கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2000.07-09

Page 1
பாரிந்த முள்முடியைத் யாரிந்தக் கண்ணிரை
பாரிந்தச் சிலுவையின்
பாரிந்தப் பூமுக த்தை
 

த் தாங்க வல்லார்
த் துடைக்க வல்லார்
னைச் சுமக்க வல்லார்
ப் பொருத்த வல்லார்

Page 2
  

Page 3
எத்தனை பல்லவி வடித்திருப்பேன். நானும் எத்தனை சரணங்கள் தொடுத்திருப்பேன் முத்திரைக் கவிதைகள் படைத்திருப்பேன்- பெருஞ் சத்தமாய்ச் சபைகளில் படித்திருப்பேன் அத்தனையும் உன் கொடைகளடி- உன்னில் ஆயிரம் அழகுக் கடைகளடி சித்திரக் கவிதையின் மஞ்சமடி- நீ சிற்பியைச் செதுக்கிய நெஞ்சமடி
விழிகள் என்ன விளக்குகளோ- இல்லை விடியும் காலைக் கிழக்குகளோ பார்வையில் என்னைப் படம்பிடித்தாய்- உன்னைப் படித்ததும் மனசுக்குள் இடம் பிடித்தாய் தேர்வுகள் நூறும் தேறிவிட்டேன்- என் தேவதை உன்னிடம் தோற்று விட்டேன் சிறகுகள் இரண்டும் பூட்டி விட்டாய்-தங்கச் சிறையிலே என்னை மாட்டி விட்டாய்
என்னில் வெளிச்சம் கொடுத்தவளே. எனை எனக்குள் கண்டு பிடித்தவளே உன்னை எனக்குள் விதைத்து விட்டாய்- என் உளறல்கள் யாவும் புதைத்து விட்டாய் வாசலில் வசந்தமாய் வந்து விட்டாய்- என் வாழ்விலே அர்த்தங்கள் தந்து விட்டாய் கலைகளின் பூமியில் முளைத்து விட்டேன்- வரும் காலத்தின் முகமாய்க் கிளைத்து விட்டேன்
#存労 ofr ܕ \
}} ീ1 ? 3 i02. -
 
 
 

・ポrr &ể ể & محمد **
நண்பர் இலக்கியக் குழு. வாழைச்சேனை
மூன்றாவது இதழக்கு வந்து விட்டோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி நமக்கு.
கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசியிலும் நேரிலுமாக நமக்குத் தரப்படும் உற்சாகம் மேலும் சிறப்பாக ‘யாத்ராவைத் தர வேண்டும் என்ற உணர்வை எம்மில் மேலிடச் செய்கிறது. இரண்டு இதழ்களே வெளிவந்த நிலையில் இந்தளவு வரவேற்பு இருக்குமென்று நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
பலரும் தங்களது வேலிகளைத் தாண்டி உற்சாகக் கரம் நீட்டும் நிலைமை உருவாவது போல் தோன்றுகிறது. அப்படி 8q. நல்ல சூழல் உருவாகுமானால் நமது இலக்கியப் பரப்பு ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
எங்கிருந்து கரங்கள் நீட்டப்படுகின்றன என்பது பற்றி ‘யாத்ரா கவனங் கொள்ளாது. அணுகுவோர் யாவரையும் அது அனைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதால்.
பல இடங்களுக்கும் சென்று ‘யாத்ரா'வை அறிமுகம் செய்து வைத்து வருகிறோம். உங்கள் பிரதேசத்திலும் ஒரு ஏற்பாட்டை நீங்கள் செய்து தரலாம்.
இம்முறையும் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அவதானிக்கலாம். அடுத்த இதழ் இன்னும் அதிக பக்கங்களில் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உங்களால் ‘யாத்ராவும் ‘யாத்ராவால் நீங்களும் நலம் பெறப் பிரார்த்திக்கின்றோம்.
* も※ 学 ぶど rf* \^ رحمہ ، iO3: نی .t } * برعمسيحية

Page 4
சு.வில்வரத்தினம்
saj rrgët t 3
நண்பன் தந்தையை அறிமுகம் செய்த பின்னர் யதேச்சையாய்த்தான் கேட்டேன்: அந்த நெற்றி வடு பற்றி
நெற்றியை வருழயவாறே கண்களில் ஒளியூறப் பெரியவர் இது தொழுகை வடு என்றார்
9IUUsT நொந்து கொண்டேன் எண் அறியாமைக்காக
அல்லாஹற்வைக் கூவியழைத்து தான் பிறந்த மண்ணில் தலை Uணித்து தொழுததால் தங்கிக் கொண்டதுதானே அந்த அழகிய வடு
எப்Uழ முழந்தது என்னால் தொழுகை வடுப்பூத்த நெற்றிப் பொட்டில் சுத்தியலால் ஓங்கி அழத்தது போல் அவர்களைப் பிறந்த மண்ணினின்றும் துரத்தி என்னை நானே காயப்படுத்திக்கொள்ள
என் மனசுள் புடைத்து நிற்கும் குற்ற வடுவைத் துளைக்கின்ற நெற்றிக் கண்ணாக மாறியது அவர்களின் தொழுகை வடு விழுப்புண்களையும் விசாரிக்கின்றனவாய்த் துளைத்து
எப்போது நீங்கும் என் வடு அவர்களது நெற்றிக்கு மிகவும் நெருக்கமான தொழுகை வடுவாய் நிலைத்த மண்ணின் அழுகை சிதைத்த பழியினின்றும் நீங்குவது எப்போது
நண்ப, யாசித்திருக்கிறேன் அல்லாஹற்விடம் அவ்வினிய நல்கூர் வேளைக்காக
04. کالمے
 

கிளிகளுடன் பேசுவாய் குருவிகளுடன் குதூகலிப்பாய்
அணிற்குஞ்சுகளுடன் ஆட்டமும் அருவிக் குளிப்புமென ஆனந்தித்திருப்பாய்
நைல்லுப் பாய்க்குக் காவல் கிடப்பாய் குஞ்சுக் கோழியைக் கூட்டிலடைப்பாய் சோளக்குலையைச் சுட்டுக் கொறிப்பாய்
வெளிகளில் வெட்டுக் கிளி துரத்துவாய் வானத்தில் வெள்ளி பொறுக்குவாய்
இங்கே சிக்னல் கம்பங்களிலும் செக் பொயின்ற்களிலும் நகரத்து நச்சுப் புகையில் மூச்சுத் திணறலுமாய்க் கழியுதடி எண் காலங்கள்
| ; ; Y క్ష 3:g f #זf שו

Page 5
யாத்ரா இதழ்கள் கிடைத்தன. நன்றி. உங்கள் துணிகரமான முயற்சி நீடித்து நிலவப் பிரார்த்திக்கிறேன். இதைத் தரம் பேணித் தொடருங்கள். வசதிப்படின் அல்லாமா இக்பால், கலீல் ஜிப்ரான், நஸ்ருல் இஸ்லாம் போன்றவர்களை அறிமுகப்படுத்துங்கள்.
அல் ஹாஜ் எஸ்.எம்.கமால்தின் கொழும்பு-8
யாத்ரா-2 கிடைத்தது.உள்ளடக்கமும் வடிவமைப்பும் சிறப்பாயிருக்கின்றன. ஆசிரியர் தலையங்கத்தில் உங்கள் கருத்து என்னைக் கவர்ந்தது. காரணம் கவிதை பற்றி அதே கருத்தைத்தான் நானும்கொண்டிருக்கிறேன். இதுபற்றி விரைவில் ஒரு கட்டுரையை யாத்ராவுக்குத் தரவிருக்கிறேன். அர்ப்பணிப்புடன் நீங்கள் செயற்படுவதை என்னால் உணரமுடிகிறது.
வாழ்த்துக்கள்.
செ.யோகநாதன் (6):57(լքLճւj-1
முகவரி,நிலா.ப்ரியம்,நேஸம்,ஸகீ. இப்படி மொத்தம் 32 சொற்கள்தான் இப்போதைய கவிதைகள் என்றாகிவிட்டநிலையில் அவற்றைப் புறந்தள்ளி ஆழ்ந்த பசி உள்ளோருக்குச் சரியான உணவு யாத்ரா.எடுத்த எடுப்பிலேயே பாவலர், நீலாவணன்,அஸமத் போன்ற நட்சத்திரங்களும் நிமத், ஸதக்கா, இப்னு அஸஉமத் என்ற இளைய சிந்தனைகளுமாக யாத்ரா-2 சிறப்பாக இருக்கிறது.
அண்ணல் பற்றிய குறிப்புகள் அருமை. அன்னாரது நினைவுக் குறிப்பு களை அச்சொட்டாகத் தந்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு அழகான முன்னுதாரணம் கூறியிருக்கிறது யாத்ரா. அண்ணல் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு மிகவும் பிரயோசனமான பகுதியாக ‘சங்கப் பலகை இருந்தது. ‘சங்கப்பலகை யாத்ராவின் ஒரு தங்கப் பதக்கம். கவிதைத் தொகுதி வெளியிடாத கேள்வியும் தலித்தியம், பெண்ணியம் போன்றவை பற்றித் தனக்குத் தெரியாது என்று பாவலர் சிரிப்பது பாவலரின் சிந்தனை வரட்சியைக் காட்டுகிறது என்பதை விட அவள் அவை பற்றிக் கூறவிரும்பவில்லை என்று நான் என்னை ஏமாற்றிக் கொண்டேன். “அழகான ஒரு சோடிக் கண்கள் பற்றியும் ஆத்மீகக் கவிதானுபவம் பற்றியும் கேட்கப்பட்டிருக்க வேண்டும். யாத்ரா இதில் சறுக்கியிருக்கிறது.
, . *
むrr労#ff κανκ リリrs多gfr3 (06)
 

அஸPமத்தின் கட்டுரையைப் படித்த போது அவரது ‘பூபாள கால நினைவுகள் இனிப்பாக ஞாபகம் வந்தன. புதிய தலைமுறையினரைக் குறும்பா எழுத ஊக்குவித்தவர் அவர். ‘தமிழகத்தின் பத்திரிகைச் சந்தை' என்று முடியும் குறும்பாப் போட்டியொன்றைன்க்தது ‘பூபாளம். எத்தனையோ குறும்பா வாப்பாக்களை முந்திக்கொண்டு ஆன், கல்முனை ஆதம், எஸ்.எம்.எம்.றாபிக், நஸ்ர் ஆகிய குறும் பாப்பாக்கள் ஒடி அதில் நானும் கல்முனை ஆதமும் பரிசுகள் பெற்றோம். அதன் பின் தூது’ கவியேட்டில் தொடாச்சியாக ஆசிரியர் கருத்தைக் குறும்பாவிலேயே எழுதி வந்தேன்.
அன்பு முகைய்தீனின் நிலவைக் காணாதவள்’ கவிதையில் வரும் ‘எல்லா நிலங்கனையும் இனி நாங்கள் நேசிப்போம் என்ற வரிகள் அருமை. ஆனால் நமது ஒரு குழந்தை கண்டியில் அடக்கம் செய்யப்பட்டதால்தான் அந்த நிலத்தையும் நேசிக்கின்றோம். தமிழர்களின் செம்மணிப்புதைகுழி. முஸ்லிம்களின் காரைதீவுப் புதைகுழிகள்.பற்றியெல்லாம் கவலைகொள்ளாத சுய புலம்பல்கள் யாத்ராவில் வரக்கூடாதென விரும்புகிறேன். நி.மத்தின் இழப்புகள் ஒரு சமுதாயத்தின் நிம்மதியின் இழப்புகளாகும். யாத்ரா கொணர்ந்த சோக வீச்சு மிக்க கவிதா சாமரம் அது.கவிதாசார்மிக்க பகுதியாக 'கடிதங்கள் அமைவதைக் கவனித்துக் கொள்ளுங்கள். ‘வாழ்த்துகிறேன், ‘பிரார்த்திக்கிறேன் போன்ற ‘.றேன் கடிதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாமே. * புதியவை பகுதி பிரயோசனமானது. கவிதையின் வடிவம் பற்றிக் கவலைப்படாது ‘கவிதை பற்றிய கவலையுடன் தேர்ந்தெடுத்த பாவடிவங் களைப் பிரசுரிப்பது சிறப்புத் தரும்.
வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம்.ஸதக்கா ஆகிய இரு போர்வாட்களோடு கவிதா யாத்திரைக்குப் புறப்பட்டு வெற்றிகரமாகஇரண்டாவது காவலரணைக் கைப்பற்றிவிட்ட தளபதி நீங்கள். காவலரண்களின் எண்ணிக்கை அல்ல கவிதா முகாம்கள்தான் நமது இலக்கு என்பதுதான் முக்கியம்.அஸஉமத் ‘பூபாளம் இசைத்த பின் நான்கூட ஒரு சிறிய தூது சொன்னேன். தொடர்கிறது உங்கள் ‘யாத்ரா'.
என்.ஏ.திரன் கல்முனை
நீங்கள் முன்னெடுத்து வைத்திருக்கின்ற பயணப் பாதை மீதெனக்கு பெரும் நம்பிக்கை பூத்திருக்கின்றது. கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் காட்டிவரும் அக்கறைய்ை தொடர்ந்து பேணுங்கள். வரலாறு யாத்ராவைப் பேசுமென இந்த நிமிடங்களில் என்குச் சொல்லத் தோன்றுகிறது
வெளிமடை ரபீக்
யாத்ரா-1 ல் இடம் பெற்ற கவிதை பற்றிய எனது கட்டுரை சம்பந்தமாக.
இடையில் தமிழ்ச் சங்க மேடையில் மிகச் சொற்ப நேரம் சந்தித்த அலி ஸாஹிர்மெளலானா,எனது கட்டுரையைப் படித்ததாகப் பாராட்டினாரேயொழியச் சந்தேகம் எதையும் கேட்கவில்லை.சில பல்கலைக்கழக இஸ்லாம்,அறபுப் போதனாசிரியர்கள் மக்கள் மத்தியில் பேசும்போது,அந்தலூஸைப் பிடித்து ஆண்ட வீரம், ரோமைப் பிடித்த வீரம் பற்றி (உண்மையில் இவ்வெற்றிக்கு
3 E07 リリ存安女f ملخص
رم سجيه

Page 6
爱
முன்மாதிரி வீரம் என்பதை மறந்து ) அடுக்கு மொழியில் முறுக்கேற்றும் பேச்சுப்போல, ‘மலை முகட்டில் மலைகளின் இடுக்கில் சங்கீதமிசைக்கும் அருவி.இஸ்மாயில் நபியின் குதியடித்தெழுப்பிய ஊற்று, எரிமலைக்குழம்பு, பிரளயம்,மேகங்கள்.இளந்தென்றல்’எனக் கவிதைக்கு இலக்கணம் கூறி யிருக்கிறார். இவையெல்லாம் முறுக்கேற்றும் நடைகள்.கவிதை இவையல்ல. வேண்டுமானால் படிமங்களுக்குப் பாவிக்கலாம். பேச்சு மொழி, எழுத்து மொழி என்பன தரும் உணர்வு கவிதையாக மாறும்.சிறந்த சொற்களில் அழகியல் முறையில் அது, பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் அளவளாவும். ‘நம்மூரில் மாடுகள் அதிகமாய் மூத்திரம் அடிக்கும், ‘உடைகளைக் கழற்றி உங்களை நிர்வாணப் படுத்திக் கொள்ளுங்கள், ‘உங்கள் யோனியைத் திறவுங்கள், ‘பனியை வீசிப் பாலுறுப்பைக் குதிர்த்தாது, ‘பிருஷ்டப் பகுதியெங்கும் உரச உரச தசைகள் தோறும் எரிந்து கிளர்வுறும், ‘கைக்குள் அடங்கும் அளவினதானவுன் மார்பின் இடைவெட்டில், ’கனவும் பிறகான சொப்பன ஸ்கலிதச் சுகமும் தற்காலம் நான் படித்த சிலகவிதைகளின் சொற்களிவை, இன்னும் சிலவற்றை எழுதுதல் கூச்சமுடையது. இச்சொற்கள் தனிமையாகும் போது உண்மையில் அழகுதான். அது சொல்லும் விதத்தில் அழகற்றிருப்பதை உணரலாம்தானே. சிறந்த சொற்களில் சிறப்பான முறையில் எழுந்து உணர வைப்பதே கவிதை என்பது எனது திடம்.
ஏ.இக்பால் தர்கா நகர்.
ஒவியங்களில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. அவை அச்சாகும் போது நேர்கிற தடையாகும். நளிம் அற்புதமாக வரைகிறார்.பாராட்டுக்கள். யாத்ராவைப் பாடசாலை மட்டங்களிலும் அறிமுகம் செய்வீர்களானால் இளையவர்கள் பயனடைவார்கள். யாத்ராவின் ஆசிரியர் மற்றும் யாத்ரா வுக்காகப் பாடுபடும் ஏனைய இலக்கிய நல்லிதயங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
அனார் சாய்ந்தமருது
கவிதையை மையமாகக் கொண்டு யாத்ரா இதழ் வெளி வருவதையிட்டு எண்ணப் புளகாங்கதம் அடைகின்றேன்.
பல தீவிரவாதங்களுக்கு மத்தியிலும் ஓர் மத்திம இதழாகத் திகழ்ந்து ஆரோக்கியமான தத்துவப் போராட்டத்திற்கு களமாக அமையுமாயின் வரவேற்கத் தக்கது. அத்தகைய சாத்தியக்கூறு இவ்விதழில் தென்படுகிறது.
லெனின் மதிவானம் கொட்டகலை
i
f'
3

༧༧༽ བ) ༠ཀཤག། ༦་བཀའ་
ஊரைல்லாம் வெள்ளம்
UUlgigs UUdig5
UU-dig5
U_565ങ്ങT
நடந்து வருகையில் தெறிக்கும் நெருப்பரில் தெரு கூதல்
«ՖՈԱյԱծ
fo- 6T (EGS35 மிதந்து வருகின்றாய்
st
உர்ை கொண்டைக்குக் குளிரெழும்பரிக் கையுதறிக் காலுதறத் தோள் வரைக்கும் நீண்டு அவிழ்ந்து
Աշ6Օչքամ?6ծ துவண்டு தொங்குவது
ஒரு காகத்தின் கூடு g) 6oot it, gil 6 to6ђео 6)ио6ђер அழிகின்ற கற்பனையை ஏற்படுத்தி விடுகிறது
65fTő50 || JfTfT நானெர்ைறால்
நான் விழுந்து ஈரத் தெருவெங்கும் துடிக்கிறேனர் 6 T6öŤ Cyp6ODU SQAbgËć35 SQULð உன் அழுகுக் கொண்டை
என்று சொல்லச் சில சிரமங்கள் நேர்ந்தாலும்

