கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2002.10

Page 1
வவுனியா கலை இலக்
 
 

பக்கிய சஞ்சிகை இதழ் 0의
க்கிய நண்பர்கள் வட்டம்

Page 2
நியூ விஜயா ஸ்ரோர்ஸ்
கொறவப்பொத்தான வீதி, வவுனியா
சுபீட்சா மருந்தகம்
113, கொறவப்பொத்தானை விதி
வவுனியா. s
ல் ச
' ಹಿ)
భ;
ம் ள், பால்மா வகைகள்,
డి. భ గ -
 
 
 
 
 
 
 
 

RỪLUF - zooz 15 jou o 2
2R?"R தனிச்சுற்றுக்கு மட்டும் ஆசிரியர் குழு
அகளங்கள்
கந்தையா யூரி கணேசன்
அச்சு:
மல்ரிவிஷன் பிறிண்ரேஸ்
gefüų, Saqaffar.
Apsau; 024 - 23143
வடிவமைப்பு:
க.ரணேஷ்
உதவி:
அளவையூர் தணசீலர்
ப.முரளிதரன்
இலச்சினை:
ப. சிவAர்பு
தொடர்புகட்கு:
சிபாதிகை,
395
145 இநம்பைக்குணம்,
அலைகரை விதி,
Syarqafuar.
Apsau: 024 - 21310
வெளியீடு:
வவுனியா கலை இலக்கிய
ர்பர்கள் வட்டம்,
கட்டுரைகள் Ν அழகிரிசாமியின் ‘தவப்பயன்”
- ந. இரவீந்திரன் -
66 s 99 /N 6a76/10Usso sfe ܠܢ
- பா.மகாலிங்கசிவம் -
Ν பாடல் ܐ
\ தமிழை வளர்ப்போம்
- அகளங்கண் -
Ν தமிழில் முதல்வரவாற்று நாவல்.
- முல்லைமணி ~
முல்லைமணியின்வன்னியியற்சிதனை
* ~ நீகணேசன் -
YA நிதர்சனத்தின்புத்திரர்கள்.
ゞ
- கனகரவி -
Ν மழைமேகங்கள் கலைகின்றன. ゞ
~ ந.பார்த்தீபன் -
N மானுடத்தின் தமிழ்க் கூடல்
~ பி.மாணிக்கவாசகம் -
.கவிதைகள் - میشیگلا
- கே.சிவஞானம் -

Page 3
ஆசிரியர் தலையங்கம்
எமது கலை இலக்கிய செயற்பாட்டின் ஒரு அங்கமாக மிளிரும் சஞ்சிகை வெளியீட்டில் இரண்டாவது இதழுடன் சங் திப் பதில் மகிழ்வடைகின்றோம். வவுனியாவை மையப்படுத்தி வன்னி வடக்கு, கிழக்கு, எனப் பரந்து மலையகம், கொழும்பு, உள்ளிட்ட தமிழ் பேசும் உலகுடன் இணைவது எம் குறிக்கோள். மானுடம் சுடரும் ஒரு விடுதலையை நாடி, மானுடத்தின் தமிழ்க் கூடலுடன் இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் ஈழத்துத் தமிழிலக்கியக் கருத்தரங்கு என இலக் கரிய விவாத அரங்குகள் பல வெளிப்பட்டுள்ளன.
மேலும் சில நாடக அரங்குகளை வவுனியா கண்டுள்ளது. அரங்குகளுடன் இலக்கியப் பதிவு போன்ற பல விடயங்கள் இவ்விதழை அலங்கரிக்கின்றன.
அடுத்த சித்திரை இதழுடன் சந்திக்கும் வரை விடைபெறுகின்றோம்.
ஆசிரியர் குழு
 

கு. அழகிரிசாமியின் “தவப்பயன்’
சிறுகதை : ஒரு நோக்கு
-ந. இரவீந்திரன்
பல்வேறு அர்த்த பரிமாணங்களைத் தரக்கூடிய கட்டமைப்புக் கொண்ட நல்ல ஒரு சிறுகதைக்கு உதாரணமாக அமைவது கு.அழகிரிசாமியின் ”தவப்பயன்'. இக் கதையின் முடிவு பற்றற்ற வாழ்வு உலக இன்பம் என்பன பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.
இச் சிறுகதை பற்றிய தேசிய கல்வி நிறுவக ஆசிரியர் கைந்நூல் (உயர்தர வகுப்பு பாடநூலில் இச்சிறுகதை இடம் பெற்றது என்ற வகையில்) மேலே குறிப்பிட்டுள்ளவாறு சொல்லியுள்ளதைக் கவனிக்கலாம். நான்கு வினாக்களும் மதிப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. பற்றற்ற வாழ்வின் மறுபக்கம் உலக இன்பமே என்பதை இச் சிறுகதை காட்டுகிறது என்பதை உணர்த்துவதுதான் ஆசிரியர் கைந்நூலின் நோக்கம். உண்மையில் தவப்பயன் சிறுகதை அதனையே செய்கிறது.
ஆயினும் சிறுகதை ஆசிரியர் பல அர்த்த பரிமாணங்கள் அமையக்கூடியவாறு கதையைக் கட்டமைத்திருப்பதால் வ்ேறு அர்த்தங்களும் இக் கதைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பயங்கரத் தபசியான நிர்மலானந்தர் சுவர்க்கம் சென்றதைக் கண்டு திகைத்தது தன் தவவலிமைச் செருக்கினால் எனக் கொள்வாருளர். அந்த வகையில் நான் எனும் ஆணவச் செருக்கு நீங்காமையினாலேயே மீண்டும் அணிலாகப் பிறக்க நேர்ந்தது என்பார் எஸ்.எஸ். ஆனந்தன் (பார்க்க : "சிறுகதைத் தொகுப்பு. பக் 84.)
இவ்வாறு கருதுவதற்கு ஏற்றவகையில் ஆசிரியர் இடம் வைத்துள்ளார். உடலைவிட்டு நீங்கிய தபசியின் ஆன்மா மேற்சோதனைக்காகப் பதினைந்து நாட்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது பற்றிச் சிறுகதையில் மேல்வருமாறு கூறப்பட்டுள்ள

Page 4
"இன்னும் 'நான் நசியவில்லை, 'அவன் இன்னும் அவனாகத்தான் இருக்கிறான். அவன், நான் 'அவன்’ ஆகவில்லை; நான் 'அவன்’ ஆகவில்லை. கேவலம் தூல சரீரத்தைக் களைந்துவிட்டால் ஈஸ்வர ஐக்கியம் கிட்டிவிடுமா?
இது அத்தபசியின் நிலை எனக்கொண்டால் எஸ்.எஸ்.ஆனந்தன் கருத்து சரியானது. கதையை முழுமையாகப் படித்தால் அவ்வாறில்லை என்பது புலனாகும். கடவுளின் தீர்ப்பின் பிரகாரம் உடலை நீங்கியதும் நான் முற்றாக ஒழிந்துவிடாது, அவரவர் நிலைக்கேற்ப சுவர்க்கத்தில் சில காலம் 'சோதனை செய்தல் அவசியப்படும் என்பதையே இது உணர்த்துவது.
உண்மையில் தபசியின் தீவிர தவ வலிமை மயக்குபவரை மட்டுமல்ல கடவுளையே மயக்கிவிட்டது ஒருபுறம் மயக்குயவர் அந்ந நல்ல இதயத்துக்கு ஏற்றதாக ராஜகுமாரனாகவோ முனிசிரேஷ்டராகவோ படைப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறார். மறுபக்கம் தன்னோடு இரண்டறக் கலக்கக்கோரும் ஆன்மாவின் விருப்பை ஈடேற்ற எண்ணிய இறைவனும் திகைத்துவிடுகிறார். ”இன்ப துன்பததை உணராத பேரின்ப உபாசகனாக இருந்த அந்த ஆத்மா எம்மோடு அத்வைத நிலையிலிருந்தால் என்ன, ஆஸ்ரமத்தில் சந்நியாசியாக இருந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான்" என்ற முடிவுக்கு இறுதியில் கடவுள் வருகிறார்.
'தபசிற்குப் பலனாக, சுகமான வாழ்க்கையை உணர்ந்து துய்க்கும் ஒரு பிறப்பை, பழையபடியும் அதே பூலோக வாழ்க்கையை, அதற்குச் சுட்டிக்காட்டுவதைவிடச் சிறந்த பிரதி உபகாரம் வேறு எதுவும் இல்லை. அதற்குச் செய்யும் பேருதவியும் பரிகாரமும் பிராயச்சித்தமும் அதுவே' என்ற முடிவுக்குக் கடவுள் வருகிறார்.
அந்த வாழ்வு ராஜகுமாரனாயோ முனிசிரேஷ்டராயோ இருப்பதால் அமையாது. இந்தப் பூவுலக இயற்கையுடன் இயைந்து ஒன்றித்து இன்பங்காணும் வகையில் ஆசிரமத் தோட்டத்தில் அணில் குஞ்சாகப் பிறப்பதால் சித்திக்கும் (மனிதன் இயற்கையைப் பிரிந்து கவலைப்பேயை வரிப்பவன்)
ஆக, அதீத துறவின் மறுபக்கம் இன்பம் துய்த்தல், இது ஒன்று மற்றொன்றாக மாறும் இயங்கியல் விதி, பாரதி கூறியவாறு 'ஒன்று மற்றொன்றாக மாறும், இன்று படுத்தது உயர்ந்து ஏற்றமடையும், உயர்ந்தது இழியும்” என்ற இயங்கியல் விதியைத்தான் கு.அழகிரிசாமி இச்சிறுகதை மூலம் காட்டுகிறார்.
அவரது சமகாலத்தில் எழுதியவரான க.நா.சுப்ரமண்யம் "பொய்த்தேவு” என்ற நாவலில் இதே விடயத்தை எதிர்த்திசையில் காட்டியவர். பொய்த்தெய்வமான பணத்தைக் குவித்து இன்பங்கள் துய்ப்பதையே நோக்கமாய்க் கொண்ட மனிதன் முடிவில் சலிப்படைந்து சன்னியாசியாகி அலைந்து அனாதைப் பிணமாய்ச் செத்தொழிந்ததை ”பொய்த்தேவு” நாவலில் க.நா.சு.சித்திரித்திருந்தார். அதீத இன்பம் துறவுக்கு வழி கோலுவதை இது காட்டுகிறது.
6 அமருதம்-அ 6

வள்ளுவம் காட்டும் உண்மையை இங்கு நினைவுகூறலாம். நுனிக்கொப்பு ஏறி, இன்னும் கடக்க முயன்றால் கிழே விழ நேரும். முற்றுந் துறந்த தவம் (சுவர்க்கமும் அண்டாத வகையில் 'நான் முழுதாய் அழிந்துவிட்ட நிலை) கவலைகள் அண்டாத இன்ப வாழ்வுக்கு கால்கோலாகிறது.
துறவு வாழ்வின் கதையூடாகவே இவ்வுலக வாழ்வை நேசிப்பதற்கு ஆசிரியர் வழிசமைக்கிறார். இது பாரதியிடமும் இருந்த அம்சம் கு.அழகிரிசாமியின் சககாலத்தவரான் பிச்சமூர்த்தி வேதாந்தியான போதிலும் 'மாயத்தச்சன்” பற்றிப் பாடுகையில் வாழ்வனுபவங்களுடாகவே இறைவனை நாடுவதைக் காட்டியவர்.
I
இந்தியச் சிந்தனை மரபுக்கு இது புதியதல்ல. ஒரு வழிதான் என்ற இறுக்கம் இந்துக்கோட்பாட்டில் இல்லை. சைவத்திடமோ, வைணவத்திடமோ தத்தமக்கான இறுகிய கோட்பாடுகள் ஓரளவிற்கு இருக்க முடியுமாயினும் இந்துவாகத் தன்னை உணர்பவர் புறச் சூழலுக்கு அமைவாகத் தன் சிந்தையை வகைப்படுத்துவதற்கு வழிதுறைகள் உண்டு. (தவப்பயன் சிறுகதை சைவசித்தாந்த அடிப்படை மட்டுமோ, வேதாந்த வழிமுறை சார்ந்ததோ அற்றது.)
இந்து நெறி மாறும் சூழலுக்கு அமைவாகத் தகவமைத்துக் கொள்வதற்கு ஏற்ற தன்மையைக் எப்படிப் பெற்றுக் கொண்டது? ஏனைய சமயங்கள் தோற்றம் பெற்ற காலத்தையும் தோற்றுவித்த மூலவரையும் தெளிவாகக் காட்டுவது போல இந்து சமயத்துக்கு தொடக்கம் 'இல்லாமல் போனது எப்படி?
எல்லா சமூகங்களும் வளர்ச்சியின் ஆரம்பப்படியில் இயற்கை வழிபாட்டுமுறை உடையனவாயிருந்தன. இயற்கையை விலக்கி சமூக அமைப்பு சிக்கலடைந்து வந்தபோது இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுள் பற்றிய கருத்துகள் நவீனமடைந்து வந்தன. பழைய மதங்களை அழித்து புதிய கடவுட் கோட்பாட்டுடன் ஏனைய சமயங்கள் தத்தமது சமூகங்களை வெற்றி கொண்டன.
இந்து சமயத்திலோ இந்த இரு போக்குகளும் உண்டு. இயற்கை வழிபாட்டு அம்சங்களும், பிரம்மம் பற்றிய கோட்பாடுகளும் பேணப்படுகின்றன. இன்னும் பல நூற்றாண்டுகளின் பின், பல சமூக மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்ற பதி பற்றிய கோட்பாடும் இவற்றுடன் சமரசம் கண்டு இணங்கிப் போயுள்ளது. பழைய மதங்கள் அழிந்து போகாமலே புதிய சிந்தனைகள் இணங்கி வாழும் இந்தப் பண்பு எப்படி ஏற்பட்டது?
ரிக்வேதம் இயற்கையை யாகங்கள் செய்து வணங்கி இவ்வுலக வாழ்வியல் தேவையைப் பூர்த்தி செய்வது. சிந்து வெளிப் பண்பாடோ யாகத்துக்கு எதிராக மூர்த்தி
7 -ேமருதம்-அ 7

