கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்ப்புக்கள்

Page 1


Page 2

உயிர்ப்புகள்
(சிறுகதைகளும் மதிப்பீடும்)
வெளியீடு:
கலாசார கூட்டுறவுப் பெருமன்றல் கட்டைலுேகி கெல்லியடி. பல நோக்குக் கூட்டுறவுச்சங்கல்

Page 3
உயிர்ப்புகள் UYRPPUHAL
A Collection of Short Stories of Twelve Writers
& Review by Prof. K. SIVATHAMBY
Published by: KAEASARA KOODURAWU
PFRUMAN RAM KAD DAVELI- NELLIADY M. P. C. S. Ltd KARAVE DDY.
Printed by: “KALALAYA' - NELLIAOY
Cover Design by: THAVAM
First Edition: DECEMBER 1986
Price: Rs. 15/-
Copy Right: WOMEN COMMITTEE
KADDAIVELY NELLAIDY M. P. C. S. Ltd, KARAVEDOY.

உள்ளே. . . .
(உயிர்ப்புகளின் உயிரைத்தேடி) s
பக்கம்
உவப்பு ... 07
இதுவும் பிரசவம் ... 15 அகதிகள் ... 25
அதிர்வுகள் ... 30
பிறந்தமண் 35
உலகம் பரந்து கிடக்கிறது . 46
எங்கேதான் வாழ்ந்தாலும் ... 54
நாளையும் அடுப்பு எரியும் 60
, நாட்கள், கணங்கள். நமது வாழ்க்கைகள் . 70 அல்ஷேசன்கள் உள்ளே வரலாம் ... 84
தத்து 96
விடிவின் பாதைக்கு ... 107
மதிப்பீடு
116

Page 4
வாழ்த்துரை *உயிர்ப்புகள்’ சிறுகதைத்தொகுதி வெளியீட்டை உவந் தேற்றுக்கொள்ளும் கூட்டுறவுச்சங்கம் தனது உயிர்ப்பைப் பற்றியும் நினைவுகூருவது மிகவும் பொருத்தமானதாகும்.
இலங்கைக் கூட்டுறவு இயக்கம் உயிர்த்தெழுந்த ஞாயி ருக இன்று 75ஆவது ஆண்டு நிறை வைக் கொண்டாடுகிறது. அதன் வரலாற்றில் பல முன்னேற்றமான திருப்பங்கள் இடம் பெற்றுள்ளன. 1911 களில் ஐக்கியநாணய சங்கமாக முளை கொண்டது; 1940 இல் நுகர்ச்சிச் சங்கக்கடைகளாக விரி வடைந்தது; 1957 இல் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் களாக வளர்ச்சியடைந்தது; 1970 இல் அரசகட்டுப்பாட்டில் புனரமைக்கப்பட்டது; 1978 இல் திரும்பவும் சீரமைக்கப் பட்டு ஜனநாயகப்படுத்தப்பட்டது; இன்று மக்களின் அனைத் துச் சேவைகளையும் நிறைவு செய்யும் மக்கள் இயக்கமாக மிளிர்கிறது. ;
எமது சங்கம் இவ்வாண்டு ஆரம்பத்தில் டாக்டர் கனக' சுகுமாரின் ‘குடும்ப முதலுதவி’ என்னும் நூலை வெளியிட்டு கூட்டுறவின் வளர்ச்சியை உறுதி செய்து பெருமைப்படுத்தி யது மேலும் சமூக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு "கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம்’ அமைக்கப்பட்டுள் ளது. இம்மன்றம் மாத ந் தோறும் புத்தகக்கண்காட்சி, திரைப்பட விமர்சனம் மற்றும் பல்துறை ஆய்வுகள் எ ன் ப வற்றை ஒருங்கமைத்து கூட்டுறவுக்கு வலிவும், வனப்பும் வழங்கி வருகிறது.
இச்சங்கத்தின் தொழிற்பரப்பில் வாழும் எழுத்தாளர் களை ஊக்குவிக்கு முகமாகவும், கெளரவிக்கு முகமாகவும் "உயிர்ப்புகள்’ என்ற சிறுகதைத் தொகுதியை கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்ற வெளியிடுகிறது. இம்முன்னுேடி முயற்சிக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பொருளுதவியும், பேரா சிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டலும், பெரு மன்ற உறுப்பினர்களின் உழைப்பும் உறுதுணையாக அமைந் துள்ளன.
இம்முயற்சியில் ஈடுபாடுகொண்டு உழைத்தவர்களையும், உதவியவர்களையும், ஆதரவளித்த கூட்டுறவாளர்களையும் வாழ்த்தி, நன்றி கூறி நிறைவு காண்போமாக.
கரவெட்டி, த. சிதம்பரப்பிள்ளே தலைவர்
5-12-86. கட்டைவேலி நெல்லியடி ப, தோ, கூ. சங்கம்

வெளியீட்டுரை
கட்டைவேலி - நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச்சங் கத்தின் வெளியீடான ‘முதலுதவி’ நூலின் வெளியீட்டு விழா நெல்லியடி மத்தியமகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சங்கத்தின் உபதலைவர் செ. சதானந்தன் அவர்களும் நானும் (நெல்லை க. பேரன்) இப்பகுதி எழுத்தாளர்களை ஒன்று சேர்த்து இச்சங்கத்தின் ஒர் அங்கமாக, கலை இலக்கிய அமைப்பொன்றினை உருவாக் கினல் என்ன. என்று ஆலோசித்தோம். இந்தச் சிந்தனை யின் வெளிப்பாடாகவே, தெணியான், நெல்லை . பேரன், எஸ். வன்னியகுலம், குப்பிழான் ஐ. சண்மூகன், கருணை யோகன், த கலாமணி ஆகியோர் இணைந்து எமது வேண்டு கோளினைச் சங்கத் தலைவர் த. சிதம்பரப்பிள்ளை அவர்களி டம் எழுத்து மூலம் சமர்ப்பித்தோம். எமது வேண்டுகோளி னைத் தலைவரும் இயக்குனர்சபையும் பெருமனதுடன் ஏற் துக்கொண்டு, இச்சங்கத்தின் செயற்பாட்டு எல்லைக்குட் பட்டு கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கலாசார ‘கூட்டுறவுப் பெருமன்றம்’ என்னும் அமைப்பினை உருவாக்கினர்கள்.
தமிழ் இலக்கியப்பரப்பில் சமுதாய முன்னேற்றத்துக்கு உறுதுணையான இலக்கியங்களைப் படைப்பதே ஈழத்து இலக் கியக்கின் பொதுவான குளும்சமெனலாம். இந்தப் பொது நோக்கில் சற்றும் வழுவாது சமுதாயத்தை உயிர்ப்பிக்கும் இலக்கினே அடியாதாரமாகக் கொண்ட சிருஷ்டிகளே இத் தொகுப்பில் இடம்பெறுவதால், இத்தொகுதி "உயிர்ப்புகள் என்னும் பெயரினைத் தாங்கி வெளிவருகின்றது.
நூல் ஒன்றினை வெளியிடும் போது நூலாசிரியர் தனக்கு இணக்கமான ஒருவரிடம் அணிந்துரை ஒன்றினைப் பெற்று நூலின் முதற்பகுதியில் இடம்பெறச் செய்வதே பொதுவான மரபாக இருந்து வருகிறது. இத்தகைய அணிந்துரைகள் நூலே அழகு செய்வதற்கென்றே, பெரும்பாலும் பாராட் டுரைகளாக - புகழுரைகளாக அமைந்து விடுகின்றன. இவை களப் பற்றுக்கோடாகக் கொண்டு, அணிந்துரைகளை நடு நிலை விமரிசனம்? எனவும் படைப்பாளிகள் மயங்குகின்றனர். இந்நூலில் இடம் பெற்றுள்ள மதிப்பீடானது மேற்குறிப்

Page 5
பிட்ட போக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டதொன்ற கும். இத்தொகுதியில் இடம்பெறும் சிறுகதைகளை ஆதார மாகக் கொண்டு, தமிழ்ச் சிறுகதைகளின் பொதுவான மதிப் பீடாகவே இது அமைந்துள்ளது. இந்தச்சிறுகதைத் தொகுப் பினை மாதிரிக்காக உரைத்துப் பார்க்கும் விசேடமான ஒரு மதிப்பீடாக இது அமைந்துள்ளதால் பிரத்தியேகமாக இந் நூலின் இரண்டாம் பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. உண் மையில் இத்தொகுதிக்கென அணிந்துரை ஒன்றினைப்பெறு வதில் எமக்கு நாட்டம் இருக்கவில்லை.
நூல் வெளியிடுவதற்கு வசதியற்றிருக்கும் எழுத்தாளர் களுக்கு உற்சாகமூட்டும் வகையில் எமது சங்கம் இப்பகுதி எழுத்தாளர்களை ஊக்குவிக்க முன்வந்தமைக்காக அதன் தலைவருக்கும் இயக்குனர் சபையினருக்கும், கூட்டுறவாளர் களுக்கும் (சங்க உறுப்பினர்களுக்கும்) எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்ருேம். இத்தொகுதியில் இடம் பெறும் சில சிறுகதைகளை ஏற்கனவே பிரசுரித்த "மல்லிகை" "குங்குமம்” “வாணி" சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கும், இத் தொகுதியில் இடம்பெறும் படைப்பாளிகளுக்கும், மதிப்பீட் டினை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கும், அட்டைப் படத்தை அழகாக "ஒவ்செற்றில் அமைத்துத் தந்த ஓவியர் 'தவம், விஜயா அழுத்தகத்தார் ஆகியோ ருக்கும், மிகவும் சிறந்த முறையில் விரைவாக நூலை அச் சிட்டு உதவிய "கலாலய அச்சகத்தாருக்கும் எமது நன்றி உரியதாகும். எமது உறுப்பினர்கள் விமர்சனங்களை உள் வாங்கவும், இலக்கியத்துறையில் மேலும் வளரவும் ஆர்வங் கொண்டவர்கள். எனவே உங்கள் கருத்துக்களையும் எங்க ளுக்குத் தாருங்கள்.
நெல்லியடி நெல்லை க. பேரன் கரவெட்டி, அமைப்பாளர் 25-11-86. கலாசார கூட்டுறவுப் பெருமன்றம்

உவப்பு
'இவளுக்கென் ஞச்சு!
ஆகாயமும் இன்று இவளைப்போல. . அழகாக இல்லை எல்லாம் பொத்தல் பொத்தலாக . கருமையின் எழில்
வண்ணத்தை அலங்கோலப்படுத்துகிறது. இந்தப் பொத்த லில்லாத ஆகாயம்கூட இவள் மேனி அழகுக்குத் தோற்றுப் போகும்.
இவள் மேனி அழகு என்னைப் பைத்தியமாக்குகிறது. இந்த அழகு மேனியில் மோகவெறி கொண்டு இவள் பின்னே நான் பறந்து திரிந்த நாட்கள். இவள் கரிய நிறத்தில் நந்தலாலாவைக் கண்டு நான் உணர்ச்சிப் பரவசத்தில் உள் ாம் சிலிர்த்துப்போன காலங்கள். கழுத்தைச் சொடுக் கித் திருப்பி, கண்ணின் கருமணியைச் சுழற்றி வெட்டி வெட்டி மோகம் ததும்பு விழிகளால் இவள் போதை வெறி பூட்டிய சமயங்கள். தெத்தித் தெத்தி நடக்கும் இவள் தடையில் கிறங்கி என்னை தான் இழந்து தவியாய்த் தவித்த வேளைகள். இவள் சிறகடிப்பில் என் இதயம் ஒரு கணம் நின்று படபடத்துத் துடித்த அந்தக் கிளுகிளுப்புகள்.
எல்லாமே இவளுக்கு மறந்து போச்சா
எனக்கெப்படி உறக்கம் வரும் சுண்டுவில்லால் விசை யாகக் கூவி அடித்த கல்லொன்று மண்டையைத் தாக்கி
--سے 7 --سس۔

Page 6
தெணியான்
விண் விண் என்று கலக்கி விட்டதுபோல தலை சுழன்று கனக்கிறது.
இவளால் இவை எல்லாவற்றையும் ஒரு தடவை நினைத் துப் பாராமல் மெய்மறந்து உறங்கம் முடிகிறதே! இந்த உறக்கம் நிசமான துதான அல்லது . . ?
உறக்கத்திலும் மென்மையான தன் அலகுகளால் என் சிறகுகளை இதமாகக் கோதிக்கோதி, செல்லமாக மெல்லக் கொத்திக் கொடுத்து உறங்க வைத்தவள், இன்று தலையை மடக்கிக் கழுத்துக்குள் முகத்தைச் சரித்துக்கொண்டு கிடக் கிருள்.
அலகுகளைக் கூராக்க வேண்டுமென்ருெரு பொய்ச்சாட் டுச் சொல்லிக் கொண்டு என் அலகோடு தன் அலகை உரசி உரசி கருவிழிகள் சிவந்துவர, வெப்பமூச்செறிந்த வண்ணம் நெருங்கி வருகின்றவள், இன்று ஒதுங்கிக் கிடக் கிருள்
இவளுக்காகவே இந்தக் கூடற்பனைக்குள் உச்சார வட் டிலே கட்டினேன் அழகான ஒரு வட்டக்கூடு சுள்ளித் தடி கள் மென்மையான இவள் உடலை உறுத்தக்கூடாது என்டர் தற்காக எத்தனை வீடுகளுக்கு அலைந்தேன். தும்புத்தடிகளி லிருந்து தென்னந்தும்பைப் பிய்த்தெடுக்க எவ்வளவு போரா டினேன்! அந்தத் தும்புகளையும் பழைய துணிகளையும் சுமந்து வந்து, கூட்டினுள்ளே சொகுசான உள்ளணை தயாரித் தேன்.
அன்றிரவு, அந்த இதமான மெத்தையில் இருவரும் படுக்கச்சென்ற முதல்நாள். இவள் என்ன சொன்னுள்? "காதல் தான் பெரிதெனக்கு; சாலையில் எழுந்து கரை பவும் வேண்டாம்; வயிற்றுப்பாட்டுக்காகக் கறணம் போட் டுப் பறந்து திரியவும் வேண்டாம். கட்டியணைச்சுக் கொண்டு காலமெல்லாம் உறங்குவோம்’.
இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லிப் பிதற் றிக் கொண்டே கிடந்தாள். அந்த இரவு இவள் உறங்கவே இல்லை.
' * ------8-سس

உவப்பு
அந்த அவளா, இவள்?
நம்பவே முடியவில்லை!
இன்ருேடு இரண்டு இரவுகள், மழைகால விழிப்புப் போல எனக்கு, மழையின் அந்தக் கொடு கல் விழிப்பிலும் என்ன ஆனந்தம்! நெருக்கமான . மிகநெருக்கமான இவளின் கதகதப்பு. மழைவானத்து மை இருளை இவளின் மேரி வனப்போடு அப்போது ஒப்பிட்டுப் பார்ப்டேன். பூ.! வான மெங்கே? இவளின் செளந்தரிய வண்ணக் கோம்) பெங்கே1
எப்போதோ நான் குரலெடுத்துக் கரையவேண்டுமென்று தவித்துக் கொண்டு கிடக்கிறேன்.
சேவல் இன்னும் கன்முதற் குரலேக் கொடுக்கவில்ஃயே! அகல் பிறகு, அதன் இரண்டாவது குரலையும் கேட்ட பிற கல்லவா நான் குரல் எடுத்துப் பாடவேண்டும்!
கடந்த இரவு என்றும்போல நான் பாடவில்லை; ஆயம் பாடவில்லை; அழுதேன். என் பாட்டோடு சேர்ந்து தேன கப் பெருகும் இவள் இனியகுரல், என் சோகக்குரல் கேட்டுக் கூட வெளிவரவில்லை. எனக்குப் பெருத்த ஏமாற்றந்தான்.
இவள் இவ்வளவு பெரிய விஷமக்காரியா! நான் அப்படி என்னத்தைச் சொல்லிவிட்டேன். "இந்த மனிதரைப் போல எவனே ஒருவன் ரை பிள்ளை யைத் தன்ரை பிள்ளை எண்டு பெயர் பதியிறவனல்ல நான்" என்று தானே சொன்னேன்.
அதுக்கு இவள், ‘என்ன சொல்லுறியள்?’ என்று கேட் டாள், ஒன்றும் விளங்காதவள் போல.
இவன் நடிக்கிருள் என்று உணர்ந்து கொண்டே மீண் டும் சொன்னேன்
"நான் மானமுள்ளவன்?
"அப்ப. நான் தான் மானங்கெட்டவளோ?
سے 9 -۔

Page 7
®gogfuff (T
இவள் கேட்டுக்கொண்டு அதன்பிறகு மெளனமாக ஒதுங்கினவள்தான் .
என்னைக் கொல்லாமற் கொன்று கொண்டிருக்கிருள்.
நான் கேட்டதில் என்ன பிழை?
எனக்கும் ஒரு வருஷ காலமாக மனதில் இருந்து கொண் டிருக்கும் ஒரு நெருடல், மனம் பொறுக்காமல் பகிடிபோலச் சொல்லிவிட்டேன்.
சென்ற ஆண்டு போல இந்தத் தடவையும் நடந்து விடக்கூடாதென்று முன்னெச்சரிக்கையாகச் சொன்னேன். அவ்வளவு தான் .
கடந்த வருஷம் இவள் அடைகாக்க ஆரம்பித்ததும் நான் எவ்வளவு பெருமைப்பட்டேன். எனக்கும் ஒரு வாரிசு தோன்றப்போகிறது என்று மகிழ்ந்தேன் இவளுக்கு உவப் பான உணவுகள் எவை என்பதை அறிந்து, தேடி அலைந்து எத்தித் திருடி, எறி பட்டு, இடிபட்டு, இருஞ்சிக்கொண்டு பறந்து வந்து அடைகாத்துக் கொண்டு கூட்டுக்குள்ளே கிடந்த இவளுக்கு என் அன்பையும் குழைத்து ஊட்டினேன்
ஒரு நாள் .
ஒரு நடுப்பகல் வரை இவளுக்கு மிகவும் பிரியமான குஞ்செவி ஒன்றைத் தேடி அலைந்து கடைசியில் பூனையோடு சண்டை இட்டு அதை ஏமாற்றி விட்டு அலகினுல் தூக்கிக் கொண்டு இவளைத் தேடி ஓடி வந்தேன்.
அப்போது கூட்டில் இவளோடு நான் எதிர்பார்த்திருந்த என் வாரிசு.
எனக்கு மனதில் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இவள் தடுத்தும் கேட்காமல் அணைத்து முத்தமிட் டேன்.
என்ன நிறம் ஆகா .1 இப்படியுமொரு அழகுக் கரு மையா? இவள். சான் அழகுக் கறுப்பி தோற்றுப் போய்
- 10 -

உவப்பு
விடுவாள்; என்ருலும் இவளால்தான் இப்படி ஒரு பேரழ கைப் பெறமுடியும் என்று பெருமிதங்கொண்டேன்.
அப்பன் எனக்கு, அந்தப் பெருமை மனதில் பிறந்தது நியாயந்தானே!
பெண்ணுக்கும் தன்பிள்ளை பொன்பிள்ளை அல்லவா?
இந்தக் குதூகலிப்புகள் எல்லாம் ஒரு மாதகாலம்வரை தான்.
அதன் பிறகு ஒரு நாள்.
இவளுக்கு உவப்பான குஞ்செலி ஒன்றைப் பிடித்துக் கொண்டு இவளுக்கும் கொடுத்து என் வாரிசுக்கும் பக்குவ் மாக அருகிருந்து ஊட்டிவிட வேண்டும் என்று எண்ணி ஆவலுடன் பறந்து வந்தேன்.
இங்கே. என் கூட்டிலே என் வாரிசு, 'கூஉ. . 2 : » . ae a Anu. . . . . . . . " எனக் கொடூரமாகக் குரல் எழுப்புவது கண்டு நிகைத்தேன். கா. கா. கா- என்று காணுமிர்தமாக
இனிய குரல் எழுப்பவேண்டிய என் வாரிசுவா இது?
எனக்குச் சினம் பொங்கி எழுந்தது.
கொல்லும் பார்வையால் இவளை வெறித்தேன்.
இவள் தலைகுனிந்து ஒதுங்கிக் கொண்டாள்.
என் வாரிசு என்று பெருமைப்பட்ட அந்த "அதை என் அலகால் சினம் தீரும்வரை கொத்திக் கொத்தித் துரத் தினேன்.
அந்தத் தவறு திரும்பவும் நடந்தால். இவளை எப்ட நான் மன்னித்து, இவளோடு இனிமேலும் நான் வாழமுடி யும்? நானென்ன மானம் ரோசமில்லாத மனிதனு?
இது சொன்னதுக்காகவா இவள் என்னேப் பழிவாங்கி yoit !
سے 11 --س۔

Page 8
தெணியான்
காலை முதல் எத்தனை தடவைகள் இவளுக்குப் பிரிய மான உணவுகளைக் கொண்டு வந்து கொடுத்தேன்.
அப்பத்துண்டு,
ஒரு குழந்தையிடம் எத்தித் திருடினேன். "சீ . 1 சனி யன்’ என்று தாய் ஏசினள். எனக்கு நெஞ்சு பதைத்தது நான் திருடின குற்றத்துக்காக நான் வாகனமாகச் சுமக்கும் என் தேவனுன சனிஸ்வரனையா சந்திக்கிழுக்க வேணும்! இவளுக்காக அந்த அம்மாவையும் நான் மன்னித்தேன். இவளுக்கு அப்பத் துண்டைக் கொண்டு வந்து கொடுக்க வேணுமென்ற அவசரம் எனக்கு. இல்லையென்ருல் தலையில் ஒரு குட்டுக் குட்டிப்போட்டு வந்திருப்பேன்.
மத்தியானம் அந்த அம்மா பூவரசமிலையில் ஒரு கிள் ளுச் சோறும் கறியும் போட்டுக் கொண்டு வந்து கையிலே வைத்துக் கொண்டு நின்று, “கா. கா " என்று கூப்பிட் டாள் எனக்கு விளங்கிவிட்டது என்னுடைய தேவன் சனீஸ் வரனுக்கு ஆக்கிப் படைத்து, அதில் ஒரு பங்கை எனக்குத் தரக் கூப்பிடுகிருள் என்று.
ரோசம் என்னைத் தடுத்தது. என்ருலும் இவளை நினைத் துக் கொண்டேன்.
சரி, இதையாவது இவள் உண்பாள் என்ற நம்பிக்கை யில் அலகு நிறைய அள்ளிக் கொண்டு ஓடிவந்தேன்.
அதன் பிறகு கோழித்தலை ஒன்று. அதன் பிறகு ஆட்டெலும்பொன்று . குஞ்செலியாவது விரும்பித் தின்னுவாள் என்று நம்பி, பரதேசி நாயாக நான் அலைந்து, பொழுது மைம்மலுக்குள் விழும்போது, ஒரு குஞ்செலியைப் பிடித்துக்கொண்டு பறந்து வத்தேன். அதையும் தன் அலகினல் தூக்கிக் கூட்டுக்கு வெளியே எறிந்து விட்டாள்.
அது முதல் நானும் பட்டினிதான்.

உவப்பு
இதுவரை எந்தக்காலத்திலும் கிடைக்காத புதிய தீன் ஒன்றை இப்போது கொஞ்சக் காலமாக இவளோடு கலந் துண்டு மகிழ்ந்திருந்ததெல்லாம் இவள் மறந்து. இப்ப. என் வாரிசை இவள் அடைகாத்துக் கொண்டு எதை யும் தின்னுமற் கொள்ளாமல் பட்டினியாகக் கிடக்கிருள். நான் மட்டும் எப்படித் தின்னலாம்! .
சரி, சரி, இனிமேலும் இப்படியே காலம் கழிக்கேலாது இவள் மனதை அறியத்தான் வேனும் ஹ".ம்.
"என்னப்பா ... பேசாமல் கிடக்கிருய்
懿
‘என்ன . காது கேக்கயில்லையே!” 'தல்லாக் கேச் குது' "ஏன் ஒன்றையும் தின்னுருய் இல்லை! இப்படிக்கிடந்தால் என்னெண்டு பொரிச்ச கூட்டுக்காலை எழுப்பப்போருய்!"
'இதுக்குத்தான் பெத்தவள் இருக்க வேணுமெண்டு சொல்லுறது. இந்த நேரத்திலே தாவுக்கு இதம்பதமாக எல் லோ தின்னவேணும் இப்ப கண்டதையும் தின்னமனமில்லை’! அப்பம் படையற்சோறு, கோழித்தலை, ஆட்டெ-இம்பு, உனக்குப் பிடிப்பான குஞ்செலி - . எல்லாம் கொண்டு வந்து தந் தன் ஒண்டும் வேண்டாமெண்டிட்டாய். நீ கோவத் திலைதான் தின்னுமல் கிடக்கிருய் எண்டு நினைச்சேன்"
மனதிலே ஆத்திரந்தான், எண்டாலும் ஆரோடை கோவிக்கிறது ?
‘என்ன தீன் வேணும்? கெதியாகச் சொல்லு இரவும் பகலும் பட்டினி கிடக்கிருய்.”
உங்களுக்குத்தானே நல்லாத் தெரியும்! இப்ப கொஞ்ச க் காலமாக நாங்கள் என்ன சாப்பிடுகிறமெண்டு.”
‘என்ன . மனிஷ இறைச்சி? எனக்கெண்டால் சலிச் கப் போச் க. எவ்வளவெண்டு தின்னுகிறது!’
ہے۔ 13 سب

Page 9
தெணியான்
"எனக்குச் சலிக்கயில்லை. அதொரு தனி ருசி" ‘சரி, இப்ப கொண்டு வாறன்; இரு? "இப்ப எங்கே தேடப் போறியள்?
"அடி விசரி. மனிஷ இறைச்சிக்கும் இஞ்சை இப்ப பஞ்சமா! எங்கே போனுலும் குவிஞ்சு கிடக்குது. நீ ஏன் வீணுகப் பசிகிடக்கிருய். இரு, இப்ப வந்திடுகிறன், எது வேணும்.ஈரலோ, மூளையோ? கா.கா.கா.”
இந்த அகால வேளையிலும் இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு காகத்தின் ஒலி கேட்கிறது.
மல்லிகை - மார்ச் 1896 தெணியான்
அறிமுகம் வேண்டாத நாடறிந்த எழுத்தாளர் இவர். ஆக்க இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், அறிவுத்துறை சார்ந்த ஆய்வு களிலும் இன்று ஆர்வம் காட்டி வருகின்றர். கந்தையா நடேசன் என்பது இவரது இயற்பெயர். தெணியான், நிருத்தன், கூத்தன், க. ந. ஆகிய புனபெயர்களினூடு காத்திரமான சிருஷ்டிகளை உருவாக்கி வருகிறர் இவை தவிர்ந்த பல்வேறு புனபெயர்களில் ஒழிந்து கொண்டு இலக்கிய மதிப்பீடும் விமர்சனமும் செய்து வருகிறர் சிறு கதை, நாவல் கவிதை கடடுரை, வானுெலி நாட்கமென இவரது எழுத்துத்துறை பரந்துபட்டது.
சிறுபருவமுதல் மாக்ஸியக் கருத்துக்களே வரித்துக் கொண்ட இவரது படைப்புக்கள், சமூகத்தைக் கூர்மையாக விமர்சிக்கும் தன்மை கொண்டவை. இவர் எழுதிய ‘விடிவை நோக்கி" (நாவல் , வீரகேசரிப் பிரசுரமாக வெளியாகியது 'கழுகுகள்’ (நாவல்), "சொத்து' (சிறு கதைத் தொகுப்பு) ஆகியன தமிழ்நாட்டில் பிரசுரமானவை. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ். கிளேச்செயலாளராக இருந்த இவர், இன்று துணைத்தலைவர்களுள் ஒருவராக இருக்கின் றர். 1942-08-06 ஆம் திகதியன்று பிறந்த இவர் இன்று தேவரை யாளி இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிருர் பிறந் தகத்தின் பெயராலேயே இன்றும் இவர் அழைக்கப்படுகின்றர்.
முகவரி: தெணியகம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை,

இதுவும் பிரசவம்
சி. வன்னியகுலம்
உச்சந்தலையில் ஓங்கி அறைந்தது போலிருக்கிறது. தெற் ாறித்திட்டு விண்விண்னென்று வலியெடுத்து வெடித்துச் சிதறி விடும் போலிருக்கிறது. காற்ருேட்டமற்ற புகைக்கிடங்கில் கிடந்து தத்தளிப்பது போல மூச்சு முட்டுகிறது. நினைவுகள் தடுமாறி எண்ணங்கள் தத்தளிக்கின்றன. இப்படி ஓர் அவலம் ஏற்படுமென ஏற்கனவே தெரிந்திருந்தால் . .
"சுப்பையா அண்ணை, உங்களைத்தான் பப்பாசிக்காய் ஏனென்று கேட்டனன்? கனியிருப்பக் காய் கவர்வது மணி தன் சுயாதீனமாக இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.!
சுப்பையா வாத்தியார் இகலோக நினைவுகட்கு இப் பொழுது தான் இழுபடுகிறர். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனல் என்ன பதிலைச் சொல்வது என்று தான் அவருக்குப் புரியவில்லை.
இருமலை மென்று விழுங்குகிருர், வார்த்தைகளும் மெல் லப்பட்டு சுப்பையா வாத்தியாருடன் கண்ணுமூச்சி விளை யாடுகின்றன.
"மனிசிக்குப் பல்லுக்கொதி பிள்ளை, சின்னப்பு வைத் தியர் டப்பாசிக்காயிலை சேர்த்துப் பாவிக்கச் சொல்லி மருந் கொண்டு தந்தவர். அதுதான்.”
- 15 .

Page 10
சி. வன்னியகுலம்
** அப்ப தேவையானதை ஆய்ஞ்சு கொண்டு போங்கோ சுப்பையாண்ணை. நான் உதிலை கடைக்கொருக்காப் போயிட்டு வாறன்.”
அவள் போய்விட்டாள். சுப்பையா வாத்தியாருக்குப் போன உயிர் மீள்கிறது.
கையிலிருக்கும் தடியைக் கொண்டு தலைக்கு மேலாக வளர்ந்து நிற்கும் பப்பாசிக் கன்றுகளில் காயை இடுங்குகின் முர், பெண் பப்பாசிக்காயோடு ஆண் பப்பாசிக்காய்களும் இரண்டு விழுகின்றன. கண்கள் நாலா பக்கமும் வெறி கொண்டு சுழல எக்குக்குள் சொருகி வைத்திருந்த கடதாசிப் பையை எடுத்து நடுக்கத்துடன் விரித்துப் பப்பாசிக்காய்களை அதற்குள் போட்டுப் பொதிந்து மூடுகிருர்,
ஒரு கைங்கரியம் முடிந்துவிட்டது. இருந்தும் மனத்தின் அடித்தளத்தில் பதிந்துவிட்ட பயத்தின் ரேகைகள் வலுத் துக் கொண்டுதான் வருகின்றன. தடியைத் தூர வீசி எறிந்து விட்டு விசுக்விசுக்கென்று வீட்டை நோக்கி எட்டி மிதிக் கிருர்,
சுப்பையா என்று வெறுமனே பெயர் சொன்ஞல் ஒரு வருக்கும் அவரைத் தெரிவதில்லை. சுப்பையா வாத்தி அல்லது சுப்பைபாச் சட்டம்பி என்று சொன்னல் தான் எல்லோ ருக்கும் விளங்கும். தமிழ்ச் சட்டம்பியாக இருந்து வாழ்க் கையில் தடமடிக்க வேண்டுமென்று அவரது தலைவிதி, அப் படித்தான் இருந்தாலும் மனிதனைச் சும்மாயிருக்க விடு கினமே!
எப்படியும் வாழலாமென்று வாழ்க்கை நடத்துபவரல்ல சுப்பையா வாத்தியார். இப்படித்தான் வாழவேண்டுமென்று வழி வகுத்து நேரான பாதையில் நெறிதவருது நடப்பது தான் அவருடைய அடிமனதின் ஆதங்கம். பகல் வேளைகளில் கைமாறுக் கொட்டிலுக்குள் சாக்குக் கட்டிலில் படுத்திருக் கும்போது, கூரைக்கூடாக இலேசாகப் பாதை பிரித்து முகத் தில் சுளிரென வெயில் உறைக்கும் போது இவையெல்லாம்
- 16

@g៣៦ பிரசவம்
வெறும் விதண்டா வாதமாகத்தான் அவருக்குத் தெரியும். இந்தக் கெளரவத்திற்கு இழுக்குத் தேடித் தருவதற்காக எத்தனையோ சந்தர்ப்பங்களெல்லாம் வந்த போது, மன தைக் கல்லாக்கி வைராக்கியத்தோடு கண்களை இறுகமூடி இருந்துவிட்டார். ஆனல், நேர்மையாக வாழவேண்டுமென்று விண்ணுணம் கதைப்பதெல்லாம் விளல்த் தனமானது Ꮚ j Ꮫ5r பதை இப்பொழுதுதான் அனுபவ வாயிலாக அனுபவிக் கிருர் சுப்பையா வாத்தியார்.
வீட்டினுள் நுழையும்போது மனக்கிலேசம் உடலேயும் உள்ளத்தையும் கூனிக் குறுகச் செய்கிறது. கையிலே பின மாகக் கணக்கும் பப்பாசிக்காய்ப் பொட்டலத்தைக் கட்டி லில் போட்டுவிட்டு அதேவீச்சில் தானும் அமர்ந்து கொள் கிருரர். வாடிய கத்தரிக்கா யாகத் தேகமெங்கும் சுருக்கங்கள் விழுந்து கிடக்கிறது. கன்று போட்ட மாட்டின் இடிந்து போன கொட்டாக மூகத்தின் சதைப்பகுதி கொட்டுப்பட்டு மண்டை எலும்புகள் வெளித்தள்ளி முகம் விகாரமாகத் தோன்றுகிறது. உழைப்பை அவர் தின்ன, உழைப்பு அவரை மென்று விழுங்கிக் கொண்டிருப்பதன் சாயல் துலக்கமாக அவரில் தெரிகிறது.
நடந்து வந்த களை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. தேகமெல்லாம் பூட்டுப்பூட்டாக முறித்துப் போட்டதுபோசி வலியெடுக்கிறது. நாவு தண்ணீருக்காக ஏங்கித் தவித்து சுருண்டுபோய்க் கிடக்கிறது.
“சை. ஒரு செம்பு தண்ணியை மடக்குமடக்கெண்டு இப்ப குடிச்சால். பக்கத்தில் செம்பு இருப்பது கண்ணுக் குத் தட்டுப்படுகிறது. கட்டிலில் இருந்தபடி கால்களே நிலத் நிலூன்றி செம்பை எட்டியெடுத்து உள்ளே பார்வையைச் செலுத்துகிருர், சொட்டுத் தண்ணிகூட இல்லை. அலேச்சல், காகம், சோர்வு, ஏமாற்றம்! செம்பு தடாலெனக் கீழே விழுந்து உருள்கிறது. உண்டியில் உறைந்திருத்த கோபம் கண்மத்தம் கொண்டு சிரசிலேறி விறுவிறுத்துக் கொண்டி ருக்கிறது.
- 17

Page 11
சி வன்னியகுலம்
*இஞ்சருங்கோனை, அவள் பெட்டையெல்லே அன்ஞ காரமில்லாமல் அழுதழுது சீவனை மாய்க்கிருள். நீங்களெண் டாலும் அந்த அறுந்து போவனட்டைப் போப் என்னென் டாலும் கதைச்சுப் பாருங்கோவன்.”
பெண்ணுக்குரிய பேதமை, மனைவியென்ற உரிமை.
அவள் வினவுகிருள்.
புண்ணில் புளிப் பிடிக்கிறது.
*என்னனை, இண்டைக்குத்தான் கண்டறியாத யோசின் யெல்லாம். அப்பிடியென்ன சுவர் தலையிலே இடிஞ்சு விழுந்து போச்சே? உலகத்தில் நடக்காத ஒண்டை அவள் செய்து GLT L–rrGalt ?”
Luan T if ... . . . . Lartntry ... .. . LuGMT nrff....... !
அடித்த கை விறுவிறுக்கிறது. ஆத்திரமடங்கவில்லை. அவளது கூந்தலைப் கோலிப்பிடித்து கைகளில் சுருட்டிப் படலைக்கு வெளியால் கொறகொறவென இழுத்துச் சென்று தள்ளுகின்றர்.
'போடி வெளியாலை பறைநாயே! செய்யாததையுஞ் செய்து போட்டு என்னம்பொண்டில் நியாயமும் கதைக்க வந்திட்டியோ? அவகளுக்கென்ன வாயிலையும் வயித்திலையும் வாங்கி வைச்சிருப்பகள். ஆணுப் பிறந்தவனுக்கெல்லொ அவமானமும் ஆய்க்கினையும் ’
படலையை இழுத்து உட்புறமாகக் கொழுவிவிட்டு கட் லில் தொப்பென விழுகிருர். சிந்தனைகள் அவள் சொன்ன வார்த்தைகளை அசை போட்டு மேய்கின்றன.
* எண்டாலும் அவள் அப்படி சொல்லியிருக்கப்படாது. "அவளை வெளியாலை துரத்தினதும் நல்லதுதான். அவ ளுக்குத் தெரியும் மனிசனுக்குக் கோவம் வந்தால் இப்படித் தான் ஆளுக்கு மேலாலை சீறும், பிறகு அடங்கிப்போமெண்டு. தகப்பன் வீட்டைபோய் நிண்டிட்டு நாளைக்குக் காலமை
- 18

இதுவும் பிரசவம்
நான் அவளும் வருவாள். அதுக்கிடையிலை ஒரு தரும் இல் லாத நேரத்திலை காரியத்தைச் சுழுவா முடிச்சுப்போடலாம்”
கொஞ்சக் காலமாகத் தமக்கு ஒன்றன்மேலொன்முக வந்து குவியும் துன்பச் சுமைகளை யோசித்துப் பார்க்கிருர் சுப்பையா வாத்தியார், “எவ்வளவு துன்பம்? எவ்வளவு கரைச்சல்? உள்ளது ஒரு பெட்டைக்குஞ்சு. அதைக்கூட மானம் மரியாதையோடை ஒருதன்ரை கையிலை பிடிச்சுக் குடுக்க நாதியற்றுப்போய் நிக்கிறன். அந்த எளிய ராஸ்கல். விசுவலிங்கன் காலை வாரியிருக்காட்டில் நானேன் இப்பிடி நாயாய் அலையப்போகிறன்? கடத்தகால நிகழ்ச்சிகளே தினைக் கும்போது அடிவயிற்றில் வெறுப்பும் சினமும் குமட்டுகிறது.
விசுவலிங்கம் அவருடைய ஆசைத்தங்கையின் அருமைக் கணவன். எல்லா விஷயத்திலும் ஆள் நல்லவன்தான். காசு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கருமி. இந்த ஒரு சின்ன விஷயந்தான் விசுவலிங்கத்திற்கும் சுப்பையா வாத்தியாருக்கு மிடையில் பெருமலையாய் கோடுகிழித்து நிற்கிறது
‘விசுவலிங்கத்தின்ரை மூத்த பொடியனுக்கும் என்ரை பெட்டைக்குந்தானே சின்னனிலையிருந்து முடிச்சுப் போட்டுக் கொண்டு வந்தனங்கள். அவளும் அண்ணையின்ரை பிள்ளை யைத்தான் செய்யிறதெண்டு அடிச்சுச் சொல்லிக் கொண்டி ருந்தவன், பொடியன் இஞ்சினியரா வந்தாப்போலை, அவைக் கும் முருத்து மூத்திப் போச்சு. கண்மூக்குத் தெரியாமல் தேனம் கேட்க வெளிக்கிட்டிட்டினம். அவன் பொடியன் தான் பாவம். இவளைச் செய்ய அவனுக்கு நல்ல விருப்பம். வேள்வு எடுத்தாப்போலை ஒவ்வொரு பயணத்திற்கும் இவ ளட்டையும் வந்து கதைக்காமல் போகமாட்டான். நானும் மூடிமறைச்செண்டாலும் எழுத்தை முடிச்சுப் போட்டிருக்த வேணம். இப்படி நடக்குமெண்டு ஆர் கண்டது?
“வேள்வு எடுக்கேக்கிள்ளை சீதனம் பற்றி ஒண்டும் விசுவ லிங்கன் கதைக்கேல்லை. அடுத்த மாதம் கலியாண நாளை
நிச்சயிக்கிற போது தான் அவனுக்கு அந்த அறுந்துபோன
- 19 -

Page 12
சி. வன்னியகுலம்
குணமும் வந்தது. காசு முப்பதாயிரம் வைச்சால்தான் களி யாணம் எண்டு நிண்டு கொண்டான்."
‘நானும் ஒரு அழுங்குப் பிடியன் தான். ஒரேயடியாக சீதனம் தரமுடியாதெண்டு நிண்டிருக்கக்கூடாது. இரந்து கிரந்தெண்டாலும் பத்தாயிரத்தோடை விஷயத்தை முடி: சிருக்க வேணும்.”
"கலியாணப் பேச்சு இடையிலை முறிஞ்சு போச்சுத்தான் எண்டாலும் பொடியன் வீட்டுக்கு வாறதை நிறுத்தேல்லே இப்பிடித்தான் ஒருநாள் பொழுது சஈயேக்கிள் ஃா அவன் வீட்டை வந்திருந்தான். நான் அடிளேவிலே மாட்டுக்கு வைக்கோல் உதறிக் கொண்டிருக்க பெட்டையும் அவனு: வீட்டில் கதைத்துக் கொண்டிருந்தவை. ஆரோ கூத்தாட யன் அந்த நேரம் பார்த்து பொடியனுக்கும் பொட்டை கும் இரகசியமாகக் கலியானம் முடியப்போகுதெண்டு வி வலிங்கனுக்கும் காதைத் கடிச்சுப் போட்டாங்கள்.’
அவன் படலையை அறுத்துக் கொண்டு வீட்டுக்கை உ6 ளட்டுப் பெட்டையைத் தான் இழுத்துப் போட்டு அடி சான். பெத்த எனக்குப் பொறுக்க முடியுமே! நான் ஓடி போய் விசுவலிங்கன்ரை கழுத்திலை பிடிச்சு நெரிக்க, அதை பார்த்துச் சகிக்காமல் அவன்ரை பொடியன் என்ரை முக திலை ஒரு தட்டுத்தட்ட. s
பல் வரிசையைத் தடவிப் பார்த்துக் கொள்கிருர், முல் வரிசையில் இரண்டு பற்களுக்கான இடம் காலிப்படுத்த பட்டிருக்கிறது. (இதன் பின்னர் சிரிப்பதையே நிறுத்தி கொண்டு விட்டார் சுப்பையா வாத்தியார்.) மாமனுக்கு பல்லுடைச்சவனைத்தான் போய்க் காலைப் பிடிக்கச் சொல்? ருள் இவள்”
"ஐயா! பொழுது பட்டுப்போச்சு, தேத்தண்ணியை
குடியுங்கோவன்! பெட்டையைக் காணவில்லை குரல் மட்டு கேட்கிறது.