Page 7
அந்த ஒருவனுக்காக,
g?" LLomt 6 up Sempo. Lunt 5
எனைக் கடந்து போகையில் வெற்றியின் அடையாளமாய் இருவிரல் நீட்டிக் குதூகலித்தாய் போரில் ஜெயித்திருப்பாய் என்றல்லோ கையசைத்தேன்
காக்கிச் சட்டையும் கடுமுகம் கொண்டோரைக் காணின் பரணிற் பதுங்கும் ஒருயிரை வெற்றி கொள்ள - நீ பெரும் படையுடனா சென்றாய்
குருவிக் காவலுக்கும் கவனெடுத்தடிக்காத ஓர் அப்பாவியை சைன்யம் நகர்த்தி நசுக்கச் சென்ற உன் வீரத்தை என்ன சொல்ல
நான் மீன் பிடிக்கும்
புணானைக் காட்டில் அவனைக் கொன்று கழுவிய இரத்தம் பேசியது எறும்புக்கும் சேதாரம் செய்யா அவனுடலைத் தொழுவிக்க பள்ளியும் ஏங்கிற்று
துக்கம் விசாரிக்கச் சென்றேன் அவன் வீட்டின் மண் சுவரில் அவனது தாயின் ஒப்பாரியிருந்தது கிணற்றடியில் முர்ச்சையுற்றுச் சகோதரியிருந்தாள்
(10)

அவன் தந்தையோ நெஞ்சடைத்துக் கதறினார் ஊர் கூடியங்கு கண்ணீரிறைத்திற்று
நான் பார்த்திருக்க வாழையிலிருந்து இரு சொட்டுப் பணி விழுந்தது உன்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டழுத அவன் அந்திமத்தை நினைவூட்டிற்று அது
வீரர்காள் அவனை எங்கு கொன்று புதைத்தீர்
என்பதாவது நினைவிருக்கா உமக்கு
2000.03.03
Il

Page 8
கவிமணி
எம்.சி.எம்.ஸ்பைர்
‘இன்று இந்துவாகிய நான், இஸ்லாமியக் கவிஞர் ஸுபைர் அவர்களுக்குப் பட்டமளிப்பது, அன்று எட்டயபுரத்து இந்து அரசர், சீறாப்புராணம் தந்த உமறுப் புலவரின் புலமைக்குப் பெருமதிப்பளித்து சமஸ் தானத் து வித்துவானாக வைத் திருந்தமையை நினைவூட்டுகிறது.
- - - - - -ஸாஹிராக் கல்லூரியில் பல்கலைக் கழகத் துணை வேந்தராகிய நான் கவிஞர் சுபைர் அவர்களுக்கு இச் சபையின் வேண்டு கோட்கிணங்க, 'ஈழத்துக் கவிமணி’ என்ற கெளரவப் பட்டத்தினை அளிக்கிறேன்.”
கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் 111181ல் மாண்புமிகு
சபாநாயகர் அல்-ஹாஜ் பாக்கிர் மாக்கார் அவர்களின் தலைமையில்
கவிஞர் எம்.ஸி.எம்.ஸபைர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ஆரம்ப, இறுதி வசனங்கள் அவை.
நாற்புறங்களிலும் சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட கல்ஹின்னைக் கிராமத்தில் தமிழ் மணங்கமழச் செய்த கவிமணி அவர்கள் 1933ம் ஆண்டு ஆகஸ்ட் 27ந் திகதி காஸிம் ஹாஜியார் - ஸபியா உம்மா தம்பதியின் இரண்டாவது புதல்வராவர்.
:ாதீரf 3
12,
 
 

ஆசிரிய சேவையில் தன் வாழ்வை அர்ப்பணித்த கவிஞர் அவர்கள் அதில் கிடைத்த வேதனத்தில் வாழ்ந்தபடி தனதும் பிறரினதும் இலக்கிய தாகத்தைத் தீர்த்த அற்புத மனிதர். 1961 முதல் மூன்று வருடங்கள் அவர் நடத்தி வந்த ‘மணிக்குரல்’ என்ற சஞ்சிகையில் எழுத்துப் பழகிய பலர் இன்று பிரபல்யங்களாகவுள்ளனர். மணிக்குரல் பதிப்பகத்தின் மூலம் கலாநிதி அல்லாமா உவைஸ் அவர்களின் 'இஸ்லாமியத் தென்றல்' உட்பட நூல்களையும் பதிப்பித்தார்.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள், கவிமணியின் 'மலரும் மனம்’ எனும் பாலர் பாமாலை பற்றிக் குறிப்பிடும் போது ‘.குழந்தை களுக்கேற்ற பாடல்களைக் குழந்தை உள்ளத்துடன் இயற்றித் தந்துள்ள கவிஞர் ஸுபைர் அவர்கள் தமிழறிந்தோர் அனைவரதும் பாராட்டுக்குரியவராகிறார் என்கிறார்.
'மலர்ந்த வாழ்வு’, ‘கண்ணான மச்சி'எங்கள் தாய் நாடு', 'காலத்தின் குரல்கள்','பிறைத்தேன்','இலக்கிய மலர்கள்','மனிதம் பேணும் மாமறை','மலரும் மனம்’ ஆகிய நூல்கள் அவர் நமக்களித்த இலக்கியச் செல்வங்களாகும்.
சீறாப்புராணத்தின் ‘பதுறுப்படலம் பாடநூலில் சேர்க்கப்பட்டபோது அதற்குச் சிறந்த ஓர் உரை எழுதிய கவிஞர் க.பொ.த.சா.த. பரீட்சைக்குத் தமிழ் இலக்கியம் 'ஆ' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அதனை நடைமுறைப்படுத்துதற்குத் தம்மாலான அனைத்தையும் பிரதிபலன் கருதாது செய்து முடித்தவர். 1956ல் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இவர் நிகழ்த்திய ‘இலங்கை இஸ்லாமியக் கவிஞர்கள் என்ற உரை உமா வாசகம் என்ற பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. 'குறிஞ்சித் தேன்மலர்'மருதமலர் 'இலக்கிய மஞ்சரி’ ஆகிய நிகழ்ச்சிகளையும் அவர் வானொலியில் தொடர்ந்து நடத்தி வந்தார்.
கல்ஹின்னை மாணவர் சங்கம்,எழுத்தாளர் சங்கம்.வை.எம்.எம்.ஏ. போன்றஇயக்கங்களில் பதவிகள் வகித்த இவர், இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராகவும் தலைவராகவும் விளங்கி'மறுமலர்ச்சித் தந்தை அறிஞர் சித்தி லெப்பை அவர்களுக்கு 1976ல் அரசாங்கத்தால் நினைவு முத்திரை வெளியிடப்பட முன்னின்று உழைத்தார்.
; 12 。子ア受リ il3 ! ! ff ჭყr fr-3

Page 9
அவர் தமது அந்திமக் காலத்தில் நூறாண்டு காலப்படைப்பான அப்துல் காதிறுப் புலவரின் ‘அடைக்கல மாலைக்குப் பொழிப்புரை எழுதியதில் ஓர் அற்புதமே தென்படுகிறது எனக்குறிப்பிடும் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன், அக்குறணை, மத்திய கல்லூரியில் அவரால் அரங்கேற்றப்பட்ட ‘மன்னனைக் காத்த முஸ்லிம் மங்கை’ என்ற கவிதை நாடகத்தைக் காண வந்தோர், கண்ணிர் மல்கக் கண்டு களித்த காட்சி மனதை விட்டு அகலாதது என்கிறார்.
1991ல் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம் முதல் விழாவில், ‘கவித்தாரகை - நஜ்முஷ் ஷஆரா பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட கவிஞருக்கு 1993ல் மலேஷிய கவிமாலை இலக்கிய அமைப்பு ‘இலக்கிய மணி’ பட்டம் வழங்கிக் கெளரவித்தது. 1998ல் சமய கலாசார அலுவல்கள் அமைச்சு ‘கலாபூ ஷணம் விருதும் பொற்கிழியும் சான்றிதழும் வழங்கிக் கெளரவித்தது.
பதினெட்டு வருட காலமாக இலக்கியத்தை விட்டும் தூரமாயிருந்த பெருங்கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களை மீண்டும் செயல்படத் தூண்டியது கவிமணி செய்த அளப்பரிய சாதனையாகும்.
கவிமணியின் இலக்கியச'செயற்பாடுகளிலும் கண்ணியமிக்கநடவடிக்கை களிலும் கவரப்பட்ட ஜனாப் ஏ.ஏ.எம்.புவாஜி அவர்கள் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கியிருக்கிறார். 16.05.1999 அன்று இவ்வுலகைப் பிரிந்த கவிஞரின் ஞாபகார்த்தமாக கல்ஹின்னைத் தமிழ் மன்றம் 220 பக்கங்கள் கொண்ட ஞாபகார்த்த மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழ் மன்றத்தின் நிறுவனர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா அவர்களே கவிஞருக்குஇக்பாலையும் உமர் கையாமையும் ஜலாலுத்தீன் ரூமியையும் அறிமுகப்படுத்தியவர்.
ஆளை ஆள் இருட்டடிப்புச் செய்யும் இலக்கிய உலகத்தில் ஒரு கவிஞனை ஞாபகப்படுத்தி, மலர் வெளியிட்டுக் கூட்டம் நடத்திக் கெளரவிப்பது அதனைச் செயல்படுத்துவோருக்கு உயர்ந்த உள்ளம் இருப்பதைக் காட்டுகிறது.
ஞாபகப் படுத்திப் பேசுமளவு ஒரு கவிஞர் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார் என்றால் சமுதாயத்தில் அவரது செயற்பாடுகள் மகிமை மிக்கவை என்பதன்றி வேறு என்ன?
u i gj5 JH

கவிமணி எம்.சி.எம்.ஸ்பைர்
பசியெனும் நெருப்பே பரந்த இவ்வுலகை பாழ்நர காக்குதடா - அந்தப் பாழும் நெருப்பை அணைக்கும் பணியே UTrf60) (5ф606)ш т
உறவைத்தின்று உயிரை வளர்க்கும் உணர்ச்சி பெருகுதடா - பெரும் வறுமை யதற்கு வழியாயிருந்து வஞ்சம் புரியுதடா
பொருளுள் ளோர்தம் உள்ளந் தனிலே பூட்டு விழுந்ததடா - அதனுள் அருளும் கருணை அடங்கிக் கொண்டு -9(ԱՉ5) Ա9ՈԱյՓԿ-Ո
செல்வம் சிலரிடம் மலையாய்க்குவிந்து செருக்கை வளர்க்குதடா - அதனால் பள்ளம் விழுந்து பலரின் வாழ்வு பசியில் வதங்குதடா
பசியில் லாத வயிற்றை இறைவன் படைத்து வைத்தானா - அன்றேல்
Uணமில்லாது சுகமாய் வாழும் வழியை வைத்தானா
( காலத்தின் குரல்கள் கவிதை நூலிலிருந்து )
15

Page 10
g
女
சி.சிவசேகரம்
வலப்புறம் சூரியன் ஒளிர்கிறது இடப்புறம் உள்ள கடல்மீதென் முழுநிழலினையே எறிகிறது கடற்கரை மணலென் காலடிச்சுவடு
பலப்பல கொண்டே திகழ்கிறது
2
இடப்புறம் சூரியன் ஒளிர்கிறது
வலப்புறம் உள்ள கடல்மீதென்
முழுநிழலினையே எறிகிறது
கடற்கரை மணலென் காலடிச் சுவடு
பலப்பல கொண்டே திகழ்கிறது
3
பின்புறம் சூரியன் ஒளிர்கிறது
முன்புறம் உள்ள கடல்மீதென்
முழுநிழலினையே எறிகிறது
வேண்டாம் கடலே மணல்மீதென்
காலடிச் சுவட்டை அழியாதே!
4 முன்புறம் சூரியன் ஒளிர்கிறது பின்புறம் உள்ள கடல்மீதென் முழுநிழல் சூரியா எறிந்தாயா ஆ, என் காலடிச் சுவடுகளை
கடற்பெருக் கழித்தோ வெகுநேரம்!
- Gோ மோ ஜோ (Guo Mojo) வின் சீனக் கவிதையின் ஆங்கில மொழியூடான மொழிபெயர்ப்பு -
16,
 
 

தமிழ்த் தாயின் இளைய புதல்வி புதுக்கவிதை.இஸ்லாமிய என்ற அடைமொழி இதனிலும் சேர்க்கப்பட வேண்டுமா என்பதை விமர்சகர்கள்தாம் இனி முடிவு செய்யவேண்டும்.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தை நாம் அவதானித்தால் சங்க காலத்தின் பின் அதில் மதங்களினதும் அவற்றோடு சார்ந்த அறநெறிக் கருத்துக்களினதும் செல் வாக் கைக் காணலாம். ஆரம்ப கால இஸ்லாமிய இலக்கியங்களிலும் இத்தன்மையை நாம் காண்கிறோம்.
இஸ்லாமிய இலக்கியத்தில் மெய்ஞ்ஞானச் செய்யுட்கள், பல மதங்களைக் கொண்ட தமிழ் மக்களது பொதுவான சுவை உணர்வுகளுக்கேற்ப நெகிழ்ந்து கொடுத்தன.ஏனெனில் மத பேதம் காட்டும் புறக்கிரியைகளை விஞ்சி மெய்ஞ்ஞான தத்துவ இலக்கினது குவியத்தில் அச்செய்யுள்களினது நோக்குகள் இணைந்திருந்தன.
ஏனைய பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரை இத்தகைய பொது நுகர்வுக்கு வாய்ப்பு இருக்கவில்லை. எனவே சைவ இலக்கியம். இஸ்லாமிய இலக்கியம் என்ற சமாந்தரங்கள் தமிழ் இலக்கியப் பாட்டையில் தவிர்க்க முடியாதிருந்தன. முஸ்லிம் புலவர்களது நீண்ட காலச் செய்யுள் ஆக்க மரபின் காரணமாக மஸ்அலா, படைப்போர், நாமா, முனாஜாத், கிஸ்ஸா போன்ற தனித்துவமான புதிய வடிவங்கள் உருவானதையும் நாம் இலக்கிய வரலாற்றில் காண்கிறோம்.
நவீன ஆக்க இலக்கியம் பக்தி மார்க்கத்தைத் துறந்து சமூகப் பார்வை, யதார்த்தம் போன்ற பண்புகளை ஏற்றுச் செல்கின்றமையாலும் அரபுத் தமிழின் தேவையில் தங்கியிராமல் தமிழ் லிபியில் வெளிவருவதனாலும் தமிழ் இலக்கியம் என்ற பொதுமையில் அவை சங்கமித்து வருகின்றன.
安

Page 11
பக்தி இலக்கியத்தில் இறையியல் தத்து வங்கள் நேரடியாக அவற்றின் கருப் பொருளாயிற்று. நவீன ஆக்க இலக்கி யங்களோ அத்தகைய இறையியல் தத்துவங்களின் சமூகப் பெறுமானங் களைக் கருப் பொருளாய்க் கொண்டுள் ளதனை அவதானிக்கிறோம். இதனால் பரந்து பட்ட மானுடம் என்ற தளத்தில் இலக்கியங்கள் சந்திக்கின்ற தன்மை யினையும் காண்கிறோம்.
எனினும் ஒவ்வோர் இனத்துக்கும் மதம் மாத்திரமன்றி மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் என்பன தனித்துவச் சிறப்பை அளிப்பதனால் அத்தகைய தனித்துவ வாசனை தவிர்க்க முடியாதது.
புதுக்கவிதையின் உள்ளடக்கம்
மேற்காட்டிய தோற்றுவாயின் தளத்தில் தமிழ்த் தாயின் புதுக் கொழுந்தாகத் துளிர்த்துள்ள புதுக் கவிதையை அவதானிப்போம்.
காலமும் இடமும் போட்டி போடுகின்ற நவீன விஞ்ஞான, இயந்திர யுகத்துக்கு ஈடு கொடுக்கின்ற விதத்தில் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்ட வடிவம் என்பதனால் பக்தி மார்க்கத்தைப் புதுக் கவிதை உள்ளடக்கமாகக் கொள்வதற் கான வாய்ப்புகள் குறைவு. புது யுகத் தின் தேவைகளான மனிதாபிமானம், சர்வதேசியம் என்பனவே அதன் கருப் பொருளாக வேண்டும்.
புதுக்கவிதை தமிழ்நாட்டில் தோற்றம் பெற்ற 1940 முதல் அல்லாது விடினும் அதனை அண்மிய காலந்தொட்டு முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்புச் சுவடுகளைப் புதுக்கவிதா நதியின் கரைதோறும் காண்கிறோம். ஆனால் அவை பொதுக் கவிதைகளாகவே
。 f多女#3
இருந்தன. ஆரம்ப கால (எழுத்துப் பண்ணையின்) புதுக்கவிதைகள் அகவய நோக்குக் கொண்டிருந்தமையால் அதன் போக்கில் மெய்ஞ்ஞானக் கவிதைகளை நம்மவர்கள் யாத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவர்கள் தயாராகுமுன்பே * வானம் பாடிகளின் முயற்சியினால் புதுக் கவிதைகள் நவநவமான பரிமாணங்களைப் பெறலாயிற்று. சாதி, இன, மத பேதங்களைக் கடந்த பொதுமைக் கணி ணோட்டத்தில் புதுக்கவிதை பயணம் செய்ததனால் இன, மத, பிரதேச ரீதியான தனித்துவ வாசனையை அப்போது இனங்காண முடியவில்லை.
வானம்பாடிக் கவிதைகளுள் பெரும்பா லானவை கருத்து நிலையில்(ரொமாண் டிக்) புனைவியல் படிமத்தை உத்தி யாகக் கொண்டிருந்தன. ‘நெம்பு கோலால் உலகைப் புரட்டும் அளவுக்குச் சிலரது கவிதைகள் நடப்பியலை (Realism) விட்டுப் பிறழ்ந்து சென்றன.
புதுக்கவிதையில் பயிலப்படும் உத்தி களுள் படிமம் (Image) மிக முக்கி யமானது. மரபுக் கவிதைகளில் பயிலப் படும் உவமை, உருவகம் என்பவற்றை இது ஒப்பினும் இவற்றின் பரிமாணத்தை விடப் படிமம் தொட்டுச் செல்கின்ற பரிணாமம் புதுப் புது ரச லாவண்யங் களை நோக்கி விகCத்து நிற்கிறது. எனவே கருத்து நிலையிலும் பிரயோக நிலையிலும் இது வெவ்வேறு பெயர் களில் இனங்காட்டப்படுகின்றது.
பிரயோக நிலையில் உதிரிப் படிமம், பூசல் அல்லது முரண்படிமம், வார்ப்புப் படிமம் எனவும் கருத்து நிலையில் ரொமாண்டிக்படிமம்,மரபியற் படிமம்,மிகை யதார்த்தப்படிமம், புராணவியற்படிமம், காணிபல் படிமம் எனவும் வகைப் படுத்தப்படுவதுண்டு. இவை அறுதி யான முடிவுகளல்ல; விமர்சனப் பார் வைக்குத்
ܢܫܬܐ
தட்டுப்படும் வகையறாக்கள். (18)

