கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனருவி 1964.05

Page 1
–()−F
羽
例)
C이 弧
s
மு
ملخص
L5
9.25
தழுவின
کس
 
 


Page 2
亨 شہ
i R. V. கவுடர்
R. V. G. பீடிகள்
மேலானவை
சிறந்த புகைபிடித்தல்
R.V. G. பீடிகள்
ஒரு சீரான கலவை

2/7 27
தேனருவி பிரசுராலயா
நிதிக்காக
வானெலி நாடகக் குழுவினர்
பெருமையுடன் அளிக்கும்
g. ச ண் முகம்
எழுதிய u 1 /T JU gBI $
டைரக்ஷன் மேற்பார்வை சி. சண்முகம் எஸ். இராமச்சந்திரன் ! மேடையமைப்பு ஒலி-ஒளி - லடீஸ் வீரமணி கே. எஸ். ராஜா
இடம்: பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் |
காலம்: 30, 31-5-64 நேரம்: 6-00
கட்டணம்: ரூ. 10/- 3/. 2/.

Page 3
FOr
Frames
Lenses &
all your Requirements
Visit
LONDON OUALITIED OPTICANS
MOHANILAL C. VASA
207, 2nd Cross Street,
COLOMBO .

t Jr 6 lo
༄་་་༽( (5 N་རྫོང་རྩེ་ O U I F\ | | S
O پ க (IN
O Y CGARS WN
O | ..: aling 器、 N டு
சுருட்டுகளில் சிறந்ததும் இலங்கை மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றதும்
கனகலிங்கம் சுருட்டுகளே தெரிவு செய்யப்பட்ட திறம் புகையிலையினுல் அனுபவம் மிக்க தொழிலாளர்களைக் கொண்டு
நிபுணத்துவம் வாய்ந்த நிர்வாகத்தின்கீழ் தயாரிக்கப்படுவது
கனகலிங்கம் சுருட்டுகள்
தயாரிப்பாளர்களும் வினியோகிஸ்த்தர்களும்
V. Kanagalingam Pillai & Son 7, St. John's Road, COOMBO.
Phone : 5883

Page 4
For
Quality
Jewellery
PATTAKANNU SUBBIAH ACHARY & SONS
soveREIGN HOUSE
No. 102, New Chetty Street, Telegrams : “SOVEREIGNS'''
COLOMBO 13. Telephone: 26 04

With best Compliments from
一手N○○RTEx=
A product of Noortex :
BOYS" SUITS, BABY SUITS, FROCKS,
BUSH SHRTS, SHORTS, SLACKS, JEANS, BLOUSES, AND VARIOUS GARMENTS
N U. S. STYLE.
Head Office & Factory
275/5 L, 1st Division Varadana
COLOMBO 10.
phone. 2448

Page 5
ീക്ഷബർ
محرک
来 来 米
K. S. S. SABARATNAM
SA BARA TNA BDI INDUSTPILS
GAMPO LA
Phone : 325

SMART BALLERINAS
for You
D. S. I.
BALLERNAS
- FOR
Ladies and Children
Manufacturers:
D. Samson industries GALLE
D IS T R IB UT O RS D. Samson, 97, 62 First Cross St. Colombo. Phone : 6509

Page 6
os-s-s-s-s-s-s-s-s-s-s-s-s
அடுத்த இதழில் T H E N A R U V பயணகாவியம்
(கவிதை)
EDITOR: நீலாவணன் “ARUNMOL”
* w
.. ※ 9 ge
மகரநதம ASSITANT EDITOR: B. MAHENDRAN s (கதை)
() ஜோர்ஜ் சந்திரசேகரன் 簽 s
ART:
“SATCHI" கவிமலர்கள் ; ※ (இல. கட்டுரை)
: க்கீரன்
CIRCULATION MANAGER: நககரன PARARAS VARITAMBI 大 ; ※ நிலா ஒளியில் MANAGING EDITOR: : தவிை த) S. ARUNMOLTHEVAN நாகூர் ஏ. பாவா
k 59 school AVENUE colonso. gait 15.6 :(புதிய பகுதி) LLLLLLLLSLS LS SLSLSLS LSLSLSLS SLSLSLS SLS SLS LS SLLLLSSL0L

இரா. இள 3இலக்
قائق ذة س سوومي)
سسمی مسیحی
14 39 قية لاقة وق
μυπ Ε
SéI(5'''
0 1 3 375 في 1ة هو
சொத்தி
விஞ்ஞ** கட்டுரை
أ1اورة
uo@环@ لآلهة تفوق توي
C3D65- نق اقسا از
€ ఈ శ్రీ Gná函罗硬° ܀ ܀ *
TLD ஒனிமா நிலق
ஒரு ĝuĥuŭo a -o
5、莎型 * 今 * V3 X *K 650 یrgآ5٦ آڑقڑھت His List5o • புதிய py DL 16579
sist (5 கலே
u 1qğ53yl C' aum (5āl 6ŝi" ரத்துகிறேம்
:് ** **
1
l4 6 T 23
3
1 ܐܸܝ݂ 46
5
5 2. 56
67
ä aj (3 LP பெயர்கள் قr th قس؛
ந்துக்கள்
ஜனயே கட்டு?
யாவும்
汁、5 @ s"エ端
يقية .
క్స్టి

Page 7
அன்புள்ள ஆசிரியருக்கு!
* šo 8 o s 9 பூர்த்திக்கதைப் போட்டிக் கெனத் தாங்கள் ஏற்படுத்திய பகுதி வரவேற்கத் தக்கது. சில பிச்சைக்காரப் பத்திரிகைகளைப் போல் - கூப்பன் வைத்து அதை நிரப்பி, பூ, கதையுடன் அனுப்பி ணுல்தான் ஏற்கப்படும் என்று நீங் கள் போடாமல் விட்டதே தேன ருவியின் தொண்டை விளக்குகின் நிறது இப்படிக் கூப்பன் களைப் போடுவதால் இரவலில் படிக்கும் நிலையிலுள்ள ஏழைகளின் கதி என்னுவது? நல் ல வேளையாக தே ன ரு வி யி ன் முத்திரையைக் காப்பாற்றினிர்கள். வாழ்க தேன ருவி வளர்க அதன் தொண்டு!! நித்தாவூர் எஸ். பி. காந்தன்
அன்புடையீர்!
எனது எழுத்தாள நண்பர்கள் என்ற தொடர் அவசியம்தானு? தனிப்பட்ட மன உளைச்சல்களைக் கொட்டித் தீர்க்க தே ன ரு வி போன்ற பத்திரிகைகள் களம் அமைத்துக் கொடுத்தால் இந்த நாட்டு இலக்கிய உலகம் கடைந் தேறுவது எங்ங்ணம்? தேனருவி பக்கச் சார்பாக இயங்கும் இத ழாக மிளிர விரும்பினல் எனது அபிப்பிராயம் வீணுனதுதான். தேனருவி தேசிய இதழாக மலர வேண்டுமென்று கனவு கண்டவர் களில் நானும் ஒருவன் என்ற கார னத்தினலேதான் இந்த அபிப் பிராயத்தை எழுதுகிறேன்.
வணக்கம்.
மருத முனை
ஆசிரியருக்கு!
& was ஈழத்தின் இலக்கியத் திங்க ளேடான தேனருவி தரமானவை
1 9
*மருதூர்க்கொத்தன்"
களைத் தட்டிப் பார்த்து பிரசுரிப் பதில் என்றும் முன்னிற்கிறது. பாணகமுவ *மருதுரர்க்கனி?* அன்புடையீர்
தங்கள் பணி பெரிதும் பாராட் ட ம் கு ரி யது. தங்கள் பணிக்கு ஒத்துளைப்பது தமிழ்த் தொண்டேயாகும்.
9U. Sasiis M. A. Dip. in Ed. ஹட்டன்
ஆசிரியர் அவர்களே!
ஆயிரக்கணக்கான நாட்களுக்கு முன்னுல் பாரதியார் என்ற கவி ஞன் புது  ைம ப் பெண்ணைப் படைத் தான். அதற்காகப் பெண் கள் சமுதாயம் தலைவணங்கியது. இன்ருே ஒரு கவிஞன் புதுமைப் பெண்ணைக் காட்டுகிருர். பார்க் கவே பிடிக்கவில்லை. பெண்மை யைப் போற்றத்தான் முடியாவிட் டாலும் தாழ்த்திக் காட்டா மலா வது இருக்க முடியாதா உங்களா லும் எழுத்தாளப் பரம்பரையா லும்?
யாழ்நகர் “பூங்கோதை"
ஆசிரியருக்கு! w தங்கள் பத்திரிகையில் தொட ராக வெளியாகும் “எனது எழுத் தாள நண்பர்கள்’’ என்னும் கட் டுரைத் தொடர் அதன் ஆசிரியர் சொல்வதுபோல் முழங்காலுக்கும் மொட்ட ந் தலைக்கும் மு டி ச் சுப் போடும் விவகாரமாகவே இருக் கின்றது. கட்டுரையின் முன்னுரை யில் முற்றிலும் கற்பனைப் பாத்
திரங்கள் என்று எழுதிவிட்டு அதன் பின் "அவர் எழுத்தாள நண்பர்" என்று முடிக்கப்படு
கிறது. இது ஓர் அநாகரியக் கைங் கரியம். .
சம்மாந்துறை இ. சின்னத்தம்பி
 

கிளை 3 நாடும் மொழியும் நம திரு கண்கள் ஊற்று 2
தமிழிற்குத் தொண்டு செய்வோன் JFII GDI2)
த்மிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டா? பாட்டின் திறத் தாலே இவ்வையத்தைப் பாவித்திடவந்த பாவேந்தன் பாரதியார் - இரு பதாம் நூற்றண்டின் ஈடிணையற்ற கவிஞர் மறைந்து ஆண்டு பலவாகி விட்டன. அவனுடைய நாமம் தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக் கின்றர்களோ அங்கெல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. ‘இதந்தரு மனேயி நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதம்திரு இரண்டுமாறிப் பழி மிகுந்திழிவுற்ருலும் விதம்தரு கோடி இன்னல் விளைத்தெனை அழித்திட் டாலும் சுதந்திரதேவி நின்னைத். தொழுதிடல் மறக்கிலேனே’ என்ற பாடலின் மூலம் சுதந்திர வீரர்களின் உள் ளத் தி லும் - ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாடலின் மூலம் தேசபக்தர்களின் உள்ளத்திலும் - 'விடுதலை! விடுதலை விடுதலை’ என்ற பாடலின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் தன்மான உள்ளத்திலும் - "அமுது ற்றின யொத்த இதழ்களும் - நிலவூறித் ததும்பும் விழிகளும்’ என்ற பஈட

Page 8
லின் மூலம் காதலிளம் காளேயரின் உள்ளங்களிலும் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டே இருக்கின்ருன் பாரதி. இந்த உண்மையை உணர்ந்து தான் தமிழிற்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - தமிழ்த் தொண் டன் பாரதிதான் செத்ததுண்டா? என்று நம்மையெல்லாம் கேட்டார் பாரதி யின் பக்திக்குப் பாத்திரமாகி, புரட்சிக்கு வித்திட்ட புதுமைக்குயில் பாரதி தாசனுர். இன்று அந்தக் குயில் மறைந்துவிட்டது.
கூவிப்பறந்த குயில் கூண்டைவிட்டுப் பறந்துவிட்டது. வாடித் துடிக்கு கின்றர் வையத்துத் தமிழரெல்லாம்.
“எங்கெங்கு காணினும் சக்தியடா - ஏழுகடல் அவள் வண்ணமடா” என்ற பாடலின் மூலம் 'பாரதிதாசன்” என்ற உணர்வைத் தமிழர்க்கு உணர்த்தி - தமிழ், தமிழர் - தமிழர் வாழ்வு, முன்னேற்றம் இவை களையே அடிப்படையாகக் கொண்டு கேட்கக் கேட்கத் தெவிட்டாத தெள்ளமு தக் கவியமுதை அள்ளிஅள்ளிக் கொடுத்த - புதுவை தந்த புதுமைக் குயில் நம்மிடமிருந்து அகற்றப்பட்டுவிட்டது.
ஆளுல் நம் புதுமைக்குயில் மறையவில்லை. திருக்குறளின் மூலமாக வள்ளுவர் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிருரோ - சிலப்பதிகாரத்தின் மூல மாக இளங்கோ எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிருரோ? சாகுந்தலத்தின் மூலம் காளிதாசர் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிருரோ? மற்றும் எண் *ணற்ற நாடகங்களின் மூலம் ஷேக்ஸ்பியர் எப்படி வாழ்ந்துகொண்டிருக் கிருரோ அதேபோல் “குடும்ப விளக்கு’ “பாண்டியன் பரிசு” “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ ‘எதிர்பாராத முத்தம்” போன்ற காவியம் கவிதை களின் மூலம் நம் 'பாரதிதாசன்” அவர்களும் வாழ்ந்துகொண்டே இருக்
கிருர், ஒன்றென்றும் வாழ்வார்.
‘தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தந் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்குநேர்'
என்ற அவர் பாடல் ஒவ்வொரு தமிழருடைய உள்ளத்திலும் எப்பொழு தும் ஒலித்துக்கொண்டே இருக்கும் - தமிழ் உணர்ச்சி உள்ள ஒரேயொரு தமிழன் உள்ளளவும் அவர் உயிரோடு வர்ழ்ந்துகொண்டே இருப்பார்.
2

நாதப்பிரம்மத்தில் கலந்
శి ಕ್ಲಿಲ್ಲಿ? 巫
ஆயன் குழலோ - நாயனம்தானுே என்று ஐயுறும் வண்ணம் - நம்மையெல்லாம் இசை அருவியில் மூழ்க வைத்த வரும் - நாதசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என்று ஒருவர் இருந்தார் - மறைந்தார் என்ற எண் ணத்தையே எழவிடாது காப்பாற்றி வந்த வருமான காரு குறிச்சி அருஞசலம் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவர் பரப்பிய நாத வெள்ளத்தின் ஜஸ் ஜல ராகம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. * * 5èѣј сътру வேலனே?’ என்ற திரைப்பாடலின் மூலம் கலையென் ருல் என்னவென்று தெரியாத கல்நெஞ்சரையும் சிலையென்ன நிற்க வைத்து, ரசிக்கவைத்த நாதசுர மன்னன் காருகுறிச்சியின் வாசிப்பில் இசைக்கலை யின் அத்தனை இலக்கணங்களையும் கேட்டு ரசித்தோம். இன்று அவர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். அந்த மாமேதையின் மறைவு தமிழ் உலகுக்கு ஈடுசெய்ய முடி யாத மாபெரும் நஷ்டமாகும்.
!நேயர்கள் கவனத்திற்கு - ܚ - ---ܫ- ܚܚܚܫ
*ஏப்ரல்’ மாத அட்டைப்படத்திற்கு கவிதை கேட்டு எழுதி இருந்தோம். ஏராளமான கவிதைகள் வந்து குவிந்து கிடக்கின்றன. பரிசீலனை செய்வதற்கு போதிய நேரம் இன்மை யாகையால் அட்டைப் படக் கவிதையின் முடிவும் - ‘பூர்த்திக் கதைப் போட்டி"யின் முடி வும் அடுத்த இதழில் இடம்பெறும் என்பதை அன்புடன் தெரியத் தருகின் ருேம். மேலும் தேனரு வியில் தொடர்ந்து வெளிவந்த “புதிய பரம்பரை' பகுதி இந்த இதழுடன் முடிவடைவதோடு அடுத்த இதழிலிருந்து ‘தேன் கூடு' என்னும் பகுதியும் ‘பூலை’’ இதழி லிருந்து கல்லூரி மாணவிகளுக்குரிய புதிய பகுதி ஒன்றும் ஆரம்ப மாக இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரியத் தருகின்ருேம். மற்: றும் நாடகப் போட்டிக்குக் கொடுக்கப்பட்ட முடிவு தேதியைச் சிறிது பின் போடும்படி பல எழுத்தாள நண்பர்கள் எழுதி இருத் தார் கள். அவர்களின் விருப்பத்திற்கிணங்க போட்டியின் முடிவு தேதியை 15 - 6 - 64 வரை பின் போட்டுள்ளோம்.
அட்டைப்படக் கவிதைகள் - “பூர்த்திக் கதைப் போட்டி' கதை கள் அனுப்பிய நேயர்களுக்கு எங்கள் உள்ளம் கணித்த நன்றியைத். தெரிவித்துக்கொள்ளுகின்ருேம்.
五3”

Page 9
சி. சண்முகம "ஈழத்தில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களும் நல்ல கவிதை எழுத்தாளர்களும் தினம், தினம் தோன்றிக்கொண்டே இருக்கிருர் களேயன்றி முத்தமிழில் ஒன்ரு கிய நாடகத் தமிழை வளர்ப்ப தற்கு நல்ல நாடக எழுத்தாளர் க ள் தோன்று கிருர் களில்லையே. இப்படியான நாடக எழுத்தாளர் களை உருவாக்குவதற்கு தேனருவி மூலம் என்ன செய்யலாம் ..?" எ ன் று எண்ணிக்கொண்டிருந்த நேர மது. 'சென்ற ஆண்டு நாட கப் போட்டியை வைத்து தங்கப் பதக்கம் பரிசளித்ததுபோல் இந்த ஆண்டும் "இரண்டாவது அகில இலங்கை நாடகப் போட்டி' ஒன்றை வைத்து, அதில் பரிசு பெறும் நாடகங்களை ஒரு தொகுப் பாக வெளியிட்டால் நாடக எழுத் தா ள ர் க ளே உருவாக்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற ஒரு திட்டத்தை கூறிஞர் நண்பர் பார ராஸ் வாரித்தம்பி அவர்கள். ஆனல் இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு இதற்குரிய பரிசுத் தொகையை எப்படி வழங்குவது . நாடகத் தொகுப்பை வெளி
14
யாரது? ( நாடகம் )
யிடுவதற்கு தேனருவியில் போதிய பொருளாதாரம் இருக்க வேண் டுமே! என்று எண்ணி இத்திட் டத்தை சிறிதுகாலம் பின்போட எண்ணினேம். இந்த நேரத்தில் தான் நண்பர் சண்முகம் அவர்கள் தெய்வம்போல வந்தார்கள்.
சண்முகம் அவர்கள் எனக்குப் புதிய வரல்லர். “தேனருவி' ஊற் றெடுப்பதற்கு முன் நாடகக் கலை யில் அதிகமாக நாட்டம் கொண் டிருந்தபோது நண்பர் சண்முகம் அவர்களையும் அடிக்கடி சந்திப் பேன். இலங்கை வானெலிமூலம் பல நாடகங்களை எழுதி வெளி யிட்ட சி. சண்முகத்தின் பெயரை ஈழத்து மக்கள் கேட்காமல் இருந் தாலும் இருக்கலாம் . ஆனல் அவர் எழுதிய நாடகங்களை கேட் காதவர்கள் இருக்கவே முடியாது. நண்பர் சண்முகத்தைக் கண்ட தும் எங்கள் திட்டத்தை அவரி டம் சொல்லி-அத்திட்டம் நிறை வேற ஒரு நாடகத்தை அரங்கேற் றினல் என்ன? வெற்றியளிக்குமா? என்று கேட்டோம். அப்பொழுது *இதற்கேனையா இ வ் வ ள வு யோசனை? நாடகப் போட்டியை த ட த் துங் க ள். நா ட க த் தொகுப்பு வெளியீட்டிற்காக ஒரு நாடகத்தை * வானுெலி நாடகக் குழுவினர் சார்பாக வெற்றிகரமாக அரங்கேற்றித் தருகின்ருேம்' என்ரு ர்.
ஏற்கனவே ஈழத்து நாடக மன் றங்களில் நடக்கும் “கஜால்' களை
அறிந்திருந்தவனுகையால் இ து சாத்தியமாகுமா என்று கேட் டேன். 'அதற்கொன்றும் பயப் Lu LG611 air Linth'' (Dont Worry)
என்று கூறினர் நண்பர் சண்மு கம் அவர்கள். மேலும் இத் திட்
 

'வானுெலி நாடகக் குழுவினர்? என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நாடக மன்றம் முதன்முதலாக “ன்புட்னிக் சுருட்டு” என்ற நாட கத்தை மேடையேற்றியது. கடந்த மார்ச் 29-ந் திகதி யாழ்ப்பாணத் தில் *ன்புட்னிக் சுருட்டு” என்ற நாடகத்தை ஐந்தாவது தடவை
யாக மேடையேற்றியபோது,
மாலினி சுருட்டுக் கம்பெனி அதிபர்
திரு. வி. கிருஷ்ணபிள்ளை அவர்கள் அளித்த கேடயத்தை,“வானுெலி நாடகக் குழுவினரின் போஷகர் திரு. என். இராமச்சந்திரன் அவர்கள்
பெற்றுக்கொள்கிறர்.
டத்தையும் தேனருவியின் சேவை கயையும் வானெலி நாடக மன்றத் தின் காப்பாளரான திரு. எஸ் இராமச்சந்திரனுக்கும் மற்றும் நிர்வாகிகள்-நாடகக் கலை ஞ ர் களுக்கும் எடுத்துக் கூறினர்.அவர் களும் உள்ளத் சுத்தியோடு ஒத்து ழை க்க முற்பட்டார்கள். இதன் பலனய் உ ரு வா கி ய து தா ன் "யாரது நாடகம்,
"யாரது’ நாடகத்தை அரங்கேற் ரித் தருவதற்கு திரு. இராமச்சந் நிரன் அவர்களும் சண்முகம் அவர் களும் பட்டுக்கொண்ட சிரமத்தை நிரினக்கும்போது அவர்களின் நல்ல உள்ளத்தையும் - சேவை மனப்
பான்மையையும் எப்படிப் பாரா ட்டுவதென்றே தெரியவில்லை. நாடகத்தை அரங்கேற்றித் தருவ தோடு நில்லாது போட்டியின் மூன்ருவது பரிசுத் தொகையை யும் 'வானெலி நாடகக் குழு வினர்' சார்பாக தந்துதவ முன் வந்துள்ளார்கள்.
ஒரு நல்ல நாடகத்தை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னேடியாக இருக்கும் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர் களினதும் சண்முகம் அவர்களின தும் சேவை நம் நாட்டிற்கு என்.
றென்றும் தேவை.
- ஆசிரியர்.
5

Page 10
பட விமர்சனம்
g 9 *(956)(35LDLD
GLI亚° து போ க் கி ற் காகவே சினிமா பார்ப்பது என் பது மக்கள் பலரின் எண்ணம். சினிமாவை ஒரு கலையாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு தமிழ் சினிமா
கலைநயமாக இது வரை உருப் பெருததால், தமிழ் சினிமாவை பொழுதுபோக்குச் சாதனமாக ம க் களிற் பெ ரு ம் பா லோ ர் நினைத்து வருவதில் ஆச்சரிய மில்லை .
*கு ங் கு ம ம்” சினிமாப்படம்
மற்றுமொரு பொழுதுபோக்குச் சித்திரம் . எனவே சினிமா ? என்ற அர்த்தத்தில் அதனை மதிப் பிடுவது நியாய மாகாது. பொழுது போக்கு அம்சங்கள் என்று சொல் லக்கூடியவை எவை எவை குங்கு மம்' படத்தில் உள்ளன?
பெண், மேனுட்டுப் பாணியைத் தன்ன தாகக் கொண்ட தமிழ் க் கிழவன், பிச்சைக் காரன், தமிழ்ப் பண்டிதர், தந்தையின் பழியைத் தானே சுமக்கும் தனயணுக ஐந்து வேடங்களில் சிவாஜி கணேசன் வேஷம் போட்டு வருகிருர், சிற் சில கட்டங்களில் அவர் அங்க அசைவுகளும், பேசும் முறையும், நகைச்சுவை ந ல் கு கி ன் ற ன. கோமாளியாக அவரது நடிப்பு எடுபடுமளவிற்கு அவரது குன சித்திர பாத்திரம் முழுமை பெற வில்லை. இதற்குக் காரணம் அவ ரது பாத்திர சிருஷ்டி, படத்தி ஆள்ள மற்றைய பாத்திரங்களைப் போலவே, வலுவ நறதாக இருப்ப தாகும். இத் தொய்வுக்குக் கார னம் படக் கதையே. நல்ப முடி பா த , அசம் டாவிதமானதாக, குறிக்கோளைக் கோட்டைவிட்ட தாக இருப்பதா லாகும். கதையில் ஒட் டை க ள் இரு த் தா லு ம்,
6
கதையை நெறிப்படுத்திய முறை யில் கொஞ்சம் நம்பத்தகுந்ததா கச் செய்திருக்கலாம். ஆனல் கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷன் பாணி பழைய தினு சுதான். ஆகை யால் சிவாஜி கணேஷன் இருந்தா லுங்கூட இப்படம் அவர் வரும் ஒருசில காட்சிகளை மாத்திர ந் தான் இரசிக்க முடிகின்றது. சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களும் ஓரளவிற்கு இரசனைக்கு உதவி செய்கின்றன. கண்ணதாசனின் பாடல்களும், மகாதேவனின் சங் கீதமும், சுசீலா, ஜானகி, சவுந்திர ராஜனின் குரலகளும் படத்தி லுள்ள ஒட்டைகளை ஒரளவுக்கு மறைக்க உதவுகின்றன.
சாரதா என்ற இளநடிகையின் நடிப்டப் பியா ச ங் க சீள த்தா ன் துலாம் பரமாகக் காணச் செய் திருக்கிருர் கள் டைரக்டர்கள். அவரது முகவெட்டு தமிழ் சினிமா விற்கு மற்றுமொரு கோண எழி ஃலத் தந்துள்ளது.
விஜயகுமாரி உழைத்து நடிக் கிருர், நல்ல நடிகை. விழலுக்
கிறைத்த நீராயிற்று அவர் திறன் இப்படத்தில். உயிர்துறக்கிருர் . ராஜேந்திரனும், முத்துராமனும், ராஜம் மாவும், ரங்க ராவும், ஏன் நகேஷ"ம், மஞேர மாவும் எல் லோரும் ஒன்ரு கப் பயன்படுத்தப் L. L. 5 drug usu T 567t.
சிவாஜி கணேசனின் அமெரிக்க விஜயத்தின்போது எடுக்கப்பட்ட * ஸ்ரில் படங்களும், இப்படத்தில் சேர்க் கப்பட்டுள்ளன.
இப் படிப் பல கு  ைற க ள் நிறைந்த இப்படத்தை கடைசி வரை பார்க்கத் துர எண் டு வ து என்ன? விறுவிறுப்பு! அந்த விதத் தில் இது கவர்ச்சித் தன்மையான ஒரு நல்ல பொழுதுபோக்குட் ut-th.
- "ஈஸ்வரபுத்திரா"

