கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கு 1996.12

Page 1
压的 GD6)ījuģi
உள்ளே.
ஞானி சி.சிவசேகரம்
நா. சுப்பிரமணியன் கோ, கேசவன் தி.சு. நடராசன்
mmmmmmmmmmm
 

***、*毽
மார்கழி '96
லாநிதி நினைவு மலர்-1
क।

Page 2
STD SD PCO FAX XEROX LAMINATION
D)' TSP 8z, ) 1424 KS) ER
Services
Available
for
hours
ARABI TELE-COMS
48, Anna Main Road, MG R Nagar, Chennai 600 078
 

இலக்கு கா, லா, ண், டி. த. ழ் (தனிச் சுற்றுக்கானது)
ஆசிரியர் தேவகாந்தன்
ELAKKU 6, Dr. Radhakrishnan Nagar, Choolaimedu, Chennai - 600 094.
யாதும் ஊரே !
எண்ணத்தை
எழுதுகிறேன்
இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்தில் ஒரு சகாப்தமாகவே விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள். அன்னாரின் பதினைந்தாவது மறைவு தினத்தை நினைவு மலர் வெளியிட்டுப் போற்றுவதில் இலக்கு காலாண்டிதழ் பெருமிதம் கொள்கிறது.
தழிழிலக்கிய உலகு இன்று பல்வேறு குழுநிலைகளில் முடங்கி, கூtணம் அடைந்து கொண்டிருக்கிறது. எந்த மொழியிலும் விமர்சனம் / இலக்கியப் போக்குகள் என்பன எப்போதும் குழுநிலை சார்ந்தே வளர்ச்சி கண்டுவந்துள்ளன. எனினும், இது தொடர்ந்து நீட்டித்துக் கொண்டே போவது, வளர்ச்சி நிலையைக் குறிப்பதாகாது. ஆரோக்கியமான ஓர் உள்ளுறவு நிலவாதது கவலைக்குரிய விஷயமும் கூட,
இது குறித்து, கடந்த சில ஆண்டுகளாகவே கோவையிலிருந்து ஒரு
யாவரும் Gaesar
விலை ரூபா : 7-00
குரல் கவனம் தட்டிக் கொண்டிருக்கிறது. 'நாம் பேதங்களை மறந்து கொள்கை ரீதியாகப் பேசி தீர்வு காணவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்" என்று. விரித்த கரங்களோடு வரும் இக்குரலை, பாரளாவிய ஒரு ஐயம், சோசலிச இலக்கிய அரசியல் போக்குகள் குறித்து ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில், நாம் தேவை கருதியேனும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம். 'பெண்ணியம். தலி
த்தியம், சூழலியம் முதலியவற்றை உள்வாங்கிக்கொண்டு ஆழ்ந்த புரிதலோடு படைப்பும் விமர்சனமும்
முன்னெடுக்கப்படவேண்டும்' என்கிறார் இக்குரலுக்குச் சொந்தக்காரரான ஞானி.
படைப்பு விமர்சனம் தழுவிய தமிழின் தேக்கநிலைகளின் 6) LO E உடைப்பாக, ஞானியின் இக்குரலை இனங்காண்பதில் தவறில்லை எனவே தெரிகிறது. இதுபற்றியெல்லாம் நீங்களும் எழுதவேண்டும்.
bn ld நிறையவே யோசிக்கவேண்டியதிருக்கிறது.
///%7Zمجھے پڑھے - .

Page 3
"அடியும் (Uplą. سم
- ஓர் ஆய்வு
ஞானி
தமிழ் இலக்கிய ஆய்வில் ஜீவா, ரகுநாதன் ஆகியவர்கள் மூலம் மார்க்சீய அணுகுமுறை இடம்பெற்றது. கலாநிதி கைலாசபதி அவர்களின் வருகையின் மூலம் தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சீய நெறி உறுதிப்பட்டது. தொடக்கத்தில் தமிழாய்வுத் துறையில் மார்க்சீயம் மரியாதை பெறவில்லை. கைலாசபதி அவர்கள் இந்த மரியாதையை மார்க்சீயத்துக்கு ஏற்படுத்தினார். பேராசிரியர் சிவத்தம்பி, நா. வானமாமலை ஆகியவர்கள் மார்க்சீய நெறியை மேலும் வளப்படுத்தினர். இன்று தமிழாய்வுத் துறையில் மார்க்சீயமும் ஒரு ஆய்வு நெறி என்ற முறையில் கேள்விக்கு இடமற்றதாகத் திகழ்கிறது. தொடக்கத்தில் தமிழ் நெறிக்கும், மார்க்சீய நெறிக்கும் இருப்பதாக கருதப்பட்ட முரண்நிலை இன்று இல்லை.
1972-ல் வெளிவந்த கைலாசபதி அவர்களின் "அடியும் முடியும்" என்ற தமிழிலக்கிய ஆய்வு நூல் கைலாசபதி அவர்களின் ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது. சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிச்சென்ற திருமாலும், பிரம்மனும் இறுதியில் தோற்று களைத்துப் போயினர் என்பது புராணக்கதை. தமிழின் மேன்மைபற்றிப் பேசிய தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை (Myth) அளந்தறிய முடியாதென்று பெருமிதம் கொண்டனர். "கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து வாளொடு முன்தோன்றி மூத்த குடி" என்று கவிதை செப்பினர். கைலாசபதி இந்தக் கூற்றை ஆய்வு செய்து "அடியும் முடியும்" என்ற தொகுப்பிலுள்ள கட்டுரையில் மறுக்கிறார்.
உயிர்களின் பரிணாம வளர்ச்சிபற்றிய அறிவியல் ஆய்வுகள் மனிதனின் தோற்றக் காலத்தை திட்பமாக வரையறை செய்துள்ளன. புவியியல் ஆய்வுகள் கதிரவனில் இருந்து பிரிந்து உலகம் உருவான காலத்தையும் கணிக்கின்றன. இம்முறையில் தமிழின் தொன்மையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதுதான் என்கிறார் கைலாசபதி,
"அடியும் முடியும்" என்ற கட்டுரைத் தொகுப்பில் இரண்டாவது கட்டுரை தமிழ் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரை. தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து இடம்பெறவில்லை. சங்க இலக்கியத் தொகுப்பில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றது. அதன் பின்னர் காலந்தோறும் புதிய கடவுள்கள்
2 O இலக்கு

தோன்றினர். சில கடவுள்கள் மறைந்தனர். இத்தகைய இந்தக் கடவுளர்கள் நூல் முகப்பில் வாழ்த்தாக இடம்பெற்றனர். விரிவான முறையில் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றதை கைலாசபதி அவர்கள் ஆய்வு செய்கிறார். 20-ம் நூற்றாண்டை நெருங்கும்பொழுது தமிழ் மொழி கடவுளாக மதிக்கப்பட்டு வாழ்த்துச் செய்யுளாக இடம்பெற்றது. தமிழின்மீது பக்தியுணர்வு பரவியது. இடைக்காலத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களில் தெய்வம்பற்றிய ஐயம் இடம்பெற்றதையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.
வடமொழிக்கும், தென்மொழிக்கும் வரலாற்றுக் காலம் முழுவதும் இருந்து வரும் பகைமையை விரிவாக எடுத்துக்காட்டுகிறார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ் வாழ்த்து பாடலில் ஆரியத்துக்கு கடுமையான எதிர்ப்பு இடம்பெற்றதை குறிப்பிடுகிறார். இந்தப்போக்கிற்கு மூலகாரணமாக டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வை குறிப்பிடுவதோடு அவர் நிற்கவில்லை. இதன் வரலாற்றை முற்காலத்திற்கும் கொண்டு செல்கிறார். பிரித்தானிய அரசின் இனக்கொள்கையைக் குறிப்பிடுகிறார். இந்தியர்களைப் பிளவுபடுத்தி தம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் இனக்கொள்கையைப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறார்.
அடியும் முடியும் என்ற இந்தத் தொகுப்பு நூலில் கடவுள் ஆயினும் சரி, வேறு எத்தகைய மொழி அல்லது இலக்கியப் போக்காயினும் சரி - எல்லாமே வரலாற்றில் குறிப்பிட்ட சூழலில் தோன்றுகின்றன என்ற மார்க்சீயக் கருத்தை ஆய்வு நெறியாக முன்வைக்கிறார். அடியையும் முடியையும் வரலாற்றில்தான் தேடிக் கண்டறிய முடியும். வரலாற்றுக்கு வெளியில் வைத்து இலக்கியம் முதலிய ஆய்வைச் செய்யமுடியாது. கடவுளும், கடவுட் கருத்தும் வரலாற்றுக்குக் கட்டுப்பட்டதுதான் என்ற முறையில் இவரது ஆய்வு தொடர்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வில் வரலாற்றியல் நெறியை இம்முறையில் அழுத்தமாக இந்த நூல் மூலம் கைலாசபதி அவர்கள் பதிக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
இன்று இந்த நெறி இயல்பானதென்று தோன்றினாலும் 60-களின் இறுதியில் அல்லது 70-களின் தொடக்கத்தில் இந்த ஆய்வு நெறியின் புதுமையை அன்றிருந்தவர்கள் நன்றாக உணர்ந்திருக்க முடியும்.
"அகலிகை" கதையின் அடிமுடி ஆய்வு அடுத்த கட்டுரையில் தொடர்கிறது. வேதங்களிலேயே அகலிகை பற்றிய குறிப்பு இடம்பெற்றாலும், அகலிகை கதைக்கு ஒரு முழு வடிவம் தந்தவர் வால்மீகி தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை அகலி கை கதையை கம்பர் புதுமைப்படுத்தினார். நம் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், புதுமைப்பித்தன் முதலியவர்களும் அகலிகை கதைக்கு புதுப்பொருள் வழங்கினர். கடைசியாக முருகையன் கதையையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.
கம்பர் முதலியவர்கள் அகலிகையின் உளவியலுக்கு அழுத்தந் தந்தனர் என்பதற்கு அழுத்தம் தருகிறார் கைலாசபதி, சமூகச் சூழலை கவனத்திற் கொள்ளாமல் உளவியல் போக்குக்கு அழுத்தம் தருவதிலுள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறார். இதன் காரணமாக பெண்ணின் கற்பு என்பதே படைப்பாளிகளின்
3 0 இலக்கு

Page 4
பார்வையில் முதன்மை பெறுகிறது. வரலாற்றில் பெண் எவ்வாறு தன் தலைமை நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டாள் என்பதை எங்கெல்ஸின் மேற்கோள்கள் மூலம் எடுத்துரைக்கிறார் கைலாசபதி,
இதன்மூலம் தனியுடைமை, அரசு ஆகியவற்றின் இயக்கத்திற்கும் இதன் மூலம் ஆணாதிக்கம் முன்னுக்கு வந்ததையும் இத்தகையதொரு சூழலில்தான் பெண் அவளது கற்பு நெறிக்காக I கற்புநெறி தவறியவள் என்ற முறையில் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறாள். விந்தனின் 'பாலும் பாவையும் என்ற நாவலை இங்கு சிறப்பாக மேற்கோள் காட்டுகிறார் கைலாசபதி, கதைத் தலைவி கன்னிப் பருவத்தில் கற்பை இழந்தவள் என்பதற்காக அவளை காதலன் புறக்கணிக்கிறான். அகலிகை புராணக் கதையில் வருவதைப் போல இந்த நாவலிலும் ஒரு தசரத குமாரன் வருகிறான். புராணக் கதையில் அகலிகையின் சாபம் நீக்கியவன், இன்று யதார்த்த வாழ்வில் காதலனால் கைவிடப்பட்ட அகலிகையை மணந்து கொள்வானா, சாபம் நீக்கிய ராமனும் சரி, இன்றைய தசரத குமார்னும் சரி அகலிகையை மணந்து கொள்ளமாட்டான் என்று யதார்த்தக் கதை தருகிறார் விந்தன். புராணக் கதையை இவரும் புரட்டிப் போடுகிறார். முன்னைய படைப்பாளிகள் போல அகலிகை கதையை விந்தன் கையாளவில்லை. விந்தனின் படைப்பில் ஒரு புதிய கோணம் வெளிப்படுகிறது. விந்தனின் கதைத்தலைவி இறுதியில் சாவைத்தான் எதிர்கொள்கிறாள் என்றாலும் சமூகத்தின் முன்னிலையில் ஒரு அறைகூவல் போல அவள் தோற்றம் தருகிறாள். கட்டுரையை முடிக்கும்பொழுது நாம் வியப்பு அடையும் முறையில் ந. சி. கந்தையாபிள்ளையை மேற்கோள் காட்டுகிறார். பெண் போராடித்தான் சமூகத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற முறையில் கந்தையாபிள்ளை எழுதியிருக்கிறார்.
சிலப்பதிகாரம்பற்றி ஆய்வது அடுத்த கட்டுரை. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் கதை பெரும்பகுதி கற்பனைக்கதை. தமிழகத்தில் திராவிட இயக்கத்தவர் கொண்டாடியது போல சிலம்பு வரலாற்று நிகழ்ச்சி இல்லை. நற்றிணையில் கூறப்படும் திருமாவுண்ணி, புறநானூற்றில் பேகன் மனைவி ஆகியவர்களோடு சிலம்பின் கண்ணகி கதையை பொருத்தமாகவே தொடர்புபடுத்துகிறார். வரலாற்றுச் சூழலில் மக்களின் உணர்வு அழுத்தங்களோடு வளர்ந்த கதை சிலம்பின் கதை. சேரன் செங்குட்டுவன் வரலாற்றுப் பாத்திரமல்ல.
சிலம்பின் அடியையும், முடியையும் இவ்வாறு பழங்காலச் சூழலுக்கும், நம் காலத்திற்கும் நகர்த்துகிறார் கைலாசபதி, நிகழ்காலத்தின் தேவைகள் முற்காலத்து வரலாற்றைக் கட்டமைக்கிறது என்ற உண்மையை கைலாசபதி மறுக்கவில்லை. எனினும் நம் காலத்திற்குத் தேவையான பொருளை சிலம்பிலிருந்து கண்டெடுப்பதை கைலாசபதி ஒப்புக்கொள்ளவில்லை. கண்ணகி செய்த புரட்சி, மக்காளாட்சிக் காலத்தில் மட்டுமே கருத்தியல் வடிவம் கொள்ளத்தக்க புரட்சி. பழங்கால நிலைமையில் இத்தகைய புரட்சி சாத்தியமில்லை. டாக்டர் மு.வ. முதலி யவர்கள் இளங்கோவின் ஊழ் நம்பிக்கையை ஒதுக்கி வைத்து சிலம்பை ஆராய்கின்றனர். இளங்கோவின் படைப்பில் இன்றியமையாத அங்கம் அவரது ஊழ்கோட்பாடு. இளங்கோவிலிருந்து அவரது முக்கியக் கோட்பாடு ஒன்றைப் தொடர்ச்சி பக்கம் 33
4 0 இலக்கு

தேசிய இலக்கியமும் 0 முற்போக்குச் சிந்தனையும் 0 கைலாசபதியின் பங்களிப்பு 0
öF. afaa 63F de g fin
தேசியம் எனப்படும் அரசியற்கோட்பாடு பற்றிப் பல தெளிவீனங் கள் உள்ளன, தேசியம் பல தளங்களில் இயங்குகிறது. அதற்கு வரை விலக்கணங்களால் இறுக்கமாகக் கட்டுப்படத்தக்க ஒரு நிரந்தர அடை யாளம் இல்லை. அது எங்கும் வரலாற்றுச் சூழல்களின் குழந்தையா கவே உள்ளது. தேச அரசு என்ற கோட்பாடு முதலாளித்துவத்தின் வருகையையொட்டி உருவானது. இதன் பின்னர் தேசியம் ஒரு முக் கியமான வரலாற்றுச் சக்தியாகவே இருந்து வந்துள்ளது. முதலாளித் துவ நலன்கள் தேசிய வாதத்தின் மூலம் பேணப்பட்டன. பிற தேசங் கள் மீதான ஆக்கிரமிப்பு அதன் பேரால் நியாயப்படுத்தப் பட்டது. உழைக்கும் மக்களைப் பிளவு படுத்துவதில் தேசிய வாதம் ஒரு வலிய கருவியாகவே செயற்பட்டுள்ளது. சாதி, மதம், நிறம், பிரதேசம் போன்ற பலவும் இவ்வாறு பயன்படுவதை நாம் அறிவோம். எனவே இவ்வாறான சுய அடையாளங்களை எல்லாமே பிற்போக்கானவை என நாம் நிராகரிக்கலாமா? மார்க்ஸிய-லெனினிசம் அவ்வாறு கருத வில்லை. இதனாலேயேதான் அது ஒடுக்குகிற தேசியத்தைப் பிற் போக்கானதாயும், ஒடுக்கலுக்கு எதிராக கிளர்ந்தெழுகிற தேசியத்தை முற்போக்கானதாயும் கொள்கிறது. ஒடுக்குதலை முறியடித்தபின், ஒடுக்கப்பட்ட தேசியம் எத்தகைய பார்வையைக் கொள்கிறது என்பது அதன் வரலாற்றுப் பங்கை நிர்ணயிக்கும். பிரித்தானிய ஏகாதிபத்தி யத்துக்கும் அதன் கொலனி ஆட்சி முறைக்கும் எதிராகக் கிளர்ந்த இந்திய மண்ணில் ஒரு வகையான இந்தியத் தேசியம் இருந்தது. அது போலவே, ஒரு இலங்கைத் தேசியமும் இருந்தது. ஆயினும் இவற் றுக்குள்ளேயே பிற்கால இந்து - இந்தி - உயர்சாதி ஆதிக்கத்தின் தேசிய வாதமும், சிங்கள. பெளத்த தேசிய வாதமும் தமது விதை களைக் கொண்டிருந்தன. இதன் விளைவாக இந்தியாவினதும் இலங்கையினதும் சிறுபான்மைத் தேசிய னங்கள் தமது தேசியத்தை வலியுறுத்த நேர்ந்தது. தேசிய இன ஒடுக்கல், தேசிய விடுதலைக்கான போராட்டத்துக்கு வழிகோலியது. இத்தகைய நெருக்கமான நிலைமைகளில் மார்க்ஸியவாதிகளிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட இடமுண்டு. தேசியவாதம், தேச விடுதலை
இலக்கு O 5

Page 5
என்ற கோட்பாடுகளைப் பற்றிய மூர்க்கத்தனமான நிலைப்பாடு களைக் கொண்டிருப்போர், யதார்த்தமான நிலைமைகளைப் புறக் கணிக்க நேரும். மறுபுறம் தேசங்களிடையிலான முரண்பாட்டின் பகைமையான கூறு எது, சினேகமான கூறு எது என்ற தெளிவுடன் இருப்போருக்குக் குறுகிய தேசியவாதத்துக்கும் பலியாகாம்ற் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கவும், தேசிய இனங்களின் ஐக்கியமென்ற பேரில் நியாயமான பே ராட்டங்களை மறுக்கா மற் செயற்படவும் இயலும். இன்று இத்தகைய தெளிவுக்கான தேவை மிகவும் உள்ளது. இவ்வகையில், தேசிய இலக்கியம் தொடர்பாகவும் முற்போக்கு இலக்கியம் தொடர்பாகவும் கைலாசபதி ஆற்றிய பங்கை நினைவுகூர்வது பயனுள்ளது.
கைலாசபதி இலங்கையின் மார்க்ஸிய-லெனினிஸக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக நின்ற ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். அவரது இலக்கியக் கொள்கை அந்த இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலை ஆதாரமாகக் கொண்டது. நடைமுறையில் அவர் தவறுகள் சில செய்துள்ளார். எந்த இயக்கமாயினும் தனிமனித ராயினும் தவறுகட்கு அப்பாற்பட்டோர் அல்ல. எனவே குறிப்பான தவறுகள் ஏற்பட்ட சூழ்நிலைகளை அறியும்போது அவை அடிப்படை யான சிந்தனையின் விளைவானவையா, சூழலின் விளைவான பிறழ்வுகளா என விளங்கிக்கொள்ளலாம். கைலாசபதி என்றுமே குறுகிய தேசியவாதியல்ல. இலங்கையின் ஐக்கியத்தை அவர் \ விரும்பின்ார். அதே வேளை, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதில் அவருக்குத் தடுமாற்றம் இருக்கவில்லை. தேசிய இன ஒடுக்கலுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராக அவர் குரல்கொடுத் தார். அவரது அரசியல் பாட்டாளிவர்க்கத்தின் சர்வதேசிய அரசியல். ஆயினும் அவரfல் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்த முடிந்தது. மலையகத் தமிழரதும் முஸ்லிம்களதும் இலக்கியத்தின் தனித்துவமும் முக்கியத்துவமும் அவருக்குத் தெளி வாகவே தெரிந்தன. ஒரு நல்ல மார்க்ஸியவாதி ஒரு தேசபக்தராக வும்,சர்வ தேசியவாதியாகவும் இருக்கவேண்டும் என்பது, மா ஸேதுங் கூறிவந்த ஒரு கருத்து. கைலாசபதியின் தேசிய இலக்கியக் கொள்கை அதற்கு ஒரு நல்ல ஆதாரம்,
1950களில் இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் இலக்கியக் கொள்கை பற்றிய தத்துவார்த்த மோதல் மரபுவாதிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒருபுறத்திலும், முற்போக்குச் சிந்தனையாளர் களை மறுபுறத்திலுங் கொண்டதாக இருந்தது. இம்முனைப்பு 60களுடுந் தொடர்ந்தது. தமிழ்த் தேசியவாதத்தை வலியுறுத்திய தமிழரசுக் கட்சி (த.வி. கூட்டணியின் முன்னோடி) ஓரளவுக்குத் திராவிடர் இயக்கத்தின் ‘தமிழ்த் தூய்மைக் கோட்பாட்டாலும். அற்ப அளவுக்கு பகுத்தறிவு வாதத்தாலும் பாதிக்கப்பட்டது. மொழியை முதன்மைப்படுத்தித் தமிழைக் "காப்பாற்றுவதைத் தனது இலட்சிய மாகக் காட்டிய அளவில் (தனித்தமிழ் வாதத்தின் மூலமும் வேறு வகைகளிலும்) ஒரு மரபுவாத மொழிக் கொள்கையை ஏற்கும் நிலைக்கு அதன் இலக்கியவாதிகள் தள்ளப்பட்டனர் எனலாம்.
6 O இலக்கு
 

இதனையொட்டி, பேச்சுத் தமிழை இழிசனர் வழக்கு’ எனக் கருதிய மரபுவாதிகளுடன் அவர்கட்கு நெருக்கம் ஏற்பட்டது. வட்டார வழக்கை ஒதுக்கிச் செந்தமிழ்’ என்று அவர்கள் கருதிய ஒரு மொழியை இலக்கிய மொழியாகக் கொள்ளும் போக்கை அவர்களது ஏடுகள் வெளிப்படுத்தின. முற்போக்கு இயக்கத்தையோ இடதுசாரிச் சிந்தனைகளையே ஏற்காத சில சிந்தனையாளர்களும் இவர்களிட மிருந்து இவ் விஷயத்தில் வேறுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தககது.
கொள்கையளவிற் சாதிகள் இல்லை என்ற கருத்தை இவர்கள் வெளிப்படுத்தினாலும், நடைமுறையில் சாதியத்துக்கு எதிராகப் போரிடும் தைரியம் இவர்கட்கு இல்லாததோடு, உயர் சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முறையிலேயே இவர்களது அரசியற் தலைமைப்பீடம் அமைக்கப்பட்டிருந்தது. மலையக மக்களையே r முஸ்லிம்களையோ அணைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் தமிழ்த் தேசியவாதத் தலைமைக்கு இருந்ததில்லை. இவ்வகையில், திரட் விடர் இயக்கம் இவர்களைவிட்ச் சற்று முற்போக்கானது எனவே கூற வேண்டும். Հ.
மேற்கூறிய சூழல்களில், தமிழ் தேசியவாதத்தால், ஈழத் தமிழ்த்
தேசிய இலக்கியத்தைப் பற்றிய ஒரு ஆக்கபூர்வமான பார்வையை விருத்திசெய்ய இயலவில்லை. மறுபுறம், முற்போக்கு இலக்கியவாதி களால் பிற தேசிய இனங்களுடன் பகைமையின்றி. தமிழே உய்ர் வான மொழி என்ற வீறாப்பிற்கு அவசியமின்றி, தமிழ் பேசும் மக்கள் குழுக்களது தனித்துவத்துக்குப் பங்கமின்றிச் சமகால மொழியினதும் வாழ்க்கைச் சூழலினதும் அடிப்படையில், ஒரு தேசிய இலக்கியக் கோட்பாட்டை விருத்தி செய்ய முடிந்தது. இலங்கையிலே பாரதியை கொண்டாடுவதில், தமிழ்த் தேசியவாதிகளைவிட இடதுசாரிகள் முன்னணியில் நின்றனர் என்றுதான் கூறவேண்டும். 60களில் பாரதியை ‘கஞ்சாக் கவிஞன்’ என்று தமிழரசுத் தந்தை எனக் கூறப் படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் இழித் துரைத்ததாக அவரை இடதுசாரிகள் கண்டித்ததும் எனக்கு நின்ை வில் உள்ளது. மொழியையே முதன்மைப்படுத்திய தமிழர்சுக் கட்சி யின் அரசியலின் விளைவாக, ஆண்ட பரம்பரைக் கவிராயர்கள் உணர்ச்சி பொங்க எழுதித் தள்ளினர். தமிழரசுக் கட்சியின் தமிழ் இனவாதம் சிங்களப் பேரினவாத அரசியலால் மேலும் வலிமை பெற்றது. அதன் பாதிப்பு 1950கட்குப் பிற்பட்ட ஈழத்து எழுத்தில் இருந்தது உண்மை. அரசியலில் அதன் ஆதிக்கத்தின் விளைவாக இடதுசாரிகள் ‘தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டு பாரம் ஞமன்ற அரசியலில் ஓரங்கட்டப்பட்டதும் உண்மை. ஆயினும் ஈழத்துத் தமிழ்த் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டுக்கு ஆதாரமாக நின்ற வர்கள் இடதுசாரிகளே என்பதில் ஐயத்துக்கிடமில்லை. இதில் கைலாசபதியின்பங்கை ந. இரவீந்திரன்1, இளங்கீரன்2 போன்றோர் தெளிவாகக் கூறியுள்ளனர். பத்திரிகைத் துறையூடு தேசிய இல்க்கி யத்தின் வளர்ச்சிக்குக் கைலாசபதி ஆற்றிய பங்கு பற்றித் தில்லை நாதன் 3 விளக்கியுள்ளார். சுருக்கமாக இவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

Page 6
1. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவமான ஒரு கூறாகவும் அதேவேளை இலங்கையின் தேசியத் தன்மையைக் கொண்ட தன்மையால் இலங்கையின் தேசிய இலக்கி யத்தின் ஒரு பகுதியாகவும் அடைய வளம் காட்டினார். இன்று ஈழத் தமிழர் தம்மை ஒரு தேசிய சிறுபான்மையாக அல்லாது ஒரு தேச மாகவே அடையாளங் காணும் நிலையில் கூட கைலா சபதி எடுத்துக் காட்டிய தனித்துவத்தின் கூறுகள் தம் முக்கியத்துவத்தை இழக்க வில்லை. இத் தனித்துவத்தின் வரலாற்றுப் பாங்கான தன்மையும் கைலாசபதியாற் தெளிவாகவே அடையாளங் காட்டப்பட்டது.
2. பல்வேறு எழுத்தாளர்களையும் ஊக்குவித்த அளவில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. தமிழகத்து வியாபார இலக்கியத்தினால் மூழ்கடிக்கப்பட்ட ஈழத்து ஜலக்கியச் சூழலில் ஈழத்து எழுத்தாளர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் முறையில் அவரது செயல்கள் அமைந்தன. தினகரன் பத்திரிகை ஆசிரியராக அவர் பணியாற்றிய குறுகிய காலத்தை இன்றும் மிகவும் பெருமை யுடன் பல ஈழத்து எழுத்தாளர்களும் நினைவுகூர்வார்கள்.
3. ஈழத்து வாசகர்களிடையே, தமிழகத்து அங்கீகாரத்து இலக்கியத்தினதும் திராவிடர் இயக்கத்து அடுக்குமொழி இலக்கியத் தினதும் மயக்கங்களை மீறி, ஈழத்துப் படைப்புகளை விருப்புடன் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் முறையில் அவர்களை எட்டும் விதமான பத்திரிகையாகத் தினகரனை அவர் மாற்றியமைத்தார்.
மேற்கூறிய எவையுமே தமிழகத்துடன் பகைமையான முனைப் புடையனவாக அமையவில்லை. ஈழத்து எழுத்தை அதன் தரத்தின் அடிப்படையிலும் ஈழத்துத் தமிழையும் அதன் கிளைகளையும் தமிழ் நாட்டுத் தமிழுடனும் அதன் கிளைகளுடனும் சமமானவை என்ற அடிப்படையிலுங் கருத வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு பற்றித் தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த முற்போக்குச் சிந்தனை யாளர்களிடையே அதிகம் கருத்து LfDin" QJi_u (i" (5 இருக்கவில்லை. கைலாசபதி மட்டுமின்றி பிறமுற்போக்கு எழுத்தாளர்களும் தமிழகத் தின் தரமான, முக்போக்கான எழுத்தாளர்களுடன் மிகவும் நல்ல உறவு கொண்டு இருந்தனர்.
கொள்கையளவில் தேசியவாதத்தின் முற்போக்கான பண்பு களுடன் தேசிய இலக்கியத்தை உறவுபடுத்தி அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பாரதியும் தாகூரும் பற்றிய அவரது நூலும்4 ஆறுமுக நாவலர்பற்றிய ஆய்வும் 5 குறிப்பிட வேண்டியன. ஒரு மார்க்ஸியவாதி தேசிய உணர்வை அனுதாபத்துடன் அணுக முடியும், அணுகவும் வேண்டும். அதே வேளை, தேசிய உணர்வு மேலாதிக்க உணர்வாகும் போது அதைக் கண்டிக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும். தேசியம் என்பது ஒரு சுய அடையாளம் என்ற அளவில் மதிக்கப்படும் போது அங்கு தேசங்கள், தேசிய இனங்கள் என்பன சமமானவை யாகவே கொள்ளப்படுகின்றன. மனித சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சிந்தனைக்கு இது கடினமானதல்ல. எனவேதான் சாதியத்துக்கு எதிரான எழுச்சியை மும்முரமாக ஆதரித்த கைலாசபதியால், மலையக, முஸ்லிம் தமிழ் எழுத்துக்களது தனித்துவத்தையும்
8 O இலக்கு
 

அங்கீகரித்து, ஈழத்தமிழின் சுய அடையாளத்தையும் வலியுறுத்த முடிநதது.
மாறாக, அன்றைய ஈழத்தமிழ்த் தேசியவாதிகளால் மலையகத் தின் எழுத்தின் மீதோ ஈழத்து முஸ்லிம்களது இலக்கியங்கள் பற்றியோ அக்கறை காட்ட முடியவில்லை. வடக்குக் கிழக்கின் தமிழர் மத்தியிற்கூட மண் வாசனையுடன் கூடிய எழுத்து அவர்களிட மிருந்து எழவில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் உருவாக்கிய ஒரு இலக்கியச் சூழலின் பின்னணியிலேயே, அரசியல்ரீதியாக அவர்களிட மிருந்து வேறுபட்டவர்கள் கூட, பெருமையுடன் ஈழத்து மண் வாசனை மிக்க படைப்புகளை முன்வைப்பதற்கு வசதி ஏற்பட்டது.
கைலாசபதியின் முற்போக்கு இலக்கியக் கொள்கை அடிப்படை யில் சரியானதாகவே இருந்தது. ஆயினும் நடைமுறையில் அவர் சில பாரிய தவறுகளைச் செய்துள்ளார். இதன் காரணங்களை அன்று இலங்கையில் முற்போக்கு இலக்கியந் தொடர்பான விவாதம் நிகழ்ந்த சூழலின் அடிப்படையிலும் அவ்விவாதம் சென்ற திசையையும்வைத்தே மதிப்பிடுவது தகும்.கைலாசபதி எல்லா இலக்கியத்திற்கும் ஒரு சமுதாயப் பார்வை உண்டு என்பதையும், படைப்பில் உள்ளடக்கமே அடிப்படையானது எனவும் வலியுறுத்தியது உண்மை. அது சரியான துங் கூட. ஆயினும் கைலாசபதியின் நிலைப்பாடு அழகியலை நிரா கரிக்கும் ஒன்றல்ல. கைலாசபதி அழகியற் கோட்பாடுகளை வகுக்க வில்லை என்ற வாதம் ஒரு குறைபாடக இன்னமும் சிலரால் முன் வைக்கப்படுகிறது.6. இது அழகியலின் நிராகரிப்பு என்று எவருங் கூறுவார்களாயின் அது மூர்க்கத்தனமாகும். உருவமும் உள்ளடக்க மும் பகைமையானவை என்ற முட்டாள்தனமான வாதம் தம்மை முற்போக்கானவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பிய சிலரால் 1980களில் ஈழத்தில் முன்வைக்கப்பட்டது உண்மை. ஆயினும் இ
கைலாசபதியின் நிலைப்பாடல்ல.
}}
எழுத்தாளர் அனைவரும் எதை எழுத வேண்டும் என விதிகள் வகுப்பது முற்போக்கு இலக்கிய விமர்சகரது எண்ணமாயிருக்கல காது. அதே வேளை, ஒரு எழுத்து எத்தகைய சமூகப் பார்வையை உடையது என்பதை மதிப்பிடும் பொறுப்பு அவராற் தட்டிக் கழிக்க இயலாதது. இதுவே கைலாசபதியின் விமர்சன நடைமுறை. அவரது தவறுகளை மட்டுமே ஆதாரமாக முன்வைத்து அவரை அளவிட முனைவோர் ஒருபுறமிருக்க, அவதூறுகள் மூலம் அவரைத் தாக்கி வருகிற ஒரு கூட்டமும் இன்னமும் இருக்கிறது. குறிப்பாக, அண்மை யில் வெங்கட்சாமிநாதன் சுபமங்களா ஒக்டோபர் "95 இதழிலும், எஸ். பொன்னுதுரை சென்ற வருடம் கணையாழியிலும் சுபமங்களா விலும் கக்கிய விஷம், சிந்தனைத் தளத்திலும் கைலாசபதியை எதிர் கொள்ள இயலாமையின் வெளிப்பாடுதான்.
இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைக் (மு.போ.எ. ச.) கட்டி எழுப்பியதிலும், முற்போக்கு இலக்கிய வளர்ச்சியிலும், முற் போக்கு இலக்கியக் கொள்கையை வகுப்பதிலும் கைலாசபதியின் பங்கு முக்கியமானது. 1963ல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு
இலக்கு O 9

