கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைப்பூங்கா 1965.04

Page 1
இலங்கைச் சாகித்திய Թinlini Լիլլյլ հi:
ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் எடு
தமிழ் சாகித்திய விழாச்
சிறப்பிதழ்
 
 
 

மண்டலததினுஸ்
1955
சித்திரை இதழ்
ஆசிரியர் :
சதாசிவம்
ச. துரைசிங்கம்
விலை ரூபா 1-00

Page 2

5 où il Lb ŠI 5 I
ஆண்டுக்கிருமுறை வெளிவரும் ஏடு
சித்திரை இதழ்
ஆசிரியர் : ஆ. சதாசிவம் செ. துரைசிங்கம்
. இலங்கைச் சாகித்திய மண்டலம்
கொழும்பு-7.

Page 3
கலப்பூங்கா
1964 ஆம் ஆண்டு இதழ்கள்
கிடைக்குமிடம் :
எம். டி. குணசேணு கொழும்பு.
மற்றைய புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
y
கலைப்பூங்கா
1963 ஆம் ஆண்டு இதழ்கள்
யாழ்ப்பாணம் மூன்ருரங்குறுக்குத் தெருவிலுள்ள 43 ஆம் இலக்க இல்லத்திலே
விலைக்குக் கிடைக்கும்.
y
இவ்வேட்டில் வெளியிடுவதற்கான கட்டுரைகளைப் பின்வரும் விலாசத்துக்கு அனுப்புக.
பொதுச்செயலாளர், இலங்கைச் சாகித்திய மண்டலம், 135. தருமபால மாவத்தை, கொழும்பு-7.

உள்ளுறை
பக்கம்
1. ஆசிரியர் கருத்து 5
2. இலக்கியமும் நாட்டு வருணனையும் 9
- வித்துவடன், பொன். முத்துக்குமாரன் B, O L
3. சோழர் காலப் பெருங்காப்பியங்கள் 1 4
- திரு. ச தனஞ்சயராசசிங்கம் M. A., M. Lit.
4. திருவாக்கு என்னும் 'திருநூல்'
தமிழில் வளர்ந்த வரலாறு 3 Ꭰ
- திரு. பி. சே செ நடராசா
5. திருவாசக ஆராய்ச்சிப் பேருரையின் மாண்பு 45
-பண்டிதர், க. நாகலிங்கம்
6. செந்தமிழ்ச் சிறப்பு
- புலவர், சி. சின்னையா
7. இராமனின் சுந்தரத் தோற்றமும்
வீபீடணனுக்களிக்குங் காட்சியும் 6
-பண்டிதர், பொ. கிருட்ணபிள்ளை
8. இலக்கியமும் சமூக வாழ்வும் 66
- புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
9. பரிசில் வாழ்க்கை 7
- வித்துவான், அ. கனகசபை

Page 4
தமிழ் த் தாய்
தேனே பாகே நறும்பாலின்
திரளே கரும்பின் செழுஞ்சாறே தெவிட்டா வமுதே யெனச்சுவைக்குந்
தெய்வத் தமிழின் தீங்குதலை மானே மயிலே மடப்பிடியே
மாடப் புருவே மாங்குயிலே வன்னக் கிளியே பொன்னனமே
மலர்மேற் பாவாய் மணிப்பூவாய் ஆனே றுடையா னிரு செவிகட்
கன்பே முருகன் அகநிறையும் ஆசைப் பெருக்கே தவப் பயனே
அறிவே தூண்டா மணிவிளக்கே தானே தனைநேர் தமிழகத்துத் தாயே வருக வருகவே சங்கப் புலமைத் தமிழ்க் கூடற்
றலைவி வருக வருகவே
கண்ணே கண்ணுட் கரு மணியே
மணியுட் கதிரே கதிரொளியே காணு மறிவே நல்லறிவிற்
கலந்து விளங்குங் காட்சியே எண்ணே யெழுத்தே யேழிசையி
னின்பே யின்பி லெழுபயனே ஏழைக் கிரங்கும் பெருங்கருணை
யெம்பி ராட்டி யென்றடியேம் உண்ணே யத்தோ டுனைக் கூவி
யோல மிட்டு நின்றழைத்தால் உஞற்றும் பிழைகள் பொறுத்துவரா
துங்கே யிருக்க வழக்குண்டோ தண்ணேர் தலைமைத் தமிழகத்துத்
தாயே வருக வருகவே சங்கப் புலமைத் தமிழ்க்கூடற்
றலைவி வருக வருகவே
-a simp

ஆசிரியர்கருத்து
செந்தமிழ்
செந்தமிழ், எழுத்தஞ் சொல்லும் பொருளுமெ60 மூன்று பகுதிகளை உடையது. அந்த மூன்று பகுதிகளுஞ் செம்மை யாகப் பொருங்கியவிடத்துச் செந்தமிழ் அமைகிறது.
*எழுத்தஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்"
எனத் தொல்காப்பியத்திலே கூறப்பட்டது.
எழுத்துக்களை அவற்றிற்குரிய பிறப்பு நியதிகளின் படி உச் சரித்தல்வேண்டும். எழுத்துக்களின் பிறபடி கியதிகள் தொல் காப்பியத்திலும் அதைப் பின்பற்றிச் செய்யப்பட்ட பிற இலக்கணநூல்களிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக் கின்றன. அக்கூற்றுக்களை மிக்க நுட்பமாகத் தவறின்றிக் கையாளல் வேண்டும் என இலக்கண நூலாசிரியர்கள் பலவா முகப் பலவிடங்களிலே வற்புறுத்தினர்கள். ஒரு பெரிய இயங் கிாத்துக்கு அதன் பகுதிகள் செம்மையாக அமைவது எப்படி இன்றியமையாததோ, ஒரு பெரிய அரசாங்கத்தக்கு அதன் அங்கங்கள் யாவும் எப்படி இன்றியமையாதனவோ, அப்படியே தமிழ்மொழிக்கு அதன் பிறப்பு நியதிகள் இன்றியமையாதன. இதை உணராமையால் இக்காலத்திலே எழுத்துக்கள் பிழை பட உச்சரிக்கப்படுகின்றன. அங்கினம் உச்சரிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள. ஆங்கில மொழியிலே எழுத்துக்களின் உச்சரிப்புக் கவனிக்கப்படுகிறது. ஆரியமொழியை உச்சரிப்புக் கைவந்தவர்களே கற்பிக்கிருரர்கள். தமிழ்மொழியில் ழ், ள், ல் என்ற ஒலிகளைப் பேதமின்றி உச்சரிக்கும் வழக்கம் வளர்ந்து வருகிறது. ங், ன், ண் ஒலிகள் காலந்தோறும் ஒருதன்மைப்
5

Page 5
படுகின்றன. இத்தவறுகள் செந்தமிழின் சிறப்பைக் கெடுத்து விடும். எனவே தமிழ் எழுத்துக்கள் பிறப்பு கியதிப்படி உச்சரிக்கப்படல் வேண்டும். தொல்காப்பியக்திலே கூறப்படும் இலக்கணங்களுக்கெல்லாம் மூலமாய் அதை ஒரு சிறந்த நூலாக் கியது எழுத்துக்களின் உச்சரிப்பாகையினலேயே எழுத்திலக் கணத்தைப்பற்றிக் கூறுகின்ற இபலுக்கு அதன் முக்கியத்துவம் நோக்கி நூன்மரபு எனத் தொல்காப்பியர் பெயரிட்டனர்.
எழுத்துக்களாலே சொற்களை ஆக்கு மிடத்தும், சொற் களாலே வாக்கியங்களை ஆக்குமிடத்தும் அவ்வாக்கங்களுக் குரிய நியதிகளை ஒருதலையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். அங்ஙனங் கடைப்பிடித்தல்வேண்டும் என்பதைத் தொல்காப பியத்து மொழி மரபுங் கிளவியாக்கமும் நன்கு புலப்படுத்த கின்றன.
கியதி, மரபு, இலக்கணம் என்ற சொற்களைக் கேட்டதும் இக்காலத்திலே பெரிய அச்சம் உண்டாவதைக் காணலாம். அவ்வச்சம் பொய்ம்மையின் அடிப்படையிலே உண்டானது; கேவையில்லாதது. அஞ்சுபவர்கள் கியதி, மரபு, இலக்கணங் களை அறிவதினலே காலம் வீணுகின்றது என்கின்றனர். அவர்கள் எண்ணம் உண்மைக்கு மாமுனது.
இலக்கணம், காலச்சுருக்கத்துக்கு முக்கியங்கொடுக்கின்றது. உரையாசிரியர் பலர் காலவிரயத்துக்குரிய வாக்கியங்களை வழு வுடையன என்பர். பாணினியத்திலே காலவிரயப்பட்ட குக் திரங்களை முக்குணங்களையுங் கடந்த பதஞ்சலிமுனிவர் திருக்கி யமைத்தார். எனவே கியதி, மரபு, இலக்கணங்களாலே காலம் வீணவதில்லை; காலஞ் சுருங்குகிறது.
இலக்கியப்பயிற்சி கைவந்த பின்பே இலக்கணங்களைக் கற் றல் வேண்டும். இலக்கணம் படித்தற்குரிய மாணக்கர் யார் ନୀ ଗର୍ତt p வினவுக்கு இலக்கியங்களை நன்கு பயின்றவர் என்ற விடையை ஆரியமொழியிலுந் தமிழ்மொழியிலும் பாக்கக் காணலாம். (இலக்கியம்) "பயின் முர்க்கு ஆசங்கை நிகழு மன்றே, அவ்வாசங்கை நீங்க இந்நூல் ஒரு தலையான் வேண் டப்படும்' என்றும் (இலக்கியம்) "பயிலாதார்க்கு ஆசங்கையே நிகழாமையின் இந்நூல் பயன் படாது' என்றுங் தொல்காப் பியப் பாயிரவிருத்தியிலே மாதவச்சிவஞானமுனிவர் கூறினர். இலக்கியப்பயிற்சியின்றி இலக்கணங் கற்பது காலததுக்கு முந்திய செயலாகிக் குன்று முட்டியகுருவி இடர்ப்படுவதுபோல இடர்ப் படநேரும். காலத்துக்கு முந்திய செயல்கள் கேட்டை விளைத்
6

த%ல யாவரும் அறிவர் இலக்கியப்படிப்புக் கைவந்தவர்களுக்கு இலக்கணப்படிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தமிழ்வாக் கியங்கள் எல்லாம் ஒன்பது எழுவாயை உடையன; ஒன்பதுக்கு மேற்பட்ட எழுவாயில்லை என்ருல் இலக்கியங்களிற் பரந்து பட்டுக்கிடந்த வாக்கியங்களைக் கண்டையுற்ற மாணக்கர்கள் ஆனந்தப்படுவார்கள். ஒன்பது எழுவாய்க்குமுரிய பயனிலைகள் திணை, பால், இடம், காலம் என்பனவற்றிலே முரண்படாத விடக் துச் செந்தமிழ்வசனம் சித்கிக்குமென்றல், கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டு இலக்கணத்தின் தேவையை உணர்ந்து அதை அறிய அவாக்கொள்வர். காலத்தைச் சுருக்கிச் சிர மத்தைப் போக்கும் நோக்கமாகக் கையாளப்பட்ட இலக்கணங் காலத்தை வீணக்கிச் சிரமத்தைப் பெருக்குகிறதென்பது சந் தர்ப்பத்காலேற்பட்ட தவறென்க. இதைத் தமிழ் அறிஞர் சிங் திப்பார்களாக,
தமிழ் படித்தவர்கள் பலர் ‘செந்தமிழ் என்ருல் எட்டாத தமிழ் ; அத்தமிழ் பரம்பரையாக வால்வேண்டும் ; எல்லா ருக்கும் அது வராது" என்கின்றனர்; தமிழ் எழுத முன்வந் தவர்களின் சிறுபிழைகளைப் பெரும் பிழைகளாக்குகின்றனர். அச்செயல்கள் ஆக்கத்தை விளைவிப்பன ஆகா. அவற்ருலே தமிழ் படித்தவர்கள் இருவேறு பகுதியினராகப் பிரிந்து இருவேறு வகைப்பட்ட தமிழர் ஆகின்றனர். இருவேறு வகை யால் உண்டாகுந்துன்பமும் ஒரு நெறியால் உண்டாகும் இன் பமுங் கற்பனைக்கும் எட்டாதவை. சம்பந்தசுவாமிகள் 'ஒரு நெறிய தமிழ்” என்ருர். மூன் மும் பரிபாடலிலே 'ஒரு கிழ லாக்கிய ஏமத்தை' என ஒரு நெறிப்படுத்துகிற செய்கை பாராட்டப்பட்டிருக்கிறது. எனவே தமிழை இருவேறுவகைப் படுத்தாமல் ஒரு நெறிப்படுத்திச் செந்தமிழைப் பாதுகாக்க வேண்டும். செந்தமிழின் இன்றியமையாத பகுதிகளை யாவரும் அறியும் வண்ணம் இலகுப்படுத்தி அதை அறிந்தவர்கள் பிற ருக்கு விளக்குதல் வேண்டும். இவையே கமிழுக்கு ஆக்கத்தை oDJ GMTITLUL I Go ahu.
செந்தமிழ் என்ருல் விளங்காத் தமிழ் என்றும் ஒரு கருத்த நிலவுகிறது. இலக்கியப் பயிற்சியுடையோர் சங்கச் செய்யுள் களைப் படித்தால் அக்கருத்துந் தவறென உணர்வர்.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றிலே உரிப்பொருள் தலைசிறந்தது என்று தொல்காப்பியர் கூறினர். உரிப்பொருள் இல்லாவிடத்து முதற்பொருளாலுங் கருப்பொருளாலும் எந்தப்பயனும் உண்டாகாது. அதுபோலவே
7

Page 6
எழுத்துஞ் சொல்லும் பொருளும் அமைந்த மொழியமைப்பிலே பொருள் முக்கியமானது. அதை உயிர் என்றுஞ் சொல்லலாம். உயிரில்லாத உடம்பு பிணம் என்பதை யாவருமறிவர். தமிழ் என்பதற்கின்பம் என்று கருத்து. களவியல் நுதலியது தமிழ் என்னுங் கூற்று இதற்காதாரமாகும். பொருள் அறநெறிப் பட்டவிடத்திலே இன்பம் உண்டாகிறது. எனவே இறுதி இலட்சியம் இன்பமாயமையப் பொருள் அறநெறிப்படுதல் வேண்டும். எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமுந் தவறில் லாத விடத்தும் அறம் பொருள் இன்பங்களுக்கு முரண்பட்ட தமிழாயின் அதைச் செந்தமிழ் என ஆன்றேர் கூருர்; அதைக் கொடுந்தமிழ் என்றே தள்ளுவர். பொருள் அகப் பொருள், புறப்பொருள் என இருவகைப்படும். பொருளிலக் கணங் தமிழ்மொழிக்கேயுரியது. தமிழ்மொழியோடு சேர்த் தெண்ணப்படுகிற ஆரிய மொழியிலும் பொருளிலக்கணம் வரை யறுத்துக் கூறப்படவில்லை. "எழுத்தஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகா ாததின் பொருட்டன்றே, பொருளதிகாரம் பெறேம் எனில் இவை பெற்றும் பெற்றிலேம்' எனப் பாண்டி யன் கூற்முகக் களவியலுரையிலே கூறப்பட்டிருப்பது பொரு ளிலக்கணத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
தமிழ் பொருளுடன் சமவாயப்பட்ட மொழி. பிறப்பென் னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருளைக் கண்ட தமிழர், "செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்லையே இன்சொல்லாகக் கொண்டனர். எனவே செந்தமிழுக்குப் பொருள்முக்கியம் என்பது பெறப்படும். எழுத்திலக்கண வழு வுஞ் சொல்லிலக்கண வழுவுமின்றிப் பொருளை உயிரோட்டமா கக் கொண்ட தமிழே செந்தமிழ் எனப்படும். செந்தமிழ் ஆரியத்துக்கு முரண்பட்ட மொழியன்று.
நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமம் காமத்துச் சிறந்தது' என்ற பரிபாடற் பகுதியாலும்,
'அறங்கரை நாவி னன்மறை முற்றிய
அறங்கோட் டாசான்"என்ற தொல்காப்பியச் சிறப்புப்பாயி ாப்பகுதியாலுஞ் சங்ககாலத் தமிழர் ஆரியரோடிணங்கி வாழ்ந் தனர் என்பது புலனுகின்றது. எனவே சமுதாய அடிப்படை யிலே அன்பை வளர்த்துத் தமிழராய் வாழ்ந்து ஒன்றுபட்டுச் செந்தமிழை வளர்ப்போமாக.
8

-பொன். முத்துக்குமாரன்
இலக்கியமும் நாட்டு வருணனையும்
விஞ்ஞானிகள் மிக்கு வாழுகின்ற இடத்தில் விஞ்ஞான மேதை ஒருவன் தோன்றுகின் முன். இசைப்பயிற்சி மிக்கார் பலர் வாழுகின்ற இடத்திலே சிறந்த இசைக்கலைஞன் ஒருவன் தோன்றுகின்றன். ஒழுக்கமும் உள்ளச்செம்மையும் கிறைந்த மக்கள் வாழுகின்ற நாட்டிலே ஒர் உத்தம புருடன் அவதரிக் கின்றன். சமய வாழ்வில் வேரூன்றி கிலைத்த சமுதாயததில் ஒரு தத்துவஞானி உதயஞ் செய்கின் முன். இவ்வாறு மக்களின் சமூக அமைப்பே மாட்சிமை மிக்க தலைவனின் தோற்றத்திற்குக் காரணமாகின்றது. இவ்வுண்மையை அறிந்த புலவர்கள், தாங் கூறுதற்கு எடுத்துக்கொண்ட செய்திக்குப் பிறப்பிடமான சூழலை விவரித்தும் வருணித்தும் பாடத் தவறுவதில்லை.
அகப்பொருட் செய்தியைக் கூறும் பாக்களிலே மூன்று பொருள்களை முறைசிறக்க அமைத்தல் வேண்டும் எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தனர். அவை முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. அவற்றுள் முதற்பொருளாவது ஒரு செய்தி கிகழ்தற்கிடமாகிய கிலமுங் காலமுமாகும். அகநானூறு முதலிய அகப்பொருளிலக்கியங் களிலுள்ள பாடல்களிலே புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக் கங்கள் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருத்தல்போல, அவ் வொழுக்கங்கள் நிகழுதற்கிடமான மலை, சுரம் முதலிய நிலங் களின் நல்லியல்புகளுஞ் செவ்வனே விதந்து கூறப்பட்டிருக் கின்றன. இவ்வாறு அமைந்த கிலங்கள் மாத்திரமன்றி, அங்கிலங்களில் வாழுகின்ற தாவரங்கள், மிருகங்கள், பறவை கள், மக்கள் ஆகிய கருப்பொருள்களின் பண்புகளும் புனைந்து கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு செய்தியைத் தனித்தனிப்
y 9

Page 7
பாடல்களிற் கூறுகின்ற வழக்கம் மலிந்த சங்ககாலத்தின் பின்னர், பலப்பல செய்திகளையுங் தொடர்புபட அமைத்துக் கதைவடிவிற் காப்பியமாகப் புனையும் வழக்கம் புலவர்க ளிடத்திலே உண்டாயிற்று. அங்ஙனம் அவர்கள் கதையைக் கூறுகின்றபோதுங் கதையின் உயிராய் அமைந்த இலட்சியத் கிற்கும், அவ்விலட்சியத்தின் வடிவமான கதாநாயகனுக்கும் பிறப்பிடமாயாவது குழலாயாவது பொருந்திய நாட்டின் நல் லியல்பை விளக்கிக்காட்டத் தவறவில்லை. ஆனல், அவ்வாருன நாட்டின் சிறப்பினை விளக்கிக் கூறுகின்ற முறைமையிலுந் கிறமையிலும் வளர்ச்சியும் வனப்பும் இருத்தலைக் காலர் தோறுந் தோன்றிய இலக்கியங்களிலே நாம் நன்கு கண்டு மகிழலாம்.
சங்ககாலத்திற்குப் பின்னர் முதன்முதலிற் முேன்றிய காப்பியமான சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடலுடன் தொடங்குகின்றது. அவ்விலக்கியத்தின் கதாநாயகர்களான கண்ணகியுங் கோவலனும் பிறந்த நாடும் வாழ்ந்த குழலும் எத்தகையன என்பதை அந்நூலின் ஆசிரியர் முதற்கண் கூற வில்லை. புகாரைப்பற்றிச் சிறிதளவே சொல்லிவிட்டு அவர் கதை நிகழ்ச்சியினைக் கூறத்தொடங்கினர். ஆயினுங் கதாநாய கர்களின் பிறப்பிடமான காவிரிப்பூம்பட்டினத்தினதுஞ் சோழநாட்டினதுஞ் சிறப்பியல்புகளை முறையே இந்திரவிழவூ ரெடுத்தகாதையிலும் நாடுகாண்காதையிலும் அழகாக விவரித் துக் காட்டினர். சிலப்பதிகாரம் ஒரு நாடகக் காப்பியமெனத் தக்கதாதலாலும், முதன்முதலில் எழுந்த காவியமாதலாலும் அவ்வருணனை அவ்வாறு அமைந்தது எனலாம்.
சிலப்பதிகாரத்தின் பின் கதைதழுவி எழுந்த காப்பியங் களிற் சீரிய நூலாகிய சிங்காமணியிலே கதாநாயகனுடைய நாட்டினையும் நகரினையுங் கூறுகின்ற மரபிலே சிறு வளர்ச்சி காணப்படுகின்றது. சீவகனது ஏமாங்கத நாட்டின் ஏற்றமான வளத்தையும் இராசமாபுரத்தின் உயர்வையும் ஆசிரியர் முதற் கண் கூறிப் பின்னரே சீவகனது பிறப்பினை உரைத்தனர். ஆயினும் அவர் அவற்றைத்தனித்தனி இலம்பகங்களிற் கூருது, சீவகன் கல்விபயின்றதையே சிறப்பு நிகழ்ச்சியாகக் கொண்டு, அது முதலிலமைந்த இலம்பகத்திற்கு 'நாமகளிலம்பகம்" எனப்பெயரிட்டு, அந்த சமகளிலம்பகத்தின் ஆரம்பத்திலே
0

நாட்டு வளத்தையும் நகர்வளத்தையுங் கூறினர். நாட்டுச் சிறப் பிலே மழைவளம் வயல்வளம் முதலிய இயற்கை வளங்களும், நகர்ச் சிறப்பிலே செயற்கை வளங்களும் மிகுத்துக்காட்டப்பட் டன. இவ்விருவகை வளங்களுஞ் சீவகனுடைய வாழ்விலே மலர்ந்த இன் பவளத்திற்கு ஏற்ற காரணங்களாகின்றன.
சீவகசிந்தாமணிக்குப் பின்பு தோன்றிய பெரியபுராணம் ஒரு சமயக் காப்பியமாகும். அதன் ஆசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள் பத்திச்சுவை கனிசொட்டப்பாடிக் காப்பியங்களுள் ளுஞ் சமய நூல்களுள்ளும் பலவாற்ரு?னும் அந்நூலானது தலைமைபெறுமாறு அமைக்தனர். முன்னே தோன்றிய காப் பியங்களை விடப் பெரியபுராணம் நூலமைப்பாலும் நூற் பொருளைக் கூறுகின்ற திறனலும் மேம்பட்டுப் பிறநூல்களுக் செல்லாம் வழிகாட்டியாய்த் திகழ்கின்றது. முன்னைய காப் பியப் புலவர் போலாது சேக்கிழார், நூலின் முதற்கண் நாட் டுச் சிறப்பு நகரச் சிறப்பு என்பவற்றைத் தனித்தனியாக அமைத்தனர். மேலும், அந்நூலில் வரும் ஒவ்வோரடியார் செய்தியும் ஒவ்வொரு புராணமெனப் பெயர் பெறுந் தன்மைக் கேற்ப, அவ்வொவ்வொரு புராணத்தின் தொடக்கத்திலும் அவ்வப் புராணத்திற் கூறப்படும் நாயனாது நாட்டின் சிறப் 49 Paris குறைந்தது இரண்டு மூன்று பாடல்களிலாயினும் வரு ணித்தும் சிலவற்றிலே காட்டின் சிறப்புமட்டுமன்றி நகரின் சிறப்பினையும் ஒருங்கு வருணித்துங் கூறியிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சேக்கிழார், காங் கூறுங் கதாபாத்திரங்க ஒளின் உயரிய பண்புகளின் ஆக்கத்திறகுக் காரணமான காட்டி னதும் நகரத்தினதும் நல்லியல்புகளைக் கூறுகின்றவிடத்து, இயற் கையனவுஞ் செயற்கையனவுமான பொருள்வளங்களையும் ஒழுக்க நன்னிலைமைகளையும் பாக்கக் காட்டிப், பின்னர், பத்திவளமுஞ் சமயவாழ்வும் அந்நாடு நகரங்களிலே பல்கிப் பெருகித் திகழ் வதையுங் தம் அருமைப் பாடல்களிற் படம் பிடித்தாற்போலக் காட்டுகின் ருச்.
"மேகமுங் களிறும் எங்கும் வேதமுங் கிடையும் எங்கும் யாகமுஞ் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் யோகமுங் தவமும் எங்கும் ஊசலு மறுகும் எங்கும் போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்"
எனவும்,
1