2 y O (a)
மஞ்சவுணு விலிருந்த சேவல் களின் கூவ லொலி காதைப் பிளக் கிறது. அம்மாவின் அறையிலி ருந்து மணியின் அலாரம் அடிக்கி றது ‘இர வே! நீ விடியாமலிருக்க uDTL L-frust?" என்று ஏங்கிய எனது உள்ளத்தின் துயர் கொந் தளிக்கும் கடல்போல் கொதித் துக்கொண்டிருக்கிறது.
செவிக்கு இனிமை தர, வாழ்த் தொலி கொடுத்து வரவேற்கும் சேவலின் கூவலொலியும், எனது கல்வியின் அக்கறையின் எடுத்துக் காட்டாகக் கேட்கும் மணிக்கூட்டு அலாரமும் எனது செவிகளுக்கு நாராசம்போல் இருந்தன.
துயருற்ற இராப்போழ்தில் துணையிருந்த தலையணைகள் கண்ணி ரால் நனைந்து பார்ப்பதற்கு அருக் கு எளி ப் பா க வு ம், அ  ைச ந் து அ ைசந்து அலட்டிக்கொண்டதால் பாவாடையும் தாவணியும் அசை வுற்று அலங்கேர்லமாகவும், "பூங் குழல்’ என்று போற்றும் பேறு பெற்ற கூந்தல் “வெள்ளாட்டு வாலே" என்று கூறும் நிலை போல அம் காட்சியளிக்கின்றன.
கொதித்த உள்ளத்தின் பிரதி பலிப்பாக, உடல் குட் டிஞல் வாட் டப்பட்டு துவண் ட செந்தாமரை போலவும்; தூங்காத நிலைபெற்ற கண்கள் செந்தனலென "குடி காரன்’ கண் போலவும் தென்படு கின்றன.
இந்நிலையில், நான் இன்று கல் லூரிக்குச் சென் ருல்; அகத்தைப் புறம் காட்டியே கொடுத்துவிடும். உள்ளச் சுமை குறையும் வரைக் கும் கல்லூரிக்கு முழுக்குப்போட வேண்டியதுதான்!
"டக் - டக்" கதவிலே யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. இந்தத் தட்டல் எந்த நிலையிலும் அம்மாவி னுடையதாக இருக்க முடி 4 யாது. அம்மாவுக்கு இன்று
சதா த ன ம்
என்னைத் துயில் எழுப்பும் துணி வோ-திராணியோ இருக்கவே இரு க்காது. செவிக்குள் விழுந்த, "டக்-டக் ஒலியை செவிமடுக்காத வள் போல் மறுபக்கம் புரண்டு படுக் கிறேன். ஆணுல்...!
நேசத்தோடு பாசம் வைத்து கனிவாகக் கூப்பிடும் "பூங்குயில்” என்ற அப்பாவின் ஓசையை அவ மதிக்க எனக்கு உரிமையென்பதே கிடைக்காது என்று உணர்கிறேன்.
"வந்து விட்டீர்களா, அப்பா !” என்ற ஆவல் நிறைந்த கேள்வி
யுடன், என் நிலை மறந்து-ஒடிச்
சென்று கதவின் தாழ்ப்பாளை
இழுத்து விடுகிறேன்!
'பூங்குயில் ஏன் இவ்வளவ் நேர
மும் எழும் பா ம லி ரு ந் தாய்?
எழும்பி ஏன் படிக்கக்கூடாது? என்று அப்பா பரிவோடு கேட்ட வினுக்களுக்கு விடை இறுக்க முன்பே-எனது நிலை கண்டு பதை பதைத்துப்போஞர் அப்பா!
"என்ன நடந்தது? ஏன் இரவு துரக்கம் கொள்ளவில்லையா? என் றதும், எனதுள்ளம் வெடித்து ஆயிரம் துண்டுகளாகி விடும்போ லிருந்தது. உச்சி வெய்யிலில் துவண்டு தவிக்கும் மழலைமொழிப் பாலகன் போல் உள்ளம் பதை பதைக்க, அப்பாவின் நெஞ்சிலே தலையை வைத்து, விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டேன். அப் பாவின் நாவிற்கும் பேசும் வல் லமை இல்லைப்போலும்!
சிறிது நேரம் ஒரே அமைதி.
7

Page 11
'பூங்குயில்!. என்று நீ பெரிய பி வ் ளை யா ஞே, யோ அ ன் று  ெத ரா ட் டு உ ன் னை எ டு க் கி இடுப்பில் வைத்து உலாத்தும் பழக்கத்தை விட்டுவிட்டேன். இன்று, நீ சிறுபிள்ளைபோல் அழு வ  ைத ப் ப ா ர் த் த ர ல், தூக்கி உலாத்த வேண்டும்போலி ருக்கிறது."
இராமுழுதும் தேம்பித் தேம்பி அழுததால்,வறண்டிருந்ததொண் டைக்குள், ஏதோ ז60"חמש תחו_ו கட்டி வைத்ததுபோலவும், அது வும் சிறிது சிறிதாகப் பெரிதாகி வளர்ந்து பேசமுடியாத நிலையில், தொண்டைக்குள் நோவைக் கொடுத்ததுபோலிருந்தது. பேசு வதற்கு நாவசைந்து கொடுக் காமலிருக்கிறதே என்ற எண்ணத் தில், வாய்க்குள்ளிருந்த உமிழ் நீரை சிறிது சிறிதாக விழுங்கிப் பேசக்கூடிய நிலையை உண்டாக்கு கிறேன்!
"அப்பா!.., அம்மா.. எங்கே...!"
"அடுக்களையிலே கோப்பி போடு 6Q?.
"அப்பா..! நீங்கள் கா ப் பி அருந்திவிட்டீர்களா?
"உனது துன்பத்தை அறியாமல், எனக்குக் காப்பியே வேண்டாம். கொம்மா ஏசிஞளா அல்லது அடித் தாளா? நடந்ததைச் சொல்லு, நாணல்லோ பரிகாரம் தேடுவது."
"அப்பா. இந்த வீட்டிலே, நான் உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்இருக்கவே கூடாது!"
"ஏன் இந்த வீடு சிறிதா? போதாதா? இதற்கேன் இவ்வளவு கவலை? இன்னும் சில காலம் பொறுத் திரு உனது விருப்பத் திற்கு எங்கே வேண்டுமென்ற லும் ஒரு பெரிய வீடு கட்டித் தரு கிறேன்."
8
"அப்பா. பொன்னும், பொரு ளும், மாடி வீடும் ஒருத்தி நிம்மதி யாக வாழ்வதற்கு போதுமென்று எண்ணுகிறீர்களா?"
"ஏனம்மா! ஒரே மகள் என்றதற் காக, உனது விருப்பம்போல் உனது வாழ்வு சிறப்புற கண்ண
றைந்த கணவன் ஒருவனையும் தரவில்லையா? வேறென்னமா குறை? இன்னும் ஒரு வருட
பொறுத்திரேன், அவனும் "இஞ் சினியராகி வந்ததும், கார் வார் கித் தந்து இருவரையும் உல்லா மாக வாழ வைக்காவிட்டால்!
"அப்பா! நீங்கள் சென்று காப்ட யைச் சாப்பிடுகிறீர்களா?
"உனது துன்பம் என்னவெண் ( அறியாமலா?
*சரியான சமய சந்தர்ப்பத்தில் கைகொடுத்து உதவ வந்த இயற் கையே நீ வாழி! என்று வாழ்த்தி "அப்பா, இராமுழுதும் ஒரே வயிற் று வலி. ^ தவித்துப்போனேன் அம்மாவை எழுப்பி, ஏன் நித்தி ை! யைக் குழப்புவான் என்ற எண் னத்தில், என்னுல் ஆன மட்டு தாங்கியும் பொறுத்தும் இரு தேன். இவ்வளவுதானப்பா!இத கேன் நீங்கள் ஏங்கிச் சாகிறீ கள்?"
வீட்டின் பின்புற சீமெந்தித் திண்ணையில் கரிக்கோட்டிற்குள் அடைக்கப்பட்ட புலி போல் படுத்து இருக்கிறேன். மற்றை காலங்களில், இத்தினங்களிலு: பாடசாலைபோகும் நான், சொல் லிய பொய்யின் உதவியால் நடித்த நடிப்பின் நடையா: பேசாமல் படுத்திருக்கவேண்டிய நிலைக்குள்ளானேன்.
உள்ளக் குரங்கு எங்கெa கேயோவெல்லாம் LI fr ui ii5 g தாவிக்கொண்டிருக்கிறது. நினை கும் நினைவெல்லாம் கடந்த நான்

s
i
காண்டு வாழ்க்கையின் நினை வோட்டச் சம்பவங்களாகவே தென்படுகிறது.
o &9 Ꭴ) C
பருவ மங்கையாகாத பதினுேரா வது வயதில்; பாவாடை கட்டி, ரவிக்கை போட்டு, சிட்டுக்குருவி யன சிங்கார வாழ்வு வாழ்கி றேன். பள்ளி வாழ்க்கையோ பல வழிகளாலும் இனிமையாக இருக் கிறது. விஞ்ஞானப் பாடங்களைத் தவிர்த்து மற்றைய பாடங்கள் எல்லாம் என க்குத் தண்ணிர் போல்!
'பூங்குயில்! நீ அடுத்த வருடம், "ஜே. எஸ். . தொடக்கம் or un cár año” பாடங்களைத் தான் படிக்கவேண்டும். அதற்காகச் “சயன்ஸ்" பாடங்களைக் கவன மாகப் பாடம் சொல்லித் தருவ தற்கு "ரியூசன் மாஸ்ரர்" ஒருவரை ஒழுங்கி படுத்தியிருக்கிறேன்.
அவர் தாளை தொடக்கம் 'சயன்ஸ்’
பாடங்களேப் படிப்பிப்பார்; கவ னமாகப் படித்து நீயும் பெரிய தோர் விஞ்ஞானியாக வரவேண் டும்!”
og fl, யாரப்பா அந்த மாஸ்ரர்?
*கடைக்காரக் கணேசு இருக்கி
ருரே, அவரின் மகன் "கோபால்" என்று சொல்லுவார்களே அவன்
தான்."
ஆண் சகோதரமோ அன்றி பெண் சகோதரமோ இல்லாத எனக்கு, பிற ஆண்பிள்ளையிடம் பாடம் கேட்பது என்பது வெட் கத்தைக் கொடுக்கிறது போன்ற உள்ளுணர்வு உள்ளத்தைத் தொட நாணி முகத்தைச் சாய்க்கிறேன்.
'அவன் சிறு பிள்ளை மாதிரி, எப் படிப் பாடஞ் சொல்லிக்கொடுக் கப்போறன்’ என்ற ஆட்சேபத்
தொனியில்; அம்மா சிறிது சளேத் துக் கதைக்கிருர்,
“பெண்டுகளின் ரை பே ச் சு க் கிடக்கட்டும்; அவன் தானே இந்த வருஷம், "எஸ். எஸ். சி. யில் வட மாகாணத்தில் முதலாவதாகப் "பாஸ்"பண்ணியிருக்கிருன். அவன் படிப்பில் பெரிய விண்னன்."
e Q c g
ஆசிரியராக அமைக்கப்பெற்ற வர் வருகிருர், என்னை நாணமும் வெட்கமும் கவ்வுகிறது. அம்மா விற்குப் பின் நின்று; அம்மாவின் சேலைத் தலைப்பின் தொங்கலின் நூல்களால் இடதுகை ஆள் ச் காட்டி விரலை, வலது கையால் சுற்றிக்கொண்டு ஆசிரியரைப் பார்க்கிறேன்.
* 为
'பூங்குயில்! நீ ஏன் வெட்கப்படு கிருய்? மாஸ்ரரைத் தெரியாதா? எல்லாம் நல்லாச் சொல்லித் தருவார், கவனமாகப் படிக்க வேண்டும்" என்று சம்பிரதாயத் திற்காக பலதும் பத்துமாக ஏதே தோ அப்பா சொல்லி வைக்கிறர்.
"மாஸ்ரர்; சிறு பிள்ளைக்குப் பெரிய பொறுப்பெண்டு எண் ஞதேயுங்கோ. இவளுக்கு நல்லா கப் பாடஞ்சொல்லி, பெரியவ ளாக்குவது உங்களின் கடமை தான். இங்கே கீழே படிக்க முடி யாது, பிறர் நெடுகிலும் அதுக்கும் இதுக்குமெண்டு வருவார்கள். நீங் கள் மேல்மாடியில் எனது அறை யில் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கலாம்,' என்று கூற, அம் மாவைத் தவிர்த்து நாங்கள் மூவ: ரும் மேல் மாடியை நோக்கி மேலே செல்கிருேம். சிறிது நேரத் தில் அம்மாவும் காப்பியுடன் வ", நால்வரும் காப்பி அருந்தி, என் னென்னவோ, பெரிய பெரியவிட யங்களை அவர்கள் கதைக்கிறர் கள். அறிமுகத்துடனும் அருந்திய
9

Page 12
காப்பியுடனும் அன்றைய நாள் சென்று விடுகிறது.
o
s Ꮼ 0Ᏹ GO
காலம் கரைகிறது. நாட்கள் வாரங்கள் ஆகின்றன. வாரங்கள் மாதங்களாகின்றன. எம்மை அறி யாமலே ஒராண்டு, எம்மை விட் டுப் பிரிந்து விடுகிறது.
ஆசிரியர் என்ற எண்ணத்தில்; கொடுக்கப்பட்ட பயபக்தி, மரி யாதை எல்லாம் உண்டான இடம் தெரியாமல் ஒடி மறைந்து விடு கின்றன. ஆசிரியரின் மேல் வைக் கும் அன்பு-அப்பாவின் மேல்  ைவ க் கு ம் அ ன் பு நிலை  ைய அடைந்து விடுகிறது, அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வரு கிறது. WM
நான் "கோபால் மா ஸ் ர ர்’ என்று கூப்பிட்டால் போதும் அவரின் நிலை சர்க்கரைப் பந்த வில் தேன் மாரி சொரிந்தது போலாகிவிடும். அவரும் என்னை *தங்கச்சி” என்று அழைக்கும் நிலைமாறி ‘குயில்" என்று கூப்பி டும் நிலையை பெற்று வி ட் டார் "குயில். ! உ ன க் கு ப் பூ ங் குயில் என்று பெயர் வைத்திருக் கக் கூடாது. "மாங்குயில்" என்று தான் பெயர் வைத்திருக்க வேண் டும். குயி வினு மினி ய குரலை வைத்திருக்கும் நீ, எனக்கு ஏன் ஒருநாளும் பா ட் டு ப் பாடிக் காட்டவில்லை? அதனை நினைக்க மனம் வருத்தமாக இருக்கிறது".
"அம்மா, ஏசுவா! அம் மா பாடிக் காட்டச் சொன்னுல் நான் பாடுகிறேன்" என்று பணிவாகக் கூறுகிறேன்.
அம்மாவின் அனுமதி பெற்ருகி விட்டது. எனக்கென்ருல் என்ன பாட்டைப் பா டு வ தெ ன் றே தெரியவில்லை. இருதயம் வேக மாக அடிக்கிறது, மாஸ்ரருக்கு
多蔷“
பாட்டுப் பாடிக் காட்டப் போகி
றேனே எ ன் நற ஆனந்தத்தில் தொண்டையைச் சரிப்படுத்து கிறேன், எனது வல்லமையைச்
சுட்டிக் காட்டத் துணிந்தே விட் டேன்.
"வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையிற் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு"
திரைத் தென்றலாக இருத் தாலும், கவிமணி தேசிக வினய கம் பிள்ளை அவர் க ரூ டை ய கவிதையல்லவா? இனிமைக்கும், பொருளுக்கும், உள்ளத்தை ஈர்க் கும் வல்லமைக்கும் ஈடிணையேது:
நான் பாடும்போதெல்லாம், அவர் தலை அசைப்பதும்; இவ்வுல கில் இல்லாத பிரமையும், கண்டு ஆனந்தமும் ஆ ச் ச ரி யமும் கொண்டேன். "குயில் எவ்வளவு திறமையாகப் பாடுகிருய் தெரிகி றதா?”
என்னை அறியாமலே எனதுள் ளம் வானம்பாடியின் நிலையைப் பெற்றுவிட்டதோ! மேலே,மேலே உயரப் பறந்து செல்கின்றது!
ઈ
காலை ஐந்து மணி தொடங்கி ஆறு மணி வரை இருந்த பாட நேரம்; மா லை ஆறு மணி தொடங்கி ஏழு மணி வரையாகி; ஏழு மணி தொடங்கி எட்டு மணி யாகி மாற்றப்பட்டுக் கொண்டே போகிறது. இதற்கும் வீட்டிலே எதுவித எதிர்ப்பும் கிடைக்கவே யில்லை.
"மாஸ்ரர், உங்களினுடைய வசதிபோல் வந்து பாடம் சொல் விக் கொடுத்தால் போதும்" என்ற அம்மாவின் வார்த்தைகள்:

.ஆசிரியருக்கு பூரண உரிமை கொடுத்தாற் போலிருந்தது!
விடுமுறை காலங்களில் ஒரு வெள்ளிக்கிழமை 1 பகல் எண் ணெய் வைத்து நீராடி, அகிலும் சாம் பிராணியும் கலந்த புகை காட்டப்பட்டு, குடும்பி முடியா மல்-பின்னித் திரியாமல், கூந் தல் நுனியிலே முடியப் பெற்று பஞ்சாகப் பறப்பதுபோல் காட்சி அளிக்கிறது எனது கூந்தல்
‘குயில். ! இன்றைக்கு உன் :னப் பார்த்தால் என்ன மாதிரி இருக்கிறது தெரியுமா?”
9
LLLL L 0 L0 L L0S L L 0 S L 0 0 SL C L S LS S0 LLS LL LLL LLL 0 LLLLL 0L LS 0 SLL l te 8 8 s 8 ) » A
"சித்திரை மாத நீல வானிலே உலாவும் வெண்ணிலா, விண்ணில்
நின்று மண்ணுக்கு வந்தது போல்! இல்லை! இல்லை! இல்லை! அதுவும் உன்னிடம் அழகுப்
பிச்சை வாங்க வேண்டும் கார் முகிலும், திரை கடலும் உனது குழலைக் கண்டு பெருமைப்படும்; அதனை நீ அறிந்தால் பெருமைப் படுவாய்! இன்றை யி லி ரு ந் து உன்னை 'பூங்குழலி' என்று கூப்பி
டட்டுமா?"
“என்ன மாஸ்ரர். குழலியா? வேண்டவே வேண்டாம்!
"பூங்குழலி என்ருல் கூந்தலழகி என்றர்த்தம்!
*மாஸ்ரர், என்னே அப்படிக் "கூப்பிடவே வேண்டாம்! எனக்கு அது பிடிக்காது!
“ F if......
சிறிது தேரம் பெரியதோர் அமைதி.
"குயில் ! என்னை உனக்குப் பிடிக் கிறதா?”
"என்ன மாஸ்ரர் கேட்கிறீர்
ò6ነr?”
"நீ, நல்ல பிள்ளை, இல்லையா?
"ஆம்" என்பதன் அத்தாட்சியாக எனது தலையை அசைக்கிறேன்! என்னைத் தனது அருகாமைக்கு வரும்ப்டி பணிக்கிருர், வகுப் பறையில் குழப்படி செ ய் த மாணவி, ஆசிரியரால் கண்டு பிடிக்கப்பட்டு,தண்டிக்க வரும்படி பணிக்கும்போது; நடுங்கி நடுங்கி செல்லும் நிலை போல், நானும் ஏதோ பயத்தினுல் உந்தப்பட்டு மெல்ல மெல்ல வாகச் சென்று ஆசிரியர் முன்னுல் நிற்கிறேன். எனது இருத்யம் என்ன வேகத்
ல் அடிக்கிறதென்பதை எனது காதுகள் உணருகின்ற பிரமை என் மனதில் பதிகிறது ஆசிரி யரின் கைகள் பதறுகின்றன. எனது கண்கள் பேந்தப் டேந்த முழிக்கின்றன, ஆசிரி ய ரி ன் கைகள் எனது கூந்தலை இறை, இறையாகப் பிரித்து அழகு பார்க் கின்றன!
எனது உடல் நடுக்கம் எடுக்கி றது. உள்ளம் பதை Lu Googts 5th கிறது. உடல் தளர்ச்சி காண் பது போல் தோ ன் று கி ற து. அறையை விட்டு ஒடி விடுவதற்கு எ த் த னி க் கி றே ன். எ ன து குறிப்பை அறிந்தவர் என் னை இறுகப்பற்றி எனது இரு கன்னங்
களையும் மூத்தத்தால் மறைக் கிருர், "அ ம் மா வ ந் த ர ல்" என்று எச்சரிக்கை கொடுத்து
எனது கன்னங்களைத் துடைத்துக் கொள்கிறேன்.
பாவாடை, சட் என்று
"தலையையும், டையையும் சரிப்படுத்து வேண்டிக் கொள்கிருர்,
எனது உடல் இன்னும் பதை பதைத்துக்கொண்டே இருக்கி றது. உள்ளத்திலே சுமை! வெட் கம் உடல், உள்ளம் யாவற்றை
- '2

Page 13
றையும் பிடுங்கித் தின்னுகிறது. அம்மாவிடம் ஒடிச் செல்கிறேன்.
ძზ ઈ.
நான் பருவ மங்கையானேன் என்று அம்மாவிடம்தானும் கூறு வதற்கு வெட்கமாக இருக்கிறது. முகக் கோணலைக் கண்டு அம்மா வும் ஏதோ உணர்ந்தார் போல்,
என்நிலையைக் கண்டு அறிந்து கொண்டாள்.
இரண்டாண்டுகள் மறைந்தே விட்டன. பல்கலைக் கழக புகு
முகப் பரீட்சையில் சித்தி பெற்று இருக்கிருர், அம் மா என் னை, அவர் சித்தி எய்தியமையைக் குறித்து வாழ்த்துக் க டி த ம் எழுதுமாறு வேண்டுகிறர். இத னேத் தொடர்ந்து, பல கடிதங் களின் பின், எங்கள் இருவருக் கும் திருமணப் பதிவு நடைபெறு கிறது! நாங்கள்; எங்கள் விருப்
பம்போல் பழகுவதற்கு அனு மதிக்கப்பட்டோம்,
பல்கலைக் கழக வாழ்வில் அவ
ருக்கு இரண்டாண்டுகள் முடிந்து விட்டன. பல்கலைக் கழக அணுப வங்களே மிகவும் சுவை சொட்ட மணிக் கணக்கில் கதைத்துக் கொண்டு இருப்போம்; கேட்டுக் கேட்டு மகிழ்வேன். அது வும் காதலர் இருவர் உரையாடுவது என்ருல் சொல்லவும் வேண்டுமா?
நாம், பக்கம் பக்கமாக எழுதும் கடிதங்களில், ஒரு பகுதியில் இரு வரும் கல்வியில் சிரத்தையும், அக்கறையும், வர்களாக இரு க் க வேண் டு மென்று எழுதுவதை இருவரும் மறக்கமாட்டோம்.
o: ઈ. છે ஃ
நேற்றைய தினம், பள்ளிக் கூடத்தில் நாடக ஒத்திகை இருப் பதையும் மறந்து, விடுமுறையில் வந்திருக்கும் அத்தான், எனது வருகைக்காகக் காத்திருப்பாரே என்ற எண்ணத்தில், ஓடோடி வீடு வந்தேன். ஊர்தியிலிருந்து இறங்கும்போது, சக மாணவிகள்,
22
வீ ர ன் போ ல்,
கவனமும் உள்ள
எனது அத்தானின் பெயரைக் கூறி, என்னைக் கேலி செய்ததும் எனக்குப் பெருமையாகவே இருந் தது. வெற்றி விருது வெள்ளிக் கிண்ண உருவில் பெறப் போகும் அன்ன தடை நடந்து, வெளி வாசலின் இரும் புப் படலையின், உள் தாங்கியை நகர்த்தி முற்றத்தில் நிற்கும் அத் தா னி ன்  ைசக் கி ளை ச் காண்கிறேன். க ரு மு கி லை க் கண்ட மாமயில் போல் உள்ளம் குதித்தெழுகிறது.
வீட்டின் முன் கதவு பூட்டப் பட்டிருக்கிறது. எங்கே அம்மா சென்றிருப்பார் என்று ஏங்கு கிறேன். அ ப் ப டி யெ ன் ரு ல் அத்தானின் சைக்கிள் எவ்வாறு இங்கே வந்தது! கேள்விக்குமேல் கேள்விகள் ஒரு சில விஞ டிக்குள் மூளையைத் துளைக்கின்றன.
கையிலிருந்த பென்சில், என்னை அறியாமலே கதவில் தட்டுகிறது.
அம்மா வந்து கதவைத் திறக் கிருர், த லை ம யி ர் கலைந்திருச் கிறது, சேலை சிதைந்திருக்கிறது.
'நாடக ஒத்திகைக்கு நிற்க வில் 3லயா? என்று வினவுகிறர்.
*மறந்துபோய் வத் து விட்
G. Gör”
"மறப்பாய், மறப்பாய்" என்று: கோபக்கனல் பொங்க தனது அறைக்குள் சென்று கதவைச்
சாத்தவும், அத்தானின் உருவம் மறைய முயலுவதையும் எனது கண்கள் காணத் தவறவில்லை.
அன்று அவர் சொல்லிய "தலை யையும், பாவாடையையும், சட் டையையும் சரிப்படுத்து’ என்றது
இன்று எனக்குச் சா ட்  ைட கொண்டடிக்கிறது.
"ஐயோ! இதென்ன இந்தக் காதலர்கள், கதவுகள், மேசை கள், சாமான்கள்; இல்லை, இல்லை இந்தப் பூலோகமே சேர்ந்து சுழல்கின்றன.'
அப்பா..! *

(க. இராமலிங்கம்
கையிரதம் வெகு விரை
L வாக ஒடிக்கொண் டி ரு ந் தது. எனது மனம் அதைவிட வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. ஆம்! சித்திரைப் பொங்கல் விடு முறைக்காக வீடு சென்றுவிட்டு கிரும்பிக் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தேன். சிந்தனை முழு வதும் இந்த சிறிய லீவில், நடந்த
சம்பவங்க்ளைப் பற்றித் தா ன். அவள்தான்! சரோதான்! என் கண்ணுக்குள் நின்று எ ன் னை
மயக்கிக் கொண் டி ரு ந் தாள்" என்ன அழகு! என்ன பார்வை! சரோ ஒரு அங்கத்தில் குறைவு இருந்தால் மறு அங்கங்கள் ஏதா வது ஒன்றில் கூடிய செழிப்பு இருக்கும் என்பார்கள்! அல்லது முக அங்கத்தில் கூடிய செழிப்பு இருப்பதால் தானே உன் கால் களில் ஒன்றை ஆண்டவன் சொத் தியாக்கிவிட்டான்! ஆண்டவன் படைப்பில் தான் எத்தனை ஏற்றத் தாழ்வுகள்!
அவள் சொத்தி! என க் கு அவள் சொத்தியாகத் தென்பட வில்லை. உலகுக்கு ஏன்? எனது தாய் தந்தையருக்கே அவள் சொத்தி! ஆனல் எனக்கு நீ சொத்தியில்ல்ை சரோ! சொத்தி யானுலும் உன் உள்ளம் நிறைந் தது சரோ-உன் உள்ளம் தூய் மையானது.
10-ம் திகதி நான் அன்று காலை தான் வந்திருந்தேன். முற்றத் தில் நின்றுகொண்டு பல் துலக் கும்போது நீ வந்தாய்! ஒரு
காலைத் தாண்டித் தாண்டி வந்தாய். உன் பார்வையை வீசினய், அப்பப்பl என்ன பார்வை நான் மருண்டுவிட் டேன். இப்படியும் ஒரு ஒளி யா? உன் கண்கள் என்ன வெல்லாமோ, பேசின. நீ போய்விட்டாய்,என் அம்மா வுடன் ஏதோ பேசிவிட்டு, நீ போன பின்பு அம்மாவிடம் விசாரித்தேன், "அவள் பெரிய பிள்ளையாகி மூண்டு மாத மாச் சடா தம்பி! முன்னையைப் போல அவள் இஞ்சை வாறதுமில்லை சொத்தி முடமானுலும் பெண் பெண்தானே" என்ருள்.
அடுத்த நாள்! என்னை வீட் டில் விட்டு விட்டு அம்மா தன் மச்சாளுடன் ஆற்றுக்குக் குளிக் கப் போய்விட்டாள். அப்பா வேலைக்குத் தேயிலைத் தோட்டத் திற்குள் புகுந்துவிட்டார். அவர் திரும்ப சாயந்தரம் ஆறு மணி யாகும். "கண்மணி மாமி’ கண் மணி மாமி’ என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாய் நீ! நான் கவனிக்காதபடி இரு ந் தே ன்.! "மாமி இல்லைங்களா' என்று கேட்
டாய். "ஆற்றுக்குப் போய் விட் டார்கள்" என்றேன். நீ அப் படியே முற்றத்தில் நி ன் று கொண்டு என்னைப் பார்த்துக்
கொண்டிருந்தாய். உன் கண்கள் என் உருவத்தை மேய்ந் த ன போலும் அது மட்டுமல்ல என் கண்களும் உன் அழகை.
'உள்ளே வரலாமே" என்றேன். வந்தாய், நின்று கொண் டே இருந்தாய். உட்கார மறுத்து விட்டாய், பெரிய வெட்கம்தான் போ! நான் அழகான "டெரிலின்’ சேட் அணிந்து கொண்டி ரு ந் தேன். அது கை மூ ட் டி லும் கொலரிலும் பிரிந்து இருந்தது. நீ பார்த்துவிட்டாய், சேட்டு கிழிந்திருக்கிறதே? "ஆம் தைக்க வேண்டும். கடையில் இதைத்
2 ፰

