கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச்செல்வி 1959.04-05

Page 1
சித்தினர, விவகாசி
停(
 


Page 2
를
美
தென் இந்திய யாத்திரை 6-7-59 தொடக்கம் 25-7-59 வரை (20 நாட்கள்)
இந்தியாவிலுள்ள பல கோயில்களேயும் சரித்திர உண்மைகளே யும் அங்குள்ள பல தொழில் முன்னேற்றங்களேயும் மிசவும் குறைந்த செலவில் சகலவித வசதிகளுடன் கண்டு களிக்க இப்பிரயாணத்தை ஒழுங்கு செய்துள்ளோம். இப் பிர யாணம் விசேஷமாக ஆனி உத்தாத்தன்று சிகம்பரம் நடராஜப்பெருமானின் தேர்த திருவுலாக் காட்சி யைக் கண்டு ஆனந்தமடைய அரியதோர் சந் தர்ப்பம். விரும்புவோர் சகலரையும் பங்குபற்றி நன்மையடையும் வண்ணம் வேண்டுகிருேம். ★ இந்தப் பிரயாணத்தில்,
சேது. இராமேஸ்வரம், திருச்சி (அழகர் கோயில்) பரீாங்கம், திருவானைக்கா, சீர் காளி வைத்தீஸ்வரன்கோயில், சிதம்பரம், மதருஸ், காஞ்சீபுரம், மகாபலிபுரம் திருக்களுக்குன்றம், திரு வொற்றியூர், திருவண்ணமலை, பழனி கோடைக் கானல், மதுரை, திருப் பரங்குன்றம், திருநெல்வேலி, திருச செந்தூர், தென்கா சி. (குற் ரூலம்). கொச்சின், திருவனந்தபுரம், நாகர் கோயில் சுசீந்திரம், கன்னியாகுமரி, முதலிய இன்னும் பல இடங்களைத் தரி சிக்க ஏற்பாடு செய்துள்ளோம். கட்டண விபரம்: யாழ்ப்பாணமிருந்து புறப்பட்டுத் திரும்பி யாழ்ப்பாணம் வந்து சேரும்வரை ரெயில்கட்டணம் 3-ம் வகுப்பு (டிககற்) நபர் ஒனறுக்கு ரூபா 150/-மட்டும்.
பகல் இரவு இருநேர காவா போசனத்திற்கு நடா 40 பிடத்திபேகம். இட்பிரயாணத்தில் சேரவிரும்புவோர் முதலில் ரூபா 10/- பதிவுக் கட்டணமாகக் கட்டவேண்டும்.
விபாம் வேண்டுவோர் நேரில் வருக அல்லது 50 சத போஸ்டல் ஆர்டருடன் எழுதுக. விவேகாநந்தாடிரேட்ஸ்கோப்பறேஷன் சிங்கப்பூர் மலாயா பிரயாண வசதி செய்பவர்கள் இந்ாஜ கட்டடம், பெரியகடை, யாழ்ப்பாணம். கந்தி: *சென்றவேல்" போன்: 517.
qLSLLLLLLaaakLqiLLeqLLqeLeqL qaaY LaT LqL SHLLLLiLY
S
美
s
t养f
拿
A.
OHLLLTLkLLTLqLt OLLL TLLLLqSMLMLLSLL LaaYeMOOeL TLLOLMLMLMT

リ
மக்கள் வைத்தியசாலை
சுன்னுகம்
இவ் வைத்தியசாலை மக்கள் தன்மைக்காகவும் வசதிக்காகவும் 28-11-58-ல் ஆரம்பிக்கப்பட்டது
திறந்திருக்கும் நேரம்: stråd 7-30 மணிமுதல் இரவு 8 மணி வரை
டாக்டர் S. S. இராசநாயகம்
(Permanent Medical Officer)
ക് 9 மணி தொடக்கம் கடமையாற்றுவர்,
LršLi S. சுப்பிரமணியம் 1. P. (P.S.) m (Visiting Medical Officer)
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பி. ப. 2 மணிக்கு வருவார்
A.
ま。
மக்கள் வைத்தியசாலை,
à
கே. கே. எஸ். ருேட் சுன்னுகம்
Wes LSLLLBLBLBLBLBSLLLLLBMT

Page 3
സ്ത്ര-¶ണ്ണ[Ifപ്രസ്തi:
ஆதரவாளர்களின் திருப்தியே எமது மசி, சி!
O O li/C5j55517° 622 GSaʼluD சுத்த சைவபோசனம் சுவைமிக்க பலவித சிற்றுண்டி வகைகள் மற்றும் பலகார வகைகள் இன்னும் குளிர்ந்த பானங்களும் உங்களே மகிழ்விக்கும். உங்கள் தேவைகளுக்கு
ஆடர் செய்யுங்கள். பிருந்தாவனம் நிர். 144, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்ப. STSMMLSSLLLLLSLLLTiMLLLLL
怒
. Ao ဂ္ဂီ R* 苓引
YuSLSALLA SMMMMMMLLLLSSSLLL LSSSMMSSSLSALLLLLLLSSMMMMSSLSLSALSL SMMSLTTLLYLLLLSSMSLLSMSALzLASMMMSAAL
அம்பாள் ஸ்ரோர்ஸ் அழைக்கிறது!
கோயில், தேநீர்க்கடை, வீட்டுத் தேவைகளுக்குரிய செம்பு, பித்தளை, எவர்சில்வர் பொருட்களும்,
கமலவிளக்கு, பட்டுக்குடை முதலியனவும் சகாயவிலைக்கு விற்கப்படும்.
ஓடர்கள் குறித்த தவணையிற் செய்து கொடுக்கப்படும்.
- அம்பாள் ஸ்ரோர்ஸ் - புறெப்; செ. சிவபாலசிங்கம் ܝܘܿ ܲ
265, கே. கே. எஸ். வீதி : யாழ்ப்பாணம்.
陸y=立s=7の巧ーマ3.x=\国ーマ。3系=高3,ェーリ

S:fi::::: itii itt: ::3泌:4t; *ແ9 t
O 嵌 S. P. பீடி, செய்யது பீடி உயர்ந்த ரக புகையிலையினுல் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை 排
காரம், மணம், குணம் ஆகியவை ஒருங்கே அமைந்தவை! தொண்டைக்குக் கெடுதல் செய்யாதவை!!! இனிமையும் எழிலும் நிறைந்த S. R. பீடி, செய்யது பீடிகளை
எல்லோரும் விரும்பிப் பாவிக்கின்றனர். நீங்களும் இன்றே பாவியுங்கள்.
எங்கும் கிடைக்கும். 翡
S. R. பீடி, செய்ய அது பீடி 勘
வடமாக 7ண ஜென்ட் ; 38 கபே நவஜீவன்
கம், 132, K. K. S. ருேட், யாழ்ப்பாணம்,
Q).:::::::::::::::::::::::::::::::::ii.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: treet::::::::::::::::::::::::::::::6
golpeosacos gooOO Dess popoepopo-OOOO 6seoo Oooa. De eo Oo ooDoesso8
யாழ்ரதம் ராக்ஸி பிடி யுங்கள் !
- மைலுக்கு 60 சதம்
: குறைந்த செலவில் வசதியான பிரயாணம்.
பணிவு, உற்சாகம், நேர்மையுள்ள சாரதிகள்.
நிதானமான சலார்-நீங்கள் கொடுப்பது மீட்டர்
காட்டுவதையே. வாக்குவாதம் வேண்டாம் - மீட்டரைக் கவனி
யுங்கள்.
பிரயாணிகள் இன்சூர் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் பிடிக்கலாம். டெலிபோன் இலக்கம் பின்னர் அறிவிக்கப்படும். யாழ்ாதம் லிமிடேட் 7, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
LLLLLLLL00L0L0000000L0000LLLLLL0L uugL00L0LL0S L0LLLL0L0LLLL LLLLLL
o

Page 4
ཁ 22 N22Nu4x24 N:22Ns.24N24Ni
RAJAH STORES
வண்ணப் புத்தாடைகள் வகைவகையான சீத்தைகள்
பங்களுர் மைசூர் பட்டுச் சேலகள் பார்க்கத் தெவிட்டாத பட்டு இரவிக்கைத் துணிகள்
N
N
N Y. N
பட்டு வேட்டி : பட்டுச் சால்வை
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அனைவர்க்குமேற்ற N அழகான ஆடைகள் மலிவாகக் கிடைக்கும்.
N ஹென்ட்லி, மாக்ஸ்ரோ சேர்ட்டுகளும்
கிடைக்கும்.
* நஜிப் கட்டடம்",
மெயின் ஸ்ரீட், சங்கான,
*
y
N
ў угп'?gт ஸ்டோர்ஸ் N . .
Y.
N
s4Ys»24Ysasy4xijassas4xs

(G)ப()ன்னுடை
எதாவதொரு துறையில் குறிப் பிடத்தக்க சேவை செய்தோரைப் பாராட்டிப் பொதுமக்கள் தாமா
கவே முன்வந்து பொன்னடை
போர்த்துவதுதான், கலைஞரின் 4ெ ரவத்தை உயர்த்தும். ஆனல், ச, த்தில் எங்கிருந்தோ இங்கு
வ, த நாடகக் கோஷ்டியினரில் ருவர் "எனக்குப் பொன்னடை போர்த்துங்கள்’ என்று சில பிர
முகர்களைக் கெஞ்சியதை நினைக் கும்போது கலைஞரின் தரம் இவ் " வளவு துரம் தாழ்ந்துவிட்டதா என்று எங்கினேன். இங்கு நல்ல க?லஞர்கள் இல்லை’ என்றும் கேலி செய்தாராம் அவர், யாழ்ப் பாணத்தின் தலைசிறந்த இரு நடிகர்களினற்றன் அவர்களின்
மானம் பிழைத்தது என்பதை மறந்துவிட்டாரோ,. கந்தர்மடம், - யாழரசன்",
இன்பத்தின் தொல்லை
கடையவனே. என்ற அடிகளை எழுத்தாளர் வாய் மட்டும் முணு மு க்கவில்லை. என்போன்ற எத் தனையோ நேயர்களை அம்முணு முலுப்புக்குள் ஆளாக்கி, இதயம்
விட்டு நீங்கா வகையில் இடம் பெற்றுவிட்டது. குருணுக்கல். சி. ஜோதி.
கொடுக்கும்
வாசகர் வாய்மொழி
படிக்கலாம் கொழும்பு. வை. வேதாரண்யன்
த(ம)லை சிறந்த.
மலைநாட்டிலும் நல்லமணியான கவிஞர்களுண் டென்பதை நிலை நாட்டிய கலைச்செல்வி வாழிநீடே! ஈழத்திருநாட்டில் தலையான இலக் கிய இதழ் நம் கலைச்செல்வியே! பதுளை, இ. ஆறுமுகம் இவரை ஏமாற்றுங்கள் !
பங்குனி இதழில் வெளியான "இவரைக் கேளுங்கள்’ பகுதியை ஆவலுடன் படித்துப் பார்த்தேன்.
அப்பகுதி "சப்பென்று இருந் ததைக்கண்டு எமாற்றமுற்றேன். கொழும்பு. 6i. 3TT 6) Fur.
மகிழ்ச்சி-தொடர்க!
சோம்பிக் கிடக்கும் சிறுவர் சமு தாயத்தைத் தட்டி எழுப்பி இளை ஞர்களுக்கு வீர உணர்ச்சியைக் எடு கலைச்செல்வி என்பதறிந்து மகிழ்ச்சி. தொ டர்ந்து வெளியிடுங்கள். மகாவெல, ப, முருகையா நாம் பெற்ற செல்(வி)வம்:
‘நான் பெற்ற செல்வம்' என்று பாடி நானில முழுவதும் நற்றமி ழோசையைப் பரப்பும் செளந்தர ராஜனின் பேட்டிக் கட்டுரையை
‘இன்பத்தின் எல்லை’ என்ற வெளியிட்ட கலைச்செல்வி நாம் கதையை இளைஞர்களும் நங்கை பெற்ற செல்வம். யர்களும் உணர்ச்சி வேகத்துடன் கல்முவன கில்யாணி,
பரிசளிப்பு விழா
கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிஞரைப் பாராட்டிப் பரி சளிக்கும் விழாவை இம்மாதம் நடாத்தத் திட்டமிட்டோம்.
பாடசாலை விடுமுறையானதால் கவிஞருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கூடிய சீக்கிரம் விழாவை நடாத்துவோம். மாணவர் ஆற்றல்போட்டி, கட்டுரைப்
போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்க்கும் அன்று பரிசளிக்கப்படும்.

Page 5
(22NS 22 Neans: 24FS-26N24 Nedansas
E வரதர் வெளியீடு E
அளிக்கும்
热
வினப் பத்திரங்கள்
G. C. E. SIGISGof5i
( திருத்திய 2-ம் பதிப்பு) மிகச் சிறந்த 20 அப்பியாசங்களும் விடைகளும் அடங்கியது
எழுதியவர்: வே. க. கந்தசாமி
( புதுமை லோலன் )
விலை சதம் 75
ஆசிரிய கலாசாலைப் பிரவேச பரீட்சைக்கும் மிகவும் உபயோகமானது
விற்பனையாளர் ஆனந்தா அச்சகம் - புத்தகசாலை 226, காங்கேசன்துறை வீதி : யாழ்ப்பாணம் போன்: 348
$24 N24 N24 N24 in 24 N26 as 24 N. 245
p
Vs
著
(e.
瓦

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 海 பரவும்வகை செய்தல் வேண்டும். -பாரதியார்
கலை; 1 சித்திரை 1959 ஏப்ரல் : மே | காட்சி: 9 தமிழ்ப் பல்கலைக் கழகம் ஈழத் திருகாட்டின் இயற்கைத் துறையான திருக்கோணமலைக் கருகே தமிழ்ப் பலகலைக் கழகத்திற்கான நீல வாங்கப்பட்டு விட்டது, இன்னும் சிலநாட்களில் கட்டட வேலைகள் ஆரம்பமாகி விடும், தமிழ்ப் பெருமக்களின் ஆதரவுடன் திருமலையில் தோன்ற விருக்கும் இக் கழகம், ஒற்றுமைக்கும் கட்டுப்பாட்டிற்கும் உயர்ந்த இட்சியத்திற்கும் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக இலங்கப் போகின்றது. தமிழ்ப் பேருமக்களின் ஆசைக் கனவு கனவாக மாறும நன்னுள் அதிக தூரத்திலில்லை என்ற எண்ணம் தேனகத் தித்திக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்ப் பல்கலைக் கழக இயக்கத் தினர்கரு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகின்ருேம், இன்றுள்ள கல்வித்திட்டம், மண் க்கும் மனிதனுக்கும், உடலுக்கும் உழைப் பிற்கும, வாழ்விற்கும் இலட்சியத்துக்கு மிடையே இருந்த தொடர் பைத் துண்டிக்கத்தான் உதவியிருக்கின்றது. படித்துப் பட்டம் பெற்றவர்கள் பணம் கறக்கும் உத்தியோகங்களுக்கு ஒடுகின்றனர். வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் உழைப்பாளிகள் ஒதுக்கப் படுகின்றனர், பணம் வரும் என்ற நினைவில் மேலே மேலே படித்த பல்லாயிரக்கணக்கானுேர் இன்று வேலேயேது மின்றித் தவிக்கின்றனர், உழைக்க உடலுண்டு; பயிர் செய்ய நிலமுண்டு; ஆணுல் கெஞ்சும் நினைவும் நாற்காலியைத்தான் ந1கிென்றன. இந்த மனப்பான்மையை மாற்றி, மனிதர்களை வ க்கைக் குகந்தவர்களாக ஆக்கி, கெஞ்சத்து கல்லம் யாமென் னு நடுவுநிலைமை'யை ஊட்டி வளர்க்கும், புதிய புரட்சிகரமான க வித் திட்டத்திற்ைருன், அள்ளி அள்ளிக் கொடுத்த ஆயிரமாயிரம் பேர்களின் அகம் மலரும், அருமையான பயன் கிடைக்கும்; தமிழ் மக்களின் வாழ்வும் வளம்பெறும்,

Page 6
திருவள்ளுவர் திருநாள்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில் வாழும் நாமெல்லோரும் நாள்தோறும் அப் பொய்யில் புலவனை நினைந்து போற்றுவதற்கு மறக்கக்கூடாது. மனிதன் மனிதனுக வாழ்வதற்குரிய அறவழிகளே அழகாக எடுத்துரைக்கும் திருக்குறள் இன்று உலகத்தின் முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குறள் கூறும் நீதிகளைக் குவலயம் முழுவதும் பரப்புவதற்குக் கொழும்பிலுள்ள தமிழ்மறைக் கழகமும் அதன் ஆயுள் தலைவர் பண்டிதர் கா. பொ, இரத்தினம் எம், ஏ, பீ. ஒ. எல். அவர்களும் பெருமுயற்சிகள் எடுத்து வருகின்றனர், ஒவ்வோராண்டிலும் வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாளை உலகெலாம் வாழும் தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டு மெனத் தமிழ்மறைக் கழகம் விரும்புகிறது, இவ்வாண்டுத் திரு வள்ளுவர் திருநாள் மேமாதம் 22-ந் திகதி வெள்ளிக்கிழமை. இப் பெருநாளில் தமிழர் தம் இல்லமெல்லாம் விழாக்கோலம் பூண்டு விளங்கவேண்டுமென விரும்புகின்றேம்.
அன்பார்ந்த நேயர்களே!
வணக்கம், இடநெருக்கடியால் சென்ற மாதம் உங்களைச் சந்திக்க முடியவில்லை. 'தை இதழ் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து பொலிவுடன் விளங்கியது. பின்வந்த பங்குனி இதழ் தரத் தில் சோடைபோகவில்லையென்றலும் துரும்பாய் இளைத்துவிட்டதே' என்று எழுதியுள்ளார் சென்னை அன்பர் ராமமூர்த்தி, 'கலைச்செல்வி யைக் காணுது கவலை யுறுகின்றேன். எக்காரணங் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். கலைச்சேல்வி போன்ற தரமான ஒரு பத்திரிகை தமிழ்மக்கட்குக் கட்டாயம் தேவை” என்று மட்டுககர் சிவகுமாரன் கொழும்பிலிருந்து எழுதுகின்றர். தரமான விஷயங்களுடன் ஒவ் வொரு மாதமும் தவருது பத்திரிகையை வெளியிடுவதுதான் எமது நோக்கம், ஆனல் அச்சகத்தாரின் ஒத்துழைப்பு பூரணமாக எமக் குக் கிடைப்பதில்லை. கலைச்செல்விக்கெனத் தனியாக ஓர் அச்சகம் , GJsbull-tTG). . . . . . . .
இது வளரும் எழுத்தாளர் மலர். இதுவரை எந்தப் பத்திரிகையும் இப்படியான முயற்சியில் ஈடுபடவில்லை. வளர்ந்து வரும் எழுத் தாளர்களின் படைப்புகளைப் படித்துப் பிரபல எழுத்தாளர்களே பிரமித்துவிடுவார்கள். மலர்பற்றிய உங்கள் விமர்சனத்தை எதிர் பார்க்கின்ருேம். சிறந்த விமர்சனத்திற்கு-விமர்சனப் போட்டிக்கான பரிசுகள் உண்டு. எங்கே எழுதுங்கள் பார்க்கலாம். வணக்கம்,

பரிசுக் கவித்ை
புதிய உ ல கு
æ uousdór Ho
(கவிஞர் முருகுப்பிள்வளமயில்வாகனம் அவர்களின் பிறப்பிடம் அல்வாய். 1946, 47ல் 'மின்னுெளி பத்திரிகையின் ஆசியராகக் கடமையாற்றியுள் ளார். 1948-ம் ஆண்டு தொடக் கம் வத்துகாமம் கிறீஸ்தவ தேவா லய தமிழ்ப் பாடசாவலயில் ஆசிரி யரா யிருக்கின்ருர், பூங்குயில், தமிழ்ச்செல்வி, பார்வதி காதற் பறவைகள் முதலிய சிறு காவி யங்கவளயும், ஏராளமான பாலர் பாட்டுக்கவுளயும் எழுதிப் புகழ் படைத்த நம் கவிஞர், கவிதை எழுத ஊக்குவித்து உற்சாகமூட் டியவர்கள் வீரகேசரியில் சித் திரம் வரையும் வி. கே. அவர் கவூரும், சுதந்திர ன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அவர்களுக்
தான் என்று நன்றி யுணர்ச்சி யுடன் கூறுகின்ருர்) سا -----
கொதியெண்ணெய்ச் சட்டியுள்ளே நீர்பட் டாற்போற் கோபித்தாள் என்இல்லாள்; கடன்கா ரன்வந்(து) அதிகாலை திருப்பள்ளி யெழுச்சி பாடி
அயலவர்க்கெம் புகழ்பரப்பு கின்றன்; மீவிர் புதிதாக உவமத்தின் உள்ளு றைந்த
பொருள்கண்ட புலவன்போற் பூரிக் கின்றீர் மதியுண்டோ நுமக்கென்ருள்; ஆமென் றேன்நான்; மனத்திடையே காண்புதிய உலகில் நின்றேன்.
2