Page 5
- தலம் - தீர்த்தம் உடையதாக, கடவுட் கோட்பாட்டை உருவாக்கிவிட்டது. அத்தகைய உயர் பண்பாட்டினர் பின்தங்கிய பண்பாட்டாளர்களான ரிக் வேதகால ஆசிரியர்களால் வென்றடக்கப்பட்டனர்.
வெற்றிகொண்டவர்களை வேள்வி வழிபாட்டுக்கு மாற்ற முயன்று தோற்ற ஆரியர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களின் கோயிலில், அங்குள்ள மூர்த்தியின் முன் தமது வேள்வியைக் குறுகத்தறித்துப் பூசையாக்கிக் கொண்டனர், தம்மை முழுதாய் இழந்துவிட விரும்பாமல் இயற்கை வழிபாட்டு அம்சங்களை கோயிலினுள் புகுத்தினர். கலப்புற்ற இப்புதிய வைதீக நெறி தமிழகம் போல் இயற்கை வழிபாட்டைப் பேணிக் கொண்டிருந்த ஏனைய சமூகங்களைப் பண்பாட்டுத் தளத்தில் வெற்றிகொள்வது சுலபமாயமைந்தது. ஆதலால் இந்தியா முழுமைக்குமான (இந்தியாவைக் கடந்தும் பரவிய) மதமாயானது 3.535 &LDu Jib.
அந்த வகையில் வேதம், வேதாந்தம், சித்தாந்தம், போன்ற ஒன்றையொன்று முற்றிலும் மறுக்கும் தத்துவ முறைமைகள் தமக்குள் சமரசம் செய்தும் சமாதான சகஜீவனம் நடாத்தி வந்துள்ளன. ரிக்வேத ஆரியர்கள் தமக்குள் பிராமணர், சத்திரியர், வைசியர், எனப் பிரிந்திருந்தபோதிலும் சமத்துவம் உடையவர்கள், இயற்கையை வசப்படுத்தும் பிராமணர் எங்கோ உள்ள கடவுளின் ஏஜென்ட் அல்ல. அந்த ஆத்மார்த்தப்பணி புதிய பிரதேசங்களை வெற்றிகொள்ளும் சத்திரியரைவிடவோ, பொருளியல் விருத்திசெய்த வைசியரைவிடவோ அப்படியொன்றும் மேலானதல்ல.
புதிய ஆள்புலங்கள் விவசாயப்பெருக்கம் கண்டு, ஆள்வோர் - ஆளப்படுவோர் பேதம் ஏற்பட்டு சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடங்கிய பின் அரசரா பிராமணரா பெரியர் என்ற போட்டி தொடங்கியது. அப்பேதப்பட்ட சமூகம் இயற்கையைப் பிரிந்த கடவுள் பற்றியும் எண்ணத்தலைப்ட்டது. (ரிக்வேதகால முடிவில் பிராமணர்களே இயற்கை சக்திகளின் வடிவமாக அல்லாத அனைத்திலும் மேலான பிரஹஸ்பதி பற்றி எண்ணத் தலைப்பட்டுவிட்டனர்) அந்த மேலான சக்தியின் வையகப் பிரதிநிதிகளாகப் பிராமணர் தம்மை நிலைநிறுத்த முயன்றனர்.
இக் கட்டத்திலேயே பிராமணரை விலக்கிய ஆன்மீகத் தலைவர்கள் தலையெடுக்கத் தொடங்கினர். அத்தகைய ரிஷிகள், பிரதானமாக சத்திரியர் மத்தியிலிருந்து வந்தனர். அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரமம் பற்றிச் சிந்தித்தனர். இயற்கைக் கடவுளரை வசப்படுத்தும் பிராமணர்களின் யாகங்கள் அர்த்தமற்றன என்றனர். அறிவுத் தேடலில், ஞான மார்க்கத்தில் மட்டுமே பிரமத்தை உணரமுடியும் என இந்த உபநிடதச்சிந்தனையாளர்கள் தமக்கு அருகிலிருந்து பயபக்தியுடன் கேட்கும் சிஷ்யர்களுக்கு போதித்தனர், ஆயினும் வேதத்தை மூலமாகக் கொண்டு, புதிய வியாக்கியானங் கூறலாகவே இம் மாற்றுச் சிந்தனை அமைந்தது. ஆதலால் பிராமண - சத்திரிய சமரசத்துக்குப் பங்கம் நேரவில்லை.
இந்த வேதாந்த நெறி பிரம்மம் எது என்பதற்கு நீயே அது என்று விளக்கம் அளித்தது. அந்த வகையில் ஆன்மா, தானே பிரம்மம் என்பதை அறியும்போது பந்தப்பட்டுள்ள ஏனையவையிலிருந்து விடுதலை பெற்றுவிடும். ஏனையவை மாயை
8 Cossile 8

என்கிற கருத்துமுதல்வாத நிலைப்பட்ட யாக்ஞவல்கியரின் சிந்தனை முறைமையும் அத்வைதமே. உலகம் உள்பொருள் - உப்புக் கரைசலில் மறைந்துள்ள உப்புப்போல பிரம்மம் எங்கும் வியாபித்துள்ளது (உனக்குள்ளும்) எனச் சொல்லும் உத்தாலகரின் பொருள்முதல்வாதச் சிந்தனை முறையும் அத்வைதமே.
பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து சங்கரள் அத்வைதத்தைத் தொகுத்தபோது யாக்ஞவல்கியரின் சிந்தனை முறையையே பின்பற்றிக் கொண்டார். ஆதலால் அத்வைதம் உலகை மாயையெனக் கொள்வது என்ற அபிப்பிராயம் வலுப்பெற்றுள்ளது. உத்தாலகள் போல உலகை உள்பொருளாகக் காணும் அத்வைதத்துக்கு பாரதி சிறந்த எடுத்துக்காட்டு பாரதியின் சிந்தனை முறையை கு.அழகிரிசாமியின் "தவப்பயன்’ சிறுகதையில் காணமுடியும்.
”தவப்பயன்"கடவுளை அடைதலை விடவும் இவ்வுலகில் ஒரு அணிலாகப் பிறத்தல் பேரின்பம் எனக்காட்டுகிறது. 'நான்’ எனும் ஆணவமுடையவராகி, மனிதரே உயர்ந்த உயிரி என்ற கள்வம் எமக்குள் வளர்த்துள்ளது. காக்கைக் குருவி எங்கள் ஜாதி எனக்கூறக்கூடிய அத்வைதிக்கோ அணில் இன்னும் மேலான்து.
சைவசித்தாந்த அடிப்படையில் இக்கதையை அமைத்திருப்பின் நான்' அழிந்தநிலை கண்டதும் இறைவனுடன் இரண்டறக் கலத்தல் ஏற்பட்டிருக்க வேண்டும். இறையின்பத்தையும், உணரமுடியாத பற்றற்ற அந்த ஆன்மாவிடம் 'நான் ஏது? சைவசித்தாந்தம் இவ்வுலகை இறைவன் படைத்திருப்பது ஆணவமலத்தை நீக்குதற்காக எனக்கூறும். அந்தவகையில் இவ்வதீத நிலைக்குப் பின்உலகுக்கு அனுப்புதல் பொருத்தமற்றது. ஆசிரியர் வேண்டுமென்றே சைவசித்தாந்த அடிப்படையை மீறுகிறார். அவர் எந்தச் சித்தாந்தங்களுக்கும் கட்டுப்படாமல், இந்த இயற்கையின் மேலான தன்மையை (கடவுளைவிடவுங்கூட) இக்கதை மூலம் வெளிப்படுத்த முயல்கிறார். இதுவே கதையுடன் மிக அதிகளவில் பொருந்திச் செல்லக்கூடிய வாசிப்பாக அமையும் வேறு வாசிப்புக்களுக்கான சாத்தியமும் உண்டு.
(வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் இருபத்தெட்டாவது பெளர்ணமிக் கருத்தாடல் சந்திப்பின்போது, 300599 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
○ (్యత్
முன் அட்டை படப்பிடிப்பு பி.மாணிக்கவாசகம். இடம் பெயர்ந்த அகதிப்பிள்ளைகளின் எதிர் காலம். 2

Page 6
இரு சிறுகதைகள்- ஒருநோக்கு
1. கனகாம்பரம் - கு.ப.ரா 2. பாற்கஞ்சி - சி. வைத்திலிங்கம்
-LJT.Da51T6SÉJabf6b B.A. (Hons.)-
- குயராஜகோபாலனின் IíLl][i
வ.வே. சு ஐயர். பாரதியார் முதலியோரால் தொடக்கப்பட்ட தமிழச்சிறுகதை பூரணமாக வளர்ச்சி அடைந்த காலம் மணிக்கொடி சஞ்சிகை வெளிவந்த காலமாகும். மணிக்கொடி காலத்தை தமிழச்சிறுகதையின் பொற்காலம் என்றும், மணிக்கொடியில் எழுதிய எழுத்தாளர்களை மணிக்கொடிக்குழு என்றும் அழைப்பது வழக்கம். மணிக்கொடி பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்களில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி வ.இராமையா, கு.ப. இராஜகோபாலன். அழகிரிசாமி ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கு.ப.இராஜகோபாலன் சிறுகதை, கவிதை, ஓரங்கநாடகம், இலக்கியக் கட்டுரை முதலிய பல துறைகளில் தமது ஆற்றலை வெளிக்காட்டி உள்ளார். இவரது சிறுகதைகள் காணாமலே காதல், புனர்ஜென்மம்', கனகாம்பரம்', முதலிய நூற்தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ஏறக்குறைய எண்பத்தைந்து சிறுகதைகள் எழுதியுள்ளார்.
கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகள்.
கு.ப.ரா.உயிருள்ள பாத்திரங்களை உருவாக்குவதில் தனித்திறமை வாய்ந்தவர். ஆண், பெண், உறவு தொழிற்படும் விதம் பற்றிய உளவியற்பாங்கான சித்தரிப்பாக இருப்பதே இவரது கதைகளின் சிறப்பம்சமாகும். இவரது கதைகள் பாலுணர்ச்சி பற்றியதாகவே அதிகம் உள்ளது என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உள்ளது. பெரும்பாலும் ஆண் பெண் உறவுகளால் ஏற்படும் துன்பங்களை பல்வேறு கோணங்களிலிருந்தும் இவர் காட்டியுள்ள .
மனிதனது நுணுக்கமான உணர்வுகளை உயிர்த்துடிப்போடு வெளிக் கொணர்வதால் இவர் பிரெஞ்எழுத்தாளரான மாப்பஸானோடு ஒப்பிடப்படுகிறார். சிறுகதைப் பொருளால் மட்டுமல்ல. உருவக அமைப்பிலும் தமிழ்ச்சிறுகதைக்கு பலம் சேர்த்துள்ளார். புதுமைப்பித்தனை விட கு.ப.ராவே அதிக உருவப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். என்று விமர்சகள்கள் குறிப்பிடுகின்றனர்.
10 Cuorosio 10

கனகாம்பரம்
கு.ப.ராவினால் சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முதல் எழுதப்பட்ட இச்சிறுகதையானது, அவருடைய ஏனைய பெரும்பாலான கதைகளைப் போல ஆண்பெண் உறவுநிலையை அடிப்படையாகக் கொண்டதாகும். முன்பின் தெரியாக ஒரு அந்நிய ஆடவனுடன் படித்த பெண்களே தயக்கமின்றிப் பேசுவது ஓர் அசாதாரண விடயமாகக் கருதப்பட்ட ஒரு சூழலில் இக்கதை நிகழ்கின்றது. இக்கதையில் ஆசிரியர் பெண்கள் பற்றிய பாரம்பரியமான பல சமூக மனப்பாங்குகளையும், நவீன காலத்திற்கேற்ற புதுமையான சமூக நோக்குநிலையையும் எடுத்துக்காட்டி இரண்டையும் முரண்பட வைப்பதன் மூலம் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றார். புரிந்துணர்வின்மையும், சந்தேகங்களுமே கதையோட்டத்தை வளர்த்துச் செல்கின்றன.
ராமு, மணி, சாரதா - பாத்திரப்படைப்புக்கள்
மிகக்குறைந்த பாத்திரங்களை அமைத்து அவற்றை உளவியல் அடிப்படையில் முழுமையாக வளர்த்துச் செல்வதே கு.ப.ராவின்பணியாகும். அவ்வகையில் ராமு, மணி ஆகிய இருவரும் நண்பர்களாகவும், ஒத்த குணவியல்பு உடையவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இவ்விருவரும் உயர்கல்வி நிலையத்தில் கல்வி கற்ற போது
"ஆணும் பெண்ணும் சமமாகப் பழக வேண்டும் என்று மேடைகளில்” பேசிய மிக முற்போக்கான கொள்கையுடையவர்களாக இருக்கின்றனர். எனினும் அந்தக் கொள்கைகளை தம்முடைய வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ள முடியாத முரண்பாட்டை இவர்களிடையே காணலாம். சாரதா தன்னோடு பேசியதால் ராமு அடைந்த தடுமாற்றமும், தன் நண்பனை உள்ளே வந்து உட்காரும்படி அழைத்ததால் மணி கொண்ட விபரீதமான சந்தேகமும் இவர்களுடைய முரண்பாட்டினை எடுத்துக் காட்டுகின்றன. இவர்கள் எவ்வளவு முற்போக்கான கொள்கை உடையவர்களாக இருந்தாலும் பெண்கள் பற்றிய பாரம்பரியமான மனப்போக்கிலிருந்து மாற்றம் அடையாதவர்களாகவே இங்கு காட்டப்பட்டுள்ளனர்.
இக்குறைபாடுகளுடன் ராமுவிடம் சில நல்ல குணங்களும் காணப்படுகின்றன. தன்னுடைய நண்பனின் குடும்பம் குளம்பிவிடக்கூடாது என்பதற்காக அவன் துடிப்பதும், நண்பனின் மனநிலை, அறிந்து நீண்டநேரம் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறுவதும் அவனுடைய நல்ல பண்புகளைக் காட்டுகின்றன.
சாரதாவின் குணவியல்பு, பெண்களின் மென்மையான மனவுணர்வு.
கனகாம்பரத்தில் படைக்கப்பட்டுள்ள ஏனைய இரு பாத்திரங்களைப் போல சாரதாவும் வாழ்க்கை முரண்பாடுடைய ஒருத்தியாகக் காட்டப்படவில்லை. அவள் இறுதிவரை கணவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணாக நடந்துகொள்பவளாகவே ஆசிரியரால் காட்டப்படுகின்றாள். இங்கு சாரதா என்ற பெண்ணின் மென்மையான மனவுணர்வு நான்கு கட்டங்களில் வைத்து விளக்கப்படுகின்றது.
01. சாரதா என்ற கிராமப்புற பெண்ணின் மனநிலை:-

Page 7
சாரதா ஒரு படிப்பறிவற்ற கிராமப்பெண். அவளுடைய நடையுடை பாவனைகளும் கிராமப்புறத்தையே நினைவுபடுத்துகின்றன. ஆனால் கணவன் விரும்பியபடி வாழவேண்டும் என்ற பெண்ணுக்குரிய மனோநிலை அவளிடம் காணப்படுகின்றது. கணவனின் உபதேசத்தை உள்வாங்கி, அதன்படி நடக்க முயற்சிக்கின்றாள். அதன் மூலம் கணவனை மகிழ்ச்சிப்படுத்தலாம் என்ற ஆர்வம் அவளிடம் காணப்படுகின்றது.
02. கணவனின் நண்பன் வந்து போகும் சூழல்
"இதோ வந்து விடுவார். உள்ளே வந்து உக்காருங்கள்” என்று அழைப்பதில் கணவனின் நண்பன் பற்றிய அவளது நம்பிக்கையான மனநிலை வெளிப்படுகின்றது. இதன்மூலம் தான் பட்டண நாகரிகத்திற்கேற்ப நடப்பதாகக் கருதி, கணவன் மகிழ்ச்சி அடைவான் எனும் எண்ணமும் அவளிடம் இருப்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது. இங்கும் கணவர் கருத்தறிந்து நடக்கும் பெண்ணின் மென்மையான மனநிலையைக் 85T60076)Tib.
03. தனது எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்ட நிலை:-
இங்கு கணவன் அவள் மேல் கொண்ட சந்தேகத்தினால் தன் பெண்மை அவமானப்படுத்தப்பட்டதை உணரும் ஒருத்தியாக அவள் காட்டப்படுகின்றாள். கணவனிடம் எதிர்பார்த்த பாராட்டுக்குப் பதிலாக நம்பிக்கையினமே அவளுக்குப் பரிசாக கிடைக்கின்றது. இதனால் கோபம் அடைந்து சடக்கென்று உள்ளே திரும்பிப் போய் விடுகின்றாள். இங்கு தவறான சந்தேகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மென்மையான மனநிலை காணப்படுகின்றது.
04. கணவனை மன்னிக்கும் சூழல்:-
கணவன் தவறு செய்தாலும் அதனை மன்னித்து எதுவுமே நடக்காதது போல நடந்து கொள்ளும் பெண்ணின் இயல்பு இங்கு காட்டப்படுகின்றது. கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே, நீங்கள்சொன்னதில் தப்பென்ன? என்று சாரதா பெண்களுக்கென்றே அமைத்த முறையில் பேச்சை மாற்றி விட்டாள்" என ஆசிரியர் இம்மனநிலையை மிக அழுத்தமாக வெளிப்படுத்துகின்றார். V
கனகாம்பரம் எனும் பூ கதையில் பெறும் முக்கியத்துவம்.
இக்கதையின் தலைப்பு கனகாம்பரம்’ என்பதாகும். கனகாம்பரப்பூ வெளித்தோற்றத்தில் அழகானதாக காணப்பட்டாலும் அது வாசனை அற்ற ஒன்றாகவே உள்ளது. இதனை அடிப்டையாக் கொண்டு நகரப்புற பெண்களின் வாழ்க்கைப் போக்கிற்கு குறியீடாக கனகாம்பர பூவை கதாசிரியர் பயன்படுத்துகின்றார். இவ்விடயத்தை தலைப்போடு மட்டும் விட்டுவிடாது கதையின் உள்ளேயும் எடுத்து மணி என்ற பாத்திரத்தின் ஊடாக விளக்குகின்றார்.
”பட்டணத்துப் பெண்கள் மாதிரித் தான் இருக்கிறது. அவர்கள் வைத்துக் கொள்கிற கானகாம்பரமும், வாசனை இல்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக் கொள்வதுண்டோ? காக்கரட்டான் பூவைத் தலையில் வைத்துக் கொள்கின்ற பெண்களுடைய வாழ்க்கைப் போக்கும் அப்படித் தான் இருக்கும்”
என மணி கூறுகின்றான். இங்கு கதாசிரியரின் நோக்கமாகிய, நகர்ப்புறப்
12 Goisie 12