Page 14
தைத்தால் திருப்பி கிழிந்துவிடும் அதுதான்."
:* நான் தைத் துத் தரட் LNft"
"உனக்குத் தைக்கத் தெரியுமா?
"ஓ! விதம் விதமாகத் தைப் பேன். கைத்தையல் தான். நான் சேட்டைக் கழற்றித் தந்துவிட் டேன். நீ கொண்டு போய் விட் டாய். என் உள்ளத்தையும் கூட,
மாலை வந்தது. நீயும் வந்தாய்.
சேட்டைத் தந்தாய்; ஆனல் என்
உள்ளத்தைத் தரவில்லை. அதைக் கவர்ந்து கொண்டாய்!
நான் சேட்டைப் பார்த்து விட்டு "ஒ திறமாகத் தைத் திருக் கிருயே" என்றேன். உன் உடல் தானத்தால் கோணிச் சிறுத்து விட்டது. "எப்ப போகிறீர்கள்? நீதான் கேட்கிருய், 15-ம் திகதி, ஏன்? "இல்லை, சும்மா கேட் டேன்'. நீ விஷயத்துடன் த ரா ன் கேட்டிருப்பாய் எனக்குத் தெரி யாதா. நீ நடந்து வி ட் டா ய், அடுத்த நாள் நீ வரவில்லை. அம் மா வீட்டிலிருந்தாள் என்று தெரி யுமோ? சனிக்கிழமை வந்தாய். நான் தான் தலையைச் சொறிந்து
கொண்டு வாசற்படியில் நின் றேன். "என்ன பேன் கடிக்கி றதா? "ஆமாம்! பார்த்துவிடுகி ரு யா? :ஓ! அதுக்கென்ன? உன்
சொற்களில் ஆர்வம் இருந்தது, ஆசை நிறைந்து வழிந்தது.
வீட்டில் ஒருவரும் நான் உன் மடியில் தலையை வைத் துக்கொண்டு கிடக்கிறேன். தலை யை நீ விரித்து, விரித்துப் பார்த் துக்கொண்டிருக்கிருய், "சரோ!“
h".
"இந்த வேளை யாராவது நம் மைப் பார்த்தால்?
名4
இல்லை :
நீ வெல வெலத்துப் போகிருய், என்னதானுலும் பெண்ணல்லவா!
"நம்ம வீட்டு வேலி உயர்த்திக் கட்டப்பட்டிருக்கிறது. பயப்பட வேண்டியதில்லை." அமைதி நிலவு
கிறது. “சரோ', 'ம்'.
"நான் உன்னை. * நா ன் ஏதேதோ வெல்லாம் உளறுகி
றேன். நீ வைத்த கண் எடுக்கா மல், என்னையே பார்த்துக்கொண் டிருக்கிருய். உன் கண்களில் நீர் முட்டியது. ஏன்? ஆனந்தக் கண் goofprit?
இல்லை துக்கத்தை அடக்கமுடி யாமல் தான் நீ பேசுகிருய். "நீங் கள் உசந்த சாதி! நானே கீழ்சாதி! எங்காவது பணம் படைத்தவர்
கள் ஏழைகளை தங்கள் உறவினரும்
மனமார விரும்பி மணம் செய் தது உண்டா? அதைவிட நானே ஒரு சொத்தி கையாலாகாதவள்! அந்தப் பாக்கியம் எனக்குக் கிட் G DIT?”
“சரோ வீனுக மனதை அலட் ட்ாதே! எனக்கு என் சரோ தான் வேண்டும். வேறு எந்தப் பெண் ணும்தேவையில்லை. சொத்தியோ முடமோ உள்ளத்தை உணர்ந்து கொண்டால் அதுவே போதும்! "அன்பால் அமைந்ததே இல் வாழ்க்கை” அதுவுமல்லாமல் நான் மணம் செய்வது, எனக்காகத் தான் அல்லது பிறருக்காகவல்ல! என் பெற்றேர்களையோ உறவினர் களையோ எண்ணி நீ பயப் படாதே! நீ உறுதியாக இருந்தால்
grif?!”
‘ம், என்னவோ உங்கள் இஷ் டம். உன் உதடுகளின் அசைவே ஒரு தனி அழகாக இருக்கிறதே சரோ!-என்மனம் நினைக்கிறது.
“F G grrr”. “h
நான் உன்னைத் தூக்கிக் கட்டித் தழுவி உன் கன்னத்தில் ஒன்றை.

ஆம்! நீ உன்னை எனக்கு அரிப் பணித்துவிட்டாய்! நான் உன்னை அரவணைத்தேன்!
இன்று காலை நீ வந்தாய்! "நான்
போகிறேன்". உன்கையில் ஒரு சிறிய பார்சல் இருந் . என்னி டம் நீட்டினய். நான் றைக்குள்
போய் வந்து ஒரு 61வ வலப்பை நீட்டினேன். நீ வாங்கிக்கொண்டு எட்டி அடிவைத்து ஓடி விட்டாய்! நாணம் க ள் விக் கொ எண் ட து போ லும். நீ போய்விட்டாய் பின்பு வரவில்லை, !, 1 ன் ரெயி லுக்கு வரும்போது 2 என வளவை எட்டிப் பார்த்தேன். நீ சமயம் பார்த்து முற்றத் தில் நின்று கொண்டிருந்தாய் ஒரு புன்னகை யும் கையசைவும் என்னை உன்னிட மிருந்து பிரித்தன.
நாட்கள் பல கடந்து மாதங்க ளாயின. ஐப்பசி மா , "டைசி. அன்று காலை எனக் (, , 31 டு கடி
தங்கள் வந்தன. ன்று தந்தை யிடமிருந்து. 'அம் வுக்கு நெருப் புக்காய்ச்சல் மிகி, பும் கடுமை.
உடனே வரவேண்டி யது' என எழு தியிருந்தார். எனர், ہات Lb LJ L5یل றியது. மற்றது ( 3 சரோவிட மிருந்து "கண்மணி மாமிக்குக் கடுமை. இதற்கிடையில் உங்களு டைய கலியாணப் பேச்கம் அடி
படு குது" என்றெ தியிருந்தாய், அன்று தான் நீ ர் ரு புதல் முதல் கடிதமாகஎ{{' மிருந்:ாய்,
நான் ஓடோடியும் : தேன்.
அம்மா படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். அ ப் பா க வலை தோய்ந்த முகத்துடன் அ , கில் அமர்ந்திருந்தார். சுற்றது,ார் உறவினர் யாவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். 'மகனே! வந் 9 Jib (? unrt-ti * !
என் தாய் கி ண ற் று க் குள் இருந்து கேட்குமாற்போல் கேட் டாள் "ஆம்! அம்மா' என்று ஆMழுந்து அவளைக் கட்டிப் பிடித்
தேன். பின்பு முழந்தாளிட்டு அருகே இருந்தேன். 'மகனே! எனக்கு ஒரு ஆசை நெடுங்கால மாக இருந்தது. நான் உயிருடன் இருக்கும்போதே கண் குளிரப் பார்த்து விடலாம் என்றிருந் தேன். அது முடியாமல் போய் விட் டது. நீ அதை நிறைவேற்றுவாயா? "ஆம் அம்மா. நான் சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன். ‘இனி உன் தந்தையாவது நிம்மதி யாய் இருக்க, நீ நாகம்மா மாமி யின் மகள் பூரணத்தைக் கட்டிக் கொள்ளவேணும்" எனக்கு கொல் லன் இரும்புச் சுத்தியலால் காய்ச்
சிய இரும்பில் அடிப்பதுபோல் நெஞ்சில் அந்த வார்த்தைகள் அடித்தன!
5 Tuurrrif அன்றிரவே கால LD nr (G9 rř.
பத்து மாதம் சுமந்து பெம் றெடுத்து, சீராட்டி, பாராட்டி வளர்த்த அன்னை தீயிலிடப்பட்
டாள். அவள் பரப்பிய அன்பின் ஒளியானது என் நெஞ்சின் ஆழத் தில் சுடர் விட்டு எரிந்துகொண்டி ருந்தது. கடைசிநேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதியும் அதனல் வரப்போகும் விளைவுகளும் என் நெஞ்சத்தை கூரிய அரிவாளால் அறுப்பதுபோன்று அறுத்துக் கொண்டிருந்தன.
"உன் உருவம் சரோ! என் கண்
களில் நீ தத்தித்தத்தி வருவது தெரிகிறது. வேதனையா இது! நான் என்ன செய்யப்போகிறேன் சரோ ஐயோ! இப்படியும் ஒரு சோதனையா ஆண்டவனே!"
பெற்றவர்கள், தங்கள் இஷ்டப் படி மக்கள் நடந்தால் தான் நன் ருக வாழமுடியும் என்ற எண்ணங் கொண்டுள்ளவர்கள். அவர்கள் தங்கள் மக்களின் நலனையும், சந்த தியின் விருத்தியையுமே விரும்பு கிருர்கள், ஆஞல் மக்களுக்கு உணர்ச்சியுண்டு. பருவமடைந்த வர்கள் தங்களுக்குள் பல எண்
25

Page 15
னங்களுடன் இருப்பார்கள் என்ற எண்ணமே இருக்காது. அதனல் தானே இந்த வினையெல்லாம்! தங் கள் இஷ்டப்படி செய்து வைப் பார்கள். வைத்த பின், மக்கள் படும் கஷ்டங்களைப் பார்த்துத் தாங்களும் கட்டியழுவார்கள்.
சனிக்கிழமை மூன்ரும் சடங் கன்று நான் கிணற்றடியில் நின் றேன். என்னண்டை வந்து "கண்மணி மாமி ஏதோ சொன்ன வாம்" என்ரு ய். "ஆம் சரோ! நான் அப்படிச் சொல்லுவா வென்று எதிர்பார்க்கவில்லை. அதனுல் என் மனம் மிகவும் குழம்பியிருக்கிறது’ என்று குனிந்த தலை நிமிராமல் சொல்லிவிட்டு நிமிர்ந்தேன். நீ தாண்டிப் தாண்டிப் போ ய் க் கொண்டிருந்தாய் உன் குமுறல்
எனக்குக் கேட்டது உண்மையில்
என் மனம் ஒரு நிலேயிலில்லை. மனம் உனக்கு முக்காற்பங்கும் அம்மாவிற்குக் கொடுத்த வாக் குறுதிக்குக் காற் பங்குமாக ஊச லாடிக்கொண்டிருந்தது.
மாலை மூன்று மணிக்கு, நான் அயர்ந்து துரங்கிக்கொண்டிருந் தேன். அப்பா என்னைத் திடுதிப் பென எழுப்பி ‘தம்பி, பக்கத்து வீட்டுச் சரோவைக் காணவில்லை யாம்! தேடுகினம்’ என்ருர், நான் திடுக்கிட்டு எழுந்தேன். எங்கு போயிருப்பாயோ? அக்கம் பக்கத் தவர் அங்கு மிங்கும் ஒடித் திரிகி ருர்கள். நானும் ஒடுகிறேன். ரோட்டின் நீளம் ஓடி வந்தேன். ஒரு றெயில்வே கடவை. அதில் நின்றுகொண்டு தண்டவாளத்தை உற்று நோக்கினேன். தூரத்தில் புகையிரதம் வரும் சப்தம் கேட் டது. 200 யார்களுக்கு அப்பால் நீ ருேட்டில் நின்று கொண்டிருந் தாய், சிறிது தூரத்தில் தண்ட வாளத்தின் மேல் படுத்துவிட் டாய். அந்த இடத்தில் தண்ட வாளத்தில் ஒரு பெரிய வளைவு. *கூ" எனச் சத்தமிட்டுக்கொண்டு வருகிறது’ அந்தக் கடுகதிப் புகை
26
யிரதம். நான் ஒடோடியும் வருகி றேன் உன்னைக் காப்பாற்றி விட லாமென்று. ஆனல் புகையிரதம் முந்தி விட்டது. "ஐயோ! சரோ!“ என் குரல் வானைப் பிளக்கிறது. சனங்கள் என் பின்னுல் ஓடி வரு கிருர்கள்.
புகையிரதம் தன் வேலையை முடித்துவிட்டுப் போய் விட்டது. ஒடி வந்து உ ன் மே ல், ୫. ଅଙ୍କି மேலல்ல உன் சடலத்தின் மேல்
விழுகிறேன்! கூக்குரலிடுகிறேன் பின் எழுந்து, சுற்றும் முற்றும் பார்க்கிறேன். உனக்கு எதிரே
ஒரு பொட்டலம். அதில் நான் தந்த என் வலப்பும், ஒரு கடிதமும் கிடந்தன. ஒரே ஒரு கடிதம்தான் எழுதியிருக்கிருய். அ து வு ம் என்னை விட இந்தப் பரந்த உலகில் உனக்கு நெருங்கிய உற வினர் யாரும் இல்லை? அது தான் சரோ என் ஒருவனுக்கு மட்டும் உன் கையெழுத்து.
கடிதத்தைப் படிக்கிறேன். நீங் கள் நன்ருக வாழ வேண்டும். இந்தச் சொத்தி, உங்கள் வாழ்க்  ைக யி ல் குறுக்கிட்டதென்ப தையே மறந்து விட வேண்டும்’ - சரோ,
ஐயோ! சரோ! சொத்தி என்று சொல்லி என் னேயே சொத்தியாக்கி விட்டுப் போய்விட்டாயே! நீ மகா தியாகி நான் வெறி பிடித்தவனுய் உன் மேல் விழுகிறேன்.
 ெச |ா த் தி
*ச ரே (ா நீ போய்விட்டாய்" எனக்கென்ன வாழ்வு. ஒரு கை ஒ டி ந் த துபோ லி ரு க் கி ற தே’ அம்மா! உன்னைக் கட்டிப்பிடித்து அழுகிறேன். நீ தைத் துத் தந்த சேட் முழுதும் ஒரே ரத்தம். ‘பைத்தியம்! சொத்தி! சரோ: நீ சாகவில்லை” என்றெல்லாம் கதறிக் கொண்டு நான் விசர் பிடித்த வஞய் ஒடுகிறேன். ★

சிறு விலங்கினப் பெற்றேரின் சிரத்தையான பராமரிப்பு
லங்கினங்கள் தம் குழந்தை களைப் பராமரிக்க இயற்கை அறிவைப் (instinct) பெற்றிருக் கின்றன. சில இனங்களில் இவ் வியற்கை அறிவானது ஒர் பாது காப்பான இடத்தில் முட்டைகளை இடுவதற்கு மட்டுமே துணைசெய் கிறது. சில விலங்கினங்கள் இவ் வியற்கை அறிவை முட்டை இடு வதற்கு மட்டுமல்லாது சிறு பிரா ணிகள் வளர்ந்து உரிய பரு வத்தை அடையும் வரை தேவை யான பராமரிப்பை அளிக்கவும் பயன்படுத்துகின்றன. நம் கண் முன்னே பசு, பூனை முதலிய மிரு கங்கள் தம் இனத்தை வளர்க்கும் விதத்தைக் காண்கிருேம், ஆஞல் பரிணுமக் கொள்கை முறையில் (Theory of evolution) g 6 fi) 60 sp விட த் தாழ் ந் த பிராணிகளி
டையே இப் பராமரிப்பு அதிசயிக் கத் தகுந்த வகையில் சிறந்து காணப்படுகிறது.
நீர் வாழ் பிராணிகளின் வாழ் க்கை முறையைச் சிறிது நோக்கு வோம். விசித்திர மு  ைற யி ல் பெற்ருே ரின் பராமரிப்பு ஆங் காங்கே காணப்படுகிறது. உதா ரணமாக மீன் வகைகளில் ஆண் வர்க்கமே அதிக சிரமம் அடைவ தைக் காணலாம். ஏரியஸ் (Arius) sy 6v 6w g. 4, 27 L8 ašt (Cat Fish) என்று பொதுவாகக் குறிப்பிடப் படும் ஒரு வகை மீனினத்தில் ஆண் மீனனது முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரை அவற் றைத் தன் வாயுள் வைத்துக் காப் பாற்றுகிறது. வாயை முட்டை கள் அடைத்திருப்பதால் குஞ்சு பொரிக்கும் வரை அது உணவு
-செல்வி. சற்சொரூபவதி நாதன், B. Sc"
கொள்ளாது பட்டினியாக இருக்க நேரிடுகிறது.
பட்டர் மீன் அல்லது போலிஸ் (Pholis) எனப்படும் பிரித்தானியக் கடலில் காணப்படும் ஒரு வகை மீன்கள் முறைப்படி தாயும் தந் தையுமாக முட்டைகளைத் தம் உடலாற் சுற்றிப் பாதுகாக்கின் so G3r. 35 siðgöÉG SOM T (Hippopotomus} இனத்தில் ஆண் கடற்கு திரையின் வயிற்றில் ஓர் பராமரிப்புப் பை இருக்கிறது. கடற்கு திரை நேரா கவே நீந்திச் செல்லும் அப் பையி னுள் பெண் கடற்கு திரை இட்ட முட்டைகள் இருக்கும். உ சி ய காலத்தில் அம் முட்டைகளிலி ருந்து சிறு கடற்கு திரைகள் வெளி யில் வரும் பொழுது ஆண் கடற் குதிரை மிகுந்த வ லி யு ட ன் உடம்பை முன்னும் பின்னுமாக வளைத் து அவை வெளிவர உதவு கிறது.
அடுத்து நிலத்திலும் நீரிலுமாக வாழும் பிராணிகளை நோக்கு வோம். சிசிலியைச் சேர்ந்த டார் வின் தவளை இனத்தில் ஆண் தவளை தன் தொண்டைக் குழிக் குக் கீழே அமைந்துள்ள ஒர் பை யில் பெண் தவளே இடும் முட்டை களை விழுங்கிச் சேர்க்கிறது. முட் டைகளிலிருந்து வாற்பேத்தை கள் வெளிவந்ததும், அவை வாழ்
வதற்கு அதிக இடம் தேவைப்படு
வதால் பையானது தந்தையின் முகத்தின் கீழ் பரந்து விரிகிறது, பின்பு முகத்தின் இரு பக்கமாக
விரிந்து முடிவில் அதன் உடம்பு
முழுவதையும் மூடி விடுகிறது. இந் நிலையில் தவளை தன் குஞ்சுகள்
2 go

Page 16
மூழுப் பருவமடைந்து வெளி வரும்வரை நடமாடுகிறது.
அட்ைடிஸ் (Alytes) என்னும் தேரையானது பெண் தவளை இழையாக இடும் முட்டைகளைத் தன் பின்னங்கால்களில் சுற்று கிறது. கட்டுப்பட்ட கால்களுடன் தள்ளாடியபடி நிலத்தினடியில் ஒர் இடத்தையடைகிறது. இரவு வேளைகளில் மிகக் கவனத்துடன் வெளியே வந்து சமீபத்தில் உள்ள குளத்து நீரிலோ அல்லது பணித் துளிகளிலோ முட்டைகளை நனை த்து ஈரத் தன்மையைக் கொடுக் கிறது. இப்படியாகப் பல நாட் கள் தொடர்ந்து செய்கிறது. ஈற் றில் முட்டைகள் பொரிக்கும் வேளை நெருங்கியதும், அதை அதன் இயற்கையறிவின் துணை கொண்டு அறிந்து அச்சமயத்தில் சமீபத்திலுள்ள குளத்திற்குச்  ெச ன் று வாற்பேத்தைகளைக் குளத்துள் விடுகிறது,
ஆமையினமும் பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றது, கரை யோரங்களில் பாதுகாப்பான
இடத்தை நாடிப் பெண் ஆமை யானது பல மைல்களை நீந்திக் கடக்கிறது. அங்கு கரையை அடை யுமுன்பு பகைவர்கள் தென்படுகி ருர்களா என்பதை அவதானித்து அதன் பின்பு கரையை அடைந்து குழி தோண்டி முட்டையிடுகிறது. பின்பு குழியிலிருந்த இடம் தெரி கயாது கவனமாக மணலினுல் மூடி விடுகிறது. தான் முன்பு வாழ்ந்த இடத்திற்கு நேராகச் செல்லாது சுற்றுப்புற வழியாகச் செல்கிறது.
நீர் வாழ் பிராணிகளை விடுத்து நிலத்தில் வாழும் பிராணிகளைக் காண்போம். சிலந்தி பின்னு வதை நாம் எல்லோரும் காண்கி ருேம்: பிராணிகளைக் கொன்று உணவாக்குவதற் கா க வே வலை பின்னுவதாக நாம் எ ன் னு கிருேம். ஆணுல் இவ்வலையானது வேறு விதத்திலும் பயன்படு
28
இடுவதற்கு
கிறது. சில ந் தி வ லை பின்னி அதன்மேல் முட்டையிடுகிறது. பின்பு அதன்மேல் வலையைத் தொடர்ந்து பின்னி ஒர் வலைக் கூட்டை ஏற்படுத்துகிறது. பின்பு இக் கூட்டைக் கவனமாகப் பாது காக்கிறது. வேட்டைச் சிலந்தி கள் தாம் உணவு தேடச் செல் லும் பொழுது மு ட்  ைட க ள் கொண்ட இக் கூட்டைத் தம் உடம்பின் கீழ்ப்பாகத்தில் ஒர் பந்துபோல நூலினுல் கட்டித்தம் முடனேயே எடுத்துச் செல்கின் றன.
நமக்கு இன்னல் செய்யும் தேள் மிகு வினுேதமான முறையில் குஞ்சுகளைப் பாதுகாக் கி ற து. குஞ்சுகள் வெளிவந்ததும் உட னடியாகத் தா யி ன் முதுகுப் புறத்தை அடைந்து அங்கு வசிக்
ன்றன. குஞ்சுகள் வளர்ந்து தம்மைத்தாமே பராமரி க் கு ச் நிலை வரும்வரை தாய்த் தேள் அவைகளுக்குப் பூச்சி முதலிய
உணவைக் கொடுத்துப் பாதுகாக்
கிறது. வேட்டைக் குளவி (Hu:- ing warp or Annaphila) 6T 60T L'ủu (64 h குளவி இனமானது முட்டையிலி ருந்து வெளிவரும் புழுவிற்கு வேண்டிய உணவை, முட்டை முன்பே சேகரித்து வைக்கிறது. நிலத்தில் ஒர் சிறு துவாரத்தை ஏற்படுத்திவிட்டுத் தாய்க் குளவியானது தன் குழந் தையின் முதல் உணவுக்காக ஓர் புழுவைத் (Caterpillar) தேடிச்செல் கிறது. அப்புழு உயிருடன் இருந் தால் முட்டையிலிருந்துவரும் சிறு குளவியால் அதனுடன் போராடி அதை மாய்க்க இயலாது, இறந்த புழுவாக உணவு இருந்தால் அது குளவிகள் வெளி வ ரு வ த ர் கு முன்பு அழு கி வி டு ம், ஆகவே தாய்க் குளவியானது தீர்க்கதரிச னத்துடன் புழு மயங்கக் கூடிய அளவினதாக ந ஞ்  ைச அதன் உடற்குள் செலுத்துகிறது. இற வாமல் மயங்கிய நிலையில் இருக் (ரும் புழுவை இழுத்துச் சென்று

அத்துவாரத்தினுள் வைக்கிறது. பின்பு முட்டையை இட்டு அத் துவார வாயிலை மண்ணினுலும், இலைகுழைகளினலும் நன்கு மூடி விடுகிறது. முட்டையி லி ரு ந் து வெளிப்படும் குளவி மயங்கிய நிலையில் இருக்கும் புழுவை உண வாகக் கொண்டு வளர்கிறது.
இப்படியாக அதிசயிக்கத் தக்க வகையில் பி ரா னி க ள் தம்
இயற்கை அறிவைப் பயன்படுத் தித் தம் சந்ததியைப் பேணிப் பாதுகாக்கின்றன. இவை எமக்கு, வினுேதமாகத் தோன்றினலும், அப்பிராணிகளுக்கு அதிக ஆபத் தையும், சிரமத்தையும் உண்டு பண்ணும் வகைகளாக இருக்கின் றன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
நாட்டிற்கு
ஆபத்து
ஒரு நாட்டிலுள்ள மக்களில் சிலர் மூடர்களாயிருப்பதில் ஒன்றுந் துன்பம் வந்துவிடுவதில்லை. அவர்கள் தங்களே அறிவாளிகள் எனக் கருதிக்கொண்டு செயலாற்றத் தொடங்கும்பொழுதுதான் துன்பமும்
விளையத் தொடங்குகிறது.
ஒரு நாட்டிலுள்ள மக்களில் சிலர் அறிவாளிகளாக இருப்பதில் ஒரு பயனும் உண்டாவதில்லை. ஆனல் அவர்கள் "தங்களால் எதுவும்:
செய்ய இயலாது”
என்று நினைக்கும்பொழுதுதான் அந்நாட்டிற்கு, ஆபத்து விளையத் தொடங்குகிறது.
-கி. ஆ. பெ. விசுவநாதம்.
ലീ ഗ് ീർ ലീheഴർ
ഗല
H. C. M. INDUSTRIES
289, NEGOMBO ROAD,
WATALA.
忍9>

Page 17
சோர்வை நீக்கி
உற்சாகத்தை ஊட்டுவது
786 கல்கி பீடிகள்
இன்றே பாவித்துப் பயனடையுங்கள்
திறம் பீடிப்புகையிலே, பீடியிலை, மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
சி. சின்னத்துரை அன் பிறதர்,
39, K. K. S. 65, 44, 3-ம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம். கொழும்பு.
தொழிற்சாலை :
118-12, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு.

