கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கு 1995.08

Page 1
இலக்கியம் உனக்கு சுபாவம் இயக்கம்தான் உன் சுவாசம் தோழமை உனக்கு ரத்தபந்தம் வாழ்க்கையே உனக்கு யுத்தகளம்
சூர்யமுகி
(சூரியகுளியல்)
+*
 
 


Page 2
வில்லி தேவசிகாமணி 660)6OTG) இலக்கிய பரிசுகள் திட்டம் 1995
மேற்படி பரிசுத் திட்டத்திற்கு 1995-ல் வெளியான சிறுகதைத் தொகுப்புகளை அனுப்பி வைக்கலாம். ஒவ்வொன்றிலும் நான்கு பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும். உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ளலாம். நூல்கள் வந்து SSog வேண்டிய கடைசி நாள் :
31-1-1996 அனுப்ப வேண்டிய முகவரி : CHE. GNANAN, Secretary LDM-PS 6/714, Asari Colony, Sivakasi West - 62624 (INDIA)
ELAKKU ADWT. TARIFF
Full page inside Half page Fu ! i page Front Cover inside Ha f page Front Cover inside Full page Back cover inside Half page Back cover inside Full page
Rs 600 OO Rs 300 OO
Rs 900 OO
Rs 450 00
Rs 800 00
Rs 400 OO
Back cover outside Rs 100000 DD Cheque should be made
in favour of
DEVI PRASURALAYAM
Address :
ELAKKU
21158, Moovarasampattu
main Road, Madras - 600 09

காலச்சுவடு (காலாண்டிதழ்) தனியிதழ் : ரூபா 20 ஆண்டுச்சந்தா ரூபா 80 தொடர்பு முகவரி: காலச்சுவடு, 151, Gas. L. GarstGS, நாகர்கோவில்
629001
ey feastf 她 (இருவார இதழ்) பிரதம ஆசிரியர் தொடர்பு முகவரி :
(Firsår
இல, 4. ஜெயரட்ன மாவத்தை
டிம்பிரிகஸ்ஸாய, கொழும்பு-05
உன்னதம் (காலாண்டிதழ்) ஆலத்தூர் அஞ்சல் 2. 455 688 سه தனி இதழ் ரூபா 15.00 ஆண்டு சந்தா: ரூபா 60.00
6a) u fiħ
காலாண்டிதழ்)
காலசுப்பிரமணியம் தொடர்புக்கு : கே. சுப்பிரமணியன் பெரியூர், சத்தியமங்கலம்-838 401
நிகழ் (காலாண்டிதழ்) தனி இதழ்: ரூபா 20123. காளீசுவரர் நகர், கோவை-641 009
மல்லிகை ל י ஆசிரியர்: டொமினிக் ஜீவா முகவரி:
234-B, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
sâspa cur 10-00
சிற்றிதழ் செய்தி (இருமாத இதழ்) 1. சம்பத் நகர், சூளேஸ்வரன் பட்டி, பொள்ளாச்சி.642 006
கிழக்கு
த. பெ. எண். 9, திருத்துறைப்பூண்டி-614 718 தனி இதழ்; ரூபா 12.00 ஆண்டுச் சந்தா : ரூபா 60.00 வெளிநாடு : ரூபா 300.00
விதையும் விருட்சமும்
முல்லை அமூதன் (ஈழம்)
உன் தாத்தா அசட்டையாக எறிந்த விதைதான் விருட்சமாகி நிற்கிறது. எப்போது நீ
T6T-6 விதைக்கப் போகிறாய்?
நாளை உன் தோழனுக்கு வரலாறு சொல்ல நான் தேவைப்படலாம்!

Page 3
என் கதை
GS5, L Teoff u sid
எழுத்து எனக்குத் தொழில் அல்ல. பொழுதுபோக்குமல்ல. ஏறக்குறைய தான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருடகால எல்லைக்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறுசிறு மன ஆசைகளுக்காகவும், விளம்பர மோகத்துக் செலவு செய்தேன் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டிய ல்லை.
கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப் புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அத்துடன் சுமார் 20 வயது வரையிலே நான் ஏற்றுக் கொண்ட அரசியல் வேலைகள், கிராமப்புறங் களுக்கு இன்றியமையாததாயும் இருந்தமையால் எனது பெரும்பகுதி கவனத்தையெல்லாம் அதில் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அது கிராமப் புறங்களில் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவியாகவும் இருந்தது.
கிராமப்புறத்து மக்களிடம் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. அரசியலைப் பொதுமக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளவும் அவர்களிடமே அவைகளைப் பரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்று, தவறானவைகளை நிராகரித்தும் தான் அரசியல் அனுபவங் களைப் பெறவும் வேண்டும். அன்று தேசிய ரீதியாகவும், சர்வதேசிய ரீதியாகவும் சரியான அரசியல் போதனைகளைப் பெற்றுக்கொள்வதற் கான தமிழ் நூல்கள் மிகவும் அருந்தலாகவே இருந்தது, இந்த நிலைமை, நாட்டையும், மக்களையும், கிராமங்களையும் பார்த்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களையே அரசியல் முதலீ டாகக்கொள்ள எனக்கு ஏற்பட்ட வாய்ப்பு, என்னை மேலும் மேலும் கிராமப்புறங்களை ஊடுருவிப் பல்வேறுபட்ட அனுபவங்களை மேலும் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு உற்சாகத்தைத் தந்தது எனலாம்.
ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம்கார்க்கியினுடைய நூல்கள் பல தமிழில் வந்திருந்தமையால் அவைகளில் சிலவற்றை நான் படித்
i ) இலக்கு
 
 

தேன். முதன் முதலில் கார்க்கியின் "தந்தையின் காதலி என்ற நாவலையும், அமெரிக்காவிலே" என்ற அவரின் கட்டுரை நூலையும் படித்தேன். விஷயங்களைச் சொல்லும்போது கார்க்கியால் ஆளப்பட்ட முறைகள், அவைகளில் இருந்த எளிமை எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. "தந்தையின் காதலி" என்ற அவரின் நாவலைப் படித்த போது ஏற்பட்ட உந்தலினால் "வீராங்கனைகளில் ஒருத்தி" என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். இது வரை அக்கதை நான்கு தடவைகள் மறுபிரசுரமாகியுள்ளது. என்னுடைய சிறுகதை களில் எனக்குப் பிடித்தமான முதல்கதை அது. அக்கதையில் என்னால் பாவிக்கப்பட்ட சொல் பிரயோகமுறையும், எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளின் புறப்பாடும் எனது வேறேந்தக் கதையிலும் இருப்பதாக தான் கருதவில்லை.
மாக்ஸிம் கார்க்கியின் தாய்” நாவலை நான்படித்தேன். நீண்ட காலமாக அது என்மனதில் கிடந்தது, ரஷ்ய நாட்டின் விடுதலைக் கான நடைமுறைச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அந்தத் தாயைப்போன்று நமது நாட்டினதும் சமூகத்தினதும் விடு தலைக்காக அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்து வழி நடத்தக்கூடிய ஒருபாத்திரம் ஏன் பிறக்கக்கூடாது என எண்ணினேன்; தேடினேன்; ச0 பவங்களைச் சேகரித்தேன். அதே தாய்போன்று எனது கண் ணுக்கு முன்னால் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் பிடித்துவிட் டேன். அவரின் நடைமுறை வாழ்க்கை முறைகளை அவதானிக்க, அவச் பேசும் சொல் முறைகளைச் சேகரிக்க, அவரின் உடை நடை பாவனைகளை அறிந்து கொள்ள, மொத்தத்தில் அவரைச் சரியானபடி நான் படித்துக்கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் கழித்தேன். அவருடைய யாழ்ப்பாண நடைமுறை வாழ்க்கையோடு மாக்ஸிம்கார்க் கியின் தாயையும் சேர்த்துக் கணக்கிட்டு, சமப்படுத்தி, நான் கற்றுக் கொண்ட அனுபவங்களையும் சேர்த்து இராசாண்ணர்’ என்ற அவரை "ஐயாண்ணர் ஆக்கினேன். பஞ்சமர்" என்ற நாவல் பிறந்து விட்டது.
யாழ்ப்பாணத்து வாழ்க்கைமுறை, யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணத்துச் சம்பிரதாயங்கள், யாழ்ப்பாணத்து உடை நடை பாவனை, யாழ்ப்பாணத்து வீடு வாசல் அமைப்பு, யாழ்ப் பாணத்து விவசாய வாழ்க்கை வளர்ச்சி, யாழ்ப்பாணத்து அரசியல் நடைமுறைகள், யாழ்ப்பாணத்து மண்ணின் அவலங்கள், வீழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவற்றில் எதையுமே பிறநீங்கலாகி நிற்கவிடாமல் பஞ்சமரில் சகலதையுமே உள்ளடக்கியதில், நான் கார்க்கியையே வழிநடத்தல்காரனாக ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆயினும் பஞ்சமரில் என்னால் பிறப்பிக்கப்பட்ட பாத்திரங்களில் யாழ்ப்பாண மண்ணின் இயல்புகளுக்கு மாறான பல குறைபாடுகள் இருப்பதை இப்போது என்னால் உணரமுடிகிறது. இதற்குப் பின்னானும் எனக்கு இப்படி ஒருநாவல் எழுதும் வாய்ப்புக் கிட்டுமோ என்ற ஐயப்பாட்டால், யாழ்ப் பாண மண்ணில் நடந்த நான் பார்த்த, நான் அறிந்த என்னால் அறியப்பட்டவர்கள் அறிந்த பல சம்பவங்களைக் திணித்ததின் மூலம், நாவல் என்ற உருவத்துக்கப்பால் பஞ்சமர் ஒரு சம்பவக்கோர்வை என்ற குற்றச்சாட்டை மற்றவர்கள் சுமத்த வாய்ப்பளித்திருக்கிறேன்
இலக்கு | i

Page 4
என்றே கூறவேண்டும். இந்தப் பஞ்சமர் நூலுக்குப் பின்பு "உருவம் என்பது எடுத்துக்கொள்ளப்படும் கருப்பொருளாலும், அதை வெளிக் கொணர்வதற்கான ஆள்வினாலும் தன்போக்கில்ேயேதான் அமைவ தாகும், இவைகள் தன் இச்சையாகவே இந்த உகுவம் என்பதனை அமைத்துக்கொள்கின்றன" என்ற கருத்துக்கு நான் வந்துவிட்டேன்.
பஞ்சமருக்குப் பின்னால் என்னால் எழுதப்பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல். பஞ்சகோணங்கள், தண்ணீர் ஆகியவைகளும் முருங்கையிலைக்கஞ்சி, மையக்குறி, சொக்கட்டான் ஆகிய தொடர் நாவல்களும் உருவத்தைப் பொறுத்தமட்டில் எனது பஞ்சமரின் பிறப் பிலிருந்து அந்தவழியைப் பின்பற்றியவைகளேயாகும். كم
எம்மையும் எம்மைச் சுற்றியும் சதா பலவேறுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நாளாந்த நிகழ்வுகளுக்கூடாக சுழி ஒடிச் செல்வதுவே வாழ்க்கையாகி விட்டது. பெருமளவில் இந்தச் சுழிஓட்டத்தையே சரிவரச் செய்து முடிப்பதில்தான் மனிதனின் கவனமெல்லாம். பல காரியங்கள் அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாவற்றையும் அவன் தேவையெனக் கருதுவதுமில்லை. W
என்னுடைய நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ்வொன்றிலும் பல புதிய புதிய நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். அவைகளைப் படிக்கும், போதுதான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உள்ள கனதியைப்புரிந்து கொள்வதாகப் பலர் கூறுகின்றனர். இதிலிருந்து ஒரு உண்மையை என்னால் கற்றுக் கொள்ளமுடிகிறது. அதாவது "என்னால் கிரகிக்கப் படும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளாக இருப்பதால்தான், அதை எழுத்தில் படிக்கும்போது அது மற்றவர்களுக்குக் கனதியைக் கொடுக்கிறது" என்பதாகும்.
"சமூகத்தில் பல உண்மைகள் அன்றாடம் நடக்கின்றன. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் எழுத்தில் கொடுத்து விடவேண்டுமா?" என்ற ஒருகேள்வி இயல்பாகவே உங்கள் மனதில் எழ இடமிருக்கிறது. இதற்கு நான் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். 'தனிமனிதனதும் அல்லது அதற்கும் மேலாக முழு உலகத்தினதும் பொதுவான மனுசீக உணர்வினை. இலேசாகவேனும் தட்டிவிடக்கூடிய நாதக் கூர்களைக் கொண்டவைகளாக எவை எனக்குப்படுகின்றனவோ அவற்றை மட்டுமே எழுத்துருவில் வடிப்பது" என்பதாகும்.
W இருபது ஆண்டுகளுக்குமுன் நான் "அசை" என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப் படும் பொன்னம்மாள்" என்ற ஒரு விபச்சாரியின் கதை அது. அவளுக்கு நடுவயதாக இருக்கும்போது நான் அவளைக் கண்டிருக்கி றேன். பேசியிருக்கிறேன். அவளையும் அவளின் வாழ்க்கை முறை களையும் அவதானித்திருக்கிறேன். பெரிதும் பொய்க்கலப்பின்றி அவளின் வாழ்க்கையை எழுதமுற்பட்டு, அதை எழுதிப்பிரசுரித்தபின் (தொடர்ச்சி பக்கம் 66)
iv இலக்கு
 

இலக்கு
காலோoண்oடி0த0ழ்
h6act
15 ஆகஸ்டு 995
※※
வேல்ரக்கானது
ஆசிரியர் : தேவகாந்தன்
மே 1 லிருந்து இலக்குவுக்கான புதிய முகவரி :
இலக்கு 2158, மூவரசம்பட்டு மெயின் ரோடு, சென்னை - 600 O91.
ELAKKU 2|158, Moovarasampattu Main Road, Madras - 600 09,
(INDIA)
A Magazine for literary criticism and creative writing,
Greslf 魏 w %
0 கே. டானியல் பற்றி
அவளின் படைப்புகள் ப்ற்றியான கட்டுரைகள் o இலக்கியச் சந்திப்பு:
காரண துரைக்கண்ணன்
0 நூல் விமர்சனங்கள்
GasTL.Lir filshuîtrô
கரந்த் பற்றி
கட்டுரை 0 கவிதைகள் o ஈழத்து நர்வல் வரிச்ை-3

Page 5
மஹாகவி கவிதைகள் - ஒரு மதிப்பீடு
கலாநிதி நா. சுப்பிரமணியன் தமிழ்த்துறை, யாழ். பல்கலைக் கழகம்
இத்தகைய பெருமை மிக்க யாழ்ப்பாணத்தின் சமூகத்திற் காணப் பட்ட போலிச் சடங்காசாரங்களில மஹாகவி கொண்ட வெறுப்பே சடங்கு என்ற காவியத்தின் அடிப்படை. அப்போலிச் சடங்காசாரங் களை வைத்து வன்னிப்பிரதேசம் சென்று வாழ முயலும் இளங்காதலர் களின் கதை அது.
மஹாகவியவர்கள் நடுத்தர வர்க்க சமுதாயத்தின் மீது கொண்ட அனுதாபம் ஒரு சாதாரண மனிதனது சரித்திரமாக விரிந்தது. நடுத்தர வர்க்கத்தினருள் மேல்மட்ட வர்க்கத்தினரைப் பின்பற்றிப் பொருள்ட்டி உயரவோ அன்றேல் தொழிலாள, விவசாய மக்களுடன் இணைந்து கொள்ளவோ முடியாத நிலையில் தனிமைப் படுத்தப்பட்ட ஒரு பிரிவின ரின் கதை இது. வாழ்க்கைக்கு ஒரு திட்டவட்டமான குறிக்கோள் இல்லாத நிலையிலும் அதனை இயல்பான கோணத்திலே தரிசித்து வாழ்ந்தே தீரவேண்டுமென்று முனையும் ஒரு சராசரி சாதாரண மனித னின் பிறப்பு முதல் இறப்புவரையான வரலாறு இது. அம்மனிதனின் செயல்கள் அனுபவங்கள் என்பன இக்காவியத்திற் காட்சிகளாக விரி கின்றன. இக்கிராமத்திற் பிறந்து நகரத்திற் குடியேறி வாழ்ந்து பின் னர் கிராமத்திற்கே மீண்டு வந்து மடிந்துபோகும் வகையில் அமையும் இக்காவியக் கதைப் போக்கினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் - குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்திற் பிறந்து கொழும்பு சென்று உத் தியோகம் பார்த்துப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கே மீண்டு இயற்கை எய்தும் சமூகத்தின்-ஒரு காலகட்ட நிலை வெட்டுமுகப் பார்வையாகத் தெரிகிறது.
மஹாகவியின் மற்றொரு காவியமான கந்தப்ப சபதம் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உலகை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஏகாதி பத்திய உணர்வினைப் புலப்படுத்தி நிற்பது. இது மஹாகவியின்
உலகப் பார்வையைக் காட்டுவது.
இவ்வாறு சமகால உணர்வு, சமூக உணர்வு, ஆழமான மனிதாபி மான நோக்கு என்பவற்றின் அடிப்படையில் யதார்த்த அணுகுமுறை
2 இலக்கு
 

யிற் கவிதைகள் படைத்த மஹாகவியவர்கள் அவ்வப்போது சார்ந்து நின்ற அரசியல்-சமூகச் சிந்தனைகளையும்:காதல்-குடும்ப உறவுணர்வு களையும் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
மஹாகவியவர்கள் தமது இலக்கிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலே பொதுவுடமைச் சிந்தனையாற் கவரப்பட்டிருந்தார் என்பதற்கு 27-6-1943 ஈழகேசரி இதழில் பண்டிதர் என்ற புனைப் பெயரில் அவர் எழுதியுள்ள "வானகம்’ என்ற கவிதை தக்க சான்றா கின்றது. மதியை முதலாளியாகவும், விண்மீன்களைப் பாட்டாளிகளாக வும் உருவகித்து அமைந்த கவிதை அது. விண்மீன்களுக்குரிய ஒளியைச் சுரண்டியே மதி என்ற முதலாளி முழுமதியாகக் கொழுக்கி றான் என்றும், அம்மதி பிறையாகத் தேயும்போது விண்மீன்கள் ஒளி சிறந்து ஆனந்தமடைவதாகவும் அவர் கற்பனை செய்கிறார். பாட் டாளிகளான விண்மீன்கள் ஒன்று திரண்டால் மதி முதலாளி பின்னம் செய்யப்படுவான் என்பதை,
சின்னச் சின்னச் சுடர்கள் தான்
சேர்ந்தால் பெரிதாய் ஆகாதோ
மின்னலாகி முதலாளி
மீது பாய்ந்து அன்னானை
பின்னம் செய்ய மாட்டாவோ?
பிரட்டியுருட்டி எறியாவோ?
என்ற வினாவால் உணர்த்துகிறார், அத்தகையபுரட்சி எழும் என்பதை
திறந்த கடலின் மடை போலே
திக்கற்றவர்கள் சேர்ந்தங்கே
பறந்து வந்து எதிர்த்தார்கள்
பாட்டான்பாடு முதலாளி
பிறங்கி நின்ற செஞ்சீற்றம்
பிளந்து விண்ணை மோதியது
உறங்கும் நீதி எழுத்தங்கே
ஊழிக்கலகம் செய்ததுவே"
என்ற அப்பாடலின் இறுதியடிகளால் சுட்டுகிறார். மஹாகவி அவர்கள் தமது ஆரம்ப காலக் கவிதைக் கையெழுத்துப் பிரதிகளின் பின்புற அட்டைகளில் சுத்தியும் அரிவாளும் (பொதுவுடைமைச் சின்னம்) கைப்பட வரைந்திருப்பார் என எம். ஏ. நுஃமான் தெரிவித்துள்ள தகவல் (ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், அறிமுகக் குறிப்புக்கள் ப. 2) மஹாகவியின் ஆரம்ப கால பொதுவுடமைச் சிந்தனைச் சார்பை மேலும் உறுதி செய்து நிற்கிறது. சக இலக்கியப் படைப்பாளியும் பொதுவுடமை அரசியலில் ஈடுபட்டவருமான அ.ந. கந்தசாமியின் தொடர்பு இவரை அச்சார்புக்கு உரியராக்கியிருக்கலாம் என்பது உள்கிக்கக் கூடியதே. எனினும் பிற்காலத்தில் மஹாகவி கோட்பாடு ரீதியான பொதுவுடைமைச் சிந்தனைக்குள் நிற்காமல் தமக்கெனத்
இலக்கு / 3

Page 6
தனித்த சமூகப்பார்வையை வளர்த்துக் கொண்டார் என்பதை அவரது கவிதையாக்கங்கள் உணர்த்தி நிற்கின்றன.
1950-60 களில் ஈழத்து அரசியலில் தமிழரது இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றபொழுது மஹாகவியும் சமகாலத்து இலக்கியவாதி கள் பலரும் அதனையும் கவனத்திற் கொள்ள வேண்டியவர்களாயினர். 1956ஆம் ஆண்டு ஆன் மாத ‘தேன்மொழி கவிதை ஏட்டில் மஹாகவி பண்டிதர் என்ற புனைபெயரில் எழுதிய கவிதை இது:
ஈழத்தில் வாழ இயலா திணித்தமிழென் றாழக் கடலுள் அமிழ்ந்த அது-சூழினென் சிங்களத்தைக் கற்பீர்; சிறு பதவி வாய்க்குமேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கு. தனிச்சிங்களச்சட்டம் நிறைவேற்றப்பட்ட சூழ்நிலையில் பாடப்பட்ட இக்கவிதை, தமிழ் அரச பணியாளரில் ஒரு சாரார் தம் பதவித் தேவைக்காகச் சிங்களத்தைக் கற்று எப்படியும் வாழ்ந்து கொள்வார்கள் எனத் தமிழ்மக்களின் ஒரு சாராரின் மனப்பான்மையைக் குத்திக் காட்டுவதாக உள்ளது. 1958 தமிழ் இனக் கொலையை அடுத்துப் போராட்ட உணர்வு முனைப்புப் பெற்ற குழலிலே அதனைப் பிரதி பலிக்கும் வகையிலே மஹாகவி பாடிய கவிதை ‘தமிழ் எங்கள் ஆயுதம்" என்ற தொகுப்பில் (1962) இடம் பெற்றுள்ளது. அக்கவிதை:
கறையிலாத் தமிழ் தெருக் கணிகைமா தெனவெறிக் கயவரின் தயவிலாக் காலிடைப் படுவதோ முறையிலா வழிகளில் முரடர் எம் முடிவையே
முயல நாம் மூடியோர் மூலையில் துயில்வதா? பறையெலாம் அதிர்க நம் பலமெலாம் திரள்கவே பாதிநா டெங்களுக் காக என் றெழுகவே. அறமெலாம் ஒருகரைப் படினவர் வெல்லுதல்
அணுபிளந் தெறியினும் ஆவதொன் றல்லவே.
இருபத்தைந்து ஆண்டுகட்கு முன் மஹாகவி எழுதிய இக்கவிதை யிலே, தமிழர் மீதான பெருந்தேசியவாதக் கொடுமை தொடர்ந்தால் தனிநாடுகோருவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பது உணர்வு பூர்வமாக அழுத்தம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.
காதல் - குடும்ப உறவுணர்வு
மஹாகவி ஒரு கலைஞன் என்ற வகையிலே காதல்-குடும்ப உறவுகள் என்பன தொடர்பான உணர்வோட்டங்களை வார்த்தை களுக்குள் சிறைப்பிடிப்பதில் வல்லவர். அவருடைய பாநாடகங்கள், காவியங்கள், வில்லிசைப்பாடல் என்பவற்றில் இத்தகைய உணர்வை
4 / இலக்கு
 

வெளிப்படுத்தும் பாங்கிற்குச் சான்றாகப் பின்வரும் "தாமதம் ஏன்' என்ற தலைப்பிலான கவிதையின் ஒருபகுதியை நோக்கலாம்.
கைத்தேனா உங்களுக்கு? கால்நடையிற் கூடக்
கந்தோர்விட் டெப்பொழுதோ வந்திருக்கக் கூடும் பத்தான தேமணி!அப் பாவருவார் என்று
பார்த்திருந்த கண்மணியாள் போய்த்துயின்று விட்டாள் அத்தான்ஏன் வீடுவர இவ்வளவு நேரம்?
ஆவலுடன் உங்களுக்காய்க் காவலிருந் திங்கே பித்தானேன் நான்நீங்கள் போயிருந்த தெங்கே
பேதைஎனை யோமறந்தீர் தாமதம்ஈ தென்ன? பால்மொழியே நான் உன்றன் பக்கத்தை விட்டப்
பால்நகர மாட்டேன்! என் றெள்வளவோ சொன்ன ஆல்விழுதே! என்றன்ஒரே ஆதரவே! அத்தான்!
அந்தரித்துப் போனேன் நான் அண்டையிலே உள்ள நூல்நிலையம் போய்வரவா இவ்வளவு நேரம்?
நூறுதரம் வாசலிலே வந்துவந்து நின்ற கால் கடுக்க லாச்செனக்கு கடைத்தெருவில் என்ன
கம்பனைக்கண் டோபேசிக் கொண்டிருந்தீர் அன்பே, (வள்ளி ப. 17)
சமகால உணர்வு சமூக உணர்வு, யதார்த்த அணுகுமுறை என்ப வற்றின் மூலம் ஈழத்துத் தமிழ்க்கவிதையின் உள்ளடக்கத்திற் புதிய வளர்ச்சி நிலைகளைப் புலப்படுத்திய மஹாகவி அவர்கள் அதன் வடிவ நிலை, சித்திரிப்பு நிலை என்பவற்றிலும் புதுமை புரிவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். தாமே புதிய பரிசோதனைகளை மேற்கொண்ட தோடு தமது சமகால ஏனைய கவிஞர்கள், பிறதுறைகளின் கலைஞர் கள் ஆகியோரோடு இணைந்து அவர்களின் செயல்முறைகளைத் தழு வியும் தமிழ்க்கவிதைக்குப் புதிய வளம் சேர்த்தார். குறும்பா என்ற புது யாப்புகளிற் பேச்சு வழக்கு சொற்களின் பிரயோகம், கவிதை பாநாடகமாகவும் வில்லிசைப் பாவாகவும் எய்திய பரிணாமங்கள் என் பன மஹாகவியின் மேற்படி செயற்பாடுகளால் தமிழ்க்கவிதை வடிவ நிலை, சித்திரிப்பு நிலைகளில் எய்திய வளங்கள் ஆகும்.
தமது மிகப் பெரும்பான்மையான கவிதைகளை வெண்பா, கலி வெண்பா, விருத்தம், கட்டளைக்கலிப்பா முதலிய மரபு யாப்பு வகை களில் வெளிப்படுத்திய மஹாகவி அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சி யாகக் குறும்பா என்ற புதுயாப்பை அறிமுகம் செய்தார். அவரது "குறும்பா தொகுதியில் இடம் பெற்றுள்ள நூறு கவிதைகளும் இந்த யாப்பில் அமைந்தவையாகும்.
குறும்பா எனப் பெயரிட்டழைக்கிப்படும் யாப்பு ஆங்கிலத்தில் லிமரிக்ஸ் (Limericks) என்ற பெயரில் அமைவது. எட்வேட் லியர் என்
ܚܣܚܦܶܚ
இலக்கு / 5

Page 7
பவரால் தோற்றுவிக்கப்பட்டு ஆர்.எல். ஸ்டீவன்சன், நோர்மன் டக் ளஸ், ருட்யாட் கிப்ளிங், ரி. எஸ். எலியட் முதலிய கவிஞர்களால் கையாளப்பட்டு வந்த இந்த யாப்பு மூன்று அடிகளைக் கொண்டது. ஐந்து வரிகளில் அமைவது. முதலாம் அடியின் மூன்றாம் ஆறாம் சீர்களும், மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒரே இயல்புடையதாதல் இந்த யாப்பின் சிறப்பியல்பு.
முதலாம் அடி விடயத்தைத் தோற்றுவிக்கும் தரவாக அமையும். இரண்டாம் அடி அதனை வளர்த்து நிற்க மூன்றாம் அடி திடீர்த் திருப்பத்தை அல்லது எதிர்பாராத முடிவைத் தந்து வாசகனை வியப்பில் ஆழ்த்தும். அமைப்பு நிலையிலே முதலாம் அடியின் முதலாம் நான்காம் சீர்களும், மூன்றாம் அடியின் முதற்சீரும் இடப்பக்கத்தில் ஒரேநேரான இடத்தில் ஆரம்பமாகி முதலாம் இரண்டாம் ஐந்தாம் வரிகளாக அமையும். தொடக்கத்திலே பாலர் பாடலாகத் தோன்றிய லிமரிக்ஸ் பின்னர் சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளையும் கூறத்தக்க வடிவமாகப் பயில் நிலை வளர்ச்சி எய்தியது.
ஆபாசங்கள், அபத்தங்கள், கேலிக்குரிய விடயங்கள் முதலியவற் றைப் புலப்படுத்த ஏற்றதாகவும் பயன்படலாயிற்று. இந்த யாப்பைத் தமிழில் குறும்பாவாக அறிமுகம் செய்த மஹாகவி அவர்கள் தமது சமகால சமுதாயத்தில் பல்வேறு முரண்பாடுகளையும் கேலிக்குரியன வும் நகையூட்டத்தக்கனவுமான அம்சங்களையும் அதனூடாகச் சுவைபட வெளிப்படுத்தினார்.
முந்தலிலே வாழ்கின்ற தேவர் முழு தொழிலிற்கும் முதலாளி ஆவர்
"இந்தவிலை விற்கிறதே ஏன் செருப்பைத் தேய்ப்பான்’ என்று அந்தரத்திற் தான் நடந்துபோவார்.
செருப்புத் தேயும் என்றஞ்சி நிலத்தில் நடக்கத் தயங்கும் "கஞ்சப் பிரபு'க்கள் பற்றிய கிண்டல் இது.
நல்லையர் நெக்குருகி நைந்தார் நம்பெருமான் "வா’ என்று வந்தார் 'நில்லையா" என்றடியார் நேரேபோய்த் தம் மனைவி செல்லம்மாள் சேலையுள் மறைந்தார்,
உருகி வழிபடும் பக்தர் முன் இறைவன் நேரிற் காட்சி கொடுத்து
"வா" என அழைததால் அவர் என்ன செய்வார் என்ற சிந்தனையில் உதித்த சுவைமிகு கற்பனை இது.
6 | இலக்கு
 

முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின் கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் போவான் முச்சூலன்.
உயிர் பறிக்கவரும் யமனைக் கூடச் சமாளிக்கும் அளவிற்கு "கைலஞ்சம் வளர்ந்து விட்டது என்பதை இக்குறும்பா புலப்படுத்தி நிற்கின்றது.
மஹாகவியின் இத்தகைய குறும்பாக்கள் பலவற்றுக்குப் பொருத்த மான சித்திரங்கள் ஓவியர் செள’ அவர்களால் தீட்டப்பட்டுள்ளன. அவை பாக்கள் உணர்த்தும் விடயங்களுக்கு மேலும் அழுத்தமும்
சுவையும் தருவன.
மறுமலர்ச்சிக் காலம் தொடக்கமாக ஈழத்துத் தமிழ்க் கவிதையில் நிகழ்ந்து வந்துள்ள முக்கிய மாற்றங்களிலொன்று மரபு யாப்புக்களில் செம்மொழிச் சொற்களுக்குப் பதிலாகப் பேச்சு வழக்குச் சொற்களைப் பிரயோகிக்கும் முறைமையாகும். பேச்சு வழக்குச் சொற்களை மரபு யாப்புக்களின் சீர், தளை, ஒசைக் கட்டுப்பாட்டை மீறாத வகையில் பயன்படுத்துவதில்தான் இதன் திறமை தங்கியுள்ளது. கவிப் பொரு ளைச் சராசரி வாசகனது உணர்வு நிலைக்கு இட்டுவரும் நோக்கிலான இம்முயற்சியை மறுமலர்ச்சிக் கவிஞர்களும், மற்றக்காலக் கவிஞர்களும் வெவ்வேறு அளவுகளில் மேற்கொண்டுள்ளனர். இம்முயற்சியில் உணர்வு பூர்வமாக ஈடுபட்டு மரபு யாப்புக்களுக்குப் பேச்சோசை என்ற பரிமாணத்தை அளித்தவர்களில் முதல்வராக முன்னோடியாகத் திகழ்ந்த பெருமை மஹாகவிக்கு உரியது. சாதாரண பேச்சு வழக்குச் சொற்கள் கருத்துத் தொடர்புக்கு ஏற்ற வகையில் சிறு சிறு வாக்கியங் களாகத் தொடரும்போது, அவற்றினூடே வெண்பா, விருத்தம், கட் டளைக் கலிப்பா முதலிய யாப்பு வகைகளின் வடிவ நிலை புலப்பட்டு நிற்றல் மஹாகவி கவிதைகள் பலவற்றின் பொதுப்பண்பாகும்.
சேலை ஒன்று சரசரப் புற்றது திறப்பும் பூட்டும் கறகறப் புற்றன வேலி யோகறை யான்படர்ந் துள்ளது மெல்லவே அந்த மண்அதிர் வுற்றது வாழை நட்டுள பாத்தியில் ஈரமோ வைத்த காலிற் சளசளப் புற்றது மூலை ஒன்றினில் ஒலைக் கிடுகினை முன்வி ரிக்க, அதுநெரி வுற்றது.
(கண்மணியாள் காதை ப. 46)
சோமு வாதம்பி சுறுக்காய் வெளிக்கிடன் தேரமாச் செல்லே ? நெடுக இருக்கிறை ?
இலக்கு / 7

Page 8
என்ன தவிற்காரர் இன்னும் வரவில்லை ? ஒத்துக்கா ரர்தான் அடுக்களைக்குள் நிற்கிறார் ஊமையன்ரை காருக்குச் சொன்னி யெல்லே.? சொல்லிவிட்டேன் காரை இன்னும் காணன். வருவானே கட்டாயம்? வந்துவிட்டான் போல, வரட்டும் வெளிக்கிடுவம்.
(கோடை பா நாடக உரையாடற் பகுதி பக் 49-50)
ஆகிய பாடற் பகுதிகளில் மேற்படி பண்பை வெவ்வேறு அளவு களில் அவதானிக்கலாம். இவற்றில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பேச்சுத் தமிழ்ப் பிரயோகங்கள் மண் வாசனையுடன் வெளிப்பட்டுள் ளமை அவதானிக்கத் தக்கது.
பேச்சு வழக்கிற்குக் கொடுக்கப்பட்ட இம் முதன்மை கவிதையை எழுதும் முறைமை, அச்சிடும் முறைமை என்பவற்றிலும் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. கவிதை யாப்பின் அடியமைதிக் கேற்பச் சீர் பிரித்து அமைக்காமல், பொருள் அமைதிக்கேறபச் சொற் களையும் சொற்றொடர்களையும் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தும் முறைமையும் மஹாகவியின் கவிதைகளிற் காணப்படுகின்றது. சம காலத்தில் முருகையன், நீலாவணன் முதலிய கவிஞர்களது கவிதை களிலும் இப்பண்பை அவதானிக்கலாம். இத்தகைய முயற்சிகள் யாப்பை அதன் செம்மொழிப் பாங்கான ஒசையினின்று வேறுபடுத்திப் பேச்சுமொழி ஓசை (பேச்சோசை)க்கு இட்டு வரலாயிற்று. இதனால் உரைநடைக்குரிய பயன்பாட்டை அது எய்தலாயிற்று. மஹாகவியின் இவ்வகையிலமைந்த கவிதைக்குச் சான்றாக முன்னர் சுட்டிய "தேரும் திங்களும்" என்ற கவிதையைக் காட்டலாம். இத்தகைய முயற்சிகள், மரபு யாப்பானது நவீன உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு ஏற்ற தல்ல எனவும், தடையாக உள்ளதெனவும் கருதும் புதுக்கவிதைச் சிந்தனையாளர் சிலரின் கருத்துக்களுக்கு அறைகூவலாக, சவாலாக அமைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
"So sf U6h>j* 3fj65.f6fffñb TTJ5 Er L-lèJ5, வில்லிசை முயற்சிகளும்:
மஹாகவியின் கவிதையாக்க நெறியிற் குறிப்பிடத்தக்க முக்கிய
பண்பு அதன் கட்புலச் சித்திரிப்புநிலை ஆகும். கவிதையிற் கூறப்
படும் விடயத்தை வாசகர்களது மனக்கண்ணிலே நாடகக்காட்சி போல
விரியும் வகையில் சித்திரிப்பதே கட்புலச் சித்திரிப்பு எனப்படும். மஹா
கவியின் பல கவிதைகளில் இப் பண்பை அவதானிக்க முடிகிறது. முற்
சுட்டிய தேரும் திங்களும் கவிதையில் வரும்,
'நில்' என்றான் ஒராள் 'நிறுத்து' என்றான் வேறோர் ஆள் "புல்" என்றான் ஓராள்
8 I இலக்கு
 

"புலை" என்றான் வேறோராள்
கல்லொன்று வீழ்ந்தது கழுத் தொன்று வெட்டுண்டு சில் லென்று செந்நீர் தெறித்து நிலம் சிவந்து மல்லொன்று நேர்ந்து மனிதர் கொலையுண்டார்”
எனவரும் அடிகள் இச்சித்திரிப்புப் பண்பு அவரது பாநாடகங்கள் வில்லிசைப் பாடல் என்பவற்றில் நிறைவாக வெளிப்பட்டது. மஹாகவியவர்கள் நாடகக் கலைஞர் ஏ. காசீசியஸ் அவர்களுடன் கொண்டிருந்த உறவு இப்பாநாடகங்கள் மேடைநிலையில் புகழ் பெறக்காரணமாயிற்று.
மஹாகவியவர்கள் ஒரு வில்லிசைப்பா ஆசிரியன் ஆவதற்கு அவர் வில்லிசைக்கலைஞர் லடிஸ் வீரமணி அவர்களுடன் கொண்டிருந்த தொடர்பு ஒரு முக்கிய காரணமாகும். அவர் மூலம் கண்மணியாள் காதையைப் பலமுறை மேடையில் நிகழ்த்திய பின்னரே மஹாகவி அதற்கு நூல்வடிவு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாகவி பற்றிய மதிப்பீடுகள்
ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் தன்னம்பிக்கையுடன் கவிதைகள் படைத்துவந்த மஹாகவியவர்கள் தமது வாழ்நாளிலும் பின்னரும் வெவ்வேறுபட்ட விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் பெற்றவர். ஈழத்துக் கவிஞர்களுள் அதிகவிமர்சகர்களது கவனத்தைப் பெற்றவர் இவர் எனலாம். இவரது வாழ்நாளில் அமைந்த மதிப்பீடுகளில் கோடை பாநாடகத்தின் பின்னிணைப்பாக சண்முகம் சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட "மஹாகவியும் தமிழ்க்கவிதையும்’ என்ற கட்டுரை காத்திரமானது. இவர் மஹாகவி இறந்தபின் நூலுருப்பெற்ற ஒரு சாதாரண மனிதனின் சரித்திரத்திற்கும் விரிவான மதிப்புரை வழங்கியுள்ளார். மஹாகவி உயிருடனிருந்த போதே அவரது பாநாட கங்கள் தொடர்பாகக் காரசாரமான கலந்துரையாடல்கள் நிகழ்ந் துள்ளது.
மஹாகவி இறந்தபின் நிகழ்ந்துள்ள மதிப்பீடுகள், திறனாய்வுகள் என்ற வகையில் டாக்டர் சாலை இளந்திரையனின் "எளிய நடைக் கவிதையும் மஹாகவியும் (4வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுக்கட்டுரை-1974), சி. சுமத்திரியின் மஹாகவியின் வாழ்க்கையும் கவிதையும் (யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வேடு - 1979) மயிலங்கடலூர் பி. நடராசனின் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரும், * மஹாகவி' உருத்திரமூர்த்தியும், (காரந்தனை பாரதிமலர்-1982), எம்.ஏ. நுஃமானின் "மஹாகவி-ஒர்
இலக்கு I 9

Page 9
அறிமுகம் (1/4 மலர் மன்னன் வெளியீடு ஏப்-ஜான் 1982) என்பன குறிப்பிடத்தக்கவை. ༨་་
மேற்படி மதிப்பீடுகள் பலவும் மஹாகவியின் சமூக நோக்குநிலை, அவரது கவிதையாக்கங்களின் உணர்வு நிலைகள், வடிவநிலை, சித்தி ரிப்புத்திறன் என்பவற்றை அணுகி நோக்கியுள்ளன. குறிப்பாகப் பாரதிக்குப் பிற்பட்ட தமிழ்க்கவிதை வளர்ச்சியில் 'மஹாகவி’ ஒரு புதிய கட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி நிற்கிறார் என்ற கருத்து சண் முகம் சிவலிங்கம், நுஃமான், சுமத்திரி, பி. நடராசன் என்போரது ஆய்வுகளில் புலனாகின்றது. v
சண்முகம் சிவலிங்கம் அவர்கள், "நாம் இன்னமும் பாரதி யுகத் தில் இருக்கிறோம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறு தித் தளிர்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன, பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனால் அந்த யுகசந்தி பிரிந்து விட்டது. அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு
« $y y»
உயர்திய வெற்றியே மஹாகவி எனலாம்’ என்பர்.
(கோடை பின்னுரை ப. 72)
ஈழத்துத் தமிழ்க்கவிதை என்று எல்லைப் படுத்தாமல் தமிழ்க் கவி தைப் பெரும்பரப்பு முழுவதன் வரலாற்றோட்டத்தையும் உட்கொண்டு சண்முகம் சிவலிங்கமவர்கள் முன்வைத்துள்ள இம்மதிப்பீடு மஹாகவி தொடர்பாக எதிர்காலத்தில் நிகழ வேண்டிய உயர்நிலை ஆய்வு களுக்குக் 'கரு'வாகத் திகழவல்லது.
மஹாகவி தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களிலொன்று அவரது சமூக நோக்கு நிலை தொடர்பானது.
* மஹாகவியின் (நாடகம் புதியதொரு வீடு) அடிப்படையில் தோல்வி, சமுதாயப் பிரக்ஞை இல்லாதது"
என மு. நித்தியானந்தன் அவர்கள் அந்நாடகம் தொடர்பாக நிகழ்ந்த கலந்துரையாடலில் மஹாகவிக்கு முன்னாலேயே எடுத்துக் கூறினார் என்பர் (நெல்லை. க. பேரன் மல்லிகை ஜ"ாலை 1971 ப. 32). e முருகையன் அவர்கள் மஹாகவியைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு இடத் தில்
**இவரது கவிதைகள் அமைதியானவை ஆர்ப்பாட்டமில்லாதவை கொடுப்புக்குட் சிரிக்கும் ஓர் இலேசான குறும்புடன் இலகுவான சொற்களுடன் நடப்பவை. இந்த அமைதியும் சாந்தமும் கவிஞரது வாழ்க்கை நோக்கிலிருந்து பிறப்பெடுத்தவையேளனலாம்' என்கிறார் (ஒரு சில விதி செய்வோம் - 1972 ப. 5). இவ்விரு விமர்சனங்களும் மஹாகவியின் சமூக நோக்குநிலை தொடர்பானவையே. நித்தியான ந் தன் கூறுவது போலப் புதியதொரு வீடு நாடகத்திற் சமூகப் பிரக்ஞை இல்லை என்றோ அல்லது முருகையன் அவர்கள் கணித்தது போல மஹாகவியவர்கள் "இது தான் உலக இயல்பு; எப்படியோ சமாளிக்க
10 இலக்கு
 

வேண்டியதுதான்' என்ற மனப்பான்மை கொண்டெைரன்றோ முடிந்த முடிபாகக் கூறுதற்கில்லை. அவரது “தேரும் திங்களும் முதலிய பல கவிதைகள் இவ்வகையில் நமது கவனத்துக்குரியன. அவற்றில் அவ ரது 'சிறுமை கண்டு இகழும் இயல்பைச் சிறப்பாக அவதானிக்க (pliquij Lo.
மேற்சுட்டிய "தேரும் திங்களும் கவிதை "சாதி வேறுபாட்டுணர்வு' தொடர்பான மஹாகவியின் வெறுப்புணர்வைத் தெளிவாகப் புலப் படுத்தி நிற்கும் ஒன்றென்பது வெளிப்படை. இப்பிரச்சினை தொடர் பாக சமகாலத்தில் கவிஞர் சுபத்திரன் என்பார் படைத்துள்ள ஒரு கவிதையை இங்கு எடுத்துக் காட்டுவது ஒப்பியல் நோக்கிற் பயன் படுவதாக அமையும். அக்கவிதை :
சங்கானைக்கென் வணக்கம் (தொழிலாளி இதழ் 17-07-1968)
சங்கானைக் கென்வணக்கம் சங்கானை. அந்தச் சரித்திரத்தில் உன் நாமம் சங்கானைக் கென் வணக்கம் மிங்காது; யாழகத்து மண்ணிற் பலகாலம் செங்குருதிக் கடல் குடித்துச்
O O 0
எச்சாமம் வந்து
செழித்த மதத்துக்குள் | எதிரி அழைத்தாலும் வெங்கொடுமைச் சாக்காட்டாய் நிச்சாமக் கண்கள் வீற்றிருந்த சாதியினைச் நெருப்பெழுந்து நீறாக்கும். சங்காரம் செய்யத் குச்சுக் குடிலுக்குள்
தழைத்தெழுந்து நிற்கின்ற
ଜଗ வி C o சங்கானைக் கென் வணக்கம் காலுவிருககும கோபததை
மெச்சுகிற்ேன் சங்கானை. O O. O. மண்ணுள் மலர்ந்த கோயிலெனும் கோட்டைக்குள் மற்ற வியட் நாமே உன் கொதிக்கும் கொடுமைகளை குச்சுக் குடிலுக்குள்
ாயினிலம் மிக்க
ਕrਰ குடியிருந்த கோபத்தை
வாயிலிலே நின்று மெச்சுகிறேன்! மெச்சுகிறேன்!! வாழ்த்தும் பெருஞ்சாதி. எண்ணத்திற் கோடி
ஏற்றம் தருகின்றாய்
O O - O S. w
புண்ணுற்ற நெஞ்சுக்குள் நாய்கள் வாலை புதுமை நுழைக்கின்றாய் நறுக்க எழுந்தாய் கண்ணில் எதிர்காலம் சங்கையிலே நீ யானை காட்டி நிலைக்கின்றாய்
இலக்கு 1 11

Page 10
உன்னை எனக்கு சிந்தனையால் உன் நாமம்
உறவாக்கி வைத்தவனை செகமெல்லாம் ஒலிக்கட்டும் என்னென்பேன் செங்கொடியின் வீடே ! ஐந்து பெருங் கண்டத்தும் சிறுமை எடுத்தெறியும்
சிங்கத்தின் நெஞ்சே ! செய்தேன் உனக்கு வணக் கம்,
எழுந்துவருப் பூகம்பம் தந்தவனாம் மாஓவின்
இக்கவிதை சங்கானை என்ற கிராமத்தில் நிச்சாமம் என்ற பகுதி யில் சாதி ஏற்றத்தாழ்வுக் கெதிராக நிகழ்ந்த பேரெழுச்சி யொன்றை வாழ்த்துவதாக அமைந்தது; சாதிப் போர்ாட்டத்தை வர்க்கப் போராட் டமாகக் கருதும் அடிப்படையில் அமைந்தது. மாஓவின் சிந்தனையில் தன்னை இணைத்துக் கொண்ட ஒரு போராளியின் வீறார்ந்த போரு ணர்வின் வெளிப்பாடு இது. மஹாகவியின் "தேரும் திங்களும்” போலவே சிறப்பானதொரு உணர்வுப்பதிவாகவும் இது திகழ்கிறது. மஹாகவி ஒரு கலைஞன் என்ற வகையில் அனைத்துலக அறிவியல் வளர்ச்சியின் தளத்தில் நின்று சாதியுணர்வை விமர்சிக்கிறார்; எள்ளி நகையாடுகிறார். ‘சுபத்திரன்’ ஒரு கலைஞனாக மட்டுமன்றிப் போராளியாகவும் நின்று அனைத்துலகிலும் நிகழும் வர்க்கப் போராட் டத்தின் ஒரு கூறாக சாதி எதிர்ப்புணர்வை நோக்குகிறார்; அவ்வுணர் வுக் கெதிரான எழுச்சியை வாழ்த்தி வரவேற்கிறார். இரண்டு asiops களும் அவரவர் தளங்களில் தரமான கலை வெளிப்பாடுகளேயாம். ஆயின் சுபத்திரன் கவிதைகள் பற்றி ஆய்வு செய்த க. யோகநாதன் (கவிஞர் சாருமதி) அவர்கள் மஹாகவியின் "தேரும் திங்களும்" 66flaps பற்றிக் கூறும் போது,
போராட்டத்தில் நீதி அநீதி எவையெனக் கண்டு தள் பங்கு யார் பக்கம் என்பதை விட, போராட்டத்தின் காரணத்தைக் கண்டு அருவருக்கும் ஒரு "அல்லுத் தொல்லைக்கும் போகாத மனிதனாகத் தன் பொருள் வெளிப்பாட்டை அமைத்துக் கொண்டு விடுகிறார் மஹாகவி. இதனைக் குறிவைக்க அவ குக்குக் கெளரவமான அங்கதத் தொனி போதுமானதாகி விடுகிறது. என்றும்
.அருவருத்து முகஞ்சுளிக்கும் ஒரு கனவானின் முணுமுணுப் புக்கு ஒப்பிடலாம் என்றும் குறிப்பிடுகிறார் (சுபத்திரன் கவிதைகள் - யாழ். பல்கலைக் கழகத் தமிழ்த்துறை ஆய்வேடு 1983-84, ப. 61). இம்மதிப்பீடு மஹா கவி பற்றிய சரியான புரிதலின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றல்ல என்பது எமது கருத்து. மஹாகவி தனது சார்பு யார் பக்கம் என் பதைத் தெளிவாகக் காட்டியவர். அவரது கவிதை ஒரு கனவானின் முணுமுணுப்பல்ல. ஒரு கலைஞனின் மனச் சான்றின் குரல் என்பதே எமது கணிப்பாகும். Ο
12 I இலக்கு
 

தமிழக, ஈழ, மலேஷிய, சிங்கப்பூர் இலக்கிய வரலாறென்று தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு தேசங்கள் குறித்த எல்லையிடல் இலக்கிய மேன்மை தேடலுக்கு ஊறுவிளைவிப்பதாகும். தேசஎல்லைப்பட்ட இலக்கிய வரலாறுகள் மாண வர்களுக்கான சுருங்கிய, பாடவிதானத் தேவைக்" காகமட்டுமே எழுதப்படலாம். இலக்கிய வாசகர் களுக்கும், ஆய்வாளருக்கும் இது ஏற்றதல்ல. தமிழின் வளர்ச்சியும் உன்னதமும் கனவுகளாய்க் கொண்ட ஒரு நெஞ்சத்துக்கு இந்த விரிந்த பார்வை இயல்பாகவே வந்துவிடும். "இலக்கு" வுக்கு இந்த ஆசை நிறைய உண்டு.
இதனுடைய அர்த்தம் யாது? அந்தந்த நாடுகளில் தேசிய மொழியாக இருக்கும் தமிழ், தன் புவியியல், வரலாறு, பண்பாட்டு அடிப் படைகளில் மண்வாசனை மிக்க தேசிய இலக்கி யம் படைக்கும். மக்கள் மொழியும் மண் வாச னையும் மிக்க இத்தேசிய இலக்கியத்தைப் புரிந்து கொள்வதில், வளர்ச்சி நிலைகளை அறிந்துகொள்வதில் இடர்ப்பாடும் இணக்க மின்மையும் இருத்தல் கூடாது. தமிழகத்து தமிழ், ஈழத்து தமிழ், மலேஷியத் தமிழென்று பல தமிழ்கள் இல்லை. தமிழ் ஒன்றே, அது போல் தமிழிலக்கியம் ஒன்று. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது கணியன் பூங்குன்ற னது வாசகமாக இருக்கட்டும். ஆனாலும், தமிழிலக்கியம், இப்போது பார்த்தால் இந்த உலகத் தமிழிலக்கிய விவகாரத்தில் பிரச்சினை யின்மை தெரியும். இது அரசுகள், நாடுகளின் பல்கலைக் கழகங்கள் மட்டத்தில் செய்யப்பட வேண்டிய முயற்சி, "இலக்கு” இதை முன்மொழி கிறது. அவ்வளவே.
*இலக்கு” நான்காவது இதழ் அமரர் கே. டானியல் நினைவு மலராக வெளிவருவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கீழ்த்தட்டு மக் களின் வாழ்க்கை அவலங்களை, சாதீயக் கொடுமைகளை, மனிதாயதச் சிதைவுகளை நவீன இலக்கிய ஊடகங்கள் மூலமாய் தமிழிலக் கியத்துக்கு கொண்டுவந்தவர்கள் ஈழத்தில் நிறைய இருக்கிறார்கள். மஹாகவி, செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா போன்றவர்களை இங்கே உதாரணத்துக்கு குறிப்பிடலாம். ஆனால், வர்களின் பாதை கடந்து பஞ்சமர்க்கான
இலக்கு / 18

Page 11
நாவல்களை எழுதியவர் என்ற வகையில் கே. டானியலுக்கு இலக்கிய வரலாற்றில் தனியான ஓரிடம் உண்டு இதை வெளிச்சமிட்டுக் காட்ட "இலக்கு முனைந்திருக்கிறது. இந்த ஒரு மகிழ்ச்சியுடன், என் மண்ணின் இலக்கிய வளம் பேசப்படும்படிக்கு "இலக்கு" நான்காவது இதழ் வரமுடிந்ததிலான இன்னொரு மகிழ்ச்சியும் உண்டு.
1926ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த கே. டானியல் வளர்ந்ததும் வாழ்ந்ததும் பொருளாதார வசதி படைத்திராத ஒரு குடும்பத்திலே தான். பொருளாதார வசதியின்மையோடு சாதீய அடக்கு முறைக்கு உட்பட்ட குடும்பமாக அது இருந்ததாலும், அவரது இளமைக்கால்ம் மிகுந்த துன்பகரமானதாக இருந்தது. அந்த வாழ்க்கை அனுபவமே அவரை ஒரு "போராளி"யாக்கியது.
சமுதாயப் புன்மைகளை தன் கருடப்பார்வையினின்றும் தப்ப விடாமல் எழுத்தில் சிறைப்பிடித்து சில அமர சிருஷ்டிகளின் கர்த்தா வாக விளங்கும் இவர், தமது ஜீவியத்தின் பிற்காலத்தில் நீரிழிவு நோய்வாய்ப்பட்டு தமது பார்வையும் பாதிக்கப்பட்ட நிலையில் 23-3-86ல் தஞ்சாவூரில் காலமானார்.
"டானியல் சிறு கிதைகள்" என்ற முதலாவது நூலின் மூலம் எழுத்துலகில் பிரபலமடைந்த இவர், மொத்தத்தில் எட்டு நாவல்களும், சுமார் முந்நூற்றைம்பது சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது "பஞ்சமர்" நாவல் சலங்கை' இதழில் பலத்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்தது. சரஸ்வதி, தாமரைபோன்ற பத்திரிகைகளும் இவரது எழுத்துக்களைத் தாங்கி வெளிவந்தன.
ஈழத்தில் சாதீயப் பேயை கொன்றொழிக்கம் திட்டத்துடன் தாடங்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் நிறு வனர்களில் ஒருவராக இருந்ததோடு, இயக்கத்தை வழிநடத்திய, போர்க்களங்களைக் கண்ட பெருமையும் இவருக்கு உண்டு.
"பஞ்சமர்” நாவலுக்காகவும், "உலகங்கள் வெல்லப்படுகின்றன’ சிறுகதைத் தொகுப்பிற்காகவும் பூணூரீலங்கா சாஹித்ய பண்டல பரிசு களையும் பெற்றிருக்கிறார். கே. டானியலின் இலக்கிய முக்கியத் துவம் பலராலும் இன்று உணரப்படுகிறது. அன்னாரின் மறைவு குறித்த நினைவுகளையொட்டி இவ் இதழை டானியல் நினைவு மலராகக் கொண்டுவர முடிந்ததில் பெருமையடைகிறேன்.
உருவமும் மொழியும்
உண்மையில் சொல்லப் போனால் இலக்கியத்தில் எந்தத் துறையுமே மொழிக்கேற்ற படியும், அந்த மொழியைக் கையாளு கிற ஜனங்களின் பண்புகளுக்கேற்றபடியும் மாறி அமைகிறது. அதனால்தான் இலக்கிய உருவம் ஒன்றுதான் என்றாலும், வெவ் வேறு மொழிப் பிரதேசங்களில் வெவ்வேறு விதமாக வளருகிறது. பிரெஞ்சு நாவல் ஆங்கில நாவலிலிருந்து மாறுபட்டிருப்பதற்குக் காரணம் இதுவேதான். மரபு என்கிற மரம் பல கிளைகளாகத் தழைத்து விரிந்து விதம் விதமாகப் பூக்கிறது. ஒவ்வொரு மொழி யும் ஒவ்வொரு விதமாகப் பூக்கிறது என்று கொள்ளலாம்.
叫 ST。[5f官。母后
14/ இலக்கு
 

டானியலின் குறுநாவல்கள்
"பஞ்சமர்” என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்தில் ஓரளவுக்குத் தெரிய வந்திருப்பவர் க்ே. டானியல்.
இலங்கை யாழ்ப்பாணப் பகுதியில் உயர் சாதி வேளாளர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களான பஞ்சமர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களை சித்திரிக்கும் நாவல் "பஞ்சமர்'.
f பஞ்சமர் நாவல் வரிசையில் பஞ்சகோணங்கள்" என ஒன்றையும், மற்றும் சில நாவல்களையும் டானியல் எழுதியிருக்கிறார். யாழ்ப் பாணப் பகுதியில் உயர்சாதி வேளாளர்கள் நடந்து கொள்கிற முறைகளையும், தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தப்படுகிற விதங்களை யும், பஞ்சமர்கள் அவற்தை எதிர்த்து உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களையும் பதிவு செய்யும் படைப்புகள் அவை.
தீண்டாமையை ஒழித்துக்கட்டி மனிதஉரிமைகளைப்பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டங்கள் நடத்தாமல் தீராது. அப்படிப் போராடுகிறபோதே நில உரிமைக்காகவும் அவர்கள் போராடியாக வேண்டும். அத்துடன் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று டானியல் கருதினார். இதை அவருடைய நாவல்கள் புலப்படுத்தும்.
கே. டானியல் சிறுகதைகளும் எழுதினார். மனித வாழ்க்கை சமூக அமைப்பு முறைகளைப் பிரதிபலிக்கும் குறுநாவல்களையும் அவர் படைத்திருக்கிறார். மனிதர்களிடையே நிலவும் சீர்கேடுகளையம் சின்னத்தனங்களையும் சுட்டிக் காட்டவும், பலவகையான மனித இயல்புகளை எழுத்தில் பதிவு செய்யவும் அவர் குறுநாவல் வடிவத்தை நன்கு பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.
"சமூக அமைப்பு முறையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் வரை சீர்கேடுகள், சின்னத்தனங்கள் மனித இனத்தை சூழ்ந்து கொண்டே நிற்கும். அந்த அடிப்படை மாற்றத்தைத் தோற்றுவிக்க தனித்து எழுத்தாளனால் மட்டும் முடியாதென்பது உலக வியாபகமாகி விட்ட உண்மையாகும். இந்த உண்மையை ஏற்று எனது பேனா மூலம் எனது சிறுபங்கை மட்டும் செய்ய முற்படுகிறேன்" என்று
இலக்கு 1 15