站
இதுவும் பிரசவம்
சுப்பையா வாத்தியாயர் சோம்பல் முறித்துக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நடக்ருர், ஆடுகாலில் தொங்கும் சிரட்டைக் குடுகையில் கிடக்கும் உமிக்கரியில் கொஞ்சம் கையிலெடுத்துப் பல் விளக்குகிருர், துலாக் கயிற்றைப் பிடித்து நாலு வாளி குளிர்ந்த தண்ணிரை இழுத்துத் தலை யில் கொட்டுகிருர், கையில் வீயூதியைக் குழைத்து முருகன் பட்டத்தின் முன் பக்தகோடியாக நின்று கொண்டு நெற்றி யில் திரிபுண்டரமாக வீயூதியை இழுக்கிருர், அனுபவம் முதிர முதிர வாழ்க்கைத் தத்துவங்களும், தார்ப்பரியங்களும் தெளி வடைவது போல நீர்ப்பிடிப்புக் காயக்காய நீறும் பால்
வண்ண ஜாலம் காட்டி மயக்குகிறது.
99
“முருகா! .. தேனீர்க் கிளாசை கையிலெடுத்து விளிம்பில் வாயை வைத்து உறிஞ்சுகின் ருர்.
“பெட்டை இப்ப அடுப்படிக்குள்ளே இரவுச் சாப்பாடு தேடிக் கொண்டிருப்பாள்?
சின்னப்பு வைத்தியர் சொல்லிக் கொடுத்த கிரந்தங் கள் யாவற்றையும் மனதில் நிரைப்படுத்திப் பாராயணம் செய்கிறர். சுறுசுறுப்பு உடலைச் சுற்றிப் பிடிக்கிறது.
பப்பாசிக் காய்களின் தோலை விறுவிறுவெனச் சீவுகிருர்.
காப்படியெல்லாமோ அது உருமாறிப் பாக்குத் திரணையள வில் சுப்பையா வாத்தியாரின் கைகளில் இப்பொழுது கிடக்
"ஐயா! சாப்பிட வாருங்கோவன்.”
கையில் செம்புடன் முன்னுல் நிற்கும் மகளை ஏறெடுத் துப் பார்க்கிருர், தாய்மையின் பூரிப்பு கன்னத்தின் சதைப்
பகுதிகளில் வெடிப்புக்காட்டிப் பூரணத்துவம் பெற்றுப் பொலிகிறது.
நெஞ்சிலே இடியின் பேரோசை
- 21 -

Page 13
GT வன்னியகுலம்
எழுந்து சென்று கையலம்பிவிட்டு அடுப்படியுள் நுை கிருர். கோப்பைச் சோற்றுள் கை பிசங்குப்படுகிறது. அை போடும் மாட்டிற்கு முன் இருக்கும் தீனி தேவையற்ற தான்! பேருக்குச் சாப்பிடுகிருர்,
"செம்பை முத்தத்திலே விட்டிட்டு வந்திட்டன். எடு
துக் கொண்டுவா பிள்ளை.? அவள் வெளியேறுகிருள். கை லிக்கும் பாக்குத் திரணை குழம்புச் சட்டியில் போட்டு கலக்கப்படுகிறது.
செம்பை வாங்கி அண்ணுக்காகப் கவிழ்க்கிருர், தண்ணி புரைக்கேறி அவதிப்பட, அவள் அவரது உச்சந் தலைை இதமாகத் தடவிக் கொடுக்கும்போது சுப்பையா வாத் யாருக்குக் கண்களில் நீர் சுரந்து கொடுக்கிறது. சால்வை தலைப்பினுல் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே கிருர்,
*நீ சாப்பிடன் பிள்ளை !??
மீண்டும் சிந்தனைகள் சேற்றெருமையாகின்றன.
“பெட்டையையும் காப்பற்ற வேணும் அதேநேர இரண்டமாளுக்குத் தெரியவுங்கூடாது சின்னப்புப் பரியா யிடம் கொண்டு போகாலாம்தான், பிறகு விஷயம் வெளி சுப்போயிடும். என்னவாயிருந்தாலும் கப்பையா வாத்தின் 6: பெட்டை தூங்கிச் செத்தாலெண்டு பெயர் வரட்டு ஆணுல் . . கரைகுட்டி போட்டாள் எண்ட பெயரை மட்டு நான் கேட்கமாட்டான். அதுக்குச் சரியான வழி. ''
"அன்னம்மாதான், அவள் இந்த விஷயத்திலை லைசென் பெருத மருத்துவச்சி!
'பிள்ளை நீ சாப்பிடணை, உனக்குத் துணைக்காக அ னம்மா மாமியை உதிலை போய்க் கூட்டிக்கொண்டு வாறன்
அன்னம்மா மாமிக்கு லைசென்சு இல்லைத்தான். இ( தாலும் எல்லா விஷயத்தையும் அவளுக்குச் சொல்கிரு
- 22

Mwm
க்
தந் γή
整_ இதுவும் பிரசவம்
சுப்பையா வாத்தியாயர். அவள் அவருக்குத் தைரியம் கூறு திருள்.
எங்கிருந்தோ இரண்டாஞ்சாமக் கோழி ஒன்று இறக் கைகளைப் படபடவென அடித்துக் கூவுகின்றது. ஆந்தை யொன்றின் அலறல் அந்தப் பிரதேசத்தையே அதிபயங்கர மாக்குகின்றது. விடிவும் விபரீதமும் விடிவில் விபரீதம்! விபரீதத்தில் முடிவு!
வீட்டிற்குள் முனகல் ஒலி இலேசாக எழுகிறது. சுப் பையா வாத்தியார் குளிர்காய்வதற்காக சுருட்டொன்றை வாயில் பொருத்தி அதற்கு நெருப்புத்தட்டி வைக் கிருர். முனகல் ஒலியின் வேகம் விரைகிறது. “அம்மா...' என்ற அலறல் ஒலி கேட்டுத் திகைக்கிருர், வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று செத்தையில் பாதை பிரித்து அதனூடாக நோட்டமிடுகிருர்,
குப்பிவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அருகில் ஏதோதோ பொருட்களெல்லாம் கிடக்கின்றன. அவள் சுப் பையா வாத்தியாரின் மகள் - ஒட்டுச் சுவர்களுக்குக் காலால் உதை கொடுத்து ஊன்றி, கைகள் இரண்டையும் பின்புற Drras flot-........ மீண்டும் மனதைத் திடப்படுத்தியவரா கப் பார்வையை உள்ளே செலுத்துகிருர்,
அன்னம்மா அவளை அணைத்துப் பிடித்தபடி அடிவயிற் றைத் தடவிக் கொடுக்கிருள். சேலை மறைக்கப்படவேண்டிய இடத்திலிருந்து விலக்கப்படுகிறது. சுப்பையா வாத்தியார் கண்களை மூடிக்கொண்டு விசும்புகிருர்.
மீண்டும் "அம்மா..” என்ற அலறல், மரண அமைதி
நிமிடங்களில் யுகங்கள் கரைகின்றன சுப்பையா மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடக்கிருர்,
"பொருளிலார்க்கு இவ்வுலக மில்லைத்தானே? சுழலும் Pada AbAS) do உண்மையும் குறைப்பிரசவமாக,
- 23 -

Page 14
சி வன்னியகுலம்
சுப்பையா அண்னை . 1” எழுந்து செல்கின்ருர், அன்னம்மா கொடுக்கும் சே3
பொட்டலத்தை தடுங்கும் கைகளால் வாங்குகிருர், க
களில் கண்ணிர் வெள்ளம் அணையுடைத்துப் பாய்கிறது.
குங்குமம், பொங்கல் மலர் - 18
சி. வன்னியாகுலம்
படைப்பிலக்கிய கர்த்தாவாக இலக்கியத்துறையில் பிரவே: செய்த இவர் இலக்கிய விமர்சனா, சமூகவியல், ஆய்வு ஆ வற்றில் பெருமளவு நாட்டங்கொண்டு வருகிருர். இவரது மு லாவது சிறுகதை 1968-06-15 தினபதியில் பிரசுரமான இதன் பின்னர் வன்னி வதிசியூர் வன்னியன் ஆகிய பு பெயர்களில் பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றர் 19704 ஆண்டு குன்றநாடு மாமன்றம் அகில இலங்கை ரீதியாக நட திய சிறுகதைப் போட்டியில் “இதுவும் பிரசவம்' என்ற இவ சிறுகதை முதற்பரிசு பெற்றது. ஈழநாடு நடாத்திய சிறுகை போட்டியொன்றில் இழந்த ஒளி என்ற சிறுகதை பாராட் பெற்றது. பல்வேறு புனபெயர்களில் மறைந்து கொண்டு இ கிய விமர்சனம் செய்து வருகின்றர்
எழுதுவினைஞராக இருந்து கொண்டே பட்டப்படிப்பை ே கொண்டார் 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழ நடாத்திய முதுகலைமாணி (எம் ஏ.) பரீட்சையில் சித்தியை தார் முதுகலைமாணிப் பட்ட்த்திற்காக இவர் எழுதிய ஈழத் புனைகதைகளிற் பேச்சுவழக்கு என்ற ஆய்வுக்கட்டுரையை மு தமிழ் வெளியீடடுக் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது 198 இந்தியாவிலே நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலகத் தமி ராய்ச்சி மாநாட்டில் 'ஆரம்பகாலத்து ஈழத்துத் தமிழ்க் க யங்கள்” என்று ஆய்வுக் கட்டுரையை வாசித்தார் இவ சமூகவியல் ஆய்வுக்கட்டுரையொன்று ‘தமிழர் திருமண ந முறைகள்’ நூலில் இடம் பெற்றுள்ளது. 1976-80ம் ஆன காலப்பகுதியில் இலங்கை வானுெலி நட்ாத்திய கலைக்கோ நிகழ்ச்சியில் இவரது ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனங்களு இடம்பெற்றன
பிறந்த திகதி; 15-9-1946 முகவரி: மணிமாளிகை, அல்வாய் தெற்கு, அல்வாய்.

wi
71
F5,
šį
P翘
பூம் ாத் ரது தப் (Біі லக்
கம்
அகதிகள்
கருணையோகன்
மழை ஒரு பாட்டம் பெய்து இப்போதுதான் ஒய்ந்தது போலிருக்கிறது! அதிகாலை தொடக்கம் பத்துமணி வரையும் கேட்டுக்கொண்டிருந்த ஷெல் அடிச்சத்தம் இப்போது கேட்க வில்லை. மனத்தில் சற்று நிம்மதி! சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றன் சிவராசா.
※ 家 §
சிவராசா, வள்ளுவர் சனசமூக நிலையச் செயலாளர். சில மாதங்களுக்கு முன்பு சனசமூக நிலையச் சார்பில் அவனும் சனசமூக நிலையத் தலைவர் கந்தையாவும் சேர்ந்து பல இடங் களுக்கும் சென்று அகதிகளுக்காக நிதி சேர்த்திருந்தனர். சேர்த்து முடித்துச் சரியாகக் கணக்கு வழக்குப் பார்ப்பதற் கிடையில் வந்திருந்த அகதிகள் திரும்பிச் சென்றுவிட்டனர் இன்னெரு தடவை அகதிகள் வந்து சேர்ந்தபோது கந்தையா *ாரில் இருக்கவில்லை. சேர்த்த நிதி இன்னமும் அவரிடமே இருந்து வருகிறது!
掌 率 掌 本
கந்தையாவின் வீட்டை நோக்கி, சிவராசா சைக்கிளில் சென்று கொண்டிருக்கிருன்.
வழியில் -
தட்டுமுட்டுச் சாமான்கள், ரிசுப்பைகள், அழுகை, புலம் பல், ஒப்பாரிகளுடன் பலர் வந்து கொண்டிருக்கிருர்கள்.
- 25 -

Page 15
கருணையோகன்
"இவர்களும் மணியகாரன் தோட்டப் பாடசாலைக் செல்கின்றனர் போலும் என்று சிவராசா எண்ணுகின்ரு
事
“கந்தையா அண்ணை, கந்தையா அண்ணை’ பலதடவைகள் கூப்பிட்டும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே ஏதேதோ ஆரவாரங்கள். பலத்த குரளி எவரோ கதைக்கின்ருர்கள்.
பின்புறப் படலையால் வீட்டுக்குள் செல்ல எண்ணி அ விடத்திற்குச் செல்கின்றன் சிவராசா.
படலைக்கருகில் உள்ளே ஒரு பெரியநாய் கட்டப்பட் ருப்பது தெரிகிறது.
ஆணுல், தனது சாப்பாட்டுக் கோப்பையுடனும், அதி எஞ்சியிருந்த எலும்புத் துண்டுகளுடனும் அது விளையா கொண்டிருப்பதால் இவனைக் கவனிக்கவில்லைப் போலும்,
சிவராசா விருந்தையை நோக்கிச் செல்கின்றன். அங்கே ரீ. வி. யில் ஒரு படம் ஒடிக்கொண்டிருக்கிற அப்போது ஏதோ ஒரு நடனக்காட்சி நிகழ்ந்து கொண் ருப்பதாகத் தெரிகிறது.
“ஒகோ. அதுதான் கந்தையா அண்ணைக்கு நான் : பிட்டது காதிலை விழவில்லையோ?” என்று எண்ணியவ சிவராசா அவரைக் கூப்பிடுகின்ருன்.
மீண்டும் உரத்துக் கூப்பிடுகின்றன். பிரயோசனமில்லை. அருகில் சென்று மெதுவாகத் தட்டுகின்ருள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிருர் கந்தையா! *ஆர். ஆர். என்ன வேணும்?” சிலவிநாடிகளின் பின்புதான் சிவராசாவை இனங்கள் கொண்டவர், “ஏன். என்ன விஷயம்.? என்கிருர்.
*அண்ணை இப்ப ஒருக்கால் மணியாறந் தோட்டப் ளிக் கூடத்திற்குப் போட்டு வருவமே?”
--سے 26 سے

கூப்
Vዐ፱
ATG9
அகதிகள்
‘என்ன இப்பவோ?.ஏன் என்னத்துக்கு, சிவராசா? 'இண்டைக்கு காலமை நடந்த பிரச்சினைகளாலே.” "ஏன். அங்கை என்ன நடந்தது? ஆமி வந்திட்டாங் களே?. இப்பதானே ஆமி வெளியாலே வாறதில்லையே." “பொலிகண்டியியிலை விடியப்பறம் தொடக்கம் ஷெல் அடியாம். பாவம். நடக்க ஏலாத வயசுபோன மனுச னெண்டும் செத்துப் போச்சாம் .”
'அட . காலமை முழுசும் ஷெல் அடிச்சு ஆக ஒராளே செத்தது. உன்ரை கதையைப் பாத்தா கனபேர் செத்த மாதிரியெல்லை இருக்கு. சரி, சரி. சொல்லு"
*காலமை ஹெலியும் வந்து சுட்டதாம் கனசனங்கள் ஊரை விட்டுக் கிளம்பி.”
வழக்கமாய் நடக்கிறதுதானே, அதுக்கென்ன இப்ப?" 'இல்லை; இதுவரை வராதளவுக்கு கனசனங்கள் மணி யாறந் தோட்டத்துப் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கினம் போலை கிடக்கு . அவைக்கு ஏதாவது உதவி செய்யலா மெண்டுதான்.?
கந்தையா யோசிக்கிருர், வீடியோகசற்ரை இண்டைக்கு மத்தியானத்துக்கிடையிலை குடுக்க வேணும். சரி, அதுதான் போகுதெண்டா. புதுவீட்டுக்கு நிலையம் பாக்க கந்தப்புச் சாத்திரியாரும் இப்பதான் வாறனெண்டவர். எண்ணண்டு போறது? --
தான் வரமுடியாது என்று சிவராசாவுக்குக் கூற வாயெ டுத்தவர் -
விரைவில் நடக்கவிருக்கும் சனசமூக நிலையப் பொதுக் கூட்டத்தை நினைத்தும் இரண்டொரு தினங்களில் நடக்கும் இணக்கசபைத் தெரிவுக் கூட்டத்தை மனங்கொண்டும்.
ام
இருவரும் மணியகாரன் தோட்டப் பாடசாலையை விடைந்துவிட்டனர்.
- 27

Page 16
கருனேயோகன்
garrar பாடசாலைக்குள் சென்று அங்கு வந்திருப்பு வர்களுடன் கதைத்து பல விபரங்களை அறிந்து கொள்கின் ரூன்.
பாடசாலைக்குள் ஏறத்தாழ இருநூறுபேர் வரை தங்கி யிருக்கிருர்கள் - அவர்களில் பலர் பொலிகண்டியிலிருந்து வந்தவர்கள் 8 s s & 8
கந்தையாவும் அவர்களுடன் பேசுகின் ருர்,
家 事
இருவரும் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண் டிருக்கின்றனர்.
முன்பு சேர்த்த நிதியை இம்முறையாவது கொடுத்து விடவேண்டுமென்ற எண்ணம் சிவராசாவுக்கு. அவர்களின் நிலைபற்றி, தான் அறிந்தவற்றை விரிவாகக் கூறிக்கொண்டு வருகிருன்.
கந்தையாவின் வீடு அண்மிக்கிறது.
தேற்றடியில் இறங்கி நின்று கொண்டு கந்தையா கூறு இன்ருர்: 'சிவராசா, அந்தக் காசை இவங்களுக்கு இப்ப குடுத்து வீனக்க வேண்டாம்.”
என்ன அண்ணை சொல்லுறியள்?"
இவங்கள் ஆரெண்டு. எந்த ஊரெண்டு . er Grauw தொழில் செய்யிறவங்களெண்டு உனக்குத் தெரியாட்டியும் எனக்குத் தெரியும். நல்லாய்த் தெரியும். இந்த எளிய சாதியளுக்கு, இவங்கடை ஆக்கள் - அதுதான் இங்க இருக் கினமே, அண்ணுசிலையடியார். அவை, தாங்கள் சேர்த்துக் குடுக்கட்டும்
கந்தையா தொடர்ந்து கூறிமுடிப்பதற்கிடையில் -
தொலைதூரத்தில் ஏதோ பலத்த சத்தம் கேட்கிறது.
சில மணித்தியாலங்கள் ஒய்ந்திருந்த ஷெல் அடித்தாக் குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கின்றனவோ?
- 28 -

அகதிகள்
கந்தையா வெவெலத்துவிட்டார்!
வீட்டிற்குள் போய்விடவேண்டுமே என்றதுடிப்பு அவரை ஆட்கொண்டது! என்ருலும், பதுங்குகுழி வெட்டி முடித்த *மயால் ஒருவித நிப்மதி உள்ளே போவதற்கு காலடி எடுத்து வைத்தவர், சனசமூக நிலையத் தலைவர் தெரிவு இணக்கசபைத் தெரிவு என்பவற்றை நினைத்துக் கொண்டு திரும்பிவந்து, ருேட்டில் நிற்கும் சிவராசாவுக்கு மெதுவாகக் கூறுகின்ருர்:
"எங்கடை ஆக்கள் வாறபோது குடுப்பம் . தாராள மாய் குடுப்பம் . வேணுமெண்டால் இன்னும் சிேத்தும் குடுப்பம்”
ஷெல் அடிகள் மறுபடியும் கேட்கத் தொடங்கிவிட்டன.
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றன!
2s, 1986
கருணையோகன்
செல்லேயா யோகராசா என்பது இவரது இயற்பெயர். கருணை யோகன் என்ற புனபெயரே இன்று இவருக்கு நிலத்து விட் டது. இவரது முதலாவது ஆக்கம் 1969ம் ஆண்டு ஈழநாடு பத் திரிகையில் பிரசுரமானது. விமர்சனம், கவிதை சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் இவர் ஆர்வங்காட்டி வருகின்றர். இவரது ஆய்வுக் கட்டுரையான வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம்” பிரசுரமாக வெளிவந் துள்ளது. சிந்தாமணி, சிரித்திரன், ஈழநாடு போன்ற பத்திரிகை கள் நட்ாத்திய கவிதைப் போட்டிகளிலே இவர் பல பரிசில்களைப் பெற்றிருக்கின்ருர்,
கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகக் கட்மையாற்றும் இவர் தமிழ் சிறப்புப் பட்ட்தாரியாவார் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி எம். ஏ ) பட்டம் பெறுவதற்காக ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றர். சங்க இலக்கியத்திலே மிகுந்த பற்றும், நவீன இலக்கியத் துறை களிலே சிறந்த தேர்ச்சியும் கொண்டவர். இவர் ஈழத்தில் வளர்ந்து வரும் சிறந்த விமரிசகராக கணிக்கப்படுகின்றர். பிறந்த திகதி: 17-12-1949 முகவரி: பாரதி அகம், கரணவாய் தெற்கு, கரவெட்டி,

Page 17
அதிர்வுகள்
கண. மகேஸ்வரன்
தோப்பில் வாழ்கின்ற அந்தச் சில குடும்பங்களிலேயே இருளணின் குடிசைதான் மிகவும் சிறியது.
சிறிசுகள் நிறைந்து வாழ்வதும் அங்கேதான். வயோதி பக் களைகளும் அங்குதான் அதிகம்.
எப்படியோ அந்தச் சின்னஞ்சிறு குடிசைக்குள் நீட்டி திமிர்ந்தும், கூனிக் குறுகியும் அவர்களுக்குப் பொழுது போய்த்தான் வந்தது.
தினக்கூலிகளாய் அவர்களில் சிலர் ஆங்காங்கு சிறு வேலைகளால் சம்பாதிப்பதை விட, அவ்வப்போது நிகழும் மரணச்சடங்குகளால்தான் அந்தக் குடும்பம் கொஞ்சம் வயிறரச் சாப்பிடும் மற்றநாட்களில் 'தாகசாந்தியிலேயே பொழுது கழியும் போகமும் கழியும்
இருளன் எத்தனையோ மரண வீடுகளைச் சந்தித்திருக் கிருன், செத்தார் பிரிவைச் சுமக்க முடியாமல் தேம்பி அழு வாரைத் தேற்றியுமிருக்கிருன். தேற்றவே முடியாத நிலையில் தானும் ஒரு நாள் அழுதே தீரவேண்டுமென்ற நிதர்சன மான உண்மை, இந்த நாற்பத்தாறு வருடங்களில் இன்று தான் அவனுக்கு அனுபவிக்கக் கிடைத்திருக்கிறது.
வாசலில் புதிதாக முளைத்த அந்தச் சிறு பந்தலின் ஒரு மரக்காலுடன் சாய்ந்திருந்த இருளனுக்கு, அதற்குமேல் இருப்புக் கொள்ள முடியவில்லை. அவனது கட்டுப்பாட்டை
-30

அதிர்வுகள்
யும் மீறி கண்கள் பெரிதாக அழுது வடிந்தன, சாம்பிய மனத்தின் வெம்மை, வீச்சாக வந்து விம்மலாய் வெடித்த தில் கேவிக்கேவி அழுகை வந்தது.
இன்றைக்குக் காலையில்தான் அவன் இளையமகன் சொல் லாமல் கொள்ளாமல் ஒரேயடியாக மண்டையைப் போட்டு விட்டான்.
பஞ்சத்தின் வடுவில், அவன் மண்டையைப் போட்டதில் கூட இவனுக்குக் கவலையில்லை. ஏழில் ஒன்று டோனல் என்ன, குடியா முழுகப் போகிறது?
*சிவனே’ என்று விதியை தொந்து கொண்டு அதற்காக அவனல் சிறிது தேரம்தான் அழமுடிந்தது.
அதற்கப்பால் இவ்வளவு நேரமும் குடிசைக்குள் குந்தி யிருக்கும் இவனது மூதாதைக்கிழம் மூன்றும்தான் இவனது மனைவின்யயும், இன்னும் கொஞ்சம் நெருங்கிய உறவினர் என்ற பேரில் இருக்கின்ற சிலரையும் இழுத்திழுத்து நெஞ் சில் பெரிதாக அடித்துக் க்ொண்டு ஒப்பாரி வைக்கின்றன. இவர்கள் ஏன் இத்தக் குழந்தை போனதின் பின் இனி வாழ் வேயில்லை என்ற மாதிரி பெரிய காட்டுக் கூச்சல் போடு கின்றனர் என்று ஒரு கணம் இவனுக்கு எரிச்சலாவும் இருந் தது. அவனுக்கு மட்டும் பெற்ற பாசம் இல்லாமலா இருக் கிறது. அதற்காக அதையே நினைத்துக் கொண்டு சதா புலம்பி அழ அவனல் ஏனுே முடியவில்லை.
இப்பொழுது அவன் புதிதாகத் தேம்பி அழுவதற்கு இவையெல்லாம் பெருங்காரணமல்லி
சற்றைக்கு முன் அவன் செவியில் மூத்த மகன் சொன்ன வாசகம்தான் அவனது அடிமனதைக் கிளறி, வெம்மையை உண்டுபடுத்தியிருக்கிறது.
நாளும் பொழுதும் குடி அடிமைகளாய் இவன் மனைவி யும் சில சிறிசுகளுமாய், மூத்த தம்பி உடையார் காலால் இட்ட ஏவல்களையெல்லாம் தலையால் செய்து முடித்து, கஞ்சியோ, தவிடோ, பழசோ எதுவானலும் தட்டாமல்
- 31

Page 18
கண. மகேஸ்வரன்
வாங்கியுண்டு பொழுதைக் கழித்த வேளைகளை எண்ணி எண்ணி அந்த மனிசன் சர்வவல்லமையோடும் கடவுள் கடாட்சத்தால் நீடுவாழவேண்டுமென்று நித்தமும் மனதில் வேண்டிப் பிரார்த்தித்த குற்றத்திற்காகவே பெரிதாக அழ வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது.
அட, பாவி மணிசா! உன்ரை இன சனத்தின் சடங்கு களுக்கெல்லாம், ஏதோ என் வீட்டுக் காரியம் போல் நின்று வேர்க்க விறுவிறுக்கப் பறையடித்துப் கெளரவிப்பேனே. என்க்னத் துக்கம் விசாரிக்க வரவேண்டாம். என் வீட்டுச் சடங்கிற்கு - என் குலத்தொழிலாகிய பறையடித்தலையே செய்யக் கூடாதென்று கட்டளையிட நீயாரடா எனக்கு? என்று கேட்டு, ஆவேசமாக கத்தி, அவன் குரல்வளையை நெரித்துக் கொல்ல வேண்டும் போன்றதொரு வெறி இருள னின் மனத்தில் பெரிதாக ஓங்கி ஒரு கணம் வளர்ந்தது. மறுகணமே இதெல்லாம் சாத்தியப்படாதென்பது போல புகை மூட்டமாய்க் கலைந்து சிதைந்தது. அந்தச் சிதைவின் வெளிப்பாடாய்த்தான் அவனுக்குக் கண்ணிர் பொங்கி வழி கிறது. விம்மல் விசும்பலாய்த் தேம்பும் பெருந்துயரால் கேவு கிறது.
இன்னுெரு சமயமென்ருல் சாராயத்தை உள்ளே தள்ளி விட்டு ‘குப்'பென்று நாறும் வாயைத் திறந்து நாலுவார்த்தை அசிங்கமாய்ப் பேசித் திட்டியிருப்பான்.
மகனை இழந்த சோகத்தில் மனது கல்லாக, மதுவாடை படாத துப்பரவான வாயில் ஏனே அந்த அசிங்கமான வார்த்தைகள் புரள மறுக்கின்றன.
பறைய வீட்டில் பறையே அடிக்கக் கூடாதென்று யார் மூலமோ கட்டளையனுப்பியிருக்கிருண். போகட்டும், தான் algt(36)/6öTLntıb...... கூடமாட வேலை செய்த குடிமக்களை யுமா வந்து கலந்து கொள்ள விடாமல் தடுக்க வேண்டும்?
இவனது மகன் சொன்னன். “எனே அப்பு, மூத்தாம்பி உடையார் எங்கடை தம்பி யின்ரை செத்த வீட்டுக்குப் பறையடிக்க வேண்டாமாம்
i 32 -

அதிர்வுகள்
காதும் காதும் வைச்சமாதிரி உடனை காரியத்தை முடிக்கட்டு மாம். சிலவுக்கெண்டு நூறு ரூபா குடுத்தனுப்புகிருராம். மகன் சொன்ன வார்த்தைகளை வாயைப் பிளந்து கொண்டு இருளன் மெளனமாகச் செவிமடுத்தான்.
என்ன செய்வதென்று புரியாத குழப்பத்தில் அவன் மனது கொஞ்சநேரம் கல்லாய்ச் சமைந்திகுந்தது.
மகன் தொடர்ந்தான். *உன்னேடை சேர்த்து தொழிலுக்குப் போற இடங்க ளிலை ஒத்தாசையாயிருந்து கதைச்சுத் திரியிற அம்பட்டன யும் வாற வழியிலே வழிமறிச்சு திருப்பிப் போட்டாராம்.
மகன் மாண்டு போனதைவிட, மகனின் இறுதிக்கிரியை சளைக்கூட சரியாய் ஒப்பேற்ற முடியவில்லையே என்ற ஆதங் கம்தான் இப்போது அவனைப் பெரிதாக ஆட்டிப் படைத் திதி
தன்னை ஒரு ஈனப் பிறவியென்று தனக்குள்ளாகவே தாழ்த்திக் கொள்வதில் அவனுக்கு இஷ்டமில்லையென்றலும் ஏனே அவன் மனம் அதையே அங்கீகரிக்குமாப்போல் தனக் குள் குமைத்து ஏக்கப் பெருமூச்சாய்க் கண்ணிர் கக்குகிறது.
அந்தக் கலங்கலுக்கிடையிலும் மகன் சொல்வது காதில் தெளிவாகக் கேட்கிறது
அப்பு இண்டைக்கு முதலும் கடைசியுமாய்ச் சொல் வி றன் . இண்டைக்கு என்ர தம்பியின்ர செத்த வீட்டுக்கு அடியாத பறை, இனி இந்த ஊருக்குள்ளை ஆர் செத்தாலும் அடிக்கக்கூடாது. இதை மீறி நீ பறையைத் தூக்கினுலும் இந்த வீட்டிலை இன்ணுெரு சாவீடு கெதியிலே வரும்!”
‘என்ன சொல்லுருய்?"
'பறையிலே தொடக்கூடாது” 'அதுதாஃெையடா எங்கடை பிழைப்பு” "பட்டினி கிடந்து சாவம். பறையிலே தொட்டால் கொலேதான் ..??
- 33 -

Page 19
கண. மகேஸ்வரன்
புதிதாகத் தளிர்விட்ட இளரத்தத்தின் கொதிப்பை புரிந் தும் புரியாதவனப் இருளணின் மனம் குழம்பி இளைய தலை முறையின் எழுச்சிக் குரலுக்கு எதிராகப் பேசத் திராணி யற்று அடிமைத் தளையிலிருந்து விடுபடவும் வலிமையின்றி மனம் வெதும்பி. ‘ஓ’ என்று பெருங்குரலில் ஒப்பாரி வைத்து அழவேண்டும் போலிருந்தது.
ஜனவரி - 85 'மல்லிகை"
கண. மகேஸ்வரன்
1968 முதல் எழுதி வரும் இவரது முதல் ஆக்கம் சிரித் திரனில் வெளியானது. தொடர்ந்து சிறுகதை, குறுநாவல். கவிதைகள் எழுதி வருகிருர். தாரகை” சஞ்சிகையின் ஆசிரிய ரான இவர் சிலகாலம் சிரித்திரனிலும் பணிபுரிந்தவர். பாட சாலை நாட்களில் ‘செவ்வந்தி’, ‘நவரசம்’ ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளை நட்ாத்தியவர். அகிய இலங்கை ரீதியிலான சிறு கதை, குறுநாவல் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். எழுது வினைஞராகப் பணிபுரியும் இவரது புனைபெயர் ‘மணிமணுளன்’
முகவரி: நுகவில், கரவெட்டி மேற்கு, கரவெட்டி

பிறந்த மண்
* நெல்லே க. பேரன்
ஒயோ மாகாணத்தின் செழிப்பாணமலைப் பிரதேசமொன் றில் ரம்மியமான சூழலில் ஒக்கிட்ஸ் மலர்த்தோட்டத்தின் நடுவே அந்தப் பாடசாலை அமைந்திருந்தது. ஆபிரிக்கநாடு என்பதால் அதிபர் நீக்ரோ இனத்தவராக இருந்தார். இலங் கையர்களின் கல்வி ஆற்றலிலும் படிப்பித்தல் முறையிலும் அவருக்கு நல்ல நம்பிக்கை, அதனல் ஆசிரியர் முத்துலிங்கம் மீதும் அலாதிப்பிரியம். குறும்பு செய்யும் மாணவர்களையும் மூத்து தன் அன்பான நடவடிக்கைகளினல் கவர்ந்து எளிமை யான ஆங்கிலத்தில் விளங்கத்தக்க விதத்தில் நவீனமுறைக் கணிதத்தையும் விஞ்ஞானத்தையும் சொல்லிக் கொடுப்பதை அவர் பல தடவைகள் வகுப்பறையின் வெளியே நின்று அவதானித்து ஓர் ஈடுபாட்டைத் தனக்குள் வளர்த்துக் கொண்ட காரணத்திஞல் அவனுக்கு வேண்டிய சகல வசதி களையும் செய்து கொடுத்தார்.
தன்னுடைய குவாட்டர் சின் பின்னல் உள்ள நிலத்தில் மூத்து கோவா, கரட், லீக்ஸ் என்பன கொஞ்சமாகப் பயி ரிட்டிருந்தான், கோழி இறைச்சி அலுத்துப்போகும் வேளே களில் இந்த மரக்கறி இலைக்கோசுகளை உண்டு மகிழ்வான். சில வேளைகளில் அழுக்குத்துணி எடுக்க வரும் நீக்ரோப் பெண் இந்த மரக்கறிகளைச் சந்தையில் விற்று நயராக்களாக் கித் தருவாள். மூன்று அல்லது நாலு நபராக்களைச்சேர்த்து விட்டால் பிளாக்கில்" ஒரு ஸ்ரேலிங்பவுண் தோட்டு வாசி
- 35 -

Page 20
நெல்லே க பேரன்
வைக்கலாம் அல்லது ஏதாவது விடுமுறைத் தினச் செலவை ஈடுசெய்யலாம் என்று முத்து அவளது மரக்கறி வியா பாரத்தை ஊக்குவித்தான். எப்போதாவது அந்தப் பெண் ணுக்தம் ஒரு நயாரஈ கொடுப்பான்.
அன்று பின்னேரம் கோவாத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோதும் சிந்தனை முழுவதும் காலையில் அதிபர் கூப்பிட்டுக் தந்த 'ரெலெக்ஸ்’ செய்தியிலேயே லயித் திருந்தது. அண்ணு தான் கொடுத்திருந்தார். 'நிலைமை சரி யில்லை. இப்போது வரவேண்டாம்”
முத்துலிங்கம் ஊரை விட்டுப் புறப்படும்போதே நாட்டில் பிரச்சினைகள் தன்ருக வேரோடிப் போயிருந்தன. தரப்படுத் தலினுல் பாதிக்கப்பட்ட அவன் பொறியியல்துறை படிக்க முடியாமல் விஞ்ஞானப் பட்டதாரியாக வெளிக்கிட்டதும் பின்னர் களுத்துறையில் படிப்பிக்கும்போது எழுபத்தேழுக் கலவரத்தில் உடமைகளைப் பறிகொடுத்துவிட்டு வெள்ள வத்தை முகாம் ஒன்றில் அகதியாகத் தஞ்சம் புகுந்ததும் கப்பலில் காங்கேசன்துறையில் வந்து இறங்கியதும் பின்னர் சிலகாலம் வேலையில்லாமல் இருந்து விட்டு ஆங்கிலப் பத் திரிகையில் வெளியான விளம்பரம் ஒன்றைப் பார்த்து விண் இனப்பஞ் செய்து ரிக்கற்காக மட்டும் கொடுத்து நைஜீரியா விற்குப் புறப்பட்டதும் ஒவ்வொன் ருசு அவனுக்கு ஞாபகம் வந்தன. ரிக்கற் காசும் சகோதரிக்கு வீடுகட்டுவதற்கென்று கொஞ்சப் பணமும் உழைத்து அனுப்பி விட்டான். ஊருக் குப் போனலும் திரும்பவும் வந்து பணம் சேர்க்கும் நினைப் புத்தான் அவனுக்கு மேலோங்கி இருந்தது.
பைப்பில் இருந்து சீறிச் சிறிய வாய்க்காலில் ஒடிவரும் தண்ணீரைக் கோவாச் செடிகளுக்கு நிரம்பவிட்டுக் கட்டி ஞன். அடியில் பழுத்து மஞ்சள் பூத்த இலகளை மெதுவா கக் கைகளினல் கிள்ளி விட்டான். யாழ்ப்பாணத்து விவ சாயக் குடும்பத்தில் பிறந்த அவனுக்குத் தோட்டவேலை தண்ணிர் பட்டபஈடு. உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூ ரியில் ஜி சி. ஈ. படித்துக் கொண்டிருக்கும்போது தொண்ட
- 36

பிறந்தமண்
மானுற்றில் உள்ள தகப்பனரின் செம்பாட்டுத்தறையில் அவரோடு சேர்ந்து கொத்துவதும், குழை தாழ்ப்பதும், கீரைக்கொட்டை தூவுவதற்குப் பாத்தி கட்டுவதும், வாட் டர்பம் வயரில் தண்ணிர் வராதபோது கிணற்றுக்குள் படி களில் தாவி இறங்கிப் "புட்வால்வில் சூழ்ந்திருக்கும் பாசி களை அகற்றுவதும், பிறகு அதே கிணற்றுக்குள் நீச்சல் அடித்துக் குளித்து மகிழ்வதும் தகப்பஞரிடம் ஏச்சுக் கேட் பதும் என்று ஒவ்வொரு சம்பவங்களாக அவனது மன வீடியோ வில் ஒடி முடித்தன.
*நான் மட்டும் பல்கலைக்கழகம் போகாமல் இருந்திருந் தால் இப்பவும் கீரைத் தோட்டத்திலும் மரவள்ளித் தோட் டத்திலும் சட்டையில்லாமல் சாரத்தோட நிண்டு சண்டிக் கட்டுடன் சுதந்திரமான தோட்டக் காற்றை அனுபவித் திருக்க முடியும், இஞ்சை முகம் தெரியாத நீக்ரோச் சாதி யோட கத்திக்கத்தி மாரடிக்க வேண்டியிருக்கு. பெற்ருே ரையும் சகோதரங்களையும் வருஷக்கணக்கில் பிரிந்து வாழ வேண்டியிருக்கு”
முத்து அடிக்கடி இப்படி நினைப்பதுமுண்டு. அண்ணுவின் 'ரெலக்ஸ்’வர முன்னர் சகோதரி எழுதிய கடிதம் ஒன்றில் தாங்கள் இப்போது தொண்டமானுற்றில் வசிப்பதில்லை என்றும் அங்கு சின்னக்கதிர்காமம் என்று எல் லோரும் துதித்த செல்வச்சந்திதித் தேர் எரிக்கப்பட்டதுடன் கோவில் மடங்களில் சிலவும் இடிக்கப்பட்டு விட்டன என் இறும் மணிக்கோபுரம் தகர்க்கப்பட்டுவிட்டது என்றும் தாங் கன் எல்லோரும் பாதுகாப்புத்தேடிப் பக்கத்து ஊர்களில் தஞ்சம் புகுந்திருப்பதாயும் நீ வந்தால் சந்தோஷமாக வர வேற்கும் சூழ்நிலையில் எவரும் இல்லை என்றும் எழுதியிருந் தாள.
எழுபத்திஏழில் ஆபிரிக்க நாட்டிற்கு வந்த முத்துலிங் கம் ஒவ்வொரு தடவையும் லீவில் தாயகம் திரும்ப நினைக் கும்போது ஏதாவது குழப்பங்கள் வந்து வீட்டில் இருந்து "வரவேண்டாம்” என்று கடிதங்களும் கிரலக்சும் வருவது சகஜ மாகிவிட்டது.
-- 37 سلنه

Page 21
நெல்லே க பேரன்
வெரித்தாஸ், பி. பி சி வாஞெலிச் சேவைகளும் சில வேளைகளில் ரி. வி. வெளிநாட்டுச் செய்திச் சேவைகளும் முத்துவுக்குத் தன் தாய்நாட்டின் அவலங்களைத் தெரிய வைக்கும் சாதனங்களாகும். வீட்டில் இருந்துவரும் கடிதங் களில் செய்திகள் பூடகமாகவே தெரிவிக்கப்படும், நவிண்டி லில் தன்னேடு சட்டம் படித்த மிகவும் அப்பாவியான பட்ட தாரி ஆசிரியர் கந்தவனுதன் அநியாயமாகச் சுட்டுக் கொல் லப்பட்டதை "சற்றடேறிவீயு'வில் வாசித்தபோது முத்து அதிர்ச்சியடைந்தான், வளவினுள் புகுந்து யாரையோ தேடி விட்டு வேலைக்காரனைக் கொண்டு செவ்விளநீர் பறித்துக் குடித்தவர்கள் குடித்த கையோடு வேலைக்காரச் சிறுவனை யும் அத்த அப்பாவி ஆசிரியரையும் சுட்டுவிட்டுச் சென்றி ருக்கிறர்கள். சிறு எறும்பின் மீது கூடத் தங்கள் காலடி படக்கூடாது என்று சமணர்கள் மயிற்பீலி கொண்டு திரி வார்களாம். இந்த நண்பனும் அவ்வளவு மெதுமையான வன். பிறர் துன்பம் பொறுக்காதவன். நட்பை நேசிப்பவன். எத்தனையோ நாட்கள் முத்துவும் வேறு நண்பர்களுமாகக் கந்தவனதன் வீட்டிற்குச் சென்று கருப்பநீர் குடித்து மாங் காயும் பறித்துச் சாப்பிட்டிருக்கிருர்கள். வல்வெட்டித்துறை வாசிகசாலை ஒன்றினுள் மனிதர்களை உயிரோடு பூட்டி வைத் துக் குண்டு வைத்து அவர்களது குடல்களைத் தகர்த்த அந் தக் கொடூரம் நடந்த அன்றுதான் முத்துவின் நண்பனும் கொல்லப்பட்டான். அந்தப் பிரதேசத்தில் வேலிகள், வீட் டுக் கூரை சின் யாவும் எரிக்கப்பட்டனவாம்.
கம்பராமாயணத்தின் "லங்கா தகன’ அநுமார்கள் இன் றும் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கி ருச்கள். ஆனல் தமிழ் இராவணர்கள் எந்தச் சீதைகளையும் கவர்ந்து வந்து சிறை வைக்கவில்லையே. தங்களுக்கு நியாய மாகக் கிடைக்கவேண்டிய சுதந்திரத்தைத் தானே கேட்கி முரிகள்? இதனைக் கேட்ட குற்றத்திற்காகவா இத்தனை வெட்டுகள் . குத்துக்கள். கொலைகள். அம்மா கடல் தாயே . "குமுதினியும் "தூயஒளியும்" என்ன பாவம் செய் தன? எத்தனை இளங்குருத்துக்கள் துடிக்கத் துடிக்கக் கருகி
- 38 -

