கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 1988.06

Page 1

6) 60.
9 ܒܗ ܡܒܤ- ܒܗ
ஏழுகின்
6.- 1988 ஒளி: 6
ஊக்குவிப்பு:7).
ப முத்திங்கள் மலர்

Page 2
நீங்கள் விரும்பும் புதிய பழைய திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் பதிவு செய்து குறித்த தவணையில் பெற்றுக்கொள்ளவும் பதிவு செய்யப்பட்ட புதிய பழைய திரைப்படப் பாடல்கள், மற்றும் புதிய ஒடியோ கசற், வீடியோ கசற், மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
உடன் நாடுங்கள்.
LALAA ALAJ LaALL LALJAJ AaJ ALAJ AaJ AaJ LEJ SAJ AaEJ AaEeSLALA aaS LaLLL LaAS LAaAL ALLAJ AaJ ALASLAaAS LaS0SaLS aLaSLLLLLLLAL
e4 SA GK PG .4 •ه3• •3
ጓሶS ♥ጦS ግጠኛ ♥፡s ኃጨና ጓኛ ♥ኛ %$ *እኛ ጓS *ጠኛ ጓኛ ጓS”°ጠኛ °እኛ ጓኛ ጓኛ ጓኛ ጓኛ °እኛ %$ች,$ %እS ጓኛ ጓኞችwS ማ,
a SKYROSE ELECTRONS
ALAAJSAALAeS AaJLaEJLAAL ALEALSLAAAASLAaAALS EaEAs EJ AaJLAaALS0aJEaSLL LaaLLaLLLL aayaaaaaasa Sasa
『a"?"*?マーが"***ーリーーーー・リー 。マリ >እS**ጏs ♥ws ♥vS‛ ግጠኛ`ጓS ጓS ጓS ጛs ♥
No: HOSPITAL ROAD,
JAFFNA.
மாணவ உலகின் வழிகாட்டி
NIRUI TUTION CENTRE Kondavil.
A / L 90-AUIG க?ல. வர்த்தக, விஞ்ஞான வகுப்புக்கள்.
பெளதிகம் திரு. செளந்தி வர்த்தகம் திரு. தேவா இரசாயனம் திரு. செல்வா புவியியல் திரு. வேலா துரிய, பிரயோகம் திரு. கிருஷணு இந்து நாகரீகம் திருமதி.
விலங்கியல் திரு. ஞானம் அருள்நங்ை தாவரவியல் திரு. பாலா அளவையியல் திரு. S. S. மனுேகர பொருளியல் திரு. சின்னத்தம்பி தமிழ் திரு. குழந்ை கணக்கியல் திரு.மரியதாஸ் அரசியல் திரு. மஃறு
فحفظقـ
ஆண்டு 5, 6, 7, 8, 9, 10, 11 ஆண்டுவரை சகல பாடங்களும் பட்டத
ஆசிரியர்களினுல் கற்பிக்கப்படுகின்றன. மேலதிக விபரங்கட்கு:- நிரு டியூசன் சென்றர், கோண்டாவில்.

ஆலோசகர்:-
நா. குழந்தைவேலு B. A. (Tamil SPL) MQA. (Cey) D. O.A.S.
நிர்வாக ஆசிரியர்:- ந. அமிர்தலிங்கம்
ஆசிரியர்:- மு. ரவீந்திரன்
துணை ஆசிரியர்:- க. கண்ணதாசன் ந. சத்தியபாலன்
நிர்வாக உறுப்பினர்கள்:- ந. கமலா ஜே. லூசியான் மரியதாஸர் சி. தர்மபாலன் சு. சண்முககுமார் கா. சசிதரன்
தொடர்பிற்கு:- *ஆதவன்' சஞ்சிகை, 38, அம்பாள் வீதி, நாயன்மார் கட்டு, uu ATyjbi Lu ITayvriíb.
|யம் என இருவகையானது.
‘எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லனவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவும் வேண்டும்"
இதயகீதம்
அன்பின் வாசக இதயங்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் பல.
புத்தாண்டு விபவ ஆண்டாக மலர்ந்துள்
ளது. தமிழ் மக்கள் வாழ்வும் புதுப் பொலி வோடுபூபாளம் இசைக்கட்டும்.
இதோ உங்கள் ஆதவனும் புத்தாண்டுடன் கல்வி, கலை, இலக்கிய முத்திங்கள் மலராக தொடர்ந்து வெளிவருகின்றன். உங்கள் கல்வி, கலை, இலக்கியத் தேவைகட்கும், ஆர் வங்களுக்கும் ஏற்ற வகையில் சிறந்த ஆக் கங்களைத் தாங்கித் தொடர்ந்தும் "ஆதவன்" மலர்ந்து மணம் தருவான். இப்பணியில் தாங்களும், அதிலும் சிறப்பாக உயர் கல்வி மாணவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது எமது இதய பூர்வமான 9.
இலக்கியம் - ஆக்க இலக்கியம், அறிவிலக்கி கல்வித்துறை பில் எமது இன்றைய மாணவர்களின் தேட லுக்கு தகுந்த விதத்தில் பல விடயங்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது. கிடைப் பவையும் நிறைந்த தரத்தில் அமையாது காணப்படுகின்றன. எனவே எமது பணியில் எம்மைக் கரந்தந்து. உதவியும், தோள்தந்து தாங்கியும் ஊக்குவிக்கின்ற கல்விமான்களின் பங்களிப்புக்களாலும் மேலும் அவர் போலும் பல அறிஞர் பெருமக்களின் ஆக்கங்களாலும் தொடர்ந்து மாணவரின் கல்வித் தேவை களைப் பூர்த்தி செய்வதே எமது தலையாய நோக்கங்களிலொன்று. அதே போல மாண வர்களும் கல்வி சார்ந்த அறிவிலக்கியப் படைப்

Page 3
பொருளடக்கம்:-
வாழ்க பாரதி (கவிதை)
- மெய்யவன் பயிற் செய்கையும் பசுமைப் புரட்சியும்
(கட்டுரை) =V. சண்முகநாதன் உபநிடதங்கள் காட்டும் உண்மை நெறி2
(கட்டுரை) - க. சொக்கலிங்கம்
! M. A. கலை அமுதம் (கவிதை) - செல்வி. தி. வாசுகி இங்கிலாந்தின் பொருளாதார வரலாற்றில் கைத்தொழிற் புரட்சி - அ. குமாரவேலு B.A. 'படைப்புக்கள் பிரசவமல்ல" (செவ்வி) - குழந்தை ம. சண்முகலிங்கம் பிரித்தானிய கட்சிமுறை
(கட்டுரை)
- இ. யோகராஜா
விடியுமா? (சிறுகதை) - மு. ரவீந்திரன்
பெளத்தம் சமயமா அல்லது தத்துவமா? - திருமதி.
ச அருள்நங்கை B. A. சிந்திக்க மூன்று வினக்கள்
ஆக்கமும், ஊ க்க மு ம் தந்த உள்ளங்கட்கு நன்றி கள் படைப்புக்கள் யாவும் படைப்பாளர் பொறுப்பே.
புக்களை எமக்கு தந்துதவினல் தரம் நோக்கி அவற்றை நாம் பிரசுரிப்போம். மாணவர்க ளின் ஆளுமையை வெளிக்காட்ட வல்ல சிறுகதை - கவிதை போன்ற ஆக்க இலக்கி யங்களையும் நாம் எதிர் பார்க்கின்றேம்.
உங்களுக்கு நாம் கூற விரும்புவதெல்லாம் நிறைய வாசியுங்கள்! நிறையச் சிந்தியுங்கள்! உங்கள் சிந்தனையில் உதித்தவற்றை விருப்ப மானதும் ஈடுபாடனதுமான ஆ க் கமா க வார்த்து உருக்கொடுத்து அவற்றை அந்தந்த துறைசார் ஆசானிடம் கொடுத்து ஒழுங்க மைத்து எமக்கு அனுப்பி வையுங்கள். தர மான ஆக்கங்களையே ஆதவன் வேண்டி நிற் கின்றன்.
முத்தமிழெனும் பரந்த கடலில் முயற்சி யாம் படகேறித் துணிவே துணையெனும் மூல பலத்துடன் பயணம் செய்கின்றபோது புய லென்றும், சூறவளியென்றும் துன்பங்க ளும், துயரங்களும் வந்தபோதும் உறுதி யுடன் மும்மாதத்திற்கொருமுறை ஆதவன முத்துக்குளித்து வா சக நல்லிதயங்களிற் பிரகாசிக்க வைப்போம்.
ஆதவனின் சிறப்பான வளர்ச்சிக்கு உங்கள் ஊக்குவிப்பு அவசியமாகிறது. அபிப்பிராயங் களை கடித மூலமேனும் தெரிவியுங்களேன்! குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்! நிறைவினை எடுத்துக் கூறுங்கள். இரண்டுமே எமது சிறப்பான பணிக்கு உதவும்.
மேலும் கடந்த இதழில் சில கட்டுரைகள் முடி பு பெருமல் போயின. அவை இவ்வித ழில் தொடரும். இந்த நிலை இனி வருங் காலங்களில் ஏற்படாது.
மீண்டும் சொல்கின்ருேம். உங்கள் அபிப் பிராயங்கள் எமக்கு உரமூட்டும். உங்கள்
ஆக்கங்கள் இதழை மேலும் அழகாக்கும்.
- ஆசிரியர்

*※※※※※※※※※※※
வாழ்க பாரதி
Afa 3: Afe ع8خ , - De AFS SA ※亨兴等米第兴蕊杀毒兴擎杀
*-””※※※※※※※××※※※※
பாரதத்தின் தமிழ் மண்ணிற் பிறந்து வந்து
பழந்தமிழை இனிமையோடு இலகுவாக்கி பாரதியாம் மாக்கவிஞன் கவிதை தந்தான் - அவன் துாட்டினிமை பாவொன்றில் அடங்காதய்யா தாரணியிற் பாமரனும் நுகரும் வண்ணம் - அவன்
தந்தகவி தமிழ்த்தாயின் அடிணிகளாகும் கார்மேகம் பொழிந்த குளிர் மழை யினைப் போல் கவிதந்து புகழ் கொண்ட வேந்தன் வாழ்க!
தேசமதைக் காதலிக்கக் கற்றுத் தந்தான் நேசமொடு தாய்மொழியை வளர்க்கச் சொன்னுன் நீசர்களைத் தூவென்று இகழச் சொன்ஞன் பாசமொடு பண்பாடு காக்கச் சொன்னுன் வேஷமிடும் போலிகளை இகழச் சொன்னுன் நாசமுற்றே கலி அழியச் சாபமிட்டான்!
நானிலத்திற் பெண்குலத்தோர் தலை நிமிர்ந்து மானமொடு பேரறிவும் பேணிக் காத்து ஆணவர்க்கு நிகரென்று திகழச் சொன்னுன் கூன் நிமிர்ந்து குலந் தழைக்கப் பாதை சொன்னுன்
அவன் சொன்ன அத்தனையும் அறிவின் பாதை அவனியிலே ஒவ்வொருவர்க்கும் ஒளியின் ஊற்று! தவருது அவன் சொன்ன நீதி போற்றித் தவமென்று இவ்வாழ்வை மேன்மை செய்வோம்!
س- 3 س--

Page 4
சிந்தனைத் துளிகள்
கண்ணிர் :-
இரக்கமும், அன்பும், பாசமும் எங்கே நிறைந்திருக்கின்றனவோ எந்த உடம்பில் நிறைந்திருக்கின்றனவோ அந்த உடம்பில் கண்ணிர் கண்களுக்குப் பக்கத்திலேயே நிற்கிறது. கண்ணிரிலே உறவு இறுகப் பிணைக்கப்படுகிறது. நான்:.
தன்னை உணர்ந்து தலை நிமிர்ந்து ‘நான்' என்ருல் அது தற்பெருமை யல்ல, தலைக்கணமல்ல, தன்னம்பிக்கைதான்! ஒரு கூட்டமைப்பின் கட் டுப்பாட்டுக்குள் நீ அடங்க வேண்டாமா என்று கேட்பீர்கள். அடங்கு கிறேன் - நான் நானகவே அவ்வமைப்புள் அடங்குகிறேன். நான் விரும் பாததை யாரும் என்மேல் சுமத்த முடியாது. பிறர் என்னைப் புகழுவ தால் எனது நான் தன்மை உரம் பெறவில்லை. சிலர் என்னை இகழுவ தால் எனது நான் தன்மை மாறிவிடுவதுயில்லை. என்ன்ேப் பற்றி எனக் குத் தெரிந்ததை விட வேறு யாருக்கு அதிகம் தெரியும்? நான் என் னும் உணர்ச்சியை எல்லோருக்கும் உண்டாக்கவே நான் பேசுகிறேன். சக்கரம்:-
மனிதன் நம்பிக்கையை இழந்தாலொழிய, காலம் அவனைக் கை விடுவதில்லை. 'நான்’ என்பதை எனக்கு வைத்துக் கொண்டு நாளை என்பதைக் காலத்துக்கு விட்டு விட்டேன். துணிச்சல்:-
பயந்தவனுக்கு உலகம் வாழிபாட்டுப் பொருள். து னிந்த வன் உலகத்துக்கு வழிபாட்டுப் பொருள் தலைமுறை தோறும் வருகின்ற பிறப்பு ஒவ்வொன்றிலும் உன்நினைவு அழுத்தமாகப் பதிய வேண்டுமென் முல் துணிந்தவனக வாழவேண்டும். சாவு பிறரைக் கொல்கிறது. துணிந் தவன் சாவைக் கொல்கிருன். இயற்க்ை பிறரை ஆள்கிறது. துணிந்த வன் இயற்கையை ஆள்கிருன். காதல்:-
தத்துவம் கிடக்கிறது. அனுபவம் இதைத்தான் சொல்கிறது. நிறைவேருத காதலே அழியாத இலக்கியம். காதல் தூய்மையானது. அது தோல்வியடைந்தால் காதல் உயர்வானது அது நிறைவேறவிட் டால் திருமணத்தில் முடிகின்ற காதல் காதலேயல்ல! தோல்வியுறு வது எதுவோ அதுவே காதல் தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாடத் தான்வாடும் ஒருயிர் உணர்வும் எங்கே ஏற்படுகின்றதோ அங்கே வாழ்வதுதான் காதல்
உறவு:-
சிரிக்கும்போது சிரிக்கும் உறவில் அழுத்தம் இல்லை! அழும்போது சேர்ந்து அழும் உறவில் அழுத்தம் இருக்கிறது.
தொகுட்பு:- கவியரசின் ஞானமலர்களிலிருந்து,

பதினெண் கீழ்க்கணக்கிலு ள்ள
நா. குழந்தைவேலு
அறநூல்கள் M. A. Q. (Cey) D, O, A, S.
தமிழிலக்கியம் என்னும் பரவையினுள்ளே மூவேந்தர் காலத்துச் சான் றேர் வகுத்தமைத்த எட்டுத் தொகை, பத்துப் பாட்டுச் செய்யுட்களை அடுத்து சிறப்புற்று விளங்குவது பதினெண்கீழ்க் கணக்கு" என்னும் நூல் தொகுதியாகும். இத் தொகுதியிலடங்கிய நூல்கள் இன்ன என்பது பற்றி முதன் முதலாக ஆராயத் தொடங்கிய வர் ஈழத்து சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களே. 1887 - ல் கலித்தொகைப்
'நாலடி நான் மணி நானுற்ப தைந்தினை முப் பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியுடனேலாதி யென்பவே கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு"
என்ற செய்யுளைக் குறித்து அவர் எழுதியுள்ளமை நோக்கற்பாலது. இக் கீழ்க் கணக்கு ஆால்களைத் தொல்காப்பியர் கூறும் 'அம்மை" என்ற வனப்பினுள் உரையாசிரியர்கள் அடக்கியுள்ளார்கள். இவ் வனப்பிற்கு
'சின் மென் மொழியால் தாய பனுவலின் அம்மை தானே அடி நிமிர் பின்றே"
என தொல்கப்பியராலே இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது. சில எழுத்துக்களான் வந்த எண்ணுச் சுருங்கிய சொற்களால் அடி நிமிர் பில்லாததாய்த் தாயனுபவலின் இலக்கணத்தோடு அமைந்து அம்மை யாகும். தாயனுவல் என்றது அறம், பொருள், இன்பம் எனு மூன்றற் கும் இலக்கணம் கூறுவன போன்றும் இடையிடையே அவையன்றியும் தாவிச் செல்வது எனப் பேராசிரியரும் நச்சினர்க்கிளியரும் உரைத்த லான் உணரலாம். இவ் வனப்பிற்கு உதாரணமாகப் பதினெண் கீழ்க் கணக்குத் த ர ப் பட் டு ஸ் ள மை யா ன் கீழ்க்கணக்கு நூல்களையே தாயனுபவல்" என்னும் பெயரால் கூறுவது அறியக் கிடக்கின்றது. இச் சூத்திரம் கீழ்க் கணக்கு நூல்களின் யாப்பமைதியும் பொருளமைதியும் கூறுவதேயன்றி அப் பெயர்க்குக் காரணம் கூறுவது அன்று. இவ்வாறே மிகப் பிற்பட்ட காலத்தெழுத்த பன்னிரு பாட்டியலில்,
سسسہ 5 تا ~ سے دی۔

Page 5
'அடி நிமிர் பில்லா செய்யுட் ட்ொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறப்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்’
என வரும் சூத்திரமும் யாப்பமைதியும் பொருளமைதியுமே உணர்த்து கின்றது.
‘அகவலுங் கலிப்பாவும் பரிபாடலும் பதிற் றைந்தாதி பதிற் றைம்ப தீரு மிகுத்துடன் ருெகுப்பான் மேற் கணக் கெனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகை யெண் பெறின் எள்ளறு கீழ்க் கெனவும் கொளலே'
என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் அடி நிமிர் பில்லாச் செய்யுளாவது வெண்பா என அறியக் கிடக்கின்றது. அதனுல் அறம், பொருள், இன்பம் என்னுமிவற்றுள் ஒன்று பற்றியும் பல பற்றியும் வெண்பா யாப்பினற் பலர் செய்த நூல்கள் பதினெண் கீழ்க் கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன என்று கொள்ளக் கிடக்கின்றது.
கீழ் கணக்கு தூல்களை இயற்றிய புலவர்களுள் ஒருவரும் மூவேந்தர் காலத்துப் புலவர் வரிசையிற் காணப்படாமையானும், பெயரொற்றுமை யுள்ள் கபிலர், பொய்கையார் எனுமிருவர் தாமும் அக்காலத்துப் புலவரே எனக் கொள்ளற்கு இடர்கள் சில உண்மையானும், இந்நூல்களை இயற றியோர் பிற் காலத்துச் சான்றேர் என்னும் வழக்கினலும், மூவேந்தர் காலத்துச் செயுட்களின் பொருளமைதி, யாப்பமைதி மொழிநடை முதலானவற்றினின்று இவை வேறுபட்டு நிற்றலானும், அக்காலச் செல்யுட்களின் கருத்துக்கள் கீழ்க்கணக்கு நூல்களில் பயின்று வருதலா னும் பிற அகச் சான்களானும் இக் கீழ்க் கணக்கு நூல்கள் களப்பிரர் காதை தனவாகக் கொள்ளக் கிடக்கின்றன. கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட் டென்பது,
'நாலடி நான் மணி நானுற்பதைந் தின முப்
பால் கடுங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி யென்பனவும் கைந் நிலை யாங் கீழ்க் கணக்கு"
என்னும் வெண்பாவால் அறியக் கிடக்கின்றது அவையாவன:
1. திருவள்ளுவனர் இயற்றிய திருக்குறள் 2. சமணமுனிவர்கள் s நாலடியார் 3. י நல்லாதஞர் திரிகடுகம்
- 6 -

4, விளம்பிநாகனர் 9 y நான்மணிக் கடிகை 5. முன்றுறையரையனுர் sy பழமொழிநானூறு 6. கபிலர் இன்னுநாற்பது 7. மாறன் பொறையனர் ஐந்திணை ஐம்பது 8. மூவாதியார் g ஐந்திணை எழுபது 9. கண்ணஞ் சேந்தனர் s திணைமொழி ஐம்பது 10. மதுரைக் கண்ணங் கூத்தனர் , கார்நாற்பது 11. காரியாசான் 99 சிறுபஞ்சமூலம் 12. கணிமேதாவியர் ஏலாதி
3, s 劈外 திணைமாலைநூற்றைம்பது 14. புல்லங் காடனர் 9 கைந்நிலை 15. பூதஞ்சேந்தனர் s இனியவை நாற்பது 16. பொய்கையார் களவழி நாற்பது 17. கூடலூர்க்கிழார் sy முதுமொழிக்காஞ்சி 18. பெருவாயின்முள்ளியார் ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களை அவை கூறும் பொருள் மரபிற் கேற்ப அகததினை கூறுவன, புறத்திணை கூறுவது. அறவொழுக்கங்க ளேச் சிறப்பித்துக் கூறுவன என மூன்ருக வகுத்து நோக்கலாம்.
1, ஐந்திணை ஐம்பது 2. ஐந்திணை எழுபது 3. திணைமொழி ஐம்பது 4. திணைமாலை நூற்றைம்பது 5. கார் நாற்பது 6. கைந்நிலை
என்னும் ஆறும் அகத்திணை நூல்களாகும். சோழ மன்னனின் போர்க்கள மொன்றைச் சித்திரித்துக் காட்டும் கழவழி நாற்பது புறத் திணை நூலாகும்.
1. திருக்குறள் 2. நாலடியார் 3. இனன நாற்பது 4. இனியவை நாற்பது 5. திரிகடுகம் 6. ஏலாதி 7. சிறுபஞ்ச மூலம் 8. ஆசாரக் கோவை 9. பழமொழி நானூறு 10 முதுமொழிக் காஞ்சி 11. நான்மணிக் கடிகை
ஆகிய பதினெரு நூல்களும் அறவொழுக்கங்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
பதினெண் கீழ்க் கணக்கிலுட்ள அறநூல்சளை அவற்றிற் காணப்படும் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள், நூற்பாயிரச் செய்யுட்கள், அவை கூறும் அறக் கருத்துக்கள், அவற்றை வலியுறுத்திக் கூறும்வகை முதலான
-- آ سـ