Page 7
மு.போ.எ.ச.விலும் பிரதிபலித்து, அது பாராளுமன்ற வாத வலது கம்யூனிஸ்ட்டுகளது ஆளுமைக்குட்பட்டபின், கைலாசபதி அதைப் பிளவுபடுத்த விரும்பாமல் ஓரளவு ஒதுங்கியே நின்றார். அவரது முக் கியமான அரசியல், இலக்கிய பங்களிப்புக்கள், மார்க்ஸிச-லெனினிச அணியின் ஏடுகளிலும், தேசிய கலை இலக்கியப் பேரவையுடைய ஏடு களிலும் இடம்பெற்றன. அவரது மார்க்ஸியர்லெனினிச நிலைப்பாடு பற்றி எவருக்கும் ஐயத்துக்கு இடமில்லாதவாறு அவர் வாழ்ந்தார். இதற்காகவே அவர் விரும்பப்படார். இதற்காகவே அவர் வெறுக் கப்பட்டார். அவரது முற்போக்கு இலக்கியப் பணியையும் தேசிய இலக்கியப் பணியையும் பிணைக்கும் ஒரு வலிய இணைப்பாக இருந் தது அவருடைய ஏகாதிபத்திய விரோத அரசியற் சிந்தனை. స్థాయి அவரது பங்களிப்பின் முக்கியத்துவமும் அடிநாதமும் என்
60.
உசாத் துணைக் குறிப்புகள் :
இரவீந்திரன், ந, 'தேசிய இலக்கியக் கோட்பாடும் கைலாசபதியும்' பன்முக ஆய்வில் கைலாசபதி, தேசிய கலை இலக்கியப் பேரவை (இலங்கை), சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1992 பக். 133-158 2. இளங்கீரன், சுபைர், "பேராசிரியர் கைலாசபதியின் அரசியல்’, பன்முக ஆய்வில் கைலாசபதி, ப. 48-57 3. தில்லைநாதன், சி., "எ முத் தா ள ர் பத்திரிகையாளர் களிடையே கைலாசபதி”, பன்முக ஆய்வில் கைலாசபதி, Lu. 1—18 4. கைலாசபதி, க., இரு "மகாகவிகள், நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ், சென்னை, (6ம் பதிப்பு) 1987 5. நாவலர் மலர், யழப்பாணம், 1969 6. ஆதி, ‘அழகியலும் அரசியலும்', உயிர்ப்பு-5, ஆனி 1995
6U6ơor 6ör, Lu. 28—34, u. 118
O O O
கருத்தை திட்டவட்டமாகத் தெரிவிப்பதற்காகத் தேடிப் பெற்ற உரைநடை, நேரெதிரான பண்பை இன்று சிலர் கையிற் பெற்றுள்ளது. பண்டிதர்களிடமிருந்து அதனை மீட்டால் மட்டும் போதாது; பரிசோதனை என்ற பெயரில் பம்பாத்துப் பண்ணுகிற வர்களிடமிருந்தும் அதனைக் காப்பாற்ற வேண்டும். "எழுத்தும் சொல்லும் பொருளை அறிவதற்கன்றோ" என்றுரைத்த சான்றோரைப் போல் நாமும் சிந்திக்கவும் உணரவும் பழகிக் கொள்ள வேண்டும்.
க. கைலாசபதி V (தமிழ் நாவல் இலக்கியம்)
10 O இலக்கு
 

புதுநெறி எழுத்தாளரின் 0 6eps U600f 0
கலாநிதி கைலாசபதி
இலக்கிய உலகிலே, சிறப்பாகப் படைப்பிலக்கியத்துறையிலே, தஸாப்தங்கள் குறிப்பிடத்தக்கவையாய் அமைகின்றன. 1930கள், 1940கள் என்றெல்லாம் இலக்கிய வரலாற்றாசிரியர்களும் திறனாய்வாளரும் வகுத்துரைத்தல் பொது வழக்காகும், சாதாரண மாக ஒருவர் எழுதத் துவங்கிப் பயிற்சியும் தெளிவும் பெறுவதற்குச் சில வருடங்கள் ஆகின்றன. பத்தாண்டுக் காலத்தில் ஒர் எழுத்தாளர் தன்னைத் தரமான பனடப்பாளியாக நிலைநாட்டிக் கொள்ளுதல் இயலும், அக்காலப் பகுதியில் இலக்கிய உலகிற் பிரவேசித்தவர்களை அந்தப் பத்தாண்டுகளுக்கு உரிய தலைமுறையினராக குறிப்பிடுதல் சகஜம். ஈழத்து நவீன தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் 1950கள், 1960கள், 1970கள் என்று வழங்குவது இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுவதொன்றாகி விட்டது. இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், க. தி. சம்பந்தன் ஆகியோரை முப்பதுகளில் முகிழ்த்த கதாசிரியர்கள் என்று விவரித் தால், இந்நூலாசிரியர், காவலூர் எஸ். ஜெகநாதனை, எழுபதுகளில் எழுதத் தொடங்கியோருள் ஒருவர் என்று விவரித்தல் இயைபுடைய தாகும். சரிநுட்பமாகக் கூறுவதாயின், எழுபதுகளின் நடுப்பகுதி யிலிருந்தே இவரின் படைப்புகள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க லாயின. தொடக்க நிலையிலுள்ள எழுத்தாளர் பலரிடத்துக் காணப் படும் மிகையார்வமும் பரபரப்பும் படபடப்பும் இவரிடத்துக் காணப் பட்டன. அதன் பிரதிபலிப்பையும் விளைவையும் எழுத்திலும் கண்டு கொள்ளகூடியதாயிருந்தது. பல்வேறு பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் இவரது கதைகள் பிரசுரமாயின. அவற்றுட் பல அவசர படைப்புகளாக அமைந்துவிடும் ஆபத்து இருந்ததையும் அவதானித் திருக்கிறேன். வாழ்க்கையைப்பற்றியும் இலக்கியத்தைப் பற்றியும் ஆர அமரச் சிந்திக்கவோ, அவற்றுக்கிடையேயுள்ள அத்தியந்த பிணைப்பினை உன்னிப் பார்க்கவோ இயலாத வேகத்தில் ஆசிரியர் எழுதிக்கொண்டேயிருந்தார். அவருடைய நோக்கமெல்லாம் ஜன ரஞ்சகம் தானோ என்று ஐயுறுமளவிற்கு எழுத்தின் தொகை இருந்தது.
ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியரின் கதைகளில் அனுபவம், கொள்கை, பார்வை இவற்றின் பாதிப்பைக் காணும்படி யாக உள்ளது. வெறுமனே, "இலக்கிய ஆர்வ உணர்வோ உந்துதலோ மாத்திரமன்றி, வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கும் தன்மையும் அதன் நேரடி விளைவான கண்ணோட்டமும் இவரது

Page 8
அண்மைக்காலக் கதைகளில் இழையோடுவதைக் காணக்கூடியதா யிருக்கிறது. கதாசிரியர் உலகை அறிந்துகொள்ளும் செயற் பாங்கிலே, தன்னைத்தான் அறிந்துகொள்ளும் முயறசியும் நடை பெறுவதை சமீபத்திய கதைகள் காட்டுகின்றன என்றுகூறத் தோன்று கிறது. இத் தொகுப்பிலே கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் எழுதப் பெற்ற கதைகளிற் சில இடம் பெறுகின்றன. இவற்றில் இரண் டொன்றைத் தவிர ஏனைய கதைகள் பொதுப்பண்புகளைப் பெற்று விளங்குவதைக் கண்டுகொள்ளலாம். சமூகம், காலம், மாற்றம். பிரக்ஞை என்ற பொருள் தொகுதி இக்கதைகளின் கருவாக உள்ளது. யுகப்பிரசவம் என்னும் தலைப்பு, கால மாற்றம் சம்பந்தமானது. இந்த நூற்றாண்டின் முதற்காலிலே, மகாகவி பார நியார் நமது இலக்கியத்திலே யுகமாற்றம் பற்றிய சிந்தனையையும் உணர்வையும் தோற்றுவித்தார். கலியுகம் வீழ்ந்து, கிருதயுகம் - உன்னதமான பொற்காலம்-எதிர்காலத்தில் மலரும் என்னும் நம்பிக்கை அவரது படைப்புகளுக்கு ஆற்றலும் அழகும் ஊட்டியது. பாரதிதாசனாரும் "புதியதோர் உலகம் செய்வோம்' என்றார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் காலமாற்றத்தை வீறுடன் பாடினார். பாரதி பரம்பரையில் வரும் முக்கியமான கவிஞர்களும், புனை கதாசிரியரும் யுகம்" என்னும் பதத்தை வெவ்வேறு தொடர்களில் கையாண் டுள்ளனர். சமூக அமைப்பு, ஒழுக்கவியல், சமய நம்பிக்கை முதலிய
வற்றில் ஏற்படும் சலனங்களையும் பிறழ்ச்சிகளையும் மாற்றங்களையும் குறிப்பிடுவதற்கு, " யு கதர் ம ம் ', "புகசந்தி, "யுகமாற்றம்' "புகம் பிறக்கிறது' முதலிய
தொட்ர்கள் எழுத்தாளர்களினால் அவ்வப்போது பயன்படுத்தப்பட் டுள்ளன. மனிதனை மனிதன் கரண்டி வாழும் நிலை அற்ற உலகினை உருவாக்குவதே பொறுப்புணர்ச்சியும் நேர்மையும் பெற்றுள்ள இன்றைய எழுத்தாளரின் கடமையும் பணியுமாகும். அள்ளிலட்சியத்தை வாழ்வியலிற் கண்டு வரை பன" செய்து லோவியங்கள்ாக நிரும்ாணிப்பதில் இலக்கிய ஆக்கத்திறனிலும் முறையிலும் எழுத்தனரிடையே ஏற்றத்தாழ்வுகளும் நூலுக்க வேறு ப்ாடுகளும் இருத்தல் கூடும். நிலைகெட்ட மாதரை நினைந்து நெஞ்சம் புண்னாகி, வாழ்க்கையின் அவலங்காள நுண் வியதாக விவரிப்பதில் சிலர் கூடுதலான கவனஞ் செலுத்துவர். ஆனால் சிலரோ, அவலத்தின் மத்தியிலும் நாளைய விரவு நோக்கி நன்னம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டங்களை சித்திரிப்பர். தன்னம்பிக்கையும் தளரா உறுதியும் கொண்ட பாத்திரங்களை இத் தகைய எழுத்தாளரின் படைப்புகளிலே தரிசிக்கலாம்." கட்டுண் டோம், ப்ொறுத்திருப்போம், க்ாலம் மாறும்' என்ற மரபு வழி வாக்கியத்தை ஏற்று மன அமைதி அடையாமல், "தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ என்னும் புது நெறியைக் கைக் கொள்ளும் எழுத்திாளரே புத்துலகைப் படைக்கும் பணிக்குப் பங்களிப்புச் செய்வோராவர்.
(நர்மதா வெளியீடான காவலூர் எஸ். ஜெகநாதனின் யுகப் பிரசவம் சிறுகதைத் தொகுதிக்கு கலாநிதி அவர்கள எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஒரு பகுதியானலும் முழுமையான ஓர் இலக்கியப் பார்வையைத் தருகிறதல்லவா?)
ఖళ్ల
 
 
 
 

நாவலின் சரளமான போக்கும் எளிமமயும்ே இதன் தனித்தன்மை
'தவிரவாதிந்து 蠶
57 மஹறிந்த பிளேஸ், (குறுநாவல்) :* தி. ஞானசேகரன் விலை (இலங்கையில்)
ரூபா 5000
இலங்கை மலைநாட்டில் வைத்திய அதிகாரியாகக் கடமை பாற்றும் தி. ஞானசேகரணிகள் சுபமங்களா - இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவை இ:ைTந்து நடத்திய ஈழக் குறுநாவல் போட்டி பில் பரிசு பெற்ற "கிவ்வனத்து மலையக வெளியீட்டகத்தின் 15வது வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
மலையகத்து இந்திய வம்சாவழித் தொழிலாளர் பற்றிய கதை இயான்று அதற்கான் தளத்தில் வைத்து படைக்கப்பட்டிருக்கிறது. மிக எத்ார்த்தான பாத்திரப் படைப்பு. கதையில் இயல்பை மீறும் எந்தச் சம்பவமும் இல்லை. உரையாடல் மண்மனம் மிக்கதாக,
'திர்க்கேயான தனித்தன்மையோடு விளங்குகின்றது.
ஒரு படைப்பில் எது கலைத்துவம் என்பதைச் சுட்டுவது கடின பாகினும், அதை வாசிப்பின்போது உண்ர்ந்துகொள்வது மிக பல்பக் முடியக்கூடியதே. கள்ளாத்து நாவலில் இந்த இரண்டு பங்களுமே சுலபமாகியிருக்கின்றன். குறிப்ப்ாகச் சொல்வதர்
ால், நவமின் சரளமான போக்கும், அத்ன் எளிமையுமே இதன்
நிலைத் தன்மையாகத் தெரிகிறது.
ஒரு படைப்பாக்கத்தில் அபூர்வமாக அமைகிற அம்சம் இது. El சென்ற ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் ஆசிரியரின் குருதிமலை அளவுக்கு உன்னதம் இதில் இல்லை என் பதைக் குறிப்பிடவே வேண்டும். இரண்டும் இருவேறு வடிவங்கள் என்பது சரியான் சமாதானம் ஆக முடியாது.
மலையக இலக்கியமாக, அந்த வகையில் ஈழத்து இலக்கியமாக,
நூல்ை இனங்காணுவதுமானுகே அவசியமுமாகும்.
இத்ணும் விரிந்த அளவில் தமிழ் இலக்கியமாக, தி.ஞா.வின் இந்த
துறவி

Page 9
சிறுகதையென்றால் அதில் கதை இருந்தாக வேண்டும் என எதிர்பார்ப்பது பழைய மரபு
கிளகக்கி விளிம்பு டிரஸ்ட்
இரு 11, தேவேந்திரகுல வீதி, (சிறுகதைகள்) உப்பிலிபாளையம்,
பாப்லோ அறிவுக்குயில் கோவை-641 015
விலை:' ரூபா 30.00
வெறும் நிகழ்ச்சிகளையும் கதாபாத்திரங்களின் குணங்களையும் வெறுமனே விவரித்துக் கொண்டு போவது கதை, வெறுங்கதை படைப்பிலக்கியக் கதை அன்று. படைப்பிலக்கியம் என்னும் பொழுது அதில் கதைக்குள் அடங்கிய - கதைக்கு மேலாக, சில சிறப்பு அமி; ல் கள் இருந்தாக வேண்டும். வெள்ளைத் துணியில் வர்ணங்கள் ஏறுவது போன்று, கதையில் சுய அனுபவம், தத்துவ விசாரம், பிரச்சாரம் அல்லது நீதி போதகம், பொதுநோக்கு, பிறர் சிநேகம் போன்ற பொருள்கங்கள் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ, குறிப்பாகவோ (குறிப்பாக அமைதல் சிறப்பு), வெளிப்படையாகவோ சாயமுற்றிருக்க வேண்டும். இந்தப் பார்வை கொண்டு பார்க்கும் பொழுது பாப்லோ அறிவுக்குயில், ஒவ்வொரு கதையையும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்பு அம்சங்களோடேயே புனைந்திருப்பதால், நல்ல படைப்பிலக்கியம் படைத்திருக்கிறார் என்று மகிழ்வோடு சொல்ல 6υ Γιο. . . . . ."
முரணாக - சிறுகதை என்றால் அதில் கதை இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது பழைய மரபு. அதில் கதை இருக்க வேண்டுமென்றில்லை; கதைக்குரிய நிகழ்வுகள் - ஏன் ஆயத்தங்கள் கூட - மறக்க முடியாதவாறு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டாலும் போதும் என அமைந்துள்ள தற்காலச் சிறுகதைகள் சில . ஏன், பல இந்த உத்திக்கு, மகாமசானம், வெளிப்பூச்சு, ஒருநாள் கழிந்தது, நினைவுப் பாதை, சாமியாரும் குழந்தையும் சீடையும் போன்ற சிறு கதைகள் மூலம் வித்து இட்டவர் புதுமைப்பித்தன்தான் என்று சொல் லத் தோன்றுகிறது. தோழர் பாப்லோ அறிவுக்குயிலின் படைப்புகளுள் சில - பொதி, நடவு, கிளுக்கி, சூரி முதலியவை பழைய மரபுச் சிறு கதைகளாக, எடுப்பு தொடுப்பு முடிப்பு என்று மலர்ந்துள்ளன. வெயில் பறவை, வீடு, அடி, வலி முதலிய படைப்புகளில் கதைகளை விட நிகழ்ச்சிகளின் விவரிப்பே கதைக்குரிய பணியைச் செய்திருக் கிறது. கிராமம் நகரம் என்னும் குறுநாவலில் பாப்லோ மேற்படி இரண்டையும் ஆற்றல் பொதுளக் கலந்து ஒன்றை மற்றது பிரிக்க முடியாதவண்ணம் ஒன்றுக்கு மற்றது துணை போகிற வண்ணம் கதைக் கலை செய்திருக்கிறார். அற்புதமான படைப்பு இந்தக் குறுநாவல், மற்ற கதைகளுள், பொதி, நடவு, சூரி, வலி ஆகியன சிறந்தன. கதைகளின் தராதரத்தில் வேறுபாடு இருந்தாலும் எந்தக் கதையுமே முற்றாகச் சோடை போகவில்லை! குறைந்தபட்ச
14 O இலக்கு
 

எதிர்பார்ப்பை - படிக்கச் சுவையூட்டும் பணியை - பூர்த்தி செய்வ தாகவே அமைந்துள்ளது.
கதாசிரியர் மட்டுமல்லர், அவருடைய கதைகளில் வருகிற பாத்திரங்களும் இலக்கணத் தூய்மை கொண்ட தமிழில் பேசி வந்தது ஒரு காலம். கல்கி என்னும் மாபெரும் கதை சொல்லி இப்படித்தான் கதை சொல்லி வந்திருக்கிறார். பாத்திரங்கள் பேசுகிற உரைநடை
யிலும் பேச்சுத் தமிழைக் கொண்டுவந்த எழுத்தாளர் யாராக இருப்
பினும், அம்முறையை ஒரு விசுவாசப் பரப்புதல் போல முழுமையாகக் கையாண்டவர் புதுமைப்பித்தன்தான். பேச்சுத் தமிழ் உரையாடலை மேலும் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் ஜெயகாந்தன். சில கதைகளில் அவர் ஆசிரியர் கூற்றையும் தன்மையில் முழுக்க முழுக்கப் பேச்சுத் தமிழிலே எழுதி வந்திருக்கிறார். அந்தக் கதை களுக்கு அம்முறை அழகூட்டும் என்று கருதி, ஜெயகாந்தன் சில கதைகளில் முழுமையாகக் கையாண்ட பேச்சுத் தமிழ் ஆசிரியக் கூற்றை பாப்லோ அறிவுக்குயில் பெரும்பாலான கதைகளில் அங்கே இங்கே அதிமாகவும், இங்கே அங்கே குறைவாகவும் கையாண்டிருக் கிறார். இது ஒரு நல்ல புது உத்திதான் என்றாலும், பேச்சுத் தமிழ் ஆசிரியக் கூற்றுக் குறைந்தபட்சம் கதையின் மொத்தத் தொனிக்கு நியாயம் செய்வதாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம்பட்சக் கருத்துக்கு இடமில்லை. கிராமம் நகரம், பொதி, சூரி, வலி முதலிய கதைகளுள் ஆசிரியரின் பேச்சுத் தமிழ்நடை உகந்ததாக இருக்கிறது. ஆனால் எல்லாக் கதைகளையுமே - குறிப்பாக நடவு, கிளுக்கி, வெயில் பறவை போன்ற கதைகளை - பேச்சுத் தமிழில் எழுதித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை (புதுமைப்பித்தன் விந்தன் கதைகள் காண்க). வீடு என்கிற கதையை மட்டும் பாப்லோ இலக்கணத் தமிழில் - அதிலும் பெரும்பான்மை இலக்கணத் தமிழில் என்றுதான் சொல்ல வேண்டும் - எழுதியிருக்கிறார். மற்றக் கதை களைவிட இந்தக் கதை சிறப்பற்றதாக அமையவில்லை.
அநேகமாக எல்லாக் கதைகளுமே பாட்டாளி சமூகத்தினரின் பிரச்சினைகளையும் அவற்றிற்கு முதுகெலும்புக் காரணமான பிற சமூகத்தினரின் அடாவடித்தனங்களையும் சுயநல, வஞ்சகப் போக்கு களையும் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ (பெரும்பாலும் வெளிப்படையாகவே) சித்திரிப்பனவாக உள்ளன. சில கதைகளில் வெயில்பறவை, சூரி, வலி முதலியவற்றில் - பிரச்சார வாசனை சற்றுத் தூக்கலாக இருந்தபோதிலும், இத்தகைய பிரச்சாரம் கதை யில் கலை நய ஓட்டத்திற்கு ஊறு இழைக்காததால் இவை நன்றே என்று படுகிறது. அதே சமயம், பாப்லோ தம் பிரிவினரான பாட்டாளி மக்களின் நல்ல குணங்களையும் - சிறப்பு இயல்புகளையும் - மிகைப் படுத்தாமல், அளவாக, அழகாக, எதார்த்தமாகக் குறித்துச் செல்வது பாராட்டுதலுக்கு உகந்தது.
சில கதைகளில் ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், மதுரா போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களின் தற்குறிப்பேற்றம் (உம்: "புகைபோக்கியை விலக்கிவிட்டு மரங்களோடு கைகுலுக்கினான் சூரியன்’) இங்கேயும் அங்கேயும் தெரிகிறது. (கவிதைக்கே பெரும்
இலக்கு O 15

Page 10
பாலும் உரிய தற்குறிப்பேற்றத்தை அளவாகப் பயன்படுத்தாவிடில்
ஆவிதையில் கூடக் கவித்துவத்தைக் க்ெடுத்துவிடும்). தவிர்க்கப்ப்ட வேண்டிய இத் தற்குறிப்பேற்றத்தை சிலகத்தைகளில் ஆபரண்டாலும் பலகதைகளில் பாப்லோ தவிர்த்திருக்கிறார்; நன்று மேலும் கிளுக்கி,
சூரி ஆகிய கதைகளில் ஜனரஞ்சக் எழுத்தர்ள்ர்கள் கதையை முடிக்
கும் பாணியில், வலிந்த திடீர் முடிவுகள்ை கையாண்டிருப்பது க்ள்த
பின் தொனிக்குக் குந்தகம் இழைக்கிறது. மேன்மேலும், தம் பிரிவினரைத்தாம் குறிப்பிடுகிறாரென்றாலும், தாபித் மக்களைப் பற்றிய யாரும் விரும்பத்தகாத இழிவான சொற்பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம்.
சான்றாக ஒளிர்கிறார். இளைஞரான ஆசிரியரின் எழுத்தி பட்டறிவின் முதிர்ச்சி பரிபக்குவம், துடிப்போடு பரிமளிக்கிறது, மக்களையும் சமுதாய நிலைகளையும் ஆழ்ந்த இரக்கத்தோம் தோக்கியதன் விளைவே இந்த ஞான அறுவட்ை இவருக்கு அதோடு, இயல்பாகக் கவிமணம் கொண்டவராக உள்ளார். எனவே, இவர் சொற்கள் சுவைக்கின்றன. இவருடைய கவித்துவ வருனன்ை களுக்குக் கிராமம் நகரம் குறுநாவலில் வரும் ஆவரைக்காடு,
முன்ரியப்பர் கோவில் சரகம், சூறைக்காடு, குளக்கரையும் குளமும்
போன்ற இடங்களைச் சுட்டிக்காட்டலாம்.
சரளமான மொழி வளம், நுட்பமான நோக்குகள், கணிசமான பொது அறிவு, பாராட்டற்குரிய மனித மாண்பு ஆழ்ந்த சுயதேடல், புதிய புதிய அனுபவங்களுக்கு ஆளான பேறு, அநீதிகளைக் கண்டு குமுறும் உளப்பாங்கு ஈடுபாடு கொண்ட கலைப் பயிற்சி, பரபரப்பான சுய அதிருப்தி - இவையும் சேர்ந்து இவருடைய கதைகளைச் சிறந்த படைப்பிலக்கிய மகனிகளாக ஆக்கியுள்ளன.
பாப்லோ அறிவுக்குயில் மேன்மேலும் பலபல படைப்புகள் படைத்து இலக்கியத் தொண்டு புரியவேண்டும் என்பது நம் அவா! வேண்டுகோளும்ஃபl
பா. அமிழ்தன்
கவிதை அசலான்தாகவும், சுய ஆளுமை மிக்கதாகவும் வரும்போதுதான் வெற்றி
படையும். உயிர்திரு சென்டாம்பிகை பதிப்பகம் (கவிதைகள்) - 44-ஏ வைத்தி தெரு, சேலம்-1 ஆர். கே. பக்: 228: விலை: ரூ. 40
கவிதை மொழி, மனத்துடன் நெருங்கிய தொடர்புடையதாய் கருத்துப்புலப்பாட்டில் பல்வேறு தளங்களில் விரியும் சாத்தியமுள்ளது. ரத்து முழங்கும் பிரகடனத்திலும் தத்துவக் கசிவிலும் கூட
வயசுக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதற்குப்_பாப்லோ என்னும் படைப்பாளி சிறந்
 
 
 
 
 
 
 
 
 
 

நுணுக்கமான மொழி ஆளுமையின் காரணமாகக் கவிதை வரிகள் வெளிப்படுகின்றன. வாசிப்பில் கவிதைப் பிரதி மொழி காரண்மாக மாறுபட்ட அர்த்தங்களைத் தருவதனால் கவிதை இருண்மைக்குள் சிக்கிக்கொள்கிறது. ம்ொழியிடிப்படையில் வரிகள்ை நுணுகி ஆராய்ந்தால் ஒரளவு விளங்கிக்கொள்ளுமாறுதான் தமிழ்க் கவிதைப் பரப்பு உள்ளது. படைப்பின் ஆதாரத்தினை விளங்கிக்கொள்ள, படைப்பு மூலத்தினைக் கண்டறிய வேண்டிய தேவையைக் கவிதை வாசகனிடம் கோருகின்றது. அது சாத்தியமற்ற நிலையில் பிரதி தரும் அனுபவம் சார்ந்துதான் கவிதை வாசிப்பு இயங்குகின்றது.
வரலாற்றில் தமிழ்க் கவிதையானது, மருத்துவம், சோதிடம், மனையடி சாஸ்திரம் போன்ற பல்துறை அறிவினை வெளிப்படுத்து மாறு, எளிய யாப்பமைதியும், சந்த ஒழுங்கும் அமைய ஊடகமாகச் செயல்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இன்றும் பலர் ஏதேனும் ஒரு தத்துவத்துடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு, தத்துவத் தைக் கவிதையாக்குகின்றனர். ஆனால் கவிதை அசலானதாகவும் சுய ஆளுமை மிக்கதாகவும் வெளிப்படுகையில்தான் தத்துவக் கசிவைத் தாண்டி, கவிதை வெற்றியடையும். இல்லையெனில் சோதிடக் கவிதை, மருத்துவக் கவிதை போலத் தத்துவக் கவிதையையும் தரம் பிரித்து ஒதுக்கி வைத்துவிடும் அபாயமுள்ளது.
"உயிர்த்திரு கவிதைத் தொகுப்பின் மூலம் தனக்குள்ளான கருத்துலகில் பயணப்படும் ஆர். கே.யின் மனம் எதிர்கொண்ட புற வுலகக் காட்சிகள் மற்றும் அனுபவங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. புராணம், அறிவியல், அறவியல் சார்ந்த ஆர்.கே.யின் கவிதைக் குரலில் "நான்" உரத்து ஒலிக்கிறது. ஆர்.கே.யின் "நான்", சுயத்தின் வெளிப்பாடு, தனி மனித மனத்தின் ஆன்மீகத் தேடலின்
விள்ைவாக "நான்" சித்தரிக்கப்பட்டுள்ளது. "நான் தப்பிக்கும் மார்க்கம் என்ன", "நான் என்ன கொடுத்தேன் உனக்கு", "நான்'
கல்தான்'. "பசியுடன் பூதமும் 蠶 'மரம் நான்'," என்னிடம் எஞ்சியிருப்பது என் உட்ல்மட்டும்ே', 'ஒரு பூவில் அடங்கும் என் வானம்' இப்படிக் கவிதைகளில் பல இடங்களில் வரும் நான்' தனி மனித முனைப்பு என்ற நிலையைத் தாண்டிச் செல்வதில்லை. சுய அனுபவங்கள் சார்ந்த அனுபவங்களின் விமர்சன ரீதியிலான பல "நான்'களின் தொகுப்பு, வாசகனுக்குக் கவிதையில் மாறுபட்ட தளங்களைக் காட்டும். ஆனால் ஆர்.கே.யின் "நான்', கவிஞருடன் பிரிக்க இயலாமல் செயற்படுவதனால், வாசகனைக் கவிதையுடன் ஒன்றுபடுவதிலிருந்து தடுக்கிறது.
ஆர்.கே.யின் கவிதைகளின் இயங்குதளம் தத்துவம் மட்டும் சார்ந்திருப்பது பலவீனமான அம்சமாகும். இன்று பிரபஞ்சத்தில் மனித இருப்பு என்பது இதுவரை 'மனிதன் கண்டறிந்த கருத்தியல் களின் மறுதலிப்பாக உள்ளது. விடுதசை, மீட்சி புரட்சி என நம்பிக்கை கொள்ளச் சொன்ன தத்துவங்கள், மாபெரும் ஆளுமைகள் உடைபடுகையில், ஆர்.கே. சித்தரிக்கும் கருத்தியல் மட்டும் விதி
H S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S =====نی :
இலக்கு 0 17

Page 11
விலக்கா என்ன? அதுவும் கவிதைக்குள் தோய்ந்து வெளியானாலும் தத்துவம் வாசிப்பில் அலுப்பையே தருகின்றது.
அடையாறில் ஓர் ஆலமரம் எரிந்தது என ஜே. கேயுடன் தன்னை இனங்காணும் ஆர்.கே.யின் மலம், ஒளி உலகமெங்கும்! பரந்தது எனக் கண்டறிந்து, உறங்கிய உலகம் ஒன்று/விழித்துக் கொண்டது எனத் திருப்தியடைந்து இறுதியில் ஆலமரத்தடியில் கோடி சூரிய வெயில் என மகிழ்வடைகிறது. ஜே. கே. கவிஞரின் மனதில் தோற்றுவிக்கும் எண்ண அலைகளைப் பதிவாக்காமல் வெறுமனே வெளிப்பட்டுள்ள கவிதைக்கும் கிழக்கு சிவக்கும்" என்ற வெற்று கோஷத்துக்கும்-அடிப்படையில் வேறுப்ாடு கிடையாது. ஒரு குறிப்பிட்ட தத்துவம் வாழ்வின் அடிப்படையாகி, அது தோற்றுவிக் கும் அனுபவங்களை உள்வாங்கிச் செரித்து எழுதப்படும் ஆக்கமான முயற்சியினால்தான் கவிதை வெளிப்படும். கவிஞரின் தத்துவ
ஆர்வம் மட்டும் கவிதைக்குப் போதாது.
ராம்/அறம் என்பதன் மரூஉ/இயற்கையின் நியதி|மறைந்துள்ள மந்திரம்|உலகின் ஜீவ இயக்கம்|தர்மத்தின் அச்சில் சுழல்கிறது அண்டம்|ராம் அந்த அச்சு என்று இந்துத்வத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கவிதையில், வெறுமண அறவியல் போதனைதான் உள்ளது. ஆர். கேயின் தீவிரக் கருத்துலக வெளிப்பாடு, வெறும் வரிகளைக் கவிதையாக அடுக்கத் தொடங்கிவிடுகிறது. அது வாசகனுக்குப் புதிய அனுபவத்தைத் தருவதில்லை. பல்துறைப் புலமையும், பரந்து பட்ட அறிவுலகத் தேடலும், மொழியாளுமையும் மிக்க ஆர்.கே. கவிதையாக்கத்தில் கருத்தியல் வெறியை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் ஆர்.கே.யின் கவிதையுலகு இயல்பாக வெளிப்பட்டு புதியதான தளங்களை வெளிப்படுத்தும்.
ஆர். கே.யின் தத்துவத் தேடலையும் மீறி, "அலையோரம், வெட்சி, பென்சில், வலி, பள்ளம், முதல் அதிசயம், கல்' போன்ற சிறந்த கவிதைகள் தொகுப்பினுள் இடம் பெற்றுள்ளன.
காலத்தை | முகத்தில் சுமந்து கொண்டு ! காத்திருந்தனர் | அவனும் அவளும் ! எதிரும் புதிரும க என முடியும் 'பள்ளம் கவிதை யில் அன்றாடம் எதிர்கொள்ளப்படும் சாதாரண நிகழ்வு, "மனம்" 'உணரும் இழப்பாக நுணுக்கமாகக் கவிதையாக்கப்பட்டுள்ளது.
"முதல் அதிசயம் கவிதை தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று. ஆதியிலிருந்தே மனிதன், பிரபஞ்சத்துடன் கொள்ளும் உறவு புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் நீள்வதுடன் வியப்பையும் தருகிறது. இன்னும் தீாக்கப்பட்ாத பிரச்சினைகளும் கேள்விகளும் ஒவ்வொரு புள்ளியிலும் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் தேடிய ஆர்.கே.யின் பதிவுதான், ஒரு சோற்றுப் பருக்கைக் காக அலைந்து கொண்டே கடவுளுக்குச் சவால் விடுகிறேன் என்ற
கவிதை வரிகள்.
 

