கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்த்தம்

Page 1
അ
 


Page 2

خاوقا9
கதிர்சியர்தன்
வெளியீடு

Page 3
Artham (Short Stories) Kathir Sayanthan, (C) Pages: 84, First Edition: May 15th, 2003, Type Setting: Thanendran, Mohan, Prasanth, Cover Design: Suthath, Printing: E-Kwality graphics, Nihari publishers, 88/7, Watarapala Road, Mt.Lavinia. Price: Rs.100/-(Sri Lanka), 2 Euro(Other Countries)

எனது அம்மா கமலேஸ்வரிக்கும் அUப7 கதிரேசனட%ர்எை7க்கும்

Page 4

خلوغز9
பிடி Giaባr7 பெலிஸ் نیشنلәoелола, ?ાજ Géယခခံ့)ါဍဂ်Jnဖ&J. Dic خGخصميهوهتم2 6laచదిసry సిరీసెఖn:J2ంగ్రిట6aససెntు یl فاضرتال Ólomårå ികീര്ട്രീ ി సినిగితి Gఎరొసెలnaఎనn Gknr-6a@aస99ని 6లinఒగాంn Ginఓ@6ు. Teee LAyeqLM keATTeS TMMAA uTMMeyLAMTAAAAMreS ܣmܚܢܘܚܪ̈2[m6ܢGܢ3hi
னையிறவுப் பெருவெளி
யைக் கட்சிக்கின்ற போதெல்லாம் மேனி *2 சிலிர்த்துப் போவதென்னவோ உண்மை தான். "ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி." மோட்டார் சைக்கிளை ஒட்டிய நகுலன் சத்தம் போட்டுப் பாடினான். அற்புதமான குரல்
ッエー அவனுக்கு. நேற்று இரவு முழுதும் அவனது பாட்டுக் கச்சேரியுடன் தான்
கழிந்தது.

Page 5
"கவனமடா. பாத்துப் போ." பின்னாலிருந்து சொன்ன எனக்கு லேசான பயமிருந்தது. கரை முழுவதும் மிதிவெடி கவனம்' அறிவிப்புக்கள்.
"ஒல்லாந்தர், வெள்ளைக்காரன், சிங்களவன், இந்தியன் எண்டு ஒரு முன்னூறு வருஷம் அந்நிய ஆதிக்கத்தில கிடந்த நிலம் இது. இதுக்காக நாங்கள் கொடுத்த உயிர் விலை மூவாயிரத்துக்கும் மேலை." பக்கவாட்டாக வீசிய காற்று என் காதுகளில் "இர்." என்று இரைந்து கொண்டிருந்ததால் அவன் குரலை உயர்த்தியே சொல்ல வேண்டியிருந்தது.
நான் அமைதியானேன். கிட்டத்தட்ட மூன்று வருசத்துக்கு முதல் இதே வீதிகளில் இரவுகளில் அவர்கள் உலவியிருப்பார்கள். காயம் வழி குருதி வழிந்தோடக் கிடந்திருப்பார்கள். உயிர் பிரிந்திருப்பார்கள். அவர்களின் சுவாசப் பையைத் தொட்டு வந்த காற்று இந்தப் பெருவெளியில் உலவக் கூடும்.
நகுலன் மோட்டார் சைக்கிளை மெதுவாக்கி ஒரமாக்கினான். டொல்பின் வாகனமொன்றில் 'காய் கூய்' என்று கத்தி கை தட்டிப்பாடி, இளைஞர் கோஷ்டியொன்று எங்களைக் கடந்து எதிர்த்திசையில் சென்றது. சற்று முன்னர் நாங்கள் கடந்த ஆனையிறவு வரவேற்புப் பலகை முன்பாகவோ அல்லது தகள்க்கப்பட்டுக் கிடந்த இராணுவ டாங்கி முன்பாகவோ இறங்கி நின்று அவர்கள் படமெடுத்துக் கொள்ளக் கூடும்.
"டேய். அந்தப் பள்ளிக்கூடத்தின்ரை பேர் என்ன.?" வரும் வழியில் 1 இயக்கச்சிக்கு பிரியும் வழியில் இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றி
கதிர்சனத்தன்
 

خاوځژ9 நான் கேட்டேன். ஒன்றிரண்டு மரநிழல்கள் தான். அவற்றின் கீழ் பிள்ளைகள் அமர்ந்திருந்தார்கள். பெயர்ப் பலகை கூட இல்லை. எப்பிடியும் ஒரு பத்து பன்னிரண்டு வயசுக்குள்ளை தான் எல்லோருக்கும் இருக்கும். மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொல்லி விட்டு நான் இறங்கிக் கொண்டேன். மர நிழல் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும். அவர்களும் இடம் பெயர வேண்டியிருக்கும். எப்பிடியும் உச்சி வெயில் தலையைப் பிளக்கும்.
"என்ன. பார்க்கிறாய் இங்கை நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படித்தான். கட்டிடங்களெல்லாம் சிதைஞ்சு போச்சு. கட்டித்தருவாரும் இல்லை. கணக்கெடுப்பாரும் இல்லை. அதுக்காக. விடமுடியுமே.?" நகுலனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.
"நகுலா. அந்தப் பள்ளிக்கூடத்தின்ரை பெயர் என்னண்டு கேட்டன்."
"ஒ. அந்த இயக்கச்சிப் பள்ளிக் கூடமோ. தெரியேல்லையடா. வேணுமெண்டால் வரேக்கை கேட்பம்" என்றவன் "இல்லை கேட்க முடியாது" என்றான்.
"66.'
"பின்னேரம் அந்தப் பள்ளிக்கூடம் இருக்காது. நாளைக்கு காலமை தான் இருக்கும்." உண்மை தான். மாலையில் அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததென்று அடையாளமே தெரியாமலிருக்கும். பரந்தன் சந்திக்கு
ଶ୍ରେଷ୍ଠ୍ଯ୍୩ୟ୍ଯ

Page 6
வந்தோம். எனக்கு கால் விறைத்திருந்தது. "நகுலன். கொஞ்ச நேரம் நிப்பாட்டு. கால் விறைச்சுப் போச்சு." நகுலன் நிறுத்தினான்.
"சங்கீதா எங்கை நிற்பாள்.? வீட்டிலயா. அல்லது.?"
"ரண்டிடத்திலயும் போய்ப்பாப்பம். சரி ஏறு." நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
"சங்கீதாவை எப்பிடித் தெரியும்.?" நான் அவனுக்கு பதில் சொல்லவில்லை. அவனும் திருப்பிக் கேட்கவில்லை.
"சங்கீதாவிற்கு முழங்காலுக்கு கீழே ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்ததை முதல் சந்திப்பிலேயே நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் படு இயல்பாக ஊன்று கோலுடன் அவள் நடப்பதும், சில சமயங்களில் ஓடுவதும், கால் மேல் கால் போட்டுக் கொள்வதும். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு வேளை மனசுக்குள்ளே வலியிருக்குமோ..?"
ஆறேழு மாதங்களுக்கு முதல் ஏதோவொரு நிகழ்வில் 'எங்கேயிருந்து வாறியள்?' என்று அவள் கேட்ட போது தான் அவள் அறிமுகமானாள். பதில் சொன்னபோதே அவள் முகத்தில் ஏதோ ஒரு ஏளனம் தோன்றியது உடனடியாகத் தெரிந்தது. அதனை நேரடியாகச் சொல்லும் வரை காரணம் கேட்க முடியவில்லை. அன்று மாலை வந்து அழைத்த போது கேட்க
முடிந்தது.
 

9iት ls
"தமிழ் வளக்கிறவரே. ரீ குடிக்க வாங்கோ." எழுந்து போகும் போதே கேட்டேன். "அதென்ன தமிழ் வளர்க்கிறவர் எண்டு நக்கலாய்?"
"தமிழைச் சாகவிடாமல் வளர்க்கிறது நாங்கள் தான் எண்டு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுறது நீங்கள் தானே. நீங்கள் எண்டால் நீங்கள் இல்லை. உங்களைச் சார்ந்த பிரதேசம், சூழல். இதெல்லாம் தான்."
உண்மைதான் என்று தோன்றியது எனக்கு. ஆனாலும் அதெப்படி ஒரு பெண்ணிடம் தர்க்கரீதியாய் நான் தோற்கக்கூடும் என்கின்ற எனக்குள்ளிருந்த ஆண் வர்க்க சிந்தனை அடுத்த கேள்வியைக் கேட்டது.
"அப்படி வளர்க்கிறதிலை என்ன பிழை."
"ஒண்டு சொன்னா பிழையா நினைக்கக் கூடாது. தமிழை வளர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.? என்ன உரிமை இருக்கு.? தமிழ் எண்டுறது வெறும் மொழி மட்டு மில்லை. அது சார்ந்த இனம் பண்பாடு பொருளாதாரம் அரசியல் எல்லாம் தான். நீங்கள் என்னத்தை வளர்த்திருக்கிறியள்.?"
"இதுநாள் வரை எனக் குள்ளேயே பொங்கி எழுந்த கேள்விகள் தான் அவை, இப்போது இன்னொருவரிடமிருந்து வந்தது. வெளியே சொல்லாது உள்ளுக்குள்ளேயே எண்ணிக் கொண்டேன்." "சரியான வாய்க்காரி."
േ

Page 7
அதற்கடுத்த அடுத்த நாட்களில் அவள் எழுதிய சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஒரு கொப்பி முழுதும் எழுதப்பட்ட கவிதைகளை அவளே கொடுத்தாள். ஒரு காலையில் ஒரமாயிருந்து புரட்டிக் கொண்டிருந்த போது நடந்து வந்து முன்னால் அமர்ந்து கொண்டாள்.
தெருப்புழுதியில் கந்தகம் மட்டுமே கரைந்திருந்தது. குழந்தைகளினர் கூக்குரல்களே காற்றலைகளை நிறைத்திருந்திருந்தன
"என்ன கவிதைக்குள்ளை எதுகை மோனையை தேடுறியள் போலை கிடக்கு. அதெல்லாம் கிடைக்காது. எங்கடை கவிஞர் சொன்னது போல உள்ளே கொதிப்புறும் உலைமுகத்தின் வாய் மொழியில் புனைவுகள் இருக்காது. பொய்யான வேஷங்கள் இருக்காது. அது மாதிரித்தான் இதுவும். அதை விட்டிட்டு சும்மா விழ விழ எழு எழு எண்டு வழ வழாவெண்டு எழுத எனக்குத் தெரியாது. அப்படி எழுதுறாக்களுக்கு ஒரு பெயர் சொல் லட் டே. சொல் லடுக்குக் கொத்தனார்கள். கவிதைக் கான வார்த்தைகளைத் தேடுவதிலேயே சொல்ல வந்த பொருளை மறந்து போகின்றவர்கள். அவள் சொன்ன எதுவுமே எனக்கு புதிய விடயமாகத் தெரியவில்லை. ஆனாலும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
கதிரசவத்தன்
 
 

خاوځژ9 "எங்கடை மண்ணிலை இருந்து எழுதுற எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்." அது வரை பேசிக் கொண்டிருந்த விடயத்திற்கு தொடர்பில்லாமல் கேட்டவள் மீண்டும் தொடர்ந்தாள். "எங்கை தெரியப் போகுது.? உங்களுக்கு சாண்டில்யனையும் ராஜேஸ்குமாரையும் உங்கடை பொம்பிளைப்பிள்ளை யளுக்கு ரமணிச்சந்திரனையும் விட்டால் ஆரைத் தெரியும்.?"
"இல்லை எனக்குத் தெரியும்." என்றேன் நான்
"உங்களுக்கு என்றால் நீங்கள் இல்லை. நீங்கள் சார்ந்த பிரதேசம், சூழல் இவையெல்லாம் தான்." மீண்டுமொருமுறை அவள் நினை வூட்டினாள். எனக்கு கோபம் எதுவும் வரவில்லை. ஆனாலும் குரலை கடுமையாக்கி வார்த்தைகளில் செயற்கையாய் சூடேற்றிச் சொன்னேன்.
"இஞ்சை பாருங்கோ. எல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டு மென்றில்லை. அது அவையின்ரை தேடலைப் பொறுத்தது. எல்லாத்தையும் எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்க வேணும் எண்டு எந்தக் கொம்பனும் கட்டளையிட முடியாது." கடுமையான எனது தொனி அவளில் எந்த மாற்றத் தையும் ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. "கொம்பன் இல்லை கொம்பி." என்று அவள் சொல்ல அவளுடன் சேர்ந்து நான் தான் சிரிக்க வேண்டிய தாய்ப் போனது.
"உங்களை உங்கடை எழுத்துக்களை ஏன் எங்களுக்கு தெரியாமல் போனதெண்டால், அதுக்குக் காரணம் இஞ்சை நடந்த சண்டை தான். இவ்வ
്റ്റൂ

