கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1989.09-10

Page 1
و حضر " . و மலேயக வெ
 


Page 2
With Aest CorpFinente from
collAR cAMP
Wholesale & FRetail Dealers in Dyes & Chemicals
Specialist in Flower 8 Batick Dyes We have dye for all purpos a
41, Bankshall Street,
COLOMBO - 11.
Phone:- 548 8
இல்லத்தரசிகளின் உள்ளங்கவர்ந்தது பிறவுண்சன் தயாரிப்புகளே
BROWNSON INDUSTRIES
139: BANKSHALL STREET,
COLOMBO 11.
Telephone; 271 97

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்று பதவி கொள்வார்
இாடுந்து ஆசிரியர் :
இதழ் ஆறு அந்தனி ஜீவா
KOZHUNDU 57, மகிந்த பிளேஸ், கொழும்பு -6
செப்டம்பர் - ஒக்டோபர் 1989
தோட்டங்கள் தோறும்
வாசிகசாலைகள்
அன்புள்ளங் கொண்டவர்களே,
மலைமுகடுகளிலும் தேயிலைக்காடுகளிலும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள மலையக மக்களின் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் வண்ணம் தோட்டங்கள் தோறும் வாசிகசாலைகள் அமைக்கப்பட வேண்டும் மலையக கலை இலக்கியப் பேரவை இதனை வற்புறுத்தி வந்துள்ளது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் மட்டும் கருத்தாயிராமல் அவர்களின் அறிவுக் கண்களை திறப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் தோட்டங்கள் தோறும் சாராயக் கடைகள் திறப்பதில் நம்மவர்கள் காட்டும் ஆர்வத்தை தோட்டங்களில் வாசிகசாலை அமைப்பதில் காட்டவேண்டும் மலையக சமூக நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், இதனை செயலாக்க முன்னின்று செயல்பட
முன் வர வேண்டும்

Page 3
நடைச் சித்திரம் !
எங்கள் துரை வருகிறர்
- க. ப. லிங்கதாசன் -
தொடைதெரியக் காற்சட்டை தொந்தி தள்ளும் மேற்சட்டை தொப்பியுடன் கைதடியுங் கொண்டே!- சப்பாத்து நடைதெறிக்க "அல்சேஸன்’ நாயுடனே எங்கள் துரை நாலாம் நம்பர் மலையேறி வருவார்!- தடியேந்திப் படையெனவே நிரைவழியே பாவையர் தம் கைவரிசை பார்த்தபின்னே கீழிறங்கி வருவார்!- அந்தத் தொடையதிரும் நடையினிலே தோகையரின் கடைப்பார் வைத் தொடுப்பதனல் உளம் நெகிழ்ந்தே போவார்.
பூக்கூடை விற்பனைக்கும் பூச்சட்டி மாளிகைக்கும் பொதிசுமக்கும் "ட்ரூப்பரிலே ஏற்றி- அருகே நாக்கூச்சம் இல்லாமல் நாயகனின் பெயர்சொல்லும் நம்மதுரைச் சாணியுடன் போவார்! - பின்னல் பூக்கோவா, போஞ்சி, கரட், பூசலாது கறிவகைகள் பொக்கட்டோக்" பிள்ளைகுட்டி சுமையும் - தாங்கி ஊக்கமுடன் ஊர்நோக்கி ஒடும்வண்டி வாரத்திலே ஒவ்வொருநாள் வெள்ளிவந்தால் போதும்!
ஆட்டுமாட்டு வருமானம் ஆள்கொடுக்கும் வருமானம் அத்தனையும் சேர்க்கும் துரைச் சாணி - “கையுறை கேட்டு விட்டால் கூச்சமென்று கேளாமல் "என்வலப்பில்" கிடைத்துவிடும் பெருத்தவருமானம்! - எல்லாம் போட்டு ஒரு மாடிவீடும் புத்தம்புது ‘லாஞ்சர்" ஒன்றும் புதுவருடம் பிறக்குமுன்னே சேரும்!- எங்கள் நாட்டுவருமானத்திலே நம்மதுரை 'ஜாலியாக' நடைபயின்று வருவதுவோ மானம்?
a- 2 -

மலேயகத்தில் நூலகத் தேவை
பெருந்தோட்டப் பகுதிகளில் நூலகத் தேவை இன்னும் உண ரப்படாமலிருப்பது உண்  ைம யில் பெரிதும் வருந்துவதற்குரியது. ஐரோப்பிய நாடுகளில் 15 ஆம் நூற்றண்டிலேயே நூலகத் தேவை, உணரப்பட்டிருந்தது. அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியும், கிறிஸ்தவ மதச் சீர்திருத்த இயக்கங்களும் 19 ஆம் நூற் ரு ண் டி ல் நூலகத் தேவையை மனித சமுதாயத்தில் வெகுப்பரவலாக உணரவைத்தன.
இருபதாம் நூற்றண்டின் இறுதி தசாப்தத்தை நோக்கிச் சென்று கொண்டிக்கின்ற இ ன்  ைற ய காலகட்டத்திலும் நூலகத் தேவை பெருந்தோட்டப் பகுதிகளில் உணரப்படாதிருத்தற்கு
* உடல் உழைப்பாளராக 95 சதவீதத்தினர் அமைந்திருக்கும்
ஒரு சமூகமாக இது இன்னும் இருப்பது.
* இச் சமூகத்தைச் சார்ந்த இளவல்கள் கல்லூரிப் படிப்பை (பத்தாம் வகுப்பு) முடிக்கும் தறுவாயிலேயே நகர் ப் புற வியாபார நிலையங்களுக்குள் கவர்ந்து விடப்படுவது,
* தோட்டங்களுக்குள் தொழில் பார்க்கும் (மத்திய தர வகுப் பினர்) படித்தவர்களும் வாசிக்கும் மனுேபாவம் குன்றியவர் களாக இருப்பது,
t படித்தவர்களாகவும், வாசிப்புணர்வு மிகுந்தவர்களாகவும் இருப்பவர்கள் தொழிலேதும் பெறமுடியாத நிலையில் தோட் டத் தொழில் புரியும் தமது குடும்பத்தினருக்குப் பாரமாக இருப்பது.
என்ற ஏதோ ஒன்று அல்லது எல்லாமே இணைந்த ஒன்று கார ணமாக அமையலாம்.

Page 4
ஒன்ருே பலவோ -
மலையக சமுதாயம் சீரழிந்து போவற்கு இது போதாதா?
வளரும் சமுதாயத்தின் வாசிப்புப் பழக்கம் வளர்க்கப்பட வேண்டியது அவசியமான ஒன்ருகும். வாசிப்பு எ ன் பது கல்வியை வளர்க்கும் பழக்கங்களில் ஒன்ருகும். கல்வி என்பது இடைவிடாது கொடுக்கப்பட வேண்டிய ஒரு பயிற்சியாகும்.
இவைகளில் இடையில் ஏற்படும் தொய்வு ஒரு தடையாகக் கருதப்படும், நிவர்த்திக்க முடியாத ஒரு பெரிய த டை யாக அமைந்து விட்டிருப்பதை சமீபத்தைய இலங்கை நிகழ்வுகள் புலப் படுத்துகின்றன
இடைவிடாத கல்விக்கு நூலகங்கள் அவசியமாகும் ஏனென்ருல், நூலகங்கள் வா சிக் கும் பழக்கத்தை மாத்திரமல்ல - நூலகங்கள் சேகரிக்கும் பழக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன.
வாசிக்கும் பழக்கமும், வாசனையைத் தனது தேவைக்குப் பயன் படுத்தும் பழக்கமும், ஒரு சமுதாயத்தில் முன்னேற்றப் பாதையில் மைல் கற்களாகக் கருததப்படுதல் வேண்டு.
கியூபாவிலும், சோவியத் ருஷ்யாவிலும் தொழிலாள இயக்கங் கள் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசெல்வதற்கும், வாசிக்கும் பழக் கத்தை அவர்களிடையே ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவியிருக் கின்றன.
பெரும்பாலும் பிறநாடுகளிலும், புத்தகப் பதிப்பாளர்களே நூல கத்துக்குப் புத்தகங்களை அனுப்புகிருர்கள்.
இன்னும் சில நாடுகளில் புத்தக விற்பனையாளர்கள் நூலகத்துக்கு புத்தகங்களை அனுப்புகிருர்கள்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த இரண்டும் முறைகளும் - பதிப் பாளரும், விற்பனையாளர்களும் நூல்களை அனுப்பிவைப்பது - ஸ்நா னப் பிராப்தம்" கூடப் பெருத ஓர் அம்சமாகும்"
வாசகனின் வாசனை அபிவிருத்திக்குக் காரணம் என்று நூலகம், வதிப்பாளர், விற்பனையாளர் என்று ஒன்ருெடொன்மூக இணைந்ததொரு

வட்டத்தை நாம் காட்டமுடியுமென்ருலும், அது மீண்டும் ‘ஸ்நானம் பிராப்தம் பெருத ஒரு நடப்பாகவே கருதப்படல் வேண்டும்.
நூலகங்கள் - அதிலும் பொது நூலகங்கள் (மாநகர, நகர, உள் ரூராட்சி) பொது மக்களின் வரிப்பணத்தில் நடாத்தப்படுகின்றன. எனவே, தங்களின் தாய் மொழியில் உள்ள புத்தகங்கள் வேண்டும் என்று குரலெழுப்பும் உரிமை பொது மக்களுக்குண்டு.
மலையகப்பகுதிகளில் பதுளை, நுவரெலியா, மாத்தளை, இரத்னபுரி, குருநாகலை, கண்டி என்ற மாநகர சபைப்பிரிவுகளும், அவிசாவளை பலாங்கொடை, பண்டாரவளை, கம்பளை, அப்புத்தளை, அட்டன் - tg கோயா, கடுகண்ணுவ, களுத்துறை, நாவலப்பிட்டிய, தலவாக்கொல்லை . லிந்துலை என்ற நகரசபைப் பிரிவுகளும் தெஹியோவிட்டை, மாவ னெல்லை, மத்துகம, பசறை, பெல்மதுள, பூண்டுலோய, புசல்லாவ, றக்வானை, ரம்புத்தொட்டை, இறத்தொட்டை, ரூவான்வல்ல, தெல் தெனிய, வரக்காப்பொல, வெலிமடை, எட்டியாந்தோட்டை என்ற பட்டினசபைப் பிரிவுகளும் இருக்கின்றன. மொத்தமாகவுள்ள 549 கிராமசபைகளுக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கைத் தமிழ் பேசும் மலையகப் பகுதிக்குள் அமைந்துள்ளன. இவைகள் எல்லாமே, பொது மக்களின் வரிப்பணத்தினைப் பெற்று நூலகங்கள் நடாத்துகின்றன இவைகள், அனைத்தும் தலா இரண்டு பிரதிகள் என்று வாங்கவேண் டிய நிலைமையை நிர்ப்பந்தத்தை உருவாக்கினுல் ஒவ்வொருவெளியீட் டிலும் 200 பிரதிகள் விற்பனையாவதில் எந்த வித சிரமுமே இருக்க (tpւգԱմn 5l.
அறிவைப்பாதுகாப்பதற்கு காட்டிய சிரத்தையில் கால்வாசியே ணும் அறிவைப்பரப்புவதற்கு ஆசியர்களும், ஆபிரிக்கர்களும் காட்ட வில்லை என்பது பலரது கணிப்பாகும்.
வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளாத ஒரு சமூகத்தில் வாசிக் கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒரு தனிமனிதனுக்கு புறம் பான தனி மனித முயற்சி தேவைப்படுகின்றது. தேவையான புத்த கங்கள் கிடைப்பதால் தொடர்ந்து சிரமம் ஏற்படுகின்ற நிலைமை உரு வாகின்ற போது வாசிக்கும் ஈடுபாடு குறையத் தொடங்குவதும்
--سے 5 --سے