விலகி இருந்தால் / மறந்து போகிறது ! கூடவே இருந்தால் மரத்துப் போகிறது என்ற கல்’ கவிதை வரிகள் கடவுளுக்கு மட்டு மில்லாமல், மனிதனின் சகல நெருக்கமான உறவுகளுக்கும் பொருந்து. கிடை க்க வேண்டுமென்று பல முயற்சிகள் செய்து பெற்ற உறவு, நாளடைவில் தவிர்க்கவியலாமல் சலிப்புக்குள்ளாவது மனிதனுக்குச் சாடமே. கோயில் குருக்களுக்கும் சாமி சிலைக்குமான தொடர்பு வெறும் கல்லாகிப் போகும் கணங்கள், எளிதில் புறக் கணிக்கக் கூடியன அல்ல. கல்லைக் கழுவிக் கொண்டிருந்த 1 யந்திரக் கரங்கள் என்ற வரிகள், வாழ்க்கையின் சகல மேன்மைகள் குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன,
கவிஞனாக வெளிப்படுவதற்கான ஆகிருதியிருந்தும் ஆர்.கே, யின் மீது படிந்துள்ள கருத்தியல் சுமை, படைப்பின் அடிப்படையைச் சிதைத்துள்ளது. அடுத்த கவிதைத் தொகுப்பில் இத்தகைய பலவீனத்தைக் களைவதன் மூலம் சிறந்த கவிஞராக ஆர்.கே. வெளிப் படுவதற்கான நம்பிக்கையைத் தொகுப்பிலுள்ள சில கவிதைகள் தருகின்றன.
பொதுவாகச் சுமார் ஐம்பது கவிதைகளைச் சுமார் நூறு பக்கங் களுக்குள் தொகுப்பாக வெளியிட்டுத் தன்னைக் கவிஞனாக முன்னிறுத்த முயலும் தமிழ்ச் சூழலில், 208 பக்கங்களில் கவிதை களைப் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் அழகான அச்சமைப் பில் நேர்த்தியுடன் வெளியிட்டுள்ள ஆர். கே.யின் முயற்சி குறிப்டத் தக்கது. புத்தக வெளியிட்டில் ஆர். கே.யின் அக்கறையையும் கடும் உழைப்பையும் பாராட்டமலிருக்க முடியவில்லை.
ந. முருகேசபாண்டியன்
வித்யாஷங்கர் கவிதைகள்
பகலில் - அழகாகவே படுகிறார்கள்
நைட்டியில் அடுத்தவீட்டுப் பெண்கள். பார்க்கும் பெண்களை Fr உதட்டுக்கு படுக்கச் சொல்லவே စ္ပ္ပ္ပ္ 2f உண்டு தோன்றுகிறது. மெளனத்தில்
உன் மூச்சு சிட்டியில் மட்டுமே பரிபாஷை,
பார்க்க
பைய நடந்தாலே [ [0] تقلL ஜெர்ஸிபசுக்கள். 0660T GF
கிடைக்கின்றன

Page 12
நீ, நான், கவிதை
என்னை சோகத்திலேயே வைத்திருந்து சில கவிதைகள் எழுதச்செய்தாயே நன்றி ! Ο
உன் நினைவுகள் நெருஞ்சி முட்கள்தான் ஆனாலுமென்ன அதிலுமிருக்கின்றன சின்ன சின்ன மகிழ்வுகள் அந்த பூக்களைப்போல!
உன் கண்களில் என் பிம்பத்தை தேடுகிறேன் 66or 660 கண்ணிரில் உன் முகம் பார்க்க விரும்புகிறாய்? O M நிலவு பொங்கி வழிந்த இரவில் நாம் பேசிக்கொண்டிருந்தபோது
uersuraruri மறைத்துக்கொண்டாயே உன்னை!
முழு நிலவு வழியும் அந்த பார்வையில் தேடுகிறேன் எனது முகம் Sos இருள் படிந்து கிடக்கிறது அது! . Ο
வண்ணத்துப்பூச்சி வருடிப்போனதில் உன் ஸ்பரிசம் உணர்ந்தேன் நீயில்லாத காணலில் O இந்த உயிரெங்கும்
ஊறிக்கிடப்பதினால் நீ கீறிய காயங்களிலெல்லாம் கவிதையே வழிகிறது!
-அழகியபெரியவன்
20 o இலக்கு

தமிழ் ஆய்வியல் வரலாற்றில்
கலாநிதி க. கைலாசபதி
கலாநிதி நா. சுப்பிரமணியன்
யாழ். பல்கலைக் கழகம்
f
திரு. கனகசபாபதி கைலாசபதி (1933-1982) அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று இளங்கலைப் பட்டமும் (B.A.Hons) முதுகலைப் பட்டமும் (M.A.) பெற்றவர். சிலகாலம் தினகரன் இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தபின் பல்கல்ைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்றவர். அப்பணியிலிருந்தவாறே உயர்கல்வி விடுப்புப் பெற்று இங்கிலாந்து சென்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மார்க்சிய பேரறிஞர் ஜோர்ஜ் தொம்ஸன் அவர்களின் வழிகட்டலில் Tamil Heroic Poetry Grcird goouélé ஆய்வு நிகழ்த்திக் கலாநிதி (Ph.D) பட்டம் பெற்றவர்.
இலங்கைப் பல்கலைக்கழக வித்யாலங்கார வளாகத்தில் தமிழ், இந்துப் பண்பாடு ஆகிய துறைகளின் தலைவராகப் பணிபுரிந்த அவர், பின்னர் 1974இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் உருவானபொழுது அதன் முதலாவது தலைவரானார். அவ்வளாகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் அமர்ந்தார். அங்கு கலைப் பீடாதிபதியாகவும் பணிபுரிந்தவர் அவர்
தமது ஆய்வுப் புலமையால் தமிழகத்திலும் அனைத்துலக மட்டத்திலும் பெருமதிப்பை ஈட்டிக் கொண்ட அவர், தமிழ் ஆய்வியல் வரலாற்றில் ஒரு காலகட்டத்தின் தலைமகனாக - Trend setter ஆக கணிக்கப்பெறும் தகுதியை எய்தியவர்.
அவ்வாறான அவரது தகுதிப்பாட்டை வரலாற்றுப் பின்னணியில் நோக்கி இனங்காணும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.
தமிழ் ஆய்வியல் - கைலாசபதி கால் பதிக்கும் வரை :
கலை, இலக்கியம், மொழி ஆகியன சார்ந்த பண்பாட்டுத்துறைகளில் ஆய்வு என்பது தேடித் திரட்டித் தொகுத்தல், அவ்வாறு தொகுக்கப்பட்டவற்றின் உள்ளார்ந்த பண்புகளை இனங்காணல், மற்றும் சுவைத்தல், மதிப்பிடுதல், எதிர்காலத்தில் வாழக்கூடிய - அல்லது முன்னெடுக்கப்பட வேண்டிய - கூறுகளை இனங்கண்டு காட்டல் முதலிய பல படிநிலைச் செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இவற்றுள்
21 D இலக்கு

Page 13
முதலாவது செயற்பாடு பதிப்பித்தல், ஆவணப்படுத்துதல் என்பனவாக அமையும், இரண்டாவது செயற்பாடு பண்பாட்டு வரலாற்றாய்வாக வடிவம் பெறும், அடுத்து வரும் இரண்டும் திறனாய்வு தொடர்பானவை. இறுதிப் பணி ஆய்வாளனின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்தது. மேற்படி ஆய்வுச் செயற்பாடுகள் அனைத்திலும் அடிநாதமாக அமைந்திருக்க வேண்டிய உணர்வுநிலை 'உண்மை காண்டல்' என்ற ஆர்வமாகும். இதற்கு அடிப்படையாக அமைவது புறநிலை (Objective) அணுகுமுறையாகும். மாறாக, அகநிலை (Subjective) ஆக அணுக முற்படும்பொழுது அந்த் ஆய்வானது உண்மைக்கு அருகில் இட்டுச் செல்வதை விடுத்து, விரும்பியதைக் கண்டறியும் ஆர்வச் செயற்பாடாக அமைந்துவிடும்.
தமிழிலே பண்டைய உரைப் பாரம்பரியத்தில் திறனாய்வுக் கூறுகள் சில பயின்றுள்ளன. பாயிர மரபு திருவள்ளுவமாலை என்பவற்றிலும் இவ்வாறான திறனாய்வுக் கூறுகளை நோக்க முடிகிறது. மேலும், சமூக-பண்பாட்டு வரலாறு தொடர்பான பல செய்திகளையும் அவை உள்ளடக்கி அமைந்தன. ஆயினும் அவை ஆய்வியல் என்ற முறைமையை நிலையிலான செயற்பாடுகள் அல்ல. மரபு பேணுதல், நயத்தல் ஆகிய ஆர்வமுனைப்புக்களின் வெளிப்பாடுகளாகவே அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் நோக்கும் போது நாம் ஆய்வு என்ற வகையில் மேலே நோக்கிய பொருண்மை சார்ந்த முயற்சிகள், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பதிப்பு முயற்சிகளுடனேயே தோற்றம் பெறுவதைக் கண்டுணர முடிகின்றது. குறிப்பாக, "ராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), டாக்டர் உ.வே. சாமிநாதையர் (1855-1942) முதலியவர்கள் கால வெள்ளத்தால் மறைந்தவை போக எஞ்சியிருந்த தமிழ் நூல்களைத் தேடித் திரட்டிப் பதிப்பித்து, தமிழியலாய்வுக்கான களப்பரப்பை அடையாளங்காட்டி, முதற்கட்டப் பணியைச் சிறப்புறத் தொடக்கி வைத்தனர். இம் முயற்சியின் அடுத்த கட்டச் செயற்பாடுகளாகவே பண்பாட்டு வரலாற்றாய்வுகள், இலக்கியச் சுவை தேர் முயற்சிகள், மதிப்பீடு தொடர்பான செயற்பாடுகள் என்பன உருவாயின. மேற்சுட்டிய பதிப்பு முயற்சிகளுக்கு சமகாலத்தில் வண. கால்டுவெல் அவர்கள் மேற்கொண்டிருந்த திராவிட மொழிகளின் ஒப்பியலாய்வில் முன் வைக்கப்பட்ட முடிவுகள் தமிழ்மொழியின் தொன்மை, மேன்மை, தனித்தன்மை என்பன தொடர்பான ஆய்வுப் பார்வைகளுக்கான அருட்டுணர்விற்குத் தோற்றுவாய்களாக அமைந்தன. y
மேற்கண்டவாறு 19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து தொடங்கிய தமிழ் ஆய்வியலில் - குறிப்பாக பண்பாட்டு வரலாறு தொடர்பான ஆய்வுப் பார்வையில் - முனைப்பாகப் புலப்படத்தொடங்கிய உணர்வுநிலை தமிழின் தொன்மை, மேன்மை என்பவற்றை இனங் கண்டு காட்டும் ஆர்வமாகும். இந்தியத் தேசிய விடுதலையுணர்வு வளர்ச்சி பெற்று வந்த அக்காலச் சூழலில் தமிழறிஞர் பலரும் தமது மரபுசார் பெருமைகளை மீட்டெடுக்கும் ஆர்வத்துடன் செயற்பட்டனர். இவ்வாறான ஆர்வ முனைப்பு 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பல்வேறு தரங்களில் தொடர்ந்தது. பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை, மல்லாகம் வி. கனகசபைப்
22 O gaudy,

பிள்ளை, மறைமலையடிகள், சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் மு. வரதராசனார் முதலிய பலர் இவ்வாறான 'தமிழ் உணர்வு நிலையினால் வழி நடித்தப்பட்ட ஆய்வாளர்கள் ஆவர்.
இவ்வாறு தமிழ் ஆய்வியலில் தமிழ் உணர்வு செல்வாக்குச் செலுத்தி நின்ற காலப்பகுதியில் அந்த உணர்வுக்கு அப்பால் நின்று உண்மைகளை நாடும் செயல்திறனும் சில ஆய்வறிஞரிடம் வெளிப்பட்டது. பேராசிரியர்கள் எஸ். வையாபுரிப் பிள்ளை, க. கணபதிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் முதலியவர்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்க முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். தரவுகளை முதன்மைப்படுத்தல், அவற்றை ஒப்புநோக்குதல், அவற்றினூடாகச் சமுதாய வரலாற்றுப் போக்கை இனங்காணுதல், இவற்றினடிப்படையில் வரலாற்றுக் காலகட்டங்களை வகுத்தல் என்பன எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களிடம் தெ. பொ. மீ. அவர்களிடமும் சிறப்பாகப் புலப்பட்டு நின்ற அணுகுமுறைகளாகும். ஈழத்தமிழறிஞரான பேராசிரியர் க. கணபதிப் பிள்ளையவர்கள் சாசனவியல் ஆய்வினூடாக மொழி பண்பாட்டுக் கூறுகளை இனங் காண முயன்ற முன்னோடியாவர். சுருங்கக் கூறின் தமிழ் ஆய்வியலில் உணர்ச்சிக் கலப்பற்ற புறநிலைப் பார்வைக்குத் தளம் அமைத்தவர்களாக மேற்படி மூவரையும் சுட்டலாம்.
தமிழ் இலக்கியத்திறனாய்விலே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான வரலாற்றில் அதன் அழகியல்' என்ற அம்சமே தனிக் கவனத்தைப் பெற்றிருந்தது. தொனிப்பொருள், கற்பனை, உத்தி, நடை, இவற்றால் விளைகின்ற உணர்வுத் தாக்கம் என்பனபற்றி விரித்துரைப்பதும், இலக்கிய ஆக்கங்களில் அவை பயின்றுள்ள முறைமைகளை நயம்பட எடுத்துரைப்பதுமே இலக்கியக் கல்வி, இலக்கிய விமரிசனம்' என்பனவாக மேற்படி காலப் பகுதியிற் கருதப்பட்டன. திருமணம் செல்வக்கேசவராய முதலியார், வ.வே.சு. ஐயர் ஆகியோர் முதல் டி. கே. சிதம்பரநாத முதலியார், கு.ப. ராஜகோபாலன், பெகோ. சுந்தரராஜன், க.நா. சுப்பிரமணியம், சி. சு. செல்லப்பா, அ. ச. ஞானசம்பந்தன் முதலிய பலர் வெவ்வேறு வகைகளிலும் அணுகுமுறைகளிலும் இலக்கியத்தின் ‘அழகியல் பற்றிப் பேசியவர்களேயாவர். இலக்கியத்திறனாய்வு என்ற வகையில் சுட்டப்படும் இவர்களின் செயற்பாடுகள் பலவும் அழகியல் சார்ந்த மதிப்பீடுகளாகவே அமைந்தவையாகும்.
க. கைலாசபதி அவர்கள் தமிழ் ஆய்வியலில் ஈடுபடும் வரை - ஏறத்தாழ 1960 வரை - தமிழரின் பண்பாட்டாய்விலும், இலக்கியத் திறனாய்விலும் முனைப்பாகப் புலப்பட்டு நின்ற போக்குகள் இவைதான். இதே காலப் பகுதியில் இவ்வாறான அணுகுமுறைகள், போக்குகள் என்பவற்றுக்கும் புறம்பான புதியதொரு பார்வையும் அறிமுகமாகத் தொடங்கியிருந்தது. அதுதான் மார்க்சியப் பார்வை. இது சமூக வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகத் தரிசிப்பது, பண்பாட்டுக் கோலங்களைச் சமூக இயங்கியல் ஊடாகத் தரிசித்து மதிப்பிடுவது, கலை இலக்கியம் என்பவற்றை அழகியல் ஆக்கங்கள் என்ற அளவில் மட்டும் நோக்காமல் அவற்றைச் சமூகப் பிரச்சினைகளின் பதிவுகளாகவும் அவ்வகையில் சமூக வர்க்கங்களின் குரலாகவும் நோக்குவது. இவ்வாறான பார்வை, அணுகுமுறை
23 0 இலக்கு

Page 14
என்பன, 1920-30களில் இந்திய மண்ணில் மார்க்சியம் அறிமுகமானதைத் தொடர்ந்து, 1930-50 காலப்பகுதியில் தமிழகத்தில் அறிமுகமாயின. ஈழத்திலும் இவ்வாறான பார்வை, அணுகுமுறை என்பன 1940-50களில் தமிழிலக்கியத்துறையில் பயிலத் தொடங்கின.
தமிழகத்திலே மா. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், தொ. மு. சி. ரகுநாதன், ஆர். கே. கண்ணன், தி. க. சிவசங்கரன், நா. வானமாமலை முதலியவர்களும் ஈழத்திலே மு. கார்த்திகேசன், கே. கணேஷ், கே. ராமநாதன், மகாகவி, அ.நா. கந்தசாமி, இ. முருகையன், இளங்கீரன், செ. கணேசலிங்கன், கே. டானியல், டொமினிக் ஜீவா முதலியவர்களும் இவ்வாறான மார்க்சியப் பார்வைகளுக்கு ஆய்வு நிலையிலும் படைப்பு நிலையிலும் வெவ்வேறு விகிதங்களில் தம் பங்களிபைச் செய்து வந்தனர். இவ்வாறான செயற்பாடுகளுக்குரிய சிந்தனைப் பரிமாற்றத் தளங்களாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்' என்ற பெயரிலான அமைப்புக்களும் தமிழகத்திலும் ஈழத்திலும் தோற்றம் பெற்றிருந்தன. ஜனசக்தி, சாந்தி, தாமரை, புதுமை, மனிதன், தமிழன், புதுமை இலக்கியம், மரகதம் முதலிய இதழ்கள் மேற்படி சிந்தனைகளுக்கான பதிவேடுகளாகச் சிறப்புறப் பணியாற்றி நின்றன. தமிழர்களின் சமூக-பண்பாட்டு வரலாற்றை மார்க்சிய அடிப்படையிலான மானுடவியல், சமூகவியல், பண்பாட்டியல் அணுகுமுறைகளுடாகக் கட்டியெழுப்பும் நோக்கில் நா. வானமாமலை அவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரிலான ஒரு ஆய்வு வட்டத்தையும், அதன் பதிவேடாக ஆராய்ச்சி இதழையும் 1960களின் நடுப்பகுதியில் தோற்றுவிக்கிறார்.
இவ்வாறாக, ஆய்வு நிலையிலும் படைப்பு நிலையிலும் மார்க்சியப் பார்வை அறிமுகமாகத் தொடங்கியிருந்த சூழலில் அதனை முன்னெடுத்து, தமிழ் ஆய்வியலி ல் ஒரு கனதியான மாற்றத்தை விளைவிக்கவல்ல ஆளுமையுடன் அடிபதித்தவர் க. கைலாசபதி, 1950களின் நடுப்பகுதியிலிருந்து 1982இல் தாம் இயற்கை எய்தும்வரை ஏறத்தாழ முப்பதாண்டுக் காலத் தமிழ் ஆய்வியலில் தமது ஆளுமையை அவர் மிக அழுத்தமாகப் பதித்துக் கொண்டார், தமிழ் ஆய்வியலின் திசையறி கருவியாகச் சிறப்புடன் செயற்பட்டார்.
கைலாசபதியின்
ஆளுமையின் உருவாக்கமும் இயங்கு நிலையும்
தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆற்றல் பெற்றிருந்த க. கைலாசபதி அவர்கள் ஈழத்தின் முதல்வரிசைக் கல்வி நிலையங்களாகத் திகழும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு றோயல் கல்லூரியிலும் தம் இடைநிலைக் கல்வியைப் பெற்றவர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலே இவர் பயின்ற காலத்தில் ஆசிரியப் பணி புரிந்தவரான மு. கார்த்திகேசன் அவர்கள் மார்க்சியத்தைச் சிந்தனை, செயல் ஆகிய இரண்டிலும் முழுநிலையில் ஏற்றுச் சமூக நோக்குடன் செய்ற்பட்டு வந்தவர். அவரால் உருவாக்கப்பட்ட மார்க்சிய போதம்
24 0 இலக்கு

பெற்ற மாணவ பரம்பரையில் ஒருவராக கைலாசபதி அமைந்தார். இவ்வகையில் அவரது உடன் தோழருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கவிஞர் இ. முருகையன் அவர்கள். இத்தோழமை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற கைலாசபதி அவர்களுக்கு பேராசிரியர்கள் கலாநிதி க. கணபதிப் பிள்ளை, வி. செல்வநாயகம், கலாநிதி, சு. வித்தியானந்தன் ஆகியோர் சிறந்த வழிகாட்டிகளாக அமைந்தனர். இவர்களில் செல்வநாயகமவர்கள் இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு என்பவற்றுக்கான அடிப்படைகளைக் கற்பித்தார். ஏனைய இருவரும் மொழி-பண்பாடு என்பன தொடர்பான கல்வியை வழங்கியதோடு, கல்வியாளனொருவன் சமூகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு செயற்படுவதற்கான வழிகளையும் தம் சமூக ஈடுபாட்டாற் புலப்படுத்தி நின்றனர்.
தமிழுடன் துணைப்பாடமாக மேலைத்தேய வரலாற்றைக் கைலாசபதி பயின்றார். இந்த மேலைத்தேய வரலாற்றுக் கல்வியானது சமூக இயக்கங்கள், சமுதாய வரலாற்றுச் செல்நெறிகள் என்பவற்றைப் பற்றிய தெளிவைப் பெறவும், மார்க்சியம் என்ற தத்துவத்தின் தனித்தன்மையை வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்து கொள்ளவும் துணைபுரிந்தது. இந்திய அல்லது கீழைத்தேய நாடுகளின் வரலாறுகளைப் பயிலும் ஒருவருக்கு மேற்படி சமூக வரலாறு தொடர்பான தெளிவைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பதை இத்தொடர்பில் சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது)
இளங்கலை (B.A. Hons) பட்டத்தில் முதல் தர சித்தி எய்திய கைலாசபதி அவர்கள் 1957 முதல் சில ஆண்டுகள் தினகரன் இதழில் ஆசிரியப் பணி புரிந்தபோது ஈழத்தின் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், வாசகர்கள் ஆகிய முத்தரப்பினருடனும் மிக நெருக்கமான தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். சமகாலத் தமிழகத்தின் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் ஆகியோருடனும் மிக நெருக்கமான தொடர்புகளை இவர் உருவாக்கிக் கொண்டார். இவற்றால், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் செல்நெறியைத் தெரிந்து தெளிந்தார். அத்துடன் ஸ்திர்காலத்தில் அது செல்ல வேண்டிய நெறியைப் பற்றிய எண்ணக் கருக்களை முன்வைப்பதற்கான ஆளுமையையும் வளர்த்துக் கொண்டார்.
பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக அவர் ஏற்றுக் கொண்ட பணி, தமிழ் ஆய்வியலில் அவர் முழுநிலையில் ஈடுபட வாய்ப்பானதாக அமைந்தது. அப்பணியின் தொடர்ச்சியாக அவர் கலாநிதி (Ph.D.) பட்டம் பெற இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் சென்றபோது, அங்கு அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக அமைந்தவர் மார்க்சியப் பேரறிஞர் ஜோர்ஜ் தொம்ஸன் அவர்களாவர். s
இவரது நெறிப்படுத்தலில் கைலாசபதி அவர்கள் மேற்கொண்ட Tamil Heroic Poetry’ (தமிழ் வீரயுகக் கவிதை என்ற ஆய்வு அவருக்குக் கலாநிதி (Ph.D.) பட்டத்தை ஈட்டித் தந்ததோடு, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வெளியீடாக நூல்வடிவம் எய்தும் சிறப்பையும் பெற்றது.
25 0 இலக்கு

Page 15
தமிழ் விரிவுரையாளர் என்ற வகையில் கலாநிதி க. கைலாசபதி அவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பாடப்பகுதியின் பொருண்மைக்கு ஏற்றவகையில் தகவல்களைத் திரட்டவும், அவற்றினூடாகக் கருத்துக்களைக் கட்டியமைக்கவும், அவற்றைக் "கேட்டார்ப் பிணிக்கும் வகையிலே எடுத்துரைக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார். ஆணித்தரமான முடிவுகளுடன் கட்டுரைகளை எழுதும் பயிற்சியை வளர்த்துக் கொண்டார். மேலும், கைலாசபதி அவர்கள் மிகத்திட்டமிட்டு தகவல்களைப் பேணிக் கொள்ளும் (Filing) கோப்பு முறைமையைக் கடைப்பிடித்தார்.
இவ்வாறான அடிப்படைத் தகுதிகளோடு மட்டும் அமையாமல், தாம் வகிக்கும் பதவிநிலை, அதன் அதிகார வாய்ப்புக்கள், செல்வாக்கு முதலியவற்றை மிக அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான துணிவும் தன்னம்பிக்கையும் உடையவராகவும் அவர் திகழ்ந்தார். இதனால் தமிழ் ஆய்வியல் தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் நிகழ்வனவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் அவரால் முடிந்தது. அவற்றை உடனடியாகப் பயன்படுத்தி, தம் ஆளுமையின் வளர்ச்சியை உடனுக்குடன் பதிவு செய்து கொள்ளும் மதினுட்பமும் செயல்வேகமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தன.
இவ்வாறாக ஒரு ஆய்வாளன் என்ற நிலையில் கைலாசபதி அவர்கள் தம்மை நாளுக்கு நாள் புதுப்பித்துக் கொள்ளும் - வளர்த்துக்கொள்ளும் - திறனுடன் திகழ்ந்தமையால், சமகாலத்தில் ஈழத்திலும், தமிழகத்திலும், அனைத்துலக மட்டத்திலும் ஒரு பெரும் 'ஆய்வாளர் - ஆய்வுமாணவர் வட்டம் இவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்க ஆவலுடன் காத்திருந்தது. இவரது அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் என்பனவற்றை வேதவாக்காக ஏற்கும் நிலை சமகால ஆய்வாளர் பலரிடம் நிலவியது. இவரிடம் தம் படைப்புக்களுக்கும் ஆய்வுகளுக்கும் முன்னுரை, அணிந்துரை, மதிப்புரை என்பன பெறுவதற்குப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் பேராவல் கொண்டிருந்தனர். இந்தியப் பல்கலைக் கழகங்கள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் என்பனவும் அனைத்துலக மட்டத்தில் அயோவாப் பல்கலைக்கழகம், கலிபோர்ணியப் பல்கலைக்கழகம் முதலி யனவும் இவரது ஆளுமையை மதித்து வரவேற்றுக் கெளரவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் சமகாலத் தமிழ்ப் பேரறிஞர்கள் பேராசிரியர்கள் ஆகிய பலருக்கும் கிட்டாத ஒரு உயர் தனிக் கணிப்பை இவர் எய்தியிருந்தார். இவ்வகையில் இவருக்கு இணையாக இத்தகு கணிப்பைப் பெற்றவராக நம்மத்தியில் இன்று திகழ்ந்து வருபவர் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களாவர். இவரும் கைலாசபதியைப் போல ஜோர்ஜ் தொம்ஸனது வழிகாட்டலில் கலாநிதிப்பட்ட ஆய்வு மேற்கொண்டவர் என்பதும், மார்க்சிய நோக்கிலான ஆய்வை முன்னெடுப்பதில் கைலாசபதியுடன் இணைந்து செயற்பட்டு நின்றவர் என்பதும், கைலாசபதிக்குப் பின் இப்பொழுதும் செயற்பட்டு வருபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
26 0 இலக்கு

கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரியப் பணிபுரிந்த காலத்திலும், பின்னர் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ள காலப் பகுதிகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பேரவை முதலிய முற்போக்குச் சிந்தனைத் தளங்களில் இணைந்து செயற்பட்டவர், அவை சார்ந்த இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தவர். குறிப்பாக மல்லிகை, தாயகம் ஆகிய இதழ்கள் இவரது சிந்தனைத் தெறிப்புக்களின் உடனடிப் பதிவுக் களங்களாக அமைந்தவையாகும். தமிழகத்திலும் சாந்தி, சரஸ்வதி, தாமரை முதலிய இதழ்களுடன் இவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். இவற்றில் இவரது எழுத்துக்கள் பிரசுரமாயின.
கைலாசபதியவர்கள் தம் பதவிநிலைச் செயற்பாடுகளோடு மேலதிக கெளரவங்களாக யுனெஸ்கோவுக்கான இலங்கைத் தேசிய ஆணைக்குழு (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைச் சபை (1970), இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம் (1971-74), இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆலோசனைக் குழு (1973) என்பவற்றிலும் நியமனம் பெற்றுப் பணியாற்றியவர். இலங்கைக் கலைக் கழகத்தின் 'தமிழ் இலக்கியக்குழு', 'நாட்டியக்குழு என்பவற்றுக்குத் தலைமை வகித்து (1972-1976) வழிநடத்தியவர் என்ற பெருமையும்
கைலாசபதியவர்களின் ஆய்வுப்பரப்பும் பார்வையும்
தமிழ் விரிவுரையாளர் - பேராசிரியர் - என்ற வகையிலே தமிழரின் மொழி, இலக்கியம் ஏனைய பண்பாட்டுக் கூறுகள் என்பன தொடர்பான பல்வேறு ஆக்கங்களையும் தரிசிக்க வேண்டிய கடமை அவர் முன் நின்றது. அக்கடமையே அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழ் மொழி - இலக்கிய பரப்பின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் கவனம் செலுத்தினார். எழுத்திற் பேணப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாய்மொழி மரபுகளையும் அவர் கருத்திற் கொண்டார். மேலும் இசை, நடனம், நாடகம், திரைப்படம் மற்றும் பல்வேறு பொதுத் தொடர்பு ஊடகங்களும் அவரது பார்வைப் பரப்புக்கு உட்பட்டன. ஆங்கிலம் முதலி ய பிறமொழிகளின் கலை இலக்கியங்கள், திறனாய்வு முறைமைகள் என்பவைபற்றிய அறிவு அவருக்கு வாய்த்திருந்தமையால், தமிழின் மேற்படி கூறுகளை அவரால் ஒப்பியல் நோக்கில் அணுக முடிந்தது. கலை, இலக்கியம் ஆகிய எல்லைகளுக்கு அப்பால் அனைத்துலக அரசியலிலும் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறாக அவர் புலப்படுத்தி நின்ற பன்முகப்பார்வையின் செழுமையை அவரது எழுத்துக்கள் நமக்குத் தெளிவாக இனங்காட்டி நிற்கின்றன.
கைலாசபதியின் ஆக்கங்கள் என்ற வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல் வடிவம் பெற்றவை 19. இவற்றுள் இரு நூல்களுக்கு அவர் இணையாசிரியர்.
27 0 இலக்கு

Page 16
நூல்கள் ஆண்டு வரிசைப்படி : முதற் பதிப்புகள்)
தமிழில் :
இரு மஹாகவிகள் (1962) பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968) ஒப்பியல் இலக்கியம் 1969)
அடியும் முடியும் (1970) கவிதைநயம் (1970) இ முருகையனுடன் இணைந்து எழுதியது) இலக்கியமும் திறனாய்வும் (1972) பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1973) மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும் (1979) (மனைவி சர்வ மங்களம் அவர்களுடன் இணைந்து எழுதியது 10. சமூகவியலும் இலக்கியமும் (1979) 1. திறனாய்வுப் பிரச்சினைகள் (1980 12. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் (1980) 13. இலக்கியச் சிந்தனைகள் (1983) 14. பாரதி ஆய்வுகள் (1984) 15. ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (1986)
ஆங்கிலத்தில் :
Tamil Heroic Poetry (1968) The Relation of Tanil and Western Literature On Art and Literature (1986) . On Bharathi (1987)
கைலாசபதியவர்கள் ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள் வானொலி உரை என்ற வகைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதியவை 200க்கு மேல். நூல்களுக்கு முன்னுரை, அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை முதலிய வகைகளில் எழுதியவை 43. இவ்வாறான ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், முன்னுரை முதலி யவற்றிற் சில மேலே நாம் நோக்கிய நூல்கள் பலவற்றுள் தொகுக்கப்பட்டுள்ளன. பெருந் தொகையான இவ்வகையாக்கங்கள் நூலுருப் பெறவில்லை.
மேற்குறித்தவாறான அவரது ஆய்வுப்பரப்பிலே மக்கள் சீனம் தொடர்பான நூல், மற்றும் சில கட்டுரைகள் தவிர, ஏனைய மிகப்பெரும் பகுதி தமிழ் ஆய்வியல் சார்ந்ததாகும். தமிழியல் ஆய்வுப் பரப்பில் அவர் பல்வேறு விசயங்களைப் பற்றியும் பேசியிருப்பினும் அவையனைத்தினூடாகவும் அவர் கவனம் செலுத்தி நின்ற துறைகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று. தமிழர் சமுதாயத்துக்கும் அதன் கலை
28 0 இலக்கு ''

இலக்கியங்களுக்கும் உள்ள உறவுநிலை தொடர்பான ஆய்வியல். இன்னொன்று. திறனாய்வியல். அவரது தமிழ் ஆய்வியற் செயற்பாடுகள் அனைத்திலும் இந்த இரு துறைகள் சார்ந்த உணர்வோட்டங்களே உள் நின்று இயக்கின. இந்த உணர்வோட்டங்களை வழிநடத்தி நின்றது அவரது மார்க்சிய தத்துவ அடிப்படையிலான சமூகப் பார்வையாகும்.
நாம் வாழும் இந்த உலகைப் புறநிலை மெய்ம்மையாக ஏற்றுக்கொள்வது மார்க்சியத் தத்துவம், அது உலக இயக்கம், சமுதாயக் கட்டமைப்புக்கள் என்பவற்றுக்கான அடிப்படைக் கூறுகளை அறிவியலடிப்படையில் தெளிவாக விளக்கி நிற்பது. இத்தெளிவினூடாக, சமூக நலனுக்கு ஏற்றவகையில் உலகை - சமுதாயத்தை - மாற்றியமைப்பதற்கு இது வழி காட்டுகிறது. சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளங்களாக உற்பத்தியுறவு நிலை, பொருளியல் அடிப்படைகள் என்பவற்றைச் சுட்டும் மார்க்சியத் தத்துவம், கலை இலக்கியம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை மேற்கட்டுமானங்களாகக் காண்பது. அடித்தளங்களில் நிகழும் மாற்றம் மேற்படி மேற்கட்டுமானங்களிலும் மாற்றத்தை விளைவிக்கும் என்பது மார்க்சியத்தின் பொது விதியாகும்.
இத்தத்துவ அடிப்படையிலான ஆய்வியல் அணுகுமுறை இயங்கியல் எனப்படும். எந்த ஒரு பொருளையும் தற்சார்பு இன்றிப் புறநிலையாக அணுகுதல், அதனைச் சமுதாய வரலாற்றுச் சூழலில் பொருத்தி நோக்குதல், அதன் உள்ளார்ந்த முரண்நிலைக் கூறுகளையும் அவற்றின் இயக்கத்தால் நிகழும் பண்புநிலை மாற்றங்களையும் தெளிந்து கொள்ளுதல் என்பன் இயங்கியல் அணுகுமுறையின் பொது விதிகளாகும்.
கைலாசபதியவர்கள் மார்க்சியம் பற்றியும் அதன் இயங்கியல் அணுகுமுறை பற்றியும் நன்கு தெரிந்து தெளிந்திருந்தார். அவற்றினூடாகத் தமிழர் சமுதாயத்தின் வரலாற்றியக்கத்தை இனங் காண்பதில் உணர்வு பூர்வமாக ஈடுபட்டார்; அவ்வாறான வரலாற்றியக்கத்தில் கலை இலக்கியம் என்பன முகிழ்ப்பதற்கு அடிநிலைகளாகத் திகழ்ந்திருக்கக்கூடிய உணர்வு நிலைகளின் வர்க்கச் சார்புகளைக் கண்டு காட்ட விழைந்தார். இவை தமிழர் சமுதாயத்துக்கும் அதன் கலை இலக்கியம் என்பவற்றுக்குமிடையிலான உறவுநிலைகள் பற்றி விளக்கும் ஆய்வு முயற்சிகளாகக் செயல்வடிவம் எய்தின. v
85ᎧᏡᎠᎧu) இலக்கியத் திறனாய்வு என்ற வகையிலே, அவர் தமது கால கட்டத்தில் முனைப்பாகப் புலப்பட்டு நின்ற அழகியல் அணுகுமுறைகளை மறுதலித்து 'சமூகப் பயன்பாடு என்ற அம்சத்தை முதன்மைப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வகையில் உருவத்தைவிட உள்ளடக்கமே முக்கியம் என்பதை வலியுறுத்தினார். இந்த அடிப்படையில் படைப்புக்களின் தரம், படைப்பாளிகளின் ஆற்றல், அணுகுமுறை என்பவற்றைச் செயல்முறைத் திறனாய்வுக்கு உட்படுத்தியதோடு மட்டுமன்றி, அனைத்துலக மட்டத்திலான திறனாய்வுச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்து தமிழ் மரபுடன் பொருத்தி நோக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டார். இவ்வகை முயற்சிகளினூடாக தமிழில் நவீன திறனாய்வியல் வளர்ச்சிக்குப் பாதை சமைத்த ஒருவராக அமைந்தார்.
29 D இலக்கு

Page 17
கைலாசபதி பார்வையில்
தமிழர் சமுதாய வரலாறும் இலக்கியமும்
கைலாசபதியவர்களின் ஆய்வுப் பார்வை, தமிழர் சமுதாய வரலாற்றுக் காலகட்டம் முழுவதையும் பொதுவாகக் கருத்துட் கொண்டமைந்தது. எனினும் அவற்றுள் குறிப்பாக மூன்று கால கட்டங்களில் அவர் தனிக் கவனம் செலுத்தினார்.
966 .
- சங்க இலக்கிய காலம் (கி.பி. 250 வரையான காலப்பகுதி)
பக்தி இலக்கிய - காப்பிய காலம் (கி.பி. 600-1300)
- நவீன இலக்கிய காலம் (கி.பி. 19ம் நூ.ஆ. தொடக்கம் சமகாலம்
Gugo)
அவரது எழுத்துக்களும் பெரும்பாலானவை மேற்படி காலப் பகுதிகளின் சமுதாய நிலைகள், அவற்றுக்கும் அவ்வக்கால இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு என்பன பற்றியே அமைந்தனவாகும்.
சங்க இலக்கிய காலப்பகுதி மீது அவர் புலப்படுத்தி நின்ற ஈடுபாட்டுக்கு முக்கிய சான்றாக அமைவது தமிழ் வீரயுகக் கவிதை (Tamil Heroic Poetry) என்ற ஆய்வேடு. இதுதவிர இத் தொடர்பில் பல கட்டுரைகளும் அவர் எழுதியுள்ளார். பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம் என்பவற்றிலான அவரின் -ஈடுபாடுகளுக்கு "நாடும் நாயன்மாரும்", "பேரரசும் பெருந்தத்துவமும்" ஆகிய கட்டுரைகள் தக்க சான்றாவன. இவை பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற நூலில் இடம் பெற்றுள்ளன. இத்தொடர்பில் வேறு சில கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழ் நவீன இலக்கிய காலப் பகுதியில் அவர் புலப்படுத்தி நின்ற தனி ஈடுபாட்டிற்குச் சான்றுகளாக இரு மகாகவிகள், தமிழ் நாவல் இலக்கியம், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். அவர் எழுதியுள்ள பெருந்தொகையான கட்டுரைகள், நிகழ்த்தியுள்ள வானொலி உரைகள் என்பன நவீன இலக்கியம் சார்ந்தனவாகவே அமைந்தன என்பது நம் கவனத்துக்குரியது. அதிலும் குறிப்பாக நவீன தமிழ் இலக்கியத்தின் முதல்வனாகத் திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஆளுமையையும் அதற்கமைந்த சூழலையும் மையப்படுத்தியே அவர் ஆழமாகச் சிந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியின் ஆளுமைபற்றிய பார்வைக்கு அடுத்ததாக அவர் கவனம் செலுத்தி நின்ற துறை தமிழ் நாவலிலக்கியமாகும். இவ்விரண்டையும் அடுத்து அவர் ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி பற்றியும் கவனம் செலுத்தியுள்ளார். இவ்வாறான முயற்சிகளில் அவரது தனித்தன்மைகள் புலப்படுமாற்றைச் சுருக்கமாக நோக்கலாம்.
தமிழரின் சமுதாய வரலாறு, இலக்கிய வரலாறு என்பவற்றை கால கட்டங்களாக வகைப்படுத்தி நோக்கும் முயற்சியில் கைலாசபதியவர்கள் தமக்கு முற்பட்ட, சமகால ஆய்வாளர் பலரிலிருந்தும் பேறுபட்டார். பொதுவாக
30 0 இலக்கு

