கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவிஞன் 1970.03

Page 1
|
|- ( |-| ()
|-| | )
sae . . .
 


Page 2
KAVIGNAN Vol. IV.
Edited by M. A. Nuhman, For Readers Association Kalmunai Ceylon.

விஞன்
இந்த இதழோடு ஓராண்டுக்குரிய கவி ஞனின் நான்கு இதழ்களும் வெளிவந்து விட்டன. வாசகர்கள் காட்டிவரும் ஆதர வும் ஆர்வமும் கவிஞனைத் தொடர்ந்து வெளியிட முடியும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.
அடுத்த கவிஞன் ‘ம ஹா க வி யி ன் கோடை" என்னும் கவிதை நாடகத்தைத் தாங்கி அதிக பக்கங்களுடன் ஒரு தனி நூலாக வெளிவர உள்ளது. கோடை இது வரை தமிழில் தோன்றிய கவிதை நாட கங்களுள் பல அம்சங்களாலும் சிறந்த ஒன்ருகும்.
இனிவரும் கவிஞன் வெளியீடுகளில் ஒன்றுவிட்டு ஓர் இதழை ஒரு தனிக் கவிஞ ருக்காக ஒது க்கு வ து என் எண்ணம். மொத்தமாக ஒருவரின் படைப்புகளையும் அவரின் கவிதைக் கொ ள் கை களை யு ம் தெரிந்துகொள்ள அது உதவும். நமது வாச க்ர்களுக்கும் கவிஞர்களுக்கும் இது ஓரளவு திருப்திதரும் செய்தியே.
கவிஞனில் வெளிவரும் படைப்புகள் பற்றிய ஆக்கபூர்வமான விம்ர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும். பாராட் டுரைகளே எமக்கு அதிகம் வருகின்றன. எப்போதும் பாராட்டையே எதிர்பார்ப்பது படிைப்பாளிக்கு உகந்ததல்ல. விமர்சனத் துக்கு உட்படுவதற்கும் நம் ம வர் பழக வேண்டும். காமம் செப்பாது கண்டது மொழிவதே வளர்ச்சிக்கு வழிகோலும்,
-தொகுப்பாளர்.

Page 3
  

Page 4
கண்ணிர் உகுத்தேன் கடல் உப்பாய் மாறியதே விம்மி அழுதேன் மலைகள் வெடித்தனவே,
ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கு முட்டை வைத்தாய் கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன்.
வண்டில்கள் ஒட்டி மனிதர்க் குழைத்து வந்தேன்.
கையால் பிடித்துக் கரைவலையை நானிழுத்தேன்.
கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.
நெய்யும் தறியில் நின்று சமர்செய்தேன்.
சீலை கழுவி சிகையும் அலங்கரித்தேன்
வீதி சமைத்தேன்.
விண்வெளியில் செல்லுதற்குப் பாதை சமைக்கும் பணியும் பல புரிந்தேன்.

ஆனலும் குஞ்சுக்கு அரை வயிறு போதவில்லை காதல் உருகக் கதறி அழுது நின்றேன்
கதறி அழுகையிலே கடல் இரத்தம் ஆயினதே. விம்மி அழுகையிலே வீடெல்லாம் பற்றியதே.
கடல் இரத்தம் ஆகுமென்று கதறி அழவில்லை, வீடுகள் பற்றுமென்று விம்மியழவில்லை
ஆக் காண்டி, ஆக்காண்டி எங்கெங்கு முட்டை வைத்தாய், கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்தும் குடல் சுருங்கி நின்ருர்கள்.
பசியைத் தணிக்கப் பலகதைகள் சொல்லி வந்தேன்.
கடலை இறைத்துக் களைத்த கதை சொல்லி வந்தேன்.
வயலை உழுது மடிந்த கதை சொல்லி வந்தேன்.
கொல்லன் உலையும், கொடுந் தொழிற் சாலையதும், எல்லா இடமும் இளைத்த கதை சொல்லி வந்தேன்.

Page 5
சொல்லி முடிவதற்குள் துடித்தே எழுந்து விட்டார் - பொல்லாத கோபங்கள்
பொங்கிவரப் பேசுகின்ருர் :
"கடலும் நமதன்னை கழனியும் நமதன்னை கொல்லன் உலையும்
GSL கொடுந்தொழிற் சாலையதும் எல்லாம் நமது' என்ருர் எழுந்து தடி எடுத்தார். கத்தி எடுத்தார் கடப்பாரையும் எடுத்தார். யுத்தம் எனச் சென்ருர் யுகம் மாறும் என்றுரைத்தார். எங்கும் புயலும் எரிமலையும் பொங்கிவரச் சென்றவரைக் காணேன், செத்து மடிந்தாரோ?
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை பொரித்ததுவோ நாலு குஞ்சு. நாலு குஞ்சும் போர் புரிய நடந்து விட்டார் என்ன செய்வேன் ஆனவரைக்கும் அந்த மலைக் கப்பாலே போன வரைக் காணேன், போனவரைக் காண்கிலனே.
ஆக்காண்டி, ஆக் காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன்.

நாக. மகாலிங்கம்
பார்ப்பாட்டு
கும் மிருட்டு. கோடறுத்து வீழும் அதிகார மின் வெட்டு
கோவில் மணி
தூர அடித்துச் சிதறியது
அது
வீழ்ந்த குலத்தின் விடுதலைப் போர்ப்பாட்டு,

Page 6
மு. சடாட்சரன்
ஒரு மழைநாள்
மார்கழி மாதம் மழைவெள்ளம் போடாமல் ஆழுது வானில் அடர்ந்த கரும்மேகம்! ஆறேழு நாளாய் அடைமழையிற் காணுத சூரியனைப் பார்க்கச் சுகமாய் இருக்கிறது! கூனியிரு காக்கைமாங் கொப்பில் கரைகிறது. வானவில் ஒன்றும் மலர்ந்து தெரிகிறது.
பீலியினுற் கொட்டும் பெருமழையும் பேய்க்காற்றும் வேலியொடு வீட்டில் வெறிதீர்த்தும் ஒயாதோ? வீட்டுக் கதவெல்லாம் வீங்கி இழுத்தடைத்துப் பூட்ட முடியாது பொறுப்பாய் இருக்கிறது! தீயை உமிழாது தேய்ந்ததீப் பெட்டிகளும் காயாது வீட்டுக் கதவோரம் உள்ளனவே சங்கிலியைப் பிய்க்கச் சமர்புரிந்து மேற்பாயும் எங்களின் நாய்கூட இன்னும் எழும்பாது மூலைக்குள் கைகால் முடங்கிப் படுக்கிறது!
காலை மலருமுன் கண்விழிக்கப் பிந்திவிட்டேன். பாலுக் கழுமெனது பாலனெழும் முன், அவனின் சீலைகளைத் தோய்த்தால் சிரமம் குறைந்துவிடும்!
நீராய்க் கிடக்கும் நெடும்பாய் தலையணைகள் ஈர விறகும் எடுத்துலரப் போட்டிடலாம். கீரை கருவாடு கிழங்கை அரிந்தெடுத்து நீரள்ளிக் கொண்டு நெருப்பெடுத்தால் சோருகும். காயா விறகும் கசியும் அடுப்போடும் ஒயா தடைப்பும் உபத்திரவம் நீங்காதோ?

நேற்றிரவு முற்றுமென நித்திரையில் லாதுசெய்து வீரிட்டழுது வெறும்முலையைச் சப்பியவன் கண்ணயர்ந்து தூங்குகிருன் காற்றும் அடிக்கிறதே!
இன்னும் சிறுபொழுதில் எங்களுக்கே பாடுபடச் சென்றவர் என்மீது சீவனையே வைத்திருக்கும் அத்தானும் வந்திடுவார், ஆசை மகனழுதால் ஏசுவார் நல்ல இரக்கம் அவன் மீது!
பாசமெல்லாம் வந்து பறித்தெடுக்கும் தங்கமகன் சோற்றைக் கடைந்து சுவைக்கு ரசம்விட்டுச் சேர்த்துப் பிசைந்து சிறு°யக்’கில் வெந்நீரும் வைத்துவிடின் ஓடிவந்து வாய்மலரக் கூத்திடுவான்! கைத்த துயர், செல்வக் கனிவாய் மொழிகேட்டால் ஒடி மறையும் ஒருகோடி மைல் தூரம்!
வாடிக்கை யாகமீன் கொண்டுவந்து விற்பவனை ஏழெட்டு நாளாக இத்தெருவிற் காணவிலை. நாளைக் கடத்தல் நமக்குப் பெருந்துயரே!
மாலைவரை வானம் மழைபொழிய வில்லையெனில் பாலுக் கழுமெனது பாலன் மகிழ்ந்திருப்பான் வேலைசெய்யும் என் கணவர் வீட்டுக்கெழில் சேர்ப்பார் நாளைக்கிவ் வான் மிகவும் நன்ருய் வெளித்துவிடும்!

