கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூபாளம் 1982.10

Page 1
|- -|- -------_-_------------- シ ! ± 引– !
* **** s |- sissossae呕)
|역TTTT* **** (#)歴 |-濑)
**
 
 
 
 
 
 
 

*)* l
率率
シAけ
W

Page 2
عد - ܔ - -سنتققنشده
ONE AND ONLY
SHOCK ABSORBER
Manufacturers In Sri Lanka
MARE E NA
SHOCK ABSORBEERS
Beaten all foreign Shock absobers Due to our rugged roads, Ard road condition.
ஹீலங்காவில் p. 6irst ஒரே ஷொக் எப்சோபர் உற்பத்தியாளர்கள்
வளிநாட்டு ஷொக் எப்சோபர் நம்நாட்டுக் கருடு முருடான
பாதைகளுக்கமைவில்லாத காரணத்தால் எல்லா வெளிநாட்டு '
ஷொத் எப்சோபர்களையும் விட மேலோங்கி நிற்பது
ம f னு:
804, Negombo Road, Mabola,
WATTALA ,
T“phone: , 53-59>

சுவரம் 1
இராகம் 1
5 islTr 1982 October
‘ஓசை முதல எழுத்தெலாம் ஏகணவன் நேசம் முதற்றே உலகு' '
ћs புவியில் நிலைத்து வாழ்பவன் ஆண்டான் அல்லன்; அரும்பெருஞ் செல்வம் பூண்டான் அல்லன்; புன்மை எதிர்த்து ஆண்டி யாயினும் அறத்தால் வென்று நீதியை நிறுத்தி நிம்மதி பாடும் சோதியாம் கவிஞன் மட்டுந் தானிம் மண்டலம் வாழ்வான். எட்டுத் திக்கின் எம்மொழி தமிலும் வாழ்பவன் அவனே;
ஆள்பவன் அவனே! எழுத்துல கினிலும் எல்லா ரூள்ளும் முழுப்புக முடையான் முன்னுறு கவிஞன். அத்தகு பெருமை அமைந்தும் இத்தரை மீதில் அவனுக் கென்றேர் அழகிய ஏடிலை! கவலைக் குரிய தலைவலி இதனைத் தவிர்த்திடல் வேண்டி நிலைமணம் கொண்டோம்; நிவர்த்திக் கின்ருேம். விடிய லிராசும் வீணை எழுந்தது. மடியில் தவழும் மதலையைப் பாரீர்! ஒருநாட் கூத்தென ஒய்ந்து விடாது வருநாள் எல்லாம் வளர்த்திட நன்மை அருங்கவிப் பெரியீர், அவனியில் என்றும் இறவாப் புகழீர், எம்முட னிணைந்து பூபா ளத்தின் புவிவாழ் வதனே தீபக் கவிகள் தீட்டுவ தாலும்
பூபாளம் !

Page 3
அருகிலி ருந்தே அணைப்பத னலும் விருப்பின் நண்பர்க் குரைப்வத ஞலும் குறைகள் நிறைகள் கூறுவ தாலும் சிறக்க நின்று சீர்பெற் றிடவே மனத்தால் வாக்கால் மாண்புற வெண்ணித் தனமும் தந்து தாங்குவ தாலும் நீட்டு வித்து நிலைபெற ஊட்டி வளர்க்க உடன் வருவீரே!
ஆசி க ள் EYCQCSISISIS
பூபாளம் வைகறையின் புனிதராகம்; புலர்ந்திடும் பொழுது பூவுலகில் புரட்சிகர மாற்றங்கள் செய்யுமாப்போல், புதுமைக்கவி அசோமத்தின் பூபாளம் புவனமெலாம் பூரிக்கப் பணிசெய்தல் வேண்டும். புதுக்கவிதை, பழங்கவிதை என்றெல்லாம் பேசிடாது நயமிக்க, ரசமான, ஜீவகவிதை தோன்ற நாமெல்லாரும் ஒருங்கிருந்தே உழைப்போமாக! பூபாளம் வளரட்டும் தமிழ் சிறக்கட்டும்!!
ஆர். சிவகுருநாதன் (பிரதம ஆசிரியர், தினகரன்.)
பொழுதோடு புலர்வதாம் பூபாள ராகத்தில் பூபாள ராகம்; புலரட்டும் கவிப்பொழுது அமிழ்தாக மலர்கிறது தாபங்கள், தரிசனங்கள், அசோமத்தின் பூபாளம் ததும்பட்டும்; அவிழ்க்காத மனுப்புதிர்க்கு கவிச் சுனைகள்விடையான கவிதந்து உணர்வுகளின் உசுப்பலுடன், புகழ் காண வேண்டும் உலகத்தைப் பாடட்டும். பொலிவான புத்திதழ்கள்
ஈழவாணன் பொன். இராஜகோபால் தினபதி
ஆசிரியர், வீரகேசரி வார வெளியீடு
பூபாளம் 2

பூபாளம் முழங்கட்டும்; எங்கும் புதுப் பொலிவு பிறக்கட்டும்! என்னரும் நண்பர் அசோமத்தும் அருமை கவின் கமலும் இணைந்து மேற் கொள்ளும் இப்புதிய
முயற்சி வாழ்க! வளர்க!
எஸ். எம். கார்மேகம்
செய்தி ஆசிரியர், வீரகேசரி
அரைத்துயிலில், சொர்க்க சுகானுபவத்தில் ஆழ்த்தும் எல். எஸ். டி. இலக்கியங்கள் மலிகின்ற இன்று தட்டித் துயில் எழுப்பும்
ராகங்கள் இசைப்பீர்! மரத்துக் கிடக்கின்ற செவிப் பறைகள் விழிக்க மிதக்கிறது பூபாளம்!
எம். எச். எம். ஷம்ஸ் (அஷ்ஷூரா)
கற்பனைச் சிறகு விரித்துக்
கவிதை உலகினிலே * பூபாளம்" கருத்துக்கினிதாய், கலைநயமாய், கண்ணியமாய்க் கானமிசைக்க வாழ்த் துகிருேம்,
அன்னலட்சுமி இராஜதுரை ஆசிரியர், மித்திரன் GIFTET DGUrio
நேர்கொண்ட எண்ணமதை
நெஞ்சாற் பாடுகின்ற
சீர் கவிஞர் ஏடாகச்
சித்தந் தெளிவிக்கக் கூர்மதியர் சில்லோரால்
குன்றத் தொளிவிளங்க ஆர்வத்துப் பூபாள
அலையேநீ நீடெழுவாய்
கவிஞர் மலைத்தம்பி
கவிவானில் உலாவத் துடிக்கும்
கவிதா நெஞ்கங்களுக்கும், பிரியர்களுக்கும் உன்னதமானதொரு விடியல் புலர்ந்துவிட்டது. ‘பூபாளம்’ இசைக்கும் மோகன ஆலாபனையில் கலா நேசர்களின் மனப்பறவைகள் ஆனந்தமடை
யட்டும்,
பூபாளம் தரும் கவிப்பாலம்
பாவலர்க்கிது பெரும் ஆரம்;
வாழ்த்துக்கள்!
லீலா இராமையா துணையாசிரியர், தினகரன்
கருத்துக்கள் ஆக்கியோர் கண்ணே; பொறுப்போ
உரித்தாகா பூபாளத் துக்கு.
ஆ-ர்
பூபாளம் 3

Page 4
எஸ். ஐ. நாகூர் கனி
வந்தாரை வாழ வைக் கும் கொழும்பு, வாழைத் தோ ட் ட முஸ்லிம்களின் தமிழ் ப் பணியில் சங்குசக்கரப் புலவர் என்பார் முன் னிலை வகிக்கிருர், முஹம்மது அலியார் எனும்பெயர் கொண்ட இவர் வாழைத்தோட்டப்பகுதியின் பேரா வீதியில் வாழ்ந்துள்ளார். இவரது காலம் 1924க்கு முந்தியதுஎனலாம். சுமார் 60 - 65 வயதெல்லை வரை வாழ்ந்த இப்புலவரின் ஒரேயொரு மகளான சேவும்மா என்பவர், கொழும்பு கொம்பனித் தெ ரு ப் பகுதியில் வாழ்ந்து வருகின்ருர்.
பக்தி இலக்கியங்களைப் படைத்த ஞா ன ச் செ ல் வர் களு க் குத் தமிழிலக்கிய வரலாற்றில் பஞ்சமே யில்லை. நாயன்மார்கள், ஆழ்வார் களும் பட்டினத்தாரும் 3)g mLDலிங்க அடிகளாரும் இவ்வழி வாழ்ந் தோரே. குணங்குடி ம ஸ் த ர ன், தக்கலை பீரப்பா போன்ருேர் இஸ்
லாமிய ஞானச் செல்வர்கள்.
இவர்களின் ஞா ன வ |ழியில் வாழ்ந்தவரே, இச்சங்கப் பலகையில் வைத்து ஆராயப்படும் சங்கு சக் க ரப் புலவரெனும் முஹம்மது அலியார் ஆவார். இவரது நாவில் சங்கு சக்கரம் இருந்தது. இவரது நாவில்ை நவின்ற எதுவும் நடந்தே தீரும். வீட்டில் இருந்தவாறே பாடுவார் தனிமை வேளைகளில் வெண்கட்டி யினலும் கரித்துண்டினலும் சுவரில், பலகையில், மேசையில் என்றெல் லாம் பாடல்களை எழுதிவைப்பார் .
தனது பாடல்களுள் ஒன்றில் மக்களைப் பார்த்து உங்களுக்கு எ து வேண்டும்? எனக் கேட்கிருர் . அதை, தான் பேய் மனத்திடம் கேட் பது போலவே கேட்கின்ருர், எளிய தமிழ் நடைதான் எனினும், அவ்வரிகளில் ஞானப்பேரின்பம் இழையோடுவதை எண்ணி மகிழலாம்.
தவம் வேணுமோ, பவம்வேணுமோ எதுவேணுஞ்சொல்மனமே அவமானத்தின்அனுபோம் வேணுமோ தவயோகம்செய்யத்தத்துவம் வேணுமோ பவவினைதீர்க்கப்பாக்கியம் வேணுமோ பகராய்பகராய் பச்சமில்லாப் பெரும்பேய்மனமே!
பூபாளம் 4
 

சாமீபவேதத்தின் சரியைகள்வேனுமோ சாரூபவேதத்தின் கிரியைகள் வேணுமோ சாலோகவேதத்தின் மவுனங்கள்வேணுமோ சாயுச்சியவேத்த்தின் யோகங்கள்வேணுமோ
Fruţă:8u Lorraor சரஹதுவேணுமோ சாதாத்நபியிரு பதங்கள்வேணுமோ சாகாமல்சாக தெளலத்துவேணுமோ வேகமடக்கிட வித்தைகள்வேனுமோ? இப்பாடல்கள் ஞானத்தை ஏந்தியிருப்பன. அவற்றை விஷயம் தெரிந்தோர் விளக்கவுரை செய்தல் ஆராய்ச்சிக்கு உதவும். “ஆத்திசூடியில்’ ஒளவை ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்ருர், ஆனல் அதையே இப்புலவர் இவ்வாறு வெண்பா மூலம் கூறுகின்ருர்
ஈயாதார் கோடி இருந்தென்ன போயென்ன காயா மரத்தினர்க் கால் தருமே - வாயாற் பசப்பியே பத்தகுக்குப் பங்கிடாமு தல்கள் கசைகளவு கோட்டுக்காங் காண்! ஈயாத பாவிகளின் சொத்து கோடு வரை சென்று நாசமாகும் என்பது பொருள். முஹியித்தீன் ஆண்டகை பேரில் முஹியித்தீன் சதகம் பாடிய இப் புலவர் தூதுவிருத்தத்தில் தூதனுப்புகின்றர்.
அன்னமே மயிலே கேளாய் அன்புவைத் திணிமை யாக முன்னவ னருளைப் பெற்று முலகெலாம் புகலாய் மெய்யாய் தன்னிலை யறிந்துகீர்த்தி தனதென தான்தா ஞகும் அன்னிலை மனேன்ம ணிக்கென் னருள்தரச் சலாஞ்சொல் வாயே இன்னுெகு விருத்தத்தில்- M
முக்கோண வட்டமுகப் பாக்கி முன்னிலை நாட்டி வைத்து அக்கோணத் துள்ளே யமைந்தாளுஞ் சத்தி மனே மணியை சக்கோண மாக சரிவட்ட வீட்டினிற் சார்ந்தென் முன்னே தக்கோ னருளால் வருவாயெ னச்சொல்லு மாமா யிலே இவ்வாறு ஞானப் பழரசத்தைப் பல்வேறு பாவுருக்களால் பாடிய இப் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப்பாவோலை பாடிப் பெருமைப் படுத்தப்பட்டார். இவரின் பாடல்கள் எழுத்து வடிவில் அங்கிங்கென்று உறவு நெஞ்சங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. இவற்றை வெளிக் கொணர்ந்து அச் சேற்றி ஆவன செய்தல் இஸ்லாமிய சமயப்பணி மட்டுமல்ல இன்றமிழின் நற்பணியுமாகும். W
இத்துறையில் ஆர்வமும் ஊக்கமுமுடையோர் இவ்விவகாரத்தில் சம்பந் தப்பட்டோரை அணுகித் தூசுபடியும் தூய்மை இலக்கியங்களைச் சங்கப்பலகை யில் வைக்க முனையவேண்டும். அமைதி தேடும் இக்கால மாந்தருக்கு, இத்தகு பக்தி இலக்கியங்களே பயனும்-பலமும் தரும். புதிய இளந் தலைமுறையும்
பழையன அறியும்.
பூபாளம் 5