பிறந்தமண்
மாண்டன. இந்தச் சிந்தனைகளில் இருந்து மீளமுடியாத முத்துவுக்குத் தன் தாய்நாட்டில் அடுக்கடுக்காக நடந்து வரும் சம்பவங்கள் மனத்தை நெருடிக் கொண்டே இருந்தன.
அன்றிரவு சாப்பிட்டுவிட்டு மீதி உணவைக் குளிர்ப் பெட்டிக்குள் வைத்துவிட்டு ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசிக்க நினைத்தான். அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து நண்பன் கொண்டு வந்திருந்த ‘விமானங்கள் மீண்டும் வரும்? என்ற குறுநாவலை எடுத்துப் பிரித்தான். மத்திய கிழக்கில் உழைக்கச் சென்று வாடும் தமிழ் இளைஞர்களின் கஷ்டங் களை யதார்த்த பூர்வமாகச் சித்தரித்திருந்தார் ஆசிரியர். எங்கு சென்ருலும் கஷ்டப்பட்டுத் தம்குடும்பத்தையும் சகோ தரிகளையும் காப்பாற்றும் தமிழ் இளைஞர்கள் தங்களுக்கு என்று சொல்லிக்கொள்ள ஒரு நாடு இல்லையே என்று நினைத் தான். கொழும்பிலும் ஏனைய சிங்கள ஊர்களிலும் வாழ முடியாது என்று கப்பலிலும் பிளேனிலும் அகதிகள் பஸ் களிலும் வந்து பிறந்த மண்ணில் தஞ்சம் புகுந்தவர்களும் சொந்த வீடுகளில் நிம்மதியாகப் படுத்து உறங்கமுடியாத படி "ஷெல்" அடிகள். ஹெலிகொப்டர் சூடுகள்.
மாலை வேளைகளில் சில இலங்கைத் தமிழ் தண்பர்களின் வீடுகளுக்குச் சென்ருல் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கடி தங்களில் வந்த புதினங்களைச் சொல்லிக் கவலைப்படுவார் கள். தங்கள் பகுதிகளில் எல்லாரும் "பதுங்கு குழிகள் வெட்டி யிருக்கிருர்கள் என்றும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போதுகூட இப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்ல யாம் என்று உடுப்பிட்டியைச் சேர்ந்த ராணி அக்கா அன்று சொன்னதை முத்து எண்ணிஞன். ராணி திருமணம் முடித் ததும் கணவருடன் ஒயோ மாகாணத்திற்கு வந்துவிட்டாள்.
சந்நிதிக் கோயில் பூசையே இப்போது நடப்பதில்லையாம். திருவிழாக் காலத்து இனிமையான நிகழ்வுகள் முத்துவின் மனதில் வந்து போயின.
حس۔ 39 ہس۔

Page 22
நெல்லை க. பேரன்
திருவிழா ஆரம்பித்தால் அவனுடைய வீடு சத்திரந் தான். உறவினர்களும் வெளியூர்க்காரர்களும் வருவார்கள். அடிக்கடி அவியல் நடக்கும். இளேஞர்கள் முற்றத்து மாம ரத்தடியில் சைக்கிள்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல் வார்கள். வீட்டின் முன்னுல் உள்ள பெருவீதியில் விதம்வித மான கரகக்காவடிகள், முள்ளுக் காவடிகள், துலாக்காவடி கள் எல்லாம் கிராமியக் கலையின் உச்சவாத்தியமான உடுக்கு ஒலிக்க வலம் வரும். வாழை தோரணங்களால் சோடிக்கப் பட்ட டிறக்டரில் நீண்ட பனைத்துலாவை நாட்டி அதன் உச்சியில் தொங்கும் கயிற்றில் ஊசிவலையேற்றி முதுகுச் சதையை இழுத்துக் கொண்டு குப்புறத் தொங்கியவாறே அலகுகளில் வெள்ளிவேல் குத்தி இருகரங்களிலும் வேலா யுதம் தாங்கி அக்கரங்களைச் சிரமேல் குவித்து 'முருகா’என்று பக்தியுடன் பக்தர்கள் உலாவரும் காட்சி காண்பவர் மனங் களை உருக்கும். தாத்திகர்களையும் சிந்திக்க வைக்கும். காலில் மூள்ளு மிதியடிகளை ஏற்றித் தலையில் கொதிக்கும் கற்பூரச் சட்டிகளைத் தாங்கித் தங்கள் கஷ்டங்கள் தீரக் ‘கந்தனை? வேண்டித் தேசின் பின்னல் ஊர்வலம் வரும். பெண்களின் வேண்டுகோளும் தொண்டமானுற்றில் தோய்ந்த மேனி யோடும் ஈரவேஷ்டியுடனும் உடம்பெல்லாம் உவர்மண்ணும் ஊசியும் கல்லும் படியத் தேங்காயைக் கரங்களில் ஏத்தி உருண்டு உருண்டு அங்கப்பிரதிட்டை செய்யும் அடியார்கள் கூட்டம். வரிசை வரிசையாக வளையல் கடைகள், பொம் மைக் கடைகள், கடலைக்காரிகள், ஐஸ்டழவான்கள், சோடாப் போத்தல்களின் கழுத்துக்களில் கட்டரினல் ஜலதரங்கம் வாசிக்கும் சோடா விற்கும் பையன்கள், காணுமற் போன சிறுவர்களைப் பற்றித் தகவல் தந்து கொண்டிருக்கும் தற் காலிகமான பொலிஸ்நிலையம், தண்ணீர்ப்பத்தல்கள். இத்தி பாதி . இத்தியாதிப் பெருமைகளுடன் மூன்று வேளையும் சோறு மணக்கும் அன்னதான மடங்கள். நாவலர் மரபில் பண்டிதமணி காட்டிய கந்தபுராணக் கலாசாரம் இப்போது எங்கேபோய் ஒழிந்து கொண்டதோ? மறுபடியும் சந்நிதியில் இந்தக் கல்களையும் கலாச்சாரத்தையும் காணமுடியுமா என்று முத்து ஏங்கிரூன்.
-- 40 --س--

பிறந்தமண்
மூன்று மாதக் கல்லூரி விடுமுறை. ராணியும் கணவ ரும் தங்கள் உறவினர்களிடம் லண்டனுக்குப் போய்விட் டார்கள். முத்துவின் சில நண்பர்கள் சிங்கப்பூருக்கும் இந்தி யாவிற்கும் சென்றுவிட்டார்கள், முத்துவின் ஒன்றுவிட்ட பெரியக்கா குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. இலங்கைப் பூமிசாஸ்திரம் படித்த அவரின் பிள்ளைகள் இப்போது இந்தியப் பூகோளவியலையும் துணை மொழியாக ஹித்தி மொழியையும் படிக்கிருர்கள். வோட்டரை "வாட்டர்’ என்றும் ஓடிற்றரை “ஆடிட்டர்’ என்றும் ஒப்பறேஷனை "ஆப்பரேஷன்” என்றும் அவர்கள் உச் சப் பில் கஷ்டப்பட்டுக் கொண்டு ஆங்கிலம் படிக்கிருர்கள். முத்து விடுமுறைக்குத் தான் இலங்கைக்குப் போவ தென்று தீர்மானித்துவிட்டான். 'இப்ப வராதை’ என்ற வெருட்டல்களுக்குப் பயந்தால் எப்பவும் ஊருக்குப் போக முடியாது. எண்பத்திமூன்று யூலைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலே ஏதோ பிரச்சனை. பிரச்சனை இல் 80ாத நாளும் ‘சாவு’ என்று தலைப்பு வராத யாழ்ப் பாணப் பத்திரிகையும் கிடையவே கிடையாது. லெபஞணி லும் சைப்பிரசிலும் வாழ்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குப் போகவில்லையா என்று நினைத் தான். விமானநிலையத்தில் குண்டு வைப்பார்கள். சி. ரீ. ஒ விலும் வெடித்ததாம் என்று ராணியக்கா ஷெருட்டினதை நி%ன வில் கொண்.ான்.
'விதி என்று ஒன்று இருந்தால் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் மரணத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாது.” அவன்து மனம் தத்துவம் பேசியது. ராணி அக்காவின் தூரத்து உறவுப்பெண் நைஜீரியாவின் தென்பகுதி மாகா ணத்திற்குக் கணவருடன் வந்த புதிதில் மூளைக்காய்ச்சல் பீடித்து மரணமாக வில்லையா? அல்லது தான் ஒயோ மாகா னைத்து வழவழப்பான தார் வீதிகளில் கணவேகமாகக் காரை ஒட்டும் போது எதிரில் வரும் தண்ணீர் பவுசருடன் மோதி மரணம் சம்பவிப்பதில்லையா ? இவ்வாறு பல காரணங் களைத் துணைக்கிழுத்துக்கொண்டு ஒருவாறு மனத்தைத் திடப்
- 41 -

Page 23
நெல்லை க. பேரன்
படுத்திய முத்துலிங்கம் வேறு இருநண்பர்களுடன் கட்டு நாயக்காவிற்கு வந்து இறங்கினுன். ஐயாயிரம் ரூபாய் பேசி வவுனியாவரைக்கும் மினிபஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த் திஞர்கள். வழியில் சுமார் பத்து இடங்களில் செக்கிங் நடை பெற்றது. சாரதி சிங்களவர் என்பதால் சில இடங்களில் பிரச்சனை இல்லாமல் வரமுடிந்தது. இவர்களை வவுனியாவில் இறக்கிவிட்டு மினிபஸ் சாரதி திரும்பிவிட்டார். அவருக்கு வவுனியாவுக்கு இஞ்சாலை பாதுகாப்பு இல்லையாம்.
கிளிநொச்சிப் பாதைக்குப் போகமுடியாது என்றும் அங்கு அரசாங்க அதிபர் சென்ற வாகனத்தைச் சுட்டுச் சாரதி ஸ்தலத்திலேயே மரணமானுர் என்றும் கதைகள் பர வின. இரவு வவுனியாவில் உள்ள தமிழ்ப்பாடசாலை ஒன்றில் தங்கினர்கள். இரவு முழுவதும் குண்டுச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. ரி. வி. யில் மாத்திரம் கேட்ட இச் சத்தங்களை முத்துலிங்கம் இப்போது நேரடியாகவே கேட்ட போது மிகவும் பயத்தான். இன்னும் கொஞ்சநாட்களுக்குக் கிளிநொச்சிப் பாதையால் போகமுடியாது என்றும் முல்லைத் தீவு, பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் போகலாம் என்றும் அதுவும் நாவற்குழி போகாமல் கோப்பாய் அல்லது புத்தூர் வழியானப் போகவேண்டும் என்றும் வல்வெட்டித்துறை, தொண்டமானுறுப்பக்கம் எல்லாம் பிரச்சனை என்றும் கதைத் நார்கள். முத்துவிற்கு இவற்றைக் கேட்டபோது தலையைச் சுற்றியது. எட்டு வருடங்களின் பிறகு பிறந்த மண்ணைத் தேடிவந்த எனக்கு இத்தனை சுற்றுப் பாதைகளா என்று ஏங்கினன்.
வவுனியாவில் இருந்து வாகனங்கள் எதுவும் இல்லாத தால் முத்துவும் நண்பர்களும் டிருக்டர் ஒன்றில் ஏறி முல் லைத்தீவுக்குப் பயணமாயினர். வவுனியாவில் படிப்பிக்கும் சில யாழ்ப்பாணத்து ஆசிரியைகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இருபகுதியினரும் பரஸ்பரம் தமது அனுபவங் களை இப்பிரயாணத்தின்போது பகிர்ந்து கொண்டனர்.
- 42 -

பிறந்தமண்
முல்லைத்தீவில் இருந்து பரந்தன் வரையும் தேங்காய் லொறி ஒன்றில் ஏறிய முத்துலிங்கம் கூட்டத்தினர் மறுபடி பரந்தனில் இருந்து ஆனையிறவு தடைமுகாமிற்கு வரப்பயத்து வேறு காட்டுப்பாதை வழியாக ட்ரக்ரரில் சுண்டிக்குளம் கரைப்பாதையால் இயக்கச்சிக்கு வந்தார்கள். பின்பு கொடி காமம் வரைக்கும் இன்ஞெரு ட்ருக்ரறில் ஏறினர்கள். ஒவ் வொரு பயணத்திற்கும் தலா ஐம்பது ரூபா கொடுத்தார் கள். கொடிகாமத்தில் இருந்து தட்டி வானில் ஏறி நெல்லி யடிக்கு வந்த முத்துலிங்கம் உடுப்பிட்டிக்குத் தெரித்த ஒரு நண்பரின் சைக்கிளில் சென்ருன். ராகுல சாங்கிருத்தியாய ரின் “வால்காவில் இருந்து கங்கைவரை..” என்பது போல முத்துவும் ஒரு எழுத்தாளஞக இருந்திருந்தால் 'தைஜிசியா வில் இருந்து உடுப்பிட்டி வரை." என்று தன் பிரயான அனுபவங்களை நிச்சயம் எழுதியிருப்பான்.
தன் பெற்றேர் அகதிகளாக இருக்கும் காணியைத் தேடிக் காலடி வைத்த போது வாசலில் மாமரத்தின் கீழே அவனை வரவேற்றது "பதுங்கு குழியின்’ படிக்கட்டுக்கள்தான். திடீ ரென்று பேரிரைச்சலுடன் வானத்தில் ஹெலிகொப்டர் சுற் றும் சத்தமும் "பட் பட படவென்ற வெடிச்சத்தங்களும் கேட்டன. வீட்டின் நாலா புறமும் இருந்து முதியோர் முதல் சிறுவர் வரை ஓடிவந்து திபுதிபு வென்று பதுங்கு குழிக்குள் இறங்கினர்கள். யாரோ ஒரு முதிய பெண்மணி வாசலில் களிசானேடு நின்ற முத்துவையும் இழுத்துக் கொண்டு குழிக் குள் இறங்கினுள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஒரே வியர்வையும் செம்பாட்டு வெக்கையும்.
"ஏன்ரா தம்பி முத்து. வராதை வராதை எண்டு கொண்ணன் தந்தி கொடுத்தவனெல்லே. இப்ப ஏன் தம்பி வத்தனி. இஞ்சை பாத்தியே எங்கடை இருப்பை."
தாய் தான் அவனது முகத்தைப் பிடித்து இருட்டில் தடவிஞள்,
سس- 43 صسسد

Page 24
நெல்லே க பேரன்
பதுங்கு குழியின் மேல் புறத்தில் இருந்து மண்துகள்கள் மேலே முகத்திலும் த% யிலும் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தன. பனிக்கும் விழிகளோடு முத்து லிங்கம் அந்த மண்ணைப் பார்த்துக் கொண்டு நின்றன். ஆம். அது அவன் பிறந்த மண். இந்த மண்ணிற்காக அவன் என்ன செய்து விட்டான். தன் பெற்ருேரும் சகோதரங் களும் இந்த மண்ணில் வாழ்ந்து அவலங்களுள் சிக்குண்டு விடுதலைக்காகத் தவித்துக் கொண்டு வாழ்கையில் தான் மட்டும் இரண்டு மாதங்களில் திரும்பவும் பணம் தேடுவ தற்சாகக் குளிர்ச்சி தரும் ஒயோ மாகாணத்திற்குப் போக வேண்டுமா? இங்கே அவன் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன அவன் ஏதாவது செய்யத்தான் போகி முன். ஆம். உயரே உறுமிக் கொண்டு பறக்கும் கரிய அத்த விமான அரக்கனின் கீழ்ப்புறமாக நீண்டு தெரியும் இரட் டைக்குழல் துப்பாக்கியில் இருந்து கனன்று பறக்கும் எரி தழல்களைப் போல ஏதோ ஒன்று. அவன் மனத்துள் பொறி யாய்ப் பற்றிக் கொண்டது.
அவனது இடது கையோடு பிணைக்கப்பட்டிருந்த சிறிய மண்ணிறத் தோற்பையின் உள்ளே இருந்த பாஸ்போட்டை உருவி எடுத்தான். பதுங்கு குழிக்குள்ளேயே துண்டு துண் டாக அந்தப் பாஸ்போட்டைக் கிழித்து எறிந்தான். வெளியே வரும்போது முகம் முழுவதும் வியர்வையில் கரைத்த செம் மண் படர்ந்திருந்தாலும் அவனது மனம் மாத்திரம் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தது.
(யூலை 1986)
நெல்லை க. பேரன்
1966 முதல் எழுத்துலகில் பிரவேசித்த இவரது முதலா வது ஆக்கமான எண்பது ரூபா" சிறு கதை சுதந்திரனில் வெளியானது. தொடர்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்
جس 44 سس۔

சனம், வானுெலி நாடகம், கவிதை, தகவல்துறை ஆகியவற் றில் ஈடுபட்டுள்ள இவர் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பல இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார். 1969ல் ‘கடவுள் உள்ளே இருக்கிறர் சிறுகதைக்கு தொழில் தினக் களத் தமிழ்மன்றம் இரண்ட்ாவது பரிசு கொடுத்தது. 1985ல் யாழ் இலக்கியவட்டமும், ஈழநாடு பத்திரிகையும் நடாத்திய இர சிகமணி கனக செந்திநாதன் ஞாபகார்த்தப் போட் டி யில் "விமானங்கள் மீண்டும் வரும் குறுநாவல் முதற்பரிசு பெற்றது. யாழ் சட்டக்கல்வி நிலைய மாணவர் மன்றத்தின் வெளியீட்ான "உள்ளம்" கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் “அஞ் சல் ஒலி ஆசிரியராகவும் பணி புரிந்த இவரது நூல்களாக "ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிருள்' (சிறுகதைத் தொகுதி 1975), “வளவுகளும் நேர்கோடுகளும் (நாவல் - 1978) ‘சந் திப்பு (பேட்டி - 1985), விமானங்கள் மீண்டும் வரும்” (குறு நாவல் - 1985) என்பன வெளியாகியுள்ளன. அச்சில் உள்ள "கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற இவரது சிறுகதைத் தொகுதி அண்மையில் வெளிவரவுள்ளது. எழுதுவினைஞராகப் பணிபுரிகிருர், நெல்லை க. பேரன், உமாமணுளன், ராஜிவிஜி ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறர்.
இயற்பெயர் கந்தசாமி பேரம்பலம்
பிறந்த திகதி: 18-12-1946 முகவரி: காளிகோவிலடி, நெல்லியடி, கரவெட்டி,

Page 25
உலகம் பரந்து கிடக்கிறது
குப்பிழான் ஐ. சண்முகன்
அந்தக் கடிதத்தை வாசித்து நிமிர்ந்த போது என் கண் கன் கலங்கியிருந்தன. எதற்கோ வாய்விட்டு அழவேண்டும் போல மனத்தினில் தவிப்பு; கடிதத்தை மடித்து உறையி விடுகின்றேன். கைகளில் நடுக்கம்; நினைவுகள் கடிவாளமிடு கின்றன.
குழந்தைக் கனவுகள்!
கந்தையா, எனது ஒரேயொரு தம்பியின் பெயர் அது தான். என்னிலும் ஏழுவயது இளையவனுன அவனை இடுப்பில் தூக்கித் திரிந்த நினைவுகள் மனதில் கிளர்கின்றன. அவன் பிறந்தபோது அப்பாச்சி வெளியே வந்து, “டேய் முருகையா உனக்கு ஒரு தம்பி பிறந்திருக்கிருனடா” என்று சந்தோஷத் துடன் சொன்னபோது, நான் ஐயாவின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு முற்றத்துப் பலாமரத்தின்கீழ் நின்றிருந் தேன். ஐயா வேப்பங்குச்சியால் பல்துலக்கிக் கொண்டிருந் தார். நான் ஐயாவின் கையை உதறிவிட்டு, எனக்குத் தம்பி பிறந்த செய்தியை என்னுடைய நண்பர்களுக்குச் சொல்ல ஒடியது இப்போதும் நினைவிருக்கிறது. "எனக்கல்லோணே ஒரு தம்பி பிறந்திருக்கணை” என்று "வீரம் காட்டிச் சொன்ன தும் இப்போதும் நினைவிருக்கிறது,
سه 46 -سه

உலகம் பரந்து கிடக்கிறது
அந்தக் கடிதத்தைப் படித்ததினல் அந்தக் கடிதத்தோடு தொடர்பற்ற - ஆஞல் அவனுேடு தொடர்புள்ள பழைய நினைவுகள் மனத்தில் மிதக்கின்றன. அவனு அந்தக் கடி தத்தை எழுதினன்
அவன் இப்போது இருபத்திரண்டு வயது வாலிபன். அவன் வளர்ந்த கதையின் சில மங்காத நினைவுகள் மனதில் இழையோடுகின்றன. குழந்தைப் பருவத்தில் 'கைதட்டி ஓடி விளையாடியபோது அவ்னது புலிப்பல்லுச் சங்கிலி அறுந்து தொலைந்தது; முற்றத்துப் பலாமரத்தின் அடிப்பகுதியில் காய்த்த மூன்று பலாக்காய்களைப் பிடுங்கிவிட்டு நாங்கள் பிடுங்கவில்லையென்று பொய் சொன்னது; கிராமத்துப் பாட சாலையில் படித்துக் கொண்டிருந்த அவனை நான் கூட்டிச் சென்று நான் படித்த கல்லூரியில் சேர்த்தது, கல்லூரிக் குப் போகும் வழியில் களவாக விளாங்காய் பிடுங்கும்போது அகப்பட்டது; பருவ இயல்பினுல் நான் ஒருத்திமீது “சலனம் கொண்டிருந்தபோது - அந்த அவளும் என்மீது சலனம் கொண்டிருக்கின்ருளென்று தெரிந்தபோது அவளை அண்ணி என்று அழைத்தது.!
அந்த அவஞ, என் தம்பியா இக்கடிதத்தை எழுதியிருக் கின்றன். இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் காதலித்தவளைக் கைபிடிக்க முனைந்தபோது - அவளொரு சிங் களப்பெண் என்ற காரணத்திற்காக, என் பெற்றேர் அதை எதிர்த்தபோது நான் மிக உணர்ச்சி வசப்பட்டிருந்தேன். பெற்ருேரின் உணர்ச்சிகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மதிப்ப ளித்து அவளை மறந்து விடுவதா அல்லது அவர்களை மீறி “எனக்காகப் பிறந்தவளைக் கைப்பிடிப்பதா என்று எனக் குள்ளே நான் போராடினேன். எமது குடும்பச் சூழலில் 'பராம்பரிய ஒழுக்கக் கோட்பாடுகளில்" நம்பிக்கை வைத்து “பெற்ருேருக்கு அடங்கிய பிள்ளேயாக" நான் வளர்ந்திருந் தேன். அதே நேரத்தில் உத்தியோக காரணத்திஞல் எனது குடும்பத்தை, எனது கிராமத்தை விட்டு, வெளியுலகைத் தரிசித்த தான் புதிய சூழல் - நண்பர்களின் தாக்கத்தினுல்
- 47 -

Page 26
குப்பிழான் ஐ. சண்முகன்
புதிய கொள்கைகள் - புரட்சிக் கருத்துக்களால் ஆகர்ஷிக் கப்பட்டிருந்தேன்.
அந்தச் சூழலில் அவள் அறிமுகமாகியிருந்தாள் - நான் அவளால் கவரப்பட்டேன், அவளுந்தான். − நான் அவளை மணக்கக்கூடாது என்பதற்கு எனது பெற் ருேர் காட்டிய நியாயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அம்மா பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் குலப்பெருமை களைச் சொன்னுள். எங்களினத்தில் தான், சாதியில் தான் தாங்கள் மணத்தொடர்புகள் வைத்திருக்க வேண்டும், அப் படித்தான் இதுவரைவைத்திருந்தோம் என்றும் சொன்னுள். “சாதி கெட்டதுகள் பிரியனுக்கு அடங்கிய பெண்சாதியாக மாமியாருக்கு அடங்கிய மருமகளாக இருக்க மாட்டாளவை" என்று வாதாடிஞள். எனக்காக எத்தனையோ பெரிய இடங் களில் எத்தனையோ "குணபூஷணிகள்? - அழகு சுந்தரிகள் " காத்திருக்கிருர்களென்றும் - எவ்வளவோ சொத்துக்கள் என் னிடம் வந்து சேருமென்றும் சொன்னுள் - மன்ருடினுள், வய தான காலத்திலே எங்களை வருத்தாதையடா என்று அழு தாள்.
எனக்கு இதொன்றும் பிடிக்கவில்லை. நான் அம்மாவுக் குச் சொன்னேன்.
"அம்மா காலம் மாற மாற அதுக்கேற்ப மனிதனும் மாறத்தானே வேணும். இந்தப் பரந்து விரிஞ்ச உலகத்திலே சாதி இன வித்தியாசங்களெல்லாம் இனிமேல் இல்லாமல் போகும். மனிதனெண்ட ஒரு சாதியும், அதன் வாழ்க்கைப் போராட்டங்கள் உணர்ச்சிகளும் தானம்மா இனி இருக்கும். அந்த மனித ஜாதியுக்கை நான் எனக்கொரு அடிமையைத் தேடவில்லை. எனக்குப் பிடித்த ஒரு மனைவியை - என்னுடன் வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்ளத் தோதான ஒருத்தி பைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ w
அம்மா என்னை முழிசிப் பார்த்துக் கொண்டு, எங்கடை விருப்பத்திற்கு மாழுய்ப்போனு நீ எங்களுக்குப் என்று சொன்னுள், பின் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
- 48 -

உலகம் பரந்து கிடக்கிறது
நான் எனக்குள் போராடினேன். எள் பெற்றேரின் என் னைப் பற்றிய ஆசைக் கனவுகள் எப்படி எப்படி இருக்கு மென எனக்குள் எண்ணிப் பார்த்தேன். அவற்றையெல்லாம் நான் சிதைக்கத்தான் வேணுமா?
என் மனத்தில் அவள் புன்முறுவல் கோலந் தெரிந்தது. அந்த நளினத்தில் - அந்த அழகோவியத்தில் - அந்தக் குளு திசயத்தில் மாறுகின்ற காலத்தின் கோலங்களைப் புரிந்து கொண்ட அந்த மனப்பக்குவத்தில் நான் என்னையே மறந்து விட. இல்லே இழந்துவிட.
அவள் எனக்கேற்றவள், அவளேதான் எனக்கேற்றவள். அன்றைய மங்கலான மாலையில், கையில் ஒரு குட்கே சுடன் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன், எங்கள் சின்ன வீட்டின் குசினி அறையிலிருந்து விம்மல் சத்தம் கேட்டது. கிழவனின் இருமல் சத்தம் கேட்டது. ஆட்டுக்குட்டிகள் கத் தும் சத்தம் கேட்டது. முற்றத்துப் பலாமர இலைகள் காற் றில் அசையும் சத்தம் கேட்டது.
அப்போது வாசல் கதவின் நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு அவன் - என் தம்பி சொன்ன அந்த வார்த்தை asoit , ...
அண்ணு நீ போகிருய், புரட்சிகள், புதுமைகள் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு டோகின்றாய், நேற்றுச் சந தித்த யாரோ ஒருத்திக்காக, காலங்காலமாக இரத்தத் தொடர் போடு கூடிய, பாசஉணர்ச்சி இழைகளை அறுத்துக் கொண்டு போகின்ருய். உனது ஆசைகளை நிறைவேற்று வதற்காக - உனது சுயதிருப்திக்காக - உன்னைப் பெற்று வளர்த்து உருவாக்கிய தெய்வங்களின் உணர்ச்சிகள் ஆசை களை அழித்து, அந்த அடிப்படையில் நீ வாழப் போகிருய் அண்ணு ஆணுல், இந்தத் தம்பி உன்னைப்போல - உணர்ச்சி காதல் என்பவற்றைப் பெரிதாக மதித்து தன் நன்றியை - செய்ய வேண்டிய கடமைகளை மறந்து ஓடிவிடமாட்டான். எனக்கும் துக்கமாகத்தான் இருந்தது. கண்கலங்கி கண் ணிரும் வந்தது. அவன் வார்த்தைகளைக் கேட்ட தான், அந்
- 49 - '

Page 27
குப்பிழான் ஐ. சண்முகன்
え定3°
தத் துக்கத்திலும் சந்தோஷப்பட்டேன். எனது பெற்றேருக்கு நான் கையாலாகாதவளுகப் போஞலும் - என் தம்பி அவர் களைக் கைவிடமாட்டானென எண்ணினேன்.
அவஞ - அன்று அப்படிச் சொன்ன என் தம்பியா இக் கடிதத்தை எழுதியிருக்கிருன், கைகள் நிலை கொள்ளாது நடுங்க - உறைக்குள்ளிருக்கும் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படிக்கின்றேன். سمتیہ
'அண்ணுவுக்கு..!’
அன்புள்ள அண்ணுவுக்கு என்றுகூட எழுதவில்லை. என்னை ஒரு அன்புள்ள அண்ணணுக அவன் கருதியிருக்க முடியாது தான். அன்று அந்த மங்கிய மாலை நேரத்தில் அம்மாவின் விம்மலைக் கேட்டுக்கொண்டு ஐயாவின் தாளாத இருமலைக் கேட்டுக்கொண்டு தம்பி உணர்ச்சிவசப்பட்டுச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு - வீட்டைவிட்டு வெளி யேறியவன் பின் அவர்களுடன் எதுவித தொடர்புகளுமே கொள்ளவில்லை. அவர்கள் சுகதுக்கங்களில் பங்கு கொள்ள வில்லை. என்மனைவி எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் கூட, வெறும் வீம்பில் சும்மா இருந்துவிட்டேன். நான் எங் துனம் ஒரு அன்புள்ள அண்ணனுக, அருமை மகனுக இருக்க وفات واعرق "
"இந்தக் கடிதம் உனக்குத் திகைப்பை ஏற்படுத்தலாம். அன்று நீ வீட்டைவிட்டு வெளியேறியபோது, நான் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ சொல்லியிருந்தேன். வெறும் சம்பி ரதாய பழைய மரபுகளையும் நம்பிக்கைகளையும் கட்டிப்பிடித் துக் கொண்டு வாழமுடியாது என்பதை தான் இப்போது உணர்ந்து கொண்டேன். அன்று நீ செய்தவை நியாயமா னவை என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன்"
"ஏற்கனவே, ஒருமுறை படித்திருந்த போதிலும் கூட, இப்போதும் அந்தத் தவிப்பு மனதைக் குமைக்கின்றது. அவ னும், என் தம்பியும் அவர்களைக் கைவிட்டு விட்டாகு? அவர்கள் எப்படித்தான் வாழப் போகிருர்களோ..?
-سس 50 ---

உலகம் பரந்து கிடக்கிறது
"அண்ணு, உலகத்தில் காலநிலை சரியில்லாவிட்டாலும் இயற்கைநிலை சரியில்லாவிட்டாலும், புயல் அடித்தாலும், வெயில் எறித்தாலும் . அவற்றையெல்லாம் இலட்சியம் செய் யாமல் தன்பாட்டிலேயே வளர்கின்ற ஒரு வஸ்து" இருக்கி றது. வட்டி அண்ணு வட்டி, எவ்வளவு காலத்துக்குத்தான் உள்ள சொத்துக்களைக் காட்டி, காட்டி கடன்பட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்க முடியும். வட்டிகூட கொடுக்க முடி யாத போது எவ்வளவு காலத்திற்குத்தான் மற்றவர்கள் கடன் தருவார்கள். இந்தச் சூழலில் நான் தொழில் செய்ய முனைந்தேன். வீரசிங்கத்தின் சுருட்டுக் கொட்டிலில் சுருட் டுச் சுற்றப் போனேன்.”
"வீட்டில் பூகம்பம் நிகழ்ந்தது. அம்மாவும் ஐயாவும் சண்டைக்கு வந்தார்கள். எமது கெளரவம் என்ன? குலப் பெருமை என்ன என்று என்னைக் கேட்டார்கள். "சபை சந் தியிலே எங்களை மதிப்பினமே" என்று அம்மா கேட்டாள்! ஆளேக்கண்டிட்டு, சால்வையைத் தூக்கிக் கமக்கட்டுக்கை வைக்கிறவங்கள் நாளைக்கு எங்களை மதிப்பினமோ? என்று ஐயா கேட்டார். பரம்பரை பரம்பரையாக விதானையாக இருந்தவர்கள் - கல்வீட்டுக்காறராக வாழ்ந்தவர்கள், மற்ற வர்களுக்கு கீழே வேலை செய்யக்கூடாதென்று ஐயா சொன் ஞர். தான் வேலையை விட்டுவிட்டேன்.
*அண்ணு, பசிக்குச் சாப்பிடாவிட்டால், அந்த நேரத் துச் சாப்பாட்டை பின்பு சாப்பிடத் தேவையில்லைத்தான். ஆணுல், எத்தனை நாளைக்குத்தான் அரைப்பட்டினியாகவும் முழுப்பட்டினியாகவும் காலத்தைத் தள்ளமுடியும். நான் ஏன் அரைப்பட்டினியாகவும் முழுப்பட்டினியாகவும் காலத் தைத் தள்ளவேண்டுமென்று யோசித்தேன். இந்த மலை மாதிரி உடம்பை வைத்துக் கொண்டு நான் ஏன் சும்மா யிருக்கவேண்டும். பழைய கெளரவங்களும், அந்தஸ்துக்களும் குலப்பெருமைகளும் எங்களுக்குச் சோறு போடாது என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். நான் எங்கேயாவது சென்று வேலை செய்து உழைக்க வேண்டுமென்றும் சொன் ଦ3ଙrଜit.'
- 51 -

Page 28
குப்பிழான் ஐ சண்முகன்
'ஐயா சொன்ஞர்; ஒரு பிள்ளை கட்டை அறுத்துப் போட்டுப் போட்டுது; நீயும் உன்ரைபாட்டிலை போ; நாங் கள் பசி கிடந்தாலும், கெளரவத்தோடை சாவோம்’.
என் கைகள் நடுங்கின. இவர்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும்? பசி கிடந்தாலும் கெளரவத்துடன் சாவாசி
வரட்டுக் கெளரவங்களையும், பரம்பரைக் குலப்பெருமைகளை யும் விட்டு, காலத்தோடு இவர்கள் ஏன் ஒத்துப்போகக் கூடாது?
"அண்ணு! எனக்கும் வயதாகின்றது. வெட்கத்தைவிட்டு உனக்கொன்று சொல்கின்றேன். நானும் கலியாணம் செய் யப் போகிறேன் அண்ணு; இந்தப் பரந்த உலகத்தில், எனக் குத் துணையாய் வர ஒருத்தி காத்துக்கொண்டு இருக்கிரு ள்ண்ணு, இது கூட அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இதற்குக்கூட அவர்கள் சம்மதிக்கமாட்டாகள், இங்கும் குலப்பெருமைகளும், கெளரவப் பிரச்சனைகளும் தலையெடுக் கும். இதைப்பற்றி யோசித்தபோது உன் நிலைமையை நான் புரிந்து கொண்டேன்.”
இந்தக் கட்டுப்பட்ட வேதனைகள் நிறைந்த வாழ்க் கையைவிட்டு, வாழ்க்கையின் அர்த்தங்களும், நம்பிக்கை களும், போராட்டங்களும் நிறைந்த பரந்த உலகத்தில் நான் காலடி எடுத்து வைக்கப்போகின்றேன். என்னுடன் கைகோத்துக்கொள்ள தோழர்கள் இருக்கிருர்கள். அவளும் வருவாள். என்னல் வேறெதுவும் செய்யமுடியாது. எனக் கும் வாழ்க்கைபற்றிய ஆசைகளும், அர்த்தங்களும், நம்பிக் கைகளும் உண்டு.
என் கரங்கள் நடுங்கினலும், எனது மனம் வேதனைப் பட்டாலும், தான் அவர்களை விட்டுப் பிரிந்த அந்த - மங்கிய மாலைநேரத்துச் சூழல் மனத்தில் விரிந்தாலும் - நானென்ன செய்யமுடியும், காலத்தில் கருத்துக்ளோடு ஒட்டி நாங் களும் வாழத்தானே வேண்டும்; அவர்களும் தங்கள் நம் 1953)45 a 95-6r 94élu... ... ...?
--س- 52 --

உலகம் பரந்து கிடக்கிறது
மனத்தில் ஏதோ ஊருகின்ற மாதிரியான வேதன; கையிலிருக்கும் கடிதம் காற்றில் பரபரக்கின்றது. என் கண் களுக்கப்பால் உலகம் பரந்து கிடக்கின்றது.
1972 ܚܗ
குப்பிழான் ஐ. சண்முகன்
ஐயாத்துரை சண்முகலிங்கம் என்பது இவரது இயற்பெயர். தான் பிறந்த கிராமத்தின் பெயரைத் தமது பெயரின் முன்னுல் சேர்த்துக் கொண்டவர். 1966 முதல் எழுத ஆரம்பித்த இவரது “பசி’ என்னும் முதல் சிறுகதை “ராதா" என்ற பத்திரிகையில் பிரசுரமானது. சிறுகதை, கவிதை, சிறுவர் நாடகம், திறனுய் வுக் கட்டுரைகளென இவரது இலக்கிய ஈடுபாடு விரிந்து செல் கின்றது. நவீன சினிமாப் படங்களில் தரமான தயாரிப்புக்களை இவர் வரவேற்பவர், விமர்சிப்பவர். கலேஇலக்கியத்தில் அழகிய லின் முதன்மைத்துவத்தை வலியுறுத்துபவர். இவரது சிறு கதைகளில் மனிதனின் மென்மையான உணர்வுகள் கூட கலைத் துவத்துடன் வடிக்கப்பட்டிருக்கும். இவர் எழுதிய சிறுகதைகள் “கோடுகளும் கோலங்களும், “சாதாரணங்களும் அசாதாரணங் களும்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களாக வெளிவந்துள் ளன. ‘கோடுகளும் கோலங்களும் 1976ல் யூரீலங்கா சாகித்திய மண்ட்லப் பரிசிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கலைப்பட்ட்தாரியான (பி. ஏ) இவர் கல்வித் திணக்களத் தில் எழுதுவினைஞராகப் பணிபுரிந்தவர். இன்று நெல்லியடி ம. ம. வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறர்.
பிறந்த திகதி: 01-8-1946 முகவரி; மாணிக்கவளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டி,

Page 29
எங்கேதான்
வாழ்ந்தாலும்
ச. முருகானந்தன்
உக்கிரமமாகப் பெய்து கொண்டிருந்த பணியையும் பொருட்படுத்தாமல், காற்றே, வெளிச்சமோ வராத அந் தச் சின்னஞ்சிறிய சமையல் அறைக்குள் ஈரவிறகு எழுப்பிய புகைமண்டலத்திற்குள் முழுகி, இடிந்து போய்க்கிடந்த மண் ணடுப்பின் எதிரே அமர்ந்துகொண்டு தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.
அடுப்புப் புகட்டில் குப்பி விளக்கு எரிந்து கொண்டி ருந்தது. அதிகாலையின் வரவை சேவல் அறிவித்துவிட்டபோதி லும் வெளியில் இன்னமும் இருள் முற்ருக விலகவில்லை.
முத்தையா அறைமூலையில் சாக்கைப் போர்த்திக் கொண்டு முடங்கிப் போயிருந்தான். அந்தச் சின்னஞ்சிறு குடிசை வீட்டில் குசினியும், ஒரு அறையும் தாவாரமும் மாத் திரம்தான் இருந்தது. மலையக குச்சு லயங்களில் வாழ்ந்து பழக்கப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதியதல்ல.
பம்பரக்கல்லே எஸ்டேட்டில் தேயிலைக் கொழுந்து பறித் துக் கொண்டிருந்த காலத்திலையே வறுமைக்கும் பட்டினிக் கும் பழக்கப்பட்டவர்கள் தான். மலையகத்தின் கொடுங் குளிரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, உடமை வர்க்கங்களுக்காக உழைத்து உழைத்துக் கண்ட மிச்சம் சாது

எங்கேதான் வாழ்ந்தாலும்
வுமே இல்லை. இருந்த கொஞ்ச நஞ்சப் டாத்திரம் பண்டங் களையும், பிற உடமைகளையும் 83 கலவரத்தில் முற்ருள் இழந்து விட்டு, கட்டிய துணியுடன் அகதி முகாமுக்கு வந்து அங்கு ஆறேழு மாதம் அஞ்ஞாதவாசம் செய்து, கடைசியில் வன்னேரியிலுள்ள ஆண்விழுந்தான் குடியேற்றத் திட்டத்தில் வந்து சேர்ந்தான் முத்தையா.
அக்கராயன் அகதி முகாமிலிருந்தபோது தான் கண் ணம்மாவைக் காதலித்துக் கைப்பிடித்தான். என்ருவது ஒரு நாள் விடிவு வரத்தான் செய்யும் என்ற அதீத நம்பிக்கை யுடன் இருவரும் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தார்கள். “றெட்பான வழங்கும் *ரேசன் வயிற்றைக் கழுவ உதவியது. அவர்களின் உதவி யோடு, தமக்கு வழங்கப்பட்ட காட்டு நிலத்தை வெட்டி, துப்பரவாக்கி மிகவும் கஷ்டப்பட்டு இந்தக் குடிசை வீட்டை அமைத்து விட்டார்கள்.
நேரிய காட்டுத் தடிகளை வெட்டி குத்துக்கால் தட்டு, புத்துமண் வெட்டிச் சுமந்து வந்து மணலோடு கலந்து தண் ணிர் ஊற்றி ஊறவிட்டுப் பிசைந்து குழைத்து, பெரிய பெரிய உருண்டையாக்கி, இருபக்கமும் பலகையடித்து, நேர்தப்பா மல் அடுக்கி மொங்கானிட்டு இறுக்கி அந்த நான்கு சுவர் கஃளயும் அமைக்க முத்தையாவும் கண்ணம்மாவும் பட்ட சிரமம் அளப்பரியது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுக்காக வைத்து வரிந்து கட்டி தென்னங் கிடுகுகளால் வேய்ந்து ஒருவாறு குடி வந்தாகிவிட்டது. பாத்திரம் பண்டங்கள் இலவசமாக “றெட்பாஞ’வால் வழங்கப்பட்டது. அருகிலேயே கிணறு வெட்டுவதற்கும் பணஉதவி கிடைத்ததால் சீக்கிரத்திலேயே அதையும் வெட்டிக் கட்டி முடித்து விட்டான் முத்தையா. ஒருநாள் இவனது நிலத்தைப் பார்வையிட்ட நிர்வாகி நேரி லேயே தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்
- 55 -

Page 30
ச. முருகானந்தன்
*எல்லோரும் முத்தையாவைப்போல உழைத்தால் விரை விலேயே வன்னேரி பொன்னேரியாகி விடும்? - அவரது பாராட்டுதல்கள் அவனுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத் தது
வெட்டிப் பண்படுத்திய காணித்துண்டைச் சுற்றி நெருக் கமான வேலி அமைத்துப் பாதுகாத்து உள்ளே காய்சறித் தோட்டம் போட்டான் முத்தையா. தக்காளி, கத்தரி, மிள காய் போன்ற நாற்றுக்களை கிளிநொச்சியிலிருந்து வாங்கி வந்து பாத்தி அமைத்து நட்டான். அவனது முயற்சியைப் பாராட்டி அவனுக்கு ஒரு "வாட்டர் பம்ப்" வழங்கப்பட்டது. இதஞல் அவனது முயற்சிகள் மேலும் உயர்ச்சி பெற்றன
இடையிடையே ஊன்றப்பட்ட வெண்டை, பூசணி பயிற்றை வித்துக்களும், தூவப்பட்ட முளைக்கீரை விதை களும் பச்சை பிடித்து முளைக்கத் தொடங்கியிருந்தன.
வெறும் காய்கறித் தோட்டமாக மட்டும் நின்று விடா மல், ஒரு நிரந்தரத் தோட்டமாக அதை ஆக்கிவிட வேண் டும் என்பது கண்ணம்மாவின் ஆசை. கண்ணம்மா தன் எண் ணத்தைக் கணவனிடம் கூறியதும் அவனும் அதை ஆமோ தித்து ஒரு புறத்தே வாழை மரங்களும், கரையோரமாக தென்னம் பிள்ளைகளும் நட்டான். தோடை, எலுமிச்சை, பலா மா என்று வகைக்கு ஒன்றிரண்டு மரங்களாக நட்டுப் *ாதுகாத்தான்.
பெருமரங்களை நட்டபோது விவசாய அலுவலர்களின் ஆலோசனைப்படி போதிய இடைவெளி விட்டு நாட்டிச் சது ரத்தில் இரண்டு முழ ஆழத்தில் கிடங்கு வெட்டி குழியில் உப்பும், சாம்பலும் எருவும் இட்டு பக்குவமாய் நாட்டினுன் வானமும் வஞ்சகம் செய்யாததால் வைத்த பயிரெல்லாம் வளமாய்த் துளிரித்தன.
வரண்டு கிடந்த வாழையெல்லாம் புதிய இலைகள் விட்டு தளிர்த்து வளர்ந்து தோகை விரித்தன. தென்னகள் குருத்து விட்டன. மாவும் பலாவும் வேரூன்றின.
- 56 -

