கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுயநிர்ணய உரிமையில் முஸ்லிம்கள் மலையக மக்கள்

Page 1


Page 2

சுயநிர்ணய உரிமையில் முஸ்லிம்கள்-மலையக மக்கள்
இமயவரம்பன்
சவுத் ஏசியன் புக்ஸ்
புதிய பூமி வெளியீட்டகம்

Page 3
Suyanirnaya Urimaiyil Muslimgal Malaiyaga Makkal Imayawaramban
First Published March 1994
Printed at Rasakili Printers, Madras-20
Published in association with
Puthiya Bhoomi Veliyeetagam
&
South Asian Books
611 Thayar Sahib II Lane Madras-600002
RS. 8-OO
சுயநிர்ணய உரிமையில் முஸ்லிம்கள்-மலையக மக்கள் இமயவரம்பன்
முதற் பதிப்பு : மார்ச் 1994 அச்சு : இராச கிளி பிரிண்டர்ஸ், சென்னை-20
வெளியீடு : புதியயூமி வெளியீட்டகத்துடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 611 தாயார் சாகிப் 2-வது சந்து சென்னை-600002
eib. 8-00
இலங்கையில் கிடைக்குமிடம் :
VASANTHAM (P) Ltd
S. 44, III Floor Central Super Market Complex Colombo-11

பதிப்புரை
இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக கூர்மையடைந்து வந்துள்ள தேசிய இனப்பிரச்சினையா னது இன்று எரிந்து கொண்டிருக்கும் ஒன்றாகி நிற்கின் றது. இப்பிரச்சினையின் மத்தியில் சுயநிர்ணய உரிமை, பிரிந்து செல்லுதல், தேசியவாதம் பற்றிய விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. மேற்படி விவாதத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தத்தமது நிலைக்கு வலுச் சேர்க்கும் நியாயங்களை முன்வைத்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மார்க்சி யத்தைத் தொட்டுக்காட்டி விவாதம் புரியத்தவறுவதில்லை. ஆனால் இத்தகையவர்களில் பலர் மார்க்சியக் கோட்பாடு களைத் தொட்டுக்காட்ட முயற்சிக்கிறார்களே தவிர மார்க்சிய உலக நோக்கிற்குத் தம்மை உட்படுத்தி அந்த நிலையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுதேட முற்படுவதாக தெரியவில்லை. இதனால் இவர்கள் மார்க் சியம் இன்றைய நிலையில் போதுமான தொன்றாக இல்லை என்று குறைகூறுவதற்கும் முற்படுகிறார்கள். அது மட்டுமின்றி சுயநிர்ணய உரிமை பற்றிய பிரச்சினை யில் சிங்கள தமிழ் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாட்டினை மட்டுமே அழுத்தம் கூறி ஏனைய சிறு பான்மையினரான முஸ்லிம்கள் மலையக மக்கள் ஆகி யோரின் சுயநிர்ணய உரிமைப்பற்றி எடுத்துக்கூறத் தயங்குகிறார்கள். இதனால் தேசிய இனப் பிரச்சினை யின் முழுமையைப் பார்க்கவும் அதன் இன்றைய யதார்த் தத்தை எதிர்கொள்ளவும் பின்னடிக்கிறார்கள்.

Page 4
4
இச்சூழலிலேயே "சுயநிர்ணய உரிமையில் முஸ்லிம்கள் மலையக மக்கள்' என்னும் இந்நூல் வெளியிடப் படுகிறது. மார்க்சிய அடிப்படையில் சமகால நோக் கில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மேலும் விவாதங்களைக் கிளப்பக் கூடும். இவ்வாறு நிகழுமாயின் நன்மையுடையதே. ஏனெனில் பரந்த அளவிலான கருத்து மோதல்களால் மேன்மேலும் சரியான கருத்துக்கள் செழுமை பெறுவதற்கு வாய்ப்புக் அதிகரிக்கவே செய்யும்.
மேலும் தேசிய இனப் பிரச்சினையில் முஸ்லிம்களின் தும், மலையக மக்களினதும் தனித்துவமான அம்சங்கள் எவ்வகையிலும் புறக்கணிக்கப்பட முடியாதவை என்ப தனை வலியுறுத்தும் நோக்கிலேயே இக்கட்டுரைகள் நூல் உருவம் பெறுகின்றன. இதனை இமயவரம்பன் எழுதியுள் ளார். தேசிய இனப்பிரச்சினை பற்றி ஏற்கனவே இமய வரம்பன் பல கட்டுரைகளை விரிவாக எழுதியுள்ளார். அவை நூலுருவிலும் வெளிவந்துள்ளன. அந்த வகையில் இந்நூலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்நூலினை எம்முடன் இணைந்து வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கும். இதனை அச்சிட்டுத் தரும் அச்சக உரிமையாளர் ஊழியர்களுக்கும் எமது மன
மார்ந்த நன்றிகள்.
புதியபூமி வெளியீட்டகம்
வணக்கம்
117, கீழ் சென் அன்றுாஸ் இடம் முகத்துவாரம்,
கொழும்பு 15
இலங்கை

1
முஸ்லிம்களும் சுயநிர்ணய உரிமையும்
1, முன்னுரை
மாக்ஸியம் ஒரு விஞ்ஞானம் என்றுதான் தம்மை மாக்ஸியவாதிகளாகக் கூறிக்கொள்ளும் அனைவரும் சொல்கிறார்கள். ஆயினும் அவர்களுட் குறிப்பிடத்தக்க தொகையினர் மாக்ஸியத்தை ஒரு வாய்ப்பாட்டு மட்டை யைப்போலவோ அல்லது இலக்கணச் சூத்திரங்கள் போலவோ பயன்படுத்துவதை நாம் காண்கின்றோம். மாக்ஸியத்தை லெனின் வளர்த்தெடுத்தார் என்றும் மாஓசேதுங் அதை மேலும் விருத்தி செய்தாரென்றும் சொல்பவர்கள் லெனினையும் மாஒவையும் மேற்கோள் காட்டிப் பேசுவதுடன் திருப்தியடைவதைக் காணலாம். சுயநிர்ணய உரிமை பற்றிப்பேசும்போது லெனினும் ஸ்டாலினும் முன்வைத்த கருத்துக்களை மிகவும் விறைப் பான முறையில் இவர்கள் திருப்பிச் சொல்வார்கள். மாக் ஸியச் சிந்தனை நெறியின் விஞ்ஞானரீதியான தன்மையை இவ்வாறு மறுக்கும்போது பிறப்பது வரட்டு மாக்ஸியம். இது உண்மையில் மாக்ஸிய விரோதமானது என்று மாஓ சுட்டிக்காட்டியது மிகவும் முக்கியமானது. வரட்டு மாக் ஸியத்தில் ஒரு முக்கியமான பண்பு, தாம் அகச்சார்பாக வந்தடையும் முடிவுகட்கு ஆதாரந்தேட மர்க்ஸியச் சிந்த யாளர்களின் சொற்களை இரவல் வாங்கி-ச்வசதிக்கேற்ப

Page 5
6
வியாக்கியானஞ் செய்வது. ஒரு மாக்ஸியவாதியின் முக்கிய உள் எதிரி அகச்சார்பு என்றுதான் தோன்றுகிறது
சுயநிர்ணய உரிமை தொடர்பான வாதம், இன்னமும் "சுயநிர்ணய உரிமை என்றாற் பிரிந்து போவதற்கான உரிமையின்றி வேறல்ல" என்ற லெனினின் கருத்தை வியாக்கியான ஞ் செய்வதைப் பற்றியே சுழல்கிறது என் றால் அதற்கான காரணம் அகச்சார்புதான். சிலர் தமிழ் ஈழம் பிரிந்து போவதுதான் தீர்வு என்ற தமது கருததை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பிரிவினைக்கான போராட்டமே அன்றி வேறல்ல என்று நியாயப்படுத்து வது ஏன்? பிரிந்து போகும் உரிமையும் பிரிந்து போவதும் ஒன்றல்ல என்று இவர்கட்கு விளங்காதா? ஒரு உரிமையை வைத்திருப்பவர், அதை ஏன் எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராயாமல் ஒரு உரிமை இருப்பதால் அது பிரயோகிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? அந்த உரிமைப் பிரயோகிக்கப்படாமற் போவது அந்த உரிமையின் இழப்பல்ல என்பது இவர் கட்குத் தெரியாதா? பிரிந்து போகும் உரிமை வேண்டும் என்று கேட்டுப் போராடுவோர் பிரிவினைக்காகப் போராடுவோரினின்று தெளிவாகவே வேறுபடுகிறார்கள். முன்னையோர் இணைந்து வாழும் வாய்ப்புைக் கருத்திற் கொண்டே போராடுகிறார்கள்: பின்னையோர் எவரிட மும் பிரிந்துபோகும் உரிமையைக் கேட்கிவில்லை அவர்கள் பிரிவினைக்காகவே போராடுகிறார்கள், இவ்வாறான வித்தியாசங்களை எல்லாம் எளிதாகவே அலட்சியம் செய்யும் 'சுயநிர்ணயம் சமன் பிரிவினை" என்ற வாய்ப் பாடு அகநிலைச்சார்பின் ஒரு விளைவு அந்த அகநிலைச் சார்புக்கு வேறுதுணை விளைவுகளும் உண்டு. இவை பற்றிப் பின்னர் கவனிப்போம்.
மாக்ஸியவாதிகள் தேசங்களின் பிரிவினையை ஆதரிக் குங் காரணங்களுஞ் சூழ்நிலைகளும் தேசியவாதிகள்

7
எனப்படுவோரின் நிலைப்பாடுகட்கு முற்றிலும் உடன் பாடானவையல்ல. மாக்ஸியவாதிகளது அணுகுமுறை வர்க்க முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது; சர்வதேசப் பார்வையுடையது. தேசிய இனக்கட்சிகளுக் கிடையிலான முரண்பாடுகளைச் சினேக முரண்பாடு களாகக் கருதுவது.
தேசியவாதிகளது அணுகுமுறை ஒரு தேசத்தினதோ. தேசிய இனத்தினதோ நலன்கள் என்று தாம் கருதும் விஷயங்களை முதன்மைபடுத்துவது. எனவே அது தேசங்களிடையிலும் தேசிய இனங்களிடையிலும் உள்ள முரண்பாடுகளை முக்கியப்படுத்தி ஒரு தேசிய இனத்தின் நலன்கள் மற்றைய இனங்களின் நலன்களைவிட முக்கிய மானவை என்று கருத இடமுண்டு. தேசிய இனங்கள் இரண்டின் அதிகார வர்க்கங்களிடையிலான பகைமை யைத் தேசிய இனங்களிடையிலான பகைமையாகக் காட் டும் நிர்ப்பந்தத்திற்கும் அது உள்ளாக நேரிடுகிறது. சர்வ தேச அரங்கிற் தன்னை ஏகாதிடத்தியவாதிகளின் கையில் ஒரு பகடைக் காயாக்கும் நிலைக்கும் அதன் குறுகிய உலக நோக்கே காரணமாகிறது,
சில தேசியவாதிகள் தம்மை முற்போக்கானவர்களா கவும் இடதுசாரிகளாகவும், சிலசமயம் மாக்ஸியவாதிக ளாகவும் காட்டிக்கொள்வதுண்டு. இவர்கள் எல்லாரும் இவ்வாறு செய்வதன் நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்று சொல்வது நியாயமாகாது. ஆயினும் இவர் களது முற்போக்குச்சிந்தனையும் இடதுசாரி அரசியலும் தமது தேசியவாதத்தின் தேவைகளை நிறைவேற்றவே பயன்படுவன. இதனால், இந்த தேசியவாதிகள் தாம் வலியுறுத்தும் பிரிவினைக் கோரிக்கைக்கு உடன்பாடற்ற எந்த முற்போக்கான அரசியல் நிலைப்பாட்டையும் கை விடத் தயங்க மாட்டார்கள். மாக்ஸியம் இவர்களது