Page 5
கவிஞர் வாழ்க!
இன்று நல்ல காலைப் பொழுதில் இனிது சேர்ந் துள்ளோமே என்றும் நாங்கள் அணியாய் நின்று எழுதிக் கவி செய்வோமே
எங்கள் புதிய உணர்ச்சிக் கீதம் எங்கும் ஒலித்தல் வேண்டும் தங்கி நிதமும் துயில்வோர் தம்மைத் தட்டி யெழுப்பல் வேண்டும்
புதிதுபுதிதாய்ப் பாடல் இங்கே பொங்கி எழுதல் வேண்டும் நதியைப் போலும் பெருகி மக்கள் நன்மை அடைதல் வேண்டும்.
எலியைப் போலும் இருந்து எம்மை என்றும் சுரண்டு வோரைப் புலியைப் போலும் பாய்ந்து பாடல் போட்டு மிதித்தல் வேண்டுய். நிலவைப் போலும் பாடல் இந்த நிலத்தில் பொழிதல் வேண்டும் பலமே இன்றிச் சோர்ந்து கிடப்போர் பாய்ந்தே எழும்பல் வேண்டும் குயிலைப் போலும் கவிஞர் நாங்கள் கூவி இசைக்க வேண்டும் மயிலைப் போலும் மக்கள் கேட்டு மகிழ்ந்தே ஆடல் வேண்டும்.
அலையைப் போலும் கவிதை இனிதே ஆர்த்தே எழுதல் வேண்டும்
மலையாய் நின்று கொடுமை செய்வோர்
மண்ணுய் ஆதல் வேண்டும்.
இதனைச் செய்யக் கவிஞர் 6T GöiÜan)nrlíb இன்றே எழுதல் வேண்டும் எதையும் தாங்கி உழைக்கும் கவிஞர்
எமக்குள் வாழல் வேண்டும்!
இ அன்பு முகையதின்
இழி மனம் வைத்திடாதே
எழிலுறும் மாதர் தன்பால் இழிமனம் வைத்திடாதே! இருக்கின்ற பணம் அழிந்து இன்னல்கள் வந்து சேரும்!
பழியுடன் பிணிகள் வந்து பாவத்தில் கொண்டு தள்ளும் கசந்திடும் வாழ்க்கை என்பாய் கண்மழை பொழியக் காண்பாய்!
தினம் காணும் கனவு தன்னில் தீராத தொல்லை சேரும் மனமது அலைந்து போகும் மதி கெட்டு வாழ்வு மாயும்!
நலிந்துடல் மெலிய நீயோ நஞ்சிலே அமைதி காண்பாய்! எழிலுறும் இளமை நோக்கார்
எடுத்ததும் வெட்டும் கீறும்
எத்தனை அங்கமெல்லாம் பார்வைக்கு(ம்) எடுத்து வைப்பர்! இதன்பின்னே புதை குழிக்குள் ஏகிடும்; என்ன காண்பாய்?
இ மல்வத்தை நடேஜினி
கனவு
எண்ண அலைகளிடையே - உறக்கத்தில் எம்மை மகிழ்விக்க - நித்திரா தேவி சொல்லித் தரும் இனிய கதைகள்!
S is si(p2T சிறழ் அஹமது
பூபாளம் 6

எடு காலை
காக்காஅக் கம்புதனைக்
காலால் மிதிக்காதே! ஏக்கம் மிகுந்தஎங்கள்
இரணக்கோல்; கதிரடிக்கும் கம்புதான் எங்களினைக்
காக்கும் படைஅதுவே நம்பிக்கை தரும்ஒருகோல்! நாளை சிலருக்குச் சூட்டுக்கோல் ஆகிடலாம்;
சுரணைவரு மட்டுமெங்கள் பாட்டைச் சுரண்டுபவர்
பழிவாங்கப் படுவர்;இந் நீட்டுக்கோல் அவர்களது
நெஞ்சைத் திருத்திடலாம்; காட்டாதே பல்லைச்சே!
காக்கா உன்காலைஎடு!
இ பாவலர். பஸில் காரியப்பர்
ப(ா)லம்
எழுத்து நரம்புகள் எம்பிப் புடைத்துக் கருத்துச் சுவடுகளைக் கழுத்திலிருந்திறக்கிப் பதித்து நடப்போம் சோம்பலின்றி; கடப்போம் மனக்கூம்பலின்றி!
முற்றுப் புள்ளிக்கு முன்பாக முட்டும் குமைச்சல்களை விண்ணப்பித்து அது தவிர்க்க விண்ணைப் பிய்த்து வலிமையை உரைப்போம்; வழியெங்கும் நிறைப்போம்! நம் பேணுவுக்குள் வெறும் மையில்லை : வெறுமையைப் போக்கும் பெருமைதான் உண்டு
இ ‘பாத்திமா மைந்தன்'
ஏணிப்படிகள்
வேலாயுதர், இராமநாதன், திருச்சிற்றம்பலம், சிவஞானம், நடேசபிள்ளை, தில்லையம்பலம், சின்னத்தம்பி, அப்பாத்துரை, கமலா தம்பிநாயகம், திருமதி செல்லத்துரை, சிவநேசன், லோகநாதன், ரெங்கநாதன், பழனிநாதன், சேர்வையார், பாலகிருஷ்ணன்இந்த ஏணிப்படிகளில் ஏறித்தான், இங்கே உயர்ந்து நிற்கிறேன்!
இ விருச்சிகன்
இரு பக்கங்கள் சேரியிலே வாழுகின்ற நாறும் மனிதக் கும்பல் ஒரு புறம்: ஊறிடும் பணத்தில் மிதக்கும் உல்லாச சுகபோகிகள் மறுபுறம்: ஓங்கி உழைத்தவர்கள் ஏங்கி உணவுக்கு அலைந்திட தேங்கியே தேய்ந்து தினம் வாடுகின்ருர்கள்வீங்கி வயிறுமுட்ட
*விஸ்கி"யுடன் உண்பவர்கள்: தூங்கி மயங்கியவர்கள்; துயரேதும் அறியாதவர்கள்; ஆம்: ஒருபக்கம் இல்லாவாழ்வு; மறுபக்கம் உல்லாச வாழ்வு!
கலா விஸ்வநாதன்
பூபாளம் 7

Page 6
நனவாகும் நாள் வருமா?
நெஞ்சமெனும் நெடுந்திரையில் நிழற்படமாய் வந்தென்னக் கொஞ்சுகின்ற சபல த்தால் குமரியுன்னை நினைக்கின்றேன். அஞ்சுகமே, என்னினிய அழகுநிலா ஆனவளுன் பிஞ்சுருவத் தளிருடல்தான் பித்தனென்றே ஆக்கியது.
纜 தினம் வகுவாயே
ருப்பாயே எனஅனைத்துப் புரவியிலே நீஏறிப் பூங்காவில் வலம்வருவாய் கரம் பற்றும் போதினிலே கண்மூடி நாணத்தால் உரம்பெற்ற நெஞ்சமென உரையாய்நீ சிறுவார்த்தை
சிலபொழுது அருகிருந்தே சிரித்துச் சிரித்தேயென் நலம்கேட்பாய் எதிர்கால நம்வாழ்வு தனைச்சொல்வாய் உலகினிலே நீயின்றி உயிர்வாழேன் இதுதிண்ணம் சிலையே என் கனவெல்லாம் சீக்கிரம்நீ நனவாக்கு.
இ அ. கெளரிதாசன்
பதிலொன்று அனுப்புவிரா?
மாப்பிள்ளை ஆவ தற்கு
மணமகள் தேவையென்று பேப்பரில் நீங்கள் போட்ட
பெரியதோர் விளம்ப ரத்தைப் பூப்படைத் திட்ட மூன்று
பூவையர் எங்க ளுள்ளே மூப்படைந் தின்று செல்லும்
மூத்தவள் நானுங் கண்டேன்.
சீதனந் தேவை யில்லை
சீர்வரி சையும் வேண்டாம் மாதுதான் வேண்டும் மங்கை
மனங்கவர் அழகுப் பெண்ணுய்ப் போதுமே இருந்தால் கல்வி
பெற்றவள் நன்ரு மென்று நீதமாய்க் கேட்கும் உங்கள்
நெஞ்சினை வாழ்த்து கின்றேன்
இன்றைய ஈழந் தன்னில்
இளைஞரே உங்கள் போன்று நன்றென மற்ருேர்க் கிந்த
நல்லெணம் உதிக்கு மென்ருல் குன்றென வளர்கு மர்கள்
குடும்பவாழ் வடைவர் திண்ணேம் என்றுயான் எண்ணி யிந்த
எழில்மடல் தீட்டு கின்றேன்.
இ) கிண்ணியா அலி
காலை மலர்ந்ததுவே!
இளம்பரிதி கதிர்விரித்துக் கிழக்கினையே ஒளிசெய்ய எழிலதனைப் பருகிமனங்களித்திட்ட நறுமலாகள உளநெகிழ்ந்து முகமலர வதுகண்டு மனமகிழ்ந்து களிவண்டு குதுர்கலிக்க இளங்கால மலர்ந்ததுவே
புள்ளினங்கள் துயில்கலைந்தே இரைதேடு குறியோடு துள்ளியெழுந் துயர்வானிற் பறந்தெங்குங் கலகலப்புச் செய்துமகிழ்ந்தெம்மருங்குஞ் சுறுசுறுப்பா யோடியாடி மெய்யுழைப்பிற் கழித்திடவே மென்காலை மலர்ந்ததுவே!
இ கொக்கூர் கிழான்
பூபாளம் 8

புரட்சி
எங்கள்
வியர்வைத் துளிகள் எங்களை ஏமாற்றிவிட்டு ஏழடுக்கு மாளிகைகளின் மதுக் கோப்பைகளை நிரப்பிக் கொண்டிருக்கும் வரை நாங்கள் புரட்சியாளர்கள்! பட்டினிப் பட்டாளங்கள்!
இ திருமலை. இரா. செல்வம்
கோவலன்
ஏழு மணிக்குத்தான் தாலி கட்டவேண்டும் பெற்றேரின் முடிவு! அவனைஏழு மணிக்குத்தான் கடற்கரையே விடும்!-- மாப்பிள்ளை நிலைமை! மணமேடையில்அவனது சிந்தனைகண்ணகியா? மாதவியா?
இ ராஜ் கண்ணு
மேய்ச்சல்
அப்பனின் வயலில் - அப்போதெல்லாம். எருதுகள் உழுதன! அப்பனின் - மரணத்தின் பின். இப்போதெல்லாம் - மக்களே எருதுகளாய் *கோட்டில்" உழுதுகொண்டிருக்கின்றனர்!
இ கிண்ணியா ஹஸன்
பூட்டு
உங்களின் கதவுப் பிரிவுகள்கதைக்கும் போது, இணைத்து நின்று இல்லம் காப்பேன். வருகை தருவோரை வார்த்தை யின்றிவிரட்டுவேன். ஆனல், இதய மேந்தி வரும் ஏழைகளை மட்டும் என்றுமேவிரட்டுவதில்லை. பேசாக் கதவுள்ளஇல்லங்களையே, அவர்கள் நாடுகிருர்கள்.
இ “இப்னு அஸ9மத்’’
தஞ்சம்
கன்னியரும் காளையரும்
காதலிலே தஞ்சம் கன்னியமாம் காதலர்கள் கருத்துறவில் தஞ்சம் பண்ணுேசைப் புலவரெலாம் பாடலிலே தஞ்சம் நன்மைகளைச் செய்திடுவோர் நற்சுவனத் தஞ்சம் மண்மீது பிறப்பவர்கள்
மண்ணுக்கே தஞ்சம் மன்னவனும் இறைவனிடம் மானிலமே தஞ்சம்!
இ உடுதெனிய, ரஷீட் நூருல் ஐன்
பூபாளம் 9

