கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 1988.09-10

Page 1
★ செப்ரம்பர் - ஒக்டோ
 

53)
எழுகிறன்
வ இறுக்கிய முத்திங்கள் மலா
LE ABA

Page 2
மாணவ உலகின் வழிகாட்டி
NIRUI TUIITION CENTREE, KONDAVIL.
A/L 90 - Aug
கலை, வர்த்தக விஞ்ஞான வகுப்புகள்,
பெளதிகவியல்: திரு. செளந்தி இரசாயனவியல்: திரு. செல்வா
3մմյ, பிரயோக கணிதம்: திரு. கிருஷ்ளு விலங்கியல்: திரு. ஞானம் தாவரவியல்: 3605. шл60пт பொருளியல்: திரு. சின்னத்தம்பி கணக்கியல்: திரு. மரியதாஸ் வர்த்தகம்: திரு. தேவா புவியியல்: திரு. வேலா இந்துநாகரீகம்: திருமதி அருள்நங்கை அளவையியல்: திரு. S. S. மளுேகரன் தமிழ்: திரு. குழந்தை அரசறிவியல்: திரு. மஃறுப்
தனித்துவம்மிக்க ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை:
5, 6, 7, 8. 9, 10, 11 ஆண்டுவரை சகல பாடங்
களும் கற்பிக்கப்படுகின்றன.
விபரங்கட்கு: நிரு டீயூசன் சென்ரர் கோண்டாவில்.

ஆதவன்
எழுகிறன்
உதயம் 2 1988 ფაიfo; 7
ஆலோசகர்:- நா. குழந்தைவேலு B. A. (Tamil SPL) M. A. Q. (Cey)D, O, A.S.
நிர்வாக ஆசிரியர்:- ந. அமிர்தலிங்கம்
ஆசிரியர்:- மு. ரவீந்திரன்
துணை ஆசிரியர்:- க. கண்ணதாசன் ந. சத்தியபாலன்
நிர்வாக உறுப்பினர்கள்:-
ந. கமலா இ. அரசகுலசூரியன் ஜே. லூசியன் மரியதாஸ் சி. தர்மபாலன் சு. சண்முககுமார் கா. சசிதரன் க. சர்வலோகராஜா ச. சண்முகலிங்கம்
தொடர்பிற்கு:- **ஆதவன் எழுகிறன்' 38, அம்பாள் வீதி, நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணம்.
செய்க தவம்! நெஞ்சே!
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் -
வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.
செய்க தவம்!
இதய கீதம் "
சமத்துவ உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அறிவினை விசாலப்படுத்தி மனிதப் பிறவிக்குகந்த காரியங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாயிருப்பதே உண்மையான கல்வி என்பது அறிஞர் டால்ஸ்டாயின் கருத்து.
சுல்வி கற்று விட்டால் மட்டும் போதுமா ; நாம் கற்ற கல்வியால் சமுதாயம் பயனுற வேண்டாமா, என்றெண்ணி செயல்படுபவர் கள் எத்தனை பேர்? ஏதோ செய்கின்றர் களே என்று எண்ணுமல் தட்டிப் பறிக்க முயய்கின்றர்களே அவர்களை எண் ணும் போது தான் வேதனை நெஞ்சை அழுத்துகின் றது. போகட்டும் விட்டுவிடுவோம்,
எங்கள் அன்பான வாசகர்களின் சிக்கலை தவிர்ப்பதற்காக ‘ஆதவன்’ புதிய பல அம் சங்களுடன் ‘ஆதவன் எழுகிறன்' எ ன் ற பெயரில் மூன்று மாதங்களுக்கொரு முறை உங்கள் கரங்களில் தவழ்வான். பெயரில் மட்டுமே மாற்றம் ஆசிரியர் குழு அப்படியே தொடர்ந்தியங்கும். "ஆதவன் எழுகிறன்' தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆதவன் செயலவை என்ற அமைப்பினுல் மேற்கொள்ளப்படும். உயர் கல்வி மாணவ ரின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் கலை, இலக்கியம் என்பவற்றை வளர்ப்பதற்
கும் எம்மாலியன்ற பங்களிப் பை ச் செய்
வோம்,

Page 3
இவ்விதழில்
விஜய நகர நாயக்கர் காலத்தில் அங்கத
இலக்கியம் (கட்டுரை) நா. குழந்தைவேலு
B. A.
இதயக் கூட்டினுள்ளே
(கவிதை) - க. கண்ணதாசன்
குருதிப் பாய்ச்சல்
(கட்டு)ை - ம குருபரன்
இலக்கிய வானில்
(சிறுகதை) - புதுமைப் பித்தன்
பல்லவர் காலமும் பக்தி இலக்கிய நெறியும் (கட்டுரை) - க. நாகேஸ்வரன்
M. A.
மார்க்குடன் செவ்வி
இங்கிலாந்தின் பொருளாதார வரலாற்றில் கைத் தொழிற் புரட்சி
(கட்டுரை) - அ. குமாரவேல் B, A,
படைப்புக்கள் யாவும் 5 டைப்பாளர் பொறுப்பே
இளைஞர்கள் ஆக்க இலக்கியங்களை படைக்க முன்வரல் வேண்டும். இதனுல் எதிர்காலத் தில் எமது மண்ணில் சிறந்த எழுத்தாளர் கள் உருவாக முடியும். ‘கட்டுரை வேண்டு மானுல் தருகிறேன், ஆணுல் கதையோ, கவி தையோ என்னுல் முடியாது. எனக்கு எழுத வராது" இதுவே எம்மில் பலரின் கருத்து. எவருமே பிறக்கும் போது எல்லாம் தெரிந்து பிறப்பதில்லை எனவே உங்கள் திறமையில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் உங்களாலும் எழுதமுடியும். வளர்ந்து விட்ட எழுத்தாளருக்கு களம் அமைத்துக் கொடுப் பதல்ல எமது நோக்கம் வளர்ந்து வருபவர் களைத் தட்டிக் கொடுப்பதே சஞ்சிகையின் பணியாகும். இன்று மாணவர்கள் மத்தி யில் இலக்கியம் தேவையற்ற தொன்றக கரு தப்படுகின்றது. இந்நிலை தவிர்க்கப்பட வேண் டியதே. இளைஞர்கள் தம் ஒய்வு நேரத்தை பயனுள்ளதாக்க தரமான இலக்கியங்களைப் படித்தல் வேண்டும். கல்லூரி மட்டத்திலே
இலக்கியக் கருத்தரங்குகள் நடாத்தப்படல் வேண்டும். இவற்றின் மூலம் ஈழத்து இலக்கி யங்கள் இன்னும் சிறப்பான தன்மையினை
எதிர் காலத்தில் பெறமுடியும்.
நிறைய ஆக்கங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றையெல்லாம் இவ்விதழில் பிரசுரிக்க முடியவில்லை. ஆணுலும் அவற்றில் தரமான ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து தொடர் ந் து வரும் இதழ்களில் நிச்சயம் வெளியிடுவோம், தொடர்ந்து எழுதுங்கள். நாம் உறுதியுடன் செயற்பட உங்கள் பங்களிப்பு அவசியம். வாழ் வில் இடர்கள் வருவது சகஜம். ஆணுல் அவற் றை யெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் முன்நோக்கிச் செல்வோம். தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றியமைப்போம்.
ஆதவன் அந்தியில் மறைந்தாலும் விடிய லுக்காய் மீண்டும் எழுகிறன் .
- ஆசிரியர்

சிந்தனைத் துளிகள்
உள்ளத்தில் ஊக்கமும், வீறும், முயற்சியும் வேண்டும். அஃதே உண்மைப் பொருள். வேறு மண்ணினப் பொருள்: ஒருநாள் நில்லாது நீங்கிப்போகும். உள்ளச் செல்வமே உள்ள செல்வம். வெள்ளிச் செல்வம் விரைவில் அகலும். அப்படிக் கைப்பொருளை இழந்தாலும் ஊக்க முடையவர் மனமுடையார். இது போனல் இன்னும் ஈட்டிக்கொள்வோம், வலுவிருக்கிறது என்று தைரியங் கொள்வர். அத்தகைய அசைவில்லாத ஊக்கமுடையவரிடம் ஆக்கம் (செல்வம்) வழிதேடி வந்துசேரும். நாம் பாச்சும் நீருக்குத் தக்கபடி செடிகளில் மலர் குலுங்குகின்றது. அது போலவே உள்ளத் திண்மைக்கும், உண்மைக்கும், ஊக்கத்திற்கும் தக்க படியே வாழ்வில் மாந்தருக்கு உயர்வு கிடைக்கின்றது. ஒரு எளிய இராணுவச் சேவகனுயிருந்த நெப்போலியன் எப்படிப் பிரெஞ்சு தேசத் திற்கே அரசனனன்? அநாதியாக சோற்றிற்குக்கூடக் கூலிவேலை செய்த முசோலினி எப்படி இத்தாலிக்கே சர்வாதிகாரியானன்? நாடோடியாகத் திரிந்த மாக்வலிம் கோர்க்கி (MAXIM GORKY) எப்படி உலகெல்லாம் புகழும் எழுத்தாளனகி, லெனினுக்குக் கண்போலிருந்தான்? உயிருக்கே ஆபத்துடன் நாடுதோறும் திரிந்து பலவாறு வருந்திய லெனின் எவ்வாறு சோவியத் நாட்டின் இரட்சகனணுன்? எளிய சிவாஜி எப்படிச் சத்திரபதி யானன்? எல்லாம் உள்ளத்தால் திண்மையால், முயற்சியால், தைரியத் தால் அன்றே. நீருக்குத்தக்க மலர் நீட்டம், வீறுக்குத் தக்க வினைநீட்டம்.
உயர்ந்த எண்ணங்களைக் கொள்ளுக, முயலுக. அவை காலவசத்தால் கைகூடாமற்போஞலும், தவறது வெற்றிபெற்றதற்குச் சமானமேயாகும். ஏனெனில், உயர்ந்த எண்ணங்கள் தன் காலத்தில் இல்லாவிடினும் பிற்காலத்திலாவது நிறைவேறும். கால் மார்க்ஸ் (KARL MARX) கைக்கொண்ட பொதுவுடமைக் கொள்கை அவர் காலத்தில் நிறைவேற வில்லை பாவம் வறுமையில் வாடியிருந்தார். எனினும் உள்ளங் குறைய வில்லை. அவருக்குப் பின் லெனின் அவர் எண்ணத்தையே நிறைவேற்றி ஒரு பெரிய நாட்டையே காப்பாற்றினர். உயர்ந்த எண்ணங்கள் உண்மை யின் சக்திபெறும். ஒரு காலத்தில் தீவிரமாக நிறைவேறும். உரங்கொண்ட உள்ளமுடையார், தமது காரியம் சிதைந்தாலும் தளரமாட்டரர்கள். பின்னும் வீறுகொண்டு முயல்வர். உள்ளவுரன் இல்லாதவர் உலகில் பலருக்கு உதவும் வன்மையுடையோம் என்னும் பெருமையெய்தார்.
பெரிய, உடலால் பயனில்லை. பெரிய துணிந்த உள்ளமே பெருமை யுடையது. யானை, பேருடலும் கூர்கொம்பும் உடையது எனினும் தன்னிற் கிறிய உடலுள்ள புலி எதிர்த்துக் தாக்கினல் அஞ்சி நடுங்கும். உள்ளததின் வீறு, ஆண்மை, திண்மையே ஒருவனுக்குச் சரியரன பல மாகும், அறிவாகும். அவ்வாறு மனவுறுதியில்லாதவர் மரத்தினை ஒப்பர்.
-- சுவாமி சுத்தானந்த பாரதியார்.

Page 4
கனவுகள்
-செல்வி ந. பரிமளா
COOC00CD00C00C00C0
தமிழ் வானம் பொழிகின்ற
மழையாகுவேன் - அந்த
அமிழ் தான கவி பாடி அலை மோதுவேன்.
கனிவான இசை பாடும்
குயிலாகுவேன் - நல்ல
இனிதான தமிழ் பேசும்
கிளியாகுவேன்.
கலே தோறும் கமழ்கின்ற
கவிஞணுகுவேன் - உயர்ந்த
கலை ஞானம் சொரிகின்ற
கருத்தாகுவேன்.
மலர் தோறு மிருக்கின்ற
மணமாகுவேன் - மடுவில்
அலர் தோறு மின்னிக்கின்ற
தேனுகுவேன்.
இசைவாணர் இசைக்கின்ற
இசையாகுவேன் - என்றன்
தசையோடும் நரம்போடும்
தமிழ் பேசுவேன்.
O
O O
O O
O O O
ஆதவனே
எழுவாய்!
OC00COOCOCOOCOCO
வருவாய் செந்தோழா - ஒளி தருவாய் உயிர்த் தலைவா திருவே! நீவரும் போதில் - புவி துலங்கும், அழகு இலங்கும்.
வந்திட நிலமகள் நகுவாள் -
இருள் வெந்திடும் நிலை கண்டுவப்பாள் தந்திடும் ஒளியில் சிலிர்ப்பாள்-இன் தமிழே போலக் குழைவாள்.
ஒளிக் கதிர்க் கூர் அம்பு - வந்து உலகிடை மெல்ல வீழ பலிக்கடா எனவே ஆகிப்-பொய்மை பனி போல்ச் சிதறி மாளும்,
கனவிருள் போர்வையைக் கிழித்து -
els).96 கயமை பொருமையைக் கழித்து தினமும் வீறுடன் எழுந்து - மானுட துயரெலாம் போக்கியே அருள்வாய்,
--செல்வி. பூரீதேவி கணேசசுந்தரன்
LLeuLLLLAqLLJLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLL
மலர் சுகந்த மணம் பரப்ப வாசகர்களாகிய தங்களிடமிருந்து தர மான ஆக்கங்களை எதிர் பார்க்கின்ருேம். விமர்சனக் கடிதங்களை வரவேற்
கின்றேம்.
நாம் உறுதியுடன் செயற்ப. உங்கள் பங்களிப்பவசியம்.
-**ஆதவன் செயலவை'

விஜய நகர நாயக்கர் காலத்தில்
அங்கத இலக்கியம் 50. Sg560)S6a/g) B. A. (Tamil Sp) M. A. Q. (Cey) D. O. A.S.
தமிழிலக்கிய வரலாற்றிலே வசைக்கவி பெருந்தொகையாக எழுந்த காலம் விஜய நகர நாயக்கர் காலம் எனலாம். வசைக்கவி இக்காலத்தில் பெருத்தொகையாக எழுதற்கு இக் காலத்துச் சூழ்நிலை முக்கிய காரண மாய் இருந்தது என்பதிற் சந்தேகமல்லை. நாடாட்சியானது, பிற மதத் தினராகிய முஸ்லீம்கள் கையிலும், பிற மொழியினரான விஜய நகர மன்ன ர் க ள் கையிலும் சிக்கிக் கொண்டமையினலும், அவர்கள் ஆட்சி அடிக்கடி மாறுதலுற்றமையினலும் நாட்டு மக்களிடையே வறுமை குடிகொண்டதோடு அவர்கள் தத்தம் ஊர்களைவிட்டு ஓடிப் பாதுகாவலுள்ள இடங்களைத் தேடி அலேய வேண்டிய நிலை ஏற்படலா யிற்று. இங்ங்னம் நிம்மதியற்ற நிலையிலிருந்த மக்களின் உள்ளத்திலே வெறுப்புண்ர்ச்சி தோன்றுதல் இயல்பாகும். வாழ்க்கையில் மக்களுக்கு ஒரு திருப்தி மனப்பான்மை ஏற்பட முடியாத இச் சூழ்நிலை வசைக்கவி தோன்றுவதற்கு வாய்ப்பாக இருந்தது எனலாம்.
ஒரு சமுதாயத்திலோ, தனிமனிதனிடத்திலோ காணப்படும் ஊழல்களையும், குறைபாடுகளையும் கடிந்து அவற்றை ஒழிக்கும் நோக் காகக் குத்தலான முறையில் அவற்றை எடுத்துக்கூறும் இலக்கியம் வசைக்கவி அல்லது அங்கதம் எனப்படும். அங்கதம்; செய்யுள் இலக் கியத்தில் மட்டுமின்றி, இன்பியல் நாடகத்திலும், நாவல் முதலிய உரைநடை இலக்கியத்திலும் வருதலுண்டு, மக்கள் சமுதாயத்திலே இகழ்ச்சிக்கு ஏதுவாயுள்ள ஒழுகலாற்றினை ஒழிக்கும் நோக்கமாக அது கையாளப்படுமிடத்து, அது பெரும்பாலும் நகைச்சுவையோடு கூடி வருதலைக் காணலாம். அந்த நகை, ஒரு நையாண்டிச் சிரிப்பாவ தன்றி அர்த்தமற்ற விகடச் சிரிப்பு ஆகமாட்டாது ஒரு ஆசிரியன் தன் னுடைய மாணவர்களைத் திருத்தப் புகும்பொழுது கைக்கொள்ளும் வழி வகைகளுக்கும், அங்கத ஆசிரியன் கைக்கொள்வனவற்றிற்கும் வேறு பாடு உண்டு. ஆசிரியன் அவர்களுடைய குற்றங்களை நேரிலே தர்க்க முறையாக எடுற்துக் கூறிக் கடிந்து பேசுதலை நாம் பெரும்பாலும் காண லாம். அங்கத ஆசிரியன், இகழ்ச்சிக்கு உரியவைற்றை நேரில் எடுத் துக் கூருமல் மறைமுகமாக அல்லது குறிப்பாக எடுத்துக் காட்டியும் புகழ்ச்சிக்கு உரியவற்றேடு சார்த்தியும் ஒப்பிட்டும் மனத்தைப் புண் படுத்தாத வகையில் நகைச்சுவை தோன்றக் கூறியும் கடிதல் உண்டு. இவ்வாறு புத்தி சாதுரியங்களைக் கையாளாது நேரிலே வன்மையாக வும் குத்தலாகவும் வெகுளிச் சுவை தோன்றக் கடிந்து கூறுதலுமுண்டு.
- 5 -

Page 5
அவன் எத்தகைய உபாயங்களைக் கையாண்டபோதும், சமூகத்தை யும் தனி மனிதனையும் திருத்துதல் ஆகிய ஒன்றனை மட்டுமே நோக்க மாகக் கொள்ளுகின்றன்.
அங்கதம், இலத்தீன் முதலிய இலக்கிய வளமுள்ள தொன் மொழி களிலும் ஆங்கிலம் முதலிய இக்கால ஐரோப்பிய மொழிகளிலும் சிறப்புற்று விளங்குதலைக் காணலாம். அங்கதம்பற்றிக் தொல் காப்பியர் கூறுவதில் இருந்து அது அவர் காலத்திற்கு முன்னரே தமி ழிலக்கியத்தில் இடம்பெற்றுவிட்டது என்பது புலனுகின்றது. அதுபற்றித் தொல்காப்பியர் கூறுமிடத்து,
'அங்கதந் தானே அரிறபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே” 'செம்பொருள் ஆயின வசையெனப் படுமே" ‘மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும்" வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றயின் அங்கதச் செய்யுள் என்மஞர் புலவர்"
எனக் கூறியிருத்தலைக் காணலாம். வசையொடும், நசையொடும் என வரும் சூத்திரப் பகுதியிலே உள்ள நசை" என்னும் சொல் நகை' என்று இருந்திருக்குமோ என்று கணேசையர் தம் அடிக்குறிப்பிற் கூறி யிருப்பது சிந்தனைக்கு உரியதொன்ருகும். அங்கதத்திற்குரிய அம்சங்களுள் நகை முக்கியமானதொன்ருகும்; என ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளர் கூறியிருடபது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அங்கதம் என்பது, வெளிப்படையாகக் கூறுதல், காந்த மொழியால் கூறுதல் என இருவகைப்படும் என்பது மேலே உள்ள சூத்திரங்களினல் அறியக்சிடக்கின்றது. வாய்க்காவது சொல்லும் இகழ்ச்சி, செம்பொருள் அங்கதம் ஆகும். இகழ்ச்சியை மறைத்துக் கூறுதல் பழிகரப்பு அங்கதம் ஆகும். இத்தகைய பழிகரப்பு அங்கதமே இலக்கியத்தில் பெரிதும் கை யாளப்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக,
‘'தேவ ரனயர் கயவர் அவருந்தாம் மேவன செய் தொழுக லான்'
என்னும் திருக்குறள் வெண்பாவை எடுத்துக் காட்டலாம். இகழ்ச் சிக் குறிப்புத் தோன்றுமாறு கயவரை இழித்துக் கூறவந்த புலவன் அவர்களைக் தேவனேடு ஒப்பிட்டுக் கூறுவதிலுள்ள இலக்கிய நலன் சுவைத்து இன்புறற்பாலது. புகழ்வதுபோல பழித்தல் என்னும் அணி வகையும் அங்கதத்தின் பாற்படுவதொன்ருகும். இதற்கு புறநானூற்றில் உள்ள மேல்வரும் செய்யுட்பகுதி தக்க உதாரணமாகும். ஒளவையார்,
- 6 -