Page 6
8
தேசியவாதக் குறிக்கோள்களை அடைய உதவும் ஒரு கருவியே ஒழிய வேறில்லை. எனவே மாக்ஸியத்தை ஒரு வாய்ப்பாட்டு மட்டைபோற் கருதி வசதியான சில சூத்தி ரங்களை மட்டும் எடுத்து விறைப்பான முறையிற் பாவிப் பார்கள். உதாரணமாக, ரஷயப் பேரரசின் கீழிருந்த தேசங்களின் பிரிந்துபோகும் உரிமை பற்றிய லெனினின் நிலைப்பாடு, அதாவது 'ஒவ்வொரு தேசத்திற்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு" என்ற பிரகடனம், இவர்கட்கு இனிப்பானது. சீன விடுதலையின் போது ஏன் இதேவித மான 'பிரிந்து போகும் உரிமை' வலியுறுத்தந்பட வில்லை என்று கேட்டால், சிலர் "சீனாவில் தேசிய இனங் களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை, சோவியத் யூனிய னில் தீர்க்கப்பட்டுவிட்டது' என்ற விதமாக ஏதாவது பொய்சொல்லித் தப்பிக் கொள்ளப்பார்ப்பார்கள். சிலர் சீன அரசு பற்றிய தமது விருப்பு வெறுப்புகட்கு ஏற்ப எதையாவது சொல்லி மழுப்புவார்கள். எனினும் தெளி வான விளக்கமென்று எதையும் இவர்களால் முன்வைக்க (p19.ülfTgöl.
மாக்ஸியவாதிகளின் நிலைப்பாடோ தேசியப் பிரச்சி னையை வர்க்கமுரண்பாட்டின் ஒரு அம்சமாக கருதுவது, எனவே அது தேய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உள்ள முரண்பாடுகளைப் பிரதான முரண்பாடு இரண் டாம் மூன்றாம் பட்ச முரண்பாடுகள் என்ற விதமாக அடையாளங் காண்கிறது. முரண்பாடுகளின் முக்கியத் துவத்தை நீண்டகாலக் கண்ணோட்டத்திலும் குறுகிய காலக் கண்ணோட்டத்திலும் வேறுபடுத்தி ஆராய்கிறது. ரஷயப்புரட்சியின் பாடங்களைச் சீனாவில் நேரடியாகப் பாவிக்க முடியாமற்போனமையும் சீனப்புரட்சியின் அனு பவங்கள் அப்படியே வியட்னாமியப் புரட்சியிலும் விடு தலைப்போரிலும் பயன்படாமையும் நமக்கு உணர்த்து வது என்ன? மாக்ஸியத்தை வாய்ப்பாடுகளாகவும் சூத்தி ரங்களாகவும் பயன்படுத்த முயல்வோர் இதன் விஞ்ஞா

9
னத்தன்மையை நிராகரிப்பவர்களாவர். அவர்கள் முடி வில் மாக்ஸிய விரோதமான நிலைப்பாட்டை வந்தடை வது இயல்பானது.
தேசங்களதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமை பற்றியும் தேசிய இனமொன்றை எவ்வாறு அடை யாளங்காண்பது என்பது பற்றியும் லெனினும் ஸ்டாலி னும் விரிவாகவே ஆய்ந்துள்ளனர். ஆயினும் அவர்களது வரைவிலக்கணங்களன் எல்லைகட்குள்ளேயே சமகாலப் பிரச்சினைகள் பற்றிய தேடல் நிகழ வேண்டுமா? லெனி னுப் ஸ்டாலினும் பயன்படுத்திய மாக்ஸிய ஆய்வு முறை யும் உலகக் கண்ணோட்டமும் முக்கியமானவை, ஆயினும் அவர்கள் குறிப்பாகக் கவனஞ் செலுத்திய பிரச்சனைகள் இன்று நம்முன் உள்ள பிரச்சனைகளினின்று காலத்தா லும் இடத்தாலும் நிலமைகளாலும் வேறுபட்டவை என்பது நமது கவனத்துக்குரியது. அத்துடன், தேசியப் பிரச்சனை பற்றி மாக்ஸியவாதிகளது நிலப்பாட்டை நிரா கரிக்க முயலும் சிலரது விஷமத்தனம் பற்றியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொதுவான விதிகளைக் குறிப்பான நிலவரங்களுக் குப் பயன்படுத்தும்போது விறைப்பான முறையில், வாய்ப்பாட்டை ஒப்பிப்பதுபோல, செயற்பட்டால் பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் பற்றிய கதையில் அந்த மூடர்கள் வந்தடையும் அபத்தமான முடிவுகளை நாமும் சந்திக்க அதிக காலமெடுக்காது. பொதுவான விதிகளை நிராகரித்து ஒவ்வொரு நிலவரத்தையும் மற்ற நிலவரங்களுடன் உறவற்றதாகக் காண்போர் பகுதிக்கும் முழுமைக்கும் உறவு தெரியாதவர்களாக ஒரே கிடங்கில் நூறுதரம் இடறி விழுபவர்களாக இருப்பார்கள்.
தேசம், தேசிய இனம். சுயநிர்ணயம், பிரிந்துபோகும் உரிமை போன்ற விஷயங்கள் பற்றி இன்றைய உலகச்

Page 7
16
சூழலில் மாக்ஸ்யவாதிகள் எடுக்கக்கூடிய நிலைப்பாடு களைப் பற்றிக் கீழ்வரும் பகுதியில் சுருக்கமாகக் கவனிப் போம்.
2. தேசிய இனங்கள் பற்றிய சிலபிரச்சனைகள்
நாடு, தேசம், அரசு என்ற சொற்கள் எப்போதுமே தெளிவான முறையிற் பயன்பட்டு வந்தன அல்ல. இன்றும் ஆவணங்களில் தேசம் என்ற சொல் நாட்டையும் அரசை யும் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம். ஒருவர் தன்னை இந்தியர் என்றோ,பிரித்தானியர் என்றோ, கனேடியர் என்றோ கூறும்போது பொதுப்பட அந்தச் சொல் குறிக்கும் நாட்டைச் சேர்ந்தவர் அல்லது அந்த அரசின் ஆட்சிக்கு உட்பட்டவர் என்றே கூறமுற்படு கிறார். இவ்வாறே முன்னாட் சோவியத் ஒன்றியத்தின தும், யூகோஸ்லாவியாவினதும் குடிகள் தம்மை சோவியத் அல்லது யூகோஸ்லாவிய நாட்டினர் என்று அழைத்து வந்தனர். ஆயினும் இந்த நாடுகளில் அவர்கள் வெவ் வேறு குடியரசுகளின் பிரஜைகளாகவும் இருந்தனர். ஐக்கிய அமெரிக்கா (யூ. எஸ்) ஐம்பது அரசுகளின் சமஷ்டி எனப்படுகிறது. அங்கே அமெரிக்கர் என்ற சொல் அனை வரையும் குறிக்கப் பயன்படுகிறது. ஆயினும் சுய அடை யாளமுடைய தேசிய இனங்களை அடையாளங் காட்டும் வகையிலான அரசுகள் எதுவும் அங்கு இல்லை. (ஹவாய்த் தீவுகள் ஒரு பலவீனமான விதிவிலக்கு எனலாம்)
எனினும், அரசியல் விஞ்ஞானிகள் தேசம், தேசிய இனம் என்று அடையாளங்காணும் சமுதாயப் பிரிவுகளி டையே ஒன்றுக்கு மேற்பட்டபொதுவான இலட்சணங்கள் இருக்கலாம் சிலசமயம் ஒரு நாட்டில் உள்ள ஒரு இனப் பிரிவு தேசிய சிறுபான்மை இனமென்றோ சிறுபான்மைத் தேசிய இனமென்றோ அழைக்கப்படுவதையும் நாம் அறி

11
வோம் இவ்வாறான வேறுபாடுகள் ஒரு இனப் பிரிவின் அரசியல் அந்தஸ்துத் தொடர்பானவை, பலவேறு வர லாற்றுக் காரணங்களுக்காகவும் அரசியற் தேவைகளா லும் நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு இனப்பிரிவு ஒரு தேசிய இனமாகவோ சிறுபான்மைத் தேசிய இன மாகவோ தேசிய சிறுபான்மை இனமாகவோ அல்லது ஒரு தனித்துவமான இனப்பிரிவாகவோ அடையாளங் காட்டப்படலாம். இவ்வகையான அடையாளங் காணல் சமுதாய, அரசியற் தேவைகளின் விளைவான ஒன்றே அல்லாது மனித குலத்தின் மீது இயற்கையால் விதிக்கப் பட்ட அடிப்படையான வேறுபாடுகளினின்று எழுந்த ஒன்றல்ல.
தேசங்களும் நாடுகளும் அரசுகளும் மனிதர் நாகரிக யுகத்திற் காலடியெடுத்துவைத்து வர்க்க சமுதாயங்கள் நிறுவப்பட்டதையடுத்து உருவாகி வந்துள்ளன. மனித உறவுகளிற் கருத்துப் பரிமாறல் ஒரு முக்கிய அம்சம். எனவே ஒரு சமுதாயத்தை இணைக்கும் முக்கிய தொடர் புச் சங்கிலியாக மொழி அமைந்தது. ஒரு சமுதாயத்தில் வர்க்க அடிப்படையில் உற்பத்தி உறவுகளால் நிர்ணயிக் கப்பட்ட சமூக வேறுபாடுகளையும் மீறிப், பொதுவான
வாழ்க்கை முறைகள் உள்ளன இப்பொதுமை. சமுதாயத்தின் உறுப்பினர்களிடையே நெருங்கிய உறவை அவசியமாக்குகிறது. மானுடத்தின் மேனோக்கிய
வளர்ச்சி மனித சமுதாயங்களிடையே வேறுபாடுகளையும் அதிகரிக்கிறது: ஒரு சமுதாயத்தினுள் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவுகளையும் மீறிய கலாச்சார ஒற்று மையை அதனுள் நம்மால் இனங்காண முடிகிறது. சமுதாய உறவுகள் யாவற்றுக்கும் ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது. ஒரு சமூகத்தை ஒன்றாகப் பிணைப் பதில் ஒரு பொதுவான பொருளாதார அமைப்பும்

Page 8
12
முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சமுதாயம் தொடர்ச்சி யான ஒரு பூ பிரதேசமாக இல்லாது போகுமாயின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடையே சமுதாயப் பரிமாறல் இல்லாது போகவும் அவர்களது வாழ்க்கை முறையும், காலப்போக்கில், மொழியுங்கூட வேறுபடவும் நேரலாம். இவை அனைத்தினும் முக்கியமானது அந்தச் சமுதாயத்தின் அரசியற் பரிமாணம், ஒரு சமுதாயத்தின் மக்களை ஒரே அமைப்பாகப் பேணும் தேவை, அச்சமு தாயத்தின் மீது அதிக ஆளுமையையுடைய சமுதாயப் பிரிவிற்கு உள்ளது. அச்சமுதாயத்தின் எதிர்பார்ப்புக் களும் அதன் பொதுவான சிந்தனை முறையும் ஒருமித் திருப்பது அச்சமுதாயத்தின் ஒருமைப்பாட்டுக்கு அவசிய மாகிறது. இவ்வாறு விஷயங்களைக் கருத்திற்கொண்டும் ரஷ்யப் பேரரசின் கீழ் ஒடுக்கப்பட்ட நாடுகளதும் மக்களதும் தேவைகளைக் கணக்கிலேடுத்துமே ஸ்டாலின் தேசம் என்றாலென்ன என்பதற்கான ஒரு இலக்கணத்தை முன்வைத்தார். அந்த வரைவிலக்கணத்தை விறைப்பான முறையிற் பயன்படுத்துவோமாயின் நாம் வரலாற்றுக் குருடர்களாவோம்.
தேசங்கட் குச் சுயநிர்ணய உரிமை என்பது பற்றிக் கொலனித்துவவாதிகளும் பிற அப்பட்டமான பிற்போக் காளர்களும் தவிர்ந்த அனைவரும் பேரளவில் உடன்பாடு கொண்டிருந்த ஒரு காலத்தில், கொலனித்துவ ஆட்சிக்கும் தேசிய ஒடுக்குதலுக்கும் உட்பட்ட நாடுகளும் மக்களும் தமது விடுதலைக்கெதிராகப் போராடத் தொடங்கிய காலத்தின் ஆளும் வர்க்கத்தின் தேசியவாத உணர்வுகளை முதன்மைப்படுத்திய சமூக ஜனநாயக வாதிகளும் இடது சாரிகளாக உலா வந்த சிலரும் சுயநிர்ணயம் என்பதற் குரிய விளக்கத்தைத் திரிவுபடுத்த முற்பட்டனர். இதை யொட்டியே, லெனின், சுயநிர்ணயம் என்றாற் பிரிந்து போகும் உரிமையின்றி வேறல்ல என்று உறுதியாகக்

13
கூறினார் . இந்த விளக்கத்தை ஒரு வாய்ப்பாடாக்கி ஒப்பிப்பதன் மூலம், சில இடதுசாரிகள் தாம் குறுகிய தேசிய வாதிகளுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்று உறுதி செய்துள்ளனர்.
பிரிந்துபோகும் உரிமையின் அங்கீகாரம் பிரிவினையை ஊக்குவிக்கும் நோக்கையுடையதல்ல. மாறாக அது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பைப் பலப்படுத்தும் நோக்கையுடையது. இதன் காரணமாகவே சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையே என்று கூறுவோர் சுய நிர்ணய உரிமை என்ற தன் கருத்தைத் திரிக்கிறார்கள். அதாவது ஒன்றைச் செய்யும் உரிமையை அதைச் செய்யும் நிர்ப்பந்தமாக மாற்றுகிறார்கள். இது லெனினுடைய அடிப்படையான நோக்கத்திற்கு எதிராக லெனினின் சொற்களையே திரித்துப் பயன்படுத்தும் முயற்சி.
சீனாவின் விடுதலைப் போராட்டத்தின் போது, தேசிய இனங்களின் உரிமைகள் பற்றிய உத்தரவாதங்கள் வழங்கப்பட்டனவேயொழிய, பிரிந்துபோகும் உரிமை பற்றிப் பேசப்படவில்லை. ஏனெனில் சீனாவின் தேசிய இனப்பிரச்சினை ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த அடிமைப் பட்ட தேசங்களின் பிரச்சினை போன்றதல்ல. சீனாவின் விடுதலையையடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தேசிய சிறுபான்மை இனங்கள் அடையாளங் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில லட்சத்திற்கும் குறைவான சனத்தொகையுடையன. இந்த இனங்களின் உரிமைகளையும் சுய அடையாளத்தையும் பாதுகாக்கும் முறையில் சுயாட்சி அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. வரலாற்றுக் காரணங்களால், தேசிய இனங்கள் மத்தியில் உருவான பகைமைகளும் அச்சங்களும் ஒரு குறுகிய கால எல்லைக்குள் ஒழிந்துவிடமாட் டா. ஆயினும்

