கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யுகம்

Page 1


Page 2

யுகம
தொகுப்பாசிரியர் :
இமையவன்"
பல்கலை வெளியீடு,
யாழ்ப்பாணம், இலங்கை.

Page 3
* முதற் பதிப்பு: பெப்ரவரி, 1968
2. பல்கலை வெளியீடு : 4
密
赛
洲
கதைப் பூங்கா விண்ணும் மண்ணும் காலத்தின் குரல்கள் யுகம்
* அச்சுப்பதிவு-ஆசீர்வாதம் அச்சகம்,
யாழ்ப்பாணம்.
வில: 1-00
விற்பனையாளர் : எஸ். கிருஷ்ணசாமி நியூஸ் ஏஜண்ட், பெரிய கடை, யாழ்ப்பாணம்.

என்னுரை
என்னுரை ஒரு சம்பிரதாயம்; கல்யாண வீட்டில் கொட்டுமேளம் முழங்குவது போல.
இன்று இலக்கியத்தைப் பற்றிப் பலவிதமான அபிப்பிராயங்கள்; இவற்றிடையே அகப்பட்டுத் தவிக்கும் வாசகர்கள். இலக்கியத்தை வெறும் பிர சாரக் கருவியாக்கும் ஒரு சாரார்; இல்லை இலக்கியம் வெறும் பொழுது போக்கே என்று தூக்கியெறியும் இன்னெரு சாரார். அதுவுமல்ல, இலக்கியம் இலக்கி யத்துக்காகவே என்று குரல் கொடுக்கும் வேறு சிலர்-இப்படி இலக்கியத்தைப் பற்றிப் பலவேறு வித மான - தப்புக் கணக்கீடுகள். அத்தகைய "மேதாவி' களின் தப்புக் கணக்கீடுகளிலிருந்து தப்பிய இலக்கி யத்தைப் பற்றிய உண்மையான வரைவிலக்கணங் கள் ஏதாவது உள்ளனவா ?
உண்மையாகப் பார்த்தால்-ஒரு விதத்தில் இலக் கியத்தைப் பற்றி வரைவிலக்கணம் சொல்ல வருவது அறிவீனம். அது அவ்வரைவிலக்கணத்துள் அடங்கு வது போலக் காட்டிக்கொண்டு அதிலிருந்து நழுவி துருத்திக் கொண்டு நிற்க என்றைக்குமே தவறிய தில்லை. அந்தத் துருத்தலே இலக்கியத்தின் உயி ரூட்டி. இதனல் உயர்ந்த இலக்கியத்தைச் சுவைக்க வரைவிலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட, பக்குவம் பெற்ற மனுேபாவம் கோரப்படுகிறது. இந்தப் பக்குவ மனுேபாவத்தைக் கொண்டு ஒரு கதை இலக்கியமா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ளலாம். பொது விலே அம்மா சமைத்த சோறுகறி இப்படி இப்படி யான கூட்டுக்கள் சேர்ந்த ஒன்றுதான் என்று எங்க ளால் வரைவிலக்கணம் சொல்ல முடியாவிட்டாலும் அது நன்றக இருக்கின்றதோ அல்லவோ என்று

Page 4
சொல்ல முடிவது போல, என்ருலும்-இன்றைய விமர்சன உலகு இலக்கியத்தைப் பற்றிய வரைவிலக் கணங்களில் தோல்வி கண்டிருந்தாலும்- உண்மை யான இலக்கியங்களைப் பற்றி அறிய எவ்வளவோ உதவியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.
சிலருக்கு மேகத்தைக் கூந்தலென்ருல், மின்னலைப் பெண் என்ருல், மார்பகத்தை மலையென்ருல் சுவைக் கும். உவமையும் உருவகமுமே இலக்கியத்தின் முக்கிய உறுப்பு என்று நம்புகின்ற மரபைப் பழங் காலக் கவிஞர்கள் எம்முள் புகுத்திவிட்டார்கள். அறிவும், சிந்தனையும் தெளிவுடன் இருக்கும் இந்தக் காலத்திற்கூட உவமையையும் உருவகத்தையும் உள் ளுணர்வோடன்றி, வெறுமனே மரபுச் சொல்லாக மண்பொம்மை போல கையாளுவதில் பலர் முனைந்து கொண்டிருக்கிருர்கள். பழங்காலக் கவிஞர்கள் அவற்றை உணர்ச்சியோடு அழகாகத்தான் கையாண் டார்கள். ஆனல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன தன் காரணமாக இன்று வலிந் தமைக்கப்பட்ட உணர்ச்சியற்ற உவமைகளாக ஆகி விட்டன. இவ்வுவமைகளைப் படித்துப் படித்துச் சலித் துப்போன சரத் சந்திரர் ஓரிடத்தில் அழகாகச் சொல் கிருர் : "நான் மரத்தை மரமாகத்தான் பார்க்கி றேன். மலை, மலையாகத்தான் தோன்றுகிறது. தண் ணிரைப் பார்த்தால் தண்ணீரைத் தவிர வேறென்றும் தோன்றுவதில்லை. ஆகாயத்திலுள்ள மேகத்தைக் கழுத்து வலிக்க, வலிக்க அண்ணுந்து பார்த்தாலும் அவைகள் மேகமாகத்தான் காட்சியளிக்கின்றன. அங்கே யாருடைய அடர்த்தியான கூந்தலும் மருந் துக்குக் கூடத் தென்படுவதில்லை. சந்திரனைப் பார்த் துப் பார்த்துக் கண்ணுெளி மங்கிவிட்டது. ஆணுல் அங்கு யாருடைய முகமண்டலத்தையும் தரிசிக்க வில்லை." என்கிழுர்,

இவ்விதமான இலக்கியத் தன்மையினின்று விலகிய போலி இலக்கியங்களை வேறுபடுத்தி, உண்மையிலக்கியம் எவையென நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கிய ஆசிரியன் சொல்லவந்த ஒன்றை உண்மைக்கு மாறுபடாமல், அதே வேளையில் கலைத்தன்மையும் வஞ்சிக்கப்படாமல், உயர்ந்த கலைத் தன்மையோடு கூடிய யதார்த்தப் போக்கில் கூறுகி ருஞ) ? என்ற கேள்வியைப் போட்டு விமர்சனக் கண்ணுேட்டத்தோடு இலக்கியத்தை எடையிடுகிற போது அது உண்மையில் இலக்கியமா, அல்லவா என்பது புரிந்துவிடும். அன்றித் தமிழ்ப் படத்தில் வருகின்ற பிச்சைக்காரன் பசி, பசி என்று அழுதகை யுடனேயே பாட்டுப் பாடி பிச்சை கேட்பது போல - உண்மையான உணர்வுடன் பிரச்சனையை அணுகவிடாது -அந்தப் பிரச்சனையைப் பற்றிய உண்மையான உணர்வே எழாது-போலியாக அமை கிற உணர்வை இரசிக்கிற மனுேபாவத்தை உருவாக்
கிக்கொண்டு விட்டோமானுல் விமர்சனக் C T சூர்ந்துபோகும் ; உண்மை இலக்கிய உணர்வு குருடாகிவிடும்.
வெறுமனே, ஜனரஞ்சக ரீதியில் இன்பம் பயப் து தான் இலக்கியமானல், அந்தப் பெருமை ஆங்கிலத் தில் ஒடும் * by Nights" படங்களுக்கு வந்து சேர்ந்து விடும். ஜனரஞ்சகம் என்று ஜனநாயக ரீதியிலே "வோட் எடுத்தோமானல், ‘இலக்கி பம்" என்பதன் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது போய்விடும். சங்கீத உணர்வே (அறிவிருக்க வேண்டுமென்பது அவ சியமில்லை) இல்லாத ஒருவனுக்கு அற்புதமான அமை வோடு ஒலிக்கும் சங்கீதம் காட்டுக்கத்தலாவது போல உயர்ந்த இலக்கியங்களை உணர்ந்து ரசிக்கும் பான்மையற்றவர்களுக்கு அவை வெறும் குப்பை களாக ஆகிவிடுகின்றன. எனவே உண்மையான இலக்கியத்தைப் புரிந்து அனுபவிக்கும் திறனை வாசகர் கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு இத்தொகுதி பூரண திருப்தியைத் தரும்.

Page 5
இத் தொகுதியில் எட்டுக் கதைகள் வெளிவரு கின்றன. அவை பல்கலைக் கழக மாணவர்களாலும் விரிவுரையாளர்களாலும் எழுதப் பெற்றவை. திரு. செ. வெ. காசிநாதன், பி. வஜிரஞான ஆகிய இரு வரும் மெய்யியற்றுறை விரிவுரையாளர்கள். பின்ன வர் ஒரு பெளத்த பிக்கு. திரு. காசிநாதனுடைய கதை சிறுகதை என எழுதப்படாதது அதை அவரி ரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பதிப்பிப்ப தற்கு நானே காரணம்; பொறுப்பும் கூட) ஏனைய அறு வரும் மாணவர்கள். மு. பொன்னம்பலம், பொதுக் கலைத் தேர்வு வகுப்பில் இறுதிவருட மாணவர். பீ. மரியதாஸ் அதே துறையின் இரண்டாம் வருட மாணவர். இரா. சிவச்சந்திரன் புவியியலைச் சிறப்புப் பாடமாகப் பயில்பவர் ; இரண்டாவது 6) CD Lமாணவர். சரநாதன் பொறியியற் கல்லூரி இரண் டாம் வருட மாணவர். சபா. ஜெயராசா, கல்வி மாணி பரீட்சை எழுதிவிட்டு முடிபுகளை எதிர்பார்த் துக் கொண்டிருக்கிறர். போக, இன்னுெருவர் கணக்கில் வரவில்லை.
இத் தொகுதி வெளியீட்டின் காலாக அமைபவர் கள் இருவர் திரு. மு. திருநாவுக்கரசு, திரு. செங்கை யாழியான் அண்ணு (அவரை அவ்வாறுதான் நான் அழைப்பது). மற்றும் சகோதரர் மு. இரத்தினசாமி, நண்பர் எஸ். சுந்தரலிங்கம், பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ. ரவீந்திரன், காரியதரிசி, நா. சுப்பிர மணியம் ஆகியோருக்கும், சிறந்த முறையில் அச்சிட் டுத் தந்த ஆசீர்வாதம் அச்சகத்தினருக்கும், குறிப் பாக அதன் அதிபர் திரு. எம். வி. ஆசீர்வாதம், ஜே. பி. அவர்கட்கும் என் நன்றிகள்.
இ. ஜீவகாருணியம் மார்க்கஸ் பெர்ணுந்து மண்டபம், (இமையவன்)
இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை.

பதிப்புரை
“பல்கலை வெளியீட்"டின் நான்காவது சிறுகதைத் தொகுதியாக *யுகத்’தைத் தமிழ் கூறும் நல்லுலகத் திற்குப் பெருமையோடு சமர்ப்பிக்கின்ருேம். 1962 ஆம் ஆண் டி ல் செம்பியன் செல்வன், க. நவசோதி, நான் ஆகிய மூவரும் சேர்ந்து "பல்கலை வெளியீடு" என்ற நிறுவனத்தை அமைத் தோம். இவ்வெளியீட்டகத்தின் அறுவடைகளா கக் கதைப் பூங்கா, விண்ணும் மண்ணும், காலத் தின் குரல்கள் எனும் மூன்று சிறுகதைத் தொகுதி கள் வெளிவந்தன. கதைப் பூங்கா, விண்ணும் மண்ணும், காலத் தின் குரல்கள், யுகம் என்னும் தொகுதிகள் ஒவ் வொரு காலகட்டத்தின் வெளிப்பாடுகள்; அவற் றில் எழுதியவர்களின் எதிர்கால வளர்ச்சியின் தொடக்கப்படிகள் ஈழத்து இலக்கிய ஆக்கத் திற்குப் பல்கலைக்கழகம் அளித்த ஆரம்ப ஆக்கங்கள்.
யுகம்" என்ற இச்சிறுகதைத் தொகுப்பிற்கு இ. ஜீவகாருண்யம் (இமையவன்) பொறுப்பேற்றுத் தொகுத்துள்ளார்; ஆக்கபூர்வமான சிந்தனைகள் மலிந்த இளம் உள்ளம். இன்று பல்கலைக்கழகத்திலுள்ள இளம் எழுத் தாளர்களை ஒருங்கு சேர்த்து, இலக்கியவுலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதில் "யுகம் முன்னிற் கின்றது. - தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில், அண் மைக் காலத்தில் சிறுகதைகள் முக்கிய இலக்கிய வடிவமாக அமைந்து வருகின்றன; ஆரம்ப எழுத்

Page 6
தாளன் எவனும் உவந்தேற்கும் ஒரு துறையாகச் சிறுகதை அமைகின்றது. பல்கலைக்கழக எழுத் தார்வம் மிக்க இளைஞர்கள் இதற்குப் புற னடையாக அமைந்திலர். உணர்ந்த அறிந்த கருப் பொருட்கள் சம்பவக் கோவைகளாக அமைய, இளம் உள்ளங்களுக்கேயுரிய ஆசாபாசங்களினின் றும் விலகி, புதிய கண்ணுேட்ட ஆர்வத்தோடு *யுகக் கதைகள் அமைந்துள்ளன.
* இத்தொகுதி இலக்கியவுலகிற்கு நம்பிக்கையை யும் திருப்தியையும் அளிக்கும் என நம்புகின் றேன். A
- அன்பு - “செங்கை ஆழியான்' "அன்ன வாசா", 71/10A, அம்மன்கோவில் வீதி, கலட்டி, யாழ்ப்பாணம். 8-2-68.

மு. பொன்னம்பலம்
தவம்
திடீரென அறுபட்ட வீணையின் தந்திபோல், வீசி யடித்த காற்று அன்று விழுந்து விட்டிருந்தது. எதிரே கிடந்த கடலிலும் அந்த அமைதியின் விழுக்காடு. அங்கே ஓங்கியெழும் அலைகள், அன்று தம் ஓங்கா ரத்தை அடக்கித் தமக்குள் குறுகுறுக்கும் மெளன நெளிவுகள். புங்குடுதீவு மக்களின் பாஷையில் சொல்லப்போனல் கடல் 'ஈராட்டி" போட்டிருந் 95 ġ . மீனவர்களுக்கு "வேட்டை மீன்களுக்கோ பொல்லாத காலம். தாமாகவே வலியச்சென்று வலையிலும் பறியிலும் மாட்டிக்கொண்டு துடிதுடிக் கும் பொல்லாத காலம். இரண்டொரு வள்ளங் களைத்தவிர எல்லாமே கடலுக்குப் போயிருந்தன, பறியெடுத்துவர, எஞ்சி கரையில் நின்ற தோணி களோ மீனவர்களுக்குச் சொந்தமானவை அல்ல. அவை சில வெள்ளாளருக்கு உரியவை.
நேரம் அப்போது காலை ஒன்பதரை மணிக்கு மேலாக இருக்கலாம். காற்றின் வீழ்ச்சி வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்தது. கடலோ தனது வரம்பை விடுத்து சிறிது உள்விழுந்து வற்றிக்கிடந் தது. அதனல் அதன் கரைகிழித்த வீதியில் ஒரு விரிவும் அழகும் வளைந்தோடின. அந்தக் கரையில் இரண்டொரு நிழலூட்டும் பூவரசு மரங்கள். as L-d) காற்றின் பிசுபிசுப்பு அவற்றின் இலைகளிலும் ஏறி விட்டிருந்தன. அதனல் அவையூட்டிய நிழலிலும் ஏறிய ஒருவித பாரம். குளிர்ச்சியாக வழிந்தது.

Page 7
2 யுகம்
நின்ற மரங்களுள் சடைத்த ஒன்றின் கீழ் சிலர் குந்திக்கொண்டிருந்தார்கள். நான்கு பெண்கள், ஐந்தாறு ஆண்கள். எல்லோர் முகங்களும் கடலை நோக்கித்தான் இருந்தன. நெய்தல் நிலத்தவர் களின் இரங்கல் அவர்களிடம் இல்லாவிட்டாலும் "இருத்தல்" அவர்களிடம் குடிகொண்டிருந்தது. ஆமாம், காத்திருந்தார்கள். கடலில் போயிருக்கும் தோணிகள் கரைக்குத் திரும்பவேண்டும். அப்போ தான் அன்றையச் சோற்றுக்கு அவர்களுக்கு மீனுண்டு. அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அப்போ தைய உடமையாக ஐம்பது சதமோ ஒரு ரூபாவோ இருந்தது. * பெண்கள் அவற்றைச் சேலைத்தலைப்பில் முடிந்திருந்தார்கள். ஆண்களோ ஐம்பது சதக்குத்தி களை வெகு அலட்சியமாக தங்கள் செவிகளின் உட் புறத்தில் சொருகி விட்டிருந்தனர். தோணிகள் கரைக்கு வந்ததும் அதே அலட்சியத்தோடு காசை வீசிவிட்டு ஒவ்வொரு மீன்கோர்வையை தூக்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு தெரியும். ஆனல் அவற் றுக்கெல்லாம் தோணி கரைக்கு வரவேண்டும். அது வரை அவர்கள் காத்திருந்தார்கள்.
தூரத்தே தோணிகள் கடலட்டைகள்போல் மிதந் தன. குந்தியிருந்தவர்களின் கற்பனைக்கேற்றவாறு அவை வருவதும் போவதுமாக மிக அற்பமாக நெளிந்துகொண்டிருந்தன. வடக்கு, கிழக்கு. தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் அவை சிதறலாகக் கிடந்தன. சில பாயிழுத்துப் போய்க்கொண்டிருந் தன. குனித்த புருவம்போன்ற அடிவானம். அதைக் குடைவன போன்று தோணிகளின் ஏகாந்த சஞ்
FITTLD . --
பூவரசின் கீழ் குந்தியிருந்தவர்களில் சில ஆண்கள், கையை நெற்றியின்மேல் வைத்து கடல் வெளியை

