கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஜந்தா

Page 1
Jacket Printed in Commercial Printing & Publishing House, Madriis-l
 
 

- குயிலன் புதிப்பகம்)

Page 2

மூலம் கே. ஏ. அப்பாஸ் தமிழாக்கம் கே. கணேஷ்
ye. sd குயிலன் பதிப்பகம் 82, பாண்டி பஜார் தியாகராயநகர் : : சென்னை-17

Page 3
முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1964 உரிமை பதிவு செய்யப்பெற்றது.
வில் ரூபா ஒன்று
முல்லை அச்சகம், 258, பைக்கிராப்ட்ஸ் ரோடு, சென்னை-14.

பதிப்புரை
உலகப் புகழ் பெற்ற இந்திய முற்போக்கு எழுத்தாளர் கே. ஏ. அப்பாஸ். முன்பே இவரது நூல்களில் பல தமிழில் வெளி பந்துள்ளன, மிகவும் சிறிய குறுநாவல் "அஜந்தா" என்ருலும் இதில் அடங்கியுள்ள பெரிய தத்துவம், படித்து முடித்ததும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். முற்றுப் பேருத கு கையில் ஒலித்துக்கொண்டிருக்கும், புத்த பிக்குவின் உளியோசை, பரிபூரணத்து வத்தை நோக்கி முன்னேற மனிதன் பாடுபட வேண்டுமென்ற பெரிய ‘நோக்கத்தைப் புேராதிக் கிறது.
திரு. அப்பாஸ், கிருஷ்ண சந்தர், ஆர். சுே நாராயணன் போன்ற சிறந்த எழுத்தாளர்களின்ர நெருங்கிய நண்பரான, திரு. கே. கணேஷ் இலங்கையில் நடந்த “பாரதி”யின் ஆசிரியர். அவர் இந்நூலை அழகிய் முறையில் தமிழாக்கித் தந்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றி.
குயிலன்

Page 4

அஜந்தா
இந்தியக் கலைகளுக்கு அஜந்தா நிலையான இலட்சிய மாக இருந்து வருகிறது.உலகத்திலேயே இதற்கு ஈடு இணை கிடையாது. ஆங்கிலேயர், அமெரிக்கர்கள் கட்ட இங்கு வந்து பார்த்ததும் ஊமையாகி விடுகிருர்கள்.இக் குகைகள் தோன்றி பதினைந்து நூற்ருண்டுகளாகின்றன. இந்தக் குன்றின் பாறையைத் தோண்டிச் செதுக்கி, இவ்வற்புத ஒவியங்களைத் தீட்டவும், இவ்வாயிரக்கணக்கான சிற்பங்களை ஆக்கவும், எண்ணுாறு ஆண்டுகள் ஆயின. இந்தப் புத்தர் சிலையைப் பாருங்கள்.”
அந்தப் பெரிய அமைதியான குகையில், அரசாங்க வழிகாட்டியின் வரண்ட குரல் துல்லியமாக எதிரொலித்தது. மாதச் சம்பளம் இருபத்தெட்டு ரூபாய், ஏதோ ஒன்றிரண்டு கிடைக்கும் “இணும்" இவற்றிற்காக அவன் இதுபோன்று காள்தோறும் பலமுறை, ஆண்டுக்கணக்காகக் கடறி வருகிருன். சொன்னதையே திருப்பித் திருப்பிக் கிளிப்பிள்ளை போல யாதொரு மாற்றமுமில்லாமல் யங்திரத்தைப்போல்இன்றேல் கிராமபோனைப்போல் கூறி வருகிருன். கிர்மலுக்கு இக் குரல் இராட்டை சுற்றும்பொழுது எழும் ஓசைபோல வோ, அன்றி தேனிக்களின் ரீங்காரம் போன்றே, பொருளும் முடிவுமற்ற உயிரில்லரச் சொற்களாகத் தோன்றின.

Page 5
6 அஜந்தா
ஆனல் கலாரசிகையும் கலையே உருவுமான பாரதியோ அவ்வழிகாட்டியின் சொற்களை மிகவும் கவனத்துடன் கேட் டாள். அந்தப் பழம்பெரும் கலைக் கோவிலிலே தானும் ஒன்றிவிட எண்ணினுள். ஒவ்வொரு ஓவியமும், ஒவ்வொரு சிற்பமும், தூண்கள், வளைவுகள் அனைத்தும் அவளை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது.
* நிர்மல் இதோ பார்.நிர்மல் அதைப் பாரேன். அந்த புத்தர் சிலையில் எத்தகைய தெய்வீக சாக்தம் நிலவுகிறது பார் 1.இந்த அப்சரஸ் கூந்தல் முடிந்திருக்கும் அழகைப் பாரேன். என்ன இனிமை. என்ன அற்புதம்.ஆ1 ஆ! என்ன அற்புத அழகு.” என வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த பேரொலியாக அவளது வாயினின்று கிளம்பியது.
நிர்மல் பேசாதிருந்தான். அவன் ஒன்றையும் செவி மடுக்கவில்லை. வழிகாட்டி யந்திரம்போல் முனகுவதோ பாரதி மகிழ்ச்சிப் பெருக்கால் உதிர்க்கும் சொற்களோ எல்லாம் வெறுமையாகத் தோன்றின. அவன் கண்கள் அந்தச் சுவர் ஓவியங்கள் மீது படிந்திருந்தாலும் அவை அவனுக்குப் பொருளற்ற மங்கிய வண்ணச் சேர்க்கை யாகவே தோன்றின. எந்தக் குகையில் இருக்கிருேம், எந்த ஒவியத்தை ரசிப்பதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிருேம் என்பதைக்ககூட அவன் உணரவில்லை.
அந்த வழிகாட்டியின் முடிவில்லாத அர்த்தமற்ற விமர்சனம் தன்பாட்டில் போய்க்கொண்டே இருந்தது. * .இந்த வண்ண ஒவியத்தைப் பாருங்கள். இதில் மகாத்மா புத்தர் அவரது முற்பிறவியொன்றில் தன் மாணவர் கட்கு அறிவுரை நிகழ்த்துகின் ருர். அந்த மகானின் பேச்சை இந்த அரசவை காட்டிய மங்கை கேட்டுக்கொண்டிருக் கிருள். அரண்மனையில் அவள் காட்டியமாட வேண்டிய கேரமோ கடந்துவிட்டது. அவள் மூலம் இந்த விசித்திரத்

அஜந்தா
துறவியைப் பற்றியும் அவரது விசித்திர உபதேசங்களையும் கேட்டுத் தெரிந்திருந்த அரசன் அப்பேரருளாளரைச் சோதிக்க எண்ணினுன். நீங்கள் யார் ? எதைப் போதிக் கின்றீர்கள்?’ என அவரிடம் வினவுகிருன் . புத்தர் தான் சூன்யன் எனவும், தான் உண்மையையும் அமைதியையும் போதிப்பதாகவும் பதில் கடறுகிருர் .இதைக் கேட்ட அரசன் துறவியின் கை கால் காதுகளையும், மூக்கையும் வெட்டி யெறியும்படி கொலையாளிகட்கு உத்தரவிடுகிருன் .கொலை யாளியின் வாள் விழுகின்ற ஒவ்வொரு தடவையும் புத்தர் கடறுகிருர் : “ சத்யமும், அமைதியும் எனது கையிலோ, காலிலோ, காதுகளிலோ மூக்கிலோ உறையவில்லை. எனது
உள்ளத்தில் இருக்கின்றன?...அவர் காயங்களேப் பாருங்கள், இரத்தம் எப்படி.”
இரத்தம் !
அந்த வழிகாட்டியின் முடிவில்லாத, அர்த்தமற்ற உளறல்களில் இந்த ஒரு வார்த்தைதான் அர்த்தமுடைய தாக நிர்மலுக்குப் பட்டது.
இரத்தம் 1
இங்த ஒரு வார்த்தை அவனது உள்ளுணர்வைச் சம்மட்டி அடிபோல் தாக்கியது.
இரத்தம் !
அஜந்தாக் குகைகளின் கற்சுவர்களெல்லாம் வெறுமை யில் கலந்தன. அங்கே சுவர் ஓவியங்களோ அன்றிக் கற்சிலைகளோ, பாரதியோ அன்றி வழிகாட்டியோ, பசுங் குன்றுகளோ அன்றி அந்த அழகிய சிறிய ஓடையோ ஒன்றும் காணவில்லை. கலை, வரலாறு, சமயம், ஒழுக்க முறை, புத்தர், காசி காட்டு அரசன் ஆகிய அனைவரும் கணத்தில் வெறுமையில் ஒன்றி விட்ட்னர்.

Page 6
8 அஜந்தா
இரத்தம் !
இரத்த ஓடைகள், இரத்தம் நிறைந்த ஆறுகள், குருதிக் கடல். இந்த இரத்த அலைகளினுல் பம்பாய்க் கரையிலே உந்தித் தள்ளப்பட்டான். முன்னூறு மைல்களும், 1500 ஆண்டுகளுக்குமப்பால் இக் குகைகட்குத் தப்பி வந்த இரத்தக் கறை நிறைந்த அதே பம்பாய்க்குத்தான்.
嫁 t
செப்டம்பர் முதல் நாள். வழக்கம்போல், தன் வேலை முடிந்ததும் தாதரிலுள்ள தங்கள் வீடுகளுக்குச் சேர்ந்து போவதற்காக நிர்மல் கிர்காமிலுள்ள காரியாலயத்திற்குச் சென்றன். அங்கு அச்சமயத்தில் யாரோ ஒருவர் ககரில் வகுப்புக் கலவரம் மூண்டு விட்டதாகக் கடறினுர், தங்கள் பேணு, பென்சில், டைப்ரைட்டர் ஆகிய கருவிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அங்கிருந்த ஊழியரனைவரும் நிலைமை குறித்துச் சர்ச்சை செய்யத் தொடங்கினர்.
" நாம் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கலவரம் சில மணி நேரத்திற்குள் அடக்கப்பட்டுவிடும். இம்முறை அரசாங்கம் எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்கத் தயாராகவிருக்கிறது."
* இன்றைக்கே இந்தக் கலவரம் எப்படித் தொடங்கி
யிருக்கும். காளைக்குத்தானே முஸ்லிம் லீகினர் கருப்புக் கொடி ஊர்வலம் கடத்துவதாக அறிவித்தது.?”
* இதெல்லாம் கல்கத்தாவில் கடந்த கலவரம் பற்றிய செய்தியின் விளைவு."
"ஆயிரக்கணக்கான கத்திகளையும் கட்டாரிகளையும்
போலீசார் கண்டுபிடித்திருக்கிருர்களாம்.”
* கோல்பிட்டாவினருகில் யாரோ ஒரு முஸ்லிம் பண்டித
ஜவஹர்லால் படத்தின் மேல் பழைய செருப்பு மாலை சூட்ட
முயற்சித்தானுமே.”*

அஜந்தா 9.
* அதெல்லாம் கடக்காது தம்பி. இம்முறை இக்துக்க ளெல்லாம் கைகட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்ரு நினைக்கிருய்.?
அச்சமயத்தில் கீழே தெருவில் ஆம்புலன்ஸ் வண்டியின் மணியோசை கேட்கவும் ஜன்னல்களை கோக்கி அனைவரும் ஓடினர். ஹரிகிருஷ்ணதாஸ் ஆஸ்பத்திரிக்குள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலரை வண்டி எடுத்துச் சென்றது. கோடு போட்ட சட்டையும், அழுக்கு வேஷ்டியும், கறுத்த மராத்தித் தொப்பியுமனிந்த ஒரு குட்டையான குண்டு மனிதன் ஆஸ்பத்திரி வாயில் காப்பவனை நோக்கி “யாரப்பா இவர்கள்? இந்துக்களா ? முஸ்லிம்களா ? எனக் கேட்டான். ககர்ந்து கொண்டிருந்த வண்டிக்குள் தலையை கீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வாயில் காப்பவனும் " ஒரு முஸ்லிமும், இரண்டு இந்துக்களும்” என்ருன்..உடனே ? இந்து ஹோட்டலுக்கு முன்னுல் ஆத்திரம் நிறைந்த குமுறல்கள்
கிளம்பின.
இதற்குள் சர்னி ரோடிலுள்ள கடைகளெல்லாம் மூடப் பட்டன. அந்த இந்து ஹோட்டல் கதவுகூட மூடப்பட் டிருந்தது. அதன் முன் வாயிலிலிருந்த இரும்பு ‘கேட்” மாத்திரம் பாதி திறந்தபடியிருக்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் கடைசி டிராம் வண்டியும் காலியாக ஒடிச் சென்றது. காரோ, வாடகை வண்டியோ, பஸ்களோ கிடையாது. பாதை வெறிச்சென்றிருந்தது. ஆணுல் மேல் மாடிப் பலகணிகள் வழியாக, சிறுசிறு கடிட்டமாகப் பலர் நின்று கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ பயங்கர நிகழ்ச்சிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாயை அவர்கள் முகத்திலே படிந்திருக்தன. சுருதி கூட்டிய பேரிகை பயங்கர முழக்கத்திற்குக் காத்திருப்பது போல அச் சூழ்நிலையில் ஒரு விருவிருப்பு இருக்தது.