பெண்களின் வாழ்க்கைச் சிறுமைத் தனங்களை எடுத்துக் காட்ட அவருக்கு கனகாம்பரமே கை கொடுத்தது. .
அதுமட்டுமல்ல, மணி என்ற பாத்திரத்தின் வெளிப்படையாகச் சொல்ல முடியாத மனநிலையை எடுத்துக்காட்டி கதையோட்டத்தை வளர்த்துச் செல்லவும் கனகாம்பரம் உதவுகின்றது.
இது என்ன பூ என்று இதை நித்தியம் வாங்கித் தலையில் வைத்துக் கொள்கிறாய் என்று அவன் அவலை நினைத்து உரலை இடித்தான்
என ஆசிரியர் கூறகின்றார். இதனைத் தொடர்ந்து வரும் உரையாடல்களும் இப்பகுதியில் அந்நிய ஆடவன் ஒருவனை வீட்டிற்கு அழைப்பதால் மணியின் மனதில் ஏற்பட்ட அதிருப்தியையும் விபரீதமான சந்தேகங்களையும் சாரதாவிற்கு வெளிப்படுத்த கனகாம்பரப் பூ பயன்பட்டதைக் காட்டுகின்றது.
இதைப்போலவே "கனகாம்பரம் எனக்குபிடிக்காதே’, பெண்களுக்குகென்றே அமைந்த முறையில் பேச்சை மாற்றிவிட்டாள் என கதையின் இறுதிப் பகுதியிலும் கனகாம்பரப் பூ இடம் பெறுகின்றது. இங்கு கோபம் மாறி கணவரின் தவறை மன்னித்து சமாதானமாகிப் போகின்ற பெண் இயல்பை வெளிப்படுத்தவும் கதையை முடித்து வைக்கவும் கனகாம்பரப்பூவே பயன்படுகின்றது.
கு.ப.ராவின் உரைநடைச் சிறப்பு
கு.ப.ரா. கையாண்ட தனித்துவம் மிக்க உரைநடை, அவர் சொல்லவந்த கதைப் பொருளை வெளிப்படுத்தப் பெரிதும் துணை நின்றது. மென்மையான உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கேற்ற உரையாடல்களையே அவர் பிரயோகித்தார். அவர் கையாண்ட சொற்கள் உணர்வு, குறிப்பாற்றல் கொண்டனவாகவும், கவிதைப் பண்பு கொண்டனவாகவும்
காணப்படுகின்றன.
"மிருதுவான பாஷையில், கம்பீரமான உணர்ச்சி நிலையை வருணிப்பதில் ராஜகோபாலன் தனிப்பட்ட கலைஞன்”
என வ. ராமையா கூறுகிறார்.
"சாரதா. என்று சொல்லி மேலே பேசமுடியாது நிறுத்தினான். வேண்டாம் என்று அவனது முகத்தை தடவினாள்.”
இங்கு முதல் வாக்கியத்தில் தான் மனைவி மேல் தவறாக சந்தேகப்பட்டதாக வருந்தி மன்னிப்புக் கேட்கத் துடிக்கும் மணியின் மனநிலை சொல்லாமல் விளங்கவைக்கப்படுகின்றது.
அடுத்த வாக்கியம் கணவனின் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் சராதாவின்

Page 8
மனநிலையைக் காட்டுகின்றது. இரு சிறு வாக்கியங்களால் பெரும் போராட்டத்தில் சிக்கியிருக்கும் இரு பாத்திரங்களின் மனநிலையைத் தூண்டிவிட்டு வாசகர்களின் கற்பனையை தூண்டிவிடுகின்றார்.
ஆசிரியரின் உரைநடையில் உள்ள சிறப்பம்சம், வாக்கியங்களை காரணகாரிய அடிப்படையில் அமைப்பதாகும். கதையின் தொடக்கமே மணி என்று வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான் என அமைகின்றது. அவன் உள்ளே செல்லாமல் வெளியே நின்றதற்கான காரணம், அடுத்த வரியில், "நண்பன் விட்டில் இருக்கின்றானோ, இல்லையோ என்ற சந்தேகம்” என எடுத்துக்காட்டப்படுகிறது. இப்பண்பினை கதைமுழுவதும் காணலாம்.
தான் கூறும் விடயத்தை மேலும் அழுத்திக்கூற விரும்பும் போது கேள்விகளை அடுக்கி அவற்றை மனதில் பதிப்பது ஆசிரியரிடம் காணப்படும் இன்னோர் அம்சமாகும்.
”அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அறியாமையோ, மணிக்கு கோபத்தை உண்டாக்கினால்? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார் கண்டார்கள்?" என்னும் பகுதியில் இதனைக் காணலாம்.
தேவையான இடத்தில் சிறு சிறு வாக்கியங்களை அமைப்பதும், மரபுச்சொற்கள், உவமைகள் என்பவை பயன்படுத்துவதும், பாத்திர உரையாடல்களை குறைத்துத் தானே கதையினைக் கூறிச் செல்வதும அவரிடம் காணப்படுகின்ற ஏனைய சிறப்புக்கள்.
வைத்திலிங்கத்தின் - பாற்கஞ்சி
1. ஈழத்துச் சிறுகதைகள்
ஈழத்திலே சிறுகதை 1930 களின் பிற்பாதியிலேயே தோற்றம் பெறுகின்றன. ஆங்கிலேயர் வரவினால் ஏற்பட்ட புதிய சமுதாய மாற்றமும் ஆங்கிலக் கல்வியறிவும், தமிழக சஞ்சிகைகளில் எழுதிய தமிழக எழுத்தாளர்களின் பாதிப்பும் ஈழத்தில் சிறுகதை தோன்றக் காரணமாக அமைந்தன. இவ்வகையில் இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம், க.தி.சம்பந்தர் ஆகியோர் ஈழத்துச் தமிழ்ச்சிறுகதையில் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தனர். இம் மூவரும் ஈழத்துத் தமிழ் சிறுகதையின் முன்னோடிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களோடு சோ. சிவபாதசுந்தரமும் குறிப்பிடத்தக்கவார். இவர்களது கதைகள் கலைமகள் , கிராம ஊழியன், சூறாவளி, மணிக்கொடி, ஆனந்தவிகடன் முதலிய தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளில் வெளிவந்தன. ஈழகேசரியும் இவர்களது முயற்சிகுக் களமாக அமைந்தது.
2. சி. வைத்திலிங்கம்,
ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளில் சி.வைத்திலிங்கத்தின் கதைகளே இலக்கியத் தரத்தில் முதலிடம் பெறுவதாக பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவர். இவர் மிகக்குறைவாக முப்பதிற்கு உட்பட்ட கதைகளையே எழுதியுள்ளார். அவற்றுள் வரலாற்றுக் கதைகளும், சமூகக் கதைகளும், ஆண் பெண் உறவைச்சித்திரிக்கும் கதைகளும் உள்ளன. ஆண்பெண் உறவைச் சித்திரிக்கும்
14 Corsio 14

கதைகளில் கு.ப.ராவின் செல்வாக்கு இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
8. பாற்கஞ்சி
இக்கதையானது ஒரு ஏழைக்குடும்பத்தின நிறைவேறாத ஆசைகளைப் பாற்கஞ்சியைக் குறியீடாகக் கொண்டு சித்தரிக்கின்றது. சிறுதேவை யொன்றைக் கூட நிறைவேற்றுவதில் அக்குடும்பத்துக்குள் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் சோகங்களும் இக்கதையில் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன.
4. "எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களுமே கதையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
(வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டநிகழ்வு -23 இல் (01-01-1999) வாசிக்கப்பட்டது)
III|محمجھی جس மாருதம் 2 வெளியீட்டின்போது பேராசிரியர் சு.மோகனதாஸ் முன்னிலையில் நாடகக் கலைஞர் எஸ்.ரி. அரசு அவர்களுக்கு நாடகச்செல்வம் விருது வழங்கிக் கெளரவிப்பவர் முன்னாள் வவுனியா பிரதேச செயலாளரும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருமாகிய திருமதி எமல்டா சுகுமார் அவர்கள்.

Page 9
56 M0
கொழுத்த குட்டி ஆடொன்றின் உயிர்ச்சுவையின் மெச்சி சொக்கிக்கிடக்கிறது அசைவற்று
வயிறு வீங்கிய வெங்கிணாந்தி நீண்டு நிமிர்ந்து அசைநதசைநது அரைந்துரைந்து வளைந்து குறாவிக் கிடக்க பிடிக்காத இக்கணப் பொழுதேயதன் சீவிப்பின் தவமாயுமிருக்கலாம்.
சுருள்சுருளான அப்பாம்பின் மாயதசைப் பொறிப் பிடியில் சிக்குண்டு நசுங்குண்டு
மெய்மெய்யெனக் கத்திக்கதறி பாம்பின் கொடுவாயுட் செலுத்தப்படுமிக் கொடுங்கணத்தில் அவ் ஆட்டுக்குட்டியின் தவம் எதுவாய் இருக்கும்.
கே.சிவஞானம் 6/6/6 fluit.

வெண்புறாவே சீக்கரமே வந்துவிடு11
வெண்புறாவே! வெண்புறாவே - உந்தன்
வண்ணச் சிறகசைந்து
பறந்து நீ வந்துவிடு!
வறண்டதெம் மனங்களில் வாரிநீ பாலை வார்த்து விடு
(အဲ့အနေ உண்மைகளை
றியச் செய்துவிடு!
குலைந்த நீதி - நிம்மதி இங்கே
உதயமாகிடச் செய்துவிடு!
6. (E குருதி குளிப்பாட்டிய
தென்றல் தாலாட்டி - அதை குதூகலம் பொங்க விடு! புதைந்து மண்ணோடு மண்ணாய் மாண்டுவிட்ட மனிதத்தை புனிதமாய் பொங்கிப் பிரவகிக்க விடு - எங்கள் மண்ணில் நாங்கள் மகிழ்ந்தே வாழ வந்துவிடு! உன்னை அறியாது நாளைய எம் சந்ததியாவது வந்து போகக் கூடாது உந்தன் சிறகின் நிழலில் - நாம் சேர்ந்தே - நீந்தி விளையாட (8660öTGLDiDLDIT சவம் மலிந்து போன தேசத்தில்
சந்தோஷ மலர்தூவிவிடு ஆண்டாண்டு காலமாய் - நாம் ஆண்டு வந்த தேசத்தில் சுதந்திர தாகம் தணிய நிம்மதியாய் - நாம்வாழ வழிவகுத்துத் தந்துவிடு! வெண்புறாவே வெண்புறாவே உனது எழில் மிகு சிறகசைத்து பறந்து நீ! சீக்கிரமே வந்துவிடு வெண்புறாவே! வண்ணச்சிறகசைத்து பறந்து நீ வந்துவிடு!
னாட், வவுனியா
நன்றி ஒளியைநோக்கி சித்திரை ஆனி 2002

Page 10
6))
義が暮 Hラsル
صے 名
李 @
ܔܓ
ଗାଁ
i
த்தனைநாளைக்குத்தான் ଜୋT ரியப்போகிறது இந்த விளக்கு
த்தனை புயல்களிற்கு இந்த விளக்கு இலக்கு விரைவில் அணைந்துவிடும் ஒரு விதவைச்சோகத்தோடு மனம் கூறிக்கொள்ளும்
ஒரு தசாப்தம் நிறைவுற்றது அணைவது போல் இருக்கையில் அடிக்கடிதுலங்குவது அதன் இயல்பு
இப்பொழுதும் கூட
மனம் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை
பஞ்சபூதங்கள் சேர்ந்து சதிசெய்தது எப்படியோ அனைத்துவிடவேண்டும் என்பதில் குறியாய் இருந்தது வங்காள தாழமுக்கம் வந்து இறங்கியது அந்தக் கொடுமழையிலும் அட எரிகிறதே
இப்பொழுது மனம் அடிக்கடிசொல்லாமல் மகிழ்ச்சி கொள்ளும் அந்த விளக்கு என் மனக்கண்ணில் விடியலைப் புதுப்பிக்கும் விளக்காய் பிரகாசிக்கும் அர்ப்பணிப்புக்கள் என்னும் எண்ணை அதை அணைய விடப்போவதில்லை.
அளவையூர் தனசீலன் வவுனியா.

solidafiuli) joiGITUiLGuibitis (b.
ஏதுமறியா எதிரிகள் எதற்காகச் சிறையில்? இனிமையான இளமையை எவனிடமோ தொலைத்துவிட்ட அபலை வாழ்வுதான் அவர்களுக்கா?
கருவைச் சுமந்த கருவறையே கதி கலங்கி நிற்கிறதே, காரணமில்லாத கைதியின் சிறைவாழ்வை எண்ணி!
அன்றோ அக்கிரமத்திற்காகச் சிறைவைக்கப்பட்டார்கள். இன்றோ பார்த்தாலும் பயங்கரவாதம் கேட்டாலும் பயங்கரவாதம் தெரியாமல் இருந்தாலும் பயங்கரவாதம் விளக்கமின்றியே வருடங்கள் கழியும் நாதியற்ற பாவிகளைப் பரிதவிக் வைத்துவிடும் பயங்கரவாதக் தடைச்சட்டம் - இச்சட்டம்தான் எமக்கெதற்கு
அரசியல் வாதிகளின் வாக்குறுதி அக்கினியில்தள்ளப்பட்டவருக்கு ஆறுதலைத் தராது மாறாகக் காலத்தை ஒட்டிவிடும் உறவுகளை பிரிந்து சந்தோசம் களை இழந்து எதிர்காலத்தை இழந்தவருக்கு சராசரி மனித வாழ்வைக் வாழவிடு அவர்களை விடுதலை செய்!
உதாசீனத்தாலும் உடல் வதைப்புக்களாலும் ஒடுங்கிப் போன அவள்களின வாழ்வுக்கு உரமேற்றி உரக்கச் சொல்லுங்கள் அவனை விடுதலை செய்யென! எவரும் சொல்லாவிட்டால் விட்டு விடுங்கள் வரலாறு சொல்லட்டும்! சிறை சென்ற மைந்தன் உதாசீனம் செய்யப்பட்ட தமிழனென்று!