Page 9
14
தேசிய சிறுபான்மையினரது உரிமைகளும் நலன்களும் உத்தரவாதம் செய்யப்பட்டு பெரும்பான்மை இனத்தினர் மத்தியில் உள்ள பேரினவாதப் போக்குகளைக் களையும் நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் தேசிய இனங்களிடை யிலான நல்லுறவு வளர்த்தெடுக்கப்படுகிறது. சீனாவின் தேசிய சிறுபான்மையினரது பிரிந்துபோகும் உரிமை பற்றியும் திபெத்திய பிரிவினை பற்றியும் அயலில் இருந்தே கோஷங்கள் எழுவது நம் கவனத்துக்குரியது. குறிப்பாகத் திபெத்திய நிலவுடைமைக்காரர்களதும் அடிமைச் சொந்தக்காரர்களதும் ஆதிக்கம் முறியடிக்கப் பட்டபின், திபெத்தை விட்டு வெளியேறிய தலாய்லாமா என்னும் 'மதத் தலைவரும்" திபெத்திய சுரண்டற் சமுதாயத்தின் ஏகப்பிரதிநிதியாகக் கருதக்கூடிய வருமான நபரின் நடவடிக்கைகள் கவனத்துக்குரியன.
இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனை சிக்கலானது. பலநூறு சிற்றரசுகளாகக் கிடந்த ஒரு துணைக்கண்டம் பிரித்தானிய கொலனித்துவத்தின் வருகையால் ஒரு நிர்வாகத்தின் கீழ் வந்தது. பிரித்தானியர் போகுமுன்பே இந்தியாவின் பிரிவினைக்கான கோரிக்கைகள் எழுந்து இந்தியா மத அடிப்படையில் பிரிவு கண்டது. மொழி அடிப்படையில் மட்டுமே இந்தியாவிற் பலநூறு தேசிய இனங்களை அடையாளங் காணலாம். பிரதேச மொழி வழக்குகள் என்ற விதமாகச் சில மொழி வேறுபாடுகளைப் புறக்கணித்தாலும், ஆதிவாசிகள் பேசும் நூற்றுக்கணக் கான மொழிகள் ஒருபுறமிருக்க, கணிசமான தொகை யினர் (லட்சக் கணக்கினர்) பேசும் மொழிகள் இருபதுக்கு மேற்தேறும். இந்தியக் குடியரசு தேசிய இனங்களது நலன்களைப் பேணும் முறையில் அமைந்ததல்ல. சிறு பான்மைத் தேசிய இனங்களின், குறிப்பாக ஆதிவாசி சமுதாயங்களின், நலன்களைப் பேணுவதற்கான வாய்ப்பு கள் குறைந்து வருகின்றன. இவர்களது பிரச்சனைகளை

15
விட இந்தி-இந்து-சாதிய மேலாதிக்கத்தின் விளைவுகள் விளைவுகள் பெருந்தொகையினராக உள்ள பல தேசிய இனங்களது மனங்களிலும் அச்சத்தை வளர்க்கிறது. இந்த நிலையில் தேசிய இனங்களாக அடையாளங் காணப் படாத சாதி அடிப்படையிலானதும் சமய அடிப்படையி லானதுமான சமூகப் பிரிவுகளது உரிமைகட்கு உத்தர வாதம் எவ்வாறு சாத்தியமாக முடியும்? இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனை வெறுமனே குறிப்பிட்ட சில தேசிய இனங்களது பிரச்சனையாக மட்டுமே கருத முடியாததாக உள்ளது. இந்தியாவில் வெடித்தெழும் சகல பிரிவினைவாதக் கோரிக்கைகளையும் நாம் நிபந் தனையின்றி ஆதரிக்க முடியுமா? அதே வேளை தமது சுய அடையாளத்தைப் பேணுவதற்கும் தேசிய இன உரிமை களை நிலை நிறுத்தவும் பிரிவினைக்காகப் போராடுமாறு நிர்பந்திக்கப்பட்ட மக்களது போராட்டங்களை நிரா கரிக்க முடியுமா? இந்தியாவின் ஐக்கிய ப் இன்றைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் நெடுங்காலம் நிலைக்க இயலாத ஒன்றாகிவிட்டது. பலவேறு தேசிய இனங்களதும், மதங்களதும், சாதியினரதும் சமத்து வத்தின் அடிப்படையில் அவர்களது உரிமைகளை உத்தர வாதம் செய்யவல்ல சுயாட்சிகளின் இணைப்பாக இந்தியா அமைவதன் மூலமே இத்துணைக்கண்டத்தின் மக்களது நலன்களும் இந்திய ஐக்கியமும் பேணப்பட (plguth.
ஆபிரிக்கக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு நாடுகள் இன, மொழி அடிப்படையில் அமையவில்லை. கறுப்பு ஆபிரிக்க நாடுகள் பலவற்றில், ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இனப்பிரிவினர் வாழ்கிறார்கள். அவர்களது மொழிகளின் பெரும்பாலானவை வீட்டு மொழிகளாகச் சுருங்கிவிட்டன முன்னைய கொலணி எஜமானர்களது மொழிகளே பல நாடுகளின் தேசிய

Page 10
16
மொழிகளாக உள்ளன. சில நாடுகளில் வாழும் முக்கிய மான இனப்பிரிவினருக்கு ஒரு தொடர்ச்சியான நிலப்பிர தேசம் இல்லை. நாடோ டிகளாக வாழும் இனங்களுக் குரிய நிலப்பரப்பை அடையாளங் காட்டுவது மிகவும் சிக்கலானது. எவ்வாறாயினும் மிக அண்மைக்காலம் வரை வெவ்வேறு இனப்பிரிவுகளிடையிலான மோதல்கள் குறை வாகவே இருந்தன. இன்றைய மோதல்கள் பலவற்றுக்குக் காரணமாக இருப்போர் மேலை முதலாளித்துவ நாடு களின் அதிகார வர்க்கத்தினரே என்பதும் கவனத்துக் குரியது
ஆப்பிரிக்காவிற் கொலனித்துவம் ஏற்படுத்திய சிக்கல் களுள் மிக முக்கியமானது தென்ஆபிரிக்கா எனலாம். அங்கே ஐரோப்பிய வம்சாவழித் தேசிய இனங்கள் இரண்டும் இந்திய வம்சாவழியினரைக் கொண்டதும் உண்மையிற் பல்வேறு இனத்தவரை உள்ளடக்கியது மான ஒரு தேசிய இனமும் வெள்ளையருக்கும், கறுப்பு இனத்தவருக்கும் ஏற்பட்ட இனக்கலப்பின் விளைவாக சகலரையும் உள்ளடக்கிய ஒரு தேசிய இனமும் பல்வேறு இனப்பிரிவுகளை (ஸ"லூ, ஸோதோ, ஸோஷா, த்ஸ் வானா போன்றன) உள்ளடக்கிய கறுப்பு இனத்தோரும் தேசிய இனங்களாக அடையாளங் காணப்பட்டனர். வெள்ளை இனவெறி ஆட்சிக்கு ஆபத்து வரப்போகிற சூழ்நிலையில், கறுப்பு இனத்தவரைப் பிளவு படுத்தும் முயற்சியில் இறங்கிய வெள்ளை அரசாங்கம், வளங் குறைந்த பிரதேசங்களைக் கொண்ட கறுப்பு இனப்பிரிவு களின் சுயாட்சிகளையும் சுதந்திர நாடுகளையுங்கூட நிறுவ முற்பட்டது. பின்பு ஸ"லூக்களின் தேசியவாதம் வலுவாக ஊக்குவிக்கப்பட்டது. ஸ"லூக்களுள் ஒரு சிறு பகுதியினரது ஆதரவையே உடைய மங்கோஸ"த்து பூத்தெலேஸி என்பவரை ஸ"லுக்களின் ஏகப் பிரதிநிதி யாகக் காட்டும் முயற்சியும் நடந்தது. வெள்ளை ஆதிக்

17
கத்திற்கு முடிவு வரப்போகிற இன்றைய நிலையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் குறுகிய காலத்திற்காவது தமது வர்க்க நலன்களைப் பேணுவதற்காக ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் தலைமையுடன் சமரசம் பேசுகின்ற நிலையில் தீவிரவாத வெள்ளை இனவெறியர், முக்கிய மாக டச்சு வம்சாவழி ஆப்ரிகான்ஸ் இனத்தைச் சார்ந் தோர், தமக்கென ஒரு தனிநாடு பற்றிப் பேசுகிறார்கள். பூத்தெலேஸியும் பிரிவினை பற்றிப் பேசுகிறார். இங்கே, மாக்ஸியவாதிகள் எந்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த முடியும்? எந்த வாய்ப்பாட்டு மட்டையும் நமக்கு இங்கு உதவ மாட்டாது.
அமெரிக்கக் கண்டம் முழுவதும் வாழ்ந்த ஆதி அமெரிக்கர்கள் (அமெரித்தியர்) இன ஒழிப்பிற்கு ஆளா னார்கள். இன்று அக்கண்டத்தின் வடக்கில் உள்ள இரண்டு நாடுகளில் ஆங்கிலம் அல்லது ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் ஆதிக்கத்தில் உள்ளன. அத்திலாந்திக் மாகடலின் தீவுகளிற் பெரும்பகுதி அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட ஆபிரிக்கரைக் கொண்டவை. கியூபா கறுப்பு ஸ்பானிய மக்களைக் கொண்ட ஒரு தேச மாக உள்ளது. ட்றினிடாட், தென் அமெரிக்கக் கண்டத் தில் உள்ள கயானா என்பவற்றில் கறுப்பரும் இந்திய வம்சாவழியினரும் உள்ளனர். பிரேஸில் நாடு போர்த்துக் கேய வம்சாவழியினரதும் அடிமைகளாகப்போன கறுப் பரதும் ஆதி அமெரிக்கரதும் கலப்பு இனத்தவரினதும் தேசமாக உள்ளது. ஸ்பானிய மொழி வழங்கும் மத்திய தென் அமெரிக்க நாடுகள் இனமொழி அடிப்படையிலான தேசங்களல்லாமல் வரலாற்றுக் காரணங்களால் தனிநாடு களாக அமைந்தவை. அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் தமது உரிமைகள் மறுக்கப்பட்டு இனஒழிப்புக்கு உள்ளாகி வரும் ஆதி அமெரிக்கர்களது சுய நிர்ணய உரிமை பற்றி நமது நிலைப்பாடென்னவாக இருக்கமுடியும்? பூ எஸ்

Page 11
18
ஸில் உள்ள ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களது உரிமைகள் பற்றியும் மொழியுரிமை மறுக்கப்பட்டு வரும் ஸ்பானிய இனத்தவரது உரிமைகள் பற்றியும் நாம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கமுடியும்? புதிதாக குடியேறியவர் களான வியட்னாமியர், சீனர், கொரியர், இந்தியர் போன்ற ஆசிய சமுதாயங்களின் தேசிய சுய அடை யாளமும் ஐரோப்பிய தேசிய இனங்கள் மத்தியில் (குறிப் பாக இத்தாலியர், கிரேக்கர், யூதர் போன்று) உள்ள இன உணர்வுகள் பற்றிய நமது நிலைப்பாடு என்ன? இதற் கெல்லாம் எளிதான சூத்திரங்கள் உள்ளனவா? அவுஸ்தி ரேலியாவில் இன ஒழிப்புக்கு ஆளாகி வந்துள்ள பூர்வ குடிகளதும் நியூசிலாந்தின் சிறுபான்மையான மயோரி மக்களதும் இன உரிமைகள் பற்றி தாம் என்ன சொல்ல
Փւգպւն?
"மாக்ஸியம் இவற்றை ஆராயத் தவறிவிட்டது, இவற்றை ஆராய லாயக்கற்றது' என்பது ஒரு சாரரின் வாதம். 'மாக்ஸும் லெனினும் ஸ்டாலினும் சொன்ன வற்றுக்குள் மட்டுமே மறுமொழி தேட முடியும்' என்பது வரட்டு மாக்ஸியத்தின் வாதம். முன் குறிப்பிட்டது போன்ற பல பிரச்சனைகட்குத் தக்க பதில் தரமுடியாமல் இவர்கள் திணறும்போது , "மாக்ஸியத்தால் இயலாது" என்று வாதிப்பவர்களது கைகள் வலுவடைகின்றன.
மாக்ஸ் முதல் லெனின், ஸ்டாலின் வரையிலானவர் கள் வாழ்ந்த காலத்தில், தேசிய இனப்பிரச்சனை பொது வாகக் கொலனி ஆதிக்கத்திற்குக் கீழான தேசங்களது விடுதலை தொடர்பான பிரச்சனையாக இருந்தது. நேரடி யான கொலனி ஆதிக்கம் போய்விட்ட புதிய சூழலில் கொலனித்துவம் தன் வசதிக்காக ஏற்படுத்திய பிரதேச எல்லைகளுள் அமைந்த நாடுகளின் தேசிய இனங்கட்கு இடையிலான வேறுபாடுகள் பற்றிய பிரச்சனை எழுந்