Page 7
O அஜந்தா,
திடீரென சன்ட்ஹர்ஸ்ட்ரோடினின்று காலடி ஓசைகள் கேட்டன. சொல்லி வைத்ததுபோல கண்களனைத்தும் ஏககாலத்தில், சப்தம் வந்த திக்கைப் பரபரப்புடன் கோக்கின. ஒரு குர்தாவும் பைஜாமாவும் அணிந்து மெலிந்த வாலிபன் ஒருவன் நகரத்தில் நடைபெறும் ரத்தக்களறியை அறியாதவன் போல் அலட்சியமாக கடந்துகொண்டிருத் தான. s
“இவன் அப்பன் வீட்டு பிண்டிபஜார் என்று எண்ணிக் கொண்டு இந்தப் பயல் நடப்பதைப்பார் ” என இந்து ஹோட்டலின் முன்னின்ற கடிட்டத்தினின்று ஒரு வரட்டுக் குரல் கிளம்பியது. உடனே அந்தக் கறுப்பு மராத்தித் தொப்பி யணிந்த குள்ளமான குண்டுப் பேர்வழி, தன் சட்டைப்பைக்
குள்ளிருக்கும் வஸ்துவைத் தேடிக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞன் இப்பொழுது வசந்தனின் காரியாலயத் தின் ஜன்னலுக்குக் கீழே சென்று கொண்டிருந்தான். அவனை நிர்மலும் கிட்டத்தில் காண முடிந்தது. கறுப்பு நிறம், புத்திசாலித்தனமான தோற்றம், மிக மிக மெலிந்த உருவம். அவனது மஸ்லின் சட்டைக்கும் வெளியே முட்டிக் கொண்டு தெரிந்த எலும்புகளைக் கூட எண்ணி விடலாம். மாணவனுகவோ அல்லது கிளார்க்காகவோ இருக்க வேண்டும். நிர்மலுக்கும் காரணமறியாது °தம்பி, கொஞ்சம் ஜாக்கிரதையாகப்போ. காலங்கெட்டுக் கிடக்கிறது” என்று கவி எச்சரிக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனல் அவனது உதட்டினின்று யாதொரு ஒலியும் கிளம்பவில்லை. எச்சரிக்கை செய்யப் போதிய அவகாசமும் இருக்கவில்லை என்பதை உணர்ந்தான். பளபளக்கும் நீண்ட கத்தி அவனை நோக்கிப் பறந்து வந்தது.
அடுத்த கணத்தில் அந்த இளைஞனின் முதுகில் அது பாய்ந்து இடுப்புவரை இறங்கி விட்டது. அந்தக் கத்தியைக்

அஜந்தா 1.
தடுக்க எண்ணியோ என்னவோ அந்த அப்பாவியின் கைகள் தாணுகவே மேலே தூக்கின. ஆணுல் அடுத்த கணமே சுழன்று தரையிலே விழுந்துவிட்டான். இலேசாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வது போல் ஒரு சாக்குரல் கேட்டது.
* ஹே பகவான் ?? இதைக் கேட்டதும் அந்த இந்து ஹோட்டலில் ஒரு சலசலப்புத் தோன்றியது.
*அடேடே. இது இந்து போல் இருக்கிறதே!” *அப்படியிருக்காதப்பா. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த அயோக்கியன் அப்படி ஏமாற்றி யிருப்பான்!”
“இந்து எங்காவது பைஜாமா அணிவதைப் பார்த்திருக் ácዐguሠff ?”
“அவன் கால் சட்டையைத் திறந்து சுன்னத்து செய் திருக்கிறதா என்று பார் 1”
கத்தி இன்னும் அந்த இளைஞன் முதுகில் செருகியவாறு தானிருந்தது. இருந்தும் அதைப் பற்றிக் கவலைப்படாது பலர் அவனது உடலைப் புரட்டிஞர்கள். அவர்களில் ஒருவன் பைஜமாவைக் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்தான்.
நிர்மல் வெட்கத்தால் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். அவன் முகத்தை யாரோ சாக்கடையில் பிடித்துத் திணித்து அமுக்கிவிட்ட உணர்ச்சி தோன்றியது.
அவன் திரும்பிப் பார்த்தபொழுது அவர்களது பரி சோதனை எல்லாம் முடிந்திருந்தது. கொலைகாரன் கத்தியைப் பிடிங்கி பின் பிரேதத்தை முன்னிருந்தபடி புறட்டி வைத்தான்,

Page 8
அஜந்தா
*மிசுட்டேக்காப் போச்சு 1° என்று கூறிக்கொண்டே தனது அழுக்குப் படிந்த வேஷ்டியின் நுனியைக் கிழித்துக் கத்தியிலிருந்த இரத்தத்தைத் துடைத்து எறிந்தான்.
காயத்திலிருந்து கத்தியை வெளியே இழுத்தபொழுது அதிணின்று கசிந்த கறுப்பும் செம்மையுங் கலந்த இரத்தம் செத்தவனின் வெள்ளை உடைகளே நனைத்து தார்ரோட்டிலே வழிக் து பரவியதை நிர்மல் கண்டான்.
s
இரத்தம் !
“கொலை, பூசல், கலகம் இவையெல்லாம் இந்த அமைதி நிறைந்த சுவர்க்கத்திற்கு வந்ததும் தூர மறைந்து விடுகிறல்லவா ?
நிர்மலின் தோளின் மேல் பாரதி அன்பாகத் தனது மெல்லிய கரத்தை வைத்து மெதுவாக, அமைதியாகக் கடறினுள். அவன் ஆழ்ந்திருந்த அந்தக் குருதிக் கடலி லிருந்து ஒரு பெரும் அலை அவனை வெளியே இழுத்துக் கரை சேர்த்ததைப் போன்றிருந்தது அவனுக்கு. தனது சிந்தனை கலைந்து சுயநினைவுக்கு வந்தான்.
*என்ன...என்ன சொன்னுய் பாரதி ?”
1 “இங்கே இந்தக் குகைகளியே காமிருக்கும் பொழுது பம்பாய், கல்கத்தா, சண்டைசச்சரவு இரத்தக்களரிகளிலி ருந்து எவ்வளவோ தொலைவில் இருப்பதை உணர்கிருேம் பார்த்தீர்களா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னேயல்லவா இருக்கிருேம், கடைசியில் இந்த இடத்திலா வது நீங்கள் பம்பாயில் கண்ட பயங்கரக் காட்சிகளை மறந்து விடுவீர்களென நினைக்கிறேன்.”
事

அஜந்தா 13
பேதை பாரதி!' அழகின் ரசிகையும், அழகே உருவு மான அந்தப் பாரதி, அப்பப்பா காதைத் துளைக்கின்ருளே ! அவளது மூளையில் இதெல்லாம் எங்கே ஏறுகிறது !
நிர்மலை அவள் மனமார்க் காதலித்தாள். ஒரு கொடிப் பொழுதேனும் அவன் கவலையாக விருப்பதைக் காணச் சகி யாள். நிர்மலின் இரக்க மிக்க உள்ளம் பயங்கரக் காட்சி களைக் காணச்சகிக்காது என்பதைக் கலவரம் நடந்த அன்றே அவள் உணர்ந்தாள். சர்னி ரோடில் நடக்த கொலை பாதகத்தைக் கண்ணுற் கண்ட பின்னர் மூன்று நாட்களாய் அவனுல் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை ஊமைபோலாகிவிட்டான். அவனது உள்ளத்திலும் எண் ணத்திலும் வேதனை நிறைந்த அமைதி நிலவியது. கோழை என்று யாரும் தன்னை எண்ணி விடுவார்களோ எனப் பயந்து இதன் காரணத்தை அவன் ஒருவரிடமும் கூறவில்லை. ஆணுல் எப்பொழுதும் பாரதியிடம் மட்டும் தனது உள்ளத் திலுள்ளதைத் திறந்து கடறிவருவது வழக்கம். அதன்படி அந்தப் பயங்கர நிகழ்ச்சிகளை எடுத்துக் கடறினுன். ‘அந்த மெலிந்த இளைஞன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பீதியுடன் கடைசி முறையாகக் கையைத் தூக்கித் தடுத்த காட்சி எனது கண்ணிலே இன்னும் இருக்கிறது. அவனது கடிச்சல் இன்னும் காதிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவனது வேதனை நிறைந்த பரிதாபமுகம் இராப்பகலாக என்னை அச்சுறுத்துகிறது. கான் தூங்கும் பொழுது கூட அவன் இரத்தக் கடலில் மூழ்குவதைக் காண்கிறேன். அதனின்று அவனை என்னுல் காப்பாற்ற முடியாத சத்தியற்ற நிலையிலிருப்பதையும் உணர்கிறேன்.”
அவனது பரந்த, சுருண்ட முடியைத் தனது மெல்லிய விரல்களால் அன்புடன் கோதியவாே போவம் நிர்மல் .”* என்ருள் பாரதி.

Page 9
夏星 அஜந்தா
துயரப்பட்டுக் கொண்டிருக்கும் தனது நண்பனுக்கு ஆறுதலளிக்க அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள். சினிமா, ரேடியோ, இசைக்கச்சேரி இன்னும் எங் கெல்லாமோ அழைத்துச் சென்ருள். அவளது காதல் கனிந்த பார்வையும் இனிமையான பேச்சுங்கட்ட அவனது உள்ளத்தில் பதிந்த அந்தப் பயங்கரக் காட்சியை அகற்ற முடியவில்லை. நிர்மல் தனது பழைய உற்சாகத்தையும், சுரு சுருப்பையும், ஹாஸ்ய உணர்ச்சியையும் திடீரென இழந்து விட்டான். வாழ்க்கையின் பலவிதத் துறைகளிலும் அவன் கொண்டிருக்த சிரத்தையும் கனவும் மறைந்தன. வழக்கம்
போல் பாரதியைத் தினம் பார்க்க வருவான். ஆணுல் மணிக்கணக்காக ஊமையைப் போல் அப்படியே ஒரு வார்த்தைகட்டப் பேசாது உட்கார்ந்திருப்பான். ஏதோ
கண்ணில் தோன்ருத பிசாசைப் பார்ப்பது போல் அவனது கண்கள் மிரண்டு விழித்துக் கொண்டிருக்கும்.
“எனது அன்பே, நிர்மல் ! உங்கள் இளகிய உள்ளம் புண்பட்டிருக்கிறது என்பதை கான் உசணர்கிறேன். அதற்காக நீங்கள் இப்படி நோயாளிபோல் இருக்கவேண்டா மெனக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அந்த சர்னி ரோட் சம்பவம் பயங்கரமானதுதான். ஆணுல் நீங்கள் அதை அவசியம் பறக்க முயல வேண்டும் ’ என அவள் கூறுவாள். அதற்கு அவன் “ஆம் அதை மறந்து விடுவது கல்லதுதான் " என்று கடறித் தனக்குள்ளாகவே “அதை மறக்க முடிந்தால்தானே தவிக்கிறேன்” என்பான்.
நிர்மல்குமார் உணர்ச்சியும் சற்பணு உள்ளமும் படைத் தவன். இளம் எழுத்தாளர்களிடையே கல்ல செல்வாக் குள்ள கவிஞன், வசனகர்த்தாவுங்கடிட நாட்டின் உயர்ந்த இலக்கிய சஞ்சிகைகளில் அவனது கவிதைகள், கட்டுரை கள், கதைகள் வெளிவந்தன. இலட்சாதிபதியின் மகளும்

அஜந்தா 15
கலா ரசிகையும், கலைஞர்களை ஆதரிப்பவளுமாள் பாரதி நிர்மலின் இலக்கிய மேதையை மெச்சுபவள். அவளால் அப்பொழுது முடிந்திருக்குமானுல் கலகமும் குழப்பமும் நிறைந்த இந்தப் பைத்திய உலகினின்று அவனைப் பிரித்து சவுக்குத்தோப்பு நிறைந்த குன்றின் உச்சியிலே ஒரு அழகிய பங்களாவை அவனுக்காக அமைத்துத் தந்திருப்பாள். அமைதியைக் குலைக்க முடியாத அவ்வுச்சியிலே அக் கோயிலை எழுப்பி, தன் இலக்கியத் தெய்வத்தைக் கற்பனை உலகில் சஞ்சரிக்க விட்டிருப்பாள். அவளது இத்தகைய மேலோட்டமான போக்கு நிர்மலுக்குப் பிடிக்கவில்லை,
அவன் ஒரு தினசரியின் நிருபணுக விருக்தான். கல்ல எதிர்காலமுள்ள கற்பனை வளம் நிறைந்த ஒரு எழுத்தாளன் பத்திரிகைத் தொழிலில் உழல்வது அவனின் ஆற்றலை வீணுக்கும் கொடிய செயலென அடிக்கடி பாரதி கடறி
வந்தாள்.
ஆணுல் நிர்மலோ ‘இன்றைய இந்தியாவில் இலக் கியப் பணி என்பது வெகு சிலரே புரியக்கூடிய ஆடம்பரச் செயலாகும்; வருவாய் குறைவாக விருந்தாலும் பத்திரிகைத் தொழில், ஒருவகைத் தொழில் முறையோடு சேர்ந்தது என் ருவது கூறலாம். அதோடு, நிருபணுகக் கடமையாற்றும் பொழுது வாழ்க்கையை நேருக்கு நேராய் அதன் பற்பல கோணங்களில் பார்க்க வாய்ப்பேற்படுகிறது. கோர்ட்டுகள் போலீஸ் கச்சேரிகள், வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், பொதுக் கடிட்டங்கள் ஆகிய இடங்களில் மனித இனத் தைத் தொகுதியாகவும் தனித் தனியாகவும் பார்த்து அவற் றின் குணுதிசயங்களைப் பயின்று அனுமானிக்க முடிகின் றது” எனக் கருதினன். இத்தகைய கோக்கின் விளைவாகத் தான் அவனுக்கு உணர்ச்சி தோன்றி, கட்டுரைகளையும் கவிதைகளையும் உருவாக்க முடிந்தது. அந்த அனுபவத்தின்

Page 10
16 அஜந்தா
விளைவினுல்தான் வாழ்க்கையை அப்பட்டமாகவும் கண்ணுடி போல் துல்லியமாகவும் எடுத்துக்காட்டி ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற முடிந்தது என்பதும் அவன் முடிபு.
நிருபன் என்ற முறையில் நிர்மல் ஊரடங்குச் சட்ட கேரங்களிலும் நகரின் பற்பல பாகங்களில் சுற்றித் திரிய நேர்ந்தது.
சண்ட் ஹர்ஸ்ட் ரோடு
பிண்டி பஜார்
பைதோனி
பைக்கலா
பரேல்
தாதர்.
பம்பாய் முழுதுமே ஒரே சண்டையும் சச்சரவும் நிறைந்த ரணகளமாகக் காட்சியளித்தது. கத்திக் குத்து களும் கொலைகளும் நாலா பக்கங்களிலும் நடந்ததாகச் செய்திகள் தோன்றின. இதோ இங்கே ஒரு முஸ்லிம் ரொட்டிக் கடைக்காரன் கொல்லப்பட்டான்! அதோ அங்கே ஒரு இந்து பாற்காரன் முஸ்லிமால் குத்தப்பட்டு ஆபத்தான நிலைமையிலிருக்கிருன்! இங்கே ஒரு பட்டாணியன் கொல் லப்பட்டுக் கிடக்கிருன். அங்கே ஒரு கிழக்கத்தியான் கொலே செய்யப்பட்டிருக்கிருன். இங்கே ஒரு பத்து வயதுப் பாலகனை யாரோ கழுத்தை வெட்டியிருக்கிருர்கள்! அங்கே ஒரு பதினுெரு வயதுச் சிறுவன் தெருவில் போகிற ஒருவ னைக் கத்தியால் குத்தி விட்டான்.
ககர முழுதுமே இந்து பம்பாய்’ ‘முஸ்லிம் பம்பாய்” எனப் பிரிக்கப்பட்டு விட்டது. பைதோனியின் வழியாக ஒரு முஸ்லிம்கூட கடந்துசெல்லத் துணிய மாட்டான்.