அதியமான் நெடுமானஞ்சியால் தொண்டைமானிடம் தூதாக அனுப்பப்பட, தொண்டைமான் ஒளவையாருக்குத தனது ஆயுத சாலேயைக் காட்டிய போது பாடியது -
‘இவ்வே,
பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து கொல்துறைக்கு உற்றில மாதோ'
இச் செய்யுட் பகுதிக்கண் தொண்டைமானுடைய படைக்கலங்கள் புகழப்படுவனபோலவும் அதியமானுடைய படைக்கலங்கள் இகழப்படுவன போலவும் கூறப்பட்டிருக்கின்றன. எனினும், உண்மையில் அவர் தொண் டைமானுடைய ஆயுதங்களே இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றப் பழித்துக் கூறியிருப்பதுகண்டு இன்புறற்பால்து:
தமிழிலக்கிய வரலாற்றிலே அங்கதம் மூவேந்தர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஆங்காங்கு காணப்படினும் அங்கதப் பாட்டுக்கள் விஜய நகர நாயக்கர் காலத்திலே பெருந்தொகையாக எழுந்ததுபோல அதற்குமுன் எழவில்லை என்றே கூறலாம். அவ்வாறு எழுதுவதற்கு இக் காலச் சூழ்நிலை முக்கிய காரணமாய் இருந்தது. செல்வம் சிலரிடத்தில் மட்டுமே தங்கியிருக்க பலர் பசிப்பிணியால் வாடும்நிலை ஏற்படும் காலத் தில் அவர்கள் மனத்திலே திருப்திக்குறைவும், கொந்தளிப்பும் ஏற்படு தல் இயல்பாகும் அது புலவர்கள் மனதிலும் உண்டாக அவர்கள் வாயி லிருந்து வசைக்கவி வெளிவருகின்றது. இக்காலத்திலே தமிழ்ப் புலவர் களை ஆதரிப்பார் யாருமில்லை. மூவேந்தர் அற்று முடியுமற்று, சங்கமும் போய், பாவேந்தர் காற்றில் இலவம் பஞ்சாகப் பறந்தனர். குன்றும் குழியும் குறுகி வழிநடந்து அங்காடி வீதிகளிலே அலேந்து திரிந்தனர். விண்ணிரும் வற்றிப், புவி நீரும் வற்றி வெதும்பி அழக் கண்ணிரும் புலவோர் தவித்த காலம் இது. இக்காலப்பிரிவில் இவ்வசைக்கவி மரபினை இரட்டைப் புலவர் தொடக்கிவைத்தபோதும் அது வளர்ச்சி பெறுவதை காளமேகப் புலவரின் பாடல்களில் காணலாம். இரட்டையர் பாடிய வசைக்கவிக்கு மேல்வரும் செய்யுள் ஒர் உதாரணம் ஆகும். அவர்கள் பாண்டியன் சமூகத்தில் சென்று பாடிப் பரிசுபெறும் சமயத்தில் அவ னுடைய மந்திரி ஒருவன் அதை விலக்க, அவன்மீது கோபங்கொண்டு பாடியது -
**புராதனமான தமிழ்ப் புலவிரிந்தப் புன்குரங்கு மராமரம் விட்டிங்கு வந்த தென்ணுேவகை கேட்டிலையோ தராதலம் வென்ற தமிழ் மாறனையுந்தன் தம்பியையும் இராகவ னென்றுமி லக்குவ னென்று மிருந்ததுவே"
ཡང་ཡང་མ་ 7 ཡང་དང་ཡང་

Page 6
காளமேகப் புலவர் இடைச்சியர் மிகுதியாய்த் தண்ணிர் கலந்து மோர் விற்பதைக்கண்டு, இகழ்ச்சிக் குறிப்பும் நக்ைச்சுவையும் ஒருங்கு தோன்ற மேல்வரும் செய்யுளிற் கூறியிருப்பது படித்து இன்புறற் பாலது.
**காரென்று பேர் படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின் வாரொன்று மென்முலைய ராச்சியர்கை வந்ததற்பின் மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றயே??
நீ வானத்தில் இருக்கும்போது "மேகம்' என்று பேர் பெறுகிருய் நிலத்திற்கு வந்த பிறகு ‘நீர்" என்று பேர் பெறுகிருய். இந்த மங்கை யின் கையை அடையும்போது "மோர்' என்று பேர் பெறுகிருய் என்பது பாடலின் பொருள்.
காளமேகப் புலவர் ஒரு முறை ஓர் ஊருக்குச் சென்றபொழுது அங் குள்ள சத்திரத்தில் அவருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ ருக்கு அப்பேர்து கடும்பசி, உணவுக்கு நேரமாயிற்று. சமையல் ஆகிக் கொண்டிருப்பதாகத் திரும்ப திரும்ப அறிவிக்கப்பட்டதேயன்றி, உணவு வந்து சேரவில்லை. இறுதியாக ஆட்கள் வந்து, இலையிட்டு உணவு பரிமாறிய போது, காலம் தாழ்ந்து அவர்கள் உணவு பரிமாறியதைப்பற்றி நகைச் சுவையாகப் பாடிய பாடல் வருமாறு
*கத்துகடல் சூழ் நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையில்இட ஊர் அடங்கும் ஓர் அகப்பை அன்னம் இலையில் இட வெள்ளி எழும்'
இந்தச் சத்திரத்தில் உணவு சமைப்பவர்களுக்கு பொழுது அஸ்த மிக்கும்போது அரிசி வந்து சேரும், அதைக்குத்தி உலையில் இடும்போது வார் அமைதியாய் உறங்கிவிடும். சமைத்த சேர்ற்றை அகப்பையால் எடுத்து இலையில் பரிமாறும்போது, பொழுது விடியத் தொடங்குவதற்கு அறிகுறியாய் கிழக்கே வெள்ளி முளைக்கும் என்பது இச் செய்யுளின் பொருள். இத்தகைய சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய வசைக்கவிகள் இக்காலப் பிரிவில் எழுந்தி தனிப்பாடல்களில் காணலாம். இத்தகைய அங்கதத்தின் பாற்படும் பாடல்கள் பல காணப்பட்டபோதும் தமிழிலக் கியத்தில் அங்கதம் ஓர் இலக்கியத் துறையாகக் குறிப்பிடத்தக்கவளவுக்கு வளர்ச்சியடைந்து இருந்ததென்று கூறுதல் கடினமாகும். வீரமாமுனி வரின் "பரமார்த்த குரு கதை அங்கத இலக்கியத் துறையில் குறிப் பிடத்தக்க முயற்சியாகக் கருதப்படுகின்றது. ஆயினும் பிர்மஞர் வில்லி யப்பிள்ளையின் பஞ்சலட்சண திருமுக வுலாசமும், கவிமணி தேசிகலிநா
ج۔۔ 8-س۔

யகம்பிள்ளையின் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் தமிழி (லக்கியத்தின் அங்கத இலக்கியத் துறையில் ஈடிணையற்றனவாகக் கரு தத் தக்கன. இவற்றிற்குக் காலத்தால் முந்திய, ஈழத்து வண்ணுர்பண்ணை நட்டுவச் சுப்பையர் இயற்றிய கனகி புராணம் அங்கத இலக்கிய வரிசை யில் வைத்து எண்ணத்தக்க வெற்றி வாய்ந்ததாகும். அப் புராணத்தி லுள்ள செய்யுட்களுக்கு ஓர் உதாரணம் வருமாறு.
‘நடந்தாளொரு கன்னி மாராச கேசரி நாட்டிற் கொங்கைக் குடந்தானசைய வொயிலா யதுகண்டு கொற்றவரும் தொடர்ந்தார்சந் நியாசிகள் யோகம்விட் டார் சுத்த
சைவ ரெல்லாம் மடந்தானடைதுச் சிவபூசையுங் கட்டி வைத்தனரே'
தமிழில் அங்கதம் நூல் வடிவில் வருதலை ஐரோப்பியர் காலப்பகுதி இலக்கியத்திலும், இருபதாம் நூற்ருண்டு இலக்கியத்திலும் காணலாம்.
a 3 1.
சிர்காழியின் பண்பு
தொகுப்பு: க. சர்வலோகராஜா
அமைதியும், அன்பும் கனிந்த வதனமும், தமது வித்வத் தன்மையை எண்ணிக் கிஞ்சித்தும் அலட்டிக்கொள்ளாத பண்பும் கொண்டவர் மறைந்த இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். அவர் தமது குருவின்மீதும், தான் சார்ந்த துறையான சங்கீதத்தின்மீதும் கொண்ட பக்தி வார்த்தையால் அளவிடமுடியாதது. -
அண்ணுமலை பல்கலேக் கழகத்தின் இசைத்துறைக்குத் தலைவாய் இருந்த அவர் வாரமிருமுறை அங்கு வந்து வகுப்பெடுத்துவிட்டுப் போவார். இசைக் கல்லூரியின் உள்ளே செல்லும் எவரும் தமது செருப்பு களை வெளியே களற்றிவைத்துவிட்டு, உள்ளே செல்வது வழக்கம். ஒரு முறை, சீர்காழி அவர்கள் இசைக்கல்லூரிக்கு வரும்பொழுது பேராசிரியர் S. V. பார்த்தசாரதியுடன் பேசிக்கொண்டு வந்த ‘பிராக்கில் செருப்புகளைக் கழற்ருமல் படிகளைக் கடந்து காலே உள்ளேவைத்துவிட்டார். மறுகணம் தமது தவறை உணர்ந்து துடிதுடித்தவராய், “முருகா முருகா" என்று வாய் முணுமுணுக்க வெளியே விரைந்து சென்ருர். வெளியே தன் செருப்புகளைக் கழற்றிவைத்து தமது தவறுக்குப் பரிகாரமாய் இசைக்கல் லூரியின் வாசல் படிகளை மூன்று முறை வணங்கிய பின்பே உள்ளே சென்ழுர்,
இது இசையின்மீது அவர்கொண்ட பக்தியைக் காட்டுவதோடல்லாமல் அங்கு நின்ற மாணவர்களுக்கு ஒர் அரிய படிப்பினையாயும் அமைந்தது.
حسييه 9 سم.

Page 7
இதயக் கூட்டினுள்ளே s - க. கண்ணதாசன்
அம்மா.1 கனவு சுமந்த விழிகளுடன் என் - எதிர்காலம் நோக்கி காத்துக் கிடக்கும் என்னினிய அம்மா!
தாங்க முடியாத இம்சைப்பட்டு என்னை - நீ ஈன்றெடுத்த கணத்தில் என்ன எண்ணிக் கொண்டாய்?
இதோ - இந்த நாட்டின் tocð6ðI söT -
உதித்திருக்கிறன் என்று தானே?
இல்லைத் தாயே உந்தன் - எண்ணத்தை மாற்றிக் கொள்.
இங்கு மன்னர்கள் சித்திரவதைப் படுவதற்கும் ஒர் பொழுதில் - அற்ப ஆயுளில் இறந்து பட்டுப் போகவுமே
S 6irst off ...
நீ - எனக்கு முலைப்பாலூட்டும் போதெல்லாம் வீரம் ஊட்டுவதாய் அல்லவோ எண்ணியிருப்பாய் ..?
இப்போதெல்லாம் - என்னுல்
நிமிர்ந்து நடக்கக் கூட
முடிவதில்லை .
இதயக் கூட்டினுள்ளே -
எப்போதுமே ஏதோ - ஒரு “ Ju'(up ditems கொடுரமாய் துருத்திக்
கொண்டிருக்கும்.
உயிர் வாழ்வது மட்டுமே இப்போது இலட்சியமாய் உள்ளது எனக்கு .
வேலிகள் தோறும் கண்களாய் காது வரை = கிழிந்த வாய்களாய்
நான் -
விமர்சிக்கப் படினும் -
ஆடை இன்றி அம்மணமாக வேனும், உயிர் வாழ்வது மட்டுமே இப்போது இலட்சியமாய் எனக்கு .
உள்ளது
என் அருமை அம்மாவே எனது தேசம் - இன்று அவ்வாறுதானே உள்ளது?.
சஞ்சிகை தொடர்ந்து வெளிவர உற்சாகமூட்டிய
அறிஞர்களும்,
இதழை அழகாக்க ஆக்கங்களை தநதுதவிய கலைஞர்களும், நிதிப்பழுவை நீக்க விளம்பரங்கள் தந்துதவிய விளம்பரதாரர்களும், எமது நன்றிக்குரிய
வர்கள்.
- **ஆதவன் செயலவை
ー10ー

குருதிப்பாய்ச்சல் -
(ρ. Θαβυθόόν
அண்மைக்காலங்களில் குருதிஇழப்பு சர்வசாதாரணவிடயமாகி விட்டது. குத்து, வெட்டுக்காயங்கள், பொதுவாக குருதி இழப்பிற்கு காரணமாக அமைகின்றன. ஒரு லீற்றர் வரையான குருதி இழப்பு உடலைப் பெருமளவில் பாதிப்பதில்லை. இதன்போது இழக்கப்பட்ட குருதியானது குருதியிழப்பைத் தொடாந்துவரும் ஒரிரு மாதங்களில் புதிதாக உருவாக் கப்படும் குருதியினல் நிவர்த்திசெய்யப்படுகின்றது. இதற்குத் தேவை யானது இரும்புச்சத்தைப் போதியளவில்கொண்ட உணவேயாகும். ஆனல் குருதியானது பெருமளவில் இழக்கப்படின் குறிப்பாக குருதியின் அளவானது சாதாரணமாக உடலில் உள்ள குருதியின் அளவின் 40% குறையுமாயின் குருதிப்பாய்ச்சல் அத்தியாவசியமானதொன்ருகிறது.
குருதிப்பாய்ச்சலின்போது குருதியை வாங்குபவரது உடலில் உள்ள குருதிக்கு பொருத்தமில்லாத வகையைச்சேர்ந்த குருதி செலுத்தப்படின் குருதியில் உள்ள செங்குருதிக்கலங்கள் பல ஒன்று சேர்ந்து சிறுகட்டிகளை உருவாக்கும். இச் சிறுகட்டிகள் மயிர்த்துளேக்குழாய்கள் எனும் நுண்ணிய குருதிக்குழாய்களை அடைத்துப் பாரிய விளேவுகளே ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகம் பாதிக்கப்படுவதால் சிறுநீர் உற்பத்தியாக்கம் தடைப்படும். சில சமயங்களில் இறப்பும் ஏற்படலாம். 20ம் நூற்றண்டின் ஆரம்ப காலம்வரை அநேகமாக குருதிப்பாய்ச்சல் தோல்வியிலே முடிவடைந்தது. பின்னர் லான்டஸ்ப்ெனர் (Landsteiner) என்பவர் குருதியைப் பல கூட்டங்களாகப் பாகுபடுத்தினர். இவரது பாகுபாட்டின் அடிப்படையி லேயே தற்போது குருதிப்பாய்ச்சல் வெற்றிகரமாக நிகழ்த்தப்படுகிறது.
குருதியில் உள்ள செங்குழியங்கள் எனப்படும் கலங்களில் உள்ள Agglutinogen எனப்படும் உடல் எதிரியை அடிப்படையாகக் கொண்டு குருதி 4 கூடடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மனித செங்குழியத்தில் 2 வகையான Agglutinogen கள் காணப்படுகின்றன.
960Guitoug07:- Agglutinogen A
Agglutinogen B
இவ்விரு Agglutinogen கள் குருதியில் இருப்பதை அல்லது இல்லா
திருப்பதை அடிப்படையாகக் கொண்டு குருதியானது A, B, AB, O எனும் 4 கூட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
Agglutinogen A எனும் வகை உடல் எதிரியைக் செங்குருதிக் கலங் களில் கொண்ட குருதியானது குருதிக்கூட்டம் A யைச் சேர்ந்ததாகும்.
سسته i II مساحت

Page 8
Agglutinogen B ஐக் கொண்ட குருதியானது குருதிக்கூட்டம் B ஐச் (Bsiss5.orgh. Agglutinogen A, Agglutinogen B 67grth 2 avó0560tu யும் கொண்ட குருதிக்கூட்டம் AB ஐச் சேர்ந்ததாகும். Agglutinogen A யையோ Agglutinogen B யையோ கொண்டிராத குருதிக்கூட்டம் O ஐச் சேர்ந்ததாகும்.
குருதியின் குருதிப்பாய்பொருளில் Agglutinin எனப்படும் பதார்த் தம் காணப்படுகிறது. குருதிக்கூட்டம் A வகையைச் சேர்ந்த குருதியின் குருதிப்பாயத்தில் Agglutinin Anti B எனும் பதார்த்தம் காணப் படும். இதைப்போல குருதிக்கூட்டம் B யில் Agglutinin Anti A யும் 5QU56)&isin.' Lluh AB Slav Agglutinin Anti A, Agglutinin Anti B ஆகிய இரண்டும் காணப்படும். குருதிக்கூட்டம் 0 வில் Agglutinin A யோ Agglutinin B Gunt is T600TLJuliot LITs. VA
Agglutinogen A ஐக் கொண்ட குருதிக்கூட்டம் A ஐச் சேர்ந்த குருதி யானது Agglutinin Anti A ஐக் கொண்ட குருதிக்கூட்டம் B ஐச் சேர்ந்த குருதியுடன் கலக்கப்படின் செங்குருதிக்கலங்கள் பல ஒன்று சேர்ந்து சிறுகட்டிகளை உருவாக்கும். இந் நிகழ்ச்சி ஒருங்கொட்டல் என அழைக் கப்படுகிறது. இதேபோல் Agglutinogen B ஐக் கொண்ட குருதியுடன் Agglutinin Anti B ஐக் கொண்ட குருதியைக் கலக்கும்போதும் ஒருங் Glgsmu'Láv sßsb56ör sog. 95m 65 Agglutinogen A Aggiutinin Anti A uyl-gith Agglutinogen B Agglutinin Anti B uplgith சேரும்போது ஒருங்கொட்டல் நிசழ்கின்றது.
இதன்படி A வகைக் குருதியுடையவர்க்கு A வகைக்குருதியும் O வகைக்குருதியும் வழங்கலாம். B வகைக் குருதியுடையவருக்கு B வகைக்குருதியும் O வகைக்குருதி யும் வழங்கலாம். AB வகைக் குருதியுடையவருக்கு எவ்வகைக்குருதியும் வழங்கலாம்.
O வகைக் குருதியுடையவருக்கு O வகைக்குருதி மட்டுமே வழங்கலாம்.
ஒருங்கொட்டலைத் தவிர்த்துக்கொள்வதற்கு நோயாளியின் குருதியின் கூட்டத்தைச் சேர்ந்த குருதியைச் செலுத்துவதே சிறந்ததாகும். அதே கூட்டத்தைச் சேர்ந்த குருதி கிடைக்காதவிடத்து O வகைக்குருதியைச் செலுத்தலாம். O வகைக் குருதியின் செங்குழியங்களில் எவ்வகையான Agglutinogen களும் காணப்படாததால் எவ்வகையான குருதியுடைய நோயாளிக்கும் இக்கூட்டத்தைச் சேர்ந்த குருதியைச் சேர்க்கலாம். இத ஞல் இது 'பொதுவழங்கி" எனக் கூறப்படும்.
- 2 -

