கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனருவி 1962.10

Page 1
G프
脚
「디] *狙 食 saeo.
 


Page 2
Always insist on
KANAGALINGAMS CIGARS,
சுருட்டுகளிலே மிகவும் திறமானது ருசிகரமானது காரம், மணம், குணம் ஆகியவை நிறைந்தது சிறந்த புகையிலையினல் திறமான தொழிலாளரால்
தயாரிக்கப்படுவது
キ=ー。っこ== === ー = === =ー = =cこe に = こ =
கன கலிங்கம் Ji () (6 ball GII
SLLuLLSLSqLLLLJLLLLLSLLLLLLLJLqLLLLLLLLSSLS LTqL LeeeLLLLLLLLJLS LSLL LJLL LJJLJSeSLSJJ LJ LSJS LLLLL LSL LLLJ எப்பொழுதும் பாவியுங்கள்.
& Kỳ Ý Ấ) (? & É. Ở Ý 6 Áô ý ế
No. 17, St. John's Road, COL O M B O. Phone: 5883 (ables : KANCIGARS
 

உங்கள் பணத்திற்கு பெறுமதி வாய்ந்தவை. உறுதிக்கும், நீடிய கால பாவனைக்கும் உத்தரவாதமுள்ளது. பரிபூரண பெறுமதிக்கு இதை விடச் சிறந்த டயர் சேவையைப் பெறுவ த ரிது.
SEIBERLI NG TYPES
A.S.S. சங்கரலிங்கம்பிள்ளை அன் கம்பனி லிமிட்,
தபால் பெட்டி இலக்கம்: 435 136, பஞ்சிக்காவத்தை ருேட் கொழும்பு-10.
போன் : 4 4 9 1 தந்தி: "டயர்டியூப்’’
SLSSCSSSSSSSSSLSSSSSSSLSSSSSS

Page 3
நாகரீக நங்கையர்களே!
O வண்ணக் கழுத்தணிகளுக்கு!
() மின்னும் காதணிகளுக்கு!
O ஜொலிக்கும் கையணிகளுக்கு
ஒலிக்கும் கால ைகளுக்கு! தரம் குறையாத இமிட்டேசன் நகைகள் தேவையா? விஜயம் செய்யுங்கள்.
களஞ்சியம் பிரதர்ஸ் 14, சைணு பஜார் சென்னை-1 (காடோடி மன்னன், கட்டப்பொம்மன், தங்கப்பதுமை, மன்னதி
மன்னன், பார்த்திபன் கனவு, வஞ்சிக்கோடடை வாலிபன், முதலிய படங்களுக்கு நகைகள் சப்ளை செய்தவர்கள்) தலைமைக் காரியாலயம்:
161/11, பேங்ஷால் வீதி, கொழும்பு. கடிதத் தொடர்புகள் சென்னை முகவரிக்கு மட்டும் வைத்துக் கொள்ளவேண்டுகிருேம்.
*தேனருவி” மட்டக்களப்பில் சந்தா விபரம் நமது ஏஜென்சி
இலங்கை, இந்தியா. -y Mk
ஒரு வருடம் ரூபா 3-50
哆
ஆறு மாதம் ரூபா 1-75 ᏧᏂ 6Ꭰ ! மலாயா வெளிநாடு நிதி
புத்தகசாலை
23, பிரதான வீதி, மட்டக்களப்பு.
ஒரு வருடம் ரூபா 4-50 தனிப் பிரதி சதம் 130

E THEN ARUW is
(TAMIL MonTHLY)
MANAGER: S. Arunmolithevan
EDITOR: "ARUNMOLI"
EDITORIAL : Assistants.
“Eela - Thevaa ”” "lampooranan ' “ Mahendran '
“ Navukarasan ””
A18ሏዩ : 露媒
Sana "
兹 ʻ Satchi ʼ'
THENARUV
31/3, HAMPDEN LANE,
COLOMBO-6.
Price per Copy: 30 Cents.
கதைகள்
முத்துச்சிப்பி *
liab
பிச்சைக்காக எச்சில் எனினும் கலைஞன்
கட்டுரைகள்
இயக்கமும் இலக்கியமும் தகவினகானசபா தேவாரமும் இசைக் குறிப்பும்
கவிதைகள்
கடுகியே பிரிவதேனே?
தனிப்பகுதிகள்
தகனம் கவிதை பிறந்த கதை எண்ண மஞ்சரி வளரும் கலை செந்தாமரை

Page 4
**தேனருவி' ஆ! தேன் போல இனிக்கிறது. இலங்கையில் நல்ல மாத சஞ்சிகை இல்லை என்ற குறை இனிமேல் இல்லை. முகப் பை அலங்கரிக்கும் சாளுவின் கைவண்ணம் போற்றத் தக்கது. ஆனல் பண்டைக் காலந் தொடக்கம் பாவலரும் ஒவியரும் பெண்களைப் பகி ரங்கமாகத் துகிலுரிகின்றனர். பண்பாடமைந்த உடையுடன் பெண் ணினத்தை ஒவியர் சிருஷ்டிப்பாராயின் நாட்டுக்கும் நமது பண் பாட்டுக்கும் அருந்தொண்டு புரிபவர் ஆவர். வாழ்க! தேனருவி! 6)} (oðð d; d; tD . for T &o, யோ. திருஞானசம்பந்தர். தேனருவி புரட்டாதி ஊற்றுப் பார்த்து ஒவ்வொரு பக்க மாகச் சுவைத்தேன். இந்தியப் பத்திரிகையுடன் போட்டிபோடும் தேனருவி இன்னும் செழிப்போடு வளரவேண்டுமென்பதே என் அவா! மட்டக்களப்பு, 'முததமிழ்தாசன்"
ஈழத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் தேனருவி என்றும் நிலை த்து வாழ கடவுளை வேண்டி தேன் கலந்த அருவியை நெஞ்சாரப் புகழ்ந்து வாழ்த்துகின்றேன். e
திருகோணமலை, ந மகேந்திரஜோதி
தேனருவி எடுப்பாக இருக்கிறது. ஜனங்கள் எதிர் பார்க்குமள விற்கு கதைகளைக் கூட்டியிருக்கலாம். கவிதைகளை அதிகமாகத் தாங் கின் மக்களிடம் தீவிரமாகச் செல்லாது தேங்கும். அங்ங்னமாயின் நஷ்டம் யாருக்கு?.
கொழும்பு, வஸ். அகஸ்தியர். ‘தேனருவி" சிறந்த ஒர் இலக்கியப் பத்திரிகை. கதை, கட்டு ரை, கவிதை அனைத்தும் சற்றேனும் இலக்கியச் சுவை குன்றது கலை மணம் கமழ்கின்றது. தமிழ் நாட்டில் "கலைமகள்’ எப்படியோ, ஈழத்தில் ‘தேனருவி அப்படியே! எனினும் தற்போதையத் தரம் பொலிவுற நம் ஈழம், கலை எழில் வளம் பெற, நாம் எல்லோரும் உழைப்போம்.
பண்டாரவளை 'கொடியூர் அமரகம்’
தேன் நிலவிலே ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் தேனிலும் இனிய தேனருவியை பருகியவர்கள் தொடர்ந்து பருகாமல் இருக்கமாட் டார்கள். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பார்த்துச் சுவைக்கும் இத்தேனருவி மக்களுக்கு ஒரு பயனளிக்கும் இன்ம ல ராகத்திகழ்கின்றது. தேனருவி ஆசிரியர்க்கும் மற்றும் இதில் பங்கு கொள்ளும். எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றி. வாழ்க தேனருவி.
பேராதனை செல்வி. ஏ. எச். யூ. பரீதா. கலைப்பொலிவு நிறைந்ததாகவும், சுவையுள்ளதாகவும், அமை ந்துள்ள தேனருவி, புரட்டாதி ஊற்றில் ஆவலுடன் எதிர் பார்த் திருந்த, இசை விமர்சனம் வராதது இசை ஆர்வமுள்ள எம்போன்ற மாணவிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இனிமேல் இசை விமர்சனம் த வருது வர ஆவன செய்யவேண்டுகின்றேன்.
திருகோணமலை செல்வமகள்-நடராஜா
 

நாடும் மொழியும் நமதிரு கண்கள் ஊற்று 7
416) нJI
மிழ் மொழி இயல், இசை, நாடகம் என மூன்முக வகுக்கப் ቃ பட்டு 'முத்தமிழ்' என மொழியப் படுவதை யாவரும் அறி வர். இவற்றுள் நடுநாயகமாக விளங்கும் இசைத்தமிழ் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்களால் போற்றி வளர்க் கப்பட்டு சிறந்து விளங்கி இருக்கின்றது. இதனை பழந் தமிழ் நூல் களாகிய தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் வரும் குறிப்புகளிலிருந்தும், சிலா சாஸ்ன ஆதாரம் உடைய சரித்திர ஆராய்ச்சிகளிலிருந்தும் அறியக் கிடக்கின்றது.
ஏழாம், எட்டாம் நூற்றண்டில் அவதரித்த அப்பர், சுந்தரர்,
சம்பந்தர் ஆகியவர்கள் பக்திச் சுவையோடு சேர்த்துக் குளைத்துக்
 ெக |ா டு த் த இசைத் தமிழ்
செல்வ ங் களை இன்றும் நாம்
வருகிருேம்.
அனு பவித்து அடுத்த இதழில் கால வேறுபாட்
ஆனல் அவை டின் காரணத்தி னலும், அரசி
யல் மாறுதல் முருகையன் எழுதிய களி ன லும் இசைத் தமிழ் O இன்று மங்கிக் கிடக்கின்றது. கவிதை பிறத்த கதை
கச்சேரிசெய்ய 左 வரும் பிரபல
சங்கீத வித் வான்களும் மற் றையோர்களும், பிற பாஷைகளில் உள்ள கீர்த்தனங்களையே திரும் பத் திரும்பப் பாடிக் கொண்டும்-கிளிப்பிள்ளை போல் ஒரு சில பாடல்களை மட்டும் ரசிகர்களுக்கு ஒப்புவித்துக் கொண்டும் இருக்கின் ரு ர்கள். இந்த நிலைமையை மாற்றி இசைத் தமிழின் பெருமையைப் பேச்சளவிலும், எழுத்தளவிலும் வைத்துக் கொள்ளாது செயலளவில் காட்ட ஈழத்தின் இசைக் கலைஞர்களும், சபாக்களும் முன்வரல் வேண்டும். இந்த நோக்கத்துடன் ஓரளவு செயல் புரிந்து வரும் சபாக்கள்ல்-திருமலை-தசுFணகான சபா மிகவும் போற்றத் தக்க

Page 5
6
தாகும். இச்சபாவைப் பற்றிய கட்டுரை ஒன்று இவ்விதழில் இடம் பெறுகின்றது.
இச்சபாவின் இசைத் தொண்டினை ஆதரிக்க வேண்டியது இல ங்கை வாழ் சங்கீதாபிமானிகளின் தலையாய கடமையாகுமென இக் கட்டுரையை முடிக்கின்றர் எழுத்தாளர் 'கான லோலன்" அவர் கள் மற்றும். -
ஐந்து சிறுகதைகள் இந்த இதழில் இடம் பெறுகின்றன. பத் திரிகை வேலையிலிருந்து வேர்த்துக் களைத்து வரும் அவனுக்கு, அவள் சந்திப்பு பாலைவனத்தில் கண்ட பசு மலர்ச் சோலையாக இருந்தது. ஆனல். * பரராஸ்-வாரித்தம்பி" கதையைப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.
* பங்கம்" துருவக் கதைகள் என்ற தொடரில் இடம் பெறும் இரண்டு சிறுகதைகளில் யாழ்ப்பாணத்தைப் பகைப் புலமாகக் கொண்ட முதற் கதையே இதுவாகும். தான் வேலை பார்க்கும் இட மான மாத்தறைக்கே தன் மனைவியையும் கூட்டிக் கொண்டு போக லாம் என வந்த சிவக்கொழுந்து பட்ட மான பங்கத்தை தனக்கே உரித்தான தனி நடையில் எழுதியுள்ளார் எழுத்தாளர் எஸ். பொன் னுத்துரை அவர்கள்.
கணபதிப்பிள்ளை இறந்ததும், அவர் மனைவி சின்னச்சியின் சீவி யம் எல்லாம் புவனத்தின் வீட்டுத் திண்ணையிலேதான் கழிந்தது. புவனம் அவளுடைய மருமகள் தான். இருந்தும் எத்தனை நாளைக்குத் தான் அவளுடைய உதவியுடன் இருக்க முடியும். அரசாங்கத்தாரி ஞல் அளிக்கப்படும் பிச்சைக் காசு அவளின் மனக் கண்முன் தோன்றி யது. ஆனல் சின்னச்சியால் அக்காசைப் பெற்றுக் கொள்ள முடிய
வில்லை. காரணம்?. **சொர்ணன்' எழுதிய ‘பிச்சைக் காசை’ப் படியுங்கள் விடை கிடைக்கும்.
அவனுடைய தந்தைக்கு "பழிலா'' எலி கடித்த பழமாகத் தென் பட்டாள். ஆனல் அந்த எலியே அவன் தான் என்பதை ‘எச்சில் எனினும்' என்ற கதையில் “நுஃமான்' புலப்படுத்துகின்ருர்
செ. யோகநாதன் கண்ட காட்சி "கலைஞன்” என்ற கதையாக உருவெடுத்துள்ளது:
மற்றும் வழக்கம் போல் தொடர் காப்பியம் கட்டுரையுடன் இ. நாகராஜனின் ‘கவிதை பிறந்த கதை"யும். கவிதை உலகிலே புதி தாகக் காலடி எடுத்து வைக்கும் இளம் கவிஞர் ஒருவரின் கவிதை யொன்றும் இவ்விதழிற்கு சுவையூட்டுகின்றன,

f
* வல்லிக் கண்ணன்.
* சாகித்திய மண்டலமும்.
* தமிழ் நூல்களுக்குப் பரிசும். * ரவமிகமணி டி. கே. சி.
* கவிமணி தேசிக
விசித்திர எழுத்தாளர் வல்லிக் கண்ணன்
率
எழுத்து வெறி பற்றி, நான்
F li ji;i 5 T fi பீஸ் குமாஸ்தா
வேலையை ராஜினமா செய்து
விட்டு, 1942-ம் வருஷம் மே மாதம் ஒரு நாள் அதிகாலை வேளையில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். ஒரு வ ரி ட மும் சொல்லிக் கொள்ளா மல் கையிலே காசு இல்லா மற் தான் ஆலிவர் கோல்ட் ஸ்மித் நடந்து நடந்தே
ஐரோப்பா பூராவும் சுற்றினு
மாக்ஸிம் கார்க்கி
ணுமே.
எங்கெங்கோ திரிந்தானுமே. நானும் ஏன் திரியக் கூடாது? தி ரு நெ ல் வே லியிலிருந்து சென்னை சுமார் 400 மைல்
விநாயகம்பிள்ளை.
தூரம். தினசரி 30 மைல் நடந்தால் ஒருவன் 14 நாட் களில் சென்னையை அடைய லாம். கணக்கின்படி இது மெத்தச் சரி. சூல்ை வச திகளற்ற நிலையிலே ஒருவன் அவ்வாறு செய்ய இயலுமா? அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. புறப்பட்டுவிட்
டேன்.
* நான் சென்னை வந்த புதி தில், ஒரு தடவை எபிஷியன்ட் கணபதி ஐயர் சொன்னுர் .
'நீங்கள் பெரிய ஸினிக் ஆக இருக்கிறீர்கள். ஸினிஸிசம் வாழ்வில் பலன் தராது. மெட்டீரியலிஸ் மனே பாவ மும் தேவை. உலகத்தின் முதல்தர லினிக் ஆகிய டயோ" ஜி ன ஸ் கூ ட க  ைட சி யி ல் தனது List 3, -டப்பை விற்று வி ட் ட (ா ன்’’ S என்று.
நான் எனது சொத் தா கி ய புத் த கங்களை விற்கவேண்டிய அவசியம் இது வரை ஏற்பட வில்லை.

Page 6
10.
* நான் இசைந்து ஒத்துழைப் பதானல் சினிமா உலகம் எனக் குப் பணம் அளிக்கத் தயாராக இருந்தது. ‘வாழ்க்கை வசதி கள் எல்லாம் கிட்டும் கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற் படும், நல்ல வேலை உண்டு" என்று சிங்கப்பூர் தமிழ் பத்திரிகை ஒன் றும், கோலாலம்பூரில் வாழும் சுப. நாராயணனும் என்னைப் பல தடவைகள் அழைத்தனர். 'நல்ல சம்பளத்துடன் ஒரு (Quడి) * என்று மதுரை தினசரி ஆசை காட்டியது. ஆயி னு ம் சென் னையை வெறுத்துச் செல்லும் எண்ணம் இன்னும் வரவில்லை எனக்கு.
* நான் வாழும் முறை தனிரக மானது. பிறருக்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கவுமில்லை. சில வருஷங்களுக்கு முன் னரே எனது நண்பராக வந்து சேர்ந்த ஜெயகாந்தன் சொல்
வார் ,
**இ வ ர் பித்தகோரஸாக இருக்கிருt , பித்தகோரசுக் கும் நன்மை செய்ய எண்ணி ன் மகா அலெக்ஸாந்தர். வெளியே வெயிலில் அமர்ந் திருந்த அவர் அறிஞரை அணுகினர். உமக்காக நான் என்ன செய்யலாம் என்று கே ட் டா ர். 'என் மீது விழும் வெயில்ை மறைக்காமல் தள்ளி நில்லு; அது போதும்’ என் ருர் அவர் .
இவ்வித விசித்திர சுபாவம் படைத்த எழுத்தாளர் வல்லிக் கண்ணனை நமது இலக்கிய ரசிகர் கள் சி. சு. செல்லப்பா சகிதம் சந்திக்கச் சென் ருர்கள். அவர் கள் கூறிய சில சுவையான தக வல்கள்
* கிருஷ் ஞ ம் பே ட்  ைட யி லுள்ள ஒரு சேரிப்புறத்தில்
ஒரு கு டி  ைச போன்ற வீடொன்றில் வசிக்கிருர் . வெளியே இருந்து பார்க்கும் பொழு து குடிசைபோன் றிருந்தாலும் உள்ளே அறை யை வெகு அழகாக, துப்பர வாக வைத்திருக்கிருர் . எங் கும் புத்தகங்கள்; பத் தி ரி கைகள். அவருடைய அ ண் ண ன் அசோகனுடன் வசிக் கிருர் . அவரும் ஓர் எழுத் தாளர். இருவரும் பிரம்மச் சாரிகள்.
அவருக்கு 42 வயது ஆகி
றது. இன்றுவரை எழுத்
தையே நம்பி வாழ்கிருர் . மாதம் ஒரு கதை கல்கிக்கோ, விகடனுக்கோ எழுதினுல் 100 ரூபா கிடைக்கும். அது போ தும் ஒரு மாதச் செலவுக்கு. மூன்றுநேரமும் இட்லிதான் சாப்பாடு. உயிர் வாழ்வதற் காக மட்டும்தான் சாப்பிடு கிருர் . நாள் முழுவதும் ஊர் சுற்றி, எதையும் உன்னிப் பாக அவதானிப்பதே அவ ரது பொழுது போக்கு. கை யிலிருக்கும் பணம் யாவற் றுக்கும் புத்தகங்கள் வாங்கி விடுவார். நிறையப் படித்து அதிகம் சிந்தித்து, கொஞ்சம் எழுதுகிருர் . -
அவர் 'கோர நாதன்' என்ற புனைபெயரில் காரசாரமாக எழுதிய நூல்களைப் படித்த வர்கள், அவர் தி. மு. க. வை சேர்ந்தவர் என நினைக்கிருர் கள், சிலர் அவர் ஒரு கம் யூனிஸ்ட் என "லேபல் ஒட்டு கிருர்கள். அவர் எந்தக் கட் சியைச் சேர்ந்தவரும் இல்லை. தனிப் போக்குடையவர்.
அ தி க ம் பேச மாட்டார் . கூச்சம் மிக் க வர். எழுத் தாளர் கூட்டங்களில் அதி கம் கலந்து கொள்வதில்லை.

இலங்கையிலிருந்து சென்றி ருந்த டொமினிக் ஜீவாவுக்கு சென்னையிலுள்ள சில எழுத் தாளர்கள் நடத்திய வர வேற்புக் கூட் ட த் தி ற் கு ச் சென்று விட்டு, சொந்தக் குரோதங்களால் அங்கு சில எழுத்தாளர்களுக்குள் ஏற் பட்ட சச்சரவைச் சகியாது
இடையிலெழும்பி வந்துவிட்
டார். * அவருக்குப் பிடித்தமான
எழுத்தாளர்கள்:
அன்ரன் செகாவ், டாஸ்டா வஸ் கி.
* அவரும், நாவலாசி ரி ய ர்
இளங்கீரனும் நெருங்கிப் பழ
கியவர்கள்; நண்பர்கள். * அவருக்குள்ள நல்ல பழக் கம்; ரசிகர்களும் நண்பர் களும் எழுதும் கடிதங்களு க்கு உடனுக்குடன் பதில் எழுதுவது.
சாகித்திய மண்டலமும் தமிழ்ப் பரிசும
இம்முறை சாகித்திய மண்ட லத்தினர் தமிழில் மொழி பெயர் ப்பு நூலொன்றுக்கும், கட்டுரை நூலொன்றுக்குமே பரிசு வழங்கி யிருக்கின்றனர். மூன்று சிறு கதைத் தொகுதிகள் வெளிவந் திருந்தும், அதில் எந்தத் தொகு தியும் பரிசுக்குகந்ததாக அவர் களுக்குப் படவில்லை. கடந்த முறை பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியுடன் ஒப்பிடும்பொழுது குறிப்பாக காவலூர் ராசதுரை யின் ‘குழந்தை ஒரு தெய்வமும் நீர்வை பொன்னையனின் "மேடும் பள்ளமும் தரத்தில் எந்த விதத் திலும் குறைந்ததல்ல. எழுத் தாளர்கள் ஊக்கமுடன் எழுதுவ தற்காகவும், நூல்கள் வெளியிடு வதை உற்சாகப்படுத்துவதற் காகவுமே இப்பரிசுத் திட்டம்
ஏற்படுத்தப்பட்டது. எ மு த் தாளர்களை உற்சாகப்படுத்துவ தற்காகவேனும் ஏதாவது ஒரு நூலுக்குப் பரிசு கொடுத்திருக் கலாம்.
சிறுகதைத் தொகுதியொன் றுக்குப் பரிசு வழங்கப்படா
மைக்கு நிர்வாக சபையில் ஏற் பட்ட மாற்றமோ, அல்லது புல மைக் காய்ச்சலோ தான் காரண மாயிருக்கு மென்று பலர் சந்தே கிக்கின்றனர். சிறு க  ைத த் துறை அப்படி ஒன்றும் இலக்கி யத்தில் முக்கியமான துறை அல்ல என்று அபிப்பிராயப்படுகிறவர் க்ள், நிர்வாக சபையில் ஆதிக் கம் வகிப்பதும் இதற்கொரு காரணமாக இருக்குமா?
தமிழனுக்கு ஆங்கிலம்
புரியாது
ஆங்கிலத்தில், தமிழுடன் ஒப் பிடும் பொழுது, இலக்கியம் மிக வும் வளர்ந்திருக்கிறது. என்ன தான் ஆங்கிலத்திலுள்ள தரமான இலக்கியங்களை நான் விழுந்து விழுந்து படித்தாலும், தமிழி லுள்ள இரண்டாந்தர நூலொன் றைப் படிப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெதிலுமில்லை. "எத் தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்ரு ன் பாரதி. அதில் நூல்களைப் படிப்பதும் ஒர் இன்பம் என்கிருர் க. நா. சு. அதுவும் தமிழ் நூல்களைப் படிப் பது பேரின்பம் எனக் கருது கிறேன் நான். குறிப்பாகக் கவி தையைப் பொறுத்த மட்டில் தமிழ்க் கவிதையையே என்னல் ரசிக்க முடிகிறது. இதைக் கவி. யரசர் தாகூர் ஓரிடத்தில் வெகு அழகாக விளக்குகிருர் .
'கவியை அனுபவித்து விடு வதற்காக எ த் த G3-uLufT மொழிகளைக் கற்றேன். இங் கிலிஷ் மட்டுமல்ல; பிரஞ்சு பாஷை, ஜெர்மன் பாஷை,

Page 7
2
லத்தீன், கிரீக் ஆகிய புரா தன பாஷைகள் எல்லாம் கஷ்டப்பட்டுக் கற் றேன். என்ன பயன்? கவியின் இத யம் தெரிந்ததா? இல்லவே யில்லை. என் தாய்மொழி ஒன்றன் மூலமாகத் தான் அது தெரிய வந்தது. ஒரு வன் பிறமொழிகளின் மூல மாகக் க வி யி ன் உ யிர் நிலையை அறியப் புகுவது: காதலியின் அருள் முறுவலைப் பெறுவதற்காக வக்கீலுக்கு வக்காலத்துக் கொடுக்கிற அழகுதான்.'
ரஸிகமணி டி. கே. சி. அவர் கள், தமிழ்க் குழந்தைகளுக்கு எல்லாப் பாடங்களுமே தமிழிற் தான் போதிக்க வேண்டும் என்ற கருத்துடையவர். ஏன் ஆங்கிலக் கவிதைகளைக் கூட, தமிழிலேயே விளக்கிப் படிப்பிக்க வேண்டும் என்று கூறுவார். ஆங்கிலேயர் கள் கூட லத்தீன், கிரேக்க மொழிகளிலுள்ள கவிதைகளைப் படிக்கும் பொழுது, அந்தந்த மொழி உரைகளுடன் படிப்ப தில்லை; ஆங்கில விளக்கத்துடன் தான் படிப்பார்கள். ஆகவே நாமும் ஆங்கிலக் கவிதைகளை, தமிழ் விளக்கத்துடனேயே படி க்க வேண்டும் என்று டி. கே. சி. அடிக்கடி கூறுவார்.
ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்தும், ‘தமிழுக்கு ஆங் கிலம் புரியாது’ என்று முதன்
முதல் துணிச்சலாகச் சொன்ன
தமிழர் டி. கே. சி. தான். கு: அழகிரிசாமி, டி. கே. சி. யைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்
சுவையான சம்பவத்தைக்
ஒரு குறிப்பிடுகிருர்,
*தாய்மொழிக் கவிதைகளை
அனுபவிக்க முடிவது போல, பிறகவிதைகளைப் பரிபூரண மாக அனுபவிக்க முடியாது
என்பதில் யாதொரு சந்தேக
மும் கிடையாது. இதனற்ருன் ‘நமக்கு ஆங்கிலம் டிரியாது’ என்று டி. கே. சி. அழுத்தந் திருத்தமாகச் சொன்னர் . ஆங் கிலத்தில் மகா விற்பன்னர் என்று புகழப்பட்ட வி. எஸ். பூரீனிவாச சாஸ்திரியாராலும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்று டி. கே. சி. ஒருநாள் கூறினர். அண்ணுமலை சர்வகலாசாலையில் சாஸ்திரி யார் துணைவேந்தராக இரு ந்தபோது ஜயகர் அங்கு வந்தி ருந்தாராம். ஜயகர் சர்வகலா சாலையில்பேசும்பொழுது, 'ஆங் கிலத்தையே படித்து சாஸ்திரி பார் தம் வாழ்நாளை வீணுக்கி விட்டாரல்லவா?’ என்ரு ராம். அப்போது அங்கு அமர்ந்திருந்த டி. கே. சி. உடனே "ஆம்" என்று கூறினராம்.'
பழம் பெருமை பேசுவது பற்றி கவிமணி
தாய்மொழியில் இலக்கியங் களைச் சுவைப்பதால் ஏற்படும் அநுகூலங்களையும், ர சா னு ப வத்தையும் பற்றி எழுதும் பொ
ழுது, நம்மிற் பலர் தமிழ்ப்பற் றுக்குப் பதிலாக, தமிழ் வெறி கொண்டு அலைவதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. 'உண்மை நிகழ்ச்சிகளைக் கவனி யாமல், வரலாற்றுப் பெருமை களைக் குறித்து வாய்ப்பறையடிப் பதை நாம் ஒரு மகிழ்ச்சியாகவும் பொழுபோக்காகவும் கருதி வரு கிருேம்.’’ என்று ஒர் எழுத்தா ளர் குறிப்பிட்டதில் பெருமள வில் உண்மை இருக்கிறதுபோல் எனக்குத் தோன்றுகிறது.
நமக்கு ஆதர் ஸமாக இருக்க வேண்டிய முன்னேரின் வீரதீரச் செயல்கள், நமது வளர்ச்சிக்குக் கு ந் த க ம க, இ ரு ப் பதை எந்தத் தமிழ் மகனும் விரும்பமாட்டான். நாம் சாதிக் கப்போவதை வைத்தே பெரு

