கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதைவளம் 2

Page 1


Page 2
L0L0LL 00Y00LLL00L0LeL0L0L0L0LL00000Y000L0L00000LL0L0L0L 0LL0LLLL0L0LL000LSS
தமிழ் உலகிலே
பத்திரிகா தர்மத்திற்கும் எண்ணச் சுதந்திரத்திற்கும் தனித் தமிழ் பற்றுச்கும் வெளிவரும் ஒரே பத்திரிகையான
竺yW以殊
(A%8﴿سمص ീ%
50, புதுச் செட்டித் தெரு, கொழும்பு-13.
●●●●●●●● ●●●●●●●を*を**************る********●
 
 

கதை வளம்
ஏடு இரண்டு
ரகுராமன்
தினபதியின் தினம் ஒரு கதைக் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் பிரசுரமான கதைகளைப் பற்றிய விமர்சனம்,
வெளியீடு: மரபு நிலையம்
231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13.

Page 3
This book is the
February '68, Publication
of
The Marapu Nilaiyam
with (ue acknowledgement to
DNAPATH" The Tamil Daily of The independent Newspapers Ltd.
RAHU RAMAN'S
KATHAI WALAM
Part : TWO Price: "CENTs SIXTY
 

பதிப்புரை
ஆரம்பத்திலேயே கதைவளம்" அன்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகின்ருேம். தவிர்க்க முடியாத சில காரணங்களினுல், கதை வளத் தின் இந்த இரண்டாவது ஏட்டினை உரிய காலத்தில் வெளியிடுவதிலே காலதாமதமாகி விட்டது. இதனல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் di, glu ஏமாற்றத் திலும் பார்க்க, எமக்கு அதிக துக்கம் என்பதைக் கூறிக் கொள்ளும் அதே சமயம், அடுத்து வரும் கதை வள ஏடுகளைக் குறித்த காலங்களிற் கொண்டு வர ஏற்பாடாகியுள்ளது என்பதையும் கூற விரும்பு கின் ருேம்.
எல்லோரையும் திருப்தி செய்ய விழைபவன், ஈற்றிலே ஒருவரைக் கூட, திருப்தி செய்யத் தவறு கின்றன்' என்பது பொது விதி. அத்துடன் உண்மை சுடும் என்பதும் நமது அனுபவம். எனவே, ரகு ராமனின் நடுநிலைமை தவருத விமர்சனம் குறிப் பிட்ட சிலர் மத்தியிலே சற்றே மன நோவினை ஏற் படுத்தி இருத்தல் இயற்கை சார்ந்ததே. இந்த மனநோவினைத் தவிர்க்கும் முகமாகத் தவறுகளைச் சுட்டிக் காட்டாது விட்டால், விமர்சன கருமமே அர்த்தமற்றதாகி விடும். தவறுகளை மட்டுமே சுட் டும் பார்வை வக்கிர புத்தியின் பாற்படும்; அது வெறுங் கண்டனஞ் சார்ந்ததாகவும் அமையும். ஆணுல், ரகுராமன் சேமமான இலக்கிய விமர்சனக் கலையை வளர்க்கும் புனித பணியில் ஏக சிந்தை யுடையவர் என்பதை அறிந்தோர் அறிவர். இதனை அணி சேராத முதிர்ந்த எழுத்தாளர்களும் ஒப்புக்

Page 4
4
கொள்ளுகின் ருர்கள் என்பதை நிறுவும் முகமாகப் பிரபல நாவலாசிரியை பா. பாலேஸ்வரி அவர்கள் ரகுராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி யைக் கீழே தருகின்ருேம்:
*. தினபதியில் வெளிவந்த ஒக்டோபர்,நவம்பர் மாதங்களுக்கான தங்கள் விமர்சனம் படித்தேன். தங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்தது. பாரபட்சமின்றித் துலாக்கோல் போல் எது சரி எது பிழை என்பதை தெட்டத் தெளிவாக பிறர் உண ரும் வகையில் விமர்சிப்பது ஒரு கலையாக இருந்தா லும், மனப் பக்குவமும் வேண்டுமல்லவா. ?
*நெஞ்சில் நிறைந்தவன்” என்ற சிறு கதையின் விமர்சனம் எனக்குப் பிடித்தது. கதையில் பல சிக் கல்கள் உள்ளதை நானும் உணர்ந்தேன். ஆயி னும், கதை நடை நல்லதாக இருந்ததாலும் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக் கத்துடன் சிபார்சு பெற்ற கதை அது. தொடர்ந்து விமர்சியுங்கள். அதனுல் ஓரளவு அனுபவம் பெற்ற நாமும் பயன் அடைகின்ருேம்.”
*சு. வே. என்றழைக்கப்படும் க், வேலுப்பிள்ளை அவர்கள் முறையான தமிழ் இலக்கிய - இலக்கணப் பயிற்சியுள்ளவர். ஈழத்துச் சிறுகதை முயற்சிகளிலே நீண்ட காலத் தொடர்புடையவர். சரளமும் இனி மையுமுள்ள நடையைத் தமது எழுத்துக்களிலே பயின்று வருபவர். பண்டிதமணியின் நல் மாணுக் கரும், கல்வித் திணைக் களத்தின் பாட நூல் எழுத் தாளரும், இலக்கியச் சுவைஞருமான சு. வே. அவர்கள் இந்த ஏட்டிற்கு முன்னுரை வழங்கியுள் ளார். அவருக்கு நமது உளங் கனிந்த நன்றிகள்.

5
தினபதி தினம் ஒரு கதைத் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற் பிரசுரமான இருபத்திரண்டு கதைகளை விமர்சித்து ரகுராமன் தினபதியில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதினர். அதனை மேலும் செப்பனிட்டுச் சிறப்பித்து மரபு நிலையம் தனது மாசித் திங்கள் வெளியீடாக வெளியிடுகின்றது. இதற்கு அனுமதி வழங்கிய தினபதிக்கும், சுயா தீனப் பத்திரிகா சமாஜத்திற்கும் நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். -
வணக்கம்.
to rakuuth

Page 5
விமர்சனம் பற்றி ஒரு சிறு 6up86ਗb
*ழத்து விமர்சகர்கள் பலர், படைப் புக்களை விமர்சனம் செய்வதில்லை; சமன் செய்து சீர்தூக்குவதில்லை; அரசன் எழு தினுல் என்ன, ஆண்டி எழுதினுல் என்ன சிருஷ்டிக்கப்பட்ட விடயம் எத்தகையது என நோக்குவதில்லை. அரசனுக்கு ஒரு நீதி, ஆண்டிக்கு ஒரு நீதி என்ற வகை யில்தான் விமர்சன விற்பன்னர்கள் விளாசி வருகின்றனர். அதே வேளை யில் நண்பர் ரகுராமன் பலரது குறை நிறைகளையும் சுட்டிக் காட்டி, நடு நிலை சென்று நயம் பட உரைக்கின்ரு ர். அவ ரது இச்செயல் ஈழத்து எழுத்தா ள ர்களது நல்ல அபிப்பிராயத்தைப் பெறும் என்பதில் சந்தேகமே யில்லை.
நண்பரி ரகுராமனுடைய விமர்சனம் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஒரு பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளமை மறுக்க முடியாதது; மறைக்க முடியாதது. என் போன்ருே ர் பலர் வரவேற்கின் ருர்கள்;
மகிழ்ச்சியடைகின் ருர்கள்.
-ஜனுர்த்தனன்
தினபதி 23 - 2-68.

முன்னுரை
“ஆயிரம் மலர்கள் மலரட்டும்” என்பது இலக் கியப் பூங்காவின் வளத்துக்கும் வனப்புக்கும் பொருந் துவதொரு சிறந்த கொள்கையாயினும், சுவைஞ னின் நலனுக்காக, அம் மலர்களின் மணம் குணம் நிலைபேற்றுத் தன்மை என்பனவற்றை அளவிட்டுக் காட்ட வல்ல, ஆக்க பூர்வமான விமர்சனமும் இன்றியமையாததாகிறது.
"கதை வளம் இலக்கிய முயற்சியிலீடுபட்ட எவ ருக்கும் - இளம் எழுத்தாளர், முதுபெரும் எழுத் தாளர் - சிறுகதையின் பரந்துபட்ட நுணுக்கங்களைக் காலத்துக்காலம் காட்டி, ஆக்கச் சிந்தனை சார்பான உணர்வுப் பண்பை ஊட்டுவதஞல், இத்தகைய ஒரு முயற்சி வரவேற்கப்படுகிறது.
தினபதி என்னும் நாளிதழின் "திணமொரு கதை' என்னும் கோட்பாட்டை யொட்டி வெளி வரும் சிறுகதைகளை விமர்சிக்கும் சிரம சாத்திய மான முயற்சியை ரகுராமன் அவர்கள் "கதை வளம்" என்னும் இவ் வெளியீடு மூலம் திங்களுக்குத் திங்கள் திறம்படச் செய்து வருவதை இலக்கியச் சுவைஞன் பாராட்டாமலிருக்க முடியாது.
எல்லா இலக்கிய வகைகளுக்கும் சொற் பொரு ளுக்கப்பாலாய் துடிக்கும் தொனிப்பொருளே பொருள். அதன் நறுமணமே மனத்தில் வியாபித்து நித்தியமாய் நிலைப்பது. அப்பொருள் நின்று வற்று மாயின் வெறுங் கூடே மிஞ்சும்.