Page 11
  

Page 12
பதிவுகள்(1)
வவுனியாவில் ஒரு கலை விழா!
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஐந்தாண்டு நிறைவு நிகழ்வு கடந்த மாதம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்கலாசார மண்டபத்தில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஐந்தாண்டுகளுக்கு மேலாக மாதம் தோறும் முழுநிலா நாளன்று முற்பகல் பதினொரு மணிதொடக்கம் ஒரு மணிவரை இரண்டு மணிநேரம் கலை இலக்கியம் தொடர்பான கருத்தாடல்களையும், நூல் வெளியீடுகளையும், விமர்சனநிகழ்வுகளையும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நிகழ்த்தி வந்துள்ளது.
வெவ்வேறான கொள்கைகளையுடையவர்கள் ஒன்றுகூடி கருத்தாடல்களை நிகழ்த்துவதற்கான களத்தை கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஐந்தாண்டுகளாக வவுனியாவில் முழு நிலா கலை இலக்கிய நண்பர்கள் கூடல் ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக அமைந்ததை அதன் ஐந்ததாண்டு நிறைவு நிகழ்வில் காணமுடிந்தது. அவற்றை விளக்கமாகப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.
இந்த நிகழ்வில் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மாமனிதர் விருது வழங்கி கெளரவித்த எஸ்.ரி.அரசுக்கு கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் "நாடகச் செல்வர்” என்ற பட்டமளித்துக் கெளரவித்தனர்.
கலாபூசணம் முல்லைமணி, வே.சுப்பிரமணியத்திற்கு ”இலக்கியச்செல்வர்” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.
இருவருக்கும் மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் கெளரவிக்க, வவுனியா பிரதேச செயலாளர் திருமதி மேரி ஆன் இமெல்டா சுகுமார் விருதினை வழங்கி கெளரவித்தார்.
ஐந்தாண்டு நிறைவு நிகழ்வில் மேற்படி வட்டத்தினரால் "மாருதம்" என்ற கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மாருதம்காலாண்டு இதழாக வெளிவருவதற்கான எண்ணத்தையும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வெளியிட்டுள்ளது. வவுனியாவில் வெளியிடப்படும் இந்தச் சஞ்சிகை மண்ணின்
2 அமருதம்-அ 2

மைந்தர்களால் ஆதரவு கொடுக்கப்படும் பட்சத்தில தொடர்ந்து வெளிவரக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
21.02.1997 ஆம் ஆண்டு முழுநிலா நாளன்று கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கலை நிகழ்ச்சிகளையும் மேடையேற்றி உள்ளுர் கலைஞர்களையும் ஊக்குவித்து வருகின்றது. ஐந்தாண்டு நிறைவு நிகழ்வில் செல்வன் பத்மநாதன் சிவமைந்தனின் நூறாவது மேடையமர்வாக இசை நிகழ்ச்சியும், வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டியப்பள்ளி, நிருத்ய நிகேதனம் ஆகியவற்றின் மாணவர்கள் அளித்த நடன நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்தன.
பிரதம விருந்தினர் திருமதி இமெல்டா சுகுமார் வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் ஆகியோர் அங்கு உரையாற்றினர்.
நிகழ்வில் சிறப்புரைகளை இந்து இளைஞர்சங்கத்தலைவர் நா.சேனாதிராஜா, இந்து மாமன்ற தலைவர் சி.ஏ.இராமசாமி, யாழ். மத்திய கல்லுTரியின் முன்னாள் அதிபர் நாக. சண்முகநாதப்பிள்ளை ஆகியோர் நிகழ்த்தினர்.
நன்றி யுரையினை யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாக ஆங்கில விரிவுரையாளர் கந்தையா முறி கணேசன் நிழ்த்தினார்.
தம்மான்-19.05.2002 வீரகேசரி

Page 13
  

Page 14
பண்பாட்டின் அடியாக ஒரு பாடல்
பல்லவி
எங்கும் சமாதான வெள்ளம் வழிந்தோட இன்னருள் தர வா குகா சிங்களம், தமிழ் ரெண்டும் செங்களம் ஆடாமல் வாழ்ந்திட வரந்தா குகா.
(எங்கும்)
அனுபல்லவி
அடிதடி வாழ்வினால் பட்டதெல்லாம் போதும் விடிவினை தரவா குகா மிடியெனும் கடலினில் முடிவின்றி வாடிடும் படி செய்தல் முறையோ குகா
(எங்கும்)
சரணம்
ஆணவம் என்றொரு சூரனை கொன்றவா அமைதியை தரவா குகா ஆனந்த வாழ்வெனும் இன்பத்தில் ஆடிடா
ஞானத்தை நீ தா குகா.
(எங்கும்)
இராம. நகுலேஸ்வரன்.

தமிழை வளர்ப்போம்
alatai.
”தமிழ்”, “தமிழ்”, என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறோம். தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று உணர்ச்சிக் குரலாக உரிமைக்குரல் எழுப்புகிறோம்.
ஆனால் எங்களில் பலர் தமிழில் கையெழுத்துக்கூட வைப்பதில்லை. கையெழுத்து வைக்கக் கூட லாயக்கில்லாத மொழியா தமிழ்மொழி.
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களில் கூட தமிழில் கையெழுத்து வைப்போரைக் காண்பதரிது. தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்ற பட்டதாரிகள் கூட தமிழில் கையெழுத்திடுவதில்லை.
தமிழ்ப்பேராசிரியர்களில் கூட தமிழில் கையெழுத்திடுவோர் நம் நாட்டில் மிக அருமை என்றே சொல்லலாம். இந்த லட்சணத்தில் மாணவர்களைக் குறை கூறி என்ன Lju 6őT.
பாடசாலைகளில் தமிழில் கையெழுத்திடும் மாணவனைக் காண்பது மிக மிக அரிதாகவிட்டது. கையெழுத்து என்றால் அது ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டுமென்ற அறியாமைப்புத்தி அடிமைப்புத்தியாய் எங்களில் ஊறிவிட்டது.
எவ்வளவு இழப்புக்களை, எத்தனை விதமான போராட்டங்களை, இரத்தச் சேறுகளைக் கண்டபின்னும் இன்னும் இவ் இழிநிலை என்றால் எம்மக்களுக்கு என்ன நடந்தது. தமிழினம் என்ன எருமை மாட்டிலிருந்து கூர்ப்படைந்த இனமா என்றுதான் கோபத்தோடு எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இன்று இருக்கின்றோம், என்பதைக் கட்டாயம் தமிழர் யாவரும் சிந்தித்தேயாகவேண்டும்.
முற்காலத்தில் தமிழ் வளர்த்த பெரியோரை எவ்வகையில் மன்னர்கள் ஆதரித்தார்கள் கெளரவித்தார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. தமிழைப் புலவர்கள் வளர்க்க புலவர்களைப் புரவலர்கள் பாதுகாத்துப் பரிசளித்துக் கெளரவித்தனர்.
சங்ககாலம் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்படும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலத்தில் வாழ்ந்த புலவர்களைச் ”செந்நாப் புலவர்” என்று அழைத்தனர்.
சங்க காலப் புலவர்களிலே மிகப் பெரும் சிறப்புப்பெற்ற புலவரான கபிலர்,
பாரிவள்ளலைப் புகழ்ந்து பாடிய பாடலொன்றில் 'பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்” என்று பாடுகின்றார்.

Page 15
செந்நாப் புலவர்களாகிய சங்கப் புலவர்கள் அக்காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். போற்றப்பட்டார்கள்.
அரசர்களின் சபைகளில் அரசர்களுக்கு அறிவுரை வழங்குபவர்களாக அவர்களே விளங்கினர். அதிகமானின் சபையில் ஒளவையாரும். பாரியின் சபையில் கபிலரும் பெருமதிப்புப் பெற்றிருந்ததைப் புறநானூறு என்னும் சங்க இலக்கியம் காட்டுகிறது.
புலவர்களை அரசர்கள் ஆதரித்த விதத்தை இன்று நினைத்தால் ஆச்சரியம் மிகுகிறது. சங்ககாலப் புறத்தினை நூலாகிய பதிற்றுப்பத்து என்ற நூலைப் பாடிய புலவர்களுக்குச் சேரநாட்டு மன்னர்கள் வழங்கிய பரிசுகள் பற்றிய விபரங்கள் பிரமிப்பை ஊட்டுகின்றன.
சேர மன்னர்கள் பத்துப் பேரின்மேல் பத்துப்புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுப்பே இப் பதிற்றுப்பத்து நூலாகும்.
இப்போது இந்நூலில் முதற்பத்தும், இறுதிப்பத்தும் தவிர்ந்த ஏனைய எட்டுப்பத்துக்களே தான் எஞ்சியிருக்கின்றன.
இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டுர்க் கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனிடம் உம்பற் காட்டு ஐஞ்ஞாறுார் பிரமதாயமும், முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு, தென்னாட்டுள் வருவதனிற் பாதியும் பரிசாகப் பெற்றார். (பிரம தாயம் - அந்தணர்களுக்குக் கொடுக்கும் இறையிலி நிலம்)
மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கெளதமானர், இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்புகழ்க் குட்டுவன் மூலம் சுவர்க்கத்தையே பெற்றார்.
நான்காம் பத்தைப் பாடிய காப்பியற்றுக் காப்பியனார், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற அரசனிடம் நாற்பது இலட்சம் பொன்னும், அவன் அரசாண்ட இராச்சியத்தில் பாதியும் பரிசாகப் பெற்றார்.
ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார்.
ஆறாம் பத்தைப் பாடிய காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், சேரலாதனிடம் அணிகலன் செய்யத் துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பரிசாகப் பெற்றார்.
ஏழாம் பத்தைப் பாடிய கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனிடம், நூறாயிரம்
பொற்காசும், நன்றா என்ற குன்றின்மேல் ஏறிநின்று கண்ணில் கண்ட நிலமனைத்தும் பரிசாகப் பெற்றார்.
28 Gமருதம் அ 28

எட்டாம் பதத்தைப் பாடிய அரசில்கிழார். தகடுரெறிந்த பெருந்சேரல் இரும் பொறை என்னும் அரசனிடம் அவனது சிம்மாசனத்தையே பரிசாகப் பெற்றார்.
ஒன்பதாம் பத்தைப்பாடிய பெருங்குன்றுார்க் கிழார், இளஞ்சேரல் இரும்பொறையிடம், முப்பத்திரண்டாயிரம் பொற்காசும், ஊரும், மனைவளமும் பிறவும் பரிசாகப் பெற்றார்.
பாரிமுப்பத்தாறு ஊர்களைப் புலவர்களுக்கும், பாணர்களுக்கும் பரிசாகக் கொடுத்தான். குமணன் பெருந்தலைச் சாத்தனார் என்ற தமிழ்ப்புலவருக்குத் தன் தலையையே பரிசாகக் கொடுத்தான்.
இப்படியெல்லாம் புலவர்களைச் சங்ககால மன்னர்கள் மதித்தார்கள் போற்றினார்கள். தமிழ்ப் புலவர்கள் மூலம் தமிழை அவர்கள் வளர்த்தார்கள்.
பிற்காலத்தில் குறிப்பாக சோழர்காலத்தில் பெரும் புலவர்களைச் சோழர்கள் பெரிதும் ஆதரித்தார்கள். பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தார்கள்.
மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி, ஈட்டி எழுபது முதலான நூல்களைப் பாடி கவிராட்சதன் எனப் பாராட்டப்பட்ட ஒட்டக் கூத்தருக்கும். கலிங்கத்துப் பரணியைப் பாடிய சயங்கொண்டாருக்கும், இராமாயணத்தைப்பாடிய கம்பருக்கும் ”கவிச் சக்கரவர்த்தி” என்ற விருது வழங்கிக் கெளரவித்தார்கள்.
கலிங்கத்துப் பரணி என்ற நூலைச் சயங்கொண்டார் பாடிக்கொண்டிருக்கும்போது அவரது ஒவ்வொரு கண்ணிக்கும் (பாடல்) ஒவ்வொரு பொற்தேங்காயைப் பரிசளித்தான் குலோத்துங்கன் என்பார் பூரணலிங்கம் பிள்ளை.
முரசுகட்டிலிலே படுத்துக் கிடந்து, மரணதண்டனைக்குரிய பெருங்குற்றத்தைச் செய்திருந்த மோசிகீரனார் என்ற புலவரை மன்னித்து, அவரின் களைப்பைப் போக்கி நித்திரைக்குத் துணைசெய்ய, தகடுரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன் தன் கையில் கவரிகொண்டு வீசினானன் என்ற செய்தி சங்க காலத்தில் புலவர்களுக்கு மன்னர்கள் கொடுத்த பெரும் மதிப்பைத் துல்லியமாகக் காட்டுகின்றது.
நீண்ட நாட்கள் நோயின்றி உயிர்வாழச் செய்யவல்ல அரிய நெல்லிக் கனியொன்றைப் பெருமுயற்சியால் பெற்று வந்த அதிகமான் அந்நெல்லிக் கனியை ஒளவை யாருக்குக் கொடுத்துத் தமிழை வளர்த்தான்.
சோழர் காலத்தில் சேக்கிழார் பெருமான் பெரியபுராணம் பாடியதைக் கெளரவிப்பதற்காக அநபாய சோழன், அவரைப் பட்டத்து யானையின் அம்பாரியில் தன் அருகில் இருத்தி, அவரின் வியர்வை போக இரு கைகளிலும் கவரிகொண்டு வீசி, வீதிஉலா வந்தான் என்ற செய்தி புலவனுக்கு, மன்னர் செய்த மரியாதையின் உச்சம் என்றே குறிப்பிடலாம்.
29 Caisieo 29

Page 16
மன்னர்கள் மட்டுமன்றி வள்ளல்கள் பலரும் பெரும் புலவர்களை ஆதரித்திருக்கிறார்கள். கம்பனைச் சடையப்ப வள்ளலும், பிற்காலத்தில் சீறாப்புராணம் என்ற இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடிய உமறுப்புலவரை சீதக்காதியும் ஆதரித்தாகத் தகவல்கள் உண்டு.
புகழேந்திப் புலவரை சந்திரன் சுவர்க்கி என்ற மன்னனும், வில்லிபுத்துராழ்வாரை வக்கபாகை வரபதி ஆட்கொண்டான் என்ற மன்னனும், ஆதரித்ததாக அவர்கள் பாடல்கள் சான்று பகர்கின்றன.
பாவம் பாரதி நமக்குச் சற்றுமுன் வாழ்ந்த மகாகவி அவன், பாரதியின் வறுமை மிகவும் கொடுமையானது. பாடுபொருள்களைப் பலவாகக் கொண்ட பாரதிக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொருள் மிகக் குறைவாகவே இருந்தது.
அவனை ஆதரிக்கப் பலரும் அஞ்சினர். அவனது மரணச் சடங்கில் கூட பதின்நான்குபேர் மட்டுமே கலந்து கொண்டதாக அறியும் போது பாரதிகாலத்து நிலை எப்படி இருந்தது என்பது புலனாகின்றது.
கவியரசு வைரமுத்து மிகவும் வேதனையோடு சொன்னான். பாரதியின் பிணத்தில் மொய்த்த இலையான்களின் எண்ணிக்கையளவுக்குக் கூட மரணச் சடங்கிற்கு மக்கள் வரவில்லை என்று.
நாட்டுக்கு நல்லதைச் சொல்லும், தமிழ் வளர்க்கும் புலவர்களின் நிலை இதுதான். தமிழை வளர்க்க இன்று தமிழர்கள் பலர் தயாராக இல்லை.
மொழியையும், மொழியினுடாகத் தெரியவரும் பண்பாட்டு விழுமியங்களையும் கைவிட்டுவிட்டால் எமது தனித்துவத்துக்குரிய அடையாளங்களே அழிந்துவிடுமல்லவா.
மொழி வெறும் தொடர்பு ஊடகம் அல்ல. அதனைத் தாண்டி அதன் பயன்பாடு அதிகம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
எனவே தமிழர்களே தமிழை வளர்ப்போம். தன்மானம் காப்போம். தருணம் இதே. வாழ்க தமிழ், வளர்க்க தமிழ்க்கலைகள், ஓங்குக எம் உயர் பண்பாடு.
 