Page 7
எம். ஏ. நுஃமான்
அதிமானிடன்
I
எங்கும் இருட்டாய் இருந்தது. அந்தக் கங்குற் பொழுதில் கறுத்த வானிலே மின்னல் ஒன்று மின்னி மறைந்தது. மின்னலின் பின்னல் மிகப்பெரிதாக இடிஇடித்துக் குமுறி இரைந்தது! இடியின் ஒலியில் இருண்டு கிடந்த காணகம் அதிர்ந்து கலகலத்தது. யானைகள் பயந்து பிளிறி இரைந்தன. தாரகை போலத் தணலாய்ச் சிவந்த கண்களை உடைய புலிகள் உறுமின.
அடர்ந்த அந்தக் காட்டின் இடை, ஓர் இருட்டுக் குகையுள் இருந்தான் மனிதன், பரட்டைத் தலையன், பிறந்த மேனியாய்க் கையில் தடியுடன் காவல் இருந்தான்.
உள்ளே ஒருபுறம் உலர்ந்த விறகுகள் தணலும் சாம்பலும் ஆகக் கிடந்தன. காலையில் கொன்ற பெரிய பன்றியின் பச்சை மாமிசம் ஒருபக்கம் இருந்தது. சருகுகள் பரப்பிய தரையில் சற்றுத் தள்ளிக் குழந்தைகள் சயணித் திருந்தன.
பிள்ளைகள் கிடந்த இடத்தில் ஒருபால் மல்லாந்து கிடந்தாள் மங்கை; அவளின் இமைகள் மூடி இருந்தன; பெரிய சுமையாய்த் திரண்ட மார்பின் மீதில்ஒர் கைகிடந்தது. கழுத்தின் கீழ்மறு கைகிடந்தது. காவல் இருந்த மனிதன் அவளது வதனம் பார்த்தான். விம்மிக் கிடந்த மார்பை வெறித்தான். அகன்று கிடந்த கால்களின் இடை, அவன் கண்கள் மேய்ந்தன. கல்லில் குந்தி இருந்தவன் எழுந்தான்; இவள் அரு கமர்ந்து கட்டி அணைத்தான். கன்னம் முகர்ந்தான். மார்பினை வருடி அம் மனிதன் மகிழ்ந்தான்.
10

வெளியே, எங்கும் இருட்டாய் இருந்தது; அந்தக் கங்குற் பொழுதில் கறுத்த வானிலே மின்னல் ஒன்று மின்னி மறைந்தது. இடியும் மழையும் இரைந்து கலந்தன. கானகம் அதிர்ந்து கல கலத்தது.
II
பரந்து கிடந்த பசும்புல் வெளியில் மாடுகள் மேய்ந்தன. மனிதன் ஒர்புறம் நின்றுகொண் டிருந்தான், ஏதோ நினைவுடன். கன்று பசுவைக் கத்தி அழைத்த சத்தம் கேட்டது. தனித்த ஓர்மாட்டின் ஏரியில் நின்ற காகம் ஒன்றும் கத்தியது. அவன்தன் கைத்தடி கொண்டு குத்தி நிலத்தில் குழியுண் டாக்கினன்.
பரந்து கிடந்த பசும்புல் வெளியில் புற்கள் குறைந்து போய் - இப் போது நாட்கள் பலப்பல நடந்து விட்டன. ஆயினும் மனிதன் அவ்விடம் விட்டுப் போவதற் கின்னும் புறப்பட வில்லை. எங்கு போகலாம் என்பதைப் பற்றிய நினைவில் ஆழ்ந்து - அவன் நிலத்தைக் கிண்டினன். மாடுகள் இளைத்து வாடி இருந்ததைக் கண்ட போதவன் கண்கள் கலங்கின.
அகன்ற ஓர் மரத்தின் அடியிலே வந்து குந்தினன் மனிதன். குடிசையில் இருந்து வந்த அவனின் மனைவி, புதிதாய்ச் சுட்ட கிழங்கும் சுட்ட இறைச்சியும் தொட்டுக் கொள்ளச் சொற்ப தேனும் கொண்டு கொடுத்தாள். அவளும் அவனுடன் உண்கையில் வழிந்த உதட்டுத் தேனை நக்கிச் சிறிதே நகைத்தான் மனிதன். அவளின் இடையில் கட்டி இருந்த இலைகள் வாடி இருந்ததை கண்டான்; உடனே ஒடிச் சென்று பெரிய இலைகளாய் ஆய்ந்து அவளை அணியச் செய்தான்.
I

Page 8
III
ஆற்றிலே அலைகள் புரண்டன, மெதுவாய்க் காற்று வீசியது! கரையில் நின்ற மரங்களில் பூத்த மலர்கள் உதிர்ந்து ஆற்று நீரின் அலைகளில் மிதந்தன.
பச்சையாய்த் தெரிந்த பயிர் வயல் களிலே உச்சமான விளைவை உண்டாக்கப் பாய்ந்த அந் நீரில் பரிதியின் கதிர்கள் பட்டுத் தெறித்தன - பல அலங் காரக் கட்டி டங்கள் காட்சி அளிக்கும் ஓர் தெருவினை நோக்கி விரைந்த தேரிலே ஒருபுறம் மனிதன் உட்கார்ந் திருந்தான். மடியிலே அவனின் மனைவிக்காக வாங்கிய ஆடையை மடித்துவைத் திருந்தான்.
ஆடையின் மெதுமையைத் தடவிய போதில் மாதின் மேனியை வருடுதல் போல உணர்ந்தான்; உடனே உடல்சிலிர்ப் படைந்தான். காட்டுப் பாதையில் மலர்ந்து கமழ்ந்த பூக்களில் அவளின் புன்னகை கண்டான். வானிலே அவனது தேரை முந்திப் பறந்து சென்றஒர் பறவையும் கண்டான்.
வாசலில் வருவதும் வந்து பார்த்துப் பூசலுடனே உட்புறம் போவதும் ஆக நடந்தும் அலுக்கா அவளின் பாதம், பழுத்துச் சிவந்துபோம் என்பதை எண்ணிய போதில் இவன் மிக நொந்தான்.
‘பாகா ! இன்னும் வேக மாகப் போ, எனச் சொல்லி வெளிப்புறம் பார்த்தான். குதிரையின் வாயில் நுரைமிக வழிந்தது. அதை மிக அடித்து விரட்டினன் பாகன்.
IV
கறுத்த முகில்கள் வானில் கவிந்தன. இறுக்க மாக இருள்கையில் காற்றும் வேகமாக வீசிச் சுழன்றது.
12

கடலிலே அலைகள் குமுறி எழுந்தன. அலைகளில் மிதந்த அச்சிறு கப்பல் ஆடி அசைந்தே அமிழப் பார்த்தது. மூடி இருந்த உட்புறம் எங்கும் அலைநீர் புகுந்தது. அதனுள் இருந்த மனிதன் கப்பலை வளைத்துத் திருப்பினுன். நனைந்த வாறே நல்ல இருட்டில் பாய்மரக் கம்பம் ஏறிப் பணித்தான்.
அவளும் அவன்போல் நனைந்துபோய் இருந்தாள் கூதலும் பயமும் சேர்ந்து கொடுகினுள். ** என்ன? பயமா’’ என்ருன் மனிதன். * 'இல்லை' என்ருள் இவள்; அவன் சிரித்தான். *" கரைகாண் வரை நான் கப்பல் விடுவேன் அலையும் புயலும் அடிக்கினும் என்ன! பயப்பட வேண்டாம்' என அவன் பகர்ந்தான். கரை தெரியாத கடலிலே, அச்சிறு கப்பல் சென்றது கடும்புயல் இடையே!
V
வெயில் எறித்தது; வியர்வைத் துளிகளை மனிதன் விரல்களால் வழித்து நிமிர்ந்தான். விழித்த காலைப் பொழுதிலே இருந்து அழித்த காட்டிடை அதுவரை அமைத்த தண்ட வாளத் தொடரின் வழிஅவன் கண்கள் சென்றன: களைப்படைந் திருந்தான்.
தொலைவிலே, மேகம் துயின்று கிடந்த மலையினை அந்த மனிதன் பார்த்தான். அந்த மலையின் அப்பால் செல்லத் தண்ட வாளம் சமைக்கும் தனது திறமையில் ஒருகணம் பெருமிதம் உற்ருன்.
மலையினைத் துளைத்து வெடிமருந் துகளை அடைத்தபின் திரியினை அப்பால் இழுத்துச் சென்று, திரியினில் தீயினை வைத்தான். சீறி எரிந்த திரியினை விட்டும் தூர ஓடினன். தொலைவிலே உள்ள மறைவிடம் வந்ததும் மலையினைப் பார்த்தான்.
13

Page 9
தொலைவிலே மேகம் துயின்று கிடந்த மலையிலே வைத்த மருந்து வெடித்தது. கானும் மலையும் அதிர்ந்தபேரொலியிடை வானிலே கற்கள் சிதறிப் பறந்தன.
தொலைவிலே நின்ற மனிதனின் நெற்றியில் சிறியதோர் கல்லின் சிதறல் விழுந்தது. "அம்மா’ என்றே அவன் அதைப் பொத்தினன்.
"ஐயோ’ என்றே அவள் அவன் அருகே ஒடி வந்தாள்; ஒருகணம் அவளின் மெய்சிலிர்த்தது. மேனியில் கிடந்த துணியினைக் கிழித்து நீரிலே தோய்த்தாள். பிளந்த நெற்றியில் வழிந்த குருதியைச் சற்றே துடைத்துச் சுற்றிக் கட்டினள். * வலிக்குதா?’ என்றனஸ் மங்கை, *இல்லை" என்றே இவன்நகை செய்தான்.
VI
அந்தி சாய்ந்தது, அந்த வீட்டிலே வானெலி மெதுவாய்ப் பாடுதல் கேட்டது. குளியல் அறையில் அவன்குதா கலத்துடன் சவர்க்கா ரத்தைத் தாடியில் பூசினன்.
அடுத்த அறையில் அவள் அவன் பெட்டியில் ஒவ்வொன் முக உடுப்பினை வைத்தாள். வெவ்வே முகக் கிடந்த சப்பாத்தினைத் துடைத்தே ஒருபுறம் தூக்கி வைத்தாள். அவன் உள் நுழைந்தான்; ஆடையை அணிந்தான்; கழுத்திலே ரையைக் கட்டிக் கொண்டான்; தோளிலே கமரு தொங்க விட்டான்; வாயிலே சிகரட் வைத்த வாறு வெளியிலே வந்தான் - மென்மையான மணம்பர வியது அவளும் வந்தாள். காரிலே அவன், அவள் கைவிரல் நகத்தைத் தடவிய போதவள் சற்றே சிலிர்த்தாள்.
விமானம் எழுந்து மேலே பறந்தது. அவன் அவள் இடையை அணைத்துப் பிடித்தான். சன்னலின் ஊடே தரையில் தெரிந்த காட்சியை அவளைக் காணச் செய்தான்.
14