மைப்படக்கூடிய காலம் வந்து
விட்டது.
நாகர் கோயிலில் நடந்த எழுத் தாளர் மகாநாட்டில் பழம் பெருமை பேசுவதைப் பற்றி கவிம்னி தேசி க வி நா ய க ம் பிள்ளை அவர்கள் அழகாக விளக்கியிருக்கிருர் .
**நான் எழுத்தாளர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழில் அது இருந்தது இது இருந்தது என்று பழம் பெருமை ப்ேசிக் கொண்டிராமல் 6TgSI தேவையோ அத்துறையில் இற ங்கி அவர்கள் உழைக்க வேண் டும். முத்தமிழ்,முத்தமிழ் என்று முழக்கம் செய்கிருர்கள். இசைத்
3
தமிழில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? பண்டை நூல் களைப் படித்துவிட்டு நாம் பெரு நாரை, பெருங்குருகு என்று திருப்பித் திருப்பிச் சொல் விக் கொண்டிருந்தால் இசை ஞானம்
உண்டாகி விடுமா? அந்தநாரை களும், குருகுகளும் மறைந்து போய்விட்டன, நம்மு டைய வலைக்குள் அகப்படப் போவதில்லை. ஓர் ஏழை உண்
ணச் சோறும், உடுக்கத் துணியும் இல்லாமற் தவிக்கிருன். அவ னிடத்தில் அவனுடைய பாட்ட னும், கொள்ளுப்பாட் ட னு ம் பெரிய கப்பலோட்டி வியாபாரி களாயிருந்தார்கள் என்று பழம் புராாணம் படிப்பதனுல் என்ன L1uu 6är?” ”
LLLLSLLLLLSSLA YLLLLJLLL LLLSSLLSLLLLLLLLLSLJLSLuSLSYSLuuLLeuqqTqeT LJLLLLLLLLuuLuLLLJLLLLLLSSuSLuLLJSLLSSLSLLJSLLqLYeSL 0LL
புத்தியில்லே! 5
புத்தியில்லே!
() சுப்பிரமணிய பாரதியார் ஒரு நாள் அம்மன் கோவிலுக்குப் போயிருந்தார். அங்கு ஒரு சடங்கு நடந்து கொண்டிருந்தது.
ஏராளமான கூட்டம். அக் கூட்டத்தின் நடுவில் ஒருவன் பேயாட் 1ம் ஆடிக் கொண்டிருந்தான். மக்கள் அவனுடைய ஆட்டத்தை
அவன் பின்வருமாறு பா டி க் 1
ரசித்துக் கொண்டிருந்தனர். கொண்டே ஆடினன்.
兹
சுனனும் பில்லே!
伊 புத்தியில்லே!
'பாக்கும் வைச்சான் பழமும் வைச்சான் வெத்திலை வைச் சான் போயிலை வைச் சான் ஒண்ணு வைக்க மறந்து விட்டான்
சுண்ணும் பில்லே!
பாடலைக் கேட்ட பாரதியார் சிரித்தார். பேயாட்டம் ஆடிய வனுக்குக் கோபம் வந்து விட்டது. பாரதியை வெறித்துப்பார்த்து ‘'நீ ஏன் சிரித்தாய்' என்று சீறிஞன். உடனே பாரதியார் பின் வரும் பாட்டைப் பாடி ஆட ஆரம்பித்தார்.
கிலமும் வைச்சான் பழமும் வைச்சான்
கிகளில்லாத செல்வம் வைச்சான் ண்ணுவைக்க மறந்துக்கிட்டான்
புத்தியில்லே!
ASqSqLLSqS SSqJJSLSLSLLqSLSLSJqqS0SqqSJqSSSL qeqSLSSLSSqqqSqqSLSqSqSLLSLLSqSqSqSLSLLSSqLSLSLSLS

Page 8
வளையும் அவனையும் நினைத்
அ தால்.அவன் அவளைச்
சந்தித்து ஐந்து வருடங்களாகின் றன. அவளை அவன் சந்தித்ததே ஒரு விசித்திரமான சூழ்நிலையில்,
அவன் ஒரு பத்திரிகாசிரியன். இலக்கியப் பித்து. இலட்சிய வெறி.
அன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி இருக்கும். இருளின் இடைவெளியில் மின் ஒளி ஐக்கிய மாகி கொழும்புக் கோட்டை பஸ் நிலையம் சோபிதமாக மினுங் கியது. பத்திரிகை வேலை முடித்து அச்சகத்தைவிட்டுவேர்த்துக் களை த்து சோர்ந்து தளர் நடை நடந்து பஸ் நிலையத்திற்கு வந்தான் அவன். அவன் விழிகள் பஸ் வரும் வழியில் ம்ெ (ா ய் த் தி ரு ந் த ன. பஸ் நிலையம் நிறைய கூட்டம். கூட்டத்தின் நடுவே அவன் நின் முன். அவனின் தோளை இடித்த \ படிஅவனை திரும்பிமோகனமாகப் பார்த்து முறுவலித்தபடி அவள் முன்னேக்கி நடந்தாள். அவளின் பின்னல் நூதனமான வாசனை அவன் நாசியைத் துழைத்து மன தை மயக்கி அவளைத் தொடர்ந்து சென்றது. அவளின் முதுகைப் பார்த்தபடி நின்ருன். படியே அவனைத்திரும்பவும் திரும் பிப் பார்த்தாள். ‘ஒருவேளை என் அபிமான ரசிகைகளில் ஒருத்தி eurritu ...?"
நடந்த
அவன் அவளைத் தொடர்ந்தான் அவள் நின்ரு ஸ். காலா காலம் அவனேடு சேர்ந்து பழகியவள் போல் முறுவலித்து அவனை நோக் கினள். குசலம் விசாரித்தாள். ரீ சாப்பிடுவோமா என்று கேட்
s
ஆனந்த பவானில் இருவரும் எதிரெதிரே இருந்து ரீ சாப்பிட் டனர். அவளின் கால்கள் இடைக் கிடை அவன் கால்களை வருடினN அப்பொழுதெல்லாம் அவள் அழ காகச் சிரித்தாள். அவளையே இமை கொட்டாது பார்த்தபடி இருந் தான். அவனையே அங்குள்ளவர் கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார் கள்.
நீ.அவன் தடுமாறினன்.
அவள் சிரித்தாள். * ரீகலில் படம் பார்ப்போமா? குழைவுடன் கே ட் டா ள். அப்பொழுதான் அவனுக்குப் புரிந்தது அவளை.
அவன் கண்களில் நெருப்பு.
家 事 家
இரவுமுழுவதும் அவனல் தூங்க முடியவில்லை. வாழ்வின் முதல் அனுபவம். மூட்டைப்பூச்சியாக உள்ளத்தைக் குடைந்தது. சீர் திருத்த வாதம் பேசும் அவனுக்கு ஏற்பட்ட முதல் அனுபவம்.? அவளின் அழகு முகம் அவன் கண் களில் தோன்றித் தோன்றி அழிந் தது. அவனின் உள்ளத்தை அவள் ஆட்சி செய்தாள். அவனுல் அவ
 

ளின் ஆக்கிரமிப்பைத் தடுத்து
நிறுத்த முடியவில்லை. அவளின்
கவர்ச்சியான உடல், இயற்கை யும் சேர்க்கையும் கலந்த கலவை அவன் உள்ளம் அவள் அழகை ரசித்தது. தீயின் செந்நாக்கு அதன் அழகு, கவர்ச்சி, அவளின் தீயின் கவர்ச்சியைக் கண்டான். அவள் தீ. அண்மினல் சுட்டுப் பொசுக்கிக்கருக்கிவிடும்.
எத்தனையோ விட்டிற் பூச்சிகள் தினம் தினம் தீ நாக்கின் சுவைப் பொருளாகின்றன. அது நினைவு க்கு வரும்பொழுது அவனுக்கு பயமாக இருந்தது. அ வ வின் அழகு அவனுக்கு அபினியாக அவன் அறிவை மயக்கியது.
தினம் தினம் இரவு அவளைச்
சந்திக்க வேண்டும் என்ற ஆவலை அவனல் கட்டுப்படுத்த முடிய வில்லை. தினம் தினம் இரவு 8 மணிக்கு அவள் அவனுக்காக பஸ் நிலையத்தில் காத்து நிற்பாள்.
நாளுக்கு ஒர் அல்ங்கா ரம். அவளின் குமிழ் சிரிப்பு அவனுக்குப்பணி நடுக்கத்தை, இடைக் கிடை குதுகுதுப்பையும் கொடுத்தது. களைத் து சோர்ந்து தளர்ந்து வரு
Rasa
பவனுக்கு அவளின் புதுப் புன்ன கை புதுப் பலத்தை புது உற்சா கத்தை கொடுத்தது. தி ன ம் தினம் இருவரும் எதிரெதிர் இரு ந்து ரீ சாப்பிடுவார்கள். அவள் அவனைப் பார்த்துச் சிரிப்பாள். அவன் முகத்தில் விழி பதித்து இருப்பாள். இப்பொழுது அவள் அவனைத் தொடுவதில்லை. காலால் வருடுவதில்லை. எ ல் வள வோ ஆசையோடு அவனேடு கதைப் பாள். அவள் பேச்சு அவனுக்கு மதுரமாக இனிக்கும். ஒரு நாளா வது ரீ பணம் அவனைக் கொடுக்க அ வ ள் விடவில்லை. அவளைப் பார்ப்பதை அவள் புன்னகையை ரசிப்பதை அவளுடன் சில நிமி ட ங் க ள் பேசிக்கொண்டிருப்ப தைத் தவிர அதற்கு மேலாக அவன் அவளிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. அவளும் அதை வற்புறுத்த வில்லை. அதனுலோ என்னவோ அவள் அவைேடு பழகத்

Page 9
6
துடித்தாள். பழகினுள். நாட்கள் கரையப் பழக்கமும் வளர்ந்தது
事 *
பிறந்த தினம் என் வீட்டுக்கு வாருங்கள் என்று வற்புறுத்தி அழைத்தாள். அவன் மறுத்தான் மன்ரு டினள். பிறிதொருநாள் வருவதாக வாக்களித்தான். அன் றே வரும்படி கெஞ்சினுள். அவ னுக்கு அவளைப் பார்க்க, அவள் கோரிக்கையை மறுக்க முடிய வில்லை. ராக்சி ஒன்று அவர்களை ஏற்றிக்கொண்டு பறந்தது. கொ ட்டாஞ்சேனையில் ஓர் ஒழுங்கைக் குள் சென்றது. இரவில் அவனு க்கு ஒன்றும் புலப்படவில்லை. எங் கும் இருள். நகரசபை விளக்கு கள் அழுது வடிந்துகொண்டிருந் தன.
ராக்சி நின்றது.
அவள் முன்னே சென்ருள். அவன் பின் தொடர்ந்தான். ஒரு ஒதாருக்குளால் ந ட ந் த ரா ள். அவன் காலில் கல் இடறி விழ இருந்தவன் அவளின் தோளைப் பி டி த் து ச் சமாளித்துக்கொண் டான்.
ஒரு மண்ணெண்ணை சிம்னி விளக்கு மங்கலாக எரிந்துகொண் டிருந்தது. ஒரு கிழவி கடைவாயி லில் கால் நீட்டி அரைத் தூக்கத் தில் இருந்தாள். அவனைக் கடந்து உள்ளே சென்ருள். அவன் பின் தொடர்ந்தான். ஒரு விசாலமான அறை. படுக்கை எல்லாம் அலங் காரமாக விரிக்கப்பட்டிருந்தது. மேசையில் ஊது பத்தி கமகம என்று அறை எங்கும் ஒரே நமறு ணம். அறைக்குள் அதிகமாக ஒன் றும்இல்லை. உடுப்புப்பெட்டி பகட் டான சில அலங்காரப் பொருட் கள் சில பட்டுப் புடவைகள்
வெளியே கிடந்தன.
မ္ယား ဓါr அவனைப் பார்த்துச் சிரித் தாள.
அவன் அவளைப் பார்த்தான். அவள் அங்கு கிடந்த ஒற்றை நாற் காலியை எடுத்து போட்டாள். அவன் இருந்தான். அவள் புதுப் பலகாரங்களும் ஆவி பறக்கும் தேனீரும் எடுத்து வந்து ரீப்போ வில் வைத்தாள்.
இரண்டையும் மாறி மாறிப் பார்த்தான். அவளின் பார்வை அவனை மன்றடியது. இதையும் தீண்டமாட்டீர்களா என்று கேட் பதுபோல் இருந்தது. அவன் அவைகளைத் தொடவில்லை. அவளையே பார்த்தபடி இருந் தான்.
சாப்பிடுங்கள் உன் கைபட்ட தை நான் சாப்பிட முடியாது.
தீண்டத் தகாதவளா?
நெருங்கத் தகாதவள்.
அவள் அவனைப் பார்த்தாள் உதட்டில் புன்னகை இல்லை. கண் களில் கண்ணீர் முட்டி நின்றது.
எப்படித்தான் உனக்கு மனம் வந்தது? இப்படி உன் வாழ்வைத் திசை மாற்ற
அவள் சிரித்தாள்.
நீ சமுதாய விரோதி.
அவள் சிரித்தாள்.
சீ நான் அயோக்கியன். உன் னைச் சுற்றித் திரிகிறேன். அவள்
அவன் வாயை பொத்தினுள் . அதை அவனும் எதிர்பார்க்க வில்லை. அவளும் எதிர்பார்க்க
வில்2ல. சட் என்று கையை எடுத் துக்கொண்டாள்.
அவளின் ஸ்பரிசம் அவன் உடலை ஒரு கணம் சில் லிடச் செய்தது.
率 家 家
என் வாழ்வில் நான் தோல்வி காணுதவள். உங்களிடம்தான் நான் தோற்றேன். நீங்கள் என க்கு அன்னியர் இல்லை. நீங்கள்

யார் என்றே எனக்குத் தெரியாது இந்தப் பதினைந்து வருட காலத் தில் என் நெஞ்சம் உருகியது. அன்பாற் பாகா கியது இதுதான் எனக்கு முதல் அனுபவம். வாலி பத்தின் அழிவில் அன்பைப் பெற் றேன், அனுபவித்தேன். நீங்கள் வள்ளல். உங்கள் வள்ளண்மை உங்களுக்குத் தெரியாது. ’’
போ  ைத தலைக்கேறியவள் போல் தூணைக் கட்டிப்பிடித்த படி அவள் பேசிக் கொண்டே போ
அவன் சிலையாகக்
கதிரையிற் சமைந்திருந்தான். W
‘நான் உங்களிடம் பைத்திய
மாகின்றேன். சூல்ை என்னைக் முடியவில்லை. முடியவில்லை.
**ஆண்டு தோறுங் ‘கலையருவி யில் நாவற் போட்டி வைக்கின் நீர்கள். கடந்த நான் காண்டு களாகத் தொடர்ந்து பரிசு பெற்ற நாவலாசிரியை 'விமலி'யை உங் களுக்குத் தெரியாது. ஆயிரமாயி ரம் வாசகர்கள் அவளுக்கு இருக் கின்றர்கள். அவர்களுக்கும் அவ ளைத் தெரியாது.
உங்களுக்கு முன் கட்டுப்படுத்த மறைக்க
(up Lq2. tLu
என்
நடிக்க
தன் கதைகளில் பண்பையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்தும் விமலி நான் என்ரு ல் நீங்கள் நம்ப மாட்டீர்கள். நம்ப வேண்டாம்.
ஏன் விழிக்கின்றீர்கள் வாழ்வு வேறு எழுத்து வேறு மன எழுச்சி வேறு. நல்லவராக, ஒழுக்க சீல ராக, பண்பாளராக வாழவேண் டும் என்ற விருப்பம் இருக்கலாம் மனப் பலவீனம், நரம்புத்தளர் ச்சி அவர்கள் ஆசையை அழித்து, அவர்கள் எதிர்பாராத வாழ்வை
யே கொடுத்துவிடும்.
பதினேந்து வயதுக்கு முந்திய வாழ்வை பற்றி எனக்குத் தெரி யாது. எட்டாவது வயதில் வீட்  ைட வி ட் டு வெளியேறினேன். பசிக்கொடுமை காரணம். இப்
17
பொழுது என் பெற்றவர்களை எனக்குத் தெரியாது. பல வீடு களில் எடுபிடி வேல்ைக்காரியாக இருந்து என் உடலை வளர்த்தேன் உடலில் வனப்பும் மினுமினுப்பும் போட்டிபோட்டு வளர என்ன்ைக் கண்டு வீட்டு எசமானிகள் Լմ այb தார்கள். மூன்று நான்கு மாதங் களுக்குமேல் ஒரு வீட்டில். நிரந் தரங் கிடைக்கவில்லை.
தாய் அன்பு, சகோதர அன்பு, எசமான அன்பு, -எந்த அன்புணர் வும் இல்லாது உள்ளம் 1. Π ερ. வெளியாக இருந்தது.
பதினேந்தாவது வயதில் வெள் ளவத்தையில் ஒரு வீ ட் Lq- 6i) வேலைக் க ம ர் ந்தே ன் . அ து எக்கவுண்ட ைெருவரின் குடும் Lub. அந்த அம்மா நல்ல வள். அன்பு காட்டா ட் டா லும் ஆதரித்தாள். க ரு ணை நெஞ்சம். அவளுக்குமூன்று குழந்தைகள். மூத்தவர் சுதாகர், பதினறு வயது இருக்கும்.அடுத்தது உமா, ஒன் பது வயதுச் சிறுமி.குமார் இரு வய துக் குழந்தை. குமாரைப் பர மரிப் பதுதான் என் பெரும் பங்கு வேலை" சுதாகர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார். பகலெல்லாம் படிப்புவிளையாட்டு என்று வெளி யே அலைந்து இரவு எட்டு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவார் இரவில் நான்தான் அவருக்குச் சாப்பாடு எடுத்துவைக்க வேண் டும். மேசையிற் சாப்பாடு இருக்க அவர் என்னையே பார்த்துக்கொ ண்டிருப்பார். கறிபோடும்போது கையைப் பிடித்து இழுத்து.
அதை என்னுல் ஆட்சேபிக்க முடியவில்லை. அது எனக்கு அவசி யந் தேவையாக இருந்தது. நாட் செல்லச் செல்ல அவர் என்னில் எவ்வளவோ உரிமை கொண்டா டினர். அவர் எவ்வளவு உரிமை கொண்டாடினலும் அவரால் என் னை த் தி ருப்தி ப் படுத் த மு டி ய வி ல் லை. க டு ம் u gr?

Page 10
8
காரியாக இருந்தேன். ஒருநாளை க்கு அவர் என்னைச் சந்திக்காவிட் டாற் துடித்துப் போவேன். அவ ரை நான் காதலித்ததில்லை. அந்த எண்ணமே எனக்கு ஏற்பட்ட தில்லை. அவசியமற்ற கைகூடாத எண்ணங்களை மனதில் வளர்ப்பவ ளல்ல நான். ஒரு நாள் நானும் அவரும் சமையலறைக்குள் இருக் கும்போது அவரின் தாய் திடீரெ ன்று வந்துவிட்டா. என்னையும் அவரையும் சேர்த்துப் பார்க்கும் போது.
அவர் என்னை அடிக்கவில்லை ஏசவில்லை ஆனல்.
'உனக்கு அழகும் இளமையும். அவனுக்கும் அப்படி, இருவரிலும் நான் தவறு சொல்ல முடியாது. என்னிற் தான் பிழை என் மகனில் எனக்கு இருந்த நம்பிக்கை நீ வெறும் வேலைக்காரி என்ற எண் ணம் இதனல் நான் தவறுவிட்டு
தால் உனக்கும் நல்ல தில்லை, அ வ ன் வாழ்வும் பழுதுபட்டு விடும். இந்தா இதில் நூறு ரூபா இருக்குச் செலவுக்கு எங்காவது போய்விடு.”*
அவரைப் பிரிவது கஷ்டமாகத் தான் இருந்தது. காதலால் அல்ல அவர் எனக்குத் தேவையாக இருந்ததால்.
அதற்குப்பின் அடுத்தடுத்துச் சில வீடுகள். அங்குள்ள ஆண்களும் சுதாகரைப்போலவே இருந்தார் கள். ஒரு வித்தியாசம் சுதாகர்
வாலிபன் மாணவர், இவர்கள் மணமானவர்கள், மனைவியோடு வாழ்பவர்கள்.
அவர்கள் என்னேடு உறவாட
விரும்பினர்கள். எனக்கும் அவர் களை வேண்டி இருந்தது. அவர் களாற்சுடெ என்னைப் பூரணப் படுத்த முடியவில்லை. ஒரு வீட்டில் என்னல் இரண்டு மூன்று மாதங் களுக்குமேல் நிலைக்கமுடியவில்லை. அந்த நேரத்திற் தான் இந்த ஆயாவைச் சந்தித்தேன்.
அவள் எனக்குப் பாதை காட்டி ஞள். நீ வயிறு வளர்க்க வேலைக்கு அலைய வேண்டாம். உன்னைத் தேடிப் பணம் வர, நீ விரும்பும் திருப்தி கிடைக்க, வசதிகள் பெருக வழி செய்வதாகக் கூறிஞள் நா னுஞ்சம்மதித்தேன்இந்த வீட்டை ப் பதினன்கு வருடங்களுக்கு மு ன்பு- எனது பதினரு வது வயதில் வாடகைக்கு எடுத்தோம். இங்கு குடிவந்ததும் அவள் இந்த அறை யை அலங்கரித்தாள். அந்த இர வே என் தொழில் தொடங்கியது. பரிபூரண விருப்பத்துடன் என். தொழிலில் முழு மனதுடன் ஈடு பட்டேன். ஒவ்வொரு நாளுந் தொழில் முடிவிற் களைத்துச் சோர்ந்துவிடுவேன். ஆ ன லு ம் பூரண திருப்தி கிடைக்கவே இல்லை. பணம் பெருகியது எனக் கும் ஏக கிராக்கி, தினம் புதுப்புது மனிதர்கள் என்னைத் தேடிவந் தார்கள். புதுப்புது மனிதர்கள் புதுப்புது மனப்போக்கு, ஆசை வெறி, உட துடிப்புக்கொண்ட வர்கள் எல்லாரையும் தனித்து நின்று திருப்திப் படுத்தினேன், மகிழ்வூட்டினேன். அவர்களால் என்னை மகிழ்வூட்டித் திருப்திப் படுத்த முடியவே இல்லை.
இடைக் கிடை சுதாகர் என்னைத் தேடி வருவார். அவர் வந்தால் என் மனம் குதூகலப்படும். அவர் ஆசைகளுக்கு நான் மறுப்புத் தெரிவிக்க மாட்டேன். அவருக்கு விசித்திரமான ஆசைகள். அவர் திருப்திக்காக ஆனந்தத்துக்காக நான் எவ்வளவோ மரணவேதனை களை அனுபவித்தேன். அவரின் கைச் செலவுக்குக் க ண க் கி ன் றிக் கொடுப்பேன் அவரை நினைத் தால் என் மனம் இப்பவும் குதூ கலமடையும் . w
பகற் போதெல்லாம் எனக்கு அவமாகப் போனது. வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இருந்தும் ஆயா தடுத்துவிட்டாள் வெளியே சென்ருல் எம் மதிப்புக்

குறைந்து விடுமாம் தொழிலைப் பாதித்துவிடுமாம்.
நித்திரை கொள்வதைத் தவிர வேறு வேலை இல்லை. எவ்வளவு நாளைக்குச் சோம்பி இருப்பது பொழுது போக்காகப் புத்தகம் படிக்கத் தொடங்கிய எனக்கு படிப்பு வெறியாக மாறியது. பல ரூபாக்களுக்கு புத்தகங்கள் வாங் கிப் படித்தேன்.
என் தொழிலின் ஈனம், புத்த கங்களைப் படிக்கப் படிக்க எனக் கே தான் அருவருப்பாக பட்டேன் "நான் சமுதாய விரோதி" என்னையே நான் பழித்துக்கொண் டேன் ஆணுலும் என்னுல் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
படிக்கப் படிக்க எழுத வேண் டும் என்ற உணர்ச்சி வெறியாகப் பீறிட்டது. என்னல் எழுதாமல்
இருக்க முடியவில்லை. என் தொழி
லின் சீரழிவை, ஒழுக்கத்தின் உயர்வை, பண்பின் அவசியத்தை என் சொந்த அனுபவங்களைக் கொண்டு எழுதினேன். என் எழுத் துக்களுக்கு உங்கள் "கலை அருவி" இடம் கொடுத்தது. என் படைப் புக்கள் சமுதாயத்திற்கு வரப்பிர சாதமாக இருந்தது. பாராட்டுக் பரிசு
களும், புகழுரைகளும், களும் குவிந்தன.
ஆனல் ஊருக்கு உபதேசஞ்
செய்த நான் என் வாழ்வை மாற்ற முடியவில்லை. என் வாழ்வில் மாற் றம் இல்லை. ஒரு மாதத்திற்குமுன் பும் என் தொழிலில் சலிப்புத் தட்டவில்லை. என் தொழி லில் எனக்கு இன்னமுங் கிராக்கி இருக்கின்றது. இனியாவது நினைத் தால் நான் நாளைக்கே கெளரவ மாக வாழமுடியும் அதற்குரிய சகல வசதிகளும் நிறைந்து இருக் கின்றது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு எனக்கு ?
பத்துவருடங்களுக்கு முன்பு உங்களை நான் சந்தித்திருந்தால்..?
உங்களில் என்ன இருக்கின்றது? உங்களுக்குமுன் நான் ஏன் என்னை இழக்கின்றேன்.
என்று
எனக்குச்
9
நீங்கள் மந்திரவாதியா ? என் இல்லம் வந்தவர்கள் என்னை எவ் வளவு இம்சைப்படுத்தியிருப்பார் கள், சுய திருப்த்திக்காக,
நீங்கள் மட்டும்? க்கு குரு .
நீங்கள் என
இனி நான் இந்த நகரத்தில் இருக்க மாட்டேன். உங்களைச் சந்திக்க மாட்டேன். எனக்குத்
தெரியும் என் சந்திப்பால் உங்கள் வாழ்வு பாழாகின்றது. உங்களு க்குச் சமுதாயத்தில் இருக்கும் மதி ப்பு மங்குகின்றது என்னுல் பனைக் குக் கீழ் இருந்து பால் குடித்தர் லு ம் குடிகாரப் பட்டந்தான் கிடைக்கும். ஆணுல் உங்கள் நினை வை, உருவை, நட்பை என்னுல் மறக்க முடியாது; இழக்கமாட் டேன். இந்த நகரத்தில் இருந் தால் உங்களுக்கு நிம்மதி இருக் காது நான் போய்விடுகின்றேன். அதற்காகத் தான் உங்களே அழை த்தேன் என் கடைசி ஆசை இதை அழிக்காதீர்கள்.
அவள் கண்களிற் திரண்டிருந்த க ண் ணி ரை ப் பார்த்தபடியே தேனீர் கிளாசைக் கையில் எடுத் தான் தேனிர் அவலாக இருந்தது.
கண்ணிரின் இடையே அவள் முகத்தில் மலர்ச்சி உதட்டில் புன் னகை அவனில் கால்களைத் தொ ட்க்டு கண்களின் ஒற்றிக்கொண் டாள் அதை அவஞல் தடுக்க முடியவில்லை.
அதன் பின் அவளை அவன் காண வில்லை. அவனைப் பொறுத்த வரை அவள் இறந்தவள் அவளைக் கடை சியாகச் சந்தித்து ஐந்து வருடங் களாகின்றன. அவள் நினைவு அவ னைப் பிரமையாக்கி அலைத்தது. பேயாக அலைந்தான் அவன் சாந் தியைச் சந்திக்கும்வரை அவன் மனதில் அமைதி இல்லை. சாந்தி சந்தித்திராவிட்டால் அவ ன வாழ்வு? அவன் வாழ்வைக் கண்டி ருக்க மாட்டான்,