Page 8
ளவு காலமும் நீங்கள் எங்களை வந்து சேரேல்லை. இனி வருவியள்.சரியான ஊடகங்கள் அந்த வேலையைச் செய்யும். சரி. நீங்கள் எழுதின கவிதைய ளைத் தாங்கோ. நான் கொண்டு போய்க்குடுக்கிறன். "
அவள் அப்போது கோபப்பட்டிருக்கக்கூடும். "என்ன.? நான் என்ன பப்ளிசிட்டிக்கு அலையிற ஆளெண்டு நினைச்சியளே..?" அவளது கேள்வியில் வேறு யாரோ அலைகிறார்கள் என்கிற தொனி அப்பட்டமாய்த் தெரிந்தது. அதனைக் கேட்டு பெரிசுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும் பப்ளிசிட்டியை விரும்பாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்குள் தொக்கி நின்றது.
அன்று மதியம் வரை அவள் நிறையப் பேசினாள். "செம்மணியில் புதைக்கப்பட்ட சனங்களுக்காக அந்த இடத்தில ஒரு நினைவுச் சின்னம். அல்லது ஒரு ஞாபகச் செய்தி எண் டு ஒண்டும் இல்லை. ஆனா எங்கையிருந்தோ வந்த ரேடியோக்காரன் அதிலை கட் அவுட் வைச்சு வரவேற்கிறான்." என்று சினந்தாள். "யாழ்ப்பாண லைபெறறி எண்டுறது சுண்ணாம்பு அடிச்ச அந்தக் கொங்கிறீட் கட்டிடமில்லை. அது எங்கடை ஆத்மா." என்று விளங்கப்படுத்தினாள். "எந்தவொரு ஆக்கிரமிப்பாளனுக்கும் மண்டியிடாமல் கடைசி வரை நின்று போராடிய பெருமை முல்லைத்தீவைத் தான் சேரும்." என்று பெருமைப்பட்டாள். உறுதியாக,
கதிர்சzத்தன்
 

خاوتوڑ9
மாற்றுக் கருத்துக்களே கிடையாது என்ற ரீதியில் அவள் பேசிய விடயங்கள் பரவலாயிருந்தது.
ஆண்கள் நிறைந்த சபைகளிலே அவர்கள் என்ன சொன்னாலும் வாய்மூடி மெளனிகளாகக் கேட்டு விட்டு ஆட்டு மந்தைகள் போல் தலையசைத்துச் செல்கின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். ஆண்களுக்கு சமானமாக நின்று பேசத்தெரியாமல் அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு வர ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள்' என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலாக வரும். அவையும் அவையின்ரை வெட்கமும்.'
சில வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றின் முகப்பில் வைத்து "தேவையில்லாத வேலை பார்த்தாயெண்டா உதை வாங்குவாய்" என்று ஒருத்தி சொன்ன போது அவமானத்திற்குமப்பால் மகிழ்ச்சியும் எட்டிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்த மகிழ்ச்சி சங்கீதாவைச் சந்திக்கும் போதும் வந்தது.
மோட்டார் சைக்கிள் "சடார் சடார்" எண்டு வீதியின் குழிகளுக்குள் துள்ளித்துள்ளி விழுந்தது. "எங்கடை சர்வதேசத் தர வீதியிலை பயணம் செய்ய குடுத்து வைச்சிருக்க வேணும் நீ." எனக்குச் சிரிப்பு வந்தது. பிரதான வீதியிலிருந்து விலகி மோட்டார் சைக்கிள் உள் வீதியொன்றில் நுழைந்து சங்கீதா வீட்டின் முன் நின்றது. நான் கேற்றைத் திறந்து கொண்டு உள்
ଶ୍ରେଷ୍ଠ୍ଯ୍୩ୟ୍ଯ

Page 9
நுழைந்தேன். நகுலன் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தான். கேற் திறந்த சத்தம் கேட்டிருக்க வேண்டும் போல. சங்கீதா தான் வந்து பார்த்தாள்.
"அட. வாங்கோ. வாங்கோ." அழைத்துக் கொண்டு போய் என்னை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். நகுலனை அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. கிடுகுகளால் வேயப்பட்டிருந்த அந்த வீடு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. முன்றலில் பூங்கன்றுகள் வரிசையாய் பூத்திருந்தன.
"கேள்விப்பட்டேன். நல்ல விசயம் செய்யிறியள். வாழ்த்துக்கள்" என்றாள் சங்கீதா, "எங்கடை காலத்தை பதிவு செய்யிற கதையஞம் கவிதையஞம் வரத்தான் வேணும். இல்லையெண்டு சொல்லேல்லை. அதோடை பின்தங்கி நிற்கிற விசயங்களிலையும் முன்னுக்கு வர்றதுக்கு ஏதாவது செய்ய வேணும். படிப்பில என்ன தான் நாங்கள் கெட்டிக்காரராய் இருந்தாலும் உண்மையில ரண்டு மூன்று தலைமுறை பிந்தின அறிவினைத்தான் நாங்கள் படிச்சுக் கொண்டிருக்கிறம். அதை நீங்கள் தான் மாத்த வேணும். ஏனெண்டால் நீங்கள் இஞ்சையிருந்து போனனியள். கொஞ்சம் இருங்கோ வாறன்" என்றெழுந்து உள்ளே போனாள். இப்போதெல்லாம் அவள் ஊன்றுகோல் இல்லாமலே நடக்கிறாள்
மதியம் அங்கேயே சாப்பிட்டோம். சங்கீதா சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசினாள். "எங்களில கன பிள்ளையஸ் கொம்பியூட்டரை கண்ணாலையே
கதிர்சனத்தன்
 

خاوقا9
பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப் போறோமோ எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு துாக்கியெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப எல்லா நாட்டு கல்வியறிவும் இருக்கிறது தான். அதை எங்களுக்கும் தரவேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை."
"சரி சங்கீதா. நாங்கள் வரப்போறம். நகுலனுக்கு வேறை இடத்திலை அலுவல் ஏதோ இருக்காம்." நான் புறப்பட்டேன்.
"சரி. சந்திப்பம்." மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார நகுலன் ஸ்ரார்ட் செய்தான்.
"என்ன நகுலன். போச்சிப்போத்திலை எறிஞ்சிட்டீர் போலை." பெற்றோலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிறிற் அல்லது ரின்னர் அடைக்கப்பட்ட சிறு குப்பியைத்தான் சங்கீதா போச்சிப்போத்தல் என்றாள். இப்போது அது தேவைப்படவில்லை.
"இல்லை. எறியேல்லை. பத்திரமா வைச்சிருக்கிறன். திரும்பத் தேவைப்படுமோ தெரியாது."

Page 10
வரும் வழியில் நகுலன் பேசிக்கொண்டே வந்தான். "இங்கையிருக்கிற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையை சுமந்து கொண்டு தான் வாழு கினம். பார்த்தாய் தானே, படிக்கப் பள்ளிக்கூடம் இல்லை. சரியான வேலையில்லை. யுத்தம் எத்தனை பேரை அங்கவீனமாக்கியிருக்கு.? கையை இழந்து காலை இழந்து எத்தனை ஆண்கள்.பெண்கள்.
நான் அமைதியாகவே வந்தேன். "இப் பிடி அங்கவீனமான ஆண்களைப் பற்றி பெண்களைப் பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நாளைக்கு கலியாணம் எண்டொரு நிலை இவைக்கு வரேக்கை கலியா ணத்தின்ரை தேவையை வேறை விதமா விளங்கிக் கொள்கிற ஆக்களே நிறைய இருக்கிற எங்கடை சமூகத்திலை இருந்து அங்கவீனமானவர்களை கலியாணம் கட்ட எத்தனை பேர் முன்னுக்கு வருவினம்.?"
எனக்குள் சட்டென ஏதோ வெட்டிப் போனதைப் போல நான் உணர்ந்தேன். நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
"நகுலன் நிப்பாட்டு நான் ஒடுறன்." நகுலன் நிறுத்திப் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் மோட்டார் சைக்கிளை ஓட்டத் தொடங்கினேன். ஆரம்பித்து விட்ட ஆனையிறவுப் பெருவெளியின் காற்று முகத்திலடித்தது. "சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்துாரப் பூமழை துாவியது." இப்போது நான் தான் பாடினேன். என்னாலும் UT- இயலும்.
دیے%/87) قبرسے
GëLD – 2003
கதிர்சzத்தன்
 

ஆத்திக்
季
గిన అగిన్డీana இணைத்திருந்தான். கொடுக்கப்படும் دختلف علم کوه طی nسலிெருக்கு காட்டும் G وتنغهGl مله n Pفمضغم 2 c عضوعظه به O2గిబ9nచ్గేnyు అగిన్డిమిగి ఒక్కొ, మిన్గా, GIసెసెno Gigann Gky (ါဍဂ်ō,ၾ GPuymor ጓላፊካ 2ح) 3 الملم Aծձւ) هغره)دفوی)که Gപഴ്സു.
SLibg. சென்ற வாகனமொன்று
d) முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்து விட்டுப் போனது. எவ்வளவு தான் ஒதுங்கி நின்றாலும் போகிற வரு
கிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கி
G றது. தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்படியே
Ge தான் குண்டும் குழியுமாகக் கிடந்தது.
6YT2»e

Page 11
கெனடியைச் சிலர் ஆச்சரியமாகப் பார்த்துப் போனார்கள். "நடை உடைகளில் நான் இந்த இடத்திற்குப் புதியவனாகத் தெரியக்கூடும்" என அவன் நினைத்துக் கொண்டான்.
"சங்கக் கடை கடந்தாச்சு. இன்னும் கொஞ்சத்துரந்தான்." சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்புத் தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்தன. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே அங்கே வந்திருப்பார்கள்.
"எப்பவாவதும் இருந்திட்டுத் தான் தர்றாங்கள். அதையும் விட்டிட முடியுமே!" அம்மா சொல்வாள். உண்மை தான். நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்படியும் மதியம் நெருங்கும்.
இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதியில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.
"ஏழு வருஷத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.? அகிலனைப் போய்ப் பார்த்திட்டுப் போவமோ..?" போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில் தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.
"கெனடி முகாமில் இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு. இரவில் வீட்டிலயிருந்து படிக்கட்டே." தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.
 

خاوقا9 "அதுக்கென்னடா வாவன்." அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.
அகிலன் இப்ப அங்கை தான் இருக்கிறானோ. வேறை இடம் போனானோ..?
வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண், "முதல்ல போய் முழுக வேணும். பிறகு அகிலனிட்டை வரலாம்."
அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில் வேறு சில கடைகள் முளைத்திருந்தன. "ஒருவேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு. ச்சீ. சண்டை நிண்டு போச் சு. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள். அகிலன் எங்கை போயிருப்பான்?"
அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.
"அவள் இப்ப எப்படியிருப்பாள்? என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா?"
கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது.
ck ck ck
ܒܶܛܥܧܙ62

Page 12
"அக்கா. அக்கா." வாசலில் நின்று அழைத்தான் கெனடி முன் விறாந்தையில் சிறுவயதுப் பையன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்கவில்லை.
"அம்மா. ஆரோ வந்திருக்கினம்." அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்து வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.
"கெனடியே வா. வா. என்ன திடீரென்று. ஆச்சரியம் தெரிந்தது. -
கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம் பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவரோடை பேசிக்
அக்காவின் முகத்தில்
கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.
"கொஞ்சம் பொறு. பாய் எடுத்தாறன்." "இல்லையக்கா வேண்டாம்." கெனடி திண்ணையில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.
கதிர்சzத்தன்
 
 

خاوځژ9
"இஞ்சை வாங்கோ. பிள்ளைக்கு என்ன பேர்." அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும், அவன் தாயின் பின்னால் ஓடிப் போய் மறைந்து கொண்டான்.
"நேற்றுப் போல கிடக்கு. ஏழு வருஷமாச்சு." அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.
"அக்கா. மிஸ்டர் கண்ணா எங்கை?" கண்ணன் மாமாவை கெனடி அப்படித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்படித் தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.
"வேலைக்கு. போட்டார் பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன் சாப்பிடலாம்."
"ஓம் அக்கா" கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக் கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள நல்ல தண்ணிர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள் தான் கெனடியின் வீடும் இருந்தது.
"ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்? பக்கத்திலை காடு. யானையள் அடிக்கடி வரும். அதுவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்." அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.
"கொஞ்ச வருஷத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்கை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்." என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் "நல்ல
ڈاپ ٹار6Y2

Page 13
தண்ணிர் தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்." என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.
பத்து ஏக்கள் பரப்புக் காணியுள் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள்ளே போய் மரந்தடிகள் வெட்டிவந்து, கிடங்கு வெட்டி, மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி, இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து. அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.
சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந் தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியேறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.
கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.
"அண்ணா. வாளியை விட்டுட்டு போட்டியள். அம்மா குடுத்துவிடச் சொன்னா." அக்காவின் மகனிடம் இருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடியை நோக்கிப் போனேன். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலை மோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. கெனடி ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்து கொண்டான்.
குதிர்சzந்தன்
 

ஆர்த்தக்
தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப் போட்டு பாதையை அடையாளப்படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.
அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒருமுறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவம்சம் செய்திருந்தது கெனடிக்கு ஞாபகமிருக்கிறது. நடு இரவில் வந்து அம்மா எழுப்பவும், எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு. இந்த இருட்டுக்கை எங்கை போறது', என்று தான் முதலில் நினைத்தான்.
"வந்திருக்கிறது தனியன் யானை, கூட்டமா வந்தா அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள் இது தனியனா வந்திருக்கு."
"குசினிக்குள்ள உப்பு, மா ஏதாவது இருக்கோ? அதுகளுக்குத்தான் யானையள் வரும்."
"சத்தம் வையுங்கோ அது போயிடும்." W
ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டார்கள். அடுத்தடுத்த காணிக்குள் ளிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். சத்தம் வைத்தும் வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப் பார்த்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவம்சம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக் கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல் சனம் வந்து பார்த்தது.