அஜந்தா 17
பிண்டிபஜார் வழியாக ஒரு இந்துவும் செல்வதில்லை. பாக்கிஸ்
தானும் அகண்ட இக்துஸ்தானும், முடிவில் இங்கேயே ஸ்தாபிதமாகி விட்டன!
மற்ற நிருபர்களுடன் நிர்மலும் போலீஸ் அல்லது இராணுவ லாரிகளில் கலகம் நடந்த பகுதிகளைப் பார்வை யிடச் சென்ருன். ஒருநாள் ஒரு வெள்ளை சார்ஜெண்டு *காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் பாக்கிஸ்தான் வேண்டா மென்றீர்கள். ஆணுல் இன்று பம்பாயில் ஒரு பாக்கிஸ்தான் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா..” என்று கேட்டான். மறு காள் ஒரு ஆங்கிலேய இராணுவ வீரைெருவன் நிருபர்களை கோக்கி “நீங்கள் வெள்ளையனே வெளியேறு என்று எங்க ளைப் பார்த்துக் கோஷித்தீர்களே! நாங்களும் வெளியேறத் தயாராகிக்கொண்டிருக்கும்பொழுது நீங்கள் ஏனப்பா எங் கள் பின்னுல் ஓடிவந்து "சிறிது தங்கிப் போங்களேன்? என்று காலைப் பிடிக்கின்றீர்கள்? இந்துக்கள் தங்களை முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்றும்படி எங்களைக் கேட்டுக் கொள்கிருர்கள். முஸ்லிம்களோ இந்துக்களினின்று பாது காக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறர்கள். ஆக இரு வருமே தங்கள் பாதுகாவலுக்காக எங்கள் துப்பாக்கிகளே யும், விமானங்களையும் எதிர்பார்த்திருக்கிருர்கள். இவ் விஷ யத்திலே இருவருமே ஒற்றுமையைக் காண்கிருர்கள். இன் றைக்கோ இருவருமே “வெள்ளையனே வெளியேருதே’ என்று கோஷிக்கிருர்கள்” என்று கூறினுன்.
இந்தியாவின் சுதந்தர மாளிகை சரிந்து சிதறி விழுவது போல் கிர்மல் எண்ணினுன், பல நூற்ருண்டுகளாக போற்றி வளர்க்கப்பட்ட தேசபக்த உணர்ச்சிக்குப் பெருங்
துரோகம் புரிந்து மாசுடடுத்தப்பட்டிருப்பதாகக் கருதினன்.
1557-ல் தோன்றிய முதல் இரத்தக் கலவரம்.

Page 11
18 அஜந்தா
வங்காளப் பிரிவினையை எதிர்த்து நடத்திய போராட்
ஒத்துழையாமை கிலாபத் இயக்கங்கள், சுதேசி இயக் கம், பகிஷ்கார இயக்கம். காந்திஜியும் அலி சகோதரர் களும்.!
ஜாலியன் வாலாவில் கடந்த மறக்கமுடியா உயிர்த் தியாகம். பொது வேட்கையான நாட்டு விடுதலைக்காக ஒன்றிக் கலந்த இந்து, முஸ்லிம் சீக்கியர்களின் இரத்தம்.
பகவத்சிங்கும் அவரது வீரத் தோழர்களும், சத்தியாக் கிரகம், சட்டமறுப்பு இயக்கம். ராவி நதிக்கரையிலே கொடி பறக்க விடப்பட்ட மகத்தான சம்பவம்.
எல்லா தேசீய கீதங்களும் கோஷங்களும்.
இந்தியாவின் ஒற்றுமை. இந்தியாவின் தன் மதிப்பு. உயர்வு.
இந்தியக் கலைகள் இலக்கியங்கள். இந்திய இசை, கவிதை, ஓவியம், சிற்பம்.
ஒப்புயர்வற்ற இவ்வுன்னதமானவைக ளெல்லாம் மண் ணுேடு மண்ணுக நசுக்கப்படலாமா ?
h s
*நூற்ருண்டுகளாக மண்ணுேடு மண்ணுகக் கிடந்திருக் தாலும் அஜந்தா புடம்போட்ட தங்கம்போல் ஒளிவிட்டு விளங்குகிறது.’ இவ்வாறு வழிகாட்டி இன்னும் உளறிக் கொண்டிருந்தான்.
**இந்தியக் கலை, இலக்கியம், கவிதை, ஓவியம் இவற் றின் அழிக்கமுடியாச் சிரஞ்சீவிச் சிருஷ்டி அஜந்தா” என்று உற்சாகத்துடன் பாரதி மொழிந்தாள்:

அஜந்தா 19
ஆயினும் அந்த இருள்படர்ந்த குகையிலே, அவ் வழி காட்டியின் ‘டார்ச்’ ஒளியின் வட்ட வடிவமான வெளிச்சத் திற்குள்ளும் நிர்மல் வெறும் மங்கிய பொருளற்ற வண்ணக் கோடுகளைத்தான் கண்டான். அழகையோ கலையையோ அவன் காணவில்லை. அதில் எப்பொருளையும் உட் கருத்தை யும் காணவில்லை. நிர்மலின் உள்ளத்திலே ஆழங் காண முடியாத ஒரு ஆத்திரம், பெரும் ஏமாற்றம் தோன்றியது.
*இவையெல்லாம்.இந்தக் குகைகள், இச் சிற்பங்கள், இச்சுவர் ஓவியங்கள், இச்சித்திரங்கள், இம்முயற்சி, இவை எதற்காக? ஏன் செய்யப்பட்டன? மனித உழைப்பு வீணுனதுதான் கண்ட பலன்! மனிதனுடைய நீண்ட பரிணும வளர்ச்சி வரலாற்றில் கல்லிலே உருவங்களைச் செதுக்கி, உழைப்பை முயற்சியை வீணுக்காது, மனிதனை மனிதனுக்க முயன்றிருந்தால் இன்று இரத்த வெறிபிடித்த காட்டு மிருகங்களைப்போல ஒருவர் மற்றவரைக் கொன்று தீர்க்கும் நிலையில்லாது செய்திருக்கலாமே. அஜந்தாவிட மிருந்து இந்தியா கற்றுக்கொண்டதென்ன? ஒன்றுமில்லை. சத்யம், வாழ்க்கை, இவ்வுலகம் இவற்றினின்று மனிதனின் கவனத்தை வேறு வழியில் திருப்பும் சின்னமாகவே அஜக்தா இருந்திருக்கிறது! அஜந்தா வெறும் பொருளற்ற சின்னம் மட்டுமல்ல. அது வெறும் ஏமாற்று, புரட்டு, பொய்.” இவ்விதமாகக் கூ ச் ச ல் போடக்கூடத் தோன்றியது.
நிர்மலின் சிந்தனை சென்றுகொண்டிருக்கும் பயங்கரப் போக்கைச் சிறிதும் உணராத வழிகாட்டி தனது விமர்சனத் தைத் தொடங்கினுன், “இந்தச் சுவரோவியங்களைப் பாருங் கள்.புத்தர் வெண்புரவியிலே ஏறி வீதி வழியாகச் சென்று கொண்டிருக்கிருர், என்ன கம்பீரம் இந்தப் பெண்களைப் பாருங்கள். அவர்கள் அந்த அருள் வள்ளலை எவ்வளவு

Page 12
2O அஜந்தா
பக்தி விசுவாசத்துடன் கவனித் துக் கொண் டி ரு க் கிருர்கள் .”
பாரதியும் “நிர்மல், இந்தப் பெண்களைப் பாருங்களேன். அவர்கள் அகத்திலே மிளிரும் பக்தி முகத்திலே பொலி கிறது. இந்தியப் பெண்மையின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, தாய்மைக் குணங்களை அஜந்தாவின் ஓவியர்களே கன்கு புரிந்து வெளிப்படுத்தியிருக்கிருர்கள்.”
இந்தியப் பெண்களின் நாற்குணங்கள் அவர்களது அமைதி விரும்பும் உள்ளம்! அவர்களது மென்தன்மை!!! அவர்களது தாய்மையுள்ளம்!!!! அக்குகைக் கற்களையே கிடுகிடுக்கும்படியாக வாய் விட்டு ஏளனமாகச் சிரிக்கலாமா வென்றுகட்ட கிர்மலுக்குத் தோன்றியது.
இந்தியப் பெண்களின் காற்பண்புகள்? அவர்கள்து அமைதியான உள்ளம்? அவர்களது மென்தன்மை? அவர்
களது தாய்மை உள்ளம்?
பொய் புரட்டு !! ஏ மா ற் று !!! ஆபத்தான தப்பெண்ணம்!!!!
家
நிர்மல் ஒரு கம்யூனிஸ்டல்ல. அவர்களுடன் ஒத்துப் போகும் இனத்தைச் சேர்ந்தவனுே அன்றி அவர்கள் *அனுதாபி யோ அல்ல. ஆயினும் ஒருங்ாள் கம்யூனிஸ்டுக் கட்சிக் காரியதரிசி பி. சி. ஜோஜியைத் தொழில்முறை காரணமாகப் பேட்டி காண வேண்டியிருந்தது. அச்சமயம் தெருவே கடிச்சலும் குழப்பமுமாகக் கேட்டது. அனைவரும் ஜன்னலண்டை ஒடிஞர்கள். வெளியே பார்த்தபொழுது ஒரு வயதான வெள்ளைத்தாடி போலி முஸ்லீம், டிராம்பாதை

அஜந்தா 21
வழியாக ஓடிக்கொண்டிருந்த இரத்த ஊற்றில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவன் முதுகுப்புறமாய் குத்தப் பட்டுக் கிடந்தான். எதிர்ப்புறத்திலிருந்த ஒரு கட்டிடத்தின் பால்கனியிலிருந்த சில மராத்திப் பெண்கள் ஏதோ நாடகத் தில் ஹாஸ்யக் கட்டத்தைக் கேட்டுச் சிரிப்பதுபோல் கெக்கலித்துக் கொண்டிருந்தார்கள்.
*கமலா! அங்கே கிடக்கும் அந்தத் துலுக்கனின் தாடி யைப் பார்; வெள்ளைத்தாடி சிகப்புத்தாடியாக மாறிவிட்ட தைக் கண்டாயா?”
அனைவரும் அந்தக் குதூகலச் சிரிப்பிலே கலந்து கொண்டனர்.
இந்தியப் பெண்மணியின் நற்பண்புகள்! அவர்களது அமைதி விரும்பும் உள்ளம! அவர்களது மென்தன்மை! அவர்களது தாய்மை உள்ளம்!!!!
ஒரு செஞ்சிலுவை வண்டி வீதி வழியாக ஓடி வந்தது. கிறீச்சிட்டு பிரேக்போட்டு கின்றது. இறந்துகொண் டிருந்த அந்த போலிக்கிழவனை தூக்கிப்போட்டுச் சென்றது. உடன் எதிர் வீட்டிலிருந்த பெண்ணுெருத்தி கையில் ஒரு வாளித் தண்ணீருடன் வெளிவந்து பாதையில் உறைந்து போயிருந்த இரத்தத்தின் மீது ஊற்றிக் கழுவினுள்.
அதன் பின் பல காட்கள் அப் பெண்களின் பேய்ச் சிரிப்பு நிர்மலின் காதுகளிலே ஒலித்துக்கொண்டே யிருங் தது. அவனது கனவுகளிலே அந்த போலியின் இரத்தங் தோய்ந்த வெண்தாடி காற்றிலே அசைந்து பேய்க்குருவி போல் காட்சியளித்துக்கொண்டிருக்தது. அவனது அறிவுக் கும் ஹாஸ்ய உணர்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஏதோ 9(5 வேடிக்கையைக் கண்டு இந்தியாவின் பெண்ணினமே சிரித்துக் கொம்மாளமடிப்பதாக அவனுக்குத் தோன்றியது.
இந்தியப் பெண்மையின் நற்பண்புகள்! அ. 2

Page 13
22 அஜந்தா
அவர்களது அமைதி காடும் உள்ளம்! அவர்களது மென்தன்மை! அவர்களது தாய்மை உள்ளம்!!! நிர்மலின் நண்பர்களில் பலர் முஸ்லிம்கள். எனினும் கலவர காலங்களில் அவர்களைச் சென்று பார்க்க நிர்மலால் முடியவில்லை. ஒருங்ாள் அவனது சகா நிருபணுன ஹனீப் மலேரியாக் காய்ச்சலினுல் மிகவும் பாதிக்கப்பட்டிருப்ப தாகக் கேள்விப்பட்டான். ஹனீப் மணமாகாத தனிப் பேர்வழி யாதலால் அவனைக் கவனித்துக்கொள்ள ஒருவரும் கிடையாது -என்பதையும் நிர்மல் அறிவான். எனவே பிண்டிபஜாரில் அவன் வசித்த இடத்தை நோக்கிச் செல்ல முடிவு செய்தான்.
கிராபோர்ட் மார்க்கெட் வந்ததும் பஸ்ஸிலிருந்த இந்துப் பிரயாணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். நிர்மல் ஆங்கிலேய முறைப்படி உடை அணிந்திருக்ததால் யாரும் எடுத்த எடுப்பில் அவனை இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்துவணு என்று கூறமுடியாது. அவன் கல்ல சிகப்பானதால் பலர் அவனைப் பார்சி எனவும் கருதினர். இருந்தும் “பாகிஸ்தானிப் பகுதி’க்குள் பஸ்சென்றுகொண்டிருந்தபொழுது தான் ஏதோ ஆழத்தில் மூழ்கிவிட்டது போன்ற உணர்ச்சி தோன்றியது. அவனது இதயம் பயத்தினுல் வேகமாய் துடித்தது. தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முரட்டு முஸ்லிம் தனது இதயத் துடிப்பின் ஓசையைக்கேட்டு, புனிதமான தங்கள் பக்தர் பிரதேசத்தில் நுழையத் துணிந்த 'காபீர்” என்று தன்னை அவன் எங்கே கண்டுவிடுவாணுே என்றுகட்டத் தோன்றியது. 'மிசுடேக்காய்" சர்னிரோடின் குண்டன் இந்து இளைஞனுெரு வனேக் குத்திக் கொன்றது போல் எந்த நேரத்தில் தன் துட்டைன் பைக்குள்ளிருக்கும் பளபளக்கும் கத்தியை cடுத்து ‘கா பீரின் முதுகுப்புறம் பாய்ச்சுகிருணுே தெரிய