ஒட்டமாவடி இஸ்மாயில்
உதயத்தில் ഷ്ട്രങ്ങേന്ദ്രb கம்பனிகளுக்கும் அரச அலுவலகங்களுக்கும் ஊழியர்கள்
ஆமைபோல்
மதியபோசனம் உண்ட LDuJö5ğgölü அலுவலக மேசையில் கும்பகர்ணன்போல்
கடமை முடியுமுன்னரே அவர்கள் வீட்டுக்கு விரைய வேங்கைகள்போல்
காரியாலய ஜன்னல்கள் திறந்திருக்க மின்விளக்கெரிய மின் விசிறி சுழல சிற்றுாழியர்கள் பேருந்துத் தரிப்பிடத்தில்
ஆனாலும் ஊதிய உயர்வும் அலவன்சும் கோரி அடிக்கடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
புராணவியல், மரபியற் படிமங்கள்
புதுக்கவிதையில் முஸ்லிம் படைப்பாளி களது தனித்துவ அம்சங்களை இனங்
காணப் புராணவியற் படிமமும் மரபியற்
படிமமும் பெரிதும் உதவுகின்றன. புரா ணம் பலபோது வரலாற்றோடு தொடர் புறுவதால் இதனை வரலாற்றுப் படிமம் எனவும் வழங்குவர்.
தமிழ்ப் புதுக்கவிதையுலகில் சாதனை கள் படைத்த ஆரம்ப கால முஸ்லிம் கவிஞர்கனான அப்துல் ரகுமான், அபி, மு.மேத்தா, இன்குலாப் போன்றோரது கவிதைகளில் இஸ்லாமியப் புராணவியல்,
மரபியல் படிமப் பிரயோகத்தினைக்
காணி பது அருமை. இதற் குக் காரணமென்ன? பரந்துபட்ட தமிழ் வாச
கர்களுக்கு அப்படிமங்கள் புரியாமற்
போகுமோ என்று அஞ்சியிருக்கலாம். அல்லது இத்தகைய படிமங்களைப் பிரயோகிக்குமளவுக்கு அவர்களது நினைவூற்றில் சலனம் ஏற்படாதிருக் கலாம். ஆனால் கவிக்கோ அப்துல் ரகுமான் சில இஸ்லாமிய சஞ்சிகைகளில் எழுதியிருந்த கவிதைகள் சிலவற்றில் மரபியற் படிமங்கள் விரவியிருந்தன.
இலங்கைப் புதுக் கவிஞர்கள் இஸ்லா மியப் புராணவியல், மரபியல் படிமங்களை 1960களின் இறுதியிலேயே பிரயோகிக்க
ஆரம்பித்தனர் என்பதை இங்கு குறிப்பிட
வேண்டும்.
"ஆத்துமமோ மையித்தாய் அடங்கி நெடுங்காலம்
உள்ளம் இடிந்த கபுர்
உருமாறிப் போன மனம்
அவனிப்போ
செத்துவிட்ட சிந்தனையின் சந்தாக்கு’
-பண்ணாமத்துக் கவிராயர் (இன்ஸான்.1967)
19) むfr安grr3

Page 12
இங்கு மரபியற் படிமங்கள் பொருத்த மாகப் பிரயோகிக் கப்பட்டுள்ளன. இன்னுமோர் அம்சம் கவனத்திற் கொள்ள வேண்டும். வெறும் அரபுச் சொற்களை அல்லது குழுஉக்குறிகளைக் கலந்து விடுவதால் மாத்திரம் மரபியற் படிமம் சித்தி பெறமுடியாது. மேற்காட்டிய கவிதையில் மையித்து, கபுர், சந்தாக்கு போன்ற சொற்கள் உணர்ச்சி பூர்வமான மரபியற் படிமங்களாக விழுந்து பரதேசி ஒருவனின் பரிதாபத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
பாரம்பரியத்திலே காலூன்றி, வரலாற்று விழுமியங்களினுடாகப் பிரச்சினைகளை நோக்கும் ஆற்றல் கைவரப் பெற்ற கவிஞர்களின் கவிதைகளில் இத்தகைய படிமப் பிரயோகங்களை நாம் நிறையக் காண முடியும்.
இலங்கைக் கவிஞர்களைப் பொறுத்த வரை அவர்களது அனுபவத் தளங்கள் விரிவானபோது குறிப்பாக அரசியல் மயப்பட்ட கட்டங்களில்- தனித்துவமான படிமங்கள் மூலம் அவற்றைப் பிரதிபலிக்க முற்பட்டுள்ளனர்.
படிமப் பிரயோகத்தில் அனுபவத் தளங்களின் தாக்கம்
1960களின் இறுதிப் பகுதியில் பலஸ் தீனத்தில் ஸியோனிஸ பயங்கரவாதத் 'தினால் விளைந்த அரபிகளின் பரிதாப நிலை, ஏகாதிபத்திய, நவகாலனித்துவ, ஸியோனிஸ எதிர்ப்புணர்வைக் கிளறி விட்டது. தேசிய உள் தளத்தில் சமூக அசமத்துவம் காரணமாகக் கொந்தளித்த சீதனப் பிரச்சினை, சுரண்டல் என்பவற் றோடு சமய ஆஷா டபூதித்தனம் என்பவற்றை எதிர்த்த போக்கும் இக் கால கட்டத்தில் காணப்பட்டது. இத்தகைய சமய, சமூக, அரசியல், பொருளாதார அம் சங்கள் புதுக் கவிதையின்
(20.
பாடற் பொருளானபோது அவற்றில் இஸ்லாமியப் புராணவியல், மரபியற் படிமங்கள் உத்திகளாய் அமைந்து உணர்ச்சியூட்டின.
‘ஹஜ்ஜாஜிக் கிரிடமுடன் மத்திச்சக் கோல் பிடித்துப் பள்ளித் தர்பாரில் கொடுங்கோன்மை நடத்தும் கோமான்கள் சமுதாய நீதிக்குத் தல்கின் ஒதி மண்ணள்ளிப் போடுகையில்.’
-எம்.எச்.எம்.ஷம்ஸ் (தினகரன்-1975)
ஒன்றினது அழிவைச் சுட்டும் தமிழ் மரபுச் சொல் ‘சாவு மணி அடித்தல் என்பது. மேலே கவிதையில் இக்கருத்தை உணர்த்தும் சொல் தல்கின் என்பதாகும். இறந்த ஒருவரை அடக்கம் செய்தபின் மண்ணள்ளிப் போடுவதும் ‘தல்கின்’ ஒதுவதும் மரபு. பள்ளி நம்பிக்கையாளரை இலங்கையில் ‘மத்திச்சமி என வழங்குவர். கிராமப் புறங்கனில் மன்னர்களாக நடப்புக் காட்டுவோரின் கிரீடமும் செங்கோலும் மரபியற் படிமமாக கவியாக்கம் பெற்றுள்ளன.
இதே போல் சமூக ஏற்றத் தாழ்வைச் சாட வந்த பண்ணாமத்துக் கவிராயர் (பாரூக்) நல்லதோர் புராணவியற் படிமத்தைக் கையாள்கிறார்.
குதும் திருட்டும் சுரண்டலுமாய் வாழ்வோர் ஆது மகன் ஸத்தாதின் சுவர்க்கத்தில் நுழைந்திட்டார்’
-ஏழையின் ஈமான் (தினகரன்-1975)

ஹத் நபி (அலை) காலத்தில் அவரது போதனைகளைப் புறக்கணித்து இறை வனுக்கே சவால் விட்டு சர்வாலங்காரங் களுடன் சுவர்க்கமொன்றைக் கட்டுவித் தானாம் ஸத்தாத். இறைவனை மறந்த செல்வச் செருக்குக்கு நல்லதொரு படிமம் ஸத்தாத்.
ஜாஹில் கால வரலாற்று நாடகத்தின் இன்றைய கதாநாயகன்
பெண்மையின் கண்களைப் பிடுங்கி எடுத்தான் இதோ. கண்ணாங் கொத்திகளுக்காய் கத்தம் தயாராகிறது.
(ஷம்ஸ்)
பெண்ணுக்குக் கண்ணாக அமைவது அறிவு. அதனைப் பெறத் தடைவிதிப்பவர் யார்? ஜாஹில் (அறியாமை) கால வரலாற்று நாடகத்தின் இன்றைய கதா நாயகன் அல்லவா? 'கத்தம் இறந்த
பின் நடத்தப்படும் (திவச) சடங்காகும்.
இறப்புச் சடங்கு தயார் என்ற எச்சரிக் கையே இங்கு உணர்த்தப்படுகிறது.
மெய்ஞ்ஞானிகளின் பேரில் சமுதாயத் தில் உருவாக்கப்பட்டுள்ள சடங்காதி களைச் சாட முனைந்து குதுபு நாயகம் அவர்களை விளித்த பாங்கில் எழுதப் பட்டதே பின்வரும் கவிதை:
“உங்கள் பெயரில தினை ஹயாத்தாக்கி சமுதாய சுப்பராவில் பூசி விட்டார் எச்சில்களை’
-புறாத் நதியின் புதையல் (தினகரன்-1977)
21 دلور
குதுப் நாயகம் தீனை (மார்க்கத்தை) ஹயாத் ஆக்கியவர்கள். ஆனால் அவரது பெயரில் சமுதாயம் அழுக் காக் கப்படுகிறது. தீனினால் சுப்ரா (விரிப்பு) அழுக்காவது போல் சுப்பரா என்ற மரபியல் படிமம் சமுதாய அவலத்தைச் சுட்டி
நிற்கிறது.
சர்வதேச பயங்கரவாதம், ஆதிக்க வெறி என்பனவற்றுக்கு தஜ்ஜால் நல்லதொரு படிமம். அதே போல அதர்மத்தை உணர்த்தும் புராணவியற் படிமம் அபூஜஹில். அநீதியின், கொடுமையின் மொத்த உருவாக நபி (ஸல்) அவர்களுக்கு இடையூறு விளைவித்தவன் அவன். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்பவற்றுக்கு எதிராக நிற்கும் அதிகார வர்க்கத்தைச் சாடி எழுதப்பட்ட கவிதைகளில் இந்தப் படிமத்தை நாம் காணலாம்.
'அபு ஜஹீல்களே. சமுக நிதியை அழித்தொழிக்க உங்கள் கூரிய நகங்களை விரித்து விட்டீர்கள் இதோ யுத்த முரசு முழங்குகிறது ஆமாம். மீண்டுமொரு கர்பலா
-சபதம் (தினகரன்-1975)
இழப்பதற்கில்லா முஸ்லிமான்கள் நாங்கள் அபூதர்ராய் நின்று அபூ ஜஹிலை ஒழிப்பதற்காய் உமருக்குத் தோள் கொடுப்போமி
-உமர்கள் வந்தால் (அல் அக்ஸா ஆண்டுமலர்-1980)
மூன்றாம் கலிபா உஸ்மான் (ரலி) காலத்தில் சமூக அசமத்துவத்துக் கெதிராகப் போர்க் கொடி தூக்கி
') ? ? ? ? 3

Page 13
இஸ். b: Jo
சமாதானம் பிறக்கும் இரண்டாயிரத்திலும் இந்த சப்தம் இருக்கும்
நடக்கின்ற பாதையிலே என் கால்கள் இடறும் பிணங்களில் பட்டு
தோண்டப்பட்ட குழிகளில் மீண்டும் மீண்டும் தேடுதல் தொடரும்
மண்டையோடுகள் மறைவாக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்படும்
தீராத யுத்தத்தில் தீர்க்கப்படும் உயிர்கள் நிஜங்களைக் கொன்று நிழல்களை வெளிச்சம் காட்டும்
எனினும் சமாதானம் என்ற சப்தம் இருக்கும்
படிமங்களின் பிரயோகமாகும்.
ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பிய நபித் தோழரே அபூதர்ருல் கிபாரி (ரலி) அவர்கள். இந்த வரலாற்று நாயகர்களது தேவை இக்கவிதையில் படிமங்களாக உணர்த்தப்படுகிறது.
எண்பதுகளில் ஏற்பட்ட உத்வேகம்
இலங்கையில் 1980 பிறக்கும்போதே வரலாறு காணாத கோர வடிவில் இனப் பூசலும் பயங்கரமாகத் தோற்றம் பெற்றது. பேரினவாதம் எங்கே தம்மை அழித்து விடுமோ என்ற பீதி சிறுபான் மையினருக்கு. எதிர்காலம் பற்றிய ஏக்கம், உரிமைகள் பற்றி உள்ளுக்குள் உறுத்தல. இந்த இதய வெளிப் பாடுகளின் அறுவடைகளாக விளைந்தவை சிறு சஞ்சிகைகள். ரோணியோ வடிவில் காளான்களாக முழு இலங்கையிலும் இவை வெளி வந்தன.கூழாங்கற்களாகச் சிதறிக் கிடந்த கவிதைகளில் இரத்தினங்களும் இருந்தன.
வடக்கு கிழக்கில் வன்முறைப் போராட்
டம் ராணுவக் கெடுபிடிகள், இன
முரண்பாடுகள்- இப்படி அபஸ்வரமாக இருந்த சமூக உறவுகள் காரணமாக எழுந்த சிருஷ்டிகளுள் பெரும்பாலானவை இன உணர்வுக் கவிதைகளே.
முஸ்லிம் கவிஞர்களைப் பொறுத்த மட்டில் பலஸ்தீனப் போராட்டம், ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி, ஆப்கன் முஜாஹிதீன் போராளிகள் பற்றிய வீரதீரச் செய்திகள் போன்றவை இவர்களது கவியுணர்வுக் கு உத வேக மூட்டின.இக்காலக் கவிதைகள் பெரிதும் வரட்டுக் கோஷங்களாக அமைந்த போதும் பல சிறந்த கவிதைகளும் தேறின. இக் கவிதைகளில் காணப்படுபவை இஸ்லாமிய புராணவியல், மரபியற்
ܢܫܬܗ

குறிப்பாகத் தூது, எழுச்சிக் குரல், அல்
ஹஸனாத்,பாமிஸ், அஷஷரா போன்ற
பருவ வெளியீடுகளில் இத்தகைய கவிதைகள் நிறைய இடம் பெற்றன.
‘இன்றைய பாத்திமாக்கள் ஹவுஸ் மேட்களாக அலியாரின் மைந்தர்களோ எஸ்துகளுக்குக் கொடி தூக்குகின்றனர் இன்றைய ஸஹாபிகள் வாள் பிடிக்கும் கைகளில் மிஸ்வாக் ஏந்தி துஆ முணுமுணுப்புடன் ஹிஜ்ரத் பயில்கின்றனர்.”
-எம்.எச்.எம்.ஷம்ஸ் (மாளுடம் பூத்தது-1985)
இங்கு பாத்திமா, அலியாரின் மைந்தர், எஸிது, ஸஹாபி, ஹிஜ்ரத் போன்ற வர லாறு சார்ந்த பிரயோகங்கள் படிமங்க ளாக அமைய சமூகச் சீரழிவு அங்கதச் சுவையுடன் எடுத்துக் காட்டப்படுகிறது.
படிமம், குறியீட்டு உத்திகளைச் சிறப் பாகப் பிரயோகிக்கும் ஏ.ஆர்.ஏ.ஹஸரின் எண்பதுக்குப் பிந்திய கவிதைகளில் இஸ்லாமிய மரபியற் படிமங்களைக் 35sT600T6 ort Lib.
'நீங்கள் ஹருல் ஈன்களுக்காய் காத்திருங்கள் நாங்கள் ஊருணிகளாயப் உப்பு நீர் சுரக்கிறோம் பர்தாக்களோடு பாதையில் கிடக்கிறோம்.'
(தினகரன்-1980)
சீதனக்கொடுமை இங்கு கவிப்பொருளா கியுள்ளது.1980 களின் பின் காட்டாற்று
ار
வெள்ளமாகப் பீறிட்ட கவிதைகளில் கர்பலா, ஹ"ஸைன், எஸிது போன்ற பிரயோகங்கள் நிறைய இடம்பெற்றன. இதோ ஒரு வித்தியாசமான படிமம்:-
பெருக்கெடுத்தோடும் இந்த இரத்த ஸம்ஸம்மை மறித்துக் கட்ட எங்கே நம் ஹாஜறாக்கள்?
-இம்தா உவைஸ்
இதில் பிரயோகிக்கப்பட்டுள்ள படிமம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்றாஹீம் நபி (அலை) கால வரலாற் றோடு தொடர்புடையது. ஹாஜறா அம்மையார் மகனுக்காக நீர் தேடிப் பாரான் வனத்தில் ஓடிக்களைத்த நெரம். பாலை பிளந்து பைம்புனல் பிரவகித்த தென்பது சரிதை. போதும் போதும் (ஸம் ஸம்) என்று அவர் மறித்தாராம். இன்று இரத்தம்தான் அப்படிப் பொங்கு கிறது. இதனைத் தடுக்க ஹாஜறாக்கள் வேண்டும் என்ற அங்கலாய்ப்பு கவிஞருக்கு.
இஸ்லாமிய வரலாற்று மரபியற் படிமங் களை அநாயாசமாகப் பிரயோகிக்கும் கவிஞர் என்.ஏ.தீரனின் கவிதையொன்று.
‘எங்கள் அபாபீல்கள் இப்போதுதான் தம் சொண்டுகளைக் கூராக்கவும் இறக்கைகளை வலிமைப்படுத்தவும் கிழக்கு நோக்கிப் பறக்கின்றன.
(தூது-14, 1988)
குர்ஆனில் கூறப்படும் சம்பவமொன்று இங்கு படிமமாகின்றது. நபி (ஸல்) பிறப்பதற்கு முன் ஆப்ரஹா என்ற மன்னன், இறையில்லமாம் க.பாவை இடித்துத் தள்ள யானைப் படையுடன் வந்தான்.
›› : ;‛፧ *ቿ rr r፦ 2 f夢女f3

Page 14
இறைவன் சிறிய பறவைகளை அனுப்ப, அவை சின்னஞ் சிறிய கற்களை எறிய யானைப்படை மெல்லப்பட்ட வைக்கோல் போல் அழிந்ததென்பது வரலாறு.
கிழக்கு வாழ் முஸ்லிம்கள் சின்னஞ்சிறு அபாபீல் பறவைகள் போன்று சிறுபான் மையாக இருப்பினும் சொண்டுகளைக் கூராக்கி,இறக்கைகளை வலிமைப் படுத் திக் கல்லெறியத் தயாராவதாகக் கவிஞர் கட்டியம் கூறுகிறார்.
இலங்கையில் அஸிஸ் நிஸாருத்தீன், ஸெய்னுல்ஏ.நியாஸ்.நஜ்முல்ஹ"ஸைன், அலவி ஷரிப்தீன் போன்றோரும் இப்படி மங்களைப் பிரயோகிக்கின்றனர்.
வானம்பாடிகளைப் பிரதிபண்ணிப் புதுக் கவிஞர்களாக முனைந்த படைப்பாளர்கள் வசந்தம்,சொப்பனம்,ராத்ரி, ராகங் கள், படகுகள்,முகவரி என்றெல்லாம் புதுக்கவிதைக்குச் சொல் சேர்த்தது போல 1985களின்பின் முஸ்லிம் கவிஞர் படை ஜாஹிலிய்யத், ஷைத்தானியத், ஈமானியம், அபூஜஹரீல் போன்ற சொற்களை எழுந்தமானமாகப் பிரயோகித்து ஜிஹாத் செய்ய முற்படும் பாங்கு தென்படுகிறது.
வெறும் அறபுச் சொற்களை அள்ளித் தெளிப்பதால் தனித்துவமான இஸ்லாமிய புராணவியற் படிமங்களைப் பிரயோகித்து விட்டதாக இவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. O
(1990 டிஸம்பர் 30ல் கீழக்கரை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 5ம் மாநாட்டில் வாசிக்கப்பட்டது. நன்றி கருத்தரங்கக் கோவை)
குறிப்பு
1990கள் வரையான பார்வை இது. இத்தலைப்பில் இன்று வரையான பார்வை குறித்த கட்டுரை வரவேற்கப் படுகிறது.
நாச்சியாதீவு பள்வன்
எனக்கு அந்நியமாய்ப் போய்விட்டது சிரட்டை மண் வைத்து சிறு வயதில் நான் விளையாடிய
என் ஊள்
என் தந்தையுடலை இதோ இந்தச் சந்தியில்தான் துப்பாக்கி ரவைகள் ருசி பார்த்தன
குண்டு மாரியில் என் குடும்பம் அழிந்து போனது அதோ அந்த ஆலமரத்தின் கீழ்த்தான்
இந்த ஊருக்கு நான் பழையவன்தான் முகவரி மட்டும் முற்றாக மாறி விட்டது அகதி என்று
 