[மருதூர்க் கொத்தன்)
வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப் பா ன். மாலை $யிடை இழியும் அருவியின் வேகத் தில்  ைம யி ரு ட் கன தி  ைய க் குடைந்து நடக்கின்றன் அப்துல் கரீம். பத்துவயதுப் பையனுந் தந் தையைத் தொடர்கிருன். சாதக மான சாபல்யவேட்கையில்,வருங் காரியம் வாயில் வரும் என்ற எண் னச் சுழிப்பில் 'அந்த வல்ல பெரிய ற குமான் முகம்பார்ப்பான்’என்ற வாக்கியத்தை அசைபோடுவதிற் தன் சிந்தையை வயப்படுத்தி விட் டான் கரீம். ஊதற் காற்றின் உந் துகை தங்களுக்காய்ப் பிறப்பிக் கப்படும் ஆக்ஞை யெனும் மருட் சியிற்தனையுண்டு, வேலித்தழை களும், தென்னங்கீற்றுகளும், பாழ் வளவுகளில் மண்டிக்கிடக்கும் செடிகளும் அசைந்தரற்றும் மெல் லோசையைச் சு ரு தி யா க க் கொண்டு, வெண்கருமைக் குறு மணலில் மூழ்கி மீண்டும், "சரக்
"கரக்.” இசைபாடும் அவர்கள் பாதங்களுக்குக் கூட அந்த நம் பிக்கை.
உவர்க்களப்பின் மேற்பரப்பிற் தவழ்ந்த ஈரப் பதனின் பளுவால் மெல்லென நீந்தும் சீதளக் காற் றுக்குக் கஞ்சற் சாரணுல் வேலிகட் டும் எண்ணத்தில் உடலைப்போர்த் துப் பிடித்துக்கொண்டிருக்கிருர் <历@了。
அக்கினிப் பாளமாகத் தகிக்க வேண்டிய அயனப் பிரதேசத்தை யும், தாவராதிகளும், ஜீவராசி களும் வதியக்கூடியதாக வளப்
படுத்தும் கடற்காற்றினுல் சுண்ண
காளவாயாகக் கனன்று கொண் டிருக்கும் கரீமின் மன வேக்காட் டைத்தான் தணிக்கமுடியவில்லை.
அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்த்தால்..?
வாழ்க்கை யெனுங் கொல்லன் கொப்பரையில் கொழுந்து தள் ளும் வறுமைத் தீயின் பசித்த நாக் குகளுக்கு இரையாகும் குடும்பத் தில் வசந்தம் சிரிக்கும் என்று நம்புபவன் கரீம். அந்த நம்பிக் கையின் நட்சத்திரப் பிரகாச சுகானுபவத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடத்திவிட்ட 665, -
கண்கடை தெரியாத இருளில், பாற்தில்லைப் பற்றைகளை விலத்தி வழிகண்டு செல்வதில் அவர்கள் அநுபூதிகள். கரீமின் வலது தோட் tu Ł- 60) l - வலிகண்டிருக்கவேண் டும், துடுப்பை இடது தோளுக்கு மாற்றுகிருன்.
"அந்த வல்ல பெரிய நகுமான் முகம் பார்ப்பான்."
மகளின் வாழ்வுப் பாதையிலே நந்தியாகக் குறுக்கிட்ட ஏழ்மைப் பகைவனைச் சிரக்கம்பம் செய் விக்க கரீமை யுத்த சன்னத்தனுப் வழியனுப்பிவைத்தபோது அவன் மனைவி கூறிய நன்மாராயம்.
எலிவளைகளாக இரு அறைகளைக் கொண்ட குடிசை, ஈயெறும்பு தானும் நுழையாதவாறு இறுகக் கட்டிய கிடுகுச் செத்தையையே சுவராகக்கொண்ட குடிசையின் கர்ப்பக்கிரகத்தினுள் Lié Gaf மடைந்த மகள். என்னதான் அவல வாழ்க்கை வாழ்ந்தாலும், பருவ பக்குவமடைந்த குமரைக் கட்டுக்காவலாகத்தானே வைத்தி ருக்கவேண்டும், மற்ற அறையில், முன்பக்கம் முழுமையாகவும், மற் றிருபக்கமும் மேல் அரையளவுக் குள்ள காலதர் வழியே, வெளியே
3

Page 18
வெண்பஞ்சாகத் துமிக்கும் பணித் திவலைகள் உள் நுழைந்து மயிர்க் கால்களைத் துளைப்பதில் நின்றும்
பாதுகாப்புப் பெறுவதற்காய்ச் சாரனெனுங் கருப்பையுள் சிசு வாக முட ங் கி க் கிடந்தனர்
தந்தையுந் தனயனும், வாழ்க்கை முழுக்கக் கும்ப ர்ண வரம் நல்கி விட்டால் எவ்வளவு செளகரியப் படும் என்பதுபோலிருந்தது அவர் கள் தோற்றம். பசியின் அழுங்குப் பிடியில் வெறி முற்றிவிட்ட புலி யின் நகங்களாகமனத்தைவராண் டும் அவசங்களையும், குசேலகாண் டப் பாராயணத்தையும் மறந்த நிம்மதியின் பேராட்சி அவர்களில்.
ஒட்டுத்திண்ணையில் ஈர விறகுக ளோடு நடத்திய மடைப்பள்ளிப் போரை நிறுத்திவிட்டு, குப்பி விளக்குடன் நெருங்கிவந்தாள் ஹலீமா, அவன் மனைவி. மெத் தென்ற இளமை நலம்இல்லாவிட் டாலும், மதாளிப்புக் குறையாத கஞ்சமலர் ஒத்தணம் பெற்றது கரீமின் புயம். அங்குசத்தின் பிர
யோசத்தில் அடங்கி இயங்கும் யானையாக கரீம் வாரிச் சுருட்டி எழுந்தான். மகனையும் எழுப்பி
ஞள். கரித்துணிக்கைகளை அசை போட்டுப் பல்துலக்கி அவள் தயா ராய் வைத்திருந்த வெந்நீரில் முகம் அலம்பினுர்கள்.
இலங்கை ஆலைகளின் உலக சாதனையான ஊசல் மணக்கும் ஊற லரிசிப் பழஞ்சோறும், சூடு காட்டிய மட்டிச்சதைப் பழங்கறி பும் நிசிக்குளிரில் கரும்பாக. ...கடைந்தெடுத்த அமு தாக .உணவு முடிந்ததும், உலர்ந்த தென்னங் குருத்தும், நிலாவெளிப் புகையிலையும், நெருப்புக் கொள் ளியும் கொணர்ந்துவைத்தாள் ஹலீமா. மனித இயந்திரத்திற்குப் புகை மூலம் குடுகாட்டுவதற்கான *ருேக்கை”க் குத் தேவையான மூல வஸ்துக்கள். அவளும் பத்தா வின் தேவைகள் அறிந்த பதி
32
விரதை, பணிவிடை முடிந்ததும் t புறப்பட ஆயத்தமானர்கள்.
"அந்த வல்ல பெரிய முகம் பார்ப்பான்’
ரகுமான்
கரீமின் மனைவி நெட்டுயிர்ப் புடன் பிரசவித்த நம்பிக்கைப் பல்லவி, அ வ ள் பெருமூச்சு கொழுந்துவிட்டெரியும், குப்பி விளக்கின் ராட்சசச் சுடரோடு மோதித் தணிந்தது.
பல்லவி?
கரீமைப் பொறுத்தவரை இடி முழக்கம்.
இடிய்ொலிக்கு அதிரும் நாக மா கத் தன்னை மறந்த நிலையில், தலை மேற் சுமத்தப்பட்டுள்ள கடமைச் சுமை கொல்லன் பட்டரைப் பிடிச்சிராவியாக நெஞ்சை அழுத் துவதான மனப் பிராந்தியில் காரி யத்திலீடுபட்டான். மூலையிலே பதுக்கி வைத் திருந்த "டைனமட்” வெடிகளை அதீதக் கரிசனையோடு எடுத்து மடியில் வைத்துச் செரு
கிக்கொண்டான்.
தொழிலுக்கு வெளிக்கிடும் போதெல்லாம் முதலில் மனைவி யைப் படலைக்கு அனுப்பி ஒழுங் கையில் ஆள் நடமாட்டம் இல்லை யென்பதற் கறிகுறியாக "உங்க ளைத்தான்’ எனும் சங்கொலி பிறந் ததும், வெண்கலக் குமிழ்போன்ற அவள் வதனத்தில் முளி விசகளம் பெறும் சம் பிரதாயத்தையே மறக்குமளவுக்கு ஆதுரப்பட் டான் கணவன் சம்பிரதாயத்தை மறந்த "லும், மனைவி தன் கட மையிற் தவறவில்லை.
வெளியாக வெ றி ச்
சென்று கிடந்த இல் லறச் சோஃவயில் வசந்தம் வரு ஷித்த ஒரே குத்துவிளக்கு, ஒளி உமிழ வகையின்றி மூலையிலே முடங்கிக் கிடக்கின்றது. திரி

'ட்டு, நெய்வார்த்துத் தீபமேற்றி வைத்தால்தானே குத்து விளக்கு குல விளக்காகஒளிரும். 'தூண்டா மணிவிளக்கென்ருலும் ஒரு தூண் டுகோல் வேண்டும்."
விளக்கிற்குத் தூண்டுகோல். பெண்ணுக்கு? மாப்பிள்ளை யென்ன குப்பை யில் கீரையா? கரீமைப் போன்ற வர்கள் இலகுவிற் பெற்றுவிட? கலியாணச் ச ந்  ைத யி ல் கரீம் பேரம் பேசிய மாப்பிள்ளையின்
பெறுமானம் நா னு ற் ருெ ரு
பாய்கள்.
முதல் படைத்தவன் கொடுத்த தோணியை வங்காளக் கடலிற் செலுத்திப் பாறைகளை அண்டி
நங்கூரம் பாய்ச்சித் தூண்டிலில்
இ  ைர  ைய க் குத் தி ப் போடு
வான். சூரை, சுரு, பாரை, பனை மீனென்று தோணி நிரம்பிவிடும். காலந் தன் கடமையிற் தவறி, உடுக்கணங்கள் தங்கள் நியதியிற் பிசகினலும் பிசகலாம். ஆனல், நிறைமாதக் க ர் ப் பி னி யி ன்
சாயை காட்டி, மச்சச் சூலுடன்
கரை தட்டும் தோணியை வர வற்க உடையவன் தவறமாட் டான். கறிப்பாட்டுக்கு ஒரு சிறி யதைக் கையிலே பிடித்த வண் ணம், துடுப்பையும், தூண்டில் முதலான வற்றையும் தோளிலே போட்ட வண்ணம் வீடு திரும்புவ தோடு கரீமின் அன்றைய கடமை முடிந்துவிடும். தோணி யை யு ம்
அதற்குத் தேவையான பண்வரி
33

Page 19
சையும் கொடுத்த வ னு க் குத் தினந்தரம் படியளக்கவா முடி யாது?
சீதக்காதியின் வாரிசு என்ற கற் பிதத்தாலோ என்னவோ, செருப் பாக உழைத்தவன் என்ற நன்றி உணர்வுடன், நெருப்புக்கு இரை யாகும் நிலையிலிருந்த தோணி யைக் கரீமுச்கு அன்பளிப்பும் செய்ததோடு, ப டி ய ள க்கு ங் கடமையிலிருந்தும் அவன் தன்னை விடுவித்துக்  ெகா ண் டா ன். ஒட்டை உடைசல்களே ஒட்டு வேலையால் மறைத்துக் கொண் டான் கரீம். சொந்தத் தோணி யின் புண் ணியத்தால் அன்ருடம் உண்டு உடுக்கும் செக்குச் சுழற்சி யில் வலம் வந்த கையோடு, மக ளுக்கும் மனைவி க் கு ம் இரண் டொரு சிறு நகைகளைச் செய்யு மளவுக்குத் தான் கஜானு இடங் கொடுத்தது.
தன் தகுதியை எகிறிய வர னுக்கு ஏங்காமல், 'ஏழைக்கேற்ற எள்ளிருண்டை கிடைக்காமலா போகும் என்று விட்டுத் தள்ள வும் முடியவில்லை. நேர்ந்து தவ மிருந்து நெய்யால் விளக் கெரித்து ஆசைக்குப் பெற்று அருமைக்கு வளர்த்த ஏக புத் திரி. அவனத தான். என்று ஒற்றைக் காலில் நாரைத்த வம் புரிகின் ருள்.
கரீம் வாலிடப் பராயத்தில் துடுக்குக்காரன், ச ண் டி ய ன் ஆகக் கூடினல் இரண்டொரு அத் தர் மீனுக்காகத் தொடு வானுக்
குத் தோணியோட்டி வெயிற் பால் குடிப்பது அவனுக்கு என் னவோ போலிருக்கும் மீன் பிடி
இலாக் கா வி ன் க ன் ண ய ம், போலீஸ்காரரின் பார்வையிலும் பொடி தூவிவிட்டு பெரிய மீன் பாட்டப்ாகப் பார்த்து ஒரு வெடி யைப் போட்டால் ஆயிரக் கணக் கிற் தேறும். அவனது வாலிப மு று க் கி ற் கு வாரப்பாடான தொழில். கிண்ணியாக் கடற்
弓尘
கரையில் "டைனமைட் காரர் களைக் கண்காணிக்க நேர்ந்த ஊழ்வலியை நொந்து கொள்
ளாத மீ ன் பி டி ப் பரிசோத, தகர்கள் அபூர்வத்திலும் அபூர் வம். கரீமின் சீனடியிற் சிக்கி? வாதையுற்றேர் அதிகம் பேர். துணிந்து படகில் வந்து தன்னைப் பிடிக்க முயன்ற பரங்கிக்காரனைத் துடுப்பால் அடித்துக் கடலிற் சாய்த்த பரிதாபத்தோடு இந்த, வெடி விவகாரத்தைக் கைகழுவி விட்டான்.
எந்தக்  ைக யா ல் அதனைத் தொடுவதில்லையென்று சங்கற். பஞ் செய்தானுே, அதே கையாற் தான் இன்று அதனை எடுத்து மடி யில் வைத்துக் கொண்டான். அறிந்து கொண்டே சட்ட விரோ தச் செயலில் ஈடுபடுகிறேன் என்” பதை அவன் உணர்கின் முன். மக. ளின கழுத்திலே தாலி யேற்றிச் சுமங்கலியாய்ப் பார்க்க வேண்டு; மென்ற அபிலாஷையின் உந்த லால் சட்டத்தை மீறுவதையும். அவன் பொருட்படுத்தத் தயா ரில்லை. எத்தனையோ பேரிடம் கடன் கேட்டு ஏ மாந்த நிலைமை பிற் தான் இந்த முடிவுக்கு வந் 37 ಟಿ!
அந்த வல்ல பெரிய றகுமான்
முகம் பார்ப் டான்'
நெஞ்சமெலாம் நி றை ந் து வழிந்து உடலின் அணு வறை தோறும் நிரவிவிட்ட அநத வாக் கியம் அவனை அறியாமலேயே கரீமின் நாவில் உச்சாடனம் பெறுகின்றது.
சிறகாம் கைகளால் வயிலலைக் கும் கடைச் சாமச் சேவல்களின் ஓங்கார நாதத்திற் கூட அதே வாக்கியத் தொ ட ர் இழைந், தொளிப்பதான எண்ணம் அவ னுக்கு. பட்சி சாரங்கள் சேவ லின் தானத் தலைமையையேற்று: இருளடிமைத் தளை அறுக்கும் சம ரிற் குதித்து விட்டன.

நீர்த்தாகத்தில், ஆடிக் கோடை யிற் சேறு கண்டு வி ட் ட குட் டையை விரையும் கரடியை உரு வகித்து, கடற்கரையை அடை நின்றனர் வாப்பாவும், மகனும் துடுப்பை யெடுத்து இருகைகளா லும் கூட்டிப் பிடித்து உலக்கை போடும் பெண்ணுக ஓங்கி, மெல் லலைகளின் முத்தத்திற் கிறங்கிக் கிடக்கம் குருத்து மணலிற் குத்தி நாட்டுகிருன் கரீம். புகையிலைத் துணிக்கைக்கு உலர்ந்த தென்னங் குருத்தைச் சின்னி விரலளவு கிள் ளிப் போர்வை போர்த்து.உதடு களைக் குறடாக்கி ருேக்கையை இழுத்துவிடும் ஒரு ‘தம் புகை யின் வெக்கையில் கொட்டியாரக் குடாவின்  ைவ க  ைற க் குளி ரென்ன, தூந்திரத்துச் சீதனத் தையே ஒரு கை பார்த்திடத் துடிக்கும் இறுமாப்பு.
தந்தையையும், தன யனையும் இரு அ ந் த ங் க எரி ற் சுமந்து கொண்டு, பன்னிரண்டு ஆண்டு களை அனயாசமாக உ த ஹி த் தள்ளிவிட்ட முதுமை இலச்சினை கள் கரீமின் சிட்சையில் மறை வுண்டிருக்கும் , பெருமிதத்தில் மார்க்கண்டேய வரம் பெற்ற
மங்கையின் தருக்குடன் தோணி
வழுக்கிச் செல்கிறது.
"ஆண்டவா! வல்ல பெரிய றகு மானே!ஏழைக்கிரங்கி முகம் பாரு தாயனே'
மனைவி கூறிய நம்பிக்கை வாக் கியத்தைத் தாரக மந்திரமாக வரித்த பாவனையில், அத நீற் கு அழுத்தங் கொடுத்து ஒரு தரம் உச்சரித்துக் கொள்கிருன் கரீம். “சறுவா"வின் மடியை அவிழ்த்து வெடிகளையும், தீப்பெட்டியையும் ஒருதரம் பார்த்துவிட்டு மடியைச் செருகிக் கொள்கிருன்.
* உன்னையே இல்லையென்பார்க்
கும் இரங்கும் த யா ப ர  ேன்,
ஏழைக் குமருக்காக மனமிரங்கு நாயனே!"
‘வீச். g? Lq-6J nr liq ulu ilib LDIT........ ஒடிவா! அம்மா தாயே..! செகப் பாக ஓடிவா,
கார் நீலக் கம்பளத்தில் முத் துப் பரல்கள் வருவதுபோல கண் ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு நீர்ச்சுழிப்புப் பரவை, நுங்கு நுரைக் கொ ந் த ஸ்ரீ ப் புட ன் எழிற் தோற்றங் காட்டுகிறது. பிரிந்த தாயின் வ ர  ைவ த் தொலைவிலே கண்ட மதலையாக ஆற்றலை ஒரு வழிப்படுத்தி அந் தச் சுழிப்புப் படலத்தினூடே கட்புலனை நிலையோட விடுகின் ரு ன் கரீம். அவன், தொலைதூரத் திலேயே இலைப்பின் தன்மையைக் கண்டு மீனை இனங்காணுங் கலை த ன் கு கைவரப் பெற்றவன். பாரை மீன் பாட்டம். இரண்டா யிரம் பாரைகளுக்கு மேற் தேறும் என்பதனை அந்த மறுகும் மயங்கி ருளிற் கூட மட்டிட்டுக்கொள்கி ரு ன் கரீம். ஒரு வெடியைவெடிக்க வைத்து பேய்ச்சுருக்களும் சட் டத்தின் காபாந்துக்காரர்களும் நெருங்குவதற்கிடையில் ஐநூறு பாரைகளையாவது சுழியோடிவிட் டால். என்று தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொள்ளுகிருன்.
"அந்த வல்லபெரிய ற குமான் முகம் பார்த்துவிட்டான்' என்று சொல்லிக்கொள்வதிலே அவனுக் குப் பேரானந்தம், சுற்று முற்றும் பார்க்கிருன். அங்கொன்றும் இங் கொன்றுமாக நரை திரை பூத்த அவனது வதனத்தில் வெற்றிப் புன்னகை பொன்ன வரை மலர்க் கொத்தின் காந்தி காட்டுகிற்து. துடுப்பையெடுத்துத் தோணியை வலிக்கிருன். 'முதலைக் குட்டிக்கு யாரும் நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. ம க னு ந் தா ன் துடுப்பு வலிக்கிருன். வ ள் ள ம் வாயு வேகத்திற் சறுக்கிச் செல்ல, வெற்றிக்கம்பம் நெருங்கிவிட்ட தான பூரிப்பில், மல்லிகைக் குவை யில் மிதப்பது போன்ற இதவு. குத்துவிளக்கிற்குத் தீபமேற்றி,
35

Page 20
அதன் மங்கலப் பேரெழிலைக் கண் டானந்திக்கலாம் என்ற நம்பிக்
கைக் கீற்றுகள் கரீமின் இதய விதானத்திற் சித்திரந் தீட்டு கின்றன.
மடியை அ வி ழ் த் து, வெடி யொன்றையும் தீப் பெட்டியை
யும் எடுக்கிருன்.
“Fff.........
ஊசிமல்லிகைப் பூவின் வாசி யில் நெருப்புக் குச்சியின் நுனி யில் தீயின் நாக்கு பரதம் பயில் கின்றது. ஆடல்அணங்கை ஆலிங் கணிக்கத் துடிக்கும் காதல் நாய கனே போல வெடியின் முகையிற் திரி. மகளின் சங்கு கழுத்தில் அவள் மனங் கவர்ந்த ஆணழகன் தாலி கட்டுவதான வதுவைக் காட்சி கரீமின் மனத்திரையில் நிழலாடுகின்றது.
தீயும் திரியும் புல்லுகின்றன.
திரியில் சுடர்விடுந் தீ மகளுக் கும் மருமகனுக்கும் எடுக்கவிருக் கும் மங்கள ஆராத்தியை நினை வூட்டுகிறதா? அதைப் பார்த்துக் கொண்டே நிற்பதில் உடலெங் கும் பரவும் இன்ப லாகிரியின் சிலிர்ப்பில் கணங்கள் கரைவதைக் கூட மறந்த நிலை! கொண்ட லின் குமுறலோ, மே 1ா த லே T இன்றி இடியிடித்து வள்ளத்தை ஒரு உலுப்பு உலுப்புகிறது.
‘யாமுகியித்தீன்"
“66är Ginu tripurari!"
இடியினுாடு இரு அவலக்குரல் கள் பரிதாபமாக ஒலிக்கின்றன. ஆமாம், வெடி கையை விட்டுப்
பிரியும் நிலையில் வெடித்துவிட்ட தால், மீனை வேட்டையாடுவதற்
36
மாணிக்க
குப் பதிலாக கரீமின் உள்ளங் கையையே அது வேட்டையாடி விட்டது. அள்ளிப்பிடித்து அனுப வித்த கைவிரல்கள் துணிக்கை யாக அலைபாயும் கடல் நீரில் மிதந்து தாழுகின்றன.
"மீன் ஓடுது. ஒன்றையும் பாரா மத் தோணியை வலி மகன்"
"வாப்பா! உங்கள் கை?
"ஒரு கை போன மத்தக் கை யிருக்கு. அவன் நாடினத்த நாம தேடித்தான் தாத்தாவின் கழுத் திலே தாலி கட்டிப் பார்க்கலாம்" கரீம் தலையிற் சுற்றியிருந்த சால் வையை நனைத்துக் கையைச் சுற் றிக் கொள்கின்ருன். நீலப்பாவில் இழைகளை மறுத்து செய்த கம்பளத்தின் சுருக்கங்கள் போல எற்றும் உவட்டல்களுக்கு எவ்விக் கொடுத்து விரைகின்றது வள்ளம். கரீம் ரணவாதையிலும் இலட்சிய சித்தியிற் வேட்கையி லும் உந்தப்பட்டுச் சாம்புகிருன். வள்ளம் மீன் பாட்டத்தை அண் மிவிட்டது.
“மகன் குச்சியைத் தட்டு”
கரீம் வலக் கையில் மற்ற வெடி யைப் பிடித்துக் கொள்ள, மகன் தீப்பெட்டியிற் குச்சியை உரசிப் பற்றவைக்கிருன்.
முண்டக மொக்காக முருகு தள்ளும் மடந்தையின் G. 5 சத்து நுங்கின் பூரிப்புடன் கடற் குமரியின் மார்பைப் பிளந்து தாவுகிருன் செம்பருதிக் குதலை.