அஜந்தா 23
வில்லை. ஏதோ காரணமின்றி முதுகுப்புறம் அரிப்பது போல வும் கெஞ்செலும்புகளின் வழியாக ஒரு கத்தி செலுத்தப் படுவது போலவும் ஒரு கற்பனை உணர்ச்சி தோன்றியது.
ஜே. ஜே. ஆஸ்பத்திரி அருகில் பஸ்ஸிலிருந்து இறங்கிய பொழுது காற்புறமும் த ன் னை க் குத்த தகுதியுடையவர்கள் இருப்பதை உணர்ந்தான். யார் கண்டது? அந்தக் காய்க்கறிக் கடையிலிருக்கும் வியாபாரி காலிபிளவரினைத் தான் வெட்டுகின்ற அதே கத்தியினுல் ஒரு இந்து வழிப்போக்கனின் தோலை உரிக்க முயலலாம்! அதோ அந்தப் பட்டாணியன் ஒரு “காபிர்பய“லைக் கொல்லு வதன் மூலம் அரம்பையர் நிறைந்த சுவர்க்கத்திற்கு இலவச அனுமதி பெறலாம்! தனக்குப் பின்னுல் காலடி ஓசை கேட்க வும் நிர்மல் திடுகிட்டுத் திரும்பிப் பார்த்தான். வந்து கொண் டிருக்தது பர்தா அணிந்த ஒரு பெண். ஒருகணம் அவனுக்கு நிம்மதி தோன்றியது. மறுகணமே யாராவது பிரபல குண்டன் தன்னை மறைத்துக்கொள்ள இவ்வேஷம் போட் டிருக்கக் கட்டாதா என்று ஒரு எண்ணம் தோன்றியதும் அவனது உடலெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. உடனே ஒன்றும் யோசியாது திடீரென தன் கண்பன் வசித்த இடத்தை கோக்கி ஓட்டம் பிடித்தான்.
ஹனீப் மயக்கமாய் உணர்வற்றுப் படுத்திருந்தான். எனவே நாள் முழுதும் அவனுடன் நிர்மல் தங்கவேண்டி நேர்ந்தது. காய்ச்சல் சிறிது குறைந்து கோயாளி பால் சாப்பிட முடிந்த நிலை ஏற்பட்டதும் நிர்மல் திரும்பித் தனது இருப்பிடம் செல்வதென எண்ணியிருந்தான். ஆணுல் அப்பொழுதுதான் சைக்கிளில் சென்ற ஒரு போலீஸ் காரன் ஒலிபெருக்கியின் மூலம் மாலை ஐந்து மணி யிலிருந்து இருபத்து நான்கு மணி நேரம் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்திருப்பதாக அறிவித்துச் சென் ருன்

Page 14
24 அஜந்தா
வெளியிற் சென்று யாரும் திரியவேண்டாமெனவும் எச்சரித் தான். ராணுவப் பாதுகாவலர்கட்கு அங்ங்ணம் வெளியில் திரிபுவர்களைச் சுடும்படியாக உத்தரவு கொடுக்கப்பட்டிருப் பதாகவும் கூறிச் சென்ருன். ஊரடங்குச் சட்டம் அமுல் வர இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. எனவே நிர்மல் சிவாஜி பார்க்கிற்குத் திரும்புவதென்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்தான். எனவே அன்றிரவை ஹனீபுடன் கழிப்பதென முடிவு செய்தான்.
ஹனீபின் அறை, பிளாக்கின் ஒரு பக்கத்திலிருந்தது பால்கனியிலிருந்து பார்த்தால் பிரதான தெரு தெரியும். ஜன்னல்கள் பக்கத்துத் தெருவை நோக்கியிருந்தன. *கண்டதும் சுடு உத்தரவை மனதிற்கொண்டு பலர் அவசர அவசரமாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு முன்னர் தமது இருப்பிடங்கட்கு ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு கிழக்கத்திய பாற்காரன் இந்து வென்பதை அறிவுறுத்தும் குடுமியுடன் மூங்கிற் காவடியில் பித்தளைப் பானைகளில் பாலைச் சுமந்து வேகமாகவும் அதே சமயம் எச்சரிக்கையாகவும் தெருவோரமாக ஒதுங்கிப் போய்க்கொண்டிருத்தான். அவனது தோளிலிருந்த சுமை யின் பளுவைச் சுமந்தவாறே இருபுறமும் பயத்துடன் மிரண்டு பார்த்துக்கொண்டே சென்ருன் முன்னர் சர்னி ரோடில் யமபுரம் கோக்கிச் சென்ற இளைஞனைக் கண்டதும் ஏற்பட்டதுபோல் இவனுக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற உணர்வு நிர்மலுக்குத் தோன்றியது. கடச்சல்போட்டு அவனே எச்சரிக்க எண்ணினன். ஆனல் இம்முறையும் வார்த்தைகன் அவனது வாயிலேயே உறைந்து தங்கி விட்டன. கண்மூடித் திறப்பதற்குள் மூன்று குண்டர்கள் அக்தக் கரிய மெலிந்த கிழக்கித்திப் பால்காரனை வழி மறித் ததைக் கண்டான்.

Jiant 塞5
*ஏ காபிர் பயல் மகனே! எங்கே பேரவதாக கீ நினைத்துக்கொண்டு கடக்கிருயடா?”
அந்த அப்பாவி ஒரு வார்த்தைக.ட பதில் பேசவில்லே. அவன் தான் எது கடறினுலும் அம் முரடர்கள் தன்னை விட்டு விடப் போவதில்லை என்பதை உணர்ந்தாஞே, அல்லது அந்த மூவரின் கண்களிலும் யமனைக் கண்டாணுே என் னவோ, மறுபுறம் திரும்பிச் சென்ருன், மற்ருெரு கடிட்டம் அவனேத் திரும்பிச் செல்லாதபடி வழிமறித்துக்கொண் டிருந்தது. -
நிர்மலின் இரக்க கெஞ்சிலே வேட்டைக் காட்சிகளைக் கற்பனை பண்ண முடிந்ததில்லை. ஆணுல் இப்பொழுதோ வேட்டையாடப்பட்ட மானின் நிலை எப்படியிருக்குமென் பதை உணர்ந்தான். அந்த மெலிந்த பாற்காரனின் முகத் திலே, தான் உடன்ே சாகப்போவதை உணர்ந்ததஞல் ஏற் பட்ட பயம் நிறைந்த தோற்றத்தைக் கண்டான். தன்னைத் துரத்தி வருபவர்களைக் கடைசித் தடவையாக கிராதரவான மருண்ட பார்வையுடன் கோக்கிஞன். பின்னர் பக்கத்துத் தெரு வழியாகத் தப்பிக்க முடியாதென்பதை உணர்ந்ததும் ஒடத் தொடங்கினுன். அவனை உடன் ஐந்து மனித வேட்டை காய்கள் தொடர்ந்து சென்றன.
நிர்மல் அறையின் மற்ற பக்கம் ஓடினுன். ஆணுல் அவன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பதற்குமுன் அப் பாற்காரன் கீழே விழுந்த சப்தம் அவன் காதிற் பட்டது. தெருவிலே பித்தளைப் பாத்திரங்கள் டனுர் என்ற ஒலியுடன் விழுந்தன. பாதையிலே வெள்ளாறுபோல் பால் ஓடியது. மி மல் ஜன்னல் வழியாகப் பார்ப்பதற்குமுன் அக்தப் பாலில் பாற்காரனின் இரத்தம் கலந்துவிட்டது.
"அயோக்யப் பயல் தப்பி ஓடப் பார்த்தான்!”

Page 15
26 அஜந்தா
அப்புறம் அவனது பக்கத்து அறையிலே ஒரு பெண் சிரிக்கும் ஒலியைக் கேட்டான். ‘அடியே குல்பாணுே, விரை வில் வங்து பார்! நமது சந்தில் ஒரு காபிர் கொல்லப்பட்டுக் கிடக்கிருன், வா, விரைவில் வா’ என்று அவள் கச்ச லிட்டழைத்தாள். ‘அடியே குல்பானே இந்த அழகான காட்சியை வந்து பார். நம்மவர்கள் எவ்வளவு வீர தீர பராக்கிரம செயலை ஆற்றியிருக்கிருர்கள்!” என்று அவள் அழைத்துக் கடறுவது போலிருந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைகள், யுவதிகள், கிழவிகள், நடுத்தர வயதுப் பெண் கள் ஆகியவர்களின் இரைச்சல் கேட்டது.
*அடியே, அவன் குடுமியின் லகூடிணத்தைப் ur(8u sir !”
“அவனுக்கு நன்ருய் வேண்டும். இந்தக் கிழக்கத்திப் பயல்கள் பாலில் தண்ணிர் கலப்பவன்கள். இவனுக்குத் தண்டனை இப்பொழுது கிட்டியிருக்கிறது.”
*கிர்காமில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்குப் பதிலாக நம்மவர்கள் பழிக்குப்பழி வாங்கத் தொடங்கிவிட்டார்கள். பிண்டிபஜாரில் ஒரு காபிரைக்கூட உயிருடன் விடமாட் டார்கள்."
உடனே ஒருத்தி வீட்டிற்குள் சென்று குப்பைத்தொட்டி யைக் கொண்டுவந்து அதிலுள்ளவற்றை வீதியிற் கவிழ்த் தாள். பாலிலும் இரத்தத்திலும் ஈமண்டிய அதே இடத்தில் முட்டைத் தொலிகள், கிழங்குத் தோல்கள், வாழைப்பழத் தோல்கள், பழைய மாமிசத் துண்டங்கள், எலும்புகள் யாவும் விழுந்தன.
ஆஹா இந்தியப் பெண்களின் உண்மையான பண்பு கள்!

அஜந்தா ዷ7
அவர்களின் அமைதி நாடும் உள்ள்ம்! அவர்களின் மென்தன்மை! அவர்களின் தாய்மை உள்ளம்!!!! சண்ட் ஹர்ஸ்ட் ரோட் பெண்களின் பேய்ச் சிரிப்பும் பிண்டிபஜார் பெண்களின் இரத்தவெறிக் கொக்கரிப்பும் கலந்த ஒரு பயங்கர ஒலி அவன் எங்கெங்கு சென்றலும், ஏதேது செய்தாலும், தூங்கும்பொழுது கூட காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்தது.
அதே பயங்கர ஒலி அஜந்தாக் குகைகளிலும் எதி ரொலித்தது. மங்கலாயிருப்பினும் துல்லியமாகத் தெரிக்த அக்த ஓவியங்களில் காட்சியளித்த ஒவ்வொரு அப்சரஸ், ராஜாகர்த்தகி, ஒவ்வொரு பெண் முகத்திலும் ராகூடிஸக் கொலைவெறி தாண்டவமாடுவதாக அவனுக்குத் தோன்றி யது. நிர்மலுக்கு ஒரு ஆழங் காணமுடியாத வெறுப் புணர்ச்சி ஏற்பட்டது. “கான் எல்லாப் பெண்களையுமே வெறுக்கிறேன்” என்று கூறிக்கொண்டான். சிறிது சிக் தித்த பின்னர், “ஆம் பெண்ணினத்தையேதான். பாரதி யைக்கூடத்தான்.” தன்னைக் காதலிக்கும், தான் காதலிக் கும் பாரதி வாழ்க்கையின் கோர உருவங்கள் நிர்மல் கண் னில் படாதிருப்பதற்காக, அவனுக்காகத் தனது செல்வப் பெருக்கால் தங்கத்தாலும் வெள்ளியாலும் மதிலெழுப்ப விரும்பிய பாரதியை, கலகமும் பலாத்காரமும் நிறைக்த சூழ் நிலையினின்று நிர்மலைக் கடத்தி"ச் சென்ற பாரதியை, தான் காதலித்த காதலனுக்காக எதுவும் செய்யத் தயாராக விருந்த பாரதியை வெறுக்கிருணு ?
காதல்! காதல்? நிர்மலுக்குச் சிரிப்பு வந்தது. காதல், வெறுப்பு, காதலும் வெறுப்பும் வெறுப்பும் காதலும்!