て一 V Ju i t (ངོ་ །
சந்தியா குமாரி லியனகே
வகுUப7ல் கொடுத்த கட்டுரையை 67G475%ö7/7///7 676ö7áő 65 é5ő 67C//7Gegy gov/762////7(of பயம் ந?றைந்த வழிக7ே7ரு மென7ன72/7ம் 67ழுந்து ந7ர்கும் ச7ந்தன?
வட்மன் வைத்து எழுத? வருமாறு நேற்றுக் கொருத்த கட்டுரையை 67ழுத? வட்டதாகத் தெ7வ%க்க கைகஎை7 உயர்த்தத் தைரியத்துடனர் இனறு ச7%த்து ந%ற்கும் சாந்தன?
ഗ്രഗു ഖുശ്രീഗ്ഗമേ ஆசிசர்யத்துடனர் ப7ர்க்கிறது அவஎை7
வ%டயங்களர் தொ?யாததாலி வேறு நாட்கள7%ன் பு/எ7எ7%களர் க%டைUபது குறைவு அவளுக்கு
வேறு நாட்கள7%ன் அத?கU பு/எர்எ7%களை7U பெறும் (a/76aye/a87f இனறு ந” எழுத? வந்த பட்ழன? கட்டுரைய?ன முனர் தோர்றே பே/7/?ன77
சிங்களத்திலிருந்து தமிழில்: இப்னு அஸ்மத்

Page 15
.rم.#م ;م ;ޗާ : ; ; :) ? : [ '3
மசூதியிலிருந்தோர் தொழுகையின் அழைப்பு என் நெஞ்சப் புதைவிலே7ர் இன் துளிக் கிளர்வு! - ஆனால் நான் முஸ்லிம் அல்ல.
சிலுவை ஏந்திய தேவாலயத்தினுள் ஆமென் எனவெழுந்த ஆழ நெஞ்சொலிப்பில் ஓர் ஒளிப்பருக்கை என்னுள் இறங்கும்! ஆனால் நான் கிறிஸ்தவன் அல்ல.
 

தெருவோரம் அமர்ந்த தியானப் புத்தரின் விழிகளின் கவிப்பில் உள்ளுயிர் சிலிர்க்கும்/ ஆனால் நான் பெளத்தன் அல்ல.
தேவாரப் பொழிவோடு தேரிருந்துரும் சுவாமி ஒளிர்வில்
இறுகிய என்மனக் கட்டவிழ்ந்திளகும்! ஆனால் நான் இந்து அல்ல.
நான்கு வீதிகள் கலக்கும் சந்தி
கால் மார்க்ஸ் நிற்கிறார், கற்சிலையாக! புரட்சி சுலோகம்,என்னுடல் அதிரும்! ஆனால் நான் மார்க்ஸிஸ்ட் அல்ல.
இடமும் வலமும் பூட்டிய விலங்கொடு எலும்புக் கூடொன்று எண்முன் எதிர்ப்படும்
நீயார் என்றேன்
மனிதம் என்றது! என்றது சொல்லி என் தோள் சாயும் என்னுடல் - ஆத்மா எரிகல் போன்று கருகி அணைந்தது ஆனால் நான் மனிதனே அல்ல!
எனக்குள் ஓர் புதுக்குரல் எழு என ஒலிக்கும்
மெல்ல விழிக்கிறேன்
இப்போஇடம் வலம் குறிகள் சுழுமுனை ஈர்ப்பில் புது வழிஅழைக்கும்.
(27)

Page 16
。な参gro3
uTg5 JIT இதுபேனாவால் செய்யும் ஹஜ் யாத்திரை கற்பனை மலைகளில் ஏறிச் செல்லும் இது ஒரு சிறிபாத யாத்திரை பேனாவின் முடியிறக்கிச் செய்யும் இது ஒரு திருப்பதியாத்திரை
இது சுயநல யாத்திரையல்ல பிறர் நல யாத்திரை
பொதுவாக யாத்திரைகளெல்லாம் காலால் நடந்து செய்பவை இது கையால் நடந்து செய்யும் யாத்திரை
நாம் மட்டுமல்ல யாத்திரிகள்கள் இந்த மேகங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றன அலைகள் எங்கே அலைந்து கொண்டிருக்கின்றன காற்று எங்கே விரைந்து கொண்டிருக்கிறது காலம் எங்கே கழிந்து மறைகிறது எல்லாமே யாத்திரைதான் செல்கின்றன
வாகனமானால் வீதியில் செல்லமுடிகிறது கப்பலானால் நீரில் செல்ல முடிகிறது விமானமானால் ஆகாயத்தில் செல்ல முடிகிறது ஆனால்
பேனாவால்மட்டும்தான் மனித மனசுக்குள்ளேயே பயணிக்க முடிகிறது
\`ܘܪܵܐ ܇.̄ (28
 

ULU
G
s
ඩී.
யாத்திரைகளிலெல்லாம் சிறந்த யாத்திரை இந்தப் பேனா யாத்திரைதான்
இது ஒரு தவம்
ஒற்றைக் கால் தவம் பாதம் தேய்ந்து பாதைகளிலெல்லாம் இரத்தம் சொட்ட ஒற்றைக் காலிலேயேநடக்கும் தவம்
பேனா ஒரு வாய் சிலருக்கு வருவாய்
உண்மையில் எனக்குப்பிடித்த நா பேனாதான் அது சப்தமிட்டு யாரைத் தொந்தரவு செய்திருக்கிறது
வீண் பேச்சுப் பேசாதது பேனா அதுதான்பேசிமுடிய வாய்க்கு முடியிட்டுக்கொள்கிறது படித்தவர்களின் பிரதான வாய் பேனா வாய்தான்
உலக மொழிகளுள் பேனாவுக்குத் தெரியாத மொழியேதும் உண்டா பேனாவின் பேச்சு கட்டுரை பேனாவின் பாடல் கவிதை பேனாவின் சிரிப்பு பாடல்
பணமே சகலதும் என்றாகிப்போன உலகில் பணத்தை விடப்பெறுமதியானது பேனா ஒன்றுதான் மனிதன் பணத்தை பர்ஸில் வைத்து பின்பக்கம் வைத்துக்கொள்கிறான் பேனா ஒன்றைத்தான் நெஞ்சுக்குநேரே முன்பக்கம் வைத்துக் கொள்கிறான்

Page 17
f
步
ff
* جميع
படைப்பாளி எப்போதுமே தனது சூழலிலிருந்தே கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறான்.வாழ்க்கை என்பது
வற்றாத
ஒரு களஞ்சியம். தீட்சண்யமான பார்வையும்
அவதானமும் ஒருவனுக்கு இருந்தால் அவனுக்குரிய கருப்பொருள் கிடைத்துக்
கொண்டேயிருக்கும்.” 3.
ノ
V ( பண்ணாமத்தக் கவிராயர்
༈་ཡོད)
m n.mm M.1 سستی
ܢܫܬܐ
 
 
 
 
 

யாத்ரா:கவிதையுடனான உறவு எப்படித் துவங்கியது?
பண்.கவி: இந்தக் கேள்வி மூலம்தான் சிந்திக்க வைக்கிறீர்கள். இதுவரை இது பற்றி நான் யோசித்துப் பார்த்தது கிடை யாது.பாடல்களில் எனக்கு மிகவும் ஈடு பாடிருந்தது. பள்ளி மாணவனாக இருக் கும் போது பாடல்கள் மனதில் உண்டு பண்ணுகிற அதிர்வுகளும் சலனங்களும் அதே போன்று நாமும் எழுதிப் பார்க்க லாமே என்ற ஆர்வத்தை ஏற்படுத்தின. இந்த உந்துதலில் இஸ்லாமியப் பாடல்கள் எழுதத் தொடங்கினேன்.
இப்பாடல்களில் கவித்துவம் இருப்பதாக எனது ஆசிரியர்கள் எனக்குக் கூறியிருக் கிறார்கள். அது எனக்கு உற்சாகத் தைத் தந்தது. இங்குதான் என் கவிதை துவங்குகிறது என்று சொல்லவேண்டும்.
யா: உங்களுக்கு வழி காட்டிய ஆசிரி யர்கள் பற்றி.
பண்:நான் கற்றது மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில். தமிழார்வம் உள்ள பல ஆசிரியர்கள் அங்கு கடமையாற்றினார் கள்.குறிப்பாக சி.சிவப்பிரகாசம்,வி.கதிர வேலு ஆகிய இரு ஆசிரியர்கள். அவர் கள் இப்போது உயிருடன் இல்லை.அத் துடன் எனது இலக்கிய ஈடுபாட்டை நெறிப்படுத்திய ஒருவராகக் கல்லூரியில் கடமையாற்றிய அபூதாலிப் அப்துல் லதீப் அவர்களைக் குறிப்பிடவேண்டும்.
யா: அப்துல் லதீப் அவர்களை நீங்கள் குறிப்பிடும் போது ‘இன்ஸான் ஞாபகம் வருகிறது. அப்பத்திரிகையில் உங்கள் பங்களிப்பு எந்தளவு இருந்தது?
பண்: லதீட்புடன் இன்ஸானை ஆரம்பிப் பதற்கான பூர்வீக ஏற்பாடுகளைச் செய் தது நான் என்றுதான் சொல் ல வேண்டும்.
مہاجر
‘இன்ஸான் என்ற பெயர் அப்பத்திரிகைக்கு வந்ததே ஒரு தனிக்கதை. இந்தப் பெயரில் ஒரு இலக்கியச் சஞ்சிகையை மாத்தளை யிலிருந்து கொண்டு வர வேண்டும் என்று நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். நிரந்தர முகவரி அன்றும் இல்லாத ஒருவனாக நான் இருந்த படியால் ஹரிஸன் ஜோன்ஸ் றோட் இன்று துணை மேயராகவிருக்கும் வை.மஹற்ரூப் அவர் களின் முகவரியிலிருந்து அவருடன் இணைந்து ‘இன்ஸான் என்ற இலக்கியச் சஞ்சிகையைக் கொண்டுவரத் திட்ட Lft' (SLIT b.
அதேவேளை கொழும்பிலிருந்து ஒரு பத்திரிகை வரவிருப்பதாக லத்தீஃப் சொன்னார். அதில் நானும் சேர்ந்து கட்டாயமாகக் கடமையாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது ஆலோசனையின்பேரில் நான் கொழும்பு செல்ல நேர்ந்தது. பிறகு ‘இன்ஸான் என்ற பெயரை அப்பத்திரிகைக்குச் சூட்டினோம்.
யா: உங்கள் முதல் கவிதை?
பண்: அது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதைதான். அப்படித்தான் சொல்ல வேண்டும். நான் ஆங்கில மொழியில் கல்வி கற்றவன்.1954ல் க.பொ.த. சா.த. வகுப்பின் இலக்கியப் பாடத்துக்கான கவிதைத் தொகுதியில் ஹரேந்திரநாத் சட்டோபாத்யாயருடைய கவிதை யொன்று என்னைப் பெரிதும் கவர்ந்தது. அக்கவிதையை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. மொழிபெயர்த்தேன். கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர்தான் ஹரேந்திரநாத்.
யா: நீங்கள் கவிதைகள் படைத்துக் கொண்டிருந்த காலத்தில் மாத்தளையில் கவிதைத் துறையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்?
3) ##3 へごシ

Page 18
பண்: மாத்தளையில் அப்படி யாரும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அவ்வேளை ‘சுதந்திரன்’ மிகப் பிரபல்யமான பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது.ஆரம்பத்தில் இலங்கைக் கவிஞர்களாக நான் மதிக்கத் தொடங்கி யது மஹாகவி,நீலாவணன்,முருகையன் ஆகிய இம்மூவரோடு மற்றொருவரை யும் குறிப்பிட வேண்டும்.அவர்,வி.கி.ராஜ துரை.இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன்.இவர்களது கவிதை கள் ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தன. நாமும் இப்படி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை இவர்களது கவிதைகள் என்னில் ஏற்படுத்தின.
யா:இதன் பிறகான உங்கள் இலக்கிய முயற்சிகள்.?
பண்; பிரக்ஞை பூர்வமாக இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டேன் என்று குறிப் பிடுவது கடினம். பாடசாலைக் காலத்தி லேயே சமதர்மக் கருத்துக்களால் கவ ரப்பட்டவன் நான். அடிநிலை மக்களின் துன்ப துயரங்கள், அவலங்கள் இலக்கி யத்தில் கவனம் பெறவேண்டும் என்ற போக்கில் கவிதையை ஒரு ஊடகமாக சாதனமாகப் பயன்படுத்தி வந்திருக்கி றேன் என்று சொல்ல வேண்டும். நான் ஒரு இலக்கியவாதி என்ற முறையில் இலக்கியம் செய்தேன் என்றோ கவிதை எழுதினேன் என்றோ சொல்லிக் கொள் வதில் அத்தனை சம்மதம் இல்லை. ஏதோ ஒருவகையில் கவனிப்புப் பெற்று விட்டேன். கிடைக்கப் பெற்ற அங்கீகாரத் தைத் தக்க வைத்துக் கொள்ள வேண் டும் என்ற அடிப்படையில்இப்போதைக்கு நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை இதயபூர்வமாக இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
யா:மொழிபெயர்ப்புக் கவிஞர்களில் முன் னணிக் கவிஞர் நீங்கள். மொழிபெயர்ப் புக்கான கவிதையை எப்படித் தேர்ந் தெடுக்கிறீர்கள்? : ), ' '3
(32)
பண்: ஒரு கவிதையில் நேரடிச் செய்தி இருக்குமானால் அது என்னை ஆகர் விக்கிறது. அவ்விதமான கவிதைகளை
யும் ஏற்கனவே குறிப்பிட்டேனே. அடி
நிலை மக்களின் துன்பங்களைச் சொல் லும் கவிதைகளையும் தேர்கிறேன்.
யா: உங்களால் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர்கள்.?
பண்: அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம், ட்பைஸ் அஹற்மத் ஃபைஸ், தெலுங்கானாக் கவிஞர் மஹம்துTம்
முஹிதீன், பாக்கிஸ்தானிய கவிஞர்
இ.ப்திகார் ஆரி..ப் போன்றோரின் கவிதைகளுடன் பலஸ்தீனக் கவிதை களும்.
பலஸ்தீனக் கவிதைகளைப் பொறுத்த வரை இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். பலஸ்தீனக் கவிதைகளை முதலில் மொழி பெயர்த்தவர் எம்.ஏ.நு.மான் அவர்கள். மூன்று கவிதைகள் ஆரம்பத்தில் தின கரனில் வந்ததாக ஞாபகம்.அதைத் தொடாந்து நான் மொழி பெயர்க்கத் துவங்கி விட்டேன். ஏ.இக்பால், ஜவாத் மரிக்கார் போன்றோரும் பலஸ்தீனக் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கி றார்கள். அவை தினகரனில் வெளிவந் தன.எனது கவிதைகள் முதலில் தேசா பிமானி'யில் வெளிவந்து பின்னர் "மல்லிகையிலும் பிரசுரமாயின.
யா: மொழிபெயர்ப்பல்லாத உங்களது ஆரம்பகால கவிதைகள்.?
பண்: அறுபதுகளில் ‘தாரகை” மூலம் தான் நான் ‘பண்ணாமத்துக் கவிராயர்’
என்று அறிமுகமாகினேன். அக்காலப்
பிரிவில் தாரகையில் வாராவாரம் எனது கவிதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந் தன. அக்கவிதைகள் அங்கதச் சுவை நிரம்பியவையாக இனங்காணப்பட்டுப்
ak

(2
அஷ்ரஃப் சிஹாப்தீன்
சிறுகதை நூலை வெளியிட்டு வைத்தார்
தொடர் கதையாளர் தலைமை வகித்தார்
குறுங்கதையாளரும் கூடியிருந்தார்
மணிக் கதையாளர் முன்னால் அமர்ந்தார்
பெருங் கதையாள்ர் விமர்சனம் படித்தார்
நெடுங் கதையாளர்
நன்றியுரைத்தார்
கதை எழுதுபவரைத்தான் காணவே இல்லை
பேசப்பட்டன.மற்றும் செய்தி, தேசாபிமானி இரண்டிலும் கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
யா: உங்களின் படைப்புகளின் பாணி யாரையாவது பின்பற்றியதா?
பண்: கவிதைப் பாணியைப் பொறுத்தள வில் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற ரகுநாதன், மற்றும் ‘எழுத்து கவிஞர்க ளின் பாதிப்பு ஓரளவு என்னில் இருந்தது - உருவ அமைதியைப் பொறுத்தளவில் - என்று சொல்ல வேண்டும். புதுமைப் பித்தனை நான் விரும்பிப் படித்தேன்.
யா:சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்களா..?
பண்: எழுதியிருக்கிறேன். ஒரு சிறுகதை * அலையில் வெளிந்துமிருக்கிறது. ‘அலை ஒரு சிறந்த இலக்கிய இதழாக இருந்தது.
யா: இலங்கையில் சிறந்த கவிஞர்கள் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?
பண்: என்னுடைய காலத்துச் சிறந்த கவிஞர்கள் என்று நான்சொல்வதானால் புரட்சிக் கமாலையும் அப்துல் காதர் லெப்பையையும் குறிப்பிடுவேன். நான் மதித்த கவிஞர்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
யா: கவிதைகள் பிரித்து அலசப்படுதல்
குறித்து..?
பண்: மரபுக்கவிதையென்றோ புதுக்கவி தையென்றோ அலட்டிக் கொண்டது கிடையாது. இசைப் பாடல் எழுதுவதிலி ருந்து கவிதைக்கு வந்ததனால் சந்த லயம்,ஓசையுடன் எனது கவிதைகள் பிறந்தன.
யா: மொழிபெயர்ப்புகளும் அப்படியா?
3-ff;# g frעי

