கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீர்த்தக்கரைக் கதைகள்

Page 1
ஆனந்த ராகவன்
உயர்ந்த கடினமான சிறுகதை வடிவுக்குப் பெருமளவில் சவாரு அமையக்கூடிய கருத்துக்களை சிந்தனகளை டாடா இரு தாமல் வண்ணம் சிதறாமல் தேர்ச்சியுற்ற பாத்திரப் படைப்பின் மூலம் வார்த்துத் தாக்கூடிய படைப்பாளி இா
ETIGGGS. Go
தீர்த்தக்காயில் வல்வை மனோன் பிரான்ஸிஸ் சேவியர் எனும் பெயர்களில் இவரது எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன. இலங்கைவிாவட கிழக்குத் தமிழ் மக்களின் உக்கிரமான தேசிய இயக்இன் ஆவா: பிப முதற் கட்டத்தை இவரது தீர்த்தக்கரை எழுத்துக்கள் பிரதிபலிகன்றன.
சந்திரபோஸ்
இவர் மலையகத்தின் வேர்களை குறிப்பிட்ட ஓர் காலப் பகுதியில்
தொட்டுப் பாத்த இளைஞர் அதன் பிரதிபலிப்புகளை இவர் எழுத்துக் ETEL BETETETETE
E.
கேகாலை கையிலைநாதன்
கண்டிப் பிரதேசத்துத் தோட்டங்களுக்கு உத்ே काळका இவரு டைய கதைகள், 1977ல் மகட்பிரதேச மகளுக்கு எதிராய் நிகழ்ந்த வன்முறைகளின் பின்னர், துளித்தடிய வசந்தத்துக்கான நம்பிக்கையை கேகாலை கையிலைநாதன் தன் எழுத்தில் பதிவு செய்துள்ளார்
ராமையா முருகவேள்
மலையகத்தின் இன் லைமுறையையும் இன்றைய காலப் பகுதி பையும் பிரதிபலித்து நிற்கு :L ഋജE":""
 


Page 2

ug:াি:"ক্ত
தீர்த்தக்கரையிலும்
தொகுப்பு இது
Irg.E.L. J.R.R.T.-T. வாழ்க்கபேயும்
டஜர்சிபுேம்
சிறுகதைகள் தீர்த்தக் கரைக் கதைகள்' என்று
தமிழில் சிறு பத்திரிகைள் என்னும்
ls SFIFTrm.

Page 3

தீர்த்தக்கரைக் கதைகள்
(இலங்கை மலையகச் சிறுகதைகள்)
தொகுப்பு நந்தலாலா அட்டன், இலங்கை
அன்னம் 2, சிவன்கோயில் தெற்குத் தெரு
சிவகங்கை-623 360

Page 4
தீர்த்தக்கரைக் கதைகள் (இலங்கை மலையகச் சிறுகதைகள்)
C நந்தலாலா அச்சாக்கம்: அகரம், சிவகங்கை முதற்பதிப்பு: ஏப்ரல் 1995
வெளியீடு:
நந்தலாலா Nandhalala
அட்டன் 133-111 Dimbula Road இலங்கை. HATTON
SRILANKA
விற்பனை உரிமை: அன்னம்(பி)லிட் 2, சிவன் கோயில் தெற்குத் தெரு சிவகங்கை-623560 தமிழ்நாடு

தீர்த்தக்கரைக் கதைகள்
மொத்தம் மூன்று கதைகளைத் தவிர, இத்தொகுதியி லுள்ள ஏனையவை அனைத்தும், 1980-82 காலப் பகுதியில், இலங்கையின் மலையகப் பிரதேசத்தி லிருந்து தோன்றிய வளமான தீர்த்தக்கரையில் ஒதுங்கியவைதாம். 狩
1980 ம் ஆண்டின் மத்தியப் பகுதியில் "தீர்த்தக் கரை"யின் முதல் இதழ் மலர்வு கண்டது. காலாண்டு சஞ்சிகையான இது தனது ஐந்தாவதும், இறுதி யானதுமான இதழை 1982 இன் இறுதிப் பகுதியில் வெளியிட்டது.
இருந்தும், இக்குறுகிய வாழ்வெல்லையில் இவ்விதழ் களில் பிரசுரமாகிய சிறுகதைகள் அநேகரின் கவனத்தை ஈர்த்தன- "தீர்த்தக்கரைக் கதைகள்' எனக்குறிக்கப் பெற்றன.
ஜெயகாந்தனாகட்டும், வல்லிக்கண்ணனாகட்டும், அல்லது இலங்கையின் பல்வேறு காத்திரமான விமர்சகர்களாகட்டும், வாசகர்களாகட்டும் - நெஞ் 63)ğFlü பிழிகின்ற. . ." என்று இக்கதைகள்
பொறுத்துப் பரிவுடன் சுட்டி நின்றார்கள்.
தமிழ்ச் சிறு பத்திரிகைகள் பொறுத்து எழுதிய வல்லிக் கண்ணன் இக்கதைகள் பொறுத்துக் குறிக்கும் போது,
"மலையக மக்களின் வாழ்க்கையையும், உணர்ச்சி களையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக் கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புகள் அவை"
எனக் குறிப்பிட்டார். (தமிழில் சிறு பத்திரிகைகள்: வல்லிக்கண்ணன்)

Page 5
இக்கதைகளில் பெரும்பாலனவைகளில் சோகம் இழை யோடினாலும், அவை நிராசையை, விரக்தியை வாசகனில் ஏற்படுத்துவன அல.
இது ஆத்திரம் கலந்த சோகம்! சமூகத்தில், மனிதனில் பற்றையும், பாசத்தையும் தோற்றுவித்து மனிதனை அவனது ஆக்கப் பூர்வ நிகழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் சோகமாகவே இச் சோகம் மிளிர்ந்துள்ளது.
82 ல் நின்றுபோன "தீர்த்தக்கரையைச் சார்ந்த சில இளம் எழுத்தாளர்கள் கால ஓட்டத்தில், 92ல், "நந்தலாலாவை" உருவாக்கினார்கள்.
ஆக, 1980இல் பிரவாகம் கொண்ட ஒர் இலக்கிய முயற்சி, இலக்கியப் போக்கு நின்றதாக இல்லை. தொடர்கின்றது. - 1980-94 ஆகிய காலப் பகுதிகளில், இவ்விரு இதழ் களிலும் மலர்ந்த உன்னதமான கதைகளில் சில வற்றையே தேர்ந்து இங்கு வெளியிடுகின்றோம்.
1980க்கும் 1994க்கும் இடைப்பட்ட இப்பதினான்கு ஆண்டு காலப் பகுதி, மானுட விடுதலை என்றதோர் நோக்கில் எம்மைப் பொறுத்த மட்டில் வெறும் வனவாசம் தான்.
இனி, இதன் முற்றுப்புள்ளி? ஓர் கிருதயுகம்? -அது பிறிதொரு கேள்வி!
இறுதியாக, ஒர் கலைப்படைப்பு நூலுருப் பெறும் போது நேர்த்திமிக்க தன் ஆக்கத்திறனால் அப் படைப்பைஅதற்குரிய அடித்தளத்திலும் சமயங்களில் அதைவிட மேலான அந்தஸ்துக்கும் உயர்த்தும் போக்கைத் தனது சகஜமானதொரு வழிமுறையாகக் கொண்ட திரு. மீரா அவர்களுக்கும் அன்னம்- அகரம் தொழிலாளத் தோழர்களுக்கும், நன்றியுடன். . .
கந்தலாலா இலக்கிய வட்டம், அட்டன் இலங்கை.

sir (3er
ஆனந்த ராகவன்
உதய காலத்து ஜனனங்கள் நண்பனே என்றும் உன் நினைவாக
வீணையை மேவும் விரல்கள்
பிரான்சிஸ் சேவியர்
நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி
விடியாத இரவுகள் தடம் மாறும் சுவடுகள்
ஏ,எஸ். சந்திரபோஸ்
என்று தணியும் இந்த . . .
கேகாலை கையிலைநாதன்
தண்ணிர் வற்றிடும் குளங்கள் மீண்டும் வசந்தம் வரும் காதலிலே இருகண்கள் வெண்ணிறத் தாமரைகள்
தூரிகை
ராமையா முருகவேள்
சிறுவன்
17
27
4.
46
55
68
76
87
OS
25
144

Page 6
ஆயிரக்கணக்கானெதாழிலாளர்களைப்பெரும்பான்மையாக கொண்டதோர் சமூகத்திலிருந்து நற்றலாலாவின் செயல்பாடுகள் ஜீவிதம் கொள்வது எமக்கு வாய்ப்பாகியது.
அதனாவோ, என்னவோ எமது செயல்பாடுகளுக்கு வியூகம் அமைத்த அத்தொழிலாளியின் படைப்புகளுக்கும், அவர்களைச் சார்ந்த தத்துவங்களுக்கும் வந்து சேரும் தூற்றுதலுக்கும், அவமானங்களுக்கும் வியூகம் அமைக்கின்ற பணியில் நாமும் பங்கேற்பதில் இயல்பாகவே
பெருமை பூண்டோம்.
வானம், எத்தனையோ பிரளயங்களை மனிதனுக்கு நிகழ்த்திக் காட்டியிருக்கின்றதுதான்.
ஆனால், அதனையும் மிஞ்சிய பிரமாண்டங்களை அவ்வகண்ட வானுக்கு நிகழ்த்திக் காட்டியுள்ளவன்தான் மனிதன்
வாரதி முதல் இன்று வரை நாமும் எம் எழுத்துக்களும் அம்மனிதனுக்காய் என்றும் வணக்கம் செலுத்தும். இதுவே எமது அடிப்படை என்பதில் பெருமை என்பதைவிட பிறிதென்ன மிஞ்சுவது.
O
வாழ்த்துக்கள் நந்தலாலா

ஆனந்த ராகவன்
உயர்ந்த,கடினமான, சிறுகதை வடிவுக்குப் பெருமள் வில் சவாலாக அமையக்கூடிய கருத்துக்களை, சிந்தனைகளை, உரையாடல்களை உறுத்தாமல் வண்ணம் சிதறாமல் தேர்ச்சியுற்ற ஓர் பாத்திரப் படைப்பின் மூலம் வார்த்துத் தரக்கூடிய படைப் பாளி இவர் .
இவர் படைத்துள்ள பாத்திரங்களின் முதிர்ச்சியே இவ் வெற்றிக்கான பின்னணி எனலாம்.
இங்கு பிரசுரமாகியுள்ள இவரது கதைகளில் சில தமிழ்ச் சிறுகதை உலகின் அதி உயர் வீச்சுகளை, பல்வேறு பரிமாணங்களை அழுந்தத் தொட்டவைகண்களில் நீர் கூட்டியவை.

Page 7
உதயகாலத்து ஜனனங்கள்
"சாரி"யில் அவ்வளவு சந்தடியில்லை. நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடிவிடும். தொங்கலில் சுவர் ஒரமாக இருந்த அந்த மேசையை அடைந்து புத்தகங்கள் அடங்கிய பையை நாற்காலியின் விளிம்பில் தொங்க விட்டுவிட்டு அமர்ந் தேன். இந்தச் சிறிய நகரத்துக்கு வரும்போதெல்லாம் இந்த இடத்திலேயே அமருவது வழக்கம். வரும்போது தூறலில் நனைந்து விட்டிருந்த தலையைக் கைக்குட்டை யால் துவட்டிக் கொண்டிருந்தபோது ‘வெயிட்டர்" வந்தான்! “பார்” களில் இப்பொழுதெல்லாம் சின்னப் பையன்களையே வெயிட்டராக அமர்த்துகிறார்கள். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் 'சன்மானமே அவர் களுக்குச் சம்பளம். தலைமயிரை ஒட்டவாரி கிழிந்த சட்டையொன்றை நேர்த்தியாகப் போட்டிருந்த அவனைப் பார்த்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவாறே வேலைக்கு வந்தவனாகத் தெரிந்தது. பக்கத்தில் எங்கா வது தோட்டத்திலிருந்து வந்தவனாக இருக்க வேண்டும்.
மழையும் குளிருமாக இருந்ததால் சாராயத்திற்கும் சோடா வுக்கும் “ஓடர் கொடுத்துவிட்டுத் தலையைத் துவட்டி முடித்தேன். ஜன்னல் வழியே தெரிந்த வானம் முன்பை விட இருண்டிருந்தது. இன்னும் தூறல் நின்றபாடில்லை. இடையிடையே ஜன்னலையும் தாண்டி வந்த சாரல், புள்ளிபுள்ளியாக பொட்டுப் பொட்டாக- இன்னும் கொஞ்சம் நெருக்கமாகத் தரையை ‘ஷேட் பண்ணி வைத்திருந்தது. காற்று கொஞ்சம் பலமாக அடித்தபோது சற்று ஒதுக்கமாக இருந்த எனது மேசையிலும், என்மீதும் கூட நீர்த்திவலைகள் விழுந்தன. குளிராக இருந்தாலும் அதுவும் ஒரு சுகமாகவே இருந்ததால் ஜன்னலைச் சாத்தா மல் விட்டுவைத்தேன்.
அந்த மாடிவிலிருந்து வார்த்தபோது நகரத்தின் ஒருபகுதி
8 உதயகாலத்து ஜனனங்கள்

கீழே தெரிந்தது. வேறு மாடி வீடுகள் எதுவும் பக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மாதக் கடைசியாதலால் நகரம் சந்தடியற்று இருந்தது. இடையே பாதையில் பெரியவர்களும் இளையவர்களும் போய்வந்து கொண் டிருந்தார்கள். நகரத்தின் மெளனத்தை எப்போதாவது வாகனங்கள் ஹாரணடித்துக் கலைத்தன. தூரத்தே "ரயில்வேடிரக்கில் சாரல் தம்மீது விழாதிருக்கும் பொருட்டு புத்தகங்கள் தாங்கிய கைகளால் குடையைச் சற்றுத் தலையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டு மறுகை யால் காற்றில் பறக்கும் பாவாடையை உடம்போடு ஒட்டிப் பிடித்துக் கொண்டும் நாலைந்து பெண்பிள்ளைகள் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிந்தது. மாலை ‘ரியூசனுக்குப் போய் வருபவர்களாக இருக்க வேண்டும்.
கிளாசில் சாராயத்தை ஊற்றிச் சோடாவோடு கலந்து கொண்டிருந்தபோது பலமான காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினேன். “அவன் ஒரு காலை இழுத்தவண்ணம், கையில் மரக்கறிக் கூடையுடன் வந்து கொண்டிருந்தான். பக்கத்தில் சிறிய பெண் குழந்தை ஒன்று அவன் நடையுடன் சேர்ந்தாற்போல இழுபட்டு வந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் இருந்த மேசையில், நாற்காலியைச் சற்றே இழுத்துக் கால்களை நீட்டியவாறு அமர்ந்தபோது தான் என்னை அவன் நிமிர்ந்து பார்த்தான். பொதுவாக *பார்” களில் பக்கத்து மேசையில் இருப்பவர்களைப் பார்க் கும் போது தொனிக்கும் நட்புரிமையே அவன் கண்களிலும் தொனித்தது.
'இவனை. . இந்தக் கண்களை இந்த தீட்சண்யத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று என்னுள் ஒர் உணர்வு மெல்லத் தோன்றிற்று. அவனுக்கும் ஏதோ தோன்றியிருக்க வேண்டும் போல. . முதலில் அவன்தான் எழுந்தான். "ஐ திங் வி நோ ஈச் அதர்" கைகளை நீட்டியவாறு அருகில் வந்தபோது. . ‘ஓ! சார்லி எவ்வளவு மகிழ்ச்சியான சந்திப்பு! உன்னை இங்கு காணுவேன் என நினைக்கவேயில்லை. நீ ரொம்ப வும் மாறிவிட்டாய். தாடியில்லாமல் உன்னை அடையாளம் காணுவது கஷ்டமாக இருக்கிறது." நீண்ட நாட்களுக்குப் பின்பு காணும் நண்பர்கள் பரிமாறிக் கொள்ளுகின்ற கடந்த கால நினைவுகள், விசாரணைகள் என்பவற்றிற்குப் பிறகு எனது கவனம் அவனோடு இருந்த
JAM ŠIS TTS air / ? *

Page 8
s ňS Monrooralar
சின்னக் குழந்தையிடம் சென்றது. அவள் இன்னும் பக்கத்து மேசையில் இருந்தவாறு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அழைத்து எனது மேசையில் அமர்த்தியவாறே சார்லி கேட்டான்,
"நாங்கள் உனது தனிமையைக் கலைக்கவில்லை என நினைக்கிறோம்."
"நான்சென்ஸ், தனிமையை எப்படிப் போக்குவது என்ற
பிரச்சனையோடுதான் இங்கு வந்தேன். உன்னைக் காண்பதும், இப்போது நாம் இங்கு இருப்பதும் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? குழந்தையைப்
பார்த்துக் கொண்டே தொடர்ந்தேன். عر "உனது திருமணத்தைப் பற்றியெல்லாம் ஒன்றும் கூற
வில்லையே?
"பேபி, அங்கிளை "விஷ்' பண்ணு' என்றான்.
கூச்சத்துடன் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த குழந்தை யைத் தட்டிக் கொடுத்துப் பெயரை விசாரித்தேன்.
வெயிட்டர் பையன்'அவனுக்கும் சேர்த்து ஒரு கிளாசும் ஒரு "பிளேட்" வறுவலும் கொண்டு வந்து வைத்தான்.
பேபிக்கு வறுவல் காரமாக இருப்பது அவளது முகச் சுழிப்பில் தெரிந்தது. வெயிட்டரிடம் அடுத்த கடையில் இனிப்பு வாங்கி வரும்படி கூறினேன். "குழந்தை உன்னைப் போலவே இருக்கிறாள் சார்லி" அவன் முகத்தில் புன்னகைக் கீற்று.
"சிலவேளை பேபியின் தகப்பனாகப்பட்டவன் எனக்கு உறவினனாக இருந்திருக்கக் கூடும்"
அவனது பதில், அந்தப் புன்னகை ஒரு தந்தையின் பெரு மிதத்திற்கு மேலாகவே ஒரு அர்த்தம் தொனிப்பதை உணர்த்தியது. "சார்வி, யூ ஆர் நொட் ஜோக்கிங்?" வெயிட்டர் கொண்டு வந்த 'சொக்லேட்டை குழந்தை கையில் கொடுத்து அவளை ஜன்னல் அருகே அனுப்பிய பின் சார்லி சொன்னான்.
'இல்லை ராஜு, நான் கேலியாகச் சொல்லவில்லை.
l0 , al-SKI Sir Niġss gMITMUT isir

தீர்த்தக்கரைக் கதைகள்
பேபிக்கு ஐந்து வயதாகிறது. நான் திருமணம் செய்ததோ இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான்."
நான் வியப்போடு அவனை உற்று நோக்குகிறேன்.
"எங்கள் திருமணம் சாதாரணமாகவே நடந்தது. உனது விலாசம் தெரிந்திருந்தால் கட்டாயம் அறிவித்திருப்பேன். பேபியின் அம்மாதான் எனது மனைவி. உனக்கு அவளைத் தெரியாவிட்டாலும் அவள் நமக்கெல்லாம் தெரிந்தவளே. நம்மவளே”
சார்லி நிறுத்திவிட்டு இன்னும் கொஞ்சம் கிளாஸில் விட்டுக் கொண்டான். இயற்கையில் சிவந்த முகமுடைய அவன் முகம் மேலும் சிவந்து துடித்தபோது அவன் மேலும் நிறையச் சொல்ல விரும்புகிறான் என்பதை உணர்ந்தேன்.
ராஜா, நாம் ஒன்றாக இருந்த அந்தக் காலங்கள் மகத் தானவை. சுற்றி அடைத்த வேலிகளுக்கு நடுவே, அரசியல் கைதிகளாக ஒரு தண்டனையை அல்ல-ஒரு வாழ்க்கை யையே வாழ்ந்து கொண்டிருந்ததாகத்தான் இன்னும் நினைக்கிறேன்."
"சாள்ஸ்சை உனக்குத் தெரியும்தானே?"
ஓ..நம்ம சாள்ஸ் தானே? நன்றாக நினைவிருக்கிறது. அவன் குணம் பெற்று வரும் முன்னரேதான் எனக்கு விடுதலை கிடைத்து வெளியே வந்துவிட்டேனே. ஆனால் அந்த நிகழ்ச்சியை மறக்க முடியுமா? அப்போதுதானே அந்தத் தடித்த சிறையதிகாரி-சதா குடித்துக் குடித்துச் சிவந்து போன கண்களோடு, குளிக்கையில் . . சவர்க்காரம் போட்டுக் கொண்டிருக்கும்போது தண்ணிரை நிறுத்தி விடுவானே. . நினைவிருக்கிறதா? தட் சேடிஸ்ட் பாஸ்ட் டர்ட். . சிறையில் அன்றுதானே கொஞ்சம் வசதி கோரி உண்ணாவிரதம் இருந்தோம். உள்ளே ஏற்பட்ட சிறிய கலவரத்தைப் பயன்படுத்தி சிறைக் கம்பிகளுக்கு உள்ளே இருந்த நம்மைத் திடீரென வளைத்துச் சுட்டார்களே அந்த நேரத்தில் நானும் "பெர்னண்டோ”வும் "கேட்"டிற்குப் பக்கத்தில் நின்றோம். தலைக்குமேலே இருந்த தென் னோலை முறிந்து விழுந்தபோதுதான் என்ன நடக்கிறது என்பதை அறிந்து தரையிலே படுத்து உருண்டு உருண்டு *கேம்" பிற்குள் போனோம். பின்னர்தான் தெரிந்தது "சாள்ஸ் சுடப்பட்டதாக." አ
‘ராஜ", எனக்கு இந்தக் கால் ஊனமானதும் அப்போது தானே. நீ போன சிறிது நாட்களுக்கெல்லாம் அந்தக் "கேம்பை மூடிப் பல்கலைக்கழகத்துக்கே கொடுத்து
ARVYĝis viTas Qlair, L l l '

Page 9
sås sorsoredàr
விட்டார்கள், நாங்கள் திரும்பவும் சிறைக்கே அனுப்பப் பட்டோம். அங்கிருந்தபோதுதான் "சாள்ஸ்" சுகமாகி வந்து சேர்ந்தான். குண்டு வயிற்றின் ஒரத்தில் பாய்ந்திருந்த தால் 'ஆப்பரேசன் செய்திருந்தார்கள். அதன் பிறகு சாள்ஸ் அடிக்கடி நோய்வாய்ப்பட்டான். அவன் உடம்பு ரொம்பவும் பலவீனமாக இருந்தது. அவனுக்குப் போதிய வைத்திய வசதி அளிக்க வேண்டுமென்ற எங்களது கோரிக் கைக்கு எந்தவித பலனும் இல்லை."
சார்லி நீண்ட பெருமூச்சோடு தொடர்ந்தான்.
'அப்பொழுதெல்லாம் நான்தான் அவனைக் கவனித்துக் கொண்டேன். ஒருநாள் திடீரென அவன் நிலை மோச மாகியது. காலையில்தான் வைத்தியசாலைக்குக் கொண்டு போக முடியுமென்று சொல்லிவிட்டார்கள். சாள்ஸ் தனது முடிவை அப்போதே அறிந்திருக்க வேண்டும். என் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான். தன் தங்கையைப் பார்த்துக் கொள்ளும்படி பலமுறை வேண்டிக் கொண் டான். அதை நான் ஒரு கட்டளையாகவே ஏற்றுக் கொண் டேன். அந்த கனத்துப் போன இரவு சாள்ஸின் மெல்லிய துடிப்புக்களையும் பறித்துக் கொண்டே போய்விட்டது. ராஜ"; சார்லி ஒரு நிமிடம் அமைதியானான்.நானும் அந்த ஆத்மவேதனையில் ஒன்றிப்போயிருந்தேன்.
'இது நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் நான் விடுதலை அடைந்தேன். வெளியில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றிருந்தன. சீக்கிரமாகவே சாள்ஸ்ஸின் தங்கை யைக் காண முயன்றேன். அவள் சில மாதத்தின் முன் விடுதலையடைந்து கிராமத்திற்குப் போய்விட்டதாகக் கூறினார்கள்.
அது ரொம்பவும் தனித்துப் போன கிராமம். ஒரு நாள் காலை அங்கு போய் இறங்கினேன். பிரதான பாதை யிலிருந்து சற்று தொலைவிலும் காட்டிற்கு மத்தியிலும் அக்கிராமம் மிக ரம்மியமாகக் குடிகொண்டிருந்தது. கிராமத்தின் எல்லையிலேயே கமலாவின் வீடு இருந்தது. வீடு என்பதை விடச் சிறு குடிசை என்றே சொல்லலாம்.
கமலா, என்னைக் கண்டபோது ஏதோ நான் வீடு தவறி வந்துவிட்டதாகவே எண்ணினாள். சாள்ஸின் பெயரைக் கூறியதும் தான் தெளிவடைந்தாள். அவன் பெயரைக் கேட்டதும் கதவின் ஒரத்தைப் பிடித்துக் கொண்டு சிலை யாகிவிட்டாள். கண்கள் மட்டும். . எங்கோ வெறித்த வார்வையைக் கண்ணிர் குளம்கட்டி மறைக்கிறது,
12 உதயகாலத்து ஜனனங்கள்

ł šis as avräs assons as dir
சட்டென்று நினைவிற்கு வந்தவளாகப் பொங்கிய கண்ணிரை அடக்கவும், அழுகையை அடக்கிக்கொள்ளவும் தன்இறுக்கமான இதழைக் கட்டிக்கொண்டும், கண்களை மூடித்திறந்து வேதனையை மிடறாக விழுங்கியபடி என்னை முகமன் கூறத் தயாரானதைக் கண்டபோது உறுதிமிக்க பெண்மை அவளில் குடிகொண்டிருந்ததைக் கண்டேன்."
சார்லி கண்களை மூடி மானசீகமாக அக்காட்சிகளில் மூழ்கிப்போயிருந்தான். 'அதன்பிறகு அடிக்கடி அங்கு நான் போய் வந்தேன். கமலாவும் அவளது அம்மாவும் தான் இருந்தார்கள். விடுதலையாகிப் பல மாதங்களின் பின்னரே அவள் முன்புசெய்து கொண்டிருந்த ஆசிரியைத் தொழில் மீண்டும் கிடைத்தது. நான் அக்குடும்பத்தில் ஒருவராகவே பழகிவந்ததுடன் எனது வரவு ஒரு உறுத்த லாக இல்லாத படியும் பார்த்துக்கொண்டேன்.
*கமலா என்னை "ஐயா" என்றுதான் அழைத்தாள். அவளுக்குத் தேவையான புத்தகங்கள் பத்திரிகைகள் யாவற்றையும் வாங்கிச் செல்வேன்’’.
"ஒரு நாள் அவள் அம்மா அதனைப் பிரஸ்தாபித்தாள். கமலாவிற்கு தனக்குப்பிறகு எந்தத்துணையும் இல்லை யென்றும் யாராவது ஒருவனின் கையில் பிடித்துக் கொடுத் தால் நிம்மதியென்றும் ஒரு தாயிற்கே உரிய அவஸ்தை யோடு கூறியபோது, "அம்மாவிற்கு எப்போதும் இதே புலம்பல்தான். எனக்கு அப்படி ஒரு வாழ்க்கையே விருப்ப மில்லை என அடித்துக்கூறினாள் கமலா, அதில் ஒரு பெண்ணின் மாமூலான மறுப்பினைவிட அதிக அழுத்தம் இருந்ததாக உணர்ந்தேன்.""
*ஒருநாள் அவள் தனியாக இருந்தபோது அதே கதையைத் தொடங்கி சிறை வாழ்க்கையில் அவள் விரக்தியுற்றிருக்கலா மென்றும் * அதிலிருந்து விடுபட நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமென்றும் கூறினேன். கமலா அழத்தொடங்கினாள். குமுறிக் குமுறி அழுதாள். எப் போதோ பட்ட சித்திரவதைகள் அனைத்தும் மீண்டும் சாட்டைகளாய் மாறி மனதைச் சாட துடித்துப்போய் அழுதாள். அந்த அழுகையினூடே விம்மலுக்கு இடையே அதைக் கூறினாள்.
ஒ. எவ்வளவு கொடூரமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். தே ஆர் ரியலி பீஸ்ட்ஸ் (அவர்கள் நிச்சய மாக மிருகங்கள்தான்) ஒருவரா? இருவரா? ஒரு முறையா? இரண்டு முறையா? அந்தக் காவல் நிலையத்துக்குள்
ršs Tir 3

Page 10
- | Brès Gyromoraldir
நிகழ்ந்த பயங்கரங்களின் நினைவுச் சின்னமாக 'ஒன்று" அவள் வயிற்றில் தங்கி வளர்வதை உணர்ந்தபோது அந்த வளர்ச்சியைத் தடுக்க திராணியற்றுச் சிறைக்கம்பிகள் நடுவே இருந்தாள். ஏற்கனவே நைந்தும் பலவீனமும் உற்றிருந்த உடல் நிலையில் "அபோஷன்" அபாயகரமான தென வைத்தியர்கள் கருதியதால் அவள் "அதனைப்" பெற்றே தீரவேண்டியதாயிற்று. சிறையிலிருந்து வருவதற்கு முன்னர் குழந்தையைத் தூரத்து உறவினரிடம் கொடுத்து விட்டு வந்தாள். பின்பு இடையிடையே போய்ப்பார்த்து விட்டு வருவதோடு சரி. எனக்கு இதில் ஆச்சரியமளித்தது என்னவெனில் அவள் அதனை நோக்கிய விதம்தான். குழந்தையிடம் எவ்வித வெறுப்புமின்றி வாஞ்சையோடு i தனது தாயின் நிர்ப்பந்தத்தால் குழந்தையைப் ரிந்திருக்கிற தாய்மைச் சோகம் அவளில் எப்போதும் குடிகொண்டிருந்ததை முதன்முதலாக உணர்ந்தேன்.
வெறுக்கத் தக்க மனித கொடூரங்களில் அது தோற்றம் கொண்டிருந்தாலும் தனது தாய்மையினுாடே இவ்வுலகில் பிரவேசம் செய்திருக்கின்ற ஒரு மானுட உயிர் என்ற ரீதியில் அவள் அக்குழந்தையில் கொண்டுள்ள புனித உணர்வை அறிந்தும் அவர்கள் பிரிந்து இருப்பது தகாது எனநினைத்தேன், சமூகத்தின் அவலங்களுக்காக உயிரியல் நியதிகளினுாடே வந்து சேர்ந்த ஒரு ஜீவனைப் பழிவாங்கு வது நியாயமில்லை என்பதையே அவள் தனது பல்வேறு கருத்துக்களால் நிரூபிக்க முயன்றிருக்க வேண்டும்.
உறவினர்களின் எதிர்ப்பினுாடே நானும் அவளும் போய் ஒருநாள் குழந்தையை அழைத்து வந்தோம். மிகவும் சின்னக் குழந்தையாக இருந்தாள். காட்டில் தனியாக மலர்ந்திருந்த புஷ்பத்தைப் போல இருந்தாள். பேபியின் வரவோடு அந்த வீட்டில் ஒரு வசந்தமே வந்து குடியேறியது போலாயிற்று. நான் பேபிக்காக, மிட்டாய்க்காகவும் விளையாட்டுச் சாமான்களுக்காகவும் கடைகளில் ஏறி இறங்கத் தொடங்கினேன். பேபி எனக்கும் கமலாவுக்கு மிடையில் இருந்த உறவை அர்த்தப்படுத்தும் ஒரு பாலமாகக் கூட ஆகிப்போனாள். என்னை அறியாமலே நான் பேபிக் குத் தந்தையாகிப் போனதாகப் பட்டது.
அந்தச் சம்பவம் எங்களை அறியாமலே நடந்திருக்க வேண்டும். அல்லது அது என்னில் வளர்ந்தது போலவே அவளிலும் வளர்ந்திருக்க வேண்டும். அன்று பேபியின் பிறந்த நாள். அதற்காகவே "லீவு’ போட்டுவிட்டு இரவுப் பயணம் செய்து வந்திருந்தேன்.
l4 / a -SK a for Roig gwawrii as ir

தீர்த்தக்கரைக் கதைகள்
பேபியைத் தூக்கி முத்தமிட்டுக் கமலாவிடம் கொடுத்த அந்த நேரத்தில் தான் என்னை-ஸ்பரிசித்த அவளது கரங் களால் பெற்ற உணர்வில் அவளது விழிகளை நோக்கிய போது-அந்தச் செய்தியை நான் பெற்றுக் கொண்டேன். படபடத்துத் தாழ்ந்த விழிகளினூடே, மனித சுயநலங் களுக்கு அப்பால் இயற்கையாகவும், நிதானத்தோடும்நிலை கொண்டு வளர்ந்த ஒரு உறவின் வெளிப்பாட்டை அவ்விழி
கள் முதன் முதலாகப் படித்துக் காட்டியபோது அதே
பதிலை அவளும் பெற்றிருக்க வேண்டும்.
அதன் பிறகு இரு வாரங்களில் எங்கள் திருமணம் சாதாரணமாக நடந்தேறியது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு ஆச்சரியம்தான். கமலா எனக்கு மனைவியானது ஒரு அற்புதமே. வெறும் கருணையால் அன்றி மனித உறவு குறித்த ஆரோக்கியமான உறுதிப் பாட்டில் அந்தக் காதல் தோன்றியது என்றே எனக்குப் Lull-gil.
"ஆமாம், அது அப்படித்தான் உருவாகியது. அதுதான் சரி? பேபி திரும்பிவந்து உட்கார்ந்தது கூட எங்களுக்குத் தெரிய வில்லை. நடந்த உரையாடல் விளங்காமலே எங்களைப்
பார்த்தபடி அமர்ந்திருந்த அவளை இழுத்து அணைத்த
வாறு சார்லி தொடர்ந்தான்.
"யூ ஸி ராஜ", அந்தப் பல மிருகங்களில் இவளின் தந்தை யானவன் ஒரு தமிழனாகவோ, சிங்களவனாகவோ இருக்கக் கூடும். இப்போது இவள் மனித நாகரிகத்தின் உன்னத அம்சங்களைக் கொண்ட பெற்றோராகிய எங்கள் குழந்தையே, யார் கண்டார்கள் தன் தாயை விடவும், உயர்வான ஒரு சமூகக் கடன்பாட்டைத் தன் தோளில் சுமந்து இவள் பிரகடனம் செய்யக் கூடும்; தன்னை ஜனிக்கச்
செய்த அந்தக் கூட்டங்களைத் தன் வாழ்வின் 7வீச்சில்
சாய்த்து விடவும் கூடும்.
"அவள் நிச்சயம் அப்படித்தான் செய்வாள் என நாம் நம்புவோம் சார்லி. *
சிறிதுநேர மெளனத்தின் பின்னர் சார்லி விடைபெற ஆயத்தமானான். அவன் விழிகள் பளபளத்தன.
"ராஜ", மழை மீண்டும் பலத்து விட்டால் பேபியோடு போய்ச் சேர்வது சிரமமாகிவிடும். நீயும் வருகிறாயா?*
wis yra Rvár / 15

Page 11
'இப்போ இல்லை சார்லி. உங்களையெல்லாம் கானச் சீக்கிரமே வருவதாகக் கமலாவிடம் சொல்லு"
"கட்டாயம் வா. கமலா இன்னொரு குழந்தைக்குத் தாயாகப் போகிறாள் என்ற மகிழ்ச்சியான விடயத்தை நான் உனக்குச் சொல்ல வேண்டும். பேபிக்குப் புதிய மாமா பிடித்திருக்கிறது. பாரேன், உன்னோடு நெருங்கி விட்டாள்."
சார்லி வாசலைத் தாண்டும் போது பேபி திரும்பிக் கையை ஆட்டி ஆட்டினாள். ஒரு தேவதையே குழந்தை உருவில் புன்னகைத்துக் கையசைப்பதாய்த் தெரிந்தது. அந்த மரப் படிகளினூடே இறங்கியபோது சார்லியின் ஊனமுற்ற காலின் உரத்த ஓசை எதையோ பிரகடனப்படுத்துவது போல ஒலித்தது. அதை ஆமோதித்து கிளாசில் இருந்த மிகுதியையும் உயர்த்திக் குடித்தேன். வெளியே வானம் தெளிய ஆரம்பித்திருந்தது.
där 1980
16 / a guairwig' galraimriasáir

நண்பனே! என்றும் உன் நினைவாக.
தோட்டத்தின் வழியே போவதைத் தவிர்த்து, தண்ட வாளத்தினுாடேயே நடந்து வந்தோம். நாங்கள் இறங்கிய ரயில் நிலையத்தில் இருந்து இந்த இடம் சிறிது தொலை வில் இருக்கிறது. மலைத்தொடரின் ஒருபக்கச் சுரங்கத்தி னுாடே நுழைந்து, மலைச்சரிவின் மறுபுறம் இருக்கும் சுரங்கத்தின் வழியே சென்று மறையும் ரயில் பாதை. கீழே சிறிது தூரத்திற்கப்பால் தோட்ட எல்லையுடன் சங்கமிக்கும் புல்வெளி; குடியிருப்புக்கள்; இடையில் உயர்ந்து செல்லும் மலைமுகட்டின் சரிவில் இருப்பதால் இங்கிருந்து பார்க்கத் தெரிவதில்லை.
இன்று வானம் தெளிவாக இருக்கிறது. நான் வந்து போகின்ற இந்நாட்களில் என்றுமே வானம் இப்படித்தான் பளிச்சிடும். காலை இளம் வெயிலின் சாயல் இன்னும் மாறவில்லை. சீராக வீசும் காற்றில் அலைவரிசையாய், ஒரு கரையில் இருந்து மறுகரைக்குத் தொடர்ச்சியாய் அசையும் புற்கள். இடையிடையே குடை பிடித்தாற் போல் சடைத்து நிற்கும் மரங்கள்.
மலைச்சரிவு சிறிது தட்டையாய்ப் பிரிந்து செல்லும் இடத் தில், அந்த இடம் தெரிகிறது. பிரதீப் தான் தன் பெரிய பையைத் தோளில் போட்டபடி முதலில் இறங்குகிறான். குடையை ஊன்றியபடி பின் தொடர்கின்றேன்.
'அப்பா பார்த்து வாங்கப்பா. விழுந்திடுவீங்க' ஒ. . . எம் ஐ பி கம் தட் ஒல்ட்? அந்த நாட்களில் இதே இடங்களில் என்னமாய் ஒடித் திரிந்திருக்கின்றேன். இங்கே முயல்கள் அதிகம். இப்போதும் இருக்கவேண்டும். நிலவுநாட்களில்
A
ஆனந்த ராகவன் / 17

Page 12
r5 iš 5 AoiraMoiras dir
விடுமுறை தினங்களில் முயல்வேட்டை என்று கிளம்பினால் நேரம் போவதே தெரியாது. சில சமயங்களில் குகனும் சேர்ந்து கொள்வான். அகப்படும் நாட்களில் வீட்டில் ஒரே குதூகலமாக இருக்கும்.
இன்று, இதோ இந்த மரங்களைப் போல பிள்ளைகளும்
வளர்ந்து விட்டார்கள்; அவர்களின் அக்கறையும் அன்பும்
"அப்பா கவனங்களாக வெளிவரும் போது மாத்திரமே என் தாடியின் நரைகளைப் பார்த்துக் கொள்ளத் தோன்
றும். இப்போதும் வெயிலின் மினுக்கலில், பார்வை ஒரத்
தில் இழையோடும் தாடி நரையின் வெளிர்ப்பு பளிச்சிடு
கிறது. கால்களின் ஒரத்தில் படிகின்ற புற்களின் ஈரம்;
மகன் எனக்காகக் கீழே காத்திருப்பது தெரிகிறது.
"அப்பா இங்க பாருங்க, போன வருஷம் கமலா வைச்ச விளக்கு அப்பிடியே இருக்கு. செடியில் ரோசா கூடப் பூத்திருக்கப்பா.”*
இங்கு வருகிறபோதெல்லாம் படுத்த படுக்கையை மடிக் காமல் சென்றுவிட்டதைப் போலவும், அதைச் சீராக்கி வைத்துவிட்டுப் போகவே வந்திருக்கிற மாதிரியும் எனக்குத் தோன்றும். பெரிய பையில் கொண்டு வந்திருந்த மண் வெட்டிக்கு, வழக்கமாக விட்டுச் செல்லுகின்ற பிடியைப் பிரதீப் போடத் தொடங்கினான். நான் கத்தியை எடுத்துக் கொண்டு வளர்ந்திருந்த செடிகளை வெட்டத் தொடங் கினேன்.
'அப்பா! நீங்க சும்மா இருங்கப்பா, கோணமாணலா வெட்டுவீங்க?"
இதற்கு மேல் அந்தப் பொறுப்பை அவனிடமே விட்டுவிட வேண்டியதாயிற்று. பிள்ளைகளில் இவனுக்கு மாத்திரம், அம்மாவைப் போன்ற தோற்றமும், குணமும் . . எதையும் திட்டமிட்டு நுணுக்கமாய், திருத்திச் செய்யும் போக்கு. செய்து முடித்த பிறகு எரிச்சலையும் மறந்து பாராட்டத் தோன்றும். தாயின் நிதானம் அப்படியே இவனையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.
சிறிது தள்ளி இருக்கும் பாறையின் சரிவில் அமருகிறேன். காலை வெய்யிலில் புல் படர்ந்திருக்கும் இடத்தைத் தவிர, மற்ற இடங்கள் எல்லாம் காய்ந்திருக்கின்றன. பாறையின் குளிரும் இன்னும் சிறிது நேரத்தில் போய்விடும். அன்று நட்ட வாகை மரத்தின் நிழல் பாறையின் சரிவில் தள்ளி விழுகிறது. மரத்தின் மஞ்சள் நிறப் பூக்கள் பாறையிலும், 'சுற்றிலும் விசிறலாய்ப் பரந்திருப்பது அழகாக இருக்கிறது.
18 ! நண்பனே. . . .

தீர்த்தக்கரைக் கதைகள்
ாறைச் சரிவைத் தழுவி ஓடும் ஒடையில் விழும் பூக்கள் ன்னக் கப்பல்களைப்போல் அணிவகுத்துச்செல்லுகின்றன.
பிரதீப் இப்போது நேர் பார்த்துக் கயிற்றைக் கட்டிக் கொண்டு இருக்கின்றான். இனி யாரும் அந்த வேலையில் தலையிட முடியாது.
O
இருபது வருடங்கள்! என்னமாய்ப் போய்விட்டன. இன்று போல இருக்கிறது. இப்போதும் காதின் ஓரங்களை உரசிச் செல்லும் காற்றில், அந்தப் பேச்சின் ஒலியை, சிரிப்பின் கலகலப்பை நான் கேட்கின்றேன்.
இதோ அங்கே இடைவெளிகளோடு பிசிறலாய் ஆரம்பித்து, படர்ந்து, சிறிது தூரத்தில் நெருக்கமாய்ப் பின்னிய பச்சைக் கம்பளமாய் விரிந்து போவதுதான் பளிங்குமலைத் தோட்டம். இருபது வருடங்களுக்கு முன்பு தகரப்பெட்டி யோடு எனது ஆசிரியத் தொழிலுக்கு, இந்தத் தோட்டத் திற்கு முதன் முதலாக அடியெடுத்து வைத்தேன். அடுத்த மாதமே என் மனைவியையும் அழைத்து வரவேண்டிய தாயிற்று.
தோட்டப்புற சூழ்நிலை, வந்து சில நாட்களிலேயே ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. எந்த வசதிகளுமே அற்றிருந்த அந்தப் பாடசாலையில் கல்வியின் அந்தஸ்தை நிலைநிறுத்துவதை ஒரு சேவையாகவே கருதினேன். என் மனைவியும் இந்தப் பணியில் ஒத்துழைப்பாள். புத்தக வசனங்களை ஒப்புவிப்பது என்பதிலிருந்து, கல்வியின் எல்லைகளை விஸ்தரிக்க அவளது அனுசரணை உதவி யாயிற்று. பிள்ளைகளுக்குச் சுகாதாரக் கல்வியை நடை முறையில் அவள்தான் போதித்தாள். உடைகள் முன்பை விட தூய்மையடைய ஆரம்பித்தன. பல பிள்ளைகளின் வெறுமையான நெற்றியில் திருநீறு தோன்ற ஆரம்பித் திருந்தது.
தோட்டத்தில் எங்கள் பிரசன்னமும், உறவும் அந்தச் சிறிய பள்ளிக்கூட மூலைகளில் பதிந்து, கிளைக்கத் தொடங்கிய போதுதான் மூன்றாவது நபராக குகபாலன் வந்து சேர்ந் தான்.
குகபாலனுக்கு, அண்மையில் உள்ள நகரத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும், நகரத்தில் வசதியான இடம் கிடைக்கும்வரை எனது வீட்டில் தங்க அனுமதி கொடுக்கும் படியும், எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவனின் சிபாரிசுக்
ஆனந்த ராகவன் / 19

Page 13
நந்தலாலாவின்
கடிதத்துடன் தான் குகபாலன் எங்களுக்கு அறிமுக
மானான்.
நகரம், குறுக்கு வழியால் போனால் ஒன்றரை மைலுக்குள் தான். இதனால் குகபாலன் பெரும்பாலும் நடந்தே போய்வந்தான். சீக்கிரத்திலேயே அவனது நடவடிக்கைகள் அவனை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஆக்கிவிட்டது.
நகரத்தில் இருந்து வரும் பொழுது சொந்த வீட்டைப் போல் தேவையானவற்றைத் தானே வாங்கி வருவான். விடுமுறை நாட்களில் யாரும் சொல்லாமலேயே ஜன்னல் கதவுகளைத் துப்பரவு செய்ய ஆரம்பித்து விடுவான். வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் அவன் கைப்பட்டு காய்கறிகள் தலைதூக்கத் தொடங்கியிருந்தன. அவன் எங்களின் நெருங்கிய நண்பனாகி வருவது தவிர்க்க முடியாமலே நடந்தது.
"மாஸ்டர் ஊருக்க என்னை கோதாண்டி என்றுதான் கூப்பிடுவினம்-'
அதற்குப் பிறகு “கோதாண்டி'தான் நிலைத்துப் போயிற்று. என் மனைவியின் கல்விப் பணிகளில் கோதாண்டியின் பங்கும் சேர்ந்து கொண்டது. பிள்ளைகள் அவனையும் சேர் என்றே அழைத்தார்கள். விளையாட்டாகவே விடயங் களையும் போதிப்பான்.
** டேய் மோகன் பல்லைக் காட்டு!" ** சேர், யானை மாத்திரம் பல் விளக்குதா சேர்??? ** யானைக்கு நாலு கால், உனக்கும் நாலு காலாடா?"
மற்றப் பிள்ளைகளும் கோதாண்டியோடு சேர்ந்து கொள்வார்கள்.
விடுமுறை நாட்களில் கோதாண்டியோடு பொழுது போவதே தெரியாது. சாப்பிடும்போது ரொம்பவும் கல கலப்பாக இருப்பான், மேசையை விட்டு நாங்கள் எழும்ப சில சமயங்களில் மணிக்கணக்காகும். என் மனைவிக்குத் துணையாக வந்திருந்த அவளது தங்கை நளினியோடு கேலி பேசுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். "அக்கா! தவமணி ஒமென்று சொல்லிருக்காட்டா நளினியைத்தான் முடிச்சிருப்பன்'
கோதாண்டிக்கு, சுற்றி வளைத்து தன் மாமா மகளைப் பற்றிய விடயத்தை எடுத்தாக வேண்டும். அப்போது
29 / நண்பனே. . . .

தீர்த்தக்கரைக் கதைகள்
நாணத்தோடு கலந்த ஆண்மையின் சாயலை அவனில் நான் இனம் காண்பேன். என் மனைவி என்னைச் சாடையாகப் பார்த்துச் சிரிப்பாள்.
"அவள் என்னோடுதான் வருவேனென்று சொல்லிப் போட்டா மாஸ்டர். மாமனார் டாக்குத்தர், எஞ்ஜீனியர் என்று தேடித் திரியினமாம், நான் ஒரு நாளைக்குக் காவிக் கொண்டு வரப்போறன் பாருங்கோ
சில நாட்களில் சிறிது தண்ணியும் போட்டால் ஒரே விசேஷ மாக இருக்கும். கதை வீட்டு, உலக விவகாரங்களில் ஆரம்பித்து கோதாண்டியின் சங்கீத, நாட்டிய நிகழ்ச்சி களுடன்தான் நிறைவு பெறும். கோதாண்டிக்கு நல்ல தொனி. அதிலும் மயானகாண்டப் பாடல்கள் தான் அவனது விசேஷம். குரலை உயர்த்தியும், தாழ்த்தியும், சிரிப்பும் கர்ஜனைகளும் பின்னணியாக அந்தக் காட்சியையே முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவான்.
வழக்கமான அந்தக் கடைசி நிகழ்ச்சியைத் தொடங்குமுன், என் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டபடி, அவனுக்குச் சேர்ட்டைக் கழட்டியாக வேண்டும். -
கைகளை உயர்த்தி, தோள்களைக் குலுக்கி, மயிரட்டர்ந்த தன் மார்பில் தட்ட ஆரம்பிக்கும் போது காட்சி களைகட்டி விடும். மதுவால் சிவந்த முகத்தோடு கோதாண்டி அறையே அதிர சுற்றி வருவான்.
"யாரடி கள்ளி நீ இந்த அடாத இருளில் வந்து பேரிடி மழை தனில் . . . . "'
தொழிலாளர் குடியிருப்பும் வீடும் சற்றுத்தள்ளி தனித்தே இருந்தாலும், சத்தம் கேட்டு வந்து ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்க்கும் இரண்டொரு சிறுவர்களும், நாங்களும் அவனது ரசிகர்களாகிப் போயிருப்போம்.
வாழ்க்கை அந்தச் சிறிய தோட்டத்தில் பயனும், ரம்மிய மும் நிறைந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது.
நாடெங்கும் திடீரென இன வெறியாட்டம் தலைவிரித் தாடத் தொடங்கியிருந்தது. வானொலியிலும், பத்திரிகை களிலும் அதே செய்தி. வாய்வழிப் பேச்சுக்கள். தமிழர்கள் நாடெங்கும் தாக்கப் படுவதாக, சூறையாடப்படுவதாக, கொலை செய்யப்படுவதாகப் பரவிய செய்திகளால்
ஆனந்த ராகவன் / 2

Page 14
நந்தலாலாவின்
தோட்டமே பீதியுற்று இருந்தது. பளிங்குமலைச் சரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட கலனிக் குடியேற்றங்கள் வேறு இருந்தன. நகரத்தில் சில கடைகள் தீக்கிரையாகியதாகச் செய்தி வந்தது. மாலை நகரத்துக்குப் போய் வந்த கோதாண்டி நிலைமை மோசமாகி விட்டதாகவும், தான் வேலை செய்த இடத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதாகவும், தன்னையும் தேடித் திரிந்ததாகவும் கூறினான்.
தோட்டப் பகுதிகளுக்கு வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தாலும் இரவெல்லாம் நித்திரையின்றியே இருந்தோம் .
அன்று பகல் சாப்பாடு முடிந்து வெளியில் உலவிக்கொண் டிருந்த கோதாண்டி திடீரென ஓடிவந்தான். "மாஸ்டர் ஆக்கள் கத்தி, பொல்லுகளோட வருகினம். இங்கதான் வருகினம் போலக் கிடக்கு. "
இப்போது சத்தம் மிக அருகில் கேட்டது.
"மாஸ்டர்! நீங்கள் அக்காவையும், நளினியையும் கூட்டிக் கொண்டு, பின் கதவால் வெளிக்கிட்டு போங்கோ. வயிற்றிலை பிள்ளையோட வேற நிக்கிறா. பொம்பிளை கள் என்றால் இந்த வெறியன்கள் விடமாட்டான்கள்'
'நான் கொஞ்சம் போக்குக்காட்டிட்டுப் பின்னால வாறன், நீங்க மினக்கெடுத்தாமப் போங்கோ மாஸ்டர்.”*
வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒற்றையடிப் பாதை வழியாக நளினியையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஓடினேன். இப்போது நாங்கள் சிறிது தூரத்திற்கு வந்து விட்டோம். வீட்டு முன் கதவு உடைபடும் சத்தம் கேட் கிறது. அவர்கள் இருவரையும் முன்னால் ஓடவிட்டு, சிறிது தாமதித்து நிற்கின்றேன். கோதாண்டி பின்புற ஜன்னல் வழியே குதிப்பது தெரிகிறது. தொடர்ந்து இருவர் அவனைத் துரத்துகிறார்கள், ஓடிவந்த கோதாண்டி இடை யில் நின்று ஒருவனைத் தாக்குகிறான். ஒருவன் சுருண்டு விழ, கோதாண்டி மேலே ஒடிவருகிறான். மற்றவன் அண்மித்து விட கோதாண்டி தயங்குவது தெரிகிறது.
‘'கோதாண்டி ஒடிவா!'
‘‘மாஸ்டர்! அக்காவயளைக் கூட்டிக்கொண்டு கெதியா ஒடிமறையுங்கோ மாஸ்டர். '
22 / நண்பனே. . . .