குருதிக்கூட்டம் AB ஐச் சேர்ந்த குருதியின் குருதிப்பாயத்தில் எவ் வகையான Agglutinin களும் காணப்படாததால் இக் கூட்டத்தைச் சேர்ந்த குருதியையுடைய நோயாளிக்கு எக்கூட்டத்தைச் சேர்ந்த குருதி யையும் வழங்கலாம். இதல்ை இது "பொதுவாங்கி" எனக் கூறப்படும்.
1940ம் ஆண்டு மேலுமொரு முக்கியமான குருதிக்கூட்டம் கண்டு பிடிக்கப்பட்டது. இது ரீசஸ் காரணி (Rhesus factor) எனப்பெயரிடப் lull-gs.
இது செங்குருதிக்கலங்களில் உள்ள Agglutinogen D எனப்படும் பதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது Agglutinogen Dஐ செங்குருதிக்கலங்களில் கொண்ட குருதி யுடையவர்கள் RH + (RH நேர்) எனப்படுவர். உலக சனத்தொகையில் 85% இவ்வாறனவர்கள். மிகுதி 15% மக்கள் தமது செங்குருதிக்கலங் a56fhốð Agglutinogen D gibsonu sies Gi7. 296.Jiřes 5în RH- (RH LD60MpD) 676 T' படுவர். ஆகவே RH காரணியையும் கருத்தில் எடுத்து குருதியை பின் வருமாறு பாகுபடுத்தலாம்.
A- AB-- BAB -- ABO- O
குருதியில் இயற்கையாக Agglutinin Anti D காணப்படுவதில்லை. RH- குருதியுடையவருக்கு RH+ குருதி செலுத்தப்படிச்ே எவ்வித வேறுபாடும் காணப்படமாட்டாது. ஆயினும் Agglutinogen Anti D குருதியில் மெதுவான வேகத்தில் உருவாக்கப்படும். இதனல் 2ம் முறை யாக RH+ குருதி செலுத்தப்படின் ஒருங்கொட்டல் நிகழும். RH+ குருதியுடையவருக்கு RH+ குருதியையோ RH- குருதியையோ செலுத் தலாம். RH- குருதியிடைய ஆண்களைப் பொறுத்தவரையில் ஒருமுறை RH+ குருதியைச் செலுத்தலாம். எனினும் 2ம் முறை குருதிப்பாய்ச்ச லின்போது பொருத்தமான குகுதிக்கூட்டம் பாவிக்க வேண்டும்.
RH- குருதியையுட்ைய இளம்பெண்களுக்கு RH- குருதியே வழங் க்ப்பட வேண்டும். ஏனெனில் RH+ குருதி வழங்கப்பட்டால் குருதியில் Agglutinin Anti D உருவாக்கப்படும். இது அப் பெண்ணில் உருவாகும் குழந்தையின் குருதி RH+ ஆக இருப்பின் குழந்தையின் குருதியில் ஒருங்கொட்டலை ஏற்படுத்தும். சிலவேளைகளில் இறப்பு எற்படலாம். அல் லாலிடில் குழந்தை மஞ்சட்காமாலையினல் பாதிக்கப்படும்.
ஆகவே குருதிப்பாய்ச்சலின்போது ABO பாகுபாட்டிற்கிணங்கவும் RH காரணிக்கிணங்கவும் குருதிப்பாய்ச்சல் நிகழ்த்தப்படுவது அவசியம்.
- 13 -

Page 9
பல்லவர் காலமும்
பக்தி இலக்கிய நெறியும்
- கனகசபாபதி - நாகேஸ்வரன் B. A.
(Hons) M. A. (Cey)
உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
தமிழிலக்கிய வரலாற்றிலே அற நெறிக் காலத்தினைத் தொடர்ந்து பக்தி நெறிக் காலம் தோற்றம் பெறுவ த னை க் காணலாம். களப்பிராட்சியின் பின்னர் பல்லவ மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட காலப்பகுதியினைப் * ப ல் ல வ ர் காலம்" எனக் குறிப்பிடுவது மரபு சங்கமருவிய கா லத்து நிலவிய கோட்பாடுகளும், சமண பெளத்த மதக் கருத்துக்களும், வாழ்விலே பற்றுறுதியின்றி அமைந்த தன்மை களும் புதியதொரு கோட்பாட்டினை யும் வாழ் வி ய ல் நெறியினையும் அவாவி நின்ற காலப்பகுதியாகப் பல்லவர் காலத்தை கொள்வர் அறி ஞர். சமண பெளத்த மதக் கருத் துக்களின் செல்வாக்கு மங் கி ய நிலையிலே சைவ வைணவ மதங்கள் தலையெடுத்து ஓங்கி வளர்ச்சியடைய முனைந்த காலமே இப்பல்லவர் காலமெனலாம். மேலும் சமண பெளத் த சந்நியாசிகளிடையே காணப்பட்ட ஒழுக்கச் சீர்கேடுக ளும், போலிவேடமும் புதியதொரு தத்துவார்த்தத் தேவையினை யேற் படுத்திற்று. எல்லாவற்றுக்கும் மேலாகத் துறவு நெறியின் அழுத் தம் குறைந்து. ஊழின் மீதிருந்த நம்பிக்கை கெட்டு வாழ்க்கையிலே பற்றுறுதியும், பிடிப்பும் ஏற்பட்டு
முழுமுதற் டொருளான 'இறைவ னின் திருவருளினலே தடையும் இன்பம் ஒன்றே மேலானதென்ற” கருத்து மேலோங்கிய காலம் இப் பல்லவர் காலமெனலாம்.
சைவ வைணவ எழுச்சி:
பல்லவ மன்னர்கள் சைவமதத் தினைச் சார்ந்தவர்கள். ஆகையினல் அம்மதம் வளர்ச்சியடையவும் ஏனைய வைதிக மதங்கள் மறுமலர் ச்சி யெய்தவும் மன்னர்களது பேராதரவு இருந்தது. விஷ்ணுவை வழிபடும் வைணவர்களும், சிவனை வணங் கும் சைவர்களும் தத்தம் சமயத்
தடங்களிலே நின் று இலக்கியங் களை இயற்றிய காலம் பல்லவர் காலமாகும். ஆலயங்கள் (குட
வரைக் கோவில்கள்). இறைவனது திருவுருவ பவனை, திருவிளையாடல் கள், அற்புதங்கள் என்பன சமயப் பிரசாாமென்ற வகையிலே பெரிதும் எடுத்தோதப்பட்டன. பல்லவர் கால இலக்கியங்களிலே குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் படைத்தவை நாயன்மார்களது தேவாரங்களும் (பதிகங்களும்) ஆழ் வார் க ள து பாசுரங்களுமேயாகும். ந ந் தி க் கலம்பகம், முத்தொள்ளாயிரம், பாரத வெண்பா முதலிய இலக்கி யங்களும் பல்லவர் காலத்தனவே யாயினும் இவற்றைவிட, பக்திப்
- 14 -

பாடல்களே பெரிதும் சிறப்புறு கின்
றன. இதனல் பல்லவர் காலம் பக்தி நெறியின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
பகுத்தறிவு எல்லாவற்றை யும் தீர்த்துவிட முடியாது. கில விஷயங்கள் பகுத்தறி வுக்கு அடங்காத விஷயங்கள் என்று தெரிந்து கொண்டு பக்தி செலுத்த வேண்டும். பக்திக்கு வேண்டிய நம் பிக்கை பகுத்தறிவைப் புறக் கணிக்க வில்லை. அதற்கு அப்பால் செல்கிறது. ஐம் புலன்களுக்கும் அப்பா ல் உள்ள ஆருவது புலன் ஒன்ரு கும் இந்த பக்தி. பகுத்தறி வுக்கு எட்டாத விஷயங்களில் இந்த ஆற வது புலனே பயன்படும்.
- மகாத்மா காந்தி
கடவுள் - மன்னன் புகழ்ச்சிகள்:
இறைவனைப் புகழ்ந்து பாடும் மரபின் தொடக் கம் பல்லவர் காலத்திலே முகிழ்த்துக கிளம்பு கிறது. 'பொய் மை யா ள ரை t பாடாதீரெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்" என்றும், "நாமார்க் குங் குடியல்லோம்" எ ன் றும் எழும் கூற்றுக்கள் பல்லவர் கால்த் துத் தத்துவக் கோட்பாட்டினைப் புரிந்து கொள்வதற்குப் போது மானவையாகும். தோத்திர அநுரல்க ளின் புகழ்ந்து பாடும் மா பின் தொடக்கம் இக்காலத்திலே உன டாக்கப்படுகிறது.
பல்லவர் காலப் பக்திப் பாடல்க ளானவை பெரிதும் பதிக வடிவிலே யமைந்திருந்தன. அதாவது பத்து பதினென்று அல்லது பன்னிரண்டு LuiT L 3à'5Gifā' அமைந்திருந்தன. தனிச் செய்யுட்களில் ஒரு துறை யைப் பாடும் சங்ககால மரபு தொடர் நிலை ச் செய்யுட் க ளா க ச் சங்க டி ரு விய கால த் தே வளர்ச்சி பெற்று பதிகமாகப் பல்ல வர் காலத்தே மலர் ந் தி தி இப் பதிக மரபில் வளர்ச்சிக் கட்டத் திஜனச் சோழப் பெருமன்னா காலக் காவிய நெறியாகக் இலக்கியங்களிலே சமயச் girt fill-gs தன்மை அதிகளவிலே பல்லவர் காலத்திலிடம் பெற்று விளங்கவும், ன்ெனர் சோழர்கால உலகியற் grrr fiu Tä இலக்கியப் போக்கிலே யும் விரும்பியோ விரும்பாமலோ ரமயச் சார்புடைமை அடிநாதமாகி இழையோடிக் காண נן L ן- QM מו காலாக அமைந்தவை ப ல் ல வ ர் காலத்து இலக்கியச் செல் நெறி களே யெனலாம்.
காணலாம்.
வளமும் வனப்பும்:
பல்லவர் காலத்திலே நாயன்மார் களும் ஆழ்வார்களும் தமது தோத் திரப் பாடல்களை மக்களுக்குப் புரியக் கூடியவகையில் rിuuffങ്ങ്ബ பாக்கினர். பேச்சு வழக்குச் சொற் ள், சொற்ருெடர்கள். as turrGirl பட்டமை இவ்வெளிமைப் பண்பின் ஒரம்சமேயாகும், இசை த் துவ
இணந்த பாடல்களைப் பாடிய மற்றுமோர் உத்தியாகும். சமய மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தி பல்லவர்காலப் பிரசார பல்வேறு ஒசைவிகற்பப் uTL-lis 'ேதந்து பாடல்களுக்கு வளத்
سا - l5 --سیہ

Page 10
தியுைம் வனப்பினையுமூட்டிச் சமயப் பிரச்சாரம் செய்தனர் நா ல் வர் பெருமக்கள். இப் போ க் கின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாகவே சோழர்கால இலக் கி யப் போக்கு அமைந்தது.
சித்தாந்த மேன்மை: w
பக்தியிலக்கியத்தின் தொடக்கம் காரைக் கா லம் மை யா ரா லே யே தோற்றுவிக்கப்படுகின்றது. பின் னர் சம்பந்தர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகராலே வளர்த்தெ டுக்கப்படுகிறது. வைணவ ஆழ்வார் களாலே போற்றப்படுகிறது. திரு விரட்டை மணிமாலை, திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகம் என்பன அம்மையாரது பனுவல்களாகும். திருமுறைகளின் சிறப்புக்களிலே தலையாயவை அவற்றிலே பொதிந் துள்ள சைவசித்தாந்த தத்துவக் கருத்துக்களாகும். வட மொ ழி ப் Hராணக் கருத்துக்களும், தத்து வங்களும் பல்லவர் காலத்திலே உருவாக்கப்பட்டுப் பின், சோழப் பெரு மன்னர் காலத் தி லே பேரிலக்கியங்களிலே பொதிந்தமை கின்றன. சுருங்கக் கூறின் 'பல்ல வர் காலத்திலெழுந்த சித்தாந்தக் கருத்துக்களின் விரிவாக்கப் பட்ட தொடர்ச்சிப் பணி'யே சோழர் காலத் த த் துவ அநுரல்களாகும்,
தமிழ் வருணனை மரபு:
வடமொழிக் கல்வி ப் புலமையும் பயன்பாடும் பல்லவர் காலத்திலே பயில் நெறியாயிருந்த தெனினும் பக்தியானது தமிழ் மொழியிலேயே பெரிதும் ஜனரஞ்சகப் படுத் தப்பட் டது. இறைவனை "வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்?' என்று அப்பர் பெருமான் பாடுகின்ருர்,
தமிழைப் பண்ணரின் தமிழாக ஆக்கியவர் தமிழ் வல்ல ஞானசம் பந்தர் “கெ(ா)ஞ்சு தமிழ்" பாடிய வர் சம்பந்தர். கிளியைத் தூதாக அழைத்துச் சிவனதுதி ருநாமத்தைக் கூறும்படி பாடியவர் அவர். ‘தூது" இலக்கிய மு ன் னே டி யாகவும் மிளிர்ந்தவர். சம்பந்தரது பாடல்க ளிலே இயற்கையைப் பாடும் தன் மையை முதலிருவரிகளிலேயுங்கான லாம். திருத்தலங்களது கலைவளம், திணைவளம், தெய்வீகப் பொலிவு என்பன குறித்த வருணனைப் பாடல்
கள் சம்பந்தரது அருந்தமிழாக அ மை ந் து காணப்படுகின்றன. ‘மாலைமாற்று' என்னு மொரு
வகைப் பரிசோதனையினை நிகழ்த்திப் புதுமை புகுத்திய ‘யாப்பியல் நிபு னர் சம்பந்தர். வேதநெறிதழைத் தோங்கவும் மிகுசைவத்துறை விளங் கவுமவதரித்தவர் சம்பந்தர். 'அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல, சம்பந்தர் திருவவதாரஞ் செய்தார். 'நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்" என்ருர் சுந்தரர், சம்பந்தர் தமது பதிகத்தினைத் திட்டமிட்டமைத்துப் பாடினர் பிறமதக் கண்டனம் உட் பட அவர் கையாண்ட நெறிகள் சைவ நெறியின் மேன்மைகளையெடுத்து விளக்குவனவாம். ஒவ்வொரு பதி கத்திலும் 8 வது பாடல் இராவண னைக் குறித்தும் 9 வது பாடல் பிரம விஷ்ணுக்கள் குறித்தும் 10 வது பாடல் பிறமதக் கண்டனமாகவும். 11 வது பாடல் முத்திரைக் கவியாக வும் அ மை வது காணத்தக்கது.
ー16ー

தெய்வீகக் காதல் நெறியை இணைத் தமைக்கும் பாடல் மரபின் தொடக் கத்தினைச் சம்பந்தரிலே காணலாம். ஈரடி மேல் வைப்பு, சக்கரமாற்று, திருயமகம், திருமுக்கால் முதலிய பாவகைகளையுங் கையாண்டவர் சம் பந்தர். ‘அப்பர் சுவாமிகள் வழி பட்ட தமிழ் நாட்டுத் திருப்பதிகங் களை விட மிகுதியான தலங்களைச் சம்பந்தர் வணங்கிப் பாடினர்' என் டர் ஆய்வாளர்கள்.
'தருந்தடக்கை முத்தழலோர்
மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக் கருந்தடங் கண்ணுர்
கழல் பந்தம்மானைப் பாட்டயருங் கழுமலமே'.
என்ற வரிகளிலிருந்து வீடுகள் தோறும் பெண்கள் கழங்கு, பந்து அம்மானை முதலியவற்றை ஆடும் பொழுது சிவபெருமான் சிறப்பி னைப் பாடுதல் மரபு என்ற செய்திக் குறிப்புகளை அறிவிக்கிருர், தர் திருமுறைகள் முதல் மூன்று மாகும்,
4, 5, 6 ஆம் திருமுறைகள் அப் பர் பாடியவை. கலேயறிவும், அனு பவ அறிவும், பண்பட்ட உள்ள மும், பக்திவைராக்கியமும், அற் புதங்களியற்றியவருமாக அப்பரடி களேச் சமயங்காட்டி நிற்கிறது. இயற்கையழகு விஞ்சி நிற் காத பாடல்கள் அப்பருடையவை. சிவ பக்தியும், சிவதோத்திரமும் புராண இதிகாசச் செய்திக் குறிப்புகளும் மிகு தியாக இவரது திருமுறைகளிலே யிடம் பெறுகின்றன. திருத்தாண்
சம்பந்
டகம், திருவிருத்தம், திருநேரிசை திருவங்கமாலை என்பன இவர புதிய செய்யுள் வகைகளாகும்.
தமதுவரலாற்றைத் திருப்பதிகங் களிற் பாடி வைத்து மனமுருகிப், படிப்பவரை நெக்குருகும்படி செய்த” அடபரடிகளது பக்தி அனுப வ முதிர்ச்சியை அவரது திருமுறை களிலே தரிசிக்கலாம்.
சுந்தரர் கா லத் தி லே சமயப் போராட்டம் பெரிதுங் குறைந்து விட்டதாதலால் இவரது பாடல்களில் புறசமய கண்டனம் இல்லை. செந் தமிழ் நடையும் சுவை மிகுதியு முடைய பாடல்கள் சுந்தரருடை யவை. தலவருணனைகள் - இயற் கையழகு வருணனைகள் என்பவை மிகவும் சிறப்பாயமைவன.
‘அரும்பருகே சுரும்பருவ
அறுபதம் பண்பாட அணிமயில்கள் நடமாடும்
அணியெழில் சூழயலின்
‘‘பொதுவாக எ ன் னு டை ய கதைகள் உலகத்துக்கு உப தேசம் பண் ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல; பிற்கால நல்வாழ் வுக்காக செளகரிகம் பண்ணி வைக்கும் இன்சூன்ஸ் ஏற்பா டும் அல்ல. எனக்குப் பிடிக்கி றவர்களையும் பிடிக்காதவனை யும் கிண்டல் செய்து கொண் டிருக்கிறேன்?.
- புதுமைப்பித்தன்
سست i۶۶ -۔

Page 11
கரும்பருகே கருங்குவளே
கண்வளக்ரும் கழனிக்
கமலங்கள் முகமலருங்
கலய நல்லூர் காணே."
இயற்கை வருணனைக்கும், சுவை பயக்கும் பல செய்திகளுக்கும் சுந்த ரது பாடல்களிற் சான்றுகளுள். இறைவேைய * பித் தா ** இர அழைத்துப் பாடியவர் சுந்தரர் பெரிய புராணத்தின் காவிய நாயக னன நம்பியாரூரனை" , 'அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் 'மண் மேற் சென்று சொற்றமிழ் படு’ என்று கட்டளை பிறப்பித்ததாகப்பேசு கின்ருர் சேக்கிழார். சுந்தரர் திருத தொண்டத் தொகையைப் பாடினர். அடியார் பெருமையையுணர்த்துப வர்சுந்தரராவார். இவரது கால் கோள் பெரியபுராணத்திலே விரிவு பெற்று, அப்புராணம் ‘தேசிய இலக் வியமாகவும் பரிணமிக்கச் செய்த *கதாநாயகன்" சுந்தரராவார்.
சமுதாய ஒருமைப்பாடு:
பல்லவர் காலத்திலே ஏற்பட பெரியதொரு சிறப்பம் சம் சாதி யேற்றத் தாழ்வை நீக்கிய சமரசமா கும். "ஆவுரித்துத் தின்றுழலும் புஜலயரேனும் கங்கைவார் சடைக் கரந்தார்க் கண்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கு ங் கடவு ளாரே " என்ற கோட்பாடு அன் புரிமையை நிலைநாட்டிக் கடவுட் பக்தியை" மேன்மைப்படுத்திற்று அஜனவருமே ,ஈர நெஞ்சினர் ஆயி னர், கண்ணப்பர் மரபிலே இறைவ னுணர்விலே உள்ளந் திளைத்திருந் தனர். உணர்ச்சியுடன், ‘அறிந்த நெறியிலும், 'ஆகம நெறி'யிலும் பக்தி மேலீட்டுடன் வழிபாட்டு மரபி
என்பன
ஜனக் கைக்கொண்டனர். குடும்ப வாழ்விலேயும் சமய ஒருமைப்பாட் டுணர்வி கை க் கொண் டு நடந் தனர்.
பல்லவர் காலத்துப் பக்தி முதிர்ச் சியினை மணிவாசகரது திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்க ளிற் காணலாம் ஆ ரா அ ன் பு குழைந்த பக்தி, உருகு ந் தமிழ் மணிவாசகர் செய்த திருமுறைகளிற் சிறப்புடன் sinr 600TU படும் அமிசங்கள்.
கால ஒப்பீடு:
சங்ககால உலகியற் காதல் பல்ல வர் காலத்திலே பக்திக் காதல்ாகப் பரிணமிக்கிறது. மணிவாசகர் தம் மைத் தலைவியாகப் unt ଈjä୪ uଦର୍ପଦ ணிப் பாடிய பாடல்கள் திருவ கத்திலேயுண்டு. திருக்கோவையார் அகப் பொருட்டுறைகள் நன்கு முதிர்ச்சி பெறும் பாடல் க ளை க் கொண்டமைந்துள்ள நூலாகும். ஜி வா த் மா , பரமாத்மாவுடன் சேர்ந்து அனுபவிக்கும் G3 fairui காதலைச் சாமானிய மானுடர்களின் சிற்றின்பக் காதலுணர்வு Osiritu ளிக்கப் பாடியவர்கள் மணிவாசக ரும், ஆண்டாளுமாவர். ஆண் ாளின் விரகதாபப் பாடல்களேத் தமிழிலக்கிய வ ர லா ற் றிலே யே பெண்கள் தமது உள்ளக்கிடக்கையை நாயகனுடன் சேர்ந்தனுபவிக்கும் உடலின்ப அனுபவ வேட்கையை வெளிப்படையாகப் புலப்படுத்திநிற் கும் பாடல்களாகக் கொள்வர். 'பொங்கிய பாற்கடற் பள்ளி கொள்வ்ானப் புணர்வதோராசையினுல் என் கொங்கைகிளர்ந்து குமைந்து
குதுகலித்து ஆவியைக் கொள்ளை கொள்ளும் (ஆகுலஞ் செய்யும்)"
سبب ف18. سلسبي