Page 11
தொடர் கட்டுரை:
O
இயக்கமும் இலக்கியமும்
{
=ܒ ܒܐܒܒܒܘܒܐܒܐ=ܐ சிவத் தம் பி ܀ 7�ܲ ܕܝܵܗܒܐܴܒܒܘܒܒܕܒܐܒܒܒܘܒܒܘܒܠܹܐ)
.ட்டுவ நிலையில் மிருகங் G.وفه களைக் கொன்று தின்ற மக்கள், மிருகங்களை வளர்ப்பதன் மூலம் கடினமற்ற வாழ்வை நடத்த முடியுமெ ன்பதைக் காலக் கிரமத்தில் உணர்ந்தனர் என்பது வ ர ல |ாறு ப பொது விதி. சுயமாக உண் ைவ“உற்பத்தி செய்யாது காட்டிற் காணப்பட்ட உணவுகளைத் தாமே உற்பத்தி செய்யும் பொழுது விவசாயிக ளாக மாறுகின்றனர். மிருகவேட் டை நிலையிலிருந்து மிருக வளர்ப் புக்குமாறுவதுடன் இணை ந் தே இம்மாற்றம் வரும். இம்மாற்றம் தான் முல்லைநில நாகரிகம் எனத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறு கின்றது. மேல் நிலை வேட்டுவ வாழ்வினைத் தொடர்ந்து வருவது ஆயர் நிலை வாழ்வு அந்த ஆயர் நிலையிலும் இரு நிலைகள் உள என்
IT.
முதல்நிலை-காட்டுமிருகங்களை
வீட்டு மிருகங்களாக மாற்றல்
இரண்டாவது நிலை-மிருகங்களைப் பிடித்து வளர்த்தல் சிறிதளவு விவசாயம் முல்லைக்குரிய கருப்பொருட்ளை கப் பார்க்கும் பொழுது ஆயர் நிலை வாழ்வின் இரண்டாம் நிலைக்குரி யது என்பது புலனகின்றது. காட்டு மிருகங்களைப் பிடித்து அவற்றை நன்கு பழக்குவதாகும் இரைதேடு வதும் அதற்காக அவற்றை மேய் ச்சல் நிலங்கட்கு இட்டுச்செல்வது ம் ஆண்களின் தொழிலாகும். முல் லைத்திணையில் இதனை நாம் காணல
ாம்முல்லைத்தினையில் காணப்படும் விவசாயம் முக்கியமானது. முல்லை நில நாகரிகத்தில் கிழங்கு அகழ் தல் கைவிடப்பட்டுத்தானிய விவ சாயம் தோன்றும் என்று அறிஞர் கூறுவர். இதனை 'நாம் முல்லைக் குரிய கருப்பொருட் தொகுப்பி லா காணலாம். பயிர்ச் செய்கைக் காகக் கோவலர் காட்டையழித் துக்கட்டைகளைக் கொழுத்துவது பற்றியும் கொல்லை கொல்லையாக விவசாயம் செய்வது பற்றியும், சிறு பயிர்கள் பேணி வளர்க்கப்
படுவது பற்றியும், கலப்பை கொண்டு உழுது பயிரிடுதல் பற் றியும், சங்க இலக்கியங்களின்
குறிப்புக்கள் காணப்படுகின்றன. மருதநில நாகரிகத்தின் ஆணி வேராக அமையும் நெற் பயி ர்ச் செய்கை முல்லையிற் தொட ங்குகின்றது. கொல்லைகளாகத் தொடங்கிய விவசாயம் பழனங் களாக விரிகின்ற பொழுது, சொத்துடைமை யடிப்படையில் ஆட்சி தோன்றுகின்றது.
இந்தச் சமுதாயத்தில் ஆண் கள் தாம் வாழும் சிறு குடிப்பாக் கத்திற்கு வெளியே போக வேண் டியவர்களாகின்றனர். முதலில் மிருகங்களைப் பிடிப்பதற்கும், பின்னர் விவசாயம் முன்னேறிய நிலையில், ஊர்ப்புறக் காவலுக்கும் செல்வர். முல்லைத் திணைப்பாடல் கள் பெரும்பாலும், வேந்தன் காரியம் முடித்து வரும் தலைவர் கூற்ருக அமைவதை அவதானிக் கவும்.
இவ்வாறு ஆண்கள் பிரிந்து சென்ற காலங்களில், பெண்கள்

தங்குவர்.
* அவ்வப்பகுதிகளிலே
ஆண்கள் மிருகம் பிடித்தல், ஊர்க்காவலாகிய கடின வேலை
களில் ஈடுபடும் பொழுது, இல் லத் தில் தங்கியிருந்து மட்பாண்டம் வனைவர், பெட்டி கடகம் செய் வர், சிறு மண்வெட்டிகொண்டும் களைக் கொட்டுக் கொண்டும் பயிரி டுவர். பெண்களே முதன் முத லில் விவசாயிகளாக இருந்தனர். அந்த இந்தியக் குடிகளிடையே தாய்வழி மை நிலவுகின்றது. மாடு பூட்டிய கலப்பை வந்த பிறகே, விவசா யம் ஆணின் விவகாரமாக மாறி ற்று. முல்லை நிலப் பொருளாதார அமைப்பின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் பெண் களே காரணகர்த்தராக விளங்கி னர். அதனுல் இந்நில நாகரிகத் திற்குப் பெண்கள் “இருத்தல் அவசியமாகின்றது. ஆரம்பத்தில் அவ்வாறிருந்த பெண்கள், சொத் துரிமை வளர்ச்சியின் பின்னரும், அரசியல் வளர்ச்சியின் பின்னரும் பெண்கள் இல் லில் இருந்து, மிரு கங்களைப் பராமரித்தனர், ஏவ
லாளர்களைக் கட்டுப்படுத்தினர்.
மேலும் சொத்துரிமை வளரும் பொழுது, குடும்பத்தை ஒம்புதல் முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாகும். சொத்துரி மை, குடும்பம் முதலியன வள ரும் பொழுது ஏக தார வழக்கம் தோன்றும். பிறக்கும் குழந்தை கள் ஒரே கணவன் மனைவியரு டையதாகவே இல்லாதிருக்குமா குல் சொத்துரிமைப்பிரச்சினை ஏற் படும். எனவே தனிமனித சொத் துரிமைக்குப் பெண்ணின் கற்பு முக்கியமானது. இன்னும் வரு டத்திற் பெரும் பகுதி ஊருக்கு வெளியிலேயே ஆண்கள் தமது காலத்தைக் கழிக்கவேண்டியிருந் தமையால், பெண்க ளது கற்பு நிலையை வலியுறுத்த வேண்டிய தேவையுமிருந்தது. எனவேதான் முல்லை சான்ற கற்பாயிற்று.
அடுத்து மருதத்தினைப் பார்ப்
போம்.
அடிப்படையிலேயே சில
தான்"
21
மருதத்தினை விளக்கும் பொ ழுது வயலும் வயல் சார்ந்த இடமும்’ என்று கூறுவார்கள்.
தானிய உற்பத்தி முறைமை பெரிதாக வளர்த்து நின்ற காலம் மருத நில நாகரிகக் காலம். விவ சாயம்" வளர்ந்ததின் காரணத்தி ஞல் சொத்துரிமையும் வளர்ந்து விடுகின்றது. நிலக்கிழார் எனும் பட்டமும் வந்து சேர்ந்து விடுகின் றது. உற்பத்தி முறைகள் மாறி, முற்றிலும் ஆண் அதிகாரமுடைய ஒரு சமுதாயமாகவே மருதம் காட்சியளிக்கின்றது. கலப்பை கொண்டுழவு செய்தும், பலபேர் களே வைத்து வேலை செய்வித்தும் தனது செல்வத்தைப் பெருக்கு கின் ருர் . முல்லையில் தொடங்கிய
சொத்துரிமை இங்கு பெரிதாக
வளருகின்றது. இது காலவரை பிரயோகத்திலில்லாத உற்பத்தி முறைகள் கையாளப்பட்டபடி யால், வருமானம் கூடுகின்றது. அதனுல் இலாபம் ஏற்படுகின்றது செலவழிக்கப்படாத ஒரு தொகை நிலக்கிழாரிடத்து வளர்கின்றது. இதன் காரணமாகப் பணக்காரர், ஏழை என்ற பிரிவு உண்டாகின் றது. நிலவுடைமை ஆட்சி நிறு வப்படுகின்றது. இந்த அடிப் படையில் தான் வேள்மான் முத லிய மருத நில அரசர்கள் தோன்
றியிருப்பார்கள் இந்தச் செல் வங் கொழிக்கும் சூழ்நிலையிற் தான் அரசனே தோன்றுகின்
முன் என்பதை முன்னர் பார்த் தோம்.
இந்த மருத நில நாகரிகத்திற் வறு பல முக்கியமான மாற்றங்களையும் நாம் காண்கின் ருேம். அ வ ற் று ஸ் முக்கிய மானது பெண்ணின் நிலையில் ஏற் படும் மாற்றமே. குறிஞ்சி, முல்லை நாகரிகங்களில் பொருளாதார முக்கியத்துவம் நிறைந்த தொழில் களையாற்றிக் குடும்ப முன்னேப் றத்திற்கும், சமுக வாழ்விற்கும் கடமையாற்றி வந்த பெண், முற்

Page 12
22
றிலும் மாறிய பொருளாதார அமைப்புக் கொண்ட மருதத்தில் வெறுமனே வீட்டுப் பெண்ணுக, முன்பிருந்த உ ரி மை களற்றவ ளாக வீட்டோடு அடைபட்டுக் கிடக்கின் ருள். புதிதாகத் தோன் திய உற்பத்தி முறைகளைச் சொல் வதற்கு வேண்டிய பண்பும் பல மும் அ ந் ற வர்களாக விளங் கியமையாலே தான் இம்மாற்றம் ஏற்படுகின்றது. சமுதாயத்தின் இருப்புகளிலும் நிலமுடையோர், நிலமற்றேர், இம்மாற்றம் காணப் பட்டது. இதனலே தான் மரு தத்தில் தலைவனின் தயவில் வாழ்பவளாகக் காணப்படுகின் ருள். கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்ப அதற்காக ஊடு வான் என்று விரிப்பர்.
பரத்தையர் என்ற புதியதொரு ‘இனமும் மருதநில நாகரிகத் தில் தான் தோன்றுகின்றது. மருதநிலத் தலைவனின் போகப் பொருளாக விளங்கியவர்களே இம்மாதர்கள். ம க ப் பே று, பிள்ளை வளர்ப்புப் போன்ற சமு தாய நல காரியங்களுக்கு அத்தி
யாவசியமாக இருந்த பெண், செய்து வந்த அந்தக் கடமை களுக்காகப் போற்ற ப் ப ட் ட
பெண் மருதத்தில், நிலவுடைமை யாட்சியில் போகப் பொருளாக மாறுகிருள். கலைஞர்கள் கூட் டத்திலேயே இம்மாற்றம் முதன் முதலில் ஏற்பட்டது. பூர்வீக சமுதாய அமைப்பில் தனது பாடல் களால் மக்களை மகிழ்வித்து வந்த பாணனது நிலைமை படிப்படியா கக் குறைந்து வருவதை நாம் சங்க இலக்கியங்களிற்காணலாம். சமுதாய அமைப்புமான இவர் கள் வீரன் புகழைப் பாடுபவர் களாகவும், அரசன் புகழைப் பாடுபவர்களாகவும் மாறுகின்ற னர். மக்கள் கவிகளாக மக்களு டன் வாழ்ந்த இவர்கள் வீரரைப் புகழ்பவராக மாறுவதைத் தமிழ் நாட்டுப் பாணர் வரலாற்றில் மாத்திரமல்லாது, கிரேக்க நாட்
டுப் பாணர்கள் வரலாற்றிலும், இரஷ்ய நாட்டுப் பாணர்கள் வர லாற்றிலும் நாம் காண்கின்ருேம். மருதநில நாகரிகத்தில், பாணர் விறலியர், முக்கியத்துவம் அற்ற வர்களாகவே காணப்படுகின்ற
if (
புதிதாகத் தோன்றிய சமுதாய அமைப்பில் இவர்கள் இடமற் றுத் தவித்தனர். சமுதாய உற வில், அன்ருட வர்ழ்வில் முக்கிய இடம்பெற்ற கலை இப்பொழுது அந்த நிலையிலிருந்து விடுபட்டது. பொருளும், பொழுதுமுடையவர் களே இவற்றிலீடுபட முடிந்தது, எனவே நிலங்கள் பலவற்றைச் சொந்தமாகவுடையவனே இந்த மகிழ்ச்சிக் கருமங்களில் ஈடுபட முடிந்தது. கலையின் பண்பும் பயனும் மாறுகின்றது கலையின் ரசனை மாறியது போலவே, கலை யையுடையவளும் போகப் பொரு ளானள். குலமாது, விலைமாது என்ற வித்தியாசமேற்படுவதற் கான அடிப்படைக் காரணம் இதுவே. வீட்டுப் பெண் வேறு, தலை தெரிந்த விறலி வேறு, இரு வரும் பெண்களே எனினும் ஒருத்தி கணவனுக்கு அடிமை ட் பட்டவளாக இருக்க வேண்டும், மற்றவள் விவாகபந்த மற்றவ
வளாய் வருபவரை உபசரிக்க வேண்டுமென்றும் வழக்கங்கள் தோன்றின. ஒரு திட்ட வட்ட
மான சமுக அமைப்பில் வாழும் கலைஞர்கள், அவ்வமைப்பு மாறும் பொழுது பெரும் இன்னல் அடை வர் என்பதற்குப் பி ற் கா ல ச் கோயில்முறையழிந்த பின்னர் தேவதாசிகள், ஊர்வேசிகளாக மாறியதும் நல்ல உதாரணமா கும்? மருதநிலத் தலைவனுக்கு மகிழ்நன் எ ன் பது பெயர் இதுவே அந்த வாழ்வை எமக்குச் காட்டிவிடுகின்றது. எ ன  ேவ. ஊடல் என்பது மருதத்தின் பண்பு மாத்திரமல்ல, தவிர்க்க முடி யாத நியதியென்பதையும் நாம் காணலாம்.

மக்களிடையேயிருந்து தோன் றிய நிலக்கிழான் (கிழான்-உரிமை யுடையவன்) தனது அதிகா ரத்தை நிலைநாட்டுவதற்குப் பல வழிகளைக் கையாண்டு தனது கட்சியை நிறுவுகின்றன். இது நிலப் பிரபுத்துவ ஆ ட் சி யி ல் காணப்படும் பண்பு. ஐரோப் பிய வரலாற்றில் மாத்திரமல்ல தமிழ்நாட்டின் வரலாற்றிலும் இது தெரியக் கிடக்கின்றது.
மருதம் எனும் மரம் இன்றும் நீர் வளமுள்ள பகுதிகளில் வளரு வதை நாம் காணலாம். பண் டைத் தமிழ் நாட்டில் நெற் செய்கை செழித்தோங்கிய இடங் க ளி  ெலா ன் ரு ன, த 1ா மி ர வருணி நதிக்கருகே இன்றும் இம் மரங்கள் காணப்படுகின்றன. வயற் செய்கைக்கு வாய்ப்பான நிலத்தில் வளர்ந்த மரம், வயற் செய்கையையே குறித்து நின்றது எனவே மருதம் ஆகுபெயர் மற் றவையும் இவ்வாறே.
கடலையும், கடல் சார்ந்த இடங் களையும் கொண்ட நெய்தல், கமிழ்நாட்டு வாழ்விலும், வர லாற்றிலும் மிக முக்கியம் பெறு நின்ற ஒரு பிரதேசமாகும். தமிழ் நாட்டுக் கடற்கரையோரத்தில்நெய்தலில், இரு முக்கிய பிரிவு கள் காணப்பட்டதை நாம் அவ தானிக்க வேண்டும். கடற்கரைக் சுருகே வாழ்ந்து, கடலில் மீன் பிடித்து வாழ்ந்து வந்த மக்கள் ஒரு சாரார். கடல் வழி சென்று வணிகம் செய்தவர் இன்னுெரு சாரார் . உடுக்க நல்ல ஆடையற்ற
குழந்தைகள் விளையாடிக் கொ என டு நிற்கும் உப்பங்கழியும் நெய்தல் தான். உரோமாபுரியி
லிருந்து வந்த பொன்னும் பண மும் இறங்கிய துறைமுகமும்
நய்தல் தான். இந்தப் பொரு ளாதார வேறுபாட்டைப் பட்டி எனப் பாலையில் நாம் நன்கு காண லாம். ஆனல் தமிழ் நாட்டு வாழ்க் கையைக் காட்டிய இலக்கியங்
23
களைக் கொண்டு பொருளிலக் கணம் வகுத்த சான்ருேர், நெய் தல் வாழ்வு எனும் பொழுது கடலை நம்பி வாழும் மீனவர் வாழ்க்கையையே குறித்துள்ள னர் என்பதை நெய்தற் கருப் பொருள் காட்டுகின்றது. நாட் டின் உட்பகுதியிலேற்படும் மாற் றங்கள், நெய்தல் நிலத்தில் காணப்படும் அந்த வாழ்வைப் பெரிதும் பாதியா. அன்றிருந்த அறிவு நிலை கொண்டும் பொருள் நிலை கொண்டும் பார் க்கு ம் பொழுது அவர்கள் வாழ்வு பின் தங்கியதாகவே யிருப்பது தெரி கின்றது. மீனை விற்றும், உப்பை விற்றுமே மக்கள் வாழ்ந்து வந்த னர். மற்றெந்தத் தொழிலும் அதிகம் காண முடியாத நித்திய அபாயம் அவர்கள் தொழிலில் உண்டு. அந்தச் சமுகத்தில் ஆண் முக்கியமானவன். அவன் பலம் கொண்டு, கொண்டு வருவதைத் தான் பெண்விற்கின்ருள். எனவே அந்நில வாழ்வில் ‘இரங்கல்” தோன்றுமென்ப த நீ கு நீண்ட விளக்கம் அவசியமில்லை.
ஆணுல் நெய்தலின் மற்றெரு துறையான வணிகம் மிக முக்கிய மானது. தமிழ் நா ட் டி ன ர் கிரேக்க உரோம நாடுகளுடன் தொடர்வுபடுத்தி, உலகத்திற் தோன்றிய முதல் தேசப் படத்தி லேயே தமிழ் நாட்டிற்கு முக்கிய இடந் தேடித் தந்தது இந்த வணி கமே. முசிரி, புகார், கொற்கை, தொண்டி முக்கியமான துறை முகங்கள். நாம் இதுவரை பார் த்த வாழ்வின் பண்புகளிலிருந்து வேறுபட்ட ஒரு வாழ்வு முறை யைத் தமிழ் நாட்டிற்குள் புகுத் திய வாயில்கள் இவை. உள்நாட் டுப் பொருளாதார வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கி யிருக்கக் கூடிய பொன்னையும் பொருளையும் குவித்திருந்த பகுதி GT வை. பண்டைய பிற நாட்டு வணிகம். தமிழ்நாட்டுப் பொருளியல் வாழ்வில் ஏற்படுத்

Page 13
24
திய மாற்றத்தினை ஆராய்தலவசி யம். இக்கண்ண்ேட்ட்ங் கொண்டு இதுவரை பேராராய்ச்சிகள் நடத்
தப்படவில்லையே. திணை மயக்கம் எனத் தொல்காப்பியர் கூறும் பண்பு (ஒரு நிலத்தில் நடக்க
வண்டிய ஒழுக்கங்கள் இன் னெரு நிலத்தில் நடத்தல்) துறை முகததைச் சார்ந்த பகுதிகளி லேயே தோன்றியிருக்க டும். மேலும் வணிகம் காரண மாகவே பொருளாதார வளர்ச்சி
ஒருமுகப்படுத்தப்படும். அ ந் த
வகையிலும் இந்த வணிகத்துறை பெரும் தொண்டாற்றியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் வாழ்வில் மாற்றங்களேற்பட்ட காலத்தும் வணிகத்துறை பொன்றத் துணை யாக விருந்திருக்கின்றது. எல் லாவற்றிற்கும் மேலாக . அடுத் தடுத்த காலப்பிரிவுகளில் அகத் திணை எனப் பகுக்கப்பட்ட பகு ெ யில் இவ்வளர்ச்சியினைக் கண்ட நாம் புறத்திணையிலும் அதனைக் காண முடியும்.
ALLLLLLL LeeS ueeYqL Lq uTAqLJLL LLLJLSLLSLLLLLAALLLLLLLLJJSLLLLSLLALqLLLJLJJLJL q qJS SeSeJeqLS SSLJ ܗ¬à .àsܢ
இலங்கையர்கோன் நினைவு
-நாடகப்
(III)-
பரிசு தங்கப் பதக்கம்
அமரர்
இலங்கையர் கோன் நினைவாக
நடாத்தப்பட
விருந்த சிறுகதைப் போட்டியை கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கம் மிகவும் விரிவான முறையில் நடாத்துவதற்கு விசேட ஒழுங்குகள் செய்திருப்பதால், நாடகப் போட்டியாக நடாத் துவதென தேனருவி முடிவு செய்துள்ளது. ஆகவே குறிக்கப் பட்ட நிபந்தனைகளுக்கு அமைய இப்போட்டியிற் பங்கு பற்றி ஒத்துழைக்குமாறு எழுத்தாள அன்பர்கள் அனைவரும் வேண்
டிக் கொள்ளப்படுகின்றர்கள்
நிபந்தனைகள்:-
1. ஒருவர் எத்தனை நாடகங்கள் வேண்டுமானலும்
எழுதி அனுப்பலாம்.
நாடகம் தழுவலாகவோ,
மொழி
பெயர்ப்பாகவோ இல்லாது சொந்தப் படைப்பாக இருத்
தல் வேண்டும்.
2. நாடகம் காட்சிகள் குறைந்ததாகவும்,
இரண்
டரை மணித்தியாலங்கள் மேடையில் நடித்துக் காண்
கூடியதாகவும் - நடிகர்களின்
எண் க்கை
வேண்டிய கடைசித் திகதி
பிக்கக் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
நாடகம் கிடைக்க 15-1 2-62.
3. நாடகம் அனுப்ப வேண்டிய முகவரி.
ஆசிரியர், “தேனருவி”
313 ஹம்டன் ஒழுங்கை,
கொழும்
ւյ-6.
LSqLq LSLSLSLSqJLSLSqSLLLSqJYSqSLLSqSJSLLSqSJSqSJqqLqSqJJSquSS SSLLqSqSqSSqSLSSqqqqqSSSSqqqLSLSLSLqJJJS

(cococcaccaccreoccacco see'ecesseeeeeeeees
கவிதை பிறந்த கதை-5
இ. நாகராஜன் r ecceeeed - ܒܙܒܒܹܗܒܐܒܗܝܗܒܒܐܒ)
** கவிதையது பிறந்திட்ட கதையை இங்கு கழறிடுக!" என்றெனக்குக் கடிதம் மூன்றைச் சுவையாக எழுதியுள்ளிர், தொடர்ந்து மக்குச் சோதனையைத் தருதலழ கல்ல, நிற்க . எவை கவிதை இயற்றுதற்கு ஏது? என்று எண்ணுகின்றேன் காலத்தில் பதினைந் தாண்டு குவையாகக் கூடிற்றுக்-கழிந்த பின்பும் குன்றத நினைவுக்குச் சாவும் உண்டோ?
事 ·豪
மார்கழி மாதக் கடுங்குளிர் வையக மக்கள் உறங்கு நிசிவேளை கூரை அழிந்த குடிசையின் வாசலில் கூனல் விழுந்த குறைநிலவில் பேரறி யேனுெரு பேய்நிழல் ஒப்பிடப் பெருகிய வேதனை உருகிவர யாரையோ அவளெதிர் நோக்கு கிருளதை நானறி யேன்கதை ஏதறியேன்!
**பசிபசி!' என்ருெரு பாலனின் குரலது பளிச்சென ஒலிக்கத் திரும்பிடவே ** நிசியினில் தொல்லையா? போய்ப்படடா" வெரை நேர்மை யிலாவகை திட்டுகிருள் 'பசிபசி*" யெனுமொலி அடங்கின தோ:வவன் படுத்தன னேஉடல் முடக்கினனே? விசையுடன் முதுகினில் விறுவிறு என அறை விழுந்தது வோ; பறை முழங்கியதோ?
**அப்பனைக் கேளடா தப்பிலி நா'யென அதட்டு கிருளவள் மிரட்டுகிருள் **இப்ப பசிக்குது' என்னுகி முன்பயல் ஏச்சொ டடியது மிஞ்சுகுது; V எப்படி ஆகிய தோவவன் சத்தமே என் செவி தன்னதில் எட்டவில்லை; கப்பிய பசியுடன் வேதனை காட்டிய கண்ணிய மற்றிடு காரியத்தை-ட

Page 14
26
நின்றனன் எண்ணினன்; நெஞ்சிடை மண்ணதில் நிறைந்திருப் போர் பல பசித்தவரா? இன்றல என்றுமே இந்நிலை ஓங்கியே இன்னலே துன்னி இருந்துவிடில், என்று பசித்தவர் இலாதொழி வர்?புவி ஏற்ற இறக்கம் ஒழிந்திடுமா? ஒன்றலக்-கோடி விஞவும் எழுந்தது ஒன்றி உளத்தினில் ஊன்றியதே!
και
மாடதா? மனிதனு? என்ன நிலையிதோ? மண்ணதை மேடையாய்க் கொண்டவனு? பாடுகிருன், மரம்சாடுகி முன்,அவன் பள்ளமும் மேடதும் பார்த்தறியான், ஆடு கிருனவன், மரங்களை மக்களாய் ஆக்கு கிருன், பல கேட்குகிருன் வீடெது? எதையவன் நாடி நடக்கிருன்? மெள்ள அவனையே பார்த்தனனே!
கூரையி லாதவக் குடிசையின் வாசலைக் குறியெனக் கொண்டவன் ஏகுகிருன்; யாரை யவள் எதிர் பார்த்த னளோபசி ஆற்றக் குழந்தையைத் தேற்றினளோ? சீரறி யாதவித் தப்பிலி கூலியை தீய்த்துக் குடித்துச் சீரழித்துப்பாரறி .யாதவில் வேளை நடக்கிருன் பார்த்திருப் போர் பசி தீர்ந்திடுமோ?
"அப்பன் வருவனும், அவன்தரு வானுணக் கான உண**வென ஆற்றினளோ..? அப்பணு? அன்றி அடவியின் மாவிதா? அறிவு திறம்பிய பேயிதுவா? எப்படி வாழுவாள்? மைந்தனைப் பேணுவாள்? என்ன உலகமோ? மனிதர்களோ? கப்பிய வேதனை உப்பிப் பருத்திடக் காத்திர மாங்கரு ஆக்கியதோ?
‘ஓசை நிரப்பியோ, கவிக்குயர் வானதாம்
உத்திகள் ஏதெதோ அன்றறியேன் 'தூ'செ'ன வாகிய வாழ்வினில் குத்திய துன்ப அனுபவ முள்ளதனல் காசினி மீதினில் யான் கவி பாடிட கண்ட கருவுருக் கொண்டதனுல் தேசு மிளிர்ந்திடு செந்தமிழ் ஊறிடத் தீங்கவி பாடினன் தேர்ந்திடுவீர்!