Page 19
பண்: ஆம். காலச்சுவடு கூட மதிப்புரை எழுதுகையில் முழுக்க முழுக்க தமிழ்க் குணம் கொண்ட கவிதைகளாக எனது மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன என்று எழுதியுள்ளது. அத்தோடு சந்தத் துக்குள் இவர் விழுந்திருக்கிறார் என்றும் ஒரு குறிப்பு அதில் வருகிறது.(சிரிப்பு)
யா: உங்களது கவிதை நூல்கள்.
பண்: “காற்றின் மெளனம்’ என்ற எனது
கவிதைத் தொகுதி சில வருடங்களுக்கு
முன்னர் வெளிவந்தது. அத்தனையும்
மொழிபெயர்ப்புக் கவிதைகள். 'சடக்கோ
ளம்’ என்ற எனது சுய கவிதைகள் அடங்கிய தொகுதி வெளிவரப் போவ தாக ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத் தப்பட்டது, நானும் ஈழவாணனும் சொக்கநாதனும் மாத்தளையில் வேக மாகச் செயற்பட்ட காலத்தில். பல்வேறு காரணங்களால் அது வெளிவரவே இல்லை. இன்றைக்கு அதை வெளிக் கொணர்ந்தால் காலவழுவாக இருக் குமோ என்ற சந்தேகம் இருப்பதால் அது அப்படியே இருக்கிறது.
யா: புதிய கவிதை வடிவங்கள் குறித்த தான உங்கள் பார்வை என்ன?
பண்: மரபுக்கவிதையில் சொல்லப்படாத பல விடயங்கள் புதுக் கவிதையில் சொல்லப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். புதுக்கவிதை, மரபுக் கவிதை என்று பிரிப்பதை விட இந்த அடைகளை உதிர்த்துவிட்டுக் கவிதையாக ஒன்று தாக்குப் பிடித்து நிற்க வலுவுள்ளதா இல்லையா என்று பார்ப்பதுதான் நல் லது. கவிதையைப் பொறுத்தவரை இது தான் எனது பார்வையும் அணுகுமுறை யும். இன்று புதிய வீச்சுடன் படைக்கக் கூடிய ஒரு இளைஞர்படை உருவாகி வருகிறது. வரவேற்கவேண்டியது அவ சியம். இந்தக் குழாத்திலிருந்து சிறந்த கவிஞன் ஒருவன் உருவாவான் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 。 7多女存3
34 سمبر
‘கவிதையானது முதன்முதலில் அச்சில்
வரவில்லை. வாய்மொழியாகத்தான் வந்தது. வேறுஊடகங்களுக்குள்
அது போனாலும் கவிதை கவிதையாகவே
இருக்கும்.
யா: "பண்ணாமத்துக் கவிராயர்’ என்ற பெயரை ஏன் சூட்டிக் கொண்டீர்கள்?
பண்: "பண்ணாமம்' என்பது மாத்தளை யின் பழம் பெயர். புகையிரத நிலைய அட்டவணையில் ஐம்பதுகள் வரையும் பண்ணாமம் என்றுதான் இருந்தது. பின்னர்தான் மாத்தளை என்ற பெயர் வந்தது. எனவே அந்தப் பெயருடன் சேர்த்துக் கவிராயர் என்று எனது பெயரை வைத்துக் கொண்டேன்.
யா: தற்கால இலக்கியப் போக்குகள்
பற்றி.
பண்: பத்திரிகைகளில் படிக்கிறேன். ஆனால் எந்தளவு இவற்றை உள்வாங் கியிருக்கிறேன் என்று சொல்வது சிரமம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு போக்கு மேலோங்குகிறது. ஆனால் அவை நிரந்தரமாக இருக்கப் போவ தில்லை. காலப்போக்கிலே இன்றைய கோட்பாடு மாறி இன்னொன்று இந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும். இவை யெல்லாம் மேலோங்கினாலும் சரி தணிந்தாலும் சரி இம்மாற்றங்களை யெல்லாம் மீறி இலக்கியம் தனித்து
நிற்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யா: கலங்கலுற்ற நிலையில் உள்ள ஒரு சமுதாயச் சூழலை கவிதையால் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா?
பண்: கவிதையால் மட்டும் அதனைச் சாதிக்க முடியாது. கவிதையையும் ஒரு சாதனமாக, ஆயுதமாகப் படைப்பாளி கையாள்கிறான்.அது அவனது பங்களிப்பு.
யா: இப்போது இலக்கிய முயற்சிகளில் ஈடுபாட்டைக் காணோமே.
பண்: இப்போதைக்குக் கவிதைக்கான உந்துதல் என்னிடமில்லை. சூழ்நிலைக் கைதியாக, அஞ்ஞாத வாசம் புரியும் ஒருவனாகத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.வெகுஜனப்பத்திரிகை களைத் தவிர வேறெதுவும் மாத்தளை யில் கிடைப்பதில்லை. ஒரு மாற்றுப் பத்திரிகையை,ஒரு நல்ல சஞ்சிகையைக் கண்டிக்குச் சென்றுதான் வாங்கவேண்டி யிருக்கிறது. அல்லது கொழும்புக்குச் செல்லும் ஒருவரிடம் சொல்லியனுப்ப வேண்டியிருக்கிறது. உடனுக்குடன் எதையும் பெறும் வாய்ப்பு எனக்கில்லை. *காலச்சுவடு', 'கணையாழி ’ போன்ற வற்றைப் பெறமுடியாது இங்கே.
யா: இலங்கையில் ஏன் ஒரு நல்ல இலக்கிய சஞ்சிகையைநடத்த முடியா துள்ளது?
பண்: வணிக நோக்கோடு சஞ்சிகை நடத்த முடியாது. பொருளாதார வளம் நிறையத் தேவை. ஆனாலும் அவ்வப் போது சில சஞ்சிகைகளைக் காணக் கிடைக்கிறது. முனைப்பு' வியூகம்’, *ஆகவே' போன்றவை. மலையகத்தில் ‘நந்தலாலாவந்துகொண்டிருந்தது. இப் போது அதுவும் இல்லை.திடீரென எங்கி ருந்தாவது ஒரு சஞ்சிகை வரத்தான் செய்யும். ஆனால் அது தீர்க்காயுசாக இருக்குமா என்று சொல்லமுடியாது. அப்படிச் சிரமப்பட்டு நடத்தினாலும் எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள்?
حالیہ
(35)
N
இந்திய ஜனரஞ்க எழுத்தாளர்களின் பிடியில் சிக்கியிருக்கும் நம்மவர்களை வெளிக்கொணர்வது இலகுவில் சாத்தி யமானதல்ல.மலரன்பன்,சோமு போன்ற நல்ல எழுத்தாளர்கள் நம்மிடையே இங்கு இருக்கிறார்கள். மலைநாட்டுக் கதையென்றால் தோட்டக்காட்டுக் கதை என்கிறார்கள். இந்தியாவின் சேரிப்புறக் கதையென்றால் ஆகா. ஒகோ. என்கிறார்கள்.
யா: மீண்டும் கவிதைக்கு வருவோமா?
பண்: ரொமாண்டிச வர்ணனை மிக்க கவிதைகள் என்னைக் கவருவதில்லை. எளிமை,விடயத்தை நேர்படச்சொல்லு தல் அதிலும் கவித்துவத்தை என்னால் காண முடிகிறது.நாம் சொல்லவருகின்ற செய்தி யாரைப்போய் எட்ட வேண்டும் என்ற தெளிவு கவிஞனுக்கிருந்தால் அக்கவிதை அதற்குரிய வடிவத்தைப் பெறும். பரீட் சார்த்தமாகவும் நான் கவிதை எழுதிப்பார்த்ததுண்டு. அதே வேளை செய்திகளை உடனுக்குடன் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் கவிதைகளை எழுதியதுண்டு. அரசியற் கவிதைகளும் அதில் அடங்கும். உதார ணமாக :- நாலுவாய்ச் சோறு என்ற கவிதை தேசாபிமானியில் ஒருமுன்னுரை யோடு வெளிவந்து தினகரனில் மறு பதிப்பானது.
யா: அவையடக்கமற்ற சொற்களைப் பயன்படுத்துதல், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல்,மண்வாசனைக் கவிதை கள் பற்றி நீங்கள் சொல்வது என்ன?
பணி : கவிதை மேம்படாமல் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான உத்திகளைக் கையாள்வது வரவேற்கப்படக் கூடாது என்பது என் அபிப்ராயம். ஆங்கிலச் சொற்பிரயோகத்தில் கவிதை வலுப்படு மாக இருந்தால் பாவிப்பதில் தவறில்லை
。7安びrr3
سمبر

Page 20
نان.
\N
f2.
ឬបុណ្យ ប៉ារ៉ាប់
Sierübunóo 6muIT656
கண்ணி வெடிகளோடு உண்மைகளும் புதைந்திருப்பதால் உதைப்பதுதான் உத்தமம்
பனை தன்னோடு முதுகெலும்புகளையும் சேர்த்தே முறித்துக்கொண்டதா
மனிதக் குண்டுச் சப்தம் கூட நாம் அடிக்கடி உடைந்து விழுத்துகிற புண்ணகையை ஒரு நிமிடம் மட்டுமே நிறுத்தி வைக்கிறது
சொறி நாய்களுக்குப் போல் மனிதனுக்கும் வாழ்வுரிமை சவக்குழி தவிர்ந்த
மற்றெல்லா இடங்களிலும்
ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது
பிழையான வழிகளில் நேர்மையாக சுவாசிக்க முடியாது
கடல்கள் வேண்டாம்ஒரு கடுகுக்குள் ஒரு துப்பாக்கியையும் ஒரு தோட்டாவையும் ஒளிக்கக் கிடைத்தால்
N
斉
参
f:3.
نسب
36,
அல்லவா?.ஆனால் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகப் பாவிக் கப்படுமானால் அது ஒரு செப்படி வித்தையாகவே இருக்கும்.மண்வாசனை, கவிதைக்கு மெருகூட்டுமாயின் வரவேற்
கலாம்.
யா: படிமம் இல்லையென்றால் கவிதை இல்லை என்று சிலர் சொல்கிறார்களே.?
பண்: படிமமும் குறியீடும் கவிதை உத்திகளாகத்தான் பாவிக்கப்படுகின்றன. இவை இல்லாமல் இயல்பு நவிற்சி என்றும் ஒன்று இருக்கிறதல்லவா? சங்க காலச் சிலபாடலகள் போல் செய்தியை இயல்பாகச் சொல்லும் கவிதைகள் உள்ளனவே. சிலவேளை முழுக்கவும் படிமங்களைப் போட்டுக் கவிதையின் பிராணனையே வாங்கும் போக்கும் காணப்படுகிறது. படிமம் உத்தியே தவிரப் படிமமே கவிதையல்ல.
யா: அபூதாலிப் அப்துல் லதீ.பின் கவிதைத் தொடர்பு எப்படியிருந்தது.?
பண்: அவரும் சில கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார்.ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி அவரே மொழி பெயர்த்ததுமுண்டு.சிலதை நான் மொழி
பெயர்த்ததுமுண்டு.
யா; இன்ஸானில் பட்டை திட்டப்பட்ட கவிஞர்கள் ஞாபகமா?
பண்: எம்.எச்.எம்.ஷம்ஸ், கலைவாதி கலீல் ஆகிய இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மற்றொருவர் பதுறுல் இஸ்லாம் என்ற எம்.கே.எஸ்.முகமட். இவர் பின்னர் இலக்கியத்துடனான தொடர்பை அறுத்துக் கொண்டார்.
யா: பெயர் குறிப்பிடாமல் சில மொழி பெயர்ப்புக்களைச் செய்திருப்பதாக அறிகி றோம். அவை பற்றி.

கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது சில பிரபலங்களை வைத்தே அநுமானங்களுக்கு வருகிறோம்.இதற்கு அப்பாலும் நல்ல கவிதைகள்இருக்கின்றன. ஒரு பொஸ்னியக் கவிஞன் சொன்னான்:- ‘ஒரு சிறந்த கவிதை அதற்குரிய கவிஞனைத்தானே தேடிக்கொள்கிறது.”
பண்:அப்துல் லத்தீ'ப் சோவியத் ஸ்தானி கராலயத்தில் பணியாற்றிய காலத்தில் ‘சோவியத் நாடு' தமிழ்ச்சஞ்சிகைக்காக ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளேன். அதில் சில இலக்கியப் பங்களிப்புகளும் உள்ளன. மாக்ஸிம் கோர்க்கியுடைய டெங்கோவின் இதயம் போன்ற சிறு கதைகள் என்னுடைய மொழிபெயர்ப்பாக வந்தன.மாயகோவ்ஸ் கியுடைய "லெனின்’ என்ற நீள் கவிதை 1967ல் என்னால் மொழிபெயர்க்கப்பட்டு சோவியத் நாட்டில் வெளிவந்தது. இதே கவிதை திருச்சிற்றம்பலக் கவிராயரால் மொழிபெயர்க்கபபட்டு அதற்காக இந்தி யாவில் 'நேரு சமாதானப்பரிசு’வழங்கப் பட்டது. அதே வேளை இக்கவிதையைச் சிங்களத்தில் மொழிபெயர்க்க நால்வர் அடங்கிய குழுவொன்றை நியமித்தி ருந்தார்கள்.அந்தக் கவிதையைப் பார்த்து ஆறுதலடையவேனும் என்னிடம் பிரதி இல்லை! எனது சிறந்த மொழிபெயர்ப்பு
ار
களுள் அதுவும் ஒன்று. ஷரிஅத்தி அவர்களின் ‘ஹஜ் உலகளாவிய இயக்கத்தின் இதயம்' என்றநூல் மொழி பெயர்ப்பும் பெயர் குறிப்பிடப்படாத எனது பணிகளுள் ஒன்று.
யா: நாடகத்துறையிலும் ஈடுபட்டீர்களா?
பணி ; அது தற்செயலாகத் தான் நடந்தது. முருகையா என்ற என் நண்பா. சிங்கள நாடகத் துறையோடு சம்பந்தப்பட்ட ஒரு திறமைசாலி. அவசரமாக ஒரு போட் டிக் காக பதினைந்து நாள் அவகாசத்தில் நாடகம் வேண்டுமென்று நின்றார். சலோமி’ என்ற ஒஸ்கார் வைல்டுடைய நாடகத் தைத் தமிழ்ப்படுத்தி ‘ஊழிப் புயல்"என்ற தலைப்பில் மேடையேற்றினோம்.நாடகப் பிரதியை நான் தயார் செய்தேன்.நடிப்பு அனுபவமற்றவர்களைக் கொண்டு நடித்தும் சிறந்த நடிகை,சிறந்தமேடைக் காட்சி, சிறந்த ஒப்பனை ஆகிய மூன்று பரிசகளை அந்நாடகம் பெற்றது.
யா: ஒதுங்கிய நிலையில் தொடர்ந்தும் இப்படியே இருந்து விட உத்தேசமா?
பண்; மாத்தளையில் இலக்கியத் தீனி போட முதல் பத்மநாப ஐயர் இருந்தார். இப்போது அவரும் இல்லை. ஆனாலும் ஒதுங்கிய நிலையிலிருந்து வெளியே வரவேண்டும் என்ற உந்தல் இல்லாம லில்லை. அது எப்படி வடிவம் பெறும் என்று இப்போதைக் கு என்னால் சொல்ல முடியாது.
ஒராபி பாஷா இலங்கையில் தீவாந்தர வாசமி செய்தபோது அவருடன் வந்தவர்களுள் ஒருவர் அறபு இலக்கிய மறுமலர்ச்சிக்கே பிதாமகர் என்று பின்னர் அறிய வநதோம். முகம்மத் அல் பரூதி அல் சமீஹற் அவர்களின் 'தாயகத்தின்மீதான நினைவு’ என்ற
37 望しむ安女rr3

Page 21
திடீரென எங்கிருந்தாவது ஒரு சஞ்சிகை வரத்தான் செய்யும்.ஆனால் அது தீர்க்காயுசாக இருக்குமா என்று சொல்ல
முடியாது. அப்படிச் சிரமப்பட்டு ஒன்றை நடத்தினாலும் எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள்?
கவிதையை மொழி பெயர்த்து வைத் துள்ளேன். அறபுப் புரட்சியின் பின்னணி யில் உருவான ஆனால் இலங்கையில் இருந்து படைக்கப்பட்ட கவிதை அது. பதினேழு பக்கங்களுக்குச் சிறுபிரசுரமாக வரும். ஏற்கனவே தினகரனில் பிரசுர மாகிப் பின்னர் கமால்தீன் நடத்திய 'கல்பனா சஞசிகையில் மறு பிரசுர மானது. இதை எப்படியாவது அச்சில் கொண்டு வர வேண்டுமென்ற ஆசை யிருக்கிறது.
யா: இறுதியாக.
பண்: வாழ்க்கையை விட்டுத் தன் கவிஞனைப் புறம் போக விடுகிற ஒரு சமூகம் கைசேதப்படும் என்கிற வாசகம் தான் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. சமூகத்தின் வேரைத் துண் டித்து இலக்கியவாதியாக நிலைத்து நிற்க நினைப் பது வீணி மனப்
பிராந்தியாகும். O
Lri želo 3
பண்ணாமத்துக் கவிராயர் |
விண்ணிலிருந்து வேத வெளிப்பாடு வரவில்லை .
மெளனமானது பூமி விதவைத் தாய்போல் புலம்புகிறது
BT6)UO விம்மிக் கேவுகின்றது இருள் காற்று
வெண்தாமரை மலருமோ
கொள்ளை நோய்களோ தீர்க்கதரிசிகளோ அனுப்பி வைக்கப்படுவது இது போன்ற காலங்களில்தானாம்
இவ்வாறு கூறும் மறைநூல்களில் இன்னொன்றும் காணப்படுகிறது
இதற்குப் பின் தீர்க்கதரிசிகள் வரமாட்டார்
(அம்ஜத் இஸ்லாம் அம்ஜத்தின் உருதுக் கவிதையின் தழுவல்
வேதனைத் தடாகத்தில்
 
 

தஞ்சுவர நிழல்
அது நஞ்சு மரத்து நிழலாயிற்று -ஆரம்பத்தில் அப்படியிருக்கவில்லை ," کمبر ஆறும் இரண்டுமாக மொத்தம் எட்டு வருடங்கள் போன பின் ރ / நிழலிலும் விஷம் ஊறியிருக்கக் கண்டேன்
-
f سعر
அப்போது புத்தி கெட்டிருந்தது 2/>ܠܹ2ܐܽ \ கடும் கோடையென்று ஒடி ஒதுங்கியதிலும்
lik வயது இளசு என்பதனாலும்
நஞ்சு புரியும் நிலையை விட நிழல் தேடி ஒதுங்கும் அவசரம் பெரிதாயிற்று
எட்டு வருடங்களும் நிழல் என்ற பெயரில் விஷம் சொட்டுச் சொட்டாக இலைகள் வழியாக மூளையில் படிய பின் மூளையிலிருந்து சூழ இருந்தோருக்குத் தெறித்துச் சர்வமும் ஒழுகிற்று
அந்த மனிதர்களும் நஞ்சாகினர் / நிழலில் குடியிருப்பு இனிச் சாத்தியமல்ல
தொட்டது பட்டதெல்லாம் விஷமான பின் 2 ܐܝܠ ܐܝܠ \
அந்த மரம் நஞ்சானது ރަ/ அந்த இடம் நஞ்சானது ހޭހ~~~~-ށިހޯހ
மரமும்
விஷமேறிய மனிதர்களும் ஒன்றிப் போக
し A நிழல்வாசிகள் வெளியேறினர்
&
இன்னுமொருமுறை
அங்கு குடியேற வாய்ப்புக் கிடைத்தால் زنامہ ',
நஞ்சள்ளி எப்படி நான் பருகுவது
3 } } } } )' .39 امر