Page 14
கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.
"அம்மா. கெனடி அண்ணா வந்திட்டார்." என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக் கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரவில்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம்' என கெனடி நினைத்துக் கொண்டான்.
"அக்கா இப்பவும் யானையள் வாறதோ..?"
"அதுகள் தன்பாட்டிலை வருங்கள் போகுங்கள்" சிரித்துக் கொண்டே இயல்பாகச் சொன்னாள் அக்கா.
மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். "எட கெனடியோ. காலமை காகம் கத்தேக்கையே அதின்ர நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன். நீ தானா." வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்கப் பேசும் அவரது வழக்கம் அப்படியே தானிருந்தது. 'மனிசன் மாறேல்லை."
இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் * உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்திருக்க வேண்டும். அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி
"தம்பி என்ன படிக்கிறியள்.?" "நேர்சரி"
"படிச்சு என்னவா வறப் போறியள்"
கதிர்சzத்தன்
 
 

خلوقا9
"டொக்டரா வருவன்."
"டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ?"
"இல்லை."
"அப்ப.?"
"பிளேன் அடிச்சும், ஷெல் அடிச்சும் காயம் பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்.
கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக் கொண்டே சொன்னான். "இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத் தேவையில்லை." கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.
"பிளேன் அடிச்சாலும் எனக்குப் பயமில்லை. நான் விழுந்து படுத்திடுவன்." சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தில் ஏதோ ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.
"என்ன வந்தனி, வீட்டிலேயே நிக்கிறாய் பழைய சினேகிதங்களை பார்க்கப் போகேல்லையோ." என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரிந்திருந்தது.
"அக்கா அகிலனை உங்களுக்குத் தெரியும் தானே. வரேக்க பார்த்தனான். முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்." அக்கா சட்டென்று அமைதியானாள்.

Page 15
"அவன் இப்ப இல்லை." கண்ணன் மாமா தான் சொன்னர். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.
"வீரச்சா நாலு வருஷத்துக்கு முதல்."
இப்போது கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருடத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.
அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். "ஆமி வந்தா. எங்களால துவக்கெடுத்து சுடவாவது முடியும், நீ பாவம் துவக்கு உனக்கு மேலாலை நிக்கும். எப்படித் தூக்கிறது." படிக்கிற காலத்தில் அவனை இப்படியெல்லாம் நண்பர்கள் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.
"கிழடுகள் மாதிரி கதையாதையடா" என்று கூட கெனடி சொல்லியிருக்கிறான்.
அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போக வேணும்.
米 ck sk
இரவு படுக்கப் போகும் போது கண்ணன் மாமா கேட்டார், "ஏதேனும் அலுவலா வந்தனியோ."
கதிர்சனத்தன்
 

ஆர்த்தக்
என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ, அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.
மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள். கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்கிற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.
மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில் தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டிடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்குக் கீழே வாங்கு மேசைகளைப் போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.
கெனடியின் வகுப்பில் தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்குகளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்குக் காட்டும் போது ஆச்சரியமாயிருந்தாலும், மாலிக்கா கதை, கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈள்ப்பு விழுந்திருக்க வேண்டும்.
"இல்லை, சும்மா உங்களையும்."
மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில் தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒருநாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.
"மாலிக்கா நில்லும்." இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.
6ክጊAtgis

Page 16
"நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம். உண்மையோ." "ub..." "போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ" மாலிக்கா பேசாமல் நின்றாள்.
"போட்டியளில கலந்து கொண் டு இன்னொருவரின் ரை வரையறைக்குள்ள எழுதாதேங்கோ. சுயமா நீங்களா எழுதுங்கோ. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ, உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ." என்று தொடங்கி நிறையப் பேசவேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.
இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது. எத்தனை சிறுபிள்ளைத்தனமாக நடந்திருக்கின்றேன். மாலிக் கா இப் பவும் அதேமாதிரித் தான் இருப்பாளோ. வெட்கப்படுவாளோ. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.
ஆனால், அவளின் அப்பாவை நினைக்கத்தான் பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ. இதிலையென்ன..? நான் அவளோடை படிச்சவன் சும்மா சந்திக்கப் போறன்!
நாளைக்கு அவள் வீட்டுக்குப் போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.
 

خاوقا9 நிறையக் கேள்விகளோடு உட்கார்ந்திருந்தான் கெனடி மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை."
அன்று காலையிலேயே அவன் ம்ாலிக்கா வீட்டுக்குப் போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா.
லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான். "ஆரப்பன். உள்ளை வாரும்." "ஐயா மாலிக்கா நிக்கிறாவோ." அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை "இல்லைத் தம்பி. பின்னேரம் சிலவேளை வருவா." கெனடி தான் யாரென்பதைக் கூறிவிட்டுத் திரும்பியிருந்தான்.
மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.? ஒருவேளை கல்யாணம் முடித்திருப்பாளோ. பள்ளிக்கூடப் பக்கம் போனால் யாராவது சொல் லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.
米 ck ck
வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி.?
சட்டென அடையாளம் கண்டு கொண்டான்.
அது மாலிக்கா தான்! மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒருகால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு
خاتاث6۲2

Page 17
மேலிட எழுந்த கெனடிக்கு மேல்வளை தலையில் இடித்தது. தடவி விட்டுக் கொண்டான்.
"வணக்கம் கெனடி எப்படியிருக்கிறியள்." கேட்டுக் கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகுகம்பீரமாகத் தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.
"எப்படி சுகமாயிருக்கிறியளோ?" "ம்." கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப் பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.
"என்னோடை படிச்சவை." மாலிக்கா நிறையப் பேசினாள். தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள். அந்தப் பெயரை சில கவிதைகளிலும் கதைகளிலும் கெனடி ஏற்கெனவே அறிந்திருந்தான்.
தெளிவான அந்தச் சிந்தைனைகளுக்கு நீதான் சொந்தக்காரியா' என உள்மனம் கேட்டுக் கொண்டது.
ஏனோ தெரியவில்லை அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.
மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேநீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்,
"அக்கா. கெனடி சரியா வெட்கப்படுறார் போலை கிடக்கு." கெனடிக்கு யாரோ "ணங்' என்று தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரித்துக்
கதிர்சzத்தன்
 

W. ܒܶܐ
கொண்டே உள்ளே போனாள்.
"சரி. கெனடி. காலமை வீட்டை போயிருந்தனான். அப்பா தான் சொன்னார். எனக்கு உங்கடை வீடு சரியாகத் தெரியாது. ஒரு மாதிரிக் கண்டுபிடிச்சு வந்திட்டம். வேறை என்ன. நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்." மாலிக்கா அக்காவைக் கூப்பிட்டுச் சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.
மாலிக்கா தான் மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். "கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகமிருக்கோ."
ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாகக் கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்கிற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத் தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் அவன் வீட்டிலிருக்க வேண்டியதாகப் போனது.
"ம்." கெனடி உண்மையிலேயே இப்போது வெட்கப்பட்டான்.
அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஒடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.
ஏப்ரல் 20 - 2003

Page 18
6ીતરીકેa/Jજ (pકૃry^2 U9ოოჩტr 1ت^6 تنفورد (به -(كورفعوا تلكة@ UఓమిగిJaగీసెను .ጳካ? ജാക് ട്രവീഞ്ഞത് كيفوئ)Gf دتداولم12ملاكادمoوى فناهمرهانا داده فرهاداچه AAA A qTqqL LeTTyeyqegAeAee ALALCCCy eAAMee eAyy 0qMAL AAqyqgS
3
தூரத்தே கரையினில் வெளிச்சங்
கள் இன்னமும் தெரிந்து கொண்டிருந்தன. ஆர்ப்பரித்து எழுகின்ற அலைகளின் தாலாட்டில் அந்த வள்ளம் ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்க, அதனுள் அமர்ந்திருந்த அத்தனை முகங்களிலும் ஒரு இனம் புரியாத பீதி பரவிக் கிடந்தது.
நேரம் பதினொன்றைத் தாண்டியிருக்குமோ?" சேயோன் பக்கத்திலிருந்த மனிதரைப் பார்த்தான். அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
 

خاوتوڑ9 "அண்ணை, நேரம் என்ன?" "பத்தே முக்கால்." ஏற்கெனவே பார்த்து வைத்திருந்தவர் போல, பட்டென்று சொல்லி விட்டு அந்த மனிதர் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
ஓ. இரண்டு மணி நேரம் ஆகிவிட்டதா? தேசத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகி வந்திருப்போம். சேயோனின் கண்களில் நீர் கசிந்தது போலிருந்தது.
'எத்தனை பெரிய போராட்டத்தின் பின் இந்தப் பயணம் நிகழ்ந்திருக்கின்றது?
இரண்டு மாதத்திற்கு முன்பு அம்மா இந்தப் பேச்சை எடுத்த போது சேயோன் ஒரேயடியாக மறுத்தான்.
"உங்களுக்கென்ன விசரோ? இந்தியாவுக்குப் போய் என்ன செய்யப் போறியள்?"
"என்ன செய்யிறதெண்டு எனக்குத் தெரியும். நீ சும்மாயிரு." "வேண்டாம் அம்மா, இருக்கிற இடத்தையும் விட்டுப் போய். படிப்பையும் குழப்பி. வேண்டாம். பேசாமல் இங்கேயே இருந்திடலாம்." சேயோன் எவ்வளவோ வாதாடியும் அம்மா அதனைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
"அதெல்லாம் முடியாது. காசுகூட கட்டியாச்சு இனிச் சொல்லுற திகதியில போகவேணும். அவ்வளவுதான்."
"காசு திரும்பி வாங்கலாம். ஆனால் உயிர் அப்படியில்லை." "நீ என்ன சொல்லுறாய்?"
ཡི་ཚུལ་དང་བ་འ༡

Page 19
"கொஞ்சக் காலத்திற்கு முதல் இந்தியா போன வள்ளம் ஒண்டு கவிழ்ந்து நூறு பேருக்கு கிட்ட ஒண்டா செத்துப் போனது ஞாபகமிருக்கும் தானே."
அம்மாவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும். "ஒ. இருக்கு, நல்லா ஞாபகமிருக்கு. விசுவமடுவில ஷெல் அடிச்சு சனம் செத்துப் போனதும் ஞாபகமிருக்கு. சுதந்திரபுரத்தில கிபிர் அடிச்சு பள்ளிக்கூடம் போன பிள்ளையஸ் செத்துப் போனதும் ஞாபகமிருக்குது. ஏதோ உன்ரை கதையைப் பார்த்தா உன்னைக் கொல்லுறதுக்கு கூட்டிக் கொண்டு போற மாதிரியெல்லே இருக்கு."
"இல்லையம்மா. இந்தியாவில யாரைத் தெரியும் எண்டு போறியள்? அங்கை போய் எங்கை இருப்பியள்?"
"ஏனடா. இங்கை வரக்கை யாராவது தெரிஞ்சே வந்தனாங்கள்? அதப்போலத் தான். அங்கை போய் ஒரு வீடெடுக்கிறது. முடிஞ்சால் வாங்கிறது. அதெல்லாம் ஒரு வழி பிறக்கும். இப்ப அதுக்கு என்ன?"
அதற்கு மேல் சேயோனால் எதுவும் பேச முடியவில்லை. மாலையில் அம்மாவே இவனை அழைத்தாள்.
"சேயோன், எல்லாம் உன்ரை நன்மைக்குத் தான்ரா. உங்கடை வயசில எவ்வளவு வசதியை நாங்கள் அனுபவிச்சனாங்கள். ஆனால் நீங்கள் இந்த இடத்தை விட்டா வேறை இடம் அசைய முடியாது. அது போதாதென்று ஷெல்லடி, பிளேனடி வேற. இதுகளுக்கு மத்தியில உங்களைப் போல வயசான ஆம்பிளைப் பிள்ளையளை வைச்சிருக்க எந்தத் தாய்க்குத் தான் மனசு வரும்?"
 