மேக மண்டல மெத்தையில் உராய்ந்து சென்ற, ஜெட் விமான நீள் புகைக் கோடுகள் நீல வானில் நெளிந்து தெரிந்தன. ஏழாம் திகதி இங்கிருந்து போய் ஆரும் திகதி அமெரிக் காவின் பட்டண மொன்றில் பகல் உண வுண்டார் ஜப்பான் அரங்கின் நாட்டிய நிகழ்ச்சியை அமெரிக் காவில் அமர்ந்தவர் கண்டார்.
VII
காலைப் பணியும் குளிரும் கலந்து விண்மீன் வெளிறி விடிகிற பொழுதில் வான் வெளிக் கப்பலில் மனிதன் அமர்ந்தான்.
கருவிகள் அனைத்தும் பரிசோ தித்தான் 'சரி இனி எதுவும் தாமதம் இல்லை. பேரொலி ஒன்று வெடித்துப் பிறந்தது. தீப்பிழம் பினது திரண்ட புகையிடை ஏவு கணையின் இயக்கம் நிகழ்ந்தது. நூறு கோடி டொலரைச் சுமந்து அப்பலோ பூமியின் அப்பாலாகி காற்று மண்டலம் கடந்து பறந்தது.
வான் வெளிக் கப்பலுள் மனிதன் இருந்தான். பூமியைச் சுற்றிப் புதிய திசையிலே மேல்கீழ் அற்ற வெளியிலே சென்றன். கரிய கம்பளத் திரையிலே பதித்த ஒளிமுத் துக்களின் இடையிலே ஊர்ந்தான். தொலைவிலே நீல மேகம் சூழ்ந்த மண்ணின் வடிவ வனப்பினைக் கண்டு உடல் சிலிர்ப் படைந்தான். உடனே தரையில் இருந்தவளுக்கும் இதனைக் காட்டினன்
வீட்டின் ஓர் அறையில் மேசைமுன் அமர்ந்து இரண்டரை இலட்ச மைல்களுக் கப்பால் சந்திரத் தரையின் சாம்பல் மண்ணிலே காலடி வைத்த கணவனைக் கண்டாள். ஏணிப் படியில் இறங்கிய போதவன் இதயத் துடிப்பை எண்ணிக் கணித்தாள். * தந்தையே’ என்று அவன் தனையன் அழைத்தான் "மகனே' என்றவன் மறுமொழி சொன்னன்.
15

Page 10
VIII
உலகைக் கையின் ஒருபிடிக் குள்ளே அடக்கிக் கொண்டு அதற்கப் பாலே விண்வெளி கடந்து வெளியிலே உள்ள கோளங் களிலே வாழ முனையும் பாதி மனிதனின் மற்றையப் பாதி வீதி தோறும் அலைந்து திரிந்தான்.
6T (
பரட்டைத் தலையும் பசித்த கண்களும் மெலிந்து தோன்றும் மேனியு மாக வீதி தோறும் அலைந்து திரிந்தான்.
தொழிற் சாலைகளின் உலைக்களங்களிலே வெந்து வெந்து மேனியின் வலிமை அனைத்தையும் யார்க்கோ அர்ப்பணம் செய்தான்.
கழனிச் சேற்றில் வியர்வையைக் கலந்து பொன்விளை வித்துப் போடிமார்க் களித்தான் பழைய கஞ்சியைப் பருகி இருந்தான்.
ஆலயக் கதவுகள் அவன் நுழையாது மூடிக் கிடந்தன -
முடிவிலே மனிதனின்
இரண்டு பாதியும் இருவே ருக முதிர்ச்சி அடைந்ததால் மோதிக் கொண்டன .
இளைத்த பாதியின் இதயத் துள்ளே உயிர்வாழ் தற்கோர் வேட்கை உதித்ததால் பூமியில் அவன்ஒரு போரிலே குதித்தான்.
தலையிலே பெரிதாய்த் தடிஅடி வீழ்ந்தது பிளந்த தலைமிகப் பெரிதாய் வளர்ந்தது
குண்டுகள் உடலைத் துளைத்துச் சென்றன துளைகளில் இருந்து அசுரர் தோன்றினர்
இளைத்த பாதியின் இதயத் துள்ளே உயிர்வாழ் கின்ற வேட்டை உதித்ததால் அவன் அதி மானிடன் ஆக மாறினன். மாறிய அந்த மனிதன் பூமியில் புரியும் போர் மிகப் பெரிதே!
16

தான் தோன்றிக் கவிராயர்
ழுதுவதேன் ?
6Taš7čkov
நான்
கண்டு பிடிக்க எழுதித் தரிப்பின் எது சாலும்?
என்னை
அவன்
கண்டு பிடிக்க எழுதித் தரிப்பினும் எது சாலும்?
அவனை நான் கண்டு பிடித்துக் கொள்ளவும் அவஃன அவன் கண்டு பிடிக்கச் செய்யவும் எண்ணி எழுதின் எதற்காகும்?
என நான் தேடிக் கண்டு பிடித்ததை எழுத, அதில், தன அவன் தாணுய்க் கண்டுணர்ந் தறியத் தமிழ் செய்வேன்!
17

Page 11
அன்பு முகையதின்
விழிப்பு
பட்ட கடனுக்காய் - தொழிலாளி பயந்தே உழைக்கின்ருன் வட்டிப் பணத்தினிலே - முதலாளி வாழ்க்கை நடத்துகின்றன்.
உணவுப் பொருட்களினை - அவன் ஒழித்துப் பூட்டு கின்றன் தினமும் உணவுக்காய் - தொழிலாளி தெருவில் அலைகின்றன்.
ஏழை படுந்துயரை - அவன் எங்கே உணருகிருன் வாழவைப்பவனை - நினையாது வாழ்க்கை நடத்துகிருன்.
என்ன உலகமிது - தோழா ஏன் நீ தூங்குகிருய்? உன்றன் உரிமையினை - உணர்ந்து ஓயாது போராடு.
நெஞ்சு கொதிக்கிறதே - உன்னை நினைக்கும் போதினிலே
அஞ்சிநீ ஓடாதே - இனியும் அடங்கிக் கிடக்காதே!
18

பாண்டியூரன்
இதய நோ !
மனத்திலே வளரும்தீயை மடியிலே கட்டுகின்ற சனத்திலே ஒருவன், என்றன் சாதியோ மனித சாதி. இனத்தினுல் இணைந்ததாலே இகத்தினுக்(கு) உற்ற இன்னல் எனக்கு நேர்கின்றதாக இதயநே எடுக்கு திங்கே.
இதயமுள்ளோர்கள் அங்கே இல்லையோ..? நைசீரியா புதைகுழி நிரப்புகின்ற போர்க்களம் ஆவதேனுே? சதைகளை அரிந்தே அன்னர் சஞ்சலம் துடைப்பதற்குப் பதைபதைக் கின்றதுள்ளம் . . படைக்கலம் கண்ணிராமோ?
நீர்ப்பசை யற்று மண்ணில் நிற்கிற காரை முட்போல்
போர்க் கொடுமையால் என்பு புறப்பட நிற்கும் சேயை . . மார்க்குடத் தமுதில்லாமல் மாண்டதாய் வரஸ் முகத்தைப் பார்க்கையில் மூளுந்தீயைப் பாரெனும் அடுப்பில் வைப்போம்!
19

Page 12
விளைவிலே உயர்ந்த நெல்லை விதைத்துவிட்டார்கள் அந்த உழவர்கள்;
ஒம்புதற்கு ஊரணிக் குளத்து
நீரைக்
களனியிற் பாய்ச்சினுலும் களை மலிந்(து) உள்ள தாங்கு இழவு தேர்கின்ற போழ்தில் உழவன் கை இரும்பாகாதோ?
கீரையை வளர்த்திரண்டு கிளரிலைப் பருவத்தில் நீர் வார்ப்பதே யன்றித் தீயை வார்ப்பவர் மலிந்து விட்டார்! பார்த்திருப் போரே யிந்தப் பாரிலே பனேகர்! சீச்சி, வார்த்தையை விடுக; வெந்த மனத்தினுல் வாட்கள் செய்வோம்!
மாண்டவர் வதனப் பூவை LD6öö7 LD J56ír மருவட்டும்! பின் ஈண்டுள மனித யாக்கைக் கிருக்கிற குருதிச் சொட்டும் ஆண்டு செய் அழிவுப் போரின் ஆணிவே ரறுத்துப் பாய்ந்து வேண்டுவ வேண்டுவாங்கு வென்றிட விழையட்டும் சா!
20
Ο

மு. பொன்னம்பலம்
திப்பீடு
எனக்கோ வயது இருபத்தைந் தாகிறது. வாழ்க்கை இதுகால் வரைத்த வரலாற்றை மீட்டுச் சுவைத்து மதிப்பீடு செய்கின்ற வேட்கை எனக்குள்ளே விம்மி எழுகிறது. ஏட்டை எடுப்பேன் எழுதிக் கணக்கெடுக்க.
அணைந்த நெருப்பாய், அவிந்த குமிண்சிரிப்பாய் காற்றில் கலந்தஎன் கால்நூற்று ஆண்டாளே, பாலை மணலில் பதிந்த அடிச்சுவடாய் தூர்ந்து தெரிகின்ற காலச் சுவடுகளே, நீங்கள் எனப் பிரிந்து நீள்தூரம் செல்கின்றீர், போங்கள். இதுகால் புணையாய், அலைகடலாய் வாழ்ந்து எனக்கு வரலாறு தந்திப்போ போகின்றீர். நானே, பொருமி எழுந்தெதிரே எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே குந்தியிருக்கும் ருெ பின்சன் குறுசோப்போல் பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற ஒர்தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.
நீரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின் ஒரத்தில் ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பில் தன்னை இனங்கண்டு தாவும் மனப்பேடு.
என்ன. அது? வாழ்வின் இலக்கோ? கலைத்துடிப்பின் சின்னக் கனவுலகோ? சீர்பெற் ருெளிர்கின்ற - முன்னர் ஒரு கவிஞன் போக முனைந்திட்ட - ** எல்டொறடோ' என்கின்ற இன்ப மணிப்புரியோ?
ஏதோ அறியேன். இழையாய் முதுகெலும்பின் கோதில் உருள்கின்ற குன்றி மணித்துடிப்பில் பீறியெழும் மின்னல் பெருக்கின் நொடியில் அவை எல்லாம் புரியும்; இருந்தும புரியாது. மல்லாந்து அங்கே கும் மார்க்கம் அறியாது பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற ஓர் தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.
21