Page 7
i0 费 கலச்செல்வி வாராய்என் நிதிக்குவையல் வருத்த மேன்:தேன் ܖ மதிசுவைக்கும் உளத்தோடு பறப்போம்; நெஞ்சில் ஆராய்வும் தேவையுமே இறக்கை யாக்கி
அறியாமை முகில் கிழித்தே அப்பாற் செல்வோம் பாராய்;எம் பாரதிபோற் பலரும் எண்ணப்
படைப்பினிலே நிலைகண்ட பண்பாட் டாலாம் சீரான புத்துலகu1 மனிதர் வாழும்
திருநாடு வளர்அறங்கள் சிறக்கும் நாடே!.
எழிலொழுகு தெருவீதி இரும ருங்கும்
இணேயொத்த திருமனைகள்; முன்றிற் பக்கம் விழிகவரும் பூஞ்செடிகள்; தென்றல் வந்து விளையாடும் சுற்ருரடல் வீதிக் கப்பாற் பொழிலிடங்கள்; வெளியிடங்கள்; சிறுவர்க் கான
புற்றரைகள்; பொதுவிடங்கள்; மறைக ருத்தைத் தெளியிடங்கள் இவை;இவையே ஐயங் தீர்த்துச் - சிந்தனையை வளர்க்கின்ற கலைக்கூ டங்காண்1.
மழைகாலம் குடிசையுள்ளே ஒழுகும் கீரை
மண்சட்டி வைத்தேந்தி மகவைக் கையால் விழைவோடு தூக்கித்தன் மடிய ஃணத்து
விழிசோரக் குளிர்நீக்கி வாழுந் தாயர் இழைநெகிழ்ந்த கந்தையினுல் மானங் காக்கும்
இழிநிலையைப் பழிக்கின்ற செல்வர் வாழும் பிழைமலிந்த நாட்டினைநீ மறந்தே இந்தப்
பேருலகின் செல்வச்சீர் காண்க பெண்ணே1.
நள்ளிரவில் அழும்பிள்ளை வருந்தி டாமல்
நாளைக்கு கல்லுணவு தருவேன் என்று சொல்லிமறு பகல்தனிலே ஏங்கிச் சோரும்
சூழ்ச்சியொன்றுங் தெரியாத தாயை வாயாற் கள்ளியென்றும் கடன்காரி என்றுங் கூறிக்
கருத்தழிந்த நாட்டினை நீ கண்டி டாமல் செல்வரென்றும் வறிஞரென்றுங் திரிபில் லாத
திருநாட்டை அறிவுக்கண் கொண்டு காணுய்,

கலைச்செல்வி 11
மனிதனென உருவெடுத்தும் மதிப்பில் லாமல்
வன்புலிபோல் சிங்கம்போல் 5ரிபோல் வாழ்ந்து தனியுரிமை கொண்டாடித் தவிக்கும் வாழ்க்கை
தவிர்ந்தபெரு நன்னடு; தாய்மை பேணி இனிமையுடன் உறவாடி இன்பங் தேக்கும் எழில்நாடு சாதியென்ற இடர அறுத்துப் புனிதமிகு சமுதாயம் புத்து ணர்ச்சி
பொங்கிடவே வளருகின்ற பொன்ன டிஃதே!.
இடுபவர்கள் இல்லாமை இரப்போர் இல்லா
இயல்பிதனல் என்றுரைத்த கம்பன்; அம்பு தொடுசிலேயே கோடுவன என்று சொன்ன
துகள்தீர்ந்த புகழேந்தி; சாதி பேதக் கொடுமைகளை மனத்தெண்ணி யிரண்டு சாதிக்
கூற்றுரைத்த ஒளவைஎனும் புலவர் யாரும் நெடுநாளாய்ப் பகலிரவாய் 5ெஞ்சிற் கண்ட
நேர்மைநிறை அன்புலகம் காண்க நீயே.
நோக்கின்யார் ஒருயிரை ஆக்க வல்லார்
5ொந்தஉடல் பிரிந்துசெலும் உயிரை மீட்டும் ஆக்கவழி அறியாதான் உயிர னைத்தும்
அழியவழி கண்டுகொண்டே அணுக்குண் டெல்லாம் தேக்கிவைத்த ஆணவத்தைப் பரிக சித்துச்
சிரிக்கின்ருரர் புத்துலகோர் உயி ருடம்பைக் காக்கவெழும் ஆக்கவழி சேர்விஞ் ஞானக்
கலைவளர்ச்சிக் கண்காட்சி காணுய் கண்ணே.
எழுகின்ருரர் உதயத்தில்; இன்பத் தோடே
இறைவணக்கம் செய்துதொழிற் கேகு கின்றர் உழுபவர்க்கே நிலமென்ற கொள்கை யாலே
ஊக்கத்தோ டுழைக்கின்ருரர்; தொண்டு செய்து கொழுபவர்கள் யாருமில்லை; தொல்லை யில்லை
துண்டுநிலப் பிரிவில்லை; தொழில்கள் இன்றி அழுகின்ற குடும்பங்கள் எவையு மில்லை
அறிவில்லா மனமில்லை; அறிவாய் நெஞ்சில்,

Page 8
12 கலைச்செல்வி
கண்ணிரண்டில் ஒர்கண்ணுய்க் கருதப் பட்டுக்
கல்வியினும் உரிமையினும் உயர்ச்சி யுற்ற பெண்களிவர்; ஆண்களொடு சமான மாகப்
பெரும்பணியிற் கைகொடுப்பர்; பேத மில்லாப் பண்பினிலும் அன்பினிலும் மிக்கார்; காதற்
பறவையென உலவிடுவர்; கற்பின் பொற்பார்; புன்னகையே தம்5கையாய்க் கொண்டு வாழ்விற்
புத்தொளியை ஊட்டிடுவர் காண்க பொன்னே!.
சீதனத்தின் பேய்ாட்டம்; பெண்வீட் டாரின் சீர்வகைகள் குறைவென்ற தில்லுமுல்லு ஆதனத்தின் உரிமைப்போ ராட்டம்; வேலி
அளவைக்கோர் போராட்டம்; அதற்கோர் கூட்டம் வேதனமே யில்லாத வேலைக் காய்த்தம்
வே&ளயெலாம் வீணுக்கிப் பசியால் வாடும் பாதகங்கள் நிகழாத நாட்டைக் காண்டும்
பயனிறைந்த நயமிக்க உலக மீதே.
கிதமுயரும் பண்பாட்டால் நேர்மை யுண்டு
திேயுண்டு நோய்ப்பட்டோர் மூப்ப டைந்தோர் இதமாக வாழ்வதற்கிங் கில்லம் உண்டே,
இடுவென்று திரிவார்கள் யாரு மில்லை முதல்தந்து தொழிலுக்கு வழியைக் காட்டும்
முறையான பொதுச்சங்க அமைப்பு முண்டு மதமொன்று தெய்வமொன்று சாதி யொன்று
மதியுண்டு விதியென்ற வாழ்வே யில்லை.
அரசியலில் காந்திவழி; பொருளாக் கத்தில்
அமெரிக்கர்; வாணிபத்தில் ஆங்கி லேயர் தரமுயர்ந்த ஊக்கத்தில் சீனர்; ஓங்குஞ்
சமத்துவத்தில் ரூஷ்யர்கள்; நுட்ப வேலைத் திறமிகுந்த முயற்சியிலே யப்பான் மக்கள்
தெய்வத்தின் அருள்பாடிப் பழமை பேணி அறவழியில் புதுமையினை வளர்க்க எண்ணும் ஆவலிலே நற்றமிழர் ஆகி நின்றர்.

கலைச்செல்வி 18
மாலையிலே பொதுவிடத்தில் மக்கள் கூடி
மனமகிழ்ந்தே இசைநுகர்ந்து வாட்டங் தீர்ந்து
பாலைவனம் போலிருந்த நெஞ்சம் மீண்டும்
பசுஞ்சோலை யாகிடவே பால்நி லாவில்
காலையிலே இருந்தரும்பிப் போதாய்ப் பூத்த
காதல்நோய்க் கா8ளயர்தம் கண்ணன் னுரைச்
சோலையுள்ளே அணைந்துசெல்லும் தோற்றங் காட்டித்
கோகைமயில் போல்மனையாள் கோ8ளத் தொட்டேன்.
*நன்றுநன்று; மனுேவசியம் எங்கே கற்றீர்
நல்லவொரு கற்பனைதான்! புதிய நாடாம்! என்றுவரும் அக்காலம்! இக்கா லத்தெம்
இயல்புணர்ந்தோர் இதனை5ாம் கூறக் கேட்டால் கன்றென்று மடிசுரந்து பால்தங் காற்போன்ம்
கதையென்பர்; விடுகளின்ருரள்; மீண்டும் சண்டை! கண்டுகொண்டேன் கடன்காரன் வந்து விட்டான் கதவையடை கண்ணுட்டி என்றேன் காணிர்.
மாணவ ஏஜண்டுகள்
கலைச்செல்வியை விற்பனைசெய்ய ஒவ்வொரு பாட சாலையிலும் ஏஜண்டுகள் தேவை. 20% கழிவு கொடுக்கப்படும். தமிழாசிரியர் அல்லது தலைமை யா சிரியரின் கையொப்பத்துடன் உடனே எழுதுக. பெயர்கள் கலைச்செல்வியில் வெளியிடப் படும்.

Page 9
வளரும் எழுத்தாளர் மலர்
ぐ、ノ
யாழ்ப்பாணம் எவர்சில்வர் மாளிகை யில் யாற்றுகின்றர் மணியம், சொந்தப்பெயர் க. சுப்பிர
5-6)
மணியம். 'பாடிக் களிப்ப தெப்போ? என்ற கவிதை கலைச் செல்வியில் வெளி யாகி யுள்ளது. சுதந்திர னில் அடிக்கடி இவர் பெயரைக் காணலாம்.
ممي"ج ନବ୍ଜ
"யாழ் நங்கை சுன்னுகம்
இராம நாத ன் கல்லூரி மாணவி. சொந்தப் பெயர் அன்னலட்சுமிஇராசையா. அன்னையின் ஆவல்' என்ற கவிதையும், பெரியவன்' என்ற கதையும் கலைச் செல்வியிலும், இசை இணேத்தது' என்ற கதை 'தினகரனிலும் வெளிவந் துள்ளன,
 
 

கலைச்செல்வி
பரமேஸ்வரக் கல்லூரியில் கல்வி பயின்ற பஞ்சாட் சரம் இப்போது தமிழ் ஆசிரிய பயிற்சிக் கலா சாலை புதுமுகத் தேர்விற் காகப் படித்து வருகின் ருரர். சொந்த ஊர் இணு வில், ‘காதலர்க்கு' என்ற கலதை 'கலைச் செல்வி புரட்டாதி இதழில் வெளி யாகியுள்ளது. ‘வீரகேசரி' யி ஜிம் சில கவிதைகள் வெளியாகியுள்ளன.
spy
WS
15
影 Σζ.
(Y
உடுவில் கிராமாதிகாரி அபி மன்னசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி இராஜகுல தேவி சொந்த ஊரிலுளள ஒரு பாடசாலையில் ஆசிரி oulut 5 3 (5 56 6ör g f. சோமுவின் செய்மதி'என்ற கதை 'கலைச்செல்வி? இரண் டாம இகழில் வெளிவக் துள்ளது.

Page 10
16 w கலைச்செல்வி
v/
WM
மானிப்பாய் இந்துக் கல் அாரி மாணவியாக இருந்த 'உமா? இபபோது யாழ்ப் பாணக்கல்லூரியில் கல்வி பயிலுகின்றர், சொந்தப் பெயர் கெளரிசிவம் சிவ சம்பு, 'உறுதி பிறந்தது' என்ற கதை கலைச்செல்வி ஐப்பசி இதழில் வெளி யாகியுள்ளது.
>
3.
器
朗
s
器
உங்கள் உதவி
தமிழிலக்கிய உலகில் கலைச் செல்விக்கு இருக்கும் மதிப்பு எல்லோரு மறிந்ததே. புதிய பல எழுத்தாளர் கஜளக் கலைச்செல்வி அறிமுகப்படுத்தி யிருக்கின்ருரள். பழம்பெரும் எழுத்தாளர்களின் மிகச் சிறந்த படைப்புக் க2ள வாசகர்களுக்கு அளித்திருக்கின்றரள். இதுவரை செய்துவந்த தொண்டிலும் பார்க்க, இன்னும் அதிக தொண்டுகளைச் செய்வதற்கு உங்கள் உதவி தேவை. நான்கு ரூபாயை அனுப்பி நீங்கள் சந்தாதாரராகலாம். உங்கள் உறவினரையும் நண்பர்களையும் சங்காதாரராக்க லாம். வியாபார நிலையங்களில் ‘கலைச்செல்வியை அறி முகப்படுத்தி விளம்பரம் கொடுத் துதவும்படி அவர்களைக் தூண்டலாம். கலைச்செல்வியின் வளர்ச்சி கன்னித் தமிழின் வளர்ச்சி. நன்றே செய்யுங்கள்; அதனை இன்றே செய் யுங்கள். W
தமிழ் இலக்கிய மன்றம்.
 

தேடிவந்த செல்வம்
×ද් (Jäääffaudii බ්‍රි:
பாக்கியம் ! அமைதி? மாரி மழைபோல் G)rni) நீ இந்தக் கடிதத்தைக் கண் யும் தேன் மொழிகள் எங்கே? டதும் கண்பார்வை இழந்த கட்டுக்கட்டாக வந்து குவியும் அஞ் குருடன் திடீரெனப் பார்வை சல்கள் எங்கே? எங்கே? அப்படி பெற்றது போல யானுல் வேறு ஆனந்தப் படு Այո65)յպլԻ....2**
வாய்,"எனக்குக் t கடிதம் எழுதி இப்படி அன்று இன்று தான் நீ எழுதிய கடி மனம்வந்ததோ ass60g5 US-5gs சி வா வுக் கு’ போது மட்டும் என்று ஆச்சரி என் பக்கத்தில் uLu tʻi Lu (B 6)j T (ifi. நீ நின்றிருந ஆனல், எல்லா sió. நிச்ச வற்றையும் விட யம் உன் பஞ்சுக் உன்னைத் தாக்க கன னது கள ஒரு பேரிடியும் சிவந்திருக்கும்; இதனுள் இருக் இரத்த ನಿ கின்றது என் ஊம் பெருக பதையும் முத கெடுத் தோடி லிலே அறிந்து யிருக்கும், நல் கொள்! அதைச் مر. شنينة سا லகாலம் உனக் th 65ášćeb சகிக்கும் சக் கலைச்செல்விமூலம் ஏற்கெனவே அறிமுக ಅಞ್ಞ"
ர் முல்ஜலச்சிவன். சொந்தப் பெயர் a
" o: ::: © ಮೂಗಿನಿಹತ್ತಿತ್ವ' த்துக் கொள் சமாசத்தில் வேலைபார்க்கிருச் ரம் நூறுமைல்.
முதலில் நீ எழுதிய கடிதத்தின் சிலவரிகளே எடுத்துக்கூற விரும்பு கிறேன்.
*சிவா, நீங்கள் ஒரு விசித்திரப்
பிறவி. பெண்ணின் மனதைப்
புரிந்துகொள்ள முடியாதவர்.
இல்லாவிடில் என் இத்துணை
அலட்சியம்? என் இந்தப் பயங்கா
இதே தூரம்தான் நம் அந்தஸ்திற் கிடையே உள்ள தூரமும், இதைத் தான் இந்தக் கடிதத்தில் விளக்கி -விரித்துக் கூறப்போகிறேன்.
இந்தச் சிவா உன்னை மறக்க மாட்டான். ஒருபோதும் மறக்க மாட்டான். உயிர் இவன் உடலில் ஒட்டி க் கொண்டிருக்கும் வரை,

Page 11
18
உன் நினைவும் இவன் இதயத்தை ஒட்டிக்கொண்டுதாணிருக்கும்! இப் படி என் இதயம் இருக்க, என் னைப் புரிந்த நீயும் என் அப்படிச் சந்தேகித்தாய்? ஏன் அந்தப் பெரிய இருப்புக்குண்டை என் இத யத்தில் விட்டெறிந்தாய்? என்?
*சிவா, நில்! உன் உடலை நான் ஆயிரம் துண்டுகளாக வெட்டிக் குவிக்கப் போகின்றேன்-உன்னைச் சித்திரவதை செய்யப் போகின் றேன். நில்!” - இப்படி நீ கூறி யிருந்தாலும் நான் வருந்த மாட்
டேன். வேதனைப்பட மாட்டேன் ஆனல், அதற்கு மேலாக என்னை வதைத்து விட்டாய்; வருத்தி விட்டாய்!
நீயே நினைவாக - நீயே உலக மாக - நீயே என் வாழ்வாக-நீயே என் குலதெய்வமாக - எல்லாமே நீயாக எண்ணி எங்கும் என்னைப் பிடித்து, ‘அப்படியென்றல்வேறு யாரையும்.’’ என்றுகேட்கலாமா? இதுவும் ஒரு கேள்வியா? இல்லை, இல்லை. இது என் இதயத்தைக் குத்திக் குத்திக் குருதி குடிக்க வந்த விஷப்பூச்சி!
பாக்கியம்! உன் பிழையைக் குத்திக் காட்டுகிறேன் என்று நினைக்கிறயா? இல்லை. ஒருபோது மில்லை. என் இதயத்தின் துய்மை யை - என் அன்பின் மேன்மை யை க எமது உயர்வு - தாழ்வை எடுத்துக் கூறிவிட்டுப் போகவே எழுதுகிறேன்.
நான் குறிப்பிடும் தூரம் வெறும் மைல் அளவிலுள்ள தூரமல்ல. எனக்கும் உனக்குமுள்ள அந்தஸ் தின் தூரம் அதை ஒருதரம் சிந்தித்துப்பார்,
கலைச்செல்வி
நீ ஒரு லேடி டாக்டர் - நான்
ஒரு சிறு குமாஸ்தா. நீ அறிவில் பெரும் கடல் - நான் சின்னஞ்
சிறு குட்டை. நீயோ ஆயிரம் ஆயி
ரம் உழைப்பவள் - நானே என் வயிற்றுக்கே போதும்படி உழைக்க முடியாத 'உழைப்பாளி சுருங்கக் கூறப்போனல், நீதிராட்சைப்பழம், நான் நரி, உன்னை என்னல் பெற முடியாது. நீ என்னைவிட உயர்ந் தவள்.
இதை அன்று நாம் புரிந்து
கொள்ள முடியாமற் போய்விட்
டது. நீ என் எழுத்தின் திறமை யில் மயங்கினய். நான் உன் நடனத்தின் நளினத்தில் சொக்கி னேன். என் உன் அழகிலும்தான் மயங்கினேன் நான். இதுதான் நடந்த விபரீதம்!
நீ டாக்டராகப் பயிலப் போன நாட்தொடக்கம் நான் கடிதம் எழுதுவதைக் குறைத்துக் கொண்
டேன். நீ இரண்டு கடிதம் எழுதி
ணுல் நான் ஒரு பதில் கடிதம் எழுதுவேன். இதற்குக் காரணம் கேட்டு எழுதினுல், பதில், ஒய் வின்மை என்று எழுதினேன். நீயும் நம்பிவிட்டாய். ஆனல் உண்மை யாதெனில் எடுத்த எடுப் பிலேயே கடிதம் எழுதுவதை நிறுத்த முடியாமையே!
ஒரு கிழமைக் கொன்றக-பதி னைந்து நாட்களுக் கொன் ற க - மாதத்திற்கொன்ருக - இப்படியே கடிதம் எழுதுவதைக் குறைத்துக் குறைத்து இப்போ ஒருவருடமாகமுந்நூற்று அறுபத்தைந்து நாட் களரக எப்படித்தான் கடிதம் எழுதாம லிருக்கின்றேனே! அதி சயந்தான்,

88uwödsśd
பரக்கியம், என்று நான் உனக்
குக் கடிதம் எழுதுவதை நிறுத்தி
னேனே அன்றே இரவு - பகல் என்ற வேற்றுமையை மறந்தேன், பபி என்னும் மனிதனை விட்டுத் துெலையாத நோயினின்றும் விடு பட்டேன். 'இன்பம் இன்பம்" என்று மனிதன் அடையத் துடிக் கும் புதையலை வெறுத்துத் தள்ளி னேன். தாய் - தம்பி - தங்கை என்ற எண்ணத்தையே மறந்து தனியே - ஒன்றியாக - பைத்திய மாக என் அறையில் அடைந்து கிடக்கிறேன். எல்லாம் உனக்காக. என் மெளனம் உன் மனத்தை மாற்றும்; என்னை நீ மறப்பாய்; உன் தந்தையின் விருப்பப்படி அந்த டாக்டர் தேவனை மணப் பாய். நல்ல இடத்திலே நல் வாழ்வு வாழுவாய்; நல்லின்பம் நுகருவாய்; என்ற ஒரே எண்ணத் தால் உனக்குக் கடிதம் வரை வதை நிறுத்தினேன். இதை நீ அறியாமல் வேறு யாரையும் காத லித்துவிட்டேனே என்று சந்தேகப் பட்டு எழுதினயே. இப்போ நம்பு கிருயா, இந்த சிவாவுக்கு சிவ பாக்கியத்தைத் தவிர வேறு யாரி லுமே காதல் இல்லை என்று? இனி நம்பு. இனியாவது நம்பு, இந்தச் சிவா நல்லவன் என்பதை.
'என் அப்பா என்னை டாக்டர் தேவனுக்கு மணம் முடித்து வைக் கத் திட்டமிட்டிருக்கின்றர். தேவ ஜம் என்னை அடையக் கங்கணம் கட்டியிருக்கிருர், பாவம், இலவு காத்த கிளியாகப்போகின்ருர்’ என்று உன் கடிதத்தில் ஒருகால் எ மு தி யி ரு ந் தாயே, அன்று அதைப் பார்த்தபோது ஒருவித பயம் எழுந்தது, என் மனத்தில். அன்று நான் பயந்ததில் அர்த்த முண்டு என்பது இன்று புரிகிறது.
9
- நான்தானே அந்த இலவு காத்த கிளியாகவுள்ளேன். உன் அப்பாவோ, தேவனே, எதையும் அடைய முடியாததற்கு ஆவல்பட்டு விட வில் லை. அப்படியெல்லாம் கிடைக்காததற்கு ஆசைப்பட்டது நீயும் நானும்தான்.
பாக்கியம்! நீ அருமையானவள்; நல்லவள். இல்லாவிடில் ஒரு வருட காலமாக என் பதில் கிடை யாதபோதும், இப்படிக் கடிதம் மேல் கடிதம க எழுதுவாயா?
உன்னைப் போல ஒருகாதலி எல் லோருக்கும் கிடைக்க முடியாது! நீ எனக்கு மட்டும் கிடைத்த பெரும் பாக்கியம், விலை மதிப்பற்றதோர் மாணிக்கம். பொற் பதக்கத்திற் கிடையே இருந்து அழகாக ஜொலி க்கவேண்டிய வைரம் நீ. தவறு தலாக இந்தக் குப்பை மேடான என் வாழ்க்கைக்குள் வந்து சிக்கி விட்டாய். நான் உனக்குத் தகுதி யற்றவன்!
‘எல்லாம் இந்த டாக்டர் வேலை ஒன்றல் தானே விளைந்த வினை. இல்லாது விட்டால், அன்று - ஐந்து வருடங்களுக்கு முன் நாம் பாடசாலை மாணவர்களாக இருக் கும்போது எத்துணை ஜோடிப் பொருத்தமாக - தகுதியுடையவர் களாக இருந்தோம். இன்று .?
ஐயோ . வேண்டாம் இந்த டாக்டர் வேலை, வேண்டாம். அவர் மட்டும் கிடைத்துவிட்டால் போதும்', என்று எண்ணி உன் வேலையையும் உதறிவிடக் கூடும். என் காதலுக்காக அப்படி எதை யும் செய்துவிடாதே, பாக்கியம். வேண்டாம் அந்த விபரீத நினைவு உனக்கு. அப்படியெல்லாம் தேடி