Page 7
-
数女妆女章空章立伞伞伞、伞伞伞业 ***
今丰 *丰 பெறுமதிமிக்க உங்கள் கடிகாரங்கள் 丰°
நம்பிக்கையோடும் தகுந்த உத்தரவாதத்தோடும்
திருத்திக் கொள்ளத் தலைநகரிலே சிறந்த இடம். بہتھ
SI r(2)
: 今非 丰夺 FAREENA TIME CENTRE 今丰 பரீனு டைம் சென்டர்
41, OVER HEAD BRIDGE 丰令 姊卡 MARADANA, COLOMBO-10 年
丰令 露、
அழகிய 丰令 அச்சுப் பதிப்புகளுக்கு 義 注 y * நல் வாழ்த்துக்கள் *
: S. 汝 நலம் விரும்பி 丰邻 今丰 女 丰令
ஹோதி பிரின்டர்ஸ்
注 நிபு ஜாதி * 丰令 LlᏧ60)Ꭰ எல்கடுவை :
女 s 注 33
* 举本举举恋本本本本本举本本本本本本体松本书本杰本本本书

இயற்கையும் மனிதனும்
டாக்டர். தாவRம் அஹமது
மருத்துவம் கண்ட மாபெரும் சாதனை சரித்திரப் புதுமைகள் தந்த நவீன இருபதாம் நூற்ருண்டில் இருக்கிருேம் நாங்கள். நவீன மருத்துவம் "லேசர் ஒளியினல் அறுவை சிகிச்சை அழகாய்ச் செய்யும் பெரிய சாதனைப் பெருமைகள் கண்டு பிரமிப் படைந்து பீற்றித் திரிகிருேம்.
இந்திய மண்ணில் இருக்கும் ஒருவனின் இயங்க மறுக்கும் இதயத் தொலியை அமெரிக் காவின் இருதய நிபுணர் *சட்லைட்" ஊடே சாவ தானமாய்க் காது கொடுத்துக் கேட்டுக் கணித்துப் போதிய யோசனை புதிதாய் வழங்கும் சேதியும் அறிந்து திகைத்து நிற்கிருேம்!
வானில் நீந்தி வளியும் தாண்டி வேகம் செல்லும் விண்வெளிக் கலத்தின் உள்ளே இருக்கும் ஒருபெரும் வீரரின் சுவாச இயக்கம் சோர்வடை கின்றதைப் பூமியில் அமைந்த புதுநிலை யகத்துத் தாமதி யாது தருமொரு கருவி மூலம் அறிந்து முணுமுணுக் கின்ருேம்!
பூபாளம் 11

Page 8
பஞ்ச பூதப் பரிணு மத்தை விளக்கிய டார்வினின் இயற்கையின் ஆய்வு எழுப்பிய சர்ச்சைகள் அனைத்தும் விடுத்தே ஆதி மனிதன் இயற்கையோ டிணைந்து எப்படி வாழ்ந்தான் என்பதை உலகம் சற்றே நின்று சரித்திரம் தன்னை உற்றுப் பார்க்கையில். உற்றுப் பார்க்கையில்.
உணவு மருந்தாய் மருந்தே உணவாய் உறுநோய் போக்க உபயோ கிக்கும் அறிவை அன்றே ஆதி மனிதன் எங்ங்ணம் பெற்ருன்? எங்ங்ணம் பெற்ருன்? இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்த பயிற்சியால் பெற்ற பயன்தா னெதுவோ? அனுபவத் திரட்டை ஆக்கிக் கொடுத்த வழிவழி வந்த மருத்துவத் தொகுப்பின் வளர்ச்சியின் உயர்வே இன்றைய மருத்துவம் என்பதை மறப்பது எளிதோ? இனிதோ? மருத்துவம் கண்ட மாபெரும் சாதனை. சரித்திரப் புதுமைகள் தந்த நவீன இருபதாம் நூற்ருண்டில் இருக்கிருேம் நாங்கள். இயற்கை வளங்களை இமைப்பொழு தழிக்கிருேம்; உயிருடன் இயங்கு மொன்றின் மயிரினைப் படைக்கும் வல்லமை எங்கே?
(தொடரும்)
விரைவில் வெளி வருகிறது
கமல் பிரதர்ஸ் பப்ளிகேஷன் வழங்கும் இலங்கையின் முதலாவது
உருவகக் குறுங் காவியம்
38883.38 EEEEEEEEEEEEEEEE புலராத பொழுதுகள்
பூபாளம் 12

உனக்கான வெட்கமடா
8 தெமோதரை குறிஞ்சிவாணன் 8
சம்பளந்தான் போட்டாலும், போட்டார்; அதைச்
சரிபார்க்க நோக்கந்தான் இல்லா மலே உன்கையில் கிட்டியதே அதிர்ஷ்டம் என்று
ஒரு வார்த்தை தாயிடத்தில் சொல்லி டாமல் கம்பிநீட்டி விட்டாயே சினிமாப் பார்க்க,
கடன்காரர் வீட்டினிலே "ஈயாய்" மொய்க்க வெம்பியழும் தாய்மனதில் கொந்த விக்கும்
வேதனையை நீஎண்ணிப் பார்த்த துண்டோ?
காலையிலே செழும்பரிதி எழுந்தே இந்தக்
காசினியில் சுடர்பரப்பிச் சூட்டைக் கொட்ட ஏழைகள் உன்தாயோ வியர்வை தன்னை
எழிலான தேச்செடிக்கு வார்த்து விட்டு மாலையிலே கால்களெலாம் தளர்வி னுேடு
மனநோக்கி வருகின்ற நிலையை சற்றெவ் வேளையிலும் எண்ணுமல் உன்னிஷ்டம் போல்
வீணடித்தால் இன்பந்தான் வருவதென்ருே?
வளமான எதிர்கால வாழ்விற் கிற்றை
வரும்படியில் சேமித்து வைத்தி டாமல் இளமையிலே எடுக்கின்ற சம்ப ளத்தை
இஷ்டம்போல் பாழ்செய்தால் எதிர்காலத் தில் நலமாக இம்மண்ணில் வாழ்ந்த லென்ருே;
நமைச்சூழ்ந்த மிடிமை யெலாந் தீர்வ தென்ருே? வழிவழியாய் வறுமையிலே உழல்வ தென்ருல்
வாழ்வதுதான் ஏனப்பா? மனத்தில் கொள்வாய்!
எடுக்கின்ருய் சம்பளத்தை, உனது வாழ்வின்
ஏழ்மையினைப் போக்குதற்கா, இலையா; சொல்வாய்! கொடுக்கின்ருய் மதிகெட்டும், சினிமா விற்கும்,
கொள்ளையடி குழுவிற்கும், கள், சூதுக்கும். படுக்கின்ருய் ஒழுங்கான விரிப்பு மின்றிப்
பஞ்சநிலை தலைவிரித்தல் கண்டு செஞ்சந் துடிக்கின்ற உணர்வுதான் சிறிது மில்லாச்
சோதரனே உனைக்காண வெட்கம் வெட்கம்!

Page 9
༈ ཨོཾ་ཨ༔ ཙམ་༢༦ ཙམ་ལྡ༦༠། ལྷ་རྒྱུ་
; e9l6ᎠᏠ ;
妹 女 ང་
本 女 注书注举妹轮津丰令妹丰令苏
நாம் சுவைத்து, இர சித் த கவிதை ஏராளமுள்ளன; எதைப் பற்றி எழுதுவது என்பது பற்றிய 1ημέθάσοτ
எழுந்தபோதுதான் கவிஞர் கண்ணதாசனின் ‘எங்கே அவ ன்?" என்ற கவிதை எனக்குத் தன்கை நீட்டியது. இது ஒரு த த் துவக் கவிதை நம் சுயத்துக்குள்ளே தான் *கடவுள்’ குடிகொண்டிருக்கிருன் என்ற உயரிய தத்துவத்தைத் தரும் கவிதை.
மண்ணில் ஆயிரம் மலர்களைப் பார்க்கிருேம். மனத்திலாயிரம் எண் ணங்கள் எழுகின்றன. விண்ணில் ஆயிரம் விண் மீன்களு முள்ளன; வெட்ட வெளியில் ஆயிரம் உயிர்கள் உள்ளன. இவையெல்லாவற்றையும் உருவாக்கியவர் யார்? சிந்தித்துப் பாருங்கள். கடவுள் என்பீர்கள்; வைத்துக்கொள்வோம்.
மேலும் உருவுக்குள்ளே உருவை வைத்துவிட்டு, கரு வுக் குள் ளே கருவை வளர்க்கின்றன் ஒருவன் என்கின்ருேம். அல்லாமலும் இரு ளிருக்குமிடத்தில் ஒளியை வைத்து ஒன்று மறைய மற்றென்று வரும் மாயா ஜாலத்தைச் செய்துள்ளான்
E ஏ. பி. வி. கோமஸ்
ஒருவன்! அதே நேரத்தில் நிழல் என்ற வடிவில் ஒளியின் பக்கத்தி லேயே இருளையும் வைத்துள்ளான். சிலவற்றை உண்டென்கின் ருேம்; அவையில்லாது போகின் றன. இல்லை என்போம்; அவை இருந்துவிடும். நல்லவை என்போம்; அவை பொல்லாதவையாய் மாறி விடும் பொல்லாதவை, நல்லவை யாகிவிடும்.
இவைகளைச் செய்பவன் கட வுள் என்போம். அவன் எங்கே யுள்ளான்? வாருங்கள் காட்டு கிறேன், என்று கூறி இதோகாட்டு கிருர், கவிஞர்:-
** என் கைக் கோலில்
அவனுள்ளான் என் நா முழுதும் அவனில்லம் என் மன மெல்லாம் அவன்
கோயில் என்னில் "நா"ணுய்
அமர்ந்துள்ளான்இன்னும் விளக்கம் கேட்பீரோ? இறந்து பாரும் தெரிந்து விடும்!" எனவே-மனம், வாக்கு, காயம் மூன்றினலும் நாம் அநுபவித்துக் காணும் 'அறிவே'-கடவுள், என்
பூபாளம் 14

பதை கைக்கோலை உடலுக்கும்"நா'வைச் சொல்லுக்கும் - மனக் கோயிலை உள்ளத்துக்கும் உருவகப் படுத்துவதன் மூலம் காட்டும் கவி ஞன்-"என்னில் ‘நானப் அமர்ந் துள்ளான்" என்ற தத்துவ அடி யுடன் முடிக்கின்றன். காரணம்:-
சிந்தையிலும் சொல்லி லும் செயலிலும் இறைவன் வாழவேண் டும் என்பதே இவ்வுயரிய தத்துவம்.
இப்போது முழுக் கவிதையை uyuh LunTri G3Lurr Lorr?
மண்ணிலாயிரம் மலர்களம்ைத்
தவன் மனத்திலாயிரம் அலைகளளித்
தவன விண்ணில் ஆயிரம் மீன்கள்
சமைத்தவன் வெளியில் ஆயிரம் உயிர்கள்
படைத்தவன்
-எவ்வூருடையான் என்றீரோ எம்மூர்வாரும் சொல்கின்றேன்! உருவுக்குள்ளும் உருவை வைத்தவன் கருவுக்குள்ளும் கருவை வளர்த்தவன் இருளில் ஒளியை மறைவில் வைத்தவன் ஒளியில் இருளை அருகில் வைத்தவன்,
-எவ்விடமுள்ளான் என்றீரோ? என்னிடம் வாரும் சொல்கின்றேன்! உண்டென்பதுபோல் இல்லென்பான் இல்லென்பது போல் உண்டென்பான் நன்றென்பது போல் அன்றென்பான் அன்றென்பது போல் நன்றென்பான்
-எப்புறமுள்ளான் என்றீரோ? இப்புறம் வாரும் சொல்கின்றேன். என் கைக் கோலில் அவனுள்ளான்என் நாமுழுதும் அவனில்லம் என் மனமெல்லாம் அவன் கோயில் என்னில் "நா"ணுய் அமர்ந்துள்ளான்
-இன்னும் விளக்கம் கேட்பீரோ? இறந்து பாகும் தெரிந்துவிடும்.
- கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் சிலை!
கவிப்பேரரசு கண்ணதாசனுக்குச் சிலை வைக்க முனைவதை விட, ஏராளமாக வெளியாகி இருக்கும் அவரது நூல்களை நாம் வேறு மறு
பதிப்புச் செய்து வெளியிடுவதை விட
நம் தாய் நாட்டின் இறந்த -
இறந்து கொண்டிருக்கும் கவிஞர்களின் படைப்புகளை வெளியிடும் முயற்சியை மேற்கொள்வது தமிழ்த் தொண்டாகும்.
பூபாளம் 15