Page 13
நானேறிப் பாயிழுத்த நாவாய் அனுபவத்தின் போதாக் குறையாலோ பிஞ்சில் பழுத்ததிலோ மோதுண்டு கல்லில் முடமாய் ஜடமாகி ஒரம் கிடக்கிறது. ஒய்ந்து தனிமனுவாய் குந்தி யிருக்கும் ருெ பின்சன் குறுசோப்போல் நானிங்கு. ஏதேனும் நாவாய் வருஞ் சிலமன்.?
ஆவல் விழியீற்றில் ஆட, அடிவானம் கூவும் மெளனக் குரலில் உளம் ஒட. காத்துக் கிடக்கின்றேன், காலம் வரும்வரைக்கும்.
பாட்டில் விழுந்த பழைய வியாபாரி ஏட்டைப் புரட்டி இதயத் திருப்திக்காய்ப் பார்க்கும் பழங்கணக்காய், நானும் பழையவற்றின் ஈர்ப்பில் மனதை எடுத்து நடக்கின்றேன்.
அம்மா எனும் அந்த அன்பு மலைக்கோயிற் சன்னிதியில் நான்முன்னர் தாவித் தவழ்கையிலே என்ன நினைவையவள் என்னில் செதுக்கினளோ? சோறுாட்டி, வானம் தொடுத்த மலர்ச்சரத்தின் ஊர்காட்டி, அன்பு ஒழுக்கி வளர்த்த அவள் என்ன நினைவையெலாம் என்னில் செதுக்கினளோ?
என்ன நினைத்திருப்பாள்? என்றன் மகன் பெரிய
மன்னணுய், காரில் மதிப்போடு மாற்ருரின் கண்ணில் படவாழும் காட்சி வழியிலவள்
என்னை நிறுத்தி இறும்பூது எய்திருப்பாள்.
என்ன பிழை? இற்றைச் சமூக இயல்புகளின் சின்னம் அவள். வேறு சிந்தை அவட்கேது?
பாவம், ஒய்! என்னை நிதம் பள்ளிக் கனுப்பியவள் மோகமுற, நானே முருங்கை மரக்கிளையில் காகம் இருந்து கரையும் அழகினிலும், வேகமுடன் காற்று விரைய நிலமிருந்து சேவல் உதிர்த்த சிறகு மிதப்பதிலும், அண்ணந்து பார்த்தாலோ அங்கே கரும்பருந்து பண்ணுய் விசும்பில் படரும் சுருதியிலும் ஏதோ கனவை இயற்றத் தொடங்குகிறேன்.
22

பள்ளியிலே ஆசிரியர் "பேயா, உனக்கிங்கு கல்வி வராது! களிமண்ணே மூளை" யென அன்னர் திருமொழிக்கு அப்பழுக்கு நேராது கண்ணன், சிவபெருமான், காராம் பசுவெல்லாம் மண்ணில் சமைத்தேக, மாணவர்கள் கொண்டாட ஆதிச் சிவஞர் அடிநுனியைக் கண்ட, புது மாலயனுய் என்றன் மனது சிறகடிக்க.
அந்தி அடிவான், அமுதக் கடைசலென குந்தி யெழும்நிலவு, பூவரசங் குழையூடாய் சிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற காலைப் பரிதி, ககனச் சிறுபறவை, * ஏலோ’ என நீர் இறைப்போர் - இவையெனது பிஞ்சு மனதைப் பிசைய, மறுகணமே பெஞ்சில் எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம் நெஞ்சில் புரண்ட நினைவுக்குத் தொட்டிலிட.
என்ன விதமாய் இளமை மறைகிறது!
கன்னக்கோல் இட்ட களவாய், நெருப்புற்ற பொன்னுருக்காய், மின்சிரிப்பாய், போகந் தருந்திகிலாய் சின்ன வயது சிறகடிக்க, நான்பெரிய மன்னணுய் அல்ல அல்ல, மண்டூகம் என்கின்ற பட்டத்தை வாங்காக் குறையாய் படித்தந்த **எஸ்எஸ்ஸி" என்னும் இடறும் பரியின் பிடரி பிடிதேறி - பின்னங்கால் தந்தஉதை இன்னும் விலாநோ க - எப்படியோ தொத்தியதில் வெற்றி முழக்கமிட்ட வீர வரலாறு.
தூர ரயில் கூவும். தொத்துதற்கு முன் அம்மாள் ஈர முகம் நோக்கி, "எல்லாம் சரி"யென்று கூறிப் பிரிந்து கொழும்பு நகர்வந்தால், ஏதோ கடையில் இருந்து கிறுக்குகின்ற மாதம் வயிற்றை நிரப்பும் ஒருவேலை.
போதாதா? என்னைப் படைத்தோன் படியளந்தான். வாழ்கஅவன். வேலை முடிந்து அறையடைந்து பாட்டில் விழுந்து முகட்டில் விழிபதித்தால், ஒட்டு ரயிலாக ஒடும் எலிக்குஞ்சு நீட்டு ரயிலாய் நெளியும் ஒருசாரை
23

Page 14
வேட்டை அடடா, இது கால் விழுந்திருந்த **தொட்டில் பழக்கம்" சுரீரென்று பற்றியெழச், சிற்பி ஒருவன் செதுக்கத் தொடங்குகிருன். எட்டாக் கணியாய் இருந்த நிலாப்பேடு, கொட்டும் மழை, விண் குடையும் பிரளயங்கள், மொட்டாக்கில் வாழும் மரும முடிச்சுக்கள், கிட்டாப் பொருளாய்க் கிடந்து கரங்காட்டும்.
எல்லாம் எதிர்வந் திரங்கிக் கரங்சுப்ப சொல்நுழையா ஊரெல்லாம் தேரோட்டி அங்குலவி வில்லாள ஞய்அகிலம் வென்ற களிப்போடு மீண்டும் உலகிறங்க, முன்ன லுளயன்னல் வாங்கும் நிகழ்வில் விழிபோய் நனைகிறது.
என்ன சனங்களிவர்? ஏதோ வெறியில் கடலைச் சிதறலென கால்போன போக்கில் உடலை நடத்துகிருர், ஓவென் றிரைந்தவரைத் தின்று பசியாறத் திரியும் அசுரக்கார் வண்டியினம். நித்தம் வாய் பிளந்து கொக்கரிக்கும் வானெலிகள். ருேட்டில் விழுந்து புரள்கின்ற.. கூனல், முடம், நொண்டிக் குப்பை - இவற்றுள்ள என்ன நினைப்போரார்?
எனக்கே எனதுருவம் கொன்னை நினைவாய்க், குருடாய்க், குறைச்சிலையாய்த் தன்னை இழந்தழிய, தாவி வெளியுலகக் குப்பைக்குள் நானும்போய் குன்றி மணிபொறுக்க ஆயத்தம் ஆகின்றேன். அப்போதான் அங்கவளைச் சந்தித்தேன்.
ஐயா, நம் சங்கத் தமிழ்க் காதல் வந்ததுவோ எச்சில் வடிய, ஒருதலை யாய் - வாடாமல் சட்டை அணிந்து, தலைமயிரை நீரோடு எண்ணை நிரவி நிமிர்த்திவிட்டு, மாதாந்தம் பெற்ற வருவாயில் மண்வீசி, ஓடோடி நாளும் உரோமம் சிலிர்த்தெழும்பக் காதலித்தால் - அந்தக் கனகி புரிந்த வினை வார்த்தைக் கடங்காத வானச் சிதறல்களாய், பூச்சரமாய் ஆச்சரியம் புரிந்து, சிலநாளில் புஸ்வாண மாகப் புரியாத் துயரத்தில் மூழ்கி அடியேன் முணுமுணுக்க,
24

ஒர் கடிதம் அம்மா அனுப்புகிருள்: ‘'என்றும் சிவபெருமான் முன்னிட்டு வாழுற மோனுக் கெழுதுவது., இங்கு கடன்காரர் என்னை நெருக்கீனம். சுப்பன் எடுக்கவும் காசில்லை, ஏதேனும் பாத்தனுப்பு. இப்படிக்குன் தாயார்' என்றந்தக் கடிதம் கதைக்கிறது. கர்ம வினையால் நான் விடிய அவள் வயிற்றில், வீணே என நம்பிக் காலம் கழிக்கின்ற கட்டுப் பிணிப்பையெலாம் நாயாய்க் கழிக்கும் நமைச்சல் எனக்குள்ளே. ஆணுலும் ஏதோ அனுப்பித் தொலைக்கின்றேன்.
காதல் ஒடிந்துவிழக் காமம் தலைதூக்கும்.
சேலைச் சரசரப்பு, சின்ன இடை, காற்ருல் மேலெழும்ப ஆடை அதனுள் மினுங்குகிற வாழைத் தொடைகள், வயிற்றின் இடைவெளியில் ஆளுக்கு எதையோ அருட்டி விட, நானே எனக்குக் குருவாய் இருந்து படித்த வித்தை உத்தி பலவுண்டு தவிக்கு. அவைவிரிச்கின் உட்பிரிவு கடும். உமக்கேன்? - இவையென்னை ஆட்சிபுரிந்து அளந்த திரவியங்கள்.
அம்மி இருந்து அகன்ற இடமாயென் கன்னங் குழியோட, கண்டால் என தம்மா *" கோதாரிப் போவான்கள்” என்று கொழும்பூரில் சோருக்கிப் போட்டோரைத் திட்டித் தொலைத்திருப்பாள்.
இப்படியாக இனிமை எனக்களித்துக் காலங்கள் வேப்பமரக் காயாய் உதிர்கிறது. ஏனப்பா மேன்மேலும் இந்தச் சனிவாழ்க்கை? நானெப்போ என்னை நசுக்கித் தொலைத்திருப்பேன்.
ஆனல் முடிகிறதா? அந்தக் கருவானின் கூனல் முடிவில், குதிக்கும் ஒரு சுழிப்பில் ஏளுே இதயம் இழைய, மறுகணமே இங்கு வதிகின்ற எல்லா உயிரினமும் என்கீழ் இயங்கிவர, இப்பார் முழுதையுமோர் சங்காய் எடுத்தூதும் சக்தி எனக்கேற.
25