19
துள்ளது. இச்சினேக முரண்பாடுகள் பல்வேறு காரணங் களாற், பகை முரண்பாடுகளாகத் தோற்றமளிக்கும் அளவுக்கு விகாரப்படுத்தப்பட்டுள்ளன. மத அடிப்படை யிலான தேசியவாதம் ஒரு புதிய பரிமாணமாகியுள்ளது. இது சரியோ பிழையோ என்பதைவிட இதற்கு மாக்ஸிய அரசியல் நடைமுறை எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்ற கேள்வி முக்கியமானது
சுய நிர்ணயம் என்பது பிரிந்துபோகும் உரிமை தொடர்பானதாகக் கருதப்பட்டுத் தேசங்களின் சுய நிர்ணய உரிமை பற்றிய வாதம் பிரிவினைக்கான உரிமை தொடர்பான விவாதமாக இருந்த நிலையைக் கடந்து விட்டோம். தேசிய இனங்களின் பிரச்சனை, முக்கிய மாகத் தேசிய அரசாக அமையும் வாய்ப்பில்லாத தேசிய இனங்களின் பிரச்சனை, இன்று மேலும் கவனமான பரிசீலனையை வேண்டி நிற்கிறது. சுய நிர்ணயம் என்பதன் அர்த்தம் ஒரு தேசம் பிரிந்துபோகும் உரிமையை எந்தநிலையிலும் மறுக்காத விதமாக மேலும் விரிவுபடுத்த படவேண்டிய தேவையை தாம் எதிர்நோக்குகிறோம். தேசிய இனம் என்ற பதத்தின் பொருளை மேலும் விரிவு படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. தேசிய இனங் களாக அடையாளங்காண முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாய பிரிவுகளது உரிமைகள் தொடர்பாகவும் தெளி வான கருத்துக்கள் அவசியமாகின்றன.
3. தேசிய இனமும் சுய நிர்ணயமும்
ஒரு தேசிய இனம் ஒரு தேசமாக அல்ல தேசிய அரசாக அமைவதற்குச் சில நடைமுறைச் சாத்தியமான தேவைகள் உள்ளன. அதற்குரிய ஒரு தொடர்ச்சியான பிரதேசம் ஒரு முக்கியமான தேவை. இது எப்போதுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததில்லை. உதாரணமாக, அமெரிக்கா

Page 12
20
வின் (யு எஸ்) அலஸ்கா பகுதிக்கும் பிற பகுதிகட்குமிடை யில் கனடா உள்ளது. அதன் ஹவாய்த் தீவுகள் பசுபிக் சமுத்திரத்தில் உள்ளன. இந்தியாவின் அந்தமான் தீவுகள் கண்டத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளன. இங்குஅந்த மான் தீவுகளில் உள்ள ஆதிவாசி மக்கள் வேறு தேசிய இனத்தவர் என்பது கவனிக்கத்தக்கது. 1971ல் பாகிஸ் தானின் பிரிவினவைரை அந்தநாடு இந்திய நிலப்பரப்பாற் பிரிக்கப்பட்டிருந்தது.பாகிஸ்தான் பிரிவினையைச் சாத்திய மாக்கிய முக்கிய காரணி அன்றைய பாகிஸ்தானின் கிழக்குப்பகுதி (பங்களாதேஷ்) எந்த வகையிலும் மேற்குப் பாகிஸ்தானின் தேசிய இனங்களுடன் ஒன்றாகச் சேர்த்துக் கருத முடியாத ஒன்று என்பதுதான். மேற்கு ரஷ்யாவின் ஒரு பகுதி போல்ற்றிக் குடியரசு நாடுகளால் ரஷ்யாவின் பகுதியினின்று பிரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிறிய சனத்தொகையுடைய தேசிய இனங்கள் வேறு தேசிய நிலப்பரப்புகளாற் பிரிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும்போது ஒரு தேசிய நிர்வாகமாக இயங்குவது சிரம மானது. இக்காரணத்தினாலேயே இலங்கையின் பேரின வாத அரசாங்கம் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதேசத்தின் தொடர்ச்சியை அறுக்கும் திட்டங்களில் இறங்கியது. ஆயினும், பிரதேசத் தொடர்ச்சியின்மை மட்டுமே ஒரு தேசிய இனம் ஒரு தேசமாக அமைவதை நிறுத்திவிடாது.
தேசிய இனங்களை அடையாளங்காணுங் காரணி களில் இனம், தாய்மொழி போன்ற விஷயங்கள் பயன் பட்டுள்ளது போல மதம் பயன்பட்டதில்லை என்பது உண்மை இதற்கான காரணங்களுள் ஒருவராற் தனது மதத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ள அளவுக்கு தாய் மொழியையோ இனத்தையோ தெரிந்தெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்பது முக்கியமானது. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் பல வேறு மேற்கு ஐரோப்பிய நாடு களில் ஒன்றுக்கு மேற்பட்ட மதத்தினர் வாழ்கின்றனர்.

21
இந்த மத வேறுபாடுகள் பெருமளவும் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் சார்பானவையாகவே இருந்து வந்தமை ஒரு முக்கியமான விஷயம், யூதர் தாம் குடியேறிய நாட்டின் மொழியையே தமது தாய்மொழியாக்கிக் கொண்ட பின்னரும் அயலா ராகவே கருதப்பட்டமை இனவேறுபாடு தொடர்பானது, இதுவே இன்று ஆசிய ஆப்பிரிக்க கரிபியன் மக்களுக்கும் பிற ஐரோப்பிய நாடுகளினின்று குடியோருக்கு எதிராகத் தேசியவாதிகள கா ட் டு ம் பகைமைக்கு ஆதாரமாகவுள்ளது.
மறுபுறம், மத அடிப்படையில் தேசிய இனங்கள் அடை யாளங்காணப்பட்ட சூழ்நிலைகளும் இருந்துள்ளன. முன் னைய யூகோஸ்லாவியாவின் கத்தோலிக்கரும் (குறோவற் மக்கள்) சம்பிரதாய (Orthodox) கிறிஸ்தவர்களும் (ஸேர்பிய மக்கள்) முஸ்லிம்களும் வெவ்வேறு தேசிய இனங்களாகவே கருதப்பட்டு வந்துள்ளனர். ஸேர்பிய-குறோவற் பாகு பாடு ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரசிய லாதிக்கத்தின் உச்சத்தின்போது நிகழ்ந்த மதமாற்றத்தின் விளைவு. நீண்ட காலங்கட்கு, இரு மதத்தினரும் வெவ் வேறு அரச நிர்வாகங்கட்கு உட்பட்டு வாழ்ந்துவந்தமை யும் கலாச்சாரத்தின் மீது மதத்தின் பாதிப்பும் இரண்டு மதப்பிரிவுகளையும் வேறுபட்ட தேசிய இனங்களாகக் கருத வாய்ப்பளித்தன அடிப்படையில் ஒரே மொழி யையே இரு சாராரும் பேசியபோதும், எழுத்து முறைகள் வித்தியாசமாக இருந்துவந்தன. துருக்கிய (ஒட்டோமான்) சாம்ராஜ்யத்தின் எழுச்சியின்போது, இஸ்லாமிய மதத் தைத் தழுவிய ஸேர்பியரே இன்று பொஸ்னியாவில் வாழும் முஸ்லிம்கள். துருக்கிய ஆட்சி போன பின்பு சிலர் பழையபடி கிறிஸ்தவராயினர். மற்றோர் முஸ்லிம் களாகவே வாழ்ந்தனர். ரோமன் கத்தோலிக்கருக்கும் (குறோவற்) சம்பிரதாயக் கிறிஸ்துவருக்கும் (ஸேர்பியர்)
○pー2

Page 13
22
அரசியற் காரணங்களால் இருந்துவந்த முரண்பாடுகள் போன்று முஸ்லிம்கட்கும் ஸேர்பியர் கடகுமிடையே பிரச்ச னைகள் முன்னர் இருந்ததில்லை. எவ்வாறாயினும் மூன்று மதத்தவரும் ஒரே இன மக்களாயினும் வெவ்வேறு தேசிய இனங்களாகவே மதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே அண்மை அரசியல் நெருக்கடி ஏற்படும்வரை யூகோஸ்லாவி யாவினுள் 45 வருடமாக மத வேறுபாடுகள் சமுதாய நெருக்கடிகளுக்கு வழிகோலவில்லை.
இந்தியப் பிரிவினை மத அடிப்படையில் நிகழ்ந்தது. தனியே இஸ்லாம் என்ற அடிப்படையிலோ அதைவிடப் பலவீனமாக, இன்று கட்டியெழுப்பப்படும் ஹிந்துத்துவம் என்ற அடிப்படையிலோ ஒரு தேசம் அமைய முடியாது என்பதை வரலாறு நமக்குக்காட்டியுள்ளது. மொழி வேறு பாட்டையும் வரலாற்றுக் காரணிகளையும் வேறுபடும். கலாச்சாரங்களையும் புறக்கணித்து மதமென்ற அடிப் படையில் ஒரு தேசம் அமைய முடியாது என்பது பங்களா தேஷ் விடுதலையால் மட்டுமின்றி இன்று பாகிஸ்தானுக் குள் உள்ள நான்கு பிரதான தேசிய இனங்களதும் தேசிய உணர்வும் நமக்கு உணர்த்துகிறது. பாகிஸ்தானின் ஐக்கி யத்தைப்பேண இஸ்லாம் மட்டும் போதாது.தேசிய இனங் களின் நியாயமான அபிலாட்சைகள் நிறைவேற்றப்படாத வரை, தேசிய ஒருமைப்பாடு சாத்தியமில்லை. மொழியா லும் பிற சமுதாய வேறுபாடுகளாலும் வேறுபட்டு நிற்கும் தேசங்களை ஒரே தேசமாக்க மதம் போதாது என்பதற் காக, மத அடிப்படையில் ஒரு தேசமோ தேசிய இனமோ அமைவதை நாம் முற்றாக நிராகரிக்க முடியாது.
மேற்கு வங்க மக்களும் கிழக்கு வங்க மக்களும் தம்மை இன்னமும் வங்காளிகள் என்றே கருதுகிறார்கள். மேற்கு வங்கம் ஒருசமயம் இந்தியக் குடியரசினின்று பிரிந்தாலும், இரண்டு பிரதேசங்களும் உடனடியாக ஒரு நாடாக அமை

&3
வது இயலாத அளவுக்கு மத அடிப்படையில் விருத்தி பெற்ற அரசியல் தடையாகவே உள்ளது. ஆயினும் சமுதாய வளர்ச்சிப்போக்கில் மொழிவழித் தேசியம் வங்க மக்களை ஒன்று படுத்தும் வாய்ப்பு அதிகம்.
மேற்கு இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்தியப் பிரிவினை ஏற்படுத்திய ஆழமான காயங்களும் வரலாற்று பிரச்சனைகளும் முஸ்லிம் பஞ்சாபிகளையும் முஸ்லிம் களல்லாத பஞ்சாபிகளையும் அரசியல் ரீதியாக வேறு பட்ட தேசிய இனங்களாக்கி விட்டது. இதேவேளை நான்கு மதங்களையுடைய கேரளத்தின் மக்கள் தம்மை மலையாளிகளாகவே கருதிவருவது கவனிக்கத்தக்கது.
மத அடிப்படையிலான வேறுபாடு ஒரே இனத்தவரும் ஒரே மொழி பேசுவோருமான மக்களை இரண்டு வேறு தேசிய இனங்களாக்க முடியுமா என்ற கேள்விக்குரிய பதிலை அதற்குரிய சமுதாய வரலாற்றுப் பின்னணியில் மட்டுமே பெறமுடியும். கண்மூடித்தனமான வாய்ப்பாட் டுப் பிரயோகம் தரக்கூடிய ஆபத்தான விளைவுகளில் ஒன்றைச் சீக்கிய மக்களின் தேசியவாதம் தொடர்பாகக் காணமுடிந்தது. சீக்கிய மக்களுக்கான அரசு ஒன்றை இந்தியக் குடியரசிற்குள் வேண்டிநின்ற சீக்கிய இனத் தலைவர் கம9ள ஜவஹர்லால்நேரு உதாசீனம் செய்தது போக முக்கியமான ஒரு தலைவரான மாஸ்ட்டர் தாரா ஸிங் நேரு ஆட்சியின்போது சிறையிலடைக்கப்பட்டார். (இவ்வாறே காஷ்மீர விடுதலை கேட்ட ஷேக் அப்துல்லா வும் சிறையிலிடப்பட்டார்) மத அடிப்படையிலான அரசு கள் பற்றி நேருவின் அச்சம் இந்தியப் பிரிவினையாலும் மதச்சார்பற்ற அரசாங்கம் பற்றிய அவரது கொள்கையா லும் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும் சீக்கிய மக்கள் தமது மத உரிமைகளைப் பேணவும் நீண்ட வரலாற்றுக் காலத்
தில் விருத்திபெற்ற தமது கலாசாரத் தனித்துவத்தை