Page 6
ரகுராமன், சிறுகதையில் தொனிப் பொருள் பற்றிக் கூறிய கருத்துக்கள் வலுவுடையன; இளம் எழுத்தாளர்கள் அவசியம் அவதானிக்க வேண் ԼգԱյ6ծT.
பிரசாரத் தன்மைக் கலப்பற்ற, ஆக்க பூர்வ மான அவரது விமர்சனம், வளரும் சிறுகதை எழுத் தாளர்க்கு ஊக்கமும் நம்பிக்கையு மூட்டுவதாக அமைந்து நிறைவினைத் தருகிறது.
சு. வே.
நாவற்குழி,
கைதடி, 12-2-1968,

கதை வளம்
*தினம் ஒரு சிறு கதையைப் பிரசுரித்தல்" என்ற துணிகரமான திட்டத்தைத் தினபதி வெளியிட்ட பொழுது, அதனைப் பற்றி வளர்ந்த எழுத்தாளர் மத்தியிலே அன்று நடைபெற்ற வாதப் பிரதி வாதங் களைப் பற்றி இப்பொழுது குறிப்பிடலாம். இப்படிக் குறிப்பதற்குக் காரணமும் இருக்கிறது.‘களங் கிடைக் கின்றது என்ற உற்சாகத்திலே இளம் எழுத்தாளர் கள் சிலர் விழுந் தடித்துக் கொண்டு எழுதுவார் கள்; பின்னர் தினமும் ஒரு கதையைப் பிரசுரிப் பதற்குப் போதுமான கதைகள் வந்து சேரமாட் டாது" என்று ஆரூடஞ் சொன்னவர்களையும் எனக் குத் தெரியும்.
அவர்களுடைய ஆரூடம் போய்த்துவிட்டது.
தினபதியில் மூன்ரு வது மாதமாகத் தொடர்ந்து தினம் ஒரு கதை பிரசுரமாகிக் கொண்டிருக்கின் றது; இன்னும் சில மாதங்களுக்குத் தேவையான கதைகளைக்கூட எழுத்தாளர்கள் அனுப்பி வைத் துள்ளார்கள்; உற்சாகங் குன்ருத நிலையில் அனுப் பிக் கொண்டே இருக்கிருர்கள் எனத் தினபதி ஆசிரிய பீடம் அறிவித்திருக்கிறது.
சுவையான புள்ளி விபரம்
அக்டோபரி மாதத்தில், இருபத்தியாறு ஈழத்து இளம் எழுத்தாளர்களின் இருப்பத்தியேழு கதை
to 2

Page 7
10
கள் பிரசுரமாகியிருந்தன. நவம்பர் மாதத்தில், மொத்தம் இருபத்திரண்டு கதைகள் பிரசுரமாகி யிருக்கின்றன.
இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு நாளும், என்னுடைய விமர்சனக் கட்டுரை பிரசுரமானதின் காரணமாக மூன்று நாள்களுமாக மொத்தம் நான்கு நாள்கள் சிறுகதைகள் பிரசுரமாகவில்லை.
இருபத்திரண்டு கதைகளுள், மூன்று கதைகளை அக்டோபர் மாதத்திலும் சிறு கதைகளை எழுதி யுள்ள மூவர் எழுதியுள்ளார்கள். அந்த மூவரும் கலையமிர்தன், ந. நல்ல ரத்தினம், கிளிவண்ணன் ஆகி யோராவர். மீதமுள்ள பத்தொன்பது கதைகளைப் புதிய எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்ருர்கள். எனவே, அக்டோபர் - நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கிடையில் நாற்பத்தைந்து புதிய எழுத்தாளர்கள் அறிமுகமாகி இருக்கின்ருர்கள்.
டிசம்பர் மாதத்திலும் புதிய எழுத்தாளருடைய கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. விமர் சனத்திற்கும், புள்ளி விபரங்களுக்கும் அதிக ஒட் டுறவு கிடையாது என்று நம்புபவன் நான். ஆனல், மூன்று மாதங்களுக்கு இடையிலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு பிடித்து, ஈழத்து வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்கும் உண்மையைப் புலப்படுத்த நியாயப் பிரமாணங்களிலும் பார்க்கப் புள்ளி விபரங்கள் உத வும் என்ற காரணம் பற்றியே இந்த விபரங்களை இங்கு தர விழைந்தேன்.
பெருகி வரும் இளம் எழுத்தாளர் பட்டியலைப் பார்க்கும் பொழுது, ஈழத்து இலக்கிய உலகில் ஒரு

நன்னிமித்தம் மனை கோலி வருவதைக் காணும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
என் தளம்
இவ்வளவையும் உற்சாகமாகக் கூறிக் கொள் ளும் பொழுது, தலையை எண்ணிக் கட்சியின் கூற் றினை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் ஜனநாயக சம் பிரதாயமாக இருப்பினுங்கூட, அது சுயம்புவான இலக்கிய விமர்சன விசாரணையுமாகாது என்ற பிறி தொரு உண்மையும் உறைக்கின்றது.
"இந்த இரண்டாவது உண்மையின் தளத்தில் நின்று நவம்பர் மாதக் கதைகளைப் ப்ற்றிய விமர் சன விசாரணையை ஆரம்பிக்கலாமா?’ என்ற கேள் வியும் எழுகின்றது. இலக்கிய வளர்ச்சியிலே உள்ள பற்றுதல் காரணமாக இக்கேள்வி எழுதல் தவிர்க்க முடியாததாகும்.
விமர்சனம் என்பது யார், அடி, அங்குலம் போன்ற அளவைகளில் என்றும் மாருத நிர்ண யிக்கப்பட்ட அளவுகளை உடையது என்று எழுத் துலகின் சவலைகூடத் தன்னை ஏமாற்றிக் கொள்ள
Dnt LT67.
‘நமது இலக்கியத் தோட்டத்திலே ஆயிரம் மலர்கள் மலரட்டும்!" என்று விரும்புதல் இலக்கிய வளர்ச்சி பற்றிய அக்கறையின் ஓரி இலக்கு. இந்த இலக்கு, என்றுமே இலக்காக அமைந்து விடுவ தில்லை. கால ஓட்டத்திலே இலக்கே தளமாக அமைந்து, புதிய இலக்கினைப் பற்றிய அக்கறை கணிகின்றது. அப்பொழுது, "இந்த ஆயிரம் மலர் களில், மனேரஞ்சிதம் எத்தனை? ரோஜா எத்தளை

Page 8
ܨܝ
2
குண்டு மல்லிகை எத்தனை? இரு வாட்சி எத்தனை? வீணிலே தோன்றிய எருக்கலம் பூக்கள் எத்தனை? என்று தரம் பிரித்துப் பார்ப்பதை மட்டுமே இலக் கியப் பற்றும், விமர்சன விசாரணையும் தூண்டவுங் கூடும்.
ஒரு தளத்தில் அதுசரி; மறு தளத்தில் இது சரி. ஆணுல், தினபதிப் பூங்காவில் மலரும் இலக்கிய மலர்களை இரண்டாவது தளத்தில் நின்று விமர் சனஞ் செய்வதற்கான காலம் இன்னமும் பழுக்க 'வில்லை. m
இத்தனையையும் மனத்திலே வைத்துக் கொண்டு தான், நவம்பர் மாதத்திற் பிரசுரமான இருபத்தி ரண்டு கதைகளையும் நோக்க வேண்டியிருக்கிறது.
பிராந்தியக் கணக்கு
எழுத்தாளர் தந்துள்ள முகவரிகள், அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள கதைக் களங்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு பிராந்திய ரீதியிலே கதை களைப் பிரிப்பதாயின், சென்ற மாதத்தைப் போலவே இம்மாதத்திலும் கிழக்கு மாகாணக் கதைஞர்களே அதிகம் எண்ணிக்கையுள்ள கதைகளை எழுதியிருக் கின்ருர்கள். மொத்தம் எட்டுக் கதைகள் அவர் களுடையவை. மலைநாட்டுக் கதைகள் ஆறு; யாழ்ப் பாணக் கதைகள் நான்கு. ம்ற்றும் நான்கு கதை களையும் வெலிகாமம், கொழும்பு, குருனுகல், மன் ஞர் ஆகிய இடங்களிலே வாழும் நான்கு எழுத் தாளர்கள் எழுதியிருக்கின்ருர்கள்.
நவம்பர் மாதத்திலே "நிறை நிலா" சிறுகதைத் தொகுதியின் ஆசிரியரும், சிறந்த கவிஞருமான இ.

13
நாகராஜன் இரண்டு கதைகளை அறிமுகஞ் செய் துள்ளார். அவரைப் போன்றே அனைத்திலங்கைத் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பின் தலைவர் வ. அ. இராசரத்தினம், சழனிவெளி இலக்கிய வட்டத் தலைவர் ஏ. பி. வி. கோமஸ், கவிஞர் யுவன் ஆகிய மூவரும் இவ்விரண்டு கதை களையும், ஏனை யோர் ஒவ்வொரு கதையையும் அறிமுகஞ் செய்து வைத்துள்ளார்கள்.
இனி, பிரசுரமான கதைகளைப் பற்றித் தனித் தனி விமர்சனங்களை எடுத்துக் கொள்வதற்கு முன் னர், நவம்பர் மாதக் கதைகளிலே பற்றிப் படரும் பொதுப் பண்புகளைப் பற்றியும், அவற்றிலே தொற் றிக் கிளை பிரியும் இலக்கியக் கோட்பாடுகள் பற் றியும் சற்று விபரித்தல், சம்பந்தப்பட்ட சகலருக் கும் பயனுடைத்தாக அமையுமெனக் கருதுகின் றேன்.
நவம்பர் மாதத்திலே பிரசுரமான கதைகளுக் குள் என். எஸ். எம். ராமையா சிபார்சு செய்து மலரன்பன் எழுதிய "பார்வதி, இ. நாகராஜன் சிபார்சு செய்து நாவாந்துறை டா. அன்ரனி எழுதிய ‘உறவுக்கு அப்பால்’, எம். ஐ. ஏ. முத்தலிப் எழுதி வ. அ. இராசரத்தினம் சிபார்சு செய்த 'திருமணம்’ ஆகிய மூன்று கதைகள் முறையே அக்கதைகள் விளைந்த மலைநாடு, யாழ்ப்பாணம், கிண்ணியா ஆகிய பிராந்தியங்களை நேர்த்தியாகச் சித்திரிப்பதிலே வெற்றி பெற்றுள்ளன. ཚན་
வ. அ. இராச்ரத்தினத்தினற் சிபார்சு செய் யப்பட்ட பிறிதொரு கதையான செல்வி கே. ஜே. மெக்காதரின் "பிணைப்பு" என்ற கதை தென் மாகாண முஸ்லிம்களின் பேச்சுத் தமிழை அறிமுகஞ் செய்

Page 9
14
வதிலே வெற்றி பெற்றுள்ளது. ஈழத்து இலக்கிய மணத்திற்குப் புதிய வாசனையைச் செல்வி மெக் காதர் சேர்த்துள்ளார்.
பத்திரிகைக் கதைகள்
இவற்றைத் தவிர மற்றைய கதைகளுள் பெரும் பாலானவை சாதாரணப் பத்திரிகைக் கதைகளின் தரத்தைச் சார்ந்தனவாக இருக்கின்றன என்பது சற்றே ஏமாற்றத்தைத்தான் தருகின்றது.
‘எல்லாக் கதைகளும் பத்திரிகைகளிலேதான் பிரசுரமாகின்றன; பத்திரிகையிலே பிரசுரமாகும் கதைகள் பத்திரிகைக் கதைகள்தானே; அப்படி யிருந்தும் "பத்திரிகைக் கதைகள்’ என்று தரம் பிரித் துக் கட்சி பேசுவது நியாயமா?' என்று இளம் எழுத் தாளர்கள் சிலர் கேட்கக் கூடுமாதலின், பத்திரிகைக் கதையென்று நான் குறிக்கும் கதைகள் பற்றிய விளக்கம் ஒன்றினைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. v
விமர்சகர்கள் சாதாரணமாகப் "பத்திரிகைக் கதைகள்’ என்று குறிப்பிடும் ரகக் கதைகளுக்கு பெரிய இலக்கிய நோக்கம் எதுவுங் கிடையாது. அவற்றின் முதலாவது நோக்கம்: பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புவது. இரண்டாவது நோக்கம்: சிருஷ்டி இலக்கியத்துறை பற்றியும், இலக்கிய விமர்சனம் பற்றியும் பயற்சி எதுவுமில்லாது, வாசிப்புப் பழக்கத்தை மட்டுமே கொண்ட வாச கர்களைத் திருப்தி செய்வது.
வாசகர்களுள் இந்த ரகத்தினர் பெரும்பான் மையினர். இருப்பினும், இத்தகைய கதைகளின்