Page 15
அன்ருெருநாள் கேளும், அருமையாய் என்பேரில் தந்திவரும் 'அம்மா சாகக் கிடக்கின்ரு வந்துபார்' என்று, வயிற்றில் அடித்தபடி ஒடுகிறேன். அங்கு உருவம் அழிந்தம்மா கட்டிலிலே என்செய்வேன். காசம் அவளுக்கு.
முட்டிச் சுவரோடு மோதி அழுகின்றேன்.
வட்டிலிலே சோறு வழங்கி எனையணைத்த பட்டுச் சிறு கரங்கள், பார்த்த மறுகணமே ஒத்தித் துயரை எடுக்கும் ஒளிவிழிகள், வற்றிக் கிடந்தாலும் வந்து எதிர்நின்ற என்னை இனங்கண்(டு) இறக்கை அடித்திட்ட இந்தக் கணப்பொழுதில், ஆமய்யா, என்னேடு இந்த உலகே இதுகால் இழைத்திருந்த பாவமெலாம் நீங்கிப் பரிசுத்தம் பெற்றிருக்கும்.
எல்லாம் முடிகிறது. எங்கோ நெடுந்தொலைவில் மல்லாந்து, அம்மா மரணத் துணையோடு சொல்லாட, நானே சுருண்டு கொழும்பூரில். எல்லாம் முடியும்.
இளைய பரம்பரையின் செல்வன் இது கால்நான் சேகரித்த கையிருப்பை எண்ணிக் கணக்கிட்டேன். ஏ, என்னை விட்டோடும் காலக் கொழுந்துகளே. கையொடிந்து இங்கேநான் எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே குந்தி யிருக்கும் ருெ பின்சன் குறுசோப்போல் பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற ஒர்தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.
தூரத்தே அந்தச் சுழிப்பின் ஒளியாட்டம். ஏதேனும் நாவாய் இனியும் வருஞ்சிலமன். p
26

முருகையன்
ஆணவம்
பாட நான் அறியேன். ஆயினும், தனியே பதையில் வருகிற போது, கூடவே எவரும் இன்மையால், எனது குரலினை எடுத்தனன் பாட.
ஓடிவந்தென்னுள் உந்திய கலிப்போ உயர் இசையாய் வெளிப்படாமல் பீடுசால் பேச்சாய்க் கிளம்பவும், எனக்குட் பேசினேன், கூசுதல் இன்றி.
கூசுதல் இன்றிப் பேசிய என்னைக் குறித்து நோக்கிய சில நண்பர் ஏசினர், பற்றி இழுத்தனர்; அறைக்குள் இட்டனர்; பூட்டினர்; போனர்.
சீசி! அச் சிறைக்குட் கிடக்கிறேன், இன்னும், சிறுமைகள் காணினும்,
முழங்கும் ஆசையை அடக்கித் தவம் புரிகின்றேன், ஆணவம் நலிவதன் பொருட்டு?

Page 16
ஜிவா - ஜீவரத்தினம்
உன்னைப்போல் நானும்
ஒருமுறை சாகவேண்டும்
மூத்தப்பா செத்தா போனுய்? மூடர்கள் உன்னை நன்கு பார்த்திருந் தார்களானற் பச்சையாய்ப் போய்யே சொன்னர்! வாத்தியார் போல, வாலா மணி, வெள்ளை வேட்டி, சால்வை நேர்த்தியாய் உடுத்தி யுள்ளார்; நீ புது மாப்பிள் ளை தான்.
ஆயிரம் ஆண்டு காலம் அப்பனே, நீவாழ்ந் தாலும் நாயினைப் போலத் தானும் நம்மையார் நடத்து வார்கள்? போயிற்றுன் சீவனென்றுன் பொன்னச்சிக் கிழவி சொல்ல ஆயிற்ரு? பாவம் , என்றே அடுத்தவீட்டாரும் வந்தார்.
கச்சைதான் கட்டு தற்கும் கால்முழத் துண்டு மின்றி எச்சிலைப் பொறுக்கி வாழ்ந்தோம். இரங்கினர் எவரும் இல்லை. பச்சையாய் நம்மைத் திட்டிப் பழித்தவர் எல்லாம், உன்னை மெச்சிடும் படியாய் இன்று மேதையாய் மாறி விட்டாய்.
28

முந்தநாள் வீட்டுக் குள்ளே முனகினய் கிடந்து யாரும் வந்தனரில்லை; வந்து வைத்தியம் பார்த்த தில்லை! நொந்துநொந் தழு தாய், அன்பு நோக்கினைக் கண்டாய் இல்லை. இந்தநாள் ஒன்றே வாழ்வின் இனிமையை நுகரு கின்ரு ய்!
உன்னைப்போல் மூத்தப்பா, நான் ஒருமுறை சாக வேண்டும்; பொன்னைத்தான் ஈடு கேட்கும் போடியார் கூட வந்தே என்னைத்தான் மனிதனுக இருப்பவர்க் குரைக்க வேண்டும்! உன்னைப்போல் நானும் அன்ருேர் உயர்ந்தவன் ஆக வேண்டும்.
29

Page 17
நான்கு அமெரிக்கக் கவிதைகள் - சசி.
*முப்பது ஆண்டுகள்
-எட்கார் லீ மாஸ்ற்றேஸ்
மரத்தடியில் பாட்டன் இருக்கின்ருர்; கண்ணில் அரைத்தூக்கம்.
பையன் மிதக்கின்ற வெண்முகிலைப் பார்த்துப் பசும்புல்லில் கிடக்கிருன் . கிட்ட ஒர் காக்கை கரைகிறது. விட்டு விட்டு ஒர் குருவி மெல்ல இசைக்கிறது. தூரத்தே மேயும் பசுவின் கழுத்துமணி ஒசைகளும், விப்லியின் குன்றில் உழுகிறவர் பேசுவதும் கேட்கிறது.
பின்னல் ப்ழத் தோட்டம். வேனிற் காலத்து அமைதி விளங்குகிற காடு அதற்கப்பால்.
ஒற்றைக் கரத்தை யொன்று தானியத்தை ஏற்றித் தடதடத்து அட்பறிக்குப் போகிறது.
தோட்டப் புறமிருந்து ஓர்கிழவி கூடை நிறையப் பழங்கொண்டு போகின்ருள். ஆமாம், மரத்தடியில் பாட்டன் அமர்ந்தபடி தூங்கி விழுகின் ருர்,
பையன் தொடர்ந்து மிதக்கின்ற வெண்முகிலைப் பார்த்தே பசும் புல்லில் கிடக்கின்றன்.
நெஞ்சைக், கிளறும் புரியாத ஆசைகளை மோந்துமோந்து அந்த முகில்களையே பார்க்கின் முன்; வையம் படர்ந்துளது - ஏங்குகிருன் . .
முப்பது ஆண்டுகள் சென்றன.
அப்பையன் வாழ்வினல் தேய்ந்தங்கு மீண்டும் வருகின்றன். அந்தப் பழத்தோட்டம், அந்தப் பெருங்காடு, அந்தச் சிறுவீடு, எல்லாம் அழிந்துளது. பாதை முழுதும் படபடத்து ஓடுகிற வாகனத்தால் தூசு - மறைந்த அக் குன்றையே ஆசித்தான் இப்போதவன்
Jonathan Houghton.
30

காற்றும் வெள்ளியும்
-அமி லோவல்
மெலிந்த வானில் மிதக்கின்ற இலையுதிர் காலத்து நிலவு பளிச்சென்று ஒளிர்கிறது.
மீன் உள்ள குளங்கள், நிலவு படும் போதுதம் முதுகினை அசைத்து விழிப்புள்ள செதில் ஒளியை வீசுகின்றன.
தவறியது
--கார்ல் சேன் பேர்க் இரவு முழுதும் நதியின் மீது பணியும் புகாரும் தொங்கிப் படர்கையில் , தன்னந்தனியே கண்ணிருடன் குழம்பி வழிதவறிப் போன குழந்தை போல ஓர் படகின் ஊதல் ஒலி துறை முகத்தின் மார்பையும் கண்களையும் தேடி இடைவிடாது கத்தி அழைக்கிறது.
ஆறுதலான ஒரு மா?லப்பொழுது
-உவால்ற் விற்மன் ஒருவார உடல் வேதனை - ஒய்வின்மை நோவு - காய்ச்சலின் வெம்மை - இவைகளின்பின் நாள் ஒன்று முடிந்து பொழுது சாய்கின்ற போது ஒர் அமைதி - ஓர் ஆறுதல், மூளைக்கு மூன்று மணி நேர ஓய்வு - இதம் - ஒழிவு - சுகம்.
உவால்ற் விற்மனின் கவிதை அவருடைய 'Leaves of grass' என்னும் தொகுப்பிலிருந்தும் மற்ற மூன்றும் “Modern American poetry” என்ற தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டன.
31