தவம் 3.
நோக்கினர். நீரில் ஏற்பட்ட வெயிலின் எதிரொளி கண்களைக் கூசவைத்ததோடு எரியவைத்தது. கடலுக்குமேல் இன்னெரு கடல், கானல் வரிகள். நோட்டம் விட்டவர்களில் ஒருவர். 'இந்தா நேர கிழக்க கிடக்கிற தோணி முருகன்ர எண்டு நினைக் கிறன்" என்ருர்.
"அப்படித்தான் நானும் நினைக்கிறன்" என்ருர் தலைப்பாகை கட்டியிருந்த ஒருத்தர்.
"அப்படியெண்டா நாகேசன்ர தோணி இஞ்சால தாழையடியில் கிடக்கிறதா?" என்ருர் ஒரு வெள்ளை வேட்டிக்காரர்.
"ஒமாக்கும் அவன்தான் தாழையடியில் பறி எடுக்கிறவன்' என்று ஆமோதித்தார் முன்பு முரு கனைப் பற்றிப் பிரஸ்தாபித்தவர்.
"அப்ப ஐயன்ர தோணி எங்கே?" என்று கேட்டு அவர்கள் பேச்சில் தானும் கலந்து கொண்டாள் பச்சைச் சேலையணிந்த ஓர் நடுத்தர வயது அம்மாள். 'அவன்ர தோணி நல்லா தெற்கால போயிருக் கும். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்" அரு கிலிருந்த பல்மிதந்த கிழவி அவளுக்குப் பதில் கொடுத் தாள்.
முருகன், நாகேசன், ஐயன்-அவர்கள் அந்தப் பகுதியின் முக்கியமான மீனவர்கள். பூவரசின் கீழ்க் குந்தியிருந்தவர்கள் அவர்களிடந்தான் வழமையாக மீன்வாங்குவது. முன்னவர்கள் பின்னவர்களின் இஷ்ட தெய்வங்கள். சிலர் ஏற்கனவே பணங்கட்டிக் "கட்டு மீன்' வாங்குகிருர்கள். சில அப்போதைக்கப்போது காசை வீசியோ கடன் சொல்லியோ மீன் கோர்வை களைத் தூக்குபவர்கள். ஒருத்தருக்கு முருகன் இன் னெருத்தருக்கு நாகேசன், அடுத்தவருக்கு ஐயன். இவர்களுக்கு அவர்கள் இஷ்டதெய்வங்கள். ஆனல்

Page 8
  

Page 9
6 யுகம்
நீரை பட்டையால் கோலி கடலுக்குள் இறைத்துக் கொண்டிருந்தனர்.
"ஆரு அதில நிக்கிறது, கந்தரும் சுப்பையருமா?" -பல்மிதந்த கிழவி வெள்ளைவேட்டிக்காரரைப் பார்த் துக்கேட்டாள்.
'ஒ, கந்தரும் சுப்பையருந்தான். இவைதான் நம்ம வெள்ளாளத் திமிலர்"- Ꭿ
வெள்ளைவேட்டிக்காரரின் பதிலில் நையாண்டி கலந்து நின்றது.
'ரெண்டு பேருமாச் சேர்ந்து இந்த நேரத்தில எங்கபோகப் போயினம்?".
இது பச்சைச் சேலைக்காரியின் கேள்வி. * 'ஏன், இப்பதானே கடல் நல்லா வத்தித்தெளிஞ்சு போய் கிடக்கே. அதுதான் அவை வத்துக் கட லுக்கு வலைபோடப் போயினமாக்கும். இண்டைக்கு அவைக்கு நல்ல உழைப்பெண்டு நினைக்கிறன்' - பல் மிதந்த கிழவிதான் பதில் கொடுத்தாள்.
"தூ, வெக்கங் கெட்ட நாயன், அவையின்ர உழைப்பும் பிழைப்பும்."-தலைப்பாகைக்காரர் ஒரு முறை காறித் துப்பினர். அவர் முகம் பலகோணங் களைக் காட்டி ஓய்ந்தது. அவர் தொடர்ந்தார். இவங்களேன் வெள்ளாளர் எண்டு சொல்லித் திரியி ருங்கள்? இவங்களும் திமிலரோட போய் இருக்கிறது தானே?. தூ, நாயஸ். வெக்கமில்லாமல் வேட்டி கட் டிக்கொண்டு திரியுதுகள். அதுக்குள்ள விபூதிப் பூச்சு வேற." என்று கூறிவிட்டு அவர் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தார்.
"ஓ, பொடியன் சொல்றது உண்மைதான்" என்று ஆமோதித்தனர் அங்கிருந்த பெண்கள்.

தவம் 7
* "உண்மையில்லாமல் பொய்யா?" - தலைப்பாக் காரர் சொன்னதை வேறு ஒரு தினுசில் ஆமோதித் தவராய் ஆரம்பித்தார் வெள்ளை வேட்டிக்காரர். 'இந்த வெள்ளாள திமிலரால இந்தப் பக்கத்தில் எங்களுக்கும் மரியாதையா இருக்கேலாமல் இருக்கு. திமிலங்கள்கூட எங்களை மதிக்கிருங்கள் இல்லை. ஏன் மதிக்கப்போருங்க? இந்த வெள்ளாள திமிலர் அவங் களோட சேந்து சாப்பிட்டு குடிச்சு கொண்டாடினு அவங்கள் எங்களை ஏன் மதிக்கிருங்க? வெக்கங் கெட்ட நாயன்." என்று அவர் முடித்தபோது அங் கிருந்த பெண்களும் ஆண்களும் சிரித்தனர்.
"அது மட்டுமா, செய்யிறதையெல்லாம் செய்து போட்டு அவைதானே சாதிக்காறர் எண்டு எல்லாத் துக்கும் முன்நிக்கினம். தாங்க செய்யிற நாத்தங் களைப்பற்றி நினைக்கீனமா?" இன்னெரு அம்மாள் தனது கருத்தைத் தெரிவித்தாள்.
"ஒமண அவையின்ர சாதியும் குலமும். அந்த நாயளின்ர பேச்சைவிடு" என்று அந்தப் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பதுபோல் வெளிக்கிட்ட ஒரு கொண்டைக்காரர், "என்ன இண்டைக்கு கந்தரும் சுப்பையருந்தானே நிக்கீனம், பசுபதியரும் மகனும் இண்டைக்கு எங்க போயிற்றினம்?' என்று பேச்சை வேறு புதுத்திசையில் கிளறிவிட்டார்.
'அவை நேரத்தோடயே (கடலுக்குப்) போயிற் றினமாக்கும்' என்று பதிலளித்த தலைப்பாக்காரர் அந்தப்பேச்சில் அலுப்புத்தட்டியவராய், நெற்றியில் கையை வைத்து கடலைநோட்டம் விட்டார். பிறகு, "“டேய் தம்பி, ஏதாவது தோணி வருதாவெண்டு பார், என்ர கண்ணுக்கெண்டா ஒண்டும் தெரியேல்ல' என்ருர் முன்னுல் இருந்த இளைஞனைப் பார்த்து.

Page 10
8 யுகம்
இத்தனைநேரமும் அவர்கள் பேச்சில் பங்கெடுக் காது வெறும் புன்னகையை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்த அவன், அவர் கட்டளையை வாங்கிக் கொண்டு கையை நெற்றிமேல் வைத்துப் பார்த் தான். பிறகு, "அப்படி ஒரு அறிகுறியும் இல்லை" என்ருன் வெகு சுருக்கமாக.
அவன் மனம் சற்றுமுன் அங்கு நடந்தோய்ந்த உரையாடலைப்பற்றி எண்ணிப் பார்த்தது. அவன் பார்வை சிறிது தூரத்தில் கடல் பிரயாணத்துக்கு தோணியை தயார்படுத்திக்கொண்டு நின்ற கந்தரை யும் சுப்பையரையும் நோக்கி ஓடியது. அவர்கள் வெள்ளாளத் திமிலர்! அவனுக்குச் சிரிப்பு வந்தது. கந்தரும் சுப்பையரும் அவன் சொந்தக்காரர். ஏன், பூவரசின் கீழ் கூடியிருந்தவர்களுக்குந்தான். ஏன் வெள்ளாளர் மீன் பிடிக்கக்கூடாதா? அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
கந்தரும் சுப்பையரும் தோணியைத் தாங்கத் தொடங்கினர். தோணி நீரை ஊடுருவிக்கொண்டு பாயத்தொடங்கிற்று. அப்போது அவர்கள் பார்வை பூவரசின் கீழ் குந்தி இருந்தவர்களின் மேல் விழுந்தது. ஒர் அலட்சியப் பார்வை. கூடியிருந்தவரை தூசத் தனை அளவு கூட மதிக்காத பார்வை. பூவரசின்கீழ் இருந்த அவனுக்கு அந்தத் தோணியில் தானும் போய்த் தாவவேண்டும்போல் ஆவல் உந்தியது. கந்தரும் சுப்பரும் போகும் அந்த ஆழக்கடலுக்கு, அந்தக் குனித்த புருவ அடிவானுக்கு தானும்போய் அங்கு தாவியெழும் மீன்களாய் துள்ளிவிழ அவனுக்கு ஆவல் பற்றிக்கொண்டு வந்தது. ஆனல் அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? பக்குவமில்லாத பயல் என்று தள்ளிவிடமாட்டார்களா? இல்லை, அவர்கள் இவனது பக்குவமின்மையைப் பொருட்

தவம் 9
படுத்தாது தோணியில் கைதுரக்கி விட்டாலும் இவ னுக்கு அவர்களோடு போகத் துணிவிருக்கிறதா ? ஊரார் தரும் பட்டத்தையும் பரிகாசத்தையும் தாங்கிக்கொண்டு இவனுக்கும் மீன் பிடிக்கப் போகத் திராணி இருக்கிறதா ? அவனுக்கு தன்மேலேயே ஒரு வகையறியாத ஆத்திரமும் வருத்தமும் ஓடிவந்தன. அதன் பிரதிபலிப்பாய் அவன் கையில் அகப்பட்ட சிறு சங்கொன்றை எடுத்து கடலுக்குள் வீசினன். விழுந்த சங்கு நீரில் வட்டங்களை விளைவித்தது. வட் டங்கள், வளையங்கள், முடிவும் தொடக்கமும் அற்ற வட்டங்கள், சக்கரம், திருமாலின் சக்கரம்.அவன் அவற்றையே இமைக்காது நோக்கியபோது பின்னுலி ருந்த வெள்ளை வேட்டிக்காரரின் குரல் ஒலித்தது.
**இந்தா வெள்ளாளத் திமிலர் புறப்பட்டின மாக்கும்!"
போய்க்கொண்டிருந்த கந்தரையும் சுப்பையரை யும் நோக்கி எய்யப்பட்ட நையாண்டிச் சொற்கள் அவை, எழுந்துபோய் சொன்னவரின் கன்னத்தில் ஓங்கி அறையவேண்டும் போலிருந்தது இளைஞனுக்கு. இவர்களின் வாழ்க்கை கரையில் வந்து குந்தியிருந்து காற்றைக் குடிப்பதோடு முடிந்து விடுகிறது. ஆழக் கடலைப் பற்றி அறியாத வெறும் மேலோட்ட பேர் வழிகள். அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண் டான். இல்லை, அறிந்தாலும் ரகசியமாய் முயன்று பார்த்து தோல்வி கண்டவர்கள். அதனுல் அதன்மேல், அதில் வெற்றி கண்டவர் மேல் அத்தனை வெறுப்பு. அதனல் வெள்ளைவேட்டி வேஷம். அதனல் கரையில் நின்று மீன் பிடிக்கும் ஜாதிக்காரர்கள். அவனது உதட்டை சிரிப்பொன்று கிழித்தது.
2

Page 11
O யுகம்
'இதுக்குக் கீழ இருந்து எத்தின மட்டுக்கு தவம் செய்யிறது, போய் ஒரு போத்திலாவது வயித்துக்க இறக்காட்டிச் சரிவராது"
அத்தனை நேரம் அங்கு காத்திருந்த தலைப்பாக் காரருக்கு அப்போதான் வேருெரு ஞானுேதயம் வெளிச்சது. ஞானம் வேண்டித் தவஞ் செய்த ஆதி காலத்து ரிஷிகள் மனத்தை ஒருநிலைப்படுத்த சோமா என்னும் பானத்தை அருந்துவார்களாம், இப்போ பூவரசின் கீழ் இருந்த இவருக்கு தவத்திலிருந்து தப் புவதற்கு இரண்டு போத்தல் கள்ளுத்தேவைப் பட் டது. அவன் மீண்டும் முறுவலித்தான்.
'தம்பி, மீன் வந்தா எனக்கும் ஒருகோர்வை வாங்கி வை, நான் இப்ப வாறன்' என்று முன்ன லிருந்த அந்த இளைஞனுக்குக் கூறிவிட்டு தலைப்பாக் காரர் எங்கோ அருகில் இருந்த கள்ளுத்தவறணக்கு எழுந்துபோனர்.
மேற்குப் பக்கமாக நீண்டிருந்த பூவரசின் நிழலும் வர வர தன்னைச் சுருக்கி தன் காலுக்குக் கீழேயே தன்னைக் கொணர்ந்தது. நிழல் குறுகக் குறுக பரவி யிருந்தகூட்டமும் பூவரசின்அடியை நோக்கி குறுகியது. "ஊஹா, என்ன வெய்யில்" என்றவராய் கள் ளுத்தவறணக்குப் போயிருந்த தலைப்பாக்காரர் அரை மணித்தியாலத்துக்குப் பிறகு அங்கு திரும்பி வந்தார். வந்தவர் நின்ற நிலையிலேயே கையை நெற்றியில் ஏற்றி கடலை ஒரு நோட்டம் விட்டார். பிறகு முகம் மலர்ந்தவராய், 'இந்தா முருகன்ர தோணி வருகுது போல இருக்கு" என்ருர், எல்லோர் பார்வையும் ஆவலோடு அப்பக்கம் மிதந்தது. இளைஞனும் அந் தப் பக்கம் தனது பார்வையைச் செலுத்தினன்.

தவம் - 11
ஒரு தோணி கரையை நோக்கி வந்துகொண்டுதான் இருந்தது. ஆனல் அவனுக்கு அதில் அக்கறை அதிகம் இருந்ததாகத் தெரியவில்லை. மாருக, முன்னுல் முழங்காலளவு நீரில் நண்டுபிடித்து விளையாடிய வெள் ளாளச் சிறுவர்களையும் அவர்கள் பிரதிபிம்பம் தெளிந்த நீரில் விழுந்து நெளிந்ததையும், நெளிந்து அது கரையை நோக்கிப் படர்ந்ததையும் அவன் அதிக அக்கறையோடு பார்த்துக்கொண்டிருந்தான். இதற்கிடையில் தோணி கரையை அண்மித்துக் கொண்டிருந்தது. வெயிலின் வேகத்தில் தோணியில் நின்றவர்கள் புகைப் பிண்டங்களாகத் தெரிந்தனர். அதனுல் யூகிக்க முடியவில்லை.
* "ஆற்ற தோணி அது? முருகன்ரயா நாகேசன் ரயா?'-கொண்டைக்காரர் தனது ஐயத்தை கிளப்பி ஞர். -
'நாகேசன்ர போலத்தான் இருக்கு"-தலைப்பாக் காரர் பதில் கொடுத்தார். ஆனல் அதிகநேரம் இந்தப்பிரச்சனை அவர்களிடம் இருக்கவில்லை. தோணி கரைக்கு வந்தது. இதுவந்ததுமே, 'இது நம்ம வெள்ளாளத் திமிலற்ற பசுபதியரும் மகனும்" என் ருர் வெள்ளைவேட்டிக்காரர். எழுந்த ஆவல் ஓடிவற்ற, ஆத்திரத்தோடு, தோணியை விட்டிறங்கி மீனும் பறியும் மரக்கோலுமாக போய்க்கொண்டிருந்த பசு பதியரையும் மகனையும் பார்த்தனர் கூடியிருந்தவர். அவர்கள் கூடியிருந்தவரை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தனர். பிறகு அந்தப்பக்கம் முகத்தை திருப் பவே இல்லை. கூடியிருந்தவரின் கையாலாகாத் தனத்தை தலையில் குட்டிக் காட்டுவதுபோல் அவர்கள் மீன் பறிகளைக் காவிக்கொண்டு சென்ருர்கள். அந்த

Page 12
12 யுகம்
இளைஞன் முகத்திலே மீண்டும் பழைய சிரிப்பு. அந்தச் சிரிப்பின் சுவடு அழியமுன் அங்கேயிருந்த தலைப் பாகைக் காரர் திடீர் என ஏதோ நினைத்துக்கொண்ட வராய், பசுபதியரையும் மகனையும் நோக்கி எட்டி மிதித்து நடந்தார். என்னதான் சொன்னலும் இந்தச் சுத்த வெள்ளாளருக்கு அந்த வெள்ளாளத் திமிலரான பசுபதியரைச் சந்திக்கும் திராணி இருக்க வில்லை. அதனல் அவர், பசுபதியரின் பின்னல் போய்க்கொண்டிருந்த மகனைத்தான் அணுகினர். போனவர் பல்லிளிப்பது தூரத்தில் சாடையாகத் தெரிந்தது. சிறிது தாமதம். அதன்பின், "பகை வனுக் கருள்வாய்" என்ற காட்சியில் பசுபதியாரின் மகன் இரண்டொரு மீனைப் பறிக்குள் இருந்து வெகு அலட்சியமாக வெளியில் தூக்கிப் போடுவது தெரிந் தது. வெளியில் விழுந்த மீனை நாய்க்குட்டி கெளவு வதுபோல் தூக்கி வைத்து பனையோலைக்குள் சுற்றிக் கொண்டு தலைப்பாகைக்காரர் திரும்பவும் பூவரசடிக்கு வந்தார்.
"வாய்ச்சிற்று போல இருக்கு '-வெள்ளைவேட்டிக் காரர் அவரைப் பார்த்துக் கூறினர்.
*"ஓ, ஒரு மாதிரிக் கறிக்குச் சரிப்பண்ணிப்போட் டன்'-தலைப்பாகைக்காரர் பதில் கொடுத்தார்.
'ஒ, ஒருமாதிரிப் பல்லிளிச்சுச் சரிப்பண்ணிப் போட்ட போலிருக்கு'-கொண்டைக்காரர் குத்த லாகக் கதைத்தார்.
தலைப்பாகைக்காரருக்கு அது எரிச்சலையேகொடுத் திருக்கவேண்டும். ஆனல் அதைப்பூசி மெழுகியவ ராய், "என்ன அப்பிடி இளக்கமாகக் கதைக்கிற? எனக்கு மீன் குடுக்காமல் இந்த வெள்ளாளத்திமிலர்

தவம் 13
இந்தப் பக்கத்தால போவாங்களோ?" என்று வீராப்பை விட்டெறிந்தபோது, 'ஒ, அல்லாட்டி விடமாட்ட' என்று மீண்டும் தலையில் குட்டினர் கொண்டைக்காரர்.
முகத்தில் அசடுவழிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட தலைப்பாக்காரர் 'இனி நானேன் உங்க ளோட நிண்டு காயிறன்? அவங்கள் எப்பவாருங் களோ, நான் போறன்" என்றவராய் அங்கிருந்து நடையைக் கட்டினர். பின்னலிருந்தவர்களின் சிரிப்பை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
மீண்டும் கூட்டம் கடலைநோக்கித் திரும்பியது. இப்போ பூவரசின் நிழல் கிழக்கை நோக்கித் திரும் பியது. கூட்டம் அந்தப்பக்கமாக அரையத்தொடங் கிற்று இருந்தாற்போல் அங்கிருந்தவர்களில் ஒருத்தி, 'கடவுளே, பொழுதுபட்டுப் போச்சு. முருகனையுங் காணேல்ல, நாகேசனையுங்க் 7ணேல்ல. நான் போகப் போறன்" என்றவளாய் எழுந்து நடக்கத்தொடங்கி ஞள். மற்றவர்களுக்கும் அதே சபலம். நம்பிக்கை யின்மையின் விழுக்காடு. "எல்லாம் பொய். முருக னும் நாகேசனும் கடலுக்குப் போகேல்லியாக்கும். போனல் இவ்வளவு நேரத்துக்கும் வராமலா இருக்கி ருங்கள்?'-அங்கிருந்த கூட்டத்தின் முக்கால்வாசி எழுந்து நடந்தது, எஞ்சியிருந்தவர்கள் அந்த இளை ஞன், வெள்ளை வேட்டிக்காரன், கொண்டைக்காரன். " "டேய் தம்பி, எல்லாம் பொய்யடா '-வெள்ளை வேட்டிக்காரர் முன்னலிருந்த இளைஞனுக்குக் குரல் கொடுத்தார். 'அவங்கள் கடலுக்குப் போயிருந் தால் இத்தறிக்கு வந்திருப்பாங்கள். அவங்கள் போகல்ல, நான் வீட்ட போகப்போறன்" என்று கூறிய அவரும் எழுந்து நடந்தார்.