Page 5
இயல்பாய் ஒருவனிடத்தில் எழுகின்ற துடிப்பு அடங்கி விடுவதும் பொதுவில் தவிர்க்கமுடியாததே.
பெருந்தோட்டச்சிருர்கள் வாசிப்பது குறைவு பள்ளிக்கூடத்துக் குப் போவதற்கு முன்பு அவர்கள் புத்தகங்களைப் பார்க்காதிருப்பது இதற்கு மிக முக்கியமானதொரு காரணமாகும்.
பத்தொன்ப, தம் நூற்றண்டில் ஒரு தனிமனிதனின் உழைப்பு வரு மானத்தில் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட விகிதாசாரத்தில் புத்த கங்கள் வாங்கப்பட்டன என்றும், மலிவுப்பதிப்பு, மாணவப்பதிப்பு என்ற முயற்சிகளும், இன்றைய நவீன கண்டுபிடிப்பு வசதிகளும் இதை 5சத விகிதாசாரத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் கணக்கெடுத் திருக்கின்றர்கள்.
1930 களில் நடேசய்யர் மலையகத்தில் 25 சத வெளியீடுகளைக் கொண்டுவரும் போது தோட்ட மக்களின் வருமானம் 41 சதமாக இருந்தது. இன்று வருமானம் 38 ரூபாவாக இருக்கும் போது 19 ரூபா வுக்குக் கொண்டுவரப்படும் நூல்கள் இன்னும் 50சத விகிதாசாரத்தி லேயே அமைந்திருக்கின்றன. அதற்கு குறைந்த அளவில் புத்தகங்கள் வெளியிடப்படும் வாய்ப்புகளிருந்து, அதற்கு குறைந்த விஷியஸ் சேர்க் கில்" என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் மீளா வட்டத்துக்குள் அமிழ்ந்து விடும் நிலைமையை இது குறிப்பதாக மலைத்துக்கொண்டிருப்பதில் அர்த் தமில்லை. . .
தோட்டங்கள் தோறும் நூல்நிலையங்கள், நகரப்பாடசாலைகள் தோறும் நூல் நிலையங்கள், எல்லாப் பகுதிகளிலுமே வாசகர் வட்டங் கள், என்ற நிலை தோற்றுவிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் போது மலையகத்தில் புத்தகங்கள் வெளியிடப்படுவது பிறர்கண்டு வியக்கும் அளவுக்கு வியாபித்துப் பெருகும் அதுவரை - அந்த நிலை உருவாகும் வரை - அத்த நிலைமை உருவாவதற்கு நாமெல்லாம் கைகோர்த்து நிற் காதவரை - புத்தகங்கள் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் விநோதமானவர்களாகவே கருதப்படுவார்கள். இந்த நிலைமை நீடிப்பது மலையக இலக்கிய வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதாக அமைய முடியாது.
- 6 *animus

எலலை தாண்டாத
அகதிகள்
“யட்டவத்தை தோ ட் ட் த் து லய த் தை அடி ச் சி, நொறுக்கி நெருப்பு வைச்சி, லயத்தில் இருந்த சாமான் சட்டு முட்டுகள தூ க் கிட் டு போயிட்டானுக. ல ய த் தி ல் இருந்த ஆளுக புள்ள குட்டி களோட காட்டுக்குள்ள ஒடி மறைஞ்சிட்டாங்க. தோ ட் டத்து தொ  ைர எ ந் த நட வடிக்கையும் எடுக்கலியாம் .
எல்லாம் முடிஞ்சோன்ன தோட்
டத்து லொறியில ஆள்கள ஏத்தி மாத்தளை மாரியம்மன் கோயில இறக்கிவுட்டுட்டு போயிட்டாரு. இம்புட்டும் செஞ்சதும் யார் தெரியுமா? யட்டவத்த தோட் டத்துக்கு போற சந்தியில இருக் கிற கடைக்காரன் மகன்தான்!"- மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிவந்த வேலு பதறியபடி சொன்னன். அவன் சொன் னது அத்தனையும் உண்மை! நடந்ததை நேரில் பார்த்தவன். கண்கள் பார்த்ததை வாய் வெளிப்படுத்துகின்றது.
*2)
ஒரு வட்டம் போட்டது போல் வேலுவைச் சுற்றி ஒரு கூட் டம். அதில் சிங்காரம் - ஆண் டிக் கிழவன் - என்று ஒரே தோட் டத்தைச் சேர்ந்தவர்கள் இருந் தார்கள்.
**இந்த பக்கத்தில இருந்த
ஒரே ஒரு தோட்டத்தையும் எரிச்சிட்டானுகளே! கவுருமெண்
டும் ஒரு நடவடிக்கை எடுக்
மாத்தளை சோமு
கல்ல. நாடு போற போக்கு சரியில்ல." இது ஆண்டிக் கிழ வனின் அறுபது வருட அனுபவ முத்திரை,
**இதுக்குத்தான்யா இந்தியா வுக்கு போயிடுவோம்னு சொன் னேன். எவன் கேட்டான்!.' உழைப்பில் தேயிலைக் காட்டுக்கு ஒரு பரம்பரையைத் தியாகம் செய்த பிரதிநிதியின் குரல்!
- 7 -

Page 6
'அட நீ ஒண்ணு ஏதாச்சும் கலவரம்னதும் இந்தியாவுக்கு போயிடுவோம்னு சொல்வீங்க கலவரம் முடிட்சோன்ன அதை மறந்திடுவீங்க. ஒரு நெலையான பேச்சு நம்ம ஆளு களு க் கு இல்ல. அதனல்தான் அடி விழுது-’’ இது ஒருத்தன்.
**இந்த நாட்டுலதான் எங்க பாட்டன் பூட்டன் ஒழைச்சான்! தேயிலை தூளுக்கு அடியிலதான் அவங்கள புதைச் சோம் ! நாங்க ஏன் இந்த நாட்டை விட்டு
போவேனும்? ஒருத்தரும் போகக்
கூடாது." தன்னை மறந்த சிங் காரம் "ஆவேச* மாக சொன்
**ஆமாமா . இவுரு ஏன் இப் புடி சொல்லமாட்டாரு? வீட் டுல சிங்களத்த வைச்சிட்டு வெளி யில வீராப்பா பேசுருராக்கும்.
இவருக்குத்தான் இந்தியா போக,
முடியாது! இந்தியாவுல இவனை எவன் ஏத்துக்குவான்?'
சிங்காரத்தை தாக்க வேண்
காத்திருந்தவனின்
6T 67 GOT LIT சொன்ன” என்று சிங்காரம் அவணுேடு "மோதப் போன போது பக்கத்தில் இருந்தவர் கள் குறுக்கிட்டு அந்த சண் டையை அப்படியே அடக்கிவிட் டார்கள்.
டும் என்று த ராக் கு த ல்
சிங்காரம் நெஞ்சில் சுமை
யேறியவனக தலை குனிந்திருந் தான். ஆண்டிக்கிழவன் அவனை
தலையெழுத்தினல
ஆறுதல் படுத்துவது போலவும் மற்றவர்களுக்கு பதில் சொல் வது போலவும் பேசினன்.
'சிங்காரம் அவனை கட்டிக் கிட்டு ஒரு வருசமாச்சி! இன் னைக்கி அவ சிங்களத்தி மாதி ரியா இருக்கா அசல் தமிழிச்சி மாதிரியல்ல இருக்கா! அந்தக் கதையெல்லாம் இப்ப எதுக்கு.? நடக்கிற வேலைய பாருங்க . ஷிம். ஆயிரம் கலவரம் வந்தா லும் நம் மா ஞ க மத்தியில ஒத்துமை வருமாங்கிறது ச ந் தேகம். ஆண்டிக் கிழவன் உள்ளதை - நல்லதைச் சொல்லி அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பார்த்தான். முடியவில்லை. அடுத்த கேள்வி வெடித்துவிட்டது!
** அதுசரி தாத்தா! ஏன் சிங் காரத்துக்கு சப்போட் பன்ன னும் ? நம்ம லயம் எரிஞ்ச துக்கு அவன்தான் காரணம்.! அவன் சிங்களத்தியை கட்டப் போயி அவன் தம்பிதானே லயத் துக்கு நெருப்பு வைச்சான்! " என்று ஒருத்தன் பேச்சை நீட் டப் போனபோது கிழவன் அதை இடைமறித்துவிட்டான்.
* "நம்ம லயம் நீ சொன்ன மாதிரி சிங்காரத்திஞல எரிஞ்ச துன்னு வைச்சிக்குவோம் அப் படின்ன மத்த லயிம் யாரால எரிஞ்சிச்சி? இதெல்லாம் நம்ம நடக்குது. யாரையும் கொறை சொல்லி பிரயோசனம் இல்ல. என்னைக்கி
-سی- 8 --سے