Page 6
வற்றை நோக்கி சமணச் சார்புடையன வைதீக சமய சார்புடையன என இரண்டாக வகுக்கலாம். திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், எலாதி ஆகிய ஐந்தும் சமணச் சார்புடையனவாகவும், திரிகடுகம், நான்மணிக் கடிகை, முதுமொழிக் காஞ்சி, இன்னநாற்பது, இனியவைநாற்பது, ஆசாரக்கோவை ஆகிய ஆறு நூல்களும் வைதீக சமயச் சார்புடையனவாகவும் காணப்படுகின்றன.
பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள அறநூல்களுள் தலையானது திருக் குறள். இந்நூலை அருளிச் செய்தவர் தெய்வப்புலவர் திருவள்ளுவராவர். அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும் முதற்பொருள்' என வருந் தொல்காப்பியச் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டே திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலத் தமது நூலை வகுத்து அமைத்தார் என்பது தெரிகின்றது. அறத்துப்பால் முப்பத் தெட் அதிகாரங்கலையும் பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களையும் கொண்டுள்ளன. அர்த்த சாஸ்திரம், மனுதரும சாஸ்திரம், சுக்கிரநீதி, காமசூத்திரம் முதலாய வடநூற் கருத்துக்களை வள்ளுவர் தன்னூலாக்கத்திற்குப் பயன் செய்துள்ளார். என்பதற்கு அகச் சான்றுகள் காணப்படுகின்றன. உதா ரணமாக அறத்துப் பாலில்,
‘இல்வாழ்வாள் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை'
'இயல்பினுன் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை"
என்ற குறள்களில் வள்ளுவர் நால்வகை ஆச்சிரமங்களுள்ளாரைக் குறிப்பிட்டு அவர் களி ல் இல் ல ற த் தி லுள் ளா ர் ஏனை மூன்று நிலைகளிலுள்ளார்க்குத் துணை யெனவு ம் அவனே தலை சிறந்தவனெனவும் கூறுகின்ருர், இக்கருத்து ԼՈՉ9505ԼԸ சாஸ்திரத்தில் மூன்றும் பகுதியில் எழுபத்தெட்டாம் சுலோகத்தில் உள்ளது. சாதி, மதம் கடந்து உலகப் பொது நூலாக நின்று மக்களு டைய நல்வாழ்விற்கு பேருதவி புரிந்து வரும் இந்நூல் ‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழும்" வகையினை வகுத்துக் காட்டுதலான் பிற மொழி யாளரும் இதனைத் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்தும் போற்று கின்றனர். வீரமாமுனிவர், இலத்தீனிலும் டாக்டர் போப்பையர் ஆங் கிலத்திலும் டாக்டர் கிரால் ஜெர்மானியிலும் மொழி பெயர்த்தவை. சிறப்புடையன் பிரெஞ்சு, உருசியா, செக்கோ முதலிய முப்பத்தைந்துக்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை உலகம் போற்றும்உத்தம நூலாக அது விளங்குவதை எடுத்துக் காட்டுகின் . اpDé
- 8 -

'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்'
என கொல்லாமை புலாலுண்ணுமை ஆகிய பேரறங்களை வலியுறுத்தி, உயிர்களிடத்தெல்லாம் அன்பு காட்டி மக்கள். ஒழுகுதற்கான அற நெறியை யெடுத்துக் கூறி அறநெறிகள் ருெழுகும் ஒரு சமுதாயத்தை தமிழ் நாட்டில் உருவாக்க வேண்டும் என்னும் குறிக்கோளைக் கொண்டு எழுந்த இந்நூல், பண்டைக் காலத் தொடக்கமாகத் தமிழ் நாட்டின் பண்பாட்டை உருப்படுத்தி வளர்த்து வந்த பேரிலக்கியங்களுக் கெல்லாம் பெருவழிகாட்டியாக அமைந்தது எனலாம். வாழ்க்கைக்கு உறுதுணை யாக உள்ள அற ஆசார ஒழுக்க நெறிகளைக் கூறும் நூல்கள் பல உள வெனினும் திருக்குறளைப் போலச் சொற் சுருக்கமம் பொருட் செறிவும் உள்ள குறட்பாக்களிலே கற்றேரும் கல்லாதோரும் மனங் கொண்டு கற்கக் கூடிய முறையில் அறவுரைகளைக் கவிச்சுவையுடன் கலந்து கூறும் நூல் வேறில்லை. திருக்குறலைப் படிப்போர் மனதிலெல்லாம் இது ஒரு சிறந்த நீதி நூல் என்ற எண்ணம் நிலவுகின்றதன்றி நடையழகில் ஒப்புயர்வற்ற இந்நூல் ஒரு கவிதைக் களஞ்சியம் என்ற எண்ணம் உண் டாவதில்லை. உண்மையில் இந்நூலிலுள்ள ஒவ்வொரு குறட்பாவும் ஒவ் வொரு சொல்லோவியமாகக் காட்சியளிப்பதை நாம் காணலாம். குறளுருக்கொண்ட திருமால் மூவுலகையும் ஈரடியால் அளந்தது போல வள்ளுவரும் மக்கள் மனதில் எண்ணுவன யாவற்றையும் அளந்தறிந்து அவற்றையெல்லாம் வண்ணமும் வனப்பும் உவமை முதலிய அணிச் சிறப்பும் உணர்ச்சிப் பெருக்கும் உள்ள ஈரடி வெண்பாவால் வெளிப் படுத்தியுள்ளனர். வள்ளுவருடைய உணர்ச்சியனுபவங்களையும் கற்பனைச் சிறப்பினையும் கவிச்சுவை நிரம் யெ காமத்துப்பாலில் மட்டுமன்றி, அறத் துப்பால் பொருட்பாலாகிய ஏனைப் பால்களிலும் காணலாம். திருவள் ளுவமாலை இந் நூலுக்கு ஒரு முகவுரை போல நின்று இதன் கணுள்ள சிறப்புக்கள் பலவற்றைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகின்றது. அது திருக்குறளைப் படித்து அனுபவித்த பெரும் புலவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்திப் பாடிய வெண் பாக் களைக் கொண்ட ஒரு தொகை நூலாகும். அதிலுள்ள பாக்களுள் ஒன்று வருமாறு:-
ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றே ருள்ளதோ றுள்ளுதோ றுள்ளமுருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
பதினெண் கீழ்க் கணக்கு அறதுரல்களுள் திருக்குறளை அடுத்து மக் கள் பாராட்டி வந்தது நாலடியார் எனலாம். அது நாலடி நானுறு
என்றும் வழங்கப்படும். சமணமுனிவர்கள் பலர் இயற்றிய வெண்பாக்க
- 9 -

Page 7
ளுள் நானூறு வெண்பாக்களைப் பதுமனர் என்பவர் தெரிந்து அவற்றை இந்நூலில் நாற்பது அதிகாரங்களாக வகுத்து அமைத்தனர் என்று கூறப்படுகின்றது. திருக்குறளைப் போல அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால் என மூன்று பகுதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் உள் ளன, திருக்குறள் போலவே இந்நூல் ஆங்கில நாட்டு மிஷனரியைச் சார்ந்த டாக்டர் ஜி. யு. போப் எனபவரினல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்நூல் தி ரு க் குற ளோ டு ஒப்பநோக்கிச் சேர்த்து மதிக்கப்படுவதை 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்ற பழமொழியால் அறியக் கிடக்கின்றது. 'மருவிய காலந் தன்னில் மக்களின் ஒழுகங் குன்ற உரிய நல் அறங்கள் சொன்னர் உயர்ந்தவை இரண்டும் நாலும்" என்பது ஈழத்துக் கவிஞரொருவரின் கணிப்பு. பொருட் செறிவும் சொற்செறிவும் கொண்ட இந்நூல் மளிதன் மனிதப் பண்புடையவனக வாழ வழி வகுத்து நிற்கிறது எனலாம். ஒவ்வொரு வரும் தான் வாழ விரும்புவதுடன் பிறர் வாழவும் உதவ வேண்டும் என்ற அருங் கருத்தை வருமாறு கூறுகின்றது.
கடிப்பிடு கண்முரசம் காதத் தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றேர் கொடுந்தார் எனப்படும் சொல் (நால: 100)
மக்கள் வாழ்வில் உற்ற நண்பர் ஒருவர் வேண்டும். அவர் நட்பிற் குரியவரா என்று தெரிந்து தெளிநது வாழுதல் வேண்டும். அந்த நண்பர் குற்றம் பார்க்காத தன்மையுடையவரா என்று அறிந்து துணிதலே தலையானது. அந்த நட்பே சிறந்தது இதனை அழகிய உவமையால் வரு மாறு விளக்குவது நயக்கத்தக்கது.
யானை அனையர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழிஇக் கொளல் வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிநித வேல் மேய்யதா வால் குழைக்கும் நாய் (நால: 213)
இந்நூலில் உற்ற செய்யுட்கள் நீதி ஒழுக்கங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. பொதுமகளிடமிருந்து ஒதுங்கி வாழுமாறு திருக்குறள் அறிவுரை கூற இந்நூல் பொதுமகளிர் ஒழுக்கம் அவர்களது நடத்தை, தொழிலின் தந்திரங்கள் முதலானவற்றை எடுத்துக் கூறி அத்தகைய வரது உறவு - தொடர்பு பற்றி மிக மிகக் கவனமாக இருக்குமாறு எச் சரிக்கை செய்கிறது. தன்னைத்தானே சான்றேனகக் கொண்டு புகழ்தல் ஆகாது; தம்மை இகழ்வாரைப் பொறுத்து; தம்மை இகழ்ந்தமையால் அவர் நரகத்தையடைவாரே என்று பரிதல் சான்றேர் கடன்விளையே.
- l0 -

ஒருவன் இறக்கும் போது உடன் வருவது என்றெல்லாம் இந்நூலிலுள்ள செய்யுட்கள் மக்களுக்கு உறுதி பயக்கும் உண்மைகளை எடுத்துக் கூறுகின் மனவெனினும், உலக இன்பங்களே இழித்திக் கூறித் துறவறத்தின் பெருமையைப் பல்லாற்ருனும் போற்றுகின்றன. வாழ்க்கையிலே துன் பமே அதிகம் என்பதை உணர்ந்து உயர்ந்தோர் துறவறத்திலீடுபட இழிந்தோர் இல்லறத்தில் ஈடுபடுவர். இல்லறத்தை அறவே விலக்கிவிட இளமையிலே துறக்க வேண்டும் என்ற சமணக் கொள்கை கூறப்பட் டிருத்தலான் இந்நூல் திருக்குறளைப் போலன்றி துறவறத்தைய்ே வற் புறுத்த எழுந்ததென்று கொள்ளக் கிடக்கின்றது. உலக வாழ்க்கையிற் காணப்படக் கூடிய குறைபாடுகளே எடுத்துக் காட்டி அவ் வாழ்விலுள்ள பற்றை அறச் செய்கின்றது. மக்கள் மனம் வேறு, செய்கையும் வேறு ம%னப்பாசம் கைவிடாய் மக்கட்கு என்றேங்கி எத்தனை காலம் வாழ்வாய் நல்வினையே உயிர்க்குப் பயன்தர வல்லது முதலாய கருத்துக்களை வலி யுறுத்திச் செல்லுமாற்றல் நாலடியார் துறவு நூலாகவே காட்சியளிக் கின்றது.
இந்நூல் முழுவதிலும் நிலையாமைக் கொள்கையே ஊடுருவிச் செல் கிறது. ச்ெல்வம், இளமை, யாக்கை என்பனவற்றின் நிலையின்மை நூலின் தொடக்கத்திலோய தொகுக்கப்பட்டுள்ளன. அறுசுவையோடு கூடிய உணவுகளை விரும்பி மனையாள் ஊட்ட அவற்றுள் இது வேண்டும் இது வேண்டாம் என்று உண்ட செல்வரும் ஒரு காலத்தில் ஏழையாய் ஓரிடத்திற்குச் சென்று கூழ் இரந்து உண்ண நேருமாகையால் செல்வம் ஒரு நிலையான பொருளாகக் கருதத்தக்கது ஆகாது. யானையின் புற முதுகில் அழகு பெறக் குடையின் நிழலில் அமர்ந்து சேனைத்தலைவராய்ச் சென்ற பெருமையுடையவர்களும் ஊழ்வினை வந்து உறுத்த அதனல் நிலைமை வேறுபட்டு தம் சொந்த மனைவியையும் பகைவர் கைப்பற்றிக் கொள்ள நேர்ந்து வீழ்ச்சி உறுவார்கள்.
இவ்வாறு நிலையாமை முதலியவற்றை வற்புறுத்தும் செய்யுட்களும் சொல் லோவியமாக இலக்கியச் சுவையோடு அமைந்துள்ள தன்மை இந்நூலின் சிறப்பியல்பாகும். இந்நூலிலுள்ள உவமைகள் மூவேந்தர் காலத்து உவமைகளைப் போல சிறப்புடையனவாகவும் பொருளைத் தெளி வாகப் புலப்படுத்துதற்கு ஏற்ற கருவியாகவும் அமைந்துள்ளன. இந் நூலிலுள்ள செய்யுட்கள் குறட்பாக்களைப் போலவே ஒன்றைக் கூறும் பொழுது அது படிப்போர் உள்ளத்திலே நன்கு பதியுமாறு சுருங்கிய சொற்களிலே தெளிவாகக் கூறுகின்றன. அதனல் பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்" என இந்நூலையும் திருக்குறளையும் ஒளவை யார் பாராட்டியுள்ளமை மிக்க பொருத்தமுடையது.
நாளிமணிக் கடிகை நூற்று நான்கு வெண்பாக்களைக் கொண்டுள்ள ஒரு நீதி நூலாகும். ஒவ்வொரு செய்யுளிலும் நந்நான்கு உண்மைப்
re-l

Page 8
பொருள்கள் கூறப்பட்டிருத்தலால் இது நான்மணிக் கடிகை என்னும் பெயரைப் பெற்றுள்ளது. இது தொல்காப்பியர் கூறியுள்ள எண்வகை நூல் வனப்புகளுள் அம்மையென்னும் வனப்பின் பாற்படும் என்பது உரையாசிரியர்கள் கருத்தாகும். இந்நூலாசிரியர் தாம் அறிந்த உண் மைகள், நீதிநெறிகள், உலகியல்புகள் என்பனவற்றை மக்கள் அறிந்து பயனெய்துமாறு தெணிவாகவும், மக்கள் மனங்கொண்டு படித்து, இன் புறக் கூடிய வகையிலும் கூறியுள்ளார். இந்நூலிலுள்ள சுவை நிரம்பிய செய்யுட்களுக்கு ஒர் உதாரணம் வருமயறு:-
கோல் நோக்கி வாழுங் குடியெல்லாந் தாய் முலைப் பால் நோக்கி வாழுங் குழவிகள் - வானத் துளிநோக்கி வாழும் உலகம் உலகின் விளிநோக்கி இன்புறுங் கூற்று.
நானுற்பது என்னும் சொற்றெடராற் குறிக்கப்படும் இன்னுநாற்பது முதலிய நான்கு நூல்கள் ஒவ்வொன்றும் நாற்பது செய்யுட்களாலானவை. மூவேந்தர் காலத்தில் தனிச் செய்யுட்களைப் புலவர்கள் இயற்றுதலே பெரு வழக்காயிருந்தது. அக்காலப் பிரிவைத் தொடர்ந்து வந்துள்ள களப் பிராட்சிக்காலப் பிரிவிலே, பல செய்யுட்கள் தொடர்ந்து வரும் நூல்களை இயற்றுதல் வழக்காக இருந்தது என்பதற்கு நான்மணிக்கடிகை, இன்ன நாற்பது முதலிய தூல்கள் சான்ருகும். இன்னுநாற்பது, இனியவை நாற்பது என்னும் நூல்களில் நாற்பது செய்யுட்கள் ஒன்றையொன்று தொடர்ந்து வந்த போதும் இவை தொடர்நிலைச் செய்யுட்கள் எனக் கொள்ளக் கூடிய அளவுக்குப் பொருட்தொடர்பு காணப்படுமாறில்லை தனித்தனிச் செய்யுட்கள் நாற்பது ஒன்றையொன்று தொடர்ந்து வந்தது போலக் காணப்படுகின்றன. தனிச் செய்யுட்கள் தோன்றிய காலத்துக்கும் தொடர்நிலைச் செய்யுள் எனப்படும் காவியங்கள் தோன்றிய காலத்துக் கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பதினெண் கீழ்க் கணக்கு ஆால்கள் தோன்றியமையால் அவை இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மைகள் இந் நூல்களிற் காணப்படுகின்றன நான்மணிக் கடிகை போலவே இன்னு நாற்பது, இனியவை நாற்பது என்னும் நூல்களும் மக்களுக்கு உறுதி பயக்கும் நீதிநெறிகளையும், அறிவொழுக்கங்களையும் எடுத்துக் கூறுகின் றன. இவை கூறும் பொருளிலும், அப்பொருளைக் கூறும் வகையிலும் இந்நூல்களுக்கிடையே வேறுபாடு இருப்பினும் அவ் வேறுபாடுகளைத் தெளிவாகக் கண்டு கொள்ளுதல் அரிதாகும். இன்ன நாற்பதில் இன்னது இன்னதது என்றும் இனியவை நாற்பதில் இன்னது இன்னது இனியது என்றும் கூறப்படுதலைக் காணலாம். மக்களுக்கு உறுதி பயப்பனவற்றை ஒரு நூல் எதிர் மறையாற் கூற மற்றது உடன்பாட்டாற் கூறுகின்றது உதாரணமாக இன்ன நாற்பதில் ஊனத் தின்றுனைப் பெருக்குதல் முன்
سے ۔۔ 12 ۔ ۔سی۔

னின்ன? என்றும் 'கல்லாருரைக்குங் கருமப் பொருளின்ன" என்றும் கூறியிருக்க அவை முறையே இணியவை நாற்பதில் “ஊனைத் தின்றுனைப் பெருக்காமை முன்னினிதே' என்றும் ‘கற்றறிந்தார் கூறும் கருமப் பொருளினிதே' என்றும் கூறப்பட்டிருத்தல் நோக்கற்பாலது. இதுவே இந்த இரண்டு நூல்களுக்குமுள்ள முக்கிய வேறுபாடாகும்.
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் நூல்கள் மருந்தாற் பெயர் பெற்றுள்ளன. உடலுக்கு உறும் நோய்களைத் தீர்த்து நலம் புரி யும் மருந்துகள் போல இவை மக்களுயிர்க்கு உறுதிப் பொருளை அறி வுறுத்திக் காமம், வெகுளி, மயக்கங்களால் ஏற்படும் அறியாமையை அகற்றி நன்மை பயக்கும் பெற்றி வாய்ந்தவையாதலின் இவை அவ்வாறு மருந்தாற் பெயர் பெறலாயிற்று. திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றினலும் ஆக்கப்பட்ட மருந்தைக் குறிப்பதாகும். சுக்கு முதலிய மூன்றினலாகிய கடுகம் ஒருவர் உடல் நோயை மாற்றி இன்பம் புரிவது போல ஒவ்வொரு பாட்டின் அமைந்த மும்மூன்று பொருளும் உளநோயாகிய அறியாமை முதலியவற்றைப் போக்கி இன் பம் செய்வன. இந்நூற் காப்புச் செய்யுளுட்பட தூற்று ஒரு வெண்பாக் களக் கொண்டது.
*அருந்ததிக் கற்பிஞர் தோளும் திருந்திய
தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின் அரிதில் அகற்றுங் கேள்வியார் நட்பு மிம் மூன்றும் திரிகடுகம் போறும் மருந்து' எனக் கூறப்பட்டதிலுள்ள திரிகடுகம் என்னும் சொல்லே சிறப்புப் பற்றி இந்நூறுக்குச் சிறப்புப் பெயராகக் கொள்ளப்பட்டது. இந்நூலி லுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் மும் மூன்று பொருட்கள் கூறப்படுதல் போல,
**கண்ணகல் ஞாலம் அளந்த தூஉம் காமரு சீர்த்
தண்ணலும் பூங் குருந்தம் சாய்ந்த தூஉம் - நண்ணிய மாயச் சகடம் உதெத்த தூஉம் இம் மூன்றும் பூ வைப்பூ வண்ணன் அடி' என இந்தூல் கடவுள் வாழ்த்திலும் திருமாலின் திருவடிகள் ஞாலம் அளந்தமை, குருந்தமரம் சாய்ந்தமை, சகடம் உதைத்தமை ஆகிய மூன்று செயல்களும் நூற் பெயருக்கு ஏற்றவாறு அமைந்திருத்டல் படித்து இன்றற் பாலது.
'தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை?
-سی. 13، ی.