நூற்றாண்டுகள் அடிப்படையிலும், அரசியல் வரலாற்றடிப்படையிலும் காலம் சுட்டும் வழக்கமே அவர் காலத்துக்கு முன் நிலவியது. நூற்றாண்டுகளாக வகைப்படுத்துவதில் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை முதலியவர்களும் சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் முதலியனவாக வகைப்படுத்துவதில் பேராசிரியர் வி. செல்வநாயகம் முதலி யவர்களும் ஈடுபட்டிருந்தனர். W
கைலாசபதியவர்களின் சமகாலத்தவரும் அவருடன் ஒரே துறையில் பணியாற்றி நின்றவருமான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் கருத்தியல் அடிப்படையில் இயற்கைநெறிக் காலம், அறநெறிக் காலம், பக்தி நெறிக் காலம், தத்துவநெறிக் காலம், அறிவியல்நெறிக் காலம் என்பனவாக வகைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். கைலாசபதியவர்கள் மேற்படி பார்வைகளினின்று வேறுபட்டு மார்க்சிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில் பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலைவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம், சமவுடைமைச் சமூகம் என்பனவாகக் காலப் பகுப்பு நோக்கை மேற்கொண்டார். இவ்வகையில் தமிழரின் ‘சமுதாய - இலக்கிய வரலாறுகளுக்கு ஒரு புதிய பொருத்தமான பார்வையை முன்வைத்த சிறப்பு இவருக்கு உரியதாகிறது.
இவ்வாறான பார்வையின் ஊடாக அவர் சங்க இலக்கிய காலப் பகுதியை 'gifusib' (Heroic Age) GT6015 56TLITff.
"அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்குச் சமூகம் மாறும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனி மனிதக் கொள்கை உடைத்தெறிந்து, வலுக் கொள்கையடிப்படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள் நிறைந்த வரலாற்று நிலையை வீரயுகம் என்றழைப்பர்",
என 'வீரயுகம்' என்பதற்கு அவர் விளக்கம் தருகிறார். சங்கப் பாடல்கள் எனப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டுத் தொகப்புக்களிலமைந்த பாடல்கள் பலவும் சுட்டி நிற்கும் சமுதாயம் மேற்படி வரலாற்று நிலை சார்ந்ததே என்பது அவரது கணிப்பாகும்.
"புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே, அளவு மாறுபாடு குணமாறுபாடாக உருமாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்",
எனச் சங்ககாலத்தின் அரசு உருவாக்க சூழலின் வரலாற்றை அவர் சுட்டியுணர்த்துகிறார்.
தமிழர் சமுதாயம் தனது தொன்மையான இனக்குழு - பழம் பொதுமை - நிலையிலிருந்து, நிலவுடைமையை நோக்கி மாற்றமடைந்து கொண்டிருந்த வரலாற்றுச் செல்நெறியின் ஒரு கட்டமாகவே, சங்க கால வரலாற்றுச் சூழலை அவர்
31 0 இலக்கு

Page 18
தரிசிப்பது தெரிகிறது. இவ்வாறான தரிசனத்தளத்தில் நின்றே அவர் தமது Tamil Heroic Poetry (1966) என்ற கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண்டு நிறைவு செய்தார் என்பது இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியது.
அவர் இப்பார்வையை முன்வைத்த காலப்பகுதியில் - 1960கள் வரையான காலப்பகுதியில் - சங்ககாலம் என்பது தமிழர் பிறபண்பாட்டுக் கலப்புக்குட்படாது. தம் தனித்தன்மையைப் பேணி நின்ற காலப்பகுதி என்பதும், அக்காலப் பகுதியில் வீரம், கற்பு, அறம் ஆகிய பண்புகளில் தமிழர் மேலோங்கி நின்றனர் என்பதுமான கருத்து நிலைகளே பெருவழக்காகத் திகழ்ந்தன. இவ்வகையில் சங்ககாலம் தமிழர் வரலாற்றில் பொற்காலம்' என்ற எண்ணம் அன்று தமிழியலாரிடையே பரவலாக நிலவி வந்தது. இந்தப் பொற்கால மாயத்திரையைக் கைலாசபதியின் மேற்படி பார்வை கிழித்தெறிந்தது. உடைமையுணர்வு சார்ந்த போராட்டங்களால் தமிழரின் பழம் பொதுமைச் சமூகத்தில் பண்புநிலை மாற்றங்கள் நிகழ்ந்த காலமாக - ஒரு நிலைமாறு காலமாக - அப்பார்வை அக்காலப் பகுதியைக் காட்டி நின்றது. இப்பண்புநிலை மாற்றம் அவற்றின் இயங்குநிலை என்பன பற்றி கைலாசபதி அவர்களின் விளக்கம் வருமாறு :
"முன்னர் குழுவுக்கும் கணத்துக்கும் பொதுவாக இருந்த 'சகோதரத்துவ ஒழுகலாறு இப்பொழுது தலைநிலையெய்திய 'பெருஞ்செய்யாடவர் ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்கால கட்டத்திலே தவிர்க்க முடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன. அக்காலத்திலே புலவராக மட்டுமன்றி அறிவராகவும் வரலாற்றாசிரியராகவும் போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர்கள் இந்த நடைமுறை விதிகளைப் பிரசித்தப் படுத்தினர். சமுதாயம் முழுவதற்கும் பொதுவானவையல்ல இவ்விதிகள். தலை மக்களுக்கிடையேயுள்ள "கண்ணியமான" உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படை எனலாம்.
இவ்வாறு சங்ககாலச் சமுதாய பண்பாட்டு வரலாற்றைக் காட்டிய கைலாசபதியவர்கள் சங்க இலக்கியப் பரப்பில் பெரும்பாலான பாடல்கள் வாய் மொழிப் பாடல்களாக உருவானவை எனக் குறிப்பிடுவர். அவரது Tamil Heroic Poetry என்ற ஆய்வில் நிறுவப்பட்டுள்ள முக்கிய கருத்து நிலை இது.
'வாய்மொழி இலக்கியம்' என்பது, குறித்த ஒரு கால கட்டத்தில் குறித்த ஒரு புலவரால் திட்டப்பாங்குடன் எழுதப்படாமல், மக்களின் அனுபவங்களினூடாக உருவாகி, செவி வழியாகப் பேணப்பட்டு நிற்பவற்றைச் சுட்டி நிற்பது. குறித்த சிலவகை அடிக்கருத்துக்கள் (Themes), சூழ்நிலைசார் கூறுகள் (Situational ASpects), வாக்கியத் தொடர்கள், தொடர்களின் பகுதிகள் என்பன மீண்டும் மீண்டும் பயின்று வருவது வாய்மொழி மரபின் முக்கிய பொதுப்பண்பாகும். சங்க இலக்கியப் பாடல்களில் இவ்வாறான பொதுப்பண்புகள் பயின்றுள்ளமை கைலாசபதியவர்களின் மேற்படி கருதுகோளுக்கு அடிப்படையாயிற்று. அவர் இப்பாடல்களை, ஏறத்தாழ இவ்வகைப் பண்புகளைக் கொண்ட கிரேக்க கெல்டிக் ܫܵܘਜੰ(£á" ဟုံးနှီး’ ”
32 0 இலக்கு

பிரித்தெடுத்துவிட்டு அவர் படைப்பை ஆய்வது கைலாசபதி அவர்களுக்கு உடன்பாடில்லை.
அடியும் முடியும் தொகுப்பில் இறுதிக் கட்டுரை நந்தனைப்பற்றிய கட்டுரை. நம்பியாண்டார் நம்பியின் குறிப்பு முதற்கொண்டு சுந்தரர், அதன்பிறகு சேக்கிழார் நந்தன் கதையை விரித்துப் பாடியதைக் குறிப்பிடுகிறார். கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனை விரிவான ஆய்வுக்கு இடம் தருகிறது. நிலத்தில் தனியுடைமை முறையை பிரித்தானியர் புகுத்தினர். ஜமீன்தார்கள், மிராசுதார்கள் தோற்றுவிக்கப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பாரதியாரின் நந்தன் கதை உருப்பெற்றதை நுட்பமாக விளக்குகிறார் கைலாசபதி, சாதியின் வர்க்கத்தன்மை, தேசியத்தன்மை பற்றியும் குறிப்பிடுகிறார். பிரித்தானியர் காலத்து நிலவுடைமை மாற்றம் பற்றி விளக்கும் பொழுது அதற்கு முன்னர் நிலவிய உறவு முறையை ஆசிய உற்பத்திமுறை என்று நாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு விபரங்களைத் தருகிறார்.
சேக்கிழாரும் பாரதியாரும் கடைசியாக நந்தன் கதையைப் பாடிய முருகையனும் சமய எல்லைக்குள் வைத்து சித்திரித்தனர்.
நந்தனின் புரட்சி - ஓர் அகவயப்புரட்சி. வரலாற்றுச் சூழலை கணக்கில் கொள்ளாதபோது இவ்வகைப் படைப்பே சாத்தியம் என்ற முறையில் கருத்து தெரிவிக்கிறார் கைலாசபதி, இங்கும் நந்தனின் உளவியலுக்குத் தரப்படும் அழுத்தம் காரணமாக வரலாறு மற்றும் சமூகச் சூழல் புறக்கணிக்கப்படுகிறது என்பது கைலாசபதியின் கருத்து. .
2
அடியும் முடியும் வெளிவந்து சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. இடையில் மார்க்சியம் பற்றி நமக்கு கூடுதலான அனுபவங்களும், புரிதலும் ஏற்பட்டிருக்கின்றன. வரலாறு என்பது கட்டமைக்கப்படுவது என்ற கருத்து இன்று முன்னுக்கு வந்துள்ளது. மொழி என்பது சொற்களின் தொகுதி மற்றும் இலக்கண விதிகளின் தொகுப்பு என்ற கருத்து இன்று பின்னுக்கு தள்ளப்படுகிறது. மாறாக, மொழி என்ற கருத்து அறிவு மற்றும் மனம் என்றும், மொழியினால்தான் நாம் கட்டமைக்கப்படுகிறோம் என்றும் கருதும் போக்கு இன்று முன்னுக்கு வந்திருக்கிறது. உளவியல் ஆய்வுகள் மேலும் நுட்பமும் திட்பமும் பெற்றுள்ளன. இந்த பின்னணியில் கைலாசபதி அவர்களின் ஆய்வுமுறை மட்டுமல்லாமல், அன்றைய சூழலில் அவர் தந்த முடிவுகளும் இன்று மறு ஆய்வுக்குரியவை. இது தவிர காலந்தோறும் அகலிகை கதையும், கண்ணகி கதையும் மறு படைப்பாக்கம் பெற்றுள்ளதை கைலாசபதி விரிவாக ஆராய்ந்தார். கடந்த 25 ஆண்டுகளுக்குள் அகலிகையும், கண்ணகியும் மேலும் சில படைப்பாளிகளால் மறு ஆக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றனர். கைலாசபதி அவர்களின் நெறியில் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்கள் காலந்தோறும் எவ்வாறு புதிய பொருள் காணுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய சிந்தனையும் நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நோக்கிலும் கைலாசபதி அவர்கள் நம் போற்றுதலுக்கு உரியவர்.
33 0 இலக்கு "

Page 19
வரலாறு என்பது வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியர் கண்டதை ஒரு வகையில் கட்டமைப்பு என்றே பொருள்படுத்துவது பொருந்தும். எனினும், கட்டமைப்பு என்பதன் கூறுகள் விரிந்து செல்கின்றன. நிகழ்கால நோக்கிலிருந்துதான் தொன்மையான வரலாறு பார்க்கப்படுகிறது, அல்லது. கட்டமைக்கப்படுகிறது என்ற கருத்தை கைலாசபதி அவர்கள் புரிந்து கொண்டிருந்தார் எனினும், அதை முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மொழிபற்றிய பெருமித உணர்வு தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியங்களின் மேன்மை பற்றிய உணர்வு முதலியவற்றை திராவிட இயக்கத்தினர் போற்றியதை மார்க்சியர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழின் தொன்மை, தமிழ் நூல்களின் காலம் முதலியவை பற்றி அறிவியல் முறையிலான வரலாற்றாய்வில் மார்க்சியர் கருத்துச் செலுத்தினர். ஆரியர் திராவிடர் இனப் போராட்டம் மார்க்சியருக்கு உடன்பாடில்லை. சிலப்பதிகாரத்தினுள் தமிழனின் வீரம் முதலியனவற்றை திராவிட இயக்கத்தினர் கண்டதை மார்க்சியர் மறுத்தனர். இவ்வாறெல்லாம் தம் கால அரசியல் தேவைகளை ஒட்டி முன்னைய வரலாற்றுக்கு திராவிட இயக்கத்தார் கண்ட பொருள் கைலாசபதி அவர்களுக்கு உடன்பாடில்லை. வரலாற்றாய்வை அறிவியல் முறையில் கறாராக செய்ய வேண்டும் என்பது கைலாசபதி அவர்களின் கருத்து.
இத்தகைய இருவேறு ஆய்வு முறைகளுக்கு அடியில் இருந்தது அரசியல்
என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தின் திராவிட இயக்கத்தினர் வளர்ச்சியை மார்க்சியரால் செரித்துக்கொள்ள இயலவில்லை. இலங்கையில் தமிழரசுக் கட்சியை மார்க்சியர் ஏற்கவில்லை. திராவிட இயக்கத்தினர் இனம் என்று பேசியதை, ஐரோப்பியர் தம் அரசியல் தேவை கருதி முன்வைத்த மரபு இனம் (Race) என்று தமிழக சூழலில் மார்க்சியர் மதிப்பிட்டனர். திராவிட இயக்கத்தினரின் இனம் என்ற கருத்தாக்கத்தினுள் ஆழ்ந்த பார்வை செலுத்தியிருக்க கூடுமானால், தேசீய இனம் என்று பொருள் கண்டிருக்க முடியும். தேசீய இனம் என்ற கருத்து மார்க்சியர் ஆரத்தழுவிக் கொள்ளவேண்டிய கருத்து. ஆனால் இந்திய தேசீயம் என்றும் இலங்கைத் தேசீயமென்றும் மார்க்சியத்தை பிரித்த நிலையில் தமிழ் தேசீய இனம் என்பது அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை. நிகழ்கால அரசியல் உணர்வென்பது வரலாற்றை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதற்கும் இவர்களின் போக்கை சான்றாக கொள்ளலாம்.
இனம் என்பதற்கு தேசீய இனம் என பொருள் கண்டு, இந்திய இலங்கை தேசீயம் என்பதை மறுத்து, தமிழ் தேசீயம் என்பதை மார்க்சியர் ஏற்றிருப்பாரானால், நம் கால வரலாற்றின் திசைவழி வேறு தடத்தில் சென்றிருக்கமுடியும். திராவிட இயக்கத்தினரின் தமிழ் தேச விடுதலையை மார்க்சியரும் ஏற்றுக்கொண்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்க முடியும். இவ்வாறு செய்ய இயலாமல் மார்க்சியரின் கண்ணை மறைத்த வரலாற்று மாயையை எப்படி விளக்குவது ? சோவியத் யூனியனில் ஆதிக்கம் செலுத்திய ரஷ்ய தேசீய இனத்தின் பாதிப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும், ! ۔۔۔۔
நிகழ்கால நோக்கில் பழைய வரலாற்றை பொருள்படுத்துவது தவறு என்பது அறிவியல் நோக்கு என்று மார்க்சியர் கருதினர். இதன் காரணமாக இளங்கோ
34 0 இலக்கு

அடிகளிடம் வெளிப்பட்ட புரட்சி உணர்வையும், கைலாசபதி ஒப்புக்கொள்கிறார். அதே சமயம், இலக்கியம் என்பது பிரதிபலிப்பு என்ற மார்க்சிய கொள்கையைத்தான் வரித்துக் கொள்கிறார். இதனடிப்படையில் மக்களாட்சி யுகத்தில் வெளிப்படுவதாகிய புரட்சி உணர்வு நிலமான்ய சமூகத்தில் வெளிப்படமுடியாது என்று துணிகிறார். இலக்கியம் என்பது பிரதிபலிப்பு என்பதை நாம் மறுக்கவில்லை. பிரதிபலிப்பு என்பதினுள்ளும் இரு வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றை PASSIVE REFLECTION, ACTIVE REFLECTION 6Taigo sa partb. Gayahat galang கூறி இருக்கிறார். இம்முறையில் நிகழும் சூழலுக்கு எதிர்வினை என்ற முறையில் இலக்கியத்திற்கு பொருள் காணமுடியும். கண்ணகி செய்த புரட்சி என்பது அக்கால சூழலில் ஒரு கற்பனை என்பதில் ஐயமில்லை. எனினும் மக்களின் உணர்வை ஆற்றலோடு வெளிப்படுத்தக் கூடிய கற்பனை, கழிந்து போன ஆதிபொதுமைச் சமூகத்தின் பொதுமை உணர்வை இளங்கோ முதலிய படைப்பாளிகள் இன்னும் தமக்கு உட்கிடையாக கொண்டிருக்கின்றனர் என்பதையும் இந்த கற்பனை வழியே நாம் புரிந்து கொள்ளமுடியும்.
ஆரிய திராவிட முரண் என்பது பழங்காலம் முதற்கொண்டு இன்றுவரை மறுக்க கூடியதாக இல்லை. இந்த சூழலில் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றி முதலிய கற்பனைகளையும் நாம் புரிந்து கொள்ளமுடியும். இந்திய தேசீயம் என்ற ஆதிக்க கருத்தியல் தமிழ் தேசீயத்தை அடக்க அல்லது ஒதுக்க முனைந்த நிலையில் தமிழின் தொன்மை பற்றிய பேருணர்வுகள் எழத்தான் செய்யும். இயற்பியல் ஆய்வில் அறிவியலின் செயற்பாடும், சமூகவியல் ஆய்வில் அறிவியல் நோக்கும் ஒன்றாக இருக்கமுடியாது. எத்தகைய கறாரான அறிவியலின் ஆய்வுமுறையும் கருத்தியலை வெளியேற்றிவிட முடியாது. இலக்கியத்தின் நேர்வினைப் பண்பை மறுத்த நிலையில், வரலாற்றுப் பார்வையில் மார்க்சியரிடம் மிஞ்சுவது அனுபவ வாதம். அல்லது நேர்காட்சி வாதம். இந்த விபத்து மார்க்சியருக்கு பல சமயங்களில் நேர்ந்துள்ளது. கைலாசபதி அவர்களும் இந்த விபத்திலிருந்து தப்பவில்லை.
'அகலிகை’ பற்றிய ஆய்விலும், 'நந்தன் பற்றிய ஆய்விலும் படைப்பாளிகளுக்குள் அழுத்தம் பெற்றிருந்த உளவியல் பார்வையை கைலாசபதி நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். உளவியல் ஆய்வுபற்றி கைலாசபதி அவர்களிடம் நாம் காண்பது எதிர்மறைப் போக்கு அரசியலுக்கும், சமூக நோக்கிலான விமர்சனத்திற்கும் மார்க்சியர் அழுத்தம் தந்த அந்த கால சூழலில் உளவியல் நோக்கின் ஆக்கப்பண்பு புறக்கணிக்கப்பட்டது என்பது உண்மை. மெளனியை மார்க்சியர் புறக்கணிப்பது இக்காரணத்தினால்தான். பொதுவாக இலக்கியத்தின் தனித் தன்மையை மறுத்த நிலையில் அரசியலுக்கு மார்க்சியர் முதன்மை தந்தனர். இதன் காரணமாக படைப்பியக்கம் என்பது மார்க்சியரால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. கலைபற்றியும் அழகியல் பற்றியும் மார்க்சியரிடம் வளமான பார்வை விரிவுபெறாமல் இருந்தது.
ஆண் ஆதிக்க சமூக சூழலிலும், கம்பர் முதலிய அனைத்து பட்ைப்பாளிகளும் அகலிகையின்பால் சார்பு நிலை எடுத்தே பேசினர். கெளதமனை குற்றவாளி ஆக்கியும் சிலர் சித்திரித்தனர். படைப்பாளிகளுக்குள் ஆண் ஆதிக்கம்
35 0 இலக்கு

Page 20
என்ற கூற்றும் இங்கில்லை. நந்தனைப் பொறுத்த வரையும் படைப்பாளியின் அணுகுமுறை எதிர் நிலைக்குச் செல்லவில்லை. அகலிகையோடும், நந்தனோடும் அவர்கள் ஒத்து பேசியபொழுது அவர்களின் உளவியல், துயரம் முதலியவற்றையே வெளிப்படுத்தினர். இலக்கியப் படைப்பென்பது வரலாற்றின் முரண்பட்ட பல்வேறு சூழல்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. இப்படி எதிர்பார்ப்பது ஓர் வகையில் இலட்சிய நோக்கு.
இலக்கிய ஆக்கத்தினுள் படைப்பாளிக்கு இருக்கும் பங்கைப் போலவே திறனாளிக்கும் பங்குண்டு. எத்தகைய சூழலில் இந்தப் படைப்பு தோன்றியது என்றெல்லாம் வரலாற்றுச் சூழல் மற்றும் முரண்பாடுகளை திறனாளி விளக்குவதன் மூலம் படைப்பை செழுமைப்படுத்தமுடியும்.
மேலும் ஒன்று, அகலிகை அல்லது நந்தனின் உளவியலை அகழ்ந்து ஆழ்ந்து செல்லும்முறையில் படைப்பாளியின் இயக்கம் நடைபெறுவதை நாம் புரிந்துகொள்ள முடியும். முருகையனின் நந்தன், தனக்குள் தானே எரிமூட்டிக்கொண்டு, அதிலே வெந்து, பொன்போல் ஒளி பெற்று வெளிப்பட்டாரென முருகையன் புனைந்துரைக்கிறார். உண்மையில் புறச்சூழல் கடுமையாக இருக்கும்போது அகத்தினுள் ஆழ்ந்து செல்வதைத் தவிர துன்புற்ற ஒரு மனிதனுக்கு வேறு நெறியில்லை. அதே சமயம் அகத்தினுள் தொடர்ந்து ஆழ்ந்து செல்பவர் இறுதியில் புறத்தினுள் வெளிப்படுவர். அகத்தினுள் ஆழ்ந்து சென்று அங்கே பிரம்மத்தைக் கண்ட சங்கரர் அதனோடு தங்க இயலாமல் வெளிவந்து சவுந்தரிய லாகிரி பாடினார். அத்வைதத்தினுள் மூழ்கி எழுந்த விவேகானந்தர் சோசலிசத்துள் வெளிப்பட்டார். அகத்தினுள் ஆழ்ந்து சென்று பிகாசோ முதலியவர்கள் நவீன ஒவியத்தின் கர்த்தாக்கள் ஆயினர். ஆகவே அகத்தினுள் செலவை மார்க்சியர் எதிர்மறை நோக்கில் காணவேண்டியதில்லை.
இங்கு மார்க்சின் ஒரு கூற்றை நினைவு கூர்வோம். சில சமயங்களில் கலை அடைந்திருக்கிற உன்னதத்தை, அக்காலத்தின் பொருளியல் சூழலில் இருந்து விளக்கமுடியாது என்றார். மார்க்ஸ். இப்படி கூறியதனால் பொருளியலுக்கும் கலைக்கும் அறவே உறவில்லை என்று நாம் அர்த்தப்படுத்த இயலாது. இவற்றிற்கிடையில் கண்ணிகள் பல உள்ளன என்றுதான் நாம் காணவேண்டும். இங்கு இலக்கியத்தின் தனித்தன்மை என்று இதை நாம் பேசமுடியும். எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் பறவை தரைக்கு வந்துதான் தீர வேண்டும் என்ற பிடிவாதம் இங்கு தேவையில்லை. உயரப் பறத்தலை மார்க்சியரால் அறிந்து கொள்ளமுடியும். காலந்தோறும் கடவுள் வாழ்த்து மாறிவந்ததை கைலாசபதி குறிப்பிடுகிறார். இப்படி மாறிவரும் கடவுட் வாழ்த்தை அக்காலத்தில் வரலாற்று சூழலிலிருந்து கைலாசபதி விளக்கவில்லை. எனினும் நாம் புரிந்து கொள்கிறோம். இங்கு இன்னொன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். கடவுள், ஆன்மா முதலிய கருத்தினங்கள் அதே வடிவில் உண்மையானவை அல்ல. இவை மனிதர்கள் உருவாக்கிய கருத்தாக்கங்கள். வரலாற்றில் மனிதர்களின் தேவைகள் முதலியவைகளை ஒட்டி மனிதர் தோற்றுவித்த கருத்தாக்கங்கள். பகுத்தறிவாளர்களைப்போல் இவை பொய் என மார்க்சியர் ஒதுக்கமுடியாது. அவற்றின் வழியே வரலாற்றின் முரண் நிலைகள், மனிதர்களின்
36 0 இலக்கு

தேவைகள் ஆகியனவற்றை மார்க்சியர் காணவேண்டும். அன்றியும் சிக்கலான புறச்சூழலை எதிர்கொள்ளும் முறையில் மனிதர் உருவாக்கிக் கொண்ட பார்வை என்றும், அறிவு என்றும் இவற்றைக் கருதமுடியும். இவற்றின் வழியேயும் ஆதிக்கம் செயல்படும் என்பதை நாம் மறுக்கவில்லை. கடவுள், ஆன்மா முதலிய கருத்தினங்களை உள்ளடக்கிய மதம்பற்றிய ஆய்வில் மார்க்சியர் ஈடுபாடு கொள்ளாதது ஏன் என்பது புரியவில்லை. வரலாற்றாய்வில் ஒரு பெரும் குறையென இதை இங்கு நாம் கொள்ளமுடியும். அனுபவ வாதம், அல்லது நேர்க்காட்சி வாதத்திற்கு மார்க்சியம் பலியானதன் விளைவு என்றுதான் இதைக் கூறமுடியும். தமிழ் சூழலில் இத்தகைய ஆய்வில் கைலாசபதி ஈடுபட்டிருப்பார் என்றால், இந்த நூற்றாண்டில் தமிழின் மீது நமக்கு ஏன் பக்தி ஏற்பட்டது என்பதை அவர் உடன்பாட்டு நோக்கில் மதிப்பிட்டிருக்கமுடியும்.
ஒரு சிற்பத்தை படைக்கும் பொழுது, அந்த சிற்பம் சிற்பியை படைக்கிறது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். தமிழ் மொழி என்பது கருவிதான் என்று அறிவியல் கூறும். இந்தக் கருவி, அதை நாம் உருவாக்கும் பொழுதே நம்மையும் படைக்கிறது என்று தமிழின் ஆக்கமறிந்தவர் கூறமுடியும். இவ்வகையில் தமிழ் நமக்கு தெய்வம்.
வரலாறென்பது கட்டமைப்பு 1 புனைவு என்ற பார்வை கைலாசபதி அவர்களின் காலத்தில் தமிழ் சூழலுக்கு வந்து சேரவில்லை. யதார்த்தம் பற்றிய இறுகிய பார்வையை மார்க்சியர் கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். இலக்கிய வாசிப்பில் வாசகனின் பங்கு பற்றி, கைலாசபதி அவர்களுக்கு பெரும்பாலும் உடன்பாடில்லை. இன்றிலிருந்து வேறுபட்டதான முன்னைய வரலாறு என்று ஒன்று உறுதியாக உண்டு. அதைக் கண்டறிவதுதான் வரலாறு மற்றும் இலக்கிய ஆய்வு என்று கைலாசபதி அவர்கள் உறுதியாக நம்பினார். இளங்கோவின் தத்துவத்தை புறக்கணித்துவிட்டு சிலப்பதிகார ஆய்வு செய்ய முடியாதென்றார். ஒருவேளை வாசகனின் சுதந்திரம் என்பதை கைலாசபதி அவர்கள் ஏற்பார் என்றாலும், அந்தச் சுதந்திரம் முற்றானதா என்ற கேள்வியை அவர் நியாயமாகவே கேட்டிருப்பார். மொழி பற்றிய அமைப்பியலாளரின் பார்வையையும் இதே முறையில் அவர் கேள்விக்கு உட்படுத்தியிருப்பார். யதார்த்தம் என்பது முற்றிலும் புனைவுதானா என்றும் அவர் கேட்டிருப்பார். சமூக மாற்றம் என்ற அரசியல், மார்க்சியரின் பார்வையை அடைத்துக் கொண்டிருந்த அக்கால சூழலில், கைலாசபதி அவர்களைப் போன்ற பேரறிஞர்கள் எத்தகைய வரையறைகளுக்குள்ளிருந்து செயல்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது அவர்களை இன்றும் நாம் போற்றி மதிக்கத்தான் செய்வோம். தமிழ் இலக்கிய ஆய்வில் ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியவர் கைலாசபதி என்ற முறையில் அவரை என்றும் நாம் நினைவில் கொள்வோம்.
అ అ అ
3T இலக்கு

Page 21
இலக்கியப் பேரரங்கு
இவங்கை முற்போக்கு எழுத்தானக்கங்கம் நற்பதாவது ஆண்டுநிறைவினை இவக்கிட்டப் பேரர7ங்காக கொழும்பின் முன்று தாடகன் ஐPலை 5, 6 Zநடத்திடது தமிழகத்தில%ருந்து முத்த எழுத்தான வல்லிக்கன்னன் நாவலாசிரியர் பொன்னவன் g/ഥബ്ദ് //ഗ്ഗ//////് ZAബ് -ജുകി(ീ/് ക്ലബ്ധ (ിb/ഞ്ഞ/-ബ/്
இத்தடப் பேரர7ங்கில் பேரரசி7ய7 கா சிவத்தம் 2 முத்த எழுத்தான வரதர் Zഖിഖിത്രക' (/_/ഥിഞ്ഞീഴ്ച/, ിfമീബക് =ഴ്ചീ//ബ് ക്ലബ്രീ ബീമണ്ഡ ദ്രഗ്ര, தெணிவத்தை ஜோசப் சாரல்நாடன் போன்ற நாட்டின் பல பாகங்கணி%ைதந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தானகளும் கலந்து கொண்டனர்
இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. 7952-முதல் சீ0 வரை சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் 1982-ட%ன் இன்றைய வரை சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் என்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் இடம் பெற்றன
TA0TAT AAAA AAAA MT kA0cM MMMATTTTM TM TAM ATAAS நாவலாசிரியர் பொன்னலேன் தமிழக நாவல்கள் பற்றியும் கூறிய கருத்துக்கள் பயனுள்ள7வைகள77க அமைந்தன
மூன்றாம்நாள் இலங்கையின் முத்த எழுத்தான7 வரதரின் "வரதர் கதைகள்" Zoബ്ര% മിഡ്വൈബ്ദമുണ്"മഞ്ഞ ബണ്ഡീമ ///-മിഥ ക്ലി-Z) ീഗ്ഗബ് ബ്രീമിയ ജിബ്രക്സീഗ്ഗഴ്സ് ബ്രീ./ബെഥ'Zഗ്ഗീ 6ി/ബീബ്ബ്, ക/ബ്ബ/.ബീ ജൂ/ബ്'ZA ஆகியே77 கருத்துரை வழங்கின77கன் எழுத்தான7 என் சோமகரந்தன7ல் TTA00MTALA S S 0TTMA TMTA S MMT MMMTA MMT0AS AAAAAALASATTTS
குறுநாவல்' போட்டி பரிசளிப்பு
TMMMT TTATLMMTTA MAMMSAAAALA AAAA ALATML TLA STMMTS SA0ATTTAMA TT0MM AA AM MMTAAS AAAAA AMALATTTA AMA AMTS MMMA0AM AALMALATT T AMAMMc M AM AAAA A AASA ATTS S TAATAT ബഗ്ഗഴ്ചന്നു.ബീ ബ്രികെ4-ബ് ജമ& 4/ീണ// ബ്രി, ക്ലി/മക%ബ് மண்டடத்தில் நடைபெற்றது தமிழில் இலக்கியச் சஞ்சிகை மரபும் கடமங்க7ை7வும்" ണുന്ന കൃണബ്രZീ) ീഗ്ഗ/ീ//്ക/ കീഴ്സ്/മീഉബ////ി%/് കബീബ്ര/് കീഴ്കിബ(/d ഴ്ചബൈബമ ബീഴ്ക്/
- அந்தனி ஜீவா
38 0 இலக்கு
 
 

அப்பாவின் மரணம்
எவ்வளவு மோசமாக வெறுத்தேனே அதைவிட அதிகம் அன்புவைத்திருந்தேன் எத்துணை அன்பு கொண்டிருந்தேனே அதைவிட அதிகம் வெறுத்துவந்தேன்
கடைசி நிமிஷம் வரை மன்னிக்கவும் தயாராக இல்லை
கங்கு போல வார்த்தைகளைக் கொட்டியும் இருக்கிறேன்
இனி யாரையும் இவ்வளவு ஆழமாக நேசிக்கவோ வெறுக்கவோ முடியாது
எல்லாம் முடிந்தது இருக்கிறேன் உங்கள் எச்சமாக
வெட்டிச் சாய்க்கவும் எட்டுப் பேர் வேண்டும்
எட்டுப் பேரென்றலும் எதிர்த்து நிற்கும் தைரியம் யாருக்கு வரும்
எந்த சூதாட்டத்திலும் எப்படியும் ஜெயித்துவிடும் நுட்பம்
யாரும் பொறமைப்படும் அழகு எதையும் லட்சியம்பண்ணுத போக்கு
யானை படுத்தால் குதிரைமட்டம் இதுதான் எங்கள் அப்பா சட்டம்
வாய்த்தது இந்திரபோகம் வாழ்ந்தது ராஜபோகம்
II பவளவிழாவுக்கு நாள் பார்த்து முகூர்த்தம் குறித்து
பத்திரிகையடித்து சத்திரம் அமர்த்தி
அரண்மனை ராஜாக்களை அழைத்து அத்தனை பேருக்கும் நினைவுபடுத்தி
39 D இலக்கு

Page 22
இரவெல்லாம் இருந்து எழுதி எடுத்துச் செலவழிக்கப் பணம்திரட்டி
தாலி செய்யச் சொல்லி
தனிப்பட்டு எடுக்க நினைத்து அடுத்த வாரத்துக்குள் அவசரப்பட்டு எடுத்துவைத்த காலடிகளில் எற்றிவிட்ட நெருப்பு எங்கள்மனசில்
V எவ்வளவு தூரம் அலைந்த கால்கள்
எத்தனையெத்தனை காரியம் செய்த கைகள்
என்ன ஒரு தனி மனசு
எல்லோர் மனசிலும் பதியும் குணவாகு தாத்தா பெயர் வைத்ததுக்காக கூடுதல் பிரியம் என்னிடம் எப்படி எரியூட்ட இதயமில்லாது என் கண்ணீர் மறைத்து
- விக்ரம/தித்யன்
\,
காரும் - ஏ.சியும்
காற்றை கற்பழிக்க புன்னகை அறுவடைக்கு வாகனம் வழிக்கும் - பயணப்படும் உதடுகளில் புகை விந்து. . புன்னகை சமாதி.
நாசி நக்கும் 0. மரண கருவின் நுரையீரல் நொறுங்க மறதியான முனகல் ஏ.சி - கழிவுகள் மண்ணில் எதிரொலித்தும் - ஒசோனை கிழிக்க, மயக்க பிரதேசத்தில் கரையான் பணி முடிக்கும் கதிர் - மைக்கேல் ஜாக்சனுடன் சதை சிதைய. நீயும்
வெப்ப காமத்தில் Y தானும.
துருவ பனிகரம்
பூமி உருண்டை பிசைய. - 257z/7
40 0 இலக்கு