தமிழில் முதல் வரலாற்று நாவல் - மோகனாங்கி
இலக்கியச் செல்வர் கலாபூஷணம் முல்லை மணி வே.சுப்பிரமணியம்.
நாவல் என்னும் சொல் புதுமை என்னும் பொருள்படும். தமிழில் இதனைக்
குறிக்க நவீனம், புதினம் என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் ஏற்கனவே பெருவழக்காக இருக்கும் காப்பியம், பிரபந்தம் என்னும் செய்யுள் வடிவிலான இலக்கிய வகையிலிருந்து வேறுபட்டுப் புதிய வடிவில் அமைந்திருப்பதாலேயே நாவல் என வழங்கப்படுகின்றது. நாவல், பழைய இலக்கிய வடிவங்களிலிருந்து பின்வருமாறு வேறுபடும் 01. நாவல் வசன வடிவில் அமையும். 02. நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களையும், கதைமாந்தரையும்
கொண்டிருக்கும். 03. கதையில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் நம்பகத் தன்மை வாய்ந்ததாக இருக்கும். 04. நாவல் வெறுமனே கதைமட்டுமன்று, கதைக்கு அப்பாலும் சமுதாயத்துக்குச் சில
செய்திகளைக் கூறும். 05. ஒரு கதையினுடாக ஒரு சமுதாயத்தின் பண்பாட்டம்சங்கள், விழுமியங்கள் பலங்கள்,
பலவீனங்கள் முதலியவற்றை நாவல் சித்திரிக்கும்.
"வசன வடிவிலே குறிப்பிடத்தக்க அளவு நீளமுடையதாகவும் பாத்திரங்களின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப் பொருளில் அமைத்து அவற்றின் உணர்ச்சி மோதல்களையும் சித்தரிப்பது நாவல்” என வரைவிலக்கணம் கூறுவார்.
இந்த வரைவிலக்கணம் நாவல் வளர்ச்சியடைந்த நிலையில் தோன்றியது. ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் இங்கிலாந்திலும் எழுதப்பட்ட ஆரம்ப கால நாவல்கள் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையும் காதல் உணர்வுகளையும் சித்தரிக்கும் பண்புடையனவாக இருந்தன.
ஈழத்தின் முதல் நாவலாகக் கருதப்படும் அறிஞர் சித்திலெப்பையின் அசன் பேயின் கதை (1885) மர்மச் சம்பவங்களுடனும் வீரசாகசச் செயல்களுடனும் எழுதப்பட்டது.
நாவல் நிகழ்கால வாழ்க்கையை மட்டுமன்றி இறந்த கால, எதிர்கால வாழ்க்கையையும் சித்திரிக்கலாம். கடந்த கால வாழ்க்கை அம்சங்களை மையமாகக் கொண்ட நாவல் வரலாற்று நாவல் எனப்படும். மனிதன் சந்திரனில் காலடி வைப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே அறிஞர் எச்.ஜி.வெல்ஸ் First man in the moon (சந்திரனில் முதல்மனிதர்கள்) என்னும் எதிர்காலத்தைச் சித்திரிக்கும் நாவலை எழுதினார்.
நாவலாசிரியன் ஒருவன் கடந்த கால வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, அக்கால அரசியல்நிலை, ஆட்சிமுறை, பொருளியல், சமயம், பண்பாடு முதலியவற்றின் சூழ்நிலைகளையும் அவற்றின் இயக்கப் பண்புகளையும் வரலாற்றுக்கு முரண்படாத வகையில் வாசகரின் மனதில் கால உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கலைச் சுவையுடன் வடித்துக் காட்டுவானேயானால் அதனை வரலாற்று நாவல் எனக் கூறலாம்.

Page 17
தமிழிலுள்ள வரலாற்று நாவல்கள் ஆட்சித் தலைவர்களையும் அவர்களைச் சார்ந்த உயர்மட்ட மாந்தரையும் நாயகர்களாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் வாழ்ந்த சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை, பண்பாட்டம்சங்களை அடிநாதமாகக் கொண்டு எழுதப்படுபவையும் வரலாற்று நாவல்களே.
பெரும்பாலும் வரலாற்று நாவல்களும், நாடகங்களும், காவியங்களும் கடந்த காலத்தின் மேன்மையையும், சிறப்பையும் நினைவுகூர்ந்து பெருமிதமடையும் நோக்கிலேயே எழுதப்படுகின்றன. தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் ஒரு சமுதாயம் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதும் அங்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்த தலைவர்களின் நாட்டுப்பற்று, வீரம் முதலானவற்றை நினைவு கூர்வதும் வரலாற்று நியதியாகும்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி முதலிய நாடுகளில் தேசிய உணர்வு பொங்கி எழுந்தபோது அதனை மேன்மேலும் வளர்ப்பதற்கு அந்த நாடுகளின் பழம்பெருமைகளைக் கலைகளின் மூலம் மக்களுக்கு உணர்த்த முயன்றனர். இதனை உணர்ந்த வரலாற்று நாவல்களே ஏற்றனவாக அமைந்தன.
ஏறக்குறைய இதே நோக்குடனேயே சங்கிலியன், பண்டார வன்னியன், கயிலைவன்னியன் வரலாறுகள் கலைப்படைப்புக்குப் பயன்பட்டுள்ளன.
தமிழில் எழுந்த முதல் வரலாற்று நாவல் மோகனாங்கியாகும். இதனை எழுதியவர் ஈழத்தவரான திருகோணமலை தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆவர். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் கீழைத்தேயச் சுவடி நிலையத்தின பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். அப்பணிபுரிந்த வேளையில் தாம் மேற்கொண்டிருந்த வரலாற்றாராய்ச்சியின் பயனாக கிடைத்த ஊக்கத்தால் மோகனாங்கி நாவலை எழுதினார். இந்த நாவல் 1895ம் ஆண்டு சென்னை யூனியன் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதே நாவல் 1919 இல் 'சொக்கநாத நாயக்கள் என்னும் பெயரில் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஆட்சி புரிந்த சொக்கநாத நாயக்கன் (1659 - 1682) தஞ்சாவூர் ஆட்சித்தலைவன் விஜய ராகவ நாயக்கன் (1640 - 1673) ஆகியோரின் ஆட்சிக் காலப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டது. மோகனாங்கி நாவலில் விஜயராகவ நாயகனின் மகளான மோகனாங்கிக்கும் சொக்கநாத நாயக்கனுக்கு மிடையே ஏற்பட்ட காதலும் அது சம்பந்தமாக திருச்சிராப்பள்ளி, தஞ்சவூர் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட போரும் இந்நாவலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இரு நகரங்களிலும் ஆட்சிபுரிந்தவர்களிடையே நிகழ்ந்த அரசியல் போட்டியின் பகைப்புலத்தில் காதல், வீரம், சூழ்ச்சி முதலியவற்றைப் பொருத்தி வரலாற்று நாவலைப் புனைந்துள்ள தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழில் வரலாற்று நாவல் துறையின்முன்னோடியாக அமைகிறார்” எனக் கலாநிதி நா.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்.
32 3ருதம்-அ 32

இந்த நாவலை மதிப்பிட்டுள்ள சோ.சிவபாதசுந்தரமும் பெ.கோ. சுந்தர ராஜனும் a on சமகால நடப்பியலையும் வெறும் கற்பனையையும் தாண்டி, உண்மை வரலாற்றுச் சம்பவங்களை சரித்திர உணர்வுடன் ஓர் ஒப்பற்ற நாவலாக எழுதியுள்ளார் சரவணமுத்துப்பிள்ளை, வரலாற்று நாவல் என்ற வகையில் சரவணமுத்துப்பிள்ளை தனிப்பட்ட சிறந்த முன்னோடியாக விளங்குகிறார்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
9ʻy
மோகனாங்கி தமிழ் நாட்டினைக் களமாகக் கொண்டபோதும் ஈழத்துப் பேச்சுவழங்குகள் இடம்பெற்றுள்ளமையை சோ.சிவபாதசுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணம்: வலோற்காரம், வீட்டுக்குக் கிட்ட, சொன்னனான், கனநாளாச்சு, வரக்காட்டிறன், பின்னை, சீ, சுறுக்கு, விசர், செவ்வையாக
பிற்காலத்தில் சிறந்த நாவலாசிரியராகத் திகழ்ந்த 'கல்கி ரா.கிருஷ்ணமூர்த்திக்கு 'மோகனாங்கி முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. மோகனாங்கி வெளிவந்து நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னரே கல்கியின் பார்த்திபன் கனவு (1942) வரலாற்று நாவல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து சிவகாமியின் சபதமும் (1944 - 46) பொன்னியின் செல்வனும் (1950 - 53) கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்து பின்னர் நூலுருப் பெற்றன.
கல கலி அவர் களுக் கிருந்த வசதிகளும் வாயப் ப் புக் களும் சரவணமுத்துப்பிள்ளைக்கு இருக்கவில்லை. கல்கி வரலாற்று நாவலை எழுதிய காலத்தில (1941 - 1954) க.அநீலகண்ட சாத்திரியின் பாண்டியராச்சியம் (1929) சோழர்கள் (1935) சதாசிவபண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரம் (1949) இராசமாணிக்கம் பிள்ளையின் பல்லவள் வரலாறு (1944) ஆகோபாலன், கிருஷ்ணசாமி ஐயங்கார் ஆகியோரின் காஞ்சிப் பல்லவள் வரலாறு (1928) முதலிய சரித்திர நூல்கள் வெளிவந்திருந்தன. எனவே தானே முயன்று வரலாற்றுத் தகவல்களைத் தேடவேண்டிய சிரமம் அவருக்கு இருக்கவில்லை.
வரலாற்று நாவலில் வரலாறும் இருத்தல் வேண்டும். நாவலும் இருத்தல் வேண்டும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தல் வேண்டும்” கல்கிக்கு அவர்கண்முன்னே வரலாறு இருந்தது. அதனை தனது நாவலுக்குப் பயன்படுத்தினார்.
சரவண முத்துப்பிள்ளை மோகனாங்கியை எழுதியகாலத்தில் (1895) நாயக்கமன்னர் வரலாறுபற்றிய நூல் எதுவும் வெளிவந்திருக்கவில்லை. வரலாற்றுச் சுவடிகளில் மறைந்திருந்த தகவல்களை அகழ்ந்தெடுப்பதற்கே அவர் பெருமுயற்சி செய்யவேண்டிய நிலை. தமிழில் அவருக்கு முன்னுதாரணமாகச் சரித்திர நாவல் எதுவும் வெளிவந்திருக்கவில்லை. கல்கியைப் போலப் பரந்த வாசகள் கூட்டத்தை அடையக்கூடிய வாய்ப்பும் இருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலேயே அவர் மோகனாங்கியை எழுதிவெளியிட்டார். அந்நாளில் இந்நாவல் குறிப்பிடக் கூடிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.
நிலமை இவ்வாறாக தமிழ்நாவலின் முக்கிய பிரிவொன்றுக்கு முன்னோடியாக விளங்கியவர் ஈழத்தவர் என்ற நியாயமான பெருமையைத் தட்டிப்பறித்துக் கல்கிக்குக்

Page 18
கொடுப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்கிறார் பேராசிரியர் க. அருணாசலம் அவர்கள் அவர் அதற்குக் கூறும் காரணம் வேடிக்கையானது.
“இந்நாவலில் வரலாற்றுச் சூழல் ஓரளவு இடம் பெற்ற போதும் சொக்கநாதன் - மோகனாங்கி ஆகியோருக்கிடையிலான காதல் நிகழ்ச்சிகளும் அதுசம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினைகளும் சூழ்நிலைகளும், சீர்திருத்தக் கருத்துக்களுமே மேலோங்கி நிற்கின்றன. நாவல் என்ற பெயருடன் வெளிவந்த போதும் நாவலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டு விளங்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியராற் கையாளப்பட்ட நடை சிற்சில இடங்களில் எளிமையும் பேச்சுவழக்குச் சொற்களும் காணப்பட்டாலும் நாவலில் பெரும்பகுதி . கடின சந்தி விகாரங்களுடன் கூடிய சிக்கல் நிறைந்த நீண்ட வசனங்களையும் கடினமான சொல்லாட்சிகளையும் கொண்டு விளங்குகின்றது.
புதிய துறையில முதன் முதலாக ஈடுபடுபவர்களின் ஆக்கங்களில் சிற்சில குறைபாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாததே. பிரதாப முதலியார் சரித்திரமே (1879) தமிழில் தோன்றிய முதல் சமூகநாவலாகும். நாவலின் பண்புகளைச் சரிவர உணராத நிலையிலேயே வேதநாயகம் பிள்ளை சரித்திரம் என்னும் பதத்தைப் பிரயோகித்துள்ளார். இந்த நாவலைப் பின் வந்தோரின் நாவல்களுடன் ஒப்பிட்டு நாவலின் பண்பு அருகிக் காணப்படுகின்றது என்று கூறினாலும் பிரதாபமுதலியார் சரித்திரமே தமிழில் தோன்றிய முதல் நாவல் என்பதை எவரும் மறுக்கவில்லை. ஆரம்ப கால நாவல்களில் காப்பியங்களின் செல்வாக்குப் படிந்திருப்பதைக் க. கைலாசபதி சுட்டிக்காட்டுவர்.
தமிழ் நாட்டு அறிஞர்களான இரா. தண்டாயுதம், கி.வா.ஜகந்நாதன், கோ.வி.மணிசேகரன் முதலானோர் கல்கியே தமிழில் சரித்திர நாவலின் தந்தை எனக் கூறுவதைத் க. அருணாசலம் சிக்கெனப்பிடித்துக் கொண்டு தனது கருத்துக்கு அரண் சேர்க்கிறார். ஒரு புதிய இலக்கியவகைக்கு இலங்கையர் ஒருவர் முன்னோடியாகத் திகழ்வதை தமிழக அறிஞர் ஏற்கவிரும்பாதாதாலோ அல்லது அறியாமையாலோ இப்படிச் சொல்கின்றனர். இது ஒன்றும் புதிய விடயம் அன்று உ.வே.சாமிநாதையர் பிறப்பதற்கு (1855) முன்பே சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் நீதிநெறி விளக்க உரையை பதிப்பித்து வெளியிட்டுவிட்டார். ஐயருக்கு பதின்மூன்று வயதாக இருக்கும் போதே 1668 இல் தொல்காப்பியம் சேனாவரையம் உரையை சி.வை.தா பதிப்பித்துவிட்டார் நிலைமை இவ்வாறாக ஐயர் அவர்களே பதிப்புத்துறையில் முன்னோடி எனப் பறைசாற்றும் தமிழகத்தார் சரவணமுத்துப்பிள்ளைக்குச் சேரவேண்டிய நியாயமான புகழை இருட்டடிப்புச் செய்வதில் வியபில்லை. இதற்கு நம்மவர் ஒருவரும் துணைபோவதே வியப்பான செய்தியாகும்.
மேலும் கல்கியின் வரலாற்று நாவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை மோனாங்கி ஏற்படுத்தவில்லை என்பதும் அருணாசலத்தின் வாதமாகும். கல்கியின் சமூக நாவல்கள்ஏற்படுத்திய தாக்கத்தை பிரதாப முதலியார் சரித்திரம் ஏற்படுத்தவில்லை என்பதால் பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் நாவலிலக்கிய முன்னோடியாகத் திகழ்வதை மறுக்க எவரும் முன்வரமாட்டார்கள்.
மோகனாங்கி குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்று நாவல் என்பதை அருணாசலம்