Page 22
seed ovče
நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்ப் படைப்புலகுக்கு அளப்பரிய பங்காற்றி வரும் கவிஞர் அல் அஸீமத் அவர்களுக்கு பாரதி கலா மன்றத்தினர் நடத்திய பாராட்டு விழா எழுத்தாளர் மு.பவrர் தலைமை யில் ஏப்ரல் 9ம் திகதி கொழும்பில் நடைபெற்றது. ஆர்.வைத்தமாநிதி அதிதியாகக் கலந்த விழாவில் என்.நஜ்முல் ஹ"ஸைன்வரவேற்புரை நிகழ்த்தினார். பாரதி கலா மன்றத்தின் சார்பில் அல் அஸஉமத்துக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினார் டொமினிக் ஜீவா. ம.பொ.சி.மன்றத்தின் சார்பில் த.மணி, கம்பளைதாசன், அன்னலட்சுமி ராஜதுரை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்த்துக் கவிதையை வாசித்து அல் அஸஉமத்துக்கு மலர் மாலையணிவித்துக் கெளரவித்தார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.மேமன்கவியின் வாழ்த்துக் கவிதை இடம்பெற்றது.தாஸிம் அகமதுவின் வாழ்த்துக் கவி தையைக் கிண்ணியா அமீர் அலி வாசித்தார். அல் அஸஉமத் ஏற்புரை வழங்கினார்.
நாட்டின் தமிழ் பேசும் எழுத்தாளர்களும் புத்தி ஜீவிகளும் புலம் பெயர்ந்த இலங்கையரும் அவ்வப்போது வெளியிடும் நூல்கள் பற்றிய தகவல்கள் ஒரு சிலரைத் தவிர ஏனையோரைச் சென்றடைவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் வெளியான நூல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய நூலொன்றை வெளியிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.புதிய நூலகம் என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்நூலுக்கு நூலாசிரியர்களும் நூல் வெளியீட்டாளர்களும் தங்களது புத்தகங்களை 15-6-2000 க்கு முன்னர் அனுப்புமாறு அந்தனி ஜீவா அறிவித்துள்ளார். புதிய நூலகம் வெளிவந்ததும் நூல்கள் அனைத்தும் இலக்கியஆர்வலர்களின் பார்வைக்காகப் புத்தகத் திருவிழா என்ற பெயரில் காட்சி யொன்றும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. நூல்களை அனுப்ப வேண்டிய (ypass6Jń: ANTHONY JEEVA, P.O. BOX-32, KANDY, SRI LANKA.
கல் ஹின்னைத் தமிழ் மன்றத்தின் சார்பில் மறைந்த கவிமணி எம்.ஸி.எம். ஸ"பைர் நினைவுக் கூட்டம் கொழும்பு இஸ்லாமிய நிலை யத்தில் ஜூன் 4ம் திகதி முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஸமீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலாசார அமைச்சு ஆலோசகர் எஸ்.எச்.எம்.ஜெமீல் , முன்னாள் கல்வியதிகாரி எஸ்.எம்.எம்.யாஸின் எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸ.ப், ஏ.எல்.எம்.ராஸிக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். வெளியிடப்பட்ட 220 பக்க நினைவு மலர் அறிமுகவுரையை 'தினக் குரல்’ ஆசிரியர் ஆ.சிவநேசச் செல்வன் நிகழ்த்தினார். மேமன்கவியின் கவிதாஞ்சலியும் இடம் பெற்றது. கல்ஹின்னைத் தமிழ் மன்ற நிறுவனர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா நன்றியுரை வழங்கினார்.
o a e o o a es o o a O o a o o o o o e 9 a 8 o 6 0 a 0 a 0 o 8 a 8 o 6 0 a 0 o
。rs多gr#3 £40
المية
ܢܫܬܐ

வெள்ளிக்கிழமை விடியல் ஊரடங்கு உத்தரவை வானொலி துப்பியது
புத்தகங்களைப் பரப்பிக் கோயில் சாலையில்
பக்தி மணம் பரப்பும்
காலை நேரக் கரு கருவிலே கரைந்தது
குங்குமம் சந்தனம் மணக்கக் கையில் காளாஞ்சியுடன் புத்தகம் வாங்கும்.அம்மாக்கள் அழகுக் குமரிகள் கோயிலுக்கு வரமுடியாது.
எதிர்காலத்தைக் கையில் பார்த்து ராசி பலன் சொல்லும் சாஸ்திரக் குறத்திகள
ہٹلر
(41)
கோயில் வீதியில் இன்று குந்தியிருக்க முடியாது.
பாவப்பட்ட பிச்சைக்காரர்களைப் பாதையோரத்தே இன்று
பார்க்க இயலாது
படம் விற்கும் பந்துசேனவும் பூக்கடைக் கிருஷ்ணாவும் மணிப்பெட்டி ஹஸன் நாநாவும் இந்தப் பக்கம் இன்று எட்டியும் பார்க்கமாட்டார்கள்
இன்று ஊரடங்கு வெள்ளிக்கிழமை கோயில்தெரு வெறிச்சோடியிருக்கும்
ஆலயத்துள் அம்மன் சிலை மனித சத்தங்கள் கேளாமல் தனிமையில் இருக்கும்
, ** リリ存安グな3

Page 23
:ாத்ரா 3
‘இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நவீன இலக்கியவாதிகள் கவிதை என்பது படித்துப் புரிந்து கொள்ளக் கடினமானதாக இருக்க வேணடும் என்ற அணுகு முறையைத் தோற்றுவித்தார்கள். எளிமையையும் தெளிவையும் எழுத்தில் கொணி டு வருவதற்கு அவசியமான கடின உழைப்பை விரும்பாதவர்கள் அதை வரவேற்றார்கள். இருண்மை உயர்ந்த இலக்கியத்தின் பிரிக்க முடியாத அம்சம் என்றும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது நல்ல இலக்கியமல்ல என்றும் கருதப்பட்டது. எஸ்ரா பவுண்ட்,எலியட் ஆகியோரின் கவிதைச் சிறப்பு இத்தகைய எண்ணங்கள் பரவக் காரணமாக அமைந்தது. ஒரு கவிதையின் இயல்பாலேயே கடினமாக இருக்கிற கவிதை வேறு; எழுதியவனே புரிந்து கொள்ள முடியாத கவிதைப் படைப்பு வேறு. ஒரு கவிதை நம்மை மீண்டும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஆவலை உண்டாக்குகிறதா? இதுதான் நல்ல கவிதையின் அடையாளம்.
மேலே உள்ளது ஒக்ஸ்.போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்ட ‘தற்காலக் கவிதைகள் தொகுப்பு நூலுக்கு பி.ஜே.என்ரைட் எழுதியிருந்த முன்னுரையின் ஒரு பகுதி.
இன்று எழுதப்படும் பல கவிதைகளைப் புரிந்த கொள்ள முடியாத வேதனையில் என் அறிவுப் பரப்புக்கு விடப்படும் இத்தகைய சவாலை தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சலோடு அவதிப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு மேற்கண்ட முன்னுரைப் பகுதி சற்று ஆசுவாசமளித்தது.
(42. y
2 -- ܢ
کلے
 

ரயிலை விட்டிறங்கியதும் ஸ்டேஷனில் யாருமில்லை அப்போது அவன் கவனித்தான் ரயிலிலும் யாருமில்லை என்பதை ஸ்டேஷன் இந்தது எனபதை அது ஸ்டேஷன் இல்லை’ என்று நம்புவதிலிருந்தும்
g66T6) 96.606 விடுவித்துக் கொள்ள முடியவில்லை ஏனென்றால் ஸ்டேஷன் இருந்தது.
என்பது போன்ற கவிதைகளைப் படித்து விட்டு என் போன்ற சாதாரணன் ஒருவன் தன்னிரக்க மேலீட்டால் வெதும்பாமல் எப்படியிருக்க முடியும்? எனவே இந்த நவீன கவிதைக்காரர் கள் அதி மேதாவித்தனத்தைக் காண்பிப்பதற்காகத் தங்களுக்கே விளங்காத விதமாக வார்த்தைப் பயமுறுத்தல் விட்டுக் கொண்டிருக்கிறர்கள் என்றும் மேற்குக் கவிதைகள் சிலவற்றைப் படித்து விட்டுக் குழப்பகரமாகக் கொப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வாசகனைப் பயமுறுத்துவதில் திருப்தியடைந்து கொள்கின்ற வெற்றுப் பம்மாத்துக்கள் என்றும் இருண்மையே இலக்கியம் என்று மயங்கிப் படைப்பு களை அபத்த நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்; இதெல்லாம் சுத்த ஏமாற்று என்றும்யாராவது சொல்லும் போது எழுதும் போது மனம் சந்தோஷப்பட்டுக் கொண்டது. நான் தனியாக இல்லை, இத்தகைய கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் பலபேர் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் மனம் பெரிதும் நிம்மதியடைந்தது. ஆங்கிலக் கவிதைகளோடு அல்லது வேற்று மொழிக் கவிதைகளோடு
எனக்குப் பரிச்சயம் இல்லாதிருக்கலாம். ஆனால் தமிழ்
தெரியாதவனா நான்?
இந்த நிம்மதியை நீண்ட நாள் நீடிக்க விடவில்லை என் நண்பரொருவர். அரசாங்க மருத்துவமனையில் வைத்தியராகப் பணியாற்றும் அந்த நண்பர், " நீ உன் ரேடியோ நிகழ்ச்சிகளை யாருக்காக நடத்துகிறாய்?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டார்.‘நேயர்களுக்காக” என்ற பதிலை எதிர்பார்த்ததல்ல அந்தக் கேள்வி என்பதால் பேசாதிருந்தேன்.
43
35
f

Page 24
بع
s
s
'], 'j ! ft 3
6
ஏதேதோ கவிதைகளையெல்லாம் வாசித்து உன் பண்டிதத் தனத்தைக் காட்ட விரும்புகிறாயா?” “ஏன்கவிதை கள் நல்லாயில்லையா?” என்றேன் தர்மசங்கடத்தோடு. “பசுவையா, கல்யாண்ஜி, கலாப்ரியா என்று நீ சொல்லுகிற கவிஞர்களைத் தேடிப் படித்துப்பார்த்தேன். ஒரு இழவும் விளங்கவில்லை. அவர்கள் ஏதோ புலம்புகிறார்கள்.
அதையெல்லாம் நீ திரும்பச் சொல்லி அறுத்துக்கொண்டிருக்.
y
கிறாய்.” எனறு சலிப்பாகச் சொன்னார். எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
“கவியரங்குகளிலும் உன் மண்டைக் கனத்தைத்தான் காண்பித்துக் கொள்கிறாயே தவிர மற்றவர்களுக்குப் புரியும்படியான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல உனக்குத் தெரியவில்லை.”
எனக்கு வாய் திறக்கவே வெட்கம் ஏற்பட்டது.அவரே தொடர்ந்தும் சொன்னார்."வைரமுத்து, மேத்தா போன்றோ ருடைய கவிதைகளை நீ வாசித்துப் பார்த்ததில்லையா?”
‘படித்திருக்கிறேன். நல்ல கவிதைகள் ஒன்றிரண்டும் இருந்திருக்கின்றன. பெரும்பாலனவை வார்த்தை ஜோடனை களாக மனதில் தங்காமல் வெறும் சொற்களாகவே எஞ்சுகின்றன. ஒரு சில கவிதைகளில்தான் அவர்கள் அனுபவித்ததை நாமும் பெற்றுக்கொள்ள முடிகிறது.” என்றேன். அதற்குப் பின் நண்பர் கவிதைகள் பற்றிப் பேசவில்லை. w
எனக்கு அறவே புரியாத கவிதைகளைச் சிலாகித்துப் பேசும் நபர்களிடம் நான் அந்தரங்கத்தில் கொள்ளும் விரோதம் போல, நண்பரும் ‘புரியாததையெல்லாம் சிலாகித்து மேதாவித்தனத்தைக் காண்பித்துக் கொள்கிறான்’ என்ற நினைப்பில் மெளனமாகியிருக்கக் கூடும் என்பது வேதனை தந்தது.
இதுபோல என் நண்பரும் வேறொரு கவிதை ரசிகரிடத்தில், ‘புரியாததை ரசிக்கும் கிறுக்குப் பிடித்த மேதாவி என்கிற தோற்றத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடும். வைரமுத்து தன் சினிமாப் பாடல்களில் “அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடும் பெண்ணை ஒற்றைப் பார்வை பார்த்தவன்’ பற்றி எழுதுவ தைப் புரிந்து கொள்ள முடியாத ரசிகரும் இருப்பார்தானே?
44 ノ

அவர்கள் புரியாமல் எழுதுகிறவர்கள்; இவர்கள் வெற்றுச் சொல்லலங்காரம் செய்கிறவர்கள்; ஏதோ இந்த ஒரு சிலர்தான் நல்ல கவிதை எழுதுகிறவர்கள்’ என்று நான் பகுத்து வைத்திருப்பதை அப்படியே பொதுமைப்படுத்திச் சொல்லிவிட முடியாதென்று தெரிந்தது.பெரும்பாலானவர்கள் இதைத்தான் கவிதையென்கிறார்கள் என்று நான் ஜனநாயக முறையைத் துணைக்கழைத்துக் கொள்ள வேண்டுமானால் வைரமுத்து, மேத்தாவை விட வேறு கவிஞர்கள் கிடையாது என்று ஒப்புக் கொள்கிறவனாக வேண்டும்.
கவிதை என்பது இப்படியிருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தைச் சொல்லி எனக்கான கவிதைகளைத் தேர்கிற போது, அதே போன்று மற்றவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிற கவிதைகளையும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும். கவிதை என்கிற சமாச்சாரம் இதுதான் என்று வற்புறுத்த ஆரம்பித்தால் அது அதிகாரமாகி விடுகிறது. அவரவர்க்கு அவரவர்க்குரிய கவிதைகள்!
நவீன கவிதைகள் சில புரிவதில்லையே என்ற குற்றச்சாட் டுக்கு ‘புதுக்கவிதை ஒரு பார்வைஎன்ற தனது நூலில் பாலா இவ்வாறு ஒரு பதில் கேள்வி போடுகிறார். கணிதம் புரிய வில்லை. பெளதீகம் புரியவில்லை என்றால் நம்மிடம்தான் குறையிருப்பதாக உணர்ந்த கொள்ளும் நாம் கவிதை புரியவில்லை என்றால் மட்டும் கவிஞனைக் குறைகூறுவது ஏன்?
புரிதல் அல்லது புரியாமை என்பது அவரவர் பழக்கத்தி னடிப்படையாகவும் முயற்சியினடிப்படையாகவும் வருவது தான்.நாம் வளர வளர, பழகப் பழகப் பலவற்றைப் புரிந்து கொண்டு வருகிறோம். அதே போல் கல்கி, சாண்டில்யன்,
அகிலன் வகைக் கதைகளைத் தண் சுவாசமாகக்
கொண்டிருந்த ஒருவருக்கு இப்போது அவை சலிப்பைத் தருவதிலும் ஆச்சரியமில்லை. ஜெயகாந்தன், அசோக மித்திரன், சா.கந்தசாமி, சுந்தர ராமசாமி கதைகள் இப்போது அவருக்கு நெருக்கமாகியிருக்கக் கூடும்,
சினிமாப் பாடல்களை எடுத்துக் கொண்டாலும் செக் தேசத்து அல்லது ஈரான் தேசத்துச் சாதாரண மக்கள் ரசிக்கும் படங்களை நமது வெகு ஜனங்கள் புரிந்து கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.சினிமாவுக்கு மொழி ஒரு தடையல்ல; நல்ல சினிமாவைப் பார்த்துப் பழகிக் கொள்ளாததுதான் புரிந்து கொள்ளத் தடையாக அமைகிறது. கவிதைகள் விஷயத்திலும் அப்படித்தான் போலும்.
45.
:
。7安好存3

Page 25
s
前
ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த ரயில் ஸ்டேஷன் பற்றிய அந்தக் கவிதை நகுலனுடையது. நகுலனை எழுத்தாளர் களின் எழுத்தாளர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.அதாவது சாதாரண வாசகர்களுக்கானவையல்ல அவரது எழுத்துக் கள் என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. (எல்லா விஷயங்களும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட வைதான்.) வாசிப்பு,வாசிப்பு என்று பல படிகளைத் தாண்டி வந்த ஒருவருக்கு வெளிப்படையாகச் சொல்லப்படும் அந்த ஒரே விஷயங்கள் சலிப்பைத் தருபவையாக மாறிவிடும். எனவே புதிராகவும் சூசகமாகவும் குறிப்பால் கோடிட்டுக் காட்டியபடியே பாய்ந்து செல்வதாகவும் எழுத்து மாறுவது தேவையாகிறது.
'ஆல்' என்ற சஞ்சிகையில நகுலன் பற்றி எழுதிய நாஞ்சில் நாடனின் குறிப்பையும் இங்கே தருகிறேன்.
“நகுலனுடைய கவிதைகள், கதைகள், நாவல் பற்றிய தீர்க்கமானதோர் குற்றச்சாட்டு, அவரது எழுத்து யாருக்குப் புரிகிறது என்பது. இந்தப் புரிதல் என்ற அச்சம் அவரவர் தளத்தைச் சார்ந்தது. ஒரு விஷயம் புரியவில்லை என்பதை அறிவுப் பரப்புக்கு விடப்பட்ட சவால் என்று எடுத்துக் கொள்வது நியாயமானது.ஆனால் நான் ஒரு மாபெரும் ரசிகன், எனக்கு ஒரு படைப்பு புரியாமல் இருக்க முடியாது. அது அப்படிப் புரியாமல், அந்தப் படைப்பு ஊனமுடையது அல்லது படைப்பே அல்ல என்று சாதிப்பது திறனாய்வோ ஆரோக்கியமான அணுகு முறையோ அல்ல. எல்லாமும் எல்லாருக்கும் புரிந்து விட வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
திருவனந்த புரத்துக் கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் பணிக்கரின் ஒவியங்கள் எதுவும் புரியவில்லை. நவநீதகைவல்யம் புரியவில்லை. சுபென் மேத்தா இசை புரியவில்லை.பம்பாய் என்.சி.பி.ஏ.கலையரங்கின் முன்கூடத் தில் கண்ட ரோட்டின் சிற்பங்கள் சில புரியவில்லை. ஞானக்கூத்தனின், தருமு சிவராமுவின், சுந்தர ராமசாமியின் சில கவிதைஸ் புரியவில்லை. ஈடிஷ் மொழி புரியவில்லை.
எத்தனையெத்தனையோ விஷயங்கள் என்னவென்றே
புரியவில்லை.
புரியாதவை மேன்மையானவை என்றும் எளிமையானவை தாழ்வானவை என்றுமல்ல நான் சாதிப்பது. தரத்தை நிர்ணயிக்கப் புரிதல் அல்லது புரியாமை ஒரு அளவுகோல் அல்ல என்பதற்காக.” (பகிர்ந்து கொள்ள மேலும் சங்கதிகள் உண்டு)
. AZY (46)