خاوتوڑ9
அமைதியான அம்மா சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேட்டாள்.
"இண்டைக்கு பேப்பர் பாத்தியா சேயோன்?"
"இல்லை. ஏன்?"
"இந்த இடத்தைப் பிடிக்கிறதுக்கும் சண்டை தொடங்கி விட்டாங்களாம்."
"தொடங்கித்தானே இருக்கிறாங்கள். இன்னும் பிடிக்கேல்லையே."
"இல்லை. அதில்லை. இனி உதில இருக்கிற வவுனியாவுக்குக் கூட உன்னைக் கூட்டிக் கொண்டு போறது கஷ்டம். இஞ்சை அடைந்து கிடந்து சாகிறதிலும் பார்க்க இந்தியாவுக்குப் போய் நிம்மதியாய் இருக்கலாமெண்டு தான் இந்த முடிவெடுத்தன். பிழையா?"
இறுதியில் அம்மா வென்று விட்டாள்.
ck ck ck
அணியத்தின் பக்கவாட்டில் அலையொன்று அடித்ததுவும், ஐயோ! என்றெழுந்த ஒருமித்த குரல்கள் விரிந்து கிடந்த கடல் வெளியை ஆக்கிரமித்து ஒலித்ததுவும் கணநேரத்தில் நடந்து முடிந்துவிட அலாக்காகத் தூக்கப்பட்ட வள்ளம் ஒருவாறு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
சேயோன் சுற்றும் முற்றும் பார்த்தான். வெளிச்சங்கள் முற்றாக மறைந்து விட்டிருந்தன. கடற்பரப்பின் நான்கு பக்கங்களிலும் கவிந்திருந்த கரிய

Page 20
இருளும், மலையென உயரத்தில் எழுந்து நின்ற அலைகள் நடுவானைக் கடந்து விட்ட மங்கிய நிலவின் ஒளியில் பளபளத்து வருவதும் பயத்தை உண்டு பண்ணின.
"ஏன் ஐயோ எண்டு கத்திறியள். அவையவையும் கடவுளைக் கும்பிட்டுக் கொண்டு இருங்கோ. நடக்கிறது தான் நடக்கும்." யாரோ ஒரு மூதாட்டியின் குரல் அந்த வேளையிலும் கணிரென ஒலித்தது.
படார். ஆர்ப்பரித்து வந்த அலையொன்று வள்ளத்தை அடித்து எழுப்பி அப்பால் நகர அது அந்தரத்தில் கீழே விழுந்தது.
"ஐயோ." அதே மூதாட்டியின் அதே கணிரென்ற குரல் தெளிவாகவே கேட்க, சேயோன் சிரிப்பினை உதட்டுக்குள் அடக்கிக் கொண்டான்.
இப்போது வள்ளத்தின் எஞ்சின் உள்ள பகுதியில் ஏதோ சலசலப்பு தெரியவே, யாரோ அணியத்திலிருந்து குரல் கொடுத்தார்கள்.
"ஏன். என்ன நடக்குது அங்கை?" "சுக்கான் உடைஞ்சு போட்டுதண்ணை." அங்கிருந்து குரல் வந்தது. "ஏன் தம்பி, சுக்கான் உடைஞ்சால் என்ன?" தன் ஐந்து வயது மகனை மடியில் அணைத்தபடி அந்தத்தாய் கேட்டாள்.
"வள்ளத்தை இனித்திருப்பி ஓட முடியாதம்மா." "விளங்கேல்லைத் தம்பி." "வள்ளம் இனித்திரும்பாதம்மா." "கடவுளே." அவள் அழத் தொடங்கினாள். வள்ளத்தின் ஓட்டம் முற்றாக நிறுத்தப்பட அது அலையின் போக்கிற்கு அடித்துச் செல்லப்பட்டது.
 

خاوقاژ9
"யாராவது நங்கூரத்தைப் போடுங்கோவன்," இளைஞன் ஒருவன் கத்தினான்.
"போடேலாது. கயிறு இனி எட்டாது." சேயோன் அணியத்தினைப் பிடித்து மெதுவாக எழுந்து நின்று கொண்டான். சற்றுத் தூரத்தில்அம்மா வாந்தி எடுப்பது தெரிந்தது.
"நேரமென்னணி ணை?" சேயோன் சாதாரணமாகக் கேட்க பக்கத்திலிருந்த மனிதர் இப்போது இவனை முறைத்துப் பார்த்தார்.
"டேய். பயணத்திற்கு நேரம் கேட்கக் கூடாதெண்டு தெரியாதே? எனக்குத் தெரியும், நீ வெளிக்கிடேக்கையே கேட்டனி. இப்படி ஏதாவது நடக்குமெண்டு எனக்குத் தெரியும்." அவரது கோபம் படகுக்காரனிடம் திரும்பியது.
"ஏன்ரா. டீசல் எண்ணையெல்லாம் ஒழுங்கா அடிச்சதோ..? அல்லது இதப்போலத்தான் இடைநடுவில முடிஞ்சு போகுமோ..? நாயஸ். இண்டைக்கு அநாதையாச் சாகவிடப் போறாங்கள்."
"அண்ணை ஏனண்ணை வீணாச் சத்தம் போடுறியள்?" யாரோ மெதுவாகக் கேட்டார்கள்.
"ஓ. எல்லோரும் இப்படியே இருப்பம். அவன் வந்து சுட்டுட்டுப் போகட்டும்."
இந்தச் சண்டைகளை கணக்கெடுக்காது படகோட்டி எப்படியோ சுக்கானைச் சரிசெய்துவிட வள்ளம் மீண்டும் சீராக ஓடத் தொடங்கியது.
எத்தனை தரம் இந்தியாவுக்குப் போய் வந்த அனுபவம் இருந்திருக்கும். சேயோன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

Page 21
இருளகன்று வெளிச்சம் முற்றாகப் பரவியிருந்தது. அலைகளின் ஆர்ப்பாட்டம் வெகுவாகக் குறைந்து வள்ளம் எவ்வித ஆட்டமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோர் முகங்களிலும் மரண பயம் அகன்று மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.
"அந்தா வெளிச்சவீடு மாதிரி ஏதோ தெரியது." சேயோன் திரும்பிப் பார்த்தான். வெண்ணிறக் கம்பி மாதிரி ஏதோ வெகு தூரத்தில் தெரிந்தது.
"ஒ. வடிவாப் பாருங்கோ. அதுக்குப் பக்கத்தில கோவில் கோபுரம் ஒன்று. இராமேஸ்வரமா இருக்கும்." இளைஞன் ஒருவன் கைகாட்டினான். "ஒவ்வொருத்தரா ஏறுங்கோ" மேலே நின்றிருந்த பொலிஸ்காரர் ஒவ்வொருவரின் கையைப் பிடித்தும் மேலே ஏற்றினார். சேயோன் ஏறி சுற்று முற்றும் பார்த்தான். அம்மா ஏற்கெனவே ஏறிவிட்டிருந்தாள்.
எல்லோருக்கும் தேநீர் கொண்டு வரப்பட்டது. உட்கார்ந்திருந்த சேயோனால் எழுந்து கொள்ள மனம் வரவில்லை. அப்படியே இருந்தான். அம்மா தனக்குக் கிடைத்ததை இவனிடம் கொண்டு வந்து நீட்டினாள். "சேயோன், இந்தா குடி." வாங்கிக் குடித்தான். கசந்தது போலிருந்தது. முழுவதையும் குடித்து முடித்துவிட்டு டம்ளரை நீட்டினான்.
"அவங்க அவங்க பெயரையும் டிஸ்றிக்கையும் சொல்லி விட்டு அந்த பஸ்ஸில போய் ஏறுங்க."
ததிர்சzத்தன்

ஆர்த்தக்
அந்த முகாமை அடைந்த போது நேரம் மத்தியானத்தைத் தாண்டியிருந்தது. எல்லோரையும் ஒரு மரத்தின் கீழ் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
"இந்தா. எல்லா ஆம்பிளைங்களும் சர்ட்டைக் கழட்டிட்டு இப்படிக் கியூவில நில்லுங்க."
அடிக்கடி வோக்கிடோக்கியில் வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே எல்லோரையும் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருந்த அவரின் முகம் இயல்பாகவோ அல்லது வேண்டுமென்றோ இறுகிப் போயிருந்தது.
"உன் பேரென்ன?" சற்று அதிகாரத் தொனியிலேயே அவர் கேட்டார்.
"சேயோன், வயது பத்தொன்பது."
இப்போது அவரது பார்வை சேயோனின் தோள்பட்டை மீதிருந்த தழும்பில் பதிந்திருந்தது.
"என்ன இது?"
"முந்தி. சின்னப்பிள்ளையில மரத்தில இருந்து விழுந்தனான் அதுதான்."
"ம். வயசென்ன சொன்னாய்?"
"பத்தொன்பது."
"யார் கூட வந்தாய்?"
"அம்மாவோடை."

Page 22
அருகில் நின்ற அம்மா நான் தான் என்பது போல கை காட்டினாள். "ஒகே நீ போகலாம்." ஊசி ஏற்றிய கை வலித்தது. பஞ்சால் தேய்த்து விட்டுக் கொண்டான். "வாங்க தம்பி உங்க ரூமைக்காட்டுறன்." சற்று வயசான ஒருவன் வந்து அழைக்க சேயோன் சாமான்களைத் தூக்கிக் கொண்டு எழுந்தான்.
"நான் தூக்கிறன் தாங்க" "பரவாயில்லை. நானே தூக்கிறன்." அம்மா இவன் பின்னால் நடந்தாள். சேயோன் மெதுவாக அவனுடன் பேச்சுக் கொடுத்தான்.
"ஐயா. ஒவ்வொரு குடும் பத்திற்கும் ஒவ்வொரு ரூம் கொடுக்கிறாங்களா?"
"ஆமா தம்பி. எல்லோரையும் ஒண்ணா விடமுடியுமா?" "வேற என்ன மாதிரி." "மாசம் ரண்டு முறை பணம் தருவாங்க. அரிசி, சீமை எண்ணெய் இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப மலிவாக் கிடைக்கும். பக்கத்திலேயே தியேட்டர் இருக்கு." சேயோன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்களில் பெருமை குடிகொண்டிருப்பது போலத் தெரிந்தது.
"இதுதான் உங்க ரூம். இந்தாங்க திறப்பு." "சரி ஐயா. இந்த இடத்த விட்டுட்டு நாங்கள் விரும்பின இடங்களுக்குப் போய் இருக்க முடியாதா..?" சேயோன் திறப்பினை வாங்கிக் கொண்டே கேட்டான்.
கதிர்ச2த்தன்
 

خلوتھڑ9
"ஒ. அதுவா. நீங்க ஒரு விண்ணப்பம் எழுதி கவர்மெண்டுக்குக் கொடுக்க வேணும் அதுகூட ஒண்னு ரண்டு வருஷத்துக்குப் பிறகு தான் பர்மிஷன் வரும். அதென்னாலும் பரவாயில்லை. அதுக்குக்கூட உள்ளேயும் வெளியேயும் ரொம்பப் பணம் செலவழிக்கணும்."
"அப்போ அது வரைக்கும்?" "இங்கைதான். இராத்திரி பத்து மணிக்குள்ள உள்ள வந்திடணும். அப்புறம் விடிஞ்சாப்புறம் தான் வெளியில போகலாம். எங்காவது தூர இடங்களுக்கு போகணும்னா பர்மிஷன் வாங்கணும். ஐஞ்சாறு நாளுக்குத் தருவாங்க. அதுக்குடன வந் திடணும். திடீரென எல்லோரும் இருக்கிறாங்களா எனக் கணக்கெடுப்பாங்க. இல்லைன்னா பிடிச்சு உள்ள தள்ளி விடுவாங்க. நீ கூட பார்க்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கிறாய். கவனம்." அவன் கூறிவிட்டு தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். அம்மா ஒரு ஐம்பது ரூபாத்தாளை எடுக்க,
'பரவாயில்லைக் கொடுங்க, நான் சேஞ்ச் பண்ணிக்கிறன். அவன் வாங்கிக் கொண்டு போனான்.
அங்கை போய். ஒரு வீடெடுக்கிறது. முடிஞ்சால் வாங்கிறது. அதெல்லாம் ஒரு வழிபிறக்கும். அம்மாவின் வார்த்தைகள் மனதில் எதிரொலிக்க, சேயோன் அ7 வத் திறந்தான்.
அது தூசு மண் உருள் படர்ந்து கிடந்தது.
ஜனவரி 30-2000