Page 10
நஞ்சாகும் நாளைகள்
(20ம் நூற்றண்டு மனித நதிகளை நோக்கி.)
இரைச்சல் அலைகள்
பாரம்பரிய மணல் வீடுகளை
அழித்துப் போகும்.
மனித வாழ்வு காவிய
மர இலைகள் உதிர்க்கும் -
பிளவுப் பூக்கள் இளமைப் பூண் அடிக்கடிசபல அடுப்படியில்
மயக்கப்பால் குடிக்கத் துடிக்கும்.
பாசமுட்கள், பயணத் தடங்களில் உதிரச்சுவடுகளாகி விலகி ஒடும்!
மனக்காகங்களோ, விரக்தி எச்சங்கள் போட்டுச் சிறகடிக்கும்.
இன்ப வாழ்வுப் புடவை கிழிந்து இறந்த காலக் கொடியில் காயும். அர்த்தம்ான சோகங்கள் அர்த்த ராத்திரியில் எரியூம் கனவு வால் நட்சத்திரங்களாய் தனவிலியை எரிக்கும்.
மன மேனியின் நினைவுச் சதையில் அணுக்குண்டுப் பயப்புண் வீங்கி.வீங்கி. சீழ் வடிக்கும்!
அடுத்த நூற்ருண்டுப் பிலாக் கணக்காட்டை நோக்கி கேள்விகள், *நாளை களை நஞ்சாக்கி நஞ்சாக்கி நகர்ந்து போகும்.
SQ Guolosir asal நாங்கள்?
ஒலைக் குடிசையும் ஒட்டிய வயிறுகளும் எம் வாழ்க்கை
வியாபாரத்தில்
ரெஜிஸ்டர் மார்க்குகள்!
நீண்ட ராத்திரிகள் எம் துன்ப மூச்சுகளைச் சிறைப் பிடித்து வைக்கும் நிம்மதி ராஜ்யத்தின் வாயிற் காவலர்கள்! காலப் பொழுதின் பூபாள ராகம் கடின உழைப்பின் கடமைக்கு அழைப்பு விடும்-ஒர் அவசரக் கடிதம்! பகலவன் வருகை
பசியின் வெற்றிடத்திற்கு
விண்ணப்பம் கோரும்
வேலை நிறுவனம்
இ ஏ. அவSஸ் நிலாருதீன்
ஆராய்ச்சி!
நீங்கள்மண்ணுள் மறைந்தீர்களா? எங்களுக்கான சுகவாழ்க்கையை ஆராய்ச்சி செய்கிறீர்கள்!
Q “ ‘ußisivu Taivy”
பூபாளம் 16

தாயோடு தந்தை தகுசந் ததிஒப்பா ராயில்லை அல்லாவுக் காம்.
அவனின் திரைஒளியாம்; அத்திரை நீங் கிட்டால் புவனம் எரிந்துவிடும்; போற்று. காலம், மழை,கர்ப்பம், நாளை, மரணமிவை ஞாலத் தறிந்தோன் அவன். நினைத்தால் நினைப்பான்; நடந்தால் நீ ஓடி அணைப்பான் விரைந்தே அவன். பகல்மறையு முன்னும் பகல்புலரு முன்னும் செயல்சேரும் ஆள்வானைச் சென்று. ஊணைக் குறைத்தலிலும் ஒங்கப் பெருக்கலிலும் ஆணை அவனிடத் தாம். இறைவன் உறங்குவ தில்லை; அவற்கோர் உறக்கம் தகாதென் றுணர். தவணைகளின் மேலேயாம் தக்கதமைத் துள்ளான். தவருது; துன்பம் தவிர் மேய்ப்பவரே நீவிரெலாம்; மேதினியில் யார்மாட்டும் மேய்த்தமுறை ஆயப் பெறும் ஆண்டவனைச் சந்திக்க ஆசைப் படுவானை ஆண்டவனே சந்திப்பான் ஆய்ந்து.
பூபாளம் 17

Page 11
2 இறை நம்பிக்கை
ஏமாற்றம் சேர்வதிலை 'ஏகனை நீதொழுது ஈமானப்ச் செய்யும் செயல். நிராகரிப்பார் முன்னே நீ நேர்நின்று போர்பூண்; பராமரிப்பார் இன்றகல்வார், பார். நம்பி உறுதியுடன் நாயன் அழைத்திடுவீர்; நம்பார்க் கிலைவிடையாம்; நம்பு. மகிழ்வுவரின் நன்றிசொல்வார்; மாறுவரின் துய்ப்பார் இகபரத்தின் நன்மை இவர்க்கு. நமைப்போல் தொழுதேத்தி நாமறுத்த துண்ணும் அமைப்புள்ளார் முஸ்லீம் அறி. வஞ்ச உணர்வுகளின் வார்ப்பை வெளிப்படுத்த அஞ்சல் இறைநம்பிக் கை,
நெற்பயிரும் கள்ளியதும் நேர்வர் விசுவசிப்போர் அற்ப நயவஞ்சத் தார். இலையெதுவும் வீழா நிழலதுவும் நீங்கா நிலைமரத்தர் நம்பிக்கை யர். அல்லாஹ், இறத்தல், அரும்விதி,உ யிர்த்தெழலில் இல்லான்நம் பிக்கை இலன், இறையவனுக் கேதும் இணைவையா ராகி இறந்தால் சுவனம் இருப்பு.
(தொடரும்)
பிராந்தியக் கவியரங்கு பாரதி முக்காடு!
இலங்கையிலே முதன்முதலாகப் பி ரா ந் தி ய கவியரங்கொன்றை கவிஞர்
நடத்துவதாகத் தீர்மா னித் து விளம்பரமும் செய்திருந்த வலம்புரி கவிதா வட்டத்தினர், கூடிய விரை
வில் அதனைச் செய்வார்களென எதிர்பார்ப்பதில் தவருென்றும் இல்லையே?
‘பாரதி, Lr9ע ח* என்று ஏன் சிலர் பாசாங்கு செய்வ துடன் நின்று முக்காடும் போட்டுக் கொள்கிருர்கள்? தங்களால் ஒரு பாரதியைப் போலவோ, பாரதியை விட மேலாகவோ வரமுடியாது என்பதாலா?
பூபாளம் 18

சந்திமர ஆண்டி
இ ஸி. எஸ். காந்தி 0
ஆலையிலே சங்கூதும் செல்வேன், காலை அன்ருடப் பணிதன்னை ஏற்பேன்; பின்னர் வேலையிலே மூழ்கிடுவேன்; மறந்து மென்னை வெட்டிக்கதை எவருடனும் பேசேன், சங்கு மாலையிலே முழக்கமிடும்; வருவேன் வீடு மகிழ்வோடு உறவினரும் சுற்றத் தாரும் சோலையிலே சூழ்புட்கள் போல வந்து சுற்றியெனக் குழுமிடுவர்; பெருமை பொங்கும்,
மூலையிலே கிடக்கின்றேன், மூப்பு என்னை முன்வந்து ஆதரிப்பாரில்லை; கூற்றன் ஒலையிலே அழைப்புவிடும் காலம் தானும் ஒடிவந்தால் மகிழ்வுறுவேன்; ஊன்றிக் கம்பு காலையிலே சந்திமர அடிக்கு வந்து கையெடுத்து இரக்கின்றேன், குந்தி ஏதும் சாலையிலே நடப்போரும் ஈவர்; இன்று செகத்தினிலே சந்திமர ஆண்டி யானேன்.
கனியுதிர்த்தால் ஆலமரம் வெளவால் நாடும் கவின்மலர்கள் பொலிந்திட்டால் சிட்டு நாடும் இனிப்பிருந்தால் எறும்புகளும் படையெடுக்கும் இரையிருந்தால் கூண்டிற்குள் விலங்கு மோடும் நுனித்தூண்டில் புழுவிருந்தால் மீன்கள் கூடும் நிதியிருந்தால் சுற்றத்தார் கூட்டந் தேடும் தனிமனிதன் ஒட்டாண்டி என்னைத் தேடித் தரணியிலே எவர்வருவார் பேண வோடி?
கூன்விழுந்த சிறுமேனி; நடுங்கும் கைகள், குழிகளுக்குள் மினுக்கமிடும் இரண்டு கண்கள் ஏன் பிறந்தேன் எனச்சபிக்கும் உடைந்த வுள்ளம், ஒட்டிநிற்கும் சிறுவுந்தி, ஒல்லிக் கால்கள் வான்கோமான் கண்களைப்போல் கண்கள் கொண்ட கந்தையுடை நடைப்பிணம்யான்; உலகில் இன்று தீன் கிட்டத் தட்டுத் தடு மாறி வந்து தினந்தோறும் குந்தியிங்கு இரக்கின் றேனே.
*awesik
பூபாளம் 19
z ہیں۔ O 5
as سر بیمه - |
용 홍 a 3
S 9 له تعب كرة يخ که تا Z ک> a
있 3 ド O
雷 T
s 薰 赛
s Čš - G s। ମୁଁ ଛି! 8菲曾器 エ & E 8
Հ} 显 S) S. > 话 墨 (a 5 ā 岑、 s GEQ 锯 斐
总 砷

Page 12
கவிதையும் கற்கண்டும்
அணுவைத் துளைத்தேழ் கட லைப் புகட்டல் கவிதை. சிறிது கருணை காட்டுவோம்: கரும்பு வச னம்; சாறு கவிதை. இன்னும் இறு
கிய கற்கண்டு வாழும் கவிதை. இதோ ஆதாரம்
சித்ர கவிச்சரபம், ஆசுகவி டி. வி. அப்துல் கபூர் சாஹிப்
புலவர் அவர்களைப் பலருக்குத் தெரி ing .. மேலச்சிவபுரி சன்மார்க்கச் சபைக்குப் புலவர் சென்றிருந்த போது, அவர் தம் ஆசுகவிப் புல ഞ ഥ ഞI d് சோதித்தறிவதற்காக புலவோய்! ஆசுகவி காளமேகம் நேரிசை வெண்பா 15 ர்ேகளில் 12 இராசிகள் வர அ மைத் துப் பாடியது போல் aeth DIT fib lumrl
முடியுமோ?’ எனக் கேட்டனர். **ஒ, அதுவா1. அதற்குப் 15 சீர் கள் தேவையில்லையே! 7 ர்ேகளைக்
கொண்ட குறள் வெண்பாவிலேயே பாடிவிடலாமே?' என்று புன் ன கையுடன் மறு மொ ழி கூறி மறு கணமே பாடிக் காட்டினர்.
ஆடுசே வீணை அலவனரி
பெண்டுளைதேள் நீருவிற்சு ருக்குடமீ னே’’ என்பது புலவர் பாடிய குறள்.
இதன் பொருளாவது: ஆடு - மேஷம்: சே - ரிஷபம்; வீணை 'மிதுனம்; அலவன்" கற்கடகம்; அரி - சிங்கம்: பெண் - கன்னி; துளை - துலாம்: தேள் - விருச்சிகம்; நீரு நீண்ட வில்-தனுசு சுரு- LCs, Jib; குடம் - கும்பம்; மீன் - மீனம்.
இந் நிகழ்ச்சியை நேரிற்கண் புலவர்கள்: பண்டிதமணி கதிரேசன், செட்டியார்,உமாமகேசுவரம்பிள்துை ரா. ராகவ ஐயங்கார் முதலியோரி
இ) கணி
நன்றி: "மதி நா'
கைவிலங்கு
சுதந்திரமாய்த் திரிந்த எனது கைகளுக்கு விலங்குபூட்டி அடிக்கின்றீர்களே!. உங்களுக்கு இரக்கம் இல்லையா? எனது தவறுகள் பெரிய தவறுகளா? பல - பெரியவர்கள் செய்த தவறையே நானும் செய்தேன்! எனக்கு விழும் அடிகளைப்பார்த்து இந்த மக்கள்ே கண்ணிர் விடுவது புலப்பட வில்லையா? அன்று சுதந்திரமாய்த் திரிந்தவனே நான்! இன்று? என்ருே ஒருநாள் எனக்குச் சுதந்திரம் கிடைக்கும்! அப்போது உங்களுக்குச் சுதந்திரத்தைப் புரியவைப்பேன்.
g வதிரி - ரவி - சஞ்சயன்
பூபாளம் 20