தீர்த்தக்கரைக் கதைகள்
நான் ஒடினேன். மலை முகட்டின் சரிவில் மறையும் முன் மீண்டும் நின்று பார்க்கின்றேன். இப்போது கோதாண்டியைத் தெரியவில்லை. ஒரு கூட்டம்”அவனை மொய்த்திருப்பது மட்டும் காணமுடிகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார்கள். நான் ஒடினேன். சரிவில் இறங்கும்போது, ‘கண்ணைக்குத்துறாங்க" என்ற கூக்குரல் மட்டும் பெரிதாகக் கேட்கிறது.
வயிற்றுப் பாரத்தோடு மேலும் ஓடமுடியாமல் விழுந்து கிடக்கும் மனைவியையும் தூக்கிக் கொண்டு, நளினி பின்னால் வரக் காட்டுக்குள் ஒடினேன். பாறைகளின் மறைவில் மூவரும் ஒருவரின் மூச்சு மாத்திரமே சப்திக்க ஒளிந்திருந்தோம். சிறிது நேரத்தில் பலரின் நடமாடும் ஓசை கேட்கிறது.
'இங்கு தான் இருப்பாங்க" "எல்லாரையும் கொல்லவேண்டும். "'
சிங்களத்தில் பேச்சுக்குரல்கள். என் மனைவியின் இதயத் துடிப்பை மட்டுமே இப்போது கேட்க முடிகிறது. சிறிது நேரத்தில் சந்தடி ஓய்கிறது. வேறு வழியில் தேடிப் போயிருக்கவேண்டும். திரும்பி வந்தாலும் வரலாம். மனைவியையும், நளினியையும் அணைத்தபடி மாலையும், இரவும் அதே நிலையில். சருகுகள் அசையும் போதெல்லாம் அவளின் உடலும், வயிறும் அதிருகிறது. நிலா வந்து நள்ளிரவான பிறகு அவளை, நளினியிடம் விட்டுவிட்டு மெல்ல நகருகின்றேன்.
எங்கள் எல்லார் மனதிலேயும் கோதாண்டியின் நினைவே நிறைந்திருந்தது. தப்பியிருப்பான் என்ற நம்பிக்கை. சில வேளை காயத்தோடு மற்றவர்கள் அவனை மீட்டிருக்கக் கூடும். ஒற்றையடிப்பாதையைத் தவிர்த்து, பற்றைகளி னுாடும், பாறைகளிலும் மறைந்து மறைந்து நகருகின்றேன். கடைசியாக, கோதாண்டியைச் சூழக் கூட்டம் நின்றிருந்த இடம் காலியாக இருக்கிறது.சிறிது அப்பால் நகருகின்றேன். கோதாண்டி இங்கு எங்கோ ஒளித்திருந்து "மாஸ்டர்’ என மெதுவாகக் கூப்பிடக்கூடும். என் செவிகளைக் கூர்மை யாக்கிக் கொள்கிறேன். ஒடைக்கு அப்பால் இருக்கும் பாறை யில் யாரோ படுத்திருப்பது தெரிகிறது. கோதாண்டியோ? மனதில் மகிழ்ச்சி தட்டுகிறது. மெல்ல அணுகுகின்றேன். கோதாண்டிதான், ஆனால், , !
அவனது கைகள் இரண்டும் வெட்டப்பட்டுப் பக்கத்தில் கிடக்கின்றன. ஒரு கண் பாதி வெளியில் வந்த நிலையில்
\ ஆனந்த ராகவன் / 23

Page 15
NSb5(Aor Rowaar
வெடுத்து நிற்கிறது. உடல் முழுவதும் குத்திக் குதறிக
நிலையில்.
மானிடத்தின் உயிர்ப்பும், உயர்ந்த உள்ளமும் கொண்ட ஒரு உன்னத நிர்மாணம் என்னமாய்க் கணப்பொழுதில் சிதைந்து சிதறுண்டு போனது. எனது வேட்டியின்பாதியைக் கிழித்துக் கோதாண்டியைப் போர்த்துகிறேன்.
தோட்டத்தில் வெறியாட்டம் நடந்து முடிந்திருந்தது. ஆட்களோடு போய் நளினியையும், மனைவியையும் அழைத்து வந்தேன். கோதாண்டியை அந்நிலையில் வீட்டார் பார்ப்பதை விரும்ப வில்லை.
தன் சந்ததி செழிக்கவும், தழைக்கவும் வளர்த்த அந்த
ஆண்மை மிக்க ஆகிருதியே அவனின் தந்தையின் நினைவில் ருக்கட்டும். அவனுக்காகக் காத்து, அவனை நினைத்
ருக்கும் அந்த இளம் பெண்ணின் சிந்தனையில் அவனது
வசீகரமே நிரந்தரம் கொண்டிருக்கட்டும்.
இப்போது உள்ள நிலையில் உடலை அங்கு அனுப்ப முடியாததால் கிரியைகளை இங்கேயே முடிப்பதாப்
அறிவித்து, கோதாண்டிக்குத் தோட்டத்தின் எல்லை :
யிலேயே ஒரு படுக்கை அமைத்தோம். அதன் பின்புசீக்கிரத்
திலேயே ஆசிரியத் தொழிலைவிட்டு, உயர்கல்விக்காக நான் வெளியில் செல்ல நேர்ந்தது.
மரத்தின் உச்சியில் ஒற்றையாய் ஒரு கொண்டைக் குருவி கத்துகிறது. ஹோகோட், நான் அழுதிருக்கிறேன். என் தாடி நனைந்திருக்கிறது. பிரதீப் வேலையைக் கச்சிதமாக முடித்திருந்தான். கல்லறையைச் சுற்றி ஒரடிக்கு இடம் விட்டு, சுற்றிவர வேலி அமைத்திருந்தான். புல்லைச்
செதுக்கி, தலைமாட்டின் இருபுறமும் வட்டமாக வெட்டி,
ரோஜாக் கட்டைகளை நட்டிருந்தான்.
தண்ணிர் விட்டுக் கழுவவேண்டிய வேலை மட்டுமே பாக்கி இருந்தது. அதையும் முடித்து பத்தியையும், விளக்கையும் பற்றவைத்தோம். காற்றில் விளக்கு அணை யாமல் இருக்க பிரதீப் மறைப்பொன்றை வைத்தான். வீட்டில் தயாரித்த, கோதாண்டிக்குப் பிடித்தமான தின்பண்டங்களை எடுத்து வைக்கின்றேன். அவனுக்கு எள்ளுருண்டை என்றால் உயிர். பிரதீப் தூரத்தில் முயல் தேடப் போய்விட்டான். இறுதியாக என்றும் அவனுடன்
24 / நண்பனே. . .

தீர்த்தக்கரைக் கதைகள்
பகிர்ந்து கொள்ளும் அந்தப் பானத்தை இரு கிண்ணங் களிலும் நிரப்புகிறேன். ஒன்று அவனுக்கு.
"நண்பனே உன் நினைவாக!"
கோதாண்டிக்கு நீட்டாகத்தான் பிடிக்கும். தொண்டையை எரித்துக்கொண்டு இறங்குகிறது. தூரத்தில் பிரதீப் எதற்குப் பின்னாலேயோ ஒடுகின்றான். இருபது வருடங் களுக்கு முன் இதே தினத்தில் தான் மனைவியையும், நளினி யையும் அழைத்துக் கொண்டு ஓடினேன். கோதாண்டி இன்னும் இளமையுடனே எனக்குக் காட்சி அளிக்கின்றான். "அக்கா! பிறக்கிறது பெடியன் என்றால், கண்டிப்பாக என்ரபிள்ளைக்குத்தான் கட்டி வைக்கவேணும்."
"சீதனம் இல்லாமல் அடிபோடுகிறார் நளினியின் கிண்டல். யார் கண்டார்கள். கோதாண்டி இன்றிருந்தால் பிரதீப், கோதாண்டியின் மகளுடன் முயல் தேடப் போயிருப்பான்" கல்லறையில் தலைவைத்து மோதிய அந்தத் தந்தையின் குமுறல் இன்னும் நெஞ்சைப் பிளக்கிறது. கோதாண்டி யாருக்கு என்ன செய்தான்?
மனிதர்களை, மிருகங்களாக்கி ஏவிவிட்ட அரசியல்வாதி களும், மதவாதிகளும் என்றாவது இப்படி அமர்ந்து, ஒரு இழப்பை உணர்ந்திருப்பார்களா? ஒரு தந்தையின் கதறல், ஒரு இளம் பெண்ணின் நித்தியமாகிப் போன ஏக்கமும், கண்ணிரும் ஒரு நண்பனின் தவிப்பு-இந்த மனித உணர்வுகள் இவர்களை எப்போதாவது தொட்ட துண்டா?
பகல் ரயிலுக்கு இன்னும் சிறிது நேரம் இருக்கிறது, மெது வாகப் புறப்படுகின்றேன். பிரதீப் சாமான்களைக் கட்டிக் கொண்டு மேலே போய்விட்டிருந்தான். குடையை ஊன்றிக் கொண்டு ஏறும்போது சிறிது தள்ளாடுகிறது. சிறிது
தண்ணையான இடத்தில் சற்றே நிதானித்துத் திரும்பிப் பார்க்கின்றேன்.
பிரதீப், அற்புதமாக அந்தப் படுக்கையைத் தயார் செய் திருந்தான். விளக்கின் புகை காற்றில் மெலிதாக அசைந்து மேலெழுகிறது. கழுவியதால் பளிச்சிட்ட நினைவுச் சின்னத்தின் மத்தியில் மனைவிஅனுப்பிய ரோஜாச்செண்டு. அதன் அருகில், தின்பண்டங்களுக்கு மத்தியில் கண்ணாடிக் குவளையில் அந்த மஞ்சள் திரவம் வெய்யில்பட்டுப் பளிச் சிடுகிறது.
"வில் கோதாண்டி டேக் இட்?"
ஆனந்த ராகவன் / 25

Page 16
'யெஸ் ஹீ வில்" ** என்ட் ஹீ வில் சிங் என்ட் டான்ஸ் டூ" கைகளை உயர்த்தி, தோள்களைக் குலுக்கி, மார்பில் 5ւ-ւգաւյւգ,
**uurULT LuuGA) is 5|Teór Gágs அர்த்த ராத்திரியில் எக்தன் ஈமத்துள் புகுந்து . . . .'
என் தாடி மீண்டும் நனைகிறது.
y
ஜனவரி 1982 d
26 நண்பனே. . . . .

வீணையை மேவும் விரல்கள்.
மரங்களில் தான் எத்தனை ரகங்கள்!
வீட்டைச் சுற்றிஇருந்த குறுகிய வயல் வெளியைத் தாண்டி புதிதாகத் திருத்தப்பட்ட நிலத்தில், மாரிகாலப் பின்பணி யின் பகைப்புலத்தில் இடையிடையே தழைத்து நிற்கும் மரங்களின் லாவண்யத்தில் அவன் லயித்திருந்தான். கால்களை அழுந்த ஊன்றி வானத்தைப் பார்த்து அகங் காரிப்பதாய் சடைத்துப் படர்ந்து நாணித் தலை குனிந் திருப்பதாய், களைத்து, சாய்ந்து சயனித்திருப்பதாய் ஏன் எல்லாம் இழந்து பரதேசிக் கோலமாய் இவற்றில் தோற்றம் கொள்ளும் அவற்றின் காட்சிகள் தான் எத்தனை.
அந்த ஏகாந்தமான பின்னணியில் கலந்தும் ஒன்றியும் போயிருந்த இரவின் மெளனத்தைக் கலைத்து எழுந்த அந்த மெலிதான விசும்பல் ஒலிதான் அவனின் சிந்தனைத் தொடரை திடுக்குறப் பறித்தது. தொடர்ந்து அவனது நெஞ்சின் ஆழத்தில் ஓர் இறுக்கம்.
திரும்பிப் பார்க்காமலே அவன் அவள் குறித்துக் கவலை யுற்றான்.
சிலவேளை அடிகள் பலமாகப்பட்டிருக்கக் கூடும். காய்ச் சலும் காயலாம். அவளை மேலும் தொந்தரவு செய்து தேவையற்ற அவஸ்தைக்குள்ளாக்காமல், களைப்பால் அவள் அமர்வடைந்து அவளாக உறங்கிப் போவதையே அவன் விரும்பினான்.
திலீபன் இந்த வீட்டில் வாடகைக்கு அறை எடுத்துத்
ஆனந்த ராகவன் / 27

Page 17
கந்தலாலாவின்
தங்கியிருக்கும் இந்த ஆறுமாத காலத்தில், இது ஒன்றும் புதிதான விடயமல்ல. ஆனால் இன்று விடயம் எல்லையை மீறித்தான் போய்விட்டது.
வந்து சில நாட்களிலேயே இந்தத் தம்பதிகளின் வாழ்க்கை ஒரு குடும்பம் அல்ல; ஒரு ஏற்பாடே என்று அவனுக்குப் பட்டிருந்தது.
தேவகியின் கணவனுக்குப் போலிசில் அதிகாரியாக உத்தியோகம். நாட்கணக்கில் ஆளை வீட்டில் காணக் கிடைக்காது. வருகின்ற நாட்களிலும் பெரும்பாலும் நேரம் கழித்து நிதானமற்ற நிலையில்தான் கண்டிருக் கின்றான். தேவகி பெரும்பாலும் தன் அறையிலேயே இருப் பாள். சமைத்து மேசையில் எடுத்து வைப்பதோடு சரி, இருவரும் சேர்ந்து உண்பதென்பது அரிதாகவே தான் காணக்கிட்டும்.
திலீபனின் வரவு அவளது தனிமையைச் சற்றுக் கலைக்க உதவியாக இருந்திருக்கக் கூடும் என்றுதான் தோன்று கின்றது. ஒரு சுதந்திரமான எழுத்தாளனாகவும் ஒரு பெரிய நிறுவனத்தின் Marketing Representative -gld, 6 lb இருந்த அவன் அடிக்கடி வெளியூர் சென்று அலுத்துக் களைத்து திரும்பி, அறையில் தங்கும் ஒரு சில நாட்களில் எல்லாம் தேவகியின் சமையல் அவனுக்கு ஒரு ஹோம்லி யான நிறைவினைத் தரும்.
மிகவும் கண்ணியமாகவும் தன்னிடம் மிகுந்த பரிவுடனும் நடந்து கொள்ளும் இந்த இளைஞனை தேவகிக்கு மதிக்கத் தெரிந்ததில் வியப்பில்லைதான். அவன் தங்கும் நாட்களில் அவனுக்குப் பிடித்தமான அயிட்டங்களைக் dialதானாகவே தெரிந்து தற்செயல் போல சமைத்துப் போட வும் அவன் நிறைவுடன் உண்டு, மேலும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதைப் பார்க்கும் போதில் எல்லாம் பெரிதும் நிறைவுகொள்வாள்.
அவளது நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கைக்காக அவன் நிறையவே வருந்தச் செய்தான். தேவகி, கணவனிடம் ஏச்சுக்களும் திட்டுக்களும் வாங்க எந்த விசேட தேவை களும் இருந்தாக வேண்டும் என்றில்லை. மாமூலான இந்த விடயங்கள் சில சமயங்களில் எல்லைமீறி தேவகியைக் கை நீட்டி அடிப்பதிலும் போய் முடிவதுண்டு. இவற்றில் எல் லாம் அவன் பெரும்பாலும் தலையிடாமலே இருக்க விரும்பி னான். ஆனால் இந்த சந்தர்ப்பங்கள் அவனை ரொம்பவும்
28 / வினையை மேவும் விரல்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
சங்கடப்படுத்திவிடும். அவன் உள்ளத்தைப் பெருமளவு அலைக்கழித்து அவமானமுறச் செய்துவிடும். ی
இன்றும் வழக்கம் போல் பிந்தித்தான் கிரகப் பிரவேசம். ஆனால் ஜீப்பில் வந்தவர்கள் தேவகியின் கணவனை கைத்தாங்கலோடு அழைத்து வரவேண்டியதாயிற்று. இந்தக் கூட்டங்களைக் கண்டால் திலீபன் பெரும்பாலும் அறைக்குள்ளேயே இருக்க விரும்புவான். சாப்பாட்டு மேசையில் வழக்கத்தை விட ஆர்ப்பாட்டமும் சத்தமுமாக இருக்கவே சிறிது எட்டிப் பார்த்தபோது பாத்திரங்கள் சிந்தி சிதறிக் கிடப்பதையும் தேவகி ஒர் ஒரமாக, கண்கள் பெருமளவு வெறுப்பை உமிழ கல்லாய் நிற்பதையும்
56-1760.
தேவகியின் கணவன், விழிகள் சிவந்த நிலையில் பேச்சுகள் ஆபாச தொனியில் ஊற்றெடுக்க சாப்பாட்டு மேசையில் பூதாகரமாய் நின்று கொண்டிருந்தான். தேவகியின் மெளனம் அவன் மேலும் கோப மூட்டியிருக்க வேண்டும். தன்னை நோக்கிக் கைகளை எட்டி வீசியவாறு வந்த அவனை விலக்கி அறையினுள் புகுந்த அவளை அவன் பின் தொடர்ந்தான்.
அறையில் எழுந்த அடிக்கும் சத்தத்தாலும், யாரோ, விழுந்த சத்தத்தாலும் தேவகியின் குரலே கேட்காத மெளனத்தாலும் பெரிதும் கலவரமடைந்து, சரி இது இனி யும் கணவன் மனைவி விவகாரமாக இருக்க முடியாது என்ற தீர்மானத்தோடு தீவீபன் அறையில் பிரவேசித்த போது அங்கே தேவகியின் தலைமயிரை ஒரு சட்டையைச் சுருட்டிப் பிடிப்பவன் போல் இழுத்துப் பிடித்தவாறு அவன் நின்றிருந்தான். தேவகியோ சேலை சரிந்துவிழ,சட்டைகள் கிழிந்து தொங்க, உதட்டோரத்தில் ரத்தம் கசிய, "சரி என்னைக் கொல்லத்தானே வேண்டும். இதோ கொல்" என்பது போல் நின்றிருந்தாள். குடிவெறியில் அங்கும் இங்கும் நிதானம் தவறி மறுகையைச் சுழற்றி வீசியவாறு அவன் இருந்தான். திலீபன் தன் வழக்கமான நிதானத்தை
ழந்து அவனைப் பாய்ந்து தள்ளி தேவகியை மீட்டான்.
லீபனைத் திட்டவும் எதிர்க்கவும் முற்பட்டு நிதானமின்றி குடியின் போதையால் பாதி கட்டிலிலும் மீதி கீழுமாக சரிந்து விழுந்த அவனை உள்ளேயே விட்டுக் கதவைப்பூட்டி னான் திலீபன்.
வேதனையாலும் அதிர்ச்சியாலும் அவமானத்தாலும்
பாதிப்புற்றிருந்த தேவகியை அவனேதான் அறைக்கு அழைத்து வந்து காயங்களுக்கு மருந்திட்டான். கீறல் பட்டு
ஆனந்த ராகவன் / 29

Page 18
கந்தலாலாவின்
ரத்தம் கசிந்த இடங்களிலெல்லாம் அவன் மருந்தை இட்ட போது மருந்தின் எரிவால் எரிந்தும் ஆனால் முகம் சிணுங்காமல், வெறுப்பு ததும்ப இருந்த அவளைப் பார்த்து இவன் மனம் வருந்தினான்.
பின்னர் வெளி விராந்தையிலேயே இருந்த அவளை அவனே அழைத்து தன் கட்டிலில் படுக்க விட்டுக் கதவைச் சாத்திய பின் உறக்கம் பிடிக்காது விராந்தைக்கு வெளியே வந்து மெல்ல நடக்கத் தொடங்கினான்.
அதிகாலையில் தேவகி எழுந்த போது திலீபன் கதவருகில் நாற்காலியில் சாய்ந்தவாறே உறங்கிப் போயிருந்தான். திறந்த மார்புடன் சற்றே தலை சரிந்து உறங்கும் அவனை ஒரு தாயின் கருணையோடு பார்த்து படுக்கையில் இன்னும் மடிக்காமல் கிடக்கும் போர்வையால் போர்த்தி விட்டாள்.
நாலைந்து நாட்களாக பத்திரிகை விநியோகம், கூட்டங் கள் என்று அலைந்து இன்று வீட்டில் இருப்பது சுகமாக இருந்தது. காலையில் எழுந்த போதே ஜன்னலினூடே எட்டிப்பார்த்த இளம் வெயிலும் மெலிதாக வீசிய காற்றும், சூழ ஒலித்த பறவைகளின் ஒலியும் அவனில் புத்துணர்ச்சியை ஊட்டியிருந்தன. அவன்பார்த்துக் கொண் டிருந்த மஞ்சளும் வயலட் நிறமும் கலந்த அந்தப் பறவையைப் பின் தொடர வேண்டி, குசினிக்குள் பைனா குலர் சகிதம் நுழைந்த அவன் மேசையில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்த அவளையும் கடந்து ஜன்னலருகே வந்து நின்றான். மரத்திற்கு மரம் தாவிச் சென்ற அதன் லாவண்யங்கள் குறித்து வாய்விட்டு வந்த கொமண்ட்ரி களைக் கேட்டு அவள் சற்றே வியப்புடன் பார்த்து அமைதி யாகச் சிரித்துக் கொண்டாள். இன்று அவள் சற்றுப் பூரிப்புடன் இருப்பதாகத் தோன்றியது. குளித்து, முழுகி பரந்த நெற்றியில் அழகாகத் திலகமிட்டிருந்தாள். அவளது அறிவார்ந்த பெரிய கண்கள் பளபளத்து மின்னுவதாய்ப் l-L-gil.
மறைந்து போன பறவையைத் தேடி மரங்களிலும் வெளிகளிலும் ஒடிய பைனாகுலரின் போக்கில் இறுதியாக அந்தக் கொண்டைக் குருவி வந்து சிக்கி, இது தனது கொண்டையை அந்த சின்ன விட்டத்துக்குள் ரம்மியமாக மெல்ல அசைத்த போது என்றுமில்லாதவாறு அவளே மிகுந்த சிரத்தையுடன் கேட்டாள்.
V 30 / வீணையை மேவும் விரல்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
"செம்பூத்தாக்கும்" அவன் பைனாகுலரில் இருந்து பார்வையை அகற்றாமலேயே கூறினான்.
'இல்லை, கொண்டைக் குருவி. அட இதுதான் எவ்வளவு அழகா இருக்கிறது"'. அவள் ஒரு பெருமூச்சுவிட்டவாறே கூறினாள்,1ம். . ஆமாம். . அழகாக . . சுதந்திரமாக . . அன்பாக"
இவனுக்குப் புரிந்தது, எதை அவள் குறிக்கிறாள் என்று. அந்த வருத்தத்தை எல்லாம் கிளற மனம் வராதவன், பேச்சின் திக்கை மாற்றவோ என்னவோ சிறிது நேர மெளனத்தின் பின் எதையோ கேட்க முற்பட்டபோது அவளே கேட்டாள்,
'இந்த பைனாகுலருடன் உங்களுக்கு நன்றாக ஜீவியம் போகின்றது என்ன?"
திலீபன் பார்வையைத் திருப்பாமலேயே கூறினான்.
ஆம், இது இயற்கையை அதன் மெளனம் கலையாமல் என்னருகில் கொண்டுவரும் நண்பன். அந்த மரங்களைப் பின்னிப்படர்ந்து நிற்கின்ற கொடிகளை இதில் ரசிக் கின்றேன். பூச்சாடியில் முடங்கிக் கிடந்து, ‘என்னைப் பாரேன்” என்று பரிதாபமாக குரலெழுப்பாமல் அதோ அங்கே தொலைவில் தன்னிச்சையாக மலர்ந்திருக்கிறதே அந்தக் காட்டுமலர், அது தான் எவ்வளவு ரம்மியமானது. பறவைகளின் சுதந்திரத்தில் அத்துமீறிப் பிரவேசிக்காமல் ரசிப்பதில் எவ்வளவு இன்பம் இருக்கின்றது தெரியுமா?
அவள் அவனை ஒருகணம் ஏறிட்டு நோக்கினாள். காலை வெயில் தலைமயிரிலும் காதோரங்களிலும் பட்டுப் பளபளக்க ஜன்னலருகே ஒரு பிம்பத்தைப்போல் தெரிந்த அவன் உருவத்தைப் பார்த்து அவள் நினைத்தாள். ‘இவன் ஒரு மென்மையான மனிதன் அற்புதமான கலைஞன்." என்று!
தொடர்ந்து என்ன நினைத்தாளோ, தெரியாது, 4.ணக்கும் அந்தக் குருவியைப் பார்க்க ஆசையாக இருக்கின்ற 'தன்று கூறி பைனாகுலர்ஸை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டிய போது அவன் அவள் பார்க்க வசதியாக அதைச் சரி செய்து கொடுத்தான்.
ஒரு கணத்தில் அவள் முகம், வேடிக்கை பார்க்கக் கிளம்பி விட்ட சின்னக் குழந்தையின் குதூகல முகமாகி விட்டதை அவன் மென்முறுவலுடன் அவதானிக்கவே செய்தான்.
ஆனந்த ராகவன் / 31

Page 19
கந்தலாலாவின்
கூடவே காமெண்டரி தரும் பங்கை இப்பொழுது அவளே தானாக எடுத்துக் கொண்டாள். *"ஒ. . எவ்வளவு பெரிசாத் தெரியுது. தூரத்தில் இருக்கிற கமலா அக்கா வீடுகூட, இதோ கைகிட்ட. .' V− "அதோ ஒரு செம்பூத்து. . மெல்ல மெல்ல நடக்குது. கண்ணைப் பாருங்கோ ரத்தச் சிவப்பு. . *
**ம். . குழந்தைதான்' என்றான் அவன்.
அவள் நாணி மெல்ல சிரித்த போது அவன் கூறினான், "'உங்களுக்குப் பொழுது போகாத நேரங்களில் நீங்கள் இதைப் பாவிக்கலாம். என் ரூமில் தான் கப்போர்டில் இருக்கும்.' **உங்கள் பத்திரிகையை, நீங்கள் கொடுக்கிற புத்தகங்களை வாசிக்கிறதில் நிறையவும் பொழுது போகிறது’’
"வாசிக்கிறதோடுநிறுத்தாம எழுதவும் முயற்சிக்கவேணும். எழுதப் பழகி அதில் மூழ்கிட்டா மற்றக் கவலைகளைக் கூட எளிதில் மறந்திடலாம்." அவன் அவளுக்காக ஒரு போக்கிடத்தைத் தேடித்தர முற்பட்டான் போலும்.
"சின்ன வயதில் ஸ்கூல் காலத்தில் பள்ளிக்கூட மெகஸின்ல எல்லாம் நிறைய எழுதியிருக்கின்றேன். அந்தத் தொடர்பு உங்க பத்திரிகையில் ஈடுபடுத்திக்கிட்ட பிறகு திரும்பவும் துளிர்க்கிற மாதிரி இருக்கிறது. திலீபன், அண்மைக் காலத் தில் நானும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தெரியுமா?"
இது அவன் எதிர்பார்க்காதது. י" * தலையை ஆட்டியவாறே ஆச்சரியத்துடன், "இஸ் இட்? எழுதினதை எங்க பத்திரிகைக்கு அனுப்பலாமே என்றான். "உங்கள் பத்திரிகைக்குத் தான் அனுப்பினேன். பிரசுரமும் ஆயிடுச்சு'
'இல்லையே. தேவகிங்கிற பேர்ல எதையும் தெரிவு செய்ததா எனக்கு நினைவில்லையே." ‘'தேவகிங்கிற பேரைப் பாவிக்கலை. புனை பெயரில்தான் எழுதினேன்". முந்தானையை இழுத்துவிட்டுக் கொண்டு சில விநாடி மெளனங்களின் பின் சொன்னாள், பரந்தாமன்கிற பெயரில் . a
32 / வீணையை மேவும் விரல்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
ஒரு கணம் நிதானித்த திலீபன் பின்னர் ஆச்சரியத்துடன்
கூறினான்.
'பரந்தாமன். .?ஒஹோ. அந்தப்பெயர் எனக்கு நிறையவே நினைவில் இருக்கின்றது. பிரதியின் கையெழுத்தைப் பார்த்தபொழுதும், பாத்திர வார்ப்புகளில் தொனித்த பெண்மையின் சாயலாலும் இந்தப் பரந்தாமன் என்கிற ஆசாமியின் பின்னால் உள்ளது ஒரு சேலை கட்டிய நபரே என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். கடைசியில் . . . . அட நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள். ரியலி ஃபைன், நிறைய எழுதுங்கள். '
இந்தப் புகழுரைகளால் அவள் இயல்பாகவேநாணமுற்றாள். இன்று எல்லாமே திலீபனுக்கு மகிழ்ச்சியூட்டுவனவாக இருந்தன. காலை பில் பார்வையால் துரத்தித் திரிந்த அந்தச் சிறிய பறவை கூட சந்தோஷத்தைத் தனக்குக் கொண்டு வந்த தூதுவனாகவே அவனுக்குப் பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தேவகியுடன் நீண்ட நாட்களாகவே கதைக்க விருந்த விடயங்களையும் பேசுவதற்கு விரும்பினான். அதற்கு அடியெடுத்துக் கொடுப்பதைப் போன்று அவளது பேச்சும் அமைந்திருந்தது.
'வாசிப்பதையும், எழுதுவதையும் மனம் அமைதியாய் இருந்தால் தான் செய்ய முடிகின்றது. குரலில் சிறிதுவிரக்தி ஒலிக்கத் தொடர்ந்து, 'அன்றைப் போல ஏதாவது நடந் தால் அடுத்த சில நாட்களுக்கு மனம் சில்லிட்டுப் போகின்றது."
"'உங்கள் சுபாவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த வாழ்க்கையை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள் என்று நினைக்கக் கஷ்டமாக இருக்கின்றது. தேவகி நீங்களாக விரும்பியது தானே’’
ஒரு பெருமூச்சோடு தேவகி அவனுக்குப்பதில் தந்தாள். *எனது தேவைகள், விருப்பங்கள் எல்லாம் இந்த கல்யாண ஏற்பாட்டில் இரண்டாம் பட்சம்தான். விருப்பத்தை யார் பார்த்தார்கள். சீதனம், உத்தியோகம், அந்தஸ்து இதைத் தானே பார்த்தார்கள். அட இப்போது நினைக்கையில், நானும் கூட இதற்கெல்லாம் உடந்தையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனக்கும், இவ்வளவு சீதனம், இத்தனை பவுணில் நகை, மாப்பிள்ளைக்கு உத்தியோகம் என்கிற விடயங்கள் வந்து மோதிய போது ஒரு போலியான பூரிப்பில் சுயமான விருப்பங்களை விட்டுக்கொடுத்து விட்டேனோ என்று சந்தேகப் பட வைக்கிறது’
ஆனந்த ராகவன் / 33

Page 20
is isors. Their
-அவள் ஒரு பாவமன்னிப்பைத்தேடுபவள் போல இப்படிக் கூறியதும் அவன் மெல்ல இதமாக மறுத்துக் கூறினான்.
*"நான் உங்களைக் குறை கூறவில்லை தேவகி. இத்தகைய மாமூலான ஏற்பாடுகளுக்குப் பின்னரும் சில தம்பதிகளால் விருப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளமுடிகிறது. 'அவளையே சற்றுநேரம் எடைபோடுவதைப் போல பார்த்த திலீபன் தொடர்ந்தான்.
'நான் நினைப்பதுண்டு, உங்களுக்குக் குழந்தைகள் இருந் தால் உறவின் இணைப்பாக அது உதவி இருக்கும் என்று."
தேவகி பதில் கூறாது சிரித்த போது அதில் விரக்தியே தொனிப்பதை அவன் இனங்கண்டான்.
"நான் படுகின்ற வேதனை போதாதென்று இன்னொரு aluogosto 'P
சிறிது நேர மெளனத்தின் பின் தொடர்ந்தாள்: 'இனி எங்களுக்கு குழந்தையே இருக்காது என்றுதான் நினைக் கிறேன் திலீபன், ரியலி. . இதையெல்லாம் யாரிடமும் சொல்லத் தோன்றியதில்லை. ஏன், வெளியே சொல்லாமல் யாவற்றையும் என்னுள் புதைத்து வைத்துக்கொள்ளும் வைராக்கியத்தைக் கூட ஒரு பலமாக, ஒரு பெருமையாக கருதி வந்துள்ளேன், திலீபன்'
திலீபன் மெல்லத் தலையை குனிந்தவாறே சொன்னான்.
*"தேவகி நீங்கள் மிகவும்தனித்துப்போய்விட்டீர்கள்.இந்தத் தனிமை யாருக்குமே நல்லதல்ல."
இவள் வாழ்க்கையை நாசமாக்குகின்றாள் என்பதை அவன் நன்றாகவே உணர்ந்து கொண்டான். ஏதேனும் ஒரு வகை யில் சில யோசனைகளை முன் வைத்து உதவ எண்ணிய அவன், சிறிது சங்கடமாக இருந்தாலும் மெதுவாக நிதானமாகக் கேட்டான்.
""உறவுகளை அவராக நிறுத்திக் கொண்டாராக்கும்'
அவளும் ஒரு தாழ்ந்த குரலிலேயே கூறினாள். . "ம். ஆப்படியும் கூற முடியாது. ஆரம்பத்திலிருந்தே ஒரு மனைவி என்கிற உணர்வில் தான் அதற்கெல்லாம் நான் இயைந்து போயிருந்தேன். ஆனால் இப்போதெல்லாம்
அதுவும், அந்த சம்பவத்திற்குப் பிறகு நானே நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.'
34 / 6 sasvirao u 306 y sios ir

தீர்த்தக்கரைக் கதைகள்
அவள் பார்வை இப்போது நிலைகுத்தி நின்றது.
"நீங்க இங்க வர்ரதுக்கு முன்னால் . . . ஒரு மாதத்திற்கு முன்னால அது நடந்தது. இப்ப நீங்க இருக்கிற ரூம்தான் அவர் தன் சகாக்களோடே கும்மாளம் அடிக்கும் இடம். அன்றும் ஜீப் வந்த சந்தடி கேட்டுநான் கிச்சனுக்குள்ளேயே இருந்தேன். வழமைக்கு மாறாக புதிய சந்தடிகள் கேட்டன. யாரையோ அடிக்கும் சத்தமும், அலறலும் இடையிடையே கேட்டன. அறைக் கதவு திறந்த போது நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். யாரையோ, இருவர் தரையில் அவனது கால்கள் பட இழுத்துச் செல்வது தெரிந்தது. அவர்கள் அறைக்குத் திரும்பியதும் டோர்ச் லைட்டோடு மெதுவாக ஜிப்பை அணுகினேன். ஜீப்பின் பின் புறத்தில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அந்த இளைஞன் கிடந் தான். அறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவனது வேதனைகள் மெதுவாகவே கேட்டது.
நான் டோர்ச்சை அடித்து "யாரப்பா நீ என்று கேட்ட போது சரிந்திருந்த தலையை சற்றே நிமிர்த்திப் பார்த் தான். இப்போதும் அந்த முகம் நினைவில் இருக்கின்றது. மெல்லிய மீசையுடன் கூடிய அழகிய முகம். வயது இருபது களில் தான் இருக்கும். சிறிது நேரம் பார்த்த பிறகு மெது வாகக் கேட்டான், "அக்கா கொஞ்சம் தண்ணி, விரைந்து போய் ஃபிரிட்ஜில் இருந்த பார்லியை கொண்டுவந்து போத்தலோடு அவனுக்கு பருக்கினேன். 'தம்பி உன் பெயரென்ன" என்று கேட்டபோது மெதுவாகக் கஷ்டப் பட்டு கூறினான். . . .'"
""பரந்தாமன்"
"ஆனால் அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் போயிற்று. அறையில் கதிரைகள் இழுபடும் சத்தமும் கேட்கவே, ஏற்கனவே எனது நிலைமையை மீறி ஏதேதோ செய்து விட்டதை உணர்ந்து ஒடி ஒளிக்க வேண்டியதாயிற்று. சிறிது நேரத்தில் ஜீப் போய் விட்டது. ’’
'அடுத்த சில தினங்களின் பின்னர் நான் தற்செயலாகஅந்த செய்தியை பத்திரிகையில் பார்க்க நேர்ந்தது, படத்தோடு பிரசுரித்திருந்தனர். அந்த முகத்தை அடையாளம் காணுவது கஷ்டமாக இருக்கவில்லை. பெயரும் பரந்தா மனே. பொலீசாரால் கைது செய்யப்பட்ட அவன் கோர மாகக் கொலை செய்யப்பட்டு ஆனையிறவு வெளியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்பட் டிருந்தது. அவன் குறித்த விபரங்கள் விரிவாக வெளியாகி
ஆனந்த ராகவன் / 35

Page 21
Is iš Smoraonraísér
இருந்தன. அண்மையிலேயே திருமணம் செய்ததாகவும் மனைவி ஏழுமாத கர்ப்பிணி என்றும் இருந்தது.'
** அன்றிரவு முழுவதும் நான் உறங்கவே இல்லை திலீபன். அந்த இளைஞனின் நெற்றியை அன்று துடைத்த போது கையில் பட்ட ரத்தக்கறை எனது கண்களில் நிழலாடியது. அவன் பட்ட வேதனையை நானும் அன்று அனுபவித்தேன். அவனுக்காக, எதிர்கால ஆசைகளோடு அந்த சிசுவை வயிற்றில் ஏந்தி நிற்கும் அந்தப்பெண்ணுக்காக அழுதேன்."
'அதன் பிறகு எனது கணவரை பார்க்கும் போதெல்லாம் ஒரே வெறுப்பு தட்டும். அவரது மீசையோடு கூடிய முகம் கட்டிலில் என் மீது கவிகின்ற போதெல்லாம் அந்த இளைஞனின் தீட்சண்யமிக்க விழிகளே என் கண்களின் முன் வந்து வெறிக்கும். அந்த நேரங்களில் நான் சில்லிட்டு மரத்துப்போவேன்.'
சில சந்தர்ப்பங்களின் பின்னர் அவரே கூறினார், "யூ ஷெல் ஹேவ் பிகம் எ யூஸ்லஸ் ரிஜிட் வுமன்.'
"அந்த தீர்ப்பை நான்மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண் GL-air. '' r
'நடந்து போன இனக்கலவரங்களில் எல்லாம் எங்கள் குடும்பத்தாரும் நிறையவே பாதிப்புக்குள்ளாகியிருந் தார்கள். இந்தத் தமிழ் இளைஞனின் போராட்டமும். தியாகமும் நான் உட்பட ஒரு இனத்தின் தன்மானத்திற்கும் விடுதலைக்குமானது தானே என்று நினைக்கையில், இவரோடு வாழ்கிற வாழ்க்கையே ஒரு குற்றமாகிறது. மிருகத்தனமான சித்திரவதைகளுக்குக் காரணமான ஒருவரின் உழைப்பில் சாப்பிடுகிறோம் என்ற எண்ணமே என்னை எத்தனையோ நாட்கள் பட்டினி போட வைத்திருக் கின்றது. இப்போதுகூட நான் இந்த வாழ்க்கையை, ஒ. .ஹெள மச் ஐ ஹேட் இட்'
**ஆனால் நீங்கள் வந்த பின்னர் எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. உங்களால் ஏற்பட்ட இலக்கியப் பரிச்சயம் என் மனக்கவலைக்குச் சிறிது மாற்றாக இருந்தது. என் முதல் கதையை எழுதிய போது அந்த இளைஞனுக்கான ஒரு சிறு பிரார்த்தனையாகவே என் புனைபெயரைக்கூட *பரந்தாமன்' என்றே வைத்துக்கொண்டேன்.""
தேவகி வழமைக்கு மாறாக மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்
தாள். உணர்வுகளின் நெகிழ்வாய் சிவந்து போயிருந்த அவளின் வட்டமான முகத்தில் அன்று நடந்த சண்டையின்
36 / வீணையை மேவும் விரல்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
சின்னமாக கீறல்கள் பளிச்செனத் தெரிந்தன. தேவகியின் கண்களின் ஒரத்தில் கசியும் கண்ணிரையும் பெருமூச்சால் உயர்ந்துதாழும் அவளது மார்பையும் பார்த்திருந்த திலீபன் இப்போது நினைத்தான்.
‘ஓ. . இவள்தான் எவ்வளவு மென்மையானவள்”
O
எத்தனை வாரங்கள் கழிந்து விட்டன.
கழிந்த நாட்களில் எல்லாம் அவள் மனித வாழ்க்கை சம்பந்தமாக எத்தனை விடயங்களைப் புதிதாக அலசிப் பார்த்து யோசித்துப் புண்பட்டுப் போயிருந்தாள். .1 இன்று அவன் வருவதாகக் கூறிச் சென்ற நாட்கள்பல கழிந்த பின்னரும் இன்னும் வரவில்லையே என்ற தவிப்புடன் இருந்த தேவகி, திலீபன் வந்து சேந்ததுமே-வெளிப்படை யாகச் சொல்லவேண்டிய விடயங்கள் எத்தனையோ இருந்தும், ஏனோ மெளனியாகிப் போனாள்.
அவன் அலுத்துக் களைத்த கோலத்தில் வந்து தட்டிய போது பார்த்ததைத் தவிர மற்றப்படி பெரும்பாலும் அவனைப் பார்க்காமல் தவிர்த்துக் கொண்டாள்.
அவள் கதவைத் திறந்தபோதே, அவளது இமையோரமாய் ஏற்பட்டிருந்த புதிய காயத்தை அவன் கவனித்து, அது குறித்து கேட்க முற்பட்டபோதும் கூட, அவள் அதைத் தவிர்த்துக் கொண்டு சென்று விட்டிருந்தாள்.
பின், அவன் சாப்பிட்டு ஆறுதலாக இருந்து, வெளியே சென்று விட்டபோது மாத்திரம், அவள் அவன் அறைக்குள் போய் வந்தாள்.
இப்போது திரும்பிவந்து பாத்ரூமிற்கு போயிருக்கும்போது மெல்ல அவன் அறைக்குள் எட்டிப்பார்க்கிறாள். மேசையில் வைத்து, பாரத்திற்காக மேலே கிளாசையும் வைத்திருந்த இடத்தில் இப்போது அந்தக் கடிதம் இல்லை. அவன் அதைப் பெற்றுக் கொண்டான் என்பது ஆறுதலாக இருந்தது.
திலீபன் பாத்ரூம் விவகாரங்களில் எப்போதுமே சந்தடியான
சுபாவமுடையவன். ஏகப்பட்ட சத்தங்களுடன் தண்ணிரை வாரியிறைத்துக்குளிக்கின்ற அவனது சந்தடி மிக்க செய்கை யைக் கண்டு அவள் மனதுக்குள் சிரித்திருக்கின்றாள். பல நாள் யோசித்து இறுதியில் உறுதியோடு எழுதிய அந்தக்
ஆனந்த ராகவன் / 37

Page 22
i SaoiraMoiraar
கடிதத்தின் வரிகளை மீண்டும் மீட்டிப் பார்க்கின்றாள். தேவையற்று அங்கு ஒன்றும் இருக்கவில்லை.
அன்பின் திலீபனுக்கு,
திருமணம் என்பது என்வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக இருந்த சுகத்தையும் பறித்துக் கொண்டது. ஆனால், அதுவே என் மனதில் அவமானகர மானதாகவும், குற்றமுள்ளதாகவும் தோன்ற ஆரம்பித்த போது நான் ஒரு முடிவுக்கு வரவேண்டியதாயிற்று. எனக்கும் அவருக்கும் உள்ள உறவை ரத்து செய்து கொள்வது எனத் தீர்மானித்து விட்டேன். முன்பே நிறை வேற்றியிருக்க வேண்டிய தீர்மானத்தை உங்களின் வருகை தான் எனக்குச் சுட்டிக் காட்டிற்று. நாளைக் காலை புறப் படும் முதல் ரயிலில் நான் என் நெருங்கிய ஒரு சிநேகிதியின் வீட்டிற்குப் போகின்றேன்.அங்கிருந்து பிறகு பெற்றோரிடம் செல்வதாக யோசனை. அத்துடன் இந்த வீட்டிற்கும் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு அறுந்துவிடும். இறுதி யாக, நான் போகுமுன் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில், என் மனதில் துளிர்ந்து நிற்கும் எண்ணங்களைத் தெரியப் படுத்தவே இதை எழுதுகின்றேன்.
திலீபன், இந்த வீட்டில் உங்களின் பிரவேசம் என்னில் நிறையப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரமல்ல. வாழ்க்கையின் பல அம்சங்களில் எனக்கு ஆதர்சமாகமாறி விட்டிருக்கின்றீர்கள்என்பதை நன்றாகவே உணர்கின்றேன். எழுத்திற்கும் இலட்சியங்களுக்கும் உங்களை ஆசானாகக் கருதினேன். ஒரு தாய்மை உணர் வுடனேயே உங்கள் தேவைகளை நான் கவனித்தேன். ஆனால் இந்தச்சிலமாதங்களில்இந்தப்பிணைப்பு என்மட்டில் ஒருஉறவாக உருவெடுத்து விட்டதை இனம்காண்கின்றேன். உங்களில் இன்று நான் கொண்டுள்ள பாசம் முழுமை யானது. வாழ்க்கையில் என்றாவது நிதானித்து நான் யாரையாவது காதலித்து இருக்கின்றேனா என்றால் அது நீங்களாகத்தான் இருக்கும். திலீபன் உங்களை நான் மனப்பூர்வமாக நேசிக்கிறேன்.
ஆனால், எனக்கு உதவி செய்வதாகக் கருதியோ, என் மீது பரிதாபப்பட்டோ எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வாழ்க்கையை மீண்டும் பரிசோதனைக்குள்ளாக்க நான் விரும்பவில்லை.
உங்களுக்கும் என்னில் இயல்பான பாசமும் இவளோடு
38 / வீணையை மேவும் விரல்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
வாழ்வேன் என்ற எண்ணமும் இருந்தால் மாத்திரமே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை.நாம் தொடர்ந்து நண்பர்களாக இருக்கலாம். வாழ்க்கையின் இந்தக் கட்டத் தில் துளிர்த்த இந்த ஓர் எண்ணம் அழிந்துபோக நேர்ந்தா லும், வாழ்க்கையில் ஒரு உன்னதமான, உண்மையான உறவை gp(D5 தலைப்பட்சமாகவேனும் ஸ்தாபிக்க முயன்றேனே என்ற திருப்தியில் வரப்போகும் நாட்களை நான் வாழ்ந்து முடிக்கக் கூடும்.
அன்புடன் தேவகி.
'அன்புடன் உங்கள்’ என்று எழுதக் கைவந்து பின்னர் அன்புடன்' என்று மாத்திரம் எழுதியதையும் நினைத்துக் கொள்கின்றாள்.
அன்று முழுதும் திலீபனை முகம் கொடாமலே கழித்தாள். இடையிடையே தன் அறையில், சாப்பாட்டு மேசையில் ஜன்னலோரங்களில் திலீபன்பதில் ஏதும் எழுதிவைத்திருக் கின்றானா என கண்களால் ஏக்கத்தோடும் கலக்கத்தோடும் பார்த்தாள். மாலையில் எங்கோ வெளிப்பட்டுப் போனவன் இரவு நெடு நேரம் வராததால் சாப்பிட்டுவிட்டு, அவனுக்கும் மேசை யில் எடுத்து வைத்துவிட்டு வந்து படுத்தாள். நாளை தன்னுடன் எடுத்துச் செல்லத் தீர்மானித்தவையை எல்லாம்எடுத்தாகி விட்டதா என்றும் மீண்டும் பார்த்துக் கொண்டாள்.
திலீபன் வந்ததும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.சில வேளை அவன் தன்னை அழைத்துப் பேசக் கூடும் என்ற நினைப்பில் கதவைத் திறந்த நிலையில்விட்டு, அறையில் விளக்கையும் எரியவிட்டு படுக்கையில் இதயத்தின் பாரத்தோடு சாய்ந்தாள். திலீபன் அறையில் இருந்து நெடுநேரம் இழுப்பதும் மூடுவதுமாக சந்தடிகள் வந்து கொண்டிருந்தன. மனதில் களைப்பாலும், சோர்வாலும் தன்னையறியாமலே தூங்கிப்போனாள் தேவகி.
காலையில் அலாரம் அடித்து எழும்பி புறப்பட ஆயத்தங் கள் செய்த போதெல்லாம் அவள் மனம் அந்த அறையைச் சுற்றியே இருந்தது. இறுதியாக பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்படும் போது அவனது அறைக் கருகில் தயங்கி
ஆனந்த ராகவன் / 39

Page 23
கந்தலாலாவின்
னாள். அறையைத் தட்டுவோமா என்று நினைத்தாலும் அவனாகவே தன்னைக் காணாததால் முன் கதவை மாத்திரம் சாத்திவிட்டு வாசலைவிட்டு இறங்கினாள்.
வீட்டில் இருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் இரு மருங்கும் இருந்த புற்களில் படிந்திருந்த பணித்துளிகளின் ஈரம் அவள் கால்களை சில்லிடச் செய்ய, பாதை திரும்பி மறையும் வளைவில் கடைசியாக பார்க்கத் திரும்பிய போதுதான் இத்தனைக் காலம் வாழ்ந்து தீர்த்த அந்த வீடு, சுற்றாடல் யாவற்றிலும் அந்த அறையின் ஜன்னல் மாத்திரமே அவள் கண்ணில் பட்டு நின்றது. ஒரு கணம் அது திறக்காதா என ஏங்கி ஒரு நட்பின் பிரிவு வருத்த, பின் தொடர்ந்தாள்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரத்துடனேயே வந்து விட்டாள் தேவகி. அந்த ரயில் அந்த ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டுச் செல்வதால் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. காலை யில் உள்ளே குளிராக இருக்கும் என்ற எண்ணத்தில் சற்று நேரம் வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
இரண்டொருவர் ஸ்டேசனுக்கு வரத்தொடங்கிய பின்னர் தானும் ரயிலில் ஏறினாள். பெரும்பாலும் சீட்டுக்கள் காலியாகவேஇருந்தன. கூட்டம் கூடுகிறபோது கிடைத்த இடத்தில் இருக்கத்தோன்றுகின்றது. காலியாக உள்ள போதோ இருக்கையில் இருக்கும் சின்னக் கீறலைக்கூட அடையாளம் கண்டு வேறொன்றைநாடச்சொல்லுகின்றது.
இத்தகைய நினைப்புகளோடும் இதைவிட மனதில் ஏமாற்றமும், ஏக்கமும், தன்மேல் கோபமும் பொதிந்து அழுத்துகிற பாரத்தோடும் இரண்டொரு பெட்டிகளைத் தாண்டி இறுதியாக ஒரு இருக்கையைத் தீர்மானித்து பெட்டியை மேலேவைத்து விட்டு இருக்க முயன்றபோது, தன்தோளில் விழுந்த கரத்தின் ஸ்பரிஸத்தால் திடுக்குற்ற அவள் திரும்பிப்பார்த்தபோது அவன் அங்கே நின்றிருந் தான.
வழமைக்கு மாறாக நேர்த்தியாக வாரிவிடப்பட்ட தலை யுடனும், பளிச்சிட்ட உடைகளுடனும் ஒரு கையில் பெட்டியை ஏந்தியவாறு திலீபன் அவளருகில் இருந்தான். அவன் அவள் கரத்தைத் தொட்டு மெதுவாக அழுத்தி பின் அந்தக் கரத்தை மெதுவாக, ஒன்றுமே பேசாது, முத்தமிட்டபோது அவள் அவனின்மார்பில் சாய்ந்து அழத்தொடங்கினாள்.
40 / வீணையை மேவும் விரல்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
அவன் அவளின் நடுங்கும் முகத்தைத் தனது கரங்களில் ஏந்தி அவளது கண்களைத் துடைத்து தலையை ஆட்டிய வாறே "நோ. டோன்ட்" என்றபோது கண்ணிர் வழியும் கன்னங்கள் சிவக்க அவள் ஒரு பள்ளி மாணவியைப் போல் நாணி முகம் சிவந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அந்த ரயில் புதிதாக ஒரு வாழ்க்கையையே சுமந்து செல்லப் போகின்றது!
e56LT ult 982
ஆனந்த ராகவன் / 44

Page 24
நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி
‘‘அட எஞ்செருப்ப, எனக்குக் காதுகுத்தப் பாக்குறியளே! எனக்கு என்னா . . . வயசிருக்கும்? சொல்லுங்க பாப்போம். அதானே, நாப்பதுக்கு மேல சொல்ல மாட்டீங்கன்னு தான் எனக்கும் தெரியுமே. ஐம்பத்தைஞ்சுக்கு மேல ஆகுதையா. அதைச் சொன்னா "பென்சின் குடுத்துடு வான்னு தோட்டத்துல ரெண்டொரு வயசு கொறச்சே சொல்லி வச்சிருக்கேனாக்கும்.
ம். . கையப் பாத்திஹளா, இப்பத்தான் கொஞ்சம் தளர்ந்து போச்சுது. எள வயஸ்-Cல 'குஸ்தி செலம்பம் எல்லாம் வெளயாடியிருக்கேன். அது அந்தக் காலத்து சாப்பாடுய்யா. கெளமைக்கு அரைப்புச தருவான். ஒரூவா காசைத் தூக்கிப் போட்டுக்கிட் போனாக்கா ஒரு வண்டி சாமான் கொண்டாரலாமே. தெனம் உருளக்கெழங்கு, மைசூரு பருப்பு, கருவாடு இத்தியாதி.
கெளமைக்குத் தவன தவனபெரிய கங்காணி வீட்டுல ஆடு வெட்டுவாஹ. ரூபாய்க்கு இந்தா, . அம்புட்டுக் கொடுப்பாஹ.
நாட்டானுங்க அரிசி கொண்டாந்துடுவாஹ. சும்மா முத்தாட்டமா, நாட்டு மரக்கறி, பெலாக்கா இன்னம் என்னென்னவோ எல்லாம். சல்லி கில்லி கேக்க மாட் டானுங்க. கொஞ்சம் பருப்பு, மாவு இப்படிக் குடுத் திட்டாச் சரி.
*பண்டையா"ன்னு இருந்தாரு பாருங்க. சும்மா ஆட்டுக்
கடாயாட்டம் மீசைய வெச்சுக்கிட்டிருப்பாரு. எப்பவுமே கருக்கல்லதான் வருவாரு. நல்ல திப்பிலிக் கள்ளு
42 / நாகசேனை. . . .