வெள்ளக்காரனை நம்பி இந்தியா வுல இருந்து வந்தோமோ. அன்னையில இருந்துதான் இந்த பி ர ச் னை!. வெள்ளக்காரன் நமக்கு ஒரு முடிவும் காட்டாம சீமைக்கு போயிட்டான் அந்த நேரமே ராம ஒரு முடிவை வெள்ளக்காரனுக்கிட்ட கே ட் டிருந்தா இன்னைக்கி நாம நிம் மதியா வாழ முடியும் . நாங்க இந்தியாவுல இருந்து வந்தாலும் இந்த ஊரையே தாய் நாடா நெனச்சோம் பஸ் ரெயில் ரோடு போட்டது நம்ம ஆளுகதான். அதில எத் தனையோ பேரு செத் து ப் போயிட்டாங்க.
சிங்கமலை சொரங்கத்து சுவர்ல போயி பார்த்தா இந்த ரோடு போட்டதில எத்தனைபேர் செத் தாங்கிறது தெரியும்! அப்புடி நம்ம ஆள்க உசுரை குடுத்து ஒழைச்ச நாடு இது . 1 ஏன்
இந்த நாட்டை விட்டு நாங்க
போவேணும்?. ' கிழவன் அதே தோட்டத்தில் பிறந்து, கங்காணி யாகி - தலைவராகி இ ன் று முதிர்ந்து உதிரத்தயாராக இருப் பவர். எவரும் அவருக்குத் தெரி யாமல் அங்கே பிறந்ததில்லை - திருமணம் செய்வதில்லை! அவ ருக்கு எந்த கட்சியின் மீதோசங்கத்தின் மீதோ தனிப்பட்ட பற்றுதல் கிடையாது ஆணுல் அங்கே நடக்கிற எல்லாவற்றி லும் அவர் இருப்பார்
ஆண்டிக் கிழவன் கேட்ட கேள் விக்கு எவரும் பதில் கொடுக்காத
சிலோன் பூரா
தால் அவனே அந்த வாக்கு வாதத்தை முடி த் து வைத் தான். **.சரி...சரி போங்க. பேச்சு நீட்டவேணும். சிங் காரம் நீ யோ சிக் கா தே ! அதெல்லாம் அப்படித்தான். தைரியமா இரு!'
அந்தக் கூட்ட ம் மெ ல் ல கரைந்து போயிற்று.
Ο o o o
சிங்காரம் ரொம்பவும் சோர்ந்து போய் அகதி முகாமிட்ட கோயி லின் உள்ளே போனன். அவன் மனம் மழை இல்லாத தேயிலைச் செடியாக *கருகி விட்டது. தான் சிங்களப் பெண் ணு ன மாலினியை கல்யாணம் செய் ததை இத்தனை நாளும் நெஞ் சில் "அடக்கி வைத்து குத்திக் காட்டிவிட்டான். மாலினி சிங் காரத்தை கைகோர்த்து ஒரு வரு டத்திற்கு மேலாகி விட்டது. அதை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிருனே..! அ தே நேரத்தில் அவன் சொன்னதில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது! அன்று அந்த லயத் திற்கு நெருப்பு வைத்தவன் மாலினியின் அண்ணன்தான் . அவன் கையில்தான் தீவட்டி இருந்தது.!
தன்னுல்தான் அந்த லயம்
எரிந்துவிட்டதோ!. அ வ ன் மனம் எங்கோ பள்ளத்தில். பள் ள த் தி ல். விழுந் து கொண்டேயிருந்தது.

Page 7
*சடா"ரென்று ஒரு நினைவு வெட்டி மறைந்தது. அவர்கள் காதல் உச்சக் கட்ட த் தி ல் இருந்த காலம். அந்த காதல் விவகாம் எப்படியோ அப்பா வின் காதில் விழுந்து விட்டது. அவர் அவனிடம் நேரிடையாக கேட்டார். சிங்காரம் யோசித் தான். இப்போது பொய் சொன்னலும் பிறகு எப்போ தாவது உண்மையைக் 'கக்க” வே ண் டி வ ரு ம் ! அ த ஞ ல் நிஜத்தை. ஆம். ! சிங்காரம் தான் மாலினியைக் காதலிப்ப தாக சொன்னன்.
அவ்வளவுதான். அவர் இத யம் ஸ்டோர் அடுப்பாக கொதித் திதி.
* 'இனி நீ எனக்கு மகனில்ல. இனிமே இந்த காம்புராவுல கால் வைக்காதே! ஏன் மூஞ்சி யில முழிக்காதே!...”*
சிங்காரம் மறுபேச்சில்லாமல் அந்த காம்பராவை விட்டு போய் துரையிடம் சொல்லி வேறு காம்பராவில் குடியேறி தன் புதுக்கதையைத் தொடங்கி ஞன். அதற்கு அடுத்த வாரம் மாலினியை பக்கத்து டவுண் பொலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டிப் போனன் அவன். அங்கே இரு வரும் ஒருவரை ஒருவர் காத லிப்பதாகவும்-திருமணம் செய்ய விரும்புவதாகவும் முறைப்பாடு செய்து கையெழுத்திட்டு வந் தார்கள். சாதி-சமயம்-மொழி என்ற வட்டத்துக்குள் வட்ட
மடித்து வாழ்ந்த மாலினியின் பெற்றேர்கள் - அ வ ரு  ைட ய சகோதரர்கள் அந் த தமிழ் இளைஞன் - சிங்கள நங்கை திரு மணத்தை முறியடிக்க வந்து சட்டத்திற்கு மு ன் ன ல் சர ணடைந்து போனர்கள்.
சிங்காரத்தோடு கைகோர்த்த மாலினியைப் பார்த்து அவ னின் அண்ணன் நெருப்பாய் வார்த்தைகளைக் கக்கினன்.
'தமிழ் பயலோடயா போற. போ? உன்னையும் அவனையும் கவனிச்சிக்கிரேன்."
அன்று சொன்னதை இன்று செய்து விட்டானே?.
சிங்காரத்திற்கு யோ ச னை
யோசனையாக வந்தது. கல் מL מé $, וL ו ו - 6bbT L מ600T L ח ווו போனன் மாலினி கலங்கிய
கண்களுடன் அவனருகே வந்து நின்ருள். அவன் மெளனமாக இருந்தான். ஒட்டிப் போயிருந்த அவன் உதடுகள் பிரியவில்லை.
மாலினிக்கு ஒன்றுமே புரிய வில்லை. அவன் தோளில் சாய்ந்து அழுதாள். அவளின் கண்ணிர் துளிகள் அவன் மார்பை நனைத் தது. ஆனல் உன் நெஞ்சை அது நனைக்கவில்லையே!.
சிங்காரத்திற்கு மாலினியைப் பார்க்கிற போதெல்லாம் அவ ளுடைய அண்ணனின் நினைவு தான் வருகிறது அதனை அவ ஞல் தவிர்க்க முடியவில்லை.
-بے . 10 سس

மெல்ல அங்கிருந்து நழுவி கூட்டத்தில் கலந்து தேரடிக்கு வந்தான் சிங்காரம். தேர்க் தட்டிப் மாசி மகத்தில்
கூடாரத்தை அவன் பார்த்தான். ஒடுகிறதேர் அலங் க ரி க் கா த மணப்பெண்ணுக நின்றது.
ஒரு கணம் நினைவு க்கு ஸ் விழுந்து திரும்பினன் அவன். அந்த மைதானம் மாசி மகத்தில் நகர்வலம் போகிற பஞ்சரதங் களும் நிற்கிற மைதானம். அங்கே கலர் கலராய் பூக்கள் பூத்துவிட்டது போன்ற மக்கள் கூட்டம். அந்த மக்களிடையே காவடி - கரக - பொய் க் கால் குதிரை இன்னும் பல கோஸ்டி யினரின் ஆட்டபாட்டங்கள் -
வானத் தி ல் எதிரொலிக்கிற
மாதிரி முழங்குகிற வாத்தியங் களின் இசை - அலங்கார பல்பு களின் மினுக்கங்கள் - அரகரT கோசல்கள் ஆகியன கவிஞர்கள் சொல்கிறமாதிரி அந்த இடத்தை தேவலோகமாக் கி யி ரு க் கும் ! இன்று? . ஒ. அந்த மைதானம் அகதி முகாமாகி விட்டது!
சிங்காரம் அந்த சித் தி ரத் தேரில் தொங்குகிற சிறுமணி ஒன்றை அசைத்தான். அப் போது அதிலிருந்து கிளம்பிய ஓசையில் கிளர்ந்த நினைவு கூடையில் விழுகிற கொழுந் தாக அவன் நெஞ்சில் விழு கிறது .
e e o
மாலினியும் சிங்காரமும் அந்த கோயிலுக்கு வந்தபோது அந்த தேரைப் பார்த்தார்கள். அன்று சாதாரண நாள் எவரும் இல்லை.
அவன் அந்த தேரின், மணியை அசைத்துப் பார்த் தா ன் . * கிணிங் . கிணிங் . " என்று அசைந்து ஒரு இதமான ஓசை யைக் கொடுத்தது அந்த மணி. மாலினி தானுக அந்த மணியை அசைக்கப் போனள். அவ ளுக்கு எட்டவில்லை. அப்போது அவன் அவளின் கரத்  ைத ப் பிடித்து இணைத்து உயர்த்தி அந்த மணியை அசைத்தான். 'கிணிங். கிணிங்.."
ஒ" எனணமாய் இசைக்கிறது இந்த சிறுமணி!
அப்போது அவன் சொன். னன். ‘நான் தனியா மணி அசைக்கிறதை விட இப்ப வந்த சத்தம் நல்லா இருக்கு!”
** ஏன்?” மாலினி கேட்டாள்.
'ரெண்டு பேரு கையும் சேர்ந் திருக்கே. அதனுலதான்...??
மாலினி வெட் கித் து அவ
னுடைய மார்பில் சாய்ந்தாள்.
அவன் அவளை அப்படிபே கட் டிப் பிடித்து முத்தமிட்டான்.
எ வ னே தேர் மணி யை அசைக்க அவன் நினைவு அறுந்து விழுகிறது. சிங்காரம் திரும் பிப் பார்த்தான். அங்கிருந்த வன் நல்லுசாமி.
سسه III س=

Page 8
* சிங்காரம்! இங்கதான் இருக் கியா? ஒன்னய எங்கங்க தேடு றது! ஒனக்கு தெரியுமா? பாம்பு கல் ரோட்டு கடை மொதளா ளிய வெட்டி கடையில போட்டு எரிச்சிட்டானுக. அவருட்டு மனுசியையும் புள்ளை களை யு ம் கெடுத்து தேயிலை தோட்டத் துல போட்டானுகளாம்.
இப்ப அவங்கள கோயிலுக்கு கொண்டாந்திருக்காங்க."
சிங்காரம் ஒடிஞன். அவ னுக்கு முன்னல் நல்லுசாமி ஓடி னன். இருவரும் கோயில் காரி யாலயத்திற்குப் போனர்கள். அங்கே கிழித்துப் போ ட் ட நாராக படுக்கையில் கிடத்தப்
பட்டிருந்தார்கள். இத் தனை நாளும் "காத்து வந்த தை "காவு" கொடுத்துவிட்டதற்கு அடையாளமாக இரு ந் தன. அவர்கள் தேகம்.
அவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அடுத்த சில
நிமிடங்களில் அவர்கள் ஆஸ்பத் திரிக்கு கொண்டு போகப்பட் டார்கள். பாம்புகல் ரோட்டு கடை முதலாளியையா எரித்து
விட்டார்கள்? நேர்மையாக வர்த்
தகம் செய்த அவரின் கரங்கள் தான் பலருக்கும் அள்ளி க் கொடுத்தன. அவரையா?. ஓ.. நாட்டுக்கு என்ன நடந்து விட்டது? . பெரும்பான்மை என்ற ஒரேயொரு மமதை சிறு பான்மை மக்களை அழிக்கத்
தூண்டுகிறதோ! இவர்கள் என்ன
தான் செய்தார்கள்! இந்த மண் ணுக்காக உழைத்ததைத் தவிர வேறு எதுவுமே தெரியாதவர் கள்! உழைப்புக்கேற்ற கூலிக் காக மட்டுமே போராடியவர் கள்! இவர்களுக்கு அகிம்சை தான் ஆயுதம்! இவர்களை ஏன் அடிக்க வேண்டும்?. ஒ. மண் மாதாவே ! உனக்கு சாதி - சமய நிறபேதம் தெரியாதாம். அப் படியானல் இந்த உழைக்கும் மக்களின் ரத்தக்கறை உன் மீது பட்டுள்ளதே. அதனை எப்படி அனுமதித்தாய் . ஒ. நீ கண் களை மூடிவிட்டாயோ!
சிங்காரம் மனமொடிந்த நிலை யில் அந்த அகதி முகாமின் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தான். அவனுக்கு மாலினியைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணமே வர வில்லை. மாலினி அவனை அகதி முகாமில் தேடிக்கொண்டேயிருந்: தாள் தன்னை ஒதுக்கி வருகிருன் என்பது அவ ளுக்கு மெல்ல மெல்ல புரியத்
சிங்காரம்
தொடங்கிவிட்டது.
ძზ) ஃ ஃ
ஒரு பெரிய அண்டாவைத் தூக்க முடியாமல் தூக்கிக்
கொண்டு வந்தது ஒரு கோஷ்டி. உண்மையில் ஒரு அண்டாவைக் குறைந்தது எட்டுபேர் தூக்க வேண்டும் . ஆனல் அந்த அண் டாவை ஐந்து பேர் அரக்கினர் கள்.
- 12 as