15
வயது, பிரசுரமான பத்திரிகைகள் மளிகைக் கடைக் காரனின் கைகளுக்குச் சென்றடையும் வரை நிலைத் திருக்குமோ என்பது கூடச் சந்தேகம். இக் கதை கள், கதை நிகழ்ச்சிக் கூறுக்கு - கதையென்று நம்ப வைக்கும் நிகழ்ச்சிகளின் இசைப்பிற்கு - முக்கியத் துவங் கொடுக்கின்றன. உண்மை என்ன வென்றல், வலுவான ஒரு தொணிப் பொருளை நேர்த்தியாகப் பரிவர்த்தனை செய்யும் கதைகளே காலத்தை எதிர்த்து உயிர் வாழவல்லன. இந்த உயரிய பண்பு பத்திரிகைக் கதைகள் ரகத்தைச் சேர்ந்த கதை களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை.
தப்பித்தவறி இந்தப் பண்பு இணைந்து விட்டால், கதை வேறு ஒரு தரத்திற்கு உயர்ந்து விடுகின்றது. ஆரம்பம் - உச்சம் - முடிவு, முக்கோணக் காதல், எதிர்பாராத ஏமாற்றம், எதிர்பாராத மகிழ்ச்சி என்று எருமை உழக்கிய வயலை மீண்டும் உழு வதைப் போன்று இக்கதைகள் அமைந்திருக்கும்.
இந்தக் கதைகள் பெரும்பாலும் ஒரே வார்ப் பில் அமைவதினல், ஒன்றிலிருந்து பிறிதொன்றை இனங் கண்டு ஞாபகத்திலிருந்து பிரித்துப் பார்ப் பது சிரமாகிவிடும். இத்தகைய பண்புகளமைந்த கதைகளை, நான் குறிப்பிடுவதைப் போன்றே ஏனைய விமர்கசர்களும் "பத்திரிகைக் கதைகள்’ என்றே குறிப்பிடுகின்றனர்.
நோயின் ஏதுக்களும் மருந்தும்
"பத்திரிகைக் கதைகள் என்ற ரகத்தைச் சேர்ந்த கதைகளையே பெரும் பாலான இளம் எழுத்தா ளர்கள் எழுதுவதற்குக் காரணம் என்ன? நோயை இனங் கண்டு கொண்டால், வைத்திய சிகிச்சை

Page 10
6
அளிப்பது சுலபமாகி விடுகின்றது. இந்த மருத்துவ பரிசீலனை விவகாரத்தைப் போன்ற அக்கறை தான் இதற்கான காரணத்தை அறிவதிலும் ஏற்படுகின்றது.
கீழ்த் தட்டு, இடைத்தட்டு வாசகர்களைத் திருப்தி செய்யக் கூடிய கதைகளையே விரும்பிப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் மலிவாகக் கிடைக்கின்றன. இந்தக் கதைகள் பலவற்றை வாசிக்கும் பொழுது ஏற்படும் அருட்டுணர்வினை மட்டுமே சிருஷ்டி எழுச் சித் தளமாகக் கொண்டு கதைகள் எழுத இளம் எழுத்தாளர்கள் முந்துகின் ருர்கள். இதனல், இளம் எழுத்தாளர் பலர் தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தச் சூழலையும், தமது வாழ்விலே நேரடியாக அனுப விக்கக்கூடிய வாழ்க்கை ஆரோகண அவரோகணச் சுருதி பேதங்களையும் ஊன்றி அவதானிக்கவும், அந்த அவதானிப்பிலிருந்து புதிய தொனிப் பொருளை உள்ளடக்கிய இலக்கியப் படைப்பை உருவாக்க வேண்டுமென்ற துடிப்பும் அற்றவர் ளாக இருக்கின்றர்கள் . இதற்கு விடா முயற்சியும், சலியாத பயிற்சியுந் தேவை.
"பத்தோடு பதினென்று’ என்ற வகையில் எழுத் தாளர் பட்டியலில் சேர்ந்து கொள்ளாது, "நூற் றிலே ஒருவன்’ என்ற வகையில் தன் எழுத்து வன் மையை நிலைநாட்ட வேண்டுமென்று கருதும் எழுத் தாளன் இலக்கியப் பயணத்தை இலட்சியப் பயண மாகவும் வரித்துக் கொள்வதினலே கடின வழியைத் தேர்ந்தெடுக்கின் முன்.
உழைப்புப் பயன் தரும். அதை விடுத்துப் பத் திரிகைக் கதைகளின் அருட்டுணர்வில் எழுதப் படும் கதைகள் சுய எழுத்து முன்னேற்றத்திற்கு தக்க அடித்தளம் இட்டுத் தரமாட்டாது!

7
கிரேக்க இதிகாசத்திலே "புரோகிர ஸ்டீயன் as Liq.”ðavÜ (Procrustean Bed). U fò só 6? (Eb 5605 வருகின்றது. இந்தக் கட்டிலை வைத் திருந்தவன், தன் விருந்தினர்களை அந்தக் கட்டிலிலே படுக்கச் செய்வானும். கட்டிலிலும் பார்க்க உயரமான வர் சு மேற்படி கட்டிலிற் படுக்க நேர்த்தால், என்ன செய்வான் தெரியுமா? கட்டிலின் அளவிற்கு ஏற்ப விருந்தினர்களுடைய கால்களைத் தறித்துச் சரி செய்வானம். கட்டில் என்ற ஜடப் பொருளின் அளவுப் பிரமாணத்திலும் பார்க்க, ஒரு மனித ஜீவ னின் அங்க அளவுகள் இரண்டாம் பட்சமான Srpen u T? பத்திரிகைக் கதைகள் எழுதப்படும் பொழுது, உயிர்த் துடிப்புள்ள சம்பவங்களின் இசைப்பு முறை கட்டிலின் அளவிற்கு ஏற்ற வகை யிலே தறித்தெறியப்படுகின்றன! இந்த ஒப்புவமை யைப் பற்றியும் நமது இளம் எழுத்தாளர் சிந்தித் துப் பார்த்தல் விரும்பத்தக்கது.
துடிப்பும், ஆர்வமும் உள்ள இளம் எழுத்தா ளர் ஒரு மாதத்திற்குச் சஞ்சிகைக் கதைகளை வாசிக்காமல், "புதுமைப்பித்தன் கதைகள்", "ரகு நாதன் கதைகள்', "அழகிரிசாமி கதைகள்’, 'சிவப்பு ரிக்ஷா” (தி. ஜானகிராமன்), 'மெளனி கதைகள்', 'முல்லைக் கொடியாள்’ (விந்தன்), "ஜனனி (லா. ச. ரா. ) ஆகிய ஏழு சிறு கதைத் தொகுதி களையும் படித்து ஜீரணிக்கும்படி சிபார்சு செய்கின் றேன். இந்த ஏழு சிறு கதைத் தொகுதிகளும் ஏழு வகைத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றைப் படித்து முடிந்ததும் கதை எழுது வது பற்றிய வேறு ஒரு பிடிமானமும், புதிய ஒரு பார்வையுந் தோன்றும். அத்துடன், பத்திரிகை
A-3

Page 11
18
ரகக் கதைகளுக்கும், இலக்கிய அந்தஸ்து பெறும் கதைகளுக்கும் உள்ள இலட்சணங்களின் வேறு பாடுகளையும் இனங்கண்டு கொள்ளுதல் சாத்திய ιριτΘδιb.
தொனிப் பொருள்
சம்பவங்களின் இசைப்பினைக் குறிக்கும் கதை திகழ்ச்சிக் கூறே சிறுகதையின் பிரதான அம்சம் என்று கருதுதல் பத்தாம் பசலிக் கொள்கையாகும். நேர்த்தியான தொனிப் பொருளைப் (Theme) பரி வர்த்தனை செய்யத் தவறும் கதைகள் சிருஷ்டி இலக் கியத்தில் உன்னத இடம் பெறத் தவறுகின்றன.
டால்ஸ்டாயின் "எவ்வளவு நிலம் தேவை? மாப்பஸானின் 'வைர அட்டிகை" ஆகிய சாகா வரம் பெற்ற கதைகளை வாசித்துப் பார்த்தால், அவற்றின் அமரத்துவம் தொனிப் பொருள்கள் தொற்றிச் சமைந்திருப்பதைக் காணலாம்.
கதை நிகழ்ச்சிக் கூறின்றிக் கூட தொனிப் பொருளை மட்டுமே புலப்படுத்தக் கூடியதாக கதை எழுதப்படுதலும் சாத்தியம் என்பதை நமது இளம் எழுத்தாளர் அறிந்து கொள்வதும் நல்லது. *புதுமைப்பித்தன் கதைகள்" என்ற தொகுதியிலே 'இது மெஷின் யுகம்" என்ற கதை இடம் பெறு கின்றது. கதையின் இறுதி வரிக்கு வரும் வரையில் கதை நிகழ்ச்சிக் கூறு எதுவுமற்ற, ஒரு சம்பவத் தின் நேர்முக வர்ணனை என்ற மயக்கமே தோன் றுகின்றது. அவை இயந்திர யுகத்தின் இயந்திர வேகத்திற்குள் தன்னவும் இயந்திரமாகவே இணைத் துக் கொள்ளும் ஹோட்டல் பரிசாரகனப் பற்றிய வர்ணனைகளே என்னும் எண்ணம் வெகு இயல்

9
பாக எழுகின்றது. மேற்படி கதையின் இறுதிக் கட் டத்திலே “ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்து விட்டது ஸார்!’ என்று பரிசாரகன் குனியும் இடத் தில், அவன் இயந்திரம் அல்ல: மனிதன் என்ற தொனிப் பொருள் சடுதியிலே முகங் காட்டுகின் றது. இதஞல், அதற்கு ‘நல்ல ஒரு சிறுகதை’ என்ற அந்தஸ்தும் வந்து சேருகின்றது.
கட்டிலே விட்டிறங்காத கதை" என்ற மகுடத் தில் ஒரு கதை புதுமைப்பித்தனின் "காஞ்சனை’ என்ற தொகுதியிலே இடம் பெறுகின்றது கதை நிகழ்ச்சிக் கூறின்றியே 'கதை பண்ணலாம்” என்ப தற்கு இந்தக் கதை நல்ல இலக்கணமாக விளங் குகின்றது. இந்தக் கதையின் தொணிப் பொருளே,
தொனிப் பொருளின் முக்கியத்துவந்தான்.
தொனிப் பொருள் என்பதற்குப் பூரண விளக் கம் கொடுப்பதானுல், ஒரு முழுக் கட்டுரையே எழுத நேர லாமென அஞ்சுகின்றேன். தயிரிலே உள்ள வெண்ணெய் போல்வது தொனிப் பொருள். அது தயிரிலே உறைந்து கிடக்கின்றது. அதனைச் சட் டென்று இனங் கண்டு பிடிக்க இயலாது. அதற்காக அஃது இல்லையென்றுஞ் சொல்ல முடியாது.
சமயப் பெரியார்கள் தமது ஆழ்ந்த தத்துவங் களை விளக்குவதற்கும் நீதிக் கதைகளைக் கூறினர் கள். ஈஸாப் கதைகள், இயேசுநாதர் உவமைகள், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கதைகள் ஆகியன இந்த வகையைச் சார்ந்தன.
தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்துக் காட்டுவது போல நீதிக் கதைகளிலே தொனிப் பொருளை மகான்கள் மக்களுக்கு வெளிப்படையாகக் கூறிஞர்கள்.