Page 12
20
வந்த செல்வத்தைத தெருவில் தள்ளிவிடாதே.
"என்னைப் பெறற்கரிய பாக்கியம் என்று நினைக்கிறீர்களே, அப்படி யானுல், நீங்கள் மட்டும் என் தானக வலிந்து வந்து, ‘என்னை ஏற்றுக்கொள்-அணைத்துக்கொள்? என்று கெஞ்சும் செல்வத்தை "போ, போ' என்று பிடர்பிடித்துத் தள்ளவேண்டும்?-இப்படி உன் தூய்மையான உள்ளத்தில் ஒரு கேள்வி உதிக்கும்.
அதுதானே சொன்னேன், அந் தச்செல்வத்தை எற்பதற்கு அரு கதையற்றவன் இந்த சிவா என்று.
பாக்கியம் உனக்குக் கடிதம் எழுதுவதென்றல், கட்டுக் கட்டாக எவ்வளவோ எழுத முடியும். ஆனல் அப்படியெல்லாம் இனி ஒருபோதும் எழுத மாட்டேன். எழுதி எழுதி என்னில் அன்பை வளர்க்க விரும்பவில்லை.
கடைசியாக உனக்காக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீ அதைக் கட்டளையாகவும் எடுத்துக் கொள்ளலாம்; அல்லது உனக் குப் பேரதிர்ச்சியைத் தரும் பேரிடி யாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியும் இருக்கட்டும். என் மட்டில் அது உன் இன்ப வாழ் விற்காக விடுக்கும் அன்புக் கட்ட2ள்.
நான் உனக்குத் தகுதியற்ற வன். நீ உரிய இடத்திற்கு தேவ னிடம் போய்விடு. போ! போ!! இதுவே நான் உனக்கு விடுக்கும் வேண்டுகோள்-அணபுக் கட்ட8ள.
பாக்கியம், நீ என்னை அடைய முடியவில்லையே என்ற எக்கத்தால் தற்கொலை செய்துகொள்ள எண்
anys das
ணுவாய். அப்படியெல்லாம் அந் தப் பேடிச் செயலைச் செய்து விடாதே. அன்று தெரியா த் தனமாக ஒருவர் நிலையையை ஒருவர் புரிந்து கொள்ளாமல் காதல் கொண்டுவிட்டோம். அதை யெல்லாம் மறந்துவிடு; அதெல் லசம் வெறும் கனவு--கானல் நீர் என்று எண்ணி, என்னை மன் னித்துக் கொண்டு, மறந்துவிடு. மறந்துவிடு.
நானும் இந்த நாட்டைவிட்டு எங்கோ போய்விடுகிறேன். ஒரு வரை ஒருவர் இனிச் சந்திக்க முடி யாமல் வேறு நாட்டிற்குப் போய் விடுகிறேன். நீ இன்பமாய் வாழ வேண்டும்.
உன் நல்வாழ்வை விரும்பும்,
- சிவா -
நான் அவளுக்குக் கடிதம்
எழுதிவிட்டுப் பேனவை மூடுவதற் கும், யாரோ என் அறையின் கதவைத் தட்டுவதற்கும் சரியாக இருந்தது.
* யாரோ? எவரோ? அம்மாவா கத்தானிருக்கவேண்டும்' என்று எண்ணிக்கொண்டுபோய்த் திறந் தேன், கதவை.
ஒரு ரூபாவையே கண்டறியாத பரம எழைக்கு *பத்து லட்சம் ரூபாய் குதிரைப் பந்தயத்தில் அடித்து விட்டாய்; இந்தா உன் பணம்' என்று பணத்தை நீட்டி னல், அந்த எழை எத்துணை ஆச் சரியம் - ஆனந்தம் - அவநம் பிக்கை கொள்ளுவானே, அத் தனையும் நான் அடைந்தேன், அந் தக் கதவைத் திறந்தபோது, வாச

கலேச்செல்வி
கர்களுமே அதிசயப்படப் போகிறீர் கள். என் காதலி எனக் கூறி னேனே அவள் -சிவபாக்கியம் வந்து நின்ருள்!
எங்கே வந்தாள்; எப்படி வந் தாள்; என் வந்தாள்; எதுவுமே புரியவில்லை எனக்கு. மரக் கதவு டன் மரமாக நின்றேன்.
அவள் பேச்சைத் தொடக்கினள்:
"என் சிவா, இத்தனை ஆச்சரி யம்? 'இவள் யாரடா சனியன், கள்ளனைப் பிடிக்க வந்ததுபோல வந்து நிற்கிருளே என்று அதிசயப் படுகிறீர்களா? என்று குத்தலாகக் கூறிவிட்டு, 'உங்களிடம்தான், உங் களைத் தஞ்சமடையத்தான் வந் தேன்’ என்ருள்.
*நல்லதாய்ப் போய் வி ட் டது. பத்துச்சதம் செலவழிக்காது, நேரி லேயே கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போய்விடலாம்’ என்று நினைத்தேன். அதே நேரத்தில் அவளின் குத்தலான பேச்சு என் மனத்தை உறுத்தாமலும் இருக்க வில்லை.
நான் "வா’ என்று உபசரிக்க வில்லை. அவளாகவே என் அறை யுள் நுழைந்தாள் கையிலிருந்த சூட்கேசை ஒருபுறம் வைத்தாள்; மறுகையிலிருந்த ‘றிஸ்ட் வாட் சை”க் கழற்றி என் மேசைமீது வைத்தாள்; அவள் அந்த நிமி டத்தில் நடந்துகொண்ட விதம் எதோ அவள்தான் வீட்டுச் சொந் தக்காரிபோல் இருந்தது
மேசைமீது இருந்த கடிதத்தின் பின்புறத்தைக் கண்டுவிட்டாள் போலும், "என்ன கடிதமா இது? என்று கேட்டாள்.
**ஆம்” என்றேன்.
忍盘
**இது என்ன ஆச்சரியம், கடி தம் எழுதும் பழக்கம் உங்களுக்கு உண்டா!” என்று நளினமாகக் கேட்டாள்.
"அந்தப் பழக்கம் இப்போது இல்லைத்தான். ஆனல், எழுத வேண்டிய நிலைமை நெருங்கிய தால் எழுதியுள்ளேன். அதுவும் வேறு யாருக்குமில்லை, உனக்குத் தான்’ என்றேன்.
'என்ன? எனக்கா? கடிதமா? நீங்களா?' என்ருள், ஏதோ மேற்குத் திசையில் சூரியன் உதி த்துவிட்டான் என்றதைக் கேள் விப்பட்டவன் போல.
அவள் பட்ட அதிசயத்தையும் அவசரத்தையும் கண்டபோது சிரிப் புச் சிரிப்பாக வந்தது எனக்கு.
*சந்தேகமில்லை, உனக்கேதான் படித்துப்பார். ஆனல் எந்தவித மாற்றத்தையுமே செய்யும் படி கேட்டுவிடாதே' என்று நான் சொன்னது அவள் காதில் விழுந் திருக்குமோ என்னவோ. அவள் அதைப் படிக்கத் தொடங்கிவிட் டாள். நான் அடுத்த அறைக்கு அலுவலாகச் சென்று விட்டேன்.
ஐந்து நிமிடங்கள் சென்றிருக் காது. சிவா, சிவா..! என்று கத்தினள். வீடு அதிர்ந்தது! நான் அதிர்ச்சி அடையவில்லை. அவள் அப்படி அதிர்ச்சி அடை
வாள் என்பது நான் எதிர்
பார்த்ததே.
என்ன பாக்கியம்?’ என்றேன்
சர்வசாதாரணமாக,
"என்ன இது? ஏன் இப்படி யான முடிவிறகு வந்தீர்கள்? பணமும் பதவியும் வேண்டுமா காதலிப்பதற்கு? காதல் அவ்வ ளவு கேவலமானதா? கடைச்

Page 13
22
சரக்கா? இவ்வளவுதான உலகம் போற்றும் ஒர் எழுத்தாளனின் சித்தம்? உலகத்திற்கு முன்
னேற்றக் கொள்கைகளையும் புது மையான போக்குகளையும் எடுத் துக் காட்டி, உலகையே மாற்றி அமைக்கவேண்டிய நீங்கள் கட்டிய முடிவு இதுதான? வெட்கம்’ என்று ஆத்திரம் வழியக் கூறி சூள்ை.
**பாக்கியம்! நீ எதைக் கூறின லும் என் தீர்மானத்தை மாற்றி
விட முடியாது. போவதற்குச் சகல
ஒழுங்குகளுமே செய்தாகி விட்டது. நீ அந்த டாக்டர் தேவனை மணந்து கொள்’ என்றேன் கண்டிப்பாக,
*சிவா..! நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள். அந்த டாக்டரை நான் மணம் செய்யக்கூடாது
என்றும் என்னை என் விருப்பப்படி வேறு யாரையாவது மணந்து, இன்பமாக வாழ்ந்தால் போதும் என்றும் கூறிச் சென்று விட்டார் அப்பா. அந்த டாக்டருக்கு எத் தனை ‘காதலிகள் உண்டு என்பதை அப்பா அறிந்துவிட்டார். அப்படி யெல்லாம் என் திருமணத்தில் மனம்விட்டுக் கூறிய அப்பா இப் போதுமட்டும் இருந்தால்... s இப்படி அவள் பெருமூச்சுடன் கூறியபோது, அவள் வேல்விழிகள் நீர்த் தேக்கங்களாயின.
** என் பா க் கி யம், அப்பா எங்கே?' என்றேன் ஆச்சரியத் துடன். நான் ஆச்சரியம் அடைந் தது அவள் தந்தை இல்லை என்ப தில் மட்டுமல்ல, அவள் தந்தை அவள் திருமணத்தில் இவ்வளவு
தூரம் விட்டுக் கொடுத்து விட்டாரே -
என்பதிலும்தான்.
கலைச்செல்வி
"அவர் அம்மா சென்ற வழி யைத் தொடர்ந்து சென்றுவிட்டார். நான் உங்களைத் தேடி இங்கு வந் துள்ளேன். இங்குதான் வேலையும் மாற்றலாகியுள்ளது’ என்துசொல் லித் தேம்பினள்.
'பாக்கியம்! நீ டாக்டர். நான் பரம எழை. இந்த வழையை உனக்கு வேண்டாம்’ என்று கத்தியே விட்டேன்.
வெளியே சென்றிருந்த என் தாயார் வந்து நின்று நடந்த தைக் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். 'தம்பீ, தேடிவந்த செல்வத்தை என் துரத்துகின்றய? எதோ தெய்வம் தந்த பெண்தேடிவந்த செல்வம் என்று நினை த்து அணைத்துக்கொள். நீயும் நானும் செய்த பாக்கியமே பாக் கியம்’ என்ருள் ஆனந்தமாக, நல்ல மருமகள் கிடைத்துவிட்ட்ாள் என்ற இதயப் பூரிப்பு அம்மாவுக்கு.
என் முதன்முதல் கடவுள்தாயே என் காதலியை, தேடி
வந்த செல்வம் என்று அணைத்
துக் கொள்ளும்படி கூறும்போது நான் எப்படி என் ஆருயிரைஇதய ராணியை உதறிவிட முடி யும்? என் பிடிவாதம், கடிதம்
எல்ல்ாவற்றையுமே தூர எறிந்து
விட்டு, “பாக்கியம்...!” என் றேன் என்றுமில்லா காதலுடன்.
گھبر
*அத்தான்....!" என்ருள்
முதன் முதலாக, அந்த "அத் தான்' என்ற ஒரு சொல்லில்தான் எத்தனை நிறைவு-எத்தனைகனிவுஎத்தனை பணிவு!
அம்மா மெதுவாக அறையை விட்டு நழுவினள். நாம் ...!
డానా
曾

சிரிப்பு
4QAM. D. 9 ja 56ör 4A
அன்று, மூத்தவிநாயகர்
நண்பன் வீட்டுக்கு அவ்
ஆலயத்தின் எட்டாம் காள் வழியாகச் செல்லும்போ இராத் திருவிழா. வெகு தெல்லாம் அந்த ஆலயத் விமரிசையாக * ·.१ தைப் பார்த் நடைபெற் திருப்பேன். று க் கொண் அதன் தோ டி ரு ங் த து. སྨྱོ་ றறமஎனககு திருவிழா யா . வருததததை ருக்கு என்று உண்டாக்கி மாத்திரம் கே யது. ஆலை, ட்டு விடாதீர் அன்று அதே கள். இவ்வின ஆலயம் என் விற்கு விடை று மில்லாத யளிப் ப தா tly தேவ ல்ை, அங்கு லோகம் போ பெரும் பான் லக் காட்சி மையினராகக் யளித் த து. குழுமியிருந்த பலவித வர் வாலிபர்கள ண மின்விள தும், வாலைக க்கு க ளால் ளதும வயிற் T அலங்கரிக்கப் றெரிச்சலேக் தாலு:அ பட்ட அலங் கெட்டிக் கொ ,ே :6 5TBT LDT Grif
ள்ளவேண் டி 5ேரும். என
க்கு ஏன் அந்தப் பொல்
நல்லதொரு கருத்தை விளக்குகின்றது
சிரிப்பு p
மடைந்து 8F ରu if ଥs ଅଗt
கைகள் - சிக ரங்கள் - கில
சிதைந் திருந்த
மறைத்துக்
லாப்பு?
நான் அந்த இடத்தைச் சேர்ந்தவனல்லன்; என்ருர லும், நண்பனின் விருப்பப் படி (எனக்கும் விருப்பங் தான்) விழாவிற்குச் சென் றிருந்தேன்.
கொண்டு வெகு கம்பீரமாக எழுந்து கின்றன. அப்பப் பா! அவையின் அழகுதான் என்னே!
நண்பனும் நானும் சிதை ந்த சுவர் ஒன்றில் அமர்ச்

Page 14
24
திருந்தோம். மேளக்கச் சேரியின் இறுதிக் கட்டம்
வெகு விறுவிறுப்பா யிருக் தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் கற்பனை உள்ளத்தில், ஏதோ பார அாரமான தவறிழைத்து விட்ட மனைவி கணவனைப் பார்த்து மன்னிப்புக் கோரு வதுபோல் நாதசுரக்காரன் தவிற்காானைப் பார்த் து இறைஞ்சுவதைப் போலும், அவனே டும், டுடும் என்று கணவனுக்குரிய கடுங் தொ னியில் அவளின் வேண்டு கோளுக்கு இடங்கொடாது கண்டிப்பதுபோலும் தோற் றியது.
எனக்குச் சிரிப்பு பொத் துக்கொண்டுவந்தது. ஆனல், சிரிததுவிட்டால் எதிர்ப்பக் கததில் பலவர்ண உடைக ளில் பட்டாம் பூச்சிகளைப் போல் அமர் ந் திருக் கும் பதுமைகளைப் பார்த்துத் தான் பயல் பல்லே இளிக்கி ருரன் எனச் சுற்றி இருந்த வர்கள் கருதிவிடுவார்களே எனச் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.
ஒலிபெருக்கியின் உதவி
யுடன் காதைத் துளைத்துக் கொண்டிருந்த மேளக் கச்
சேரியும் ஒருவாறு ஓய்ந்தது.
இனி வரவேண்டியவர்கள் பாடகியும் சின்னமேளங்க ளுக்தான். மத்தளக்கார லும் ஆர்மோனியக்காரனும்
a čaš Gås så si
மேடைக்கு வந்துவிட்டார் கள். அதுவரை அறிதுயி லில் ஆழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவ ரும் முண்டி யடி த் து க் கொண்டு மேடையை நோக்கி ன்னேறினர்கள். நாட் g žಳ: ఐపోడ్ கும் வழிமேல் எல்லோ ருடைய விழிகளும் பதிக் திருந்தன.
நண்பனைப் பார்த்தேன். galoolga கண்கள் மட்டும் பெண்கள் பகுதியில் ஏதோ ஓர் இடத்தில் இலயித்திருக் தன. ஒருவேளை அவன காதல் சிட்டுக்கிட்டு அக்கூட் டத்தில் இருக்குமோ என்ன வோ என்று எண்ணினேன்.
“ஏது, பார்வை ஒரேயடி யாக விழுநது விட்டதே' என்று அவன் காதைக் கடித்தேன் 5ான். திடுக்கிட் டுத் திரும்பிய அவன் அசடு வழியப் பல்லேக் காட்டியபடி,
*ம்.அதோ பார்! அந்தக் அானுக்கு வலப் பக்கத் தில்..' என்று கிசு, கிசுத் தான். என் பார்வையும், அவன் பெருவிரல் காட்டிய திசையில் சென்று ஒரு பதுமைமேல் பதிந்த்து.
* ஆமாம்! அவளுக்கும் உனககும என ன ப பா தொடர்பு?’-என் வினு அவ னைக் குறுநகை புரிய வைத் 55,

கலைச்செல்வி
“என்ன தொடர்பா? பக் கத்து வீட்டுக்காரி: பெயர் கமலம்; நெருங்கியதொடர்பு' -அவன் கவனம் முழுவதும் அவள்மீது இருக்ததால், வாக கியம் துண்டாடப்பட்டு வெளி யேறியது.
*ஒகோ! ஏனப்பா திரிக் கிருய்? காதல் கவ்வி விட் டது என்று சொல்லேன்' என்றேன் நான்.
“சே, சே, அப்படி ஒன்று மில்லை”என்றவன், "ஆமாம்” என்று மென்று விழுங்கி ன்ை.
* as t
"ஏன் தம்பி இந்த ஊதா ரித்தனமான செலவுகளெல் லாம அவசியந்தான?” பகுத் தறிவைக குழைத் துக் கொண்டு பின்னே எழுந்த வினவொலி எங்கள் பேச் சுககு முற்றுப் புள்ளி இட் * التي سا
பின்புறம் த லை யைத் திருப்பி அக் கேள்விக் குரிய வரைப் பார்த்தேன். 5ரை முடி அவர் வயோதிகத்தைப் பறைசாற்றியது. ஆயினும், அவர் ஒழுக்கத்தின் விழுப் பத்தை உணர்ந்து வாழ்பவர் என்பதை அம் முகத்தில் நிரமபி வழிந்த மலர்ச்சியும் பளபளப்பும் எடுத்துக் காட் t-60T,
"அப்படிச் சொல்ல க் கூடாது; எங்கள் ஊர் பட் டணமல்ல; காட்டுப் புறம்,
Illégio,
25
எம்மக்களிற்கு இதுபோன்ற விழாக்களையும கேளிக்கை களையும் விட்டால் வருஷத் தில் சில நாட்களாவது மகிழ்ச்சியாகக் கழியும் பொழுது எப்படிக் கிடைக் கும்??-என அருகில் கின்ற இளைஞர் அவருக்கு விடை யளித்தார்.
"அது சரி தம்பி; விழா வேண்டா மென்று கான் சொல்லவில்லையே ஆணுல், இதோ பார்! இவ்வளவு சிகரங்கள் திருவிழாவுக்கு அவசியந்தான? இது க்கு இறைக்கும் காசை ஒவ் வொரு திருவிழாக்காரரும் மட்டுப்படுத்தினுல் இதைப் போல் என்றும் நிலைக்கக் கூடிய உண்மைக் கோபுரமே
எழுப்பி விடலாமே?-பெரி
யவர் ஆற்ருமையால் பொரு மினர்.
"ஆமாம்! இடிந்த சுவரைச் செபபனிட முடியாதபோது இந்தப் போலிக ளெல்லாம் எதற்கு? என்றேன் நானும்,
இளைஞர் கப் சிப்பென அடங்கிவிட்டார்.
*கணபதிதுணேயே. ’’-سس ஒலிபெருககியிலிருந்து கிளம் பிய இசை எங்கள் பார்வை யை மேடைப்பக்கம திருப்பி யாரோ ஒரு குமாரி யாம் (பெயரில் மட்டும்; தோற்றத்திலல்ல) தொடை யில் பளார், பளார் என்று