(களவு LIögöluI ஒரு பாடம்)
കണ്ടു ീഗ്ഗക്സീ ബ്രകീഴ്ത്ത
கதவுகளைத் தாழரிதிக ஜன்னல்கலை77 பூட்டுக எப்போதும் விழிப்புடனே இருந்திதிக
இருந்தார்கன்
പ്പു, ബ/ബ്രി
களவு பெருகி வருகிறது
கத்தேக நபர்கன் சகலரையும் சிறையில%திக
ീളത്ര കിഡ്വൈകസ്മെന്ന് കzzീഗ്ഗz%്
ക '4ബ/്ക്
ஆனாலும்
கனவு பெருகி வருகிறது
சிறைச்சாலைக2ை கண்டிப்பை வலுப்படுத்துக காவலை அதிகLபடுத்துக ക7യഞ്ച) മ/ീകബ് കിങ്ങുമക്ക് ക7ഖബ്ബ് ബീബക് മഞ്ഞീല്ക്കബ്ദZ -§ഖജ്ഞ/ഞ്ഞ ബിന്നൈ4/0 இதடத்து தான்கு மன?தெர விழ2Zபில் வைத்த77கள்
فA%ڑ2چ 677/7ڑھے
കണബു മിശ്രകി ഖമ്രകീഴ്ത്ത
കിഗ്ഗക്സ് ബക്ടീൈ ബൈീക/്യ ഖ/ൿബീബ്നീറ്റ്ര് ഖങ്ങZo/(് ിക്കുന്നബി ക്രീകൃ/്ബ്
ஆனாலும்
കന്നബ്ബ/ ിഗ്രിക്കി ബ്രകീഴ്ത്ത
ഖീ, മിക് ബഡ്ഡുീ ബീല്ക്ക് ZബീബZ அவதான வி7ைக்குகனையும் பொருத்தி 24ഗ് Zക്രികബീ e.ബീബ്ര, 4Z
فZ///z 67 622 کلیئر////4/47 74% ت7677z//Zzھ /76/62/7/چھ ہی بڑی تھی.
ക7ഖബ്രക്ടീ மின்கம்/? வேனிகட்டும் கற்சவர்கட்கும் பின்னல் மறிக்கப்பட்ட கடற்கரைகட்கும் தோட்டங்கட்கும் சன்னத் துணை/த இதன்ட கண்ணாடி பொருத்திய ഖങ്ങി. ബീ.) ஆயுதர் தரித்த சாரதிகளுடன்
ീ/ീ ബ്രഷ്ണന്ന്ല്ക്ക്
ஆனாலும்
കണുബ്ദ് (ീ ഗ്രീകീ ബ്രക്സീയ്യു
தேசம் இரண்டு விதமான சிறைக் கட்டங்க7ே/னது சட்டத்துக்கு எட்டும் தொலைவிலுள்7ேருக்கு ஒன்று எட்டாத தொலைவில் உன்னோகுக்கு ஒன்று
ஆனாலும்
ക്ലബ്ബു ഒീഗ്ലക്സീ ബ്രക്സീയ്യ
- കി. ക്രിബ്ബ
4. 0 இலக்கு

Page 23
என்னுடைய தெய்வமும்
உன்னுடைய தெய்வமும்
என்னுடைய தெய்வம் ஊரெல்லையில் உட்கார்ந்திருக்கிறது கறுப்பாய்க் களிமண்ணாய்க் கண்களை முழித்தபடி கையிலே வாளுடன் பற்கள் தெரியச் சிரிக்கிறது உன்னுடை தெய்வமே உயர்வானது என்கிறாய் அது சிவனானால் என்ன மாலானாலென்ன அல்லாவோ இல்லை அந்தப் பரம பிதாவோ எனில் என்ன எதுவுமே அல்லாத பரம்பொருளேதான் எனில் என்ன என்னுடைய தெய்வம்
உன்னுடைய தெய்வத்தை விட எனக்கு எட்டுந் தொலைவில் உள்ளது உன்னுடைய தெய்வம் உன்னை மோட்சத்துக்கு வழி காட்டும் என்னுடைய தெய்வம் நான் அயலூர் போய் வரும் வரை எனக்காகக் காவலிருக்கும் உனக்கு அது போதுமோ போதாதோ எனக்கு இது போதும்
என் ஊரானைக் கேள்
என் தெய்வம் பற்றி நீ சொல்லும் ஒவ்வொரு கதைக்கும் தன் தெய்வம் பற்றி அவன் இன்னொரு கதை வைத்திருக்கிறான்.
- சி சிவசேகரர்
42 0 இலக்கு

முடிந்தபின்
முட்களினுள் காலம் புத்தகத்தினுள்ளே அவனவன் வாழ்வு எதிரும் புதிருமாய் - நடு பகலில் கீழே விழும் நீண்ட நிழல்கள் என் கடை தாண்டிப் போகும் சவ ஊர்வலம் கீழே விழும் பூக்களும் சிதறும் ஊதுபத்திச் சாம்பலும் அப்போதய காற்றுக்குத் தாங்குமா? பிணத்திற்குத் தெரியுமா பிரதான சாலைகளின் மேடு பள்ளம்
நுகர முடியுமா தண்ணி பன்னீரின் வாசனையை,
- எஸ். செந்தில்குமார்
C எளிது. எளிது.
ஏரியின் மீதூர்ந்து கரையாமல் மூழ்காமல், பனைமர மீதினில் ஏறிப்பின் இறங்கி சிந்தாமல் சிதறாமல்,
கள்ளிமுள் காட்டிடையே காயப்படாமல், குத்திய குச்சியில் வீழ்ந்து கிழிபட்டுப் போகாமல், பள்ளங்கள் பாய்ந்தும் மேடேறி ஊர்ந்தும் உடைபட்டுப் போகாமல் பயணிக்கும்
அந்தப் பருந்தின் நிழல்.
- இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்.
/ ཛོད་༽
EL4KKU Quarterly
ADVT, TARIFF
Wrapper (Back Page Full) Rs. 1000-00
(2nd Page Full) Rs. 900-00 (3rd Page Full) RS. 800-00 inside (Full Page) RS. 600-00
Cheque/DD Should be drawn in favour of DEVI PRASURALAYAM ノ برس ܓܠ
43 0 இலக்கு

Page 24
இருவருமே.
வெறும் பூச்சிகளின் சத்தங்கள் மட்டும் கேட்கும் முட்பாதைகளில் என்னை வழிமறித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டதில் லேசான அதிர்வில் இருகரமுயர்த்தி தலை கோதியதில் பிசு பிசுப்பாய் சிலிர்த்து நின்ற பன்றியின் ரோமமாய். முகம் மெல்ல உருகிக் கொண்டிருந்தது மீசை வாய் கைகள். அதனதனூடே அங்கங்கே
கால் விரல்கள் மட்டுமே விலகி விலகி தரை படியாமல். இப்போது முன்னைவிட சற்று ஆச்சர்யம் ஆண்டவன்தான்!
அவரும்
என் தலையிலிருந்து கால் விரல்கள்வரை தடவிப் பார்த்துவிட்டு திசையறியாது
வெவ்வேறாய் நீண்ட குச்சியால் தரையைத் தட்டி புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
- செம்மாறு வி பாலு
C கெடுதலும் ܗܝ இயல்பும் )
கெடுதல் இயல்புக்கு மாறாய் இயல்பிருப்பது கெடுதலும் தோல்வியும் இணக்கமான முரண்பாடுகள் கெடுதலினால் பாதிக்கப்பட்ட இயல்பு வளமானால்
கெடுதலில் தவறில்லை !
கெடுதலின் பாதிப்பு இயல்பின் கடினத்தை பொறுத்து பாதிப்பு கெடுதலா என்பதை அனுபவமும் விதியும்
நிர்ணயிக்கும்
பாதிப்பின் விளைவால் வளர்ச்சி சிதைந்தால்
அது தோல்வி
வாழ்வின் இருட்டு வெளிச்சங்களை இனம்கான
கெடுதல் அவசியம்
இயல்புக்கு மாறாய் இயல்பிருந்தாலும் !
- ஜி கார்த்திகேயன்
44 0 இலக்கு

கைலாசபதியின் ஆய்வுப் பங்களிப்புகள் - ളഗ്ര 4ഗ്ഗ/ഥക്രീമി
- கோ. கேசவன்
கலாநிதி க. கைலாசபதியின் (1933-1982) படைப்புகள் பெரும்பாலும் வெளிவந்துவிட்டன. அன்றைய அரசியல் சூழ்நிலைகளினால் புனைப்பெயர்களில் அவர் எழுதிய கட்டுரைகள் சில இன்னமும் தொகுப்பு வடிவில் அச்சேறாமல் இருக்கலாம். அவர் வாழ்ந்த காலத்திலும் அவரது மறைவிற்குப் பின்னரும் அவரைப் பற்றியும் அவரது படைப்புகள், ஆய்வு அணுகுமுறை ஆகியனபற்றியும் பலர் மதிப்பிட்டுள்ளனர். பின்னோக்கிக் காண்கையில் அவரளவுக்குத் திறனாய்வில் ஈடுபட்டவர்கள் குறைவு எனவும், அவரளவுக்குத் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மிகவும் குறைவு எனவும் அறியலாம். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு. அவரது ஆய்வுப் பங்களிப்புகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. தமிழாய்வை இன்னமும் முன்னெடுத்துச் செல்லவும் தமிழாய்வில் மார்க்சிய அணுகுமுறையின் பங்களிப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் இத்தகைய மீளாய்வு தேவைப்படுகிறது. இதை இக்கட்டுரையில் முழுமையாக நிறைவேற்ற இயலாவிடினும் இது தொடர்பான சில கருத்துரைகளை விவாதத்துக்காக முன்வைக்கலாம். அதற்குமுன் கைலாசபதி குறித்த சில விவரங்களைத் தொகுத்துக்கொள்ள முனைவோம்.
கைலாசபதியின் வரலாறு பற்றியும் அவரது கலை இலக்கிய அரசியல் ஈடுபாடுகள் குறித்த நிகழ்ச்சிகள் பற்றியும் எவ்வித முழுமையான நூலும் இதுவரை எழுதப்படவில்லையெனினும், அவரின் சகபயணிகளும் மாணவர்களும் அவரைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். இவற்றையே நாம் ஆதாரங்களாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது.
பழமைவாதச் சூழல் மலிந்த யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்க, உயர்சாதி வேளாளத் தமிழர் குடும்பத்தில் கைலாசபதி பிறந்தார். யாழ்ப்பாண சமூகத்தின் பாரம்பரிய தன்மைக்கு அதில் ஆங்கிலேய வல்லரசு ஏற்படுத்திய மாற்றங்களும் இங்கு குறிப்பிடத்தக்கவை. அவற்றோடு அவற்றை எதிர்கொண்ட யாழ்ப்பாண சமூகத்தின் எதிர்வினைகளும் இங்கு கருதத் தக்கவை. சாதியம் ஒரு சமூக அமைப்பு வடிவமாகவும், பிரதேச உணர்வு மேலோங்கிய தன்மை கொண்டதாகவும், தந்தை
45 0 இலக்கு

Page 25
வழிப்பட்ட குடும்ப உறவுகள் ஆழமிக்க இணைப்புகள் கொண்டதாகவும், வேளாளர்களின் நிலவுடைமை ஆதிக்கம் கொண்டதாகவும் தமிழகச் சைவ சமய சித்தாந்தமே மேலாண்மைக் கருத்துருவாகவும் உள்ள யாழ்ப்பாண சமூகத்தில் ஆங்கிலேய வல்லரசும் கிறித்துவ சமய நிறுவனங்களும் ஏற்படுத்திய மாற்றங்கள், அச்சமூகத்தில் சில எதிர்வினைகளை உருவாக்கின. அய்ரோப்பிய அரசியல் மற்றும் சமய நிறுவனங்களால் ஏற்பட்ட நவீனமய விளைவுகளை யாழ்ப்பாண வேளாளர், சாதி நிலவுடைமையாளர் எதிர்க்கவில்லையெனினும் அவற்றால் தம் பாரம்பரியம் உடைந்துவிடக் கூடாது என்றும், நவீனமயம் அனைத்துச் சாதிகளுக்கும் சென்றடைந்துவிடக் கூடாது என்றும் கவனத்தோடு செயல்பட்டனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையில் தமிழ்மொழி பேசுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடல் இன்றியமையாததாகும். அதோடு தமிழ்நாட்டைப் போல இங்கு வரலாற்று ரீதியில் பிராமணர்களின் பொருளாதார மேலாண்மையும், பண்பாட்டு ஆதிக்கமும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இத்தகைய சூழலில் வேளாளரின் பாரம்பரிய ஆதிக்கப் பேணலையும் கல்வி, தொழில் நவீனமயப் பங்கெடுப்பையும் காணல் வேண்டும். இதற்கு இணையான இன்னோர் எதிர்வினையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தேசிய உணர்வு, சாதிய எதிர்ப்பு ஆகிய உணர்வுகளுடன் அரசியல் சீர்திருத்தங்களைக் கோரும் இயக்கங்கள் இலங்கையின் வடக்கில் தோன்றின. வட இலங்கைத் தொழில7ண7 சங்கம் 792 ம/ழர்//ன இணைஞ/ காங்கிரசு (1924) ஆகிய தாராளவாத சீர்திருத்த சங்கங்களை இங்கு குறிப்பிடலாம். ஆசியப் பகுதிகளில் தோன்றிய தேசிய உணர்வுகளின் எதிரொளியா? இதைக் காணலாமெனினும் இந்தியத் தேசியக் காங்கிரசின் உடனடிச் செல்வாக்கை இதில் காணலாம். இவற்றின் தலைமையில் ஆங்கிலேய சமய நிறுவனப் பள்ளிகளில் பயின்ற இளம் அறிவாளிகள் இருந்தனரெனினும் அவர்களில் யாழ்ப்பாண ஆதிக்க சாதியான வேளாளர்களும் ஒடுக்கப்பட்ட சாதியான தாழ்த்தப்பட்டவர்களும் இருந்தனர் என்பது வரலாற்று முதன்மையான நிலையாகும். இத்தகைய சங்கங்களின் உந்துதலினால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே உறுப்பாக இருந்த ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் (1927) உருவாயிற்று. இத்தகைய சங்கங்கள் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து வீரியமாகச் செயல்பட இயலவில்லையெனினும் அரசியல், சமூகத்துறைகளில் பல சீர்திருத்தங்களைக் கோரியதுடன் சகல சாதிகளின் பங்கெடுப்பையும் உத்திரவாதப்படுத்தின. இதனால் சம ஆசன - சம போசன உரிமை சட்டமாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை (1930, 1931) வழங்கப்பட்டது.
கைலாசபதியின் பிறப்புக்கால யாழ்ப்பாணச் சமூகத்தை மேற்கண்ட இரண்டு எதிர்வினைகள் முரண்பட்டுக் கொண்டிருந்த சமூகமாகக் காணவேண்டிய சூழலி ல், இடதுசாரிக் கருத்துகள் அறிமுகமாகாத தன்மையிலும் காண வேண்டியுள்ளது. கோலாலம்பூரில் அலுவலராக இருந்த கைலாசபதியின் தந்தையார் தம் மகன் உத்தியோக லட்சணமாக வாழவேண்டும் என விரும்பியதையும் கைலாசபதிக்கு
46 0 இலக்கு

அத்தகைய ஆர்வத்தோடு சனநாயக இயக்கங்களின் மீதான ஈடுபாட்டையும் காணவேண்டுமெனில், இத்தன் கய பிறப்புச் சூழல் பற்றிய விவரம் தேவையாகவுள்ளது. கைலாசபதி பல்கலைக்கழகக் கல்வி முடித்தபின் தினகரன் உதவி ஆசிரியராகவும் (1959-61) பேராதனைப் பல்கலைக்கழகத் துணை விரிவுரையாளராகவும் (1961-62) இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வு மாணவராகவும் (1963-66) பேராதனை, மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் (1968-73), இலங்கைப் பல்கலைக்கழக வித்தியாலங்கார வளாகத்தில் இந்து நாகரிகத் துறைத்தலைவராகவும், (1974) இலங்கைப்பல்கலைக்கழக யர்ழ்ப்பாண வளாகத் தலைவராகவும் (1974-1977), அமெரிக்க, அயோவா பல்கலைக்கழகத்திலும் (1977) கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் (1978) சிறப்பு பேராசியராகவும் இருந்து இறுதியாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும் (1978-1982) இருந்துள்ளார். கைலாசபதியின் தந்தை, கைலாசபதி தினகரன் உதவி ஆசிரியரானவுடன், பொருத்தமான அலுவலைத் தேர்ந்தெடுக்கவில்லை என வருத்தப்பட்டதாக கைலாசபதியின் தோழர் அன்பர் இளங்கீரன் குறிப்பிடுகின்றார். ஆனால் தந்தையின் உள்ளார்ந்த விருப்பத்தை நிறைவேற்றுவதாகவே கைலாசபதியின் அலுவல்கள் பட்டியல் உள்ளது.
இத்தகைய படிப்புச்சூழல், மற்றும் பெரும்பாலும் அரசு சார்பான அலுவல் சூழல் கைலாசபதிக்கு அளித்த வாய்ப்பையும் வரம்பையும் எண்ணிப் பார்த்தலே பொருத்தமாகும். அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, ரோயல் கல்லூரி ஆகியவற்றிலும் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்கும் காலத்தில் அவருக்கு விரிவான படிப்புப் பழக்கமும் எழுத்துப் பழக்கமும் இருந்தன என அறிகிறோம். இக்காலகட்டத்தில தமிழியல், கல்வி, சமூகம், அரசியல் ஆகிய துறைகளில் விரிவான ஈடுபாடு கொண்டு விளங்கியதாக அறிகிறோம். இக்கால கட்டத்தில் இவருக்கு மார்க்சிய அறிமுகமும் ஈடுபாடும் ஏற்பட்டன.
இலங்கையின் முதல் இடதுசாரி இயக்கமான இலங்கை சமசமாஜுச் கட்சி 1937இல் தம் செயல்பாடுகளை வடிகிழக்குப் பகுதிகட்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியது முதல், யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கருத்துக்களின் செல்வாக்கைக் காணலாம். இது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் மேடைகளையும் பகிர்ந்து கொண்டது. இதற்கு அடுத்த பத்தாண்டுகளில் இலங்கைப் பொதுவுடைமைச் சட்சியின் மூலம் வடகிழக்கு மாகாணங்களில் மார்சியக் கருத்தாக்கங்கள் அறிமுகமாயிற்று. இரண்டாம் உலகப் பெரும் போருக்குப்பின்னர் நாசிக-பாசிச சக்திகளின் வீழ்ச்சி, மரபு வழிப்பட்ட காலனி ஆதிக்கத்தகளவு, சோசலிசக் கருத்துருவத்தின் வளர்முகம், ஆகியன அரசியல் நிகழ்வுகளாக இருந்த சர்வதேச சூழலில், சனநாயக அறிவாளிகள் மார்க்சியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி விரிவுரையாளர் தோழ7 மு. கார்த்திசேசன் மூலம் 1945களுக்குப்பின் வடகிழக்கு மாகாணத்தில் அறிமுகமான மார்க்சியக் கருத்துக்கள் பருண்மையான வடிவம் கொள்வதற்குரிய சூழல் அன்றைக்கு இருந்தது. 1937 முதல் சமசமாஜக் கட்சியின் மூலம் இடதுசாரிக் கருத்துகள் அறிமுகமாதல், 1931 முதல் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் பல சீர்திருத்த சட்ட்ங்கள் அறிமுகமாதல், 1940கள் முதற்கொண்டு பல சங்கங்கள் ஆரம்பிக்கப்படல்
47 D இலக்கு

Page 26
(ச்ன்மார்க்க ஐக்கிய இளைஞர் சங்கம், வட இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றவை) ஆகியனவற்றை இங்கு முதன்மையாகக் குறிப்பிடலாம். இத்தகைய புறவயச் சூழலில் அறிமுகமான மார்க்சியப் பரவலினால் சகல சாதிகளிலிருந்தும் தோன்றிய அறிவாளிகளில் சனநாயக சக்திகள் மார்க்சியத்தின் பேரில் ஈர்க்கப்பட்டனர். கைலாசபதியின் மார்க்சிய தத்துவ ஏற்பு அவர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி இடைநிலைக் கல்வி மாணவராக இருக்கும்பொழுது அமைந்திருப்பினும், அது காலந்தோறும் பல காரணங்களில் உறுதிப்பட்டிருக்கலாம். அவர் மார்க்சியத்தை 'ஆழ்ந்த அறிவுபூர்வமாகவும் அதன் நடைமுறை அனுபவத்தின் உண்மையாலும் சமுதாய வர்க்கச் சார்பு நிலையாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான உயர்ந்த தத்துவம் என்பதாலும் ஒப்புக் கொண்டிருந்தார் என்று அவரது தோழர் சிகி/ செத்திவேல் கூறுவதன் அடிப்படையை ஒப்புக்கொள்ளலாம்
சைலாசபதி மார்க்சியத்தைக் கல்வி சார்ந்த ஆய்வுகளுக்கு உரிய அணுகுமுறையாக மட்டுமே கையாளும் கல்வியாளராக மட்டுமின்றி, பொதுவுடைமைக் கட்சியில் உறுப்புரிமை பெற்றவராகவும், அவ்வாறு உறுப்புரிமையற்ற காலங்களில் அனுதாபியாகவும் இருந்தார் எனவும் குறிப்பிடுகின்றனர். அம்பலத்தான், அம்பலத்தாடி, அபேதன், ஜனமகன், பரமன், உதயன் ஆகிய பல புனை பெயர்களில் புதுமை இலக்கியம், மரகதம், வசந்தம், செம்பதாகை, தொழிலாளி, கற்பகம், சமர், ஜனவேகம், இளங்கதிர் ஆகிய இதழ்களில் அரசியல், கலை, இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். அரசு சார்ந்த பணியில் நீண்டகாலம் இருந்த கைலாசபதி இத்தகைய அரை-இரகசியத் தன்மையில் செயல்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்களை நிராகரிக்க இயலாது.
உலகளாவிய நிலையில் சோவியத் ரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சித்தாந்த மோதல்கள் ஏற்பட்ட காலத்தில் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியிலும் பிளவு ஏற்பட்ட பொழுது (1964) தோழர் சண்முகதாசன் தலைமையிலான சீனக் கருத்தோட்டத்தை ஆதரிப்பவராகக் கைலாசபதி இருந்தார் என அறிகிறோம். இத்தகைய காலத்திலும் இதற்கு உடனடி அடுத்த காலத்திலும் (1963-1966) பிரிட்டன் பர்மிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியரும் மார்க்சிய அறிஞருமான ஜூ/7ஜ் தாம்சனின் மேற்பார்வையில் முனைவர்பட்ட ஆய்வக கைலாசபதி மேற்கொண்டிருந்தார். ஜார்ஜ் தாம்சன் சீன சித்தாந்தத்தை ஆதரித்தவர் என்பதும் பிற மார்க்சிய லெனினிய அறிஞர்களோடு இணைந்து சீன ஆம்வுக்குழு (Chinese Study Group) என்ற அமைப்பை வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கவையாகும். இத்தகைய அறிஞர்களின் தொடர்பு கைலாசபதியின் சீன சித்தாந்த சார்புத் தன்மைக்கு ஒர் அடிப்படையான காரணமாக இருக்கலாம். ஆனால் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்ட (1970 காலத்தில் கைலாசபதி எத்தகைய நிலைபாட்டோடும் தம்மை இணைத்துக் காட்டிக் கொள்ளவில்லை என அறிகிறோம். சோவியத் வல்லரசின் நடவடிக்கைகள் மீது கடுமையான விமரிசனத்தை அவர் முன்வைத்த பொழுதினும் சீனப் பாதையின் மீதான தம் ஆதரவை விமரிசனக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியதாகவே உணரமுடிகிறது.
48 0 இலக்கு

சோசலிச சமூகத்தில் அது நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி அவர் சாதகமான
மதிப்பீடுகளை முன்வைத்த மாதிரி தெரியவில்லை. அவர் இறுதி ஆண்டில் (1982)
கிருதயுகம் இதழில் ஒரே உலகம் என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒருபகுதி !
சோசலிசம், புதிய சமூக அமைப்பை ஓரளவு எளிதில் உருவாக்கிவிடலாம். ஆயினும் புதிய மனிதனை உருவாக்குதல் அத்தனை எளிதான காரியம் அன்று. பல நூற்றாண்டுகள் பழகிப்போன எண்ணங்களும் உணர்வுகளும் சோசலிச சமுதாயத்து மனிதருள்ளும் மண்டிக் கிடப்பதில் வியப்பெதுவும் இல்லை. அவை சோசலிசத்தின் உயிருக்கே உலைவைக்கக்கூடும்.
சைலாசபதி, சோசலிச சமூகத்தின் உயிருக்கே உலைவைக்கும் எண்ணங்களை நீக்கக் கூடிய கலாச்சாரப் புரட்சியின் தேவையை நிரம்ப சிரமப்பட்டு நமக்கு உணரவைக்கிறார். இதுமட்டுமல்ல, 1978இல் சீனாவிற்குப் பயணம் செய்தபின் இவரது துணைவியாருடன் இணைந்து எழுதிய மக்கள் சீனம் - காட்சியும் கருத்தும் என்ற நூலில், 1949-1961 காலகட்ட சீன அரசியல் நிகழ்வுகள் விரிவாகவும் தற்சார்பாகவும் கூறப்படுகின்ற அளவுக்கு, அதற்குப் பிந்தைய காலகட்டத்திய அரசியல் நிகழ்வுகள் விளக்கப்படவில்லை. கலாச்சாரப் புரட்சி பற்றிய குறிப்புரைகளில் (பக்.51, 85, 94, 121, 137) தற்சார்பு நிலை எதுவும் வெளிப்படையாகக் காணப்படாவிடினும், நூலின் உள்ளார்ந்த நீரோட்டம் நவீனமயமாக்கல் கோட்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதை (பக். 142, 156, 226-227) நுனித்துக் காணும்பொழுது அறியமுடிகிறது. சீன நவீனமயமாக்கம் என்பது கலாச்சாரப் புரட்சியின் அதிதீவிர இடதுசாரித் தவறுகளைக் களைதல் என்ற போர்வையில் 1960களின் சோவியத் ரசியாவின் உற்பத்தி சத்திகன் வணர்ச்சின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். கைலாசபதியின் சர்வதேச பரந்துபட்ட மார்க்சிய அறிவோடு இதைத் தொடர்புபடுத்திக் காணும்பொழுது, அவரது இத்தகைய மாறுபட்ட நிலைகளையும் கணக்கிலெடுக்கவேண்டியது அவசியம். அவரை வெறும் இடது சாரி என்றோ மார்க்சிய அறிஞர் என்றோ அடையாளப்படுத்துவதோடு அமையாமல் மார்க்சிய லெனினிய - மாசேதுங் சிந்தனையாளர் என்றும் டெங்சியோ பிங் முன்னிறுத்திய நவீனமயமாக்கல் சிந்தனையாலும் கவரப்பட்டவர் என்றும் அடையாளப்படுத்துதல் அவருக்கு இழுக்கன்று. சோசலிசப் புரட்சிக்குப்பின் கலாச்சாரப் புரட்சியின் தேவை அவரால் உணரப்பட்டிருப்பினும் அதன் நடைமுறையில் உருவாகும் தவறுகளைக் களைவதற்கான இயல்பான - சீரான தேர்வுகள் அரசியல் கோட்பாடாக உருவெடுக்காத அவரது காலச் சூழலில் இத்தகைய ஈர்ப்பு கவனிக்கத்தக்கது. சோசலி சப் புரட்சி நடைபெறாத ஒரு பின்னடைந்த நாட்டின் மார்க்சிய அறிவாளியின் தொடர்ந்த அறிவுத்தேடலில் இதை சிக்கலான சூழலில் ஏற்பட்ட மன இடர்ப்பாடு என்றே கொள்ளவேண்டும். •
கைலாசபதி இயற்பெயரிலும் புனைப் பெயர்களிலும் கட்டுரைகள் எழுதுவதோடு அமையாமல் கலை, இலக்கிய அமைப்புகளிலும் இயங்கினார்.
49 D இலக்கு

Page 27
இலங்கைக் கலைக்கழகம் (1970-1975) இலங்கைக் கலைக்கழகத் தமிழ் இலக்கியக்குழு (1972-1976) கலைக்கழகத் தமிழ் நாட்டியக் குழு (1973-76), பாடநூல் ஆலோசனைக்குழு (1971-74) அய்க்கிய நாடுகள் அறிவியல் - பண்பாட்டு அமைப்பின் இலங்கை தேசிய ஆணைக்குழு (1971-1974), இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1956-1974) தேசிய கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றில் பங்கு கொண்டிருந்தார். இவை அரசுசார் நிறுவனங்களாகவும் அரசுசாரா இடதுசாரி நிறுவனங்களாகவும் இருந்தன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பல்வேறு தத்துவப் போராட்டங்களின் திசை வழிகாட்டியாகக் கைலாசபதி அமைந்திருந்தார். இலங்கையின் - குறிப்பாக வடகிழக்குப் பகுதியில் நடந்த பல்வேறு சனநாயக - தேசியப் போராட்டங்களின் தத்துவத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைந்திருந்தது. இவற்றிலெல்லாம் கைலாசபதியின் இயக்க அளவிலான செயல்பாட்டைக் கண்டாலும் அரசுசார் நிறுவனங்களொடும் அவரது தொடர்ந்த பங்கெடுப்பு கருதத்தக்கது. பாராளுமன்றப் பாதையை நிராகரித்து மக்கள் திரள் பாதை (MaSS Line) யைத் தேர்ந்தெடுப்பதில் பெருவிருப்பம் கொண்டிருப்பதாக அவரின் படைப்புகள் குறிப்பிடுகிறபொழுது, இத்தகைய இரண்டுவகை நிறுவனங்களிலும் அவரது பங்களிப்பு ஒன்றையொன்று பரஸ்பரம் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்பே இருந்திருக்கும் எனலாம். அவரது மகத்தான இயக்கப் பங்களிப்புகளின் ஊடாக இழையோடும் இதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இத்தகைய வாழ்க்கை விவரங்களோடு அவரது ஆய்வுப்பங்களிப்புகளைக் காண வேண்டியுள்ளது. அதற்கு முன் அவரது ஆய்வுக்காலச் சூழலைப்பற்றி ஓரளவு விளக்குதல் பொருத்தமாகும்.
2
கைலாசபதியின் ஆய்வுக்காலம் 1955-1982 ஆகும். இத்தகைய காலத்தில் அரசியல் சூழல், தமிழாய்வுச் சூழல், மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுச்சூழல் ஆகியவற்றைச் சுருக்கமாகக் காணலாம். கைலாசபதியின் ஆய்வுப்பங்களிப்புக்குரிய இடத்தைத் தேர்வு செய்தலுக்கு இது இன்றியமையாததாகும்.
இரண்டாம் உலகப் பெரும் போருக்குப்பின் வல்லரசு நாடுகள் தம் குடியேற்ற ஆதிக்கத்தின் வடிவத்தை மாற்றி புதிய குடியேற்ற ஆதிக்க வடிவத்தை மேற்கொண்டதன் பின்னர், அந்தந்த நாடுகளின் முதலாளிய வர்க்கங்கள் தத்தம் அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களைத் தீர்க்க இயலாமல் மூச்சுத்திணறிய ப்ொழுது, ரசியாவும் சீனாவும் ஏனைய சோசலிச நாடுகளும் முன்னிலைப்படுத்திய சோசலிசக் கருத்துருவம் இத்தகைய நாடுகளின் சனநாயக தேசபக்த அறிவாளிகளைக் கவர்ந்தது. 1955கள் சோசலிசக் கருத்துருவத்தின் உச்சக்காலம் எனலாம். சரியாகச் சொன்னால் அது முன்னேறிய நிலையில் இருந்தது. ஆனால் சோசலிச சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் உள்ள அகமுரண்பாடுகளை எதிர்கொள்வது குறித்து சோசலிச முகாமில் கருத்துவேறுபாடுகள் 1960களின் இடையில் ஏற்பட்டது. இதன்பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் சீனாவின் கலாச்சாரப் புரட்சி உற்பத்தி உறவுகள் மேம்பாட்டுக் கோட்பாட்டை முன்வைத்துச் செயல்பட்ட
50 0 இலக்கு

&
காலத்தில், சோசலிசக் கருத்துருவத்துக்கு மூன்றாம் உலகநாடுகளில் வளர்ச்சி நிலையே காணப்பட்டது. இருப்பினும் சோசலிச சமூகத்தை எவ்வாறு
நடத்திச்செல்வது என்பதில் இரண்டு சோசலிச நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட
கருத்து மோதல்கள், சோசலிசத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பின்னடைந்த நாடுகளில் பொதுவுடைமை இயக்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தியது. சோசலிசக் கருத்துருவத்துக்குரிய செல்வாக்கு புறநிலை அளவில் முன்னேறிக் கொண்டிருப்பினும் அதைச் செயல்படுத்தக்கூடிய அகநிலைச்சக்திகள் பிளவுபட்டன. இக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகள் மார்க்சியத்துக்கு GangorLIGI (Parellel) தத்துவங்களை உருவாக்கியும் (அதாவது எதிரானது எனச் சொல்லமுடியாத தத்துவங்கள்) மூன்றாம் உலக நாடுகளின் சமூக முரண்பாடுகளை அகலப்படுத்தியும் வினைபுரிந்தன. மூன்றாம் உலக நாடுகள் ஒவ்வொன்றின் தனித்தன்மையை இரண்டாம் பட்சமாக்கி அந்தந்த நாடுகளின் பொதுவுடைமை இயக்கங்கள் செயல்பட்டு தம்மிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டமை வல்லரசு நாடுகளின் தந்திரத்துக்கு உரமூட்டின. பொருளாதார தாராளவாதத்தை அனுமதித்த முன்னாள் சோசலிச நாடுகள் அரசியல் அதிகார இறுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் எழுச்சிகளால் தகர்ந்துபோனதை 1970களின் பின்னிறுதியும் 1980களின் தொடக்கமும் எடுத்துக்காட்டின.1980களின் தொடக்கத்தில்
சோசலிசக் கருத்துருவம் அதன் பின்வாங்குதல் (Retreat) காலத்தில் இருந்தது.
கைலாசபதியின் ஆய்வுக்காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் சோசலிசக் கருத்துருவத்தின் உச்சத்தையும் பின்வாங்குதலையும் காண இயலும்,
கைலாசபதி ஆய்வுக்கால ஈழச்சூழல் அடுத்து கருதத்தக்கது. தமிழர், சிங்களவர் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் அருகருகே தத்தம் அடையாளங்களுடன் வாழும் இலங்கையில், பொதுவுடைமை இயக்கம் இரு தேசிய இனத்தவர்களின் சனநாயக முற்போக்கு, தேசிய சக்திகளை ஈர்த்தது. வல்லரசு எதிர்ப்பு நோக்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 1953ம் ஆண்டு மாபெரும் வேலை
நிறுத்தத்துக்குப் பின்னர், பொதுவுடைமைக் கட்சியினால் வல்லரசு எதிர்ப்பையும்
தேசிய, சனநாயக ஆர்வங்களையும் முன் எடுக்க இயலவில்லை. சிறுபான்மை தேசிய இனத்தவரான தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களைப் புறக்கணித்து உருவான சிங்கள பெளத்த தேசியவாதம், ஆளும் வர்க்கத்தால் பேரின வெறியாக மாறியபொழுது அதைத் தடுப்பதற்குரிய மாற்றுச் செயல் தந்திரங்கள் இல்லை. சிங்கள பெளத்த பேரின தேசிய வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் தேசிய இனத்தின் தற்காப்பு நடவடிக்கைகள் மீதான விமரிசன ரீதியிலான ஆதரவையும் தர பொதுவுடைமைக் கட்சி தயாராக இல்லாத சூழலில் தேசிய இன ஆர்வமிக்க தமிழரிடமிருந்தும் பொதுவுடைமைக்கட்சி தனிமைப்பட நேர்ந்தது. கலாநிதி கா. சிவத்தம்பி ஓரிடத்தில் மிகச் சரியாகக் குறிப்பிட்டதைப்போல யாழ்ப்பாணத்தில் (1960களில் சாதி எதிர்ப்பு அடிப்படையில் வளர்ந்த இடதுசாரி இயக்கத்தின் நல்வர்ய்ப்புகள் பின்னாளில் பாதிக்கப்பட்டன. இலங்கை போன்ற சாதியம் சமூக அமைப்பாகவும், பல தேசிய இனங்கள் அருகருகே வாழும் சமூக அமைப்பாகவும் உள்ள ஒரு நாட்டில் வல்லரசு எதிர்ப்புடன் தேசிய இனச்சிக்கலையும் சாதியச் சிக்கலையும் மதவெறிச் சிக்கலையும் இணைப்பது குறித்த
51 0 இலக்கு