Page 12
20
அவர்களுடைய நோக்கம் இலக்கியத்திற்கு அப் பாலும் உயர்ந்து நின்றதினல், தொனிப் பொருளை கலா நேர்த்தியுடன் பூடகமாகவும், நேர்த்தியாகவும் பொருத்தி வைக்கவும் வேண்டிய அவசியம் அவர் களுக்கு ஏற்படவில்லை.
மகான்கள் நீதிக் கதைகளைக் கருவியாகக் கைக் கொண்டனர். கதாசிரியர்கள் மகான்களல்லராத லால், கதைகளைக் கலா சிருஷ்டியாக - முழுமை யாக்க வேண்டிய அவசியத்தை உணருதல் வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில், பிரசாரக் கதைகளுக் கும், நீதிக் கதைகளுக்குமுள்ள வேறுபாட்டினை விளக்கின் விரியுமென்று அஞ்சுவதால், இவை பற் றிய விளக்கத்தைப் பிறிதொரு சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொள்ளலாம் எனத் தவிர்க்கின்றேன்.
பத்திரிகை ரகக் கதைகள் ஐந்து
இனி, நவம்பர் மாதத்திலே பிரசுரமான கதை களின் குணநலன்களை ஆராயப் புகுவோம். கலைய மிர்தன் எழுதி, திருச்செந்தூரன் சிபார்சு செய்த *முடிவு ந. நல்லரத் தினம் எழுதி ச. அ. செபரத் தினம் சிபார்சு செய்த “கடிதம்', எஸ். எஸ். கரீம் எழுதி ஈழத்துச் சோமு சிபார்சு செய்த ‘காத லுக்கு கண் இல்லை. த. பரமலிங்கம் எழுதி இ. நாகராஜன் சிபார்சு செய்த “முறைப் பெண்’, ஆர். வி. டி. ரோஸ் எழுதி பிறிதொரு பத்திரிகை யிலே கடமையாற்றும் கதாசிரியரினுற் சிபார்சு செய்யப்பட்ட "வைராக்கியம்’ ஆகிய ஐந்து கதை களையும் பத்திரிகை ரகக் கதைகளுக்குத் தகுந்த உதாரணங்களாக எழுந்த மேனியாகச் சாட்டலாம்.

2.
அக்டோபர் மாதத்தில் "இறுதி அவா’ என்ற கதையை எழுதிய கலையமிர்தன் நவம்பர் மாதத் தில் எழுதிய கதைதான் ‘முடிவு". படிக்க வந்த இடத்தில், படிப்பிலே கவனங் குன்றிக் கெட்டுச் சீரழிந்து, பரீட்சையிலே தோல்வி கண்டு, தற்கொலை செய்து கொள்ளும் விக்டருடைய கதையை "முடிவு' சித்திரிக்கின்றது.
போலி வாழ்விலே சிந்தையைப் பறி கொடுக்கும் பிறிதொரு மாணவனின் கதையை "அப்பா" என்ற மகுடத்தில் அக்டோபர் மாதத்தில் நல்ல ரத்தினம் எழுதி இருந்தார். "அப்பா’ என்ற அக்கதையில் அப்பா இறந்து போகிருர், "முடிவிலே மகஞன விக் டர் இறந்து போகின்ருன். மாற்றம் அவ்வளவுதான்!
அக்டோபர் மாதத்தில் ‘அப்பா’ என்ற கதையை எழுதிய நல்லரத்தினம், மூன்றடுக்கு மாளிகையிலே பிறந்து, செல்வத்திலே வளர்ந்து, குடிகாரக் கணவ னின் அட்டகாசங்களைத் தாங்காது தற்கொலை செய்யும் பொழுது, தேவி என்ற நாயகி எழுதிய கடிதத்தைத்தான் "கடிதம்' என்ற கதையிலே அறி முகப் படுத்தி வைக்கின்ருர்.
"காதலுக்குக் கண் இல்லை’ என்ற கதையில், நக ரப் படிப்பிற்கு வந்த ஹிஞயா என்ற முஸ்லிம் பெண், போலி நாகரிகங்களுக்கு வளைந்து கொடுத்து, ஆர்யா என்ற சிங்களக் கார்ச் சாரதியின் மீது காதல் கொள்கிருள். காதலின் இன்பமான இரக சியச் சந்திப்பு என ஹிஞயா முதலில் நினைக்கும் சந்திப்பிலேதான் ஆர்யா அப்பட்டமான காமுகன் என்ற உண்மை அவளுக்குப் புலப்படுகின்றது. அவளுடைய கற்பைக் காப்பாற்ற நியாஸ் (அவனே ஒழுக்கத்தை நிலை நாட்டும் சீலஞகச் சித்திரிக்க

Page 13
22
வேண்டுமென்று கதாசிரியர் நினைத்திருந்த போதி லும், அவன் ஒரு "பீப்பிங் டொம்" (Peeping Tom) என்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது.) இந்த நியாஸ் என்ற பரிதாபப் பாத்திரம் இறக்க (?) நேரிடுகின்றது. t
கட்டிலுக்கு ஏற்ப விருந்தாளியின் கால் தறிக் கப்படுவதைப் போல, இம்மூன்று கதாசிரியர் களும், பத்திரிகைக் கதைகளுக்கு ஒரு முடிவு தேவை என்ற காரணத்தினுல், ஒவ்வொரு கொலைகளைச் செய்து முடிப்பதிலே கூட ஒற்றுமையுடையவர்களாக இருக்கின்றர்கள்.
நவாலியூர் த. பரமலிங்கத்தின் *முறைப் பெண்” என்ற கதையிலே, முடிவில் கொலை செய் யாது திருமணஞ் செய்து வைக்கும் புரோகிதராகக் கதாசிரியர் மாறுகிருர். யாழ்தேவி ரயில் பிரயாணத் தின் போது மோகன் - லோகா என்ற இளம் ஜோடி சந்திக்கின்றது. பின்னர், நீண்ட காலம் பிரிந்தி ருந்த அத் தானும் - மச்சாளுமே அவர்கள் என்ற உண்மை தெரிகிறது. "டும் டும்" என்று முறைப் பெண்ணிற்கும் அவள் அத்தானுக்கும் கல்யாணம் நடைபெறுகின்றது.
கல்வி கற்கும் தம்பிகள், தாய், விபத்திலே இரு கால்களையும் இழந்த தந்தை ஆகியோர் அடங்கிய குடும்பத்தைப் பராமரிப்பதற்காகச் சமய வகுப்பு நடத்தி வரும் மலர்விழிதான் ஆர். வி. டி. ரோஸ் எழுதியுள்ள *வைராக்கியம்" கதையின் நாயகி. அவ ளைப் பார்ப்பதிலே கதாசிரியருக்குச் சலனம் ஏற் படுகின்றது. அவளுடைய நடத்தையைப் பற்றி ஊராரி அவதூருகப் பேசுகிருர்கள். அந்தப் பேச் சினைச் சாட்டாக வைத்துக் கொண்டு மலர்விழி

23
யுடன் அவர் பேசுகின்ருர். பின்னர் தான் தெரிகி m தாம். ஆச்சரியப்பட வேண்டாம்; அது சகோதர பாசமாம்! இதிலே யாருக்கு எதைப் பற்றி வைராக் கியம் ஏற்பட்டது என்று தெரியாமல் நாம் திகைக் கின் ருேம். வாழ்க்கையை நேர்மையாக நோக்கா மல், ஏனைய பத்திரிகைக் கதைகள் என்ற சாளரத் தினூடாக வாழ்க்கையைத் தரிசிக்கும் ஒரு பொதுமை இநத ஐந்து கதைகளிலேயும் உண்டு. இதஞல் நிகழ்ச்சிக் கூருக இடம் பெறும் சம்பவங்கள் அதீத கற்பனை சார்ந்தவையாகவுந் தோன்றுகின்றன.
சிபார்சு செய்யும் கதைஞரின் தொடர்பு
*ஈழத்தின் சிறுகதை மன்னன்” எனவும் போற் றப்படும் எஸ். பொன்னுத் துரை சிபாரிசு செய்து, ப. முத்துக்க மாரசாமி ஐயர் எழுதிய ‘பேய்" என்ற கதையும் சாதாரண பத்திரிகை ரகக் கதை யாக இருக்கின்றது. சித்ரா, சேகர் மீது காதல் கொள்ளுகின் முள்; கர்ப்பந் தரிக்கின் முள் ஏமாற் றம்; தற்கொலை என்ற நிகழ்ச்சிகளே கதையாகப் பின்னப்பட்டிருக்கின்றன. கதையிலே செழிப்பான நடை கையாளப் பட்டிருப்பதுடன், இறுதியில் வரும் திருப்பம் ரசிக்கும் படியாகவும் இருக்கின்றது. சிபார்சு செய்யும் ஆசிரியர், தமது கருத்துக்களை இளம் எழுத்தாளர்களுடைய கதைகளிலே புகுத் தாது பார்த்துக் கொள்ள வேண்டு மென்ற பண்பு இக்கதையைச் சிபார்சு செய்த பொழுது எஸ். பொ. வுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.
யுவன் சிபார்சு செய்துள்ள மனேரஞ்சிதம் எழு திய வாஞ்சை" அமானுல்லாஹ் எழுதிய ‘தாலிப் பாக்கியம்" ஆகிய இரண்டு கதைகளும் இந்த