Page 8
"தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிங்தை முனிவர் மறையவர் வீழ்ந்த வின் பத் துறையுள் விரவுவார் குழ்ந்த பல்வே றிடத்தகத் தொன் னகர்"
எனவும் வரும் பாடல்களிற் காணப்படும் நாடும் நகரமுஞ் சமய வாழ்வினை மலரச்செய்யும் பெரியார்களின் பிறப்பிற்கு ஏற்ற கிலைக்களன்களாயே உள்ளன என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
சேக்கிழாருக்குப் பின்வந்த கம்பர் தாம்படைத்த இராமாயணத்தில் ஒரு புதுமையை அமைத்தார். சேக் கிழார் நாடு நகரங்களின் சிறப்புக்களைக் கண்டு அவற்றைத் கனித்தனி படலங்களிற் பாடிய திறனை உணர்ந்த கம்பர், தமது நூலிலே நாடுநகரங்களின் சிறப்புக்களைக் கூறுதற்கு முன்னுக, அந்நாட்டுப் படலத்திற் பிறர் கூறிய மழையின் சிறப்பினைத் தாம் தனியாக முதற்கண் வைத்து ஆற்றுப்படலம் எனப் பெயரிட்டு, அதன் பின்னரே கோசல நாட்டின் வளத்தினையும் அயோத்தி நகரின் அழகினையும் வருணித்தார். அங்கினம் அவர் ஆற்றுக்கு முதன்மை கொடுத்துப் பின்பு நாட்டின் சிறப்பினைப் பாடினராயினும், அங்காட்டின் வளத்தினைக் கூறுகின்றவிடத்துங் தமக்கே உரிய அழகான நடையிலே பிற புலவர்கள்--சங்ககாலப் புலவர் உட்படப் பலருங்-கூருத முறையிற் கூறுகின் முர். ஒரு நாட்டின் மேன்மையை, அங்கு , நாஞ்சிலல்லது படையும் இல்லை, சுடு நெருப்பல்லது ஊர் சுடு நெருப்புமில்லை என்ருயினும், வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன என்ரு யினும், நல்லனவன்றித் தீயன வில்லை என்ற வாய்ப்பாட்டிற் கூறுவதே மரபு. ஆணுற் கம்பரோ, கோசலநாட்டிலே நல்லனவே இல்லை என்று சொல்கின் ருர் !
'aj6áT6ðuD இல்லையோர் வறுமை இன்மையால்
கிண்மை யில்லைநேர் செறுரு ரின்மையால் உண்மை யில்லைபொய் யுரையி லாமையால் ஒண்மை யில்லைப்பல் கேள்வி மேவலால்'
இவ்வாறு கூறியவர் கம்பர் ஒருவரே யாவர். இத்தகைய நல்ல நாடுதான் இராமர் அவதரித்தற்கு ஏற்ற கிலைக்களமாயிற்று
2

இவ்வாறு காலந்தோறுந் தோன்றிய காப்பியங்களிற் கதாபாத்திரங்களின் பிறப்பிற்கு நிலைக்களமாகிய நாடு நகரங்கள் வெவ்வேறு வகையில் விதந்து கூறப்பட்டன. இவை யெல்லாவற்றையும் விட வேருெரு புதிய வழியிலே புதுமைக் கவிஞராகிய சுப்பிரமணிய பாரதியார் பாடினர். அவர் தமது பாஞ்சாலி சபதம் என்ற நூலில் அத்தினபுரம், இந்திரப்பிரத்தம் என்ற இரு வேறிடங்களையும் வருணிக்கும் மரபு நூதனமானது. அத்தினபுரத்தின் இயல்பினைக் கூறுகிற போது அது நல்லவர் வாழுகின்ற நகர் என்று முன்னேர் போலவே புனைந்து கூறிச் செல்லாமல், அங்கு நல்லாரும் உள்ளனர் தீயாரும் உள்ளனர் என்பதை மறைக்காமற் செப்புகின்றர். ஆனல் இந்திரப்பிரத்க வருணனை ஏனைய நூல்களைப்போலவே அமைகின்றது. துரியோதனன், சகுனி முதலான தீயவர் வாழுகின்ற இடத்தையும், கருமன் முதலிய நல்லவர் வாழுகின்ற இடத்தையும் ஒரே தன்மையனவாகப் புனையாமல் அவ்வக் கதாபாத்திரங்களின் பண்புகளுக்கமையப் பாடியமை நாம் கண்டு நயக்கத்தக்கதாகும்.
13

Page 9
--ச. தனஞ்சயராசசிங்கம்
சோழர்காலப் பெருங்காப்பியங்கள்
தமிழ்நாடு இராசராசன் இராசேந்திரன் முதலிய பேரர சர் ஆட்சியிற் பகை, பிணி முதலிய துன்பங்களின் றிச் செல் வத்திற் செழித்தது. கங்கைநாடு, மண்ணைக்கடக்கம், இலக்க தீவு, முரட்டெழில், ஈழம், கடாரம் முதலிய பிறநாடுகளுஞ் சோழர் ஆட்சிக்குட்பட்டன. சோழநாட்டிற் பல்கலைகளும் வளர்வதற்குரிய குழல் அமைந்தது. நடனம், இசை, சிற்பம் ஒவியம் முதலிய நுண்கலைகளிலே மன்னரும் மக்களும் ஈடு பட்டனர். அவ்விருதிறத்தாருஞ் சமயத்தைப் புறக்கணிக் கவில்லை. அவர்கள் அதனையும் வாழ்வின் இன்றியமையாத கூறெனக் கருதினர்கள். அக்காலத்து மக்கள் மன்னனைக் கடவுளென மதித்தனர். மன்னர் கோயில்களுக்கு அளித்த பொருள்கள் "தேவராசா" (கடவுள்-மன்னன்) என வழங் கப்பட்டன. நாம் அவ்வழக்கில் மன்னன் கடவுள் அமிசம் பெற்ற தன்மையைக் காண்கிருேம். அக்காலத்து மன்னர்கள் நலங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய தூய தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து இராசேந்திரன், குலோத்துங்கன் முதலிய வட மொழிப் பெயர்களை விரும்பினர்கள். சோழப் பெரு மன்ன ரவையிலே தமிழ்ப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் ஒருங்கே வீற்றிருந்து தமிழிலும் வடமொழியிலும் பாணிகளை யும் பிரசத்தி கர்ப்பியங்களையும் பாடினர். தமிழ்ப்புலவர்கள் வடமொழிபால் வெறுப்புக்கொள்ளாது அதனை விரும்பிக் கற்ற னர். அவர்கள் வடமொழியிலுள்ள இலக்கண இலக்கியங்களைக் கற்று அவற்றிலுள்ள சிறப்பான இயல்புகளைத் தமிழிற் புகுத்த விழைந்தனர். இதன் பயனுகச் சோழர்காலத்திலே தமிழ் இலக்கியம் வடமொழி மரபினைத் தழுவிப் புதியதொரு வழி யிற் செல்லலாயிற்று.
4

மக்களின் பண்பாடு உயர்கிலையடைகிற பொழுது அவர் களது மொழியில் உயர்ந்த இலக்கியங்கள் எழுமென்பதற்குச் சோழர்காலத்துப் பெருங்காப்பியங்கள் சான்முகின்றன. சிங் தாமணி, கம்பராமாயணம் முதலிய பேரிலக்கியங்கள் மன்னரின் வாழ்க்கையினைப் பெருங்காப்பிய முறையிற் சித்திரிக்கின்றன. சோழர் காலத்துப் பெருங்காப்பியங்கள் சில சிறப்பியல்புகளைக் கொண்டன. அவை யாவும் வடமொழி விருத்தப் பாவினடி யாகப் பிறந்த தமிழ் விருத்தத்தினல் இயற்றப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் சமயத்தினைச் சிறப்பித்துக் கூறு கின்றன. அவற்றுள்ளே பெரியபுராணம் ஒழிந்த ஏனைய நூல்கள் வடமொழிக் கதைகளைத் தழுவி யெழுந்தவை. அவற்றுட் பெரும்பாலானவை வடமொழியிலே தண்டியியற்றிய காவியாகரி சத்திற் கூறப்பட்டிருக்கும் பெருங்காப்பிய இலக்கணங்களுக்கு அமைய இயற்றப்பட்டிருக்கின்றன.
காப்பியம் என்பது வடமொழிச் சொல்லாகிய "காவ்ய என்பதின் தமிழாக்கமாகும். தண்டியின் காவியாதரிசத்தினைத் தழுவித் தமிழிலே தண்டி யாசிரியர் ஒர் அணிநூலினைச் சோழர் காலத்தில் எழுதினர். அவர் பெருங்காப்பியத்தின் இலக்கணங் களை வருமாறு கூறுகிருர் :
*பெருங்காப் பியகிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு விவற்றினுென் றேற்புடைத் தாகி முன் வர வியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனே யுடைத்தாய் மலைகட னடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல் கேம்பிழி மதுக்களி சிறு வரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மக் கிரந் தூது செலவிகல் வென்றி சங்கியிற் ருெடர்ந்து சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றேர் புனையும் பெற்றிய தென்ப"
தண்டியலங்காரம், 8
5

Page 10
பெருங்காப்பியமானது வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகிய மூன்றனுள் ஒன்றினைப் பெற்றதாயும் பாயிரத்தோடு வருவதாயும் அமைதல் வேண்டும். அதன் தலைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுகச் சிறந்து விளங்குதல் வேண்டும். தலைவன் அறம், பொருள், இன்பம், வீடாகிய நான்கு பொருளினையும் அடைவதாகக் கூறுதல் வேண்டும். மலை, கடல், நாடு, நகர், முதலிய இயற்கை வருணனைகளிலும் வைகறை, விடியல், நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் முதலிய சிறுபொழுதுகளிலும் கார், கூகிர், முன்பணி, பின்பனி, இள வேனில், முதுவேனில் முதலிய பெரும்பொழுதுகளிலும் ஞாயிறு, கிங்களின் தோற்ற முதலிய வருணனைகளிலும் பெரும் பாலன அதில் இடம்பெறும். மணஞ்செய்தல், முடிசூடுதல், சோலையில் இன்புறுதல், புனல்விளையாடல், மதுவுண்டு இன் புறுதல், புதல்வரைப் பெறுதல், கூடல், ஊடல் முதலிய கிகழ்ச் சிகளுங் காப்பியத்திற் கூறப்படும். அதிலே மந்திராலோசனை, தூதுசெல்லுதல், போருக்குச் செல்லல், போர்தொடுத்தல், வெற்றி முதலியனவுக் தொடர்ச்சியாகக் கூறப்படுதல்வேண்டும். இவையாவுஞ் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற உட் பிரிவுகளுள் ஒன்றினைப்பெறுதல் வேண்டும். காப்பியமானது மெய்ப்பாட்டுக்குறிப்பினையும் வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை ஆகிய எண்வகைச் சுவை
களையும் பெற்றுச் சான்றேரினுற் புனையப்பட்டு விளங்கும்.
சோழர் காலததிலே முதன்முதல் எழுதப்பட்ட பெருங் காப்பியஞ் சீவகசிந்தாமணியாகும். இந்நூலைத் திருத்தக்க தேவர் என்னுஞ் சமணர் கி. பி. பத்தாம் நூற்முண்டில் இயற்றி ஞர் என்பர். நாம் சோழர் காலச் சமயகிலையினை நோக்கின் அக்காலத்திலே சமணசமயம்பெளத்தத்தைவிடச் சிறப்புப்பெற்ற தெனப் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியியற்றிய சோழர்' என்னும் வரலாற்று நூல் வாயிலாக அறியலாம். இராசராசனின் தமக்கையாகிய குந்தவையார் இராசராசபுரத்திலுங் திருமழ பாடியிலுஞ் சமணப்பள்ளிகளைக் கட்டுவித்து அவற்றின் பரி பாலனத்திற்குப் பொருட்கொடையுஞ் செய்தார். இராசாாசன் தென்னுர்க்காட்டுத் திருநறுங்கொன்றை என்ற இடத்திலுள்ள பெரிய பள்ளியில் இரு விளக்குக்கள் நாடோறும் ஏற்றிவருமாறு கிலக்கொடை செய்தான். சமணப்பள்ளியைக் கொண்ட இடம் 'பள்ளிச்சந்தம்' என வழங்கியது. சோழர்காலத்திற் பள்ளிச்
16

சந்தங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. சிற்முமூர், செங்கற்பட்டு, திருப்பாண்மலை, விளாப்பாக்கம் முதலிய இடங்களிலே சமணப் பள்ளிகள் சோழப்பேரரசர் ஆதரவுடன் சமயப்பணிபுரிந்தன. கி பி. 885-ஆம் ஆண்டளவிலே பெரிய சமணப்பள்ளியொன்றில் வாழ்ந்த பெண் துறவிக்கும் அவளின் ஐந்நூறு மாணுக்கர்களுக்கு மிடையே ஏதோ கலகம் விளைந்ததெனக் கூ றப்படுவதிலிருந்து இக்காலத்துச் சமணரின் தொகையினையுஞ் செல்வாக்கினையும் நாம் ஒரளவு கணிக்கலாம். இச்சூழலிற்ருன் சீவகசிந்தாமணி என்னுஞ் சமணப் பேரிலக்கியம் எழுந்தது.
வடமொழியிலே கண்டி யியற்றிய காவ்யாதரிசக்தினைத் திருத்தக்கதேவர் முதலிய சோழர்காலப் புலவர்கள் கற்றனர். காவ்யாதரிசத்திலுள்ள காவிய இலக்கணங்களாகிய பொன் முடி கவித்தல், மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி முதலியன மன்னர்க்கே பொருந்துவதை அறிந்து அவற்றைக் கைக்கொண்ட மன்னர்பற்றிய காப்பியங்களை யியற்றினர். சீவக சிந்தாமணியாசிரியர் வடமொழியில் வாதீபசிம்மன் எழுதிய சுதந்திர குடாமணியையுங் கத்தியசிந்தாமணியையுந் தழுவிச் சீவகசிந்தாமணியை யியற்றினர் என்பர் வடமொழியிலுள்ள சீவந்திரநாடகம், சிறீபுராணம் முதலியனவும் இவர்க்கு உதவின என்பர். சிந்தாமணியின் தலைவனுகிய சீவகன் ஏமாங்கதநாட்டு மன்னணுகிய சச்சந்தனுக்கும் விசயை என்ற அவன் பட்டத் தாசிக்கும் பிறந்தான். சீவகன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணந்து சிறப்புடன் வாழ்ந்துவந்தான். தன் தந்தையை வஞ்சித்து நாட்டைக் கைப்பற்றிய கட்டியங் காரனைப் போரில் வென்று நாட்டை மீட்டான். ஒருநாள் அவன் சோலையில் உலாவச் சென்முன். அங்கு கடுவன் ஒன்று இனிய பலாச்சுளையினே மந்திக்கு ஊட்டும்பொழுது காவற். காரணுல் விாட்டப்படுங் காட்சியினைக் கண்டு வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்தான். இதன் பயனகச் சீவகன் அரச பதவியினைத் தன் மகன்பால் ஒப்படைத்துவிட்டுத் துறவு கொண்டான். இக்கதையினைத் திருத்தக்கதேவர் பெருங்காப்பிய இலக்கணங்களுக்குப் பொருந்தத் தக்கதாகப் பாடினர். கடவுள் வாழ்த்துடன் நூலைத் தொடங்கினர். அப்பகுதியிற் சித்தனையும் அருகக் கடவுளையுஞ் சாதுக்களையுந் தருமத்தையும் வணங்கினர். பதிகம் என்னும் பிரிவிலே நூலின் வருபொரு
B 17

Page 11
எளினை உரைத்தார். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றி னைப் பன்னிரண்டு இலம்பகங்களிற் கூறினர். வீட்டினைச் சிறப்பித்து முத்தியிலம்பகத்திற் கூறினர். சீவகன் தன்னிக ரில்லாத் தலைவன் என்பதற்கு அவன், குணமாலை மீராடிவிட்டு வந்தபொழுது அசனிவேகமென்னும் யானை மதங்கொண்டு அவளைக் கொல்லவா அதனே அடர்த்து அவளைக் காப்பாற்றி யதும், இசைப் போர் நிகழ்த்திக் காந்தருவதத்தையை மணங் ததும், திரிபன்றி இயங்கிரத்தை அம்பினல் எய்து வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெற்று இலக்கணையை மணந்ததும், கட்டியல் காரனைப் போரிலே வென்றதுஞ் சான்றுகளாகும். ஏமாங்கத நாட்டுவர்ணனையும் நகர்வர்ணனையும் மிகவும் விரிவாகச் சித் திரிக்கப்பட்டன. சீவகன் காந்தருவகத்தை முதலாயி னேரை மணமுடிக்கல், பொழினுகர்தல், சச்சந்தன், சுதஞ் சணன் முதலாய புதல்வரைப்பெறுதல் முதலியன வுங் கட்டியங் காரனைக் கொன்று அரசுரிமை பெறுவதாலே மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி, முதலியனவும் நூலிலிடம் பெறு கின்றன. நாமகளிலம்பகம், கோவிந்தையாரிலம்பகம், காங் கருவதத்தையாரிலம்பகம், குணமாலையாரிலம்பகம், பதுமை யாரிலம்பகம், கேமசரியாரிலம்பகம், கனகமாலையாரிலம்பகம், விமலையாரிலம்பகம், சுரமஞ்சரியாரிலம்பகம், மண்மகளிலம்பகம், பூமகளிலம்பகம், இலக்கணையாரிலம்பகம், முக்கியிலம்பகம் ஆகிய பதின்மூன்று இலம்பகங்களைச் சிந்தாமணி கொண்டது. இந்நூலிலேயே இலம்பகம்" என்ற சொல் "இயல்' என்னும் பொருளில் வழங்குகிறது. நூலின் பகுதிகள் பலவற்றிலும்
எண்வகைச் சுவையினையும் மெய்ப்பாட்டினையும் நாம் காணலாம்.
சிந்தாமணி வடமொழிக் காப்பிய மரபினைத் தழுவித் தமிழில் எழுந்தமையால் வடமொழியணிகள் பெருந்தொகை யாக அதனிற் காணப்படுகின்றன.
பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம் நற்சிரு ரூர்தலின் கங்கை மார்விரீஇ உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே
நாமகளிலம்பகம், 60
8

ஏமாங்கதநாட்டு மகளிர் நெல்லை உண்ணவருங் கோழி களை விாட்டத் தம்முடைய விலையுயர்ந்த காதணிகளைக் கழற்றி பெறிவார்களென்றும் அவை சிறுவர் உருட்டுக் தேர்ச்சில்லுகள் உருளாவண்ணங் தடைசெய்வனவென்றுங்
கற்பனைசெய்தார்.
*வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும்
உயர்ச்சி புனைந்துரைப்ப துதார்த்தமாகும்"
என்ற தண்டியலங்காரச் சூத்திரத்திற் கிணங்கத் கிருத் தக்கதேவர் ஏமாங்கதநாட்டினரின் செல்வகிலையைப் பாடுவ தற்கு ஒரு செல்வமிகுதியணியினை இப்பாட்டிற் கையாண்டார். கிருத்தக்கதேவரின் கற்பனை பழையதொன்முகும்.
*கேரிழை மகளி ருணங்குணக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்"
பட்டினப்பாலை, 23-25
என்று கடியலூர் உருத்திரங் கண்ணனர் பட்டினப் பாலையிற் பாடிஞர். மேலும் பட்டினப்பாலையாசிரியரிர்
*மாம%ல யணைந்த கொண்மூப் போலவுந்
தாய்முலை தழுவிய குழவி போலவும்" (95-96)
என்ற உவமைகளைத் திருத்தக்கதேவர் பயன்படுத்தினர்.
*தாய்முலை தழுவிய குழவி போலவும் மாமலை தழுவிய மஞ்சு போலவும்"
நாமகளிலம்பகம். 7 !
சிற்சிலவிடங்களிலே திருத்தக்கதேவரின் கதையுங் கற்பனை யும் பழையன வெனினும் அவர் அவற்றிற்குப் புது மெருகூட்டி னர். சோழர்காலப் புலவர் யாவரும் பழைய ககையினையுஞ் சிற்சில விடங்களிற் பழைய கற்பனையையும் பயன்படுத்திய பொழுதிலும் அவர் அவற்றினைத் தத்தம் பேரிலக்கியங்களிற் பயன்படுத்தும் வகையிலே தனித்தன்மை பெற்று விளங்கினர்.
19

Page 12
கிருத்தக்கதேவர் முதலிய சோழர்காலப் புலவர் கையாண்ட அணிகள் பெரும்பாலுஞ் செய்யுளுக்கு அலங்கார மாகவே விளங்குகின்றன. சங்ககாலத்திற் புலவர்கள் உண்மை யணியையே பெரிதுங் கையாண்டார்கள். அக்காலப் புலவர் கள் கையாண்ட உவமைகள் சொற்சுருக்கமாகவும் பொருட் பெருக்கமாகவும் இலங்குகின்றன. பல அடிகள் கொண்ட பாடலொன்றினுள் ஒரு சிறிய சொற்ருெடர் உவமையாக வரும். அச்சொற்ருெடர் அப்பாட்டின் பொருளிற்குப் பெரும்பாலும் மையமாக விளங்கி அதன் பொருளை எளிதில் விளங்க உதவுகிறது. சங்ககாலப் புலவர்கள் புலனல்லாத பொருளினைப் புலனுக்குவதற்கே உவமையினைக் கையாண்டார் கள். அறியாத ஒரு பொருளினை அறிந்த ஒரு பொருளிஞல் விளக்கினர். "ஒரேர் உழவன்போல, கல்லிலொரு சிறுநுரை போல, செம்புலப்பெயல்நீர் போல, சிறுகோட்டுப் பெரும் பழந் தூங்கியாங்கு' முதலிய எடுத்துக்காட்டுகள் இவ்வுண்மையினை வலியுறுத்தும், கிருத்தக்கதேவர் மலையின் அருவிகளை வருமாறு உவமித்தார்:
'இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்த்தமுத் தாரமும் போன்றவை நலங்கொள் பொன்னெடு நன்மணி சிந்தலாற் கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே'
நாம. இல. 6
அருவிக்ள் வீழ்வது இந்திரன் மார்பின்மேல் வீழ்ந்த முத்துவடத்தினை ஒத்தனவென்றும் அவ்வருவிகள் பொன்னை யும் மணியையுஞ் சிந்துதலால் அவனின் ஆபரணப்பேழை கவிந்து அதிலிருந்து நீங்கிய ஆபரணங்களையும் ஒத்தனவென் றுங் கிருத்தக்கதேவர் கற்பனை செய்தார். அறிந்த சாட்சியாகிய அருவியோட்டத்தினைக் கண்ணுற்காணமுடியாத இந்திரனின் மார்பிலுள்ள முத்தாரத்திற்கு ஒப்பிட்டார். இவ்வுவமை வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுந்தது அன்று.
விருத்தயாப்பு, முன்னர்க் காரைக்காலம்மையாராலே முதன்முதலிற் பத்திநெறியினைப் புலப்படுத்தப் பயன்படுத்தப் பட்டது. அவரைப் பின்பற்றிச் சைவ நாயன்மாரும் வைணவ
ஆழ்வாருங் தக் தேவாரத்திருப்பாசுரங்களையும் பிரபந்தங்
20

களையும் அவ்யாப்பிற் பாடினர். அதனைப் பெருங்காப்பியம் பாடுவதற்கு முதன் முதலிற் பயன்படுத்திய பெருமை வேக சிந்தாமணியாசிரியர்க்கே யுரியது. வல்லான் வகுத்த வழியிற் செல்வது மரபா கையாலே திருக்தக்கதேவருக்குப் பின் வாழ்ந்த கம்பர், சேக்கிழார், கச்சியப்பர் முதலியோருங் கததங் காப்பியங்களை விருத்த யாப்பில் அமைத்தனர்.
எனவே, வடமொழி மாபைப் பின்பற்றியதிலும் விருத்த யாப்பிற் பெருங்காப்பியம் பாடியதிலும் வடமொழியணிகளைக் கணக்கின்றிக் கையாண்டதிலுஞ் சீவகசிந்தாமணியாசிரியர் ஒரு புது மரபினைத் தமிழ் இலக்கியத்திற் முெடக்கிவைத்தா
ரெனலாம்.
சோழர்காலத்திலே திருத்தக்கதேவரை யடுத்துக் கம்பர், இராமாயணத்தினை யியற்றினர். வால்மீகி வட மொழியில் இயற்றிய இராமாயணத்தினை முதனூலாகக் கொண்டு கம்பர் பெருங்காப்பியத்தினை யியற்றினர். ஆனல், வால்மீகியிராமாயணத்தில் இராமர், சீதை முதலியோர் தத்தம் உயர்குணங்களுக்கு முரணுகக் கூறிய வற்றினைக் கம்பர் நீக்கியும் இராவணன் சீதையைக் தூக்கிச் செல்லுதன்முதலிய தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாதவற்றை மாற்றியுமமைத்தார். இராமர் சீதையைக் கண்டு காதல் கொள்வது முதலிய தமிழர் பண்பாட்டிற்கு ஒத்தவற்றினைப் புதிதாகச்சேர்க்கவுங் கம்பர் தவறவில்லை. இராமன்,சீதை, இலக்குமணன், பரதன் முதலிய பெரும் பாக்திரங்களேயன்றி, வாலி, குகன் முதலிய சிறு பாத்திாங் களுங் கம்பரின் ஆற்றலினல் இலட்சியப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டன. வால்மீகி இரண்டடிச் சுலோகங்களாக நாலாயிரம் பாடல்களில் இராமாயணத்தைப் பாடினர். கம்பரோ பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நாலடி விருத்தப் பாக்களில் இராமாயணத்தைத் தமிழ் நாட்டிற்கு அளித் தார். கம்பரின் இராமாயணம் பாலகாண்டம், அயோத் தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தர காண்டம், யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களாகவும், படலங்களாகவும் பிரிக்கப்பட்டது. காண்டம், படலம் என்ற பிரிவுவகைகள் தண்டியலங்காரத்திலுள்ள பெருங் காப்பியச் குத்திரத்திற் கூறப்பட்டில.
C 2.