Page 23
60eácha ဂ်ဖ်ပံ့မှုံခြုံ Αγιουaάη δΛaήήΛάη GدA7ف Glدعوته GAوقدض Aه Ghخضصميدلت ...Mán.OM Gama 6l»&Srpay ܪܘܢܗܘܪܺ8ܢܢܐܿܣܘܳܶ كGض)شنعاصدع (oorلمG دموحدة 0نتهى LLCA AqAeMMGGMeLS EEkeLA yyyTTAeA TTTA AAAATeeeLLLLLS
GA -تلانهيفك 20 ف بعقله مدمدمGi .فGAتلاعضوعات
R (၆);မှ പ§ ጓላéካ G്റു ήάκηώως ό.
*2
1. தூக்கம் கலைந்து மெதுவாய்க் கண்களைக் கசக்கியபடியே எழுந்து பாயில் உட்கார்ந்தான் செந்துாரன். இராத்திரி பெய்த பெருமழை மேலே வேயப்பட்ட ஓலையினுாடாக உள்
நுழைந்து சாணம் போட்டு மெழுகிய நிலத்தில் ஆங்காங்கே தேங்கியிருந்தது. 3 செந்துாரன் அண்ணாந்து நோக்கினான். வரிசையாய் வேயப்பட்ட எந்த அறிகுறி யும் இன்றி கூரையின் மீது ஏதோ
ததிர்சzத்தன்

ஆர்த்தக்
குப்பையை போட்டு விட்டது போல கிடுகுகள் சிதிலமடைந்து அவற்றின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதை கட்டியம் கூறி நின்றன.
போர்வையை உதறி எழுந்து பாயினைச் சுருட்டி வைத்து விட்டு எதேச்சையாய் திரும்பியவனின் கண்களுக்கு இரவு படித்து விட்டு பக்கத்தில் வைத்த இரு கொப்பிகள் மீது கறையான்கள் மேயத் தொடங்கியிருப்பது தெரிந்தது. பதறிப் போய் கொப்பிகளை எடுத்தான்.
"நல்ல காலம். பார்க்காமல் விட்டிருந்தால் போச்சு. சனியன் பிடிச்ச கறையான்." செந்துாரன் வாய் விட்டுத் திட்டியவாறே கொப்பிகளை அருகில் தடிகளால் வரிசையாய் அடுக்கப்பட்டு பொலித்தின் விரிக்கப்பட்டிருந்த தட்டினில் வைத்து விட்டு வெளியில் வந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்து
கொண்டான்.
விறாந்தைக்கு முன்பாக சின்னதாக ஒரு பந்தி இறக்கி அமைக்கப் பட்டிருந்த அடுக்களைக்குள் அம்மா ஈரம் ஊறிய தென்னம்பாளைகளோடும் பொச்சுமட்டைகளோடும் போராடிக் கொண்டிருப்பது தெரிந்து. அப்பா வாசலில் உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.
"என்னங்கோ. உப்பிடியே போனா மழை வெள்ளமெல்லாம்
வீட்டுக்குள்ளை வந்திடும் போல இருக்கு. இந்த ஒரு ராத்திரி மழைக்கே சுவரெல்லாம் ஈரம் ஊறி கூரையெல்லாம் ஒழுகினால், மாரியிலை எப்படித்
م&;rrںہاروgro

Page 24
தாங்கப் போகுது?" அம்மா கேட்டாள்.
"ஓம் நிமலா. கூரை வேய எப்படியும் ஒரு நுாறு மட்டை கிடுகாவது வேணும். இங்கை ஒரு மட்டை இருபதுக்கும் முப்பதுக்கும் தான் போகுது. இந்த மாரிக்குச் சமாளிப்பம். பிறகு பார்க்கலாம். சரி. நான் வெளிக்கிடுகிறேன்." அப்பா எழுந்தார்.
"என்ன, இந்த விடியக்காலையில் வெளிக்கிடுகிறியள்?"
"ம்.வெயிலுக்கு முதல் தொடங்கினாத்தான் ஒரு நுாறு நுாற்றைம்பது தேங்காயாவது உரிக்கலாம். நான் வர்றன்." அப்பா எழுந்து நடந்தார்.
செந்துாரன் கிணற்றடி நோக்கிப் போனான். கிணற்றடியில் நின்ற போது எதிர் வீட்டு பாரிஜாக்கா தன் பத்து வயது மகன் பாலுவை துாக்கத்திலிருந்து எழுப்புவது துல்லியமாகக் கேட்டது.
"பாலு.பாலு.எழும்பு.எழும்பிப்படி"
米 k 米。
மாலையிலிருந்தே வெகுதொலைவில் கேட்கத் தொடங்கிய குண்டுச்
கதிர்சzந்தன்

خاوځژ9
சத்தங்கள் இரவு வரை தொடர்ந்து கொண்டிருந்தன. முன்னால் வைக்கப்பட்டிருந்த குப்பி விளக்கொளியில் உட்கார்ந்து செந்துாரன் படித்துக் கொண்டிருந்தான். நாளைக்கு அவனுக்குப் பரீட்சைகள் ஆரம்பமாக இருந்தன.
"பின்னேரத்தில் இருந்தே ஒரே சத்தமாக் கிடக்கு. ஒண்டுமே விளங்கேல்ல." அருகிலிருந்த அம்மா சொன்னாள்.
"ம்." ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விட்டு மீண்டும் பார்வையை புத்தகத்தினுள் பதித்து சற்று நேரத்தில் பக். பக். என்ற முன்னறிவிப்பு சத்தத்தோடு விளக்கு அணைந்து போனது.
"சரி. நாளைக்குப் பாப்பம்." செந்துாரன் எழவும் அம்மா தடுத்தாள்.
"கொஞ்சம் பொறு. நான் பாரிஜாட்டைப் போய் எண்னை வாங்கி வாறன்."
"வேண்டாமம்மா.நாளைக்கு படிக்கலாம்." சலித்துக் கொண்டே கூறினான்.
"செந்து நாளையான் சோதினைக்கு ஏதும் முக்கியமாப் பாக்கக் கிடக்கும்,

Page 25
இரு. என்ற அம்மா சிறிது நேர மெளனத்தின் பின் சற்று உணர்ச்சி வசப்பட்டவளாய் தொடர்ந்தாள். "உன்ரை அண்ணன் தான் தொடர்ந்து படிக்காமல் போட்டான். நீயாவது படிச்சு பெரியாளா வர வேணும் எண்டது தான் எங்கடை விருப்பம்." அம்மா எழுந்து போனாள்.
ராகுலன். செந்துாரனை விடவும் நான்கு வயது மூத்தவன். செந்துாரனின் குடும்பம் ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து தெரிந்த சிலரின் உதவியால் இந்தத் தோட்டத்தில் இடம் கிடைத்து சின்னதான ஒரு வீட்டை கட்டி முடிக்கும் வரை அவன் தான் அப்பாவோடு சேர்ந்து சகல வேலைகளையும் பார்த்தான்.
காட்டிற்குச் சென்று தடிகள் வெட்டிக் கொண்டு வருவதாயிருந்தாலும் சரி. களிமண் குழைத்து வீட்டின் சுவரெழுப்புவதாயிருந்தலும் சரி, சகல பொறுப்புக்களையும் தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு ஒடித்திரிந் தவன் ஏனோ தொரியவில்லை ஒரு சில நாட்களில் ஒரேயடியாகவே வீட்டை விட்டுப் போய் விட்டிருந்தான்.
செந்துாரனுக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. ராகுலன் வீட்டை விட்டுப் போய் ஒரு வருடம் கழிந்திருக்கும். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வந்தவன் வாசலில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பது தெரியவே ஆச்சரியத்தோடு உள்ளே நுழைந்தான். ராகுலன் அம்மாவோடு பேசிக்
 

கொண்டிருந்தான்.
"நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் சாகத்தான் போறம் எண்டு போய்ச்சாக எங்களுக்கு மட்டுமில்லை, வேறு யாருக்கும் விருப்பமில்லைத் தான். ஆனா என்ன செய்யிறது? ஒண்டு சொல்லுறணம்மா. நான் இந்த வழிக்கு விரும்பி வரவேயில்லை. தள்ளப்பட்டம். எல்லா வழியும் அடைக்கப்பட்ட போது இந்த வழி தான் இனி என்று தள்ளப்பட்டம்."
செந்துாரனுக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த ஒரு வருடத்தில் அண்ணன் நிறையவே பேசக் கற்றுக் கொண்டிருக்கிறான்."
"வா.வா. என்னடா வெயிலுக்கு தொப்பி ஒண்டு போடக்கூடாதோ?" ராகுலன் இவனைப் பார்த்துக் கேட்கவும் சந்தோசமாய் ஓடிப் போய் அவனருகில் அமர்ந்து கொண்டவனின் கவனத்தை பக்கத்தில் சுவரோடு சாத்தி வைக்கப்பட்டிருந்த 'அது' தான் முதலில் ஈர்த்தது.
"என்ன நல்லாப் படிக்கிறியே?"
LO
"சோதினை எப்ப?"
['gلامnںماريge

Page 26
"வாற மாசம்"
ராகுலனின் கேள்விகளுக்கு சிரத்தையின்றி பதிலளித்தவாறே அதையே' வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்வன் கொஞ்ச நேரத்தில் அதைத் தொட்டுத் துாக்க முயற்சித்த போது ராகுலன் தடுத்தான்.
"செந்து.வேண்டாம்."
"ஏனண்ணா?" என்பது போல இவன் பார்வையால் கெஞ்ச. அதை' எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டே கூறினான்.
"நீ இதைத் துாக்கக் கூடாது எண்டு தான் நான் துாக்கினன்."
"ஒ. அவர் துாக்கக் கூடாதென்று இவர் துாக்கினாராம். நல்லா வசனம் பேசுறார்." அதுவரை அமைதியாய் இருந்த அம்மா செல்லமாய் கோபித்துக் கொள்ள, ராகுலன் பலமாகச் சிரித்தான்.
"ம். நான்கு வருடங்கள் ஓடிவிட்டது". செந்துாரன் பெருமூச்சொன்றை விடுவித்துக் கொண்டான். எதிர் வீட்டில் அம்மாவின் குரல் கேட்டது.
"பிள்ளை பாரிஜா. ஒரு காப்போத்தல் மண்ணெண்ணை இருந்தாக் குடு பிள்ளை போன முறை வாங்கினதையும் சேர்த்து நிவாரணம் வந்தவுடன்
ததிர்சzந்தன்
 
 

9ሕå لیخا
தாறன்."
米 米 米
வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டு. சில நிமிடங்கள் கடந்த போதும்
செந்துாரனின் பார்வை வேறெங்கோ வெறித்திருந்தது. அவனது கண்கள் லேசாய்ப் பனித்திருந்தன.
இன்று அதிகாலையிலேயே யுத்தச் செய்தி வானொலியில் அறிவிக்கப்பட்டு அப்போதிருந்தே இறந்தவர்களின் விபரமும் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா வானொலியே கதியென அதனருகிலேயே உட்கார்ந்திருந்தாள். செந்துாரன் பரீட்சைக்குப் புறப்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த அக்கணத்தில் தான் அந்தப் பெயரும் காற்றில் கலந்து ஒலித்தது.
திருமாறன் என்றழைக்கப்படும் உருத்திரமூர்த்தி ராகுலன். சூர்யா என்றழைக்கப்படும். வானொலி தொடர்ந்து அறிவித்து கொண்டிருக்க அம்மா அப்படியே சாய்ந்து அழுது அரற்றி மயங்கிப் போனாள். ஓடிப்போய் அப்பாவை அழைத்து வந்து அம்மாவின் மயக்கத்தை தெளிவித்து தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்ட இடத்திற்கு அவர்கள் புறப்பட்ட போது செந்துாரனும் கூடவே புறப்பட, அப்பா தடுத்தார்.