Page 18
சண்முகம் சிவலிங்கம்.
இன்றையத் தமிழ் கவிதைபற்றிச் சில அவதானங்கள்
IV
முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற் றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதான மானவை என நான் கருதுவது புலப்பட்டிருக்கும். வாழ்நிலையின் அடியாக எழும் கவிதைகளைப்பற்றியே இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியுள்ளது. எனினும் அதற்குமுன்னர் இன்னுமொரு விஷயத் தைத் தெளிவு படுத்திக் கொள்ளுதல் நன்று.
ஆரம்பத்தில் நாங்கள் பெரும்பாலும் இரண்டு காரணங்களை அல்லது இரண்டிலொரு காரணத்தை முன்னிட்டே கவிதைகள் எழு தத் தொடங்குகிருேம்: ஒன்று, கவிதை என்ற இலக்கியவடிவத்தில் நமக்கு ஏற்படும் கவர்ச்சி. இது சிலருக்கு செய்யுள் என்ற மொழி யுருவத்தில் ஏற்படும் கவர்ச்சியாக அமைதலும் உண்டு. மற்றது, கவிதை அல்லது செய்யுள் எழுதுதல் ஒரு பெரிய விஷயம் என்றும் அதை எழுதுகின்றவர்களை மற்றவர்கள் விசேஷமாய்க் கனம் பண்ணு கிருர் கள் என்றும் ஒரு அபிப்பிராயத்திற்கு உட்படுதல், கவிதை படிக்கின்றவர்களின் தொகை மிகவும் குறைவு என்று நாம் எவ் வளவு கூறிக்கொண்ட போதிலும், “கவிஞர்" என்ற அந்தப் பட் டத்திற்கு நாட்டில் உள்ள கவர்ச்சி நாம் அறிந்ததே. சிறுகதை எழுதும் ஒருவரை அல்லது நாவல் எழுதும் ஒருவரை ஒரு கூட்டத் தில் பேச அழைக்கும்போது, நிகழ்ச்சிநிரலில் அவருடைய பெயருக்கு முன்னலோ அல்லது பின்னலோ சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்று போடவேண்டிய நிர்ப்பந்தம் நமக்குஇல்லை. ஆனல் கவிதை எழுதுகின்ற ஒருவரின் பெயரை ஒரு நிகழ்ச்சிநிரலிலோ, அல்லது அதைப்போன்ற வேறெதிலோ போடநேரு போது, நாம் அதிகமாக யோசிக்கிருேம் - “கவிஞர்" என்று முன்னுக்குப் போடாமல்விட்டால், கோபித்துக் கொள் வாரோ, என்னமோ என்று. அதேபோல பத்திரிகை. யில் சிறுகதை அல்லது தொடர் கதை ஒன்று வெளி வரும் போது, அதை எழுதியவரின் பெயரின் முன்னலோ, பின்னலோ எந்நேரமும் சிறுகதையாசிரியர், அல்லது நாவலாசிரியர் என்ற ஒருவகையான டெசிக்கினேஷன் ஒட்டிக்கொண்டிருப்பதை நாம் காண்பதில்லை. ஆனல் கவிதிை எழுதியவரின் பெயரின் முன்னுல் மாத்திரம் பல தடவைகளில் அந்த டெசிக்கினேஷன் ஒட்டப்படுவதைக் காண் கிருேம். கவிஞர் என்பவர் ஒரு தனிச்சொரூபம் என்பதுபோல் ஆகி விடுகிறது. ஆனல் பிறமொழியாளர்களிடம் இத்தகைய கவிஞர் சொரூபமோ, கவிஞர் என்ற பட்டத்தில் இத்தகைய கவர்ச்சியோ இல்லை என்பதைக் காணும்போதுதான் நமது கவிசிரோன்மணிகளுக் குள்ள பேராசையின் அவலம் தெரிகிறது.
இவ்வாருன இரண்டு காரணங்களினலும், அல்லது இரண்டில் ஒரு காரணத்தினுல் கவிதை எழுதத் தொடங்குகின்ற நாம் கவிதை 32

யைப்பற்றியோ அல்லது கவிதை எழுதும் உத்திநுணுக்கங்கள் பற்றி யோ... எந்தத் தெளிவான அபிப்பிராயங்களோடும் தொடங்குவதில்லை, தொடங்கவும் முடியாது. கம்பன் என்ருல் என்ன. காளிதாசன் என் ருல் என்ன, எல்லோருடைய ஆரம்பமும் இப்படித்தான். ஆரம்பத் தில் வந்த வந்த வழிக்கு உள்ள ஒரு பின்பற்றலே உண்டு. நம்மவர் கள் குறியீட்டுக் கவிதைகளை எழுதினர்கள். படிமக் கவிதைகளை எழுதினர்கள். சந்தக் கவிதைகளை எழுதினர்கள். புதிய புதிய உவ மானங்களைத் தேடித்தேடி, அதுவே கவிதை என்று எண்ணிக்கொண்டு எழுதினர்கள். கால் நூற்றண்டுக்குமேல் கவிதை எழுதிய நம் முது பெரும் கவிஞர்கள், ' கவிதை என்பது என்ன தம்பி, "அதைப்போல இது என்று சொல்வதுதான் கவிதை” என்று கூடச் சொன்னர்கள். திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு தம்முடைய கவிதையைத் தொடங் கியவர்கள் பலர். தமிழரசுக்கட்சிக்கு இசைவாகப் பாடல்களை யாத் துக்கொண்டு தம்முடைய கவிதையைத் தொடங்கியவர்கள் பலர். அந்தத் தமிழுணர்ச்சிப் பாடல்களைக் கண்டு இப்போது அவர்கள் வெட்கப்படுகிறர் கள். தம்முடைய தொகுதிகளில் அந்தப் பாடல் களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று கூறி, அந்தவகைப் பாடல் களை உணர்ச்சிக் கவிஞர்களுக்கே தானம் செய்துவிட்டு, தாம் வேறு வகையான கவிதைகளில் முயற்சிக்கிருர்கள். இது எதைக் காட்டு கிறது என்ருல், நாங்கள் ஏதோ ஒரு பின்பற்றலோடு தொடங்கு கிருேம். ஆனல் நாளடைவில் ஒவ்வொருவரும் தத்த மக்கு கவிதை யில் ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொண்டு, பற்பல சூழற் காரணி களிஞலும் அமையும் ஒரு நெறியில் நமது கவிதா சிருஷ்டித்திறனை அல்லது சிலர் தமது செய்யுள் கோக்கும் திறனைச் செயற்படுத்து கிருேம் .
அதாவது, பெரும்பாலும் தனிப்பட்ட கவிஞர்களின் கவிதைப் போக்கு எக்காலத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. தமது வாழ் வின் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு தளங்களுக்கு தமது கவிதைப்பே 4 கை. பிரக்ஞைபூர்வமாகவோ, பிரக்ஞை பூர்வமில்லா மலோ மாற்றி, நெறிப்படுத்துகிருர்கள். தனிப்பட்ட கவிஞர்கள் தம் முடி டய போக்கை மாற்றி நெறிப்படுத்திக் கொள்வதைப்போல ஒரு மொழித் தொகையினர், அல்லது இன்னும் சரியாகச் சொன்னல், ஒரு குறிப்பிட்ட சமூக உறவைக் கொண்டிருப்பவர்கள், கூட்டாகவும், தமது கவிதைப் போக்கை காலத்துக்குக் காலம் நெறிப்படுத்திக் கொள்கிருர்கள். இந்த நெறிப்படுத்தலுக்கே, அதன் மிக விரிவான அர்த்தத்தில் விமர்சனம் என்றுபெயர். அத்தகைய நெறிப்படுத்தலுக் கான சில ஆலோசனைகளையே நான் பின் வரும் பந்திகளில் எடுத்துக் கூறப்போகிறேன். அதனுல் தமிழ் கவிதைகளின் போக்கு இப்படித் தான் இருக்கவேணும் என நான் விதிப்பதாக யாரும் கருதத் தேவை இல்லை. கவிஞனுக்குரிய சு த ந் தி ர த் தி ல் நான் கைவைக்கிறேன் என்றும் யாரும் குறைப்பட்டுக்கொள்ள வேண்டாம். அப்படி ஒன்றும் நேர்ந்துவிடமுடியாது. நமது கவிதைப் போக்கின் சில அம்சங்களைக் குறித்து யோசனைபண்ணுகிருேம். அவ்வளவுதான்.
W
வாழ்நிலைக் கவிதைபற்றிச் சொல்லும்போது “சேதனபூர்வமாய், இயக்கரீதியாய் சிருஷ்டிக்கப்பட்ட வாழ்க்கைக்களத்தில் வாழ்நிலை 33

Page 19
களின் முரண்பாடுகளே முக்கிளுக்குப் புலப் படுத் திச் செயலூக்கம் கோருவது. ’ என்றும், வாழ்க்கைக்களத்தையும் வாழ்நிலையையும் இணைத்து, பூரணமான இயக்கமுறையில் முரண்பாடுகளின் தடங்களை யும் சுவடுகளையும் தொட்டுக்காட்டுதல்..' என்றும் எழுதினேன்.
இனி யாருடைய வாழ்நிலை என்ப்துதான் அடுத்த கேள்வி.
"மக்களுடைய வாழ்நிலை' என்பது மட்டும் இதற்குரிய பதிலா காது. நம்முடைய சமுதாயத்தில் எல்லா. மக்களும் ஒரேவிதமான வாழ்நிலையைக் கொண்டிருந்தால் நாம் அப்படி ஒரு பதிலைச் சொல்ல முடியும். ஆனல் இங்கு அந்த நிலை இல்லை. மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் உடையவரின் வாழ்நிலைக்கும், மாதம் இருநூறு ரூபாய் வருமானம் உடையவரின் வாழ்நிலைக்கும் எவ்வளவோ வித்தி யாசம் உண்டு. இந்த வருமர்ன வித்தியாசம் வெறும் ரூபாய்களின் வித்தியாசம் அல்ல. அந்த ரூபாயோடு ஒட்டிய விருப்பு, வெறுப்பு, சிந்தனை, செயல், போக்கு, லட்சியம் எல்லாவற்றிலும் வித்தியாசம் உண்டு. அதனுல்தான் எந்த மக்களின் வாழ்நிலை என்பதை நாம் வேறு படுத்தி அறியவேண்டியே உள்ளது.
சமுதாயத்தில் ஏழை பணக்கர்ரன் என்பதை நாம் வேறுபடுத்தி அறிய முடியுமானல், இல்க்கியத்திலும் நாம் ஏழையின் இலக்கியம் என்றும், பணக்காரனின் இலக்கியம் என்றும் வேறுபடுத்தி அறிய முடியும். நமது வாழ்நிலையின் அடிப்படையில், ஏழையினுடையவும், பணக்காரனுடையவும் விருப்பு வெறுப்பு, சிந்தனை, செயல், போக்கு, இலட்சியம் இவைகளுக்கிடையில் வேறுபாடு உள்ளதை நாம் ஒப்புக் கொள்ள முடியுமானல், அவற்றினடியாக எழும் இலக்கியத்திலும் அந்த வேறுபாட்டைக் கண்டுகொள்ளமுடியும்.
'ஏழையின் இலக்கியம்", "பணக்காரரின் இலக்கியம்’ என்ற பாகுபாடும் சொற்ருெடரும் சிலருக்கு புதிதாகவும், சுவையற்றதாக வும் தோன்றலாம். ஆனல் அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் என்றும் கிறிஸ்தவ இலக்கியம் என்றும் கேள்விப்பட்டிருப்பார்கள், ஒரு கலாச் சார அடிப்படையில் உள்ள சில சில்லறை வித்தியாசங்களை அவர்கள் அங்கு இனங்கண்டுகொள்கிருர்கள். ஆனல் ஒரு இஸ்லாமிய, கிறிஸ் தவ இலக்கியத்தினுள்ளும் ஏழையின் இலக்கியமும், பணக்காரனின் இலக்கியமும் உண்டு. வாழ்நிலையின் அடிப்படையில் உள்ள இந்த வேறுபாடு வெறும் க்லாச்சார அடிப்படையில் கூறப்படும் போலி யான தோற்ற வேறுபாடுகளைவிட மிகவும் ஆழமானதும், ஊடுருவல் மிக்கதும் ஆகும். ' . -
கலாச்சார அடிப்படையில் உள்ள சில்லறை வேறுபாடுகளை நாம் புறக்கணிக்கக் கூடியதுபோல, வாழ்நிலையின் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை யாரும் புறக்கணிக்க இயலாது ஒரு ஏழைக் கும் பணக்காரனுக்கும் / பொதுவாய் உள்ள சில உடலியல் உணர்ச்சி களை வைத்துக்கொண்டோ, அல்லது அவர்களுக்குப் பொதுவாய் உள்ளதாகக் கூறப்படும் சில தார்மீக, ஆன்மீக உணர்வுகளை வைத் துக்கொண்டோ இரண்டு வர்க்கத்தினருக்கும் பொதுவான இலக்கி யம் செய்ய இயலாது. ஏனென்ருல், 'அந்தப் பொதுவான உணர்ச்சி களினதும் உணர்வுகளினதும் வெளிப்பாட்டின் தன்மையையும் முறை யும் அவரவரின் வாழ்நிலை யி லே யே பெரிதும் தங்கியுள்ளது. எடுத்து காட்டாக, ஒரு ஏழை இளைஞனுடைய காதலையும், ஒரு
34