“எவ்வித சொந்த அ நுட வ மும் இன்றிச் சமயப் புத்த கங்களை மட்டும் படித்து விட் டுச் சிலர் ஈசுவரனை விவரிக்க முயல்கிருர்களே, எத்துணை விசித்திரம் இது தேசப்படத் தில் மட்டும் கா சி யை ப் பார்த்து விட்டு வந்து அந்த ஸ்தலத்தைப் பற்றி விவரிப் பது போன்றதே!'
- ராமகிருஷ்ண பரமஹம்சர்
என வருமடிகளிலே ஆண்டாள்
தன்வயமிழந்த காமமேலீட்டுணர்
ப் புலப்பாடு வெளிப்பாடடைந்து ற்கிறது.
அன்பு அறத்தை வெல்லல்;
பல்லவர் காலத்திலே, அதற்கு முன்னைய, பின்னைய காலங்களிலே முதன்மை பெறும் மன்னனுக்குப் பதிலாகக் 'கடவுள்" - "இறைவன்" முதன்மைப் படுத்தப் படுகிறன் 'அரண்மனை"கள் 'அரன்மனை"களா கின்றன. (சிவன் கோவில்களா கின்றன) அறக் கோட் பா டு ம் , *ஊழ்" என்ற நம்பிக்கையும் மாறு தலடைகின்றன. வாழ்வின் நியதி துன்பமென்ற தத்துவம் மாறுகிறது. பெண்ணுடன் வாழும் வாழ்வே தலையானதென்ற வாழ்வுப் பற் றுத் தெய்விக நிலைப்படுத்தப் படுகி றது. அறத்தினும் அன்பு பெரி தென்ற தன்மை பெரிதும் இடம் பெற்றது. இறையருளால் ஆகாத
தொன்றில்லை யென்ற உணர்வுபற்றுறுதி பிறந்தது. உணர்ச்சிப் புலப்பாடும், வாழ்க்கையனுபவத்
தினை வெளிப்படுத்தும் தன்மையும்
பெரிதும் எற்படலாயிற்று,
'பல்லவர் கால இலக்கியம்" என்வ மகுடத்திலே டாக்டர். மு. வரதரா சஞ்ர் பின்வருமாறு தொகுத்துக் கூறும் கருத்துக்கள் மனங் கொள் ளத் தக்கன. (தமிழிலக்கிய வர லாறு, மூன்ரும் பதிப்பு 1978, பக் 99 - 133) M
'.அரசர்களின் வீரச் செயல்க ளைப் பாடும் நிலைமாறி கடவுளின் அற்புத விளையாட்டுக்களைப் பாடும் நிலை வளர்ந்தது. வள்ளல்களின் கொடையைப் பாடும் பாடல்களுக்கு ஈடாக கடவுளின் அருட் செயல்க ளைப் பாடும் பாடல்கள் வளர்ந்தன. கற்பனைக் காதலுக்குப் பின்னணி யாக அந்தந்த ஊர்களின் இயற் கைச் சூழல் வருணிக்கப்பட்டிருந் தது மாறி, கடவுளிடம் செலுத் தும் பக்திக்குப் பின்னணியாக அந் தந்தக் கோயில் தலங்களைச் சூழ்ந்த இயற்கையழகைப் பற்றிய வருண. னைகள் அமைந்தன. சங்க இலக் கியக் காதற்பாடல்கள் பலவற்றிலும் இயற்கை வருணனைகள் அமைந் தமை போலவே சம்பந்தர், சுந்த ரர், திருமங்கையாழ்வார் முதலா னவர்களின் பக்திப் பாடல்கள் பல வற்றிலும் சிறந்த இயற்கை வருண னைகள் அமைந்தமை காணலாம்.9
ஆழ்வார்கள் நாயன்மார்களின் பக்திப்பாடல்கள் கற்றவர்களோடு மற்றவர்களும் கூ டி ப் பாடுவதற்கு ஏற்றவாறு தமிழ் எளிதாய் நெகிழ்ந்து அ மை ந் த து . ஊர் தோறும் பக்தர்கள் கூட்டம் கூட்ட மாகப் பாடிக் கோயில்களைச் சுற்றி
- 9 --

Page 12
வந்து வழிபடுவதற்கு எற்ற வகை யில் இசைப் பாடல்களாக அமைந் தன. இவ்வாறு நடை எளிமையும் இசையினிமையும் கூடினமையால், தமிழ் இ லக் கி ய த் தி ல் 'ஒரு மாறுதல்’ஏற்பட முடிநீதது.
ஆழ்வார்கள் நரயன்மார் பாடல் களில் துறவறம் பழிக்கப்பட வில்லை.
இல்லறம் வெறுக்கப்படவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. க%லகளும் போற்றப்படுகின்றன
இந்த உலக இன்பங்களே நுகர்ந்த வாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது. உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்குகிறது.
ஆழ்வார் நாயன்மார்களின் பக் திப் பாடல்கள் விளைத்த புரட்சி ஒன்று; "கடவுளுக்கு முன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள், கட வுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர்" என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. <到岛 ஞல் அரசர்களையும் செல்வர்களே யும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ்
‘கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண் டும் " என்ற கொள்கை வளர்ந்தது. அரசர்கி
ளுடைய அரண்ம%னகளையும் செல் வர்களின் மாளிகைகளையும் நாடிச் சென்று ஏங்கி நிற்கின்றவர்களைத் திருப்பிக் கோயில்களை நாடி நிற்கச்
செய்தார்கள். அரண்மனை பெயராக அது வாை யி ல் வழங்கி வந்த *கோயில்"என்ற சொல்லே கடவுளின் ஆலயத்துக்கு உரிய சொல்லாகுமாறு மாறுதல் ஏற்பட்டு விட்டது.நாட்டில் அதுவரையில் மிக உயர்ந்த கட்ட மாக இருந்தவை அரண்மனைகளே, பக்திப் பாடல்கள் செய்த புரட்சியின் விளை வாக அரண்மனைகளுக்கு இருந்த சிறப்பெல்லாம் கோவில்க ளுக்கு உரியவையாகின.
பேரா சி ரியர் , க லா நிதி , ஆ. வேலுப்பிள்ளை அவர்கள், ‘சை வருடைய பக்தியியக்கம் பெரிய புராணத்திற் பூரணத்துவம் பெற் றது போல வைணவருடைய பக்தி யியக்கம் கம்பராமாயணத்திற் பூர ணத்துவம் பெற்றது . " (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், மூன்ரும்பதிப்பு, 1985, பக் - 138) என்று ‘முடிவு கட்டுவது இவ் விடத்திலே சுட் டி க் காட்டப்பட வேண்டியதொரு முக்கியமான கருத் தாகும். இலக்கியங்கள் எல்லாவற் றுள்ளும் தனித்துவமான பேரின் பத்தினை நல்கி - இதயத்தை யுருக் குந் தன்மை வாய்க்கப் பெற்றவை யாகப் பல்லவர் காலப் பக்தியிலக் கியங்களமைவதனைக் கா ண முடி கிறது. த மிழை ப் பக்திக்குரிய மொழி யெனக் கொள்வதிலே நுட் பமான உண்மைகளுள வென்பதனை ஒப்புக் கொண்டேயாக வேண்டியுள்
ளது. 米
சென்ற இதழில் வெளியாகியிருந்த செவ்வியில் இருப்பதாகச் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்,
வருந்துகின்ருேம்.
சில கருத்துப் பிழைகள் தவறுக்கு
தொடர்ந்து இடம் பெருமல் பார்த்துக் கொள்வோம்"
— “ “ Sàfiuň”
- 20

இலக்கிய வானில்
இலக்கியத் துறை வளர்ச்சிக்கு காத் தி ரமா ன பங்காற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரது ஆக்கங்களை இலக்கிய வானில் என்ற இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரிக்கவுள்ளோம். இம்முறை இலக்கியவானில் புதுமைப்பித்தன் இடம் பெறுகின்ருர்,
பாட்டுக்கொரு புலவன் பாரதியினைப் போல் சிறுகதை என்ற தும் நினைவிற்கு வருவது புதுமைப்பித்தன் பெயரே, தனது ஆணித்தரமான கருத்துக்களால் எழுத்துலகில் புதுமை படைத்தவர். 1906 - ம் ஆண்டு இவ்வுலகில் பிறந்த புதுமைப் பித்தன் அவர்க ளது இயற்பெயர் சோ. விருத்தாசலம் என்பதாகும். தமிழ் நாட்டி லுள்ள திருநெல்வேலியில் பி. ஏ. வரை படித்துப் பட்டம் பெற்ற இவர் தினமணிப் பத்திரிகையிலும், பின்னர் தினசரிப் பத்திரிகை யிலும் பல ஆண்டுகள் துணை ஆசிரியராக பணி புரிந்த வர் . திரைப்படத் துறையிலும் தன் வாழ்வின் கடைசிக் காலத்தில் எழுத் துப் பணி செய்தார். மணிக்கொடியிலும் வேறு சில பத்திரிகை களிலும் எழுதிய கதைகள் வா யி லா க , இவர் மறைந்து நாற்பதாண்டுகள் சென்றுவிட்ட போதும் தமிழ்ச் சிறுகதை உலகிலே நிர ந் த ரமா க வாழ் ந்து வருகி ன் ருர் . இவரது சிறு கதைகளில், சர்ச்சையை ஏற்படுத்திய கதை ‘பொன்னகரம்’, எமது
வாசகர்களுக்காக இச்சிறுகதையினை இங்கே தருகின்றேம்.
— éfodfouudi
பொன்னகரத்தைப் பற்றி க் கேட்டிருக்கிறீர்களா? ந ம து பெளராணிகர்களின் க ன வை ப் போல அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் எ ன் று சொல்கிருர் களே, அந்தத் த த் துவ த் தை க் கொண்டு நியாயம் என்று சமா தானப்பட வேண்டிய விதிதான். ஒரு சில ‘மகாராஜர் களுக்காக, இம் மை யி ல் பயனைத் தேடிக்
கொடுக்கக் கடமைப்பட்டு வசிக் கும் மனிதத் தேனீக்களுக்கு, உண் மையில் ஒரு பொன்னகரந்தான்
9.gil.
ரயில்வேத் தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக் ருப் போகிறதே ஒரு சந்து. அது தான் அங்கு ‘மெயின் ரஸ்தா. கை கோத்த நான்கு பேர் வரிசை

Page 13
தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால். அதற் குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைவுகள் போல.
திவ்வியப் பிரதேசத் தகசிக்க வேண்டுமானல், சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென் முல்தான் கண் கொள்ளாக் காட்சி யாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குளம்புகள், சாலையோர மாக முனிசிபல் கங்கை - அல்ல; யமுனைதானே கறுப்பாக இருக் கும்? அது தா ன் , பிறகு ஓர் இரும்பு வேலி; அதற்கு க் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வேத் தண்டவாளம்.
இந்தத்
மறுபக்கம், வரிசையாக மனிதக்
கூடுகள் ஆமாம், வசிப்பதற்குத் தான்.
தண்ணீர்க் குழாய்கள்? இருக்
கின்றன. மின்சார விளக்கு? ஞாப கமில்லை - சார்ண எண் னெ ப் விளக்கு. அதாவது சந்திரன் இல் லாத காலங்களில் (கிருஷ்ண பட்
சத்தில்) ஏற்றி வைத் தால் போதாதா?
* பொன்னகரத்துக் குழ ந் தை
களுக்கு 'மீன் பிடித்து விளை யாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில் மீன் ஏது? எங்கிருந்த ப ண க் கா ர வீடுகளி லிருந்தோ, சில சமயம் அழுகிய பழம்; ஊகிய வடை, இத்தியாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.
ரயில்வேத் தண்டவாளத்தின்
பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான்
செய்கிறது. போகக்கூடாது என்ற
சட்டம் குழந்தைகளுக்குத் தெரி யுமா? போனல் பெற்ருேருக் குத்தான் கொஞ்சம் பாரம் ஒழிந் ததே! குழந்தைகள்தான் என்ன
* கிளாஸ்கோ’ ‘மெல்லின் ஸ்பூட்" குழந்தைகளா, கம்பி இடையில் போகாமலிருக்க? புகைந்தோடும்
அந்த இரு ம் பு நாகரிகத்துக்கு, வரிசையாக நின்று, "குட்மார்னிங் சார்!’ என்று கத்துவதில் ரொம்ப ஆன ந் த ம் அவர்களுக்கு. அது தான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.
ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கல கல வென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதி லிருந்து அவ்வூர்ப் பெண்கள் தங் கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், த ன் னி ர் எடுக்க வரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்ருல் ஒரு
பாரதப் போர்.
இளவயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை. மாசடைந்த கண்கள் - விடிய விடிய மின்சார * ஸ்பின்டிலைப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும்? கண்கள் தாம் என்ன இரும்பா? உழைப் பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு, ஆரோக்கி யமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள். காலரா, இத்தியாதி அங்கிருந்து தானே உற்பத்தி செய்யப்படுகின்,
一22一

றன! எப்படியாவது உயிர்வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் ந ட க் கும் . பழைய காலத்து மனிதன், புலி, சிங்கங்க ளுடன் குகையில் வாழ்ந்து வந் தான். அ வை களும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்ருன், அதற்காக வலிமை
அற்று, வம்சத்தை விருத்தி செய் யாமல் செ த் தொழி ந் தா போனன்? வாழ்க் கையே ஒரு
பெரிய வேட்டை. அதற்கென்ன?
கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு -வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக்கவலை இல்லை. அது வேறு உலகம் - ஐயா, அதன் தர்மங்களும் வேறு.
அம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது, அல்லது இருபத்திரண் டுக்கு மேல் போகாது. புருஷன் * ஜ ட் கா " வைத்திருக்கிருன். சொந்த வண்டிதான். அம்மாளும் முருகேசன் (அவள்புருஷன்), அவன் தாயார், தம்பி, முரு கே ச ன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்து அவர்கள் குடும்பம் இருவருடைய வரும்படியில் தான் இவர்கள் சாப் பாடு - (குதிரை உட்பட), வீட்டு வாடகை, போலீஸ்; மாமூல் முரு கேசன் தம்பி, திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள் தான். எல்லோரும் ஏக தேசக் குடியர்கள்தான். ՛ ւ-6ն ஸிசனில் பசியை மறக்க வேறு வழி? பசி! ஏயா, பசி! 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்" என்று வெகு ஒய்யாரமாக, உ ட ம் பில் பிடிக்காமல் பாடுகிறீரே! அங்கு
நீர் ஒருநாள் இருந்தால், உமக்கு அடிவயிற்றில் இருந்து வரும் அதன் அர்த்தம் !
அ ன் றை க் கு முருகேசனுக்குக் குஷி, அவனும் அவன் குதிரையும் "தண்ணி" போட்டு ரேஸ் விட்டார் கள். வண்டி "டோக்கர் அடித் தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதி ரைக்குப் பலமான காயம் . முரு கேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டு வந்து போடும் பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க, வீக்கத்துக்கு என்னத்தையோ அரைத்துப் பூசினுள் அம்மாளு. அப்பொழுது தான் சற்றுப் பேசி னன். அவனுக்குப் பால் - கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுக்குக் கூலி போட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?
அம்மாளு தண்ணிர் எடுக்க வரு கிருள்.
*கும் இருட்டு, பஞ்சாங்கத் தின் படி இன்றைக்குச் சந்திரன் வர வேண் டு ம் , ஆணுல் அது மேகத்தில் மறைந்து கொண்டால், முனிசிபாலிடி என்ன செய்ய முடி
யும்?
எப்பொழுதும் போல இரைச்சல் தான். ஒருவாறு தண்ணீர் பிடித் தாய் விட்டது. திரும்பி வருகி ருள்.
சந்திரன் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம் ப நாளாகக் கண் வைத்திருந்தவள். இருவரும் இருளில் மறைகிருர்கள். அம்மாளும் முற்கால் ரூபாய் சம் பாதித்து விட்டாள். ஆம், புருஷ னுற்குப் பால் - கஞ்சி வார்க்கத்
தான்! என்னமோ கற்பு, கற்பு எ ன் று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா! பொன்னகரம்,
------ 23 س--

Page 14
“ஒவியன் தான் தேடுதலை
மேற்கொள்ளும்போதே
ரசிகனையும்
தேடவைக்கிறன்"
'நான் தேடுகறேன். கண்டுபிடிக் கிறேன். கீறுகிறேன். நீங்க ளும் தேடுங்கள். கண்டுபிடியுங்கள். பசி யுங்கள்...' என்று கூறுகின்ற திரு. அ. மாற்கு அவர்கள் ஒரு ஒவியஆசிரியர். தான் கற்பிக்கும் கலேயை வெறும் ஜீவ னுேபாயமாக மாத்திரம் கொள்ளாமல் ஆத்மார்த்தமான விருப்போடு அதில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருபவர். இளைய சமுதாயத்தினரை நவீன ஓவியத்துறை யில் ஈடுபடுத்தி - ஊக்குவித்து அவர்கள் அதைப் பயிலவும் மேன்மையுறவும் தன் ஞலான இதயபூர்வமான ஒத்துழைப்o0.ப யும் உதவியையும் வழங்குபவர். கலைஞ னுடைய மேன்மைகள் குறித்து உன்னத
மான அபிப்பிராயங்களைச் சொல்பவர். பழகுவதற்கு மிகவும் இனியவர்.
*ஆதவன் எழுகிறன்’ திரு. க. கண்ணதாசன், பாலன் ஆகியோர்
சஞ்சிகைக்காக
திரு. ச. சண்முகலிங்கம், மேற்கொண்ட செவ்வி இங்கே
அவருடன் திரு. மு. ரவீந்திரன், திரு. ந. சத்திய பிரசுரமாகிறது.
இன்று சங்கீதம், நடனம், இல க்கியம் முதலான கலைத்துறைகள் நம் மத்தியில் பரவலான இடத் தைப் பெற்றுள்ளன. பொதுவாக அவற்றை விரும்பி வரவேற்கிறவர் களின் தொகையும் அதிகமென்றே கூறவேண்டும். அதேயளவுக்கு ஒவி யம் அதுவும் நவீன ஓவியம் வர வேற்புப் பெருததற்கான காரணம் எதுவென்று நினைக்கிறீர்கள்?
எனைய கலைத்துறைகளுக்கு பர வலான அறிமுகங்களும் மேடை யேற்ற வாய்ப்புக்களும் கிடைக்கின் றன. ஆகவே அவை பொதுஜன வரவேற்புகளே எளிதில் பெற்றுவிடு கின்றன. இந்த வகையில் பார்க்கும் பொழுது, ஒவியத்திற்குச் சரியான அறிமுகம் இல்லை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனைய நுண் கலைகளுக்கு அரங்கேற்ற வாய்ப்புகள்
- 24 -
 