* யாராவது ஒடி வாங்கப்பா. ஒதவி செய்ங்கப்பா." என்று ஒருத்தர் கத்தினர். அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்த சிங் காரம் "டக் கென்று அந்த கோஸ்டியோடு இணைந்தான்.
"ஒங்க மாதிரி நெறைய பேரு வந்து ஒதவி செஞ்சா நல்லா இருக்கும்! எல்லாம் அகதியா இர்திகிட்டா யாரு தம்பி தொண் டரா வேலை செய்வா?*
அவர் சொன்னது அவனுக்கு நியாயமாகப்பட்டது. இந்தப் பெரிய கூட்டத்தில் ஒடியாடி வேலை செய்ய நிறை ய பேர் தேவை. அதற்கு ச ம் பளத் திற்கு ஆள் பிடிக்க முடியாது. இங்கே தான் தொண்டர்களை உருவாக்க வேண்டும். சிங்கா ரம் அந்த நிமிடத்திலிருந்து ஒரு தொண்டராக மாறினன்.
சிங்காரத்திற்கு அந்த அகதி முகாமில் தொண்டராக வேலை செய்வது பிடித்திருந்தது. முகா மில் வேலை இல்லாமல் "அம்மா, இருக்க குறிப்பாக மாலினியின் பார்வையிலிருந்து அவ னின் நினைவுகளிலிருந்து விலகி நிற்க இந்த தொண்டர் வேலை அவ னுக்கு உதவியது. அன்று பகல் உணவை பரிமாறுவதில் சிங்கார மும்முரமாயிருந்தான். நேரத்தில் சிகிச்சை நிலையத்தி யிருந்து ஒலி பெருக்கி அவனை அழைத்தது. Gë 6u av 60 u i போட்டுவிட்டு என்னவோ ஏதோ வென்று பதறியவாறு போனன்.
அந்த
சிகிச்சை நிலையத்தில் பிச்சைக் கிழவன் தள்ளுவண்டியில் படுத் திருந்தான். அவன் பயந்து போனன் ஆண்டிக் கிழவனுக்கு என்ன ஆகிவிட்டது. சிங்காரம் கிழவனின் கையைப்பிடித்து கலங் கினன். 'நெஞ்சில திடீர்னு வலிப்பா. அடிக்கடி வர்ர வலி தான்! ரெண்டு மூ னு ஊசி போட்டா சரியாப் போயிரும்.”*
தனக்குத்தானே கிழவன் ஆறு தல் சொன்னன். 'இப்ப கவுரு மெண்டு ஆஸ் பத் தி ரி க்கு போறேன். நீ மா லினிய கைவிட்டுராதே!..நேத்து வந்து அழுதா. உன்னய நம்பி தாய்தகப்பனை வுட்டுட்டு வந்திருக்கா. அவளை ஏமாத்திராதே! கைவிட் டுராதே." என்ற கிழவன் அவன் முகத்தைப் பார்த்தவாறு கேட்டான். ** sp... ... இங் காரம் ஏன் அவளை நீ ரெண்டு நாளா பார்க்கல்ல."
அவன் பொய் சொல்லி சமா ளித்தான்.ஒ இந்த 'பொய்" எத்தனை பேருக்கு கைகொடுக் கிறது!
**இல்ல. தாத்தா இப்ப நான் இங்கே தொண்டரா வேலை செய் யிறேன். அதனுல பார்க்க முடி யல்ல."
**சரிப்பா அவளை கைவிட் டுராதே."
அடுத்த சில நிமிடங்களில்
கிழவனை சுமந்துகொண்டு அந்த

Page 9
அம்புலன்ஸ் வண்டி ஆஸ்பத் திரிக்கு ஓடியது.
O o 00 od o
மறுபடியும் ஒருநாள் ஒலி பெருக்கி அவன் பெயரைச் சொல்லி அழைத்தது.சிங்காரம் பயந்துவிட்டான்.ஆஸ்பத்திரிக் குப் போன கிழவனுக்கு என்ன மும் ஆகிவிட்டதோ!.
சிங்காரம் கோயில் காரியால யத்திற்கு ஓடினன்.
**வாங்க.தம்பி.
'உங்களை நம்பி ஒரு முக்கிய
LDT 607
வருகிற அகதிகளை நீங்க பேருஊரு விபரம் கேட்டு பதியவேண்
டும்.அதுதான் உங்கவேலை...”*
கோயில் கமிட்டியைச் வர் சொன்னூர்.
சேர்ந்த
அடுத்த சில நிமிடத்தில் வெய் யில் நெருப்பாக கொளுத்திய போதும் கோயில் மைதானத்தில் மேஜை-நாற்காலி போடப்பட் டது.அதில் சிங்காரம் உதவி யாளனேடு உட்கார வைக்கப்பட் டான்.காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகிற வேலை அந்திசாயும் வரை நீடித்தது. ஆரம்பத்தில் சிங்காரத்திற்கு சந்தோஷமாக இருந்தது. போகப்போக அந்த நாற்காலி முள்ளாகத் தைக்கத் தொடங்கியது. அப்போதுதான் பெரிய பதவிகள் பார்க்க அழகாக
இருந்தாலும் அது முள்ளின் மேல்
பொறுப்பை கொடுக்க போறேன்.இங்கே வந்திருக்கிற
இருப்பதற்கு சமம் என்பதை அவன் உணரத் தொடங்கினன். ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் பெயர் விபரங்களை பதிந்தான். கோயிலின் உள்ளே இருந்தவர் களைதோட்டவாரியாக அழைத்து ப தி ந் தா ன். அங்கு பெயர் கொடுத்த ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக பார்த்துக்கொண் டான்.
நேற்றுவரை தோடடங்களில் உ ழை த் த தொழிலாளர்கள் இன்று அகதிகளாக வந்திருக் கிருர்கள். இவர்கள் அகதிகளா? ஓ. எப்போதும் இவர்கள் அகதி கள் போல்தானே இருக்கிருர் கள்.லயத்தில் பார்த்ததற்கும் இப்போதும் என்னவித்தியாசம்? அப்படியானல் இவர்கள் அகதி கள் தானே! ஆம் எப்போதும் இவர்கள் நிரந்தர அகதிகள்.! அவர்களுக்கு இந்த நாடு வகுத்த எல்லையே அகதிகள் வாழ்கிற 5 ல்லைதான். உலகில்உள்ள அகதி க ளு க் கு உடை-உணவு-இடம் உழைக்காமல் கிடைக்கிறது. ஆணுல் இவர்களுக்கோ அவை கள் உழைத்தால்தான் கிடைக் கிறது!
டெலிவிசன்வந்துவிட்ட காலத் தில் கூட அவர்கள் இன்னமும் விபரம் தெரியாதவர்களாகத் தான் இருக்கிருர்கள், உலகமே இன்று சொந்தமாக்கிக் கொண்ட * கல்வி இவர்களுக்கு மட்டும் ஏன் அந்நியமாகிவிட்டது.
நேற்று ஒரு சம்பவம்.ஒரு குடும்பத்தை பெயர் கேட்டு விப ரம் பதிந்தான்.
** பேரு."
* "முனியாண்டி.."
''6), Lig...,
Φρανκ l4 : sus

'நாப்பதுக்கு மேலே இருக்
கும்.'
**நாப்பதுக்கு மேலன்ன கரெக்
டாய் சொல்லுங்க.”
* கரெக்டா சொல்றதுக்கு பொறந்த ஆண்டு தெரியா துங்க.."
அப்புறம் சிங்காரம் முனியாண் டியைப் பார்த்து "குத்து மதிப் பில் வயதைக் குறித்தான்.
** என்னென்ன எ ரி ஞ சி போச்சி..அதுட பெறுமதி "
'நமக்கிட்ட பெறுமதியானது எதுவும் இல்லிங்க . ஆன சிட்டி சன் சிப் கொப்பி எரிஞ்சு போச் சுங்க , ! அதான் கவலைப்படு றேன்.”
சிங்காரத்திற்கு முனியாண்டி யைப் பார்த்தபோது பாவமாக இருந்தது. தன் காம்பராவில் இருந்த பொருட்கள் எரிந்ததற்கு கவலைப்படாதவன் அந்த நாட்டு பிரஜையாக்கப்பட்டதற்கு அத்
தாட்சியாகக் கொடுக்கப்பட்ட வெறும் காகிதம் எரிந்ததற்கு அழுகிருனே! ஒ. வெறும் காகி
தம் அது இல்லை! இந்த நாட்டுக் காக உழைத்து வந்த இனத்தை நாடற்றவராக ஆக்கப்பட்ட போது அவர்கள் ஒவ்வொருத் தரும் இந்த நாட்டில் வாழ ஒரு
லைசென்ஸ் , அதற்கு பெயர்சிட்டி
சன்சிப் அது கிடைக்காதவர்கள் அகதியாக தாயகம் திரும்ப வைக் கப்பட்டார்கள்! இர ண் டு ம் கிடைக்காதவர்கள் நாடற்றவர் கள் ஆக்கப்பட்டார்கள்.
அன்று கடைசியாக பெயர் விப ரத்தை பதிந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது மாலினிதான் நின்றுகொண்டிருந்தாள். மாலினி பெயர் பதியத்தான் வந்திருக் கிருளோ?
சிங்காரம் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தான் .அவள்
தன் உணர்ச்சிக்கு உருவம் கொடுக்காமல் கண் க ளா ல் சாடை காட்டினுள். கண்கள்
கலங்கி வந்தன.
சிங்காரம் அவள்அருகேபோய், 'இங்கெல்லாம் வந்து தொந் தரவு கொடுக்கவேணும்! இப்ப நான் ஒரு வேலைய பாரமெடுத் திருக்கேன்.நீ போயி நம்ம தோட்டத்து ஆளுகளோட இரு! நான் இங்கதான் இருக்கிறேன்." என்று சொல்லிவிட்டு பதிவேட் டோடு கா ரியா லத் தி ற் கு போனன்.
மா லி னி அழுதுகொண்டே போனள்.
d% ძზ ძ% நாலு நாட்களின் பின்னர் ஒரு நாள் அன்று என்ன நடந்ததோ தெரியவில்லை அகதிகள் அன்று லொறிகளில் வந்து குவியத் தொடங்கினர்கள். சிங்காரத் துக்கு எதுவும் புரியவில்லை. இனக் கலவரம் நின்றுவிட்டது என்று நினைத்தபோது புதிய அகதிகள் வந்து இறங்கிவிட்டார்கள். அந்த மாவட்டத்தின் எல்லையில் இடம்பெற்ற கலவரத்தினுல் பாதிக்கப்பட்ட மக்கள்தான் அவர்கள். அவர்கள் அத்தனை பேரும் ரப்பர் மரத்தோட்டத் தைச் சார்ந்த தொழிலாளர்கள்.
சிங்காரத்துக்கு அாறு வேலை அதிகமாகிவிட்டது போல் தெரி கிறது. லொறிகளில் இருந்தவர் களை வரிசையாக நிறுத்தி விப ரம் பதிய வைத்தார்கள். அனு மான் வால் போல் வரிசைநின்றி ருந்தது. அதில் அதிகமானேர் கட்டிய துணியோடு வந்திறங்கி ஞர்கள். இன்னமும் அவர்கள் முகத்தில் பயம் போகவில்லை.