கொழும்பில் --
முதல்தரமான
சாய்ப்புச்
சாமான்களுக்கு
எஸ். வி. பொன்னம்பலம் அன் சன்ஸ்
345, பிரதான விதி, கொழும்பு.
இங்கிலிஷ் மருந்துகளும் நெவமில்ஸ் ஸ்தாபனத்தாரின் சகல விதமான தயாரிப்புகளும்
மொத்தமாகவும் சில்லறையாகவும் சகாயமான விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்
S. V. Ponnampalam & Sons
345, Main Street, Colombo.
4 4 75 தலைமை அலுவலகம்
டெலிபோன்: ; 3597
6522 இல்லம்

Page 21
நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணசலம்
கச்சேரிக்குச் சென்று வந்த அலுப்பு இன்னும் ஆறவில்லை. இன்றுபோல் இருக்கின்றது.அன்று, 1963-ம் ஆண்டு டிஸம்பர் மாதம் திரு.காரு குறிச்சி அருணுசலத்தின் இன்னிசைக்குத் தவில் வாசித்துக் கொண்டிருந்தேன். அதுவும் அவர் வாழ்ந்து கொண்டிருந்த இடமான கோவில்பட்டியில். என்றும்போல் என்னை மறந்த லயிப்பில் அன்றும் வாசித்துக்கொண்டிருந்த பொழுது ரசிகப்பெருமக்களின் ஏகோபித்த வாழ்த்துக்கள் நடுவே, ‘இன்னும் பல்லாண்டு காலத்திற்கு அவரின் இசைக்குத் தவில் வாசிக்கவேண்டு மென' எண்ணினேன். இப்படி
ஒரு பேரிடி விழுமென்பதற்காகத்
38
தான் அப்படி ஒரு பேரவாக் கொண்டேனே? எனது போ வாவை வெறும் பொய்யாக்கி விட்டு,-அக்கச்சேரியையே எமது க டை சி க் கச்சேரியாக்கிவிட்ட காலதேவனைத் திட்டாமல் இருக்க முடியுமா?
காலஞ்சென்ற தவில் வித்து
வான் “நீடாமங்களம் சண்முக வடிவேல்' இலங்கையில் சில கா ல ம் தங்கியிருந்தபொழுது, என்னைக் காரு குறிச் சிக்கு அறி
முகஞ்செய்து வைத்தார். அவரின் நற்பணி வீண்போகவில்லை. முதன் முதலாக, 1959-ம் ஆண்டு சென் னையில் நடைபெற்ற இசை விழா வில் காரு குறிச்சி யின் நாதஸ்வரத்தி ற்கு தவில் வாசித்து, இந்திய மக்களிடை யே அறிமுகமானது மட்டுமல்லாது நாம் இருவரும் மிகவும் நெருங்கியவர் க ஞ மானேம். என்னை அவர் "மருமகனே!" என அ  ைழ க் கு ம் சொல் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின் றது மட்டுமல்ல எள் றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே யிருக்கும். அன்ஞரது மறைவு இசையுல கத்திற்கு ஈடு கொடு க்க முடியாத பெரு நட்டமாக இருப்ப தோடு, என் நெருங் கிய உறவினராகி
 

விேட்ட அ வ ரின் மறைவிஞல் எழுந்த கவலை காலத்தால் அழிந்து விடாது. V−
மக்களிடையே நிலவும் செல் சவாக்கு, அவரின் இன்னிசையால் மட்டுமே அடைந்துவிட்டதாக எண்ணிவிடாதீர்கள். அ வ ரி ன் இயல்பான உதவி செய்யும் மனப் பான்மையும், கர்வம் இல்லாது எவருடனும் மிகவும் எளிமையாக, அன்பாகப் பழகுவதனலும் தனக் கென ஒரு கூட்டத்தையே வைத் திருந்தார். இப்படியாகப் பல் வேறு கோணங்களில் கவரப்பட்ட காரு குறிச்சியின் மறைவு உண்மை யிலேயே வருத்தம் தருவதாகும். நான் பல வித்துவான்களின் நாதஸ்வரத்திற்குத் தவில் வாசித் திருக்கிறேன். ஆணுல் அவரின் இன்னிசையில் மூழ்கி, இரண்டறக் கலந்து பெறும் லயிப்பும், இன்ப மும் என்றும் தோன்றியதில்லை. அவரின் இசைக்குத் தவில் வாசிக் கும்பொழுது நான் அனுபவித்த திருப்தி இனி என்றுதான் கிட் டுமோ? இப்படியான ஒரு பிறவிக் கலைஞன், காரு குறிச்சியின் சிறப்பு அம்சங்களைக்கொண்டு தோன்ற வே ண் டு  ெம ன ஆண்டவனை வேண்டுகிறேன். ஆணுல் என் கண் களின் பார்வைக்குள் இப்படி ஒரு கலைஞன் தோ ன் று வா னெ ன எண்ணவில்லை. அவரின் மறைவி ஞல் ஏற்பட்டுள்ள இடைவெளி என்றுமே வெற்றிடமாக இருந்து வி டு மோ என அஞ்சுகிறேன். ஏனென் ருல் இவை போன்றவை கள் மனித பலத்தினல் சாதித்து விடமுடியாத காரியங்களல்லவா! காரு குறிச்சியின் இ  ைச யை ப் பொறுத்த மட்டில், அவரையும், நாதஸ்வரத்தையும் வேறு வேருக
இரண்டு பொருட்களாக என்னுல்
நினைக்க முடிவதில்லை. இரண்டும் சேர்ந்த ஒரு பொருள் போன்ற ஒரு மயக்கத்தைத் தான் தரு கிறது. ஏதோ பாகுபடுத்த முடி யாத பிணைப்பு.
எந்த இந்திய வித்துவான்களும் இதுவரை கையாளாத வகையில்,
நாத ஸ் வ ரத்  ைத தனது சேவக ஞக்கி, அதனுடன் ஒன்றிவிடுவத ஞல் பெருகும் உணர்ச்சி வெள் ளத்தைத் தான் அவரிடம் காண் கிறேன். அதில்தான் எத்தகைய ஒரு காந்தசக்தி, இசைஞான மற்ற பாமர மக்கள் பலர் அதில் கட் டுண்டு ப்ோவதைக் கண்டோம். அவரின் விரல்களின் அசைவுகளில் ஒடுங்கிவிடும் எத்தனையோ ஒலி கள்! "ஷணுய் மாதிரி வேண்டுமா? வினை மாதிரியா? அல்லது வயலின் மாதிரியா? எல்லாமே அவரின் நாதஸ்வரத்தில் இருந்து கேட்க own to . ,
குறிப்பாக அவர் ஒரு ராகத்தை அல்லது கீர்த்தனையை விரும் பியோ, விரும்பாமலோ இருக்க வில்லை என நினைக்கிறேன், எதை எடுத்தாலும் சில்லறைக் கீர்த் தனை என்ருல் கூட அதையொரு த னித் துவ ம் வா ய் ந் த தாக அமைத்துவிடும் சாமர்த்தியசாலி. இப்படியாக அவரின் திறமைகள்
பல வு ன் டு. கூறிக்கொண்டே போகலாம்.
அடிக்கடி என்னைப் பார்த்து
"அந்த ஊரு ஒனக்கு லாயக்கில்லை" எனக் கூறி இந்தியாவிற்கே வந்து தனது வீட்டிலே தங்கிவிடும்படி கேட்டுக் கொண்ட போதெல்லாம் நான் தட்டிக் கழித்துக் கொண்டே வ ந் தேன். இ ன் று அ வ ரு ம் மறைந்துவிட்டார். ஆனல் ஈழத் தவனன என்னை முதன் முதலாக இதுவரை எந்த இலங்கைக் கலை ஞருக்கும் கிட்டாத ஒருவாய்ப்பை எனக் களித்து சென்னை இசைவிழா வில் அறிமுகமாக்கி இந்திய மக் களின் பாராட்டை பெற்றுத் தந்த பெருமை காருக்குருச்சிக்கே உரிய தாகும். என் வாழ்வின் முன்னேற் றத்தில் முக்கிய பங்குகொண்ட என் மதிப்பிற்குரிய காரு குறிச்சி பார்வையை விட்டு அகன்ருலும் நினைவை விட்டு அகல முடியாதவ gr fr3)2íl i ' t-fTrir.
லய ஞான குபேர பூபதி - வி. தட்சணுமூர்த்தி - ALALSMLL LeLLLLL LLLLLLLASLLS
39

Page 22
| பிடிகளிலே ஒரு புதுமை!
பாவிப்பவர்களுக்கெல்லாம் பூரண திருப்தியை அளிப்பது
கமலா பீடி
நீங்களும் இன்றுமுதல் எங்கள் கமலா பீடியை
பாவித்து மனத்திருப்திய டையுங்கள்
ஏக விநியோகஸ்தர்கள் :
ச.வெ. பொன்னம்பலம்
*கமலா ஸ்டோர்ஸ்”
15, செட்டியார் தெரு, கொழும்பு-11
தொலைபேசி: 3597 - 6522 தந்தி: தாமரை

翌 * AAAAV MAZama P 瓣魏总窃畿数
JI- தமிழ் மக்களுக்குப்
புதிய கலையன்று. இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், அதற்கு முற்பட்ட காலத்தும் தமிழ் மக்களிடையே நாடகம் உயர்ந்த நிலையில் விளங்கியிருக் கிறது என்பதைப் பழந்தமிழ் நூல் கள் வாயிலாகக் காண லாம். நாடகமின்றித் தமிழ் மொழியே முழுமை பெருது என்ற அளவுக் குத் தமிழின் ஒரு பகுதியாக நாட கத்தினை வகுத்திருக்கிருர்கள் நம் ஆன்ருேர், நாடகத்திற்கு ஓர் இலக்கணமும் அவர்கள் வகுத்துத் தந்திருக்கிறர்கள். அ வ் வி ல க் கணத்துக்கமைய ஆடலும் பாட லும் கொண்ட கூத்துக்கள் அற்றை நாள் அனேக மெழுந்தன. அவற் றையே இன்று நாம் நாட்டியங்க ளாகவும் நாட்டுக் கூத்துக்களாக வும் ஆங்காங்கு காண்கின்ருேம்.
(க. செ.
இன்று நாம் நாடகங்கள் என்று குறிப்பிடுவன, தமிழ் மக்களுக்கு இடையிட்டு வந்து சேர்ந்த ஒரு கலை என்றுதான் சொல்ல வேண் டும். மேல் நாட்டாரின் நாடக முறையைப் பின்பற்றியே இன்று நாம் தமிழில் நாடகங்கள் தயா ரிக்கிருேம். இன்றைய நாடகங் களிலே, அற்றை நாட் கூத்தின் அ ம் ச ங் க ள் ஓரளவிருப்பினும், மேல்நாட்டார் கையாளும் முன்ற களே பெரிதும் இடம்பெறுகின் நறன.
அற்றை நாட் கூத்தினை எவ்வாறு அண்ணுவியிடம் பயிலாது ஆட முடியாதோ, அவ்வாறே இற்றை நாள் நாடகத்தினையும் தக்க ஆசா னிடங் கல்லாது தயாரிக்க முடி யாது. பலர் நாடகம் பயிலுந்
ສສສສສສສສສສສສສສສສສສສສສສສສສg
மேடை நாடகம்
நடராசா) $3;
துறையில் இன்று கவனஞ் செலுத் தாதிருப்பதனுலேயே, சி ற ந் த நாடகங்கள் தயாராவது அபூர் வமாயிருக்கிறது.
இக்கால நாடகத்தைத் தனி ஒரு கலையென்று கூறிவிட முடி யாது. அதற்குட் பல கலைகள் அடங்கிக் கிடந்தன என்பதைச் சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதை எடுத்துக்காட்டும். ஆடல், இசை, பாடல்,தண்ணுமை, குழல், யாழ் என்பனவற்றின் அமைதிக ளும், அரங்கின் தன்மையும் அறிந், தவனே ஆடலாசான் ஆகலாம். அவ்வாறே இன்றைய நாடகத் தயாரிப்பாளர்கன்  ெத ரி ந் து கொள்ளவேண்டிய கலைகளும் பல. அவற்றுள் முக்கியமானவற்றைக் கவனிப்போம்.
நாடகந் தயாரிப்பதற்கு முன், நாடகத்துக்கான எழுத்துப் பிரதி யைத் தெரிவு செய்ய வேண்டும். நாடகத்தின் வெற்றிக்கு அதுவே முதற் காரணமாகும். எல்லா நாட கப் பிரதிகளும் நல்ல தயாரிப் பிற்கு ஏற்ற ன வாய் அமைவ தில்லை. தயாரிப்பதற்கு வாய்ப் பான நாடகப் பிரதியைத் தெரிவு செய்வதும், தமக்கு வேண்டிய வாறு பிரதியை எழுதுவிப்பதும் அதனைத் திருத்தியமைப்பது மெல் லாம் ஒரு தனிக்கலையென்றுதான்
சொல்ல வேண்டும்.
தயாரிப்பதற்கு மட்டுமன்றி, நடிப்பதற்கும் நா ட க ப் பிரதி போதிய இடமளிக்க வேண்டும். நா ட கம் எழுதுபவர்களுக்குத் தயாரிப்பு நுட்பங்கள் தெ ரி ந், திருக்க வேண்டும். அல்லது. தயா
4斑

Page 23
சீப்புநுட்பங்கள் தெரிந்தவர்களே நாடக எழுத்துப் பிரதிகளை எழுத வே ண் டு ம். அப்பொழுது தான் நாடகம் தயாரிப்பதற்கு ஏற்ற தாக அமையும் ,
இன்றைய தமிழ் நாடகங்களைப்
பெரும்பாலும் சமூக நாடகங்கள், சரித்திர நாடகங்கள், நகைச் சுவை நாடகங்கள்,இலக்கிய நாட கங்கள் என வகுத்துக் கூறலாம். நாட்டிய நாடகம், இசை நாட கம் ஆகியன வேறு வகையைச் சேர்ந்தன. எல்லாத் தயாரிப்பா ௗர்களும் எல்லா வகையான நாட கங்களையும் திறம்படத் தயாரித்து விட முடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையிலே திறமை யிருக்கலாமே தவிர, எல்லா வகை யிலும் திறமையிருப்பது அபூர் வம். நகைச்சுவை நாடகங்களைத் தயாரிக்கும் ஒருவர், ஒருவேளை சமூக நாடகங்களையுந் தயாரிக்கக் கூடியவராயிருக்கலாம். ஆ ஞ ந் சமூக நாடகங்களைத் திறமையா கத் தயாரிக்க முடியாதவராயு மிருக்கலாம். எல்லார்க்கும் ஒவ் வொன் றெளிது என்பர்.
சரித்திர நாடகங்கள் தயாரிப் டவர்களுக்குச் சரித்திர அறிவும், இலக்கிய நாடகங்கள் தயாரிப் பவர்களுக்கு இலக்கிய அறிவும் அவசியந் தேவை. எவ்வெத்துறை யி லே தயாரிப்பாளர்களுக்குப் போதிய அறிவு ம் ஆற்றலு முண்டோ, அவ்வத்துறை நாடகங் களையே அவர்கள் தயாரிக்க முயல் தல் வேண்டும்.
எந்த ஒரு நாடகமும் இக்காலத் தில் இரண்டரை மணித்தியாலங் களுக்குமேல் நீ ள க் கூ ட (ா து. அதற்கு மேல் நீண்டால் மக்க ளுக்கு அவகாசம் போதாமையால் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிடு கிறது. ஐந்து நிமிட நேரத்துக்குக் குறைந்த காட்சிகள், கதையோட் டத்தையும் க வர் ச் சி யை யு ம் குறைப்பதற்கண்றி வேறெதற்கும்
9 4ھ۔
உத வா. அதனுல் நாடகக் காட்சி கள் ஒவ்வொன்றும் குறைந்தது பத்துப்பதினைந்து நிமிடங்களுக்கா வது நீண்டிருத்தல் வேண்டும். எல் லாமாக ஐந்து அல்லது ஆறு காட் சி களு க் கு மேற்படாதிருந்தால் நாடக ந் தயாரிப்பதற்கு வாய்ப்பா யிருக்கும். சில தயாரிப்பாளர்கள் இரண்டு மூன்று நிமிடங்களுக் கொரு காட்சியாக வைத்து, இரு பது முப்பதெனக் காட்சிகளை அடுக்கிவிடுகிருர்கள். அது நல்ல நாடகத் தயாரிப்பிற்கே பங்கம் விளைக் குஞ் செயலாகும்.
நாடக பாத்திரங்கள் பத்துப் பன்னிரண்டிற்கு மேற்படாதிருத்
தல் நற்பலனையளிக்கும். பெருந் தொ கை யா ன கதாபாத்திரங் களைப் புகுத்துவதால் மேடை
நாடகங்களைச் சோபிக்கச் செய்ய லாமென்று எண்ணுவது சரியான கருத்தென்று கொள்ள முடியாது. மூன்று நான்கு கதாபாத்திரங்க ளுடனேயே ஒரு நாடகத்தைத் தி ற ம் ப - த் தயாரித்துவிடுதல் கூடும்.
எமது நாட்டிலுள்ள நாடக மேடை வசதிகளைப் பொறுத்த வரையில், அதிகமான காட்சிக ளுக்கும், தொகையான கதாபாத் திரங்களுக்கும் இடமில்லையென்று துணிந்து சொல்லிவிடலாம்.
நாடகந் தயாரிப்பதற்கு நல்ல மேடைகள் இலங்கையில் இரண்டு மூன்றிற்கு மேல் இல்லையென்றே சொல்லலாம். மேடை வசதியில் லாத இடத்தில் நாடகந் தயாரிக்க முயல்வது பெருந் துணிகரமான
செயல்தான். இ ர ண் டா யி ர ம்
ஆண்டுகளுக்கு முன்பே அரங்கு எவ்வாறு அமைய வேண்டுமென வகுத்துக் கூறியிருக்கிருர்கள் நம் ஆன்ருேர் . செயிற்றியணுகும் சுத் தானந்தப் பிரகாச ஆசிரியரும், சிலப்பதிகாரந் தந்த இளங்கோ வும் அதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிருர்கள்.

*அரங்கினுயரமும் அகலலும் நீளமும் இருபத்து நால்விரற் கோலள வதணுல் எழுகோ லகலத் தென்கோனிளத் தொருகோ லுயரத்துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை வைத்தவி டை நில நாற்கோ லாக..?
என்று ர் சுத்தானந்தப் பிரகாசத் தில், அதனே இக்கால அடிக்கணக் கின் படி கூறினுல், அரங்கானது நிலத்திலிருந்து 4 அடி உயர்ந்தும், 28 அடி அகன்றும், 32 அடி நீண் டும், 16 அடி உயரத்தில் மேல் விதானங் கொண்டும் அ  ைம ய வேண்டும். இக்கால நாடகங்களுக் கும் ஏறத்தாழ இவ்வளவு நீள அகல உயரங்களைக் கொண்ட மேடைகள் தேவை. அப்பொழுது தான் நாடகத் தயாரிப்பின் திற மையை எந்த ஒரு தயாரிப்பாள :னும் காட்ட முடியும். ஒளியமைப் பினையும், காட்சி மாற்றங்களையும் திறமையாகக் கையாள்வதற்கும், நடிகர்கள் நடிப்புத் திறமையைப் உலப்படுத்துவதற்கும் அத்தகைய அகன்று நீண்ட அரங்கே மிகவும்
பொருத்தமானதாயிருக்கும்.
பல தயாரிப்பாளர்கள், காட்சி மாற்றங்களுக்கிடையே பல நிமிட நேரத்தைப் போக்கிவிடுகிருர் கள். இது நாடகத் தயாரிப்பில் ஏற்ப டு ம் காட்சி மாற்றத்தில் நேரம் அதி கம் செல்வதால், நாடகம் பார்ப் டவர்களுக்கு அலுப்புத் தட்டுவ துடன், நாடகத்திலுள்ள கவர்ச்சி யுங் குறைந்துவிடுகிறது. நாடகம் பார்ப்பவர்களிடையே நடிகர்கள் ஒரு காட்சியில் ஏற்படுத்தும் உணர்ச்சியை மறு காட்சிக்கும் வளர்ந்துசெல்ல விடாது கெடுத்து விடுகிறது, அந்த நீண் ட நேர இடைவேளைகள். அதனல், நடிகர் களின் முயற்சியிற் பெரும்பகுதி பயனற்றுப் போய்விடுகிறது. என வேதான் காட்சி மாற்ற நேரம் அரை நிமிடத்துக்கு மேற் செல் லாமற் கவனிக்க வேண்டியிருக்
ஒரு பெருந்தவறு. '
sia
கிறது. இடைவேளை கூட இல்லா மல் நாடகத்தை நடித்து முடிப் பது அதன் வெற்றிக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும். அப்படியா ஞல், நமது தயாரிப்பாளர்களுட் பலர் ஏன் அவ்வாறு செய்வதில்லை? இந்த இடத்திலே தான் மேடை யலங்காரமும் உடையலங் கார மும் இடர் விளைக்கின்றன.
மேடையலங்காரமும் உடைய லங்காரமும் நாடகத்துக்கு அவசி யமே. ஆனல், அவை நாடகத்தின்
நோக்கத்தைக் கெடுத்துவிடக் கூடியனவாயிருக்கக்கூடா. பொது வாகக் காட்சி மாற்றங்களுக்
கிடையே நேரத்தைப் போக்கு வன இவ்வலங்காரங்களே, அவை நாடக ஓட்டத்தைத் தடைப்படுத் தாதவாறு அமைக்கப்பட வேண் டும். ஒரு காட்சி முடிவில் ஒரு வகை உடையில் வரும் பாத்திரம், அடுத்த காட்சி ஆரம்பத்தில் வேறு உடையிலே காட்சியளிக்க வேண்டிய விதமாக நாடகப் பிரதி யமையக்கூடாது. அதுபோலவே, மேடையலங்காரமும் அரை நிமிட
நேரத்துக்குள் மாற்றியமைக்கக் கூடிய விதமாகச் செய்யப்பட வேண்டும். சில வேளைகளில்,
ஒளியை அணைத்து அதனைப் பத் துப் பதினைந்து விநாடிகளில் மீண் டும் ஏற்றுவதற்கிடையிற் காட்சி மாற்றக்கூடியதாயமைக்க வேண் டும் .
மேடையலங்கார விடயத்தில் இரு கட்சிகள் உள. குறித்த காட்சி அப்படியே மேடையிற் பிரதிபலிக்குமாறு அலங்காரஞ் செய்ய வேண்டுமென்பது ஒரு கட்சி. அதாவது, ஒரு குடிசையில் நடைபெறுங் காட்சியென்ருல், மேடையிலே அப்படியே ஒரு கு டி  ைச ய  ைம த் து, அதற் சூழலையும் ஆக்கிவைக்க வேண்டும். ஆனல், அந்தக் கட்சி யைச் சார்ந்தவர்கள், அக்குடி சையை அரை நிமிட நேரத்துக் குள் அகற்றி, மற்ருெரு மாளிகை
43

Page 24
யை அங்கு நிறுவக்கூடிய வசதி செய்யத்தக்கவர்களாய் இருத்தல் வேண்டும். மறு கட்சியைச் சார்ந் தவர்கள், காட்சிக்கேற்றவாறு அடையாள அலங்காரஞ் செய் தாற் போதுமென்பார்கள். அதா வது, மேடையைப் பொருள்க ளால் நிரப்பாது, ஒரு சோலைக் காட்சியைக் குறிப்பதற்கு ஒரு மரக்கிளையோ, அன்றி ஒர் இலை யோ போதுமென்பர். மேடையை உண்மையான வீட்டுக் காட்சி போலவோ சோலைக்காட்சி போல வோ அலங்கரிப்பதால், மக்கள் கவர்ச்சி அதிலே சென்றுவிடு கிறதேயன்றி நடிப்பிற் செல்வ தில்லையாகையால், நாடகத்தின் நோக்கம் கெட்டுவிடுகிறது என் பது அவர்கள் வாதம். இந்த வகையான அடையாள அலங்கா ரஞ் செய்பவர்களுக்குக் காட்சி மாற்றத்தில் நேரம்போவதற்குக் காரணமேயிருக்கமுடியாது.அடை யாள அலங்கார முறையைக் கை யாளும் தயாரிப்பாளர்கள், நடிப் புத் திறமையினல் மக்கள் உள் ளங்களைக் கொள்ளை கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க நடிகர்களை புடையவர்களாயிருக்கவேண்டும். இல்லையேல், நாடகம், இரண்டுங் கெட்டாணுகிச் **சப் "பென்று போய்விடும்.
நடிகர்களுக்கு ஒப்பனை செய்வது உண்மையிலே ஓர் ஒவியக்கலை வல்லுநனுக்குரிய தொழிலாகும். ஆணுல், நாடகத் தயாரிப்பாளருக் கும் ஒப்பனை செய்தல் பற்றிய அறிவு இருத்தல் அவசியம். ஏனெ
ல், நாடகத் தயாரிப்பென்பது, நாடகாசிரியரின் கதையை நடி கர்களின் உதவியைக் கொண்டு ஒருவன் தன் கற்பனைக்கேற்ற வாறு மேடையிலே சித்திரித்துக் காட்டுவதாகும்.
எனவே,பாத்திரங்களின் வேடப் பொரு த் தம் எவ்வாறிருக்க வேண்டுமென்பதனை தயாரிப்பா ளர்தான் கற்பனை செய்துகொள்ள
4垒
முடியுமே தவிர, வெறும் ஒப்பனைக் கலைஞனுல் அதனை முற்ருக உணர முடியாது. தயாரிப்பாளனின் உத் தரவின்படியே ஒப்பனையாளன் வேடம் அமைக்க வேண்டும். அத னற்ருன், எவ்வெப் பாத்திரத் திற்கு எவ்வெ வ் வொ ப் பனை அமையவேண்டுமென்ற அறிவு, தயாரிப்பாளனுக்குத் தேவைப்படு கிறது.
ஒரு நாடகத்தில் நடிப்புத்தான் முக்கியம். அதற்கு உடையலங்கா ரம், மேடையலங்காரம், ஒப்பனை ஆகியன ஒத்தாசையளிக்கத்தக் கனவாயமைய வேண்டும். நடிப் பென்பது, கதையின் தன்மையை யும், பாத்திரங்களின் குணசித்தி ரங்களையும் மெய்ப்பாட்டின் மூல மும் உணர்ச்சிப் பிரதிபலிப்பின் மூலமும், வார்த்தைகள் மூலமும் வெளிக்காட்டி, அச்சம்பவம் அக் கணம் உண்மையிலேயே நிகழ் கிறது என்ற ஒரு மயக்க உணர் வை மக்கள் மனத்தில் ஏற்படுத் தக்கூடியதாயிருக்க வேண்டும். ஆனல், நடிகன் உணர்ச்சி வசப் பட்டுத் தன்னை மறந்துதானே அப்பாத்திரமாக மாறிவிடக் கூடாது. மக்கள் மனத்தில் அவனே அப்பாத்திரமாக விளங்குகிருன் என்ற மயக்க உணர்ச்சியை உண் டாக்கத்தக்கத்ாக நடிப்பு அமைய வேண்டுமே தவிர, நடிகன் தன்னை மறந்து நடிக்கக்கூடாது. தன்னை மறந்த நிலை ஏற்பட்டால் நடிப்புக் குப் பங்கம் விளையும்.
திரைப்பட நடிப்புக்கும் மேடை நடிப்புக்கும் அதிக வித்தியாச முண்டு. பல இளைஞர்கள் திரைப் பட நடிப்பினைப் பார்த்துவிட்டு, மேடையிலும் அப்படியே நடிக்க ஆசைப்படுகிறர்கள்.மேடை நடிப் புக்குச் சில பண்புகள், வழக்கங் கள், மரபுகள் உண்டு. நடிகர்கள் மேடைக்கு வ ரு வ த ந் கு ம் வெளியே செல்வதற்கும் ஒரு ஒழு ங்கு முறையிருப்பதுபோலவே, அவர்கள் மேடையில் நடப்பதற்:

கும், நிற்பதற்கும், திரும்புவதற்
கும், பேசுவதற்கும் சில ஒழுங்கு முறைகள் உள.
கொலைக் காட்சி, விர சமான
*செயல்கள் போன்றன மேடை நாடகங்களிலே தவிர்க்கப்பட வேண்டும் என்பது, நாடக அறி ஞர்கள் பல காலமாகக் கைக் கொண்டொழுகும் சம்பிரதாய மாகும். அவ்வாறே, திரைப்பட உத்திகளை மேடை நாடகத்திற் கையாளும் முறைகளும் தவிர்க் கப்படவேண்டும்.
நாடகம் சிறந்து விளங்குவதற்கு ஒளியமைப்புப் பெரிதும் உதவு கிறது. இக்கால நாடகத்துக்கு மட்டுமன்றி, அக்காலக் கூத்துக் கும் ஒளியமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென விதி வகுத்திருக் கிருர்கள். சிலப்பதிகாரத்து அரங் கேற்று காதையிலே, *துானிழற் புறப்பட மாண் விளக்கெடுத்து? என்று அரங்க ஒளியமைப்புப் பற் றிக் கூறப்பட்டிருக்கிறது. அரங் கிலேயுள்ள தூண்களின் நிழல் அரங்கிலும் நடிகர் மீதும் சபை யோர் மேலும் விழாதவாறு விளக்குகள் அ  ைம க் க ப் பட வேண்டுமெனக் கண்டிருக்கிருர் கள் அற்றை நாள் நாடகாசான் கள். அந்த உண்மை இக்காலத் துக்கும் பொருந்தும்.
மேடை நாடகங்களுக்கு இப் பொழுதெல்லாம் ஒளியமைப்பு, மின் விளக்குகளாலேயே செய்யப் படுகின்றது. மின்விளக்குகளுள் ஆளும், கடுங்கதிர்ச் சுடரொளி விளக்குகளே ஒளியமைப்புக்கு ஏற் றன. அவ்விளக்குகள் மேடைக்கு முன்புறமாகவும் , ஒளியானது மேடைக்கு வெளியே மேலிருந்து மேடையை நோக்கிக் கீழே வந்து மேடையில் விழத்தக்கதாகவும் மேடையில் எல்லா இடங்களிலும் ஒளி ஒரே அளவினதாகப் பரவக் கூடியதாகவும் அமைக்கப்படல் வேண்டும். அவ்வாறமைத்தால்
நிழல் விழக் கார ண மி ராது. மேடையில் நிழல் விழும்படியாக ஒளி ய  ைம ப் பிருக்கக் சிடடாது. ஒளியை ஏற்றவும் இறக்கவுந் தக்க தனிக் கருவியைக் கொண்டு, காட்சிகளின் தன்மைக்கேற்ற வாறு ஒளியின் செறிவைக் கூட்டியோ குறைத்தோ கொள்ள வேண்டும்
ஒளியமைப்பு ஒப்பனைக்கேற்ற வாறு அமையவேண்டும்; அல்லது ஒப்பனை ஒளியமைப்புக்கு ஏற்ற வாறு அமையவேண்டும்; வேருேர் அறையிலே வேறுவித ஒளியி
லிருந்து ஒப்பனை செய்துவிட்டு,
மேடையில் நடிகன் வந்து நிற்கும் போது அந்த மேடை ஒளியமைப் புக்கு அவ்வொப்பனை விட்டுக் கொடுப்பதைப் பல தயாரிப் பாளர்கள் க வ னி ப் ப தி ல் லை. எனவேதான், மேடைக்குரிய ஒளி யமைப்புடயே, ஒப்பனை ஒத்திகை களும் நடத்தல் படல் வேண்டும்.
நல்ல நாடகத் தயாரிப்பாள ராக விளங்க விரும்பும் எவரும்,
இத்தனை அம்சங்களையும் ஒரள வாவது தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வொவ்
வொரு துறையிலும், தனி நூல் கள் எத்தனையோ ஆங்கிலத்திலி ருக்கின்றன. அவற்றைப் படித் துத் தயாரிப்பு முறைகளை ஏட்டுப் ப டி ப் பள வி லாவது தெரிந்து கொண்டு நாடக ந் தயாரிக்கத் தலைப்பட்டால், நமது சமூகத்தில் நல்ல நாடகத் தயாரிப்பாளர்கள் பலர் விரைவிலே தோன்றி விடு
வார்கள். அப்பொழுது. நமது பழம்பெருங்கலையாகிய நாடகம் மீண்டும் உயர்வடைந்து, எம் சமூகத்தை உய்விக்கும். 女
4夺

Page 25
ລRPວrລH
பூமணக்கச் சுரிகுழலில், புதுநிலவின்
எழில் சொட்டும் பூவை; அந்தக் காமனுக்கும் மயல்மூட்டுங் கருவிழியைச்
சுழற்றியொரு கணத்தில் வண்ணப் பாமணக்கச் செழுங்கொவ்வைப் பழஇதழில்
புன்னகையைப் படர விட்டுத் 'தார் மணக்குஞ் சுடுரோட்டில் தமிழ்வணக்கஞ்
செப்தொயிலாய்த் தலையைச் சாய்த்தாள்!
米
நானின்று விழித்ததும் நரிமுகத்தா!
அது யாரோ நடிகை (Sunri (SLT ! ஏனின் றென் எதிரினிலே இப்பெரிய
எழிலரசி இங்கு வந்தாள்! வானின்று குதித்தவளோ! வையகத்து
மோகினியோ! மயங்கும் போது தேனென்றுங் குரலுக்குத் தெரிவிக்கும் உவமைக்கோர் தெளிவு தந்தாள்!
冰 米 米
**சேர்மனுக்கு நிற்கின்ற செல்லப்பா என்னுடைய சிறிய தந்தை; ஒர் முறையில் இத்தொகுதி உறுப்பினரும்
எங்களுக்கு உறவே அந்தக் *கார் "இணக்குங் ‘கராச்' உள்ள கட்டிடத்துக்
கெதிரிருக்குங் "கனக வாசா' ‘போர்ட் இருக்கும் வீடெமதே; பூங்கோதை
எனது பெயர்’ புகலலாஞள்.
事 家 本
'நீங்களுமோர் கவிஞரென நெடுநாளாய்த்
தெரியாது; நேற்றுத் தான் நான் வாங்கியதோர் சஞ்சிகையில் வந்திருந்த
புகைப்படமும் வாழ்த்தும் பார்த்தேன்' பூங்கொடியாள் தொடர்ந்திட்டாள்; புதுப்புனலுள்
நடுரோட்டிற் புதையலா னன்! ஏங்கியதோர் இகவாழ்வு இன்றெனக்குங் கிடைத்ததென இறுமாந் திட்டேன்!
 