Page 14
24
நிலைநிறுத்தவும் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததன் விளைவாகச் சீக்கிய மக்களின் உணர்வுகள் அகாலி தேசிய வாதமாகிக் காலிஸ்தான் விடுதலைக்கான போராட்ட மாக விருத்தி பெற்றது. இதுமட்டுமன்றி இந்தியாவின் ஆதிவாசிகளதும் சிறிய தேசிய இனங்களதும் பிரதேச உரிமைகள் தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டின் போதாமை காரணமாகவே நாகா, மிஸோ மக்கள் ஆயுதமேந்திப் போராட நேரிட்டது. இவ்வாறே, இன்று, மலைவாழ் பூர்வகுடிகள் தமக்கான ஒரு பிரதேசத்துக்காகப் போராடும் தேவை ஏற்பட்டுள் Tெது.
தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் ஆதிவாசிகள், நாடோடிகள் போன்ற சமுதாயப் பிரிவின ரைப் போதிய கணிப்பிலெடுக்கத் தவறியதன் காரணமாக இம்மக்களது உரிமைகள் நாளாந்தம் பறிக்கப்பட்டு வரு கின்றன. இலங்கையின் வேடர் சமுதாயத்தின் பிரச்ச னையோ நாடோடிகளின் நிலைமையோ தேசிய இனப்பிரச் சனையின் ஒரு பகுதியாகவேனும் இதுவரை கருதப் படாமை கவனிக்கத்தக்கது.
சில தேசிய இனங்கள் பற்றியோ சமுதாயப் பிரிவுகள் பற்றியோ அதிகம் அரசியல் அக்கறையின்மைக்கு அவர்கள் இதறி வாழ்வதோ அவர்கட்கு ஒரு தொடர்ச்சியான சொந்தப் பிரதேசமின்மையோ அவர்கள் மிகவும் சிறிய தொகையினர் என்பதோ காரணமாக இருக்கலாம். சில சமுதாயப் பிரிவினர் பற்றிப் பரவலான பகைமை உணர்வு கள் பெரும்பான்மைச் சமுதாயங்கள் மத்தியில் நிலவுவது காரணமாக இருக்கலாம் (உதாரணமாக, முன்னர் யூதர் இன்று நாடோடிகள், குறவர் சில ஆதிவாசிகள்) எவ்வா றாயினும் இம்மக்கள் பிரிவுகட்கெதிரான சமுதாய அநீதி கட்கு அவர்களது தனித்துவம் பற்றியும் உரிமைகள் பற்றி

25
யும் அவர்கள் வாழும் சமுதாய அமைப்புப் போதிய அக்கறை காட்டாமை ஒரு முக்கிய காரணம்.
சில சமுதாயப் பிரிவினரது வாழ்க்கை முறை நவீன சமுதாயத்துடன் ஒட்டி அமையாது போவதும் அவர்களது நலிவுக்குக் காரணமாகலாம். பொதுவான சமுதாய வளர்ச்சிப் போக்குடன் இத்தகைய சிறுபான்மைப் பிரிவி னரை அணைத்துச்செல்லும் அக்கறை முதலாளித்துவ சமு தாயத்துக்கு இல்லை. அது இவர்களை ஒடுக்கி ஒழித்துவிட முனைகிறது அல்லது ஒதுக்கிச் சமுதாயத்திற்கு வெளியே தள்ளிவிடுகிறது. சோஷலிஸம் இவர்களை நவீன சமுதா யத்தினுள் அழைக்க விரும்புகிறது. ஆயினும், இதை நிர்ப் பந்தத்தினாற் சாதிக்க முடியாது. எனவே, ஒவ்வொரு இனப்பிரிவினதும் நலன்கட்கு ஊறின் றிச் சமுதாய நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி நேருகிறது. இக்கார ணத்தாலேயே ஒவ்வொரு சமுதாயப் பிரிவிற்கும் தன் தனித்துவத்தைப் பேணும் உரிமை வழங்கப்படுகிறது. பிற் பட்ட சமுதாயங்களைப் பிற்பட்ட நிலையிலேயே பேணு வது சோஷலிஸத்தின் நோக்கமல்ல. ஆயினும் அவர்களை வலோற்காரமாக நவீனத்துவத்துக்குட் தள்ளிவிடுவது முற்போக்கான காரியமாகி விடாது.
இத்தகைய சிறுபான்மைச் சமுதாயயப்பிரிவுகளைத் தேசிய சிறுபான்மையினர் என்றோ சிறுபான்மைத் தேசிய இனமென்றோ அங்கீகரிப்பதன் மூலம் அவர்களது தனித் துவத்தைப் பேணும் வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் சமுதாய மாற்றங்கள் இந்தத் தனித் துவத்தை இல்லாது செய்யக்கூடும். ஆயினும் தம் தனித் துவம் பற்றிய தெரிவு அவ்வச் சிறுபான்மையினரது கையி லேயே இருக்கவேண்டும்.
ஒரு மக்கள பிரிவு தேசிய இனமாகவோ அடையாளங் காணப்பட்டால் அதற்குச் சுய நிர்ணய உரிமை உண்டு சுய நிர்ணய உரிமை என்றார் பிரிந்து போகும் உரிமை;

Page 15
26
பிரிந்து போகும் உரிமையைப் பிரயோகிக்கும் வசதி இல்லாத ஒரு மக்கள் பிரிவுக்குச் சுய நிர்ணயத்தை அதன் முழுமையான அர்த்தத்தில் அனுபவிக்க முடியாது. இது உண்மை அதனால் அவர்கட்குத் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையே இல்லை என்றாகிவிடுமா? அவர் கள் அக்காரணத்தாற் தேசிய இனமாக இல்லாது போய் விடுவார்களா?
உதாரணத்துக்கு, இலங்கையின் வடக்கிலும் கிழக்கி லும் முஸ்லிம்களும் தமிழர்களும் இல்லையென்று வைத்து கொள்வோம். முழுத் தீவும் சிங்கள மக்களைக் கொண்ட தாக இருந்திருக்கக் கூடிய ஒரு நிலையில், மலையகத்திற் தமிழர்கள் தோட்டங்களிற் குடியேற்றப்படுகிறார்கள். அவர்கள் குடியேறி வாழ்ந்த சூழ்நிலையில் அவர்களது மொழி, மதங்கள், கலாச்சாரம் போன்றயாவுமே பேணப் பட்டு வருகின்றன. அவர்களை நாம் ஒரு தேசிய இனமாக கருத முடியுமா, இல்லையா? அவர்களது உரிமைகள் எந்தளவுக்குப் பேணப்பட முடியும்? ஒரு மலையகத் தமிழ கத்தை நிறுவும் வாய்ப்பு இல்லாததால் அவர்கள் ஒரு தேசமாக அல்லது ஒரு தேசிய அரசாக அமையும் வாய்ப்பு இல்லை. ஆனாலும் அவர்கட்குத் தாம் ஒரு தேசிய இனமாக வாழும் உரிமை, அந்த வாழ்க்கை முறையைப் பேணும் உரிமை அவர்கட்கு இருக் கிறது. பிரிந்து போவது சாத்தியமில்லாத காரணத்தா லேயே அவர்கள் பிரிந்து போவது பற்றிச்பேச முடியாது போகிறது. ஆயினும் அவர்கள் தமது வாழ்கைமுறையைப் பேணக்கூடிய சுயாட்சி அமைப்புக்கட்காகப் போராட முடியும். தமது தேசிய இன உரிமைக்கான சட்ட ரீதியான தும் அரசியலமைப்பில் உள்ளடங்கியதுமான பாதுகாப்புக் களை அவர்கள் பெற முடியும். இங்கே சுய நிர்ணயம் பற்றிய சிலரது வாய்ப்பாட்டு மட்டையைப் பயன்படுத்து வோமானால் இன ஒழிப்புக்கான அங்கீகாரத்தை வழங்க அதிகம் சிரமம் இராது.

27
பிரிந்து போகும் வாய்ப்பில்லாத தேசிய இனங்கள் எத்தனையோ உள்ளன. மலேசியாவின் சீனரும் தமிழரும் அத்தகைய தேசிய இனங்கள் தான். ஃபிஜியில் வாழும் இந்திய வம்சா வழியினரும் அத்தகையோர் தான். இவர்கள் போன்று தென் அமெரிக்காவிற் பல தேசிய இனங்களை அடையாளங் காட்டலாம். அவர்களாற் தேசங்களாகத் தம்மை அமைக்க இயலாமை அவர்களைத் தேசிய இனங்களல்ல என்று ஆக்கி விடாது. பிரிந்து போகும் வாய்ப்பு இல்லாத ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணயம் குறைபாடுடையது. ஆனால் அந்த இனம் தனது இருப்பின் தன்மையை நிர்ணயிக்கும் உரிமையை அதனிடமிருந்து பறித்து விட முடியாது எனவே ஒரு தேசத்தின் சுய நிர்ணய உரிமை பற்றிய கோட்பாட்டை அப்படியே எல்லாத் தேசிய இனங்கட்கும் பிரயோகிக்க முடியாது. நமது இருப்பைப் பேணுவதற்கும் நிர்ணயிப் பதற்குமான அதிகபட்ச உரிமையும் உத்தரவாதங்களும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இருக்க வேண்டும். அவ்வாறான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு தேசிய இனம் தன் இன ஒழிப்பைத் தடுத்து தன் இருப்பைப் பேணவும் தன் எ திாகாலத்தைத் தன் கையிற் கொள்ளவும் போராடுமாறு நிர்ப்பந்திக்கப்படலாம். இதன் மூலம் அதற்கு இல்லாதிருந்த ஒரு தொடர்ச்சியான பிரதேசம் உருவாகவும் நேரலாம். சுயநிர்ணய உரிமையை யாரும் வழங்காமலே அந்த இனம் அதை உருவாக்கித் தனதாக்கிக் கொள்கிறது. எனவே தேசிய இனங்களின் பிரச்சனையைச் ‘தேசம் சமன் தேசிய இனம்', 'சுய நிர்ணயம் சமன் பிரிவினை' போன்ற கொள்கைப்பட்ட கோஷங்களின் மூலம் தீர்க்க முடியாது.
ஒரு தேசிய இனத்தின் இருப்பு, மிரட்டலுக்கு உள்ளாகுமென்றால், அதன் இருப்பை உத்தரவாதம் செய்யக் கூடிய ஒரு அமைப்பையோ அவசியமாயின், சுய

Page 16
28
நிர்ணய உரிமையை அதன் முழுமையான பொருளில், அதற்கு வழங்கக் கூடிய ஒரு தேசிய எல்லையை வகுப் பதற்கும் நாம் ஆதரவு தெரிவிக்கக் கடமைப்பட் டுள்ளோம். ஐரோப்பாவில் தேசிய இன ஒடுக்கலுக்குள் ளான யூதர்கட்கு அவர்கள் வாழ்ந்த நாடுகளில் சுயாட்சிப் பிரதேசங்களை ஏற்படுத்தவேண்டுமென்ற கருத்து மிகவும் நியாயமானது. ஆயினும் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவின் பிரச்சனையை அராபியர்களின் பிரச்சனையாக்கி ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை மறுத்து நிலை நிறுத்தியது. மாக்ஸிய சோஷலிஸவாதிகளால் இதைவிட நல்ல தீர்வுகளைக் காண முடியும்.
ஒரு சமுதாயப் பிரிவு தேசிய இனமா இல்லையா என்ற முடிவே அதன் இருப்புப் பற்றிய வாழ்வா, சாவா?’ என்ற முடிவைத் தீர்மானிக்க முடியாது. ஒரு சமுதாயப் பிரிவு தன்னை ஒரு தனித் தேசிய இனமாகக் கருதும் நிலை ஏறபடுகிறதென்றால், அதன் நன்மை - தீமைகள் பற்றி அந்தச் சமுதாயப் பிரிவு ஏதோ ஒரு வகையில் கணிப்பிட்டே அந்த முடிவுக்கு வருகிறது.
மேற்குறிப்பிட்ட விஷயங்களை மனதிற்கொண்டு இலங்கையின் முஸ்லிம் மக்களது சுய அடையாளம் பற்றிய பிரச்சனைக்கு வருவோம்.
4. முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமா?
மத அடிப்படையில் மட்டுமே தேசிய இனங்கள் அமைவதில்லையெனினும், வரலாற்றுச் சூழ்நிலைகள் குறிப்பிட்ட ஒரு மதத்தினரைத் தம்மைச் சூழவுள்ள சமுதாயத்தினரினின்றும் தெளிவாகவே வேறுபட்ட ஒரு இனப்பிரிவாக மாற்ற இடமுண்டு. இலங்கை முஸ்லிம்