Page 10
சிங்காரம் வேகமாக விபரங்க ளைப் பதிந்தான். அவர்கள் அத் தனைபேரினதும் முறைப்பாடு எத னையும் "எடுத்துவர முடியவில்லை என்பது தான். மலையேறி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்
தில் அவர்கள் எந்த ஏற்பாடும்
செய்யாமல் இருந்துவிட்ட்ார்கள்.
"நாசமாப் போனவனுக இந்த மாதிரி பன்னிட்டானுகளே! ஒண்ன திண்னு ஒண்ணுகெடந்து ஒண்ண இருந்து இந்தமாதிரி செஞ்சானுகளே...??
O O அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு கிழவி ஒப்பார் வைத்தாள்.
சிங்காரம் "யாரு?" என்று
கேட்டான்.
"பக்கத்து நாட்டுல இருந்த சிங்களவனுகதான்".
சிங்காரத்துக்கு ஞாபகம் தான் வந்தது. இனி மேல் அவளோடு .
பகல் இரண்டு மணியிருக்கும் சிங்காரத்துக்கு தூக்கம் வரும் போலிருந்தது. ஆனலும் அவன் அதனை அடக்கி தன் வேலையைக் கவனித்தான். இன்னும் கொஞ் சப் பேர்தான் இருந்தார்கள்.
இரண்டு லொறி அகதிகளைக் குறிப்பெடுத்துவிட்டான்.
அவன் பெயர் - விபரம் பதிகி
பேரு." **பியதாசா'. சிங்காரத்துக்கு "வியப்பாக"
இருந்தது. மறுபடியும் பெயரைக் கேட்டான். அவன் அதே பெய ரைத்தான் சொன்னன். அவ னுக்கு புரியவில்லை. பியதாசா. சிங்களப் பெயர் ஒரு சிங்களவன் அவன் ஏன் இந்த அகதிமுகா முக்கு வருகிருன்?
பெயரை பதியாமல் நிமிர்ந்து பார்த்தான் அவன். அரைகுறை தமிழில் பேசினன். ‘சிங்களவ ஞன நான் ஏன் முகாமுக்கு வந்தி ருக்கேனு தான் நீங்க பார்க்கி
மாலினியின்
நீங்க! நான் வேரகம ரப்பர் தோட்டத்தில் தமிழ் ஆள்க ளோட லயத்தில இருந்து வேலை செய்யிறவன். நான் கல்யாணம் கட்டியிருக்கிறது ஒரு தோட்டத் தமிழ்ப் பொம்பள. பேரு லச் 57 Ló)... ””
சிங்காரத்துக்கு "பொட்டில்" அடித்தது போலிருந்தது. பிய தாசாவுக்குப் பக்கத்தில் "லச்சுமி" நின்று கொண்டிருந்தாள். சிங் களப் பெண்ணை மணந்தவர்களும் தமிழ்ப் பெண்ணை மணந்தவர் களும் அகதிகளாக வந்திருக்கி முர்கள். கலப்புத் திருமணத்தால் தேசியத்தை உருவாக்கலாம் என்று சொன்னவர்கள் எங்கே? **நல்ல தாய் - தகப்பனுக்கு பொறந்தவனுக இந்த அநியா யாம் செய்ய மாட்டானுக! ஆணு இவனுக என்னத்தைப்பண்ணின லும் எங்க ரெண்டுபேரையும் பிரிக்க முடியாது! " என்ற பிய தாசா லச்சிமியைப் பார்த்தான். இருண்டிருக்கிற அவள் முகத்தில் ஒரு பிரகாசம்!
எங்கே அழைத்துச் செல்வது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு. பியதாசாவை ஏறிட்டுப் பார்க் கத் தயங்கினன். தமிழர்களை அடிக்கிற சிங்களவர்கள் மத்தி யில் இந்த பியதாசா ஒரு மனி தன்-அதற்கு மேல் ஒரு மகாத்மா, அவனுடைய நிழலில் கூட நிற் கக் வணு தனக்கு"தகுதியிஃ என்ற நினைப்பு அவனுக்கு. தன்னை மன்னிக்கக் கோருவது அவன் கண்களைப் பார்த்தான். அன்று இரவு நாலுபேர் சுற்றி வர இருந்தும் அதைப் பெரிது படுத்தாத சிங்காரம் மாலினி யின் கண்ணிர்த் துளிகளைத் துடைத்து விட்டு அவளை அப்ப டியே கட்டிப் பிடித்துக் கொண் டான். மாலினிக்குஎதுவுமே புரிய வில்லை உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?.
ــــــــــــے 16 بسی۔

மலையக சிறுகதைச் சிற்பி
ஒரு சமுதாயத்தின் மாற்றம்
அச் சமுதாயத்தின் இலக்கியத் தி லும் பிரதிபலிக்கப்படுவது தவிர்க்க முடியாத அம்சமாகும். இத்தகைய சமுதாய விழிப் புணர்வானது அ வ் வ க் கால கட்டங்களில் இலக்கியத்தில் பிரதிபலித்துள்ளமையை 15n th காணக் கூடியதாக உள் ளது. இதனை நாம் மலையக சிறுகை
சிற்பியான என். எஸ். எம்.
ராமையாவின் "ஒரு கூடைக்
கொழு ந் து' சிறு க  ைத த் தொகு தி யில் அவதானிக்கக் கூடியதாக விருக்கிறது.
மலையக மக் களின் துன்ப து ய ர ம் களை அவர் க ளின் யதார்த்த பூர்வமான வாழ்க் கையை மலையக படைப்புகளில் அறிந்து கொள்ள முடியும். மலை யக சிறு ச தை க்கு உருவ ம் கொடுத்தவர் என மலையக சிறு கதை எழுத்தாளர்களாலேயே பாராட்டப்பட்டவர் என். எஸ். எம். ராமையா. இவரது “ஒரு கூடைக்கொழுந்து" என்ற சிறு
கதைத் தொகுதியை படித்துப்
பார்த்தால் அவைகள் உழைக் கும் மக்களின் வாழ்க்கையி லிருந்து முகிழ்ந்திடுகின்றன. இவரது சிறுகதைகளில் மலையக மக்களின் துயர நிகழ்வு கள் மனதை தொடும் வி த த் தி ல் இழையோடுகின்றன. இந்த ச் சிறுகதைகளின் மூலம் கடந்த
கால மலையகத்தை நம்மால் தரி சிக்க முடிகிறது. இந்த சிறுகதை களில் காணப்படும் பாத்திரங் கள், சம்பவங்கள் வாழ்வோடு வரலாற்றேடு பின்னிப்பிணைந்து 6u lar.
என். எஸ். எம். என்று நண் பர்களாலும் இலக்கிய வட்டத் திலும் அன்புடன் அழைக்கப் படும் நாராயணன் மெய்யப் பன் ராமையா என்பதே இவ ரது முழுப்பெயாாகும். பதுளை ரொக்கில் தோ ட் டத் தில் 27-1-1931 இல் பிறந்த இவரது மணிவிழா வுக் கு இ ன் னும் இரண்டு ஆண்டு பாக்கியிருக் கின்றன. இன்னும் நண்பர்களை இலக்கியவாதிகனை சந்தித்தால் போதும் தன்னையும் தன் குழலே யும் மறந்து இலக்கியம் பற்றி யும் , மலையக எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்புப்பற்றியும், மலையக எழுத்தாளர் களின் இலக்கிய பங்களிப்பு பற்றியும் மணிக்கணக்கில் பேசு வ தில்
சளைக்க மாட்டார்.
இன்று மலையகசிறுகதைகளைப் .b ,[ij பேசுவதானுல் என், ו எஸ். எம். ராமையாவை குறிப் பிடாமல் யாரும் பேசமுடியாது. மலையக சிறுகதை முன்னேடி யான இவர், தனது இலக்கியப் பணியை வானெலி நா ட கம் மூலம் தான் ஆரம்பித்துள்ளார். வானெலியில் 'சாணு’ என்ற
- 17 ബ