குடும்பத்தில் அனைவரும் அகதிகளாய் வீதியில் கிடப்பதை வெள்ளம் அறியாது
வேகமாய் ஓடித்தப்ப வெளிச்சம் இருந்தால்தான் வசதியென்று சந்திரனுக்குத் தெரியுமா என்ன
போர்வையின்றிக் கிடப்பது புழுக்கம் காரணமாக அல்ல என்பது மனசை நடுக்கும் இந்தக் குளிருக்குப் புரியாது
நான் நிரபராதியென்று சிறைக்கூட மூட்டைப் பூச்சிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான்
இன்னின்னார்க்குத்தான் இரும்புச்சத்து இருக்கிறதென்று தோட்டாவுக்கு எப்படித் தெரியும்
என்றாலும் யாருக்குத்தான் தெரியாது உயிருக்கு ஒன்றும் தெரியாதென்று
47

Page 26
მტ éfნიტორ მხmტ
தென்னிலங்கையின் சிங்களக் கிராமம் ஒன்றில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
அந்த மீனவனான கவிஞனுக்கு 46 வயது. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள். அவனது இறுதித் தேவைகளை நிறைவேற்றுமாறு வைத்தியர்கள் அவனது மனைவிக்குச் சொன்னார்கள். மரணம் அவனுக்கு முன்னால் நின்றது.
வைத்தியசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவனது இறுதித் தேவை என்ன என்று மனைவி அவனிடம் கேட்டாள். ‘ஒரு ஒலிப்பதிவு கருவியும் ஒலிப்பதிவு நாடாவும் என்று அவன் தன் தேவையைச் சொன்னான். வீட்டுக்கு வந்ததும் வீட்டிலிருந்த ஒரேயொரு அலமாரியை விற்றாள் அவனது மனைவி. அப்பணத்தில் அவன் கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுத்தாள்.
அவன் மனைவியை அழைத்தான். அவளது மடியில் தலை சாய்த்தபடி ஒலிப்பதிவுக் கருவியை இயக்குமாறு கூறினான். அவன் கவிதை பாடத் தொடங்கினான்.
இன்று இதயம் துழக்கிறது படபடவென வேகமாய் திடுதிப்பைன இறந்து போவேனோ நிச்சயமில்லை
நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்த நாளாய் தனிமைக்குத் துணையாய் வந்தது நீ மட்டுமே என் அருகே
வாழ்வுப் பயிர் கதிர் நிறைத்துச் செழிக்கையில் ஆற்று வெள்ளம் வந்து விட்டது எதிர்பாராமல் எப்Uழப்போகும் இம் மூவுயிர்களின் காலம் இதயத்து நினைப்பெல்லாம் சுக்கு நூறாயிற்று
கை காட்டுகின்றான் காலணி
கட்டிலருகே இரவுக்குள் நின்று போய்விடும் ஆபத்திலிருக்கிறது என் மூச்சு
:ாத்ரா 3 (48. ܢܝܬܐ
M. */ *Tr; «

அன்பே, ஊரிலிருக்கும் எல்லோருக்கும் அறியப்படுத்து என் மரணத்தை. மும்மணிகளின் ஆசிகள் உனக்கும் இரு பிள்ளைகளுக்கும்
அடுத்தவரால் குட்டுப்பட்டு வாழ இடந்தராது உண்டு குழக்கவெனப் போதுமான பொருளேதுமில்லை பிள்ளைகளை நல்வழிப்பட்டவராக்கி அன்பே, அந்த மகிழ்ச்சியில் உன் சோகத்தை இதயத்திலிருந்து நீக்கிக் கொள்
சேர்த்து வைத்த ஆஸ்திகள் ஏதுமில்லை" காலணி பறித்துச் செல்ல சொந்தமென்றும் யாருமில்லை
பேணிக் காக்க குடும்பச் சுமை தாங்க இயலாதெனக் கண்டால் குற்றமில்லை வேறு துணையொன்று கூட
என்ன செய்ய
விதித்த பழ ஆகிற்று போக வேண்ழய பயணமும் உரிய தளத்துக்கு வந்தாயிற்று அன்புத் தாரமாய் ஆக வேண்டும் நீ அடுத்த பிறப்பிலும் பிள்ளை குட்டிகளும் இந்த.
நோயாளியின் வீட்டில் நீண்ட நேரமாக எவ்விதச் சந்தடியும் இல்லாததை அயலவர்கள் அவதானித்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது.
நோயாளியும் மனைவியும் இறந்து கிடக்கக் கண்டார்கள். ஒடி முடிந்த ஒலி நாடாவைக் கெைடடுத்தாாகள். அதிலிருந்த இலக்கிய நயம் மிகுந்த சோகமான சிங்களக் கவிதையைக் கேட்டு முழுக்கிராமமும் சோகத்தில் ஆழ்ந்தது.
பாவம், புற்று நோய்அதற்குக் கவிதை தெரியாது!
தகவலும் கவிதை மொழிபெயர்ப்பும் g5fresn b85 6murT
な安女rr3。 )49 ہاجر

Page 27
இலங்கையின் மூத்த கவிஞர்களுள் ஒருவரான சு.வில்வரத்தினம் 'அகங்களும் முகங்களும்(1985), "காற்று வழிக் கிராமம்(1995), 'காலத்துயர்(1996) ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தந்தவள். புத்தாயிரத்தில் அவரது "நெற்றி மண்' என்ற நான்காவது கவி : தைத்தொகுதியைத் திருகோணமலை கூடல் பதிப்பகம் வெளியிட் டுள்ளது.எழுபத்தெட்டுப் பக்கங்களில் முப்பத்தொரு கவிதைகள், ! தலைப்புகள் இல்லாமல் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம்சிதைத்த வாழ்வின் அவலத்தொனி கவிதைகள்தோறும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அட்டைப்படம் எரிக்கப்பட்ட அவரது D
வீட்டை ஞாபகப்படுத்துவது போலுள்ளது. விலை 100.00 ' يتيى சு.வில்வரத்தினம்,198/2,கீழை வீதி,உவர் மலை, திருகோணமலை.
இயல்பினை அவாவுதல்
போர் தரித்த பூமியிலிருந்து அமரதாஸின் கவிதைகள், மிகுந்த சிரமத்துடன் வெளிவந்துள்ளன."தேடல் வெளியீடாக வந்திருக் கும் இக்கவிதைத் தொகுதி 48பக்கங்களில் முப்பத்தைந்து கவிதைகளைத் தாங்கியுள்ளது.நவீன அச்சு வசதிகளில்லாத பிரதேசத்திலிருந்து வந்தாலும் நூல் மிகக்கவனமாக வடிவமைக் கப்பட்டுள்ளது.போரின் கொடுமை பற்றிய நெஞ்சின் விக்கலாக சொல்லொண்ணா ஊமை மனத்தின் வேதனைக் குரலாக விரி கிறது. சொற்கட்டும் இறுக்கமும் கொண்ட அமரதாஸின் கவி தைகளின் வெற்றி என்னவெனில் படிக்கின்ற போது நெஞ்சில் சுரீர் எனத் தைக்கும்படியான சோகத்தைத் தருவதுதான்.ஒருசில தொகுதிக்கென்றே எழுதப்பட்டனவோ? விலை 70.00. அமரதாஸ் 257, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.
விடைக்குள் வராத வினாக்கள்
எழுபதுகளில் கவிதைப் பரப்பில் வலம் வந்த தாஹா நகள் ஸபாவின் கவிதைத் தொகுதி 'விடைக்குள் வராத வினாக் கள்’ எனும் பெயரில் படிப்பு வட்டத்தால் வெளியிடப்பட்டுள் ளது.78பக்கங்களைக் கொண்ட நூலில் 30 கவிதைகள் இடம் : பெற்றுள்ளன.'ஸபா, மொழியை வைத்துச் சிலம்பல் செய்ய வில்லை.கவிதைக்குரிய மொழியான உணர்வைப் பலப்படுத் தியுள்ளார் என்று கவிஞர் ஏ.இக்பால் தனது நிறுப்புரையில் கூறுகிறார். 'மின்னல் உயிர்த்த வேகத்திலேயே மரித்துப் போகிறதே என்று குறைப்பட்டுக் கொண்டு பார்க்கின்ற நமக்கு அது பளிச்சென்று பரந்து பட்டுத் தரும் வெளிச்சத்தை நன்றி யோடு நோக்கத் தெரியவில்லை என்று புதுக்கவிதை பற்றிச் சொல்கிறார் ஸபா விலை-75.00
தர்ஹாநகர் ஸபா 99/1, பிரதான வீதி, தர்ஹா நகள்-12090
:ாதிர#3 50 ܢܫܘܗܝ
 
 
 
 
 
 

: இலங்கை வானொலியின் பல்வேறு நிகழ்ச்சிகள் கவிதைகளுக்கு வாய்ப்பளித்து வந்திருக்கின்றன; வருகின்றன. 3. அவற்றில் உருவான ஒரு நல்ல கவிஞனை, மருதமுனை புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் கலை இலக்கிய மன்றம் * வெளியிட்டுள்ள 'காலத்தின் காலடியில் என்ற கவிதைத் தொகுதி அடையாளங் காட்டுகிறது. எம்.எச்.ஏ.கரீம் தந்திருக்கும் 68 பக்கங்கள் கொண்ட நூலில் 26 கவிதைகள் அடங்கியுள்ளன. புதுக் கவிதையில் மட்டுமன்றி யாப்பமைதி கொண்ட கவிதைகளிலும் காலூன்றி நிற்கும் வல்லமை கரீமுக்கு உண்டு என்கிறார் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன், தனது மதிப்புரையில். விலை 60.00 எம்.எச்.ஏ.கரீம்,557k /5, பவுண்டரி றோட்,
மருதமுனை.
நாயகமே பூமிக்கு வாருங்கள்
பிரபல நூலாசிரியரும் மதுக்கலசம்', 'கவிதாஞ்சலி'நான்,நீ”, நாயகமே முறையீடு,நம்பிக்கைமணிகள் ஆகிய கவிதை நூல்களைத்ாேருள் தந்தவருமான கவிஞர் அபூபக்கள் அவர்களின் நாயகமே பூமிக்கு வாருங்கள்’ என்ற நெடுங் கவிதை, நூலாக வெளி யாகியிருக்கிறது. 50 பக்கங்களிலான நூலை சாய்ந்தமருது இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது. இஸ்லா மிய சமுதாயத்தின் அவல நிலை பற்றி முகம்மது நபி யவர்களிடம் முறையிடுவதாகக் கவிதை அமைகிறது. ஆத்மீக வாழ்வின் அவசியத்தை உணர்த்தும் கவிஞர் இவர் எனப் பேராசிரியர் க.அருணாசலம் அணிந்துரையில் குறிப்பிடுகிறார். விலை ரூ 50.00 ܀- கவிஞர் அபூபக்கள், 52, ஒஸ்மன் வீதி, சாய்ந்தமருது.05
உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் நிந்ததாசன் என அறியப்பட்ட ஏ.சிறாஹில்'உன்னிடம் விரல் கள் கேட்கிறேன் கவிதைத் தொகுதியைத் தந்துள்ளார்.மணி மேகலைப் பிரசுரமாக வெளியாகியுள்ள 144 பக்கங்களைக் கொண்ட நூலில் எளிய நடையிலான 27 புதுக்கவிதைகள் அடங்கியுள்ளன.ஏராளமான கவிதைகளைக் கைவசம் வைத் திருப்பவள் என்பதால் - அநேகமான இடங்களில் ஒவ்வொரு சொல்லாக உடைக்காமல் அச்சிடப்பட்டிருந்தால் இன்னும் 25 கவிதைகளையாவது நூலில் சேர்த்திருக்கலாம்.நிந்ததாசன் வாழ்க்கை இனிமைகளைக் கவிதையாக்கத் தவறவில்லை என்கிறார் வல்லிக் கண்ணன்.விலை ரூ.12500 ஏ.சி.றாஹில், ஏ2, எ.ப் 10, ஆமர் வீதி தொடர் மாடி, கொழும்பு 12
3' ? ) } )' 51 لر

Page 28
அழியாத கவிதை
சிந்தா மணியென்றும் சூடா மணியென்றும் தந்தாரே பத்திரிகை ஜாம்பவான்- அந்நாள் கவிஞர் எலார்க்கும் குருஅவரே எஸ்.டி dfk)JbT uI356OLDuUT 5ITGörl
சிறந்த கவிஞர் திரிஞானி உள்ளந் திறந்த மனிதர்! சினேகம்- அறச்சிறந்தார் தன்னை மறப்பார் தமிழ்க்குணத்தார்! தேன்தமிழாம் அன்னைக் கடிமை அவர்
தத்துவங்கள் பேசுகின்ற சிந்தனைச் சிற்பியவர் முத்தமிழ் கற்ற முதுபெரும்- வித்தகரே! அத்தகுமோர் மேதையாம் அன்னார் புலமைதனை நித்தம் புகழும் நிலம்!
புகழொடு தோன்றிப் புவிமறைந்தார்! எங்கள் அகங்களில் வாழ்ந்திருக்கும் ஆசான்!- புகழ்நாமஞ் சூடிப் பிரிந்த சிவநா யகமையா நீடித்து வாழ்வார் நிஜம்!
யாத்ரா சார்பில் வெண்பாக்கள் 6ਹ6ਹਘ 95 963
52.
 
 
 
 
 
 
 

ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்
நிலம் பார்க்காது மேகம் என்றேன் பார்க்கும் மரம் பார்க்கும் மலை பார்க்கும் என்றாய்
நேற்று எழுதிக்கொண்டிருக்கும் நோட்டைப் பிடுங்கி கணக்கு நோட்டில் கவிதை எழுதக்கூடாது
சொல்லி முறைத்தாய்
விளக்கனைந்ததும் வெண்ணிலவே பாடினேன் மொதல்ல தீப்பெட்டி தேடுங்ககுத்தினாய்
அழும் குழந்தையைத் தோள் மீது சாய்த்து தேனே தென்பாண்டி. ஆரம்பித்தேன் கொடுங்க பால் கொடுக்கனுைம் வெறுப்பை நீட்டிக் குழந்தையை வாங்கினாய்
என்ன செய்ய யதார்த்தச் சேற்று வரப்பில் சறுக்காமல் எனக்கு நடக்கத் தெரியவில்லை
விழுந்து கையூன்றி எழும் மனசின் எதிர்பார்ப்பு அறிவாயா நீ
காதலனாய் இருந்த காலங்களில் மனசு மாறிட மாட்டிங்களே -சொல்லி கண்ணிரோடு கட்டியனைப்பாய்
அப்படியேதான் இருக்கிறேன் பெண்ணே அசாதாரணமாய் நேரும் அந்த அணைப்பு
எப்போதாவது வாய்க்குமென்று - مصسمصبحری ج?
நன்றி உனக்குப் பிறகான நாட்களில்
ޗަކް
女。

Page 29
இளநெஞ்சன் முர்ஷிதீன்
எங்கள் யாத்திரை அரசியல் பேசும் அதிகார போதை மாத்திரைப் LJT6)]60)60IUJT6ITTö(ShôG5[] LJTLD LéBL (6lĐ
மக்கள் பிரதிநிதித்துவத்தின் பெயரால் ஏரியா எம்பி மார்களால் ஏலமிடப்படும் இளைஞர்களுக்காகப் போராட்டம் நடத்தும்
எங்கள் யாத்திரைகளை ஈமானிய உணர்வுகளால் நாங்களே புனிதமாக்கிக் கொண்டிருக்கிறோம்
நாங்கள் வளர்பவர்கள் என்பதற்காக தலையைத் தடவுபவர்கள் தியாகிகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மயிரைக்கூடப் பிடுங்குபவர்கள் துரோகிகள்
எங்கள் யாத்திரையில் நாங்கள் அடையாளம் கண்ட போலி அடையாள அட்டையின் சொந்தக்காரர்கள் பலபேர்
இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதால் ஊக்கந்தர வேண்டுமென மேடையில் பேசும் பிரதிநிதிகள் எங்களுக்குத் தருவதோ தூக்க மாத்திரை
ܢ ̄ ، -1,7 54
 

UT
5
நாங்கள் கவிதைகளால் வாழ்த்த வேண்டும் அவர்கள் காசு சம்பாதிக்க வேண்டும் நாங்கள் மக்கள் மத்தியில் முழங்க வேண்டும் அவர்கள் பதவிகளில் அமர வேண்டும் நாங்கள் அல்லாஹற்வுக்காக என்று சொல்ல வேண்டும் அவர்கள் எங்களைக் குர்பான் பண்ணவேண்டும்
எங்களுக்கு நாயோட்டம் அவர்களுக்குத் தேரோட்டம் இப்போது அவர்களுக்குக் கொண்டாட்டம் தேர்தல் வந்தால் தெரியும் திண்டாட்டம்
எங்கள் யாத்திரையில் நாங்கள் எத்தனையோ பொய் முகங்களையும் எத்தனையோ பேய் முகங்களையும் கண்டிருக்கிறோம்
அப்பாஸிய கிலாபத்தை அலங்கரித்த ஆட்சியாளரின் பெயரைக் களங்கப்படுத்தும் சமூகப் போலிகளையும் சந்தித்திருக்கிறோம்
நாங்கள் புதிய மில்லேனியக் கனவுகளின் சொந்தக்காரர்கள் நாங்கள் முன்னோக்கி வைக்கும் அடிகளின் சுவடுகளை அழிப்பதற்கென்றே சுற்றித் திரியும் சுயநலக் கிருமிகளையும் பார்த்திருக்கிறோம்
இறை நம்பிக்கை நாட்டின்
தன்னம்பிக்கை நகரத்தின்
முயற்சித் தெருவில் வசிப்பவர்கள் நாங்கள்
சுதந்திரச் சிந்தனைகள் எங்களுக்குச் சமுத்திரம் எதிர் நீச்சல் எங்கள் பாய்ச்சல்
எத்தனை எரிமலைகளை நாங்கள் சந்தித்தாலும் ஒரு நாள் பனிமலைகளிலும் பயணிப்போம்
அதுவரை எங்கள் யாத்திரையில் எங்கள் பேனாக்கள் புதுப்புது அத்தியாயங்களை எழுதிக்கொண்டே இருக்கும்
55, !}; ff ჭყ; fr3
Öć