ஏழைக் கவிஞன்
எழுதத்தான் முடிகிறது, என்னுல்; எழும்பவோ முடியவில்லை! சமுதாய நிலத்தில் சமதர்மப் பயிர்களைக் கடித்துண்ணும் பூச்சிகள். மனிதாபிமானங்களை மறைக்கும் அந்தஸ்துப் போர்வைகள். ஏணியை எட்டி உதைத்திடும் பகுத்தறிவின் சிதறல்கள். உரிமை ஒப்பந்தத்தின் தர்ம ஒப்புதல்கள். . மகத்தான மரமேறும் வேதாள சாதனைகள்!. எழுதத்தான் முடிகிறதுஎன்னுல் எழும்பவோ முடியவில்லை!!
09 மஸ்கெலிய மனுேகரன்
எப்படித் தூங்கினுய்
மண்ணின் மைந்தனே! இத்தனைத் துல்லியமாய் எப்படித் தூங்கினய்.? சிறைப்பட்ட வறுமைக் கருவைக் குத்திக் கிழிக்காமல் கடமை முகில்களைக் கருக்க விட்டே. மெளன வலைபின்னி மரணக் கனவுகளைப் பெருமூச்சாக்கிஅதோ..! அங்கே, ஏழை முள்கள்
இரணமாக்கிய மொட்டுக்கள்உப்புக் கசிவுகளை மண்ணுக்குரமாக்கி எச்சில் பருக்கைகளை ருசிபார்க்கும் பட்டமரத்தில் உதிரத்துளிகளைப் பருகும் செல்வ ஒட்டுண்ணிகளைக் கண்டும் இத்தனைத்துல்லியமாய் எப்படித் தூங்கினய்.?
இ மெஹருன் நிஸா றிஸ்ாட்
முறையீடு!
ஒ.இக்பால் உன் ஷிக்வாக்கள் மறைந்து விட்டனவா? அதனுல்தான. இன்னும் உலகில். "ஜவாபுகளே இல்லாத விஞக்களாய் நாங்கள் வாழுகிருேம்!
இ வண்ணதாசன்
விழித்ததடா நல்லறிவு
எழுந்ததடா இளம் பரிதி என்றும்போல் கிழக்கினிலே விழுந்ததடா அறியாமை மன இருள்தான் யாங்கணுமே விழித்ததடா நல்லறிவு வாழ்க்கையிது வளமாகச் செழித்ததடா விடியலிலே பூபாளத் தேவதரு
ஷ் நாயன்மார்கட்டு ப. மகேந்திரன்
பூபாளம் 21

Page 13
சங்கமம்
வகவம் தோன்றக் காரணம் என்ன?
* இயக்க ரீதியாகத் தமிழ்க் கவிதையை வளர்ப்பதற்காக.
* வளரும் கவிஞர் களுக்குத் திறந்த கவியரங்குகள்மூலம் களம் அமைத்துக் கொடுப்பதற்காக.
* தமிழ்க் கவிஞர்களுக்கென ஓர் இயக்கம் தேவை என்பதைச் செயல்படுத்துவதற்காக,
வகவத்தின் குறிக்கோள்கள் என்ன?
* ஈழத்துக் கவிஞர்களை ஒன் றிணைக்க ஆவன செய்வது.
* கவிஞர்களது மாறுபட்ட கருத்து ஃகளை ஒரே மேடையில் அறிய வாய்ப்பேற்படுத்திக் கொ டுப்பது. (வகவம் நடத்தும் தோன்மதிக் கவிய ரங்குகள் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்)
* மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காக ஒவ்வொ குதுறையிலும் ஆற்றல் உள் ளவர்கள் தத்தம் திறமைகளைக் காட் டுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது.
вы. :-sзява.--*ч----
www.muwww.max
பூபாளம் 22 --
வகவத் தலைவருடன் செவ்வி
* "அலவன்’’ +
* கவிதை நூல்கள் வெளியி( வதற்குரிய ஆலோசனைகள் வழங்கு வதுவும், வெளியீட்டுவிழா ஏற்பாடு கள் செய்வதுவும்.
* ஈழத்தின் தமிழ்க் கவிதைப் போக்குபற்றியும், வளர்ச்சிபற்றியும் திறய்ைவு செய்வதற்கான எற்பாடு களைச் செய்தல்.
* வளரும் கவிஞர்களுக்குச் சுயமான கவியரங்குப் பயிற்சி அளிப் பது. (இதை மாதாந்தம் நடை பெறும் திறந்த கவியரங்குகள்மூலம் வகவம் நடைமுறைப்படுத்தி வரு கிறது.)
வகவம் இதுவரை ஆற்றியுள்ள பணி கள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?
* இதுவரை 10 திறந்த கவிய ரங்குகளை வெற்றியுடன் வக வம் நடத்தியுள்ளது.
* குறுகிய காலத்துக்குள் இரு கவிதை நூல்கள் வெளியிட ஏற்பாடு கள் செய்துள்ளது.
* அகில இலங்கை ரீதியிலான தமிழ்க் கவிதைப் போட்டி நடத்திச் சிறந்த கவிதைகளைத் தெரிவுசெய் துள்ளது. (பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண் டிருக்கின்றன .)
b
 
 
 
 

* பல வளரும் கவிஞர்களை உருவாக்கியுள்ளது.
* கவிதைக்கென வெளியாகும் ஒர் ஏட்டின் அவசியத்தைக் கருத்திற் கொண்டு அதற்கான ஆலோசனைகள் வழங்கியதன்மூலம் பூபாளம் எனும் இக்கவிதை ஏட்டைக் கவியுலகுக்கு அளிக்கிறது.
* பூபாள ஆசிரியர் அல்அஸ" மத் அவர்களின் உதவியுடன் திறந்த கவியரங்கின் ஒர் அம்சமாக யாப் பிலக்கண வகுப்பொன்றை மாதந் தோறும் நடத்தி வருகிறது.
* ஈழத்துக் கவிதை நூல்களை
இயன்றவரை விமர்சனம் செய்து ஊக்கமளிக்கிறது.
லகவத்தின் எதிர்காலத் திட்டங்களும் அவற்றுக்கான காரணங்களும் எவை?
* ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்கினை வரலாற்று ரீதியாகத் திறனய்வு செய்தல்.
* மறைந்த ஈழத்துக் கவிஞர் களின் கவிதைகளை நூல்வடிவில் கொண்டுவருதலும் நூல் வடிவில் இருக்கும் கவிதைகளைப் பரந்த அடிப்படையில் அறிமுகப்படுத்துத லும்.
* கவியரங்கக் கவிதைகளைத் தாகுத்து நூல் வடிவில் வெளி பிடுதல்.
* ஒரு கவியரங்கை முழுவது மாக ஒரு கவிஞருக்காக ஒதுக்கி அவ ரது கவிதைகளைக் “கவிதா நிகழ்வு' களாக நடத்துதல்.
* ஈழத்துத் தமிழ்க் கவிஞர் களின் வாழ்க்கை வரலாறுகளை ஒன்று சேர்த்து நூலாக வெளி
யிடுதல்.
* ஆண்டுதோறும் கவிதைப் போட்டிகள் வைத்துக் கவிஞர்களை ஊக்குவித்தல்.
* திறந்த கவியரங்குகளைப் பிராந்திய அடிப்படையில் விரிவாக் குதல்.
* கவிதைகளால் சமூக சீர்தி ருத்தக் கருத்துக்களை முன்வைத்தல். இவற்றுக்கான காரணங்கள்: கவிதை இலக்கியம் பொதுச் சொத் தாக்கப்படல் வேண்டும் என்பது வும் ஈழத்துக் கவிஞர்களைச் சர்வ தேச அரங்கில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்பதுவுமாகும். கவிதை, இயக்க ரீதியாகத் தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டுவந்த ஒர் இலக்கிய வடிவமாகும் என்பது நம் துணிபு.
செவ்வி தந்தவர்:
வலம்புரி கவிதா வட்டத்தின்
தலைவர்:
டாக்டர். தாஸிம் அஹமது
***** சித்திரங்கள்:
கவின் கமல் *****
பூபாளம் 23

Page 14
ஆண்மை
ஆளப் பிறந்தது ஆண்மை எனப்படும். ஆளப் பிறந்திரு ஆளப் படாதே! அயர்வற உழைத்து உயர்வுறக் காத்தல் உன்கட ஞகும், தெள்ளத் தெளிவாய்த் தெரிந்திடு என்றே உள்ளங் கையில் உன்மனை வைத்தான். பெருவிரல் தான் நீ; மறுவிரல் பெற்றேர்; மாதென நடுவில் மனைவியாம்; மோதிர விரலே மனையாள் பெற்றேர்; சுண்டு விரல்தான்
அண்டிநீ பெற்ற இகபர மேன்மைக் கருவழி கூறும் தகுமுன் குழவிகள்.
விரல்கள் நான்கும் உரமாய் நிமிர்ந்து ஓங்கி நிற்கப் பெருவிரல் சென்றே பாதம் தொட்டு மறுபடி நீளும்; மறுபடி பணியும். இதுபோல் நீயும் இன்புற மதித்துப் பெற்ருேர், மனைவி, அவளது பெற்ருேர், உன்றன் பிள்ளைகள்-அனைவரும் உற்ரு தரித்தல் உன்கட னகும். அவருனை அடைந்து அருள்பெறல் தவறிலை; எனினும் தத்துவம் இதுவே,
இ மாத்தளையான்
கம்பனும் வள்ளுவனும் பாரதியும் மரபை மீறிப் பாடிவிட்டதாக ()
அலுத்துக்கொள்ளும் சில அருணுேதய அப்பாவிகள், ஏன் கம்பரை வள்ளுவன் பாரதியை விடத் திறமாகப் பாடமுனைதல் கூடாது?
பிழையறு தமிழில், புகல்வன இறுக்கி மொழிந்தன மொழியா முறையில் மாதம் ஒழிந்திடு முன்னர் உங்கள் எழிலுறு கவிவரின் ஏற்றிடுவோமே. <敦一f,
பூபாளம் 24

வயோதிபர் சேவை மறவேல்!
1)
மூத்தோரின் வார்த்தைசெயல் epait
அமிர்த்மெனக்
காத்துவத்தல் எங்கள் கடனென்றே - மாத்தருமம் பூண்டு மனம்வைத்துப் போற்றவெனச் சாற்றிவைத்த
2)
3)
(4)
5
)
6)
7)
8)
ஆண்டே! மறத்தல் அரிது. பார்வையொடு பல்லிழந்தும் பண்பார்ந்த
. சொற்சுவையின் ஆர்வம் இழந்தும் அழகிழந்தும் - சோர்வடைந்தும் சாவை வரவேற்குந் தள்ளாப் பராயத்தோர்! சேவை மறவாமற் செய்.
இளமை நலங்கொழிக்க இன்பமெலாந் தோய்ந்து குளிர்மை யடைந்துடலங் கூனிச் - செழுமைகுன்றி மூப்படைந்து முற்றிநரை முக்காலில் நிற்பவரைக் காப்பதுதான் தெய்வக் கருத்து. பளபளக்கும் பைங்கு ருத்தின் பான்மையிலே
நின்றேர் தளதளத்துக் காவோலைத் தன்மை - கலகலக்க வீழ்ந்தாலுஞ் சந்தனத்தின் மேன்மை கமகமக்க வாழ்ந்தாரே யென்று மதி. மூத்தோர்களின்றி முளைத்தவொரு நாடுசபை பூத்தொளிரு ஞானம் புகுமனைகள் -
பார்த்ததுண்டோ? காத்திருந்து பட்டினத்தார் காண்பித்த
அன்னகடன் தீர்த்திடுதலன்ருே சிறப்பு? துன்னு மிளநீர் சுவையேனும் பால் கறந்த மன்னு முதுமை மறப்பரிதே - முன்னமிள மன்னன் முதியோ ருடையில் மனுநீதி சொன்னகதை யோர்ந்து துதி.
தென்றலொடு வானுந் திரைகடலுந் தேசமெலாம் நின்றுபா ராட்டும் நிகரில்லா - அன்புமயச் சேவைதரும் அன்னை தெரேசாவின் செய்யமனப் பூவை யணிந்து புரி. மக்கள் வெளிநாடு செல்ல மனையெல்லாந் தொக்க வயோதிபர்தம் தொன்மடமாய் -
நிற்குமொரு காட்சி தெரிகிறது; கண்கொடுத்த தேவா! நின் ஆட்சிநலன் ஓங்க அருள்.
அரச பொற்கிழிக் கவிஞர் க. த. ஞானப்பிரகாசம்
பூபாளம் 25
ଜୋଳ