Page 13
4 யுகம்
எல்லாம் பொய்யா? என்ன எல்லாம் பொய்? இளைஞன் சிரித்தான். அவர்கள் எல்லாரும் கடலுக் குப் போகாவிட்டால் அவர்களின் தோணிகள் எங்கே? அது ஒன்றே போதாதா அவர்கள் கடலுக்குப் போயிருக்கிருர்கள் என்பதைச் சொல்ல? ஆனல் பாவம், நேரத்தால் கட்டுண்ட இவர்களுக்குப் பச்சை உண்மையே பொய்யாகத் தெரிகிறது. இளைஞன் மீண்டும் சிரித்தான். அவனைப்பொறுத்தவரையில் இப்போ தோணிக்காரர்களுக்காகக் காத்திருப்பதை விட அந்தக் கடலைப் பார்த்திருப்பதே பெரிதாகப் பட்டது. நாகேசன் வராமலா போகப்போகிருன்? அல்லது வந்தால்தான் என்ன வராவிட்டால்தான் என்ன?
வெள்ளைவேட்டிக்காரரைப் பின்பற்றிக் கொண் டைக்காரரும் எழுந்து நடந்தார். போகும்போது அவரும், 'தம்பி நீ வரேல்லியா?' என்ருர்,
கடலைப் பார்த்த பார்வையை எடுக்காமலேயே அவன் பதிலளித்தான்.
'நான் வரேல்ல' 4

சபா. ஜெயராசா
உருளைக் கிழங்கு
யாழ்ப்பாண நகரம். தெருக்கள், கடைகள், சாக்கடை, சாக்கடைக்குமேலாக அமைக்கப் பட்ட படிகள் . கடையையும் தெருவையும் இணைக்கும் சிறிய பாலங்கள் போன்றன.
சாக்கடை-கருநீலநிறம்-நின்றும் தேங்கியும் ஒடும் கலங்கல் நீர். இடையிடையே வெற்றிலை உமிழ் நீர்ச்சிகப்பு. படிவும், கரைவும்.
கடைக்குள் கிடந்து அழுகிய உருளைக்கிழங்கு அது இருக்கவேண்டிய இடத்தை இழந்து சாக் கடைக்கு வருகின்றது.
ஒரு சிறுமி-ஏழைச்சிறுமி, அழுக்குப் பிடித்த பிஞ்சு உடல். தலைக்குமேல் ஒரு பழங்கடகம். மானத்தை மறைப்பதுபோல் கடகத்தின் கரையில் கிடந்த பொத் தலை மறைத்து உள்ளே ஒரு காட்போட் வைக்கப் பட்டுள்ளது. அழுக்குப் படிந்து மடிந்து கிடந்தது அந்தக்காட்போட் கடதாசி.
சாக்கடையைத் தேடும் சிறிய கண்கள். அங்கே அழுகிய உருளைக்கிழங்கு
"அட, உருளைக் கிழங்கு இண்டைக்கு நல்ல முழுவி யளம்’ சிறுமியின் முகத்தில் மகிழ்ச்சி-புன்னகை-சாக் கடைத் தண்ணிரில் பதிந்து ஓடியது.
"தொப்" என்று சாக்கடை நீரில் குதித்தாள். தெறித்துப் பாய்ந்த சாக்கடை நீர் அவளை நனைத்தது. *வதவத எண்டு" உருளைக் கிழங்கு அவ்வளவையும் கடகத்துக்குள் அள்ளிப் போட்டாள்.

Page 14
16 யுகம்
கடகத்தைத் தூக்கித் தலைக்குமேல் வைத்தாள். சாக்கடை நீர் சொட்டிக்கொண்டிருந்தது. வெற்றி கலந்த பிஞ்சுநடை.
. எதிரே தையற்கடைக்காரரின் கடை. வெட்டிக் கழிக்கப்பட்ட துணிகள் 'குவிஞ்சு கிடந்தன. வண் ணங்களின் சிதறல், வடிவங்களின் கலப்பு. அழகு உணர்ச்சிக்கற்பனை!
'ஐயா கொஞ்சத்துண்டு பொறுக்கட்டே?” அந் தச்சிறுமி "கடைக்காருளைக் கேட்கின்ருள்.
‘விடிய முன்னம் வந்து விட்டியே.ம். இண் டைக்கு உனக்கொரு வேலை கிடக்கு, அந்தப் பின் பக்கவிருந்தை கழுவவேணும். தண்ணியள்ளிக் கழு விப் போட்டுக் கொஞ்சம் துண்டைப் பொறுக்கிக் கொண்டுபோ"
சிறுமி கடகத்தை இறக்கி கடைவாசற் படியின் ஒருமூலையில் வைத்துவிட்டு உள்ளே போகின்ருள். உள்ளேயிருந்த வாளியை எடுத்துக்கொண்டு ருேட்டுக் கரைக்கு வந்தாள். ܗܝ
'இறுக்கி அமத்தினுல்த்தான் இந்தப் பைப்புக்கு ளாலை தண் ணிவரும். கை நல்லா நோகுது, ..ம். மூண்டுவாளி தண்ணி காணுந்தானே. இண்டைக்கு நல்ல துண்டுகள் பொறுக்கவேணும்'.
மரத்தின் பிஞ்சுக் கொப்பு ஒன்றைக் கயிறுகட்டி இழுப்பதுபோல், அவளது கைகளை வாளியும் தண் ணிரும் இழுத்து "சவண்டபடி உள்ளே போனுள்.
"ஐயா கழுவி முடிஞ்சுது. துண்டுகளைப்பொறுக் கட்டே?"
"'என்ன்த்துக்கும் உனக்கு அவசரந்தான், எட சுப்புறு, அவள் பெரியதுண்டுகளைக் கொண்டு

உருளைக்கிழங்கு 7
போய்விடப்போருள். பாத்து பெட்டியுக்குள்ளை கழிச்சு விட்ட துண்டுகளைக் கொஞ்சங்கிள்ளிக்குடு"
-பெண்ணுெருத்தி கடைக்கு வருகின்ருள். "ஆ, வாருங்கோ அம்மா, பெட்டை விலத்தி நில்! அம்மா வரவழிவிடு." s
ஒதுங்கிநின்ற சிறுமி அந்த "அம்மா'வைப் பார்க் கின்ருள்.
'சிவத்தச் செருப்பு, சிவத்தச் சீலை, சிவத்தச் சட்டை, தோடு கூடச் சிவப்பாயிருக்கு. எட கையிலை வைச்சிருக்கிறபையும் சிவப்பாயிருக்கு, பணக்காறர் இப்பிடித்தான் போடுவினமாம். என்ரை அம்மா விட்டை இப்பிடிச்சீலையில்லை. அவவிட்டை ரண்டு சிலைகிடக்கு. ஒண்டு கிழிஞ்சது மற்றது தைச்சது."
சுப்புறு வருகின்றன். 'இந்தா துண்டுகளைக் கொண்டுபோ!"
சிறுமி எதிர்பார்த்த துண்டுகள் கிடைக்கவில்லை! நிற்கின்ருள்.
நகரத் தெருக்களை அங்குமிங்கும் பார்த்தபடி பொலிசு இன்ஸ்பெக்ரர் போல வருகின்றர்,சுகாதார இன்ஸ்பெக்ரர்.
தையல் கடையின் மூலைப்படியில் கிடந்த அழுகின உருளைக் கிழங்கு,அவரது கண்களில் படுகின்றது. உற்றுப் பார்க்கின்ருர். ஏதோ குற்ற உணர்ச்சியால் தாக்கப்பட்டவள் போலச் சிறுமி "அது என்ரை ஐயா" என்ருள். .
'நீ உதுகளைக் கொண்டுபோய் விக்கிறபடியால்த் தான் இஞ்சை ஒரே நோயும் நொடியுமாய்க்கிடக்கு." **இதுகள் விக்கிறத்துக்கு இல்லை ஐயா, நாங்கள் சமைக்கிறத்துக்கு!"
3,

Page 15
8 யுகம்
'துப்பரவு தெரியாத உங்களாலைதான் எங்களுக் குப் பெருங்கரைச்சல்! இதைத் திண்டால் உங்களுக்கு வாற நோய் அயல் முழுக்க உடனை பரவிவிடும். உங்களுக் கென்ன சும்மரகிடப்பியள். எங்களுக் கெல்லோ தெரியும் அதின்ல்ர கஷ்டம்" அவருடைய முகம் கோபமாக மாறுகின்றது.
'சரி இதைக் கொண்டுபோய் அந்தக் குப்பை வாளியுக்கை கொட்டு!.ம். கெதியாய்க் கொண்டு போய்க் கொட்டு.”* சிறுமியின் முகத்தில் சிறிய வியர் வைத் துளிகள் அரும்புகின்றன. ஏமாற்றத்தின் வெளிப்பாடான சிறிய மொட்டுக்கள் போன்ற வியர்வைத் துளிகள்!
சிறுமி கடகத்தையும் உருளைக்கிழங்கையும் தூக் கிக்கொண்டு குப்பைவாளியடிக்குப் போகின்ருள். ‘ம். இவர் போகட்டுக்குமென், நான் வாளியுக்குள்ளை கைவைச்சு உறுளைக்கிழங்கை அள்ளிக்கொண்டு ஒட LD nr "GB GG6IT?”
அழுகிய உருளைக்கிழங்கைக் குப்பை வாளியுள் கொட்டிய சிறுமி, அதைக் கவனியாதவள் போலப் பாசாங்கு செய்து, அடுத்த கடையின் வாசற்படியரு கில் சென்று ஒதுங்கிநிற்கின்ருள்.
‘என்ன கெதியாய்ப் போருரில்லை, இந்தமனுசன்!" அவர் அசைந்து அசைந்து நடந்துகொண்டிருந்தார்.
"உர்.உர்' என்று உறுமிக்கொண்டுவந்து நின்றது முனிசிப்பல் குப்பைலொறி. லொறியில் நின்று குதிக் கின்றன் குப்பை அள்ளிப்போடுபவன்.
தலையில் பந்தின் ‘கவர்"-அது தொப்பி. காதில் ஒரு பீடி. அரைக் காற்சட்டை. புழுதி அடித்த

உருளைக்கிழங்கு 79
உடம்பு. வெற்றிலைக் குதப்பலை லொறிக் குப்பைக் பைக்குள் துப்பியபடி லொறியிலிருந்து குதிக்கின்றன். குப்பை வாளியைத் தூக்கி லொறிக் குப்பைக்குள் கொட்டுகின்றன். சிறுமியின் இதயத்தைத் தூக்கிக் கொட்டுவது போலிருந்தது.
அழுகிய உருளைக்கிழங்கு நசுங்கிச் சிதறி லொறிக் குள் விழுகின்றது. ஏக்கத்துடன் சிறுமி பார்க்கின் ருள்.
"உர்" என்ற லொறியின் புறப்பாடுலொறியில் எழுதியுள்ள எழுத்துக்கள் "யாழ்நகர சபை" சிறுமியால் வாசிக்கமுடியவில்லை.
கட்டாயக் கல்விச்சட்டம், இலவசக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் வாடை சிறுமிக்கு வீசினல் தானே!

Page 16
சரநாதன்
கதவடைப்பு
புலரும் பொழுதுக்கு இன்னும் தூக்கக் கலக் கம்! கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஊமையிருள் தாலமாய்க் கவிந்திருக்கிறது. கனத்த இந்தக்கருக் இருட்டுப் போதிலே வெளிவிருந்தையில் சாய்வுநாற் காலியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். நேரம் மந்த நடை பயில்கின்றது. போர்க்கோலம் கொள்ளும் களத்துமே டாய் நுனி வானம் செங்கீறல் விழுந்து சிவக்கிறது. உள்ளங்கை ரேகைகள் மங்க லாய்த் தெரியுமளவிற்கு வானம் வெளுத்து விட்டி ருந்தது. பொழுது விடியாதோ என்ற ஏக்கத்தில் கண்களை மெல்ல உயர்த்துகிறேன்.
முற்றத்தில் படர்ந்து கிடக்கும் மல்லிகைப் பந்தல் அந்த மைம்மல் இருட்டில் தெளிவாய்த் தெரிகிறது. உடலின் அணுக்கள் அத்தனையையும் வருடிக்கொண்டு சோழகம் செல்கிறது. முகையாய், மலராய்ச்சிரித்து நிற்கும் அந்த மல்லிகையில் என் கண்களைப் பொருத்து கிறேன். எண்ணம் அதிலே லயித்து மீட்சி கொள்ள மறுக்கிறது. சிலிர்த்து வரும் சோழகம் இறைத்து விட்ட வெண்முத்துக்களாய் இலைத் தளிர்களைத் தழுவி நிற்கும் மலரிதழ்களை அணைத்துச் செல்வது என்னை “ஏதோ செய்கிறது.
காற்றின் உத்வேகத்தால் தளிரணைப்பில் இருந்து விடுபட்ட மலரொன்று என் காலடியில் வந்து விழு கின்றது. அது மலரா.? சோழகத்தால் அடிபட்டு

கதவடைப்பு 2 1
வாடி வதங்கிய இதழ்கள். அதை எடுத்து உற்றுப் பார்க்கிறேன்.
என் இதயத்தை யாரோ விரல்கொண்டு சுண்டி விட்டாற் போன்ற ஒரு துடிப்பு. உள்ளடங்கிக் கிடந்த இதயத்து நினைவுகள் நெஞ்சத்தைப் பிசைந்து உயிரணுக்களை நெரித்து. உதிரத் தேய்வோடு பெரு மூச்சலைகளாய் வெளிப்படுகின்றன.
கெளரியின் நினைவுகள் கண்முன் அடர்ந்து உற் றுப்பார்க்கும் போது ஓடி மறையும் நிழல்களாய், என்னைச்சித்திரவதை செய்கின்றன. அனற் பொறி பட்ட பஞ்சாய் உள்ளம் தகிக்கிறது. தேங்கிய நீருள் விழுந்த கல்லைச்சுற்றி வளரும் வட்டங்களாய், நினைவலைகள் நெஞ்சுக்குள் இருட்திரை விரித்துப் படி கின்றன.
வாழ்க்கை கனவுகளை கெளரியும் நானுமாகப் பகிர்ந்து கொண்ட நாட்கள் தான் எத்தனை?
கெளரி நல்ல அழகிதான். ! அளவான உயரம்; கண்களைக் கவர்ந்திழுக்கும் நிறம்; அவளது அழகை விட அந்தக் கவர்ச்சி; துரு துரு வென்றிருக்கும் பாவ னைகள் சரளமாய் அத்துடன் பெண்மையின் கட்டுப் பாட்டுக்களை மீருத பண்பாட்டோடு பேசி, மற்ற வர்களை ஈர்க்கும் திறம்; பலகோணங்களிலிருந்தும் சிந்தனையில் இறங்கும் ஆற்றல். இவைதான். கூட்டுப் புழுப்போல நானுண்டு. என் வேலையுண்டு என்றிருந்த என்னைக் கவர்ந்திழுத்தன.
பாலும் நீருமாய் வேற்றுமை கண்டு பிரிக்கமுடி யாத உணர்ச்சிகளோடு நாம் வாழ்ந்த காலம்..!
காலம் பூரணத்துவம் காட்டியது. இன்ப வாழ் வின் நூலேனியாய் எனக்கும் சர்வகலாசாலைப் பிர வேசம் கிடைத்தது.

Page 17
22 யுகம்
ஒருயிர் இரண்டு கூருகப் பிரியுமோ..? பிரியு முணர்வு என்னை வதைத்தது. பிரியும்போது நிகழ்ந்த சம்பவம் இன்னும் என் எதிரில் நிழலாடுகிறது. மாலை மங்கும் வேளையில் அன்று கெளரியைப் பார்க்கப்போயிருந்தேன். என் வரவை அறிந்தவள் போன்று வாசலில் காத்திருந்தாள்.
பனியில் தோய்ந்த மென்மலர் போன்ற ஒரு புதுமை; குளித்துவிட்டு வந்திருந்தாளோ? தோரணம் கட்டிவிட்டாற்போன்று சடையில் ஆடும் மல்லிகைச் சரத்தை அன்று காணுேம்.
* * G)g, 6'r ffi?” அவள் தலை நிமிர்ந்தது. கண்கள் உடைத்து விட்டிருந்த நீர்ப்பெருக்கில் விழிகள் நீச்சல் காட்டின. சொல்லத் தெரியாத ஒரு ஏக்கம், ஆசை, தாபம் எல்லாம் குமைந்து ஒரு பெருமூச்சாய்ப் பிதிர்ந்தது. அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். என் பார்வையின் சக்தியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லையோ?
* உன் ஏக்கம் எனக்குப் புரிகிறது. பிரிவு.அது ஒரு காலக்கண்ணுடி . அதன் ஊடாக எதிர்கால இன்பந் தான் தெரிய வேண்டும், கெளரி."
"அந்த ஒரு நம்பிக்கைதான் என் தாரகம்." அவள் என்னைப் பார்க்கிருள். என் கண்களினூடு நுழைந்து இதயத்தின் அடிவேரைத் தொட்டு, என் னைப் பார்க்கிருள். காற்றில் மிதப்பது போன்ற ஒரு பாவம் என்னில் விளைகிறது. 'அ.த்...தா.ண்' அவள் வாயில் வார்த்தைகள் சிக்கித் தவித்து மடிந்தன.