Page 12
டானியல் தனது எழுத்து முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத் தக்கது.
டானியலின் குறுநாவல்களை படிக்கிறவர்கள் இலங்கைத் தமிழ ரின் சமூக அமைப்பு,தொழில், அரசியல், இன மோதல் சம்பந்தமான பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் விதம் விதமான மனிதர்களின் விந்தையான போக்குகளையும் வேடிக்கை இயல்புகளையும் புரிந்து கொள்ளவும் அவை உதவக் கூடும்.
முக்கியமாக, முருங்கையிலைக் கஞ்சி, மையக்குறி என்ற இரண்டு குறுநாவல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
“முருங்கையிலைக் கஞ்சி”யில் ஆறுமுகத்தாரின் வாழ்க்கையை விரிவாகச் சித்திரிக்கும்முறையில் புகையிலையைப் பயிரிடும் விவரங்கள். அதில் எதிர்ப்படும் சிரமங்கள், அவற்றை விவசாயி சமாளிக்கும் திறமைகள் முதலியன சுவையோடு கூறப்பட்டுள்ளன.
ஆறுமுகத்தார் தன் மகன் மூத்தவனை மிக அதிகமான அன்பு காட்டி வளர்க்கிறார். ஒவ்வொரு விஷயத்திலும் அவருடைய பாசம் எப்படி வெளிப்படுகிறது என்பதை கதை நிகழ்ச்சிகள் ரசமாக விவரிக் கின்றன.
அவனைப் படிக்க வைத்து, நகரத்தில் வேலை வாங்கிக்கொடுத்து, அவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து காரியங்கள் ஆற்றி வருகிற ஆறுமுகத்தாருக்கு, முதலாவது அதிர்ச்சி மகனின் திருமணவிஷயத தில் சேற்படுகிறது.
அவன் தன்னோடு பணிபுரிகிற சிங்களப்பெண் ஒருத்தியை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறான். இதை ஆறுமுகத்தாரும் அவர் மனைவியும் ஏற்றுக்கொள்ள சித்தமாகவில்லை.
ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. நகரத்தில் வெடித்த சிங்களவர் வெறியாட்டத்தில், அந்தப் பெண் மூத்தவனை ப் பாதுகாப்பதற்காகத் தன் உயிரையே இழந்து விடுகிறாவ் மூத்தவன் தப்பிப் பிழைத்து பெற்றோரின் கிராமம் வந்து சேர்கிறான். சிங்களப் பெண்ணின் தீரமும் தியாகமும் தமிழ்ப் பெற்றோர்களின் உள்ளத்தைத் தொடுகின்றன. அந்த வீட்டில் அவள் ஒரு தெய்வம் போல் மதிக்கப் படுகிறாள். அவளுடைய படத்துக்கு எப்பவும் தகுந்த மரியாதைகள் செய்யப்படுகின்றன.
நீத்தார் நினைவில் செய்யப்படுகிற சடங்குகள் சம்பிரதாயங்கள் குறுநாவலில் உரிய முறையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
மூத்தவன் வேறொரு இடத்தில் வேறு ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் பிடிப்பற்றவன் போல், கடமையாற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து சில நாட்கள் அவன் காணாமல் போகிறான்.
16 1 இலக்கு
 

ஆறுமுகத்தாரின் வயலில் வேலை செய்கிற தாழ்த்தப்பட்ட இனத்தவன் என்று கருதப்படுகிற ஒருவன் மூலம் ஒரு தகவல் கிடைக் கிறது. அந்த ஆளின் சொந்தக்காரப் பெண் ஒருத்தியை ஆறுமுகத்தா ன் மகன் கூட்டிப்போய் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தி அவருக்கு பேரதிர்ச்சியாக விழுகிறது.
அவர் வயலுக்குக் கிளம்பிய போது, அவருடைய மனைவி வேறொருத்தி மூலம் தகவல் அறிய நேரிட்டது. மூத்தவன் அவனுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்பது செய்தி. அதைக் கேட்ட அம்மா ஆத்திரம் அடைகிறாள். ஆனால், தந்தையோ, வாழ்க்கையில் பிடிப்பற்று தனக்குத் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த மகன் இவ்வளவுக்கு மனம் மாறி ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு அலைகிறானே, அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்கிறார்.
அதே தந்தை வயலிலிருந்து வீட்டுக்கு உடனடியாகத் திரும்பி வந்து, வெளி முற்றத்தில் மூன்று கல் வைத்து. அடுப்பு மூட்டி, கஞ்சி வைக்கும்படி உத்தரவிட்டு, அப்படி கஞ்சி கொதிக்கிறபோது முருங்கை இலைகளை உருவி அதில் போடுகிறார். மூத்தவனின் உரிமைக் கஞ்சி குடியுங்கோ என்று அறிவிக்கிறார்.
காலையில் தனக்குத் தேறுதல் கூறியவர் ஏன் இப்போது இப்படி *உரிமைக் கஞ்சி' குடிக்க முனைகிறார் என்பது அந்தத் தாய்க்கு விளங்கவில்லை.
* உரிமைக் கஞ்சி' குடிப்பது' 'அன்றிலிருந்து அந்த மகன் அந்த வீட்டின் சாவுக்கும் இல்லாமல் வாழ்வுக்குமில்லாமல் போய் விடுவதை உணர்த்தும் செயலாகும்,
வயல் வேலை செய்கிறவன் சொன்ன செய்தி ஆறுமுகத்தாரின் மனைவிக்குத் தெரியாது. அவளும் இதர பிள்ளைகளும் அழுகிறார்கள், ஆறுமுகத்தார் கலக்கம் எதுவுமில்லாது காணப்படுகிறார்.
மகன் சிங்களப் பெண்ணை மணம் புரியத் துணிந்ததை ஏற்றுக் கொண்ட உயர்சாதித் தந்தை, அவன் தாழ்த்தப்பட்ட இனம் என்று கருதப்படும் ஒரு சமூகத்தின் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சாதி வெறி அவ்வளவுக்கு மனித உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை இக்குறுநாவல் உணர்த்துகிறது.
செல்வமும் செல்வாக்கும் பெற்ற உயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தையின், மற்றும் அவர் மகனின் வாழ்க்கைப் போக்குகளை சுவாரஸ்யமாக விவரிக்கிறது "மையக்குறி. தந்தைக்கு சளைக்காமல் மகன் செய்யும் ஆணவச் செயல்களையும் அட்டூழியங்களையும் அது சுவையாகக் கூறுகிறது. சோமசுந்தாத்தார் என்று பெயர்பெற்று எப்படி எப்படியோ வாழ்ந்துவிட்ட மகனின் கடைசி ஆசை விசித்திர மானது, காலத்துடன் ஒட்டாதது.
இலக்கு 17

Page 13
ஆயினும், தந்தைக்கு ஊழியனாய், ரிக்ஷா இழுப்பவனாய், நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்து, மகனுக்கும் வேலைக்காரனாய், தோழனாய், ஆலோசகனாய், அவரது விருப்பங்களை எல்லாம் நிறை வேற்றும் நண்பனாய் வாழ்கிற ரிக்ஷா இழுக்கும் பண்டாரி, சோமசுந்தரத்தாரின் இறுதி ஆசையையும் நிறைவேற்றி வைக்கிறான்.
இப்படி அறுபது வருடங்களுக்கும் மேலாகவே அந்தக் குடும்பத் துக்கு உழைத்துக் கொண்டிருக்கும் அந்த உண்மை உழைப்பாளி எப்பவும் வெளியே உள்ள ஒரு மரக்குத்தியில் குந்தியிருந்து, அவனுக் கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு போணியில்தான் காப்பியோ தேநீரோ குடிக்கவேண்டியிருந்தது. காலமும் நாகரிகமும் வளர்ந்து எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அந்தப் பெரிய வீட்டில் அவனுக்கு உரிய இடமும், அவன் குடிக்க உபயோகப்படும் போணியும் எந்தவித மாறுதலும் பெற்றிருக்கவில்லை. இந்த சமூக அநீதி நயமாக உணர்த்தப்பட்டுள்ளது இந்தக் குறுநாவலில்.
கே. டானியலின் குறுநாவல்கள் கலைநயம் குன்றாத படைப்பு கள், வாழ்க்கை உண்மைகளை உணர்த்தும் சமூகசித்திரங்கள் ஆகும்.
- வல்லிக்கண்ணன்
குன்றின் குரல் \ சிறப்பிதழ்
/才 1995
தனது பதினான்காம் ஆண்டின் முதலாவது இதழை சிறப்பிதழா கக் கொன டு வந்திருக்கிறது ‘குன்றின் குரல்". ஆசிரியர் திரு அந்தனி ஜீவாவினதும், பொறுப்பாசிரியர், இணையாசிரியர் ஆசிரியர் குழுவினர தும் பணி இதழ் முழுக்க காணக்கிடக்கின்றது.
தரமான இலக்கிய மலர்தான் என்பதை மல்லிகை சி. குமாரின்
மாடும் வீடும் கவிதை மூலம், இதழின் ஆரம்பமே புரிய வைத்துவிடு
கிறது. தொடர்ந்து சாரல்நாடன், ஜெ. சற்குருநாதன், லெனின் மதி
வாணம் ஆகியோரின் கட்டுரைகள் திறனாய்வுரீதியிலும், அந்தணி
ஜிவாவின் பி. டி. ராஜன் பற்றிய நினைவுப் பேருரையின் எழுத்து
வடிவம் தகவல் ரீதியிலும் அமைந்து இலக்கிய மணம் கமழச் செய்து
விடுகின்றன. சி. பன்னீர் செல்வததின் துறவியின் காதல் முத்திரைக் கதையாக மிளிர்கிறது.
தொடர்பு : குன்றின் குரல்
30, புஸ்பதான மாவத்தை, கண்டி, சிறிலங்கா
18 / இலக்கு
 

டானியல் படைப்புக்கள்:
ஒரு திறனாய்வு நோக்கு
-5 T. JrifJ Dayof Hess -
புனைகதை இலக்கியத்தின் இன்றியமையாத பண்பு அதன் சமூக மெய்மையாகும். இதுவே புனைகதையின் "கற்புநிலை' என்றும் பேசப்படுகின்றது. ஈழத்தின் தமிழ்ப் புனைகதை வரலாற்றில் சமூக மெய்மையை அதன் "இரத்தமும் சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மைக் கணிப்புக்குரிய ஒரு வராகச் சொல்லப்படுபவர் காலஞ்சென்ற கே. டானியல் அவர்கள், ஈழத்துந் தமிழர் சமூகத்தின்-குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்தின்-உள்ளார்ந்த முரண்பாடுகளை இயற்பண்புடன் இலக்கிய உலகில் அழுத்தமாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தனிக்கவனத் திற்குரிய படைப்பாளியாக இவர் திகழ்கின்றார். உரிமைகள் மறுக்கப் பட்ட அடிநிலை மக்களின் உணர்வோட்டங்களின் ஊடாக யாழ்ப் பாணப் பிரதேச சமூக வரலாற்றை இனங்காட்டும் நோக்கில் எழுது கோல் ஏந்தியவர் இவர். இதில் இவர் புலப்படுத்தி நின்ற தீவிர நிலை இவரை ஒரு "ஆவேச மனிதாயதவாதி' என்ற கணிப்புக்கு உட்படுத்தி யது (கார்த்திகேசு சிவத்தம்பி, மல்லிகை, 1983 டிசம்பர், பக் 5-7). இவ்வாறு வீறார்ந்த நிலையில் படைப்பிலக்கியப் பணிபுரிந்த இவர் ஈழத்தின் நவீன தமிழ்ப்படைப்பிலக்கிய வரலாற்றில் பதித்துள்ள "தடம்", படைப்பிலக்கியவாதிகள் வரிசையில் இவருக்கு வழங்கக்கூடிய "இடம்" என்பது தொடர்பான சில சிந்தனைகள் இங்கே முன்வைக்கப் படுகின்றன.
சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையைப் படைப்பிலக்கியத்திற்குப் பொருளாகக் கொள்ளும் நோக்கு ஈழத்தில் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே தோற்றம் பெற்றுவிட்டது. இடைக்காடாரின் நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்’ (1925) எச். நெல்லையரின் “காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி" (1937) முதலிய நாவல்களிலும், பாவலர் துரையப்பாபிள்ளையின் சில கவிதைகளிலும் இப்பண்பை அவதானிக்க முடியும்.
மேற்சுட்டிய இந்த நூற்றாண்டின் முற்பகுதிப் படைப்புக்கள் சாதி ஏற்றத்தாழ்வின் புறநிலையின் சில கூறுகளை மட்டும் அவதானித்
இலக்கு / 19

Page 14
தவையாகும். ஏற்றத்தாழ்வு மனப்பாங்கு, தீண்டாமை ஆகிய கூறு களைக் கொண்ட ஒரு சமூகக் குறைபாடு என்ற கருத்தே அக்காலப் படைப்புக்களில் உணர்த்தப்பட்டது. பொதுவான அறிவு வளர்ச்சி யாலும் சீர்திருத்தச் சிந்தனையாலும் இக்குறைபாடு தவிர்க்கப்படக் கூடியது என்ற நம்பிக்கையே அக்காலப் பகுதிப் பார்வையின் ஊடாகப் புலப்படும் தீர்வு ஆகும். சமகால இத்திய விடுதலைப் போரை வழிநடத்திய காந்தீய சிந்தனைகள் பொதுவான அறிவு வளர்ச்சி என்பன இவ்வாறான பார்வைகட்கு உந்து சக்தியாக அமைந்தன என்பதை உய்த்துணர முடிகிறது. சாதி முறையின் கொரே மான யதார்த்தங்கள் அக்காலப் பகுதியில் தரிசனத்திற்கு வரவில்லை என்பது இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
1950-60 களில் முற்போக்கு இலக்கியச் சிந்தனை முனைப்புறத் தொடங்கிய காலகட்டத்தில் சாதிப் பிரச்சினையின் கொடுரமா6ன யதார்த்தங்கள் இலக்கியப்பதிவுகள் ஆயின. சராசரி மனிதனிடம் உறங்கிக்கிடக்கும் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதும் பொது வுடமை அரசியல் நோக்கில் சமுதாய மாற்றத்தை அறைகூவி அழைப்ப தும் இக்காலப்பகுதியின் முனைப்புற்ற நோக்கு நிலைகளாக அமைந் தன. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய பல்வகைப் படைப் புக்களிலும் இவை வெளிப்படலாயின. மஹாகவியின் தேரும் திங்களும்'கவிதையிலும், சுபத்திரளின் சில கவிதைகளிலும், டொமினிக் ஜீவாவின் 'தண்ணிரும் கண்ணீரும்’ சிறுகதையிலும், அம்பலத்தாடி களின் "கந்தன்கருணை", மெளனகுருவின் சங்காரம் முதலிய நாடகங் களிலும் மேற்சுட்டியவாறான நோக்கு நிலைகளைச் சிறப்பாக அவ தானிக்க முடியும். (இவை தொடர்பாக விரிவான ஆய்வுகளுக்கு இடம் உளது.)
நாவலிலக்கியத்துறையைப் பொறுத்தவரை இளங்கீரன், செ. கணேசலிங்கன், சொக்கன், செங்கை ஆழியான், தெணியான், செ. யோகநாதன், தி. ஞானசேகரன், நா. சோமகாந்தன் முதலிய பலர், மேற்சுட்டியவாறான நோக்கு, ஆர்வம் என்பவற்றைத் தம் கருத்துக்களில் புலப்படுத்தியுள்ளனர். உயர் சாதியினர் என தம் மைக் கருதிக்கொள்வோர் தாழ்த்தப்பட்டோரெனத் தம்மாற் கணிக்கப் படுவோர் மீது நிகழ்த்தும் அடக்குமுறைக் கொடுமைகளை நாவல் களில் விரித்துரைக்க முற்பட்ட முதல்வர் என்ற சிறப்பு இளங்கீரன் அவர்களுக்கு உளது. அவரது "தென்றலும் புயலும்’ (1955) நாவல் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உயர் சாதியினர் எனத் தம்மைக் கருதிக்கொள்வோரில் சிலர் பொருளியல் நிலை தாழ்ந்தபோதிலும் கூட சாதி உணர்வினை விட்டகலாத நிலையை இது சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் "சாதிமீறிய நிலையி லான காதலை நிறைவு செய்வதான" கதையம்சத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான சாத்தியத்தையும் இந்நாவல் உணர்த்தியமை கின்றது.
மேற்சுட்டிய ஏனைய நாலவாசிரியர்களுட் பலரும் கல்வி வளர்ச்சி, கலப்புத் திருமணம், தொழில்முறை மாற்றங்கள், மனித நேய-சமத்துவ சிந்தனைகள், சட்டம் முதலியவற்றின் மூலம் சாதி ஏற்றத்தாழ்வுணர்
20 / இலக்கு
 

வுக்கும் அது சார்ந்த கொடுமைகளுக்கும் தீர்வு கிட்டும் என்ற நம்பிக் கையைத் தம் படைப்புக்களில் புலப்படுத்தி நின்றனர். இததகை யோரினின்று குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டு நின்று இப்பிரச்சி னையை அணுகியவர் என்ற வகையில் செ. கணேசலிங்கன் தனிக் கவனத்திற்கு உரியவர். இவர் சாதி முறைமையை, பல்வேறுவகைப் பட்ட சுரண்டல்களுக்கும் காரணமானதும் வர்க்க சார்புடையதுமான ஒரு பிரச்சினையாக நோக்கும் நிலையில் ஆழமான பார்வையைப் புலப்படுத்தினவர், இளங்கிரன், செ. யோகநாதன் முதலியவர்களும் இவ்வாறான நோக்குக் கொண்டிருந்த போதும் அவா களின் ஆக்கங் களில் அப்பார்வை ஆழமாகத் தொழிற்படவில்லை என்பது குறிப்பிடத தக்கது. (செ. யோகநாதன் அண்மைக்காலத்தில் தமிழகத்தில் இருந்து படைத்துள்ளவற்றை நான் இன்னும் முழுமையாகத் தரிசக்க வில்லை. ஆதலால் எனது மேற்படி கணிப்யு அவர் ஈழத்தில் இருந்தபோது எழுதிய முற்பட்ட படைப்புக்களையே கருத்தில் கொண்டதாகும்). செ. கணேசலிங்கனின் மேற்குறித்தவாறான ஆழமான பார்வையின் வெளிப்பாடுகள் என்ற வகையிலே நீண்ட பயணம், சடங்கு, போர்க்கோலம் என்பன குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவமுடையன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சாதிப் பிரச்சினை யால் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்கள் வர்க்கரீதியாக இணைந்து முச்சிபெற முற்பட்ட 1960-70 காலகட்ட சமூக வரலாற் றுப் போக்கைத தமது மேற்படி படைப்புகளில் செ. கணேசலிங்கன் பதிவு செய்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் தமது தாழ்வுச் சிக்கலினின்று விடுபட்டு எழுச்சிபெற்று வரும் நிலையை உணர்த்துவனவும், உயர் சாதியினரெனப்படுவோரின் உள்முரண்பாடுகளை இனங்காட்டுவனவு மாக இவரது மேற்படி படைப்புக்கள் அமைந்தன.
இவ்வாறு கணெசலிங்கனின் நாவல்கள் புலப்படுத்தி நின்ற ஆழமான பார்வையையும் சமுதாய விமரிசனத்தையும் மேலும் ஆழப்படுத்தி மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றன என்ற வகையிலேயே டானியலின் * பஞ்சமர் வரிசை நாவல்கள்" வரலாற்று முக்கியத்துவமுடைய படைப்புக்களாகத் திகழ்கின்றன. டானியலும் சாதிப் பிரச்சினையை பல்வகை ஒடுக்கு முறை களுக்கும் அடிப்படைக் காரணியான வர்க்க சார்பான ፵(Ù பிரச்சினையாகவே கண்டார். ஆனால் அவ்வாறு காணும் வகையில் குறிப்பிடத்தக்க தனித்தன்மையுடன் திகழ்ந்தார். கணேசலிங்கன் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவில் பள்ளர்-பறையர் ஆகிய இரு வகையினரையே முதன்மைப்படுத்தி நோக்கினார். ஆனால் டானியல் இவர்களுடன் நளவர், வண்ணார், அம்பட்டர் ஆகிய மூவகையின் ரையும் இணைத்து நோக்கியதோடு இவர்களோடு ஒத்த வாழ்க்கைத் தரமுள்ள வேறுபல சாதியினரையும் உட்படுத்தி நோக்கினார். இவர் வழங்கிய "பஞ்சமர்" என்ற சொல்லாட்சி மேற்சுட்டிய பள்ளர் முதலிய ஐவகையினரையும் பொதுவாகக் குறிக்கத்தக்கதாகும். அதேவேளை பஞ்சப்பட்ட அனைத்து மக்களையும் குறித்து நிற்கும் வகையில் பொருள் விரியத்தக்கதுமாகும். இவர்கள் அனைவரது இணைந்த எழுச்சியே பஞ்சமர் வரிசை நாவல்களில் புலப்படுத்தப்பட்ட தொனிப் பொருள் ஆகும்.
இலக்கு 21

Page 15
கணேசலிங்கனின் நாவல்கள் 50-70 காலகட்ட சமுதாய வரலாற் றுப் போக்கைச் சித்திரிப்பன. பஞ்சமர் வரிசை நா வலகள் மேற்படி காலப்பகுதியை உள்ளடக்கி அதற்கும் முன்னாக ஏறத்தாழ இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்டகாலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய வரலாற்றுப் போக்கையும் எடுத்துக் காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக அடிமைகள் நாவல் 1890-1956 காலகட்ட வரலாறாக அமைந்தது. 'கானல்", "தண்ணீர்" ஆகிய நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் இந்த நூற்றாண்டு தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று நான்கு தலைமுறைகளின் வரலாறுகள் இவற்றில் விரிகின்றன.
கணேசலிங்கனின் படைப்புக்களிலிருந்து டானியலின் பஞ்சமச் வரிசை நாவல்களை வேறுபடுததி நிற்கும் மற்றொரு முக்கியக கூறு இவரது சமூக அனுபவ நிலைகள் ஆகும். கணேசலிங்கனுக்கு அடக்குமுறைக் கொடுமை என்பது வாழ்வியல் அனுபவம் அல்ல. அது அவரது பொதுவுடைமைப் பார்வையினூடாகப் புலப்படும் ஒரு காடசி மட்டுமே. கண்டும் கேட்டும் உணர்ந்ததைக் கருத்து நிலைப் படுத்தி கதை அமைத்து அவர் நாவல் புனைந்தார். ஆனால் டானிய லுக்கு பஞ்சமர் பிரச்சினை என்பது வாழ்க்கையின் அனுபவ தரிச.ை ம ஆகும். தான் பிறந்த சமூக நிலையாலும் யாழ்ப்பாணப பிரதேசத் தின் பல்வேறு கிராமங்களின் அடிநிலை மாந்தரின் வாழ்க்கை நிலைகளோ டும் கொண்ட நேரடித் தொடர்புகளாலும் தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டத்தில் பங்கு கொண்டமையாலும் அவர் பெற்றி ருந்த அனுபவத் தெளிவு அது.
இந்தப் பஞ்சமரில் நானும் ஒருவனாக நிற்கின்றேன். அறி வறிந்த பருவம் முதல் இன்று வரை இந்த மக்கட் கூட்டது, தினரின் பிரச்சினைகளிற் பங்கு கொண்டு, இவர்கள் துன்பப் பட்டுக் கண்ணீர் விட்டபோதெல்லாம் சேர்ந்து கண்ணிர் விட்டு, சிறு சிறு வெற்றிகள் கண்டு மகிழ்ந்தபோதெல்லாம் சேர்ந்து மகிழ்ந்து.பெற்றுக் கொண்ட அனுபவங்களோ எண்ணிக்கையற்றவை
என அவர் கூறியுள்ளவை ("பஞ்சமர் - உள்ளே நுழைவதற்கு முன்.') இத்தொடர்பில் நமது கவனத்துக்குரிய.ை டானியல் அவர் களுக்கு இருந்த இந்த அநுபவத் தெளிவு பஞ்சமர் வரிசை நாவல் களுக்குத் தனியான கன பரிமாணத்தைத் தந்துள்ளமையை உய்த் துணர முடிகின்றது, இந்நாவல்களின் சம்பவங்களில் இருந்து கதையம் சத்தை உருவாக்குவதில் திட்டப்பாங்கான அமைப்புக்கு அதிக இடம் இல்லை. ஆசிரியரின் கற்பனைத் தொழிற்பாட்டிற்கு அதிக அவசியம் இருக்கவில்லை. சமூக வரலாற்றுப் போக்கில் பல்வேறு கூட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களைப் பொருத்தமுற இணைப்பதன் மூலம் - அவற்றினூடாகப் புலப்படும் சமூக அசைவு இயக்கத்தை உணர்த்துவதன் மூலம் - இந்நாவல்களுக்கான கதையம்சத்தை டானியல் அவர்கள8 ல் புலப்படுத்திவிட முடி கின்றது. யாழ்ப்பாணப் பிரதேசித்தில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிஜமான சமூக
22/ இலக்கு
 

மாந்தரைப் பெயர் மாற்றங்களுடன் நடமாட வைப்பதன் மூலமும் பல்வேறு கிராமப்புறங்களின் நடைமுறை வாழ்க்கை பழக்கவழக்கம் உணவுமுறை, பொழுது போக்குகவ,சடங்கு-சம்பிரதாயங்கள் முதலிய வற்றை இயற்பண்புடன் சிததிரிப்பதன் மூலமும் ஒரு உயிரோட்ட மான-நிஜமான-சமூக வரலாற்றை டானியல் அவர்களால் காட்சிப் படுத்தி விட முடிகின்றது. வாழ்க்கையிலிருந்து கைை உருவாகின்றது என்ற நிலைக்குப் புறம்பாக வாழ்க்கையே கலையாகிவிடும் நிலையை பஞ்சமர் வரிசை நாவல்களில் தரிசிக்க முடிகின்றது.
"வாழ்க்கை-கலை இவற்றின் எல்லைக் கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்மையாக நூலை நிறைத்துள்ளன' எனப் பேராசிரியர் க. கைலாசபதி பஞ்சமர்" முதற்பாகம் தொடர் பாக முன்வைத்துள்ள கணிப்பு (தினகரன் வாரமஞ்சரி 1972 10, 22, பக் 10) பஞ்சமா வரிசை நாவல்கள் அனைத்திற்குமே பொருந்தக் கூடிய கணிப்பாகும்.
பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்தினதும் பொதுவான கதையம்சத்தைப் பின்வகும் இரு கூறுகளுக்குள் அடக்கிவிடலாம்.
(அ) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக் கொடுமைகளின்
விவரணம். ஆ) அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனித நேயம் கொண்ட உயர்சாதியினர் எனப்படுவோரும்
இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கை களின் விவரணம், முதல் நாவலான பஞ்சமரில் இந்த இரு கூறுகளும் நேரடியாகவே கதையம்சமாக விரிகின்றன. உயர் சாதியினர் எனப்படுவோரில் சாதித்திமிர், அதனால் அவர்கள் புரியும் அட்டுழியங்கள் என்ப:ை தொடர்பான பல கதைகள், செய்திகள் என்பவற்றையும் தாழ்த்தப் பட்டோரின் வர்க்க ரீதியான எழுச்சியையும் இந்நாவல் கட்டம் கட்ட மாக விவரித்துச் செல்கிறது.
"கோவிந்தன்’ நாவலிலே சாதித்திமிர் பிடித்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி சித்திரிக்கப்படுகின்றது. பஞ்சமரின் எழுச்சிக்கு முன் சாதித் திமிர் நிலை தளர்ந்து போவதாகக் காட்டுவது இந்நாவலின் அகநிலை யான கதையம்சம், ஆனால் புறநிலையிலே 'சாதி மீறிய காதல் - பாலியல் உறவு" என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தியதாக இந் நாவல் அமைந்துள்ளது.
"அடிமைகள்’ நாவலும் கோவிந்தனைப் போலவே வேளாளகுலக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியைப் பேசுவது. நிலம், புலம், சொத்து, அதிகாரம் , அடிமை-குடிமை என்பவற்றுடன் ராசவாழ்வு நடத்திய அக்குடும்பம் கேளிகைக்கள் , ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலிய வற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக இந்நாவல் காட்டியமைகின்றது.
'கானல்’ நாவலின் கதையம்சம் மேற்கூறியவற்றினின்று சற்று வேறுபட்டது. தமிழர் மத்தியிற் பரவிய கிறிஸ்தவ மதம் சாதிபிரச்
இலக்கு | 23

Page 16
சினைக்குத் தீர்வு காட்டும் ஒன்றாக அமைற்ததா? என்ற வினா எழுப்பி விடைகாணும் நோக்கில்-விமர்சிக்கும் நோக்கில்-இது அமைகின்றது.
சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையில், குடிதண்ணீர் பெறுவதில் தாழ்த்தப்பட்டோர் எய்தும் அவலங்களை மையப்படுத்திக் கதைப் பொருள் கொண்டமைந்தது தண்ணீர் நாவல்.
தாழ்த்தப்பட்டோரின் சமத்துவம் நோக்கிய எழுச்சி வரலாற்றுடன் தமிழரின் இனவிடுதலைக்கான இயக்கங்களின் உருவாக்க சூழலை இணைத்துப் புனையப்பட்ட நாவல் பஞ்சகோணங்கள். தாழ்த்தப்பட் டோரின் எழுச்சி மேற்படி சூழலில் எத்தகு பாதிப்புக்களை எய்திற்று என்பதை இந்நாவல் மூலம் டானியல் உணர்த்த விழைகின்றமை புரிகின்றது.
மேற்குறித்தவாறான பஞ்சமர் வரிசை நாவல்களின் கதைகள் நிகழ்களங்கள் என்ற வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமப்புறங்களும் டானியலின் பார்வைப் பரப்புக்குள் வந்துள்ளன. குறிப்பாக பஞ்சமர் நாவலின் கதை நந்தாவில், வட்டுக்கோட்டை முதலிய கிராமங்களில் நிகழ்ந்தது. "கோவிந்தன்” நாவலின் முக்கிய களம் சுதுமலை. "அடிமைகள்' நாவல் மந்துவில், புத்தூர், சுட்டிபுரம் ஆகிய கிராமங்களில் நிகழ்கின்றது. 'கானல் தாவடி, சின்னக்கலட்டி, திருநெல்வேலி ஆகிய கிராமங்களைக் களமாகக் கொண்டது. "தண்ணிர் வடமராட்சிப் பகுதியை குறிப்பாகக் கரவெட்டியை மையப் படுத்தியது. "பஞ்சகோணங்களின்" கதை நிகழ் களங்களாக புன்னா லைக்கட்டுவன், கட்டுவன், உரும் பிராய், சுன்னாகம் ஆகிய கிராமங் கள் அமைந்துள்ளன.
இந்நாவல்களின் கதை நிகழ் களங்களைப் போலவே கதை நிகழ் கால எல்லைகளும் விரிவானவையாகும். பஞ்சமர் நாவல் நிகழ்வு கள் 1956-69 காலப்பகுதிக்குரியன. இக்காலப் பகுதியை அடுத்து தமிழின விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவான காலம் வரையான ஆண்டுகளில்-ஏறத்தாழ 1970-80 களில் பஞ்சகோணங்கள் கதை நிககின்றது என்பது அந்நாவலின் முன்னுரையால் உய்த்துண ரப்படுவது. ஏனைய நான்கும் இந்த நூற்றாண்டின் முற்பகுதி சார்ந் தனவாகும். குறிப்பாக கோவிந்தன் 1919-65 காலப்பகுதியையும் அடிமைகள் 1890 1956 காலப்பகுதியையும் கதை நிகழ்காலமாகக் கொண்டவையாகும், w
இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது சாதிப் பிரச்சினையை உள்ள்டக்கமாகக் கொண்ட படைப்புக்களின் வரலாற் றில் கதையம்சப் பரப்பு, பிரதேசப் பரப்பு, காலப்பரப்பு ஆகியவற்றில் பஞ்சமர் வரிசை நாவல்கள் முன்னைய ஆக்கங்களை விட மிக விரிவானவையாக-தனிக்கவனத்திற்குரிய கனபரிமாணங்கள் கொண் டவையாக - திகழ்கின்றமை தெளவாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம் 23-3-94 அன்று நிகழ்த்திய எழுத்தாளர் கே. டானியல் நினைவு அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் தொகுப்பு.
24 / இலக்கு
 