Page 13
கம்பர் வடமொழியிலே கண்டியியற்றியகாவியா தரிசம் முதலிய இலக்கண நூல்களைக்கற்றவர். அவர் வடநாட்டு இராமர் கதையைத் தம் கவிதைப் பொருளாகக் கொண்ட பொழுதிலும் அவரின் அரசவிசுவாசமும் நாட்டுப்பற்றும் அவரைச் சோழநாட்டையும் மன்னனையும் பாடும்படி தூண்டின. சோழப்பேரரசின் உன்னத நிலைக்குப்பொருந்த அவர் நூல் உயிர்த்துடிப்புள்ள இலக்கியமாக விளங்குகிறது.
நா ம்கம்பரை ஒர் அலங்கா ரப்பித்தன் என வருணிக் கலாம். கம்பர் வடமொழியிலக்கியங்களிற் பெரும்பயிற்சி யுடையவராகையால் அவற்றிற் காணப்பட்ட அலங்காரச் சிறப்புக்களை யெல்லாங் தாம் படைத்த இராமாயணத்தில் அடக்கிவிட்டார். தற்குறிப்பேற்றம் என்னும் அணி உற்பி ாேட்சை" என வடமொழியில் வழங்குகிறது. புலவன் ஒருபொருளின் இயல்பாக கிகழும் நிகழ்ச்சிக்குக் காரண மாகத் தான் குறித்க கருத்தினை ஏற்றிக் கூறுதலே தற்குறிப் பேற்றம் (தன்+குறிப்பு+ ஏற்றம்) எனப்படும். கம்பர் தற்குறிப் பேற்றவணியையே தம் பெருங்காப்பியத்திற் பெரிதுங் கையாண்டார். சிலவிடங்களில் அதனைத் தொடர்ச்சியாகப் பயன்
படுத்தினர்.
“மையறு மலரி னிங்கி யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிக ளென் கைகளை மீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்க [னுங் ணையனை யொல்ல வாவென் றழைப்பது போன்ற தம்மா"
'கிரம்பிய மாடத் தும்பர் சீள்மணிக் கொடிக ளெல்லாத்
தாம்பிற ரின் மை யுன்னித் தருமமே தூதுசெல்ல வரம்பில்பே எழகினுளை மணஞ்செய்வான் வருகின் முனெ றாம்பையர் விசும்பி னடுமாடலி னுடக் கண்டார்." (ண்
மிதிலைக்காட்சிப்படலம், 1,2.
கொடிகள் காற்றினல் அசைக்கப்படுவது இயல்பான கிகழ்ச்சியாகும். ஆனல், கம்பர் அக்கொடிகள் அசைவது காற்றினல் அன்று என உள்ளத்திற் கருகி, ‘இராம லக்குமணரும் விசுவாமித்தி சரும் மிதிலைநகர்க்கு வருகின்றனர்; அக்கொடிகள் திருமகளின் இயல்பினளாகிய சீதையை மனஞ்
22

செய்யத் திருமாலின் இயல்பினனுகிய இராமர் வருவதை யறிந்த அவரைத் தங்கைகளை நீட்டி வரவேற்கின்றன’ வென்றர். ஒருவர் நம் இல்லத்திற்கு வரின் அவரை நாம் கைகள் இரண்டினையுங் நீட்டி வரவேற்று உபசரிக்கிருேம். இம்மனிகப்பண்பினை அஃறிணைப் பொருளாகிய கொடிமீது எற்றிக் கம்பர் கூறினர். கொடிகள் கைநீட்டிவரவேற்ற துடன் இராமலக்குமணரின் வரவேற்புபசாாம் கின்றுவிட வில்லை. கம்பர் மேலும் 'இராமலக்குமணரை மாடத்திலுள்ள நீண்ட மணிக்கொடிகளாகிய தேவமாதர் நடன விருந்தினுல் வரவேற்கின்றனர்" என்றர். இவ்வாறு காற்றுக்குக் கொடிகள் அசையும் இயற்கைக்காட்சி, கம்பரின் கற்பனையில் இராம லக்குமணரை வரவேற்று உபசரிக்கும் பண்புகொண்டனவாகவுந் தேவமாதராகவும் மாறுகின்றது. கம்பர் முற்றும் புதிதாக இக்கற்பனையைப்படைத்ததாக நாம்கொள்ளல் ஆகாது. இளங் கோவடிகள் கோவலனுக்கு நிகழவிருக்குந் துன்பத்தினை வாச கர்களுக்கு உணர்த்துவதற்கு மதுரை மதிலின் மீதுள்ள கொடி அசையும் நிகழ்ச்சியைப் பயன்படுக்கினர்.
‘போருளக் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பன போல் மறித்துக்கை காட்ட"
புறஞ்சேரியிறுத்தகாதை 189, 190
இளங்கோவடிகள், 'கோ வலனே! இங்கு வராதே ரீயிங்கு வரின், உன்னைத் துன்பஞ்குழும்” எனக் கொடி தன் கைகளால் அசைக்து மறிக்கின்றது என்ருரர். இததன் பவுணர்ச்சியைப் புலப்படுத்தக்கையாளப்பட்ட தற்குறிப்பேற்றத்தையே கம்பர் இன்பகிகழ்ச்சியாக இராமலக்குமணரின் வரவேற்பினையுணர்த்து வதற்கு மாற்றிப் பயன்படுத்தினர். பழைய கற்பனையெனினுங் கம்பனின் புதுமெருகூட்டலினல் அது புதுச்சிறப்பினைப் பெற்று எம்மை அதனைப் படிக்குக்தோறும் இன்புறுத்துகிறது. இன் லுங் கம்பர் இராமரின் பிரிவைப் பொருது கோழிகள் சிறகடித்துக் கூவினவென்றும் சீதையின் விர கதாபந் தன்னைச் சுடுமென அஞ்சிச் சூரியன் மறைக்தானென்றுந் தாங்கருதிய வற்றைப் பிறபொருள்களின் இயல்பான கிகழ்ச்சிகளுக்குக் காரணமாகக் காட்டிக் கூறினர்.
23

Page 14
திருத்தக்கதேவர் கம்பருக்குப் பெருங்காப்பிய மரபில் வழிகாட்டியாக விளங்குகிறர். கம்பரோ உவமை முதலிய அணிகளைக் கையாளுவதிலே திருத்தக்கதேவராகிய குருவை வென்ற சீடராகக் காணப்படுகின்றர். திருத்தக்கக்ேவர் ஏமாங்கதநாட்டிலே கெல்விளைந்த சிறப்பி%ன (புணர்த்துவதற்கு ፵® பாட்டிலே மூன்று உவமைகளைக் கையாளுகிறர். நெற் பயிரானவை, கருவுற்ற பசும்பாம்பின் தோற்றத்தினையொத்தன வென்றும், கீழ்கிலையிலுள்ளோர் செல்வத்தைப்போலப் செருக்கு டன் க%ல நிமிர்ந்து கின்றனவென்றும், கல்வி நிரம்பிய அறிஞர் போலத் தாழ்ந்து கின்றனவென்றும் வருணித்தார்.
கொல்லருஞ் குற்பசும் பாம்பின் தோற்றம்போன் மெல்லவே கருவிருங் தீன்று மேலலார் R • செல்வமே போற்ற%ல கிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே"
நாமகளிலம்பகம் 24
அநுமன் சீதைக்கு இராமரின் மோதிரத்தைக் காட்டி னன். அப்பொழுது சீகை அடைந்தகிலையினைக் கம்பர் செய்யுளில் அடிதோறும் உவமை வாயிலாக விளக்கினர். சீதையின் மகிழ்ச்சிநிலையினைப் புற்றிலுள்ள பாம்பு தன் மாணிக்கத்தினை யிழந்து மீண்டும் அதனைப் பெற்ற நிலைக்கும் "பொருளற்ருர் பூப்பரொருகால்" என்றபடி பழைய செல்வத்தை யிழந்தவர் மீண்டும் அதனைப் பெற்றகில்க்கும் மலடி மலட்டுத்தன்மை நீங்கிக் குழவி ஈன்ற நிலைக்குங் கண்ணுெளி யிழந்தவன்.அவ் வொளியினை மீண்டும் பெற்ற நிலைக்கும் ஒப்பிட்டார்.
'இழந்தமணி புற்றர வெதிர்ந்ததென லானுள்
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள் குழந்தையை யுயிர்த்தமல டிக்குவமை கொண்டாள் உழந்துவிழி பெற்றதொ ருயிர்ப்பொறையு மொத்தாள்"
உருக்காட்டுபடலம்-65
சிற்சிலவிடங்களிலே கம்பரின் அலங்காரம் அளவுகடந்து போகிறது எனலாம். அலங்காரம் அளவுகடந்துபோய்த் தம் வித்தையைத் திறம்படப் புனைந்து காட்டும் ஏழாங் நூற்முண்டின் வடமொழி யுலகைப் பின்பற்றிய கம்பர் தாங்கையாண்ட
அலங்காாத்தின்மூலம் மக்கள் கருத்துக்கு உணவுகொடுக்கிருர்,
24

கம்பரது கற்பனை இரசிகர்களை யீடுபடுத்தக்கூடிய முறையிலே பயன்படுத்தப்பட்டது. சீவகசிந்தாமணி மூவாயிரத்து நூற்று நாற்பத்தைந்து பாக்களைக் கொண்டிருக்க இராமாயணம் பன்னிசண்டாயிரக்துக்கு மேற்பட்ட பாக்களாற் பாடப்பட்டி ருப்பது கம்பரின் பெருங்காப்பியஞ் செய்யுட்டொகையிலும் வளர்ந்து சிறப்புற்றிருப்பதை விளக்குகிறதுபோலும். அவரின் இராமாயணத்திற் சோழர்காலப் பெருங்காப்பியங்களின் வளர்ச்சி உன்னத கிலயை யடைந்து அவருக்குப்பின் சிறிது சிறிதாக அவ்வளர்ச்சி குன்றி நாயக்கர்காலத்துத் தலபுராணங் களிலே முற்ருக வீழ்ச்சியடைந்தது. ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கிற் கம்பராமாயணம் இடம்பெருதது சமண பெளத்தர் வைணவக் காப்பியக்திலே கொண்டிருந்த சமயக் காழ்ப்பினை யுணர்த்துகிறது. நாயன்மார் வரலாற்றினைக் காப்பிய அமைப்பிற் சிக்கிரிக்கபெருமை சேக்கிழாரைச் சார்ந்தது. சுந்தாரின் திருக்கொண்டத்தொகையையும் நம்பி யாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியினையுஞ் சேக்கிழார் கசடறக் கற்றபின் தங் கிருத்தொண்டர் புராணத் தைப் பாடினர். பொருளமைதியிலே சேக்கிழார் வடமொழிக் கதைகளைத் தழுவிப் பெருங்காப்பியங்கள் இயற்றிய ஏனைய சோழர்காலப் புலவரைவிட உயர்ந்து விளங்குகிமுர். அவரி னது நூல் தமிழ்நாட்டுச் சைவநாயன்மாரின் கதையைக்
கூறினமையாற் சிறந்து விளங்குகிறது.
பெருங்காப்பிய இலக்கணங்களுட் பொன் முடி கவித்தல், மந்திரம், ஆTஅதி செலவு, இகல், வென்றி முதலியன மன்னர்க்கே பொருந்துவன. கிருத்தக்கதேவர், கம்பர் முதலியோர் இவற்றினை யறிந்தே மன்னர்பற்றிப் பெருங் காப்பியம் பாடினர். சேக்கிழாரின் தலைவராகிய சுந்தார் சடையனுர்க்கும் இசைஞானியார்க்கும் பிறந்தவரெனினும் அவர் நரசிங்கமுனையரென்னும் மன்னரால் வளர்க்கப் பட்டவர். அரசியற் கலையையும் அந்தணர் மறையையுஞ் செவ்வனே கற்றவர். ஆகையாற் பிறகாப்பியங்களில் வரும் மன்னர்க்கு எத்துணையும் அவர் குறைந்தவரல்லரெனலாம்.
பெரியபுராணம் என்ற பெயர் 'மாக்கதிை' என்ற வட மொழி வழக்கின் நேர்மொழிபெயர்ப்பாகும். திருத்தொண்டர் புராணம் என்பதே பெரியபுராணத்தின் இயற்பெயர்.
25

Page 15
கிருத்தொண்டர்புராணத்தின் வாழ்த்துச் செய்யுளொன்றில் *மாக்கதை' என்ற சொற்ருெடர் காணப்படுகிறது. பிற் காலத்தில் அதனைத் தமிழிலே பெரியபுராணம்" என மொழிபெயர்த்துத் திருக்கொண்டர்புராணத்திற்குச் சிறப்புப்
பெயராக வழங்கினர் போலும்.
பெரியபுராணம், காண்டம் என்ற பெரும்பிரிவினையுஞ் சருக்கம் என்ற சிறுபிரிவினையும் பெற்று விளங்குகிறது. சுந் தாரின் வரலாறு திரும%லச்சருக்கத்திற் ருெடங்கி, வெள்ளானைச் சருக்கத்திலே முடிகிறது. பெரியபுராணத்தைச் சேக்கிழார் சமயப்பொருமை காரணமாக இயற்றினரெனக் கதையொன்று வழங்குகிறது. அநபாயசோழர் சிந்தாமணியைப் பெரிதுஞ் சுவைத்ததைக் கண்டு அவரின் மனத்தை மாற்றுமாறு பெரிய புராணத்தைச் சேக்கிழார் இயற்றினரெனுங் கதையைச் சமணர் பரப்பினர். சமணபெளத்தர் தத்தம் இலக்கியங்களுக்கு ஏற் றம் அளிக்குமுகமாக "ஐம்பெருங்காப்பியம்' என்ற வழக் கினை வழங்கினர். இவ்வழக்கிற் சைவவைணவ இலக்கியங் களில் ஒன்றெனினும் இடம்பெருககே யிதனே வலியுறுத்தும். சமணர் தஞ் சிந்தாமணிக்குச் சிறப்பு அளிக்குங் நோக்கத்துடன் சேக்கிழார் திருத்தக்கதேவரின் ஆற்றலிற் பொருமை காான மாகப் பெரியபுராணத்தை யியற்றினரெனக் கதையொன்றனைக் - கட்டினர். ஆனல் அக்கதை யின்று சேக்கிழார் சிந்தாமணியை வெல்லும் இலக்கியத்தைப்படைக்கும் ஆற்றல்வாய்ந்தவரென் பதை விளக்குவதற்குப் பலாாற் பயன்படுத்தப்படுகிறது. சேக் கிழார் சிந்தாமணியின் சிறப்பினை யுணர்ந்து அதனைச் சுவைத்தா ரென்பதை அவ்விரு நூல்களையொப்பிட்டுக் கற்பின் அறியலாம். சிந்தாமணி பதின்மூன்று சருக்கங்களைக் கொண்டதுபோலவே பெரியபுராணமும் பதின்மூன்று சருக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. சிந்தாமணியாசிரியர் சோழநாட்டின் செல்வச் செழிப்பினை மனத்திற் கொண்டு எமாங்கதநாட்டினைப் பாடி ஞர். சேக்கிழாருஞ் சோழநாட்டினையுஞ் சோழமன்னனையும் வருணித்தார். அரசவிசுவாசம், நாட்டுப்பற்று முதலிய நல்லி யல்புகள் சோழமன்னனின் அமைச்சனிடத்தில் இல்லாமற் போகுமா ? அவற்றினை யுணர்த்துவதற்குப் பெரியபுராணம் ஒருவாயிலாக அமைந்தது. சிங்காமணியில் எவ்வாறு சீவகன் பிறப்பு முதலியன நாமகளிலம்பகத்திற் கூறப்பட்டதோ
26

அவ்வாறே திருமலைச்சருக்கத்திற் சுந்தாரின் இளமை வருணிக் கப்பட்டது. முத்தியிலம்பகத்திற் சீவகன் முத்தியடைவது கூறப்பட்டதுபோல வெள்ளானைச்சருக்கத்திற் சுந்தரர் வீடு பேற்றினையடைவது கூறப்பட்டது. சுந்தரரின் வரலாறு தடுக் காட்கொண்டபுராணத்திற் ருெடங்கி ஏயர்கோன் கலிக்காம நாயனுர், கழறிற்றறிவார் நாயனர் முகலியோர் புராணங்களில் வளர்ந்துவெள்ளானைச்சருக்கத்திலே முடிவடைகிறது.
பெருங்காப்பிடத் தலைவராகிய சுந்தரமூர்த்திசுவாமிகளின் நாடாகிய திருமுனைப்பாடி நாட்டைப்பற்றி அதிகம் பாடாது இருபாடல்களுடன் முடித்ததஞ் சோழநாட்டைப்பாடியதஞ் சுந்தராது கதை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகக் கூறப்படாததுஞ் சேக்கிழாரின் நூலைப் பெருங்காப்பியமெனக் கொள்வதற்குத் தடையாகவிருக்கின்றன. ஆயினும் பெருங்காப்பியம் இது கானென வரையறுத்துத் தமிழிலே தண்டியலங்காரத்திலுள்ள பெருங்காப்பியம் பற்றிய குத்திரமொன்றே கூறுகிறது. அதனை மட்டுங்கொண்டு பெரியபுராணத்தின் பெருங்காப்பியச் சிறப்புக் களையாராய்வது ஏற்புடைத்தன்று. சிலப்பதிகாரம், மணிமே கலை முதலியன பெருங்காப்பிய வரிசையில் வழங்குவதனை நோக்கின் பெரியபுராணத்திற்கும் அவ்வரிசையில் இடமுண்டு என்றுகொள்ள எவருந் தயங்கார். பெரியபுராணம் நாலா யிரத்து இருநூற்றுஜம்பத்துமூன்று பாடல்களைக்கொண்டது.
"குன்றவ ரதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி யார்த்தி வன்திரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்குங் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்"
கண்ணப்பநாயனுர் புராணம்-3
உடுப்பூரில் வாழ்ந்த வேடரின் இல்லம் இப்பாடலில் வரு ணிக்கப்பட்டது. சேக்கிழார் குன்றவரின் இல்லத்தை வரு ணிப்பதை யொழித்து அவர்களின் முற்றத்தை யீண்டு தன்மை நவிற்சியாக வருணித்தார். விளாமரங்களில் வளைந்த செவிகளை யுடைய வேட்டைநாய்கள் கட்டப்பட்டிருந்தன. அவ்விளா மரக் கிளைகளில் வாரும் வலையுந் தொங்கவிடப்பட்டன. பன்றி, புலி, கரடி , மான் முதலிய பார்வை விலங்குகளுங் காணப்பட்டன. இவற்றுடன் மலைநெல், முற்றத்தில் உலர்த்
27

Page 16
தப்பட்டிருந்ததையுங் காணலாம். குறிஞ்சிநிலக் கருப்பொருள் கள் இயற்கை வனப்புடன் வருணிக்கப்பட்டன. கொடுஞ் செவி, வன்திரள் என்ற வருணனைகள் சொல்லில் எளிமையும் பொருளில் ஆழமுங் கொண்டவை. வேட்டுவருடைய வாழ்க் கைப் போராட்டத்திற்கு இல்முன், காடு ஆகியனவே களங்கள். இரவும் பகலும் விலங்குப் பகைக்கு அஞ்சாது போரிடும் வாழ்க்கை பெற்றவர்க்கு இல்வாழ்விற்கு நேரம் ஏது ? எனச் சேக்கிழார் காட்டினர். சேக்கிழார் பிறிதோரிடத்தில் வேட்டு வரைத் "தாளில் வாழ் செருப்பர்" என வருணித்ததும் அவர் களின் புறவாழ்க்கையைக் குறித்தே. குன்றவரின் இல்லத்திற்குப் பதிலாக அவர்களின் முற்றத்தை வருணித்ததால் அவர்களின் விரவாழ்வினைத் தொடக்கத்திலேயே எம்மை யுணரவைத்தார்.
சேக்கிழார்க்குப் பின் கச்சியப்பசிவாசாரியார் கந்தபுராணக் தின யியற்றினர். இந்நூல் வடமொழியிற் காணப்படுங் கந்த புராணத்தின் ஒரு பகுதியாகிய சங்கரசங்கிதையிற் கூறப்படுஞ் சுப்பிரமணியக் கடவுளின் அவதாரத்தையும் அவர் சூரன் முதலிய அசுரரை வென்று தேவர்களைக் காப்பாற்றிய வர லாற்றுக்களையுங் கூறுகிறது. இது உற்பத்திகாண்டம், அசுர காண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தக்ககாண்டம் என ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சைவசிதகாந்தக் கருத்துக்கள் செறிந்ததாயும் முருகனது பெரு மையைப் பாடுவதாயும் இந்நூல் அமைந்திருப்பது இதன் சிறப் பிற்குச் சான்ருகும். இப்பெருங்காப்பியம் பத்தாயிரத்து முந்நூற்றுநாற்பத்தாறு பாடல்களைக் கொண்டது. பாத்திரப் படைப்பு முதலிய பல்வேறு அமிசங்களிற் சீவகசிந்தாமணிக் குங் கம்பராமாயணத்திற்குமுள்ள ஒற்றுமைகளைவிடப் பன் மடங்கு கூடுதலாகக் கந்தபுராணமுங் கம்பராமாயணமும் ஒன் முேடொன்று ஒத்திருக்கின்றன. இராவணன் குரனையும், குர்ப் பனகை அசமுகியையும், அனுமன் வீாவாகுவையும், சிறை யிருந்த சீதை சிறையிருந்த சயந்தனையும் ஒத்திருத்த%ல இவ்விரு நூல்களையும் படிப்போர் உணர்வர்.
குண்டலகேசி வளையாபதியாகிய இரு நூல்களின் செய் யுட்கள் யாவும் இன்று எமக்குக் கிடைத்தில. இங்கிலையில் அவைபற்றித் திட்டவட்டமாக ஒன்றுங் கூறமுடியாது.
1. வேலும் வில்லும், ரா. பி. சேதுப்பிள்ளை, சென்னை, 1947
28

வடமொழியிலே 'பஞ்சகாவ்ய' என்ற வழக்கில் அரிட கவியின் நைடகமுங் காளிதாசனின் இரகுவமிசமுங் குமாரசம் பவமும் பாரவியின் கிராதார்ச்சுனியமும் மாகவியின் சிசுபாலவகமும் அடங்கும். சமணபெளத்தர் தததம் இலக் கியங்களுக்கு ஏற்றம் அளிக்கும்பொருட்டு இவ்வடமொழி வழக்கினையொட்டித் தமிழிலும் ‘ஐம்பெருங்காப்பியம்' என்ற சிறப்பு வழக்கினை வழங்கினர். இவ்வழக்கினை நன்னூலுக்கு மயிலைநாதர் எழுதிய உரையிலே முதன்முதலாகக் காண் கிருேம். இவ்வழக்கில் மணிமேகலை சிலப்பதிகாரம், சிந்தர மணி, குண்டலகேசி, வளையாபதியாகிய சமணபெளத்த நூல்களே யிடம்பெற்றன. இந்நூல்களின் ஆசிரியர்க்குப்பின் வாழ்ந்த சமணபெளத்தவுரையாசிரியர் இவ்வழக்குப் பெரு வழக்காகுமாறு தத்தம் உரைகளில் அதனைக் குறிப்பிட்டனர். சமயப்பொறுமை யுள்ளம்படைத்த பிறசமயவுரையாசிரியரும் அவர்கள் கூற்றினைத் தத்தம் உரைகளிற் கையாண்டனர். பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவற்றையுங் கொண்ட வைணவச்சார்புடைய கம்பராமாயணம் சமயப்பொருமை காரணமாகப் பெருங்காப்பிய வழக்கிற் சேர்க்கப்படவில்லை. விசயாலயன் வழியில் வந்த ஆதித்தியசோழன் வைணவரைத் துன்புறுத்தியதன் விளைவாக நாட்டில் உண்டான குழப்பத்தில் அவன் உயிர் இழந்த செய்தியும் இரண்டாங் குலோத்தங்கன் சிதம்பாத்திலுள்ள விட்டுணு விக்கிரகததை யப்புறப்படுத்த முயன்ற கதையுஞ் சோழர்காலத்தில் வைணவசமயம் வீழ்ச்சி யுற்றதைக் குறிக்கின்றன. முன்பு சமண பெளத்த சமயங்களே யெதிர்ப்பதற்கு ஒன்றியுழைத்த சைவவைணவ சமயங்கள் இவ்வாறு பிளவுறின் அவற்றிற்கும் பிறவற்றிற்குமிடையே யிக்காலத்திலேகிலவுகிற கையினைக் கூறவேண்டுமா ?
சோழர்காலச் சமுதாயத்தின் கிலையே அக்காலத்துப் பெருங்காப்பிய இலக்கியத்தின் நன்மைக்குப் பொறுப்பாக விருந்தது. மாட்சிமைமிக்க ஆட்சியுடன் கிகழ்ந்த அரசர் செயலுஞ் சமயமும் வடமொழிக்கலப்பும் இலக்கியத்தைப் பாதித்தன. அக்காலத்துப் பெருங்காப்பியங்களாகக் கருதப் படுஞ் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருத்தொண்டச் புராணம், கந்தபுராணம் ஆகிய நான்குஞ் சமயத்தாற் கட்டுப் படுத்தப்பட்டன. மன்னரும் மக்களுக் தத்தம் ஆதரவினுல்
29

Page 17
எச்சமயத்தைப் போற்றினர்களோ அதைப் பின்பற்றியே பெருங்காப்பிய இலக்கியம் எழுந்தது. இதற்கு எடுத்துக் காட்டுக்களாக முன்பு கூறப்பட்ட நான்கு நூல்களும் அமையும். சீவகசிந்தாமணி, சமணத்தையும் இராமாயணம் வைணவத்தையுங் கிருத்தொண்டர்புராணம் கந்தபுராணம் ஆகிய இரண்டும் சைவத்தையும் பாராட்டிக் கூறுகின்றன.
பெருங்காப்பியத்திற்குக் கதை முக்கியமன்று. சோழர் காலத்திற் முேன்றிய பெருங்காப்பியங்கள் நாலிலே மூன்று வடமொழிமரபைத் தழுவி வந்தன. இதற்குக் காாணம் மக்களின் சமயப்பற்றும் வடமொழியார்வமுமேயாகும். அக் காலத்திலே மணிப்பிரவாள நடைக்குத் தனிமதிப்புக் கொடுக் கப்பட்டது. வடமொழிக்கு ஆதரவு மக்களிடையே கிடைக்க மன்னரவையில் வடமொழி விற்பன்னரால் வடமொழியா ராய்ச்சி நடத்தப்பட்டது. இதன் விளைவாக வடமொழி தங்குதடை யின்றித் தமிழிற் புகுந்தது. வடமொழிக்காப்பிய மரபும் அணிகளுங் தமிழ்ச் செய்யுட்களைப் பொருளிலும் அமைப்பிலும் அணிசெய்தன. அக்காலத்துப் புலவர் தம் நூலிற்குப் பொரு ளாகக்கொண்ட கதை பழையதென்ருலும் அதைத் தம் நாகரிகத்திற்கும் மக்களின் விருப்பத்திற்கும் இயையமாற்றிப் பாடினர். மக்கள் விரும்பிய பழங்கதைகளுக்கூடாகப் புதிய கருத்துக்களை அவர் புகுத்தினர். இதனுல் அவரின் பெருங் காப்பியங்கள் இன்றுஞ் சிறப்புற்றுவிளங்குகின்றன.
30

-பி. சே. செ. நடராசா
'திருவாக்கு” என்னும் “திருநூல்” தமிழில் வளர்ந்த வரலாறு
யேசுநாதர் அருளிய திருவசனங்களைச் (Gospel) சுவி சேடம் என்று தமிழில் வழங்கி வருகின்றனர். சு+விசேடம் என்பது நற்செய்தி என்று பொருள்படும். Gospel என்ப தனைச் சுவிசேடம் என்று மொழி பெயர்த்த பெருமை யாருக்குரியதோ தெரிகின்றிலது. கிருநூல் எனப்படும் விவிலிய நூலினை மொழிபெயர்த்தது யார் ? பலர் மொழி பெயர்த்தார்கள். முதன்முதலாகத் தமிழ்மொழியிலே அது யாரால் எங்கே மொழிபெயர்க்கப்பட்டது ?
இந்தியாவில் வழங்கிவரும் நூற்றுக்கணக்கான மொழிக ளில் ஏறக்குறைய ஒரு நூறுமொழிகளிலே கிருநூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் முதன்முத லாகத் தோன்றியது தமிழ்மொழியிலே என்பது மகிழ்ச்சிக் குரியது ; அதுவும் இலங்கையிலேயே தொடங்கலாயிற்றென் முல் இன்னும் பேருமகிழ்ச்சிக்குரிய தன்முே.
திருநூல் தமிழில் வந்த வரலாற்றை வகுத்துக் தொகுத் துக் காட்டுதலே இக்கட்டுரையினது நோக்கமாகும். அவ் வரலாற்றை இருவகைப்படுத்துவாம். ر
i. கத்தோலிக்கு வேத மொழிபெயர்ப்பு i. மற்றைய கிறித்துவ சபையினர் மொழிபெயர்ப்பு.
gosautégs: Gospel திருநூல்: Bible கீழைத்தேச மொழிகளில் தமிழ்மொழியிலேதான் முதல்
அச்சுநூல் தோன்றலாயிற்று,
3.