Page 11
ழைக்கப்படும்
சண்முகநாதன் நா ட க த் தயாரிப்பாளராக பணியாற்றிய காலகட்டத்தில்
என். எஸ். எம் எழுதும் நாடகங்
களைக்கேட்டு சுவைப்பதற்கு ஒரு
சுவைஞர் கூட்டமே இருந்தது. இவரது ‘ஒரு மின்னல்" என்ற நாடகத்தை இன்றும் பாராட்டி கூறுவார்கள்.
இவரது வானெலி நாடகங் களில் எதிரொலி, தலைவர் வீட் டுக்கல்யாணம், தாமரைக்குளம், ஞா ன க் கண், பாலை நில ம் போன்ற நாடகங்களை குறிப்பிட் டுக்கூறலாம். இவரது நாடகங் களில் நடித்த எஸ். எம். ஏ. ஜப் பார் இ ன் றும் வானெலியில் தன் திறமையை வெளிப்படுத்தி ஜாம்பவானக திகழ்கிருர், மறைந்த வானெலி, மேடை நடிகர் ரொஸாரியோ பீரிஸ் போன்றவர்களை குறிப் பிடலாம்.
ஈழத்து தமிழ் இலக்கியத்துக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என பெ ரு  ைம யுடன் குறிப்பிட்ட விமர்சகரும், பேராசிரியருமான க லா நி தி கைலாசபதி அவர்கள், 'தினக ரன்’ ஆசிரியர் பீடத்தில் அமர்ந் திருந்த பொழுது, இவரது வானெலி நாடகங்களைக்கேட்டு மலையககளஞகக்கொண்ட கதை களை எழுதும்படி கேட்டாராம் இதனை தனது நண்பனும், இலக்கிய ஆர்வலனுமான திரு. ஆர். கனகரத்தினத்திடம் என். எஸ். எம். கூறிஞராம். கணக
தமிழகத்தில்
குறிப்பிடத்தக்க
ரத்தினமும் இவரை சிறுகதை கள் எழுதும்படி கூறிஞராம்.
இவர், தான் வாழ்ந்த மண் ணின் அனு பவ த்  ைத ‘ஒரு கூடைக் கொழுந்து சிறுகதை எழுதி நண்பரான கனகரத்தினத் திடம் காட்டினுராம். க ன க ரத்தினம், அதனை வாசித்து பின் னர் சில ஆலோசனைகளைக்கூறி ஞராம். கதை மீண்டும் திருத்தி எழுதப்பட்டு 'தினகரனில் பிர சுரமானது (4.6. 61)
சிறுகதை வெளிவந்த மறுவா ரமே கலா விமர்சகரான கணக செந்திநாதன் "ஒரு கூ  ைட க் கொழுந் து" க  ைத  ைய ப் பாராட்டி வீரகேசரியில் எழுதிய துடன் என். எஸ். எம். ராமை யாவைப்பாராட்டி நேரடியாக கடிதம் எழு தி ஞர். 'இந்தக் கதையின் தனிச்சிறப்பு’ மலை நாட்டு வாழ்க்கை முறை இன் னது எ ன் ப த நீற்கு ஒரு நல்ல மாதிரிக் கதையாக இது அமைந்
திருப்பது, சமீப கால த் தி ய
இலக்கிய வளர்ச்சியின் தவிர்க்க முடியாததும் வரவேற்க வேண் டியதுமான ஒரு விளைவே, மலை நாட்டுப் பிராந்திய இலக்கிய வளர்ச் சிக் கு அடி எடுத்துக் கொடுக்கும் வகையில் இந் த
சிறு க  ைத தோன்றியிருப்பது’ எ ன் று * புதுமை இலக்கியம்" சஞ்சிகை விமர்சித்தது.
என். எஸ். எம். ராமையா
குறையவே எழுதினலும் இலக் கிய உலகில் நிறைவான இடத்
ー Is ー

தைப் இவரது பன்னிரண்டு சிறுகதை கள் "ஒரு கூடைக் கொழுந்து" என்ற மகுடத்தில் 1980-ம் ஆண்டு வெளியாகியதுடன் அர சின் சாகித்திய மண்டலப் பரி சையும் பெற்றது.
இவரது சிறு கதைகள் தமிழ் நாட்டு "மஞ்சரி” மறுபிரசுரஞ் செய்தது. தரமான இலட்சியப் படைப்புகளை வெளியிடும் வாச கர் வட்டம் வெளியிட்ட *அக் கரை இலக்கியம்’ என்ற தொகுப்பில் இவரது வேட்கை இடம்பெற்றிருக்கிறது. ஆசிய நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளில் ஒன்ருன இவரது *வேட்கை" ரசியன் ஜர்னலில் இடம் பெற்றுள்ளது. *செக்" சோவியத் மொழிகளில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.
பிடித்துக் கொண்டார்.
'1960 களில் எழுத்துத் துறை யில் நுழைந்த என். எஸ். எம். ராமையா தன் எழுத்தின் வளத் தால் கடல் கடந்த இடங்களில் கெளரவத்தைப் பெற்றிருக்கிருர். குறைவாக எழுதி, கணிசமான வாசகர்களின் கவனத்தை ஈர்த் திருக்கிருர், மலை ய கம் என்ற பிராந்தியத்திற்கேயுமே விசேஷட மான தன்மைகளைக் கொண் டெழுந்த மலையக சிறு கதை இலக்கியத்திற்கு உருவம் அமைத் தவர் என்றவகையில் ராமையா வரலாற்று முக்கியத்துவம் பெறு கிருர்' என மு. நிததியானந்தன் குறிப்பிட்டிருப்பது எத்தகைய யதார்த்த பூர்வமான உண்மை யாகும்.
- அந்தனிஜிவா
}.
மிதமாகப் Guör".
ஏழைபோல் வாழ். கொள்ளாதே.
:43.
. மகாத்மா காந்தியடிகளின்
கருத்துரைகள்
எவர் எது சொன்னலும் கேட்டுக்கொள். உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்; ஒவ்வொரு நிமிடத்தையும் முக்கியமாகக் கருதிச் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்.
செல்வத்தில் பெருமை
நீ செய்யும் செலவிற்குக் கணக்கெழுது மனம் ஒன்றிக் கல்வி கற்றுக்கொள் நாள் தோறும் உடற்பயிற்சி செய். அளவோடு சாப்பிடு. நாள் தவருமல் நாட்குறிப்பெழுது. மில்க்வைற் நீலசோப் மேலுறைகள் 25 அனுப்பி "படிப்பினை" என்னும் நூலையும் அழகிய காந்தி யடிகள் ஸ்ரிக்கரையும் பெற்றுக் மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம். யாழ்ப்பாணம்.
த. பெ. 77.
கொள்ளுங்கள்.
مـــــه 19 سـنس

Page 12
வெளவால் தகவல்கள் இந்தி
பூரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ஜனப் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் தனது நாடாளுமன்ற பேச் சொன்றின் போது சாரல்நாடன் எழுதிய *தேசபக்தன்" கோ. நடேசய்யர் நூ லை மேற்கோள்காட்டியும், தனது பேச்சின் போது அந்த நூலை சபையிலே பிற அங்கத் தவர்களுக்குக் காண்பித் தும் இருக்கின்றர் என்பதும் மகிழ்ச்சி கரமான செய்தியாகும்.
மலைநாட்டு மக்களுக்கு இப்படி ஒரு பெருமைமிகுந்த பாரம்பரி யம் இருக் கி ன் ற தென் பது நமக்கு இதுவரையிலும் தெரி யாமல் போய் விட்டதே என்று மனப்பூர்வமாக இந்த நூ லை வாசித்தப் பல கல்விமான்களும் ஒததுக் கொள்கின்றனர்.
எந்தவித பிரதியுபகாரத்தை யும் எதிர்பார்க்காமல் பிரதி யுபகாரம் என்பது பதவி, பணம், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப் புக்கான அங்கீகாரம் என்ற விதத்தில் ஒன்று-மலையக வெளி யீட்டகத்தினர் இந்த நூ லை வெளியீட்டிருக்கின்றர்கள்,
இந்த நூலில் நடேசய்யரின் பிறந்ததினத்தைப் பற்றி எந்த விதமான குறிப்பும் இல்லையே என்று சிலர் குறை கூறுவதை யும் கேட்க முடிகின்றது.
நடேசய்யரின் பிறந்ததினத் தை அறிய முடிந்தால் மிக ச்
பிய போது,
சிறப்பாக மலை நாடெங்கும். அவரது பிறந்த தினத்தைக் கொண்டாடலாம், என்ற இதய சுத்தியான ஆசையாலோ, அவ ருக்கு முத்திரை வெளியிடும்படி
ஆட்சியாளரிடம் கோரிக்கை வி டு க் க வசதியாயிருக்குமே எண்ணமுடியாது. குறைகூறும்
நோக்கே இலக்காயிருக்கின்றது.
'பிறந்த தினத்தைத் தெரிந் தவர் க ள் அறியத்தாருங்கள், இரண்டாம் பதிப்பில் சேர்த்துக் கொள்கிறேன்" என்று சாரல் நாடன் நூல் அறிமுகவிழாவில் பேசியபோது கூறியிருந்ததையும் நாம் இங்கு நினை வு படுத்திக் கொள்வது அவசியம்.
"சுப்பிரமணிய பாரதியார் மர ணித்தபல வருடங்களுக்கு அவ ரது நினைவு ஜயந்தி தா ன் கொண்டாடப்பட்டது. அதற் குக் காரணம் அவரது பிறந்த நாள் தெரியாமலிருந்ததேயா கும். அவர் மரணமான தினம் பலருக்கும் தெரிந்த ஒன்று. எனவே, அவ ர துப் பி m  ைவ உணர் ந் த சமகாலத்தவர்கள் அன்றையதினத்தை அ வ ர து நினைவுதினமாக நா டு தழுவிய விதத்தில் கொண்டாட ஆரம் பித்தனர். பாரதியாரின் மரண தினத்தில் பாரதிவிழா கொண் டாடுவதை விடுக்க வேண் டு மென்று பாரதிபக்தர்கள் விரும் அவரது "ஜன்ம
سے 20 -یب سے

தித்தைக்' கண் டு பி டி க் க ஆராய்ச்சியே செய்யவேண்டி யிருந்தது.
பாரதியாருடன் புதுவையில் ஒன்ருக இருந்தவரும் பாரதி யார் பணியாற்றிய "இந்தியா"
பத்திரிகையின் நிறுவனர்களில்
ஒருவருமான ஆச்சாரியர் உதவி யும், பாரதியா ருட னி ரு ந் த குவளை கிருஷ்ணமாச்சாரியாரின் உதவியும் பெறப்பட்டது. ஹிந் துஸ்தான் ஆசிரியர் குழாத் தைச் சேர்ந்தவர்கன் புதுச் சேரிக்கு இரண்டுமுறை யாத் திரை மேற்கொண்டு தீர, தெரி ந்த மட்டும்விசாரணை செய்தார் கள் பாரதியாரைப் பற்றி பல தவருண செய்திகள் அடிப்பட்டு போனது அதன் பின்னரே யாகும். அந்த ஆசிரியர் குழாம் செய்த தீ விர முயற்சிகளினுல் 1938, 1939-ம் ஆண்டுகளில் பாரதி மலர்கள் வெளியாயின. அந்த மலர்களிலும் ஒன்றிரண்டு பிழைகள் நேர்ந்துள்ளன என் பதை "கிராம ஊழியன்" கட் டுரையொன்று (பாரதியார்-சில சந்தேகங்கள் - 1-11-43) வெளிப் படுத்துகின்றது.
தி. ஜ: ர. எழுதியுள்ள “பாரதி
சரிதம்" குறிப்பிட்ட பாரதியார்
பிறந்த தினம் பிழையென நிறு
வப்பட்டதும், பாரதியாரைப் பற்றிய இன்றைய நாமறிந்த தகவல்கள் பரப்பப்பட்டதும் இந்த ஆய்வுகளுக்குப் பின்ன லேயே" என்று விளக்கிய சாரல் நாடன் "'நான் பல விதங்களி லும் திருப்திப்படுத்திக்கொண்ட தகவல்களையே எனது நூலில் தந்துள்ளேன். நூலில் சில தக வல்கள் தரப்படவில்லையெ ன்
முல், அது குறித்து தான்பெற்ற தகவல்கள் திருப்திதருவனவாக யில்லையென்பதை இந்த முட் டையில் மயிர் பிடுங்கும் பேர் வழிகள் ஏன் உணர்கின்றர்க ளில்லை'யென்று ஆ த் திர ப் liff.
அவர் ஆத்திரப்படுவது ஒரு விதத்தில் நியாயமானதாகவே படுகின்றது.
நடேசய்யர் உருவ அமைப்பு எப்படியிருந்தது என்பதே எம் மில் பலருக்குத் தெரியாது. இந்த நிலையில், “தேச பக்தன்" கோ. நடேசய்யர் நூலின் அட் டையை அப்படியே 'புளொக்" பண்ணி த மது பத்திரிகையில் போட்டும். அந்த நூலில் தரப்
பட்டுள்ள தகவல்களைத் திரட்டி
ஒருகட்டுரையைத்தயார் பண்ணி யும் தமது பத்திரிகையில் முழுப் பக்க அளவில் பிரசுரிக்கும் தர்ம வான்கள் இந்த நூலைப்பற்றி ஒரு வரியேனும் குறிப்பிடா திருப் பது கற்றறிந்த பலரின் கண் டனத்துக்குள்ளாகியிருக்கின்றது. பிறருக்கு பிறந்த பிள்ளைக்குத் தகப்பனென்று தன்ளை கூறிக் கொள்ளும் வெட் கங் கெட் ட வர் களின் செயலை ஒத்தச் செயல் இது.
சிம்பாப்வே தமிழ்ச்சங்க வெளி யீடாக ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்துள்ள "பூரீலங்கத் தமிழர்' என்ற வெளியீடும், ஜெர்மனியிலிருந்து வெளி வரு கின்ற 'சிந்தனை” என்ற பருவ வெளியீடும் மலையகத் தமிழர் பற்றிய சரியான சில தகவல் களைத் தந்திருக்கும்போது இங்
س- lر مست.