காயத் செல்லாது - - - - -
நூல் விமர்சன பகுதி
ஒரு தொகுப்பை நூலாகக் கொண்டுவரும்போது சுயமதிப்பீடு செய்வது அவசியம்.
தீவுகளின் சந்திப்பு 18, திருவள்ளுவர் வீதி, திலகர் நகர், (சிறுகதைகள்) தட்டாஞ் சாவடி (அஞ்சல் ), புதுவை ரா. ரஜினி, புதுச்சேரி. 9. விலை ரூ 16 -
தகவல் தொடர்பியல் கருவிகள் வளர்ச்சியினால் பெருகியுள்ள வணிக இதழ்கள், வாழ்க்கை குறித்து மேலோட்டமான படைப்புக் களை வெளியிட்டு, பரந்துபட்ட மக்களிடையே மலிவான வாசக தளத்தை உருவாக்கியுள்ளன. இதனால், படைப்பாச்கத்தினை மிக எளிமைப்படுத்தி கொச்சையாகப் புரிந்துகொண்டு, வெகுசன இதழ்களின் தேவைக்காக ஆக்கங்களை எழுதுகின்ற படைப்பாளி கள் (1) இன்று பெருகியுள்ளனர். வெகுசன இதழ்களில் எழுது வதன் மூலம் கிடைக்கும் பிரபலத்தினுக்காகவே எழுதுகின்றவர்கள், இலக்கியவாதியாகவும் தம்மை நிலை நிறுத்து விசித்திரமான சூழல் தற்சமயம் தமிழில் நிலவுகிறது. இத்தகைய சூழலில், புதுவை ரா ரஜினி வெகுசன ரசனைக்கேற்ப விசித்திரமான கலவையில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
பாண்டிச்சேரியில் வாழ்கின்ற ஓட்டல் நிர்வாகம் படித்து
வேலையிலுள்ள இளைஞன், அவனது ப்ரிய வத்சலா, அவனது நண்பர்கள், அவனது பால்யகால நினைவுகள். எனப் பல கதை களில் ஒரே செய்தி மையமாக அமைந்திருப்பது அடிப்படையில் அருமையான உத்தியெனினும், சம்பவ விவரிப்பில் மேலோட்டமாக இருப்பதனால் "கூறியது கூறலாக வறண்டுள்ளது. மேலும் கதை மனிதர்கள் மற்றும் அவர்களுடைய அனுபவங்கள், கதை சொல்லி யின் தளத்திலே செயற்படுவதினால், தட்டையாக இருப்பது தொகுப்பிலுள்ள கதைகளின் பலவீனமான அம்சமாகும்.
ஒரு நண்பனின் கதை, மாறுதல்கள், சில உண்மைகள்போன்ற கதைகளில் கதை சொல்லிக்கும் அவரது இளமைக்கால நண்பர் களுக்குமிடையிலான உறவு மற்றும் அனுபவங்கள் நினைவாக விரிகின்றன. மனித மனத்தின் நுணுக்கமான கூறுகள் அழுத்த மாகப் பதிவாக்கப்பட்டமையினால், அவை உணர்ச்சியற்ற சொற்களின் வெற்றுக் குவியலாகி, வாசிப்பவருக்கு அலுப்பைத் தருகின்றன.
அண்ணன் குதிரை, ஆத்மாக்கள் - இரு கதைகள் மட்டும், தொகுப்பினுள் மாறுபட்ட தளத்தில் (1) உள்ளன. குதிரை, ஒரு
இலக்கு I 25

Page 17
பார்ப் னக் குடும்பத்தில் ஏற்படுத்தும் மன உணர்வுகள் மற்றும் பாதிப்பினைப் படைப்பாக்காமல், "ரிச்சி போயிடுச்சி வத்சலா" என்று பொலபொலவெனக் கண்ணிர் விடும் பார்ப்பனனைக் காட்டியிருப்பதன் மூலம் நல்ல கதை வீணடிக்கப்பட்டிருக்கிறது.
குடும்ப உறவு, குறிப்பாக ஆண் -பெண் உறவு கத்ைகள், வெறும் அசட்டு உணர்ச்சிகளின் தொகுப்பாக உள்ளன. முழங் காலில் முகம் புதைத்து குலுங்கும் 'வசந்தமான கனவுகளில்" மிதக்கும் "பால குமாரன்” பிராண்ட் பெண்கள், தொகுப்பில் நிரம்ப உள்ளனர். ஒரு நிலையில், வெகுசன, வணிக எழுத்தை விட மேலானதாக இருப்பது போன்று புதுவை ரா. ரஜினியின் கதைகள் 'பாவ்லா" பண்ணுகின்றன. மேலும் யதார்த்தத் தளத்தில் இயங்கும் இவரது கதைகள், யதார்த்தக் கதைகளின் அடித்* எ மான நம்பகத்தன்மை, அனுபவத் தேர்வு, வாழ்க்கை மதிப்பீடு, சம்பவ விவரிப்பு மற்றும் சொல்வளம் அற்று வறண்டிருப்பதனால். எதிர்கொள்ளும் வாசகனுக்கும் எவ்வித அனுபவத்தினையும், தருவதில்லை.
ஒரு இளம் படைப்பாளி, தனது பயிற்சிக்கால எழுத்தினை, அற்புதமெனச் சிலாகித்து, அவை இதழ்களில் வெளியானதாலே அங்கீகாரம் கிடைத்ததென மயங்குவது இயற்கை . ஆனால் ஒரு தொகுப்பு நூலாகக் கொண்டு வரும் போது, போலித்தனத்துக்கும் உண்மைக்குமிடையிலான வேறுபாட்டினைப் புரிந்துகொள்வதுடன் சுய மதிப்பீடு செய்துகொள்வது அவசியம். அப்பொழுதுதான் நூறாண்டு வரலாறுடைய நவீன தமிழிலக்கியத்தில் தனது இடத்தினை வரையறை செய்ய இயலும். இவ்வடிப்படையில் *பத்தோடு பதினொன்று' என்ற முடிவுக்ரு வருவதனைத் தவிர வேறு வழியில்லை. - 5 T. (p (563 surgiyus
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற ஒருவகை இலக்கியம் வெளிவரத் தொடங்கியுள்ளது.
அம்பி கவிதைகள் மித்ர வெளியீடு, 375, ஆற்காடு ஆர். அம்பிகைபாகன், சாலை, சென்னை-24
"அம்பி கவிதைகள்' என்ற பெயரில் வெளிவந்திருக்கும் கவிஞர் அம்பி (அம்பிகைபாகன்) அவர்களின் கவிதைத் தொகுதியில் அவர் பல்வேறு காலங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் எழுதிய பலதரப்பட்ட கவிதைகள் யாவும் அடங்கியுள்ளன
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கவிஞரான இவர், ஈழத்துக் கவிதை வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரையைப் பதித்த கவிஞர்களான மஹாகவி, நீலாவணன் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனது படைப்பு களை வெளிக்கொணர்கிறார். அடிச்சுவடு, அம்பிப்பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், Lingering Memories போன்ற நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரின் வேறு பல நூல்கள் வெளிவரவும் உள்ளன.
26 /இலக்கு
 

"அம்பி கவிதைகள்" என்ற கவிதைத் தொகுதியில் இசையில், அலைகளில், அரங்குகளில், வழியில், குறுங்க வியம் என்ற பகுதி களில் உள்ளடக்கப்பட்ட கவிதைகளில் இசையில் என்ற பகுதியில் உள்ளவை இயற்கைச் சித்திரிப்புகளையும், அலைகளில் என்ற பகுதியில் உள்ளவை புலம் பெயர்வின் அவலங்களையும், அரங்கு களில் என்ற பகுதியில் உள்ளவை. கவியரங்கில் படிக்கப்பட்ட கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன வழியில், குறுங்காவியம் என்ற பகுதிகளில் -தமிழ்மொழிப் புறக்கணிப்பும் பண்பாட்டுச் சிதைவுகளும் கூறப்பட்டுள்ளன. மேற்கூறிய விஷயங்களைக் கூறும் இவரது கவிதைகள் யாவும் மரபுக் கவிதைகளாக அமைந்து சொல்லடுக்குகளையும் ஓசை நயத்தையும் கொண்டு காணப்படு கின்றன.
ஈழத்தின் தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலைகள் காரண மாகப் புலம்பெயர்ந்து வாழும் மக்களுடைய அவலங்களைச் சித்திரிப்பனவாகப் "புலம் பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற ஒரு வகை இலக்கியம் வெளிவரத் தொடங்கியுள்ள சூழ்நிலையொனறில் அம்பி அவர்களும் தன்னைப் பாதித்த புலம்பெயர்வின் துன்ப துயரங்களைத் தனது கவிதைகளினூடாக இனங்காட்டுகிறார்.
'அண்ணை வா தம்பிவா என்று
அனைவரும் மகிழ்ந்த ஞாலப' என்று சொந்த நாட்டின் சிறப்பைக் கூறும் இவர்
"சகடைக்காலின் அசைவு கொண்ட உலகிலே தமிழன் என்ற தனித்தவத்தை பேணுநீ' என்று தமிழன் என்ற மானவுணர்வுடன் வாழ வேண்டிய வாழ்வின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
புலம் பெயர்ந்து சென்றவர்கள் அங்கிருந்துகொண்டு சொந்த நாட்டின் சுகங்களை நினைத்து அந்த இனிய வாழ்வுக்காக ஏங்குவது ஒருபுறமாகவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அவல வாழ்வின் சோகங்களைச் சித்திரிப்பது மறுபுறமாகவும் புலம் பெயர்ந்தோர் இலக்கியங்களில் சித்திரிககப்படுகின்றன. இவற்றை விட அந்நிய மோகத்தில் அமிழ்வதால் ஏற்படும் பண்பாட்டுச் சிதைவுகளும், தமிழ்மொழிப் புறக்கணிப்பும் புலம் பெயர்ந்தோர் இலக்கியங்களில் பொதுவாகச் சித்திரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்நூலாசிரியரும் வழியில், அவைகளில் என்ற பிரிவுகளில் புலம்பெயர்வு வாழ்வின் ஒரு பகுதியைக் கூறிச் செல்கிறார்.
கவிதை என்ற இலக்கிய வடிவம் மிகவும் வளர்ந்து வருகின்ற வடிவமாகவும், எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகின்ற இலக்கியமாகவும், குறுகிய வடிவில் நிறைந்த பொருளைத் தருகின்ற இலக்கிய வகையாகவும் காணப்படுகின்றது. ஈழத்துக் கவிதை வரலாறு அன்று முதல் இன்றுவரை தனக்கென ஒரு தனித் துவத்தையும் ஒரு சிறப்பினையும் கொண்டது. மஹாகவி முதல் புதுவை இரத்தினதுரை வரை இந்த உண்மையை நிலைநிறுத்தி
இலக்கு 127

Page 18
யுள்ளனர். 'கவிஞனின் கலை எம்மைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டினைத் தராவிட்டால் நாம் எம்மைச் சரிவர அறிந்து கொள்ள முடியாது." இத்தப் பேருண்மை பொதிந்த வாசகத்துக் கமைய ஈழத்தில் இருந்து கொண்டு தமது படைப்பாற்றலால் ஈழம் சார்ந்த உணர்வுகளைப் படைப்பாளிகள் வெளிக்கொணர் கிறார்கள்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் ஈழத்துக்கப்பால் பல்வேறு நாடு களிலிருந்து கொண்டு ஈழத்துப் படைப்பாளிகள் பல்வேறு இலக்கியப் படைப்புகளை வெளியிடுகின்றனர். இந்த வகையில் வெளிவந்துள்ள ஒரு ஆக்கம் இது. அவ்வளவே.
"மித்ர' வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுதியில் சந்தம், சொல்லடக்கு, ஒசைச்சிறப்பு போன்றனவும், ஆங்கிலச் சொற்களும் தொடர்களும் (லெற்மீ எலோன் மம்மி வெற், மீ டிசைட்.)போன்ற மொழிச் சொற்களும் காணப்படுகின்றன. வெளிநாட்டு வாழ்வைச் சித் திரிக்கும் கவிதைகளில் வேற்று மொழிச் சொற்களுக்க்ான பொருளை அடிக்குறிப்பில் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. - ஈழமகன்
உலகத் தமிழரெலாம் ஒன்றாவதற்கு இதுபோன்ற நூல்கள் பயன்படும்.
தென்னாப்பிரிக்காவிஸ் 77 நாட்கள் (பயணப் பட்டறிவு) பேராசிரியர் இர. ந. வீரப்பன்
உலகில் இன்று நூற்றிற்கும் அதிகமான நாடுகளில் தமிழர் பரவி வாழ்கின்றனர். பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறை னர். அறிவியல், தொழில்நுட்டம் போன்ற அறிவு சார்ந்த உயர் தொழில் நுணுக்கத்துறைகளில் தமிழர் பலர் பணியாற்றியபோதி லும், கடல் கடந்து சென்ற தமிழரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பஞ்சைகளாய், பராரிகளாய், கூலிகளாய், எடுபிடிகளாய், ஏதிலி களாய் உலகில் பல நாடுகளில் சிதறிக் கிடக்கின்றனர். அவ்வாறு சிதறுண்டு கிடப்போரை ஒன்றிணைக்கும் உயர்நோக்கம் காரண மாக அகிலமெங்கும் பரவிட ஸ்ள அத்தமிழரின் வாழ்வியலை உற்று நோக்கி குறைகளையும் நிறைகளையும உய்த்துணர்ந்து தள்ள வேண்டியதையும் கொள்ள வேண்டியதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்.
பல்வேறு நாடுகளில் வாழும் தமிழரின் வாழ்வியலை எல் லோரும் அந்தநத நாடுகளுக்குச் செனறு அறிதல் இயலாது. அதற்கான வாய்ப்பு வசதிகள் எல்லோருக்கும் எளிதே அமையா. இது போன்ற பயண நூல்கள் மூலமாக ஆங்காங்குள்ள தமிழர் வாழ்வை நேரில் காண்பது போன்ற உணர்வினைப் பெறுகிறோம். ஆசிரியரின் பயணப்பட்டறிவு பன்னாட்டுத் தமிழருக்கும் பல வழி களில் முழுப் பயன் கிட்டுமாறு அமைந்திருப்பது பெரிதும்
28/ இலக்கு
 

பாராட்டுக்குரியது. ஆசிரியரின் இப்பணிக்காக நன்றி செலுத்துதல் நல்லது
பயண நூல் என்ற பெயரில் வழக்கமாக வெளிவரும் நூல்கள் பெரும்பாலும் சுற்றுலாத் தலங்களை மய்யமாகக் கொண்டு எழுதப் படுவனவாகும். அந்நூல்கள் மாடமாளிகையின் எழில் தோற்றம் பற்றிக் கூறும் வணண நீரூற்றுக்களின் அருமைப்பாட்டினை விளக்கும். உல்லாசக் கடற்கரையின் சிறப்பினை எடுத்துரைக்கும். இவை யாவும் வெறும் பொழுபோக்கிற்காகப் பயன்படுமே தவிர ஒரு சமுதாயத்தை மேம்படுத்த ஒரு சிறிதும் பயன்படாது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் 77 நாட்கள் என்ற இந்தப் பயண நூல் ஒரு மாறுபட்ட, தனிச் சிறப்புடைய, தமிழ்ச் சமுதாயம் பயன்பெறத் தக்க முறையில் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட நூலாகும். 'ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் . . . . . . . . . . . .'' என்ற பாரதியின் நெஞ்சையுருக்கும் பாடலுடன் நூலைத் தொடங்கி யிருப்பது மிகப்பொருத்தமானதாகும். தமிழர் வாழ்வு, கல்விநிலை முதலியவை குறித்துத் தமிழர் வாழ்வோடு தொடர்புடைய பல்வேறு புள்ளி விவரங்களைத் திரட்டி மானிடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு நோக்கோடு ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார்.
பண்டுக்கள் இலெமூரியரே! (பக்கம் 43) என்ற தலைப்பில் பல ஆப்பிரிக்கப் பழங்குடிகள் கடல் கொண்ட குமரிக்கண்டத்தைச் சார்ந்தவர்கள் என்பதைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்.
"கல்வி அமைச்சராக 1992 முடிய இருந்தவர் தமிழரான திரு. கிருட்டிணராசு, இவரது கல்வித் திட்டத்தில் தமிழுக்கான தனித் திட்டம் எதுவுமில்லை. ஏழாயிரம் ஆசிரியருக்குமேல் இந்தியராக, பெரும்பாலும் தமிழராக இருந்தும் தாய்மொழி மணமில்லை. தென்னாப்பிரிக்கச் சனநாயக ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு பூமிப்பிள்ளை. துணைக் கல்வி இயக்குநர் திரு. மாரி சூசைப்பிள்ளை எல்லோருமே தமிழராக இருந்தும் தமிழறிவு வளர வழி செய்யவில்லை. தனிப் புகழ், தனி மானம் எனக் கருதும் தமிழினக் குற்றவாளிகள்' எனத் துணிவுடன் தமிழுக்குப் பகைவர் தமிழரே என இடித்துரைக்கின்றார்.
தொன்னாப்பிரிக்காவில் நாடகக் கலை வளர பாடுபட்ட திரு. பி. கே. கண்ணிப்பிள்ளை, திருமதி நீலா போன்றவர்களைப் பற்றி எழுதிஅவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருப்பது மிகமிகப் பாராட்டத்தக்க செய்தியாகும்.
இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, குசராத்தி, இந்தி, உருது முதலிய மொழிகளும் அரபும் அங்கே உண்டு, தென்னாப்பிரிக் காவின் பத்து இலட்சம் இந்தியரில் அறுபது விழுக்காட்டினர்-ஆறு இலட்சம்-தமிழராக, பெரும்பான்மை மக்களாக இருந்தும் மற்ற இந்திய மொழிகளுக்குள்ள வளர்ச்சிகூடத் தமிழுக்கு இல்லையே, ஏன்? என்ற கேள்வியை எழுப்பி நமது சிந்தனையை ஆசிரியர் தூண்டுகிறார்.
இலக்கு 1 29

Page 19
இவ்வாறாகத் தென்னாப்பிரிக்கத் தமிழரின் மொழியியல், அரசியல், சமூகவியல். பொருளியல் வர்ழ்வைப் பல கோணங்களில் நமக்குக் காட்டும் மிகச் சிறந்த ஒரு நூலாக அமைந்துள்ளது. இருப்பினும் ஓரிரு குறைகளைச் சுட்டாமல் இருக்க முடியாது.
இலக்கண முதல்வன் தொல்காப்பியன் பிறமொழிச் சொற் களைத் தமிழில் பயன்படுத்துவதற்கு விதி செய்துள்ளான். வட மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்பொழுது வடமொழி எழுத்து களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்துகளாலே எழுதித் தமிழ்க் கோலம் செய்ய வேண்டுமென உணர்த்துகின்றான் நூலாசிரியர் மலேசியா (பக்கம் 21) என்று தொடங்கிய முதல் பத்தியிலேயே மலேஷியா என்று எழுதுகிறார். திரான்சுவால் என்ற ஊரை ட்ரான்ஸ்வால் (பக்கம் 37) என்றும் திரான்சவால் (பக்கம் 59) என்றும் டிரான்ஸ் வால் (பக்கம் 73) என்றும் எழுதுகிறார். இசுடேங்கர் என்ற ஊர்ப் பெயரை இஸ்டேங்கர் (பக்கம் 90) என்று தொடங்கி அதே பக்கத்தில் ஸ்டேங்கர் என்று எழுதுவது கொஞ்சமும் பொருத்த மில்லை. அச்சக அன்பர்களின் கவனக் குறைவாலும் இதுபோன்ற சில குறைகள் ஏற்பட்டிருக்கலாம். பிற மொழிச் சொற்களைக் கையாளும்போது ஒரு முறைமை பேணி சொற்கள் தமிழ்க் கோலம் பூண்டு வருமாறு இந்நூலின் அடுத்த பதிப்பை வெளியிடும்போது செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதில் அய்யமே இல்லை.
உலகத்து தமிழரெல்லாம் ஒன்றாவதற்கும் தமிழியம் தழைப்ப தற்கும் இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயன்படும். நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியதாகும். --முனைவர் சபா அருளானந்தம்
உருவகக் கதையின் சிறப்பம்சம்
அதிர்ச்சி நோய் எமக்கல்ல தமிழ்த்தாய் வெளியீடு (உருவகக் கதைகள்)
காக. பத்மநாதன்
உருவகக் கதையின் உருவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு நோக்கங்களுக்கு படிமுறை வளர்ச்சி உண்டு. இதை பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள் காலத்திலிருந்து, கே. எ. அப்பாஸ் போன்றோர் காலம் ஊடாக "வீரகேசரி', 'இளப் பிறை" ஆகிய பத்திரிகைகளின் காலம் வரை வெளியான இவ்வகைக் கதைகளை உற்று நோக்கின் சுலபமாகவே புரிந்துகொள்ள முடியும். கிராமியக் கதைகளில் சில, உருவகக் கதையின் வெளிப்பாட்டு நோக்கத்தை மிக தத்ரூபமாக உள்ளடக்கிக் காட்டுகின்றன. இதை எந்த மொழி நாட்டார் கதைகளிலும் காணலாம்,
ஆயினும், உருவகக் கதை கிராமியக் கதை அல்ல. சிறுகதை யும் அல்ல. எதன் எல் லக்குள்ளும் அடைபடாமல் சுயம்பு வாகவே அது இருக்கின்றது. இது ஒருவகைத் தேக்க நிலையைக் குறிப்பதாகக் கொள்ளலாமெனினும், இதுவே இதன் சிறப்பம்சமும்
(35 to
30 | இலக்கு
 

ஆதிகாலக் கதைகளையும், இடைக்காலக் கதைகளையும், பிற்காலக் கதைகளையும் ஒப்புநோக்கின் வெறும் நீதி போதனை களுக்காக எழுந்த அக்காலக் கதைகளிலிருந்து இடைக்காலக் கதை கள் உத்திவகைகளில் வேறுபடுவதையும், அவ்விரண்டு காலகட்டக் கதைகளிலிருந்தும் இக்காலக் கதைகள் வேறுபட்டு சமூகநீதி சொல்ல வந்துள்ளதையும் ஒருவர் தெற்றெனப் புரிந்து கொள்ளலாம்
பூர்வாங்கமான இத்தகவல்களை மனத்தில் கொண்டு நூலை அணுகுவோம்.
வீரகேசரி, சிரித்திரன் போன்ற பல்வேறு பத்திரிகைகளிலு வெளிவந்த, ஆசிரியர் சொல்வதுபோல் 43 ஆண்டுக் கால அறுவடையின் தொகுப்பு நூல் இது. இத்தொகுப்பிலுள்ள 34 கதைகளும் ஒரே தரத்தனவல்ல. சிறந்தவை, சுமாரானவை என பலதரத்தன. சிறந்த கதைகளுள் சிலுவை, அழியாத ஒன்று ஆகிய கதைகள் உருவகக் கதையின் உன்னதத்தைத் தொடு கின்றன.
உருவகக் கதையின் இலட்சணத்தைத் தெரிந்து ஆசிரியர் பிரக்ஞை பூர்வமாகவேதான் இவ் இலக்கிய வகையினைக் கையாள் கிறார். நடையில், உருவகங்களைக் காட்டுவதிலும், அர்த்த்த்துக் கேற்ற உருவங்களைச் சமைப்பதிலும் இதைத் தெரிந்துகொள்ள முடிகிறது ஆனால், தொகுப்பின் வெற்றிக்கு இந்தக் கத்ைகள் இன்னும் வடிகட்டப்பட்டிருக்க வேண்டும். விடுதலை உணர்வை வெளிப்படுத்த எழுதப்பட்ட கதைகள் இன்னும் செழுமைப்படுத்தப் பட்டிருப்பின், நூலின் அமைப்புப் போலவே ஒரு வித்தியாசமான உருவகக் கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்ததாக ஒரு வாசகன் மகிழ்ச்சிப்பட நிறையக் காரணம் இருந்திருக்கும். -துறவி அவர் தொட்டுள்ளவை நாம் தொடாதவை என்ப தால் நம்மைத் தொடுகின்றன.
நகடித்ர மீன் எஸ். பி. ஆர். புக்ஸ், 4/5, மணிநகர், தேவதேவன் தூத்துக்குடி-628 003. விலை: ரு.-00 "நட்சத்திர மீன்" 92, 93, 94களில் தேவதேவன் படைத்துள்ள நறுக்குகளின (புதுக்கவிதைகள்) தொகுப்பு.
அவர் தொட்டுள்ளவை நாம் தொடாதவை என்பதால் அவை நம்மைத் தொடுகின்றன. -
"குல்லாய் வியாபாரி' ஒரு நறுக்கு. பழைய கதை அல்ல--தேவ தேவன் சொல்வது புதிது.
எல்லோருக்கும் அவரவர் தலைகளுக்கு நலந்தர தலைப்பாகை விற்பவன் தன் தலையில் மட்டும் தலைப்பாகை மூடை சுமந்து அழுந்துகிறானாம்.
நட்சத்திர மீனில் நறுக்குகள் அனைத்துமே இப்படித்தான்,
இலக்கு 31

Page 20
பகையே அன்பாயும் அன்பே பகையாயும் மாறும் அன்பின் நடிப்பினை--இடத்துக்கு இடம் வேறுபட்டுத் தோன்றும் அன்பின் பொய்மையை-இதனால் சிதறுண்டு தனித்தனி கொண்டாட்டங்கள் நடத்தும் மாந்தரை-ஒன்று படா உலகை எதிர்த்து 'மெளனங்கள்" என்னும் நறுக்கு உரத்து ஓசை எழுப்புகிறது.
இலையசைவு' ஒரு சிறிய நறுக்கு. பெரிய இலக்கியம்.
விடுதலை பற்றி அறிந்திட வியட்நாமைப் பார்-தென்னாப் பிரிக்காவைப் பார்" என்று பேசுகிறவர்களுக்கு-யாரையும் பார்க்காமல் எங்கும் போகாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே விடுதலைப் பாடம் நடத்துகிறது இலை.
இலையில் தங்கியிருந்த நீர் சொட்டுச் சொட்டாய் விழுந்துகொண்டிருந்தது. ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை * அப்பாடா?" என மேலெழுந்தது இலை. "அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக, "இங்கும் அங்குமாய் அல்லாது வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய் என்றும் இருக்கிறதை மட்டுமே அறிந்திருந்தது அது" என்கிறார் தேவதேவன்.
வேண்டாம்" என்னும் நறுக்கு தாஜ்மகால்மீது கூட நமக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி ஒரு கரு. அப்படி ஒரு பிடி.
"வீடுபெறல்" இயல்பான பட்டறிவின் வெளிப்பாடு.
அவளுக்கு எதிரே காத்திருக்கிறது அவள் பாதை அவனுக்கு எதிரே காத்திருக்கிறது அவன் பாதை"
வெளியிலுள்ளவர்களை விளிப்பதற்கல்லவா பெயர்?" "தேன்நிரப்பி கனத்து பூமிநோக்கித் தள்ளும் சின்னஞ்சிறு பாரத்தை வெகு எளிதாக தேன்தொடாச் சிறகுகள் தூக்கி உலாத்துகின்றன’ போன்ற வரிகள் ஆழமானவை,
சந்துரு வேறு நூலுக்கு தனி அழகுதான். ஆனால்மில்டன் காலத்து சாத்தான்களுக்கும் தேவதைகளுக்கும்
இருபதாம் நூற்றாண்டின் தேவதேவனுக்கும் இருக்கும் தொடர்பு தேவைதானா? தேவதேவன்தான் சொல்ல வேண்டும்.
உருமாற்றம், கட்டித்தழுவல், உறவு, ஒளியின் முகம், இலை யசைவு போன்ற அழகான தனித் தமிழ்த் தலைப்புக்களிடையே "பைனரி", "மெளனங்கள்" "குல்லாய் வியாபாரி", "நக்ஷத்ர மீன்", "ஒரு பரிசோதனையும்." என வரும் பிறமொழித் தலைப்புகள் அருவருப்பூட்டுகின்றன: - காசி ஆனந்தன்
32 இலக்கு
 