Page 18
மற்றைய கிறித்துவ சபையினராலே தொடங்கப்பட்ட மொழிபெயர்ப்பு வேலைகள் வரலாற்றிலே முதலிடம் பெறுகின் றன. ஆகையால் அவற்றைப்பற்றி முதலில் எடுத்துக் காட்டுதும். இவர்களின் மொழிபெயர்ப்பு வேலைகளும் பல திறப்பட்டன : ஆகவே அவற்றையும் வகுத்துக் காட்ட வேண்டியதாகின்றது.
i. இலங்கையை ஆண்ட ஒல்லாந்த அரசாங்கம் எடுத்துக்
கொண்ட முயற்சி.
i. தனிப்பட்ட பாதிரிமார் எடுத்த முயற்சி.
iii. மொழிபெயர்ப்புச் சங்கங்கள் செய்த முயற்சி.
இலங்கையை ஒல்லாந்தர் 17 ஆம் 18 ஆம் நூற்றண்டுக சில் ஆண்டனர். ஆண்ட காலத்தே இறப்பிறமாது வேதத் தைப் பரப்பவும் முயன்றனர். தமிழிலும், சிங்களத்திலும் விவிலியம் எனப்படுங் திருநூல மொழிபெயர்க்கவும் அச்சிட்டுப்
பாடபவும ஒழுங்குகள செய்தனர்.
இம்முயற்சிபற்றிய வரலாறுகள் பிலிப்பு தே மெல்லோ பாதிரியார் மொழிபெயர்த்து 1759 இல் அச்சேற்றிய கிருநூலின் முகவுரையிற் கூறப்பட்டிருக்கின்றது. அம்முகவுரையின் விசேட பகுதியை அப்படியே கருகின் முேம்,
'குஸததாவு விலலெம பாரொன வன இமமொவு is a to இவடககிலெ புகடசியுடன அழுமபொது உங்கள நிகதிய இபறகைககுளள நனமையினுரு தின மையினும பெரிவே மன திரங்கி தமககுணடான to fast விசாரங்களுககுகூட மெலாலெ குறிககபபடட சங்கை பெருக பிலிபபுஸ் பலதெ யுஸ் எனகிற குருவான வா தமிடபடுகதின மததெயுஸ எழுதின சுவிசேடததையும சங்கை பொருத அதிரியானுஸ தெகு மெய எனற குருவான வா கமிடபடுததின புதிய ஏறபாடு முழுதையும தாங்களபாடியிற சங்கை டொருக குருககள தமிடபடுததின புதிய ஏறபாடடையும தாமுயிரொடிருககும பொது யாடபாணதகிற சங்கை பொருத குருவாகிய அதெலபுச கருமா எனபவருககுப பாரமாககி இது கள கிரேகக வாக கி பததுடனெ சரிககடடபபடடு பாஷையறிருத தமிள மனிதரு 6. உதவியைக கொணடு இவபு-ததுதி திருசசபை அலொ ச%னயின விசாரிபபின கீழாகத தமிடபாஷையின குணதது
32

சுகும பெலனுககும ஒததிருககிற வொரு பாஷைபபடுததுதலை புண்டுபணணிக கொளளததககதாக மெததவுரு தெணடிததாா இபபடி ககானெ இருதச சுசிரதமானதுவும அதிக நெசமுள ளதுவுமான கறபினே அருதபபுகளப படததகக உததமமான வருடைய கடடளையின படியெ கனமுயக குறிககபபடட சங்கை பொநக இரணடு பொகள முனபதாகவும் யாடபாணதது புருெபபொனெருதாகிய யுவாம பிலிபபுஸ எனறவரையும கிாகொழுமபு புருெபபெனெருதாகிய பிலிபபு எமானுவெல் எனற வரையும பாஷையறிநத பொகளையுங் கொண்டு கடப் பிசுகபபடடு மததெயு செழுதின சுவிசெஷம 1749 ஆணடில அறபசி மாகததின கடசியிலெ உனககு உனது பாஷையிலெ கையாழிககபபடடுத." -
இம்முகவுரை வசனங்களின் படி விவிலிய நூலின் மொழி பெயர்ப்பை முதலிற் செய்தவர் பிலிப்பு பல்தேயு என்பவ ராவார். இவர் தமிழ்ப்படுத்தியது மத்தேயு திருவாக்கு ஆகும். பிலிப்பு பல்தேயு இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் 1658-1665 என்ற ஆண்டுகளுக்கிடையிலே கங்கியிருந்து வேதபோதகஞ் செய்தனர் என்று அறியக்கிடக்கின்றது. ஆகவே 1665க்கு முன் யாழ்ப்பாணத்திலே மக்கேயு சிருவாக்கு மொழி பெயர்க்கப்பட்டுக் கையெழுத்துப் பிரதியாக வழங்கியிருத்தல் 3.டுமென்பது புலணுகின்றது. இவ்வாறு விவிலியம் முதன் முதலாக யாழ்ப்பாணத்திலே மொழிபெயர்க்கப்படலாயிற்று.
ஒல்லாந்தர் ஆட்சி இலங்கையிலே தொடங்கிய காலத்துத் திருவாக்கு நூலினை மொழிபெயர்க்க முயற்சிகள் எடுக்கப் பட்டன. 1694 இற் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க முயற்சி எடுக்கப்பட்ட தெனினும் நற்பயனளிக்கவில்லை. விண் முயற்சியாக முடிந்ததெனினும், இச்சீரிய தொண்டினை ஒல் லாந்த அரசாங்கங் கைவிடவில்லை. இம்முயற்சிகளுக்கிடை யிலேதான் அதிரியானுச தேமேயு என்பவர் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழிபெயர்த்து வெளிப்படுத்தினர். இது கொழும்பிலே நிகழ்ந்தது. ஆனல் எவ்வாண்டில் வெளிவந்த தென்று சொல்ல முடியவில்லை. இதற்குப்பின்னரே தரங்கம் பாடி மொழிபெயர்ப்பு உதயமாயிற்று. இது பத்தலோமயசுசீகன் பால்கு என்ற சேர்மானிய பாதிரியா ராலே மொழிபெயர்க்கப் பட்டு 17 14 இல் முதலாம் பகுதியும், 17 15 இல் இரண்டாம்
33

Page 19
பகுதியுமாக அச்சேறி வெளிவந்தது. 494 பக்கங்களை யுடையது. கென்மார்க்கு அரசர் நாலாம் பிறடறிக்கு மன்னருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இப்பதிப்பின் முக வுரையிற் சீகன் பால்கு ஐயரும், மொழிபெயர்ப்பு வேலையில் அவருடன் தொண்டாற்றிய கிரீண்டலர் ஐயருங் கையெழுத் திட்டனர். இதன் இரண்டாம் பதிப்பு 1758 ஆம் வருடம் வெளிவந்தது. இப்பதிப்பினை உரோமாபுரியிலுள்ள பாப்பாண் டவர் நூல்கிலையத்திற் பார்க்கலாம்.
பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்க்க சீகன் பால்கு முன்வந்தனர். 17 4 ஆம் ஆண்டு அவ்வேலையைத் தொடங் கினர். ஆனல், அவர் 17 19 இல் காலமானர். உரூத்து புத்தகம்வரை செய்து முடித்தனர். பெஞ்சமின் குல்சையர் இதனைத் தொடர்ந்து மொழிபெயர்த்து 1728 இல் அச்சில் வெளிப்படுத்தினர்.
குல்சையர் பழைய ஏற்பாட்டிலுள்ள தள்ளுபடி ஆகமங் களையும் மொழிபெயர்த்து அதனையும் 1728 ஆம் ஆண்டு தாங்கை அச்சகத்தில் வெளியிட்டார். இவரது தமிழ்நடை சிறப்புற்றதாயமையவில்லை. வீரமாமுனிவரும் பல கிறித்தவர் களுங் குறைகூறி எள்ளி 5 கையாடினர். சாமுவேல் என்பார் அதன் தமிழ் நடையைத் திருத்தி 1868 இல் சென்னை எச். பி. சி. கே. அச்சகத்தில் வெளியிட்டனர்.
1741 இல் யாழ்ப்பாணத்திலே கிறேமர் என் பார் மத்தேயு கிருவாக்கினை மொழிபெயர்த்து அச்சேற்றினர். இவ்வெளியீட் டிற்குக் காரணகருத்தாவாக ஒல்லாந்த தேசாதிபதி உவில்லியம் வான் இம்மாவ் இருந்தனர் என்று இதன் முகவுரையிற் கூறப்பட்டிருக்கிறது
கிறேமர் தொடங்கிய வேலையை, வட்லுள் தலைமையில் இயங்கிய சபையொன்று தொடர்ந்து செய்யலாயிற்று. இச் சபையில் பிலிப்பு தேமெல்லோ, சைமன் தேசில்வா என்பாரிருக் தன்ர். நான்கு திருவாக்கும், அப்போத்தல நடபடிகளும் 1742 இல் வெளிவந்தன. இந்நூல் கொழும்பிலே கிழக்கிந்திய ஒல்லாந்த சங்கத்தாரின் அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது.
34

பிலிப்பு தே மெல்லோ சிறந்த தமிழ்ப் புலவர். இலங் கையின் முதற்றமிழ் வேதபோதகர் ; பலமொழிகளைக் கற்று ணர்ந்தவர். கிருவாக்குநூல்களை மொழிபெயர்த்ததுடன் தாவீதின் சங்கீதங்களையுந் தமிழில் இன்னிசையால் யாத்தனர். இது 1755 இல் அச்சேறியது. கொழும்பு நூதனசாலையிலே பிரதி ஒன்றுண்டு.
க : சங்கீதம்
க. ஆகாதவ ராலோசனை யிலெ
பொகாமற பாவிகள வழியிலெ கிலலாமற சாசககா றருடைய வெதகதிற கருததாய அதனே கதான
ாாபபகற சிந்திபபொன பாயககியவான
1759 இல் இவரின் சொந்த மொழிபெயர்ப்பாகிய புதிய ஏற்பாடு முழுமையும் வெளிவந்தது இப்பதிப்பின் முகவுரை யிலே புதிய பழைய ஏற்பாடுகளின் மொழிபெயர்ப்பு வரலாறு தரப்பட்டிருக்கிறது. இதன் பிரதியொன்று கொழும்பு நூதன சாலையிலுண்டு. இவ்வகை மொழிபெயர்ப்பினை ஊக்குவித்த பெருமை ஒல்லாந்த தேசாதிபதிக்கேயுரியது. பெருந்தொகைச் செலவிற் பதிப்பித்த இவ்வகை நூல்கள் கிறித்தவர்களுக்கு
இலவசமாகவே அ ளிக்கப்பட்டன.
வீரமாமுனிவருக்குப்பின் தமிழ் அகராதி ஒன்றினைச் செய்த பிலிப்பு பாபிரிசியசு என்ற சேர்மன் பாதிரியார் தமிழ் மொழியினை நன்கு கற்றுத் தேறித் தமிழ்நூல்கள் இயற்று வாராயினர். இவர் சேர்மனிய உலூத்தர் சபையைச் சேர்ந் தவர். சீகன்பால்கு ஐயர் சூல்சையர் என்பவர்கள் செய்த மொழிபெயர்ப்புக்களை நன்கு ஆராய்ந்து அவற்றைத் திருக்கிச் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்துச் செவ்விய மொழி பெயர்ப்பென்று 1772 இல் புதிய ஏற்பாட்டினை அச்சேற்றி வெளியிட்டனர். ஆயிரம் பிரதிகளே எடுக்கப்பட்டன. இதன் இரண்டாம் பதிப்பு 1778 இல் வெளியாயிற்று. முழுவேதாக மும் 1796 இல் இவர் இறந்தபிற்பாடு வெளிவாலாயிற்று.
பாபிரிசியசு பாதிரியாரின் மொழிபெயர்ப்பிலுங் குறைகள் காணப்பட்டன. இவர் மொழிபெயர்ப்பைக்குறித்து 'அருணுேதயம்" என்னும் சஞ்சிகை 1867 மாசி மாதத்தில் எழுதியதாவது :
35

Page 20
"கர்த்தர் நமக்களித்த வேதத்திருப்புதலை மதித்துக் காப் பாற்ற முயல்வது போல் அதிலுள்ள பிழைகளையுங் காக்க முயலவேண்டுமென்பது கர்த்தருடைய சித்த மல்ல என்பதையும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேம்.”
ஆகவே அதனைத் திருத்துவதில் வேதபோதகசபை முனைந்து கின்றது. சுவார்சு ஐயரும் இந்தியப்பாதிரிமார் இருவரும் இவ் வேலையில் உழைக்கலாயினர். பாபிரிசியசு ஐயர் மொழிபெயர்ப் பிலே கண்ட எழுத்துப்பிழை, சொற்பிழை, தமிழிலக்கணப் பிழை இவற்றைத் கிருததி 1867 இல் வெளியிட்டனர். 1893 இல் வேருெரு பதிப்பும் வெளிவந்தது.
வேதாகம மொழிபெயர்ப்புக்கள் இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கையில் இரேனியசு ஐயர் என்பார் பாபிரிசியசின் மொழிபெயர்ப்பின் குறைகளை நீக்கிப் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பைச் செய்து காட்ட அதனைச் சென்னை வேதா கம சங்கம் 1833 இல் வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்புச் சிறந்ததெனினும் பல சொற்ருெடர்கள் நேர்மொழிபெயர்ப்பா யிாாமல் வியாக்கியானமாயிருந்தது.காரணமாகத் தமிழ்ச் சபை யினர் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
இவ்வாறு தனியாட்கள் செய்த மொழிபெயர்ப்புக்களும் அச்சேறியுள்ளன. கும்பகோணத்தில் வேதபோதக ஊழியஞ் செய்த மத்தேயு எல்வின் ஐயர் புதிய ஏற்பாடு நான்கு திரு வாக்குக்களையும் மொழிபெயர்த்து 1911-1913 என்ற வருடங் களுக்கிடையில் வெளியிட்டனர். 1922 இல் ஞானப்பிரகாசம் ஐயர் என்பவரின் புதிய ஏற்பாட்டின் மொழியெயர்ப்பு ஒன்று வெளிவந்தது.
இதுவரை, வேதபோதக ஐயர்மார் தனித்தும் ஒன்று கூடி யுஞ் செய்த மொழி பெயர்ப்புக்களைப்பற்றி விரித்துரைத்தாம். இவையெல்லாம் காலத்துக்குக் காலங் திருத்தப்பட்டனவெனி னும் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவையல்ல; திருத்தம் வேண்டி கின்றன. சபைகள் பல தாய்நாட்டிலுஞ் சேய் நாட்டிலுங் கூடின. சேய்நாட்டில் யாழ்ப்பாணத்திலே சபை யொன்று கூட்டப்பட்டது. இதன் தலைவர் பீற்றர் பேர்சிவல் ஐயர். 1832 இல் இச்சங்கம் கூடலாயிற்று. இச்சங்கத்தில்
36

இசுபோல்திங்கு, உவிஞ்சுலோ, விறதேட்டன், ஆறுமுகநாவலர் ஆகியோர் அங்கம் வகித்தனர். தமிழ் உரைநடைகைவந்த நாவலர்பெருமானின் உதவியுடன் மொழிபெயர்ப்பு நடை பெறலாயிற்று. பதினெட்டு ஆண்டுகளாக நடந்த மொழி பெயர்ப்புச் சென்னையில் அரங்கேறச்சென்றது. சென்னையில் இதற்கு எதிர்ப்புஇருந்தது. மழுவை மகாலிங்கஜயர் இம்மொழி பெயர்ப்பைப் பெரிதும் பாராட்டித் தீர்ப்புக்கூறவே யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு அங்கீகரிக்கப்பட்டு 1850 இல் அச்சேற்றப் பட்டது. அச்சேற்றப்பட்ட பிரதிகள் தமிழ்நாடு முழுவதும் பறந்தன. எதிர்ப்புக்களும் பறந்து வந்தன. திருநெல்வேலி தஞ்சாவூர் இவற்றிலிருந்து சரமாரியாக வந்தன. இந்திய இலங் கைத் தமிழ்கலந்த படைப்பென்றனர் பலர். சங்கதமொழிச் சொற்கள் கிறைந்திருக்கின்றன என்றனர் சிலர். நாவலர் வேண்டுமென்றே பல சொற்பிரயோகங்களை விட்டிருக்கின்ருர் என்றனர்சிலர். இது நேரடி மொழிபெயர்ப்பாக அமையவில்லை யென்றனர் சிலர். ஆகவே இதனைப்பரீட்சார்த்தகரமான மொழி பெயர்ப்பெனக்கூறி வேறு திருத்தமான மொழிபெயர்ப்பு வேண்டி நின்றனர். இதனுலே நாவலர் மொழிபெயர்ப்புச் சிறிது காலிம் யாழ்ப்பாணத்திலே மாத்திரம் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் மறைந்துவிட்டது. இப்பிரதிகள் கிடைப்பதற்கில்லை. பிரதி யொன்று யாழ்ப்பாண அத்தியட்சர் சபாபதி குலேந்திரம் அவர்களிடமுண்டு.
சென்னை வேதாகம சங்கம் புதியதோர் மொழிபெயர்ப்பை வெளியிடும் வேலையை 1854 இல் மீண்டும் மேற்கொள்ளலா யிற்று. தங்கள் மொழிபெயர்ப்பு எல்லா வேதபோதக சபை களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அமையவேண்டுமென்பது அவர்களின் பேரவா. எனினும் வேலையைத் தொடர்ந்து விடாப்பிடியாய் நடாத்த முடியவில்லை. போக்குவரத்து வசதி யின்மை, இடமாற்றம், சிலரின் எதிர்பாராத மரணம், இவை யெல்லாங் தடைசெய்தன. என்ருலும் 1857 இல் எல்லாச் சபைகளின் ஒத்துழைப்புச் சம்மதம் பெற்றதும் மொழிபெயர்ப் புச்சங்கம் நிறுவப்படலாயிற்று. இச்சபையில் உலூத்தர் சபை நீங்கலாக மற்றச்சபைகள் பிரதிநிதித்துவம் வகித்தன. பெளவர் ஐயர் தலைமையில் இயங்கலாயிற்று. பாபிரிசியசு ஐயரின் மொழிபெயர்ப்பே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.
E. 37

Page 21
1863 இற் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு முடிவடைந் தது. 1864 இல் அது அச்சில் வெளிவந்தது. 1868 இற் பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு முற்றுப் பெற்றது. 1871 இலே முழு வேதாகமும் அச்சில் வெளிவந்தது. 5000
பிரதிகள் எடுக்கப்பட்டன.
இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புக்களெல்லாம் எ ராச முசு தொகுப்பை மூலமாகக் கொண்டு செய்யப்பட்டவை. நெசிலின் (Neslin) தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு புகியதோர் மொழிபெயர்ப்பை ஆக்குதல் வேண்டுமென்ற எண்ணம் சென்னை வேதாகம சங்கத்துக்கு உதயமாயிற்று. ஆகவே 1923 இல் மொழிபெயர்ப்புச் சங்கமொன்று உருவா யிற்று. இச்சங்கத்தில் எல்லாச் சபைகளின் பிரதிநிதிகளு மிருந்தனர். இலாசன் ஐயர் கலைவராயிருந்தார். இம்மொழி பெயர்ப்பு வேலையிலே பேருதவியாகத் துரைசாமி பண்டிதர் என்பார் இருந்தார். சகல சபைகளின் ஒத்துழைப்பாலே கிருத்தமான மொழிபெயர்ப்பு 1936 இல் வெளிவந்தது. இது தமிழ்நடையிலுஞ் மொழிபெயர்ப்பிலும் சிறந்ததாக விளங்கியது. எனினும் நெசிலின் தொகுப்பை ஆதாரமாகக்கொண்டு மொழி பெயர்த்தபடியால் அடக்கம் வேறுபட்டிருந்தது. பலமான எதிர்ப்பு தாயகத்திலுங் யாழ்ப்பாணத்திலுங் கிளம்பியது. ஆகவே இலாசன் மொழிபெயர்ப்பு நிலையான மொழிபெயர்ப் பாக விளங்கவில்லை.
சென்னை வேதாகம சங்கம் இலாசன் மொழிபெயர்ப் பைத் திருத்கத்தொடங்கியது. மோனகன் ஐயர் தலைமையில் வேருேர் சங்கத்தை அமைத்தது. இச்சங்கத்தின் மொழி பெயர்ப்பை 1941 இல் வெளியிட்டனர். இதிலும் புதிய ஏற்பாட்டிலே சில பிழைகள் காணப்பட்டன. இவற்றைத் கியல் ஐயர் திருத்தி 1954 இல் வெளியிட்டனர். 1956 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு வேதபோதக சபைகளின் 250 ஆம் ஆண்டு கிறைவுவிழா கொண்டாடப்பட்டது. ஆகவே விழா ஞாப கார்த்தமாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள வேதாகம சங்கப்பண உதவிகொண்டு முழு வேதாகமமும் 1956 இல் வெளியிடப்படலாயிற்று.
வ்வகையிலெழுந்த மொழிபெயர்ப்புக்களின் வேறுபாடு களை நாமறிதல் வேண்டும். அதற்காக அவ்வம் மொழிபெயர்ப்பி லிருந்து உதாரணங் தருவாம்.
38 .

மத்தேயு :
3.
அதிகாரம். 4. அப்போ இயேசுநாதர் பசாசினலே சோதினைப் படுகிறதுக்காக அரூபியினலே வனந்திரத்திலே
கொண்டு போகப்பட்டார்.
அவர் நாற்பது பகலும் காற்பது இரவும் உபவாச
மாயிருந்த பின்பு ஈற்றிலே அவருக்குப் பசியுண்
(s) (o)
(...)
l.
டாச்சுது.
சோதினேகாறன் அவரிடத்திலே வந்து நீ சறுவேச பரனுடைய குமாரனணுல் இந்தக் கல்லுக்களை அப்பங் களாகக் கற்பியென்று சொன்னன்.
1741 கிறேமர்.
அப்பொழுது இயேசு பிசாசினுற் சோதிக்கப் படுவதற்கு ஆவியானவராலே வனுக்கரத்திற்குக்
கொண்டு செல்லப்பட்டார்.
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமா யிருந்த பின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து நீர் தேவனுடைய குமாரனேயானுல் இந்தக் கல்லு கள் அப்டங்களாகும்படி சொல்லும் என்முன்.
1759. பிலிப்புகே மெல்லோ.
பின்பு யேசு பிசாசினுலே சோதிக்கப்படும்படி ஆவி யினல் வனத்திற்குக் கொண்டு போகப்பட்டு- நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசமாயிருந்தார் ; பின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதிக்கிறவன் அவரிடத்தில் வந்து, நீ தேவ னுடைய குமாரணுயிருந்தால் இந்தக் கற்கள் அப்ப மாகும்படி கட்டளையிடென்முன்.
1850: நாவலர்.
அப்பொழுது இயேசு பிசாசினுற் சோதிக்கப்படுவ தற்கு ஆவியானவராலே வனந்த ரத்திற்குக் கொண்டு
போகப்பட்டார்.
39

Page 22
2.
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமா
யிருந்த பின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3
அப்பொழுது சோதனைக்காான் அவரிடத்கில் வந்து நீர் தேவனுடைய குமாரனேயானுல் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்ருர்.
1888, 1957 பதிப்பு.
இதுவரையுங் கத்தோலிக்கால்லாத மற்றைய கிறித்தவர் கள் செய்த வேதாகம மொழிபெயர்ப்புக்கள்பற்றி வரைந்தாம். இனி, கத்தோலிக்கர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நோக்கு வாம். கத்தோலிக்கர் அதிகமாக வேதாகமங்களைப்பற்றி கினைப்பதில்லை. குருமார் இலாத்தீன் மொழியிலுள்ளதை உப யோகிப்பர். விசுவாசிகளுக்கு செபப்புத்தகங்களுண்டு. இப் புத்தகங்களில் வேதாகமப் பகுதிகளிருக்கும். ஆகவே கத்தோ லிக்கு குருமார் வேதாகமங்களை மொழிபெயர்ப்பதில் அதிகம் ஊக்கங் காட்டவில்லை. எனினும் மொழிபெயர்க்காது விட்டன ால்லர். அவர்களின் மொழிபெயர்ப்பும் 19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியிலேதான் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் சில சில பகுதிகளே மொழிபெயர்க்கப்பட் e மதுரைப் பகுதியிற் பங்குக் குருவாக விருந்த திரிங்கால சுவாமியார் இவ் வலுவலில் ஈடுபட்டார். இவருக்கு உதவியாயிருந்தவர் மிக்கேல் சங்கியாசியார். திரிங்கால் சுவாமியாருக்கு ஊக்கமளித்தவர் இவரே. 1860 ஆம் ஆண்டு தொடங்கிய வேலை 1879 இல் முடிவடைந்தது. இரு கையெழுத்துப் பிரதிகள் எடுக்கப் பட்டன. 1891 இல் முதன் முறையாக புதுச்சேரி கத்தோ லிக்கு மிஷன் அச்சுக்கூடத்திற் புதிய ஏற்பாடு பதிப்பிக்கப்பட லாயிற்று. இப்புதிய ஏற்பாட்டின் மூன்றும் பதிப்பு 1906ஆம் ஆண்டு கடந்தது. சந்தியாகு சுவாமியார் பரிசோதித்துத் கிருத்தி அச்சேற்றினர்
பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு எப்பொழுது தொடங் கப்பட்டதென்று தெரியவில்லை. 1904 இற் பழைய ஏற்பாடு தமிழில் அச்சேறியது. இது கும்பகோணம் மேற்றி ராணியார் தலைமையிற் குருமார் பலர் ஒன்றித்து உழைத்ததன் பலனுக வெளிவந்தது.
40