Page 16
28 அஜந்தர்
காமனைவரும் உடன் பிறந்தவர்கள். நாமெல்லாம் காதலர்கள். நாமெல்லோரும் நண்பர்கள், தோழர்கள்!
காம் அன்பினுல் பிணைக்கப்பட்டிருக்கிருேம். இருக்தும் நமக்குள் வெறுத்துக்கொள்கிருேம். ஒருவர் மற்றவரைக் குத்திக் கொலை செய்கிருேம். ஒருவர்மீது மற்றவர் கற்களே யும் குண்டுகளையும் வீசி எறிகின்ருேம். ஒருவர் வீட்டில் மற்ருெருவர் தீ மூட்டுகின்ருேம். ஒருவர் வீட்டுக் குழங் தையை மற்றவர் கொல்கின் ருேம். ஒருவர் மற்ருெருவர் கழுத்தை அறுக்கின் ருேம். காம் ஒருவர் மற்ருெருவரைக் காதல் புரிகின் ருேம்!
炸 制
“இதோ இந்தச் சடலங்களைப் பாருங்கள். தலை துண்டிக் கப்பட்டிருக்கிறது!’-வழிகாட்டி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான். அலைச்சலால் அவனது உடலில் வியர்வை தோன்றியுங்கடிட அவனது குரலில் யாதொரு சோர்வுங் தோன்றவில்லை. தான் கண்டது சித்திரங்களிலே யாயினும் அவற்றிலுள்ள சாக்கோலம் மென்மையும் அனிச்ச உள்ளமுங்கொண்ட பாரதியின் முகத்தை வெளுக் கச் செய்தது.
*இந்தக் கொடுங்கோலரசன்தான் இந்த அப்பாவி மக்க ளின் தலையை வெட்டச்செய்து அவர்களது உடலைக் கழுகுக்கு இரையாக்கியுள்ளான்.”
கிர்மலின் உள்ளத்தில் சம்பந்தமற்ற ஒரு பயங்கர எண் ணம் குடிகொண்டது. “யார் கண்டது? அங்த அரசன் கொடியவனுக இல்லாதிருந்திருக்கலாம். ஒருக்கால் அவ னுக்குக் கழுகுகளின் மேலிருந்த அத்பந்தப் பிரியத்தால் அவற்றிற்கு உணவளிக்க எண்ணங்கொண்டு இம்மக்களைக் கொன்றிருக்கலாம். அவன் புரிந்த அந்தப் படுrேலைகள்

regiasst 29
இந்தக் கொடிய பறவைகளுக்கு கன்மை பயக்த தல்லவா?.”
பிணங்கள்!
இருபத்தேழு சில்லிட்ட அழுகிய பிணங்கள் கல்தரை யிலே கிடந்தன.
வயல்களில் அறுவடை செய்யப்பட்டுக் குவிக்கப்பட்ட கெற் கதிர்கள்போல் கிடக்தன.
கசாப்புக் கடையில் இரத்தம் சொட்டச் சொட்ட தோலுரிக்கப்பட்டுத் தொங்கும் இருபத்தேழு ஆடுகளைப் போல.
இருபத்தேழு மனித சடலங்கள் சில்லிட்டு அழுகிப் போய் இறந்துகிடந்தன. தான் வழக்கமாய்ச் செய்தி சேக ரிக்க ஆஸ்பத்திரிக்குச் செல்வதுபோல் நிர்மல் அன்று சென்றபொழுது கலவரத்தால் அப்பொழுது மாண்டவர் களின் உடல் பிண அறை"க்குக் கொண்டு சேர்க்கப்பட் டிருப்பதாக அறிந்தான். அவர்கட்குச் சாவோடு விஷயங் கள் முடிந்துவிடவில்லை. அந்தக் கற்றரையிலே பிரேத பரிசோதனை என்ற கடைசி அவமரியாதையும் பெற்று மரண விசாரணை அதிகாரியின் தீர்ப்புக்காகவும் காத்திருக்க கேர்ந்தது. எனினும் யாரும் எளிதில் கூறக்ககூடிய ஒரே தீர்ப்புத்தான், கடறக்கூடியதாக இருந்தது. அதுதான் DJ DTD
இதற்குமுன் தனது வைத்தியக் கல்லூரி அன்பன் அழைத்துச்சென்று காட்டிய ரணப் பகுதி வார்டில்தான் ஒரு தடவை ஒரு செத்த் பிணத்தைப் பார்த்திருக்கிருன்.
ஆணுல் இங்கோ இருபத்தேழுக்குக் குறையாமல் பிணங்கள் கிடந்தன. கிழவர்கள், வாலிபர்கள், பெண்கள்

Page 17
அஜந்தா
குழந்தைகள், மெலிந்து உலர்ந்த நோஞ்சல் பேர் வழிகள், முதுகிலே குத்துக் காயம் பட்டவர்கள், வயிறு கிழிக்கப் பட்டதால் இரத்தம் வடிந்துகொண்டிருக்கும் காட்சி, தலை துண்டிக்கப்பட்ட முண்டங்கள், இத்யாதி.
இவ்விடத்தில் யார் இந்து? யார் முஸ்லிம் ? சாவின் அணைப்பிலே அனைவரும் ஒன்ருகத்தானிருந்தனர். இதில் இளைஞன் யார் ? கிழவன் யார்? ஏழை பணக்காரர் யார் யார்? கொலைகாரனின் வாள் அனைவரையும் சமமாக்கி இந்தக் குளிர்ந்த கல் தரையிலே ஒன்ருகச் சேர்த்து வைத்தது.
இந்தக் குளிர்ந்த கல்தரை ! இதுதான் அவர்களது பாகிஸ்தானும் இக்துஸ்தானும் போலும் !
இந்தப் பலனற்ற சாவு! இந்த உயிரற்ற சலனமற்ற பார்வையிழந்த கண்கள்! இந்த பயங்கரத் தனிமை !
ஆக, இதுதான் அவர்கள் நாடிய சுதந்திரம். இதுவே அவர்களது இஸ்லாம். இதுதான் வேத தர்மம் !
烈山测吐 மகாதேவ அல்லாஹோ அக்பர் 1
நிர்மல் அரசியலில் நேரடியாகச் சம்பந்தப்படாது ஒதுங்கி நிற்க முயன்றிருக்கிருன். தன் வாழ்க்கையை கடத்துவதற்காகவே நிருபன் தொழிலில் கடமை புரிந்தான். எனினும் செயல் முறையில் இறங்கும் சுபாவமுடையவ னல்ல அவன். அவனது உலகமோ கற்பனையும் உணர்ச்சி யும் நிறைந்த தனி உலகமாகும். எனினும் கலவரம் கடந்த மூன்ரும் நாளே தனது பகுதியிலுள்ள சாந்தி சேனை'யிற் சேர்ந்தான். எல்லா பொது ஸ்ாதபனங்களுக்கும் அது சாக்தி "சேனையாக விருந்தாலுஞ் சரி, அஞ்சுமான்-குதாம்-இ-வதன்

அஜந்தர் Sl
ஆக விருந்தாலுஞ் சரி எதற்கும் விளம்பரங் தேவைதானே. நிர்மலும் பிரபல தினசரிப் பத்திரிகையில் சம்பந்தப்பட் டிருந்ததால் சேனையின் நிருவாகக் குழுவில் ஒருவனுகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இரு சமூகங்களின் பிரதிகிதி களும் இருந்தாலன்றி அரசாங்க அங்கீகாரம் கிடைக்கா தாகையால் நிர்மலின் நண்பனும் அண்டை வீட்டுக்காரணு O6 அகமதும் கமிட்டியிலே சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
கலவரத்தினுல் ஏற்பட்ட மனக் கலக்கத்தையும், விரக்தியையும் இச் சேனையில் பணியாற்றுவதன் மூலம் ஒருவாறு மறக்கலாமென நிர்மல் எண்ணினன். எனவே சாந்தி சேனையின் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டுவிட்டான்: போர் முரசைக் கேட்டுப் பெருமிதங் கொள்ளும் போர் வீரனைப் போல் சாந்தி சேனையில் சேர்ந்து பணியாற்றுவதில் இன்பங் கண்டான். இதுவும் ஒரு யுத்தந்தானே. இருளுக்கும் ஒளிக்கும், அமைதிக்கும் அழிவுக்கும் இடையிலே நடக்கும் போராட்டக்தானே. மதவெறியையும், கொடிய பலாத் காரத்தையும் எதிர்த்துப் போராடும் சாந்தி சேனையில் ஒரு சிப்பாய். அவன் ஒரு பெரும் வீரனுக அதனின்று வெளிவரா விட்டாலும் ஏதோ தனது கடமையைச் செய்து, தனது வாழ்க்கை பயனற்ற வெறுமையாகப் போகவில்லை என்ற மன அமைதியாவது ஏற்படலாமல்லவா?
பலமுறை பாரதி நிர்மலிடம் * வாருங்கள் இந்தப் பாழும் இடத்தை விட்டுத் தொலைவிலே போய்விடுவோம். இந்தக் கலவரங்களெல்லாம் தீர்ந்தபின் தி ரு ம் பி விடுவோம்” என்ருள். ஆக்ரா 1 தில்லி! காஷ்மீர்! அஜந்தா ! எல்ல்ோரா ! மைசூர் 1 இலங்கை ! அவள் எங்கெங்கெல்லாம் செல்லவேண்டுமென ஒரு காலத்தில் கனவு கண்டாளோ அங்கெல்லாம் செல்லலாமென ஆச்ை மூட்டினுள். ஆணுல் நிர்மலோ இத்தகைய நெருக்கடியான

Page 18
32. அஜந்தர
வேளையில் பம்பாயை விட்டுச் செல்வது கோழைத்தனமும், கடமையினின்று தவறிய செயலுமாகும் எனக் கருதினன். மென்மை உளமும் கற்பனைத் திறனும் படைத்த அவனை யொத்தோர். இங்கே உயிருக்கு ஆபத்தான பணிகளில் ஈடுபடுவது ஆண்டவனுல் அளிக்கப்பட்ட ஆற்றல்களே அங்யாயமாக வீணுக்குவதாகும் என பாரதி அவனுடன் விவாதம் செய்தாள். ஆயினும் அவற்றை அவன் காது கொடுத்துக் கேட்பதாகவில்லை. காரியாலய நேரம் நீங்க லான மற்ற நேரத்திலே சாந்தி சேனையின் பணியிலே
ஈடுபட்டான்.
சாந்தி சேனையின் வேலை என்ன ? அமைதியைப் போதிப்பது. நிருவாகக் குழுவினர் வீடு வீடாகச் சென்று இரு வகுப்பினரையுங் கண்டு இருவரும் அமைதியாக வாழும்படி கூறுவது. இரு பக்கமும் மூட்டப்பட்டிருந்த துவேஷ வெறியை மாற்றுவது, இருவருக்கிடையேயும் அன்பையும் சகோதரத்வத்தையும் வளர்ப்பது. இவை தான் சேனையின் வேலைகள் என நிர்மல் எண்ணினுன் .
ககரத்தில், அவன் வசித்த சிவாஜி பார்க் பகுதியிற்கூட கொடிய வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன.
மாஹிமிலுள்ள முஸ்லிம்கள் சிவாஜி பார்க்கிலுள்ள இந்துக்களைத் தாக்கப் போகின்றனர்!
சிவாஜி பார்க்கில் வசிக்கும் இந்துக்கள் மாஹிமிலுள்ள முஸ்லிம்களைத் தாக்கப் போகின் ருர்கள் !
முஸ்லிம்களுக்கு விற்கும் பாலிலே இந்துப்பாற்காரர்கள் நஞ்சைக் கலந்து கொடுக்கிருர்கள் !
முஸ்லிம் காய்கறிக் கடைக்காரர்கள் இக்துக்களுக்கு விற்கும் தக்காளி முட்டைக்கோசுகளில் கஞ்சைச் செலுத்தி வைத்திருக்கிருர்கள் !

அஜந்தா
இரானி ஹோட்டல்களில் தேநீர் அருந்தாதீர்கள்.
அதில் கஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது !
வதந்திகள், பச்சைப் புழுகுகள்! பொய்கள் பொய்கள்!
நகர முழுவதையுமே வெறுப்பும் பிளவும் பொய்யும் நிறைந்த பேரலை அமுக்கிவிடும்போலிருந்தது! கிர்மலும் அகமதும் இத்தகைய கொடு வெள்ளத்தைத் தடை செய்வதே சாந்தி சேனையின் முதல் வேலையாக இருக்க வேண்டுமென எண்ணினர். ஆணுல் தங்கள் தவற்றைப் பின்னுலுணர்ந்தார்கள்.
சாந்தி சேனையின் வேலை என்ன? முதலாவது-சந்தா சேர்த்தல் 1 அகமதுடன் நிர்மலும் தங்கட்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலுள்ள இடங்கட்கு வசூலிக்கச் சென்ருன். அங்கு வசித்த ஒரு சில முஸ்லிம்கள் கன்கொடை கொடுக்கவோ அன்றி வீட்டிற்கு ஒரு ரூபாயென கிர்ணயம் செய்யப்பட் டிருந்த குறைந்தளவு மாதக் கட்டணத்தையேனும் தரவோ மறுத்துவிட்டனர்.
t *சாந்தி சேனையென்ற இந்தப் போர்வையில் இந்துக்கள் என்ன திட்டமிட்டிருக்கிருர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களைப் பாதுகாக்க நீங்கள் தேவையில்லை. பட்டாணியக் காவற்காரர்களை காங்கள் நியமித்திருக்கி G(Sub-*
சில இந்துக்கள் “நெருக்கடி நேரும்பொழுது உங்கள் சாந்தி சேனையினுல் என்ன சாதிக்க முடியும் ? காங்கள் எங்களுக்குச் சீக்கியர்களைக் காவல் வைத்திருக்கிருேம்” என்ருர்கள் இரகசியமாக. * சீக்கியர்கட்கு கிர்பான் வைத்துக்கொள்ள சட்டத்திலேயே அனுமதியுண்டு தெரியுமா ?” என்ருர்கள்.