தமிழ்நாட்டுக் கவிதைக்கும் ஈழத்துக் கவிதைக்கும் உள்ள வேறுபாடு கவிதை யாழ்ப்பாணம், இலங்கை (இளங்கவிஞர்களுக்கான இரு திங்கள் ஏடு) விலை: ரூபா 15 бо. Cou aryптағпт
பெரும் பத்திரிகையோ, சிறு பத்திரிகையோ ஒரு பத்திரிகை வெளிவருவதற்கு இலக்கியம் சார்ந்தும், சாராததுமான சில பல காரணங்கள் இருக்கின்றன. ஒடைக்கரை வீதி, குருநகர் என்ற விலாசந்தாங்கிய 'கவிதை" இதழ்கள் மூன்றைப் படிக்கக் கிடைத்த தில் மேற்குறிப்பிட்ட இலக்கிய, மற்றும் இலக்கியத்திற்கு வெளியே யான காரணங்கள் சிலவற்றை ஓரளவிற்கு அறிய முடிகிறது.
இலக்கியம் சார்ந்த காரணங்கள் என்று பார்த்தால் வண்ண நிலவனின் கடிதவரிகளையே திரும்பத் தரத் தோன்றுகிறது:
'பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணத்திலுள்ள நிலவரத்தைக் காட்டுகின்றன. என்றாலும், அவை ரொம்ப நேரடியாக உள்ளது போல் தோன்றுகிறது. "ஆனால், உங்களுடைய இப்போதைய நோக்கம் உயர்ந்த தரத்தைவிட, இளங்கவிஞர்களை ஊக்குவிப்பதாகத் தான் இருக்க முடியும் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கே நிலவுகிற அவதியும், சஞ்சலமும் மிக்கசூழலில் இலக்கியத்தின் ஊற்றுக்கண் அடைப்பட்டுப் போய்விடக் கூடாது. இதற்காக நீங்கள் மேற்கொண் டுள்ள இந்த முயற்சிக்கு என் எளிய வாழ்த்துக்கள்." தொடர்ந்து பல வருடங்களாக போரின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாண இளம் உள்ளங்களில் பயம், வன்முறை, பாதுகாப்பின்மை முதலிய உணர்வுகள் எத்தனை தீவிர மாக ஊடுருவி அவர்களை மனநோயாளிகளாக்கி வருகிறது என்ற விவரங்களைத் தரும் கட்டுரையொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந் தது. சூழல் அழுத்தத்திற்கும், அதனால் ஏற்படும் மன அழுத்தத் திற்கும் ஒரு வடிகாலாய் 'கவித்ை" பத்திரிகை அமைந்திருப்பதாய்க் கொள்ளலாமா?
அதேபோல்தான் மரபிலும் சரி, புதுக்கவிதையிலும் சரி "கவிதை' தரமான கவிதைகளையும் தருகிறது, வறண்ட கவிதை களையும் தருகிறது. கவிதைகளின் "தரம்" என்று பார்க்கும்போது அவர்கள் வயது, கல்வி. சமூகப் பொருளாதார வாழ்வுச் சூழல் முதலியவற்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமா இல்லை தரமான கவிதையென்பது அவற்றையெல் லாம் மீறி உருவாவதா? என்ற கேள்வியும் உடன் வந்து உறுத்து கிறது. "இளங்கவிஞர்கள்' என்ற பதம் எத்தனை வயதுக்குட்பட்ட வர்களைக் குறிக்கிறது -அப்படிப்பட்ட வயது வரம்பை " கவிதை" இதழ் கடைப்பிடிக்கிறதா என்பது போன்ற விவரங்களும் தெரிய வில்லை. கவிதை குறித்த கட்டுரைகள், கேள்வி-பதில்கள் கவிஞர் களை நேர்காணல், தலையங்கம் போன்ற பகுதிகளில் தென்படும்
இலக்கு | 33

Page 21
தரமும், அனுபவ முதிர்ச்சியும் அதேயளவு நிலைப்புத்தன்மை கூடியதாய் கவிதைகளில் கிடைப்பதில்லை. இதன் காரணமாய்த் தான் இளங்கவிஞர்களின் வயது வரம்பு பற்றிய சிந்தனை எழுகிறது. இப்படிச் சொல்வதால் வயது முதிர முதிர எழுத்தாற்ற லும், அனுபவ முதிர்ச்சியும் கூடுமெனறு சொல்வதாக அர்த்த மல்ல!
"இதயமும் இதயமும் இணைவதே இக்காதல் இளகிய இதயங்கள் இணைவதில் ஒரு தூறல் இளமையில் இதயத்தில் ஏற்படும் ஒரு மாறல் இருண்ட இதயத்தில் ஒளிர்வதே இக் காதல். மேற்கண்ட வரிகள் "றுக்ஷன்' என்பவர் எழுதிய உண்மைக் காதல் என்று தலைப்பிட்ட கவிதையில் வருகின்றன. கவிஞனின் வயது குறித்த சிந்தனையையும் மீறி மேற்கண்ட கவிதை வரிகளும் அந்த முழுக்கவிதையுமே சாதாரணம்தான் என்ற முடிவுக்கே மனம் வருகிறது. ‘செல்கின்ற பாதையிலே' என்ற தலைப்பிட்ட மீசாலையூர் கமலாவின் கவிதை, கு. மணிமேகலையின் 'நிறை வாழ்வு மலரட்டும்' என்ற கவிதை. ஞா. கெனத்தின் "இரவுகள்" என்ற கவிதை என கவிதை இதழ்களில் பல 'சுமார் கவிதைகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதே சமயத்தில், சுமார் கவிதைகளுக்கு சரிசம விகிதத்தில் சிறந்த கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
"அந்தச் சுவரில் கீறாதே மகனே! முற்றத்தில் உழக்கி விளையாட வேண்டாம் அந்தப் பூக்களைப் பறித்தல் கூடாது அவையொன்றும் நம்முடையவையல்ல" என்று செய்யாதே"க்களோடு செல்லும் கருணாகரனின் "புதிய விதிமுறைக் கவிதை (கவிதை இதழ் ஐப்பசி-கார்த்திகை 1994) ஏது செய்ய/காலம் சுருக்குக் கயிறான பின்/கண்டதுக்கும் மறுப்பைக் கட்டளையிடும் உறவாயிற்று நமக்கு-என்று முடி வுறுகையில் போர்ச் சூழலில் இடம் விட்டு இடம் பெயர்ந்து வீடிழந்த வர்களாயும், அகதிகளாயும் அல்லலுறும் தமிழ்மக்களின் அவலம் நம் மனதில் கனக்கிறது. "சொல்லத் துடிக்குதய்யா நெஞசம்!” என்ற தலைப்பிட்ட பா. மகாலிங்கசிவத்தின் அழுத்தமான மரபுக் கவிதை கவிநயமும், சமூகப் பிரக்ஞையும் ஒருசேரப் பெற்று புத்தரைக் கேள்வி கேட்கிறது சில வரிகள் :
"தென்தமிழ்ப் பூமியை நெருப்பில் எரிப்பதும் சிறுவர் உடல்களும் தெருவிற் கிடப்பதும் பைந்தமிழ்க் கன்னியர் கற்பைப் பறிப்பதும் பசாசுக் குழுக்களே ரோந்து புரிவதும் பஞ்சனை மீதினிற் படுத்தோர் காட்டிலே படுந்துயர் காண்கிலை; பரி நிர்வாணமோ? உந்தனுக் குணவிடச் சுஜாதை வந்தனள் இவர்களுக்குதவிட யசோதையா வருவது? இப்படி "சிறந்த" கவிதைகளுக்கு நிறைய எடுத்துக்காட்டு
களை கவிதை இதழ்களிலிருந்து தர முடியும். தமிழர்களின் போர்ச்சூழலை, போருக்கான நியாயங்களை எடுத்துரைக்கின்றன
34 / இலக்கு
 

*கவிதை"க் கவிதைகள். தமிழர் பக்க நியாயங்கள் மட்டுமே பேசப் பட்டிருக்கின்றன என்றும் கூறலாம். "கடிக்கின்ற நுளம்மை/ அடிக்காமல் இருந்தாலும்jகொழும் பில்/"பயங்கரவாதி" தான்/எதிரி இருக்கின்ற எங்கள் மண்ணிலும்/தீவிரவாதிதான்-என்று ஆரம்பிக் கும் இ. ஜனார்த்தனின் "தாய்மண்ணும் நாமும்!" கவிதை, 'கலாநிதி என்றாலும்/கனடாவில்/கைதேர்ந்த "கூலி தான்! வெள்ளைக்காரியிடம்/கொள்ளை போனாலும்/கொண்ட பெயர் "கறுப்பன்'தான்!ஆனால்/குண்டு வெடித்துக்/குவிந்த தசையாய்! எங்களூர்ச் சுடலையிலே/எரிகின்ற போதிலும்./சொந்தப் பெயர்/ மனிதன் (ஆவணி-புரட்டாதி 1 94 இதழ்) எனவும், "முகவரியை மாற்றியுள்ளேன்" என்று தலைப்பிட்ட "மு. விஜயராகவனின் கவிதை' நான் என்/முகவரியை/மாற்றியுள்ளேன்/உன்னைப் போல்/நானும் எங்கேனும்/அகதியாய்/புலம்பெயர்ந்து விட்டனோ என்றெண்ணிப்/ புலம்பாதே" என்பதாகவும் சோ. மதீசனின் கவிதை வரிகள் "உன் விருட்சத்தின் / “வேர்களை வெட்டி"/வேற்று நாட்டில் நட்டிருக்கும் நண்பனே/உன் தமிழ் முகத்தையே காணவில்லையே/எங்கு தொலைத்தாய்/கனடாவிலா ஜெர்மனியிலா/என்றும் கோபமும், எள்ளலுமாகப் பேசுகின்றன. புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய இந்தப் பார்வை யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் மனக்குறையைப் பிரதிபலிப்பதா? அல்லது, அவர்கள் மனதில் அத்தகையதொரு பார்வையை உருவாக்கப் பிறந்ததா? இந்த வரிகள் உடலாலும், மனதாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமானத்ா அல்லது உடலால் மட்டும் பெயர்ந்தவர்களையும் உள்ளடக்கியதா?
படித்த மூன்று இதழ்களிலும் தலையங்கங்கள் சிந்தனையைத் தூண்டுவதாயிருந்தன. தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் விழா பற்றிய தலையங்கம் "அரசியல்வாதிகளின் பகட்டான ஆரவாரங்களால்-சுயநல அறிவுஜீவிகளால் தமிழை வளர்க்க முடியாது, நடைமுறை வாழ்வின் சகல துறைகளிலும் எமது மொழியைக் கையாள்வதன் மூலமும், பற்றுறுதியுடன் செயற்பட்டு வரும் தமிழியலாளர்-படைப்பிலக்கியவாதிகள் - இதழியலாளருக் குக் கைகொடுப்பதன் மூலமும்தான் தமிழ் வாழும்-வளரும்!" என்று திட்டவட்டமாகக் கூறுகிறது மற்றொரு தலையங்கம் நூலகம் இயங்க வேண்டிய விதம் பற்றியும், இயக்கும் விதம் பற்றியும் இடித்துரைக்கிறது.
"தமிழ்நாட்டுக் கவிதைக்கும், ஈழத்துக் கவிதைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்- நமது கவிஞர்கள் பேச்சோசை கையாண்டு பெரு வெற்றி பெற்றுள்ளனர்" என்று கவிதைக் கலைத் தொடரில் சோ. பத்மநாதன் குறிப்பிடுகிறார், இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. கவிதையின் உள்ளடக்கம் சமூகம் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும் என்ற பார்வை கவிதை பற்றிய கட்டுரைகளில் தொடர்ந்து தரப்பட்டுள்ளது. உருவம் அல்லது Style பற்றி, நவீன நடைகள் பற்றியெல்லாம் படித்த் இதழ்களில் எதுவும் பேசப்படவில்லை. ஓராண்டு நிறை வுற்ற இந்தப் பத்திரிகையின் பிறஇதழ்களில் பேசப்பட்டிருக்கிறதா, பட்டிருக்குமா தெரியவில்லை. பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பத்திரிகை கவிதைப் போட்டி நடத்தியிருக்கிறது. நாட்டு நிலவரம்
இலக்கு 35

Page 22
பற்றியே கவிதைகள். "முக்காபலா, சொக்காபிலா" ரக கவிதை களுக்கு(?) அங்கைய பள்ளி மாணவர்களிடம் வரவேற்பிருக்காது என்றே தோன்றுகிறது. வரவேற்பு தோன்றாமலிருக்க இந்த இதழ் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மொழி பெயர்ப்புக் கவிதைகள், குறிப்பாக பிற மண்ணிலான போர்க்காலக் கவிதைகளை இன்னும் அதிகம் வெளியிடலாம். இதழட்டையில் மாற்றம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். அச்சுப் பிழைகள் அரிதாகவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
-லதா ராமகிருஷ்ணன்
கதையை கோயில்பட்டிதாண்டி கோபன்ஹேகனுக்
கும் அதற்கு அப்பாலும் கொண்டு செலுத்தி விட்டது "கசுக்கம்" FF00 சிந்து பதிப்பகம்
(சிறுகதைத் தொகுப்பு) சோ. தர்மன்
இலக்கிய 'ஹெவிவெயிட்"களான கி. ரா. பிரபஞ்சனின் அணிந்துரை, வாழ்த்துரைகளை முன் பாரம் பின் பாரமாகத் தாங்கி வெளியாகியுள்ள தர்மனின் முதல் சிறுகதைத் தொகுதியை மதிப்புரைக்க இந்த நோஞ்சானுக்குச் சின்னச் சின்னதாக மூன்று
தகுதிகள் தர்மனின் வாசகன், சக எழுத்தாளன், இலக்கியச்
சிந்தனைக்கு மாதச் சிறுகதையாக *நசுக்கத்தைத் தேர்ந் தெடுத்தவன்.
நசுக்கத்திலேயே தொடங்கலாம். நல்ல கதை என்று , ஆசார மார்க்சீயர்கள் முதல் அனாசார வைஷ்ணவர்கள் வரை எல்லாத் தரப்பிலும் பாராட்டப் பெற்ற கதை. இலக்கியச் சிந்தனை, கதா என்ற கனமான விருதுகள் பெற்றது. அனாயாச மான நடையும், எங்கேயும் துளிக்கூடப் பிசிறு தட்டாத இறுக்க மான வடிவமைப்பும், எரிகொள்ளியான குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை முழுக்க முழுக்க இயல்பாகக் கையாண்ட லாவகமும் கதையைக் கோயில்பட்டி தாண்டி கோபன்ஹேகனுக்கும் அதற்கு அப்பாலும் சுலபமாகக் கொண்டு செலுத்திவிட்டது. கல்லூரி களில் பாடத்திட்டத்திலும் சேர்த்தாகி விட்டது. ("நசுக்கம் சிறு கதையின் மூலம் நீவிர் பெறும் படிப்பினைகள் குறித்துப் பதினைந்து வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக" என்று நாளைக்கு வினாத் தாள் குறிக்கும் சான்றோர்கள் குதறி வைக்கப் போவது சாத்திய மென்றாலும்) சாகாவரம் பெற்ற கதை இது.
நசுக்கத்தின் வெற்றிக்கு ஒரு பரிமாணம் இதுவென்றால், மற்றது, தொடர்ந்து இதே தரத்தில் தர்மனிடம் சிறுகதைகளை எதிர்பார்க்க வைக்கிற சூழ்நிலை.
"ஈரம் தொகுப்பு ஓரளவுக்கு இந்த எதிர்பார்ப்புகளை நிறை வேற்றி உள்ளதைச் சொல்லியாக வேண்டும். என்றாலும் நட்பான சில வார்த்தைகள்,
36 / இலக்கு
 

சாத்தியமான, மனதை ஈரப்படுத்துகிற கதை சொல்கிற தர்மன் ஏன் அதீதமான வட்டார வழக்குச் சொல்லாடலோடு அங்கங்கே வாசகனைத் தடுத்து நிறுத்த வேண்டும்?
கைவசமிருந்த “கரிசல் அகராதி'யை இரவல் வாங்கிப் போன நண்பனைச் சபித்துக் கொண்டு இருக்கிறேன். "விருவு", தொக்கம்" என்ற கதைத் தலைப்புக்களுக்கு அர்த்தம் தேடியாக வேண்டும். கி. ரா. முன்னுரையில் சிலாகித்த "முன்னந்தியங் காலில் மொளிமடக்கி நொண்டி, கட்டியவன் செய்த காரியம் புரியும் வரை முழங்காலைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
இதையும் தாண்டி மனதைப் பிடிக்கிற காரியத்தில் தருமன் பெறுகிற வெற்றி அவரை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முக்கிய மாக அவரின் குழந்தை உலகம்.
விடிவதற்கு முன் வாழைத்தார் சுமக்கத் தூக்கம் கலையாத கண்களும், அழுக்கு உடுதுணிகளில் மூத்திர வாடையுமாகக் குளிரில் நடுங்கியபடி, லாரியில் அவர்கள் மந்தைகளாக ஏற்றப்படுகிறார் கள். கருமருந்து நெடிக்கு நடுவே குனிந்த தலை நிமிராமல் மணிக் கணக்காகத் திரி குத்துகிறார்கள். அந்த வாடையோடு கஞ்சி குடிக்கிறார்கள். கணநேரம் சந்தோஷப்படுகிறார்கள். கருகிச் சாகிறார்கள், புஞ்சையில் புகுந்ததற்காகக் குரூரமாகக் கட்டி வைத்து அடிக்கப்படுகிறார்கள். திருடியதாகச் சந்தேகிக்கப்பட்டு, பழிப்ாவத்துக்கு அஞ்சிய சொந்தத் தாயால் கொதிக்கிற எண்ணெ யில் துடிக்கத் துடிக்கக் "கைமுக்கம்" செய்யப்படுகிறார்கள்.
உலகப் பேரழகி ஐஸ்வர்யாராய் வீடு தேடி வந்து நம்மோடு சேர்ந்து உட்கார்ந்து பெப்ஸிகோலா குடிக்கப் போகிறாள் என்று வாசலில் விழிவைத்துக் காத்திருக்கிற கான்வெண்ட் குழந்தை களும், உச்சிவெய்யிலில் பசிக்கிற வயிற்றோடு கோயில் ஐயர் பூசை முடித்து ஒருகை பொங்கல் தருவார் என்று நம்பிக்கையோடு கைகூப்பி இருந்து கைநிறையத் திருநீறும் குங்குமமும் மட்டும் பெறுகிற, ஆடு மேய்க்கிற குழந்தைகளும் ஒரே உலகத்தில்தான். இதே நாட்டில்தான்
தர்மனின் வார்த்தைகள் சாட்டைகளாக நெஞ்சில் இறங்கி ரணப்படுத்துகின்றன. இதெல்லாம் மாற ஒரு துரும்பையாவது இதுவரை நகர்த்தி இருக்கிறோமோ. இனிமேலாவது செய்யப் போகிறோமா.
முகமறியாத இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையை அசாதாரணமான இறுக்கத்தோடு சொல்கிற தர்மன், பெரியவர் களின் உலகத்தைச் சித்தரிப்பதில் முழு வெற்றியும் கட்டுக்கோப்பும் பெறாமல் போவது ஏன்?
"கட்டமொய் வாங்க வந்த பெண்ணைப் பற்றி விஸ்தாரமாக ஆரம்பித்து, "சரிப்படாது" என்று, ரெட்டியாரையும், நாயக்கரை யும் கர்வபங்கம் செய்கிற கோமணம் மட்டும் தரித்த குரூசோடு
இலக்கு | 37

Page 23
நடந்து, "இதுவும் தோதுப்படாது; நசுக்கம் லெவலுக்குப் போக சமுதாயப் பார்வை குறைகிறது" என்று சம்சயப்பட்டோ என்னமோ கோயில் திருவிழாவில் நுழைந்து, ஜாதிச் சண்டையாகக் கிளம்பி, மனுஷ உயிர்கள் பலியாவதில் முடிகிற கதை உதாரணம்.
என்றாலும் தர்மனின் கதைகள் நம்மைத் தொடர்ந்து படிக்கத் தூண்டுகின்றன. "தொக்கம்" கதையை இரண்டு தடவை வாசித் தேன், முதல்தடவை கதையோட்டத்துக்காக மறுபடி (பின்னுரை யில் பிரபஞ்சன் குறிப்பிட்டதைப் படித்த அப்புறம்) அதன் "அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு"க்காக. செம்பருந்தும், "பால்ட் ஈகிளும்? நெருங்கியவைதான். பறவை நிபுணர் சலீம்அலி சொன்னாலும், சொல்லாவிட்டாலும்.
"மழைக்காற்றின் குளிர்ச்சியில் உடம்பை நாய் நக்கினாற் போல சில்லிட்ட உணர்ச்சி" என்றும், "வெய்யில் ஏறிக்கொண் டிருக்க, வட்டமாக உட்கார்ந்து வளையம் குத்திக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்ப்பதற்குத் தரையில் சிதறிய தானியங்களைக் குத்திப் பொறுக்கும் கோழிகளைப் போல இருந்தது" என்றும் அழகான உரைநடை எழுதுகிற தர்மன் இரண்டாவது இலக்கியச் சிந்தனை விருதுக்கு அப்புறமாவது, "க(னி)தம் (?) போன்ற சொல் விளையாட்டுக் கதைத் தலைப்புக்களைத் தவிர்ப்பார் என்று நம்பலாம். -இரா. முருகன்
போர்க்குணமற்ற சித்தரிப்புகளால் உண்மையான எரிசூழல்களும் வெம்மையற்று நிற்கின்றன.
நீந்தாவதி இளம் பிறை பதிப்பகம், 375-8, (சிறுகதைகள்) ஆற்காடு சாலை, சென்னை-24, F56hub விலை ரூ. 30
பனிரெண்டு கதைகள் அடங்கியுள்ளது தொகுப்பில். ஆசிரி யரின் தன்னுரை, இவை 35 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெளிவாக முன்னுரைக்கிறது.
இடைப்பட்ட 35 ஆண்டுகளில் பேசப்படாதவைகளாகவும், மறுபிரசுரம் ஆகாதவைகளாகவும், தொகுக்கப்படாதவைகளாகவும்
நவத்தின் படைப்புகள் இருந்திருக்கின்றன. இதிலிருந்து இவரது படைப்புகளின் ஆளுமையை, உணர முடிகிறது.
மேற்கண்ட 35 ஆண்டுகளில் தமிழின் சிறுகதை வரலாறு பல தளங்களையும், களங்களையும் கடந்து வந்துள்ளது. உலகத் தரங்களோடு தனது தகுதியை ஒப்பாய்ந்து மேன்மையுறும் முயற்சிகளில் தீவிரப்படும் முதிர்ச்சியைப் பெற்றிருக்கிறது. எனவே இன்றைய நிலையில் தொகுப்புப் பணிகளும், கடந்த காலத்து
 

மேறந்தவைகளை மறு முன்வைப்பு முனைப்பும் கடும் சிக்கலும் சிரமமும் கொண்டவை. காத்திரமான படைப்புகளே வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பின்னோக்கிப் பார்க்க விரும்பும் ஆர்வலர் களுக்கும் உவப்பானதாக உகந்ததாக இருக்கும். இல்லையெனில் தொகுப்புக்கான எவ்வித பலனுமின்றி புறந்தள்ளப்பட்டுவிடும்.
அநேகமாக நவம் அவர்களின் தொகுப்புக்கும் ஒதுக்கப்படும் நிலையே பெரிதும் சாத்தியமாகவுள்ளது. முந்தைய காலகட்டத் தில் எத்தகு உணர்வுத்தளத்தில் தனது படைப்புகள் சம்பவித்திருந்த போதிலும் நிகழ்காலத்தில் அவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற பேரார்வத்தின் வெளிப்பாடே தொகுப்புகளும், நூல்களும், இந்த அங்கீகாரத்தின் பரிசீலனையில் 'நந்தாவதி" தொகுப்பு மிகவும் பின்தங்குகிறது. கதைகள் ஜோடனைத் தன்மைகளோடு இருப்பது, படைப்பாளியின் இலக்கிய ஆளுமை தீர்க்கமற்ற தென்கிறது. போர்க்குணமற்ற சித்தரிப்புகளால் உண்மையான எரி சூழல்களும் வெம்மையற்று நிற்கின்றன. நந்தாவதி கதையில் நனவோடை உத்திகள் நயமற்று இடறுகின்றன. பல கதைகளில் வெறுமையான விவரணைகளும், ஆசிரியரின் நேர்ப் பிரவேசங்களும் எரிச்சல் தருகின்றன. நகைச்சுவையென ஆசிரியர் நினைப்பதை யும் ரசிக்க இயலவில்லை. இப்படியாக நெடுகெங்கும் பலவீனங் களாலேயே கரல்கோளப்பட்டிருக்கும் கதைகளனைத்தும், ஊன்றி நோக்கும்போது வலுவான அடித்தளத்தை ஆதாரமாகக் கொண் டிருப்பது புரிகிறது. ஆசிரியர் பொறுப்புணர்வோடும் பொறுமை யோடும் செயல்பட்டிருப்பாரேயானால், 'கூத்து" போன்ற உக்கிர வீச்சுக் கதைகள் கூட மரத்துப் போயிருக்காது. அக்கதை எத் தகு சிறந்தமுறையில் படைக்க இயலுமென்பதற்கு உதாரணம் : 1964ல் எழுதப்பட்ட அதே கதை பாத்திர மற்றும் கூத்து மாற்றத் தோடு அடிமூலம் சிதையாமல் 1991(அல்லது 92ல்) இரண்யவதம்" என்ற பெயரில் "இந்தியா டுடே' இதழில் சா. கந்தசாமியின் திறமையால் மிகச் சிறந்த கலை ஆற்றலோடு வெளியாகியிருப்பது,
*சுபத்திரை கல்யாணம்" "இரண்யவதம்’ என்றானது மகிழ்ச்சி யான விஷயம்தானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. பொழுதுபோக்குப் பத்திரிகைகளின் கதைத் திரட்டுகள் இலக்கியத் தளங்களில் இயங்கும் வலிமையற்றவை என்பதை உணர்த்தும் தொகுப்புகளில் 'நந்தாவதி" ஒன்று. - பொன்விஜயன்
தமிழிலக்கியத்தில் தி.க.சி. விமர்சனப் பாணி தனித்தன்மை வாய்ந்தது.
விமர்சனங்கள் விஜயா பதிப்பகம், மதிப்புரைகள் 20, ராஜ வீதி, பேட்டிகள் கோவை-1. தி. க.சி.
தி.க.சி யின் திறனாய்வுகள்', "விமர்சனத் தமிழ் வரிசையில்
இலக்கு 39

Page 24
சென்ற வருட இறுதியில் வெளிவந்திருக்கிற தி.க.சி.யின் நூல்
"விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்".
மிகப் பிந்தி வந்த அவரது எழுத்துக்கள் இன்னொரு தொகுப்புக் கான அளவு இருக்கின்றனவாயினும், தி.க சி. என்கிற இலக்கிய விமர்சகரைப் பற்றிய ஓர் ஆய்வுக்கு இம்மூன்று நூல்களும் பற்றாக் குறையாய் ஆகிவிடா. அந்த வகையில் இந்நூல் விமர்சனமானது, இந் நூலையே மட்டுமன்றி நூலாசிரியரையுமே உள்பார்ப்பதாக அமையும். இதில் நூல் விமர்சன விதிமுறைத் தப்பேதும் இல்லை யென்றே எண்ணுகிறேன்.
நேரடி விமர்சனத் , க்கு உள்ளாகும் இந்நூல் மூன்று பகுதி களாய் அமைந்தும், 49 தலைப்புக்களைக்கொண்டும் இருக்கிறது. எனினும் இறுதிப் பகுதியான பேட்டிகள் விவகாரத்தில், அவை தி.க சி யின் விமர்சன ஆளுமையை எந்த வகையிலும் வெளிப் படுத்தவில்லையென நம்புகிற காரணத்தால், அவற்றை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறேன், மற்ற இரண்டு பகுதி விஷயங் களைப் போலவே இதுவும் பத்திரிகைகளில் ஏற்கனவே வெளிவந் திருந்தபோதும்.
இந்நூலை வாசித்து முடிக்கும்போது, எந்த நூல் பற்றி விமர்சனம் செய்ய முற்படுகிறாரோ அந்த நூலை விமர்சகர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசித்திருப்பது தெரிகிறது.
சில இடங்களில் விமர்சகரே அந்தத் தொகை, இரண்டா மூன்றா என்றும் கூறிவிடுகிறார். ஒருசில பேர் தவிர மற்றையவர் களுக்குச் சாத்தியமாகாத இந்த வாசிப்புத் தன்மை, ஒரு விமசர்க னுக்கு அவசிய பண்டாகும். இந்த நூலிலுள்ள விமர்சனங்கள் போது மானதோ அல்லவோ, சரியோ தப்போ, ஆனால் மேம்போக்காகச் செய்யப்பட்டவையல்ல என்பதை இதுவும் தெளிவாக்குகிறது.
அடுத்து, கணிப்புக்கு எடுக்கும் நூலை பாரபட்சமின்றி விமர்சகர் நோக்குகின்ற பண்பு. நூலின் குணம் குற்றம் இரண்டை யுமே தி.க.சி. பார்க்கிறார். அதில் மிக்குள்ளதை நூலின் பண்பாகத் தெரிவிக்கிறார், இலக்கிய இயக்கங்கள் போக்குகள் பற்றிய விமர்சனத்திலும் தி.க.சி.யின் இந்தக் குறள் பண்பைக் காண முடிகிறது.
தி க.சி.யின் விமர்சன முறையை விமர்சனத்துறையின் எந்தப் பிரிவில் அடக்கலாமெனில், மிகச் சுலபமாகவே அதை ரசனை முறைத் திறனாய்வில் அடக்கிவிடல் ஒருவரால் கூடும். ஆனால், ஆழ்ந்து நோக்கும்போது அது உண்மையில் மதிப்பீட்டு முறைத் திறனாய்வே என்பது தெரியவரும். அவர் சார்ந்துள்ள இலக்கிய இயக்கத்தை வைத்துப் பார்த்தால் அது மார்க்சியவியல் எதார்த்த வாத திறனாய்வாகவும் தெரியும்தான். ஆனால் ஒரு நூலை இயக்கத்தை மதிப்பிடும் வகையிலேயே தி.க.சி.யின் பெரும் பான்மையான விமர்சனங்கள் இருப்பதைக் கொண்டு அதை மதிப் பீட்டுமுறைத் திறனாய்வெனல் பொருந்தும்,
(தொடர்ச்சி 65 ஆம் பக்கம்)
49 இலக்கு
 

SawdsdSLAd JFj535ïII :
நாரண துரைக்கண்ணன்
ஜீவா எனும் நாரண துரைக்கண்ணனின் வாழ்வு அற்புதமானது. மலையென வளர்ந்திருத்தல் சுயமாகவே இருந்திருக்கிறது. வறுமைப்பட்ட வாழ்வில் படிப்புக்குப் பரிதவித்துத் திரிந்த ஒரு சிறுவனின் வெற்றியை நாரண துரைக்கண்ணனின் வாழ்வு கொண்டிருக்கிறது. இன்றும் கணிர்க் குரல். பார்வையிலும் பழுதில்லை. கண்ணாடி இல்லாமலே பார்க்கிறார்; படிக்கிறார். செவிப்புலன்தான் குறைந்துள்ளது. 9](Difigiúb Hearing-Aid வேண்டாமென்கிறார். அசைதல், சிறிது நடத்தல், சாப்பாடு, தூக்கம், நினைவுகளை அசை போடுதல் மட்டுமே பெரும்பாலும் இன்று வாழ்க்கை. நினைவுகளைப் புரட்டாமல் அதன் ஒரு பகுதியிலேயே அழுந்தி அழுந்தி மேலே மிதந்திடாதிருக்கத்தான் இந்த எத்தனமோ ? அப்படித்தான் தோன்றுகிறது. உள்ளெழுந்த ஒரு தாஜ்மகாலே இந்த மலையினை உந்தி உந்தி வளர்த்திருப்பதை, அதுபற்றிய பிரஸ்தாபம்
வரும்போதெல்லாம்
இவரது கண்களில் தோன்றும்
மீனுமினுப்பால், இதழ்க்
குறுஞ்சிரிப்பால்
துணிய முடிகிறது. பத்திரிகைத்துறை வளர்ச்சியில் நினைவு கொள்ளப்படவேண்டிய உருவம் இவர். இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய பேயர் இது.
விழுதுகள் கிளைகளைத் தாங்கலாம். வேர்தானே ஜீவசத்து தருகிறது மரபினில் காலூன்றி. திசைகள் அளாவி மேலோங்கும் நம் இலக்கியச் செல்நெறி, மூத்த தலைமுறையை இங்கு நன்றியோடு நினைவு கொள்கிறது. "இலக்கு”வுக்காகவே மேற்கொள்ளப்பட்ட இவ் இலக்கியச் சந்திப்பில் உடனிருந்தோர் : விக்ரமாதித்யன், இளம்பிறை ரகுமான், தேவகாந்தன்.
நன்றி: நாரண துரைக் கண்ணனின் மருமகள், பேரன்.
இலக்கு | 41