29
களின் பெரும்பாலோரது தாய்மொழி தமிழ். இவர்களின் முன்னோரில் ஒரு பகுதியினரேனும் அராபியராக இருந் திருக்க இடமுண்டு. ஆயினும் இவர்கள் இன அடிப் படையிற் பெருமளவும் தமிழ், சிங்கள இனத்தவருடன் நெருங்கியவர்களே. இலங்கையின் அரசியலும் தமிழ்த் தேசியவாதிகளின் அரசியலும், அதற்கு முன், பிரித் தானியரது பிரித்தாளும் சூழ்ச்சிகளும் இவர்கள் தம்மைச் சோனகர் என்று கருதுவதை ஊக்கியிருக்கக் கூடும். ஆயினும், அவர்களுக்கு “இஸ்லாமியத் தமிழர்' என்று பேரிட்டு, அவர்கள் தமக்கென்று தெரிந்தெடுத்துள்ள சுய அடையாளத்தை மறுப்பது பேரினவாதத்தின் பண்பை Այ6ճ)ւ- Ամ ֆ! .
கேரள முஸ்லிம்கள் தம்மை மலையாளிகளாகக் கருது கிறார்கள். பங்களாதேஷிகள் தம்மை வங்காளிகள் என்பதிற் பெருமைப்படுகிறார்கள். தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழ்த் தேசியவாத அரசியலில் திராவிட இயக்கத்திலும் காட்டி வந்துள்ள ஈடுபாடு கணிசமானது. தமிழக முஸ்லிம்கள், உயர் வர்க்கப் பார்ப்பனர்களைவிட அதிகமாகத், தம்மைத் தமிழர்களாகக் கருதுவோர் எனலாம். அவர்கள் தாம் முஸ்லிம்கள் என்ற சுய அடை யாளத்தை மறுக்காத அதே வேளை தம்மைத் தமிழ்ச் சமுதாயத்தினது, அதாவது தமிழ்த் தேசிய இனத்தினது பகுதியாகவே காண்கின்றனர். இலங்கையின் முஸ்லிம்கள் தம்மைச் சோனகரென்று அழைப்பதற்கும் இஸ்லாமியத் தமிழர் என்ற முத்திரையை ஏற்கத் தயங்குவதற்கும் பல வேறு காரணங்கள் உள்ளன. அவர்கள் தீவின் பல பகுதி களிலும் பரவி வாழ்வதும் நீண்ட காலமாக இலங்கையின் தேசியவாத அரசியலில் சிங்களத் தேசியவாதிகளாலும் தமிழ் தேசியவாதிகளாலும் உதாசீனஞ் செய்யப்பட்ட மையும் இங்கு குறிப்பிடத்தக்க காரணங்கள்.

Page 17
30
மலையகத் தமிழர்களையே ‘வடக்கத்தியான்', தோட் டக்காட்டான்' என்று ஒதுக்கிய ஈழத் தமிழ்த் தேசிய இனம் நெடுங்காலமாகவே மேற்கிலங்கையில் வாழ்ந்த பரதவ மற்றும் மீனவ சாதித் தமிழரைத் தம்மில் ஒரு பகுதியினராகக் கருத மறுத்தது. தமிழ்த் தேசியவாதத் தலைமை யாழ்ப்பான உயர் சாதித் தமிழ் அதிகாரவர் கத்திடமே இருந்து வந்த காரணத்தாற் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியே இருந்து தமிழ் மக்கள் எல்லாரும் (கொழும்பு வாசிகள் தவிர்ந்து) ஒரு படி கீழானவர்களாகவே இந்த வர்க்கத்தினராற் கருதப் பட்டனர். இதன் விளைவாக, ஈழத் தமிழ்த் தேசிய வாதம் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்று படுத்திச் செல்லும் அரசியற் போக்காக விருத்தி பெறுவது சிரமமாயிற்று.
"இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்கள்" என்ற அடிப் படையில் அரசியல் பேசிய முதலாவது அரசியற்கட்சி யான தமிழரசுக் கட்சியும், நடைமுறையில், யாழ்ப்பாண உயர் - நடுத்தர வகுப்புத் தமிழர்களது நலன்களின் அடிப்படையிலேயே பிரச்சனைகளை அணுகியது. நீண்ட காலமாகவே, தமிழ்த் தேசியவாதத் தலைமையின் போக்கு, முஸ்லிம்களது நலன்களை முக்கியப்படுத்தத் தவறிய அனுபவத்தால், முஸ்லிம் மக்கள் மத்தியிற் தமிழ்த் தேசியவாதத் தலைமை பற்றிய சந்தேகங்கள் குறையவில்லை.
சிங்களம் நாட்டின் ஒரே அரச கரும மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்ட போது, தமிழ் அழியப் போகி றது என்று மேடை தோறும் பயமுறுத்திய தமிழரசுக் கட்சியின் தேவை, என்றுமே, தமிழைப் பாதுகாப்பதல்ல. ஆங்கிலம் படித்து அரசாங்க உத்தியோகங்களைப் பிடிக்கும் வாய்ப்பு குறையுமே என்ற ஆதங்கமே மொழிப் பிரச்சனைக்கு ஒரு ஜீவ-மரணப்

31
பிாச்னையின் அந்தஸ்தை வழங்கியது. முஸ்லிம்களது தமிழ்ப் பற்று எந்த வகையிலும் தமிழர்களது தமிழ்ப் பற்றுக்குச் சளைத்ததல்ல. ஆயினும் அவர்களைப் பொறுத்த வரை சிங்கள மொழி அரசகரும மொழியா வதன் மூலம் அவர்கள் அனுபவிக்காத வேலைவாய்ப்புக் களை அவர்கள் இழக்கும் நிலை ஏற்படவுமில்லை, அவர் களது தாய்மொழிக் கல்வி வசதிகள் மறுக்கக்படவுமில்லை. அதைவிடத் தமிழ்-சிங்கள தேசியவாதத் தலைமைகளின் முரண்பாடு, சிங்களப் பேரினவாத அரசுக்கு, முஸ்லிம் களை நடுநிலைப்படுத்தும் அவசியத்தை உணர்த்தியது. நெடுங் காலமாகக் கல்வி வசதிகளிற் பின் தங்கியிருந்த முஸ்லிம்கள், முக்கியமாகக் கிழக்கு மாகாணம் மன்னார் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், புதிய வாய்ப்புக் களைப் பெற்றனர். உண்மையில் அவர்கள் தமிழர்களை விட அதிகமாக எதையும் அனுபவிக்கவில்லை. ஆயினும், அவர்களது கல்வி உத்தியோக வாய்ப்புக்கள் கணிசமாக முன்னேறின. இச் சூழ்நிலையில் சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியல்லாதிகள் தமது நலன்களைப் பெருக்கிக் கொண்ட got fit.
முஸ்லிம் மக்கள் மத்தியில், தாம் முஸ்லிம்கள் என்ற உணர்வும் பின்தங்கிய தமது சமுதாய நலன்களைப் பேணும் அக்கறையும் பரவலாக இருந்த போதும், ஒரு முஸ்லிம் தேசியவாத அரசியல் முனைப்பு இருக்கவில்லை. முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற் பட்டவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் போலன்றி, ஆளுங்கட்சியி லும் எதிர்கட்சியிலும் தமிழரசுக் கட்சியிலுங் கூட இருந் தார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களது தனித்துவத்தை வலியுறுத்திய போதும், அவர்களை அதையே, தமது அரசியலின் மையமாக்கி ஒரு சோனக அரசியற் கட்சியையோ தேசியவாத இயக்கத்தையோ கட்டியெழுப்ப முனையவில்லை. அவர்களிடம் முஸ்லிம் கள் என்ற இன உணர்வு இருந்தது. ஆயினும், தாம் ஒரு

Page 18
32
தேசிய இனமென்று வலியுறுத்திச் செயற்படும் நிர்ப்பந்தம் அவர்கட்கு ஏற்படவில்லை.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் முஸ்லிம்கள் முதலில் சிறிது பாதிக்கப் பட்டனர். 1977க் குப் பின் நடந்த குடியேற்றத் திட்டங்களில் முஸ்லிம்கள் மீதான பாதிப்பு அதிகமாயிற்று. அவர்களது வருவாய்க் குரிய தொழில்கள் பாதிக்கப்பட்டன. 1970களின் நடுப் பகுதியிலிருந்து நகரத்து முஸ்லிம் வியாபாரிகளுள் கண்ட முன்னேற்றங்களும் மத்திய கிழக்கின் வேலைவாய்ப்புக் களால் முஸ்லிம்களுக்குக் கிட்டிய பொருளாதார வசதி களும் (தமிழரும் சிங்களவரும் அந்த வேலைவாய்ப்பின் நலன்களை அனுபவித்த போதிலும்) சிங்களப் பேரின வாதிகட்கு முஸ்லிம்கள் மீதான குரோதத்தை வளர்த்தன.
சிங்சளப் பேரினவாதத்திற்கு முஸ்லிம்கள் முகங் கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையிலேயே தமிழ்மக்கள் மீதான பேரினவாத இன ஒடுக்கல் தன் உச்சத்தை நோக்கி விரைந்தது. 1377, 1983ம் ஆண்டுகளின் தமிழர் விரோத வன்முறை தமிழர் மீது முஸ்லிம்களின் அனுதாபத்தைச் சம்பாதித்தது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திர தமிழீழத் திற்கான விடுதலைப் போராட்ட இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்தனர். ஆயினும் தமிழ்த் தேசிய வாத மரபில் வந்த விடுதலை இயக்கங்கள் முஸ்லிம்களது அபிலாட்சைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.
முஸ்லிம்களும் மலையகத்தமிழரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நிபந்தனையின்றித் தமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்ற விதமா கவே தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் கருதின. விடுதலை இயக்கங்களுடன் முரண்பட்ட தமிழர்களைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தமக்கு வழங்கிக் கொண்ட இயக்க உறுப்

33
பினர்கள் தமது தலைமைகளின் அங்கீகாரத்துடன் முஸ்லிம்களையும் தண்டிக்கத் தலைப்பட்டனர். இது எத்தகைய பாரதூரமான விளைவுகளைத் தருமென்ற ஞானம் இவர்கட்கு இருந்திருக்க முடியாது.
முஸ்லிம்களின் எண்ணங்களையோ நலன்களையோ கணிப்பிலெடுக்காமல், அவர்களைத் தமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தரக் கடமைப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகக் கருதிய இயக்கங்கள், முஸ்லிம்களின் மனக்கசப்பைச் சம்பாதித்தன. ஆயினும் பெருவாரியான முஸ்லிம்களது அனுதாபம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பிலேயே இருந்து வந்தது.
உயர் வர்க்கத் தமிழர்களைக் கொண்டே தனது இன வாத அரசியலை நடத்தக்கூடிய நிலையிலிருந்த ஒரு அர சாங்கத்துக்கு விடுதலை இயக்கங்களுடன் பகைத்துக் கொண்ட முஸ்லிம்களிடையே ஆதரவாளர்களைத் தேடு வது சிரமமாக இருக்கவில்லை. தமிழர்-முஸ்லிம்கள் மோதலை ஊக்குவிக்கு முகமாகச் சில முஸ்லிம்கள் அர சாங்கத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டனர். இதே வேளை பல வேறு விடுதலை இயக்கங்களும் முஸ்லிம் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களும் 1987-89 கால இடையில் இந்திய "அமைதி காக்கும் படையினரது துணையுடனும் தூண்டுதலுடனும் முஸ்லிம்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதல்களும் முஸ்லிம்களை விடுதலை இயக் கங்கள் மீதும் தமிழ்த் தேசியவாதத்தின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்தன.
முஸ்லிம்களை எவ்வாறு தமக்குச் சார்பாக வென் றெடுப்பதென்ற அறிவு போதாமையாலோ அது பற்றிய அக்கறை போதாமையாலோ, கடந்த சில ஆண்டுகளாக, முஸ்லிம்கட்கெதிரான பல நடவடிக்கைகள் மேற்கொள்

Page 19
34
ளப்பட்டுள்ளன. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டமையும் பொலொன் நறுவ மாவட்ட படு கொலைகளும் மிகக் கொடிய உதாரணங்கள். முஸ்லிம் கள் படுகொலைசெய்யப்பட்ட சூழ்நிலைகள் பற்றிய தெளிவீனங்கன் இருந்த போதும் இக்கொலைகளை விடுத லைப்புலிகளே செய்ததாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையைப்பெறக் கூடிய நிலையில் விடுதலைப் புலிகள் இன்று இல்லை என்பதே மிக முக்கிய மான விஷயம். எந்தவொரு தமிழ்த் தேசியவாத இயக்க மும் முஸ்லிம்களது நம்பிக்கையைப் பெற முடியாதளவுக்கு முஸ்லிம் மக்களது உணர்வுகள் வருத்தப்பட்டுள்ளன. ஆயினும் முஸ்லிம்களும் தமிழர்களும் இதுவரை பரஸ்பர எதிரிகளாக மாறவில்லை என்பது ஒரு நம்பிக்கையூட்டும் அம்சம். முஸ்லிம் கொலைகாரர்களிடமிருந்து தமிழரைக் காக்க முஸ்லிம்கள் துணிந்து நின்ற சம்பவங்களும் தமிழ்க் கொலைகாரர்களிடமிருந்து முஸ்லிம்களைக் காக்கத் தமிழர் முன்வந்த நிகழ்ச்சிகளும் வடக்கிலிருந்து முஸ்லிம் கள் விரட்டப்பட்டபோது தமிழ் மக்கள் காட்டிய அனு தாபமும் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் இடையிலான எதிர்கால நல்லுறவு பற்றியும் நம்பிக்கையூட்டும் விஷயங்
956.
எவ்வாறாயினும் முஸ்லிம்களிடையே தமது சுய அடையாளம் பற்றிய முன்னைய நிலைப்பாடு மிகவும் உறுதிப்பெற்றுள்ளது. அவர்கள் தமது மொழியை நிரா கரித்து இஸ்லாம் மட்டுமே தமது சுய அடையாளம் என்ற நோக்கில் என்றுமே செயற்படவில்லை. ஆயினும் அவர் கட்கெதிரான வன்முறையும் அவர்களது நலன்களையும் அவர்களது தனித்துவத்தையும் நிராகரிக்கும் அரசியலும் அவர்கள் மத்தியில் இஸ்லாமிய முதனிலை வாதப்போக் குக்களின் வளர்ச்சிக்கு வித்திடமுடியும். 'ஜிஹாத்'போன்ற இயக்கங்கள் இன்னமும் வளராமைக்கும் அரசாங்கத்தின்