Page 30
M *
பஹீமா ஜஹான்
உனது தேவதைக் கனவுகளில் அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம் உனது இதயக் கோவிலில் அவளுக்குப் பூஜைப் பீடம் வேண்டாம் உனது ஆபாசத் தளங்களில் அவளது நிழலைக் கூட நிறுத்தி வைக்க வேண்டாம் வாழ்க்கைப் பாதையில் அவளை நிந்தனை செய்திட உனது கரங்கள் நீளவே வேண்டாம்
அவளது விழிகளில் உனதுலகத்தின் சூரிய சந்திரர்கள் இல்லை அவளது நடையில் தென்றல் தவழ்ந்து வருவதில்லை அவளது சொற்களில்
சங்கிதம் எழுவதும் இல்லை
அவள் பூவாகவோ தளிராகவோ இல்லவே இல்லை
காலங்காலமாக நீ வகுத்த விதிமுறைகளின் வார்ப்பாக அவள் இருக்க வேண்டுமென்றே இப்போதும் எதிர்பார்க்கிறாய்

உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய் நான்கு குணங்களுக்குள் அவள் வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய் அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள எல்லையற்ற உலகை உனக்காக எடுத்துக் கொண்டாய்
எல்லா இடங்களிலும் அவளது கழுத்தை நெரித்திடவே நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்
அவள் அவளாக வாழவேண்டும்
வழி விடு

Page 31
செய்திகள் பட சாதரச செய்திகள்
கல்முனை
கல்முனை புகவம் அமைப்பு யாத்ராவுடன் இணைந்து நடத்திய கவிதைப் பயிற்சிப் பட்டறை கல்முனை நகர மண்டபத்தில் 16.06.2000 அன்று காலை நடை பெற்றது. கல்முனை ராமகிருஷ்ண ம.வி. கல்முனை ஸாஹிராக் கல்லூரி ஆகிய வற்றின் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகளுக்கு புகவம் தலைவர் எஸ்.எம்.எம்.றாபிக் தலைமை வகித்தார்.யாத்ரா அறிமுகவுரையை இதழாசிரியர் நிகழ்த்த, ‘கவிதைத் துறையில் மாணவர் அவதானிக்க வேண்டிய அம்சங்கள் என்ற தலைப்பில் கவிஞர் அல் அஸஉமத் அவர்களும் ‘இலக்கியமும் மாணவர்களும்' எனுந்தலைப்பில் கவிஞர் டாக்டர் ஜின்னாஹ ஷரிபுத்தீன் அவர்களும் உரை நிகழ்த்தினர். தலைப்புகளுக்குக் கவிதை எழுதல்’ எனுந் தலைப்பில் பேசிய கவிஞர் கலைவாதி கலீல் அவர்கள்,கலந்துகொண்ட மாணவர்களுக்குத் தலைப்பொன்றைக் கொடுத்து, அவர்கள் எழுதிய கவிதைகளுக்குத் திருத்தங்கள் குறிப்பிட்டு விளக்கமளித்தார்.
vama"
::::: fit was
x,ஜ் 繆 அன்பு முகையதின் எஸ்.எம்.எம்.றாபிக்
செ.பேரின்பராசா எம்.எம்.ஜெஸ்மின் பத்திரிகையாளர் ஏ.எல்எம்.சலீம்
அதே மண்டபத்தில் பிற்பகல் இடம் பெற்ற விழாவுக்குக் கவிஞர் அன்பு முகையதீன் தலைமை வகித்தார். ‘காணாமல் போனவர்கள்’ கவிதைநூலை மருதூர்க் கொத்தன் விமர்சனஞ் செய்தார். அன்பு ரொஷான் அக்தாா'வயிற்றுக்கே உதவாத Y2K'என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். கவிஞர் அக்கரை மாணிக்கம், யாத்ரா இதழாசிரி யருக்கு இயற்றிய வாழ்த்துப்பா அச்சிடப்பட்டு சபையில் விநியோகிக்கப்பட்டது. பாவலர் பஸில் காரியப்பர், கவிஞர்கள் என்.ஏ.தீரன், மருதூர்அலிகான், டாக்டர். எஸ்.நஜ்முதீன்,கே.எம்.ஏ.அஸிஸ்.எஸ்.எம்.எம்.றாபிக்,ஏ.ஜி.எம்.ஸதக்கா, மருதமுனை விஜிலி, நவமணி பத்திரிகையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.பூமுதீன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டனர்.
墨汁な労sof ,' ی۔سہ^\ :tதிரf 3 、58X کلے
 
 
 
 
 
 
 

-۰عیچ
செய்திகள் L3 "தத் தர செய்திகள்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பர்றை மாவட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ‘யாத்ரா' மற்றும் ‘காணாமல் போனவர்கள்’ கவிதை நூல் ஆகியவற்றின் அறிமுக விழா அக்கரைப்பற்று கலாசார மண்டபத்தில் 17.06.2000 அன்று காலை நடைபெற்றது. வித்யா ஜோதி எம்.ஏ.உதுமாலெப்பையின் தலைமையில் நடைபெற்ற விழாவில் அக்கரைப்பற்றுப் பிரதேசச் செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.அப்துல் மஜித் கெளரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இx
ல்லாஹ்
கவிஞர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் விரிவுரையாளர் ரமீஸ் அப்து
வாலிப முன்னணியின் பிரசார உத்தியோகத்தர் ஏ.பி.தாவூத் வரவேற்புரை நிகழ்த்த முன்னணியின் மாவட்டச் செயலாளரும் கவிஞருமான அன்புடீன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.தென்கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹற் விமர்சன உரையை நிகழ்த்தினார். அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ், கலைமகள் ஹிதாயா மஜீத் ரிஸ்வி ஆகியோரினால் வாழ்த்துப்பா பாடப்பட்டது. கவிஞர் எஸ்.முத்துமீரான், எழுத்தாளர் மருதூாக் கொத்தன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மருதூர்க் கொத்தன்
கவிஞர்கள் அல் அஸமத், டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன், கலைவாதி கலில், மருதூர்க் கொத்தன் ஆகியோர் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்கள். முன்னணியின் பணிப்பாளர், சேவைத் தாரகை எம்.ஐ.உதுமாலெப்பை யாத்ரா ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்கிக் கெளரவித்தார்.
む7安女な3 .59 اصر
அல் அஸ9மத் கவைாதி கலீல் எஸ்.முத்து மீரான்

Page 32
செய்திகள் A g செய்திகள்
பிரதி நினைவப் பரிசு வழங்கும் சேவைத் தாரகை கவிஞர் பாலமுனை பாரூக் எம்.ஆஉதுமாலெப்பை, அருகில் அன்புடின்
S.
அப்துல் குத்தூஸ் சிறப்புப் பிரதிகள் வழங்கும் பிரதேச செயலாளர் ஹிதாயா மஜீத் ரிஸ்வி
88
பிரதேச முக்கியஸ்தர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் நிகழ்ச்சியைத் திறம்பட ஏற்பாடு செய்த வாலிப முன்னணிப் பணிப்பாளர் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்களுக்கும் கவிஞர் அன்புடீனுக்கும் விசேட நன்றியைத் தெரிவித்து யாத்ரா இதழாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை எம்.ஐ.அன்வர் தொகுத்தளித்தார்.
கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்
យffff3 50 عالمے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திகள் செய்திகள் மருதமுனை யாத்ரா அறிமுக விழா மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆராதனை மண்டபத் தில் கடந்த 17.06.2000 அன்று மாலை 5.30 க்கு நடைபெற்றது. மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல்.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் விசேட அதிதியாக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம். மஜீத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
வரவேற்புரையை ஏற்பாட்டாளர்கள் சார்பில் இலங்கை வானொலி வர்த்தக சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பஷிர் அப்துல் கையூம் நிகழ்த்தினார். யாத்ராவை அறிமுகம் செய்துவைத்தார் கவிஞர் கலைவாதி கலீல். சிறப்புரைகளை கலாபூஷணம் செய்யது ஹஸன் மெளலானா, கவிஞர் மு.சடாட்சரம் ஆகியேர் நிகழ்த்த, கருத்துரைகளைக் கவிஞர்களான ஜின்னாஹற் ஷரிபுத்தீன், அல் அஸஉமத் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் குறிப்பாக பஷிர் அப்துல் கையூம்,கவிஞர் விஜிலி,பத்திரிகையாளர் பூமுதீன் ஆகியோருக்கும் உரைகள் நிகழ்த்திய அறிஞர்களுக்கும் கலந்து சிறப்பித்த கவிஞர்கள், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினார் யாத்ரா ஆசிரியர். நிகழ்சியை ஏற்பாடு செய்தவர்கள் சார்பில், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார் கவிஞர் விஜிலி.
შეწყვეტაშკზ
நிகழ்ச்சியின் இறுதியில் 'மருதமுனை யாத்ரா வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
காப்பாளர்கள்: ஜனாப்.ஏ.எல்.மீராமுகைதீன் (அதிபர்- அல்மனார் மத்திய கல்லூரி) ஜனாப்:ஏ.எம்.ஏ.சமட் (அதிபர். ஷம்ஸ் மத்திய கல்லூரி) கவிஞர். திரு.மு.சடாட்சரம் (ஒ.பெ.உதவிக் கல்விப் பணிப்பாளர்) கலாபூஷணம்.எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யது ஹஸன் மெளலானா
தலைவர்: ஏ.எச்.எம்.மஜீத் (ஒ.பெ.உதவிக் கல்விப் பணிப்பாளர்) உப தலைவர்: கவிஞர்.ஐ.ஏ.ஹமீத் (முன்னாள் பிரதேச சபைத் தலைவர்) செயலாளர்: கவிஞர்.எம்.விஜிலி உப செயலாளா:கவிஞர்.எம்.எச்.ஏ.கரீம்
பொருளாளர்: கவிஞர்.எம்.ஏ.ஹஸன் நிர்வாகக்குழு: ஜனாப்.எம்.ஐ.எம்.றஊப், கவிஞர்.அறநிலா, புன்னகை வேந்தன், பி.எம்.ஏ.காதர், எம்.ஐ.வலித், ஏ.எச்.எம்.பூமுதீன்.
3 rig it ,2 .61 ہلر

Page 33
牙
குரை முட்கொப்பில் விழுந்த பட்டுத் தாவணி போல மிகவும் பரிதாபகரமானது
67607gol 6)|T6U/TQD|......
என்னை எரித்துச் சாம்பலாக்கிவிடவில்லை பிய்த்துப் பிய்த்துக் காயப்படுத்தி துன்புறுத்தினான் அவன் எனக்கு ஆன்மா இல்லையென்று அதுவும் மதம்பிடித்தவர்கள் சொன்னபோது நான் துடித்துப்போனேன் நான் காற்றோட்டமற்ற அறைகளில் பூட்டப்பட்டிருக்கிறேன். மிக இருண்ட யுகத்தின் மனிதர்கள் நான் பிறந்தபோதெல்லாம் உயிருடன் என்னைக் குழிதோண்டிப் புதைத்தார்கள்.
காலமே, எனது சூடான பெருமூச்சுக்களையோ எனதான்மாவின் விசும்பல்களையோ வெறுமையாகிப்போன
எனது வாழ்தல் பற்றிய
:ாத்ரr 3
கிண்ணியா ஹிதாயத்
முகாரி கானங்களையோ நீ செவிசாய்க்கவே இல்லை தாய் என்ற வகையில் இவையெல்லாவற்றையும் கூட நான் மன்னித்து விடுவேன் காய்ந்துவிட்ட சிவப்புப் பக்கங்களாய் இருந்தால் இல்லை.இல்லை ஆன்மாவுள்ள பிறவியாய் நீ இன்னும் என்னை அங்கீகரிக்கவில்லை இதுதான் என்னால் தாங்க முடியவில்லை
சலிமின் தந்தையே, கேட்டுக் கொள் வேண்டுமானால் உன்னாலும் என் சதையையும் எச்சிலையும் புசிக்கலாம் ஆனால் அனார்கலியின் பாதங்களுக்குக் கீழ் உன்னால் எட்டிக்கூடப் பார்க்க முடியாது ஏனென்றால் அங்கேதான் சுவனமிருக்கிறது
. ۔۔۔۔۔۔ `\ (62 /
 
 
 

dJ/s LS
வங்கிக் கூட்டில் அடைகாத்தக் குஞ்சு பொரிக்கும் கோழி
காசோலை நண்பனுக்கு உயிர் கொடுக்கும் தோழன்
அரச ஊழியர்களின் அமாவாசை நிலவு
ஊடுருவி உறவுகளைப் பகையாக்கும் நாரதர்
tnig.)
ஏ.எச்.எம் ஜிஃப்ரி
மானுடத் துயரங்களே பாடலாகிப்போன யுத்த யுகங்களில் மனித அவலங்களே எல்லையற்று விரிகின்றன
புரட்டப்பட்ட பக்கங்களாய் இழப்புக்கள் தொடர்கையில் இதமின்றித் துடிக்கிறது இதயம்
உறக்கத்தைக் கிழித்து எழுகின்றன ஒலங்கள்
ஒப்பாரிகளே ஒட்டியிருக்கும் s மானிடரின் வாழ்க்கை கையூட்டு விழாக்களில் கேள்விக் குறியாய் கலந்து சிறப்பிக்கும் வளைந்து போயிற்று பிரதம அதிதி
அமாவாசை இரவில் பதரை மணியாக்கும் நிலவைத் தேடுவதைப் போல்தான் ரசவாதி தேடவேண்டியிருக்கிறது
வாழககையை நாட்டுக்கு நாடு நாமத்தை மானுடத்தின் முகவரி மாற்றிச் சொல்லும் நவீன யுகத்தில் ஒரே இனம் புதைகுழியாகிப் போகிறது
சாதி சமய பேதமின்றி அடுத்த ೫ಣ್ಣ: சகலரோடும் பழகும் மாண்டுதான் போமோ? சோசலிஸ்ட்
ヘ・・-- リリ着労女#3

Page 34
( ) பாடலாசிரியர் அவர். அவர் வீட்டுக்கு எதிர் வீடொன்றில் வாழும் முழுநிலவொன்று ஒரு துண்டுக் காகிதம் கிறுக்கிச் சொல்லியதாம்; “ஆபாசமாக எழுதுகிறீர்கள், ஆடை கட்டிப் பாடுங்கள்” என்று. அதே துண்டின் மறுபக்கத்தில் நமது பாடலாசிரியர் எழுதியனுப்பி னாராம் இப்படி. “காய்ச்சிய பாலுக்குத் தானடி ஆடை காமத்துப் பாலுக்கு ஏனடி ஆடை?” (பாடலாசிரியர் படியிறங்கும் வேளை அம் முழுநிலவு, அத்துண்டைச் சுக்குநூறாகக் கிழித்து முகத்துக்கு நேரே விட்டெறிந்தது வேறுகதை)
() கிண்ணியாவில் ஒரு வரகவி இருந்தாரு. எஸ்.எஸ்.பாவா என்பது அவர் பேரு. குடை கட்டுவாரு. அந்நாளில் தகவல் ஒலிபரப்புப் பிரதியமைச்சராயிருந்த ஏ.எல்.அப்துல் மஜீது அவர்களிடம் சென்று வேலை கெட்டாராம் இவ்வாறு.
6Tib.5.
நீ எனக்கு முறைக்குத் தம்பி நானுன்னை நம்பி வெய்யிலில் கிடந்து வெம்பி இப்போ கட்டுகிறேன் குடைக் கம்பி.
0 சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கமானஆசான்அவர். பாடசாலையில் சிறு வகுப்பொன்றில் Art பாடம் நடத்த நுழைந்து, ‘இன்றைக்கு இலையொன்றைப் பார்த்து வரைவோம், பெரிய இலைகள் பறித்து வாருங்கள்” என்று இரு மாணவர்களை அனுப்பி னாராம். இலை பறிக்க வெளியே ஒடிய மாணவர்களைக் கண்ட பாடசாலை அதிபர் மாணவர்களை அழைத்து “எங்கே ஒடுகிறீர்கள்?” என்று அதட்ட‘ஆட்டுக்கு இலை பறிக்க..” என்றனராம் மாணவர்கள். ‘ஆட்டுக்கு இலை பறிக்கவா ஸ்கூலுக்கு வருகிறீர்கள், ஒடுங்கள் U வகுப்புக்கு” என்று அவர்களை விரட்டினாராம் அதிபர். لر N
r சந்தாதாரராக விரும்புவோர் வருடசந்தா 100 ரூபாவுக்கான காசுக்கட்டளையை
M.PSADHATH என்ற பெயருக்கு WATTALA தபாற் கந்தோரில் மாற்றத்தக்கதாக
அனுப்பி வையுங்கள். தயவு செய்து காசோலை அனுப்ப வேண்டாம். أص
ܥܠ
(அடுத்த இதழோடு யாத்ரா ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கிறது. யாத்ரா-4) முதலாம் ஆண்டு மலராக வெளிவரும். நீங்களும் அதில் பங்கு پهچـــہیے۔
கொள்ளுங்கள்.
ܢܠ
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக, மஹபாகே, சென்.மேரீஸ் றோட் , அல் அஸ9மத்தினால் அச்சிடப்பட்டு ஹுதா றோட், வாழைச்சேனையில் வசிக்கும் ஏஜ்எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
 

FFLD I soflu i Gosnismfullsor நிலவரம்
இப்னு ஜிஃப்ரி
எங்கள் தலைப்பாகைகள் மீது
ஏவப்பட்ட செவ்வரிவாளில் ரணம் விழுந்திருந்தது
மாஸ்கோ முதல் பீஜிங் வரை
சடவாதத்தினை சாமார்த்தியமாய் விதைத்த செங்கோட்டை குன்றின் பூமியில் குற்றுயிரானமை நினைந்து உள் உருகியதால் காலடியிலிருக்கும் இஸ்லாமியோதய நிலம் நோக்கி
ஓர் இரத்தக்காட்டேறிப்பாய்ச்சல் நிகழ்த்தியது
விண்ணிலிருந்து பொழிந்து முடிந்த குண்டு மழையில் க்ரொஸ்னிகளையிழந்தது கட்டிடங்களெல்லாம் வரலாற்றில் வாழ்ந்தவையான பிரமை தருகின்றன
இன்றில் ஆள் அரவமற்ற பூமியின் மீது விஸ்வாசம் இன்னும் விஞ்சியே நிற்கிறது முஜாஹித்கள் விடும் மூச்சில்
எனது முஜாஹித் சகோதரன் எதிர்ப்பலம் இராட்சதமேயாயினும் விஸ்வாசம் செழித்த பூமியில் சடவாதம் வீரியம் பெறும் நிஷடூரத்தின் முன் இருப்புக்கொள்ளமாட்டான் ஷாமில் பஸாயேவும் இப்னுல் கத்தாபும்
எமது நேற்றைய மறவர்களின் இன்றைய பிரதிபலிப்புக்களே!
அதோ. அன்று பத்ரில் எழுந்த தக்பீர் இன்று செச்னியாவிலும் கேட்கிறது

Page 35
- - -
LLL LL S L SLL L L L L L L L SLL L L SL LL SL LLLL LLLL LSL LLL LLLL LLL LLL LLLL
%ർ 74 3' ീt
7ஆ
Dispensing Chemists Film Rolls. Cosmetics,
圃 g
疆
223, Negoml ΜΑΤΤΑ SRI LAM
ph: 3)
a n . . . . s r. s r s so a one e s r. s r.
 

L L L L L LL S LLL 0 LLLL S S
தி:#?
·, Drug & Grocers Fancy J Baby items
bO ROad. \LA KA
-