Page 9
தற்செருக்கு, வீண்வெகுளி, பொருளாசை ஆகிய மூன்று தீய குணங்களும் ஒருவருடைய குன்றமன்ன செல்வத்தை ஒரு நொடிப் பொழுதில் அழித்துவிடும் தன்மையன என்பது இப்பாடலின் கருத்தாகும். 'இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை' என்று முடிந்துக் கூறும் முறை நயக்கத்தக்கது.
சிறு பஞ்சமூலம் என்பது ஐந்து வேர்களாலாகியது. மருத்துவ நூலின் கூறப்பட்ட கண்டங்கத்தரிவேர், சிறுவழுதுளை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சிவேர், பெருமல்லிவேர் ஆகிய பஞ்சமூலங்கள் மக்கள் பிணிகளைத் தீர்ப்பதுபோல இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுட்களிலும் 9 டங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்துணர்கின்ற்வர்பிறவி நோயைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்டுகின்றது.
“முழுதுணர்ந்து மூன்றெழித்து மூவாதாள் பாதம்
பழுதின்றி ஆற்றப்பணிந்து - முழு தேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா வெண்பா உரைப்பன் சில'"
என கடவுள் வாழ்த்துச் செய்யுளோடு ஆரம்பிக்கும் இந்நூலின் கண் உள்ள இலக்கியச் சுவை நிரம்பிய செய்யுட்களுக்கு ஒர் உதாரணம் வருமாறு:-
'பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான் செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும் உய்யான் பிறர் செவிக்கு உய்த்து'
எலாதி என்பது. எலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்துப் பொருட்களாற் செய்யப்படுவது. அது உடல் நோயை நீக்கிக் குணந்தருவது போல ஒவ்வொரு வெண்பாவி லும் ஆறு கருத்துக்கள் கொண்ட உயிரைப் பற்றும் தீமை நோயை நீக்குதலால் இப்பெயர் பெற்றது. இந்நூல் எண்பது வெண்பாக்களைக் கொண்டுள்ளது. வடமொழிக் கருத்துக்களும் சொற்களும் விரவியுள்ள இந்நூற் செய்யுட்கள் ஈதலாகிய பேரறத்தையும், வீட்டு நெறியையும் வலியுறுத்திச் செல்கிறது.
**கற்ருரைக் கற்றது உணரார் எனமதியார்
உற்றரை அன்னம் ஒராமல் - அற்றர்க்கு உண்டி, உறையுள் உடுக்கை இவை ஈந்தார் பண்டிதராய் வாழ்வார் பயின்று”
-- 14 سنس

எவரையும் தாழ்வாக கருதாமல் பொருள் இல்லாதார்க்கு வேண்டு வன உதவுபவரே புகழ் மிக்க டண்டிதராய் வாழ்வார் என்பது இப்பாட லின் பொருளாகும். இந்நூலிலுள்ள சுவை நிரம்பிய செய்யுட்களுக்கு ஓர் உதாரணம் வருமாறு:-
'கொலை புரியான் கொல்லான் புலான் ஹூயங்காண் கூர்ந்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலை திரியான் மன்னவர்க்கு மன்றி மறுமலிபூங் கோதாய் விண்ணவர்க்கு மேலாம் விடும்"
ஆசாரக் கோவை என்னும் நூல் மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப் பிடித்து ஒழுக வேண்டியவை இன்னவை வில்க்க வேண்டியவை இன்னவை என்று நேரிசை வெண்பா முதலாகப் பல்வகை வெண்பாக்களில் எடுத் துக் கூறுகின்றது. இந்நூலின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள செய்யுள் வருமாறு:-
'நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
டின்னுத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ டொப்புர வாற்ற வறிதல் அறிவுடமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து"
அறம், ஒழுக்கம் முதலியவற்றைக் கூறும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்ருக எண்ணப்படும் முதுமொழிக் காஞ்சி என்பது சிறந்த பத்து முதலாகத் தண்டாப்பத்து ஈருகப் பத்துப் பத்துக்களையுடையது. காஞ்சித்திணை பற்றித் தொல்காப்பியர் புறத்திணையியலிற் கூறுமிடத்துப்
'பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்ருனும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே"
எனக் கூறியிருத்தலும் அதற்கு நச்சினர்க்கினியர் உரை கூறுமிடத்து வீடு பேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றேர் சாற்றும் குறிப்பினது" என்று கூறியிருத்தலும் நோக்கற்பாலன. காஞ்சித்திணை யின் துறைகளுள் ஒன்றக விளங்கும் முதுமொழிக் காஞ்சி என்பதற்கு, அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொரு ளாகிய அறம் பொருள் இன்பங்களை அறியச் செய்தல் எனப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகின்றது. இந்நூலிற் கூறப்பட்டுள்ள முது மொழிகள் யாவும் தனித்தனி குறட்டாழிசையில் அமைந்துள்ளன. அவற்றிற்கு ஒர் உதாரணம் வருமாறு:-
'ஆர் கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஒதலிற் சிறந்தன் ருெழுக்க முட்ைமை"
- 15

Page 10
இந்நூலிலுள்ள குறட்டாழிசைகள் பத்துப் பத்தாக அமைக்கப் பட் டிருக்கும் முறை ஐங்குறு தூற்றில் வந்துள்ள பத்துக்களை ஞாபகப்படுத்தி நிறகின்றது. இந் நூலாசிரியர் பெயர் மதுரைக் கூடலூர் கிழார். ஐங்குறு நூற்றைத் தொகுத்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் இந்நூலாசிரிய ராயிருத்தல் கூடும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
நாட்டில் வழங்கும் பழமொழிகளை ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுந்த நூல்களுள் காலத்தால் முந்தியதும் திருக்குறள் நாலடியார் என்னும் இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணத் தக்க சிறப்பு வாய்நததும் பழமொழி நானூறு என்னும் நூலாகும். ஒரு நாட்டு மக்க ளிடையே வழங்கும் பழமொழிகள் அந்நாட்டு மக்களின் பண்பாட்டு நிலை யினை ஒரளவிற்கு எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு பழமொழியையும் அப பழமொழியின் விளக்கத்திற்கு வேண் டிய ஆாற்கருத்துக்கள், அறிவுரைகள், கதைகள், வரலாற்று நிகழ்ச்சி கள் இன்னேரன்னவற்றுள் ஒன்றையும் கொண்டு விளங்குகின்றது. இந் நூலிலுள்ள செய்யுடகள் நாலடியாரிலுள்ள செய்யுட்களைப் போன்று இலக்கியத் தர உள்ளவையாக விளங்குகின்றன. அவற்றிற்கு ஓர் உதா சணம் வருமாறு:-
*உரை முடிவு காணுன் இளமையோன் என்ற
நரை முது மக்கள் உவப்ப - நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்'
கண் கவரும்
படங்களுக்கு
柴
பேபி போட்டோ
படப்பிடிப்பாளர்
❖፻ረ
ತಳಿ
சேர். பொன், இராமநாதன் வீதி, திருநெல்வேலி.
 

பயிர்ச்
செய்கையும்
வாழ்க்கைக்கு ஆதாரமாக சுய தேவையடிப்படையில் மேற்கொள் ளப்படும் பயிர்ச்செய்கை வாழ்க்கைப் பயிர்ச் செய்கையாகும். தென்ன சியா, தென்கிழக்காசியா பகுதிகள் மற்றும் சீன, யப்பான் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பயிர்ச் செய்கையை வாழ்க்கைப் பயிர்ச் செய்கை என அழைக்கிருரர் கள். இப் பயிர்ச் செய்கை யி ல் பெருந்தொகையான மக்கள் ஈடுபட் டும் ஏக்கருக்குரிய உற்பத்தி குறை வாக உள்ளதுடன் நாட்டிற்குநாடு வேறுபாடு கொண்டதாகவும் உள் ளது. ஆகவே இப்பயிர்ச்செய்கை யில் பசுமைப் புரட்சி ஏற்படுத்துவது அவசியமாகின்றது.
பயிர்ச் செய் கை யி ல் LDUlசார்ந்த உற்பத்தி உத்திகளுக்குப் பதிலாக நவீன உற்பத்தி உத்திகளே கடைப்பிடித்தலே பசுமைப்புரட்சி என அழைக்கிருர்கள்.
வாழ்க்கைப் பயிர்ச்செய்கையின் ஒரு பகுதியாக பெயர்ச்சி பயிர்ச் செய்கை இடம் பெறுகின்றது. வாழ்க்கை பயிர்ச்செய்கையுடன் ஒப்பிடும்போது பின் தங்கிய அம்சம் கொண்டதாக இச் செய்கை இடம் பெறுகிறது. பெயர்ச்சி பயிர்ச்
பசுமைப் புரட்சியும்
-V. சண்முகநாதன்
செய்கை தென்னசியா, தென் கிழக்காசிய நாடுகளில் சில இடங் களிலும் கிழக்கிந்திய தீவுகள் என் பவற்றிலும் அதிகமாகக் காணப் படுகிறது. அடர்த்தியான காடுகளை எரியூட்டி அழித்து ஓரிரு வருடங்கள் பயிர் செய்த பின்பு அவ்விடங்களே விட்டு ஏனைய இடங்களுக்கு சென்று இதே முறையையே மேற்கொள்கி முர்கள். ஆரம்பகாலங்களில் முக் கியத்துவம் பெற்றிருந்த இப் பயிர்ச் செய்கை அண்மைக் காலங்களில் இதனளவு குறைவாகவே உள்ளது.
இதனல் காடுகள் அழிக்கப்படுவது
டன் இதனுல் நிலத்தின் வளமும் இழக்கப்பட வேண்டியதாயிற்று. நிரந்தாமாக தங்கி வாழ முற்பட்ட போதும் பிற்போக்கான விவசாய முறைகளும் குறைந்த வாழ்க்கைத் தரமுடைய மக்களுமே முக்கிய அம்சங்களாக கா ன ப் பட்ட ன . தொடர்ந்து இந்நிலை நீடிக்குமா யின் வளர்ந்து வரும் மக்கட் தொகைக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்படும் எனவே இவ்வாழ்க்கை பயிர்ச் செய் கை யில் பசுமை புரட்சியை ஏற்படுத்துவது அவசிய மாகின்றது.
இவ் வாழ்க்கைப் பயிர்ச் செய்கை யில் நெற்செய்கையே பிரதான இடம்
- 1 -

Page 11
பெற்ற போதும் இந்தியா போன்ற நாடுகளில் கோதுமைச் செய்கையும்
உப உணவுப் பயிர்சசெய்கையும் குறிப்பிடத் தக்களவு முக்கியம் பெற்றுள்ளது. தென்கிழக்காசிய
நாடுகளில் 75 % திற்கு மேற்பட் டோர் பொருளா தா ரத்து டன் இணைந்த இப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருக்கிருர்கள். சுயதேவையை அடிப்படையாகக் கொண்டு பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்பட்டாலும் உள்ளூர் சந்தையில் விற்பனையும் இடம் பெறுகிறது. இவ் வாழ்க் கைப் பயிர்ச்செய்கையில் (குறிப்பாக
நெல்) பெருமளவு மக்கள் ஈடுபடடு
சுயதேவையை பூர்த்தி செய்ய முடி யாமல் இருக்க அமெரிக்காவில் சிறிய தொகையினர் 8% மான மக்கள் ஈடுபட்டு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறர்கள்.
வாழ்க்கைப் பயிர்ச் செய்கையை சிற்றுடைமை விவசாயம்என அழைப் பதுண்டு. தென்னசியா, தென் கிழக்காசிய நாடுக ளில் உள்ள வயல்களானது பரப்பில் சிறியன வாக உள்ளது. இங்குள்ள விவசாயி கள் சிற்றுடைமை விவசாயிகளாக காணப்படுவதுடன் ச ரா ச ரி யாக 5 ஏக்கருக்கு குறைவான நிலப் பரப்பையே கொண்டிருக்கிறர்கள்வயல்கள் சிறியனவாக இருப்பதால் இயந்திர சாதன பிரயோகம் குறை வாகவும் மேற்கொள்ள முடியாம லும் உள்ளது. ஆ கை யா ல் தொடர்ந்து கலப்பையும் எருது களுமே ப யன் படுத்தப்படுகிறது. பயிர்ச்செய்கையில் உற்பத் தி யை அதிகரிக்க முடியாமல் இருக்க
சிற்றுடைமை விவசாயம் ஒரு தடை யாக உள்ளது.
பயிர்ச் செய்கையை
வாழ்க்கைப் மேற்கொள்ளும் விவசாயி யி ன வாழ்க்கைத் தரத்தை நோக்கும்
போது அவன் கட்னிலே பிறந்து கடனிலே வளர்ந்து கடனிலே மாழ் கிருன் என்று கூறப்படுகிறது. கார ணம் இச் செய்கையை மேற்கொள்
ளும் விவசாயியின் வருமானம் குறைவு முதலீடு இன்மை இதனல் கடன் பெற்றுக் கொள்கிறன்.
பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாதபோது நில த் தை யும் இழக்க வேண்டிய நிலை. இந் நிலையில் அவன் எவ்வாறு உற்பத் தியை அதிகரிக்க முடியும்.
இப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளை நோகசூம் போது அவர்கள் போதிய கல்வியறிவற்ற வர்களாகவே காணப்படுகிருர்கள். கல்வியறிவற்றவர் உற்பததியைப் பெருக்கக்கூடிய உ ர ப் பா வனை, களை கொல்லி,பயிர் நாசினி போன்ற வற்றை மேற்கொள்ள முடியாத நிலை. அத்துடன இவற்றின் தவ முன பிரயோகங்கள் பயிர்களுக்கு LDLʻ(BL(Qôh' 6) விவசாயிக ட் கும் ஆபத்தை தோற்றுவித்துள்ளன. நல்ல விளைவை தரவல்ல நல்லின
விதைகளைப்பற்றி அறிந்து கொள்
ளாதவர்களாக தொடர்ந்து ஒரே இன விதையை பயன்படுத்துவதும் ஆகும்.
பயிர்ச்செய்கை பிரச்சனைகளில்
வாழ்க் கை ப் எதிர் நோக்கும்
سیسے 18 سے

ar6) š26) தாக்கமும் ஒன்றகும். காலநிலைத் தாக்கம் என்பது fÉ657l வரட்சி, திடீர் வெள்ளப் பெருக்கு, குருவளித் தாக்கம் போன்றவற் றைக் குறிப்பிட முடியும். இவற் (η ευ நிர்ச்செய்கையில் விவசாயி எதிர்பார்க்கும் உற்பத்தியைப் பெற முடியாதிருப்பது மி ட் டு மல் ல பெருத்த நஸ்டத்துடன் நா டு ம் இறக்குமதிக்கு தள்ளப்படுகிறது. இந் நிகழ்ச்சிகள் இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் போன்ற நாடுகளில் வருடந்தோறும் இடம் பெற்று வருவதை நோக்க முடியும்.
இப் பயிர்ச்செய்கை எதிர்நோக் கும் தாக்கங்களில் குறிப்பிடக்கூடிய ஒன்று நாட்டின் அரசியல் நிலைமை நாட்டில் ஏற்படும் அரசியல் குழப் பங்கள், வன்முறைகள் பெரும் பாலான ஏ க்கர் விவசாயத்தைப் பாழ்படுத்தியுள்ளது. உதாரணங்க ளாக இந் தி யா - பஞ் சா ப் இலங்கை - வடக்கு கிழக்கு மாகா ணங்களில் மேற்கொள்ளப்படும் நட வடிக்கைகளால் சில வேளைகளில் அறுவடைக்கு முன்பே வயலோடு சேர்த்து அழிக்கப்படலாம். கலகங் களால் விவசாயிகள் சொந்த இடங் களிலிருந்து வெளியேற்றலாம். இத ஞல் பாதிப்பு விவசாயிக்கு மட்டு மல்ல நாட்டிறகும் தான்.
பயிர்ச் செய்கையில்
வாழ்க்கைப் சிற்றுடைமையே கூ டு த லா கக் காணபபடுகின்றது. இந் நிலையில்
மரபு சார்ந்த உற்பத்தி முறைகளை கைவிட்டு உற்பத்தி இயந்திரமய மாக்கப்படுமாயின் அங்கு உற்பத்தி அதிகரிக்கப் படுவதற்கு வாய்ப்புக்
கள் உண்டு. தென்னுசிய நாடு களில் இயந்திரமயமாக்கம் படிப்படி யாக ஏற்ப ட் டு வருகி ன் றது . இலங்கையில் உழவு இயந்திர பயன் பாட்டின் அளவு வரண்ட மாவட் டங்களில் கூ டு த லா க உள்ளது. அம்பாந்தோட்டையில் 80.5 % மாக உள்ளபோது குருநாகலில் 23.1 % மாகவே உள்ளது. இயந்திரம் தற்போது நிலத்தைப் பண்படுத்த சூடடிக்க போக்கு வரத்திற்கும் பயன் படுத்தப்படுகிறது.
விவசாயி பயிர்ச்செய்கை நட
வடிக்கையில் ஈடுபடும் போது அ வ னுக்கு கடன் வழங்க நிறுவன ரீதி யான அமைப்பு நிறுவன ரீதியற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. விவசாயி கூடுதலாக தங்கி நிற்பது நிறுவன ரீதியற்ற துறையிலாகும். இந் நிலையில் அரசாங்கங்கள் േ சாயிகளுக்கு உதவு முகமாக நிறு வன ரீதியான துறையை ஊக்கு வித்து வருகிறது. நிறுவன ரீதியற்ற துறையின் கெடுபிடிகளே தளர்த்த வும் அரசாங்கங்கள் முயன்று வரு கின்றன. இதனல் விவசாயி முழு மனதுடன் உற்பத்தியில் ஈடுபட உற்பத்தியும் அதிகரிக்கின்றது.
இப்பயிர்ச் செய்கை முறை மேற் கொள்ளப்படும் நாடுகளில் கல்வித் தரம் அதிகரிக்க அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதால் நவீன விவசாய அறிவை மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய தாக உள்ளதுடன் விவசாய விரி வாக்க ஆலோசனைகள் வழங்கப்பட கமத்தொழிற் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அத்துடன் தற்போது உரப்பாவனை இலங்கையில் அதி
- 9 -

Page 12
பயிர்ச்செய்கையில்
கரிப்புக் காட்டி வருகின்றது. 1950-ல் 1,40,000 மெற்றிக் தொன் ஞக இருந்தது. 1982-ல் 16,50,000 ஆக அதிகரித்துள்ளது. கிருமி நாசினி பிரயோகங்களும் அதிகரித்து வருகி ன் றது . நெற்செய்கையில் புதிய நெல்லினங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. மற்று ம் உ ரு ளை க் கிழங்கு போன்ற உப உணவுப் பயிர்களிலும் புதிய இனங் கள் அறிமுகப் படுத்தப்பட்டு உற் பத்தி அதிகரித்துள்ளது.
பயிர் செய்கையில் பாதிப்பை ஏற் படுத்தும் காரணிகளில் காலநிலைத் தாக்கத்தை தற்போது மேற்கொள் ளப்பட்டு வரும் நவீன நீர்ப்பாசன நடவடிக்கைகள் மூலம் குறைக்கப் பட்டு வருகின் றன. வெள்ளப் பெருக்கு காலங்களிலும் சரி, வரண்ட பிரதேசங்களிலும் சரி ஆற்று நீரைப் பயன்படுத்த அணைக் கட்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாக மகா வலி அபிவிருத்தித் திட்டம்.
மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் நிலையையும் அரசாங்கங் கள் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி அமைதியை ஏற்படுத் தும் போது சுமுக நிலை உருவாகி முன்னேற்றம் காணப்படும்.
வாழ்க்கைக்கு ஆதாரமான இப் பயிர்ச்செய்கை தென்னசியா தென் கிழக்காசியா நாடுகளில் மேற்கொள் ளப்பட்டு வரும்போது சிற்றுடைமை வயல்கள் இயந்திர சாதன பிரயோக மின்மை, வாழ்க்கைத் தரகுறைவு கல்வியறிவின்மை காலநிலைத் தாக் கம் போன்றவற்ருல் இதன் உற்பத் திக் குறைவும் இத்தகைய குறை பாடுகளை நீக்கி பசுமைப் புரட்சியை எற்படுத்த நாடுகள் பல நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளன. விவ சாயத்தை இயந்திர மயமாக்கல், விவசாயக்கடன் வசதிகளை எற்படுத் திக் கொடுத்தல், நவீன விவசாய ஆலோசனைகளை மேற்கொள்ளல், திருந்திய நல்லின விதைகளை பயன் படுத்தல், களை கொல்லி கிருமி நாசினி பிரயோகம், உரப்பாவனை, நவீன நீர்ப்பாசன முகாமைத்துவ நடவடிக்கைகளை கடைப்பிடித்தல் ஆகியன இலங்கை இந் தி யா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவை பசுமைப் புரட்சியின் வெளிப்பாடுகளாகும்" ஆகவே வாழ்க்கைப் பயிர்ச்செய்கை யில் நாடுகள் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் பசுமைப்புரட்சியின் தாக்கத்தை உணரக் கூ டி யதா க உள்ளது.
() . . . So
وعمقتبسسسسسس
DEALERS IN
SPORTS GOODS & BICYCLE SPARES
YARL ENTERPRISES
56,
HOSPITAL ROAD, -
JAFFNA.
- 20 -