35
எடுபிடிகள் சிலரது கையாட்களை விட மற்ற முஸ்லிம்கள் மத்தியில் தமிழர் விரோத உணர்வு இல்லாமையும் இன்ன மும் தமிழ், முஸ்லிம் சமுதாயங்களிடையே உள்ள நல்லுற வைக் காட்டுகின்றன. இது இன்னும் எவ்வளவு முஸ்லிம் விரோத அரசியலுக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்கு உரியது.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினர் தமிழகத்து முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர் என்றே நெடுங்கால மாகக் குறிப்பிட்டு வந்துள்ளனர். அதே பதத்தை இலங்கை யிற் பிரயோகிக்கும் போது அது முஸ்லிம்களது சுய அடையாளத்தை மறுக்க முனைகிறது. ஏனெனில் முஸ்லிம் மக்களது அரசியல் தமிழ்த் தேசியவாத அரசியலினின்று வேறுபட்டே இருந்துள்ளது. முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாகக் கருதுவது, அவர்கட்கும் பேரின வாதத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய சகல தமிழ் பேசும் மக்களுக்கும் நல்லதா இல்லையா என்பது ஒரு கேள்வி, அவர் கட்கு அவ்வாறு கருதும் உரிமை உண்டா என்பது இன்னொரு கேள்வி. முஸ்லிம்கள் தம்மைத் தனியொரு தேசிய இனமாகக் கருதுவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. இது அவர்களது நலன்களைத் தமிழ் மக்களது நலன்களினின்று பிரித்து நோக்கத் தூண்ட வேண்டிய தில்லை. முஸ்லிம்கள் தமிழர் மத்தியிலோ சிங்களவர் மத்தியிலோ வாழும் தேவை இருப்பதனால் எந்தவிதமான அரசியற் தீர்வும் அவர்கட்குரிய ஒரு தனியான பிரதே சத்தை வழங்க மாட்டாது என்ற வாதம், அவர்கள் ஒரு தேசிய இனம் என்பதை மறுக்கப் போதாது.
இலங்கையின் தேசிய இனட்பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் எந்த வகையான சுயாட்சியோ பிரிவினையோ முஸ்லிம்களது தனித்துவத்தை மறுக்குமாயின் அது நிலைக் கக் கூடிய தீர்வாக அமையாது. முஸ்லிம்கள் தாமும்

Page 20
36
தமிழினத்தின் ஒரு பகுதியினர் என்று கருதக் கூடிய ஒரு சூழ்நிலையைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பினால் அதைச் சாத்தியமாக்குவதில் அவர்களுக்கு முக்கிய பொறுப்புண்டு. சுயநிர்ணய உரிமை தேசிய இனங்கள் ஒன்றாக வாழ்வதை எவ்வாறு இயலுமாக்குகிறதோ, அவ்வாறே முஸ்லிம்களின் தனித்துவத்தை மதித்து அவர் களைத் தமிழினத்தின் ஒரு பகுதியென்று நிர்ப்பந்திக்காது விடுவது அவர்களைப் பிற தமிழ்ப்பேசும் மக்களுடன் மேலும் ஐக்கியப்படுத்தும்.
எந்த ஒரு தனித்துவமான சமுதாயப்பிரிவுக்கும் அதன் தனித்துவத்தை மறுத்து அது தன்னை ஒரு தேசிய இனமா கக் கருதும் உரிமையை நிராகரிப்பவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவது நேர்மைக் குறைவாகவே தெரி யும். முஸ்லிம்கள் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருது வதற்கான அரசியற் சூழ்நிலையை உருவாக்குவதிற் தமிழ்த் தேசியவாதத் தலைமை இதுவரை ஆற்றிய பங்கு பெரியது. முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசிய இனத்தின் பகுதி யாக அல்லது சிங்களத் தேசிய இனத்தின் பகுதியாக மட்டுமே இருக்க உரிமையுள்ளவர்கள் என்ற வாதம், எத்தனை மாக்ஸிய மேற்கோள்களால் அலங்கரிக்கப் பட்டாலும், தன்னுட் பொதிந்துள்ள ஒரு பேரினவாத இயல்பை மறைக்கப் போதாது
முஸ்லிம் மக்களது இருப்புப் பற்றிய முடிவு, அவர் கள் மிரட்டப்படும் போது, அதைப் பேண, அவர் கள் தமது சுய அடையாளத்தை வலியுறுத்துவதும் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருதவேண்டுவதும் நியாயமானது. அதன் மூலமே அவர்கள் தமது சுய அடையாளத்தை யும் சமுதாய நலன்களையும் பேண முடியுமாயின் அந்த உரிமை அவர்களுடையது.

2
முஸ்லிம்களின் தலைமையும் தேசிய இன உரிமையும்
1) இலங்கையில் முஸ்லிம் மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரவி வாழ்ந்த காரணத்தால் அவர்களைத் தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தைப் பற்றி இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டேன். அவர்கள் தமிழைப் பேசுகிற காரணத்தால் அவர்களைத் தமிழினத் தின் ஒரு பகுதியாகக் கருதமுடியுமா முடியாதா என்பதை விட, முஸ்லிமகள் அவ்வாறு தம்மைக் கருத விரும்புகிறார் களா என்பதும் அவ்வாறு கருதுவதற்கு வாய்ப்பான நிலை மைகள் உள்ளனவா என்பதும் முக்கியமானவை. முஸ்லிம் களின் தனித்துவம் அவர்கள் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருதும் அளவுக்கு அவர்களை நிர்ப்பந்திக்குமாயின் அதற் கான அரசியற் காரணங்களையும் சமுதாயச்சூழலையும் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனிக்கவேண்டும்.
தேசிய வாதத்தின் முற்போக்கான அம்சங்கள் அதன் பிற்போக்கான அம்சங்களுடன் இணைந்தே வருகின்றன. கொலனித்துவ எதிர்ப்பை மையமாகக்கொண்டு எழுச்சி பெற்ற சிங்களத் தேசியவாதம் பிற்காலத்தின் சிங்கள
(p-3

Page 21
38
பெளத்த பேரினவாதத்தின் விதைகளையும் தன்னுட் பொதித்திருந்தது. விதேசிய எதிர்ப்புணர்வு, சிங்களை பெளத்த நலன்கட்குக் கேடானதாகக் கண்டவற்றுட் கிறிஸ்த்துவ மதத்தின் ஆதிக்கமும் ஒன்று. கொலனித் துவமும் கிறிஸ்துவ திருச்சபை அதிகார பீடங்களும் கை கோத்து நின்ற சூழலில் அத்தகைய பகைமை இயல்பான தேயாயினும் ஒருபுறங் கிறிஸ்துவ அதிகார பீடத்திற்கும் சுரண்டும் வர்க்கங்கட்கும் மறுபுறம் ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்குமிடையிலான வேறு பாடடைச் சிங்கள-பெளத்த தேசியவாதிகளாற் காண முடியவில்லை.
இத்தேசியவாதத்தின் தலைமை சிங்கள கொவிகம எனப்படும் வேளாள சாதியினரின் கையில் மட்டுமே இருக்கவில்லை. வணிகத் துறையிலும் உத்தியோகங் களிலும் உயர்தொழில்களிலும் மேலேறக் கூடிய நிலையில் இருந்த பிற சிங்களச் சாதிப்பிரிவினரும் சிங்கள-பெளத்தத் தின் எழுச்சிக்குத் துணை நின்றார்கள். இந்த நூற்றாண் டின் முற்பகுதியில் வியாபாரிகளிடையிலான போட்டியின் அடிப்படையிலேயே முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. இதைச் சிங்களமுஸ்லிம் கலவரம் என அழைத்தாலும், இதன் காரண கர்த்தாக்கள் சிங்களப் பேரினவாதிகளே. பிரித்தாளும் தந்திரத்திற் கைதேர்ந்த பிரித்தானிய கொலனித்துவம், இந்த மோதல் ஈற்றிற் தமது அதிகாரத்திற்கு எதிரான எழுச்சிக்கு வழிகோலும் என்று அஞ்சியதாலே அதை அடக்க முற்பட்டது. அதற்குத் தலைமை தாங்கிய சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் சிறையிலிடப் பட்டனர். இத்தருணத்திற் சிங்களத் தலைவர்கட்குச் சார் பாகப் பிரித்தானிய ஆட்சியிடம் பரிந்துரை செய்யத் தமிழ் உயர் குடிகளின் பிரதிநிதிகள் முன்வந்து அவர்களை விடுவிப்பதில் வெற்றியுங் கண்டனர்.

39
வடக்குக் கிழக்கின் தமிழ்த்தலைவர்கள், முக்கியமாக யாழ் மாவட்டத்தின் உயர்சாதி அதிகார வர்க்கத்தினர், ஆங்கிலேய ஆட்சியாளர் தயவிற் தம்மை மேம்படுத்திக் கொள்ள முனைந்தவர்களின் பிரதிநிதிகளே. தம் சாதி, வர்க்கம், பிரதேசம் தொடர்பான நலன்களையும் சமுதா யத்தின் மீதான தமது ஆதிக்கத்தையும் வலியுறுத்தும் நோக்கில் அவர்கள் வளர்த்துக்கொண்ட உறவுகள் தவிர்க்கமுடியாமல் ஆங்கிலேயருக்கு விசுவாசமாகவும் சிங்கள உயர் குடிகளின் தலைமையுடன் நெருக்கமாகவும் அமைந்தன.
தமிழ் உயர் குடிகளின் வர்க்க நலன்கள் சிங்கள உயர் சாதியினருடன் அவர்கட்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது வியப்புக்குரியதில்லை. சாதிய ஆதிக்கத்தின் முன் மொழி, சமயம் என்ற பொதுத்தன்மைகளே பலவீனமாகின. வடமேல் மாகாணத் தமிழரும், வன்னி மட்டக்களப்புத் தமிழரும் தரங்குறைந்தவர்களாகக் கருதப்பட்டமையும் மலையகத் தமிழர் இழிவாகவே கொள்ளப்பட்டமையும் இன்னமும் முற்றாக நீங்கிவிடவில்லை. இத்தகைய உயர் குடிகளும் அதன் பிரதிநிதிகளும் தம் சாதி அமைப்பிற்குள் கட்டுப்படாத முஸ்லிம்களை அயலாராகவே கருதியதில் வியப்பில்லை.
மலையகத்தமிழரது வாக்குரிமையும் குடியுரிமையும் பாதிக்கப்பட்ட பின்னரே தமிழ்த் தலைமையின் ஒருபகுதி தமிழினம். தமிழ்பேசும் மக்கள் என்ற கருத்துக்களை முன் வைத்து முஸ்லிம்களையும், மலையகத் தமிழர்களையும் தனித்தனியான இனங்களாகக் காணும் தேவையை மறுதலிக்குமளவுக்குத் தமிழ்த்தலைமையால் தமிழ்ப்பேசும் மக்களை ஐக்கியப்படுத்த முடியவில்லை. தமிழ்ம் பேசும் மக்கள் என்றபேரில் அரசியல் நடத்திய தமிழ்த்தேசியவாத தலைமை சாதியத்தையே எதிர்த்து முறியடிக்க

Page 22
40
திராணியற்று இருந்தபோது,முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் வடக்குக்கிழக்கு மாகாணங்களின் தமிழருடன் எவ்வாறு ஐக்கியப்படுத்தியிருக்க முடியும்? தன் அரசியற் பாரம்பரியத்தை இத்தலைமையால் எளிதாக நிராகரிக்க முடியவில்லை. சிங்களப்பேரினவாதம் ஏற்படுத்திய நெருக்கடிகளே தமிழ்ப்பேசும் மக்கட்பிரிவு களிடையின் போராட்ட ஐக்கியத்துக்கு வாய்ப்பளித்தன. முஸ்லிம்களின் அரசியற் தலைமை, பிற தமிழ்ப்பேசும் மக்களினது தலைமைகளினின்று வேறுபட்டும் தனித்தும் இருந்தமைக்குப் பிரித்தானியரது பிரித்தாளும் தந்திரங் களைவிடச், சாதிய அடிப்படையிலான தமிழ்ச் சமுதாய அமைப்பும் ஒரு காரணம். 1956 வரை, மட்டக்களப்புத் தமிழர், கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் தமது தளமாகக் கொண்ட தமிழ்த் தேசிய வாதத் தலைமையை ஏற்க முற்றாகவே மறுத்தமையை நாம கருத்திற்கொண் டால் முஸ்லிமகள் அததலைமையை விளங்கிக் மகாளவது எளிது.
2. பிரித்தானிய ஆட்சியின்கீழ் இலங்கையின் முஸ்லிம்கள் இலங்கை சோனகரென்றும் இந்திய சோனக ரென்றும் வெவ்வேறாக அடையாளங்காணப்பட்டனர். டச்சுக்காரரின் ஆட்சியின் போது, இன்றைய இந்தோ னேசியாவின் ஜாவாத்தீவைச் சேர்ந்த மக்கள் இலங்கைக் குக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றுமுதல் இன்னுமும் மலாயர் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களைவிடச்சிறிய தொகைகளில் தென்னாசியாவின் பிற பகுதிகளினின்று வந்த முஸ்லிம்களும் உள்ளனர். முதலாவது அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் மிகச் சிறுபான்மையான இனங்களின் பிரதிநிதிகளை நியமிக்கும் நோக்குடன் ஆறு பாராளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப் பட்டன. பறங்கயரும் மலாயரும் இவ்வாறு நியமிக்கப் பட்டனர்.இந்த நடைமுறை பின்னா கை வடப்பட்டது.