கொண்டாருவாரு. சும்மா தீர்த்தமா இருக்குமே! எடைக் கிட நாங்களும் அப்பிடியே நாட்டுப் பக்கம் போயிட்டு வருவோம். ஹாம். . இப்பத்தான் எல்லாமே மாறிப் போச்சு. புதுசா வந்திருக்க பயலுகளுக்குத்தான் கொம்பு மொளச்சிருக்கு. முந்தி மாதிரி போய் வந்துக்க முடியுமாங் கிறேன்.
அட. வந்த வெசயத்த வுட்டுப்பிட்டேனே பாருங்க, நானும் நாலு வருஸம் கங்காணியாக்கூட இருந்திட்டேன். என்னமோ சம்பளத்தைப் பெருஸா கூட்டிப்பிட்டானு ஹளாம். கூட்டம் போட்டுப் பேசுறானுஹ. போன கெளம சங்கத்தில் கூட்டம் போட்டுப் பேசினாஹ.
எங்கேயோ வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தாஹளாம். நம்ம தோட்டத்துத் தொழிலாளிங்க எல்லாம் சொர்க்கத் தில இருக்கானுஹ-அப்டீங்குற கணக்காப் பேசினாஹ. சம்பளம் கூடிக்கினுச்சாம். . ஆடு, மாடுஎல்லாம் தருவானுஹ ளாம் நாங்கதான் செலவழிக்கத் தெரியாம கூத்தடிக் கிறோம்முங்குற கணக்கா பேசுறானுஹ.
அட சிறுக்கி மவளே, வந்து பாருடி ஆயா நாங்க வாழுற பொழப்பேன்னு நெனைச்சுக்கிட்டேன்.
பூஞ்சிக்கா எப்பய்யா மூணு ரூபாய்க்கு வித்துச்சு? பீட்ரூட்டு மூணுரூவா. காரட்டு கெளங்கு மூணுரூவா. கத்திரிக்கா, தட்டப்பயறு. இதெல்லாம் முந்தி நாட்டு மரக்கறின்னு சீந்தக்கூட மாட்டோம். இப்ப அதுகூட ரெண்டு ரூவாக்குக் கொறச்சலில்லே.
v9IL- அவகணக்கா-சீமாட்டியாவா நம்ப சனங்க இருக்காஹ? காலங்காத்தால ரெக்கோடு மாதிரி ரெண்டு ரொட்டியப் பிச்சி வாயில போட்டுக்கிட்டு போனாக்காத்தான் தாங்கும். இப்போ அதுவும் ரெண்டரை ரூவாங்கறான். சம்பளுக்கு தேங்கா ஆனை வெலவிக்குது. தேர்தலு வருதுன்னு தோட்டத்துக்குத் தோட்டம் கூட்டம் போட்டுப் பேசினானு ஹ. மாசச் சம்பளம் தாறோம். பொம்பிளைங்களுக்குச் சம சம்பளம் தாறோம்மின்னாஹ. இப்ப வாயை மூடிக்கிட்டு எங்க மேலே குத்தம் சொல்லுறாணுஹளே! தோட்டமும் முந்தி மாதிரி இல்லே. தொரைமாருங்களுக்கு j
துளுத்திருச்சு, ஆயிரம் சட்டம் போடுறானுஹ. முன்ன மாதிரி "ஸ்டிரைக்கு வேற பண்ண ஏலாதுன்னு பேசிக்
ஆனந்த ராகவன் / 43

Page 25
கிறாஹ; தோட்டம் நட்டத்துல போகுன்னு சொல்லி முதுகெலும்ப முறிக்கிறானுஹ. ரெண்டு நாளைக்கு ஒருக்கா ஒடம்பு வலிக்கு "மருந்து கொஞ்சம் போடலாமுன்னா காப்போத்த எட்டுரூவாங்கிறான்.
புதுஸா, வீடு கட்டப்போறானுங்கனாஹ. அதுவும் ரெண் டொன்று கட்டி புதுசா வந்த சிங்களக் குட்டிங்களுக்குக் குடுத்துப்பிட்டானுஹ.
எம் மவன் வேற கண்ணாலம் கட்டிக்கிட்டான். சல்லி கில்லி வேணுமின்னாக் கேளு. ஆனா பெண்டாட்டியோட, வீட்டுல கொட்டாரம் போட்டுராதேடான்னு சொல்லி வச்சிருக்கேன்.
அவனும்தான் எங்கபோவான். . காம்புறா இல்லேன்னுட் L-ITGOlg/O.
ராவு வீட்டுக்குப் போனா கால வைக்க எடம் இல்லே. சலசலன்னு புள்ளஹ படுத்துக் கெடக்கு. மவன் பொண்டாட்டியோட அடுப்படியில படுத்திருக்கான்.
ம். . நாம எல்லாஞ் சேந்து கேட்டா ஏதாவது செஞ்சிருக்க லாம். சங்கக்காரனுஹதான் ஒருத்தனுக்கொருத்தேன் அடிச்சுக்கிட்டு அஞ்சாளாப் பிரிஞ்சு கெடக்குறானுஹளே. கொஞ்சம் பேரு "கவுருமண்டு தான் சரிகிங்றாஹமத்தவங்க கூடாதுங்கிறாஹ-நாக்க திருப்பித் திருப்பிப் பேசுறானுஹ. கஸ்டமா இருக்கு பாருங்க.
என்னமோ, எளவட்டங்க கொஞ்சம் பேரு நாம எல்லாம் ஒன்னாச் சேரனும்மின்னு சொல்லுறானுக. ஏதோ, செஞ்சாச் சரி. எங்கடைசி மவன்-அவன்தான்தங்கராசுஏதோ பெரிய சோதனை எழுதி முடிச்சிருக்கான். நாலஞ்சு பயலுங்கள சேத்துக்குட்டு அடிக்கடி "மீட்டிங்"கு வேற போட்டுக்கறான்.நல்ல வெசயமா கதைக்கிற மாதிரித்தான் தெரியுது. ஏதோ பொறுப்பாச் செஞ்சாச் சரி.
படிக்கிற நம்ப ரெண்டொரு பயலுகள பாக்கையில எனக்குக் கொஞ்சம் பயம்மாக்கோட இருக்குது பாருங்க. படிச்சு கொஞ்சம் தலைய வெளியே காட்டினாக்கதான் டவுணுக்காட்டு குட்டிகள இழுத்துக்கிட்டு போயிரு றானுகளே? பெறகு தீவாளியோ பொங்கலோ-தேவா தேவைக்கு தலையக் காட்டுறதோட சரி.
ロ §මffi-1980 "
44 / 5rssar. . . .

(JITGT666) GiGif
தீர்த்தக்கரையில் வல்வை மனோகரன், பிரான்ஸிஸ் சேவியர் எனும் பெயர்களில் இவரது எழுத்துக்கள் பிரசுரமாகின.
இன அடக்குமூறைக்கு எதிராக ஓர் தேசிய இயக்கம் கருக்கட்டியபோது, அது குறித்து, தம் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்திருந்த கடந்த ஓர் தலைமுறையின் கசப்புகள், சந்தேகங் கள், வியப்புகள், ஆசீர்வாதங்கள் ஆகியவற்றை ஒரு புறமாய் இவரது எழுத்துக்கள் பதிவு செய்த அதேவேளை, அதன் மறுபுறமாய், எழுச்சியுற உருக் கொண்டிருந்த புதிய தலைமுறையினரின் மனித நேயங்கள், விமர்சனப் பார்வைகள், நம்பிக்கை வீச்சுகள் ஆகியவற்றையும் இவர்தம் எழுத்துக்கள் பொதிந்து கொள்ளத் தவறவில்லை.
ஓர் தேசிய இயக்கமானது குறுகிய வரையறை களை மீறி ஓர் உயர்வீச்சை அடைதல் வேண்டும் என்ற உயரிய நம்பிக்கையை இவர் எழுத்துக்கள் கொண்டிருந்தது வெறும் கற்பனாலங்காரம் தொடர்பானது அல்ல.
மாறாக, ஒரு கோரமான இன ஒடுக்குமுறையின் பின்னணியில் தனது மண்ணின் புதிய-கடந்த தலைமுறைகளின் வாழ்வியல் சாரத்தை உள்வாங்கி அவர் தம் வெவ்வேறு காலங்களில் அவ்வவ் காலங்களுக்கே உரித்தான அரசியல் தத்துவார்த்த ஒன்றிணைப்பை அனுபவ படிப்பினைக்கூடு முன்னெடுக்க முனைந்த ஓர் முயற்சியின் விளை பயனே அது.
சுருக்கமாகக் கூறுவதானால், இலங்கை வாழ் வட-கிழக்கு தமிழ் மக்களின் உக்கிரமான தேசிய இயக்கத்தின், சுவாலை மிக்க முதற்கட்டத்தை இவரது தீர்த்தக்கரை எழுத்துக்கள் பிரதிபலித்தன 6T6 GTO

Page 26
விடியாத இரவுகள்
"பிள்ளெய்! சும்மா வீம்பு பண்ணாதை. இது நடக்கக் கூடிய காரியமில்ல. நீ கோவியனைக் கட்டினா ஊர் உலகம் சும்மா இருக்குமா என்ன? இந்த எண்ணத்தை விட்டுப் போடு. அப்புவுக்கு எப்பவும் உன்னைப் பற்றித்தான் கவலை. அவருக்கு யோசினையைக் குடுக்காதை" மகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கூறினாள் பூரணம்.
பீடிப் புகையிலையை அளவு பார்த்து வெட்டிக் கொண் டிருந்த தவமணி தாயை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையிலேயே கருத்தானாள்.
'அப்பு என்னமாய்ச் சோர்ந்து போறார் தெரியுமா? ரெண்டு பிள்ளைகளிலயும், ஒண்டாலையும் நிம்மதி இல்லை எண்டு நெடுக ஏக்கம். இப்ப இந்தக் கதையைக் கேட்டா மனுசன் இடிஞ்சு போயிடும்' அவள் குரல் தழுதழுத்தது.
தவமணி வாஞ்சையோடு தாயைப் பார்த்தாள். அவள் தான் என்னமாய் மாறிவிட்டாள்.
அவசரம், படபடப்பு எல்லாம் மாறிய நிதானமான பொறுமை. ஆயாசத்தையும், கவலையையும் வெளிக் காட்டாமல் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் 6) fT616ð L110 •
தன்னை விழித்து நோக்கும் மகளிடம் ரகசியம் பேசுவது போல் மெதுவாகச் சொன்னாள் பூரணம்.
'பிள்ளேய்! இந்த வீட்டில நடந்த விசயங்கள் எல்லாம், எங்களைக் கேட்டுக் கொண்டா நடக்குது. எப்புடியும் நடக்கட்டும். எல்லாம் கடவுள் சித்தம். ஆனா அப்புவை
46 | விடியாத இரவுகள்

நினைச்சாத்தான் கவலையா இருக்கு, அவர் எனக்கு முன்னாலேயே உருகி உருகிச் செத்துப் போயிரக் கூடாது" அவள் பேச முடியாமல் தடுமாறினாள்.
கண்களிலிருந்து வழிந்தோடும் நீரைத் தடுக்கத் திரா னி யற்றுப் பரிதாபமாக மகளைப் பார்த்து விழித்தாள் பூரணம்.
அதே அம்மாவா இவள்!
‘கேட்டிங்களே உங்க செல்லமகன் சொல்லிறதை. மாதகல் சம்பந்தம் வேண்டாமாம். ஆரோ வேதக்கார கரையாரச் சியை முடிக்கப் போறானாம்.'
மூன்று வருடங்களுக்கு முன் மூர்க்கத்தனமான வெறியுடன் கணவனிடம் முறையிட்டாள் பூரணம்.
**சத்தம் போடாதை, மெல்லமாப் பேசு'
அப்பு கத்திப் பேசமாட்டார். அப்படிப் பேசுபவர்களையும் பிடிக்காது.
"'என்னில பாயத்தான் உங்களுக்குத் தெரியும். பிள்ளைக்
கந்தக் கூத்துத் தெரியாது. இந்தத் தைரியம் அவனுக்கு யார் கொடுத்தது, எல்லாம் நீங்க கொடுத்த இடம்'
அவளது ஆவேசத்தின் கனல் அவரை உலுப்பியது. அப்பு அவனைக் கேட்டார்.
'சந்திரன்! என்ன. .அம்மா சொல்லுற கதை உண்மையே' அவன் பேசவில்லை.
அவரது சந்தேகம் வலுத்தது.
மீண்டும் கேட்டார். இப்பொழுது அவன் தலை "ஆம்" என்று அசைந்தது. 'பளிர்' என்ற அவரின் அறையின் வேகம் தாங்காமல் கீழே விழுந்தவன் எழுவதற்குள்,அவன் தலைமயிரைப்பற்றி இழுத்துக் கொண்டு வெறி கொண்டவர் போலக் கத்தினார். 'இந்த ஆட்டம் ஆடுறதுக்குதான் இந்த குடும்பத்தில் பிறந்தியோ'
Syrdörfattiv 8sasuu / 47

Page 27
Sissaraoradr
இரண்டு நாட்களுக்கு பூரணம்தான் அந்த வீட்டை ஆட்டு வித்தாள். கணவன், மகன், மகள் என்று ஏதோ ஒரு முறை வைத்துக் கொண்டவள் போல் ஒருவர் மாறி ஒருவரை நேரிடையாகவும் மறைமுகமாகவும். . திட்டி. , ஏசி. . கடிந்து. .
'கலியாணம் முடிச்ச நாளில இருந்து சொல்லுறன், எண்ட அம்மா வீட்டோட இருப்பம். பிள்ளைகள் நல்லா வரும் எண்டு; கேட்டாத்தானே. என்ப. ஆக்கள உங்களுக்கு பிடிக்காது. இப்ப தெரியுதுதானே'
"என்னை ஒரு மனுசியா மதிச்சு எண்ட சொல்லை எப்பவாவது கேட்டிருப்பியளே. படிச்ச பிள்ளையஸ், படிச்ச பிள்ளையஸ் எண்டு செல்லம் கொடுத்தீங்க. இப்ப பாத்தீங்கதானே'
'எளிய சாதியள வீட்டில அண்ட விடாதீங்கெண்டு சொன்னா கேட்டாத்தானே. பிள்ளைகளோடு சேர்ந்து என்னைப் பயித்தியமாக்கினீங்க. இப்ப அந்தத் தைரியம் தானே அவனுக்கு வந்திருக்கு"
இரண்டாம் நாள் சந்திரன் வீட்டைவிட்டு வெளியேறி
னான்.
'அண்ணெய்! நீ போகாத, எங்கெண்டு போகப் போறா. அப்பு இப்படித்தான் கோபப்படும். அதுக்காக நீ வீட்டை விட்டுப் போகாத" தவமணி அழுதுகொண்டு அவன் முன்னால் சென்று தடுக்கின்றாள்.
"அவன் போகட்டும், போய்த் துலையட்டும். ஆரும் அவனை தடுக்க வேண்டாம். இந்த வீட்டுக்கு அவன் பிள்ளை இல்லை. இந்த குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு வல்லமை இருக்கு அவர் மார்தட்டி, இறுமாப்புடன் மனைவியின் எதிரே கைகளை அகல விரித்துக்கொண்டு கூறினார்.
பூரணம் விக்கித்து நின்றாள். சந்திரன் போய் விட்டான்.
ஆறு மாதங்கள் வரை அவனைப்பற்றி ஒரு சேதியும் தெரியாது. அதன்பின். . அதன்பின். .
ஊரில் ஏதும் அசம்பாவிதம் என்றால் பொலிஸ் அவனைத் தேடிக்கொண்டு வீட்டுக்கு வரும். வழக்கமான நடவடிக் 60aesesir.
48 / clums woad

தீர்த்தக்கரைக் கதைகள்
எல்லோருக்கும் பழக்கமாகி விட்டது.
**சந்திரன் எங்கே ""
'வீட்டை இல்ல ஐயா !”
** எங்க போனவன் **
*" தெரியாது! வீட்டை கோவிச்சுக்கொண்டு போனவன்' " 'இன்னும் வரல்லையா?*
* 'இல்லை ஐயா'
"'பொய் சொல்ல வேண்டாம் "
'சத்தியமா தெரியாது’’
அந்த இன்ஸ்பெக்டர் தன் பன்றிக் கழுத்தைத் திருப்பி பலாப்பழச் சரீரத்தை ஜீப்பில் திணிக்கும்போது பூரணம் கூறுவாள்.
"எண்ட பிள்ளை இந்தமாதிரி தப்புத் தண்டாவுக்கு போக மாட்டான் ஐயா"
'ம்! சரி. அவன் வந்தா ஸ்டேசனுக்கு வரச்சொல்லு??
"ஒம் gunt””
பொலிஸ் ஜீப் போனபின் பூரணம் கணவனை மெதுவாக of stiftunt air.
"எந்த வங்கியில களவு போனதாம்' 'இது களவு இல்ல, கொலை' அவள் விக்கித்து நிற்பாள். தவமணி ஊரெல்லாம் கதை சொல்லுவாள்.
'பொலிஸ் வந்து விளக்கு துடைக்கிற துண்டை மணந்து பாத்துது’’
""முறுக்குப் பொரிச்ச எண்ணையை நக்கிப் பாத்துது'
'விதை வெங்காயத்துக்குள்ள கையை விட்டு சோதிச்சுப் பாத்துது'
அவளுக்கு ஒருவிதப் பெருமிதம்.
பிரான்சிஸ் சேவியர் / 49

Page 28
கந்தலாலாவின்
பரஞ்சோதிதான் அவள் கைகளைப் பற்றியபடி அடிக்கடி கூறுவான். -
'உன்ட அண்ணன பொலிஸ் தேடுறதால அவன் ஒண்டும் ரெளடி இல்ல. அவன் இலட்சியவாதி. உயிரைத் துச்சமா மதிக்கிற உன்ட அண்ணெய் மாதிரி ஆக்களாலதான் எங்கட சமூகத்துக்கு விடிவு - வாய் கிழியப் பேசுறதில என்ன இருக்கு. உன்ட அண்ண ஒரு . .'
அவள் பூரிப்போடு அவன் கழுத்தை வளைப்பாள்.
ஒன்பது மாதங்கள் வரை சந்திரன் றிமாண்டில் இருந்தான். பத்திரிகையில் அவன் பெயர் புகைப்படத்தோடு வெளி வரும். கொலை, களவுகளில் அவனுக்குத் தொடர்பாம். பிரபல்யமான வழக்கறிஞர்கள் எல்லாம் அவனுக்காக இலவசமாக வாதாடப் போகிறார்களாம். அவர்கள் பெயரும் பத்திரிகையில் படத்துடன் வெளிவரும்.
பூரணம் கணவனோடு நிமாண்டில் அவனை ஒரே ஒருநாள் சந்தித்தாள். அடர்ந்து வளர்ந்த தாடியும், தலையும் முகத்தை மூட, கூன் விழுந்த முதுகும் சேர்ந்து அவன் வயதை இரட்டிப்பாக அவளுக்குக் காட்டியது.
*" என்ர ராசா! நீ எண்ட பிள்ளையல்லோ. இம்மாதிரி வேலை செய்ய மாட்டியல்லோ"
விக்கி விக்கி வந்த அந்த வார்த்தைகள் தொண்டைக் குள்ளேயே சிக்கிக் கொண்டன.
வழக்குத் தாக்கல் செய்யப்படாமலே அவன் விடுதலை யானான். மகனைப் பார்க்கச் சென்ற அப்பு கையோடு அவனைக் கூட்டிக் கொண்டு வந்தார்.
தாய்மையின் ஆதங்கம்!
என்ன கதைப்பது!
எதைக் கேட்பது!
என்ன வேணும் அவனுக்கு!
பேச முடியாத தவிப்பு. தவமணி அவனையே சுற்றிக்கொண்டு வந்தாள்.
அவன்தான் என்னமாய் மாறிவிட்டான்
50 f விடியாத இரவுகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
ஒவ்வொரு விசயங்களையும் அக்கறையோடு கேட்டுப் பொறுமையாக விவாதித்து. உற்சாகப்படுத்தி. நம்பிக்கை யூ-டி . கண்டிப்புடன். .
ஒரு புதிய கூட்டம் அவனை சூழத் தொடங்கியது.
'விடுதலை ஒரு நாளில வந்திடாது. அது நீண்ட நாள் போராட்டம். நாங்கள் அவசரப்படக்கூடாது. எங்கட பிழைகளத் திருத்த வேணும். எப்பவும் மக்களோட நிக்க வேணும்'.
‘சுயநலம் எங்கதான் இல்ல. உயிரை துச்சமாக மதிச்ச எங்கட இளைஞர்களே இண்டைக்கு மாலைக்கும், விளம்பரத்துக்கும் முந்துறாங்க்ள். இந்த வெக்கக்கேட்டை என்னவென்கிரது*
"செய்ய நினைச்ச லட்சியம் சரியெண்டுபட்டா, ஏன் பயம் GMDL போகுது? 象
தவமணிக்கு அவனில அசாத்திய நம்பிக்கை. ஒருவருக்கும் சொல்லாத் ரகசியத்தை ஒருவாறு சொவ்லிவிட்ட்ாள். அவன் ஆச்சரியத்தோடு தங்கையைப் பார்த்தான். ஒரு (ւpԱյ16խ 6),
'உன்ட காதல் பிழை எண்டு பயப்படாதை. இந்தச் மூகத்துக்கு காதல் ஒரு சவால்தான். அதை நீங்க ரெண்டு பேரும் தான் ப்ோராடிவெல்லவெணும்'
அது அவளுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. அவள் பரஞ்சோதியின் தைரியத்தை மனதுக்குள் எண்ணி வெட்கப்பட்டு நம்பிக்கையுட்ன்'சிரிப்பாள். சந்திரன் இப்போது தோட்டத்துக்குப் போகிறான். மாலை வேளைகளில் வாசிகசாலை. படிப்பு. கூட்டங்கள். ஒய்வு வேளைகளில் அரசியல் சர்ச்சைகள். .
அப்பு திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பார். 'இந்தக் குடும்பம் இனித் தலையெடுக்கும்" அவரே கணக்குப் பார்த்து முடிவு செய்வார்.
'பொலிஸ் வழக்கொண்டு எதுவுமில்ல. அந்த மாதிரிப் போக்கும் இல்ல. நல்ல புத்தி வந்திருக்கு. இனிக் கெதியில
பிரான்ஸிஸ் சேவியர் / 51

Page 29
கந்தலாலாவின்
அவனுக்கு ஒரு கலியாணத்தை நடப்பிக்க வேணும். அதோட ஆளாகிடுவான். ' .
அவன்மேல் கழிவிரக்கப்பட்டுச் சிலசமயம் நினைப்பார். "அவன வீட்டை விட்டுக் கலைச்சது எவ்வளவு பிழை”*
சந்திரன் தோட்டத்துக்குப் போகும்போது பூரணம் மனதுக் குள் புழுங்குவாள். சிலசமயம் வாய்விட்டே கூறுவாள்:
"உன்ர படிப்புக்கு உத்தியோகம் எடுத்திருக்கலாம். வீணா வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டாயே ராசா. தாயின் அந்த ஆசையை வேடிக்கையாய் ரசித்து வாய்விட்டுச் சிரிப்பான் அவன் .
ஒரு நாள்!
வீட்டைவிட்டு யாரும் வெளியே செல்லவில்லை. ஊர் எங்கும் பரபரப்பு: வீடுகளில் சப்தம் செய்யாமல் பாடும் வானொலிகள். வீடு களில் நின்ற ஆண்களைக் கண்காணிக்கும் பெண்கள். கண்மண் தெரியாமல் அசுரவேக உறுமலுடன் ஒடித்திரிந்த ஜீப் வண்டிகள்.
வானொலியை முடுக்கி விட்டு ரகசியமாய்ச் செய்தி கேட்டார்கள். வடக்கில் அவசரகாலநிலைமை பிரகடன மாம். ஊரடங்குச் சட்டமும் வரும் என்று வதந்திகள். இரவு சாப்பிட்டபின் புத்தகத்தைக் கையிலெடுத்த சந்திரனின் தலைமாட்டில் அமர்ந்து அவன் தலையை வருடிக்கொண்டே பூரணம் சொன்னாள், 'தம்பி நாளைக்கு வாசிக்கலாம். இப்ப புத்தகத்தை மூடி வைச்சிற்றுத் தூங்கு. ஊரில நடக்கிற அமளியில இப்படிக் கனநேரம் விளக்கு எரியக் கூடாது"
அவள் படுக்கைக்குச் சென்றாள்.
இரவு நடுநிசி.
நேரம் பன்னிரெண்டை தாண்டியிருக்க வேண்டும். தெரு நாய்களின் ஊளை காதைத் துளைத்தது.
அந்த இரச்சலின் மத்தியில் அமைதியாக அந்த வீட்டின் முன்லைட் வெளிச்சம் இல்லாமல் ஜீப் வண்டி ஒன்றுநின்றது
52 / விடியாத இரவுகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
ஐந்து காக்கிச் சட்டைகள் கீழே இறங்கின. சப்பாத்துக் காலடி ஓசை வீட்டை நெருங்கியது.
‘சந்திரன்! அதே முரட்டுக் குரல்."
‘‘ஒம் இருக்கிறன்' கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவனை அப்பு, 'தம்பி" என்று தடுத்து மறித்தார். “கொஞ்சம் இருங்கோ" என்று அவரை விலக்கி நிதானமாக வெளியே வந்தவன் முகத்தில் டோர்ச் லைட் வெளிச்சம். அவன் அப்படியே நிற்கின்றான். அருகில் வந்ததும் விளக்கை அணைத்துவிட்டு அந்த இன்ஸ்பெக்டர் கேட்டார்.
** காலையில் எங்க போனணி?' "
'ஒரு இடமும் போகேல்ல, வீட்டிலதான் நின்றனான்."" ** பொய் சொல்லாத "'
* "rחו שמa_6bbT60) L " "
* 'இண்டைக்கு அவன் எங்கேயும் போகேல்ல ஐயா! வீட்டில
தான் நின்றவன். '" நீண்ட நாட்களுக்குப்பின் ஒருவித புதிய பயம் பிறந்தது.
‘சரி; நீ ஒருக்கா ஸ்டேசனுக்கு வா!'
கொஞ்சம் இருங்க. வேட்டிய மாத்திட்டு வாறன்' ‘'இப்ப வந்திடலாம். இப்படியே வா’’
அவன் தயங்கித் தயங்கி அவர்களுடன் சென்றான். ஜீப் உறுமிக் கொண்டு விரைந்தது. அது மறையும் வரை அப்படியே வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு பார்த்தார்கள். சந்திரன் வரவில்லை. பொழுது புலர்ந்தது.
அப்பு பொலிஸ் ஸ்டேசனில் கேட்டார், இரவே அவனை விசாரித்து விட்டு வீட்டிற்கு அனுப்பி விட்டார்களாம். அப்பு சோர்ந்து களைத்து வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் மயான அமைதி.
சந்திரன் வரவில்லை. அன்று வீட்டில் சமைக்கவில்லை. யாருக்கும் பசி இல்லை. மறுநாள் சேதி வந்தது.
பிரான்சிஸ் சேவியர் / 53

Page 30
சந்திரன் முதல் நாள் உடுத்த சாரத்துடனும், சேட்டுடனும் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு வலது கையைத் தலைக்கு அணையாய் வைத்து, வாய் சிறிது திறந்தபடி அந்த முச்சந்தியில் தலை நிமிர்ந்து படுத்திருந் தான். ஈ கூட்டம் முகத்தை மொய்த்தபடி இருந்தது. பூரணம் வயிற்றிலடித்துக் கொண்டு அலறினாள். ** என்ர prnrsonrt இந்தக் கொடுமையை உனக்கு செய்தது ஆர்?"
அதன் பின். . .அதன் பின். . . அவள்தான் என்னமாய் மாறி விட்டாள்.
கண்களிலிருந்து வழிந்தோடும் நீரினூடாக மங்கலாய்த் தெரியும் ஆகாயத்தையே வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தாள் பூரணம். 'அம்மா! தாயின் மெளனத்தை கலைத்தாள் தவமணி. முந்தானையால் கண்களைத் துடைத்து விட்டு மகளை நிமிர்ந்து பார்த்தாள்.
'அம்மா! நீ ஒண்டையும் யோசிச்சு கவலைப்படாம சாப்பிட வா’ அவள் கூறிவிட்டு விருட்டென்று எழுந்து வீட்டுக்குள் சென்றாள். புகையிலைப் பெட்டியும் கத்தரிக்கோலும் அப்படியே கிடந்தது. அவள் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் பூரணம். அவளுக்கு மகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருக்கையை விட்டு எழும்போது மெதுவாக அரற்றினாள்: *" என்னவோ எப்படியோ . . வாழப்போற பிள்ளைகள் நீங்க, புத்திசாலித்தனமா நடவுங்கோ' என்று தடுமாறிய அவளின் தொண்டையை ஏதோ ஒன்று கவ்விப் பிடிக்க தொடர்ந்து பேசாமல் அமைதியானாள். அவள் போலவே அந்த வீடும் அமைதியாய் கிடந்தது. நடு இரவில் மட்டும் தூக்கம் வராமல் புரண்டு விம்மித் தவிக்கும் அந்தத் தாயின் புலம்பல் ஒரு உறுமலாய் வெளிப் பட்டு அந்த சுவரில் மோதி எதிரொலிக்கும்.
‘' என்ர ராசா! ஆர் உன்னைக் கொண்டு போனது.'
ps oubuff l980
54 / விடியாத இரவுகள்

தடம் மாறும் சுவடுகள்!
'அந்த வழுசல்கள் இப்பவெல்லாம் எல்லாத்துக்கும், உன்னையும் சேத்துக்கொண்டுதான் திரியினம். பிறகு ஒண்டெண்டா உன்னை விட்டிட்டு, எளிய சாதியெண்டு மாறிடுவாங்கள். அவங்களுக்கென்ன காரும் பங்களாவும் இருக்கு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. படிச்சாலும் படிக்காட்டியும் வீட்டில பணம்இருக்கு, உனக்கும் அப்புடியே? படிச்சு முன்னுக்கு வாற புத்தி இல்லாத கழிசறை." s
அவன் முகத்தில் துப்பாத குறையாக காறி உமிழ்ந்தார் அவர். அப்பு இப்படித்தான். ஏசப் பிடிச்சா விடாது. ஆனால் ஒரே தடவையில் ஏசிப்போட்டு விட்டிடும். நினைச்சு நினைச்சுப் புறு புறுக்காது. அவன் தலையைக் குனிந்து கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியும்! இன்னும் சிறிது நேரத்தில் அப்புவின் அந்தக் கொதி அடங்கி அன்பு சுரக்க, இதயத்தில் 'தாய் இல்லாப் பிள்ளைய ஏசிப் போட்டன் என்ற கழிவிரக்கத்தோடு, அவன் தலையைத் தடவி அவனை வருடிவிடப் போகிறார் என்று. அதை எதிர்பார்த்தவன் போல், ஆனாலும் அவரது அந்தக் கோபத்திற்கு அர்த்தம் கொடுப்பவன் போல் முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு அப்படியே கிடக்கிறான்.
அவனுக்கு அது சுகமாக இருந்தது. எல்லாம் திட்டமிட்டு நடந்ததில் ஒரு நிறைவு. ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்தத் திட்டம் அவனுக்குத் தோன்றியது. பாடசாலைப் பகிஷ்கரிப்பு என்ற சாக்கில்
பிரான்சிஸ் சேவியர் / 55

Page 31
maiseoireoraidir
சுவரில் எதிர்ப்புக் கோஷம் எழுதி, மாணவர்களைப் பாட சாலைக்கு வராமல் தடுத்து அந்தச் சாக்கில் மாணவிகள் மத்தியில் ஒரு ஹிரோவாக உயரலாம் என்ற சுகமான கற்பனையில் மிதந்திருந்த மாணவர்களின் போக்கில் சலிப்புற்று கமலன்தான் அந்தத் திட்டத்தைக் கூறினான். 'பகிஷ்கரிப்பு மாத்திரம் போதாது'
தீட்சண்யமான அவன் பார்வையின் ஆகர்சிப்பில் இரண்டு நண்பர்களும் அவன் கையைப் பற்றிக் கொண்டார்கள்.
ஒரு வார கால அவகாசம். தீர்க்கமான திட்டம்! ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பு!
கொடி பறக்க விடப்பட்டு இரண்டு நிமிடத்தில் அது எரியத் தொடங்கியது.
ஒரே பரபரப்பு!
'பாரன் பெடியன்ர மூளையை' 'இப்பத்தைய பெடியள் உஷாரான ஆக்கள்' ‘எல்லாத்தையும் கச்சிதமாச் செய்து போட்டாங்கள்' ‘இவங்கள்ளதான் விஷயமிருக்கு'
அவன் ஆவலோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக் கிறான். அப்பு ஏசிய களைப்புத் தாங்காமல் கதிரையில் அமர்ந்து காலைத்தூக்கி மடியில் வைக்கின்றார். 'உன்ர கொண்ணைமார் படிச்சு ஆளானதைக் கண்டும் உனக்குப் புத்தி இல்லாமற் போயிற்றே! உனக்குக் கிடைச்ச வசதிகள் அவங்களுக்கு எங்க கிடைச்சுது. அவங்களுக்கு இப்பிடி வசதி இருந்திருந்தா இந்நேரம்’ என்றவர் பேசமுடியாமல் பரிதாப மாக நாக்குழற, தடுமாறி வாய் அடைத்து அப்படியே மெளனமானார்.
கமலன் துணுக்குற்று எழுந்தான். அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. அந்த மெளனத்தின் கொடுமையை அவனால் சகிக்க முடியவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந் தான். அவனுக்குத் தெரியும் அப்புவின் அப்போதைய வெப்புசாரம். நாளும் பொழுதும் அவர் உருப்போட்டு அவனுக்குச் சொல்லித்தந்த அந்த அவலமான அனுபவ முத்திரைகள். . .
56 / தடம் மாறும் சுவடுகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
சமூகத்தின் சுயநலத்தால் இழைக்கப்பட்ட அந்தக் கொடுமைக்கு அர்த்தம் காண முடியாமல் நைந்துபோன அந்த இதயத்தில் வக்கரித்த வார்த்தைப் பொருமல்கள்!- அவர் கூறுவார் பொருமிப் பொருமி:
"உன்ர மூத்த கொண்ணைதான். . உங்க எல்லாருக்குள்ளை யும் நல்ல வடிவு. பிறக்கேக்க முருகன் மாதிரி வடிவென்று கொம்மா சொன்னதால அவனுக்கு மணியம் என்று பேர்வைச்சன். அவன் சாகேக்க உனக்கு ஐஞ்சு வயசிருக்கும். தாயைத் திண்டு வளந்த உன்னில கொண்ண நல்ல பாந்தம். எந்த நேரமும் உன்னைத் தோளில போட்டபடி, பள்ளிக் கூடத்தில அப்ப கொடுக்கிற பாணை வைச்சிருந்து உனக்குக் கொண்டுவந்து கொடுக்கும்."
"ஆள் சரியான சுட்டி. நிமுசம் சும்மா இரான். ஆனா சரியான ரோசக்காரன். அவன் படிச்சது ஒரு ஐயர் பள்ளிக்கூடத்தில. அந்த வாத்தியார் சரியான சாதித்திமிர் பிடிச்சுது. எங்கட பிள்ளையளக் கதிரையில இருக்கவிடாது. நிலத்திலதான் இருக்கவிடும். பள்ளிக்கூடக் கிணத்தில தண்ணி அள்ளிக் குடிக்கவும் விடாது. வெள்ளாம் பிள்ளையன்டதான் தண்ணிவாங்கிக் குடிக்க வேணுமிண்டு கட்டளை. எங்கடபிள்ளையஸ் தண்ணி வேணுமிண்டா வெள்ளாம் பிள்ளையன்ட போய்க் கெஞ்சவேணும். உன்ர கொண்ணைக்கு இதொண்டும் பிடிக்காது. அவன் சரியான ரோசக்காரன். அந்தச் சின்ன வயசிலேயே தண்ணி விடாயோட கிடக்கும். ஆரிட்டயும் கெஞ்ச மாட்டான். வீட்ட வந்துதான் வாயில தண்ணியை வைக்கும். உன்ர சின்னண்ணையைக்கூட பள்ளிக்கூடத்தில தண்ணிகுடிக்க விடாது. அப்படிக் குடிச்சா ஏசும். உவையள்ட தண்ணி வாங்கிக் குடிக்கிறதை விட வேர்வையை நக்கிப்போட்டு கிடந்திடலாம்." என்று சொல்லும்.
"அவன் எஸ்.எஸ்.சி சோதினையைப் பாஸ் பண்ணினதும் பாக்க வேணுமே ஆக்கள்ற நாக்கு வழிப்பை. இந்த அயலில எங்கட சாதியில முதன்முதல் சோதினை பாஸ் பண்ணினது உன்ர கொண்ணைதான். அட, வெளி ஆக்கள் மாத்திரமில்ல எங்கட ஆக்களுக்கும் இதால பொறாமை. எத்தினை எத்தினை பேரின்ட பொறாமையை அவன் சமாளிச்சிருக் கிறான். ஆனா ஒண்டையும் வெளிய சொல்லான். எல்லாம் தன்பாட்டுக்கே. ஆரின்ட புத்தியும் கேட்காம எல்லாத்தை யும் சரியா செய்வான்.
"அவனுக்கு கிளறிக்கல் வேல கிடைக்கேக்க பதினெட்டு வயசுதான். ஆரும் நம்புவீனமே. எல்லாம் அவன்ட
பிரான்சிஸ் சேவியர் / 57

Page 32
6 s5 Mor RosTafar
பிரயாசை. அவன் லோங்ஸ் போட்டு வேலைக்குப் போற அழகப் பாத்து பேசாத மணிசரில்ல. எப்புடியெல்லாமோ உயர்ந்திருக்க வேண்டிய பலன் அவனுக்கு இருக்கு. ஆனா. . எல்லாம் மண்ணாப் போச்சு . . என்ட குஞ்சுமணியம். . "
'மணியம் ஒரு வெள்ளாம் பெட்டையக் கிளப்பிக் கொண்டு போய்ச்சாம்' மரணப்படுக்கையில் இருந்து உயில் எழுதும் பரபரப்பும் நிதானமும் கலந்த தொனியில் அப்புவிட்ம் , கேட்டார்கள். w
'ஊர் இருக்கிற நிலவரத்துக்குள்ள உன்ர பிள்ளையின்ர வேல என்ன?*
‘எங்கட சாதிக்கிள்ள புள்ள இல்லயெண்டா இப்புடிச் செய்தவன்”*
* 'இப்ப நயினாமார் சும்மா விட்டிருவாங்களே'
மணியத்தின் நண்பர்கள் ஓடிவந்து அப்புவுக்கு ஆறுதல்
கூறினார்கள்
'நீங்க ஒண்டுக்கும் பயப்பிடாதைங்க. அவங்க ரெண்டு பேரும் எங்க வீட்லதான் இருக்கிறாங்க. பெட்ட நல்ல குணமான ஆள். மணியத்தை நல்லா விரும்புது. பேசாம கட்டி வையுங்க'
*"உவங்கள் யாரையும் கூட்டி அழப்பிச்சா எங்கட கை சும்மா இருக்குமே?'
"யாரும் சும்மா இருக்கவில்லை!" ஒரே களேபரம்
அடி!
பதிலடி! வீடுகள் தீக்கிரையாகிச் சாம்பராயின.
தொழிலின்றி வெளியே செல்லாமல் முடங்கிக் கிடந்தார் கள் ஆண்கள்.
அந்தப் பரபரப்பின் மத்தியில் மணியம் மாலதியோடு வந்தான். கூடவே ஒரு கூட்டம் பின்னால் வந்தது.
‘‘இனி பொறுக்கக்கூடாது. கெதியில கலியாணத்தை
58 / தடம் மாறும் சுவடுகள்

தீர்த்தக்கரைக்கதைகள்
நடப்பிக்க வேணும். இவனுகளுக்கு இதச்செய்து காட்ட வேணும்.’’
கலியான ஏற்பாடுகள் அந்த அவதியிலும் ஒரு உற்சாக வெறியுடன் ஆரம்பமாயிற்று. அன்று பிற்பகல் நன்றாக இருட்டிய பின்பு ஜீப் வண்டி அந்த வீட்டில் வந்து நின்றது. இரண்டு பொலிஸ்காரர் சகிதம் இறங்கிய இன்ஸ்பெக்டர் குண்டாந்தடியைச் சுழற்றிக் கொண்டு நின்றார். மணியம் முன்னே சென்றான்.
'மணியம் உங்கள்ள ஒரு கொம்பிளேன் இருக்கு. நீங்க ஒரு மைனர் பிள்ளையக் கடத்திட்டு வந்தீங்கெண்டு.”*
அப்பு இடைமறித்தார்.
"இல்லை ஐயா! அந்தப் புள்ளயும் பிரியப்பட்டுத்தான் வந்திருக்கு. வேணுமிண்டா கேட்டுப்பாருங்க. '
அப்புவின் வியர்வை நாற்றத்தாலும், தளர்ந்து போன உடம்பின் சுருக்கங்களாலும் அருவருப்படைந்து முகத்தைச் சுழித்துக் கொண்டு "அதப்பற்றிப் பிறகு பாப்பம். இப்ப ரெண்டு பேரும் ஜீப்பில ஏறுங்க" என்றார்.
மணியத்தையும் மாலதியையும் ஏற்றிக்கொண்டு சென்ற
அந்த ஜீப்பின் அசுர வேகத்தில் அப்பு ஒருகணம் நிலை குலைந்து நின்றார்.
*"அந்தப் புள்ள விரும்பேக்க சட்டம் என்ன செய்யும்?* என்ற நினைப்பில் பின்னாலேயே பொலிஸ் ஸ்டேசன் சென்ற அவருக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள் என்ற வகையில் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். மாலதிக்கு மணியத்தைக் கட்ட விருப்பமில்லையாம். பொலிசில சொல்லிப் போட்டுதாம். அவளுடைய வீட்டிற்கு அவளை அனுப்பிப் போட்டாங்களாம்.மணியம் அவளைக் கடத்தின குற்றத்திற்காக றிமாண்டில் இருக்கிறானாம். ' அப்பு வெட்கித் தலை குனிந்தார்.
"அந்தச் சண்டாளி என்ர புள்ளையின்ர பேரை இப்புடியா கெடுக்க வேணும்.'
மறுநாள் அவனைப் பிணை எடுப்பதற்காக, காண் உறுதியையும் தேடி எடுத்துப் புறொக்டர் வீட்டிற்குச் செல்ல ஆயத்தம் செய்யும் போது சேதி வந்தது. ‘மணியம் அவமானம் தாங்காமல் வேட்டியைக் கிழித்து சுருக்குப் போட்டு, செத்துப் போயிற்றானாம்.'
பிரான்சிஸ் சேவியர் 59

Page 33
கந்தலாலாவின்
அப்பு அப்படியே சாய்ந்து விட்டார். அவர் மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது
சமூகத்தின் ஒவ்வொரு தடைக் கற்களையும் எதிர்நீச்சல் போட்டுத் தாண்டி வந்த மணியம் சவமாக உள்வீட்டில் நீட்டிக் கிடந்தான்.
அவரால் நம்ப முடியவில்லை.
** என்ர புள்ள ஒருக்காலும் தற்கொலை செய்யமாட்டான். இதுல சூது இருக்கு." அந்த அழுகுரல் ஓயவில்லை.
'உந்தப் பொலிசை நம்பி மோசம் போனனே. எல்லாம் அவங்கட ஆக்கள். என்ர புள்ளைய அவங்கள்ட ஒப்படைச்சது எவ்வளவு பெரிய பிழை" நிராதரவாகத் துடித்துக்கொண்டிருந்தார்.
இயலாமையின் பரிதவிப்பு.
திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவர் போல ஏதோ ஒரு வேகத்தில் அச்சுவேலிக் காணியை விற்றுப்போட்டு பஸ் ஏறி ஒரு கையில் பழைய ட்ரங் பெட்டியும், மறுகையில் ‘அப்பு துரக்கு, நடக்க ஏலாது” என்று சிணுங்கும் கமலனையும் பிடித்துக்கொண்டு திருகோணமலைக்கு வந்து சேர்ந்தார். திருகோணமலையின் சித்திரை மாதப் புழுக்கத்தைத் தாங்காமல், அப்போது அவர் உடம்பு தெப்பமாக நனைந் தாலும், மனதுக்கு சுகமான சூழ்நிலைகள்.
"அண்ணெய்!”*
"அப்பு' அவர் முகம் அறியாத மனிதர்கள் அந்த முதுமைக்குக் கொடுத்த மதிப்பு.
அவர் சில்லிட்டு நின்றார்.
ஒரு புது நம்பிக்கை பிறந்தது.
"'என்ன சாதியோ!என்னிலும் நல்லதோ' என்று ஆரம்பத் தில் சங்கடப்பட்டு தடுமாறிய அவர், பின் அந்த சூழலுக் கேற்ப தன்னையும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்.
கமலன் வளர்ந்து வந்தான். அவன் வளரும்போது மணியத்தின் துடுக்கும், யதேச்சைப் போக்கும் கூடவே அவனில் வளர்வதை அவர் அவதானிக்கத் தவறவில்லை.
60 / தடம் மாறும் சுவடுகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
மணியத்துக்கு நடந்த அந்தக் கொடுமையின் வடு சதா அவரைச் சந்தேகக் கண்கொண்டு, பழி வாங்கத் துடிக்கும் சூடுபட்ட சிறுத்தை போல அவர் மனதை அரிக்கும் . அந்தத் துயரம் கமலனின் வாழ்விலும் தொடரக்கூடாதென்ற வைராக்கிய உணர்வில் உருப் போட்டுக் கூறுவார். .
'காலம் என்னதான் மாறினாலும். இந்தச் சாதித் துவேஷம் இவங்கள்ட மாறப்போறதில்லை.'
கமலனைத் தேடிவரும் நண்பர்களை, அவன் வீட்டில் இல்லாத வேளைகளில் அப்பு பேட்டி காண்பார்.
"நீங்கள் பெரிய சாதியள். எங்கட வீட்டில சாப்பாடு, தண்ணி குடிக்கிறது தெரிஞ்சா உங்கட வீட்டில கோவிக்க மாட்டாங்களோ, நீங்க பெரிசா காதல், கீதல் என்று. . " நீங்க முடியுமெண்டா ஆரும் குறைஞ்ச சாதி பெடிச்சிகளை காதலிச்சு சடங்கு முடியுங்கோ பாப்பம்'
அவர் வேடிக்கை போல் பேசி காரியமாக அவர்களை அள விடுவார். சில வேளைகளில் சாடை மாடையாய் மணியத் தின் கதை வரும். அப்பொழுதெல்லாம் இறுதியில், *சொல்லுங்க தம்பி, நீங்க படிச்ச பிள்ளையஸ். என்ட மகன் வெள்ளாம் புள்ளயக் கட்டப் போறான் என்டதற்காக ஊரைக் கொளுத்தி பிறகு அவனையும் சாகடிச்ச நேரத்தில மெளனமா இருந்திட்டு இப்ப நாங்க எல்லோரும் ஒரு இனம் என்றிரதுல என்ன அர்த்தம் இருக்கு. உதில என்ன நியாயமிருக்கு"
அவர்கள் அந்தக் கேள்விக்கு விடை கூறாமல் மெளனமாக இருந்துவிட்ட ஒரு தலைமுறையின் கொடுமையை மனதுக் குள் சபித்து ஏக்கப் பெருமூச்சை விடுவார்கள்.
அப்பு நிறைவோடு பார்த்துக் கொண்டிருக்கிறார். 'மணியத்தின்ட துடிதுடிப்பு அப்படியே இருக்கு. எதுக்கும் முன்னு க்குப் போற புத்தி. ஆனா இவனுக்கு இருக்கிற செல்வாக்கு அவனுக்கு இல்லாம போயீற்று.”*
கமலன் மிக உற்சாகமாக வீதி அலங்கரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.ஒரு கையில் அலவாங்கும், மறு கையில் தண்ணி வாளியுமாக இளைஞர்கள் ஒவ்வொரு குழியிலும் தண்ணிர் ஊற்றுவதும், அது வற்றியபின் தோண்டுவதுமாக வழிந்தோடும் வியர்வையை அசட்டை செய்தபடி மும்முர
பிரான்சிஸ் சேவியர் / 6

Page 34
நக்தலாலாவின்
மாக நிற்கின்றார்கள், வர்ண டியூப் பல்ப்புகள்,சோடனைக் காகிதங்கள், பூக்கள், இலைகள். ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கமலன் அவர்களுக்கு விடுக்கும் கட்டளைகளை ரகசியப் பெருமையோடு ரசித்துக் கொண்டு'மழை இல்லாம தரை நல்லா வலிச்சுப் போச்சு. பாருங்களன், ஒரு குழி தோண்ட பிள்ளைகள் எவ்வளவு கஷ்ட்டப்படுகுதுகளென்டு.'இளைஞர் களின் அந்தப் பிரயாசைக்கு அப்புவின் உற்சாகம்.
உச்சிப்பொழுது. இன்னும் மூங்கில் தடிகளே நாட்டி முடிக்க வில்லை என்ற அவதியில் கமலன் வேகமாக அலவாங்கைப் போடுகிறான். அது கல்லில் பட்டு பொறி கிளம்புகிறது.
**இதுல என்ன றோட்ட ஒடைச்சு குழிதோன்றிரது" இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு கொடுப்புக்குள் வெற்றிலையை நாக்கால் தள்ளிவிட்டுக் கொண்டு பேக்கரி முதலாளி சில்வா கட்டைக் குரலில் கேட்டார்.
கமலன் நிமிர்ந்து பார்த்தான்.
அவர் அண்மையில் தான் அங்கு வீடு கட்டி குடிவந்தவர். அவன் வழிந்தோடும் வியர்வையைக் குனிந்து சாரத்தால் துடைத்துவிட்டு சிரித்துக் கொண்டு கூறுகின்றான்.
'முதலாளிக்குத் தெரியாதா? இண்டைக்கு கோணேசர் ஊர்வலம் வாறது. அதுதான் சோடிக்கிறம்.'
'ஒங்கட கோணேசர் வாறதுக்கு ஒங்கட ஊட்டு முன்னால சோடியுங்க. ஏன் இஞ்ச வாறிங்க. எனக்கு இதுல பிரிய மில்ல" அவர் கண்டிப்போடு சொன்னார்.
கமலன் அலவாங்கோடு எழுந்து நின்றான்.
'இது பொது விசயம்தானே முதலாளி. வருசா வருஷம் சோடிக்கிறது. அப்ப நீங்க இல்ல. இதில இப்ப சோடிக் கிறதில உங்களுக்கு என்ன கஷ்டம் வந்திட்டுது. யூ.சி. றோட்டுத்தானே’’
'ஆ. . . . அப்படி இல்ல. ஒங்கட கொண்டாட்டத்தை ஒங்கட வீட்டுள்ள வைச்சிக்கோங்க. எங்கள்ட காட்ட வாணாம். நீங்க ராத்திரி பூரா ஸ்பீக்கர் போட்டுக் கத்துவீங்க. அது எங்களுக்குச் சரிப்பட்டு வராது,' " அவர் குரலில் கண்டிப்போடு சேர்ந்து கேலியும் தொனித்தது.
"'உங்கட வெசாக் கொண்டாட்டத்துக்கு நாங்க எதுவும்
62 / தடம் மாறும் சுவடுகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
சொல்லுறமா? அதுக்கும் ஊரெங்கும் வேண்டிய மாதிரி பந்தல் போடுறீங்களே.'
அவன் குரலில் சூடேறியது.
'ஆ வெசாக், அது தேசிய கொண்டாட்டம். அதுக்கு கவுண்மேந் ஒடர் இருக்கு. இதுக்கு இல்ல தெரியுமா?சும்மா விசரன் மாதிரி கத்தினா இந்தப் பந்தல் எல்லாத்தையும் வெட்டிப் போடுவன்.""
அவரது அந்த ஆக்ரோசமான தொணியைக் கேட்டு, அவரது வேலையாட்கள் இருவர் ஓடிவந்து "ஏய்! என்ன நீ இதுல கைவார் போடுற" என்று அவனை நெருங்கினார்கள்.
நடக்கப்போகும் அசம்பாவிதத்தை அறிந்து அதற்குள் கமலனின் நண்பர்கள் ஓடிவந்து அவனை இழுத்துச் சென்றார்கள்.
** சொன்னாக் கேள். இவங்களோட கொழுவினா இண்டைக்கு கோணேசர் ஊர்வலத்தில குழப்பம் பண்ணு வாங்க. பேசாம வா. பிறகு பாப்பம். இது மட்டும் சோடிப்பம்.""
'நீங்க எப்பவும் இப்படித்தான். இவ்வளவு பேர் நின்றும் அவனுகள் ரெண்டு பேரைக்கண்டதும் ஓடி வந்திட்டீங்கள்' அவன் கைகளை உதறி விட்டுக் கூறினான்.
"நாங்க பயந்து ஒடல்ல. எப்பவும் நிதானம் வேணும். இப்ப கொழுவினா எங்களுக்குத்தான் கூடாது. கோணேசர் ஊர்வலம் முடியட்டும். '
'இப்படித்தான் எப்பவும் சொல்லிறது. அவன் பேசேக்க விட்டுக் கொடுத்திட்டு பிறகு பாப்பம், பிறகு பாப்பம் என்று சொல்லித்தான் அவங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்து போயிற்று. ’’
இவன்களின் இந்த இழுபறியைச் சுவரில் சாய்ந்து கொண்டு அந்த இருவரும் வேடிக்கையாக ரசித்தார்கள். ஒருவன் குறும்புச் சிரிப்போடு சீண்டினான்.
'கோணேசர் ஊர்வலமா நடத்துறிங்க. ஒங்கட கோணேசர்
போன வருசம் கடலுக்குக் குளிக்கப் போனவர் தானே. பொறகு எப்பவாம் குளிச்சு வந்தவர்."