கதவடைப்பு w 28
அவளது குழப்பத்தைப் புரிந்து கொண்டு, அருகே சென்று அவளை அணைத்துக்கொண்டேன். அவளது மோவாய்க்குக் கீழே வளையமாய்ப் பின்னிக்கிடந்த என் கைகளின் மீது இரண்டு கண்ணிர்த் துளிகள் விழுந்து சிதறின. A)
" என்ன வேண்டும். ? சொல் கெளரி. சொல்." இத்தனை நாளா இல்லாத ஒரு புதிய சூழ்நிலை அது. ஆனல் அப்படியான ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவள் போல அவள் பேசினுள்.
"அதோ. அந்த மல்லிகைச் சரத்தை உங்கள் கைகளால் சூடிவிடவேண்டும். என் ஒரே ஆசை இது. செய்வீர்களா..?"
அவள் காதல் இளஞ்சூட்டில் பாகாய் உருகி இல்லையாகிருளோ. அவள் கண்கள் கெஞ்சிக் கெஞ்சி ஏங்கின.
**கெளரி உன் காதலின் உறுதிதான் என் வாழ் வின் வெற்றி. தூய்மையான காதலுக்குத் தெய் வீகத் தன்மைகள் அதிகம். ஆழ்ந்த அமைதியினுள்ளே துடிக்கும் ஒரு சலனம்தான் அதன் பண்பு. அது ஏங் கிப் புலம்புவதில்லை. அதில் உண்மை ஒளி சுடர் விடும்."
மாலையைச் சூட்டிக்கொண்டே சொல்லி முடித் தேன். அவன் என் மார்பில் மாலையாகிக் கிடந்தாள். அன்றுடன் எனக்கும் மல்லிகைக்கும் ஒரு தொந் தம் ஏற்பட்டது. நான் சர்வகலாசாலைக்குப் போய் விட்டேன்.
நான் கிறீஸ்தவன் என்ற காரணம் காட்டி, கெளரிக்கு இந்துமாப்பிள்ளை ஒருவனைத் தேடிப் பிடித் தாள் கெளரியின் தாய். பாவம்! மதச் சம்பிரதா

Page 18
24 யுகம்
யங்களில் ஊறிவிட்டவள் அவள், காதலுள்ளங்கள் அவளுக்கு எப்படிப் புரியும்? பெற்றவளின் கட்டுப் பாட்டை, அவளது தீர்மானத்தை எதிர்க்க கெளரி யின் பஞ்சை உள்ளத்திற்குத் துணிவேது?
கடமைக்கும் காதலுக்குமிடையே பல த் த போராட்டம். ஈன்றவளைத் தியாகம் செய்துவிடும் அளவிற்கு கெளரிக்குக் காதல் பெரிதாய்ப்படவில்லை. அண்மையில் வந்த ஒருவனுக்காக, ஆரம்பத்தில் வந்த உறவினர்களைப் பிரிந்துவிட அவளால் முடிய வில்லை. கடமைதான் வென்றது. கெளரி என்னை மறந்து சந்திரனை மணந்து கொள்ளச் சம்மதித்து விட்டாள்.
மணம் நடைபெறுமுன்பு நான் எண்ணியதுண்டு: சந்திரன் கெளரியை எவ்வாறு முழுமையாக அடைந்து விடமுடியும்? அவளது நெஞ்சத்தின் ஆழத்தில் நான். என்னை வட்டமிடும் பழைய நினைவுகள் மல்லிகையாய் உயிர் மணம் வீசிக்கொண்டுதான் இருக்கும். அவள் வாழ்வு பாதிவாழ்வாக, அதில் என் நினைவு ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கும். மணவீட்டிற்கு என்னையும் அழைத்திருந்தாள். என் எண்ணம் தவறென்று அன்றே எனக்குப் புரிந்து விட்டது.
சந்திரனின் கையைப் பற்றிக்கொண்டு, அவள் ஒமகுண்டத்தை வலம் வரும்போது என் மனம் வெந்து வெடித்தது. அவளுக்குப் புதிய வாழ்க்கை பிடித்துவிட்டதென்று என்மனம் ஓராயிரம் ஒல மிட்டது. கணநேர மின்னலில் இரவு பகலாவதைப் போல அவளது அந்தரங்கம் எனக்கு வெளித்துவிட் - தி. என் இடத்தைச் சந்திரன் நிரப்ப, قیWEl கெளரியின் இதயத்தையும் சேர்த்து நிரப்பிவிட்டது.

as 5616) littly W 25
எனக்கும் கெளரிக்கும் இடையே சந்திரன் புகுந்து கொண்டது மெய்யென்ருல், கெளரிக்கும் சந்திரனுக்கு மிடையே நான் புகுந்து கொள்ளத் துடித்தேன்இடையேயுள்ள உரிமையைப் பகிர்ந்து கொள்வதற் காகவல்ல; முற்ருகப் பிரித்துஎடுத்துக் கொள்வ தற்கு,
வாய்திறந்து கொட்டிவிட வகையில்லாத வேதனைகள் தேளாய்க் கொட்டி என் நெஞ்சை அழ வைத்தன. என் இடத்தை நான் உறுதி செய்து கொள்ள முடியாவிட்டால் போகிறது. ஆனல் என் இனப் பலவீனமானவனுய்க் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏதும் நிகழாதவன் போல நடிப்புக் காட்டி நான் போய்விட்டேன்.
இரவின் மெத்தென்ற இருள். குருட்டு யோசனை களுடன் கண்களை மூடிப்படுத்திருந்தேன். கெளரி யின் முதலிரவுக் காட்சிகள் என் கண்முன் தோன்றின.
பட்டுப் புடவை சரசரக்க, பாதரச ஒலியோடு நடந்து அவள் சந்திரனின் அறைக்குப் போகின்ருள். எங்கே யாராவது பார்த்து விடுவார்களோ என்ற நாணம் அவள் நடையில் துடிக்கிறது. உள்ளெழுந்த பரபரப்பை வெளிக்காட்டிக்கொள்ளாது அன்ன நடை நடக்கிருள். மெல்ல அறைக்கதவைத் தாண்டுகிருள். தாமதிக்கிருள். இதழ் விரியாத ஒரு புன்முறுவலுடன் ஒதுக்கி விடப்பட்டிருந்த திரையை இழுத்துவிடுகிருள். தன்னை நோக்கிவரும் கெளரியை நோக்கிச் சந்திரன் கைகளை நீட்டுகிறன். அவள் அருகே வந்ததும் தன் இரு கைகளையும் மாலையாகப் போட்டபடி சந்திரன் அணைக்கிருன். ஐயோ? மேலே கற்பனை செய்யக்கூட என் மனம் சகிக்கவில்லை.
4.

Page 19
26 யுகம்
மனம் நிறைந்த ஒரு வாழ்க்கைதான் கெளரி வாழ்கின்ருள் என்று என் நண்பன் ஒருவன் எனக்கு எழுதினன்.
இருந்தும், என்னில் இருந்து அவள் முற்ருகப் பிரிந்துவிடவில்லை. என் செய்வேன்.? நினைவு புரளும் போதெல்லாம் அவள் தோன்றுவாள். புத்திசாலித் தனமான அவளது கேலிப்பேச்சுக்கள் என்னுள் எதி ரொலிக்கும். எண்ணம் தடம் புரண்ட நிலையில் இப் போது நடந்து முடிந்துவிட்ட துக்கத்தின் அடிச்சுவடு, வடுவாய் என்னுள் பதியும். நான் எனக்குள்ளேயே துவண்டு, தூக்கமில்லாமல் சரியான உணவில்லாமல் தெம்பில்லா உள்ளத்தோடு எத்தனை நாள் துடிதுடித் திருக்கிறேன்.
※ 举 来
இப்பொழுது நான் மனிதன்; வாலிபத்தின் உணர் வுகள் வீறுகொண்டு ஆட்டிப்படைக்கும் நிலையில் நான் இல்லை. என் உயர் பதவி அதற்குத் துணைசெய்கிறது.
举 举 格
வாழ்க்கை சினிமாவைப் போலவா? அதிலும் ஒரு இரண்டாம் காட்சியா? இருந்தாற் போல வந்த ஒரு செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. சந்திரன் மாரடைப்பால் இறந்துவிட்டானும், செய்தி கேட்ட நான் மனப்பூர்வமாக கெளரிக்காக அநுதாபப்பட் டேன்-வருந்தினேன். கூடவே புளிப்பின் இறுதியில் இலேசாக மருட்டும் இனிப்பைப் போலவும் ஒரு உணர்ச்சி எங்கிருந்தோ, தலை நிமிர்த்தி மெல்ல என் னுள் எட்டிப் பார்த்தது. ܚ
கெளரி இப்போது ஒரு எரி நட்சத்திரம். ஒரு நாள் எட்டாத உயரத்தில் கண்ணுக்குத் தெரியும்

கதவடைப்பு 27
படி கம்பீரமாகச் சுடர்விட்டது. இப்போது கீழே வீழ்ந்து கொண்டிருக்கிறது. இனி மிஞ்சப்போவது வெறும் கரித்துண்டு. -
கரித்துண்டுதானே வைரமாக விளைகிறதாம். கரியை வைரமாக்கி, மார்பில் அணியவேண்டும்போல் ஒரு ஏக்கம். இன்று கெளரியை எப்படியாவது சந் திப்பது என்ற முடிவு என்னை ஆட்கொண்டது. சாய்வு நாற்காலியை விட்டு எழுகிறேன்.
எப்படித்தான் கெளரியின் வீட்டை அடைந்தேனே? வீடு வெறிச்சோடிக்கிடக்கிறது. கலையுணர்வோடு கெளரியின் கைபட்டுத் துலங்கும் அந்த வீடு மூளியாய் இருண்டு கிடக்கிறது.
தயங்கித் தயங்கி வந்தாள் கெளரி. ** உட்காருங்கள்" வார்த்தைகள் நெரிந்து, உருவழிந்து வெளிப்பட் டன. உட்கார்ந்த நான் நின்று கொண்டே இருந்த அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.
உள்ளே சோகம் கவிந்திருந்தாலும், அதை மற்ற வர்களுக்குக் காட்டவிடாது திரைபோட்டது அவளது இதழ்களில் கோடிட்ட முறுவல். புழுதி படிந்து பாவந்ததும்புஞ் சிலையூடு உயிர் துடிப்பது போன்று நின்முள் கெளரி. நெருப்பில் உருகிப் புனிதமாகும் பொன்னுய்த் தன் வேதனையில் தன்னையே புடம் போட்டுக்கொண்டு நின்ருள்.
விதியின் தராசில், அபாக்கியப் படிக் கல்லில் நானும் கெளரியும் ஏறக்குறைய ஒரே நிறை காட்டி னுேம். அவள் முதற்காதலைக் கானல் நீரெனக் கருதி வாழுந்துடிப்பில் இன்னெருவனைக் கைப்பிடித்தாள். இன்று அவனும் போய்விட உதிர்ந்தும் வாடாத

Page 20
28 யுகம்
மல்லிகையாய்க் கிடக்கிருள். நானே. முதற் காத லுக்குத் தெய்வீகம் ஏற்றி, அது கிடைக்காது என்ற போதும், அதற்காகத் துடிக்கிறேன்.
" "கெளரி, நீரைப் பிரித்து இனிமை திரட்டும் நோக்கில் காய்ச்சிய பால் எவ்வாறு பொங்கிச் சிந்தி யதோ..? பால் பொங்கிச் சிந்துவதும், தீயின் நாக் குகள் பருகிச் சுவைப்பதுவும் உலக இயற்கைதான்." * ‘சிதறிச் சிந்தும் என்று தெரிந்தாலும் பால் பொங்காது விடுமா..? பொங்குவது பாலி ன் இயற்கை. வழியவிடாமல் காப்பது."
வார்த்தைகள் முடிவடையவில்லை. இரு கண் ணிர்த் துளிகள்தான் அவற்றின் முடிபு.
என்னுள் ஏனே ஒரு வெறி. அவளைக் குத்திப் புன் செய்யும் குரூரம். மனிதனில் உள்ள மிருகம் பேசியது.
'எனக்கென்றலும் ஒரு நல்ல வளமான எதிர் காலம் உண்டு. ஆனல் உனக்கு இதுபெரும் இழப்புத் தான். '
'நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்."
கெளரி நீ.??? 'இழப்பதற்கு நான் எதையும் பெற்றுவிட வில்லையே."
சிறிதுநேரம் மெளனம் பேசியது. என்னுள்ளே இரகசியமான இன்பச்சுரப்பொன்று கண்திறந்தது. * "நாம். நானும் அவரும் இன்பமாகத்தான் வாழ்ந்தோம். எங்களுக்காக வல்ல. உலகத்துக்காக."
‘ “ Gagarrf?” ” *,ஆமாம். மலை ஏறுபவன் தன் சுமையைத்தானே தாங்குவாணும். எம் துயரத்தை நாம் எம்முள்ளே அடக்கி அடக்கி வாழவேண்டி இருந்தது."

கதவடைப்பு 雳9
எங்கும் மயான அமைதி, அமைதியைக் கிழித்துக் கொண்டு அவள்தான் பேசினுள்.
'நீங்கள் சொன்னது போல் பூரணத்துவமான காதலுக்குத் தெய்வீகத்தன்மைகள் அதிகம்தான். அந்த முதலிரவே எதையும் நான் மறைக்கவில்லை; அவரிடம் சொன்னேன். நினைப்பின் பூரணத்துவமான வார்ப்பில் சொற்கள் எப்படி எப்படி வந்தனவோ, அவற்றை அப்படி அப்படியே சொன்னேன். சில இடங்களில் என் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பதங்களை மாற்றிப் பொருள் மெருகு கொடுத்துச் செப்பனிடவேண்டும் போல் தோன்றினலும் அப்படிச் செய்யவில்லை. சொல்லி முடிந்த பின்புத ன் நான் ஏற்கனவே ஒருவரை மன தால் வரித்துவிட்ட உண்மையை ஏன் அவருக்குச் சொன்னுேம் என்று இருந்தது. நான் நடுங்கினேன். அந்த நடுக்கத்தை மேலும் வளர்க்கும் பதிலைக்கூறக் கூடாது என்ற பெருந்தன்மையோடு தான் அவர் பேசினர்.'
"காதலில் ஒருவர்க்கொருவர் தியாகம் செய்யத் தயங்காதபோது அது புனித வஸ்துவாகிவிடுகிறது. நீ உன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் நிறை மனதோடு, தூய்மை கலையாது ஒப்படைத்துவிட்
டால் நீதான் பெண். உள்ளத்தை ஆட்கொண்ட வனே உடலையும் ஆளவேண்டும். ஆனல் சமூகமும் சம் பிரதாயமும் .! நீ என் தாலியை மட்டும் சுமந்து
கொள். அதுபோதும் கெளரி, '
தன் கணவனின் பெருந்தன்மையைச் சொல்லும் போது அவள் இமைகள் படபடத்தன; விம்மல்கள் வெடித்தன.

Page 21
30 யுகம்
'அவர் உரிமை இருந்தும் என்னைத் தீண்டவில்லை. உண்மையில் அவர் தெய்வம். தெய்வம்."
அவள் வாய்விட்டு அழுதாள். "ஐயோ, ஒவ்வொரு முறையும் மலர் சூட்டிக் கொள்ளும்போதும் ஒருவகைத் தாழ்வுணர்ச்சி எனக் குள் இருக்கத்தான் செய்தது."
ஒரு நிமிட இடைவேளைக்குப் பின் கேவலுக் கிடையே வார்த்தைகள் நழுவி விழுந்தன.
**நான்தான் அவரைக்கொன்றுவிட்டேன். ஏமாற் றத்தைப் போன்ற கொடிய விஷம் இல்லை. ஆமாம் விஷமூட்டித் தெய்வத்தையே கொன்றுவிட்டேன்." . அவள் சுவரிலே தலையை மோதிக்கொண்டு மாய்ந் தாள்.
நான் மரமாகி நின்றேன். என்னுள் எழுந்த இன்பச் சுரப்பின் கண்கள் அடைபட்டுவிட்டன. வெட்கிக் கூனிக் குறுகி நான் ஈனப் புழுவாய் நெளிகிறேன். அவள் பெண்மையின் கொலுவாய், மலையாய், பூசனைக்குரிய தெய்வீக மலராய் நிற்கிருள். அவள் கண்களில் இப்போது ஒரு தெய்வீக மலர்ச்சி.
"மனிதத் தெய்வம் ஒன்றை அபகரித்துவிட் டதையெண்ணி மரணம் பெருமைப்பட ஏதுவில்லை. ஏனெனில் தெய்வத்திற்கு மறைவில்லை. உணர்வு மயமாய் என்னுல் மட்டும் அனுபவிக்கும் ஒரு சக்தி என்னுள் பரவிக்கொண்டே இருக்கிறது. அவரை நான் இழந்துவிடவில்லை; என்றும் இழந்துவிடும் எண் ணமும் இல்லை. என் கன்னிமையையே வாடா மல்லிகையாக்கி அவர் திருவடிகளுக்கு அர்ப்பணித் துக்கொண்டேவாழ்ந்து விடுவேன். அது எனக்குப் போதும்."

ABonuaron L-LIL- - 31
கெளரியின் குரல் தீனமாய், ஆனல் உறுதியாய் ஒலித்து ஓய்ந்தது.
கரித்துண்டை வைரமாக்க முற்பட்ட நான், அந்தக் கரித்துண்டு தானே வைரமாகி ஒளிவிடுவதை மணர்ந்தேன். இப்போது அந்த உணர்வே என் பள்ளம்.
தேநீர் கொண்டு வருவதற்கென உள்ளே போன வள் பழக்கம் காரணமாகக் கதவையும் மூடிக்கொண் .ாள். அவள் தன் 'மனக் கதவை அடைத்துக் கொண்டபின் எந்தக் கதவு மூடினல் என்ன திறந் தால் என்ன?
இனி எனக்கு அங்கே அனுமதி இல்லை. வெறும் "மரக்கதவை அடைத்துக் கொண்டு நான் வீட்டுக் குப் புறப்படுகின்றேன். 女

Page 22
பீ. மரியதாஸ்
முரண்பாடு
பச்சையில் துளிர்வெள்ளையாக தளதளவென்று மதர்த்து நிற்கும் கொழுந்தைப் பார்க்கும்போது ரங்கம்மாவிடம் நிமிடத்திற்கு நிமிடம் வேகம் கூடு கிறது.
விஞ்ஞான யுகத்தில், இந்த மரகதத் தீவில் கொழுந்து பறிக்கும் யந்திரம் வராவிட்டாலும், அதற்கொரு யந்திரம் தேவையில்லை; அப்படியொரு யந்திரம் வந்தாலும் அதையும்விட வேகமாக எங்க ளால் கொழுந்து பறிக்க முடியும் என்பதைச் செய லால் நிரூபிப்பதுபோன்று பெண்கள் வேகம் வேகமாகக் கெழுந்தெடுக்கிருர்கள்.
கைகளில் மென்மைதான்! அதில் நெளியும் லாவக நொடிப்பு கணத்துக்குள் கை நிறைய கொழுந்தை அடக்கித் தானகவே, தன்னிச்சைத் தொழிலாக, பக்கவாட்டில், முதுகில் தொங்கும் கூடைக்குள் கொழுந்தை எறியும் யந்திரப் பான்மை, மென்மையில் தோய்ந்த திண்மையையும், அப்பியாச முதிர்ச்சியையும் காட்டுகிறது. யந்திரம் போன்ற உழைப்பு; ஆனல் யந்திரம் போன்ற ஜடப் பொரு ளில்லாத இரத்தமும் தசையும் உள்ள உயிர்ப்பு நொடியுள்ள மனிதப் பெண்களின் உழைப்பு!
கங்கானி தன்பாட்டில் நின்று கொண்டிருக்கிறர். காலை நேரங்களில் கங்காணிக்கு அதிகமாகச் சத்தம் போடவேண்டியிருக்காது.