Page 13
குள்ள சிலர், மலைநாட்டு மக்க ளைப்பற்றிய தங்களது பார்வை யில் தவறிழைப்பது வேண்டு மென்றே செய்வதா? அன்றேல், மலைநாட்டு மடையர்கள் பொறுத் துக் கொள்வார்கள் என்ற தான் தோன்றித்தனத்தினலா?
தேசியத்தமிழ் ஏ டு களி ல்குறிஞ்சிப்பரல்கள், மலையக மஞ் சரி, மலையகமாருதம் என்ற பகு திகளில். வெளியிடப்படுகின்ற
சிலரது அறிக்கைகள், சில ஆக்கங்
கள் இப்படி எண்ணச் செய்கின் ADğ5l •
"தோட்ட எல்லைகளைச் சுற்றி யடித்திருந்த முள்ளுக்கம்பிகள் என்ன வாயின? "என்று கேட்கும் பரிதாபத்துக்குரிய ஒருவர்,
"தேயிலை மரங்களில் கொழுந் தெடுப்பதற்கு ஏணியில் ஏறும் என்னருமைச் சகோதரிகள்" என்றெழுதும் பரிதாபத்துக்குரிய இன்னுெருவர் என்று எழுதுபவர் கள் மாத்திரமல்ல இவைகளைத் தமது பத்திரிகைகளில் வெளியி டுபவர்களும் இந்த நிலையிலே தான் இருக்கின்ருர்கள்.
இவர்களின் நியாயத்தை எந்த அளவுக்கு மலையக மக்கள் ஒத்துக் கொள்ளப்போகின்றர்கள்?
புதியகாற்று, மலையகத்தில் வீசத் தொடங்கி விட்டதென் பதை அனைவரும் உணர்தல் அவ gui ub.
நம்மவர்களின்
பார்வைக்கு s to
மத்திய மாகாண சபையில் நம்மவர்களின் பிரதிநிதிகளாக திருவாளர்கள் ஒ. இராமையா, பி. கந்தையா, எஸ். ராஜூ, வி. அண்ணுமலை, டப்ளியூ ரட்ணம், கதிரேசன், வி. புத்திர சிகாமணி, எஸ். சதாசிவம், இராமநாதன் ஆகியோர் உள்ளனர்.
அவர்களின் பார்வைக்கு, வீரகேசரி 30-8-89 வெளிவந்த கீழ் வரும் செய்தியை சமர்ப் பணம் செய்கின்ருேம் ,
செய்தி இதோ- w வடக்கு கிழக்கு மாகாணத்தி
லுள்ள தமிழ் எழுத்தாளர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு வடகிழக்கு மாகாணசபை மேற் கொண்டுள்ள திட்டப்பிரகா ரம் பேராசிரியர் அ. சண்முக தாஸ் எழுதிய பேராசிரியர் வித்தி" என்ற வரலாற்று நூல் சட்டத்திரணி எஸ். சிறிஸ்கந்த
ராஜா எழுதிய ‘சந்ததிச் சுவடு கள்" என்ற நாடகநூல், சி. வன் னியகுலம் எம். ஏ. ‘எழுதிய ஈழத்து புனைகதைகளில் பேச்சு வழக்கு என்ற ஆய்வு நூ ல் சோலைக்கிளி 'எழுதிய எட்டா வது நரகம், அன்புமணி எழுதிய "ஒரு தந்தையின் கதை’ ரவிப் பிரியா வின் "சந்தன ரோஜாக் கள்' மற்றும் "ஒரு வானவில் ரோஜா வாகிறது’ ஆகிய நூல்
களில் தலா 300 பி ர தி கள்
கொள்வனவு செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபை உறுப்பினர் திரு. நா. நேசராசா தலைமை யிலான தமிழ் எழுத்தாளர் ஊக் குவிப்புக் குழுவினரின் சிபாரி சைத் தொடர்ந்தே மேற்படி பிரதிகள் கொள்வனவு செய்யப் பட்டுள்ளன.
- 22 -

A person's words must not be interpreted so as to do him an injustice என்பதை மகாத்மா காந்தி வேத வாக்காகவே நினைத் தா ர். "கம்ப்ளி நியூஸ்" தரும் செய்திகளை யும், சொற்களுக்கான அர்த்தங்களை யும், இதே மஞேபாவத்தில் வாசித் திட - வாசகர்களை வேண்டுகின்ருேம்.
தோட்டப்பாடசாலை அர சாங் கம் கையேற்கப்பட்ட சூழ் நிலையை பயன்படுத்திக் கொண் டு ஆசிரியர்களுக்காக ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆயுட்கால செய லாளர் ஒரு "ஞானப்பழம் இவர் பல லட்சம் மதிப்புள்ள வீட்டை தலைநகரில் சொந்தமாக வாங்கியுள்ளார். இவரை நம்பி சங்கத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் சிவ *68auחr" என்று கையை பிசைந்து கொண்டிருகின்றனர்.
தேயி%லயின் தந்தை என்று புகழப்படும் ஜேமஸ்டெபிலர் வயது காரணம் காட்டப்பட்டு நூல் கந்தரதோட்டத்திலிருந்து கடைசி காலத்தில் துரை வேலையினின்றும் விலக்கி வைக்கப்பட்டார். அந்த வேதனையிலேயே 1892 ல் அவரது உயிர் பிரிந்தது. தேயிலைத் தொழிலும், நன்றி மறந்தலும் இரட்டைக் குழத் தைகள் போதும், தோட்ட மக்கள் 1948ல் நாடற்றவர்களாக் கப்பட்ட நன்றி மறந்த செயலுக்கு இது வரை பூரணமான பரிகாரம் காணப்படாதது இதனுல் தான் போலும்.
அடுத்த ஆண்டிலிருந்து ஒரு மாதப்பத்திரிகை மலைநாட்டிலிருந்து வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மலைநாட்டு நகரங்கள் அனைத்திலும் தமிழ்ப்புத்தக விற்பனை நிலையங்கள் திறக்கப்பட இருப்பதாகவும் அடிபடும் செய்திகள் உண்மை யாக இருக்சக் கூடாதே என்று சில தொழிற் சங்கப்பிர முகர்களும், அவர்களின் அடிவருடி செய்தி சேகரிப்பாளர்களும் ஆண்டவனை வேண்டுகின்றனர்.
இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து தமிழகத்தில் புனர்வாழ்வு தேடியிருக்கும் மலைநாட்டு மக்களின் பிரச்சினைகளை வெளிப் படுத்தும் நோக்கில் ஒரு மாதாந்த தமிழ் ஏடு இந்தியாவி லிருந்து வெளிவர இருக்கின்றது.
۔ییے 923 س۔

Page 14
அடுத்த இதழ்.
ஆண்டு மலர்
கொழுந்து. .5 அடுத்த இதழ் ஆண்டு மலராக மலரவிருக்கின் கின்றது
கொழுந்து இது வரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளது. அடுத்த இதழ் ஏழாவது இதழ் ஆண்டு மலராக அதிகபக்கங்களுடன் மலர்கின்றது. புதிய ஆண்டில் ஜனவரியில் வெளிவரும் என்ற தகவல்களை தெரிவித்துக் கொள்கிருேம். அதன் பின்னர் மாதம் ஓரிதழாக மலரும்
ஒரு சஞ்சிகையின் வளர்ச்சி வாசகர், விற்பனையாளர் விளம்பரத் தார்கள் தரும் ஆதரவிலேயே தங்கியுள்ளது.
அதனல், கொழுந்து சஞ்சிகையை விற்பனை செய்து உதவும் நல்ல இதயங்கள் விற்பனை செய்த பணத்தை அனுப்பி உதவும்படி கேட்டுக்கொள்கிருேம்.
மண்யகத்திலிருந்து வெளி வந்த மலைமுரசு முதல் தீர்த்தக்கரை". வெளிவந்த சஞ்சிகைகளை நாம் அறிவோம்.
அந்த சஞ்சிகைகளுக்கு ஏற்பட்ட நிகழ்வு" கொழுந்து இதழுக்கு ஏற்படக்கூடாது என விரும்புகிருேம்.
கொழுந்து மலையக மக்களின் அரசியல், கலை இலக்கிய கல்வி சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டது.
கொழுந்து மலையக மக்களின் ஒவ்வொருவரின் இல்லங்களை சென் றடைய வேண்டும் என்பதே எமது அவா. அத்துடன் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் கொழுந்து கிடைக்க வேண்டும் என்பதும் எமது அபிலாஷையாகும்.
இதற்கு கொழுந்து இதழை நேசிக்கும் நெஞ்சங்களின் ஆதரவு என்றும் தேவை.
-'அந்தனி ஜீவா -
ー 24露ー