இருப்பதுபோல் ஓவியத்திற்கும் ஒலி யக் கண்காட்சிகள் போன்ற வாய்ப் புகள் இருந்தால் இதுவும் போதிய வரவேற்புப்பெறமுடியும்.
இன்று மக்கள் மத்தியில் குறிப் பாக இளைஞர்கள் மத்தியில் ஒவியத் துறைபற்றிய ஒரு ஈடுபாடும், அத னைப் பயில வேண்டும் எனும் ஆர்வ மும் இருப்பதைக் காணமுடிகிறது. அதனைப் பயிலும் நோக்கோடு என்னை நோக்கி வருகின்றவர்கள், எவ்வளவு விரைவாக அதனைப் பயில முடியும் என்பதுபற்றியும், மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற முடியும் என்பதுபற்றியுமே கூடிய பிரக்ஞை யுடன் உரையாடுவதைக் காணமுடி கிறது. துரதிஷ்டவசமாக நமது யாழ்ப்பாண மக்கள் எதைப் பயில் முன்வந்தாலும் அதனல் பெறக் கூடிய பண வருமரனத்தையே முத ன்மைப்படுத்தி நாடுகின்ற இயல் புடையவராக இருப்பதும் மேற் சொன்ன குறைபாட்டுக்கு ஒரு காரணம் எனக் கருதலாம்.
() ஒவியம் எனப் பொதுவாகக் குறிப்பிடுவதற்கும், நவீன ஓவியம் எனக் கருதுவதற்கும் இ ைட யி ல் பாரிய வேறுபாடுகள் ஏதேனும் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
ஆ ஒவியம் என்ற சொல் கருதி நிற்பது, குறிப்பிட்ட ஒன்றைத்தான் அதாவது மனிதன் கருத்தை வெளி ப்படுத்தப் பயன்படுத்துகின்ற ஒரு கலைச் சாதனம் அது. ஆரம்ப காலங் களில் ஒன்றினை உள்ளபடியே வரை கின்ற முறை அனுசரிக்கப்பட்டு வந்தது. புகைப்படத்துறை தோன்
ருத காலத்தில் ஒவியத்தின் அந்த
இயல்பு பயன்பாடுடையதாய் இருந்
应g/· ஆஞல், காலப்போக்கில் புகைப்படத்துறையும் தோன்றி விபட்ட பிறகு, அத்தகைய ஓவியங் களின் தேவை முக்கியத்துவம் பெற வில்லை. கால வளர்ச்சியில் ஒரு ஒலி யன் தனது மனக்கருத்தை வெளிப் படுத்த உதவும் ஒரு சாதனமாக அதைக் கைக்கொண்டான். அது
நவீன த் து வம் பொருந்தியதாய்
இருந்தமையால் நவீன ஓவியம் என்ற பெயரோடு பிரபல்யம் பெற லாயிற்று. மேலும், எல்லோரும் காலம்காலமாய் செய்து வந்ததையே நானும் செய்துகொண்டிருக்காமல் புதிதாக ஏதாவது சாதிக்க வேண் டும் எனும் உந்துதல் புதிய அமைப் பிலான ஒவியத்துறையின் வளர்ச் சிக்கு ஒரு காரணமாய் அமைந்தது எனலாம்.
ஒவியம் - ஏனைய நுண்கலைகளைப் போலவே பாடசாலைகளில் ஒரு பாட மாக போதிக்கப்படுகிறது. இளைய சமூகத்தினரிடம் ஒவியம் தொடர் பான ஈடுபாடு (மனமார்ந்த விருப்பு) குறைவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது, இந்தக் குறைபாட்டை நீக்கி அவர்களிடத்தில் இக் கலையின் சிறப்பை உணர்த்தி ஈடுபடச் செய்வ தற்கு என்ன வழிவகைகளைக் கையா ளலாம் எனக் கருதுகிறீர்கள்?
 ேஇந்த இடத்தில் நான் மீண்டும் வலியுறுத்தவிரும்புவது ஒவியக்கண் காட்சிகளின் இன்றியமையாத தன் மையினைத்தான் மேலும் பாடசாலை களில் ஒவியத்தைக் கற்பிக்கின்ற
。ー25 ー

Page 15
ஆசிரியர்கள் அதனை மாணவர்கள் விரும்பிக் கற் கி ன் ற வித ம க
- அதில் ஈ டு பா டு கொள் ளக்கூடிய விதத்தில் அ த னை க் கற்பிக்க வேண்டும். அத்தோடு
இன்றைய நிலையில் மாணவர்கள் நுண்கலைப்பாடங்களைத் தெரிவு செய்கின்றபோது பெருமளவு மாண விகள்கூட சங்கீதம், நடனம் போன் றவற்றுடன் ஒவியத்தையும் ஈடுபாட் டோடு கற்றுக்கொள்ள முன்வரு வதனை அவதானிக்க முடிகிறது. அத்தகையவர்களை நன்கு கற்பித்து அவர்களை இத்துறையில் தேர்ச்சி பெறவைத்துக் கண்காட்சிகள்மூலம் அவர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துவைக்கும்போது பரவலான ஈடுபாடுடையவர்கள் உருவாகும் நிலையினை எற்படுத்தமுடியும். அது போல சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவையும் அவர்களது ஓவியங் களைப் பிரசுரம் செய்து அவர்களை ஊக்குவிப்பதும் ஒரு நல்ல வழி யென்று கூறலாம்.
( ) நவீன ஒவியத்தை சாதாரண மாக எவருமே வரைந்துவிடமுடியும்
என்ற கருத்து நிலவுகின்றது. இதைப்பற்றி என்ன கூறவிரும்பு கின்றீர்கள்?
இ (சிரிப்புடன்) இது ஒரு தவறன கருத்து பார்த்தவுடன் வரைந்து விடலாம் போலத்தோன்றினலும் யாராலும் அதனை அப்படிவரைந்து விடமுடியாது. ஒவியத்தை வரை வதற்கு ஆழ்ந்த ஈடுபாடு பெருமளவு பயிற்சி இவையெல்லாம் அவசிய மாகத் தேவைப்படுகின்றன. ஒருவன் ஒரு ஓவியத்தை வரையும்போது
குறிப்பிட்ட ஒரு எண்ணத்தை மன தில்கொண்டுதான் வரை கி ரு ன். எனவே அது என்ன எண்ணக் கருத்தை அடிப்படையாகக் கொண் டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் ஒருவனுக்கு அவசியமாகிறது. உதாரணமாக ஒரு மரபுவழி ஓவியன் காந்திஜியை வரைந்து தரும்போது நாம் சுலப மாக அதனை அடையாளம் காண முடியும். ஆனல் அதையே ஒரு நவீன ஒலியன் வரையும்போது அதன் அமைப்பினைக்கொண்டு எளிதில் அந்த ஓவியம் இன்னதுதான் என அறியமுடியாது போகலாம். காந்தி ஜியின் சில முக்கியமான சிறப்பம் சங்களை அந்த ஓவியம் முன்னிலைப் படுத்தி அமைக்கப்பட்டிருக்கலாம். எனவே ஒரு ரசிகன் தேடுதல் பண் பின் கூர்மையினைக்கொண்டு ஒலி யத்தை அடையாளம் காணுகிருன். ஒவியன் தான் தேடுதலை மேற் கொள்ளும்போதே ரசிகனையும் தேட வைக்கிறன். இதுவே நவீன ஓவி யத்தின் ஒரு பண்பு எனலாம்.
() ஒருவர் கண்ணில் ஒரு ஓவியம் நிறைய அர்த்த முடையதாகவும் இன்னுெருவர்க்கு வெறும் அபத்த மாகவும் படுகிறது - உங்கள் கருத்து என்ன?
$ ஒரு ஒ வியத் தை ப் பார்த்து அதன் உட்பொருள் இன்னதுதான் என்று கண்டுகொள்ளும் ஈடுபாடோ ஆர்வமோ அவற்றைப் பார்க்கிற பலரிடம், என் பல புத்தி ஜீவிகளி டம்கூட இல்லாதிருப்பதைக் காணு கிருேம், ஒரு ஒவியம் ஏன் இப்படி இருக்கிறது? அது சொல்லுகின்ற
--۔ 236 م۔

செய்தி என்ன? என அறிகின்ற இயல்பே பலரிடமில்லை. அதேவேளை எல்லோராலும் ஒரு ஓவியத்தைச் சரி வரப் புரிந்துகொள்ள முடியும் என் றும் சொல்லமுடியாது.
$ ஒரு நவீன ஓவியத்தில் மனித மன உணர்வுகளை மிகவும் சிறப்பாக சித்தரிக்க முடியும் எனக் கருது கின்றீர்களா? (நடனம், இசை, இலக் கியம்போல்)
( ) நிச்சயமாக முடியும் - ஒரு ஓவி யன்கூட குறிப்பிட்ட மன உணர்வின் உந்துதலின் பேரில்தான் வரையத் தொடங்குகிறன். அவனது மன
ஆழத்தில்தான் ஒரு ஓவியம் உரு வாகத் தொடங்குகிறது. மேலும் ஒருவரை ஓவியமாக வரையத்
தொடங்குமுன்னர் ஒரு ஒ வியன் அவரோடு ஆறுதலாக உரையாடு கின்றன். அவரது உள் இயல்புகளை அடையாளம் காணுகிருன். பின்னர் அந்தக் குணும்சங்களைப் பிரதிபலிக் கும் விதமாக அவரது உருவத்தை வரைகிருன் - இதுபற்றி ஒரு சரித் திரச் செய்தியை இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு சமயம், வின்சன்ட் சேர்ச்சில் அவர்களை ஒரு ஓவியர் (கிரகாம் சத லாண்ட்) ஒவியமாக வரைந்து கொண்டுபோய் பாராளுமன்றத்தில் சேர்ச்சில் அமரும் நாற்காலியில் வைத்தார். ஏனைய மந்திரிகள் மற் றும் அங்கிருந்தோர் அந்த ஒவியத் தைப் பார்த்து ஒரு யுத்த மந்திரியை இப்படியா வரைவது? பார்த்தால் ஒரு நாய் அமர்ந்திருப்பதைப்போல் அல்லவா இருக்கிறது என்று சிரித்
தார்கள். அந்தவேளை சேர்ச்சிலும் வந்தார், ஓவியத்தைக் கண்டார் முன்புறமாகவும் பக்கவாட்டிலும் நின்று ஒவியத்தை நன்கு அவதா னித்தார். ஒவியம் வரைவதனையே தனது பொழுதுபோக்காகக்கொண்ட
சேர்ச்சில் அந்த ஒவியரை அணுகி
அவரை இறுகத்தழுவி 'என்னை மிகவும் சிறப்பாக - எனது குணும் சங்கள் வெளிப்படும் வகையில் வரை நீதிருக்கிறீர்கள்' என்று சொல்லிப் பாராட்டினராம் - எனவே இதிலி ருந்து மனிதனுடைய குணம்சங்கள் ஒவியத்தில் மிகச் சிறப்பாகச் சித் தரிக்க முடியுமென்று தெரிகிறதல்
Öù6)ሀዘፓ .
( ) சமூகப் பிரச்சனைகள் - தற்கால நடைமுறை வாழ்க்கை நிலைகள் இவற்றை நவீன ஓவியம் எந்த அளவுக்குச் சித்தரிக்கமுடியும் என நினைக்கிறீர்கள்?
9 இந்த விஷயத்தில் காட்டூன்கள் பெரும்பங்கு வகிப்பதை அவதா னிக்கலாம். மேலும் அண்மையில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி களில் சமூக அரசியல் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் ஒலியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றுள் பல மிக ஆழமான சித்தரிப்புகளாக அமைந் திருப்பதை அவதானிக்க கூடியதாய் இருந்தது. எனவே ஒவியத்தினூடாக அவற்றைச் சிறப்பாகச் சித்தரிக்க முடியும் என்றே கூறவேண்டும்.
th ஓவியக் கலையின் வளர்ச்சிக்கும் அதன் பரவலான முன்னேற்றத் திற்குச் சஞ்சிகைகள் - பத்திரிகைகள் எந்த விதத்தில் உதவ முடியும்?
- 27 -

Page 16
L) முகப்பு ஓவியங்களேப் பிரசுரித் தல், ஒவியங்களுக்காக பக்கங்களை ஒதுக்குதல், ஒவியங்கள்பற்றிய செவ் விகள், அவர்களது கருத்துக்கள் என்பவற்றைப் பத்திரிகை, சஞ்சிகை களில் பிரசுரிக்க முன்வருதல் என் பன ஒவியத்துறையை ஊக்குவிப் பதாக இருக்கும் ** அ லே ?? போன்ற சஞ்சிகைகள் யோசப் யேம்ஸ் போன்றேரின் செவ்வியினைப் பிரசுரித்ததையும் நவீன ஓவியங்களை முகப்புப்படமாகப் பிரசுரிப்பதும் ஓர் நல்ல உதாரணமாகும்.
அத்துடன் நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றல் அடிக் கடி ஓவியக் கண்காட்சிகளே ஆங் காங்கே நடாத்துவதினுல் மாண வர்கள் மத்தியிலும் மக்கள் மத்தி யிலும் ஒவியம் சம்பந்தமான விழிப் புணர்வை எற்படுத்தலாம்.
ஒவியங்களைத் தொங்க வி ட் டு அழகுபடுத்தலும் வசதி படைத்தோ ரும் கலே ஆர்வமுள்ளோரும் தமது வீடுகளின் சுவர்களில் நல்லதோர் இடத்தினை ஒதுக்கி அதில் புடைப்புச் சிற்பங்கள் போன்றவற்றை அமைப் பதஞலும் இக் கலைக்கு ஊக்கமளிக் கலாம். அனேகமாக இப்போது தெற்
கில் இவை பரவலாக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
9 தொடர்ந்து இக் கலைதொடர் பாக ஈடுபாடுள்ளவர்களை வளர்க்க நீங்கள் என்ன வகையில் முயற்சி செய்கிறீர்கள்?
( ) நவீன ஒவியத்தில் ஆர்வமுள்ள வர்களுக்காக வகுப்புக்களை நடாத்தி யும் அவர்களுக்கான கண்காட்சிகளை ஒழுங்குபண்ணி அவர்களைப் புறஉல குக்கு அறிமுகம் செய்தும் வரு கிறேன். அண்மையில் செல்வி வாசுகி ஜெகந்நாதனின் ஓவியக்கண் காட்சியொன்றை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின் றன. அத்தோடு சாதாரணமாக ஒவ்வொருவரும் தமது வீட்டுச்சுவர் களில் நவீன ஓவியங்களைத் தொங்க விட்டு அழகுபடுத்த முன்வரவேண் டும் என நான் விரும்புகின்றேன்.
அது பரவலாக மேற்கொள்ளப் படுவது ஓவியம்பற்றிய ஈடுபாட்டு உணர்வினைச் சகலர் மத்தியிலும் பரப்ப உதவியாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
se 宠括
'ஆதவன் எழுகிருன்' சஞ்சிகையில் நூல்ம்ே பகுதி புதிதாக
இடம் பெறவுள்ளது.
ஈழத்து நூல், உங்கள் நூல்களும் இப்பகுதியில் இடம் பெற வேண்டுமா?
வெளியீட்டாளர்களே பிரதிகளை
சஞ்சிகை
உடன் எமது முகவரிக்கு அனுப்புங்கள். சேர்த்துக் கொள்வோம்.
முகப்பு ஒவியம் வரைந்தவர்
ஆதவன் செயலவை
திரு. அ. மாற்கு
- 28 -

ஏன் எழுதுகிறேன் * 'இலக்கியப்பணி என்று எதைச் சொல்வது? என் ஆத்ம எதிரொலிப் பாக நான் வாழும் வாழ்க்கையின் ரஸனயை எனக்கு எளிதா கக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக் காட்டுகிறேன். இதில் சேவை என் பதோ பணி என்பதோ இடம் பெற வில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள் ளவே நான் விரும் புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியது மாக வியப்புகள் நிறைந்து இயங்கு கிறது. அதைப் பார்த்துக்கொண் டிருப்பதே ஆனந்தம்தான். அதைத் தான் நான் பகிர்ந்துகொள்கிறேன்,
எழுத்துமூலம்."
- தி. ஜானகிராமன்
இலக்கியமும் நானும்
வாழ்வின் அந்திம தசையில் இவ் வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும். ‘என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்ப மா ன துதான். எனினும் அந்தச் சொற்ப மா ன கலைத் திறனையும் நான் பேணிச் சிராட்டி வளர்த் தேன். எனது அந்த ரங் கத்து க்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசிவரையும் நான் காப்பாற்ற முயன்றேன், எனக்குக் கிடைத்த பாஷையை மலினப்படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னு லான முயற்சி எடுத்துக் கொண் GLsör.'
இவ்வளவு போதும் எனக்கு.
- சுந்தர ராமசாமி
எதிர் கொள் இனிய சோதரி! இன்றுடன் எத்தனை நாள்? நீயும் மெளனமும் உறவு கொண்டு.
எழுந்து பார் -
இதுதான் உச்சிவேளை.
இழந்தது எல்லாம் சொத்துக்கள்
தானே
எழுந்திரு என்றேன்
அவளோ -
வாழ்வின் வசந்தத்தை,
வண்ணக் கனவுகளை,
இழந்துவிட்ட இதயத்தை, தேடுகிறேன் என்ருள்.
ஒரு கணம்இதய கடிகார பெண்டுலம்
அசைய மறுத்தது ஆயினும் - இனிய சோதரியே! ஆயிரம் பேர் உன்போல்.
இறந்த காலம் இறந்து போனது எதிர் காலத்தை ஆயினும் எதிர் கொள்ள வேண்டாமா?
எமுந்து பார் இதுதான் உச்சி வேளை.
- செல்வி. ந. கமலா
‘ஆதவன் எழுகிறன்' சஞ் சிகை வெளியிடப்படுவதன் நோக்கம் உயர்கல்வி மாண வர்களின் கல்வித் தேவை 4ை/ப் பூர்த்தி செய்தல்: இஆர ஞர்களின் கலை, இல க் கி () முயற்கிகளுக்கு களம் அமைத் துக் கொடுத்தலே.
- ஆதவன் செயலவை

Page 17
(
V
1760 - 1830 க்கும் இடையில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அடிப் படை மாற்றங்களைக் குறிக்கவே கைத்தொழிற் புரட்சி என்ற பதத் தை முதலில் ஆர்னேல்ட்ருெயின் பயன் படுத்தினர். ஆனல் அதனை புரட்சி என அழைக்கலாமா என்ப தில் பொருளாதார வ ர லா ற் று ஆசிரியர்களிடையே வாதப் பிரதி வாதங்கள் உள்ளன. ஒஸ்ரின், நெவ், போன்ற அறிஞர் கள் கைத் தொழில் புரட்சி என்ற பதப் பிர யோகத்தை எ தி ர் க் கின்றனர். ருெயின்பீ என்பவர் கைத்தொழில் புரட்சி பற்றி நடத்திய தொடர் விரி வுரைகள் 1884 - ல் நூலுருவில் வெளி வந்தன. அதன் பின்பு இப் Løtd gf stal F (T gift T 6007 LDT & D Li யோகிக்கப்பட்டது. ஆனலும் இங் கிலாந்தில் 1766 க்கும் 1830 க்கும் இடையில் ஒரு கைத்தொழில் புரட்சி நடந்தேறியது எனக் கூறு த ல் ஒன்றில் கூறத்தகாத ஒரு கூற்றக அல்லது விரும்பத்தகாத ஒரு பதப் பிரயோகமாகவே அமைகின்றது. பொருளாதார வரலாறு என்பது வரலாற்று ரீதியாக ஏற்பட்ட மாற் றங்களை ஒரு தொடர் நிகழ்ச்சியாக காரணங்களோடும் காரியங்களோ டும் தொடர் பு படுத்தி விரித் துரைக்கும் ஒன்ருக அமைகின்றது. பொருளாதார மாற்றங்கள் குறிப்
அ. குமாரவேல் B. A.
இங்கிலாந்தின் பொருளாதார ) வரலாற்றில் ) கைத்தொழில் புரட்சி 3 )
[ Homs)
பிட்ட ஒரு காலத்தில் தோன்றிய தென திட்டவட்டமாக வரையறுக்க முடியாது. அவ்வாறே எப்போது முடிவு பெற்றது எனவும் திட்ட வட்டமாக கூறமுடியாது. பொரு ளாதார மாற்றங்களுக்கு Ript லாற்றில் பிரிநிலைக் கோ டு கள வரையறுக்க முடியாது. எனவே 1760 - 1830 க்கும் இடையில் தொழிற்புரட்சி எற்பட்டதென வரை யறை செய்தல் பொருத்தமான தல்ல. உண்மையில் இங்கிலாந் தில் 1760 க்கு முன்பும் 1830 க்குப் பின்பும் கூட பல அடிப்படை மார்) றங்கள் கைத்தொழிலில் ஏற்பட் டுள்ளன. 1733 ம் ஆண்டு எறி நாடா கண்டு பி டி க் கப் பட்ட து.
1830 ன் பின்பும் நிலக்கரி உற் பத்திநுட்பங்கள் வளர்ச்சியடைந் தன. இம்மாற்றங்களுக்கான காய ணங்கள் இக்காலத்திற்கு முன்பும் பின்பும் இருந்துள்ளன. முதலாளித் துவஊற்றெடுப்பானது மத்திய காலத்திலேயே அதற்கான வித்தை இட்டுள்ளது. தொழிற்புரட்சியின் விளைவு முதலாளித்துவத்தின் தோற் றம் என்ருே அல்லது 1760 - 1830 க்கும் இடை யி லே தான் அது தோன்றிய தென்றே கூற முடி யாது. புரட்சி என்ற பதம் அடிப் படை மாற்றங்களை மிகக் குறுகிய
- 30 -