Page 19
4 அஜந்தர
ஒருவகையாக பணமும் சேகரிக்கப்பட்டது. மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் அங்தப் பகுதியை, ஊரடங்குச் சட்டம் அமுல் கடக்காத நேரத்தில் காவல் செய்ய இருபது காவற்காரர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடமை யாற்ற வேண்டிய பகுதிகளை நிர்ணயிக்கும் விஷயமாக கிருவாகக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.
* ஒவ்வொரு தெருச் சந்தியிலும் ஒரு காவற்காரரை நியமியுங்கள்.”
* பகுதி முழுதையுமே வளைத்துக் காவல் போடுங்கள்." * அது சரி அல்ல. அப்படிச் செய்வது பெரிய முட்டாள்தனம். தாக்குதல் வருவதாக இருந்தால் மாஹிம், வார்லி அல்லது கடற்கரைப் பகுதி-இந்த மூன்றே மூன்று பகுதிகளிலிருந்துதான் வரமுடியும். ஆகவே நாம் இந்த மூன்று பகுதிகளில்தான் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். தாக்குதல் கேர்ந்தால்.”
* தாக்குதல் ? யாரால் தாக்குதல்,?” * முஸ்லிம்களால்தான். வேறு யாரால்? இந்த மூன்று மார்க்கமாகத்தான் அவர்களால் தாக்க முடியும்."
* இந்தக் காவற்காரர்கள் என்ன செய்யப் போகிருர் seir 2'
* இந்தப் பகுதிகளில் யாராவது முஸ்லிம் குண்டர்கள் சுற்றித் திரிகிருர்களா எனக் கவனித்துக்கொள்ள வேண்டும். அப்படிக் கண்டவுடனே அவர்கள் உடனே சீட்டி அடிக்க வேண்டும். உடனே மக்கள் அந்த இடத்திற்குத் திரண்டு வரலாம்.”
* முஸ்லிம் குண்டர்களை மட்டுங்தானு? இந்துக் குண்டர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தில்லையா?” கிர்மல் இந்தக் கேள்வியைக் கேட்டான்.

அஜந்தா 35
அதற்கு கிருவாகக் குழுவிலுள்ள ஒருவர் கூறிய பதிலைக் கேட்டதும் நிர்மல் தனது நண்பன் அகமதின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே வெட்கப்பட்டான். “ஒளிவு மறைவு எதற்கு? நிர்மல்குமார் அவர்களே, கன்ருகக் கேட்டுக் கொள்ளுங்கள். குண்டனென்ருல் முஸ்லிம் குண்டன் என்றுதான் பொருள்.”
கூட்டம் முடிந்ததும், “ இத்தகைய பேர்வழிகளுடன் உன்னுல் எப்படி வேலை செய்ய முடியுமோ தெரியவில்லை; எனக்கென்னவோ இவர்களெல்லாம் இந்துமகாசபைக் காரர்கள்போல்தான் தோன்றுகிறது” என்று நிர்மல் அகமதை கோக்கிக் கூறினுன்.
அதற்கு அகமது “இருபக்கமும் இத்தகைய வெறி யர்கள் இருக்கத்தான் செய்கிருர்கள். மாஹிமிலுள்ள முஸ்லிம்களிடையே எத்தகைய வதந்திகள் பரப்பப்படு கிறது என்பது உனக்குத் தெரியாது. அவர்களோ, கமது சாந்திசேனை சிவாஜி பார்க் இந்துக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆயுதப் படையென்றும், மாஹிமிலுள்ள முஸ்லீம்களை எந்த நிமிஷத்திலும் எதிர் பாராத முறையிலே அது இரவிலே தாக்கக் கிளம்பலாமெனவும் கருதுகிருர்கள்” என்ருன்.
இவ்விதமாக சாந்தி சேனையின் வேலை நடந்து கொண் டிருந்தது.
நன்கொடைகள் !
தொண்டர்கள் !
காவலர்கள் !
தனி உடைகள் !
ஊது குழல்கள் !

Page 20
sé அஜந்தா
கட்டங்கள் !
தீர்மானங்கள் !
'போலிஸ் கமிஷனருக்கு விண்ணப்பங்கள் !
ஆணுல் சாந்தி அமைதி குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டியது பற்றி ஒன்றுமில்லையா ? அதைப்பற்றி ஒரு முயற்சியுமில்லை. யாதொரு ஏற்பாடுமில்லை. எனின் சாந்தி சேனைதான் எதற்கோ ? அதைப்பற்றிய தடபுடல்கள் என்னத்திற்கு ?
*முஸ்லிம் குண்டர்கள் !”
**இந்து குண்டர்கள் !”
*உங்கள் வீடுகளில் கற்களையும் செங்கல்களையும் தயாராகச் சேமித்து வையுங்கள் *
*எனது வீட்டிலே பத்துத் தடிகள் தயாராக வைத் திருக்கிறேன்."
*எனது அண்டை வீட்டுக் காரரிடம் கைத்துப்பாக்கி இருக்கிறது."
‘முஸ்லிம் பசங்கள் வரட்டும் கொன்று தீர்த்து விடு കസ്രേb !??
*இந்து காபிர்கள் வரட்டும், சதையைத் துண்டு துண் டாக்கி விடுகிருேம். ??
அமைதி, கல்ல அமைதி !
家 *இக்குகையிலுள்ள ஒவ்வொரு கல்லிலும் சாந்தமும்
அமைதியும் பொலிகிறது. காம் தினமும் இங்கு வந்து விட்டால், காம் பம்பாயில் விட்டு விட்டு வந்த பயங்கர

அஜந்தா ❖፡ ቃ7
நிகழ்ச்சிகளே மறக்க முடியுமென நான் நினைக்கிறேன் ?? என்று பாரதி கடறினுள்.
மற்ருெரு குகைக்கு அவர்களை அழைத்துக் கொண்டே *நீங்கள் எல்லாக் குகைகளையும் பார்த்து விட்டீர்கள். இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. ஆணுல் இதிலே சிரஞ்சீவிச் சிற்பங்களையோ ஒவியங்களையோ காண மாட்டீர்கள். தரை, விதானம், தூண்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்படாது கிடக்கிறது. ஏதோ காரணத்தால் அரைகுறையாகக் கிடக்கிறது.’ என்ருன் வழிகாட்டி,
அரை குற்ை வேலை? ஏன், நிர்மலும் பாம்பாயில் தனது வேலையை அரைகுறையாக வைத்துவிட்டு வர வில்லையா ? ஏன், பாதியளவுகடிட பூர்த்திசெய்யவில்லை யென்றே கூறலாம் ! போராட்டம் சரியாகத் தொடங்கக்கூடவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டான்.
நிருவாகக் குழு கடைசியாக நடத்திய கூட்டம் ! படிப்பறியா பாமர காவற்காரர்களை நியமிப்பதற்குப் பதிலாக இந்திய தேசியப்படை (ஐ. என். ஏ.) யின் பழைய வீரர்களை நியமிப்பதுதான் முறையென ஆரம்பமுதலே நிர்மல் கடறவந்தான். போரிலும் கட்டுப்பாட்டிலும் புடம் போட்டு மிளிர்ந்தவர்களாகிய அவ்வீரர்கள் வகுப்புப் பூசலற் றவர்களாக விளங்குவார்கள் என்பது அவன் துணிவு. தவிர, அவர்கட்கு உதவியும் ஆதரவும் தேவையாகவும் இருந்தது. அக்தக் கூட்டத்திலே பழைய காவலர்கள் நீக்கப்பட்டு அவர்கட்குப் பதில் ஐ. என். ஏ. வீரர்கள் நியமிக்கப்பட விருக்கிருர்களென காரியதரிசி கடறினதும் கிர்மல் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். கடைசியில் ஒருவகையாக சாந்தி சேனே சரியான வழியில் செல்கிறதென எண்ணினுன். ஆணுல் அடுத்த கணமே அவனது எண்ணம் தவிடு பொடி யானது.
9,

Page 21
38 அஜந்தா
ஒரு மராட்டிய வக்கீல் "ஐ. என். ஏயில் ஒரு முஸ்லிம் இருப்பது உண்மைதானு ?" எனக் கேள்வி ஒன்றைப் போட்டார்.
காரியதரிசி ஏதோ குற்றம் செய்துவிட்டவர்போல *ஆமாம். ஆணுல் ஒரே ஒரு பேர்வழிதான்." என்று இழுத்தார்.
கொழுத்த குஜராத்தி சேட் தொண்டையைக் கனைத்துக் கொண்டே ‘எங்கள் பக்கத்தில் இது சம்பந்தமாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது” என்ருர்.
மெலிந்த மார்வாடி எலும்பர், “இதைச் சகிக்க முடியாது. சகிக்கவே முடியாது” என்று கடவினர்.
அக்தக் கிழட்டு வக்கீல் பெரும் முழக்கத்துடன் *காவற்காரணுக ஒரு முஸ்லிம் கியமிக்கப்பட்டதன் காரணம் மென்ன? இதற்குத் தகுந்த காரணம் காரியதரிசி காட்டியாக வேண்டும்” என்று கேட்டார்.
குஜராத்தி சேட் தனது முடிவையும் கூறிவிட்டார்; “இப்படிப் போய்க்கொண்டிருந்தால் காங்கள் ஒரு பைசாக் கட்ட கொடுக்க மாட்டோம்.”
குட்டையான ஒரு குண்டு டாக்டர், “எனது பகுதியி லுள்ளவர்களின் அபிப்பிராயமும் அதுதான் ” என்று உறுதிப்படுத்திஞர்.
அந்த வரட்டு மார்வாடி “இது நமது பெண்மணிகளின் மானத்தைப் பாதிக்கும் விஷயம்’ எனக் கூச்சலிட்டார்.
கிழட்டு வக்கீலும் விடுவதாக வில்லை. ‘இதற்குத் தகுந்த விளக்கங் கூறியாக வேண்டும்."
சஃலவர் டிேஜையைத் தட்டிக்கொண்டே “ அமைதி ய்ாக விருங்கள்.” என்க் கேட்டுக்கொண்டார்.

Jabsint 39
* இந்தத் தனி முஸ்லிமை நியமித்திருப்பதால் எதுவும் ஆபத்து கேர்ந்துவிடுமென நான் எண்ணவில்லை. இந்திய தேசியப் படையில் எத்தகைய வகுப்பு வேற்றுமையும் கிடையாது. அதற்குமேல் கமிட்டியும் விரும்பாவிட்டால் ஏதாவது ஒரு சாக்கு கறி அக்தப் பேர்வழியை விலக்கி விட்டால் போகிறது" என்று கூறி, காரியதரிசி நிலைமை
யைச் சமாளித்தார்.
*அதுதான் 守f!°”
* LC360T'
"அந்த ஆசாமியை ஏன் நியமித்தீர்கள் என்பதற்குத் தகுந்த பதில் கடறித்தானுக வேண்டும்.”
*சிறிதும் தாமதிக்கக்கூடாது!”
அகமது மட்டும் மெளனமாகப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.
அவனது புன்னகையைக் கண்டதும், நிர்மலினுல் அடக்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஆத்திரம் ஆத்திர மாக வந்தது.
*முடியாது! முடியவே முடியாது!’ என்று உரக்கக் கூறிஞன். அவன் போட்ட கூச்சலினுல், நிகழ்ச்சிக் குறிப்பில் "அமர்த்தப்பட்டிருக்கும் ஐ. என். ஏ. ஆட்களில் ா வரும் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது' என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.” என்று எழுதிக்கொண்டிருக்த காரியதரிசி நாற்காலியில் திடுமெனச் சாய்ந்து பேணுவைக் கீழே வைத்தார். தீர்மானம் எழுதப்பட்டிருந்த இடத்தில் பெருமளவு மைக் கறை பட்டிருக்தது.
"முடியாது; முடியவே முடியாது" இவ்வாறு புத்துத் தடவை இடைவிடாது கூறுவுதன் மூலம் மற்ற ஒன்பது

Page 22
40 அஜந்தா
பேர்களின் வாக்குகளை கிராகரிக்க எண்ணியதுபோல் *இந்தத் தீர்மானத்தை நான் ஆதரிக்க முடியாது. கண்டிப் பாய் ஆதரிக்கவே முடியாது' எனக் கடறினுன்.
திடீரென நிர்மல் கூறிய அம்மொழிகளைக் கேட்டதும் மற்ற அங்கத்தினர்கள் கண நேரம் சமைந்து போனுர்கள். அந்த மெளனத்தில் அவனது சொற்கள் அர்த்தமில்லா வெற்றுரைகளாகத் தோன்றின. “இத்தகைய தீர்மானம் பெரும் வெட்கக் கேடாகும். ஒற்றுமை, அமைதி என்ற லட்சியத்திற்கே துரோகம் செய்வதாகும். காமே வகுப்பு வாதிகளாக மாறிக்கொண்டே வகுப்புவாதத்தை ஒழிப்ப தாவது? இத் திர்மானம் மட்டும் நிறைவேறினுல் இவ்விஷய மனத்தையும் பொதுமக்களுக்கும், செய்திதாள்களுக்கும் தெரிவிப்பதை எனது கடமையாகக் கொள்வேன்" என அவன் மொழிந்தான்.
அகமது மீண்டும் புன்னகை செய்தான். *சபாஷ் தம்பி ஆணுல் உனது வீரமொழிகளெல்லாம் அவர்கள் காதில் ஏறப்போவதில்லை” என்று அவன் கூறுவது போலிருந்தது.
குச்சிக்கால் மார்வாடி “இக்துக்களாகிய நாம் பெரும் ஆபத்திலிருக்கிருேம் என்பதை பூரீமான் நிர்மல் அறிய மாட்டார் போலிருக்கிறது."என்ருர்,
தடித்த குஜராத்தி சேட் “விஷயத்தை மூடி வைப் பானேன்? இந்த முஸ்லிமைக் காவலாளியாக நியமித்தால் காங்கள் மேற்கொடுை கன்கொடை தரமாட்டோம்” என்று கர்ஜித்தார்.
துட்டிைக் குண்டு டாக்டர் “நிரல்கன் அனேகளும் 8 ஜிஜர் செய்துவிட்டு இங்துகொ சபைாரின் சம்ரக்ஷணி ச்ேனையில் சேர்ந்துவிடுவோம்” என்று பயமுறுத்திஞர்.