Page 35
கந்தலாலாவின்
ரத்தம் சூடேறியது.
இமைப்பொழுது நேரம் ; கையிலிருந்த அலவாங்கோடு மின்னலெனப் பாய்ந்த கமலன் தாறுமாறாக . . மாறி. . . மாறி இந்த வேகத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. *அம்மே! கானவா !”
அவர்கள் அலறிக் கொண்டு ஓடினார்கள். மறுவிநாடி கமலனை இழுத்துக் கொண்டு எல்லோரும் ஓடி மறைந்தார்கள். அலங்கார வேலைகள் யாவும் ஸ்தம்பித்து நின்றது. ஒரே நிசப்தம்!
எல்லோரும் ஒன்று கூடினார்கள்.
இனி என்ன செய்வது? அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். எப்படியும் தாக்க வருவார்கள். அதற்கு ஆயத்தம் செய்ய வேண்டும். “சோடினை வேலை இம்மட்டோட போதும்' ஒருவர் கட்டளையிட்டார்.
அப்பு விசயம் அறிந்து ஓடிவந்தார். "உவன் கழிசறைக்கு இதுதான் வேல. எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னுக்குப் போறது.' எல்லாரும் அவரைத் தடுத்தார்கள். 'அவன ஏன் திட்டுறீங்க. அவனில என்ன பிழை இருக்கு." "இவன் செய்த வேலயால இண்டைக்கு கோணேசர் ஊர்வலம் பிழைப்படப் போகுது." "நல்ல கதைதான். அவனுகள்ற காலில விழுந்தா நாம கோணசர் ஊர்வலத்தை நடப்பிக்க வேணும். அதைவிட சும்மா இருந்திடலாம்.'
' ' G35 frcootstri ஊர்வலம் இண்டைக்கு இல்லாட்டி வாறவருசம், ஆனா இருக்கிற இடத்தில நாம எப்பவும் உரிமையோட வாழவேணும்.' 'கொழுவலுக்கு அவங்க வந்தா நாம சும்மாவிடப்படாது' அப்பு பேசுவதற்கு வார்த்தைகள் அற்று அவர்களை மலங்க மலங்கப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார்.
64 / தடம் மாறும் சுவடுகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
அந்தி சாயும் வேளையில் சந்திக் கடைக்கென்று வெளிக் கிட்டவர் திகைத்து நின்றார். இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருந்து இறங்கினார். அப்பு உடனே வீட்டிற்குள் பார்த்தார். கமலன் இல்லை. ஒரு நிம்மதிப் பெருமூச்சு !
** நீதான் கமலன்ட அப்பாவா? **
"ஒம் gшт! y is
* "எங்க அவன்? ' **வெளிய போனவன். இன்னும் வரவில்லை. ' அதற்குள் கூடவந்த இரண்டு பொலிசார் வீட்டையும் வளவையும் சுற்றி வந்தார்கள். கண்களைக் கூர்மையாக்கி. குரலைக் கடுமையாக்கி போகும் போது இன்ஸ்பெக்டர் கேட்டார். 'உன்ட மகன் காலயில சண்டை போட்டதா?’’
"தெரியாது ஐயா’ அவர் முகத்துக்கு நேரே உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னார்.
* 'அவன் வந்தா ஸ்டேசனுக்கு அனுப்பி வை சரியா’’ 'ஓம் ஐயா!'
அப்பு ஒடிந்து போய் உட்கார்ந்தார். 'கோணேசா ! என்ட பிள்ளைய இந்தப் பிசாசுகள் கையில சிக்க விட்டிடாத .'"
அக்கம் பக்கமிருந்து கூட்டம் சேர்ந்தது. "பயப்பிடாதைங்க!"
"பயப்பிடாதைங்க!"
கமலன் வீட்டுக்கு வரவில்லை. அன்று இரவு அப்பு உறக்கமின்றிக் "கழித்தார். கோணேசர் ஊர்வலம் வந்தபோது மட்டும் வீதிக்குச் சென்று, மானசீக மாக வேண்டினார்.
அங்கும் கமலன் இல்லை. எல்லோரும் குழப்பத்தை எதிர் பார்த்து தயாராக
இருந்தார்கள். ஆனால் எதுவித அசம்பாவிதமும் நடக்காமல் ஊர்வலம் திரும்பியது.

Page 36
மறுநாள் காலை சைக்கிள் சத்தம் கேட்டுத் துள்ளி எழுந்தார். கமலனின் நண்பன் ஒருவன்!
வீட்டிற்குள் வந்து தாழ்ந்த குரலில் ரகசியமாகக் கூறினான்.
"அப்பு! கமலன் இந்தக் கடிதத்தை உங்கள்ட தந்தவன். இதில விபரமா எல்லாம் எழுதியிருக்கிறான். இப்ப அவன யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி இருக்கிறம். கொஞ்ச நாளைக்கு அங்க இருக்கட்டும். நீங்க எதுக்கும் பயப்பிடாதையுங்க. நேற்று பேக்கரி முதலாளி வீட்ட பொலிஸ்மாருக்கு விருந்து போட்டவங்க. இப்ப கமலன் அவங்கட கையில அம்பிட்டா என்ன செய்வாங்களோ தெரியாது. நீங்க எதுக்கும் யோசிக்காதிங்க. அவன் யாழ்ப்பாணத்தில டியூட்டரியில படிக்கட்டும். அங்க அவன் பாதுகாப்பா . . . . . . " "
அவன் சொல்லி முடிக்கவில்லை! அப்புவுக்குத் திக்கென்றது.
நெஞ்சில் யார் பாறாங்கல்லை வைத்தது.
பதறிப்போய், அவன் கைகளைத் தனது நடுங்கும்
கரங்களால் கெட்டியாகப் பற்றிக் கொண்டு, அவனது
முகத்தைத் திகிலுடன் பார்த்துக் கொண்டு பரிதாபமாக, பதறிய மெல்லிய குரலில் அவசரமாகக் கேட்டார். *தம்பி! தம்பி யாழ்ப்பாணத்துக்கா போனவன். சாதித் திமிர் கூடின அந்த இடத்த, அங்க அவன் அந்த வெள்ளாம் ஆக்களோட பிரச்சனை இல்லாம இருக்க ஏலுமா? இளைஞன் திடுக்குற்று விழித்தான். அவனது முகபாவனை விபரிக்க முடியாத ஒரு மாற்றத்திற்குள்ளானது. கணநேர மெளனத்தின் பின், அவரை உற்றுப் பார்த்துவிட்டு, அவனது குழந்தைத்தனமான அகன்ற விழிகள் பளபளக்க, நிதானமாக நிறுத்தி, நிறுத்தி* “ஓம் அப்பு. இப்ப அங்க அவன் ஒரு பிரச்சனையும் இல்லாம இருப்பான்’ என்றான் ஒரு உறுதியில். அப்பு அவனது அந்த அகன்ற விழிகளை ஏறிட்டு நோக்கி னார். . . அதில் தான் எத்தனை தெய்வீகம்!
ஜனவரி-1982
66 / விடியாத இரவுகள்

J. GTG), 555JBLITG)
இவர், மலையகத்தின் வேர்களை, குறிப்பிட்ட ஓர் காலப் பகுதியில் தொட்டுப் பார்த்த ஒரு இளைஞர். அதன் பிரதிபலிப்புகளை 9 aur எழுத்துக்கள் ஆங்காங்கு ஏந்தத் தவறவில்லை.

Page 37
என்று தணியும் இந்த. !
உதறிப்போட்ட புற்களைப் போல, அவனது முடி கண்ட படி. . . . சட்டைக்கும். . . . கால் சட்டைக்கும். . . . ,}מ வேறுபாடேயில்லை; ஏனென்றால் இரண்டுமே ஒரே புழுதி யில் புரண்டது தானே. உடல் நல்ல கறுப்பு. கண்கள் துருதுருவென்று. இவன்தான் அந்தக் கந்தையாவின் ஏழாவது பிள்ளை.
இவனுக்கு இப்போது பன்னிரண்டு வயதிருக்கலாம் என்ற உண்மையை அந்த சிட்டுக் கிழவியும் பொடிகாமியும் கூறியபோது தான் அறிய முடிந்தது. இல்லாவிட்டால் ஏழு வயது பிள்ளையென்றே நினைத்திருக்கக்கூடிய அப்படிப்பட்ட உருவத்துக்குரியவனாகவே தோற்றமளித்த அவனை, "அடேய் அம்பாஸ்ட்டர்’ என்று கூப்பிட்டால் போதும். "ஐயோ. . இன்னும் எங்க அக்கா சடங்கா வலங்களே" என்று உரக்கவே கூறிவிடுவான். இந்த இளவயதிலேயே இதையெல்லாம் கூறிப்பழக்கிய பெருமை அந்தச் சிட்டுக் கிழவியையே சேரும். சின்னஞ்சிறுசுகளை விடுவதாக இல்லை அவள். “ ‘அந்தக் கிழவியைக் கட்டிக்கிறியா?' 'அவன் ஒங்க மச்சான் தானே' . . வாடா என்புருஷா' என்று செல்லம் கொஞ்சி விளையாடு வதில் சாமர்த்தியசாலியான அவளுக்கு வேறு என்னதான் முடியும்? சிறார்களின் மூக்குக்களைக் கூடச் சுத்தமாக வைத்திருப்பதற்கு வழிகாட்ட முடியாது.
அந்தக் கந்தையாவின் மகனான 'கல்லுமண்டிப் பயல், தினந்தோறும் அந்த லயத்தில் இருக்கும் சோமு, லீலாவின் மகள் "ஆயிபுள்ள ‘கட்டவெட்டி", "பூனைக்கண்ணி எல்லோரையும் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு மிளாரு (விறகு) தேடப் போவதில் வில்லனாகவே இருந்தான். மிளார் பொறுக்குவதில் அவனுக்கு நிகர் அவனே.
அவனுக்கென்று தற்போது இருக்கும் பெரிய சொத்து, தலையில் நான்காக மடித்து வைக்கக் கூடிய அளவில் உள்ள ஒரு சாக்குத் துண்டும் அவன் இடுப்பைச் சுற்றி பத்துச் சுற்று சுற்றுமளவில் உள்ள ஒரு தும்பக் கயிறும் தான். இதை
68 / என்று தணியும் இந்த .

எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான். இரவில் படுக்கும்போது கூட அந்தச் சாக்குத் துண்டைத் தலையில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான். இரவில் நித்திரைக்குப் போகுமுன் அவனது தந்தை அவனுக்குக் கொடுத்திருக்கும் உறுதிமொழியையும் நினைவு படுத்திக் கொள்வான். " "அப்பாத்தான். . . எனக்குச் சொரண்டி, புஸ்கோட்டு எல்லாம் வாங்கித் தாரேன்னு இருக்காரே! அந்த உறுதியில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
கிழமை நாட்களில் விறகு தேடுதலும் மாலை நேரங்களில் குருவி அடிப்பதுவும். அதுவும் இல்லாதுவிட்டால் ‘கூட்டுமார் புல்லு" வெட்டப் போவதும் வழமை. மாலை நேரங்களில் தான் சிட்டுக் கிழவியும் குழந்தைப் பிள்ளைகளுடன் விளையாடுவாள். ஒரு நாளைக்குச் சிட்டுக்கிழவி படுத்து விட்டால் தோட்டமே வெறிச்சோடிப் போய் விடும் என்று அந்தப் பொடியாமிதான்கூறுவாள்.
சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு மெழுகுவதற்கு கல்லு மண்டிப் பயலின் கோஷ்டி வெள்ளை மண் தோண்டுவதற் கும், சாணி எடுப்பதற்கும் ஆளுக்கொரு சுரண்டியை எடுத்துக்கொண்டு போவார்கள். தோண்டி எடுப்பதை எப்படியாவது உருட்டிக்கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அந்தச் சுரண்டியைப் பிடித்ததும் அவர்களுக்கு ஒரு பெரிய தெம்பே ஏற்பட்டு விடும். சம்பளத்துக்குப் புல்லு வெட்டப் போகும் பெரிய நினைப்பே அவர்களிடம் மேவியிருப்பதைக் காணலாம். சில நாட்களில் தூரத்து மலையில் கொழுந்து எடுப்பதாக இருந்தால் தேநீர் எடுத்துக் கொண்டும் புறப் பட்டு விடுவார்கள்.
இப்போதெல்லாம் 'கல்லுமண்டியின்" கோஷ்டிக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது. புதிதாக நாட்டுப்பகுதியில் இருந்து வந்து தோட்டத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கும் பாஸ்மார் களுக்குக் கல்லுத் தூக்கிப் போடுவதுதான். அந்த அப்பு ஹாமிபாஸ் வீடு கட்டி முடிந்ததும் கல்லுமண்டிக் கோஷ்டிக்கு ஒவ்வொரு ரூபாய் தருவதாகக் கூறியிருந் தார். அதில் ஒரு சதம் கூடப் பிசகாமல் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் எல்லோருமாகக் கல் தூக்கிப் போட்டார்கள்.
கற்கள் தூக்கிப் போட்டதில் சோமுவுக்குத்தான் சிரம மாகப் போய்விட்டது. அவனது காலில் ஒரு கற்பாறை உருண்டு விழுந்து விட்டது. இருந்தும் அவன் விடவில்லை, * சும்மாவா ஒரு ரூவா' என்று நொண்டிக் கொண்டே கற்களைத் தேடுவான்.
ஏ. எஸ். சந்திரபோஸ் / 69

Page 38
sisu rared
இந்த அப்புஹாமி பாஸின் ஒரு ரூபாவை எண்ணி 'கல்லு மண்டி"தனது மாமாவிடம் மாமா படத்துக்குக் கூட்டிட்டுப் போ மாமா. . . நான் பாஸையா சல்லி கொடுத்ததும் தாரேன்’ என்று அடிக்கடி தொல்லை கொடுத்து ஒரு படத்தையும் பார்த்து விட்டதாக கந்தையா தனது மைத்துனனான பொன்னையாவிடம் அடிக்கடி கூறுவான்.
ஒருநாள் பொடிகாமிக்கு மிக நெருக்கிய வழியில் உறவின ரான ஒருவர்-ஒன்றுவிட்ட சகோதரனாம்-பொடிகாமி வீட்டிற்கு வந்தார். அப்போது கேகாலையில் தான் வைத் திருக்கும் கள்ளுக்கொட்டிலுக்கு நன்றாக வேலை செய்யக் கூடிய நம்பிக்கையான பையன் தேவை என்றதுமே பொடி ஹாமி ஒ. . . இந்தா இந்த சிட்டுக் கிழவியிடம் கூறினால் தான் தேடிக் கொண்டு வந்துவிட மாட்டாளா? என்று நினைத்துக் கொண்டான்.
சிட்டுக் கிழவிக்கு அந்த எண்ணம் மெல்ல உறுத்தத் தொடங்கி விட்டது "ஆமா. . . அந்த கல்லு மண்டியத்தான் அனுப்பலாம் என்ற பேராசையுடன் கந்தையாவிடம் வாய் விட்டுக் கேட்டும் விட்டாள். கந்தையாவுக்கோ "ஏய் என்னா தடிக் கழுத மோசக்காரி, நான் தான் அடிமையாப் போயிட்டேனா" என் புள்ளையை யும் யாருக்கும் பத்து ரூபாய்க்கு வித்துப்புடுவேன்னு நெனைச்சியோ" என்று கேட்பதற்குத்தான் துணிவு வரவில்லையே.
கிழவி வந்து கேட்டதுமே "சரியப்பா கொடுக்கிற தெய்வம் கூரையப் பிச்சுக்கிட்டுக் கொடுக்குற மாதிரி இல்ல. . சொல்லி ஏற்பாடு செய்யி, நம்ம வயிறுதான் காயுதுன்னா ஏன் புள்ளைங்க வயிறும் காயனும். அதுங்கனாலும் போயித் தேறட்டும். . .ஊரையும் பாத்த மாதிரி இருக்குமில்ல. . . அந்த மேட்டு லயத்து கங்காணிவுட்டுப் பேரன் இப்போ எப்புடி இருக்கான்! யாரும் தோட்டக் காட்டுப் புள்ளைன்னு சொல்லுவாங்களா?, என்று மிகுந்த நயத்துடன் கூறி முடித்தாள் கந்தையாவின் மனைவி ‘பெரமாயி. மறுநாளே, கோலாகலமாகப் பிரயாண ஏற்பாடுகள் நடந்தேறின. கல்லுமண்டிக்கு எவ்வித சலனமும் இல்லை. காலைப் பொழுதில் கல்லுமண்டி புறப்பட்டு விட்டான். மூக்கு, பற்கள் எல்லாம் கந்தையாவின் பெரிய முயற்சியால் சுத்தமாகக் கழுவப்பட்டது. கந்தையா எவ்வளவு சிரமப் பட்டானோ தெரியவில்லை. கல்லுமண்டி காலையில் நல்ல மேற்சட்டையும் காற்சட்டையும் போட்டிருந்தான்.
கல்லுமண்டி, அம்மா அப்பாவின் ஆசியுடன் முன்பின்
70 I என்று தணியும் இந்த, .

தீர்த்தக்கரைக் கதைகள்
தெரியாத ஆனால் அந்தப் பொடிகாமிக்கு மிகவும் வேண்டியவருடன் புறப்பட்டு விட்டான்.
வீடுகளில் ஆட்டுக்குட்டியும், கன்றுகளும், கோழிக்குஞ்சு களும் அவன் போவதைப் பார்க்கத்தான் செய்தன. அவனின் நண்பர்களும் வேடிக்சுை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ஆயிபுள்ள கல்லுமண்டியிடம் வந்து 'அந்தச் சாக்கையும் கயித்தையும் எடுத்துக்கவா" என்றாள். அப்போது கூட அவன் விடுவதாக இல்லை. சற்று யோசித்து விட்டுச் சொன்னான். "நா திரும்பி வந்தோடன கொடுத்துடனும் என்றான்.
பொடிகாமிக்கு வேண்டியவர் கந்தையாவிடம் கல்லுமண்டி யின் பெயர் என்னவென்று- மெயாகே நம மொனவத" என்று கேட்டார். கந்தையாவும் கல்லுமண்டியின் தலையை வருடியவாறு சும்மா எல்லாரும் மஸ்டீன்னு கூப்பிடுறதுங்க '
என்று நயந்தான். "ஒவ்நிக்காங் . . . “கலுமண்டி' கியலா, ஆஹண்ட' என்றாள் பொடிகாமி. சிட்டுக் கிழவியும் சரிங்க . . . சரிங்க . . . பேருக்கு ஒத்த ஆளுதான்
"கலுமல்லின்னே கூப்பிடுங்களேன் என்று சொல்லி வைத் தாள். இப்படியாகக் கல்லுமண்டியின் தலையில் ஒரு சின்ன "தோட்டக் கிராமிய ஒருங்கிணைப்பு'நிறைவேற்றி வைக்கப்
L-L-gil. , ኳ
எல்லோருக்கும் பயணம் கூறிவிட்டு. . . கையைக் காட்டி ஆட்டிக்கொண்டே, சில படிக்கட்டுக்களில் துள்ளிக் குதித்து, பாதையை அடைந்தவன் உற்சாகமாக நடைபோடத் தொடங்கினான். பாதையோரம் நின்ற வாகையில் இருந்த மீன்கொத்திக் குருவியைப் பார்த்ததும் ஏற்பட்ட ‘கல்லெறி யும் நினைவையும் ஒதுக்கிவிட்டுப் பொடிகாமிக்கு வேண்டியவருடன் நடந்தான்.
நாட்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய். . . ஒரு வருடம் எப்படி ஓடி விட்டது. கலுமல்லியைப் பற்றித் தகவல்கள் பொடிகாமி மூலமாக அவ்வப்போது வந்து கொண்டிருந்ததால் கந்தையாவும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின்கேகாலையில் இருந்து பொடிகாமி யின் உறவினர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் அந்த முதலாளி கந்தையாவிடம் கொடுக்குமாறு அனுப்பிய ‘ஒரு மரத்துக் கள்ளும்’ எவ்வித இருட்டடிப்புமின்றி வந்து சேர்ந்தது. கந்தையாவுக்கு மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இறுதியில் வந்து சேர்ந்ததால் வந்த நபருடன் மகனைப் பார்க்க புறப்படத் தயாரானார்.
நகை ஈடுபிடிக்கும் கடையில் ஆறு மாதங்களுக்கு முன்னர்
町... எஸ். சந்திரபோஸ் I 71

Page 39
isä SaMoiraMoiraffiadir
வைத்த மூக்குத்தி’யின் மேல் இன்னுமொரு ஐம்பது ரூபா மேலதிகமாக வாங்கிக்கொண்டு அதில் ஒரு -3, Մ) ரூபாவுக்கு "பிஸ்கட்” பெட்டியும் வாங்கி வந்து சுறுசுறுப்பாக மற்றைய பிள்ளைகளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தார். இன்னும் தேயிலை ஒரு இரண்டு றாத்தல், இலைக்கோவா, செள செளக்காய். . . இப்படி ஒரு பெரியமூட்டையே கட்டி விட்டார். இவ்வளவும் தன் மகனை அழைத்துச் சென்றது மட்டுமின்றித் தன்மீது அன்பு பாராட்டிக் கள்ளுப்போத்தலையும் அனுப்பிவைத்த முதலாளிக்கல்லாமல் வேறு யாருக்கு'.
பஸ் பிரயாணம்! ஆம் இந்த நீண்ட பிரயாணம். ஒருமுறை கண்டிக்கு "சிட்டிசன்’ விடயமாகப் போய்வந்த பின்னரான இரண்டாவது பிரயாணம் இதுதான்.
தனது பிள்ளையின் எதிர்காலம் குறித்தும் ஏன் தனது எதிர்காலம் குறித்தும் கூட ஒன்றும் அறியாத ஒருவனாக இவ்வளவில் மூட்டை கட்டிக்கொண்டு அவர் போவதில் வியப்பொன்றும் இல்லைதான். ஆனால் இதைச் சுட்டிக் காட்ட கந்தையாவுக்கு ஒரு நாதியில்லாமல் போய்விட்டதே என்று உணர்வதில்தான் காலத்தின் கொடூரமே தங்கி நிற்கின்றதோ? மாலை நான்கு மணி இருக்கும். முதலாளி வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்துவிட்ட மனிதருக்கு மிகுந்த நன்றி யைக் கூறினார் கந்தையா.
கலுமல்லி, இப்போது வாட்ட சாட்டமாக கள்ளுக் கொட்டிலில் கள்ளை அளந்து கொடுக்கும் ஒரு ஊழியனாக எதிர்பார்த்தது எவ்வளவு தப்பானது என்பதை இப்போது தான் கந்தையா எண்ணிப்பார்க்கிறார் அவன் அந்தச் சட்டைகளுடன் மகிழ்ச்சியாகச் சட்டிபானை கழுவிக் கொண்டிருந்தான். அப்பாவைக் கண்டதும் மகன் துள்ளி ஓடி வந்தான். தொடர்ந்து முதலாளியும் ஓடி வந்தார். சுக சேமங்களை மிக்க அன்புடன் கேட்ட அந்த முதலாளி - யிடம் தான் வாங்கி வந்தவற்றை யெல்லாம் கொடுத் தார். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அந்தத் தேயிலை யில் தேநீரும் வந்தது. அன்று இரவு நல்ல பொரியல் வகைகளுடன் போசனமும் முடிந்தது. அந்த முதலாளியின் மூத்த மகளாக இருக்க வேண்டும்-கந்தையா கொணர்ந்த செளசெளக் காயைப் புதுமையாக அவள் அம்மாவிடம் வினவினாள். அந்த முதலாளி இந்த செளசெளக்காயைப் பெரிதுபடுத்திக்
72 / என்று தணியும் Oந்த.

தீர்த்தக்கரைக் கதைகள்
கூறுவது போல ஒன்றைத் தூக்கிக்கொண்டு வந்து சிங்களத் தில் கூறினார். "இத நல்ல அவிச்சி. இரண்டு மாட்டு முள்ளும் போட்டு கஞ்சி மாதிரிக் காச்சினா நம்ப நாயி நல்லாக் குடிக்கும்" என்றார். கந்தையாவுக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்க வேண்டும், "என்னடா நாய்க்குப்போடுவதையா நாம் கற்பகத்தருவாக் கொண்டு வந்தோம் என்று. இல்லையேல் அவர் முகம் அப்படிச் செத்திருந்திருக்காது. அந்த இரவில் ஆசையான அரவணைப்பில் "கலுமல்லி லயித்து விட்டான். கந்தையாவின் நெஞ்சுக்குள் ஒட்டி ஒதுங்கிக் கொள்ள முயற்சித்தான். கந்தையா அவனை அணைத்து அவனது மெலிந்த முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தூங்கினார். அதிகாலை நான்கு மணி இருக்கும். "கலுமல்லி", “கலுமல்லி" என்று குசினி அறையில் இருந்து வந்த குரலின் சப்தத்தால் கந்தையா விழித்துக் கொண்டார். ‘என்னடா இந்த நேரத்தில எழுப்புறாங்க" என்று நினைத்துக் கொண்டே மெல்ல மகனைத் தட்டினார், 'கல்லுமண்டி" “கல்லுமண்டி’ என்று. கல்லுமண்டி முனங்கிக் கொண்டே சொன்னான்: ‘இன்னைக்கு மாத்திரம் தூங்கிடறேன் அப்பா" என்றவாறே முடங்கிக் கொண்டான். கந்தையா ! வுக்குப் புத்தியில் 'பளிர்" என்று ஏதோ தட்டியது. "என்னடா' எந்த நாளும் இவ்வளவு வெள்ளனவே எந்திருச்சிறுவியா? மகன் ம். . ம். . என்றவாறே நெளிந்து கொண்டான்.
குசினியில் ஏதோ முனகல். யாரோ வந்து தரையில், கந்தையாவின் அணைப்புக்குள் கல்லுமண்டி உறங்குவதை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனதைக் கந்தையா அவதானிக்கவே செய்தார். கல்லுமண்டியை எழுப்புவதற் காகத் தான் என்று முடிவுக்கு வந்தார். காலை ஐந்தரை மணி இருக்கும். கல்லுமண்டி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். குசினியில் இருந்துவந்த பேச்சுக்குரல் கந்தையாவைத் திடுக்கிட வைத்தது. "அப்பன் வந்துட்டான்னு திமிற பாத்தியா. அஞ்சர மணியாயிருச்சி. அப்பன் வந்ததுள்ள இருந்து கவனிச்சு கிட்டு தான் வாரேன். எங்கள எல்லாத்தையும் மதிக்காத மாதிரி நடந்துகிறான். சட்டியையும் ஒழுங்காகக் கழுவல, நேத்து ராத்திரி. அப்பன் போகட்டும். அப்புறம் புளியங் கொம்பில என்னப்பா சேதின்னு கேட்டுறலாம். , , இன்னும் ஏதேதோ. . ஆத்திரமாகச் சிங்களத்தில் என்றாலும் கந்தையாவுக்குப் புரிந்து கொண்டது.
ஏ. எஸ். சந்திரபோஸ் / 73

Page 40
இவனெ இங்க புளியங்கொம்புல அடிக்கிறாங்களா? எந்த நாளும் நடக்குமோ?* மகனை எழுப்பிக் கேட்கத் துணி வில்லை கந்தையாவுக்கு. e இரவில் அவன் 'ஆயிபுள்ள" "ஆயிபுள்ள" சாக்க வச்சிருக்கியா' என்றெல்லாம் ஏதேதோ புலம்பியது கந்தையாவின் நினைவுக்கு வந்தது. காலை ஒருவாறு எழுந்து பல் விளக்கும்போது யாரோ குசினியறையில் தாழ்ந்த குரலில் ஏசுவது கேட்டது.
காலைச் சாப்பாடு முடிந்த பின்னர் கந்தையா, முதலாளி
யிடம் மெல்லப் பேச்சைப் போட்டார் "கலுமல்லி உட்டு அம்மா அவனைப் பார்க்க ஆசைப்படுதுங்க. கூட்டிக்கிட்டுப்
போயிட்டு ரெண்டு நாளையில அனுப்பிறரேனுங்க”
முதலாளிக்குப் புரிந்து விட்டது. சிங்களத்தில் கூறினார், ‘என்னத்துக்கு. . என்னத்துக்கு. .இங்க புள்ள மாதிரியில பார்க்கிறோம் என்று உள்ளே சென்று இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைக் கொண்டுவந்து கந்தையாவின் கையில் தந்தார். "கலுமல்லி புதுவருஷம் முடிஞ்சு வருஷச் சம்பளத்தையும் எடுத்துக்கிட்டு வரட்டும். . அவனுக் கென்னா கொற இங்க . . முதலாளி மீசையைத் தடவி விட்டுக்கொண்டே சொன்னார். ‘அங்க லயத்துப் புள்ளை களோடு சேர்ந்து ஊர்சுத்தி வேற கெட்டுப் போயிருவான்" கந்தையாவுக்குத் தான் தோட்டத்துக் கடையில் பட்டிருந்த கடன் நினைவுக்கு வந்தது. தயங்கித் தயங்கிச் சொன்னார். "அப்ப புதுவருஷத்துக்குக் கட்டாயம் அனுப்பிருங்க." கல்லுமண்டியிடம் விடைபெறும்போது கல்லுமண்டி, கந்தையாவின் காதோரமாக விக்கி விக்கிச் சொன்னான். 'அப்பா, காலயில எனியக் கூட்டிக்கிட்டுப் போறதாகச் சொன்னியே??? கந்தையா மெல்ல அவனிடம் சொன்னார், "மொதலாளி ஒனிய புதுவருஷத்துக்குத்தான் கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னாருடா. . புதுவருஷத்திக்கு ஒனியக் கட்டாயம் கூட்டிக்கிட்டுப் போயிருவென்.'" ** அப்பா அப்ப அந்த "ஆயிபுள்ளக்கிட்ட ஏவுட்டுச்சாக்கை யும் கயித்தையும் வச்சிருக்கச் சொல்லு, புதுவருஷத்துக்கு நாவந்திருவேன்னு. . எனக்கு வேணுமின்னு. .' கந்தையா புறப்பட்டு விட்டார். கல்லுமண்டி. . இல்லை கலுமல்லி. . புதுவருஷத்துக்குப் போவானா? யாருக்குத் தெரியும்?
Müyast- 98
74 / என்று தணியும் இந்த . .

GÖÖSITGDGD கையிலைநாதன்
தண்ணீர் வற்றிடும் குளங்கள், மீண்டும் வசந்தம் வரும் ஆகிய இரு கதைகளின் பின்னணி குறித்து இவர் குறிப்பிடும்போது, இக்கதைகள் கண்டிப் பிரதேசத்துத் தோட்டங்களுக்கு உரித்தானவை எனக் குறித்தார்.
அதாவது, சிங்கள மக்கள் குடிகொண்டிருந்த கிராமங்கள் பெரும்பான்மையாக அமைந்திருந்த பிரதேசங்களின் ஓரமாகவே இத்தகைய ஓரிரு தோட்டங்கள் அமைவுற்றிருந்தன.
இத்தோட்டங்களுக்கும்- அக்கிராமங்களுக்குமான முரண் 70,80 காலப்பகுதிகளில், கேவலமானதோர் இன அரசியலின் பின்னணியில். மோசமான ஓர் நிலையை எட்டியது.
1930 கள் தொடக்கம் மிகுந்த செளஜன்யத்தோடு விரவிய இவ்விரு மக்கள்களுக்கிடையிலான சுவாத்தியம் என்பது மேற்படி காரணத்தால் எழுபதுகளின் பிற்பகுதியில் கொடுமையாக நஞ்சுற்றது.
1977ல் இம்மக்களுக்கு எதிசாய் நிகழ்ந்த வன் முறைகளின் பின்னர், துளிர்க்கக்கூடிய வசந்தத்துக் கான நம்பிக்கையை கேகாலைகையிலைநாதன தன் எழுத்தில், அக்காலப் பகுதிகளில் தேக்கித் தந்தார்.
இவரது ஏனைய கதைகள் பிறிதொரு தளத்தில் இருந்து மலர்ந்துள்ளன.

Page 41
தண்ணீர் வற்றிடும் குளங்கள்
‘எங்கஇருந்து வந்திருக்குமாம் இந்தத் தவக்களக் குஞ்செல் லாம்?' நிழலுக்காக, அந்தப் பிரமாண்டமான மரத்தின் கீழே , ஓடிக்கொண்டிருந்த காணோரமாகக் குந்தியிருந்த ராமையா, அந்தக் காணில் தேங்கிநின்ற நீரில், நீந்தித் திரிந்துகொண்டிருந்த சின்னஞ்சிறு தவளைக்குஞ்சுகளை யெல்லாம் உற்றுப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
படிகம் போன்று தெளிந்திருந்த அந்த நீரில் எந்த ஒரு கவலையுமற்றுத் தமது சின்னஞ்சிறு வாலை ஆட்டிக் கொண்டு நீந்தித் திரிந்து கொண்டிருந்த தவளைக்குஞ்சுகள் அவனது மனதில் அன்று ஏனோ புதிதாய் ஆயிரம் கேள்வி களை எழுப்பிக் கொண்டிருந்தன.
**இந்தத் தவக்களக் குஞ்செல்லாம் தூங்குமா? எங்க போயிப்படுத்துக்கும்?"
"இந்தத் தவக்களக் குஞ்செல்லாம் என்னாத்தப் பத்தி யோசிச்சிகிட்டு இருக்கும்? சாமியைப் பத்தி யோசிக்குமா?"
‘'எத்தன சாதி தவக்களக்குஞ்சு இந்த ஒலகத்துல இருக்கு? பதினெட்டுச் சாதியா?" V
'திடீர்ன்னு முருகரு பெருமான் இந்தத் தவக்களக் குஞ்சு களுக்கெல்லாம் முன்னுக்கு வந்து அச்சுருவா நின்னு பழைய காலத்து தபசுங்ககிட்ட கேட்ட மாதிரி ஒங்களுக்கெல்லாம் என்னா வரம் வேணுமுன்னு கேட்டா இந்தத் தவக்களக் குஞ்செல்லாம் என்னா சொல்லும்?நடுநடுங்கிப்போயிருமா?"
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனுக்குப் பதில் தெரிய" விட்டாலும் அவனது சிந்தனை இப்படியான கேள்விகள்
76 / தண்ணீர் வற்றிடும் குளங்கள்

எழுப்புவதை நிறுத்தவில்லை-கன்னியப்பனின் காலடிச் சத்தம் கேட்கும்வரை !
ராமையா, தவளைக் குஞ்சிகளில் இருந்து பார்வையைத் திருப்பி ஏறிட்டு நோக்கினான். எதிரே கன்னியப்பன் மெதுவாக ஒரு தளர்ந்த நடைபோட்டு வந்து கொண்டிருந் தான். உச்சி வெயிலின் கோரத்தைப் பொறுக்க மாட்டாமலோ என்னவோ அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டிருந்தான்.
கன்னியப்பனும் ராமையாவும் சம வயதினர். தோட்டத்துப் List L-3 IT68) Gudi) ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாக மாஸ்ட்டரின் மாட்டுக்குப் புல்லறுத்தவர்கள். வாழ்க்கை யின் மேடு பள்ளங்களைத் தாண்டிக் கனதூரம் வந்திருக்கும் இந்த நண்பர்களிடையே பலபேர்களிடையே காண முடியாத சரியான புரிந்து கொள்ளல் காணப்பட்டது.
'வெத்தல வச்சிருக்கியா? இங்கன குந்திக்கிட்டு என்னா பன்ற -கன்னியப்பன் ராமையாவின் அருகே வந்துநின்று ஒரு கையை இடுப்பில் ஊன்றிக்கொண்டு மற்ற கையைச் சாதுவாக தொங்க விட்டவாறே புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டான்.
**வெயில் மண்டைய பொளக்குறது தெரியல'-குந்தி யிருந்த வாறே சட்டைப் பையிலிருந்து வெற்றிலை பாக்கைச் சுண்ணாம்புடன் எடுத்துக்கொடுத்த ராமையா மெல்ல மொறுமொறுத்தான்.
'ம். . . மண்டைய பொளக்குற வெயில்தான். இப்ப இந்தத் தோட்டத்துல எல்லாரும் பொளந்த மண்டையோடதானே திரியுறானுங்க! என்னமோ ஒவியமா வெயில் அடிக்குதாம். அதனால இவரு சென மாடு மாதிரி இங்கன ஒக்காந்து கிட்டாராம். சரிதான் எழும்பு. வா போவோம்' உரிமையோடு கன்னியப்பன் தன் வார்த்தைகளால் இராமையாவை விரட்டி அவனைத் தன்னோடு வரும்படி செய்தான். கன்னியப்பன் எப்பவுமே இப்படித்தான். எரிச்சலுற்றவன் போல, அதே சமயம் கிண்டலாக வேறு கதைப்பான். அதற்கேற்றாற்போல் அவனுக்கு ஒரு சிடுசிடுத்த முகம்.
ராமையா தனது காய்ந்து போயிருந்த உதட்டோரத்தில் மெல்லிய ஒரு சிரிப்பை நெளிய விட்டவாறே, ம், . என்று ஒரு பெருமூச்சையும் விட்டு விட்டுத் தனது தவளைக் குஞ்சுக் கேள்விகளைத் தவளைக் குளத்திலேயே போட்டு
கேகாலை கையிலைநாதன் 77

Page 42
கந்தலாலாவின்
விட்டு, தானும் ஒருவாய் வெற்றிலை போட்டவாறே கன்னியப்பனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.
நண்பர்கள் இருவரும் அந்த மண்டையைப் பிளக்கும் வெயிலில் வெற்றிலையைக் குதப்பியவாறே தமது வாயசைவுக்கு ஏற்ப ஒரு மெதுவான நடையைப் போடத் தொடங்கினர்.
அவர்கள் தலைக்கு நேராக மேலே வானத்தில் ஒரு சிறிய பருந்து தனது இறக்கையை அகல விரித்தவாறே ஏனோ தானோவென்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கீழே சோர்வாக ராமையாவோடு நடந்து கொண்டிருந்த கன்னியப்பன். ராமையாவின் கன்னத்தில் புதிதாய் விழுந்திருந்த கருமையை ஒருதரம் உற்றுப் பார்த்து விட்டு வினவினான்: ‘'என்னா ஒவுட்டுக் கன்னத்தில கண்ணுக்குக் கீழ கருப்பா இருக்கு?’’
ராமையா முகத்தில் ஒரு கேள்விக்குறி. "கருப்பாவா? கண்ணுக்குக் கீழையா? இல்லாட்டி இந்தக் கன்னத்து மேட்டுலயா?" என்றவாறே தன் கண்ணுக்குக் கீழே உள்ள சிறிய மேட்டைத் தன் முரட்டு விரலால் தொட்டுக் காட்டினான்.
* 'இல்ல. .இல்ல. அங்கன இல்ல இந்தா இங்கன' என்ற வாறே கன்னியப்பன் ராமையாவின் கன்னத்தில் வட்ட மிட்டிருந்த கருமையைத் தனது சுட்டுவிரலால் அழுத்தித் தொட்டுக் காட்டினான்.
கன்னியப்பன் தொட்டுக் காட்டிய இடத்தைத் தன் விரல் களால் மெல்ல வருடியபடியே கூறினான் ராமையா, "ம். . என்னாத்தப் பெருசா இருக்கப் போவுது. சத்தில்லாட்டி இப்படிக் கருப்பா விழுமாம். ஆனா ஒனக்குத் தெரியுமா எங்க அப்பன் பாத்தாக்க என்ன சொல்லுமுன்னு? அது சொல்லும் சனி புடிச்சிடுச்சிடிடாங்கும். சனி என்னாப் பண்ணுமாம், நம்ம கால் வழியர் ஏறி மூஞ்சிக்கு வந்து அதுவுட்டு ரெண்டு காலையும் அகட்டி நம்ப கன்னத்துல வச்சி அழுத்திக்கிட்டு நம்ப உச்சாந்தலை முடியைப் புடிச்சு குலுக்கு குலுக்குன்னு குலுக்குமாம். அந்த நேரத்துலதான் மனுசனுக்குச் சொல்லாத கஷ்டமெல்லாம் வருமாம். இது கால்வைச்சு மிதிக்கிற மிதி இருக்குல்ல. .அதனாலத்தான் ரெண்டு பக்கக் கன்னத்துலேயும் இப்படிக் கறுப்பாய்ப் படியு தாம். அப்புறம் சனி பகவானுக்கு, நம்ப ஒரு பூசைய கீசைய வச்சி நூல் கட்டினாத்தான் அதுவுட்டு ரெண்டு காலையும் கன்னத்துல இருந்து எடுத்து மூக்கு மேல வச்சி
78 / தண்ணீர் வற்றிடும் குளங்கள்

தீர்த்தக்கரைக்கதைகள்
ஏறி மூக்குல இருந்து ஒரு தாவுத்தாவி மனுசன விட்டுட்டுப் போவுமாம் இப்படி மூக்குக் கறுப்பான ஒடன நம்ப நெனைச்சிக்க வேண்டியது தான். ஒ ஹோ சனிப்புள்ள நம் பள உட்டுட்டுப் போவப்போறார்ன்னு'
சுவாரசியமாகக் கதை கேட்டுக் கொண்டு வந்த கன்னியப்பனுக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரித்துக் கொண்டே சொன்னான்: ‘'ம். .இது நல்ல கதையா இல்ல இருக்கு, அப்படின்னா, இன்னைக்குத் தோட்டம் இருக்குற நெலமையில இங்க இருக்கிற தொரையையும் இந்த நாட்டான்களையும் தவிர அத்தன பேத்தோட கன்னத்துல மிலயா கறுப்புக் கறுப்பா புடிச்சி அப்பிப் போய் இருக்கணும்?"
ராமையா தலையை ஆட்டிச் சலித்து எரிச்சலுற்று, "அட நீ ஒன்னு. இப்ப நான் என்னா இத நம்பிகிட்டா சொல் றேன்" என்று கன்னியப்பனின் எள்ளலுக்கு மறுப்புத் தெரிவித்தான்.
கன்னியப்பன் ஒன்றும் பேசவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசாது நடந்தனர். இருவரது மனமும் தோட்டத் தில் நடக்கும் சம்பவங்களை நினைத்துக் கணக்கத் தொடங்கி விட்டன. சனிதான் பிடித்து விட்டதோ?
சுமாராக ஒடிக்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையை அந்தச் சம்பவம் அல்லோலகல்லோலப் படுத்துவதாய் அமைந்தது. அவர்களது தோட்டத்தையும் சுற்றிவர உள்ள தோட்டங்களையும் "நட்சா" என்ற அரசாங்க நிறுவனம் பொறுப்பேற்று நிலத்தை மக்களுக்குப் பகிர்ந் தளிக்கப் போகின்றதாம். தோட்டம் முழுவதும் ஒரே பதட்டம். என்ன செய்வது? எங்கே போவது? இனந் தெரியாத தவிப்பு. எந்த மண்ணில் தலைமுறை தலைமுறை யாகத் தங்கள் உழைப்பைச் செலவிட்டார்களோ அதே மண்ணில் இன்று அவர்களுக்கே புரியாத புதினங்கள் நடந் தேறத் தொடங்கின. முரட்டுத் தனமாகத் தேயிலைகள் புடுங்கியெறியப்பட்டன. 'நீ யார் கேட்பதற்கு' என்ற பார்வையோடு புதியவர்கள் தோட்டத்தில் பவனி வரத் தொடங்கினர். ‘என்ன செய்கிறாய் நீ" என்று யார் யாரோ புதிது புதிதாய் வந்து அகங்காரத்தோடு குரலெழுப்பினர். "பிரஜா உரிமை இருக்கா?' 'ஒடு, !' என்ன நடக்கும்? ஆயிரம் கேள்விகள். . ஆயிரம் கேள்விகள்.
இருவரும் களைத்துப் போய்த்தமது லயத்தின் முன்னால்
கேகாலை கையிலைநாதன் 79

Page 43
nsis saoraoirsifileáir
இருந்த பலா மரத்தினடியில் கிடந்த கற்களின் மீது குந்தியிருந்தனர்.
ராமையா வெற்றிலை எச்சியை பலாமரத்தின் பருத்த வேரில் பளிச்சென்று துப்பிவிட்டுக் கன்னியப்பனைக் கேட்டான்.
"'என்னாத்தான் நடக்குமுன்னு நெனைக்கிறே?""
**ம். . என்னா நடக்குமா? வேறென்னா . . ஒன்னையும் என்னையும் வெத்தல பாக்கு வச்சு அழைச்சுக்கிட்டுப் போயி. நெலத்தை எடுத்துக்கங்கடா பயலுகளான்னு சொல்லப் போறானுங்க' -எரிச்சலோடு தொடர்ந்தான் கன்னியப்பன். "கேள்வியப் பாரு கேள்விய. என்னாத்த இனி நடக்க இருக்கு. நேத்துப் பத்தாம் நம்பர் மலையிலே யும் தேயிலையைப் புடுங்கித் தள்ளிட்டானுங்க. புள்ள மாதிரி வளத்தது. எல்லாத் தேயிலையையும் எங்கள வச்சே புடுங்கிப்புட்டு எல்லாம் முடிஞ்சோடனே எங்கள நைஸா மேப்பக்கமாப் போங்கடான்னு அனுப்பிப்புட்டு அவங்களுக்குள்ள நெலத்தப் பங்கு போட்டுக்குவானுங்க, வேறென்னா . . தேவடியா மவனுங்க எறுை கன்னியப்பன் வெறுப்போடு கூறினான்.
ராமையா வழக்கம்போல் சாவதானமாக வெற்றிலையை மென்று எச்சிலை மீண்டும் பலாமரத்துவேரில் துப்பிவிட்டு, தனது தடித்த உதட்டைப் புறங்கையால் அழுத்தி ஒரு துடைப்புத் துடைத்துவிட்டுச் சொன்னான்: ‘' ம் . . . இன்னையோட ஆறு நாளா வேல இல்ல. என்னாப் பண்ற துன்னும் தெரியல. ஜில்லாவுல இருந்தும் வெட்டொன்னு துண்டு ரெண்டா ஒரு வார்த்த சொல்ல மாட்டேங்குறானுங்க. காலங்காத்தால புஞ்சிபண்டா எனக்குப் புத்திமதி சொல்றான். . தேயில புடுங்கப் போகட்டாம். இல்லாட்டி வேற வேல கெடைக்காதாம். நான் சொன்னேன்.நீ வேணுமுடா போடா தேயில புடுங்க. எனக்கு வேண்டியத நான் செஞ்சுக்கிறேன்னேன்.”*
கன்னியப்பன் சிறிதுநேரம் தலையைக் குனிந்தவாறே பேசாது இருந்தபின் கூறினான்:
'' b. . . எங்களப்பத்தி இவனுங்களுக்கெல்லாம் இப்ப எளப்பமாத்தான் இருக்கு போல. ஒருத்தன் சொல்றான் தேயிலையைப் புடுங்குடான்னு. இன்னொருத்தன் சொல்றான் அட்டன் பக்கம் ஒடுங்கடான்னு. யாருடா இந்த நாதேரி முண்டங்க . . . எங்களுக்குப் பாதகாட்ட?
80 / தன்னிர் வற்றிடும் குளங்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
நானும் பாத்துகிட்டுத்தான் வாறேன். இப்ப இந்தத் தோட்டத்துல இருக்க ரெண்டொரு நாட்டான்களுக்கும் கொஞ்சம் துளுத்துதான் போச்சி'
"ஆமாண்டா கன்னியப்பா, என்னமோ, காலங் கெட்டுப் போயிட்டு கரட்டானும் தலையில காவடி எடுத்துக்கிட்டு ஆட்ற கணக்கா இல்ல ஆட்ரானுங்க. பாரேன், இந்த நோஞ்சான் பய புஞ்சிபண்டா நமக்குப் புத்தி சொல்ல வர்றான்னா பாத்துக்க வேண்டியதுதான். .." என்று ராமையாவும் தன் உள்ளக் குமுறலை வெளியிட்டான்.
இந்தக் குமுறல்களை லட்சியம் செய்யாது ஓடி வந்த ராமையாவின் மகன் ராமையாவின் கால்களுக்கிடையே வந்து நின்று அவனது நெஞ்சில் சொந்தத்தோடு சாய்ந்து கொண்டு சொன்னான்.
"அப்பா அந்தப் பாட்டைச் சொல்லேன். அம்மாகிட்ட கேட்டேன். அதுக்குத் தெரியாதாம் ஓங்கிட்ட கேக்கச் சொல்லுது . . . "'
ராமையா வாஞ்சையோடு அவனை உற்றுப் பார்த்தவாறே "ம்" என்று மெல்லக் கனைத்து தலையை ஆட்டியவாறே, "எந்தப்பாட்டு' என்றான்.
அதான் அந்த,
சிட்டான் சிறு குருவி சினுக்குத்தான்-இந்த சின்னப் பொண்ணு காதில குணுக்குதான்
அப்பிடிம்பியே. . . அந்தப்பாட்டு.
"ம் அதெல்லாம் அப்புறமா அந்திக்குப் பாடுறேன். இப்ப நான் குளிக்கப் போவணும். சாப்பிட்டியா? ஒடிப் போய்ச் சாப்பிடு' என்றவாறே அவனது பிருஷ்டத்தில் செல்லமாக அவனை ஒரு தட்டுத் தட்டி முன்னுக்குத் தள்ளினான்.
அவன் சிணுங்கியவாறே, "அப்ப அந்திக்கு டவுனுக்குப்
போகயில எனக்குக் கணக்குக் கொப்பி வாங்கிட்டு வந்திரு' என்றான்.
ராமையா அவனை உற்றுப் பார்த்தவாறே 'ம்' என்றான். ராமையாவின் மகன் மெல்லச் சிரித்தவாறே, தனது காற் சட்டையின் கிழிந்த பின் பக்கத்தினூடாகப் பிருஷ்டத்தைக் காட்டிக் கொண்டே ஓடினான்.
ராமையா ஒடிச் செல்லும் தனது மகனைப் பரிவுடன்
கேகாலை கையிலைநாதன் / 8