; உபநிடதங்கள் காட்டும்
######### ១_rap G, ម៉្លេះ 2 ※ க. சொக்கலிங்கம் M. A s
AY
ខ្លែ (Tត់ ) +
SY
V
※
1. -g, sit LDIT:
நான் என்று தன்னையே சுட்டி உணரப்டுவதாகிய ‘ஆன்மா" என்பது உடனடியாக இருப்பளவில் உணர்ந்து கொள்ளக் கூடியதே. எவனும் தன்னுடைய சொந்த ஆன்மா பற்றி ஐயுறவோ அது இல்லை என்று மறுக்கவோ முற்படான். (உலகாயதன் இதற்கு விலக்கு) இவ்வாறு ஆன்மாவின் இருப்பினை உணர்ந்தாலும் அது எத்தகையது? என்று கேட்டால் விடையளிப்பது அத்துணை எளிதான காரியமன்று.
ஆன்மா பற்றிய ஆரம்ப எண்ணக்கரு, அது பிராணன் எனப்படும் மூச்சுக்காற்று என்பதே, காலப்போக்கில் உணர்வு, உள்ளம், ஆவி ஆன்மா என்ற படியேற்ற முறையிலே இவ்வெண்ணக் கரு வளர்ச்சி கண்டு வந்துள்ளது.
ஒருகால் ஆன்மா என்ருல் என்ன என்று அறிந்து வரும்படி தேவர் கள் இந்திரனேயும், அவர்களுக்குப் போட்டியாக அசுரர்கள் விரோசனனை யும் பிரஜாபதி என்ற குருவி.ம் அனுப் பி ன ர் . பிரஜாபதி தமது உபதேசத்தை அவர்கள் வந்ததும் உடனடியாகத் தொடங்கவில்லை. தாம் சொல்வனவற்றை உணரும் பக்குவத்தினை அவர்கள் அடைவதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகள் செபம், தவம், விரதம் ஆகியவற்றை நடத்திய பின் தம்மிடம் வருமாறு அவர் அவர்களுக்குப் பணித்தார். அவர்களும் அவ்வாறே குறித்த காலத்தைக் கழித்து அவரிடம் திரும்பி வந்தனர், பிரஜாபதி அவர்களை நோக்கிச் சொல்வார்:
* ஒருவர் மற்றவரது கண்களிற் பார்க்கையிலும் தண்ணிரில் நோக்குகையிலும் கண்ணுடியிற் காண்கையிலும் தோற்றுவது எதுவே" அதுவே ஆன்மா."
இந்த விளக்கம் விரோசனனுக்குப் போதியதாய் இருந்தமையால் அவன் குருவை வணங்கி விடைபெற்று அசுரர்களிடம் திரும் ச்ெ சென்ருன், ஆனல் இந்திரனுக்கு இது நிறைவைத் தரவில்லை. 'உடலை ஆடை அணிகளால் அலங்கரித்தால் ஆன்மாவும் உடலைப் போலவே அலங்கார மாகத் தோன்றும். உடல் அழகுடையதானல் ஆன்மாவும் அழகுடைய
س- 21 --

Page 13
தாகும் உடலானது குருடாகவோ, நொண்டியாகவோ இருப்பின் ஆன்மா" வும் குருடுபடும், நொண்டியாகும். உடல் அழிய ஆன்மாவும் அழிந்து போம், “எனவே இதனுல் எவ்வித நன்மையும் இல்லை" என்று அவன் முடிவு சய்தவனுய் மீண்டும் பிரஜாபதியிடம் சென்று தனக்கு உண்டான ஐயங்களை எடுத்துரைத்தான். பிரஜாபதி, 'கனவு நிலையில் கட்டற்று உலவும் எதுவோ, அதுவே ஆன்மா’ என்ருர், இந்த விளக்கமும் இந்திரனுக்குத் தெளிவு தராது கலக்கத்தையே மகுவித்தது
'கனவு நிலையின் பொழுது ஆன்மா, நனவு நிலையின் போன்று உடற் பாதிப்புக்களால் பாதிப்புக்கு உள்ளாவதில்லை என்பது உண்மையே, உடலோடு தானும் அழிவுருது என்பதும் ஏற்கத் தக்கதே. ஆனல் கனவு இடம் பெறுகையில் உண்டாகும் அச்சம், கவலை, ஆகிய உணர்வுகளாலே பாதிப்படைதல் போன்ற மயக்க உணர்வு அதற்கு உண்டாவதும், தூக்கத்தில் வாயுளறல், அழுகை ஆகியவற்றிற்கு உள்ளதும் இயற்கை. எனவே இதனுலாகும் நன்மை எதுவும் இல்லை" என்று சிந்தித்த அவன் தன் இடர்ப்பாட்டினையும் ஐயத்தையும் விரஜாபதிக்கு உரைத்தான். பிரஜாபதி இம்முறை, "ஆழ்துயிலை அனுபவிப்பவன் எவனே அவனே ஆன்மா' என்ருர். இதுவும் அவனது ஐயத்தைப் போக்கவில்லை. *ஆழ்துயில் நிலையில் ஆன்மா எதுவும் அற்றதாக, எவ்வுணர்விற்கும் உள்ளாகாததாக, எதனையும் அறியுததாக, சுருங்கச் சொன்னுல் ஒன்றுமற்ற சூனியமாக ஆகின்றது. அறிவிலதாய், உணர்விலதாய், விருப் பிலதாய் உள்ள இதனுலும் பயன் இல்லை." என்ற இந்திரனது விசாரமும், ஐயமும் அவன் உண்மையை உணரும் அறிவுப் பக்குவத்தினை அடைந்து விட்டான் என்பதைப் பிரஜாபதிக்கு உணர்த்த, அவர் மகிழ் வோடு கூறுவார்.
*ஆன்மாவிற்காகவே இருப்புடையதாயினும் உடல் ஆன்மா ஆகாது. ஆன்மா தன் உள்ளத்தால் மட்டுமே உணர்வதாயினும் தனவனுபவ மும் ஆன்மா அன்று. ஆழ்துயில் நிலையில் கண்ணுக்குப் புலனுகாத பண்பு நிலைப்பட விடயமும் ஆன்மா எனலாகாது. கண், உடல், மன உணர்வுகள், அவற்றின் தொடர்ச்சியான செயற்றிறங்கள் என்ற யாவும் ஆன்மாவிற்குக் கருவிகள் மட்டுமே. விழிப்பு, கனவு, துயில் நிலைகள் யாவும் அதனையே ஆதரமாகக் கொண்டவை. ஆன்மா சர்வ வியாபகமானது, யாவையும் கடந்தும் உள்ளாகியும் நிற்பது அழியாத தன்னிலையிலேயே தான் சார்ந்து நிற்பதும், சுதந் திரமானதும் ஐயங்கள் மறுப்புக்கள் ஆகியவற்றிற்கு அப்பாலானதும் அதேவேளை அவற்றை ஆக்க வல்லதும் ஆன்மாவே. எல்லா அறிவு களுக்கும் மூல முழுமுதலாய் நிற்பது எதுவோ அதுவே ஆன்மா."
பிரஜாபதியின் ஆன்ம விளக்கத்தை நாம் ஊன்றி நோக்கும்பொழுது பின்வரும் உண்மைகள் புலணுகும்:
سه 22 س--

1. விழிப்பு நிலையில் புறப்பொருள்களது ஒன்றிணைப்பும் ஒழுங்கமைப் யும் பொறிகளின் உதவி கொண்டு உள்ளத்தாற் செயற்படுத்தப்பட்டு ஆன்மாவின் அநுபவங்களுக்கு உள்ளாகின்றன. உடல், புலனுணர்வுகள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக் காரணங்கள். இவற்றின் செயற்பாட்டினல் ஏற்படுத்திக் கொள்ளும் மனைவி, மக்கள் என்ற உறவுகள் என்பவற்ருல் ஆன்மா சார்புடைப் பொருளாகின்றது. எனவே அதன் பூரண சொரூபம் வெளிப்பட்டுத் தோன்ற வாய்ப்பில்லை,
2. கனவு நிலையில் புலன்கள், பொறிகள் என்பன வெல்லாம் ஒடுங்கி உடலும் செயலற்று விடுகின்றது. மனம் மட்டுமே செயல் புரிகின்றது. புலக்காட்சியற்ற மாணதக் காட்சியே சொப்பன நிகழ்வு. எனினும் இந் நிகழ்வின் போதும் ஆன்மாவின் சொரூபம் மறைந்தே கிடக்கிறது. கனவு, நனவு என்ற இtண்டிற்குமிடையில் அகப்படடு மாற்றங்களுக்கு ஆட்படும் ஒன்றை ஆன்மா எனக் கொள்ளல் இயலாது.
3. ஆழ்துயில் நிலையிலோ (சுளுத்தி) பொறிச் செயல்களும், உளச் செயல்களும் அற்றுப் போகின்றன. இந்நிலையில் ஆன்மாவினது உள் ளடக்கம் என்று சொல்ல எதுவும் எஞ்சாது. எனவே ஆழ்துயில் நிலை யையும் ஆன்ம சொரூப வெளிப்பாடு எனல் ஆகாது.
அவ்வாருயின் ஆன்மா என்பதுதான் என்ன? விடயம், விடயி (Subjeet and Objeet) இரண்டுக்கும் தோற்ற மூலமாயும் முதற் காரண மாயும் உள்ளதுதான் ஆன்மா, அது சர்வவியாபகமானது. பொறி புலன்களுக்கு அப்பாலானது ஆணுல் அது உடல் ஒவ்வொன் றின் உள்ளும் தன்னை விடயமாக்கிய உடலைத் தான் நினைத்தவாறு இயக்கு கின்றது. இல்வுண்மை பிருகதாரணிய உபநிடதத்திலே, யக்ருவல்கியரின் உபதேச வாயிலாக மேலும் தெளிவாகும். 'ஆன்மாவே அறிவோனுய் இருநது எல்லாப் பொருள்களையும் அறிவதால் அதனை ஒரு விடயமாகக் கொண்டு அறிதல் கூடாது. அதே வேளையில் கண் ணு க் குப் புலணுகப் பண்பு நிலைப்பட்ட விடயமாகவும் அது தன்னைக் குறைக்காது (பண்புநிலைAbstraction) ஏனெனில் அறிவானின் அறிவு எ க்கா லத் தி லும் அழிவுக்கு உள்ளாவதில்லை. புலக்காட்சித் தரிசனமும் ஒடுங்குவதில்லை. சூரியன் அஸ்தமிக்கலாம். சந்திரன் மறையலாம். ஆனல் ஆன்மா தனது சுயம்பிரகாசத்திலே எப்போதும் ஒளிகான்ற வண்ணம் இருக்கும்.”
கடோபநிடதம் இதே கருத்தினை வேருெரு வகையாக வலியுறுத்து கின்றது.
*அங்குச் சூரியன் ஒளிராது. சந்திரனும் தாரகைகளும் சுடர்விடா மின்னலும் மின்னது. அந்தப் பெருந்தீ எங்கு உளது? அதுவே ஆன்மா.
ஆன்மாவின் ஒளியினைத் தொடர்ந்தே முன்னவை ஒளிவிட வல்லன. அதன் ஒளியினூடாகவே இவை ஒளி பெறுகின்றன."
- 23 -

Page 14
'தீயைத் தலையாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும் நாற் றிசைப் பரவெளிகளைக் காதுகளாகவும், வேதத்தை வாயாகவும் பிரபஞ்சத்தை இருதயமாகவும் கொண்ட இது (ஆன்மா) யாவையுங் கடந்த தொன்ருகும்" என்பது முண்டகோபநிடதக் கூற்று,
இந்த ஆன் ம சொ ரூ பத் தினை எவ்வாறு அறியலாம் என்பது உபநிடதம் ஆராயும் மற்ருெரு பிரச்சினை, விசாரம். விழிப்பு நிலையில் எற்படும் புற உலக அறிவு (விஸ்வ), கனவில் உண்டாகும் கற்பனைப் பொருள் பற்றிய அறிவு (தஜஜஸ்), இச்சைகள் நோவுகளைக் கடந்த தாயினும் பேரானந்தத்தை நேராக உண0ாது அதன் நிழலை மட்டும் துயில் நிலேயிற் காணும் அறிவு (பிரக்ஞ) ஆகிய மூன்றையும் கடந்து, விடய விட்யி பேதமற்றதும், பூரண சாந்தி தருவதும், ஞானத்தின் முதல் நிலைக்கு உரியதுமான அறிதுயில் (துரிய நிலை) நிலையை அடைவது ஒன்றே ஆன்ம சொரூபத்தினை அறிதற்கு வழியாகும். இந்நிலையிலே பன்மை என்பது மறைந்து ‘ஆன்மம் ஏகம்’ என்ற அறிவு தோன்றும். பிரணவமாகிய ஓங்காரம் (அ - உ - ம்) அவ்வறிவின் அடையாளம் ஆகும். எனினும் ஆன்மா இதனையும் கடந்ததாகும்.
கடோப நிடதத்தில் ஆன்மதத்துவம் பின்வரும் உருவகத்தாலே புலப்படுத்தப்படுகிறது. ‘பிரபஞ்சப் பொருள்களே வீதிகள், இவ்வீதிகளில் உலாவரும் தேர்தான் உடல். ஐம்பொறிகளும் அந்தத் தேரிலே பூட்டப் பட்ட குதிரைகள். உள்ளமே கடிவாளம். விவேகமே சாரதி. அகமே
(Ego) நுகர்வோன். தேரின் எசமானனே ஆன்மா." கடோபநிடதம் கூறும் மற்றேர் உண்மை. “பெளதிகப் பொருள்களிலும் பொறிகள் உயர்ந்தவை. உள்ளம் டொறிகளிலும் மேலானது. விவேகம் உள்ளத்
திலும் உன்னதமானது. விவேகத்சிலும் மகத் (Suite reason) மேலாகும். அவ்யக்தன் (Unmanibest) மகத்திலும் உயர்ந்தோன் புருஷனே (ஆன்மா) "மகத்திலும் மகத்தானவன். அவனிலும் உயர்ந் தது எதுவும் இல்லை." என்பதாகும்.
2. பிரமம்:-
பிரமம் என்ற பதம் 'பிருஹ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன் றியதாகும். பிருஹ் என்பதற்கு வளர்தல், வெளித் தோன்றல் என்ற பொருள்கள் உள்ளன. ஆரம் பத் தி ல் யாகம் என்ற பொருளிலும், பின்னர் பிரார்த்தனை என்ற பொருளிலும் இச்சொல் அமைந்தது. இன்று இயற்கையாகவும் ஆன்மாவாகவும் வெளித் தோற்றுவது எதுவோ அதுவே பிரமம் என இதற்குப் பொருள் கொள்ளப்படுகின்றது. பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூல காரணமே பிாமம் ஆகும். சாந்தோக்கிய உபநிட தத்தில் பிரமம் தஜ்ஜலான் என்ற சொல் கொண்டு அழைக்கப்படுகின்றது.
- 24 -

“தத் - அது, ஜ - தோற்றுவிப்பது லி - தன்னுள் ஒடுக்குவது. அன் - தாங்குவது.) அனைத்தையும் தோற்றுவித்து, காத்து இறுதியிலே தன் னுள் ஒடுக்கிக் கொள்ளும் பரம் பொருள் என்ற கருத்தை இச்சொல் தருகின்றது. தனித்தனி உடல்களுள் தன்னைக் கட்டி வைத்துள்ள அகவய ஆன்மாவே புறவயமாய்ப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் தோற்று வித்து, தன்னுள் அடக்கிக் கடந்த நிலையிலே நிற்கையில் "பிரமம் எனப்படுகின்றது. ஆக, ஆன்மா வேறு, பிரமம் வேறு என்று இருமைப் படுத்தாது ஒருமையாக ஒன்ருகக் காண்பதே ஞானம் என்பதொரு கோட் பாடும் பிரமம் பற்றிய ஆய்வில் ஏற்பட ‘தஜ்ஜலான்’ என்ற பதம் இடமளிக்கின்ற தெனலாம்.
‘தொடக்கத்தில் ‘ஸத்’ மட்டும் இருந்தது. நான் பல ஆவேன் என்று அது நினைத்தது.' என உத்தாலகர் சுவேத கேதுவாகிய தம் மகனுக்கு உபதேசிக்கத் தொடங்கி. ஒன்று இரண்டாகிப் பின் பலவான வகையினே விளக்க முற்படுகின்றர். (சாந்தோக்கிய உபநிடதம்) முதலிலே தீ, நீர், நிலம் ஆகிய மூன்று பூதங்களும் பிரமத்திலிருந்து தோன்றின என்பதும் பின்பு உயிரிகளுக்கான உடலங்கள் தோன்றும் வரை பலவாதல் நிகழ்ந்தது என்பதும் உத்தாலகர் கொண்ட முடிவாகும். ஆக உயிரிகள் தோறும் நிற்பதும் இயக்குவதும் ஒடுக்குவதும் தோற்றுவிப்பதுமெல்லாம் பிரமமேயாகும்.
தைத்திரீய உபநிடதத்தில் அன்ன ம ய கோ சம் (உடற்போர்வை) பிராணமயகோசம் (உயிர்ப்போர்வை), மனுேமயகோசம் (2-oirott, போர்வை), விஞ்ஞானமயகோசம் (அறிவுப் போர்வை), ஆனந்தமய கோசம் (ஞானப் போர்வை) என்று பஞ்ச கோசங்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது. இப்போர்வைகள் அல்லது சட்டைகள் பற்றிய உருவ கம் பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு விளக்கம் கூறப்படுகின்றது. இக் கோசங்கள் யாவும் ஒன்றுள் ஒன்ருய் ஒடுங்கி இறுதியில் பிரமத்துள் டுங்க, பிரமம் இவையாவிற்கும் அப்பாலாய், மேலதாய் விளங்குகின்
றது. எனவே பிரமம் என்பது பிரபஞ்ச ஆன்மாவாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் எல்லாமாக உள்ளது. சிலந்தியின் வலையானது சிலந்தி யின் உமிழ்நீரிலிருந்து உண்டாவது போன்றவை. இந்தத் தோற்றம் ஒடுக்கம் எல்லாம் உயிருளி, உயிரிலி, ஆன்மா, அன்ைமா, சடம், சத்து என்ற யாவும் அதுவாகவும் அதேவேளையிலே அவற்றைக் கடந்ததாகவும் உள்ளதே பிரமம். இதனையே ‘தத்துவம் அளி’ (அது நீ ஆகின்ருய்) என்ற சொற்றெடரால், மகாவாக்கியத்தால் சுவேதகேதுவிற்கு உத்தா லகர் எடுத்துரைக்கின்றர். இதே பொருளினையே ‘அஹம் பிரமாஸ்மி என்ற மகாவாக்கியமும் குறிப்பிடுகிறது என்பர்.
---- 25 -س-

Page 15
இவ்வாறு தன்னிலிருந்தே தோற்றுவித்தும் ஒடுக்கியும் அலகிலா விளையாடல் புரிநதிடும் பிரமம் இச்செயல்களினல் பாதிப்படையாதா? அதன் பூரணத்துவம் குன்றதா என்பதும் நியாயமான கேள்வியே. *ஈசாவசிய உபநிடதம் பிரமத்தின் பூரணத்துவம் எக்காலத்திலும் எதன லும் பாதிப்படைவதில்லை என்று அறுதியிட்டுக் கூறுகின்றது.
*அதுவும் பூரணம் இதுவும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உருவாகின்யது. பூரணத்திலிருந்து பூ ர ண த் தை எடுத்த பின்னரும் எஞ்சுவதும் பூரணமே.'
பூரணமாகிய பிரமத்தை வாக்கு மனம் கொண்டு அறிதலோ உணர் தலோ ஆகாத காரியம் 'இது இவ்வாறு உள்ளது" என்று உடன்பாட்டு வகையிலே பிரமத்தை அறிய முயன்றல் அறியாமையே எஞ்சும். எனவே "அது.இது அன்று (நேதி,நேதி) என்று எதிர்மறைவாய்ப்பாட்டினல்மட்டுமே குறித்து ஞானிகள் உணர முற்படுவர்" என யூக்ஞவல்கியர் கூறுவர். "கற்ப ைகடந்தசோதி , 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி” என்றெல்லாம் எம் சைவப் பேரறிஞர் பரம்பரையினரும் இவ்வாறே கூறு வதும் கருத்திற் கொள்ளத்தக்கதாகும். பூரணம் என்பது ஆன்மாவின் இருப்புண்மையையும் பிரமத்தின் சர்வ வல்லபத்தையும் உள்ளடக்கிய பரம்பொருள் எனக் கொண்டு 'எதுக்களாலும் எடுத்த மொழியாலும் சோதிக்காது ஏற்று தன்னுள்ளே காண முற்படுவான் எவனே அவனே மெய்யுணர்ந்தவனவான,
உபநிடதங்களிலே பிரமம் மேலும் இருவகைகளிலே விளக்கப்படு கின்றது. பிரபஞ்சத்தையும் குணங்களையும் விசேடங்களையும் (சப்பிரபஞ்சம், சகுணம், சவிசேடம்) தன்னிற் கொண்டு வெளி த் தோன் றும் பிரமம் சகுணப்பிரமமாகும். பிரபஞ்சமற்ற, குணங்களற்ற, விசேடங்களற்ற (நிஷ்பிரபஞ்சம், நிர்குணம், நிர்விசேடம்) அப்பாலம்பிரமம் நிர்க்குணப் பிரமமாகும். நிர்குணப்பிரமநிலையே ‘சத்" ஆகிய உண்மைநிலை எனச் சங்கராச்சாரியார் முதலிய பின்வந்த மெய்யியலாளர் பலரும் கொள்
கின்றனர். இவ்விரண்டினையும் முறையே தடத்தம், சொரூபம் எனக் கொண்டு இவ்விரண்டும் சிவபெருமானின் (சத்) உண்மை நிலைகளே எனக் கருதுவர் சைவசித்தாதிகள் இவர்கள் பிரபஞ்ச ஆன்மா எனப் பிரமத்தையும் அதன் தனித்தனி நிலைகளே தனிப்பட்ட ஆன்மாக்கள் என்றும் கொள்வதில்?ல. இவர்களுக்கு இறை, உயிர், உலகு என்ற மூன்றும் (பிரமம், ஆன்மா, பிரபஞ்சம்) வேறுவேருனவை. அநாதி யானவை. அநாதி, எனவே அழிவும் அற்றவையம், ரீராமானுஜரின் வழி, சங்கராச்சாரியார், சைவசித்தாந்திகள் ஆகிய இருசாராருக்கும் இடைப்பட்டதோர் வழியாகும்.
- 26 -