பங்கம்
திருவாளர் சிவக்கொழுந்து
கட்டிலில் படுத்திருந்தார். அதே அறையில், திருமதி புனிதம் சிவக்கொழுந்து தரையில் விரிக் கப்பட்டிருந்த பனை யோ லை ப் பாயில் சயனித்தாள்.
அவர் உத்தர தேவியில் ஊர் திரும்பியவர். இரவு பதினெரு மணிக்குத்தான் உ த் த ர தே வி யாழப்பாணம் வந்தது. மூக்கு முட்டிய "கலை". வீட்டில் விரதம், சாப்பாடும் கிட்டவில்லை. பிர யாண அசதியுடன், வெறும் வயி ருக, கால்களைக் கட்டிலின் சட் டங்களில் எறிந்து எறிந்து "அலட் டி'க்கொண்டு படுத்திருந்த சிவக் கொழுந்து கண்களை விழித்தார்.
தாவணிப் போர்வைக்குள் சரக் கட்டையாகச் சுருண்டு கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.
* எனேய்!”
1.ம். மறுபக்கம் புரண்டாள்
‘என்னண புதுநாணயமா நித் திரை கொள்ளுழு ய், விடிஞ்சல்லை போச் சு. *
திருமதி சிவக்கொழுந்துவின் செவிகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் விழுந்தன. கோடி ப்புறமிருக்கும் நாவல் மரத்தில் 'அடை'யும் கோழிகள் கூவியதும் அவளுக்குக் கேட்டது. அந்நேரத் திலேயே துயிலெழுந்து, தன் வீட்டு அலுவல்களைச் சுறுசுறுப் பாகக் கவனிப்பது அவளுடைய வழக்கம். இன்று அவளால் எழுந் திருக்க இயலவில்லை. தேக மெல் லாம் பச்சைப் புண்ணுக நோகும்
எஸ். பொன்னுத்துரை
அலுப்பு. அவருடைய குரல் கா
தில் விழுந்த பின்னர், "சீ, மூதேவி
வாலாயம் கூடாது" என்ற எண்
ணம் உதித்தது.
"ஒமப்பா நித்திரை சரியா அ ம த் தி ப் போட்டுது’’ என்று சமாதானம் கூறியவாறு எழுந்து, சேலையைச் சரிசெய்தாள். அவர் தலைமாட்டில் கிடந்ந லோட்டா தண்ணிரை மி ட று முறிக்கும் தாளத்துடன் குடித்துவிட்டு, மறு பக்கம் புரண்டு கண்களை மூடிக் கொண்டார்.
புனிதத்திற்குத் தலையைச் சுற் றியது. சுமையேற்றப்பட்ட வாக் கில் தலைப்பாரம். செ மி யா க் குணக்கோலத்தில் வயிற்றைக்கும ட்டிக்கொண்டும் வருப் உணர்வு இத்தனைக்கும் வெள்ளியும் சனி யும் விரதம்; ஒரு நேரச் சாப்பாடு கிணற்றடிப் பக்கம் விரைந்தாள். வெகு பிரயாசையுடன் சத்தத் தை அடக்கி, எலுமிச்சம் மரத் தின் கீழ் வாந்தியெடுத்தாள். கால்களால் புழுதியை எத்தி மூடி ஞள். எலுமிச்சம் பழமொன் றைப் பறித்து மோந்தாள். நிலை சற்றே சீரடைந்தது. பற்களில் உமிக்கரி போட்டு மினுக்கி, முகம் கால் கழுவி, கிழக்கு நோக்கி விபூதி பூசி, வீட்டுப்பணியில் ஈடு
If T G . '
பானையில் அடைத்திருந்த புளி
யம் பழமொன்றை உ ப் பி ல் தோய்த்து வாயில் திணித்துக் கொண்டு, குசினிக் கதவடியில்
நின்று வீட்டறைப்பக்கம் பார்த் தாள். திருவாளர் எழுந்து வரும்

Page 15
28
*சிலமனை'க் காணவில்லை. உலையில் நீர் மலமலத்துக் கொதித்தது. தேங்காய்ப்பாதியைத் துருவி எடு த்து, பிட்டுக்கும் மாக்குழைத்து முடிந்த பொழுது தான், கிணற்ற டியில் அவஸ்தையுடன் ஓங்காளிக் கும் சத்தம் கேட்டது. விரல் நுனி களிற் தன் உடல் பாரத்தை ஏற்றி, குறுக்கு வேலியால் எட் டிப் பார்த்தாள். சிவக்கொழுந்து வி ர ல் களை த் தொண்டைக்குள்
திணித்து, பித்தத்தை இறக்கி முகம் கழுவிக் கொண்டிருப்பதை க்கண்டாள்.
கெதியாக முட்டைக் கோப்பி யைக் கலந்தெடுத்தாள்.
"என்னனை, முட்டைக் கோப் பியே? இண்டைக்கு ஏதோ விர தம் கிரதமாக்குமெண்டு நினைச்
፵፡ 6ör . '
"உங்களுக்கு வருஷத்திலை முன் னுாத்தறுபத்தைஞ்சு நாளும் பச் சை மீன் வேணும். நேத்துத்தான் புரட்டாசிச் சனி விரதம்"
"விரதத்தோடை ரயில் பய ணக்காரனையும் பட்டினி போட் டுட்டாய்"
"உன்னுணை மத்தவங்களில் குத் தம் கண்டு பிடிக்கிறதுக்கு உங் களைப்போலை ஆளில்லை. இன்ன நாளைக்கு வாறதெண்டு ஒரு விச ளம் எழுத மூண்டுசேம் கிடைக் கேல்லை. பேந்தென்ன? வந்தாக் கண்டுகொள்ளுவம்'.
கோப்பையை உதட்டோரம் வைத்துக் கோப்பியில் ஒரு மிடறு உறிஞ்சிக் குடித்தவாறே, "எங்
கை, கொம்மாவைக் காணம்?" என்ருர்,
எப்பவும் நெக்கு ஊழிவம்
செய்யுற தெண்டு அவவுக்குத் தலை யெழுத்தே? தனிய இருக்கிறதெ ண்டு துணைக்கு இருந்தவை. வீர பத்திரரைக் கண்டதும், ராத்திரி யே அவ தம்பியோடை அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா.
குற்றியை
"அதுக்கு, நடுச்சாமத்திலையே போறது? அந்தக் கிழடிக்கு என்ர நிழலும் புடிக்காது.”
கோப்பியைக் குடிக்கிருர்,
"மருமேனிலை மாமியாருக்கு அவ்வளவு மரியாதை யாக்கும்." வார்த்தைகளை அரையும் குறையு மாக விழுங்கிக் கொண்டே குசி னிக்குள் நுழைந்தாள்.
நேற்றுத்தான் இளங்கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெ ழுகப்பட்டிருந்த தரையை, விள க்குமாற்றினுல் கூட்டி, அடுக்களை யை ஒதுக்கினுள். 'துருவலை'க் எடுத்துப் போட்டு அதன் முன்னுல் பெரிய பருத்தித் து  ைற ப் பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்தாள். அதன் மேல் தலைவாழை இலைத்துண்டு ஒன்றைப் போட்டு, தண்ணிர் தெளித்துக்கொண்டே, "பேப்பர் படிச்சது போதும். வாருங்கோ வன்' என்று அழைத்தாள்.
கைகளைக் கழுவிக்கொண்டு, சிவக்கொழுந்து குற்றியில் அமர்ந் தார். மூன்று பிட்டுகளை இலையில் வைத்து உதிர்த்திவிட்டு, முட்
டைப் பொரியலையும் எடுத்து வைத்தாள்.
அவர் சாப்பிடத் தொடங்கி ணுர்.
திருவாளருக்கும் திருவாட்டி யாருக்குமிடையில், மெளனச்
சுவர் எழுந்து நின்றது.
"சோக்கா இருக்கப்பா. இப்ப தான் வீட்டுச் சாப்பாடு. சிங்களச்
சாப்பாட்டிலை நாக்கு மரத்துப் போச்சு."
நிமிர்ந்து பார்த்தபொழுது,
அவள் மாட்டுக் கொட்டில் பக்கம் பார்த்து, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பது தெரிந்தது.
* என்னெனை நீட்டுக் கயித்தினை யோசிக்கிருய்?
வெப்பமான நெடுமூச்சு.
سمبر

'இல்லை, பத்து மாசமா மாத்த றையில் இருந்து யாழ்ப்பாணப் பக்கம் கோச்சி வரே ல்லையாம்."
'கோச்சி வந்ததுதான் எனக்குத் தான் லீவு கிடைக்கல்லை."
"நான் காத்தைக் குடிச்சுக் கிடப்பன் எண்டு நினைச்சியளாக் கும்."
'எனக்கிருக்கிற கடன் தனிஉனக் குத் தெரியுமே?
"ஆருக்காகப் பட் ட னி ய ள். அந்த மாத்தறைச் சிங்களத்திக் காகத்தானே?"
"பேக்கதையள் கதைச்சுக் கோ வத்தைக் கிளப்பாதை."
"கோழ்வம் கோழ்வமெண்டு நெடுகப் பேக்காட்டுறதே? உங் களிட்டை வந்த தம்பையா அண் னேட்டை என்ன சொன்னனி ሀJ 6ኽr?”
"அவன் ஒரு கோள்மூட்டி’
பத்து வருஷமா அவள் என் கனத்தைப்பெத்தாள்? அந்த மலடி யோடை நான் வாழமாட்டன். காசும் அனுப்பமாட்டன், எண்டு அவரிட்டைச் சொன்னனியளோ, இல்லையோ?*
"சும்மா ஒரு கோவத்திலை சொ ன்னதை இவ பெரிய இது எண்டு சொல்லுருள். தம்பையா அண்ணை வரக்கே என்னை வேலையிலிருந்து நிப்பாட்டி வெச்சாங்களெண்டு தெரியுமல்லே?"
'கங்காணியெண்டால், ஆஸ் பத்திரியிலை கங்காணி Gഖ யைப் பார்க்க வேணும். சிங்க
எாக் கங்காணியளை மேய்ச்சால்
விடுவாங்களே? ஒரு சிங்களத் காறையைக் கிளப்பி வெச்சிருந்
தியாம். எப்படிப் பாடு?"
"அவளாலே-அவள் சொன்ன சாட்சியாலை தான்-என்ர உத்தி யோகம் திரும்பிக் கிடைச் சுது. எனக்கு ஒண்டும் தெரியாது."
29 ܐ
"அது கிடக்க, அவளுக்கு-என்ர சக்களத்திக்கு எண்டாலும்-புள் ளைப் பூச்சி வெச்சிருக்கே?"
அவளுடைய ஒவ்வொரு வார்த் தையும் திருவாளர் சிவக்கொழுந் துவைக் குடைந்தெடுத்தது. நிதா னம் தடம் புரண்டது.
* மலட்டுப். மலட்டுக் கதை யள் தானே வரும்."
"இஞ்ச! உந்தக் கோழ்வத்தைக் கொண்டுபோய் நீ மேய்க்கிற சிங் களத்தியளிட்டைக் காட்டு. ஆர் மலடி?...நான் வே  ைற யொரு வனைக் கட்டியிருந்தால், அதுக் கிடையிலை ஐஞ்சாறு பெத்திருப் Lu 6öIT.”
தேகத்தை உலுப் பி ஆட் கொண்ட கோபாவேசத்துடன், குற்றியை இடறி எழுந்தார். பெட்டி உதையில் நசிந்தோடி, அடுக்களை வாசலில் கிடந்தது. வெளியால், சருவக் குடத்திற்குப் பக்கத்தில், பிட்டு மணிகள் சித றிக் கிடந்தன. காகங்கள் விழுந் தடித்துக் கொண்டு இரைச்ச லுடன் கொறிக்கின்றன.
*அதுதானே, யின்ர முகத்திலை அங்க நிற்கிறனன்."
ஈச்சேரில் வந்து படுத்தார். புகையிலையைக் கிழித்து, ஒரு சுருட் டுச் சுற்றி எடுத்தார். அதைப் பற்ற வைத்தார்.
புயலின் புத்திரப் பாக்கியமான நிசப்தம் ஆட்சி செலுத்தியது.
உந்த வேசை முழிக்காமல்
அந்தச் சுருட்டைப் புகைத்து முடிப்பதற்கிடையில், பதினைந்து இருபது நெருப்புக் குச்சிகளைச் செலவழித்தார். சுருட்டுக் குறளை எறிந்தார். வெற்றிலைத் தட் டைத் தேடிப் பிடித்தார். வெற் றிலை வாடிக் கிடந்தது. கறட்டிச் சுண்ணும்பு. ஒருவ  ைக யா க ச் சமாளித்து. ஒரு வாய்க்குத் தாம் பூலம்தரித்தார். சேட்டை எடுத்து மாட்டி, சால்வையைத் தோள்

Page 16
30
க்ளில் எறிந்தார். வெளியே புறப்
படும் ஆயத்தம்.
அவரை வழி மறிப்பதைப் போல, எதிரில் வந்து நின்முள் புனிதம். ஆத்திரம்-சினம் ஆகிய வற்றின் சுவடுகள் தூர்ந்திருந் தன. முகமும் முகமும் நேராகச் சந்தித்தன. புதிதாகக் காணப் படும் அவளுடைய கவர்ச்சியில் அவருடைய விழிகள் ஒரு கணம் நிலைத்தன. இப்பவும் கல்யாணச் சந்தையில் "செல்லும் குமரி. அவ ளுடைய கழுத்தில் சிவக்கொழு ந்து தாலி கட்டிப் பத்து ஆண்டு களாயினும், சென்ற வைகாசி யிலே தான் இருப த் தி  ெய ட் டு வயது பூர்த்தியாயிற்று. தனக் கட்டுகள் சதை கூட்டிக் கொழு த்த வாக்கில் நிமிர்ந்து, செளந் தர் யப் பொலிவு காட்டின. குலை தள்ளிய வாழையின் நிறைவுடன், இரத்தம் ஊறிய வாக்கில், முகத் தில் மலர்ச்சி. கன்ன உச்சிக்காரி இப்பொழுது நேர் வகிடுவிட்டு வா ரத் தொடங்கியிருந்தாள். இந்த "உத்தி முகத்தை உருண் டையாக்கிக் காட்டியது. சிரிக்கும் பாசாங்கில், நாக்கு நுனி உத ட்டை நனைத்து மீண்டது.
"நீங்கள் ஆள் சுறுக்கர் தான். துலைக்கே புறப்பட்டுட்டியள்?"
பதிவில்லை.
"இஞ்சாருங்கப்பா. ஒருக்காச் சின்னக் கடைப் பக்கம் போயிட்டு வாருங்கோவன்."
* சின்னக் கடைக்கே? துக்கு?"
"இண்ட்ைக்குநாயித்துக்கிழமை யல்லே? கட்டைக் காலன் தானே உங்களுக்குப் பிடிக்கும்? சற்று முன்னர் நடந்த சண்டையின் சாயல் எள்ளளவும் இழையாத இதயம் குழைத்துப் பேசி, ஒரு ஐந்து ரூபாய்த்தாளை அவருடைய கைக்குள் வைத்தாள். அவரு டைய நாக்கில் கடல் ஆமை இறைச்சியின் சுவை ஊர்ந்தது. கோபமெல்லாம் அடங்கிற்று.
என்னத்
சால்வையை ஈச்சேரின் சட்டத் தில் எறிந்து, மறுபடியும் குந்தி னா .
"கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண்டாணை."
செம்பில் தண்ணிர் வந்தது. வாயில் குதப்பப்பட்ட வாடல் வெற்றிலை ஒரு மாதிரிக் கசந்தது. வாயை நன்ருக அலம்பிக் கொப் பளித்துத் துப்பிவிட்டு, *அண் ஞக்காகத் தண்ணிர் குடித்தார். செம்பிற்குள் பார்வை தட்டுப் பட்டது.
*இங்க செம்புக்கை வெத்திலை கிடக்கு."
" ஓம். வாடாமல் போட்டு வை ச் சஞன்."
‘அப்ப வெத்திலைத் தட்டையும் தா. சுண்ணும்புக் கறண்டீக்கை கொஞ்சம் தண்ணி விட்டு இழகப் UG5768). ' -
புனிதம் மடித்துக் கொடுக்க, பத்தியமாகத் தாம்பூலம் தரித்
தார். நாக்கும் நன்ருகச் சிவந் தது.
* இஞ்சேருங்கோ, கெதியாட்
போனத்தான் நல்லதாய்க்கிடைக் கும்."
* எநக்குத் தெரியாத சின்னச் கடையே? கொஞ்சம் பொறுத் துப் போவம்."
'நீங்கள் மாத்தறைக்குப்போை ரெண்டு வ ரு ஷ த் து க் கு ஸ் ளே யாழ்ப்பாணம் தலைகீழா மாறிட் டுது.'
புனிதமும் வெற்றிலை போட்டு கொண்டாள்.
* உனக்கும் நல்லாச் சிவந்திரு. கனை. "
* இதிலை தெரியும் நான் எ பிடிப்பட்டவளெண்டு. எ ப் வேலைக்குத் திரும்பிப்போறியள்: ‘நான் ஒரு கிழமை லீவிலை வந், ஞன்”*

'மழைதான் பெய்யப் போகுது'
தன்னுடைய உத்தேசத்தைத் தெரிவிக்க இதுதான் சமயமெனச் சிவக்கொழுந்து நினைத்தார்.
"எல்லாத்தையும் மறந்திடுவம் உன்னை என்னேடை கூட்டிட்டுப் போகத்தான் லீவு போட்டு வந்த g) Gör. ”
இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் புதிசாய் முளைச்சிருக்கு..ஏன் இப்ப அந்தச் சங்களத்தி கைவிட்டுட்டாளே."
'உந்த விண்ணுனம் கொட்டுற பொம்புளையளோடை கதைச் சுத் தப்பேலாது. நான் ஒரு சிங்கள வைப்பாட்டி வெச்சிருக் கி ற ன் எண்டு ஆரோ தட்டுவாணியள் கதை கட்டியிருக்க வேணும்."
" பேந்து கதைப்பம். கெதியாய் கடைக்குப் போயிட்டு வாருங் கோவன்."
அந்தச் சமயம், "சங்கடத் தால் சைக்கிளை ஏற்றி, படலை யைத் திறந்து கொண்டு, ஒரு வாலிபன் வந்தான். சாக்கினல் மறைபோடப்பட் டி ரு ந் த ஒரு பெரிய போத்தல் ‘கரியரில் கட் டப்பட்டிருந்தது, பக்குவமாகச் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தி Gö)Gör . சைக்கிள் "கான் டி லில் தாங்கிய பையைக் கையில் எடுத்தான்.
"அது மரஞ்சீவுறவன்." "இப்ப இவங்களுக்குக் காசு மெத்தி, ஊர் பிடிபட்டு, கெப் பர் மிஞ்சிப் போச்சு. அவன் சின் னவன் கத்திக்கூடு கட்டி, முட்டி கள், தீட்டுத்தடி எல்லாத்துட னும் உடுப்புப் போட்ட மாதிரித் தான் வருவான். உவன்ர சோக் கைப் பாருங்கோவன்." என்று வாய்க்குள் புறுபுறுத்தார்.
சேட்டைக் கழற்றி, கொடுக் குக் கட்டி, கத்திக்கூடு மாட்டி, தளை நாரையும் மு ட் டி யையும்
31
கையில் எடுக்கும்வரை, அவ னையே அவதானித்தார் சிவக் கொழுந்து ஈச்சேரில் படுத்துத்
தன்னைக் கவனிக்கும் அவரை இவ னும் உற்றுப் பார்த்தான்.
"என்ன அப்பிடிப் பாக்கிருய் செல்லத்தம்பி? இவர்தான் எங் கட இவர்."
‘ஐயாவே? அப்பிடித்தான்நினைச் சன். எப்பிடி ஐயா மாத்தறைப் பக்கம் மழை தண்ணி?" என்று சம்பிரதாயமாகக் குசலம் விசா ரித்தான். அவர், அவனுடைய நெஞ்சில் சடைத்திருந்த ரோமத தையும், உருண்டு திரண்டு கிட ந்த தேகக் கட்டையும், விடுப்புப் பார்த்தார். அ ப் புற ம் தான், ஏதாவது பதில் சொல்ல வேண் டுமே என்கிற மரியாதைப் பண்பு ஞாபகத்திற்கு வந்தது.
சின்னவனுக்குச்  ெசா ந் 5GLe?''
*ச்சா.நாங்கள் கொட்டடிப்
பகுதி. உரையாடலை நீட்டாமல், "அப்ப வாறன் ஐயா, இண்டைக் குப் பாளை தட்டுமுறை" என்று கிணற்றடிப் பக்கம் போக அவச ரம் காட்டினன்.
*இந்த வளவிலை எத்தினை மரம் கட்டியிருக்கிருய்?"
*அஞ்சு'
"எதெது?"
* கிணற்றடி கறுப்பிக் கன்றுகள் ரெண்டு, கக்கூசடி உசரியும், வளு க்கலும், கோடிச் சிவப்பி. சிரத் தையின்றிப் பாடம் ஒப்புவிக்கும் வாக்கில் சொன்னன்.
*நாவலடிச் சிவப்பி நல்லா ஊறு மெண்டு சின்னவன் சொல்லு வான்."
"அது பாளை மாறிப் போச்சுது, ஐயாவுக்கு எங்கடை தொழில் முறையும் நல்லாத் தெரியுதே?" என்று "பொடி வைத்துப் பேச் சை முறித்துக்கொண்டு, கிணற்

Page 17
32
றடிக் கறுப்பியை நோக்கி நடந் தான்.
*இந்தக் கோசு ஏன் மரங்களைச் சின்னவனுக்குக் கு டு க் க ல் லை?" என்று மனைவியை விசாரித்தார்.
'சீவிய உருத்து எண்டு சொல்லி அம்மாதான் இவனுக்குக் குடுக்க ஒத்தக்காலிலை நிண்டவ. மரத் துக்கு எழுவது ரூவா மேனி மூன் னுாறம்பது ரூவா தந்தவன். அந் தக் காசிலை வாங்கிவிட்ட பசுவா லும், கோழியளாலும் தான் பிச் சை எடுக்காமல் மானத்தைக் காப்பாத்திச் சீவிக்கிறன்.
"இவன் ஐயம்புள்ளை ஆக்களின் ரை பகுதியாக்கும். அவங்கள் காசுக்காரர்."
"ஆனலுமப்பா,சனியனுக்கெறு அகராதி பேசுறவன். அண்டை க்கு முத்தத்து மரத்திலே பழுத் திருக்கிற குலையைப் புடுங்கிவிடு எண்டு சொல்ல, "தேங்காய் ஆயி றவனைப் பாருங்கோ. அவனும் புழைக்கவேணும்' எண்டு சொல் வீற்றுப் பேக்னன்."
"இப்ப இந்தக் கீழ்சாதியளுக் குத் தானே நடப்பு. என்னுேடை அவன் அருளானந்தம் - அவன் தான் கொய்யாத்தோட்டத்து நளவன்-மாத்தறைக்கு வேலை மாாறி வந்தான். பேந்து ஒரு மாசத்திலை இலங்கை திரும்பி வந்துட்டான். நானும் மூண்டு மாசமாப் பிடிக்கா எம்பியளை எல்லாம் பிடிச்சு ஒரு மாறுதலுக் குப் புழுத்திப் பார்த்தனே!"
* என்னப்பா, கதையிலை குந்தீட் டியள். எப்ப இறைச்சி வாறது. எப்ப காய்ச்சிறது, எப்ப சாப்பி றது?"
"ஒமப்பா, வெய்யிலும் ஏறீட் டு து. நான், அவன் ராசான் ரை கடையிலை ஒரு சைக்கிளை வாட கைக்கு எடுத்துட்டு, ஒடியாறன். நீ உலையை வெய்யன்."
சிவக்கொழுந்து புற ப் படும் பொழுது, கிணற்றடி மரத்தில் பாளை தட்டும் சத்தம் கேட்டது. சின்னக்கடையிலிருந்து சிவக் கொழுந்து திரும்புவதற்கிடையில் அவரைத் தேடி சரவணமுத்து விம் திருநாவிக்கரசும் வந்திருந் தார்கள் அவர் க  ைட க் குச் சென்ற சமாச்சாரத்தை புனிதம் தெரிவித்தாள். அவர்களிருவரும், படலைகசூ முன்னல், வீதி த்ருத் குவித்திருந்த கல்லுக்குப் பக்கத் தல் குந்தியிருந்தார்கள். அப் பொழுதுதான் செல்லத் தம்பியும் சிவலே முடித்துக் கொண்டு புறப்
- - T657, அவர்களுக்கும் அவனுக்குமிடை யில் ஏதோ வாக்குவாதம் நடந் தி து .
திருமதி சிவக்கொழுந்து உற் றுக் கேட்டாள்.
"இன் ச பார் சரவணமுத்து. உன்ர பெருமாகோயில் சண்டித் த்னத்தை எள்ளெண்ணைச் சட்டி எரிக்க வாறதுகளிட்டைக்காட்டு. நான் கொட்டடியான். இனி மேல் என்னட்டைச் சேட்டை விட்டால், பாளைக்கத்தியாலை உன்ர குடலை எடுத்துப் போட்டுத் தான் வழக்குப் பேசுவன்." செல் லத்தம்பியின குரல் உரத்துக் கேட்டது.
புனிதம் வேலியால் எட்டிப் பார்த்தாள். அதற் கி  ைட யி ல் அவன் சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.
அந்நேரம் சிவக் கொழு ந் து அங்கு வந்து சேர்ந்தார். இரு வரும் அவருடைய காதைக் கடி த்து ஏதோ சொன்னர்கள்.
"அப்பிடியே சங்கதி. நான் கறி
யைக் குடுத் தி டு வாறன்’ என்று
படலையைத் திறந்து உள்ளுக்கு வந்தார். புனிதம் ஒரு தேங்கா யைக் கொடுவாக் கத்தியில் பிறத்தியால் அடித்துக் கொண் டிருந்தாள்.

சிவக்கொழுந்துவின் முகம் கறு
க் து, வியர்த்துக் காட்சி தந்தது.
கறி உமலை, அவளுடைய கால் களில் பட்டும் படாமலும் விழ வீசியெறிந்தார். பேசாமல் திரும் பிஞர்.
துலைக்கே?"
'கறியைக் காச்சு, வாறென்"
போ ட் டு கால்
* வெய்யிலுக்கை வந்து என்ன அவசரம்? ஆறிப் போகலாமே?”
"கண்கெட்டுப் போவாளே, பட சீலக்கை சரவணமுத்தனும் திரு நாவுக்கரசும் நிக்கிறது தெரியல் லேயே." அவங்களோடை ஒரு அலுவல்
"அப்ப இண்டைக்குச் சாப்பாட் டுக்கும் ஆளில் லேயாக்கும். அந் தக் குடிகாரங்களோடை சேந்து குடி குடியெண்டுகுடிச்சுப்போட்டு ராவைக்குத்தான் வாறதாக்கும். இங்கையல்லே உங்களுக்கு முட்டி யிலை கள்ளு வாங்கி வெச்சிருக் கிறன்"
"ஒவ்வொரு கதைக்கும் நீ மாத் துக்கதை கதைக் காதை, நீ கெதி
யாக் கறியைக் காச்சு. நான் சுறுக்கா வந்திடுவன்'
படலையை அடித்துச் சாத்தி
விட்டு, சிவக்கொழுந்து வெளி யேறினர்.
புனிதம் எப்பொழுதும் சமைய வில் சுறுசுறுப்பு. இன்றைக்கு இனந்தெரியாத பதற்றம். கத்தி யில், இறைச்சியை அறுத்தாள். வார்’களைக் குறுணியாக்க முடிய வில்லை. வெடுக்கு மணத்தில் அரு வருப்பு. பெரிய துண்டுகளாகப் போட்டாள்.
ஆமைக் கொழுப்பையே உரு க்கி, கடுகு-சீரகம்-கறிவேப்பிலைஅரிந்த வெங்காயம், பச்சை மிள காய் எல்லாவற்றையும் போட் டுத் தாழித்து, இறைச்சியைப் போட்டு வேகவைத்தாள். உப்
33
பும் மிளகாய்த் தூளும் போட்ட
பின்னர், தேங்காயின் முதற்பாலை யும் விட்டுக் கொதிக்கவைத்த பொழுது, பெரிய வேலையொன் றைச் செய்துமுடித்த திருப்தி ஏற்பட்டது. இதற்கிடையிலேயே இரு லில் சொதியும் கூட்டி வைத் தாள். குழம்பை இறக்கிவிட்டு சொதியை அடுப்பில் ஏற்றவேண் டியதுதான். மரக்கறியில்லை.
குழம்பை இறக்கித் திருகாணி யில் வைத்து, தேசிக்காய்ப் புளி யை ஊற்றிப் பிரட்டிச் சட்டி யால் மூடிவிட்டு, சொதிச் சட்டி யை அடுப்பில் ஏற்றினுள்.
அப்பொழுது, சிவக்கொழுந்து அடுக்களைக்குள் நுழை ந் தா ர். சாமான் பெட்டிகள், சட்டிகள், விறகு-மட்டை முதலியன விரித்த படியே கிடந்தன. இன்னமும் அவற்றை அடுக்கி ஒதுக்கவில்லை. துருவு பலகைக்குப் பக்கத்தில் கிடந்த சிரட்டை யொன்றை எடுத்துக்கொண்டு, பனை ம ட் டையைத் தட்டி எழுந்து நின்ற அரைக் குந்தில் குந்தினர். 'ஆளு க்கு நல்ல ஏத்தம் .'
"இதிலை கொஞ்சம் G3 LunT L.-1q.ʼ நீட்டினர்.
* நெக்குத் தெரியுமே அந்தப் பாழ்பட்டுப் போவாங்களோடை போஞல், இப்பிடித்தான் ஆட் டத்திலை திரும்புவியளெண்டு." அகப்பையால் கோலி இறைச் சித் துண்டுகளைச் சிரட்டைக்குள் போட்டாள்.
இறைச்சி என்று சிரட்டையை
"டீயே, போடு."
*சரி பிடியுங்கோ’ என்று சிரட் டையைக் கொடுத்தாள்.
வாராத் தெரிஞ்சு
தோலை முன்பற்களால் உரித் துத் துப்பிவிட்டு, வாரைச் சப்பி ஞர். பெரிய துண்டு; பல்லுக்குக் கொஞ்சம் கஷ்டம்.