முரண்பாடு 33
ரங்கம்மாவின் கைவிரைவு கூடக்கூட கூடை அசுர வேகத்தில் நிறைந்து கொண்டிருக்கிறது. சுற்றுமுற் றும் பார்ப்பதையோ அடுத்த நிரைக் காரியிடம் பேசுவதையோ மறந்த நிலையில் கர்ம சித்தி யில் உளம் லயிக்கவிட்ட யோகியைப் போன்று, காரியத்தில் தன்வசம் இழந்தவளாய் அவள்கொழுந்து ள்ெளிக் கொண்டிருக்கிருள். பார்ப்பதற்கு அவள் இப்படி எல்லாவற்றையும் மறந்து காரியத்தில் சித்தங் கலந்தவளாக இருந்தபோதும், அவளது மனம் வீட்டைப் பற்றியும், பிள்ளைகளைப் பற்றியும், "ஸ்டோ ரில் வேலை செய்யும் கணவனைப் பற்றியும் எண்ணி, கற்றிச் சுழன்று சக்கரவட்டம் போட்டுக் கொண்டி ருக்கிறது. கொழுந்தைக் கிள்ள அவளது மனம் அதில் பதிய வேண்டியதில்லை அவளைப் பொறுத்த வரையில்! கைகள் தானுகவே இயங்கும் யந்திரத் தன்மைபெற்ற தொழிலாளிப் பெண் அவள்!
பனிக் துளி மறையாத தளிர்கள் வெண்பற்களைக் காட்டிச் சிரிப்பதைப் போன்று நிமிர்ந்து நிற்கும் அழகு பார்க்கப் பரவசமூட்டும் அழகு. இப்படித்தான் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இரவில் பெய்யும் பணியும், பகலில் கொழுத்தும் வெயிலும் செய்யும் ரசாயன மாற்றம் கொழுந்தை அள்ளி இறைக்கும். இக்காலங்களில் அதிகமாகக் கொழுந்தெடுக்க முடியு மாகையால் காலை ஐந்தரை, ஆறு மணிக்கே பெண்கள் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். *கைக்காசு கொழுந்து காலத்தில எவடி வீட்டுல இருப்பா" என்று பெண்கள் பேசிக்கொள்வது சர்வ சாதாரணமானது. சகலத்தையும் மறந்து-உணவைக்கூட மறந்து-சர்வ பரித்தியாகம் என்பார்களே அதைப்போன்று, நிறைய கொழுந்தெடுப்பதைப் பற்றியே கனவிலும் சிந்தித்து
25

Page 23
34 யுக்ம்
இயங்கும் காட்சியை இம்மாதங்களில் காணலாம். சில தோட்டங்களில் மதியச் சாப்பாட்டிற்குக் கூட பெண்கள் அனுப்பப்படுவதில்லை. மின்சார வசதி யற்ற கொழுந்து மடுவங்களில் இம்மாதங்களில் மாலை யில், "கேஸ் லைட்' எரிவதைக் காணலாம்.
இன்றைக்குப் பத்து மணிக்கு தினம் வருவதைப் போன்று ரங்கம்மாவுக்குத் தேநீர் வராது. காலை யில் போட்ட 'மல்லித் தண்ணியில் கொஞ்சத்தை மிச்சம் வைத்துவிட்டு வந்திருந்தால் மகன் அதைக் கொண்டு வருவானே என்பது இப்பொழுதுதான் அவளுக்கு நினைவுக்கு வருகிறது. கணவனுக்கும் இன் றைக்குதேநீர் கிடையாது. என்ன செய்வது? காலையில் வெள்ளென எழும்பி கோலம் போடுவதைக் கூட்ச் செய்யாமல் மல்லி வறுத்து இடித்து, அதில் சிறிதை மதியத்திற்கு வைத்துவிட்டு மீதியை கேத்தலில் போட்டு வேகவைத்து காலைத் தேநீரைச் சமாளித் தாள். மத்தியானம் போய் மல்லி வறுத்து இடித் துக் கொண்டிருக்க முடியாது.
ரங்கம்மாவிற்கு ஒரு வயதான கடைசி மகன் காலையில் மல்லித் தண்ணிர் குடிக்க மறுத்து அடம் பிடித்தது நினைவிற்கு வந்தது. உடம்பிற்கு நல்லது என்று அவனை அதைக் குடிக்கச் செய்தது அவளுக்குப் பெரும் பாடாய்போய்விட்டது. மற்ற இரண்டு பிள்ளைகளும் இதைக் குடித்துவிடுவார்கள். மாதத் தில் ஏழு, எட்டு நாட்கள் தேநீருக்குப் பதிலாக மல்லித் தண்ணீர் குடித்து அவர்களுக்குப் பழக்கமாய் போய் விட்டது. இத்தகைய சிந்தனைக் கலவையோடு அந் திக்கு என்ன செய்வது என்ற நினைவில் அமிழ்ந்திருந்த ரங்கம்மாவை "கொழுந்து கொண்டு வரச் சொல்லும்" கங்காணியின் குரல் திருப்பிவிட்டது.

முரண்பாடு 35
சூல் நிறைந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் களைப்போல பெண்களெல்லாம் தங்களுக்கு முன்னல் கொழுந்துக் கூடையை இறக்கிவைத்துவிட்டு வரிசை யாக நிற்கிருர்கள். ஒவ்வொருவரும் இடையில் கட்டியிருந்த படங்கை அவிழ்த்து முன்னல் விரித்து அதில் கொழுந்தைக் கொட்டி, பிள்ளைகளுக்குப் பேன் பார்ப்பதைப்போல கொழுந்தைக்கிண்டி "மொட்டை" "நார்க்காம்புகளை" பொறுக்கிக் கொண்டிருக்கிருர்கள்.
எழுதப் பழகும் சிறு குழந்தை தன்னிச்சைப் போக்கில் கிறுக்கி விளையாடும் கோணற்கோடுகளைப் போல புதிதாக வெட்டப்பட்ட புதிய ரோடு மெலிந்து மெலிந்து, மறைந்து, மறைந்து தெரிகிறது. யதேஸ் மாக குழந்தை கீறிய கோடு சில இடங்களில் நேராக விழுந்து விடுவதைப் போன்று சிற்சில இடங்களில் ரோடு நேராகச்சென்று, காற்றுக்கு ஆடிமறையும் செடியைப்போல வளைவில் மறைந்து, 19657 62orff தோன்றி, மறைந்து நெளிந்து செல்கிறது.
கங்காணி ஒருவர் நிறுத்திப் பிடித்த நிறுவைத் தடியில் தராசுக் கொக்கியில் "கொழுந்துத் தட்டு" தொங்கிக் கொண்டிருக்க, அதில் பெண்கள் கூடைக் கொழுந்தைக் கொட்டி நிறைக்க, தராசைப் பார்த்து "கொழுந்துத் துண்டில் ருத்தலைப் போட்டு கணக்கப் பிள்ளை பெண்கள் ஏந்தும் கூடைக்குள் அதனைப் போடுகிருர், முப்பது. முப்பத்தஞ்சி. என்று கணக் கப்பிள்ளை முத்தல் சொல்லும் சத்தம் மட்டும் மணிக் கூண்டின் ஒலியைப் போல கேட்டுக் கொண்டிருக்கிறது. நிசப்தமான, ஆனல் ஒலி மரணிக்காத, பெரிய மணிக் கூண்டு இயங்கும்போது எழும் கிர்ரென்ற ஒலியைப் போன்ற முணுமுணுப்பு மெதுவாய்க் கேட்டுக்கொண் டிருக்கிறது. ・

Page 24
36 யுகம்
கீழே நெளிந்து வரும் ரோட்டில் பெரியதுரை காரில் வருவது தெரிகிறது. கொழுந்து நிறுத்து முடித்து ஒதுக்கங்களில் பிள்ளைகள் கொண்டு வந்த தேநீரைப் போத்தலோடு சரித்துக் குடித்துக்கொண்டி ருந்த பெண்கள் துரையின் கார் கீழே வருவதைக் கண்டு, தேநீர்ப் போத்தல்களை எடுத்துக்கொண்டு நிறைக்கு விரைகின்றனர்.
துரையின் கார் முனியாண்டிக் கோவில் "முடக் கில்" நிற்கிறது. ரோட்டு “வங்கியை" அடுத்து நிற்கும் பாதையில் எப்படியோ மேலே ஒட்டிக்கொண்டிருக்கும் மண்ணில் வேர்விட்டுத் தளைத்த ஆலமரம். பெரு விருட்சமாக உயர்ந்து நிற்கும் தன் வளர்ச்சிக்கேற்ப பாறையின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் வேர்களை கூடாரக் கயிறுகளைப் போல பக்கவாட்டில் நீட்டி பாறையின் ஓரங்களின் வழியாக மண்ணுக்குள் நுழைந்து, அதன் பலத்தில் நின்று கொண்டிருக்கிறது. மரத்தைச் சுற்றி விழுதுகள் கற்றை கற்றையாகத் தொங்கி பாறையைச் சுற்றியுள்ள தரையில் தங்களது நுனியை நுழைத்து மரத்திற்கு மேலும் பலத்தையும், வளத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. துரை மேல் மலைக்கு வந்தால் சிறிது நேரம் காரைநிறுத்தி முனியாண்டிக் கோவிலைப் பார்க்காமல் போகமாட் டார். மரத்தின் இடுக்கிற்குள் கல்லில் அமர்ந்து மரத்தில் சாய்ந்து கல்லாய் சமைந்திருக்கிருர் முனி யாண்டி. முன்னுல் இரண்டு மூன்று வேர்கள் அதற்குக் காவலிருப்பதைப் போன்று மண்ணில் எழுந்து நிற் கின்றன.
துரையின் பக்தியைப் பற்றித் தொழிலாளர்கள் பேசிக் கொள்வார்கள். அவர் தமிழரில்லை. ஆங்கி லேயர். அப்படியிருந்தும் அவர் முனியாண்டியை

முரண்பாடு 37
வணங்குகிருர் என்ருல் அதில் உண்மைப் பக்திதானே தெரிகிறது. அவர் புதிதாக வந்த துரை. வந்து ஐந்துமாதங்களாகின்றது. முன்பிருந்த பறங்கித்துரை அங்கேயே பதினைந்து வருடம் இருந்தவர். அவர் காரில் வரும்போது சும்மா ஆலமரத்தைப் பார்த் துக்கொண்டு வருவாரே தவிர, இறங்கி கீழே நின்று இவரைப் போல பக்தியோடு பார்ப்பதில்லை.
புதிய துரைக்கு அந்த ஆலமரத்தைப் பார்க்க ஒரே வியப்பு. தான் நிற்கும் இடத்தில் தனக்கு எவ்வித பலமும் இல்லாது. பக்கவாட்டில் சென்று தரையில் நுழையும் வேர்களினதும், விழுதுகளின தும் பலத்தில், தன்னில் ஆதாரமின்றி பூதா கார மாய் வளர்ந்து நிற்கும் ஆலமரத்தின் நிலையைப் பார்க்க துரைக்கு ஒரே வியப்பாக இருக்கும். ஒவ் வொருமுறை அப்படியே செல்லும் போதும் காரை நிறுத்தி அதனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டி ருப்பார். மரத்தைச் சுற்றிப் பார்த்ததும் உண்டு. தன்னில் பலமின்றி, தனக்குப் பலமாக, தன்னில் வளர்ந்தவைகளின் பலத்தில் நிற்கிறது அந்த ஆலமரம்! மரத்தில் சாய்ந்திருக்கும் முனியாண்டியையோ, முன்னலிருக்கும் வேல்களையோ அவர் உன்னிப்பாகப் பார்த்ததில்லை. தனது மனைவியிடம் கூட துரை இந்த ஆலமரத்தைப் பற்றிக் கூறியிருக்கிருர்,
துரையின் கார் புறப்படுகிறது. சுற்றிலும் மலையை நோட்டம் விடுகிருர். மலையெங்கும் கொழுந்து பூத்துக் குலுங்குகிறது. நிச்சயமாக இம்முறை இப் பகுதியில் ஒரு "ரெக்கார்டை ஏற்படுத்தி விடலாம் என்ற மகிழ்ச்சித் திவலைகள் முகத்தில் விழுகின்றன. இன்னும் கொழுந்து நிறுத்துமுடியவில்லை. பச்சிலை மலையாகக் கொழுந்து குவிந்து கிடக்கிறது. இளம்

Page 25
38 ر-•- யுகம்
பெண்கள் இருவர் கொழுந்துச் சாக்கை விரித்துப் பிடிக்க, ஒருத்தி கொழுந்தை அள்ளியள்ளி அதனுள் நிறைத்து அப்பால் தூக்கி வைக்கின்றனர். தட்டுக் காரர் தராசில் கொழுந்துச்சாக்கை நிறுத்து அப்பால் வைக்க மற்ருெரு பெண் கொக்கிகளினுல் சாக்கின் வாய்களை மூடிக்கொழுவுகிருள். கிளாஸ் நைலோன் சாரியணிந்த பெண்ணின் அங்கங்களைப் போல சாக் கிற்குள் இருக்கும் கொழுந்துகள் வெளியில் தெரி கின்றன. துரை காரை நிறுத்தவில்லை. காருக்கு ளிருந்து துரையின் அல்சேசன் நாய் எட்டிப் பார்க் கிறது. அது குறிப்பிட்ட ஒரு காலத்திலன்றி மற்ற நாட்களில் வெளியில் போகாது. அதனல் தான் துரை காரில் வைத்து மலைக்குக் கொண்டுவருவார். கார் "மட்டத்து மலையை நோக்கி நகர்கிறது.
நேரம் பதினுென்று இருக்கும். வெயில் தணலாய்
கொழுத்துகிறது. ரங்கம்மா கூடை கனப்பதை உணர் கிருள். மேலே இருக்கும் சின்னரோட்டு வரை எப்படியாவது போய்விடவேண்டுமென்று
மேலும் வேகமாகக் கைகளைப் பாய்ச்சுகிருள். சின்ன ரோட்டில் கூடையை இறக்கி மேலே வழியும் கொழுந்தை உள்ளே அமுக்கி, முருங்கை மரநிழலில் கூடையைத் தூக்கிவைத்துவிட்டு, தலையில் "கொங் காணி' மடித்துப் போட்டிருந்த வேஷ்டியை உதறி, முடிச்சுப் போட்டு கோணியாகத் தலையிலிருந்து கீழி றக்கி மற்ற இரு முனைகளையும் இடுப்பைச் சுற்றிக் கட்டி, "மடி கட்டிக்கொண்டு, சின்ன ரோட்டு வங்கி யில் கால் வைத்து பெரிய தேயிலை 'வாதொன்றைப் பிடித்து மெதுவாக ஏறுகிருள்.
கைகள் இயங்குகின்றன. எங்கும் இனம் புரியாத மெளனம் நிலவுகிறது. கங்காணி ஒரு ஒரமாக

முரண்பாடு r/ 39
நின்று ஒவ்வொன்ருகக் கொழுந்தைக் கிள்ளிக்கொண் டிருக்கிருர், இன்னும் சிறிது நேரத்தில் மதியச் சாப்பாட்டுச் சங்கொலி கேட்கும். சங்கடிக்கும் முன்னர் எப்படியாவது கூடையை நிரப்பிவிடவேண் டும் என்ற எண்ணத்தில் எல்லாப் பெண்களும் வேகம் வேகமாக இயங்குகின்றனர். அதிகமான பெண்கள் கூடைகளை இறக்கி மரநிழலில் வைத்துவிட்டு, தலை வேஷ்டியை அவிழ்த்து கோணியாக "மடி கட்டி யிருக்கின்றனர். மரங்களின் முதுகில் தொங்கும் வெள்ளைத் தேன்கூடுகளைப் போல அவர்களின் முதுகில் கொழுந்து நிறைந்த கோணி வேஷ்டிகள் தொங்கு கின்றன.
料 物 彝
ரங்கம்மா, பரக்கப் பரக்க வீட்டுவேலைகளைச் செய்து கொண்டிருக்கிருள். அடுப்பில் தோசைக் கல்லில் அவளுக்கு ரொட்டி வெந்து கொண்டிருக்கி றது. பிள்ளைகள் இருவரும் ஒரு ரொட்டியைப் பிய்த்து ஆளுக்குப் பாதியாக, சீனியில் தொட்டு தின்று கொண்டிருக்கிரு கள். வாளியில் கொண்டு வந்த தண்ணீரை மூலையில் வைத்துவிட்டு, அடுப்பருகில் "பலாக்கட்டையை இழுத்துப் போட்டு அதன்மேல் ரங்கம்மா உட்காருகிருள். வெந்த ரொட்டியைத் தட்டில் எடுத்து வைத்துவிட்டு, கேத்தல் நீரை அடுப்பில் வைத்து, காலையில் மீதம் வைத்திருந்த 1 ல்லித்தூளை அதில் கொட்டுகிருள். பெட்டியில் இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது. கடைகளில் மல்லி கிடையாதாம். கூப்பன் கடையில் கியூவில் நின்றுதான் மல்லிவாங்க முடியும். அதற்கு கையில் காசு வேண்டும். இதனுல் என்ன விலை என்ருலும், எந்தப் பொருளென்ருலும் வாடிக்கைக் கடையில் தான் வாங்குவது வழக்கம்.