மீண்டும் உபநிடதங்களுக்கு வந்தால் சப்பிரபஞ்ச, சகுண, சவிசேஷட பிரம நிலையிலேதான் பிரமத்தால் படைத்தல், காத்தல் முதலாகிய தொழில்கள் நிகழ்கின்றன. *எல்லாம் அவனில் தோன்றி அவனில் வாழ்ந்து அவனில் ஒடுங்குகின்றன." என்கிற சாந்தோக்கிய உபநிடதம் ‘எல்லாவற்றிற்கும் தலைவரும், எல்லாம் அறிபவரும், எல்லாவற்றை யும் உள்நின்று கட்டுப்படுத்துவதும் எல்லாவற்றினதும் தோற்ற முதற் காரணனும், இறுதியில் அடைதற்குரியவனும் அவனே, தீயிலிருந்து சுடராகவும், மண்ணிலிருந்து குடமாகவும், பொன்னிலிருந்து அணிக ளாகவும், சிலந்தியிலிருந்து வலையாகவும், உடலிலிருந்து உரோமமாக வும், சிப்பியிலிருந்து முத்தாகவும், வீணையிலிருந்து இசையாகவும் வெளிப்படுதல் போலப் பிரமத்திலிருந்து எல்லாப் படை ப புக் களும் தோற்றுகின்றன." என்பது மாண்கேகிய உபநிடதத்தின் கூற்று. களிமண்ணை அறிந்தால் களிமண்ணிலிருந்து ஆக்கப்படும் பாண்டங்கள் யாவற்றைபும் அறியலாம். காரணத்தை அறிந்தால் காரியத்தையும் அறியலாம். களிமண்ணே பாண்டங்களுக்கு முதற்காரணம் என்று அறிவது போலப் பிரமமும் படைப்புக்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணம் என அறிதலே ஞானம். (கடவுள் படைப்புக்களின் நிமித்தகாரணர் உபாதான காரணர் என்ற கருத்துக்களும் தோன்றியுள்ளன. என்பதும் குறிப்பிடத் தக்கதே.) இயற்கை பிரமத்தின் உடல் என்றும் பிரமம் அதன் உயிர் என்றும் பிருகதரணியக உபநிடதம் உரைக்கும். உடல் உயிரை அறியாதவாறு போலப் பிரமத்தைத் தம் உயிர் என்பது அறியாது உயிர்கள் உள்ளன. இது அறியாமை.
இந்த அறியாமைக்குக் காரணம் யாது? இதற்கு மெய்யியலாளர் பலரும் ‘மாயை' எனப் பதில் உரைப்பர். மாயை பற்றிய கோட்பாடு உபநிடதங்களில் உண்டா என்று கேள்வி.
3. மாயை அல்லது அவித்தை:
மாயை அல்லது அவித்தை பற்றிய கருத்துக்கள் உபநிடதங்களில் உள்ளன என்று ‘உபநிடத மெய்யியல் பற்றியதோர் ஆக்கபூர்வமான அளவீடு' (A Construetive Survey of Upaniradic Philosophy) என்ற தமது நூலிலே, போராசிரியர் R. D. ரானடே சுட்டிக் காட்டி அவ்வாதாரங்களேத் தொகுத்துத் தந்துள்ளார்’ என்று கூறும் கலாநிதி சந்திரதர் சர்மா, 'இந்திய தத்துவம். ஒரு விமர்சன அளவீடு " (A Crifical Survey of Indian Philosophy) 6T667 p sub DITGSGay அவற்றை எடுத்துக் காட்டியுள்ளார். அவை வருமாறு:-
1. “உண்மையை மூடியிருக்கும் திரையானது தங்கத்தாலானது. மிகப் பெறுமதி வாய்ந்தது. மிகப் பகட்டானது, கண்ணைக் கூச வைப்பது. அது பார்ப்போனுடைய உள்ளத்தினைத் தனது உள்ளடக்கம் இது எனப் புலப்படுத்திக் காட்டாது மறைகின்றது." (ஈசாவசிய உபநிடதம்15)
-- .27. مس۔

Page 16
2. குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போல மனிதர் அறியாமை யிலேயே உழன்று கொண்டும் தாமே அறிவாளிகள் என நினைந்து அலைந்தவாறுள்ளனர். (கபோ நிடதம்) (1, 2, 4, 5,)
3. மனிதனுனவன் தனது உள்ளத்தின் அந்தரத்தில் உறையும் ஆன்மாவினை ஆட்சி கொள்ள முன் அறியாமை என்ற முடிச்சை அவிழ்த் தல் வேண்டும். (முண்டக உபநிடதம் 11 1, 10)
4 அறிவே ஆற்றல், அறியாமையோ ஆண்மையில்லா அலியினை ஒக்கும். (சாண்டோக்கியம் 1, 1, 10)
5. உண்மையை உணராமை என்பது இல் பொருளுக்குச் சமமானது. அது இருளையும் மரணத்தையும் போன்றது.
(பிருகதாரணியக உபநிடதம் 1, 3, 28,)
6. எம்மிலுள்ள குறையியல்பு, பொய்மை, மாயம் என்பவற்றை நீக்காத வரை நாம் பிரமத்தின் உலகத்தை அடைதல் இயலாது.
(பிரசன உபநிடதம் 1, 16)
7. இருமை உள்ளவாறு போல’ என்ற சொற்ருெடரே இருமை நிலை என்ற குறிப்பொருளைத் தருகின்றது. மாயை என்பது உள்ளது போல் தோற்றத்தை உண்டாக்குவதோர் அறியாமை.
(பிருகதாரணிய உபநிடதம் 11, 4, 14)
8. ஆன்மா ஒன்றே உள்ள பொருள் மற்று உள்ளவை எனக் கூறப்படும் யாவும் வெறும் சொல், நாமம், தோற்றம் மட்டுமே.
(சாந்தோக்கிய உபநிடதம் V1, 1, 4,
9. கடவுள் ஒரு மாயவன் தனது சக்தி கொண்டு அவன் இவ் உலகினைப் படைக்கின்றன். (சுவேதாசுவதர உபநிடதம் IV, 9,)
உபநிடதங்களும் உலகியலும்:
உலகியலுக்கும் ஆன்மீகத்துக்குமிடையே முடிவு காண முடியாதவாறு தத்தளித்துக் கொண்டிருந்த வேதாந்தங்களின் இறுதியாகவும், சாரமாக வும் அமைந்த உபநிடதங்கள் பிரமம், ஆன்மா பற்றிய ஆய்விலேயே பெரிதும் ஈடுபட்டு, உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை வற் புறுத்திய போதிலும் உலகியலே முற்ருகப் புறக்கணித்தன எண்றும் சொல்லிவிட முடியாது. வாழ்க்கையை வையத்து வாழ்வாங்கு அமைத் துக் கொள்வதற்கான அறிவுரைகளும் உபநிடதங்களிலே ஆங்காங்கு காணப்படுகின்றன. எனினும் உபநிடதங்கள் காட்டும் உண்மை நெறி யென்ற தலையங்கத்திற்கு அவை பொருந்தாவாகையால் இக் கட்டுரை யிலே அவை பற்றிச் சொல்லப்படவில்லை.
- 8 -

கலை அமுதம்
நற்றமிழ் வளர்த்த புலவரெலாம் நடனக் கலையைப் போற்றுகின்றர் அற்றம் கூறித் தூற்றவில்லை அழிவது கெடுவதென் றரற்றவில்லை.
நடனக் கலையொரு விருந்தாகும் நல்லவர் கண்களுக்கமுதமாகும் பரத முனிவரின் பரிசாகும்
பாரில் தமிழரின் பவிசாகும்.
அம்பலத்தாடும் நடராஜன் ஆனந்த நடனப் பிறப்பிடமாம் அன்பும் அறிவும் கலந்திருக்கும் பண்பும் பயனும் அதிலிருக்கும்.
ஐம்புலன் வழியே உள்ளமதை உருக்கி ஓம்! எனும் தத்துவத்தை ஒதியுணர்த்திட உதவுவதாம் ஓங்கார நாதப் பிரம்மமதாம்.
**ஆங்கிகம் புவனம்’ எனத் தொடரும் ஆனந்த தியான சுலோகமெலாம் அம்மை அப்பனின் திரிபுவன
ஆட்சிப் பெருமையை செப்புவதாம்.

Page 17
( இங்கிலாந்தின் பொருளாதார ) வரலாற்றில் )
( கைத்தொழில்
அ. குமாரவேல்
Pத்திய காலத்தில் பிரித்தா
னிய கைத்தொழிலின் நோக்கம் அக்கால விவசாய சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வதாக அமைந்தது. நகரங்களும் கிராமங் களும் ஒன்றுக்கொன்று உதவி செய்யும் தாபனங்களாகவே இருந் தன. கைவினைத் தொழிலாளர் விவசாயிகளுக்குத் தேவை யான யந்திரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கினர். கை வினைத் தொளிலாளரின் நோக்கம் தமது குடும்பத்தைப் பராமரிக்கும் வகையில் வருமானம் பெறுவதா கும். இந்நிலை தொடர்ந்து நிலை பெற வில்லை. பிரித்தானியாவுக் கும், ஐரோப்பாவுக்கும் இடையில் பெருகிவந்த வர்த்தகம் இலாபம் உழைக்கும் ஒரு வர்க்கத்தை பிர சவித்தது. ஒரு முதலாளித்துவ அடிப்படையில் கைத் தொழில் வளர்ச்சிய டைய வேண்டியது தவிர்க்க முடியாததாகியது. 17-ம் நூற்றண்டின் பிற் பகுதியில் இங் கிலாந்தில் வணிகவாதக் கொள்கை வளர்ச்சியடைந்தது. ஒரு இறக்குமதியில் அதிகம் தங்குமா யின் அதன் மூலவளங்கள் அந்
தோடு சர்வதேச அரங்கில் அந் நாட்டின் கெளரவம் வீழ்ச்சியடை யும் என வும் கருதப்பட்டது.
நாடு
புரட்சி 2 )
B. A. [[Hons)
மேலும் இக்கொள்கையால் இங்கி லாந்தின் பிரதான இறக்குமதியான பருத்தித் துணி தடையை எதிர் நோக்கியது. ஆரம்பகாலத்தில் இங் கிலாந்தில் பருத்தி நூல் இறக்குமதி செய்யப்பட்ட போதும் அது மெழுகு வர்த்தி உற்பத்திக்காகவே மேற் கொள்ளப்பட்டது. பருத்தித் துணி இறக்குமதி தடையாகவே பருத்தித் துணிக்கான இராக்கி அதிகரித்தது. பருத்தித்துணி இங்கிலாந்து மக்க ளின் கோடைகால ஆடையாகும்.
பழைய முறைகளினூடாக இவ் வாடை உற்பத்தியை அதிகரிக்க முடியாதிருந்தது. அதற்கு ஏற்ற
கைத்திறத் தொழிலாளரையும் பெற முடியாதிருந்தது. உண்மையில் இத் துறை சார்ந்த தொழிலாளிகளின் நிரம்பல் வரையறுக்கப் பட்டதாக அல்லது கேள்வியை ஈடு செய்ய முடியாததாக இருந்தது. பொருட் களின் விலைகள் அதிகரித்தன. இத னல் இலாப வாய்ப்புக்களும் எதிர் பார்க்கைகளும் ஸ்திரமாயின. சிறிய மரபுவழிக் கருவிகளைக் கொண்டு அதிகரித்த கேள்வியை ஈடு செய்ய முடியாதிருந்தது. ஆரம்பகாலத்தில் கைத்தொழிலாளர்கள் தமது வீடுக ளில் கருவிகளால் உற்பத்தியை மேற் கொண்டுவந்தனர். நாடோடி வியா பாரிகள் அதனைக் கொள்வனவு செய்து சந்ததைப் படுத்தினர்.
سے 30 سے

அந்நிலை தொடர முடியவில்லை. அதி கரித்த கேள்வியை அவர்களால் ஈடு செய்ய முடியவில்லை. கைத்தொழில் முறை மாறவேண்டி இருந்தது. பெரிய தொழிற்சாலை அமைப்புத் தோன்றி ஒரே கூடாரத்தின் கீழ் ஆயி ரக்கணக்கானதொழிலாளிகள் (ഖിബ QFujuu (36u6ðið7 L-ULU தொழிற்சாலை தோன்ற வேண்டி இருந்தது. இது
அமைப்பு ரீதியா ன மாற்றத்தை
உண்டாக்கி அடிப்படைகளே நவீன மாக்கி புதிய தோர் முறையைப் படைத்தமை புரட்சிக்கு வடிவத் தைக் கொடுத்தது.
இங்கிலாந்தில் கைத்தொழிற் புரட்சியை முதலில் உருவாக் வைத்ததும் பொருளாதார வளர்ச் தியில் முன் கொழு பின்கொழு நிகழ்ச்சிகளே இணைத்துக் கொடுத் ததும் பருத்தியாடைத் தொழிலே யாகும். ஆரம்பத்தில் இங்கிலாந் தில் கம்பனி உற்பத்தியில் அதிக லாபம் சம்பாதிக்கப்பட்டது. பருத்தி நெசவுத் தொழிலில் எப்போதும் தொழிலாளர் பற்ருக்குறையாகவே இருந்தனர். முதலில் பருத்தியை யும் லினனையும் கலந்து தடித்த பருத்தியாடையே உற்பத்தி செய்யப் பட்டது. இதனை (Fustian) துணி என அழைக்கப்பட்டது. துரிய ஆடையை உற்பத்தி செய்வது முத லில் சாத்தியமாகவில்லை என்றே கூறல் வேண்டும். உற்பத்தியைப் பெருக்குவதற்கு துணியை நெய்வதி லும், நூலை நூற்பதிலும் அதிக மாற்றங்கள் எற்பட வேண்டி இருந் தன. கைததொழில் புரட்சிக்கு முன்னர் மனிதசக்தியே பெருமள வில் உற் பத் தி க்கு ப் பயன்
பட்டு வந்தது. உழைப்புச் சக்திக் குப் பதிலாக யந்திரங்கள் புகுத்தப் படவேண்டி இரு ந் தன . அமை விடங்கள் மாற்றப்பட வேண்டியிருந் தன. தொழிலாளர்களை ஒன்று திரட்டி உற்பத்தி செய்யும் செயல் முறை தோன்றுகின்றது. இதனல் கைத்தொழில்சாலைகள் ஓரிட ச்
செறிவுக்கு உட்படலாயின. இயந்
திரங்களை இயக்கும் சகதியை அடிப் படையாகக் கொண்டு ஓரிடச் செறி வுமையப் படுத்தப் படுகின்றது. மனிதனின் முக்கியத்துவம் குறை கின்றது. மனிதன் யந்திரத்தைக் கையாண்ட முறை மாறி இயந்திரம் மனிதனை ஆளும் முறை தோன்று கின்றது. பருத்தியாடையை உற் பத்தி க்ெய்வதில் மனிதனின் பங்கு குறைக்கப்பட்டதற்கு தொழிலாளர் பற்ருக்குறை மட்டும் காரணமாக அமையவில்லை. யந் தி ரத் தை க் கையாளுவது நெசவையும் நூற்றலை யும் இலகுபடுத்தியமையும் ஒரு காரணமாகும். யந்திரப் பொறி முறைகள் இரு பிரிவான சீர்திருத் தத்தை அடைந்தன. ஏற்கனவே இருந்ததை சீர்திருத்தி யமையும் புதிய பொறிகளைத் தோற்றுவித் தமையுமே அவ்விரு பிரிவுமாகும்.
பருத்தியாடை உற்பத்தியில் முத வில் நூல் நூற்பதிலேயே அவசிய அவசர கண்டு பிடிப்புக்கள் தேவைப் பட்டன. எனினும் முதலில் நெச விலேயே கண்டுபிடிப்புக்கள் ஏற் பட்டன. 1733 - ம் ஆண்டு எறி நாடா என்ற பொறி கண்டு பிடிக் கப்பட்டது. இருவர் செய்த வேலை யை ஒருவர் செய்யும் வேலையாக மாற்றியமையே இக் கண்டு பிடிப்
=ܚ- 31 -

Page 18
பின் அடிப்படையாகும். மனித வலுவில் தங்குவதைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. நெய் தல் இலகுவாகியது. ஆனல் நூற் றல் சிரமமாகியது. நெசவின் முன் னேற்றத்திற்கு நாற் ற ல் ஈடு கொடுக்க முடியாதிருந்தது. இத னைத் தொடர்ந்து அத்துறையில் கண்டு பிடிப்புக்கள் அவசியமாகின. ஒவ்வொரு கண்டு பிடிப்பும் இன் ஞெரு கண்டு பிடிப்பின் காரண மாகவும் அல்லது அதன் விளைவாக வும் அமைந்தது. 1738 - ல் லூயி போல்ஸ் என்பவர் நூற்கும் கருவி யொன்றைக் கண்டு பிடித்தார். எனினும் அது ஏற்கனவே இருநத தைரியப்படுத்த மட்டுமே உதவி
என்பவர் ஜென்னி என்னும் இயந் திரத்தைக் கண்டு பிடித்தார். இதன் மூலம் ஒரே நோத்தில் 100 நூற் கதிர்களை நூற்க முடிந்தது. இத னைத் தொடர்ந்து மியூஸ் என்ற யந்திரம் சாமுவேல் கிரொம்டன் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. 1768 - ல் றிச்சர்ட் ஆர்க்ாைட் என் பவர் நீர்ச்சட்டம் என்ற பொறித் தொகுதியைக் கண்டு பிடித்தார். இதனைத் தொடர்ந்து பல முக்கிய மாறுதல்கள் எற்பட்டன. இதுவரை காலமும் உருவாகிய பஸ்ரியன் என்ற தடித்த ஆடை மறைந்தது. தூய மென் மை யா ன பருத்தி ஆடை உற்பத்தியாகியது. மேலும் இக் கண்டு பிடிப்பில் இன்னேர் முக்கியத்துவம் உண் டு . இது வரை மனிதனுல் இயக்கப்பட்ட பொறிகள் மனித சக்தியில் இருந்து இயற்கை சக்தியை நோக்கி நகர்ந் தன. அதேவேளை கைத்தொழில்
ஓரிட அமைவுகளில் மாற்றம் ஏற் படுகின்றது. நீர் நிலைகளை நோக்கி தொழிற்சாலைகள் நகர்ந்தன. அத் துடன் மியுலின் கண்டு பிடிப்பதைத் தொடர்ந்து ஒரே தடவையில் 2000 கதிர்களை நூற்க முடி ந் த மை பெரும் புரட்சியை உருவாக்கியது. இக்காலத்தில் யேம்ஸ் உவாட் என் பவர் நீராவி யந்திரத்தைக் கண்டு பிடித்தார். இதனைத் தொடர்ந்து 1887 - ல் டாக்டர் எட்வார்ட் காட் ரைட் என்பவர் விசைத் தறியைக்
கண்டு பிடித்தார். இக் கண்டு பி டி ப் பின ல் தொழி லா ள ர் மனக் க ச ப் பு அ டை த் து
எதிர்ப்புத் தெரிவித்தனர். தமக்கு வேலையில்லாது போய் விடும் என அவர்கள் எண்ணியமையே காரணம்
ஆகும். நெசவு மிக விரைவாக வளர்ச்சியடைந்தது. 1792 - ல் எலி விட்னி என்பவர் பருத் தி யி ல்
இருந்து விதைகளைப் பிரித்தெடுச் கும் யந்திரத்தைக் கண்டு பிடித்தார். இதனுடன் பருத்திசார்பான நுட்பங் கற் முற்றுப் பெறுகின்றன. இதன் கருத்து வேறு கண்டு பிடிப்புகள் ஏற்பட வில்லை என்பதல்ல. ஏற் கனவே கண்டு பிடிக்கப்பட்டவையே விரிவாக்கம் செய்யப் பட்டன . பருத்தி நெசவுத் தொழில் மட்டு மல்லாது. பட்டு, லினன் உற்பத்தி யிலும் பல கண்டு பிடிப்புக்கள் ஏற் பட்டன. 1785 - ல் துணிகளில் உருளையை உ ரு ட் டு வ தன் மூலம் அச்சடிக்கும் முறை கண்டு பிடிக்கப் 1799 - ன் பின் பல் வகைச்
பட்டது. சாயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. யந்திர உருவமைப்பு மாற்றமும்
நெசவைத் துரிதப்படுத்தும் மாற்றங் களும் பருத்தித் தொழில் ஏற்பட்ட
سست 30 ســـــــــــ