Page 15
26
அறைந்த வண்ணம் தன் குரலை எழுப்பினள்.
'-முருகு முன்னுக்குப் போ யிருக்கலாமா? என்ருரன் நண் பன் என்னைப் பார்த்து.
“ஏன்? இங்கே நிற்க நன் முய்த் தெரியுதே!"என்றேன் 5ான், அவன் எண்ணத்தை உணர்ந்தும் உணராதவன் போல. x
'அதற்கல்ல; சும்மா வா வன்'; என்று கூறிக் குறு நகை புரிந்தவன், என் கை யைப்பற்றி முன்னேறினன். நானும் தட்டிக் கழிக்க மன மில்லாதவனுகப் பின் சென் றேன். முன் வரிசையில் எங் களுக்கு இடம் கிடைத்தது.
நண்பனுக்கும் அவளுக்கு மிடையே இருந்த இடை வெளி ஆளையாள் கண்டு களிக்கக் கூடிய அளவுக்குச் சுருங்கி விட்டது. காதல் சேட்டைகளுக்குக் கேட்பா னேன். இருவர் கண்களும் கணததுககுககனம ஒனை யொன்று o:: டிருந்தன; இடை யிடையே இருவர் பற்களும் பளிச்சிட் L-60.
அவளைப் பார்த்த என் கண்களும் அவள்மீதே நிலை குத்தி நின்றன. அவ்வளவு அழகுதான் போங்கள்! என் மனச் சாட்சியோ, அவள் எழிலை அங்கம் அங்கமாக ஆராயத் தலைப்பட்ட என்
நுத் தொலைவில்,
கலைச்செல்வி
கண்களைத் தடுக்க வகையறி யாது தவித்தது.
ஆகா! அவளன்முேபெண். அவளின் அழகுககு ஈடாக எதைக் கூறலாம்? நெளிக் தோடும் நதியைப் போன்ற கருங் கூந்தல்; அதனூடே வானத்து வெண்மதி யென இலங்கும வட்ட வதனம்; மன்மதனின் வில்லையொத்த கரும் புருவம்; கடிலாடும் கய லைப்போன்ற எழில் விழிகள்; கோத்து வைத்த முத்தாரம் போன்ற பல்வரிசை, அர்திச் சிவப்பைச் சிங்தையிலூட்டும் செங் கன்னங்கள்; கொவ் வைக் கனியைப் பழிக்கும செவ்விதழ்கள், வாளிப்பும் வனப்பும் இழையோடும் தங்க மெரு கூட்டப் பட்ட தளிர்மேனி. இன்னுேரன்ன சிறப்புக்களைக்கொண்ட அழ குச் சிலை அவள்.
“ஆசை அன்பெல்லாம்
கொள்ளை கொண்ட கேசா பேசும் ரோஜா என்னைப்
பாரு ராஜா”
நண்பனைப் பார்த்து அப் பசும் பொன் மேனியாள் பாடியதல்ல இப்பாட்டு; சற் காலில் சதங்கை கலீர், கலீர் என்று ஒலிக்க, முன்வரிசை இரசிகர் க்ளுக்கு மண்ணே வாரி இறைத்துக் கொண் டிருந்த சின்னமேளங்கள் எழுப்பிய இசையோசையே இது. அப் பாட்டும், பாட்டுக் கேற்ற

கலச்செல்வி
அவர்களின் அங்க அசைவு களும், (5டனமல்ல) காளை களின் உள்ளத்திற்கு உற் சாகமூட்டி அவர்களை நிலை கொள்ள விடாது ஆரவாரிக் கச் செய்தது.
“கணபதி துணையே. என்று ஆரம்பித்த பாடல் இந்த அளவுக்கு முன்னேறி விட்டதே என்று அங்க லாய்த்தேன்.
“ஆலயத்தில் தீயஉணர்ச்சி களைத் தூண்டிவிடும் இப் படிப்பட்ட பாட்டுக்கள் பாட லாமா?-பக்கலில் இருந்த ஒரு வழுக்கைத் தலையார் எழுப்பிய வின இது.
“பாடினல் என்ன? 'கண பதி துணையே’ என்ற பாட் டில் சொக்கி விநாயகர் எப்போ உறங்கி விட்டாயே! இனி இ6தப் பாட்டுக்களெல் லாம அவர் காதில் விழுவது எப்படி?” என்ருரர் ஒரு நறுக்கு மீசைக்காரர். அப்
போது வெடித்துக் கிளம்பிய
அவுட்டுச் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே!
இவ்வுலக நினைவற்றவர்க ளாக வேருேரர் உலகில் சஞ் சரித்துக்கொண்டிருந்த இர சிகர் கூட்டத்திற்கு, “நீங்கள் இருப்பது இறைவனின் இருப்பிடம” என்று ஞாபக மூட்டுவது போல் டாண், டாண் என்று ஒலித்தது ஆலயமணி. ஆமாம்! சதிர்க் கச்சேரிக்கும் ஒரு முடிவு
2?
ஏற்பட்டது. ம க்க ளின் ஆனந்தமும் ஆரவாரமும் குன்றின,
"ஏன் இவ்வளவு அவசரம்? இன்னும் நாலுமணி யாக வில்லையே! அதுக்குள்ளே நிறுத்தி விட்டார்களே!" என்று ஏங்கினர் ஒரு சின்ன மேளப் பிரியர். அவரைப் பார்த்து நான் ஏங்கினேன்.
கேன் கூட்டைக் கோல் கொண்டு தாக்கும் போது எவ்வாறு தேனிக்கள் திக் கெட்டும் பறக்குமோ அவ் வாறே மணி அடித்ததும் மக்கள் கூட்டமும் கலையத் தொடங்கியது.
*சரி, போகலாம் வா! எனக் கூறிய நண்பனும் என்னை இழுத்துக் கொண்டு எங்கோ ரைந்தான், அவன் விரை வுக்குக் காரணம் முன்னல் சென் று கொண்டிருந்த அவன் காதலி கமலம்தான் என்பதை அறிந்த நான் எனக்குள் சிரித்துக் கொண் டேன். அப்பப்பா! காதலின் வேகந்தான் என்னே!
ஏதோ எதிர்பாராத வித மாக அவள் அழகுக் கழுத். தைப் பார்த்த நான் அப் படியே மலைத்து நின்று விட் டேன். ஆம்! அவள் கழுத் தில் பொன்னுலான தாலிக் கொடி ஒன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது!
‘நண்பனுக் 6TDfT5
வில்லையே! என்று குழம்பி

Page 16
28
னேன். என் திகைப்புத் தீர்வதற்குள் அங்கு வந்த ஒரு மெலிந்த ஆண் “கமலம், நீ வீட்டுக்குப் போ; நான் திருவிழாப் "பிசகைத்தீர்த்து விட்டு வாறேன்’ என்று அவளைப் பார்த்துக் கூறி SO)6OT.
அவள் சற்றுத் தயங்கு வதுபோ லிருந்தது.
“என்ன கமலம், பக்கத் திலே இருக்கிற வீட்டுக்குப் போகப் பயப்படுகிறியே, சரி வா, மேற்குவீதிவரை நானும் வாறேன்.?
அவள் சரி என்பதற்குப் பதிலாகத் தலையை gہوا۔ ا னுள்,
உள்ளத்தில் கிளர்ந் தெழு தே ஐயத்தை என்னல் கட் ப்ேபடுத்த முடியவில்லை.
"சோமு, யாரடா உன் புருவுக்குப் பக்கத்தில்..? என்று அவ8ளயே / பார்த்
துக்கொண்டு கின்ற நண்ப
னைக் கேட்டுவிட்ட்ேன்.
“அவன? அவள் புருஷன் தான் அந்த கோஞ்சான்’- வெந்தழலை முகத்தில் வாரிக் கொட்டுவது போல் வெளி வந்த இவ் வார்த்தைகள் அவன் கூறியவைகான்; யாதொரு தயக்கமுமின்றியே
என் ஐயம் தீர்ந்து ஆத்தி ரம் பிறந்தது. அதே சமயம்
கலைச்செல்வி
ஏதோ ஒன்று என் உள்ளத் தைக் கடப்பாரை கொண்டு குடைந்தது.
*சீ! என் நண்பன் இவ் வளவு இழிகுணம படைத்த
வன? கே வல மாணவன? என்ன கயமை?! என்று குமைக்தேன். -
மீண்டும் அப்பக்கம் திரும் பிய நான், கற்புக் கனலாம் கண்ணகிவழி வந்த அக் கம லம் தன் கணவன் பின் சென்றுகொண்டிருப்பதைக் கண்டேன். தான் செல் லும் பாதையில் தன் மனைவி யும் வழுக்கி விழாது பின் தொடர்கிருரள் என்ற நம்பிக் கையில் அந்த அப்பாவிக் கணவன் முன்னே நடந்து கொண்டிருந்தான். பாவம்! தன் கமலம் தன்னைவிட இ ன் னெரு வண்டுக்குத் தேன் அளிப்பதை அவனல்
எப்படி உணர முடியும்? கல்
மிஷமில்லாத அந்த ஆண் றவிக்காக என் மனம் அனுதாபப்பட்டது.
என் பார்வ்ையைத் திருப் பிய நான், நண்பன் என் முன்னிலையில் இல்லாததை யிட்டு வியப்படையவில்லை. மலரை நோக்கி அந்த வண்டு பறந்துவிட்டது.
வாணவேடிக்கை பார்ப் பதற்காக வடக்கு வீதிக் கோடியில், அரளிச் செடிகள் புடைசூழ விளங்கிய அக் கிணற்றுக் கட்டில் அமர்க்

திருந்தேன். வீதிவலம் வர வேண்டிய சுவாமி கோயில் முன்றிலில் நின்றிருந்ததால் அங்கு சன நடமாட்டம் இரு க்கவில்லை. நண்பனைப் பற் றியும் அப்பெண்ணைப் பற்றி யுமே என் மனம் உளைந்து கொண்டிருந்தது. M
*கண்களே பெண்களே நம் பாதே!'-ஒலிபெருக்கி அல
றியது. அதில் எத்தனை உண்மை
'கமலம், கொஞ்சம் நில்
லேன்' - அடங்கிய தொனி யில் ஒலித்தது ஒரு குரல்.
சந்தேகமில்லை அவர்கள் தான்!
செடியின் பின் மறைந்த வாறு சத்தம் வந்த திசையை 6ோக கினேன்.
நண்பனும் அவளும் நெரு ங்கி நின்று கொண்டிருந்தது நிலவொளியில் நன்கு புலனு கியது; ஏனுே என் மனம் திக், திக் என்று அடித்துக் கொண்டது,
'இன்றுதான் உன் மன தை உணர்ந்தேன் கமலம்! நானும் எத்தனை நாட்களாக உனக்காக ஏங்கினேன தெரி யுமா? ஆனல், நீ எப்படியோ என்று பயந்து சும்மா இருக் கேன்." என்று இழுத்த அவன் அவள் கன்னத்தை
29
வருடி யிருக்க வேண்டும், 'பளார்’ என்று ஒரு சத்தம் கேட்டது. நண்பனின் கரம் இப்போது அவன் கன்னத் தில் இருந்தது. என் கண்க 8ளயே என்ல்ை நம்ப வில்லை! GO) GPolo
*சீ! நாயே, யுேம் ஒரு மனு ஷன? ஏதோ பக்கத்து வீட் டுக்காரன், ஐக்கிய்மாகப் ப கியவன் என்று எண்ணி, பார்த்துச் சிரித்தால் இந்த அளவுக்கு வந்துட்டியே!” என்று கூறிய அப்பெண்புலி பனந்தோப்புக்குள் சென்று மறைந்தது. என் திகைப்புத் தீரச் சற்று நேரமெடுத்தது.
ஐயமேயில்லை! அவள் கண் ணகி வழித தோன்றல்தான்!
நண்பனைப் பார்த்தேன். மூப்டடைந்த எருதுகளின் உதவியால் ஊர்ந்துசெல்லும் கட்டை வண்டிபோல் தள் ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான் அவன்.
‘ஹ்! ஹ்! ஹ்!' - நான் எனககுள் சிரித்துக் கொண் டேன்.
பெண்கள் சிரித் து விட் டால், ஏதோ அவர்கள் தங்
கள் வலையில் விழுந்து விட்ட
தாக மனப்போதை கொள் ஞம் நண்பனைப் போன்றவர் களைப் பார்த்து எள்ளுவதில் தவறென்ன இருக்கிறது.

Page 17
6எல்லாம் உனக்காக!
99
లక్ష్ of 6d6öI ” %2{..و
காரியாலயத்தில் இருந்து வந்த ரகு 'உமா’ என்று குரல் கொடுத்தபடியே உடுப் பைக் களைந்துகொண் டிருந் தான். கையி லே ஒவலு டன வ5த உமா அதைக் கணவனிடம் கொடுத்த படி "என்ன விசே டமோ? இவ் வளவு மகிழ் ச்சி என்பது போல் பார்த் து முறுவலித் தாள.
உமா நான் ஒன்று சொல் கிறேன்.
*நான் எப்
என்று கூறியபடி உமா காலி டம்ளருடன் சமையல்
அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய மனத்திலே -- . நாளை வரும்
காரியா லய மனே ஜரை மகிழ்விக்கும் a 60 6of களே தாண் ட வ மாடின. அதற் கான தி ட் டங்களே இரவோடுஇர வாகத் தயா ரித்தும் விட்
டாள் !
விடிந்தது. -- விருந் தாளி யை அழைக் கப் போய்
أسسسس
பொழு தாவ
கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் எச். எஸ். ஸி வகுப்பில் படிக்கின்ருர்
விட் டா ன் உ மா வின்
அதி உங்கள் . .
. கபிலன். சொந்தப் பெயர் கதிர்காம o சொல் லே * நாதன் சிறந்த எழுத்தாளனுக வேண்டு க ண வ ன. தட்டிய துண மென்பது இவரின் இலட்சியம். உமாவுமஅவ டா? பீடிகை ச ரத்திற்கு
"இன்றிக் கூறுங்கள்.”
'உமா நா 2ளக்கு நம் வீட் டிற்கு எனது காரியாலய ம்னேஜர் விருந்தாளியாக வரப்போகின்ருரர் அவரை நன்கு உபசரிப்பது உன் கடமை அதுதான்.”
'போங்கள்!இகற்கும் என் அனுமதி வேண்டுமோ?”
ஏற்றாற்போல் வீட்டு வேலை களை முடித்துவிட்டு விருங் தாளியின் வரவை எதிர் பார்த்த வண்ணம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.
வாசலிலே காரின் “கிரீச்??
என்ற ஒலியும் கலகல என்ற
சிரிப்பொலியும் விருந்தாளி
 

கலைச்செல்வி
வந்து விட்டார் என்பதைப் பறைசாற்றின யன்னல் ஊடாக வாசற பககம 2) DIT தன்பார்வையைச் செலுத்தினுள். ஆ. தன் கணவன் ரகுவின் கையைக் கோர்த்த வண்ணம் வரு பவன் பிரபாகரனேதான ? யாரைக் காணக் கூடாதென விரும்பினுளோ அதே நப பைக் காரியாலய மனேஜ ராகக கனடதும அவளுககு என்னவோ செய்வது போல் இருந்தது. மகிழ்ச்சித்திரை சற்று முன்பு மண்டியிட்ட அவள் வதனத்திலே எங்
கிருந்து தான் இவ்வளவு வெறுப்பும் கோபமும் தோன்றியதோ ? உடலில்
மின்சாரம் பாய்வதுபோன்ற அதிர்ச்சி. எந்தக் காரியாலய மனேஜரை மகிழ்வோடு வர வேறக விரும்பினுளோ அதே நபர் பிரபர்கரனுக இருந்தபொழுது..? அவளை யும் அறியாமலே அவளின் சிந்தனைத் திரையிலே கடந்த கால கினைவேடுகள் புரளத் தொடங்கின, w
率 米 本
யாழ்ப்பாணம் 'மீன உயர்
நிலைக் கல்லூரி'யில் உமா எஸ். எஸ். ஸி. படித்துக் கொண்டிருந்தாள். அதே
கல்லூரியில் அதே வகுப்பில் தான் பிரபாகரனும் கல்வி பயின்று கொண்டிருந்தான். பிரபாகரன் முயற்சியைத் துணையாகக் கொண்டு சிந்த னையைக் கல்வியில் பதிய
31
வைத்ததன் விளைவாக அவ் வகுப்பிலே முதலாம் பிள்ளை யாக இருந்தான். பிரபாக ரனின் ஆழ்ந்த கல்வியறிவு உமாவை அடிமையாக்கியது. கூடிப் பழகவேண்டிய சம்ப வங்கள் எத்தனையோ அவர்க
விடையே ஏற்பட்டது. 5ாள
டைவில் இரு உள்ளங்க ளிடையேயும் காதல் வெள் ளம் புகுந்து கங்கு கரையின் றிப் பெருகியது. பிரபாகரன் ஏழைமையிலே பிற B து ஏழைமையிலே வளருபவன். தாய்தந்தையரை இளவயதி லேயே உருட்டிவிட்டு அன தையாகத் திரிபவன் அவன்! உறவினன் என்று சொல் லிக்கொண்டு அவனைக் காப் பாற்ற வந்த ரிக்ஷோ இழுக் கும் ஒரு கிழவனைத் தவிர எவருமே பிரபாகரனை உறவி னன் என்று சொல்ல முன் வரவில்லை. 'மனிதர்க3ளபகுத்தறிவு மிக்க அறிவாளி களே - இழுத்துச் செல்லும் மனித மிருகமாக; - கொட் டும் மழையிலும் குமுறும் இடியிலும-கொல்லும்வெயி லிலும் - மனித உணர்ச்சி யற்று மரத்துப்போய் பிரபா கரனுக்காக ‘ரிக்ஷோ இழு த்து, அவனை எப்படியோ எஸ். எஸ். ஸி. வரையும் படிப் பித்து விட்டான் அந்தக் கிழவன்! உமாவும் ஏழை தான். ஆனல் பிரபாகரனைப் போன்று அவல வாழ்வு5டத் தும் ஏழைகளாக அவள்
பெற்றேர் இருக்கவில்லை!

Page 18
$2
காலம் கடந்தது. பிரபாக ான் எஸ். எஸ். ஸி. முதற்பிரி வில் சித்திய  ைட ங் த ரன். ஆனல் உமா கணக்குப் பாட த்தில் வழுக்கி விழுந்து விட் டாள்! இங்க கேரத்திலே 'ரிக்ஷோ இழுத்த அவன் தாத்தா காரடித்துக் கட்டை போலானர். ரபாகரனுக் குக் கொழுகொம்பாக இருந்த அந்த 'மனித மாடும்’ போய்
ட்டபின் அவனுக்கு உல கமே சூனியமாகத் தென்பட் டது. ஆனல், காதலின் சிக ரமாக - ஆதரவு தரும் குல விளக்காக - உமா அவளது
இதயத்திலே நடமாடி இருட் டைப் போக்கடித்தாள் அவ
ளின் ஆலோசனைப்படி அவ
ளின் தந்தையிடம் உமாவை மணம் முடிக்க அனுமதிகேட் டான். ஏதோ துளரத்துச் சொந்தம் என்ற நினைப்பிலே - மகளின் பிடிவாதத்தின் திண்மையினுல் திருமணத் துக்கு மறு த் தா ரி ல் லை. ஆனல் என்றே ஒருநாள் - காதலியையும் மறந்து சொல் லாமல் கொள்ளாமல் எங்கோ ஒடிவிட்டான் ஒடிப்போன வனைத் தேடிப் பார்த்தனர் உமாவின் பெற்ருேரர். பெரும் பாலும் அவன் இறந்தே போயிருப்பான் என்ற எண் ணமக.ட அவர்களிடம் தலை தூக்கிவிட்டது, போனவனேதான்! உமா இரண்டாம்முறை தோற்றிய பரீட்சையில் சித்தியடைந்து விட்டாள் தன் குடும்பத்
n
போனவன் "
கலைச்செல்வி
தின் அவல நிலையை அறுத் தெறியக் கொழும் பி லே *டைப்பிஸ்ட்' வேலைபெற்று குடும்பத்துடன் ரயில் ஏறி விட்டாள் காலமுள் கவலை யின்றி விரைந்தது.
உமாவுடன் வேலைபார்த்த ரகு உமாவைக் கைப்பிடிக்க விரும்பினன். அதன்பலன் உமா ரகுவின் மனைவியா
ள்ை. மூன்று ஆண்டுகளைக்
காலமுள் விழுங்கிவிட்ட பின் னர் திடுதிப்பென்று பிரபா கரன், உமா முன்னிலையில் வந்து நிற்பதென்றல்.
“உமா” என்ற ரகுவின் குரல்-அலை புரண்டு வரும்
சிந்தனைத் தொடரை அறுத் தது 5டமாடும் இயந்திர மாக உமா இயங்கினுள்.
ஆனல் பிரபாகரன் சலன மின்றி வந்த காரியத்தை வெகு விரைவில் அவசரமாக முடித்துக்கொண்டு விடை பெற்றுக் கொண் டான். அவன் கண்களிலே குயீர் என மடை திறந்துவிட்ட வெள்ளம் போல் கொட்டத்
தயாராக இருந்த கண்ணி ரைப் பேதை உமா கண் டாளா?
事 率
ஏதோ வேலையில் ஈடுபட் டிருந்த உமா “தபால்'என்ற தபாற்காரனின் ஒலி கேட்டு விரைந்து சென்று கடிதத் தைப் பெற்றுக்கொண்டாள். தன் விலாசமிடப்பட்டு அக் கடிதம் வந்திருப்பதைப் பார்