Page 28
பொதுவுடைமையரின் செயல்தந்திரத் தே7ல்வி இதில் தெளிவாகின்றது. தாக்கும்
நிலையில் உள்ள தேசிய வெறித்தனத்தையும் தற்காப்பு நிலையில் உள்ள தேசிய
ஆர்வத்தையும் ஒருசேரப் பாவித்ததோடு மட்டுமின்றி. இரண்டுக்கும் இடையிலான அம்ச்கியம் - போராட்டம் என்பதை முற்றாக நிராகரித்துவிட்டு,நிடத்தனைமற்ற
அம்ச்கிமத்தை முன்வைத்தனர்; அதோடுமட்டுமின்றி, இரண்டு தேசிய
இனங்களுக்கு இடையிலான சமத்துவத்துடன் மட்டுமே அய்க்கியம் (Unity With
cquality) என்பதும் காலப்போக்கில் நழுவிவிட்டது. வரலாற்றை இன்றைக்கு
பின்னோக்கிக் காணும்பொழுது இலங்கை போன்ற பல தேசிய இனமக்களைக்
கொண்ட நாடுகளில் 'ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரபுத்துவ எதிர்ப்பு என்பனவற்றுடன்
தேசிய இனங்களின் சமத்துவத்தையும் வற்புறுத்தி நிற்கும் ஒன்றையே முழுமையான
தேசியம் என்று கொள்ளமுடியும் என சைலாசபதியின் தோழர் சி. கா. செந்திவேல் குறிப்பிடல் (1992) கவனத்துக்குரியது. இதற்கு 10 ஆண்டுகளுக்கும் முன்னரே
கைலாசபதியின் மரணம் நேர்ந்துவிட்டது.
இனி கைலாசபதி காலம் வரையிலான மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுச்
சூழலைக் காணலாம். மார்க்சியத்தை அளவுகோலாக்கி இலக்கிய சமூக ஆய்வுகளில் ஈடுபட்ட கைலாசபதி விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்டதோடு அனைத்துலக மார்க்சிய அறிஞர்களோடும் கலைஞர்களோடும் தொடர்பு கொண்டிருந்தவர்; அமெரிக்கா, இந்தியா, இலண்டன், சீனம் ஆகிய நாடுகளுக்கும் சென்றவர். அவரது படிப்புப் பரப்பளவு கருதத்தக்கது. அவரது மேற்கோள் நூல்களே இதற்கு சான்று பயக்கும். ரசிய சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் 1920-1930களில் சோசலிச சமூக உறுதிப்படலில் கலை இலக்கியத்தின் பங்கு குறித்து நடைபெற்ற விவாதங்கள், இதன்பின் 1934இல் உருவெடுத்த சோசலிச மத7ர்த்தவாதச் சே7//(தி, சாதனோவ் - புகாரின் கருத்து வேறுபாடுகள், ஸ்டாலின் வீழ்ச்சிக்குப்பின் சோசலிசயதார்த் வாதத்தை சரதனோவிz/ம் என்பதாகக் கண்டறிந்த விவாதங்கள், சீனாவில் புதிய சனநாயகப் புரட்சிக்காலத்தில் மாசேதுங்கின் யேனான் கலை இலக்கியப் பேருரை ஆகியவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சோசலிசயதார்த்த வாதத்தின் சில அம்சங்கள் மீது விமரிசனம் வைத்த அங்கேரியன் மார்க்சிய அறிஞர் ஆ77ஜ் லூக/ச்சு (1886-1971) பால்சாக் மீதான ஏங்கெல்சு கருத்துகளையும் டால்ஸ்டாய் மீதான லெனின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய எத/த்தவாதச் சே7ட்ட/தி; செருமானிய மார்க்சியக் கலைஞர் பெட்ரோல் பிரெக்ட் (1898-1956) முதலாளிய நவீனத்துவக் கலை வடிவங்களைப் பயன்படுத்த இயலும் எனக் குறிப்பிட்டபொழுது அதை ஜார்ஜ் லூகாக்சு மறுத்துரைத்தல், இவற்றை பிரெக்ட் மறுத்துரைத்து விவாதித்தல் இது 1938இல் எழுதப்பட்டு 1967இல் வெளிவரல், பிரெக்ட்டின் கலை இலக்கியக் கருத்துகளுடன் அவரை அறிமுகப்படுத்திய நூல்கள் (Understanding Brecht Walter Bangamin) இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சித் தலைமையில் ஒருவரான அந்தோனியே7 கிர7ர்சியின் (1891-1937) மேல/திக்கர் (Hegemony) கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கருத்துருவ வரையறை குறித்து ஏற்பட்ட விவாதங்கள், பிரஞ்சுப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருந்த லூயி அஸ்தூச7 மார்க்சியத்தை கூறுகாண் வாசிப்புக்கு (Symptomatic Reading)
52 0 இலக்கு

உட்படுத்தி கண்டறிந்த முடிவுகளை கலை இலக்கியத் தளத்துக்கு விரிவுபடுத்தியதால் ஏற்பட்ட விவாதங்கள் என மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் மீதான சர்ச்சைகள் பெருகிக்கொண்டே வந்தன. இத்தகைய விவாதங்கள் தொடர்பான மூலநூல்களும் விளக்க நூல்களும் வெளிவந்ததோடு இவைபற்றிய இதழ்க் கட்டுரைக்கும் 1970களில் அதிகம் வெளிவந்தன. மார்க்சிய அரசியல் கோட்பாடுகள் மீதான சர்ச்சைகள் மார்க்சிய முகாமுக்கு உள்ளும் புறமும் நடந்ததைப் போலவே மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் மீதான சர்ச்சைகளும் நடந்தேறின. குறிப்பாக இத்தகைய சர்ச்சைகள் ரசியா (1930கள் வரை), செருமனி, இத்தாலி, பிரெஞ்சு ஆகிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றன என அறியலாம். இத்தகைய சர்ச்சைகள் 1970களில் பின்னடைந்த மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய அறிவாளிகள் மத்தியிலும் பரவியது எனலாம். கைலாசபதியின் ஆய்வுக்காலச் சூழலில் மார்க்சிய இலக்கியக் கோட்பாடு குறித்து இத்தகைய சர்ச்சைகள் உலகளாவிய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். அவரது ஆய்வு தொடங்கும் காலத்தில் தமிழாய்வுச் சூழல் எப்படி இருந்தது எனத் தெரிதல் முக்கியம் ஆகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், காப்பியங்கள் ஆகியவை பதிப்பிக்கத் தொடங்கிய காலத்துக்குப்பின்னரே (1887-1920) முறையானதமிழ7யவு தொடங்கியது எனலாம். இத்தயை பதிப்புகளில் மூலபாடம், பாடபேதம், உரை விளக்கம், உரைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ற மூலபாட ஆய்வைப் பதிப்பாசிரியர்களிடம் காணலாம். முலபாட ஆய்வுரைகளில் பதிப்பாசிரியர்கள் ஆய்வு முன்னுரைகளிலும் பாடவேறுபாடுகளிலும் தத்தம் கருத்துகளை வலியுறுத்தும் போக்கையும் காணலாம். நூல்கள் பதிப்பித்தலைத் தொடர்ந்து அவை இயற்றப்பட்ட காலங்களைப் பற்றிய கருதுகோள்கள், ஆய்வுரைகளாக முன்வைக்கப்பட்டன. கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பிற வரலாற்றுச் சான்றுகளோடு பொருத்திக் காலம் பற்றி ஆய்வுரைகள் நடத்தப்படாமல், ஊகங்களே உறுதியான முடிவுகளாக்கப்பட்டன. அடுத்து இலக்கியத்தில் காட்டப்படும் சமுதாயத்தைப் பற்றிய ஆராய்வுகள் வெளிவந்தன. எம். சேசகிரி
FITGiusif (Essay on Tamil Literature 1894, 68.568Tssanu (The Tamils Eighteen. Hundred Years Ago 1895-1901) ஆகியோர் இந்தப் போக்கைத் தொடங்கினர். இலக்கியங்களில் காணப்படும் கருத்துகளை விளக்கி இலக்கிய நயவுரைகள் எழுதப்பட்டன. சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள், டாக்டர். மு. வரதராசன் போன்றோரின் ஆய்வுரைகளை இவ்வாறு காண இயலும். இவர்களின் ஆய்வுரைகளில் தமிழின் தொன்மை, பெருமை ஆகியன முதல்நிலைப்பட்டன. இதே காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியனவற்றை ஜனரஞ்சகப்படுத்திய இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது. அவை சைவசித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டன. இவற்றிலெல்ாம் தமிழ், தமிழன், தமிழ்நாடு ஆகியன குறித்து வெளிவந்த அதீதமதிப்பீடுகட்கு மாற்றுரைகளாக பல ஆய்வுகள் வந்தன. வையாபுரி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சாமி. சிதம்பரம் ஆகியோரது ஆய்வுகள் இங்கு குறிப்பிடத்தக்கவை. எல்லோரின் ஆய்வுகளையும் ஒருசேர எண்ண இயலாவிடினும் இவர்கள் இந்தியக் கண்ணோட்டத்தில் தமிழாய்வுகளை மேற்கொண்டனர். சாமி
53 0 இலக்கு

Page 29
சிதம்பரம் ஆய்வுகள் இலக்கியம் காட்டும் சமூகத்தை புறநிலை அளவில் பல இடங்களில் விளக்கிக் கூறினாலும், பாரதீயப் பரவசநிலை அங்கங்கே தென்படுகின்றது இலக்கியம் என்றால் என்ன? பக். 133; சிலப்பதிகாரத் தமிழகம் 184). வையாபுரியின் ஆய்வுகள் (1946-1957) ஆதாரமில்லாத எடுகோள்கள் மறுப்பு உணர்வுவசப்பட்ட நிலை மறுப்பு என்பனவற்றின்மீது ஆதாரம் கொண்டிருப்பினும் மொழியியலின் பலவீனமான அம்சங்களின் மீது ஊன்றி நின்றதனால் கால ஆராய்ச்சிகளில் தேவையற்ற விதத்தில் பண்டைய இலக்கியங்களின் காலத்தைப் பின்னுக்கு இழுத்தன. இவர்கள் இலக்கியம் சமூகத்தின் விளைபொருள் என ஒப்புக்கொண்டு சமூகவியலின் சில அம்சங்களை தம் ஆய்வுக்குரிய அளவுகோலாகக் கொண்டு செயல்பட்டனர். ஆனால் பண்டைய இலக்கியத்தின் சமூக வேர்களை வெளிக்கொணர முடியவில்லை, நவீன இலக்கிய வடிவங்கள் மீதான ஆய்வுரைகளும் இல்லை. இவர்களின் ஆய்வுகள் ஒருவித தேக்கநிலை எய்துதலுக்கு முன்னதாக இவர்களின் ஆய்வுக் கூறுகளையும் உள்ளடக்கி மார்க்சிய ஆய்வு அணுகுமுறை 1950களில் இங்கு அறிமுகமாயிற்று. இலக்கியத்தை வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையிலும் இயங்கியல் அடிப்படையிலும் கண்டறிய முனைந்த இத்தகைய அணுகுமுறையை ஜீவானந்தம், இசுமத் பாட்சா, எஸ்.இராமகிருட்டிணன், தொ.மு.சி. இரகுநாதன், நா. வானமாமலை ஆகியோரிடத்தில் முதல் காலகட்டத்தில் காண இயலும். உருவஇயல் ஆய்வாளர்கள் இலக்கியத்தின் உருவ எழிலை ரசித்துக் கொண்டிருந்த சூழலிலும் தமிழின் தொன்மை குறித்து இயல்புக்கு மாறான விவரங்களை பலர் கொடுத்துக் கொண்டிருந்த காலத்திலும் இவர்களின் ஆய்வுகள் உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தியும் சமூகப் பின்புலத்தை பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்துடனும் விளக்கின. இங்கு ஜீவாவின் சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள் இசுமத் பாட்சாவின் கற்காலத்தமிழர்சன் ஆர்காலத்திலிருந்து தர்காலம் வரை ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. எனினும் இவை தமிழிலக்கியத்தின் பருண்மையான ஆய்வு வெளிப்பாடுகளாக அமையாமல், மார்க்சியம் கண்டறிந்த வரலாற்றுக் காலகட்டங்களை கோட்பாடு அளவில் சூக்குமமாக சுட்டுவதாகவே அமைந்துவிட்டன. நா. வானமாமலையின் ஆய்வுகள் தத்துவம், வரலாறு, தொல்பொருளியல் ஆகிய துறைகளை உள்ளடக்கி அமைந்தன. கைலாசபதியின் ஆய்வுக்காலத் தொடக்கம், இதன் தொடர்ச்சியாகவே காணப்பட வேண்டியுள்ளது. சமூகவியல் ஆய்வுகளின் தேக்கம், பண்டைய இலக்கியத்தை மட்டுமே ஆய்வுக்குரியனவாக எடுத்துக்கொள்ளல், தமிழ்-தமிழ்நாடு ஆகியனவற்றின் தொன்மையையும் சிறப்பையும் அதீதமாக எடுத்துச் சொல்லல், புதிய புதிய துறைகளில் வெளிவந்த கண்டுபிடிப்புகளைத் தமிழாய்வில் பயன்படுத்தாத நிலை, ஆய்வுக்குரிய சமூக / இலக்கிய நிகழ்வுகளின் தனித்தன்மை குறித்துப் பருண்மையாக ஆய்வு செய்யும் அளவுக்கு மார்க்சிய ஆய்வுத்துறையின் வளர்ச்சியற்ற தன்மை என இன்னோரன்ன சூழலில் கைலாசபதியின் ஆய்வு தொடங்குகிறது எனலாம். இத்தகைய இடைவெளிகளை நிரப்புவதற்குரிய ஆய்வாளர்கள் தேவைப்படும் புறநிலைச் சூழலில் கைலாசபதியை காண இயலும். இதையும் இதற்குப்பின் முப்பதாண்டுகளில் ஏற்பட்ட சூழலையும் கைலாசபதி எவ்வாறு எதிர்கொண்டார் என காணல்வேண்டும், அதன் தொடக்க நிலையாகக் கைலாசபதி படைப்புகள் குறித்த சில பொதுவான அம்சங்களைத் தொகுக்கலாம்.
54 0 இலக்கு ' .. . : -

கைலாசபதி வரலாற்றுணர்வையும் இயக்கவியலையும் தம் ஆய்வுகட்கு ஆதாரமாக்கிக் கொண்டிருந்தாரெனினும், அவரது படைப்புகள் அனைத்தும் அவை எழுதப்பட்ட கால வரிசையை மனங்கொண்டு தொகுக்கப்படவில்லை. அவர் இறுந்தட்பின் வெளியிடப்பட்ட பாரதி ஆய்வுகள் இலக்கியச் சிந்தனைகள் ஆகிய நூல்களுக்கும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த தவின இலக்கியத்தின் அடிப்படைகள் என்ற நூலுக்கு மட்டுமே எழுதப்பட்ட காலம் தெளிவாகத் தெரிகிறது. அவரது படைப்புகள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு ! கருத்தரங்குகளில் படிக்கப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டிருக்கலாம். இவற்றின் காலம் அறியப்பட முடியவில்லை. இலக்கியத்துக்கு மட்டுமல்ல இலக்கிய ஆய்வுகட்கும் காலம் தேவையாகவுள்ளது. எத்தகைய வரலாற்றுச் சூழலில் ஆய்வாளரின் ஆய்வு உருவாகியுள்ளது என்பதையும், பல்வேறு காலங்களில் வெளிவந்த கருத்துகளில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கின்றனவா என்பதையும் அப்போதுதான் கண்டறிய முடியும். அதுமட்டுமல்ல ஆய்வாளரின் சிந்தனைப் பரப்பு எதிலிருந்து எதுவரை பரவியுள்ளது என்பதையும் கண்டறிய முடியும்.
கைலாசபதியின் வாசகர் தளம் அடுத்து கருதத்தக்கது ஆகும். பத்திரிகைக் கட்டுரைகள், கருத்தரங்க உரைகள் ஆகியன வெளிவந்துள்ளன. இவற்றைக் கல்வியாளர்களும் (மாணவர்கள் - ஆசிரியர்கள்) மார்க்சியத்தின் மீது ஓரளவு பிடிப்பு கொண்ட இலக்கிய ஆர்வலர்களும் (இவர்கள் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகவோ அனுதாபியாகவோ அல்லது இரண்டுமற்ற நிலையில் உள்ளவராகவோ இருக்கலாம்) இவரது வாசகர் தளமாக அமைந்தனர். எந்தவிதச் சிக்கலுக்குரிய தலைப்பையும் எளிமையான உரைநடையில் சாதாரணப் படிப்பறிவுப் பழக்கம் கொண்டவர்களும் படிக்கத்தக்க நடையைக் கைலாசபதி கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இரண்டு முனைகளில் நிற்கக்கூடிய வாசகர்தளம் இதற்குத் தம்மளவிலான காரணமாக இருந்தாலும், கைலாசபதி என்ற எழுத்தாளரின் தனித்திறனும் இதில் அடங்கியுள்ளது. கைலாசபதியின் பத்திரிகைப் பணி இதற்கு ஒரு காரணமாகக்கூட இருக்கலாம். கல்வியாளர்களின் தேவையை மனங்கொண்டு அடிக்குறிப்புகள் அதிகம் கொண்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இலக்கிய ஆர்வலர்களின் தேவையை மனங்கொண்டு அடிக்குறிப்புகள் எதுவுமற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வெளிவந்த கட்டுரைகளைக் கவனத்தில் கொண்டால் இரண்டாம் வகைக் கட்டுரைகளே 1970க்குப் பின்னர் நிரம்ப வந்துள்ளன. அவர் எந்த வாசகர் தளத்தை நோக்கி நகர விரும்பினார் என இதனால் அறிய இயலும். மாசேதுங் விரும்பிய, திரப்படுத்துதலை4/ம் 4.67/ejaasz V//6227/2, 676v4//d (Standardisation and Popularisation) கைலாசபதியின் கட்டுரையில் காண இயலும்.
கைலாசபதியின் எழுத்துத் தொழில்நுட்பம் சற்று கவனிக்கத்தக்கதாகும். பல கட்டுரைகளில் ஏதாவது ஒரு குறிப்பு நறுக்கை மட்டும் முன்வைத்து இதை வேறொரு சந்தர்ப்பத்திற் காணலாம்' என்பார், சில கருத்துகளை அதிகம் விளக்காமல் சுருக்கமாகச் சொல்லிச் செல்வார். இத்தகைய குறிப்புகளைப் பின்னர் கட்டுரையாக
55 0 இலக்கு *

Page 30
விரிவுபடுத்தி எழுதியுள்ளார். அதேபோல கட்டுரையின் இறுதியில் ஏதாவது புதிய செய்தியைக் குறிப்பிட்டு இதை விரிவாக ஆராய ஏற்ற சந்தர்ப்பம் அன்று என முடித்துவிடுவார். இது முடிவு அல்ல, இன்னொரு கட்டுரைக்கான தொடக்கம் ஆகும். கட்டுரையின் தலைப்பை மட்டுமே மையமாகக் கொண்டு வாசகனை அங்கும் இங்கும் காணவிடாமல் செய்யாமல், தலைப்பு தொடர்பான பிறசெய்திகளையும் சுட்டிக்காட்டி வாசகனின் படிப்பு ஆர்வத்தைப் பெருக்கும் தந்திரம் இதில் உள்ளது.
கைலாசபதியின் இத்தகைய தந்திரம் அக்கட்டுரையை மட்டுமின்றி அடுத்த கட்டுரை குறித்தும் சிந்திக்கவைத்து வாசகர் உளவியல் ஆர்வத்தை கிளரச் செய்யும் நோக்கமுள்ளது.
ஒரே கருத்து அல்லது ஒரே மேற்கோள் பலகட்டுரைகளில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டு வருவதைக் காணலாம். இது ஏறத்தாழ நீதி இலக்கிய வகைக்குரிய இயல்பு ஆகும். அதேபோல இவரது கட்டுரைகளில் நீண்ட மேற்கோள்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. பல்துறை அறிவு நூல்களின் துணையோடு தமிழகப் பருண்மை நிலைகளை மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஆய்ந்து புதிய கருதுகோள்கள், புதிய முடிவுகளைக் கூறும்பொழுது அதை உறுதிப்படுத்த நீண்ட மேற்கோற்கள் அவசியமாகின்றன, ஒரே கருத்தைத் திரும்ப திரும்பச் சொல்லும் நீதி இலக்கியத்தன்மையும் தேவையாகின்றது.
அவரது அடிக்குறிப்பு விளக்கங்கள் பிறரிடமிருந்து சற்று மாறுபட்டவை. ஆசிரியர் - நூல் பெயர்கள் மட்டுமேதான் இருந்தாகவேண்டும் என்ற ஆய்வு மரபை மீறி நிறைய அடிக்குறிப்புகள், பெரிய அளவிலான அடிக்குறிப்புகள் ஆகியனவற்றைக் காணலாம். வாசகனின் மேல்வாசிப்புத்தூண்டல்களாக இவை உள்ளன. இதோடு மட்டுமின்றி கட்டுரை எழுதி முடித்தபின் அத்தலைப்பு குறித்து ஏதாவது தொடர்புள்ள நூல், சிறுகுறிப்பு எதுவும் புதிதாகக் கிடைத்தாலோ அவற்றையும் கைலாசபதி வாசகரோடு பகிர்ந்து கொள்ள விரும்பினார். இத்தகைய கல்வி சார்ந்த அரசியல் விருப்பம், ஆய்வாளர் கைலாசபதியிடம் இருந்தது.
கைலாசபதியின் ஆய்வுக் கட்டுரையில் உள்ள இத்தகைய தொழில் நுட்பக்கூறுகள் அவரது வாசகர் தளத்தையும் ஆய்வு நோக்கத்தையும் கருதி
அமைந்தவை ஆகும். இதுவும் ஓர் ஆய்வுப் பங்களிப்பே ஆகும். மரபு வழிப்பட்ட ஆய்வுநடை மரபிலிருந்து கைலாசபதியின் ஆய்வுகள் மீறியுள்ளன.
ல ல் ல அேடுத்த இதழில் 2
56 0 இலக்கு

பேராசிரியர் கைலாசபதியின் நூல்கள்
இரு மகாகவிகள் - 1962 பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் - 1966 தமிழ் நாவல் இலக்கியம் - 1968 ஒப்பியல் இலக்கியம் - 1969 -9|գպլճ (փլգակմ) - 1970 இலக்கியமும் திறனாய்வும் - 1972 பாரதி நூல்களும் பாடபேத ஆராய்சியும் - 1973 திறனாய்வுப் பிரச்சினைகள் - 1980 சமூகவியலும் இலக்கியமும் கவிதை நயம் - 1970 இணையாசிரியர்) இலக்கியச் சிந்தனைகள் - 1983 Tamil Heroic Poetry நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் பாரதி ஆய்வுகள் - 1984
ஈழத்து இலக்கிய - 1980 முன்னோடிகள் - 1986
>
ஜெயகாந்தன் இலக்கியத்தடம்
ஜெயகாந்தன் இலக்கியத்தடம்' வரவிருக்கிறது. அவரின் ஆளுமை, சிந்தனை, படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை விரைவில் வெளியிடுகின்றோம். அவர் பற்றிய, அவரின் படைப்புகள் பற்றிய
தகவல்கள் தந்துதவ வேண்டும். நன்றி.
ിg/_// ിക്കുന്ന ബ്ലബ്ധ4 മക്ബ/ീ " DR. SHANMUGA SUNDARAM KAAVYA PUBLISHERS,
16, 17th-E - CROSS, INDRA NAGAR II STAGE.
N
>
ܢܠ
57
BANGALORE - 560 038. (INDIA) /
லில்லி தேவசிகாமணி இலக்கிய நினைவுப் பரிசு
திருப்பூர் தமிழ்ச் சங்க இலக்கியப் பரிசு பெற்ற தேவகாந்தனின்
A. நெருப்பு
இப்பொழுது விற்பனையில் விலை ரூபாய் 30-00 ബണീ/% குமரன் பப்ளிஷர்ஸ்
ബ%ബ7 ' பாரி நிலையம் 183, பிராட்வே, சென்னை - 600 103.
0 இலக்கு

Page 31
ஒப்புநோக்கி ஆராய்ந்தே தமது மேற்படி முடிவை முன்வைத்தார். பொதுவாக சங்கப்பாடல்கள் புலவர்களால் திட்டப்பாங்குடன் எழுதப்பட்டவை என்ற கருத்து நிலவிவந்த சூழலில் இவரது இந்த ஆய்வு முடிவு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவரைத் தொடர்ந்து தமிழியலார் சிலர் இவ்வகையில் சிந்திக்க முற்பட்டனர். பேராசிரியர் கதிர் மகாதேவன் மேற்கொண்ட ஒப்பியல் நோக்கில் சங்ககாலம் என்ற ஆய்வு இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது.
சங்கப்பாடல்களை வாய்மொழி மரபோடு தொடர்புபடுத்தி நோக்கும் கைலாசபதியவர்களின் பார்வை, அணுகுமுறை என்பன தமிழ் ஆய்வுலகில் பலராலும் மதித்து வரவேற்கப்பட்டுள்ளது. எனினும் சங்கப் பாடல்களை முழுமையாகவோ அன்றேல் அவற்றின் பெரும் பகுதியையோ வாய் மொழிப்பாடல்களாக உருவானவை என்பதை அறிஞருலகம் முழுநிலையில் ஒப்புக்கொள்ளவில்லை. சங்கப் பாடல்களில் வாய்மொழி மரபுக் கூறுகள் பயின்றுள்ளன எனினும் அவை எழுத்திலக்கியங்களாக உருவானவை என்பதே பொதுவாக ஒப்பமுடிந்த கருத்தாகும். இதனை மேலும் தெளிவாகக் கூறுவதானால் 'சங்கப் பாடல்களுக்கு முன் தமிழகத்தில் வலுவான ஒரு வாய்மொழி மரபு நிலவி வந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டு, 'அம்மரபின் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்ட நிலையில் புலவர்களால் எழுத்து நிலையில் வெளிப்படுத்தப்பட்ட இலக்கியங்களே சங்கப் பாடல்கள் எனக் கருதும் நோக்குநிலையே தமிழ் ஆய்வுலகில் பொதுவாக நிலவிவருகின்றது. சுருங்கக் கூறுவதானால் அவை வாய் மொழி மரபில் தோன்றி வளர்ந்து வரிவடிவம் பெற்றவை என்றே கருதப்படுகின்றன,
சங்கப் பாடல்களின் உருவாக்கம் தொடர்பாக நிலவிவருகின்ற மேற்படி கருத்துநிலைகள் தொடர்பாக ஒரு குறிப்பை இங்கு முன்வைப்பது அவசியமாகிறது.
கைலாசபதியவர்களும் அவரை அடியொற்றிய பிற ஆய்வாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளவாறு சங்கப்பாடல்களில் வாய்மொழி இலக்கியப் பண்புகள் பயின்றுள்ளமை தெளிவு. மேலும் ‘வீரயுகத்தின் பொதுப் பண்பு என்றவகையில் பாணர், கூத்தர், பொருநர், விறலி முதலியவர்கள் 'தலைவன் புகழை வாய்மொழியாகப் புகழ்ந்தேத்தும் இயல்பிலான பாடல்கள் சங்கப் பாடற் பரப்பில் உள்ளன என்பதையும் அறிவோம். சங்கப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கருதுகோளுக்கு இவையே அடிப்படை -
வாய்மொழிப் பாடல்கள் எனப்படுபவை பொதுவாக ஆசிரியர் பெயர் அறியப்படாதவை. ஆனால் சங்கப் பாடல்கள் ஆசிரியர் பெயர் அறியப்பட்டவை. 473 புலவர்களில் பாடப்பட்ட 2381 பாடல்கள் கொண்ட இலக்கியப் பரப்பு அது. புலவர்கள் எனப்படுபவர்கள் மேற்சுட்டிய பாணர், கூத்தர் முதலியவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். பாணர் முதலியவர்களுக்கு அரசர்கள், வீரர்கள் என்போரின் செயல்வீரமே முக்கிய பாடுபொருள். போர்க் களத்திலும், அரசவைகளிலும் இசைப் பண்புடன் பாடுவது இவர்களது பாணி. ஆனால் புலவர்கள் அறம்-ஒழுக்கம், சமய உணர்வு என்பவற்றினடிப்படையில் சிந்தித்து இலக்கியம் படைப்பவர்கள். இவர்களின் படைப்பில் இசைப்பண்பைவிட சொற்களின் பொருட் செறிவும் திட்டப்பாங்கும் முதன்மை வகிக்கும். வரலாற்று நிலையில் நோக்கினால் பாணர்
8 0 இலக்கு

முதலியோர் வீரயுகத்திற்கும், புலவர்கள் பின்வீரயுகத்திற்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றனர். சங்கப் பாடல்களாக அறியப்படுபவை மேற்சுட்டியவாறு புலவர் பாடல்களாகவே எமக்குக் கிட்டியுள்ளன. எனவே இவை எழுத்திலக்கியங்களாக வரிவடிவம் எய்தியவை என்பது உய்த்துணரத்தக்கது.
இவ்வாறு இலக்கியம் படைத்த புலவர்கள் தமக்கு முற்பட்ட பாணர், கூத்தர் முதலியவர்களின் மரபை அடியொற்றி கற்பித நிலையில் நின்றும் பாடல் புனைந்துள்ளர், குறிப்பாக, புறநானூறு 60ஆம் பாடல் விறலியைக் குறிப்பதால் பாணன் பாடுவதாகக் கொள்ளலாம். ஆனால், இந்தப்பாடல் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியதாகப் பிற்குறிப்பு கூறுகிறது. எனவே பாணர் மரபை ஒட்டிப் புலவர் பாடியதாக இது கருதப்பட வேண்டும் என்பர் ஜார்ஜ் எல். ஹார்ட், மேலும் ஒளவையார் பாடல்களிலும் (புறநானூறு 390, 392) கோவூர்கிழார் பாடல்களிலும் (புறநானூறு 373, 382, 400) இசைக்கலைஞர்கள் போலப் பாடப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே சங்கப் பாடல்களில் பாணர், கூத்தர் முதலிய கலைஞர்களின் மரபை அடியொற்றிய புலவர்களின் ஆக்கங்கள் எனத் துணியலாம்.
இவ்வாறு புலவர்கள் தமக்கு முற்பட்ட பாணர், கூத்தர் முதலியோரின் மரபைப் பின்பற்றி நின்ற படைப்பாக்க நெறியினை கைலாசபதியவர்களும் உணர்ந்திருந்தார் என டாக்டர். செ. வை. சண்முகம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்.
புலவர்கள் பின்வீரயுக காலத்தில் சமய உணர்வோடு சிந்தனை மேம்பாட்டை தத்துவ விசாரணை) சிறப்பாகக் கருதினார்கள். இந்தக் காலத்தில் தான் வடமொழிக் கலப்பு ஏற்பட்டது. பிறகு பிராமணர்களும், புலவர்களுமாக இடம் பெற்றார்கள். இவர்கள் பொருநர், கூத்தர் போன்ற கலைஞர்களின் சில மரபினைப் பின்பற்றினார்கள் என்பது அவருடைய (கைலாசபதியவர்களுடைய கருத்தின் சாரம். அதாவது, புலவர்கள் பாணர்களாக, கூத்தர்களாகச் செய்யுள்களைப் பாடி மகிழ் வித்திருக்க வேண்டும். எனவே, கைலாசபதியும் இலக்கியச் செய்யுள்கள் புலவர்களால் இயற்றப்பட்டவை என்ற கருத்து உடையவர் என்று கூறலாம். . சங்க இலக்கியச் செய்யுட்கள் வாய்மொழிப் பாடல்கள் அல்ல என்பதை கைலாசபதி உணர்ந்திருந்தார் என்பதே முக்கியம். என்பது அவர் தரும் விளக்கம். இவ்விளக்கம் ஏற்புடையதாகவே தெரிகிறது. எவ்வாறாயினும் சங்கப் பாடல்களைச் சமுதாய வரலாற்றடிப்படையில் வாய்மொழி மரபுடன் தொடர்புபடுத்திச் சிந்திக்கும் முயற்சிகளுக்கு முதல்வடிவம் தந்து முன்னோடியாக அமைந்தவர் என்ற சிறப்பு கைலாசபதி அவர்களுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. v
அடுத்த இதழில் மிதி)

Page 32
கலாநிதி கைலாசபதி : மீண்டும் ஒரு தேவை
தி. சு. நடராசன்
20-ஆம் நூ.ஆ முடியப் போகிறது. இதன் 90கள் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தேய்மான காலம்தான். படைப்புலகிலும் திறனாய்வுலகிலும் தமிழ்க்கல்வியுலகிலும் பெரிசுகள் இல்லாமலாகிவிட்ட காலம். புதிய தலைமுறை முகிழ்த்திருக்கிறது என்று தோன்றினாலும், ஒரு புதிய அலை எழும்பாமலா போகும் என்பது உண்மையானாலும், ஒரு ஒட்டுமொத்தத் தன்மை, ஒரு அறிவார்த்தமான தலைமை இல்லாமல் போய்விட்ட காலம், இது. இந்த நேரத்தில், சாதனைகள் புரிந்த பழைய ஆட்களை நினைத்துப் பார்த்தால் nostalgia 1 பழங்கனவுத் தொனி விழுந்தாலும் ஆச்சரியமில்லை / தவிர்க்கமுடியாது. அதனால் என்ன - மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசாமல், வெளிப்படையாகி எல்லாருடனும் சேர்ந்து பேசினால், தொனியும் தோரணையும் மாறும் இல்லையா? சாதனைகளைச் செரித்துக்கொள்கிறபோது பழசிலிருந்து புதுசு அல்லது பழசை மீறிப் புதுசு தோன்றும் இல்லையா?
தமிழ்க் கல்வியாளர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் / ஆராய்ச்சியாளர்கள் 10த்தியில் கலாநிதி க. கைலாசபதிக்கு ஒரு நட்சத்திர மதிப்பு உண்டு. பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கின் போது கவனித்திருக்கிறேன் - நாற்பது வயதுக்குட்பட்ட தமிழ்க் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் கைலாசபதியைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். இன்று சில எழுத்தாளர்கள், தங்களை ஒரு பீடத்தில் அமர்த்திக் கொள்வதற்காகத் திட்டமிட்டு அடியார் கூட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்களே, அதுபோல் இல்லை இது - இவர்கள் இயல்பாகவும் தன்னிச்சையாகவும் வருபவர்கள். இவர்களில் பலரும் அவருக்குப் பழக்கமில்லாதவர்கள். ஆனால், மூன்று நாளும் அவர் போகிற இடமெல்லாம் இவர்கள் வருவார்கள். அவரைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தவர்களும் உண்டு. எதனால் அப்படி ஒரு மதிப்பு?
இந்நூற்றாண்டின்,70, 80-கள் தமிழிலக்கிய உலகில் எழுச்சிமிக்க ஒரு வசந்தம். குறிப்பாக, முற்போக்கு இலக்கிய முகாமிற்கு அது ஆகிவந்த காலம். மேலும், படைப்புலகில் பல புதிய பரிமாணங்களன்றியும், திறனாய்வு / ஆராய்ச்சி உலகில் ஒரு பரவலான வீச்சும் இரு தது. திறனாய்வாளர்கள் சுறுசுறுப்பாகி / உற்சாகமாகி இயங்கினார்கள். விவாதங்கள், மோதல்கள், பரிமாற்றங்கள் எல்லாம் இருந்தன.
62T Li f : 77
60 0 இலக்கு