ஒப்புக் கொள்கிறார். அதனை முன்னோடியென ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்
என்று தெரியவில்லை.
யார் எப்படிக் கூறினாலும் மோகனாங்கியே தமிழில் தோன்றிய முதல் வரவாற்று
நாவல் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடிக்குறிப்பு
O1. Websters new international Dictionary of English Language 1963.
02. கலாநிதி நா. சுப்பிரமணியம் - ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் 1978,
03. கலாநிதி க. அருணாசலம் - தமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2000
04. கலாநிதி க. அருணாசலம் - மேலது
05. சங்கிலி வரலாற்று நாடகம் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை 06. சங்கிலியம் காவியம் கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை 1970 07. பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் - முல்லைமணி 1970 08. தணியாத தாகம் - வரலாற்று நாடகம் - கரவைக் கிழார் 1968 09. வன்னியர் திலகம் - வரலாற்று நாவல் - முல்லை மணி 1998
10. கலாநிதி நா. சுப்பிரமணியம் மேலது
11. கலாநிதி க. அருணாசலம் மேலது
12. கலாநிதி நா. சுப்பிரமணியம் மேலது
13. பெ.கோ.சுந்தரராஜன் ಹಾಲಿ! நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் 1977
சோ. சிவபாதசுந்தரம்
14. சோ. சிவபாதசுந்தரம் தினகரன் வாரமஞ்சரி 1972 15. கலாநிதி க. அருணாசலம் தினகரன் வாரமஞ்சரி 16. கலாநிதி க. அருணாசலம் தினகரன் வாரமஞ்சரி 17. கலாநிதி க. கைலாசபதி தமிழ் நாவல் இலக்கியம் 1968

Page 19
முல்லைமணியின் வன்னியியற் சிந்தனை - நூல் அறிமுகம்
-கந்தையா பூஞரீகணேசன்
ஏற்கனவே பண்டாரவன்னியன் நாடகத்தினுாடாக வன்னி மண்ணின் அடையாளத்தினை வெளி உலகிற்கு பறை சாற்றிய முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்கள் வன்னிக்கே உரித்தான வன்னியியற்தத்துவத்துடன் வன்னியியற் சிந்தனை - நூலினை வெளியிட்டுள்ளார். ஈழத்து இலக்கிய உலகின் பிரதேச இலக்கியங்களின் பங்கு சம்பந்தமான ஆய்வுகள் ஏற்கனவே வெளிவர தொடங்கி உள்ளன. இலக்கியத்தினுாடாக மக்களின் வாழ்வியலைத் தொட்டு அதனுாடாக மேற்கிளம்பும் சிந்தனைகளைத் தொகுத்து பார்ப்பதே ஒரு தத்துவ உருவாக்கத்தின் அடிப்படையாகும். அந்த வகையில் வன்னியியற்சிந்தனை என்ற நூலானது வன்னி சார்ந்த தத்துவங்களை உருவாக்கும் ஒரு தொடக்கமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் வன்னி பிரதேச இலக்கியம், முல்லை மாவட்ட நாட்டார் இலக்கியம், வன்னி பிரதேச நாவல் இலக்கிய முன்னோடி கைலாசபிள்ளை, தனித் தமிழ்வல்ல பண்டிதர் வ.சு.இராநையனார், முன்னோடிக் கவிஞர் வன்னியூர்க் கவிராஜர், (முல்லைமணியின்) எழுத்துலக அனுபவங்கள் ஆகிய கட்டுரைகளுடன் பொதுவான கட்டுரையான இலக்கியமும் வாழ்வியலும்’ என்பன இலக்கியம் சார்ந்த கட்டுரைகளாக அமைகின்றன.
ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம் ‘குலசேகரம் வைரமுத்து, பண்டாரவன்னியன், அன்னிய எதிர்ப்பியக்கத்தலைவன் கைலைவன்னியனார், மண்ணின் சுதந்திரம் காத்த முள்ளியவளை வன்னியர்கள் மற்றும் வன்னி நாட்டின் கறைபடிந்த வரலாற்று நாயகர்கள் என்பன வன்னி அரசர்களும் அவர்கள் சார்ந்த அரசியலும் பற்றி பேசுகின்றன. அரங்கு மற்றும் இசை, பற்றி இரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று முல்லைமுடியில் அமைந்த கோவலன் கூத்து பாரம்பரிய வாத்தியக்கருவி பறைமேளம் என்பது மற்றையது.
நாடகம் மற்றும் அரங்கு பற்றிய கட்டுரைகளில் நவீன அரங்குகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தால் அப்பகுதி முழுமை பெற்றிருக்கும். அத்தோடு பாரம்பரிய வாத்தியக்கருவிகள் மற்றவைற்பற்றியும் விரிவான பதிவு ஒன்றும் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். இவற்றோடு இந்தநூலில் எழும் கேள்விகள் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
முதாலாவதாக காக்கை வன்னியன் என்கின்ற கதாபாத்திர உருவாக்கம் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகின்றது. வன்னியர்கள் 2000 ம் ஆண்டு காலத்திற்கு முற்பட்ட வரலாறு உடையவர்கள் என்கின்ற வரலாற்றுத்தகவலில் உள்ள உண்மை எவ்வித முரண்பாடும் அற்று நிருபிக்கப்படவேண்டும். (பக்கம் 72)
36 Cup'05-O 36

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் - 19 ம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரின் பங்களிப்பால் ஈழத்தமிழரின் பண்பாட்டு அடையாளம் - அரசியல் அடையாளம் தக்க வைக்கப்பட்டது. ஆனால் அவரது கிராமிய வழிபாட்டு எதிர்ப்பு வரலாற்று முரண்பாடுகளை தோற்றுவித்தன. இவை பற்றியும் விரிவான ஆய்வுகள் தேவை. அத்தோடு வன்னியின் ஒவியங்கள், கதைப்பாடல்கள், கைவினைக்கலைகள், கட்டிடக்கலை, பயிர்ச்செய்கை முறைகள், வனவாழ்வியல், விருந்தோம்பல் மற்றும் உணவுப்பழக்கங்கள், ஆடை அணிகலன்கள் விழாக்கள் என்பனவெல்லாம், பல்வேறு எழுத்தாளர்களால் பதியப்படவேண்டும். என்பதனை முல்லைமணி அவர்களின் நூல் கூறி நிற்கின்றது.
எளிய நடையில் எழுத்து இலக்கணப்பிழைகள் இல்லாமல தெளிந்த நீரோடை போல எழுதுகின்ற முல்லைமணி அவர்கள் வன்னி மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தவர்களுக்கே பெரும் சொத்தாகும். ஒரு நாடக ஆசிரியராக பண்டாரவன்னியனையும், நாவல் ஆசிரியராக வன்னியர் திலகம், கமுகஞ்சோலை, என்பனவற்றையும் ஒரு சிறுகதை ஆசிரியராக ‘அரசிகள் அழுவதில்லை’ என்ற தொகுப்போடு மேலும் பல கதைகளையும் அதை விட ஒரு கவிஞராகவும், ஒரு ஆய்வாளனாகவும் திகழும் முல்லைமணி அவர்கள் மேலும் பல பதிவுகளை தம் காலத்தில் செய்ய வேண்டும் என மாருதம் வாழ்த்துகின்றது.
மாருதம் 1 வெளியீட்டின் போது முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்கட்கு இலக்கியச்செல்வர் விருது வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்திக் கொளரவிப்பவர் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் சு.மோகனதாஸ்

Page 20
நிதர்சனத்தின்புத்திரர்கள் ஒரு சிறு அலசல்.
-கனகரவி
உறுதி, கவிஞன், தாய் இடம், தண்ணிரும் கண்ணிரும், ஒண்டு செய்வோம். அடிமைக்குடி, நிமிர்வு, என்ன செய்யலாம். சர்வதேச அடிமைகள், நிதர்சனத்தின் புத்திரர்கள், என்ற பத்து நாடகங்களையும் எழுத்துருவில், நிதர்சனத்தின் புத்திரர்கள், என தந்திருக்கும் கந்தையா ரீகணேசன் நாடகத்தினூடே நல்ல பல கருத்துக்களை வெளிச்சொல்லியுள்ளார்.
மண்ணின் விடுதலைக்காக மண்ணில் எமது மக்கள் பட்டதுன்பதுயரங்கள் வரலாற்றுப் பதிவாக வரவேண்டிய தேவையொன்றுள்ளது. இதனை யார் செய்வதென்பதற்கப்பால். கலை இலக்கியம் என்று தெரியப்படுத்தப்பட்டவர்கள். அதனூடே என்ன செய்ய வேண்டுமென்பதை சரியான முறையில் செய்யவேண்டும் என்பதை ஓரளவிற்கு செய்வதற்கு முன்வந்தவராக நாடகம் என்ற ஊடகத்தினுாடே கந்தையா சிறீகணேசன் "நிதர்சனத்தின் புத்திரர்கள்’ நாடக எழுத்துருவை நூலாக தந்துள்ளார்.
இந்த நூலில் உள்ள பத்து நாடகங்களையும் தனித்தனியே பார்ப்பதற்கு அது ஒரு நீண்ட பார்வையாக அமையவேண்டும். ஆகவே இந்த நூல் பற்றி சிறு அலசலாகவே இதை எழுத எத்தனித்துள்ளேன். அதனுாடே நூலசிரியரின் எண்ணத்தில் தோன்றிய கருத்துக்கள் எந்தவித வேறுபாடுமின்றி தயங்கிநிற்கும் யாவரும் தெரிந்துணர வேண்டியதாகும்.
சமூகம் பற்றிய அக்கறையும், அரசியல் பற்றிய பார்வையும், படைப்பாளியொருவனுக்கு கூடவே இருக்கவேண்டுமென்பதை கந்தையா ரீகணேசன் ஓரளவு எழுத்தாக்கியுள்ளார்.
உறுதி என்ற இந்த நூலில் உள்ள முதல் நாடகத்தின் பாடலில்
"எத்தர்கள் கோடி சூழ்ந்து எமனிடம் அனுப்பினாலும் சித்தத்தை இழந்து நாங்கள் சீவியம் நடத்தமாட்டோம்”
என்ற எழுச்சிமிகக் கருத்து, சமூகத்தை சரியான முறையில் நோக்கும் எவரிற்கும் வருவனவாகும். இத்தனை இழப்பிற்கு மத்தியில் தான் எம்மினம் நிமிர்ந்துள்ளதென்பதனை இப்படியான வரிகள் மீண்டும் நினைவு படுத்துகின்றன.
ဒွိ
"உணவில்லை உடையில்லை வீடில்லை பொருளில்லை உயிர்தானும் நிலையாக தரித்திருக்க வாய்ப்பில்லை”
38 (-ஆ-னு 38
 
 
 

இப்படிக் கூறக்கூடிய எண்ணம் சமூகத்தை சரியான முறையில் பார்க்காத ஒருவரின் மனதில் தோன்றுவதற்கு சாத்தியமே இல்லை. வெறும் நடப்பிற்கான வாழ்வு என்பதில் மெய்களை மேலெழச் செய்வதற்கானதொன்று. வரிந்து கட்டுவதற்கு தயாரானவர்களாலும், இலக்கியப் படைப்புகளினூடே சிந்தனை வீச்சுடையவராகின்றனர்.
இவரின் நாடகங்களில் பல கவிஞர்களின் கவிதைகளை சேர்த்திருந்ததும் சிறப்பு
மிக்கதாகும். கவிஞன் என்ற நாடகத்தினூடே கவிஞர்கள் பலரின் கவிதைகள் கருத்தாழம் மிக்கதாக பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"நான் எப்போதும் எனக்குரியவனில்லை மக்களே. எனது தாய் தாய்க்கு பணியாற்ற பாடலிசைக்கவே விரும்புகின்றேன். அடிமைத்தாயகத்தில் புரட்சி அலைகள் பீறிட்ட
போது காலியான வயிற்றோடு நிறைவான கொள்கை களோடு போராடவே நான் விரும்புகின்றேன்”
என்ற சீனக் கவிஞர் குங்லியின் கவிதை இது. இதே போன்று எம்மினவிடுதலைப் போராட்டம் எவ்வளவு விலை கொடுத்து வீச்சுப் பெற்ற தென்பதை புரிந்து கொள்ளத்தக்க வகையில் பல கவிஞர்களின் கவிதைகளை நாடகங்களிற்குள் சேர்த்துள்ளதென்பது இரண்டும் ஒன்றாக கலந்து கவனத்தை ஈர்க்க வைத்துள்ளதென்றே கூற வேண்டும்.
"தாய் இடம்" நாடகத்தின் முழுமையை ஒருவரியில் சொல்வதானால் அதில் ஆசிரியர் சேர்த்துள்ள கவிதை வரிகளைச் சொன்னாலே புரியும்.
“எந்தையும் தாயும் மகிழந்து குலாவி இருந்ததும் இந்நாடே.”
இதனை மறுதவிப்பவர்களிற்கு நாம் மீண்டும் மீண்டும் சொல்லியாகவே வேண்டிய கட்டாய காலத்திற்குள் வாழ்கின்றோம்.
சமூகத்துடிப்புடன் சில நாடகங்கள் தண்ணி பிரச்சினை, பெண்விடுதலை, சீதனப்பிரச்சினை, நாடுவிட்டு ஓடுவோர். எனவும் நூலாசிரியர் பார்வையை வீசுகின்றார்.
"சர்வதேச அடிமைகள்" நாடகத்தின்முற்குறிப்பாக உள்ளதை அவசியம் சொல்லியாக வேண்டும்.
”மூளைசாலிகள் நீவிர் ஓடிவிட்டால் இங்கு தோன்றுமா புதுவாழ்வு? கட்டடங்கள் கட்டவும் பாலங்கள் போடவும் எம்நாட்டை நிர்மாணிக்கவும் - வேறு
39 Goose 39

Page 21
எவன் வருவான் என்று நீர் ஓடுவீர்?
இது இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் பொருந்தும் என்பதை ஏன்? என்பது பற்றி சொல்லாமலே புரிந்து கொள்ளுவீர்கள்
இதில் நாடகத்திற்குள் நாடகமாக, பண்டாரவன்னினின் நாடகம் மேடையேறுகின்றது. முல்லைமணி அவர்களுடைய அந்த நாடகத்தில் வரும் வரிகள் காலத்தால் அழியாததாகும்.
பண்டார வன்னியனின் புனித நாட்டில் மக்களிடம் துப்பாக்கியைக்காட்டி கலங்க வைக்க முடியாது. என்று பண்டார வன்னியன் பாத்திரத்தின்வசனம். வெள்ளையரை மட்டுமல்ல வேறு எவரிடமும் கேட்கக் கூடிய வகையில் பெறி தட்டுவதாக அமைந்திருக்கின்றது. முல்லைமணியின் நாடகப்பகுதியை பொருத்தமாக கையாண்டுள்ளார்.
"நிதர்சனத்தின் புத்திரர்கள்"
ஊர்விட்டு ஊர்ஓடும் காலமிது நாதியற்று நாயாய் அலைகின்றோம். என்பதை காலத்தின் அவலத்தை படம்பிடித்துக் காட்டும் படைப்பாகக் கருதமுடியும்.
புதுஉலகம் சமைப்பாய் தோழா என்று எதை கேட்கின்றார் என்பதை சுபத்திரனின் கவிவரிகளுடன் நாடகம் நிறைவு செய்யப்படுகின்றது.
நூலாசிரியரின் இந்த நூலிற்கு சாகித்திய மண்டல பரிசும் கிடைத்துள்ளது. பாராட்டுதலிற்குரியதே.
கவிதையினை நாடகத்திற்குள் நன்கு பயன்படுத்தும் திறன் கொண்டதாக "நிதர்சனத்தின் புத்திரர்கள்’ நாடக எழுத்துரு அமைந்துள்ளது. இது ஒரு புது வடிவமாகவும் கருதுவற்கு இடமுண்டு. கவிதைகளினுாடாக மட்டுமல்ல தனது கருத்துக்களாலும் இன்னும் பல நாடகங்களை இவர் தரவேண்டும்.
கந்தையா ரீ கணேசனின் நிதர்சனத்தின் புத்திரர்கள் நாடக நூலிற்கு 20:அரச இலக்கிய விரு
வழங்கப்பட்டுள்ளது.
 