கத்தோலிக்கு மொழிபெயர்ப்பிற் கையாளப்பட்டிருக்குஞ் சொற்களுஞ் சொற்ருெடர்களும் வித்தியாசமானவை. சமய
வேற்றுமை காரணமாகவே சொற்களும் வேற்றுமையடைந்தன.
சொற்களையும் வசனநடையினையுஞ் சீர்தூக்கிப் பார்த்துச் சமயத்தை நிச்சயித்துக் கொள்ளலாம். இதனை விரித்துக் கூறுவதற்கு முன்னர்க்கத்தோவிக்க வேதாகமத்தின் மத்தேயு 4 ஆம் அதிகாரத்தை முதலிலே தருவாம்.
1. அப்போது யேசுநாசர் பசாசினலே சோதிக்கப்படு வதற்கு இஸ்பிரித்துவினுல் வனந்தாத்துக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்டார் :
2. அவர் நாற்பது இரவும் நாற்பது Luas gyuots உபவாசமாயிருந்த பின்பு அவருக்குப் பசியுண்டா யிற்று. <
3. அப்போது சோதனை செய்வோன் அவாண்டையில் வந்து நீர் சர்வேசுரனுடைய சுதனனுல் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லு மென்முன்.
கத்தோலிக்கர் மொழிபெயர்ப்பிலும் மற்றையோர் மொழி பெயர்ப்பிலுஞ் சில வேற்றுமைகள் காணப்படுகின்றன. முதலா வதாக, "சர்வேசுரன்' என்ற சொல்லினை எடுப்பாம். இச்சொல் Jehovah என்ற ஆங்கிலச் சொல்லின் சமபதம். இச்சொல் இன்றுவரையுங் கத்தோலிக்கரால் உபயோகிக்கப்பட்டு வரு கின்றது. வேதபோதகத்திற்குத் துணைபுரிந்த போர்த்துக்கீசர் காலத்தில் 'தம்பிரான்' என்றசொல் உபயோகிக்கப்படலாயிற்று. Lord என்பதற்கு இது சம பதமாகும். Lord's Prayer என் பதனைத் 'தம்பிரான் வணக்கம்' என்றும் வழங்கினர். இச்சொல் இப்போது வழக்கொழிந்தது. சர்வேசுரன் என்ற சொல்லே இன்று வழக்கிலிருக்கிறது. சீகன்பால்கு, கிறேமர் என்பாரிரு வருந் தங்கள் மொழிபெயர்ப்பில் (1114+1741) இச்சொல்லை உபயோகித்துள்ளார்கள். 1759 இலே தேமெல்லோ என்பார் தேவன்" என்ற சொல்லை முதன் முதலாகக் கையாளுகின்றர்.
(2) தமிழ்ப்பாசையில் நாற்பது பகல் நாற்பது இரவு என்று சொல்வதை நாற்பது நாளென்று மாத்திரஞ் சுருக்கமாய்ச் சொல்லுவது வழக்கம் , நாற்பது பகல் நாற்பது இரவு என்று சொல்வது எபிரேயர் பாசை நடையாம்
4

Page 23
1869 இற் பாபிரியசு என்பார் கர்த்தர்' என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கினர். மறுதலித்தோர் மதத்திலே தேவன் யாகோவா, கர்த்தர் என்ற பல சொற்கள் உபயோ கத்தில் இன்றுமிருக்கின்றன. கத்தோலிக்கு மதத்திலே சர்வேசுரன்’ என்ற சொல் வழங்கிவருகின்றது. ஆண்டவர் என்ற சொல்லையும் உபயோகிப்பர். தேவன், கர்த்தர் என்ற
சொற்கள் கிடையா.
இந்து மதத்தினர் வழங்குஞ் சொற்பிரயோகங்களை நீக்கித் தமக்கென ஒரு மொழிமரபினைக் கிறீத்தவர்கள் ஆக்கிக் கொண்டனர். இவர்களும் இந்துக்களைப்போல் அதிகமான சொற்களைச் சங்கத மொழியிலிருந்து கடன் பெற்றனரெனினுந் தமிழ்மரபினைச் சிதைத்காரல்லர். தமிழ் இலக்கணமுறைப்படி பல சொற்களை ஆக்கிக் கொண்டார்கள் மொழிபெயர்க்கக் தக்கவற்றை மொழிபெயர்த்தார்கள். மொழிபெயர்க்கமுடியாத வற்றை நேரடியாகத் தமிழ்மொழிச்சாயலாக மாற்றினர்கள். பின்வரும் பெயர்களின் மொழிபெயர்ப்பு, சாயல்மாற்றம் இவற்றை நோக்குக.
இராயப்பு. பேதுரு அருளப்பு. . . யுவானியர்
சஞ்சுவான் சுவாம்பிள்ளை சின்னப்பர். tu ft afya
பாவிலுப்பிள்ளை
இன்னும் பல சொற்பிரயோகங்கள் கத்தோலிக்க ராலே மாத்திரம் உபயோகிக்கப்படுகின்றன. சாமிபாரின் இருப்பி டத்தை 'அறைவீடு' என்பர் வேக வினு விடையைக் குறிப் பிடம்” என்பர். யேசுநாதர் சொன்னர் என்பதைத் ‘திரு வுளம் பற்றினர்' என்றும், விசனித்தார் என்றுங் கூறுவர். தேவ நற்கருணை, சற்பிரசாதம், கிவ்விய கற்கருணை, நன்மை, எழுந் தேற்றம், சுற்றுப்பிரகாரம், மனுமகன், வேண்டிக்கொள்ளுதல் என்ற சொற்பிரயோகங்களையும் நோக்குக.
இதுவரை திருவாக்கு என்னுங் கிருநூல் தமிழிலே மொழி பெயர்க்கப்பட்ட வரலாறும் அம்மொழிபெயர்ப்பு காலக் தோறுங் திருத்தப்பட்டுச் செம்மை பெற்றவரன் முறைகளும் எடுத்துக்காட்டி இக்கட்டுரையை இனிது முடித்தாம்.

மொழிபெயர்ப்பு நடந்த ஆண்டு வரிசை
(மற்றைய கிறித்துவ சபையினர் மொழிபெயர்ப்பு)
1666 س-1658
1694
1714-1715
1728
1728
741
1742
1750
1759
1772
1778
1796
1853
பிலிப்பு பல்தேயு மொழிபெயர்த்த கையெழுத துப்பிரதி யாழ்ப்பாணத்தில் வழங்கல்.
பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஒல்லாத்த
அரசு முயற்சிசெய்தல்-இலங்கை. அதிரியானுச தேமேயு புதிய ஏற்பாடு முழுவ கையும் மொழிபெயர்த்துக் கொழும்பில் அச் சேற்றினுர்-இலங்கை, சீகன் பால்குடாகிரியார் தரங்கம்பாடியிற் புதிய ஏற்பாடு முழுவதையும் வெளிப்படுத்தல்சீகன்பால்கு+சூல்சையர் இருவரின் பழைய ஏற்பாடு அச்சில் வெளிவந்தது.-காங்கம்பாடி பழைய ஏற்பாட்டுத் தள்ளுபடி ஆகமங்களையுஞ் குல்சையர் மொழிபெயர்த்து வெளிப்படுத்தல்தாங்கம்பாடி மத்தேயு திருவாக்கு கிறேமர் என்பவரால் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. - இலங்கை. நான்கு திருவாக்கும் அப்போத்தல நடபடி க ளும் (வட்செல் தலைமையிற் பிலிப்பு கே மெல்லோ சைமன் தே சில்வா இவர்களின் உதவியுடன் செய்த மொழிபெயர்ப்பு) வெளி வந்தன-கொழும்பில். பிலிப்பு தே மெல்லோ மொழிபெயர்த்த சங்கீ தப் புத்தகம் வெளிவந்தது.--கொழும்பில். பிலிப்பு தே மெல்லொவின் புதிய ஏற்பாடு முழு மையும் வெளிவந்தது. பாபிரிசியு ஐயர் திருத்திய மொழிபெயர்ப்பு புதியஏற்பாடுவெளிவரல் மேற்படி இரண்டாம் பதிப்பு. பழைய புதிய ஏற்பாடுகளின் திருந்திய மொழி பெயர்ப்பு வெளிவரல். இரேனியசு ஐயரின் திருத்திய மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாடு வெளிவரல்.
43

Page 24
1850
1864
187
867
893
191 - 1913
1922
1936
1941.
1954
1956
யாழ்ப்பாணத்திற் பேர்சிவல் ஐயர் தலைமையில் இசுபோல் திங்கு, உவின் சுலோ, விறதேட்டன் ஆறுமுகநாவலர் கூடிச்செய்த மொழிபெயர்ப்பு வெளிவரல். வேதாகம மொழிபெயர்ப்புச் சங்கம் - பொது மொழிபெயர்ப்பு - புதிய ஏற்பாடு வெளிவருதல். மேற்படி சங்கத்தின் முழுவேதாகம மொழி பெயர்ப்பு வெளிவரல். சுவார்சு ஐயர் முதலியோர் பாபிரியசு ஐயரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிடல் மேற்படி வேருேர் பதிப்பு மத்தேயு எல்வின் மொழிபெயர்ப்பு நான்கு திருவாக்கும் வெளிவந்தன.
ஞானப்பிரகாச ஐயாது புதிய ஏற்பாடு வெளிவரல் மொழிபெயர்ப்புச் சங்கம் - இலார்சன் ஐயர் தலைமையிலே-செய்த மொழிபெயர்ப்பு வெளி வந்தது.
சென்னை வேதாகம சங்கத்தின் மொழி பெயர்ப்பு--மோகன் ஐயர்தலைமையில்-மேற்படி மொழிபெயர்ப்பின் திருத்தல்-வெளிவால். மேற்படி சங்கங் திருத்திய புதிய ஏற்பாடு வெளிவரல். விழா ஞாபகமாக முழு வேதாகமும் வெளிவரல்
கத்தோலிக்கு மொழிபெயர்ப்பு
է 860-1879
1880
1891
1906
1904
44
மதுரை கிரிங்கால் சுவாமியார் செய்த புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பு முற்றுப் பெறல். மேற்படி மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதி பூர்த்தியாகல். மேற்படி மொழிபெயர்ப்பின் புதிய ஏற்பாடு அச்சேறல்.
மேற்படி புதிய ஏற்பாட்டின் மூன்ரும் பதிப்பு. பழைய ஏற்பாடு-கும்பகோணம் மேற்றிராணி யார் தலைமையிற் செய்த மொழிபெயர்ப்பு அச்சேறல்.

-க. நாகலிங்கம்
திருவாசக ஆராய்ச்சிப் பேருரையின்
மாண்பு
திருவாசகம் என்னுக் திவ்விப் நூலிற் சொல்லிய பாட் டின் பொருளுணர்ந்து சொல்லுதற்கு வாய்ப்பளிக்கும் முறை யில் எழுந்த உரைகளும் விளக்கங்களும் ஆராய்ச்சியுரைகளும் பேருரைகளும் பலவாகும். இவ்வுரைகளிற் சோழவளநாட்டுக் கிருட்ண புரத்திலிருந்து பாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தை யடைந்து வாழ்ந்த மாவைக் கவுணியன் வெண்ணெய்க் கண்ண ஞர் எனப்படும் நவநீத கிருட்ண பாரதியார் செய்த ஆராய்ச் சிப் பேருரையும் ஒன்று. இவ்வுரை, புத்தம் புதிய கருத்துக் கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு திருவாசகத்தின் சிறப்பை நன்கெடுத்துக் காட்டுகின்றது; மணிவாசகப் பெரு மான் வழிபாடாற்றிய கலங்களில் ஆங்காங்குப் பாடிய்ருளிய பத்திப்பாடல்கள் பலவற்றின் தொகுப்பே கிருவாசகம் என்னுங் கொள்கையை ஒரளவுக்கு மாற்றித் கிருவாசகமுங் கிருக் கோவையாரும் ஒரு பெருநூலின் இரு வேறுறுப்புக்கள் என்னும் உண்மையை ஒருவாறு தெளிவுபடுத்தகிறது ; பழந்தமிழ் மக்கள் சித்தாந்த சைவக் கோட்பாடுகளை அன்பினைந்திணை வழியாகத் திட்ப நுட்பமுற வெளிப்படுத்தும் நெறியினையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது; இதுவரை விளங்காதிருந்த பலபதிகப் பெயர்களையும் அப்பதிகங்கள் புலப்படுத்தும் al&r யாட்டுக்களையுஞ் சான்று காட்டி விளக்குகிறது; திருவாக வூரடிகள் புராணம், திருப்பெருந்துறைப்புராணம், திருவிளையா டற்புராணம், என்பனவற்றில் வெவ்வேறு வகையாக உாைக் கப்பட்ட மணிவாசகர் வரலாற்றினை அகச்சான்று கொண்டு ஆராய்கிறது. இத்தகைய ஆராய்ச்சிப் பேருரையென்னும்
45

Page 25
பெருங்கடலுள்ளே முத்தும் பவளமும் பிறவுங் குறைவின்றிக் கிடக்கின்றன. இவற்றில் ஒரு சிலவற்றை எடுத்துக் காட்டுவதே
யிக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருவாசகம், திருப்பெருந்துறை முதலாய பலவிடங்களில் அடிகள் அருளிய பதிகங்களைக் கொண்டதாயினும், ‘வாதவூ ாடிகள் தில்லையில் வீற்றிருந்த இறைவன் தன் காத்து ஏடு தாங்கியெழுதத திருவாசகத்தினையுந் திருக்கோவையாரையும் உடன் கூறியருளினர்' என வழங்கிவரும் வரலாறு கொண்டு இவை நூல் எனப்படுதற்குரிய பல்வகைச் சிறப்பும் பெற்று விளங்குகின்றனவென ஆராய்ச்சிப் பேருாைகாரர் கருதுகிருரர். நூலின் முதற்பகுதியாக அமைந்த சிவபுராணம் என்னும் பெயரமைந்த திருப்பாட்டை நூன்முழுவதற்கும் ஆசிரியர் அருளிய கற்சிறப்புப்பாயிரமென மிக அழகுற கிறுவினர். இப்பாட்டு தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் பிறவும் எய்தவுரைக்கின்றதென்பது அவர்கருத்து. சிவபுராணம் என்பது அப்பாட்டின் பெயராக மட்டும் அமையாது நூன் முழுவதற்கும் அடிகளிட்ட பெயரெனவும், அடிகள் சிவ புராணம்' என்றபெயரோடு குழைத்தசொன்மாலை' என்னும் பெயரையுந் திருவாசகத்திற்குக் கொடுத்தாரெனவும் பேருரை காரர் கூறுவது கணிபொருந்துவதாகும். சிந்தைமகிழச் சிவ புராணந்தன்னை' எனவுங் குழைத்தசொன் மாலை" கொண்டருள் போற்றி எனவும் வரும் பகுதிகள் இக்கூற்றிற்காதாரமா கின்றன. இன்னும் 'மணிவார்த்தை' என்பதும் இருந்துதி" என் பதுங் கிருவாசகத்திற்கு அடிகள் இட்ட பிறபெயர்களாகு மென்பதும் அவர்கருத்து. 'நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்குங் கிருப்பாட்டில், 'நமச்சிவாய வாழ்க ஈர்தன்தாள் வாழ்க’ என்னும் முதலாமடி தொடங்கி, ‘அவனருளாலே யவன்முள் வணங்கி" என்னும் பதினெட்டாமடியிறுதியாக வுள்ள பகுதியாற் கடவுள் வணக்கமும், சிங்தை மகிழச் சிவ புராணங் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பன்யான்" என்னும் அடிகளாற் செய்யப்படு பொருளுங் கூறப்பட்டனவென ஆராய்ச்சிப் பேருரைகாரர் காட்டுகிருரர். மேலும், கண் ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி" என்னும் அடி தொடக்கம் பொல்லாவினையேன் புகழுமாமுென்றறியேன்"
46

என்னும் அடியிறுதியாகவுடைய பகுதியால் அவையடக்கமும், ‘புல்லாகிப்பூடாய்ப் புழுவாய் மாமாகி' என்னும் அடிதொடங் கிச், சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்" என்னும் அடியிறுதியாகவுடைய பகுதியாலே தியான வழியால் அடைக்கலம் புகுகலும், செல்வர்சிவபுரத்தின் உள்ளார் சிவ னடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என்னும் பகுதி யால் நூற்பயனுங் கூறப்பட்டனவெனத் திருவாசக ஆராய்ச் சிப் பேருரையாசிரியர் கூறும் உரை ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது மட்டுமல்லாமல் உவந்து பாராட்டற் பாலதுமாகும்.
சிவபுராணத்தை யடுத்துள்ள கீர்த்தித் திருவகவல், கிரு வண்டப்பகுதி, போற்றித்திருவகவல் என்னும் மூன்றகவல்களுங் திருவாசக நூல் வரலாறுங் கிருவாசக நூலாசிரியராய மணி வாசகரது ஒழுகலாற்றிற்குரிய முதனூல் வரலாறுங் கூறுகின் றனவென்பது பேருரையுடையார் கூற்று. இறைவன் முத னுாலை மகேந்திர மலையிலே தோற்றுவித்தானென்பதனைக் கீர்த் கித் கிருவகவல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
“கல்லாடத்துக் கலந்தினிதருளி
நல்லா ளோடு கயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியிற். பான்மொழி தன்னெடும் எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும். கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்தும் கேவேட ராகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்றவை முகங்க ளாற்பணிக் தருளியும்’
என்னும் பகுதியால் இறைவன் முதனூல் வெளிப்படுத்த வரலாறு கூறப்படுகின்ற தென்பதும் அம்முதனூல் ஆகமம் என அடிகளாற் கூறப்பட்ட அன்பினைந்திணையாதல் வேண்டு மென்பதும் ஆராய்ச்சிப் பேருாைகாரர் கொள்கை. இங்குக் கூறப்பட்ட கீர்த்தித் திருவகவற் பகுதியை நோக்கின் பேருரை யாசிரியர் கருத்துப் பொருங்காதென எவரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கல்லாடக்கிலே நல்லாளோடு நயப்புற வெய்கியதும், பஞ்சப்பள்ளியிலே பால்போலும் மொழியினை
47

Page 26
யுடையாளுடன் எஞ்சாதீண்டிய இன்னருளை விளைத்ததும், வேட்டுவ வடிவுடன் முருக்கமலர் போன்ற சிவந்த வாயினை யுடையாளது இடையீடின் றிச் சேர்ந்த மார்பகமாகிய நன்மை பொருந்திய தடத்தின் கண்ணே படிந்ததுமாய நிகழ்ச்சிகள் எல்லாம் அகப்பொருட் சார்புடையனவாகவே காணக்கிடக் கின்றன. கேவேடர் எனப்படும் வலைஞர் குமாாணுகிக் கெளிற்றுமீன்ன அகப்படுத்தியதோடு பெருமை பொருந்திய எட்டிடத்தனவாய ஆகமங்களை வாங்கிக் கொண்ட நிகழ்ச்சிக்கு முன்பே கிராத வேடங்கொண்டு கிஞ்சுக வாயினையுடையாளது விாாவு கொங்கை கற்றடம் படிந்த களவுப் புணர்ச்சி கூறப் படுதலைப் பேருரைகாரர் முல்லைக் கரியுட்கொல்லேற தழுவித் தலைவன் தலைவியை வதுவையிற் கொள்ளுமுன்பே களவிற் கூடிய நிகழ்ச்சியைக் சித்தரிக்கும் பாட்டுக்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது மிக்க டொருக்கமுடையதாகக் காணப்படு கிறது. "கயிலையங்கிரியிலே அகப்பொருள் இலக்கணத்திற் கருத்தூன் முதிருந்தவளுக்கு அது கருத்துட்பகிவதோர் g?-LT யத்தை நாடி அவளைச் சபிப்பாள் போல நடித்து மண்ணிற் பிறக்க வைத்துப் பாராமுகஞ் செய்யப்பட்ட ஆகமங்களையுங் கடலுள்வீசச் செய்து அவளோடு கானும் அவளுக்குத் தலைவனுகச் சென்று களவினுங் கற்பினும் பயின்றும் அவளைப் பயில்வித்தும் மற்றவற்றின் மேல் அவளுக்கு ஆகமங்களின் பொருளை அறிவுறுத்தினுள்." என்னும் ப்குதியால் ஆராய்ச்சிப் பேருரையாசிரியர் அன்பினைக்கிணையின் பெருமையை நன்கு புலப்படுத்தினர்.
ஆகமம் என அடிகள் குறிப்பிட்டது அகத்திணை இலக் கணக்கையே யென் பதனையும் பேருரைகாரர் நுணுகி ஆராய்ந்து புலப்படுத்தினர். ' ற்ற ஐம்முகங்க ளாற்பணித தருளியும்' என்னும் பகுதியால் வடமொழியாகமம் புலப்படுத்திய செய்தியே குறிக்கப்படுகின்றதென்பது பொருந்தாதென்பது அவர்கருத்து. வடமொழியாகமம் பணித்தது ஐக் காம் முகமாகிய ஈசான முகத்தாலென அறிஞர் கூறுதலின் ஜம்முகங்களாற் பணித்த ஆகமமும் ஐந்தாம் முகத்தாற் பணித்த ஆகமமுங் கம்முள் வேறேயென அவர் கருதுவது பொருத்தமுடைத்து. ஐம்முகங் கள் என்பதற்குப் பேருரைகாரர், ஆயிரம் முகத்தான கன்றதாயினும்-பாயிர மில்லது பனுவலன்றே" என்னும் பகுதிக்குப் பிறர் பொருள் கொண்டதுபோல ஐந்துவகை
4&

எனப் பொருள் கொண்டுரைப்பது நயந்து பாராட்டத்தக்கதே. ஐம்முகம் என்பதனுற் குறிக்கப்படுபவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாம். எனவே மகேந்திரத் திருந்து இறைவன் வெளிப்படுத்திய ஆகமமும் ஆலவாயின் அவிர்சடைக் கடவுள் செய்தளித்த இறையனர் களவியலும் ஒன்ருதல் வேண்டுமெனப் பேருரைகாரர் துணிகின்றர். மகேந் கிரத்திருந்த இறைவன் வெளிப்படுத்திய ஆகம வழிப்பட் டொழுகிக் கருத்துலகிலே தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனுகவும் அமைத்த மணிவாசகர் அவ்வாகமத் தோற்றத் தையும் இறைவன் இவ்வுலகிலே தம்மை இருத்தி அடியவர் களென உலகோர் கூறும் பாத்தையர்க்கு அருள்புரிந்து ஒன்றக் கலந்ததையுங் தம்மை இறைவன் பிரிந்ததனலே தாம்பட்ட துன்பங்களையுந் தொகுத்துக் கூறுவனவே நூல்வரலாறு எனக் கொண்ட மூன்றகவல்களுமென்பது பேருரை காரர் கருத்து. அன்பினைக்கிணையின் பெருமையை “என்னை பாவம் ! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று ; அதுதானும் ஞானத்திடையதாகலான் யாம் அதனைத் தீர்க்கற்பாலம் என்று இவ்வறுபது குத்திரத் தையுஞ் செய்து மூன்று செப்பிதழகக் தெழுதிப் பீடத்தின் கீழிட்டான்." என வரும் இறையனர் களவியலுரைப் பகுதி யாலும் 'பொருளதிகாரம் ஞானம் உணர்த்துங் கருவி" என்னும் பேருரை காார் கூற்ருலும் நன்கறியலாம்.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரைகாரர் பாயிரம் எனவும் நூல் வரலாறு என வுங் கொண்ட பகுதிகளையடுத்துத் திருச் சதகம் முதலாக நூல் வருகின்றது. கிருச்சதகம் நீத்தல் விண்ணப்பம் என்னும் இப்பகுதிகளுக்குப் பின்னர்த் திருவெம் பாவை முதலாகப் பெரும்பாலானவை அகப்பொருட் செய்தி தழுவினவாகவே காணக்கிடக்கின்றன. அகப்பொருட் செய்தி தழுவிவருஞ் சிலபதிகப் பெயர்கள் ஆராய்ச்சிப் பேருரை எழுமுன் விளங்காதனவாகவேயிருந்தன. இவற்றுள் திருந் தெள்னேணம், திருச்சாழல், திருப்படையாட்சியென்பன குறிப்பிடத்தக்கவை. அகப்பொருள் தழுவாதவற்றுள்ளும் கோயின் மூத்த கிருப்பதிகம் முதலாயினவும் அத்தகையவே.
திருத்தெள்ளேணம் என்பது ஆராய்ச்சிப் பேருரை வெளி வருங்காலும் விளங்காத ஒன்முக விருந்தது. தெள்ளேணங்
கொட்டுதல் என்பது மணலை அள்ளிக் கொட்டுதல் எனப்
49

Page 27
பொருள்படுமென உாைவாைங்தோரும் உளர். தென்ன தென்ன வென்று தெள்ளேணங் கொட்டாமோ" என்பது கொண்டு அது ஒரு தோற்கருவியாதல் வேண்டுமெனத்துணிந்த பேருரைகாரருக்குப் பிங்கலங்தை அமரகோசம் என்னுந் தென் மொழி வடமொழி கிகண்டுகள் பேருகவி புரிந்தன. இங்கிகண்டு களில் எணம் என்பது மானின் பெயர் எனக்கண்ட பேருரை காரர், திருத்தெள்ளேணம் என்பதிலே கிருவென்பது தெய்வீகம் எனப் பொருள் படுமெனவுங் தெள்ளேணம் என்பது தெளிந்த ஒசையையுடைய மான் எனப் பொருள்பட்டுப் பின்னர் அதன் கோலையுந் தோலாற் செய்யப்பட்ட பறையையுங் குறித்து நின்றதெனவும் கிறுவியுள்ளார். இதனைப் பேருரைகாரர் கவரி மான் தோலாற் செய்யப்பட்ட படகம் என்னுந்தோற்கருவியென உணர்த்துங் திறன் ஊன்றி நோக்கியின் புறற்பாலது.
ஏணம் என்பது கலைமானேக் குறிப்பதாகவும் சிருக் கோவையாரில், 'பல்லிலனுகப் பகலை வென்றேன்' என்னும் முதலையுடைய திருப்பாட்டில் எல்லிலனுகத்தொடேனம் வின வியவன் யாவன் கொலாம்' எனப்பாடங் கொண்டு ஏனம் என்ப தற்குப் பன்றியெனவே பொருள் கூறினர் பேராசிரியர் என்னும் அதன் உரையாசிரியர். ஏனம் என்னுஞ் சொல்லிற் குப் பன்றியென்பது பொருளாயினும் திருக்கோவையாரில் குறித்த செய்யுளில் ஏனம் அதாவது பன்றி சுட்டப்படுவது பொருத்தமற்றதென்பது நன்கு புலப்படுகிறது. கிருக்கோவை யாரிலே முன்னர்த் தலைவன் வினவியவற்றுள் ஏனம் இன்மை யானும் கலைமான் காணப்படுதலாலும் இவ்விடத்தும் தோழி, கலைமானை வினவுகின்ற இவன்' என்னும் பொருள்பட “ஏணம் வினவியவன் யாவன் கொலாம்' என வினவினுள் எனக்கொள் வதே பெரும்பயனுடைத்து கலைமான வினவியவளைப் பன்றி வினுயவன் எனக் கூறுவது பொருத்தமற்ற தென்பது கூருமலே யமையும். திருக்கோவையாருக்கு உரை வரைந்த பேராசிரியர் எணம் என்னுஞ் சொற்குப் பொருள் விளங்காமையின் ஏனம் எனப் பாடங்கொண்டு பன்றியென உரைவரைந்தாரென அவரின் பெருமைக்கு இழுக்குக் கற்பிக்க விரும்பாதபேருரை காரர் 'ஏணம் என்னுஞ் சொற்பொருளறியாமையினுற் போலும் அதன் உரையாசிரியர் காலத்துக்கு முற்பட்டோர் மற்று அதனை ஏனம் என மாற்றியமைத்து விட்டனர் என் பது ஈண்டுத் துணியப்படும்' எனக் கூறிப் பேராசிரியரை
50

ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார். படகம் என்னுங் தோற்கருவி வட்ட வடிவினதாய்ப் பெண்பாலாரும் முழக்கத் தகுந்ததென்பதை, "வட்டவானமெனும் வான்படகத்தைச் கொட்டுமண்மகள்" எனவரும் கந்தபுராணச் செய்யுட்பகுதி கொண்டு பேருரைகாரர் தெளிவுபடுத்தினர். இப்படகங் கவரி மானுரி போர்க்கப்பட்டதெனக் கொண்ட அவர் மானமழியின் உயிர்வாழாக் கவரிமானுக்கும் அதனுரி போர்த்த படகத்தைக் கொட்ட முற்பட்ட தலைவிக்கும் ஒரொற்றுமை கொள்ளற்கு இடனுகின்றதெனக் கூறித் தலைமகளின் மானத்தினை நுட்ப மாக வெளிப்படுக்குக்திறன் போற்றத் தக்கது.
திருச்சாழல் என்னும் பகுதிக்கு ஆராய்ச்சிப் பேருரை காரர் கொண்ட பொருளும் அறிஞர் உலகிற்குப் பெருவிருந் தாய் அமையத் தக்கது. திருச்சாழல் என்னும் பகுதியுள் வருங் திருப்பாட்டுக்களெல்லாம் முற்பகுதி இறைவனின் இயல் பைப் பழித்துரைப்பனவாகவும் பிற்பகுதி அவனியல்பைப் புகழ்ந்துரைப்பனவாகவும் அமைந்தன. இவ்வேறுபாடு நோக் கிய மணிவாசகர் வரலாறு வரைந்த ஆசிரியர்கள் திருச் சாழலில் வரும் பழிப்புரைகள் மணிவாசகப் பெருமானேடு வாதுசெய்த புத்தரால் விவைப்பட்ட வினுக்களெனவும் புகழு ரைகள் அவற்றிற்கு ஈழநாட்டரசனுடைய குமாரத்தி மணிவா சகப்பெருமானல் ஊமைத்தன்மை சீக்கப்பட்டதன் மேற் கூறிய விடைகளென வுங் குறித்துச் சென்றனர். இக் கூற்றுப் பொருந்தா தென்பதைத் திருச்சாழற் பாக்களை ஒரு முறை படித்தோரும் இலகுவில் உணர்ந்து கொள்வர். பழிப்புரை கூறுவோரைப் புகழ்ந்துரை பகர்வோர் தாழ்குழலாய் 6T6 விளித்திருத்தலின் பழிப்புரை கூறுவோரும் பெண்பாலாரேயா வரென்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அகப்பொருட்டு றைகள் கழுவி உரை வரைந்த ஆராய்ச்சிய் பேருரையாசிரியர், தோழிதலைமகளை இயற்பழித்து மொழிதலுங் தலைவி அதனை எதிர்த்துத் தலைமகனை இயற்பட மொழிதலுமாகிய பொருளு டையது திருச்சாழல் என நிலைநாட்டினர். சாழல் என்பது விளையாட்டாகக் கைகொட்டி நகைத்துப் பேசுதல் என்னுங் பொருளுடைய தென்பதைப் பல்வேறு சான்றுகாட்டி ஆராய்ச்சிய் பேருரைகாரர் நிறுவினர். விளையாட்டாக கைகொட்டி ஈகைத்துப் பேசுதலைக் குறிக்கும் அச்சொல் ஆகு
5.

Page 28
பெயராய் விளையாட்டையும் அதன் மேற் பாடல்களையுங் குறிக்குமென்பதும் அவர்கருத்து. தலைவனைப் பிரிந்து வருந்திய தலைவியை வருத்தந்தீர்க்குமுகமாக ஒருபாயத்தை நாடிச் செய் வதே இயற்பழித்து மொழிதல். இயற்பழித்துரைக்கப்பட்ட தலை வனின் இயல்புகளை உள்ளவாறு விளக்கி இயற்படமொழிதல் அவ்விடத்துத் தலைவிக்குரியதாகும். அவ்வாறு இயற்பட மொழியுந் தலைவி அதுபற்றுக் கோடாக ஆற்றியிருக்குமென் பது அகப்பொருட்டுணிபு. தோழி கூறியன எள்ளிநகையாடற் பாலன வெனத் தலைமகள் கைகொட்டி நகைப்பதாக இப் பகுதித் திருப்பாட்டுக்கள் அமைந்திருப்பதும் பேருரை காசர் கூற்றிற்கு அரண்செய்வதாகும்.
கிருவாசகத்தில் வருந்திருப்படையாட்சி யென்னும் பதிகப் பெயர் விளங்குவதானுலும் அப்பகுதிப் பாடல்களுக்குப்
பொருள்கொள்வோார் பெரிதும் இடர்ப்பட வேண்டிய நிலை
யில் அவை அமைந்தன. அடிதோறும் இருமுறை வரும் ஆகாதே’ என்னும் சொற்பிரயோகமே இத்தகைய இடர்ப் பாட்டிற் கெல்லாம் காரணமாகும். ஆகாதே என்பதற்கு ஆகாது எனப்பொருள் கொண்டோரும் ஆகும் எனப் பொருள் கொண்டோருமாகிய இருபகுதியினருந் தமது பொருள் பொருந்தாத இடங்களைக் கண்டு மலைப்புற வேண்டிய நிலையிருந்தது. ஆதலாற் சிலவிடங்களில் ஆகும்' எனப்பொருள் கொள்வதும் வேறுசிலவிடங்களில் ஆகாது' எனப்பொருள் கொள்வதும் அவசியமெனக் கண்டனர். கண்களிாண்டும் அவள் கழல் கண்டுகளிப்பனவாகாதே’ என்னும் பகுதியில் ஆகும் என்னும் உரையும் ‘காரிகையார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமாகாகே' என்னும் பகுதியில் ஆகாது என்னும் உரையும் பொருத்தமாதல் சிந்திக்கத்தக்கது. இவ்வாறு ஒரு சொற்பிரயோகத்திற்கு இருவேறுவகைப் பொருள் காண்பது பொருத்தமற்றதென்பது வெளிப்படை. ஆராய்ச்சிப் பேருரை யாசிரியர் அகப்பொருட்டுறை தழுவி உரைவரைந்து திருப் பாட்டின் பொருளைத் தெளிவுபடுத்தினர். விதிவழியொழுகுதல் நல்லதாகவும் விலக்குவழி யொழுகுதல் தீயதாகவும் அமைதல் உலகியற்கை. ஆனல் மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப் படுமாயிடின் விதிவழி யொழுகுதலும் ஒழுக்ாமையுமாகிய இாண்டும் நல்லனவெனத்தலைமகள் கூறுவனவாக இப்பகுதிப் பாட்டுக்களின் பொருள் அமைக்கப்பட்டுள்ளதெனப் பேருரை
52

காரர் காட்டுந்திறன் மிகப்பொருத்தமுடைத்து. தலைமகளைத் தோழிகண்டு உனக்கு நல்லனவே யாகும் அல்லனவாகாவெனக்
கூறக் கேட்ட தலைமகள், ‘என்னுடைய நாயகனுய ஈசன் எதிர்ப்படுமாயிடின் எனக்கு இவை நல்லன ; இவை அல்லன ; என்னும் பேதமின்றி எல்லாம் நல்லனவாம்' என்று கூறு
கின்ருளென உரை வகுக்கும் ஆராய்ச்சிப் பேருரைகாரர் கூற்றுப் போற்றத்தக்கது. இதற்கு, ‘என்னணியார் முலையா கம் அளைந்துடன் இன்புறுமாகாதே' எனவரும் பகுதியும், 'காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமா காதே’ என வரும் பகுதியும், “சேலன கண்கள் அவன்றிரு மேனி திளைப்பனவாகாதே" எனவரும் பகுதியுந் தக்க
சான்றுகளாம்.
அன்னைப்பத்து என்னும் பதிகக்கிற் கூறப்படுஞ் செய்தி களைத் தோழி செவிலிக்கு அறத்தொடு கிற்றலைக் கூறுவனவாக ஆராய்ச்சிப் பேருரைகாரர் கருதுகிரு?ர். 'ஊரவர் அலர் தூற்றலாலும் ஐயங் கொண்டமையாலுந் தலைமகளது ஆற்றமை கண்ட செவிலி வெறியாட்டெடுக்க முயலுவதை அறிந்த தோழி, தலைமகளுக்கமைந்த நோய் காகலாலே நேர்ந்ததன்றி அணங்காலே நேர்ந்ததன்றென அவளாற் காதலிக்கப்பட்ட தலைமகன் இயல்பு அவன் காதலுள் ஈடுபட்ட தலைமகள் இயல்பு என்னுமிவற்றைக் செவிலிக்குக் கூறியறத்தொடு கின்றநிகழ்ச்சியே இப்பகுதிக்கண் கூறப்படுகிறது' என ஆராய்ச்சிப் பேருரை காார் கூறுகிருரர். தலைமகள் இங்ஙனம் கூறினுளெனத் தலைவி கூறியதனக் கொண்டுகூற்முகத் தோழி செவிலிக்குக் கூறின ளென்பதும் அவர் கொள்கை. இப்பகுதியில் அன்னுய் என வரும் விளி தலைவி தோழியை விளித்ததெனத் தொல்காப் பியச் சூத்திர ஆதாரத்துடன் நாட்டுகிருரர். பூத்தரு புணர்ச்சி கூறி அறத்தொடு கிற்றலை இப்பகுதி சித்திரிக்கிறதெனக் கூறும் அவர், தமது கூற்றுக்காதாரமாக, "துன்னிய சென்னியின் மத்தம் உன்மத்தமே இன்றெனக் கானவாறன்னே யென்னும்" என்னுந் திருப்பாடற் பகுதியை எடுத்துக் காட்டி கிறுவுந்திறன் வியக்கத்தக்கது.
அகப்பொருளைத் தழுவி வரும் பதிகங்களிலே மட்டுமன்றி மற்றையவற்றிலும் பேருாைகாரரின் நுண்ணிய ஆராய்ச்சியின் பலனுக விளங்காதபல செய்திகள் விளக்கம் பெற்றுள்ளன.
G 53

Page 29
கோயிற்றிருப்பதிகந் தில்லையில் அருளிச் செய்யப்பட்டதென் பதை ஆராய்ச்சிப் பேருரைகாரர் திருவாசகம் முழுவதுந் கில்லையிலிருந்து அடிகளால் அருளிச் செய்யப்பட்டதென்னும் பொருளில் ஏற்றுக்கொண்ட போகிலும் அப்பதிகம் பெருந் துறையானையே பன்னிப் பன்னிப் பேசிவருகவால் கோயில் என்பது திருப்பெருங் துறையையே குறிக்குமென நுவன்முர். பொதுவாகக் கோயில் என்பது தில்லையைக் குறிக்குமேனுங் *கோயில் வாயிலிற் பிச்சனுக்கினுய்' என்றின்னோன்ன கூற்றுக் களாலே தமக்குப் பெரிதும் ஈடுபாடுடைய பெருந்துறையையும் அடிகள் கோயில் என்றே கொண்டனரெனவும், திருப்பெருந் துறையைக் கோயில் என்று கொண்டமையால் தில்லையானைப் புகழ்ந்து பேசுந்திருப்பதிகத்தைக் கோயில் மூத்த திருப்பதிகம் என அடிகள் குறித்தாரெனவும் ஆராய்ச்சிப் பேருரை காரர் துணிந்தார். மூத்க கோயிற்றிருப்பதிகம் என்பதே கோயின் மூக்த திருப்பதிகமாயிற்றென்பதும் அவர் தரும் விளக்கமாகும். கிருப்பெருக்கிறையைக் கோயிலெனக் கொண்ட அடிகள் கில்லையை மூத்த கோயிலெனக் கொண்டது பொருத்த முடைக்தே.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரை, திருவாசகப் பதிகங்கள் பலவுங் குறிப்பிடும் பல்வேறு வகையினவாகிய பண்டைக் கால விளையாட்டுக்களை ஒரளவிற்கு ஆதாரங் காட்டி கிறுவு கிறது. திருவெம்பாவை, திருஅம்மானை என்னும் List L-6) களுக்குத கொல்காப்பியப் பொருள கிகார உரைவிரித்த பேரா சிரியர் கொல்காப்பியத்துள் இலக்கணம் அமைத்துப் போத லாலும் அவர் கிரு வென்னும் அடைபுணர்க்காது கூறியமை யாலும் முற்காலத்தே கன்னியர் தாம் விரும்பிய தலைவரை மணக்கக் கருகிப் பாடியும் நோற்றும் வந்தனரெனப் பேருரை காரச் கூறினர். அடிகள் திருவெம்பாவையையும் ஆண்டாள் கிருப்பாவையையும் முறையே இறைவனையும் கண்ணனையும்
மணக்கக் கருதிப் பாடியருளிச் செய்தனரெனவும் அவர் உரைக்கார். கிருப்பூவல்லி, கிருவுந்தியார், திருக்கோணுேக்கம் முதலிய விளையாட்டுக்களெல்லாங் திருவாசக ஆராய்ச்சிப்
பேருரையாலே நன்கு விளக்கம் பெற்றன வென்பது அவ்வப்
பதிக முன்னுரையாலே அறியத்தக்கது.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரைகாரர் இறைவன் மணி
வாசகப் பெருமானே முதலில் ஆண்டவிடம் திருப்பெருந்துறை
யென்பதை மறுத்து உத்தரகோச மங்கையென்பதைத் தக்க
54

அகச்சான்றுகள் காட்டி ஆணித்தரமாக கிறுவினுர். தொல்லையிரும்பிறவி என்னும் முதலையுடைய வெண்பாவைத திருவாசகப் பேறு எனக்குறிப்பிடு மாசிரியர் அவ்வெண்பாவிலே திருவாசகமென்னுங் தேன் என்னுஞ் சொற்ருெடரை யெடுத் துக் காட்டி, சிவபுராணம், குழைத்த சொன்மாலை, மணி வார்த்தை, இருந்துதி என்னும் பெயர்களால் அடிகள் அழைத்த நூலுக்குத் திருவாசகம் என்னும் பெயரைத் தொல்லையிரும் பிறவி யென்னும் முதலையுடைய வெண்பாவின் ஆசிரியரே கொடுத்திருத்தல் வேண்டுமெனக் கருதுகிருரர். அவ்வெண்பாவை இறைவனே அருளிச் செய்திருக்கலாமென்பதும் அவர் கருத்து. இவ்வெண்பாவுக்கு அவர் வரைந்துள்ள உரையாலும் பல புதிய கருத்துக்கள் புலனுகியுள்ளன. திருவாசகத்தில் வரும் பாடல்களை இயற்கைப் பொருளடைவுக்கேற்ப மாற்றியமைத் தும் பதிகங்களையும் அன்னவாறே அங்காங்கு இயல்பாயமைய வேண்டிய முறை காட்டியும் அவர் உரை செல்கிறது. ஆராய்ச் சிப் பேருரைகாார் சமய உலகிலும் இலக்கிய உலகிலும் விவா தத்திற் கிடஞ் செய்யும் பல் வேறு செய்திகளையும் எடுத் தாராய்ந்து தம் முடிபு காட்டிச்சென்றமையையும் நூலைக் கற் போர் கண்டின்புறுவர்.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரை தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் நூல்களில் ஒன்றென்பதில் ஐயமில்லை. இறை யனர் களவியலுக்கு உரைகண்ட (5 க்கீரனுர் கருத்தை நுணுகி யாராய்ந்து அகப் பொருள் இலக்கணத்தைத் தெளிவுபடுத்தும் இவ்வுரை சைவத்தமிழுலகிற்குக் கிடைத்த ஒப்பற்ற தெய்வக் கருவூலம் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொள் ளும் என்பது தெளிவு.
55

Page 30
56
செந்தமிழ்ச் சிறப்பு
ஏழுசீர் ஆசிரிய விருத்தம்
மந்தர வரையின் செருக்கினை யடக்கி
வாரிகி நீரையா சமித்து வெந்திறன் முனிவன் மைந்தரை வீட்டி
விண்டுவின் வடிவினை யீசன் முந்திய விவிங்க மூர்த்திய தாக்கும்
முனிவரன் வளர்த்தசெந் தமிழ்பார் இந்துவோ டிரவி யிருக்குநாள் வரையு மிருந்துசீர் பெற்றுவாழ்க் கிடுமே.
செந்தமிழ் மொழியே முயிருட னய்தஞ் சேருமூ வாருெலித் திறமெய் வந்துள விருபத் தாருெலி கொண்டே
வழங்கிடும் மெய்யில்வல் லினங்கள் ஐந்துடனென்று மாடவர் நிலையு
மவற்றினை யணையுமெல் லினங்கள் பைங்தொடி யார்தம் கிலைமையும் பெற்றிப் பார்மிசை பயின்றுறப் பாவும்.
இடையினம் மார்பு நாசியாம் வலிமெல்
லிடங்களுக் கிடையதாங் களகின் றடைவத லைவ் வெழுத்துறு வரிசை யவைபெற நிறுத்தவல் லினத்தின் கடைபெற "றகர" முரிமைசேர் “னகாங்'
கவின் பெற நிறுத்திமற் றவற்றி னிடையிட முறுவா னிருக்கினர் முனிவற் கிருந்தமிழ்க் குரவரா மிறைவர்.

ஆறுசீர் ஆசிரிய விருத்தம் தாவரர்ே வாழ்வனவாய்ச் சாருலகி லூர்வன வாய்த்
& தரையில் வானின் மேவுகின்ற பறவைகளாய் விலங்கினமாய் மிகுத்தபல
பிறவி மேவித் தேவினிலை வாமனித ராய்ச்சைவ சித்தாந்தத்
தெளிவு தேரும் ஆவல்பெற வுதவுதமி ழுNவரை வாழுமிதற்
கைய மின்றே வேறு
ஆன்றசீர்க் ఆడితా ளாய்ந்த அறிஞர்களோடும் முன்னுள் மூன்றுகண் ணறைய னரும் முருகவேள் தாமுங் கூடல், சான்றென விருந்தா ராய்ந்த தமிழ்மொழி யுலக முள்ள ஞான்றள விருக்கு மேதும் நவைபெரு சிறிகிங் நாட்டே.
வற்றிய தடாகங் தெண்ணீர் வந்ததின் முதலை முன்னுட் பற்றிய புதல்வ னன்னுட் பருவத்தோ டெய்தப் பாக்கள் சொற்றிடச் சிறந்து கின்ற தொல்புக முற்ற தூய வெற்றியங் தமிழின் மேன்மை விடுரு? விரிநீர் வைப்பே. ஏடணை மூன்றின் பாச மிற்றிடு மவரே மேலாம் விடுறற் குரியா ரென்ற வேத நூன் விதிக்குள் 6ffff" 607 பீடுறு மிறைவ னுரைப் பெண்ணிடைத் தூது போக்கி யூடநீர் தமிழுக் கிந்த உலகிடை யிழுக்கு முண்டோ.
வெந்துடல் சாம்ப ரான மெல்லிய லுயிர்த்து முன்னுள் வங்கிடப் பதிகஞ் சொற்ற வாழ்வுறுந் தமிழின் மாண்பு சிந்திட வருமோ விந்தச் சீருல குள்ள காலம் எந்தள வதுமட் டெல்லா எழிலுடன் வாழு மன்றே. அருந்தவ முனிமுன் தேற அணிகளோ டரிய மூன்முய் வருந்தமி ழுாைத்த வாறு மாமுக முருக மூர்த்தி கிருந்திய தமிழி னகித் தேசிக னென்ப தேரார் இருந்திடின் மருந்தொன் றன்னர்க் கீசனே யுதவு மன்றே. 9 சித்துறு பிரபஞ் சத்தைத் தேருமெய்ஞ் ஞான நூல்கள் மெத்தவுண் டிருகண் காணும் மிகுசடம் ஆய்விஞ் ஞானம் அக்தகு சிறப்பின் முமென் றதற்குநூ லதிகஞ் செய்து வைத்தில ரறிந்த மேலை வையகப் புலவர் தாமே. 10.
57

Page 31
சரிகம பதகி யாகச் சத்தபே தங்க ளேழென் றுரைதரு மிசைநூ லாங்கே யுயிரொலி யேழதாகும் வருமுயி ருடலொ டெல்லாம் மலிதொழிற் பாடுண்டாதல் புரைதா வுயிர்மெய் கூடிப் புகழ்வினை புரியு மன்றே.
இல்லறங் துறவி னுரல்க ளேற்றமாம் அகத்தி னுரல்கள் வல்லிய லாசர்க் கேற்ற வான்புறப் பொருளி னுால்கள் இல்லிய லின்பம் மேலை யின்பமா மிரண்டி னுால்கள் புல்லுசெந் தமிழின் மாண்பாய்ப் புகன்றனர் புலவர் தாமே.
விட்டினுக் குரிய தான வித்தைமுத் திாைக ளாலே காட்டிய விதங்கள் யாவுங் கதித்தபக் குவர்கள் தேற நாட்டுமெய்ஞ்ஞான நூல்க ணவின்றசெங் தமிழேவேறு காட்டிய மொழிக ளிந்தக் கவின்பெரு கடற்பார் மாட்டே.
ஐந்துசீர் ஆசிரிய விருத்தம்
ஈழம் முன்னைநா ளிருந்துள வாக்கரோ டியக்கர் வாழுந் நாகர்கள் தம்மொழி தமிழ் கிரை மலிந்து குழு மார்கலி யுலகினி லாய்ந்தறி தொல்லோர் தாழு மாறின்றி யோகிய சரதt தன்றே.
வேற்று நாடுறை புறமொழி யானருள் விரிந்து போற்று மாய்வுடை யறிஞர்கள் கண்டனர் பொலிந்து தோற்று செந்தமிழ்ச் சிறப்பினை யிந்தமெய்த் தூய்மை மாற்ற லாகுமோ வாரிதி குழ்ந்தமண் டலத்தில்,
அகர மாதியாய் னகாமெய் யிறுதியா யமைந்து பகரு மான்றசெங் தமிழ்மொழி முழுதினும் பரந்து விகல மின்றிநான் வியாபக மென்றருள் வெற்பின் நிகழ்ரு டம்பயில் முருகனுத் தரவுகா ணெடிதே.
எற்ற மூன்று நான் காறுட முென்பதா மெண்கள் தேற்று சீருரு எழுத்தினிற் றிறம்பிய திறத்தாற் போற்று மங்கவைக் குற்றுள காரணம் புகறற் காற்று கின்றில னுய்ந்து பின் னறைகுவ னன்றே.
58
3
14“
16
17

கடடளைக் கலித்துறை
தெய்வமுண் டாமென்ற சித்தமுண் டாகுந் திறம்மலியப் பெய்தருஞ் செந்தமிழ்த் தேமொழி சந்தம் பிறங்குமலை யெய்திய மாதவ மீள்குறு மாமுனிக் கெந்தை முன்னுள் உய்திட நாங்க ளுரைத்தருள் செய்தன ரோாநன்றே 18
ஓங்காரத் தாகி யுயிர்க்காதி; தோன்று மொலியனைத்தும் நீங்கா அகரமும் மெய்களுக் காதியும் நீள்ககாம் ஆங்கா ரணத்தினி லெண்களுக் காதி யமையவைத்தார் பாங்காம் உகரம்’ இரண்டாய்ப் பிரணவம் பற்றியதே. 19
அதன லிரண்டுக் குகாத்தை வைத்தன ரைந்தெண்களில் இதமாய் நடுவ ணிருக்கும் 'முருகு' எனும்பதமோர்க் திதனு யகவெழுத் தேயைங் கிறுக்குற்ற தீங்ககரம் முதலா எண்ண வருமேழை யேழாய் மொழிந்தனரே 20
முருகின் வருமெய்ந் நிரையைந் திரண்டொன்று மூன்று மெட் வருகின்ற சீருன்னி யெட்டுக் ககரத்தை வைத்தனரால் (டாய் குருவின் நிலைபெற் றிளையோன் பொதியக் குறுமுனிக்குத்
திருவங் தளசெங் தமிழோது மேலைக் கிறமிதுவே 2
அருவாகு மோரு முருவாகு Gupઢ) யருவுருவ உருவாகு மீச னருளோடு நீதி யுறைபரம குருவாகி யாகி முனிதேற வோது குலவுதமிழ் ஒருபோதி லேனு மழியாது பூமி (புளவரையே. 22
கலிவிருத்தம்
கன்றி ழந்தழு மாவின் கதறல் கேட் டன்முெர் மைந்தனைத் தேருரு ளார்கதிடற் கொன்று நீதி யுரைத்ததுஞ் செந்தமி முன்றி வேறு மொழிதமக் காயதோ 23
காசி யாத்திரை சென்றுள காதலன் பேசு கின்ற மொழியினிற் பேருளம் மாசு பெற்றிடு மன்னவன் தன்காம்
வீசு கின்ற அறந்தமிழ் மேயதே. 24
59

Page 32
60
அரும ருந்தன செந்தமி ழார்வமாய் வருவி ருந்தினி லாய்தரும் மக்களைத் திருவி ரும்பும் முயற்சியுஞ் சித்தியாங் கரும லிந்துள தீமையங் காகுமோ. 25
வாழ்க மாநில மக்கள் செங் கோலிறை
வாழ்க ஆணினம் வான்பொழி பூம்புனல் வாழ்க செந்நெல் வழங்கிய மேனிலம் வாழ்க மூதறம் செந்தமிழ் வாழ்கவே. 26

பொ. கிருட்ணபிள்ளை
இராமனின் சுந்தரத் தோற்றமும் வீடணனுக்களிக்குங் காட்சியும்
இராமன் மாரனும் வெள்கும் பெரும் பேரழகன். சீதை யும் பெண்குலத்துக்கே அழகுசெய்ய வந்த பெரும் பேரழகி. ஆழ்வார்கள் தம் அருட்பாடல்களில் இராமனுடைய அழகை எடுத்தியம்பி அன்பர்களையெல்லாம் அவனுடைய அழகுக்கட லில் ஆழ்ந்து அழுந்தி அருள் பெறுமாறு செய்தனர். கண் ண்ணுக, பாலகோபாலனுக, இராமனுக அவன் சுந்தர வடிவைப் பாடுவதிலே அவர்கள் பேரானந்தமுற்று அவற்றை ஒதுவாரை புங் களிப்பு மிகுதியில் ஆழ்த்துகின்றனர். இராமன் சீதைக் காகவும், சீதை இராமனுக்காகவும் வாழ்வதாகக் கம்பன் யாத்த கவிகள் கவிருலங் கலந்திலங்குகின்றன. அவன் வசையிலா நம்பி எனவும், அவள் மருங்கிலா நங்கையெனவும் இருவர்
உடல் உள அழகையெல்லாங் கம்பன் நமக்குக் காட்டிணன்.
இராமன் நலனைத் தானே எடுத்து இயம்புவதோடமை யாது நாடக பாணியில் பிறர் வாய்மூலமாகவும் நாம் கேட் டகமகிழும் உக்தியையுங் கையாண்டான் கம்பன். 'ஆடவர் பெண்மையை அவாவுக் தோளினய்' எனப் பற்றையறுத்த விசுவாமித்திர முனியும் இவனழகாற் கவரப்பட்டமையை அவன் வாயிலாகவே நாம் அறியச்செய்தான். வேட்டுவக்குகக்குரிசில் வாக்கிலும் அவன் பரதனுக்குக் கூறுங் கூற்ருக ،قyéقد யாண்டமைந்த மேனி அழகனும் அவளும்' என்று அவனழ கையும் அதற்குப்பொருத்தமான சீதையினுடைய நலனையும் நமக்கெடுத்துக்காட்டினன். மூக்கறுந்து இராமன் மாட்டு ஆருச்சினம் வீறு கொண்டெழுந்த கிலையிலும் இராவணன் சக்
H 6.