Page 44
isi 5ereofelsér
பார்த்தவாறே கன்னியப்பனிடம் கூறினான்: "நேத்து மாஸ்ட்டர் இவன உரி உரின்னு உரிச்சிருக்காரு"
"அட போ, நாங்க படாத அடியா அந்தக் காலத்துல, ஏனாம். . . ஏதாவது குறும்பு செஞ்சானாமா? அந்த புதுசா வந்திருக்க மாஸ்ட்டரா?"
**ஆமா. . . என்னமோ குறும்பு செஞ்சிருக்கான். இரண்டொரு அடி போட்டிருக்கிறது.இவன் பேசாம அடிய வாங்கிக்கிறது தானே. அத விட்டுட்டு இவன் என்னாப் பண்ணியிருக்கிறான், கையெடுத்துக் கும்பிட்டு, அடிக்கா திங்க சார் அடிக்காதிங்க . . கும்புடுறேன் சார் அடிக்காதிங்க அப்பிடின்னு கெஞ்சியிருக்கான். வந்து இருக்கிற மாஸ்ட்டர் நம்ம தோட்டக்காட்டச் சேர்ந்தவரு போல. அவரு பெரிய ஆத்திரத்தோட “பண்டிப் பயலே. கும்புடாதடா கும்புடாத உசுரே போனாலும் கும்புடாத, கும்புட்டுக் கும்புட்டுத்தான் ஒங்க நெலையே இப்படி இருக்கு. இனிமே கும்புடுவியா கும்புடுவியா அப்படின்னு , இவன் கும்பிட மாட்டேன் சார், கும்புடமாட்டேன் அப்படின்னு கத்தி அழுவுற வரைக்கும் விலாசு விலாசுன்னு விலாசியிருக்கார். பாவம் பொடியன். கைல கால்ல எல்லாம் அப்படி அப்படியே அடி அச்சச்சா இருக்கு."
சிறிது நேரம் பேசாது இருந்த கன்னியப்பன் மெல்ல உறுமினான். "ம். இப்படிப்பட்ட மாஸ்ட்டர் மாருங்க தான் இப்ப நமக்குத் தேவ, நமக்குப் படிச்சுக் குடுத்தானே ஒரு சோத்து மாடு. ம். . அது போவட்டும். குளிக்கப் போவமா . . க்சி என்னா வெயிலு' என்றவாறே மெல்ல எழும்பினான். ராமையாவும் துணி துண்டெடுக்க வீட்டை நோக்கிச் சென்றான்.
O
குளித்துவிட்டு வந்த இருவரும் உண்ட பின்னர் டவுணுக்கு போய்விட்டு, வீட்டை வந்து சேரும் போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தது. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திரங் கள் சிதறிப் போய்க் கிடந்தன.
ராமையாவும் கன்னியப்பனும் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சாணியால் வெகு நேர்த்தியாய் மெழுகப்பட்டிருந்த ராமையாவின் வீட்டு விறாந்தையில், தரையில் நன்றாகக் கால்களை நீட்டிப்போட்டு, சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்துகொண்டு பேசத்தொடங்கி விட்டார்கள்.
2ே / தண்ணீர் வற்றிடும் குளங்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
இந்த ஆறு நாட்களாகவே இவர்கள் இப்படித்தான், *ஸ்ட்ரைக் காரணமாக அதிகாலையில் நேரத்தோடு எழும்ப வேண்டிய சங்கடம் இல்லாததாலும்,இந்த வெயில் காலங்களில் இரவின் உஷ்ணம் தாளமுடியாது இருப்பதா லும் அவர்கள் நித்திரை வரும்வரை பேசிக்கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது.
இதற்கு மேலாக அவர்களது அலைக்கழிக்கப்பட்ட பாரமான நெஞ்சுக்கு இந்த அந்நியோன்யமான சம்பாஷனை இதமளிப்பதாகத் தோன்றியது போலும்,
ஆனால் ராமையாவின் மனைவி செல்லம்மாவுக்கோ சொல்ல முடியாத எரிச்சல்.
"என்னாத்தடி, பெருசா எளவு கத வேண்டிக் கிடக்குதாம் இவுகளுக்கு, நடுச்சாமம் வரைக்கும். ஆறு நாளா வேலையு மில்ல, ஒரு வெட்டியுமில்ல. இன்னைக்குத் தொரத்து ரானோ நாளைக்குத் தொரத்துரானோ அப்டின்னு இருக்கையில இஷக நீட்டிப் போட்டுகிட்டு அளக்குறாக தொரைகளாட்டம். . “ என்றெல்லாம் மனசுக்குள் திட்டித் தீர்த்துக் கொள்வாள் செல்லம்மா
மேலும் அவளுக்குக் கன்னியப்பன் மீது தாங்கமுடியாத எரிச்சல். ஏனென்றால், அக்காவின் குடும்பம் அட்டன் பகுதிக்குச் சென்றுள்ளதை அடுத்து, தனது குடும்பம் செல்வதையும் இந்தக் கன்னியப்பன்தான் தடுத்துத் தனது கணவன் மூளையைக் குழப்பியடிப்பதாய் நம்பினாள் அவள்.
இதைவிட, சென்ற அரசாங்கம் தோட்டங்களை அரசுமயப் படுத்திய போது,சில தோட்டங்களில் இருந்து தொழிலாளர் கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுக் கண்டி வீதிகளில் பரிதவித்து அலைந்தார்கள் என்றெல்லாம் தோட்டத்தில் இப்போது கதை கதையாகப் பேசிக் கொள்வதை கேட்டுக் கேட்டு அவளது இதயம் துணுக்குற்றுப் போய்க் கிடந்தது. இரவெல்லாம் அவளுக்குத்தூக்கமும்சரியாக வருவதில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் ஆயிரம் முரடர்கள் துரத்தி வருவது போலவும் தாங்கள் அலறி அடித்துக் கொண்டு ஒடுவது போலவும் கனவு கண்டு திடுக்கிட்டு அரற்றி விழித்து விடியும்வரை முகத்தைக் கையால் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள்.
இப்போது தனது பாரமான இதயத்தோடு, எரிச்சலுற்றும் கோபப்பட்டும் நடக்கும் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த செல்லம்மா, எங்கெங்கோ சென்ற அவர் களது கதை இறுதியில் தோட்டத்துப் பிரச்சனைக்கு
கேகாலை கையிலைநாதன் / 83

Page 45
Msis Moroorser
வந்ததும் முகத்தை இறுக்கிக் கொண்டு காதைக் கூர்மை யாக்கிக் கொண்டாள்.
'பெரிய கிளாக்கர் என்னைக்கு தோட்டத்த வுட்டுப் போகப் போறாராம். . ’’ என்று ராமையா கன்னியப்பனிடம் வினவுவது அவளுக்கும் தெளிவாகக் கேட்டது. தொடர்ந்து ** என்னைக்காவுது போய்த் தொலையட்டுமே. அவுங்க இங்க இருந்துதான் என்னாத்தப் பெருசா, பண்ணிக் கிழிக்கப் போறாகளாம்" என்ற ஏளனமும் எரிச்சலும் கலந்த கன்னியப்பனின் முனகலைக் கேட்ட செல்லம்மா,
"ஆமா, ஆமா. . . இவுக இருந்துதான் கிழி கிழின்னு கிழிக்கப் போறாக . . . ! என்னவோ சனி தொத்துற மாதிரி இது எங்க வூட்டுக்காரர் மேல தொத்திக்கிட்டு, , ' என்றெல்லாம் யோசித்து மனதுக்குள் கன்னியப்பனைத் திட்டத் தொடங்கி விட்டாள்.
கன்னியப்பனின் குரல் தொடர்ந்து ஒலித்தது. பெரிய கிளாக்கர் மட்டுமா போறார். அந்தக் கந்தசாமி குடும்பமும் தான் அட்டன் பக்கம் ஒடுதாம். . பொட்ட நாய்ங்க . . இவனுங்கவுட்டு ஏப்பனாங்கித் தனத்தக் கண்டுகிட்டுத்தான் இந்த நாட்டான்களும் இன்னைக்கு "நட்டுக்கிட்டு ஆட்றானுங்க. எதுக்கெடுத்தாலும் இப்படி ஊள உட்டு கிட்டு ஓடிஓடித்தானே இந்தக் கதியில நாங்க இருக்கிறோம் தெரியல. ம். . . ஒட்றவனெல்லாத்தையும் ஓடச் சொல்லு, நாங்க நின்னு ஒரு கை பாக்கத்தான் போறோம்' என்று ஓங்கிய ஒரு உறுமலாய் ஒலித்த கன்னியப்பனின் குரலைக் கேட்ட செல்லம்மாவால் மேலும் பொறுக்க முடியவில்லை.
துடிதுடிக்க வெளியே விருட்டென்று வந்தவள் கன்னியப்பனை நோக்கிக் கீச்சுக் குரலால் பெரிதாய்க் கீச்சிட்டாள்,
“நின்னு ஒரு கை பாக்குறதா? எங்க நிக்குறது. இங்கதான் தொரத்துரானே. . . தெரியல. வாய் மட்டும் பெருசா இருந்திட்டாப் போதுமா? யாரு எக்கேடு கெட்டாலும் எங்களுக்குத் தெரியாது. இங்கேயே இருந்து இடிபட்றவங்க பட்டாலும் சரி. செத்தாலும் சரி. நாங்க எங்க அக்கா வீட்டுப் பக்கமா போவத்தான் போறோம். எங்க சொந்த வெசயத்தில நீங்க தலைபோடத் தேவையில்ல. . .'
அவள் சொல்லி முடிக்கவில்லை. விழுந்த அறையில் தடுமாறிப் போய் விட்டாள். அடித்தது ராமையாதான்.
84 / தண்ணீர் வற்றிடும் குளங்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
'போடி உள்ளுக்கு. சொந்த விஷயமாம். மசுரு விஷயமாம், աn (5ւգ- சொன்னது அட்டன் பக்கமா ஒடப் போறோமுன்னு?க்கும். . . யாரு எக்கேடு கெட்டாலும் இவுகளுக்கு ஒன்னுமுல்லையாமே. . . எந்தச் சனங்களச் சொன்னேடி எக்கேடும் கெட்டுப் போவட்டுமுன்னு அறிவு கெட்ட முண்டமே. . . “ என்று ராமையா கையை ஓங்கிக் கொண்டு ஆவேசமாய் அலறினான்.
திடுக்குற்றுப் போய்விட்ட கன்னியப்பன் எழுந்து "சரி, சரி உட்காரு ராமையா. இதென்னா அசிங்கமா. இப்ப என்னா பெரிசா நடந்து போச்சி. . . தங்கச்சி என்னமோ அது நெனைச்சத சொன்னிச்சு . . . அவ்வளவுதானே' என்று சமாதானப் படுத்தத் தொடங்கினான்.
ராமையா சுவரில் சாய்ந்தபடி மீண்டும் உட்கார்ந்து கொண்டு புறுபுறுக்கத் தொடங்கினான். உள்ளே செல்லம்மா ஏதோ சொல்லி மூக்கைச் சிந்தத் தொடங்கி விட்டாள்.
'இல்ல கன்னியப்பா. இவ எப்பவுமே இப்படித்தான். என்னா நெனைச்சுக்கிட்டு இவ பேசுறான்னே தெரியல. ஒனக்கு நான், எனக்கு நீன்னு இருக்குற வாழ்க்கையில எவண்டா முன்னுக்கு ஒட்றது அப்படிங்கறதா பிரச்சன' என்று ராமையா கன்னியப்பனிடம் ஆதங்கத்தோடு முறையிடத் தொடங்கினான்.
கன்னியப்பன் அவனுக்குப் பொறுமையாக ஆறுதல் கூறி விடைபெறுகையில் நடுநிசியாகி விட்டது.
Дттайрцршт உள்ளே சென்று படுக்காமல் கைகளைத் தலையணையாக வைத்துக்கொண்டு திண்ணையிலேயே படுத்துக் கொண்டான்.
*ச்சா. , , என்னவா இருந்தாலும் அடிச்சிருக்கக் கூடாது. எந்தச்சனி எங்களப் புடிச்சு ஆட்டுதோ கடவுளே' என்று அவன் தனக்குள் முணங்கிக் கொண்டான்.
அந்த இரவில் எங்கையோ ஒரு நாய் பயங்கரமாக ஊளை யிட்டது. எவ்வளவுதான் முயன்றும் தூக்கம் வராமல் ஏதேதோ நினைத்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்த அவனுக்குத் திடீரென முன்பு தோட்டங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தொழிலாளர்களின் நினைவு வந்தது. அவனது முகம் இறுகியது. அந்த நினைப்பை உதறித்தள்ள
கேகாலை கையிலைநாதன் / 85

Page 46
முயற்சித்தான். ஆனாலும் அவனது மணம் கண்டி வீதியில் அலைந்து திரிந்த தொழிலாளர்களைச் கற்பனை செய்வதில் ஈடுபட்டது.
பல்லைக் கடித்துக்கொண்டு அந்தச் சிந்தனையை விரட்டியடிப்பதற்காக வேறு விடயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.
அன்று காலையில் நடந்தவற்றிலிருந்து யாவற்றையும் பற்றி யோசித்தான்.
அவனது மகன் அந்திக்குக் கொப்பி வாங்கி வரச்சொன்னது நினைவுக்கு வந்தது, "மாஸ்டர் அவனை அடிக்கயில மிச்சம் வலிச்சிருக்குமோ” என்று முணுமுணுத்தான். சனியைப் பற்றி இவன் விளக்கம் கூறியதும் உதடுகளில் கோணல் புன்னகை நெளிய இவனைப் பார்த்த கன்னியப்பனின் முகம் நினைவுக்கு வந்தது.
மெல்ல வேதனையோடு புன்னகைத்தவன், ‘‘அடடா, . அந்த தவக்கள குஞ்சுக்கெல்லாம் என்னா நடந்துச்சோ தெரியலையே. . . அடிக்கிற வெயிலுல தண்ணி வத்திப் போயிருச்சினா என்னாப் பண்ணும் அந்தச் சின்ன ஜீவாத்துக? மழையும் வர்ற மாதிரித் தெரியல. ச்சா. , துடிதுடிச்சுப் போயிருங்களா?
ஆனா . . . அதுக்கு மொதல்ல அதுகளுக்குக் கால் Quonapatagagairaort.' '
அவன் பற்களைக் கடித்தான். ஏதோ ஒரு ஆவேசம் அவனுக்கு. அவனது கை முஷ்ட்டி இறுகியது. "ஆமா. . . கால் மொளைச்சித்தான் ஆகணும்' என்ற முணுமுணுப் போடு சாணியால் வெகு நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த அந்த தரையில் "மொத்" தென்று ஓசை எழ இறுக்கிக் குத்தினான். அங்கு ஒருவேளை யாராவது விழித்திருந்திருந் தால் அந்த ஒைைசயக் கேட்டு அவர்கள் இதயம் ஒரு ஆர்த்தத்தைக் கண்டுபிடித்திருந்தாலும் கண்டுபிடித் திருக்கும்.
ඉමණි. 1980
96 / தண்ணீர் வற்றிடும் குளங்கள்

மீண்டும் வசந்தம் வரும்
'நம்ப ஆத்தங்கரை ஓரமா ஒரு ஆலமரம் சடைச்சுக்கிட்டு நிக்குது ஹலே . . அதுக்கு கீழதாங்க, தோட்டத்து ஜனமே 'ஜே"ன்னு கூடிக்குவானுஹ'.
சொல்லிவிட்டு, கோப்பையிலிருந்த தேநீரை "உர்' ரென்ற சப்தத்துடன் ஒரு மிடறு உறிஞ்சிக் குடித்தபின், மீண்டும் நிதானமாகத் தலையை நிமிர்த்தி, கண்களை இடுக்கிக்கொண்டு தொடர்ந்து தனது கரகரத்த கண்டிப் பான குரலில் சொல்லத் தொடங்கினார் ராமசாமி.
இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தவரோ தெரியவில்லை. தான் பேசும்போது ‘ங்க' என்று வரும் இடத்திலெல்லாம் 'ஹ' என்ற ராகம் போட்டு இழுத்து இழுத்துக் கதைப்பார் மனுஷர் சொன்னாஹ, வந்தாஹ எனறு.
**ஆனா ஒன்னு, பொம்பள ஆளு அந்த எடத்துக்கு வந்துற கூடாதுஹ. ஆம்பள ஆள் மட்டும்தாஹ குளிச்சி கிளிச்சி மிச்சம் சொஸ்த்தமா வந்து நின்னு குவாஹ, நம்ம பண்டாரம் பய இருக்கானுஹலே . . அந்த மொன்னத் தலையன். . தெரியுஹலா, அவென்தாஹ, நட்ட நடுவுல அட்டகாசமா நின்னுக்கிட்டு, மூணுகும்பம், சின்னுாண்டா, இந்தா இத்தப் பெரிசுக. . செஞ்சி, பூ வெச்சி, சோடிச்சி, பொட்டு வெச்சி எல்லா மனுசாளையும் புடிச்சி அதட்டி உருட்டி அட்டகாசம் பண்ணுக்கிட்டு இருப்பானுஹ மனுசாளும்அந்தமொன்னத் தலையன் போடுற ஆட்டத்தை யெல்லாம் மனசுக்கு எடுத்துக்காம அட சர்த்தான் மொன்னையனே. போடுறா தமாஷ" இது ஒவுட்டு ராஜ்யம் இல்ல அப்படிங்கிற கணக்கா, அவனுக்கு தோதா ஆஹா, ஊஹ"ன்னுக்கிட்டு நிப்பானுவ கும்பங்கள ஒரு வாட்டி
கேகாலை கையிலைநாதன் / 87

Page 47
நந்தலாலாவின்
செஞ்சி முடிச்சிட்டானுஹலாகட்டும். . அடுத்தாப்புள கரகத்தை சொமக்குறதுக்கு மூணு எளம் பசங்களா தேர்ந்தெடுக்கிற வேளத்தாஹ.'
சற்று நிறுத்தி கோப்பையில் மிஞ்சி இருந்த தேநீரை அப்படியே அண்ணாந்து வாய்க்குள் ஊற்றி, கொப்பளிப் பதைப் போல் கன்னத்தை உப்பச் செய்து குடித்தபின், தனது முரட்டு உள்ளங்கையால் உதடுகளை அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டார் ராமசாமி.
இப்பொழுதெல்லாம் இவர் இப்படித்தான். அந்தி பட்டால் போதும். சந்திரன் எங்கேயென்னு தேடிக்கொண்டு வந்து விடுகின்றார். வருவது மட்டுமல்ல, ஏதோ தனது சொந்த வீட்டிற்குள் போவதுபோல் தனது நீண்ட நெடியகரங்களை வீசிவீசி நடந்தவாறே அந்தச் சிறிய வீட்டின் குசினியறைக் குள் ஆறுதலாகச் சென்று சுடச்சுட ஆவி பறக்கும் தேனீரை இரண்டு கோப்பைகளில் ஊற்றி ஒன்றைச் சந்திரனுக்குக் கொடுத்துவிட்டு மற்றதைத் தனது பெரிய கரங்களுக்குள், ஏதோ சூழலின் குளிரிலிருந்து தப்பிக்க அந்தச் சின்னஞ்சிறு தேனீர்க் கோப்பையிடம் தஞ்சம் புகுந்துள்ளதைப் போன்று அதை இறுகப் பற்றிக்கொண்டு முன்னறையில் கிடக்கும் அந்த வாங்கில் சந்திரனுக்கு, எதிர்த்தாற்போல் அமர்ந்து கொண்டு நிதானமாகக் கதைக்கத் தொடங்கி விடுவார்.
இந்த விஷயத்தைப் பற்றித்தான் அவர் கதைப்பார் என்றில்லை. "அந்தக் காலத்தில்'தான் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக எப்படி அகன்ற மரங்களில் குடில் கட்டி இரவு பூராவும் பன்றியின் உறுமலுக்காய் காதைக் கொடுத்துக் காத்திருந்தார் என்றும், எப்படித் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரத் துரைக்குக் கல்லால் எறிந்து மண்டையைப் பிளந்தார் என்றும், இன்று எப்படி அவரது பேரன் அவனது மூக்குத் துவாரத்தினுள் ஒரு போஞ்சி விதையைத் திணித்துக் கொண்டு வந்து நின்று கண்ணை உருட்டி விழித்தான் என்றும், தேவைப்படும் சகல அபிநயங்களுடன் தனது பெரிய மூக்கைத் தூக்கிக் காட்டியும் தனது கண்டிப்பு நிறைந்த கண்களை மேலும் கீழும் உருட்டியும், விஸ்தரித்துத் தீர்த்து விடுவார்.
சந்திரனைப் பொறுத்தவரை இந்தப் பெரிய கட்டுமஸ்த் தான உடம்புடன், ஒட்ட வெட்டப்பட்ட உருண்டைத் தலையுடன் தோற்றம் தரும் இந்தக் கிழவரின் சுறுசுறுப்பு, அட்டகாசமான கதைகள்-இவற்றைவிட அவரது காலத்
88 / மீண்டும் வசந்தம் வரும்

ßffézésové sengadir
தில் அவர் துடிப்போடு கொண்டு நடாத்தியிருந்த போராட்டமிக்க வாழ்க்கைமுறை ஆகியன அவரில் அவனை மரியாதை கொள்ளச் செய்தது.
கதைகள் சொல்லும் போது மட்டும் சிறிது மெதுவாக, ஒரு தாய்க் கரடி எப்படித் தனது குட்டியைப் பார்த்து உறுமுமோ அப்படிச் சிறிது மென்மையாகக் கரகரத்து ஏதோ ஒரு தாளலயத்துடன் ஒலிக்கும் அவர்குரல் அநேக சமயங்களில், சரியாகக் கூறுவதானால், எல்லாச் சமயங் களிலுமே, ஒரு கர்ஜனை போன்ற முழக்கத்துடன் வெளி வருவதை அவன் நன்கு அவதானித்துத் தனது இதயத்துக் குள் வைத்து ரசித்துச் சிரித்துக் கொள்வான். "அப்பப்பா இந்தக் கிழவர் உறுமுவதைப் பார்" என்று. அவர் அப்படித் தான். "பொடியா-வாடா இங்க"- அதிரும். 'எழும்பு. . . தூங்காத நில்லுடா, நிமிர்ந்து நில்லு!!”-கர்ஜனைதான்.
சந்திரன் இந்தத் தோட்டத்துப் பாடசாலையைப் பொறுப் பேற்று இப்பொழுது ஒரு மாதமாகி விட்டது. ஆச்சரிய மாகத் தான் இருக்கிறது. சந்திரன் தான் ஒரு மாஸ்ட்டர் ஆவானென்று நினைத்துப் பார்த்தவனே இல்லை. வாழ்க்கையில் தான் எப்படி எப்படித் திருப்பங்கள், அதிர்ச்சிகள், ஆரவாரங்கள். சிலர் கூறுகிறார்களே வாழ்க்கை ஒரு வட்டமென்று. சந்திரனைப் பொறுத்த வரை வாழ்க்கையை ஒருவன் எப்படி எடுத்துக் கொள் கின்றான் என்பதிலேயே யாவும் தங்கியுள்ளது என்றே நினைத்தான். வட்டமென்றால் வட்டம், சதுரமென்றால் சதுரம். சூழலில் தனது பாத்திரத்தைச் சிறு வட்டத்துள் அடக்கிக் கொண்டவனுக்கு வாழ்க்கை என்றும் வட்டம் தானே. சந்திரனுக்கு இதுபற்றிச் சிந்திக்கப் போதிய ஆர்வ மிருந்தது. சில நேரங்களில் அவன் இது குறித்து மனதிற் குள்ளேயே தர்க்கிக்கவும் செய்வான். தென்னாப்பிரிக்கச் சிறையில் வாடும் யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனுக் காகக் கண்ணிர் சிந்தக்கூடிய இதயம் படைத்தவனுக்கும் வாழ்க்கை வட்டம்தானா! மனித வாழ்க்கை இன்று வட்டங்கள் வட்டங்களாய் அல்லது சதுரங்கள் சதுரங் களாய் உருப்பெறும் போக்கைத்தான் கொண்டுள்ளதா? அன்றி ஒருவரை ஒருவர் உண்மையாக நெருங்கி ஒன்றுகூடி அரவணைத்துக் கொள்ளும் போக்கையா? சந்திரன் பதிலை வாழ்க்கையிடம் இருந்தே எதிர்பார்த்தான்.
அவன் வந்த முதல் கிழமை, தோட்டமும் சரி, தோட்டப் பாடசாலைப் பிள்ளைகளும் சரி சந்திரனுக்குச் சிறிது வியப்பைத் தருவதாகத்தான் இருந்தது.
வந்த முதல்நாள், பாடசாலையில் நான்காம் வகுப்புப்
கேகாலை கையிலைநாதன் / 89

Page 48
Misissaonraonradar
பையன் ஒருவனிடம் எட்டும் எட்டும் எத்தனை என்று கேட்டான். சந்திரனுக்குத் தெரியும், இது நான்காம் வகுப்புக் கேள்வியல்ல வென்று, இலகுவான ஒன்றில் தொடங்கி, அடுத்ததாக மூவிரண்டு எத்தனை என்று கேட்போம் என்ற எண்ணத்துடனேயே இதனை முதலில் GuntlLIT 6it.
குழம்பிய தலையுடனும் வெருண்ட பார்வையுடனும் தயங்கித் தயங்கி எழும்பி நின்ற அந்தச் சிறுவன் இடுப்பை விட்டுக் கீழிறங்கிய அவனது பெரிய காற் சட்டையைத் தூக்கிவிட்ட பின்னர் அவனது மெலிந்த பத்து விரல்களை யும் முகத்திற்கு எதிராக விரித்து நீட்டிக் கொண்டு ஒவ்வொரு விரலையும் உதட்டால் தொட்டுத் தொட்டு ஒன்று இரண்டு என்று எண்ணத் தொடங்கி இறுதியில் பதினொன்று என்று பதிலளித்தான்.
சந்திரனுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. மூன்றாம் வகுப்பு மாணவனே மிக இலகுவாகப் பதில் சொல்லக் கூடிய கேள்வி இது. சந்திரனுக்கு ஒன்று
தெரிந்தது. தனது கடமை இங்கு அதிகம் என்று.
இரண்டாம் கிழமை தோட்டத்தில் அவன் பிரசித்தி யானான். 'எள வயசு மாஸ்ட்டர்’ என்று. இதே கிழமை யில்தான் ராமசாமி சந்திரனுக்கு அறிமுகமானார்.
சில நாட்களில் ராமசாமி சந்திரன் வீட்டிலேயே இரவு தங்கி விடுவதும் உண்டு. சந்திரனுக்கும் ராமசாமி தன்னுடன் இரவு தங்கி விடுவதில் வெகுவாகச் சம்மதம் தான்.
ஆனால் ராமசாமியின் பேரப்பிள்ளைகள் அவரை விட்டால் தானே. அவரது பெரிய ஆகிருதியில் அவை ஏறிக்குதித்துக் கும்மாளம் போடவும் அவரது ஒட்ட வெட்டப்பட்ட உருண்டைத் தலையைப் பிடித்துக் கடிக்கவும், அதில் உள்ள சின்ன சின்னக் கட்டை முடிகளைப் பல்லால் கடித்து இழுக் கவும் அவைகளுக்கு இருக்கும் ஏராளமான விருப்பத்தையும் அவர் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஆனால் சில சமயங் களில் அவர், அவைகளைப் பார்த்துக் கண்டிப்புடன், ‘ம். . .தலையைக் கடிக்கக் கூடாது" என்று நிதானமாகச் சொல்லிக் கொள்வார்.
இன்று ராமசாமியினதும் சந்திரனதும் கதை தோட்டத்தில்
நடக்கும் ஆடிப் பூசையைப் பற்றி அமைந்து விட்டது. அதுவும் கூட சந்திரன் ராமசாமியிடம் அவரது மூத்த
90 / மீண்டும் வசந்தம் வரும்

தீர்த்தக்கரைக் கதைகள்
பேரன் கோபால் எங்கே என்று கேட்க, “அந்தப்பயதான் மூக்குத்தித் தோட்டத்துப் பூசைக்குப் போயிட்டானு ஹலே, என்று இவர் சொல்ல. . அப்படியா? என்ன பூசை. .ஆடிப் பூசை. . நான் பார்த்ததே கிடையாதே. . என்னா ஆடிப் பூசைபாத்தது கெடையாதுஹளா என்று ராமசாமி வியக்க, சந்திரன் வருத்தப்பட்டுக் கொள்ள, இது போதாதா ராமசாமிக்கு. .?
"வழக்கமா இந்த வேலதொடங்கயில நடுராத்திரியாகிப் பூடுஹ, மேமலை காத்து சிலுசிலுன்னு வீசுமுஹ. மணி அடிச்சி தீபத்த ஏத்திப்பிட்டானுஹன்னாப் போதும். . யாருக்குனாச்சும் அருள் வந்துரும், ஒடன அருள்வந்தவர முன்னுக்கு இட்டுக்கிட்டு வந்து ரெண்டு பேத்த தேந்துதரச் சொல்லிருவாஹ. இதுல பாருஹ மாஸ்ட்டர், சில வம்புத் தறுதலைங்க முழிக்குள்ள வெரலஉட்டு அட்டப் பாப்பானு ஹங்கிறேன். பொய்க்குனாச்சும் சாமி வந்த கணக்கா வேசம் கட்டிருவானு ஹ, இதுக்கு ஒசரம்தான் யாராவது பெரியவங்க ரெண்டு பேர நெயமிச்சு அவுக மனசுல என்னா நெனைச்சி வச்சிருக்காஹளோ அத எடுத்துக் கொடுக் கனும்னு ஒரு கண்டீஸன் சாமி வர்றவகளுக்கு எல்லாம் வச்சிருக்காஹ. பெரியவங்க ரெண்டு பேரும் மொதல்லேயே தனியா பேசி ஒரு குத்து விளக்க இல்லேனா ஒரு விவுதித் தட்ட இல்லேன்ன ஒரு தேசிக்காய. . இப்படி எதனாச்சும் நெனச்சி வச்சிருப்பாஹ. சாமிவந்தவரு இஷஹநெனைச்சது இன்னதுதான்னு சொல்லிட்டாத்தாங்க. இல்லன்னா அது பொய் சாமிங்கதானே' என்று கூறிச் சந்திரனின் ஆமோதிப்பை எதிர்பார்த்து ராமசாமி மேலும் கீழுமாகத் தலையை ஆட்டியபோது சந்திரன்மெல்லக் குறுக்கிட்டான்.
'சரி ராமசாமி, பொய் சாமி ஆடுன்னா என்ன செய்வாங்க?"
உடனே ராமசாமி சற்றுநிமிர்ந்து உட்கார்ந்து தனது முரடு தட்டிப்போயிருந்தவிரலில்ஒன்றைஅவனதுமுகத்துக்குஎதிரே நீட்டி, "என்னா, பொய்சாமி ஆடுன்னா என்னா செய்வா ஹலா? ஹ , , ஹ நம்ப ஆறுமுகம் இருக்கானே. . தொங்க வீடு அவரு அப்படித்தான் ஒரு நாளு. . சாமி வந்திருச்சாம். கிடுகிடுன்னு நடுங்குறாரு தொர, களத்துல நான் நின்னு க் கிட்டுருக்கேன் என்னடா, நெனைச்சிருக்கேன் சொல் லுடான்னு . . பய தேசிக்காங்கிறான், பூசணிக்காங்கிறான். எனக்கு தெரிஞ்சி போயிடிச்சி பய நாடகம் ஆடுறான்னு . "நாடகமா ஆடுறிஹ ஐயா. இது இல்லையே நாடகம் ஆடுற துக்குக் களம். வாங்க நாடகம் ஆடுற களத்துள எறக்கி உடு றேன். சோரா ஆடுஹ தொரைகளே’ன்னு பொடரியில ஒரு
கேகாலை கையிலைநாதன் / 9

Page 49
Sierrer
செமப்புடி புடிச்சி அப்படியே அல்லாக்கா தூக்கி ஆத்துல போட்டுட்டேனுங்க. பாருஹ. ஹ. . ஹ ஹ. கூடியிருந்த பசங்க எல்லாம்சுடுகாட்டு நரி கணக்கா சீட்டி அடிக் கிறானுக’’ சிரித்தவாறே எழுந்தவர், "கொஞ்சம் இருங்க மாஸ்ட்டர். அந்த ஜனலை மூடிட்றேன். வாடக்காத்து ஜில்லுன்னு அடிக்குது இல்ல’’ என்றவாறே சென்றுஅந்தச் சிறிய அறையின் தொங்கலில் அமைந்திருந்த சின்ன ஜன்னலை மூடிவிட்டு வந்து தனது வாங்கில் மீண்டும் அமர்ந்து தனது சட்டைப் பையில் இருந்து வெற்றிலையை எடுத்து அதில் சுண்ணாம்பைத் தடவத் தொடங்கினார். அப்பொழுது அவருக்கு முன்பொருநாள் "அருள்வந்தவர்' தன்னைக் கரகம் தூக்கத் தேர்ந்தெடுப்பதற்காக பிடிக்க வந்தது நினைவுக்கு வந்தது. அந்த இனிமையான எண்ணங்களை மீட்டு இப்பொழுது மெல்லச் சிரித்துக் கொண்டார் ராமசாமி. צי
பொதுவாக இளைஞர்களுக்குக் கரகம் தூக்குவது என்றாலே பிடிக்காத ஒரு வேலை. காரணம் கரகம் தூக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தோட்டத்தில் பூசை முடியும் வரை பல கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டி இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரவு முதற்கொண்டு பூசை முடியும் நாள்வரை அவர்கள், அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூசை சில தோட்டங்களில் ஐந்து, ஆறு நாட்கள் என்று நடக்கும். அப்படியே குறை வான நாட்கள் நடந்தாலும் மூன்று நாட்களுக்குக் குறைந்து பூசை நடக்காது. கரகம்தூக்கிகளின் கையில் ஒரு மஞ்சள் நூலைகட்டி,அவர்களைக் கோயிலிலேயே நிறுத்திக் கொள்வார்கள்.இந்த இளைஞர்கள் எந்த ஒரு தேவையைக் கருதித்தானும் பூசை முடியும் நாள்வரை பக்கத்திலிருக்கும் அவர்கள் வீட்டுக்குக் கூடச் செல்ல அனுமதிக்க மாட்டார் கள். அதிகாலைக் குளிரில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும். கோயிலில் சமைத்துப் படைக்கப்படுபவற்றை மாத்திரமே உண்ண வேண்டும். கட்டுப்பாடுகள் சம்பிரதாயங்கள், ஆசாரங்கள்.
இந்த லட்சணத்தில், அந்தத் தோட்டமே குழுமியிருந்த அந்த இரவில், "அருள் வந்தவர் ராமசாமியை நோக்கி வந்தார். printLog rrLS) அப்பொழுது திடகாத்திரமான இளைஞன். நொடியில் தனக்கு நேரப்போவதை உணர்ந்து கொண்டான். கோயிலில் அடைக்கப்பட்டு, அதிகாலை நடுங்கும் குளிரில் குளித்து, ஒரு வேட்டித் துண்டைக் கட்டிக்கொண்டு, இறுதிநாள் கரகக் கும்பத்தைத் தலையில்
92 / மீண்டும் வசந்தம் வரும்

தீர்த்தக்கரைக் கதைகள்
ஏந்திக்கொண்டு ரோட்டு ரோட்டாய், வீடு வீடாய், மழை யில் குளிப்பாட்டி. . . முடியாது. முடியவே முடியாது. இமைக்கும் நேரத்தில் கும்பலில் புகுந்து ஓடத் தொடங்கி விட்டான். யாருமே எதிர்பார்க்கவில்லை. அருள் வந்தவர், 'ராமசாமி என்று கூறி விட்டார். பத்துப் பேர் ராமசாமி யைத் துரத்துகிறார்கள்.இருட்டில், நிலவின் வெளிச்சத்தில் பாதை நீண்டு அமைதியாகக் கிடக்கின்றது. புடிடா, புடிடா . . . ஏய் நில்லு . . . ஒத நிமித்திருவோம் நில்லு . . . Jtrrer IT ló) இருட்டில் தேயிலை மலையில் தாவி ஏறினான். தேயிலைச் செடிகளைப் பிடித்து விலக்கி முன்னேறினான். முன்னேறியவன் திடீரெனக் கால் தடுமாறி விழுந்தான்.--தேயிலை மலைகளில் குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்டுள்ள கான், உடலெல்லாம் வியர்வை. "ஏய் பதுங்கிட்டான், பதுங்கிட்டான். பிடிங்கடா பயல. பொடறியில கையக் கொடுத்துப் புடிச்சி இழுத்துப் போடுங்கடா வெளிய'-குரல்கள். ராமசாமி கான்வழியாக எழும்பாது படுத்தவாறே ஊர்ந்தான்.இதோ அருகில் வந்து விட்டார்கள். ராமசாமிக்குத் திக்கென்றிருந்தது: இதயம் பெரிதாக அடித்துக் கொள்வது அவனது காதில் கேட்டது. "வந்துரு. . . நீ இருக்கிற இடம் தெரியும்’-பொய்ப் பய" முறுத்தல்.
ஆள் அகப்படவில்லை. எல்லோரும் சலித்துப் போய்க் கீழே இறங்கினார்கள். ராமசாமி எழுந்து நின்றான், சலசலப்பு ஒய்ந்து விட்டது. நிலவு வெளிச்சத்தைத் தனது இஷ்டத் திற்கு அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருந்தது. தூரத்தில், சலசலக்கும் ஆற்றின் ஒரமாய், ஆலமரத்தினடியில், பெற்றோல்மக்ஸின் வெளிச்சத்தில். கும்பலாய். . . ராமசாமி சிரித்துக்கொண்டே கீழே இறங்கினான்.
ராமசாமி சிரித்துக் கொண்டார். "அட பயலே, மான்குட்டி போலிருந்தேனடா?-மனசுக்குள் சொல்லிக் கொண்டார். 'பூசை எத்தன நாளைக்கு நடக்கும்’ ’-சந்திரன் மெல்லக் கேட்டான். ராமசாமி ஒரு பெரிய பெருமூச்சொன்றை விட்டுவிட்டுக் கூறினார், "அது அந்தந்தப் பகுதியையும் தோட்டத்தையும் பொறுத்தது. சில பகுதிகள்ள நாலுநாள் வைப்பாஹ, சில பகுதிகள்ள எட்டு நாளும் வைப்பாஹ. . ." அவர் கூறி முடிக்கவில்லை. சந்திரன் ஆச்சரியத்தோடு குறுக்கிட்டான். ** என்னா எட்டு நாளா?*
"எட்டு நாளா??-அவன் அதிசயப்படுவதைக் கண்டு
Casas race ao RossuíaDays Tisdir f 93

Page 50
கந்தலாலாவின்
ஆச்சர்யப்பட்டுப் போனார் ராமசாமி-அட என்னா
மாஸ்ட்டர் சொல்லுறிஹ. மாரியம்மன் பூச, முருகன்
பூசன்னா என்னான்னு நெனைச்சீஹ? ஒவ்வொரு ஆளுக்
கிட்டேயும் மூணுமாசத்துக்குக் காசு புடிப்பாஹ , பூசெ.
தோட்டத்துல ஏழு நாளா நடக்குதுன்னா, ஆறு நாளா அர நேரம் வேலத்தான். கோயில்ல மூணு நேரமும் பூச.
ஐயர் வெளிப்பிரதேசத்துல இருந்து வருவாரு. கடைசி நாளைக்கு மொத நாள் ஒவ்வொரு வீட்டிலேயும் பலகாரம் என்ன? மாவெளக்கு என்னா? தீபாவளி பண்டிக எந்த மூலைக்கு! கடைசி நாள் கோவில்ல அன்னதானம் வேற,
தோட்டமே அண்ணெந் தம்பி கணக்கா குந்திநின்னு சாப்பிடுமய்யா. தோட்டத்துல அந்திக்கு நாடகம்! காவடி !
கரகம்! தமாஷ"! கோயில் தேர் போவுமப்யா, டிவிஷன்
டிவிஷனா ராத்திரிக்கு.
கடைசி நாள், கரகத்த விடுற நாள். என்னான்னு சொல்லுறிஹ தோட்டத்த, மஞ்சள் நீராடுரோமுன்னு வயசுப் புள்ளைகளும், பொடியன்களும் அடிக்கிற கூத்த, மஞ்சளக் கரைச்சி ஒருத்தர் மேல ஒருத்தர் ஊத்திக்கிட்டு,
வெளியில தலை காட்ட முடியாது மாஸ்ட்டர். வயசாணவங்கள மட்டும் தான் விட்டு வைப்பாஹ மாஸ்ட்டர். மொறப்பயலுக, மொறப் பொண்ணுகள
வீட்டுக்குள்ளேயே பூந்து தூக்கிக்கிட்டு வெளிய கொண்டாந்து கொடம் கொடமா மஞ்சத் தண்ணிய தலையில கொட்டுவாஹ, நாங்க வயசானவங்க எவ்வளவு சந்தோஷமா பிள்ளைங்க அடிக்கிற கொட்டத்தப் பாத்துக் கிட்டு இருப்போம் தெரியுமா? ச்சா. இப்பத்தான் ஏண்டா வாழுறோமுன்னு போச்சு."
"அப்படித்தான், இந்தத் தோட்டத்துல மன்னாருன்னு என் மருமவன் ஒருத்தன் இருந்தான் பாருஹ. சிங்கக்குட்டி. கரகம் என்னா, காவடி என்னா, செலம்பு என்னா, பூசைன்னா போதும். இங்க இருப்பான், அங்க இருப்பான், எல்லா எடத்திலேயும் இருப்பான் மாஸ்ட்டர். இந்தத் தோட்டத்துப் பொம்பள புள்ளைகளுக்கே, பூசெ நாட்கள்ள அவனக் கண்டா கொல நடுங்கும். யாரா இருந்தாலும் சரி. அப்படியே அல்லக்காத் தூக்கிக்கிட்டு வந்து குளுப்பாட்டிறுவான் குளுப்பாட்டி. அவனையும் அப்படித் தான் தூக்கிக்கிட்டுப் போயிட்டுக் குளிப்பாட்டிருவாஹ, குட்டிகள்ளாம். தோட்டமே அதிருமய்யா அவென் நடக்கை யில. எப்பவுமே உறுமிக் கிட்டு, ஓநாயுட்டு குட்டி கணக்கா இல்ல இருப்பான். ச்சா. அவனுக்கு அமைஞ்ச விதிய பாருஹ. ஒரு நெடிய பெருமூச்சு ராமசாமியிடம் இருந்து
94 I மீண்டும் வசந்தம் வரும்

தீர்த்தக்கரைக் கதைகள்
இப்போது வெளிப்பட்டது. தனது தடித்த மீசையை மெல்ல, தனது உள்ளங்கையால் தடவித்தடவி விட்டவாறே சில கணங்களுக்கு மெளனத்தில் ஆழ்ந்து போனார். சந்திரனுக்கு அது யுகங்களாகத் தோன்றியது போலும். கால்மேல் கால்போட்டு சாய்ந்து உட்கார்ந்திருந்தவன், காலை எடுத்துவிட்டுத் திரும்பவும் போட்டுக்கொண்டு, "இப்ப எங்கங்க மன்னாரு' என்றான்.
ராமசாமி, மீசையைத் தடவி விட்டுக் கொண்டிருந்த கையை எடுத்துவிட்டு, "மன்னாரு எங்கவா?" என்று நெற்றியைச் சுருக்கியவாறே மெல்லச் சந்திரனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறே முணுமுணுப்பதுபோல்க் கேட்டார். அவர் கண்களில் இப்பொழுது திடீரென வந்து குடிகொண்ட விசித்திரமான-அந்த விபரீதமான பார்வை யைச் சந்திரனால் நன்கு அனுபவிக்க முடிந்தது.
அவரது தடித்த உதடுகள் மெல்ல அதிர்ந்தன. "கொன்னுட் டாஹ மாஸ்ட்டர். அந்தப் பச்சிளம் சிங்கக் குட்டிய கொன்னுட்டாஹ. அவரது தடித்த புருவங்களின் கீழிருந்த கண்கள் துயரம் தோய்ந்து பளபளக்க அவர் தொடர்ந்தார். “சிங்கமானாலும் குட்டிதானே மாஸ்ட்டர். பத்துப்பேரு சேர்ந்து ஒருத்தனக் கொல்றதுங்கறது எந்தத் தருமத்துல சேத்தி மாஸ்ட்டர். சொல்லுஹ மாஸ்ட்டர். இந்தத் தோட்டத்த என்னைக்கு எங்க தாத்தா காடு வெட்டி வெத வெதைச்சாரோ அப்பயில இருந்து நடக்காதது, இந்தா என் கண்ணு முன்னாடி நடந்து போச்சி.""
மீண்டும் ஒரு மெளனம். சந்திரன் இம்முறை அந்த மெளனத் தைக் கலைக்கவில்லை. அவரே தொடர்வார் என்று தெரிந்து, மிகுந்த கவனத்துடன் அவரது வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே அள்ளி எடுத்துத் தன்னுள் புதைத்துக் கொள்ளத் தயாராக இருந்தான் அவன்.
"ஏன் செத்தான் தெரியுமா மாஸ்ட்டர்? ஏவுட்டு பேத்தி, வள்ளிக்குட்டி இந்தத் தோட்டத்துல இன்னிக்கு நடக்கு றான்னா அது யாரனால தெரியுமா மாஸ்ட்டர்? மன்னாரு தான். எந்தப் புள்ளைகல கொடம் கொடமா மஞ்சத் தண்ணியக் கரச்சி தலையில கொட்டுனானோ, எந்தப் புள்ளைங்க அவன புடிச்சி, அவென் மொரண்டு புடிக்க மொரண்டு புடிக்க மஞ்சத் தண்ணியக் கரச்சி அவென் தலையில கொட்டி கைகொட்டிச் சிரிச்சிச்சிகளோ, அந்தச் சகோதரத்துக்கு ஒன்னுன்னா பொறுப்பானா மாஸ்ட்டர். தமிழ்-சிங்களக் கொளப்பமுனுட்டானுஹ.
கேகாலை கையிலைநாதன் ஒ5

Page 51
NSS Norr Mo T anar
இந்தப் பக்கத்து நாட்ல இருந்து திமுதிமுன்னுட்டு வந்துட்டானுஹ. தோட்டமே செதறிப் போச்சு. அந்த ரோட்டுக்கு மேல இருக்கே புல்லுமல, அதுல வள்ளிக்குட்டி கத்திக்கிட்டு ஒடுறா. கேவலம் மாஸ்ட்டர். சொறி நாய்ங்க தோத்துப் போயிரும். அந்தப் பச்சிளம் புள்ளையத் தொரத்திக்கிட்டுப் பத்து நாட்டானுஹ ஒடுறானுகளாம். இவென், அகஸ்மகஸ்த்தா, வள்ளிவுட்டு கொரலக் கேட்டிட்டான். சும்மா சொல்லக்கூடாது மாஸ்ட்டர், தைரியசாலி, வீமன் மாஸ்ட்டர் வீமன். வள்ளி தப்பிச் சிட்டா. இவென் செத்துட்டான். வள்ளி கைய புடிச்சவன் கண்ண இவென் தோண்டிப்புட்டான்.""
மீண்டும் அந்த வரிகளை ராமசாமி மெல்லிய ஒரு கம்மலான குரலில் சந்திரனுக்குச் சொன்னார்.
"வள்ளி இன்னைக்கு நடக்குறான்னா அது மன்னாரு னாளத்தான் மாஸ்ட்டர்'
தலையை மெல்ல எதையோ ஆமோதிப்பது போல் ஆட்டிக் கொண்டே வெறித்த பார்வையுடன் அவர் தனக்குத்தானே கூறிக் கொள்வதைச் சந்திரன் இதயம் துடிக்கப் பார்த்திருந்தான்.
"இந்தத் தோட்டமே அவனுக்குக் கடமப் பட்டிருக்கு"
மிகமிக மெல்லிய குரலில், தனது ஆத்மாவிடம் கூறுவது போல் அவர் சந்திரனிடம் கூறினார். "அவென் தோட்டத்துல ஒரு சிங்கக்குட்டி மாதிரி இருந்தான். சாகையிலயும் சிங்கக்குட்டி மாதிரி செத்தான். ஆமாப்பா, அவென்னா ஒரு சிங்கக்குட்டிதான். தோட்டமே அவன மறந்தாலும்-அவர் அவரது முரட்டுக் கைகளால் அவரது நெஞ்சின் இடது பக்கத்தை மெல்லத் தட்டிச் சொன்னார்இந்த எதயத்துல அந்தச் சிங்கக்குட்டி என்னைக்கும் இருக்கும்'
மீண்டும் அந்த அறையில் ஒரு பெருமூச்சுக் கேட்டது. 'அதெல்லாம். , , முடிஞ்ச கத, அந்தக் கலவரத்துக்குப் பின்னாடி தோட்டத்துல காவாசி பேரு, நாங்க வேற தோட்டத்துக்குப் போறோமுன்னு சொல்லிட்டுப் போயிட் டாஹ, இருக்கவங்களும் ஏனோதானோன்னு வாழுறாஹ, கூடவேணாம். இந்தா கண்ணு முன்னுக்கே பாருஹலே மாஸ்ட்டர். நரலுவருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல இந்த நேரம்ன்னா, ஒங்களோட இப்படி ஒக்காந்து பேசிக்கிட்டிருப்பேனா மாஸ்ட்டர்'
96 / மீண்டும் வசந்தம் வரும்

தீர்த்தக்கரைக் கதைகள்
சலிப்புடன் தலையைக் கீழே குனிந்து தரையைப்பார்த்த வாறே கூறினார்,
'நாடகம் என்னா! கரகம் என்னா!! காவடி என்னா! கும் மி என்னா!"
நேரம் போனதே தெரியவில்லை. காற்றும் இப்போது பெரிதாக வீசவில்லை. வானத்தில் இன்று நிலவும் இருக்க வில்லை.
ஏகாந்தமாய்க் கிடந்த அந்தத் தோட்டத்தில், கனத்துப் போன அந்த இரண்டு இதயங்களும் நன்றிகூறி விடை பெற்றுக் கொள்ளும்போது வானம் நன்றாக இருட்டி விட்டிருந்தது.
"சேர், சேர் கத்தரிக்கா செடியில பூ வந்திருக்கு சேர். .”* பரக்கப் பரக்க ஓடிவந்த கோபால் மிகுந்த ஆச்சரியத்தோடு கூறினான். அவனது முகம் பூரிப்பில் திளைத்துப் போயிருந் தது. அவனுக்குப் பின்னாலேயே அவனது தாத்தா ராமசாமி தனது நீண்ட கைகளை மெதுவாக வீசிவிசி நடந்து வந்துகொண்டிருந்தார்.
ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்த சந்திரன் கோபாலின் குரல்கேட்டு ஏறிட்டு நோக்கினான். அவனுக்கு இந்தச் சிறுவனின் குதூகலம் வியப்பைத் தருவதாயிருந்தது. தனது உழைப்பால் உருவான செல்வத்திடம் இந்தச் சின்ன உள்ளம் கொண்டிருந்த காதல், மிகவும் புனிதம் வாய்ந்த தாக அவனுக்குப் பட்டது.
"அதுக்குள்ள பூத்திரிச்சா? பெரிய பூவா?" - சந்திரன் மேசையைவிட்டு எழும்பாமலே பக்கத்தில் வந்துநின்ற சிறுவனின் தலையில் கையை வைத்து அவனது மயிர்க் கற்றைக்குள் விரல்களை நுழைத்து மெல்ல, ஆதரவோடு கோதியவாறே கேட்டான்.
"ஆமா சேர் அழகான பூவுசேர். தாத்தாவுட்டு பாத்தியில இன்னும் பூவே பூக்கல சேர்.
ஏவுட்டுப் பாத்தியில நடுவுல ஒசரமா நின்னிச்சே சேர், அந்த வளந்த செடி. , அதுலதான் சேர். . நட்சத்திரம்
கேகாலை கையிலைநாதன் 97