பணக்கர்ர இளைஞனுடைய க்ாதலையும் எடுத்துக்தொள்வோம். காதல் ஒன்றேயாயினும், காதல் நிகழும் சம்பவங்கள், கீற்ருடல், காதலரின் பேச்சுமுறை, காதலரின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் ஒன்றுபோல் இராது என்பது மாத்திரமல்ல, நேர்முரண்பாடு உடையதாகவும் காணப்படும். ஒரு பணக்கார இளைஞனின் காதல் கதையைப் படிக் கின்ற ஒரு ஏழைக்கு அந்த கதையனுபவத்தோடு ஒன்றித்துக் கொள் வது முடியாது. அதேபோல ஒரு ஏழையின் காதல் கதை ஒரு பணக் ஆலப்புழைக்குச் சென்று சினிமாப் பார்ப்பது, இரண்டு ஏழைத் தம்ப திகளின் நிறைவேரு த கனவாக இருந்தது 'என்று தகழி எழுதுவதைக் கேட்டு, ஒரு பணக்காரன் அப்படியும் இருந்திருக்குமா என்று கேட் காமல் இருக்கமுடியாது. நுஃ மா ன் ‘எங்கள் அடுப்பில் எரியா நெருப்பு. ’’, என்று எழுதியபோது, "நெருப்பு எரியாத அடுப்பும் எம்மிடையே உண்டோ?’ எனக் கேட்டவர்கள் பலர். அல்லது ஒரு பிரசவத்தை எடுத்துக்கொள்வோம். கர்ப்பக்குடலில் நோவும் யோனி வழியாக சிசு வெளிவருதலும் , பிள்ளையை ஈன்றெடுத்ததும் ஒரு தாயி டம் ஏற்படும் ஆறுதலும் ஆனந்தமும் தவிர அங்கு வேறு எதுவும் பொதுவில்லை. இரண்டு பிரசவங்களையும் நிகழ்ச்சிப் படுத்த முனைகின்ற ஒரு கைதேர்ந்த கவிஞன் அல்லது கதாசிரியன் முதற்கூறியவற்றைவிட மற்றெல்லா வகையிலும் ஏழை ஏழைதான் பணக்காரன் பணக்கா ரன்தான் என்பதை உணர்வான். ஏனென்ருல் மனித உணர்ச்சிகள் சில எவ்வளவு பொதுமைப்பாடுடையனவாக இருப்பினும், அவைகள் அந்தரத்தில் தொங்கக்கூடியவை அல்ல. அவை வாழ்நிலைப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்களினுாடும் வார்த்தைகளினூடும் வெளிவர வேண்டியனவே.
ஆகவே ' ஏழையின் இலக்கியம்’ என்பதும், "பணக்காரரின் இலக்கியம்" என்பதும் சிலருக்கு எவ்வளவு, ரசக்குறைவாய்ப்படக் கூடிய போதிலும், அவை உள்ளவைகளாகும். இவைகளையே நாம் முறையே உழைப்பாளர் வர்க்க இலக்கியம் என்றும் பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்க இலக்கியம் என்றும் பெயரிட்டு அழைக்கின் ருேம்.
WI
இவற்றில், பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதி பலிக்கின ற கவிதைகளைப்பற்றியோ, அவர்களின் ஏனைய இலக்கிய வடிவங்களைப்பற்றியோ நமக்குக் கவலை இல்லை. பிரபுத்துவ முதலா ளித்துவ வர்க்கத்தின் முடிவை நாம் எதிர்பார்ப்பது போலவே, அந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களின் முடிவையும் நாம் எதிர் பார்க்கிருேம். நமது கவனமெல்லாம் உழைப்பாளர் வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்ற - பிரதிபலிக்கவேண்டிய - கவிதைகளையும் இலக்கியங் களையும் பற்றித்தான். ஏனென் ருல் எங்கள் வர் ழ்நிலையில் Tமாற்றங் களும் திருத்தங்களும் ஏற்பட வேண்டும். எங்கள் உழைப்பையும் வாழ்வையும் உறிஞ்சும் பேய்களாக எம்து அருமைச் சகாக்கள் மாறு வதை நாங்கள் இனியா கிலும் தடுக்கவுேண்டும். அதல்ை, எங்களு டைய இலக்கியம் எங்களுடைய வாழ்நியிேனின்று எழுந்து எங்க ளுடைய இந்த ஆசைகள் மீதும் 'கனவுகள் மீதும் படர வேண்டும். ஆகவேதான் எமது வர்க்கத்தில் உள்ளவர்கள் என்ன எழுதுகின்ருர் கள் என்று நாங்கள் கூர்ந்து கவனிக்கின் ருேம்.
み5

Page 20
இன்று எழுதுகின்றவர்களில் பெரும்பாலோர் எமது உழைப் பாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. அதிகமானுேர், முந் நூறு ரூபாய்க்கு உட்பட்ட மாதாந்தச் சம்ப்ளமுடைய ஆசிரியர்கள் அல் லது விகிதர்கள், ஆங்காங்கே, பெரும் குடும்பப் பொறுப்புகளுடன், ஐந்நூறு அறுநூறு ரூபாய்ச் சம்பளம் பெறும் சில பட்டதாரி ஆசி ரியர்களும் உத்தியோகஸ்த்தர்களும் உண்டு. ஆனல் இவ்வளவு பரந் துள்ள இந்த ஏழை எழுத்தாளர்கள் என்ன எழுதுகின்றர்கள்? சிலர் சுத்தக் கலைவாதிகள், சிலர் அகநோக்கு வாதிகள், சிலர் ஜீவகாரு ணியர்கள். சிலர் தமிழ்த் தேசியம் பேசும் உணர்ச்சிக்கவிகள். பலர் பொன்னடையும் புகழுடம்பும், சாகித்திய மண்டலப் பரிசும் வேண் டும் புலவர்சிகாமணிகள்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் ஏன் இப்படி ஆஞர்கள்? ஏன் இவ்வாறு தங்கள் வாழ்நிலையை மறந்தார்கள்? இதற் குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, பாரதியார், பாரதி தாசனுர், நமக்கல்லார் ஆகிய தேசியக் கவிகளின் பாதிப்பு. இரண் டாவது மேற்கேயிருந்து பல சந்து பொந்துகளினலும் ஈழத்துள் இறங்கிவிட்ட சிம்பா லிசம் (குறியீட்டுமுறை) இமேஜிசம் (படிமத் தொகுப்பு) ஆகிய கவிதை முறைகளும், அவைகளைப்பற்றி விதந்து செய்யப்பட்ட விமர்சனப் போலியான நயப்புரைகளும். மூன்ருவது கவிப்பொருளின் தேக்கத்தினுலும், இன்னும் பல்வேறு காரணங் களினலும் நமக்குள் நுழைந்துவிட்ட சந்தப் பைத்தியம். நான்கா வது, இந்த உலகம் சாசுவதமானதல்ல, அந்த உலகமே சாசுவத மானது என்ற நம்பிக்கையும், அவற்றைத் தெரிவிக்கும் பாடல் களுக்கு இருந்த வரவேற்பும், ஐந்தாவது பெயரிலும் புகழிலும் ஆசையையும் போட்டியையும் தூ ண் ட க் கூ டி ய முதலாளித்துவ அமைப்புச் சூழலும், முதலாளித்துவப் பத்திரிகை உலகும்.
WI
இவ்வாறெல்லாம் சொல்லும்போது, எழுதப்படுகின்ற கவிதை கள் எல்லாம் வர்க்கப்போராட்டத்தைக் பிரசாரிப்பதாக அமைய வேண்டும் என்ருே அல்லது உழைப்பாளர் வர்க்க இலக்கியத்தில் அழகு ணர்ச்சிக்கும் வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் இடமில்லை என்ருே நான் சொல்வதாகக் கருதக்கூடாது. வர்க்கப் போராட்டத்தின் பால் உள்ள ஆர்வ மிகுதியால் இலக்கிய உணர்வின் தாற்பரியத்தை விளங் கிக் கொள்ள மாட்டாத இலக்கியத்திற்குப் புறம்பாகவுள்ள சில தோழர்கள், செய்கின்ற ஒருவகைச் சன்னியாச உபதேசம் அது. அவர்கள் நம்மையும். ‘அடியடா, குத்தடா, வெட்டடா, எங்கள் அணி, திரளுது, உங்கள் அணி முறியுது ’ என்ற சில வர்க்கப் போராட்டப் பிரச்சாரங்கள் எழுதுவதைப்போல எழுதச் சொல்கிருர் கள். இலக்கியம் எப்படி சமூக உணர்வுகளின் மெய்ப்பாடாகி, எப்படிச் சமூக மாற்றங்களுக்கு அடிகோலுகிறது என்பதை அறியமாட்டாத கற்றுக்குட்டி கம்யூனிஸ்டுகள் அவர்கள். உண்மை என்னவென்றல், எங்களுடைய இலக்கியம், எங்கள் வாழ்நிலைலய எங்களின் அனுபவம் ஆக்கித் தரவேண்டும். எங்கள் வாழ்நிலையின் சந்து பொத்துகளையெல் லாம் வெளிக்கொணர்ந்து தரவேண்டும். இவைகளை இன்ன இன்ன முறையில்தான் ஒரு கவிஞனே கதாசிரியனே செய்யவேண்டும் என்று விபரணப் படுத்த முடியாது அது எத்தனையோ வண்ணமாக வெளிப்
36