Page 33
நிதியிலே சூர்ப்பனகையின் வாயில் ‘செந்தாமரைக் கண் ணுெடுஞ் செங்கனி வாயினுேடுஞ் சந்தார் தடக்தோளொடுங் காழ்கடக் கைகளோடும் அந்தார கலத்தொடும் அஞ்சனக் குன்றமென்ன வந்தானிவனுகு மவ் வல்வில் இராமன்' என்று இராமன் அழகு பளிச்சிட்டொளி செய்யும் வகையிற் கவிதை யொன்றைப் பெய்தான் கம்பன். ஐம்பொறிகளும் ஆறிய அனுமன் வாயிலும் இராமனைச் சுந்தானுக்கி,
'மஞ்செனத்திரண்ட கோல மேனிய மகளிர்க் கெல்லாம்
கஞ்செனுந் தகையவாகி நளியிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்ச மொத்தலர்ந்த செய்ய கண்ண'
என மகளிர் அவன் மீது கொண்ட காதலோ அநுமன் வைத்த ஆரா அன்போ சீரிய தெனக் கூறமுடியா வகையில் வெளிப் படுத்தினன். மீட்டும் அவ்வனுமன் வாயினுல் 'என் பெனக் குருகின்றதிவர் கின்றதளவில் காதல் அன்பினுக்கவதியில்லை” என உணர்ச்சிப் பெருக்கை வெளியாக்கி இராமன் மேனிநல னைக் கவிச்சிகரத்தில் ஏற்றி வைத்தான் கம்பன்.
இராமகலனே முறையற்ற முறையில் வெஃகித்தானே அனுபவித்தானங்கிக்க விரும்பிய சூர்ப்பன கை தானுமொழிந்து தன்குலத்தையும் அழிக்கும் பெருந்தீயானள். முனிவரருஞ் சிரமிசைக்கரம் வைத்துப் போற்றும் பொற்புடைச் சீதையின் அழகு வெள்ளத்தைப் பருக நினைத்த அரக்கன் தலைபத்தும் ஒழிந்து வேரோடுமழிந்ததைச் செப்பவந்த காப்பிய மே இராமா யணம். அது சீதையின் கற்பின் பொற்பொடு இராமநலனையுங் துலக்குங் காவியமாகின்றது,
நவிலரும் நன்றிப் பெருக்கால் எல்லோருக்கும் உயிரீந்த சஞ்சீவியர் வதத்தைக் கொணர்ந்த சமயசஞ்சீவியாகிய அனு மனை மார்புறத் தழுவினுன் இராம அழகன். அவன் திரு மார்பு 'எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடுழுத மார்பு' ஆகையினல் அது சீதைக்கே முற்றாட்டென கினைக்கும் அனுமன் அவன் பிணைப்பினின்றும் நழுவினன. இங்ஙனஞ் சீதைக்கே உரியவனகிய காப்பிய நாயகனை இழிகுல அரக்கருட் பிறந்துந் தலைசிறந்து விளங்கும் விபீடணன் கண்டுருகிக் கண்ணுலாயபயனை எய்தும் முறையையுங்கம்பன் காட்டியதையும் ஈண்டுற்று நோக்குவோம்.
62

கருணைமேகமாகிய இராமன், வஞ்சனை அரக்கன் பின் வந்த தனக்குக் காட்சி அருளக் கிருவுளங் கொண்டதைச் சுக்குரீவன் வாயிலாக அறிந்து உருக்கமுடன் அவனைத் தரிசிக்க விரைந்த விபீடணன் தேவியொடு அண்ணலை ஒரு சோப் பூரண புருடனுகக் காணும் வாய்ப்புத் தனக்கில்லையேயென்று உளம் தொந்து சென்ருன். கோலத்திரைகள் வெள்ளை மணலில் சீதையின் புருவவுருவை வரைந்தன. இராமனுளத்திடைச் சீதையின் உருவுகுடிகொண்டது. வெண்மணற்பரப்பிலே கரிய சாயலுடன் இராமன் மிளிருங்காட்சி தூரத்தே வரும் விபீடண னுக்குச் சீதையின் வெள்விளியின் நாப்பண் இலங்குங் கரு விழியின் மணியாகத் தோற்றமளித்தது. ஆதாம் பெருக வரும் விபீடணனுக்கு அழகன் தனித்தவனுகக் காட்சிகாாாது சீதேவியைச் சற்றும் பிரியாது அவள் விழிப்பாவையினூடே உடனுறைபவனுகக் காட்சிதருமாற்றைக் கம்பன் 'கோணு தற் கமைந்த கோலப் புருவம போற்றிரையுங்கூட' என்ற விபீடணன டைக்கலப் படலப் பாட்டிற் காட்டினன்.
சேணிடை நின்று இராமன் திருவுருவைப் பொது நோக் காகப் பார்க்கின் முன் அவன். கரிய திருமேனியும் அதன் கண் மிளிருஞ் செவ்விய கண்களும், வாயும், கைகளும், கால் களும் கார்கடல் கமலம் பூத்த (இல்பொருட்) காட்சியை நல்குகின்றன. இராமனுடைய கண்கள் குளிர்ந்து தன்னைப் பார்ப்பன போலவும், வாயிதழ்கள், தன்னுடன் கதைக்கத் துடிப்பன போலவும், திருக்கரங்கள் தன்னைக் தழுவ முற்படு வன போலவும் கிருப்பாதங்கள் தனக்குச் சரண் கருவன போலவும் விபீடணன் கண்ணில் இலங்குவதால் இவ்வுவமை சாலவும் பொருத்த முடைத்து. மேலும் சற்றே அணுகின்றவ னுக்கு விண்ணவர் வேண்டுகோளுக்கிணங்கிக் கொடியோாைத் தடிந்து நல்லோருக்குக் காப்பருளும் பாற்கடலினின்று துயி லெழும் அவதார புருடவடிவம் விபீடணனுக்குப் பளிச்சிட் டது. தசரதன் மகனுகவன்றித் தேவா திதேவனுக, நல்லுளப் பண்பமைந்த வீடணனுக்கு இராமவள்ளல் காட்சி வழங்கினன்.
சற்றே ஆறுதலாக அத்திருவுருவை அவன் நோக்கினன். இராசகோலந்துறந்த நிலையிலும் வீரகெம்பீரம் குன்றமல் அவனங்கங்கள் பொலிவதைப் புதுமையோடு நோக்கினன். அவனுடைய மார்பகத்திலே நவமணிமாலையில்லை. எனினுங்
63

Page 34
கடல் குழுலகைப் புரக்குங் காரேபோல அவன் திருமேனி துலங்கும் நிலையை மண்ணிடைப்பொருளொன் ருேடேனுஞ் சம் பந்தப்படுத்தாது உயர் விண்ணிடைப் பொலியும் ஒப்புயர்வற்ற காட்சியொன்முேடு தொடர்பு படுத்திக் கம்பன் சீரிய உவமை ஒன்றினை அமைத்தல் வியப்புடைத் தொன்ருகும்.
'படர் மழை சுமந்தகாலைப் பகர்வரும் அமார்கோமான்
அடர்சிலை துறந்த தென்ன ஆாந்தீர் மார்பு'
என்பதே அந்நலஞ்சான்ற உவமையாகும்.
(படர் = எங்கும் பரந்த ; மழைசுமந்த =சூல் கிரம்பி மழை நீரைத் தாங்கிய , அமார்கோமான் =இந்திானது : அடர்சிலை= எங்கும் நெருங்கிச் செறிந்துள்ள வானவில்; ஆரம்=மணிமாலை)
விபீடணன் இராமனுடைய ஒவ்வொருறுப்புக்களையுங் கண்ணுரக் கண்டான். மார்பைப் பார்த்தகண் அப்பொழுது தோளின் மிசை தாவியது. மார்பிலே மாலையில்லாதது போல தோளிலும் அரசர்க்குரியவாகுவலயம் நீங்கியிருந்தது. அவ் வாபரணம் இருப்பின் தோளினழகை அது விழுங்கித் தானே அழகுபெறும். இராமனின் தோளினழகு எவ்வித மறை பாடுமின்றிச் சுந்தாச்சுடர்சான்று விளங்கியது. வாகுவலய மில்லாமையினலே தோளினழகு சிறப்புறப் புலப்படுவதைக் காரணங்காட்டிக் கம்பன் 'சுடரொளி வலயந்தீர்ந்த சுந்தரத்
தோள்' என்று புலப்படுத்தினன்.
பொதுப்பார்வையை நீத்து அங்கங்களைச் சிறப்புறப் பார்த்த விபீடணன் மீண்டும் அருளொழுகுகின்ற முகமண் டலத்தை ஆராமையோடு நோக்கினன். எந்த கிலையிலும் ஒளிகுன்று அவன் முகங் கலைகுன்ரு நிறைமதிபோலத் தோற் றந்தந்தது. கற்றை வெண்பூரணமதி ஒற்றைப்பிறையாதல் உலகவழக்கன்றே ! ஆகவே என்றும் ஒளிகுன்றத் திருமுகத் திற்கு நிலாமதியை ஒப்பிடல் இழுக்குடைததாகும். என்றுங் கருணையும் மென்மையும், ஒளியும் துளும்புங் திருமுகத்தைக் கம்பன் ஒப்புயர்வற்ற "கருணையால் அமிழ்தங்காலும் முற்றுறு கலையிற்ருய முழுமதிமுகம்' என்னல் பொருத்தமுடையதாகும். முகத்தைப் பார்த்த கண்கள் பின்பு சிரமிசைப் பாய்ந்தன.
அந்தச் சிரத்தில் இருக்கின்ற ஒளியானது சிரத்திற்கொரு
64

கணிப்பொலிவைக் கொடுத்தது. ஆண்டுத் தியாகச்சுடரும் (தந்தையளித்த மோலியை தம்பிக்குக் அளி சிறக்கக் கொடுக் துத் தாய் தந்த சடாமகுடத்தோடு கூடிக்) கலங்கிலங்கு முக மண்டலம் என்றும் பொலிவொடு கூடி விளங்கியதால் 'சிற் றவை பணிந்த மோலி பொலிகின்ற சென்னியானுக இராமன் என்றும் நன்றே கின்றிலங்கினன். அழகுடன் அருமையும் நிறைந்த முழுப்பாடலும் வருமாறு :-
'கற்றை வெண்ணிலவு நீக்கிக் கருணையால் அமிழ்தங்காலும்
முற்றுறு கலையிற்ருய முழுமதி முகத்தினுனைப்
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத்திான் பெற்ற சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை."
இங்ஙனம் அழகும் அருளுக் கியாகமுங் கலக்கிலங்கும் இராமன் அருமைக் திருமேனி விபீடணனுக்குக் கிட்டுவதால் அதனை 'அருமையில் எளிய அழகு" என்போம்.
65

Page 35
-ஏ. பெரியதம்பிப்பிள்ளை
இலக்கியமுஞ் சமூக வாழ்வும்
*(UP Lor கடிகை" வரப்போகின்றது. முடிசூட்டுக் குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. க%லமகளை மணந்த காகுத்தன், கிருமகளை மணந்த வில்லின் செல்வன், கிலமகளையும் மணக்கப்போகின்றன். மூவுல குக்கும் பொதுவான முடிசூட்டு விழா. நீ, நான் என்று சொல்லிக்கொண்டு முடி மன்னரும், மண்டலாதிபதிகளும், பட்ட வர்ததனரும் முதலிய பிரபலவான்கள் விரைந்து புறப்பட்டுச் செல்கின் ருரர்கள். சன சமுத்திரம்போன்று பொதுமக்கள் மகிழ்ச்சியொலியுடன் திரண்டு வருகின்றர்கள். இத்தனையும் எதற்கு ? தசரதன் வாயாலேயே சு றிவிட்ட முடிபுனை கடிகைக்கு. *நடையில் நின்றுயர் நாயகன்" முடி சூடுவதை நானிலம் முழுதுமே நயந்துகிற்கின்றது.
மோதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை யொத்தார்
வேதியர் வசிட்ட னெத்தார் வேறுள மகளி ரெல்லாம் சீதையை யொத்தார் அன்னுள் திருவினை யொத்தான்
அவ்வூர்ச் சாதுகை மாந்த ரெல்லாம் தசரதன் தன்னை யொத்தார்."
சமபுத்தி படைத்த இராமபிரானின் முடிசூட்டுவிழா எல்லார்க் குஞ் சமமான மனமகிழ்ச்சியை யளிப்பது இயல்புதானே. இதில் வியப்பென்ன p
அாதன விளக்கங்களால் அலங்கரிக்கப்பெற்று அவிர்ந்து விளங்குகின்றது அயோத்திமா நகரம். அங்கே இரவும் பக லாகிவிட்டது. விஞ்ஞான கலாநிதி சர். சந்திரசேகர வேங்
கடராமன் என்பார் இரத்தின சோதியை எவ்வாறு பொது
66

சன உபயோகத்திற்கு உரியதாகச் செய்யலாம் என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்ற இரத்தினப் பரீட்சையின் முடி % 2000) ஆண்டுகளுக்கு முன்னேயே கண்டுபிடித்திருந்தது இந்திய நன்னடு. இரத்தின தீபங்களால் எழில்பெற்று இலங்கு கின்ற இல்லங்களையும், வீதிகளையுந் தன்னகத்தே கொண்ட இனிய அயோத்திமா நகரம் அமரர்க்கும் அருத்திபுரிகின்றது. இராவணன் காலத்து இலங்காபுரியும் இத்தகையதே. நவரத் கினங்களுள் முத்துப்போன்று உலகநாடுகளின் மக்கியிலே இசையொளிபரப்பி கிற்கின்ற நம்மிரு நாடுகளும் விஞ்ஞான உலகின் மக்கியிலே நாட்டிய புகழினும்பார்க்க, உலக சமுதாய வாழ்வின் மத்தியிலே ஈட்டிக் தந்துள்ள இணையில்லாப் புக ழா60 அது அவற்றின் அழகாகிய சிகரத்தின் மணிமுடி போன்று கிகழ்வதைக் கம்பராமாயண காவியம் கவின் பெறக் காட்டி கிற்கின்றது.
இயற்கை யழகுஞ் செயற்கை யழகும் உலக சமுதாய அழகுடனே இரண்டறக் கலந்து உறவாடுகின்ற அயோத்திமா நகரம் இனியதோர் இன்ப நிலமாகக் காட்சியளிக்கின்றது. இந்த இன்ப கிலத்தின் மத்தியிலே எதிர்பாராததொரு சம்ப வம், முன்பே முடிந்த சம்பவம், மறைந்துகிடங்க சம்பவம், சாதாரண மக்களின் அறிவுக்குப் புலப்படாததொரு சம்பவம் பயன்படும் செவ்வியை யடைந்து கிடீரெனத் தோன்றுகின்றது. விளையாட்டால் விளைந்த வினையாகிய இச்சம்பவம், விதியென் னும் பெயர்கொண்டு விளையாடத் தொடங்கிவிட்டது.
'பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை”
யென்கின்ற அந்த வினை விளைத்த விளையாட்டுக் கருவியை நமக்குக் கற்பித்துக் காட்டுகின் முர் கம்பர் பெருமான். இந்தக் கழிமண்ணுருண்டையைக் கூனியென்பாள் கன்னுள்ளத்தே உள்ளுகின்ற வினையால் விதியானது தனது விளையாட்டை ஆரம்பிக்கின்றது. -
கூனி இலேசானவள் அல்லள்; மிகப் பழையவள்; இராச குடும்பத்துப் பெண்களிடையே நல்லசெல்வாக்குப் பெற்றவள்; எங்கும் அடிபட்டவள்; கோள் சொல்வதில் அடிப்பட்டவள்; நரித் தந்திரி; சகுனியையுந் தன் கைப் பொம்மையாக்கத் தக்க
67

Page 36
சமயோசித சந்தர்ப்பவாகி, ஏசு காலத்திலே மூன்று மனேவி பர்கண் வைத்துக்கொண்டிருந்த கசாச் சக்கரவர்க்கியின் குடும்பத்திலே உள்படு கருமக் கலேவியாக இருக்தமையாஸ் கூனியின் கோளோடு கூடிய மனக்கோள், மூவுலகுக்கும் இடுக்கண் Pl-t-i:h-fಲ್ಲ..! ஆற்றல் வாய்ந்தது. அவளது f யாட்டு வினேயாகி, வினே விதியாகி, விகி தான் விளேயாடுவதை இங்கே காண்போம்.
இராப்பகலற்ற நகரிலே, இரவு வேண்யிலே கூனி கிளம் புகிருள். எங்கும் மலர்ந்தன முகங்கள். கூனியின் முகம் மாக் திரம் ஒரு கூம்பு. இன்று ಏ.17:ಟ್ಟ-# கூம்பிவிட்டது. களி யைக் கவனிக்க ஒருவருக்கும் நேரமில்லே. சாதாரண குறை பாடுகஃளப் பெரிதாக்கிக்கொண்டு சமயம் வரும்போது பழிவாங்க விாைங்து செல்லுகின்ற கயமை உலகிற்குக் கன்னே ஓர் உகா ரணமாகக் காட்டுகின்றவள் போன்று கூனி செல்கின்ருள். அவள் கடந்து செல்லுகின்ருள் என்று சொல்வதற்கில்&l குடுகுடுத்து ஒடுகின்ருள் கைகேயி அன்ஃனயின் மாளிகையுட் புகுகின் ருள்; கால்களே வருடுகின்ருள்: காகிலே ஏதோ குக குசுத்துப் பேசுகின் ருள். ஒரு கபடநாடக சூத்திரகாரியாகி விட்டாள் சுனி.
விகி விண்பாடுகிறது. அது முதற் காரணம்; கூளி துணேக் காரணம் கைகேயி கிமித்த காரணம். வினே விளேவு ჭალუ நியமம்; ஆகம சாத்திரங்களாலே கிறுவப்பட்டதோர் உண்மை; அனுபவ சாதனம், சாத்திரக் கருத்தின் (டி-பாக அமைந்துள்ள இவ்வினே விக்ளவினேச் சமூக வாழ்விலே மக்கள் நிறைவேற்றிவைக்கின்ற இந்த கியதியை இலக்கியங்கள் சிருட் டித்துக் காட்டுகின்றன. இதனுல், சமூக வாழ்வின் நியதி நிகழ்ச்சிகள் கிறைந்த ஒவியச் சாலேகள் போன்று காட்சியளிக் கின்றன இலக்கியங்கள். இராமாயணமும், இவ்வண்ணம் நிகழ்வண்ணம் இனிது காட்டும் மெய்வண்ணக் கவின் எண்ணக் கருத்துவண்ணத்தின் செவ்வண்ணக் கிகழுஞ் சீரியகோர் இலக் கியமா பமைகின்றது. இலக்கியங்களிலே கதாபாத்திரங்களின் அமைகி நியமம் உயிர்போன்றுள்ளது.
'முடி | ||ိုးar கடிகை'யை நிறைவேற்றக் துனே செய்கின்wள் கூனி, கடிகை யென்பதற்கு கோம் என்னும் பொருளோடு, சீக்கு தில், தடைப்படுதல் என்னும் பொருளும் உண்டல்லவா? Ed YM
GES

மன்னன் வாயில் இரட்டுற மொ ழிதலாக வந்து அப்போது குறிப்பால் அமங்கலம் பயந்து நின்ற கடிகை பென்னுஞ் சொல்லின் அமங்கலப் பொருளே வெளிப்படையாக உலகம் அறிதற்குக் நூணேயாகின்ருள் கூனி கடிகை யென்னுஞ் சொல்லேக் தசரதன் சொல்லவில்லி விதி கூட்டிற்று.
சீதையின் கிளிப்பிள்ளைக்குங் கைகேயி என்பது பெயர். அவ்வளவு அன்பு, இராமன்மீது கைகேயிக்குள்ள போன்பு, போாத நல்லன்பு, காய்மையன்பு, இராமனுக்கும் இவ்வாறே:
சீதைக்கும் இதுவே.
'என்னுெ ரின்னுயிர் மென் கினிக் நியார் பெய ரிகேன் மன்ன வென்றலும் மாசறு
கேகயன் மாதென் அன்னே தன் பெய ராகென
அன்பினுெ டக்காள்'
சொன்னவன் இராமன் இட்டவள் சீதை. உண்மை அன்பிற்கு இது உதாரணம். தமது உண்ணீர்க் கலசத்துக்குச் *சவுக்கத்தலி அண்ணு' என்று பெயரிட்டுச் சாகி, மத பேதங் கடந்த தனிப்பேரன்பிலே கலே கின்ற கவியரசி சரோ சினி தேவியுஞ் சமூக வாழ்வுக்கும் இல க்கியத்திக்குமுள்ள தொடர்பினே நன்கு அணிசெய்துள்ள சம்பன்க்கையுங் தொடர்புபற்றி இங்கே குறிப்பிடல் சால்புடைக்காம். நமது காலத்து கிகழ்ச்சி யல்லவா ?
இராமன்மீது கைகேயிக்குள்ள கா ய்மையன் பு -உள்ளன்பு இயல்பானது; மாறுபடாதது
'மாசறு கேகயன் மாது என் அன்ஃன'
என்று இராமனே அதற்கு அகச்சான்றுருக அமைகின்மூன். இத்தகைய மாசற்ற பேரன்பு மாறுபடுவதாயின், அஃது ஏகோ வோர் அக்கரங்கமான அபார சத்தியாலேதான் ஆகமுடியும். வெறுங் கழிமண் உருண்டைக்கு அதனேச் செய்யும் ஆற்றலே தர் பல்லும் போய்ப், பொல்லில்வரும் வில்வடிவான கூனியின் சொல்லம்புக்கு இக்க கல்லன்பு இலக்காவது எவ்வாறு கைகே யிக்கும் இதைச் செய்வது நல்லதன்று, கசசனலுக்குஞ் சாக்கிய ყმ58ჭა : இந்த நிலையான போன்பை கிலேகுலேததற் குரிய சக்தி பெற்று முன்னரேயே அமைந்து கிடந்ததொரு கியதிதான்
J (ና ሀ

Page 37
இங்கே பெரியதோர் சதிஇயக்கமாகி 'முடிபுனை கடிகை"யை முடித்துவைக்க உருத்தெழுந்தது என்கின்றர் நமது கவிச் சக்கரவர்த்தி. 偷 W
*அரக்கச் பாவமு மல்ல வரியற்றிய அறமுங்
துரக்க நல்லருள் துறந்தளஸ் தூமொழி மடமான் இரக்க மின்மையன் முேவின் றுலகங்க ளிராமன் பாக்குந் தொல்புக ழமுதினைப் பருகுகின் றதுதே' என்கின்ற இராமாயணச் செய்யுள் நமது ஐயமாகிய நோய்க்கு அமுத சஞ்சீவியாக அமைந்து மன அமைதியை அளித்து நிற்கின்றது.
இராமனது முடிபுனைதல் கடியலாகிய இச்செயலே ஒர் அறகியற் புரட்சியுமன்று; சதித்திட்டமுமன்று; பழிச் செயலு மன்று; பாதகமுமன்று; விதியின் விளையாட்டு. இராமனது ஆகூழால் இத நிகழ்ந்தது. இராமனது உடல் வலியும், மனே சத்தியும், சமத்துவ புக்கியும், காரிய சித்தியும், அத்திர சத் திாயுத்த தந்திர முயற்சியும் முதலியயாவும் அனுபவ ஞானத் தால் ஆக்கம் பெறுதற்கு முன்னின்ற ஆகூழானது உலகினை ஏக்கமுறச் செய்து, இராம சரித்திரத்தை உலகிலே அமாத்து விம் பெறச் செய்துவிட்டது.
*அரக்கர் பாவமும்' என்னும் இச் செய்யுள் இராமா யணத் திறவுகோல் : இராமாயண நடுநிலை வாக்கியம் ; அதன் உயர்நிலைச் செய்யுள். இச் செய்யுளை யறிந்தால், தசாதனை யறியலாம் ; கைகேயியையுங் காணலாம். இராமாயணமும் இனிது விளங்கும்.
*மாதவி மடந்தை
கானற் பாணி கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது' m என்னுஞ் சிலப்பதிகார அடிகளும் இங்கே கினைவுகூரத்
தக்கனவாகும். சிலப்பதிகார நிகழ்ச்சிகளை விளங்க இவ் வடிகள் உறுதுணையாகின்றன.
இவ்வாறே சமூக வாழ்வில் நிகழும் விளங்கா நிகழ்ச்சிகளை விளங்கிக் கொள்ளற்குரிய உயிர்நிலை வாக்கியங்களை இலக்கியங் களிலே கண்டு புலவர் உள்ளங்களாகிய தெப்பங்களின் மூல மாகச் சமூக வாழ்வாகிய கடலைத் தாண்டிச் சம நிலைபெறு வோமாக. நடுநிலையிலே கின்று இலக்கியம் படித்தல் எளிதன்று.
"நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது’
70