Page 25
பிரசண்ட விகடன், ஆனந்த ப்ோதினி ஆகிய பத்திரிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி யிலே ஏக காலத்தில் ஆசிரியராக இருந்தவர் நாரண துரைக்கண்ணன், அதனால் அக் கால கட்டத்து பத்திரிகைகளின் நிலை பற்றி பல கேள்விகளைக் கேட்டோம். அவரும் பல்வேறு விஷயங்களைச் சொன்னார்.
ஃ நாரணதுரைக்கண்ணன் : ஆனத்த போதினி வாரப் பத்திரிகை யாக வந்து கொண்டிருந்தது. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந் தது என்றுகூடச் சொல்லலாம். அந்த நேரத்தில் அதற்குப் போட்டி யாக வந்தது போலவே ஆனந்த விகடனின் வரவை எடுக்க வேண்டி யுள்ளது. அதற்குப் பதிலடியாக ஆனந்தபோதினி நிர்வாகத்திலிருந்து வெளிவந்ததே பிரசண்ட விகடன். கதை, கவிதைகளும், கம்பராமா யணம், பெரிய புராணம் பற்றிய கட்டுரைகளும் அதில் வெளிவந்தன. என்றாலும், அக்கால அரசியலே தலைப்பு விஷயமாக இருந்தது.
O இலக்கு : பிரிட்டிஷார் வழக்குப் போட்டார்களா ? ஃ நா. து. கெடுபிடி அதிகமாக இருந்தது.
O இலக்கு : குறுக்கெழுத்துப் போட்டியை தமிழ்ப் பத்திரிகை உல கில் முதன் முதலில் ஆரம்பித்தது எஸ். எஸ். வாசன் தானா?
ஃ நா. து. ஆமாம். ஆனந்த விகடனுக்கு, ஆனந்த போதினிக்கு நிகராக வரமுடியவில்லை. அதனால் குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விஷயங்களை வெளியிட்டும், நிறைய விளம்பரங்களைச் சேகரித்தும் பத்திரிகையை நடத்தினார், அதன் நிறுவனரும் ஆசிரி யருமான வாசன் அவர்கள்.
O இலக்கு : பிரசண்ட விகடனில் எவ்வளவு காலமாக வேலை
பார்த்தீர்கள் ?
ஃ நா. து. : ஆரம்பத்தில் நான் வேலை வார்த்தது "தேசபந்து'வில் தான். தேசபத்து பாவலர் சிறைசெல்ல ஆனந்தபோதினிக்கு வந்தேன். பின்னர், அப்போது பிரசண்ட விகடன் ஆசிரியராக இருந்த ஜி. ஏ. ராமசாமி நாயுடு அபிப்பிராய பேதம் கொண்டு விலக அத்தப் பொறுப்பையும் ஏற்றேன். முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தேன்.
O இலக்கு அதுசரி, எழுத்து துறைக்கு எப்படி வந்தீர்கள்?
ஃ நா. து. தகப்பனார் எனது ளமையிலேயே காலமாகி விட் டார். தொடர்ந்து படிக்க முடி ல்லை. ஆனாலும் திரு வி.க., மறைமலையடிகளார் போன்ற தமிழறிஞர்களின் பேச்சென்றால் எங்கு சென்றும் கேட்பேன். தமிழார்வம் வளர்ந்தது. ஒருமுறை மறைமலையடிகளார் பச்சையப்பன் கல்லூரி ஆண்டு விழாவுக்கு பேச வந்தார். போனேன். அந்தப் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர் அவரிடம் என் நூல் வாங்கும் இயலாமையைத்
42 l இலக்கு
 

தெரிவித்து நூல் இரவல் கேட்டு கடிதம் எழுதினேன். உடனே நேரில் வாசின்று பதில் வந்தது. அப்போது அவர் பல்லாவரத் தில் குடியிருந்தார். சென்றேன். வாரம் இரண்டுநாள் பாடம் சொல்லித் தருகிறேன், வா என்றார். சரி என்றேன். சென்னை பீச்-காஞ்சிபுரம் ரயில் அப்போது நாளுக்கு ஒருமுறைதான் வந்து போகும். சீசன் டிக்கட் வாங்கி சனி காலையில் போய்ப் படித்து
ஞாயிறு மாலையில் திரும்பினேன்.
இலக்கு : ஆசார அனுஷ்டானங்கள் கூடிய குடும்பம் அது. உங் களுடன் இயல்பாகப் பழகினார்களா?
நா. து. : பிள்ளை போலப் பழகினார்கள். இவ்வாறு கேள்வி யாலும், வாசிப்பாலும், மறைமலையடிகளிடம் பெற்ற சிட்சை யாலும் நான் பெற்றதே என் தமிழ் அறிவு. இருந்தாலும் பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரியில் முன்பே எழுதினேன். கட்டுரைதான். பின்னர்தான் கதைகள் எழுதினேன்.
நாரண துரைக்கண்ணன் உயிரோவியம், நடுத் தெரு நாராயணன், தும்பைப் பூ, சீமாட்டி கார்த்தியாயினி, காதலனா-காதகனா?, இவ் வுலகைத் திரும்பிப் பாரேன், தரங்கிணி, நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்?, தாசி ரமணி போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். நக ரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இவை விரும்பி வாசிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பிரபலமானது தரங்கிணி, தரங்கிணி பற்றிக் கேட்டோம்.
நா. து. : இந்து - கிறித்தவ காதலை வைத்து இந்நாவலை எழுதினேன். 1960ல் வெளிவந்தது, அமோக விற்பனை, Lu Tilt புத்தகமாகக் கூட வைத்தார்கள். அந்தப் பணத்திலேயே வீடு
கட்டினேன். அதற்கு 'தரங்கிணி" என்றே பெயரும் வைத்தேன்,
இலக்கு : ஜீவா என்ற பெயரில் எழுதியிருக்கிறீர்கள்? இந்தப் புனைபெயரைச் சூட என்ன காரணம்?
ஜிவரத்தினம் என்பது இளமையில் அவர் விரும்
பிய ஒரு பணக்காரப் பெண்ணின் பெயர். ஒரு
தலைக் காதல் தான். தன் ஆசையை வெளியில்
கூட அவர் சொல்லவில்லை. அந்த நிறை
வேறாத காதலனின் நினைவுத் துண்தான்
ஜீவா என விஸ்தாரமாகப் பதில் சொன்னார். இலக்கு : நாரண துரைக்கண்ணன் என்பது தான் உங்கள் சொந்தப் பெயரா?
நா. து. : இல்லை. கண்ணு.கண்ணு என்றுதான் தாயார் அன் போடு அழைப்பார். பள்ளியில் துரைக்கண்ணன் என்று பெயர்
இலக்கு | 43

Page 26
கொடுக்கப்பட்டது. நாராயணன் என்ற தந்தையின் பெயரின் குறுக்கம் நாரண. இலக்கு : மறைமலையடிகளாரிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள். தனித் தமிழ் இயக்கம் உங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததா? நா. து. ? அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் கூடுமானவரை பிறமொழிச் சொற்கள் கலவாது தமிழை எழுத முயன்றேன். இலக்கு : பாரதிதாசன் அன்பரில் ஒருவராக இருந்திருக்கிறீர்
கள். அவரைப்பற்றி சிறிது சொல்லுங்களேன்.
நா. து : பெரியாரைtஎனக்குப் பிடிக்கும். அவரைப் பாராட்டி பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். அவரது வாழ்க்கை வாலாறை யும் எழுதியிருக்கிறேன். பாரதிதாசன் பெரியாரின் ஆள். இப்படித் தான் பழக்கம் ஏற்பட்டது, பாரதிதாசன் கோபக்காரர் என்கிறார் கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவர் தீவிரவாதிதான். ஆனாலும் அவரது கொள்கைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதனால்தான் அவரது நூல்களையே வெளியிட முயற்சித்தேன்.
இலக்கு : நீங்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள்.?
நா. து ரகுநாதன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் என். ஆர். தாசன் போன்றவர்களை பிரசண்ட விகடனில் அறி முகப்படுத்தினேன்.
இலக்கு : வல்லிக்கண்ணன். நா. து. வல்லிக்கண்ணன் எனது மாணவன் சீர்திருத்தமாக எழுவரர்,
இலக்கு : இலங்கை எழுத்தாளர்களில்.
நா.து. : எஸ். ராஜநாயகம், கா. பொ. இரத்தினம், பொன்
னுத்துரை.
வரவர களைப்பு அதிகரித்தும், ஞாபகசக்தி குறைந்தும் வந்தது. தூக்கம் வருகிறது என் றார். அது சாப்பிட்டு முடிந்து அவர் பகல் தூக்கம் செல்கின்ற நேரமென அவரது மருமகள் விளக்கினார். பேட்டியை முடிக்கத் தயாரானோம்.
இலக்கு : உங்கள் நாடக சினிமா ஈடுபாடு பற்றி சொல்லுங்
களேன்
நா.து. ; டி.கே.சி, சகோதரர்களுக்காக நிறைய நாடகங்கள் எழுதினேன். அதிலொன்று உயிரோவியம். சினிமாவில் ஈடுபாடு இல்லை. இலக்கு: தமிழ் எழுத்தாளர் சாங்கத்தில் தலைவராக இருந் திருக்கிறீர்களா?
44 I இலக்கு
 

ஃ நா.து. : ஆமாம் பத்து வருடங்களாக. மூன்றோ, நான்கோ
தடவைகள் என்று ஞாபகம். r.
0 இலக்கு: அறிஞர் அண்ணாவோடு தொடர்பு எப்படி இருத்தது?
ஃ நா.து. எனது நாடக ஈடுபாடு காரணமாக ஓர் இரவு நாடகத் துக்கு தலைமை வகிக்க அண்ண" அழைத்தார். நல்ல நாடகம தான் அது. பாராட்டிப் பேசினேன். பின்னால் எதற்காகவும் அண்ணாவிடம் நான் சென்றதில்லை.
3-10-46ல் ஓர் இரவு நாடகம் நடந்ததென்று நா. து. வின் மருமகள் கூறினார். இவருக்கு கலைமாமணி, எழுத்து வேந்தர் போன்ற பட்டங்கள் விருதுகள் கிடைத் திருக்கின்றன. சமீபத்தில் படித்த நூல்பற்றிக் கேட் டோம். 'மறுபடியும் முருகன் அல்லது அழகு" என்றார். நவீன எழுத்தின் போக்கு அவருக்குத் தெரியவில்லை யென்று தெரிந்தது, அதனாலென்ன? அதற்கெல்லாம் வகையாக மொழியை வளர்த்த வளப்படுத்திய-பெருமை அவர் போன்றவர்களுக்கு என்றும் இருக்கிறதல்லவா? சந்திப்பை முடித்துக் கொண்டு அனைவருக்கும்
நன்றியும் வணக்கமும் கூறிப்புறப்பட்டோம். OOC)
விக்ரமாதித்யன் அலையோ အံ့၊ ၈eဓ!!!!!!! o
A அலைகின்றன கவிதைகள் அலைகள் என்னைப்போல f என் மனசைப் போல தீ (செல்வன் சுகந்தன்க்கு)
நதனககு
மெளனம்
சலனம் უჯ2(ჩ காமன் மனசு கவிதை ரதிக்குத் தெரியும் ஒரே செலவோடு செலவு ஒரு கவிதை வரவோடு வரவில்லை எழுதுவது மணியில் புதைந்திருக்கும் ஒலி 56) set இருள் மூடியிருக்கும் ஒளி என்ன
எழுத
பைத்யக்காரனுக்குப் பலவிதமாய்
கற்பனை எபபடி பாம்பு பாம்பாகவே இருக்கிறது. எழுத விண்ணாணம் பேசும் எழுதி வேதாளங்கள் என்னவாகும்
இலக்கு 45

Page 27
στα βρουτιο எழுதித் தொலைக்கலாம்
எழுதிக் கிழிக்கலாம்
எழுதிச்
சாகலாம்
பிறகு பிறகுதான்
பேசாபொருளா எழுதாவிஷயமா
இன்று
மென்ன
வானச் சாம்பலுக்குக் கீழே வாழ்கிறாள் எங்கள் தாய்
(பாலகுமாரன் அன்பு மனசுக்கு)
முட்டைக்குள்
வில்லும்வாளும் கண்ட
விரல்கள்
வீணை
வெறுமே
இப்படித்தான்
இந்த நிலா
வளர்ந்தும்
தேய்ந்தும்
வருகிறது
கிருஷ்ணன்கோயில்
கொய்யாப்பழம்
சாத்தூர் வெள்ளரிப்
பிஞ்சு
கடம்பூர் போளி
பேரளம் சுண்டல்
திருநெல்வேலி அல்வா
மதுரைக்கதம்பம்
ஹானாமதுரை மருக்கொழுந்து
போல போல
சில நாள்கள்
நினைவுகள்
(பன்மொழிப்புலவர்
மு.கு. ஜகந்நாத ராஜாவுக்கு)
நாங்கள் முட்டைக்குள் வசிக்கிறோம், எமது எதிரிகளின் கிறிஸ்தவப் பெயர்கள்
அழுக்கடைந்த ஒவியங்களால்
கூட்டின் உட்புறச் சுவர் தீட்டப்பட்டுள்ளது.
யார் எங்களை அடைகாத்தாலும் எமது பென்சில்களும் அடைகாக்கப்படுகின்றன முட்டையிலிருந்து விடுதலையாகும் நாளில் எம்மை அடைகாத்தவர் படத்தினை
உடன் வரைவோம்.
நாங்கள் அடைகாக்கப்படுவதாக ஊகிக்கிறோம் நல்ல பறவையினைக் கற்பனை செய்வதுடன் எம்மை அடைகாக்கும் கோழியின் இனம் வண்ணம் பற்றி, வள்ளிக் கட்டுரைகள் எழுதுகிறோம்.
ஒட்டினை தாங்கள் உடைப்பது எப்போது? முட்டையினுள் உள்ள தீர்க்கதரிசிகள் நடுத்தர ஊதியத்துக்காக
:: குறித்து விவாதிக்கின்னர்
நாளை வற்புறுத்துகின்றனர்.
அவர்கள்
கீ6 இலக்கு
 

சலிப்பு மற்றும் உண்மை தேவையினால் நாங்கள் அடைகாக்குங் கருவியைக் கண்டு பிடித்தோம் *முட்டைக்குள் எமது சந்ததி பற்றி அக்கறைப்படுகிறோம். எமது சிறப்பான கண்டுபிடிப்பை எம்மைக் கவனிப்பவரிடம்
பரிந்துரைத்து மகிழ்வோம்.
ஆனால் எம் தலைக்கு மேலே கூரையிருக்கிறது கிழட்டுக் கோழிகள் பலதரக் குறைமாதக் கருக்கள் நாள் முழுக்க வெற்றொலியெழுப்புகின்றன தம் கனவுகளை விவாதிக்கின்றன.
நாங்கள் ஒருக்கால் அடைகாக்கப்படாவிடின் என்ன நிகழ்ந்திருக்கும்? இந்த ஓடு ஒருபொழுதும் உடையாவிடில்? எம் அடிவானமென்பது எமது கிறுக்கெழுத்துக்கள் மட்டுமெனில் எப்பொழுதும் அப்படியேவா? நாங்கள் அடைகாக்கப்படுவதாக நம்புகிறோம்,
நாங்கள் அடைகாத்தல் பற்றி பேசினாலும் எமது ஒட்டிற்கு வேளியே பசித்த சிலர் சிட்டிகை உப்புடன் வறுக்கும் தட்டில் எம்மை உடைப்பாரென அச்சம் எஞ்சியுள்ளது முட்டைக்குள் வாழும் எனது சகோதரனே ! பின்னர் நாம் என்ன செய்வோம் ?
Ο Ο
ஜெர்மன் மூலம் : குந்தர் கிராஸ் ஆங்கிலம் வழித் தமிழில் : க. முருகேச பாண்டியன்
"பஞ்சமர்” நாவலை எழுதிய டேனியல் என்னால் ஏற்கனவே வேறு ஒரு சமயத்தில் இலக்கியக் கட்டமைப்புக்குள் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவரது நாவல்கள், நீலபத்மனாபனின் "தலைமுறைகள்” போன்று சரித்திரார்த்தமானவை,
க பிரேமிள் (லயம் - 12)
இலக்கு | 47

Page 28
ஈழத்து நாவல் வரிசை 3
Es 16) GisèFJ J556o sh C1927)
*நேச நாவல்கள் என்ற அடைமொழியில் கூறத் தக்க (1) காசிநாதன் நேச மலர் (2) கோபால நேசரத்தினம் (3) துரைரத்தினம் நேசமணி ஆகிய மூன்று நாவல்களும் "இந்துசாதனம்" பத்திரிகையின் ஆசிரியராகவிருந்த தமிழறிஞர் ம. வே. திருஞான சம்பந்த பிள்ளையினால் எழுதப் பெற்றவை. இம் மூன்றினுள்ளும் கோபால நேசரத்தினம் நாவல் மற்றைய இரண்டினையும் விட கூடிய கவனம் செலுத்தத் தக்கதாகத் தோன்றுகிறது. இந்நாவல்
பற்றிய குறிப்புக்கள்
என்ற நூலிலிருந்து
இலக்கியம்' பெற்றுள்ளன.
கோபால நேசரத்தினம் நாவல் 1926-27இல் தொடராக * வந்து 1927 இல் நூலுருப் பெற்றது. இதன் இரண்டாம் பதிப்பு 1949 இல் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பின் நூன முகத்திலே இந்நாவல் 1921 இலிருந்து பாகம் பாகமாக இந்து சாதனத்தில் வெளிவந்தத்ென்ற குறிப்புள்ளது.
சிறுவயதில் தந்தையை இழந்த கோபாலன் என்ற சைவக் குடும் பத்துச் சிறுவன் கிறித்தவ பாட சாலையொன்றில் கல்வி பயின்று வருகிறான். அவனது திறனைக் கண்ணுற்ற பாதிரியாரும் போதக ரும் மதமாற்றம் செய்விக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்நோக்கில் குட்டித்தம்பிப் போதகர் இளம் விதவையான தமது மகள் நேசரத்தினத்துடன் கோபாலனைப் பழக விடுகிறார்.
வெளி
"ஈழத்துத் தமிழ் நாவல் தொகுக்கப்
காலப் போக்கில் இப்பழக்கம் காதலாக மாறுகின்றது. கோபால னின் தாயாகிய வள்ளியம்மை மிகுந்த சைவப்பற்றுள்ளவர். இவரது கட்டுப்பாட்டுக்கு அமைய கோபாலன் மதம் மாற மறுக்கி றான். எனவே முடிவில் நேசரத் தினம் மதம் மாறி கோபாலனை மணம் முடிக்க வேண்டியவளாகி றாள். பாதிரியாரின் முயற்சி தோல்வியடைகிறது. நேசரத்தி னம் சைவப் பெண்ணாக மாறி கோபாலனைக் கரம் பற்று கிறாள். குட்டித்தம்பிப் போத கரை பாதிரியார் பதவியைவிட்டு விலக்குகிறார்.
பிற கல்வி வசதிகளற்ற நிலையிலே தம்முடைய கல்விக் கூடங்களுக்கு வரும் ஏழைப் பிள்ளைகளை மதம் மாற்றும் முயற்சியிலீடுபட்டிருந்த கிறிஸ் தவ மிஷனரியினரின் சமயப்
48 I இலக்கு
 

பிரச்சார நோக்கைக் கண்டிக்கும் வகையில் எழுந்த இந்நாவல், அக்காலப்பகுதியில் நிலவிய சமயப் போடடிச் சூழ்நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆங்கிலேயர் ஈழத்தை ஆளத் தொடங்கியபோது கிறித்தவ சமயம் பரப்புவதில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகப் பல்வேறு மிஷனரி இயக்கங்கள் ஈழத்தின் பல பாகங்களிலும் கல்விக் கூடங் களை நிறுவி சமயக் கல்வியும் பொதுக்கல்வியும் போதித்தன. கல்வியிலும் உயர்பதவிகளிலும் ஆசைகொண்ட பிள்ளைகளை மதமாற்றம் செய்தன.
இவ்வாறான கிறித்தவ சமயப் பிரசார முயற்சிகளுக்கு எதிராக பெளத்தரும் இந்துக் களும் நடத்திய இயக்கங்களை அநாகரிக தர்மபால, பூரிலயூரீ ஆறுமுக நாவலர் ஆகியோர் வழி
நடத்தினர். விவிலிய வேதம் போதிக்கும் பாடசாலைகளுக்கு மட்டும் அரசாங்கம் நிதியுதவி
வழங்கியதுபற்றி பெளத்த கமிட்டி யினரின் அறிக்கை (1867) குறை கூறியுள்ளமை இங்கு நோக்கத் தக்கது.
கோபாலனை மதம் மாற்ற முயன்ற குட்டித்தம்பிப் போதகர் பிரசங்கி உத்தியோகத்தின் பொருட்டு மதம் மாறியவர். இவர் தம் மகள் நேசரத்தினத்தை கோபாலனுடன் பழக விடுவது அழகுள்ள பெண்ணை மணம் புரியும் ஆவலைத்தூண்டி மத மாற்றம் செய்விக்கும் நோக்கிலே
Σ Τ θ
கோபாலனை மதம்
மாற
விடாமல் நேசரத்தினத்தை மதம்
ஆசிரியரது உணர்த்து
மாறச் செய்தமை இலட்சியத்தை
குடந்தை சிலிக்கு பிலின் புத்தகத் திரு விழா - 95, 19-2-95 முதல் 31-3-95 வரை சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவினையொட்டி வழங்கப் பெறும் 95க்கான சிலிக்குயிலின் புதுமைப்பித்தன் சாதனை வீறு திரு. பிரேமிளுக்கு வழங்கப்பெற்ற மைக்கான காரணம் குறித்த வே. மு. பொதியவெற்பனின் அறிக்கை யிலிருந்து:
O . திரு பிரேமிள் அவர் கள் கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். நாடகம். ஒவியம். சிற்பம் இன்னபிற துறைகளிலும்கூட.
O . சமூக உணர்வுடனும்,
வரலாற்று ஓர்மையுடனும்
டைக்கால. பகுத்தறிவு, தலித்திலக்கியப் படைப்புகளை அணுகுகிற ஜனநாயகப்
பார்வைத் தெளிவு.
Ο ... 9 ifu படைப்பை இனங்கண்டு எடுத்துரைக்கும் தீர்க்கம். நவீனத்துவ சமாங் தரக் கலைகளின் புரிந்துணர்வு,
O . சமரசமற்ற எதிர்நீச் சல் ஜீவிதம். இவையெல்லாம் இந்த அபூர்வ கலைஞனின் சிறப்பியல்புகளாகும்.
இலக்கு 49

Page 29
கின்றது. ஈழத்திலும் தமிழ்நாட்டி லும் சமகாலத்தில் கிறித்தவர் களது மதமாற்ற முயற்சி ஒரு பொதுப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இச்சமூகப் பிரச் னையை உணர்வு பூர்வமாக அணுகி இலக்கிய வடிவம் தந்த வர்கள் சிங்கள எழுத்தாளர்களே என்பது குறிப்பிடத தக்கது. பியதாச சிரிசேனவின் ஜயதிஸ்ஸ ரோஸலிண்ட் ஹேவத் வாஸனா வந்த விவாஹய (1906) நாவலை அதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். தமிழில் இதனைக் கதைப் பொருளாகத் தேர்ந் தெடுத்த முதல்வர் என்ற சிறப்பு LD,G36hi. திருஞான சம்பந்த பிள்ளையையே சாரும் எனலாம். தமிழ்நாட்டு எழுத்தாளரில் புது மைப்பித்தன் ஒருவர் மட்டுமே ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்னர் இப்பிரச்சினையை "புதிய கூண்டு" என்ற தலைப்பில் சிறு கதை வடிவில் அமைத்தார்.
*பிரச்சினை நாவல்" என்ற உணர்வுடன் ம.வே. திருஞான சம்பந்தபிள்ளை எழுதியிருக்க முடியாதெனினும், தாம் வாழ்ந்த காலத்தின் முக்கிய சமூகப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டு எழுத முயன்றார் என்ற வகையிலும், தம்மளவிலே அப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றுள்ளார் என்ற வகையிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. ஆசிரியன் பிரச்னைக்குத் தீர்வு
வேண்டிய என்ற முரண்பாட் டிலே, தீர்வுகாணவேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவரா கவே ம.வே. திருஞான சம்பந்த பிள்ளை தம்மைக் காட்டிக் கொள்கிறார். மணம் முடிப்பதற் காகக் கிறிஸ்தவர்கள் மதம் மாறு வதென்பது அன்றைய காலகடட நடப்பியல்புக்குப் பொருந்துவ
காணவேண்டுமா, தில்லையா
தல்ல என்ற பொழுதும், நேசரத்தி
னம் என்ற
- O பாத்திரத்தின்மீது தமிககுகநத
தீர்ப்பை இவர்
சுமத்தியுள்ளார்.
மகனை மதம் மாறாது தடுக் கும் சைவப்பற்றுள்ள தாயாகிய வள்ளியம்மை மூலம் ம.வே. திரு ஞானசம்பந்தபிள்ளை மற்று e Lomr மெளனப்புரட்சியையும் செய்துவிடுகிறார். விதவை மறு மணம் என்ற சமூக சீர்திருத்தக் கருத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாத வள்ளியம்மை என்ற சமயப்பற்றுள்ள தாயையும், இளம் விதவையான நேசரத்தி னத்தை மருமகளாக ஏற்க வைத்துள்ளார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ இதே காலப்பகுதியிலே தான் விதவை மறுமணக் கருத் தோட்டம் நவீன தமிழிலக்கியத் தில் இடம் பெறத் தொடங்கிய தென்பதும், வ. ரா. மஹாகவி சுப்பிரமணியபாரதியார் ஆகி யோர் தத்தம் எழுத்துக்களில் இக்கருத்தைப் புலப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கன. o
50 | இலக்கு
 

கோட்டா சிவராம கரந்த்
தொண்ணுற்று இரண்டு வயதான கன்னட இலக்கிய வாதி கோட்டா சிவராம கரந்த் அரசியல் சரிவையும் பொதுஜன அக்கறையின்மையையும் பற்றிப் பேசும்போது தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
பாஸ்வா வெங்கடேஸ்வர் ராவ் ஜூனியர்
கோபக்கார முதியவர்
அவர் உடல் அளவிலும் மன அளவிலும் நிமிர்ந்து நேராக நிற்கிறார். அவர் சப்தமான, உறுதியான, தெளிவான குரலில் பேசு கிறார். தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகிறார். இது பலருக்குப் பிடிப்பதில்லை. அவர்போன்ற மதிப்பிற்குரியவர்களிட மிருந்து பலர் எதிர்பார்ப்பது போல, அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் நல்ல தனமாகப் பேசுகிறவர் அல்ல. தனது அறிவுப் பொக்கிஷத்தி லிருந்து சரியான மேற்கோள் காட்டி நேயர்களை வசீகரிப்பதுமில்லை. இது போன்ற நிறைய சம்பவங்களைக் கூற முடியும். ஆனால் அவையெல்லாம் ஒரு கருத்தை வலியுறுத்துவதற்குத்தான். அவர் தனது பேச்சை அலங்கரிப்பதில்லை. அவர்தான் கோட்டா சிவராம கரந்த். கன்னட இலக்கியவாதி, பாரதீய ஞானபீடப் பரிசை வென் றவர். சங்கீத் நாடக அகாதமி, சாகித்ய அகாதமி ஆகியவற்றின் உறுப்பினர்.
வருடக்கணக்கில் புயல்களைத் தாங்கிக்கொண்ட பாறை போல, தனது கழுத்துக்குப் பின் இருக்கும் முடியுடனும் எண்ணங் களை அசைபோட்டுக்கொண்டிருக்கும் தணிந்த பார்வையுடனும் இருக்கும் கரந்தின் முகத்தைப் பார்த்து யாரும் அவரை 92 வயதுடைய வர் என்று சொல்லமாட்டார்கள். ஒருவித சக்தியும் புத்துணர்ச்சியும் அவருடைய முகத்துக்கு ஒளியைக் கொடுக்கின்றன. சுதந்திரத்துக்குப் பின் நிலவி வரும் அரசியல் நடப்புகளையும் நாட்டின் நிலை குறித்தும் அவர் பேசும்போது அவருள் வருங்காலத்தைப் பற்றிய கோபம் இருப்பது புலனாகிறது. நாட்டின் முழுகிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டம் பற்றியும் மக்களின் சோம்பேறித்தனத்தைப் பற்றியும் அதிருப்தியுடன் காந்த் பேசும்போது தாமஸ் க்ரேயின் கவிதையில் வரும் கோபக்காரத் தீர்க்கதரிசி போல் தோன்றுகிறார். ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய குரல் குறைந்த அளவிலான மக்களையே சென்றடைந் திருக்கிறது.
ஜனவரியில் தேசிய புத்தக வாரத்தின் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க அவர் புதுதில்லிக்கு வந்தார். வாசிப்பின் இன்பத்
இலக்கு | 51