喜
3% 乏
来源 来源 来 * - எருவில் மூர்த்தி
கவிதையிஞல் ஒப்பற்ற காவியத்தைக்
கண்டெடுத்த களிப்பில் மூழ்கிப் புவியினிலே வேறெந்தப் புலவனுக்கு
இப்பேறு பொருந்திற் றென்று, குவியிதழாள் தரவிருக்குங் குளிர்த்தென்றல்
வார்த்தைக்காய்க் குறியை வைத்துச் செவிகளினைக் கூராக்கிச் செம்மாந்து
நிற்கையிலே செப்பலானுள்!
率 亭 米
"இப்பகுதி இளம்பெண்கள் இலக்கியத்தை
வளர்ப்பதனை இலக்காய்க் கொண்டே ஒப்பரிய தமிழ் மன்றம் ஒன்ற ைமத்துக்
கொண்டுள்ளோம்; ஒருவா ரத்தில், அப்பெரிய மன்றத்தின் ஆண்டுவிழா வருகிறது; அதற்கு நீங்கள் எப்படியும் ஏதேனும் எமக்களிக்க
வேண்டும்" என எடுத்தாள் லிஸ்ட்டை
岑 事 m 本
இலக்கியத்தை வளர்க்கின்ற இளம்பெண்ணுள்
என் முன்னே ஏன்வந் தாளோ! கலக்க முற்றேன் அடசிவனே! கடன்காரன்
நான் ஏனுே கவிதை செய்தேன்! இலக்கியத்தைப் படைக்கத்தான் எனக்கியலும்;
*ஏதேனும் ஈயத் தக்க நிலைக்குரித்தாய் என்றேனும் நீள் புவியில்
தமிழ்க் கவிஞன் நின்ற துண்டோ?
溶 岑 冰
அளப்பரிய பணியாற்ற அயராமல்
உழைக்கின்ற அரிவை என்றன் குழப்பநிலை அறிவாளா! குறுநகையை இதழ்க்கடையிற் குந்த வைத்துப் பழுப்பு நிறப் பேணுவைப் பவ்வியமாய்த்
திறக்கின் ருள்! பாவி நான்போய் விழப்பெரிய குளம். குட்டை. வேறெதுவுங்
கிடைக் காதா? விரைகின் றேன்,நான்.

Page 26
திருமண வைபவங்களுக்கு ஏற்ற
பெனரிஸ் மணிபுரி டிஸ்யூசாரி
மற்றும்
உங்களுக்குத் தேவையான பிடவைத்
தினுசுகளுக்கு ஏற்ற இடம்
எஸ். ஆர். எஸ்.
معتصمحمد شعیبسبرہیمبرعبرہے
ஜவுளி மாளிகையே
எஸ். ஆர். செல்லத்துரை 216, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாண ம்.

邬 |神 可斑庙 蛋翻目 蛋玮驯 J醉隐 遭舞释形虫 禹@= 沙-鹰乱 -旧

Page 27
எனது பிரார்த்தனை!
முதன் முதலாகத் ‘தேனருவி' என்ற பத்திரிகை யைப் பார்த்த போது, இப் பத்திரிகை இந்தியாவிலிருந்து வரும் பத்திரிகையோ என்ற ஐயம் என் மனதிலு தித்தது. பத்திரிகையைப் புரட்டிப் பார்த்த போது, இலங்கையி லிருந்து வெளியாகும் சஞ்சிகை யென்றறிந்து ஆச்சரியம் மேலிட்டது. தரமான கட்டுரைகள், கதைகளோடு, மன தில் பதியும் வண்ணம் அழகான முகப்போடு, அறிவூட்டும் பத்திரிகையாக அமைந்திருந்த தேனருவியை, ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழ் மக்களின் கடமையென்றுணர்ந் தேன். அத்துடன் நில்லாது, அப் பத்திரிகையின் ஆசிரிய ரைப் பற்றியும், அதனேடு சார்புடையவர்களைப் பற்றியும் விசாரித்தேன். இலக்கியத்திற்காக மட்டுமன்றி, கலையை யும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றறிந்த போது, என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.
இன்று ஈழத்தில், சிறுகதை, தொடர் நாவல் ஆகியவற் றின் வளர்ச்சி குறிப்பிட்டளவு முன்னேற்றமடைந்துள் ளது. பிரசுராலயங்களும் தோன்றி, மேற் கூறியவைகளின் வளர்ச்சியில் ஊக்கங் காட்டி வருகின்றன. ஆனல், நாடக உலகில் குறிப்பாக நாடக இலக்கியம் பின்தங்கி நிற்கக் காரணம் பிரசுராலயங்கள் நாடகப் புத்தகங்களை வெளி யிடாமையே என்று கூறலாம். ‘தேனருவி' ஆசிரியர் இத் துறையில் ஆர்வம் காட்டி, நாடக ஆசிரியர்களையும் அவர்க ளது படைப்புகளையும் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டு மென்ற நல்ல நோக்கத்தோடு, தேனருவி பிரசுராலாயத் தைத் தொடங்க ஆசைப்பட்டார். எதையும் மற்றவர் களின் நன்மைக்காகச் செய்ய முயற்சிக்கும் போது, சமுதா யத்தில், நல்ல நிலையில் உள்ள நல்லவர்கள் நிச்சயமாக உதவி செய்வார்கள் என்ற என் நம்பிக்கை வீண் போகாது, வானெலி நாடகக் குழுவினரின் போஷகர் என்ற முறையில் என் ஆதரவும், ஆசியும் தேனருவி பிரசுராலயத்தினருக்கு என்றும் உண்டு. ஏனையோரும், தமிழ்க் கலையை வளர்க்க முயற்சி செய்யும் ‘தேனருவி பிரசுராலயா’’ இளைஞர் களுக்கு, தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்களென்று நம்பி, இவர்களின் தொண்டு ஈடேற எல்லாம் வல்ல இறை வனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஒப்பம்: எஸ். இராமச்சந்திரன்.
போஷகர், **வானெலி நாடகக் குழுவினர்"
お 9

நாடகம் சினிமா நிலை
சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச் சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும் கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னல் கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்? பாரத காட்சியெலாம் பார்ப்ப தற்கும் பழமை நிலை நீங்கிநலம் சேர்ப்ப தற்கும் ஆராய்ந்து மேல்நாட்டார் நாட கங்கள் அமைக்கின்ருர் முன்னேற்றம் அடைகின் ருர்கள்.
ஒரு நாட்டி ன் வேரிலுள்ள பகைமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும் பெருநாட்கள் முயன்ருலும் முடியா ஒன்றைப் பிடித்த பிடி யில் பிடித்துத் தீர்ப்ப தற்கும் பெருநோக்கம் கொள்வதற்கும் பிறநாட் டார்கள் நாடகங்கள், சினிமாக்கள் செய்வார் என்றன் திருநாட்டில் பயனற்ற நாட கங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பா திப்போர் தமிழ்மொழியின் பகைவரே! கொள்கை யற்ருேர்! இமயமலை யவ்வளவு சுய நலத்தார், இதம்அகிதம் சிறிதேனு மறியா மக்கள் தமைக்காக்க பிறர்நலமும் காக்க என்னும் தருமகுண மேனுமூண்டோ இல்லை இந்த அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள் அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை.
முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில் மூளிசெயல் தங்காத நல்ல தங்கை தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட சரிதத்தைக் காட்டுகின்ருர் சினிமாக் காரர் இந்நிலையில் நாடகத்தில் தமிழோ, காதை இருகையால் மூடிக்கொள் என்று சொல்லும் ܗܝ தெனட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம் செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்.
“பாரதிதாசன்'
5.

Page 28
ஒரு நிமிடம்.
இலங்கை வானெலி நாடகப் பகுதியில் நான் எழுதிய நாடகங் கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண் டி ரு ந் த கா ல ம து. **வானெலி எழுத்தாளன்” என்று ஒரு சி. பெரிய எழுத்தாளர்களால் அறிமுகப்படுத்தப்படும் "பாக்கி ய ம் ** கிடைக்கப்பெற்றுவிட்ட எழுத்தாளனுகத் திகழ்ந்தபோது தான், ‘தேனருவி' ஆசிரியர் திரு. அருண் மொழித் தேவரை (அருண்மொழியை)ச் சந்தித்தேன். அதுவும், நான் எழுதிய வானெலி நாடகத்தில் நடிக்க வந்திருந்தார். காலப்போக்கில் நடிகராக வந்த வரை இப்போது ஒரு பத்திரிகை யின் ஆசிரியராகப் பார்க்கின் றேன்.
கடந்த எட்டு வருடங்களாக, எழுதி எழுதி, எழுத்தாளன் என்ற பெயரை, 'ஸ்ரார் எழுத்தாளர் கள்’’ எனக் குத் தர மறுக்கும் போது, ஒரு பத்திரிகையை வெற் றிப்பாதையில் நடத்திச் செல்லும் ஆசிரியராக, திரு.அருண் மொழித் தேவர் மாறிய பொழுது, உண்மை யிலேயே அவருடைய உற்சாகத் தையும், விடாமு ய ந் சி யை யு ம் பாராட்டத் தான் வேண்டும். எழு தினுல் மட்டும் போதாது, தன்னம் பிக்கை வேண்டும்; தனித்தியங்க முடியுமென்ற உறு தி இருக்க வேண்டுமென்ற உ ண் மை யை எனக் குணர்த்தியுள்ளார் என்று தான் கூறவேண்டும். அவர் தன் னம்பிக்கையோடு, தேனருவியை வெளியிட் டு க் கொண்டிருந்தார். அதன் வளர்ச்சியையும் வீழ்ச்சி யையும் நான் கவனித்துக்கொண் டிருந்தேன். என் வளர்ச்சியை மற்றவர்கள் விரும் பாதபோது, என்னை வைத்து, என் சிருஷ்டிகளை வைத்து மற்றவர்கள் வளர்ந்து
52
(வலி. சண்முகம்)
கொண்டிருந்தபோது, என் திற மைக்கு மதிப்புக் கொடுக்காது, ஒரு நாடக இயந்திரமாக என்னை மற்றவர்கள் நோக்கி, என் திற மையை என்னல் புரிந்து கொள்ள முடியாது நான் மயங்கி நின்ற
போது, மற்றவர்கள் வளர்ந்து கொண்டிருந் தா ர் க ள். அதில் தேனருவியும் ஒன்று. வளர்ந்து
கொண்டிருந்த தேனருவி தி: ரென்று நின்றது. காரணம் என்ன வென்று ஆராயும்போது நாடகப் போட்டி வைத்து, நாடகம் தயா ரித்து, வெளியிட்டார்கள் தேனரு
விக் குழுவினர் என்ற செய்தி வந்
தது. தேனரு விக் குழுவினரின் ஆசை நியாயமானது நிச்சயமாக வரவேற்க வேண்டியது. ஆனல் அம்முயற்சி தோல்வியடைந்ததிற் குக் காரணம், முல்லைக் குமரியைத் தயாரித்தவர்களில் கலைஞர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் ட சோந்திகள் ஒரு சிலர் புகுந்ததே.
‘'தேனருவி" அத்தோடு நின்று விடவில்லை. மறுபடியும் புத்துயிர் பெற்றுப் பவனிவருகிறது. அது வும், நாடகக் கலைஞர்களுக்கு, நாடக இலக்கியத்திற்கு நல்ல தொண்டு செய்ய வேண்டுமென் : நோக்கோடு செயலாற்றுகின்றது. நோக்கம் நல்லதெனின், சமுதா யத்தில் தன்னலமற்று வாழும் நல் லவர்கள் உதவி செய்ய முன்வரு 6) 171766 67f.
வானெலி நாடகக் குழுவை நானும் எனது நண்பர்கள் திரு. ஆறுமுகம் , எஸ். எஸ். கணேச பிள்ளை, திரு. ரொசா ரியோ பீரிஸ் ஆகிய மூவரும், காலிமுகக் கடற் கரையில் வைத்து ஆரம்பித்தோம். *ஸ்புட்னிக் சுருட்டை' எழுதி னேன் . திரு. ரொசாரியோ பீரிஸ்,

ஆசிரியர் அருண்மொழி போஷகர், இராமச்சந்திரன்
வானுெலி நாடகக்குழு
யாரது ஆசிரியர் சி. சண்முகம்
தடிப்பதோடு ' டைரக்ட்' செய் வதாகவும் ஒப்புதல் தந்தார். கடைசி நேரத்தில், திரு. ரொசா ரியோ பீரிஸ் அவர்கள் எங்களை நட்டாற்றில் விட்டு, விலகிவிட் டார். ஒரு பண்பட்ட நடிகன், மேடை நாடகத்தைப்பற்றி, சகல தும் அ றி ந் த கலாவல்லுனர் ரொசாரியோ பீரிஸ் , தன் எதிர் கால நன்மைக்காக எம்மை விட் டுப் பிரிந்து சென்ருலும், என் நண்பர்கள் என்னைக் கை விட வில்லை. தன்னம்பிக்கையற்று மற் றவர்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைச் செயல் வீரனுக்கி விட்டார்கள். என் கண் கண்ட தெய்வம் திரு. எஸ். இரா மச்சந்திரன், என்னை மற்றவர் களுக்கு அறிமுகப்படுத்தினர்.
என் வாழ்வில் என்றும் அக்கறை காட்டும் என் ஆருயிர் நண்பர்கள் திரு. எஸ். சற்குருநாதன், சந்திர காஸ் வாசா ஆகியோர் என் உள் ளத்தில் உறுதியை உண்டாக்கி ர்ைகள். என் நண்பர்களான திரு. என். ஆறுமுகம், திரு. எஸ். எஸ். கணேசபிள்ளை, திரு. வி. சுந்தர லிங்கம், லடீஸ் வீரமணி ஆகி யோர் இன்று எனக்குப் பக்கபல
மாக நிற்கிருர் கள். காலம் மாறு கிறது, நாங்களும் மாறிக்கொண் டிருக்கிருேம், முடிவு?
*வானுெலி நாடகக் குழுவினர்’ என்ற பெயரில் இயங்கி வரும் எமது குழு ரசிகர்களைத் திருப்திப் படுத்த வேண்டுமென்ற குறிக் கோளோடு செயலாற்றும், நல்ல நாடகங்களைக் கலையை வளர்க்க வேண்டுமென்ற இலட்சியத்தோடு தயாரிக்கும் எமக்கு வேண்டுவது இரசிகப்பெருமக்களாகிய உங்கள் ஆதரவு. செயல்பட முடியாதவர் கள் முன்னுக்கு வரத் துடிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முட் டுக்கட்டை போடும் ஒருசில பெரி யவர்கள் எங்கள் துரித வளர்ச்சி யைக் கண்டு பொருமுகிருர்கள். அவர்களுக்கொன்று கூற ஆசைப் படுகிறேன். எங்களுக்குக் கலையுல கில் எவரும் விரோதிகளில்லை. எட்டு வருடங்களாக, நாடகக் கலையைப் பற்றிச் சிறிது அறிந்து கொண்டே தயாரிப்பில் இறங்கி யிருக்கிருேம். பொரு  ைம  ைய. வி டு த் து , எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நல்லாசி கூறுங்கள்.
வணக்கம் !
芝5 雲

Page 29
h • − பரிசு ரூ. 300-00
தேனருவி நடாத்தும் இரண்டாவது
அகில இலங்கை நாடகப் போட்டி முதல் பரிசு ரூபா 150.00
இரண்டாவது பரிசு ரூபா A 00-00
மூன்ருவது பரிசு ரூபா 50-00
1.
போட்டியில் பங்குபற்றும் நேயர்கள் கவனத்திற்கு
குறைந்த காட்சியமைப்பு-குறைவான பாத்திரங்கள்இரண்டரை மணித்தியாலயங்கள் மேடையில் நடிக்கக் கூடிய கால அளவு உள்ளதாயும், தழுவலோ, மொழி பெயர்ப்போ இல்லாததாயும், ஏற்கனவே மேடையேற் நறப்படாததாயும் நாடகம் இருத்தல் வேண்டும்.
நாடகம் அனுப்பவேண்டிய முகவரி:
தேனருவி,
அகில இலங்கை நாடகப் போட்டி, 59, ஸ்கூல் அவன்யூ, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
போட்டியின் முடிவு திகதி 15-6-1964,
பரிசு பெறும் நாடகங்கள் "தேனருவி பிரசுராலயா” வெளியீடாக வெளியிடப்படும். போட்டி சம்பந்தமாக எந்தவித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்பட மாட்டாது. புனைப் பெயரில் போட்டியில் பங்குபற்றும் நேயர்கள் தங்களின் இயற் பெயரையும், முகவரியை யும் நாடகப் பிரதியுடன் அனுப்பிவைத்தல் வேண்டும். பரிசு பெருத நாடகப் பிரதிகளே திரும்பப் பெற விரும் பும் நேயர்கள்-அதற்குரிய தபாற் தலைகளையும் சேர்த்து அனுப்பிவைத்தல் வேண்டும்.
- ஆசிரியர்.
.
 
 

r r ;
திரு. எஸ். சற்குருநாதன்
கிலையென்று கூறுவார்கள். அக் கலையை வைத்துப் புகழ் சம்பாதிப் பார்கள். கலைச் சங்கங்களிலும், பேரவைகளிலும், அவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக் கும். ஆல்ை, கலைக்குதவுங்கள் என்று வீடு தேடிச் சென்ருல், இலவச உள் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே, நாம் நாட கம் பார்க்க வருவோமென்று கூறுகின்ற கலைக் காவலர்கள் வாழுகின்ற நம்மிடையே, நிறை கு ட ம் தளம் பாது, அ ஸ் விக் கொடுப்பவர்கள், சொல் லி க் கொடுக்க மாட்டார்கள் என்ற
மொழிகளுக்கிணங்க வா மு ம் பெரியவர்களும் இருக்கத்தான் செய்கின்ருர்கள்.
மேடை நாடகங்கள் தரமுள்ள வைகளாக இருக்க வேண்டுமா கில், நல்ல நாடகங்கள் எழுதப்பட வேண்டுமென்ற எங்கள் எண் ணத்தை செயலாக்க, பரிசுத் திட்டமொன்றை ஏற்படுத்தி, செயல்பட்டு வருகின்ருேம். இம் முறை, அப் பரிசுகளை எமக்கு வழங்க முன் வந்திருப்பவர்கள். வானெலி நாடகக் குழுவினரின் தலைவர் எஸ். சற்குருநாதன் அவர் களும், உபதலைவர் சந்திரகாந் வாசா அவர்களுமாவர். திரு எஸ். சற்குருநாதன் அவர்கள் பட்டக்
\
கலை வளர.
கண்ணு சுப்பையா ஆச்சாரி, நகை மாளிகையின் உரிமையாளர். இளைஞராக விருந்தும், இன்று எல்லோரிடையேயும் நல்ல வரா கக் காட்சியளிப்பதன் காரணமே, கள்ளமில்லாத உள்ளமும், மற்ற வர்களுக்கு கெடுதல் நினைக்காத மனப்பான்மையுமே. இ வ ரின் தொண்டு என்றும் வாழ்க.
இரண்டாவது பரிசை வழங்கும் சந்திர காந் வாசா அவர்கள், இலங்கையின் பிரபல மூக்குக் கண் ணுடி வியாபாரிகளான மோகன் லால் தி வாசா ஸ்தாபனத்தின் உரிமையாளர். மூன்ற வது பரிசுத் தொகையை வானெலி நாடகக் குழுவினரே அளிக்கிருர்கள்.
தமிழ் மொழியைப் பற்றி நன்கு அறியாத ஒருவர் தமிழ் நாடக மன்றத்தின் உப த லே வ ரா க இருந்து, நாடகப் போட்டிக்கு இரண்டாவது பரிசைக் கொடுத்து தமிழ் நாடக எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க முன் வந்துள்ளார் என்பதை அறிந்தாவது தமிழைப் பற்றியும், தமிழ் கலையைப் பற்றி யும், பேசி, அதனுல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பெரியார் கள் உள்ள சுத்தியோடு தமிழ் கலேயை வளர்க்க முன் வர மாட் Lfrti 56rr? , --தேனருவி
திரு. சந்தரகாந்வாசா

Page 30
பாவைக்கூத்து
米 米 米 米 米
வைக் கூத்து, பொழுது போக்கிற்கு உரிய ஓர் அருமை யான கலையாகும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அதைப் பொம் மையாட்டம் அல்லது பொம்ம G) nr . . b GT GT ut 7 ri 5 sit. தமிழ் இலக்கியத்தில் பாவைக் கூத்து என்றே வழங்கிவருகிறது. புற நானூறு, திருக்குறள், சிலப்பதி காரம் முதலான மிகப் பழைய தமிழ் நூல்களிலும் பாவைக் கூத் தைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன.
எகிப்திய நாட்டுப் பழங் கல்ல றைகளில் தனித்தனியே கை கால் அசையக் கூடிய பொம்மைகள் காணப்படுவதால், அத்த நாட்டி லும் இந்தப் பாவைகளை வைத் துக்கொண்டு ஆடும் ஆட்டம் பழங்காலத்திலேயே பரவியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியா ‘ளர் கருதுகின் ருர்கள். கி. மு. ஐந் தாம் நூற்றண்டிலேயே கிரேக்க தாட்டு மக்கன்ாடிய பாவைக் கூத்து போற்றப்பட்டு வந்திருக்கிறது. ஐரோப்பாவில் இது அறிஞர்க ளின் ஆதரவு பெற்ற கலையாக வாழ்ந்து வந்திருக்கிறது. லிசேஜ்
என்னும் அறிஞர் பதினேழாம் நூற்ருண்டில் பாவைக் கூத்திற் காகவே பயன்படும் முறையில்
சில நாடகங்களை எழுதியிருக்கி ருர். பைபிள் கதைகளையும் ஞானி களின் வாழ்க்கைகளையும் பாவைக் கூத்தின் வாயிலாக மக்களுக்கு நடத்திக் காட்டியிருக்கிருர்கள். ஜாவா, சைன, ஜப்பான் நாடுக ளிலும் வரலாற்றுக்கு எட்டாத பழங்காலத்திலிருந்தே பாவைக்
டாக்டர் மு. வரதர ாசன்
米 米 来源
来源 来源 来
56
来 米 来源 来源 米 米
கூத்து இருந்து வருகிறது. ஆங் கில நாட்டுப் புலவர்களான சாஸர், ஷேக்ஸ்பியர், பேசப், அடிசன் முதலானவர்கள் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிருர்கள்.
வளமான ஒரு சோலையில் நள் ளிரவில் ஆணும் பெண்ணுமாக அழகில் சிறந்த இருவர் திரிகின் ருர்கள். அவர்கள் காதலனும் காதலியுமாக அங்கே வந்தவர் கள். நள்ளிரவில் வேறு யாரும் நட மாடாத இடம் அது. அத்தகைய இடத்தில் அவர்கள் தனியே அழ கின் வடிவங்களாக இயங்குவ தைக் கோவூர் கிழார் என்னும் பழங்காலத்துப் புலவர் பாடலில் குறிப்பிடும்போது, ஆண்பாவை யும் பெண் பாவையுமாக அழகா கப் புனையப்பட்ட இர ண் டு பாவைகள் ஆடும் அழகுக்கு ஒப் பிட்டுக் கூறுகின்ருர்,
வல்லோன் தைஇய வரிவனப் புற்ற அல்லிப் பாவை ஆடுவனப் பேய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க்கா
என்ற அடிகளில் இயங்கி ஆடும் பாவைகளின் ஆடலைக் கூறுகின் ரு ர். ஆடுவதற்கு என்று செய்யப படும் அந்தப் பாவைகள் திறமை மிகுந்த கலைஞன் ஒரு வஞல்-வல் லோன் ஒருவனுல் - இயற்றப்
பட்டு நல்ல நிறங்கள் தீட்டப் பட்டு அழகாக விளங்குகின்ற பாவைகளாம். 'ഠു'
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் உரையாசிரியர் அடி யார்க்கு நல்லார் விநோதக் கூத் துக்களைப் பற்றி விளக்கும்போது, தோலால் பொம்மை செய்து