Page 52
αέ 5ου που πεθεότ
மாதிரி. தம்பிக்குக் காட்டினேன் சேர், தம்பி சொல்றான் சேர், அவனுக்கு அதகடிக்க ஆசையா இருக்குன்னு . நா வந்த பொறகு கடிச்சுருவானோன்னு பயமாஇருக்கு சேர்.' பூரித்திருந்த அவனது முகம் நொடியில் சூம்பிவிட்டது. இப்பொழுது அவனது முகத்தில் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற பெரிய மனிதத் தோரணைமிக்க கவலையைக் கண்டவுடன் சந்திரனின்இதயத்தில்அவனிடம் அடக்க முடியாத ஒருவகைப் பரிவுணர்ச்சி ஏற்பட்டது.
அவனது தலையை ஆறுதலாகத் தடவி விட்டவாறே கூறினான், ‘ச்சீ. . சும்மா சொல்லியிருப்பாண்டா. கத்தரிப் பூவயாருமே கடிக்கிறதில்லையே. தம்பி வெளை யாட்டுக்குச் சொல்லிருப்பான். ஆனா பூச்சி, புழு வராம கவனமாப் பாத்துக்க அதுலத்தான் கவனமா இருக்கணும்.”*
சிறுவன் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சந்திரனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறே, பொறுப்பை ஏற்றுக் கொண்டு தலையை ஆட்டியபொழுது ராமசாமிக் கிழவர், "மாஸ்ட்டர்" என்றவாறே உள்ளே நுழைந்தார்.
ராமசாமிக் கிழவரின் தோட்டத்தில் மாத்திரமல்ல. . . அந்த நடுக்கணக்கு டிவிஷனில் இருக்கக் கூடிய அநேக காய்கறித் தோட்டங்களிலும் கத்தரிதான்செழிப்பாகவளர்ந்திருந்தது.
எல்லாமே சந்திரனின் வேலைதான். சந்திரனின் வேலை மட்டும்தான் என்று கூறிவிடவும் முடியாது. அவனது நண்பனின் வேலையும் கூட. அவனது நண்பன் மட்டுமா? prrt Loafntló). ...?
விஷயம் இப்படித்தான் நடந்தது. சந்திரன் அந்தத் தோட்டத்திற்கு வந்து இரு மாதத்தின் பின், அந்த டிவிஷனில் இருக்கக் கூடிய வீட்டுத் தோட்டங்களெல்லாம் பயிரிடப்படாமல் இருப்பதுகண்டு ஒருநாள் பேச்சுவாக்கில் ராமசாமியிடம் வினவினான், “ஏன் இந்தத் தோட்டமெல் லாம் சும்மா போட்டு வைச்சிருக்கீங்க? ஏதாவது காய்கறி போடலாமே. அப்படியே பெருசா விக்காம போனாலும், வீட்டுப் பாவனைக்கு சரி ஒதவுமே, ராமசாமி-அவனுக்கு
ப்படி அருமையான நிலத்தைச் சும்மா போட்டு வைத்
ருப்பது உண்மையிலேயே எரிச்சலைத் தருவதாக இருந்தது.
ராமசாமி அவருடைய உருண்டைத் தலையை ஆட்டிக்
கொண்டே சொன்னார், "ஏத்துக்கிறேன் மாஸ்ட்டர்,
ஏத்துக்கிறேன். ஆனா அதுக்கு ஒரு காரணமில்லாம இல்ல. நம்ம தோட்டம் மட்டும் தான் இப்பிடிப் புல்லுமண்டிப்
98 I மீண்டும் வசந்தம் வரும்

fé5éssové sessdr
போயிட்டுக் கெடக்குதுன்னு நெனைச்சிஹலா. இந்த டிவிஷன்ல இருக்குற எல்லா ஆளுங்கவுட்டுத் தோட்டமும் இதே நெலவரந்தாங்க. அந்தக் கோபாலு பயமாத்திரம் ஏதோ ரெண்டு பூஞ்சிவெதய நட்டுவச்சி இருக்கான். ஆனா அதுக்கொசரம், நாங்க தோட்டமே செய்யாத ஆளுகண்ணு நெனைச்சி பூடாதிஹ. செஞ்சவங்கதான். செய்யாமலா இருந்தோமுங்க"-ராமசாமி, சந்திரன் எங்கே தங்களை உழைக்கப் பயந்தவர்கள் என்று தவறாக எண்ணிவிடப் போகின்றான் என்று அச்சம் கொண்டதைப் போலிருந்தது.
இருவரும் ஆற்றங்கரைக்குச் செல்லும் பாதை வழியாக நடந்து சென்றவாறே கதைக்கத் தொடங்கினர்.
**காய்கறித் தோட்டம் மாத்திரமா புல்லுமண்டிப் போச்சு மாஸ்ட்டர்? இந்த டிவிஷன்ல ஒரு மாடாவது இருக்கான்னு கவனிச்சிஹலா மாஸ்ட்டர். சொல்றேன். என்னா விஷயமுன்னா, கலவரம் வந்திச்சி இல்லிஹலா? அதுக்குப் பொறவு அதிகமா எல்லோருமே வேற தோட்டத்துக்குப் போற ஐடியாவுலதான் இருந்தாஹ. இருந்த மாடுகள கொழப்பத்துள கொள்ள அடிச்சிக்கிட்டுப் போயிட்டாஹ. ஆளுங்களுக்குத் திருப்பி மாடு புடிக்கிறதப் பத்திய யோசன தோணல. வேற ஒரு தோட்டத்த தேடுறதப் பத்தித்தான் யோசிச்சிக்கிட்டு இருந்தாஹ, போகப் போறவனுக்குத் தோட்டம் என்னாத்துக்கு மாஸ்ட்டர்? அதுக்கும் மேல ஆளுங்களுக்கும் ஒரு வெறுப்புத் தட்டிப் போச்சி, தட்டாம இருக்குமுஹலா? கொளப்பத்துக்குப் பின்னாடி, அந்தா இந்தான்னு இப்ப நாலு வருஷம், ஆளுங்களுக்கு எந்த ஒரு செரத்தையும் இல்லாமக் கழிஞ்சி போச்சா! இப்ப என்னாடான்னா, தோட்டம் போடாம, மாடு வைக்காம இருக்கிற அந்தச் சோம்பேறி வாழ்க்கையே எல்லாத்துக்கும் நல்லாப் பழகிப் போச்சு. . . அதான் மாஸ்ட்டர் விஷயம்."
சந்திரன் சற்று யோசித்தபின் கேட்டான். "சரி இப்ப திருப்பியும் தோட்டம் போடத் தொடங்கின்னா என்ன. என்னோட படிச்சவர் ஒருத்தர் இங்க மாவில்மட தோட்டப் பண்ணையில சூபர்வைசராக இருக்காரு. போனகெழமை கூட அவரப் பார்க்கப் போயிருந்தேன். எனக்கு இப்பிடி ஒரு நெனவே வரல. அவரு மூலியமா இந்த டிவிஷனுக்குக் கொஞ்சம் வெதவாங்க முடிஞ்சாலும் வாங்கலாம்"
அன்று நடந்த இந்தச் சம்பாஷனைதான் அந்த நடுக் கணக்கில் மீண்டும் காய்கறித் தோட்டங்கள் தோன்றக் காரணமாக இருந்தது.
ராமசாமி, "செய்யலாம் தாங்க" என்று இழுத்தார்.
GassroG) GD5 sa Rogs risdir / 99

Page 53
Sisurneriler
அடுத்துக் காரியங்கள் படபடவென்று நடந்தேறின. ராமசாமிக் கிழவரிடம் கதைத்த மறுநாள் மாலையே சந்திரன் அவனது நண்பனின் வீட்டு வாசலில் நின்றான்,
"ஐம்பது குடும்பத்துக்கும் தோட்டம் போட்ற மாதிரி விதை கொடுக்கறதுன்னா கஷ்டம் சந்திரன். ஒரு முப்பது குடும்பத்துக்கு ஸ்டோர்ஸ்ல இருந்து கொடுத்து பின்ன சமாளிச்சுக்கலாம். மீதி இருபது குடும்பத்துக்கும் நீ வெளியில வாங்கிக்க, இல்லேன்னா கவர்மென்ட் "சீட் டிப்பாட்மென்டல ச்சீப்பா வாங்கிக்க. அவ்வளவு வராது. வெத மொளைச்ச பெறகு மருந்துன்னா இங்க பாத்துத் தரலாம். மத்தப்படி வீக் என்ட்ஸ்ல வந்து சூபர்வைஸ் பண்ணிக்கலாம். . நண்பனின் ஆதரவு சந்திரன் எதிர் பார்த்ததை விட அதிகமாய் இருந்தது. உற்சாகமாய்த் தோட்டத்துக்குத் திரும்பியவன், ராமசாமிக் கிழவரைத் தேடினான்.
"ம். . . ஆழமா போடுலே. முள்ளு போடுறானாம் முள்ளு. இந்தப் பக்கம் வா, வெளகு. குட்றானா குடு, என்னா திங்குறே. ஒடம்புல ரெத்தமில்ல. ஒங்களுக்கெல்லாம் ஒடம்புல சோத்துக் கஞ்சாஒடுது’-ராமசாமி கிழவர்தான். அவரது மகனின் கையிலிருந்த "கால்முள்ளை" வெடுக்கெனப் பிடுங்கினார். அவனைத் தள்ளிவிட்டு நிலத்தில் ஓங்கிக் குத்தி காலில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி, மண்ணைப் பிரட்டி வீசியடித்தார். அந்த ஞாயிறு குடும்பமே வீட்டுத் தோட்டத்தில்.
கிழவரின் நெற்றியில் வியர்வை வழிந்தது. புறங்கையால் ஒரு துடைப்புத் துடைத்துவிட்டு ஆக்ரோஷத்துடன் ஓங்கி ஓங்கி அந்த இறுகிப் போயிருந்த நிலத்தைக் குத்தினார். "தேவ்டியா பயவுட்டு மண்ணு-கட்டி பட்டுப் போய்ட்டியா?" என்றெல்லாம் முணங்கிக் கொண்டு, ‘இரு, இரு’ என்றவாறே கட்டிபட்டிருந்த அந்த நிலத்தை மூர்க்க மாய்ப் பிரட்டிப் பிரட்டித் தள்ளினார். தோட்டத்தின் வேலையில் ஈடுபட்டிருந்த பேரன் குரல் கொடுத்தான்.
"தாத்தா, இங்க ஒரு பெரிய கல்லூ. முள்ள கொஞ்சம் தா தாத்தா' .
**இந்தா கொண்டுபோ. . .டக்குன்னு தா. . .பெரிய கல்லா. . . உடாத தோண்டி எடு. இல்லாட்டி ஒடைச்சி தூளாக்கி தூக்கி வீசு. . . கண்டிப்பான குரலில் தொடர்ந் தார். தோட்டம் போடுறதுன்னா தோட்டம் மாதிரி இருக்க வேணாம்'
100 / மீண்டும் வசந்தம் வரும்

தீர்த்தக்கரைக் கதைகள்
சந்திரனும் ராமசாமியும் ஒவ்வொரு வீட்டிலும். மாவில்மட பண்ணையிலிருந்து ஒருவர் தோட்டம் பார்க்க வரப் போவதாகவும் விதைகள் வழங்கப்படுமென்றும் அறிவித்திருந்தார்கள். ராமசாமிக் கிழவர் எல்லோரையும் பார்த்துக் கத்தினார், "அடேய் சோம்பேறிப் பசங்களா. என்னடா ரோட்டு சுத்துறிஹ. ஆம்பளைகளாட்டம் தோட்டம் போடுங்கடா என்று. சந்திரனுடன் கரப் பந்தாடும் வாலிபர்கள், அவனும் ராமசாமியும் தோட்டம் செய்ய முன்வருவதைக் கண்டு தமக்குரிய பங்கை அக்கறை யுடன் செய்தனர்.
"அப்ப பூ பூத்திரிச்சி சந்திரன் உள்ளே நுழைந்த ராமசாமிக் கிழவரிடம் மெல்லச் சிரித்தவாறே கூறினான்.
"ஆமா. . .மாஸ்ட்டர். ஆனா இனி காய்காய்க்கத் தொடங்குனாத்தான் இருக்கு வேல.'"
ராமசாமிக் கிழவரின் கவலை நான்கு கிழமையின் பின், ஒரு நாள் இரவு தோட்டத்தை அணுகத்தான் செய்தது.
'நடுக்கணக்கில்' எல்லாக் குடும்பங்களுக்குமே விதை வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் ஒரு முப்பது குடும்பத்தாரே தோட்டத்தை நன்கு சிரத்தை எடுத்துச் செய்திருந்தனர். சந்திரனுக்கும் ராமசாமிக் கிழவருக்கும் இதுவே ஒரு பெரிய வெற்றியாகப்பட்டது. தோட்டம் செய்வதில் ஈடுபட்ட குடும்பங்களில் இருந்த வாலிபர்கள், தமது வீட்டின் முன்னால் அமைந்து கிடந்த அந்தப் பதினைந்தடி சதுர நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைத் தானும் விரயம் செய்யாமல் அற்புதமாகக் கத்தரிச்செடி கனை நாட்டி வளர்த்திருந்தார்கள். அவர்கள் கைத் திறனைக்கண்டு கத்தரிச் செடியே பூரித்து நின்றதுபோல் செழிப்பாக இருந்தது. சந்திரன் நல்ல இனமாக தேர்ந்து வேறு கொண்டு வந்திருந்ததால், ஒவ்வொரு தோட்டத் திலும் ஐம்பது றாத்தலுக்குக் குறையாத அளவு காய்கள் முற்றிப் பளபளப்புடன் தொங்கி நின்றன.
நாய்களின் சப்தம் லயன்களில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்த சந்திரனின் வீட்டுக்கும் கேட்கத்தான் செய்தது. சந்திரன், நிலவு காய்ந்திருந்த அந்த இரவில் ஒன்றும் பெரிது படுத்தாமல் உறங்கிப் போனான்.
காலையில் ராமசாமிக் கிழவர் அதைச் சொன்னார் அவனிடம், சிறிது ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த "கொட்டேஜ்" வீடுகள் இரண்டில் இருந்த அவ்வளவு கத்தரிக்காய்களும் ஆயப்பட்டு விட்டனவாம்.
கேகாலை கையிலைநாதன் / 104

Page 54
கந்தலாலாவின்
'மாடசாமி வீட்லயும் பெருமாள் வீட்லயும் தாங்க நாய் கொளச்சிச்சி. நாங்களும் அவ்வளவ்வா சட்ட பண்ணல. மாடசாமியும் பெருமாளும் கடைசி நேரத்துலத்தான் கதவத் தொறந்திருக்காங்க. ஏன்னா அவுங்களும் எதிர் பார்க்கல. கதவ தொறந்து பார்க்கங்காட்டியும், ரெண்டு கல்ல உட்டடிச்சிட்டு துவப்பாண்டா’ன்னுக் கத்திக்கிட்டு ஒடிச் சேந்துட்டானுஹ. நான் அப்பவே நெனைச்சேன்.ஒரு கெழமைக்கு மொத, நாய்க்குட்டி இருக்கானு தேடிக்கிட்டு வந்த அந்த ரெண்டு நாட்டானுவளும் ஒரு மாதிரியா பார்க்கையிலேயே. ச்சா ஒழப்பெல்லாம் வீணாப் போச்சே?
அன்றே எல்லாத் தோட்டங்களிலும் கத்தரி ஆயப்பட்டு, நகரத்துக்குக் கொண்டுபோய் விற்கப்பட்டது.
மாலையில் கரப்பந்தாட்டம் ஆடி முடிந்தவுடன் நெட்டை அவிழ்த்துவிட்டு, அருகில் இருந்த படிகளில் அமர்ந்து வாலிபர்கள் சந்திரனுடன் அளாவத் தொடங்கினபோது ராமசாமிக் கிழவரும் அங்கே இருந்தார்.
*"நேத்து அம்புட்டு இருந்தானுங்களோ έθιbι η இருப்மோமே. . . ஒரு சிம்பு'
*"ருசி கண்டவன் 6מוחזקוג விடுவானா. ஆறுமுகம்
தோட்டத்துல வாழத் தார் முத்திரிச்சி'
'இதுதான் மாஸ்ட்டர் இங்க பிரச்சனையே, எந்த ஒரு காரியத்தையும் என்னா ஊக்கத்தோட செஞ்சாலும் நாங்க பயந்து பயந்துதான் செய்யவேண்டி இருக்கு. எளவு சனியனுங்க! நாங்க என்னடா, லயத்துக்குள்ள முத்தையா குமிச்சி வச்சிருக்கோம்? என்னமோ தேன்பூச்சி சேக்குற மாதிரி ஒவ்வொரு சொட்டா, ஒடம்பை முறிச்சிச் சேர்த்தா லும் அதையும் நக்கிக்கிட்டுப் போக வந்துட்றானுங்க. இதுதான் மாஸ்ட்டர் அப்பவே சொன்னேன், தோட்டம் போட்றதெல்லாம் பொய்வேல. ..”*
"அட தூத்தேறி! வாய மூடு. எதுலே, பொய் வேல. எது பொய் வேல? தோட்டம் போட்றதுல்ல என்னா பொய் வேலைய கண்டலே. அவென் நக்கிட்டுப் போக நீ அவென் நாக்கை வெட்டு. அதுக்கு வக்கில்லாம வாயளக்காத"
ஆவேசத்துடன் குமுறிய ராமசாமியின் கோபக் குரலில் வாயடைத்துப் போய், பேந்தப் பேந்த விழித்த அந்த இளைஞனைப் பார்த்து சந்திரன் ஆறுதலாக "அவர் சொல்வது சரிதானே" என்பதுபோல் புன்னகை செய்தான். '
102 மீண்டும் வசந்தம் வரும்

தீர்த்தக்கரைக் கதைகள்
சந்திரனின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த வெள்ளையன் கூறினான், ‘நல்ல நாய் வளக்கணும். . . பிச்சி போட"
மீண்டும் ராமசாமிக் கிழவர் அவனையும் இடைமறித்து வார்த்தையாடத் தொடங்கி விட்டார்.
"ஆமா. . . நாய் கொண்டாங்க நாய்; ஒனக்கே ஒன்னும் புடுங்க முடியல. ஒவுட்டு நாய் வந்துதான் புடுங்கப் போவுதோ, நிறுத்துலே கதய. நாய் கொண்டாராராம் நாய் ராமசாமி வெறுப்புடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.
"அப்ப என்னாத்தான் செய்யிறது’
"என்னா செய்யிறதா. இந்தவொலி போல விட்டிட்டு நீங்கெல்லாம் கொஞ்சம் செலம்பு பழகுன்னா என்னால்லே. மதமதன்னு நிக்குறிங்களே. . .ஒங்கல்ல எத்தன பேருக்குலே செலம்பு தெரியும்? நம்ம தோட்டத்துல இருக்கவனுங்கெல் லாம் செலம்புல வில்லனுங்கன்னு தெரிஞ்சா ஒரு பய இந்தப் பக்கம் நாடுவானா. . ."
"யாரு பழகிக் கொடுக்குறது" ஏன் நான் பழகித் தாரேன்"
"எவ்வளவு தெரியிமுன்னு தெரியலையே; அர புடியா, காபுடியா?*
ராமசாமிக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது. "ஏலே என்னான்னு நெனைச்சேலே இந்த ராமசாமிய. என்னோட ஒத்துக்கு நிக்க ஏலுமா? அர புடியாவது முழு புடியாவது. . இந்த வட்டாரத்திலேயே ‘ஒன்ற புடி தெரிஞ்சவென் நான் ஒருத்தன்தான் தெரிஞ்சிக்க"
அன்று வெள்ளிக்கிழமை வொலிபோல் திடலில் அமைதி யாகப் பல இளைஞர்கள் நின்றிருந்தார்கள். தீபம் ஒன்று ஏற்றப்பட்டு, தேங்காயும் உடைக்கப்பட்டது.
ராசாமிக் கிழவர் கம்பீரமாக, தீபத்தைத் தொட்டு வணங்க அவரின் பின்னால் பத்து இளம் வாலிபர்கள் திறந்த மார் போடு தீபத்தை வணங்கி நின்றார்கள். தீபத்தை வணங்கி விட்டு, வாலிபர்களில் ஒருவனாய் நின்ற சந்திரனிடம்முதன் முதலாய்த் தீபத்தை நீட்டிப் பிடித்தார் ராமசாமி.
"மொதல்ல ஒடம்ப வளைக்கிறதுக்குப் பழகனும், இந்தா
கேகாலை கையிலைநாதன் /

Page 55
இப்பிடிச் சுத்துங்க"- சொல்லிவிட்டு அநாயாசமாகக் கம்பைச் சுழற்றத் தொடங்கினார் ராமசாமி.
அவரைத் தொடர்ந்து, பத்து இளைஞர்களும் சற்றுத் தள்ளித் தள்ளிநின்று கம்பைச்சுழற்றத் தொடங்கினார்கள். பத்துக் கம்புகளும் வலிமை நிறைந்த மூர்க்கத்துடன் தலைக்கு மேல் வேகத்துடன் சுழலத் தொடங்கியபோது, ராமசாமிக் கிழவர் லிடுவிடுவென்று அங்கும் இங்கும், ஒவ்வொருவரிடமும் சென்று அவர்கள் சரியாகச் சுற்றுவதற்குக் கற்றுத்தந்து "ஒடர்கள்" போட்டுக் கொண்டிருந்தார். *ஏலே. . . அப்பிடி இல்லேலே. . . நல்லா வளைச்சு சுத்து". *ம். . . அப்பிடித்தான். . கம்ப நீட்டிப் புடி" "மன்னாற நெனைவிருக்கலே. அவன மனசுல வச்சிக்கிட்டு சுத்துலே. சுத்து. . . நல்லா சுத்து" தலைக்கு மேல், காற்றைப் பிளந்துகொண்டு சுற்றிய கம் கள் எழுப்பிய விர் விர்ரென்ற சப்தத்தையும் மீறி ராமசா யின் அந்தக் குரல் அந்தத் திடலில் அதிர்ந்து வெடித்தது கேட்பவர்களுக்கு மிகவும் நன்றாகத்தான் இருந்தது. சந்திரன் நினைத்தான்-இது "காபுடியாக" இருக்கலாம். ஆனால் இது முதற்படி என.
Syaf 98
194 I மீண்டும் வசந்தம் வரும்

காதலிலே இரு கண்கள்
இதோ இப்படித்தான்-லேசான ஒரு மையிருட்டில் ஆற்றங் கரை ஓரமாக உட்கார்ந்திருப்பது சுகமானதுதானே? நானும் திலீப்பும் பாதையின் ஓரத்தில் போட்டிருந்த இரும்புக் கம்பிகளின்மீது ஏறி அமர்ந்து கால்களை ஏனோ தானோவென்று தொங்கப்போட்டுக் கொண்டிருந்தோம். கால்களை அப்படியே அவ்வப்போது லேசாக ஆட்டிக் கொள்வது எமக்கு திருப்தியாய் இருந்தது.
எங்களுக்கு நேர் கீழே பாதையை ஒட்டினாற்போல் ஓடியது கங்கை. சத்தமே இல்லை.
கங்கை நிறைய இன்று நீர். ஏதோ நிறை மாதத்து கர்ப்பிணி, சத்தம் போடாமல் போவாளே, அது மாதிரி சத்தமே வைக்காமல் நிதானமாக பெரிய மனித தோரணை யில் அலுங்காமல் நலுங்காமல் சென்று கொண்டிருந்தாள் கங்கை. இந்த இடம் ஒரே தட்டையான இடமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் இப்படி அமைதியாகப் போகாது.
தூரத்தில் கங்கையின் குறுக்காக போடப்பட்டிருந்த பாலமும் அந்தப் பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வெளிச்சம் நீரில் பிரதிபலிப்பதும் பார்வைக்கு அழகாக இருந்தது.
ஆனால் நாங்கள் அமர்ந்திருந்த இடம் மங்கலான இருட்டால் சூழப்பட்டிருந்தது. இருந்திருந்து உற்சாகம் கொண்டுவிட்ட கெண்டை மீன்கள் நீரின் மேற்பரப்பில் குதித்துவிழும் தபுக்,தபுக் என்ற சத்தம் எங்கள் கவனத்தை அடிக்கடி கவர்ந்தது. சத்தம் வந்த திக்கில், குதிக்கும் அந்தக் கெண்டைகளை பார்ப்பதற்கு நாட்டம் கொண்டு, நாங்கள் பார்வையை அடிக்கடி அங்கு செலுத்திக் கொண்டிருந்தா லும் வெளிச்சம் போதுமானதாக இருக்கவில்லை.
Gassraa aastro apsorgsdir 1 k 105 i

Page 56
கந்தலாலாவின்
s
இதோ இருக்கிறானே திலீப்-என்னைவிட கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வயது இளையவன்-வயதுக்கேற்ற துடிப்பு அவனில் நிறையவே காணப்பட்டது. கல்லூரியில் அட்வான்ஸ் லெவல் படித்துக் கொண்டிருக்கிறான்.
இவனோடு இப்பொழுது நான் ஓரளவு நல்ல நண்பனாகி யுள்ளேன். இவனின் நட்பு ஒரு எல்லைக்கு உட்பட்டது தான் என்றாலும் இப்பொழுது கொஞ்சக் காலமாக சாக முனைந்துள்ள எனது இளமைக்கால வீறுகளை, இளைஞனுக்குரிய துடிப்புகளை, சுயநலமற்ற போக்குகளை இவன் உயிர்ப்பிக்கிறான் என்ற வகையில் இவனது நட்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
நாங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து கதைக்கின்றோம். விவாதிக்கின்றோம். சண்டை போடுகின்றோம். கொட்டும் மழையில் நனைகின்றோம். சகதியில் புரண்டு விளையாடு கின்றோம். சகதியில் நனைந்த கால்களோடு எமது விளையாட்டு சாதனங்களான விக்கெட், பாட், போல் யாவற்றையும் துரக்கிக்கொண்டு ரயில் பாதை வழியாக, விளையாடி முடித்த களைப்பும், உற்சாகமும் களிபொங்க ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு அமைதியாக நடக்கும்போது, ரயில்பாதையின் கீழாக காட்சி தரும் வீடுகளில் உள்ள இளநங்கையர்களுக்கு கையசைத்து இரவு வந்தனம் தெரிவிக்கின்றோம். அவர்கள் எம்மைப் பார்த்து நகைத்து, நாணிமெல்ல வீட்டு வாயிற் படிக்குள் நுழைந்து ஒதுங்கி நின்றுகொண்டு நீண்ட யோசனையின் பின் எம்மைப் பார்த்துப் பயந்து பயந்து மெல்லக் கையசைத்து புன்னகைத்து விடை தருவதைக் கண்டு மிகுந்த மன நிறைவுகொண்டு சிரித்தவாறே செல்கின்றோம்.
இது ஒரு கிழமையில் இரண்டு மாலைகள்.
மற்ற நாட்களில் ஆற்றுக்குக் குளிக்கப் புறப்பட்டு விடுவோம். ஓடி வந்து தபுக் என்று, தண்ணிர் இரு மருங்கி லும் தெறிக்க கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு முரட்டுத்தனமாகக் குதிப்பதும், நீரோட்டத் துக்கு எதிராக நீச்சல் அடித்து முன்னேற முயற்சி செய்வதும், தோற்றுக் களைத்துப் போகையில் ஒரு பிடி மணலை அள்ளி படீரென்று முதுகில் ஓங்கி அடிப்பதும் மூச்சை பிடித்துக்கொண்டு நீரில் ஆழத்தில் உட்கார்ந் திருப்பதும், போட்டிகள் வைப்பதும், இறுதியில் அதிக நேரம் நீரில் ஆடியதால் கொவ்வைப்பழம் போன்ற சிவந்த
106 / காதலிலே இரு கண்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
கண்களோடும் பரட்டைத் தலையுடனும் வீட்டுக்கு வந்து சேர்தலும் வழமை.
இன்று திலீப் சற்று சோகமாகத் தான் இருந்தான். காரணத்தை அறிவேன். எல்லோருக்கும் வந்து தொலைக் கும் காதல்தான்.
அட பயலே, என்னவென்பது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நிற்கின்றான்.கங்கையை உற்றுப்பார்க்கின்றான். பெருமூச்சு விடுகின்றான். தலைமயிர் கற்றைக்குள் தனது விரல்களை விட்டு, மெல்ல நிமிண்டி விட்டு மூக்கை சுருக்குகிறான்.
அவள். . . .ம். . . . பரவாயில்லை. . . அழகானவள்தான். சிவந்த உதடுகள். சிவந்த மேனியாள். அழகான பெரிய கண்கள்.இவனைக் காண நேரும்போதெல்லாம் இதழ்களின் ஒரத்தில் மையல் சேர்க்கும் ஒரு குறும்புப் புன்னகை. கீழே தலையைக் குனித்துக்கொள்வாள்.
கதை இப்படித்தான் ஆரம்பமாகியது. அவளும் அவள் தோழியும் தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ரயில் பாதை நெடுக நடந்து செல்வார்கள்.இவன், அன்று ஏதோ தனியாக கடலை கொறித்துக் கொண்டே, ஒரு பாட்டை முணு முணுத்துக்கொண்டு வந்தவன், ஏறிட்டு நோக்க எதிரே இவள், தன்னை மறந்து, இவன் ஏதோ ஒரு உற்சாகத்தில் அவளைப் பார்த்து மெல்லச் சிரித்து ஒரு கண்ணை மாத்திரம் இறுக்க மூடி திறந்திருக்கின்றான். கண்ணைத் திறந்து முடிந்தவுடன்தான் இவனுக்கு பதற்றம் வந்திருக்கிறது, என்னடா செய்துவிட்டோம் என்று. ஆனால் அதற்குள் அவள் தரையைப்பார்த்து மெல்ல சிரித்தாளாம் ஒரு சிரிப்பு. அவளது தோழி இவளது கையைப் பற்றிப் பின்னிக் கொண்டாளாம்.
அடுத்த நாளும், அதே நேரத்தில் அவளுக்காக வந்திருக் கின்றான் பயல்! அவளும் வந்தாளாம். மெல்லச் சிரித்தா னாம். தோழி இவளது மென்மையான கையை முழங்கைக் குக் கீழ் கிள்ளினாளாம். அவள் தரையைப் பார்த்து மீண்டும் சிரித்துக்கொண்டு தோழியை முழங்கையால் மெல்ல மொத்தென்று இடித்தாளாம்.
இப்பொழுது நான்கு நாட்கள் தொடர்ந்து சிரித்துவிட்டு, இதோ முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு உட்கார்ந்
திருக்கின்றான்.
6asraday asidad agairisi I 107

Page 57
கந்தலாலாவின்
"ஏன்டா கதைக்கவில்லை" என்கின்றேன். "ஒருமாதிரியாக இருக்கு. . ." என்று இழுக்கின்றான்.
எனக்கு பரிதாபமாக இருந்தது. அவளை ஒரு கணம் எனது மனதுக்குள் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்தேன். இவனது வயதுதானிருக்கும். உண்மையிலேயே அழகானவள். கண்களிலும் நல்லியல்புதான் பெரிதும் மிளிர்கின்றது. புத்திசாலித்தனமும் தெரிகின்றது. இவனுக்கு உண்மை யிலேயே ஏற்றவள்தான்.
மேலும் காதலர் இருவர் எந்த ஒரு வஞ்சகமும் இன்றி இயல்பாகவே இளமைக் காலத்துக்குரிய Sentiment உடன் வார்த்தைகள் இல்லாது தத்துப் பித்தென்று முயல்களைப் போல் விழித்துக்கொண்டு நிற்பது என்பது எவ்வளவு புனித
மானது. அடடா ஏனோ இவர்கள் இருவர்மீதும் எனக்கு
பெரிதும் அன்பு சுரந்தது. மனசுக்குள் வாழ்த்திக்கொண்டே கேட்டேன்.
"சரிடா, உனக்காக அவளிடம் கதைத்து விவகாரத்தை சரி செய்யவா?*
உண்மையிலேயே,அவளிடம் இவனுக்காக நேரடியாக நான்
கேட்டு விடலாம் என்றுதான் எனக்குத் தோன்றியது.
மேலும், அது எனக்கு நேர்மையாகவும் சிறப்பாகவும்
Lull-gil.
ஏனோ தெரியவில்லை. இவன் பதில் கூறாமல் சிணுங்கிக் கொண்டு முணங்கிக்கெகண்டான். கங்கையின் மையப் பகுதியையே அடிக்கடி கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.
மெல்லிய காற்றின் வீசலால் காதுக்குள் நுழைந்து என்னைக் கூச்சப்படுத்திய மயிர்க்கற்றைகளைப் பெருவிரலால் மெல்ல
பின்னுக்கு ஒதுக்கித் தள்ளியவாறே, வீசிய காற்றின் சுகத்தை நன்கு அனுபவித்தவாறே, அவனது முதுகில்
ஆறுதலாகத் தட்டி என்ன விடயம் என்றேன்.
அவன் ஒரு சிறிது நேரத்துக்கு பதிலொன்றும் கூறாது
இருந்துவிட்டு காதல் கொண்டவர்கள் தமது பிரச்சனை
யைப் பற்றிக் கூறும்போது எப்படி கண்கள் பளபளக்க முகம் கவலையுடன் மாற ஏக்கத்துடன் பிரதிபலிப்பார்களோ அந்த ஒரு முகபாவனையுடன், என்னைப் பார்த்துங் 'அவளை காதலிச்சுத்தான் என்னா பன்ரது" என்றான்.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்னடா, பயல் ஞானி யாகி விட்டானோ என்று.
108 / காதலிலே இது கண்கள்

தீர்த்தக்கரைக் கதைகள்
எனது குறுக்கீடு இல்லாமல் அவனே தொடர்ந்தான்:
"முந்தியெல்லாம், யாராவது ஒருத்தி கெடைச்சாலே போதும், நல்லா என்ஜோய் பண்ணலாமுன்னு பிரன்ட்ஸ் களோட கதைச்சுக்குவோம். இப்ப என்னடான்னா கெடைச்சுத்தான் என்னா வேல. நம்ம கிளாஸ் முருகேசு இருக்கானே. அவனுக்குன்னு ஒரு கேர்ள்பிரண்ட் இருக்குபரவாயில்லை. அவனுக்கென்னா. அவுங்க அப்பாவுக்கு மூணு கட இருக்கு, ரெண்டு மில் இருக்கு, அவளுக்கு பேனா வாங்கி பிரசன்ட் கொடுக்கிறான். "மியுசிக்கல் ஷோ வுக்கு கூட்டிக் கிட்டு போறான். சின்னச்சின்ன முத்து முத்து மாலைய வாங்கி கழுத்தில போடுறான். எனக்கு என்னா இருக்கு, ஒரு ஐஸ் கிரீம் கூட வாங்கிக் கொடுக்க ஏலாது. அவளும் எம் மாதிரி ஸ்கூல் போறவத்தானே. எங்கையாவது வாடான்னு கூப்பிட்டாள்னா கூட, நான் என்னாப் பன்ரது முழிக்க வேண்டியது தான்?"
-இதை அவன் ஒரு முறையிடும் குரலிலும், இவ்வளவு நாள் நான் கேட்டிராத ஒரு விசித்திர தொனியிலும் என்னிடம் கூறினான்.
எனக்கு மனதை எதுவோ கஷ்டப்படுத்தியது. அவனது குரலில் கப்பியிருந்த சோகத்தை நான் கேட்காமலேயே இருந்திருக்கலாம் போலிருந்தது. நான் பணம் தருகின்றேன் பரவாயில்லை என்று கூறி நான் அவனை சமாதானப்படுத்த விருப்பம் இருந்தும், அது அவனது தன்மானத்தைப் பாதிக் கும் என்று கருதியதால் வெறுமனே வாயடைத்து அவனை உற்றுப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவனுக்கு,
அழகிய கண்கள்
பரந்த நெற்றி!!
இளமையான உதடுகள்.
சின்னக் கறுகறுத்த மீசை, அவன் இளைஞன்-அவனது காலம்-அற்புதமான இளமைக் காலம்! சற்று யோசித்துப் பார்த்தேன். வரவிருக்கும் வாழ்க்கையின் பாரிய அலைகளில் இவர்களது இந்தச் சின்ன உற்வு அர்த்தமற்றும் சிறுபிள்ளைத்தனமாகி யும் போய்விடக்கூடும் என்பது உண்மைதான். என்றாலும்-இவன் மானசீகமாக ஆசைப்படுதல் அல்லது கற்பனை செய்தல்கூட மறுக்கப்பட்டுள்ளதே-அல்லது
கேகாலை கையிலைநாதன் / 109

Page 58
பறிக்கப்பட்டுள்ளதே என்ற எண்ணம் என்னுள் ஒரு அநீதியைச் சுட்டுவதாயிருந்தது.
நான் பேசாமல் கங்கையின் மையத்தில், இப்பொழுது இன்னும் நன்றாக இருட்டி விட்டிருந்த கருமையினூடு, தபுக் தபுக்கென்று இன்னும் சப்தம் செய்துகொண்டிருந்த கெண்டை மீன்களைக் காண முயற்சித்துக் கொண் டிருந்தேன்.
அங்கே கங்கைதான் எவ்வளவு அமைதியாகப் போகிறாள். . ஏதோ தனது சொந்தப்புத்திரர்களின் வசந்தங்களை எல்லாம் பறித்து, காலில் போட்டு, துவம்சம் செய்யும் இந்த சமூகத்தின் வஞ்சிப்புகளைக் கண்டும் காணாததுமாய் பொருமலுற்று, அடக்கமாட்டாத வேதனையைத் தாங்கிச் செல்லும் ஒரு கிழட்டுத் தாயைப்போல்! இப்போதிருந்த மெளனம் ஏன்தான் எனக்கு இவ்வளவு வஞ்சகமாய்படுகின்றது?
gšG3Lr ur 982
1 10 f as TSR) 693 as air as dir

வெண்ணிறத் தாமரைகள்
பொறாமைப்பட்டுக் கொள்ளலாம். விழிகள் அப்படி அழகானவையாயும் பெரியதாயும், ஜீவன் ததும்புவன வாயும் இருந்தன. இளஞ் சிட்டினதுபோன்ற அவளது துடி துடிப்பு-அப்பப்பா சோர்வே அற்ற இவள் பத்தும், பதினைந்தும் வயதுடைய இரு குழந்தைகளுக்குத் தாய் என்பதை யார் அப்போது நம்பினார்கள். ஆனால் இன்று எப்படி மாறிப்போனாள்.
அன்று எக்குத்தப்பாய்த்தான் தொலைவில் நடைபாதையில் இவள் வருவதைக் கண்டேன். எப்படி மாறிப் போயிருந் தாள். சோர்வா, களைப்பா, அல்லது அவள் முகத்தில் நிரந்தரமாய்க் குடியிருக்க வந்து சேர்ந்தாற்போல் வந்து சேர்ந்திருக்கும் இறுக்கமா. அவள் சிந்தை எங்கோ லயித்திருக்க பார்வை மாத்திரம் நடைபாதையை வெறிக்க, என்னை ஓர் சிறிதேனும் கவனியாது, இப்போதைக்கு எங்கோ விரையும் இவளிடம் நான் கதைப்பதா இல்லையா என்று தீர்மானிக்கும் முன், என்னைக் கடந்து நடந்து சென்றாள்.
முதன் முதலாய் இவளை எப்போது எச் சந்தர்ப்பத்தில் எச் சூழ்நிலையில் சந்தித்தேன் என்பதே நினைவில் இல்லை. பக்கத்து கெங்கா மாமியின் மருமகள் இவள். இவளது திருமணம் சொந்த-பந்தம் என்ற அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. பத்திரிகை விளம்பரத்தின் வாயிலாக தொடர் பேற்பட்டு, பின் இவளும் கெங்கா மாமியின் மகனும் சந்தித்து பேச-பழக கெங்கா மாமியின் மகனுக்கு விருப்பம் ஏற்பட்டு மணந்தால் இவளைத்தான் மணப்பேன், என்ற ரீதியில் வந்தமைந்த ஒன்று.
கேகாலை கையிலைநாதன் / 11

Page 59
sássororsálar
இவளைக் கண்ட பின்பு யாருக்குத்தான் விருப்பம் ஏற்படா தாம். மேலும், அவளது கணவன் மோசமானவன் இல்லையே. சீதனம் சொத்து அது-இது என்று பாராமல் தனது முடிவை திடமாக அறிவித்தான்,தன் போக்கிலேயே.
பண்புடையவன் அவன். ஆனால் இவள் போலன்றி சற்று ஒதுங்கி அமைதியாக வாழ விரும்புபவன். அவனுக்கென்று தேர்ந்த இரண்டொரு நண்பர்கள். சிறிது கிறிக்கெட், சிறிது ஃபுட்போல், சிறிது மது. வேலையில் துடிப்பாய் இருப்பவன். தொழில் செய்வது அவனுக்கு இன்பம் பயக்கும் ஒரு சங்கதி. இரவு, பகல் என்று வேலையில் ஆழ்ந்து விடும் இந்த டெக்னீசியனை வழியில் சந்திக்க நேரிட்டால் ஓர் மென்மையான சிரிப்புடன் "மோர்னிங்" என்பதுடன் சரி. அவளே கூறுவாள். இவர் இன்னும் ஓர் சிறு பிள்ளைதான். ஒதுங்கியே இருப்பார். நான்தான் அனைத்தையும் கவனித் தாக வேண்டும் என்று.
உண்மையும் ஒரளவு அதுதான். வீட்டுவிடயங்கள் மாத்திர மல்ல, வெளி உலக விவகாரங்களையும் இவள்தான் கவனித் தாகவேண்டும். பிள்ளைகளை எந்தப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். எந்த பாங்கில் பணம் வைப்புச் செய்ய வேண்டும். எந்த வியாபாரத்தில் கால்வைக்க வேண்டும். வீட்டிற்கு எந்த நிறம் எடுப்பாய் இருக்கும், அனைத்துமே இவள்தான். அதிலும் தீர்மானிப்பது மாத்திரமல்ல பாட சாலைக்கு பிள்ளைகளை பிரதிநித்துவப்படுத்தி செல்வது முதல் வீட்டிற்கு அடிக்க வேண்டிய நிறச்சாயத்தை கடை ய்ல் இருந்து கொணர்ந்து சேர்ப்பது வரை அவள்தான் செய்தாக வேண்டும்.
அவர்களிடமிருந்த காரை இவள் கணவன் ஒட்டியே நான் கண்டதில்லை. இவள்தான் லாவகமாக ஒட்டுவாள். கோவேறு கழுதையின் "குனிந்த தலை’ நாணம் இவளிடம் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் அதே சமயம் மயிலும்இல்லை, குருவியும் இல்லை என்பது போல் வாழ்ந்து தொலைக்க முற்படும் அந்நியப்பட்ட விடுதலை மகளிரின் "நான்’ என்ற அடிப்படையில் இருந்து எழுந்த வரட்டுத்தனமும் இவளிடம் காணக்கிட்டாதது ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும். அவளின் ஆளுமையே "தன்னை' மறந்து வாழ்வை ஆழ மாக காதலிக்கும் உயர்ந்த பண்பினின்று பிறந்ததாய்த் தோன்றிற்று. இப் பண்புதான் இவளிடம் இத்தகைய ஓர் செளந்தர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அவளுக்குத்தான் எத்தனை காதல்கள். வீட்டை அழகு
2 / Qarairaafpġ sTubeevsir

Stås så søndrás Is Gongas dhr
படுத்துவாள். கண்ணை உறுத்தும் யாதொன்றையும் அங்கிருக்க இடங்கொடாள். எளிமையான ஆனால் அழகான ஒவியங்கள் ஒன்றிரண்டு என தேர்ந்தெடுத்திருப் பாள். சிறிதே வித்தியாசமான பூச்சாடியில் இரண்டொரு ரத்தச்சிவப்பு ரோஜா மலர்கள். தூய்மையும் எளிமையும் நிறைந்த தரை-மேசை விரிப்புகள். யன்னல் திரைகள் . மேசையில் அவளதுநூல்கள்,மூலையில் அவளது பியானோ.
ஒவ்வொரு நாளும் தனது வேலை முடித்து அலுத்துப்போய் பாங்கில் இருந்து திரும்பியவுடன் பிளாஸ்கில் இருந்த தேனீரை அருந்தி விட்டு அரை மணி நேரமாவது பியானோ வுடன் ஒன்றி விடுவாள். நெற்றியை தனது மெல்லிய விரல்களால் இறுக அழுத்திப்பிடித்தவாறே கூறுவாள், “மூளையே இறுகிவிட்டது. ஓர் அரை மணிநேரத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். ' பின் தனது விரல்களை பியானோ கட்டைகள் மீது தவழ விடத் தவழவிட மீண்டும் பூத்துக் குலுங்கத் துவங்குவாள். பின் ஒரு பாடலை முணு முணுப்பாள். பிஸ்கட் இருந்தால் அதை எடுத்துக் கடிப்பாள். பின் பிள்ளைகளின் விடயங்கள், வீட்டு விவகாரங்கள் அனைத்தையும் ஆயத்துவங்குவாள்.
வார்த்தைகள் உச்சரிக்கப்படாத சமயங்களில் எல்லாம் அவள் இதழ்களில் ஏதோ ஒரு பாடலின் முணுமுணுப்புத் தான் குடியிருக்கும். பாங்கில் கடமை நேரத்தின் போது எப்படி இருப்பாளோ?
அவளது கணவன் ஓர் கடுமையான உழைப்பாளி. கன்ஸ்ட்ரக்ஷன் ஃபேர்மில் வேலை பார்த்து வந்தான். காலை 5.30 அளவில் அவனை அழைத்துச்செல்ல வரும் வாகனம் இரவு பத்து மணியளவிலே மீண்டும் அவனைக் கொணர்ந்து சேர்க்கும். அலுத்துக் களைத்துப்போய் வரும் அவன், வந்தவுடன் முகம் கழுவி இவள் பரிமாறும் உணவு உண்டுவிட்டு இவளிடம் சற்று உரையாடிக் கொண்டு இருந்து படுத்தால், காலை மீண்டும் 5.30.
சனி ஞாயிறு ஒன்றுதான் இவர்களுக்குக் கிடைக்கும் ஒரே வரப்பிரசாதம்.இவன் சனிக்கிழமைகளில் காலையில் சீக்கிர மாகவே எழுந்து மகனையும் கூட்டிக் கொண்டு மாட்ச்சுக்கு புறப்பட்டுவிடுவான். மகனுக்கும் இவனுக்கும் இடையே உள்ள உறவு அற்புதமானது. இருவரும் கிட்டத்தட்ட நண்பர்கள் போல.
சமயங்களில் இருவரும் கடுமையான குத்துச் சண்டை
கேகாலை கையிலைநாதன் / 113

Page 60
நந்தலாலாவின்
போடுவார்கள். ஓர் சிங்கமும் குட்டியும் பிரள்வது போல் தந்தையும் தனயனும் பிரள்வார்கள். விளையாட்டாக ஆரம்பிக்கும் குத்துச்சண்டை சற்று நேரம் செல்ல தீவிரப் பட, தனயன் தனது இளமைத்துடிப்புடன் எதிர்பாராத விதத்தில் சற்று அதிகமாகவே விரைந்து அசைந்து லாவக மாக மூக்கில் குத்திவிட இவனுக்கு சில சமயம் அடி எக்குத் தப்பாய் விழகண்ணில் கண்ணிர் வந்துவிடும்.
இவள் பதறிப் போவாள். உண்மை பில் இவர்கள் குத்துச் சண்டையை ஆரம்பித்து விட்டாலே இவளுக்கு உள்ளூர ஓர் நடுக்கம் தொடங்கிவிடும். எதற்கு இத்தகைய விளையாட்டு. இவள் புரிந்து கொண்டிருந்தாள் தனது
நாயகனுக்கு வயதாகிக்கொண்டிருக்கும் உண்மையை. மெல்லிய சோகமும் பதற்றமும் அவளைக்கப்ப, அவர்களை. மென்மையாக விலக்கி விடுவாள். 'போதும் போதும்
சண்டை போட்டது. இது என்ன விளையாட்டு. வேலை வேறு அப்படியே கிடக்கிறது. அப்பனும் பிள்ளையும் கூத்தடிக்கிறீர்கள். " சாடையாக கோபம் வந்து விட்டாற் போல் கடிந்து சமயங்களில் இருவருக்கும் வேலை வைத்து விரட்டி விடுவாள்.
ஞாயிறு, இவன் இவனது உடைகளையும் மகளின் உடை களையும் துவைப்பான், அவள் அவளின் உடைகளையும் மகனின் உடைகளையும் துவைப்பாள். இருவரும் சம்பா ஷித்து, சம்பாஷித்து சிரித்து, சிரித்தவாறே தத்தம் பங்கை முடிப்பார்கள். மகள் அவனின் பிள்ளையாம். மகன் இவளதாம்.
உண்மையாக இருக்கும். மகன் கிட்டத்தட்ட இவளைப் போன்று. முழுதுமாய் அல்ல, ஆகவும் முடியாது என்றே நினைக்கிறேன்.
ஓரளவு மகள் தந்தையைப் போன்று சூதுவாது தெரியாது. சுருக்கென்ற கோபம், ஆழ்ந்த சிந்தனையின்மை. ஆனால் மனிதர்களை மனம் விட்டு நேசிக்கும் பண்பு.
இவர்களுடன் நான் என்னைப் பிணைத்துக்சொள்ள இரண்டு காரணங்கள் அடிப்படையாய் அமைந்தன. ஒன்று நான் எதிர்பாராத வகையில், திடீரென இவள் எனக்கு எழுதிய கடிதம். உள்ளடக்கம் யாதெனில் எனக்கு பெண் பார்த்து வைத்திருக்கிறாளாம். வந்து பார்த்து சொல்லவாம். மற்றது இவர்கள் தொழில் விடயமாக கண்டியிலேயே வீடு ஒன்றை எடுத்து இருக்க நேரிட்டதும் கண்டியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த எனது சகோதரியின்
114 / வெண்ணிறத் தாமரைகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
மகளை அங்கு தங்க வைக்க வேண்டிய சூழல் உருவானதுமாகும்.
அன்று என் அலுவலகத்தில் வழமைக்கு மாறான கூட்டம். பல பிரச்சனைகளில் நான் என்னையே மூழ்கடித்திருந்த போதுதான் அந்தச் செய்தி எனக்குக் கிட்டியது. அவர்கள் அவனைப் பிடித்துச் சென்று விட்டார்களாம். அதுவோ கொலைகள் மலிந்த காலம். தினம் ஒர் பத்துப் பேராவது டயர்களில் எரிக்கப்படுவது சாதாரண செய்திகளில் ஒன்று. பாதை ஒரங்களில் பகல் வேளைகளில் கூட பிணங்கள் சாதாரணமாக எரிவது சகஜம். வாகனங்களில் செல்வோர் எட்டி எட்டிப் பார்ப்பதும் பின் தம் நண்பர்களிடம் வந்து அது குறித்து திகிலுடன் கூறுவதும் நண்பர்கள் தாம் கேள்விப்பட்ட அதைவிட விகாரமான நிகழ்வுகளை வர்ணிப்பதும் வழமையாயிருந்தது. பத்திரிக்கைகளைத் திறந்தால் அங்கு இத்தனை தலைகள் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இங்கு இத்தனை டயர் எரிப்புகள் என்று பக்கம் முழுவதையும் நிரப்பிக் கொண் டிருந்தது, நாட்டின் மனித உரிமைகளும் நாகரிகமும்.
ஆனால் இவனுக்கென்ன நிகழ்ந்தது? இவனுக்கென்ன தொடர்பு? தெற்காவது வடக்காவது. இவனுக்குத்தான் அரசியலே இல்லையே. ஆனால் ஒன்று; சற்று மது அருந்தி விட்டால் மாத்திரம் எக்கச்சக்கமாய் அரசியல் வந்துவிடும் இவனுக்கு. ‘இந்த கிழட்டு அரசியல்வாதிகளால் என்ன பயன்?. ஒவ்வொருத்தனும் நாற்பது வருடத்துக்கு மேல் இருந்து என்ன செய்கிறான்? பிரச்சனைகளுக்கு தீர்வோ இந் நாட்டின் விடிவோ-வடக்காகட்டும் தெற்காகட்டும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது" என்று ஆர்ப்பரிப் பான். அது போதாதென்று சமயங்களில் சில அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்றும் தின்று திணவெடுத்துப் போன தவளைகள் அது இதென்று மனம் நோக நோக வைவான். அதற்கு எதிராய் கதைத்தால் ஆர்ப்பரித்து சண்டைக்கும் போகவே போவான். இதைக்கேட்டு விட்டு யாரும் "மொட்டைக் கடதாசி வழியை கையாண்டு விட்டார்களோ. நான் ஆழமாக வருந்தினேன். . .
இவள் ஜீவன் இழந்து போனாள். உண்ணவில்லை. உறங்க வில்லை, மனதில் இருள் கப்பிப் போனது. நள்ளிரவில் திடுக்குற்று எழுந்து பாலா வந்து விட்டார். கூப்பிடுகிறார் என்று புலம்பினாள். இவளை யாருமே சமாதானப்படுத்த
கேகாலை கையிலைநாதன் 1 115