கலைச்செல்வி
த்த அவள் ஆவலுடன் உறை யைக் கிழித்தாள்.
அன்புள்ள உமாவுக்கு,
எதிர்பாராத இடத்திலே இருந்து எதிர்பாராத முறை யிலே உனக்கு இக்கடிதம் வருவது கண்டு நீ கட்டாயம் திகைப்பாய் பதட்டமின்றி முழுவதையும் படித்துவிட்டு இந்தப் பாவியை மன்னிப் பாயா உமா! உமா! உன்னை நான் கண்டதில் பெரு மகிழ் ச்சி அடைகிறேன். நீ ரகு வின் மனைவியாக இருப்பாய்
என்று கனவிலும் நான் கருதவில்லை. உமா என் னைக் கண்டவுடன் உன்
பட்டு வகனங்கள் கூம்பிக் கருகியதை நான் கவனிக்கா மல் இல்லை. உன் வாழ்வில் புக வந்த காட்டாறு 15ான் என்று எண்ணிவிட்டாயா? அல்லது ஏமாற்றி உனக்கு மாசு தந்த பாபி என்று சிக் திக்கிருரயா உமா, சொல்!
உமா! நான் நிரபராதி!
நீ என்னை உலுத்தணுகக் கரு ே
தலாம்! ஆனல் பழைய ஏட் டைப் புரட்டிப் பார். உமா! புரட்டிப்பார்! பழைய நினை வுகள் என்னைக் கயவன் என்று உனக்குச் சாட்சி கூறலாம். ஆனல் நான் கிர பராதி உமா கி ர ப ரா தி!
உமா! நான் நிரபராதி என்
பதை - வஞ்சகமற்ற வன் என்பதை உனக்குச் சொல் லப்போகிறேன். என்னுல் உனக்குச் சொல்லாமலும்
35
இருக்க முடியவில்லை! உமா நான் தவறு செய்ததாக மேலும் கருதினுல் - என் க் கயவன் என்று நீ சிங் தித்தால் என் கயமைத்தனத் தை மன்னிப்பாயா உமா?
அன்று உன் தந்தையிடம் உன்னை மணம் முடிக்க அனு
மதி கேட்டேன். மறுக்க வில்லை உன் தங்தை. ஆனல் நிபந்தனையிட்டார். “பிரபா
கரா என்மகளே நான் ஏழை யாக வாழவைக்க விரும்ப வில்லை - துன்பத்திலே புர ண்ட அவளை இன்பத்திலே புரளச் செய்யவேண்டும்! நீ நாலுபேர் மதிக்க 5ாலு காசு உழை! உன் உமா துன்ப மின்றி வாழவேண்டும். நீ நாலுகாசு சேரப்பா! அது வரைக்கும் உமா உன்னைக் காத்திருப்பாள்”என்று கூறி னர். ‘நாலுகாசு' என் இத யத்திலே நிழலாடியது. 5ாலு காசு உழைக்கா வி ட் டால் நான் மனிதனு? ஆம், கான் வாழ வழி வகுக்கவேண்டும்! பத்தும் படைத்த பாக்கிய
வதியாக மாற வேண்டும்!
நாலுபேர் மதிக்க நம் குடும் பம் வாழவேண்டும் என்ற இலட்சியம் மனத்திலே வள ரக் கொழும்புக்கு ஓடினேன், ஆனல் வேலை கிடைத்ததா? நாகரிகம் படைத்த அந்த 5க ரத்திலே பட்டாம் பூச்சிகள் போல் பறக்து வந்த கவ5ாக ரிகப் பெண்களைக் காண என் உமாவும் அப்படி வாழ வேண்டும் என்ற எண்ணழ்

Page 19
84
மேலும் வலுத்தது உமா! இது உண்மை முற்றிலும் உண்மை! கைலஞ்சத்துடன் வேலை தர முன்வந்தார்கள்! ஏழை ரிக்ஷோக்காரனின் போன் ஐந்நூறு ஆயிரம் என்று கட்டி வேலையில் அமர முடியுமா? எங்கே போவது என்று தெரியாமல்-அந்தப் பெரிய நகரத்திலே டைத் தியகாரணுக - பஞ்சப் பாட் டுப்பாடி நாயாக அலைந்த நேரத்திலே சுந்தரம் என்ற சீமான் என்னை மலேயா வுக்கு வரும்படி கேட்டார். *பத்தும் படைத்த பாக்கிய வ தி யா க்கு உம், போ!' என்று மனத்திலே ஆயிரம் குரல்கள் எழுந்தன மறுக்க வில்லே நான். அவரைப் பின் தொடர்ந்தேன். ஏன் என்ரு கேட்கிருய் உமா? எல்லாம் உனக்காக.
மலேயா என்னை வரவேற்
து கொழும் பு போ ல '*'; மகிழ்ச்சி நிறைந்து வழியும் ' இன்ப ஒவியங்கள் பல தீட்டி னேன் உனக்கு ஆனல் உனக்கு வரைந்த அக்கடி தங்கள்-அனுப்பிய என்னி டம் “நீ அங்கே இல்லை” என் பதைச் சொல்லாமற் சொல் வதுபோல் திரும்பியே வங் தன! ஆட்சியாளருக்கு வரி யாயிற்று! எனக்கோ துயரத் தை வளர்த்தது! உமா பாடு பட்டேன் மலாயாவினிலே --சுந்தரம் றேட் கொம்பனி
கலைச்செல்வி
யின் மனேஜரானே ன். நாலு காசு ச்ேர்ந்தது உன் னைக்கான யாழ்நகருக்கு ஓடி வந்தேன்! நீ இல்லா இடம் பாலைவனம் என்று மலாயா வில் சோககிதம் பாடிவிட்டு நாம் கூடிக் குலவி மகிழ்ந்த யாழ்ககருக்கு வந்த எனக்கு வாழ்வே எட்டிக்காயாகக் கசந்தது 'உமா உனக்காக உழைத்த அந்தக் காசு என்னைப் பார்த்துச் சிரித் தது - கொழும் பு 5 கர் *சுந்தரம்றேட் கொம்பனி' கிளே ஸ் தா ப ன த் தி ல் மனேஜரா யிருந்த எனக்குக் கடமை கச6தது. நான சேர்த்த நாலுகாசை உன் பெயரிலே பாங்கில் கட்டி னேன். நீ எப்படியாவது என் கையில் அகப்படுவாய் என்பது எனக்கு நன்கு தெரியும் பாங்கிலே உன் பெயரில் ஒருலட்சம் இருக் கின்றது. ஏன் இந்த வேலை என்று எண்ணுகிருரயா? எல் லாம் உனக்காக
உமா! 'காலுகாசு சேரப் பா!' என்று கூறிய உன் தந்தையின் வாக்கைக் காப் பாற்றிவிட்டேன். யாருக்காக உழைத்தேனே அவ  ைர நேற்று வெள்ளவத்தையில் கண்டுவிட்டேன்! உமா! உனக் காகவே வாழ்ந்தேன். காதல் அரங்கிலே காதல்ஒவியம் தீட் டினேன். அதன்பலன் நான் பிரமச்சாரி உமா நான் பிரமச்சாரி, உமா நீ என்

கலைச்செல்வி
சகோதரி, அதை எவருமே மறுக்க முடியாது. பத்தும் படைத்த பதிவிரதை யாக்கி விட்டேன் உன்னை அந்த மகிழ்ச்சியிலே நான் பிறந்த யாழ்நகரை விட்டு-உன்னை விட்டு-இந்தக் கொழும்பை விட்டுக் கண்ணுக் கெட்டாத இடத்துக்குப் போகிறேன். PD LDII7!. மறந்துவிட்டேன் சண்  ைட யா? சமாதானமா? என்ற ஆங்கில நூலிற்குள் உங்கள் படம் கிடந்தது! திருடிவிட்டேன். அந்த நூல் மேசையிலே கிட ங் த து இதையிட்டு மன்னிப்பாயா?
உன் அண்ணன்,
பிரபாகரன்.
ஒன்று சொல்ல
3部
கடிதம் காற்றிலே அகப் பட்டுத் துடித்தது. அவள் கண்களிலே கண்ணிர் வெள் ளம் ஊற்றெடுத்தது! “உமா! கேற்று வந்தாரே மனேஜர் அவர் மலேயா இன்றுபோவ தால் என்னை மனேஜர் பத விக்கு உயர்த்திவிட்டார். இனி நீ குமாஸ்தாவின் மனைவி அல்ல மனேஜரின் மனைவி!! உ! 7 பேணக்காரி' மகிழ்ச்சியுடன் ரகு கூறிக்
கொண்டே வீட்டிற்குள் புகுந்தான். “உண்மையாக வா? அவர் நம்மை வாழ்
விக்க வந்த தெய்வம். y என்று கூறிய உமாவின் உள்ளத்திலே பிரபாகரனின் * எல்லாம் உனக்காக* என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது
எழுத்தாளர் பட்டியல்
இலங்க்ையி லுள்ள
தமிழ் எழுத்தாளர்கள்
அனைவரினதும் பெயர், முகவரி, ஆக்கிய நூல்கள் முதலிய விபரங்களைத் தொடர்ந்து 'கலைச்செல்வி
யில் வெளியிட எண்ணியுள்ளோம்,
டிை விபரங்
களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதியனுப்பும்படி ஒவ்வொரு எழுத்தாளரையும் வேண்டுகின்றேரம். தேவன்-யாழ்ப்பாணம், மே/பா, கலைச்செல்வி, சுன்னுகம்,
aspago

Page 20
6 உங்கம்மா'எனக்கு மாமி’
+x எம். எச். ஹமீம் x3+
**கண்ணே மாங்கா?
''LOIT isn't loss,
615l. பொருளாகவா உங்க் கண்ணுக் குப் படறேன்."
* கோவிச்சுக் கொள்ளாதே மங்களம் மங் கா என்று செல் லமாக அழைத் தால் நீ என்ன வோ..?
* ஆமா! நல் லாத்தான் புரட் டிப் பேசப் பழகி யிருக்கிறீங்க'
*காதலியைச் செல்லப் பெயர் கொண்டு அழை ப் பதில் தான் குஷி யிருக் கி றது. ஆமா! உன் அப்பா எப்படியோ அழைப்பதாகச் சொன்னியே..சே.ஞாபகம் வர மாட்டேங்குதே.!’
கல்லூரி மாணவர்.
"மங்குன்னு கூப்பிடுவாரு'.
"மங்குன்ன.ஐயையே அந்தப் பெயர் வேண்டவே வேண்டாம். மங்கு என்ற பெயரில் உள்ள ‘கு’ வை "கி" என்று வாய் தடுமாறிச் சொல்லி விட்டேனென்றல் அப்
U6) disgu Jit நான் என்ன காய்கறிப்
முஸ்லிம் அன்பரான ஹமீம் யாழ் - மத்திய
சங்கத் திங்களிதழான மத்திய தீபத்தின்
ஆசிரியராயுள்ளார்.
புறம் எட்டு நாளைக்கு என் முகத் தில் முழிக்க மாட்டே".
"ஐயே! போதுமே.”*
'கண்மணி”*
**கண்ணுவது, மணிய ரவ து” என்று ஆரம் பித்த மங்களம் சட்டென்று நிறு த்தினுள். அவள் முகம் கோபத் தால் சிவந்தது. நான் கோபத் தின் காரணம் புரியாது விழித் தேன். என்னி அப்படிச் சொல் லி விட் டே ன்? கண்மணிஎன்று i. கூ ப் பி ட் ட து 怒兹 தவற?
'நான் என்ன சொல் லி வி ட் டேன் அப்படிக் கோபம்வரத்தக் மங்களத்தினிடம் கேட்
க்கல்லூரி வ. எ.
கதாய்? டேன்.
அவள் படபடத்தாள். *என் னைக் கேலி பண்ணுவதற்கென்று தான் இங்கு அழைத்துவந்தீர் களாக்கும்.”
நான் வியப்புடன் அவளே நோக் னேன். அவள் விரல்கள் கண்
ணுக்கு மேலேயிருந்த பருவொன்
 

கலைச்செல்வி
றைத் தடவிக் கொண்டிருந்தன. இப்போது எனக்குக் காரணம் விளங்கலாயிற்று. நேற்று, "மங் களம் உன் கண்ணுக்கு மேலே மணி போன்றிருக்கும் அந்தப் பரு கூட உன் வதனத்தை அழகு செய் கிறது” என்று சும்மா சொல்லி வைத்தேன். பார்க்கனுமே அவள் செய்த ஆர்ப்பாட்டத்தை. "நான் அழகாகஇல்லை என்பதை என் இப் படிக் குத்திக் காட்டனும்” எனறு குதிக்கத் தொடங்கி வி ட் டா ள். கண்மணி என்றதும் நான் கேலி பண்ணுவதாக நினைத்து விட்டாள் போலும்.
'மங்களம், என் தவறு புரிந்து விட்டது” என்று தாஜா செய்தேன்.
திடீரென்று ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தேன். 'மங்களம் அருமையான பெயரொன்று அகப்
பட்டுவிட்டது. கலா என்ற பெயர் எப்படி.”
*கலாவா...' என்று மங்களம்
இழுத்தாள். அவள்வதோ யோசிப் பது போன்று இருந்தது.
"ஊஹ9ம் வேண்டாம்’
எனக்குத் தூக்கிவாரிப் போட் டது. ‘என்?’
"கலா, கலா என்று அழைத்த பழக்கத்தில் யார் முன்னிலையிலா வது வைத்து "மங்கலா’ என்று அழைத்துவிடப் போகிறீர்கள். அப் புறம் அவர்கள் நான் மங்கலா, இருட்டா என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்கள்,
நாசமாகப்போக நீயும் உன் வியாக்கியானமும் என்று மனதுக் குள் திட்டிக் கொண்டேன். ஆனந்தமாக, ஜாலியாகப் பேச
மாக ஆகாயத்தில்
器?
லாம் என்று மங்களத்தைக் கடற்
கரைக்கு அழைத்துவந்த எனக்கு இந்தப் பெயர்ப் பிரச்சனை தலையிடி யைக் கொடுத்து விட்டது. LOlši களம் கொலைக்களம்! எந்தக் கிழம்தான் இந்தப் பெயரை வைத் துத் தொலைதததோ தெரியவில்லை. 'உமக்கேனய்யா இந்தப் பைத்தி யம், சும்மா அம்மா மங்களம் என்று அழைத்து விட்டுப்போமே என்று நீங்கள் சொல்லலாம். எனக்கும் இந்த மங்களம் என்ற பெயருக்கும் கிரகப் பொருத்த மில்லை. ஏனென்ருல் பாருங்கள் என் மாஜிக் காதலியின் பெயரும் மங்களம்தான். என்ன! முன்பும் ஒரு காதலியிருந்தாளா என்று கேட்டுத் திகைக்காதீர்கள். உண் மைதான். அவளுடன் ஆனந்த பறந்தேன், சந்தோஷமாகத் தரையில் நடந் தேன் குதூகலமாகக் கடலில் மிதந்தேன், எங்கள் காதல் மங் களகரமாக முடியும் என்று இறு மாந்திருந்தேன். அந்தப் பாவி என் மனக் கோட்டையை மண் கோட்டையாக்கி விட்டு வேறெரு வன் கழுத்தில் மாலையைப் போட்டு விட்டாள். இப்பொழுது நீங்களே ஒப்புக் கொள்ளுவீர்கள் மங்களம்
என்ற பெயர் நல்ல சகுனம் இல்லை
யென்று. அடடே. ஏதோவெல் லாம் உளறிவிட்டன்ே போலி ருக்குது. ۔
'ம். எழுந்திருங்கள், லலி வந்துகொண் டிருக்கிருள் போ வோம்’ மங்களம் என்னைத் தட்டி எழுப்பித் தூரத்தில் வந்துகொண் டிருந்த லலிதாவைச் சுட்டிக் காட்டினுள்.
லலியும் எலியும் இப்பதான வரணும், கரடிவேளையில் பூசை புகுந்தது மாதிரி சனியன்கள்

Page 21
38
வந்து தொலையுது என்று முணு முணுத்துக் கொண்டு எழுந்தேன்.
அடுத்தநாள் காரியாலயத்தி லிருந்து வழக்கத்தை விடச் சற்று முன்னதாகவே புறப்பட்டேன். அப்படியிருந்தும், வீடுவந்து சேர மாலை மணி ஐந்தாகிவிட்டது. அவ சர அவசரமாக டிபனை முடித்துக் கொண்டு எழுந்தேன். புதிசாக ரிலீஸாகியிருக்கும் ரோமியோ ஜூலி யத்துக்குப் போவதாக நானும் மங்களமும் இன்று விடியற்காலை நாலுமணிக்குத் தீர்மானித்திருந் தோம். விடியற்காலை நான்குமணி யென்றதும் ஆச்சரியப்படாதீர்கள்! எங்கள் இருவர் வீட்டையும் ஒரு சுவர்தான் பிரித்துக் கொண்டிருக் கிறது. (கலியாணம் ஆகியதும் அதை எடுத்துவிடுவதாக தீர்மா னித்திருக்கிருேம்) இது எங்களுக் குச் செளகரியமாகப் போய்விட் டது. கொல்லைப் பக்கம் உள்ள சுவரண்டை ஸ்டூலை வைத்து எறு வேன்; அவள் அந்தப்பக்கம் நாற் காலியை வைத்து எறிநிற்பாள். வேண்டியமட்டும் நின்று வளாவுவோம். ஒன்று சொல்ல மறந்து விட்டேன். எங்கள் காதற் செடி இருவருடைய அம்மாக்களுக் கும்-அப்பாக்களுக்கும் தெரியாத பயிர். ஆகவே யாவரும் தூங்குகிற சமயம் பார்த்துத்தான் நாங்கள் சந்திக்கிறேம்.
"ஏன் இவ்வளவு அவசரம்? என்று கேட்டுக்கொண்டு அம்மா அபசகுனம்போல குறுக்கே வந் தாள்.
சினிமாவுக்குப் போகப் போகி றேன்.”
9
**சினிமாவுக்கா. அம்மா இழுத்தாள்.
என்று 'நானும்
அள
a 8ovšGatá aä
போகணுமின்னு இருந்தேன். இப்ப அப்பா வந்துவிடுவார், வந்ததும் நானும் வருகிறேன்'
'நான் ரோமியோ ஜூலியத் பார்க்கப் போகிறேன். இங்கிலிசுப் படமுன்னு உனக்குத்தான் பிடி யாதே!’
**அதனுல் பரவாயில்லை. அதை யும் ஒரு நாள் பார்த்து விட்டால் போச்சு?
'அப்பாவைக் கூட்டிக் கொண்டு (Lumubuoa”
**வீட்டிலே ஒருவரும் இல்லே. அப்பா இருக்கடடும்’
*அம்மா நீ வருவதாக இருந் தால் நான் வரலை. வீட்டிலே இருக்கிறேன். அப்பாவை அழைச் சிண்டு போ' "
**ஆமா! அந்த மங்கள மகராசி பக்கத்தில் வந்தால்தான் அய்யா வருவாரோ? என்று அம்மா எ க த்தா ளத்துடன் கேட்டதும் எனக்குத் திகீரென்றது. ஐயோ! விஷயம் வெளியில் வந்துடுச்சே!
*நானும் பார்க்கிறேன் இரவில் நான் மேசைக்கடியில் வைக்கும் ஸ்டூல் காலையில் வெளியே வந்து விடுகுது. இன்றைக் காலத்தாலே தான் விஷயத்தைப் புரிஞ்சுக் இட்டேன்.'
ஆனக்கு வியர்த்துக் கொட்டியது, கர்ல் அபிநயம் பிடித்த பொழுதி லும் வாய் அசைக்காமல் நின்று கொண்டிருந்தேன். நாக்குத்தான்
மேலே ஒட்டிக் கொண்டதே!
“எத்தனை நாளாக இந்த நாட கம் நடக்குது? அம்மா கோபத்

கலைச்செல்வி
துடன் கேட்டாள். "மரியாதையுடன் சொல்லிவிடுகிறேன். இனிமே.அந்த அரக்கியுடன் சாவகாசம் வைத்துக் கொண்டு சினிமான்னு பீச்சுனனு போனே, அப்புறம் இந்த வீட்டில் கால்வைக்க விடமாட்டேன்.”
எங்கள் வீட்டில் அம்மா சொன் ஞல் சொனனதுதான். இதுவரை யில் யாரும் அப்பீல்பண்ணி எந்த விஷயமும் மறுவிசாரணைக்கு எடுக் கப்பட்டதில்லை. அம்மா தொடர்ந் 55 f767 . . . . • •
"இன்றைக்கு எங்கேயும் போகப் படாது. புரிஞ்சுதா?”
*நான் என்ன சின்னப் பிள் ளைன்ஞ நினைத்துக் கொண்டிருக் இறே.??
"ஆமாண்டா, நீ குடுகுடு கிழவ ஞப் போனலும் நான் சொல்ற படிதான் நடக்கணும். உங்கப்பா வைப் பாரு இவ்வளவு காலத்துக் கும் என் பேச்சுக்கு எதிர்வார்த்தை பேசியிருக்கிருரோ, இல்லே நான் கீறின கோட்டைத்தான் தாண்டி யிருக்கிருரா?’
'அம்மா' என்று குழைந்த குரலில் அழைத்தேன், 'மங்களத் துக்கு அழகில்லையா அறிவில்லையா குணமில்லையா...'
**போதும் நிறுத்தடா.’என்று அம்மா குறுக்கிட்டாள், **அவ இருக்கிற அழகிலே அழகு ராணி யாகத் தெரிவுசெய்யப் படாதது தான் கொறை. தங்கக்கட்டி, எரு மைக் குட்டின்னங்களாம்.'
அம்மாவுக்கு வழக்கத்திலேயே குரல் கொஞ்சம் கழுதை, அத்து டன் இரைந்தாளென்ருல் எட்டு வீட்டுக்கு நிச்சயமாகக் கேட்கும்.
3粉
'அம்மா, கொஞ்சம் மெதுவா கத்தான் பேசேன், அண்டை அய லார் காதிலேயும் விழப்போகுது.”
நல்லவேளை என்று எனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டேன். மங் களம் வீட்டில் ஒருவருமில்லாதது எவ்வளவு நல்லதாகப் போய்விட் டது. மங்களத்தின் பெற்றேர் யாரோ உறவினர் கல்யாணத்துக் குப் போயிருக்கிருர்கள். மங்களம் தியேட்டரில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். ஐயோ.மங் களத்துக்கு என்ன சொல்வது? வெளியில் கால்வைக்க முடியாது போல் இருக்கிறதே! அம்மா விடா மல் பொழிந்துகொண்டிருந்தாள்.
'அடி ஆத்தே, அவள் ஒரு பெண்ணு, என்னை என்னவாத் திட்டுருளாம். இந்த வட்டாரத்தில் ஒரு வீடு பாக்கியில்லை. நான் எருமைமாதிரி இருக்கிறேனம். எச்சிற்கையால்ே காக்கை ஒட்டாத கருமியாம், பிச்சைக்காரனை அடி த்து விரட்டுறேனும், உனக்குச்சரி யாகச் சாப்பாடு போடாததால்தான் நீ இளேத்திருக்கிருயாம். அப்பப் பா. அவள் என்னைப்பற்றி இல் லாததும் பொல்லாதது மாகச் சொல்லுவதை மற்றவர்கள் வந்து சொல்லும்பொழுது நா க் கை ப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போலிருக் கிறது’. அந்தச்சமயத்தில் ‘என்ன ரகளை’ என்று கேட்டுக்கொண்டு அப்பா வந்துசேர்ந்தார்.
'நீங்க சும்மாயிருங்க, தம்பி காதலிக்கிருராமிலே, மூஞ்சியும் மோரக்கட்டையும் பாரேன்.”
இன்னும் அங்கு நின்றல் விஷ யம் விபரீதமாகிவிடும் என்று பேசா மல் வெளியே வந்தேன்,