மழை மேகங்கள் கலைகின்றன
ந.பார்த்திபன்
மழை மேகம் சூழ்ந்து இருள் எங்கும் பரவிக்கிடக்கிறது. சித்திரையில் ஒரு சிறு மாரி என்று சொல்லும் வகையில் மழை பொழிந்து, ஐப்பசி வரை வானம் பொய்த்து விட்டது. எங்கும் ஒரே வரட்சி குடி தண்ணிருக்கே வவுனியாவில் பல இடங்களில் தட்டுப்பாடு.
காலங்கடந்த பின் ஏற்படும் ஞானம் போல இந்த நேரத்தில் வரட்சிக்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டு சில புத்திஜீவிகள்.
இந்த மழை பெய்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டுமென்று எல்லோரும் ஏங்கும் நேரம் சிறு துளிகள் விழும் சத்தம் கேட்கிறது சூல் கொண்ட மேகம் மூடி. எங்கும் இருள் மயம்.
றிங் றிங். றிங் றிங். ரெலிபோன் மணி அடிக்க, தேவன் ஓடிச்சென்று எடுக்கிறான். றிசீவரை எடுத்துத் தொடர்பை ஏற்படுத்தியதும் “ஹலோ, நான் லண்டனிலிருந்து ரமேஷ் கதைக்கிறன் எங்கடை வீட்டாக்களைக் கொஞ்சம் கூப்பிடுறீங்களோ” ரமேஷின் குரல் கெஞ்சும் பாவனையில் கேட்க ”ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எடுங்கோ சொல்றன்” எனக் கூறியபடி மழை பெய்தாலும் என்ற நினைப்புடன் குடையையும் எடுத்துக் கொண்டு செல்கிறான்.
யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து தற்காலிகமாகக் குடியிருப்பினும் தற்போது அயலல்லவா..? எப்பவாவது இலண்டனிலிருக்கும் மகன் எடுத்துக் கேட்டு தொடர்பு கொள்ள துணை செய்வதில் தேவன் வீட்டாருக்கும் கொஞ்சம் திருப்தி.
தேவன் போய்த் தகவல் கொடுத்தும் ரமேஷின் தாயும் தங்கையும் ஓடி வர முயற்சிக்க, பத்து நிமிஷம் கழிச்சு எடுக்கச் சொன்ன விபரத்தை கூறி விட்டு வருகிறான். ஆயினும் அவர்களுக்கு அங்கலாய்ப்பு உந்த, அவனுடனே வருகிறார்கள். w ரெலிபோன் தொடர்பு வைத்த போதும், இடம்பெயர்ந்து வந்த இந்த ஆறுமாத காலத்தில் பெரிய நெருக்கத்தை தேவன் வீட்டாருடன் அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக உணர்ந்தபடி வானத்தைப் பார்த்த வண்ணம் வீட்டுக்குள் நுழைகிறான்.
சற்று நேரங்கழித்து ரெலிபோன் மணியோசை தாய் ரிசீவரை எடுக்கப் போகத் தங்கை சைகையால் தடுப்பது தெரிய, தேவனே ரிசீவரை எடுக்கிறான்.
“ஹலோ, ஹலோ.” றிசீவரை வைத்தவன் 'கட்டாய்ப் போயிட்டுது” என்று சொல்கிறான்
தாய் "வெளிநாட்டு கோல்கள் உப்பிடித்தான்.” என்று சொல்லித் தன்னையே தான் சமாதானப்படுத்துவது புரிகிறது.
மீண்டும் ஒலிக்க, தேவன் அவர்களை எடுக்கச் சொல்கிறான். றிசீவரை ஆவலுடன் எடுத்த தாய் "ஹலோ. ஹலோ.” தங்களுக்குத்தான் எனபது தெரிந்ததும் முகம் மலர 'தம்பி ரமேஷ். தம்பி எப்படியிருக்கிறாயடா. தாயின் பாசத் தவிப்பு றிசீவரை மீறி வெளியேயும் வழிகிறது.
அவர்கள் கதைக்கட்டும் என நினைத்து வெளியே வந்து நிற்கும் தேவனுக்கு அவர்கள் கதைப்பது சத்தமாகவே கேட்கிறது.
4.1 O-tozab5iĝCO 4

Page 22
வயது போன நேரம் தோட்டம் துலையில என்று சொல்வார்கள். வெளிநாட்டு கோல்கள் தெளிவு குறைவு என்பதனாலும் ரமேஷின் தாய் தன் குரலையும் உயர்த்திக் கொள்கிறாள்
ஏனம்மா நீங்கள் இன்னமும் ரெலிபோன் சொந்தமாக எடுக்கவில்லை என்று கேட்டிருப்பான் போலிருக்கிறது 'தம்பி நீ நினைக்கிறது போல இப்ப வவுனியா இல்லை. நாங்களும் எத்தினை பேரை பிடிச்சு அலுவல் பார்த்தம் லூப் இல்லை. கேபிள் இல்லை என்று ஆயிரம் கதை கதைக்கிறாங்கள். உந்த கொமினிகேசன்காரர் ஒன்றுக்கு நாலாய் எடுத்து கொள்ளையடிக்கிறதுக்குப் போல எங்களுக்கு எடுக்கேலாமக்கிடக்கு. அது கிடக்கட்டும். இன்னும் எத்தினை நாளைக்கு.? அது சரி தம்பியின்ரை பாடென்ன."
”என்னடா ஒண்டுக்கும் பயப்படவேண்டாமென்று நீ சொல்றாய் இருபது லெச்சமெல்லாடா, சிவனே இப்ப இடையில் நிக்கிறா.”
ஓ, காசுக்கு நீ பொறுப்பு. காசைப்பற்றி நீங்க யோசிக்க வேண்டாமெண்டு நீ சொன்னாலும். உது சரி வருமோ மேனே.”
“என்னப்பு சிரிக்கிறாய் கொட்பர் கூட்டிக் கொண்டு வந்து கொழும்பில நிற்கும் வரையம் போனில கதைச்சவர் பிறகு நேற்று ஏஜென்சிக்காரனிட்டைச் சேர்த்தாப்பிறகு ஒரு கதையையும் காணேறல்ல. இல்லையென்றால் தம்பியாவது எடுத்துக் கதைக்கிறவன் இப்ப ரெண்டுபேரிட்டையிருந்தும் ஒரு கதையையும் காணேல்ல. என்ன நடந்துதோ ஆருக்குத் தெரியும். ஆதி விநாயகர் அப்பனே.”
’அது சரியப்பு, தம்பி உன்னட் ைவந்து சேர்ந்தாப் பிறகு கதைப்பம் என்று அவர் நினைச்சுப் பேசாமல் கொழும்பில நின்றா, நாங்களென்ன மூக்குச் சாத்திரம் பார்க்கிறதே. எட்வும் உந்த மனுசன் உப்படித்தான். ஒரு ஊமை வேஷம்.”
தாயின் தொனி வேறுபாடும், தந்தையில் குறைகண்டு பிடிப்பதும், குறைகண்டதும் உணர்ச்சி வசப்படுவதும், உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் தந்தையில் குறை கண்டு பிடிப்பதும், தமையன் வெளிநாடு போய் உழைத்து அனுப்பிய காலச் சந்தோஷத்திலும், இப்போ தம்பி வெளிநாடு போய் முடிவு தெரியாத துக்கத்திலும் தாக்கு ஏற்படுவது மகளுக்குத் தெரிகிறது. தாயிடமிருந்து றிசீவரைப் பற்றிக் கைமாற்றிக் .i I boill II6iIد{ 'راں)
'அண்ணா தம்பி இப்ப எங்கை?”
”பங்கொக்கிலோ, அதையாவது அப்பா எடுத்துச் சொல்லியிருக்கலாம். இல்லைத் தம்பியாவது பாங்கொக்கிலிருந்தாவது கதைச்சிருக்கலாம்" சகோதரியின் குரலில் இருக்கும் ஏக்கம், தவிப்புப் புரிகிறது.
’அது சரி தம்பி உங்களிட்டை லண்டனுக்கு வந்தாப் பிறகு, தானும் ஆறுதலா வவுனியாவுக்கு வரலாம். ஆனா ஏஜென்சியைப் பற்றி, வேறேதும் பிரச்சினைகள் இருந்ததோ என்பதைப் பற்றி சொல்லியிருக்க.

"சரியண்ணா, ஏதோ ஒரு சிக்கலுமில்லாமல் தம்பி உங்களிட்டை வந்து சேர்ந்தாச் சரி. அதுவரைக்கும் இங்கை அம்மா ஒழுங்கான சாப்பாடு மில்லை. குளிப்பு - முழுக்குமில்லை.”
”சும்மா இருபிள்ளை உதுகளை ஏன் அவனுக்குச் சொல்றாய். அது சரி இங்கை எல்லோரும் குளிச்சு முழுக தண்ணி கொட்டியபடிதானே” என்று மகனுக்குக் கேட்குதோ இல்லையோ மகளைக் கடிந்து கொள்ளும் தாயின் குரல் எல்லாவற்றையும் மிஞ்சி ஒலிக்கின்றது.
வெளியே மழை இன்னமும் பெய்யவில்லை. உள்ளே மழை பெய்து ஒய்ந்தது. போல. அமைதியாக தாயும், மகளும், வெளியே வருகிறார்கள்.
தேவன் வெளியே நிற்பதும், தாயின்குரலால் தாங்கள் கதைத்தது தேவனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும் என்ற நினைப்புடனும். 'தம்பி லண்டனுக்கென்று கொழும்புக்குப்போய் பாங்கொக்கில நிற்கிறானாம். எப்படியும் ஒரு மாதத்திற்குள்ள போயிடுவானாம்.” என்கிறாள் சகோதரி
இனியேன் மறைக்க வேண்டுமென்றோ, இனியெப்படி மறைப்பதென்றோ. ஏதோ நினைப்பு அவளுக்குத் தோன்றியிருக்கலாம்.
காணி வாங்குவதும், கலியாணம் செய்வதும் காதும் காதும் வைத்தது போல் செய்ய வேண்டுமென்பது போல இப்போவெளிநாடு போவதும் மூடுமந்திரமாய்ப் போயிட்டுது. பின்னே வராதோ, இருபது இருபத்தைந்து இலட்சமென்றால் இரகசியமாகத்தானே இருக்க வேண்டும் என்று தேவனும் நினைத்துக் கொண்டான்.
”தம்பி உங்களுக்குச் சொன்னா என்ன? சுரேஷை அவன் தமையன்தான் உடனே கொழும்புக்கு வா என்றும் தான் லண்டனிலேயே நல்ல ஏஜென்சிக்காரனோடை எல்லாம் கதைச்சு அனுப்பியிருக்கிறனென்றும் கூறிவிட்டான்”
”இப்ப தானே சண்டையில்லை, சமாதானம், பேச்சு வார்த்தை பிரச்சினை இல்லை என்று சொல்றாங்கள். நாங்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கிறம். அதோட லண்டனிலிருந்து ஆக்களைத் திருப்பி அனுப்புறாங்கள் என்றும் பரவலாக கதைக்கினம். கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.”
தாயின் முகத்தில் மழை மேக இருள் அப்பிக் கொண்டது போல இறுக்கம் தெரிகிறது. திரும்பி அனுப்புவாங்கள் என்று சொன்னாதாலோ என்னவோ, அல்லது உதுதான் உங்களுக்குச் சொல்லக் கூடாது இலவசமாக அட்வைஸ்' சொல்ல வெளிக்கிட்டிடுவீங்கள் என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது.
தங்கை "என்ன சமாதானம்.? ம் என்ன பேச்சு வார்த்தை...? எத்தனை நாளைக்கு. மிஞ்சி மிஞ்சி போனால் ரெண்டு வருஷம், நாங்க நம்பேல்ல.” சிலர் கதைப்பதைக் கேட்டிருப்பாள் போலிருக்கிறது. தம்பி போனதையும், அண்ணன் கூப்பிட்டதையும் நியாயப்படுத்தி, தங்களுக்குச் சாதகமாகச் சிந்திக்கிறாள்.

Page 23
"இல்லை ரமேஷ் நன்றாக உழைக்கிறான். அப்பாவுக்கும் பென்ஷன் வருகிறது தானே. அப்ப. சுரேஷ் இங்கையிருந்து நல்லாப் படிக்கலாமே?”
"தம்பி, என்ரை பிள்ளையஸ்கடவுளேயென்று படிப்பில விண்ணர்கள். ம். என்ரை பிள்ளையைப் படிக்க விட்டாங்களே, தம்பி ரமேஷனும் நல்லாப்படிச்சவன். சுத்தி வளைப்பு. எல்லா பக்கத்தாலயம் எங்களுக்கு இடி தானே. தப்பினாப் போதும் என்றெல்லோ தம்பி.”
”அப்ப நிலமை பிழைதானே, ஆனா இப்ப.
தங்கை ”அண்ணா அங்கை இருக்கிற வசதி - வாய்ப்புக்களை எழுதும் போது ஏன் இங்கையிருந்து கஷ்டப்பட வேணும்.? என்று கேட்கிறான்
"அப்ப, குடும்பமாகப் போற எண்ணமோ..?”
”ஓம் அதுதான் எங்களுக்கும் விருப்பம்” என்று இருவரும் சேர்ந்து கூறிய போது சத்தம் கொஞ்சம் உயர்வாய்த்தானிருந்தது. அவர்கள் போகிறார்கள்.
எல்லோரும் வசதிகளையும் வாய்ப்புக்களையும் தேடிப் போனால் இங்கே யாரிருப்பது என்று கேட்பது பயனில்லை என்று புரிகிறது தேவனுக்கு.
சிறு துளியாய் விழுந்த மழையையும் காணவில்லை. காற்றில் அலையுண்ட கருமேகங்கள் விலகிச் சென்றுவிட்டன. இப்போ மழை பெய்வதற்கான அறிகுறிகள் எதையும் காணவில்லை. எல்லாம் வெளிச்சிட்டுது. சரியான புளுக்கமாக இருகிறது. என்பதை உடலின் பிசுபிசுப்புக் காட்டியபோது எங்கோ தூரத்தில் பலத்த மழை பொழிவதை உணர முடிகிறது.
 