படும். அது எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டபோதும், அதில் சோடிக் கப்படாத, சாயந்தீட்டப்படாத எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப்பட்டால், அந்தப் படைப்பு நிச்சயமாக தவிர்க்கமுடி யாத அந்தச் சரித்திர இயக்கவியல் ரீதியான சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது என்று அர்த்தம். இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக் கியம் பற்றி, சில வாய்பாட்டு உருக்களைச் செபித்துச் கொண்டு, எமது உழைப்பாளர் வர்க்கத்தின் கலை வளத்தை வறளச் செய்து விடு வார்களோ என்ற அச்சம் எம்மில் பலருக்கு உண்டு.
VIII
இறுதியாக வாழ்நிலைக்கவிதையின் கலையாக்கம் பற்றிச் சிறிது கூற வேண்டும்.
முன்னர் குறிப்பிட்டதைப் போன்று ஒவ்வொரு வகையான கவிதையிலும் ஒவ்வொரு வகையான கலையாக்கம் சம்பந்தப்பட்டுள் ளது. சந்தக்கவிதைகளில் ஒசைக்கோப்பு, குறியீட்டுக் கவிதைகளில் சில படிமங்களுக்குப் பல்வேறு அர்த்தப்பாடும் தோன்றச் செய்தல், படிமக் கவிதை களில் திடமான, பிரகாசமான, கண்ணுடிப் பளிங்கு போல் தெளிவான சில படிமங்களை உருக்கொள்ளச்செய்தல், சில தமிழக இதழ்களில் வெளியாகும் புதுக்கவிதை எனப்படுவனவற்றில், கண்விடுக்காத படிமங்களை அமைப்பது, இவ்வாறு, கவிதையின் பல விதமான கலைப்பாணிகளுக்கு மத்தியில், நாம் நமது வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் கலையாக்கம்பற்றி அவதானிக்க வேண் டியவர்களாக உள்ளோம். அதன் பொதுவான முக்கிய அம்சங்களை சுருக்கமாகப் பின்வருவாறு நிரைப்படுத்தலாம்.
1. முதலாவது, பளிச்சென்று தெரிவது இந்தக்கவிதைகளில் உள்ள ஒரு நேரடித்தன்மை. எந்த மங்கலுக்கும், கலங்கலுக்கும், கூடார்த் தத்திற்கும் இடமில்லை. குறிப்பாக உணர்த்தப்படக் கூடுமாயினும், வாழ்நிலையின் புலப்பாடுகள் மூலம் அது தெளிவாக்கப்பட்டிருக்கும்.
2. இரண்டாவது, சக்குசக்கு என்று சதகத்திலும் பதிகத்திலும் வருவதுபோல், ஒரே விஷயம் ஒவ்வொரு பாடலிலும் திரும்பத் திரும் பச் சொல்லப்பட்டிருக்காது.
3. மூன்ருவது, சொல்லப்படுகின்ற விஷயம் வாழ்நிலை-நிகழ்ச்சிப் புலப்பாடுகளினூடாக முதலிருந்து கடைசிவரையும், ஒரே அங்கமாக வளர்க்கப்பட்டிருக்கும். (இதன் காரணமாகவே, இத்தகைய கவிதை கள் பெரும்பாலும் கலிவொண்பா, அகவல் போன்ற உருவங்களில் எழுதப்படுகின்றன போலும்)
4. நான்காவது, மேற்கூறிய தன்மையின் பிரதிபலிப்பாக, இவை களில் பெரும்பாலும் ஒரு இயக்கமும் நாடகப் பண்பும் காணப்படும். 5. ஐந்தாவது, இவ்வாறிருப்பதினுல், இந்தக் கவிதைகள், வாச
கனுக்குச் சில விஷயங்களை அறிவிக்கவேணும் என்றமுறையில் எழுதப் பட்டிருக்கமாட்டா. உணர்வு ரீதியாக வாசகனிடம் பாதிப்புகளை
37

Page 21
ஏற்படுத்துவதே இக்கவிதைகளின் நோக்கப் , ஆகவே எப்படிச் சித் தரித்தால் என்ன பாதிப்பு ஏற்படும் எ று அனு மா னிக் கும் சிருஷ்டி ஆற்றலின் வழி ப்ப ட் டு நிற்கும். சிருஷ்டி ஆற்றல் இல் லாதவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதுவது சிரமம்.
6. கடைசியாக, இக்கவிதைகளில் பாவிக்கப்படும் மொழிநடை யாப்பமைதிக்கு உட்பட்ட இடத்தும் இயல்பான பேச்சோ சை இன்றி யமையாதது. நுஃமானுடைய பேச்சுமொழியும் கவிதையும் என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல சிறு சிறு வாக்கிய அமைப்பும், இயல்பான சொற்கோப்பும் கொண்டு விளங்கும். செய் யுள்களைப் பாடிக்கொண்டு ஓசையைச் செழுமைப் படுத்தல் இக் கவி தைகளுக்குப் பொருந்தாது. சொற்களின் இறுக்கத்தாலும், செறி வாலும், தெறிப்பாலுமே இக்கவிதைகளுக்கு ஒசைப்பாங்கான மெரு கேற்றமுடியும்.
இந்த அம்சங்கள் முழுவதையும் அல்லது, அவைகளில் பெரும் டாலானவற்றைக் கொண்டு, சிறந்து விளங்கும் வாழ்நிலைக் கவிதை களுக்கு நீலாவணனின் உறவு, நுஃமானின் நிலம் என்னும் நல் லா ள், மஹாகவியின் சீமாட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனல் இவைகள், 'வாழ்நிலைக் கவிதைகள் செயலூக்கம் கோருவன' என்ற கூற்றேடு ஒத்துப்போகுமா எனச் சிலர் யோசிக்கலாம். அப் படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்ருல் செயலூக் கம் பலவழிகளில் கோரப்படலாம். உதாரணமாக, மனைவி குசினிக் குள் இருந்தபடி ' விறகும் இல்லை, ஒன்றுமில்லை, எப்படிக் கறியாக குவதோ?' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல் சொல்கிருள். உடனே கணவன் கோடரியை எடுத்துக்கொண்டு விறகு பிளக்கச் செல்வான். 'விறகு பிளந்துகொண்டு வாருங்கள்?' என்று அவள் குறிப்பிட்டுச் சொல்லாததினுல், விறகு பிளக்கின்ற செய லூக்கத்தைக் கணவன் பெருமல் இருப்பதில்லை. இன்னும் சரியா கச் சொன்னல், 'விறகு பிளந்துகொண்டுவாருங்கள்’ என்று மனைவி கணவனுக்குச் சொல்வதைவிட, முன் கூறியதுபோல அவள் சொல் வதே அதிக பாதிப்பை உடையது என்பதைக் கணவன்மார்கள் உணர்வார்கள் . ஆனல் வீட்டில் விறகு பிளந்து பழக்கமில்லாத கண வன்மாருக்கு அது புரியாவிட்டால் நாம் என்ன செய்யலாம்?
(முற்றும்)
** உண்மை கொடிதே உலகில் அதனுடனே
போரிட்டு வாழப் புகுந்தோம், கலங்குவதோ? வீறிட்டு அலறி விழுந்து புரழுவதோ? பார், எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது’
-சோமு-"கோடை"யில்.
38

உங்களுக்குத் தேவையான சைக்கிள் உபகரணங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் மலிவு விலையில் எம்மிடம் கிடைக்கும்.
| “ஹமீட் பிறதர்ஸ்” 22, பொலிஸ் வீதி, கல்முனே.
அழகிற் சிறந்த தங்க நகைகளுக்கு தகுந்த இடம்
5 LOT Gl
தங்க நகை மாளிகை 58, பிரதான வீதி, 5, 6 (p &OT.
தொலைபேசி : 3 10
ஒடர் நகைகள் குறித்த காலத்தில்
உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.

Page 22
நீங்கள் புன்கடிபபும் பிடிக்க விரும்பினல்!
* நம்பிக்கையான * அழகான
நீடித்திருக்கக்கூடிய புகைப்படம் பிடியுங்கள்.
புகைப்பட வேலுை எதுவானலும், எங்களை விசாரணை செய்யுங்கள்.
A I . تیم to I சிங் கம் ஸ் புகைப்படக் கலைஞர்கள்
இதோ! ஒருமுறை விஜயம் செய்யுங்கள்; ‘பாபுஜீஸ்” ஸ்தாபனத்துக்கு
குளிர்ச்சியான - ஜஸ்கிறீம்!
ருசி நிறைந்த-மில்க்ஸேக்” மனதிற்கு இத்ம் ஊட்டும் மென்மையான *ஜெலி!” மற்றும் பலவித ருசி நிறைந்த குளிர்பானங்கள் !
பாபுஜிஸ் ஐஸ்கிறிம் ஸ்டோர் 35, மெயின் வீதி, கல்முனை.

நமது நகைகள்
நவீனமானவை
அருணசலம் GFLITi 212, பிரதான வீதி, கல்முனை.
தந்தி:- சரஸ்வதி. G3Lurr Gör: 301 .
Printed by Rev. Bro. Joseph B. Murray S. S. J., at the Catholic Press, 18, Central Road, Batticaloa, and Published by A. F. M. Meeralebbe for Readers Association, Noori Manzil, Kalmunai - 6, Ceylon. F. W

Page 23

ஜூவலர்ஸ் கான வீதி, முன