Page 27
"செந்துாரன் நீ இப்ப சோதினைக்குப் போ. முடிஞ்சாப் பிறகு அந்த இடத்திற்கு வா. நாங்கள் முதல்லை போறம்."
"இல்லையப்பா. நானும் வாறன். சோதினை அடுத்த முறையும்
பார்க்கலாம்."
"வேண்டாம் செந்து. நீ முதலில் சோதினைக்குப் போ" இம்முறை
அம்மா அழுது வீங்கிய கண்களோடு சொல்லவும் செந்துாரன் சம்மதித்தான்.
திடீரென எழுந்த விமானமொன்றின் பேரிரைச்சல் அவனது நினைவுத் தொடரை அறுத்தெறிய சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் இருந்தவர்களது முகங்களில் பெருமளவு பதட்டம் குடிகொண்டிருந்தது. சடுதியாய் விமானம் தாழப் பறந்து மேலெழும் இரைச்சலும் கூடவே தொடர்ந்து மூன்று குண்டுகள் வெடிக்கும் காதைப் பிளக்கும் சத்தமும் கேட்க, மாணவர்கள் அல்லோல கல்லோலப்பட்டு சிதறி வெளியே ஒடத் தொடங்கினார்கள்.
செந்துாரன் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து நின்று கொண்டான்.
மிக அருகில் எங்கோ குண்டு விழுந்திருக்க வேண்டும்.'
மீண்டுமொரு முறை விமானம் தாழப்பறந்து குண்டுகளை வீசிவிட்டு மறைந்து போகவும் சிதறிக் கிடந்த வினாத்தாள்களை எடுத்து வந்து மீண்டும்
 

خاوځا9 இருக்கையில் அமர்ந்து கொண்டவன் அருகில் இருந்த மாணவியைப் பார்த்தான். அவளது முகம் முழுவதும் வியர்த்து கைகள் இலேசாக நடுங்குவது தெரிந்தது.
வெகு தொலைவில் குண்டுச் சத்தங்கள் மிக மெலிதாக இப்பொழுதும் கேட்டுக் கொன்டிருந்தன.
ck 米 ck
இரவு அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வரவில்லை. நாளையும் பரீட்சை என்பதால் செந்துாரனை மட்டும் அனுப்பியிருந்தனர். நாளைய பரீட்சைக்கு அவன் படிக்கிற நிலைமையில் இல்லை. பாயினை விரித்துப் படுத்து நெடுநேரமாயும் துாக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன். எப்பொழுது துாங்கிப் போனானோ? மறுநாள் வெகு சீக்கிரமாக கண் விழித்துக் கொண்டான்.
இராத்திரி கனவில் அண்ணாவின் முகம் அடிக்கடி வந்து போனது. நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் சாகத்தான் போறம் எண்டு போய்ச்சாக எங்களுக்கு மட்டுமில்லை. வேற யாருக்குமே விருப்பமில்லைத் தான் ஆனா என்ன செய்யிறது? அவனது வார்த்தைகள் எங்கிருந்தோ எதிரொலிப்பது போலவும் குண்டுகள் வீழ்ந்த புகை மண்டலத்தின் நடுவே எதிர்வீட்டுப் பாரிஜாக்கவின் மகன் இரத்த வெள்ளத்தில் மிதக்க அவன் வயதொத்தவர்கள்
مrrgں اور gree

Page 28
இவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும்.
நேற்றைய சம்பவங்களின் பிரதிபலிப்பக இருக்கும் என நினைத்துக் கொண்டே அருகிலிந்த விளக்கைக் கொளுத்தி விட்டு எழுந்தவனின் கண்களுக்கு இரவோடிரவாக அருகிலிருந்த அந்தப் புத்தகத்தட்டின் பொலித்தினையும் தாண்டி மேலெழுந்த கறையான்கள் இரண்டு மூன்று புத்தகங்களை சாப்பிடத் தொடங்கியிருப்பது தெரிந்தது.
மனதிற்குள் இனம் புரியாத ஒரு சினம் ஏற்பட்டது. புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு கறையான்களோடு சேர்த்து அந்தப் பொலித்தினை மடித்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன் ஆவேசம் வந்தவனாய் அதைக் கீழே போட்டு கால்களால் மிதித்துத் தேய்க்கத் தொடங்கினான்.
இப்பொழுது பாரிஜாக்கா வீட்டில் பாலு எழுந்து உரத்த குரலில் படித்துக் கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது.
ஆதி
செப்ரம்பர் 2003
கதிர்சனத்தன்

خاونقلاب9
AggM MHAALAeA eAeArrA eTMMyyAryeqeq eTAyeCAe eMLS
ცხoოოებuს სომaაროა 2 دککو)^ل lی G20 فرح) و اتهامهای .၆þခံ့ဍဇံ ခ်ိဳ႔နှိခဲ့ခံ( وفلسكرية rrrrACCeeL AASAEyAAAyyqAeALLL AeiEEeeyAiL Arrrryyeeh yyyC (ါခèၾ 8ذلك،20 ܘܢܨ ခ်ိဳၾ၇ဇံယàén Cപൗര )6ضفيگ (إلخ ဂ်လခံ့)ဇာမှ (ဖခံ့ၾဗ်ပ-အံါခးဂ်(ဎါ;မှn.
E>டுநசி தாண்டிய நிசப்தத்தின் அமைதி துல்லியமாய்க் குலைந்தது போலிருந்தது.
'சரக். சரக். சரக். சரக்."
d)
மரக்கிளைகளிலா அல்லது மணல்
மூடைகளின் முன்னேயா? சரியாய் தீர்மானிக்க முடியவில்லை. காற்பெருவிரலில் ஊன்றி கைகளில் தாங்கியிருந்ததை சடாரெனத் தூக்கி தோள்களில் பொருத்தி கண்களை இருட்டுக்குள் வீசினான்.
O
ஆர்த்தக்

Page 29
'சரக். சரக். தூரத்தே மரங்கள் அசைவது தெரிந்தது.
குரங்குகளாக இருக்கக்கூடும். ஒருவேளை பாம்புகளாயும் இருக்கலாம். சின்னதாய் ஒரு நடுக்கம் உடலோடு ஒட்டிக் கொள்வதை உணர்ந்து கொள்ள முடிந்தது. நேற்றும் கூட இது பற்றி அவன் பேசியிருந்தான்.
"அண்ணை எனக்குச் சின்னனில இருந்தே பாம்பெண்டா சரியான LuuLo60öTaob600T."
அவரிடமிருந்து மிகப்பெரிதான சிரிப்பொன்று வெளிவந்தது. "பரவாயில்லை உனக்கு பாம்புக்குத் தான் பயம். இங்கை பேய், பிசாசுகளுக்குப் பயப்பிடுறவங்களும் இருக்கிறாங்கள். கொஞ்சம் பொறு வாறன்" எழுந்து சென்றவர் அதை எடுத்து வந்து கொடுக்க கைகளில் வாங்கிக் கொண்டான். அது 'மினுமினுத்தது.'
"இந்தா இதை வைச் சுக் கொள். தேவைப் படேக் கை மட்டும் தலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சாண் கீழே ஒரே போடாப்போடு முடிஞ்சிடும்.
"கொல்லச் சொல்லுறியளோ?" அவசரமாய் இடைமறித்துக் கேட்டான்.
 

9) ڈا
LS S SSS SLSL S LSSLSL SLLSS a ݂ ݂ ݂ s ۔ ۔ ؟
உன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சொல்லுறன் எண்டும் சொல்லலாம் என்றார் அவர்.
"அதைவிட பாம்பிட்டை கொத்து வாங்கலாம்."
"சிலவேளை அப்படியும் செய்ய வேண்டி வரலாம்." என்று விட்டு
அவர் போனார். அவனருகே மணல் மூடையில் தலை சாய்த்திருந்த மாறனை நோக்கினான். அவன் விழிகள் லேசாய் மூடியிருப்பது தெரிந்தது.
பொடியன் நித்திரை கொள்ளுறான் போல கிடக்கு.
மாறன், இவனோடு இணைந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் தான் ஆகியிருக்கும். ஒன்றிரண்டு வயது இளையவனாயிருப்பான் போலிருக்கும்.
"அண்ணை என்ரை நேரம் வந்த உடன் சொல்லுங்கோ" என்று உட்காருபவனை சில சமயங்களில் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட வேண்டியிருக்கும்.
சென்ற வாரம் இவனோடு இணைந்திருந்த நிலவன் இப்போது இல்லை. சூரியன் இரத்தம் சிந்திக் கொண்டிருந்த ஒரு பொழுதில் உருமறைப்புப் பணிகளில் மும்மரமாய் ஈடுபட்டிருந்தவனின் காதினை பக்கவாட்டாய்த்

Page 30
துளைத்து நெற்றியை சிதறச் செய்த சில அலுமினியச் சிதறல்கள் அவனைக் குப்புற வீழ்த்தி நிலத்தை முத்தமிடச் செய்திருந்தன.
இறுதிவரை ஓரிரண்டு மண் துகள்கள் அவன் உதட்டோரம் பிரியமறுத்து
உட்கார்ந்திருந்தமை ஞாபகத்தில் வந்து போனது.
"சின்னனில எனக்கு மண் சாப்பிடுறதெண்டாச் சரியான விருப்பம். ஒவ்வொரு நாளும் அம்மாட்டை அடிவாங்கிறது அதுக்குத் தான்." எப்போதாவது நிலவன் வீட்டைப் பற்றிப் பேசினால் கண்டிப்பாய் சொல்வான்.
"இப்பவும் நீ மண்ணால தானே பல்லுத் தீட்டிறனி" அவனைச் சீண்டுவதில் அலாதிப்பிரியம் இவனுக்கு.
"அவசரத்துக்கு என்ன செய்யிறது? அதுக்காக உன்னை மாதிரிப்பல்லுத் தீட்டாமல் இருக்க முடியுமே?"
"நான் பல்லுத் தீட்டேல்லை எண்டு நீஎப்ப பார்த்தனி?" சற்றுச் சூடாய் வார்த்தைகள் இவனிடமிருந்து வெளிப்படும்.
"எதுக்குப் பாக்க வேணும்? உன்னோட கதைக்கேக்கையே விளங்குதே" நிலவன் சிரிப்பினுடே சொல்வான்.
 

خاوقا9
"சரி அப்ப கதைக்காதை" என இவன் எழுந்து போக அவர்களது பேச்சுவார்த்தைகள் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முறித்துக் கொள்ளப்படும். பின்னர் எப்போது இணைந்தார்கள், எப்படிப் பேசினார்கள் என்பது யாருக்குமே தெரியாதிருக்கும்.
"உங்கடை பிரச்சினைக் கை இனி தலையிடவே மாட்டம்." அவனுக்காதரவாயும் இவனுக்காதரவாயும் குரல் கொடுத்தவர்கள் இறுதியில் இப்படித்தான் சொல்லுவார்கள்.
மாறன் எழுந்து கொள்வது தெரிந்தது. கண்களை அழுத்தித் துடைத்து விட்டுக் கொண்டவன் தன் கைக்கடிகார விளக்கை அழுத்தினான். வெளிர்
பச்சை நிறம் அங்கிருந்து ஒளிர்ந்தது.
"மாறன்"
Lð.
"இங்கை பரவாயில்லை, ஆனா வெளியான இடங்களிலை இப்படி
நேரம் பாக்காதயென்ன உன்னையோ உன்ரை கையையோ சிதறடிக்கிறதிற்கு
இந்த வெளிச்சம் போதும்." மெதுவாகச் சொன்னான்.
"சரியண்ணை" என்றவன், அருகே மணல் மூடையில் சரித்து வைக்கப்பட்டிருந்ததை கையினில் ஏந்தியவாறு எழுந்தான்.

Page 31
"நீங்க இருங்கோ அண்ணை, நான் பார்க்கிறன்.
"நீ இரு." கைகளை அசைத்து அவனை இருக்கச் சொன்னான்.
"இல்லையண்ணை ரெண்டு மணியாச்சு, இனி என்ரை நேரம் நீங்க இருங்கோ."
"இல்லையடாப்பா, நான் நாளைக்கு வீட்டுக்குப் போறன். ரெண்டு நாளைக்கு அங்கை தான் நிப்பன். நீ இண்டைக்கு இரு. நானே." தொடர்ந்தவனை "அம்மாட்டைப் போறியளோ" என்ற கேள்வியோடு இடைமறித்தான் மாறன். அவன் விழிகளில் சின்னதாய் ஒரு சோகம் மின்னியதாய்த் தெரிந்தது.
"வேண்டாமண்ணை இப்ப இருந்தா பிறகு பழக்கத்தில் வந்திடும். நீங்க இருங்கோ இல்லையெண்டால் நில்லுங்கோ."
தூரத்தே யானைகள் பிளிறும் சத்தம் மெலியதாய்க் கேட்டது.
米 ck ck
 

9. ܒܶܐ
"எடே தம்பியே, பிள்ளை நான் சொன்னன், இண்டைக்கு காலமை இருந்தே காகம் கத்தினது. ஆரோ வரப்போகினம் எண்டு பாத்தியே."
"ஒமம்மா நானும் போன கிழமை யோசிச்சனர்ன். ஒரு வருசமாச்சு தம்பியை இங்காலப் பக்கம் காணேல்லையெண்டு வந்திட்டான்."
அம்மாவிற்கும் அக்காவிற்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை.
"சொல்லு ராசா எத்தனை நாள் நிப்பாய்? என்னென்ன வேணும் சில்லுக்களி செய்து தரட்டே?" அம்மா ஆசையாய்க் கேட்டாள். சந்தோசமாயிருந்தது. அம்மாவை அணைத்துக் கொண்டான்.
"ஒமம்மா, எல்லாம் செய்யுங்கோ. ஒரு பிடி பிடிக்கிறன்." அம்மாவோடு வந்து அடுக்களைக்குள் அமர்ந்து கொண்டான்.
காட்டின் மெல்லிய தடிகளை வெட்டி வரிசையாய்க் கட்டி களிமண் பூசப்பட்டு சிதிலமடைந்த கிடுகுகளை வெறும் குப்பைகளாய் மேலே தாங்கியிருந்த அடுக்களை, அடுத்த பெருமழைக்கு தன் ஆயுளை முடித்துக் கொள்ளத் தயாராயிருந்தது. அண்ணாந்து பார்த்துக் கொண்டான்.
"பிள்ளை லோஜினி அக்காட்டைப் போய் பாதி தேங்காய் வாங்கியா நாளைக்குத் தாறனெண்டு சொல்லி" அக்கா வாங்கி வந்து இவனருகில் உட்கார்ந்து துருவத் தொடங்கினாள்.
ஆத்தக்