Page 18
34
*நான்தானே சொன் ன ஞ ன் இங்கை கள்ளு வேண்டி வெச்சி ருக்கெண்டு
இறைச்சித் துண்டு ஒன்றைக் கொடுப்புப் பற்களுக்கிடையில் சப்பிக்கொண்டே, ‘நான் அந்த நளவன் சீவிற கள்ளைக் குடிப்ப னெண்டு நினைச்சியே' என்ருர்,
ஆணிக்குடல் துண்டு ஒன்று, அவருடைய வாயில் ரப்பராக இழுபட்டது.
"இவளுக்கிப்ப சோகை புடிச் சுப்போச் சு. உப்புப் புளிக் கணக்
கொண்டும் தெரியுதில்லை."
மடிக்குள் மறைத் திருந்தபோத் தலை உருவி வெளியே எடுத்தார். அரைப்போத்தலில், அரைவாசிக் குச் சாராயம் இருந்தது. கிளாஸ் கூடத் தேடாமல், போத்தல் கழு த்தை வாயில் வைத்து ஒரே மடக் காகக் குடித்தார். அஷ்டகோண மாகிப் பிளந்த இதழ்களினல் குழம்புடன் கூடிய இறைச்சியைச் சூப்பி, அதனைச் "சாப்பதே" விழு ங்கி, ஒரு முறை இருமி, அவஸ் தையைத் தணித்தார்.
*அதுதானே பாத்தனன். கறுப் பன் கையோடை இருக்கேக் கிள்ளை ஏன் கள்ளை?*
*நானும் பாக்கிறன், வேசைக்கு
நாக்கு நீண்டு போச்சு. இப்பவே  ெர ண் டி லை ஒண்டு தெரிய வேணும்.'
‘என்னத்தை?
'நீ என்னுேடை மாத்தறைக்கு வாறியா, இல்லையா?*
*உன்னுணை அப்பா புண் ணியம் கிடைக்கும். போய் முழு கிட்டு வந்து சாப்பிடு. எல்லாத்தையும் ராவைக்குக் கதைக்கலாம்.”
‘குந்திலிருந்து எழுந்தார். அவளு டைய முகத்திற்கு எதிராகத் தன் முகத்  ைத வைத்துக்கொண்டு, ராவிலை கள்ளப் புருஷனேடை தான் படுக்கிறது. இப்ப எனக் குப் பதில் வேணும்.'
டுட்டு,
சாராய நெடியும், கடல் ஆமை இறைச்சி வெடுக்கும்: 'பக் கெ ன்று புனிதத்தின் மூக்குத் துவா ரங்களில் ஏறின. அருவருபட உணர்வு. வயிற்றைக்கு மட்டியது.
அடுப்பில், சொதி கொதித்துத் திரைந்தது. அவளுக்குத் தலை யைச் சுற்றியது,
குசினியிலிருந்து முற்றத்திற்கு ஓடிவந்து, பொன்னுருக்கிலன்று நாட்டப்பட்டுத் தழைத்துவளர்ந் திருந்த முள்முருக்கம் மரத்தில் கைகளைத் தாக்குக் கொடுத்துக் குனிந்தாள்.
'வூஒக்.லூஒக். வாந்தியெடுத்
தாள்.
‘என்னடி மாய்மாலம் கொட்டு ரு ய்.என்னடி உனக்குச் சத்தி யும் வருத்தமும்; சொல்லன்டீ நீ எ ன் னே  ைட வாறியா இல்லையா?*
களைப்புடன், வீட்டுத் திண்ணை யில் அமர்ந்தாள்.
"என்னடி நான் கேக்கிறன் . fổ உன்ர பாட்டுக்கு இருக்கிருய்?
'நீ கேக்கிற கேள்விக்கு மறு மொழியும் தேள்வையே? இந்த வீடு வாசலை மாடு கண்டை விட் இரவல் புடவையிலை பெரிய கொய்யகம் வெச்சுக் கொண்டு, கூப்பிட்ட இடத்துக்கு இவருக்குப் பின்னலை திரியவே ணும். நான் செத்தாலும் இந்தப் படலையைத் தாண்டி உன்னேடை வர மாட்டன்."
“சரவணமுத்துவும் திருநாவுச் கரசும் எழுதினதும், சொன்ன தும். எல்லாம் சரிதான்."
"அந்தக் கோள்காவி நாரதர் கள் என்ன சொன்னவை? இனி மேல் அவங்கள் இந்த வீட்டு ட படலைக்கு வரட்டும்."
இப்ப சண்டித்தனமும் ஆல் லே காட்டுகிருள். ஆவேசத்து Lன் கையிலிருந்த இறைச்சி!

சிரட்டையை அவள்மீது 'எறிந் தார். குறி த வருது அது சரியாக அவள் நெற்றியில் பட்டது. இரத் தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
"ஐயோ, இந்தப் பாழ்பட்டு போவான்-குறுக்காலை தெறிப் பான் என்னைக் கொல்லுருனே" என்று கூவித் தணிந்தாள்,
அமைதி.
"கடைசியா ச் சொல்லுறன் , கே ட் டு க் கொள்ளும். இந்த ரெண்டு வருஷமா நீர் உழைச் சுத் தந்ததில்லை சீவிக்கேல்லை. இது என்ர வீடு வளவு. நீர் உன்ர ஆக்களோடை போகலாம்."
என்னடி சொல்லுரு ய் என்று கேட்டவண்ணம், துருவலைப் பல கையை ஓங்கிக்கொண்டுவந்தார்.
ஏன் நிக்கிறீர்? அடியுமன். மல ட மன்களின்ர ச ண் டி த் த ன ம் பெண்டுகளிலைதானே?"
"நான் மலடன் எண்டால், நீ மலடிதானே?"
"நீதான் மலடன்.நான் LfD @v) 1qu øvæv..."
35
இந்நேரம் படலையைப் பிடுங்கு வது போலத் திறந்துகொண்டு அவசர அவசரமாகத் திருநாவுக் கிரசு ஓடிவந்தான்.
* சரவணமுத்துவை ச்சர் யிலே வெச்சு நளவன் ಕ್ಲಿಕ್ಸ್ಲೆ த ம் பி அடிச்சுப் போட்டான்' என்று முற்றத்தில் நின்று கத்தி ஞன.
‘இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு முதலிலை அவனை முடிச்சுப்போட் டுத்தான், இவளின் ரை கணக் கைத் தீர்க்க வேணும்." என்று, கொடுவாக்கத்தியை எ டு க் க க் குசினிப் பக்கம் பாய்ந்தார், நிதான மற்ற கால்களுடன், குசி னிப்படியில் தடக்குப்பட்டு, g5 IT லென்று கீழே விழுந்தார். துருவு பலகையின் பற்கள் கிழித்துக் கன்னத்திலிருந்து இரத்தம் கோர மாக வடிந்துகொண்டிருந்தது.
" வடுவா! நீங்கள் பிரிச்சு வைச்ச மாதிரி உங்கடை கூட்டாளியைத் தூக்கிக்கொண்டாச்சும் போயிடு. ஆணுல் ஒண்டு. இண்டையிலையிரு ந்து நீயோ சரவணமுத்துவோ என்ர வீட்டுப் படலை துறந்தால் விளக்கு மாத்தாலைதான் அடிப் பன்’ என்று ரெளத்திர காளி போல புனிதம் கூச்சலிட்டாள்.
*ܒܒܓܵtܡcܒcܝܒܘܡܒ ܢs> ܒܒrܒܝܒܝ ܒܒܓeܒܓ݁ܺܝ ܒܒcܒeܣܓ̇ܝܼ:cܗ ܒܗܝ ܘܨܒܐܒܒ ܝܒ ܒܒܘܡܒܐܒܒܐ ܘܒܗ ܒܐܒܒܐ ܡܒܢܐ ܒܗ ܒܒ *
கலையரசி கவிதை பொழி
*பச மஹம்ஸதாசன்”
கருங்குவளை மலர்விழியிற் கருணையேந்திக்
கமலமுகத் தெழில்நகையிற் தமிழையேந்திப் பெருங்கருனை வளர்தனத்தில் அமுதையீேஇப்
பேரின் பப் பூங்கரத்தில் வினையேந்திச் S சரிந்து விழுங் துடியிடையிற் கலைகளேந்தித்
தத்தகெனும் மேனியெலாம ஞானமேந்த
() வருந்திருவே! (
(ஈழத் தமிழகத்தின் தேசியகீதம் பாடிய கவிஞர் 'பரம வாயால் உதிர்ந்த முதற் கன்னிக்கவிதை. 1945-ம் ஆண்டு
8 ஹம்ஸதாசன்'
எனதிதயத் தமர்ந்து சாகா மணிக்கவிதை பொழிகதமிழ் வாணித்தாயே!
LIT- I gi)
LL LLLLLLLLSLLLLLLSJSSqSLqSSLSLqJLSqSSqJLSqSLSSLSLSSLJSLLLLLLLSqSLASAASSSAAS ܕܡܘܒܒܘܩܒܘܡܣܝܘܢܡ ܒ<ܗܝ ܡܗܝܡܒܐܖܝܣܐ à

Page 19
கணபதிப்பிள்ளையின் வீடு பிள் ளையார் கோவிலை யடுத்தாற் போல் அந்தப் பரந்த காணியில்
நடுநாயகமாக ள ங் கி யது . தென்னை மரங்கள், பனை மரங்கள் சூழ்ந்து கொள்ள இருந்தது அச் சிறு வீடு.
இரண்டு ஆடுகள் அதன் தாழ்
வாரத்தில் குழைதின்றுகொண்டி
ருந்தன. இப்பொழுது கணபதிப் பிள்ளையின் கவனமெல்லாம் இவற் றின் மீதுதான். மனிதர்களிடம் எதிர்பார்ப்பதை விட மிருகங் களிடம் எவ்வளவோ பலனை எதிர் பார்க்கலாம் என்ற எண்ணம் போலும்.
இந்த வயதுபோன காலத்தி லும் மனைவி பக்கத்துணையாக இருந்து கவனித்துக் கொள்ளும் பாக்கியம் கிட்டியதையிட்டு ஒர ளவு பெருமை கொள்ளாமவில்லை.
அடித்துழைத்த தேகம் என்ற காரணத்தாலோ எ ன் ன வோ, நோய் நொடியில்லாமல் கால ந் தள்ளக் கிழவனுலும், கிழவியா லும் முடிகிறது.
* ஏதோ சீவியம் ஒரு மாதிரிப் போகுது என்கிருர்களே, அந்த
வாக்கிய த் து ட் தான் இவர்களு டைய வாழ்க்கை யும். மகன் மாத ந் தோறும் அனுப் பும் காசுக்கு முன் னதாகவே "பட் ஜெ ட், த யா ர் செய்து வைக்கும் பழக்க மு டை ய anu ri கணபதிப் பிள்ளை. இப்பணந் தான் வயிற்றைக் கழுவி வந்தது.
அது நிலவு கா லம். ஆணுல் எங் கும் ஒரே ‘கும் இருட்டு. மாரிகா லத்தை நினைவுறு த்தியது. பகல் முழுவதும் பெய்த மழை விட்டி ருந்தது.
கணபதிப்பிள்ளை அன்று பகல் சமைத்தவற்றில் ஏதோ சாப்பி ட்டுவிட்டு, வீட்டினுள் மழை ஒழுக்குக்காக வைத்திருந்த பர்த் திரங்களை அப்புறப்படுத்தினர். தனக்குரிய பாயைக் கொண்டு வந்து விரித்து, தலைமாட்டில் உயர மாக ஒரு பலகைத் துண்டைப் பாயின் கீழ் வைத்ததும் “முருகா’ என்ற பெருமூச்சோடு சரிந்தார்.
"இஞ்சாரும்! நாளைக்கொருக்கா $ந்தை யாண்ணையிட்டைப் போக வேணும்: வீடு எல்லாப் பக்கத் தாலும் ஒழுகுது. காசு கொஞ்சம் மாறிக்கொண்டு வந்தாத்தான் சரி. அதோடை இந்தச் சில்ல றைக் கடன்களையும் தீர்த்துப் போட்டுச் சும்மா கரைச்சலில்லா மல் இருக்கவேணும். நாங்கள் ஆருக்குத் தேடி வைக்கப் போ றம்?"
மனைவி சின்னச்சி பேசாமல் மூலையில் முடங்கிக்கிடந்தது கண பதிப்பிள்ளையின் கோபத்தைத் தூண்டியது.
 

'ஏய் ! என்ன மாடு மாதிரிக் கிடக்கிருய்? நான் என்னவோ சொல்லுறன். அப்டொழுதுதான் நினைவுக்கு வந்த சின் ஞ ச்சி. இப்ப என்ன வேணும்?' என்று கேட்டு வைத்தாள்.
"இஞ்சை பார்! நாளைக்கொரு க்கா என்னை வெள்ளன எழுப்பி விடு மற்றது தட்டியெல்லாம் கட்டிப் போட்டியே? கறிச் சட்டி யளை உறியிலை எடுத்து வைச்சணி யே? இவையனைத்தும் பழக்க மான கேள்விகளான படியால், சின்னச்சி பேசாமல் இருந்துவிட்டு ‘அதெல்லாம் எனக்குத் தெரியும் இப்ப படுங்கோ என்ருள்.
கணபதிப்பிள்ளை பக்க த் தி ல்
இருந்த துப்பல் சிரட்டையிற் துப்பிவிட்டு, வாயில் இருந்த குறைச் சுருட்டை வீசாமல், ஒரு மூலையில் வைத்தார். டில் பொல்லுக்கிடக்கிருதா என் பதையும் பார்த்துக் கொண்டார்.
மற்றது முற்றத்தில் சுருண்டு கிடக்கும் சொறிநாய். எல்லாம்
சரியாயிற்று.
இத்தனை ஒழுங்குகளின் பின் தான் நித்திரை.
இத்தகைய ஏற்பாடெல்லாம் கணபதிப்பிள்ளையின் திரவியங் களைப் பாதுகாக்க வல்ல. அந்த இரு ஆட்டுக்க டாக் களுக்காகத் தான். கள வெடுத்து, வெட்டி, இறைச்சி யாக்கி, அதில் ஒரு பங்கைக் கண பதிப்பிள்ளைக்கே கொடுத்துவிடக் கூடிய நிபுணன்கள் மிகவும் மலிவு
அதைப்பற்றித்தான் ச ந் நூறு ப் பயம் .
水 嫩
விடியற்காலை 5 ம ணி க் கு
சீமென்ற் பாக்டரி சைரன் ஊது வதற்கு முன்னதாக எழுந்துவிட்
TIT,
காலையில் எழுந்திருக்கவேண்டிய கஷ்டத்தைப் பக்கத்து வீட்டு புவ னத்தினுடைய குழந்தை போக்கி விட்டது. திடீர் என்று விடியற்
தலைமாட்
37
புறம் வீரிட்டுக் கத்திற்று. ஏதோ
பயங்கரக் கனவு கண்டதனலோ,
என்னவோ குழந்தையின் அழுகை நின்ற பாடில்லை. இந்நிகழ்ச்சி கணபதிப்பிள்ளையின்தூக்கத்தைக் கலைத்தது.
ஒரு மாதிரியாக எல்லா வேலை களையும் முடித்துவிட்டு ஆறு மணி க்குப் புறப்பட ஆரம்பித்தார்.
*செல்லையாவின் ரை லோண்டிரி எத்தினை மணிக்குத் திறப்பான்” என்று கேட்டார், சின்னச்சியை.
"அது ஏழு ஏழரை செல்லும்; அதுமட்டும் நிக்கப் போறியளே." ‘என்ன செய்யிறது இருந்த வேட் டியை அவனிட்டைக் குடுத்திட் டன். அவன் ஏதோ “எக்ஸ்பிரஸ்" லோண்டிரி எண்டு போர்ட்டுப் போட்டிருக்கிறன். அங்கை ஒரு இழவும் இல்லை. நேற்றுத்தாற மெண்டவன் தரே ல்லை."
லோண்டிரி திறக்கு முன்பே கடை வாசலில் தவம் புரிந்து ஒரு வாறு அவனைச் சந்தித்தார். மடி யில் வேட்டித் தலைப்பில் முடிந்து வைத்திருந்த சில்லறைகளைக் கவன மாக எடுத்தார். வெளுத்த வேட் டியை எடுத்து உடுத்துக்கொண்டு தான் உடுத்திருந்த வேட்டியை அவிழ்த்துக் கொடுத்தார். அவ னுக்குரிய சில்லறையைக் கொடு த்துவிட்டுப் போய்க்கொண்டிருந் தார் பஸ்டான்டிற்கு. பஸ்டான் டிற்கு முன்னுல் ஒரு வாடகைச் சையிக்கிள் கடை. இது , பஸ்டிப் போ' விற்கு அருகில் இருக்கின்ற காரணத்தால் அங்கு பஸ் ட்ரை வர்கள் கண்டக்டர்கள் "டியூட்டி சேஞ்ச்" ஆகும் நேரத்தில் இவ்வி டத்திற்ருன் சல் லாபமடிப்பது வழககம .
கணபதிப்பிள்ளையை கிழிந்த குடையுடன் நிற்பதைக் கண்ட ஒருவர், "இஞ்சை பாரடாப்பா! உந்த ஆளை, மோன் பெரிய உத்தி யோகமாம் கொழும்பிலை. உந்தா ளும் மனிசியும் இஞ்சை கிடந்து காயிதுகள். ஏதோமோன் தன்ரை

Page 20
98
விருப்பத்துக்குக் கொழு ம் பி லை பே வேறை சாதிப் பெட்டை யை முடிச்சதுக்கு உந்தக் கிழவன் p! t t "Till FLO பண்ணிச்சுதாம். பி. ஃன மோன் இந்தப் பக்கம்
வ1றதுமில்லை, கொண்டாடுறது மில்ஃல. மாதா மாதம் காசு ஐம்ப தோ, அறுபதோ அனுப்புரு ன் போலே இருக்கு. உந்தக் கிழட்டுப் பயலுக்கேன் இந்த வேலை, உல கந் தெரியாத துகள்’ என்று நண் பனுக்கு அறிமுகம் செய்தார்.
இ  ைவ கணபதிப்பிள்ளையின் காதில் விழுந்தனவோ இல்லையோ
முகம் ஒரு மாதிரியாய் இருந்தது.
பஸ் ஸும் வந்தது.
冰 来
கந்தையா மலேயன் பென்ச னர். வயது அறுபதைத் தாண்டி அதிக நா ட் க ள |ா யி ன . மக்க ளெல்லாம் படித்து ஏதோ அங் கினும் இங்கினுமாக ஒவ்வொரு தெல்லியில் இருக்கின்றனர். வீடு வெறிச் சோடியிருந்தது. மனித நடமாட்டமில்லா த த ரா ல் இக் குறையைப் போக்கவோ என் னவோ அவர் வ ட் டி க்கடை வைத்திருந்தார்.
மக்கள் நடமாட்டத்திற் கு க் குறைச்சலில்லை, பெ ட் டி யு ம் நிறைந்தது.
கணபதிப்பிள்ளை
கண்ட கந்தையா.
வருவதைக் * ஏது, ஏது,
வா! வா!, எப்படி மகன் காசெல்
லாம் ஒழுங்காய் அனுப்புகிருன் தானே. நான் அவனைக் கொழும் பி%ல கண்டு சொல்லியிருக்கிறன்' என்று தொடர்ந்து என்னவெல் லாமோ பேசிஞர். கணபதிப் பிள்ளை எதுக்கெல்லாமோ தலை யாட்டி ஞர்.
கதை போன போக்கில் வந்த வேலைக்கே இடமில்லாமல், "அப்ட பின்னை நான் வாறன்" என்ற வார்த்தையுடன் திரும்ப வேண் டியதாயிற்று. வீடு திரும்புவதற் காக, புறப்பட்டுக் கொண்டிருந்த
ஆருக்குத் தறிச்சுக்
பஸ்ஸைப் பிடிப்பதற்குச் சற்று
வேகமாக ஓடினர் வேறு பக்கங் கவனமில்லாமல்,
米 米
* ஆண்டி ஏது பச்சைக் கமுகு, கொண்டு போரு ய் என்று வைத்திலிங்க வாத்தியார் கேட்டார். s
ஆண்டி நாணயக் கயிற்றை இலேசாக இழுத்து வண்டியை நிறுத்திவிட்டு.
*அது பாருங்கோ, அந் த க் கோயில் வளவுக் கணபதிப்பிள்ளை நேற்றுக் கார் அடிச்செல்லோ செத்துப் போச்சு. அதுதான் தெரியாதே. மற்றது நீ ங் க ள் அண்டைக்குக் கதியால் வெட் டிப் போட வேணுமெண்டு என் னட்டை வந்த னிங்களாம். இப்ப மழை தண்ணி பெஞ்சிருக்கு. நாளைக்கு அந்தப் பக்கம் வாறன்’ என்று கூறி நாணயக் கயிற்றை இழக்கி விட்டான்.
கணபதிப்பிள்ளையின் ம க ன் மாத்திரமே செத்த வீட்டிற்கு வந்தான். அவன் எவருடனும் பேசவில்லை. எவரும் அவனுடன் பேசத் துணியவுமில்லை. அடுத்த நாள் தாயிடம் சென்று தனிமை
யில் ஒரு ‘நோட்டை நீட்டி விட்டு அவன் போய்விட்டான்.
本 本
சின்னச்சி வாழ்க்கையை ஒட்ட மிகவும் சிரமப்பட்டது மகன் கவ னியாது கைவிட்டதால் என்றே கூறலாம்.
பல கடன்களுக்காக ஆஸ்தியா கக் கிடந்த ஆடு முதல் கொண்டு விற்று முடிந்தன.
மகன் கடிதத்தில் காசு இனி அனுப்ப முடியாதென்றும், விரும் பினல் தன்னுடன் வந்து தங்க லாம் என்றும் கூறியிருந்தான். ‘இனி என்ன செய்கிறது, போய் இருப்பம்' என்று தோன்றும் கண நேர எண்ணத்தை கணபதிப்பிள் ளையின் ஞாபகம் வந்து மறையச்

செய்து விடும். கடைசியில் சின் ணுச்சி இப்பொழுது பக்கத்து வீட் டுப் புவனத்தினுடைய வீட்டுத் திண்ணையிற் தான் சீவியம். சின் ஞச்சி மேல் அவள் காட்டும் அன்பை அவளுடைய குழந்தை குட்டிகளின் தொல்லை குறைத்து விடவில்லை.
புவனம் சின்னுச்சியின் மரு மகள். அன்று பருவப் பெண்ணுக
இருந்த பொழுது சின்னச்சியின்
மகனுக்குத்தான் க ல் யா ண ம் பேசினர்கள். புவனமும் அவ னையே விரு ம் பி ஞ ள். ஆனல் அவனே?.
அப்பொழுது சின்னுச்சிதான் புவனத்திற்கு ஆறுதல் கூறியதும் அவளுடைய வாழ்க்கையை ஒரு நல்ல பாதையில் திருப்பியதும். இன்று அவள் இன்பமாக இல்ல றம் நடத்தும் குடும்பப் பெண் .
அன்று * வெளியில்
மாலை புவனத்திடம் போய்விட்டு வரு
SS eiLLMSS LSLSLS TMM LM SSSMSSLLS LSSLSLSSMMMS MSLLLL LSSSSSM MS MMS MSMM MMSMSSLLLLLYSL
அ ன் பு தான்
t
39
கிறேன்’ என்று சொல்லிக் கிளம் பினுள் சின்னுச்சி.
*புவனத்தின் ரை உதவியாலை நான் நெடுக இருக்கப் பிடிக்க வில்லை; எனக்கெடா தம்பி உந் தக் “கவுண் மேந்து குடுக்கு தெல்லே பிச்சைக் காசு; அது எடுக்கிறதற்கு ஏதேனும் வழி சொல்ல டா மோனை' என்று சின் ஞச்சி உள்ளூர்க் கிராம விதானை யைக் கேட்ட பொழுது, அவர் கையை விரித்து எணை அது வந்து அநாதையஞக்கு. ஒரு வ ரு ங் காப்பாத்த ஏலாட்டித்தான் குடுப் பினம். உனக்குத்தானே மலை போலை மோன் இருக்கிருனே. உனக்கெனை எப்படித் தருவினம்’
என்ருர்,
மீண்டும் புவனத்தின் வீட் டிற்கே வந்து கொண்டிருந்தாள் சின்னுச்சி.
அழகு
மேதை என்பது வாதாடுவதில் இல்லை. அது சிருஷ்டிக்கும் சக்
தியை உடையது.
பிறரைச் சுத்தமாக்கினுலன்றி நான் சுதந்திரனுக முடியாது.
உலகத்தை வென்றவர் யார்?
அன்பின் ஆற்றல் மிக்க புத்த
பிரானேயன்றி அலெக்சாண்டர் அல்ல.
சத்தியத்திற்காக உயிர் விடுபவர்கள் சிரஞ்சீவி ஆகின்றர்கள். அப்படியே தேசம் முழுவதும் உண்மைக்காக உயிர் துறந்தால் அது வும் என்றும் சா சுவதமாகவே விளங்கும்,
ரூபமான புலன்களுக்கு விஷயமாகாமல் நம் புனிதமான உள்ளத்
தில் பிரவேசிக்கும் போது தான் தன்னை மறக்க முடியும்.
சந்தேகங்கள், வாதங்கள் யாவற்றையும் மீறியது அந்த இதுவே பரிசுத்தமான இனிய கீதம்.
அழகு! அழகே !
அனுப்பியவர்: ஈழத்துலக்ஷமி l
அன்புதான்
- ரவீந்திரநாதாகூர்.
SLS S SL S SLSL LSL S SS

Page 21
மஹாகவி' - முருகையன் சேர்ந்து படைக்கும் தொடர் காப்பியம்
ڈیلیٹ
( நான்காம் இயல் ) * காமனும் கடவுளரும்
- “மஹாகவி' -
அTண்களும் இன்றியே தொடர்ந்து நீண்டதாய்த், துப்புர வானதாய்த், துணிந்து நாளையைக் காண்பவன் மனத்திலே தோன்றி இன்றைய கண்ணெலாம் வியப்பினுற் பிதுங்க வைப்பதாய், வீண் நினை வுகளென விரிந்த மண்டபம்; வீற்றிருந் தனர் பலர்; விழிகள் தீட்டிய ஆண்களின் வரிசையைக் கண்ட காமி தன் அன்பனின் அருகினில் அமர்ந்தும் அஞ்சினுள்.
'காட்டிடை வாழ்பங்ார் இலர் என் ருேதி, நீர் காட்டினிர் குகை சில இந்தக் கோளினில் நேற்று நாம் நடக்கையில்?’ என நிகழ்த்திய நேத்திரம் கண்டவன், முகட்டைப் பார்க்கிருன்; * மாற்றமுண் டதுநிலம், நாங்கள் தூங்கிப்பின் மறுபடி விழிக்குமுன்! மனிதர் என்பவர் ஆற்றல் கொண்டவர்களோ இன்னும்?' என்றவா றங்கொருத் தியைக் கண்ணிற் பற்றி உண்கிருன்.
முகட்டினில் விசிறியா? முகடும் இல்லையே! மூண்டுயர்ந் தெழுந்துள கூரை பார்வையில் அகப்படாத் தொலைவினில் அமைந்ததோ எனும் அப்படி இருந்தது (இருக்கவில்லை?). தான் திகட்டின் ளோ எனத் திரும்பிப் பார்த்துளம் திடுக்கிட மனிதையைக் கண்டு கின்றனஸ் நகத்தை வான் நடிகை! தன் ஆளன் தோளினில் நாட்டத்து மலர்களைப் போட்டுக் கூப்பிட்டாள்.
 