Page 26
40 யுகம்
சின்னப் பையன் ரொட்டியில் பாதியைத் தின்று விட்டான்.
'அம்மாவ் தேத்தா" ரொட்டியை மெல்லத் தொடங்கிய ரங்கம்மா அவனைச் சமாதானப் படுத்த முயல்கிருள்.
'ரொட்டியைத் தின்னு தொர, தின்ன பொற்கு தொரைக்கு சீனி போட்டு மல்லித்தண்ணி தருவணும்" "சீ. மல்லித் தண்ணி வேணும். தேத்தா தா." அடம்பிடிக்கிருன்.
"தேத்தாவுக்கு தூளு இல்லடா தொர, மல்லித் தண்ணிதான் ஒடம்புக்கு நல்லது. நாங்கல்லாம் அதெதான் குடிக்கிருேம். சீக்கிரம் ரொட்டியைத் தின்னு தொர."
ரொட்டியோடு விரலையும் வாய்க்குள் வைத்துக் குதப்பிய குழந்தை திடீரென்று, "ஏம்மா நம்மூட்ல தூளு இல்ல?" என்ற கேள்வியைத் தூக்கிப்போட் டான்.
‘தூள் முடிஞ்சி போச்சி தொர. அதுணுல தூளு இல்ல".
பேசிக் கொண்டே மல்லித் தண்ணீரை கறிக்கோப் பையில் வார்த்து சிறிது சீனியை அதில் அள்ளிப் போட்டு மற்ருெரு கோப்பையில் கொதிநீரை ஆற்றி இரண்டு பிள்ளைகளிடமும் கொடுத்தாள். ரொட்டி யைத் தின்று முடித்த அவர்கள் அதைக் குடித்து விட்டு வெளியில் போய்விட்டார்கள்.
சின்னப் பையன் அடம்பிடிக்காது மல்லித் தண் ணிரைக் குடித்தது ரங்கம்மாவிற்கு சிரமத்தை நீக்கியது. எஞ்சியிருந்த மல்லித் தண்ணிரில் தனக்குச் சிறிது கறிக்கோப்பையில் வார்த்துக்கொண்டு, மிகு

(predort 1rrG) 4】
தியை அடுப்பிலேயே கணவனுக்காக வைத்துவிட்டு, கோப்பையை கையில் ஏந்தி உறுஞ்சிக்கொண்டே "இஸ்தோப்புக்கு வந்தாள்.
பெண்கள் மலைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். ரங்கம்மா கோப்பையை "ராக்கையில்" வைத்துவிட்டு, படங்கை உதறி இடுப்பில்சுற்றிக்கொண்டே, “Prtrgoir, தட்டுல ரொட்டி வச்சிருக்கேன் அப்பா வந்தா சொல்லு" என்று பெரிய பையனிடம் கூறிவிட்டு கூடையை எடுத்துக் கொண்டு foot - 60tui; கட்டுகிருள். கீழே குறுக்குப்பாதையில் தனது கணவன் வருவது ரங்கம்மாவிற்குத் தெரிகிறது. ஆனல் நின்று கதைப் பதற்கு நேரமில்லை.
மாரிமுத்து-அவன்தான் ரங்கம்மாவின் és Gooreau sár; பேக்டரியில் வேலை. தட்டில் மனைவி வைத்திருந்த ரொட்டியில் பிள்ளைகளுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துக் கொடுத்துவிட்டு, மீதியைச்ஓடிைல் தொட்டு மென்றுகொண்டே மல்லித்தண்ணீரை உறுஞ்சிக் குடிக் கிருன்.
சாப்பிட்டு முடித்தவுடன் வெளியில் முற்றத்தில் கிடந்த "குத்துக் கட்டையைப்" பிளக்கத் தொடங்கி ன்ை. சிறு கட்டைதான். வெயிலின் உக்கிரத்தால் வேர்வை வழிகிறது. அதைப் பிளந்து போட்டுவிட்டு, தலை ,லேஞ்சால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு "இஸ்தோப்பு'ப் படியில் உட்காருகிருன். *ஜேப் பில் கிடந்த பீடித் துண்டைப் பற்றவைத்து தம்" இழுத்தவனுக்கு ‘பெட்டி அடைப்பு" இருப்பது நிஜன விற்கு வருகிறது. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, பிள்ளைகளிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுப் போகிறன்.
6

Page 27
42 யுகம்
பெண்கள் கொழுந்து நிறுப்பதற்கு வரிசையாக வந்து கொண்டிருக்கிருர்கள். பேக்டரி முகப்பில் பெரிய லொறி ஒன்றில் தொழிலாளர்கள் தேயிலைப் பெட்டியை ஏற்றிக் கொண்டிருக்கிருர்கள். Spr மாண்டமான அந்த லொறி நிறைய தேயிலைப் பெட் டிகள். லொறி புறப்படும்போது டிரைவர் நாளைக்கு மற்ற லொறி பெட்டி ஏற்றுவதற்கு வருமென்று டீமேக்கரிடம் தெரிவித்துவிட்டு அதனை ஒட்டிச் செல் Scipit.
ரங்கம்மா கொழுந்து நிறுத்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது ஆறரை மணி இருக்கும். எண்பது ருத்தல் கொழுந்தெடுத்துவிட்ட மகிழ்ச்சியில் அவளுக்கு வீட்டு வேலைகளில் சிரமம் எதுவும் தெரியவில்லை.
அடுப்பில் தளதளவென்று மூச்சுவிட்டு வெந்து கொண்டிருக்கும் சோற்றுப்பானையில் மூடியை ஆட்டி கஞ்சு தெறித்து விழுகிறது. ரங்கம்மா வெற்றிலையை மென்று கொண்டே பையனின் சட்டைக் கிழிசலுக்கு ஒட்டுப் போட்டுக் கொண்டிருக்கிருள்.
பிள்ளைகள் இருவரும் இஸ்தோப்பில் நின்று தகப் பனைப் பார்த்துக் கொண்டிருக்கிருர்கள். மணி ஏழாகி விட்டது.
ரங்கம்மா சோற்றை வடித்துக்கொண்டிருக்கை யில் மாரிமுத்து வந்துவிட்டான். மணி ஏழரை இருக்கும். வேலைவிட்டு வந்தவுடன் இரவில் களைப் புத் தீர ஒரு கோப்பை தேநீர் குடிப்பது அவன் வழக்கம். பிள்ளைகளுக்கும் அதில் பங்கு உண்டு.
அப்பா தேத்தண்ணி" குடிப்பார் என்று ஆவ லோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு அவர் வெறும் 'சுடுதண்ணியைக் குடிப்பது பெரும் ஏமாற்றமாய்ப் போகிறது,

முரண்பாடு 43
மெதுவாகச் சின்னவன் தகப்பனின் தோளைப் பற்றுகிருன்.
“eTGör Lir Trefr. p56ü aynr GouéTurtalarış um... ?” "ஆமா.ப்பா" "நீ தேத்தா குடிக்கலியர்ப்பா" "தேத்தா இல்லடா தொர. தேத்தாவுக்கு தூளு இல்ல"
'நீ ஏம்பா இவ்வளவு நேரம்?" 'இன்னைக்கு பொட்டி அடைப்பு. ஸ்டோர்ல தூளு கூடிப்போச்சி. அதுணுல நெறையா பொட்டி அடைக்க இருந்திச்சி. அதுஞலதான் நேரஞ் செண்டு Gi frig."
"ஸ்டோர்ல தூளு கூடிப்போச்சி. நம்மூட்ல தேத்தாவுக்கு தூளு இல்ல. நல்ல அப்பா..!"
குழந்தை கூறிக்கொண்டே தாயிடம் தாவுகிருன். 'இன்னைக்கி எம்பதுங்க" கூறிக்கொண்டே ரங்கம்மா சிரிக்கிருள். அவனும் சிரிக்கிறன். காரணம் புரியாமலே இருவரும் சிரிக் கின்றனர்.

Page 28
இரா. சிவசந்திரன்
புதுமை விளம்பரம்
இருள். ஒளிவட்டங்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஒடும் அவைகள். அதோ பின்னுல் துரத் தும் வட்டம். இதோ, இதோ முன்னதை முந்தப் போகின்ற வேகம் சீ! மூடியவில்லை. முன் சென்ற வர்கள் முன்சென்றவர்கள்தானு? அவர்களைத் துரத் திப் பிடிக்கமுடியாதா? அலை அலையாய்-நீளவடிவில் நேர்கோட்டு வடிவில் வட்டங்கள். சிறு நீர்த்துளிக ளைப்போன்ற தோற்றம் தரும் அவைகள்.
-கண்ணைத் திறந்து பார்க்கிறேன். மேலே மின் சார வெளிச்சத்தில் கண்கள் கூசுகின்றன. அந்த மின்விசிறிச் சுழற்சி தேகத்திற்கு இதமாக இருக் கின்றது. - "ஓ! மின்விசிறி செய்யும் சேவை. பொது வுடமையான காற்றை-பரந்து செல்லும் காற்றைச் சுயநல நோக்கத்தோடு குறுகிய வட்டத்தினுள் அடக்கும் சேவை" " "டேய் சுப்பிரமணியம்" -என்ற அதட்டல் ஒலி. அதைத் தொடர்ந்து ஆள் ஒடும் அரவம். தொடர்ந்து முதலாளியின் அதட்டலும், தொழிலாளியின் பதட்டம் நிறைந்த வார்த்தைகளும்-கதம்பம்-பிரச்சனைகள்.
‘எங்குமே பிரச்சனைகள்தான்-வாழவேண்டிய பிரச்சனைகள். தன்னை இழந்து, தன் மான மிழந்து. சீ! வாழ்க்கையே"

புதுமை விளம்பரம் 娄5
இதோ நான் தங்கியிருக்கும் இந்த ஹோட்டல் முதலாளியும் வாழ்கிருன்; அந்தத் தொழிலாளியும் வாழ்கிருன், நானும் வாழத் துடிக்கிறேன். எத்தனை மேடு பள்ளங்கள்.
மேட்டைத் தட்டிப் பள்ளத்தில் இட்டால்..? எத்தனை மேட்டைத் தட்டுவது, எத்தனை பள்ளத்தை நிரப்புவது.
*புவியின் சமநிலைத்தன்மை மாற்றமடையும் போது சமநிலைத்தன்மையைப் பேணுவதற்கு இயற்கை மேற்கொள்ளும் உள்நடவடிக்கை யின் பயணுக மேடு பள்ளமாகவும் பள்ளம் மேடாகவும்.
ஆறுகள் மேட்டைக் கரைத்து பள்ளத்தை நிரப்பி. சமகைப் புவியை ஆக்க முயல்கின் றன"-இயற்கைக்கு எத்தனை உயர்ந்த மனம்; -என்றே ஒரு நாள் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பகிடியாக நான் கூறிய வார்த்தைகள். ஆமாம்! இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்-இது அற்புதமான-உண்மைதான் நல்ல சிந்தனைதான்.
உலகத்தில் எல்லாமே பிரச்சனைதான். அன்று பல்கலைக் கழக வாழ்வின் பசுமையான நினைவுகள். "ஒ அது. தனி உலகம். இது வெளி உலகம்" பட்டதாரி என்று பட்டம்பெற்று இரண்டு வரு டங்களாக வேலைதேடி அலையும் எனக்கு, இது கொழும் பில் நடக்கும் பத்தாவது நேர்முகப் பரீட்சை. நாளைக் காலை ஒன்பது மணிக்கு சூட், கோட், ரையுடன் நான் ஆஜராகவேண்டும். ஆனுல். நான் எதிர்பார்க்கும் வேலையோ? கசற் பண்ண முன்னமே காலியான இடம்
நிரப்பப்பட்டிருக்கலாம். இருந்தும் ஒரு நப்பாசை, எனக்கா? உண்மையாக இல்லை; ஆனல் என் அம்மா!

Page 29
46 யுகம்
"அம்மா! நீ இடியப்பம் அவித்து வித்து என்னைப் படிப்பிக்கும்போது என்ன நினைத்திருப்பாய். கோவில் கோவிலாகச் சென்று வரும்போது உன்நம்பிக்கை-என் எதிர்காலம்பற்றி நீ கொண்டிருந்த இலட்சியம். சீ! எல்லாமே வீண்-எல்லாம்போலி. உண் மையாக நான் வாழத்தான் வேண்டுமா ? போலிக் கெளரவத்திற்காக. நான் தங்கி யிருப்பது ஹோட்டல்; நாளை ஒரு இரவு தங்கியிருந்ததிற்காக ரூபா ஐந்து தண்டம். இந்த ஐந்து ரூபா அம்மாவிடம் இருந்தால் இரண்டு நாட்களை எவ்வளவு சந்தோஷமாக ஒட்டிவிடுவா! ஐயோ! போலி வாழ்வே? இந்தப் பட்டம் படிப்புத் தந்த வாழ்வே! சீ! என்ன மனிதன் நான், என்ன உலகம் இது." -என் மனக்குளம் கலங்குகின்றது. நாற்றமடிக் கும் எண்ணக் குப்பைகள்.
படுக்கையை விட்டு எழுந்து கால்களை எறிந்து நடக்கிறேன். என் அறையைவிட்டு வெளியே வரு கின்றேன். நிம்மதிதேடி என் மனம் அலைகின்றது. ஹோட்டலின் நிலாமுற்றத்தில் நான் நிற்கின் றேன். முன்னே இருக்கும் அரைச்சுவரில் கைகளை ஊன்றுகின்றேன். நேரே பார்வையை எறிகின்றேன். . "கோட்டைப் புகையிரத நிலையம்" என்ற தமிழ் பெயர் கண்களில் தைக்கிறது. அடுத்து ஆங்கிலமும், அதை அடுத்துச் சிங்களமும்.மேலே மணிக்கூட்டில் 11-20 என்று நேரத்தை மனம் குறித்துக் கொள்கின் Digil.
நல்ல ஒளி வெள்ளம்-இரவைப் பகலாக்கும் முயற் சியில் இச் சுற்றுவட்டாரத்தில் செயற்கைக்கு வெற்றி தான் போலும்!

புதுமை விளம்பரம் 47
பச்சை, சிவப்பு, மஞ்சள். நிற பேதங்கள். ஒன்றை ஒன்று துரத்திச் செல்லும் ஒளிப் புள்ளிகள். அவை இருள் தந்து. ஒளி தந்து. மாறி. மாறி-கண் ணடிப்புக் கவர்ச்சியாகி என் கவனத்தை ஈர்க்கின்றது. .அரை நிர்வாணகோலத்தில் அழகிய மங்கை யர் பலர். தாமரைப் பூ மலர்ந்து நிற்பது போன்ற தோற்றத்தில் அவர்கள். சிறிது வலது பக்கத்தில் பெரிய கவர்ச்சிப் படம். அவள்தான் கதாநாயகியோ? அவளின் அழகில். ஒ அழகு பலவிதம். தெய்வீக அழகு ஒன்று. அதற்கு நேர் எதிரான அழகு இன் னென்று. இரண்டாவதுதான் அவள் முகத்தில். அந்தக் கண்களில் தெரிவது..? ஓ! உணர்ச்சித் துடிப்பு. அவளின் மறைக்கப்பட வேண்டிய பாகத் தின்மேல் ஆங்கில எழுத்துக்கள் உடுக்கப்பட்டிருக்கின் றன. அவைகளைவிட்டுப் பார்த்தால் அது முழு நிர் வாணப்படமே. அது-ஓர் ஆங்கில-மேல்நாட்டு நாகரி கமே! திமிர், ஆமாம், திமிரேதான்"
அந்த விளம்பரத்தின் இடதுபக்க மேல்மூலையில் "மொடேன் ஆர்ட்" என்ற பெயரால் புரியாமல் ஏதோ வரைந்திருக்கின்றர்கள். ஒரு கோணத்தில் அது.அது வாகத் தோற்றமளிக்கின்றது.
-என் உள்ளத்தே புழு நெளியும் உணர்வு. அருவருப்பு. இந்த இடத்தில் இதை வைக்க அனுமதித் தவர் யார்? ஐயோ எமது கலாச்சாரமே! கண்களைப் பிடுங்கி எடுத்துப் பார்வையைப் புகையிரத நிலையத் திற்குத் திருப்புகின்றேன்.
அதோ. புகையிரத நிலையத்தின் முன்னல் பரந் துள்ள அப் பிரதேசத்தில்.
எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன. அதோ இடது பக்கத்தில் சமையல் நடைபெறுகின்றது.

Page 30
48 யுகம்
கையில் ஒன்றும் சுற்றி மூன்றுமாக. இலங்கையின் எதிர்காலப் பிரசைகள் இருக்கின்ருர்கள். அடுப்பில் கொதிக்கும் உணவைத் தட்டி உண்ணவேண்டும் என்ற மன ஓட்டத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. மூவரிலும் ஒரு வருஷ வித்தியாச வளர்ச்சி-சரிந்த ஒரு கிருவ் கீறலாம். அந்தப் பெண். அரை நிர் வாண கோலம்தான். கிழிந்த சட்டை. பரட்டைத் தலை. தார்ருேட்டு நிறமான சேலை. "சீ மனித வாழ்வே!" அதோ. அந்தப் பஸ் ஹோல்டிங் பிளேசுக்கு அருகே. மூன்று பெண்கள்-இளம் பெண்களேதான். அவர்களுக்குள் என்ன சண்டை. படுக்கை இடவசதி பற்றிய பிரச்சனையோ?
யாரோ ஒருவன் சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, பீடியைப் புகைத்தபடி அவர்களுக்கு அருகே வருகின்றன். ஏதோ பேசுகின்றன். ஒருவ ரோடு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அவனுேடு கதைக்கின்ருர்கள். ஒருவள் கதைக்க. அவளை இழுத்துப் பின்தள்ளிவிட்டு மற்றவள் முன்வந்து. பிரச்சனை.
அவன் பின்னல் நின்றவளின் கையைப் பிடித்து அப்பால் கூட்டிச் செல்கின்ருன். அவன் எங்கே" போகின்றன்? ஒ! அதோ ஒரு கார் நிற்கின்றது. அவள் அதில் ஏறிக்கொள்கிருள். கார் புறப்படுகின்
Oğiöl . . .
"ஓ! அவர்கள் பகலில் பெரும் புள்ளிகள்"
சீ. மனித வாழ்வே! கண்களை இறுக்கி மூடுகின்றேன். இதைத் தவிர நான் எதைச் செய்யமுடியும்? இரக்கமுள்ளவர்கள் கண்ணைமூடி மூடித்தான் இந்த நிலை.

புதுமை விளம்பரம் 委9
மேலோட்டமாக என் பார்வை அச் சுற்று வட் டாரத்தைச் சுற்றுகின்றது. சுருண்டு சுருண்டு படுத் திருக்கும் நாயாகி மனிதக் கூட்டம். ஆகாயமே கூரையாய்.,ருேட்டே பஞ்சணையாய். "சீ மனித வாழ்வே!" அந்த சினிமாப்பட விளம்பரத்தை மீண்டும் பார்க்கிறேன். மனத் தராசு துடிக்கின்றது. அங்கே பெண்களின் நிர்வாணகோலம். இங்கேயும் அதே கோலம். அது கலை. இது..?
அது கனத்தால் ஏற்பட்ட திமிர். இது இல்லாமையால் ஏற்பட்ட. ஓ அது ஆங்கில சினிமாப்பட விளம்பரம். இதுஎமது நாடு என்னும் படத்தின் நடமாடும் விளம் பரங்கள்.
-இரவு அதிகமாகச் சாப்பிட்டதால் ஏவறை ஏவறையாக வருகின்றது-புளிச்சல் ஏவறை.
"இவ்வளவு நாளும் நான் கீழிருந்து மேலே பார்த்தேனே தவிர மேலிருந்து கீழே பார்க்க வில்லை. இனிப் பார்க்கவேண்டும்."