Page 14
24
நோக்கிற்கு எதிர் மாருக அமைந்துள்ளன என்ற எண் ணமும் தொடர்பு பின்னி ஞாபகத்திற்கு வருகின் றது. இக்கதைகளை, ஒருசேர வாசிக்கும் பொழுது கதையைச் சிபார்சு செய்த யுவன் அளவுக்கு மீறி, அத்துமீறிக் கூடப் பிரவேசித்து விட்டார் என்ற எண் ணம் இயல்பாகத் தோன்றுகின்றது.
வர்ணனைகளிலே ஓரளவு கவித்துவப் பாணியைப் புகுத்துதல் மட்டுமல்ல இதற்கான ஏக காரணம். இரண்டு கதைகளிலும் விஜி என்ற ஒருத்தியே கதாநாயகியாக வருகின்ருள். இரு வேறு எழுத் தாளர்களுக்கு ஒரே பெயர்தான் நினைவுக்கு வந் தாலும், சிபார்சு செய்தவருக்கும் விஜியை விட் டால் வேறுபெயர் தமிழிற் கிடைக்கவில்லையா என்று கேட்கவுந் தோன்றுகின்றது.
"வாஞ்சை"யில் விஜி பூத்தையல் பழக விரும்பு கின்ருள். அவள் இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய, அவள் தம்பியான குலோத்துங்கன் தட்டெழுத்தும், சுருக்கெழுத்தும் கற்பதைத் துறக்கின்றன்.
*தாலிப் பாக்கியம்" கதையில் விஜிக்கு மணம் பேசப்படுகின்றது. இந்தப் பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்காக ஏங்குபவன் அவள் அண்ணன், முதற் கதையில் விஜியின் தம்பி; இக்கதையில் விஜியின் அண்ணன் என்பதும், இரு கதைகளையும் சிபார்சு செய்தவர் ஒருவரே என்பதும் கவனத்திற்குரியது.
தாலிப் பாக்கியம்" இல்லாத ஒரு குடும்பத் திலே பிறந்தவள் என்ற காரணத்தினுல் விவாகத் திற்கு ஒப்புக் கொண்ட மாப்பிள்ளை, கல்யாணம் வேண்டாமென்று கூறி விபத்திலே இறக்கிருன். "பொட்டை அழியுங்கள்’ என்று விஜி கதறும்

25
பொழுது, இக் கதை தென்னிந்தியாவிலுள்ள ஓர் அக்கிராகாரத்திலே நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் வாசகனுக்கு இயல்பாக ஏற்படுகின்றது.
முஸ்லிம் எழுத்தாளர்கள் பிற சமயச் சூழலில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்ட சிறு கதை æðar எழுதவோ, சிபார்சு செய்யவோ கூடா தென்ருே, அன்றேல் மற்றவர்கள் முஸ்லிம் கதை களை எழுதவோ, சிபார்சு செய்யவோ கூடாது என்ருே நான் கூறவில்லை. ஆனந்த விகடனில் முதன் முதலாக 50 ரூபாயை முத்திரைக் கதைச் சன் மானமாகப் பெற்ற துரயவன் (எம். எஸ். அக்பர்) ஒரு முஸ்லிமாவார். அவர் எழுதிய அந்த மூத்தி ரைக் கதை, இந்து சமய சூழலை நேர்த்தியாகச் சித்திரிக்கின்றது. தமிழிலே பிரசுரமான முதலாவது உருவகக் கதைத் தொகுதியான மரபு" என்ற நூலில் எம். ஏ. ஏஹ்மான் இந்து சமயத் தத்து வங்களிலே வனைந்தெடுக்கப்பட்ட உருவங்களைக் கையாண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கையை மிக நேர்த்தியாகச் சித்திரிக்கும் “ஈரா" (இத்தா - கணவன் இறந்ததும் மனைவி நோற்கும் நோன்பு) என்னும் சிறுகதையை எஸ். பொன்னுத்துரை தமது "வீ” (சிறுகதைத் தொகுதி, அரசு வெளியீடு) என்னும் நூலில் எழுதியுள்ளார்.
நவம்பர் மாதக் கதைகளுள் முஸ்லிம் பகைப் புலத்தைக் கொண்டு நல்ல சிறுகதைகளாகத் தேறும் இரண்டு கதைகளையும் சிபார்சு செய்தவர் வ. அ. இராசரத்தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Los

Page 15
26
ஆனல், கதை எந்த இன - மதச் சூழலிற் சித்திரிக் கப்படுகின்றதோ அஃது இயல்பாக அமைந்திருக் கின்றதா என்பதில் இளம் எழுத்தாளர்களும், சிபார்சு செய்யும் முதிய எழுத்தாளர்களும் கவனஞ் செலுத்துதல் விரும்பத்தக்கது.
அவ்வாறு பார்த்துக் கொள்ளா விட்டால், அன்ன நடை பழகச் சென்ற காகம் தன் நடையையும் மறந்தது போல, போலி சிருஷ்டிகளே அறுவடை யாகலாம் என்பதற்கு யுவன் சிபார்சு செய்துள்ள கதைகள் சான்ருக அமைந்துள்ளன.
நம்பிக்கை வரட்சி
அக்டோபர் மாதக் கதைகளிலே, என் கணிப்புப் படி ஆருவது கதையின் ஸ்தானத்தைப் பெற்ற "இப்படி ஒரு சித்தி’ என்ற கதையை எழுதிய கிளி வண்ணன்,நவம்பர் மாதம் "தாய்மை’ என்ற கதையை எழுதியுள்ளார். முன்னைய கதையைச் சிபார்சு செய்த தெளிவத்தை ஜோசப்தான், இந்தக் கதையையும் சிபார்சு செய்துள்ளார். "இப்படி ஒரு சித்தியில்
ஒரு மலடி வருகின்ருள்; “தாய்மை"யில் கமலா என்ற மலடி வருகின்ருள். தன் கணவனுக்குக் குழந்தை உண்டாக வேண்டு மென்பதற்காக
லலிதா என்ற பெண்ணை மூத்தாளே கட்டி வைக் கின்ருள். 'சாகக் கொடுத்தாலும், போகக் கொடுக்க மாட்டாள்" என்ற பழமொழியைக் கேட்டுப் பழ கியவர்களுக்கு, இந்தக் கதை செயற்கையாக அமைந்துள்ளதாகத் தோன்றும். கிளிவண்ணன் சதா மலடிகளைப் பற்றியே யோசித்துத் தன் கற்பனை களும் மலடு தட்டாமல் இருக்கப் பார்த்துக் கொள்வது நல்லது. w

27
எச். எம். பி. முஹிதீன் சிபார்சு செய்து எம். ஐ. எம். ஹ"ஸைர் எழுதிய "ஆயிஷாவின் பெரு நாள்" என்ற கதை பிறிதொரு வகையில் நல்ல தரத்தை எய்தத் தவறி விடுகின்றது. ஆயிஷா ஏழை அவளுடைய அம்மா நிறைமாதக் கர்ப்பிணி தந்தை அப்துல்லா காலனுடன் போராடிக் கொண் டிருக்கின்ருர். இப்படிப்பட்ட ஒரு தரித்திர நிலையில் எப்படி ரமழான் பெருநாளைக் கொண்டாடியிருக்க முடியும்? கொண்டாட முடியாவிட்டாலும் பரவா யில்லை. அன்று பார்த்துத் தான் அப்துல்லா மெளத் தாகிப் (இறந்து) போஞர். மாடி வீட்டு ஹாஜி யார் ‘ஸக்காத் (ஏழை வரி என்ற தர்மம்) ஒழுங் காகக் கொடுத்திருந்தால் அப்துல்லா தப்பியிருக் கலாம் எனக்காட்டி, இதன் மூலம் ‘முதலாளி வர்க் கம் ஒழிக!" என்ற கோஷமும் மறைமுகமாகப் புகுத் தப் பட்டிருக்கிறது. "ஏழை - பணக்காரன் இரண்டு துருவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்பதைப் பிரசாரஞ் செய்ய வந்த இக்கதை, தொழிலாளர் களுக்கு வாழ்க்கையிலே நம்பிக்கை ஊட்டத் தவறி யுள்ளமையால், மிகச் சாதாரணமாக முடிவடைந்து விடுகின்றது.
பெண் எழுத்தாளர் நால்வர்
அக்டோபர் மாதத்திலும் பார்க்க் அதிகமான கதைகளை நவம்பர் மாதத்தில் பெண் எழுத்தாளர் கள் எழுதியுள்ளார்கள். தென்னகப் பெண் எழுத் தாளர்களுடன் ஈழத்துப் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உற்சாக ந் தருவதாக இல்ல்ை. ஆனல், நவம்பர் மாதத்திலே பிரசுரமான கதைகளை வாசிக்கும் பொழுது இளம் எழுத்தாளர்களின் மத்தியில்

Page 16
28
கணிசமான அளவு பெண் எழுத்தாளர்கள் தோன் றக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.
"மனேரஞ்சிதம்" என்ற பெயரைத் தவிர (இஃது ஓர் ஆணின் புனைபெயராகக்கூட இருக்கலாம்) நாகபூஷணி பாலசுப்பிரமணியம், எஸ். இராஜம் புஷ்ப வனம், செல்விகள் இ. அசோகாம்பிகை, கே. ஜே. மெக்காதர் என்னும் நான்கு பெண் எழுத்தாளர் கள் இம் மாதத்தில் அறிமுகமாயிருக்கின்ருர்கள்.
இந்தக் கதைகளிலே, பேர் பாதிக் கதைகளா வது நல்ல கதைகள் என்ற தரத்தினை எய்தியிருக் கின்றன. இந்த நான்கு கதைகளிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளரான செல்வி மெக்காதர் எழுதி யுள்ள “பிணைப்பு" என்ற கதையை வ. அ. இராச ரத்தினம் சிபார்சு செய்துள்ளார்.
தென்மேற்குக் கரையோரத் தமிழ்
ஸகீனு, சாக்கிர் தம்பதிகள் பிரிந்து வாழ்கின் ருர்கள். அவர்களுக்குப் பிறந்த அமீதாவும், அவளு டைய அண்ணஞன அம்ஜத்தும் தாய் ஸ்கீனுவின் நிழலிலே வாழ்கின்றர்கள். சிறுமி அமீதாவைத் தந்தையின் நினைவு வாட்டுகின்றது. அவளுட்ைய வாட்டத்தைப் போக்கித் தந்தையைக் காணும் பயணத்திற்கு அண்ணன் அம்ஜத் உதவுகின்றன். இரண்டு பிள்ளைகளும், இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு “வாப்பா"வைத் தேடிக் கொண்டு புறப் படுகின் ருர்கள். வழியிலே அமீதாவுக்கு ஏற்பட விருந்த கார் விபத்து மயிர் இழையிலே தவிர்க்கப்படு கின்றது. தமிழ்ச் சினிமாவில் வரும் திருப்பத்தைப் போன்று மேற்படி காரிலிருந்து அவர்களுடைய *வாப்பா" குதிக்கின்ருர், குழந்தைகளுடைய சோகக்