வரிசையில் நின்று குழாய்த்
தண்ணிர் அடித்து வந்து வைத்து
விட்டு, தன் மேனிப் பிசுபிசுப்பில் தானே அரயண்டப்பட்டவள்ாய் சட்டை இடுக்குகளில் விரலை துழைத்து நுணாவிக்கொண்டு சுவரோடு பட்டும் படாமலும் அமர்ந்தாள் ராஜம்
தற்செயலாக பார்வை எதிரே
மேசைமேல் வைத் தி ரு ந் த பூச்சரைமேல் விழுந்து உன்னிப் பாகிறது.
மனத்தின் அடியிலும் கிடக்கும். அகுயைகள் அருவருப்புகளையும், அங்குள்ள சிதல் வடியும் ரணங் களின் வலிகளையும், நாற்றங் களையும்கூட பார்  ைவ யி ல் கொண்டுவருதல் சாத்தியமோ?
பார்க்கிறபோது
அவளைப்
சாத்தியமென்றே படுகிறது.
னாலும்
அவளது கணவன். வாங்கி வந்து வைத்துவிட்டுப் போன பூ ஆது. அதிலும் அவளுக்கு மிக மிகப் பிடித்தமான மொட்டுமல்லி. ஆனாலும், பார்வையில் அத் தனை வெறுப்பு
ஏன் அப்படி?
அவள் களைத்துப் போனாள். வாழ்க்கையைக் காணாமலே, வாழ்க்கை கசந்து போனாள்,
அந்த நிலைமை ஒருவருக்கு அபூர்வம். ஒருவரைப் பார்த்துப பழகுவதற்கு மு ன் பா க வே அவரை வெறுப்பது போன்றது அது. சாத்தியமற்றது.
அவளளவில் சாத்தியமாகக் கூடியதெல்லாம் சாத்தியமாகாது போனது போலவே, சத்திய மாகாததெல்லாம் சாத்தியமாகிப் போயின. என்ன செய்வது?
வாழ்க்கையை அவள் காண வில்லை என்பது எவ்வளவு நிஜம்!
gg LD!
தாய் தந்தையுடன் ஆரம்பத்தி லும், தந்தை இறந்த பின் தாயு டன் கொஞ்சமாக இடையிலும், மேலும் துரதிர்ஷ்டக்காரியாகும் படிக்கு தாயார் இறந்துபோக மணம் முடித்து புருஷன் வீடு போய்விட்ட அக்காளோடு பின் நாட்களைக் கழித்த காலத்திலும் அவள் வாழ்க்கை 60pшф காணவில்லை; உணர வில்லை; அனுபவிக்கவில்லை. ஒருநாள் எவனோ ஒருவனை வீட்டுக்குக் கூட்டிவந்த அத்தான் காரன் 'இதுதான் ராஜத்தின் மாப்பிள்ளை’ என்று அறிமுகப் படுத்திவிட்டு அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் கல்யாணம் செய்து
வைத்தான். அதன் பின்னான

Page 33
நான்கு வருஷ காலத்திலும்கூட அதை அவள் காணவில்லை; உணரவில்லை; அனுபவிக்க வில்லை.
தன் எதிர்கால வாழ்வு பற்றிய கனவுகளின் எதிர்ப்ார்ப்போடு இருந்தவளுக்கு, அந்த நான்கு வகுஷங்களும் எந்த விதமான நம்பிக்கையையும்கூட அளிக்க
sisos so.
சாப்பாட்டு விஷயத்தில், துணி மணி விவகாரத்தில் மற்றைய பெண்கள் போல் நகைநட்டு பற்றியவைகளில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தாலும் அவள் அதைப மாட்டாள். அவள் குறைப்பட்டது வாழ்க்கையில், வாழ்க்கையே குறையாகிப் போனால் மேலே சாப்பாடு, துணிமணி, நகைநட்டு கள் என்ன பலனைச் செய்யும்?
வெளிப் பார்வைக்கு அப்போது சரி, இப்போது சரி, நல்லவ னாகவே தென்பட்டான் அவள் புருஷன். அண்டை அயலா ரோடு நாகரீகமாகப் பழகினான். நாலு மனிதரோடு அரசியல், இலக்கியம் பேசினான். கள்லையில் வேலைக் குப் போய் மாலையில் வீடு திரும்பினான். சம்பள நாளா னால் ஸ்வீட், காரம் வாங்கிவந் தான், ஒன்றிரண்டு மாதத்துக்கு ஒருமுறை சினிமாவுக்கு கூட்டிப் போனான். பெரும்பாலான மாலைகளிலும், எல்லா வெள்ளி களிலும் அவளுக்கு பூ வாங்கி வந்தான். எல்லாம் இயல்பாகவும் சரியாகவும்தான் செய்தான்.
ஆனால், இரவில்தான் மாறிப் போனான்.
அளவாகவே குடித்தாலும்,
பெரிதுபடுத்தியிருக்க
அதீத சுவைகளையும், சுகங்களை யும் கேட்டான் அவன்.
அவளுக்கு அவை பிடிக்கா
திருந்த போதும், அவன் கண்டு கொண்டதேயில்லை.
மனமும் முகமும் கோண்க் கொண்டே இத்தனை காலமாக
அவள் அவனை அனுசரித்து வந்துவிட்டாள்.
ஆனால், அவன் அவளைப்
பொருட்படுத்தவேயில்ல்ை. 611 إ9ع
ளது முனகல்களில் அவன் எரிச்
சல் அடைந் தானே தவிர, அவள் உணர்வு பற்றி கிஞ்சித்தும் அக் கறை கொள்ளவில்லை; இரக்கம் காட்டவில்லை,
தன்னை ஒரு மனித ஜீவனாக
எண்ணாமல், வெறும் ஜடமாக
குறியும் முலைகளும் மட்டுமே கொண்ட தசைப்பிண்டமாக, அவன் நினைத்துவிட்டமை
அவளுக்குப் புரிந்தது.
அது அவளுக்கு ஒப்பில்லை.
ஆனாலும், அவள் அன்றுவரை வாய் திறந்து அதைச் சொல்ல வில்லை. )
வெகு பலரைப்போல் அவளுக் கும் அதைச் சொல்லத் தெரிய ‘வில்ல்ை; முடியவில்லை.
மனத்துள்ளாகவே வெறுத்து வெறுத்து, வெறுப்பை கசப்பாக் கிக் கசப்பாக்கி, அந்தக் கசப்பை இப்போது விஷமாக்கிவிட்டாள். ஆனாலும், இன்னும் ஆட்பட்
டாள் அவனுக்கு.
போன வாரத்தில் ஒரு இரவு.
இப்படித்தான் ஆலகால விஷம் போல,பொங்கியெழத் தீர்மானித்
 

தாள். பின் பலதையும் பத்தையும் எண்ணி அடங்கிப் போனாள்.
எப்படி அது நடந்தது என்று இப்போதும் அவளுக்குத் தெளி வில்லை. தான் நினைப்பதை, தீர்மானிப்பதைச் செயலாக்க முடியாதபடிக்கு தன் சுபாவம் திரிபு படுத்தப்பட்டிருக்குமோ
என்று சிந்தனை இப்போது பிறக்
கிறது அவளுக்கு. مـ" s
அவளது கடினங்களையெல் லாம் படப்பட்வென எதுவோ உருக்கிக்கொண்டிருப்பதை அவள் உணர்த்தாள்.
அவளுக்கு கடினம் விலக்கப்பட் டிருக்கிறது, எந்த மேன்மையான உணர்விலும்,
அதன் அடையாளம்தான்.
“பொம்பிளைன்னா. குளிச்சு, முழுகி, தலைவாரி, பொட்டு வைச்சு.எந்த நேரமும் லட்சுமீ கரமாய் இருக்கணும்.
அவனே சொல்லிக்கொள் கிறான். அவன் சொன்னால் அக்கம்பக்கத்திலுள்ள நாலு பேர் அதை ஆமோதிக்கிறார்கள்.
* குளித்து.முழுகி.சுத்தமாக எந்நேரமும் இருக்க வேண் டுமாம்! ×ა: v
பூ ஒரு அடையாளம்.
‘சுத்தமாக இரு என்பது அதி காரம்.
அவன் வேலைக்குச் புறப்படுவதற்கு அளவாக அரைக்
பெண்ணை நொய்மைப்படுத் தும் துரோக அஸ்திவாரம்.
பூச்சரத்திலிருந்து பார்வையை மீட்ட ராஜம் விறுவிறுவென குளியலறை போனாள். மறுநாள் செல்லப்
குடம் தண்ணிரை மட்டும் வைத் துக்கொண்டு, மீதித் தண்ணிரை யெல்லாம் கவிழ்த்துக் கொட்டி னாள். திரும்ப வந்து பழையபடி அமர்ந்தாள்.
வெளியே போயிருந்தவன் திரும்பி வருவான், எடுக்கப்படாத
பூச்சரத்தைப் பார்ப்பான், அவள் குளிக்கவில்லை என்பதைத் தெரி வான், உள்ளுக்குள் குமுறுவான், சாப்பிடாமலே போய்ப் படுப்பான் என்பது அவளுக்குத் தெரியும். அன்றைக்குப் பிரச்னை இராது. பிரச்னையெல்லாம் விடிந்த பிறகு தான் தொடங்கும். சாப்பாடு தாமதம் என்று திட்டுவான், சாம் பாரில் உப்பு கம்மி/அதிகம் என்று கத்துவான், அதை இங்கு ஏன் வைத்தாய், இதை அங்கு ஏன் வைத்தாய் என்று கூப்பாடு போடுவான், என்ன ஏது என்று அடுத்தடுத்த வீட்டில்யாராவது
கேட்டால் லட்சுமீகரத்தைச் சொல்வான், அவ்வளவுதான். ஒரு பெண்ணாயேனும் தன்
ஆளுமையை, தன் சுயமரியாதை யைக் காக்க ஏதோ புரிதலோடு அவள் தயாராகிவிட்டாள்.
உடம்பில் ஊரலெடுத்தது. ஆனாலும். மனத்தில்.
இலக்கு O 63

Page 34
ஊர்வலம்
உதிர்ந்து போன
ரோஜாக்களுக்குப் பின் நான் சென்றதுண்டு. இனம்புரியாத
சோகத்தை, வாழ்வின் முடிவை, நினைவுபடுத்தும் இம்மலர்கள்தான் நம் இறுதித் தோழர்கள். அழுகையும், துக்கமும். , பிரிவும், நிராதரவும்
கப்பி சதறிக்கிடக்கும் இம்மென்மையான மலர்கள் உலகின் தத்துவங்களை பரிகசிக்கத்தான் செய்கின்றன. இறப்பின் வழித்தட ங்கள் மலர்களாக இருந்தாலும் வாழ்வு
பெரும்பாலும் முட்களாகத்தான் இருந்து
விடுகிறது.
என்றேனும் ஒருநாள் நானும் உதிர்ந்துபோன ரோஜாக்களுக்கு முன் செல்ல நேரிடும் எல்லாவற்றையும் இழந்து
ஊர்வலத்தின் நாயகனாய்.
எம். எஸ்தர்
முரண
புரியவில்லை எனக்குன்
பேச்சு.
சொல்லப்போனால்
சகிக்கவில்லை!
புரிவதில்லை உனக்கென்
பேச்சு.
சொல்லப்போனால்
சகிக்கவில்லையுனக்கு! நீயும் நானும் இங்குதான் வாழவேண்டி
யிருக்கிறது
பேச்சின் சுகம்பற்றிய
கேள்வியற்று.
கட்சத்ரன்
64 O இலக்கு
 

வெளியீடுகள் شل شي .
SS26î Gal. A görs as 34 TA' 3 TAK 6ĩ காவல்)
2ாத்தளை சோமு
தமிழ்க்குரல் பதிப்பகம் , P-15, ஐந்தாவது பிரதான சாலை, இராமலிங்கநகர், திருச்சி-620 003. விலை : ரூபா 50-00
ஞானக்கிறுக்கள் கதைகள் ஜெயந்தன் . . . . . வெளியீடு : செம்பொன் பதிப்பகம் 6.8, தண்டீஸ்வரம் மெயின், வேளச்சேரி, சென்னை-600 042. விலை : ரூபா 25-00
:உலகத் தமிழர்
(பாகம் 2) பயண ஆய்வுக் கட்டுரைகள்) (ĉu 15 ft dArfiului ĝis . f5. 6 ŝiyüu avx Frii விற்பனை உரிமை (இந்தியா)
:ாம்பிறை பதிப்பகம், 375-8, ஆற்காடு சாலை, சென்னை-600 024. விலை : ரூபா 100-00
பனியில் மொழி எழுதி (கவிதைத் தொகுப்பு) சோலைக்கிளி
விலை : ரூபா 30-00 டானியல் சிறுகதைகள் விலை : ரூபா 45-00 செட்டை கழற்றிய நாங்கள் (கவிதைத் தொகுப்பு) - iya
விலை ரூபா 15-00
மேற்கண்ட மூன்று நூல்களும் வெளியீடு , விடியல் பதிப்பகம், 3, மாரியம்மன் கோவில் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641 015

Page 35
i
இலக்கு நோக்கி.
தி. ஜா. நினைவு மலர் வாசித்துப் பெரிதும் இன்புற்றேன். இலக்கிய வாசகர்களையும் ஜனரஞ்சக வாசகர்களையும் ஒருசேர மகிழ்வித்த அவருடைய எழுத்து ஆற்றல் போற்றுதலுக்கு உகந்த தாகும். தமிழுக்குப் புதுநடை தந்தவர். அவருடைய சுய கட்டுரை யும், அவரைப் பற்றி திருமதி அம்பை எழுதிய கட்டுரையும் - மரப்பசு நவீனத்தைக் குறித்து-விளக்கமும் சுவையும் பயனும் நிரம்பியனவாக
26.66
பா. அமிழ்தன், சென்னை-75
தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுக்கு நினைவு மலர்கள் வெளியிட்டிருப்பதை அறிந்ததும் இலக்கின் நோக்கு ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. முன்னோடிகளைப் பற்றி புரிதல், புரிய வைத்தல் என்ற கோணத்திலும் தமிழின் தற்காலப் படைப்புகளை அடையாளங் காட்டுவது என்ற முறையிலும், அதாவது தமிழ் இலக்கி யத்தின் இன்றைய நிலையிலிருந்து ஒரு நேர்க்கோட்டில் இணைத்து முன்னோடிகளதும் தற்போதைய படைப்பாளர்களதும் எழுத்துக் களை வாசிப்பதற்கான சாத்தியத்தை நிலை நிறுத்தியிருப்பது, ஒரு சிறந்த இலக்கிய இதழின் மரபுச் செயல். அதை இலக்கு செம்ம்ை யாக செய்திருக்கிறது.
ufulub மானுடம் பாடிகள் இலக்கிய இயக்கம்
தி. ஜா. நினைவு மலர் சிறப்பாக ஜானகிராமனை கவுரவித்திருக் கிறது. ‘இலக்கு" ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு படைப்பாளியை பெருமைப்படுத்தும் இலக்கிய மலராக தயாரிக்கப்படுவது போற்று தலுக்குரியது. இந்த இதழில், செ. கணேசலிங்கன் இலக்கியச் சந்திப்பு விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தது. ஞானியின் கட்டுரை ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. இறுதி முடிவு மிக முக்கியமானது. புத்தக விமர்சனப் பகுதி அருமை. பல புத்தகங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள உதவுகிறது.
வல்லிக்கண்ணன், சென்னை-5
'பல்லி ஜென்மம் சிறுகதை படித்ததும் அதிர்ந்தேன், நண்பர் களும் படித்தார்கள். இப்படிப்பட்ட "புதிய கோணச் சிந்தனைகள்’’ வியக்க வைப்பதே. இதை மலையாள இலக்கியம் தரமாகச் செய் கிறது.
பொள்ளாச்சி நசன்
தனித்துவத்தை இழக்காத ஒரு தனிமனிதனின் இலக்கிய இயக்கத்தின் ஜீவ துடிப்பு எல்லாப் பக்கங்களிலும்.
கவிஞர் சூர்யா
 

தமிழில் அருவி போல் குதித்தோடும் அழகிய நடைக்குச் சொந்தக்காரர் தி. ஜா. அவரைப் பற்றிய நினைவு. மலர் ந்ெஞ்சின் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்று. மரப்பசு நாவல் “பற்றிய அம்பையின் சிந்தனைகள் புதுமையானவை; ஆழமாகவும், அழுத்த மாகவும் எழுதப்பட்ட கட்டுரை. “மார்க்சியமும் தலித் இலக்கியமும்’ ஞானியின் கட்டுரை சிறப்பாக உள்ளது. மார்க்சிய கண்ணோட்டத் துட னான தலித் மக்களின் வாழ்வியல், அரசியல் மற்றும் இலக்கியம் பற்றிய தெளிவுடன் கட்டுரை மிளிர்கிறது.
தீபன், ஆற்காடு
அனைத்து படைப்புகளும் அருமை. "இலக்கு" என்ற தலைப்பில் இதழ்; கருத்துக்களும் இலக்கு நோக்கும் நல்ல இலட்சியத்துக்கு அழைத்துச் செல்லுகின்றன.
தேசிய வலிமை
புகழ் வாய்ந்த எழுத்தாளர்களின் நினைவு மலர்களாக "இலக்கு" இதழ் ஒவ்வொன்றும் சீரிய முறையில் வருவது சிந்தனைக்கு விருந் தாகும். மேலும் இலக்கியவாணர்களின் பேட்டியும், மதிப்புரைப் பகுதி யும், கருத்து நிறைந்த கட்டுரைகளும் ஏந்தியவாறு ‘இலக்கு வருவது வாசகர்களுக்கு மிக்க பயனுடையது.
நெல்லை க. சுப்பிரமணியன்
தமிழ் ஆங்கிலமாவது பற்றி காசி ஆனந்தன் உட்பட தமிழ் மரபு வாதிகள் எல்லோருமேதான் புலம்புகிறார்கள். தமிழை வளரவிடாது மறிக்கும் மரபுவாதமே இந்த ஆங்கிலமாதலுக்கு ஒரு முக்கிய காரணம். அடிப்படையான எழுத்துச் சீர்திருத்தத் தேவைகளை, புதிய ஒலிகளை முறையாகக் குறிக்கும் வழிவகை பற்றிய சிந்தனை களை நிராகரித்துக் கொண்டு, தலை நரைத்துக்கொண்டிருக்கும் தமிழ்க் கன்னியின் கற்பைப் பேணுகிறவர்கள், தமிழின் சமகாலத் தேவைகள் பற்றிக் கொஞ்சம் யோசிப்பது நல்லது.மூர்க்கத்தனமான ஆங்கில மோகத்தினளவுக்கு, மூர்க்கத்தனமான ஆங்கில விரோதமும்
கெடுதலானதே!
சி. சிவசேகரம், லண்டன்
ஏன் நிறுத்திவிட்டீர்கள் "ஈழத்து தமிழ் நாவல் தொடரை? மறுவிசாரணைப் பக்கமும் நின்றுபோனது. இப்பகுதிகள் இதழுக்கு வலு சேர்ப்பவை. இது பற்றி தாங்கள் மறுவிசாரணை செய்வது
நல்லது.
6Tsivo. Sruosör, 560T L-AT
மறுபக்கம்-1 பல படிமங்களை உணர்த்தும் கதை. ஒரு பெரிய நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மலைப்பையும் அது ஆழமாக ஏற்படுத்தியது. இனிமேலும் ஒரு வார்த்தையோ, ஒரு வரியோ சேர்த்தகுந்தால் "அந்தக் கதையின் வடிவம் சிதைந்திருக்கும் போலத் தெரிகிறது.
தேவரசிகன், கும்பகோணம்
تھی۔
&
Ꮥ
இலக்கு O 67

Page 36
வெ. சாமிநாத சர்மாவின் 101ம் ஆண்டு
விழா, பாரதி பாசறை சார்பில், சென்னை பாரதிய வித்யா பவனில் கொண் டாடப்பட்டது. அவ்வை நட Tਹੰ விக்கிரமன், பாரதி சுராஜ், கு, தேவநாராயணன்,
புதுகை தர்மராசன் போன்றோர்
கலந்து கொண்டனர். சிறப்புச் சொற்பொழி நிகழ்த்தியவர் பெ. சு 11.
பிளேட்டோ, ஸ்டாவின் பற்றி யெல்லாம் அன்றே நூல்கள் எழுதிய சர்மாவின் பணிகள் பற்றி நினைவு கூர்ந்தார் அவர் ஜெய காந்தன் ஒரு முறை சர்மாவின் கார்ல்மார்க்ஸ் குறித்த நூலின் கடைசிப் பத்திகளை அப்படியே ஒப்பித்தது *ள்பட பற்பல a'r Sir Ffrisii) EIDILET ST செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். என்றா ஆம் 'அதிகம் பேசப்பட்டது, சர்மாவுக்கு மன்னவி மேல் இருந்த காதலும், அவரது பனை விக்குத் தம் கணவர் மேல்
அன்றைய கூட்டத்தில் பார்வையாளர்களாக முதுபெரும் எழுத்தாளர்கள் சிட்டி, என்.எஸ், ஜெ. ஆர்.வி. உள்படப் பற்பலர் வருகை தந்தனர்.
திருப்பூர்கிருஷ்ணன் நன்றி தினமணி
LI I IT-i
i
ே
பட்டாபிக்கு நாளும் பொழு தும் லேசில் போவதாயில்லை.
உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது. சர்க்கார்
வேலைதான். பென்ஷன் உண்டு' பிரச்ன்ை என்று சொல்லும்படி
ஒன்றுமில்லை. சாப்பாடு தூக்கம் என்றிருக்க வேண்டியது தானே. அதுதானே அவரால் இயலவில்ல்ை, சக ரிடையர்டுக் ளைப் போல இவரும் கடைகின் ணிைக்குப் போய்வந்தார். ரேஷன் கார்டு, மின்சாரபில், டெலிபோன் பில் என்று ஏற்றுச் செய்யப் பழி கிக் கெர்ண்டார். அப்படியும் இதெல்லாம் ஒரு கடமையாகத்
தான் அவருக்குப்பட்டதே தவிர,
நாலு பேரைப் போல உற்சாக மாதச் சொல்லிக் கொள்ளவோ, சாதனன்யாகத் தம்பட்டமடித்துக் T57'r GI GETIT முடியவில்லை.
எங்கேயோ கோளாறு, குளியல், சாப்பாடு மாதிரி இவைகளும் ஒரு
 
 
 
 

நியமமாகிவிட்டிருந்தன. அவ்வளவுதான். எதில்தான் அவருக்கு பிடிப்பு? அவர்ே சொல்லட்டுமே.
O
பஞ்சபட்ச பரமான்னமா கேக்கறேன். ஏதோ, பெறு கrயாம இருக்கணும். அவ்வளவுதான். சில சில சமயம் நாக்கு கொஞ்சம் நீளறதும் உண்டு வாய்க்கு ருசியா, மனசுக்கு திருப்தியா அப்பளம், வடை, பாயாசத்தோடு விருத்துச் சாப்பாடும் கிடைக்கிறது தான். ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது பண்டிகை வந்துண்டுத்ானே ருக்கு. சாப்பாட்டுக்கப்பறம் கொஞ்சம் தலையைக் கீழ்ே சாய்க்கலா மில்லையா? அதையும் ட்ரை பண்ணிப் பார்த்தாச்சு, அதில் கஷ்டம் என்னன்னா, பகல்ல கொஞ்சம் கண்ணசந்தா, ராத்திரித் தூக்கம் போயே போயிடறது. தூக்கம் இல்லாட்டா, என்ன ஆறது மனுஷன், பகல்ல சயனமில்லைன்னா ராத்திரி தூக்கமும் மோசமில்லை. அப்பவும் பாதி நாள் ஏதாவது சொப்பனம் வந்து தூக்கத்தைக் கலைக்கிறது. அது மட்டுமா பயப்படுத்தவும் செய்யறதே. எத்தண்ன நாள் "ஓ"ன்னு அலறியிருக்கேன், மத்தவா என்ன என்ன என்று š5 JGr. I ligt. R. L. sija Ljsir GMU Gör "The strange case of Dr. Terys and M. Hyd'ன்னு ஒரு நீளக்கதை எழுதினாரே, ஆதுக்கு ஆதாரமே அவர் கண்ட சொப்பனம் தானாம், நமக்கென்னடான்னா, ஒண்னு சொப்பனம் பாதியிலேயே அறுந்து போயிடறது, இல்லை அலறவைக்கறது. என்னத்தச் சொல்ல.
என்னடா இது, ஸ்டீபன் எபன், சொப்பனம், கதை அப்படி இப்படின்னு சொல்லிண்டு போறான்னு பார்க்கறேனா? கொறயம் கேளுங்கோ. எனக்கு நிறையப் பேசனும், மத்தவா பேசறதையும் நிறையக் கேக்கணும். "பட்டாபிக்கு பேச்சுத்தான் மூச்சு, அன்ன ஆகாரமெல்லாம் அப்புறம்தான்' என்னைப்பத்தி இதுதான் பஹ 2ஜன அபிப்பிராயம், சரி, பேச்சுன்னா வெயில் க்ாயறதா, மழை பெய்யறதா என்கிற மாதிரியா, ஊஹ ம்ே. கதை, கவிதை, இலக்கி யம், படைப்பாளிகள், அவர்களைப்பற்றி-இப்படியாக பேசறதில, ஆலசறதில அப்படி ஒரு ருசி. எங்க அப்பர் என்க்கு விட்டுவிட்டுப் போன சொத்து இந்த ரசனைதான். நாளாவட்டத்தில் இது தீராத தாகமாகிவிட்டது. நான் இப்பு இருக்கற ஊருக்கும், "இல்க்கிய சர்ச்சைக்கும் ரொம்ப தூரம். தேடிப் பிடிச்சு ரசிகனைக்" கண்டு பிடிக்கறதுக்கு எனக்கு வயசும் இல்லெ, தெம்பும் இல்லெ, பாலை வனத்தில் பசுஞ்சோலையைக் கண்டுபிடுக்கிறது லேசுப்பட்ட காரியமா? இது இன்று.
O
அன்று..படிப்பு முடிஞ்சதும் வேலைல சேர்ந்தாச்சு. தொடர்ந்து கல்யாணம் கார்த்திகை. அப்புறம் குழந்தை குட்டி, எல்லாரையும் போல பக்கா குடும்பஸ்தனாயிட்டேன் ஆபீஸ், வீடுன்னு யந்திரகதி பயில் வாழ்க்கை. ஆனாலும் ஒரு விசேஷம், கிடைக்கற நேரமெல்லாம் நண்பர்களோடு இலக்கிய சர்ச்சைதான். மணிக்கணக்காய், நேரம்
స్టేళ్ల
இலக்கு 0 89

Page 37
போவதே தெரியாம. அலுப்பு சலிப்பே கிடையாது. வெறுப்பு யாருக்குன்னா அவரவர் குடும்பத்தாருக்குத்தான். சம்பளம் சொல்பம். அதிலெ பத்திரிகை புஸ்தகம்னு செலவு பண்ணிண்டிருந்தா யாருக்குத் தான் பிடிக்கும். கோபம், வருத்தம், மனஸ்தாபம், சமாதானம். பாதி நாள் இப்படித்தான், சக்கரம் சுழண்டுண்டிருந்தது.
ரசனையின் அடுத்த கட்டம் எழுதற முயற்சிதானே. மனசுல தோணற எண்ணங்களை காகிதத்தில் வடிக்கலானேன். அன்றாடம் அரைமணியாவது எழுதறதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். எழுதுறதை அப்பப்போ படிச்சுப் பாக்கறது, அப்புறம் மொத்தமா படிக்கறது, திருந்தம், மாற்ற்ம் எல்லாமே சிரத்தையாக நடக்கும். மனசுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் படைப்புகளை ஆழ்ந்து, அனுபவிச்சு படிச்சதனாலே என் குறை, நிறைகளை நன்றாக புரிஞ்சுக்க முடிஞ்சது. மறதிக்கு இடம் கொடுக்க பத்து, பதினைந்து நாளுக்கு கிடப்பில் பேடுவேன். கடைசியா ஒரு தடவை படிச்சுப் பாத்தபிறகு துணிஞ்சு பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன். எத்தனையோ ஏமாற்றம்கள், எவ்வளவோ தோல்விகள், கடைசியா என் எழுத்துகள் பிரசுரம் காணலாயின. பொருளாதாரரீதியில் அவ்வளவா இல்லைன்னாலும், ஆத்ம திருப்தி கிடைச்சது.
பட்டாபி கொஞ்ச நேரம் மெளனமாயிருந்தார். தானாகவே தொடரவும் செய்தார். ஆச்சு, எத்தனையோ வருஷங்கள் ஓடிப் போயாச்சு. கூடவே என்னுடைய வயசும்தான். மாமா போய் தாத்தா என்கிற அடைமொழி ஒட்டிக்கொண்டது. அதற்காக கோபமர் பட முடியும்? ஏறிக்கொண்டிருக்கும் என் வயசையும், கவிந்துகொண்டிருக் கும் முதுமையையும் ஞாபகப்படுத்தறா. அவ்வளவுதானே. வாசலுக் கும் உள்ளுக்குமா நடந்துண்டிருந்தா ஆச்சா? வெட்டிப் பொழுது. மனசுக்கு ஒரு தெம்பு வரவேண்டாமா? என்ன செய்யலாம். யோசித்து யோசித்து கடைசியில் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டார் அவர்.
O Ο Ο
*வேல்முருகன்-புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள்' போர்டை ஒரு தடவைக்கு இரு தடவையாக நன்றாய் உற்றுப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார் பட்டாபி. ஆபீஸ் பெரிதாகவே இருந்தது. வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்கும் குறைவில்லை. சிப்பந்திகளும் ஒடியாடித் தங்கள் சுறுசுறுப்பைக் காட்டிக்கொண்டிருந் தனர். சந்தர்ப்பம் பார்த்து பட்டாபி பேச்சுக் கொடுக்கத் தொடங் கினார். V− -
"முதலாளியைப் பார்க்கணும். ஊரில இருக்காரில்லையா?" 'நீங்க." 'என் பேர் பட்டாபி. எனக்கு வேண்டப்பட்டவர் அவர். பார்த் துட்டுப் போலாம்னு’
வந்ததென்னவோ அவரைப் பார்க்கத்தான். அப்படி அப்பட்டமா சொல்ல முடிகிறதா இந்த நாளில்,
"வர சமயம்தான்’ நாற்காலியை அவர் பக்கம் நகர்த்தினான் நாசூக்காய்.
90 O இலக்கு
 

"பரவாயில்லே” என்று சொன்னவாறே சற்று உட்கார்ந்து எழுந்தார். புத்தக அலமாரிகளை நெருங்கி உற்றுப் பார்க்கலானார். நேரமும் போகும், என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று தெரிந்துகொள்ளவும் செய்யலாம். ஒரு இடத்தில் அவர் கண்கள் தேங்கி நின்றன. அட, அவர் எமுதின கதை தொகுப்புகள் ஆயிற்றே. மரம சந்தோஷத்துடன் அவற்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந் தார். பரவச நிலையிலிருந்தார் அவர்.
"ஸர், ஐயா வந்துட்டாங்க, போய்ப் பாருங்க" என்ற குரல் அவரை சுயநிலைக்குக் கொண்டுவந்தது.
*வாங்க, உட்காருங்க" முதலாளி வரவேற்றார். அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டுருந்தவர், "நீங்க பட்டாபிராமன் சார் இல்லீங்களா?" என்றார்.
பட்டாபிக்கு உடலும் உள்ளமும் ஒருங்கே குளிர்ந்தது. *எப்படி சார் என்னை அடையாளம் கண்டுபிடிச்சீங்க?"
"இதிலெ என்ன ஐயா இருக்கு. புஸ்தகம் போடறவங்களுக்கு
எது இருக்கோ, இல்லையோ, ஞாபக சக்திக்கு மட்டும் குறைச்சல்
டையாது. உங்க கதைகள் கூட ரெண்டு புஸ்தகம் போட் டிருக்கோமே."
முதலாளி தொடர்ந்தார். “எப்படி இருக்கீங்க?”
பதில் சொல்லாமலே, அவரைப் பார்த்தபடியும் அவர் சொல் வதைக் கேட்டபடியுமிருந்தார் பட்டாபி. தான் சொல்ல வேண்டி யதைச் சொல்லலாம், கேட்க வேண்டியதையும் கேட்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது அவரிடம். இவர் வந்த காரணம் என்னவாயிருக்கும் என்று முதலாளியும் அவரை அளக்கலானார்.
*உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா, சார்?" *சொல்லுங்க, ஐயா"
"இந்தப் புஸ்தகங்கள் மத்தியிலேயே நானும் உங்களைப்போல வாழனும்னு நினைக்கிறேன். அவைகளோட பேசணும். வர்றவங் களுக்கு அவைகளைப் பற்றி சொல்லணும், அதுகளை அழகா பாக்” செய்து கவரில் போட்டுக் கொடுக்கணும். நீங்க மனசுவச்சா இது முடியும், சார்” அவர் குரல் தழதழத்தது.
சற்று நேரம் ஒருவரும் பேசவில்லை. அவரவர் நிலையில் அவரவர். ஒரு வழியாக மெளனம் கலைந்தது.
"இவ்வளவுதானே. நாளைவிருந்து இங்கே வந்திடுங்க ஐயா.”
முதலாளி விஷயம் தெரிந்தவர், விபரம் புரிந்துவிட்டது அவருக்கு. ΟOO
இலக்கு O 91

Page 38
Ca
i
墨
பெட்டியில் கூட்டமில்லை. எனினும் நீ உட்காரவில்லை.
வேகமாய் முன்னேறுகிறது புகைவண்டி, நிற்பன, நடப்பன. ஒடுவன, ஊர்வன எல்லாம் பின் பினாடுகின்றன. சன்னலில் துேங்கும் சந்தன நிறக்காரியும் வண்ண வண்ண புத்தகத்தில் ஒரு வ ழ வழப்பா ன அயல் மொழியை அமிழ்ந்து வாசிக்கும் கூட்டாளி ஒருத்தியும். நீலநிற முரட்டுக் கால் சராய் முடிவில் சாயங்களுடன் கூடிய கால்கள்
முன் இருக்கையில் நெளிகின் றன அவளுக்கு.
ஒருகணம் திடுக்கிட்டாய்.
உன் இதயத் துடிப்பு இயல்பை
மீறுகிறது. அமைதி. அப்பெட்டி யெங்கும் பாவித்து தடித்த அமைதி உன் செவிகளைக்
குடாய நீ விழி பிதுங்கிப்போகி றாய். பதட்டத்துடன் சரிபார்க் கிறாய். தவறு. மீண்டும் தவறு. தவறு. நீண்டதொரு ஒலியின் மூலம் புகைவண்டி உன்னைக் கேலி செய்கிறது.  ைக க ள் லேசாய் நடுங்க முரட்டுக் கம் பியை இறுகப் பற்றுகிறாய். இது முதல் வகுப்புப்பெட்டி. அந்நியர் கள் உள்ளே நுழையக்கூடாது.
இனி என்ன செய்யப்போகி றாய்? உனது பதட்டம் சந்தன நிறக்காரியை பாதித்து இருக்க வேண்டும். லேசாக அவளை நீ அசைத்துவிட்டாய். வியர்க்கிறது. வழித்தடத்தின் அடிநுனிக்குப் போகிறாய். அடுத்த நிலையத் தில் குதித்து ஓடோடி உனக் குரிய இருட்டு ஓசைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ஏறி விட வேண்டும். பயித்தியம்போல ஆகிறாய். இதயம் புகைவண்டி சப்தத்தையும் மீறுகிறது. இப் போது அயல்மொழியாள், தொப் பியுடன் இருந்தவன், விமானி களின் உடையிலிருந்தவன் யாவரும் உன்னைப் பார்ப்பதாக
உணருகிறாய்.
எது உன்னை இத்தவறை செய்யவைத்தது என்று யோசிக்க முயற்சி செய். நியாபகம் வரு கிறதா. அடுத்த புகைவண்டி நிலையம் வரை எப்போதும் போல இருக்கப்பார். ஆனால் உன் முயற்சி தோற்கிறது. மேலும் ஒருவன் (காது ஒலிப் பாட்டில் முழுகிப் போய் இருந்த வன்) சன்னமாய் அசையும் முக
வெட்டுடன் உன்மீதே கவனமாகி
றான். கருப்புக் கோட்டுக்காரன் தனது கைப்பையை ஒருமுறை சரி பார்த்துக்கொள்கிறான். எட்டிப் பார்க்கிறாய். அடுத்த நிலையம் அடுத்த பத்தியிலும் வரப்போவது இல்லை.
92 O இலக்கு
 

தாமரை வண்ணம் கொண்ட உனது சட்டையின் உள்ளேறிப் போன காற்று உன்னைச் சுழற்று கிறது. இனி எந்த முடிவிற்குமாக நீ தயாராகிறாய். தூரத்தில் பரி சோதகன் கடைசி இருக்கையி லிருந்து தொடங்கு கிறா ன். இருக்கையற்ற நீ எட்டாவது ஆள். நீ மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை இதோ அவன் நெருக்குகிறான்.
6.
சட்டத்தை மீறியிருக்கிறாய். சட்டப் பிரிவுகள் வாசிக்கப்படும். சட்டையில் பையில்லை. பர்ஸ் வாங்குமளவு வசதியும் இல்லை. அப்படியா? இத்தனை நாட்கள் சிறைத்தண்டனை அனுவவித்து கணக்கை கழி. காசில்லாமல் உணவுண்டு மாவு அரைத்த துண்டா. மீதி இருப்பது எட்டு எழுபத்தைந்து. இதை வைத்து ஆட்சி மொழிக்காரனை நீ விலைக்கு வாங்க முடியாது. மாவு அ  ைர த் தி ரு க் கி றே ன். சரி. தயாராகு. இப்போது நீ ஆறா வது ஆள். இந்த நாட்டில் காசில்லாமல் சட்டத்தை மீறக்
Gin- L-AN’ gj.l.
இது எத்தனையாவது முறை? இதற்குமுன் வகுப்பு மாறிய துண்டா, செம்மையான சட்ட முறையும் (உனக்குத் தெரிந் திருக்காது, உலகிலேயே மிக நீண்ட அரசியல் சட்டம் கொண்ட நாட்டில் நீ வாழ்கிறாய்) அதீத ஆண்டுகளாக இரு ந் து வ ரும் நீதித்துறையும், எல்லை மீறிய உரிமைகளுடன் செயலே மூச் சாகக் கொண்ட காவல்துறையும்
(சட்டப்படி அவர்கள் லஞ்சம் வாங்குவதேயில்லை) செயல் படும் இந்த புனித பூமியின் புனிதம் உன்னால் மாசுபட்டு
நிற்கிறது. ஆகவே இதற்கு நீ
நீ ஏழாவது
என்ன விளக்கம் தரப்போகிறாய். உன் உருவம் பரிசோதகனுக்குத்
தெரியவருகிறது. நீ அய்ந்தாம்
6T.
கழிவறைக்குப் ஆனால் நீ பயணச்சீட்டு இல்லா தவனல்ல. உன்னிடம் இரண் டாம் வகுப்புப் பெட்டியொன்றில் இடமிருந்தால்) இருக்கையிலோ இல்லையேல் கழிவறை கத வருகே தரையிலோ உட்கார்ந்து செல்ல பயணச்சீட்டு உள்ளது. உனதுஅழுக்குக் கண்ணிர் இங்கு எடுபடுமா. நம் மொ ழி யி ல் தோய்ந்த உனது கெஞ்சல்கள் ஆட்சி மொழிக்காரனிடம் எடு படுமா. எனவே மொத்தமாகவோ சில்லரையாகவோ உன்னிடம் மீதித்தண்டம் வசூலிக்கப்படலாம். பல்துருத்திய ஆட்சி மொழிக்கா
ரன் அவன். அழுது கதறி உனக்
கும் பழக்கம் உண்டு. ஆனால் நீ மேன்மை பொருந்திய மேல் தட்டுப் பிரஜைகளின் மாமூல் வப் ழ்க்கையை பாதித்து இருக்
கிறாய். உன்னைக் காப்பாற்றுவ
தற்கு அடுத்த நிலையம் என்கிற ஒன்று வருகிறதா. துரத்த துரத்த தூரம் மீதமிருக்கும் இவ்வேளை யில் அந்தப் பிசாசுக்கும் உனக் கும் இடையில் மூன்றே நபர்கள். ஒருவன் உறங்குபவன்.
புகைவண்டியின் படியில் தொங் கிக் கொண்டிருக்கிறது உனது காலம். சந்தன நிறத்துக்காரி? அவளது காலம் அவளது பூச் செண்டில் சேகரிக்கப்பட்டது. அது சிவப்புசாயம் பூசிய அவளது
உதட்டோரம் ஒழுகி ஓடுகிறது.
உனது மொழியின் தொண்டைக் குழியை நெரித்தபடி ஓடும் அவ ளது காலம் அவளது மொழியில் உள்ளது. உனது துயரத்தினது ரகசியம் அம்பலமாவதற்கான
கால இடைவெளி இரண்டு ஆட்
இலக்கு O 93
போவாயா?