Page 31
இமையவன்
கெளரவப் பிரசை
நொரிஸ் நெடுஞ்சாலை. அதன் இரு புறமும் இருளை விழுங்கி ஏப்பமிடும் மின்சார பல்ப்புகள் தொங்கும் கம்பங்கள்.
ஒரு புறம் கோட்டைப் புகையிரத நிலையம். மறு புறம் நகரின் செல்வச் செழிப்பைப் பிரதிபலிக்கும் கடைகள்.
இதுவே இந்நகரத்தின் தனி அழகு. கிராமப்புறத்தைப்போல பச்சைப் பசேலென்று அடர்ந்து தீயகாற்றைத் தூயதாக்கி கண்ணுக்கு வனப் பளிக்கும் இயற்கையழகு இங்கு எங்ங்ணும் மருந்துக் குக் கூடக் காணமுடியாது.
தூய காற்றை நன்ற க இழுத்துத் தீயதாகவிடும் மனிதனைப்போல சாலையெங்கணும் விரைந்து பறந்து கொண்டிருக்கும் யந்திர வாகனங்கள்-பறக்காமல் நின்று கரியாகப் பெருமூச்சு விடும் தொழிற்சாலைகள். +л. அந்தக் ஹோட்டலின் மேல்மாடி யன்னலூடாக இந்தக் காட்சிகள் தெளிவாகவே தெரிகின்றன. அந்த அறையில் தங்கி இருந்த அவன் அவற்றைப் பார்த்த வாறே தனது பொக்கெற்றிலிருந்த நெவிக்கட் சிகறற் பைக் கற்றிலிருந்து ஒன்றை எடுத்து நெருப்பைத் தீட் டிப் புகையை விடுகிருன் இயந்திரத்தைப் போல.
இன்று தீபாவளி; நண்பர் ஒருவர் வரவேண்டும்: பண்டிகை நன்ருகக் கழியவேண்டாமோ?இன்றைக்கேஎடுத்துவைத்த பட்டு வேட்டியும்-சந்தனக் கலர் சில்கில் தைத்த நஷனலும்

கெளரவப் பிரசை 51
அணிந்து இந்த இரவு தியேட்டரில் இல்லாவிட்டிால் என்ன பண்டிகை? ソ
நண்பருடன் புறப்பட அவ்வளவு நேரம் எடுக்க வில்லை. பளபளவென மினுங்கும் பட்டியோடு கூடிய அந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு பவுடர் போடுவதுதான் தாமதம்.
'ஐயா, நாலு நாளா சாப்பிடல்ல, பசிக்குது. ஏதாவது போடுங்கையா உங்களுக்குக் கோடி புண்ணி யம் கிடைக்கும். ஐயா!"
ஒரு பிச்சைக்காரன் அவர்களைத் தொடர்கிருன். திரும்பிப் பார்க்கவே பயம். ஒன்றல்ல; இரண்டல்ல; நகரின் இருபுறத்திலும் கடைகளின் விருந்தைகளில் பிச்சைக்காரக் கும்பல் தூங்கியும் தூங்காமலும் வழிந்து கொண்டிருந்தது.
"போ! போ அங்கால. பிச்சையாம் பிச்சை. * என்றவன் 'இவங்களாலதான் இந்த நாட்டின்ர மாணமே போகுது. இங்க இவங்க பிச்சையெடுப் பாங்க, இன்னும் கொஞ்ச நேரத்தால தியேட்டரில இருப்பாங்க. இவங்கள விட்டு வைக்கக்கூடாது" என்று நினைத்துக்கொண்டு நகர்கிருன்; இந்நாட்டின் மானத்தை விரும்பும் கெளரவப் பிரசையான அவன், ஏழைகளின் உடல் உணவு ஒன்றிற்காகவே இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்ற உணர் வோடு.
"ஐயா தீவாளி ஐயா - ஒரு வேளை கூட சாப் பிடல்லே, பசிக்குதையா, ஏதாவது போடுங்கையா. ஐயா. ஐயா..."
வண்ணுன் சலவையும், சோப்பையும் நீரையும் காணுத உடைகள், பிய்ந்தும் பிய்யாமலும் நைந்து தனக்குரிய வெள்ளை நிறத்தை மறந்து மண்ணிறத்

Page 32
52 Udtb
தில், அவன் அரையைச் சுற்றி தீபாவளி உடையாகத் தொங்கிக்கொண்டிருக்க அவர்களைத் தொடர்கிருன். "போ, போ, இங்க எங்கவாற, அங்காலபோ!' அவனை விரட்டிவிட்டு பஸ்ஸில் ஏறுகிருர்கள்.
来 特征 球 இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் இரண் டாம் ஆட்டம் படத்திற்கான ரிக்கெற்றைப் பெறு வதற்காக "கியூ” அடைந்து நின்றது. தீபாவளி யின் சிறப்புத் தெரிவது உண்மையில் தியேட்டரிலும், மதுக்கடைகளிலும்தான் என்பதை எதிரும் புதிருமாக அமைந்திருக்கும் அவையிரண்டும் ருசுப்படுத்திக் கொண்டிருந்தன.
“பல்க்கனி" ரிக்கெற்றும் கிடைக்குமோ என்பது கூடச் சந்தேகமாக இருந்தது. அதற்குக் கூட ஒரு "கியூ நின்று கொண்டிருந்தது. தீபாவளி நாளின் பூரணப் பொலிவை அப்படியே அங்கே பார்க்க முடிந் தது. எப்படியோ பாடுபட்டு 'பல்கனி ரிக்கெற்றை" எடுத்துவிட்டார்கள். மூன்று ரூபா அறுபதுசதத்தை அழுது கொண்டு. பல்கனி குஜன் நாற்காலி நன்ற கச் சாய்ந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.
படம் தொடங்கிவிட்டது. ஒரு சமூகப் படம். உண்ண உணவின்றி அலையும் கையற்ற அபலை ஒருவ ளின் கதா சம்பவம். அவர்கள் மனத்தையும் கூட உருக்கியது. அந்தப் படத்துக் கதாநாயகிக்காக ஒரு சொட்டுக் கண்ணிர்கூடவிட்டனர். காசு ஒரு சதமும் செலவில்லாத இரக்கம். ஏழைகளுக்கு இரங்கு வதிலென்னவோ அவர்களுக்குத் தாராள மனசுதான்! படத்தில் வரும் ஏழைக் கதாநாயகி எப்படியெப் படியோ கஷ்டப்பட்டு-இறுதியில் ஒரு பணக்கார

கெளரவப் பிரசை s3
ஞல் ஆதரிக்கப்பட்டு நல்வாழ்க்கை வாழ்கிருள். படம்தானே. நிசமாக இப்படி நிகழ்வது சாத்திய மில்லாவிட்டாலும் கற்பனையாகச் சொல்லாவிட் டால் பிறகென்ன கலை?
'இன்ரேவல்' நேரத்தில் தியேட்டர் பாரில் போட்ட மேல்நாட்டுக் குடிவகை மயக்கம் இன்னும் தீரவில்லை. தள்ளாடும் உடலோடு, மனமாக எழுந் தார்கள்.
பஸ் கிடைத்தது. ஹோட்டலின் பக்கத்திலுள்ள பஸ் கோல்டில் இறங்கிஞர்கள். முன்னேபோல சிறிது தூரம் நடக்க வேண்டும்.
'ஐயா, பசிக்குது, நாலு நாளாச் சாப்பிடல்ல. புண்ணியம் கிடைக்குமையா, ஏதாவதுபோடுங்கையா" அதன்தான். அவனேதான். புறப்படும்போது பூனை மாதிரிக் குறுக்கிட்டானே அவனேதான்.
* போடா, போ - இரவிரவாப் , பிச்சை. போ அங்கால-பேய் பிசாசுமாதிரி திரியுங்க.." என்று கூறி அவனை விரட்டிவிட்டுப் படிகளால் ஏறிப் படுக்கை யில் புரள்கிருர்கள்.
விடிவதற்கு இன்னும் மூன்று மணித்தியாலங்கள் இருக்கலாம். ஹோட்டலின் முன்னே யாரோ எத னையோ உருட்டிக் கேட்கும் சப்தம் கேட்கிறது. நித்திரையே வராது புரண்டு கொண்டிருந்த அவன் ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப் பார்க்கிருன்.
அவனேதான். முன்னும் பின்னுமாகப் பேயும் பிசாசுமாகத் தொடர்ந்த அதே பிச்சைக்காரன். சாப்பிட்ட எச்சில் இலைகளைப்போடும் குப்பைத் தொட்டியைப் புரட்டிக் கவிழ்க்கிருன்.
ஏனுே?.

Page 33
5毫 யுகம்
வாழை இலைகள் புரள்கின்றன. அதனேடு ஒட் டிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளை ஒவ்வொன்ரு கப் பொறுக்கி உண்ணப் பார்க்கிருன், பாணின் உட் புறம் உண்டபின் கத்தியால் சீவப்பெற்று கழிக் கப் பட்ட கருக்கை; பணக்காரன் கழித்த எச்சம்; அதை ஆவலோடு உண்டு கொண்டிருக்கிறன்.
என்ன பசியோ? அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற அந்தக் கல் நெஞ்சன் கண்களிலும் நீர்தேங்கியது.
ஒரு கணம்-கீழே இறங்கி உதவிசெய்வோமா என்றுகூட அவனுக்குத் தோன்றியது. ஆனல் மறு கணமே வரட்டுக் கெளரவம் மனத்தை மூடியிட்டுக் கொண்டது.
இடையிடையே அவன் இருமும் சப்தமும் கேட் டது. இத்தனை பேருடைய எச்சிலையும் உண்ணும் இவனுக்கு இருமலென்ன? சாதாரண நோய்தானே. நைந்து-பிய்ந்து பிசாணகி ஊத்தைவேறு உடம்பு வேறற்ற நிலையில் இருக்கும் இவனுக்கு உதவுவதா? இவன் கெளரவமென்ன தகுதியென்ன? W
"அவன் விதி" அதற்கு என்ன செய்யமுடியும்? பேசாமலே போய்ப் படுத்துக்கொண்டான். நிம் மதியாக உறங்கிவிட்டான்.
விடிந்தது. ஹோட்டலின் முன்னே ஏதோ கலகலப்பு. தூக்கக் கலக்கத்தினின்று விழித்த அவன் யன்னலைத் திறந்து என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்க்கிருன்.
லொறி முனிசிப்பால் லொறி - செத்த பிணத் தைக் குப்பையையொத்து ஏத்திச் சென்று கிடங்கு வெட்டித் தாக்கும்.
செத்தது யார்.?

கெளரவப் பிரசை 55
அவன்தான்; அவனேதான். அதே ஏழைப் பிச் சைககாரன.
ஹோட்டலின் முன் "ஷோ கேசில்" அடுக்கி வைக் கப்பட்ட பலகாரங்கள் அப்படியே இருந்தன. இடியப்பம், தோசை, இட்லி, வடை இன்னுேரன்ன பலவகை கம, கம" என மணம் கமழ்ந்து கொண்டே யிருந்தன. அவற்றின் முன்பாக
அழகாக பெட்டிகளிலே அடுக்கி வைக்கப்பட்ட அப்பிள் பழங்களும் வரிசையாக மேலே கட்டவிடப் பெற்றுத் தொங்கிக்கொண்டிருக்கும் முந்திரிகைப்பழங் களும் அந்தக் ஹோட்டலை அலங்காரம் செய்து கொண்டிருந்தன. 女

Page 34
பி. வஜிரஞான
எசலப் பெரஹரா மர்மம்
எசலப் பெரஹரா என்பது கண்டியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு மிகப் பெரிய ஊர்வலம். இது மிகப் புராதன காலத்தில் ஆரம்பமான வழக் கம். ஆகவே இதற்கு அதிக வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அத்தோடு அதன் கலைத் தன்மைக்காகவும் அது போற்றப்படும். இரவில் பலநாட்களாகக் கண்டி யின் வீதிகளில் பெரஹரா வலம் வரும். கடைசி நாள் ஊர்வலம் மற்ற எல்லா நாட்களையும் விட சிறப்பாய் இருக்கும். தினந்தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் இதைப் பார்க்க வருவார்கள்.
இந்த வருஷம் கடைசி நாட் பெரஹராவைப் பற்றி ஒரு பெரிய கருக்து வேறுபாடு உண்டு. அன் றைக்கொரு நூதனமான விஷயம் நடந்தது. பலரால் இதை நம்பவே முடிவதில்லை. பலபேர், ஒவ்வொரு வரும் இதைப் பற்றி ஒவ்வொரு விதமாய்ப் பேசிக் கொள்கிருர்கள். ஆனல் ஒருவரும் இதை உண்மை யாக நம்புவதாகச் சொல்லமுடியாது.
கடைசிநாள் நடந்தது இதுதான்: அன்றைக்கு பெரஹரா நடந்த போதிலும் ஒருவரும் அதைப் பார்க்க வரவில்லை. கடைசி நாளுக்கு முதல்நாளே எல்லாரும் பெரஹராவின் கடைசி நாள் என்று நினைத்துவிட்டார்கள். எனவே உண்மையான கடைசி நாளன்று ஒருவரும் பெரஹரா பார்க்க வரவில்லை. வழக்கமாய் இது நடைபெறும் பொழுது சாமமாய் விடும். அயல் சனங்களும் அந்நேரம் நல்ல நித்திரை யில் ஆழ்ந்திருந்தபடியால் பெரஹராவுக்கு வரவில்லை.

GTMF Gavu பெரஹரா offLob 57
பெரஹரா போகும் வீதிகளில் உள்ள சனங்களுக்குச் சத்தம் கேட்டதுதான். அவர்கள் நினைத்தார்கள் தாங்கள் கனவு காண்பதாக. கிரமமாக இத்தனை நாட்களும் பெரஹரா பார்த்ததினல் அந்த நிகழ்ச் சிகள் மனதில் பதிந்து போவதும் இப்படிக் கனவுகள் வருவதும் சாத்தியமே. ஆகவே அவர்கள் அந்தச் சத்தத்தைப் பொருட்படுத்தவில்லை. அது என்ன வென்று பார்க்க ஒருவரும் வெளியில் வரவில்லை. ஊர்வலத்தில் பறையடிப்பவர்களும் நாட்டியமாடுப வர்களும் அன்று பின்னேரம் பெரஹராவுக்குப் போவ தாகத் தங்கள் வீடுகளில் சொன்னபோது அவர்க ளின் உறவினர்கள் அதைப் பகிடி என்று எண்ணினர். அதற்கு முதல்நாளே பெரஹராவின் கடைசி நாளைப் பார்த்துவிட்டதாக அவர்கள் நம்பினபடியால் இவர் களின் பேச்சை அவர்கள் லட்சியம் செய்யவில்லை.
எனவே பெரஹரா பார்க்க யாரும் வரவில்லை.
ஆனல் பெரஹரா இருந்தது. வீதிகளினூடா
கச் சென்று வழக்கம் போல அது முடிவடைந்தது.
பொது சனங்கள் எல்லாம் சொல்கிருர்கள் அன் றைக்குப் பெரஹரா நடைபெறவில்லையென்று, ஆளுல் இந்தக் கருத்துக்கு எதிராகப் பலமான சாட்சியங்கள் உண்டு. பறையடிப்பவர்களும் நாட்டியக்காரர்களும் தாங்கள் ஊர்வலத்தில் பங்குபற்றியதாகச் சத்தியம் செய்கிருர்கள். பெரஹராவுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் காலையில் தெருவில் இருக்கும் யானையின் சாணத்தை அகற்றுவது உண்டு. (நூறு யானைகளுக்கு மேல் ஊர்வலத்தில் வரும்) இந்த இரவுக்கு அடுத்த நாள் காலையிலும் அனேகர் தெருவில் யானைச் சாணத் தைக் கண்டனர். பலருக்கு இது பெரிய அதிர்ச்சியைத் தந்தது. ஏனென்றல் முதல்நாள் இரவு பெரஹரா
s

Page 35
5s யுகம்
நடந்தது என்பதற்குரிய ஆதாரங்களில் யானைச் சர்ணமே மிக முக்கியமானது. மனிதர்களுடைய நினை வில் பிழைகள் ஏற்படலாம். யானைச் சாணத்தைப் பற்றி அப்படிச் சொல்லமுடியாது. இவ்வளவு சாணக் குவியல்களை யாரும் வேண்டுமென்று செய்திருக்கமுடி யாது. மேலும் யாரும் ஏன் அப்படிச் செய்கிருர்கள்? எனவே அன்றைக்குப் பெரஹரா உண்மையாக p560). பெற்றதென்று சிலர் நம்புகிருர்கள்.
சிலர் கேட்டார்கள்: "அது எப்படி இந்தப் பெரஹராவைப் பற்றி ஒருவருக்கும் தெரியாமல் போய்விட்டது?" உண்மையில் இப்படி எல்லாரும் அறியாமல் போனதற்குக் காரணம் மக்களிடையே ப்ரவிய ஒரு வதந்திதான், பெரஹரா நடந்ததென நம்புபவர்கள் சொல்கிருர்கள், இந்தத் தீவின் வர லாற்றிலேயே இதுதான் மிகவும் வெற்றிகரமான வதந்தி என்று. V
அதுபோல அழகான பெரஹரா முன்பு ஒரு போதும் நடந்ததில்லை என்கிறர். ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் எல்லாம் தாங்கள் தங்கள் பங்கு க%ள மிகச் சிறப்பாகச் செய்ததாகச் சொல்கிருர்கள். பார்க்க யாரும் இல்லை என்பது அவர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பெரஹராவில் சேவை செய்வதற்காகத்தானே பழைய அரசர்களால் கொடுக் கப்பட்ட நிலங்களை அவர்கள் பாரம்பரியமாகப் பெற்றிருக்கிருர்கள்? பார்க்க ஆட்கள் இருந்தா லென்ன இல்லாவிட்டால் என்ன, அவர்கள் தங்கள் வேலையைச் செய்யத்தானே வேணும்? “ அவர்கள் சொல்கிருர்கள் தங்கள் வேலையை அன்றைக்கு இன் னும் திறமாகச் செய்ய முடிந்தது என்று. உதாரண மாக ஆட்கள் இல்லாதபடியால் ஆடுதற்கு எல்லாம்