Page 22
40
**இண்டைக்குச் சினிமாவுக்குப் போனே, அப்புறம் பார்த்துக்கோ’ என்று அம்மா கத்துவது கேட்டது.
够 擎
'மிஸ்டர் உங்களைத் தான்'
சட்டென பின்னல் திரும்பி னேன்.
எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க மங்களம் நின்று கொண் டிருந்தாள். என் காதலின்மேல் இருந்த அற்ப சொற்ப நமயிக்கை யும் அந்தக்கணமே போய்விட்டது.
'மங்களம், நீ தியேட்டருக்குப் போகவில்லையா - திக்கித் திணறிக் கொண்டு கேட்டேன். அம்மா பேசிய தெல்லாம் கேட்டிருப்பாள்ே.
**ம். அதெல்லாம்இருக்கட்டும், இனிமேல் நமக்குள் எவ்வித சம்பந்தமும் இருக்காது-உங்களுக்
እቾ
Willlhyllist lilills iltigHuila lിറ്റി list Hill bilhilfspill a
a
国
முதலிய பலர் எழுதுகின்றனர். உங்கள்
பிரதிக்கு இன்றே பதிவுசெய்யுங்கள்.
喜 அடுத்த இதழில்: 탈 렇 ܝܬܰܐ؟
e * இளங்கீரன், பரமஹம்ஸதாசன், எஸ். த் 臺 பொன்னுத்துரை, தேவன், ஆதவன் 를
를 를 皇
LMLSSLLLMMMMSLLLMM
கலைச்செல்வி محی
கொரு கும்பிடு’ விறைப்பாகப் பேசிவிட்டுத் திரும்பினள்.
*மங். களம்..”*
"பேசவேண்டாம் மீசை முளைத் திருக்கிறதே தவிர ஆண்மை முளைக்கவில்லையே’
எங்கிருந்தோவந்து ஒரு வாட்டுத் துணிச்சல் என்னைப் பற்றிக்கொண் டது. “நீ பயப்படாதே மங்களம், அப்பா, அம்மா யார் வந்தாலும் எதிர்க்கத் துணிந்துவிட்டேன்.”
அவள் என்னை இகழ்ச்சியுடன் பார்த்துவிட்டுப் பேசினுள். 'உங் களை மனந்தால் gallistblfit எனக்கு மாமியாகி விடுவாளே!’ மங்களம் போய்விட்டாள். நான் அசந்து போய் நின்றேன்!
எனக்கு முன்பே தெரியும் 'மங் களம் காதல் மங்களம0 முடியா" துன்னு!
R
萧

-இ தியாகச் சுடர் 2,
க. பரராஜசிங்கம்
பன்னிரண்டு தடவை மணி அடித்தது. பத்து மணிக்குக் கட்டிலிற் கிடந்து கதறிக் கதறி அழுத பாக்கியம்இன்
ளிச் சொரிவாள் பாக்கியம் ஆனல் அவை யெல்லாம் வேப்பங் காயாகக் கசக்கும் அவனுக்கு. அவள் அதிக
லும் எழும்ப மனமின்றி மாக ஏதாவதுபேசிவிட்டால், அப்படி யே கிடந்தாள், அவளுடைய கன்னங்கள்
யே என்பதற் வேண்டா ப் காக அவள் பெண்டிர் கை அழவில் லை; பட்டாற் குற் குழ ந்தைகள் றம், கால்பட் கிடையாதே டாற் குற்றம்’ என்பதற்காக என்ற பொன் வும் அவள் அழ மொழி யைத் வில்லை. அப் தன்வாழ்க்கை படியானுல் ..? யில் உண்மை “என் கணவர் யென நிரூபித் குமார், கண் து வந்தான் னி  ைற ந் த குமார்.
கட்ட ழக ன்' கணவனின் என்று எவ்வ x x போக்கு அவ ளவு பெருமை శ్రీల్గా குெம்.இத்துக் ளுக்குப் 9t. ப்பட்டாளோ ? :": ಹL ఉు ఓు. அவ்வளவிற்கு லும் மிகுந்த ஆர்வமுடையவர் SyarGoT ܐ த வ அவளது கெஞ் ருரன பாதை
சை வாட்டி விட்டான் அவள் கணவன். ஆம். ழுக்க முழுக்க அவளுக்கே சொந்த மானவனுக அவன் 15டந்து கொள்ளவில்லை. அதுதான் அவளே காளிலும் பொழுதி ஆலும் அழவைத்தது.
குமார் வீட்டில் சில மணி 5ேரந்தான் தங்கு வான். அன்பு வார்த்தைகளே அள்
யில் போகின்றன் என்ப தையே நம்ப மறுத்தது அந்த வென்ஜள யுள்ளம். ஆனல் ஊரார் பேசிய பேச்சுக்களும், குமார் நடந்து கொண்ட முறையும் அவளைக் கவலேயில் ஆழ்த்தின.
● t 令 குமார் வந்து விட்டான். பொங்கி யெழுந்த கண்ணி

Page 23
42
ரைத் துடைத்துக் கொண்டு அவனுக்கு உணவு பரிமாறி ள்ை பாக்கியம். சாப்பிட்ட பின் ஈஸிசேரில் சாய்ந்தபடி ஏதோ பத்திரிகையில் மூழ்கி யிருந்தான் குமார். கணவ னின் நடத்தையைப் பற்றிக் கேட்பதற்குத் துடித்தாள் அவள். ஆனல் வார்த்தைகள் வெளிவர மறுத்தன. இறுதி யில் தன்னை ஒருவாருரகச் சமாளித்துக் கொண்டு கேட் டே விட்டாள். அவ்வளவு தான். குமாருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. மறுகணம் அவனது கை பாக்கியத்தின் கன்னங்களை மாறி மாறிப் பதம் பார்த் தது. அவள் மயங்கிச் சுவ ருடன் வீழ்ந்தாள். மேசை கள், கதிரைகள் தடதட
வென்று உருண்டன. துப்
பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டென வெளியேறினன் குமார். அறிவு தெளிங் தெழுந்த பாக்கியம் தெரு வை கோக்கினுள். தூரத்தி லே குமார் போவது மங்க லாகத் தெரிந்தது. கஷ்டப் பட்டு எழுந்து அவனைப் பின் தொடர்ந்தாள்.
ஒட்டமும் நடையுமாகச் சென்ற குமார் கண்ணம்மா வின் வீட்டிற்குள் நுழைங் தான். பாக்கியத்தின் மனம் "திக்கென்றது. சிறு வயது தொடக்கம் கண்ணம்மாவை அவளுக்குத் தெரியும். இரு வரும் பள்ளித் தோழிகள்.
கலச்செல்வி
நல்ல பண்புடையவளாகத் தான் விளங்கினுள் கண் ணம்மா. ஆனல், பள்ளியை விட்டுப் பிரிந்தபின் கண் ணம்மாவைப் பற்றி எழுந்த சில செய்திகள் பாக்கியத் திற்கு அருவருப்பை யூட் டின, ‘கண்ணம்மாவின் கண வன்' என்ற பெயர் பலருக்கு ஏற்படும்படி நடந்து வந்தா ளாம் அவள். இதைக் கேள் விப்பட்டதன் பிறகு, அவ ளைச் சந்திப்பதை நிறுத்தி விட்டாள் பாக்கியம். போ யும் டோயும் இந்த விபச் சாரி யிடமா என் கணவர் வருகின்ருரர்’ என்று பொருமி னுள். 'பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீட்டிற்கு வந்து அவளைக் கெஞ்ச வேண்டி யிருக்கின்றதே" T ബr ഫ്ര குமைந்தாள்.
8 40 夺 、
கண்ணம்மாவின் வீட்டை யடைந்த குமார், கட்டிலில் குப்புற விழுந்தான். சிறிது 5ேரத்தில் தூங்கியே விட் டான். உள்ளே நுளையத் துணிவில்லாத பாக்கியம் வாசலிலேயே நின் முள். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த கண்ணம்மாவால் சட் டென்று அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லை.Tஎன் ருரலும் பாக் கி யத் தி ட ம் நெருங்கிச் சென்று அழுகை யின் காரணத்தை விசாரித் தாள். கண்ணிருக்கும் விக்க அனுக்கு மிடையே நடந்த வற்றைக் கூறினுள் பாக்

stadt-Garded
கியம். கண்ணம்மாவின் இத யம் இளகியது. கண்கள் கசிந்தன. கண் க 8ள த் துடைத்துவிட்டுப் பாக்கியத் தின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவள் உள்ளம் திடுக்குற்றது. சி ங் த னை ரேகைகள் முகத்தில் படர்ந் தன. அவளது சிந்தனைப் பட்சி பத்து வருடங்களுக்கு முன் பறக்து சென்றது.
I * t
‘ரயில் வருகிறதடி, ஒடி வா இங்கப் பக்கம்” என்று கத்தினுள் ஏழு வயதுச் சிறுமி பாக்கியம். துள்ளிப் பாய்ந்து வர முயன்ற கண் ணம்மா தண்டவாளத்தில் தடக்குண்டு குப்புற விழுக் து
ட்டாள். கண் இமைக்கும நேரத்திற் பாய்ந்து சென்று கண்ணம்மாவைக் காப்பாற் றினுள் பாக்கியம். ஆனல் கல் லொன்றில் தடக்கி விழுந்த பாக்கியத்தின் நெற்றியில் பலமான அடி பட்டுவிட்டது. வளர்ந்த பின்னரும் காயத் தின் அடையாளம் அப் படியே கிடந்தது. சிறு வய தில் உயிரைக்காத்த பாக்கி யத்திடமிருந்து அவள் கண வனைப் பறித்துவிட்டாள கண்ணம்மா..?
'' í 9. t d
"எப்படியாவது என் கண வரை என்னிடம் கொடுத்து விடு” தன்னையே வெறித்துப் பார்த்தபடி நின்ற கண் ணம்மாவின் கைகளைப்பிடித் துக் கெஞ்சினுள் பாக்கியம்,
43
என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினுள் &56öăT60OILD LDT. 29I DIT 6T60T60 சொன்ன போதிலும் அவ ளுள்ளத்தில் குமார் ஒரு வனே குடியிருந்தான்.
பாக்கியத்தின் நிலை பரி தாபகரமாக இரு ங் த து. அதைப் பார்த்துச் சகிக்காத கண்ணம்மா, “உன் கண வரை மறுபடியும் உன் அனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு' என்ாரள்.
சத்தத்தைக் கேட்டு விழித் தான் குமார். பாக்கியத்
தைக் கண்டவுடன் ஆக் திரம் அதிகரித்தது. “சீ! சனியன் இங்கேயும் வந்து விட்டாயா? என்று கேட் டுக் கொண்டே, அந்த அறையிலிருந்த கைத்துப்
பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
டுமீல்!? துப்பாக்கி அல றிற்று. குண்டுக்கும் பாக் கியத்திற்குமிடையே பாய்ந் தது ஒர் உருவம். நெஞ்சைக் கையால் அழுத்திக்கொண்டு விழுந்த அந்த உருவத்தைப் பார்த்தான் குமார்.
கண்ணம்மா!
குமாரின் கையிலிருந்து துப்பாக்கி நழுவியது. ஆயி ரம் ஊசிகள் குத்துவது போன்ற பிரமை ஏற்பட் டது அவனுக்கு. குமாரையும் பாக்கியத்தையும் அருகில்

Page 24
44
வரும்படி சைகைசெய்தாள் கண்ணம்மா. நடைப்பிணம் போன்று சென்றனர் இரு வரும். இருவர் கைகளையும் ஒன்முக விக்கலுக்கும் ம்மலுக்
மிடையே கூறினுள். “குமார்! நீங்கள் இப்படி யெல்லாம் நடப்பீர்களென்று நான் கனவிலும் எதிர்பார்த்தவ ளல்ல. உங்கள் குடும்பத் தைப்பற்றிக் கூறியிருந்தால் 5ான உங்கள வாழககை யில் குறுக்கிட்டிருக்கவே
sðsvá-AS-svefi
மாட்டேன். பா க் கி ய ப்1 பள்ளியில் படிக்கும்போது முன்பொருதடவை என்னை ரயிலிலிருந்து கா ப் பா ற் றினுப். அதற்கு..இது.” கூறி முடிக்கவில்லை. கண் ணம்மாவின் தலை சாய்ந்தது. இருவரின் கண்களும் நீரைச் சொரிந்தன.
தியாகச் சுடராக விளங் கிய கண்ணம்மா இருவருக் கும் வழிகாட்டியாக கின்று ஒளியூட்டினுள்.
விநாயக வணக்கம்
(க. வை. ஆ. சர்மா 1
V இடையூறே னும்பெரிய இருளேத்து ரந்திடும்
எழிலாரும் ஏக பாது இடையூறேன் றடர்காட்டை எரியூட்டி எற்றிட
எழுந்தீப்பெ ருங்க டவுளே இடையூறென் றியலரவ எண்ணில்கு ழாங்களை
இரிந்தோட்டும் ஏர்க லுழனே, இடையூறேன் றிருமத்த யானையைய பூழிக்கவரும்
இயற்சிங்க ராஜேந் திரன். (1)
இடையூறேன் றேங்குமொரு மலையைப்பி ளந்திடும்
எழிலாரும் வஜ்ரா யுதம், இடையூறேன் றேயும்அலை கடலைக்கு டித்திடும்
எதிரிலாக் கும்ப முனியே இடையூறேன் றிகலாகும் மேககூட் டங்காை
எற்றும்பெ ருக்காற் றுமா இடையூறே லாம்போக்கி எங்களைக் காக்கவரும்
இடர்களையு மீச னருளே, (2)
(வடமோழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளவை)

s
ஈழத்துத் தமிழர்கள் மத்தியில், ஒரு பதினைந்து ஆண்டுகளின் முன்பு விரல்விட்டு எண்ணிவிடக் கூடியளவு எழுத்தாளர்கள்தான் இருந்தார்கள். அன்று ஒரு 'ஈழ கேசரி’யோ, "இந்துசாதன’மோ மட்டும்தான் இவர்களது, எழுத வேண்டுமென்ற தாகத்திற்கு ஈடு கொடுத்தது. அத்திபூத்தாற்போல, *ஆனந்த விகடனிலோ, 'கலைமக’ ளிலோ இரண்டொரு இலங்கை எழுத்தாளர்களது, ஒரு சில சிறு கதைகள் இடம் பெற்றிருக்கலாம். ஆனல், இன்று நிலை மாறிவிட்டது!
'மறுமலர்ச்சி' தோன்றும் போது கூடவே ஒரு எழுத்தாளர் குழுவும் பிறந்துவிட்டது! அதைத் தொடர் ந்து, ‘சுதந்திரன்’ பல புதிய இலங்கைத்தமிழ் எழுத்தாளர்க ளைத் தோற்றுவிப்பதில் ஆற்றிய பணி, இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் சிவப்பு அத்தியாய மாகத் திகழக்கூடியது.
இன்று - கட்டுரையின் ஆரம்பத் தில் குறிப்பிட்ட முதலாவது வகை எழுத்தாளர்கள், “நாம் பழைய எழுத்தாளர்கள்’ என்று கெளரவ மாக தமக்குள் நினைத்துக்கொண்டு ஒதுங்கிக்கொண்டு விட்டாலும், "மறு மலர்ச்சி' யுடன் கூடப்பிறந்தகுழு, ஆடிக்கொன்று அடுத்த ஆண்டு மலருக்கொன்று எழுதிவிட்டாற் போதும் என சுய திருப்தியடைந்து ஒய்ந்து விட்டாலும் - நாம் பெரு மைப் பட்டுக்கொள்ளக் கூடியவ
- ஈழத்து எழுத்தாளர் படைப்புக்கள் জিব্রাজিতপুরাির"
6 ஜனவரிச் சிறு கதைகள்' Šiaulauastasiusaastatislas“ųSOdulů Gdusi.”
t
{
கையில், எழுத்தாளர் தொகை பெருகி, புதியதொரு பரம்பரை வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை மறைக்க முடியாது.
பத்திரிகைகளைப் பொறுத்தவரை,
அவற்றின் தொகையும் முன் பிருந்ததைவிட, இன்று சிறிது பெருகிவிட்டது. மழைக்காளான்
கள் போலத் தோன்றி, தலையைக் காட்டிவிட்டு, இரண்டொரு இதழ்க
ளோடு படுத்துக்கொள்ளும் பத்திரி
கைகளை நாம் அடிக்கடி நம் நாட்டில் காணக்கூடியதா யிருந் தாலும், இந்தவகையைச் சேராமல் சில எடுகள் பொருளாதார பூத த்தை எதிர்த்து தாக்குப்பிடித்து
வாழ்ந்து கொண்டிருப்பதும், புதிய
எழுத்தாளர்கள் பலர் தோன்றி யுள்ளதற்கு ஒரு காரணம். அடுத் தது, பொருளாதார பலத்தோடு நம் மத்தியில் வெளியாகிக் கொண் டிருக்கும் பிரபல எடுகளில் மிக அண்மையில் ஏற்பட்டுள்ள மன மாற்றம். இலங்கை எழுத்தாளர் களை ஆதரித்து, ஊக்குவித்து, எழுத்துத்துறையில் வளர்ப்பதை விடுத்து, மிகமிகச் சமீபகாலத் துக்குமுன்புவரை, தென்னகத்துச் சரக்கைத்தான் வாரி, இறக்குமதி செய்து, வளங்கும் திருப்பணியை இந்த எடுகள் செய்துகொண்டிருந் தன. வாழும் சூழ்நிலை காரண மாக இலங்கைத் தமிழ்வாசகர்களி டம் ஏற்பட்டுள்ள புதிய விழிப் புணர்ச்சிக்கு வளைந்து கொடுகா
வேண்டிய நிர்ப்பந்தம் இந்த எடு

Page 25
46
களின் புதிய ம ன மாற் றத் துக்கு காரணமாக அமைந்துள்ள் போதும், அந்தப் பத்திரிகைகளின் நிர்வாகங்களில் ஏற்பட்ட மாற்றங்க ளும், இலங்கை எழுத்தாளர்களது படைப்புக்கள் அவற்றில் இடம் பெறக் காரணமாயுள்ளன.
இலங்கை எழுத்தாளர்களது தர
மான படைப்புகளைப் பிரசுரிப்பதில், இப்போதெல்லாம் "தி ன க ர ன்’ எடுத்து வரும் அக்கறை இங்கு கவ னிக்கத்தக்கது.
அண்மையில் நாம் எடுத்த புள்ளி விபரத்தின்படி ஒவ்வொரு மாதமும் இலங்கை எழுத்தாளர்க ளால் எழுதப்படும் சிறு கதைகள் இருபதுக்குமேல் வெளியாகின்றன.
இத்தொகை முன் எப்போதையை
யும் விட கூடுதலான தென்பதை மறுக்க முடியாது. இப்படியான வளர்ச்சி வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நம் படைப்புகள் உண்மையில் தரமானவைதான? தொகைப் பெருக்கத்தில் மட்டுமா அல்லது தரவளர்ச்சியிலும் நாம் முன்னேறியிருக்கிறேமா?
ஒழங்கானஇலக்கியம்வளரவிமர் சனம் தேவை. சிறுகதை இலக்கி
யத்தின் ஒருதுறை. அந்தத் துறை
யில் இலங்கைத் தமிழ் எழுத்தா ளர் பலர் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி அண்மையில்தான் இறங்கியுள்ளார்கள். விமர்சனம் என்றல் இன்று நம் எழுத்தாளரி டம் எதோ சிம்ம சொப்பனம் கண் டதுபோல் பீதி எற்படுகிறது! இது வருந்தக்கூடிய நிலை. ஆனல் காரணம் இல்லாமலுமில்லை. சில விமர்சகர்கள் விமர்சனம் என்ற போர்வையில் ‘பூச்சாண்டி‘ காட்டி யிருக்கலாம். ‘பூச்சாண்டி காட் டவோ - "சிம்மசொப்பனம்" கண்
av4Gs si afl
டதுபோலத் திகைக்க வைப்பதோ இக்கட்டுரையின் நோக் க ம ல் ல. நமது விமர்சனம் நல்ல இலக்கியம் வளர-எழுத்தாளரை ஊக்குவிக் கக்கூடிய ஆக்க விமர்சனமாக இரு க்கவேண்டும் - அதற்காக, பார பட்சமற்ற நம் பணியை மறந்து, *ஆகா’ அபாரம்!’ என்றெல்லாம் வெறும் புகழ்பாடவோ அல்லது *சே தரங்கெட்ட இலக்கியமென்று தள்ளி விடவோ முடியாது. விமர் சனம் என்ற நேர்மையசன கட மையை மேற்கொண்டவனுக்கு, "தெரிந்த முகமாச்சே, தேவை யான நண்பர்’ என்றெல்லாம் நினைவு எழுவ தற் கிட மில் லை. பொறுமையுடன் குணம் குற்றங் கஃள ஆய்ந்து தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் பொருட் படுத்தா மல் நடுநிலை நின்று சீர்தூக்கிப் பார்த்துள்ளோம்.
ஜனவரி மாதத்தில் இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்ட சிறு கதைகளுள் கீழ்க்கண்டவை மட்டும் என் பா வைக்குக் கிடைத்தன. .
மர்ம ஒவியம் - ஜே. டபிள்யு. சந்திரசேகரா (வீரகேசரி ஜன. 4)
புதிர் - “சொக்கன்' தின கரன் ஜன. 4 ۔ ۔ ۔ ۔
வேணி நீ வாழ்க! - 'உதய ணன்' (சுதந்திரன் ஜன. 11)
மருந்தும் மங்கையும் - அ. முத்துலிங்கம் (தினகரன் ஜன. 11) கடல் சிரித்தது - எஸ். அகஸ் தியர் (சுதந்திரன் ஜன. 18)
எதிர்பாராதது ஆ. பொன்னுத் துரை (தினகரன் ஜன. 18)
சண்பகவல்லி --அருள். செல்வ நாயகம் (வீரகேசரி ஜன. 25)