ஆட்டுவிக்கும் தோல் பாவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிருர், அதனுல் இந்தப் பாவைகளே மரம்,நெட்டி, துணி முதலியவற்ருல் செய்வ தோடு அல்லாமல், தோலாலும் செய்வதுண்டு என்று அறியலாம்.
சாதாரணமாக இந்தப் பொம் மைகளின் உயரம் 24 அடி, 3 அடி இருக்கும். ஆனல், ஒரு பொம் மைக்கும் மற்ருெரு பொம்மைக் கும் உள்ள உயரம் அகலம் முத லியவற்றை ஒப்பிட்டுப் பார்த் தால் பொருத்தம் இருக்காது. குள்ளன் என்ருல் மிகக் குள்ள மா கக் காட்டுவதும், நெட் டையன் என்ருல் மிக உயரமாகக் காட்டு வதும் உண்டு. கலையில் உயர்வு நவிற்சிக்கு எப்போதும் இடம் இருப்பதால், பொம்மைகளின் உயரத்தில் ஏற்றத் தாழ்வும் அள வுமீறி இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பாவைக் கூத்தில் போர் வீரன் அல்லது போலீஸ் கா ர ஞ க வ ரு ம் பொம்மை கள் ம ற் ற ப் பொம்மைகளை விட இரண்டு மடங்கு உயரமும் இருக்குமாம். ஐரோப்பாவில் சில நாடுகளில் பாவைகளின் உயரம் சாதாரணமாக ஐந்து அடி இருப் பதும் உண்டு. ஆணுலும், பொது வாக மக்களின் உயரத்தைவிட ஆடும் பொம்மைகளின் உயரம் குறைவாகவே இருக்கும். இல் லே யானுல், பொம்மை என்ற உணர் -ச்சி தோன்ருது அல்லவா?
மேடைகளில் நேராக அந்தப் பொம்மைகளையே கொ ன் டு வந்து நிறுத்தி ஆடச் செய்வதே
பரும்பான்மையான வழக்கம். சிறுபான்மை, திரைக்குப் பின் ஞல் பொம்மைகளை ஆ ட் டி, அவற்றின் நிழல்களை மட்டும் திரையில் விழச் செய்து சபை யோர்க்குக் காட்டுவதும் உண்டு.
பாவைக் கூத்திற்குப் பெரிய மே  ைட க ள் வேண்டியதில்லை ஆகையால். இதற்கென்று நாடக
பண்டா புகழ்
எஸ். ஆறுமுகம்

Page 31
அரங்குகள் தேவையில்லை; தெருக் களில் பெரும்பாலும் திறந்த வெளியில் மேடைகள் அமைத் துப் பாவைக் கூத்து தடத்துவார்
கள்.
பாவைக் கூத்தின் 2 Gör GI) LD" யான சிறப்பு, பொம்மைகளைச்
செய்கின்றவர்களை விட, பின்னுலிருந்து பாடுகின்றவர்களை விட, திரை மறைவிலிருந்து பொம்மை களே ஆட்டுகின்றவர்களையே சேரும். ஆடுகின்ற பொம்மைக. ளைச் சபையோர் காண முடியுமே த வி ர, ஆட்டுகின்றவர்களைக் «5гт 60от (урц. штg5). அ வர் க ள் திரைக்குப் பின்புறம் நின்று கொண்டு அத்தப் பொம்மைகளைக் கயிறுகளால் அல்லது கம்பிகளால் ஆட்டி வைப் பார்கள். சில நாடுக ளில் பொம்மைகளுக்குக் கீழே அல்லது மேலே மறைந்திருந்து ஆட்டுவதும் உண்டு. பொம்மைக ளுக்கு நிறையத் துணி சுற்றி உடுத்து, துணிகளின் மறைவில் கையால் பற்றிக்கொண்டு ஆட்டு கின்ற வழக்கமும் இருந்து வந் தது. சில ஆண்டுகளுக்கு முன், தெருவில் பிச்சையெடுப்பவர்கள் சிலர் இப்படிக் கையில் பொம் மைகளை வைத்துப் பொம்மலக்கா பொம்மலக்கா என்று ஆட்டிக் கொண்டும் பாடிக் கொண்டும் வீடுதோறும் பிச்சையெடுத்தார் .
கள்.
ஆணுல், பெரும்பான்மையான பாவைக் கூத்து, திரைமறைவில் நின்று கயிறுகளால் ஆட்டிவைப் பதே ஆகும். பொம்மையின் கை: கால் கழுத்து தலை முதலிய உறுப் புக்கள் தனித்தனியே அசையக் கூடியவைகளாய்ப் பொருத்தப் பட்டிருக்கும். அவற்றைத் தனித் தனியே கயிறுகளால் இணைத்துத் திரைக்குப் பின் இருப்பவர் கயிறு <களின் முனைகளை வைத்துக் கொண் டிருப்பார். பொம்மையின் இன்ன
நடிகவேள் இன்ன உறுப்பை அசைக்க இன்ன லடிஸ் வீரமணி இன்ன கயிற்றை இழுக்க வேண்
58"
淤
 

டும் என்பது அவருக்குத் தெரி யும். அவருடைய கை கால் காது தலை முதலியவற்றில் அந்தந்தக் கயிற்றின் முனையைக் கட்டிக் கொண்டிருப்பார். ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொருவராக அங்கே நின்றுகொண்டிருப்பார் கள். சபையோர் அவர்களைப் பார்க்க முடியாது. ஆளுனல், அவர் கள் பொம்மைகளைப் பார்த்துக் கொண்டே ஆட்டக் கூடியவகை யில் திரை முன்னும் பின்னுமாக அமைக்கப்பட்டிருக்கும். பொம் மையின் தலை அசைய வேண்டுமா ஞல், அதற்கு உரியவர் தன் கையிலோ காதிலோ உ ள் ள அந்தக் குறிப்பிட்ட கயிற்றை அசைப்பார்; பொம்மையின் தலை ஆட வேண்டிய அந்த அளவிற்கே கயிற்றைக் கணக்காக அசைப் பார். உடனே பொம்மை தலை அசைப்பதைச் சபையோர் காண் பார்கள். இது பார்ப்பதற்கும் நினைப்பதற்கும் எளியதாக இருந் தாலும், உண்மையில் அருமை யான முயற்சியே ஆகும். ஆட்டு கின்றவர் பொம்மையைச் சிறி தும் தாமதமோ தவறுதலோ செய்யாமல் அந்தந்தக் கயிற்றின் வாயிலாக உடனுக்குடன் அசை க்க வேண்டும். அவருடைய இந் தக் கடமையில் தாமதமோ தவ றுதலோ ஏற்பட்டால், சபை யோர்க்கு உடனே தெரிந்துவிடும் பாவைக் கூத்தின் சுவை குறை பும். அசைவு ஒன்றே இங்கே கலை யாக இருப்பதால் அடியோடு கெடும். ஆகையால் பாவைக் கூத் தின் சிறப்பெல்லாம் இப்படித் திரை மறைவில் கயிறு கொண்டு ஆட்டுகின்றவரின் திறமையைப் பொறுத்திருக்கின்றது. அ வ ர் திறமை உடையவராக இருந் தால், பொம்மையின் அசைவுகள் உயிருள்ள இயக்கம்போல் தோன் றும். திருக்குறளில் ஒரிடத்தில் திருவள்ளுவர் உ வ  ைம ய |ா க. அமைத்து இதன் சிறப்பைக் கூறு கின் ருர், கயிறுகளைக் கொண்டு மரப் பொம்மையை உயிருள்ளது
தாசன் டெர் ஞண்டோ
5.g

Page 32
வி. சுந்தரலிங்கம்
போல் இயக்கி மருட்டும் இந்தத் திறமையை,
மரப்பாவை, நாணுல் உயிர் மருட்டி யற்று
என்று குறிப்பிடுகின்ருர், கயிறு களுக்குப் பதிலாகக் கம்பிகளைப் பயன்படுத்துவது சி நு பா ன் மையே. கட்டைகளைக் கொண்டு இணைத்து ஆட்டும் பாவைக் கூத் தும் சில நாடுகளில் உண்டு.
திரைக்குப் பின் இருக்கின்றவர் கள் கயிறு கொண்டு ஆட்டுவ தோடு அல்லாமல், அவைகள் பேசவேண்டிய பகுதிகளையும் மறைந்திருந்தே பேசுகின் ருர்கள். ஆகையால், ஊமை நாடகமாக இருக்கவேண்டிய அது, பே சு ம் உண்மை நாடகம் போல வே பயன்தருகின்றது. பேசுகின்றவர் கள் பொம்மைக்கு ஒருவராக இருப்பதற்குப் பல ஆ ட் க ள் தேவை ஆதலால், சிக்கனம் கருதி ஒருவரே வெ வ் வேறு குரல் கொண்டு வெவ்வேறு பொம்மை களின் சார்பாகப் பேசுவது வழக் கம். மேடைக்கு வருவதற்கு முன்பே, திரை விலகுவதற்கு முன்பே, பேசும் குரலைக்கேட்டு, இப்போது காணப் போ வ து இன்ன பொம்மை என்று துணிந்து கூறக்கூடிய வகையில் குரல் வேறு பாடு இருக்கும். சந்திரமதியாகப் பேசுகின்றவரின் குரலைக் கேட்ட வுடனே, சந்திரமதி பொம்மை அங்கே வந்து நிற்கும்; பாட்டுக் களையும் இவ்வாறே திரைக்குப் பின் இருந்து பாடுவார்கள்.
தமிழ் நாட்டில் இந்த நூற்ருண் டில் பாவைக் கூத்திற்கு உரியவை
களாகப் பயன் பட்டுவந்த நாட
சு ங் க ள், அரிச்சந்திரவிலாசம், கோவலன் நாடகம், ராம நாட கம், குறவஞ்சி முதலியவைகள். பாவைக் கூத்து ஒரு மணி இரண்டு மணி நேரத்தில் சுருக்கமாக முடி வதும் உண்டு. ராம நாடகம் முத
 

லியவற்றை இரவெல்லாம் கண் விழித்துப் பார்க்கும்படி மணிக் கணக்காக நெடுநேரம் பாவைக் கூத்து த ட ப் ப தும் உண்டு. பாவைக்கூத்திற்கு உள்ள நாடக மேடை சிறி யது. ஆகையால் மற்ற நாடகங்களில் வருவ போல் அத்தனைப் பாத்திரங்கள்ை யும் இங்கே எதிர்பார்க்க முடி யாது. ஐந்தாறு பொம்மைகளை வைத்துக்கொண்டே அரிச்சந்திர நாடகத்தையோ டே வலன் நாட கத்தையோ சுருங்கிய அளவில் நடத்திக் காட்டுவதும் உண்டு. கூத்தின் முடிவில் நடித்த பொம் மைகளை வரிசையாக நிறுத்தி முடி வுப் பாட்டான மங்களம் பாடுவ தும் வழக்கமே ஆகும்.
சிறு பாத்திரங்களாகக் கதை யில் வருகின்ற எல்லோரையும் பாவைக் கூத்தில் எதிர்பார்க்க முடியாது. ஆணுல், ஒன்று. யார் வந்தாலும் வராவிட்டாலும் நகைச் சுவை ஊட்டுவதற்காக ஒரு பாத்திரம் அமைந்தே தீரும். கதைக் குத் தொடர்பு இருந்தா லும் இல்லாவிட்டாலும் கோமா ளிப் பொம்மை ஒன்று மேடைக்கு வரும். அதனுடைய உ ரு வ அமைப்பே காண்போர்க்கு நகைச்
சுவை ஊட்டக் கூடியதாக இருக்,
கும். உடம்பில் உறுப்புக்கள் சில அளவுமீறிப் பெரியவைகளாகப் புனையப்பட்டுத் தோன்றுவதால், அதைக் கண்டவுடன் சபையோர் சிரித்து ஆரவாரம் செய்வார்கள். சிறுவர்கள் மறக்காமல் போற் றும் காட்சி அந்தக் கோமாளிப் பாவையின் காட்சியே ஆகும். குண்டோதரனுக வரும் பொம் மையின் வயிறு கணக்கின்றிப்
பெருத்திருக்கும். பெரிய வயிற்
றுக்கு மேல் சிறிய தலையும், சின்ன கழுத்தும், குச்சி குச்சியான கை காலும் இருக்கும். இப்படியே சில பொம்மைகள் நகைச்சுவைக்கு என்றே செய்யப்பட்டுத் தோன். gytb.
எஸ். எஸ். கணேசபிள்ளை 1வரணியூரன் 1
6ir

Page 33
62
எஸ். கனகரத்தினம்
மேலைநா டு களி ல், ந  ைக ச் சுவைக்காக மாலுமி அல்லது நடனக்காரியின் பொ ம்  ைம யைக் கொண்டுவந்து நிறுத்தி ஆட்டுவதும் உண்டு, நடனமா டும் பொம்மை முதலில் மேடை மேல் தோன்றும்போது தலையே இல்லாமல் முண்ட மாக வும் தோன்றுவது உண்டு. பிறகு மெல்ல மெல்ல, உடம்பிலிருந்து தலை வெளியே கிளம்புமாம். நீண்ட கழுத்தோடு நின்று ஆடு மாம். இன்னும் ஒரு நாட்டில்
வேருெரு வகையான புதுமை
உண்டு. எலும் புருவமான ஒரு பொம்மையின் கைகால் முத
லான பகுதிகள் தனித் தனியே
மேடைமேல் சிதறுண்டு கிடக்கு மாம். பிறகு கைகால் முதலி யவை ஒவ்வொன்ருக வந் து சேர, தலையற்ற முண்டமாய் நிற் குமாம். கடைசியில் தலையோடு வந்து சேர்ந்து முழு உருவம் பெறுமாம். இப்படியெல் லா ம் உறுப்புக்கள் தனித் தனியாகச் சேர்க்கப்படுமாறு நுட்ப மா ன இணைப்புகளுடன் பொம்மையை அமைப்பதற்கு நல்ல திறமை வேண்டும்.
அடியார்க்கு நல் லார் வகுத் தது போல் இது விநோதக் கூத் தில் ஒன்ரு கையால் வேடிக்கைப் பகுதிகளையே மிகுதியாகக் காட்டி வந்தார்கள். துருக்கி தேசத்தில் நிழலால் காட்டப்படும் பாவைக் கூத்திற்குக் காரகியோஸ் என்று பெயர். அந்தப் பெயர் முதல் முதலில் நகைச் சுவைக் கு ப் பெயர் போன ஒருவனைக் குறித்து, பிறகு அவனுல் சொல்லப்பட்டுப் பரவிய வேடிக்கைக் கதைகளைக் குறித்து, அதன் பிறகு நாளடை வில் நகைச் சுவை மிகுந்த நிழற் பாவைக் கூத்திற்குப் பெயராகி விட்டது. ஒரு மனிதனுடைய வேஷம் பூண்டு மற்ருெரு மனிதன் நடிப்பது கூடாது என்று முகம் மது நபி கடிந்து விலக்கிய பிறகு, அந்த நாட்டில் நிழற்பாவைக்
 

கூத்து வளர்ச்சியடைந்து விட் டது என்று கருதப்படுகிறது.
தொடக்கத்தில் பாவைக்கூத்து குழந்தைகளை மகிழ்விப்பதற் காகவே தோன்றியிருக்கலாம். ஆணுல்,கலை வளர வளர,வளர்ந்த மக்களும் இதில் சுவை கண்டு போற்றினர்கள் காற்ருடி முத லிய விளையாட்டுக்களும் முதலில் சிறுவர்களுக்காகவே தோன்றிய போதிலும் நாளடைவில் பெரிய வர்களும் விரும் பக்கூடிய கலை யாக மாறியதுபோல், இதுவும் மாறி வளர்ந்திருக்கலாம். டாக் டர் ஜான்ஸன் என்னும் ஆங்கில நாட்டு அறிஞர் இதைப்போற்றிக் கூறும்போது, மக்கள் நடிக்கும் நாடகத்தில் ஷேக்ஸ்பியரின் மாக் பெத்தை எவ்வளவு திறம்படக் காட்ட முடியுமோ, அவ்வளவு திறமையாகப்பொம்மைகள் நடிக் கும் பாவைக் கூத்திலும் காட்ட முடியும் என்கிருர். பர்மாவில் ஒரு வீரன் குதிரைமேல் சவாரி செய்வதாகப் பாவைக் கூத்தி லேயே காட்டுகிருர்கள். அந்தக் குதிரையின் கால்கள் முதலிய ஒவ் வொரு பகுதியையும் தலையையும் வாலையும் கயிறுகளைக்கொண்டு அசைத்து, குதிரையின் ஒட்டம் போலவே ஆட்டிக் காட்டுவதைக் கண்டால், டாக்டர் ஜான்ஸன் கூறுவது உண்மை என்று உணர லாம். இவ்வாறே ஒருவன் கனவு காண்பது முதலியவற்றையும் பாவைக் கூத்தில் திறம்படக்காட் டுகிறர்கள்.
பாவைகளின் ஆடலால் பெறும் மகிழ்ச்சி தனி மகிழ்ச்சி ஆகும்.
* மக்கள் ஆடும் நாடகத்தைவிட
இதற்குத் தனிச் சிறப்புக்கள் சில உள்ளன. முதலாவது சபையோர் உண்மையுலகத்தை மறந்து கற் பன யுலகில் மகிழச் செய்கிறது. இரண்டாவது மக்கள் ஆட்டி வைக்க, பொம்மைகள் ஆடுவ தால், மக்களினம் ஆற்றல் மிக்கது என்ற ஆளும் மனப்பான்மை
செல்வம் பெர்ளுண்டோ
63

Page 34
64
கிருஷ்ணகுமாரி
மகிழ்ச்சி தருகிறது. மூன்ரு வது, ஒரு நொடிப் பொழுதில் தோன்றி மறையும் அழகை நிலைபெறக் காட்டுவதற்கு ஒவியம் பயன்படு வதுபோல் நடிப்பில் நிலை பற்ற பகுதிகளை ஒரளவு நிலைபெறச் செய்து காட்டுவதற்குப் பாவைக் கூத்து பயன்படுகிறது. நான்காவ தாக, மனித உள்ளத்தின் ஆழத் தில் மறைப்புக்கும் ஒளிப்புக்கும் ஒரு தனிக் கவர்ச்சி உள்ளது; பாவைக்கூத்தில் இவற்றிற்கு நிறைய இடம் உள்ளது. பேசுகின் றவரும் ஆட்டுகின்றவரும் கண் ணுக்குத் தெரியாமல் இருந்து அசைவுகள் மட்டும் தெரிவதால் அத்தகைய கவர்ச்சி இதில் மிகுதி யாக உள்ளது.
இத்தகைய அருங்கலே இன்று மெல்ல மெல்ல வேறு வேறு வடி வம்பெற்று வாழத் தொடங்கி யுள்ளது. இன்று சில கடைகளில் சில சிறப்பான கா ல ங் க ளி ல் அசையும் பொம்மைகள் விளம் பரத்திற்காக வைக்கப்படுகின் றன. அவற்றின் அசைவுகள் இயந் திர அமைப்பால் ஒரே வகையாக இருத்து, பார்ப்பவர்களின் கண்
க் கவர்கின்றன. சில பிரசாரங் களுக்கும் கல்வியியக்கத்திற்கும் சில நாடுகளில் இவை பயன்படு கின்றன. சினிமா, டெலிவிஷன் களிலும் பாவைகளை ஆடச் செய் கின் முர்கள்.
இத் சக் கலையைத் தமிழ் நாட் டில் பிற்காலத்தில் தஞ்சையில் ஆட்சி செலுத்திய சரபோஜி மன் னன் மிகவும் ஆதரித்துப் புத்து யிர் அளித்து வளர்த்தான். அந் தக் கலை வள்ளலின் காலத்தில் பாவைக் கூத்து மீண்டும் தலை யெடுத்தது என்று கூறவேண்டும். பாவைக்கூத்து ஆடும் கலைஞர்களை இந்தக் காலத்தில் காணவேண் டுமானல் தஞ்சை ஜில்லாவுக்குத் தான் செல்லவேண்டும். சரபோ ஜியின் காலத்தில் அவனுடைய ஆதரவு பெற்ற கலைஞர்களின்
 

ஒரு சிலர் இன்
பரம்ப ை; பினர்
ஒம் அதைக் குடும்பக் கலையாகக்
கொண்டு மறவாமல் காத்து வரு கிருர்கள்.
கார்ட் டுன் படங்களாக ஆங்கி லச் சினிமாக்களில் காட்டப்படு கின்றவை பாவைக் கூத்தின் வேறு வடிவம் என்றே கூறத் தகும். அந் தப் பகுதிகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரையில் விரும்பிப் போற்ருத வர்கள் யாரும் இல்லை எனலாம். தமிழ்ச் சினிமாக்களில் இந்த முயற்சி இன்னும் வளர்க்
கப்படவில்லை. இனிமேல் இதற் குத் தனியிடம் கொடுத்துப் பாவைக் கூத்தை வாழ வைக்க
«ծուն •
ஆணுல்,பாவைக்கூத்தின் வாழ்வு இதோடு நின்றுவிடாது. சினிமா வந்த பிறகு நாடகக்கலை அழியா ததுபோல், பாவைக்கூத்தும் அழி {List 5. p5rr L-555 in 6) LD வர்களுக்குச் சினிமாக்களால் ஒரு நல்ல காலம் பிறந்தது அல்லவா? அன்ருட வயிற்றுப் பிழைப்புக்கே கவலைப்பட்டு நாடகக்கலையை வெறுத்தவர்கள் பலர் சினிமா வில் சேர்ந்த பிறகு செல்வமும் செல்வாக்கும் பெற்று சூcன்னேறி யுள்ளார்கள். அந்த ஜிலேயே பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கும் வரவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்
தால்தான் கலை வாழ முடியும். கலைஞர்களைப் பட்டினிபோட் டால் கஃலயும் உயிர் துறக்கும். பணவருவாய் இல்லாத குறை
யால்தான் இன்று பாவைக்கூத் தில் பழகியுள்ள சில குடும்பத் தார் அதனுல் பயனில்லை என்று கைவிட்டு, வேறு தொழிலை நாடி வயிறு வ ள ர் க் கி ன் ரு ர் க ள். பாவைக் கூத்தில் பணம் ஈட்ட முடியும், வாழ்வு நடத்த முடியும் என்று தெரிந்தால் நாளைக்கே அவர்கள் தம் உணர்ச்சியற்ற வயிற்றுத் தொழில்களை விட்டு விட்டு, தாம் அறிந்த குடும்பக் கலையை நாட்டில் பரப்ப முன்
G) Lt.
வந்து விடுவார்கள். அவ்வாது செய்யும் வல்லமை யாரிடம் உள் ளது? மக்கள் தான் செய்ய முடி யும். அதற்கு இடையில் அந்தக் கலைஞர்களின் தி ற  ைம  ைய ச் சினிமா/ உலகம் பயன்படுத்திக் கொண்டு அவர்களை வயிற்றுக் கஞ்சிக்கு வாடாதபடி செய்ய லாம். பாவைக்கூத்தை நாட்டு மக்கள் மறக்காத படியும் செய்ய 6)T LO
இந்தப் பாவைக்கூத்து கிராம மக்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு கலையாகும். பொழு து போக்கு என்ருல் கிராம மக்கள் கிராமத்தை விட்டு நகரத்திற்கு ஓடும் ஒட்டம் தீர்ந்தால் கிராமங் களுக்குப் பெரும் பயன் உண்டு. அந்த வகையில் பாவைக் கூத்து பயன்படும் கலையாகும். பாவைக் கூத்து, கு ற் ற ம ற் ற எளிய பொழுது போக்கிற்கு உதவும் கலையாகும். சிறிய இடம் இருந் தால் போதும், ஆடம்பரமான பெரிய மேடை தேவை இல்லை. குறைந்த செலவில் நடத்தலாம். கிராம மக்கள் எல்லோரும் திறந்த வெளியில் இருந்து காணலாம். இப்படிக் கிராமத்தின் பொருளா தார நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி நடத்திக் காட்டக் கூடி யதாக இருப்பது பாவைக்கூத்து. இது மக்களை விட்டு மறைய முடி யாத ஒரு கலையாக இருப்பதால் தான் இதாலியிருந்து அமெரிக்கா விற்குச் சென்ற மக்கள் அங்கும் மறக்காமல் இதைப் போற்றி மகிழ்ந்தார்கள். அழிந்து மறை வது போ லி ரு ந் த நி லை யி ல் பிரான்ஸ் நாட்டில் 1887-ம் ஆண் டில் அந்நாட்டு மக்களால் இது புதுப்பிக்கப்பட்டது. நம் நாட்டி
லும் கிராமச் சீர்த்திருத்தம் செய்ய விரும்புவோர் இதை மனத்தில் கொ ன் டு நல் வ
பொழுது போக்காகப் புத்துயிர ளித்துக் காப்பாற்ற வேண்டும்.
மறுபிரசுரம், கலைக்கதிர்
f55

Page 35
வானுெலி நடிகரும் ‘அமச்
சூர்’ நடிகருமான செல்வன்
ஆர். விக்டர் அவர் க ட் கும் செல்வி பி. சரஸ்வதி அவர் கட்கும் அண்மையில் இனி தே. பதிவுத் திருமணம் நடை பெற்றது. அ வ ர் க வரி ன் வாழ்வு வளம்பெற தேனரு வியின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
படித்துவிட்டீர்களா?
இளங்கிரன் எழுதிய நீதியே நீகேள் ★ ரகுநாதன் எழுதிய நிலவிலே பேசுவோம்
女 பண்டிதமணி * கணப திப்பிள்ளே 7 எழுதிய "ஈழத்து வாழ்வும்
வளமும ★ செ. கணேசலிங்கம் எழுதிய சங்கமம் ஒரே இனம் 责 அகிலனின் பரிசு பெற்ற நாவல் வேங்கையின்
மைந்தன்
女
கிடைக்குமிடம்:
Gi?IIGIT. If புத்தக நிலையம் 248, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 6.
 