வளர்ச்சி யை பிரித்தானியாவின் பருத்தி இறக்கு ம தி யோ டு தொடர்பு படுத்தி நோக்கலாம். 1701ல் - 1725 க்கும் இடையில் 12 இலட்சம் பருத்திப் பஞ்சை இறக்குமதி செய்த பிரித்தானியா 1816 - 1820 க்கும் இடையில் 122 இலட்சத்தை இறக்குமதி செய்தது பருத்தியோடு மட்டும் புரட்சியின் FITul uo)e56T முடிவடைந்து விட வில்லை. நிலக்கரி, இரும்பு போன்ற வற்றிலும் ஏற்பட்டன.
நிலக்கரி, இரு ம் பு , உருக்கு ஆகியவற்றில் எற்பட்ட மாற்றங் கள் புரட்சியின் இறுதிக் காலத் தில் தான் ஏற்பட்டன. பருத்தி ஆடை உற்பத்தியில் அவசியமும் அவசரமும் கலந்த மாற்றங்கள் தோன்றின. அத்தகைய தேவை புரட்சியின் ஆரம்பத்தில் நிலக்கரி இரும்பு ஆகியவற்றில் எற்பட வேண் டிய தேவை இருக்க வில்லை. 18 - ம் நூற்ருண்டின் நடுப்பகுதி வரை இரும்பை மரக்கரியை உபயோ கித்தே உருக்கினர். இதனல் பெரு மளவு காடுகள் அழியத் தொடங் கின. இதனுல் இங்கிலாந்தின் கடற் படைப் பலம் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்டது. கடற்படைக் கப்பல் களுக்குத் தேவையான மரங்கள் குறையும் எனவும் இது கடற்படை யைப் பாதிக்கும் எனவும் கருதப் பட்டது. இதனுல் காடழிப்புக்குப்
பல தடைகள் மேற்கொள்ளப் பட்
6. எனவே நிலக்கரிப் பயன் பாடு அதிகரிக்க வேண்டி இருந்தது.
நிலக்கரியில் இருந்த கந்தகம் இரும்புருக்குத் தொழிலில் தடை யை எற்படுத்தியது. ஏபிரகாம்
டார்பி என்பவர் நிலக்கரியை சுட்டு அதனை கோக்காக மாற்றிப் பயன் படுத்தும் முறையைக் கண்டு பிடித் தார். கா டு களுக்கு அருகில் அமைந்த இரும்புருக்குத் தொழிற் சாலைகள் தற்போது நிலக்கரிச் சுரங் கத்தை நோக்கி நகர்ந்தன. 178384 - ல் கென்றி கோட் என்பவரும் பெஸ்மா என் ப வரும் கலக்கும் முறையைக் கண்டு பிடித்தனர். இதனல் வார்ப்பிரும்பு உற்பத்தியில் மட்டுமல்ல அதிலிருந்து தகடாக அடிக்கக் கூடிய தேனிரும்பு அதிகம் உற்பத்தியாக முடிந்தது. இரும்புருக் கோடு தொடர்பு பட்ட இன்னெரு தொழிலாக இணைந்தது நிலக்கரித் தொழில் என்பதாகும். ஆரம்பத் தில் நிலக்கரி வீடுகளில் எரிபொரு ளாகவே பயன்பட்டது. நிலக்கரி எப்போது இயக்க சக்திக்குப் பயன் பட்டதோ அன்றிலிருந்து அதன் முக்கியத்துவம் அதிகரித்தது. 19-ம் அநூற்றண்டில் நீராவிக்கப்பலும் புகையிரதப் போக்குவரத்தும் அதி கரிக்கவே நிலக்கரித் தேவையும் அது சார்பான கண்டு பிடிப்புகளும் அதி க ரி க்க வேண்டியதாயிற்று. நிலக்கரி உற்பத்தியில் ஏற்பட்ட பிரதானமான பிரச்சனைகள் மூன்று பிரிவுகளில் அமைந்தன. ஆழமாக சுரங்கங்களைத் தோண்டியபோது நச்சு வாயுக்கள் தோன்றியமையும், அச்சுரங்கங்களில் இருந்து நீர் ஊறி யமையும், ஆழமான சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை புவியின் மேற் பரப்பிற்கு கொண்டு வருவதுமே அதன் பிரச்சனைகளாக அமைந்தன. 1812 - ல் நியுகொமன் என்பவர் சுரங்கத்தில் ஊறும் நீரை வெளி யேற்றும் நீராவி யந்திரத்தைக்
-33 -

Page 19
கண்டு பிடித்தார். இவ்வியந்திரத் தின் ஊடாக நீர் வெளியேற்றப் \ட்டது. சுரங்கங்களில் வெளிச்ச முட்டுவது இன்னேர் பிரச்சனையாக இருந்தது. 1812 - ல் மக்டினேறி என்பவர் பாதுகாப்பு விளக்கைக் கண்டு பிடித்தார். இக் கண்டு பிடிப் பிஞல் விளக்கைச் சுற்றி கம்பிவளை கள் அமைக்கப்பட்டன. னுள் காற்று புக மு டி ந் த து . ஆனல் விளக்குச் சுடர் குளிர்ந்த வ%ளவினுடாக வெளிவந்து வெளி யிலுள்ள காற்றைப் பற்ற வைக்க முடியா தி ரு ந் த து. 1837 - ல் பாரெஸ் என்பவர் நச்சு வாயுவை வெளியேறறும் விசிறி ஒன்றை க் கண்டு பிடித்தார். நிலக்கரியை
விளக்கி
வெளியே எடுத்துச் செல்வது இன் னேர் பிரச்சனையாக இருந்தது. சுரங்கங்களில் இருந்து கரியை மேலே எடுப்பதற்கு முதலில் சணல் கயிறுகளே பயன்படுத்தப்பட்டன. இது செலவு கூடியதும் அதேவேளை யில் உறுதியற்றதுமாக இருந்தது. 1839 - ல் எஃகுக்கம்பி முறை உப யோகிக்கப்பட்டமையினுல் இப்பிரச் சினை தீர்க்கப்பட்டது. இரும்பை உருக்குவதற்கு நிலக்கரியைச் சுட் டுப் பயன்படுத்திய போது அதனல் கிடைத்த பக்க விளைவுகளைப் பயன் படுததி சாய உற்பத்தி அதிகரிக்க பருத்தித் தொழிலையும் النتوك வளர்ச்சி யடையச் செய்தது.
- தொடரும்
யுடன்
றிவைண்டிங்
52/1,
தொழிற் பயிற்சி
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இலகுவாக தொழில் வாய்ப்பைப் பெறுவதற்குக் குறைந்த கட்டணத்தில் கூடிய நேர செய்முறைப் பயிற்சி
பயிற்சியளிக்கப்படுகின்றன.
றேடியோ, ரெலிவிஷன் றிப்பியறிங் Comput Or Programming
Data Processing (Basic) எலெக்ரிக்கல் வயறிங்
Enginioring Drawing வீடியோ டெக் றிப்பயறிங் Jaffna Technical Institute
ஸ்ரான்லி ருேட், - யபழ்ப்பாணம்.
Draushts Maorship
-- 34 * سی

“L6 L புக்கள்
பிரசவமல்ல'
() தங்களது எழுத்துலக ஆரம்பம் எவ்வாறு அமைந்தது?
ஆரம்பத்தில் எனக்கு நாடகம் எழு தும் நோக்கம் இருக்கவில்லை. நடிப்ப தில் ஊக்கம்கொண்டிருந்தேன். எனி னும் திருநெல்வேலி இந்து வாலி பர் சங்கத்தின் ஒரு விழாவுக்காக 1958 - ல் ஒரு சிறுவர் நாடகம் எழுதி னே ன் அந்நாடகத்தின் பெயர் ‘நல்ல நண்பன்" என்பதா கும். முழுக்க முழுக்க ஊர்ச் சிறு வர்கள் நடித்தனர். அதன் பின் 1961 - ல் 'வையத்துள் தெய்வம்? என்னும் பெயர் சுொண்ட சிறுவர் நாடகத்தை எழுதினேன். இது வள்ளுவர் வாழ்க்கையை மையமா கக் கொண்டது. எனினும் இதை பன்னிரண்டு வ ரு டங்க ளா க மறைத்து வைத்திருந்தேன். பொது வாக ஆரம்ப எழுத்தாளர்களுக்கு இருக்கின்ற தாழ்வுணர்ச்சி, பயம் என்பன அப்போது என் னி ட ம் நிறைய இருந்தன. பின் நண்பர் களின் தூண்டுதலாலும், அவசியங் காரணமாகவும், 1973 - ல் அது -9), д) . . бЈ (Ц. த ட வைக ள் மே டையே ம் ற ப் பட் டு எல்லா ராலும் வெகுவாகப் பாராட்டப் பட்டது. இன்னும் சில நாடகங் கள் இந்தக் காலகட்டத்தில் எழு தியும் அப் பிரதிகளேச் சேகரித்து வைக்காகையினல் அவை மேடை எற்றப்படாது போயின.
1916 - ல் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களுக்கான நாடக டிப்ளோமா பயிற்சி நெறி இடம் பெற்றது. தெரிவு செய்யப் பட்ட பதினெரு தமிழர் க ளில் நானும் ஒருவன். அக்காலத்தில் நிலவிய பூரீலங்கா சுதந்திரக் கட்சி அரகாங்கம் நாடகத்தை ஒரு பாட மாகக் கொண்டு வருவதில் கூடுதல் அக்கறை கொண்டிருந்தது. நாடக மானது மா ன வ ர் 45 ள து சுய சிந்தனை, கூடிப் பழகும் ஆற்றல், ஆளுமை போன்றனவை வளர்க்கக் கூடிய தென்பதை அது நன்கு உணர்ந்திருந்தது. அதன் பிரதி பலிப்பே அந்நாடகப் யிற்சி நெறி ஆகும். நாடகத்துறையில் சிங்கள வர்கள் மு ன் னே நிய வர் க ள்
செவ்வி: குழந்தை ம.
அவர்கள் நாடறிந்த நாடக இலக் கிய கர்த்தா. யாழ் பல்கலைக் கழக நாடகத்துறை விரிவுரையாளர்,
Gமு. ரவீந்திரன்
சண்முகலிங்கம்
கண்டோர்
S க. கண்ணதாசன்
ஆவார். தென்னிந்தியா தொழில் நுட்பத்தில் முன்னேறிற்றே அன்றி கலைத்துறையில் முன்னேறவில்லை என்றே கூற வேண்டும். சிங்களத் திரைப்படம் எடுக்கவாரம்பித்து முப் பத்தைந்து வருடங்களுக்குள் அது உலகப் பரிசை தட்டிக் கொண்டது. ஆனல் தமிழ் படங்கள் இன்னும் அத்தகுதியைப் பெறவில்லை. அத்
- 35 -

Page 20
தகைய சிங்களக் கலைஞர்களுடன் பழகியதில் இருந்தே எனக்குள் நாடகம் ஒரு பயிலக் கூடிய சிறந்த துறை என்னும் கருத்து நிலை பெற்றது. அதுவரையில் நான் நாடகத்தை அத்தகைய நோக்கில் பார்த்தவன் அல்ல, வால் 1978 - ம் ஆண்டு நானும் எனது நண்பர்களும் கொழும்பு அ. தாவSசியஸ் (தற்போது பி.பி.சி. அறிவிப்பாளர்) உ த வி யு டன் T. Y. M. H. A. FIT fil Gái BITLs அரசாங்கக் கல்லூரி' ஒன்றை ஸ்தாபித்தோம். இம் முயற்சிக்கு அ. பிரான்சிஸ் ஜெனம், சு. நாகேந்திரா, லோகநாதன், க. செல்வரெட்ணம் ஆகிய நண் பர்கள் உறுதுணையாய் இருந்தனர்.
இந்நேரத்தில் மேற்கு ஜேர்மன் நாடகக் கலைஞர் கொழும்பில் வந் திருந்து சிறுவர்களுக்கான நாடகங் களைத் தயாரித்தனர். அத்துண்டு
தலால், 1979 - ல் ‘கூடி விளையாடு பாப்பா” என்னும் ஐந்தாம் வகுப் புக்குட்பட்ட நாடகத்தை எழுதி
னேன். இது அனேகம் பேரின் வர வேற்பைப் பெற்று பல முறை மேடை யேறியது. கொழும்பில் மேடை யேற்றப்பட்ட போது பல சிங்கள நாடக வல்லுனர்களின் விமர்சனத் துக்கு உள்ளாகியது. அதன் பின் னர் "உறவுகள்’ என்னும் நாடகத் தை எழுதினேன். அப்போது ஈழத் தில் தமிழ் நாடக எழுத்தாளர்கள் இருக்கவில்லை. அதனல் நான் அத் துறையில் ஊக்கம் மிகக் கொண் டேன். சிறுவர்களிடம் பெரும் தத்துவங்கள், புராண இதிகாசக் கதைகள் மூலமாகத் திணிக்கப்படு வதைக் கண் டே ன் . அதனல்
அதன் விளை
எளிமையான கருத் துக் களை கீ கொண்ட சிறுவர் நாடகங்களை எழுத ஆரம்பித்தேன். அதனல் "ஆச்சி சுட்ட வட்ை" என்னும் சிறுவர் நாடகத்தை எழுதி யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் மேடை ஏற்றினேன். பின்பு மு ய லா ர் முயல்கிருர்’ நரகத்தில் இடர்ப் படோம்" 'சத்திய சோதனை , நாளை மறுதினம்" போன்ற நாட கங்களை எழுதி மேடையேற்றினேன்.
சுண்டுக்குளியில் ‘ஏழு நாடகங் கள்" என்னும் நூல் வெளியிட்டனர். அதில் நான்கு நாடகங்கள் என்னு டையவை. மூ ன் று நாடகங்கள் பேராசிரியர் மெளனகுரு எழுதியது. சென் மெதடிஸ் பாடசாலைக்கு ஐந்து நாடகங்கள் எழுதினேன். வெளியாருக்காகவும், பல் கலை க் கழகத்து கலாச்சார அவைக்காக வும் ‘மண் சுமந்த மேனியர்' தியாகத் திருமணம் போன்ற நாட கங்களை எழுதினேன்.
( ) சிறந்த எழுத்தாளன உருவாக்குவது எது?
ஒரு எழுத்தாளன் சிறந்த எழுத் தாளன் என்னும் மாண்பைப் பெற வேண் டு மா யி ன் அவன் நான்கு விடயங்களைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். ஒன்று தான் படைக்கும் படைப்புகளை மீண்டும் மீண்டும் திருப்தி தரும் வகையில் திருத்தி எழுதல் வேண்டும். சமீபத்தில் கட்டைவேலியில் நடை பெற்ற ‘உயிர்ப்புகள்" சிறுகதைத் தொகுதி வெளியீட்டின் போது அந்நூலேப் பற்றிய கருத்துரை வழங்கிய பேரா
- 36 -

ஒரியர் சிவத்தம்பி அவர்கள் "இந் நூலில் உள்ள கதைகள் முதலாம் படிக் கதைகள், அவை மீண்டும் திருப்பி எழுதப்பட- வேண்டும்?" என்ருர், இது எதைக் குறிபபிடு கின்றது என்றல் ஆக்கங்கள் எழுதி முடிந்தவுடன் அதை மறு பரிஇசீலனை செய்து, அது எழுதப்பட்ட மையக் அருத்தை அதி G)gd60)Lourt 55 கொண்டுள்ளதா என்று நோக்காது வெளியிட்டு விடுவதைத் குறிப்பிடு ஒன்றது. இது தான் இன்றை" இலக்கிய உலகின் அவலம். சிறு கதை அல்லது வேறு ஆக்கங்களோ எழுதி வெளியிடப்படுமாயின் அது பிரசவம் அன்று. எழுத்தாளன் தங்கள் கற்பனையில் எழுந்த ஆக்கக் குழந்தையே சிறுகதையோ, கவிதை ளோ என்பதனல் அதைப் பிரச என்கின்றனர். அது தீவிடு கும். பிரசவத் தி ல் பிறந்த குழந்தையை மாற்றமுடியாது. புனரமைக்க முடியாது. ஆனல் ஆக்கத்தை அதன் இலக்கு எய்தும் வரை புனரமைக்க முடியும். உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான 6.ப்ோல் பிறைஸ்ட்" என்பவர் தன் னு டைய ஆக்க ங் கள எத்தனையோ முறை திருத்தி எழுதி னர். அவை மேடையேற்றப்பட்டு அச்சில் வெளிவந்த பின்னும் அவற் றைத் திருத்தினர். எழுத்தாளர் தி. ஞானகிராமன் அவர்கள் தன் னுடைய "மோகமுள்' எனும் சிறு கதையை நாற்பது த ட வைகள் திருத்தி எழுதினராம். ஆகவே ஒர் சிறந்த எழுத்தாளனக வருபவர் தன்னுடைய ஆக்கங்களே GTS auth ஆகக் கருதி அச்சில் வந்தால் éFif)
என்னும் நிலைப்பாட்டைக் கொண் டிருத்தல் கூடாது. அவதிப்படக் கூடாது.
அடுத்து ஒருவன் சிறந்த எழுத் தாளனச வரவேண்டுமாயின் தன் னுடைய தொழில் சார்ந்த அறி வைத் தெளிவாகப் பெற்றிருத்தல் வேண்டும். துறை சார்ந்த நூல் 2ள வாசித்து அதன் வழி நின்று எழுதல் வேண்டும்.
மூன்ருவதாக எதை எழுதல் வேண்டும் எ ன் ப தி ல் தெளிவு, சமூகம் சமகாலப் பிரச்சனைகள், தத்துவார்த்தம் என்பன போன்ற வற்றில் எதை எழுதுதல் வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.
நான்காவதாக சொல்லும் முறை யைத் தெரிதல் வேண்டும். தன் னம்பிக்கை திரும்பத் திரும்ப யோசித்தல் என்னும் பண்புகளைக் கொண்டு என்ன முறையில் சொல் லுதல் வேண்டும் என்பதை வாசிப் போன் கருத்தில் இருந்து தெரிதல் வேண்டும்.
() இன்றைய இலக்கிய உலகில் உங்களால் விரும்பத் தகாத நிகழ்வுகள் எவை?
அச்சில் வெளிவந்தால் சரி என் னும் நோக்குடனும், துறை சார்ந்த அறிவு இல்லாமலும், தாம் எடுத் துக் கொள்ளும் கருப்பொருளில் தெளிவில்லாமலும், வாசிப்பதாகிய அனுபவக்கல்வி இன்றியும் உள்ள தொரு எழுத்தாள வர்க்கம் உரு வாகுவதே என் ஞ ல் விரும்பத்
حبس 3 سست.