 
 
 

4球
எதிர்ப்புறத் தப்பொழு தெழுந்த தோர் திரை; * ஏ !" எனத் திரும்பினுன் இளைய காமவேள்; குதிப்புறம் உயர்ந்ததால் நடையி லே புதுக் குழப்பம் உற் றிட, ஒரு குமரி தோன்றினுள்; புதுப்புதுக் குனிதல்கள் நிமிர்தல், நெஞ்செனும் பொருப்பினிற் குலுக்கங்கள், வயிற்றி லே, சில பதிப்புகள் எழுப்புகள், இடைத் துடிப்புகள்பலப்பல சுவைபடப் படைக்கப் பட்டன.
கழுத்தினிற் சுற்றிய துணியைத் தொட்டதைக் கதிரையில் எறிகிருள்; கைகள் ஊர்ந்துபோய் அழுத்திட ஒரு தெறி அகன்று விண்டதும், அடிப்படைச் சதைப்புலம் விலாவிற் கண்டதே!, ஒழுக்கமே லாடைகள் என்னத் தக்கன ஒவ்வொன்ரு ய் அடுத்தடுத் துரியப் பட்டன; ஒழுக்குகள் நேர்ந்தன சபையில்; ஆணினம் ஒத்திற்று நெற்றியில் ஊறும் வேர்வையை:
திகைத்ததன் சிந்தையும், திமிறும் உள்ளமும், திருப்பிடிற் திரும்பிடா விழியும், பக்கத்திற் பகைத்ததன் மனைவியுமாக நின்ற பாற் படைக்கதி பதிஉடல் வெடவெடக்கிருன்;
புகைத்தன அறிவினிப் புடை பரந்ததாய்ப்
புலப்படும் பிறப்பிடம்" என்ற போதினில், நகைத்தன விளக்குகள் நாற் புறத்திலும்; நடிப்பு மேடையிற் திரை விழுத்தப் பட்டது.
அழுத கண் ணிரிடை அலர்ந்த மென்னகை அழகிய வசந்தியின் விழியில் நீந்திற்று; தொழுதனள்; "நாம் இனித் தொலைந்து போவதே தூய தென் ருள்; அவன் துடித்துப் போயினன்; கழுதை என் றெண்ணினன் அவளை; ஆயினும் கைஅவள் கைகளிற் கோத்து மேற்சென்று, * பழுதெதும் நிகழ்ந்ததா? இல்லையே!" எனப் பார்வையிலே கொடும் பழிப்பைக் கொட்டினன்.
நிகழ்ச்சிகள் முடிந்ததால் எழுந்த மாந்தர்கள் நிறைத்தனர் நடையினை, நெரிக்க லாயினர்; நெகிழ்ச்சியை அடைந்த ஓர் உளத்து மாரனுே நித்திரை விரும்பிய மாரி நீங்கிப் போய்த் துகிற் சில உரிந்த வெண் தொடை கொண் டாளினைத் தொடர்ந்திடத் துணிந்தனன்; தூரக் கண்டதும், புகழ்ச்சிகள் கோத்துத் தன் விழியில் எய்கிறன்; புறப்படும் அவள் வழி யோடும் போகிருன்.

Page 22
42
அவளது வாழிடம் அகன்ற பேரறை: ஆயிரம் அழகிய பொருள்கள் கொண்டது; தவளைகள் போல் ஒரு பெட்டி பாடிடும், தரும் சில காட்சிகள்; வாசக் குப்பிகள், பவளம் செய் வனவிரல் நகத்தை, வாயிதழ் பழுக்கவைத் திழுக்கிற வண்ணப் பூச்சுகள்இவைகளைக் கண்டிறு மாந்த காமுகன் இவ்வுல காட்சிதன் னது வென் ருேர்கிருன்.
ஏதிவண் புகுந்த? தென்றியம்பி னளினை இமைப்பிலா விழிகள் கொண்
டெதிர்கொண் டான் அவன்; "காதலின் கடவுள் நான்!” என்று கூறித்தன் கன்னத்தி லே ஒரு குழியைக் கிண்டினன்; 'ஆதலின்?' என்றனஸ் அழகி; ஆண்மையை அவமதித் திடுதல் கண் டவிந்தும் ஆசையால் "நீதரும் இன்பத்தை நத்தினேன்!" என நேரடி யாகத்தன் நினைப்பைக் கூறினன்.
தொகை ஒன்றைத் தெரிவித்தாள்; தெய்வ நிந்தனை துணுக்குறச் செய்தது? பண மில் லாததால், நகை ஒன்றை அவன்தர நாரி பெற்றனஸ் ; நடவடிக் கைகள் சில எடுக்கப் பட்டன; பகை ஒன்றைப் பகை சென்று மோதல் போலவே பசையற்ற உடல்களும் சேரலாகுமோ! முகை ஒன்றை மலர்த்தினுள் மனிதை மாரனே 'முத்தம் ஒன் றிரன்’, டென முதலிற் கேட்கிருன்.
* இரண்டுசொல் லேனும் நீ இனிக்கப் பேசுக; இப்படி என்னைப் பார்!’ என மொழிந்தனன்; சுரண்டினள் புருவத்தை அந்தச் சுந்தரி; சுவைப்பிது புதிய தென் றெண்ணிச் சோர்ந்தனள், மிரண்டனள், ஆயினும் மிடுக்குப் பார்வையாள், *மேனியிற் சிறந்த தோ மொழி?" என்ரு ய்கிருள்; புரண்டனர் இருவரும் பிறகு; காலமை புலர்ந்தவர் முகங்களிற் புளிப்பைக் காட்டிற்று!
படுக்கைவிட் டெழுந்த காதலன் அக்காரிகை படைத்த ஊர்ப் பானத்தைப் பருகி, வீதியில் உடுப்பினை அணிந்து கொண் டிறங்க லாயினுன் 'உருப்பளிங் காயினும், ஊமை யாகத்தன் இடுப்பினுக் கின்பமே நல்கி ஞளன்றி, இன்னுயிர்க் கெவ்வகைச் சுவைகி டைத்த?" தென் றடுத்ததாய் மனையவ ள் நினைவு வந்திட, ' அவள்விழி யோ டிதை ஒப்பு நோக்கினன்!

蟹品 "பார்த்தின்பம் அடைவதோ டமைதல் இன்றியே, பழைய ஓர் பாணியில் உடல் இரண்டினைச் சேர்த்தின்பம் விழைந்த அச் செய்கை luftat i fsh செகத்துக்குப் புதியவர் போலும், நன்று, நான் வேர்த்தஞ்சி விழுந்திலேன்! அவர் தந் தேகிய வெள்ளைக்கல் மோதிரம் விலை உயர்ந்ததே! போர்த்திக் கொண்டவள் பின்னும் புதைக்கும் கட்டிலிற் போய்விழுந் தமைதியாய்த் துயில் தொடங்கினுள்
விடுதியிற் தங்கிய வேணி லாளையோ விருப்பொடு குழ்ந்த தோர் இளைஞர் நீள்படை, அடிபிடிப் பட்டுள்ளே நுழைந்த வர்களுக் காசனம் தரு முன்னே அமர்ந்து கொண்டனர்; படபடத் தெழில் உடல் பதறி நின்றவள் பரிதவிப் பிடையிற் தன் பதியை எண்ணினுள்; கொடுப்பதில்!” எனச் சில கேள்வி கேட்டது கூட்டம், அவ் வலமந்த பாவை யாளிடம்.
‘சடுதியிற் திரும்புதல் நோக்க மோ?-இன்றேல், சற்றிந்தப் புவியினைச் சுற்று வீர்களோ?
தொடை, இடைச் சுற்றள வென்ன?- மார்பகம் துரக் கிக் கோர் விளம்பரம் திருதல் கூடுமோ? - படமெடுப் புகளிடை இந்தப் பாங்கினிற் பலபல விடுப்புகள் வேண்டப் பட்டன; ‘விடுக, இப் பொழுதெனைத் தனிய! என்றவள் வெறுப்புடன் விளம்பினள், விலகி ர்ை அவர் !
*ணவனுக் காய்வெந்து காத்தி ருக்கிருள்; கதவினைத் திறந்தவன் கரத்தைக் காண்கிருள்: பிணமெனத் தெரிந்த தப் பெரியன் வாண்முகம் பிரிவினுற் தானெனப் பேதை கொள்கிருள்: இணைவதற் காய் எழுந் தருகில் ஏகினுள்; இரு மலர்த் தொட்ை இடை இறுக்கப் பட்டனன்; ‘மணம் எனப் படுவது மடமை!’ என்றந்த மாரஞே பொன்மொழி ஒன்று திர்க்கிருன்!
* எப்படி?’ என்றவள் எதிர்த்துக் கேட்கவும், "ஏனடி, தொடுவதால் அடங்கும் மையலை அப்படி அப்படி யேவ ளர்க்கிற அருமையை எனது பேராணைக் குட்படும் இப்படி யார் கள் கண் டிருக்கி முரடி: என்னையும் மிஞ்சினர் இவர்கள்; நீமட்டும் ஒப்பிடு, நம் மண ஒப்பந் தத்திஜி ஒடித்து நாம் தனித்து வா ழலாம்!" என்ருேதினன்

Page 23
* உடல்களாய் மக்களை உடைத்தம் மேலவர் உணர்வையும் உயர்வையும் ஒழித்த தாங்கள் இம் மடமையை மெச்சுதல் மரபொன் ருயினும், மறுபடி உளறுதல் தவிர்த்தி டீர், ஐய! கடவுளின் ஆணையைப் புறக்கணித்தொரு கயமையை நிலத்தினில் நீர்ந டத்திடக் கடவிரோ?" எனச் சில கருத்தைக் கூறித்தன் கண்களிற் சேலையின் தலைப்பைத் தேய்க்கிருள்
அயலவன் ஒருத்தியை நேற்றுக் கூடிய தறியவைத் தான் அவன்! அதற்குப் பின்னரும் புயலடித் தொரு நெடும் பொழுது போயிற்று; * புரளியிற் தேர்ந்தவர் தாங்கள்; தங்கள் அம் மயலினிற் பிறக்கிற மகவை நான் கொள்ளும் வரம் அளிப் பீர்!" என்றம் மலரி கோரினள்; 'வயது வந் ததும், கரு அறுத்துக் கொண்டதால், மனிதையர் உன்னைப்போல் மல!"டென் முன் அவன்.
இருவிழிக் கடல் மடை உடைத்துப் பாயவும்,
இனிய கற்பனை என மிதந்த பூண்முலை
பொருமலுக் கிடையிலே பொங்கி வீழவும், பொழுது பட் டதுவென முகம் இ ருட்டவும், எருமையைக் கண்டநீர் எனக் க லங்கிஞள்; 'இது பெரும் பழி!' என இடிந்து வீழ்கிருள்; ஒருநில நூலினை எடுத்துப் போய் அவன் ஒதுக்கமாய் இருந்துகொண் டதைப் புரட்டினன்.
* இறப்பிந்தப் புவி மிசை இல்லை யாதலால், இனிப்புக்கு மட்டுமே காதலாம்; பிள்ளை பிறப்பிக்க நாம் என்ன புழுக்க ளா?" என்றும்,
பெருப் பித்தல் "குடும்பத்தைப் பிழை!’ என்றும் பெரும் திறத்துக்குச் சிகரமே சமைத்த மக்களின் திருத்தியும் புதுக்கியும் பதிக்கப் பட்டுள "அறத்திரட் டினிற்கண்டவ் வழகன் பூரித்தான்; ஆனந்தி வெறிகொண்டாள் போல நிற்கிருள்!
"பேழையிற் குழந்தைகள் பெறுவிக் கும் தொழில் பெரியதாய் நிகழ்ந்ததுண் டெனினும், இன்றந்த ஏழமைப் பாற்பட்ட நிலைமை போய், மக்கள் இருப்பவர் வாழ்வழி தரும் விஞ் ஞான நூற் தோழரைப் போற்றுதும் !" என மு டிந்ததைத் தொடர்ந்திரு முறை படித் தறிந்து கொண்டவன், "வீழுக, விழி நுதல் வீம்பெலாம்!" என்றேர் வீரிய வாசகம் தனை மு ழக்கினன்.

45
'நிறுத்துக கூச்சலை, நில்லும்; வீண் தொழில் நினைப்புகள் அகற்றுங்கள்!” என்ற பெண்ணின் பால்,
தொறுத்திது வரை உனைப் புணர்ந்து வாழ்ந்தது போதும்!” என் றுரப்பினன், புறப்பட் டான் பகல் கறுத் தெங்கும் இருண்டது காமத் தாள் முன்னர்; காலினில் வீழ்ந்தனள், கதறினள்; அவன் "வருத்தங்கள் சேர்த்தனை வாழ்வில் நீ; பின்னும் வசனங்கள் விளைப்பதேன்?" என விட் டேகினன்.
கோ உட்புறம் புழுக்கம் என்ருெரு கொள்கையால் வெளிவந்த தெய்வம் போல், அதன் வாயிலின் எதிர்ப்புறம், மாவின் கீழ், இன்னும் வற்றிப்போய் விடாத சிற்ருேடை ஒரத்தில் போயிருந் தென்னவோ புனைந்தி ருக்கும் ஒர் பொடியனைக் கண்டவன் காமன், பொங்கினன்; *நீ அவ னவன்?’ என்று புருவ வில்லினை நெரித்தனன்; அறிஞனுே நிமிர்ந்து நோக்கினன்.
(தொடரும்)
Na. *
தே ன ரு வி
இலங்கையர்கோன் நினைவுவிழா
அமரர் இலங்கையர்கோன் நினைவு விழாவை சிறப்பான முறை யில் கொழும்பில் கொண்டாடுவதற்கு வேண்டிய ஒழுங்குகளை தேன ருவி-விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
மேற்படி விழாவில் இலங்கையர் கோனின் "மிஸ்டர் குகதாஸன் நாடகத்தை, இலங்கை வானெலி தமிம் நாடகப் பொறும்பாள ரான திரு. எஸ். சண்முகநாதன் அவர்கள் தயாரிப்பில்- ஈழக்கலை மன்றம் மேடையேறுகின்றது.
மேலும் விழா பற்றிய விபரங்களை “தேனருவி கார்த்திகை ஊற் றில் எதிர்பாருங்கள்!

Page 24
எச்சில் எனினும்.
*MMA/VMM:
அட்டை சொல்லும் கதை
« »-^-^-
கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் தன்னந் தனியாக உட்கார்ந்திருக் கிறேன். மலைமுகட்டில் இருந்து சரியும். அருவியின் வே க த் தி ல் உணர்வலைகளைப் புரட்டி விளையா டும் இன்ப நினைவுகள். பச்சைத் தளிர்க் கொடியில் அ ல ா ந து தென்றலின் அளைவில் இதுங்கண்டு இன் மணம் பரப்பும் மலரின் குளு மை உணர்வோடு கலந்து, வயம் பிறழா வ ைகயில் இதயத்தின் உனர்ச்சித்தந்திகளே மீட்டுகிறது.
பக்தர்களின் வரவால் நிறைந்து அமைதியில் மூழ்கி, சாந்த சொரூ பியாய் நிமிர்ந்து நிற்கும் மசூதி யின் காவலில், எ தி ரே பரந்து கிடக்கும் வளைகுடா. அலைகளுக்கு மட்டும் ஒறுப்பு. இருந்திருந்தாற்
போல் ஒன்று சலார்..!! பாதத் தை நனைத் து ச் செல்வதில் இன்பம்.
மற்றும்படி "களுக்...! களுக்...!
வாலைக்குமரி உணர்ச்சி மயக்கத் தில் உதிர்க்கும் சிரிப் பை ப் போன்று. குடாவின் அந்தத்தை விட்டுச் சற்று உ ய ர த் தி ல் புட மிட்ட பொன் தட்டைப் போல் ஒளிரும் பூரணச் சந்திரன்; வெண் பஞ்சுக் கூட்டம் ஒட்டிய பளிங் குத் தட்டைப்போல் பளபளகதம வானத்த கடு. வானமெங்கும் சித றிக் கிடக்கும் முத்துப்பரல்கள். எந்தக் குபேரன் குவித்து வைத்தா னே? அவற்றை ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கும் பிரவத்தனத் தில் காலத்தை வியர்த்த மாக் கும் தென்றலின் உருவில் சற்றுத் தடித்த ஊதல் காற்று, !
நுஃமான்’
குடாவில் பொற்குழம்பு கொ திக்கிறது!
சந்தேகத்தில் அள்ளிப் பார்க்கி றேன். வெறும்நீர்தான்! உவர்நீர்! சந்திரனின் எக்காளச் சிரிப்பில் சிதறும் ஒளிக்கற்றைகள்!
என்னை ஏமாற்றியதில் பெரு மிதமோ?
‘என்ன செஞ்சிக் கிட்டு இருக்
தீங்க???
காந்தள் விரல்களின் தீண்டுத லில் மெய்சிலிர்த்து யாழின் மெல் லிய நரம்புகள் உமிழும் தொணி,
அவள் வந்து விட்டாள். எ ன் த லை தானகவே திரும்பு கிறது.
என் இதயத்தைக் கவ்விப் பிடிக் கும் காந்தத் துணுக்குகள் தான் அவள் விழிகளா?
என்நெஞ்சைத் துளைத்து அங்கு எதைத் தேடுகிருள்?
ரே ஈ ஜ ரா வி ன் மிருதுவில் தோய்ந்த அவள் கன்னக் கதுப்பு களில், என்பார்வை செஞ்சந்த ணக் குழம்பைத் தடவுகிறது,
தங்கக் கடைசலின் பளபளப் பில் மினுங்கும் அவள் அழகின் ரம்மியத்தில் மனங்கிறங்கி, வான முகட்டைத் தே டி ப் பறக்கும் வெண்புருவாக என் மனம் மே லே.மேலே. செல்கிறது. அதன் பாதங்களை நினைவுறுத்தும் அவள் செவ்வரத்தை அ த ர ங் க ளி ல் வெடித்து உதிரும் முறுவல். மதங்கொண்டு அலையும் என் மன தை, அடக்கிப் பிடிக்கும் அங்கு

சத்தை நெகிழ்த்தி வேடிக்கை பார்க்கிருளா..?
'உன் நினைவுதரும் போதையில் மயங்கிக்கிடக்கிறேன்." s
இதயத்தின் ஆழத்தைத் துருவி டும் என்வார்த்தையில் இழை பாடும் தாகத்தைப் புரி ந் து an E. IT GðoT LFT Gmrnir?
அதே முறுவல்'இப்படி வந்து உட்காரேன்!' அவள்கையைப் பற்றிப் பக்கத் நில் இருத்துகிறேன்.
எண்ண அலைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி - பிரசவத் துடிப்பு! w
எ ன் று மி ல் லா உணர்வுக்கு
முறல்கள்.
'நீ இப்படியே தினந்தினம் வந் தால் வீட்டில் ஒருத்தரும் கேட் கிறதில்லையா???
நா பிரசவிக்கும் வெறும் வார்த் தைகள். அவள் வராவிட்டால்-?
‘எல்லாரும் தூங்கினத்துக்குப் புறகுதானே வாறன் ஒருவருக்கும் தெரியாது'!
* தெரிந்தால் என்ன செய்வே'?
"நான் உங்களைத்தான் கல்யா னஞ் செஞ்சிக்கப்போறன் எண்டு சொல்லுவன்."
"அதுக்கு அவங்க சம்மதிக்கா
பட்டால்...??
இன்ன கண்ணுக்கு மெய்யாக் கிடக்கே இம்மிட்டுப் பெரிய
st - 6)... '
வைரத்தில் பாய்ந்த ஆணியா அவளின் அன்பு?
“ 26) .....
என் விரல்களில் அவள் இதழ் கள் புதைகின்றன.
'நீங்கள் என்னை உட்டுட்டுப் போயிர மாட்டீங்களே?"
47
அ10 மனதில் உளறும் ஏக்கத் தின் பிரதிபலிப்பு!
"சீ அசடு குழந்தை மாதிரி!" வானத்துச் சந்திரன் அறுந்து கடலில் விழுந்து விடுமா?
மயங்கும் சிரிப்பு.
வானில் நெளியும் ஒளித்துளி களுக்கும் அவள் பல் வரிசைக்கும் நெருங்கிய ஒற்றுமை .
*அவளின்றி வாழ்க்கை ருமா?
ஒரு கணம். சிந்திக்கிறேன். மனக்கண்ணில் ஒரு சூன்யவளை யம் மின்னி மறைகிறது.
ஊரின் கொள்ளிக் கண்களில் மண்ணைத்தூவி அவளை நான் சந் திக்கப்படும் அவதி.?
w பேசும்
அவளின் விழிக்கடை ஒரே ஒரு வார்த்தைக்காக வெறி நாய் போல் அவள் ".... சுற்றி அலைந்த நாட்கள்; தனை
சுற்றியே குதிர்ந்த எண்ணங்களின் தின வைத் ಶTಶ್ವತ್ಥ மாட்டாது தவித்த இரவுகள் மாலை மங்கையின் குளிர்ந்த பார் வையினல் வெப்பம் தணிந்து கிடக்கும் நெருப்புக் கோளம் கக் கும் குங்குமப் புகையில் அவள உருக் கண்டு, அக் நித் தகிப்பில் வெந்து கருகிய நினைவுகளெல் லாம் இப்போதுதான் என் நெஞ் சில் குதிர வேண்டுமா?
அந்த நினைவுகளில் தான் எவ் வளவு இதஷ!
* f6) Tri, , !!” 鹤
நீட்டிக் கிடக்கும் பாதங்களை முந்திச் செல்லும் அலை.
*களுக்...!களுக்...!!
உணர்ச்சித் திமிறலில் நெகிழ் ந்து, இன்பநாதம் இசைக்கும் இத மான தொனி.
அலையா?
சிந் தை
நக
அவளா?

Page 25
48
ஒளியும், அலையும் கட்டிப் புர ளும் லாவண்யம்.
காந்தளும், என் கரமும் உற வாடுவதில் இன்பக் குளுமை.
காற்றின் வருடலில் நெளியும் விளக்குச் சுடரைப்போல், இன்ப வேட்கையில் துடி துடிக்கும் LD 607 th:
பழீலா வின் தலையின் அழுத்தத் தில் என்மடி கனக்கிறது.
நிலாவொளியில் தகதகக்கும் கழைக்கரம் என் கழுத்தை விளை ந்து.
அவள் அதரங்கள் நறையின் ஊற்று.
கடலும், தரையும் பின்னிப் பிணைந்து.
சந்திரன் மேகக் குமரியைக் கட்டி அணைக்கிருன்.
நாணத்தால் கு ப் பெ ன் று
அடைத்துக் குருதி சுரந்து சிவந்த வதனத்தில் மின்னும் வீயர் வைத் துளிகளு க் கு ப் போட்டியாக, ஆள் கொல்லிப் புன்னகை உதிர்க் கிறது.
கழுத்தறுபட்டுத் தலைகீழாகத்
தொங்கும் அரைவட்ட நிலா. மகர விடாயில் எண்ணை எல்லா வற்றையும் குடி த் து வி ட் டு க்
குருடுபத்தும் விளக்கைப் போ ன்று, மரணுவ ஸ்தையில் துடிக் கும் வானத்து மீன்கள். சந்திரனை அணைக்கப்போய், கன்னத்தில் அறைபட்டு கன்றிக் கறுத்த முகில் என் மனமும் அதே முகிலா?
நேஞ்சைக் குமட்டிவரும் பெரு மூச்சின் வெப்பத்தால் கடல் வற்றிவிடாது.
தூரத்தே ஒலிபரப்பியின் அல றல். போதாக்குறைக்கு மேள தாளம், நாதஸ்வரம். காற்றில் ஊர்ந்து வருகின்றன.
செவிப் புலனைக் கிழித்து,
அரக்கனின் வெறிக்குரல் போல் தொனிக்கும் அந்த ஒலி என் என் நெஞ்சத்துள் வெறித்தனமாகப் புகுந்து என் ஆசைகளை, எண் ணங்களை, இன்ப நினைவுகளைக் குத்திக் குதறிப் பிய்த்து எறி கிறது. பழீலாவுக்குத் திருமணம்! உள்ளத்தையும் உடலையும் என் னிடம் அர்ப்பணித்துவிட்றி அவ னுக்கு எதைக் கொடுக்கப்போ கின்ருளோ?
"பாவம் பழிலா!'
அடி வயிற்றில் இருந்து சுழி யோடிவரும் பெருமூச்சோடு கல ந்து மறையும் வார்த்தை.
ம க் க ளி ன் அபிலாஷைகளை நிறைவேற்றிவைக்கும் தந்தை யின் ஸ்தானத்தில் இருந்து பார் த்தால் பழிலாவின் தந்தை செய் தது மகா தவறு.
நான் என்ன ஒன்றுக்கும் லாயக் கற்றவன் என்ற நினைப்பா?
என் உழைப்பின் ஆழத்தில், மிதக்கும் என் குடும்பத்தை ஒரு முறை நினைத்துப் பார்த்தால் ஒருவேளை என் திறமை புலப்படக் கூடும்.
வேலி இடுக்குகளின் துளையூடே என்னையே துருவித்துருவிப் பார்க் கும் வண்டு விழிகளை எண்ணித் தான் என் அழகை மதிப்பிட வேண்டுமா? அத்தனையும் வெறுர பித்த லாட்டம்.
*உன் விருப்பத்துக்கெல்லாம் மசிந்து கொடுக்க என்னுல் முடி யாது’ என்ற அசட்டுக் கெளரவத் தில் ஜனித்த வைராக்கியத்தில்,
பணத்திமிரில், புதுமாப்பிள்ளை தேடி மகளுக்குக் கலியாணம்
செய்து வைத்து அவளின் விழி நீரில் அழகு காணும் பழிலாவின் தந்தையின் சுயரூபம் என் மனக் கண்ணில் விரிந்து விஸ்வரூப மாகி.
*சை மனிதனு’!