எங்கேதான் வாழ்ந்தாலும்
காய்கறி பலன் தரத்தொடங்கியதும் இவர்களது கடன் பளு கொஞ்சம் குறைந்தது. கிளிநொச்சியில் வாரத்தில் இரண்டு நாட்கள் முறைச்சந்தை உண்டு. நாலா பக்கத்தி லிருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் வருவார்கள். தடங் கலின்றி விற்பனையாகுமாதலினல் முத்தையாவும் வாரத்தில் ஒரு தடவை முறைச்சந்தைக்குப் போவான். காய்கறிகளோடு வாழையிலையும் வெட்டிக் கட்டிக்கொண்டு விற்பனைக்குக் கொண்டு செல்வான்.
வன்னேரியிலிருந்து கிளிநொச்சி இருபது மைல் தான் என்ருலும் காலேயில் ஒரு தடவையும், பின்னர் மாலையில் ஒரு தடவையும் தான் பஸ் வந்து போகும். பெருமழை என்றுல் அதுவும் வராது. く
இன்றும் முத்தையா சந்தைக்குப் போகும் முறை. அது தான் அதிகாலையிலேயே கண்ணம்மா எழுத்து தேநீர் தயா ரிப்பதில் ஈடுபட்டிருக்கிருள்.
அடுப்படியின் சலசலப்பில் அருண்ட முத்தையா எழுந்து காலைக்கடன்களை முடிக்க வெளியே சென்றன். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையிலான அந்த மைம்மல் பொழுதில் வானத்து வெள்ளிகள் மங்கி மறைந்து கொண்டிருந்தன.
கண்ணம்மா தேநீரும் கையுமாக வந்தபோது அடுக்க ளைக்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள வாசற்படியில் புன் னகையோடு நின்று கொண்டு குறும்பாகச் சிரித்துக் கொண் டிருந்தான். கட்டையான சற்றே டெருத்த தோற்றம் அ ஞல் வயிறு தொந்தியாய்க் காணப்பட்டது.
இவ்வளவு வேலை செய்தும் வண்டி வத்துதில்லையே? என்று செல்லமாகக் கேட்டபடி தேநீரை நீட்டினுள் கண் 6007 bud IT.
*ஏன்; அதால உனக்கு ஏதாவது இடைஞ்சலா?
அவனது குறும் பைப் புரிந்து கொண்டு அவள் நாணத் தோடு சிரித்தாள்.
سیب 57 سیم

Page 31
ச. முருகானந்தன்
"ம். நானும் கஷ்டப்படுகிறேன் பலன் தான் இல்லை; அவளது மென்மையான வயிற்றுப் புறத்தை நோக்கியபடி தேனீரை உறிஞ்சினன்.
"ஆமா, அதுக்கென்ன இப்ப அவசரம் இரண்டொரு வருஷம் போகட்டுமே” என்று சொன்னவள் சற்றுத் தயக் கத்தின் பின் தொடர்ந்தாள். இந்த மாதம் இன்னும் முழுக்கு வரலிங்க?
அப்படியா? என்று மகிழ்ச்சியோடு அவளை அனைத்து முத்தமிட்டான். "ஐயே! ஒரு நேரம் காலம் இல்லீங்களா? எப்ப பார்த்தாலும் இதே எண்ணம் தான் அவள் பிகு பண்ணினன். “தேத்தண்ணி ஆறுது எடுத்துக் குடிங்க”
"நீ குடிச்சியா? அன்போடு கேட்டான் முத்தையா.
அவனுக்கு மனைவிமீது அளவு கடந்த ஆசை. “கண்ணு கண்ணு" என்று உருகிப்போய் விடுவான். அவளுக்கு அவன் மீது உயிர்.
*சரி பஸ் வரப்போகுதுங்க”
மரக்கறிகளைச் சாக்கில் கட்டினன். கத்தரியும் வெண்டி யும் நிறைய இருந்தன. இரண்டு பெரிய பூசினிக்காய்கள். வாழை இலைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சந்திக்கு பஸ் ஏறப்புறப்படும்போது கேட்டான்.
*கண்ணு உனக்கு என்ன வேணும்" "நீங்கதான் வேணும். அடுக்கான பற்கள் பளிச்சிட்டன. "வந்து பார்த்துக்கிறன்” எட்டி நடந்தான். பஸ் வழக்கம்போல நிறைந்த சனத்துடனேயே வந்தது. கால் வைக்க முடியாதபடி மூட்டை முடிச்சுகள். ஒருவாறு முடிச்சுக்களையும் ஏற்றித் தானும் ஏறிக் கொண்டான்.
பஸ் கிளிநொச்சியை அடைந்தது. துப்பாக்கி வேட்டுக் கள் தீர்க்கப்பட்டன. ஐயோ அம்மா’ என்ற அலறல்கள்1.
- 58 -

எங்கேதான் வாழ்ந்தாலும்
முத்தையாவும் வேறு சிலரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பாதுகாப்புப் படையினரைத் தாக்க முயன்ற பத்துப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாது காப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி"லங்கா புவத் தெரி வித்ததாக வானெலியும் ரூபவாஹினியும் அறிவித்தன.
"மல்லிகை" பெப்ரவரி - 1986
ச. முருகானந்தன்
1976 ஆவணி முதல் எழுதிவரும் இவரது ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ' தினகரன் வாரமஞ்சரியில் வெளி யானது. சிறுகதை நாவல், குறுநாவல், கவிதை, விமர்சனம், மருத்துவக் கட்டுரைகளை எழுதிவரும் இவரது சிறுகதைகள் "ஈழத்துச் சிறுகதை மஞ்சரி, சென்னை இலக்கியச் சிந்தனயின ரின் ‘அற்ப ஜீவிகள்’ சிறுகதைத் தொகுதி நீர்ப்பாசனத் தினக் களத்தினரின் சிறுகதைத் தொ தி ஆகியவற்றில் இட்ம் பெற் றுள்ளன. "கணையாழியில் வெளியான 'புலி’சிறுகதை தெலுங்கு ஹிந்தி, மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'மீன்குஞ்சு கள்’ என்ற சிறுகதைக்காக சென்னை இலக்கிய சிந்தனைப் பரி சும், அகில இலங்கை ரீதியில் நடாத்தப் பெற்ற கத்தோலிக்க மஞ்சரியினரின் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும், "சுட்ர்" மணிக்கதை, சிறுகதை ஆகிய போட்டிகளில் பரிசுகளும், நீர்ப் பாசனத் திணைக்களத் தமிழ் மன்றத்தினரின் சிறுகதைப்போட்டி யில் இரண்டாம் பரிசும் கிடைக்கப்பெற்றன. உதவி வைத்திய அதிகாரி (ஏ. எம். பி) ஆகக் கடமையாற்றும் இவர் ச. முரு கானந்தன் என்ற இயற்பெயரிலும் 'முருகு' 'தமிழ்ப்பித்தன்' முதலான புனைபெயர்களிலும் எழுதி வருகிறர். பிறந்த திகதி 14-1-50 முகவரி: அன்பகம், கரணவாய் தெற்கு, கரவெட்டி,

Page 32
நாளையும்
அடுப்பு எரியும்
கி. பவானந்தன்
'தம்பி ரகுபதி . ரகுபதி .??
படலைக்கு வெளியே குரல் கேட்கிறது. அரைகுறையா கப் பூட்டப்படாது இருத்த காற்சட்டைத் தெறியைப் பூட் டியபடி, பக்கவாட்டில் இடது கையால் உயர்த்தி உயர்த்தி இழுத்துக் கொண்டு படலையடிக்கு ஓடிப்போகிருன் மயூரன்.
"அப்பா. அப்பா. பெரியப்பா வாருர்."
மயூரனின் குரலோசை யன்னலின் ஊடாக என் செவி யில் பட்டு மோத, நான் எனது கழுத்தை நீட்டி வெளியே எட்டிப் பார்க்கிறேன். மயூரனின் கைகளை அன்போடு அணைத் துப் பிடித்துக் கொண் டுவெரியண்ணர் வீட்டுக்குள்ளே நுழை கிருர், அவரை இருக்கச் சொல்லிவிட்டு நான் கோடிப்பக்க மாகச் செல்கிறேன்.
*அப்பப்பா என்ன சுகம்” என் அடிவயிற்றிலிருந்து எழுந்த நீண்ட பெருமூச்சை இழுத்து நீட்டி விட்டபடி அண்ணருக்கு முன்னல் வந்து நிற்கிறேன். மயூரன் அண்ணனின் கைப் பிடியிலிருந்து விடுபட்டு புழுதியில் விளையாட ஓடுகிமுன்.
தம்பி. நீ ஒருக்கா நவரத்தினத்தைச் சந்திச்சுப்போட்டு வா. கத்தோருக்குப் போனியெண்டா சந்திக்கலாம். ஆறுதி
- 60 -

நாளேயும் அடுப்பு எரியும்
லாயும் கதைக்கலாம். நேத்து அவரைச் சந்திச்சனன். அப்ப "மாமா உங்கடை தம்பியின்ரை விசயத்தைப் பற்றி இப்ப வும் யோசிச்சனன்’ எண்டு அந்த மனிசன் சொன்னவர்.”
அண்ணர் நவரத்தினத்தைப் போய்ச் சந்திக்கச் சொல்லி விட்டார். ஆனல். நான்?
குசினிப்பக்கம் பார்த்து மனைவிக்குக் குரல் கொடுத்தேன். அண்ணருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
‘தங்கச்சி தேத்தண்ணி ஒண்டும் வேண்டாம்; இப்ப தான் குடிச்சிட்டு வாறன்.”
அடிக்கடி விரும்பித் தேநீர் அருந்தும் அண்ணருக்கு, குசி னியில் இருக்கும் தேயிலைப் பேணியும், சீனிப்போத்தலும் வெறுமையாய்க் கிடப்பது தெரியாமலில்லை.
நின்ற இடத்திலேயே யோசித்தபடி நிற்கிறேன். "என்ன தம்பி யோசிக்கிருய்? அப்ப போய்ச் சந்திக் கிறது தானே!" x
‘ஆரைச் சந்திச்சு என்ன? ஒன்பது மாசமாச்சு. ஒரு பிரயோசனமும் இல்லை. நித்திரையிலை கனவு கண்டு எழும் பிக் கதை சொல்ற மாதிரித் தமக்குப் பிடிச்ச நேரத்திலே - ஒளிப்பொட்டு கண்ணில படுகிறமாதிரி - தெரியிறவங்களுக்கு வேலை கொடுக்கிருங்கள்! இந்த நிலையில் நாம யாரைப் பிடிச்சென்ன? பிடியாமல் இருந்தென்ன? தாங்களெடுத்த தீர்மானத்தையே செய்யக் கையாலாகாதவங்களை எந்தக் கொம்பைப் பிடிச்சுப் போனலும் செய்யவா போருங்கள்! போனகிழமை ஆஸ்பத்திரிப் பக்கம் போனன். தற்செயலாக கண்ணுடி தவரத்தினத்தைச் சந்திச்சனன். தன்ரை ஒண்டு விட்ட சகோதரி முறையானவவும் என்னைப் போலத்தான் இருக்கிருவாம். அவ விடயமாகத்தான் கொழும்புக்குப்போய் கதைச்சதாயும், அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாதெண்டு அதுக்குப் பொறுப்பானவர் சொன்னதாயும், GoFnrgistressa sufiħ. இதுக்குப்பிறகு நவரத்தினத்திடம் போய் என்ன பிரயோ சனம்?
-سس- 61 --

Page 33
கி. பவானந்தன்
"நான் சொல்றதைக் கேள் தம்பி போனகிழமை அவ ற்றை "அரச"கையாள் "பெரியவர்' வந்தவர். என்ர கண் ணுல பார்த்தன். நவரத்தினமும் அவரும் ஒரே மேசையில் அக்கம் பக்கமாய் இருத்து கதைச்சவை. அத்தாள் செல்வாக் கானவர் நவரத்தினத்தோடை அவருக்கு நல்ல ஒட்டு, கட் டாயம் செய்வார். நீ ஒருக்காப் போய்ச் சந்திச்சால் நல்லது: உன்ரை நன்மைக்காகத்தான் சொல்றன் தம்பி . 9
அண்ணர் சொல்லிவிட்டு எழுந்து மேற்குப்புறக் கண் டாயத்தைக் கடந்து, அடுத்த வீட்டு குஞ்சியப்பர் வீட்டுக் குப் போகிருர்,
அவர் இருந்த கதிரையில் போய் இருந்து கொள்கிறேன்.
o o 80 ๗ o
அந்த யூ?ல 17ந் திகதி என் ஞாபகத்திரையில் வருகி றது. எட்டு மாதம் முடித்து ஒன்பதாவது மாதம்.
நாங்கள் சும்மாக அதைச் செய்யவில்லை; சட்டவிரோத மாகவும் அதைச் செய்யவில்லை; எல்லாம் முன்னேற்பாட் டின்படி முன்னறிவித்தல் கொடுத்துத்தான் செய்தோம். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளத்தில் கொஞ்சமாவது உயர்த்தித் தரும்படி கோரித்தான் வேலைநிறுத்தம் செய் தோம். ஆணுல் இன்னும் முடிவு எங்களின் பார்வைக்குத் தெரிவதாய்த் தெரியவில்லை.
குழந்தைகள் தான்கு - மனைவி எல்லாமாகக் குடும்பத் தில் ஆறு பேர். ஒவ்வொரு மாதமும் வேலை கிடைக்கும் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் வேலை ஒன்றுக்கும் போகா மல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன்.
“என்னப்பா.. இப்படியே இருந்தா என்ன செய்யி றது? இரண்டு மாசம் முடிஞ்சு போச்சு, அங்கால இங்கால எண்டு மாறினன். எத்தின நாளக்கு மாறிறது. பால்மாவும் கிறேப் மிக்சரும் முடிஞ்சு போச் சுது. ஓயாது குழந்தை அழுது களைச்சு விக்கல் எடுத்துப் போட்டுப் படுத்திட்டுது.
- 62 -

நாளையும் அடுப்பு எரியும்
மற்றதுகளுக்கு ஒரு நேரக்கஞ்சிக்கும் வழி தெரியேல்லை. அது களின்ரை வயிறு காற்றைக் குடிச்சுப் பொரூமி இரைச்ச லோடு சத்தம் போடுதப்பா. உடுப்புகளும் அழுக்காப்போச்சு: ஒரு துண்டுச் சவுக்காரமும் இல்ல. இப்ப என்ன செய்யிற
தப்பா. ”
என் மனைவியின் புத்திசாலித்தனத்தால் ஏதோ இத்தனை நாளும் குடும்பம் நடக்கிறது. இப்ப அவளால் இயலாது போலும், வேலை இல்லாத தனியணுகிய என்னைப் போலத் தான் அவள் காதில் தொங்கும் வளையல் மட்டும்தான் மிக் சமாக மங்கி மின்னுகிறது. முக்கால் பவுணுக்கு ஒரு மஞ். சாடி குறைவு. அதைத் தவிர வேறு சொத்தாக எதுவும் இல்லை.
என்னைக் கைப்பிடித்த அவளோ, தானுே எத்தச் சுகத் தையும் மேலதிகமாகவோ, சாதாரணமாகவோ எந்தக்காலத் திலும் அடைந்தது கிடையாது. கடந்த கால என் உழைப்பு எங்கள் தேவைக்குப் போதுமானதாய் இருக்கவில்லை.
முடிவாக அவளின் காதில் மின்னிய அந்த ஒரேயொரு வளையத்தைப் பெற்று விற்று வந்த பணம் இரண்டு மாதம் பட்ட கடன் போக மிச்சமாயுள்ள சில்லறையில் சில நாட் கள் கரைந்தது.
வேலே முடிந்து இரவு ஏழுமணியளவில் வீட்டுக்கு வந் தேன்.
பழக்கமில்லாத வேலை செய்துவிட்டு களைத்து இளைத்து வந்த எனக்கு குளிப்பதற்காக அடுப்பில் சுடுதண்ணிர் வைத் திருந்தாள். சுடவைத்த வெந்நீரை பெரிய அண்டாவில் ஊற்றி குளிர்ந்த நீரைக் கலந்து குளிக்கிறதுக்குத் தயாராய் வைத்திருந்தாள் என் மனைவி பிள்ளைகள் ஒட்டிய அரை வயிற்றேடு பாயில் சுருண்டு வளைந்து ஒன்றைஒன்று அனைத்து படி அக்கினி மூச்சுகளை வெளியேவிட்டு படுத்திருந்தன.
மனைவியின் முகம் அழுது கறுத்துச் சிவத்திருந்தது. சேட் டைக் கழற்றிக் கொடியில் வைத்துவிட்டு, சறத்தையும் மாற் றித் துவாயை அரையில் கட்டிக் குளிக்கச் சென்றேன். சின்
- 63 -

Page 34
கி பவானந்தன்
னக் கிண்ணத்தால் தண்ணியை அள்ளி முதுகில் ஊற்று கிருள். என் உடலெங்கும் படிந்து பரவியிருந்த தூசுகளும், ஊத்தைகளும் போக என்னுல் தேய்த்துக் கொள்ள முடிய வில்லை. என் மனைவியின் கைகள் உதவிக்கு வந்தன.
குளித்துவிட்டு வேட்டியைக் கட்டிய நான் கதிரையில் போய் அமருகிறேன்.
அரிக்கன் லாம்பைக் கையிலெடுத்துக் கொண்டு என்ன ருகே வந்து அமருகிருள் என் மனைவி. கொடியில் இருந்த சேட்டு நிலத்தில் விழுத்து கிடக்கிறது. அதை எட்டி எடுத்து அதற்குள் கையை வைத்து சில நோட்டுகளை எடுத்து,
“இத்தா மூண்டு மாசத்துக்குப் பிறகு உழைச்ச முதல் உழைப்பு."
‘என்னப்பா உள்ளங்கையும், விரல்களும் வெள்ளையப் பம் பொங்கினப் போல கொப்புளிச்சுக் கிடக்கு. எத்தினை முறையெண்டு சொல்றது? வீட்டோட இருக்கச் கொன்னல் கேட்கமாட்டியள்."
"என்ன செய்யிறது? எல்லாம் என்னுலதானே . மூண்டு மாசம் எப்பிடியோ போட்டுது. இனியும் பொறுக் கேலாதெண்டு தான். கோபாலின் விறகுக் காலைக்குப் போனன்; இந்தக் காசுகள் கிடைச்சுது .'
‘விறகு கொத்தவா போனியள். 1"
"அதெல்லாம் இருக்கட்டும்; சாப்பிட ஏதாவது .
'காக்கொத்தரிசி அன்னம்மாக்காட்டை வாங்கி உலை சிசிசிசின். ஒரு நீத்துப்பெட்டி ஒடியல் புட்டும் அவிச்சன். அதுகள் மத்தியானமும் இப்பவும் நாய்கடி பூனைகடியாகப் பிடுங்குப்பட்டு சாப்பிட்டுதுகள், ம் . இதைச் சாப்பிடுமன் அப்பா. ஓம்! இனி விறகு கொத்தப் போகவேண்டாம்."
சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்ற எனக்கு, கை கால்கள் அசைக்க முடியாமல் மூட்டு மூட்டாக வலி எடுத்து உடலெல்லாம் கொதியாய்க் கொதித்தது. காலையில் படுக் கையில் இருந்து எழ முடியவில்லை.
- 64

நாளையும் அடுப்பு எரியும்
எத்தனை நாளைக்கு ஆறு உயிர்களின் வயிறுகள் அரை யும் குறையுமாக வெறுமையாய் இருக்கமுடியும். என் உடல் ஒரளவு உடல் உழைப்பில் தேறிவிட்டது
வயிருர ஒரு நேரச் சாப்பாடும், இருநேரப் பால் தேநீ ரும், ஆறுமணிக்கு வீட்டுக்குத் திரும்பும்போது கையில் இரு டது ரூபாவும். எவ்வளவு பெரிய காசு.
சுவருக்குப் பெயின்ட் அடிக்கிற வேலைக்குத்தான் செல்ல முடிந்தது.
“என்ன தம்பி, சரியான திமிர்தான் உங்களுக்கு. நிழ லுக்கய் இருந்து வேலை செய்யமாட்டாமல் உந்த வேலையில இறங்கினியள்; இப்ப எப்பிடி?"
வேலைக்குப் போன இடத்தில் வீட்டுக்கார எஜமானி என்னேப் பார்த்துக் கேட்கிருள்.
திமிர் இல்லை ஆச்சி. நாங்கள் நியாயமானதைத்தான் கேட்டம். எங்களாலை வாழ ஏலாத நேரத்திலதான் இப்ப டிச் செய்தம். அதிலை நியாயமும் இருக்கு; நீதியும் இருக்கு. இது அவங்களுக்குப் புரியல்ல. புரியல்லையெண்டு சொல் லேலா. புரியாதமாதிரி நடக்கிருங்கள். நித்திரையில இருக் கிறவனை எழுப்பலாம். நித்திரை மாதிரிப்படுத்திருக்கிறவனை எழுப்பேலாது.”
“உங்களோட கதைக்கேலாது தம்பி. அது சரி முந்திப் பிந்தி இந்த வேலை தெரியுமோ?
"பத்துப் பன்னிரெண்டு வருசமாய்த் தொழில் செய்யா தது சாடைமாடையாய்க் கைநடுங்குது- 9
இல்லை ஆச்சி, இவன் பொடியன் உத்தியோகத்திற்குப் போனப்பிறகு நல்லாய் குடிச்சுத் திரிஞ்சவன். இப்ப விட் டுட்டான். அதுதான் கை நடுங்குது . பதட்டப்படுகிறன்." என் நண்பன் ஒரு பெரிய பொய்யைச் சொல்லி, இந் தத் தொழிலில் என் கையாலாகாத் தன்மையைத் தெரிய விடாமல் சமாளித்துவிட்டான்.
- 65 -

Page 35
கி. பவானந்தன்
அந்த வேலையில் என்ஞல் நீடித்து நிற்கமுடியவில்லை. கழுத்து வாங்கல், கண்ணுக்குள் சுண்ணும்பு விழுந்து கர கரத்து அரித்து உபத்திரம் கொடுத்ததால், அதற்கு முழுக் குப் போடாமல் என்ன செய்யமுடியும்.
பத்து நாளாகச் சோற்றுப்பானை அரைகுறையாக அடுப் பில் ஏறியதும் ஏரூததுமாகத்தான் இருந்து வருகிறது.
வெங்காயம் வைக்கிற காலம்.
குனிந்து மண்வெட்டியால் கொத்தி மண்ணைப் புரட்டு கிறபோது முதுகெலும்பும், தொடைத் தசைநாரும் - தோற் பட்டியால் இறுகக்கட்டி இழுக்குமாப்போல இழுத்து வலித்த வலிப்பையும் மறந்து பதினைந்து ரூபாய்க்கும் ஒரு நேரக்க-ை அப்பத்திற்குமாய் வேலைக்குச் செல்கிறேன்
அரிசி போட்ட சோற்றுப் பானை நெருப்பின் கொதிப் பால் வெளிப்பானையில் பொங்கி வடிந்து சூட்டின் வக்கரிப் பில் காய்ந்து பொருமியது போல் முதுகும், தோள்மூட்டும் செதில் செதிலாக படைபடையாகக் கிளம்பி, கடித்துச் சொறிந்த போதும் - குடும்பப் பாரச் சுமையை இறக்கி வைக்கிறதுக்காக இதயத்திற்குள்ளே அழுது அழுது அசி" கிப் பொறுமையாய் வேலையைச் செய்யத்தான் முடிந்தது.
வெங்காயம் நடுகிறபோது இடதுகையில் காயை எடுத்து ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் சேர்த்து காயைப் பிடித்து எடுத்து தெரிந்து வலக்கையின் பெருவிரலையும், ஆட் கட்டி விரலையும் சேர்த்துப் பிடித்து பெருவிரலை ஊண்டு கிறபோது பெரு விரலுக்கு உண்டான வலியைக் கொஞ்ச நேரம் மறந்து, நாரி உழைகிறதே என்கிற அவலத்தில், இரு கடிக்கட்டுச் சுமைகளை முழங்காலில் மூண்டு கொடுத் துத் தாங்கி சற்று ஆசுவாசப்படுத்துகிறபோது .
*பொடியா வேல செய்யிறதெண்டால் வேலயைச் செய்; இல்லாட்டிப் போ. கையுக்கு முழங்காலக் குடுத்து ஆஞ்சு ஒஞ்சு வேல செய்யவே வந்தனி. சவரியாற்றை மணி பன் னிரண்டு எண்டதும் அடிக்க, வேலை முடிஞ்சு போச்செண்டு
-- 66

நாளேயும் அடுப்பு எரியும்
அவசரப்பட்டு அப்பிடி அப்பிடியே விட்டுவிட்டு அந்த நேரத்துக்கு எழும் புவியள். இப்ப என்னடா எண்டால் முழங்காலில முண்டு குடுக்கிறியள். சுறுக்காய் வேலயச் செய்யடா பொடியா”
கூடவேலை செய்கிறவை என்னைச் சுற்றி இருக்கும்போது வேலை வாங்கிற கமக்காறன் என்னை ஏசிஈ போது அதுக்கு காது கொடுக்காமல் வேலையைச் செய்கிறேன்.
பத்துநாள் வேலை கிடைத்தால் மிச்சம் இருபது நாளும் நெருப்பை அள்ளி வீசும் வயிற்றை நிரப்பிக்கொள்ள ஆலாய்ப் பறக்கிறேன். அன்ருடக்கூலிகள் படும் வேதனைகள் என் மனதில் நிழலாடுகிறது.
o s 酸姆
தம்பி ரகுபதி. என்ன இன்னும் எழும்பாமல், தான் போகேக்கை இருந்த மாதிரியே கதிரையில் இருந்து யோசிக் கிருய் போல. . ஏன் இப்ப என்னுேட வாவன். நானும் நவரத்தினத்திட்டை வந்து சொல்றன்.”
அடித்துச் சென்ற கரைந்து ஒடிய மாதங்களில் நான் செய்த வேலைகளை எல்லாம் இரை மீட்டுப் பார்க்கும்போது, தொய்ந்துபோன வலையில் பிடிபட்ட மீன், அதை அறுத்து சின்னபின்னப்படுத்தி ஓடிய மாதிரி அண்ணரின் குரல் என் னைச் சுயநினைவுக்கு இழுத்துவந்து நிறுத்துகிறது.
*இதுவரை உங்களுக்குப் பொய் சொல்லேல்ல; இனி மேலும் பொய் சொல்ற மனம் எனக்கில்லை. பொய் சொல் றதெண்டால் ‘நான் நவரத்தினத்திடம் போறன்’ எண்டு மட்டும் சொல்லியிருப்பன். ஆஞல் என்னுல் அப்பிடிச் சொல்ல முடியாது. நீங்கள் அப்பிடிச் சொல்ல முடியாத மாதிரி என்னை வளர்த்திட்டியள். *
*கணக்க யோசியாதை தம்பி . ஒழுங்காய் நீ வாழு றதைப் பார். நீ படுற கஷ்டத்தை என்னல் பார்க்கேலாது. முக்கியமான விசயத்தைச் சொல்ல மறந்துவிட்டன்."
- 67 -

Page 36
கி. பவானந்தன்
'தம்பி, இப்ப வெளியில நிக்கிறவையளில எங்கட ஆக் கள் கிட்டத்தட்ட நாப்பத்தைஞ்சுபேர் வரை வரும். எல் லாற்றை விபரத்தையும் எடுத்துத்தரச் சொன்னவராம் பெரியவர். நவரத்தினம் மூலம் குடுத்தால் வேலை கிடைச்சி டும் அதுதான் உன்ரை விபரத்தையும் குடுப்பம் எண்டுதான். வெளிக்கிடு . . 2
‘நான் என்ன தனியணுகவா செய்தனுன். என்னுேட எத்தினைபேர் செய்தினம். எத்தினைபேரைச் சந்திச்சு எங் களுக்குள்ள கஷ்டங்களைச் சொல்லி அவையளை உணரச் செய்து குதிக்க வைச்சேனே, அவங்களை எல்லாம் மறந்து என்ரை குடும்பத்தின் தர வயிற்றை மட்டும் கழுவ. கேவ லம் 'சாதியின் பேரால சலுகையா .. ?" அதிலும் பார்க்க வேலையை இல்லாமல் போஞலும் பரவாயில்லை. அண்ணே இண்டைக்கு வெளியே நிக்கிழுேமே - மொழி - இனம் - அந் தஸ்து என்கிற கட்டுக்களை எல்லாம் உடைத்தெறிந்து ஒண் டாய் நிக்கிருேமே. அதுதான் அவங்கள் ஒண்டாய் நிற் கிற இந்தச் "சாதியைக் கண்டு பயப்படுகிருங்கள். எங்க ளைப் பிரிக்கிறதுக்கு அவங்கள் சலுகை தாறன் என்கிருங் கள் இதையெல்லாம் நம்பி நீங்கள் இந்த வீட்டுக்கு வந் திருக்கிறியளே. அதை நினைக்கிற போது கவலையாய்த் தான் இருக்கு. நவரத்தினம் மாதிரியான வங்கள் இண் டைக்கு அவங்களோடை நிப்பாங்கள். நாளைக்கு இன்னெ ருத்தரோடு நிப்பாங்கள். அவனைப் போல ஆக்கள் திறம் மாறும் பூக்களாய் இருப்பினம், நாங்கள் எப்போதும் சரி யான பக்கம்தான் நிப்பம்.”
இரத்தம் சூடேறிக் கொதிக்கிறபோது மனம் ஆவேச மாகித் திரண்டு எழுகிற மூச்சில் குழைந்தெடுத்த சொற் களாய் வார்க்காமல் இருக்கமுடியவில்லை.
வாசல் நோக்கி தலை குனிந்தபடி நடக்கிருர் அண்ணர். என் நெஞ்சிற்குள் எரிந்து புகைந்தவையை அணைக்கமுடிந்தது.
மனேவியைப் பார்க்கிறேன். அவளைக் காணவில்லை, குசி னிக்குள் எட்டிப் பார்க்கிறேன்.
-س- 68 --

நாளையும் அடுப்பு எரியும்
“மேசன் சிவராசா வந்திட்டுப் போனர். தாரிேக்கு ஆத்தி யடியில வேலையாமப்பா.
"நாளையும் அடுப்பு எரியும்."
கி. பவானந்தன்
துன்னுலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமக்கென ஒர் இலட்சியத்தை ஏற்றுக்கொண்டு, அந்த இலட்சியத்தினின் றும் நெறிபிறழாது எழுதி வருகிறர் இவரது முதல் சிறுகதை யான "தங்கம்’ சிரித்திரனில் வெளிவந்தது. 1967 முதல் எழுத் துலகில் புகுந்த இவர், சிறுகதைகள், குட்டிக்கதைகள் உருவ கக் கதைகள், சிறுநாடகங்கள் என்பவற்றின் மூலம் ஈழத்து இலக்கிய உலகுக்கு பங்களிப்புச் செய்து வருகிறர்.
மக்கள் இலக்கிய கர்த்தாவான திரு. கே. டானியல் அவர் களிஞல் மிகவும் நேசிக்கப்பட்ட விரல்விட்டு எண்ணத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் எழுதிய சிறுகதை ஒன்று 1973-ல் நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப்பண்பாடடுக் கழகத் தினர் நட்ாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுக் கொண்ட்து. 1974-ல் சிரித்திரன் நடாத்திய அ. ந. கந்தசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது “அவர்களுக்கு உறக்க மில்லை" என்ற கதை பாராட்டுப்பரிசு பெற்றது. ஈழத்தின் பல பாகங்களிலும் எழுதுவினைஞராகக் கடமை புரிந்த இவர் தற்போது வட்மராட்சி விவாகப் பதிவாளராகப் பணிபுரிகின்றர்,
பிறந்த திகதி: 12-12-1947 முகவரி: "மயூரம்", அல்வாய் வடக்க, அல்வாய்.

Page 37
நாட்கள்,
கணங்கள் e
நமது வாழ்க்கைகள்
த. கலாமணி
காலை எட்டு மணி,
சுருவத்தின் அருகில் வந்திறங்கியபோது 'அப்பாடா? என்றிருந்தது. இவ்வளவு நேரமும் நெஞ்சை நிறைத்திருந்த பயம் மறைந்து மனம் சற்று ஆறுதல டைந்தது. சொல்லி வைத்தாற்போல வீதியின் எதிர்ப்புறமிருந்த செமினரி வாச லில். இரு கைகளிலும் செவ்வரத்தம் பூக்களை ஏந்திய வஞய் சிரித்த முகத்துடன் பங்கிருற்றியஸ்,
*குட் மோனிங் சேர்??
*குட் மோனிங்?
சுருவத்தினருகே சென்று மரியாளின் திருப்பாதங்களில் செம்மலர்களை அர்ச்சித்துத் தோத்தரித்து நிற்கும் பங்கிருற் றியசுடன், கூடவே என் மனமும் மரியாளை இறைஞ்சுகிறது. தூரத்தில் நின்று என் பார்வையாலேயே அன்னையின் காலடி களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்கின்றபோது, நெஞ்சமும் "ஆவே மரியா? என்று மரியாளை வாழ்த்தி ஆரா திக்கிறது.
இதுவரை என்னுள் இருந்த படபடப்பும் நெஞ்சத்துடிப் பும் அடங்கி எவ்வாறு என் மன்ம் அமைதியானது என்
- 70 -

நாட்கள், கணங்கள். நமது வாழ்க்கைகள்
றெண்ணி வியக்கின்றபோதே, அந்த மரியாளின் அருள் பொங்கும் விழிகளில் என் பார்வை நிலைக்குத்தி நின்று, அந்த விழிகளின் விக்கிப்பில் மனம் குளிர்கிறது.
நினேத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.
இன்று நேற்றல்ல, நான்கு வருடங்களாக இதே நடை முறைதான். இந்த நான்கு வருடங்களிலும், விடுமுறை தவிர்ந்த எல்லா நாட்களிலுமே நான் கல்லூரிக்குள் காலடி வைத்ததும் இந்த மரியாளின் தரிசனத்துடன்தான்.
இம்மரியாளின் முன்னுல் நின்று அவளையே உற்றுப் பார்க்கின்றபோது, அவளின் அருள் நிறைந்த விழிகளும் சாந்தம் தவழும் வதனமும் பொழிகின்ற கருணைமழையில் நனைந்து உள்ளம் கசியும் நெஞ்சில் உருவகித்துக்கொண்ட லோகமாதாவின் திருச்சொரூபத்துக்கு ஒர் உருவத்திருமேனி கிடைத்தாற் போன்று உள்ளம் நெகிழ்ந்தது, தனது திருப் பார்வை ஒன்றிஞலேயே அண்ட சராசரம் அனைத்தையும் பேணிக்காக்கும் புவன லோஜனி இப்படித்தான் இருப்பாள், இப்படியே இருப்பாள் என்று மனம் ஆனந்தக் கூத்தாடும்.
கல்லூரி மணி அடிக்கும் ஓசை கேட்டு பங்கிருற்றியஸ் தனது தோத்திரத்தை முடித்துக்கொண்டு திரும்பினன்.
பங்கிா?ற்றியசைக் காண எனக்கு ஆசையாக இருக் கிறது. இச்சிறுவயதிலேயே தனது வாழ்வில் ஒரு நெறி முறையை ஏற்படுத்திக்கொண்ட இவனை தினத்து ஆச்சரிய மாகவும் இருக்கிறது. மூன்று வருடங்களாக, அதுவும் சொல்லி வைத்தாற்போல இதே நேரத்தில் செல்வரத்தம் பூவும் கையு மாக இவனைக் கண்டுகொண்டுதான் வருகிறேன்.
அண்மையிலேதான் இவனது பெற்றேர்கள் "பயங்சர் வாதிகள்" என்ற பெயரோடு மன்னரில் இறந்து போனர்கள். இன்று இவனேர் அனதை ஆனலும் இந்த மரியாளுடன் கொண்டிருக்கும் இந்நேய உறவு இருக்கும்வரை இவன் என்றுமே உளமாய்ச்சலுக்கு ஆளாகப் போவதில்லை என்று என் மனம் தீர்மானித்துக் கொள்கிறது.
سے 7 سس۔

Page 38
த கலாமணி
பங்கிருற்றியசுடன் அருகாக நடந்து, சுருவத்தைக் கடந்து அச்சந்தி வளைவில் திரும்பி தேவாலய வீதியில் காலடி வைக்கின்றபோது பங்கிருற்றியஸ் மெதுவாக அலறிஞன்.
“ஸேர், அங்கை பாருங்கோ?
கனரக வாகனங்களில் நீண்டிருக்கும் துப்பாக்கிகள் வீதி நீளத்துக்குக் குறிபார்த்திருக்க ஆயுதங்களை ஏந்திப் பிடித்த படி ஆயர் விடுதி முன்னுல் "அவர்கள்’.
அத்த வீதி ஏன் இவ்வளவு தூரம் அமைதியாக இருந்த தென்பதும் இப்போதுதான் உறைக்கிறது.
சுருவத்துக்கு எதிர்ப்பக்கமாக இருக்கின்ற சென்ற்சாள்ஸ் பாடசாலைகூட இன்று அடங்கிக் கிடக்கிறது. மற்றைய நாட் களெனின், இந்நேரத்துக்கு இவ்வீதி நெடுக அப்பாடசாலை மாணவர்கள் "லெப்ற் றைற்' அடித்துக் கொண்டிருப்பார்கள். "அவர்களின் வருகையாற்தான் இன்று இந்த அமைதியும் அடக்கமும்.
பங்கிருற்றியசின் கை அவனின் தோளில் தொங்கும் புத்தகப்பையை இறுகப்பற்றுகிறது. எனக்கும்கூட மீண்டும் பயமாக இருக்கிறது. எப்படியும் இப்போது அடையாள அட்டையைக் கேட்கத்தான் போகிருர்கள், நான் மாட்டுப் படத்தான் போகிறேன் என்று நெஞ்சு அடித்துக் கொள் கிறது.
ஒரு சில மீற்றர் தூரம் கடத்தபின்தான் கல்லூரிக்கும் தேவாலயத்துக்குமான பொது வாசலின் முன்னுல் உபஅதி பர் யேசுநேசன் அடிகள் நிற்பது தெரிகிறது. வேதப்புத்த கத்தைப் படித்தபடி நின்றுகொண்டிருக்கும் அடிகளாரைக் கண்டபின் சற்றுத் தென்பாகவும் இருக்கிறது.
அருகில் தெருங்க. தெருங்க. அவர்கள்? நின்றுகொண் டிருக்கும் "உசார்நில் அச்சத்தைத் தருகிறது. எமது தயக் கத்தையும் அச்சத்தையும் விளங்கிக் கொண்டவராய் தனது பார்வையாலேயே தென்பூட்டி எம்மை வருமாறு அடிகளார் அழைக்கிருர், சுற்றிலும் ஆயுதங்களைத் தரித்தவர்களாய்
-- 72 سس

நாட்கள், கணங்கள் - நமது வாழ்க்கைகள்
நிற்கும் “அவர்களுக்கு மத்தியில் வேதப்புத்தகத்தைப் பற் றியவாறு நின்று கர்லூரிக்கு வருபவர்களையும் கண்காணித் துக் கொண்டிருக்கும் அடிகளாரின் மஞேவலிமையைக் காண வியப்பாக இருக்கிறது.
"அவர்களைச் சட்டை செய்யாதவர்கள்போல நெஞ்சில் பயத்தை மறைத்துக்கொண்டு "அவர்களைக் கடந்து கல் லூரிக்குள் நுழைகின்றபோதுதான் நெஞ்சிலிருந்த பயம் முழு வதும் நீங்கி உண்மையாகவே மனம் ஆசுவாசம் கொள்கிறது.
கையெழுத்துப் போடுவதற்காக ஆசிரியர் கூடத்தினுள் பிரவேசிக்கின்றபோது பேச்சை இடைநிறுத்தி அங்குநின்ற ஆசிரியர்கள் அனைவருமே என்பக்கம் திரும்புகின்றனர்.
"என்ன மாஸ்ரர் இன்னும் நிக்கிருங்கள் தானே, உங் களை ஒண்டும் கேக்கேல்லையா?”
- லோறன்ஸ் மாஸ்ரர் வழமையான தனது அட்ட காசச் சிரிப்புடன் விஞவுகிறர்.
'இல்லை ஸேர், பாதர் யேசுநேசன் வாசல்லை நிக்கிருர். ஏன் ஸேர் என்ன விசேஷம்?”
“பிஷொப் ஹவுஸில் ஏதோ மகாநாடாம். "அவங்கடை பெரியவனும் வாருன் போஃ9. அதுதான் நேரத்தோடையே வந்திட்டாங்கள். அதுசரி, உங்கடை பக்கம் விசேஷம் ஒண்டு tóäv&avarr uomt 6ivpurri?”
*விசேஷமாக ஒன்றுமில்லை ஸேர்" என்று கூறிக்கொள் ளும்போதே தலே சற்று வலிப்பது போலவும் இருக்கிறது.
பாடவேளையின் ஆரம்பமணி ஒலிக்கும்போது "பிறேயர்" முடிந்து மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பிக் சொண்டி ருக்கிருர்கள். எனது வகுப்புக்குள் பிரவேசிக்கும்போது வகுப் பிலும் இதே கதைதான். ஆயர்விடுதியின் முன்னல் "அவர் கள்? நிற்பதைக் குறிப்பிட்டு மாணவர்கள் எனக்குப் புதினம் சொல்லும்போது ‘அவர்களைக் கடந்துதான் கல்லூரிக்கு வந்ததாகக் கூறுகிறேன்.
- 73 -

Page 39
த. கலாமணி
மனம் சோர்வாக இருப்பதஞலோ என்னவோ பாடங் களையும் அக்கறையோடு கற்பிக்க முடியாதிருக்கிறது. என் னில் தெரிந்த மாற்றத்தை அவதானித்த ஒரு சில மாண வர் ஏன் ஸேர் ஒரு மாதிரியா இருக்கிறீங்கள்” என்று விசாரிக்கவும் செய்கின்றனர். ‘நேற்றிரவு அதிகம் நித்திரை கொள்ளவில்லே’ என்று கூறிச் சமாளித்துக் கொள்கிறேன்.
மூன்ரும் பாடவேளை எனக்குப் பாடமில்லாதிருப்பது ஆறுதலாக இருக்கிறது. நூலகத்திற்குச் சென்று சற்று ஓய் வாக இருக்கலாமே என எண்ணி நூல்நிலையம் அமைந் திருக்கும் மத்தியபிரிவுப் பகுதிக்கு விரைகிறேன்.
உயர்பிரிவுப் பகுதியையும் மத்திய பிரிவுப் பகுதியை யும் பிரிக்கின்ற அந்தப் பின்புற வீதியைக் கடக்கின்ற போதும் பயம் சற்று எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. இதே வீதி யில்தான் இருநாட்களுக்கு முன்னரும் இருவர் சூடுபட்டு இறந்தனர்.
இந்நேரம் "அவர்கள்? முகாமுக்குத் திரும்பியிருக்கக் கூடும். இதுவரை திரும்பாதிருந்து இந்நேரத்தில் முகாமுக் குத் திரும்புவார்களேயானுல் என்ன ஆகும் என்று எண்ணும் போது தெஞ்சு பதைபதைக்கிறது.
நூல் நிலையத்திற்குச் செல்லும் படிகளில் ஏறி நூல் நிலை யத்தின் முன் விருந்தையில் காலடி வைக்கின்றபோதே மேல் மாடி வெளியினூடாக சவக்காலைச் சிலுவைகளுக்கும் அப் பால் தெரியும் பாதையில் பார்வையை எறிகிறேன்.
நெஞ்சு ஒருமுறை 'திக்’ என்றது.
கவச வாகனங்கள் நிரையாகப் பின்னல்வர முன்னலே அணிவகுத்து அவர்கள்’ வந்து கொண்டிருக்கிருர்கள். இப் போதுதான் ஒருவேளை அவர்களின் உயர்அதிகாரி புறப் பட்டு வந்துகொண்டிருக்க வேண்டும்.
நூல்நிலையத்திற்குள் நுழைந்து சஞ்சிகை ஒன்றைப் புரட்டுகிறேன். மனம் அதில் லயிக்க மறுத்து அலைந்து கொண்
-سس- 74 --