Page 21
தகாத நிகழ்வு ஆகும். இந்நிலை நீக்கப்பட வேண்டியது ஆகும்.
T நீங்கள் எதனுல் உந்தப்பட்டு நாடகத் துறையில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்?
ஆரம்பத்தில் இத் துறையில் பிச
வேசத்துக்கு எந்தவொரு உந்து சக்தியுமில்லே ஆனல் தொடர்ந்து பல பெரியோர்களினதும், நண்பர் களினதும் தூண்டுதல் என்னை எழுதத் தூண்டியது, குறிப்பாக உலகப் புகழ் பெற்ற நாடக எழுத் தாளரான தாவtசியஸ் எனது ஆக்கமான ‘கூடி விளையாடு பாப்பா' வைக் காட்டிய போது அதைத் தான் நெறிப்படுத்த அனுமதி கேட் டார். அது எனக்கு அதிர்ச்சியை யும், சந்தோஷத்தையும் ஊக்கத் தையும் அளித்தது. இப்படிப் பல அறிஞர்களினதும் நண்பர்களினதும் ஊக்கமே எனது நாடகத்துறை ஆர்வம்.
( ) உங்களால் கையாளப்பட்டுவரும் நவீன நாடகத்துறையைப் பற்றி?
இந் நாடக முறையானது இன்று நேற்றுப் பிறந்தது அல்ல. இது 19 - ம் நூற்றண்டின் நவீன முறை களில் ஒன்று. 19 - ம் நூற்ருண்டு வரலாறு, கலை களி ல் புதுமை படைத்தது ஆகும் ஆனல் இக் காலத்தில் வேறு நாடக எழுத்தா ளர் இல்லை என்பதனல் ‘நான் எழுதுவதே நாடக முறை" எனும் இறுக்கமான எண் ண ம் இங்கு வேரூறிை விட்டது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தாம் எழுதிய நூலொன்றில், என்னுடைய நாட
கங்களில் கிரேக்க நாடக அவலச் சுவை, ஏனைய நாடகப் பண்புகள் கூத்துக்களின் பண் புக ள் , பேட் டோல் பிறைஸ்ட் என்பவரின் தூரப் படுத்தல் என்னும் நோக்கு என் பன காணப்படுகின்றன. என்று கூறி இருக்கின்றர். எனவே இந் நாடக முறையானது நவீனமான தல்ல. முந்தைய நாடக முறையில் சிறிய மாற்றமே. எழுதத் தொடங் கும் போது வடிவங்கள் எழுந்தன. இதற்கு உலக வரலாறும், அரங்கு பற்றிய அறிவும் உதவின. நாடகத் தின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மாதிரி அதன் உருவம் அமைந்து விடுகின்றது.
( ) இந் நாடக முறையில் நாட்டார் பாடல்களை அதிகமாக பயன் படுத்துவதன் நோக்கம் என்ன?
நாட்டார் பாடல்கள் இசையில் தெளிவு மிக்கவை. அத்துடன் மக் கள் உணர்வுகளை அவை பிரதிபலிக் கின்றன. என்பதோடு நாட்டார் பா ட ல் களை பிரபலப்படுத்துதல் வேண்டும் என்னும் குறிக்கோளும் அதற்குக் காரணம் ஆகும். எளிமை, கருத்தாழம், தொனி என்பன நாட்டார் பாடல்களின் சிறப்பம்சங் கள் ஆகும். என் நாடகங்களில் பாடலின் வரிகளுக்கு இயைபான வேறு கருத்துக்களைத் தெளிவுபடுத்து வதற்கும் நாட்டார் பாடல்களை அதிகமாகப் பயன்படுத்துகிறேன்.
( ) சமகாலப் பிரச்சனைகளை எடுத் துக்கூறுவதற்கு இந் நாடக முறை மட்டுந்தான் பொருத்தமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
-س- 38- س

அப்படியென்றில்லை. எனது சிந் தனயோட்டத்தை வெளிப்படுத்து வதற்கு இம் முறையே பொருத்த மானதாக எனக்குத் தோன்றுகிறது, ஆனல் வேருெரு நாடக எழுத்தா ளருக்கு வேறெரு முறை பொருத் தமானதாகத் தோன்றலாம். வேறு எழுத்தாளர் இல்லையாதலால் எனது
முறையே பொருத்தமான நாடக முறை எனும் கருத்துத் தோன்றி விட்டது. அவ்வாறு இல்லாது இன் னும் அனேக நாடக எழுத்தாளர் கள் தோன்ற வேண்டும். சமகாலப் பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதற் குப் புதிய புதிய நாடக உத்திகளை அறிமுகப்படுத்தல் வேண்டும்.
அட்டைப் படக் கவிதை
நாளைய விடியலுக்காய் .
a w
ஜி) க. கண்ணதாசன்
நாங்கள் போகின்றேம் - எங்கள் நாளைய விடியலின் இனிமைகளுக்காய் . எங்கள் கைகளும் - இந்தக் கடல் அலைகளும் ஒன்று
ஏனெனில் - இரண்டும் என்றுமே ஒயாதவை .
நாளைக் காலை
6 dS KA O
இருள் இளகி - இனிதாய் கிழக்கு வானம் வெளுக்கும் .
மஞ்சட் குளித்த சூரியன்
ஜனித்து எழுமுன்
தோள்களில் தூக்கிய வலைகளுடன்
நாம் - எமது
குடிசை வாயில்களுக்கு வந்து விடுவோம் . "அப்பா" என மழலை பேசி - எங்கள்
குழந்தைகள் ஓடிவர
மனைவியின் கண்களோ - கூடையுள் துள்ளும் மீன்களை எண்ணிப் பார்த்து நம்பிக்கை மீதுரச் சிரிக்கும் . அப்படியே அந்தப் பகல் கழிய - மீண்டும்
கண் சிவந்த சூரியன்
கடலுள் குளிக்கப் போவான் . கடலுக்குப் போகுமுன் - ஒரு கணம்
எங்கள் குழந்தைகளை
அனைத்து முத்தமிடுவோம் . பார்வையால் மனைவிக்குப்
பரிவு சொல்வோம் .
ஏனெனில் - எங்கள் இரவுகள்
நீண்டவை என்பதுடன்
மரண பயம் மிகுந்தவை .
நாளைய விடியலின் கண நேர சுகத்திற்காய் - நாம்
இன்றைய நீண்ட இரவினை இழந்து போகின்றேம் .
ー 39ー

Page 22
பிரித்தானிய
*; இ. யோகராசா
கட்சிமுறை
பிரித்தானியாவில் கன்சவேட்டிக் கட்சி (பழமை பேணும் கட்சி) தொழிற்கட்சி, என இரு கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சி களாக இருக்கின்றன. இந்த இரு கட்சிகளும் மக்களின் மனதைக் கவ ரும் அளவுக்குப் பெரிதாகவும் சிறப்பான கொள்கைகளே தம்முள் அடக்கின வாகவும் உள்ளன. குறுகியநோக்கின் பாற்பட்ட இனபேத, வகுப்பு பிரிவினை போன்க் விடயங்களை அவை தொட்டுக் கொள்வதில்லை. பழமைபேணும் கட்சியாளர் தங்களுக்குள்ள ஆதரவில் பெரும் பகுதிக்கு நிலச் சுவாந் தர்கள், பணக்காரர்கள் பிரபுக்கள் ஆகியோரைத்தான் பெரிதும் நம்பி இருக்கின்(ர்கள், தொழிற் கட்சியினர் பெரும்பாலும் தொழிலாளர் வகுப்பினரையும், தொழிற்சங்கங்களையுமே நம்பியிருக்கின்றர்கள். இந்தக் கட்சிகள் கடைப்பிடிக்கும் கொள்கையும் அதிகாரத்துக்கு வந் தால் நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசிக்கும் சட்டதிட்டங்களும் பொதுமக்களில் பெரும்பான்மையினருடைய சம்மதத்தை பெறுவதற்கு போதுமான அளவு விரிவானதாகவே உள்ளன. வெளிநாட்டு விவகா ரங்கள், சாம்ராட்சிய உறவுகள் குடியேற்ற ஆட்சிக் கொள்கை போன்ற சில விடயங்களின் மீதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை காரியங்க ளில் எல்லாக் கட்சிகளும் ஐக்கியமாக இருக்கின்றன. அபிபபிரfய வித்தியாசங்கள் இருப்பினும் அவை கட்சிகளுக்கிடையே பிளவை உண்டு படுத்தக் கூடியவையாய் இல்லை. இதனல்தான் இந்தப் பிரச்சனைகளின் மீது பிரதமருக்கும், எதிர் கட்சித் தலைவருக்குமிடையே அடிக்கடி கலந்தாலோசனை நடைபெறுகிறது.
வருவதே தொழிற்கட்சியின் நோக்கம். ஆனல் பழமை பேணும் கட்சி யினர் பழைய விசயங்களை அப்படியே அமுலாக்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தனிப்பட்டோரது முயற்சிகளை அவர்கள் ஆதரிக்கின் ருர்கள். தனிப்பட்ட ஒருவர் தனக்கென சொந்தத்தில் செல்வங்களை வைத்திருப்பதற்கு அவருக்கு பூரண உரிமை இருத்தல் வேண்டும் என்ப தும் பழமை பேணும் கட்சியாரின் கருத்தாகும்.
எனினும் தனிமனிதனுடைய சொத்துடமையை மதித்து நடக்க வேண்டும் என்பதே எல்லாக் கட்சிகளினுடைய நோக்கமாகும். ‘ஒரு தனி மனிதனுடைய பொருளுக்கு போதிய நஷ்டஈடு கொடுக்காமல் அவனது சொத்துக்களைப் பறிக்கக் கூடாது.” என்று ஒருமித்து கூறுகின்றன.
- 40 -

தொழில்கட்சி அரசாங்கம் பிரித்தானியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்க% தனதாக்கிக் கொண்ட போ ) நிலக்கரிச் சுரங்கங்கள்மீது உரிமை உடையவர் களுக்கும் போதிய நஷ்டஈடு கொடுப்பதற்கு சிபார்சு செய்தது. தனிவுடை மைக்குக் காண்பிக்கப்படும். இந்த மதிப்பு இன்று பிரிட்டனிலுள்ள பிரதான கட்சிகளிடையே ஒரளவு த்துழைப்பை வளர்த்துள்ளது. எவ்வித நஷ்ட ஈடும் கொடுக்காமல் தனி ஒருவனுடைய சொத்துடமைகளை அபகரிப்பதை எந்தக் கட்சிகளும் எந்தக் காலத்திலும் ஆதரிப்பதில்லை. பழமை பேணும் கட்சியினர் பொதுவாக செல்வந்தருக்காகப் பாடுபடுகின்றனர். தங்க ளுடைய அரசியல் எதிரிகளான தொழிற் கட்சியினர் அவர்களை ஆதரிப் பவர்களின் சொத்துக்களை போதிய நஷ்டஈடு கொடுக்காமல் கைப்பற்ற மாட்டார்கள் என்பது பழமை பேணும் கட்சியாளருக்குத் தெரியும். தொழில் அதிபர்களும் கிலச் சொந்தக் காரர்களும் ஒர் குறிப்பிட்ட அள வுக்கு மேல் உதவி புரிய முடியாத அளவுக்கு கடுமையான பொருளா தார மந்தம் ஏற்படும் சபயங்களில் தவிர மற்றைய நேரங்களில் அவர் களுடைய ஊழியர், சிற்பந்திகளின் தேவைகளில் தக்க கவனம் செலுத்த தவறமாட்டார்கள் என்பதில் தொழிற் கட்சியினருக்கு அசையாத நம் பிக்கை இருக்கின்றது. தொழிலாளருடைய கோரிக்கைகள் புறக்கணிக் கப்பட்டால் அரசாங்கம் கைத்தொழிலைப் பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற் சங்கங்கள் கேட்டுக் கொள்ளும். எனவே ஒவ்வொரு கட்சித் தலைவரும் தமக்கு எதிரான கட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்படும் கொள் கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்கு பயபக்தியான மதிப் பளித்று வருகின்றனர். இது போட்டிக் கட்சிகளிடையே அமைதியான ஒத்துழைப்பை வளர்ப்பதோடு சாத்தியமானபோது சலுகைகளும் அளிக்க வழி செய்கின்றது. இதன் பலனக பாராளுமன்ற ஆட்சிமுறை அமைகி யாகவும் திறமையான முறையிலும் நடைபெறுகின்றது.
பிரித்தானிய கட்சி ஆட்சி வரலாற்றில் பழமை பேணும் கட்சி கடந்த மூன்று பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்டி திருமதி. மாக்றற் தட்சரை பிரதமராகக் கொண்டு சிறப்பாக இயங்கி வருவதை பார்க்கும் போது பழமையை விரும்பும் பிரித்தானிய மக்களது மனே நிலையைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
உன் தாய் மொழி மதிக்கப்படுவதில்லை என்றல் உன் குரல் வளை நெரிக்கப் படுகின்றது என்று பொருள்.

Page 23
விடியுமா?
L) மு. ரவீந்திரன்
கொழும்பின் புறநகர் பகுதி கள் ஊடாக யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்த சொகுசு பஸ்வண்டியில் பிர யாணம் செய்கன்ற பிரயாணிகளில் அனேகம் பேர் நித்திரையில் ஆழ்ந் திருந்தனர்.
**வீடு நோக்கி செல்லுகின்ற நம் மையே’ என்ற பதிபக்தி திரைப் படப் பாடல் காற்றுடன் கலந்து கொண்டிருந்தது. சிலர் பாடலைக் கேட்டவண்ணம் கற்பனை உலகில் இருந்தனர். நேரம் நள்ளி ரவை நெருங்கிக் கொண்டிருந்தது.
கதிரேசனுக்கு நித்திரை வர வில்லை. அ வ ன் பஸ்வண்டியின் சாளரத்தினூடே தனது பார்வை யை செலுததி வெளிப்புறக் காட்சி களில் மனதைப் பறிகொடுத்திருந் தான்.ஒளி வெள்ளத்தைப் பாச்சிய படி வாகனங்கள் விரைந்து கொண் டிருந்தன. முன்னே செல்லும் வாக னங்களைக் கடப்பதற்காக பின்னல் வருபவை எடுக்கும் பிரயத்தனங்கள் அவற்றின் பலனுக வெற்றி பெறும் சில வாகனங்கள் வெற்றி பெற முடி யாமல் பின்தொடர்நது செல்கின்ற பலவாகனங்கள், இவையெல்லாம கதிரேசனுக்கு வாழ்க்கையின் புரி யாத உண்மைகளைப் புரிய வைத் தன.
'தக்கன பிழைக்கும்" என்பது
விஞ்ஞானி சாள்ஸ்டாவின் கூற்று.
மனிதவாழ்க்கை இதற்கு விலக்கல்ல பணம் என்ற பொருள் சமுதாயத் தில் எவனிடம் காணப்படுகின் றதோ அவன் வாழ்க் கை யில் உயர்ந்து விடுகின்றன். கல்வி, ஒழுக் கம் என்பதெல்லாம் பணத்தின் முன்னே வெறும் கானல் நீர் போல் ஆகிவிடுகின்றன.
நினைவுகள் அவன் முன் நிழலா டின. 'தம்பி உன்ர பெயருக்கு கடிதம் ஒண்டு வந்திருக்கு ஏதேனும் இண்டர்வியூவுக்கோ தெரியாது" சோற்றினைப் பிசைந்து கத்தரிக் கரய்க் கறியுடன் வாயில் இடடுக் கொண்டிருந்த கதிரேசன் தாயினை
நோக்கினன். அவள் தொடர்ந் தாள்.
ஏதோ! காலம் நல்லாயிருந்தால்
வேலை கிடைச்சுவிடும்; எதுக்கும் காங் களும் முயற்சி செய்ய வேணும்" கடைசிக் க வளத்தை வாயில் வைத்த போது இன்னும் சோறு போடுவதற்காக தாய் அகப்பையை எடுக்கினருள்.
*அம்மா எனக்கு சோறு போதும் உங்களுக்கு நான் சோறு போட வேண்டிய நேரத்தில உங்களிட்ட வாங்கிச் சாப்பிடுகிறன்"
சாப்பிட்டு முடித்தஅவன் கடி தத்தை படிக்கின்றன். கொழும்பி லுள்ள அரசாங்க அலுவலகமொன் றில்வேலைக்காக விண்ணப்டம் கோரப் பட்டதை அறிந்த அவனும் விண் ணப்பித்திருந்தான். இண்டர்வியூ
- 42 -

வுக்கு வருமாறு கடிதம் வந்திருந் திது தாயிடம் அவன் எடுத்துக் கூறிய போது அவள் மகிழ்நது போனள்.
“தய்பி நிச்சயம் உனக்கு இந்த வேலை கிடைக்கும். இப்ப உனக்கு நல்லகாலம் எண்டு கந்தையா சாத்திரியும் சொன்னவர். எப்பிடி tւյւն கடன்பட்டாவது உன்னைக் கொழுS 4க்கு அனுப்பி வைக்கிறன். நீ போய் ஆகவேண்டியதுகளைக் கவனி"
தாயினது க ரு த் தினை அவன் தமக்கையும், தம்பியும் ஆமோதித் தார்கள்,
சாலையின் இரு மருங்கி லும் தென்னைமரங்கள் நிறைந்து காcைப் பட்டன. அவற்றின் நடுவே காணப்படும் குடிசைகள், தென்ஜன மரங்களின் ஒலைகள் காற்றிலே அசைந்தாட அவற்றினூடு நில வொளி பட்டுத் தெறித்தது. பஸ் வண்டி கொழும்பு, சிலாபம், குரு நாகல் எனும் இடங்களை இணைக்கும் தென்னை முக்கோனப் பகுதியினைத் தாண்டி யாழ் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
தந்தையை இழந்த குடும்பம்
என்ருலும் தந்தையின் பென்சன் பணம் அவர்களை வாழவைத்தது. பென்சனவது கிடைக்குமே என்பதி ணல்தான் இன்று க தி ரே ச ன் போன்ற இளைஞர்கள் அரசாங்க வேலை தேடி அலேகின்ருர்கள்.
கந்தல் சேலையையும் கவனமா கத் தைத் துடுக் கும் அம்மா, பொன்னகை எதுவுமின்றி புன் னகையே போதுமென்ற அக்கா,
கடிதத்தின் உள்ளடக்கத்தை
இரண்டு களிசான்களை வைத்து இன்று வரை சமாளிக்கும் அவன், சின்ன வயதென்ருலும் சிக்கனத் தைக் கடைப்பிடிக்கும் தம்பி, குடும் பம் சிறிதானபடியால் தந்தையின் பென்சன் பணம் அவர்களின் அன் ருட வாழ்க்கைக்கு ஓரளவு போது மானதாக இருந்தது, வெளியுல கிற்கு தம்மை ஏழைகள் அல்ல என எடுத்துக் காட்ட உதவியது.
கொண்
கல்லூரியில் படித்துக்
கதிரேசன்
டிருந்த காலத்திலே தந்தையை இழந்தான்.
'தம்பி உன்னைத்தான் நம்பி யிருக்கிறேம் கவனமாய்ப் படிச்சு முன்னுக்கு வந்துவிடு. நாளேக்கு, கொப்பர் இல்லாத பிள்ளைகள்; கட்டுப்பாடில்லாமல் வளர்ந்ததால் படியாமல் திரியுதுகள் எண்டு எங்களை ஊர் உலகம் பாத்து சொல்லக்கூடாது" தாயின் தாரக மந்திரம் இதுவாகவே இருக்கும்.
கதிரேசன் தனது நிலையுணர்ந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி ஞன். ஆயினும், உயர்தரப் பரீட்சை யில் இருமுறை தோற்றியும் பல் கலைக் கழகம் செல்ல அவனல் முடியவில்லை. பல்கலைக் கழகம் என் பது வாழ்வில் அடைய முடியாத தொன்ருகியது, பல்கலைக் கழகம் செல்லத் தகுதியிருந்தும் தவிர்க்கப் பட்ட பல்லாயிரம் மாணவர்களுள் அவனும் ஒருவன் ஆனன், இன் னும் ஒருமுறை பரீட்சையில் தோற்ற முடியும் என்றலும் அவன் அதஜன விரும்பவில்லை. அவனது குடும்பு நிலை, இருமுறை அவன் பரீட்சை யில் தோற்றுவதற்காக அவனது

Page 24
தாய்பட்ட கஷ்டங்களை அவன் அறி வான். வேலை தேடும் வேலையில் இறங்கினன். இன்னமும் தேடிக் கொண்டே இருக்கின்றன்.
உடல் உழைப்பை நம்பி வேலை செய்ய அவன் தயாராயிருந்தான்.
“ப டி ச் சுப் போட்டு கூலிவேலை செய்தால் ஊர் உலசம் உன்னைப் பாத்து என்ன சொல்லும்" என்ற அம்மாவின் வார்த்தைகள் அவனைத் தடுத்துவிட்டன.
*நீ வீட்டில இருந்தா போதும் நான் உனக்கு சோறு போடுவன்" அம்மா உறுதியாக கூறிவிட்டாள்.
பஸ் ஆனையிறவு தடை முகா மைத் தாண் டி யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. மத்தியான வேளை ஆதலால் கதிர வன் சினத்துடன் காணப்பட்டான்.
“பாத்தியே தம்பி அனுராத
புரத்திற்கும் நாவற்குழிக்கும் இடை
யிலுள்ள வித்தியாசத்தை? மகா வலி அபிவிருத்தித் திட்டத்தால அவங்கள் இண்டைக்கு பச்சை மிள காயைக் கூட செளதி அரேபியா விற்கு ஏற்றுமதி செய்யிருன்கள். ஆனல் நாங்கள் பனங்கட்டியைக் கூட ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கிறம்"
பக்கத்து இருக்கையில் அமர்ந் திருந்த முதியவர் இவ்வாறு கூறி ஞர்.
க தி ரே சன் சாளரத்தினூடே நோக்குகின்றன். கோடைகாலம் என்பதால் நாவற்குழியை அண் மித்துக் காணப்பட்ட வயல்களெல் லாம் புழுதி படிந்து தரிசு நிலங்க ளாகக் காட்சியளித்தன.
'தம்பி நீர் கொழும்பிலேயோ வேலை செய்யிறீர்? முதியவர் அவ னைப் பார்த்துக் கேட்டார். அவன்
கண்கள் கலங்கி விடுகின்றன. சமா மிரித்துக் கொண்டே 'இல்லை ஐயா! நான் வேலை தேடி க்
கொழும்புக்கு இண்டர்வியூவிற்குப் போனணுன்."
“வேலை கிடைக்கும் எண்ட நம் பிக்கை இருக்கே???
"Gay 22 கிடைக்கிறதெண்டால் பெருந்தொகையாய் காசு தேவைப் படுகுது. என்னல அந்த அள வுக்கு முடியேல்ல" அவன் விரக்தி யுடன் கூறி முடித்தான்.
பஸ் யாழ் நகரை அண்மித்துக் கொண்டிருந்தது.
முடியுமானுல் பிறரை விட அறிவாளியாய்
செயலில் இரு.
ஆணுல் சொல்லாதே.

