரத்ன தீப" த்தையே சாரும்.
கெளரவிக்கப்பட்ட சுடர்களின் விபரம்.
1 கவிச்சுடர் : 7 பத்திரிகைத் துறைப் பண்பாளர்:
(திருமதி) புஸ்ஸெல்லாவை இஸ்மாலிஹா எம். எஸ். குவாலிதீன் (சமாதானத்திவாண்)
2 பரத நாட்டியத் தாரகை : 8 பல்துறை நாடக ஈடுபாட்டாளர் :
(திருமதி) வசந்தகுமாரிசூரியகுமாரன் ஏ. சந்தனம் (சமாதான நீதிவான்)
3 மக்கள் கவிஞன் : 9 தமிழ்மணிபத்திரிகையாளர்: கண்டி எம்.ராமச்சந்திரன் ls. . சிவம் (சமாதான நீதிவாண்)
4 நடிகவேள்: 10 கலைச்சுடர் w
எஸ்.விஸ்வநாத ராஜா S. M. A. ஹசன் எழுத்தாளர்
5 சங்கீதக் கலைஞர்: 11 கவிச்சுடர், கல்லூட்டுக் கவிராயர்
ஏ. ஸ்டீபன் M.H .Mஹல்ம்தீன்
6 பல்துறைக் கலைஞர்:
முத்து சம்பந்தர் (சமாதான நீதிவான்)
பற்றிய விபரங்கின்
32 எங்கள் மலையகம்
 


Page 19
t P. C. prilinierunt,
Nath
IKI,
TPhone : 0
Prine & Design by illa. De Sigis -
 

ܒܒܡܨ.
rail.
агапроth nda sale.
8-242 17-32574
Kamidy