சில மனப் பதிவுகள்
ஈழத்து நூல், சஞ்சிகை, ஒவிய, சிற்பக் கண்காட்சி
அந்தனி ஜீவா.
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு வரை அந்த இனிய நினைவுகளை மீண்டும். மீண்டும் இரை மீட்டிப் பார்த்தேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்றது முகம் தெரிந்த, முகவரி மட்டும் தெரிந்த நண்பர்களை எழுத்தாளர்களை, கலைஞர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தது இனிய சுகானுபவம்.
ஈழத்து நூல் சஞ்சிகை ஒவிய சிற்பக் கண்காட்சிக்கு கட் டாயமாக வரவேண்டும் என்று நேரிலும் கடித மூலமும் அன்புக் கட்டளை போட்ட நண்பர் சோமகாந்தன் (ஈழத்து சோமு) உள்ளூர் உதவி ஆணையாளர் திரு. சு. டிவகலாலாவின் கடிதம் , யாழ் சென்று திரும்பவேண்டும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.
கண்காட்சி ஒக்டோபர் 28, 29-ம் திகதி நடைபெற்றது. அதற்கு முதல் நாளே நானும் மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவர் சாரல் நாடனும், பேரவையின் உறுப்பினரான டாக்டர் ராஜேந் திரனும் யாழ் சென்ருேம். கொக்குவிலில் வசிக்கும் ஆசிரியர் ஜெய ராஜாவின் பாரதி இல்லம் எம்மை இன்முகத்துடன் வரவேற்றது.
மறுநாள் யாழ். இந்துக் கல்லூரிக்கு சென்ருேம். நீங்கள் எப் படியும் வருவீர்கள் என்று தெரியும்" என்று அன்புடன் வரவேற்ருர் சோமகாந்தன். கண்காட்சியை உள்ளூராட்சி உதவி ஆணையாளய
25

Page 15
திரு. டிவகலாலாவின் தலைமையில் முன்னுள் இந்துக் கல்லூரி அதிபர் திரு. என். சபாரத்தினம் தொடக்கிவைத்தார்.
யாழ்ப்பாண உள்ளூராட்சி திணைக்களம் யாழ். ருேட்டறிக் கழ கம், யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனம் ஆகிய வற்றின் கூட்டு முயற்சியுடன் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.
கண்காட்சியைப் பார்த்ததும் என் விழிகள் வியப்பால் விரிந்தன. ஆயிரக்கணக்கான நூல்கள், சஞ்சிகைகள் மத்தியில் நம் மண்ணின் நிகழ்வுகளை ஒவியங்களாக தீட்டியிருந்த கலைஞர்களின் கலை வண்ணங் கள். அது மாத்திரமல்ல. அந்த ஒவியங்களை, சிற்பங்களையும் செய்து கலைஞர்களை நேரில் சந்தித்து உரையாடுகின்ற வாய்ப்பு <3,35пT...... எத்தகை இனிமையான சந்திப்பு.
யாழ்ப்பாணத்தில் உயிர் ஒலியமாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒவியர் அ. மாற்கு அவர்களை சந்திக்கவேண்டும் என்ற அவா, அத் துடன் ஒவியர் ஆ. இராசையா மலையக வெளியீட்டகம் வெளியிட்ட சு. முரளிதரனின் "தியாக யந்திரங்கள்’ கவிதைத் தொகுதிக்கு அட் டைப்படம் படம் வரைந்த ஓவியர் கைலாசநாதன். சிவசாயி சித் திரக்கோட்டத்தின் சிற்பக் கலைஞர் சிவப்பிரகாசம் போன்றவர்கள் மற்றும் "மறுமலர்ச்சி குழுவைச் சேர்ந்த எழுத்தாளர் வரதர், கலைப் பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை சாகித்திய கர்த்தா ந. வீரமணி ஐயர் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
முதல் நாள் மாலை எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஒன்றுகூடல் கலா நிதி எஸ். ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது. அந்த கலந்துரை யாடலில் திருவாளர்கள் டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான், திருமதி கோகிலா மகேந்திரன், சாரல் நாடன், குழந்தை ம. சண் முகலிங்கன், புலவர் ஈழத்துச் சிவானந்தன், ஓவியர் மாற்கு ஆகியோர் கருத்துரை வழங்கினர்கள்.
கருத்தரங்கு கலகலப்பாகவும், சிறப்பாகவும் அமைவதற்கு பார் வையாளர்களாக இருந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் குறிப் புரை வழங்கினர்கள். w
26

மறுநாள் ஞாயிறு காலை மேல் மண்டபத்தில் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டுக்கொண்டிருக்க கீழ் தளத்தில் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி, எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் நடை பெற்றது.
கருத்தரங்கில் திருவாளர்கள் சோ. பத்மநாதன், கலாநிதி நா. சுப்பிரமணியன், கலாநிதி சபா. ஜெயராசா, க. தணிகாசலம், செம் பியன் செல்வன், நெல்லை க. பேரன், சாரல் நாடன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்கள்.
மாலை "ஈழத்தில் கலை வளர்ச்சி" என்ற தலைப்பில் பேராசிரியர் வி. சிவசாமி தலைமையில் "நுண் கலைகள்" பற்றி கலாநிதி சோ. கிருஷ்ணராஜா, நாடகக் கலைபற்றி கலாநிதி மெளனகுரு, ‘கிராமிய, கலைகள்" பற்றி கலாநிதி இ. பாலசுந்தரம், "மலையக கலைகள்" பற்றி அந்தனி ஜீவா ஆகியோர் கருத்துரை வழங்கினர்கள். திரு. சி. இரகுநாதன் நன்றியுரை வழங்கினர்.
அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை நண்பர்களான கலாநிதி சபா. ஜெயராசா, கலாநிதி சி. மெளனகுரு ஆகியோரின் அழைப்புக்கு இணங்க யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சென்ருேம். அங்கு பேரா சிரியர் க. சண்முகதாஸ் தலைமையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. கலாநிதி சோ. கிருஷ்ணராஜாவும் கலந்துகொண்டார்.
நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களும் பயனுள்ளதாக அமைந் தது. எழுத்தாள நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு விருந்து படைத்தனர்.
முதல் நாள் அன்று ‘நங்கை" சஞ்சிகை ஆசிரியை திருமதி சரோஜா சிவசந்திரன் வீட்டில் தீபாவளி விருந்து. அதன் பின்னர் அங்கு டொமினிக் ஜீவா, கலாநிதி மெளனகுரு, திரு திருமதி சிவசந்
அட்டையில்.
மலையக இலக்கிய சிற்பியான என். எஸ். எம். ராமையாவே
அட்டையில் இடம் பெற்றுள்ளார்.
2

Page 16
திரன், சாரல் நாடன் ஆகியோருடன் சுவையான கலந்துரையாடல் பலதும் பத்தும் எமது பேச்சில் இடம்பெற்றது.
மறுநாள் திரு. சு. டிவகலாலா தலைமையில் எங்களுக்கு திரு. சோமகாந்தன் தம்பதிகள் விருந்தளித்து கெளரவித்தனர். மூன்ரும் நாள் கலாநிதி மெளனகுரு தம்பதிகள் வீட்டில் சுவையான விருந் துடன் தேசபக்த கோ. நடேசய்பர் பற்றியும், நாடகக் கலை பற்றி யும் பலவிதமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.
மற்றும் கம்பனின் வாரிசு ஜெயராஜ், தம்பி சார்ள்ஸ், பூபால சிங்கம் பூரீதரசிங், "திசை" பொன்னம்பலம், கலாநிதி பாக்கியநாதன், அனு. வை. நாகராஜன், நடிகரும் வழக்கறிஞருமான நண்பர் சோ. தேவராஜன் குறமகள் மலையகத்தைச் சேர்ந்த சாமி, ச முகராஜா இப்படி எத்தனையோ ந பர்களைச் சந்தித்து உரையாடியது எல் லாமே மனசில் என்றும் பதிவுகளாகவே இருக்கும்.
தேசபக்தன் நடேசய்யரை நினைவு கூருவோம்!
மலையக மக்களை முதன் முதவில் ஒன்று திரட்டி ஸ்தாபன ரீதி யில் அவர்களுக்கு என்று தொழிற்சங்க இயக் -த்தை ஆரம்பித்த கோ. நடேசய்யர் மறைந்து நாற்பத்திரண்டு ஆண்டுகளாகிவிட்டன. ஆனல் இவரை மக்கள் மறந்துவிட்டனர். அவர் அமரரானது நவம் பர் மாதம் 7ம் திகதி (7-11-1947) யாகும். அவர் மறைந்த நவம் பர் மாதத்தை நினைவு கூறவேண்டியது ஒவ்வொரு மலையக மகனின் கடமையாகும்.
இவ்வாறு மலையக கலை இலக்கியப் பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அமரர் கோ. நடேசய்யரின பணிகளைப் பற்றி மலையக மக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அவர் மறைந்த நவம் பர் மாதத்தை நடேசய்யர் மாதமாக நினைவு கூறவேண்டும் என்று பேரவை கேட்டுள்ளது.
மேலும் மலையகத்தின் தொழிற்சங்க முதல்வர் மலையக படைப் பிலக்கியம் பத்திரிகைத்துறை ஆகியவற்றிற்கு முன்னேடியாக திகழ்ந்த கோ. நடேசய்யரை அவர் மறைந்த நவம்பர் மாதத்தில் மலையகமெங் கும் அவரைப் பற்றிய நினைவுக் கூட்டம் கருத்தரங்குகள் நடத்தப்பட வேன் டும்.
இன்று மலையகத்தில் தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்கு கின்றதென்றல் அதற்கு வித்திட்டவர் கோ. நடேசய்யர். அதனல் அவர் மறைந்த நவம்பர் மாதத்தை மலையகத்திலுள்ள தொழிற் சங்கங்கள் தோட்டம் தோட்டமாக அவர் நினைவு கூட்டங்களை
நடத்தவேண் டும்.
28

With Best Compliments from
KNGS MEDKAS
Drugs, Groceries And Fancy Goods
94, Main Street.
ΗATTON
with Best Compliments from
SATYA “TRA DER
Dealers in Pocketing Band Stiff & Color Stiff
S. H. Super Market. 194, 1/C Keyzer Street, Colombo 1.

Page 17
இ6 'பத்தாவது ஆண்
கொழுந்து
பரிசு ரூ
மலேயக மக்களின் வாழ் Gа, телг.. முன்னர் பிர இருக்கவேண்டும். பரிசு ெ யிடும் உரிமை ஃபூக
திகதி
எழுத்தாளர் தங்கள் பன் ஆனுப்பினர்
EDITOR
57, Mail
Printed at Print House for Ed 57:MahTri da |
 

ஸ்க்கியப் பேரவையின் டு நிறைவையொட்டி ஞ்சிகை நடத்தும்
LIT 1500 -
க்கையைப் பின்னணியாகக் ஈரிக்கப்படாத குறுநாவலாக பெறும் குறுநாவல்களே வெளி வெளியீட்டகத்தைச் சாரும்.
25 - 12 - 1989
டப்புகளே பதிவுத் தபாலில் வக்க வேண்டும்
KOZHUNDU
Place, Colombo 6.
tor Publisher S. Anthony, Jee Va Place Coof bio-ES,