கலைச்செல்வி
நீறு பூத்த நெருப்பு - "சாந் தினி? தினகரன் ஜன. 25)
யாழ். நகர் நாகவிகாரை - 'ஈழத்துச்சோமு’ (சுந்திரன் ஜன. 25)
மாமாங்கம் தீர்த்தம் - 'அன்பு
மணி’ (கலைச்செல்வி பொங்கல் மலர்)
பெரியவன் - **யாழ் நங்கை'
(கலைச்செல்வி பொ. ம.)
விடிநிலா - கே. டா னி ய ல் (கலைச்செல்வி பொ. ம)
புத்தாண்டு பிறந்தது! - எச். எம். பி. மொகிதீன் (சரஸ்வதி ஆண்டு மலர்)
தென் ற ல் - கே. டானியல் (சரஸ்வதி ஆ. ம.)
பிரசவம் - செ. கணேசலிங் கன் (சரஸ்வதி ஆ. ம.)
அழுக்கணவன் - தேவன் - யாழ்ப்பாணம் (கலைமதி ஜனவரி)
'நீ ஓடாதே ராஜன்!” - 'ஈழத் துச் சோமு’ (சிறுவர் சுடர் ஆண்டு மலர்)
அமரன் - கே. டானியல் (சிறு வர் சுடர். ஆ. ம.)
இந்தப் பத்தொன்பது சிறுகதை களுக்குள்ளும் எடுத்த எடுப்பி லேயே சிறந்த சிறுகதையாகச்சுடர் விடுவது ‘நீறுபூத்த நெருப்பு'மட் டும்தான்! “வளர்ந்து வரும் புதிய பரம்பரைய்ையும் உலகையும் சேர் ந்த' சிவசம்பு சேற்றில் செந்தா மரையும் சிப்பியில் முத்தும் வெகு இயல்பாகத் தெரிந்ததால் ‘சிவக் கொழுந்துவையும் அவனுடைய கொடியையும் (சிவசம்புவின் தாய் முத்தம்மா) ஈரேழு ஜென்மங்க
Air
ரூக்கும் வெறுத்தொதுக்கியிருக்க வும், இந்த விடயத்தில் தாயின் சொல்லைத் தட்டிக் கழித்து, அந் தக் கொடியிலேயே பூத்த மலர்’ -சரசி-யை மணந்து கொண் டான்! - "இவன் எனக்கு மக னில்லை; இந்தக் காவாலியை நான் பெறல்லையெண்டு நினைப் பன். இண்டைக்கு கார் ஒடேக்கை, ம ரத் தி லை மோதிச் செத்துப் போனன் எண்டு நினைச்சுக்கொள் ளுவன்' என்று தாயுள்ளம் வைராக்கியம் கொள்கிறது. திடீ. ரென முத்தம்மாவின் மகன் ஒரு
நாள் செத்துப்போகிருன், மக னின் பிணத்தைக்கூட அவள் பார்க்க விரும்பவில்லை! “என் ர
மேன் சிவசம்பு எண்டைக்கோ செத்துப்போனன் . இண்டைக்குச் செத்தது என்ர மேனில்லை; மயி லன்ரை மச்சான்’ என்று ‘ருங்கி யாகக் கூறிவிட்டு அவள் உட்கார் ந்து கொள்கிறள்.
இழவுச் சடங்குகளெல்லாம் சரசி வீட்டில் முடிந்து, சிவசம்பு வின் பிணம் பாடைஎறுகிறது. ஊர்வலம் புறப்பட்டு, சிவசம்பு பிறந்து வளர்ந்து விளையாடித் திரிந்த மண்னை - முத்தம்மாவின் வீட்டையும் தாண்டுகிறது. ஆன லும் எற்கனவே அந்தத் தாயுள் ளத்தின் அடித்தளத்தில் விழுந்து இறுகிப் போய்விட்ட வைராக்கியம் தளரவில்லை! வாசல் படலையைப் பூட்டி - வீட்டுக்கதவைச் சார்த்திக்
கொண்டு இருந்து விடுகிறள் அவள்! -'தாயா அவள்? இராக் கதி!’
சுடலையில் சிவசம்பு என்ற வார் த்தை பிடிசாம்பராகின்றது. செத்தவனைச் சுமந்து சுடலைக்குச்
சென்ற சாவார் ஊர் திரும்பிவிட்ட
ଔ9] life

Page 26
48
சிதையில் தணல் அவிந்து நீறு பூக்கிறது . . மயானத்தின் உரி மைச் சொத்தான இருளைக் கிழி த்துக்கொண்டு திடீரென - "என் மகனே! நான் பெற்ற ராசாவே! * வயிறுபற்றினரியுதடா! உன் னேப் பிரிந்து நான் எப்படியடா வாழப்போறேன்.உன்ரைசவத் தைக்கூடப் பார்க்கக் குடுத்து வைக் காத பாவியடாநான்..! முத்தம் மாவின் ஒலக்குரல் ஒலிக்கிறது! -தாயுள்ளத்தில் நீறு அகன்று தணல் பூத்துச் சிதை மூழ்கின்றது!
*அநந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தி யைப் பேச வைப்பதுதான் சிறு கதை - ஒரு நிகழ்ச்சிதான் சிறு கதைக்குள்ள வட்டம். (ரா. பூரீ. தேசிகன்)-தாயுள்ளத்தின் அடித் தளத்தில் இறுக்கமாக விழுந்து போய் பலம் பெற்றுவிட்ட வைராக் கியத்தை, பெற்ற பாசம், தாய்மை யுணர்ச்சி உடைத்துக் கிழித்துக் கொண்டு வெளிக்கிளம்புகிறது! சாதாரணமான ஒரு செத்தவீட்டு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு - அந்த வட்டத்துள் நின்று கொண்டே, அவசியமான பாத்தி ரங்களைமட்டும் எடுத்துக் கொண்டு கதாசிரியர் தம் திறமை முழுவதை யும் காட்டியுள்ளார்.
சாவீடு என்பதைக் காட்ட, ஆசிரி யர் வர்ணனைகள் மூலம் நீட்டி முடிக்காமல், திடீரென மிகவும் இலகுவானஆனல் யதார்த்தமான வகையில் அறிமுகப் படுத்துகிருர், 'நாலும் வள்ளிசாக அறுபது வய தைத் தாண்டிய கிழங்கள்! இன் றைய கோலத்தில் இந்த நாலு கிழவிகளையும் நன்றகப் பார்த் தால் ஒன்று நிச்சயம். எங்கேயோ சாவீடு- கார்ச் சாரதி சிவசம்பு செத்துப் போனன்!’-எவ்வளவு
கலச்செல்வி
இலகுவாக, சம்பவங்களுடன் வாச கரின் உணர்ச்சியை ஒட்ட வைதது வருகிறர்! சாவீட்டுக்குப் போனல் எற்படும் அனுதாபம், கோபம், உரிமையுள்ளஉறவினர் வராவிடில் விற்படும் பரபரப்பு அத்தனையும் வாசகர்களுக்கும் எற்படுகிறது!
தன் மகன் சிவசம்பு, தன் விருப் பத்துக்கு மாருக - சரசியோடை *தொடுச'லாம் என்பதை, மகன் ஊர்ஜிதம் செய்யும்போது,எமாற்ற மடைந்த ஒரு தாயுள்ளம் எப்படி ஆத்திரத்தால் கொப்புளிக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்:-
போடா, போ! அவளிடை வீட் டுக் கோடியில் தூங்கு. போடா வெளியிலே . . போவேன்ரா' சரசி இனிக்கிருள்.அவள் கரும்பு . . அந்தத் தேவடியாள் காத் து க் கொண்டிருப்பாள். போவ ன்டா. இனி இந்தப்படலை திறந்தி யெண்டா காலை அடிச்சு முறிச்சுப் போடுவன்’’. “இந்தப் பொறுக் கித் தின்னிக்கு ஆரடா அம்மா.. என்ரை மேன் செத்துப்போனுன் நாளைக்கு அந்திரட்டி. 22
"இழவுச் சடங்குகள் எல்லாம் முடிந்தன. பாடையின் முன் கொம்பில் மயிலன் அழுதவண் னப் கைகொடுத்தான். பாடை தோளேறிவிட்ட்து. சிவசம்புவின் பிரயாணம் ஆரம்பமாகிவிட்டது. சரஸ்வதி தலைவிரிகோலமாகப் புர ண்டு விழுந்து கோவென்று கதறு கிருள் . . பறைமுழக்கத்தில், ஒப்பாரி அமுங்க . . கடவை பிரி த்த வேலியைத்தாண்டி ஊர்வலம் ஒழுங்கையில் இறங்கி விட்டது!’ . எத்தனை தெளிவான, வேகமான, உணர்ச்சியான "படப்பிடிப்பு" - படிப்பவர் கண்முன் அந்தச்

கலைச்செல்வி
சாவீட்டுக் காட்சியே முன்வந்து நிற்கவில்லையா?
“ஊர்வலத்தில் ஒரு வேகம் . சுடலை பாடை இறங்குகிறது. . . சிதை சிவசம்பு என்ற வார்த்தை பிடிசாம்பராகிறது’. எவ்வளவு செட்டான வார்த்தைப் பிரயோகம், அலம்பல் சிலம்பலற்ற மான வர்ணனை!
தாயின் அதட்டலுக்குப் பயந்து கூடப் பிறந்தானின் சவத்தைக் கூடப் பார்க்கமுடியாமல் குமைந்து குமுறும் அந்தத்தில் கையின உள்ளத்தோடு சேர்ந்து நமது உள்
ளமும் குமுறுகிறது.
*அண்ணு! நாள் வாயில்லாப் பிராணி. சுதந்திரமற்ற கூண்டுப் பறவை. நான் உன் பிணத்தைக் கட்டித் தழுவி அழ வரவில்லை யென்று குறை நினையாதே."
“எனக்கு இல்லாத சலிப்பு உங் களுக்கேன்? என்ரை மேன் சிவ சம்பு எண்டைக்கோ செத்துப் போனன். அவனுக்கு நான் வாய்க் கரிசிபோட்டுச் செய்ய வேண்டிய மரியாதை யெல்லாஞ் செய்து காடாத்தி, அந்திரட்டி எல்லாஞ் செய்திட்டான்’ என்று சொல்லும் இடத்தில் முத்தம்மாவின் உள் ளத்தில் படிந்துபோய்க் கிடக்கும்
உருக்க
49
வைராக்கியத்தின் இறுக்கம் காணக் கூடியதா யிருந்தாலும் கதாசிரியன் இன்னும் ஒருபடி மேலே சென்று, படலையைச் சங் கிலியால் பூட்டிவிட்டு திண்ணைக்
குந்திய் உட்கார்ந் திருந்து விட்
டாள் என்று வர்ணிக்கு மிடத்தில் வைராக்கியத்தின் முழு ஆழம் தெரிகிறது! சாதாரணமாகப் படலை யைச் சாததிவிடவில்லை - சங்கிலி யால் பூட்டுகிறள்!
*ம்களே! என்ரை செல்வத் தைப் பறிகுடுத்துட்டு எப்படியடி நான் வாழப்போறன்?-மயானதி தில் நின்று கதறித் துடிக்கும் தாயின் காட்சி எந்த நெஞ்சையும் உருக்கிவிடுகிறது!
கதை பூராவும் ஒரு ரசம் - சோகரசம் - தான் ஊடுருவி ஒடுகி றது. கதையைப் படித்து முடித்து விட்டால் ஒரு உணர்ச்சி - தாய்ப் பாசம், சகோதர பாசம் - மட்டும் தான் தெரிகிறது. கதையின் நிகழ்ச்சிகளில் ஒருமை, சூழ்நிலை யில் ஒருமை, பரவலற்று ஒடுகின் ற. கதையின் முடிவில் எழும் நாதத்திற்கு கதை முழுவதுமே ஈடுகொடுக்கிறது. க தா சி ரி ய ர் கையாண்டுள்ள கொச்சைச்சொற் பிரயோகம் கதையின் யதார்த்தத் தன்மைக்கு மெருகேற்றி சிறப் படையச் செய்துள்ளது.
وی Dع کطراح مک)مه

Page 27
தொடர்கதை:
3. இதைய டைரியில்
* பெரும் பேராசிரியரே!
வருக, வருக, தங்கள் வரவு நல்வர வாகுக. தங்கள் திருப்பாதம் படு
வதற்கு இந்த மாகோ ஸ்டேசன் என்ன தவம் செய்ததோ!? என்று சண்முகத்தை வ ர வே ற் ற என் அவன் நண்பனன பரமேஸ்வ்ரன், தன் கவலைகளே மறந்து, உள்ளம் திறந்து சிரித்தான் சண்முகம். 'தங்களது இந்த உற்சாகமான வரவேற்பிற்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து, மத்தியிலிருந்து, நுணியிலிருந்து எழும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என் றன் பதிலுக்கு.
பரமேஸ்வரன் குஷிப் பேர்வழி, வேடிக்கையாகப் பேசுவதில் அவ னுக்கு ஈடு அவனேதான். உல கத்திலுள்ள கவலைகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தாலும் அவ னுடைய பேச்சு அவற்றைச் சித றடித்துவிடும். சொல்லும் செய லும் கோமாளித்தனமாக இருந் தாலும், அவன் உள்ளம் உயர்ந்த algitarub, சுமுகமாகப் பழகு
மேஸ்வரன்,
வதற்குரிய பண்புடைய நண்பன் அவன், சிறுவயது தொடக்கம் ஒரே கல்லூரியிலேயே இருவரும் படித்தனர். எஸ். எஸ். சி. பாஸ் செய்தவுடன் சண்முகம் தொ டர்ந்து படித்தான். ஆனல், போ திய பொருள் வசதியற்ற பர அரசாங்கு குமரஸ் தாக்கள் தேர்வில்தேறி, கொழும் பில் உத்திய்ோகம் வகித்தான். என்றலும் அவர்களின் தென டர்பு அறுந்துவிடவில்லை. நெருங் கிய நண்பர்களாக, ஒருவர் உள் ளத்தை மற்றவர் தெரிந்தவர் களாக இருந்தனர்.
மறுபடியும் பேச்சைத் தொடக் கினன் பரமே. ரன். " என்ன மச்சான் சண்முகம் கல்லூரி விடு முறை தொடங்கி விட்டுதோ..? இந்தக் காலத்திலை சட்டம்மி மாரைப்போல் குடுத்து வைச் சவங்கள் ஒருத்தருமில்லை. ”.
*இல்லையடாப்பா.
விடுமுறை தொடங்குவதற்கு
இன் னு ம்
 

J, ësh 3 GJ disa
இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ளன. கல்லூரிக் கருகிலுள்ள ஒரு கோவிலில் திருவிழா. அத ஞல் மூன்று நாட்களுக்கு விடுதலை. மற்ற இரண்டு நாட்களுக்கும் *' எடுத்துக்கொண்டு வந்து விட்டேன், ஊருக்குப்போய் அம்மா, அப்பாவைப் பார்த்துவிட்டு வரலா மென்று.’.
“அட, சும்மா போ. ஊருக் குப் போருராம் . அம்மா அப் பாவைப் பார்க்கப் போருராம், பால்மனம் மாருத பச்சிளம் குழிந்தை... போன கிழமைதான் நான் ஊருக்குப் போனேன். தேக்கமரக் கட்டைகளைப்போல் நல்ல திடகாத்திரத்துடன் இருக் கின்றனர் உன் பெற்றேர். இப் படியே வந்துவிடேன் கொழும் பிற்கு? இரண்டு நாட்கள் 'முஸ் பாத்தி? பண்ணிவிட்டுப்பின் ஊருக் குப் போகலாம்’ என்ருன் பர மேஸ்வரன். யோசனை செய்வதற் குச் சண்முகத்துக்குச் சந்தர்ப்பம் அளிக்கவில்லை அவன். ‘ஓர் அவ சர வேலையாக நானும் எனது நண்பரொருவரும் காரில் இங்கு வந்தோம். இன்னும் சிறிது நேரத் தில் கொழும்பிற்குப் புறப்படு வோம். நீயும் வா சண்முகம்!. கார் பிரயாணம் நன்றக இருக் கும்’ என்று மீண்டும் துரிதப் படுத்தினுன்.
பரவேஸ்வரனை விட்டுப் பிரியச் சண்முகம் விரும்பவில்லை. அத் துடன், வீட்டிலும்பார்க்க, கொழும் பில் அதிக நிம்மதி கிடைக்கு மென்ற நம்பிக்கையும் அவனிட மிருந்தது. 'த் துரத்தே நின்ற ஓர் உததயோகத்தனிடம் தன் பிரயாணச் சீட்டை விட் டேறிந்துவிட்டு, நாகலிங்கத்துடன்
5i
புகைவண்டி நிலையத்திற்கு வெளி
யே வந்தான்.
அங்கேயுளள ஒரு ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக்கொண் ட ~!ர். சிறிது நேரத்தில் காரும் வதது. காருக்குள் வசதியாக உட்கார்ந்துகொண்ட சண்முகம், gullød பிரயாண அலுப்பால், ப்கிவிட்டான். தூக்கம் கலைந்து கல்களை விழித்துப் பார்த்தபோது கொழும்புமாநகரம் மின்சார ஒளி ப'ஸ் ஜெகஜ்ஜோதியாகப் பிர க' ' த்தது.
哆
கொழும்புப்பட்டினம் சண்முகத்
துக்குத் தலைகீழ்ப் பாடம். மூலை முடுக்கெல்லாம் அவனுக்கு ந்ன்கு
தெரியும். என்றலும் தான் செல்ல விரும்பிய இடங்களெல்லா வற்றுக்கும் பரமேஸ்வரனையும் அழைத்துச் சென்றன். எவ்
வளவுதான் பழகின இடமாயிருந் தாம் பேச்சுத் துணைக்கு ஒருவர் இருபது நல்லதல்லவா? நண் பனு க் கா கப் பரமேஸ்வரனும் '1ொகம் செய்யத் தயாரானன். * ' போட்டுவிட்டு சண்முகத் துடன் சுற்றியடித்தான்.
தொல்பொருட்சாலை, மிரு க சாலை, துறைமுகம், மற்றும் முக் கியமான இடங்கள் எல்லாவற்றை யும் பார்த்தனர். காலி முக மைதானத்தில் காற்று வாங்கி ଘ୪t it. முகத்துவாரக் கடலில் குளித்தனர். ஜந்துப்பிட்டி கோ விற் கூட்டுப் பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். மிக வும் சிறந்த முறையில் அலங்கரிக்கப் பட்டிருந்த கடைகள் சண்முகத் தின் கண்களுக்கு விருந்தா யமைந்தன. மூன்று நேரமுழ்

Page 28
šė
முறை தவருத சாப்பாடு-மற் றைய வேளைகளில் மனம் போன படி எங்காவது செல்வது-இப்படி இரண்டு நாட்களை ஒட்டினன் சண்முகம்,
பரமேசுவரனின் ‘லிவு' முடிந்து விட்டது. வேலைக்குச் செல்லத் தொடங்கினன். தனியாக வெளியே செல்ல விரும்பாத சண்முகம் அறைக்குள்ளேயே அடைந்து கிடந் தான்.
கொழும்பிற்கு வந்தது நல்ல தாகப்போயிற்று. அவனுடைய துக் கத்தை மறப்பதற்கு வழி செய்தது அந்த நவநாகரிக நகரம். பாரம் எல்லாம் நீங்கி மனம் லேசாகி விட்டதை அவன் உணர்ந்தான்.
மணி பத்து. இன்னும் ஆறு மணித்தியாலங்களை எப்படியாவது போக்கடிக்க வேண்டும். "சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தான். நண் பனின் மேசையின்மேல் புதிய பத் திரிகை ஒன்றிருந்தது. எடுத்துப் பார்த்தான். அந்த மாதத்திய "கலையருவி" இதழ் அது.
பத்திரிகை படிக்கும் பைத்தியம் சண்முகத்திற்கு நிறைய உண்டு. எழுத்தாளனக வேண்டும் என்ற ஆசையும் அடி மனத்தில் இருந் தது. “சிறந்த எழுத்தாளனுக விரும்பினுல் முதலில் சிறந்த படிப்பாளனுக இருக்க வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் ஒரு வர் கூறியதை அவன் ம)கக வில்லை அதற்காக, தன் சம்ப ளத்தின் கணிசமான ஒரு பகுதி யைப் பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்குவதற்கென்றே ஒதுக்கி வைத் தான். அநேகமாக எல்லாப் பத் திரிகைகளையும் அவன் படித்திருக் கின்றன். ஆனல் கலையருவியை
கலைச்செல்வி
அன்றுதான் முதன் முதலாகப் பார்த்தான். ..".
மிகவும் அழகாக அமைந்திருந்தது அட்டைப்படம். வைத்த கண் வாங்காது சில நிமி டங்களுக்கு அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வேறு எந்தத் துறையில் பஞ்ச மேற்பட்டாலும், கலைத்துறையில் பஞ்சமேற்படாத நாடு இந்தியா, காவியக்கலை, ஓவியக்கலை, எழுத் துக்கலை, அச்சுக்கலை எல்லாவற்றி லுமே சிறந்து விளங்குவது இந் தியா. அத்தகைய நாட்டில் இத் தகைய பத்திரிகைககளுக்குப் பஞ்ச மேற்படவா போகின்றது என்று நினைத்துக்கொண்டே பத்திரிகை யைக் கையிலெடுத்தான்.
அவன் காண்பது கனவா? கண் களே நன்ருகத் துடைத்துக் கொண்டு, மூன்று நான்கு தடவை பத்திரிகை அலுவலகத்தின் முக வரியைப் படித்தான். ஈழத் தமி
ழகத்திலிருந்து வெளி வந் து
கொண்டிருக்கும் பத்திரிகையாம் அது அவனையறியாமலே அவ னுள்ளத்தில் பெருமிதம் புகுந் தது. தெளிவான எழுத்து, அழ கான ஒவியங்கள் சிறந்த அமைப்பு, குறைந்தவிலே - இவையெல்லாம் அவன் பிறந்த பூமியாகிய யாழ்ப் பாணத்திலிருந்து, கலைத்தூதனு கப் புறப்பட்ட ‘கலையருவி'யின் விசேட அம்சங்கள். 'திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண் டும்' என்றடாரதியின் மணிமொழி முகபபில் பொறிக்கப்பட்டிருந்தது. கண்ணைக் கவர்ந்ததைப் போன்று கருத்தையும் கவருமா கலையருவி3 அப்படியானல் நிச்சயமாகப் பிற நாட்டார் பெருவணக்கஞ் செய்தே தீருவார்கள்.