மாறுடத்தின் தமிழ்க் கூடல் - ஒரு பதிவு
- பி.மாணிக்கவாசகம்
கலையும் கலாசாரமும் பண்பாட்டு விழுமியங்களும் எமது தமிழ் மண்ணில் போற்றிப் பேணி பாதுகாக்கப்பட்டன. ஆயினும் யுத்தத்தின் பேரழிவுகளும், அதன் நெருக்கடிகளும் ஓரினத்தின் இருப்பிற்கு ஆணிவேராகிய இவற்றையும் சிதைத்துச் சீரழித்துவிட்டன. நியாயமான அரசியல் உரிமைகளுக்காகவே போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் நிலைமைகள் மோசமாகின. தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் போராட வேண்டிய மோசமான நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முதல் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பேரவல நிலைக்குள்ளே தமிழினம் போர்க்காலத்தில் இட்டுச் செல்லப்பட்டது. தமிழ் மக்களின் கலை கலாசாரம், பண்பாடுகளும் இதன்போது நெருக்கடிகளுக்கு உள்ளாகின. ஆயினும் அவை முற்றாக அழிக்கப்படவில்லை.
இந்தப் போருக்குள்ளேயும் எமது பண்பாடு, கலை கலாசாரம் செருக்கோடு பேணப்பட்டது. அந்த வரலாற்றை யாழ்ப்பாணம் அண்மையில் ஒரு முறை திரும்பிப் பார்த்தது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்து முடிந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் 2002 இல் கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், ஊடகத்துறையினர் ஆகியோர் இதற்காக நான்கு தினங்கள் ஒன்று கூடினார்கள். கலந்துரையாடினார்கள். விவாதித்தார்கள். கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இதுவரையில் (போர்க்காலத்தில்) என்ன நடந்துள்ளது என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தார்கள். என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசினார்கள். இறுதியாக எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் சிந்தித்தார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலைஞர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகளின் வழமையான ஒன்றுகூடலைப் போலல்லாமல், பல வழிகளிலும் இது வேறுபட்டிருந்தது. மானுடத்தின் விடியலுக்கான ஒன்று கூடலாக, தமிழ் தேசியத் தன்மையில் இலக்கியத்தை, கலைப்பாண்பாடுகளை ஒருங்கிணைத்துப் பார்த்த ஓர் ஆய்வரங்காகவே இது அமைந்திருந்தது. விமர்சனம் என்ற போர்வையில் சேறுபூசும் இலக்கியப் போக்கு இங்கு காணப்படவில்லை. இலக்கிய அரங்குகளுக்கே உரிய தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகளும், பட்டியலிடல்களும் இடம்பெற்ற போதிலும், தமிழ் இனத்தின் விடிவுக்காக அனைவரும் ஒன்றிணைந்த எதிர்கால கலை இலக்கிய செல்நெறிக்கான வழி குறித்த சிந்தனை இங்கு மேலோங்கியிருந்தது.
பண்டைய தமிழ் கலை இலக்கியங்களின் வழியில் பெருமை பேசி,
இன்றைய இலக்கிய போக்குகள் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்கின்ற மரபு இங்கே உடைக்கப்பட்டிருந்தது. வீரம் செறிந்த போரிலக்கியம் பற்றியும், போர்க்கால

Page 24
இலக்கியத்தின் போக்கு பற்றியும், தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கை பற்றியும், அதன் அவலங்கள் பற்றியும் இங்கு அலசப்பட்டது.
மானுட விடுதலை நோக்கிய திசையில் ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தில், கலை இலக்கிய ஊடகங்களின் வகிபாகம் என்ன என்பதே இந்த தமிழ்க்கூடலின் தொனிப்பொருள். தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவினத்தவர்களும் நாட்டின் பலதிசைகளிலும் இருந்தும், தமிழகத்திலிருந்தும் வந்து, இதில் கலந்து கொண்டார்கள். இதன்மூலம் தமிழ் கலை இலக்கிய வரலாற்றிலேயே மிக மிக முக்கியமானதொரு நிகழ்வாக மானுடத்தின் தமிழ்க்கூடல் 2002 பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கால் நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னர் அதே இடத்தில் எழுச்சியும் வீரியமும் மிக்க ஒரு நிகழ்வாக இது நடந்து முடிந்துள்ளது.
தனி மனிதர்களாக, சிறு சிறு குழுக்களாக, அமைப்புக்களாக இயங்கும் எமது கலை இலக்கியத்துறையினர் மானுடத்தின் விடுதலை குறித்த பொதுமையான ஒரு சிந்தனையில் இங்கு ஒன்று கூடினார்கள். இந்த ஒன்று கூடல், கல்விக்கும் கலாசாரப் பெருமைக்கும் விளைநிலமாகிய யாழ் நகரில் நடந்தேறியமை மிகவும் பொருத்தமானதே. கலை இலக்கிய கலாசாரப் பண்பாடுகளின் விளைநிலமாக, அவற்றின் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணின் அவலங்கள் மிக்க போரின் வடுக்களாகத் திகழும் யாழ்ப்பாணக் கோட்டை, முனியப்பர் ஆலயம், பண்ணை வெளி, யாழ் நூலகம், தமிழராய்ச்சி மாநாட்டின் சோக வரலாற்றுச் சின்னம் ஆகியவை அமைந்துள்ள சூழலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
போரினால் அழிந்து பாழடைந்துள்ள யாழ் மண்ணின் இதயப்பகுதியில் மானுடத்தின் குரலாக, தமிழ்த்தேசத்தின் கலை இலக்கியம் அழிவுக்குள்ளிருந்து முளைவிட்டுள்ளது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும். மானுடத்தின் தமிழ் விடுதலைக்கான கலை இலக்கிய, ஊடகங்களின் செல்நெறி குறித்து, இப்போதைய பாழ் நிலைக்குள்ளிருந்து சிந்திக்கப்பட்டதன் மூலம், ஒரு தீப்பொறியாக இந்தக் கூடல் எழுந்துள்ளது. மானுடத்தின் வழிநின்று கலை இலக்கிய ஊடகங்கள் தமிழ்த் தேசியத்தின் போராட்டம் குறித்து குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, குறுகியதொரு வட்டத்தின் உள்ளே அடக்கப்படுவதற்கான அறைகூவலாக இது அமையவில்லை. மாறாக திசைகளைக் கடந்து துருவங்களை இணைக்கும் ஓர் இணைப்புப்பாலமாகச் செயற்படுவதற்குக் கங்கணம்கட்டி நிற்கின்றது.
உலகப் பொதுமைக்குள் எமது கலை இலக்கிய படைப்புக்கள், கலாசாரப்
பண்பாட்டு விழுமியங்கள் பாய்ச்சப்படுவதற்கான ஒரு பகிரத முயற்சி இது.
இரண்டு தசாப்த கால யுத்தச் சூழலின் வழியில் இன்று ஏற்பட்டுள்ள சமாதான சூழலின் மூலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார், சமூகப் பிரச்சினைகள் உலக அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை சர்வதேசத்திற்கு வியாபித்துள்ளது. இந்த

நிலையில் மானுடத்தின் தமிழ்க்கூடல் துருவங்களை நோக்கித் தனது கரங்களை நீட்டுவதற்கான எத்தனிப்புடன் முளைவிட்டுள்ளது.
“ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போரானது, மானுட விடுதலை நோக்கிய திசையில் வந்தது, வருவது, வரப்போவது என்பதாகும். இது உரிமைகளுக்கான போராட்டமும். தேடுதலுமே தவிர இந்த போராட்டத்தினுடைய, அது எடுக்கும் வடிவங்களை வைத்துக் கொண்டு அதற்கு எதிராகக் கூறப்படுவதை வைத்துக்கெண்டு இந்த உரிமைப் போராட்டத்தை மதிப்பிடக் கூடாது என்பது மிக முக்கியமானது. இதில் கலை இலக்கியம் என்பது இத்தகைய ஒரு மனித நிலையின் ஊடாக வருவதாகும். அப்போது தான் அவற்றுக்கு ஓர் ஆழமான மனிதவலு உண்டென்பதை அறியலாம்” என்று மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வில் ஆரம்ப உரைநிகழ்த்திய பேராசிரியரும் தமிழ் இலக்கிய அறிஞருமாகிய கா.சிவத்தம்பி அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு பற்றிய அறிமுகமாக, அவர் தெரிவித்த கருத்துக்களின் பரிமாண வியாபகத்த்ை கவனத்திற்கொண்டு, முக்கியமானவற்றை இங்கு நோக்குவது பொருத்தமாக இருக்கும்.
‘மனிதன் ஆளுமைக்குரிய மனிதத் தன்மைகளைப் பெறமுடியாது செயற்படுகின்ற ஒரு சூழலில், நிர்ப்பந்திக்கப்படுகின்ற ஒரு சூழலில் அவன் அத்தளைகளிலிருந்து விடுபடுவதற்கு, அந்தக் கட்டுகளிலிருந்து விடுபடுவதற்கு மானுடத்தின் குரல் முன்னுக்கு வரும். அது உலகப் பொது நியதியாகும். அது பாலஸ்தீனத்தில் கேட்கும். பிலிப்பைன்சில் கேட்கும். ஈழத்தில் கேட்கும். இந்தியாவில் கேட்கும். அமெரிக்காவில் கேட்கும். அந்த மானுடம் இங்கு தமிழிலே பேசும் என்பது ஒன்றே தவிர இந்த மானுடத்தின் தமிழ்க்குரலை நாம் வேறுவகையாக, எடுக்கக் கூடாது.
‘தமிழர்களுடைய தொன்மை காரணமாகவோ அது நீண்ட கால வரலாற்றுப் பண்புடையது என்பதற்காகவோ அது மானுடத்தின் குரலாவது இல்லை. கட்டுக்களில் நெருக்கடிகளில் இருக்கின்ற மனிதன் தன்னுடைய ஆழமான மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அது பயன்படுத்தப்படுகின்றதோ அப்போது அது மானுடத்தின் விடுதலைக்ாகன குரலாக வருகின்றது. மானுட விடுதலையின் தளமாக அமைவது அதுதான். முனித உறவுகளை மதிக்கின்ற மனித அடிப்படைகளைக் கையாள்கின்ற மனிதனை மனிதன் ஆக்குகின்ற தன்மைகளை உடையது. இதுதான் (இன்றைய இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களின் அரசியல், பொருளாதார சமுதாய, பண்பாட்டு, கலை இலக்கியச் சூழலில்) கலை இலக்கியத்தின் களமாகும்”.
உலகப்பொதுமைக்குள் எமது பிரச்சினைகள் பிரவேசிக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் விரிந்த சிந்தனையோடு, மனிதத்தின் தளத்திலிருந்து மானுட விடுதலையின் அடிப்டையில் தமிழ் மக்களுடைய போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை கலை இலக்கியச் செயற்பாடுகள் வீச்சோடு முன்னெடுக்க வேண்டும். இதற்கு மானுடத்தின் தமிழ்க்கூடல் வழிதிறந்துவிட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது கலை இலக்கிய வாதிகளினதும், கலைஞர்களினதும், ஊடகத்துறையினரதும் கைகளிலேயே தங்கியுள்ளது. 12.11.2002

Page 25
தடம்”கவிதைகள்
ஒரு வாசகனின் அனுபவகுறிப்பு கே.சிவஞானம்.
கவிதைகள் மொழியின் மிகச்சிறந்த வெளிப்பாட்டு வடிவம் என்பர் அறிஞர். உணர்வுகள் வெளிப்படுத்தும் வடிவமாய் தற்காலத்தில் பாவிக்கப்பட்டு வருவது கண்கூடு. தமிழ்மொழியிலும் தொன்றுதொட்டு கவிதை இலக்கியம் சாகாவரம் பெற்றதாய் இயங்கிக்கொண்டே இருக்கிறது. காலம் கவிதையின் அமைப்பில் பலமாற்றங்களைச் செய்கின்றது. மரபு அல்லது சிக்கல் கவிதைகளிலிருந்து இலகு அல்லது புதுக்கவிதை வடிவம் பெற்றது. ஆயினும் அழகான கவிதை ஒன்றை எழுத மரபோ அன்றி புதுக்கவிதையோ எங்களிற்கு நிறையத்தேடல் வேண்டி இருக்கின்றது. வாசிக்கவேண்டி இருக்கிறது இவை இரண்டிற்கும் மேலாக நிறைய பயிற்சி தேவைப்படுகின்றது. இந்த மூன்றுடனும் சூழலை கூர்ந்து அவதானிக்கும் பழக்கமும் நல்ல மனிதநேயமும் தேவைப்படுகின்றது. இவை எல்லா ஒழுங்காய் கைவரப்பெற்றோரே காலக்கண்ணாடியாய் மொழியின் அற்புதமாய் அமையக் கூடிய கவிதைகளை தருவர். எனவே நல்ல கவிதைகளை ஒசைநயத்தோடு நல்ல மடிமங்களோடும் படைப்பதற்கு தேடலும், வாசித்தலும், பயிற்சியும், அனுபவமும் மனிதநேயமும் அவசியமாகும்.
தடம் 3ல் சுவடுபதித்துள்ள தாரணி, காண்டீபன், றெமிஜியா, முகுந்தன், காயத்திரி, வி.சிவஞானம், சதீஸ்குமார், செல்வநிதி, பிரபாலினி, அரஸ்குமார், பகீரதி, சிவரஞ்சன், நவநிதா, தவராசா, ஆகிய கவிஞர்களின் கவிதைகளை நோக்குமிடத்து நாம் பெருமைப்படத்தக்க இரண்டு விடயங்கள் உள்ளன.
1. சமூகத்தை கூர்ந்து அவதானிக்கும் தன்மையும்
2. மனிதநேயமும் அதனுடன் கூடிய கற்பனைவளமும்
மிகச் செறிவாய் உள்ளன. அவ்வாறே இக்கவிஞர்களின் பொதுமைப்பாடான மறை ஊக்கிக் காரணிகளாக வாசித்தலும், தேடலும், களைப்பற்ற பயிற்சி என்பன அமைகின்றன. .
எனவே மேற்படி கவிஞர்கள் இவ்வாறான மறைஊக்கிக் காரணிகளை தத்தமக்குள் கண்டறிந்து விலக்கிக் கொள்ளல் அவசியமானதாகும்.
மேற்கூறிய மறை ஊக்கிக் காரணிகளை விலக்கிக் கொள்ளும்போது அற்புதமான, அழகான கவிதை கற்பனை வளமும், மனிதநேயமும் மிக்க இக்கவிஞர்களிடமிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
 

52, பசார் வீதி, வவுனியா
TP:(0,24-2I (098
3
கல்யாணி நகைத் தொழிலகம் 78, கற்குழி, வவுனியா
& வேள்ட் றவுண்ட் கொமினிக்கேசன் 78, கற்குழி, வவுனியா
TP 024-2I 790
024-23295 JJ

Page 26
A MP () ()
SH
K"
** x : **:ー
 
 
 
 

|சண்முகம் "1 சன்ஸ்
150, பசார் வீதி, வவுனியா
TP-024-22015

Page 27
Fo
@jā
கிருமி நாசினிக N
M4’ler Aiff Wolfs for FY.
 

ன உரங்கள் ள் விற்பனையாளர்
27. கடைத்தெரு வவுனியா
Vava en liya. O 24-23 fag