Page 32
"அக்கா என்ன மாதிரி உன்ர படிப்பெல்லாம் போன முறை வரேக்க தொடர்ந்து படிக்கப் போறன் எண்டு சொன்னாய் எப்படிப் போகுது?" அக்கா நிமிர்ந்து நோக்கினாள்.
"ஒமடா நான் விரும்பினது கிடைச்சிருக்கு, எண்டாலும் இஞ்சை அது செய்ய முடியாதடா. ஊருக்குத்தான் போகவேனும் என்ன செய்யிறதெண்டே விளங்கேல்லை."
"இதிலையென்ன ? ஊருக்குப் போங் கோவன்" இயல்பாய் அமைதியாய்ச் சொன்னவன், "ஒம் ராசா அப்படித்தான் யோசிச்சிருக்கிறம்" என்று அம்மா சொல்லவும் தொண்டைக் குழிக்குள் ஏதோ அடைத்தது போல உணர்ந்தான்.
"வேறை என்னப்பன் செய்யிறது? உன்ரை அப்பா போனாப்பிறம் உன்னை நம்பியிருந்தன் அதுவும் நடக்கேல்லை. இனி இவள் ஒரு நிலைமைக்கு வந்தாத் தான் உண்டு. உன் ரை மாமாவும் கடிதம் போட்டிருந்தவர். அவற்றை மகன் ராகுலனும் படிக்கத் தூர இடம் தான் போறவனாம். பிரச்சினையில்லையாம். என்ன தான் இருந்தாலும் உன்னை விட்டிட்டு என்னண்டு போறதெண்டு." அம்மாவுக்கு தொடர்ந்து பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. அழத்தொடங்கினாள்.
 

خاوځژ9
"ஏனிப்ப அழுறியள். உதில பக்கத்தில தானே போகப்போறியள்.
வரவேணுமெண்டால் உடனே வந்திட்டுப் போறன்." உதட்டில் சிரிப்பை வரவழைத்துச் சொன்ன போதும் ஆழ்மனதில் ஏதோ அழுத்தியது.
அம்மா கண்ணிரைத் துடைத்துக் கொண்டு ஆர்வமாய்க் கேட்டாள். "அப்ப அங்கை வருவியே?"
"ம் வரலாம் வராமலும் போகலாம்." அவன் முகம் இறுகியது. "ஆனா ஒண்டு நான் வாறனோ இல்லையோ, நாங்கள் கட்டாயம் வருவோம்."
அம்மாவுக்குப் புரியவில்லைப் போலிருந்தது.
ck 米 ck
மதியச் சாப்பாட்டை முடித்து விட்டு முற் றத்தில் நின்ற இளந்தென்னையின் கீழ் பாய் போட்டமர்ந்து கொண்டான். எதிர் வீடு வெறிச் சோடிக்கிடப்பது தெரிந்தது. காலையிலிருந்தே அம்மாவைக் கேட்க வேண்டுமென்றிருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எதிர்வீட்டைச் சுற்றி நின்றிருந்த கச்சானும், கீரையும் இன்னும் பலவும் இல்லாதொழிந்து அவ்விடத்தை புற்காடு ஆக்கிரமித்திருந்தது. தெரிந்த முகங்கள் கூட காலையிலிருந்து தென்படவில்லை.

Page 33
"உந்த இடத்தில நல்ல காத்து வரும். பொறு தலையணை எடுத்தாறன்" அம்மா தலையணைக் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டாள்.
"அம்மா உந்த முன் வீட்டுக்காரர் எங்கை போட்டினம். காலமை இருந்தே காணம்." நிமிர்ந்து படுத்துக் கொண்டே கேட்டான்.
"அவை கொழும்புக்குப் போட்டினம்."
"அப்படியே உங்கை என் ரை வகுப் பில படிச் ச ஒருத்தி இருந்தவளெல்ல." வெகு யதார்த்தமாயும் வெகு இயல்பாயும் இருக்க வேண்டுமென்பதற்காய் அதிக சிரத்தை எடுத்து அந்தக் கேள்வியைக் கேட்டான்.
"ஒ சர்மிலி எண்டு சொல்லி அவளின்ரை கலியாண அலுவலாகத்தான் போயிருக்கினம். லண்டனில் ஆரோ மாப்பிள்ளையைப் பேசியிரிக்கினமாம்." மெல்லிய இதயச் சுவரோரம் கூரிய ஊசியொன்று லேசாய்க் கீறீச் சென்றது போலிருந்தது. அமைதியாயிருந்தான். கீற்றுக்கள் ஊடாக உள்நுழைந்த வெயில் தலையைச் சுட்டது.
"தம்பி உன்னோட போன முறை வந்தான். அவன் வரேலையே?" சில நிமிட நேரம் அங்கு நிலவிய அமைதியை அம்மா கலைத்தாள். அவள் நிலவனைத் தான் விசாரிக்கின்றாள் என்பது புரிந்தது.
 

خلوتھڑ9
"இல்லையம்மா?"
"ஏன் ஏதேனும் சண்டையே உங்களுக்குள்ளை?"
அம்மாவை சில கண நேரம் நேராய் நோக்கியவன் விழிகளை வானத்திற்கு வீசி விட்டுச் சொன்னான். "அவன் இனி வரமாட்டான் அம்மா."
அம்மா புரிந்து கொண்டாள்.
"ம்ம். இங்கை வந்திருகேக்கை எவ்வளவு கலகலப்பாய் இருந்தவன், ம். எப்பத்தான் இதுக்கெல்லாம் முடிவோ?" அவளிடமிருந்து ஏக்கம் கலந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
米 米
அம்மாவின் கண்களில் நீர் கோடிட்டிருந்தது.
"சரி அம்மா நான் வெளிக்கிடப் போறன்." அவன் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு வாசல்வரை வர அம்மாவும் அக்காவும் கூடவே
வந்தார்கள்.
"இடையில ஒருக்கா முடியுமெண்டால் வந்திட்டு போ."
خلوتھڑ9

Page 34
"சரி" என்ற போதும் இப்போதைக்கு முடியாதென்றே மனது சொல்லிற்று.
"கவனம் தம்பி போறது. றோட்டில இறங்கினா கண்மண் தெரியாமால் உங்கட வாகனங்கள் தான் ஒடித்திரியுது.
"தடை உங்களுக்குத் தான் இல்லை, வாகனங்களின்ரை வேகத்திற்குப் போடலாம்." அம்மாவை இடைமறித்து அக்கா சொன்னாள் பலமாய்ச் சிரித்துக் கொண்டே ஏறி உட்கார்ந்தவன் கணநேரச் சிந்தனையின் பின் வேகமாய் இறங்கினான்.
என்ன? அம்மா கேள்வியாய்ப் பார்த்தாள்.
"என்ரை டயறி"
"நீ நில், நான் போய் எடுத்தாறன்" அக்கா போய் எடுத்து வந்து கொடுத்தாள்.
"உன்ரை ஞாபகமாய் இதை தந்து விட்டுப் போவன்" அவள் கேட்கவும் "அதெப்படி?" எனக் கேட்டவாறு வாங்கி எதேச்சையாய் புரட்டியவனின் கண்கள் கடைசிக்கு சில பக்கங்கள் முந்திய அவ்விடத்தில் நிலைகுத்தி நின்றன.
 

خاوغا9
கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தினர் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள்,
அந்தத்தாளை தனியே பிரித்தெடுத்து இரண்டாய் நான்காய் கிழித்து காற்றில் வீசினான். மெல்லிய இதயச் சுவரோரம் கூரிய ஊசி ஒன்று இலேசாய்க் கீறிச் சென்றது போலிருந்தது.
"இந்தாக்கா நீயே வைச்சுக்கொள்."
ck sk 米
அம்மாவின் கண்கள் சிவந்து போயிருந்தன. ஆறுமாதங்களாய் அவன்
வருவான் என்றிருந்த நம்பிக்கை காலை அக்கா சொன்ன செய்தியிலிருந்து அடியோடு தகர்ந்து போயிரிந்தது.

Page 35
காலை வெகு சீக்கிரமாய் வீடு திரும்பிய அக்கா பதற்றமாய் உள்ளே ஓடி வந்து கட்டிக் கொண்டு அழத் தொடங்கிய போதும் அம்மாவிற்கு சிறிது நேரம் எதுவும் புரியவில்லை.
"என்ன பிள்ளை வெள்ளன வந்திட்டாய். ஏன் அழுகிறாய்? வழியில ஏதாவது சேட்டை விட்டவங்களே?" அவளை அணைத்துக் கொண்டே கேட்டாள்.
"அம்மா தம்பியன் இனி வரமாட்டான். அம்மா அவன் இனி வரமாட்டான்" அக்கா விக்கி விக்கி அழுதாள்.
"என்ன?" அதிர்ச்சி மின்னல் அம்மாவை கண நேரத்தில் தாக்கியது. அக்கா எல்லாம் சொன்னாள்
"நான் பார்தேனம்மா, அது தம்பி தான். இழுத்துக் கொண்டு போனவங்கள். அதால போய் வந்த ரெண்டு மூண்டு சனமும் செத்துப் போட்டுதுகள். எல்லோரையும் கொண்டு போனவங்கள் கடைசியாய் அவனைப் பார்க்கத்தான் முடியேல்லை. கவலை தீர சத்தமாய் அழக்கூட முடியாமற் போட்டுதே." அக்கா அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள்.
米 ck ck
கதிர்சzத்தன்
 

ஆர்த்தக்
கண்கள் சிவந்திருக்க அம்மா வாசலில் அமர்ந்திருந்தாள். கேற்றை
திறந்து கொண்டு மாமா வருவது தெரிந்தது. அவரது படபடப்பும் அவசரமும் விடயம் அவருக்கும் தெரிந்து விட்டது என்பதை உணர்த்தின.
"ஐயோ ஆண்டவா, ஏன் இப்படித் சோதிக்கிறாய்." தலையில் அடித்துக் கொண்டு மாமா உட்கார்ந்தார்.
அம்மா அமைதியாய் உட்கார்ந்திருந்தாள். அவள் விழிகளில் இப்போது நீர் வழியாதிருக்க அவை எங்கோ வெறித்து நோக்கியிருந்தன. மாமா தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.
"எனக்கு தெரியுமண்ணை, நீங்க அழாதேங்கோ. இனியெல்லாம் நாங்கள் இதுக்கு அழக்கூடாது."
மாமா அம்மாவை நிமிர்ந்து நோக்கினார்.
"எப்படி அழாமல் இருக்க முடியும். போட்டு வாறன் எண்டு சொல்லிப்
போட்டு காலமை வெளிக்கிட்டவன் அதுக்குடனை சவமா வந்தா எப்படி அழாமல் இருக்க முடியும்?"
خاوتوڑ9

Page 36
"அண்ணை என்ன சொல்லிறியள்?" எங்கோ வீசியிருந்த பார்வையை சடாரெனத் திருப்பிக் கேட்டாள் அம்மா.
"ராகுலன் காலமை பள்ளிக்கூடம் போனவன். போன இடத்தில் இது நடந்து போட்டுது. ஆஸ்பத்திரியில கொண்டு போய்ப் போட்டிருக்கிறாங்கள். கைசிதறிப்போய். மாமா தொடர்ந்தார். அம்மாவின் காதுக்குள் அக்கா சொன்னவை மீண்டும் கேட்டன. அதால போய் வந்த ரெண்டு மூண்டு சனமும் செத்துப் போட்டுதுகள்.
"ஐயோ அநியாயமாய் அவனைப் பறிகொடுத்திட்டமே. காலமையும் போகேக்கை இங்கை வந்து எனக்கென்ன மருந்து வேணுமெண்டு கேட்டுக் கொண்டு போனவன். ஐயோ கடவுளே! இந்த அநியாயச் சாவுக்கெல்லாம் எப்ப தான் முடிவோ?" அம்மா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.
பெப்ரவரி 2002
குதி/சமத்தன்

خاوقا9
فلپیچlnک سocعزولنک سعSکی ہڈ6 برلنک طغورون (Door وموفلمه هيغوية فيدون فوا)وممدود فنك (2006 وف24 ...ܙܗܰܝܟ݁ܘܽܗܺܫG ثم دخوذG هاموف صدمoma GܢܣG ضضGضoorعDà
5ண்ணீர்த்துளிகள் கன்னத்தில் கோடு கிழிக்க கட்டிலில் அமர்ந்து விக்கி, விக்கி அழுது கொண்டிருந்தாள் விஜி. மீண்டும் மீண்டும் அதே நினைவு நெஞ் சிலிருந்து பீறிட்டு எழ நெஞ்சமே அடைத்து விட்டது போல ஒரு உணர்வு அவள் உடலெங்கும் பரவியது.
'கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? எத்தனை வேண்டுதல்கள் எத்தனை ஆசைகள். எல்லாமே பொய்த்துப் போனது ஏன்?"
േ6