Page 61
கந்தலாலாவின்
முடியாமல் போயிற்று. இவளது பாடல்கள் மறைந்தன. பியானோவின் இசை அக் குடும்பத்தில் நின்று போனது.
இவள் தேடாத இடமில்லை. கோராத நபர் இல்லை. அனைத்து முகாம்கள், காவல் நிலையங்கள் எல்லாவற்றின் வாயிலிலும் நின்றாள். பிசகின்றி பிசிரின்றி அழுத்தந் திருத்தமாய் ஒரே வார்த்தையை அவர்கள் கூறினார்கள். மீண்டும் மீண்டும்; "இங்கில்லை?"
பருவம் வந்த பதினைந்து வயதுப் பெண், சிறுவன், இவள்பயங்கர அமைதி அவள் வீட்டில் அப்பிப் போயிருந்தது.
ஆரம்பத்தில் இவள் முற்றாகவே உணவருந்த மறுத்து விட்டாள். பிள்ளைகள் இரண்டொரு தினம் விட்டுப் பிடித்தனர். பின்னர் தெரிந்தது, இவளது பிடிவாதம் ஆழ்ந்த வைராக்கியத்தில் இருந்து பிறந்துள்ளது-தன் வழியே தளர்ந்து கொள்ளாத ஒன்று என்று. எனவே. கூறினார்கள். மூன்றாம் நாள் மிக உறுதியாக 'அம்மா நீங்கள் சாப்பிடாவிட்டால் எங்களுக்கும் வேண்டாம்' . மகள் உணவுத் தட்டை மூடி வைத்துவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள். மகன் ஏதோ ஒர் புத்தகத்தில் மெளனமாய் ஆழ்ந்து விட்டான். இவள் எழுந்து பிள்ளை களை மிரட்டிப்பார்த்தாள், ஆனால் மிரட்டவும் தெம் பில்லை. மெல்லிய குரலில் வேண்டிக்கொண்டாள், அழுத வாறே, உண்ணுமாறு.
உணவு வேளை கடந்து இரண்டு மூன்று மணித்தியாலங்கள் தாண்டி விட்டன. கன்னங்களில் சூடான கண்ணிர்த் துளிகள் ஒன்றன் பின் ஒன்றாய் குண்டு குண்டாய் உருண்டு விழ உணவுத் தட்டின் முன் அமர்ந்தவாறே பிள்ளைகளை அழைத்தாள்.
ஒரு கிழமைதான் சென்றிருந்தது. ஆனால் அந்த ஒரு கிழமைக்குள் எப்படி மெலிந்து உருமாறிப் போயிருந்தாள். உறக்கமாவது அவளுக்கு ஓய்வு தந்திருக்கும். அதுவும் இல்லை. நினைத்துக்கொண்டாள். அவர்கள் எப்படி வந்தார்கள் பேய்களைப் போன்று. இவன் அன்று ஏனோ தெரிய வில்லை. மிகுந்த நேரம் சென்றே வந்தான்.
இரவு பதினொரு மணியிருக்கும். பிள்ளைகளும் அவளும்
பத்து மணிவரை பார்த்து விட்டு, உண்டு முடித்து படுத்து விட்டார்கள். வந்தவன் உடை மாற்றி முகம் கழுவி மேசை
16 / வெண்ணிறத் தாமரைகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
யில் வந்தமர்ந்து ஒரு துண்டு பாணைப் பிய்த்தான்-நளின மாக கதவைத் தட்டும் ஓர் சப்தம். இந்த நேரத்தில் யார்? இவள்தான் கதவைத் திறந்தாள். மூவர் உள்ளே வந்தனர். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஒன்றும் கேட்க வில்லை. தேடவுமில்லை. விசாரணைக்காக கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் காலையில் விட்டு விடுவோம் என்றும் கூறினர்.
தெய்வமே என்ன சோதனையிது. ஏதேதோ கூறினாள். பின் இவர்கள் அழைத்துச்செல்லப் போவது நிச்சயம் என்று தெரிந்தவுடன் பொறுக்காது, "எதற்காக கூட்டிச்செல்லப் பார்க்கிறீர்கள், எதற்காக கூட்டிச்செல்லப் பார்க்கிறீர்கள்.
அவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே' என்று இவள் முன்னால் பாய்ந்து அரற்றினாள். "வெறும் விசாரணைக்கு, காலையில் கூட்டி வந்து விட்டு விடுகிறோம்" என்றார்கள் நிதானமாக, " " காலையில்
நானே கூட்டி வருகிறேன்' என்றாள் இவள், இப்பொழுது வந்தவர்களது நளினமான பாணி மாறியது அவளைச் சுட்டது. வந்தவர்களில் ஒருவன் அச்சுறுத்தும் பாணியில் அவனுக்குத் தெரிந்த அரைகுறை மொழியில் அதட்டிக் கூறினான். '' ஒழுங்காக சொன்னால் கேட்க மாட்டீரோ" இன்னுமொருவன் மேசையைப் பார்த்துவிட்டு இவனிடம் உண்டு முடித்துவிட்டு வரச் சொன்னான்.இவளும் கண்ணிர் ஆறாய்ப் பெருக 'சாப்பிட்டு விட்டுப் போங்கோ' என்றாள் இவனைப் பார்த்து. அவன் மெல்ல திரும்பிக் கூறினான், ‘எப்படி இப்ப சாப்பிடுவது' அவனது கண் களும் கலங்கி, கலக்கத்துடன் இருந்தன. அவர்கள் அனை வரும் அவனுடன் வெளியே சென்று கதவைப்பூட்டி eg|6) 1606IT காலை வரை வெளியே வர வேண்டாம் என எச்சரித்தனர். வாகனங்கள் புறப்படும் ஒலியும் அவை சென்று மறையும் ஒலியும் கேட்டது. இவள் ஜன்னல் திரை களை விலக்கிப் பார்த்தாள். இருள். மேசையில் ஒரு பிளேட், அவனால் சாப்பிடுவதற்காக பிய்க்கப்பட்ட ஒரு சிறு துண்டுப் பாண், இவ்வளவும் கிடந்தன. குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஒரு கணம் ‘தெய்வமே' என்று கதறி அழுதாள்: முழங்காலிட்டு, பின் சுதாகரித்து, திகிலுடன் கதவைத் திறந்து கண்ணிர் கொட்ட பக்கத்து வீட்டை நோக்கி பாய்ந்து ஓடினாள் இருளில்.
உண்ணலாம், எப்படி உண்பது. எனக்கென்ன உணவு, பிள்ளைகள் மாத்திரம் இல்லாவிட்டால் . . . "அன்பே,
உம்மை எப்படி மறப்பேன். எங்கிருக்கின்றீர்? பசியுடன் இருக்கின்றீரா. தெய்வமே தனியாகவா இருக்கின்றீர்.
கேகாலை கையிலைநாதன் / 117

Page 62
55 Gore or Gaer
நீர். . .ஒரு சிறு பிள்ளை போன்ற நீர். ஒரு கேள்விக்காவது உமக்கு ஒழுங்காக பதில்சொல்லத் தெரியாதே.பாவிகளிடம் அகப்பட்டுக் கொண்டீரே. உமது குழந்தை மனதை அவர்கள் அறிவாரா?
உண்மையில் அவன் அப்படிப் பட்டவன்தான். அன்றொரு நாள் அப்படித்தான் அவர்களது வீட்டிற்கு அவனது நெருங்கிய நண்பர்களில் ஒருவன் குடும்ப சகிதம் வந்திருந் தான். மாலை வெகு உற்சாகமாக பிள்ளைகளின் ஆடல் பாடலுடனும், இவளது பியானோ இசையுடனும் கழிந்தது. பிள்ளைகள், நண்பனின் மனைவி. இவள் அனைவரும் உண்டு இவளைத் தவிர மற்றோர் எல்லோரும் உறங்கியும் போனார்கள். நண்பனும் இவனும் மாத்திரம் இன்னமும் உறங்காமல் மதுவை சுவைப்பதிலும் கதைப்பதிலும் நேரம் போவதே தெரியாமல் இருந்தார்கள். திடீரென சம்பாஷணை இவன் இறந்துபோன தந்தை குறித்து ஆரம்பமாகியது. வந்திருந்த நண்பன் உற்சாகமாய்க் கூறி னான் "ஓ அவர் எப்படிப்பட்ட மனிதர். நீயெல்லாம் அவருடன் ஒப்பிடுகையில் அடிமுட்டாள்'
கோபத்துடன் முரட்டுத்தனமாய் முகம் சிவக்க இவன் கூறினான்; ''கண்டபடி உளறாதே உனக்கென்ன தெரியும். எங்கள் அப்பன் ஓர் முட்டாள். எங்கள் வீட்டுப் பிரச்சனையை அறிவாயா நீ. எனக்கு ஒரே ஒரு தங்கை முப்பத்தைந்து வயதாகிறது. அவளைக் கட்டிக் கொடுக்க இவனுக்கு வக்கில்லை. இன்று வாழா வெட்டியாயிருக் கிறாள். அவளை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் எப்படி வேகின்றது தெரியுமா' பெருமூச்சொன்றை விட்டு விட்டு மேலும் தொடர்ந்தான்: "" யார் யாரோ ஒன்பது பத்து பிள்ளைகள் பெற்றவனெல்லாம் அவர்களை கரை சேர்த்துவிடுகிறான்.ஒரே தங்கை ஒரே தங்கை !! அவளைக் கரைசேர்க்க முடியவில்லை. அப்பனாம். புத்திசாலியாம். நீயெல்லாம் விடயம் புரியாமல் முட்டாள் கதை கதைக் காதே’* அத்துடன் நிற்காமல் மேலும் ஏதேதோ கூறி யார் யாரையெல்லாமோ ஏசத் தொடங்கினான். வார்த்தைகள் மெல்ல உப்பி தடிக்கதொடங்குவது தெளிவாய்த்தெரிந்தது. இவள் பதை பதைத்தாள். இது என்ன பண்பு. நமது கூரை யின் கீழ் வந்திருக்கும் விருந்தினரை அவமதிக்கலாமோ, இரும், நீர் இரும், கொஞ்சம் பொறுமன் என்று கூறி. கணவனின் கரத்தைப் பற்றி இழுத்தாள். அவன் முண்டி, கையை இழுக்க ஒருவாறு அறைக்குள் இழுத்துச்சென்றாள். படுக்கையில் அமர வைத்து கொஞ்சம் பொறும், கொஞ்சம்,
18 7 வெண்ணிறத் தாமரைகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
பொறும் என்று சிறிது நேரம் அவனுடனே இருந்து ஆசுவாசப்படுத்தி அறையைப் பூட்டி விட்டு நண்பனையும், இப்போது சந்தடி கேட்டு எழுந்துவிட்ட அவன் மனைவியை யும் சமாதானப் படுத்தினாள், ‘தெரியுந்தானே உங்களுக்கு அவரை, சற்று முரடு-விட்டுத்தள்ளுங்கள்." அவனோ விடுவதாயில்லை. "யார் முரடு, யார் முரடு, அவன் ஒரு முட்டாள். அவன் ஒரு முட்டாள்' என்று மீண்டும் மீண்டும் நண்பனை ஏசத்தொடங்கினான். பின் கையில் கிடைத்த போர்வையை கோபத்துடன் எடுத்துக் கொண் டான். இவளிடம் சொல்லாம் கொள்ளாமல் சென்று அவர்களது வாகனத்தின் பின் சீட்டில் ஏறி படுத்து தூங்கி விட்டான்.
காலை விடிந்தும் அவன் கோபம் தணிந்தபாடில்லை. வீட்டுக்குள் வராமல் வீட்டுக்கப்பால் இருந்து சிறிய கழிவறை பக்கமாய் நின்று பல் துலக்கினான்.
இவள் ஜன்னலுக்கூடு அவனை பரிதாபத்துடன் பார்த்து விட்டு அவனிடம் சென்று பரிவுடன் அன்புடன் சிரித்தவாறே மென்மையாக " "வாரும் உள்ளே, நல்ல ஆள். நீர் சண்டை போட, விலக்க வந்த என்னுடன் கோபிக்கீறீர்” என்று நகைச்சுவையுடன் கூறுமாப் போல் கூறி அவனை உள்ளே அழைத்தாள். முறைத்துக் கொண்டே உள்ளே வந்தவனுக்கு உணவு பரிமாற உண்டு முடித்து, நண்பன் படுக்கையை விட்டு எழு முன்னரே ஏதோ ஒரு மாட்ச்சுக்கு அவன் மகனுடன் புறப்பட்டுப் போனான்.
நண்பன் எழுந்தவுடன் அவனுக்கும் அவனது குடும்பத்தாருக் கும் உணவளித்து பின் இவன் சென்ற மாட்சை குறிப்பிட்டு, நீங்கள் எழுந்தவுடன் உங்களையும் அங்கு வரச்சொன்னார்; சென்று பார்த்துவிட்டு உணவு அருந்தும் வேளைக்கு கூட்டி வந்து விடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தாள். பின் இவளும் நண்பனின் மனைவியும் நடந்த விடயங்களை அளவளாவி சிரித்தவாறே உணவு தயாரிப்பில் ஈடுபட்டனர். ** ம். . முரடுகள்தான் இரண்டும்’ ‘நண்பகல் வேளை நண்பர் கள் இருவரும் மாட்சைப்பற்றி சிலாகித்துக்கொண்டே ஆர்ப்பாட்டமாய் வந்து சேர்ந்தார்கள். மெளனமாய் நினைத்துக் கொள்வாள் இப்படிப்பட்ட சிறுபிள்ளைக்காஅன்பே. . .அவன் எங்கே இருக்கிறான்? மாதங்கள் உருளத் தொடங்கின. அவள் தனியாக குழந்தைகளுடன் இருப்பது அவளுக்கே புத்திசாலித்தனமாய்ப்படவில்லை. மேலும் புதியவர்களின் நடமாட்டம் வேறு. இவள் பிரேரித்ததும் ஏற்றுக்கொண்டு இவள் தூரத்து உறவினரான மாமா மாமியார் வந்து சேர்ந்தனர். அவர்கள் குடிவந்தது
கேகாலை கையிலைநாதன் / 19

Page 63
* Es diseror aoraidsår
அவளுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்தது. வீட்டைப் பற்றி கவலை இல்லை. எனவே தான் அவனது நினைப்பிலும் அவன் குறித்து நடவடிக்கைகளிலும் ஆழ்ந்து போவது வீட்டை, முக்கியமாக பிள்ளைகளை பாதிக்காது என்பது அவளின் கணிப்பு. தனது சம்பளப் பணத்தை அப்படியே மாமாவிடம் தந்து, "வீட்டுக்கு பொறுப்பு நீங்கள்தான்' என்று கூறிவிட்டாள்.
அவளது கண்களில் அவனுக்கான கண்ணிர் என்பது என்றுமே வற்றாத ஒன்று என்பது போல் தோன்றிற்று.
இது இருவகையில் பிரதிகூலங்களை அவள் சார்ந்த உலகில் ஏற்படுத்தியது.ஒன்று இவனை தேடிப் பிடிக்கும் முயற்சியில் அவள் மிக மிக உறுதியாக நின்ற தோடில்லாமல் தனதுஅவனது நண்பர்களையும் அடிக்கடி உதவக்கோரியதன் மூலம் அவர்கள் பார்வையில் இவள் ஓர் நச்சரிப்பாக உருவெடுக்கலானாள்.
மற்றது என்றுமே எப்போதுமே அவனுடன் தன் தனி உலகில் இருந்தாள். யாருடனும் கதைக்க நேர்ந்தால், அவனைப் பொறுத்து செய்தால், அவனின் நினைவாக!! அவளது இதழ்கள் பாடல்களை முணுமுணுக்க மறந்தன. விரல்கன் பியானோ கட்டையைத் தொடமறுத்தன. பிள்ளைகளூடான அணுகுமுறைகூட வித்தியாசப்படத் தொடங்கியது.
முன்பெல்லாம் பிள்ளைகளுடன் அவள் கோபப்படுவதே கிடையாது. அவர்களுக்கு தண்டனை தர நேரிட்டாலும் அத்தண்டனையை கோபம் கொள்ளாமல் வழங்குவாள்.
உதாரணமாக, ஓர் சமயம் அவளது மகன் தனது சகோதரி யின் ஓர் ஐந்து ரூபாவை தெரியாமல் எடுத்துவிட்டான். உண்மையில் அதை திருட்டென வர்ணிக்க முடியாது. சகோதரியுடனான சண்டையின்பின் ” “geri untLub கற்பிப்பதற்காக" எடுத்து ஒளித்து வைத்து விட்டான். அழைத்து விசாரித்தாள், இல்லவே இல்லை என்று சாதித் தான். வீடே தேடினாள். இறுதியில் அந்த நாணயங்களை கண்டு பிடித்தாள்.மகன் ஒத்துக்கொண்டான் தான் எடுத்த தாக, நல்ல அடி, பின் அழைத்துக் கூறினாள்’’ இப்படி எல்லாம் செய்யக் கூடாது, இந்த வீட்டில் ஒரு வேலைக் கார அம்மாள் இருக்கின்றாள், நண்பன் ஒருவனின் மகள் இருக்கின்றாள், நீ காசை எடுத்துவிட்டாய், ஆனால் எடுக்க வில்லை என்று சாதிக்கின்றாய், நான் அந்த இருவரில் ஒருவர்தான் எடுத்திருக்கலாம் என்று எண்ணியிருந்தால் அவர்களின்நிலைஎன்ன-யோசித்துப் பார்த்தாயா'அவனை
120 | வெண்ணிறத் தாமரைகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
அணைத்துக் கொண்டாள். சப்தமிடாமல் விம்மி விம்மி அழுத அவனை முத்தமிட்டாள். சற்று ஆழமாக யோசிக்க கற்றுக்கொள் என்று வேண்டிக் கொண்டாள்.
ஆனால் இப்பொழுதோ தனது குழந்தைகள் விடும் சிறு சிறு தவறுக்கெல்லாம் பெரிதும் கோபப்பட தலைப்பட்டாள். அவர்களை முரட்டுத் தனமாக விளாசினாள். எரிந்து, விழுந்தாள். எப்படிப்பட்ட பிள்ளைகளாக வளரப் போகின்றீர்களோ, அப்பா வந்தால் என்னைத்தான் வைவார் என்பதையே மீண்டும் மீண்டும் கூறத் தலைப் பட்டாள். பிள்ளைகள் சஞ்சலத்துடன், ஒரு காலத்தில் எழிலுடன் நடந்து கொண்ட தம் தாயைப் பார்த்தனர்.
G
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களின் பின் அவர்களது நண்பர் களுக்கும் உறவினர்களுக்கும் அந்த நம்பகமான செய்தி வந்து சேர்ந்தது இறுதியில். அவனை முடித்து ஒரு மாதமாகி விட்டதாம். ஆனால் இவளிடம் எப்படிக் கூறுவது? திடத்துடன் உறுதியாய், இதயபூர்வமாகக் கூறி னாள், "அவர் வருவார்" .
அவனது உடைகளை எல்லாம் நன்கு தேய்த்து துவைத்து வைத்தாள். அவர் வரும் போது அருந்தவென்று அலுமாரி யில் நல்ல மது சிறிதளவு எப்போதும் வீற்றிருந்தது. பிள்ளை களை கறாராக கவனித்து அனுப்பத் தொடங்கினாள் பள்ளிக்கு. அவர் வரும் போது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்-பிள்ளைகள் மேல் நான் போதிய அக்கறை எடுத்துள்ளேன் என்பதை அவர் அறிய வேண்டும். அல்லது என் மேல்தான் அவர் கோபிப்பார் என்று நண்பர்கள் உறவினர்களிடம் கூறினாள்.
விடுமுறையில் பிள்ளைகளுக்காக அவளது அம்மாவின் வீட்டிற்குச் சென்றிருந்த போது பிள்ளைகள் செய்த ஏதோ ஒரு குறும்பினால் வீடே களேபரமாகிவிட்டது. உண்மை யில் அது ஓர் சகஜமான சிறு குறும்பு-பாட்டியின் வீட்டுக்குச் சென்ற செல்லத்தில் மகன் செய்தது. இவளோ வீட்டை இரண்டாக்கி விட்டாள்.
தேவைக்கு மீறி மகனை அடித்தாள், அடித்து அடித்து களைத்துப்போய் சோர்ந்து நாற்காலியில் விழுந்து அழுதாள். "அவர் வந்து பார்க்கும் பொழுது என்ன கூறுவார்? பிள்ளைகளை இப்படி மோசமாக காண நேரிடும்
கேகாலை கையிலைநாதன் 1 12

Page 64
AB is 56 or Roraisir
போது என்ன சொல்வார். 'கோபம் பொறுக்காமல் மீண்டும் பிள்ளைகளை அடிக்கும் நோக்குடன் எழுந்த போது தடுக்க வந்த தன் தாயை மோதி தள்ளியதில் இடிபட்ட அவளின் தாய் புலம்பினாள். 'அவனைத்தான் முடிச்சுப் போட்டாங்களே. இவள், பாவி பிள்ளையளைப் போட்டு கொல்லுறாள்' அவள் முடிக்கு முன், அவளது தாயின் காதைப் பொத்தி ஓங்கி அறைந்து கூறினாள் "நீயும் ஓர் அம்மாவா"
O
கடமைக்குச் செல்லத் தொடங்கினாள்-மனதைக் கல்லாக்கிக் கொண்டு. ஆம் இந்த வேலையை விட முடியாது. பிள்ளைகள் அவர் வரும் வரை அதே தரத்தில் ஒரு குறையுமில்லாமல் காப்பாற்றியாக வேண்டும். என்று வருவாரோ. அவர் வரட்டும். ஆனால் என்றோ வந்து தான் ஆக வேண்டும். வாடகைக் காலம் முடிய வீட்டைக் கேட்டார்கள். அதுவும் நல்லதாய் போயிற்று. இந்த சூழலே அவளுக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வரும் பாதையில் அவன் வருகிறான். படிக்கட்டில் அவன் நிற்கிறான். முன்னறையில், மேசைக்கருகில் அமர்ந்து மெளனமாய் அவளைப் பார்க்கிறான். ஒ. . வேறு வீட்டுக்கு போவது நல்லது. விட்டவுடன் எங்கு வருவான். பழைய வீட்டுக்குப் போவானோ? அல்லது பயந்து அம்மாவின் வீட்டுக்குப் போவானோ. அங்கும் அவனது உடைகள் சிலவற்றை எடுத்துச் சென்று தந்து கூறுகிறாள்-இங்கு வந்தால் இந்த உடைகளை வைத்திருந்து கொடுங்கள். உடனடியாக உடனடியாக, அங்கு என்னிடம் கூட்டி வந்து விடுங்கள், சரியா, சரியா சரியா.
அவர்கள் அவளைப் புரிந்து கொள்கின்றனர். இந்த நம்பிக்கையை சிதைக்க முற்படவில்லை.
தெய்வங்கள்-கணக்கு வழக்கில்லை- வேண்டினாள்.' நேர்ந்து கொண்டாள். பின் ஒரு நாள் சந்தர்ப்பவசமாய், பேச்சுவாக்கில், யாரோ ஒருவர் அலுவலகத்தில்தான், அறியத்தந்தார்கள்-ஓர் ஒன்று கூடல் குறித்து.
தத்தமது கணவனை, சகோதரனை தனயனை இழந்த தாய்மாரெல்லாம் எங்கோ எதற்கோ கூடுகின்றனராம்.
எல்லா இடத்திலும் பார்த்தாகி விட்டது. இவர்களாவது, இங்கேயாவது ஏதேனும் ஒன்று கிடைக்குமா?
122 / வெண்ணிறத் தாமரைகள்

தீர்த்தக்கரைக் கதைகள்
குறிப்பிட்ட தினத்தன்று காலையிலேயே எழுந்துவிட்டாள். குளித்தாள். என்ன கூட்டம் இது. என்ன செய்வார்கள். என்னைப் போல் இழந்தோர் கூட்டமாமே. அன்பானவர் களே, என்னைப் போலத் தானே நீங்களும். எந்த உடையில் செல்லலாம். வெண்ணிற உடையில் செல்வது சரியென்று அவளுக்குப்பட்டது. இங்கேயாவது அவர்கள் ஏதேனும் கூறக்கூடும்.
அது போயா தினம் வேறு. பெளத்த ஆலயங்களில் எல்லாம் மதவழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் பரவி விரவி காதை அடைத்தது. எத்தனை ஆலயங்கள். எத்தனை பிரார்த்தனைகள். பஸ்ஸில் ஏறியவளுக்கோ பதற்றம், திகில். ஜன்னல் ஒரமாய் அமர்ந்து கொண்டாள். பஸ் நகர்ந்த போது அவளது கண்ணை உறுத்தியது, நகரின் சுவர்களிலெல்லாம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்தாம். ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிது. நிறம் நிறமாய். நாட்டுத் தலைவர்களின் முகங்களை எவ்வளவு குளோசப்பில் போட்டிருக்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்று. ஒரு விரலை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து ஆழ்ந்து பிளிறுவது போன்றும், மெளனமாய் தியான நிலையில் புன்னகைப் பதும், வரிசை வரிசையாக கலர் கலராக . . .
இவள் இறங்கி நடந்தாள். மண்டபத்தை அடைந்தவள் விக்கித்துப் போனாள். ஆயிரத்தை விட அதிகமாக . . மண்டபம் நிறைந்து வழிந்திருந்தது. அனைவருமே வெண்ணிற உடையில்-அன்புருவங்கள், முகங்களில் அழிக்க முடியாததொரு சோகம்-கசப்பு-கடுமை அனைத்தும் ஒன்று சேர்ந்தாற் போல் அப்பிப் போயிருந்தது, நிலைத்த பார்வையுடன் அவர்கள் அமர்ந்திருந்தனர், மண்டபத்தில் திரளாக, மண்டபத்தின் மேலிருந்து பார்க்கும் போது மெல்லிய வெள்ளைத் துகிலில் அசையாத தாமரைகளாய். .
ஓர் வயது சென்ற பெண்மணி தன் மகனை இழந்தவளாம், பேசத் தொடங்கினாள்.
இவள் சுற்றிச் சுற்றிப்பார்த்தாள். எவ்வளவு பேர். எவ்வளவு பேர். தெய்வமே எதற்காக யாருக்காக இப்படியெல்லாம் நடக்கிறது. யாருக்காக, யாருக்காக -அவள் கேட்கத் தொடங்கினாள்.
நீங்கள் பொறாமைப்பட்டுக் கொள்வீர்கள். ஒரு காலத்தில்
விழிகள் அப்படி ஜீவன் ததும்புவனவாயும் அழகானவையா யும் பெரியனவாயும். . . . . .
கேகாலை கையிலைநாதன் I - 123

Page 65
பின்னிணைப்பு
அதியுயர் ஸ்தானம்
ஐ.நா. சபையின் ஒர் அறிக்கையின் பிரகாரம் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்ட நாற்பதுக்கும் அதிகமான நாடுகளில் இலங்கையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில், அதியுயர் ஸ்தானத்தை கொண்டதாக இருக்கின்றது.
மேற்படி அறிக்கையானது. 12,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக மதிப்பிட்டுள்ள அதே வேளை அதற்கு கிட்டியுள்ள தகவல்களின் பிரகாரம் மேலும் அநேகர் காணாமல் போயிருக்கலாம் என்றும் குறிக்கின்றது.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த ஒர் ஐரோப்பிய பாராளுமன்ற குழுவானது, நாட்டில் நடந்தேறிய இரண்டு முரண்களின் விளைவாக 60,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக பதிந்துள்ளது. 1988 க்கும் 1990க்கும் இடையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தெற்கிலும்
கொல்லப்பட்டனர்.
pairs: ISLAND 01-02-92.
1993
24 / வெண்ணிறத் தாமரைகள் )

தூரிகை
வழமையான, ஒர் அதிகாலையில் தற்செயலாகத்தான் அவளது ஒவியத்தை நான் காண நேர்ந்தது.
என்றைக்கும் போல் அன்றும் விளையாட்டுப் பக்கத்தை நோட்டம் விட்டு விட்டு, பின் மாமூலான தலையங்கங் களுக்குத் தாவி, பின்னர் ஒரமாய்க் கிடக்கும் "கெல்வின் துணுக்கையும் பார்வையிட்டு சற்றே ரசித்து பின் இணைக்கப்பட்டிருந்த சஞ்சிகைப் பக்கங்களுக்குள் நழுவ, அங்கே அவள் கிடந்தாள்.
சதுரம் கட்டி, அதற்குள் ஒர் புன்னகைக்கும் ஜீவனை இவள் நிறுத்தியிருந்தாள். கூடவே ஒவியத்தின் விளிம்பில் ஒவியத் தின் கருத்தைத் தெளிவுற வெளிக்கொணரும் நான்கு வரிக் கவிதை வேறு.
திகைத்தேன். என்ன இது? யார் இது! பூக்களை அள்ளி என் மேல் திடீரென வீசியடித்தாற் போல்!
இன்றைய ஒவிய உலகை ஒரளவு அறிவேன். பேதைமை மிக்க வெத்து வேட்டுகளும் திரிபுற்ற பாலியல் ஏக்கங்களும் ரொம்பத்தான் இடத்தை அடைத்துக் கொண்டு. . நிற்கும் காட்சி ஒரு புறம்.
இது போதாததிற்கு இதற்கேற்றாற்போல் தத்தமது மூளை களை கசக்கிப் பிழிந்து அவற்றிலுள்ள இல்லாததுக்கும் பொல்லாததுக்குமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அவற்றுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கூடு தமக்கும் ஓர் அங்கீகாரத்தை வழங்கித் தீர்க்குமாறு கையேந்தி மன்றாடும் விமர்சனக் கூட்டம் மறுபுறம்.
கேகாலை கையிலைநாதன் / 125

Page 66
M5k 56 oreAorerer
இந்த மாரடிப்பில் இது என்ன புதுமரபு? எங்கிருந்து வந்தது? யாரிவள்? திகைத்துப் போனேன்.
C
எனது நண்பன்-அவன் சற்றே ஒர் வித்தியாசமான பிறவி. மனிதர்களின் ஒன்று சேரலின், அவர்களின் வஞ்சகமற்ற அந்நியோன்னிய சேர்க்கையில் தன்னை மறந்து கவிதை காணும்இனத்தைச் சேர்ந்தவன். கூறுவான்: விளையாட்டுப் போட்டிகளில் அவனுக்குப் பிடித்த நிகழ்ச்சியே ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் காட்சிதானம்.
அத்தனை மனிதர்களின் கூட்டுச் சேர்க்கையின் விளை பயனாய், இத்தனை ஒழுங்குகளையும் பூர்த்தி செய்து விட்டு, பின் ஒர் பூதாகரமான நிசப்தத்தையும் ஏற்படுத்தி, அங்கே, அதன் பின்னணியில் தீபத்தை ஏற்றும் காட்சி, அதில் அவர்களும் இவனுமாய் ஒன்றுபடும் விதம்-இவனுக்கு மயிர்கள் சிலிர்க்குமாம்.
ஒர் பயிலுநர்-ஆசிரியர் கல்லூரியின் விரிவுரையாளனாகக் கடமையாற்றும் இவன் தனது இளம் ஆசிரியர்கள் ஒழுங்கு செய்யும் நாட்டியங்கள், கூத்துகள், பின் வாய்மொழிப் பாடல் சேகரிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் தோட்டத்துப் பயணங்கள்-இவற்றுக்காய் இந்தப் பயிலுநர் ஆசிரியர்களால் இரவிரவாய் மேற்கொள்ளப்படும் முஸ்தீபு கள், தயாரிப்புகள்-அதற்குள் துளிர்க்கும் ஆனந்தங்கள், அனுபவங்கள்-பின் இரவில் வீடு திரும்ப முடியாது போவ தால் இவன் பத்தினி காலையில்வீசும் அனல் பார்வை, இத்தியாதி இவற்றை, தான் சிக்கெடுத்துக் கொள்ளும் நேர்த்தி-இவை யாவற்றையும் சுவை குன்றாமல், வாய் நிறைய நெளியும் புன்னகையுடன் எனக்கு எடுத் துரைப்பான்.
ஒர் தேயிலைத் தோட்டத்து பாடசாலை குவாட்டர்ஸ் களில் ஒன்றில் தன் குடும்பத்தோடு குடியிருக்கும் இவன், சமயங்களில், அங்குள்ள இளம் தொழிலாளரின் மனுஷப்பண்பு மிக்கபாடல்களை, அவர்களது நேயமிக்க வாழ்க்கை நகர்வுகளை, அவர்களும் அவர்களது பிள்ளைகளுமாய் சுமக்க வேண்டியுள்ள வாழ்க்கைச் சுமையின் நிர்ப்பந்தங் களை நான் கேட்டுக்கொள்வதற்கேற்ப உணர்வு பூர்வமாய் எனக்காய்ச் சித்தரிப்பான்.
அவ்வப்போது ஒவியக் கலையையும் ஒரு கைபார்க்கும் இவனிடம்தான் உடனே இந்த ஒவியத்தைத் தூக்கிச் செல்ல எனக்குத் தோன்றியது.
126 | தூரிகை

தீர்த்தக்கரைக் கதைகள்
சொக்கிப் போனான் பயல். யாரிது, பூப்போல என்றான். முகம் தெரியாத, பெயர் அறியாத பூ என்றேன் நான். புன்னகைத்தான்.
உழைக்கும் மக்களின் அரசியல் என்பது அவனுக்கு அந்நிய மானதொன்றல்ல என்பதாலோ என்னவோ இவ்வோவியத்தை அவன் பிரமாண்டமாய் ரசிப்பதாய் எனக்குத் தோன்றியது. அவன் கூறுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது.
உலக ரீதியாகவே உழைக்கும் மக்கள் தமது உறுத்தி நிற்கக் கூடிய அடையாளத்தை அரசியலிலும் கலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு இழந்து நிற்கும் இந்நாட்களில் . . . . " என்ற ரீதியல் அவனது தர்க்கம் உருக் கொண்டிருந்தது.
பின்னர் ஒவ்வொரு செவ்வாய்க்காகவும் நானும் அவனு மாய் எக்கச்சக்கமாய் ஏங்கிக் கிடக்கத் தொடங்கினோம்.
இன்று என்ன வரைந்திருப்பாள். . . .? இவன் கூறுவான், ஒவியத்தைத் தன் வலக் கரத்தால் பிடித்து தன் மென்மை யான கண்களால் அவற்றை நிதானமாக வருடியவாறே
"மென்மையாய் இருக்குதுல்ல"
"ம்" என்பேன் நான்.
* மெல்லிய மேகம் மாதிரி"
''
"மெல்லிய மேகமா, மெல்லிய சோகமா"
"மெல்லிய மேகம்" பயல் இப்படிப்பட்டவன்தான். ஒன்றிப் போனால் ஒன்றிப் போனதுதான். சிரித்துக் கொண்டேன்.
ஆனால் அந்த ஓவியங்களும் அப்படிப்பட்டவையாகத் தான் இருந்தன. அடித்தளத்தில் கிடந்து அல்லலுறும் வாழ்க்கையை, அவ்
வாழ்க்கை பிறப்பிக்கும் தன்மானம் கலந்த மூச்சை, பெண் களின் விடுவிப்பை, ஆண்களின் ரோமம் அடர்ந்த முரட்டுக்
Basas PracoRo adas uiae apsirsdir / 127

Page 67
sá5 sorsorsfi cár
கரங்களின் ஆதிக்கங்களை, இந்நாட்டைச் சேர்ந்த அநேக மக்களின்சிதறியவாழ்வுகளின் பின்புலத்தில் நாம் வணங்கும் எண்ணற்ற கடவுள்களின் கையறுந்த நிலையினை. . . . . .
இவையெல்லாம் ஒரு புறம் கிடக்க, இவற்றை அவள் கூற
வந்த விதம். . . . அதன் வனப்பு. . . . தன் தூரிகையை அவள் நகர்த்திச் சென்ற நேர்த்தி-அதன் மேன்மை . . . .
வாழ்வில் இருந்து வேறுபடாமல்,தொலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கிப் போகாமல் மெல்லிய மேகங்களின் சிரத்தை மிக்க பரவலாய் அவள் விரிந்தாள். நாங்கள் ஒன்றினோம்.
கிழமைகள் சென்றன. தொடர்ந்தாற்போல் வெளிவந்த அவளது இரண்டொரு ஒவியங்களில் குறிப்பிடத்தக்க அளவு தன்னை மூழ்கடித்த பின், நீண்ட ஒர் கவிதையைத் தூக்கிக் கொண்டு என்னைக் காண வந்தான் நண்பன்.
நீண்டிருந்தாலும் ஒருவித வருடலுடன் அழகாய் இருந்த அக் கவிதை இப்படி ஆரம்பித்திருந்தது;
ஒவ்வொரு செவ்வாயும் உனது
மிருதுவான ஒவியங்கள் தம் வழியே ஓர் உறுதியைக் காட்டி நிற்கும் எவ்வளவு மென்மையாய் தீட்டுகின்றாய் என் அன்பே. ஏதோ
பெயர் தெரியா கனவுலகில் இருந்து மெல்லிய நின் மேகங்களிடம் எமக்கென ஒர் செய்தியைச் சொல்லி அனுப்பி வைத்தாற் போல். . . .
O O O O
நீ,
மெளனமாய் எம் இதயத்தில் பசுமையை விரித்து-பின் மெல்லிய நின்விரல்களால் மிருதுவாய்,
128 / IT flaneas

såkas amords as ansas dit
மிக மிருதுவாய் அவற்றை வருட எத்தனை துயரோடு எத்தனை கரிசனையோடு எத்தனை வருத்தத்தோடு ஓர்'வரலாற்றின் செய்தியை ஓர் தாய்மையின் அழகோடு விதைத்து நிற்கின்றாய். . . .
நிறுத்தி_அவன் முகத்தைப் பார்த்தேன். மெளனமாயிருந் தான். மேலே வாசித்தேன்.
என் அச்சம்
எல்லாமே இதுதான் முகம் அறியா,என் இதழே எத்தனை நாட்கள் இதே உறுதியுடன் இதே பாலையில் go 6T LI965) D66) Lé காப்பாற்றிக் கொள்வாய்? கோரையும் முட்களுமாய் தழைத்துப் பரவி விரவும்
இந்த விஷப் பரப்பில்
என் இதழே எங்குதான் ஓர் போக்கிடத்தைக் கொள்வாய்?
அன்பே,
உன்னை வருடுகின்றேன்.
@了@リ
இதயத்தின் ஆழத்திலிருந்தே வருடுகின்றேன்.
உன் இதயத்தின் நாகரிகமிக்க இவ்வீரலிப்பு தூய வாஞ்சை மிக்க வாழ்வின் செளந்தர்யங்களால். . . . மானுடத்தின் செறிந்த கலாச்சாரத்தால் மனுக் குலத்தின் பொக்கிஷ மனிதர்களின் ஈரம் சொரிந்த அறிவுத்திரட்சியால். . . மேலும் பசுமையுறுவதாக, மேலும் உறுதியுறுவதாக. உன்மேகங்களிடம் சொல் அவை ஆற்றுவது
கேகாலை கையிலைநாதன் 1 29

Page 68
கந்தலாலாவின்
ஒர் வரலாற்றுக் கடன்
என்று. . . . உன் மேகங்களிடம் சொல் அவை ஏந்துவது
மனுக்குலத்தின் ஓர் துயர் மிக்க காதை என்று. . . . உன் மேகங்களிடம் சொல் அவை மீட்ட முயல்வது ஓர் புதிய பள்ளியெழுச்சி என்று. . . . கூடவே, கூடவே உன் மேகங்களிடம் சேர்த்துச்சொல் முகம் தெரியாவிட்டாலும் அவற்றைக் காதலிக்க
இங்கே
ஈரமிக்க மனிதர்கள் என்றும் இருப்பார்கள், எம் மலைகளில் காத்திருப்பார்கள்
எனும்
எம்மவரின் ஈரமிக்க வார்த்தையிதையும். . . .
உண்மைதான். இந்த மலைப்பிரதேசங்களிலோ தொழிலாள மக்களது போராட்டம் ஒரு நாளின் யதார்த்தம் இங்கு. ஆனால் இவள் எங்குள்ளவள்? இவளின் பின்னணி штg5/?
வாசித்து முடிய, "காதல் கொண்டு விட்டாயோடா பயலே" என்றேன்.
சிரித்தான்.
பின், 'இதன் மேல் காதல் கொள்ளாமல் எதன் மேல்தான் காதல் கொள்வதாம்’ என்றான் பயல், பதிலுக்கு, நான் சிரித்தேன்.
அவளது ஒவியங்கள் அடுத்தடுத்து பிரசுரமாயின. பின்னர் பல கிழமைகள் கழிந்து, எக்குத்தப்பாய்த்தான், அவள்
குறித்த மேலும் சில விபரங்களை நாம் அறிய நேர்ந்தது,- அதுவும் கூட இன்னுமொரு ஓவிய நண்பனுக்கூடாகத்தான்.
130 1 3IT filabas

தீர்த்தக்கரைக் கதைகள்
இந்த ஓவிய நண்பன் கூட தற்செயலாய் எமக்கு அறிமுகமானவனே. பெயர் ஜகத்.
இவனது கண்காட்சி ஒன்றைப் பார்த்துவிட்டு அவனுடன் அளவளாவிக் கொண்டிருந்ததற்கூடு உருவாகியிருந்த நட்பு அது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலைகளை, பாதகங்களை இந்த ஓவிய நண்பன்-ஜகத்இவன் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற போதிலும்-மிக நேர்மையாகவும் அப்பட்டமாகவும் வடித்திருந்த துணிவும் நாகரிகமும் எம்மை அவன்பால் ஈர்த்திருந்தது.
அவன் தேர்ந்திருந்த வடிவம், ஒவியம் சார்பாய் அவன் கொண்டிருந்த தத்துவம் என்பன எமக்கு பொருந்தி வரா விட்டாலும் அவன் கொண்டிருந்த மனித நேயத்துக்கு மரியாதை செலுத்த நாம் கடமைப் பட்டிருந்தோம்.
அன்று இரவு உணவுக்காய் அழைத்திருந்தான் எம்மை.
சம்பாஷணை வழமை போல் பல்வேறு ஓவியர்கள், விமர்சகர்கள் குறித்து அலைபாய்ந்தது.
"அப்படி என்றால்இவற்றையும் ரசிப்பவர்களைப் பொறுத்து என்ன கூறுவீர்கள்" என்றான் ஜகத்.
* குறிப்பிட்ட ஓவியத்தைப் போற்றி வரைபவனையும், அதே ஒவியத்தை ஏற்று ரசிப்பவனையும், அதே ஒவியத்தை அங்கீகரித்து விமர்சிப்பவனையும் ‘வாழ்க்கை தனது ஒரே வேரிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறது. ரசிகன், விமர்சகன்,கலைஞன்-இவர்கள் மூவரும்ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோராய் ஒத்த சுவையரும்பை உடையோராய் இருப்பது ஒன்றும் அதிசயமானதல்ல. வாழ்வின் பிறிதொரு வேரிலிருந்து பிறக்கும் மனிதர்க்கே இத்தகைய குடும்பத்தாரின் உணர்வுகள் அந்நியப்பட்டு நிற்கும்" என்றான் எனது நண்பன்.
தலையை ஆட்டியவாறே "தர்க்கம் உங்கள் தொழில் போல’ என்றான் ஜகத், பின் கதை “கீத்" குறித்து எழ ஜகத் தன் நண்பனின் கருத்தை வினவினான்.
"வாழ்வதற்காய் இன்னுமொரு நூறு வருடங்களை இந்தத்
கேகாலை கையிலைநாதன் / 131

Page 69
Es is 56NoTomorrerar
தொண்ணுாறு வயது வயோதிகனுக்கு இயற்கை ஈந்திருந் தாலும் பெண்களின் வளைவுகளை கீறிக் கீறித் தீர்ப்ப திலேயே சொகுசாய் அவற்றை செலவழித்திருப்பான்."
"பாலியல் குறித்து ரொமாண்டிக்காகவும் மோகனமாகவும் ஆவன படைத்துள்ள கலைஞர்கள், உலகுக்கு ஒன்றும் புதியவர்கள் அல்ல. காலம் காலமாய் நீளும் அவர்களின் நீண்ட பட்டியலில் இந்தத் தள்ளாத வயதினனுக்கும் வசதி யான ஓர் இடம் உண்டுதான்’ என்றான் என் நண்பன்.
சிரித்தான் ஒவியன்.
"பின்னர் யாரைத்தான் போற்றுவீர்கள்" என்றான் தொடர்ந்து.
நண்பன் கூறினான்.
"உங்கள் ஒவியத்தின் உள்ளடக்கத்தை . . . . . . பின் பெயர் தெரியாத ஓர் பெண், செவ்வாய் தோறும் கீறுபவள்அவளது கீற்றுக்கள். . . . .
"ஓ நீங்கள் குறிப்பிடுவது அவளை. . . . . ."
பின் கூறினான் "அவள் பயின்றது சீனத்தில் . . . . . .பகுதி நேர மருத்துவம் வேறு செய்கிறாள்."
இப்போது எமக்குப் புரிந்தது. அவளின் ஆளுமைக்கான பின்னணி யாது என்பது-ஆனால் அவளின் பரப்பு என்ன . . . . . . "
விலாசத்தைக்கூட ஓவிய நண்பனே தேடித்தந்தான். கொண்டாட்டமாய் அவனிடம் விடை பெற்றான் என் நண்பன்.
இப்போது செவ்வாய் தோறும் இவனது நச்சரிப்புத்தாங்க முடியவில்லை. பத்திரிகையை வாங்கி வைத்துக்கொண்டு பொங்கும் ஆர்வத்துடன் என்னை என் அலுவலகத்தில் மடக்கிப் பிடித்து விடுவான்.
எனக்கோ முடிக்க வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாய் மீதம் கிடக்கும்-கிழமைநாள் வேறு என்றபடியால் . . . . . .
132 | தூரிகை

தீர்த்தக்கரைக் கதைகள்
ஆனால் இவனிடம் எதைச் சொல்ல, எதைவிட? நச்சரித்து நச்சரித்து என்னை வீட்டுக்குக் கொணர்ந்து சேர்த்து களைத்து நாற்காலியில் கிடக்கும் எனது கரங்களுக்குள் உவகையுடன் பத்திரிகையைத் திணிப்பான். நானும் எனை மறந்து ரசிப்பேன்.
தொடர்ந்து வந்த கிழமைகளில் அவளுக்காய் அருமையான கடிதங்களை எழுதத் தொடங்கியிருந்தான் நண்பன். கூறினான்-கொண்டாட்ட மாயிருக்கின்றதாம். அவளுக்கு வரைவதென்பது. ஏன் என்றேன் நான். முகமறியாத ஓர் மென்மலருக்கு எழுதுவது வேறு எப்படியிருக்குமாம் என்றான் இவன். கடிதங்களை வாசித்துப் பார்த்தேன்.
அன்றுவரை மொத்தமாய் ஐந்து கடிதங்களை எழுதி யிருந்தான். அனைத்துமே குறிக்கத்தக்கவை. அவள் குறித்த அவனது கவிதையைப் போலவே அவனது கடிதங்: களும் அவள் குறித்து ஓர் வருடும் தன்மையைக் கொண்" டிருந்ததாய்ப் பட்டது எனக்கு.
தனது ஒவியங்களில் ஒன்றில் அவள் குறித்திருந்தாள்: ' கடவுளே வரையறைகளால் பாதிப்புற்றிருக்கும்போது எனது தூரிகை மாத்திரம் என்னவாம் என்று. அதற்கு இவன், பெண்ணே, கடவுளை சிருஷ்டித்தது மனித குலத்தின் நொந்த பக்கம்தானே- ஆனால் உனது தூரிகையின் உருவாக்கமோ மனித இதயத்தின் வளமான) செளந்தர்ய பிரதேசத்திலிருந்துதானே என்று எழுதி) யிருந்தான்.
y இன்னுமொரு ஒவியத்தில் கூறியிருந்தாள் "அட இந்த சுவாத்தியம் எனது மூச்சை அடைத்து முறித்து விடும் போல இருக்கின்றதே" என்று.
அதற்கு இவன், யார்தான் இந்த மூச்சுத் திணறலை அனுபவிக்கவில்லை. எவனெவனுக்கு மனித நேயம் தொடர்} பான இதயத்துடிப்பு உண்டோ அவனுக்கெல்லாம் இந்த மூச்சுத்திணறல் அந்நியமானதல்லவே. ஆனால் பெண்ணே, உனது ஓவியங்கள்ஒன்றை எனக்குத்தெரிவித்து நிற்கின்றன. மூச்சை அடைத்துத் திணறடிக்கும் இந்த சுவாத்தியத்தில் தான் இதனையும் மீறி இறக்கை விரிக்கும் பலமான நுரையீரல்களும் ஜனனமாகின்றன எனும் சேதியை. . . ." என்றெல்லாம் வடித்திருந்தான்.
கேகாலை கையிலைநாதன் I 133

Page 70
கந்தலாலாவின்
இதற்கெல்லாம் ஒரு பதிலாவது கிடைத்ததாடா" என்றேன்
நான்.ஜி
அதற்கு இவன், 'பதில்கள்? யாருக்கு வேண்டுமாம் முகமறியாமல் அவள் வாழட்டும். எனது உணர்வையே அவளும் பிரதிபலித்து, மலைகளைப் பாதுகாத்து முகமறி யாமல் இந்த உலகின் எந்த ஓர் மூலைமுடுக்கிலோ, எங்கேயோ அவள் வாழட்டும்" என்றான்.
மலைகளைப் பாதுகாத்து. . . .? அட என் பயலே! என்மனது உள்ளுக்குள் அவனை அன்பாய் வருட"தேநீர் குடிப்போமா" என்றேன் நான்.
இன்றும் செவ்வாய். ஏன் இவன் வரவில்லை. “உணவு வேளையின் போதுதான் எனக்கும் நினைவில்தட்டியது. . . ஓ, பத்திரிகையும் இன்று பார்க்கவில்லை. . . . . . இவனையும் காணவில்லை.
பக்கத்து அறைக்கு கேட்டு அனுப்பினேன் அந்த ஆங்கில பத்திரிகைக்காக. வித்தியாசமாக தீட்டியிருந்தாள். விதி விலக்காய் அவளது "நான் இவ்வோவியத்தில் விழித்துக் கொண்டு முனைப்பாய் நின்றிருந்தது. அதற்கேற்றாற் போல் நிறம் வேறு திரிந்த நிலையில். . . . . . . . .
சோர்ந்து போனானோ பயல்? இவளது அண்மைக் கால
இரண்டொரு ஓவியங்கள், இப்படித்தான், சற்றே வேறு
பட்டு, நசிவின் எல்லையைத் தொட்டுத் தொட்டு
மீண்டிருந்தது. இவளது நிறங்கள் வெளிறத் தொடங்கு
ன்றனவோ. . . . . .?
உணவு வேளைக்கு செல்லும்போது நண்பனின் அலுவலகத் துக்குச் சென்றேன் அவனைக் கூட்டிச் செல்லும் நோக்குடன், அவனுக்கும் நிரம்பி வழியும் வேலைதான். இருந்தாலும் வந்திருப்பானே. . . . . .
அவனது அறைக்குள் நுழைந்தவுடன் அவன் மேசையில் ஒரமாய் மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையை கண்களால் நோட்ட மிட்டு விட்டு, பின் அவன் முகத்தை அமைதியாகப்பார்த்தவாறே, மேசையின் முன் கிடந்த நாற்காலியை இழுத்து அமர்ந்தவாறே ‘என்ன நினைக் கிறாய்" என்றேன்.
Il 34 / gir faDS

$tãsissar soss dir
அடுத்த கடிதத்தில்,அவளுக்கு எழுதியிருந்தான்-"பெண்ணே S ன்னைக் காணவில்லை. எங்கு சென்றாய்? எப்படித் தொலைந்தாய்?-"
மேலும் தொடர்ந்திருந்தான்; "உன் அண்மைக்கால ஒவியங் களில் உன் இதயத்தை எம்மால் காணவே முடியவில்லை. உனது மூளை மாத்திரம் உறுத்தி நின்றது. ஆனால் கடைசி யாய் பிரசுரமாகியிருந்த உன் இறுதி ஒவியத்திலோ ஓர் இதயத்தை மீண்டும் நாம் காண்கின்றேனாம். ஆனால் நாங்கள் அறிந்திராத, எமக்குப் பரிச்சயமில்லாத புதுஇதயம் இது. யாருடையது இது? உன் வாழ்நிலைமாறிப் போனதா? அந்நியப்பட்டுப் போனாயோ அல்லது அந்நியப்பட்டுக் கொண்டிருக்கின்றாயோ? நாம் பயந்தது நடக்கின்றதா? உன்னை “நீ காப்பாற்றிக் கொள் பெண்ணே. . . . "
கேட்டேன் அவனிடம்; இவ்வளவு மினக்கெடுகின்றாயே! ரோஜா உனக்குப் பிடிக்கின்றது-எனக்குப் புரிகின்றது. ஆனால் ரோஜாவின் மேல் உனக்குள்ள ஈடுபாட்டிற்காக மரவள்ளிகள் மேல் எல்லாம் நீ நீர் ஊற்றுகின்றாயோ..?
சிரித்தான் நண்பன், பின் கூறினான்;
"தெரியவில்லை. ஆனால் ஊற்றினால்தான் என்னவாம்?
"என்னவா. . . . ரோஜாக்கள் மலராது தெரியுந்தானே?
என்றேன் நான்.
மெளனமாய் இருந்தான்.
பின் நானே தொடர்ந்தேன்.
"மிஞ்சப் போவது எது தெரியுமா?"
தெரியும்" என்றான்.
“எது"
-"என் இதயம், நீ" என்று சிரித்தான், "இவன் இந்தத்
திருடன்
அப்பப்பா. . .
O O O O
தொடர்ந்து வந்த ஓவியங்கள் ஓரளவு நேர்த்தியாய்ப் பிரகாசித்தன. இவனது கடிதங்களின் பாதிப்போ?
கேகாலை கையிலைநாதன் / 135

Page 71
கந்தலாலாவின்
இவனும்தான் எவ்வளவு நேர்த்தியாய் மினக்கெட்டு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஒவ்வொன்றுக் கும் எடுத்திருப்பான்.
அன்று சந்தோஷமாய் வந்து சேர்ந்தான். முகமெல்லாம் ஓர் பூரிப்பு. அவனது அழகிய இதழ்களின் ஒரமாய் மிக மெலி தாய், செல்லமாய் ஒளிந்து நடம்புரியும் இளம் குறுநகை வேறு. ~പ്പ
என் முன்பாய்அமர்ந்து நீட்டினான் அவளதுஅழைப்பிதழை.
பிரித்துப்பார்த்தேன். அவளது கண்காட்சிதான். இது குறித்து பத்திரிகை வாயிலாக ஏற்கனவே அறிந்து இருந்தேன்.
"உனக்கும் எனக்கும் இடையிலான தொலைவை நீக்கும் பொருட்டு" என்று பொறிக்கப்பட்ட வாசகங்களுடன்.
அழைப்பிதழை, அதனது கவரை, தடயங்களுக்காக தேடினேன் நான்.
கூட்டைப் பார்வையிட்டேன். அவள் தன் கரம்பட எழுதியிருந்தாள் இவனது முகவரியை. பத்திரிக்கையில் கையொப்பமிட்டிருந்த அதே எழுத்துக்கள்.
நிதானமாக, அந்த வெண்ணிறமான நீண்ட கடித உறையில் அவளது எழுத்துக்கள் முத்து முத்தாக உருண்டிருந்தது.
உறையை இன்னும் சற்று கூர்ந்து பார்வையிட்ட போது அவள் இன்னும் நிறையவே மினக்கெட்டிருப்பது புரிந்தது.
பென்சிலால் மெல்லிய நேர்க்கோடுகள் பட்டும்படாமலும், கண்களில் தென்படாதவாறு மெலிதாக கீறி, பின் அதன் மேல் தன் முத்து முத்து எழுத்துக்களை உருளச்செய்திருந் தாள் அவள். ஓ, இவனின் கடிதங்களை நேசிக்கத்தான் செய்திருக்கிறாய், என் அருமைப் பெண்ணே! நன்றி உனக்கு. என் அருமை நண்பனான இவனின், இவனது இதயத்தை, இவனது கவிதையை அறிவாயா பெண்ணேஅறியக் கூடுமா உனக்கு. . . யோசித்தேன் நான்.
போகத் தீர்மானித்து விட்டேன். எந்த சந்தேகமும்
இல்லாமல். ஆனால் இவனோ தடுமாறி நின்றான். போவதா இல்லையா?. . .போவதா இல்லையா?
Y
136 | Tfas