Page 15
பாரதி ஒரு சாரதி
சிறகடித்துப் பறந்தன
சிந்தனைகள் ஒர்புறம் மறதியாக என்னவோ
மறைந்த நூறு ஆண்டுகள் குருதியோடும் கோளத்தில்
குதித்தெழுந்த நாளங்கள் பரிதியொத்த பாவலன்
பாட்டெழுத வந்தனன். வந்தனத்தில் ஆரம்பம்
வாழ்த்துறைகள் பின்னராம் செந்தமிழின் சாரதி
தீந்தமிழின் பாரதி கொந்தளித்த நெஞ்சிலே
கொதித்தெழுந்த போர்க்குரல் சொந்தநாட்டிற் காகவே
துணையிருந்த தணிக்கரம். தனிக்கரத்தின் வீரத்தால்
ஜகத்தினஅ பூழித்திட பணித்தபாங்கும் என்னவோ பட்டினிஒ Nத்திட
தணிந்திடாத தாகத்தால்
தவங்கிடந்து பெற்றனை இனியசுதந்திரத்தினை
இன்றவனே கவித்துணை துணையிருந்து வருபவன்
துடிக்குமிளங் கவிதைக்குக் கணைவிசையைப் போலவன்
கவிதைவேகம் தந்தது தனைமறந்தும் ஒர்கணம்
தமிழ்மறந் திருந்திலன் உனை நினைந்த இக்கணம்
ஒர்கவிதை பிறந்ததே! பிறக்கும்போது தோன்றிடும்
பிறவிக்குணம் இக்குணம் சிறந்தநெஞ் சகத்திலே
சிறகடிக்கும் இக்குணம் உறங்கும்போதும் உன்னிலே
உயிர்கலந்த உறக்கமே இறந்தபோதும் உன்னுடல்
உயிர்க்கவிதை வாழுமே!
S ''Lo2.Jussi 6ör
பாரதி இன்றிருந்தால்
*ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மெனப் பாடிய பாரதி இன்றிருந்தால் சீ! இதுவா சுதந்திரம் எனப் பாடிடுவான்! ஆயிரம் உண்டிங்கு
சாதி எனில் -
அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி? என வினவினவன் இன்றிருந்தால்.
ஆட்சிக்குப் போட்டியிடும் -
எண்ணிலாக் கட்சிகள் கண்டு உள்ளம் குமுறிடுவான். தனியொருவனுக்கு - உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோ எனக் கர்ஜித்தவன் இன்றிருந்தால். உலகம் அழிந்த்ே போகட்டும் என்றேர் "அறம் பாடமாட்டாஞ
இ தென்மட்டுவில் கண்ண
பூபாளம் 26

இன்பமே பெருக்கும்
என்றனையீன்ற எனதுயிர் அன்னை இதயமே கனிந்து ஈந்தனள் தன்னை சிந்தனை, செயல்கள் யாவுமே தந்தாள் செந்தமிழ்கொண்டே பணிகுவேன் செந்தாள்! தன்பசி பொறுத்தே என்பசி நீக்கும் தாயவள் அருளே என்றனைக் காக்கும் நன்நிதி வேறு இனியெனக் கில்லை நாளெலாம் சொல்வேன் தாயெனும் சொல்லை!
இன்னமு தென்றே இனித்திடப் பேசும்
இனியநல் லன்பு மெய்யொளி வீசும் அன்னையின்பாதம் உண்மையின் தோற்றம்
th
به دو
அவளையே பணிவேன் வழங்குவாள் ஏற்றம்!
தன்னுயிர் பிழிந்தே என்னுயிர் காத்து தரணியில் பாச மலரெனப் பூத்து என்னுயிரோடு ஒன்றியே இருக்கும் அன்னையின் பாதம் இன்பமே பெருக்கும்!
இ வளலாய் ஈழதாசன்
கவி படைப்பேன்
ஏழையின் குரலுக்குச் செவிமடுத்து
ஏழைமைக் காயிரங்கி நின்றிடுவேன் கோழைகள் நாமென்றும் இல்லையெனக் بر
குவலயத்தில் குரலொலி தொடுத்திடுவேன்! கதிரவன் கண்விழிக்கும் நேரம்வரை
கடமைக்காய்க் காத்து நின்றிடுவேன் மதியாலே பலதையும் வெற்றிகொண்டு
மங்காப் பாதையினை அமைத்திடுவேன்! மாலைவரை வீதிகளை வலம்வந்து
மாக்களைப்போல் அலைந்திங்கு வாழமாட்டேன் வேலைசெய்து உழைத்திட உறுதிபூண்டு
வீண்தொல்லை களைந்து நின்றிடுவேன்! தவிக்கின்ற அறிவுக்கு உரமுமிட்டுத்
தரணிக்காய் நன்மைபல சமைத்திடுவேன் புவிதன்னில் வாழுகின்ற அத்தனைக்கும்
பொருள்தேடிப் புதினமாய்க் கவிபடைப்பேன்
இ பதியதளாவ கே. எம். பாறுாக்
பூபாளம் 27

Page 16
ஆத்மீக இராகம்!
இஸ்லாம் சொல்லும் வழியினிலே -உன் இதயராகம் செல்லட்டும்! புனித குர்ஆன் குரலொன்றே - மனிதா என்றும் உன்னுள் எழும்பட்டும்! ஆயுள் நீட்டி வாழ்ந்திடவே -நீ ஆசைப் பட்டால் முடிந்திடுமா? நோயில் படுத்து விழுந்திட்டால் - உன் ஆசை அங்கே பேசிடுமா? அடுத்தவன் வாழ்வை எண்ணுதே - நீ பிடித்திடும் கர்வம் நீங்கட்டும் நடித்திடும் செய்கை மாறிவிட்டால் - நாம் படித்திடும் உண்மை தெளிவாகும். அல்லாஹ் ஒருவன் எமக்குண்டு - அவன் அளிக்கும் அருளோ நம்வாழ்வு அகிலம் ஆளும் ஆண்டவனை - அன்றி அணுவும் அசையா தறிவாய் நீ! நித்தமும் நன்மைகள் நிலைத்திடவே - நம் sa göguð goðsbl o GLJIT&åTuoảo சத்திய இஸ்லாம் பேணிடுவோம் - தினம் பத்தரை மாற்ருய் வாழ்ந்திடுவோம்.
© soovusởrusör sissä,
Æቾፍ ሥኅ* Jቾች
率来率率兴卒求来求
宗率求
Kg
*来求来率率求
*
s
率率来
峨可g@@@Q2与3 à
į są) 1,-1@@ smoto điqoqılı91,98 misiuoo - sourio qī£§@uo ipo qo@@ 1949? @logo-os fing) Ilog udøqoố
IỮ1ņ919 quoło 1991,919
są9@ 11, 11—145-ı-ā urīg) 19@godo@rto 1995 ș sceglą919 – 49@wę U-1@ofnfo@) ? Groooooo © Ę@ri qølg?--Noreg) |goqo uog) sī Igorms@ogos reso)
|quo usē u-15'$415 loog)--ıHITựư3 sợifĩ-qigqig) sormigaqalso qøJI 1,9491/50) fortovo oss??!!!?? Loo)
qøre og) (199), ngogqolog) | tirgū ugi goog)gồī)geyosfiso in@flo-ilogoo helgoo - qı.199 urte @ 09@ 10.905$110) Nomth-7 Lioso)
·���rigo @ Tigosēnesī šo 「니영e A的高達형-T니79 jqi-i-Tafi) -I-TOEes@@ į uog) fogsjaïs@logog agossa - qi ---ı urı @ 11@o@qïro qp urīg) sī1:21191,9ę -qi@logo Us@g) și m09aĵ09f009 ĝi qī úgig) storių91ļogĪ
நிதி

“Glæsblomshɛsɔso
அகில உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப் புக்குக் கவிதையனுப்புகின்ற கவிஞர்கள், காலத் தைப் பிரதிபலிக்கும் கவிதைகளை அனுப்பி உதவுவதே தரமான தொகுப்பு உருவாக வழிபிறக்கும்.


Page 17
கவிதைக் காதலி
1)
2)
3)
அம்புவியில் இராமனுக்கோர் மகுடஞ்சூட்டி அழிவறியாப் பெரும்புகழுக் கடிமையான கம்பனுக்கு மணிமாடங் கட்டித் தந்தாய் காணுத கவிக்கனவைக் காட்டிச் சென்ருய் செம்பவள வாய்திறந்து முறுவல்பூத்துச் செகந்தனுக்கு வேந்தனெனும் மகிமையீந்தாய் நம்பியுனைச் சரணடைந்தேன் இனியுந்தாளேன் தவமணியே மனங்கசிந்தென் னருகேவாராய்!
உள்ளமெலாம் ஈரடியா லளந்தே வாழ்க்கை உண்மையெலாங் கொண்டலெனப்
பொழிந்தான்ஞான வள்ளுவன்ருன் உலகினுக்கே புலவோனென்னும் வான்புகழை யவன்காணும் வரத்தைஈந்தாய் தெள்ளமுதக் கவிபிலிற்றுஞ் சித்தனக்கித் தேடரிய திருக்குறளைத் தேடித்தந்தாய் வெள்ளமெனக் கலையருவி பெருக்குஞ்செல்வீ வித்தகியே மனங்கசிந்தென் னருகேவாராய் காதலித்தாய் காற்சிலம்பைக் கழற்றியன்யின் காவலன மிளங்கோவின் கரத்திலீந்தாய் பாவலன யவன்பிறந்த பயனைக்காணும் பாக்கியத்தை உவந்தீந்தாய் பன்னளாகத் தூமலரா மிணைக்கரத்தின் துணையைத்தேடித் துடிக்கின்றேன் ஏழையுளத் துயரந்தீர ஓவியமே உயிர்க்குயிரே உலகம்போற்றும் உன்னதமே மனங்கசிந்தென் னருகேவாராய்!
6S LAJ Tjp GiguJúlio
தமிழ்நாட்டின் ஆஸ்தானகவிஞராக இருந்த கவியரசு
கண்ணதாசனின் மறைவுக்குப் பிறகு வேருேர் ஆஸ்
5
ான கவிஞர் இன்னும் அமர்த்தப்படவில்லை. தகுதி
யான கவிஞர்கள் இலரா? அன்றேல் ஆஸ்தான கவி ஞர் பதவி அவசியமில்லையா? தகுதி இருந்தும் அவசி யம் இருந்தும் அவச மோ ஈடுபாடோ இல்லையா?
L, 16m út 30
செட்டித்
தெருவில்
&开
l
s
2 or
È
i
s
இ வேம்பை ம. சூரீ முருகன்