Page 37
மனதில் அழுகை வெடித்து வெளிவர, கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன. லேசாக கதவு திறக்கும் சத்தம் கேட்க விஜி நிமிர்ந்து கொண்டாள்.
அத்தை கண்ணின் ஊடாக அவள் உருவம் மங்கலாகத் தெரிந்தது.
"விஜி, ஏனம்மா அழுகிறாய்?" அத்தை அருகில் வந்தமர்ந்து ஆதரவாய் விஜியை அணைத்துக் கொண்டாள்.
"கண்ணைத் துடையம்மா."
அத்தை கையைப் பற்றி, குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
"ச்சாய், அழாதை விஜி, வா சாப்பிடலாம், மணி ஒன்பதாயிட்டுது."
"எனக்கு வேண்டாம் அத்தை" விஜி கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.
"இங்கை பார் விஜி, இப்ப என்ன நடந்து போயிட்டுது என்று அழுகிறாய்? ஏஜென்சி மூலம் வெளிநாடு போற அரைவாசிப் பேருக்கு இப்படித் தான் நடக்கிறது. இண்டைக்கு இல்லாட்டி நாளைக்கு. அதுக்காகச் சாப்பிடாமல் கொள்ளமால் இருந்தால் எப்படி? வாம்மா, எழும்பு"
 

خلوقا9 அத்தை எழுந்து விஜியின் கைகளைப் பற்றிக் கொள்ள அவள் வெடுக் கென கைகளை விடுவித்துக் கொண்டாள்.
"அதுக்காக, ஒரு மாசமா கொண்டு போய் ஊர் பேர் தெரியாத இடத்தில வைச்சிருந்து விட்டு கடைசியில அம்போ என்று கைவிட்டு விட்டா எப்படி? அங்கை பொலிஸும் கண்டிருக்காட்டி நாங்கள் நாயாய் இருந்து செத்திருப்பம்."
வார்த்தைகள் அவளிடமிருந்து படபட என்று வெளிவந்தன. அத்தை மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
"இல்லை விஜி, ரகு எல்லா ஏஜென்சிகளையும் போலில்லை. இல்லையென்டால் நீ திரும்பி வந்தவுடன் வந்து பார்க்காமல் இருந்திருப்LյIIGU?"
"அது தான் பொலிஸில நாங்கள் பிடிபட்டவுடன் வந்து பார்த்துக் கிழிச்சவர்."
"ஐயோ விஜி நீ விளங்காமல் கதைக்கிறாய். உன்னை மட்டுமில்லை. இன்னும் எத்தனையோ பேரை அனுப்பப் போறவர். அது அவற்றை தொழில் உனக்காக அவர் தன்னைக் காட்டிக் கொடுக்க முடியுமா? உன்னை அனுப்பி வைக்கிறதாத் தானே சொல்லியிருக்கிறார்."

Page 38
பக்கென நிமிர்ந்து அத்தையை நேரே நோக்கினாள் விஜி அவள் விழிகள் சிவந்த போயிருந்தன.
"இனிமேல் அந்த நரகத்திற்கு நான் போக மாட்டேன்."
அத்தை திடுக்கிட்டுத் திரும்பினாள்.
"என்ன சொல்லுறாய் விஜி?"
"அங்கை போறதிலும் பார்க்கச் செத்துப் போகலாம்"
"விஜி என்னம்மா நீ உனக்காக அங்கை எல்லா ஒழுங்கும் செய்து போட்டு உழைச்ச காசெல்லாம் உனக்காகவே செலவழிச்சு, உனக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிற காந்தனை மறந்திட்டுக் கதைக்கிறியா? நீ இப்படிச் சொல்லி விட்டா செலவழிஞ்ச காசுக்கு என்ன கணக்கு? அலைஞ்ச அலைச்சலுக்கு என்ன பலன்?"
அத்தையின் கண்களிலும் நீர் கசிந்தது போலிருந்தது. விஜி அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.
"அத்தை நான் என்ன செய்யிறது? அந்த முப்பது நாளும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பம் தெரியுமா? பாழடைஞ்சு போன இடம். சாதாரணமாக முகம் கழுவக் கூட தண்ணி தேடி அலைய வேண்டிய நிலை.
கதிர்சzத்தன்
 

خلوتھڑ9
அங்கைத்தைய மொழியும் புரியாது. கையில காசு மட்டு மட்டு. இனியும்
இப்படியெல்லாம் நடக்குமெண்டு தெரிஞ்சு கொண்டும் அந்த நரகத்தில போய் விழலாமா அத்தை?"
"இனி எல்லாம் நல்லதே நடக்கும், சாப்பிட வாம்மா."
"வேண்டாம் அத்தை, எனக்குப் பசிக்கேல்லை."
"சரி, இனி உன் இஷ்டம்."
அத்தை வெளியேறிய திக்கையே பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு கண்களில் நீர் வற்றிப் போக நெஞ்சு மட்டும் விம்மியது.
கட்டிலில் சாய்ந்தவளை தூக்கம் எப்பொழுது அரவணைத்ததோ? அப்படியே தூங்கிப் போனாள். அமைதியான இரவின் நிசப்தத்தை கோலிங் பெல் கிழித்து அலறத் திடுக்கிட்டு விழித்தாள் விஜி கீழே கேற் திறக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.
செக்கிங்கோ? உடைகளைச் சரி செய்து கொண்டு கீழிறங்கினாள். அவள் நினைத்தது போலவே துப்பாக்கி தாங்கிய தோள்களுடன் மூவர் நின்று கொண்டிருக்க ஒருவன் மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

Page 39
"ஞானகுலசிங்கம்?"
"நான் தான் சேர்."
"ஐடென்ரி கார்ட்?"
மாமா ஐடென்ரி கார்ட்டைக் கொடுக்க வாங்கிப் புரட்டிப் பார்த்து விட்டு நீட்டினான்.
"நீங்க?" அத்தையை நோக்கி அவன் கேட்டான்.
"நான் அவரோடை ஹஸ்பன்ட். இல்லை. இல்லை. அவரோட வைஃப்."
அத்தைக்கு பயத்தில் வார்த்தைகள் குழறின. அவன் லேசாக புன்னகைத்துக் கொண்டே விஜியின் பக்கம் திரும்பினான். அப்பொழுது தான் அவளை அவன் பார்த்திருக்க வேண்டும்.
"இந்தப் பொண்ணு யாரு?"
"என்னுடைய மருமகள் சேர்."
 

9ዘት ܒܶܐ
"பெயர் என்ன?" அவன் இப்பொழுது விஜியைப் பார்த்தே கேட்டான்.
"விஜி"
கையில் வைத்திருந்த காகிதத்தை அப்படியும் இப்படியும் புரட்டிப் பார்த்தான் அவன்.
"பொலிஸில பதியல்லை?"
"இல்லை சேர். அவ இண்டைக்குத்தான் வந்தவ"
"யாழ்ப்பாணேயில இருந்தா?"
"இல்லை மொஸ்கோவில இருந்து"
"பாஸ்போட்"
அத்தை ஆயத்தமாக வைத்திருந்த அதைக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்த அவன் கண்களில் சந்தேகம் குடி கொண்டு விட்டது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
"இந்தப் பொண்ணை நாங்க கூட்டிட்டுப் போறம் என்குயரி முடிஞ்சதும் நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போங்க.
p്6

Page 40
அவன் மற்ற இருவரையும் பார்த்து ஏதோ சொன்னான். விஜி அதிர்ச்சி மீளாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சேர் அவவில எந்தப் பிரச்சினையும் இல்லை. நாளைக்கு வந்து பதியிறம். விட்டிடுங்க சேர்" மாமா அவனிடம் கெஞ்சினார்.
"ஒன்னும் பயமில்லை. நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போங்கோ." விஜி முன்னே நடக்க அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
米 米 ck
இரண்டு நாட்கள் இராத்திரித் தூக்கம் இல்லாததால் விஜியின் கண்கள் சிவந்து போய் எரிந்து கொண்டிருந்தன.
"வேறை என்ன கேட்டாங்கள்?" மாமா மேலும் கேட்டார்.
"ஏன் போனாய். ஏன் வந்தாய் எண்டெல்லாம் கேட்டார்கள் ஏதோ ரிப்போர்ட் வரவேணும் எண்டு சொன்னார்கள். இரண்டு நாளும் நித்திரையே
இல்லை."
"ஏன் படுக்கக் கூட விடவில்லையே?" அதை இடைமறித்துக் கேட்டாள்.
ŽførázzØžøøý
 

خاوځژ9 ۰
"கோழிக்கூடு மாதிரி ஒரு கூண்டு. எழுபது பேர். ஒழுங்காக நிற்கக்
கூட முடியவில்லை. படுக்கிறதெங்கே?" விஜிக்கு அந்தக் காட்சிகள் ஒரு முறை நினைவில் வந்து போயின.
கூண்டில் அடைக்கப்பட்ட அத்தனை பேரும் நின்று கொண்டே இரண்டு நாள் இரவினையும் கழிக்க வேண்டியிருந்தது. அறை முழுக்க
வியாபித்து வீசிய வியர்வை நொடியும் அந்த அறையின் சுகாதாரமும் முகம் சுழிக்க வைத்தன.
அத்தனைக்கும் மேலாக துவேசத்தனமான பேச்சுக்கள், கேள்விகள். "உங்களையெல்லாம் நம்ப முடியாது. தேவைப்பட்டால் திரும்பவும் வர வேண்டியிருக்கும்."
மீண்டும் ஒரு முறை அங்கு போவதை எண்ணவே விஜியின் உடம்பெல்லாம் பதறியது. அப்பப்பா.
ரெலிபோன் இனிமையாக கிணுகினுக்க சுய நினைவுக்குத் திரும்பினாள் விஜி, அத்தை போய் றிசீவரை எடுத்தாள்.
"ஹலோ"
"ம் இருக்கிறா."
"என்ன நாளைக்கோ?"

Page 41
  

Page 42
நட்பூக்கள்
துள்ளித்திரிந்த இளமைக் காலத்தில் என் நட்பில் சிக்கியவன் சயந்தன். பிடிவாதக்காரனாய், முன்கோபியாய், முரண்பட்டவனாய் இவனை எல்லா விதத்திலும் அறிந்த போதும், எழுத்தாளனாய் இனிமையானவன்.
இத்தனை சிறுகதைகளையும் இன்னும் சில கதைகளையும் பத்திரிகைகளில் அச்சுக்குப் போவதற்கு முன்பதாகவே நான் வாசித்திருக்கிறேன்.
அக்கதைகளில் எங்கெல்லாம் யதார்த்தம் வெளித்தெரிகிறதோ அங்கெல்லாம் அவனது அனுபவங்கள் இழையோடுகின்றன என்பது எனக்குத் தெரியும். அவனைப் பாதித்த நட்பு, அவனைப் பாதித்த பிரிவு, அவனைப் பாதித்த மரணம், அவனைப் பாதித்த வெற்றி, அவனைப் பாதித்த தோல்வி எனப் பலவாறாக அவை பரிணமிக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்.
மாறாக எங்கெல்லாம் யதார்த்தம் நடை தளர்ந்து போகிறதோ அங்கெல்லாம் பரிச்சயமில்லாத விடயங்களைத் தொட்டிருக்கிறான் என்பதும் புரிகிறது.
எழுத்துக்களை அனுபவங்கள் தீர்மானிக்கின்றன என்பது உணர்மையானால் இன்னும் ஏராளமான எழுத்துக்கள் அவனிடமிருந்து வர இருக்கின்றன என்பதும் உணர்மையாகும். எதனிலும் புதுமை, வித்தியாசம் என்பவற்றினுTடு கொஞ்சமாய்த் தன்னும் பிரயோசனம் உளதாய் வேண்டும். இத்தொகுதியில் புதுமை இருக்கிறது, வித்தியாசம் இருக்கிறது.இவற்றோடு இச்சிறுகதைகள் ஒரு காலத்தினை பதிவு செய்திருக்கின்றன. காலத்தின் பதிவே ஒரு படைப்பின் உச்சப் பயனாகிறது என்பதனால், இவற்றினுTடு பிரயோசனம் நிச்சயமாகவுள்ளது.
நட்புடன்,
இ. செந்தூரன் பருத்தித்துறை
 

A

Page 43
ആഴ്ചബ
கதிர்சாத்த
நீதன்

A

Page 44
நன்றி
கனவுக்ஸ் ழெப்ெபட்ட க்த்ெதி%கு
நிர்சனத்தன்