ாநாட்கள். கனங்கள். ஈமத வாம்க்கைகள்
)
டிருக்கிறது. இவ்வளவு தூரம் இன்று என்னைக் கலவரத்திற் குள்ளாக்கிய அடையாள அட்டையையும் அதனை எடுக்க மறந்த என் மறதிக் குணத்தையும் நினைத்து என் மீதே எனக் குச் சினமாகவும் வருகிறது.
தினம் காலையில் உடுப்பு அணியும் போதே சட்டைப் பையினுள் அடையாள அட்டையையும் எடுத்து வைத்து ஒருமுறைக்கு இருமுறை அது இருக்கிறதா என்று தொட் ப்ே பார்த்துத் திருப்தியடைவதுகூட வழக்கமாகி விட்டிருந் தது. இன்று மட்டும் எப்படி அது மறந்து போனது.
மறதியைக் குறித்து மீள்பரிசீலனையில் மனம் இறங்குகின்ற போதுதான் காவேயில் சுமதி என் தோள்மீது சத்தி எடுத் ததும் சத்தியில் சட்டை நனைந்து அதனை மாற்றியதும் ஞாப கத்துக்கு வருகிறது. சுமதியைப் பற்றிய நினைவு வந்ததுமே மனம் சகலதையும் மறந்து அவளைச் சுற்றியே வட்டமிடு கின்றது.
சுமதி இந்நேரம் எப்படியிருப்பாள்? .. இன்னமும் இடைவிடாது இருமிக்கொண்டேதான் இருப்பாளோ!
பாவம் குழந்தை, எவ்வளவு தூரம் துடித்துப் போய் விட்டது.
பகிடிபAடியாக இருமல் ஆரம்பித்து இரண்டு கிழமை கள் கடந்து விட்டன. சாதாரண இருமல்தானே என நினைத்து பனங்கற்கண்டை கூவியக் கொடுத்து, விளைவு கர்ப் பூரத்தை உருக்கி நெஞ்சுப் பள்ளத்தில் தொட்டுத்தொட்டு வைத்ததில் மூன்று நான்கு நாட்களும், பின்னர் குக்கலாக இருக்குமோ என்றெண்ணி புங்கங்காயும் புலித்தோலும் கோத்துக் கழுத்தில்கட்டி அதிமதுர வேரைப்பிழிந்து அதன் சாறைத் துணியில் நனைத்து உவியச் செய்ததில் நாலைந்து நாட்களும் கழிந்து போயின. அதன் பின்பாவது ஆஸ்பத் திரியில் காட்டியிருக்கலாம். ஆயுர்வேத வைத்தியரின் அனு மானங்களோடு கூடிய குளிகைகளை உரைத்து உரைத்துக்
سست 75 =

Page 40
த. கலாமணி
கொடுத்ததில் மேலும் நாட்கள் கழிந்து இருமல் அதிகரித் ததே தவிர குறைந்த பாடாயில்லை.
எப்போதுமே இப்படித்தான். கைமருந்துக்குப் பிறகு தான் ஆயுர்வேத வைத்தியர். அவருக்கும் சரிவராவிட்டால் தான் ஆஸ்பத்திரி. நேரத்தோடேயே ஆஸ்பத்திரியில் காட்டி யிருந்தால் குழந்தை இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்காது. நான் சொல்லி கேட்டால் தானே!
என்னுடைய பேச்சை யார் கேட்கிருர்கள். தங்கச்சி கூட இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பெரிய மனுஷி யாகி விட்டாள்.
ஆணுல் அவளையும் ஏசிப் பயனில்லே. ஏழை ן_j456 ח% דוth6%ז இயலாமைதான் கைமருத்துகளிலும் பழைய நடைமுறை களிலும் அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கும் காரணமோ?
*டும் . டும் . . டும் .” திடீரென்று வெடித்த குண்டுகளின் சத்தத்தில் யன் னல்கள் அதிர்ந்தன.
என்னவாக இருக்கும்..?
“முகாமுக்குக் கிட்ட உள்ள வீடுகளைக் குண்டு வைத் துத் தகர்க்கிருங்களாம் ஸேர்.? - நூலகர்தான் கூறுகிருர், இந்த நிலைமையில் பார்தான் புதுவீடு கட்டப்போகி ரூர்கள்?
மச்சானும் நல்ல மேசன்தான். பாவம், வேலைவெட்டி இல்லாமல் அவர்களின் வாயும் வயிறுமே அரையும் குறை யும்தான். இந்த நிலைமையிலும் நோயும் பிணியுமென்ருல்.? எங்கள் எல்லோரையும்விட மச்சான்தான் பிள்ளையின் வருத்தத்தால் நன்முக அரண்டு போய்விட்டார். தொடர்ந்து மூன்று நான்கு நாட்களாக நித்திரையும் இல்லை. நேற்று காரையும் பிடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த
ܚܝ 76 -

நாட்கள், கணங்கள் . நமது வாழ்க்கைகள்
போது தனது இயலாமை குறித்துக் குன்றித்தான் போய் விட்டார்.
ஆஸ்பத்திரியிலும் மருந்துக்குத் தட்டுப்பாடு. முக்கிய மான ஊசிமருந்தொன்று வெளிக்கடையில் எடுத்துத் தரும் படி சீட்டெழுதிக் கொடுத்திருக்கிருர்கள். அந்த ஊசி போட் டால்தான் விரைவில் சுகம் வருமாம். பருத்தித்துறையில் ஒரு கடையிலுமே அந்த மருந்து இல்லே, யாழ்ப்பாணத்தில் தான் வாங்கவேண்டும்.
காற்சட்டைப்பையில் கைவிட்டுப் பார்த்துக் கொள் கிறேன். மருந்துச் சீட்டு பத்திரமாக இருக்கிறது. பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது மறக்காமல் மருந்தை வாங்கிச் செல்லவேண்டும் என்று நினைத்துக் கொள்ளும் போதே ஊசிபோட்ட பின்பாவது குழந்தைக்குச் சுகம்வர வேண்டும் என்றும் மனம் அங்கலாய்க்கிறது.
பாடம் முடிந்த மணி ஒலித்தது கூடத்தெரியாமல் நினைவுகளில் மூழ்கியிருக்கும் என்னை அந்நினைவுகளிலிருந்து நூலகர்தான் மீட்கிருர், நினைவுகளின் இரை மீட்பு உள்ளத் துக்கு மட்டுமன்றி உடலுக்கும் தென்புதர என் நடையின் விரைவிலும் அது தெரிகிறது.
இடைவேளை நேரத்தின்போதான சந்திப்பில் அவர்கள்? தங்கள் முகாமுக்குத் திரும்பிப் போய்விட்டதாக ஆசிரியர் கள் கதைத்துக் கொள்கிருர்கள்.
மருந்து வாங்கவேண்டுமென்ற நினைவு ஒன்றே எஞ்சி நின்று, இடைவேளையைத் தொடர்ந்து வந்த பாடங்கள் எல்லாமே எப்ப்டியோ கழிகின்றன.
கடைசிப்பாடம் முடிவதற்கான மணி அடிக்கும்வரை பொறுத்திருக்காது வகுப்பைவிட்டு வெளியேறுகிறபோது மணியும் ஒலிக்கிறது. மாணவர்கள் எல்லோரும் நிரைநிரை யாக கல்லூரி அலுவலக முன்பாக உள்ள வெளியில் பிரார்த் தனேக்காக மரியாள் சிலைமும் கூடுகின்றனர்.
ー77ー

Page 41
5. GFÚT DISI
கல்லூரிப் பின்புற வீதியில் இறங்கிக் கல்லூரிவிதி"யில் நடந்து கொண்டிருக்கும்போது மாணவர்களின் பிரார்த்தனே துல்லியமாகக் கேட்கிறது.
*அருள் நிறைந்த மரியாயே வாழ்க!
கர்த்தர் உம்முடனேயே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரும் நீரே உம்மு 39டய திருவயிற்றின் கனியாகிய யேசுவும்
ஆசீர்வதிக்கப்பட்டவரே அர்ச்சேஷ்ட மரியாயே, சர்வேஸ்வரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்
கொள்ளும் ஆமென்’ அவர்களின் பிரார்த்தனையை உள்ளொலித்தவாறே ஆமென் கூறி முடித்து ஒருசில அடிகள் எடுத்து வைப்பதற் குள்ளாக கல்லூரி முன்புற வாசலால் வெளியேறி என்னே யும் கடந்து ஒரு சில மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கின் றனர். “பாடசாலை பஸ்ஸில் "சீற்’ பிடிக்கவேண்டும் என்ற அவதி அவர்களுக்கு,
மெயின் ருேட்டில் காலடி வைப்பதற்கு ஒரு சில மீற்றர் தூரம்தான் இருக்கையில் அந்த மாணவர்கள் திரும்பி ஓடி வருகிருர்கள்
“ஸேச் ஸேர் ஒடுங்கோ, ஆமெட் கார் வரூது"
என்ன செய்வதென்றறியாது மனம் பதறுகிறது. அருகி லுள்ள ஞானம் மாஸ்ரர் வீட்டுக்கு ஒடுவோமா என்று தீர்மானிப்பதற்குள்ளாகவே ஓடிவந்து கொண்டிருந்த ஒருவன் மீண்டும் அழைக்கிருன்.
*ஸேர் வாங்கோ அது டேவிட் மூேட்டாலே திரும் பீட்டுது’
இப்போது கொஞ்ச நாட்களாத "அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் தினம்தினம் இதே அதிர்வுதான்.

நாட்கள், கணங்கள். நமது வாழ்க்கைகள்
மெயின் ருேட்டில் ஏறி மினிபஸ் ஏதும் வருகின்றதா என்று பார்க்கின்றபோது, என்னருகே சைக்கிள் ஒன்று வந்து நிற்க. .
ஒ, பங்கிருற்றியஸ்!
*கோட் பிளெஸ் யூ ஸேர், வாங்கோ ஸேர் உங்களை ரவுணிலே விட்டிட்டு வாறன்’
தான் ஏறிவந்த சைக்கிளையே தனது நண்பனிடம் கேட்டு வாங்கி, பங்கிருற்றியஸ் என்னிடம் விடுக்கும் அழைப்பை மறுக்க முடியாதவணுய் சைக்கிளின் முன் "பார் "இல் ஏறி அமர் கீறேன்.
*கோயில்வீதி'யில் சென்று, ஆஸ்பத்திரி வீதிக்குத் திரும்பி ஆஸ்பத்திரிச் சந்தியை அண்மிக்கின்றபோது.
புழுதி கிளப்பியவாறு மினிவான்களும், கார்களும் மோட் டார்ச் சைக்கிள்களும் பறந்துவர மக்கள் செய்வதறியாது நாலாபக்கமும் சிதறி ஓடிக்கொண்டிருக்கிருர்கள்.
“கோட்டையிலிருந்து வெளிக்கிட்டுட்டாணும். ரவு ஃணத்தான் சுற்றி வஃாக்கப்போருளும்.”
- பலர் நாம் கேளாமலே சொல்லிக்கொண்டு ஒடுகிருர் கள்.
சைக்கிளைப் பலாலி ருேட்டில் திருப்பி பங்கிருற்றியஸ் விரைவாக உழக்கிக் கொண்டிருக்கிருண். ஆரியகுளச் சந்தி யடியில் நிற்கும் மினிபஸ் ஒன்று புறப்பட்டுச் செல்வத் தயாராகிறது.
“நெல்லியடி பருத்துறை போருக்கிள் கெதியா ஓடிவந் தேறுங்கோ??
“தாங் யூ வெரிமச் பங்கிருற்றியஸ், ஸ்ரான்லி ருேட் டாலே கெதியாப் போய்ச்சேரும். கவனம், கவனம்."
பங்கிருற்றியஸை அனுப்பிவிட்டு மினிபஸ்ஸை நோக்கி ஒடுகிறேன். மினிபஸ்ஸில் சரியாகக் காலூன்ற முன்னரே அது புறப்படுகிறது. பருத்தித்துறை வீதியில் விரைந்து ஆனைப்பத்தியை அடையுமுன்னரே டேப்டுப்' என்ற ஷெல்
سس۔ 9? -۔

Page 42
த கலாமணி
அடியின் ஒலிமிக அருகாகக் கேட்கிறது. ஆரியகுளத்தடிப் பக்கமாகத்தான் விழுந்து வெடித்திருக்கவேண்டும். தொடர்ந் தும் ஷெல் அடிகள்.
"ஆ, பங்கிருற்றியஸ்!” - மனம் அலறுகிறது. கோப்பாய்ச் சந்தியைச் சென்றடைகின்றபோது ஹெலி கொப்ரரி ஒன்று வடக்காகப் பறந்து போகிறது. சந்தியைக் கடந்து பூதர்மடவாேவில் மினிபஸ் திரும்பும்போது வடக் காகச் சற்றுத் தொலைவில் மற்றுமொரு ஹெலிகொப்ரரி வட்டமிடுவதும் தெரிகிறது: -
பிரயாணக் காசுக்காக மினிபஸ் - பொடியன் கைநீட் டும்போது காற்சட்டைப்பையினுள் கைவிட்டுக் காசை எடுக் கையில். காசோடு சேர்ந்துவந்த மருந்துச் சீட்டைக் கண்டுமனம் அதிர்கிறது. -
இப்போது என்ன செய்வது .? இதிலேயே இறங்கி சற்றுநேரம் பொறுத்து ரவுணுக்குத் திரும்பிப்போய் மருத்து வாங்கி வருவோமா என்று எண்ணுகின்றபோது அடையாள அட்டையை எடுத்துவர மறந்ததால் காலேயில் அடைந்த கலவரமும் நினைவுக்கு வந்து உறுத்துகிறது.
அடையாள அட்டை வைத்திருந்தவர்களிலும்கூட எத் தனை தடவைகளில் இளவயதினரைக் கைது செய்து கொண்டு போய்விட்டார்கள். என்னிடம் அடையாள அட்டையும் இல்லாத இந்த நிலைமையில், சொல்லத் தேவையில்லை.
நீர்வேலிக் கந்தசாமிக் கோயிலை அணுகும்போது மேலும் ஓர் அதிர்ச்சி.
"புத்தூருக்கும் நீர்வேலிச் சந்திக்குமிடையிலை சோதினை GQagiu u9?(?ÄbasGfr... ... அடையாள அட்டை வைச்சிருக்கிருக் களை ஒண்டுஞ் செய்யாங்கள் பயப்பிடாமல் போங்கோ’
-எதிரில் வந்த வாகனமொன்று செய்தி கூறிச்செல்கிறது. எனக்கு யோசனையாக இருக்கிறது. அப்படி அவர்கள் விசாரிக்கின்றபோது அடையாள அட்டைய்ை ள்டுத்துவர
-80

நாட்கள், கணங்கள். நமது வாழ்க்கைகள்
மறந்தமையைக்கூறி ஆசிரியர் என்பதற்கான அத்தாட்சிக் குக் கல்லூரி டயறியைக் காட்டுவோமா என்றெண்ணு கின்றபோதே டயறியின் முகப்பில் ஆங்கிலத்தில் அச்சடித் திருக்கும் ‘சர்வதேச இளைஞர் ஆண்டு 1985° என்ற வாசக மும் அதற்குக் கீழாகப் போட்டிருக்கும் பெரிய கேள்வி அடை யாளமும் நினைவில் வந்து நெஞ்ச்ை நெருடுகிறது.
அதுதான் போகட்டும். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் எங்கள் கல்லூரி அதிபர் யாழ்ப்பாணத்து மாணவர் களின் நிலைமைகள் பற்றி பரிசளிப்புத்தின அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆங்கில, தமிழ்த் தினசரிகள் அனைத் துமே அவ்வறிக்கையைப் பிரசுரித்து, எங்களுடைய கல்லூ ரியும் அரசின் "கவனத்தில் உள்ள இந்த நிலைமையில்.
பஸ்ஸினுள்ளும் சில இளைஞர்கள், மற்றவர்களுக்கும் பயணத்தைத் தொடரப் பயமாக இருக்கிறது. எங்களுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, ‘கந்தசாமி கோயிலின் அருகாகச் செல்லும் கிளை வீதியில் வாகனத்தைத் திருப்பிச் சற்றுத்தூரம் சென்று வாழைத்தோட்டமொன்றின் அருகே பஸ்ஸை நிறுத்துகிருன் றைவர்.
ஹெலிகொப்ரர் வட்டமிட்டுக்கொண்டே தொடர்ந்தும் உறுமிக்கொண்டிருக்கிறது. நேரம் யுகமாகக் கழிகிறது.
நன்ருக இருள் சூழ்ந்துவிட்டது. ஹெலியின் ஒசை அடங்கிவிட்டது. வீதியில் வாகனங்களின் இரைச்சல் ஒலியும் கேட்கத் தொடங்குகிறது.
வந்த பாதையிலே பஸ்ஸைத் திருப்பி கந்தசாமி கோயிலை மீண்டும் கடக்கின்றபோது "அப்பனே முருகா" என்று நடுத் தர வயதுடைய பெண்ணெருத்தி கையெடுத்துக் கும்பிடு கிருள்.
பங்கிருற்றியஸின் நினைவு ஊடறுத்துக் கொண்டு வந்து கரைகிறது.
நேரம் போய்விட்டதே என்று, என்றுமில்லாத வேகத் துடன் விரையும் மினிபஸ் மாலிசந்தியடியில் என்னை இறக்கி
-81 -

Page 43
占· கலாமணி
விட்டுச் செல்கிறது. சந்தி வளவொன்றில் நிறுத்தியிருந்த எனது சைக்கிளை எடுத்துக் கொண்டு நெஞ்சில் வேதனையைச் சுமந்தவண்ணம் வீட்டுக்கு விரைகிறேன். இப்போது குழந் தைக்கு எப்படியிருக்கும் என்று மனம் அடித்துக்கொள்கிறது.
வீட்டை அண்மிக்கின்றபோது படலைக்கு வெளியே மைத் துனர் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருப்பது தெரி கிறது.
குழந்தைக்கு என்னென்றுலும்..? - நெஞ்சு அதிர்கிறது. படலையை நெருங்கியதும் நெருங் காததுமாக துடித்துக்கொண்டே சைக்கிளிலிருந்து இறங்கு கிறேன்.
"என்ன இதிலை நிக்கிறியள், பிள்ளைக்கு என்ன இப்ப.? - மச்சானிடம் அவசர அவசரமாகக் கேட்கிறேன்.
'நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டுதான் நிக்கிறம். ஐடென்ரிற்றிக் காட்டையும் விட்டிட்டுப் போயிட்டாய். ரவுணிலையும் புத்தூரடியிலும் சித்திரவதையும் செய்து கன பேரைப் பிடிச்சுக்கொண்டும் போயிட்டாங்கள் என்று கேள் விப்பட்டு."
மச்சான் பேசி முடிக்கும்வரை காத்திருக்கப் பொறுமை யிழந்து மீண்டும் கேட்கிறேன்.
“பிள்இனக்கு இப்ப எப்பிடி’
“பிள்ளைக்குப் பெரிசா ஒண்டுமில்லை, உனக்கொண்டும் நடக்கேல்லைத்தானே..? V.
* மச்சான் கேட்டுவிட்டு என்னையே பார்க்க, எங்களின் அவலநிலையை எண்ணி அதிர்ந்துபோய் நிற்கிறேன் தான். எதிர் வீட்டு மணிக்கூட்டில் எட்டுத்தரம் அடித்து ஓய்கிறது.
അ brf് 1986
سے 82 ہے

த. கலாமணி
சிறு பராயம்முதல் கலைச்சூழலிலே வாழ்ந்து வருபவர் இவர் வடபகுதியின் சிறந்த இசைநாடகக் கலைஞரான சோதி டர் தம்பிஐயாவின் மகனுன இவரிடம், தந்தையின் இசையும், நடிப்பும் இயல்பாகவே அமைந்திருக்கின்றன சிறுகதை, கவிதை விமர்சனக் கட்டுரைகள். சிறுநாடகங்கள் எழுதுவதில் ஆர்வங் கொண்டவர். பல நாட்கங்களை எழுதி, நெறிப்படுத்தி, அரங் கேற்றியிருக்கிறர். அவற்றில் பிரதான பாத்திரமேற்று நடித் திருக்கிறர். 1974 ஆடித்திங்களில் இவர் எழுதிய காலத்தின் கோலம்’ என்ற சிறுகதை, தாயகம் இதழில் பிரசுரமானது. 1975ல் பேராதனப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசு பெற்றது 1977ல் நீர்ப்பர்சனத் தினக்களத் தமிம்ப் பண்பாட் டுக் கழகம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறு கதையொன்று பாராட்டுப் பெற்றது. "அல்வைக் கலா’ என்ற புனபெயரிலும் இவரது ஆக்கங்கள் வெளிவருகின்றன.
விஞ்ஞானமாணி சிறப்பு (பி. எஸ். ஸி - சிறப்பு) பட்டதாரி யான இவர் யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறர். பெளதீகவியல் பாட்த்தைக் கற்பிப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக மாணவர்களால் மதிக்கப்படு கின்றர்.
பிறந்த திகதி: 04-02-1952 முகவரி: மணிமாளிகை, அல்வாய் தெற்கு, அல்வாய்.

Page 44
அல்சேஷன்கள்
எப்போதும்
உள்ளே வரலாம்
க. நவம்
பாறிக்கிழவியாலோ . அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பருவக்குமரியான அவளது பேத்தி வசந்தி, முன் வீட்டுப் போதகரின் மகன் குமாரு டன் முற்றத்தில் நின்று ‘பாற்பமின்டன்’ விளையாடும் காட்சி நிர்வாண நடனம் பார்க்கையில் உண்டாகும் ஆசூசையை அவளுக்கு ஏற்படுத்தியது.
வசந்தி அணிந்திருக்கும் “மிணிகவுன்” மறைந்திருக்கும் அவளது அங்கங்களின் மடிப்புக்களையும் வளைவு நெளிவு களையும் பகிரங்கப்படுத்தும் விதமாக, சுருங்கி விரிந்து மான பங்கஞ் செய்வதாகத் தோன்றியது, கிழவிக்கு.
அவர்கள் விளையாட ஆரம்பித்த நேரத்திலிருந்து பழஞ் சீலை கிழிவதுபோலப் புறுபுறுத்துக் கொண்டிருந்தான் அவள்
“arug 9ai at. வயந்தி, இஞ்சார். நீயொரு குமர்ப்பிள்ளையல்லே . . சீ.சீ. உதென்ன பவுச் கொட்ட விளையாட்டிடெடிமேன? ருேட்டோரம் ஓவெண்டு
திறந்தாப் போல, கிடக்கிற இந்த முத்தத்தில நிண்டு நீ விளையாடுறதை போறவாற சனமெல்லாம் ஒரு மாதிரியா
-مسـ 84 --سے

அல்சேஷன்கள் எப்போதும் உள்ளே வரலாம்
கப் பாக்குதுகளெல்லே. கொஞ்சமெண்டாலும் மரிசாதியா இருக்கிறதில்லையே பிள்ளை.”
வெள்ளை வெளேரென்றிருக்கும் புத்தம்புதிய ‘வுட்ல் கோரிக்” வசந்தியினதும் குமாரினதும் பலப்பரீட்ஷைக்குள் ளாக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட நேரமாக நிலத்தைத் தொட்டுவிடாமல் அங்டிமிங்குமாக காற்றில் பறந்து கொண் டிருக்கிறது.
கழுத்தளவுடன் கத்தரிக்கோலுச்கு இரையான கருங் கூந்தல் அசைந்தாட மாறிமாறி இரண்டு கைகளாலும் வெகு லாவகமாக "றைக்கற்றை சுழற்றி வீசும் நளினம், இவ்விளே யாட்டில் வசந்திக்கிருக்கும் திறனையும் தேர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
*ஆச்சி உங்களுக்கு வேலை இல்லாட்டி சும்மா பேசாமல் இருக்கிறதுதானே. ' கிழவியைத் திரும்பித்தானும் பார்க் காமல் விளையாடிக் கொண்டு வசந்தி சொன்ன வார்த்தை யில் கோபம் கலந்த வெறுப்புத் தெரிந்தது.
உலகெங்கும் எரிபொருள் பற்முக்குறை. பாறிக்கிழவியின் உள்ளத்தில் மட்டும் இப்பற்ருக்குறை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லைப் போலும் அவள் அச்சுவேலியிலிந்து மட் டக்களப்புக்கு வந்து சேர்ந்து பத்து நாள் கூட ஆகவில்லை. அவள் மனதில் தொடர்ந்து ஒரே எரிச்சலும் புகைச்சலும் தான
பன்னிரண்டாவது வயதிலிருந்து இடையருது ஐம்பத் தொரு கந்தசட்டி விரதத்தைப் பிடித்துவிட்ட பாறிக்கிழவி ஆனயிறவுப் பாலத்தை முன்னெரு போதும் கடந்ததில்லை. அரிசி, மரக்கறி வியாபாரம் செய்து, சிறுவயதிலேயே தகப் பனை இழந்துவிட்ட இரு பெண்களையும் படிக்க வைத்து, உத்தியோக மாப்பிள்ளைமாராகப் பார்த்து திருமணம் செய்து வைத்ததோடு தன் கடமை நிறைவேறிவிட்டது எனநிம்மதி அடைந்தாள். ஆசிரிய நியமனம் கிடைத்தவுடன் கணவனு டன் மட்டக்களப்புக்கு மாற்றத்தை எடுத்துக் கொண்டு
- 85 -

Page 45
க. நவம்
வந்து, நிரந்தரமாகத் தங்கிவிட்ட மூத்தமகள் மீதான மனக்கி சப்புக் காரணமாக கடந்த இருபது வருடமாக இரண் டாவது மகளுடன் அச்சுவேலியிலேயே தங்கியிருந்தாள். அவ ளும் இறந்து .ோசவே கடைசிக்காலத்தில் தன் வைராக் கியத்தைக் கைவிட்டு, மூத்த மகளின் நீண்டநாள் ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நினைப்பினுலல்ல, நிர்க்கதி யான நிலேயினுல் முதன்முறையாக ஆனையிறவுப் பாலத் தைக் கடந்து, சென்ற வாரந்தான் மட்டக் களப்பில் கடை வைத்திருக்கும் ஒருவரின் உதவியுடன் வந்து சேர்ந்தாள்.
இந்தப்பகுதியின் பெரிய குடும்பங்களெல்லாம் கிறிஸ்த வர்களாக இருந்ததால் பாறிக்கிழவியின் மூத்த மகளும் கண வனும் இங்கு வந்த மறுவருடமே கிறிஸ்த்து மதத்தைத் தழுவிக் கொண்டார்கள், செல்வச்சந்நிதி முருகனிடமிருந்து வாங்கேட்டுப் பெற்றெடுத்த தெய்வானை தன் பெயரை திரே சம்மா என மாற்றிக் கொண்டதை பாறிக்கிழவி இந் தப் பிறப்பில் மட்டுமல்ல, எந்தப் பிறப்பிலும் மன்னிக்க மாட்டாள் மகளிடமிருந்து இத்தனை காலமும் அவள் பிரிந்து வாழ்வதற்குக் காரணம் இதுதான்.
சாதாரண விகிதராக தபாலகத்தில் கடமையேற்று விகிதராகவே இளைப்பாறிய சாதனையை நிலைநாட்டிய சின்னை யரும், மனைவி திரேசம்மா ரீச்சர் பிரின்சிபலாகி இருவரும் சேமித்த பணத்தைக் கொண்டு பிரதான வீதியருகில் மூன்று பரப்பு நிலத்தை விலைக்கு வாங்கி, இப்படியொரு ‘நியூபாஷன்? வீட்டைக் கட்டியெழுப்பியதைக் கண்டு மூக்கில் விரல் வைத்து வியந்து பேசாத சனமில்லை. ஆனல் இதற்கெனப் பட்ட கடன்களை அடைத்துக்கொள்ள முடியாமல் திரேசம் மாவும் கணவனும் முக்குளிப்பது பற்றி பாறிக்கிழவி கேள் விப்பட்டிருந்தாள். கணவனும் மனைவியுமாக உழைத்த பணம் எப்படித்தான் கரைந்து போய்விடுகின்றதோ! என்று தன் னைத்தானே கேட்டுக் குழம்பிக் கொண்ட கிழவிக்கு; அவர் களது வாழ்க்கை முறைகளை நேரில் பார்த்தபோது தான் உண்மை புலணுகியது.
س۔ 86 --

அல்சேஷன்கள் எப்பொழுதும் உள்ளே வரலாம்
போலிக் கெளரவத்துக்கு அடிமைப்பட்டு விட்ட தன் மகளது குடும்பத்தின் போக்கு அவளுக்கு சங்கையீனமாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.
“p nr Gof ... ... Trir GOf...... நிம்மிக்கு ஏன் இன்னும் சாப் பாடு வைக்கல்ல? கேள்வியைக் கேட்டபடியே விளையாட்டில் லயித் திருந்தாள் வசந்தி. வீட்டின் வலது கோடியில் அடர்ந்து வளர்ந்து கிளைபரப்பி நின்ற வேப்பமரநிழலில் கள்ளிப்பலகையால் செய்யப்பட்ட பெரிய கூட்டுக்குள் சங் கிலியில் கட்டி பூட்டப்பட்டிருந்த நிம்மி, தன் கூரிய நகங் களால் பலகையைப் பிராண்டியபடி உறுமுகின்றது. திரே சம்மா வீட்டு இராக்கால காவலாளியான பெட்டை நாய் அது. காட்டுப்பன்றி போல் உருண்டு திரண்டு வளர்ந்திருந்த நிம்மிக்கு, பகல் வேளைகளில் என்னவோ கழுத்தில் விலங்கு போடப்பட்டிருந்தாலும், வீட்டில் இராச நடப்பு.
நிம்மியின் கூட்டோரம் சாதாரண ஊர்நாயொன்றைக் கண்டாற் போதும், கையில் கிடைக்கின்ற பொருளால் வீசி எறிந்து, ஒடஒடத் துரத்தியடித்து விடுவார்கள். இரு முறை யும் ஊர் இனக்குட்டிகளையே ஈன்றெடுத்த போது, அவற் றைச் சாக்குக்குள் போட்டு, மூடிக்கட்டி இரவோடிரவாக, சந்தையில் கொண்டு போய் எறிந்து நிம்மியின் கன்னி மாசைத்துடைத்து வருவதிலுள்ள கஷ்டம் சின்னையருக்கல் லவோ தெரியும்!
கோப்பை ஒன்றில் சோறுடன் மாட்டிறைச்சியும் எலும் புகளும் இட்டு நிரப்பிக்கொண்டு வந்து நிம்மியின் முன்னுல் வைத்துவிட்டு, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வசந்தியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்ருள் ராணி
ராணி, வசந்தியின் வயதை ஒத்தவள்தான். வசந்தியின் நிறத்தைப் போலல்லாமல் நல்ல சிவப்பி. கழுவித்துடைத் தெடுத்தால், வசந்தி எம்மாத்திரம்? என்று கூட அவள அடிக்கடி தன் அழகைப்பற்றி எண்ணிப்பெருமிதமடைவாள். அடுத்த கணம், "நான் ஒரு வேலைக்காரி' என்பதை நினவு படுத்திக்கொண்டு, தன் விதியை நொந்து கொள்வாள்,
ܚ- 87 -

Page 46
க. நவம்
"அந்திய வாலிபனுெருவன் நின்று விளையாடுகிறேனே" என்ற எண்ணம் சிறிதேனும் இல்லாதவளாய் தொங்கிக் குதித்து விளையாடுகிருள் வசந்தி. ராணிக்கோ அவள் கோலத்தைப் பார்க்க கூச்சமாயிருக்கிறது.
"இந்த வசந்தியக்கா எப்பவும் இப்பிடித்தான், கொஞ் சமும் வெக்கமெண்டது கிடையாது’ கோப்பையை எடுத் துக்கொண்டு பின்புறமாக குசினியை நோக்கி ஓடுகிருள் frnrø0öfl.
விளையாட்டு ஆரம்பித்ததற்கிடையில் குறைந்தது ஆறு தடவையாவது இந்த ருேட்டால் மேலும் கீழுமாக சைக்கி ளில் சுழன்று கொண்டிருந்த மைனர்க் கூட்டமொன்று ‘கூய்’ போட்டபடி நக்கல் சிரிப்புடன் நகர்கிறது.
"இந்த ஆடுமாலைக்கு எப்பனும் சூடுசுறணை எண்டது இல்லைப்போலக் கிடக்கு” என்று மனதுக்குள் கறுவிக் கொண்ட பாறிக்கிழவிக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. “எடியே வயந்தி இஞ்சாலை வாடி, ருேட்டாலை போற வாற காவாலி கடப்பிளியளெல்லாம் பாத்துச் சிரிச்சுக் கொண்டு போகுதுகள், நீயொரு குமரி, சும்மா நிண்டு குதி யன் குத்துருய், ஆம்பிளைப்பொடியள் நடுருேட்டிலை நிண்டு விளையாடினுலும் ஆர் கேக்கிறது? நீ கொஞ்சம் அமரிக்கை யாய் வந்திரன்ரி" M
"ஏய். பேய்க்கிழவி, பேசாமலிருக்க முடியாட்டில் எழும்பிப் போ. உன்னை யார் இங்கே வரச்சொன்னது? பின் ஞலை மாமரத்துக்குக் கீழே போயிரு. போ. y 9
அரிகண்டம் பொறுக்க முடியாமல் போகவே வசந்தி, கிழவிமேல் சீறி விழுகிருள்.
“பனங்காட்டுக்குள்ளே இருந்து வந்த உனக்கு என்ன தான் தெரியும்.?
பாறிக்கிழவி பத்திரகாளியானுள். "என்னடி ஆட்டக்காரி சொன்னுய்? ஆசைப்பாத்தடி பனங்காட்டாள் எண்டு சொன்னய்? துடை தெரியச்சட்டை போட்டுக்கொண்டு, காலைக் கையைத் தூக்கி ஆடுற நாட
- 88 -

அல்சேஷன்கள் எப்போதும் உள்ளே வரலாம்
கக்காரி. என்னைப் பார்த்து, என்ன தெரியுமெண்டு நீ கேக்கவோடி எடியே . . நில்லடி இஞ்சை. எடுவாடு காறப் பொம்பிளே..?
போருக்குப் புறப்பட்ட பேட்டுக்கோழி போலச் சிலிர்த் துக்கொண்டு குந்தியிருந்த வாசற்புடியை விட்டு எழுந்தாள். வளைந்த முதுகை கொஞ்சம் நிமிரித்தி, குலைந்துபோன தலை மயிரை அள்ளிக்கட்டிக்கொண்டு கையிலிருந்த ஊன்றுகோலை நீட்டியபடி முற்றத்தில் இறங்கி விட்டாள்.
*றைக்கற்றை தூக்கிப்பிடித்த படி கிழவியை எதிர்த் துக்கொண்டு நின்ருள் வசந்தி.
ஒரு மகாயுத்தமே மூண்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்பட்டன.
'அம்மா . இதென்னம்மா, ருேட்டுக்கரையிலை திண்டு பிள்ளையளோடை மரியாதை இல்லாமல் சண்டை பிடிக்கி றதே???
மாலைநேரப் பாடசாலையிலிருந்து வரும் வழியில் பல நண்பர்களின் வீடுகளை ‘விஸிற்” பண்ணி முடித்துக்கொண்டு வந்த திரேசம்மா ரிச்சர் நெருப்பில் கால் வைத்தவள் போலப் பாய்ந்தோடி வந்து நடுவில் நின்ருள்.
*ஆர். நீயெல்லவோ ருேட்டுக்கரையில் மரிசாதியில் லாத பிள்ளை வளக்கிருய்? உன்ரை வளப்புத்தான் என்னைக் கேளாத கேள்வி கேக்கவைச்சுப் போட்டுது .'
பொரிந்து தள்ளினுள், பாறிக்கிழவி,
அலுப்புக் களைப்பென்று வந்த திரேசம்மாவுக்கு வழக்கு விசாரணை வேறு
நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்த திரேசம்மா தன் தாயைத்தான் சினந்து கொண்டாள். வெளியே நின்று சண் டையை வளர்க்காமல் தாயைக் கட்டாயப்படுத்தி ஹாலுக் குள் கூட்டிச்சென்று, உட்காரவைத்து, சமாதானமாக்க முயன்ருள், அவள்.
-- 89 ܚ

Page 47
க. நவம்
நாற்பது வயதைத் தாண்டிவிட்ட திரேசம்மா ரீச்சரின் கூந்தலிலுள்ள வெள்ளிக்கோடுகளை மறைக்க முயலும் கோபு ரக் கொண்டையும், குதிஉயர்ந்த செருப்பும் உடலோடு ஒட் டியபடி உடுத்திருந்த "மினிச1ாறி’யும் அவளைக் குமரியாகக் காட்டுகின்றன. இந்தக் கோலத்தில் தன் மகளைக்காணச் சகிக் காமலோ என்னவோ முகத்தைச் சுழித்துத் திரும்பியப படபடத்துக் கொண்டிருந்தாள் கிழவி.
வசந்தியும் குமாரும் மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டார்கள் "அம்மா . நீ இங்கை வந்து பத்து நாளு மாகவில்லை. வீட்டில் இருக்கிற எல்லாரையும் பகைச்சுக் கொண்டாய். இந்தக்காலத்துப் பிள்ளையஸ் நீ நினைக்கிற
இாதிரி நடக்கமாட்டுதுகள்’
"அப்ப . ஊருலகத்திலையுள்ள காவாலிப் பொடி யளின் ரை சேட்டைப் பொருளாகத்தான் குமர்ப்பிள்ளையளை வளக்க வேணும் எண்டு சொல்லுறியோ.. ?? ぐ
“என்ரை பிள்ளையை ஒருதன் இழிவாக்கதைக்க முடி யுமே? சும்மா ருேட்டாலை போறவன்கள் சேட்டை விட்டு தப்பிவிடேலாது. செருப்பாலே ஒருமுறை நல்லா குடுத்து மிருக்கிருள். கண்டவன் கடையவளுேடை பழகவிடாமல் அவளைக் கட்டுப்பாடாக, மரியாதையாகத்தான் வளர்த்து வாறன். நீயம்மா, உன்ரை வாயைச் சரியா வைச்சிருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்’
பாவம், சேட்டை பண்ணும் எண்ணமின்றி உண்மை யாகவே நேரம் என்ன என்று கேட்ட தபால் பியோன் ஒரு வனுக்கு செருப்பால் அறைந்த திமிர்க்காரி, வசந்தி. அந்தச் சம்பவத்தைச் சற்றுத் திரித்துக்கூறி தன் மகளைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் திரேசம்மா ரீச்சருக்கு எப் போதும் ஒரு திருப்தி. இதைச்சொல்ல வந்தவள் தன் வாயைப் பற்றிக்கூறியது கிழவிக்குப் பிடிக்கவில்லை.
'ஏன் என்ரை வாய்க்கென்னவாம்? உள்ளதைச் சொன் ணுல் தாய்க்கும் பிள்ளைக்கும் உடம்பெல்லாம் அரிக்குது போலையிருக்கு! நீயெண்டால் என்ன திறமானவவே? இன
سے 90 سے

அல்சேஷன்கள் எப்போதும் உள்ளே வரலாம்
சனத்தை வெறுத்து, சாதிசமயத்தை மாறி இந்த ஊரவன் களிட்டை பெரியாள் பத்திறதுக்கு இஞ்சை வந்து குடியே றின மா சாலக்காறியடி நீ.” ر
"உனக்கு என்னையும் என்ரை பிள்ளையளையும் பார்க்கப் பொழுமையாக் கிடக்கெண்டு சொல்லம்மா.
‘ஏனடி என்ரை பிள்ளையையும், பேரப்பிள்ளையளையும் பாத்து நான் பொருமைப்பட வேணுமடி? எப்பவும் நீ நல் லாயிருந்தால் எனக்குத்தான்ரி புளுகம். நீ என்னடா எண் டால் பெரிய வெள்ளைக்காறத்துரை வீட்டுச் சீவியம் நடத்த வேணுமெண்டு உள்ளதையும் வித்துச் சுட்டு பூசிமெழுகித் திரியிருய்! கடன்பட்டுச் சிலவழிச்சுத்தான் சீமான் வாழ்க்கை வாழுருய்; பொடிபெட்டையளை கண்மண் தெரியாமல் வளக் கிருய்! நாங்கள் பிறந்து வளர்ந்த நிலையளை மறந்து - அது களை மூடிமறைச்சு ஏன் வாழவேணும்? ஏன் எங்களுக்கு வெறும் வெளிப்பவுசு? விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்
mr Gud?”
*சும்மா விசர்க்கதை பேசாதை, நீ கிணத்துத் தவன் போல இருந்த உனக்கு எல்லாம் புதினமாகத்தான் இருக் கும். ஆனல் ஒண்டு சொல்லுறன், இங்கை இருக்கிறதெண் டால் பிள்ளையளை இந்த மாதிரிக் கரைச்சல் படுத்த வேண் டாம். இதுதானே அறுபது வயது வந்தால் வீட்டுக்கு நாய் வேண்டாம் எண்டு சொல்லுறது” -
“ஏனடி. உன்ரை தீனைத்திண்டிட்டன் எண்டதுக் காக நாயாக்கிப் போட்டியோடி. நான் கைகாலடிச்சு உழைத்து என்ரை வாயை வயித்தைக் கழுவக்கூடிய வல் லமை கெட்டுப் போச்செண்டுதானேடி, என்னைப் பார்த்து தாயெண்டனியெடி உன்ரை சித்துவக்கெட்ட சீவியத்திலை என்னை நாயாக்கிப் போட்டியோடி. எடியே . என்ரை குடிகோத்திரத்திலை உன்னைப்போல ரோசநரம்பறுத்தவன், பூசிமினுக்கிறவளை பெத்துப்போட்டனெண்டுதான் அழுகி
றன்??
-91 -