காலத்தில் அல்லது சடு தி யா க உணரக் கூடிய அளவிற்கு மிக விரைவாக நடைபெறும் நிகழ்ச்சி யொன்றைக் குறிப் பி டப் பயன் படுத்தப் படுகின்றது. அத்தகைய நிலையொன்று இங்கிலாந்தின் கைத் தொழில் வரலாற்றில் மிகச் சடுதி யாக ஏற்பட்டதா எனில் அது அவ்வாறு நடை பெற வில் 8ல
1760-1830 க்கும் இடையில் உள்ள காலம் 70 வருடங்களாகும். மனித வாழ்வில் இது ஓர் மிக நீண்ட காலம் ஆகும். இந் நீண்ட காலத் தில் ஏற்பட்ட மாற்றங்கள் புரட்சி என்ற பதத்தோடு தொடர்பு பட்ட தல்ல. அது மெதுவாக எற்பட்ட ஒரு மாற்றமேயாகும். கைத்தொ ழில் புரட்சி என்பது கைத்தொழில் முறையில் பின்பற்றப் பட்ட முறை யினை அது கைகளால் செய்யப்பட்ட வேலைகளை வினைப்பொறிகளால் செய்வதையும், வீடுகளில் செய்த வேலைக்குப் பதிலாக தொழிற்சாலை முறையின் அமைப்புத் தோன்றிய மையும், கைத்தொழில் உற்பத்தி நோக்கில் ஏற்பட்ட மாற்றத்தினை யும், நிலையானதும் சிறியதுமான ஒரு சந்தைக்காகவே உ ற் பத் தி செய்யப்பட்ட நிலை மாறி, குறைந்த செ ல வில் பேரளவுற்பத்தியாக செய்து நாட்டின் எல்லைக்கப்பால் உலகளாவிய சந்தைக்கு உற்பத்தி செய்யும் மாற்றத்தையும், இத் தகைய மாற்றங்கள் சமூக ரீதியில் ஏற்படுத்திய சில தாக் கங் களைக் குறிப்பிடவும் அதாவது எல்லா மாற்றங்களையும் தொகுத்துக் கூற புரட்சி என்ற பதத்தை ருெயின் பீகையாண்டார். இவ்வாறன மாற்
றங்கள் நெசவுத் தொழிலில் ஏற்பட் டன என்பது உண்மையே, ஆனல் இம்மாற்றங்கள் சடுதியாக ஏற்பட் டனவா? அல்லது அவர் கூறிய காலப்பகுதிக்குள் மட்டும் தான் நிகழ்ந்தனவா? அல்லது அக்கால வரையறைகளுக்கு முன்பும் பின்பும் கூட நிகழ்ச்சிகள் தொடர்பு படு கின்றனவா? என்பவை போன்ற வினுக்கள் பொருளா தா ர வர லாற்று ஆசிரியர்களிடையே தோன் றுவது இயல்பானதே! புரட்சி என்ற சொல்லை வரையறுக்கும் போது அங்கு பலாத்காரம், விரைவு போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனையும் கருத்திற் கொண்டு ஆராய்ந்தால் கைத்தொழில் புரட்சி என்ற பதப் பிரயோகம் பொருத்தமற்றதாகவே யுள்ளது. ஏனெனில் அது திடீ ரென ஏற்பட்ட ஒன்று அல்ல. அது மெதுவாகவே நடைபெற்றது. பிறர் உணர முடியாத வகையில் தான் நடைபெற்றது. இதன் கருத் து
அக்கால வரையறைக்குள் is) அடிப்படையான மாற்றங்கள் நிகழ வில்லை என்பதல்ல. அடிப்படை
யான மாற்றங்கள் நிகழ்ந்ததென் பது உண்மையேயாகும். ஆனல் அது புரட்சி என்ற ப த த் தி ன ல் குறித்துரைக்கக் கூடிய மாற்றங்கள் அல்ல.
கைத்தொழிற் புரட்சி பிரித்தானி யாவின் அரசியல் பொருளாதார சமூக நிலைகளில் பல விளைவுகளை உருவாக்கியது. அடிப்படை மாற் றங்கள் ஏற்பட்டன. எதிர்கால அர சியல் நிலைமைகளை மாற்றின. சமூக அடிப்படையை மாற்றி அமைத்தது.
- 31 -

Page 18
விவசாயப் பொருளாதார நாடாக இருந்த இங்கி லா ந் தை கைத் தொழில் நாடாக மாற்றி அமைத் தது. பிரித்தானியாவின் தேசிய உற்பத்தியில் கைத்தொழில் துறை யின் பங்களிப்பு அதிகரித்துச் சென் றது. வெளிநாட்டு வர்த்தகத்தில் பெருமளவிற்குத் தங்கி இரு க் கும் நிலை தோன்றியது. கைத்தொழி லில் பெருமளவு மனித வலு ஈடு படுத்தப் பட்டமையால் விவசாயத் துறைக்கான மனித வலு குறை வடைந்தது. கைத்தொழிலில் ஈடு பட்ட தொழிலாளருக்கான உண வுப் பொருட்களை இறக்குமதி செய் யும் நிலைக்கு நாடு தள்ளப் பட்டது. வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கி யிருக்கும் நிலை ஏற்பட்டமையால் பொருளாதாரத்தில் ஒர் உறுதியற்ற நிலை ஏற்பட்ட தென்பதும் உண்மை யாகும். வெளிநாட்டுச் சந்தையில் கேள்வியில் பாதிப்பு ஏற்பட்டபோது பிரித்தானியாவின் உறுதி நிலை குலைந்தது. இறக்குமதிகளில் தடை கள் ஏற்பட்ட போது மூலப் பொருட் களைப் பெறுவதில் சிரமங்கள் தோன் றின. இங்கிலாந்து உலகில் முதன் மை நிலையைக் கைத்தொழிலில் அடைந்தமைக்காகப் பெற்று க் கொண்ட பரிசு பொருளாதாரத் தின் உறுதியற்ற தன்மை என பொருளாதார வரலாற்று அறிஞர் கள் கூறக் கூடிய அளவுக்கு நிலை மை ஸ்திரமற்றதாகியது. ஆனலும் பிற்காலத்தில் கைத்தொழில் மய மாக்கல் எ ன் ப த ன் மூலம் இப் பாதிப்புக்களை ஈடு செய்யும் வாய்ப் புக்களையும் இங்கிலாந்து பெற்றது. இவை யாவற்றுக்கும் அடித் தளத்
தை அமைத்துக் கொடுத்தது கைத் தொழில் புரட்சியேயாகும். 19 ம் நூற்றண்டின் இறுதியில் ஜேர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரப் போட்டியை எதிர் நோக்கக் கூடிய அளவிற்கு பிரித்தா னியா வலிமையடைய முடிந்தது. ஆரம்ப கால ஸ்திரமற்ற நிலை பிற் காலத்தில் ஈடு செய்யக் கூடியதாக இருந்தது. 19 ம் ஆநாற்ருண்டில் இங்கிலாந்தின் குடித்தொகை மிக விரைவாக வளர்ச்சியடைந்து சென் றது. ஆயினும் மக்களின் வாழ்க் கை நியமமும் அதிகரித்தே சென் றது. இங்கிலாந்து அரசு பெரு மளவு நிதி யைப் பெறக் கூடிய வாய்ப்பு இருந்தமையால் பொதுச் செலவினங்களை அதிகரித்து வாழ்க் கை நலனை உயர்த்தக் கூடியதாக இருந்தது.
கைத்தொழிற் புரட்சி பொருளா தாரத் துறையில், இயந்திர உப யோகம், நவீன நுட்பம், ஒன்றுக் கொன்று ஈடான கண்டு பிடிப்புக் கள், முதலாளித்துவத்தின் உயர் நிலை, போன்ற பல வியத் தகு விளைவுகளையும் சில விரும்பத்தகாத விளைவுகளை யும் பொருளாதாரத் துறையில் ஏற்படுத்திய அதே வேளை யில் சமூக, அரசியல் அடிப்படை களையும் மாற்றியமைத்தது. பிறப் பின் வழியினல் பிரிந்த சமூகத்தை தொழிலின் வழியினல் பிரிக்கும் புதிய நிலை யை ஏற்படுத்தியது. சமூகத்தில் இரு முரண்பட்ட வர்க் கங்கள் தோன்றின. மு த லா ளி தொழிலாளி என்ற வேறுபாடு அதி கரித்து முரண்பாடுகள் வளர்ந்து
- 32 -

சென்றன. முதல் உள்ளவன் முக் கியத்துவம் பெறும் முதலாளித்துவ பொருளாதாரமாக இங்கிலாந்து மாறியமையினல், தொழிலாளர் நிர ந் த ர மாக தொழிலாளியாக, தனது இரு கைகளையே நம்பியிருக் கும் வர்க்கமாக மாறியது. கைத் தொழிற் புரட்சி உருவாக்கிய விளை வுகளில் தொழிற்சங்கத்தின் தோற் றம் மிக முக் கி ய மா ன து . கைத்தொழிற் புரட்சியின் ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கம் பட்ட இன்னல்களும், வேதனைக ளும் அவர்களுக்குப் பலசோதனைகளை எற்படுத்தின. தலையிடாக் கொள்கை என்ற சிந்தனையில் அ ர சாங் கம் அசட்டுத் தனமாக இருந்தமை யால் தொழிலாளர் அதிக துன்பங் களை அனுபவித்தனர். குறை ந் த கூலி மட்டம் காணப்பட்டது வழங் கப்பட்ட கூலி யும் பண மும் பொருளு மா க வழங்கப்பட்டது. பொருட்களை விற்றபொழுது த ர கு முதலாளித்துவத்தால் அதன் உண் மைப் பெறுமதி குறைந்தது. ஒரே கூடாரத்தின் கீழ் தொழிலாளர் இணைக்கப்பட்டமை ஆங்கில மக்க ளுக்கு ஒரு புது அனுபவமாகும். அவர்களுக்கு கல்வி, சுகாதார வசதி கள், விபத்துக்கான நட்டஈடு போன் றவை சமூகக் காப்புறுதி ஆகியவை அறவே இல்லாதிருந்தன. மிக நீண்ட நேரம் வேலை வாங்கப்பட்டது.
தொழிலாளர் 16 மணிததியாலங் கள் கூட வேலை செய்யுமாறு நிர்ப் பந்திக்கப் பட்டனர். எஞ்சியிருந்த 8 மணித்தியாலத்தில் தனது வழமை யான கடமைகளை, நித்திரையையும் பூர்த்தி செய்ய வேண்டி இருந்தது.
வேறு சொற்களில் முதல் உள்ள வனின் ஆனந்த வாழ் விற் கா க தொழிலாளி தனது உறக்கத்தை யே கைவிட்டான் எனின் அது மிகைக் கூற்ருகாது. பெண்கள், சிறு வர் ஆகியோர் வேலைக்கமர்த்தப் பட்டனர். அங்கு ஒழுக்கநெறி சிதை வடைந்தது. மனிதாபிமானம் என்பது அங்கு இலாபத்திற்காக விலை கூறி விற்கப்பட்டதெனலாம். தொழிலாளர் மந்தைகள் போல் நடாத்தப்பட்டனர். ஆரம்ப காலத் தில் மந்தைகளுக்கு இருந்த ஒய் வும் சுதந்திரமும் கூட இங்கிலாந் தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு இருக்கவில்லை. அரசோ முதலாளி களின் எதிர்ப்பை சம்பா தி க்க விரும்பாது, கண்டும் காணுத மாதிரி அல்லது ஏனே தானே என்ற நிலை யில் காணப்பட்டது. கைத்தொழில் புரட்சி இங்கிலாந்தின் பொருளா தாரத்தை வளர்ச்சியடையச் செய் தது என்பது உண்மையே. ஆனல் அக் காலகட்டத்தில் அதனல் ஏற் பட்ட சமூக விளைவுகள் இங்கிலாந் தின் வரலாற்றில் கறை படி ந் த அத்தியாயங்களாகவே அமைகின் றன.
கைத்தொழிற் சாலைகளைச் சுற்றி மக்கள் பெருமளவிற்குக் குடியேற லாயினர். புதிய நகரங்கள் தோன் றின. நகரங்கள் திட்டமிடப்படாது ஒழுங்கற்ற முறையில் அமைந்தன. இதனல் போதிய வசதிகள் இருக்க வில்லை. ஒரு வீட்டில் அது தாங்கக் கூடிய மக்களை விட அதிக மக்கள் தங்கினர். காற்றேட்ட வசதியோ, சுகாதார வசதிகளோ இல்லாதிருந் தன. தொற்று நோய்கள் அதிகரித்
سس 33 م

Page 19
தன, இறப்பு வீதம் கூ டி யது
ஆயுள் எதிர்வு குறைந்தது. பிற் காலத்தில் அரசு தலையிட்டுத் தீர்க் கும் வரை இந்நிலை தொடர்ந்தது. இந்நிலையிலும் சனப் பெ ருக்க ம் காணப்பட்டது. கிராமங்களில் இருந்து மக்கள் நகருக்கு வந்து குடியேறினர். ஆண்களும் பெண்க ளும் தொழிற்சாலைகளில் ஒன்ருக வேலை செய்தனர். அதனல் திரும ணங்கள அதிகரித்தன. இவ்விள வய துத் திருமணங்கள் பிறப்பு வீதத் தை உயர்த்தின. இதனல் சமூக கட்டுக் கோப்புகள் சிதறத் தொடங் கின. தொழிற்புரட்சி தொழிற் பகுப்பு முறையைக் கொண்டு வந் தது. ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு குறித்த வேலையை திரும்பத் திரும்ப செய்ய வேண்டி இருந்தது. தொழிலாளி இதனல் விரக்தி நிலைக் குத் தள்ளப்பட்டதோடு முதலாளிக்கு மேலும் மேலும் கட்டுப்பட வேண்
டிய நிலையைத் தோற்றுவித்தது, சமூக ரீதியாக குறுகிய காலத்தில் ஏற்பட்ட கெடுதலில் இருந்து தன் னைத்தானே பாதுகாக்க தொழிற் சங்கத்தை அமைக்க வேண்டி இருந் தது. தொழிற் சங்க ங் க ள் ஆங் காங்கே சிதறலாகத் தோன்றின. ஆரம்பத்தில் அரசினதும் முதலா ளிகளினதும் இறுக்கமான நடவடிக் கையால் அவை பெலவீனமாகவே இருந்தன. கைக்தொழில் புரட்சி ஆரம்பித்த குறுகிய கால த் தி ல்
விளைவுகள் மிகப் பா ர தூர மாக
இருந்தன, ஆன ல் நீண்ட கால நோக்கில் சமூக பொருளாதார அடிப் படைகளில் நன்மையைக் கொண்டு வந்தது. தொழிலாளர் வர்க்கத் தின் நலன் பேணும் அமைப்பாக தொழிற்கட்சி பிற்காலத்தில் வளர்ச் சியடையவும், அதிகாரத்தைப் பெற வும் கைக்தொழிற் புரட்சி வித்திட்
se
Léj· :
பொருளியல் - திரு. வர்த்தகம் - , , அளவையியல் - ,
KEEN CENTRE
Thirunesvely. és&v, Gnudiéés escö 89. 9O G. C. E, (A/L) 6ý656567607cb
வரதராஜன் ஜெயராமன் S. S. மனுேகரன்
தமிழ் - ,, குழந்தை இந்துநாகரீகம்- , காரை
அரசறிவியல் - , மனுேகரன் புவியியல் - , சண்
கீன் சென்ரர் - திருநெல்வேலி.
விலங்கியல் - திரு.நாகநாதன் தாவரவியல்- , குகாதரன்
பெளதீகவியல் , சத்தியசீலன் இரசாயனவியல் , மணியம் தூய, பிரயோக
கணிதம் ,,FFáT
مسسس 34 مس

அமுத சுரபி
- ந. அமிர்தலிங்கம்
'பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன். இது மலைத்தேன் என நான் நினைத்தேன்" இது கவியரசு கண்ணதாசனது பாடல் அடி. ஒவ்வொரு சொல்லின் விகுதியும் ‘தேன்’ என தேனுக முடிந்துள் ளது. இப்பாடலுக்கு கரு அவருக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்துதான் கிடைத்திருக்கும் என நாம் ஊகிக்கலாம். மேல் வரும் பகுதியைக் கவனியுங்கள்.
கொல் லி மலை யிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டு வரும்படி சொல்லியிருந்தேன். அந்த ஆள் அன்றைய தினம் வராமல் மறுதினம் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவ ன் பேசினன்.
‘நேற்றே மலைக்கு நடந்தேன் பல இடங்களில் அலைந்தேன் இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன் ஒரு கொடியைப் பிடித்தேன் ஏறிச் சென்று கலைத்தேன் சட்டியில் பிழிந்தேன் நன்ருக வடித்தேன்,
மகிழ்ந்தேன், அதில் சிறிது குடித்தேன், களித்தேன், களேத்தேன், அயர்ந்தேன், மறந்தேன், இன்று காலை நினைத்தேன், தேனை அடைந் தேன், விரைந்தேன், வந்தேன். இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்” என்று. இதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தேனுக இனிக்க வில்லையா? இப்பழந்தமிழ்ப் பகுதியே கண்ணதாசனின் அப் பாடலுக்கு அடிப்படையாய் இருந்திருக்கலாம். தமிழ் என்பதற்கு இனிமை என்றும் பெயர் உண்டு. புதுமனைத் தம்பதியரை வாழ்த்து கின்றபோது கூட “தமிழும் சுவையும் (இனிமை) போல் வாழ்க’ என பெரியவர்கள் வாழ்த்துவார்கள். தமிழை யும் இனிமையையும் பிரிக்கவே முடியாது, இலக்கிய வளமும் இ லக் கண வரம்பும் அணி சேர்க்க உவமை அணிகள் சிறந்து விளங்க தொன்மை பெற்று திகழும் தமிழ் மொழியின் இனிமைக்காக, தீங்கனிச் சுவை மிக்க கவிதைகளுக்காக வரையாது வழங்குதல் மட்டு மன்றி, இன்னுயிரையே அர்ப்பணித்த தியாகிக ளும் பண்டைக் காலத்திலும் இருந்திருக்கின்றனர்; என்பதை பழந் தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. அதில் நந்திக் கலம் பகமும் ஒன்று.
--۔ . 35 --سے

Page 20
செந்தமிழின் சாற்றைப் பிழிந்து செழுஞ் சீதச் சந்தண மென்றரோ தடவிஞர் - பைந்தமிழை ஆராய்கின்ற கோணந்தியாகந் தழுவாமல் வேகின்ற நெஞ்சே விரைந்து,
இது நந்திக் கலம்பகத்தில் வரும் வெண்பா ஒன்று. இப்பாடலை எதிர்பாராத விதமாகக் கேட்ட நந்தி மன்னன் கவியின் சுவை வழி சாய்ந்த மனதினனனன். சிதை அடுக்கி அதன் மேல் அமர்ந்திருந்து கேட்க முடியுமானல் மட்டுமே அந்த 'நந்திக் கலம்பகம்’ என்ற நூலை அரங்கேற்ற முடியுமென அதை இயற்றியவன் (நந்தியின் சகோதரன்) கூறிய போதும் தன்னுயிரை ஈந்தேனும் அந்நூலை அரங்கேற்ற வேண்டும் என்ற நோக்குடையவனக அதற்கு உடன் பட்டான்.
நந்திக்கலம்பகம் என்னும் தீங்கனிச் சுவை மிக்க நூலைநிலை பெறச் செய்ய தன் உயிரை அர்ப்பணித்த நந்தி மன்னன் எல்லாப் பாடல்களையும் கேட்ட பின் இறுதியாக உள்ள பாடல் பாடி முடிய அவனது உயிரும் பிரிந்தது. அச் செய்யுள் வருமாறு.
**வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல்
புகுந்தது உன் கீர்த்தி காணுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்
ததுன் கரங்கள் தேனுறு மலரான் அரியிடம் புகுந்தான் செந்தழ
லடைந்ததுன் தேகம் யானும் என் கவியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயாபரனே'
வரையாது வழங்கும் வள்ளலும், ஒப்பற்ற வீரமும், புகழும் கொண்ட நந்தி மன்னன் செந்தமிழுக்காக தன் உயிரை அர்ப்பணித்து 'நற்றமிழ் நந்தி' என போற்றப்படுகின்றன்.
அவனுல் நிலைபெறச் செய்த நந்திக் கலம்பகம் என்னும் நூல் தமிழுலகம் உள்ள வரை நிலைபெற்று நிற்கும். அத்தகைய கவிகளை என்றும் போற்றுவோம். இத்தகைய தியாகிகளால் தமிழ் மொழி பாது காக்கப்பட்டு வந்துள்ளது என்பதை மனதில் கொண்டு நாமும் அத் தொண்டினைச் செய்வோமாக.
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
-36 -