Page 39
களாக குறைக்கப்பட்டபோது. நிச்சயமாக நிச்சயமாகாத ஒன்று உன் வாழ்வில் நடந்துவிடப் போகிறது. V,
இனி கழிவறைக்கும் போக முடி யாது. கருப்புக் கோட்டுக்காரன் தனது புகைப்பானை கால் கார் பெட்டுக்கு மேலே உதிர்த்து விட்டு ஒரு அவசரமற்ற தொனி யில் அதனை நோக்கி உட்புகுந் தான். கழிவறையை பயன்படுத் தும் பட்சத்தில் உனது தண் டனை கூடும். அவன் முன்பதிவு செய்தவன். மதிப்பிற்குரிய மேல் தட்டுப் பிரஜையாய் இருப்பவன். தவிர இவ்வளவு தூய்மையான ஒரு இடத்தில் நமக்கு ஒன்றாம் இரண்டாம் சங்கதிகள் வருமா?
உறங்குபவனை எழுப்பும் பரி சோதகன் தனது கடிகாரத்தை ப்ார்க்கிறான். உனது நேரம் அவனது கைக்கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நம்புதலுக்கு இணையான ஒரு பொய்யை உன் மொழில் யோசிக்கிறாய். ஒரு வேளை தவறை நீ ஒப்புக் கொள்ளலாம். இப்போதோ இருப்பது ஒரு நபர். பிறகு விசாரணை தொடங்கும். அரசு தனது தொங்கும் ஈட்டியை அந்த ஆட்சிமொழியாளனின் துருத்திய பற்களில் தீட்டி வைத்துள் ளது. அதுவரையிலான கணங் களை எப்படிக் கழிக்கப்போகி றாய்? கால்சட்டையின்றி விடப் பட்டவர்களை நி  ைன த் து க் கொண்டிரு. நீயோ உனது
உள்ளங்கையை தலையில் வைத்
துக்கொண்டாய். பரிசோதகன் உன் அருகில் வருவதற்குள் அடுத்த புகைவண்டி நிலையம் வந்துவிட வேண்டும். பரிசோத கனா? புகைவண்டி நிலையமா? ஆனால் ஒரு விபத்து நேர்வதைக் கூட நீ வரவேற்பாய். உனது
உள்ளாடைகள் சில்லிட உள்ளே ரோமங்கள் சுருங்குகின்றன. கடைசி நபர்.
வழவழப்பு மொழிக்காரியின் கொஞ்சும் குரலில் பரிசோதகன் விழுந்து நீந்திக்கொண்டிருக் கிறான். அதிக அக்கறை. அதிக விசாரிப்புகள். அதிக நேரம். உனது அதிக வாய்ப்பு. மீண்டும் உனது உளைச்சல் மனதில் பரி சோதகன். புகைவண்டி நிலை யம். புகைவண்டி நிலையம் பரி சோதகன். தலையை சாய்த்து அதிருப்தியுறுகிறாய். பதட்டம். உனது மவுனத்தை இழுத்து முழுங்குகிறாய். வந்தி வருவ தற்கான அறிகுறிகள். அச்சத்தில் வயிறு கலங்கி இன்னொரு சட்ட விரோதமான வேலையை செய் தாய். இந்த நாட்டின் உன்னத பிரஜைகள் பயணம் செய்யும் பெட்டியை அவமதிக்கும் வண் ணம் நாற்றத்றைத் கிளப்பினாய். அடுத்த புகைவண்டி நிலையம் வந்துவிட்டது.
‘வெயிட்.வெயிட்.வெயிட்."
இறங்கும் உனது முயற்சி தோற்கிறது. பல்துருத்திய பரி சோதகன் உனது சட்டைக்
காலரை இறுகப் பற்றியுள்ளான். பின் அதிக சிரமமின்றி லேசாக விடுவித்துக்கொள்கிறாய்.
“என்னிடம் டிக்கிட்டு இருக்கு துங்க’
“டமில்? டமில்.மே.நஹி. மாலூம்’
போ ச்சு ரா. 'திஸ். டிக் கெட்..” திணறல் மொழியில்
உனது சொந்தக் குரலே உனக்கு எதிரி. உன் ஊர்களை கடக்கும இந்த இரயிலில் நீயே அந்நியன். வழவழப்பு மொழியாவது?
 

"ஏனுங்க .தெரியாம ஏறிப்
புட்டனுங்க"
அவன் இன்னும் ஏதோ சொல் கிறான். அவனது முகத்தில் தெரி 'யும் கேலி உனது மொழிக்கு கிடைத்த அவமதிப்பு. கூனிக் குறுகுகிறாய். உனது பயணச் சீட்டு பரிசோதிக்கப்படுகிறது. நிழல்களில் பிதுங்கி உறிஞ்சப் படுகிறது காலம். தேனீர் விற்ப னன் **சாய். ச்சாய் .' எனக் கடக்க.ஊர்ஜிதமாகிவிட்டது.
*செ கண் ட் கி ள |ா ஸ் .? ஸ்கெளட்ர்ல்'
கெட்டவார்த்தை என்று உனக் குப்புரிவதற்குமுன் சந்தனநிறக் காரிக்கு புரிந்திருக்க வேண்டும். அவளது ஓசைமிகு ஏளன சிரிப்பு பல்துருத்திய பரிசோதகனை உற்சாகமடைய வைக்கிறது.
**தெரியாம.செஞ்சுப்புட்டே னுங்க. சாமி’
"க்யா.ஹோகயா.போர்டு. போர்டு' வெளியே எழுதப்பட் டது உனது மொழியில் இல்லை யென்றாலும் ஏதோ சுவரொட்டி
மறைப்பதை காட்டிக் கெஞ்சு
கிறாய்.
'அய்யா. படிக்தத் தெரியா
துங்க...'
9
அவனது மவுனம் கூட நமது மொழியில் இல்லை. உனது பதி லுக்கு பதிலாய் அவனது தங்க
நிற கடிகாரம் மின்னும் கரம்
Go fu u இரும்புக் கதவை
இழுத்து சாத்துகிறது.
'கேளுங்க சாமீ.எங்கிட்ட
காசு ( ல்லிங்க.தெய்வமாட்டமா நெனச் சு
மனசு வைச்சு. விட்ருவியாம்'
கெஞ்சரேன். பெரிய
"பெய்சா..? பெய்சா நஹி அ . ஹா. ஹ' அ வன து சிரிப்பு அவனைவிடகனமானது அது அவனது ஆதிக்க மொழி யில் உச்சரிக்கப்படுகிறது.
**ஆனா.நானு இங்கின பீடி
குடிக்கிலிங்க. எச்சி துப்பிலிங்க. வெத்திலபாக்கு கூடப் போட லிங்க. எம்பாட்டுக்கு கெடந் தேன். '
வழவழப்பான மொழிக்காரி கைப்பையிலிருந்து குதப்பும் வில்லைகள் எடுக்கிறாள். வண்டி புறப்படுவதற்கான முதல் மணி அடிக்கப்படுகிறது.
"அய்யா. நானு கழிவறையில் கூட ஒளியிலிங்க.டிக்கிட்டுதான்
இருக்குதுங்களே.'
யாரோ இருவர் உன்னைக் கண்டனர். சன்னலுக்கு வெளியே நம் மொழிப் பிரதேசம். பரிசோத கன் உன்னை வைத்து வித்தை காட்டும் முகமாக இருக்கிறான்.
'அய்யா.மன்னிச்சிருங்க ...'
அவன் மொழியில் மன்னிப்புக்கு என்ன? ஆதிக்க மொழிக்காரன். ஏதோ நினைத்தவனாக ஆயத்த மாகிறான். தனது ஒப்பற்ற தருணத்திற்காக. இந்த நாட் டின்மேல் குடி பிரஜைகள் மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் தனது
நாடகத்தை அரங்கேற்ற அவன்
முடிவு செய்கிறான்.
உனது கையை பற்றி கும்பிடும் விதமாய் சேர்த்து வைக்கிறான். வழவழப்பு மொழிக்காரி கழி வறைக்கு வெளியே உன்னை நோக்கியபடி தென்படுகிறாள்.
"போல். போல். டமில் . பையா.போல்.மாஃப் கீஜியே'

Page 40
gif உனக்குப் புரிகிறது.
'மாபு. கிஜி.ஏ" நீ சொல் கிறாய்.
விழுந்து விழுந்து சிரிக்கும் வழ வழ மொழிக்காரியின் குரலில் ஆமிழ்ந்து கேட்கிறது வண்டி கிளம்புவதற்கான இரண்டாம்
D632.
'அய்யா. மாபு. கிஜிஏங்க”
'ஹி..ஹா. ஹா. ஹா'
'மாப்பு. கீஜிஏ.சாமி. போயி Jer'''
வண்டி நகர்கிறது. கதவு திறந்து உன்னை வெளியே பல் துருத்திய ஆட்சிமொழியாளளரின் சிரிப்பு துரத்துகிறது. மீண்டும். மீண்டும்.
'மாப்பு. கீ.ஜி. ஏ’ ஒடு கிறாய். யார் யாரோ சிரிக்கிறார்
கள்.
ஒன்று. இரண்டு. மூன்றாம் பெட்டியை துரத்திப் பிடித்து மூச் சிறைக்க ஏறி உள்ளே போகி றாய். நிற்பன. நடப்பன. ஊர் வன.பறப்பன எல்லாம் பின் னோடுகின்றன. க பூழி வ  ைற பாதையில்கூட இடமில்லை. நம் மொழிக்காரர்களால் பிதுங்கி வழி யும் இப்பெட்டியின் கதவிடுக்கு மூலையில் உறங்கும் ஒருவனுக்கு அருகே சென்று அமருகிறாய்.
மூச்சிரைக்கிறது.உனக்கு. நீ சொல்கிறாய். வெளி யே
கொப்பளிக்கும் இரு ட்  ைட நோக்கி பற்களை கடித்தபடி.
'மாப்பு. கீஜி.யே” பிறகு உனது நீலநிறப்பையில் முகம் புதைத்து குமுறி அழத் தொடங்குகிறாய்.
OOO
\,
வர்த்தக நோக்கமும், கலைப்பற்றின்மையும் சமூகத்திற் காணப்
படுகிறதாயினும்,
கலைக்கும்
பணத்திற்குமுள்ள முரண்பாடு
எல்லை கடந்து போய்விடவில்லை. முரண்பாட்டிற்கான அடிப்
படைக் காரணத்தை அறியாமலேயே
பலருக்கு நம்பிக்கை
யின்மையும் விரக்தியும் தோன்றுகின்றன. கலைக்கும் பணத் திற்குமுள்ள முரண்பாட்டின் இயல்பைக் கண்டறிந்து அதை நீக்கும் வகையில் உழைப்பதும், மீண்டும் கலைக்கும் சமுதாயத் திற்கும் பூரணமான இயைபை ஏற்படுத்துவதுமே கலைஞனின்
இலட்சியமாக இருத்தல் வேண்டும்.
க கைலாசபதி (தமிழ் நாவல் இலக்கியம்)
 

60களில் முகிழ்த்து 70-களில் மணம் வீசத் தொடங்கிய கைலாசபதி, ஈழத்து இலக்கிய பாரம்பரியம், ஈழத்து நவீன அறிவுலகத் தேடல் ஆகியவற்றின் பின்னணியில், மார்க்சிய சிந்தனைப் பாரம்பரியத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். தொடக்கத்தில் பத்திரிகையில் தினகரன் ஆசிரியராக இருந்து பின்னர் பர்மிங்ஹாம் இங்கிலாந்து ப்ல்கலைக்கழகத்தில் இடதுசாரி சிந்தனை கொண்ட ஜார்ஜ்தாம்சனிடம் மாணவராயிருந்து கலாநிதியான பேராசிரியர் கைலாசபதி, தவிர்க்க முடியாத செல்வாக்கும் படைத்த ஒரு திறனாய்வாளர்.
மறைமலையடிகள், வெ. கனகசபைப்பிள்ளை, பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை போன்ற தமிழ் மேலாண்மைக் கொள்கையினர் ஒருடக்கம். அவர்களுக்கு மாறான ப்ேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரன் போன்ற அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியாளர்கள் ஒருபக்கம், டி.கே.சி. கநா. சுப்பிரமணியன் போன்ற ரசனை முறைக்காரர்கள் ஒரு பக்கம், அவர்களுக்கு மாறான இஸ்மத் பாஷா, விஜய பாஸ்கரன், மாஜினி, ஜீவானந்தம், நா. வானமாமலை, எஸ். ராமகிருஷ்ணன் முதலிய மார்க்சிய சார்புடைய விமரிசகர்கள் ஒருபக்கம் என்ற தமிழ் விமரிசன சிந்தனைச் சூழலில் கைலாசபதியின் வரவு மிகப்பலரின் கவனத்தை ஈர்த்தது. தொடக்கத்தில் அடியும் முடியும்', 'பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் ஆகியன வெளிவந்தவுடன், இந்தியத் தமிழகத்தில் இளம் ஆய்வாளர்கள் மத்தியில் அவை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம் ஆகிய பழைய இலக்கியங்களின் சில பகுதிகளைப் புதிய வெளிச்சத்தில் இந்த நூல்கள் காட்டின. மார்க்சியக் கலைச் சொற்கள் இந்நூற்களில் மிகவும் குறைவு என்றாலும், மார்க்சியம் போற்றுகின்ற வரலாற்றியல் - இயக்கவியல் பொருள் முதல்வாதம், இந்நூற்களில் பிரதானமாக வெளிப்பட்டது. இதுவே, பழைமையான கருத்தோட்டங்களைத் தகர்ப்பதற்கும் போதுமானதாக இருந்தது.
தமிழ் ஆராய்ச்சியுலகில், வையாபுரிப்பிள்ளை - தெ.பொ.மீ. முதல் அதிர்ச்சியைத் தந்தார்கள் என்றால், கைலாசபதி - நா.வானமாமலை இரண்டாவது அதிர்ச்சியைத் தந்தார்கள். இந்த இரு தரப்பினருக்குமிடையே ஒரு பொதுவான அலைவீச்சு (Wave-legnth) உண்டு. உணர்ச்சிவயமான நெறிமுறைக்கு எதிரான அறிவியல் முறைக்குட்பட்ட தொல் மானிடவியலும், வரலாற்றியல் பார்வையும்தான் அது. உண்மையில், மார்க்சியம் கூறும் வரலாற்றியல் பொருள் முதல்வாதம், தமிழகத்தில் இப்படித்தான் புரிந்து கொள்ளப்பட்டது. கூடுதலாக, மேல்கட்டுமானம் - அடிக்கட்டுமான்ம் பற்றிய கருத்துக்கள், சமுதாயப்படிநிலை வரிசை, சமூக பொருளாதார அடிப்படையிலான வர்க்கங்களும் வர்க்க மோதல்களும், பிரதிபலிப்புக் கொள்கை முதலியவை சார்ந்த முறையியல்களும் மார்க்சிய அணுகுமுறைக்கு அணி சேர்த்தன.
மார்க்சியக் கலைச் சொற்களுடன் சற்று வன்மையான தொனியுடன் அவருடைய 'தமிழ் நாவல் இலக்கியம் வந்தபோது, ஒருபக்கம் பெருத்த வரலேற்பைப் பெற்றது : இன்னொரு பக்கம், பெருத்த தாக்கத்தை ஏற்படுத்திய இந்நூல், மார்க்சிய எதிர்ப்பாளர்களை "பீதியடையச் செய்தது என்று சொல்லவேண்டும். மார்க்சியத்தின் ஒட்டுமொத்தமான ஒரு அடையாளக் குறியாக
77 0 இலக்கு

Page 41
(ndex Sign) கொண்டு வெங்கட்சாமிநாதன் உட்பட்ட மார்க்சிய எதிர்ப்புக்
கோபக்காரர்கள் வெகுண்டு எழுதினார்கள். ஆனால், அறிவுக்குப் பதிலாக வெறும்
உணர்ச்சியே விஞ்சிய இந்தக் கோபங்களினாலும் எரிச்சலினாலும் சைலாசபதிக்கும் அவருடைய ஆய்வுமுறைக்கும் மரியாதையும் செல்வாக்குமே கூடியது.
கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், ஜார்ஜ்தாம்சனிடமும், சாட்விக், கெர் முதலியோரிடமும் கற்றுக்கொண்ட காவிய மரபிலிருந்தும் மற்றும் மார்க்சியம் கோடு காட்டிய வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் ஒரு நிலைப்பாட்டிலி ருந்தும் எழுந்தது. பழைய இலக்கியத்திலிருந்து இன்றைய இலக்கியம்வரை உள்ள விசாலமான கல்வியியல் அறிவும் தீர்க்கமான I கறாரான கருத்துக்களும் ! முடிவுகளும், கைலாசபதிக்கு அணிசேர்த்தன. பிரதிபலிப்புக் கொள்கையும் யதார்த்தவியலும், சான்றாதாரங்கள், விவாதங்கள் என்ற கட்டுமானத்தோடு கைலாசபதியின் ஆராய்ச்சியில் பளிச்சிட்டன. −
கைலாசபதி, பர்மிங்ஹாமில் செய்த முனைவர் (டாக்டர்) பட்ட ஆய்வேடு, Tamil Heroic Poetry'- Ssan Got Oxford Qajafius ill-gi. 8, 6.6SuSuó) ஆய்வுக்குரிய திடமான கட்டமைப்புக் கொண்ட இந்த நூல், சங்ககாலத்துப் புறநானூற்றுப் பாடல்களை வீரயுகப்பாடல் மரபின என்றும், நாட்டுப்புற இலக்கிய மரபினை அடியொற்றியவையென்றும் வரைந்து காட்டுகின்றன. ஆனால், தொடர்ந்து கைலாசபதி வீரயுகம் பற்றியோ, நாட்டுப்புற மரபு பற்றியோ தனியாகக் கவனம் செலுத்தவில்லை. ஆனால், ஒப்பிலக்கியத்தில் அவருக்குத் தனி அக்கறையும் கவனமும் இருந்திருக்கிறது. பர்மிங்ஹாம் அனுபவமும் மார்க்சிய உலகக் கண்ணோட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒப்பிலக்கிய Tamil Heroic Poetry’, ஆராய்ச்சியின் ஒரு வெளிப்பாடுதான். இரு மகா கவிகள் தாகூர், பாரதி) Western Impact on Bharathi ஆகியவையும் இன்னும் சில கட்டுரைகளும் அவருடைய ஒப்பிலக்கியக் கவனத்திற்குச் சில சான்றுகள்.
கலாநிதி கைலாசபதி, ஒருபக்கம் கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சித்தளத்திலும் இன்னொரு பக்கம் சுயாதீனம் மிக்க சிறு பத்திரிக்கைத் தளத்திலும் கால்பதித்து நிற்கிறார். அதுபோல் ஒருபக்கம் மரபுசார்ந்த கல்வியியல் நிலைப்பாட்டிலும் இன்னொரு பக்கம் அதற்கு மாறான அறிவியல் சார்புடைய மார்க்சிய நிலைப்பாட்டிலும் வேரூன்றி நிற்கிறார். இதன் முரண்பாடுகளில் ஒரு இயைபு காட்டி இரண்டினையும் தனக்குத் தோதாக / ஏற்புடையதாக ஆக்கிக் கொண்டவர் கைலாசபதி, அவர் ஒரு விமரிசகராக / திறனாய்வாளராக அதற்குரிய நெருக்கமான பொருளில் - விளங்குகிறார் என்பதைவிடச் சான்றாதாரங்கள், அவற்றை மையமிட்ட விவாதங்கள், ஒரு முறையியலுக்குட்பட்ட அணுகு முறையுடன் கூடிய கட்டுரைக் கட்டுமானங்கள் முதலியவற்றைத் தீர்க்கமாகப் பின்பற்றுகின்றவர் என்ற முறையில் அவர் ஒரு ஆய்வு - விமரிசகராக (Scholar - Critic) விளங்குகிறார் என்று சொல்லவேண்டும். அவரை ஏற்பது அல்லது விமரிசிப்பது, அவரது முறையியலை, நிலைப்பாட்டினைச் செரித்துக் கொள்வது என்பதெல்லாம் அவரையும், பொதுவான மார்க்சிய முறையியலையும் மற்றும் அன்றைய இலக்கியச் சூழலையும் சரிவரப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.
78 0 இலக்கு ஆ"

அவருடைய விமரிசன / ஆராய்ச்சித் தளத்தின் பரிமாணங்களை ஒரு வசதிக்காகப் பின்வருமாறு சொல்லவேண்டும். 1. கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சியும் தொழில் முறை / பத்திரிக்கை வழி சார்ந்த விமரிசனப் போக்கும் சங்கமிக்கிற நிலை. 2. பழைய இலக்கியம், புதிய இலக்கியம் என்ற இலக்கிய வரலாற்றின் வீச்சு பற்றிய ஆழ்ந்த அறிவு 3. வரலாற்றியல் நிலைப்பாடு 4 மார்க்சிய மெய்ஞ்ஞானத்தின் தாக்கம் - அதனைச் சுளுவாகிப் பயன்படுத்தியிருக்கின்ற நேர்த்தி. 5. இலக்கியத்தை அதன் தளத்திலிருந்து நகர்த்தி சமூக - அரசியல் - பொருளாதாரத் தளத்திற்குக் கொண்டு சென்ற உண்மை. இதனால் இரண்டு தளங்களுக்கும் அவர் புதிய ஒளி பாய்ச்சியிருக்கின்றார். 6. தீர்க்கமான I கறாரான முடிவுகள் / கருத்துக்கள். இது கருத்து மோதல்களுக்கும் விவாதங்களுக்கும் இடம் தந்திருக்கிறது. 7. இறுதியில், குழப்பிக் கொள்ளாத, தன்முரண்பாடு கொள்ளாத தெளிவான நடையும் கட்டுரை வன்மையும் குறிப்பிடப்பட வேண்டும். இது, பல நவீன திறனாய்வாளர்களுக்கு / ஆய்வாளர்களுக்கு வாய்க்காததால் தனியே சிறப்பித்துக் கூறவேண்டியிருக்கிறது.
சைலாசபதியிடம் கேட்பதற்குச் சில கேள்விகள் இருக்கின்றன. சில இடைவெளிகள், சில இட-வெளிகளை உருவாக்குகின்றன. முதலில், தம்முடைய ஈழத்துச் சூழலில் செ. கணேசலிங்கனனயும், நந்தியையும் பிறரையும் பாராட்டி விமரிசிக்கிறவர், ஏன் எஸ். பொன்னுத்துரையையும், மஹாகவியையும், மு. தளையசிங்கத்தையும் கண்டு கொள்ளாததுமாதிரி விட்டுவிடுகிறார்? இவர்கள், குறிப்பிட்ட சில சிந்தனைப் போக்குகளின் பிரதிநிதிகளாச்சே, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒட்டு மொத்தமான ஒரு முழுமை அதன் எதிர்முனையான கோணங்களை உட்கொண்டதுதான். இரண்டாவதாக, நாவல் இலக்கியத்திற்கு அவர் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் சிறுகதை இலக்கியத்தை உதாசீனப்படுத்துவது போன்று தோன்றுகிறது. தனிமனித சோகங்களை, விவகாரங்களைச் சிறுகதை பெரிதும் பன்னிப் பன்னிச் சொல்கிறது என்பது இவருடைய வாதம். சிறுகதை, அத்தகைய சோகங்களையும் விகாரங்களையும் மீறி எத்தனை எத்தனையோ பேசுகிறது என்பது ஒரு பக்கம் இருக்க - அப்படியே பேசினால்தான் என்ன, அதுவும் உண்மைதானே, அதற்கும் சமூக-பொருளாதாரக் காரணங்கள் உண்டே மேலும், தமிழில் சிறுகதை, பல சோதனைகளையும் சாதனைகளையும் செய்து பிரமிக்கத்தக்கதாக வளர்ந்துள்ளதை ஒரு விமரிசகன் கவனிக்காமலிருக்க முடியாது. மூன்றாவதாக - இதுபோல்தான், புதுக்கவிதையையும் இவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். இவரும் ரகுநாதனும், புதுக்கவிதைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக, மொத்தமாக மார்க்சியவாதிகளே புதுக்கவிதை-இயக்கத்திற்குப் புறம்பானவர்கள் என்று ஓங்கிச் சப்தம் போட்டார்கள். இவர்கள் நா. வானமாமலையின் விமரிசனத்தை - வசதிக்காக - மறைத்துக் கொள்கிறார்கள். புதுக்கவிதையில் இசங்களையும் உக்கிரங்களையும் அதேபோது முற்போக்கு அம்சங்களையும் கண்டறிந்து அவரே முதலில் எழுதினார். அதற்குமுன் புதுக்கவிதை பற்றி எழுதியவர்கள் எல்லாம் ரசனைக்காரர்களும் பொழிப்புரையாளர்களும்தான். நான்காவதாக - கைலாசபதி (அவர் மட்டுமல்ல, மார்க்சியத் திறனாய்வாளர்கள்
79 0 இலக்கு

Page 42
பலரும்), இலக்கியத்தின் பொருளையும், உள்ளடக்கத்தையும் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறவர் என்றும் உருவம் - கண்லநயம் பற்றி அக்கறை காட்டாதவர் என்றும் குறைகூறப்படுகிறது. குறிப்பர்க, ஈழத்திலும் இந்தக்குரல் ஓங்கிக் கேட்டது. அலை எனும் இதழ் இதற்கு முன்னிலை வகித்தது. (அலை - சமர் மோதல் சுவாரசியமான இலக்கிய மோதல்). நெஜி சிறிவர்த்தனா, ஏ. ஜே. கனகரட்னா முதலி யோர் கொள்கை ரீதியாக இதுபற்றி எழுதினார்கள்.
கலைநயம் பற்றி கைலாசபதி, சில இடங்களில் பேசினாலும், அது அழுத்தம் பெறவில்லை - உரிய இடம் பெறவில்லை என்பது உண்மை. இங்கே, கலைநயம்பற்றி மிகவும் கவலைப்பட்ட கநா. சுப்பிரமணியம் முதலியவர்கள், கலை இலக்கியத்தின் சமூகத்தளத்தை மறுத்தார்கள் எனும் நிலைமை, கைலாசபதி இதற்கு மாறான ஒரு நிலைப்பாட்டினை எடுக்கத் தூண்டியிருக்க வேண்டும். உருவம், கலைநயம் என்று அழுத்தினால் அது, சமுதாயத் தளத்திலிருந்து - வரலாற்றியல் தளத்திலிருந்து - கலையை நகர்த்திவிடுமோ என்ற ஒரு பயம் இங்கே மார்க்சியவாதிகளுக்கு இருந்தது என்பதும் உண்மையே. கலையும் பொருளும், உருவமும் உள்ளடக்கமும் இணைபிரிக்க முடியாதவை; ஒன்றில் ஒன்று கலந்தவை; ஒன்றில் ஒன்றாய் வளர்பவை. இதனை மார்க்சியம் மறுக்கவில்லை என்பது மட்டுமல்ல - தேவைப்படுகிற இடங்களில் இதனை வற்புறுத்தவும் செய்திருக்கிறது.
கைலாசபதி இப்போது இல்லை. பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இன்று, இலக்கிய விமரிசனத்தின் தளம், இலக்கியத்திலிருந்து பண்பாட்டுத் தளத்திற்கு நகர்ந்திருக்கிறது. யதார்த்தவியல் என்ற கருத்தமைவுக்குத் தாக்குதல்கள் வந்திருக்கின்றன. பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் என்ற நவீனவாதிகளின் குரல் கேட்கிறது. ஒட்டு மொத்தம் என்ற நிலையிலிருந்து 'கூறு படுத்திப் பார்க்கும் பார்வை மேலோங்கி வருகிறது. இந்தச் சூழமைவில் கைலாசபதியின் இடம் என்ன - ஏற்புடைமை என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. அவரை மறுபரிசீலனை பண்ணுவதன் மூலம் அவருடைய அல்லது மார்க்சிய முறையியலைப் புதிய சூழலில் வளப்படுத்திக் கொள்வதின் மூலம், இதற்குச் சரியான பதில் கிடைக்கும். உலக நாடுகளின் இன்றை அரசியல் - பொருளாதாரச் சூழலி ல் மார்க்சிய நிலைப்பாட்டிற்கு மீண்டும் ஒரு தேவை வலுவாக உணரப்பட்டு வருகிறது. வரலாறு என்பதற்குச் சரிவுகள் இருக்கலாம், ஆனால், எப்போதும் அது முன்னோக்கியே நகர்கிறது. கைலாசபதியோ, அல்லது மார்க்சிய ஆய்வாளர்களோ, சுயம்புகளும் அல்லர், இறைத் தூதர்களும் அல்லர் - அவர்களும் அப்படி நினைத்துக் கொண்டவர்களில்லை. ஆகவேதான், மார்க்சிய ஆய்வு! சிந்தனை, புதிய சூழல்களில் எதிர் வரும் சவால்களை ஏற்றுக்கொண்டு முன் நடக்க
வேண்டியிருக்கிறது.
ல ல ல
The Poetry lies not in the action
but in the interuption of the action – Lawrence Sterne
80 0 இலக்கு இ

இந்திய சிந்தனை пDJ I I
. டாக்டர் br. சுப்பிரமணியன்
(புதுக்கிய இரண்டாம் பதிப்பு)
விலை ; ரூ. 100.00
மேலும்
சமூக, விஞ்ஞான. கலை, இலக்கிய
நூல்களுக்கு
சவுத் ஏசியன் புக்ஸ், 611, தாயார் சாகிப் 2வது தெரு, சென்னை-600 001

Page 43
A Member Magazine of TASNA
EURKKU (Duarte
FA
1. என் தோளில் கம்பளிப்போர்வை என் கையில் புல்லாங்குழல் தவழ் நான் எங்கும் போக துரங்கவும் இல்லை ஆனால்என்கையில் துப்பாக் என் தோளில் பின எவர் வைத்துவிட்டு
கோதுமைக் கதிர்க! ஜெனரல் டயரின் மு குரூரமாய் சிரிக்கிற (graốLJ Tsir GJITSUIT 5 அமர சீக்கிய குருமா மடாலயப் பீடங்களி ஒளரங்கஜேப்பின் ெ அணிந்துகொண்டு தற்காலச் சீக்கிய கு பைலாகி (வைகாசி எவன் வரவேற்பான் எவன் கொண்டாடு
麒
பஞ்சாபி மூ
தமிழி
SLSSSSTSLS
 

Regd. No. 151/95
Magazine
தொங்கியது
ü点寺
வில்லை
n
ச் சென்றது?
ருக்குப் பின்னால் கேம்
列 — மைதானத்தில் போல) "ர்த்ளின்
தாப்பிகளை அமர்ந்திருக்கிறார்கள் ருமார்கள்,
}மேளாத் திருவிழாவை |r? "ז5ם חשה
லம் : மிந்தர் i GSF GITf