29
கதையைக் கேட்டு, சாக்கிர் தன் குழந்தைகளுடன் மனைவி ஸகீனுவிடம் செல்கின் ருர்,
ஈழவள நாட்டில் முஸ்லிம்கள் பேசும் மண் வாசனைத் தமிழ் என்று கிழக்கு மாகாணத்தின் அறுவடைகளையே படித்து இன் புற்று வந்தோம். சிங் கள மக்கள் மத்தியிலே, தென்மேற்குக் கரையோர மாக வாழும் முஸ்லிம் மக்களும் தனித்துவமான முறையிலே தமிழைப் பேசுகின் முர்கள் என்பதை யும், அந்தத் தமிழின் இனிமையையும் “பிணைப்பு' என்ற கதையிலே நன்கு அனுபவிக்க முடிகின்றது.
பேச்சுத் தமிழிலே இது புதிய சுருதியை அழ குடன் சேர்க்கின்றது. இந்த அளவிலாவது செல்வி மெக்காதரின் வெற்றி மகத்தானது.
இன்னுெரு வகையிலும் "பிணைப்பு வெற்றிக் கதையாக அமைகின்றது. அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களிலும் பத்து முஸ்லிம் எழுத் தாளர்கள் தமது படைப் பின் கைவண்ணத்தைத் தினபதியிலே காட்டியிருக்கின் ருர்கள். இந்தப் பத்துக் கதைகளிலும் பார்க்க ‘பிணைப்பு" இஸ்லா மிய சமய ஆசாரங்களைப் பேணுவதிலும், இஸ்லா மியச் சூழலைச் சித்திரிப்பதிலும் பெரு வெற்றி பெற்றுள்ளது என்பது இங்கு மகிழ்ச்சியுடன் குறிப் பிடத்தக்கது.
முஸ்லிம்களுடைய லெளகீக வாழ்க்கைச் சூழலை யும், பழக்க வழக்கங்களையும், நடைமுறை மொழி யையும் சித் திரிப்பதனல் மட்டும் சிறந்த இஸ்லா மியக் கதை எழுதி விட முடியாது. சமய தத்துவ முரண்பாடின்றியும் இருத்தல் வேண்டும். ஸ்கீன இறை பக்தி மிக்கவள், தம் இரு கண்மணிகளாம் குழந்தைகளைக் காணுத போது அவளது இறை நம்

Page 17
30
பிக்கையே (ஈமான்) அவளுக்கு ஆறுதலாக அமை கின்றது. தன் காணுமற் போன குழந்தைகள் மீள வேண்டுமென இறைவனை இறைஞ்சி ‘இரண்டு ரக் அத்து சுன்னத்துத் தொழுகை” (இறை தியானம்) இயற்றுகின் ருள்.
இதைக் கதாசிரியர் சாதாரணமாகக் கூறி, இஸ் லாமிய கோட்பாடுகளுக்குள்ளும் நம்மைப் புகுத்து கின்றர். இதனை வெகு இயல்பாகப் புகுத்துவது கதையின் கலைத் தன்மைக்கு மெருகு சேர்ப்பதாக வும் அமைந்துள்ளது. "பிணைப்பு" என்ற கதை குழந்தைகளின் மன அவசங்களுக்கும், உணர்ச்சி களுக்கும் முக்கியத்துவங் கொடுக்கின்றது.
பத்து வயதான விக்டர் என்னும் சிறுவனு டைய மன அலைவுகளைக் கடவுளுக்கு போட்ட கடிதம்" என்னும் கதை சித் திரிக்கின்றது. எஸ். இராஜம் புஷ்பவனம் எழுதியுள்ள இக்கதையை ஏ. பி. வி. கோமஸ் 9 urri d. செய்துள்ளார். * பிணைப்பு என்னும் கதை இஸ்லாமியச் சூழலைச் சித்திரிப்பதைப் போல, இக்கதை முறையான கிறிஸ்தவச் சூழலில் எழுதப்பட்டுள்ளது. "பாலர்களை என்னிடத்தில் வர விடுங்கள். ஏனெனில், பரலோக . ராஜ்யம் அவர்களுடையது' என்ற ஏசு பிரானின் வாசகத்தின் அடிப்படையிலே இக்கதை அமைக்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.
இக்கதையிலும் பிரிந்து வாழும் மேரியும் அவள் கணவனும் அவர்களுடைய மகஞன விக்டரின் உணர்ச்சியினுற் பிணைக்கப்படுகின் ருர்கள். நத்தார் பண்டிகையின் சூழலிலேதான் இந்த மன்னிப்பும், புனர் வாழ்வும் சம்பவிக்கின்றன. “கடவுளுக்குக் கடிதம் எழுதி விக்டர் தன் மனப்பாரங்களைச்

3.
சமர்ப்பிக்கும் பகுதிகளை வாசிக்கும் பொழுது, ஒரு மொழி பெயர்ப்புக் கதையை வாசிக்கின் ருேமோ என்ற உணர்வும் தவிர்க்க முடியாது ஏற் படுகின்றது. m
பிரச்சினைக் கதை
அக்டோபர் மாதக் கதைகளுள், என்னுடைய அபிப்பிராயத்தில் முதலாவது கதையாகத் தேறியது "மன்னிப்பு" என்னுஞ் சிறுகதையாகும். இதனை, “சுடர் விளக்கு” நாவலின் ஆசிரியரும், பெண் எழுத் தாளருள் முன்னணி வரிசையிலே நிற்பவருமான பா. பாலேஸ்வரி சிபார்சு செய்திருந்தார்.
அவர் நவம்பர் மாதத்திலே செல்வி இ. அசோ காம்பிகை எழுதிய 'நெஞ்சம் நிறைந்தவன்" என்ற கதையைச் சிபார்சு செய்துள்ளார். ‘மன்னிப்பு? விலும் பார்க்க 'நெஞ்சம் நிறைந்தவன்" கிளப்பும் பிரச்சினை அதிகம் சிக்கலானது.
ராணி, நான்கு பெண் பிள்ளைகளைப் பாரமாகக் கொண்ட குடும்பத்திற் பிறந்தவள். அவளுக்கும், அவளுடைய தந்தையின் சிநேகிதரான ஒருவரின் மகனுக்கும் விவாகம் நடைபெறுகின்றது. ராணியின் கணவன் உழைக்காமலும், பற்றற்ற முறையிலும் வாழ்ந்து விட்டுத் திடீரென மறைந்து விடுகின்ருன். ராணிக்கு இரண்டாம் விவாகம் நடைபெறுகின்றது. அந்த வேளையில் அவளுடைய முதலாவது கணவ னுக்குப் பைத்தியம் என்று தந்தி வருகின்றது. “முதல் கணவன் உயிருடன் இருக்க, இரண்டாவது விவாகம் நடைபெறுதல் சட்டபூர்வமானதா?" *கணவனுக்குப் பைத்தியம் என்ருல் விவாகரத்துத் தானுகக் கிடைக்கும்!” “அது எப்படி? இரண்டாம்

Page 18
32
விவாகம் நடை பெற்ற பின்னர் தானே, முதல் கண வன் பைத்தியம் என்ற செய்தி கிடைக்கின்றது?” என்று இக்கதையிலே எழும் சட்டப் பிரச்சினைகளை வைத்து மண்டையைப் பிளக்கத் தேவையில்லை.
ஒரு முதிர்ந்த எழுத்தாளரும், ஒர் ஆரம்ப எழுத்தாளருமான இரண்டு பெண்கள், முதற் கண வன் இருக்கும் பொழுது, இரண்டாம் கல்யாணத் தைக் கட்டி வைக்கும் அபத்தத்தில் ஈடுபடுகின்ருர் களே என்று எழுந்த சினம், கதையின் இறுதிப் பகுதியிலே தளர்ந்து விடுகின்றது. ராணியின் உள் ளத்திலே, முதலாவது கணவன் தான் நெஞ்சம் நிறைந்தவனுக இருக்கின் ருன். "ஒரு பெண்ணினு டைய மனத்தில், நிறைவேற த காதலாயினும் முத லாவது ஏற்பட்ட காதல் தான் மிக ஆழமாகப் பதி கின்றது” என்பது ஒரு பொதுவான நம்பிக்கை யாகும். அந்த நம்பிக்கையைத் தான் இக்கதை தொணிப் பொருளாகக் கொண்டுள்ளது.
ஒரளவு நல்ல கதைகள்
ஐந்து வெவ்வேறு களங்களில், ஐந்து வெவ்வேறு தொனிப் பொருள்களை வெளிப்படுத்துவதில் கணிச மான வெற்றி பெற்று, ஓரளவு நல்ல கதைகள் என்ற தரத்தை ‘காதல்’, ‘திருமணம்’, 'உறவுக்கு அப்பால்’, ‘கண்ணிர்”, “உள்ளம் எரிகின்றது" என்ற ஐந்து கதைகள் எய்தியிருக்கின்றன.
எம். ஏ. நுஃமான் சிபார்சு செய்து பி. கிருபை தாஸ் எழுதியுள்ள ‘காதல்’ சினிமாக் கொட்டகை யில் நடைபெறுகின்றது. சினிமாக் கொட்டகையில் நடை பெறும் 'உரசல் இன் பத்திலேயே கதையின் பெரும் வகுதி நீளுகின்றது. இந்த இன்பம் நடைபெறு

33
வதற்கு "அடுக்கு’ப் பார்க்கும் கட்டம் அனுபவ ரீதி யாகவும் அமைந்துள்ளது. போலி நாகரிகத்திலே சிக்குண்டு சோரம் போன ஒரு பெண்ணைக் கண்ட மாத்திரத்திலேயே அழகிய பழம் என்று நினைத்து ஏமாறுவதுதான் இக்கதையின் கதை நிகழ்ச்சிக் கூறு. அவள் ஆலம் பழம் என்பதுதான் சண்டு பிடிப்பு! சோரம் போன பெண்ணை ஆலம் பழத்திற்கு உவ மித்து ஏலவே பல கதைஞரும் கவிஞரும் எழுதி யிருக்கிருர்கள்.
வ. அ. இராசரத்தினம் சிபாரிசு செய்துள்ள "திருமணம்” என்ற கதையை எம். ஐ. ஏ. முத்தலிப் எழுதியுள்ளார். பூப்பெய்திப் பத்து ஆண்டுகள் ஆகி யும், ஏழையாகவும் கறுப்பியாகவும் இருப்பதினல் கன்னியாகவே காலங் கழிக்கும் தன் தங்கையின் அவல நிலையிஞல் மன அவதிக்குள்ளாகிச் சாம்பு கின்ருன் காசிம். அவனுடைய உணர்ச்சிகளும் அவன் வேளாண்மை வெட்டில் ஈடுபடும் காட்சியும் நல்ல முறையிலே சித்திரிக்கப் பட்டுள்ளன. திருமணத் தின் மூலம் ஆண்கள் தம்மிடமில்லாத ஏதோ ஒன் றினைப் பெண்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிருர்கள் என்ற விளக்கம் கதைக் குப் புறம்பாக இருந்தாலும், நயம் படச் சொல்லப் பட்டிருக்கிறது. நீரழிவு வியாதியாற் பீடிக்கப்பட் டவனை மணந்ததினுல் தன் தங்கையின் வாழ்க்கை சீரழியும் எனக் காசிம் அங்கலாய்க்கும் இறுதிப் பகுதி, மருத்துவ உண்மையோடு ஒட்டாமலிருப் பதினல், கதையில் எங்கேயோ அபசுரம் ஒலிப்பதான எண்ணந் தோன்றுகின்றது.
நாவாந்துறை டா. அன்ரனி எழுதியுள்ள 'உற வுக்கு அப்பால்" என்ற கதையை இ. நாகராஜன்