பெளத்தம் தத்துவமா
அல்லது சமயமா 2
திருமதி. அருள்நங்கை சண்முகநாதன் B. A. Hons
(இந்து நாகரீகம் சிறப்பு)
பெளத்தம் ஒரு தத்துவமா? சமயமா என்கின்ற ஆய்விலே பெளத் தம் ஒரு தத்துவம் என நிரூபித்து அது பிற்காலத்தில் சமயத்திற்குரிய அந்தஸ்தினையும் பெற்றமையினுல் சமயமாகக் கணிக்கப்படுகின்றது என நோக்கினுேம்.
இக் கட்டுரையிலே பெளத்தம் எவ்வகையில் சமய அந்தஸ்து உடையதாக கொள்ளப்படுகின்றது என்றும் அது பேணிவரும் சமயக் கொள்கைகள் எவையெனவும் நோக்க முற்படுகின்ருேம்.
சமயம் என்ற அந்தஸ்த்தை பெளத்தம் பெற்றுக் கொள்ளக் காரணம் பெளத்தக் கொள்கையை வெளிப்படுத்திய கெளதம புத்தருக்கு இறை நிலை கொடுத்து மக்கள் வழிபாடாற்ற முற்பட்டமையே ஆகும். அங்ங்ன மாக வழிபாட்டு முறைகளை பெளத்தம் பேணியமையினுல் இன்று சமய மாக அந்தஸ்துப் பெற்றுள்ளது. ஆ
ஆனல் பெளத்தமத ஸ்தாபகராகிய கெளதம புத்தர் வழிபாட்டு முறைகளையோ அல்லது சமது ரீதியிலான கொள்கைகளையோ எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இறைவன் இல்லை என் கின்ற கொள்கையை வலியுறுத்தி நிர்ஈச்சுரவாதம் பேசியவர். ஆதலால் வழிபாட்டு முறைகளையோ சமய ரீதியான கொள்கைகளையோ குறிப்பீடு செய்யவில்லை எனலாம். ஆனல் இறைவன் இல்லை என வலியுறுத்திய கெளதம புத்தரை மக்கள் வழிபாடாற்ற முற்பட்டபொழுது அதற்கான வழிபாட்டு முறைகளையும் கொள்கைகளையும் இந்து மதத்திலிருந்தே தழுவியிருக்க வேண்டுமென கொள்ள முடிகின்றது. ஏனெனில் பெளத் தம் பேணிவரும் வழிபாடுகளும் வழிபாட்டு முறைமைக் கியைந்த கொள் கைகளும் இந்து சார்புடையதாகவே விளங்குவதே குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது ஆகமங்களையும் புராணங்களையும் முக்கியத்துவப் படுத்தும் இப்து மதம் உருவ நாம வணக்க முறையில் சிறப்புடையது. அத்தகைய உருவ நாம வழிபாட்டு முறையை பெளத்தர்கள் பேணி வருகின்றனர்.
ཕ་ས་ཡ་ 45 -ཨ་མཁས་

Page 25
கெளதம புத்தரை சிலைவடித்து இருக்கைநிலை, நிற்கை நிலை, சயன நி?வ போன்ற நிலைகளிலும் மாறுபட்ட அங்கபாவங்களுடன் உருவகித்து வழிபாடாற்றுதலை நோக்குகையில் பெளத்தம் பேணும் உருவநாம வணக்க முறையை இந்து மதத் தலைவனகவே கொள்ள முடிகின்றது.
இந்துக்கள் உருவங்களோடு கூடிய இறைவளை புனிதமான ஒரு இடத் தில் வைத்து வழிபடுவதை சிறப்பான தென்கின்ற நோக்கிலே ஆலயங் களை உருவகித்தமை போன்றே பெளத்தர்களும் கெளதம புத்தரின் உரு வச் சிலையை வைத்து வழிபாடாற்றும் நோக்கோடு ஆலயங்களை ஸ்தா பித்து வழிபாடாற்றி வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்து ஆலயங்களில் சமய விழாக்கள் நடைபெறறு விழாக்காலத்திலே சமயரீதியிலான ஊர்வலம் நடாத்தப்படுவதனைப் போன்றே பெளத்தர்க ளும், கெளதம புத்தரின் பிறப்பு, ஞானம் கிடைத்தமை, இறப்பு என்பன நிகழ்ந்த நாட்களைப் புனித நாட்களாகக் கொண்டு அந்நாட்க 2ளச் சிறப்பான விழாக்களாக கொண்டாடி வருதலே நொக்க முடிகிறது. இவ் விழாக் காலங்களிலே புத்தரின் புனிதச் சின்னங்களைச் சுமந்து சென்று சமய ஊர்வவங்களை நிகழ்த்துதலேயும் நோக்குகையில் இந்துக் களின் வழிபாட்டு முறையைப் பேணல் என்றே கருத முடிசின்றது.
இதோடு தூபதீபம் ஏற்றல், படையல்களைச் செலுத்துதல், ஆ0ாதனை செய்தல், விரதங்களை அநுஷ்டித்தல் போன்றவை இந்துக்கள் சிறப்பா கப் பேணி வரும் வழிபாட்டு முறைமையாகும். மேற் கூறப்பட்ட அத்தனை முறைமைகளையும் பெளத்தர்கள் கடைப்பிடித்து வழிபடுவதை நோக்க முடிகின்றது. ஆகவே பெளத்தம் தனது வழிபாடுகளுக்கு இந்து மதத்தையே தழுவியிருக்க வேண்டுமெனக் கொள்ளக் கிடக்கின்றது.
மர வழிாடு இந்துக்களால் காலங் காலமாகப் பேணப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறையாகும். இந்துக்கள் பேணி வரும் இந்த வழக்கு முறையை பெளத்தமும் பேணக் காண்கிறேம். கெளதம புத்தர் ஞானம் பெற்றது. அரசமரத்தின் என்பதஞல் அம்மரம் பெளத்தர்களால் தெய்வீகமுடைய விருட்சமாக கொள்ளப்பட்டு வழிபாடாற்றப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்துக்கள் பேணிவரும் சில சமயரீதியான சம்பிரதாயங்களையும் பெளத்தர்கள் பேணிவர காண்கிறேம். இறைவனுக்கு காணிக்கை செலுத்துதல், நிவிர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை குறிப்பிடத் தக்கதாகும்
பெளத்தர்களில் சிலர் விஷ்ணுவின் ஒரு அவதாரமே புத்தர் என்ற நோக்கில் பெளத்த ஆலயங்கள் விஷ்ணுவின் உருவச்சிலையினை அமைத்து வழிபாடாற்றி வருதலையும் நோக்க முடிகின்றது.
- 46 -

இது மட்டுமல்லாது வீட்டிலே நடைபெறுகின்ற திருமணக் கிரிகை பிணக்கிரிகை ஏனைய சிறப்பான நிகழ்வுகளை ஆற்றும் காலம் பெளத்த துறவோர்களை கெளரவிதது அவர்களுக்குத் தானம் வழங்கி முறைப்படி ஆற்றும் கிரிகை முறைகளும் இந்துக்கள் கிரிகைகள் போன்றே அமை கின்றன, ஆகவே பிராமணர்களை பிரதப குருவாக ஏற்று இந்துக்கள் வீட்டில் நடைபெறும் வைபவங்களில் அவர்களை ஒம்புதல் போன்ற நிகழ்வை பெளத்தம் கடைப்பிடிப்பது கூட இநதுச் சார்புட்ைய ஒரு வழக்கு முறை என்றே கொள்ள முடிகின்றது.
இந்துக்கள் சிறப்பானது என ஏற்றுக கொள்ளும் கர்மம் மறுபிறப் Hப் பற்றியதான கொள்கைகளை பெளத்தர்களும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டிருக்கக் காண்கிருேம். துக்கம், துக்க நிவாரணம் என்ற தன்மையில் பிறப்பை துக்கம் என்றும் அதற்கு உற்பத்தி பற்று என்றும் பற்று நீங்குதலே பிறப்பிலிருந்து விடுபட வழியெனவும் கெளதமர் விளக் கிய கர்மத்தைப் பற்றியதான கெரள்கையில் ஆழமான நம்பிக்கையை பெளத்தம் கொண்டிருக்க காண்கிறேம்.
ஆகவே பெளத்தம் வணக்க தெய்வம், வழிபாட்டு முறை, வழிபாட்டு முறைக்கு இயைந்த கொள்கைகள் என்பவற்றினைக் கொண்டிருக்கும் சமய அந்தஸ்தை உடையதாகும். அதே சமயம் இதன் சமயக் கொகை கள் இந்து மதத்திலிருந்து தழுவப்பட்ட கொள்கைகளே என்பதனையும் எற்றுக் கொள்ள முடிகின்றது எனலாம்.
Nெ அக முகம ெ
No1 - கவிதா Namn
مح
உன் விழி னுாம்பு பட்டு அண்ருே - என் சிந்தனைச் சேனைகள் திசைமாறிப் போயின . காதல் கருக்கொண்டதால் தானே காகித மண்ணில் - எந்தன் ஆக்கக் குழந்தைகள் ஆதவனுய் மிளிர்ந்தன ஒ என் பிரிய ஸகியே! - உன் புறமுகத் தாமரையை நானறிவேன் அக முக ரகஷ்யத்தை - இனி எப்போது உடைப்பாயோ?
- 47 -

Page 26
நெஞ்சில் நிறைந்த நினைவுகள்
*சமகால இலக்கியப் படைப்புக்கள் அவலங்களை மாத்திரமே கூறு கின்றனவேயன்றி, அவற்றிற்குரிய தீர்வுகளைக் கூறுவனவாய் இல்லை. இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதே . ** இவ்வாறு 5 - 3 - 88 சனிக் கிழமை அன்று ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆதவன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை ஆற்றிய ஈழத்து முதுபெரும் எழுத்த்ாளரான "சொக்கன் ஐயா அவர்கள் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் விரிகதிர் பரப்பி; இருளினை அகற்றி ஆதவன் எந்நாளும் தொடர்ந்தும் வெளிவர எனது ஆசிகள் பல” என்று கூறினர்.
*வாழ்க நிரந்தரம்; வாழ்க தமிழ்மொழி; வாழிய வாழியவே" என்னும் பாரதியின் தமிழ்மொழி வாழ்த்கை இனிய குரலில் மாணவி கள் இசைக்க, நண்பகல் 12 மணியளவில், நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. தமிழ்த் தாய் வணக்கத்தைத் தொடர்ந்து, மங்கள விள க் கே ற் றும் வைபவம் நடைபெற்றது உயர்கலைக் கல்லூரி நிர்வாக இயக்குனர் எம். சண்முகநான் அவர்கள் மங்கள விளக்கேற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றியப் பிரதிநிதி சு. சண்முககுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்னர்.
ஆதவன் ஆலோசரும், தமிழ் விரிவுரையாளரும், விழாத் தலைவரு மான நா. குழந்தைவேலு அவர்கள், தமது தலைமையுரையில் ‘ஆதவன் சஞ்சிகை வெளியிடப் படுவதன் நோக்கம் மாணவர்களின் ஆக்க முயற்சி களை ஊக்குவித்து, அவர்களை சிறந்த இலக்கிய கர்தாக்களாக உருவாக்கு வதே’ என்ருர்,
அடுத்து, மாணவர் ஒன்றியப் பொருளாளர் வி. கனகராசாவின் உரை இடம் பெற்றது. ? நான்' சஞ்சி கை யின் துணை ஆசிரியர் ஜோசப் பாலா அர்கள் உரையாற்றுகையில் தற்கால அரசியல் நெருக் கடிகளின் மத்தியிலும் மாணவர்களின் இத்தகைய முயற்சி பாராட்டத் தக்கதாக உள்ளது" என்றர்.
வெளியீட்டுரை நிகழ்த்திய மாணவர் ஒன்றியப் போஷகரும், பொருளியல் விரிவுரையாளருமான அ. குமாரவேல் அவர்கள் "ஏட்டுக் கல்வி மாத்திரம் சிறந்த மனிதர்களை உருவாக்கி விடாது. பல்துறை சார்ந்த அனுபவக் கல்வி அவசியமானது. அறிவினை அளப்பதற்கு அளவு கோல் கிடையாது” என்றர்.
-س 48 س

தொடர்ந்து உரையாற்றிய பிரபல நாவலாசிரியரும், புவியியல் விரி வுரையாளரும1:ன “செங்கை ஆ மிபான்" அவர்கள், ‘மாணவர்கள் ஆக்க இலக்கியங்களை ஆக்கும் முயற்சியிலீடுபடுவதன் மூலம் தமது ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும். இலக்கிய உலகுடன் நீண்ட காலம் தொடர்பு பட்டு இருப்பவன் என்பதால் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவ தில் உள்ள சிரமங்களை நான் அறிவேன். எனது மாணவர்கள் தாம் கெட்டிக்காரர்கள் என்பதனை நிரூபித்து விட்டார்கள்!' எனக் கூறினர்.
ஆதவன் சஞ்சிகை ஆசிரியர் ந. அமிர்தலிங்கம் தமது பதிலுரையில் மாணவர்களது ஆக்கங்கள் தொடர்ந்தும் ஆதவனை அலங்கரிக்கும். சஞ்சிகை பற்றிய தங்களது விமர்சனங்களை அன்புடன் வரவேற்கிருேம். தவறுகள் சுட்டிக் காட்டப்படுமிடத்து திருத்திக் கொள்வோம் எனக் குறிப்பிட்டார். m
பிரதி வழங்கும் வைபவம் இந்து நாகரீக வி ரிவு ரை யாளர் திருமதி. அருள் நங்கை அவர்களது தலைமையில் இடம் பெற்றது. திரு வாளர்கள் இ. சரவணமுத்து, அரசகுலகுரியர், வி. கனகராசா, எஸ் சிவமோகன், எம். சண்முகநாதன், BECON நிர்வாக இயக்குனர் ஆகியோர் பிரதிகளை வாங்கிக் கெளரவித்தனர்.
இறுதியாக நன்றியுரை ஆற்றிய மாணவர் ஒன்றியச் செயலாளரும், ஆதவன் துணையாசிரிருமான மு. சலிந்திரன் தமது உரையில் “இலக்கிய உலகிற்கு நாம் புதியவர்கள். அன்றியும் சிறியவர்கள். நாம் அறிய வேண்டியவை ஏராளம். எமது அழைப்பை ஏற்று விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எமது நன்றிகள்" எனத் தெரிவித்தார்.
அத்துடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவேறின.
தவறுகளை ஒத்துக்கொள்ளும் துணிவும், அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான விருப்பமும்தான் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் ஆகும்.
சில நூல்கள் அறியத்தக்கன; சில நூல்கள் உணரத்தக்கன; சில நூல்கள் நெஞ்சோடும் நினைவோடும் இணையத்தக்கன.
-- 49 -

Page 27
உங்களுக்குத் தேவையான
மணிக்கூடு, கசெற், உத்தரவாதத்துடன் மொத்தமாகவும், சில்லறையாகவும் மலிவாக விற்பவர்களும், சகல விதமான மணிக்கூடுகளும் சிறந்தமுறையில் திருத்துபவர்களும், பான்சிப் பொருட்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள், ரவலிங் பாக்ஸ் முதலியன விற்பவர்களும்.
தேவன் என்டர் பிறைசஸ் வோச் வேக்ஸ் & பான்சி பலஸ் பஸ் நிலையம், - சுன்னுகம்.
நாளுக்கோர் புதுமை நாடுவது உண்மை இவற்றை அளிப்பதுதான்
۶. - ۶ م. - سی و سی ها 99 66g <-- <-- : جس چی۔: سی_ج DIT s གཛ- དམས་ ༦--8 ༢༦་བབ་ལ་ ཡ་(- ཕཡ་ 3 བ:༼-མཁས་ ༦- ང་ཡ་ خرس- مي دهه ۶۰ - - : ماتی است. موسسه
கல்யாணப் பட்டு, காஞ்சிபுரம், ஆரணி, தர்மபுரம், பணுரஸ்
மற்றும் அனைத்து மில் ஜவுளி ரகங்களும் கிடைக்கும்
SRI SEEMATI స్క్రిస్ట్
122, POWER HOUSE ROAD, - JAFFNA.
iiiiiiâÂiiÄiaGa

பொய் முகங்கள்
எங்கள் வீதி எங்கும் வெண் புருக்கள் கத்திகளோடும் கோடரிகளோடும் .
நேற்றைப் பொழுதில் இதழ் சுமந்த மென்னகையோடே எம்முடன் பேசிக் கொண்டிருந்த அண்ணனை இன்று காலை -م இராணுவ அணிவகுப்புடன் அழைத்துப் போனுர்கள். ஏனென்று எமக்கு - ஏன் அண்ணனுக்கும் தெரியவில்லை .
மயங்கி வீழ்ந்த அம்மா - பின்
எழுந்து
கத்திக் குளறியபடி ஒடிச்சென்று எட்டிப் பார்க்கையில் எங்கள் ஆருயிர் அண்ணன் உடைந்து போன உதடுகளால் தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தானும் .
இன்னும் இன்னும் விழும் உதைகளினூடே .
ஏனென்று எமக்கு - ஏன் அவர்களுக்கும் புரிவதில்லை. -ஜி. கே.
4><><>z>2<><><>>1<>-<>

Page 28
சிந்திக்க மூன்று வினுக்கள்-1
கீழ்வரும் மூன்று வினுக்களுக்கும் சரியான விடை எழுதுவோரில் இரு அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதி வாய்ந்த நூல்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
r எத்தனை அனைத்துலக தமிழாராட்சி மகாநாடுகள் நடைபெற்
றுள்ளன? நடைபெற்ற இடங்கள் எவை? 2. சதுர எண், செவ்வக எண், முக்கோணி எண் இவை மூன்ரு
கவும் வரக்கூடிய எண் எது? . யாழ்நகரில் வெளிவரும் மூன்று சஞ்சிகைகளின் பெயர்கள்? உடன் பதில்களை அனுப் பெரிசில்களை தட்டிக்கொள்ளுங்கள். பதில்கள் அனுபபவேண்டிய முகவரி:-
3
ந. அமிர்தலிங்கம்
பரிசு வழங்குவோர்:- இல: 38, அம்பாள் வீதி,
மணி ஓசை அச்சகம், நாயன்மார்கட்டு, 12, சென். பற்றிக்ஸ் வீதி, யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்,
அன்பான வாசகர்களே !
*ஆதவன்" என்ற குழந்தை உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்றன். அவனைக் கைதுக்கி விடுங்கள், காலூன்றி நடப்பதற்கு ஆதவனை ஆக்கி ய வ ர் கள் நாங்கள் வளர்ப்பவர்கள் நீங்கள். இன்றே 'ஆதவன்”*
சந்தாதாரராகுங்கள்; °_呜5ó7 நண்பர்களையும் சந்தாதாரராக ஆக்குங்கள் .
*ஆதவன்” சந்தாதாரர் விண்ணப்பம்
LL LC 0S SS LL LLL LLLL 0S SL S S S L L S S S S S S SL S L S L S S S S S S 0 S S S S S S S S L L S S S S S S S S S S LS S S S S L L L S S S S S S LS S S L S S S S S SLS S S0L LSL LLLL S SL 0
இத்துடன் வருடசந்தா ரூபா 25 (தபால் செலவு உட்பட) அனுப்பு கிறேன். (தபாற்கட்டளைகளை / காசுக்கட்டளைகளை மேற் குறித்த முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)
0LL LSL S SL SL SL SL L 0 0 L LSL S0L LLLSL L SSL L 0SL L L0 LSL SS S SS SS SSL S SLLLSL L SL SL S SL S SS SS SSL S S S S S S SS S SS S LL SSL S S S S S S S S SL LSL LS SL SL S LSS LLLL SS 0S S LSL S S S0L S

.
ஆதவனின் பரந்த ஒளி அனைத்து மாணவரிடமும் பயன் பெற எமது இதயபூர்வ நல்லாசிகள்
றேடியன்ற் கல்வி நிலையம் (அரியாலை - யாழ்ப்பாணம்)
ஆண்டுகள்:- 7, 8, 9, 10, 11
G. C. B. A/L 88, 89, - ம் ஆண்டுப் பிரிவுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
பொருளியல்: திரு. வரதராஜன் கணக்கியல்: திரு. தனபாலசிங்கம் வர்த்தகம்: திரு. ரட்ணம் அளவையியல்" திரு. மனுேகரன் தமிழ்: செல்வி, மீரா இந்து நாகரீகம்: திருமதி. அருள்நங்கை
ஸ்ரார் சயன்ஸ் சென்ரர்
(ஸ்ரான்லி கல்லூரி அருகில் - அரியாலை)
ஆண்டுகள் 6, 7, 8, 9, 10, 11, நடைபெறுகின்றன.
காலை - மாலை இரு பிரிவுகளாக நடைபெறுகின்றன.
தரமான கல்வி பெற தவமுது நாடுங்கள்.
ஸ்ரார் - அரியாலை

Page 29
'ATHAWAN'" PROGRESSWE
INE\XV COI HIGH SY
புதிய உய
ஆரியகுளம் சந்தி,
அங்கேரிக்கப்பட்ட iெவாசிப் 星 இங்கு மட்டுமே தொடர்
G. A. CR, B-A,
விரிவுரைகள் அங்கேரிக்கப்ப
நட்சத்தப்ப
அங்கேரிக்கப்பட்ட பாடங்கள்:-
1. பொருளியல் 2. தமிழ் 3. இந்து நாகரீகம் 4. புவியியல் 5. மெய்யிய
6. அரசறிவியல்
க. பொ, த, (உயர்தரம்), ே சித்தியடைந்தவர்களும், ஆசிரியர்
பட்ட நெறிக்கு புதிவு செய்தவர்களு
பட்டப் படிப்புக்களே,
COMPUTER (BASIC) Lt ஆரம்பம!
@@
-||
இச சஞ்சிகை யாழ்ப்பாணம் பாணி ஆதவன் செயலவையால் -

QUARTERLY MAGAZINE
LLEGE OFR TUIDIES
ர் கல்லூரி
- யாழ்ப்பாணம்.
சட்டப்படிப்பிற்கான விரிவுரைகள் ந்து நடைபெறுகின்றன.
:யே பட்டப்படிப்புகளுக்கான ட்ட விரிவுரையாளர்களால்
கின்றன.
விரிவுரையாளர்கள்:- திரு. அ. குமாரவேல் திரு. நா. குழந்தைவேலு திருமதி. ச. அருள்நங்கை திரு. க. குனராசா திரு. எஸ். வேல் சிவானந்தன் திரு. அ. குமார்
C. B. A L 3 பாடங்களில் தராதப் பத்திரம் பெற்றவர்களும், ம் எம்முடன் தொடர்பு கொண்டு தி தொடரலாம்.
பிற்சி வ குப்புக்களும்
ரஷ்ட உதவி பதிவாளர், திய உயர் கல்லூரி. ரியகுளம் சந்தி, யாழ்ப்பாணம்.
ஓசை அச்சகத்தில் அச்சிட்டு --88 : வெளியிடப்பட்டது.