சாணக்கியனின்
அரசியல்
சாணக்கியம்!
* காரை. செ.
சுந்தரம்பிள்ளை *
டெமொழித் தர்ம சாஸ்திரங் களில் ஒன்ரு 5 அர்த்த சாஸ்திரம் எனப்படும் சாணக்கியம் விளங்கு கிறது. இது பொருளிய%லயும், அரசியலேயும் கூற வந்த சிறந்த வோர் நூலாகும். இதன் ஆசிரியர் கெளடில்யர். இவரைச் சாணக்கி யர் என்றும் அழைப்பர். இoடருக்கு விஷ்ணு குப்தன் என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. சந்திர குப்த மெளரியன் நந்தரைத் தோற் கடித்த பெருமைக்குரியவன். அவ னைப் பேரரசன் ஆக்கிய பெருமை கெளடில்யர் எனப்படும் சாணக்கிய ருக்கே உரியதென்பர். சந்திரகுப்த மெளரியனுடைய முதன் மந் தி ரி யாக இருந்து அவனை வழி நடத் திய காாணத்தினுற் தான் அவன் பேரரசன் ஆனன் என்பது வரலாற் றறிஞர்தம் கருத்தாகும்.
தர்ம சாஸ்திரம்
அர்த்த சாஸ்திரத்துக்கு வேறும் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் இராச சாத்திரம், நீதி சாத்திரம், இராச நீதி, தண்டநீதி என்பன முக்கியமான பெயர்களாகும். இந் நூல் மன்னர்களின் நன்மை கருதி ஆக்கப்பட்டது எனத் தெரிகிறது. ஏனைய அறநூல்கள் ஸ்மிருதிகள் என்றும் தர்ம சாத்திரங்கள் என்
றும் அழைக்கப் படுகின்றன. அறம்,
பொருள், இ ன் பம் , வீடு ஆதிய புருஷார்த்தங்கள் பற்றி ஸ்மிருதி நூல்கள் எடுத்துக் கூறுகின்றன,
மக்களின் நன்மை கருதி ஆக்கப் பட்ட இந் நூல்கள் அரசர்களால் பின்பற்றப்பட்டன. அரசர்களர்ல் பேணப்பட்ட சட்டப் புத்தகங்களாக வும் தர்ம சாஸ்திரங்கள் விளங்கின.
ஆனல் ஓர் அரசன் தர்ம சாஸ் திரத்தை கடைப் பிடிக்கும் போது அவனுக்கு அதனுல் நன்மை ஏற் டாதெனில் தர்ம சாஸ்திரத்தை அவன் கை விடலாம் என அர்த்த சாஸ்திரம் கூறுகின்றது. இக் கருத்து பெளத்தர்களால் மிகவும் வன்மை யாகக் கண்டிக்கப்பட்டது.
மகாபாரதம்
இதிகாசங்களுள் மகாபாரதமும் ஒன்று. இது தர்மத்தையே வலி யுறுத்துகின்றது. இந்நூல் அர்த்த சாஸ்திரக் கருத்துக்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகின்றது. யுத்த தர்மம், ராஜதர்மம் என்பன குரு சேத்திரப் போரிலே சில இடங்க ளில் மீறப்பட்டமை இதற்கு ச் சான்று பகரும் , பிற்காலத்தில் வாழ்ந்த காளிதாச மகாகவி, பாரவி, மாகர் போன்ற பெரும்
حسس۔ 37 ۔۔۔

Page 21
புலவர்களுள் வராஹ மிகிரர், சன கர் போன்றவர்களும் தமது நூல் களில் அர்த்த சாஸ்திரக் கருத்துக் களே அடிக்கடி கையாண்டுள்ளமை நோக்குதற்குரியது.
பிரிவுகள்
அர்த்த சாஸ்திரம் பதினை ந் து பெரும் பிரிவுகளையும், நூற்று எண் பது சிறு பிரிவுக%ளயும் கொண்டுள் ளது. பெரும் பிரிவுகள் அதிகர னம் எனறும் சிறு பிரிவுகள் பிர கானம் என்றும் பெயர் பெறுகின் றன.
அர்த்த சாஸ்திரம் கூறுகின்ற அரசியல் கருத்துக்கள் சிற்றரசுக்கு உரியவை என்றும் பேரரசுக்குரியன அன்று என்றும் கூறுவோர் உளர். எனினும் அறிஞர் தம் கருத்துப்படி கி. பி. 3 ம் நூற்ருண்டுக்கு முற் பட்ட அரசு பற்றிய விளக்கத்தை எமக்குத் தருகின்ற சிறந்த நூலாக இது விளங்குகின்றது. குறிப்பாக மெளரியர் கால அரசு பற்றிய தக வல்களை இந்நூல் எடுத்துக் கூறு கின்றது,
அரசன் முதலிடம்
அர்த்த சாஸ்திரத்தின்படி அரசன் முதலிடம் பெறுகின்றன். அவன் ஒப்புயர்வற்ற தலைவகுவான். அவ னுடைய அதிகாரம் எல்லேயற்றது. அவன் தர்மசாஸ்த்திரங்களை தேவை யேல் ஏற்று ஆட்சி புரிதல் வேண் டும். அரசன் கடும் உழைப்பாளி யாகவும், அரசியலில் கண்ணும் கருத்தும் உடையவனுகவும் இரு த் தல் முக்கியம். அரச காரியங்களி லும் நிதி விடயத்திலும் சேனை
முதலாவது
களை மேற்பார்வை செய்வதிலும், உளவு பார்ப்பவர்களே கண்காணிப்ப திலும் அவன் தீவிர கவனம் செலுத் துதல் இன்றியமையாததாகும்.
மன்னர்களுக்குரிய கல்வி பற்றி அதிகரணத்திலேயே அர்த்த சாஸ்திரம் விளக்கம் தருகி றது. சகல சாஸ்திரங்களையும் அ! சன் க ற் றிரு த் த ல வேண்டும். வேதங்களையும் வேதாகமங்களேயும் பல்வேறு வகைப்பட்ட தொழில் முறைகளையும் இராசநீதி, தண்ட நீதி என்பன பற்றியும் அறிந்திருத் தல் அவசியமாகும்.
மந்திரச் சுற்றம்
மன்னன் தனித்தியங்க முடியாது. அவன் தனக்குத் துணையாக அறி வுாை கூறும் பெரியோர்களையும், மந்திரியார்களையும் சே ஞ தி ட தி, தண் டத் தலைவன் போன்ருோையும் மந்திரச் சுற்றமாகக் கொண்டிருத் தல் வேண்டும். ஓர் அரச ன து சிறப்புக்கு திருவள்ளுவர் கூறுவது போல் படை குடி, கூழ் அமைச்சு, நட்பு, அரண் ஆதிய அங்கங்கள் ஆறும் முக்கியமானவை.
அதிகாரிகளை நியமிக்கின்ற போது தகுதி அறிந்து நியமிக்க வேண் டும். தகுதி பலவகையான சோத னைகள் மூலம் ஆாாயப்படல் வேண்
டும்,
மந்திரிமார்களை அடுத்து மந்திரி பரிஷத் என்னும் குழுவொனறு அா சனுக்கு ஆலே'சனை கூறுவதற்காக அமைக்கப்படல் வேண்டும். மந்திரச் சுற்றத்தை வி. இவர்கள் அந்தஸ்
38 حب۔

தில் சிறிது குறைந்தவர்கள். எந்த நடவடிக்கையில் ஈடுபடும் போதும் அரசன் எல்லோருடைய ஆலோச னைகளையும் பெறுதல் வேண்டும்.
அதிகாரிகள்
அரசனுடைய கொள் கைகளை ஏற்று நடத்துவதற்கென தனித் தனி இலாகாக்கள் பல இருந்தன. ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒவ் வொரு த லை வன் இருந்தான். மேலும் பதினெட்டு உயர் அதிகாரி கள் அரசனுக்கு நிர்வாகத் துணை புரிய இருந்தனர்.
பதினெட்டு அதிகாரிகளின் பெயர் களும் பின்வருமாறு; மந்திரி, புரோ கிதர், சேனதிபதி, யுவராஜா, அச்ச வாயில் காவல் அதிகாரி, அந்தப்புர அதி கா ரி , மா வட்ட அதி காரி, வரி அறவிடும் அதிகாரிகளின் தலைவன், உள்நாட்டு அமைச்சன், உள்நாட்டு வரி அறவிடும் அதிகாரி, இா ன் டா வ து த ள ட தி , நகர நீதி பதி, அரச தொழிற் சாலைகளின் தலைவன், மந்திரி பரி ஷத்தின் தலைவன், தண்டத் தலை வன், கோட்டைக் காவலன், எல் லைக் காவல் அதிகாரி, (அத்தபால) வனபரிபாலன அதிகாரி.
நிர்வாகம்
மன்னனுடைய ஆட்சி அமைப்பில் இப் பதினெட்டு உய ர் அதிகாரிக ளும் முக்கிய பங்கு கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் பல உயர் அதிகாரிகள் நிர்வாகத் தை நடத்த உதவி புரிந்தனர். இன் வுயர் அதிகாரிகளுக்குக் கீழும்பற் ல அதிகாரிகள் பணி புரிந்தனர்.
Լմ
உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய குறிப்புக்களும் அர்த்த சாஸ்திரத் தில் காணப்படுகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இவை இயங்க வேண்டும். ஒவ்வொரு இராச்சியமும் பல மாகாணங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாகா ணமும் மா காண அதிபதியினல் ஆளப்படும். மாகாண அதிபதி, அச சனல் நியமிக்கப்படுவான். இவன் அரசனின் உறவினனகவே இருப் பான், ஒவ்வொரு மாகாணமும் பல மாவட்டங்களைக் கொண்டிருக் கும். இம் மாவட்டங்களை 'ஸ்தா னிகர்’ எனும் தலைவர்கள் நிரு வகித்து வந்தனர்.
ஒவ்வொரு மாவட்டமும் பல }} மங்களைக் கொண்டிருக்கும். கியா மங்கள் கி ரா ம த் தலைவர்களால் நிருவகிக்கப்படும். எல்லா அதிகாரி களுமே அரசனல் நியமிக் க t படுவர்.
ஒற்றர் குழு
அரசின் அங்கங்களுள் ஒற்றர் குழு மிகவும் முக் கி ய ம7 ன து. அரச னுக்கு ஒற்றர்கள் உயிர் போன்ற வர்கள். சொந்த நாட்டில் மட்டு மன்றி அந்நிய நாடுகளிலும் அரச னுக்கு ஒற்றர்கள் இருத்தல் வேண் டும். மிகவும் மதிநுட்பம் மிக்கவர் களே ஒற்றர்களாக நியமிக்கப்படு வார்கள். அந்தப் புரத்திலிருந்து அயல் நாட்டு அரசர்களுடைய அரச சபை வரை ஒற்றர்கள் இருத்தல் வேண்டும். பிராமண விதவைகளும் கணிகை மா த ரும் கூட ஒற்றுத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டனர்.
------- ، {!3 ص سے۔

Page 22
கோபா
நகர நிர்வாகம் சிறப்பாக அர்த்த சாஸ்திரத்திலே கூறப்படுகின்றது. தலைநகரம் இ | ண் டு பிரிவாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு தலைவனின் (ஸ்தானி கன்) அதிகாரத்தின் கீழ் இருக்கும்
இவனுக்குக் கீழ் கோபா' என்ற ழைக்கப்படும் இனக்காளர்கள் பணி புரிந்தனர், இவர்களுக்குக் கீழ் நகரகர் என்றழைக்கப்படும்
நகர்க் காவலர்கள் (பொலீஸ் அதி காரிகள்) நகரத்தைக் காவல் புரிந்து வந்தனர்.
நீதி பரிபாலனம் அரசனின் நேர டிக் கண்காணிப்பின் கீழ் இருத்தல் வேண்டும். குற்றச் செயல்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்கப்பட் டன. தவருண தண்ட%னகள் வழங் கப்பட்டால் வழங்குவதற்கு காரண மானவர்கள் தண்டனைக்குள்ளாக் கப் படுவர். போலி வைத்தியர்கள், கள்ள வணிகர்கள், கலப்படக்காரர் கள் கடும் தண்டனை பெறுவர்.
siis ni
கடலிலிருந்தும், நதியிலிருந்தும் பெறக் கூடிய சுங்க வருமானம் பற் றியும் அர்த்த சாஸ்திரம் குறிப்பிடு கின்றது. மீனவர்கள், வணிகர்கள், பிரயாணிகள் ஆதி யோரும் வரி செலுத்தல் வேண்டும். தோணிகள், பாதைகள் என்பன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கு ம் . துறைமுகங்கள் தோறும் கப்பல்க ளைக் கண்காணித்தும் பாதுகாப்ப ளித்தும் உதவும் அதிகாரிகள் பலர் இருப்பர். துறைமுகங்கள் அந்நி
யர்களின் வரவையும் செலவையும் கடுமையாகக் கண்காணிக்க வேண் டும்.
மருத்துவம்
அர்த்த சாஸ்திரம், மருத்துவம் பற்றிய தகவல்களைத் தருகின்றது. இன்று இருப்பது போல் அன்றும் ‘அம்புலன்ஸ்' சேவை இருந்திருக் கின்றது. அறுவைச் சிகிச்சை மருத் துவர்களும், பெண் தாதியர்களும் இருந்தனர். அறுவைச் சிகிச்சைக் கருவிகளும், பலவகைப்பட்ட மருந்து களும் அவை பற்றிய குறிப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன
வீதியமைப்பு பற்றிய குறிப்புக ளும் இந்நூலில் உள்ளன. சிறந்த வீதிகளே அமைத் துப் போக்கு வத்து வசதிகளைச் செய்து கொடுத் தல் அரசனுடைய தலையாய கடமை யாகும். வீதிகளை கண்காணிப்பதற் கென தனியான ஒரு திணைக்களம் குறிப்பிடப்படுகிறது. பல வகையான வீதிகள் அவற்றின் அகலங்கள் அமைப்பு முறைகள் என்பன பற்றிய திணுக்கமான விதி s ஜன. தி முறைகளும்
காணிவரி
ஒரு நாட்டின் சிறப்புக்கு வருமா னம் இன்றியமையாதது. பெரும் பாலான வருமானம் காணி வரி வசூலிப்பதற்கென தனித் திணைக்க ளம் குறிப்பிடப்படுகின்றது. இதன் அதிகாரி விவசாய மேலாளர். இவன் பயிர்களின் விளைவுக்கு ஏற்ற வரியை அறவிட்டான். பெரும்பா லும் 1/4 பங்கு அரசனுக்குரியது.
སྣང་-40 -----

நீர்ப்பாசனத்துக்கென தனி வரி அறவிடப்படும் நகரங்களில் பெரும் பாலும் வியாபார நிறுவனங்களே வரி செலுத்த வேண்டும் எனினும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட வரி யை செலுத்து த ல் வேண்டும். பொதுவாக 4 விகிதத்திலிருந்து 20 விகிதம் வரை வரி அறவிட வேண்டும். இறக்குமதிப் பொருட் களின் மீது கூடிய வரி அறவிடலாம். மதுவரித் திணைக்களம் மதுவரியை அறவிட்டது.
இவை தவிர சூதாட்ட விடுதிகளி டமிருந்தும், சுரங்கங்களிலிருந்தும், வெளிநாட்டுக்குச் செல்வோர் வரு வோரிடமிருந்தும், உள்நாட்டுக்கு வருவோரிடமிருந்தும் வரிகள் வகு லிக்கப்பட்டன. நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் செலுத்திய பணமும் வருமானத்தைப் பருக்க உதவியது. நாட்டின் தேவைக்கு நிதி போதாதெனில் புதிய வரிக ளைப் புகுத் தி வருமானத்தைப் பெருக்குகின்ற உரிமை அரசனுக்கு உண்டு.
அரசன் தன்னுடைய பதவியைக் காப்பாற்றுவதற்காக எதுவும் செய் யலாம் என்ற கருத்துகள் அர்த்த சாஸ்திரத்தில் வற்புறுத்திக் கூறப் பட்டுள்ளன. பொய்க் குற்றச் சாட்டு களைச் சோடித்துத் தான் விரும்பாத அதிகாரியை பதவி நீக்கவோ அல் லது கொல்லவோ அரசனுக்கு உரி மையுண்டு.
பெண்கள்
தனக்கு எதிரானவர்களைக் குற்ற வாளிகளாக்கித் தண்டிப்பதற்காக
அரசன் பெண்களைப் பயன்படுத்த லாம். அவ்வாறே தனக்கு எதிராக இருப்பவர்களுடைய நட்பைப் பிரிப்ப தற்கும் பெண்களைப் பயன்படுத்தி அவர்களை அழிக்கலாம். அரசன் எவ்வகையான தண்டனையை வழங் க்னலும் அதை எதிர்த்துக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. மேலும் தேவை எற்பட்டால் இறைவனின் பிரதிநிதி தானே யென்று கூறி மக் களே நம் பவை த் து தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றலாம். பகையாசர்களையும் இவ் வா று சூழ்ச்சி மூலம் கொல்லலாம்.
பணம் சேர்ப்பதற்கும் அ ர சன் எந்த நடை முறையையும் கையாள லாம். இக் கருத்துக்கள் தர்ம சாத் தி ங் க ஞ க்கு முரணுனவையான போதும், அர்த்த சாஸ்திரம் சரியெ னக் கூறுவது புதுமையானதாகும். சாணக்கியர் தமது நூலில் இந்த அறிவுரைகளையும் கூ ற த் த வ ற வில்லை. படையெடுப்பு, யுத்தம், சமாதானம் என்பன பற்றியும், அவற்றை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் ஆராய்சின்ருர், கா ன க த் தி ல் வேட்டையாடுதல், சூதாடுதல், காமலோலணுய்த் திரி தல், மது போதையில் மயங்குதல் ஆதியனவற்றல் வரும் தீங்குகள் ஆராயப்பட்டுள்ளன.
வர்ணுச்சிரம தர்மம்
வர்ணுச்சிரம தர்மத்தை அர்த்த சாஸ்திரம் ஆதரிக்கின்றது. ஒழுங்கு பிசகுகின்ற பொழுது வர் ண க் கலப்பு ஏற்படுகின்றது. இவ்வொ ழுங்கு பிசகாமல் அரசன் காப்பாற் றுதல் வேண்டும். ஒழுங்கை நிலை
سے 41 ۔۔۔

Page 23
நாட்டுவதற்கு அரசன் எந்த வழிக ளையும் கடைப்பிடிக்கலாம். பாதக மான செயல்களில் கூட ஈடுபட லாம். இதனையே இத்தாலிய அர சியல் அறிஞரான மாக்கிய வல்லி எ ன் ப வரும் குறிப்பிட்டுள்ளமை ஆராய்தற்குரியது.
அரசன் மக்களுடைய தொண்டன் என்பதை அர்த்த சாஸ்திரம் ஏற் றுக் கொண்ட போதும் ஜனநாயகம் பற்றிய எவ்வித குறிப்புக்களும் இந் நூலில் காணப்படவில்லை. எதேச் சாதிகாரத்தையே ஆதரிக்கின்றது.
ஆசிரியர்
சாணக்கியர் தமது நூலில் பல
படம்: 'ஆதவன் எழுகிறன்'
ஆசிரியர்களை பிரமாணமாகக் கூறு வர். ஒழுக்கமும் கடமையும் முக் கியமானவை. இவற்றையே தர்ம சாஸ்தி:ங்கள் வலியுறுத்தும், தர்ம சாஸ்திரங்கள இலட்சிய அடிப்படை யைக் கொண்டவை. ஆணுல் அர்த்த சாஸ்திமோ அரசனின் அபிலா சைகளைப் பேணிப் பாதுகாக்க முயற் சிக்கின்றது. எனவே தான் அர்த்த சாஸ்திரத்துக்கும் தர்ம சாஸ்திரத் திற்கு மடையே முரண்பாடுகள் ஏற்படும் போது அர்த்த சாஸ்திரத் தை விடுத்துத் தர்ம சாஸ்திரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டு மென்று மனு, யாக்ஞவல்கியர், விஷ்ணு
ஆகிய ஸ்மிருதி ஆசிரியர்கள் கூறு வது சிந்திக்கத் தக்கது. 米
அறிமுக விழாவில் நிர்வாக ஆசிரியர் திரு. ந. அமிர்தலிங்கம் உரையாற்றுகின்ருர்,
இடமிருந்து வலமாக
பூனிலழரீ, சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், திரு. இ. ஜெயராஜ் திரு. க. சொக்கலிங்கம், திரு நா. குழந்தைவேலு, திரு. ஜோசப் பாலா, புலவர் ஈழத்து சிவானந்தன் ஆகியோர் அமர்ந்திருக்கின் றனர்.
 