Page 19
34
சிபார்சு செய்துள்ளார். இக்கதை யாழ்ப்பாணத்து மீனவக் குடும்பத்தின் பகைப் புலத்திலே நடை பெறுகின்றது. மீனவர்களுடைய குடும்பச் சூழலை யும், கிறிஸ்துவப் பின்னணியையும் வெகு இயற் கையாகச் சித்திரிப்பதிலே இக் கதை வெற்றி பெற் றுள்ளது. கதை சரளமான நடையிலே நகர்த்தப் படுகின்றது. யோசப் என்ற உறவு முறையான ஒரு குடிகாரனை மணந்த பிலோமினுவின் வாழ்க்கை துன்பமயமாகிவிட்டது என்ற படுதாவிலே, பிலோ மினுவின் மனத்தில் உறவு முறை இல்லாத விக்டர் மீது காதல் மலர்கின்றது.
ஊரவர் என்ன பழியைச் சொன்னுலும், திரேசா உறவுக்கு அப்பாலே தேடிக் கொண்ட வாழ்க்கை யாவது மனமொத்ததாக அமையட்டும் என்று வாழ்த்தும் விரிந்த பண்பு அவள் தந்தையான பேதுரு என்ற தொழிலாளிக்கு ஏற்படுவது இயற்கையே.
விட்டிற்கு வரும் விக்டர் மீது திரேசாவுக்குக் காதல் அரும்புவதும் இயல்பானது. ஆஞல், தின மும் கள்ளுக் கொட்டிலில் நுழைந்துவரும் யோசப் பின் நண்பனன விக்டரின் குணநலனைப் பொறுத் துத் தானே திரேசாவின் வாழ்க்கை வளமாக அமை யும் என்ற சந்தேகம் கதை முடிவுற்றதற்கு அப் பாலும் வாசகனுடைய மனதிலே எழுந்து நிற்கின் (D3.
காதல், கணவன் - மனைவி உறவு, பிள்ளைப் பாசம் என்ற வழமையான தடத்திற்குப் புறம்பான ஒரு கதை நிகழ்ச்சிக் கூறினைச் சித்திரிக்க முற்படு வதினுல் "கண்ணீர்" என்ற கதையின் தரம் உயர்ந்து நிற்கின்றது. இக் கதையைப் புலவர் தமிழ் மாறன்

፰ 5
எழுத புதுமைலோலன் சிபார்சு செய்துள்ளார். இது அச்சகத் தொழிலாளியைப் பற்றிய கதை. ஜெய காந்தன் அச்சகத் தொழிலாளர்களுடைய மன அவசங்களையும் துயர்களையும் நேர்த்தியாகச் சித்தி ரிக்கும் வகையில் "டிரெடில்’, ‘ஓவர்டைம்’ போன்ற சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவை அனுபவ ரீதியாகவும், யதார்த்தமாகவும் அமைந்துள்ளன. அந்தக் கதைகளுடைய தரத்துடன் ‘கண்ணி"ரை ஒப்பிட முடியாது என்பது உண்மை. ஆனல், தமிழ் மாறன் தமது கதைக்குத் தொனிப் பொருளாசி வேலையில் லாப் பிரச்சினையையே கையாண்டுள்ளார் என்பது கவனத்திற்குரியது.
நம் நாட்டில் வருடா வருடம் வேலையில் லாத் திண்டாட்டம் பூதாகரமாக வளர்ந்து வருகின்றது. இந்த நிலையிலும், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழி யர்கள், கூட்டுத்தாபனங்களிலும், தனியார் துறை களிலும் உயர் பதவிகளில் அட்டையாக ஒட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்ருேம் அதீத ஆசை கொண்ட இந்தக் "கிழங்க"ளின் செயலால் எத்தனை குடும்பங்கள் கவலைப்படுகின்றன என்ற உண்மை யைக் "கண்ணிர்’ நயம்படச் சுட்டிக் காட்டுகின்றது, இந்த உண்மையைச் சுட்டி, சமுதாயத்தைச் சாடும் பொழுது கூட பிரசாரத் தொனியைப் புக விடாது பார்த்துக் கொண்டமை இக்கதைக்குக் கலையழ கைச் சேர்க்க உதவுகின்றது.
மாணிக்கத்தையும் கிழவரையும் சந்திக்கச் செய் யும் நிகழ்ச்சியை இயல்பாகச் சித்திரிக்கத் தவறி விட்டமையைப் பெரிய குறைபாடு என்று பாராட் டத் தேவையில்லை.
"உள்ளம் எரிகிறது’ என்ற கதையை ஈழத்து இரத்தினம் எழுத நவம் அறிமுகஞ் செய்துள்ளார்.

Page 20
36
மேலெழுந்த பார்வைக்குப் பத்திரிகைக் கதை போன்று ஜாலங் காட்டினுலும், "உள்ளம் எரிகிறது’ தரமான கதையாகவே அமைந்துள்ளது. ஈழத்து இரத்தினம் இளம் எழுத்தாளரல்லர். பல ஆண்டு களுக்கு முன்னர் இலக்கிய உலகிலே சிறு சலசலப்பு ஏற்படுத்தி, இடையில் அஞ்ஞாதவாசம் பூண்டு, மீண்டும் புதிய எழுத்தாளனைப்போல காலடி எடுத்து வைத்துள்ளார்.
இரண்டு மாதங்களிலும் பிரசுரமான நாற்பத் தொன்பது கதைகளிலும், சினிமா உலகத்தைப் பகைப் புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள ஒரே யொரு கதையாக "உள்ளம் எரிகிறது" அமைந் துள்ளது. ஈழத்து இரத்தினம் சினிமா உலகத்திலே தான் தமது சீவனே பாய வாழ்க்கையை அமைத் துக் கொண்டவர். எனவே, அவர் சினிமா உலகின் போலித் தன்மையையும், ஊழல்களையும் அனுபவ ரீதியாக இக்கதையிலே சித்திரிப்பதும் சாத்திய மாகின்றது.
அத்துடன், முதிர்ச்சியான எழுத்து நடையும் ஈழத்து இரத்தினத்தின் எண்ணத்திற்குக் கைகொ டுத்து உதவுகின்றது. சட்டை மாற்றுவது போன்று, இரண்டு விவாகரத்துக்கள் வருவது ரசனைக் குறை வாக இருப்பதாகத் தோன்றலாம். சினிமா நடிகை களின் காதல் புதிய புதிய "வேடங்கள்" போடு வதைப் போன்று மாறிக் கொண்டிருப்பது யதார்த் தமாகையால், இதிலே செயற்கைத் தன்மையோ, அதீத கற்பனையோ அதிகம் புகுந்து கொள்ளவில்லை என்றே எனக்குப்படுகின்றது.
நல்ல கதைகள் மூன்று
"பெற்ற மனம்', "ஊமை", "பார்வதி” ஆகிய மூன்று கதைகளின் குணநல ஆராய்வையே இறுதி

37
யாக எடுத்துக் கொள்வதற்குக் காரணம், நவம்பர் மாதக் கதைகளுள் நல்ல கதைகள் என்று தேர்ந் தெடுக்கப்படத் தக்க தகைமை இவற்றிற்கு இருப் பதுதான்.
ஆ. நடராசா எழுதிய “பெற்ற மனம்" என்ற கதையை ஏ. பி. வி. கோமஸ் சிபார்சு செய்துள் ளார் மீஞட்சி என்ற தோட்டத் தொழிலாளிதான் பெற்ற மனத்துடன் அவதிப்படுகின்ருள். தற்குறி யான அவள், மகள் சுந்தரியிடமிருந்து வரும் கடி தத்தைத் 'தம்பி சுப்பிரமணி'யிடம் கொடுத்து வாசிக்கச் செய்து விளங்கிக் கொள்ளும் கட்டம் மிகத் தத்ரூபம க அமைந்துள்ளது.
கல்லூரியிலே படிக்கும் மீனுட்சியின் மகளான சுந்தரி, உடன் கல்லூரி மாணவனுன கணேசனு டன் ஒடிப் போய் விடுகின்ருள். கதையின் இந்தப் பகுதியை வாசிக்கும் பொழுது, பல மாதங்களுக்கு முன்னர் மலைநாட்டிலுள்ள கல்லூரி ஒன்றிலே நடைபெற்றதாகப் பத்திரிகைளிலே வெளியான செய்தி ஒன்று என் மனத்திலே பளிச்சிட்டது. மேற்படிச் செய்தியும், கதையின் நிகழ்ச்சியும் ஒத்த சாயலிலே அமைந்துள்ளன.
ஒடிப்போன மகளுக்கு எதிராக வழக்குப் போடப் படுவதைக்கூட மீஞட்சியின் பெற்ற மனம் விரும்ப வில்லை. இத்தகைய ஒரு தாயைச் சாகடித்துத் தான் கதைக்கு ஒரு முடிவு காண வேண்டுமா?
கதையின் ஓட்டத்தையும், தரத்தையும் முடிவு பாதிக்கின்றது. இறுதி இரு பந்திகளும் வேறு வகையிலே அமைக்கப் பட்டிருந்தால், கதைக்கு மேலும் கலையழகு சேர்ந்திருக்கும்:

Page 21
一38
"ஊமையும் தாழையடி சபாரத்தினமும்
"கல்கி" நடத்திய ஒரு சிறு கதைப் போட்டி யிலே முதன் முதலாகப் பரிசு பெற்று ஈழத் எழுத்தாளருக்குப் பெருமை தேடித் தந்த கதை ஞரான தாழையடி சபாரத்தினம் அண்மையில் காலமாஞர் என்ற செய்தி, ஈழத்து எழுத்தாளர்களைத் துக்கத்திலாழ்த்தியது. அவர் காலனின் வசப்படு வதற்கு முன்னர் இயற்றிய கடைசியான இலக்கியப் பணி "ஊமை” என்ற கதையைச் சிபார்சு செய் ததுதான் போலத் தோன்றுகின்றது. அவர் சிபார்சு செய்து, தினபதி தினம் ஒரு கதைக் களத்திலே பிர சுரமான ஒரேயொரு கதையும் "ஊமைதான். தாழை யடி சபாரத்தினம் வளர்ந்து வரும் ஈழத்து இலக் கியப் போக்குகளிலே இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ளாமல், இறக்கும்வரை அவர் தன்னையும் ஈழத்து இலக்கிய இயக்கத்தின் அங்கமாகப் பிணைத் திருக்கின்ருர். அவர் சிபார்சு செய்துள்ள கதையை எழுதியவர் மாவுறையூர் மகேந்திரன் ஆவர்.
தமிழில், முதலாவது சிறு கதைப் போட்டியை ஆனந்த விகடனே நடத்தியதாக ஞாபகம். அந்த முதற் சிறுகதைப் போட்டியிலே பரிசில் பெற்ற ஒரு சிறுகதையின் பெயர் "ஊமைச்சியின் காதல்!” என்றும் ஞாபகம். தாழையடி சபாரத்தினம் எழுதிய முதற் கதையின் பெயர் "ஊமைப் பெண்". தின பதியின் கதைக் களத்திலே "ஊமை” என்ற கதை யுடனேயே மகேந்திரன் அறிமுகமாகிருர். தமிழின் சிறுகதை முயற்சிகளுக்கும் ஊமைக்கும் ஏதோ ஒட் டுறவு இருப்பது போலத் தோன்றுகின்றது. வாயி ருந்தும் ஊமையாக வாழும் அந்தோனி என்ற பாத்திரம் நெஞ்சில் வாழவல்ல ஒரு பாத்திரமாக

39
வடிக்கப்பட்டுள்ளது. அந்தோணி என்ற பாத்திரம் பட்டை தீட்டப்பட்டும் பிரகாசிப்பதற்கு வேலுப் பிள்ளே வாத்தியார், அவர் மனைவி பூரணம் ஆகிய பாத்திரங்களின் நடைமுறைகள் உதவுகின்றன.
யாழ்ப்பாணத்து மண்வாசனை என்று அதிகம் அலட்டிக் கொள்ளாமல், யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறை அமைத்துக் கொண்டுள்ள போலியான அன் பினை இக்கதை நாசூக்காகச் சாடுகின்றது.
அந்தோனிக்குச் சிரட்டையிலே கோப்பி கொடுக் கும் விருந்தோம்பலை பிரசாரத்தொனி எதுவும் புகுந்து கொள்ளாதவாறு எழுதி, யாழ்ப்பாணத் திலே சாக மறுத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆசா ரத்தின் கொடுமையைக் கோடி காட்டுவது கலா நயத்துடன் அமைந்துள்ளது.
"ஆமாம்; பாவம்! அந்தோணி வாயால் வாழத் தெரியாத ஊமை” என்ற இறுதி வசன ந் தேவை யேயில்லை; கதைக்கு “ஊமை” என்ற தலைப்புத்தான் பொருத்தமானது என்று வலிந்து நற்சான்றிதழ் வழங்கும் எத்தனமாகவே அந்த வசனம் தொங் கிக் கொண்டு நிற்கின்றது.
மலையகமும் பார்வதியும்
நவம்பர் மாதத்திலே பிரசுரமான கதைகளுள் என் அபிப்பிராயத்தில், மிகச் சிறந்த கதையாக உயர்ந்து நிற்பது "பார்வதி” என்ற சிறுகதை தான். இக்கதையை மலரன்பன் எழுதி யுள்ளார். என். எஸ். எம். ராமையா சிபார்சு செய்துள்ளார்.
மேட்டு லயத்திலே பெரிய எழுத்து இராமாய ணம் வாசிப்பு நடைபெறுகின்றது, அந்தப் பென்

Page 22
40
னம் பெரிய படுதாவிலேதான் பணிய லயத்து வாழ் பார்வதியினுடைய சோக உருவந் தீட்டப்பட் டுள்ளது. கதையைச் சொல்லும் உத்தி - உருவ முறையிலே முதிர்ச்சியுண்டு. லயத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுடைய பேச்சு மொழி அனுயாசமாகக் கையாளப்பட்டிருக்கின்றது.
மலைநாட்டின் வாழ்க்கையையும், அவர்களு டைய நடைமுறைப் பேச்சு வழக்கையும் கலா முழுமையுடன் தன்னகத்திலே கொண்ட கதை "ஒரு கூடைக் கொழுந்து" ஆகும். அதனை ராமையா எழு தினர். அஃது அவரது முதலாவது கதை. அந்தக் கதையின் தரத்தை மலரன் பனின் முதற் கதை யான "பார்வதி யும் எட்டிப் பிடிக்கின்றது. இக்கதை யின் முடிவினை மேலும் இறுக்கமாக்கி இருந்தால், "பார்வதி அப்பழுக்கற்ற பூரண கதையாகத் திகழும்.
"கவ்வாத்துக் கத்தியைத் தூக்குவது. கணவன் மனதில் எழுந்தாலும் " என்ற பந்திக்கு அடுத்த தாக, 'இராவணனை அழித்த பின்னர். புறப்படுகி ருர் இராமர்" என்று, அத்துடன் அன்றைய இரா மாயண வாசிப்பை முடிக்கிருர் மேட்டு லயத்து அண்ணுவிக் கங்காணி" என்ற இறுதிப் பந்தி இடம் பெற்றிருந்தாற் போதும் இடையிலே புகுந்து கொண்ட மூன்று பந்திகளும் தேவையில்லை. முடிவு இவ்வாறு இறுக்கம் பெற்றிருக்குமாஞல், ஈழத்தில் இதுவரை வெளியான இருபது சிறந்த கதைகளைத் தொகுக்கும் நூலில் "பார்வதி"யும் நிச்சயம் இடம் பெற்றுத்தானக வேண்டும்.
குண்டுக் சட்டியிலே-குதிரை ஓட்டம்
அக்டோபர் மாதக் கதைகளைப் பற்றி நான் விமர்சனம் எழுதிய பொழுது, சரித்திரம் . இலக்

4 I
கியம் . புராணம் ஆகியவற்றிலிருந்து கதை நிகழ்ச் 6ી j; கூறுகளை எடுத்து எழுதுவதில் இளம் எழுத் தாளர் நாட்டம் காட்டு கிருர் களில்லை என்று குறிப் பிட்டேன். நவம்பர் மாதக் கதைகளை ஒட்டு மொத்தமாக வாசிக்கும் பொழுது இளம் எழுத்தா ளர் பலர், "குண்டுச் சட்டிக்குள் குதிரை விடுவதை’ப் போலவே தமது கதைகளுக்கான கதை நிகழ்ச்சிக் கூறுகளைத் தேர்ந்தெடுக்கின்றர்கள் என்ற அபிப் பிராயம் மேலும் வலுப்பெற்றது.
பத்துக் கதைகள்
‘'நவம்பர் மாதக் கதைகளுள் பத்துக் கதைகள் கொண்ட ஒரு தொகுதிக்கு எந்தெந்தக் கதைகள் தேறும்?' என்ற வழக்கமான கேள்விக்கு நாம் இறுதியாக விடை காணுவோம்.
அக்டோபர் மாதத்திலே தேறிய தரமான கதைகளின் அளவிற்கு, நவம்பர் மாதத்தில் தர மான கதைகள் தேறவில்லை என்பது என் அபிப் பிராயம். இதற்கான காரணத்தை முற்று முழுக்க வும் இளம் எழுத்தாளர்கள் மீது சுமத்தவும் இய லாது. காரணம், இளம் எழுத்தாளர்களுடைய இலட்சிய வீறும், தினபதி சிறுகதைகளைப் பிரசுரிப் பதற்குப் பொறுப்பாக இருப்பவர்களுடைய பத்தி ரிகா நோக்கமும் ஏற்ற இடத்திலே பொருந்திச் சேராமலிருப்பதும் சாத்தியமானதே.
இருப்பினும், பிரசுரமான கதைகளை வைத்துக் கொண்டு, பின் வரும் வரிசையிலே பத்துக் கதைகளை ஒரு தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கலாம்.

Page 23
42
Lyrr dag) - மலரன் பன்
g06YI 65) LA) umsa மாவுறையூர் மகேந்திரன் பெற்ற மனம் - ஆ. நடராசா பிணைப்பு - செல்வி கே. ஜே. மெக்காதர் உள்ளம் எரிகிறது - ஈழத்து இரத்தினம் கண்ணிர் - தமிழ் மாறன்
கடவுளுக்கு போட்ட கடிதம் -
எஸ். இராஜம் புஷ்பவனம் நெஞ்சம் நிறைந்தவன் -
செல்வி இ. அசோகாம்பிகை
திருமணம் - எம். ஐ. ஏ. முத்தலிப்
உறவுக்கு அப்பால் -
நாவாந்துறை டா. அன்ரனி
Ο

b0000000808080800 80000008088-88088088-88000
கலப்பு பொஸ்பிரசன் J60 TJ L
ரன்ரட்- ஒரு கலப்பு "பொஸ் பிரசன்” உங்கள் இல்லங்களி லும், உங்கள் விவசாயப் பகுதி களிலும், அழிவை உண்டாக்கும் விஷக் கிருமிகளான எலிகளை நொடிப் பொழுதில் அழித்து விட சிறந்த மருந்து ரன்ரட், ஒரு போத்தல் அடங்கிய பக் கட்டின் மருந்தை ஆறு தடவை உபயோகப்படுத்தலாம். . ஒவ் 李ー வொரு பக்கட்டிலும் பாவிக் ል 1 ፫፻፳\\ [ [ கும் முறை விபரிக்கப்பட்டுள் S2, ளது. இன்றே உங்கள் வியா
tክ 安 ளி டம் תע ன் ரட் g வி 22, ARBERST, Colombos. மருந்தை வாங்கி . எலிகளின் தொல்லையை அகற்றுங்கள். .
ரன்பக் கலப்பு கிருமி நாசினி
ரன்பக்-ஒரு கலப்பு கிருமி நாசினி. மூட்டைப் பூச்சிகளை யும், கொசு போன்ற விஷக் கிருமிகளையும் நொடிப் பொழு தில் அழிக்க வல்லது ரன் பக். இன்றே உங்கள் வியாபாரிகளி டம் ரன்பக் ஒரு போத்தல் வாங்கி உங்கள் இல்லங்களில் இருக்கும் விஷக் கிருமிகளை அழித்து ஒழியுங்கள்.
எல்லாப் பகுதிகளிலும் விற்பனை யாளர்கள் தேவை
விண்ணப்பிக்கவும்: தயாரிப்பாளர்கள்:- ی
o 8 W 够 w அப்துல்லா இண்டஸ்றிஸ்,
1. LSL SLSLS SLSL SLLL SSSE S SSSS LL Yn n In II 1. 72. பார்பர் ஸ்ட்ரீட், கொழும்பு-13. * ***004x &&&&&&&&&&& **●●●●●●●●々々々々々々々々 ( - as X - X as

Page 24
鬣 羲 6
AProo
N.B. AB DUJI \ 1O2/2, WO COLO
 

மனம், குனம் நிறைந்து
配 குணமுடையது.
LFENDHAL ST: NMEBO, 12S.
le