யாப்பு கற்போம்
உறுப்பியல்
1 எழுத்து
யாப்பிலக்கணத்தின் உட்பிரிவு களான உறுப்பியல், செய்யுளியல் ஆகியவற்றுள் உறுப்பியல் எழுத்து அசை - சீர் - தளை - அடி- தொடை
என அறு வகைப்படும்.
உயிரெழுத்து (அ-ஒள) 12: மெய் யெழுத்து (க்-ன்) 18: உயிர்மெய் யெழுத்து (க-னெள) 216 ஆய்தம் (, ) 1 எனத் தமிழ் நெடுங்கணக் கில் 247 எழுத்துக்கள் உள.
உயிர் பன்னிரண்டில், அ, இ, உ, எ, ஒ-ஐந்தும் குறில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள் - ஏழும் நெடில்கள். உயிர்மெய் எழுத்துக்களில் (இவ் வண்ணமே கணக்கிட) (18x5) 90 உயிர்மெய்க்குறில்கள்; (18 x 7) 126 உயிர்மெய் நெடில்கள்.
18 மெய்யும், ஆய்தம் ஒன்றுமாக 19 ஒற்றுக்கள்,
குறிலுக்கு ஒரு மாத்திரை நெடி லுக்கு இரு மாத்திரைகள். செய்யுள் களில், ஒற்று எண்ணப்படுவதில்லை. (விரிவான விளக்கங்கள் பிறகு).
அளபெடைகள் குறித்தும் ஏற்ற இடங்களில் காண்போம்.
அ - (உயிர்க்) குறில், க - (உயிர்மெய்க்) குறில். ஆ - (உயிர்) நெடில்.
(உயிர்மெய்) நெடில்.
T κ.
(தொடரும்)
காலம் மாறதோ?
சாத்திரங்கள் படைப்பதுவும்
பாத்திரங்கள் படைப்பதுவும் செயல்திட்டம் போடுவதும்
செயலாற்றவன்ருே? சொல்லித்திரியும் - இந்த கிள்ளுக்கீரைகள் செல்லரித்துப் போகும் - நல்ல
காலம்தான் வாராதோ?
இ) எம். பாலகிருஷ்ணன்
காதல் முத்திரை
பல்லைக் காட்டும் என் புத்தி - பறிபோனது - ஒருநாள்.
அவளது -
urgid குறடுகள் பட்டு
e ரவி
வருகிறது! நர்மதா வெளியீடு
20-ம் நூற்ருண்டுச் சாலையில் . . ஒலிக்கும் கவிதைக் குரல்கள்மேமன் கவியின்
‘ஹிரோஷிமாவின் ஹிரோக்கள்’’
பூபாளம் 31

Page 18
என்றே ஒருநாள்!
உழைத்து உழைத்து, குனிந்து குனிந்து கூனிய முதுகு, ஒரு நாள். கனலை நிமிர்த்தி விஸ்வரூபமெடுத்து - உயர்ந்து நிமிர்ந்து நிற்கும்! அவ் வேளையில் - மாடி வீட்டுக் கூரைகளெல்லாம் இரண்டாகப் பிளக்கும்! அது வரை காலமும் கூனல் முதுகில் ஏறி அமர்ந்து - சொகுசுச் சவாரியில் மகிழ்ந்தவர் எங்கே போய் வீழ்ந்து துடிப்பார்? பொறுத்தவர் ஒருநாள் - பொங்கியெழுவார்! கங்குல் அகலும் அதுவரை காலமும் . சவாரி தொடரட்டும்!
S (p(5(5
விம்மல்கள்
கண்ணீரையே வரிகளாக்கிச் சோக விலாசமாக வந்த உன் - கடிதத்தைப் படித்ததிலிருந்து, தாய்ப் பறவையே
go 6 -
மழலைக் குஞ்சுகளின்
முகாரி விம்மல்களும்
பருவ மூப்பில் உருகிப் போன கன்னிக் குயில்களின் வேதனைச் சாயல்களும்
என் - இதயக் கிளையில் கவலைக் கூடு கட்டுகின்றன! இங்கு - கண்ணிர் இலைகளை உதிர்க்கும்
سیه "هوشی கொழுந்துகளின் கனத்த விழிகளைப் பார்த்து
ஒழுங்கையே அழுகிறது!
அரபு மண்ணிலிருந்து நீ அனுப்பிய ‘கெஸட்டை ஒலிபரப்பி அழுகை ஒலியெழுப்பும் உன் - நேச ஜீவன்களின் இதய வெடிப்புகள் என் கவிதைக்குக் கருவானதை அறிவாயா? * ‘ஏண்ட உம்மா! தண்ணி கேட்டா உப்புத் தண்ணிய நீட்டுரு துரங்கும் போது - - a செருப்பால வந்து அடிக்கிரு
உங்க கடிதங்கள
தர்ரு இல்லே.
சாகாம சாகிறேன். என்ன சிலோனுக்கு எடுங்கோ...”*
!۔۔۔ ?% அந்த எதிர்வீட்டில் முதிர்ந்த தாயின் புலம்பல் ஒலிக்கிறது!
இ 'கலைக் கமல்”*
பூபாளம் 32

தொடங்குவீர் புதிய பாதை
1) செந்தமிழ்க் குலத்தில் வாழுந்
தெரிவையீர் உங்கட் கென்றன் வந்தனம் முதலில் கூறி 4) வழங்குவேன் புதிய பாடல் இந்திரன் எனினும், தமிழின் இதிகாசக் கதைகள் கூறுஞ் சந்திரன் எனினும், காசுச் சந்தையில் வாங்க வேண்டாம்.
2) சீதனங் கேட்டுப் பெண்ணைச்
செல்வத்திற் திளைப்ப தற்னோர் சாதனம் ஆகக் கொள்ளுஞ் 5) சழுக்கர்கள் தம்மைத் தள்ளும்! மாதனம் நீங்கள் என்று மனத்திலே காதல் என்னும் ஆதனங் கொண்டு வந்தால் அவரைநீர் சேர்த்து வாழும்
3) சந்தையில் பேரம் பேசிச்
சரிக்கட்டி இளைஞன் தன்னை மந்தையில் ஆடு மாட்டை வாங்குதல் போல வாங்கி,
விந்தையாய் மகிழ்ச்சி காணும் வீண்அவ லங்கள் வேண்டாம், முந்தைய தமிழர் வாழ்வை மூச்சிலே கலந்து வாழும். சீதனக் கடிவா ளத்தைத் திருகியே மூக்கில் மாட்டி வாவென இழுத்து மெல்ல வண்டியில் பொருத்தில் பூட்டிப் போவென விட்ட ஜோடிப் புரவிகள் புணர்வ தில்லை தூவென இதனைத் தள்ளித் தொடங்குவீர் புதிய பாதை! உலகத்தில் ஆணகள் என்ன உத்தம முனிவர் தாமோ? கலகத்தில் நியாயந் தோன்றும் காப்பரோ தனிமை நோயை? சிலகாலம் பார்ப்பர்; பின்னர் திரும்புவர் பெண்கள் பக்கம் பலகாரம் கண்ட பூண் பார்க்குமோ தடைகள் தம்மை?
S 'ossmissis'' •
3333333333EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE பாரதி கவிதைப் போட்டி
பொருள்:
1 O O 0 'பாரதியின் சமுதாய ரூபாய்ப் பரிசு விடுதலை உணர்வுகள்"
V முடிவு திகதி 15-10-1982
மேலதிக விபரங்களுக்கு
திரு. சி. சிற்றம்பலம், செயலாளர், மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றம், மாவிட்டபுரம், தெல்லிப்பழை.

Page 19
"இதய கீதம்’
கவிஞர் பான, தங்கத்தை ஆசிரியரா கக் கொண்டு இதய கீதம் திங்கள் கவியேடு மஸ்கெலியா விலிருந்து வெளி வருகிறது. ஊக்கம் குறைந் தால் ஆக்கம் சிறக்கும் என்ற இதய கீதத்தின் பொன் மொழியைப் பூபா ளம் பாராட்டுகிறது.
வண்டி
இரவுத் தெருவில் படுக்கை நிலையத்தில் நித்ரா வன்டியின் வருகைக்காய் நின்றிருந்தேன் மோட்டு வளை நடைபாதையில் விழிப்பாதம் நொண்டியடிக்க
இந்தப்புறம் வண்டி வரும் வரை இருள் சந்துகளில் பார்வை புகுந்து பராக்குப் பார்க்கக் கறுப்புக் காய்ச்சல் - இமையில் கடை விரித்தது. கனவு நோயாளி கஷ்டமாய் எதுவோ சொல்லிமுடிக்க என்ன வென்று விசாரிக்க - நான் எண்ணு முன்னே. விரைவாய் ஒரு விடியல் என உலுப்பி எழுப்பக் கண்திறந்தபோது காலை நிலையத்தில் என்னையுதறி - வண்டி எங்கோ மறைந்து கொண்டது!
இ மொஹமட் எஸ். அன்சா
பூபாளம்
கவிதைப் போட்டி
பரிசு ரூபா 50
Աւյrror முத்திரைக்குப் பூண்ட கருத்ததனை நீபார்க்கும் கோணத்தில் நின்றெழுதி (ப்) - பூபாள முத்திரையும் சேர்த்தனுப்பின் முற்சிறந்த ஒன்றுக்குப்
பைத்தைந்து ரூபாய் பரிசு.
Gruuuri :-
முகவரி:- O is s
 

செ. குணரத்தினம் 3-ம் குறுக்குத் தெரு அமிர்தகழி
ヘ மட்டக்களப்பு.
த. பரமலிங்கம் 555 சீ பீச்ரோட் யாழ்ப்பாணம் ஆர். சடகோபன் 516 நாவல ரோட் ராஜகிரிய மருதூர் வாணன் மருதமுனை - 2 மண்டூர் அசோகா மண்டூர் - 1 வேம்பை பூரீ முருகன் 33 B தே. வீ. மாடி சிரிதம்ம மாவத்தை
கொழும்பு - 10 w த, பேரின்பம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று - 7 எம். சி. எம். சுபைர் 256 கண்டி வீதி கல்ஹின்னை சில்லையூர் செல்வராசன் 49/7 பைப் ரோட் கொழும்பு - 5 ஈழகணேஷ் 230 குருந்துஹேன ஹேகித்த வத்தல்ை மேமன்கவி 129 L கெய்ஸர் வீதி கொழும்பு - 11 ஏ. அஸிஸ் நிஸார்தீன் 41 டயஸ் மாவத்தை மாபோல வத்தலை எம். எச். எம். ஷம்ஸ் 40/4 மாளிகாவத்தை ரோட் கொழும்பு 10 எம்.பாலகிருஷ்ணன் 33 B தே. வீ. மாடி சிரிதம்ம மாவத்தை
கொழும்பு -10 கலா விஸ்வநாதன் 1/9 பாம்ரோட் கொழும்பு - 15 பி. எம். எம். நவாஸ் 180/20A பாண்டாரநாயக்க மிாவத்தை
- கொழும்பு - 12 ۔۔۔۔۔
பொன் தமிழ் நேசன் 140 1/6 புதுச்செட்டித்தெரு கொழும்பு-13 முரீதர் பிச்சையப்பா 186 மரீகதிரேசன் வீதி கொழும்பு - 13 கலையன்பன் ரபீக் A 5 1/2 தே. வீ. மாடி மாளிகாவத்தை
கொழும்பு - 10 வை. கங்கைவேணியன் 454A பழைய சோனகத் தெரு
கொழும்பு - 12
ச. அரவிந்தகுமரன் 14/E பாடசாலை ஒழுங்கை
புகையிரத நிலைய வீதி தெகிவளை எஸ். ஐ. நாகூர் கனி 42 பேரா வீதி கொழும்பு - 12 எம். எம். நஜ்முல் ஹ"சைன் 82/3 பீர்சாஹிபு வீதி கொழும்பு i2 மருதூர் ஏ. மஜீது சாய்ந்தமருது - 1 கல்முனை - - எம். ஏ. ரஹிமா 53/8 பீர்சாஹிபு வீதி கொழும்பு - 12
பூபாளம் 35