Page 30
தைப் பற்றி வேறு விருந்தினர்கள் மாலையில் பேசிக் கொண்டிருந்த போது, கரந்த் நேராக விஷயத்துக்கு வந்தார். அதிக அளவில் எழுத் தாளர்களும், முன்பு இருந்ததை விட அதிக புத்தகங்களும் இருந்த போதிலும் அவை வாசகர்களின் கவனத்தைப் பெறும் அளவிற்குச் சுவாரஸ்யமாக இல்லை. லட்சிய வாசகனாக ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு பார்த்தால் விளையாட்டுத்தனமான இளைஞனின் கவனத்தைப் புத்தகம் பெற வேண்டும் என்றார் அவர். கரந்த் விஷ யம் அறிந்தவர். ஏனென்றால் அவர்களுக்கான ஒரு க;ை b க் களஞ்சியத்தைக் கன்னட மொழியில் தயாரித்திருக்கிறார். கற்பனை யான எழுத்துதான் குழந்தையின் மனத்தைத் திறக்கும் திறவுகோல் என்பது அவருக்குத் தெரியும். தற்கால இலக்கியம் உயிர்த்தன்மை கொண்டதாக இல்லை என்று சொல்ல அவர் தயங்கவில்லை.
புலம் பெயர்ந்த N தமிழர் நல மாநாட்டு /才 áDüqLOG)ft
உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் கல்வி, வேலை, சமூக நிலைமைகள் பற்றிய அச்சொட்டான தரவுகள் நிறைந்த கட்டுரைகள் மலரின் ஆணிவேர். கலாநிதி ஆ. கந்தையா, வ. கீதா, அ. மார்க்ஸ், சுரேஷ், சி. சிவசேகரம், ராகவன், யமுனா, ராஜேந்தி ஏன் ஆகியோரின் கட்டுரைகள் இப்பெருமைக்கு பெரும்பங்கு காரணமா கின்றன. அதுபோல் வ.ஜ ச. ஜெயபாலன், ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம், கி.பி.அரவிந்தன் போன்றோரது கதைகளும், சோலைக் கிளி, சு. வில்வரத்தினம் போன்றோரின் கவிதைகளும் மரத்தின் கிளைகளாகச் சடைத்துச் செழித்திருந்து மலரின் வெற்றியைப் பறைசாற்றுகின்றன.
நூல் வெளியீடு : நிறப்பிரிகை
கிடைக்குமிடம் : விடியல்
3, மாரியம்மன் கோவில் வீதி உப்பிலிபாளையம் கோயம்புத்தூர்-641015
52) இலக்கு
 

விமரிசிக்கப்பட விரும்பாத எழுத்தாளர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர் அறிந்த ஒன்று. எழுத்தில் வெற்றி காணாத எழுத்தாளர்கள் மக்களிடம் பெருகி வரும் தரக்குறைவைக் குறை கூறுகிறார்கள். புத்தகங்கள் பரவலாகப் புழங்காததற்குக் காரணம் திரைப்படங்களும் தொலைக்காட்சியும்தான் என்று அவர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். கரந்த் சுலபமான வழியைப் பின்பற்றவில்லை. எழுத்தாளன் விமர்சனபூர்வமான உள்முகப் பார் வையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். எழுத்தா ளனாக ஆக விரும்பும் எவனும் எழுத்தாளனாக ஆக முடியும் என்ப தையும், எழுதப்படுபவை அனைத்தும் புனிதமானவை என்பதையும் விமரிசனப் பார்வையோடு பார்க்கிறார் அவர். நவீன கால மக்களுக்குச் சாபக்கேடாகத் தோன்றும் மிகவும் அவசியமான கேள்வியை அவர் எழுப்புகிறார்: ஆசிரியர் முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்பு கிறாரா? கரந்தைப் போன்று சுய விமரிசனப் பார்வை கொண்ட தற்கால எழுத்தாளர்கள் யாரும் இல்லை.
அதைப் பறை சாற்றாமல், கரந்த் தொடர்பு கொள்ளும் திறனில் நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் தான் பாட்டு, நடனம், பேச்சு ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்ட யட்சகான பாரம்பரியமான நாட்டார் நாடகத்துக்கு அவர் புத்துயிர் கொடுத்தார். அதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது- கிராமங்களுக்குச் செல்வது, ஆதாரபூர்வமாக இறந்து பட்டுக்கொண்டிருக்கும் முறை யைத் தோண்டி எடுப்பது, இருந்தபோதிலும் யட்சகானா பற்றி அவருக்குக் கிறக்கமான மாயை இல்லை. அவர் அதை தொடர்பு கொள்ளும் ஒரு சிறந்த வழி என்றும் கலாச்சாரம் ஆகிய தடைகளைக் கடந்து செல்ல இயலும் என்றும் நம்பினார். அவ்வளவுதான். பல மாகாணங்களைக் கொண்ட நாட்டின் கலாச்சாரத்தை விடுத்து விளிம்பில் உள்ள மூழ்கிப்போன கலாச்சாரங்களின் புகழ் பாடவில்லை அவர், செயலளவில் ஆழமான முற்போக்கு வாதியாக இருந்த போதிலும் அவர் முற்போக்கு அலங்காரங்களைத் தவிர்ப்பதாகத் தோன்றுகிறது.
இலக்கிய நவினத்துவத்தைக் கரைத்துக் குடி ர்தவர்களை உள் ளிட்டு, பல படைப்பாளிகள் காரணfதியின் ஆட்சியை எதிர்த்தும், நம்பிக்சை மென் உணர்வு, உணர்ச்சி ஆகியவைகளில் ஆறுதல் தேடியும் இருக்கின்றனர். கரந்த் நவீன கால நுண்ணுணர்வுகள் கொண்ட ஓர் எழுத்தாளர். யட்சகானாவுக்குப் புத்துயிர் கொடுப்பதில் பங்கு வகித்தது குறித்து அவர் கிராமீயத்தை முன் நிறுத்துவதாகப் பலர் நினைப்பது தவறு. அறிவுபூர்வமான அலசலில் நம்பிக்கை கொண்டவர் அவர். 1935-ல் கரந்த் தார்வாட் பல்கலைக் கழகத்தில் மூன்று விரிவுரைகளை அளித்தார். அவற்றில் கடவுளின் இருப்புக்கு எதிராக அவர் வாதாடினார். வயது அவரது புரட்சிகரமான நிலை யைப் பாதிக்கவில்லை. அந்த விரிவுரைகள் ஆங்கிலத்தில் அவரது நண்பர் எச். ஒய். ஷார்டா பிரசாத்தால் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலக்கு/53

Page 31
செயல்படுவதில் தீவிர நம்பிக்கை கொண்ட அவர் உத்தர கானரா மாவட்டத்தில் அணுசக்தி நிலையத்தை நிறுவுவதை எதிர்த்தார். அப்பொழுது வேறு நாட்களின் கொள்கைகளை நினைவு கூர்ந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு ஊழல் வேர் பிடித்திருப்பதை ஜவஹர்லால் நேருவின் கவனத்துக்கு அந்த நாட்களின் பிரபலமான அரசியல் வாதி யான தன் மூத்த சகோதரர் ராமகிருஷ்ண கரந்த் கொண்டு வந்தார் என்று அவள் கூறுகிறார். ஆனால் அவர் புறக்கணிக்கப்படவில்  ை6. அரசியல் சூழலைப் பார்வையிடும்போது அவர் ஜெர்மானியர்கள் இாண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு மறுகட்டுமானம் நடந்த போது வெளிப்படுத்திய உறுதியும் நேர்மையும் மக்களிடையே இப்போது இல்லை என்கிறார்.
நற்பண்புகளில் நம்பிக்கை கொண்ட கரந்த் பல கட்சிகளைச் சார்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் பிரத்தியேக உரிமைகளுக்குப் ப்ழகிப்போய் விட்டார்கள் என்கிறார். அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது ஜனதா கட்சித் தொண்டர்கள் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தினார்கள் என்கிறார் அவர். ஆனரல் மாகாணத்தில் இருக்கும் ஜனதா தள தொண்டர்களும் இப்பொழுது தளர்ச்சியடைந்து விட்டனர். இன்றைய பாரதீய ஜன தாக் கட்சித் தொண்டர்களிடையே எளிமையும் உற்சாகமும் இருப்பதை அவர் காண்கிறார்.
"கடுமையாக உழைக்கவும் நேர்மையாக இருக்கவும் மக்கள் விரும்பவில்லை, ஆகையால் எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை" என்கிறார் அவர். அவருடைய குரலில் கோபமும் வருத்தமும் கலந் திருக்கின்றன. ஆனால் அவர் எதிர்மறைக் கண்ணோட்டத்தையோ, நடப்பதெல்லாம் கெட்டதே என்ற பாவத்தையோ கொண்டவர் அல்ல. நம்பிக்கையும் சக்தியும் அவரிடம் நிறையவே இருக்கின்றன. மக்களையோ தலைவர்களையோ போலியாகப் புகழும் விளை யாட்டை அவர் ஆடமாட்டார்.
மக்கள்மீதும் நடப்புகள் மீதும் தான் கொண்டுள்ள கருத்துக்களைக் கூறும்போது அவர் தனிமையில் தன் அறையில் உட்கார்ந்திருக்கி றார். குரல் ஓங்குகிறது. தனது கருத்தை வலியுறுத்தும் போது அவரது கைகள் அசைகின்றன. ஒரு மணிநேர உரையாடலுக்குப் பின் அவர் எழுப்து ஓர் ஆாஞ்சைப் பகிர்ந்து கொண்டு விட்டு கதவைத் திறந்து நல்வாழ்த்துக்களுடன் விடை கொடுக்கிறார். கரந்த் மரியாதையை எப்பொழுதும் கைவிடுபவரில்லை. பேசவும் வாதிடவும் பெயல்படவும் தயாரான நிலையில் இருக்கும் அவர் ஒவ்வொருவரிட மும் ஒவ்வொரு கணத்திலும் வாழ்கிறார். O
scir 5 INDIAN EXPRESS 19-2-95 ஆங்கிலத்திலிருந்து தமிழில் : கோபிகிருஷ்ணன்
54 I இலக்கு
 

சிறுகதை :
கனவு தேசத்து ராஜாக்கள்
"செந்தூரம் கே. ஜெகதீஷ்
அன்று “ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாளின் உறசாகம் தொற்றிக் கொள்ள அவர்கள் அந்த சின்ன அறையில் கூட்டினார்
sé.
அன்று அவர்கள் அந்த அறை யில் கூடியதன் முக்கிய நோக்கம். வழக்கம் போல இலக்கிய சர்ச் சைக்காகவும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ‘பாரதி பிறந்தநாள் கவியரங்கம்" பற்றி பேசவும். ' .'
"என்ன ராஜ r, வெள்ளிக் கிழமை நிகழ்ச்சி உறுதிதானே?" என்று கேட்டான் நாராயணன்.
*சரியா ஆறுமணிக்கு தொடங் கிடலாம்" என்றான் கோபால். "தலைப்பு என்ன தீர்மாணிச்சியா? யார் யார் கவிதை படிக்கிறாங்க?" என்று சந்தேகம் எழுப்பினான்
60
கூட்டத்தை ஏற்பாடு செய்த ராஜாராமன் நண்பர்களைப் பார்த்து லேசாகப் புன்னகைத் தான். ஆர்வம்! ஒ! இவர்களுக்குத் தான் எத்தனை ஆர்வம்!
*வெள்ளிக்கிழமை சரியா ஆறு மணிக்கு ஆரம்பிச்சுடலாம், தலைமை ஏற்க ஒரு பிரபல கவிஞர் வருவார். இரண்டு பேரை அணுகியிருக்கேன். அநேகமா ஒருத்தர் ஓ.கே. ஆயிடுவார். நம்ம நாலு பேரும் கவிதை படிக்கிறோம். இரண்டு பெண்கள் கலந்துக்கறாங்க. சீதா, சுபத்ரா, எல்லோருக்குமே ஒரே பொதுத் தலைப்பு. "இந்நாட்டு மன்னர் கள்”, என்ன எல்லாம் தெளிவா இருக்கா?"
*ஹாலுக்கு பணம் கட்டிட்
டியா? -கோபால்,
* 26rubl நாளைக்கு லஞ்ச்
இலக்கு 155

Page 32
அவர்லே கடையிலிருந்து போயிட்டு கட்டிடலாம்" என்றான் ராஜாராம்.
போலீஸ் பார்மிஷன்?" மணி.
"அதையும் பணம் கட்டறப்போ நானே செய்து முடிச்சிடறேன்." "எல்லாருக்கும் லெட்டர் போட் டாச்சா? கூடடம் வருமில்லையா?" "முந் நூறு பேருக்கு கடிதம் எழுதி நம்ம நாலு பேரும் தானே போட்டி ருக்கோம். நிச்சயம் நூறுபேரா வது வருவாங்க" என்று ராஜா ராமன் சொன்னபோது மற்ற மூவரும் நிறைவோடு ஆமோதித்
தார்கள்.
தீங்கட்கிழமை ராஜாராமன் வழக்கம் போல பத்து மணிக்கு asso L–å S5 வந்து விடடான். முதலாளி பத்தே காலுக்கு கடை திறந்தார். கடை திறந்ததுமே கூடடம் பெருகியது பண்டிகைக் காலமாதலால் ஜவுளிக் கடைகள கொண்டாட்டம் போடடன. சுபத்ராவும் அதே கடையில் கேஷயராக இருந்தாள். அவள் வந்ததும், குட்மார் னிங் சொன்ன தும் கூட கவனிக்க முடியாமல் வேலையில் மும்முரமாக ஆழ்ந்து போனான் ராஜாராம். வாங்கி வைத்த டீயை கூட சாப்பிட முடிய வில்லை. ஆறிப் போனது.
லஞ்சுக்காக உட்கார்ந்த போது தான் சுபத்ராவிடம்பேசமுடிந்தது. * என்ன சுபத்ரா" வெள்ளிக்கிழமை கவியரங்கத்துக்கு வருவே இலலே? தலைப்பு தெரியுமா? இந்நாட்டு
மன்னர்கள்" நல்லாயிருக்கா..?
தலைப்பெல்லாம் சரிதான், பண்டிகை சீசனா இருக்கே. நம்ம இரண்டு பேருக்கும் ஒரே நேரத்துல லீவு கிடைக்குமா.
கொஞ்சம் ரசம் எடுத்துக்குங்க.. வைச்சது!"
வேணும்னா . எங்க அம்மா
அதற்குள் இரண்டு கஸ்டமர்கள் தென்பட்டார்கள். "சார், சட்டை தைக்க கொடுத்திருந்தே ம் , இன்னிக்கு ட்யூ டேட" என f tr கள். "பத்து நிமிஷம் வெயிட்
பண்ணுங்க சார் சாப்பிடறோம்."
அவர்கள் நாகரீகம் புரியாத ஜென்மங்கள் போல அங்கேயே
நின்றனர். அத்துடன் "இந்த பேன்ட் பிட் எவ்வளவு?" என்று விசாரித்தனர். எரிச்சலுடன்
அரைகுறையாய் சாப்பிட்டு எழுந் தான் ராஜாராம். அவன் எழுந்த தும் சுபத்ராவும் தன் டிபனை மூடி விட்டாள். கடையிலுள்ள மற்ற சிப்பந்திகளோ அந்த கஸ்ட மர்களை தூசு போல அலடசியப் படுத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்
தார்கள்.
அவர்களை அனுப்பி விட்டு
ராஜாராம் "சே என்ன லைப் இது? பொறுமையா சாப்பிடக் én. L- முடியலே" என்றான் சுபத்ராவிடம்.
"மனுஷனை மனுஷனா மதிக்க மாட்டேங்குறாங்க" சுபத்ரா, இங்கே என்னடான்னா நம்ம முதலாளி சாப்பாட்டுக்கு யாரும் வெளியே போகக் கூடாது. கடை யிலேயே இருக்கணும்ங்குறார். சரி இங்கேயே சாப்பிடலாம்னா இந்த ஆளுங்க சாப்பிடக் கூட விடாமல் அது ரெடியா, இது ரெடியான்னு கழுத்தறுக்கறாங்க, பத்து மிஷம் பொறு க் க முடியலே. லஞ்ச் டைம்னு பெரிசா ரிஜிஸ்டர்லே மட்டும் 6T (gg றாங்க.எந்த லேபர் ஆபீஸர் கேட்கிறான்? எல்லாம் லஞ்சம் வாங்குறானுங் க. தி ரு ட் டு ப்
56 I இலக்கு
 

மசங்க..” என்றான் ஆத்திரத் துடன்.
“ sostoar Ar கோபப்படாதீங்க, ராஜா. ஜவுளிக்கடை சிப்பந்தி களோட ஆவலமான வாழ்க் கையை யாராலும் மாத்த முடி uttgl. பொறுத்துக்குங்க."
என்றாள் சுபத்ரா பரிவுடன்.
"இல்லை சுபத்ரா. என்னாலே முடியலே. சிறுமை கண்டு சீறுவாய்ன்னு பாரதி சொன் னதை நீ படிச்சதில்லை.? என் சுபாவத்துக்குப் பொறுமை ஒத்து
வராது. ரெனத்திரம் பழகு". இது கூட பாரதி சொன்னது தானே!"
சுமத்ரா சிரித்தாள். அவளால் பதில் சொல்ல முடியாத போது இப்படித்தான் அழகாக சிசிப்பாள். அவள் சிரிப் பில் கலந்து கோபத்தை மறந்தான் ராஜாராம்.
*இதோ பாருங்க ராஜா, உங் களுக்கு ஏத்த வேலை இது இல்லை. எப்படியோ தெரியாமல் இங்கே வந்து மாட்டிக்கிட்டீங்க. உங்களை இங்கே யாரும் புரிஞ்
சுக்கமாட்டாங்க. இது வியாபார உலகம். இங்கே ஒவ்வொரு நிமிஷமும் பணம்தான் பிரதா ாைம்!” என்றாள் சுபத்ரா,
அய்யய்யோ!" என்றான் அவன். சட்டென்று ஞாபகம் வந்தது. *முதலாளி வர்றதுக் குள்ளே நான் போயிட்டு ஹாலுக்கு பணம் கட்டி, போலீஸ் பர்மிஷனும் வாங்கி வந்துட றேன்."
*நீங்களும் மத்தவங்களோட லஞ்ச் அவர்ஸை டிஸ்டர்ப் பண்ணப் போறிங்க” என்று சிரித்தாள் சுபத்ரா. 'சீக்கிரம் வாங்க" என்று வழியனுப்பி 6ts.
தீபம் நா.பார்த்தசாரதிமறைவின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ் சலிக் கூட்டம், ஞானியாரடிகள் தமிழ் மன்றத்தின் சார்பில் கடந்த ஜனவரி 26ம் தேதி தேவநேயப் பாவாணர் மாவட்ட மத்திய நூலகக் கட்டிட கருத்தரங்கு அறையில் கொண்டாடப்பட்டது. பிற்பகல் 2-30 மணியளவில் நா.பா. வின் படைப்பிலக்கியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. திருவாளர்கள் வல்லிக்கண்ணன், சங்களிபுத்தி ரன், குறிஞ்சிவேலன், திருமலை, திருப்பூர் கிருஷ்ணன், தேவகாங் தன், செல்வி பூமா ஆகியோர் பங்கு பற்றினர். மாலையில் நினைவாஞ்சலிக் கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திரு ராமர் இளங்கோ தலைமை யில் நடைபெற்றது. திருவாளர்
கள் விஜயதிருவேங்கடம், ஆர். கோவிந்தராஜன், ஜனகன், ஞானக்கூத்தன், g5 TD60)
மு. வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். திரு அ. நா. பாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சி யைத் தொடக்கியிருக்க திரு சு. திருமலை நன்றியுரை கூறி விழாவை நிறைவெய்தச் செய் தார்.
இலக்கு 57

Page 33
செவ்வாய்க்கிழமை,
வீட்டிலிருந்து புறப்படுகிற அவசரத்தில் இருந்தான் ராஜா ராமன். அம்மா அவன் அருகில் என்னவோ சொல்ல வந்தா ஸ். 's sist Dr
*ரேஷன் வாங்கணும்ப்பா. கடையிலிருந்து நூறு ரூபாய் வாங்கிட்டு வர்றியா?
என்னம்மா நீ. சம்பளம் வாங்கி ஒருவாரம் கூட ஆகலியே! அதுக்குள்ளே அட்வான்ஸா..? முதலாளி கத்துவார்."
"ஒண்ணும் சொல்லமாட்டார். பண்டிகை நாள்தானே! வியா பாரம் நல்லாவே இருக்கும், கேட்டுப்பார்."
தயக்கத்துடன் “சரி” என்றான்.
முதலாளியிடம் பணம் கேட்ட போது "இன்னிக்கு செவ்வாய் கிழமையாச்சே தையற்காரங்க கூலி கேப்பானுங்களே. நாளைக்குப் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டார்.
புதன்கிழமை.
முதலாளியிடம் பணம் வாங்கிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்தான்.
வியாழக்கிழமை.
சுபத்ராவும் அவனும் வெள்ளிக் கிழமை லீவு கேட்ட போது முதலாளி கத்த ஆரம்பித்து விட் டார். "சே! பொறுப்புணர்ச்சியே கிடையாது உனக்கு 1 என்ன பொல்லாத கவியரங்கம்?"
"பாரதி பிறந்த நாள்...!"
"பொல்லாத பாரதி இடியட்! L Ir Uġsu T உனக்கு சம்பளம் தர்றான்? பாரதியா உனக்கு
சோறு போடறான்? என்ன செஞ் சான் அந்த பாரதி. கடையிலே வியாபாரம் முக்கியமா, பாரதி முக்கியமா."
"எனக்கு பாரதிதான் முக்கியம் , முதலாளி'
*இடியட் அப்போ எதுக்கு வேலைக்கு வர்றிங்க? போய் வேலை வெட்டியில்லாமல் தறு தலையா சுத்த வேண்டியது தானே!"
*முதலாளி, ரொம்ப அநாவ
சியமா பேசறிங்க. நாளைக்கு கண்டிப்பா லீவு வேணும்!"
* கடையிலே வியாபாரம் எப்படி யிருக்கு பார்த்தியா? ஒரு பொறுப் புணர்ச்சி வேணாம் உனக்கு. சீனியர் சேல்ஸ்மேன் நீ.!"
*ஒருநாள் நான் இல்லைன்னா உங்க வியாபாரம் கெட்டுப் போகாது முதலாளி'
அதெல்லாம் எனக்கு தெரி யாது. சுபத்ராவுக்கு வேணும்னா லீவு தர்றேன். கல்லாவுலேநானே 9. " as frut gyp iq i b. பட் சேல்ஸ் பண்ண முடியாது. நீ வேணும்! "
* முதலாளி கூட்டத்தை ஏற் பாடு செஞ்சதே நான்தான். நான்
இல்லேன்னா நிகழ்ச்சி ஒரே குழப்பமாயிடும்!'"
*அதெல்லால் எனக்கு தெரி
யாது! நேத்து நீ அட்வான்ஸ் வாங்குரப்போவே நினைச்சேன். ஏதாவது கூட்டம் கீட்டம் போடு வேன்னு. உன் கூட பழகி இந்தப் பொண்ணும் அப்படியாயிருச்சு. பக்கத்துல கடையில எல்லாம் உங்க இரண்டு பேரைப் பத்தியும் தப்பா பேசறாங்க, தெரியுமா
உனக்கு?’’
58 இலக்கு
 

முதலாளியின் கோபம் அதிக மானது, வாதாடிப்பார்த்து, இய லாமையின் வெறுப்போடு வந்தவ னை சுபத்ராதான் தேற்றினாள். **நீங்க கவலைப்படாதீங்க,ராஜா. எனக்கு லீவு கிடைச்சிருக்கு. உங் களை மாதிரி பொறுப்பா நிகழ்ச் சியை நல்லபடியா நான் முடிச்சி டறேன். நீங்க ஒருமணி நேரம்
டுங்க. கவிதை படிச்சுட்டு உடனே கடைக்குப் போயிடுங்க. மீதியை நான் பார்த்துக்கறேன்" என் றாள்.
வெள்ளிக்கிழமை,
ஆறுமணிக்கு ராஜாராம் நினைத் துக் கொண்டான். * இந்நேரம் நிகழ்ச்சி தொடங்கியிருக்கும். தலைவர் வந்திருப்பார். கோபா லும் மணியும் நாராயணனும் என் னைத் தேடிக் கொண்டிருப்பார் கள். சுபத்ரா பதில் சொல்லிக் கொண்டிருப்பாள். சீதா கவிதை யோடு வந்திருப்பாள்.'
வியாபாரத்தில் மனசு ஒட்டா மல் இருக்க இரண்டு மூன்று கஸ்ட மர்கள் வெறுமனே பார்த்துவிட்டு ** அப்புறம் வர்றோம் ' என்று போனார்கள். முதலாளி கல்லா விலிருந்து இவனை முறைப்பது தெரிந்தது. ராஜாராம் தன் சட் டைப்பையில் வைத்திருந்த கவி தையை தொட்டுப் பார்த்தான். மனசு உறுத்தியது. மெள்ள முத லாளியருகில் வந்தான். * என்ன?" என்று நிமிர்ந்தார் அவர்.
** அரைநாள் லீவு போடுங்க. தான் மீட்டிங் போறேன்." அவன் கடையைவிட்டு வெளியே றினான்.
ராஜாராம் கிளம்பிய போது மணி ஏழாகிவிட்டது. அவசரமாக
விஜயா தேவசிகாமணி நினைவு இலக் கியப் பரிசுகள் திட்டம், தமிழ்நாடு
பதிப்பகம், லில்லி
கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் தி.க.சி.யின் விமர்சனங் கள்-மதிப்புரைகள் - பேட்டிகள்' என்னும் நூலும். கோவை ஞானி தொகுத்த "புதிய தரிசனங்கள்கலையும் அரசியலும்" என்னும் நூலும் வெளியிடப் பெற்ற விழா 22-1-95 அன்று திருநெல்வேலி யில் நடந்தது.
பெண்ணியம் பற்றிய கருத்தரங் கம் ஒன்று 11-2-95ல் நாரத கான சபா மினி ஹாலில் நிகழ்ந்தது. கணையாழி சார்பில் கன்டபெற்ற இக்கருத்தரங்கில் திரு.வி. சுந்தரம், சிவகா ஐ. ஏ. எஸ். போன்றோர் கலந்து கொண்டனர்.
புதுமைப்பித்தன் எழுத்துக்க பற்றிய ஆய்வரங்கம் 11-3- 5 சனி காலை பத்து மணியளவில்
குடந்தை இசை வேளாளர் அரங்கில் நடத்தப் பெற்றது. அ. மார்க்ஸ், 3- J TLD OFTËS, ரவிக்குமார், கோ. கேசவன், கண்ணன், ராஜ்கவுதமன்,
அ. ராஜமார்த்தாண்டன் உட்பட தஞ்சை, திருச்சி, மதுரை, சென் னையிலிருந்து வந்த இலக்கிய அபிமானிகளும் கலந்துகொண்ட இவ்ஆய்வரங்கம் மாலையில் இனிது நிறைவேறியது. ஏற்பாடு நிறப்பிரிகை, திரைப்பட விமர் சனக் குழு.
இலக்கு | 59

Page 34
ஒரு ஆட்டோவை அழைத்தான். வானம் நன்றாக இருட்டி விட்ட து. "சீக்கிரம் போப்பா..!" என்றான்.
முகம் கழுவக்கூட நேரமில்லை. கடையில் வியாபார மும்முரத்தின் தலை கலைந்து போயிருந்தது. சீப்பை தேடினான். எங்கேயேள விழுந்து விட்டிருக்கிறது
ஆட்டோ ஓடியது.
"நாங்ள்ை இந்நாட்டு மன்னர்கள் எங்கள் ஒட்டுக்காகத் தான் மந்திரிகள் காத்துக் கிடக்கிறார்கள். எங்கள் வாழ்வுக்காகத் தானா எல்லா அரசியல்வாதிகளும் உழைக்கிறார்கள்..?"
சுபத்ரா தன் வழக்கமான கிண் கடலுடன் கவிதையைப் படித்துக் கொண்டிருக்க கூட்டம் ரசிதது கை தட்டியது, அடேங்கப்பா ! நூத்தி அம்பது பேருக்கும் மேலே இருப்பாங்க போலிருக்கே, ஒருபக் கம் டி விக்காரர்கள் வந்து நிகழ்ச் சியை பதிவு செய்து கொண்டி ருந்தார்கள்.
சுபத்ரா முடித்ததும் கவியரங்கத் தலைவர் ராஜாராமனை அழைத் தார். திடீரென்று ராஜாராமனின் முகம் இறுகியது. கண்கள் சிவந்
தன. உதடுகள் துடித்தன கைக
ளும் கால்களும் தள்ளாடின.
எழுந்தான். மேடைக்கு வந் தான். மைக் அருகில் நின்றான். ஒருநிமிடம் மெளனமாக நின்றான்
அவனால் பேச முடியவில்லை. உணர்ச்சிகள் தத்தளித்தன. சுவற் றில் ஒட்டப்பட்டிருந்த பாரதி யின் கம்பீரமான முகத்தைப் வார்த் தான்.
தன் சட்உைப்பையிலிருந்த கவி தைவை எடுத்தான். அதில் ஒரு வரி கூஉ படிக்காமல் எல்லோரது முன்னிலையிலும் துண்டு துண் டாக கிழித்தான். காற்றில் பறக்க விட்டான்.
கண்களில் நீர் திரள மைக்கை கையால் பற்றினான்.
நாங்கள் இந்நாட்டு மன்னர்கள் நாங்களும்தான் நாங்கள் கனவு தேசத்து
ராஜாக்கள் !
நிஜத்திலோ ஏவல் செய்யப் பிறந்த
அடிமைகள்.
இன்றும் என்றும்
அடிமைகள்.
சுயமாய் முழக்கமிட்ட அவன் சடாரென்று மேடையிலேயே சரிந்து குலுங்கக் குலுங்க அழ
SRT A 68T
கூட்டம் பமபரப்பாக எழுந்து நின்றது. நாராயணனும் கோபா லும் மணியும், எல்லோருக்கும் முன்னதாக சுபத்ராவும், அவனை நோக்கி கலவரத்துடன் ஒடி வந்தார்கள். O
60 / இலக்கு
 