- 2 ft 5 F60) is
பரிசில் வாழ்க்கை
தலையே நாட்டின் செல்வம். கலைச்செல்வத்தைச் ச்ெல் வத்துட் செல்வம் என்பர். கலைக்காக உயிர்வாழுங் கலைஞ்ர் களுக்கே பரிசில்வாழ்க்கை உரிமையுடையதாகும் நுண்ணறி வுடைய கலைப்பெருமக்கள் இன்றும் நோபல் பரிசு பெறுகின் ரு?ர்கள். கலைஞர்களது வாழ்க்கையைப் பொற்கிழியும், பொன் னுடையும் பொலிவு செய்கின்றன. முக்தமிழ்த் துறைவாய் நுழைந்த வித்தகச் சான்றேர் வாழ்க்கை, பரிசில் வாழ்க்கை யாகும். கையில் பாழையேந்தி மெய்யிற் பசியைச் சுமந்து செல்லும் பாணரும், கூத்தரும், புலவரும், பிறரும் பரிசில் வாழ்க்கைக்கு உரியவராயினர். முடியுடை மூவேந்தரே பரிசில் வாழ்க்கையராய்ப் பாடி ச் சென்றனரெனில் அதன் சிறப்பு எடுத்த இயம்புக் காத்ததோ !
பரிசிலரது உலகம் பெரிது. அவர்களைப் பாதுகாப்போ ரும் பலராவர். எத்திசையிற் சென்றலும் அத்திசையிற் பரி சும் பாட்டும் அவர்களை எ கிர் கொண்டு அழைத்தன. கொள்க' எனப் பரிசிலைக் கொடுத்தபோதுங் கொள்ளேன்' என்னும் பண்புடையதும் முற்றிய கிருவின் மூவராயினும் பெட்பின்றீகல் யாம் வேண்டலமே' என்னும் பெருமிதத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்ததும் பரிசில் வாழ்க்கையே. நாளும் புள்ளும் பரிசில் வாழ்க்கைக்கு நன்மையே விளைத்தன. காலத்தையும் இடத்தையுங் கடந்து நின்றது பரிசில் வாழ்வு.
*நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
O an a பதனனறு புககுக கறனனறு மொழியினும் வறிது பெயர்குரு ரல்லர் பரிசிலர்'
என்னும் புறப்பாட்டுப் பரிசில் வாழ்க்கையைப் பாராட்டுகின்றது.
7

Page 38
வாள்வலியாலுந் தோள்வலியாலும் மற்றெவ்வலியாலும் எய்தமுடியாத வென்றி நலன்களையெல்லாம், பரிசிலர் கலைவலி யால் எய்திச் செம்மாந்து-இறுமாந்து வாழ்ந்தனர். மண்ணுளுஞ் செல்வம் படைத்த மன்னவருந் தலைவணங்கிப் பணிபுரியும் தலைமைப்பாடு பரிசில் வாழ்க்கைக் குண்டு. ஈத்துவக்கும் இன் பம் அறியாது, எலிபோன்று பதுக்கிவைக்கும் ஈயாமன்னர், பரிசிலரைக் கண்டு நாணினர். புலிபோன்ற மான வீரர், பரி சிலருடன் புணர்ச்சி நட்பும், உணர்ச்சி நட்பும் பூண்டு வாழ்ந் கனர். வேந்த ரது வெண்குடைச் செல்வத்தைப் பரிசிலர் வியவாது தம்மிடத்துச் செய்யும் முறைமையை அறிந்து ஆற் றும் மூதறிவாளரது வறுமையைப் பரிசிலர் மதித்தார்; هy تقهٔ றியும் அறிவற்றேரசை அவமதித்தார். பரிசிலரது பாடறிந்து கொடுக்குக் தினையளவு பனையளவாகப் பாராட்டுப் பெற்றது.
காந்தியடிகள் உலகினுக்குக் காட்டிய சத்தியமாகிய இளவனஞாயிறு, பரிசில் வானில் உகித்தெழுந்து, பழந்தமிழ் நாட்டிற் கலைக்கதிர் பரப்பி கின்றது. அது
'பல்லிளைஞரும் விறலியரும் வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன் மெய் கூறுவல்"
புறம் 139 எனவும்,
'பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின் றெஞ் சிறுசெங் நாவே'
புறம் 148
எனவும் பரிசிலர் கூறுங் கூற்றுக்களிலிருந்து வெளியாகும்.
அகன் கதிர்களைக் கண்டு, இன்னும் நம்முள்ளத் தாமரைகள்
பூத்துக் குலுங்குகின்றன. மாரியிரவில் மரக்கலங் கவிழும்
பொழுது, கண்ணில்லாத ஊமன் கடல் நடுவே படுந்துயர்
போன்ற பெருந்துயர் வந்தகாலத்தும், சத்தியத்தினின்றும்
அடிதவமுது பரிசிலர் வாழ்ந்தனர்.
1வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப் பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் பாடுப வென்ப பரிசிலர்'
புறம் 168
72

என்னும்பகுதி பரிசிலர் சத்திய வாழ்வுக்கு அழியாத சான்ருகும்.
米 来
கிலையற்ற உலகத்தின் கண்ணே நி%லத்து நிற்பது புகழ் ஒன்றேயாம். உலகப்புகழ் பெறுதலே உயிருக்கு ஊதிய" மாகும். மண் நாணுமாறு புகழ் விளைத்து வாழ்வோரே, கல்வாழ்வு வாழ்வோராவர். ஓம்பிய பொருளும், உடலும், உயிரும் கொடுத்துப் புகழினைக் கொள்வர். வசையற்ற வான் புகழ் ஒன்றே புலவர் காவிற் பொருந்துவதாகும், புலன் அழுக்கற்ற நிறைமொழி மாந்தராகிய புலவர் பெருமக்கள் பரந்த புகழ் நிலைக்கப் பாடுவார்கள்.
*புலவர்பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் எவா வானவூர்தி எய்துபவென்ப"
ஆதலின் புரவலர் எல்லோரும் புலவர் பாடும் புறத்துறை வழியே சென்றனர் : பாடினி பாடும் வஞ்சிக்கு அமைக்க வலியுடையோசாக விளங்கினர் : காண்டற்கு எளிமையுங், கனிவான சொல்லுங் கொண்டு பரிசிலர் உள்ளங்களைக் கவர்ந் தனர் : அன்பு கலங்க நெஞ்சும், அருள் ஒழுகு கண்ணும், கவிவண்கையும் உடையோ ராய்த் தம்புகழுடம்பைப் படைக் கும் பரிசிலரைப் போற்றி கின்றனர். கொல்லன் உலைக்கல்லை ஒத்க வன்னெஞ்சரும், குறுகிவரும் பரிசிலரைக் கண்டதும், கண்ணிரினும் இனிய தண்மையும் மென்மையும் உடையரா யினர். பரிசிலர் துயர் களைக%லயே செல்வர் தஞ்செல்வத்
தின் பயணுகக் கருதினர் : பரிசிலர் துயரைத் தந்துயரமாகக் கொண்டு பரிவுகாட்டினர். தம்முடைமையைப் பரிசிலர் உடைமையாகவும், தம்மைப் பரிசிலர்க்கு வரிசையறிந்து
பகிர்ந்தளிக்குங் தருமகர்த்தாவாகவும் எண்ணினர். இமையவர் துயர்தீா இன்னுத நஞ்சுண்டும் இறவாகிருந்த திருநீலகண்டன் போலப், பரிசிலரை உய்யக் கொண்ட புரவலர்களும் இறவாப் புகழுடம்பை எய்கினர்கள்.
ஈவோாது கைவண்மை தமது மறுமை நோக்கிச் செல் லாது, பரிசிலரது வறுமை நோக்கிச் சென்றது. இம்மைச்
செய்தது மறுமைக்காம் எனும் அறவிலை வணிகத்தை அவர்
73

Page 39
கள் கனவிலுங் கருதவில்லை. பரிசிலரைக் கூட்டிச், சங்கம் அமைத்து, அவர்தம் பசிப்பிணி மருத்துவனுகப் பாண்டியன் விளங்கினன். முரசுகட்டிலேறிய பரிசிலன் கண்வளாச், சோ மன்னன் கவரிவீசி கின்முன், சோழவேந்தன், அரசன்றிப் பரிசிலர்க்கு ஆருயிருங் கொடுப்பேன் வருக என் குடை கிழல் வருக’ என வரவழைக்கான். த%லயைக் கொடுத்துங் கண்டமிழ்ப் பரிசிலனது பசியைப் போக்கக் குமணவள்ளல் து டியாய்க் துடித்தான். தன்னையே பரிசிலர்க்கு நல்கிய தனிப்பெருங் கியாகிபன்ருே பாரி ; அவனது முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். வல்வில் ஒரியும், எழிலியும், மலையமானும், கள்ளியும், ஆயும், பேகனும் பரிசிலர் ஒக்கல் த%லவர்களாகவே விளங்கினர்கள் பெண்களுங் கம்பதங் கொடுத்துப் பரிசிலர் வாழ்வை வளம்படுத்தினர்கள். அமிழ் கினை வென்ற சுவையுடை அடிசிலைக காழிதங் கமழ ஊண் முறையூட்டினர்கள். 'பரிசிலர் தமகெனத் தொடுக்குவராயின் எமகெனப் பற்ருது' சுற்றக்காரும் உதவி வந்தனர்.
பண்புடையாளரது பெருஞ் செல்வத்தைப் பரிசிலர் ஊருணிநீர்போல உபயோகித்தனர். பரிசிலரை விருத்தும் பசி நோய் தீர்க்கும் மருந்துமரமாகச் செல்வர் விளங்கினர், கோடைகாலத்துக் கொழு கிழலாயினர்; நடுவூர்ப் பழமாமாய் கல்விருந்தாயினர். பழமரம் நாடும்பறவை, நேற்று உண்ட னம் என்னது பின்னும் வருவது போலப் பரிசிலர் கூட்டம் வங்க வண்ணமாகவே இருந்தது. பழுத்தமரத்தில், பழமுண் இணும் பறவைக்குரல் ஒலிப்பது போலச், செல்வர் விட்டில் ஊனெலியா வந்தானுங் கேட்கும். மருந்தும், விருந்தும், வள முறு கிழலும், விரும்பும் பொருளும் வேண்டியோர்க்கீயுங் கற்பகதருவாகக் காவலர் கிகழ்ந்தனர். அவர்கள் ஓம்பிய நாடு புத்தேளுலகம் போலப் பொலிந்தது. பெய்யும் இடமறி யாது, விளைபுலத்தும் களர்கிலத்தும் பொழிந்து மடம்படும் மாரிபோல, பரிசிலர்க்கு வரையாது கொடுப்போருங் கொடை மடம் படுவாராயினர். வரையாது வழங்கும் வானமும் காணப் பரிசு வழங்கியோர் பெருமை, விரிப்பின் அகலும்; தொகுப்பின்' எஞ்சும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்
உள்ளதன்மையினலேயே பரிசிலர் உலகும் உளதாயிற்று.
74

பூமேலே நடந்தோர் பெற்றிய தென்னப் பரிசிலர் இப்புவி மேல் வாழ்ந்தனர்; கறிசோறுண்டு வருந்து தொழிலல்லது பிறிதொரு தொழிலால் வருந்தாராயினர்; வெய்தான உண வுண்டு வியர்க்தல் அல்லது செய்தொழிலால் வியர்த்தல் அறியார். அவர் கை மிகவும் மென்மையாயிருந்தது. பொருட் குறைவும், மனக்குறையும் போக்குவதற்காகப் பரிசிலர் புரவ லரிடஞ் சென்ற்னர்; கவலை நெஞ்சத்து அவலங் தீர்க்க வேண்டி னர்; எண்ணியதை முகக்குறிப்பால் எடுத்துக்காட்டினர். குறை முடிப்பதுவே அவர் கொள்ளும் பரிசிலாகும். நிலங் தொட்டு நீர்ப்பாய்ச்சி, வளம்படுத்துமாறு மன்னவரைத் தூண் டினர்; விளை நிலங்கள் விளைவுகுன்றியபோது இறைதவிர்க்கு மாறு அரசனை இரந்தனர்; இருபேரரசர் பொருவது கருதி யக்கால், இடையே நிகழும் இன்னல்களை எடுத்துரைத்துச் சந்து செய்தனர்; அரச குடும்பத்து ஊடலைத் தணிக்கும் வாயில்களாக உசாத்துணைபுரிந்தனர்; முறைதிறம்பிய மன்ன வரை மீதி வழிப்படுத்தினர்; அரச கன்னியரை மணம் முடித்து வைக்கும் அறப்பணியாற்றினர். இவைபோன்றவற்றைப் பரிசி லாக ஏற்றுத் தூயபரிசில் வாழ்க்கையர் தொண்டு புரிந்தனர்.
மலையிலே பிறந்து மாக்கடலை நோக்கி, நிலமிசையோடும் பல ஆறுகள் போலப் பலதிசைகளிலுமிருந்து பரிசிலர், புரவலரை நோக்கிப் புறப்பட்டனர். உடும்புரித்தாற் போன்று எலும்பெழுங்கியங்கும் உடம்பையுடைய சுற்றத்தவரும், இளை ஞரும் அவருடன் கூடி எகினர். மணம் வளருங் கூந்தலை மலைக்காற்று அசைக்க; கலாபமயில் போன்ற காட்சியாாய்ப் பரிசிலர் மனைவியரும் பயணப்பட்டனர். யாவரும் வெயிலென வெழுதும், பனியென மடியாதும் விழைவுடன் சென்றனர். ஊர் இல்லதும், வருத்தம் மிக்கதும், உண்ணும் நீரில்லதுமான மீண்டவழிகளைத் தாண்டினர். அனல் மிகுந்த அருஞ் சுரத்தை நீங்கி, ஆணினம் மிகுந்த அடிப்பாடு பலகடந்து, மானினம் மலிந்த மலைபின் ைெழிய, மீனினங்க்லித்த துறைபல நீந்திச் சென்று கொடைவல்லாரைக் குறுகினர். கனவிலும் பகைவர் காணமுடியாத காவலுள்ள புரவலர் ஊருள்ளே உரிமையுடை யார் போலப் புகுந்தனர். வாயிலிலே தடையில்லாது வள்ளி யோர்மனையுள்ளே தலை கிமிர்ந்து சென்றனர். புள்ளுக் குரலி யம்பும் புலரிவிடியலிலும், மாலைக் காலத்திலும், மற்றெந்
75

Page 40
நேரத்திலும் பரிசிலர் வரவைப் புரவலர் பார்த்த வண்ணமாகவே இருந்தனர். பரிசிலர் பொருட்டே அவர் வாயில் அடையா வாயிலாகத் திகழ்ந்தது.
வள்ளியோர் பரிசிலரை வரிசையறிந்து வரவேற்றனர். ஈர நெஞ்சும் இன் முகமுங் காட்டிக், கட்டிததழுவிக், கைகொடுத்து மகிழ்ந்தனர். கையாலே தலையைத்தைவந்து கரவில்லாது இன்சொல் வழங்கினர். ஒருநாட் சென்ருலும், இருநாட் சென்ருலும், பல நாட் பயின்று பலரொடு சென்ற லும் முதனட்போன்ற பெருவிருப்பத்தோடு உபசரித்தனர். பாலுந், தேனும், பிறவுங் கொடுத்து பரிசிலரது தாகத்தைத் தணித்தனர். புனலாட்டி, அரையிலுடுத்த கங்தையையகற்றிப் பட்டாடை அணிவித்தனர். முற்றத்திற்குவந்த பரிசிலர் உண்ணுராயினும், ‘என்னுணையுண்' எனத் தம்மொடு குளு ரைத்து உண்பித்தனர். விருந்தயரும் விருப்பினளாய தம் ம%ன விக்குப் பரிசிலரைக் காட்டி இவரை "எம்போற் போற்று' என்றனர். இவ்வாறு பெருஞ்சோறுஞ் சிறுசோறும் வள்ளி யோர் பரிசிலர்க்கு வரையாது வழங்கினர். பரிசிலரும், தாம் மேற் கொண்ட கலைத்திறத்தால் அவர்களை உவகைக் கடலுள் ஆழ்த்தினர். பரிசிலருடன் உரையாடி உவகைபூக்க நாளே
தம் வாள் நாளிற் பயன்பட்ட நாளாக ஈவோர் எண்ணினர்.
பல நாட் கழியினும் பரிசிலரைப் பிரிய ஈவோர் இசையா ராயினர். 'கின் புகழே கிரம்பிய உள்ளம் தூண்ட, நின்னைக் காணவந்தோம்; கண்குளிரக் கண்டோம்' என்னுங் கூற்றின் மூலம் பரிசிலர்தாம் போக விரும்புங் குறிப்பைப் புலப்படுத்தி னர். கொடுப்போர் அக் குறிப்பையுணராசாயின், 'யாண்டுபல வாகி, நரைமுதிர்ந்து, கண்ணிழந்து, கோலே காலாகக் கொண்டு வருந்துந் தாயின் மெய்வருத்தத்தையும், தாய்முலை சுவைத்தும் பசிதணியாது கூழுஞ் சோறுங் கூவியழும் மக்களின் அழு குரலையும், மாசுண்ட உடையுடுத்த மனைவியின் கண்ணிரையுங் காட்டி விடைபெற விரைந்தனர்.
உழுது பாடுபடும் எருது, நென் மணியைப் பிறர்க்கு உதவுவதுபோல, கொடுப்போரும் தாம் வருந்தித்தேடிய பொருள்களையெல்லாம் பரிசிலர்க்கு வழங்குவாராயினர்; காடென்றும் நாடென்றுங் கருதாது, பகலென்றும் இரவென்
76

அறும் பாராது பரிசிலரது குறைமுடிப்பாராயினர். காட்டு விற கெடுப்போர் புதையல் எடுத்தாற் போன்று, பரிசிலரும் கிச்சய செல்வம் பெற்றனர். ,י
"குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறையு கிரையென்கோ மனைக்களமரொடு கள
ஆங்கவை, கனவென மருள வல்லே மென்கோ
நனவின்'
நல்கினர்கள்.
நெல்லிக்கனியும், நெல்லும், வாகும், பிறவும் உதவினர்கள். முத்த வடமும், பன்மணிக்கோவையும், பொன்னரிமாலையும், பசும்பொன்னும் பரிசிலர் பெற்றனர். கைபுனைந் தியற்றிய கவின் பெறும் அணிகளைப் பெற்ற பரிசிலர் சுற்றம், கழிபேரு வகை கொண்டு செய்வதறியாது திகைத்தது; இராமனுடன் காடுபோந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது, அவள் கழற்றி வீசிய அணிகலன்களைக் குரங்குச் சுற்றம் அணிந்ததுபோல, அணியும் இடமும் முறையுந் தெரியாது அணிந்து மகிழ்ந்தது. விரலில் அணிவனவற்றைச் செவியிலும், செவிக்குரியவற்றை விரலிலும், அரைக்குரியவற்றைக் கழுத்தி லும், கழுத்தணியை இடையிலும் பரிசிலர் சுற்றத்தார் அணிந்து, காண்பார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினர்.
வருங்கியும் வருத்தியும் முகம்மாறிப் பெறும் பொன்னணி யானைப் பரிசிலிலும் பார்க்க, பசிவேளையறிந்து இன்முகத்துடன் அளிக்கும் ஒரு வேளை உணவை மேலாகக் கருதினர். இயலு வது ஒன்றனை இல்லையென மறுத்தல், பரிசிலரை வாட்டுவதன் றிப் புரவலர் புகழையுங் குறைப்பதாகும். பரிசில் பெருத விடத்து புரவலரைப் பழியாது, புள்ளையும் பொழுதையும் பழிப்பர். தமக்குச் செய்த தகாத செயலால் அவர் துன்புறு வரே என இரங்கினர். "நீடு வாழிய நெடுந்தகை' எனவும், நோயிலாாக கின் புதல்வர்' எனவும் அவரையும் அவர்வழி மரபையும் வாழ்த்திச் சென்றனர். பரிசிலர் முகத்தைப் பாராது சந்தது எத்துணையுயர்ந்த பரிசிலாயினும் அதனை ஏற்காது, 'காணுது ஈத்த பரிசிற்கு யாமொரு வாணிகப் பரிசிலால்லேம் என இகழ்ந்து சென்றனர். வரிசையறியாது வழங்குவோர்க் குத் தக்கன கூறி அவரைத் தெருட்டினர். இரைவேட்ட
K 77

Page 41
வயப்புலி, யானை வேட்டை பிழைப்பின் எலிவேட்டையில் இறங் காது’ எனக் கூறிச்சென்று வரிசைக் கேற்ற பரிசை வாங்கி ல் இது,
"இரவலர் புரவலை நீயு மல்லை;
புரவல ரிாவலர்க் கில்லையு மல்லர்: இரவல ருண்மையுங் காணினி, யிாவலர்க்கு ஈவோ ருண்மையுங் காணினி ' புறம் 162
எனப்பாடித் தாம் பெற்ற பரிசிலப் புரவலர்க்குக் காட்டி அவருள்ளத்தைப் பரிசிலர் மாட்டுத் தாழச் செய்தனர். பரிசிலரை இகழ்ந்திமையாற் பண்டு பல நகரங்கள் பாழடைக் தன. புகழ்ந்த செய்யுட்கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயனுக அரையம் என்ற பெருநகரம் அழிந்தது. பரிசிலர்க்கு
அடைத்த வாயிலுடையோரை வழிவழியாகப் புலவர்பாடாது
ஒழிந்தனர்.
உலகியற் பொருளும், அப்பொருளாற் பெறும் இன்பமும் நிலையற்றவை என்பதை அநுபவமூலம் பரிசிலர் அறிந்தனர். பொருளும் பொன்னும் போகமும் பொய்ம்மையேபெருக்கிப் பொழுதினைச் சுருக்குமாற்றையறிந்து அவற்றைத்துறந்தனர். வாழ்வாய்-வாழ்முதலாய் - வாழ்முதலாகியபொருளாய்-உற வாயுள்ள ஒரு பொருளை உணர்ந்தனர். தெய்வமென்பதொரு சிக்தங் கொண்டு, அன்புற்று, அருள்நெறிபரப்பி, அற வாழ்வு வாழ்ந்தனர். அருட்செல்வன் கழலேத் துஞ்செல்வத் தையே செல்வத்துள்ளே தலையாய செல்வமாக மதித்தனர் ‘இறைவன் பொருள் சேர் புகழைப் புகழ்ந்து பாடினர். செங் நாவலர் பாசும் புகழ் உடைய பெருமான், வான்பழித்து மண்புகுந்து பரிசிலரை ஆட்கொண்டருளினன். 'அஞ்சலோம் புமதி அறிவனின் வரவு' என அன்பொடு திருவாய்மலர்க் த, பெறலரும் பரிசிலாய பேரின் பம் கல்கியருளினன்.
தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னுந்தமிழ்ப் பெரும் பண்பால், பரிசிலர் கலைஞரை புரவலரிடம் ஆற்றுப் படுத்தினர். கற்முேன்றி முட்டோன்முக் காலத்தேகோன்றிய ஆற்றுப் படையாயவித்து, இலக்கியச் சோலையில் முளைத்து வளர்ந்து பத்தித்தேன் சொட்டும் பல எழிலுறு மலர்களை ஈன்று உலகெலாம் அருள் மணம் பரப்பி நிற்கின்றது. பெற்ற
78

பெருவளம் பெரு.அர்க் கறிவுறீ இச்சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்' எனத் தொல்காப்பியப் பெருங்கடல் அதன் இறவாப்புகழை எடுத்து முழங்குகின்றது. சங்கத்தமிழ்ப் புலவ ராம் நக்கீரனுர், ஒவ்வொருவரையும் முன்னிலைப் படுத்தி, "இன்னே பெறுகி நீ முன்னியவினையே’ எனக் கூறிமுருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துகின்ருரர். பித்தா எனப்பாடிப் பேரின்ப வெள்ளத்துத்துள்ளேகிளைத்த முத்தராஞ் சுந்தார், இம்மையிலே சோறுங்கூறையும் அம்மையிலே முத்தியும் பெறப் புகலூாரைப்பாடுமாறு வழிகாட்டுகின்றர். 'பாண்டிப் பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றன் வந்து முந்துமினே' என்றழைப்பதுஞ் செவிக்குத் தேனெனத் தித்திக்குங் திருவாசக மன்றே !
"வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடியவென் னது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஒம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை”
அருள் நெறிச் செல்வர் ஆற்றுப்படுத்திய வழிகின்று எல்லோ ரும் இம்மை மறுமை வீடு பேறுகளை எய்துமாறு, தண்கதிர் மதியம் போன்றும் ஒண் சுடர் ஞாயிறுபோன்றும் கின்று கிலைத்திடுக.
இலங்கைச் சாகித்திய மண்டலத்தினரால், யாழ்ப்பாணம் ஆசீர் வாதம் அச்சகத்தில் அச்சிடுவித்து வெளியிடப்பட்டது.
79

Page 42
இலங்கைச் சாகித்தி
தமிழ் ே
H
வெளிவந்
கிராமப்
தலைசிறந்த சிங்க
மாட்டின் விக்
சிங்கள நாவலின்
இந்நூல் தென்னிலங்கை துடும்பத்தின் பொருளாதார, ப செவ்வனே படம்பிடித்துக் காட

SASLSLeeSeeeeSeeeSeLeeSeeeeSLL eeSeeSLLLeSeLeeSeLSLSeSeLLeeeSeeeeeSeLeeSeeS eSeSeSLSeSeL eSeeSL eee eeSeSS SeSeSS eeSeSe SeSeS SeSe SeAeSeLeeSeLeS SeA
திய மண்டலத்தின் வெளி uயீடு
---
துவிட்டது
பிறழ்வு
எள நாவலாசிரியர்
கிரமசிங்காவின்
திபெற்ற
ரெலிய"
ஐனும்
மொழிபெயர்ப்பு
பிலுள்ள மத்தியதரச் சிங்களக் 4ண் 11 ட்டு வாழ்க்கை முறைகளச்
ட்டுகிறது.
AeAeSAe eA eeeSSeeSSeeSSeMeSeeSeMeLeAeL eeeeSeLeeSeLeeSLeLeeLSLLLeeeSeLeeM ee LSASSASLSLSeASAeMeSe AeAe eAee eeeeeLee eLeSAAA