அஜந்தா 41
ஆஞல் அந்தக் கிழ திந்திரசாலிலான விக்கீல், தன் கையினுல் அமரும்படி சைகை செய்து, மெனமனமாகவிருக் கும்படி கடறி, “இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் நிர்மல்; இதுவோ இந்துக்கள் பெருவாரியாக வுள்ள பகுதி. இதில் அந்த அப்பாவி முஸ்லிம் ரோந்து சுற்றும் பொழுது ஏதாவது விபரீதம் ஏற்பட்டுவிட்டால் அவனது பத்திரத்திற்கு யார் பதில் சொல்வது?” என்று மடக்கினர். கூறிய பின் குஜராத்தி சேட்டையும் டாக்டரையும் வெற்றிப் புன்னகையுடன், “இந்தச் சின்னப் பயலின் வாதத்தை எனது சட்ட ஞானத்தால் தகர்த்துவிட்டேன் பார்த்தீர் களா?” என்று கேட்பதுபோல் பார்த்தார்:
அகமது நிர்மலை நோக்கிஞன். “ஒன்றும் பயன்படாது என்று நான் கடறினேனே பார்த்தாயா?’ என்று அவன்
கூறுவதுபோலிருந்தது அந்தப் பார்வை.
நிர்மல் குமுறிக்கொண்டிருக்கையிலே அங் த த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்னும் ஏதேதோ கடறி பிருக்கலாம்; உணர்ச்சிகரமாகப் பேசியிருக்கலாம். தர்க்கம், நியாயம், தேசபக்தி, சமூகப்பற்று ஆகியவற்றை யெல் லாங் காட்டி அவன் விவாதித்திருக்கலாம். ஆணுல் அவை யெல்லாம் வெறியும், அறியாமையும், வெறுப்பும் நிறைந்த வலிமையுள்ள சுவரிலே தன் தலையை முட்டிக்கொள் வதாகும் என எண்ணினுன், அவனைச் சுற்றியும் குரல்கள் அலை போ ற் கிளம்பிக்கொண்டிருக்தன. தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நி ைற வே றி ன. அங்கத்தினர்களும் நிருவாகிகளும் வழக்கமான காரசார மொழிகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிர்மல் ஒன்றும் கடறவில்லை! கிர்மல் ஒன்றையும் காது கொடுத்துக் கேட்கவில்லை

Page 23
42 அஜந்தா அவனது உள்ளத்தில் பயங்கரக் காட்சிகள் குவிக்தன! கல்கத்தா
பம்பாய்!
அகமதாபாத்! நவகாளி!
பீகார்!
பஞ்சாப் ராவல்பிண்டி!
லாகடர்!
முஸ்லிம்கள் கொலை! இந்துக்கள் கொலை! இரத்த ஊற்றுக்கள். இரத்த ஆறுகள். குருதிக்கடல் வெறுப்பும் பலாத்காரமும், பலாத்காரமும் வெறுப்பும்! மானம் பறிபோன பெண்கள்! அனுதையான குழந்தைகள்! தெருவிலும் குப்பை எரிக்கப்படுமிடத்திலும் மலே மலே
யாகக் குவிந்து கிடக்கும் பிணங்கள். மனித உடல்களைத்
தின்று கொழுக்கும் கழுகுக் கூட்டங்கள்!
தீக்களின் ஆயிரம் சுடர்கள் மேல் நோக்கி எழுங் து
வானைச் சிவப்பாக்கியது. இரத்தச் செம்மை!
வெளிநாட்டாரின் ஏளனச் சிரிப்புக்கு மத்தியிலே நாடு
முழுவதுமே இரத்தத்தால் தோய்ந்து, நெருப்பால் வெந்து இரு கூறுகளாகப் பிரிந்து கொண்டிருந்தது.

அஜந்தா 4@
அவனது மனச்சாட்சியை ஒரு யந்திரச் சம்மட்டி இடையிடையே அடித்துக் கொறுக்குவதுபோல் "சிவாஜி பார்க் சாக்தி சேனையினர் ஐ. என். ஏ. படையைச் சேர்ந்த ஒரு முஸ்லிமைச் சகித்துக்கொள்ள முடியாததுதான் இவற் றிற்குக் காரணம்” என வலியுறுத்திக் கொண்டிருக்தது.
நேதாஜி போஸின்-அவரது இந்திய தேசியப் படை யின்-வீரச் செயல்களும் பெரும் சாதனைகளும் வீண்தான் என அவனுக்குத் திடீரெனத் தோன்றியது. சுதந்தரப் போராட்டமே பயனற்றுப் போனதுபோல் அவனுக்குப் பட்டது. தேசபக்தர்களது முயற்சியும், அவர்களின் தியாகமும் முற்றிலும் வீணுகிவிட்டன. எல்லா தேசீய கோஷங்களும், தேசிய இயக்கங்களும், தேசியத் தலைவர் களும்-எல்லோரும் எல்லாச் செயலும்-வீணுகி விட்டதாகத் தோன்றியது. சிவாஜி பார்க் சாந்திசேனையும் வீண்; அதில் தான் பணியாற்றுவதும் வீண். பம்பாயில்தான் வசிப்பதிலும் பயனில்லை. தான் உயிர் வாழ்வதிற் கூடப் பயனில்லை. சுதந்தரம், ஐக்யம் என்ற பெரு நோக்கங்களைவிட, இவன் இந்து, அவன் முஸ்லிம் என்ற வகுப்புக் குறிப்புகள் முக்யத் வம் பெற்றுவிட்டன!
அப்பொழுது சாந்திசேனையிலுள்ள அந்த நிருவாகக் குழுவினர் அனைவரும் அறிவில்லா வெறிபிடித்த பிசாசுக் கோலங்கொண்டு, கெருப்புக் கக்கும் விழிகளுடன் தன்னை பும் தன் கொள்கைகளையும் அழிக்கப் பயங்கரமாக முன் னுேக்கி வருவதாக அவனுக்குத் தோன்றியது. இந்தப் பத்துப் பேர் மட்டுமல்லாது மற்றும் பல இலட்சக்கணக் கான பைசாசங்கள் நாற்புறமும் தன்னைச் சூழ்ந்துகொள்வ தாகத் தோன்றியது. அப் பேய்களில் சில தாடி வைத் திருந்தன. சில உச்சிக்குடுமி வைத்திருந்தன. முஸ்லிம் கள் இக்துக்கள், வங்காளிகள், பீகாரிகள், பஞ்சாபிகள்,

Page 24
44 அஜந்தா
மகாராஷ்டிரர்கள், பட்டாணியர், கிழக்கத்தியர், குஜராத்தி
கள், சிந்திகள் இவர்களனைவரும் தன் இரத்தத்திற்கு
வேட்கை கொண்டு அலைவதாக அவனுக்குத் தோன்றியது.
*உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒட்டமெடு!”
கிர்மலின் துடிக்கும் இதயம் ஆபத்தை முன்னறிவித் 岂g列·
*ஒடு! உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒடு!”
நிர்மல் அந்தக் கட்ட்டம் முடிவதற்குள் ஓடி வந்ததோ டல்லாமல் மறுநாள் பம்பாயைவிட்டே பாரதியுடன் ஓடி வந்துவிட்டான்.
*காம் எங்கு போகலாம்?” என பாரதி அவனைக் கேட்
டாள்.
*கலகங்கள், இரத்தக் களரிகள், செய்திப் பத்திரிகை கள், ரேடியோக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கத்திகள், குத்துவாள்கள், சீசாக் குண்டுகள், எரியும் வீடுகள், வெறி பிடித்த கூட்டங்கள், குண்டர்கள், போக்கிரிகள், இவர்க ளில்லாத இடத்திற்கு, வெகுதூரமுள்ள இடமாய், உலகத்தி னின்றே தொலைவான இடமாய், வாழ்க்கைக்குத் தூரமான இடமாகப் பார்த்துப் போவோம்” என்ருன்.
சிறிது ஆழ்ந்து யோசனை செய்தபின்னர் பாரதி தாம்
போகவேண்டிய இடத்தைக் குறித்து அறிவித்தாள்.
*அஜந்தா!"
அகமது ஸ்டேஷன் வரை வந்து அவர்களிருவரையும் வழியனுப்பி வைத்தான். கார்டு விசில் ஊதியதும் அவன் நிர்மலிடம் “நீ சிறிது பெயர்ந்து கொடுப்பது நல்லது. கொஞ்ச நாட்களுக்கு ஓய்வெடு. ஆயினும் அடுத்த

அஜந்தா 45
ஞாயிற்றுக்கிழமை சாந்திசேனையின் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது என்பதை மறந்துவிடாதே. நான் அங்கத் தினர்கள் முன்னுல் சில முக்கிய யோசனைகளைச் சமர்ப்பிக்க எண்ணியிருக்கிறேன். இந்தக் கிழடுதட்டிய கிருவாகக் கழுவினரிடம் ஆதரவு கிட்டாவிட்டாலும் பொது அங்கத் தினர்களிடம் ஆதரவு கிட்டுமென்பதில் எனக்கு கம்பிக்கை யிருக்கிறது” என்று கடறிஞன்.
ரயில் வண்டி நகரத் தொடங்கியதும் நிர்மல், "சாக்தி சேனைக்கும் எனக்கும் இனிமேல் எவ்விதத் தொடர்பும் இருக் காது’ என்று கூறினுன்.
ஆனல் அகமதோ ரயிலுடன் கூட ஒடிக்கொண்டே வந்து, “இல்லை நிர்மல். இந்த வேலையை நாம் ஆரைகுறை யாக நிறுத்திவிடக்ககூடாது" என்று கூறினுன்.
ak 家
அரைகுறையான வேலை! தனக்கு அதைப் பற்றி ஏன் கவலை? தன்னுல் முடிங் தளவு பணிசெய்தாகிவிட்டது. அதற்குமேல் என்னதான் செய்வது? ஒய்வின்றி உழைத்திருக்கும் இந்த அஜந்தா சிற்பிகளும் ஒவியர்களுங் கட்டத்தான் தங்கள் பணியை அரைகுறையாக நிறுத்தியிருக்கின்றனர்! எண்ணுாறு ஆண்டுகள் ஓய்வொழிச்சலின்றி அவர்கள் உழைத்தும் இந்தக் கடைசிக் குகையை மட்டும் முடிக்காமல் விட்டுவிட்ட தன் மர்மங்தான் என்ன?”
எவர் உள்ளத்திலும் எழும் ஐயம் இதுதான். “பாரதி நீ என்ன நினைக்கிருய்...?" ஆணுல் பாரதியோ அங்கு இல்லை. வழிகாட்டியும்
அங்கு இல்லை! மேலே முற்றத்தில் முட்டி, குகையில் எதி ரொலித்து, அக்கேள்வி அவனிடமே திரும்பி வந்தது,

Page 25
46 அஜந்தா
சிந்தனையில் மூழ்கிவிட் தாலோ என்னவோ அரை குறையாக முடிக்கப்பட்டிருந்த இந்த இருட் குகையில் எங்கோ ஒரு மூலையில் அவன் வழி தெரியாது தங்கிவிட் டான் போலும். பாரதியும் வழிகாட்டியும் இவன் வெளியில் சென்றுவிட்டதாக எண்ணி வெளியே சாலையை கோக்கிச் சென்று விட்டார்கள் போலும்.
வெளியே மாலைக் கதிரவன் குன்றின் பின்னுல் சாய்ந்து அக் குன்றினை இருளாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். இக்தக் குகைக்குள்ளேயே அவன் பல மணி நேரங்கள் அலைந்திருக்க வேண்டும் என அவனுக்கு அப்பொழுதுதான் தோன்றியது. குகையின் கும்மிருட்டு பெருகி மூச்சுத் திணறும் உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.
கடைசித் தடவையாக குகையை அவன் ஒரு கண்ணுேட்டம் செலுத்திய பொழுது, அவனை கோக்கி ஒரு தீவட்டி வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அக் குகையின் ஒரே வாயில் பக்கமிருந்து வராது குகையின் உள்ளேயிருந்து வருவது அவனுக்கு வியப்பை அளித்தது, ஒருக்கால் வழிகாட்டி தன்னைத் தேடிக்கொண்டு குகையின் மறுபக்கம் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்புகிருணுே என்னும் ஐயம் தோன்றியது.
தீச்சுளுர்து பிடித்து வருவது ஒரு மஞ்சளுடை தரித்த பெளத்த பிக்கு என்பதை உணர்ந்ததும் அவனது வியப்பு அதிகரித்தது. அவர் ஒருவரையும் அங்கு தேடுவதாகத் தெரியவில்லை. தேடவேண்டியதெல்லாம் பல்லாயிர ஆண்டு கட்கு முன்னரே கண்டு கொண்டதாக அவர் முகம் காட்டியது. யாதொரு பதட்டமுமி ன்றி மெல்ல அடிவைத்து பூர்த்தியாகாத் தூணை கோக்கிச் செல்கின்ற அவர் தோற்றத் தில் ஒரு கம்பீரம் இருந்தது. கல்லிலுள்ள துளையில் சுளுங்தை நிறுத்தியபின் தனது அங்கியின் மடிப்பிலிருந்து

அஜந்தா 47
உளியையும் சுத்தியையும் எடுத்தார். வேற்று மனிதனிருப் பதையே சிறிதும் உணராது செதுக்கத் தொடங்கினுர்,
அந்த பிக்குவை நோக்கி நிர்மல் ஒரெட்டு எடுத்து வைக்கப்போகும் பொழுது, மேலும் பல தலை மழித்த மஞ்சளுடையணிந்த பிக்குகsளின் கட்டம் குகையின் பின் புறத்தினின்று மாயமாய்த் தோன்றி கற்பாறையினின்று இறங்கிக் கொண்டிருந்தது.
ஒருவர்கடட நிர்மலைத் திரும்பிப் பார்க்கவில்லை. அனே வரும் தங்கள் தங்கள் கருவிகளை எடுத்துச் சுவரிலோ, தூணிலோ செதுக்குவதும், தீட்டுவதும், அமைப்பதுமாகிய பணிகளில் ஈடுபட்டார்கள். சிலர் ஓவியங்களைத் தீட்டுவதற் காக சுவரின் மீது மண்ணைத் தடவி கிரவிக்கொண்டிருங் தாாகள.
அந்தப் பெரிய இருட்குகையில் கல்லில் உளிபடுவதால் தோன்றிய ஒலி எங்கும் கேட்டது.
இந்த விசித்திரக் காட்சியைக் கண் கொட்டாது சில வினுடிகள் நிர்மல் பார்த்துக்கொண்டேயிருந்தான் அதற்கு மேல் அவனுல் தாங்கமுடியாது போகவே முதல் முதல் தோன்றிய பிக்குவை நோக்கிச் சென்ருன்.
“தங்கள் வேலை நேரத்தில் குறுக்கிடுவதற்காக மன்னி யுங்கள். இப்படி எல்லோரும் வேலையில் இறங்கியிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது!??
?3ی “நான் இக்குகை எப்பொழுதுமே பூர்த்தியாகாது நிலைத் திருக்கும்ென எண்ணியிருந்தேன்.?
“ஏன்? உலகமே இன்னும் பூர்த்தியாகாமல்தானிருக் கிறது. மனிதனே இன்னும் பூரண நிலையை அடைய வில்லை. அவன் கண்டிப்பாய் பூரணமடைய வேண்டும்."