என்ற தொனியில் மடிகிறது. தலை உச்சியில் விண்ணென்ற வலி.
மகளின் கலியாணத்தில் தலை யிட்டுக் குழப்பியதாகக் குற்றஞ் சுமத்திப் பிழந்த தலைவெடிப்பு இரணத்தில் சுரக்கும் தினவை வெறும் விரல்களின் வருடல் தணி த்து விடுமா?
'அவளின்றி என் வாழ்க்கையில் சாந்தி நிலவாதா?
அதே சூனிய வளையம் மின்னி மறைகிறது.
‘கேட்டியாடி புள்ள செய்திய”* "என்னயாங்காது? *உடையார்ர பழிலாப் பொட்
டைக்கு வவுத்தில் நாலு மாச மாண்டி" !
“அடியலாத்தா! போனமாயந்
சிTன் அவளுக்குக் கலியானம் (Մ)ւգ (65& !!
‘எல்லாம் அல்லாடகுதறத் துடி. இல்லாட்டி புரியன் காறன் அவ ளத் தலாக்குச் சொல்லிப்போட்டு ஊட்ட போய்ப்படுப்பான?
சந்திக்குச் சந்தி பட லை க் கு ப் படலே இதுதானபேச்சு??
ஏழனப் பார்வை சிந்தும் கண் களின் தாக்குதலில் என்மனப் பறை அதிர்கிறது. மனவேக்காட் டில் உள்ளம் குமைகிறது.
இந்தச் சம்பவம் தரும் அதிர்ச் சியை அவளால் தாங்க முடிகிற தா?
இதயம் சுக்கல் சுக்கலாக நொ ருங்கிச் சிதறிவிடாமல் வைரம் பாய்ந்து இருப்பதற்குக் காரணம் அவள் வயிற்றில் உறையும் என் நினைவுச் சின்னமா?
மாலையின் பிரசவ நோக்காட் டில் இரவு ஜனிக்கிறது.
தன்மானம் காய்ந்த சருகாக உதிர்ந்து விட்டதாக உடையா ரின் உள்ளம் உறுத்துகிறது. இழ ந்த தன்மானத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் உட்ையார் வீட்டிற்குள் நுழைகிருர் .
49
தந்தைக்குந், த ந்  ைத க் கும் வார்த்தைப் பரிவர்த்தனை.
'உடையார் உங்கட மகளுக்கு மாப்பிள்ள கேட்டு எனக்கிட்டயே வாறங்களே நீங்க செஞ்ச காரியங் களை கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தங்களா??
"ஆண்டவனுக் காவண்டி அத யெல்லாம் மறந்துட்டு."
எண்ட சொத்தையில் செருப் பால அடிச்சாப்பில் சொன்னதை எல்லாம் மறந்துட்டு, ஊரெல் லாம் காறித்துப்பற அந் த ப் பொட்டய எண்ட மகன் க யாணம் பண்ணிக்கணும் எண்டு சொல்றங்க என்ன?”
உடையாரின் முக ம் சு ன் டி, உடல் கூனிக் குறுகி.
அதை என்னல் சகிக்கமுடியும் ஆனல்..? ஆனல்.?
"பழிலாவை நான் கலியாணம் செய்துக்கிறேன்."
*டேய் உண்ட தலையப் புளந்தத இதுக்கிடையில மறந்துட்டயா? வார்த்தை த டி த் துப் பறக் கிறது. 1.
"அவள் எனக்கு ஒரு துரோக மும் செய்யவில்லையே!
* எலிகடிச்ச பழம் எங்கறதை நினைச்சிப் பாத்தயாடா?
அந்த எ லியே நான் தான் என்ற திருப்தி போதும்."
துலைஞ்சிபோ ! நீ எ க் 3 க டு கெட்டாத்தான் எனக்கென்ன'
மசிந்து கொ டு க் கா த தி ல் இரும்பு வளைகிறது.
உடையாரின் கண்களில் மின் னும் கனிவு இதற்கு முன் எங்கு போய் இருந்ததோ?
*களுக்...!! பழிலாவின் இதய நாதம்.
என் இருதயத்தைக் கப்பிக்கிட க்கும் இருளைக் கிழித்து, செவிப் புலனில் ரீங்கார மிட்டுக் கொண்
டே இருக்கிறது.
(யாவும் கற்பனை

Page 26
LOL0LL0sOLO0sO0L00LL0LLL0LL0cLOLOLSAeSOOLLLsL0S
திருமலை-தசஷிணகான சபா
gÄSSPEZÉSRE&SR9EÄSSR 35 i Sør G. Go T se Gär EÖSSE&S23E&SREÄSSR
ன்னிசை யாலே ஈசன் மன
தை எள்தில் உருக்கி இன் னருள் வரம் பெற்ற இலங்கை வே ந் த ன் இராவணன் ஏத்திய தாக இயம்பிடும் எழில் மிகு தல மே திருகோணமலை. மே  ைட ஏறித் ** தொம், நம்' என்று ரா கம் தானம் பாடின் சபையோர் கை கொட்டிக் கூச்சல் போட்டு ஒவ்வொருவராய் எழுந்து, கடை சியில் வெற்று மண்டபத்திற்கே பாடவேண்டிய நிலையில், இருப தாம் நூற்ருண்டிலும் ஒரு காலத் திலே திருகோணமலையிலும் இருந் ததுதான் என்று இன்று சத்தியம் செய்யினும் நம்ப முடியாத நிலை யில் இருக்கிறது திருகோணமலைப்
பெருமக்களின் கலை ஆர்வம். அன்று இராகத்தைக் க ன் டு எள்ளி நகையாடிய ம க் கள், இன்ருே இது என்ன கச்சேரி?
இராகம் ஸ்வரம் பாடத் தெரி யாத நிலையில் இவர் எதற்காக மேடையேறினர்? என்றெலாம் கேட்டு, இன்ன ராகம் பாடப்படு கின்றது என ஊகித்துக் கொள்வ தற்குத் துடிக்குந் நிலைக்கு வந்து விட்டனர் என்ரு ல், அதில் பெரும் பங்கு திருகோணமலையில் சென்ற பதிஞன்கு வருடங்களாக உழை த்து வரும் *ಆಹ್ವ$6ಶT dar6Oraft r” விற்கே உரியது.
1947-ம் ஆண்டு பங்குனி மாதம் நான்கு மாணவிகளுடன் உயர் திரு. சுவாமி நடராஜானந்தா அவர்கள், சம்பிரதாயப்படி இச் சபாவிலே சங்கீத வகுப்புக்களை ஆரம்பித்தார். யும், பொழுதொரு வண்ணமு மாய் வளர்ந்த இக்கலாசாலை
நாளொருமேனி
மூன்று வாரங்களுக்குள் ஏராள மான குழந்தைகளைத் தன்னுள். அடையப் பெ ற் றது. செல்வி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணி யம் அவர்கள் எதுவித வேதன மும் பெருது, இறைவியின் பணி யாய், இசைக்கலையை வளர்க்கும் பொருட்டு, இலவசமாய் வாய்ப் பாட்டுச் சொல்லி வைப்பதாலே பல தர்ம கர்த்தாக்களின் நன் கொடைகளுடன் 1947-ம் ஆண்டு ஆடி மாதம் வயலின் உபாத்தியா யர் ஒருவரை நியமித்தனர். இக் கலாசாலையில் உ ப த லை வ ரா ய் நின்று உயிர் கொடுத்த திருவா ளர். இராமச்சந்திரா அவர்கள் (திருகோணமலை இந்துக் கல்லூரி யிலிருந்து மாறிய தலைமை ஆசிரி யர்) சங்கீத அறிவுள்ளவர். மாத மொருமுறை கு ழ ந் தை களைப் பரீட்சித்து, அவர்களின் வளர்ச்சி கண்டு பெரிதும் பாராட்டினர். இசைப்பணியின் வளர்ச்சி கண்ட சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்கள் வகுப்பு நடாத்த இந் துக் கல்லூரியில் ஒர் அறையைக் கொடுத்து ஆசீர்வதித்தார்கள். கலாசாலையில் வருடாந்தப் பரீட் சைகள் நடாத்தப்பட்டு மாணவி யர் வகுப்பேற்றப்பட்டனர்.
1948-ம் ஆண்டு வீணை கற்பிப் பதற்கு ம் பூரீ கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்னும் பிராமணர் ஒரு வர் இந்தியாவிலிரு ந் து வர வழைக்கப்பட்டு முகா ந் தி ர ம் பாலசுப்பிரமணியம் அவர்களால் போசனமும், இருப்பிடமும் இல வசமாய்க் கொடுக்கப்பட்டதால் நூற்றைம்பது ரூபா வேதனம் பெற்றுக் கற்பித்தார். இப்பணம்

அவ்வப்போது நடாத்திய விழாக் களிலே சேர்க்கப்பட்டதே. இக் கலாசாலையின் பரிசுத்த நோக்கத் தையும், உண்மையான சேவை யையும் கண்டு நாளாந்தம் மாண வியர் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். இரு வருடங்களுக் குள் எழுபத்தொரு மாணவிய ரைப் பெற்ற இக்கலாசாலை 1951-ல் வட இலங்கை சங்கீத சபையினர் நடாத்தும் பரீட்சை களிற் கலக்க மாணவியரை அனுப் பியது. இப்பரீட்சைகளிற் பங்கு பற்ற ஒரு சில வருடங்கள் கொழும்பு, யாழ் ப் பா ண ம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டாலும் பின்னர், "வடஇலங்கை சங்கீத சபை"யோரை த கூழி ண கான சபையோர் பலமுறைகளில் வேண்டியதால் தற்பொழுது ஆசி ரியர் பரீட்சை தவிர ஏனைய பரீட் சைகள் திருகோணமலையிலேயே நடாத்தப்படுகின்றன, வ ரு ங் காலத்தில் ஆசிரியர் பரீட்சையை யும் திருகோணமலையில் வைப்ப தற்கு அவர்கள் மனங் கனிந்து உதவுவார்கள் என்பது திண்ணம். அம்பாள் உள்ள நிறைவே நோக் கமாகக் கொண்டு நடக்கும் இவ் விசைக் கல்லூரி இறைவி அரு ளால் இதுவரை நூற்றுக்கு நூறு சித்திகளே பெற்று வந்துள்ளது. நாளாந்தம் மாணவர்கள் அதி கரித்ததால் ஆசிரியர் பற்ருக் குறை ஏற்பட்டுள்ளது. திருவா ளர்கள். எஸ். அருள்நந்தி, கே. கனகரெத்தினம், புரக்டர் சிவ சுப்பிரமணி! ம், இ  ைற வ ன டி யெய்திய திருகோணமலை-முன் ஞட் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. சிவபாலன் முதலியோ ரின் உதவியோடு சென்ற இருவரு டங்களாக வருடத்துக்கு 1800-00 ரூபா வீதம் நன்கொடையாக அர சாங்கம் வழங்கி வருகின்றது. கலை ஆர்வத்துடன் ரூபா 150-00 பெற்று இசை கற்பிக்கத் திறமை வாய்ந்தவர்க அமர்த்துவது தான் இக்கலாசாலைக்குப் பெரும் பொறுப்பாகி விட்டது.
5 ΙΙ
1957-ம் ஆண்டு ஆசிரியர் பரீட் சைக்கு செல்வி. பொ. தேவி என்னும் பெண் தோற்று விக்கப்பட்டுச் சித்தியெய்தினர். இவ்விசைக் கல்லூரியினுல் இந் திய சர்வ கலாசாலைக்கு அனுப்பப் பட்ட இரு மாணவிகள் தற்பொ ழுது **டிப்ளோமா' பட்டம் பெற்று வந்துள்ளனர். அவர்கள் செல்வி. இராஜேஸ்வரி, சந்திர சேகரம், செல்வி. விஜய செளந் தரி, தாமோதரம்பிள்ளை ஆவர். இவர்களில் ஒருவர் வேதனத்தின் தரம் பாராது ஆசிரியையாகக் கடமையாற்றுவதும், ஆசிரி ய ர் பரீட்சைக்குத் தோற்றிய ஒரு மாணவியும் ஆசிரியையாகக் கட மையாற்றுவதும் குறிப்பிடத்தக் 5 GöT .
இக்கலாசாலை மா ண வி ய ர் இங்கு பலபோட்டிகளிலும் பங்கு பற்றிப் பல பரிசில்கள் பெற்றுப் புகழீட்டித்தந்துள்ளனர். இம் முறை கொழும்புத் தமிழ்ச் சங் கத்தினர் நடா த் தி ய இசைப் போட்டியிலும் கலந்து பரிசில்கள் பெற்று மக்களின் பாராட்டுதலை யும் பெற்றனர். காரியதரிசியின் அறிவித்தலை ஏற்று எத்தனையோ கஷ்டங்களிருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாது இசைத் திற மையைக் காட்ட எண்ணிக் கொ ழும்புக்குச் சென்று போட்டியில் பங்கு கொண்டனர். அதிலே ஏமாற்றம்? திரைமறைவில் நடந் தவை சந்திக்கிழுக்க வேண்டிய தில்லை. சுருங்கச்சொல்லின் அங்கு திறமை மதிக்கப்படவில்லை. ரா கம், தானம், பல்லவி பாடி, கேட் டவற்றிற்கெல்லாம் திரிகாலமும், நான்காம் காலமும் அனுலோமம் பிரதி லோமம் செய்து கேட்ட படியெல்லாம் இராக மாலிகை யாக்கிய ஒரு பெண்ணை விலக்கி *ஹம் ஸத்வனி** இராகம் பாடத் தெரியாது தத்தளித்து, தாரஸ் தாயியில் மத்யமம் சேர்த்து ஸ்வ ரம் பாடிய பெண்ணைப்பரிசு டன் அனுப்பிய செயல் திருமலை மக்
5D o) ,

Page 27
52 g
கட்கு மட்டுமல்ல, அவர்களின் அரங்கேற்றத்தைக் கொழும்பு மேடையிற் பார்த்த பல சங்கீதா பிமானிகளுக்கும் முகத்திலே கரி பூசியதாக முடிந்தது. (இசையின் மகத்துவம் பாதிக்கப்பட்டது என் றும் இயம்பலாம்) கொழும்புச் சங்கீத ரசிகர்கள் இந்நிலையை நன்குணர்ந்து த ரா மா க முன் வந்து ஆறுதல் வார்த்தைகள் இயம்பியதையிட்டு த கூFண கான சபையினர் கொழும்பு வாழ் ரசி கர்களின் பெருந் தன்மையைப் பாராட்டுகின்றனர்.
இக்கலாசாலை எதுவித வேதன மும் பெருது இசைத் தொண்டு புரிந்தும், பல விழாக்களிலும், கோயில் உற்சவங்களிலும் பங்கு
*westwWww Kolkw
கொண்டு சிறப்பித்தும், பணம் போதாமையால் விருத்தியான முறையிற் காரியம் ஆற்ற முடி யாது தவிக்கின்றது. பல இசை, நாடக விழாக்கள் நடாத்திச் சேகரித்த பணம் கலாசாலையின் பெயரால் மிகுந்திருப்பதால் பல தர்ம சீலர்களின் உதவியுடன் ஒரு கட்டடம் எழுப்புவதே இக் கலாசாலை யி ன் த ர் போதைய குறிக்கோளாகும். கோணேசர் பூமியில் இயங்கும் இக்கலாசாலை யின் தின வரவுப் பதிவுப் புத்தகத் தில் தற்போது நூற்றிநான்கு மாணவியர் உளர். இத்தகதின கான சபா செய்து வரும் இந்த இசைத் தொண்டினை ஆதரிக்க வேண்டியது இலங்கை வாழ் சங் கீதாபிமானிகளின் தலையாய கட
60) LD uUfT@5 ub.
SLLSL LLSLSYLSLSSLL LSLS LSLS LSSSLL LSLSLLLSLSLLL LSLS LSLSLL LSSLL LSLSLL LLSLLLLLL
குழந்தை அறிவு
9ேழந்தைகளை வளர்ப்பது பெரிதல்ல; அவர்களின் அறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது. அல்லது தானே வளரும் அறி வையாவது தடைப்படுத்தாமலிருப்பது நல்லது.
'சோற்றை உருட்டாதே! உருட்டினல் தாய் தகப்பனை உருட்டி விடுவாய்!” என்று சொல்லாதீர்கள்.
'சோற்றை உருட்டிக் கொண்டிராதே! விரைவாய் சூட்டோடு சாப்பிடு! இன்றேல் செரிக்காது!’ எனச் சொல்லுங்கள்.
** சாப்பிடும் போது ஒரு விரலை நீட்டிக் கொண்டே சாப்பிடா தே! சாப்பிட்டால் குடும்பத்திற்கு ஆகாது’ எனச் சொல்லாதீர்கள்
* சாப்பிடும்போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிட்டால் விரல் நகத்தால் கண்ணுக்கு ஆபத்து’’ எனச் சொல்லுங்கள்.
** இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே! போனல் சாஸ் திரத்திற்கு ஆகாது’ எனச் சொல்லாதீர்கள்.
** இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே! போனல் எந் தக் கழுதையாவது உதைக்கும்’ எனச் சொல்லுங்கள்.
- கி. ஆ. பெ விசுவநாதம்.

கலைஞன்
- செ. யோகநாதன்
ழுத்தாளர் கந்தசாமி பேணு 6T“富。 உதறிக் கொண்டார். மனதுள் எழும் ரசவிகாரங்களை எழுத்தில் வடிக்க முடியாத நிலை
யின் ஆத்திரம் புருவக் கீற்று களின் நெளிப்பினில் தெரிகின் றது. அரிச்சுவடியைப் பார்க்
கும் அரிவரி மாணவனின் கண் சுழற்சி. வரையறை செய்யா மற் தாள்களில் கீரு யும், வட்டமாயும் கீறுகின்றர். பேணுவிற்கு, எழு தும் விேட்கையின் உற்சாக வேர் அழுகிப்போய் விட்டது.
மேசையிலே தட்டு வைக்கும் சத்தம்.
கந்தசாமி நிமிருகின்ருர் . அவன் ஹோட்டல் பரிசாரகன்
மேசையில் வைக்கப்பட்ட தட் டுகளில் ருெட்டியும், இறைச்சி யும், முட்டையும் வைக்கப்பட் டிருக்கின்றன.
உணவைப் பார்க்கும் பொழுது வயிற்றின் வெற்றிடம் நிறை வதைப் போன்ற மனப் பொலிவு. ஆளுனலும் மன அடித்தளத்தில் தாளமிடும் அந்தக் குரல் ஒலிகள்
O 8 g tS s té
இன்றைக்கு மலருக்கு அவசியம் கதை தந்து விடுங்கள். கடைசி நா ள் . க டைசி நாள் ... LD (D is gil வி டா தீர் கள்."
“ LJ 35F GOD Lo ” பத் திரி  ைக ஆசிரியரின் கு ர ல் செ விப் ப்றை யுள் வச்சிர மா ய் ஒட் டி க் கொ ண் டு வி ட்
-தி
க ற் பனை யின் ஆக்கிர மிப்பு அவ ரில் கதிர்மி னுங்காநிலை வெள்ளைத் தாளின் கச ங் க ல் குப் பைகள் கிழி யு ன் டு ம் , க ச க் குண்
டும் சிதறு

Page 28
54
கின்றன. விடி நிலாவின் வெளி றல் மன தெங்கும் வியாபிக்கிறது;
அதோடு நெடுமூச்சுக்கள். பேணு ,
வை மேசையில் வைத்துவிட்டு, முள்ளுக் கரண்டியையும் கத்தி யையும் கைகளில் எடுத்து முட் டையில் குத்தி வெட்டுகின்றர். குருகுருத்துத் துணுக்காகும் மஞ் சட கரு, களில் படிகின்றது.
2
"சீ! எவ்வளவு துப்பரவுகெட்ட நாய்ப்பிறவிகள் நி னை வு க ள் வாழைமடல்களைப்போலக் கழரு கின்றன. கடைசியில் மன நிகழ்ச் சிப் பரப்பில் வெறுங்குருத்தாக அந்தச் சம்பவங்கள் அருக்கூட்டு கின்றன.
தலைநகரைக் கிழித்துக்கொண்டு
செல்லும் பிரதான வீதியின் இடதுபுற மருங்கிலே உள்ள 'ஹோட்டலின் இரண்டாவது மாடியில் இப்பொழுது அவர்
இருக்கின்ருர், குளிர்சாதன வசதி இணைக்கப்பெற்ற அவ்வுல்லாசத் தனியுலகிலே கூட அவருக்கு, கற்
பனை கைப்பிடிக்குள் வசப்பட வில்லை.
‘ஹோட்டல் வாசலில் ஏறு
கின்ற அவர், ஹோட்டலின் மருங்காக ஒரு முறை பார்க்கின் ருர் . அந்தக் கணத்திலே நெஞ் சிற்குள்ளே யாரோ சாக்கடை நீரை வீசி யெறிந்த உணர்வின் தகிப்பில் அவரது பார்வை அவி ந்து சுருங்குகின்றது.
மனம், அருவருப்பில் மூக்கைச் சுளிக்கிறது.
ஹோட்டலுக்கு ஒரமாக உள்ள ஒழுங்கை நீளமெங்கும் பிக்கீஸ் பெட்டித்துண்டுகளால் அடைக் கப்பட்ட சிறு வீடுகள், அவற்றின் வாசற்புறத்திலே நிர்வாணமாக, சளிவழியும் அசிங்கமான முகத் தோடு குழந்தைகள் திரிகிறர்கள்,
"இவைகள் வீடுகளா?
கரண்டியின் கூர்நாக்கு
நெஞ்சப் பற்கள் நரும்புகின் றன. வீட்டு வாசல்களிலே இலை யான் மொய்க்கும் மலத் துணுக்கு களும், ஜல வடிசல்களின் வடுக் களும், அழுகிய பதார்த்த அழு கல்களும் நித்திய வாசமாகிவிட் டன. சிக்குப் பிடித்த தலைமயி ரோடு பீழைசாறும் கண்களைத் துடைத்துக்கொண்டு அவர் முன் பாத ஒரு பிள்ளைத்தாச்சி குள்ள வாத்துப்போல அசைந்து அசை ந்து நடந்து வருகின்ருள். அங் கங்களை மூட முடியாமல் மேலுங் கீழும் கிழியுண்டும், நைந்தும் அழுக்கில் தோய்ந்து கிடக்கின் றது அவளுடைய ஆடை, கட வாய் அவிந்து, வீணிர் படிந்து காய்ந்துவிட்ட அயறுப்பொருக்கு
கள் வாய் அசைவில் உதிர்கின்
றன.
* தொரை. தொரை." சொருகு படர்ந்த அ வளி ன்
நெற்றியிலிருந்து, பொருக்கு வெ டித்துச் சிதல்வடியும் கால்வரை யிலும் அவரது நோட்டம் வெறுப்
புமிழ ஏறி இறங்குகின்றது,
இளஞ்சிவப்பில் ஒரு படம் போல, சுகாதார விழாக் காட்சி
கள் அவரின் மனதுள் நீர்க்கோலம்
போடுகின்றன. அ வ ர் த ர ன் சென்ற கிழமை நடந்த சுகாதார விழாவில் ஆரோக்கியமான தாய் க்கும் சேய்க்கும் பரிசளித்தார். அதைப் பார்த்த அதே கண் களால்.
அவர் கைகள் நெட்டி முறிக் கின்றன. "ஆ! இந்த உலகந்தான் எ வ் வ ள வு இனிமையானது. ஆஞ்றல் தூய்மையின் தன்மையை நோக்காது, அழுகலில் மனத்திரு ப்தி அடையும் இவர்கள், இவ் வினிமைக்குக் குந்தகம் ஆகின்ருர்
3, Giant!’
3
வெள்ளைக்கரு நன்ருக வெட் டப்பட்டுத் தீய்கிறது. நிலவுக்

கதிர்களின் உதயம் போல, யன் னல் வழியாக அவருக்குக் கதை யின் கரு ஆடி அசைந்து அடியெ டுத்து நடந்து வருவதைப் போ ன்ற மனக் கிளுகிளுப்பு. ‘மனித சமுதாயம் இன்பத்தைத் துய்ப் பதற்காகக், கலைஞன் மனித சமு தாயத்திற்குத் தன்னுடையபேன வின் வன்மையால் உல்லாசப் பூங்கா அமைத்துக் கொடுக்கின் முன்?
நம்பிக்கையின் ஒளி, வார்த்தை களில் உமிழ்கின்றது.
யன்னலோரமாக அவர் நிற்கின் ருர். கைக்குட்டையை எடுத்து, சட்டைக் கால ரை மிதத்திக் கழுத் தைத் துடைக்கிருர் . ஆயாசப் பெருமூச்சுவிட்ட அவரின் கண் கள் திடீரென வெளியே எகிறு கின்றன.
மீன் கெளவிய தூண்டிலைப் போல, மனம் நம்பிக்கையிற் துள்ளுகின்றது. இலேசான மனத் தூற்றலின் குளிப்பாட்டலிற்சிலிர் க்கும் பசுஞ் செடியாகின்றது மன்ம்.
பக்கீசு வீடுகளின் புறமாகஉள்ள *கக்கூஸ்" சுவரிலே, ஒருவன், ஒரு பெரிய படத்தை ஒட்டிக்கொண் டிருக்கின்ருன். அது
நிர்வாணமான பெண் ணி ன் Lull th:
யாரோ அவளை அணையத் துடி த்து எதிரே நிற்பதுபோன்ற மோகமயக்கத்தில், அவள் தன் னுடைய உடலை நெளித்து இனக் கவர்ச்சியை அங்கங்களின் ஒவ் வொரு வளைவு நெளி வி லு ங் காட்டி நிற்கின்ருள்.
அவருடைய மனம் நெகிழ் வுணர்வில் முறுகுகின்றது. சூரி யனை நோக்கித் தாவும் கொடி யைப்போல நெடுங்கோடாக மன தின் கற்பனைகள் சிதறுகின்றன.
மேசையை யன்னலோரமாக நகர்த்தி ஒரு வெள்ளைத் தாளில் பேனையை ஓடவிடுகின்ருர் எழுத் தாளர். to
55
GLort gaf எழுதிய வேளையில் அவரின் வா யு ம் ணுமுணுக்கின்றது.
%蠶為凱.嚮露 வெறும் படமில்லையடி. காந்தச் சிலையடி நீ! உன்னை வைத்து என்றுமே அழியாத அமர இலக்கியத்தை நான் படைக்கிறேனே, இல்லையா
Luftfi ”
மீண்டும் அவளைப் பார்க்குந் துடிப்பு. அவளின் அங்கங்களிலே துளும்புவதெல்லாம் வெறும் வர் ணப் பூச்சாக அவருக்குத் தெரிய வில்லை. செழுமையான தசை யின் மினுமினுப்பில் மனிதரைக் கிறங்க வைக்குங் காந்தர்வ மோ கினியாய் அவள் காட்சியளிக் கிருள்.
எழுத்தாளர் மீண்டும் வெளியே பார்க்கிருர்,
மோகினி!
மோகினிக்கு கீழே
அவரது கண்கள் ஊசிக் கூர்மை யாகின்றன.
மின்னும் கண்களின் பார்வைக் குள் அவர்கள் இருவரது உருவ மும் ரம்பக் கூர்மையிற் பாய்ந்து நெஞ்சைத் தாக்குவது போன்ற நெட்டுயிர்ப்பு, நன்னிலைச் சமுதா யத்திற்கு இடங்கள் தரும் முள் ளாணிகளாக அவர்கள் இருவரும் நடந்து வருகின்றர்கள்.
ஆணும், பெண்ணும். நெகிழ்ந்து சரியும் உடையிலே அவளின் உடற்பாகங்கள் தெரி யத் தவிக்கின்றன. அவளைத் தாங் கலாகப் பிடித்துக் கொ ன் டு அவன் நடந்து வருகின்றன். தள் ளாடும் அவளுடைய கரங்கள், அவனின் கழுத்தைச் சுற்றியிருக் கின்றது. அவர்களின் நிலையில் குடியும், விபசாரமும் கோடிட் டுத்தெரிவது போல அவர் உணரு கின்றர்.
மேலெழுந்து குமுறும் ஆத்தி ரப்பிழம்புகள், நரும்பலில் சுவா லையிட, கால்கள் தரையை உரா