நல்லை நகரில் அறிமுக விழா
தொகுப்பு: உதயன் (24-06-1988) விரகேசரி (30.06.1988)
ஈழத்துச் சஞ்சிகைகளில் அறிவியற் கட்டுரைசஃா மாத்திரம் பிரசுரிப் பதோடு நில்லாமல் ஆக்க இலக்கியங்களுக்கும் அதிமுக்கியத்துவம் அளிக் கப்பட வேண்டும். இதனல் புதிய தலைமுறையினால் சமூகத்திற்கும் பயன் தரக்கூடிய இலக்கியங்களைப் படைக்க வழிபிறக்கும்,
இவ்வாறு நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் பரீலரீ. சோமசுந்தா பரமாச்சாரிய சுவாமிகள் ஆதரவில் நடைபெற்ற 'ஆதவன் எழுகிருன் ‘* கல்வி, கலை, இலக்கிய சஞ்சிகை அறிமுக விழாவில் அறிமு கவுரையை நிகழ்த்திய எழுத்தாளர் சொக்கன் கூறினர்.
வேலணை பெரும்பாக உத்தியோகத்தரும் தமிழ் விரிவுரையாளருமான திரு. நா. குழந்தைவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் சொக்கன் தொடர்ந்து பேசுகையில் ஆதவன் எழுகிருன் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட் டிருக்கும் விடயங்கள் மக்களுக்குப் பெரிதும் பயன் தருபவைகள், குறிப் பாக மாணவர்கள்சமூகத்திற்கு உகந்த முறையில் கட்டுாைகள் பிரசுரிக் கப்பட்டது. வாவேற்கப்பட வேண்டியதாகும் என்றர்.
புலவர் ஈழத்து சிவானந்தன் பேசுகையில் நமது பிரதேசத்தில் சஞ் சிகை வெளியிடும் பணி மிகவும் கஷ்டமான ஒன்றகும். இப்பணியில் துணிவுடன் இறங்கியுள்ள இளைஞர்களுக்கு மூத்த எழுத்தாளரும் ஆர்வ லர்களும் இயன் ற வரை ஊக்கம் கொடுக்க வேண்டும் என்றர். அகில இலங்கை கம்பன் கழத அமைப்பாளர் திரு இ. ஜெயராஜ கருத் துரையாற்றுகையில், 'சிறுபிளளே வேளாண்மை வீடு வந்து சேராது என்று சொல்லிச் சொல்லியே எமது சமுதாயம் இளைஞர்களின் முய ற் சி களே தடை பண்ண முயல்கின்றது. இலக்கியம் என்பது வயது வந்தவர்தளுக் குத்தான் என்ற நிலைமாறி இளைஞர்கள் இலக்கியம் படைக்க முன் வந் திருப்பது வரவேற்கத்தக்கது. இளைஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடிய வர்கள். அவர்களது பயமும், பலவீனமும் அதுதான்.
யாழ். பல்கலைக் கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. க. நாகேஸ்வான் பேசுகையில் நாம் பல நூல்களைக் கற்று ஆராய்ந்து பெறும் அறிவு என்றும் எம் மனதில் பசுமையாக இருக்கும். அனைவரும் ஊக்
وي
·
கத்துடன் உழைத்து அறிவை வளர்க்க முன்வர வேண்டும் என்றர். *
- 43 -

Page 24
அவதார
புருஷர்
நாவலர்
செல்வி, ந. ஜெயந்தி
-96)յ3/f*ժց: 18-12-1822 இறை பதம் 05.12.1879
நல்லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேற் சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்து புராணுகமங்களெங்கே பிரசங்கமெங்கே ஆத்தனறி வெங்கே யறை - சி. வை. தா
தந்தையார்: யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தப்பிள்ளை தாயார்: யாழ்ப்பாணத்து நல்லூர் சிவகாமி இட்ட பெயர்: ஆறுமுகம்பிள்ளை ஆரம்பக் கல்வி நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர் குருகுலக்கல்வி: சேணுதிராய முதலியார், சரவணமுத்துப் புலவர் ஆகியோ ரிட்ம்நன்னூல், இரகுவம்சம், திருவள்ளுவர், திருக் கோவையார், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலி யன கற்றல். ஆங்கிலக் கல்வி பீற்றர் பார்சிவல் பாதிரியாரிடம் பெற்றமை, தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சமஸ்க்றுதம்,
சிறப்புப் பட்டம்: நாவலர், வசனநடை கைவந்த வல்லாளர், பரசமய கோளரி, அஞ்சா நெஞ்சம் படைத்த விறல் வீரர், ஐந் தாம் குரவர்.
துண்டுப் பிரசுரங்கள்: வச்சிரதண்டம், சுப்பிரபோதம் முதலிய துண்டுப் பிரசுரங்களும், சைவ தூஷண பரிகாரம், மித்தி யாவாத நிரசனம் முதலிய கண்டன தூல்களும் அவ்வப்போது வெளியிட்டமை. அச்சிற் பதித்த முக்கிய நூல்கள்: பெரியபுராண வசனம், முதலாம் இரண்டாம் பாலபாடம், திருமுருகாற் றுப்படை யுரை, சிவாலய தரிசன விதி, கந்தலரங்காரம், கந்தரனுபூதி, உபநிடத வுரை, சைவவிணுவிடை, சிவகவசம், விநாயகர் கவசம், திருவள் ளுவர் பரிமேரழகர் உரை, கந்தபுராணம், யாழ்ப்பாணச் சமயநிலை, நன் னுால் காண்டிகையுரை முதலியனவாம்.
- 44 -

தமிழ் வாழச் சைவம் வாழ அவதரித்தவர். சமயகுரவர் நால்வருக் குப் பின் சைவமும் தமிழும் வளர்த்த பெரியார். யாழ்ப்பாணத்து நல் லூர் ஆறுமுக நாவலர் ஓர் அவதார புருஷர், இடையிருட் கடைக் காலத்தில் விடியுமுன் விசும்பில் விளங்கும் வெள்ளி போலத் தளருஞ் சைவமும் தமிழும் தழைக்க அவ்விரண்டிற்கும் புத்துயிர் வழங்கப் பிறந்த வல்லாளராவார். முன்னே பல காலங்களிலும் தமிழகத்தில் இருந்து தான் பெற்ற சிறு நன்மையினை வட்டியுடன் பெருக்கி ஒரு காலத்து ஒருமுகமாக பழங் கடனைத் தீர்த்து என்றுந் தீர்க்கொணுதவாறு தமிழகத்தை ஈழநாட்டிற்கு கடமைப் படுத்திய பேருபகாரி நாவலர் என் முல் மிகையாகாது. கற்றலும் கற்பித்தலுமே நாவலருக்கு வேலை. கல் வியில் பழமை பேணும் பண்பையே போற்றினர். முந்திய தலைமுறை ஈட்டிய அறிவை எறிந்துவிடுதல் பேரிழப்பு என்னும் கருத்தைக் கொண் டிருந்தார்.
'யாதாயினும் நாடாமல் ஊராமல்
என்னுெருவன் சாந்துணையும் கல்லாதவாறு'
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க வாழ்நாழ் முழுவதும் கல்வியெ னும் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். இவரது 19 வயதிலேயே இரு மொழித் திறமையைக் கண்ட பேர்சிவல் பாதிரியார் தமது பாடசாலை யில் தமிழ் ஆங்கில உபாத்தியாயராகவும் தமக்கு தமிழ் பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டதோடு பைபிளைத் தூய தமிழில் மெரழி பெயர்க்கவும் செய்தார். சென்னையில் இருந்த அறிஞர்கள் மொழிபெயர்ப்பிலும் நாவல ரது மொழிபெயர்ப்பே சிறந்ததெனவும் யாழ்ப்பாணத்து மண்ணில் இவ் வளவு சிறந்த தமிழ் உண்டா என அவர்களே ஆச்சரியப் பட வைத்தவ "To f76gfoJoo .
கிறிஸ்தவ மத பரம்பலைத் தடுப்பதற்காக 1849 - ம் ஆண்டு தொடக் கம் ஒவ்வொரு சுக்கிரவாரத்திலும் வண்ண வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபத்தில் நியமமாக பிரசங்கம் செய்து வந்தார். இவரது நாவன்மையால் பல இடங்களிலிருந்தும் பிரசங்கம் கேட்க பிராமணர்கள், வித்துவான்கள், பிரபுக்கள் என்னும் பல திறத்தாரும் வருவாராயினர். கடவுள் வாழ்த்து, வேதாகமம், திருவிழா, யாக்கை நிலையாமை, மகளி ரொழுக்கம், தருமம் முதலியன அவர் செய்த பிரசங்கங்களில் சிலவா கும். 27 வது வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தார் இவரது பிரசங் கத்தைக் கேட்டு ‘தேருந் தோறுந் மினிதாந் தமிழ்" என்றபடி கேட் கும் தோறும், கேட்குந் தோறும் தெவிட்டாதபடி இருந்தமையால் அவ ருடைய வாக்கு வல்லபத்தை வியந்து அவரது இயற்பெயருக்குப் பின் 'நாவலர்" என்னும் திவ்விய நாமத்தை சூட்டினர்கள். - - -
--سم 45 حساس۔

Page 25
சைவப் பிள்ளைகள் படிப்பதற்கென 1871 - ல் வண்ணுர்பண்ணையிலே சைவப் பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கந்தர்மடம், கோப்பாய், மாதகல், இணுவில், பருத்தித்துறை ஆகிய இடங்களிலும் சைவ வித்தியாசாலைகள் தோன்றின. நாவலர் சிதம்பரத் திலும் ஒரு பெரிய சைவ தாபனத்தை நிறுவ வேண்டு மென்று கனவு கண்டார். அதற்குத் தேவையான பெருந்தொகைப் பணத்தை சேகரிக்க முடியாமையிஞல் யாழ்ப்பாணத்திலே நிறுவியது போன்று ஒரு பாட சாலையே அங்கும் நிறுவினர். 1872 - ல் வண்ணுர்பண்ணையில் சைவ ஆங்கில வித்தியாசாலையை ஆரம் பித் தா ர். அப்பாடசாலை நிதிவசதி இன்மையாலும் அரசாங்கப் பரீட்சை நடாத்தப்படாததாலும் நான்கு ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. எனினும் நாவலர் தொடக்கி வைத்த கல்விப் பணியானது அவரின் காலத்துக்குப் பின்பு பல தடைகளை நீக்கி வெற்றிப் பாதையில் நடந்தது என்பதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரி முதலிய சைவ சமயக் கல்வி நிறுவனங்களே சான்றகும். நாவல ரது கல்விப்பணி, ஆசிரியப்பணி, சமயப்பணி, நூலாசிரியப்பணி பாட சாலைகளை நிறுவும் பணி என விரிவடைந்து செல்கிறது, நாவலரது கற் பித்தல் பாடசாலையோடு நில்லாமல் தம்மை நாடி வந்த பலருக்கு சமய சாஸ்திாங்களையும், தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்து வந்தார். இவரின் மாணவர்களுள்ளே காசிவாசி செந்திநாத ஐயர், வித் துவ சிரோமணி பொன்னம்பலம்பிள்ளை, த, கைலாசபிள்ளை, உரையாசிரி யர் ம. க. வேற்பிள்ளை ஆகியோருடன் அவருடைய வாரிசாக இன்று வரை விளங்கி மறைந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
அக்காலத்தில் பாதிரிமார் சைவாலயங்களில் நடைபெற்ற கிரியைக ளையும், ஆடம்பர விழாக்களையும் கண்டித்ததோடு நில்லாமல் சைவசம யத் தெய்வங்களையும் பலவாறு பழித்தனர். சுப்பிரமணிய சுவாமி இரு மனைவியரைக் கொண்டதேன்? சரீரம் கொண்டு பிறந்ததேன்? என்று வினக்கள் பலவற்றைத் தொடுத்தனர். இவ்வியல்புடையவரை முற்றறி வுடைய கடவுளாகக் கொண்டு வழிபடல் தகாது எனவும் பாதிரிமார் பிர சாரம் செய்தனர். இதற்குப் பதில் சொல்லும் விதத்தில் சுப்பிரமணியக் கடவுள் வரம்பிலின்பம், இயற்கையறிவு, தன் வயமுடைமை குறைவி லாற்றல், வரம்பிலாற்றல் என்னும் ஆறு குணங்களுமே ஆறு திருமுகங் களாகவும், மற்றைய அருட்குணங்கள் மற் றைய அவையங்களாகவும் அமையப் பெற்ற அருட்திருமேனியெனவும், அவருடைய பன்னிரு திருக் கரங்களிலுள்ள படைக்கலங்களாகிய தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி. தாமரை, தண்டம், வில், மழு, என்னும் பதினென்றும் பதினெரு உருத்திரரெனவும், வேலானது இப்பதினுெரு ஆயுதங்களுக்கும் மேலாகிய ஞானசக்தி யெனவும், அவருடைய தேவிமா ராகிய தெய்வநாயகி, வள்ளிநாயகி அவருடைய கிரியாசக்தி, இச்சாசக்தி

எனவும் சாதிக்கின்ற ‘சுப்பிரபோதம்" என்னும் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவிற் கிரியைகள் சிவாகம விரோதமென்று கண்டு அக்கோயிலுக்கு போகாது விடுத்தார். அக்கோயிலார் கோயிலை சிவாகம முறைப்படி திருத்துவதற்கு நாவலரை அழைத்தனர். கோயில் திருப்பணிச் சபையில் ஒருவராக இருந்து கருங்கல்லால் கோயிலைத் திருத் தியமைக்க உதவினர். ஒரு முறை தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள நாவலர் அவர்களை அழைத்த போது 'உங்கள் கோயிலிலே; கிராம சாந்தியிலும், தேர்த் திருவிழாவிலும், வைரவர் பூசையிலும் ஆடு வெட் டுவதனல் நான் கோயிலுக்கு வரேன்" என்று மறுத்தார். இனி ஒரு போதும் அப்படி நடவாது என வாக்குறுதி அளித்த பின் சென்றர். சில வருடங்களின் பின் அது தொடர்வதை அறிந்து முருகக் கடவுளின் பூசை உற்சவத்திற்கும் குமாரதந்திரத்திற்கும் விரோதமாதலால் அன்று தொட்டு நல்லூருக்குப் போகாது விட்டார். தென் இந்தியாவில் சிதம் பரம் கோயிலில் நடராசப் பெருமானுக்கு பூசை செய்யும் ‘தீட்சிதர்’க ளின் ஒழுங்கீனங்களைக் கண்டு கொதித்து எழுந்து கண் டனங்க ள் தொடுத்தார்.
இந்தியாவிலே கருங்குழி இராமலிங்கபிள்ளை யென்னுமொருவர் தாம் சிவானுபூதி பெற்றவரென்றும் ஒதாது உணர்ந்தவரென்றும் கூறி சமய குரவர்களது அருட் பாக்களைத் தள்ளி தாம் செய்த பாக்களே ஆன்மார்த்த பூசை, பரார்த்த பூசைகளிலும் பாராயணம் பண்ணும்படி செய்தார். இவற்றைச் சகிக்க முடியாத நாவலர் பல சனங்களெதிரே தேவா திரு வாசகம் முதலியன பசு கரணம் நீங்கிச் சிவகரணம் பெற்ற நாயன்மார் களாலே அருளிச் செரியப்பட்டன என்றும் இவைகளே சிவாலய நித்திய நைமித்தியங்களிலும் ஓதத் தகுந்தன வென்றும் சிவரகசியத்திலே கூறப் பட்டிருக்கும் பிரமாணங்களைக் காட்டி பிரசங்கித்தார்.
1877 - ம் ஆண்டில் மழையில்லாமல் நெல் விளைச்சல் அருகிப்போன போது கடும் பஞ்சம் உண்டானது. வழைகள் சாப்பாடு கிடைக்காமல் துன்புற்ற வேளையில் தனது பொருளைக் கொண்டுப் , தனவந்தர்களின் உதவிகளைச் சேகரித்தும் பஞ்சம் நீங்கும் வரை கஞ்சித் தொட்டி ஏற் படுத்தி கஞ்சி வார்க்க உதவி செய்தார்.
அக்காலத்தில் இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்தது. கவர்ணரே சர்வாதிகாரி. சட்ட நிரூபண சபை ஒன்றை ஏற்படுத்தி அச் சபைக்கு சுதேசப் பெருமக்கள் சிலரைத் தெரிவு செய்து ஆலோசனைக ளைப் பெற்று வந்தார். 1878 - ம் ஆண்டு தேர்தல் போட்டியில் அக் காலத்தில் செல்வாக்கு மிக்க அப்புக்காத்து பிறிற்ருேவும், சேர். பொன்.
- 4 -

Page 26
இராமநாதனும் போட்டியிட்டார்கள். பிறிற்ருேவை ஆதரிப்போரே அதி கமாக இருக்க நாவலர் அவர்கள் இராமநாதனுக்கு ஆதாவாக இருந் தார். இராமநாதனின் பக்கம் நாடி விழுந்துபோன நேரம் நாவலரின் முயற்சியால் தமிழ் மொழியின் கம்பீரம் பிரகாசித்தது. நீதி தலை நிமிர்ந் தது. இராமநாதன் சட்ட நிரூபண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். மூடத்தனமான சாதிக்கட்டுப்பாடுகள் புழுங்கிக் கொண்டிருந்த காலத்தில் "சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள் வது சுருதி, புத்தி, அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம்” என்று எக் காலத்துக்கும் ஏற்ற சீர் திருத்தக் கருத்தைக் கூறி நீதி செய்தவர் நாவலர். திருக்கேதீஸ்வரத் திருத்தலம் வழிபடுவோரின்றி பழுதடைந்த காலத்தில் ‘மாதோட்ட த்தில் தேன் பொந்து ஒன்று உள் ளது எல்லோரும் அங்கே சென்றடையுங்கள்? என்று கூறி அதன் பழம் பெருமையை உணர்த்தி புன ரு த் தா ர ண ம் செய்ய வகை செய்தார். சைவசமயத்தின் மேன்மை குன்றிய அக் கா லத் தி ல் நாவலர் பிறந்தது சைவசமய தமிழ் மக்களின் பேருகும். குமபகோணம் பூ முருகேசம் பிள்ளை நாவலர் மறைந்த பின் பாடிய பாடல் நெஞ்சை தொடுவ தாக உள்ளது.
ஆறுமுக நாவலனை ஆருமுணராப் பொருளைத் தேறு முகங் கொண்டு தெளிந்தான - ஆறுமுகம் என்றிருக்க ஒர் முகமும் எங்களுக்குத் தோன்றமல் சென்ருெளித்தானந்தே சிவா. வாழ்க நாவலர் நாமம்! வளர்க சைவமும்தமிழும்!!
வடமாகாணத்தில் நீண்டகால கல்விச் சேவையினை வழங்கும் தனித்துவமான நிறுவனம் !
BITSMANS INSTIUITES
MAN PAY.
G. C. B. A / L (கலை, வர்த்தகம், விஞ்ஞானம்.) G. C. E. O/L (Day & EVENING CLASS)
ஆண்டு 10, 9, 8, 7. 6, பாவும் திறமையான பட்டதாரி ஆசிரியர்களினல் கற்பிக்கப்படுகின்றது.
அ; திறமை மிக்க பட்டதாரி ஆசிரியர்கள் * திறமையான நிர்வாகம் 3; அதிசயிக்கத் தக்க பெறுபேறுகள் *; நம்பிக்கையான நிறுவனம் இவற்றின் மையம். BITSMANS INSTIUTES - MANIPAY.
- 48 -

ங்களுககு
舞蹈 & ‘ā
}=\ -85 e 9 翻唱 § €. 3 : 班
உங்க
OO ÚO O
ட்டோ
GLIL GLII
Ο Ο OO
படப் பிடிப்பாளர் சேர். பொன். இராமநாதன் விதி,
திருநெல்வேலி.

Page 27
"AATHAVANELUGRAN''
விக்னூ
(கலே, வர்த்தக வகுப்புகளு ஸ்தாபனம்)
க. பொ. த. (உயர்தரம்), க ெ சிறப்பாக நடைபெறுகின்றன,
எமது திணித்துவம்வாய்ந்து
பொருளியல்
வர்த்தகம்
அனாவையியல்
தமிழ்
இந்துநாகரிகம் புவியியல்
அரசறிவியல்
முக்கிய குறிப்புகள்
1) வகுப்புகள் வாரத்தில் ஐந்:
நடைபெறும்.
2) ஆலே, வர்த்தக வகுப்புகின்றி கன் ஒருங்கினேந்து நடாத்தி
—
இச் சஞ்சிகை வெளிவாரிப் பட்டதா பால் யாழ்ப்பாணம் மணியோசை

PROGRESSIWE QUARTERLY
MAGAZINE
டியூசன் சென்ரர், 52, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
தக்கு தனித்துவம்வாய்ந்த ஒரே
பா.த. (சாதாரணதரம்) வகுப்புகள்
ஆசிரியர் குழு
திரு. கிருஷ்ணுனந்தன் திரு. லங்கா திரு. வன்னியசிங்கம் திரு. சுப்பிரமணியம் திரு குழந்தை திரு காரை சுந்தரம்பிள்ளே திரு. குனராசா திரு. மஃறுப்
து நாட்களும் நான்கு பாட்டங்களும்
க்கு தனித்துவம்வாய்ந்த ஆசிரியர் தப்படும் ஒரே ஸ்தாபனம்,
REB
ரி மாணவர்களின் ஆதவன் செயலவை அச்சகத்தில் அசிட்டு வெளியிடப்பட்டது.
,