Page 20
邵邵翌图图图图图
99.999999
பிக்காஸோவின் ஒவியங்களும்: இசை மேதைகளின் இசைஅலைகளும் ஏற்படுத்த முடியாத கலை உணர்வு களையும் தாக்கங்களையும் எழுத்தா
ளன், அதிலும் கவிஞன் தன் படைப்
புக்களால் ஏற்படுத்த முடியும் என் பது நமது துணிபு. இதற்கிலக்கண மாக அமைந்த சிலருள், ஓவியம், எழுத்து, கவிதை என்ற g5&avu Gör பல்வேறு அம்சங்களிலும் பிரகாசிக் கும் -ஒவியர் -எழுத்தாள்ர் கவிஞர் சக்தி அ. பாலையா அவர்கள் தனித் துப் பிரகாசிக்கிருர், -
1925ல் நுவரெலியா மாவட்டத் திற் பிறந்த இவர், தமது பத்தாவது
வயதில், பாரதியின் தாக்கம் என்ற
தலைப்பில் தமது முதல் கவிதையை
எழுதினர் என்பதை அறியும்போது,
புகழ்மிக்க உலக மகா கவிஞர்கள் மனக்கண்ணில் வரிசைப்படுகிருர் கள். எனினும், 1949ல்தான் முதன் முதலாக இவரது கவிதை வீரகேசரி
ήήή "
வீரகேசரி’,
的图翌图图图圈
EEEEEEEEEEEEEEEEEEEE
தெளிவத்தை ஜோசப்
ਸ਼
1. கவிஞர் சக்தீ அ. utosuurt
யில் அச்சேறியது.
கல்வியை முடித்துக்கொண்ட சக்தீ, ஓவியராகவே தம் வாழ்க்கை யைத் தொடங்கி, அமைத்துக் GáirradarGairartitif. Ceylon Teacher's College, Haywood's College of Fine Arts ஆகிய கலைக் கூடங்களில் ஆசிரியராகவும் விரிவுரையாளராக
வும் பணியாற்றிய பாலையா அவர்க
ளுடைய ஓவியக் கண்காட்சிகள் 1948-49 களில் கொழும்பிலும் பிற இடங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றன. காலஞ்சென்ற ஒவிய மேதை முதலியார் அமரசேகரா வின் புகழ்பெற்ற் Chalk Colour சித் திரங்களுக்கீடான சித் தி ரங் களை வடிப்பதில் இவர் வல்லவராக விளங் குகிருர், ܖ
காலப்போக்கில் இவரது சிந்த
கள் கவிதைகளுக்கு வித்திட்டன தினகரன்’, ‘சுத!
பூபாளம் 36
 

தொடர் காவியம்
)ཀ༡ ہوچ وچ وچ وچ اج وچ وچ بچا وہ وہ
f ; ; விணையின்
斗 蚤普普普普立立业立立立立业 注朱味饼味炸牛津港港饼
மெல்லிய நாதம் DE கவின் கமல் BB
-
() செங்கதிர் பட்டும் செந்நிறம் காணு (து)
2)
3)
அங்கொரு புல்வயல்; அதற்கு மடுத்தாய்த் தன்னருங் கணவனைத் தரணியில் இழந்த கண்ணய ராத காரிகை ஒருத்தி; இறையினை வேண்டி ஏத்தி இறப்பினை நாடி இருந்திட் டாளே.
இருந்தன ளவளுக் கொருமகள்: அவளோ கருந்தனக் கல்வி கலைபல கற்றும் வாழ்வுப் பாதை வகுத்து மகிழ்வுறச் குழுறு வழியோ சொல்லச் செய்ய யாருமோ இல்லா அவலத்துப் பாரினில் வாழ்க்கை பகைத்திட்டாளே!
பகைத்திட ஊரார் பரிவிழந் தவர்கள் சகத்து வாழ்வைச் சார்ந்திட வேண்டி
உணவுகள் சமைத்தாங் கூருக் குள்ளே
பணவரு வாய்க்காய்ப் பலரை அண்டித் தனியாய் வாழ்ந்த தருணம் கனிவாய் ஒருவன் கைகொடுத் தானே!
பூபாளம் 37

Page 21
4)
5)
6)
7)
8)
கைகொடுத் தவனுேர் காளை, கல்வியில் ஐயம் அகற்றும் ஆறறி வாளன்! அவர்கள் கொணரும் ஆகா ரங்கள் சுவையாய் உண்டு சுகம்பெற்றேர்நாள் நேசித் தவர்கள் நினைவை வீசும் காற்ருய் வீடடைந் தானே!
அடையா வாழ்வின் அரும்பெரும் சோகம் உடைந்த உளத்தால் ஒய்வுறக் கேட்டு நெஞ்சம் கரைந்து நேசம் பெருகிக் கொஞ்சும் இளமைக் கொள்கைகளாலே
நாடக உலகில் நானுேர் வேடம் இடுதல் மேலென் ருனே!
மேலான் ஒருவன் மெய்மனத் தாலே ஆளும் அவனே அன்று முதலாய்த் தாயும் சேயும் தம்மணம் மகிழப் போயும் வந்தும் பொருள்பல தந்தும் வீட்டான் ஒருவனுய் விளங்கியே வாட்டம் களைந்திட, வந்தது பிறிதே!
பிறரின் வாழ்க்கை பிறண்டி நுணுகிக் குறைகள் பேசிக் கொக்கரித் தாடும் உலகம் இவரை ஒப்பிட வில்லை! பலரும் நாணப் பழித்துக் கற்பில் பங்கம் கூறிப் பரப்பி எங்கும் கீழ்மை இசைத்தன ராமே!
இசைகே டான இச்செய் திகளை
அசைபோட் டவனேர் ஆதர வான திட்டம் தீட்டித் தேமொழி யடைந்து
‘கெட்டும் நகரம் கிட்'டெனச் சொல்வார்!
நகரம் வேண்டாம், நாடே பெயர்ந்து போத்ல் பெரி**தென் முனே!
(தொடரும்)
பூபாளம் 38

5ம் பக்கத் தொடர்ச்சி)
ான்' 'கல்கி (இந்தியா) போன்ற ந்திரிகைகளில் தனியொளி வீசிய வரது கவிதைகளில் தீப்பொறி )க்கும்! சமுதாய குறைபாடுகளைச் டிஅவற்றுக்குரிய பரிகாரமும் கூற ல்ல அக்கவிதைகள், பாரதியின் 0 ‘வெடிப்பு’க்களை மீறுவனவாக
காணப்படுகின்றன. "மலையரசன்' 'தனிவழிக் கவிரா *’, ‘சிட்டுக் குருவி", "லசுஷ்மி" பான்ற புனை பெயர் களை யும் காண்ட கவிஞர், 1966ல், கவிஞர் வி. வேலுப்பிள்ளையின் "In the a Gardens" என்ற ஆங்கிலக் விதை நூலைத் தேயிலைத் தோட் த்திலே’ என்ற தலைப்பில் தமிழில் விதை வடிவிலேயே மொழிபெயர்த் ார். ‘வீரகேசரி"யில் அத்தொடர் ரசுரமானது. *சொந்த நா ட் டி லே' என்ற விதை நூலை எழுதி வெளியிட் ள்ள பாலையா, "தமிழ் ஒளி (1954) பளர்ச்சி" (1956) ஆகிய இரு பத்தி கைகளையும் நடத்தியுள்ளார் என் து புதிய தலைமுறையினருக்குப் புதி ாக இருக்கலாம். 1963ல்; 'தினகரனில், "மேல் ாட்டு ஒவியர்கள்" என்ற தலைப் ல் "கலைமண்டலம் பகுதியில் தாடர்ந்து பல ஆக்கங்களை அளித் ள்ளார். அதே ஆண்டில், சுதந்தி Eல் மலைநாட்டு அறிஞர்கள்’ ன்ற பொருளில் பல கட்டுரை ஊநம் எழுதியுள்ளார். "வீரகேசரி"யில் பிரதம ஆசிரிய ாக இருந்த திரு. லோகநாதனின் ஊதிய விளக்கு’ என்ற சிறுகதை ாலுக்கும், கவிஞர் சி. வி. வேலுப்
பிள்ளை நடத்தி வந்த கதை' சஞ் சிகைக்கும் ஒவியர் பாலையாவே அட் டைப் படங்களை வரைந்துள்ளார். வெளிநாட்டு ஓவியர்களின் வண் ணக் கலவைகளுடனும் சாமர்த்திய நுணுக்கங்களுடனும் போட்டியிடுந் திறமை படைத்த ஓவியர் பாலையா egyalfi 356ït, Commercial Artist g355 தன் த்ொழிலை மேற்கொண்டிருந்த போதிலும், இவரை ஒரு கவிஞரா கவே ஈழத்தவர்கள் அதிகமாக அறி வார்கள். "
1981-ல் தமது கால்முறிவுக்குக் காரணமான கோரவிபத்தைப்பற்றி அவர் குறிப்பிடும்போது, அவரது திண்மை பொருந்திய நெஞ்சுறுதி நமக்குப் புலப்படுகிறது.
.‘பஸ்ஸின் பின்சில் என் இடக்
கால் பாதத்திலிருந்து மெதுவாக மேலே மேலே ஏறியபோது, என் கால் எலும்புகள் கரகரவென்று
நொறுங்கும் ஒசை எனக்குத் தெளி வாகக் கேட்டது. சில், படிப்படியாக என் வயிற்றை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோதுதான், ஏசு கிருபையால் யாரோ என்னுள் ளிருந்து 'கத்து, கத்து!" என்று கத் தினர்கள், நானும் கத்தின்ேன்! காலைக் கூழாக்கிய சில் அசையாமல் நின்றுவிட்டது!
*வ ரு ட க் க ண க் கி ல் படுக்கை வைத்தியம்! காலை எடுத்தால்தான் நான் பிழைப்பேன் என்ருர்கள் வைத்தியர்கள். நான் மறுத்துவிட் டேன். பிறருடைய துணையுடன் ஆயுளைக் கழிப்பதைவிட, இந்த ஊன்று கோல்களின் துணையுடன் இலேசாகவாவது மண்ணில் நடப் பது எனக்கு உற்சாகத்தைத் தரு றது.
பூபாளம்
39

Page 22
*************************
ஒவ்வொரு மாதத்திலும்
நோன்மதியன்று கொழும்பு 13,
புதுச் செட்டித் தெரு,
விவேகானந்தா வித்தியாலயத்தில் பிற்பகல் 1 : 00 மணிக்கு நடைபெறும், திறந்த கவியரங்கில்
கவிஞர்கள் கலந்துகொள்ள இத்தால் அழைப்பு விடுக்கும் வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) பூபாளம் பொலிவுற்றுத் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் தடையின்றி நடைபோட நல்வாழ்த்து கூறுகிறது.
வலம்புரி கவிதா வட்டம் 38, சேர்ச் வீதி, கொழும்பு. - 2  િ . ફોફોફોફોફોફોફોફોફફિફફાફ
F O R
景 Cotton Waste
i
Banian Waste
* Cloth Rags Etc.
本
R 本 CoMMERCIAL HARDWARE TRADERs 241 OLD MOOR STRFET
COLOMBO 2 Tele: 3 2 13 0
安、
注
 

O9;sil to. 莺
SPRINGS
- Q
MACHINERY
COMPONENTS GRILLE WORKS
崇
T H I LAN KA
SPIRING INDUSTRIES
750, NEGOMBO ROAD, .)
MATHUMAGALA" R A G A M A.

Page 23
}}}}}
Lilaf
== 卧 芬
. GOVERNMENT AUTHORSE 8 OF ALL · KIND OF SCALE -s ETC, UNDERTAKEN
2. || Ију ()“.
EXISTON
அரசினரால் அங்கீகரிக்க
தராசுகளின் மெற்
பழுது பார்க்குநரும்
e [ 8 Ꮹ. H,0 PᏍW 苏 ic 鹦 ':
¥343-38148#E
* இப்பத்திரிகை, இல; 7: ராகமையிலுள்ள ஆசிரியர் , கவி ன் க ம ல் ஆகியோரால், மாவத்தை, 107/18-இல் உள்ள 1982 ஒக்டோபர் மாதம் வெல்

နှုံး++ခံ့စြန္႕န္းစြန္႕းဒုံးဖြဲ႕ခံ့+{{႕းဒုံခြုံငုံးဖြဲ႕န္ဟr
ά δΜΕ και
- - r
ED METRIC CONVERSIONER' "
SREPAIRS SALES SERVICES GENERAL MERCHANTS,
MOO W III, 1520
பட்ட எல்லா வகையான
நிக் அளவை மாற்றுநரும் + '' விற்பனயாளருமாவர்.
it
и рипнула
VIJESINGHE
V
구 Place,
MBC-12
L. * 3ěřišť8ěř848é18š813E8*
10 நீர்கொழும்பு வீதி, மத்துமகல, அல்-அனUஇமத் துனே ஆசிரியர்
கொழும்பு - 12, பண்டாரநாயக்க வீனஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு ரியிடப்பட்டது.