இலக்கு நோக்கி . . .
சிற்றிதழ்கள் பலவற்றின் மத்தியில் சிந்தித்துப் பார்க்கவேண்டிய செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு சில ஏடுகளில் ஒன்றாக இலக்கு” விளங்குவதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். புதுமைப்பித்தன் இதழில் திரு. வல்லிக்கண்ணன் எழுப்பியுள்ள எண்ண அலைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள் கிறேன். இலக்கிய உலகில் இப்போது பார்வை குறுகிச் சின்னச் சின்ன வட்டங்களுள் ஒடுங்கிப்போவதில் உண்மையில் பேராபத்தே இருக்கிறது. இதுபற்றி இலக்கியவாதிகள் ஆழமாகச் சிந்திக்க வேலண் டும்.
பு. பி.இதழில் திரு. கா. சிவத்தம்பி விந்தனைப்பற்றி எழுதி யுள்ள கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது. விந்தனை உரிய விதத்தில் இனம்காட்டியுள்ளார் அவர். பாரதி இதழில் பாரதியாரின் சிறுகதை கள் பற்றி திரு. பெ.சு. மணி எழுதியுள்ள கட்டுரையும், மாக்ஸ் முல்லர் பற்றி திரு. சா. தேவதாஸ் எழுதியுள்ள மறுபரிசீலனையும், தலித் இலக்கியம்பற்றி திரு. தி.க.சி.யின் கேள்வி - பதில்களும் சிறப்பாக உள்ளன. தலித் இலக்கியம்பற்றி தி.க.சி. தெரிவித்துள்ள கருத்துக் கள் எனக்கும் உடன்பாடே. என்றாலும் பாரதியே தலித் இலக்கியத் தின் பிதாமகன் என்று அவர் கூறுவது சரியன்று. உண்மையில் தலித் துக்களுக்காக எழுப்பிய குரல்கள் தமிழ் இலக்கியத்தில் மிக முன்ன் தாகவே ஒலித்துள்ளன.
பறைச்சி போகம் வேறதோ
பணத்தி போகம் வேறதோ இறைச்சி தோல் எலும்பினில்
இலக்கமிட்டு இருக்குதோ? என்றெல்லாம் குரல் எழுப்பிய சித்தர்களை நாம் மறந்துவிட முடியுமா?
இந்த இதழை அமரர் நா. பா. வின் நினைவு மலராக வெளிக் கொணர்ந்துள்ளது பாராட்டத் தக்கது. நா.பா. பற்றிய வல்லிக்கsண் ணன் கட்டுரை சிறப்பாக உள்ளது. இதழில் புத்தகவிமர்சனங்களுக்கு கணிசமான பக்கங்கள் ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத் தக்கது. தங்கள் முயற்சி வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள்.
தொ. மு. சி. ரகுநாதன் திருநெல்வேலி-7
நா.பா. வைப் பற்றி நீங்கள் எழுதிய வரிகளில் நெஞ்சம் நெகிழ்ந் தேன். இப்படியெல்லாம் "தீபத்தை நினைப்பதற்கும். போற்றுவதற் கும் நா.பா.வின் சாதனைகளை நன்றியுடன் நினைவு கூர்வதற்கும், உங்களையும், வல்லிக்கண்ணனையும், திருமலையையும் இன்னும் சில
இலக்கு | 61

Page 35
ரையும் தவிர இங்கே நடுநிலையாளர்கள், இலக்கிய ஏட்டாளர்கள் வேறு யார் இருக்கிறார்கள? வ.க.வின் கட்டுரை மிகச் சிறப்பு. மிகச் சுருங்கிய பக்கங்களில் "தீபத்தின் 23 ஆண்டுச் சாதனை யை அற்புத மாகத் தொகுத்துக் கூறியிருக்கிறார். மொத்தத்தில் இலக்கு-3 ஒர் அரிய இலக்கியச் சாதனை.
இன்குலாப் கவிதையும், மதிப்புரையும் என்னை மிகவும் கவர்ந் தன. அவரை ஒவ்வொரு இதழிலும் எழுதச் சொல்லுங்கள். *இலக்கு’க்கு வலிவும் பொலிவும் தருவன இன் குலாப் எழுத்துக்கள் . இதில் சிறிதும் ஐயமில்லை.
தங்கள் கதை நன்று இன்னும் சுருக்கமாக இருக்கலாம்! பற்பல வரிகளைச் செதுக்கித் தள்ளியிருக்க வேண்டும்; கலையம்சம் கூடியிருக் கும்.
தி. க. சி. நெல்லை.6
முத்திங்கட் கொன்றாய் முகிட்கும் 'இலக்கு' இதழ் தித்திக்கும் பாங்கில் திகழ்கிறது - வித்தகமாய் இன்றமரா பரணன் ஏற்ற மதிப்புரைக்கு
நன்றி நவில்கிறேன் நான்.
முனைவர் கெல்லை க. சுப்பிரமணியன்
*இலக்கு" ஜன-மார்ச் 95 இதழ் மிகச் சிறப்பாக உள்ளது. நா.பா வின் நினைவு சிறந்த முறையில் கொணரப்பட்டுள்ளது. 'தீபம்’ முதல் இதழ் முதல் இறுதி வரை வாங்கி ரசித்தவன் என்ற முறையில் அதன் அருமை எனக்குத் தெரிகிறது. நிறைய நூல் விமர்சனங்கள் வந்திருப் தும் பாராட்டுக்குரியது. உங்களது இலக்கிய முயற்சிக்கு என்பாராட்டு. என் ஆதரவும் இம்முயற்சிக்கு என்றும் உண்டு.
வே. சபாநாயகம் விருத்தாசலம்
"இலக்கு பல பொருள் படைத்த, வல்லமை நிரம்பிய சொல். இலட்சியம்,வெற்றி, எல்லை, எட்டும் குறி, உள்ளார்ந்த குறியீடு. இப்படிப் பல இலக்கு'கள். எல்லாவற்றுக்கும் ஏற்ப "இலக்கு வளர, வலிமை காட்ட, வளம்பெற வாழ்த்துகிறேன். "மறுவிசாரணை' பகுதி சிறப்பானது, தேவையானது. நிறுத்த வேண்டாம்.
தமிழ்ப் பார்வையுடன் இந்திய - உலகியப் பார் வை களும் "இலக்கு பெறவேண்டும். பழைமைப் பேதைமையோடு, புதுமைப் பேதைமை பிதற்றல்களையும் வெளிப்படுத்துவது அவசியத் தேவை. தவிர்க்க முடியாத தேசீய நீரோட்டத்தையும், வணிக இலக்கியச்சந்தை யின் ஆதிக்க ஆக்கிரமிப்பை அறிந்து கொண்டு எதிர்கொள்ள வேண் டிய கட்டாயத்தையும் 'இலக்கு ஒதுக்க முடியாது. பல படிவங்கள், படிமங்கள், பரிமாணங்கள், குறிகள் கொண்டிருப்பது சிறப்பானதே. செளரிராஜன், சென்னை - 78
62 I இலக்கு
 

மூன்றாவது இதழ், அமரர் நா.பா. அவர்கள் நினைவை நினை வூட்டி வெளிவந்துள்ளமை மனத்திற்கு இதமாக இருக்கிறது. ஸ்டெந் தாலின் பெருமையை உள்ளது உள்ளபடி உலகம் அறியஐம்பதாண்டு கள் ஆயினவாம். நா.பா.வின் பெருமையை உள்ளது உள்ளபடி அறிய அத்தனை நீண்டகாலம் தேவைப்படுமோ? நா. பா. ஒரு மாபெரும் எழுத்து மேதை. புதுவகை யதார்த்தத்தை-ரொமான்டிக் ரியலிஸத்தை-திறம்பட கையாண்டவர். அவரது எழுத்தின் அருமை க. நா. சு போன்ற இலக்கிய விமர்சகர்களுக்குப் புலனாகவில்லை! ஞானபீடப் பரிசுக்கு ஏற்றவராக இருந்தும் அப்பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. நா.பா. வின் மகத்தான இலக்கியத் தொண்டினை நீங்கள் உணர்ந்து, அவர் நினைவாக இலக்கின் மூன்றாவது இதழைக் கொணர்ந்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்! இன்னொரு பக்கம்’ சிறப்பான சிறுகதை. குழந்தைகளின் மன உலகத்தைச் செம்மையாகக் காண்பிக்கிறது படைப்பு. ஆசிரியரின் நடையில் இனிய அமைதியை - ஒரு புதிய தமிழ்ப் போக்கினைக் காண முடிகிறது.
பா. அமிழ்தன் -தெற்கு கள்ளிக்குளம்
‘இன்னொரு பக்கம்" சிறுகதை குழந்தைகளின் உளவியலை அழகாக படம்பிடித்துக் காட்டுவதுடன், உள்ளத்தை நெகிழ்விக்கும் * சரித்திர சோகத்தையும் அதன் விளைவுகளையும் நுட்பமாக உணர்த்துகிறது. பாராட்டுக்கள். பொள்ளாச்சி நசன் 'இலக்கியச் சந்திப்பு’ நன்று. இளம்பிறை ரகுமான் சந்திப்பு அவரது இலக்கிய அனுபவங்களையும் அன்றைய இலங்கை இலக்கியச் சூழலையும் பற்றித் தெரிந்துகொள்ள உதவுகிறது, மஹாகவி கவிதைகள் பற்றிய மதிப்பீடு ரசிகர்களுக்கு நன்கு பயன்படும். நா.பா. பற்றிய விஷயங்கள் அருமை. நா. பா. நினைவை இப்படி சிறப்பிக்கவேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டது ‘இலக்கு' வுக்கு பெருமை சேர்க்கக் கூடியது. வாழ்த்துக்கள்.
வல்லிக்கண்ணன் சென்னை
* இலக்கு வில் இன்னும் ஆழமான படைப்புகள் வரவேண்டும். பொதுவாகவே இன்றைய சிறுபத்திரிகை எதுவுமே பழைய இதழ்கள் (தீபம், கசடதபற, அஃக், எழுத்து பிரக்ஞை, படிகள்.) தரத்தில் இல்லை.
* வேர்கள்" இராமலிங்கம்
நெய்வேலி
"இன்னொரு பக்கம்" சிறுகதை உள்ளத்தைத் தொடுவதாய் இருந்தது. வ.க. பக்கம், இலக்கியச் சந்திப்பு, மஹாகவி கவிதைகள்ஒரு மதிப்பாய்வு எல்லாமே சிறப்பாக உள்ளன.
இலக்கு 63

Page 36
"இலக்கு'வின் இலக்கு தெளிவாகப் புரிகிறது. தமிழிலக்கியத்துக்கு உரைகல் ஒன்று தேவைதான்.
-காசி ஆனந்தன்,
சென்னை
இளம்பிறை ரகுமானின் ஆழமான கருத்துக் குவியல்களைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றிகள் பல. இலங்கைதமிழக இணைப்புப் பாலமாக ப்ொது நோக்கோடு தரமான இலக்கியப் பரிமாணம் காட்டும் "இலக்கு" இதழ் கட்டாயம் பலராலும் பாராட்டிப் பேசப்படும். மஹாகவி கவிதைகளை மதிப்பீடு செய்த நா. சுப்பிரமணி யன் ஆழமாகச் செய்துள்ளார்.
பொள்ளாச்சி நசன்
நவீன இலக்கியப் போக்குகளைப்பற்றியே பேசியிருந்தாலும், ஒருவிதமான பண்டிதத்தனமும் மறைவாகத் தெரிகிறது இலக்கிய சந்திப்பு கேள்விகளும் பதில்களும் பிரயோஜனமாக இல்லை. இதழ் இன்னும் அழுத்தமான நல்ல கட்டுரைகளோடு வரவேண்டும்.
ஜி.எஸ். தயாளன் வில்லுக்குறி
"இலக்கு மூன்றாம் இதழ் நன்கு அமைந்துள்ளது. 'இலக்கு வுக்கு சேதநை பூர்வமான இலக்கிய இலக்குகள் உள என்பதை இந்த இதழ் மிக அச்சாகக் கோலங்காடடுகிறது. இலக்கிய வளங் களைச் சுட்டிக்காட்டும் ஓர் இலக்கியப் பயணம் உங்கள் சஞ்சிகைக்கு வந்து பொருந்துதல் பாராட்டும்படியாக உள்ளது.
'நீலாவணன் நினைவுகள்" என்னும் நூலுக்கு காசி ஆனந்தன் எழுதியுள்ள விமர்சனத்திலே, சில பகுதிகளில் எனக்கு உடன் பாடில்லை. ஆனால், காசி ஆனந்தனுக்கு தன் கருத்துக்களைச் சொல்ல பூரண உரிமை இருக்கு என்பதை மதிக்கிறேன். எட்டு நூல்களைப் பற்றிய ஒரளவு விரிவான விமர்சனம் 'இலக்கு' இலக்கி யப் பரம்பலுக்குச் செய்யும் தொண்டு என விளங்கி மகிழ்கிறேன்.
முக்கியமான ஒரு விஷயத்தை இறுதியிலே குறிப்பிடலாம் என்றிருந்தேன். அதுதான் இன்னொரு பக்கம்" என்னும் சிறுகதை, அருமையான கதை. புலம்பெயர்ந்த தமிழர்களுடைய கதைகளைத் தொகுக்கும் பொழுது, தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களுடைய கதைகளும் சேர்க்கப்படுதல்வேண்டும் என்று இ.பா.வும் விரும்பினார். வேரும் வாழ்வும்" என்கிற இரண்டாவது தொகுதியில் தமிழ்நாடு என்கிற பகுதியும் இடம்பெறும். அதிலே "இன்னொரு பக்கம்" வளமூட்ட வல்லது.
எஸ். பொ. அவுஸ்திரேலியா
*قسمحسختے
64 I இலக்கு
 

விமர்சனத்துறை தமிழிலக்கிய உலகில் பின் தங்கியுள்ளதை ஒப்புக் கொண்டாலும், ஈழத்தில் பேராசிரியர் க. கணபதிப்பிவளை, கனகசெந்திநாதன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, சி. தில்லைநாதன் போன்றோரையும், தமிழகத்தில் கா. ந. சு. வெங்கட சாமிநாதன், A0At TTTAtS LLLLS STLS TTLTLAL LL TTS ATLLLLS AAALLL MTTS S TS S YSTT TLCLTTS நா. வானமாமலைபோன்றோரையும் தமிழிலக்கிய விமர்சன உலகம் தந்திருக்கிறது. இந்த முக்கியமான விமர்சகர்களுடன் தி.க.சி.க்கு ஒரு இடம் நிச்சயம்ாக உண்டு. எப்படி?
அவரது மூன்று நூல்களையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது, அவரின் எழுத்து மிகமிக ஆழமானதென்றோ, மிக்க விவரணங்கள் கொண்டதென்றோ சொல்ல முடியாது. ஆனாலும், இந்த எல்லா விமர்சனங்களினூடேயும் அடிநாதமாக ஓடுகிற ஒரு விசேஷ பண்பை என்னால் காணமுடிகிறது. விமர்சன மென்பதே காரசாரமானதாக, ஒன்றை மறுப்பதாகவோ கொள்வதாகவோ ஆன குறுங்குழுவாத வெளிப்பாடாக மாறியிருக்கிற இந்தவேளையில், சமூக நலத்தை மைய மாகக் கொண்ட இலக்கியத்தை இனங்காண முயன்றுகொண்டும் , அதைப்படைப்பு நிலைக்கு உயர்த்துகிற ஒரு முனைப்பும் தி க.சி. யிடத் தில் இருந்திருக்கிறது இந்தப் பண்புடன் கூடிய பல விமர்சனக் கட்டு ரைகளை, நூல் விமர்சனங்களை, நூல் மதிப்புரைகளை இந்த மூன்று நூல்களிலுமுள்ள 111 கட்டுரைகளிலும் (மூன்றாவது நூலின் மூன்றா வது பகுதி நீங்கலாக) பரக்கக் காணலாம்.
மூலத்தை வாசிக்கத் தூண்டும் அளவுக்கு அந்நூல் பற்றிய விமர் சனம் அமைய வேண்டுமென்பார் கா. ந.சு. இலக்கிய விமர்சனத்தின் ஒரு பண்பாக இதை மேலை நாடுகளிலும் கூறுவர். தி.க.சி. அதையும் செய்கிறார். அத்துடன் படைப்பு நிலைக்கும் தன் விமர்சனத்தை உயர்த்துகிறார். மூன்றாவது நூலில் புனலும் மணலும், மூலதனம் (நாவல்), மரக்குதிரை, நா.வா.வின் ஆராய்ச்சி (42ம் இதழ்), கரிப்பு மணிகள், தலைகீழ் விகிதங்கள் போன்றவற்றைச் சுட்டலாம். விமர் சனத் தமிழில் நாகம்மரஸ் , மண்ணில் தெரியுது வானம் போன்றவற் நையும், தி.க.சி.யின் திறனாய்வுகளில் அழியாச்சுடர், மாங்காய்த் தலை, மணிக்கூண்டு, சூரியகாந்தி, மனமயக்கம், வெள்ளிக்கிழமை போன்றவற்றையும் கூறலாம். படைப்பின் உன்னதம் பெறும் விமர் சனங்கள் இவை. இத எந்தளவுக்குச் சாத்தியமாகி / சாதனையாகி உள்ளது என்பது நெறியியற்பட்ட தனி ஆய்வுக்கு உரியது. ஆனால், தி.க சி.யின் விமர்சனத்து உன்னதம் இதுதான். - தேவகாந்தன்
தனிப் பெரும் தன்மைகளோடு தமிழ் நலமும் தமிழர் நலமும் காக்க போராடிய பெருஞ்சித்திரனார் அவர்களதும் தமிழ்நாடு தந்த பெருமகன் குன்றக்குடி அடிகளார் அவர்களதும் மறைவுக்கு இலக்கு அஞ்சலி செய்கிறது.
இலக்கு 65

Page 37
என் கதை தொடர்ச்சி.
*அந்தக்கதையில் சற்றேனும் பொய்க்கலப்பில்லை" என்று அவளுடன் நெருக்கமாகப் பழகிய பலர் கூறியபோது தான் பெரிதும் ஆச்சரியப் பட்டேன். உண்மைகளை உண்மையின்படி, ஒரு விபச்சாரியின் வாழ்க் கையை எழுதும்போது எப்படி எல்லாம் எழுதியிருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாததல்ல; ஆனால் இன்றுவரை அந்தக்கதையில் விரசம் இருந்தது என்று யாரும் குறிப்பிட்டுச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அந்த விபச்சாரியின் வாழ்க்கையில் எதைச்சொல்வது என்பதில் என்னை வழிநடத்தியது, "எதைச்சொல்வது" என்பதில் நான் வைத்துள்ள கொள்கையேயாகும்.
எனது சிருஷ்டிகளில் நான் பார்த்துப் பேசிப்பழகாத பாத்திரங் களை நான் உள்ளடக்குவதில்லை. எனது பாடப்புகளில் கற்பனைப் பாத்திரங்கள் இருப்பதே இல்லை. இதனால் பாத்திரப்படைப்புகளில் எனக்கு அதிகம் சிக்கலும் சிரமமும் ஏற்பட்டதில்லை.
எனது பஞ்சமரில் சின்னாச்சி என்ற ஒரு பாத்திரம் வருகிறது அந்தச் சின்னாச்சி எனது பிறந்த ஊரில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்தவள். பஞ்சமர் எழுதத் தொடங்கி அதுமுடிவுக்கு வந்த காலப்பகுதிக்குள் அந்தச் சின்லாச்சியை நான் பலவேறு சந்தர்ப்பங் களில் சந்தித்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன்.
பஞ்சமரில் ள்ந்த இடத்திலும் அந்தச் சின்னாச்சியின் தோற் றத்தை, நான் தனியாகச் சித்தரிக்கவில்லை. அவளின் வழமைய ல அன்றாட நிகழ்வுகளைப் பிசகின்றிச் சித்தரித்ததன்மூலம் அவ்ளின் தோற்றத்தை வாசகர்கள் மனதில் படியவைத்ததுடன், அவளின்மேல் ஆசிரியனாகிய எனது எந்தத்தலையீடும் செலுத்தாமல் பேசவைத்த தன் மூலமே அவளைப் பரிபூரணமான ஒரு கிராமத்துச் சின்னாச்சி யாக ஆக்கிவிட்டேன். 'என்னடா மோனை என்னை வைச்சுக்கதை ஒன்று எழுதியிருக்கிறியாம், அதில் என்ரை குறுநாட்டுச் சீலைக். கொய்யகத்தைக்கூட அச்சுப்பிசகாமல் எழுதியிருக்கிறாயெண்டு பொடியள் கதைக்கிறாங்கள்". இப்படி அந்தச் சின்னாச்சியே என்னி டம் வாய்விட்டுக் கேட்குமளவுக்கு அவளை நான் வென்று விட்டதில் எனக்குப் பரமதிருப்தி. ^
ஒரு நாவலில் காட்டப்படுவதான காலம், அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வுமுறை, பேச்சுமுறை, பழக்கவழக்கங் கள், நாவலின் காலநகர்ச்சியின் புலப்பாடுகள், இயல்பான நடை முறைகளோடு அந்த நாவலை நிலையியலிலிருந்து இயங்கியல் வர்ை இட்டுவருதல், அந்தக்கால நடைமுறைகளுக்கேற்ப உலக வியாபக மான பரிணாம வளர்ச்சிக்கு அதன் பாத்திரங்களின் வர்க்க குணாம்சங் களை வெளிக்கொண்டுவருதல் ஆகியவைகளில் நான் தவறியிருக்கி றேனா என்பதனை நாவல் அச்சுக்குப்போகுமுன் பலரிடம் அதைப் படிக்க கொடுத்து, படிப்பவர்களின் அபிப்பிராயங்களையும் உள் வாங்கிக்கொள்வதில் நான் தவறுவதில்லை. அச்சேறுவதற்கு முன்
66) இலக்கு
 

அவைகளைப் படிப்பதற்கு 75 வயதுக்கு மேற்பட்ட ஒருவர், ஒரு குடும்பப்பெண், ஒரு உயர்பள்ளிமாணவன், ஒகு உடல் உழைப்பாளி, வர்க்க சமூக அமைப்பினைத் தெளிவுறப் படித்த ஒருவர் உட்படக் குறைந்தது எட்டு பேர்கள் வரையிலாவது இருப்பர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்து மொத்தமாகச் சொன்னால் ஒவ்வொரு படைப்பிலும் டனியல் என்ற பெயர் ஒரு சம்பிரதாயத் திற்காகவே அன்றி வேறெதற்காக்வுமல்ல. உண்மையாகவே இவை களின் எஜமானர்கள் நான் மேலே குறிப்பிட்டவர்களேயாகும், "'
"எனது நாவலின் மாந்தர்களே அதற்கான மொழியையும், கரு ஆலகங்களையும், உடை நடை பாவனைகளையும் தருவதோடல்லா மல், தாங்களாகவே உருவத்தையும் அமைத்துக் கொள்கின்றனர். கடைசியில் குறிப்பிடப்பட்ட வாசகர்கவ சரிபிழைகளைப் பார்த்து குறிப்பிட்டுக் கொடுக்கின்றனர்!’ என்றுதான் கூறலாம்.
சரியான மூலிகைகளைச் சேகரித்துத்தர பல மூலிகை நிபுணர் களும், அவர்களால் தரப்பட்ட மூலிகைகளைச் சரியாகப் புடம்போட்டு எடுக்க நல்ல அனுபவஸ்தர்களும் கிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தி யனின் வேலை அதில் மிகச்சிறிய அளவுதான். வேண்டுமானால் இது எனது மாத்திரை' என்று அவன் சொல்லிக் கொள்ளலாம்.
நலிந்த மனிதர்களின் வாழ்க்கை, அந்தவாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் நடவடிக்கைகள், இடங்களுக்கும் காலத்திற்கும், சூழ்நிலைக் சோற்பவும் வெவ்வேறு வகைப்படினும் மொத்தத்தில் அவைகளைப் ‘போராட்டங்கள்" என்பதற்குள்ளேயே அடக்கவேண்டும். அந்தப் போராட்டங்கள் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டால் அது நிட்சய மாக வரலாறு ஆகப் பரிணாமம் பெறாமல் இருக்கவே முடியாது. பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்சகோணங்கள், தண்ணீர் ஆகிய இந்த நாவல்களைப் படிப்பவர்கள் இந்தப்பரினா மத்தைக் காண்பார்கள். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முழுமையான (சாதாரணமக்களின் போராட்டங்கள் உள்ளடங்கிய) வரலாற்றைக் காண விரும்புவர்களுக்கு இவை கைகொடுத்து உதவும் என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அதேபோல காலத்தால் அருகிப்போன சொற்றொடர்களையும் புதிது புதிதாக உண்டாக்கப் படும் பிரயோகங்களையும், ஆகவும் குறைந்தபட்சம் ஒருநூற்றாண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவும் uuair ul-di sa Gub,
தற்போது எனக்குவயது 58த் தாண்டிவிட்டது. மலைபோல 6 பிள்ளைகளையும், 4 பேரன் பேத்திகளையும் கண்டுவிட்டேன். அது மட்டுமல்ல, அன்றாடவாழ்கைக்காகப் போராடுபவர்களோடு சேர்ந்து நானும் எனது வாழ்க்கைக்காகப் போராடவும் வேண்டியிருக்கிறது.
எனது இத்தனை ஆண்டுகால இலக்கிய வாழ்க்கை அனுபவங்
களில் நான் பலதைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுள் எனது சின்ன
வயதில் நடந்த ஒரு நிகழ்வு இத்தனை வருடகால இலக்கிய அனு பவங்களுக்கு மேலான இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
இலக்கு 67

Page 38
எனக்கு அப்போது வயது சுமார் 15 வரையில் இருக்கும். ஏற் கெனவே நான் குறிப்பிட்டதைப் போன்று ஒரு நேரச்சோற்றுக்கே ஆலாய்ப்பறக்கும் வாழ்க்கை. காலை பழைய கஞ்சியுடனும், மதிய வேளை கிழங்கு வகைகளுடனும் வாழ்க்கை போக, சோறு என்ற ஒன்று இரவில்தான் கிடைக்கும். அதுவும் அர்த்த ஜாமவேளையில்தான் !
எனது அப்பன் ஒரு நிரந்தரக் குடிக்காரர். அவர் இரவுச் சோற்றுக் கான அரிசியை என் அம்மாளிடம் கொண்டு வந்து வீசிவிட்டு மண் திண்ணையில் புரண்டு விடுவார். அம்மா சோறு காச்சுவாள். குழந்தை களின் கொதிக்கும் வயிற்றுக்காகக் கஞ்சியை வடித்து முதலில் குடிக்க வைப்பாள். ஒருநாள் அளவுக்கு அதிகமாக சோறு அவிந்து குழைந்து விட்டது. அப்புவுக்கு அம்மா சோறு பரிமாறின போது சோறு குழைந் திருந்ததைக் கண்டு அவருக்கு கோபம் பிறந்து விட்டது. மது வெறி யில் அவர் ஒரு கவிதையே பாடி விட்டார்.
அம்மாவுக்குப் பெயர் மரியாள். அப்பருக்கோ கையெழுத்துப் போடவே தெரியாது. ஆனாலும் அவர் ஒரு கவிதை பாடினார். அர்த்த ஜாமத்தில் பாடினார்.
"சுந்தர மரியான் செய்த
சூதை நான் அறியேனோ கஞ்சிக்காக வல்லவோ சோற்றைக் குழையவிட்டாள்" என் அம்மாவாகிய மரியாள் செய்த செயலை எவ்வளவு அற்புத மாக, ஆனா அறியாத அப்புவால் பாட முடிந்திருக்கிறது.
"அனுபவத்திலிருந்து பிறப்பதுதான் உயிர் உள்ள இலக்கியமாக p.' OCO
டானியல் மறைவின் பின் வி. ரி. இளங்கோவன் நவ. 86இல் வெளியிட்ட "என் கதை'யிலிருத்து தொகுக்கப்
பெற்றது. - ஆ~ர்.)
ஒளி an II. Ofges 65
வைரம் சுடர்விடும் சாமத்தில் சிறு பொட்டாய் பாலக்கரையில் இருள் வானில் வைக்கப்பட்டிருக்கும் ! அகல் ஒளி கைப்பிடியுடன் கூடிய மணிப்புனல் கண்ட அவ்விளக்கை, இளமானாய் எடுத்துக் கொண்டு மகிழ்வுடன் தொடர்வேன் நடப்பேன் . ஆர்வம் கொதித்தவர் ர் கேணிவக் நெஞ்சில் என தேவைகசூ
அதிகமான ஒளி !-
கல்வி அதிகரிப்பது போல, அவ்வெளிச்சம் என் பின்னால் அகலம் புனைந்து வந்து, மனிதக் குரல்கள்.
68/ இலக்கு
 

லகீடு
யாதும் ஊரே!
மலர் - 4
யாவரும் கேளிர்
கடந்த முன்று இதழ்களும் போலவே இவ்விதழும் மலராக வெளிவர முடிந்ததில் பெருமை
யடைய நிறைய இருக்கிறது தான்.
படைப்புகள் நிறைய வரு
கின்றன. தேர்வு செய்து வெளி யிடும் நிலை. அதனால் தவறுகிற படைப்புகள் குறைந்தவை என்று அர்த்த மாகாது. இந்த இதழில் பிரசுர மாகவில்லை என்றே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்விதழ் விஷயங்கள் குறித்த உதவிக்கு நண்பர் வே.மு.
பொதிய வெற்பனுக்கு ‘இலக்கு"
நன்றி கூறுகிறது. இதழில் வெளியாகியுள்ள ஓவியம் கோவிந்தன் நாவலிருந்து எடுக்கப் பட்டது. கார்க்கி
நூலகத்தார்க்கு நன்றி. ஒவியர் இளவேனிலுக்கும் தான்.
தரம்
அடுத்த இதழ் இலக்கு ஆண்டு மலராக வெளி வரும். அதற் கான முயற்சிகள் ஏற்கனவே
ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இகஸ்டில் கண்டிப்பாக எதிர் பார்க்கலாம். "இலக்கு'வுக்கு ஆதரவு தேவை. சந்தாதாரர் ஆகுங்கள். நண்பர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள். ஏனெனில், "இலக்கு ஒரு நிறு வனத்தின் இதழல்ல, தனி
மனிதனின் இலக்கிய இயக்கம்.
%ே அஆாந்அஞ்ட
விலை ரூபா : 1.00

Page 39
FOr Priwitte Circulation
EURKU (Ouarte
as LGYD GOLRAL"LLITH கரிசல் மண் கி. ராஜநாராயணன் தீப்பெட்டி தொழில்
தெருவுக்கு ஒரு கவிஞன் அல்லது காதலன் கதை சொல்லி அல்லது போஸ்ட் மார்டனிஸ்ட்
மாதங்தோறும் எங்களூர் வெட்டுக் குத்து எட்டு காலச் செய்தியாய் இடம் பெறும் தினசரிகளில்
தவறாமல்
smissimum sammen
W = apprir i'r i
 

பாஷங்கர்
விதை
கல்யாணம்
காதுகுத்தல் பூப்புனித நீராட்டு விழா கிருகப்பிரவேசம் அமரரானரென்று
எப்போதாவது வீடுதேடி வந்து விழுகிற தபால்களுக்குள் ஒரு முகத்துள் பல முகங்கள் உள்ளுடாய் கிளைத்திருக்கும்
அதிலொன்றாய் அவள் முகமும் வந்து போகும்
TIL AT ÅR TIL ', h II, Rí i g=t[i][0], [l.ie I, I'll Dill
SS