எசலப் பெரஹரா மர்மம் 59
அவர்களுக்குப் போதிய இடமிருந்தது. மேலும் தங்களது கவனம் முழுதையும் ஆட்டத்திலேயே செலுத்த முடிந்ததாம். எனவே அன்றைக்குப் பெரஹரா அசாதாரண அழகுடன் விளங்கியதாக அவர்கள் சொல்கிருர்கள்.
அழகைப் பற்றிப் பேசுப்போது, சிலர் சொல்கி ருர்கள், பார்க்க யாரும் இல்லாத படியால் பெரஹரா அழகாய் இருந்ததென்ருே அல்லவென்ருே சொல்லமுடியாது. இதற்கு எதிராக அழகியல் அறி ஞர்கள் பலர் ஒரு பொருள் யாரும் பார்க்காத போதும் அழகாய் இருக்கலாம் என்கிருர்கள். இன் னுென்று, நாட்டியகாரர்கள் தாங்கள் நல்லாய் ஆடு வதை ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிருர்கள். -
அன்றைக்கு பெரஹரா பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் போனது சனங்களுக்கு உண்மையிலேயே பெரிய இழப்பு என்று சிலர் வருந்துகிருர்கள். பார்வை யாளரை இழந்தது பெரஹராவாகையால் இழப்பு பெரஹராவுக்கே என்று மற்றவர்கள் சொல்கிருாகள் இரண்டு பகுதிக்கும்தான் நஷ்டம் என்று வேறு சிலர் சொல்கிருர்கள். ஆனல், அதுவும் இந்த விஷயத் தில், இரண்டு பகுதிக்கும் நஷ்டமேற்படமுடியாது. தர்க்க ரீதியாக அது சாத்தியமில்லை. இரண்டு கட்சிகள் மட்டும் இருக்கும்போது ஒரு கட்சிதான் இழக்கலாம். இப்பவும் பெரஹரா அன்றைக்கு உண்மையாக நடந்ததோ இல்லையோ என்பதைப்பற்றித்தான் பிணக்கு நடைபெறுகிறது. இதைத் தீர்க்க ஒரு வழியும் இல்லை மனிதர்களது நினைவுகள் பிழைக்க லாம் என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயம். பெரஹராவுக்கு அடுத்த நாள் மத்தியானம் வரைக் கும் யானைச்சாணம் ஒரு பெரிய ஆதாரமாகத்தான்

Page 36
60 புக்ம்'
விளங்கியது. மத்தியானம் வரைக்கும் சாண்ம் அப் படியேயிருந்தது. ஏனெனில் நகர்சுத்தித் தொழிலா ளர்களும் அதை அகற்றவரவில்லை. அவர்களும் இந்தப் பெரஹரா நடக்கவில்லை என்றுதான் நினைத் தார்கள். மத்தியானத்துக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்த வாதநோயாளிகள் பலர் சாணம் எல்லாவற் றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். (வாதத்துக்கு யானைச் சாணம் நல்ல மருந்தென சிங்கள மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு) ஒரே ஒரு பலமான ஆதாரமாயிருந்த யானைச் சாணமும் இப்படிப் போயிற்று.
இருக்கிற ஆதாரத்தை ஆராய்வதற்காக இந்த வாதநோயாளர் பலரை நான் அணுகிப் பார்த்தேன். அவர்களில் சிலரும், மனிதர்களின் நினைவுகளை, அது வும் தங்களுடைய நினைவுகளை, நம்பமுடியாதென்று சொன்ஞர்கள் . மற்றவர்கள், தாங்கள் அந்த நாட் களில் நோயால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டி ருந்ததாகவும், அந்தத் தொந்தரவினல் எப்போது தாம் சாணம் எடுத்து வந்தோம் என்பதை மறந்து போய்விட்டதாகவும் சொல்கிருர்கள்.
தமிழாக்கம்: செ. வே. கா.

செ.வே. காசிநாதன்
மாலை
நாட்கள் ஒன்றன்பின் ஒன்ருகச் செல்கின்றன. காலை, காலைக்குப் பின் மாலை. மாலைக்குப் பின் காலை, கழித்த நாட்கள் திரும்பிவரா. தவிர்க்கவோ மாற் றவோ முடியாத இந்த உண்மை எனக்கு மட்டும் உரிய தல்ல. நாட்களை, காலைகளை, மாலைகளைக்கண்ட எல் லோருக்கும், அதாவது எல்லோருக்கும்இது பொது. ஆனல் இந்த எண்ணம் கொணரும் தாபம் இந்த எண்ணத்தைக் கொணரும் தாபம் என்னிடத்தே எழுவது எனக்கு மட்டும் உரியது. எனது காலைகள் எனது மாலைகள் என்னுடையவை. உங்களுடைய காலைகள் உங்களுடையவை. அவர்களுடைய மாலைகள் அவர்களுடையன கலண்டர்களும் கடிகாரமும் காட் டும் காலைகளும் மாலைகளும் யாருடையவையும் அல்ல. அவை யாவர்க்கும் பொது. அவை வெறும் சொற்கள்.
என்னுடைய காலைகளை மாலைகளாக்கிப் பார்க்கி றேன். மாலைகளை மாலைகளாக்கிப் பார்க்கிறேன். எப் போதோ போய்விட்ட பூக்ககளின் மணங்கள்போல அவை என்னைச் சுற்றி வருகின்றன. அவற்றை மீண்டும் பிடித்துத் தொட்டு அவற்றின் நடுவே மீண்டும் நிற்க முடியாது என்பதை நினைக்க நினைக்க எனக்கு ஆத் திரம் வருகிறது. இது சாத்தியமாகாத மனிதனுக்கு என்ன சுதந்திரம் வேண்டிக் கிடக்கிறது.
என்னுடைய காலைகள், என்னுடைய மாலைகள், என்னுடைய நாட்கள். ஏன் நான் அவற்றினுள் மீண்டும் போகக்கூடாது? எல்லாவற்றையும் பிய்த் துப் பிடுங்கிச் சிதற அடிக்கவேண்டும் போலிருக்கி {Dቇዞ•

Page 37
62 - områka
சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் மறைந்து விடும். சிறிது சிறிதாக ஒளி குறைந்துகொண்டு வருகிறது. வானம் எல்லாம் அடர்த்தியுறுகின்றது. காற்றுத் தடிக்கிறது. கண்களை மூடிக்கொள்கிறேன். மாலையின் ஒலிகளையெல்லாம் உள்வாங்கிவிடப் பிரயத் தனிக்கிறேன். நான் எல்லாம் காதாய்த் திறக்கிறேன் இன்னெரு மாலை இன்னெரு மலர்.
நான் யார்?
பூக்களாய், மணங்களாய்; சொற்களாய், சப்தங் களாய் நிறங்களாய், படங்களாய்; ஆண்களாய், பெண்களாய் காலைகளாய்; மாலைகளாய். வேதனை é56T Tui...
விளையாட்டுக்களாய், ஏமாற்றங்களாய்.
இவையெல்லாம் நான்களாய் நாட்கள் கழிந்தன.
அன்று நல்ல மழை பெய்தது. பின்னேரம் ஊர் வலம். காரிலே மாப்பிள்ளைக்கும் தோழனுக்கும் நடுவிலே நான். எல்லாம் பச்சையும் மஞ்சளுமாக அன்றைய மாலை போயிற்று குஞ்சி ஐயா பட்டு வேட்டி உடுத்து வாய்நிறைய வெற்றிலையோடு வந்து கொண்டிருந்தார். அன்றைக்கு மாமிக்குக் கலியா ணம். மாமி நல்ல சிவப்பி. நல்ல வடிவு. GF) கட்டினல் மனுசி. இல்லாட்டிப் பெட்டை. மாமிக்கு அப்ப அத்தனை வயதிருக்காது. நான் மனுசி என்று தான் நினைத்தேன். கிணற்றடியிலே மாமிக்குக் குளிப்பாட்டினர்கள். பாலோடு கலந்து கலங்கலாய் மாமியின் மேல் ஓடிய தண்ணிர் எனக்கு ஞாபகம் இருக்கிறது. -
அப்ப எங்க வீட்டிலே கிணறு இல்லை, எங்க வீட்டுக்கும் அக்கா வீட்டுக்கும் லெட்சுமியக்காவீட்டுக்

யும்ே 68 -رጃ ̆
கும் பொதுவாய்த்தான் கிணறு இருந்தது. இருந் தாலும் எங்கள்விட்டு மனுசிகள் எல்லாரும் ஆட்சி வீட்டிலதான் குளிப்பினம். அதுகூட மறைவு. ஆளுல் இன்றைக்கு மாமிக்கு இந்தக் கிணற்றில்தான் குளிப்பு மாப்பிள்ளை ஆச்சி வீட்டில என்கிறபடியால் எங்கடை வீட்டிலே கிணறு கட்டினது எனக்குத் தெரியும். கிண்டிறதுக்கு முதல்த் தெரியாது. வீட்டில சின்னப் பெடியங்களுக்குத் தெரியாமல்க் கன தீர்மானங்கள் ஏற்பட்டுப்போகும். காரியம் நடக்கேக்கைதான் எங்களுக்குத் தெரியும். மாமாவின்ர கலியாணம்கூட இப்படித்தான்.
அதைப்பற்றிப் பிறகு. நான் பள்ளிக்கூடத்தாலை வர பெரிய கிடங்கு அடுப்படிக்குப் பின்னுலே கிண்டியிருந்தினம். நல்ல வடிவாக வட்டமாக அந்தீசாகக் கிடங்கு கிண்டியிருந் தது. அது முதல் நாள்க் கிடங்கு.
அதுக்குப் பிறகு கிணறு நாள்தோறும் அடைந்த வளர்ச்சி எனக்கு ஞாபகமில்லை"
வெடிவைத்துவிட்டு அவர்கள் ஓடியதும், அந்த மனிதன்களிலே ஒருவர் தலைக்குப்போட்டிருந்த தாழந் தொப்பியும், அண்ணன் கிணற்றில் விழுந்து நெற் றியை உடைத்துக் கொண்டதும் - அண்ணன் ஒன்றுக்கும் அழமாட்டார். உம்மென்றிருப்பார் அந்த வேலையாட்கள் பொங்கியதும், கிணற்றுக் குள் இருந்து சாம்பிராணிப் புகை வந்ததும் நினை விருக்கின்றன. கிணறு இறைக்கிற நாட்களிலும் இறைத்து முடிந்ததும் சாம்பிராணிப் புகை போடு வினம். ஒன்று இரண்டு மூன்று என்று பல சாம்பி ராணிப் புகை நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

Page 38
6A Lorrah.
சுங்கன் மீன்களைப் பத்திரமாகத் தொட்டிக்குள் பிடித்துவிட்டு தண்ணி ஊறியதும் திருப்பிவிட்ட நாள்
பூனை விழுந்த பிறகு இறைத்த நாள். பாசிபிடித்த ஐம்பது சதக்குத்தியை எனக்கு அண் ணன் எடுத்துத் தந்த நாள்.
பூரணி விழுந்து இறைத்த நாள். அப்பாவை நான் கண்டது அண்டைக் குத்தான் முதல்நாள்-நாச்சிமார் கோவிலுக்கை குழை ஒடித் துக்கொண்டு அக்கம்மா வீட்டுக்குள்ளாலேயே வந்த வர்-கொக்கத்தடி திருப்பிக்கொடுக்க.
நல்ல உயரம், பொது நிறம். பெரிய மீசை. நன்கு வளர்ந்த தேகம். சாரத்தை மடித்துச் சண்டிக் கட்டாய்க் கட்டியிருந்தார். அப்பா இதுகளில் ஒரு போதும் அவ்வளவு கவனம் எடுக்கவில்லை. நாச்சிமார் கோவில்க் கிணற்றிலே அலங்கோலமாய் நின்று குளிக் கிருர் என்று ஊரில் உள்ள பெண்கள் அறுதலியன் என்று பேசியது நினைவிருக்கிறது. அப்பாவுக்கு அப்ப எழுபதுவயசிருக்கும். எனக்கு ஆறு வயது.
அப்பாவின் முகத்தைப் பார்த்தபோது எனக்கு என்ன தோன்றிற்றென்றெல்லாம் எனக்கு ஞாபக மில்லை.அன்றைய முகம்கூட நினைவில்லை. அக்கம்மா வீட்டுஅடுப்படி வளைவிலே கூரை இடிக்காமல் குனிந்து நிற்கையில் தெரிந்த பரந்த மார்புதான் ஞாபகம் இருக்கிறது. கழுத்தைச் சுற்றிக் கொஞ்சம் வியர்த் திருந்தது. பச்சைக் கோடன் சாரம்.
அப்ப இவனை நாளைக்கு அனுப்பிவிடு என்ருர். அம்மா முந்தியே சொல்லி வைத்திருந்தாபோல.
டபிள் லைன் கொப்பி ஒன்றுதான் ஸ்திரமாயிருந் தது. 'த. வே. ரு. இங்கிலிஷ்" பிறிமரோடைதான்

யுகம் w 65
தொடங்கினது. இங்கிலிஷ் பள்ளிக்கூடத்தில நாலாம் வகுப்பில் சேரைக்க, நான் இங்கிலிஷ் எட்டாம் வகுப்பு என்று அப்பா சொன்னர். -
நான் போகிறேன்.
நான் போவேன்.
நான் போனேன்.
அவன் போஞன்.
அவன் போவான்.
அவன் போகிருன்.
படர்க்கை ஒருமை நிகழ்காலத்துக்கு எஸ் கூட்ட வேணும்.
நானும் அவனும் போனேம்.
இராமசாமி போனன்.
இராமசாமி ராத்திரிப் போனன்.
தமிழ்ப் பள்ளிக்கூடத்திலே நான்தான் இங்கிலிசில முதல். மனேன்மணி ரீச்சருக்கு என்ணில நல்ல பிடிப்பு. எனக்கு அவவிலகாதல். உலகம் மாத்திரம் ஒத்திருக்கு மென்ருல் நான் அப்பவே அவவைக் கூட்டிக் கொண்டு அவவிட்டிலே போய் விளையாடிக் கொண்டிருந்திருப் பேன், ஆனல் எங்கட வகுப்புப் பெடியன்கள்-அப்ப நாங்கள் மூன்ரும் வகுப்பு-அவவுக்கும் கறுத்த வாத்திய்ாருக்கும் தொடர்பு என்று அறிந்து கொண் டான்கள். அவையள் இரண்டு பேரும் கதைக்கிற வியளாம். மனேன்மணி ரீச்சற்ரை தம்பி சரஸ்வதி பூசையிலன்று வந்தவன். வாத்தியார் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவர். இதுதான் அவன்களு டைய ஆதாரம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொடர்பிருப்பதை அறிவதற்கு அதிக ஆதாரம் யாருக்கும் வேண்டியிருப்பதில்லை. சின்னப் பெடியன் களுக்கு மட்டுமல்ல. நான் என்னுடைய காதலை
9

Page 39
66 ιριτάου
யாருக்கும் சொல்லவில்லை. இரகசியங்கள் எந்த வயதிலே ஆரம்பிக்கின்றன ? பிறந்த நாள் முதலே தொடங்குகின்றன போலை. எத்தனை எத்தனை இரகசி யங்கள். எத்தனை எத்தனை பயங்கள். அம்மாவுக்குப் பயந்த இரகசியம். அய்யாவுக்குப் பயந்த ரகசியம். வாத்தியாருக்குப் பயந்த இரகசியம் எல்லாம் அவரோ டேயே கழிந்தன, ஊருக்கு உலகத்துக்கு.
நாள்ப் போகப் போக இரகசியங்கள் வெளிக் கிடும், இரகசியங்களைக் கேட்டுக் கேட்டு இரகசியங்க ளைச் சொல்லிச் சொல்லி நாங்களெல்லாம் தடித் துப் போளுேம். ஊருலகம் எல்லாம் தடிச்சுப் போச்சு. இரகசியம் சாஸ்திரமாய்ப் போனதற்குப் பிறகு வேறு வழிஇல்லை.
இரகசியம் என்ருல் என்ன ? எனக்குள்ளே நான் தோன்றும் போது ஒரு இரக சியம் ஏற்படுகிறது. வெளியே இருந்த நான் எனக் குள்ளே ஏற்பட்டபோது - அழுகையும் சிரிப்பும் அம்மாவும் ஐயாவும் எனக்குள்ளே சமைந்து கொண்ட போது நான் நானகிப் போனேன். என்னையும் எல்லாரையும் ஆட்டிவைக்கும் இந்த இரகசியம் பயந்துபோகும் போது மற்ற இரகசியம். எனக் குள்ளே புதியதோர் நான். நானும் நானும் உயிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெறும் போது ஒரு இரகசியம் வெளிப்படுகிறது.
ஏன் இரகசியங்களைச் சொல்ல வேண்டும் ? இந்த சத்திய பரிசோதனையினல் நாம் தூய்மை பெற்று விடுகிறேமா அல்லது தப்பிக் கொள்கிருேமா? இரகசியத்தைச் சொல்லுவதற்கும் யாசிப்பதற் கும் என்ன வித்தியாசம் ? முகத்தைச் சுளியாமல் என்னை அறிந்து கொள். என்னை வெளியே போக

யுகம் 67 محی
விடு, காற்றும் வெயிலும் பட்டு நான் பலம் பெற வேண்டும். என்னுடைய இரகசியத்தை நான் உனக்குச் சொல்லுவேன். உலகத்துக்குச் சொல்லுவேன். அதோ அந்த மலையின் உச்சியில் நின்று கத்தப்போகிறேன். காற்றும் வெயிலும் இரகசியத்தை அழிப்பதில்லை. நான் என்னை அடியோடு அழிக்கும் வரை என்னுடைய இரகசியங்கள் அழிவதில்லை. அழிகினற இரகசியங்கள் தோன்றுவதில்லை.
ஏன் இந்த இரகசியங்கள் தோன்றுகின்றன ? கொடியதோர் விதியால் இரகசியங்கள் தோன்று கின்றன. ஒவ்வொருவனுடைய இரகசியங்களும் அவனுடைய பழைய சொத்து. அவனுடைய ஆன்மா வின் சுதந்திரமும் சங்கிலியுமாய், சிலுவையாய், உயிரும்ஊனமுமாய் அவைவருகின்றன.
கறுத்தவாத்தியார் பாவம். அவருக்கு ஒரு தொகை பிள்ளையஸ். என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் ஒரு நாள், உங்க வீட்டிலே என்ன சாப்பிடற நீங்கள் என்று. இராவிலேயும் சோறு சாப்பிடுவியளோ என்றர். நான் சொன்னேன், காலையில் பழஞ்சோறும் தின்போம் என்று. எனக்குத் தெரியும் அந்த அநியாயம், பழஞ்சோறு முடியும் மட்டும் அம்மா தோசைதரா.
அப்ப சண்டைக்காலம். எங்களின்ரை வகுப்பிலை நான்தான் சரியான பணக்காறன் என்று எல்லாருக் கும் தெரியும்-அதுதான் வாத்தியாயர் என்னைக் கூப்பிட்டுக் கேட்டவர்.
அப்பாவிட்டைப் படித்த நாட்களில் வேறு என்ன நடந்ததென்று எனக்கு ஞாபகமில்லை. காலை மாலை எல்லாம் அவரோடேயே கழிந்தன.

Page 40
முக
சிறுகதைத்
{ւբ- பொன்
" சபா. ஜெயர " சரநாதன் * பி. மரியதாக * இரா, சிவச்ச * 'இனமயவன் * பி. வஜிரஞா
செ. வே. கா
+ቕኳቾiff&ፏITያLuf} 218 3 تھی۔

தொகுதி
ti ri i filli:
T母屿
iլ
சந்திரன்
ாசிநாதன்
ல்கலை வெளியீடு - 4)
೩|| ೪jipULT4old?