 
 

எனது எழுத்தாள நண்பர்கள்!
செய்திப் பொடியன்
--سمبستعستس�یســـــــــــــسے۔
இழய்திப்பொடியன் என்றும்,
*கொண்டோடி எழுத் தாளர்" என்றும் எழுத்துலகிற் பிரபலமாகிவிட்ட இந்த எழுத தாளரை நீங்கள் சந்திக்காமலி
க்க யாது. ஈழத்தில் வெளி ருக் கும்,-இ னி வெளியாக இருக்கும் எந்தப் பத் திரிகையின் சிரியரையாவது சந்திக்கப் போயிருக்கின்றீர்களா? அப்படிப்போன இடத்தில் நிச்ச யம் இவரையும் சந்தித் திருப்பீர் கள். இவர் பத்திரிகாசிரியர்களைப் 60 GF Li f és ஒட்டிக்கொள்ளும் இயல்பினர். கிளின் ஷேவ்; வய திற்கு மூப்பான நரை மயிர். (வெயி லென்றும் ம  ைழ  ெய ன் று ம் பாராது கோள்கொண்டோடித் திரிவதினுல் அந்த ஞான நரை ஏற் பட்டதான கூற்றிலுள்ள உண்மை பொய்யை நானறியேன்.)
சுருள் தெரியும் லாவகத்தில் வெட்டப்பட்டிருக்கும் سا ما هو5 கிராப்; காக்கி லோங் ஸ்; வியர்வை உப்பு ஊறிய சேட், களுதாவளை நந்தனின் "பொங்கல்’ கும் பிடு; இலவச பற்பசை விளம்பரமாக உதட்டைப் பிளந்து நிற்கும் முப் பத்தியொரு பற்கள் (ஒரு பல் போனது பற்றி உணர்வூட்டுச் சித் திரம் எழுதி வைத்துள்ளார் என்று பிரஸ்தாபம் ) மூளையின் இல்லா மையைப் பகிரங்கப்படுத்தி வளி யும் அசடு. இந்த வருணனைக்குப் பொருந்தும் ஆசாமியைச் சந் தித்திருக்கின்றீர்களல்லவா? அவர் தான் ஆள். ஈழத்து இலக்கிய உல இன் NEWS BOY; கொண்டோடி எழுத்தாளர்!
உம்மை ஓர் எழுத்தாளர் என அறிந்துகொண்டால், "எ ன் ன
ஐசே." என்ருே 'என்ன தோழர்" என் ருே தான் பேச்சை எடுப்பார். தோழர் என்று பேசுவதற்குக் கொம்யூனிசபெருங் காயம் என்ருே குடிகொண்டிருந்த காலி டப்பா என்பதுதான் காரணம். ஆலை இல் லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க் கரை என்பதுபோல, இங்குள்ள கட்சிப் பத்திரிகையொன்றில் இலக்கிய அலம்பற் களத்தைக்குத் த கைக்கு எடுத்துள்ளார். ரூஷிய லையினுவது, சீன லையினுவது? அந் தச் சின்ன மூளைக்கு இந்த விஷ யங்கள் விளங்கமாட்டாது. எல் லாம் பிரசுர லையின் தான். கதை யிலே பிடிகொடுத்து விட்டீரென் ரு ல், நீர் பட்டீர் உம்மைப்பற்றி நூறு செய்திகளாவது திரித்து யாருக்காவது சொல்லிவிடுவார். நேரிலே சந்திக்காத இடத்தில், “பெட்டிசனு’வது அனுப்பிவைப் பார். உம் மில் அவருகி குக் கோபம் கிடையாது. ஆனல், இந்த வழி யிலேதான் தன்னுடைய சிறுகதை யொன்றைப் பிரசுரிக்கப் பண்ண லாம் என்கிற லையின் அவருக்குத் தான் தெரியும்.
கொழும்பிலே அந்தச் சந்திலோ இந்தப் பொந்திலோ உள்ள ஹோட்டலுக்கு த்தேனீர் கடிக்கத் தானே சென்றி , தேனீர் கடை யில் நீர் இலக்கியத்தைப் பற்றிப் பேசாவிட்டால், இலக்கியஞ் செத் துப் போய்விடாது. பேசாமல் தேனீரைக் குடித்து விட்டு இறங் கும். நல்ல காலம் பிழைத் தீரையா! உமக்குத் தேனிர் பரிமாறும் பரி சாரகன் அவரது ஏஜன்ட். நீர் அங்கு சென்றதை இடச் சான் ருக
எஸ். பொன்னுத்துரை
67

Page 36
வைத்து, நீர் ஒருபத்திராதிபரைக் கன்ன பின்ன என்று திட்டினி ரென்று பலகதைகளைச்சோடித்து, அதே சாட்டில் தன்னுடைய கதை யொன்றையும் பிரசுரிக்கச்செய்து விடுவார். எப்படியும் பிரசுர லையின் தானே? ஆஞல் உமது நண் பரான பத்திராதிபர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு போகும்பொழுது, அன்று ஹோட் டலில் தேனிர் அருந்தும் சமயம் இலக்கியம் பேசிய சங்கதி உமக்கு ஞாபகத்திற்கு வருமா?
இவருக்குத் தென்னிந்திய இலக் கிய யாத்திரைப் “பொசிப்பு’ இன் னமும் கிட்டவில்லை. (இவரது அண் மைகால வயிற்றுப்போக்கு லையி னினுல் ரூஷியப் பிரயாணம் கிட் டலாம் என்னும் பேச்சு அடிபடு கின்றது. ஆனல், இவருக்கு முன் னதாகச் "சிறுகதை மன்னனுக் குத்தான் அந்தச் "சான்ஸ்" இருப் பதாக அவதானிகள் நம்புகின்ருர் கள்.) இருப்பினும் இவரை இந்தி யப் பத்திராதிபர்களுக்குந் தெரி պւb. “என்ன சார்? நீங்களும் சிலோனு? இந்த எழுத்தாளரைத் தெரியுமா? ஒரே கவரில் ஆறேழு கதைகளை அனுப்பிவைச்சு, அவற் றைப் பிரசுரிக்கச் சொல்லிக் கழுத்தை அறுத்துக்கொண்டிருக் கான் சார். இந்தக் குப்பைகளைப்
பிரசுரிக்கிறதிலும் Li nt fi dj és கடையை இழுத்துப் பூட்டிட லாம்னு தோணுது. எழுத்துத்
திறனை விட்டுத் தள்ளுங்கோ சார். இந்தப் பத்திரிகையிலே இன்ன மாதிரி விஷயதானங்களைத்தான் ஏத்துக்குவாங்க என்கிற மூளை யாவது வேணுமா?’ என்று முன் பின் தெரியாத பத்திரிகை ஆசிரி யர்பிரஸ்தாபிக்குமளவிற்கு கடல்
கடந்தும் இவரது கியாதி பரவி யுள்ளது.
இமயத்தின் பாரந்தாங்காது
தமிழ்நாடு மேலெழுந்த பொழுது, குறுமுனியாம் அகஸ்திய தென் புலம் வந்து நிறையைச் சமன்
Ք5 8
படுத்தியதாக ஒரு கதை வழக்கி லுண்டு. கொ ட் ட (ா வீ தி யி ன் தமிழ்ப் பலத்தைச் சமன் படுத்து வதாக சுய திருப்தி கொள்ளும் இவர் பூர்வீக.இலத்தீன் பெயரில் பெரும் புரட்சி செய்துள்ளார். இவர்தான் இங்குள்ள எழுத்தா ளர் சங்கமொன்று நடாத்திய சிறு கதைப் போட்டியில் ஒரு குழந்தை பெயரில் பங்குபற்றிச் சரித்திர சாதனையை நிலைநாட்டியவர் அது வும் பிரசுர லையின்தான்.
இவர் விமர்சனத் துறையிலும் ஆவேசமாக ஈடுபடத் தொடங்கி யுள்ளார். சீன கோஷ்டியை திட் டச் சரக்கில்லாவிட்டால், இலக் கிய அலம்பல் களத்தில் இரண்டு பேர் மீது கல்லெறிவதுதான் இவ ரது விமர்சனத் தொண்டு என்று மட்டமாக நினைத்துவிடாதீர்கள். ஆயிரம் கோள் சுமந்த தன் பெறு பேருக, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று இவரது குறுநாவ லொன்று பிரசுரமாயிற்று. குறு நாவல் பிரசுரமாகி முடிவதற் கிடையிலேயே, தனது குறுநாவ லுக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றித் தனது புகைப்படத்துடன் அளந்து கொட்டிய பெருமையும் இவரையே சாரும். அண்ணன்மனைவி-மருமக்கள் ஆகிய சுற்றம் மட்டுமே த ன து குறுநாவலைப் போற்றி யதாக எழுதிய விமர் சனப் புரட்சியை யாரால் சாதிக்க முடியும்? 徽
வானெலியைப் பற்றித் தனது அலம்பல் களத்தில் தாக்க ஆரம் பித்து விட்டாரா? அப்படி யென் ரு ல், அவரது ந (ா ட க ங் க ள் நாலைந்து அங்கே தங்கிக்கொண் டிருக்கின்றன என்றுதான் அர்த் தம். இவருக்கு அசடு வழியச் சிரிக்கத் தெரியும், மீன் காரி கள் பாஷையிலே திட்டத் தெரி யும். இவைதான் இவரது பிர சுர லையின், படிக்காமலே விமா சனம் செய்வதில் சூரர். என் னுடைய வானுெலி நா ட க

மொன்றினைப் பூரா வா கவு ம் கேட்காமலே அதனை விமர்சனம் செய்யும் ஆற் ற லும், புத்தி சாலித்தனமும் இவரை விட் டால் யாருக்கு உண்டு?
சில சந்தர்ப்பங்களிலே இவரை ஜம்பட்டா வீதியிலுள்ள சாரா யத் தவறணையிற் சந்திக்கலாம். அவரது கதை நன்ருக இருக்கின் றது என்று சொல்லிவைத்தால், இரண்டு டிராம் "கிரியா ஊக்கி"
வாங்கித்தரக் கூடியவர். ஆனல் பின்னர் உம்மைக் குடிகாரன் என்று திட்டமாட்டார் என்ப
தற்கு எவ்வி 2. ф ក៏ខ្ចី, 5 255 John 5 (p
இப்பொழுது நண்பகல் நேரம்? Lunch Interval. 69 uri 5gi agpi விறுத்து ஓடி வருகின்றவர் அவர் தான். ஒரே தாவலில், இரண்டு படிகளாகக் கடந்து வ ரு ம் வேகத்தைப் பார்த்தால், பத்தி ரிகை ஆசிரியருக்குச் சுடச் சுடக்
கோள் கொண்டு போ கி ரு ர் என்று அர்த்தம். நாங்கள் விலகி நிற்பதுதான் புத்தி, அந்தக் கோள்ச் சுமையை இறக்காவிட் டால், தலை நரைத்தது போக, வெடித்தும் போய் விடும். அத் துடன் இவற்றிற்குப் பரிசாக அடுத்த சேட மலரில் ஓர் உணர்வூட்டுச் சித் தி ரத்  ைத. வெளியிடச் செய்வதும் அவசி யம். 'கோள் கொண்டோடித் திரியும் உமக்குக் கதை எழுத எங்கு நேரம்?" என்று மட்டும் இவரைக் கேட்டுவிடாதீர் க ள். பாவம், அவர் என்னு  ைட ய எழுத்தாள நண்பர். பொன்னுத் துரை ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் "ஒரு கட்சிப் பத்திரி கைக்கு அனுப்பிய கதைகள்கட்டுரைகள் அடங்கி Fie ஒன்று என்னிடஞ் சிக்கியுள்ளது. அஃதே இரண்டுவருட இலக்கிய பிஸின சுக்குப் போதும்" என்று சொல்ல
ஏது நேரம்?
விளம்பரப் பத்தியில் ஒரு படைந்து, யருக்கு எழுதினன்.
கடையைப்பற்றி அங்கே
சிலத்தியார் விஜயம்
0ர்க்ட்வெய்ன் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, அவருடைய பத்திரிகையை ஒரு சமயம் பிரித்துப்பார்த்த பழைய சந்தாதாரன் ஒருவன் அதில்
சிலந்திப்பூச்சியைக் கண்டு வியப் அது அங்கே ஏன் வந்தது என்று கேட்டு ஆசிரி
* மார்க்ட்வெய்ன் அவனுக்கு எழுதிய பதில் இது' அப் பனே! உன் பழைய சந்தா பாக்கியைப் பற்றி விசரிப்பதற்காக அது அங்கே வரவில்லை. நகரத்திலுள்ள எந்த வியாபாரி தன்
விளம்பரம் கண்டறிந்து, அந்த ஆசாமியின் கடைவாசல் குறுக்கே அற்புத மான ஒரு வலை பின்னி யாதொரு தொந்த தரவுமின்றி வருஷக் கணக்காகக் குடியிருக்கலாமென்பதற்காகத் தான்'.
இரண்டாம் பக்கத்தில்,
செய்யவில்லையென்று
69

Page 37
IELI I I I I I 3 J - S.
ஜோர்ஜ் சந்திரசேகரன்
‘கடவுள் உண்டு என்று சொல் பவர்கள் என்னைப் பொறுத்த வரை பைத்தியக்காரர்கள். கட வுள் இல்லை என்று சொல்லுபவர் கள் அதைவிடப் பைத்தியங்கள். இப்படிக் கூறும் எழுத்தாள இளை ஞர் ஜோர்ஜ் சந்திரசேகரன் இதில் எந்தக் கட்சியைச் சார்ந்தவரென் பது தெரியவில்லை.
கொழும்பில் பிறந்து, கொழும் பில் வளர்ந்து, கொழும்பிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இவர் பெற்ருேருக்கு ஒரே பிள்ளை. இரு பத்திமூன்று வயதாகிறது.
பாடசாலை நாட்களில் கவிதை எழுதத் தொடங்கினர். படிப்பு முடிந்ததும் சிறுகதையில் நாட் டம் சென்றது. இருபதிற்கு மேற் பட்ட கதைகளே எழுதிவிட்ட இவ ரைப் பார்த்து, ‘நீங்கள் எழுதுவ தன் நோக்கம் என்ன என்று கேட் டா ல், ‘கதை எழுதும் பொழுது ஏற்படும் அந்த Excitement இருக்கிறதே அத ற் கா க எழுதுகிறேன்" என்ருர் .
எழுதும் நேரத்தில் ஏற்படும் அந்த இனம் புரியா உணர்வுக்காக எழுதுகிருர்,
சிருஷ்டி இலக்கியத்தைத் தவிர, இந்த உலகில் இவர் எதையுமே மதிப்பதில்லையாம் எழுதாத ஒவ் வொரு நிமிஷமும் பாழடிக்கப்படு
வதாக, விரயமாக்கப்படுவதாக எண்ணுகிருர், எழுதும்போதும் அ வ ஸ்  ைத . எழுதாமலிருக்கும்
போதும் அவஸ்தை. ஆனல், எழு தாமலிருக்கும்போது ஏற் படும் வேதனை, எழுதும்போது உண்டா கும் பிரசவ நோ க் கா ட் டி ல் கரைந்துவிடுகிறதாம். எழுதும்
70
போ து இருக்கும் நோக்காடு, எழுதி முடிந்ததும் மறைந்துபோ கிறதாம்.
சந்திரசேகரன் எந்தப் போக் கையுமே ஆதரிப்பவரல்ல. அரசிய லைப் பற்றியும் அவர் கவலைப்படுவ தில்லை.
"இலக்கியத்தால் ஒரு சமுதா யத்தையோ, அல்லது தனிமனி தனையோ, மாற்றவோ திருத் தவோ முடியாது’ என்று ஆணித் தரமாகக் கூறும் இவர், "உலகின் எந்த மூலையிலும் இனிச் சிறந்த இலக்கியம் என்று ஒன்று தோன்ற முடியாது" என்றும் அபிப்பிராயப் படுகிருர் .
கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத் தி ய இலங்கையர்கோன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசையும், இலக் கிய ரசிகர் குழு நடாத்திய சிறு கதைப் போட்டியில் மூன்ருவது பரிசையும் பெற்றுள்ள இவரிடம் போய் மறந்தும் இவரது கதை களைப்பற்றி விமர்சன ரீதியில் அபிப்பிராயம் சொல்லிவிடாதீர் கள். ஏனெனில், "நான் ஒரு சிறு கதையை எழுதி முடித்ததும், அதை மறந்துவிடுகிறேன். பிறகு அதைப் படித்துவிட்டு வந்து விமர் சனம் சொல் பவர்களை எனக்கு அறவே பிடிப்பதில்லை" என்கிருர் இவர்.
வேறு எதுவித நோக்கமுமின்றி, தனக்காக - தன் சுயதிருப்திக் காக, தன் சொந்தக் கவலைகளை மறப்பதற்காக எழுதப்படும் இவ: ரது படைப்புக்களில், உணர்ச்சி மேலீட்டையே, அதிகம் பார்க்க முடிகிறது.

சலசலத்து வரும் சிற்றருவி ‘போன்று, சரளமான தமிழ்நடை இவரது சொத் து . அழகான அமைதியான உரை நடை ஆழம் குறைவுதானென்ருலும், அ ழ கு நிறைய உண்டு. 并
இவருக்கு இருந்துவரும் கவலைக ளனைத்துமே கரைந்து வாழ்வில் நிறைவும், அமைதியும் கிட்ட வே ண் டு மென் று வாழ்த் தத் தோன்றுகிறது. ஆனல், "கவலை களே மறட்டதற்காகவே எழுதுகி றேன்" என்று கூறும் இவர் கவலை கள் மறந்து விட்டால், எழுதாமல் விட்டுவிடுவாரோ என்ற அச்சம் தோன்றுகிறது.
அன்புடையீர்,
யில் நான் ஈடுபட்டுள்ளேன்.
தியை இத் துறையில் தெரிவித்து அவர்களையும்
ஆறு. அழகப்பன், எம். ஏ. தமிழ் விரிவுரையாளர் (கீழைத்துறை)
அண்ணுமலேப் பல்கலைக் கழகம்
வணக்கம். நம் தமிழ்நாட்டில் வாய்மொழி : | வழங்கிவரும் தாலாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் தமிழ்ப்பணி :
கோடிக்கணக்கான தாலட்டுப் பாடல்கள் பரம்பரை பர்ம்பரை யாகத் தாய்மார்களால் பாடப் பட்டு வருவதும் அவை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப் பாடப்பட்டு வரும் தாலாட்டுப் பாடல்களில் ஒரு இலட்சம் பாடல்கள் வரை தொகுத்துத் தமிழ்த் தாயின் திருவடிகளில் படைக்க நினைக்கின் றேன்.இத்தொண்டு இனிது நிறைவேற உங்கள் இல் லத்தில் பாடப் படும் பாடல்களேயும் முடிந்தால் உங்களுக்குத் தெரிந்தவர் இல் லங்களில் பாடப்படும் பாடல்களையும் இயன்ற மட்டும் எனக்கு எழுதி அனுப்பப் பணிவன்புடன் வேண்டுகின்றேன். இச்செய்
உதவக் கூடிய உங்கள்
எனக்காக அன்புடன் உதவ வேண்டு கின்றேன். நீங்கள் எனக் குச் செய்யும் இவ்வுதவிக்கு நான் என் றும் பெரிதும் நன்றியுடையேன்.
லோறன்ஸ், LD T U LIT 3Fr Gör. ரோ ஸ் ரோ வெ ஸ் கி, ஜேம்ஸ் ஜொ ய் ஸ், புதுமைப்பித்தன், கு. பா. ரா. ஜானகிராமன், ல. ச. ரா. ஆகியோரே இவரது அபி மான எழுத்தாளர்கள். ஈழத்து எழுத்தாளர்களில் எவரையுமே இவருக்குப் பிடிப்பதில்லையாம்.
ச ந் தி ரசே க ர ன் இளைஞர்; வளர்ந்துவரும் எழுத்தாளர் விரக் தி க்கும், சுய பட்சாத் தாபத்திற் கும் அதிக இடம் கொடுக்காது, இலக்கிய ஆக்கப் பிரக்ஞையோடு எழுத முற்பட வேண்டுமென்பதே எம் அவா. இவருக்கு எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
- மகேன்.
அண்ணுமலைநகர்
இலக்கியமாக
நண்பர்களுக்கும்
அன்புள்ள, (ஒப்பம்) அழகப்பன்.

Page 38
۰" : " ر " من ب. م.: لام و به
*GLI ண் டி ரு முண் டு கொல்' லெ ன ச் சூளுரைத்த கற்புக்கரசி கண்ணகியின் வர லாற்று நாடகத்தை, பெண் மைக் குப் பெருமை தேடித்தருவதாக
எண்ணித்தாளுக்கும் *சிலம்புச் செல்வி"யை மேடையேற்றினர் கள் சைவ மங்கையர் கழகத்தி னர். நல்ல முயற்சி. அதல்ை
அவர்களுக்குப் பெருமையா இல் லையா என்பது புறம்பான விஷயம். அதுபற்றி எமக்கு அக்கறையு மில்லை.
வரலாற்று நாடகங்களில் நாட காசிரியன், ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தைச் சிருஷ்டிக்கும் பொழுது அக் கால மக்களின் வாழ்க்கைமுறையைச் சிறிதேனும், திரிபுபடாமல் அமைக்கவேண்டி யது பொறுப்பாகும். பேச்சு, வழக்குகளும் இதேபோலத்தான். தேவனின் " சிலம்புச் செல்வி"யை ஆராய்ந்தால் பல இடங்களில் *தொய்வுகள்" ஏற்பட்டிருப்பதைக் காணலாம். வழிப்போக்கர்கள் மூலம் கதையைச் சொல்லும் உத்தி இதில் கையாளப்பட்டிருக் கிறது. அவர்களின் சம்பாஷணை கள் முற்றிலும் 'ஒட்டு’ வேலை செய் ததுபோல இருப்பது மட்டுமல் லாது, கதைக்கு உயிரூட்டி முண்டு
 
 
 

கொடுக்கும் என்ற பாவனையில் பாவிக்கப்பட்ட இச்சம் பாஷணை
கள் கதையைவிட மேலோங்கி நிற்கிறது போன்ற ஒரு மயக் கத்தை ச்சயம் உண்டாக்கி
யிருக்கும். இவை போன்றவைகள் நாடகத்தின் நொந்த பகுதிகள். நகைச் சுவைக்குத் "தேவன்" தானது 'பிரண்டான “காணும்' என்பதைத் தான் தாராளமாக அள்ளித் தெளித்திருப்பது. வரட் சியைத் தான் காட்டுகிறது. நாட கத்தின் உயிரைக் கொன்றுவிட்ட தற்கு வசனகர்த்தா மட்டுமல்ல பொறுப்பு. மனப்பாடம்பண்ணி, ஆசிரியர் முன் மூச்சுவிடாது ஒப்பு விக்கும் மாணவர்கள் போல(இவர் க ளு ம் மாணவர்களாகையால் மன்னிக்கலாம்) மேடையில் வந்து போனதால் உயிருள்ள வசனங் களும் மரித்திருக்கலாம்.
நடிப்பைக் கவனித்தால்,
நாடகத் தி ல் கற்புக்கரசியாக கோகில வர்த்தினி சுப்பிரமணியம் நடித்தார். நாடக அனுபவம் இருந்தும் ஏனே சோபிக்கவில்லை. பூங்காவனத்தில் கோவலனுடன் உலாவும்போது எமக்கு வெகு பரிச்சயமான தென்னிந்திய நடி கைகள் பாணியை அவரது அங்க அசைவுகள் ஞாபகமூட்டின. அந் தப் பிரகிருதிகளை விட வேறு யார் தான் முன்னேடியாக இருக்கிருர் கள்? கோவலனுக நடித்த சாந்தினி மாணிக்கராசா சில சமயங்களில் சிவாஜி யி ன் "இமிட்டேஷனுக’ நடித்துப் பாராட்டுக்களைப் பெற் ருர் .
மாதவியின் பாத்திரமோ மிக வும் சிக்கலானது. அப்பாத்திரத் தைத் தாங்கி நடித்தவர் சர்வ லோகேஸ்வரி தங்கராசா. ஏதோ கோவலனுக்கு மாலை போடுகிற மட்டில் நடிப்பு. அவ்வளவுதான். இன்னும் எத்தனையோ பாத்திரங் கள். நடிகர்கள் பட்டியலோ . ரொம்ப, ரொம்ப நீளம். அர சவைக் கூர்க்கா முதல் கொண்டு இடம் பெறுகிறர்கள் நடிகர்கள்
பட்டியலில். அதுவும் ஒரு 'பிஸி னஸ் டக்டிக்ஸ்".
பூம்புகாரில் தவழ்ந்த தமிழைக் கொழும்பு நகரத்தில் தோய்த் தெடுத்ததால், “அவனும்", "ஆணு ளும்’, ‘சொள்ளி’யும்தான் தலை விரித்தாடின. ஐயோ! - "அவர் களின் வாயிடைப் பிறந்த தமிழே
என்கோ !”
எ ல் லா மே இப்படியென்ருல் நா ட க த் தி ல் சிறப்பம்சங்கள் இல்லையென்று எண்ணிவிடாதீர்
கள். நிறைய இருக்கின்றன.
அழகான மேடையமைப்பு - ஸ்டிஸ் வீர மணிக்கு எமது பாராட் டு த ல் க ள். அடுத்து ந ட ன அமைப்பு. பாலசுந்தரி கனகசபை யால் அளிக்கப்பட்ட நடனங்கள் குறிப்பாக சிவநடனம் நாடகத் தில் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்று. வள ர ட் டு ம் அவரது கலைத் தொண்டு! அடுத்து இடம்பெறு: வது ஒலி, ஒளி, இசையமைப்பு. வெகு சிறப்பாக அமைக்கப்பட்ட தால் நாடகத்தைக் கடைசி வரை பார்க்கக்கூடியதாக இருந்தது. மொத்தத்தில், இப்படியான ஒரு நாடகத்தை பெண்களின் முயற்சி யால் மட்டுமே மேடையேற்றி யிருப்பதற்காக, அவர்களின் துணி” விற்கும், ஆற்றலிற்கும் பாராட் டாமல் இருக்க முடியாது.
கழக அதிபர் மே  ைட யி ல் தோன்றி நன்றி தெரிவித்துப் பேசி, நாடகத்திற்காக உழைத்த பெண்களிருவருக்கு அன்பு மிகுதி" யில், அதாவது உணர்ச்சி மேலீட் டி ஞ ல், முற்றிலும் ஆங்கிலக் * கொப்பி'யாக அவர்களின் கன் னங்களில் முத்தங்களைச் சொரிந் தது.அசிங்கமாகப் படவில்லையா? வேறுவிதமாக நன்றியைத் தெரி விக்க அம்மையார் அ வ ர் க ள் தமிழ்ப் பண்பாட்டின் "என்ஸைக் கிளோப்பிடியாவைப் பார் க் க லாமே ஒரு க்கால்!
- சசி.
73.

Page 39
2i)lit. It படித்துப்பாருங்கள்
*/ By C/:
Alaga Subramaniam happens to be one of the leading Tamil creative writers, who write in English. Poet Thambimuttu, C. V. Velupillai, Rajah Proctor, Dharma Civaramoo and Bhavani Alvapillai are reasonably known well outside Ceylon as Alagu Subramaniam is, for their “ANGLO-CEYLONESE” — if I may use such a term - writings.
No less than Walter Allen - a celebrity in contemporary English letters - considers Alagu Subramaniam as a “wholly serious writer.' Leave alone what the western commentators have to say about Subramaniam's stories, as an Easterner and a Ceylon Tamil at that, found these stories quite Asiatic: that is what they should be. While the Ceylonese idiom is prolific in each of his stories, the whole Asiatic perspective is also pervading in them.
The content of his stories are quite commonplace for a Ceylonese reader, but as Mulk Raj Anand and Iqbal Singh describe, there is an unusual structural cohesion'' in them. It is the meticulous structural patterns combined with his limpid style which is also full of sarcasm, that make these stories
remarkable.
- K. S. Sivakumaran.
 
 
 
 
 
 
 

TIN & MIRROR INDUSTRIES
IMPORTERS & EXPORTERS
DEALERS IN WIRE MESH TIN SHEETS
& GENERAL HARDWARE
MANUFACTURERS
OF
Glass mirrors, Ted Strainers, Flour Sieves
&
Steel Suit Cases
Tin & Mirror Industries 64/16 Peer Saibo St.,
COLOMBO-12.

Page 40
KAMALTEX SAKS AM SATS
l(ltimatum is Arfection
Manufactured by:
M. DHARAMDAS 8. Co.
63, MAIN STREET,
COLOMBO-. phone. 5640
l'ith the ASeat Complimeut, ftom
YDGA NDUSTRIDS
Wholesalers in baby Suits Frocks
Shorts & Slacks SPECIALISTS IN BRIDEGROOM SAREES
Show Roon. 107, KEYZER ST., Abdul Rahims Building Office & Factory. 106.2/1, First Cross St.,
106 2/1, FIRST CROSS ST., COLOMBO-11.
Est : 1901 ||

Space donated by
Nirma Traadling Company
P A PER MERCHANTS
P. O. Box 64,
12 & 14, Prince Street,
PETTAH — COLOMBO 11.
Phone: 78346

Page 41
-------------------------------------------,