Page 48
க, நவம்
பாறிக்கிழவியின் நாடிக்கலன்கள் "விண்விண்" என்று துடிக்கின்றன. பற்களை இழந்த கீழ்த்தாடை வெப்பிசாரம் பொறுக்க முடியாமல் அடித்துக் கொள்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பினல் நரம்புதார்கள் விம்மிப் புடைக்கவே கை கள் நடுங்குகின்றன.
இஞ்சை. ஆரோ "விஸிற்றேஸ்" வருகினம் போலக் கிடக்கு உன்ரை குணத்தைக் காட்டி, எங்கட மானத்தை வாங்கிவிடாமல் வீட்டுக்குப்பின்னலை போயிரு . .போ. 67 lb l-j. . . . . . η
தன் சேலையைச் சரி செய்தபடியே தாயைப்பார்த்துச் சொன்னுள் திரேசம்மா.
பாறிக்கிழவியின் இதயத்தில் அந்த வார்த்தைகள் ஊசி கொண்டு குத்தியது போன்ற வேதனை மிக்க உணர்ச்சியைக் கொடுத்தன. தன் மகளை அண்ணுந்து பார்க்கிருள் குருதி உறைந்துவிட்டது போன்ற காய்வு அவள் முகத்தில் அவ ளது விழிக்கோலங்கள் மட்டும் நனைந்திருந்தன.
குமார் பின் தொடர, வசந்தியும் மஜிஸ்த்திறேற்றின் மூத்தமகனும் சிரித்துப் பேசிக்கொண்டு உள்ளே வருகிருர் கள். றெக்கிறியேஷன் கிளப் வசந்திக்குத் தேடிக்கொடுத்த நட்புக்களில் இதுவும் ஒன்று.
“குட் ஈவினிங் அன்ரி . "குட் ஈவினிங்" கம், கம். வந்து உட்காருங்கோ. * வாயெல்லாம் பல்லாகச் சிரித்த படி வரவேற்று அவர்களுடன் அமர்ந்து கொண்டாள், திரே சம்மா, வாலிபர் இருவருடன் தன் பேத்தி அருகருகாக தடு வில் அமர்ந்திருந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பதை பாறிக்கிழவியால் இரசிக்க முடியவில்லை. ஊன்றுகோலின் உதவியுடன் எடுத்தடி வைத்து நடந்து பின்புறமாக உள்ள மாமர நிழலுக்கு வந்தாள்.
இங்கு வந்த நாள் தொட்டு தனக்கு நேர்ந்த அவமா னங்களே அசைடோட்டுக் கொண்டிருந்த பாறிக்கிழவியின்
سے 92 سے

அல்சேஷன்கள் எப்போதும் உள்ளே வரலாம்
நாசித்துவாரங்கள் அடைத்துக் கொண்டன. அடிக்கடி தன் சேலைத்தலைப்பால் மூக்கைச் சீறித் துடைக்கிருள்.
குசினியின் வாசலோரம் நின்று பார்த்துக் கொண் டிருந்த ராணிக்கு கிழவி மீது இனந்தெரியாத இரக்கம் தோன்றியிருக்க வேண்டும். கிழவிக்கு முன்னுல் வந்து நின் ருள்! எதையாவது பேசவேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. ஆனல் பாறிக்கிழவியோ ஆகாயத்தைக் கண்ணி மைக்காமல் வெறித்துப் பார்த்தபடி சிந்தித்துக் கொண் டிருந்தாள்.
அதாதரவாக ஏசித்துரத்தப்பட்ட கிழவியுடன் தானும் அழவேண்டும் போலிருந்தது ராணிக்கு,
இருக்கா தா என்ன? எப்படியென்ருலும் அவள் வேலைக் arrifugisuaint
pr6.. ராணி." என்று கூப்பிட்டபடி, பின் கதவைத் திறத்து கொண்டு வெளியே வந்தாள் திரேசம்மா.
பாறிக்கிழவியின் மெளனமும் கலைந்தது. *அங்கை என்ன வாய்பார்த்துக்கொண்டு நிக்கிருய்? நிம்மியின்ரை கூட்டுக்குள்ளே நாயஸ் வந்து நிக்குதுகள் போலே யிருக்கு சத்தங்கேக்குது. அடிச்சுத் துரத்திவிடு . . ஒடு. 9
"இல்லம்மா, அது இன்சு பெற்றர் வீட்டுநாய்தான் கூட் டுக்கை நிம்மியோடை நிக்குது. கிட்டப்போகப் பயமாயிக் சம்மா. 99
அடுத்த ருேட்டில் வசிக்கும் பொலிஸ் அதிகாரி ஒரு வகுக்குத் சொந்தமான கடுவன் நாய் அது. குதி ரைமாதிரி, மீண்டு வளர்ந்த அந்த நாயைப் பார்த்தாலே நடுக்கம் பிடிக் கும்.
“ஆ. அந்த "அல்சேஷன் நாயெண்டால் அது நிக் கட்டும். அதைத் துரத்தாதை. இறைச்சி எலும்பு கிடக் தால் கூட்டுக்குள்ளை கொண்டுபோய்ப் போடு ? சொல்லிக் கொண்டு திரேசம்மா ரீச்சசி உள்ளே போய்விட்டாள்.
கட்டளையை நிறைவேற்ற எழுந்து ஒடுகிருள் ராணி.
-س- 93 --سته

Page 49
க. நவம்
பாறிக்கிழவிக்கு அடி வயிற்றிலிருந்து அருவருத்துக் கொண்டு வந்தது.
*3*...... கேடுகெட்ட வளப்பு வளக்கிருள்? "தூ . . காறித்துப்புகிருள் கிழவி.
"ஊரிலே விட்டோடி வந்த என்ரை தாயைத்தின்னிப் பேரப்பிள்ளையஞக்கு பாரமாக எண்டாலும் அதுகளோ டையே போய்க்கிடப்பம்’ என்று எண்ணியவளாய், வரும் போது கையில் கொண்டுவந்த பூச்சுக் கழன்ற 'றங்குப் பெட்டியைத் தேடி நடக்கிருள் பாறிக்கிழவி.
"மல்லிகை" ஏப்ரல் - 1974
(வர்த்தக கப்பற்றுறை அமைச்சின் சார்பில் ஆக்க வுரிமைகள், வியாபாரக் குறிகள் பதிவகம் 1983ம் சிறந்த சிறுகதைத் தொகுப்பெனத் தேர்ந்தெடுத் துப் பரிசு வழங்கிய "உள்ளும் புறமும் தொகுதி யில் இடம்பெற்ற சிறுகதைகளுள் ஒன்று.)
க. நவம்
கந்தையா நவரத்தினம் என்பது இவரது இயற்பெயர். தெணியானின் சகோதரரான இவர், 1964 ஆம் ஆண்டுமுதல் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்குப் பல்வேறு வகையிலும் பங் களிப்புச் செய்து வருகிறர். தாயுள்ளம்’ என்ற இவரது முத லாவது சிறுகதை ஹாட்லிக் கல்லூரி வெளியீடு ஒன்றில் பிர சுரமானது. சிறுகதை, உருவகக்கதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு நாடகம், புதுக்கவிதை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இலங்கை சாகித்திய மண்டலம் பாடசாலை மாண
سس 94 حسسسسه

அல்சேஷன்கள் எப்பொழுதும் உள்ளே வரலாம்
வர்களுக்காக 1964ல் நட்ாத்திய சிறுகதைப் போட்டியில் இவ ரது தாயுள்ளம்' என்ற சிறுகதை இரண்ட்ாவது பரிசான வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது சிசித்திரன் சிரிகதைப் போட் டியில் (1965) இவரது கதையொன்று மூன்ருவது பரிசு பெற் றது. வர்த்தகக் கப்பற்துறை அமைச்சின் சார்பில், ஆக்க உரி மைகள் வியாபாரக் குறிகள் பதிவகத்தினுல் 1983 ஆம் ஆண் டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக இவரது “உள்ளும் புறமும்’ தெரிவு செய்யப்பட்டதுட்ன் ரூ. 5000/- பரிசாகவும் வழங்கப்பட்ட்து. 1973ல் அகில இலங்கைப் பாட்சாலைகளுக்கிடை யிலான நாட்கப் போட்டியில் 'இந்தத் தேசத்துக்காக” என்ற இவரது நாடகம் முதற்பரிசான தங்கப்பதக்கம் பெற்றது.
கலைமாணி சிறப்பு (பி. ஏ. சிறப்பு) பட்ட்தாரியான இவர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.எஸ்.ஸி. பட்ட்த்தையும் பெற்றுக்கொண்டார். இவர் ஆசிரியராகப் பணி புரிகின்றர்.
பிறந்த திகதி: 27-4-1946 முகவரி: தெணியகம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை.

Page 50
தத்து
ராஜ பூரீகாந்தன்
வீட்டில் விற்பனையாகி எஞ்சிய பிட்டுக்களை பெரும்பன யோலைப் பெட்டியில் அடுக்கி வட்டச் சுளகால் மூடிவிட்டு நிமிர்ந்தாள். எதிரே ராசாத்தி நின்று கொண்டிருந்தாள். பால் வடியும் அந்தப் பிஞ்சு முகத்தை ஒரு கணம் உற்று நோக்கிவிட்டு பெட்டியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு இங்கிலியாவத்தையினுரடாக தடந்து சென்ருள்.
‘இவன் ராசாத்தி ஒரு சொல்வழியும் கேக்கிறேல்லை, எத்தினை தரம் சொன்னஞன் இந்தக் காலில் புண் மாறும் வரைக்கெண்டாலும் வீட்டை நிக்கச் சொல்லி. மருத்து கட்டினப்போலைமட்டும் புண் மாறிப்போமே. சவுக்கஞ் சுட லேப் பத்தையளுக்கை, கடற்கரையிலை விடிய விடியக் கண் மூளிச்சு நிக்கிருளும். பூச்சி பொடுகுகள் கடிச்சுத் தடிச்ச இடங்களைச் சொறிஞ்சு சொறிஞ்சு நெக விசமாக்கிப்போட் டுது. அவங்களும் இவனை விட்டாத்தானே, அவங்கள் வீட் டாலும் இவன் கேட்டாத்தானே. இண்டைக்கெப்பிடியும் இவ?னப் போக விடக்கூடாது, எப்பிடியெண்டாலும் மறிச்சுப் போடவேணும்’
விசாலித்துக் கிளைபரப்பிய விருட்சங்களின் கீழே சிறிதும் பெரிதுமாய் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. உருக்குப் பறவைகள், உலோகத் தும்பிகள் என்பவற்றின் நேரடிப் பார்வையிலிருந்து அரச மரங்களும் ஆலமரங்களும் அவற் றிற்கு அபயமளித்தன.
-96

姬声迦
வடக்கொழுங்கையால் புறப்பட்ட புட்டாச்சி தெற் கொங்கையால் திரும்பினள். தலையில் வட்டச் சுளகின் மேலே ஒலைப்பெட்டி இருந்தது. டட்ஸன் பிக்கப்பினுள் சோம்பிக் கிடந்த தடியன், ஆச்சியைக் கண்டதும் குதித்தோடி வர் தான்.
"ஆச்சி, முத்திரையளை எங்கையனை வைச்சனி? சங்கக் கடை பூட்டமுன்னம் போவிட்டு வந்தால் நல்லது.”
ஆச்சி எதுவுமே பேசாமல் வேகமாக நடந்தாள். தடியன் ஒட்டமும் நடையுமாக அவளருகே வத்துவிட்டான்.
"என்ன ணை பேசாமல் வாருய்
*உன்ளுேடை எனக்கென்ன பேச்சு, நீ ங்களே தும் சொல்லுப் பறைச்சல் கேட்டாத்தானே.”
*என்னணை நடந்தது? விபரமாகச் சொன்னத்தானே தெரியும்."
*எட தடியா, உனக்கெத்தினதரஞ் சொல்லியிருப்பன் அவன் ராசாத்தியை காலில் புண் மாறிஞப்போலே கூட்டிக் கொண்டு போனியோ வரும் வில்லங்கம், அவளுடைய ஓங்கி யொலித்த குரல் திடீரெனத் தணிந்து கெஞ்சியது. "அவன் பிஞ்சுக் குழந்தையடா. ஒரு ரண்டு மூண்டு நாளைக்கெண் டாலும் வீட்டிலை நிக்கட்டுக்கு ”
ராசாத்தி அடுக்களைக் குந்தில் அமர்ந்தவாறே தூங்கிப் போனன்' அவனுடைய கால் புண்ணில் ஈக்கள் தேன் குடித்தன.
அசவிலிருந்து தனது குருத்தோலைப் பாயை உருவி யெடுத்து மாலுக்குள் விரித்தாள். ஒத்தாப்புக் கூரையில் காயப்பட்டிருந்த தலையணையை எடுத்துவந்து பாயிற்போட்டு அதன் மேல் தனது வெள்ளவத்தை நூற்சேலையை விரித் தாள். பின்னர் அடுக்களைக் குந்தருகே வந்து ராசாத்தியின் சரிந்திருந்த தலையை நிமிர்த்தினுள். அவளுடைய கைபட்ட தும் அவனுடைய வலதுகரம் இடுப்புப் பட்டிச்கும் இடது கரம் கழுத்திலிருந்த கறுத்த நூலுக்கும் சென்றன.
- 97 سے

Page 51
ராஜ ரீகாந்தன்
அடுக்களைக்குள் சென்ற தடியன் இரண்டு நார்க் கடகங் களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். ஆச்சி ராசாத் தியைப் பாயில் வளர்த்திவிட்டு விரித்திருந்த சேலையின் மறு தொங்கலால் அவனைப் போர்த்திவிட்டாள்.
"சாட தடியா, கடகங்களை உதிலை வைச்சிட்டு இங்கை யொருக்கால் வந்து பார்.”
ராசாத்தியின் உடம்பு அனலாய்க் கொதித்தது. கண் களைத் திறந்து தடியனைப் பார்த்தான்.
*ராசாத்தி, கொம்மாவாணை இண்டை இரவுச்கு நீ வரக்கூடாது
ராசாத்தி சிரித்தான். தனது கண் முன்னலேயே இளம் தாயும் பருவமடைந்து சிலநாட்களே ஆகியிருந்த பூப்போன்ற தங்கையும் ஓநாய்களால் மாறிமாறிக் குதறப்பட்டுச் சாக டிக்கப்பட்ட காட்சி மனத்திரையில் ஒடி உறைந்தது. திடீ ரென்று எழுந்து குந்தியமர்ந்துகொண்டு முழங்கால்களைக் கைகளால் கட்டியவாறு ஆச்சியைப் பார்த்து மீண்டும் சிரித் தான். விளாதிமிர் இலியனேவிச் சிறுவனக இருந்தபோது அண்ணன் அலெக்ஸாந்தர் தூக்கிலிடப்பட்டமையைக் கூறும் வரிகள் இதயக் கம்பியூட்டரின் திரையில் வலமிருந்து இட மாக மெதுவே நகர்ந்து மறைந்தன.
"ஆச்சி, நான் ரண்டுதுலாக் கிணத்தடிக்குப் போய் டாக் குத்தரை வரக்காட்டிப்போட்டு அப்பிடியே சங்கக் கடைக் கும் போவிட்டு வாறன்.?
மூலைக்கை மரத்தில் செருகியிருந்த லக்ஸ்பிறே பெட் டியை உருவியெடுத்தாள். அதற்குள்ளிருந்த இருபத்திநான்கு உணவு முத்திரைகளையும் எண்ணியெடுத்து தடியனிடம் கொடுத்தாள்.
படலையடியில் இரண்டு சின்னக்குரல்கள், "மலடி, மலடி, சாப்பாட்டுப் பாசல் கொண்டு வந்திருக்கிறம், வந்துகொண்டு போ,’ என்று கோரஸில் கேட்டன.
س- 98 --

தத்து
"ஆரடா தறுதலைகள் என்னை மலடியெண்ணிறது? எனக் கிப்ப இருபத்திநாலு பிள்ளையன் இருக்கிதுகள். ஒருதரும் என்னை மலடியெண்டு கூப்பிடேலாது. மலடியெண்டு கூப்பிட் டால் தலையை நுள்ளிச் சொதிவைச்சுப் போடுவன்," என்று உரக்கச் சத்தமிட்டவாறே படலையடிக்குச் சென்ருள். அவ ளுடைய தங்கைவழிப் பேரப்பிள்ளைகள் இருவர் பொலித் தீன் பைகளில் இவ்விரண்டு சாப்பாட்டுப் பாசல்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
முன்பெல்லாம் பாடசாலை விடுமுறை நாட்களில் இவர் களுட்பட அயலிலுள்ள சிறுவர், சிறுமிகள் எல்லோருமே மலடி வீட்டிற்தான் கும்மாளமடிப்பார்கள். "மலடி” என்ற சொல்லே தமது பெற்றேர்களிடமிருந்தே இந்தச் சிறிசுகள் சுவீகரித்துக்கொண்டன. இந்தச் சொல் இதயத்தை எவ் வளவு குரூரமாகத் தாக்கி வதைக்குமென்பதை அந்தச் சிறிசு கள் அறிந்திருக்கவில்லை, வக்கரித்த மனம் படைத்த பெரிசு கள் இதன் பொருளை அவர்களுக்குக் கூறவுமில்லை. பொடி யள் இந்த வீட்டிற்குக் குடிவந்த பின்னர் சிறுவர், சிறுமி யர் படலைக்குள்ளே வந்து செல்லவதில்லை.
இரண்டு மணியாவதற்குள் இருபத்தாறுபாசல்கள் வந்து சேர்ந்துவிட்டன. அயலிலுள்ளவர்கள் தாமே சுயவிருப்பின் பேரில் முறைவகுத்து உணவுகளை அனுப்புவது வழக்கமாகி விட்டது. ஏதாவதொரு வீட்டில் ஏதாவதொரு விசேஷம் நிகழ்ந்தால் அன்று அந்த வீடே ஆச்சி வீட்டுப் பொடியள் எல்லோருக்கும் உணவனுப்பும். எல்லா வீடுகளிலும் அடுப் பெரியாத நாட்களும் வந்து போவதுண்டு. ஆணுல் இமயமே (பேதுருதாலகாலயல்ல) இடிந்து விழுந்தாலும் "மலடி தனது பிள்ளைகளை முழுப்பட்டினியோடிருக்க விடமாட்டாள். அவ் வாரு?ன நாட்களில் ஆச்சியின் புட்டுக்குழலும் பொடியன் களின் உருக்குக் குழல்களும் ஒபாது வேலைசெய்து கொண்டே யிருக்கும்.
தடியன் முதலில் டாக்டர் வீட்டிற்குப் போனன். அதி காலையில் வந்து இலக்கமெடுத்துக் காத்திருத்த நோயாளி
- 99

Page 52
ராஜ ரீகாந்தன்
கள்கூட அவனை உள்ளே போகச் சொன்னர்கள். அறையை விட்டு வெளியே வந்த டாக்டர் மீண்டும் அறையினுட் சென்று மருந்துப் பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்
-f7f7.
சந்தியில் நின்ற இரு சிறுவர்கள் இவர்களைக் கண்டதும் அறிமுகப் புன்னகை கீற்றுக்களை இதழ்களிற் தவழவிட்டார் கள். விருட்சங்களின் கீழிருந்த கரும்பச்சை நிறவாகனம் ஒன்று அக்குவேறு ஆணிவேருகக் கழற்றப்பட்டு, சுத்தமாக் கப்பட்டு மீண்டும் வெகு துரிதமாகப் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
கூப்பன்களை இழந்து உணவு முத்திரைகளைப் பெற்ற வர்களின் வீடுகளிலுள்ள பெண்கள் சிலர் சங்கக் கடையில் ஒலைப்பெட்டிகள், போத்தல்கள், பொலித்தீன் பைகளுடன் காத்திருந்தார்கள். இவ்வாரமும் மண்ணெண்ணெய் வர வில்லை. எனவே பச்சை, சிவப்பு, வெள்ளை நிறப் போத்தல் களும் பிளாஸ்ரிக், தகரக் கொள்கலன்களும் விருந்தையின் தென்மேற்கு மூலையில் கூட்டம் கூடின.
கிளே முகாமையாளரை மொய்த்திருந்த பெண்கள் விலகி இடம் விட்டார்கள். முறை வரும்போது தன்னைக் கூப்பிடச் சொல்லிவிட்டு மேற்குப்புற படியில் அமர்ந்தான் இரண்டு குழந்தைகள் ஒரு பூனைக்குட்டியுடன் விளையாடிக் கொண் டிருந்தன. அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும் போலிருந்தது. அந்த ஆசையையும் அடக்கிக் கொண்டு வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இந்த ராசாத்தி எவ்வளவு அற்புதமானவன்! மையிருட் டிற்கூட ஓர் ஆந்தை, அகிளான் அசையமுடியாது. பார்வைக் குப் பரமசாதுவாகவும் நோஞ்சானுகவும் அப்பாவிபோலவும் இருக்கிருன், செயற்படும்போதோ கரும்பனையின் வைரம் உடலிற் பாய்ந்துவிடுகிறது. நிதானத்துடன் கூடிய கன வேகம். உண்மையில் ராசாத்தி ராசாத்திதான்.?
ராசாத்திக்குக் காய்ச்சல் விட்டுவிட்டது. ஆச்சி கை யுரலில் நாறல் பாக்கையும் வெற்றிலையையும் போட்டு இடித்
- 100 سے

தத்து
துக் கொண்டிருந்தாள். மதிய போசனம் முடித்த அறுவர் பலத்த ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டிருந்தனர்
*உலகத்திலையுள்ள மிகக்கொடிய இரசாயனப் பொருள் ஆர்சனிக் அமிலந்தான்."
"பாதரசத்தையுஞ் சொல்லலாந்தானே?" *இல்லை, சயனற்தான் சரியான கொடிய இரசாயனப் பொருள்."
‘நான் சொல்லட்டே, குரல் வந்த திசையில் அறுவரும் தோக்கினர்கள். மிக அருமையாகவே வாயைத் திறக்கும் ராசாத்திதான் கூறிஞன்.
*சொல்லன்” என்ருன் அறுவரில் ஒருவன். 'நீங்கள் சொல்லிற எல்லா இரசாயணப் பொருள்களும் உடம்பிலை பட்டாற் தான் கொடியவை கண்வில்லைகளூடாக விளித்திரையை அடைஞ்சு காவிநரம்புகள் மூலம் மூளையின் பார்வை மண்டலத்துக்குப் போய் மத்திய நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டுப் பிரிவையடைஞ்சு அங்கை பெளதீக, இரசா யன மாற்றங்களைப் பெற்று உடலின் எல்லாப் பாகங்களை யும் அதே கணத்தில் போயடைஞ்சு இயங்கவைக்கும் பொருட் 'களும் இருக்கு."
என்னெண்டு சொல்லன்.? கையிலிருந்த புத்தகமொன்றையும், அருகிலிருந்த Lu திரிகையொன்றையும் தூக்கிக் காட்டிவிட்டு மீண்டும் புத்த கத்தில் ஆழ்த்தான் ராசாத்தி,
“எட பொடியள், குடிக்கிறக்குச் சொட்டுத் தண்ணிகூட இல்லை, உந்த வாளியையும் குடத்தையும் கொண்டுபோய் வேதப்பள்ளியிலை தண்ணியள்ளி வாருங்கோவன்.”
"ஆச்சி’ ‘என்ன ராசாத்தி." "இந்த ஊருக்கு நட்ட நடுவிலை வேதப்பள்ளி இருக்கு, ஆணுல் நான் வேதக்காறறை இங்கை காணேல்லை.”
معس 1 0 1 ــ

Page 53
ராஜ ரீகாந்தன்
"ஒரு குடும்பம் இருக்குது சாசா, இன்னும் இரண்டு இரண்டு குடும்பம் ருேட்டுக்கரையிலை அந்தத் தொங்கல்லை யொண்டும் இந்தத் தொங்கல்லையொண்டும் இருக்குது."
வேறையொருதரும் இல்லை?
*இல்லை, அது ராசா எங்கடை சூரப்புவாலை, அந்தா ளின்ரை அடியெடுப்பிலைதான் தாங்கள் சைவத்தையும் தமி ழையும் படிச்சம்.
"ஆறுமுகநாவலர்தான் சைவத்தையும் தமிழையும் காத் தவரெண்டு படிச்சன்."
"உங்களுக்கும், உங்களுக்குப் படிப்பிச்சவைக்கும் அப்பிடி யிருக்கும். ஆஞல் எங்களைத் தீண்டத்தகாதவையெண்டு அவர் எழுதி வைச்சிருக்கிருர் எண்டபடியால் எங்கடை சைவத்தையும் எங்கடை தமிழையும் காப்பாத்தினது சூரப்பு தான், சூரன்தான்."
*ச்சே, நாங்களெல்லாம் அப்பவே பிறந்திருக்கவேணும்."
'நீங்களெல்லாம் முந்தியும் பிறந்தனிங்கள்தான். அப்ப உன்ரை பேர் ராசாத்தியில்லை வல்லி, வேலன், சூரன், காத் தான், ஆறன் இதைப்போல இன்னும் கனக்க,
வீங்கிப் பொருமியிருந்த அவனுடைய வலது காலின் கீழ் தனது தலையணையை எடுத்து வைத்தாள். அவனுடைய உடம்பு மீண்டும் அனலாய்க் கொதித்தது.
விருட்சங்களின் கீழிருந்த வாகனங்கள் சில உச்ச ஸ்தாயி யில் உறுமிக்கொண்டு பறந்தன. ஆச்சி இன்னும் தூங்க வில்லை. திடீரென்று தடியன் வந்து நின்றன். ராசாத்தியின் பட்டியைக் களற்றி எடுத்தான். அவனுடைய உடல் இக் னும் கொதித்துக் கொண்டிருந்தது. காய்ச்சல் வேகத்தில் ஏதோ பிதற்றிஞன்.
"ஆச்சி, நாங்கள் போறம், நீயும் எங்கையெண்டாலும் ஒடண."
"அப்ப, ராசாத்தி?
سے 102 مس۔

தத்து
நான் தூக்கிக்கொண்டு ஓடப்போறன்’ "அது உனக்குக் கயிட்டி"
“syığu .....?” "ராசாத்தியை நான் பார்த்துக்கொள்ளுறன்" "அது உனக்கும் கரைச்சல் நீ ஒடன?
“என்ரை ராசாத்தியை விட்டிட்டு நான் ஓரிடமும் போகன். என்ரை பிணத்திலைதான்."
'aff... ... Fif...... as a 67th gés......"
வெளியே செல்லக் காலடி வைத்த தடியன் மீண்டும் திரும்பி வளைவில் தொங்கிய மண்வெட்டியை இழுத்தெடுத் தான். மாலின் மூலையில் சிதறிக்கிடந்த சாப்பிட்ட வாழை யிலைகளை அள்ளியெடுத்துச் சென்று குடத்தடியில் புதைத்து மண்ணை இழுத்து மூடிஞன், மண்வெட்டியை இருந்த இடத் திலேயே வைத்துவிட்டுப் பறந்தான்.
அது, அவை விருட்சங்களின் கீழிருந்த வாகனங்களின் உறுமற் சத்தங்களல்ல.
ராசாத்தி உணர்வற்ற நிலையிற் பிதற்றிக்கொண்டிருந் தான். அவள் அடுக்களையிலிருந்த சத்தகத்தை எடுத்துவந்து அவனுடைய கழுத்திலிருந்த கறுத்த நூலே அறுத்தெடுத் தாள் சிவத்தப் புத்தகத்தை எடுத்து தேவார, திருவாசக, திருக்குறள் புத்தகங்ளுடன் வைத்தாள்.
வாகன உறுமல் வேகமாக அண்மித்தது.
முழுமதி நாள், கைவிளக்குமாற்றை எடுத்து முற்றத் திலிருந்த குடத்தடியில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கலைத்தா ள்
வாகனங்களின் உறுமல் பல்வேறு உச்ச சுருதிகளில்,
பொழுது புலர்வதற்குச் சில நாளிகைகளே இருந்தன. ராசாத்தியை உள்ளங்காலிலிருந்து தோள்மூட்டு வரை போர்த்தினுள். தலைமாட்டில் குந்தியமர்ந்து கொண்டாள்.
ــــــــــ 103 -س

Page 54
ராஜ பூரீகாந்தன்
படலை திறக்கப்படவில்லை. நான்குபுற ஒலேவேலிகளும் சரசரத்தன;
நரைத்த தலைமுடியை விரித்து விட்டுக்கொண்டு ஒல மிட்டு அழத்தொடங்கினள்.
அவளை, அவனைச் சுற்றி ஏராளமான சப்பாத்துக்கால்கள்
அடுக்களைக்குள் சட்டி பானைகள் உருண்டன. முற்றத் திலிருந்த மண்குடம் உதைபந்தாகி நீரை நிலம் குடிக்க குடம் கலவோடுகளாகியது.
“கெழவி, அவனுகள் எங்கை? கேட்டவன் கையில் யாரோ எட்டப்பன் வரைந்த வழிகாட்டும் படம்.
"என்ரையப்பு, என்ரை பேரனுக்கு குலைப்பன் காய்ச்ச லெணை.
ஒரு வலது சப்பாத்துக் கால் நிமிண்ட ராசாத்தி போர்த்த சேலை இழுபட குருத்தோலைப் டாயிலிருந்து வெளி யிலுருண்டான்.
‘என்ரை ராசா, என்னைக் கொல்லணை, என்ரை காய்ச் சல்காரப் பொடியை ஒண்டுஞ் செய்யாதை."
ராசாத்தி எல்லாக் கண்களுக்கும் ஓர் அப்பாவிக் குழந் தையாகவே தென்பட்டான்.
எட்டப்பன் வரைந்த வழிகாட்டும் படத்தை வைத் திருந்த கரம் ராசாத்தியின் நெஞ்சில் மெதுவாகப் பதிந்தது.
*அத்தவசம உண? சப்பாத்துக் கால்கள் ஒவ்வொன்ருக படலையால் வெளி யேறின. ராசாத்தியை மெதுவாகப் புரட்டி, பாயில் வளர்த் தினுள். அவன் சிரமத்துடன் கண்களைத் திறந்தாள்.
திடீரென்று ஒரு சோடி சப்பாத்துக் கால்கள் குடத் தடியை நோக்கிச் சென்றன. மண் புதிதாகப் பரப்பப்பட் டிருப்பதை மின்சூழ் விளக்கு தெளிவாக்கியது.
--س۔ 04! --

தத்து
ராசாத்திச்கு நிலைமை புரிந்தது. வலதுகரம் இடைப் பட்டியை நோக்கியும் இடதுகரம் கழுத்தை நோக்கியும் ஏத காலத்தில் சென்றன. இரண்டுமே வெறுமை.
வாழையிலைகளும் கடதாசிகளும் தொடர்ந்து வெளிவர எட்டப்பன் வரைந்த வழிகாட்டும் படத்தை வைத்திருந்த கை அருகே வர வேருெரு வலிமையான கரம் அவளுடைய நரைத்த முடியைப் பற்றித் தூக்கியது. சகல தெய்வங்களும் கண்முன் தோன்ற, "என்ரை பிள்ளையாரே எங்கடை ராசாத் தியைக் காப்பாத்து.”
‘என்ன கெழவி, சாப்பாடு துண்ணது யாரு, யாரு?"
வற்றி வரண்ட தொண்டையிலிருந்து உடனே பதில் வந்தது.
"என்ரை மேளின் ரை, இவன்ரை தாயின்ரை துவசம் நேத்து, உருத்துக்காறரைக் கூப்பிட்டுச் சாப்பிட்ட வாழை யிலைகளும் கைதுடைச்ச கடதாசியளும்.”
‘ஓ! தான தீலத்தியனவா! நம்பிவிட்டார்கள் அன்றைய கண்டம் அகன்றது.
தனது ஆச்சிக்காகவும் ராசாத்தி புத்துயிர் பெற்றுப் புயலாஞன்.
யூலை 1985
ராஜ யூனிகாந்தன்
இராஜரத்தினம் யூனிகாந்தன் 1967 அளவில் எழுத்துலகப்
பிரவேசஞ் செய்தவர். இவரது முதல்கவிதை 1-2-1967 விவேகி
இதழில் பிரசுரமானது, சிறுகதை, கவிதை, அரசியல், அறி

Page 55
ராஜழரீகாந்தன்
வியற் கட்டுரை, நாடகம், ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புப் போன்ற துறைகளில் ஈடுபடடு வருகின்ருர், குறிப்பாக ஆங்கில, ரஷ்ய இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட்வர். அவற் றின் தாங்கங்கட்கு உட்பட்டவர் இவரது ஆக்கங்கள் பல ஈழத் துச் சஞ்சிகைகளில் மட்டுமன்றி தென்னிந்திய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. தகவம் இவர் எழுதிய சிறுகதை ஒன்றுக் குப் பரிசு வழங்கிக் கெளரவித்தது. ராஜிவன், ராசாக்குஞ்சு ஆகிய புனைபெயர்களிலும் எழுதிவருகின்றர்.
சோவியத்துரதரக செய்திப் பிரிவில் பத்திரிகையாளராக இவர் பணிபுரிகின்றர். இவரது சிறுகதைகள் பலவற்றிலும் வதிரிக் கிராமத்தின் சூழல் படம்பிடிக்கப் பட்டிருப்பதன வாச கர்கள் அவதானிக்கலாம்.
பிறந்த திகதி: 30-6-1948 முகவரி: பவானி, வதிரி, அல்வாய்.

விடிவின் பாதைக்கு . . .
க. சின்னராஜன்
ஆனந்தன் அமைதியாக இருக்க முடியவில்ல. அகதிகள் முகாமை அடைந்தபோது அங்கு கண்ணிரும் asurua ujudnya காணப்பட்ட மக்களைப் பார்த்து அவன் வேதனைப்பட்டுச் கொண்டான். அவனது இதயம் சோகச் சுமைகளைத் தாங்க முடியாது குமுறிக் கொணடிருந்தது.
தொட்டுத்தாலி கட்டிய கணவன்மாரை, பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளே தங்கள் முன்னிலையிலேயே பச்சை இரத்தம் பாய்த்தோ- வெட்டியும் சுட்டும் கொன்ற கோரக் காட்சிகளை நினைந்து . நினைத்து . கண்ணீர் வடிக்கும் தாய்மாரின் தெஞ்சை நெகிழவைக்கும் கதைகளைக் கேட்டுச் Gas G... . . . அவன் அதிர்ச்சி அடைந்து - அங்கு நிழல் பரப்பி நின்ற ஆலமரம் ஒன்றின் வேர்களின் மீது சற்று வே&ள அமர்ந்து கொண்டான்.
அவனது சிந்தனைகள் பலவாருகச் சிறகடித்துப் பறந்தன. அவளுல் ஓர் இடத்தில் நிலத்துக் குந்தி இருக்க முடியவில்க்க
அங்கு துன்புற்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வி வேண் டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்த இனஞர்களையும், புவதிகளையும் அவதானித்தபோது அவனது உள்ளத்தில் ஒரி இனம்புரியாத தியாக உணர்வு சுடர்விட்டது. gavrř ser முடுக்கிவிடப்பட்ட இயந்திரங்கன்போல் gifstofTas iad களுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள். உணர்வு f
was 107 -

Page 56
சின்னராஜன்
மாக அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனல் "மனித நேயத்திலிருந்து' ஒதுங்கி இருக்க முடியவில்லை,
காயப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்போர் ஒரு புறமும்; உணவு, உடை கொண்டு வந்து கொடுப்போரி இன்னுமொரு புறம்; பாதுகாப்பு நிலைமைகளைக் கவனிப் போர் வேருெருபுறம். இவ்வாறு சகல மக்களும் பங்காளி களாக மாறிக் கொண்டிருப்பதை அவதானித்த ஆனந்தன் அங்கு தானும் ஒரு தொண்டனக இணைந்து கொள்கிருன்.
இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் இளைஞர் களுடன் சேர்ந்து இரவுபகலாக மக்கள் கடமையில் மன தார ஈடுபட்டான். அவர்களின் உன்னதமான உயிர்களையும் உடமைகளையும் குண்டர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்படத் தொடங்கி விட்
6.
என்ருலும், அவனுல் அந்தச் சம்பவத்தை மறக்க முடிய வில்லை. மீண்டும் - மீண்டும். அவன் மனத்திரையில் தோன்றி நெஞ்சக் குழிக்குள் நெருப்பாய்த் தகிக்கும் அதி தக் கொடூரமான கோரச்சம்பவம்.
கறைபடிந்த அந்தக் காலைப்பொழுதில் வெடிகுண்டு களின் அதிரிவுகளும், தன்னியக்கத் துப்பாக்கிகளின் வேட் டுக்களும் தொடர்ச்சியாகக் கேட்டவண்ணம் இருக்கின்றன. சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பயங்கர ஓசைகளால் வானமும், பூமி யும் அதிர்வது போன்ற உணர்வு ஆனந்தனுக்கு ஏற்பட்டது. அவனுல் அமைதியாக வேலைசெய்ய முடியவில்லை.
காலை ஏழுமணிக்கே நிலாவெளியில் அமைந்த தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த அவன், அயற்கிராமத்தில் அரசாங்கத்தால் புதிதாக அமைக்கப்படவிருக்கும் வீடமைப் புத் திட்டமொன்றில் மேசனுக வேலைசெய்து கொண்டிருதி தான். அவன் வந்து வேலையைத் தொடர்ந்த சில நிமிடக் களுக்குள்ளாகவே தாக்குதல்கள் தொடங்கி விட்டன. அதன்
- 108 -

விடிவின் பாதைக்கு.
எதிரொலியாக பயங்கரச் சத்தங்கள் தோன்றித் தோன்றி ஆனந்தனின் நெஞ்சைப் பிளப்பது போன்ற உணர்வை அவ னுக்குக் கொடுக்கவே.
“கோணேஸ்வரா! நீ தான் அம்மாவையும், தங்கச்சியை யும் காப்பாத்தவேணும்"
அவனது கண்களில் கண்ணிர் குளம்கட்டி நிற்க மானசீக இறைவனை வேண்டிக்கொண்டான்,
தொடர்ந்தும் பீரங்கி வெடிகள் "ஷெல்" தாக்குதல்கள் வேகமாகக் கேட்டுக்கொண்டிருந்தன.
ஆனந்தனுக்கு கைகால் ஒடவில்லை. அன்ை கவலையுடன் தனது வீட்டின் திசைப்பக்கமே பார்த்தவண்ணம் இருந்தான். 'இந்நேரம் அம்மாவும், தங்கச்சியும் என்னபாடு படு வினையோ? அவைக்கு துணைக்கு நான் அங்கே இல்லையே..?" என்று துடிதுடித்துக் கொண்டிருத்தான்.
*தம்பி ஆனந்தன்! உங்கடை ஊர்ப்பக்கமாக பிளேனும் ஹெலிகொப்டரும் சுத்துது. என்ன கரைச்சலோ தெரிaல, அல்லாவே! இந்தச் சனங்களை நீதான் காப்பாத்தவேணும்,
ஆனந்தனுடன் வேலைசெய்யும் காதர் வானத்தைப் பார்த்தவண்ணம் அனுதாபத்துடன் கூறினன்.
மீண்டும் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் பூமியைநோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. பொம்பர் விமானங் களில்ை குண்டுகள் வீசப்படுகின்றன. அவை செங்குத் தாக வத்து குண்டுகளை வீசிமேலெழும்போது கரும்புகையைக் கச்கிவிட்டு உயரத்தில் பறந்து வட்டமிட்டுக் கொண்டிருக் கின்றன. ஒரே இடிமுழக்கம் போன்ற ஓசை.! அதிர்வு.! ஆனந்தனின் இதயம் படபடக்கின்றது.
*ஆனந்தன்! நீ பயப்புடாத அல்லா காப்பாத்துவார்
"தானு! அந்தப் பக்கம் பாருங்கோ! வானமெங்கும் ஒரே புகைமண்டலம்” ஆனந்தனின் குரல் கம்மிக்கிடக்கிறது. அவ
سے 109 ۔

Page 57
бdтступgsi.
னது நெஞ்சை ஆத்திரம் அடைக்க கவலேயுடன் வானம் தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"யா அல்லா! நாங்க சங்க வீட்டைக் கட்டிறம். அவங்க அங்க எரிக்கிருங்க. என்ன அநியாயம்! இது அல்லாவுக்கு அடுக்குமா? காதர் மிகவேதனையுடன் கூறினுன்.
நிமிடத்துளிகள் வளர்ந்து . வளர்ந்து. சில மணித்தி பாலங்களைப் பிச சவித்தன
அவர்களின் மிருகவேட்டை முடிந்திருக்க வேண்டும்? எங்கும் ஒரே அமைதி 1 வேட்டுக்களின் சத்தங்கள் குறைந்து மேளனத்தை முன்மொழிந்தன.
ஆனந்தன் தன்வீட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்த மாஞன். அவனைக் காதர் சிறிது தூரம் கூட்டிச்சென்று வழி அனுப்பிவிட்டு மனவேதனையுடன் திரும்புகிருன். ஆனந்த னின் மனச்சுவடுகள் பயப்பிராந்தியால் பின்னடைய அவன் சகல திசைகளையும் துளாவி . துளாவிப் பார்த்து நடந்து கோண்டிருத்தான்.
* கடவுளே! என்வீட்டில் ஏதும் நடக்கக்கூடாது. அம்மா, தங்கச்சி. அயலவர்கள் அனைவரையும் நீ தான் காப்பாத்த வேணும்" என்று வழியில் தெரிந்த விகாரையைப் பார்த்து நெஞ்சு நெக்குருக மனத்தால் வேண்டிக்கொண்டான்.
தனது வீட்டிற்குச் செல்வதற்குரிய பாதுகாப்பான பாதையில் அவனது தடை தொடர்ந்தது . அவன் நிலா வெளிக் கிராமத்தின் எல்லைப்புறத்தை அண்மித்தபோது அவனுக்க ஒருவித சஞ்சலம் - மனம் சிறிதும் அமைதியின்றிக் குழம்பியது. உற்றுப் பார்த்தபோது.
“என்ன அதியாயம் ஏன் இத்த முருகன் கோயிலை Tiħa சவங்கள்! கடவுளே! மஞ்சம் 1 கோபுரம்1 சிக்திரத்தேர் எல்லாத்தையுமே எரிச்சுப் போட்டாங்கள்! ஆ. கடவுளே குருக்கஃாயும் சுட்டுப் போட்டாங்களே! தார்மீகம் - அகிம்சை எல்லாம் பேச்சளவில்தான். நடப்பதோ அக்கிரமம்" அவனது பற்கள் கோபத்தால் தெறுநெறுத்தன.
- O -

விடிவின் பாதைக்கு,
ஆனந்தன் பிரதான தெருவைக் கடத்து வகிடு பிசித்தி ருந்த அந்த ஒற்றையடிப் பாதையூடாக தனது as "SRPLஅண்மித்துக் கொண்டிருத்தான். எங்கும் ஒரே அமைதி . மக்களின் நடமாட்டத்தையே காணமுடியவில்லை மரங்கள், செடிகள், பயிர்கள் கருகிய நிலையில் அரையும், குறையுமாக கிடக்கின்றன வீடுகளும். சில பொதுக் கட்டிடங்களும் எரித் தும், உடைத்தும் காணப்படுகின்றன. இக்காட்சியைக் கண் டதும் அவன் அதிர்ச்சியடைந்தான்! அவனுக்கு 6T of 67 செய்வகென்றே புரியவில்ல. அவனது உடல் சோர்வடைய கவலை தோய்ந்த முகத்துடன் தனது வீடு அமைந்துள்ள குறுக்கு வீதிக்கு வந்தான்.
தம்பி ஆனந்! எங்குப் போறது? அங்கு வூட்டுப்பக்கம் போகவேரூம் "
ஆனந்தனின் தந்தை உயிருடன் வாழ்ந்த காலத்தில் இருந்தே சில்வா. அவர்களின் குடும்ப நண்பராக இருந்து வத் ததும், அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கர வானக வாழ்ந்த பசுமையான நினைவுகளும் சில்வாவின மனத் திரையில் தோன்றி உள்ளத்தை நெருடியது. அவரது நெஞ் சம் கசிந்து கண்ணிர் வடிந்தது.
"முதலாளி ஏன் அழுகிறீங்கள் என்ன நடந்தது! சொல் லுங்கோ முகலாளி சொல்லுங்கோ.
- ஆனந்தன் பதட்டத்துடன் கேட்டான்.
சில்வா அவனை அழைத்துச் சென்று தனது Gikę do பின்புற அறையைக் காட்டினர். இரண்டுபிரேதங்கள் ஒன்றை பொன்று அனைத்தபடி கிடந்தன.
'அம்மா..! என்று அவற்றின் மீது அவன் விழுந்து புரண்டான். அவர்கள் இருவரையும் மாறிமாறி படி மீது தூக்கிவைத்து அழுது கண்ணீர் வடித்தான். gåva unir es G7 கலங்கியபடி அவனைத் தேற்றிக் கொண்டிருந்தார் "அவ கள்? நிலா வெளிக் கிராமத்தை முற்றுகையிட்டு தீவிரவாதி களைத் தேடுதல்' என்ற போர்வையில் அப்பாவி மக்கஃக்
سے 11 سے