Page 26
48 அஜந்தா
இக்தத் தத்துவார்த்தப் பதிலே நிர்மல் புரிக் து கொள்ள முடியவில்லை. எனவே இந்த வேலையில் எவ்வளவு காலமாக இறங்கியுள்ளீர்கள்?’ எனக் கேட்டான்.
*தொள்ளாயிரம் ஆண்டுகள்.” “தொள்ளாயிரம் ஆண்டுகளா! அப்படியென்ருல் உங் கள் வயது..?
“எனக்கு முன்னுல் எனது தங்தையும் அதற்கு முன்னுல் அவரது தங்தையுமாக...வழி வழியாக.கர்மச் சக்ரத்தைப்போல, வேலையாகிய உருளையும் உருண்டோடிக் கொண்டேயிருக்க வேண்டும்.”
*தங்கள் திருப்பெயர் யாதோ? பேச்சைச் சிறிது தனிப்பட்ட முறையில் திருப்ப முயன்ருன்.
*எனது பெயரா? ஒன்றுமில்லை. நாங்களனைவரும் பெயரற்றவர்கள்.”
இந்தக் குகைகளிலே எந்த இடத்திலுமே கலைஞனெ வனும் தன் பெயரைப் பொறித்திருக்கவில்லை யென்பது நிர்மல் மனதிலே திடீரெனப்பட்டது. கலைஞர்கள் இங்ங்ணம் சிரஞ்சீவித் தன்மையை உதாசீனம் செய்யக் கடிடியவர் களாக இருப்பார்களா?
*அப்படிபென்ருல் நீங்களெல்லாம் ஏன் இப்படிச் சிரமப்பட்டு வேலை செய்கிறீர்கள்?
*ஒருவன் எதையாவது பயன் கருதி வேலை செய் வதில்லை. மனிதன் தனது கர்மாவைப் பூர்த்தி செய்ய, பணி புரிதல் வேண்டும்.”
“இந்த வேலையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு கால மாகும்?
*யார் கண்டார்கள்!"

அஜந்தா 49
*இந்தக் குகை."
*.பூர்த்தி செய்ய இருநூறு ஆண்டுகளுக்குமேல் பிடிக்கும். அப்புறம் மற்ருெரு குகை தொடங்கவேண்டும். அதற்குப்பின் மற்ருென்று.”
*அப்படியென்ருல் அஜந்தா எப்பொழுதுமே பூர்த்தி யடையாதா?”
*ஆம்-மனிதன் பூர்ணத்வமடையும் வரை!”
நிர்ம லி ன் வியப்புணர்ச்சியை வெறுப்புணர்ச்சி வென்றது. சிறிதும் தயக்கமின்றிக் கிண்டலாக, “உங்களை யொத்த ஆயிரக்கணக்கான வர்கள் இந்த வேலையில் ஏன் தங்கள் ஆற்றலையும் கேரத்தையும் வீணுக்குகின்றீர்கள்? இத்தக் குன்றில் குடைக்தெடுத்த இக்குகைகள், இவ்வண்ண ஓவியங்கள், இந்தச் சிற்பங்கள் அனைத்தும் எதற்கு ? எதற்காக?” அவனது குரலில் கிண்டல் மறைந்து ஆத்திர மும் கோபமும் பொத்துக்கொண்டு கிளம்பியது. “இங்ங்னம் நீங்கள் கல்லைச் செதுக்கிக் காலத்தை வீணுக்காது மனுதனை மனிதனுக்கும் பணியிலே ஈடுபட்டிருந்தீர்களானுல், இன்றைக்கு நமது கா ட் டி லே இலட்சக்கணக்கான மக்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் பணியிலே இறங்கி யிருக்கமாட்டார்கள். இந்தக் குகைகளை யெல்லாம் எங்களை ஏமாற்றுவதற்காகவே அமைத்திருக்கின்றீர்கள். எங்கள் உள்ளத்தில் அழகுணர்ச்சியைக் கிளப்பி எங்களைத் தளையில் பிணைத்து விட்டீர்கள். வாழ்க்கை, உண்மை என்ற கேர் பாதையிலிருந்து எங்கள் கவனத்தை இக் குகைச் சொற் கத்திற்குச் செல்லும் தப்பு வழியிலே திருப்பியிருக்கிறீர்கள்!"
அத்துறவியின் முகத்திலே யாதொரு கலவரமுக் தோன்றவில்லே. இத்தகைய கொடூர மொழிகள் கட்ட அவரைப் பாதிப்பதாகத் தெரியவில்லை, அவரது முகத்திலே

Page 27
60 அஜந்தா சாந்தப் புன்னகை தவழ்ந்தது. அன்பும் இரக்கமும் பக்குவமடைந்த பேரறிவும் பிரதிபலித்தது. தனது வேலையி லிருந்து கண்ணை அகற்ருது அமைதியுடன் மெதுவாகக் கூறினுர்,
* இல்லை, அன்பனே!”
இம் மனிதனின் சாங்தப் புன்னகையும் அமைதியும் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. * அப்படியென்ருல் அஜந்தாவின் பொருள்தான் என்ன ? அஜந்தாவின் தத்துவார்த்தம் என்ன ?”
* கேளுங்கள் ! சிந்தியுங்கள்!"
இதைக் கடறிக்கொண்டே துறவி மீண்டும் தனது வேலையைத் தொடங்கினுர், கல்லின்மேல் உளிகள் படுவ தால் ஏற்படும் ஒலியைத் தவிர்த்து அம் மண்டபத்திலே பரிபூரண அமைதி நிலவியது.
அஜந்தாவின் தத்துவம் பற்றி இந்தத் துறவி ஒரு சொற்பொழிவே ஆற்றிவிடுவார் என்று எண்ணி எதிர் பார்த்திருக்தான் நிர்மல். ஆணுல் அவர் வாயிலிருந்து மேற் கொண்டு ஒரு வார்த்தை கடிடக் கிளம்பவில்லை. அவரது உளியின் “கிளிக், கிளிக்” ஓசையைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. காற்றிலே இலைகள் உதிர்ந்து விழுவது போல் சிறுசிறு சிதல்களாகச் சிறு கற்கள் சிதறி விழுந்தன.
* அஜந்தாவின் பொருள் பற்றி-ஒன்றும்.”
திடீரென அவனது இருண்ட உள்ளத்தில் பொரு ளுணர்ந்தது போன்ற ஒரு மின்னல் ஒளி பாய்ந்தது. தன்னக் கேட்டுக்கொண்டிருக்கும்படியாக இத் துறவி கடறிய தத்துவம் இதுதான். போலும்.

அஜந்தா 51
கிர்மலின் முகம் அவன் புரிந்துகொண்டிருப்பதை உணர்த்திற்று. இதையறிந்த அத் துறவியும் அமைதியுடன் புன்னகை புரிந்து தனது வேலையை மீண்டும் தொடங்கினுர், ஆஞல் நிர்மலோ உலகத்தின் பெரும் புதையலைக் கண்டவன் போலானுன். இந்த இரகசியத்திற்குப் பாற் கடலிற் கிட்டிய அமுதமும் ஈடாகாது என எண்ணினுன். முடிவில் அஜந்தா உணர்த்தும் செய்தியை அறிந்து கொண் டான்.
உளிகள் கல்லிலே விழும்பொழுது உண்டாகும் ஓசையைக் கேட்டுக்கொண்டு அவன் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானுே அவனுக்கே தெரியாது.
கிளிக்-கிளிக்-கிளிக் ! கல்லிலே உளிபடும் ஒவ்வொரு முறையும் நிர்மலை கோக்கி :
*வேலை 1 வேலை 11 வேலை ! உழைப்பு உழைப்பு !! உழைப்பு !!! முயற்சி! முயற்சி 11 முயற்சி !!!” எனக் கூறுவது போலிருந்தது.
மனித முயற்சியே கல்லைச் செதுக்குகின்றது. குன்று களி னின் று பாறைகளைப் பெயர்த்தெடுக்கின்றது. அவற்றை எழில் நிறைந்த உருவாக்குகின்றது. மனித முயற்சியே ஓவியங்களில் உயிர்க் களையையும் பாறை களிலே ஜீவன் நிறைந்த உருவையும் ஆக்குகின்றது. மனித முயற்சியே அவனை மிருகத்தினின்று வேறுபடுத்திக் காட்டுகிறது. உழைப்பே வழிபாடு. வேலைக்குப் பொருளும் வெகுமானமும் வேலையேதான்.
கிளிக் ! கிளிக் !! கிளிக் !!!
கல்லிலே உளிபடும் காதம். நாளையோ அல்லது இன்றைக்கேனுமோ, நூறு இருநூறு ஆண்டுகளிலோ

Page 28
52 அஜந்தா
இக்கற்கள் எழிலும் கலையும் நிறைந்த உருவாக ஆக்கப் படும். ஒரு சிலரன்றி ஆயிரக்கணக்கான வர்கள், பரம்பரை பரம்பரையாக இவ்வேலையைச் செய்து வருவார்கள் ! கலையின் பரிபூரணமே அதன் லட்சியமாதலால் இவ்வேலை என்றுமே முடிவடையாது.
கிளிக் ! கிளிக் ! கிளிக் !!!
கல்லிலே உலோகம் படும் இசையொத்த ஒலி. காளை யோ இன்றைக்கேனுமோ, நூறு இருநூறு ஆண்டுகளிலோ மனித மனப்போக்கும் செதுக்கி மெருகிடப்பட்டு, கலையும், அறிவும், அழகும், மென்மையும் நிறைக்ததாக உருவாக்கப் படும். இந்த அமைப்புப் பணியிலே ஒரு சிலரேயன்றி, இலட்சக் கணக்கானவர்கள் வழிவழியாக ஈடுபடுவார்கள். மனித சமூகத்தின் பரிபூரணமே லட்சியமாத \ால் இவ்வேலை என்றுமே முடிவடையாது.
கிளிக் 1 கிளிக் !! கிளிக் !!!
கல்லிலே உளிபடும் நாதம் ஒலித்தது. அத்துறவியும் தனது வேலையிலே ஆழ்ந்து ஈடுபட்டு விட்டதால் சுத்தியலி ஞல் தன்னுடைய பெருவிரல் நசுக்கப்பட்டதை உணர வில்லை. கல்தரையிலே அந்தச் செவ்விரத்தத் துளிகள் விழுந்ததைக் கண்டதும், குகைகளிலே தான் கண்ட சித்திரங்களும் சுவர் ஓவியங்களும் ஞாபகத்திற்கு வந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் அவ்வண்ணங் கள் எவ்வளவு புதுமையும் ஒளியும் பெற்றுத் திகழ்கின்றன! வண்ணங்கட்குப் பதிலாக ஒவியர்கள் தங்கள் இரத்தத்தை உபயோகித்திருப்பார்களோ என்ற விசித்திர எண்ணம் அவனது உள்ளத்தில் தோன்றியது. அதனுல்தான் இவை பாவம் நிறைந்து விளங்குகின்றன போலும்.

அஜித்தர Y53
ஒருக்கால் அவன் தூங்கி விட்டானுே அல்லது சிந்தனையில் ஆழ்ந்து விட்டானே !
அவன் எழுந்தபொழுது காலைக் கதிரவனின் சாய்ந்த கதிர்களினல் குகை ஒளி செய்யப்பட்டிருந்தது. ஆயினும் சுடுகாட்டின் அமைதி அங்கு கிலவியது. ஒரு ஜீவனைக்கூட அங்கு கர்ணுேம்-அக்தச் சிற்பிகள், ஓவியர்கள் கூடக் கானப்படவில்லை. தீச்சுளுக்துகள்ககூட மறைந்துவிட்டன.
கண்டதெல்லாம் கனவுதானுே. ஒருக்கால்.நல்ல விசித்திரமான கனவுதான் !
* கனவாகத்தானிருக்க வேண்டும். இந்தத் தாறுமாருன குழ்கிலையில் இத்தகைய வேடிக்கைக் கனவு உருவானதும் வியப்பில்லைதான் ” என முடிவு செய்தான்.
அந்தக் கனவுலகத் துறவி இருந்த இடத்தைக் கடந்து வெளியே வரும்பொழுது, முதல் நாள் மாலை தன் கண்ணிற்படாத ஒரு தாமரை மலர் பொறிக்கப்பட்டிருப்ப தைக் கண்டான். அல்லது அதுவும் அவனது கற்பனை விசித்திரமோ ?
பின் எதையோ நினைத்துக்கொண்டு தரையை கோக்கிக் குனிந்து பார்த்தான். அங்கே மாணிக்கப் "பரல் போன்று பல துளி சிவப்பு இரத்தம் சிக்திக் கிடந்தது.
பிரயாணிகள் விடுதிக்குச் சென்று பாரதியைச் சந்திக்காது நிர்மல் கேரே ரயில்வே நிலையத்தை கோக்கி கடிக் தான். மறுகாள் ஞாயிற்றுக்கிழமை. க ல வ ர ம் 13உக்தாலும் டேக்காவிட்டாலும் சரிதான். பம்பாய்க்குச் சேன்று சாந்தி சேனைக் கூட்டத்தில் அகமத கொண்டு ஸ்ரும் தீர்மானததிை ஆதரித்தாக வேண்டும். பம்பாயின் கல்லரங்கள் வாழ்க்கை இவற்றினின்று தப்பிச் செல்ல் துழியே இல்லை :

Page 29
54 அஜந்தச ரயில் வண்டியில் ஒரு சக பிரயாணி 8 அஜந்தாவிற்குப்
போயிருந்தீர்களா ? என்று கேட்டான்.
அதற்கு நிர்மல் 9 இல்லை, நான் அஜந்தாவை நோக்கிப்
போய்க் கொண்டிருக்கிறேன்" என பதில் கூறினுன்