Page 29
56
ய்ந்து அழுத்துகின்றன. அந்த ராத்மாவுள் ஒரு பாவ காரியத் தை நேரே நின் று பார்க்குங் குற்ற உணர்வு விஸ்வரூபமெடுக் கின்றது.
"சமுதாயம் நல்வழியிற் செல் லும் வேளையில் இங்கே விபசார மும். கு டி யு ம். சாக்கடைப் பிறவிகள்.
அவரது நெஞ்சம் கொதிப்பில் அனற் சட்டியாகின்றது. அவர்கள் இருவரும் கக்கூசிற்குள் போகக் காலடி எடுத்து வைக்கிருர்கள்.
அவளின் பின்னே அவன் உள் ளே புகுகின்றன்.
4.
பேனையையும், தாளையும் அள் ளிக் கொண்டு வெளியே போக விரைந்தவர் மீண்டும் யன்னலடிப் பக்கம் செல்கின்றர்.
கக்கூசுச் சுவரை நோக்கிய கண் கள், திடீரென்று திகைக்கின்றன. ஒருவன் மோகினியின் படத் தில் கை வைத்து இழுக்கின்றன். அகழியைத் தாண்ட விரையும் குதிரையினைப்போல, அவர் முகத் தினில் இன உணர்வுகள் வேகர மாய்ப் பொங்கின.
* டேய்". அவர் தன்னை மறந்து கூவினர். கோபத்தால் அவரின் உடலே eg - liġi
தட தடவென்று படிகள் எழுப் பும் ஓசை, நிகழப்போகும் விப ரீதமொன்றிற்கு அர்த்தம் கற்பிக் கின்றது. 5
வீதியின் ஒரத்தில் நின்ற பொலிஸ்காரனை அவர் கைதட்டி அழைக்கின்றர். அவரின் பின்னே அந்த ஹோட்டல் முதலாளி நிற் கின்ருர் .
சமூகத்தின் இழிவைத் துடை க்க வீறுகொண்ட அவர்களின் கண்கள், கரங்கள் எல்லாம் இய க்க சக்தியின் உச்ச நிலையில் உழல் கின்றன.
என்றுமே சேரியின் அழுகலுள் நுழையாத கந்தசாமி, ஊழலைச் சுத்திகரிக்கச் செல்லும் வீரனின் பெருமிதத்தோடு முன் னே நடக்கின்றர்.
கக் கூஸ் வாசல். மனிதனே நுழையமுடியாத, அசுத்த நிழல் மறைக்கும் நரகம். சுகாதாரத்தின் கு ர ல் வளை யை அங்கே நசுக்கிக் கொன்று விட் Lstri 56ir.
அவர்து கண்கள் சாத்தானை இழுத்து அடிக்கும் சாட்டையின்
சீற்றத்தோடு, வாசலுள் தாவு கின்றன.
நாற்றம் மூக்கைப் பிய்க்கின் நிறது.
குமட்டி ஓங்காளிக்கும் வாயை
சமுதாய
மூடுகிருர் கந்தசாமி. ஆனலும் ,
நடையின் வேகம் குறையவில்லை.
திடீரென்று வீலென்ற ஒலி. உலகைத் தரிசிக்கும் சிசுவின்
ரல. ಆಬ್ಜಿ? வியப்பில் திடுக்கிட் Li _intri .
கக்கூஸின் நடுமையத்தில் அவ ரது கண்கள் சுழன்றன.
நிர்வாணமான ஒரு பெண் : சுவர் ஒரமாகச் சாய்ந்து ஒரு களித்தபடியே தியங்கிக் கொண்டு அனுங்குகின்ருள். அவளுக்குக் கீழே அவளின் பிரசவத்திற்குப் பாயாகக் கிடக்கிறது நிர்வாண மோகினியின் பட ம். அ த ன் மேலே கருப்பை கக்கிய திசுத் துணுக்களும், உடைந்த னிர்க் குடமும், நஞ்சுக் கொடி யும்.இவைகள் சேருடித் தள தளக்கும் படுக்கையில் கொப்பூழ் கொடியோடு கிடக்கும் குழந்தை! மோகினியின் மேல் பு தி ய மோகினி!
நாற்றம் மூக்கைத் துளைக்கின்
fD gil.
கலைஞர், பொலிஸ் கா ர ఓr அழைத்துக் கொண்டு வீதிக்குச் செல்கிருர் .
‘நாய்ப் பிறவிகள்!" மனம் அருக்குளித்துக் குழை கின்றது.
Liar

5-8-62 திருமதி சிரோண்மணி, பொன்னுத்துரை பிற்பகல் 7-30 ட8-00 வரை .
சுத்தசாவேரியில் தெலுசு கொண்டி" செளககாலத் தில் அமைந்து விட்டது. அதனல்
**தாரணி
மேளம் கட்டவில்லை. கெம்பீர மான சாரீரம், சாதகக் குறை வால் அடிக்கடி அடைப்பதும், எடுபடுவதற்கு இரு மு வ தும் செருமுவதும் கச்சேரியின் அழ கைக் கெடுத்தது. சாரீரம் இப் படி அடிக்கடி இடக்குப் பண்ணுவ தற்கு இன்னும் எத்தனையோ கார ண ங் க ள் சொல்லலாம். இதை அறிந்து விலக்கின் நன்று. மத்யம கால சாகித்யமும் இரண்டு காலத்தில் பாட அமையும் சிட் டைஸ்வரமும் உடைய கிருதியா தலால் மு த ல் உருப்படியாய் இதைப் பாடகர் தேர்ந்திருக்க லாம். ஆனல் உருப்படி செளக காலத்தில் அமைந்துவிட்டதே! அடுத்ததாக பைரவி ('ஆசை தீர நினது முகம்") ராகத்தில் சிறந்த பி டி ப் புக் க ள் காணப்படினும் சாதகமின்மையால் ஸ் ரு தி ைய விட்டு அங்குமிங்குமாய் விலகியது நின்று நின்று பாட சாதகம் பண் ணின் நன்று. ராகம் ஒரே ஒட்ட மாய் இருந்தது. ஆறுதலாகப் பாடியிருப்பின் நல்ல பிடிப்புக் கள் சோபித்திருக்கும். தாரஸ்தா யிபஞ்சமம் வரை சுத்தமாய் சாரி ரம் 7 பேசியது. மூச்சுத் தட்டப் போகின்றது என்பதற்காக வாயி ஞல் ஸ்ருதியுடன் இணைந்து சில நிமிடம் நிற்க மாட்டாரா என்று இருந்தது. நிஸ ரீகரி ஸாரிஸ நீதப என்னும் பிரயோக ம் ஓட்டத்தால் தலையில் அடித்தது போல் அபசுரம் கொட்டியது. கேட்போரும் மூச்சைப் பிடித்துக்
கேட்கும் இந்த ஓட்ட நிர்ப்பந்
தம், வயலின் வாசிப்பில் நிவர்த் தியாக "அப்பாடா' என்று சொ ல் லத்தோன்றியது. பிடில் காரர் தன்னை மறந்து பைரவி மழை பொழிவதும் பாடகர் நேரம் போ கின்றதே என்று செருமுவதும், ம், ம் என்று பாடி ஞாபக மூட்டு வதும் தெரிந்தது. அன்பர்கள் மனத்தில்" என்னும் இடத்தில் நிரவல் ஸ்ருதி விலகி சாதகமின் மையை மறுபடியும் ஞாபகப்ப டுத்தியது. ஸ்வரத்தில் முதலாம் காலம் அட்சரத்திற்கு 2 ஸ்வரம் அரைமணிநேரக் கச்சேரிக்கு அவ் வளவு நேரம் பாடியிருக்கவேண் டியதில்லை. கடைசியாகப் பாடப் பட்ட ‘கந்தனை நினைந்து’* ஹம் ஸநாதம் இப்படியான அபூர்வரா கங்கட்கு நிறைய சாதகம் வேண் டும். அல்லாமல் சோபிக்கவே சோபிக்காது. மு த லி லி ரு ந் து கடைசிவரை தாளக் கணிசம் நன் ருயிருந்தது. மொடியுலேஷன்" அதாவது சாரீரத்தை அவ்வப் போது அடக்கவும், திறக்கவும் கற்றல் வேண்டும்.
புரட்டாதி 23 பிற்பகல்_7-30 திலிருந்து 8 வரை திரு. V. N.
பாலசுப்பிரமணியம்.
க ச் சே ரி மத்தியமாவதியில் *வினயகுனி என்னும் கிருதியு
டன் ஆரம்பித்தது. மத்தியமாவ தியின் தன்மை குறை நீக்குதல். அதல்ை பெரியோர்கள் கச்சேரி யின் முடிவில் மத்தியமாவதி பாடு வதற்கு உகந்தது என்று வகுத்த னர். இங்கு இப்பாடகர் கிருதி என்பதாலும் இதைத் தேர்ந்தி ருக்கலாம். ஆனல் ஒரு கோணத் தில் இருந்து மட்டும் பார்ப்பதா?

Page 30
58
ஒரு கச்சேரியை சோபிக்கவைப் பதற்கு ராகத் தேர்வு ஒரு முக் கிய அம்சம். சாரீரம் ஸ்ருதியுடன் இணைந்து சோபித்தது. இன்னும் சற்று மத்யம காலத்தில் பாடியி ருக்கலாம். "தியாகராஜா நீ ஸ்ரு தய" என்னும் இடத்தில் அதீத எடுப்பில் ஸ்வரம் சோபித்தது டன் தியாகராசா பக்தியையும் எடுத்துக் காண்பித்தது. இந்த உருப்படியைக் கடைசியாய் பாடி இருப்பின் தியாகராஜா என்னும் இடத்தில் ஸ்வரம் கச்சேரிக்கே மகுடம் சூட்டியிருக்கும்.
அடுத்தபடியாக "அத்தருணம்’ என்னும் பைரவிக்ருதி ராகம் சில இடங்களில் மெச்சக் கூடியதாக இருந்ததாயினும் கலப்பின்றிப் பாடக் கற்றுக் கொள்ளல் வேண் டும். ராகல கூடிணம் க ந் கு ம் போது ஒர் ராகம் பாடுவதாயின் இன்னும் ஓர் ராகத்தின் சாயல் கூடத் தென்படாவண்ணம் பாடு வதே முறை என்பதே முக்கிய மெனக் கற்பிக்கப்படுகின்றது. ஆனல் இங்கு பாடகர் பாடும் போது ராகம் பைரவியாய் ஆரம் பித்து முதல் ஆனந்த பைரவி சாயை காட்டி பின் முகாரியில் தோடியும் கலந்து விட்டதே. "மத பத" எ ன்னு ம் பிடிப்பில் தோடி சாயை பேசியதால் அடு த்த பிடிப்பாக " பத நிஸ" பிடிக்
கப்பட்டபோது இந்த குறையை
நிவர்த்தி பண்ணிய வயலின் வித் வானின்  ைப ர வி பேரூற்றைப் போற்ருதிருக்க மு டி ய வி ல் லை. urt L-35ri சாகித்தியத்தின்
கருத்தை உணர்ந்து பாடியது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்
கால இலங்கை வானுெலி வித்து
வான்களில் சிலர் தேவாரங்களிற் கூட கொச்சை கொச்சையாய் உச்சரிக்கும் இந்த சகாப்தத்தில் அழுத்தம் திருத்தமாய் சொற் களை உச்சரித்தது போற்றவேண் டியதே. க்ருதி சுமாராய் அமைந் தது. "உத்தம பிறவி என்னும் இடத்தில் ஆரம்பித்த நிரவலை தார ஸ்தாயிவரை சென்று நிரவி யிருப்பின் கருத்தை வெளிப்படுத் தப்பாடிய முறைக்கு கேட்போர் க்குரஞ்சகமாய் அமைந்திருக்கும். ஸ்வரம் பாடும் போது தான் பாட கர் தன்னை மறந்தார். ஸ்ருதியும் மறைந்தது. ஸ்வரம் அவ்வப் போது ஸ்ருதி துளி அத்தனை வில கிய தல்லாமல் மற்றுப்படி சுமா ராய் அமைந்தது. கடைசியாய் "நீது மகிம என்னும் ஹம்சாநந்தி கிருதி பல்லவிக்கு ஸ்வரம் சோபி தமாய் அமைந்தது. இப்பாடல் பாடப் பட்ட வேகத்தில் வினய குனியை இந்த இடத்தில் பாடியி ருப்பின் கச்சேரியின் தன்மையே மாற்றமடைந்திருக்கும்.
பொது வாக ஊக்கப்படுத்த வேண்டிய பாடகர். பெரியோர்க ளின் கச்சேரிகள் நிறையக்கேட்டு ராகக்கலப்பின்றிப் பாடக்கற்றுக் கொண்டால் ச ங் கீ த உலகில் நல்ல இடத்தைப் பெறலாம்.
-*ஆனந்த பைரவி?
இலக்கியம்
இலக்கியத்தில் பத்தினி இலக்கியம், பரத்தை இலக்கியம் என்று
கிடையாது. நல்லவை, மோசமானவைதான் உண்டு.
-ஒஸ்கார் வைல்ட்
நோ எழுதியவற்றில் என்றுமே திருப்திஅடைந்ததில்லை. நான் எப்போதும் எனது ஆற்றலுக்கு மீறிச் சொல்லத்தான் முயன்றேன்.”*
-விலியம் போக்னர்

LSLLLLLSLL LLSLSLSLLLSLSLSLSLSLqLqqLSLSLJhK STTTTTT S TTTTTTLLL
செந்தாமரை -
LLLLAALLLLLALLLLLqS LqLLLLLLLJLLLL YLLLLL LLLLLLLLuuuLYLeLeLLLLLLLL O
F rec te Cage eeeee" f
O
o Q .
ஊடுருவி"
reprepre-escoe." حے CooGeo C3C3 Lத்து மாதங்கள் சுமந்து பாடுபட்டுப் பெற்ருள் அன்னை-மகவை. பத்து வருடங்கள் சுமந்து படாமற் பெற்றெடுத்திருக்கிற ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்-செந்தாமரை”யை.
பிரபல நட்சத்திரங்கள். பிரபல டைரக்டர் பீம்சிங். பிரபல இசையமைப்பாளர் விஸ்வநாதன்-இராமமூர்த்தி. -சிருஷ்டி கர்த்தாக்களில் முக்கியமானவர்கள். சிவாஜிகணேசன் எப்படி வளர்ந்தார் என்பதை அறிய வேண் டுமா-காண வேண்டுமா? பாருங்கள் செந்தாமரையை. நடிப்புவரலாற்றுச் சருக்கம்,
பப்பி அக்கா பத்மினி ஆட்டமில்லை, நடிப்போட்டமில்லை, வாட்டசாட்டம்.?
லலிதா-கமலம் வயதுக்கேற்ற வண்ணம். பூவினுக்கருங்கலமே. எஸ். எஸ். ஆர்-கே. ஆர். ராமசாமி நடிக்கின்றனர். ஒரு கட் டம் மனத்தைத் தொடுகிறது.
சந்திரன் ஆக வருகிருர் சந்திரபாபு. ஒளிவீசவில்லை. முகில் மறைக்கின்றதோ? இடைக்கிடை வீசுகின்றது.
மற்றவர்கள் வந்தார்கள். Y. ஆமா! பாட்டு ஒன்றுதானும் நிலைக்கும்படியாக இல்லையே! என்ன சங்கதி?
‘என்ன ப்யா பண்ணறது. இத்தனை புகழடைந்த பின் எங்கள் ஆரம்ப கட்டத்தை வெளியிட்டால் பின்னே என்னவாம்?’’
வசனம் மலரே-மணமே-பிணமே என்கிறது. கதை காய் மடைந்து விட்டது போலும். "பிளாஸ்டர்' பண்ணியிருக்கிருர்கள். ‘கட்! கட்!" வார்த்தையை மறந்து விட்டார்கள். ஓடுகிறது நீளந்தெரியாமல்-நதிபோல-குப்பைகள் இடைக்கிடை மிதக்க.
காட்சிகள்! * பராசக்தி காலத்தைப் பிரதிபலிக்கும் பாணியில் அமைத்திருக்கிருர் அரங்கண்ணல். அவர் என்ன செய்யட்டும்.
பெயர்! ‘செந்தாமரையிலும் பார்க்க * பட உலகின் பத் தாண்டு’ என்பது நன்ருயிருந்திருக்கும்.
நட்சத்திரங்கள் வந்து தாமரையை மலர வைக்க முடியவில்லை. சூரியன் வர வேண்டுமோ? ஓகோ ! இது செந்தாமரை அல்லவே.
வெறும் நிழற் ப()ைடப்-பூ.

Page 31
தேவாரமும்-இசைக் குறிப்பும் (செந்தமிழ்ச் செல்வர் - சைவசமய சிரோன்மணி வித்துவான்
பாலூர் கண்ணப்ப முதலியார் எம். ஏ, பி. ஒ. எல். பேராசிரி யர், தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி சென்னை.)
திருதா சம்பந்தரது இசைக் குறி ப் பை உணர்தற்கு முன் அவருக்குத் தமிழ் இசையின் மாண்பைப்பற்றியும், தமிழினைப் பற்றியும் உள்ள மனப்பண்பை உணர்வோமாக. தென்னுடு தமிழ் இசைக்குப் பேர் பெற்றது என் பதையும், தமிழ்மொழியே இசை அமைந்தது என்பதையும் நன்கு எடுத்து இயம்பியுள்ளார்.
**ஊறு பொருளின் தமிழ் இயற் கி ள வி தேருமடமாதருடனர் வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேத வனமே" என்று பாடிய பாடலின் கருத்து வேதவனமாம் திருமறைக்காடு பிறதேசத்தவர் வந்து இசைப் பயிற்சிக்கு இருப்பிடமாய் அமை ந்தது என்பதாம். இது தமிழ் இசையின் மாண்பை இயம்புவ தன்ருே? இவர் தமிழிற்கு அடை கொடுத்துப் பேசும் இடங்கள் சிலவற்றுள் பண்ணுர் தமிழ், பண் ஞர்ந்த தமிழ் என்று பாடியுள் ளனர். இனி அவர்தம் பாடலில் காணும் இசைக்குறிப்பைக் காண் போமாக.
யாழ் என்னும் இசைக் கருவியி னைக் குறிப்பிடும்போது இன்னி சை யாழ் என்றும் துளை பயிலும் குழவியாழ் என்று குழல் கருவியை யும்குறிப்பிட்டுள்ளார். முழவைப் பற்றிய குறிப்புப் பல இடத்தும் வந்துளது. ‘முழவோ டிசை” என் றும் முழவுள் மந்த ஒலி முழவு ளாடு" என்றும் கூறியுள்ளார். பறையும் இசைக் கருவிகளுள் ஒன்ருகக் கூறப்பட்டுள்ளது.
*நாவினில் பாடல்’ என்ற தொ டர் இசைக் கருவிகளுள் ஐந்த
னுள் மிடற்றுக் கருவியும் ஒன்ருத லின் அக்குறிப்பினை விளக்க எழுந்
ததாகும். அப்பர் போலவும், வள்
ளுவர் போலவும் இவரும் பாட லுக்குப் பண் இன்றியமையாதது என்பதை வற்புறுத்தப் பலவேறு இடங்களில், பாடலுக்குப் பண் என்னும் மொழியை அடைகொ டுத்தே பாடியுள்ளார். “பண்ணி யல் பாடல்’ என்றும், வண்டு களும் பண்ணியைத்தே பாடின என்பதை 'வண்டு பண்ணின்று ஒலி செய்" என்றும் குறித்துள்
ளார். “பண்டான செலும் வண்டி
யாழ் செய்" என்ற அடியையும் காண்க. "பண்ணுரப்பாட வல் லார்க்கு இல்லை பாவமே என் றும் பாடியுள்ளார். "பண்கள் ஆர்
தரப் பாடுவார் கேடிலர்” என் றும் கூறியுள்ளார். ஏழிசையினை "ஆருச் சுவை ஏழ் இசை' என்
றும், "பண்ணும் பதம் ஏழ்’ என் றும் பாடியுள்ளார்.
சம்பந்தரது பாடலில் மொந் தை என்னும் இசைக் கருவி அடிக் கடி குறிக்கப்பட்டுள்ளது. இது போலவே தக்கை என்னும் கருவி யும் காணப்படுகிறது. ‘தழங்கும் மொந்தை தக்கை மிக்க" என் றும், "மொந்தை கொட்ட" என் றும், “தண்டு உடுக்கை, தாளம் தக்கை சார நடம் பயில் வார்’ என் றும், "தமிழின் நீர் மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழ வம் மொந்தை மல்குபாடல்’ என்றும் "முழவம் குழல் மொந் தை முழங்கு’ என்றும், ‘குழலும் மொந்தை விழா ஒலி என்றும், "மண்முழவம் குழல் மொந்தை பறைவளர் பாடல் என்றும் குறிப் பிட்டுள்ளார். பேரி யும் ஓர் இசைகருவி என்பது "பேரி முழங்

கக் குலாவி’ என்ற அடியால் தெரியவருகிறது.
பண்கள் பல. அவற்றுள் செவ் வழியும் ஒன்று. அதனை இவரது தேவாரத்தில் ‘சி  ைற வ ண் டு பெடை புல்கிச் செவ்வழி பாடும் குற்றுலம்’ என்றும், வண்டுசெவ் வழி நற்பண்பாடும்’ என்றும் பாடியுள்ளதைக் காண்க. திரு ஞான சம்பந்தரது மூன்று திரு முறைகளிலும் காணப்படும் பண் கள் கீழ்வருவன. அவை: நட்ட பாடை, தக்கராகம், பழந்தக்க
ராகம், தக்கேசி, குறிஞ்சி, வியா
ழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டரா கம், செவ்வழி, காந்தார பஞ்ச மம், சாதாரி பழம்பஞ்சுரம், புற நீர்மை, அந்தாளிக் குறிஞ்சி என் பன. ஆக 22 பண்கள். இப்பண் கள் முறையில் சம்பந்தர் தேவா ரம் பாடப்பட்டன என்பது அவ் வப்பதிகத் தலைப்பில் இப் பண் பெயர்கள் அமைந்திருப்பதால் அறிகிருேம். இப்பண்களின் பெய ர்களுள் சில இவரது பாடல்களில் உண்டு என்பதைச் செவ்வழிப் பண் குறிப்பிடப்பட்டிருப்பதை முதலில் கண்டோம். இது போல வே “காந்தாரம் இசையமைத் துக் காரிகையார் பண்பாட’’ என்றும் பாடியுள்ளார்.
பெரும் பண்கள் நான்கு அவை மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்பன, இவை யாழ் இயை ந்து மருத யாழ், குறிஞ்சி யாழ், நெய்தல் யாழ், பாலையாழ் எனப் படும். யாழ் என்பது பண்ணையும் இதைப்பற்றிய குறிப்புக்களைச் சிலம்பில் காணலாம். சம்பந்த ரது பாட்டிலும் 'பாலை யாழ்ப் பாட்டுகந்தான்" என்ற குறிப் புக்கானப்படுகின்றது.
ஏழ் இசைகளில் குரல் முதலில் நிற்பது. அதனை இவர் 'பண்புனை குரல் வழி' என்று குறித்துள்ள னர். கிளி ஏன்னும் இசைப் பெய ரை 'கிளிபடும் இன் சொலினர்' என்றனர். ‘துத்தம் நல்லின இசை” எனத் துத்த இசையினைச் சுட்டியுள்ளார்.
மொந்தை என்னும் இசைக் கருவியினைக் குறிப்பிடும் இடங்க ளில் பெரிதும் குழலை இயைத்துக் கூறுவதால் அதற்கு இது துணைக் கருவி எ ன் பது தெரிகிறது. * மொந்தை குழல்’’ என்றதைக் காண்க. முழவில் பல உண்டு ஆத லின் மண்முழவு, மண்ணுர்ந்த முடிவு என்று குறிப்பிட்டு, அதன் அமைப்பினேயும் அறிவிப்பது அறி தற்குரியது.
தெத்தே என்பது இசை ஒலியா
ஒலியாகும் என்பதை 'தும்பி தெத்தே எனழுரல' என்றனர். சலலரி என்பதும் ஓர் இசைக்க ருவி அதனை “சல்லரி யாழ் முழ வம் மொத்தை குழல் தாளமது இயம்ப' என்று முன் வைத்துச் சிறப்பித்துள்ளார். கொக்கரை எ ன் பதும் ஓர் இசைக்கருவி. **கொக்கரை குழ ல் முழவு’’
என்றதைக் காண்க.
இவ்வாறு பல குறிப்புக்கள் ஞானசம்பந்தரது பாடல்களில் காணப்படுகின்றன. அடுத்தாற் போல சுந்தரரது பாடலிலும்
காணக்கிடக்கும் சைக் ப் at 3::: குறி
நம்பி ஆரூரது பதிகங்கள் இந் தளம், தக்க ராகம், நட்டராகம், கொல்லி, கொல்லிக்கெளவா ணம், பழம் பஞ்சுரம், தக்கேசி, காநதாரம, பியந்தைக் காந்தா ரம், காந்தார பஞ்சமம், நட்ட பாடை, புற நீர்மை, சீகாமரம், குறிஞ்சி, கெளசிகம், செந்துரு த்தி, பஞ்சமம் என்ற பண்களிற்

Page 32
பாடப் பட்டன என்பது பதிகங் களின் தலைப்பில் அமைந்த இப் பண்களின் பெயர்கள் மூலம் உணர்கிருேம். இவரது பாடல் களுள் அமைந்த இசை பற்றிய செய்தி யாது என்பதையும் அறி தல் நல மன்ருே.
இசைக்குரிய ஒலிக் குறிப்பினை அழகுற "தென்னத் தெத் தெணு என்று பாடி' எனக் குறிப்பிட்டுள்ளார். சு ந் த ர ர் யாழினைப் பற்றிப் பாடுகையில் *யாழ் முயன்றிருக்கும் ஆரூர்' என்ருர், பேரி முழவும் இவர் பாட லில் காணப்படுகின்றன. * பேரி முழவொலியும்’ என்றனர். ‘ஏழ் இசை” என்ற தொடர் இவர் பாடலிலும் உண்டு. இவரும் இசைக்குப் பண் இன்றியமையா தது என்பதைக் குறிப்பிடுவா ராகி ' பண்ணுர் இ  ைச க ள து கொண்டு பலரும் ஏத்தும்" என்று பாடுகின்றர். பாடல்கள் பண் ணுடன் பாடப் படுதலின் இன்றி யமையாமையி *ւս 6ծr (oծ9 fi Lun L-Gi) gy(y' Grootái stag), 356) கொண்டு தெளியலாம்.
தெனத் '
6密。 திருநாவலூரர் பாடல்கள் நமக் குக் குறைவாகவே கிடைத்திருக் கும் காரணத்தால் இசைகளைப் பற்றிய குறிப்புக்கள் அவர் பாடல்களில் மிகுதியும் அறிதற் கில்லை. ஆனல் கிடைத்த அள வில் இவர் பண்ணைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துப் 1 1st L-9) 5 குப் பண் இன்றி அமையாதது என்பது புலனுகிறது.
தேவாரம் வெறும் தோத்திரப் பாடல்களின் தொகுப்புமட்டும். அல்ல. அவை ஒரு "கலைக்களஞ் சியம்’. அவற்றுள் அறுபத்து நான்கு கலைகளையும் காணலாம். அக்கலைகளுள் ஒன்றன இசைக் கலைக் குறிப்பே ஈண்டு எழுதப் பட்டது. ச ம ய ம் வாய்ப்புழி ஏனைய கலைகளைப் பற்றி ஆய்வோ
D95.
(முற்றும்)
அடுத்த ஊற்றிலேஅடிகளாருடன் ஆறு நாட்கள்
(ஈழத்துச் சிவானந்தன்)
அற்புத உலகின் கற்பனைச் செய்திகள் இன்னும் பல இடம் பெறும்.
Edited and published by S. Arunmoli Thever Residing at 31/3, Hampdem Lane Colombo-6 on October 1st 1962 for the proprietor of the TEEN ARUWI and Printed at Rajeswari Press, 18, Prince Street, Colombo.
淡

இலங்கை எங்கிலும் இணையில்லாது
விளங்கும் ஒரே ஒரு பீடி
ராஜபிடி விஸ்பெசலை
இன்றே வாங்கி உபயோகியுங்கள்.
‘ராஜபீடி கம்பெனி' 399, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அவின்யூ,
கொழும்பு-14.

Page 33
t ܠܳܐ ܙܳ0 ܢ ܢܝܼܒ (Eptimr:5
ിട്ട് (!
GOWT G. Biൂ, T SEA STC
47 MA I FN 5-TREET j9 ("OLOM JAFFF. A Af
 

e.Symbol of life's wtowic dogów, & A KANCView,
w Wekt
e Weowe.
*
}ԼDMEO II, E. 5rg.EET - BAEA AE 5,
AO LJL LJĒŽA
WA AWH