Page 58
சின்னராஜன்
கொன்று குவித்ததையும் பெண்களின் சுற்பைச் சூறையாடி அவா களைக் துப்பாக்கிக்கு இரையாக்கியதையும சில்வா ஆனந்தனுக்கு மிக வேதனையோடு எடுத்துக் கூறினர்
பாதுகாப்புத்தேடி சில்வா வீட்டில் இருந்த அம்மாவை யும், சகோதரியையும் சுட்டுத்தளவிரிவிட்டு சில்வாவின் நெஞ் சிலே துப்பாக்கிச் சோங்கினல்’ இடித்த வெறித்தனமான செயலைக் கேட்டபோது அவருக்காக இரக்கப்பட்டுக் கொண் டான்.
அப்போது துப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்கள் சர மாரியாக மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டன. வானத் தில் ஹெலிகொப்டர்களும் பொம்பர் விமானங்களும் சுற்றிச் சுற்றி நோட்டமிட்டுச் செல்வது தெரிகிறது.
ஆனந்! நீ ஒடித்தப்பிவிடு தான் எப்படியாவது இந்த பொணங்களே எரிச்சுடுவன். அவங்க திரும்ப வந்தா ஒனக் கும் கறைச்சல் தானே .. ?
சில்வா ஆனந்தனுக்காக அனுதாபப்பட்டுக் கொண்டார். "முதலாளி! நான் செத்தாலும் பரவாயில்லை. இனி இழப்பதற்கு எனக்கு ஒண்டுமில்ல. உயிருக்குயிரான அம்மா இல்ல! தங்கச்சி இல்ல! வீடு இல்ல! கடைசி இந்தப் பிரேதங் களையாவது எரிச்சு என்ர கடமையை முடிச்சுட்டுப்போறன் ?
அங்கு வீடுகள் எரிந்து அரையும் குறையுமாகக் கிடந்த கட்டைகளை எடுத்து அயலிலுள்ள சுடலையில் ஒழுங்காக அடுக்கினன். அவர்கள் இருவரையும் சில்வாவின் துணையோடு துரிக்கிச் சென்று அவற்றின்மீது பக்குவமாக வைத்து வணங் கிஞன். அவன் நெஞ்சு சோகச் சுமையைத் தாங்கமுடியாது வறண்டு பொருமியது. கண்களில் குளம்கட்டி நின்ற நீரா னது தாரை தாரையாக ஒடிப்பாய்த்தது. அவன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு கொள்ளி ஒன்றை எடுத்து சிதைமீது வைத்துவிட்டு நின்று விம்மி. விம்மி. அழுதான்.
சில்வா முதலாளிக்கு ஆனந்தனைப் பார்க்கப் பெரும் சங் கடமாக இருந்தது. சில்வாவின் கண்களில் நீர் பணிக் ைஆணத் தன அரவணைத்து.
- 1 12

விடிவின் பாதைக்கு .
*ஆனந்! நீ நிண்டா ஒன்னையும் வெட்டிக்கொலை செய் வாங்க! நீ அந்தக் காட்டுப்பக்கமாக மறஞ்சு அகதிகள் முகா முக்கு போயிடு நான் இதுவளை கவனிச்சுக்குறன்" என்று கூறி ஆனந்தனை அவசரப்படுத்தினன்.
ஆனந்தனின் தாய், சகோதரி இருவரினதும் பூகஉடல் கள் அக்கினியில் சங்கமமாகிக் கொண்டிருக்க, அவன் காட் டுக்குள் மறைந்து அகதிகள் முகாமை தோக்கி யாருமற்ற அனதையாக, வேதனையுடன் நடந்து வந்து சேர்ந்தான்.
ஒருநாள் பின்னிரவு இரண்டுமணியளவில் அவனது சக தோழன் முரளி பயப்பிராந்தியுடன் 'ஒடிவருகிறன்.
*ஆனந் காட்டுப் பக்கமாக ஏதோ சலசலப்பு "
முகாமின் மறுகோடியில் காவலில் ஈடுபட்டிருந்த ஆனந் தன் அதைக்கேட்டு வெலவெலத்துப் போஞன் எனினும் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு.
“முரளி ! நீ எதற்கும் பயப்புடாத தைரியமாயிரு. நான் போய்ப் பார்த்திட்டு வாறன் ?
ஆனந். அவரப்படாத. ஏதோ ஆபத்து நெருங்கி விட்டுது போல.
அதைப்பற்றி நான் கவலைப்படேல. ஆனல் மூதூர் அகதி கன் முகாமில நடந்ததுபோல இங்கையும் நடச்கக்கூடாது. எங்கட இறுதி மூச்சு இருக்கிறவர நாம் போராடியே தீருவம்! ஆனந்தன் வலு நிதானமாகவும் துணிவாகவும் கூறி விட்டு அந்தத் திசையை நோக்கி நடந்தான். அவன் மெது வாகத் தவழ்ந்து . தவழ்ந்து பாதுகாப்பான வழிகளால் நகர்ந்து கொண்டிருந்தான். வழியில் காட்டாறு ஒன்று வெள் ளம் பிரவாகித்து ஓடிக்கொண்டிருந்தது. அதனை சலனமின்றி நீந்தி மறு கரையை அடைந்தபோது .
"அவர்களின்" சப்பாத்துக்களின் தடங்கள், நட்சத் நிரங்களின் ஒளியில் மங்கலாய்த் தெரிந்தன.
“பெரியதொரு ஆபத்து எதிர்பார்த்திருக்கிறது இகள ஞர்கள் வெட்டப்படலாம். பெண்களும், குழந்தைகளும்
- 113 -

Page 59
சின்னராஜன்
சுடப்படலாம் . பல அப்பாவிகள் கைதுசெய்யப்படலாம். ஆனந்தனின் மனம் பலவாறு எண்ணி எண்ணித் தவிக்கிறது.
அப்போது கவச வாகனமொன்று மரங்களிடையே மறைச்து நிறுத்தப்பட்டிருப்பது ஆனந்தனுக்குத் தெரிகிறது. அதில் வந்த சிலர் தங்கள் சகபாடிகள் வருமவரை அங்கு மிங்கும் மோப்பம் பிடித்துத் திரிகின்றனர். வேறுசிலர் விசர் பிடித்த தாய்களைப்போல் கட்டுப்பாடின்றி காணப்படுகின் றனர்.
ஆனந்தன் வெகுசாதுரியமாகவும், நிதானமாகவும் அந்த வாகனத்தை அடைந்து எட்டிப்பார்க்கிரு:ன். போதியளவு ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் தயார் நிலையில் கிடக்கின் றன அவன் மிகத் துணிவுடன் சில குண்டுகளைக் கைகளில் எடுத்து வேகமாகச் செயற்படுகிருன் .
அவன் கையில் எடுத்த குண்டொன்று ஆற்றுக்குக் குறுக்கேயுள்ள பாலத்தின்மீது விழுந்து, பாலம் இடிந்து விழு கிறது.
பதுங்கி நிற்கும் எதிரிகளை நோக்கிப் பாய்ந்து செல்லும் குண்டுகள் வெடித்து. வெடித்துச். சிதறுகின்றன.
நான்கு திசைகளிலிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் அவனை நோக்கிப் பயங்கரமாகப் பாய்ந்து வருகின்றன
ஆனந்தனின் உடலை அந்தத் துப்பாக்கி வேட்டுக்கள் Wédb6v6ID) L-uunrad ag GTP pišg ..... குருதி சொட்ட. ஒரு அசுர வேகம் அவனைத் தொழிற்படுத்தகிறது. அவன் கையிலே இருந்த வெடிகுண்டை அந்த வாகனத்திற்குள் மூர்க்கமாக வீசி எறிகிருன். வெடிகுண்டுகள் யாவும் சிதறுகின்றன! அதில் ஆனந்தனின் உடல் சின்னபின்னமாக அவன் களப் வலி ஆகிருன்வை
(in 1986)
a=114 =

விடிவின் பாதைக்கு .
க. சின்னராஜன்
இவர் 1970ல் எழுத்துலகில் பிரவேசித்தார் இவரது முதல் ஆக்கமான கவிதை ஒன்று 1975ல் வீரகேசரியில் பிரசுரமானது. புதுக்கவிதை, மரபுக்கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் குறிப்பாகப் புதுக்கவிதை யின் தோற்றம், வளர்ச்சி, அதன் எதிர்காலப் போக்குகள் பற்றி நுணுக்கமாக அவதானித்து வருபவர். தற்கால எரியும் பிரச்சினை களையும் புதுக்கவிதையிலே வடித்துவிட முயற்சிப்பவர். நாடகம்" விமர்சனம் போன்ற துறைகளில் நடத்தப்பட்ட் பல போட்டி களிலே இவரது ஆக்கங்கள் பரிசுபெற்றன. பாராடடுப் பெற்றன,
சர்வோதயன்' என்பது இவரது புனைபெயர்.
வங்கியாளராகப் பணிபுரியும் இவர், ஆவரங்காலைப் பிறப் பிடமாகக் கொண்டவர். அல்வாய் வட்க்கு கிராமத்தில் திருமணம் செய்து கொண்டவர்.
பிறந்த திகதி: 20-3-1950 மூகவரி: கவிதாஞ்சலி அல்வாய் வடக்கு, அல்வாய்,
سے 115 -۔

Page 60
*உயிர்ப்புகளின்
(இத்தொகுதி, இதனுள் இ.
ஒரு விமரிசனக் குறிப்பு)
- பேரா?
"கலையாக்கம் என்பது, (அதாவது அது எழுகின்ற (அதாவது மனிதன்) தன்னை தன்னைப் புறநிலைப்படுத்திப் ட முல் தன்னை இனம் கண்டு ளாகும். (அதாவது புறநிலை தான, பிண்டப் பொருளான
S LSLSLSLLLLLYY LLLL0 LLLLLL LLLS SSLLLSTT0 TLTSLLLL LLLL SLLLLS LLLLLL0 LY0 YLYz
"மனிதன், தன்னுள்ளிரு, மூலமும், தன்னை முனைப்புறு அதாவது தன்னை ஒரு விடய வதன் மூலமே - அவன் தன் மாதலால், கலை, மனிதனை முறையில் மிக முக்கியமான
புகழ்பெற்ற மார்க்ஸிய ஃபோ, சாஞ்சேஸ் வாஸ்
Society) GT691 b pit 65a5

(O)
உயிரைத்தேடி.
டம்பெறும் ஆக்கங்கள் பற்றிய
நிரியர் கா. சிவத்தம்பி
அவ்வாக்கத்தின் எழுவாயான இடமான) அகநிலைப்பொருள் வெளிப்படுத்திக் கொள்வதான, பார்த்துக் கொள்வதான, இவற் கொள்வதான ஒரு பருப்பொரு பில் வைத்துப் பார்க்கக் கூடிய , MOD LUGOL-tül H - G5 lb) • • • • • • • • •
ந்து தான் வெளியே வருவதன் த்தி நோக்குவதன் மூலமுமே - பப்பொருளாக ஆக்கி நோக்கு னத்தான் அறிந்து கொள்ளலா
மனித நிலப்படுத்தும் நடை ஓர் இடத்தினைப் பெறுகின்றது.”
அழகியல் விற்பன்னர், அடொல் கீஸ், (கலையும் சமூகமும் (Art & ருந்து - லண்டன் 1979)
117 -

Page 61
பேராசிரியர் கா. சிவத்தம்பி
(1)
கலையாக்கத்தின் தன்மைபற்றிய இந்த மேற்கோள், ஒரு கலைப்படைப்பிலிருந்து அதனை நுகர்வோன் பெறும் கலைப் பயனை மிக நுணுக்கமாக, அதே வேளையில் மிகத்தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
பெரிதும் எளிமைப்படுத்தாமற் கூறுவதானுல், கலைப் படைப்பு என்பது மனிதன் தன்னைத்தான் நன்கு புரித்து கொள்வதற்கு வேண்டிய, புறநிலைப் பொருளாக அமைந் துள்ள "படைப்பு’ ஆகும். அது மனிதனைப் பற்றியது. அதே வேளையில் மனிதன் தனக்குப் புறம்பே வைத்து நோக்கத் தக்க ஒரு பிண்டப் பொருளாக அமைவது. மனிதனிடத்தி விருந்து படைக்கப்படுவது (ஆக்கம் மாத்திரம் படைப்பு ஆகாது “படைப்பு’ எனும்பொழுது ஆக்கமும் அளிப்பும் இணைகின்றன ) எனவே கலைப்படைப்பு என்பது மனிதனுர டாக வந்து மனித நிலையைக் காட்டுவது.
ஒவியம், சிற்பம், இசை முதலாம் துறைகளில் வரும் படைப்புக்களுக்கு இவ் உரைகல்வாசகம் எத்துணை பொருந் துமோ இலக்கியத்துக்கும் அத்துணை பொருந்தும்.
ஒவியம், சிற்பம், இசை முதலாம் துறைகளில் ஒரு படைப்பு ஆக்கி அளிக்கப்படுகின்றபொழுது அவற்றின் செம் மையை உத்தரவாதம் செய்வதற்கான "தொழில் நுட்ப எத்துணை அவசியமோ இலக்கியத்திலும் ஆக்க நுட்பப்புலமை அத்துணை அவசியமானதாகும். இது பற்றிப் பின்னர் சிறிது விரிவாகவே நோக்குவோம். இக்கட்டத்தில், கலைப்படைப்பின் தன்மை பற்றிய ஆக்கவியல் உண்மையினை இறுக்கமாக மனப் பதிவு செய்வதே போதுமானதாகும்.
(2)
எழுத்தாளர் பன்னிருவரின் சிறுகதைகளே - அவர்களின் கலைப்படைப்புக்களை - வாசித்து முடித்த நிலையிலேயே இத்தப் பகுதியை வாசிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்றே எதிர் பார்க்கின்றேன்.
- 18 -

'உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
"உயிர்ப்புகள்’ எனும் இச்சிறுகதைத் தொகுதி சுவார சியமான ஒரு தொகுதியாகும். சீவியத் தேவைக்கான நுகர் வுப் பண்டங்களை விநியோகஞ் செய்வதற்கெனத் தொழிற் படும் ஒரு நிறுவனம். மனித நுகர்வின் இன்ளுெரு மட்டத் தேவையான கலைநுகர்வுக்கான (நுகர்ச்சி என்பது ‘இது போலும்') ஒரு பண்ட விநியோகத்தில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்ருகும்.
எழுத்து வழிப்படைப்பு சனநாயகத் தேவையான ஒரு நுகர்வுப்பொருள் என்பதை இது வலியுறுத்துகின்றதென
லாம்.
குறிப்பிட்ட ஒரு கூட்டுறவுப் பெருமன்றத்தின் தொழிற் பாட்டுப் பிரதேசத்தில், அதாவது கட்டைவேலி - நெல்லிய டிச் சங்கப் பிரதேசத்தினுள்ளும் அதற்கு அடுத்த அயற் கிராமங்களிலிருந்தும் ‘மேற்கிளம்பியுள்ள எழுத்தாளர் பன் னிருவரின் படைப்புக்கள் பன்னிரண்டு இங்கு ஒருங்கு திரட் டித் தரப்பட்டுள்ளன (படைப்புக்களின் ருசிப்பரிசோதனை யாளரும் இந்தக் கட்டைவேலி - நெல்லியடிப் பெரும்பாகத் தின் பிரதான கிராமமான கரவெட்டியின் “படைப்புத்தான். இப்பொழுது அயற்கிராமத்திற்குப் படர்ந்துள்ளது.)
இத்தொகுதியின் நியாயப்பாடு, அது, யாழ்ப்பாணப் பண்டாட்டுருவாக்கத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றன வட மராட்சியின் ஒரு முக்கிய பகுதியிலிருந்து வருவதென்பதனல் ஏற்படவில்லை. இந்தத் தளத்திலிருந்து மேற்கிளம்பிய சில இலக்கியக் கலைஞர்களது ஆக்கங்கள் ஈழத்துத் தமிழரது இன்றையநிலையைப் 'புரிந்து கொள்வதற்கான (வெறுமனே ‘தெரிந்து கொள்வதற்கானவை அல்ல) படைப்புக்களாக, பதச்சோறு" ஆக, அமைந்துள்ளன என்று முன்வைக்கப்பட் டுள்ளமையிலேயே அந்த நியாயப்பாட்டை நாம் கண்டு கொள்ளலாமெனக் கருதுகின்றேன்.
ஈழத்துத்தமிழ்மக்களின் விமோசனத்துக்கான போராட் டமாகப் பரிணமித்துள்ள இலங்கையின் இனக்குழுமப் பிரச் சினை தோற்றுவித்துள்ள நிலைகளை எடுத்துக் கூறுவனவாக
- 119 ܚ

Page 62
பேராசிரியர் கா. சிவத்தம்பி
ஏழு கதைகள் அமைந்துள்ளன. (தெணியான்,கருணையோகன், நெல்லை க. பேரன், ச. முருகானந்தன், த. கலாமணி, ராஜ பூரீகாந்தன், சு. சின்னராஜன், ஆகியோரது படைப்புக்கள்.) சீதனம், சாதியுணர்வு, சமூக அந்தஸ்துப் பற்றிய போலிப் மனப்பதிவு ஆகியனபற்றியும், வேலே நிறுத்தத்தினுல் பாதிக் கப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலைபற்றியும், மற்றைய சிறு கதைகள் (சி. வன்னியகுலம், கண. மகேஸ்வரன், குப்பி ழான் சண்முகன், சு. நவம், கி. பவானந்தன் ஆகியோரது ஆக்கங்கள்) பேசுகின்றன.
சுருக்கமாகச் சொன்னல் இவை யாவும் சமகாலச்சமூகப் பிரச்சினைகள்,
இலக்கியம் என்பது சமூக இயைபுடையனவாகவும், எழுத்தாளனும் பங்குதாரராகவோ, *பெறுவோணுகவோ? இருக்கும் சமகாலப்பிரச்சினைகள் பற்றியனவாகவும் அமை தல் வேண்டுமென, இப்பொழுது எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்படும் இலக்கியக்கொள்கை நிலை நின்று நோக்கும் பொழுது, இத்தொகுதி “சிரத்தைமிக்க கவனத்துக்கு எடுத் துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்ருகின்றது.
முதலிற் சற்றுத் தயக்கத்துடனும், உள்ளுறை, இறைச் சிப் பொருள்களை நினைவுறுத்தும் வகையிற் சூசகமாகவும் எமது இலக்கியப்படைப்புக்களில் எடுத்துக்கூறப்பட்டு வந்த சிங்கள ராணுவ எதிர்ப்புணர்வு, இப்பொழுது ஈழத்துத் தமிழ்மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம் எனும் திட்ப மான கட்டுக்கோப்புக்குள் வைத்து மேற்கொள்ளப்படும் இலக்கியநிலைச் சித்திரிப்பு ஆகமாறி, தவிர்க்கமுடியாத இலக் கியப் பண்பாகக் கொள்ளப்படும் ஒரு நிலையினை (காலகட்ட முதிர்வினை) இத்தொகுதியிலே காணக்கூடியதாகவுள்ளது. முதலில், உள்ளூர்க் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு நிற்கும் ஈழத்தின் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களால் மாத்திரம் (ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கணேசலிங்கன், யோக நாதன் (அவர் புலம் பெயர்வதற்கு முன்னரே இதுபற்றி எழுதத்தொடங்கி விட்டார்) துணிச்சலுடன் எழுதப்பட்டு
ー120ー

'உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
வத்த இவ்விடயம், இப்பொழுது இங்குள்ளவர்களால், தங் கள் பிரக்ஞைகளிற் பட்ட, படுகின்ற முறைமையில் சித்தி ரிக்கப்படத் தொடங்கப் பெற்றுள்ளமை, அவதானிக்கப்பட வேண்டிய ஒரு முன்னேற்றமாகும்.
ஆனல் முக்கியமான ஒரு விஞ எம்முன் நிற்கின்றது; சிறிதேனும் அசைய மறுத்து, எதிர்கொண்டு முன்நிற்கின் றது. அவ்வாறு துணிவுடன் எழுதப்பட்டு விட்டமையால் மாத்திரம் இவை இலக்கியங்களாகவும் ஆகிவிட்டனவா?
கலையாக்கத்தின் தன்மைபற்றி இக்குறிப்பின் தொடக் கத்தில் எடுத்துக்கூறப்பட்ட வாஸ்கீஸின் கருத்து இப்பொ ழுது மிக முக்கியமாகின்றது. கலைப்படைப்பின் தன்மையாது. அப்படைப்பின் ஆக்கவியல் அமிசங்கள் யாது, அப்படைப் பின் “பயன்பாடு யாது என்பன பற்றிய வினுக்களுக்கு விடையிறுக்கும் அம்மேற்கோள் மிகநுணுக்கமாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்ருகும்.
எழுதப்படுவதால் எதுவும் இலக்கியமாகி விடுவதில்லை; தீட்டப்பெறுவதால் எல்லா ஒவியங்களும் ஓவியங்களாகா திருப்பது போன்று; செதுக்கப்படுவதால் எல்லாப் படிமங்க ளும் படிமங்கள் ஆகிவிடாதிருப்பது போன்று, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதைக்குள் ஒரு முக்கியமான விமரிசன உண்மை தொக்குநிற்கின்றது.
நாம் எழுதுவன மாத்திரம் முக்கியமாவதில்லே. "எழு தப்பட்டது” எவ்வாறு அமைந்துள்ளது என்பதும் முக்கிய மாகும். எழுதப்பட்டது என்பது எழுதப்படும் பொருளின் முக்கியத்துவத்திலே, அந்தப் பொருளை அறிமுறையிலே தொடங்கி, அந்த "அறிமுறை” எவ்வாறு "சித்திரிப்பு’ ஆகின் றது என்பது பற்றி விளங்க முற்பட்டு, அந்த "அறிமுறை" யினைக் கொண்ட ஆளுக்கும் அந்தச் சித்திரிப்புக்குமுள்ள இயைபு பற்றி தெளிவுபடுத்தி, அதனையடுத்து எழுதப்பட்ட தன் பின்னர் பிண்டப்பொருளாய் நிற்கும் அந்தப் படைப்பு தான் சித்தரித்ததை எவ்வாறு ‘விளக்குகின்றது” என்பதைக்
- 121

Page 63
பேராசிரியர் கா. சிவத்தம்பி
கண்டு, அந்த விளக்கத்தை ஏற்படுத்தும் அமிசங்கள் யாவை என்பதை இனங்கண்டு கொண்டு அமிசங்களின் இயைபை யும் படைப்பின் முழுமையும் இயைபுபடத் தெரிந்து கொள்வ திலேயே விமர்சனம் முழுமை பெறுகின்றது.
இதுதான் கலைவிமரிசனத்தின் முழுமை, குறிப்பிட்ட கலையின் தனித்துவங்கட்கு ஏற்பவும், குறிப்பிட்ட ஒரு கலை குறிப்பிட்ட ஒரு காலத்திற் பயிலப்படும் தன்மைகளின் அத் தியாவசியகங்களுக்கு ஏற்பவும், விமரிசனக்தின் மேற்குறிப் பிட்ட அமிசங்கள் வற்புறுத்தப்படுவதோ, அழுத்திக் கூறப் படுவதோ வேறுபடலாம். அதனுல் அழுத்திக் கூறப்படும் ஒரு அமிசம்தான் முழுவிமரிசனமும் என வாதிட்டு நிற்கக்கூடாது.
ஈழத்துத் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சியில் இப்பண்பு மிகமுக்கியமான வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. இலங்கை யில் 1950களின் பிற்கூற்றிலும் அறுதுகளிலும், இலக்கியத் தின் சமூக இயைபும் உணர்விறுக்கமும், வளர்ந்துவரும் சமூக சனநாயகப்பாட்டின் தேவைகட்கியைய, சமகால இயைபி லேயே தங்கியுள்ளது என்ற கருத்து இலக்கிய ரீதியாக முன் வைக்கப்பட்டது. இது இலக்கியத்தின் சமூகவியல் அமிசத்தை வலியுறுத்துவதாக அமைந்தது. இதற்கு ஒரு மார்க்லீயப் பரிமாணம் இருந்தது. இலக்கியம் சமூகத்தினைப் பிரதிபலிப்ப தாக அமைதல் வேண்டுமெனும் கொள்கை, சித்தாந்த ரீதி யாக முன்வைக்கப்பட்டது. அந்தக்கட்டத்தில் எழுதப்படு வதன் கனதியே முக்கியமான பிரச்சனையாகவிருந்ததால், எழுதப்படுவதன்“பொருள் எது என்பதே முக்கிய விடயமாக எடுத்து ஆராயப்பட்டதால், சமூகவியல் விமரினம் முக்கிய மாயிற்று. அக்கால கட்டத்திலேயே தமிழிலக்கியப் பயில் வாளர் மட்டத்தினுள் இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, மாக்ஸியம் இலக்கிய வழிநடத்துகைக்கும் ஏற்புடைத் தான ஒரு உந்துசக்தியாகக் கொள்ளப்பட வேண்டுமென்ற தொழிற்பாடு, முதன்முதலாகக் காணப்பட்டமையால் இந்த சமூகவியல் விமரிசனம் மார்க்ஸிய வாதத்தின் அன்றைய தமிழிலக்கியத் தேவையாயிருந்தது. இதன் காரணமாக, மார்க்ளிய விமரிசனம் முழுவதும் சமூகவியல் விமரிசனம்
- 122

'உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
மாத்திரமே என்ற ஒரு கருத்து மயக்கம் பலரிடையே ஏற்பட் டது. சிலர் அந்த மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவே யில்லை.மார்க்ஸிய விமரிசனம், பல நாடுகளில் இந்தத் தப்ப பிப்பிராயத்தை எதிர்நோக்கவேண்டியிருந்தது என்பது உண் மையே. கலைப்படைப்பு என்பது சமூகக் துக்கு அப்பாற்பட் டது அல்ல என்பதை நிலைநிறுத்தவேண்டிய தேவை அன்றி ருந்தது. அன்று அவ்வாறு வற்புறுத்தப்படாது விடப்பட்டி ருப்பின், கலைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற வாதம் வென்றிருக்கும். அப்படி நடந் திருப்பின், கலை, சமூகமாற்றத்தை எதிர்க்கும் ஒரு சக்தியாக மாற்றப்பட்டிருக்கும். மனித முழுமைக்குள்ளேயே கலையும் அடங்கும் என்ற கொள்கையின் முதற்கட்ட வற்புறுத்துகை கலையின் சமூகவியல் விமரிசனமாகும்.
அந்த நிலைப்பாடு வற்புறுத்தப்பட்டு, அதுவே கலேப் படைப்புத் தோற்றத்தின் நிலையான எடுகோளான பின்ன ரும், அதனையே தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருப்பது கால முரணுகும். அத்திவாரத்தை நன்கு இட்டுவிட்டுச் சுவர் நிலைக்கு வரும்பொழுது சுவரைப்பற்றிய சிரத்தை வேண்டும். அதற்காக அத்திவாரத்தை மறப்பதல்ல. ஆனல் சுவரே அத்திவாரமும் ஆவதில்லை.
இந்த உண்மைக்குள்தான் இயங்கியற் பொருள் முதல் வாதம் நிற்கின்றது. இதனை எளிமைப்படுத்த முயன்ருல்) வரும் வாய்ப்பாடுகள் உண்மையான அசைவியக்கத்தின் பன்முகப்பாட்டை விளக்குவனவாயிரா. வாய்ப்பாடுகளைச் சொல்வதற்குப் பழகியவர்களும், பழக்கப்பட்டவர்களும், வாய்ப்பாடே "முழுக்கணக்கும் என்று மயங்குவர். கணக் கின் சிக்கற்பாட்டைச் சொல்ல முயல்பவன் அவர்களின் எளி மைப்படுத்தப்பட்ட வாய்ப்பாடு மட்டை அறிவில், பூச் சாண்டி காட்டுபவளுகக்கூட மாறிவிடலாம்.
இன்றைய கட்டத்தில், நாம் மார்க்ஸிய அழகியலின் அடுத்த பரிமாணத்துக்குச் செல்வது அவசியமாகின்றது. அதா வது "சமூகத்தை தளமாகக் கொண்டு எழுதப்படுவது
- 123

Page 64
பேராசிரியர் கா. சிவத்தம்பி
(படைக்கப்படுவது) எவ்வெம் முறைகளில் எழுதப்படும் பொழுது தனது முழுமையைப் பெறுகின்றது’ எனும் விஞ முக்கியமாகின்றது. எனவே எது எழுதப்படுகிறது எனும் நிலையிலிருந்து எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு வருகின் ருேம். எழுதப்படுகின்ற முறைமைதான் எழுதப்படுவதை முனைப்பாகவும் செம்மையாகவும் ஆக்கும். பிள்ளையார் பிடிக் கத் தொடங்கினல், அது பிள்ளை யாராகவே முடியவேண்டும். பிள்ளையாரின் அமிசங்களைத் தெரியாமலும் அந்த அமிசங் களே அமைக்கும் முறை தெரியாமலும் பிள்ளையாரைப் பிடிக்க முடியாது. அப்படியான நிலையில்தான் உண்டாக்க விரும்பிய பொருளுக்குப் பதிலாகக் குரங்குவரும்.
ஆகவே ‘எப்படி எனும் இவ்வமிசம் படைப்பிலக்கியத் தில் எவ்வாறு தொழிற்படுகின்றதென்பதை முதலில் நோக்கு வோம்.
அதற்கு முன்னர், எச்சரிக்கையாக இரண்டு உண்மை களே முன் வைக்கவேண்டியுள்ளது.
முதலாவது, இந்த "எது’, ‘எப்படி என்பனவற்றையே வாய்ப்பாடு ஆக்கிவிடக்கூடாது பல்கலைக்கழகத் தமிழ் வகுப் புக்களில் இவை வாய்ப்பாடாகக் கொள்ளப் பேற்றதனல், கவிதை ரசனை எவ்வாறு ஊறுபடுத்தப்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரிந்ததே.
இரண்டாவது உண்மை, ‘எப்படி? என்பதனை அறிவதற் கான முறைமையாகும். இது “ஆறு மாதத்தில் ஆங்கிலம் கற்பது', 'எழுத்தாளன் ஆவது எப்படி" என வரும் பிர சுரங்களிற் காணப்படுவதுபோன்று சில வழிநடத்தற் குறிப் புக்கள் மூலம் எடுத்துக் கூறப்படத்தக்கதன்று.
இலக்கியப் படைப்பு எப்படி அமைகின்றது என்பதை அறிவதற்கு நாம் அந்தப் படைப்பினே, அதாவது அந்தப் படைப்பு அமைந்துள்ள பாடத்தை (Text) நன்கு வாசித்து, பாடத்தில் ஆராயப்படும் உண்மையான விடயம் யாது, அது எத்தகைய பின்புலத்தில் வைத்துச் சொல்லப்படுகிறது, அன்றேல் எத்தகைய கட்டுக்கோப்பினுள் வைத்துச் சொல் லப்படுகின்றது என்பதனை நிர்ணயஞ் செய்து கொள்ள வேண்டும்.
i 124 -

"உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
இக்கட்டத்தில், மார்க்ஸிய விமரிசன முறைமையில் எடுத் துக் கூறப்படும் "பட்டெறிவுச் சித்திப்புக்கொள்கை” (theory of reflection) பற்றி ஒரு சிறுகுறிப்பு இவ்விடத்தில் அவசிய மாகின்றது. இதில்வரும் 'நிஃப்ளெக்ற் (reflect) என்னும் பதத்துக்கான வழமையான மொழிபெயர்ப்பாம் 'பிரதிபலி? என்னும் பதத்தை எடுத்துக்கொண்டு, அப்பிரதிபலிப்பானது கண்ணுடியில் தெரிவது போன்ற பிம்பப் பிரதிபலிப்பு என விளங்கிக்கொண்டு புறவுலகிற் காணப்படும் ஒன்றை எழுத்து வடிவப் பிம்பமாக வைத்துக் கொள்வதே இக்கொள்கையின் கருத்து எனத்தவருகப் புரிந்து கொள்கின்றஒரு நிலைமையை தாம் நமது எழுத்தாளர் பலரிடையே அவதானிக்கலாம். உண்மையில் இத்தகைய ‘பிம்பப்பிரதிப்பாடு இயல்பு வாதத் தின் (naturalism) பாற்பட்டதாகும்.
மார்க்ஸியச் சிந்தனையில் றிஃப்ளெக்ற் (reflect) என்பது பட்டுத் தெறிக்கின்ற சிந்தனைகள் பற்றியே கூறுகின்றது" இதனைச் சொற்செம்மையுடன் "பட்டெறிவுச் சித்திப்புக் கொள்கை” (thsory of refletion) எனலாம். அதாவது நடை பெறும் ஒரு சமூகநிகழ்வு படைப்பாளியின் ஆக்க ஆளுமை யில் “விழுகின்ற"பொழுது அவனது மனதில், அவனது ஆக்க உந்துதற் சக்திநிலையில், அது எந்த எந்தச் சிந்தனைகளை, படி மங்களைத் தோற்றுவிக்கின்றது என்பதே இக்கொள்கையின் சாரமாகும், அப்படி இல்லாது இது வெறுமனே "பிரதிபலிப் புக் கொள்கை தான் எனின், கலைஞர்கள் யாவரும் ஒரு பொருள்பற்றி ஒரு வகையான படைப்பையே தருபவர்களாக அமைதல் வேண்டிவரும்,
இதுபற்றிப் பிரிதோரிடத்தில் பார்ப்போம். இப்பொழுது
(J) repa išab696ir
(ஆ) சித்திரிப்பு
() எவ்வாறு
ஒரு படைப்பு ஆகின்றது என் பதைப் பாசிப்போம், இதில் மூன்று விடயங்கள் தனித்தனியே
- 125 -

Page 65
பேராசிரியர் கா. சிவத்தம்பி
யும் இணைந்தும் காணப்படுகின்றன என்பதை விளக்கவே மேலே அம்முறையில் எழுதப்பட்டுள்ளது.
முதலில் படைப்பாளியின் மனதைத் தொடுவது 'ஒரு' நிகழ்வே. இது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம், அல்லது நிகழ்ச் சித் தொடராக அல்லது நிகழ்ச்சித் தொடர்களாக இருக்க லாம். ஆளுல் இந்த நிகழ்ச்சியோ, நிகழ்ச்சித் தொடரோ வாழ்க்கையின் வகைமாதிரிக்கான (typical) ஒர் உதாரண மாக, அதை எடுத்துக் காட்டும் சம்பவமாக அமையும். வாழ்க்கையின் ஏதோ ஒரு அமிசத்தை அல்லது அமிசங்களை வற்புறுத்துவனவாக, அழுத்தமாகக் காட்டுவனவாக அந்தச் சம்பவம் / சம்பவங்கள் அமையும். எனவே முதலில் அந்தச் சம்பவப்பதிவு (நிகழ்வுப்பதிவு; நிகழ்ச்சிப்பதிவு) ஏற்பட்டதன் பின்னர், அதனேடு ஒட்டிய பலவற்றை அவன் தொகுத்துக் கொள்கிருன், அதாவது கற்பனையல்லாத புறஇயல் மெய்ம் மையிற் (reality) காணப்படுவனவற்றைத் "தொகுத்துக் கொள்கிருன் அப்பொழுதுதான் அதனைப் பார்ப்பவன்/கேட் பவன்/வாசிப்பவன் அதனேடு இணைய முடிகிறது (சாஸ்திரீய இசை சிறிது வேறுபட்டது) படைப்பாளி தொகுத்துக் கொள் ளும் முறைமையிலேதான் அவன் கற்பனை தங்கியுள்ளது. புறநிலை மெய்ம்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பினை உலகியல் வழக்கு என்றும், அவை தொகுக்கப்பட்டு இலக்கியமாகத் தரப்படும் முறைமையினைப் பாடல் சார்ந்த "புலனெறி வழக்கு’ என்றும் கொள்ளலாம். இது பற்றிய தொல்காப் பியச் சூத்திரத்தை நோக்குக.
இந்தக் கட்டத்திலேதான் படைப்பாளியின் “படைப் Lun (656) D'', '93, 93,656po' (creative personality) Garfu வரும், அந்த நிலையிலேதான் படைப்பாளிகளின் தரம் முக் கியமாகின்றது. ஒரு படைப்பாளிக்கும் இன்னெரு படைப் பாளிக்குமுள்ள வேறுபாடு இந்த இரண்டாவது கட்டத்தி லேயே தெரியவரும். புறமெய்ம்மையில் நடைபெறும் நிகழ்ச் சிகளைத் தளமாகக்கொண்டு, அவற்றை உந்து பீடமாகக் கொண்டு, தான் எடுத்துக் கொண்ட பொருளை'(விடயத்தை) முனைப்புறச் சித்தரிப்பதற்கான படிமஉலகை (world of
-س- 126 --

"உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
images) அவன் நிர்மாணிப்பது இந்தக் கட்டத்திலேயே. இந் நிலையில் அவன் புறமெய்ம்மையை (realityயை)ப் படிமங் களாக்கி, நிஜஉலகின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை வன்மை யுடன், "இரத்தத்துடனும் சதையுடனும், உண்மை சொட் டத் தருவனவாக்கி, யதார்த்தமாக (realism)த் தருகின் முன், புறமெய்ம்மையை (realityயை) அப்படியே பிரதி செய் தல் யதார்த்தம் (realism) ஆகாது என்பதனை அவதானித் துக் கொள்க. இதுமுக்கியமான ஓர் உண்மையாகும். இந்த "உண்மை சொட்டும் படிம ஒழுங்கமைப்பிலேதான் படைப் புத் தோன்றுகின்றது. (இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் கதைகளில் 'புறமெய்ம்மைகள் எவற்றைச் சுற்றி ஒழுங்க மைக்கப்படுகின்றன என்பது பற்றியும், அவை யதார்த்தமாக உள்ளனவா என்பது பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.)
இந்த ஒழுங்கமைப்பிலேதான் படைப்பாளியின் "ஆக்க ஆளுமை (creative personality) தெரியும். திறமையுள்ள படைப்பாளியின் ஆக்கங்கள், அவனது ஆக்க ஆளுமையை அறிந்து கொள்ளத் தூண்டும். அவ்வாறு அறிந்து கொள்வ தற்கான மூலமாக அவனது எழுத்துக்கள்/ஆக்கங்கள், அந்த ஆக்கங்களின் அமைப்புக்கள், அவற்றின் தன்மை, பாணி, அந்த அமைப்புக்களில் அமைப்பதற்குக் காரணமான அவ னது உளவியற் பண்புகள், இந்தப் பண்புகளுக்குக் காரண மாக அமையும் அவனது வாழ்க்கைப் பின்னணி எனப்பல் வேறு அமிசங்களைத் தொகுத்து நோக்கும் பொழுதுதான், ஒரு கலைஞனுடைய ஆக்க ஆளுமை தெரியவரும். (இந்தத் தொகுதியில் இடம்பெறும் எழுத்தாளரின் ஆக்க ஆளுமை கள் பற்றிச் சிந்தித்தல் வேண்டும்.)
தமிழில் கலைவிமரிசனம் (art criticism) இல்லையெனும் அளவுக்கு அருகிக் கிடக்கிறது. தமிழ் இலக்கிய விமரிசனத் தில் நாம் இன்னும்தான் எமது தலைசிறந்த படைப்பாளி களின் ஆக்க ஆளுமைகளைத் திட்டவட்டமாக ஆய்ந்தறிந்து கொள்ளவில்லை. இளங்கோ முதல் பாரதி வரை, கபிலர் முதல் சேரன்வரை, ராஜம் ஐயர் முதல் யோகநாதன் வரை இது இன்னும் செய்யப்படாமலே உள்ளது. ஆனல் அதேவேளை
- 127 -

Page 66
பேராசிரியர் கா. சிவத்தம்பி
யில் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, லோறன்ஸ், ரோல்ஸ்ரோய், ஹெமிங்வே போன்ற பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர் களின் ஆக்க ஆளுமைகள் எத்துணை சிறப்புடன் நிறுவப்பட் டுள்ளன! இளங்கோ, கம்பன், மாணிக்கவாசகர், நம்மாழ் வார், குமரகுருபரர், பாரதி, புதுமைப்பித்தன், கு. ப. ரா, பாரதிதாசன் எனவரும் ஆக்க இலக்கிய கர்த்தர்களின் படைப்பாளுமைப் பண்புகளை நாம் இன்னும்தான் விமரிசன ரீதியாக நிர்ணயப்படுத்திக் கொள்ளவில்லை. கதாகலாட் சேபத்திறன் புலமை/அறிவுத்திறனின் எடுத்துக்காட்டாகும் என்ற ஒரு கருத்து மயக்கம் தமிழ்நாட்டிலும் இலங்கை யிலுமுள்ளது. பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்களே ‘பிரசா ரர்கள்’ என்ற தொடரையே பயன்படுத்தியுள்ளார். பட்டி மன்றகாரர்கள் இலக்கியப் பிரசாரகர்களாக இருக்க முடி யுமே தவிர, இலக்கியகாரராக இருத்தல் முடியாது. இந்தப் பிரசாரகர்கள் விதந்து காணும் முறைமையினை (ஆஹா எப் படிச் சொல்கிருன், "அப்படிச் சொல்லாமல் ஏன் “இப்படிச் சொல்கிருன் போன்ற வாய்ப்பாடுகளை) விமரிசனம் எனத் தவருக விளங்கிக் கெள்ளக்கூடாது. இலக்கியப் படைப்பாளி களை ஒருங்குவைத்து நோக்கும் பொழுது, அதாவது தவிர்க்க முடியாத வகையில் ஒப்புநோக்கும் பொழுது, இந்த "ஆக்கி ஆளுமைத் தெளிவு அத்தியாவசியமான ஒன்ருகும்.
சற்றுமுன்னர் கிளப்பப்பெற்ற 'எப்படி என்பதற்கான விடை, இந்த ஆய்வினுள்ளேயே தங்கியுள்ளது. சமூகநிகழ்ச்சி/ நிகழ்வாக உள்ளதை ஒரு ‘வரலாற்று உண்மையாக மாற் றும் கலைத்திறன், ஆக்கப்பண்பு இந்த "எப்படி’க்குள் தொக்கு நிற்கின்றது. இந்த "எப்படி? நன்கு அமைந்திருக்குமேயானல் அந்த கலைப்படைப்பின் முழுமையான நுகர்வு எமக்கு (வாச கனுக்கு) ஒரு சத்திய தரிசனமாகவே அமையும். வாசிப்பு முடிவில் அந்தச் சத்தியதரிசனக் கிளர்ச்சி ஏற்படவில்லை யேல் அந்த ஆக்கம் வெற்றிபெறவில்லையென்பது தெளிவு இந்த ‘எப்படி"யை விரிவாக ஆராயும்பொழுது ஆசிரியர் நோக்கு, நோக்கினுள் தொங்கி நிற்கும் அனுபவ அறிவு, நோக்கினல் தீர்மானிக்கப்படும் ஒழுங்கமைப்பு, நடை(பாணி)
- 128

'உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
ஆதியன முதன்மை எய்தும். இவற்றை நிர்ணயிக்கும் பொழுது அந்தப் படைப்பாளியின் "ஆக்கஅளுமை துலாம் வரமாகத் தெரியும்.
(இந்தச் சிறுகதைத் தொகுதியில் "ஆக்க ஆளுமைகள் தெரிகிறதா? அது தெரியாவிட்டாலும், ‘கதை’கள் ஒழுங்கமைக்கப்பட்டு எடுத்துச் சொல்லப்படும் முறை யில் அவை சத்திய தரிசனங்களாக அமைகின்றனவா? என்பவற்றை நோக்கல் வேண்டும். சத்தியதரிசனம்தான்
கலைஇலக்கியத்தின் பணி
ஆக்க ஆளுமையை நன்கு விளங்கிக்கொள்ள, ஆக்கத் தின் அமைதி பற்றிய அறிவு இருத்தல் அவசியம், சிறுகதை யில் இது எவ்வாறு புலப்படும்?
(4)
ஆக்கஆளுமைக்கும், ஆக்கப்படும் பொருளுக்கும் தொடர் புண்டு என்பது மறுக்கமுடியாது. எனவே சிறுகதையாசிரி யர்கள் பன்னிருவரின் திறனை விமரிசனஞ் செய்ய முனையும் முயற்சியில், சிறுகதையின் தன்மையினை, அதன் வர்த்தமான திலையினை மனத்து நிறுத்திக்கொள்வது அவசியமாகின்றது.
ஒவ்வொரு இலக்கிய வகையும் அதற்குரிய 'உயிர்நாடி" யாக ஒரு குறிப்பிட்ட அமிசத்தைக் கொண்டிருக்கும். சிறு கதையின் உயிர்நாடியான அமிசம் யாது?
'சிறுகதை ஒரு குறிப்பிட்ட மனுே நிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டுவதாக அமைதல் அவசியம், இந்த மனுேநிலையை வார்த்தை களால் சுட்டிக்காட.ாது, கதையினை வாசிக்கும் வாசகனின் மனதில் அவனை அறியாது அவ்வுணர்வு நிலை தோன்றும் படி செய்யமுடியுமானுல் அவ்வாறன சிறுகதை ஒரு தலைசிறந்த சிறுகதையாக அமையும். தாகூரின் 'காபூலி வாலா', செக்கோவின் ‘முத்தம்'. புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்', 'வழி’, ‘பொன்னகரம்', கு. ப. ரா
سس- 129 --

Page 67
பேராசிரியர் கா. சிவத்தம்பி
வின் "விடியுமா', ரகுநாதனின் வென்றிலன் என்ற போதும்", அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிருர்", லா, ச. ராவின் ‘பாற்கடல்", "கஸ்தூரி", பி. எஸ். ராமை யாவின் "அடிச்சாரைச் சொல்லியழு', ரா. பூரீ. தேசின் னின் 'மழையிருட்டு’ எனப்பல உதாரணங்கள் கூறலாம். (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் - சென்னை - மூன்ரும் பதிப்பு - 1980 ւյժ - 19 - 20)
அழுத்தக் குறியுடைய பகுதி முக்கியமானது. சிறுகதை என்பது சிறிய அளவிலான கதையன்று. அது சிறுகச்சொல்லி உயர்பட்சத் தாக்கத்தை ஏற்படுத்துவதான ஓர் உரைப் படைப்பு. எடுத்துக் கொண்ட பொருள் பற்றிய உயர் பட் சத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான முறையில் அது "அமைக்கப்படல் வேண்டும்.
சிறுகதையின் வரைவிலக்கணச் சிக்கற்பாடுகளை ஆராய்ந் தவர்கள் எல்லோருமே வற்புறுத்துவது அதன் சொற்செட்டு வன்மையைத்தான். இன்றைய சூழலுக்கேற்ற உவமையைக் கையாள்வதானல், சிறுகதையை, அதிகபலம் உள்ளடக்கி வைக்கப்பெற்ற சிறு கிறனெட்டுக்கு ஒப்பிடலாம். அது *வெடிக்கும்பொழுது ஆயிரம் சூரியரைக் கண்டதுபோன்ற ஒரு சத்தியதரிசனம், ஆன்மத் திகைப்பு/குழைவு/மீள்கண்டு பிடிப்பு ஏற்படவேண்டும். சிறுகதை என்னும் இலக்கிய வடி வத்தின் தனித்துவமான அமிசம் என்று வலியுறுத்திக் கூறப் படுவது இதுவே. "சிறுகதை என்பது தனித்துவமான, அல்லது ஒரு தனிப்பட்ட் தாக்கத்தினே ஏற்படுத்துவதற்கான செறிவினை யும் கூர்நோக்கினேயும் உட்ையதாகவிருக்கும்; தாக்கமுழுமையே இவ்விலக்கிய வகையின் பிரதான நோக்கமாகும்" என ஜே. 6. sGL-mer (J. A. Cuddon) srsir Imrf GTG5SJá ér-gpsalfrtf. (A dictionary of literary terms - Penquin 1982).
சிறுகதையின் உயிர்நாடி முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உருவச் சிறுமைதான். படைப்பாளி, தான் ஏற்படுத்த விரும்பும் தாக்கத்துக்கான அளவுக்கு அதன்
سس- 130 سس

"உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
நீளத்தை அமைத்துக் கொள்ளவேண்டும். இறுக்கமற்ற நீளம் இந்த இலக்கிய வடிவத்தின் அமைப்பையே குலைத்துவிடும்.
அந்த அளவில் இது ஒரு மிகச்சிக்கலான படைப்பு. இதில் சித்திபெறுவதற்கு மிகுந்த திறன் வேண்டும். அந்தச் சித் திக்கு இடையருத பயிற்சி வேண்டும்.
மொழிநடை நிலை நின்று பார்க்கும் பொழுது, சிறுகதை யிற் சிக்கனம் (செறிவு) ஒரு முக்கியமான பண்பு ஆகும். சிறுகதையில் எழுதப்படுவன, எழுத்தின் வழிதோன்றி எழுத் துக்கு அப்பால் நிற்கும் உணர்வுகளைத் தோற்றுவிப்பனவாக விருத்தல் வேண்டும். எனவேதான் சிறுகதை பேசுவனவற்றி ஆம் பார்க்க, அதன்'மெளனங்களே'முக்கியமானவை என்பர்.
கு. ப. ரா. வின் சிறுகதைகள் பற்றி தி, ஜானகிராமன் கூறியுள்ளவை, சிறுகதை எழுத்தாளர்க்கு வேதவாக்காக அமையவேண்டும்.
"அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒரு பிர மிப்புத்தான் ஏற்படுகின்றது. பட்டுப்போன்ற சொற்களி லும், பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலைவடிவங்களையும் உணர்ச்சி முஃனப்பையும் வடிக்கிருர்அவர் 1 இந்தத்தொகுப்பிலேயே உள்ள “மூன்று உள்ளங்கள்", "படுத்த படுக்கையில்?, “சிறிது வெளிச்சம்', 'தாயாரின் திருப்தி - இவைகளே மீண்டும் மீண்டும் படிக்கப் பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனே சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறர் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்கும், வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், கார்வைகள்! எழுதியதைவிட எழுதாமல் கழித் ததே முக்கால்வாசி என்று தோன்றுகின்றது. ஆடம்பரம் இல்லாத எளிய சோற்களுக்குக்கூட, உணர்ச்சி முனைப் பாலும், ஒரு கூட்டுச் சக்தியாலும் ஒரு புதியபொருளும் வேகமும் கிடைக்கின்றன. சாதாரண சொற்களுக்குக் கூட ஒரு புதிய வீர்யத்தை ஏற்றிய பாரதியின் வெற்றி தான். ராஜகோபாலனின் கதைச் சொற்கள் கண்டிருக் கின்றன. அதனுலேயே சத்தமில்லாத வேகமும் சிக்கன
- 131 -

Page 68
பேராசிரியர் கா. சிவத்தம்பி
மும் கைகூடி அவர் கதைகள் அடர்த்தியும், இறுக்கமும் நிறைந்த சிற்ப வெற்றிகளாகத் திகழ்கின்றன. இத்தனை வெற்றிகள் திணித்த கதைகளை தமிழில் யாரும் இது வரை இன்னும் எழுதவில்லை. உண்மையாகவே மெளனங் கள் நிறைந்த சிறுகதைகளே அவர் ஒருவர்தான் எழுதி யிருக்கிருர்."
- தி. ஜானகிராமனின் "வழிகாட்டி’ எனும் கட்டுரை - கு. ராஜகோபாலன் - சிறிதுவெளிச்சம் . - வாசகர் வட்டம் சென்னை - 1969
கு ப. ராவின் சிறுகதைகளில் வெளிப்படும் 'மனக்குழைவு களுக்கும், புதுமைப்பித்தன் கதைகளில் வெளிப்படும் "வன் மைச் சிதறல்"களுக்கும் கலாரீதியில் ஒர் ஒருமைப்பாடு உண்டு. இவை இரண்டும் கலைப்படைப்புக்களின் இரண்டு பரிமாணங்கள். கு. ப ரா. வின் படைப்பியற்பண்பு ஜானகி ராமனிடத்து ஒர் அகற்சியைப் பெற்றது. அதேபோன்று புதுமைப்பித்தனின் சித்திரிப்புப் பண்பு ஆரம்பகால ஜெய காந்தனிடம் பொலிந்து நின்றது. புதுமைப்பித்தனைப் பிரதி செய்வது கடினம்.
இவை மிகுத்த கவனத்துடன் வாசித்து விளங்கப்பட வேண்டியவை சிறுகதை வடிவத்தைக்கையாளும், முக்கிய மாகப் பயில் நிலை எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை இந்த மேற்கோளின் பின்னணியில் வைத்து நோக்குதல் அத்தி யாவசியமாகும்.
சிறுகதை என்பது "தீட்டித்தீட்டி" ஒளிபெறச் செய்யப் படவேண்டிய ஒரு படைப்பு
வெகுசன வாசிப்பு பெரிதும் வளர்ந்துள்ள நிலையில் இவ் வாறு சொற்களின் கனதியையும், வாக்கியங்களின் இறுக்கத் தையும் எழுத்துக் குறியீடுகளின் உள்ளார்த்தங்களையும் முழுக்கதையின் அமைப்புச் செம்மையும், மிகநுணுக்கமாகக் கவனித்து எழுதுவதற்கான வாய்ப்பும் இல்லாதுபோகலாம். சிறுகதையைவிட்டு, கதையொன்றினைச் சிறியதாகச் சொல்ல முனையும் ஒரு நில்பாடே இன்று தமிழில் வளரத் தொடங்கி
- 132 -

*உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
யுள்ளது. சிறுகதையின் இந்த இலக்கியச் செம்மைக் குலைவுக் குச் சில இலக்கிய சஞ்சிகைகளே உடந்தையாகவும் இருந்து வருகின்றன. எழுதியனுப்பப்படுவனவற்றை அப்படியே *போட்டு விடுகின்றன. அனுப்பப்படுவனவற்றை, அதனை எழுதியோருடன் உரையாடிக் கனதிபெறச் செய்யும் வழி காட்டற்பணி எத்தனை சஞ்சிகை ஆசிரியர்களாற் செய்யப் படுகின்றது?
சிறுகதையில் உரைநடை, கவிதைக்குரிய காம்பீர்யத் துடனும் நுண்ணுணர்வுடனும் தொழிற்படுதல் வேண்டும். அதன் ஒவ்வொரு அமிசமும், தலைப்புமுதல் இறுதிக்குறியீடு வரை, ஒவ்வொன்றும் எழுத்தாளனின் படைப்புத்திறனின் ஆழ்வுக்குவிவிலிருந்து வெளிக்கிளம்டி வேண்டும். அப்பொழுது தான் அது உண்மையான கலைப்படைப்பாக மிளிரும்.
நாவல் இலக்கியம் வளர்ந்துள்ள இன்றைய நிலையிற் சிறுகதையின் அமைப்புச்செம்மை அதன் சிக்கனத்திலும், அது சுட்டிநிற்கும், சொற்களுக்கு அப்பாலான 'மெளனங் களிலும்'தான் உள்ளது.
(5)
படைப்புத்திறன் பற்றியும், சிறுகதையின் தன்மை பற் றியும் மேற்கூறப்பட்ட கருத்துக்களின் பின்புலத்தில், இத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் எத் துணை இலக்கியக் கனதி யுடையனவாக நிற்கின்றன என்பதுபற்றி நோக்குவது தவிர்க்கமுடியாத கடமையாகின்றது.
இத்தகையனவான தொகுதிகளில் தர ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாத ஒன்றகும் தரம்” என்பது பிரதானமாக எழுத்தாளனின் படைப்பாழக் கனதியிலிருந்து பிறப்பதாகும், 'தரம் வேறு, "கவர்ச்சி வேறு, ‘ஒரு படைப்பு இன்னெரு படைப்பிலும் பார்க்கக் கவர்ச்சியாகவுள்ளது" எனும் கூற்று. படைப்பாளி பற்றிய மதிப்பீடு மாத்திரம் அன்று. அது வாசகன் பற்றிய மதிப்பீடும் ஆகும். வாசகனின் அநுபவங் கள், அவனது அநுபவ ஆழம், அவனது இலக்கியப் பரிச் சயம் ஆகியன சமமான முக்கியத்துவத்தைப் பெறும், வெகு
- 133 -

Page 69
பேராசிரியர் கா. சிவத்தம்பி
சன வாசிப்பு நிலையிற் காணப்படும் ‘கவர்ச்சிகள்? ஆழமான இலக்கியக் கவர்ச்சிகளாக அமைய முடியா என்பது பல் வேறு நிலைகளில் வற்புறுத்தப்பட்டுள்ள உண்மையாகும்.
இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்வதற்கு இந்த மதிப்பீடு இடம் தராது. அத் தகைய விமரிசனங்கள் வகுப்பறைகளில் அன்றேல் எழுத் தாளர் பட்டறைகளிலேயே மேற்கொள்ளப்பட வேண்டியன.
இங்கு மிகச்சுருக்கமாகவே நாம் அந்த விமரிசனப் பணியை மேற்கொள்ளுதல் வேண்டும்.
முதலிற் சிறுகதைகளின் பொருள்கள், கூர்மையுடனும் உணர்வு முனைப்புடனும் வெளிக்கொணரப்படுகின்றனவா என்பதை நோக்குதல் வேண்டும். கலைப்படைப்பின் ஒரு முக் கிய அமிசம் அது ரசிகனின் கருத்துக்கும் அநுபவத் தொழிற் பாட்டுக்கும் இடமளிப்பதாக அமைவதாகும். அந்நிலையில் அப்படைப்பு, படைப்பாளியின் குறிக்கோளை மீறிய ஓர் உயிர்ப்பையும் பெற்றுக்கொள்ளும். ஆனல் இது படைப் பாளியின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டதன்று. அத்தகைய 'ரசிகத்தொழிற்பாடு ஏற்படுவதற்கான "இடுகுறிகள் படைப் பினுள் நிச்சயமாக இருக்கும். ஆணுல் இது இரண்டாம் கட்ட ரசனை உணர்வாகும். முதலில் அந்தப் படைப்பின் கட்ட மைப்பு படைப்பின் சாரத்தைச் சுட்டுகின்றதா என்று நோக்கல் வேண்டும்.
இவ்வாறு நோக்கும் பொழுது பிறந்த மண்", "எங்கே தான் வாழ்ந்தாலும் ஆகியன சிறுகதைக்குரிய கட்மைப்பு அற்றனவாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். பிறந்த மண்’ எழுதப்பட்டுள்ள முறையில் அதன் அச்சாணிப் பொரு ளாக அ ை2வது வெளிநாடுகளிலிருக்கும் ஒவ்வொரு ஈழத் தமிழ் இளைஞனும் தன் தாயகத்திற்கு வராமலிருக்க முடியா தவனக இருக்கும் உணர்வுந்துதலும் இங்குள்ள நிலமை அவனைப் போராளி ஆக்குகின்ற தன்மையுமாகும். இக்கருத் தோட்டம் வேண்டிய அளவுக்கு இறுக்கமாகச் சித்திரிக்கப் படாது போய்விடுகின்றது முத்துலிங்கம், தான் இலங்கைக்
- 134 -

*உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
குச் செல்லவேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் இடம் அழுத்தம் எதுவுமற்றதாகவேயுள்ளது. இலங்கைக்கு வர எடுக்கும் தீர்மானம், இலங்கையில் வந்து இறங்கும் நிலை யில் ஏற்படும் அநுபவங்கள், வீடு வரும்வரையுள்ள அநுட வங்கள் ஆதியன சித்திரிக்கப்படும் முறையினூடாகவே இறு தியில் அவன் பாஸ்போட்டைக் கிழிப்பது முத்தாய்ப்பாக வரவேண்டும். ஆனல் 'பிறந்தமண்"ணிலோ அந்தப் பகுதி கள் கையாளப்பட்டுள்ள முறையிற் சிறிதேனும் இறுக்கம் காணப்படவில்லை. அவை சொல்லப்படுகின்றனவே தவிர சித்திரிக்கப்படவில்லை. பாஸ்போட்டைக் கிழித்து எறிவதென் பது ஒரு சொல் மாத்திரமல்ல, அது அவன், தான் இந்த நாட்டைவிட்டு, "இந்தப் பிரஜை"யாக இனி வெளியே செல் வதில்லை என்ற தீர்மானத்தின் குறியீடு, அத்த எண்ண வன்மை, தீர்மான முக்கியத்துவம் எம்மைச் சிலிர்க்கவைக்க வேண்டும். பாஸ்போட்டைக் கிழிப்பதன் மூலம் அவன் செய் யும் தியாகம் எம்மை திகைப்பு மெளனத்தினுள் ஆழ்த்த வேண்டும். இந்தத்தாக்கம் அந்தச் சிறுகதையை வாசித்து முடிக்கும்பொழுது ஏற்படவேயில்லை. காரணம் அந்தச் சிறு கதையின் கட்டமைப்புக் குறைபாடேயாகும். அது ஒரு வாய்மொழிக் ‘கதை’ யாகச் சொல்லப்படுகின்றதே தவிர சிறுகதையாகப் படைக்கப்படவில்லை.
இதே போன்ற து தான் ‘எங்கேதான் வாழ்ந்தாலும்" என்ற கதையும். இந்தச் சிறுகதையில் யாருடைய நோக் கில் அந்தச் சிறுகதை எழுதப்பட்டுள்ளது என்கின்ற தெளி வையே பெற முடியாதுள்ளது. இந்தச் சிறுகதையின் தோல் விக்கான பிரதான காரணிகளில் தலைப்பும் ஒன்று என்று கூறவேண்டியுள்ளது. இச்சிறுகதையை வாசித்து முடித்த நிலையில் இதன் தலைப்பை மீள வாசிக்கும்பொழுது அது அப்படைப்பின் சாரத்தை வெளிக்கொணருகின்றதா? எம் மையந்த மையப்பொருளுக்குரிய உணர்ச்சிநிலையை உணர வைக்கின்றதா? சிறுகதையின் தலைப்பு சிறுகதையின் மிகப் பிரதான கட்டமைப்பிலொன்று ஆகும். சிறுகதையில் மிகை யுணர்வுக்கு இடம் கொடுக்காமலும், குறைத்துச் சொல்லா
-- 135 جسے

Page 70
பேராசிரியர் கா. சிவத்தம்பி
மலும் உணர்வு நிலையினை "அச்சொட்டாக" அது வெளிக் கொணரவேண்டும். அது ஒரு முக்கியமான ஆற்றல் "அதிர் வுகள்’ இவ்வகையில் திருப்தியளிப்பதாகவில்லை. அச்சிறுகதை யில் நடந்திருக்கும் இன்னல் (இன்னெரு சாவீடு வரும் என்ற எச்சரிக்கை வெளிவரக்கூடியதான இன்னல்) "அதிர்வு’க்குள் அடங்கி நிற்கக்கூடியதா?
சிறுகதை எனும் இலக்கியவகையில் ‘கதை’ (நடந்த வற்றை நடந்த வரன்முறையிற் கூறுதல்) முக்கியமானதே அல்ல. நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் உணர்வு முனைப்பின் பின் னணியில் எடுத்துக் கூறப்படுவனவாய் அமைதல் வேண்டும். தாக்க முழுமைக்கு உதவும் வகையில் சிறுகதையின் ‘கட் டட அமைப்பு, அதன் ஓட்டம் அமைதல் வேண்டும் அவ் வாறு அமைந்து வந்து இறுதியிற் சொல்லப்படுவதால் (அதன் முரணிலையால் அன்றேல் அதன் தர்க்க ரீதியான வளர்நிலையில்) அதன் தாக்கமுழுமை உணரப்படல் வேண் டும்.
கட்டமைப்புச் சீராக இல்லாவிடின் வெளிக்கொணரப் படவிருக்கும் உணர்வுமுனைப்புக் கூர்மையாக வெளிவராது "தத்து அந்தக் குறைபாட்டை உடையதாக அமைகின்றது. கிழவியின் கண்ணுேட்ட நிலைநின்று போராளி இளைஞர்களின் வீரமும் தியாகமும் சித்திரிக்கப்படுகின்ற அந்தச் சிறுகதை யில், இறுதியில் முனைப்புடன் மேற்கிளப்பப் பார்ப்பது இரா ணுவக்காரனின் சகஜபாவமே,
கட்டமைப்புச் சீரமைப்பு என்பது வெறுமனே "சித்தி ரிப்பு களில் தங்கிநிற்பதில்லை. சித்திரிப்பு என்பதற்குள் ளேயே பாத்திர வார்ப்பு முக்கியமானதாகும். ‘விடிவின் பாதைக்கு'ச் சிறுகதை முதிர்வற்ற ஒரு படைப்பாக நிற்ப தற்குக் காரணம் அந்த இளைஞனின் பாத்திரச் சித்திரிப்பிற் காணப்படும் குறைபாடாகும். சிறுகதையினிறுதியில் எடுத் துக் கூறப்படும் வகையில் அவன் வெடிகுண்டோடு வெடி குண்டாகிச் சிதறிப்போவதற்கான ஓர்மை நிலைப்பாட்டினைக் கதையின் நடுப்பகுதியிலிருந்தே படிப்படியாக வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்தக்கதையின் இறுதிப்பகுதியிற்
- 136 -

*உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
காணப்படும் இறுக்கம் / செறிவு / கவர்ச்சி ஒட்9வேலையாக அமைகின்றதே தவிர ஒரு பரிணமிப்பு ஆகவரவில்லை. சின்ன ராஜன், சிறுகதையின் படைப்பு முறைமைகளிற் கவனஞ் செலுத்துவரேயானுற் கணிக்கப்படத்தக்க ஒரு சிறுகதை யாசிரியராக மேற்கிளம்புவதற்கு வாய்ப்பு உண்டு.
இக்கட்டத்தில், சிறுகதையின் இறுதிப்பகுதி பற்றிய ஒரு தப்பபிப்பிராயத்தை விளக்கவேண்டியது அவசியமாகின் றது. சிறுகதையில், அதன் இறுதியில் வரும் 'திடீர்த் திருப் பம்” / “எதிர்பாராத முடிவு” என்பது சம்பந்தப்பட்ட சிறு கதைப்பொருளின் / பாத்திரங்களின் இன்னெரு பரிமாணத் தைத் தருவதேயல்லாமல் ஆச்சரியத் திடீர் இறக்குமதி யன்று. அந்தத் திடீர்த்திருப்பம் எம்மைப் பேச்சுமூச்சற்ற வர்களாக்கிவிடும். மாப்பாஸானின் பாத்திரங்கள் எம்மை அந்த நிலையிலேதான் வைப்பதுண்டு. அத்தத் திடீர்த்திருப் பத்தில் ஒரு மனித உண்மை பளிச்சிடவேண்டும். இதனுலே தான் சிறுகதையின் கட்டமைப்பில் அதன் இறுதிப்பகுதி முக்கியமானதாகின்றது. இந்தப் படைப்பு முதிர்ச்சி இயந் திர நிலைப்பட வருவதில்லை, அது மனித உணர்வுத் தெளி வினுல் வருவது.
இந்தப் பண்புகளை மனங்கொண்டு நோக்கும் பொழுது, "நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைள்”, “உவப்பு", "அகதிகள்' ஆகிய சிறுகதைகளே மற்றவற்றிலும் பார்க்க முனைப்புள்ள னவாய் உயிர்ப்புடன் மேலோங்கி நிற்கின்றன. 'உவப்பில் வரும் காகத்தின் அசாதாரண தேரக்கரைதல் ஒலியினுல் ஏற்படும் மெளனச்சிதைவு, இன்றைய மனித உயிரின் அவ லநிலையை மிகுந்த வன்மையுடன் வெளிக்கொணருகின்றது, இந்தச் சிறுகதையின் கற்பனையதிதம் (காகம் தன் விர கதா பத்தைச் சொல்லல்) அதன் யதார்த்த முனைப்பை (மனிதர் கள் இராணுவத்தாக்குதலால் பிணங்களாக கவனிப்பாரற் றுக் கிடத்தல்) வற்புறுத்துகின்றது. இதுதான் இதன் அசா தாரண வலிமைக்குக் காரணமாகின்றது. ‘நாட்கள் கணங் கள் நமது வாழ்க்கைகள்" நமது இன்றைய இயலாமைகளுக் குள் முடங்கிநிற்கும் மெளனமான சோகத்தை வெளிக்
س- 137 سے

Page 71
பேராசிரியர் கா. சிவத்தம்பி
கொணருகின்றது. பங்கிருற்றியஸ் மறக்கமுடியாத சிறுவ ஞகி விடுகிறன். அகதிகள் எமது சமூகத்தின் குரூரம் ஒன் றினை வன்மையோடு வெளிக்கொணருகின்றது. அது இன் னும் சிறிது கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்குமேல் மிக நல்ல ஒரு சிறுகதையாக அமையும்:
இந்தத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை வாசிக்கும் பொழுது இன்னுெரு முக்கிய ஆக்க இலக்கிய உண்மையும் புலணுகின்றது; படைப்பிலக்கியத்தின் கவர்ச்சி அது எந்த அளவுக்கு வகை மாதிரியான மனிதநிலைகளைச் சித்திரிக்கின் றது என்பது தான். சிலவேளைகளில் சில இடங்களில் நடப் பவை சம்பவங்கள் என்ற அளவில் உண்மையாக இருக்க முடியுமெனினும், அவை வகை மாதிரியாக (Typical) அமை வதில்லை. நாளையும் அடுப்பு எரியும்’ சிறுகதையில் அந்தத் தன்மை தெரிகிறது. அரசாங்கத்தில் மூளை உழைப்பாளியாக இருந்தவன் வேலைநிறுத்தம் காரணமாகத் தொழிலிழந்து இறுதியில் விறகு கொத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை யதார்த்தமாக சித்திரிக்கப்படவில்லை. “விறகு கொத்தினுலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்ற ஒரு யதார்த்த நிலை யற்ற மிகைப்பாடு அந்தக்கதையின் உயிரை உறிஞ்சிவிடு கின்றது. நமது பண்பாட்டு வட்டத்தினுள் அத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளப்படுவதற்குச் சில படிமுறைகள் உள்ளன. வகை மாதிரியை மீறிய மிகைப்பாடு "அல்சேஷன்கள் எப்போ தும் உள்ளே வரலாம்" எனும் கதையிலும் தெரிகிறது. அந் தக்கதையில் வருபவர்கள் எவரும் உண்மையில் "அல்சே ஷன்கள் அல்லர் தம்மை அல்சேஷன்களாக நினைப்பவர் களே. 'இதுவும் பிரசவம்’ சிறுகதையில் தாயையே வெளியே அனுப்பி விட்டு தகப்பன் மகளின் கருச்சிதைவை மேற் பார்வை செய்வது நிச்சயமாக யதார்த்த வன்மையற்ற ஒரு நிலையேயாகும். அதுவும் நமது வண்பாட்டு வட்டத்தினுள் இது நிச்சயமாக வகை மாதிரியான நிலையன்று. ஒருவேளை அப்படி நடத்த ஒரு உண்மை நிகழ்ச்சி இருக்கலாம். உண் மைகள் புனைகதைகளிலும் பார்க்கப் புதினமானவை. (Facts are stranger than fiction). --GD) är sjö S 2-67 GMD, L-č307
سے 138 سے

'உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
கதையில் வற்புறுத்தப்படமுடியாத ஒன்ருகும். வாசகன் நடக் கக்கூடியதை ஏற்பானே தவிர நடக்க முடியாததை அது நடந்திருந்தாலும் ஏற்கமாட்டான். இதனுல்தான் மாதிரித் தன்மை (typicality) முக்கியமாகின்றது. புனே கதையின் புல னெறி வழக்கு இதுவேயாகும். குப்பிழான் சண்முகத்தின் படைப்பு ஒரளவுக்கு ஒரு ‘வரலாற்றுச் சிறுகதை’ யாகவே இந்தத் தொகுதியினுள் நிற்கின்றது! சிங்களப் பெண்ணைக் கலியாணம் செய்வதும் சாதிவிட்டுக் கலியாணம் செய்வதும் இச்சிறுகதையிற் பேசப்படுகின்றன பழகுவட்டம் அநுபவ ரீதியாக விரிவடையும் பொழுது ஏற்படும் சிந்தனை விரிவும், அதஞல் அகமுரண்பாடுகளைக் கண்டு துயருறும் நிலையும் இச்சிறுகதையில் வெளிவருகின்றன. ஆணுல் அவை நுணுக் கமான ஒரு கலைப்படைப்பாகவில்லை. காரணம், அமைப்பும் சித்திரிப்பும் வேண்டிய சொற்செறிவினைப் பெருமையே.
வரன் முறையான கலந்தாய்வு செய்யப்பட்டிருக்கு மேல், இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள் திருப்பி எழுதப்பட வேண்டியனவாகவே இருக் கும். பெரும்பாலான சிறுகதைகள் அவ்வவற்றின் ஆசிரியர் களாலேயே ஆற அமர மீள வாசிக்கப்பட்டனவா என்ற சந் தேகம் எழுவதை என்னல் தடுத்துக்கொள்ள முடியவில்லை.
குறித்த ஆசிரியர்கள் "மிக்க கவனத்துடனேயே தங்கள் படைப்புக்களை "ஆக்கியுள்ளனரெனக் கூறப்படுமானுல் நிச் சயமாக, சிறுகதை பற்றிய அவர்கள் வாசிப்புவட்டம் மிகக் குறுகியதாகவே இருக்கவேண்டும் போலத் தோன்றுகின்றது. ஏனெனில் புதுமைப்பித்தன், கு. ப. ரா. அழகிரிசாமி, லா. ச. ரா, தி ஜானகிராமன், புரசு பாலகிருஷ்ணன் போன் ருேருடைய ஆக்கங்கள் பற்றிய பரிச்சயமிருப்பின் இந்தப் படைப்புக்கள் பெரும்பாலானவற்றில், அவற்றில் இப்பொ. ழுது காணப்படாத ஒரு கனதி நிச்சயமாக இருந்திருக்கும்.
இவ்வேளை இன்னுமொரு உண்மையை வற்புறுத்த வேண்டியுள்ளது. சிறுகதை, நாவல் ஆகிய புனைகதை இலக் கிய வகைகள் உலகப்பொதுவானவை. அவற்றின் கொடு மூடிகளிற் பெரும்பாலானவை ஆங்கில, பிரெஞ்சு, ரஷ்ய,
سے 139 سے

Page 72
பேராசிரியர் கா. சிவத்தம்பி
ஜேர்மன் இலக்கியங்களிலே உள்ளன. இத்துறையில் வெளி வந்த இந்தியச்சாதனைகளை வங்காளம், ஹிந்தி, மராத்தி, மலையாளம் முதலாம் மோழிகளிலே காணலாம். இந்தப்புணை கதைக் கொடுமுடிகள் பல, தமிழில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளன. அந்த மொழிபெயர்ப்புக்கள் பற்றிய பரிச்சயம்கூட இருப்பதாக பெரும்பாலான சிறுகதைகளிலே தெரியவில்லை. அத்தகைய பரிச்சயமிருந்திருப்பின் இங்கு இடம்பெற்றுள்ள் சிறுகதைகளிற் பல, பொருத்தமான ஆக்க அமைதியைப் பெற்றிருக்கும்.
உண்மையில் இத்தொகுதியில் வரும் பெரும்பாலானவை நல்ல சிறுகதைகளுக்கான முதல் வரைவுகளே (First drafts) ஆகும். (
இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள பெரும்பாலான சிறு கதைகளின் குறைபாடுகள், நவீன தமிழிலக்கிய படைப்பிலக் கிய எழுத்துப் பயில்விற் காணப்படும் முக்கியமான இன் னெரு குறைபாட்டை எடுத்துக்காட்டுகின்றன. அது எழுத் தாளர் (கவிஞர்கள், கதாசிரியர் உட்பட) தாம் கையாளும் இலக்கிய வகையின் பயில் வில் (அத்திறமை கண்டுபிடிக்கப் பெற்றதன் முன்னரோ, பின்னரோ) நியாயமான பயிற்சி பெறுவதில்லை. எழுத்துப்பட்டறைகள் (writers Workshops) இதற்குப் பெரிதும் உதவும். அத்தகைய பயிற்சி இல்லாத விடத்து அல்லது வேண்டப்படாதவிடத்து, குறித்த எழுத் தாளர் தனது கூரிய வாசிப்புத்திறனுல் தனது எழுத்துவன் மையை வளர்த்துக் கொள்வர். அதுவும் இல்லாதவிடத்து சகோதர விமரிசனங்கள் மூலம், ப்யில்திறனை வளர்த்துக் கொள்ளலாம். அதுவும் வெளியீட்டுக்கு முன்னரெனின் மிக்க நன்மை தரும். இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கம் புதுவேகத்துடன் தொழிற்பட்ட ஐம்பதின் பிற் பகுதி, அறுபதின் முற்பகுதிகளில் இத்தகைய சகோதர விமரிசன முறைமை நிலவிற்று. அக்காலத்தில் வெளிவந்த புதுமை இலக்கிய இதழ்களே இதற்குச் சான்று. கைலாசபதி ஞாயிறு தினகரன் பொறுப்பைக் கையேற்று 'ஈழத்திலக்கியச் சிறுகதை வளர்ச்சியின் ஆழத்தையும் வேகத்தையும் கூட்
- 140 -

"உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
டிய பொழுது, பிரசுரத்துக்கு வந்த சிறுகதைகளை அவ்வச் சிறு கதையாசிரியர்களுடன் விவாதிப்பதுண்டு. பல இரவு கள் அத்தகைய கலந்தாய்வுகளில் நாம் ஈடுபட்டிருந்தோம். கைலாசபதியின் பதிப்புத்திறனுலும் சிறுகதைகள் முனைப்புப் பெற்றன. அத்தகைய முறையில் விமரிசனமும் படைப்பும் ஒன்றிணைந்து சென்றதனலே தான் அக்காலத்துப் படைப் புக்களில், அதுவரையில்லாத ஒர் ஆழம் காணப்பட்டது. செல்வராசன் ஞாயிறு வீரகேசரிக்குப் பொறுப்பாகவிருந்த பொழுதும் இத்தகைய கலந்தாய்வு நடைபெற்றதுண்டு
இன்றைய நிலையில் அத்தகைய சகோதர விமரிசன முயற்சிகள் இடம்பெற முடியாவிடின் வரன் முறையான எழுத்துப் பட்டறைகளாவது இருப்பது அத்தியாவசியமாகும். கலைகளின் தோற்றம் அந்த அந்தக் கலைகளின் அடிப் படைச் சாஸ்திரீயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கவேண்டும். ஆரோகணம் - அவரோகணம் தெரியாத வனல் ராது ஆலாபனஞ் செய்யமுடியாது. உளிகளின் தன்மை, பிரயோகம் ஆதியனவும், கல், மரம், உலோகங்களின் நன்மை ஆதியனவும் தெரியாதவன் சிற்பி ஆகிவிட முடி யாது. வர்ணங்களின் தனித்துவம், அவற்றின் கலவைச்சீர் தெரியாதவன் ஓவியணுகி விடமுடியாது தூரிகை வேறுபாடு பற்றிய பரிச்சயம் அவனுக்கு அத்தியாவசியம். நடிப்புக்கான பயிற்சிகள் தேவை; அவை இல்லாது நடிகனுதல் முடியா தென்பது இப்பொழுது படிப்படியாக உணரப்படுகின்றது. ஆனல் எழுத்துத்துறையில் பயிற்சியின் கவனம் செலுத்தப் படுவதில்லை. சோஷலிச நாடுகளில் எழுத்தாளர் சங்கங்களின் முக்கியபணி இளங்கலைஞர்களை எழுத்தாளர்களாக்குவதிலும், எழுத்தாளர்களை முதிர்ந்த கலைஞர்களாக்குவதிலுமே காணப் படும். இந்த உண்மையை நாங்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். S.
இவ்வாறு கூறுவதன்மூலம், குறிப்பிட்ட ஒரு வழிவகை யிலேயே படைப்புத்திறன் வளர்க்கப்பட வேண்டுமென்று நான் கூறவில்லை. எழுத்தாளன் எனத்தன்னைக் கூறிக்கொள் பவன் பிரக்ஞை பூர்வமான சிரத்தையுடன் அத்துறையில்
-- 14l -س-

Page 73
பேராசிரியர் கா. சிவத்தம்பி
தனது பரிச்சயத்தையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே வற்புறுத்திக்கூற விரும்புகின்றேன். வளர்த்தெடுப்பின் வளமான சிறுகதை அறுவடைக்கு இன் னும் இடமுண்டு என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
a \ . (6)
இத்தொகுதி வெளியீட்டில் நாம் மிகுந்த சிரத்தை
யுடன் வரவேற்க வேண்டிய ஒரு பிரசுர முறைமை மீள் முனைப்புக் கொள்கின்றது.
புத்தக அபிவிருத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தென்னசியாவில் நிலவும் புத்தகத் தேவைகளைக் குறிப்பிடும் பொழுது, "புத்தகப்பசி நிலை’ (Book Hunger) எனக் குறிப் பிடுவர். எமது சனத்தொகையையும், அச்சனத் தொகையின் எழுத்தறிவு விகிதத்தையும் நோக்கும் பொழுது, இந்த எழுத் தறிவு தொடர்ந்து பேணப்படுவதற்கான பிரசுரங்கள் இல்லை என்பது தெரியவரும். எழுத்தறிவு சமூக ஜனநாயகத்துக் கான அச்சாணித்தேவைகளில் ஒன்று. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நூல்கள், பூர்த்தி செய்யத்தக்க அளவில் வெளிவரல் வேண்டும். 71% எழுத்தறிவுடையவர்கள் நாம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில் நாம் வெளியிடும் நூல்களோ, ஒரு பதிப்புக்கு ஆயிரம் பிரதியாக உள்ளன. அவையும் விற்பனை செய்யப்படுவதற்குக் குறைந் தது ஐந்துவருடங்கள் செல்கின்றன. படைப்பிலக்கிய நூற்பிர சுரத்துக்கு வேண்டிய முதலீட்டை படைப்பாளியே செலவிட வேண்டியுள்ளது. நூலாசிரியர்கள் அச்சக முதலாளிகளாக வும், அச்சக முதலாளிகள் நூலாசிரியர்களாகவும் மாறும் நிலையில் இலக்கியப் படைப்புச்சில செல்வாக்கு வட்டங்களுக் குள் வரையறுக்கப்பட்டு விடுகிறது. அத்தகைய சில ஆசிரியர் கள் விமரிசன அங்கீகாரத்தையும்கூட "வாங்கி விடலாம். என்று எண்ணுகிருர்கள். ஈழத்தின் இன்றைய படைப்பிலக் கியப் பிரசுரமுறைமை காரணமாக, சாதாரண திறமைகளே மேலாண்மையுடன் விளங்கும் ஒரு நிலைமை ஏற்பட்டு விடு
سے 42 1 --

*உயிர்ப்புகளின் உயிரைத்தேடி
கின்றது.எழுத்துக் கனதியை வசித்துக் கொண்ட எழுத்தா ளர் நிறுவனங்கள் கூட இந்தப் பிரசுர முறைமைகளாற் கவ ரப்படும் பரிதாபதிலைகூடப் படிப்படியாக மேற்கிளம்புகின் ДОфl
இந்நிலையில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் தனது மூல தன, பிறவள வாய்ப்புக்களுடன், கூட்டுறவு இயக்க இலட் சியங்களின் மேலதிகமான நடைமுறைப்பாட்டுக்கெனப் பிர சுரத்துறையில் இறங்கியிருப்பது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்ருகும். கூட்டுறவு இயக்கத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு கருத்து 1970 - 75களில் நிலவியது. திறந்த பொருளாதாரம் வந்தபின் அபிவிருத்தி பற்றிய அடிப்படைதோக்கே மாறியுள்ளது. நாடு முதலாளித் துவத்தை தத்துவார்த்தமாக ஏற்றுக்கெர்ள்ள வேண்டிய நிலையில் அரசு தொழிற்படுகின்றது. இத்தச் சூழலில்"அடிநிலை 1573) al 637 lälds Gir' (grasSToets organigations) (0,5 Tus) sibuGay(335 சிரமம்.
இத்தகைய பெருத்த சவால்களுக்கிடையேயும், பிரசுரத் துறையில் தனது பங்கைச் செம்மையான முறையிலே செய்ய கட்டைவேலி - நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் முன்வந்திருப்பது அதன் பிரதம நிர்வாகியான அதன் தலைவர் திரு. க. சிதம்பரப்பிள்ளையின் தூரதிருஷ்டியை எடுத்துக் காட்டுகின்றது.
தொடக்கம் முக்கியமானது. அதனிலும் முக்கியம் இலட் சியப் பேணுகையின் தொடர்ச்சியாகும். இக்கலாசார கூட் டுறவுப் பெருமன்றம், சனநாயக நெறிப்பட இயங்கி, அத் தத்துவத்தின் இலக்கிய வெளிப்பாடுகளாய் அமையும் படைப் புக்களை வெளியிட்டு, மற்றைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக அமைதல் வேண்டும். அவ்வாறு அமைவதற் கான சாத்தியக்கூறுகள் மிகத்துல்லியமாகத் தெரிகின்றன.
---- 143 س

Page 74
பேராசிரியர் கா. சிவத்தம்பி
தனிமனிதத் திறமைகள் கப்பட்டு, ஒரு பொதுவான தப்படும்பொழுதுதான் கூட்( தொடங்கும். அந்தச் ‘சாரப் எழுத்து வரையுள்ள மனித தைக்கண்டு மனநிறைவு அை ணின் வளர்ச்சி பிரமிப்பை
நடராஜ கோட்டம், வல்னெட்டித்துறை, 5.9-986.
 

வளர்க்கப்பட்டு, ஒன்று சேரிக் இலட்சியத்துக்காக பயன்படுத் டுறவின் சாரம் சொட்டுவிடத் } நெல்லியடியில் உணவுமுதல் ந்தேவைகளை உள்ளடக்கி நிற்ப டகின்றேன். நான் பிறந்த மண் ஏற்படுத்துகின்றது.

Page 75
56TF (
56)lé965, 6 பல நோக்குக்
 

தனியான்
systeful to 38, 3J75jsEFT Exit, e35sually
1535, ups: குப்பிழான் ஜி.சண்முகன் తియ్ల్త్
கிாந்தன் 5.5:yrtos
ராஜ் நிகந்தன் 5, 51579,3
சித்தம்பி التة للملكة لكل 3
იყს მსესხტყვხ
6509.
ட்டுறவுச்சங்கல்