தீர்த்தக்கரைக் கதைகள்
சரி கொழும்புக்குச் சென்று, அங்கு தீர்மானிப்போம் செல்வதா இல்லையா என்று, என்ற எனது வாதம் இவனுக்கும் சரியாய்ப்பட்டது.
காலை முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், இருந்த அனைத்து வேலைகளையும் முடித்து மாலை ஆறுமணியள வில் கண்காட்சியைப் பார்வையிட திட்டம் தீட்டினோம்.
கண்காட்சிக் கூடத்துக்கு அருகாமையிலேயே நூலகமும் அமைந்திருந்தது செளகரியமாய்ப் போய்விட்டது. மூன்று மணியளவிலேயே எமது அனைத்து வேலைகளும் முடிவுற ஆறுமணிவரை நூலகத்தில் தஞ்சம் புகுவதெனத் தீர்மானித்தோம்.
எவ்வளவு நாளாகிவிட்டது, இந்த நூலகத்தில் நுழைந்து. எங்கள் மாணவப் பருவத்தில் எவ்வளவு நெருக்கமா யிருந்தது இந்நூலகம். எங்கள் குறும்புகளுக்கு, எங்கள் சண்டைகளுக்கு, எங்கள் வாதங்களுக்கு, பொருளற்ற எங்கள் கல்விக்கூடப் படிப்புக்கு-எல்லாம் இந்த நூலகம் தானே தஞ்சமாய் நின்றது.
முன்பு பரீட்சை நாட்களில் காலை ஆறு மணிக்கே வந்து விடுவோம், வரிசையில் நின்று இடம் பிடிப்பதற்காய்.
பின் களைத்து அலுத்து மாலை நூலகத்தைப் பூட்டும்வரை மனனம்-பொருளற்ற வெறுப்புத் தட்டும் மனனம்.
இது தவிர பரீட்சையற்ற மற்ற நாட்களில் இந்த நூலகம் ஒரு பூஞ்சோலை எனக்கு, இலக்கியங்களைத் தேடிப்பகிர, கனவுகாண, போர் அடிக்கும் போது "கன்டீன் தேநீர்" குடிக்க . . "மங்கும் மஞ்சள் மாலைகளில் நூலகத்தை ஒட்டினாற்போல் கட்டப்பட்டு நீண்டிருக்கும் உலக யுத்த ஞாபகத் தூபியின் மேடைகளில் வானத்தைப் பார்த்தவாறு அண்ணாந்து அருகருகே கிடக்க . . .
மெதுவாய், மிக மிருதுவாய் என்றுகூடச் சொல்லலாம், சப்தமே இல்லாமல் வானத்திலிருந்து மழை மிக மெலி தாய்த் தூறிக்கொண்டிருந்தது இப்போது. i இதோ இந்தத் தூபி மாலை வேறு மஞ்சளாகத்தான் இருக்கிறது. அன்று போல.
முன்பொருநாள், இப்படித்தான், இந்த தூபிக் கட்டடத் தில், நானும் தற்போது கனடாவில் இருக்கும் என் நண்பன்
கேகாலை கையிலைநாதன் ! 37

Page 72
så saoiraMoiraar
கேசவனும், ஒரு மாலையில் கிட்டத்தட்ட இதே நேரத்தில், வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு அருகருகே கிடந்தோம்.
எமது சம்பாஷணை அந்த அறிவார்ந்த தாடிக்கார ஜெர்மனியனைப்பற்றி யாரோ எழுதியிருந்த வாழ்க்கைச் சரிதம் பொறுத்ததாய் இருந்தது.
"அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று அந்த பால்ய காலத்து நண்பனை நான் கேட்டிருந்தேன்.
மஞ்சள் வானத்தில் அவன் விழிகள் லயிக்க, மனம் எங்கேயோ சஞ்சரிக்க சற்றே உணர்ச்சி வசப்பட்டாற் போல் அவன் கூறியிருந்த பதில் இன்னும் என் நினைவில் தேங்கிக் கிடக்கின்றது.
*உழைத்துத் தேயும் மக்களின் கரங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, ஒரே கரமாக்கி எழுதச் சொன்னால் எழுதுவார் கள். அவனைப்பற்றி, ஒருவரி. ஒரே ஒருவரி-"எங்கிருந்தோ வந்தான்" என்று-நான் யார் அத்தலைவனைப் பற்றிக் கூற என்ற அவனது அன்றைய பதில் இன்றும் எனது நெஞ்சில் மாத்திர மல்ல, இதோ எனது பக்கத்தில் நிற்கிறானே இவனது நெஞ்சிலும் வாழ்கிறது என்பதை நான் அறிவேன்.
பதில் கூறிய அந்த பால்ய காலத்து நண்பனோ இன்று எவ்வளவு தொலைவில் வசிக்கின்றான்! அவன் எப்படி இருக்கிறான்? அவனது இன்றைய உளப்பாங்கு என்ன? தெரியவில்லை.
நேரம் சென்று விட்டிருந்தது. “புறப்படுவோம்" என்றான் நண்பன்.
மண்டபத்தை அடைந்தோம். கண்கள் அலைந்தது. பத்திரி கையில் அவள் முகம் ஏற்கனவே பிரசுரமாகியிருந்தபடியால் உடனடியாகவே அவளை அடையாளம் கண்டோம். கோதப்படாத தலை. பஞ்சாபி உடையில் "நான்கைந்து பேருடன் கதைத்தவாறே அப்பெரிய மண்டபத்தின் ஓர் மூலையில் நின்றிருந்தாள். ஒவியங்களைப் பார்த்து விடுவோம்’ என்றான் நண்பன். புரிந்தது. கதைப்பதா இல்லையா என்பதைப் பிறகு தீர்மானிக்கலாம். அதற்குத் தேவை எழாமல்கூட போகலாம் என்பது எனது நண்பனின் தீர்மானம் போல.
முதலிலேயே எங்களுக்கு ஏமாற்றம்.
138 / தூரிகை

தீர்த்தக்கரைக் கதைகள்
பிரமாண்டமாய் உயர்ந்திருந்த அந்த மண்டபத்தின் பெரிய சுவர்களில், பெரிய பெரிய கன்வாஸ்களில் அவளது கைவண்ணத்தைக் காணவந்த நாம், கையளவே இருந்த ஒவியங்களைக் கண்டு குறுகிப் போனோம். பத்திரிகையில் எந்த அளவில் தோன்றியதோ அதே அளவில்.
ஓர் ஐம்பது தேறும். மீண்டும் மீண்டும் அதே . . . . அதே. . என்ன இது?
முழுதாய்ப் பார்த்து ஓர் வட்டமடித்து முடிய களைப்பு.ஒரே விதமான, ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை போலிருந்தது; இது, அவளது விசாலப் பார்வை சம்பந்தமாக நெருடும் கேள்விகளை எங்கள் மனதில் எழுப்பச் செய்தது.
பேசுவதா? நண்பனின் களைப்பை நான் அறிந்திருந்தாலும் வந்ததே வந்தோம் பேசி விட்டே செல்வோம் என்று நான் அவனை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டேன்.
நண்பனும் ஏனோதானோவென்று, இப்போது வாயிற்படி யருகே அமர்ந்திருந்த அவளிடம் ஓர் அந்நியனாய் எட்ட நின்று ‘ஒரு நிமிடம் என்றான். மெல்லப் புன்னகை செய்தவாறே எழுந்து வந்தாள் அவள்.
கேள்விகளுக்கான சிந்தையை, ஈடுபாட்டை நண்பனின் மூளை விடாப்பிடியாக அவனுக்குத்தர மறுத்ததை நான் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. வாய்க்கு வந்தபடி கேள்விகளைக் கேட்டுவைத்தான்.
சீனத்தில் படித்த அவளிடம் சீனத்தைப்பற்றி சற்றுக் கூறுமாறு வேண்டிக்கொண்டான்.
"உலகம் சமமாகவே இருக்கக்கூடாது. கூடவே கூடாது.
ஒரே வகையாய், நேராய் மிக நேராய் நீட்டப்பட்ட நேர் பாதையில் என்னதான் இருக்கிறது. வளைந்து வளைந்து
செல்லும் பாதையிலேயே அழகு கொலுவிருக்கிறது என்று புகட்டினாள் அவள்.
ஓர் படத்தை, என் அருமை நண்பனுக்குத்தன் மெல்லிய விரலால் சுட்டிக்காட்டி, மகாத்மா காந்தியின் அறிவாற்ற
லோடு பிரகடனம் செய்தாள்.
*இது எனக்கு மிகவும் பிடித்த படம். நாளை பிடிக்காமல்
கேகாலை கையிலைநாதன் / 139

Page 73
Isilgeoraoirsáidir
போகலாம். நான் நாளை மாறக் கூடும். . . .நாளை இது எனக்குப் பிழையாகத் தென்படலாம். . . . . "
இந்தத் தருணத்தில் யாரோ வர-பெரிய மனிதர்தான்பேராசிரியர்-இது பின்னால் அவளுக்கூடாக நாங்கள் தெரிந்து கொண்டது-அள்ளிக்குதித்து ஓடினாள். சம்பாஷணையை அப்படியே அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஓடியவள், மீண்டும் குதித்து வேறு ஓர் திசையில் பறந்து ஒர் மேசையை நோக்கி ஓடி எதையோ பற்றி வந்து அந்தப் பருத்த மனிதரின் கரங்களுக்குள் அவசர அவசர மாய்த்திணித்தாள்-கண்காட்சி மலராயிருக்க வேண்டும்.
பெரிய மனிதரோ, ஐந்தே நிமிடத்தில் ஐம்பத்தெட்டுப்படங் களையும் 'ரவுண்டடித்து விட்டு வந்து ஆசிர்வதித்துப் போகப்புறப்பட்டவரை வாயிற்படியில் மீண்டும் மடக்கிப் பிடித்து இழுத்துவந்து தன்னுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள்.
பின்னர் வாயிற்படிவரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த கையோடு நண்பனிடம் தொடர்ந்தாள்:
"அரசியலா. . . . இல்லையில்லை. . . .நான் சுதந்திர மானவள். முற்றாக, முற்றும் முழுதாக விடுபாடு அடைந்தவள் நான். விடுபாடு-இது என்னுடனேயே எப் போதும் இருக்கும்"
பின்னர் அவளாய் நண்பனைக் கேட்டாள்- ஒருவேளை நண்பனின் சில விசித்திரமான கேள்விகளால் திடுக்குற்ற தால் போலும் "நீங்கள் யார்?
நண்பன் கூறினான் "நான் ஒரு ஆசிரியன். உங்களுக்கு ஏற்கனவே எழுதியுள்ளேன். என் பெயர். . . .
அவள் கண்கள் மலர்ந்தன. குரலும் மென்மையுற்றது. ‘ஓ. . . . . . நீங்களா அது. . . . . . நினைத்தேன் உங்கள். . . . . . கேள்விகளைக் கண்டு. . .நல்ல கடிதங்கள். . . அனைத்தை யும் தொகுத்து பத்திரமாய் சேகரித்து வைத்துள்ளேன். . .'
புறப்பட்டோம். குறிப்புப் புத்தகத்தில் எதையாவது எழுதிச் செல்லுமாறு நண்பனை வேண்டினாள்.
கூறினான் புன்னகைத்தவாறே, ஏற்கனவே அதிகம் எழுதி விட்டதாக.
140 | தூரிகை

தீர்த்தக்கரைக் as Bass sit
இவளோ விடவில்லை. உங்கள் கையெழுத்தைப் பதித்துக் கொள்ளவேண்டும் இப்புத்தகத்தில் என்றாள் அவள்.
அவளது ஆர்வம் உண்மையானதுஎன்பது புரிந்தது எனக்கு.
நண்பன் ஓர் பெருமூச்சை விட்டவாறே பேனாவுடன் மேசை யில் விரிந்து கிடந்த குறிப்புப்புத்தகத்தின் முன் அமர்ந் தான். நிமிடங்கள் சென்றன. சுற்றும் முற்றும் பார்த்தான். என்னைப் பார்த்தான். என்னத்தை எழுதுவது என்ற கேள்விக்குறி அவனதுமுகத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
எழுந்தபடி அவளிடம் கூறினான். சற்று யோசித்து விட்டு எழுதுகிறேன் என்று.
பின்னர் சற்று வட்டமடித்தான். மீண்டும் வந்தமர்ந்து மூன்று வரிகளைக் கிறுக்கினான். அவனுக்குப் பின்னால் நின்று அவன் வலது தோளில் என் கரத்தை வைத்தவாறு இளம் புன்னகையோடு அவன் எழுத எழுத வாசித்தேன்.
"தேடலை காத்திரமாக்கு. சரியான கீற்றை நீ பற்றக்கூடும்."
அவன் கடிதங்களில் இருந்து எவ்வளவு வித்தியாசப் பட்டிருந்தது இந்த வரிகள் என்பதை எண்ணிப்பார்த்தேன். அவளிடமிருந்து எவ்வளவு தொலைக்கு வந்துவிட்டான்
இவன்.
அவள் எங்கள் பின்னாலேயே ஓடிவந்தாள். வாயிற்படி வரைக்கும் வந்தவள் எமது அவசர நடைக்கேற்ப அவசர அவசரமாய்க் கூறினாள் ஆங்கிலத்தில். "உங்களைச் சந்தித்தது எத்தகு மகிழ்ச்சி. . .எத்தகு மகிழ்ச்சி!
கடந்த கிழமைதான் நீண்ட காலத்தின்பின் நான் சந்தித்த எனது முற்காலத்து அரசியல் நண்பன் ஒருவன் என்னிடம் குறிப்பிடத்தக்க கசப்புணர்வுடன் கூறியிருந்தான்; "மூளை இருக்கிறவன் எல்லாம் திருடனாய் இருக்கின்றான். "நேர்மையானவன் எல்லாம் பைத்தியமாய் அலைகின்றான்" எனறு.
மண்டபத்தை விட்டு இறங்கி இருளில் நடக்கும் போது மெளனமாய் நடந்து கொண்டிருந்த என் நண்பனிடம் மெதுவாகக் கேட்டேன்; என்ன, உனது ஒவியங்கள் எல்லாம் சிதைந்து விட்டனவா என்று.
கேகாலை கையிலைநாதன் / 14

Page 74
அவன் 'இல்லை சிதையாது" என்றான். பின் சற்றுத் தாமதித்து மெல்லக் கூறினான்: "என் எழுதுகோலும் தெய்வம்,என் எழுத்தும் தெய்வம்" என்னும் நிலை இருக்கு மட்டும் என் ஓவியங்கள் சிதையாது என்றான், இவனது ஒவியங்களை எண்ணிப்பார்த்தேன். ஆம் அதுவும் கூட ஒருவகைத் தேடல்தான். 'அன்பான பெண்ணே, யார் நீ" என்று தொடங்கி யிருந்தது அது.
1994
42 / STfas

JITGDIOLIT UööGaJGT
மலையகத்தின் இன்றைய தலைமுறையையும், இன்றைய காலப் பகுதியையும் பிரதிபலித்து நிற்கும் இவ் இணைய எழுத்தாளரின் இக்கதை, இத்தொகுதியின் இறுதிக் கதையாக இடம் பெற் றுள்ளது மிகுந்த அர்த்தபூர்வமானது-இத் தொகுதியை பூரணத்துவம் பெறச் செய்கின்றது என்பதில் நிறைவெய்தலாம்.

Page 75
சிறுவன்
கடந்த ஐந்தாண்டுகளில் எனது நல்ல மாணவனில் அவனும்
ஒருவன். சின்னவன், சிட்டைப்போல. சிட்டைப் போல
என்றதும் தான் சிட்டுக் குருவியைப் பொறுத்து அவனுடன் நான் அவ்வப்போது அளவளாவியது நினைவுக்கு
வருகின்றது.
சம்பாஷணையின் போது சிட்டுக் குருவியின் அநேக பண்பு களை அவன் எனக்கு எடுத்துரைத்தான்.நானோ அவனைச் சீண்டி வேடிக்கை பார்ப்பதில் ஈடுபட்டேன். வெறும் மண்ணிறம், போதாததற்கு மண்டைவேறு சாம்பல் நிறத்து வழுக்கை என்று சிரத்தையுடன் எனது வாதங்களை முன் வைத்தேன். நிராகரித்தான். தூரத்தே நின்ற மரத்தை ஒரு முறை அண்ணாந்து பார்த்துவிட்டு அப்படியெல்லாம் கூறக் கூடாது என்னும் பாணியில் "ச்சா. . . .நல்லது சார்' " என்றான் பதிலுக்கு. இந்தப் பதில் எனக்குப் பிடித்திருந்தது. சிட்டுக் குருவி பொறுத்து இவனது அன்பு வெறும் வெளிப்பூச்சு வண்ணங் களில் ஒட்டியிராமல் இப்படி சற்று ஆழமாய் வேர் விட்டிருப்பது எனக்கு நன்றாய்ப் பிடித்திருந்தது.
பின் சிட்டுக் குருவியை எப்படிப்பிடிப்பது என்பது குறித்தும் எனக்கு விவரித்தான்.
"அரிசி கொஞ்சம் விசிறி, சொளக கவுத்து, ஒரு குச்சியில கொஞ்சமா தூக்கி வச்சி, நூல இழுத்துவுட்றது." "கொத்துமா"
"கொத்தாது பேசாம நடுங்கும்" பின் தன் சின்னஞ்சிறிய கைகளில் ஒன்றை விரித்து நடு
144 / சிறுவன்

தீர்த்தக்கரைக் கதைகள்
விரலை நீட்டி, "இந்தா இந்த விரல்ல கால வச்சி எம்பி பறந்து போயிரும், சார்' என்றான்.
"அம்மா பாத்தா அடிக்க வருவாங்க. கைல இருக்க குருவிய புடுங்கி பறக்கவுட்ருவாங்க."
"கொன்னுருவியா"
"ச்சீச்சி. . . . கொல்லமாட்டம் சார் சிட்டுக்குருவியை யாரும் கொல்லுவாங்களா?'
தம்பிக்கு காட்ட சார். தம்பி பாத்தோன விட்ருவோம்"
இப்படித்தான் எங்கள் உறவு முதன் முதலாய் உருக் கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆண்டு ஒன்றுக்கு இவன் தந்தை இவனைச் சேர்க்க வந்தபோது தன் சிறுகரங்களால் இரண்டு, மூன்று வெற்றிலை இலைகளை மடித்து வைத்து என் காலில் விழுந்து எழுந்தான். எழும்பொழுது அவனது கண்களைப் பார்த்திருந்தேன். படிக்கக் கூடியவன்.
புத்தி சாதுரியம், ஆர்வம். சுறுசுறுப்பு, நேர்மை, சற்றே விஷமம் இவை எல்லாம் அந்த சூதுவாதற்ற ஆறு வயதுக் கண்களில் அன்றே மின் வெட்டின.
கவரப்பட்ட நான், ஏன் இப்படி இவன் மெலிந்து இருக் கின்றான் என்று எண்ணியபடியே, முசு முசு என்று கிடந்த அவன் தலைமயிர்க் கற்றைக்குள் விரல்களை நுழைத்து மெல்ல நெருடிய போதும் கூச்சப்படாமல் தலை குனிந்து அமைதியாக நின்றிருந்தான்.
எனது பாடசாலை குடியிருப்புக்கு நேர் முன்பாகவே இருந்த தொழிலாளரின் குடியிருப்புகளில் ஒன்றிலேயே இவன் : இருப்பிடமும் அமைந்திருந்த படியால் இவனது செயல்பாடு கள் ஏறக்குறைய முழுமையாக, அந்த நாள் தொடக்கம் என் கண்களில் வழமை தவறாமல் விழக்கூடியதாய் இருந்தது.
இவனது குடும்பம் சற்றே கஷ்டமானது. மொத்தம் ஆறு ' பேர், இவன் மூத்தவன். பெற்றோரின் உழைப்பில் நான்கு ' பிள்ளைகளைப் பராமரித்தாக வேண்டும்.அதிலும் சின்னஞ் சிறிசுகள்-கஷ்டந்தான். இருந்தும், நான் பார்க்கும் போதெல்லாம் சிட்டாய்த்துள்ளித் திரிந்தான். பொருட்கள் வாங்க தினமும் கடைக்கு பெரிய கூடை ஒன்றைத் தோளில் மாட்டிக் கொண்டு பெரிய மனிதன் கணக்காய் பாதையோர மாய் மெல்லச் செல்வது. . .மரக்கறித் தோட்டத்தில் சாண
ராமையா முருகவேள் I 145

Page 76
sisarutaadr
உரமிடுவது, பாத்தி பிடிப்பது, நீர் வார்ப்பது-பின்லயத்து வாண்டுகளின் கிட்டிக்கும் கோலிக்கும் தலைமை தாங்குவது -போதாததற்கு எந்நேரமும் வாய்க்குள் ஊசலாடும் பாட்டு வேறு, பின் இவனுக்கு சிட்டுக் குருவியைப் பிடித்த தில் என்ன தவறு.
பாடங்களிலும் இவன் சளைத்தவன் அல்ல. எனது சக, ஆசிரியர்களுக்கெல்லாம் நன்றாய்ப் பிடித்தவன். இவனது தூய்மை, மரியாதை செலுத்தும் பண்பு, விடயங்களைச் சீராகச் செய்யும் ஆர்வம் - அனைத்துமே அனைவரையும் இவன்பால் கவர்ந்திழுத்திருக்க வேண்டும்.
நான் உணர்ந்தேன். இந்தப் பண்புகள் அனைத்தும் கூடி வருவது என்பது எளிதான விடயமல்ல என்பதனை. இவன் ஓர் மனிதனாக உருவாகக் கூடியவன்.
ரகசியமாய் செயல்பட்டேன். அம்புலிமாமா, பாரதச் சுருக்கம், ராமாயணம், பாரதி பாடல்கள் என எனது செல்வாக்கு அவனில் விரிந்தது.
நாள் செல்லச் செல்ல வெள்ளைக்காரத் துரைமார் எங்கள் தந்தையரை அழைத்து வந்த விதம், வழிநடையில், காடு
களில் அவர்கள் வீழ்ந்திறந்து மடிந் தொழிந்த விதம், அவர் கள் பாதைகள் அமைத்த விதம், சுரங்கங்கள் தோண்டிய விதம்-மொத்தத்தில் இன்று அழகுற அமைந்து நாற்புறமும் விசிறிக் கிடக்கும் இந்தத் தேயிலை மலைகள் உருவாகி நிமிர்ந்த விதம்.
இவற்றையெல்லாம் இவனுக்கும் இவனது நண்பர்களுக்கும் நான் அவ்வப்போது எடுத்துக் கூறி வந்தபோது இந்த மண்ணுக்கே சொந்தமான அருமையான நாட்டார் பாடல் களையும் அவ்வப்போது இணைத்துத் தர நான் தவறவில்லை.
சில நாட்களிலேயே எல்லாப் பாடல்களுமே இவர்களுக்கு அத்துபடியாகி விட்டது. ரசத்துடன் பாடுவார்கள், பயல்கள். நான் கேட்டு மனதிற்குள் சுகமாக சிரிப்பேன்.
எனது செல்வங்கள் அல்லவா? எனது தேவதைகள் அல்லவா? பாடுங்களடா. வாய்விட்டுப் பாடுங்கள்.
C
இனி, பாருங்கள் அன்றொரு நாள் அப்படித்தான்.
எங்களுக்குள் நிகழும் கூத்துக்களை அறியாத என் நண்பன்
146 / சிறுவன்

தீர்த்தக்கரைக் கதைகள்
ஒருவன் நான் இல்லாத சமயத்தில் இங்கு வந்து நான் வரும்
வரை காலத்தை ஒட்ட இவனிடம் ‘கதை’ கொடுத்து பின் நான் வந்து சேர்ந்தபோது ஆச்சரியத்துடன் வினவினான்.
"யார் இவன்? -உனது உருவாக்கமோ", எனக்குப் புரிந்தது,
நிறைவான சந்தோஷத்துடன் புன்னகைத்தவாறே நண்பனைப் பார்த்தேன், பதில் கூறாமல்.
*"பாரதி பாடல்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான். உனது அக்கினிக் குஞ்சோ'
"எனது அக்கினிக் குஞ்சா? தெரியவில்லை ஒரு நாள் அப்படி உருவாகக் கூடும்' என்று மொழிந்து வைத் திருந்தேன் அன்று.
இனி, இன்று இவனைப் பற்றி இப்படி நான் கேள்விப் பட்டது உண்மையா?
நினைவிருக்கிறது. கடந்த டிசம்பர் விடுமுறையின் போது தனது ஆறாம் ஆண்டுக் கல்வியைத் தொடர விடுகைப் பத்திரம் எழுதிக் கொடுத்தபோது இறுதியாக அவன் என்னைப் பார்த்தது.
இவனைப் போலீஸில் கொண்டு சென்றிருந்தார்களா? ஏன்? எதற்காக? இவனுக்கும் இந்தத் தோட்டத்து வேலை நிறுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக இவனைக் கொண்டு செல்ல வேண்டும்.
சிறுவன் அவன். நம்பமாட்டீர்கள். நான் வளர்த்தவன். நான் வளர்த்தவன். எனது மாணவன். எனது அருமை யான மாணவன். அவனது சிரித்த விழிகள் கொண்ட பச்சிளம் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அம்முகத்தின் நினைவு சூழ, என் மனம் இறுக நாற்காலியில் இடிந்து போய் அமர்ந்து சிந்தனையில் ஆழத் தொடங்கினேன்.
என்ன செய்வது. எனது பாட சாலையில் ஆண்டு ஐந்து வரை பயிலவே வசதி.
ஆண்டு ஆறுக்காக இவர்கள் கிட்டத்தட்ட மூன்று மைல்
தொலைவுக்கு அப்ப்ால் அமைந்து கிடந்த 'உயர்" பாட சாலைக்குச் சென்றாக வேண்டும்.
ராமையா முருகவேள் 7 147

Page 77
கந்தலாலாவின்
"நல்லா படிக்கணும்"
“GBL ug”
பேசாமல் விழுந்து வணங்கி நமஸ்கரித்து எழுந்தான், என் மாணவன்.
"ச்சீச்சி. . . . . . இதெல்லாம் என்னாத்துக்குடா. நல்லாப்டி" என்று கூறியவாறு அவனைத் தொட்டுத் தூக்கி நிறுத்திய போது என் நெஞ்சம் வேண்டியது எல்லாம்:
"மனிதனாய் உருவாகு. மனிதனாய் நட, நீயாவது சிறுவனே, நீயாவது, என் மக்களின் செய்தியைச் சொல்
வாயா? என் மக்களின் நலனை உண்மையாய்க் கூறும்,
உண்மையான பதாகையை, நீயாவது, சிறுவனே, தடம்
புரளாமல் உயர்த்துவாயா?"
இவன் என் பள்ளியை விட்டகன்று பிறிதொரு பள்ளிக்குச்
சென்ற இதே காலக்கட்டத்தில் தான் தோட்டங்களின்
தனியார் மயமாக்கலின் அதிர்ச்சி தரும் கோர விளைவுகளை நான் நேரடியாகவே பார்க்கக் கூடியதாகவும் இருந்தது.
நனைந்த கோழிக் குஞ்சை இறுகப் பற்றிப்பிடிக்கும் கழுகின் கரங்களாய் தோட்டத்து மக்களை நோக்கி கம்பனிகளின் வெறிக்கரங்கள் நீண்டன.
வேலைச் சுமை இரட்டிப்பாக்கப்பட்டது. வேலை நாட்களோ குறைக்கப்பட்டன.
மிகக் குறைந்தநாட்களில் மிகக்கூடிய லாபத்தை ஈட்ட காய்ந்த மாடுகள் பயிரிடைச் சென்று விழுவது போல, கம்பெனிகள் அவசர அவசரமாய் தோட்டத்து மக்கள் மீது விழுந்து விழுந்து மேய முற்பட்டன.
தேயிலை அரைக்கும் உருளையில் வைத்துத் தோட்டத்து மக்கள் சக்கையாய் அரைக்கப்பட்டனர். என் கண் முன்னாலேயே திடகாத்திரமான உடல் கொண்டோரின் உடல்கள் எல்லாம் அதிகபட்சமான வேலைச் சுமையாலும்
148 / சிறுவன்

தீர்த்தக்கரைக் கதைகள்
அதற்கேற்ற உணவின்மையாலும் சீர்குலைந்து ஒடிசலாகிக் குறுகக்கண்டேன்.
பேய்மழையில், முகத்தில் கோபத்துடன் சீறி வீசியடிக்கும் பெரிய பெரிய மழைத்துளிகளைப் பொருட்படுத்தாமல் வழமை போல் பெண்கள் அணிவகுத்து மலைகளில் ஏறினா லும் இருபது கிலோவுக்கு மேல் கொழுந்தில்லாமல் மலையில் இருந்து இறங்க வேண்டாம் என நிர்வாகம் உத்தரவு இட்டது.
ஐந்து மணிவரை அவர்கள் அடித்த காற்றிலும் மழையிலும் சளைக்காமல் போராடினாலும் பதினைந்தைக்கூட அவர் களால் தாண்டுவது சிரமமாயிருந்தது. மழை ஒரு புறம், சுழற்றி அடிக்கும் வாடைக் காற்றில் கொழுந்துத்தளிர்கள் வெடித்து அரும்பாதது மறுபுறம். மாலை ஆறு மணிவரை உழைத்து அரை பெயருடன் பெண்கள் மலைகளில் இருந்து மெல்ல மெல்ல வரிசை வரிசையாய் கூடைச்சுமைகளுடன்
இறங்கினர்.
அவர்களின் முகங்கள் வாடி இறுகிக் கிடந்தன. காற்றோ பன் மடங்கு ஆவேசத்துடன் அவர்களின் களைத்த முகங் களில் வீசி வீசி அடித்தது.
தோட்ட நிகழ்வுகள் இப்படியாய் முனைப்புற இவனது அப்பாவைதோட்டங்களில் புதிதாகப்போடப்பட்டகிழங்குத் தோட்டத்திற்கு இரவுக்காவலனாகநியமித்தனர். அவனுக்கு ஒரு தடியும் கவ்வாத்து கத்தியுமே பாதுகாப்புக்காக வழங்கப்பட்டதாய்க் கூறினார்கள். கூடவே ஒரு டோர்ச் லைட்டையும் தந்தார்களாம். இவைதான் அவனது ஜீவன் காக்கும் கருவிகள். -
கிழங்குத் தோட்டமோ லயங்களில் இருந்து வெகு தூரத்தில் ஒர் பள்ளத்தில் அமைந்து, ஒரு ஏக்கர் அளவில் பரந்து கிடந்தது. அதன் நடுவில், அனாதரவான அவனது சின்னஞ் சிறு குடிசையும் அவனும்.
இரவு பத்து மணியானால் போதும் காட்டுப் பன்றிகள் இவனது தோழமைக்கு வந்து விடும். ஒரு பன்றி, அது எவ்வளவு பெரிதானாலும் தனித்து வந்தால் சமாளித்து விடும் திடகாத்திரம் இவனிடம் இருந்ததுதான். ஆனால் கூட்டமாக வருமாயின் இவனின் கதி வேறு விதமாக
ராமையா முருகவேள் / - 149

Page 78
நந்தலாலாவின்
முடியக்கூடும். இதை அறிந்தே தான், பாவம் முன்கூட்டியே துரையிடம் எடுத்துக்கூறி இருந்தான்; இன்னும் ஒரு காவலாளியை தன்னோடு நியமிக்கும்படி. தோட்டத்து நிர்வாகத்தார் அவ்வேண்டுகோளை நிராகரிக்க கணப் பொழுதேனும் சிரத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. இவனது தந்தை தன் சக தொழிலாளருடன் கதைப்பான். தன்விதி பொறுத்து அவர்கள் கூறுவார்கள்
*கிருஷ்ணா,கம்பனிக்கு ஜனாதிபதி கூட நாய்க்குட்டி மாதிரி நமக்கு லாபத்தில் பங்கு வாங்கித்தர்றேன்னு சொன்ன நம்ம தலைவர் இருக்கானே-அவன் பேச்செல்லாம் கூட அவனுக்கு நாய்க்குட்டி மாதிரி, ஒன் பேச்சையா கேக்கப் போறான். அட, விட்டுத் தள்ளு. கவனமா இரு. கெழங்கு கெடக்குது ஒரு பக்கம். நெலம மோசமாகினா மரத்துல ஏறிக்க . . . . .
D
ஒரு மாதம் சென்று விட்டது. அவ்வப்போது வந்த பன்றி களை வீராவேசத்துடன் விரட்டி அடித்தான் கிருஷ்ணன். இரவில் உறுமல் கேட்டவுடனேயே தயாராகி விடுவான். தகர டப்பாக்களை அடித்து ஒலி எழுப்பவும், கற்களை விட்டு வீசி எறியவும், பின் சத்தமிட்டு திட்டித் தீர்க்கவும். . . . . .
ஆனால் இவை வெறுமனே உலா வந்த பன்றிகள். கிழங்கு வைத்தபோது வந்த பன்றிகள் வேறு விதமாய் இருந்தன. கூட்டம் கூட்டமாக திடீரென இவன் எதிர்பாராத வகை யில் ஓர் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் தோட்டத் தைச் சுற்றி வளைத்தன. பின் "தொரைத்தனமாக, ஆறுதலாக தின்று தீர்க்க ஆரம்பித்தன.
இவன் சத்தமிட்டான்.""க்கூ. . . .ஏய். . . . ஒய் ஒய். . . . . . " கத்திப் பார்த்தான். . . . கற்களை வீசியெறிந்தான். அசைய வில்லை. தகரங்களைத் தட்டி இவன் ஒலி எழுப்பியும், சாவதானமாய் தின்று தீர்க்கும்வரை அவை அசையவில்லை. மூன்று மணி நேரம் அவை அவனை அலைக்கழித்தன. சிறு சிறு குன்றுகளைப் போல் இருட்டில் தென்பட்ட அவற்றின் அருகே செல்வதும், தடியால் அல்லது கத்தியால், அவற் றைத் தாக்குவதும் சாத்தியமான தல்லவே. . . . பெரு மூச்சைத் தவிர வேறெதுவும் அவனில் எழவில்லை.
விடிந்த போது பிரட்டி விசிறியடிக்கப்பட்டிருந்த தோட்டத் தைப் போலவே அவன் மனமும் சின்னா பின்னப்பட்டுக்
கிடந்தது.
150 சிறுவன்

தீர்த்தக்கரைக் கதைகள்
நிர்வாகம் அவனுக்கு முறைப்படி அறிவித்தது. கடமை தவறித்தூங்கியதால் ரூபாய் நான்காயிரத்து ஐநூறுநட்டம் ஏற்படுத்தியதாகவும் கட்டத் தவறும் பட்சத்தில் வேலை யிலிருந்து நீக்கப்படுவதாகவும். . . . . .
இவை அனைத்தும் நடந்தது எனது டிசம்பர் பாடசாலை விடுமுறைக் காலப்பகுதியில், பாடசாலை விடுமுறை முடிந்து நான், எனது பாடசாலைக் குடியிருப்புக்கு வந்து சேர்ந்த போது அவனது நண்பர்கள் ஊடாகத்தான் இவற்றை யெல்லாம் நான் அறிய நேரிட்டது.
அப்பனுக்கு வேலையில்லை. மகன் கடைச் சிப்பந்தியாக தொலைவில் இருந்த பூண்டுலோயா நகருக்கு அனுப்பப் பட்டு விட்டான். என் மனம் துவண்டு விட்டது. கடைச் சிப்பந்தியாக? வெறும் கடைச் சிப்பந்தியாக? கடைச் சிப்பந்தியாகும் இளம் சிறுவர்களின் நிலைமையை நான் அறிந்தே இருந்தேன். குசினியறைப் புகைக்குள், தட்டுக் களைக் கழுவவும், கூட்டவும், மேசை துடைக்கவும். . . பின்னர் அவர்களின் செழித்த நாட்கள் காய்ந்து வரண்டு முடிந்த கட்டத்தில், அவர்களும் ஒதுக்கிக் கூட்டி எத்தித் தள்ளப்படுவார்கள் வெளியே.-கை துடைக்கப்பட்ட கடதாசிகளைப் போன்று.
என் மனம் இறுகியது. என் இளைய நண்பனே! என் இளைய நண்பனே! இதற்காகவா உனக்குப் பாரதி பாடல்களைக் கற்றுத்தந்தேன்?
அவன் என் பார்வையில் இருந்து முற்றாக அகன்று மூன்று நான்கு மாதம் முடிந்திருந்தது. அதற்குள் இந்த தோட்டத் தில் என்ன என்னவோ நிகழ்ந்து, ஏதேதோவெல்லாம் உருவாகத் தொடங்கியிருந்தது. கம்பெனிகளின் அட்டகாசம் கட்டுக் கடங்காமல் போயிருந்தது. வழமை போல் தொழிற் சங்கங்களினால் தீர்க்க முடியாததைத் தொழிலாளர்கள், தமது தொழிற் சங்க பேதங்களை எல்லாம் மறந்து தானே தீர்க்க முன்வரும் சூழல் உருவாகி சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. மாத இறுதி என்ற படியால் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டபின் நடவடிக்கை யில் இறங்கத் தருணம் நிச்சயித்தார்கள் தொழிலாளர்கள்.
நிர்ணயிக்கப்பட்ட தினம்-பளிரென்று விடிந்திருந்தாலும் வழமைக்கு மாறான தொழிற்சாலையின் சத்தமற்ற
ராமையா முருகவேள் | 151

Page 79
கந்தலாலாவின்
அமைதி ஓர் இறுக்கத்தை, ஒர் விநோதமான நிசப்தத்தைத் தோட்டத்தினுள் ஏற்படுத்தியிருந்தது. தொழிலாளரது முகங்களில், ஓர் விடயத்தைச் செய்து முடிக்க எழுந்த தீர்க்கத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது.
காலை பத்துமணியிருக்கும். பறிக்கப்பட்ட கொழுந்து தொழிற்சாலைக்கு முன்பாக வெறும் வெளியில் கொட்டப் பட்டு குவியல் குவியலாய் சூரிய ஒளியில் தக தக என்று மின்னிக் கொண்டிருந்தது. பெண்கள் வரிசைக் கிரமமாக வந்து தமது கூடையைக் கவிழ்த்து தம்பாட்டிற் கொட்டிச் சென்றார்கள்.
உழைப்புக்குத் தகுந்த மரியாதை செலுத்தத் தெரிந்த, தேயிலைக்கும் சாமி வைத்து வணங்கும், வணங்கத் தக்க மக்கள் இவர்கள் என்பதை நான் அறிவேன். சம்பாஷணை யின் போது கூட, 'அந்த மலை பொன் கொழிக்கும்மலை' என்று தேயிலை அதிகமாக விளையும் மலைகளை அன்போடு விளிக்கும் மக்கள் இவர்கள்.
மேடுகளைக் கடந்து, பள்ளங்களைக் கடந்து, அடிக்கக் கூடிய பேய் மழையைக் கடந்து, ஒவ்வொரு தளிராக ஆயும் அந்த முரடு தட்டிப்போன விரல்களுக்கும் கரங்களுக்கும் மாத்திரம்தான் தெரியும் அவற்றின் அர்த்தம் என்பதையும் அறிவேன் நான்.
இன்றோ கொழுந்தை விசிறியடித்துக் கொட்டினார்கள்.
கொட்டும் பொழுது வெப்பம் மிகுந்த வார்த்தைகளையும் சேர்த்தே அவர்கள் கொட்டத் தவறவில்லை.
'இந்தா, அந்த தொர நாயிய வந்து அரைச்சு எடுத்துக்கச் சொல்லு"
"கம்பெனியாம் மயிராம். . . . இது ஒன்னுத்தான் ஒனக்குத் தூளு. . . . . . கொண்டு போயி பொட்டியில வச்சு அடைச்சுக்க சொல்லு . . . . . . "'
மனித உழைப்புடன் தனது சம்பந்தத்தை அறுத்துக் கொண்ட தொழிற்சாலையோ சப்தமே அற்று உம்மென்று நின்றிருந்தது.
அதற்கு முன்னால், அதற்கு நேரெதிரே இரண்டாள் உயரத்
152 / Ag Quár

தீர்த்தக்கரைக் கதைகள்
திற்கு குவிக்கப்பட்ட கொழுந்துக் குவியல்கள் சவால் விடுப்பது போல் அமைதியாகச் சிரித்துக்கொண்டு இருந்தன.
இருப்பினும் தொழிலாளர்கள் நினைத்தது போல் வேலை நிறுத்தம் இரண்டொரு நாளில்முடிந்ததாய்த் தெரிவில்லை. கம்பெனிக்குப் புரிந்தது-இங்கு விட்டுக் கொடுத்தால் எல்லாத் தோட்டங்களிலும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று. கம்பணிகளிடம் இருந்து "பங்கு பெற்றுத் தருவதாகக் கூறிய தொழிற் சங்கத்தின் பிரதிநிதி 'பேச்சுவார்த்தைக்காக" தோட்டத்தில் நுழைந்ததுமே தொழிலாளர்கள் பதறித் துடித்தனர். பதற்றம் கட்டுக் கடங்காமல் போன கணத்தில்;
‘நாயி. . . .எங்கடா வந்த நாயி. . . கம்பனி எடுத்தா என்னமோ வாழும்னியே. . . . எங்கடா வாழ்ந்தோம். . .'"
'ச்சீ. . . . அப்படி பேசாத ராமையா. . . . இவரா கம்பனிக்கு கொடுத்தாரு!"
‘'நீ சும்மா இரு . . . . நீசும்மா இரு . . . . இவனுங்க தலைவர் தானே சொன்னான் பங்கு தர்றதா? லாபம் தர்றதா. . . . "
'ஏய் . . . . ஏய் . . . . அடிக்காத, நீ இங்கிட்டு வா. . . இங்கிட்டு வா. . . . சொல்றேன் . . .'
"வுடு . . . . நீ. கைய வுடு'
"நீ மொதல்ல வுடு . . ...”*
தொழிலாளர்களே பிரதிநிதியை தொழிலாளர்களிடமிருந்து மீட்டனர். வழி அனுப்பி வைத்தனர். தவித்துப் போன பிரதிநிதி தட்டுத் தடுமாறி, தான் வந்த காருக்குள் சமாளித்து ஏறினார். அவர் எதிர்பார்த்திருக்க முடியாது தான் வெப்பம் இந்தளவு சூல் கொண்டிருக்கும் என்பதை.
ஆனால் அன்று இரவே சூல்கொண்ட வெப்பம் பரவி, விரவி குரங்குமலை டிவிசனிலிருந்து ஓர் இளைஞர் பட்டாளமாக துரை பங்களாவை நோக்கி இரவில் இறங்கியது. இரவு பத்து மணியளவில் துரையின் பங்களாவுக்குள் நுழைந்த இளைஞர் அணி அங்கு இருந்த அனைத்தையுமே துவம்சம்
W TROLO Luar pas (Bo är Il 153

Page 80
கந்தலாலாவின்
செய்தது. துரை இருக்கவில்லை. காவலாளியோ திசை தெரியாமல் பறந்துவிட்டான்.
பூச்சட்டிகள் நொறுக்கப்பட்டன. கண்ணாடிச் சாளரங்கள் சுக்கு நூறாக்கப்பட்டன. கதவுகள், திரைச் சேலைகள், மேசைகள், நாற்காலிகள், அனைத்தும் நொடிப்பொழுதில் தவிடு பொடி. துரை இல்லாதது கூட ஏதோ தொலைபேசி சச்சரவினால் என்று கூறப்பட்டது. துரை இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ ஏது நடந்திருக்குமோ என்று சில வயதானவர்கள் பேசிக் கொண்டனர். எனக்கோ இதுவெல் லாம் புதிதாக இருந்தது. இப்படிப் பட்ட வெப்பம் கொண்ட சூழலை நான் தரிசித்ததே இல்லை.
தனது உழைப்பின் அநியாயமான திருட்டுக்கு எதிராக எழுந் துள்ள இம்மக்கள் அணியின் இந்தச் சூறைக்காற்று சுபாவம் இக்கணத்தில் அனைத்தையும் அறைந்து நொறுக்கி சுக்கு நூறாய் ஆக்கும் அசுர வலுக் கொண்டதாய் உருவாகலாம் என்பதனை அன்றுதான் முதன் முதலாய் நான்நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது.
மறுநாள் காலை பத்து மணி இருக்கும். போலீஸ் ஜிப்புகள் தோட்டத்திற்குள் வரிசையாக நுழைந்தன.
''t T. அடித்தது. . . . யார் அடித்தது . . umff பார்த்தது?-விசாரணை-தெரியாது! . . . . "'
போலீசிற்கு நிலைமை புரிந்தது. வெப்பத்தின் தன்மையும் புரிந்தது. பேசாமல் தலைவர்களை அழைத்தனர். பயமுறுத்தினர். கெஞ்சினர். தோட்டத்தையே கைது செய்வோம். இது தேவையா? இது தேவையா? பத்துப் பேரை தாங்க போதும், நாங்களும் போயிருவோம்.
தலைவர்கள் கூடி, கதைத்து. தீர்மானித்து பத்துப்பேரை தந்தனர். . .
பயப்பட வேண்டாம் ஸ்டேசனுக்கு நாங்க வருவோம் மக்கள் வழியனுப்பி வைத்தனர் இளைஞர்களை.
போலீஸ் ஜீப்புக்கள் இளைஞர்களுடன் புறப்பட, வான் களை, பஸ்களை பிடிக்க பிரதான பாதையை நோக்கி வயதில் மூத்தவர்களும், தோட்டத்துத் தலைவர்களும்
இளைஞர்களும், சில பெண்களும் தோட்டத்திலிருந்து செங்குத்தாய்க் கீழிறங்கிய நெருகலான குறுக்குப் பாதை
- / சிறுவன்

தீர்த்தக்கரைக் கதைகள்
களில் தேயிலையைப் பிரித்து பிய்த்து நைத்துக் கொண்டு ஆளை முந்தி முந்தி விரைந்தனர்.
கிழமைகள் சென்று விட்டிருந்தன. மறுக்கப்பட்ட சில உரிமைகள் இப்போது மீண்டும் தளர்த்தப்பட்டு தோட்டம் ஓரளவு அமைதி பூண்டிருந்தது. ஆனால் இதற்குப் பின்னும் போலீஸ் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
இந்தப் போராட்டத்தின் பின்னால் ஓர் வெளித் தொடர்பு உண்டாம். இல்லையென்றால் துரைக்கு வரும் தொலை பேசி பயமுறுத்தல்கள், அவமதிப்புகள், கேவலமான பேச்சுக்கள்? அது யார்?
இரண்டு மூன்று தினங்களின் பின் அவனை, என் மாணவனை, என் இனிய தோழனை பொலிசார் துரையின் அலுவலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த செய்தியை அறிந்தேன், அவனது தந்தையோடு.
விடயங்கள் அப்போதுதான் தெளிவுபட்டது. இவன் இந்த சிறுவன், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து தனது மூத்த தோழன் ஒருவனின் உதவியோடு எப்படியோ தோட்டத்துத் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து துரையை அழைத்து தகாத வார்த்தைகளால் குறைந்தது நாளொன்றுக்கு இரண்டு தரம் திட்டித் தீர்த்திருக்கிறான்.
என்ன இது? கூடினால் இவனுக்கு பதின்மூன்று வயது இருக்கும். தோற்றத்தைப் பார்த்தால் அதைவிடக் குறைவு. ஒன்பது என மதிப்பிடலாம். நம்ப முடியாமலும் இருக் கிறது. ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இவன் செய்யக் கூடியவன்தான்.
கதையை விரிவாக விசாரித்த போது இவன் செய்திருக்க லாம் என்பது தெளிவாகியது. கடையில் இவன் போதிய சுதந்திரத்துடன் இருந்திருக்கிறான். வரும் தொலைபேசி அழைப்புக்கெல்லாம் இவன்தான் அடிக்கடி பதிலுரைக்கப் பணிக்கப்பட்டிருக்கிறான். மேலும் இரவில் இவனது முதலாளி கடையில் தங்காதது வேறு இவனுக்கு வசதியாகி விட்டது.
இரவு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் இவனது திட்டுதல் நாளும் ஆரம்பமாகி இருக்கிறது. துரையை அசத்தியிருக் கிறான். w
vratour poss Galdi / 55

Page 81
usb 5 Goraorsfesör
*" தொரையா கதைக்கிறது" . . . . தொரையா கதைக்கிறது? அடேய் தொர அடேய் தொர. . . .அடேய் . . ."
பொலிசார் அதிக சிரமப்பட்டுத்தான் அந்தக் கடையை முற்றுகை இட்டுள்ளனர். இவற்றையும் அலுவலகத்தில் நடந்த விபரங்களையும் தோட்டத்துத் தலைவர் என்னிடம் நுணுக்கமாய் விபரித்த போது நான் பேசாமல் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மிகச் சிறியவனாம். தயங்கவில்லையாம். தான் செய்ததாக ஏற்றுக் கொண்டானாம் சிறுவன். மன்னிப்புக் கேட்கக் சொன்னார்களாம். அவனை, துரையிடம். அவனுக்கு மன்னிப்பு கேட்கக் கூடத் தெரிய வில்லையாம். அதற்குள் அவனது தந்தை அவன் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டாராம். அதனால் விட்டு விட்டார்களாம். பையன் அமைதியுடன் அப்பாவுடன் சென்று விட்டானாம். அமைதியான பையனாம். வீட்டில் இருக்கிறானாம். படிக்கக் கூடியவனாம்.
என் உள்ளம் மீண்டும் வேதனையுள் அமிழ்ந்தது. அவனது பெரிய பச்சிளம் விழிகளும் பரந்த நெற்றியும் என் மனக் கண்ணில் எழுந்தன.
பெயர் தெரியாமல் வீழ்ந்திருக்கும் கானகத்து மலர்களைப் போல முகை வெடித்து மலைகளுக்குள்ளேயே புதையுண்ட மலர்கள் இங்கே அனந்தம். இம் மலர்களை அவற்றின் வேருக்கு அணி சூட்டும் வகையில் சமர்ப்பிக்க என்று ஒர் பாடல் இங்கு எழும் என்று என் இதயம் வினா தொடுத் தது. ஒளிபடைத்த கண்ணினை உடைய இவன். . . . .
சிறுவனே வேலையிழந்த உன் தந்தை குறித்து யோசித் தாயோ? உன் சின்னஞ்சிறு தம்பி தங்கைகள் குறித்து யோசித்தாயோ? இல்லையெனில் இழந்து போன உன் பாரதி பாடல்கள் கொண்ட நாட்களை நினைத்து யோசித் தாயோ? பெருமூச்செறிந்தேன், எவ்வளவு நாள் அவனைச் சந்தித்து. . . . .
இன்று மாலை அவனைச் சந்திப்பேன். அவனைத்தான்என் சிறுவனை. அவனுக்காக பிஸ்கட் வாங்கி வைக்க வேண்டும். வேறு என்ன வாங்கலாம்?
எனக்கு இப்போது நினைவுக்கு வந்தது ஓர் வரி.
156 / சிறுவன்

atšakasan Tås sansoddir
"மஞ்சள் மைனா தன் தோழர்களைத் தேடுகின்றது என்னும் ஒரு வரி.
வானத்தை என் கண்கள் அண்ணாந்து நோட்டமிட்டன.
1994
v T6BLOur qpgs03Aár / 157

Page 82
இலங்கை மலைப் பிரதேசச் சிறுகதைப் படைப்பாளி களின் "தீர்த்தக் கரைக் கதைகள்' என்னும் இந்நூல் குறித்த வாசகர்களின் எண் ண ங் கள் வரவேற்கப்படு
கின்றன.
கீழ்க்காணும் முக வ ரி க்கு எழுதலாம்:
Nandhalala அன்னம் 133-111 Dimbula Road 2. சிவன்கோயில் தெற்குத் தெரு HATTON சிவகங்கை-623560
SRILANKA Qisassur
Ar

அன்னம்-புதிய வெளியீடுகள்
பெண்மணம் -கி. ராஜநாராயணன்
அந்தமான் நாயக்கம் -கி. ராஜநாராயணன்
கூக்குரல் -இன்குலாப்
மூட்டம் -சு. சமுத்திரம்
வானம்பாடி -டி. குலசேகர்
அரேபியக் குதிரை -ஆ. மாதவன் கிருஷ்ணப் பருந்து -ஆ. மாதவன்
FÅSüd --கு. சின்னப்ப பாரதி
40-00
25-OO
30-00
22-00
25-00
25-OO
25-OO
40-00

Page 83
தமிழில் ஹைகூ -நெல்லை சு. முத்து
கம்பாகதி -வண்ண நிலவன்
மஞ்சுவெளி -சி. ஆர். ரவீந்திரன் காட்டுப் புறத்து நம்பிக்கைகள் -கழனியூரன்
காத்திருப்பு -ரவிசுப்பிரமணியம்
கண்
-அய்க்கண்
போக்கு -மேலூர் மாவேந்தன்
மருதுபாண்டிய மன்னர்கள் -மீ. மனோகரன்
அன்னம் (பி)விட்
40- OO
22-OO
4O-OO
18-OO
20-00
27-00
20-00
1 60-00
2, சிவன் கோயில் தெற்குத் தெரு
சிவகங்கை-623 560