கலைச்செல்வி
ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படிக்க விரும்பினன். பக்கங்களைப் புரட்டி முதலாவது கதையை எழுதியவரைக் கவனித்தான். அவன் கண்கள் அங்கேயே குத் திட்டு நின்றன. அந்தக் கதையை எழுதியவரின் பெயர் சாவித்திரி!
நெஞ்சிலே முள் உறுத்து வதைப் போன்றிருந்தது. சற்று முன்னற்பட்டிருந்த உற்சாகமனைத் தையும் விரட்டி யடித்துவிட்டது அந்தப் பெயர். மனம் சோர் வடைந்தது. "கலையருவியை மேசை மேல் எறிந்தான். ‘சிகரட் தன் பாட்டில் எரிந்துகொண்டிருந்தது. மனம் மட்டும் மட்டக்களப்பையும் சாவித்திரியையும் வட்டமிட்டுச்சுற்றி
եւ 1ֆ] • *டைரி'யில் எழுதியிருப் பதைப் போன்று பழைய நினைவு கள் ஒன்றன்பின் ஒன் ரு க வந்தன.
4. s 8
கல்லூரியில் வேலையேற்ற முதல் நாள். மாணவர்கள் தன்னை எப் படி வரவேற்பார்களோ என்ற பயத்துடன் வகுப்பொன்றினுள் நுழைந்தான், மாணவர்களைப் பார்த்துக் கைகூப்பினன். அவர் களுக்கு அது புதுமையாக இருந் தது. அவர்களும் எழுந்து கை கூப்பி வணக்கத்தைத் தெரி வித் து விட் டு, சண்முகத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர்.
சண்முகம் ஆரம்பித்தான். 'இதுதான் என தொடக்கவகுப்பு. பாடத்தை ஆரம்பிக்கமுன் சில ஒழுங்கு முறைகளைச் சொல்ல விரும்புகின்றேன். மனிதர்கள் சேர்ந்து வாழ்வதுதான் சமுதாயம். சமுதாயத்தின் ஒரு முக்கிய பகுதி இத்தகைய கலாசாலைகள், எப்படி
(9
53
சமுதாயத்தில் ஒருவனுக்கு மற்ற வன் அடிமையில்லையோ, அதைப் போல் இங்கேயும் ஒருவரும் அடிமைகளல்ல. கையிலே பிரம் பை வைத்துக்கொண்டு, ஆடுகளை மேய்ப்பதுபோல், மாணவர்களை நடத்துவது எனக்குப் பிடிக்காது. எல்லா விஷயங்களிலும் glities ளுக்குச் சுதந்திரமுண்டு. அந்தச் ககந்திரத்தை நல்லவழியில், மற் றையோர் போற்றும்படி நீங்கள் பயன்படுத்த ைேண்டும். அந்த நல்லவழி எது என்பதை உங் களுக்கு உணர்த்துவதுதான் என் வேலையாயிருக்கும். அறிவைப் பெறுவதுடன் மாத்திரம் நீங்கள் திருப்தியடையக்கூடாது. பணிவை யும் அமைதியையுங்கொண்டு பண் பாடுடையவர்களாக விளங்கினற் றன் ந ல் ல மனிதர்களாக உலகில் வாழமுடியும்.'
மாணவர்களின் முக த் தி ல் தோன்றிய பிரகாசத்தை அவன் கவனித்தான், அவன் பேசிய பொழுது ஒருவராவது அங்கிங்கு திரும்பவில்லை; தமக்குள்ளேயும் ஒன்றையும் பேசிக்கொள்ளவில்லை. எறக்குறைய ஒவ்வொரு வகுப் பிலும் இதையே திருப்பித் திருப் பிச் சொனரூனன். எத்தனையோ "பிரப்பம் பழங்களே'ச் சுவைத் துச் சகித்துப்போன "கழுதைகள்’
'மாடுகள்’ எல்லாம் نگ{([
னுடைய சொல்லுக்குக் கட்டுப்
பட்டு நின்றன.
சண்முகத்தின் வா பூம் க்  ைக
யிலேயே ஒரு பொன்னுள் அது. நூற்றுக்கணக்கான ԼԸn 6ծ076)յti களைத் தன பேச்சினல் கவர்ந்து விட்ட திருப்தி அவனிடமிருந்தது அந்த வெற்றியைக் கொண்டாடு

Page 29
54
வதற்கு யாராவது நண்பர்கள் அருகே இருந்தால்...!
உள்ள நிறைவுடன் விடுதிச் சாலையை நோக்கி நடந்தான். பின்னலிருந்து யாரோ மெது வாகக் கூப்பிட்டார்கள். திரும் பிப் பரர்த்தான். அவனுக்கு முதன் முதலில் அறிமுகமான சாவித்திரி நின்றள்!
மன்னிக்க வேண்டும், அவசர மா க ச் செல்கின்றீர்களோ? சாவித்திரி கேட்டாள்.
*அப்படி யொன்றும் அவசர ില്ക്ക, விடுதியில் இனி ஒய் வெடுப்பதுதான்ே.!’ என்றன் சண்முகம்.
'இன்று உங்கள் முதல் நாளல்லவா? எப்படி இருந் தார்கள் மாணவர்கள்?
சண்முகம் தன் மகிழ்ச்சி முழு வதையும் வெளிப்படுத்தினன். மாணவர்களே வானளாவப் புகழ்ந் தான்.
**அப்படியானல் வாழ்க்கை முழுவதுமே ஆசிரியராக இருந்து விடுவீர்கள் போலத் தெரிகிறதே!?
*நிச்சயமாக. ஆசிரியத் தொழி 2லப்பற்றி நீங்கள் என்ன நினைக் கின்றீர்களோ தெரியாது. என் ஜனப் பொறுத்தவரை, நான் ஆசிரி யனகவே சாவேன்’. சண்முகத் தின் குரலில் உவகை பொங் கியது.
சாவித்திரிக்குப் பெருமையா யிருந்தது. அந்தக் கல்லூரியி லுள்ள மாணவர்களைப் புகழ்ந்து பேசிய ஒரேயொரு பிரகிருதி சண்முகம்
கலைச்செல்வி
இருவர்க்கிடையே பேச்சு வளர்ந் தது. பேசிக்கொண்டே நடத்து சென்று, விடுதிச் சா லை  ைய யும் * தாண்டிவிட்டனர். சாவித்திரியின்
வீடு 8 பித்தது.
'பேச்சு சுவராஸ்யத்தில் இவ்வ ளவு தூரத்திற்கு உங்களையும் நடக்
கச் செய்துவிட்டேன். வீட்டிற்கு வாருங்களேன், தேநீர் சாப்பிட்டு விட்டுப் போகலாம்’, சாவித்திரி
யின் அழைப்பைச் சண்முகம் ஏற் றுக்கொண்டான்,
அழகான் சிறிய வீடு அது. முன் பக்கத்தில் ஒரு விருந்தை. அதை யடுத்து உள்ளே விருந்தினரை வர வேற்கும் சிறு மண்டபம், அதோடு ஒட்டினற்போல் ஒரு சிறிய அறை. சமையற்கூடம் அதற்கப்பால் இருந் தது. மண்டபத்திறகு வடக்கே இருந்த இரண்டு அறைகளும் படுக்கையறைகளாக உபயோகிக்கப் டட்டன.
நடு மண்டபத்தில் சண்முகத்தை உட்காரச் செய்துவிட்டு, உள்ளே சென்ருள் சாவித்திரி. ரேடியோ வில் யாரோ இன்னிசை கீதத்தை இ  ைச த் து க் கொண்டிருந்தார். வழுவழுப்பான மெத்தை தைக்கப் பட்ட சில கதிரைகள் அந்த மண்ட பத்தை அலங்கரித்தன. மத்தி யிலே வைக்கப்பட்டிருந்த ஒரு * லி’ல் பல பத்திரிகைகள் கிடந் டன. மேலே நிமிர்ந்து பார்த் தான் சண்முகம், புன்னகை தவழ, கைகளைக் கூப்பியபடி வீற் றிருந்தார் காந்தியடிகள். மல் லிகை மாலை ஒன்று படத்தை அலங்கரித்தது. மல்லிகையின் மணம் முகத்தைத் துளைத்தது.
இதுவரை அனுபவித்திராத ஒரு வித தூய்மை உணர்ச்சி சண்முகத்

கலைச்செல்வி
திற்கு ஏற்பட்டது. அதி ஆடம்பர மற்ற இடம்தான். என்றலும் மனதிற்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கின்றது!
தேநீருடன் சாவித்திரி வந்தாள். *தாங்ஸ்’ என்று சொல்லிக் கொண்டே வாங்கிப் பருகினன் அவன். ரேடியோ கீதத்தின்
இனிமையும், மல்லிகையின் வாசத் தையும் ஒன்றகக் கலந்து, சாவித்
திரி தன் கைப்படத் தயாரித்த தேநீர்! தேவாமிர்தம்’ என்று சிலர் சொல்கிருர்களே, அதன்
ருசி இப்படித்தான் இருக்குமோ!
சிறிது நேரம் இருவரும் உரை யாடிக்கொண்டிருந்தனர். எங்கோ வெளியில் சென்ற சாவித்திரியின் தாயும், இளைய சகோதரியும் அப் போதுதான் வீட்டிற்குத் திரும்பி னர்கள்.
சாவித்திரி எழுந்தாள், 'இவர் தயனம்மா புதிதாக எங்கள் கல்லூ ரிக்கு வந்திருப்பவர், யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்தவர்’ பின் தாயைச் சுட்டிக்காட்டி, "இவ என் அம்மா. மற்றவள் என் தங்கைச்சி
ராதா, கொன்வென்டிலே படிக் கிருள்’ என்று அறிமுகஞ் செய்து வைத்தாள்.
சாவித்திரியின் தாய் நாகம்மா ளும் ராதாவும் அவர்களின் உரை யாடலிற் கலந்துகெ ர ன் - ன ர். யாழ்ப்பாணத்தைப்பற்றி மூவரும் கேள்விமேற் கேள்வி கேட்டனர். சண்முகம் சலிக்காது பதிலளித் தான். கீரிமலைக் கேணி, மாவிட்ட புரம் கோபுரம், சங்கிலியன் ஆண்ட நல்லூர், யாழ்ப்பாணக் கோட்டை -இவைகளைப் பற்றி அவன் கூறிய விபரங்களே ஆவலுடன் கேட்டனர் Քյ6յն 56ն.
55
பேச்சின் முடிவில் சாவித்திரி யின் தாய் சொன்னுள், “எங்க
ளுக்குக்கூட, ஒரு தடவையாவது யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்க ஆ  ைச த ர ன். ஆனல் அங்கே தெரிந்தவர்கள்தான் ஒருவரும்
இலப்ல’’.
"தாராளமாக அங்கே வாருங் கள். நானே உங்களை எல்லா இடங்கட்கும் அழைத்துச் செல்கி றேன்? என்று அழைத்தான் சண் முகம்,
"சித்திரை விடுமுறைக்கு நாங் கள் போவோமா அம்மா?’என்று துடித்தாள் ராதா.
'நீ பேசுவதைப் பார்த்தால், இப்போதே இறக்கை கட்டிப் பற ந்துவிடுவாய் போலிருக்கிறதே' என்று சாவித்திரி சொல்ல, எல் லோரும் சிரித்தனர்.
"சரி, நேரமாய்விட்டது மாஸ்டர். பிள்ளையுடன் கதைத்துக்கொண் டிருங்கள். எனக்கு உள்ளே வேலையிருக்கின்றது”என்று சொல் லிக்கொண்டே எழுந்தாள் நாகம் ԱDF7 (6)T
எனக்கும் நேரமாய் வி ட் ட து.
இனி விடுதிச்சாலைக்குச் செல்ல வேண்டும்'. சண்முகம் எழுந் தான்.
'ஒட்வான வேளைகளில் இங்கே வாருங்கள்! ஏதாவது நல்ல விஷ யங்களைப்பற்றிப் பேசலாம்”. சாவித் திரியும் ராதாவும் அன்புடன் விடை கொடுத்தனர்.
அடுத்த சில நாட்களுக்குத் தவ ருது அங்கு சென்று வந்தான் சண்முகம். ஆசிரியர்களின் அறி முகம் நன்கு ஏற்பட்டு மாணவர்க

Page 30
56
ளும் அவனைச் சுற்றி வளைக்கத் தொடங்கிய பிறகு, ஒழுங்காக அங்கே செல்வதற்கு அவல்ஞ முடியவில்லை, சனி, ஞாயிறு நாட்களிலும், கிழமை நாட்களில்
சில வேளைகளிலும் சாவித்திரியின் .
வீட்டிற்குச் சென்று, பொழுதைப் போக்கினன்.
எரிந்து முடிந்த "சிகரட் சண்மு கத்தின் கையைச் சுட்டபோதுதான், அவன் மறுபடியும் இந்த உலகத் திற்கு வந்தான்.
旁 8 0.
“இப்படி அடிக்கடி அங்கு சென்று வந்ததுதான் சந்தேகத் தைக் கிளப்பியதோ? கல்யாணமா காத ஒரு பெண்ணுடன் நானும் இப்படி நெருங்கிப் பழகியிருக்கக் கூடாது’. தன்மீதே குற்றஞ் சாட் டினன் சண்முகம். நெஞ்சி லிருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
அறைக் கதவை யாரோ தட்டி னர்கள். உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கதவைத் திறந்தான். அலுவலகத்திலிருந்து பரமேஸ் வரன் திரும்பிவிட்டான்.
“என்னடா அழுகுணி! முகம் ஒரே ‘டல்லாயிருக்குதே! புதுப் படம் ஒன்று வந்திருக்கிறதாம். போய்ப்பார்த்து வருவோமா?’ என் ருன் பரமேஸ்வரன்.
மா ற் ற ம் தன் சம்ம
சம்முகத்திற்கும் தேவையாயிருந்தது,
நேரம்
யிருந்தது.
கலைச்செல்வி
தத்தைத் தெரிவித்தான், சிறிது அறைக்குள்ளே யிருந்து அரட்டையடித்துவிட்டு நண்பர்கள் இருவரும் டஸ்நிலையத்தை அடைந் தனர்.
பஸ்ஸில் இரண்டுபேருக்குமட்டும் இடம் இருந்தது. பரமேஸ்வரனும் சண்முகம் எறிக் கொண் டனர்! சண்முகத்தைக் கண்டதும், ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்து தன் சீட்டிலேயே இடம் கொடுத்தாள் ஒரு பெண்மணி சண்முகத்திற்கு அவளருகே இருக்கக் கூச்சமா “தாங்ஸ்’ Tன்று சொல்லிவிட்டு நின்றன்.
**அடமுட்டாளே!’ என்று அவ னுடையகாதிற்குள் முணுமுணுத்து விட்டு அதே இடத்தில் உட்கார்ந் தான் பரமேஸ்வரன்.
“S! ffrĚJ JE GITT பரம்?’-பரமேஸ் வரனைத் திரும்பிப் பார்த்த பெண் மணி குதூகலத்துடன் கேட்டாள். பரமேஸ்வரனின் முகமும் மலர்ந் தது. இருவரும் சிரித்துப் பேசத் தொடங்கினர். மற்றப் பிரயாணி கள் அங்கிருப்பதை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. பஸ் ஒடிக்கொண்டே யி ரு ந் த து. தனித்து விடப்பட்ட சண்முகம் அவர்களைப் பார்த் த ப டி யே நின்றன். - W
- (தொடரும்)
袋濒 CNN 4
d

வளருங் தமிழ்
கதிரேசன் பாமாலை ஆசிரியர்: மு. க. சூரியன்; வெளியீடு: M. C. தங்கையா, ஆலய நிருவாகஸ்தர், டொற்றெலோயாத் தோட்டம், தொலஸ்பாகை, விலை: 50 சதம்.
தமிழர் எங்கெங்கு நுழைந்தாலும் அங்கங்கே தமது கலாச் சாரப் பண்புகளைப் பாதுகாத்துப் பரப்புவர் என்பதற்குக் கதிரேசன் பாமாலை ஆசிரியர் தக்கதோர் உதாரணமாகின்றர். மலைநாட்டில் சூரியனது பொற்கதிர்கள் துலாம்பரம் ஆவதைப்போல் மலைகளிலே குடியிருக்கும் வழக்கத்தைக்கொண்ட கதிரேசப்பெருமானைக் குறித்துப் பாடிய கவிதைகளில் சொற்சுவை பொருட்சுவை நிதிக்குவைபோல் வானளாவி நிறைந்துள்ளன, கந்தவேளின் அநுக்கிரகத்தைப் பெறு வதற்குப் பாராயணஞ் செய்யவும் பஜனை செய்யவும் பயனுள்ள நூல் கதிரேசன் பாமாலை.
சுடரொளி; திருநெல்வேலி செங்குந்த இந்துக்கல்லூரி உயர்தர மாணவர்மன்ற வெளியீடு; யாழ்ப்பாணம்.
தமிழார்லும் நிறைந்த செங்குந்த இந்துக்கல்லூரி மாணவர் களின் வெளியீடான 'சுடரொளி"யின் மூன்றம் இதழ் கிடைக்கப் பெற்றேம். தொடக்கத்தில் Light என்ற தலைப்பில் ஆங்கில விஷ யங்களைத் திறம்பட எழுதிப் பின், "சுடரொளி" என்ற தலைப்பில் தமிழ் விஷயங்களே நயம்பட எழுதியுள்ளார்கள். தமிழிற்கு முத லிடம் கொடுத்திருந்தால் தாய்மொழியைக் கெளரவித்த பெருமை பெற்றிருப்பார்கள். முதிய எழுத்தாளர்கூட எழுதுவதற்குத் தயங்கும் சில சிக்கலான விஷயங்களை இராமாயம்ை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலிருந்து எடுத்தாண்டிருக்கின்றர்கள். **வாலியைக் கொன் றது நீதி-அநீதி’ என்ற விவாதக் கட்டுரைகளும், கண்ணகியின் சிலம்பில் நின்றும் தெறித்தி பரல்தான் சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று கூறும் "பரலும் பாவையும்', என்ற கட்டுரையும் குறிப்பிடத் தக்கவை. மிகவும் அழகாக வெளியிட்ட மாணவர்களைப் பாராட்டுகின்றேம்.
ஆதவன் 》赏 ‘‘-سس

Page 31
சந்தாதாரர்களுக்கு:
usedOKe
ஒவ்வொரு மாதமும் நமது 'கலைச்செல்வி சந்தா தாரருக்கு ஒழுங்காக அனுப்பப்பட்டு வந்த்ம் சிலர் தமக்குப் பத்திரிகை கிடைக்கவில்லை யெனத் தெரிவிக்கின்றனர். இவர்கள் நமக்கு எழுதுவ துடன் மட்டும் நில்லாமல் தங்கள் ஊரிலுள்ள தபால் கிலேய அதிபர்களுக்கும் அறிவித்தால் அவர்களும் இடையிலுள்ள பெருச்சாளிகளைக் கண்டுபிடித்து, பத்திரிகையை ஒழுங்காக அனுப்பி வைக்கக்கூடும்.
- நிர்வாகி,
சுதேசி இன்றேல் சுதந்திரமில் மில்க் வைட் சோப்
உள் நாட்டில் தயாராகும் உயர்ந்த ரக சோப் மில்க் வைட் சோப் உங்கள் உடைகளைச் சுத்தமாக்க உதவும் சுத்தம் சுகம் தரும். மில்க் வைட் சேரப்
கே. கே. எஸ். வீதி, : யாழ்ப்பாணம்.
i.

༈་་་་་་་་་་་་་་་་་་་གང་ལ་གྱ་ཁ་གྱུ་ཁུག་ཀྱང་གངས་ཀྱ སྐུ་
பிறின்ஸ் அழைக்கிறது!
良
Fན་ () t
Y
次。
N
歇
Z
ܡܐ.
良 J Wግ
* திருமண வைபவம்.
ܫܚ.
-:출寻-t
تح家ܥܹܡ̄
* பொதுக்கூட்டங்கள். * வரவேற்பு, பிரியாவிடைவிழாக்கள். * கோவில் திருவிழாக்கள்
S. முதலிய எல்லா நிகழ்ச்சிகளையும் நன்ரு கப்
s படம் பிடித்துக் கொடுக்கிறேம்.
இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளவும் .
பிறின் ஸ்
படப் பிடிப்பாளர்
சுன்னுகம்.
藝
Seషిజీషిజీషిeషిజీషిreషిreషిesడeషిeషిల్
யாழ்-தமிழ் இலக்கிய மன்றத்திற்காக. திருநெல்வேலி சு. இராஜதாயகம் 13. A.
அவர்களால், யாழ்ப்பாணம், சைவப்பிரகாச அச்சியந்திர சாலையில் அச்சிடுவித்து
வெளியிடப்பட்டது. நிர்வாக ஆசிரியர்: சி. சரவணபவன் B. A.