41
மலாயரும் இலங்கைச் சோனகரும் தமக்கென வேறு பட்ட சங்கங்களை அமைத்துக் கொண்டனர். மலாயரிற் கணிசமானோர் தமிழ்ப் பேசுவோராக இருந்ததும் குறிப் பிடத்தக்கது. (இலங்கை வானொலியில் தமிழ் ஒலி பரப்பிலேயே மலாயருக்கான நிகழ்ச்சிகள் அமைந்தமை யும் கவனத்துக்குரியது.) எனினும் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களான மலாய் இனத்தவர் இலங்கையின் இனவாத அரசியல் எழுச்சியின் பின் அரசியல் ரீதியாக மேலும் பலவீனமடைந்து பின்தங்கிய ஒரு சமுதாய மாகினர்.
முஸ்லிம்களில் இலங்கைச்சோனகரே எண்ணிக்கையி லும் அரசியல், சமூகச் செயற்பட்டிலும் முக்கியமாக இருந்தனர். வடக்கில், முக்கியமாக, மன்னார் மாவட் டத்திலும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்திலும் இன்றைய அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்திலும் வடமேற்கிற் புத்தளப் பகுதியிலும் விவசாயம் மற்றும் கைத்தொழில்களில் ஈடு பட்ட முஸ்லிம்களைப் போலன்றி, இலங்கையின் பிற பகுதிகளிற் பரவியிருந்த முஸ்லிம்கள் வியாபாரத்தில் அதி அளவில் ஈடுபட்டிருந்தனர். மாநகரங்களின் கூலி உழைப் பாளர்களாகவும் முஸ்லிம்கள் இருந்தனர். பல்வேறு வர லாற்றுக்காரணங்களால் வடக்கு கிழக்கின் தமிழரையும் சிங்களவரையும் விடக்குறைவான கல்வி வாய்ப்பு களையே பெற்றிருந்த முஸ்லிம்களின் அரசியற் தலைமை, அவர்களிடையே இருந்த செல்வந்தர்களான வியாபாரி களதும் நிலவுடைமையாளர்களதும் கையிலேயே
இருந்தது.
வடக்குக் கிழக்கின் தமிழ்த்தலைமைகள் எவ்வாறு தமது உயர் வகுப்பினரது நலன்களைப் பேணத்தமிழ்த் தேசிய வாத அரசியலைப்பயன்படுத்தினரோ அவ்வாறே முஸ்லிம்

Page 23
42
களின் தலைமையும் செயற்பட்டது. பிரித்தானியரது ஆட்சியின்போதும் இலங்கையின் சுதந்திரத்தையொட்டி யும் பட்டம் பதவிக்காகக் காட்டிக்கொடுத்தும் கட்சிமாறி யும் செயற்பட்ட தமிழ்ப் பிரமுகர்களைப் போலவே இந்த முஸ்லிம் தலைவர்களும் செயற்பட்டனர்.
தமிழ்பேசும் இனம் என்ற பேரிற் தன் அரசியலைத் தொடங்கிய தமிழரசுக் கட்சியின் கீழேயே முதற் தடவை யாகத் தமிழ்தேசியவாத அரசியற் தலைமையை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்றனர். ஆயினும் தமிழரசுக் கட்சி எவ்வளவு தூரத்துக்கு முஸ்லிம் மக்களது நலன்களைப் பேணும் என்ற நியாயமான அச்சம் முஸ்லிம் மக்களி டையே இருந்தது. தமிழரசுக் கட்சியினர் தமிழர் பெரும் பான்மையாக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த ஒரு சமஷ்டி அரசைக்கோரியபோது, அது பிற மாகாணங்களில் வாழ்ந்த தமிழ்ப்பேசும் மக்களது, குறிப் பாக மலையகத்தமிழரதும் முஸ்லிம்களதும் நலன்களைப் பற்றித் தீர ஆராயவில்லை. தமிழரசுக்கட்சி மலையக, முஸ்லிம் மக்களுக்குத் தலைமைதாங்க விரும்பிய அளவுக்கு அம்மக்களை ஒரு சமமான பங்காளிகளாகக் கொண்ட ஒரு தலைமையை அமைக்கத்தக்கதாக இருக்கவில்லை. அக்கட்சியின் வேலைமுறைகளும் போராட்டங்களும் வடக்குக் கிழக்கு மாகாணத்தமிழரில் ஒரு பகுதியினரது நலன்களையே பேணுகிற நோக்கில் அமைந்தமையும் முஸ்லிம் மக்களின் சார்பில் அவர்களது நலன்களைப் பேணும் கோரிக்கைகளை வலியுறுத்தத்தவறியமையும் முஸ்லிம் மக்களிடையே தமிழரசுக்கட்சிக்குச் செல்வாக்கு வளரத்தடையாகின.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும் ஒப்பிடத் தக்களவிற் தமிழர்களும் வாழும் பாராளுமன்றத் தேர்தற் தொகுதிகளிற், தான் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக

43
முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளர்களைத் தெரிந்து தமிழரசுக்கட்சி நியமனஞ்செய்தது. தமிழரசுக் கட்சியின் பலவீனத்தை அறிந்த சில சந்தர்ப்பவாதிகள், தேர்தலில் வென்ற பிறகு, கட்சி மாறினர். இது முஸ்லிம் பற்றிய ஒரு தவறான கருத்தைத் தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியது. தமிழ்த்தேசியவாதத் தலைமையைப்பலவீனப்படுத்தவும் தமிழருக்கெதிரான இன ஒடுக்கல் அரசியலில் முஸ்லிம் களை நடுநிலைப்படுத்தவும், சிங்களப் பேரினவாத அரசு கள் இந்தத் தலைவர்கட்குப் பதவிகளையும் சலுகைகளை யும் வழங்கினர். யூ. என். பி 1956 இல் தோற்கடிக்கப் பட்டதன்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பின் தங்கிய சமுதாயங்கட்குச் சில நன்மைகளை வழங்கின. இதுவும் அரசாங்கப் பதவிகளும் அரசாங்க ஆதரவும் இந்த அரசியல் வாதிகளது அரசியற் செல்வாக்கைத் தக்க வைக்க உதவின. இவர்களது அரசியற் சூதாட்டத்தால் அதிக நன்மை அடைந்தோர் வசதிபடைத்த முஸ்லிம் களே.
உண்மையிற் தமிழ்த்தலைவர்கள் முன்னைய காலங் களில் நடந்துகொண்ட விதமாகவே, 1956க்குப் பின்னைய காலத்தின் கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் நடந் தனர். தென்னிலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்சிச்சார்புகள் கூடிய உறுதியுடன் இருந்தன. இடதுசாரி அரசியலிலும் முற்போக்கு இலக்கியத் துறையிலும் பங்கு பற்றிய முஸ்லிம்கள் கிழக்கிலங்கையின் முஸ்லிம் பாராளு மன்ற அரசியல்வாதிகளினின்று முற்றிலும் வேறுபட்டவர் களாகவும் உறுதியான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலங்கையிற் தமிழரசுக் கட்சித் தலைமைக்கும் கட்சி மாறிய முஸ்லிம் அரசியல்வாதிகட்குமிடையிலான முரண்பாட்டின் விளைவாக இடையிடையே தமிழ்

Page 24
44
முஸ்லிம் மோதல்களும் ஏற்பட்டன. அத்துடன் தமிழ், முஸ்லிம் நிலவுடைமையாளர்கட்கிடையே இருந்த மனக் கசப்பும் இத்தகைய மோதல்களை ஊக்குவித்தன. எவ்வா றாயினும், சிங்களப் பேரினவாதமும் திட்டமிட்ட குடி யேற்றமும் தொடர்ந்துவந்த சூழ்நிலையிற் தமிழரும் முஸ்லிம்களும் சிங்களப் பேரினவாதத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையை உணர்ந்தனர். மட்டக்களப்புப் பகுதிக்கு வெளியே தமிழரும் முஸ்லிம்களும் சேர்த்து வாழ்ந்த பகுதிகளிற் மிகவுஞ் சுமுகமான உறவே நிலவியது"
தமிழ்த் தேசியவாதத் தலைமை, முஸ்லிம் மக்களைக் கலந்தாலோசியாது அவர்கட்கும் சேர்த்துத் தீர்வுகளைத் தேடும் பாவனையிற் செயற்பட்டதன் மூலம் முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்த உதவியபோதிலும், 1961ம் ஆண்டின் சத்தியாக்கிரகம் முஸ்லிம் மக்களது ஆதரவைப் பெற்றது. இவ்வாறே, 1958, 1977, 1983ம் ஆண்டுகளின் வெறியாட்டங்களின் போதும், முஸ்லிம்கள் தமிழர்கட்கு மிகவும் அனுதாபமாக வும் ஆதரவாகவுமே நடந்தனர்.
3) 1977க்குப் பிறகு யூ.என்.பி. அரசாங்கத்தின் பேரினவாதம் கிழக்கு மாகாணத்தைத் துரிதமாகச் சிங்கள மயப்படுத்தும் முயற்சியில் முனைப்புடன் இறங்கியபோது முஸ்லிம்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டின் தமிழர் விரோத வன்முறையையடுத்துத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை முற்றாக நிராக ரிக்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எழுச்சி பெற்றபோது அவற்றுக்கு முஸ்லிம் மக்களது பரவலான அனுதாபம் இருந்ததோடு சில முஸ்லிம் இளைஞர்களும் அவற்றில் இணைந்தனர். இக்கால கட்டத்திலேயே, வசதி படைத்த முஸ்லிம்களின் சந்தர்ப்பவாத அரசியலை நிரா கரிக்கும் முஸ்லிம் தேசியவாத வெகுஜன சக்திகளும்

45
தோன்றின. தமிழர் விடுதலை இயக்கங்கள் தமது அரசியற் தீர்வுகளையும் நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள் நிபந்த னையின்றி ஆதரிக்கவேண்டும் என எதிர்பார்த்ததோடு தம்மிடையே இருந்த இயக்க முரண்பாடுகளைத் தீர்க்கக் கையாண் ட வன்முறையைத் தமக்கு விரோதமான அல்லது த ரோகமான நபர்கள் எனக்கருதிய முஸ்லிம்கள் மீதும் பிரயோகித்ததன் விளைவாக, முஸ்லிம்களின் நல்லெண் ணத்தை இழந்தனர்.
1987க்கும் 1989க்கும் இடையில் இந்திய இராணுவம் வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் இந்திய ஆதரவிற் செயற்பட்ட சில முக்கிய விடுதலை இயக்கங்கள் இந்தியப் படையினரின் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது தொடுத்த தாக்குதல் தமிழ்-முஸ்லிம் உறவுக்கு ஒரு அடிய7 யிற்று. இந்தியப் படைகளின் வெளியேற்றத்தின் பின்பு விடுதலைப்புலிகட்கும் முஸ்லிம்கட்குமிடையில் நல்லுறவுக்கான சூழ்நிலை இருந்தது. ஆயினும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப் பட்ட காத்தான்குடி பள்ளிவாசற் படுகொலை உட்பட அண்மையில் நடந்த பொலன்னறுவ மாவட்டப் படுகொலைகள் வரையிலான தாக்குதல்கள், முஸ்லிம் களிடையே தமிழர் தலைமை பற்றிய சந்தேகங்களை வலிமைப்படுத்தியுள்ளன, முஸ்லிம்கள் வடக்கினின்று விரட்டப்பட்டமையை முஸ்லிம் சமுதாயம் மறப்பது கடினம்.
மேற்குறிப்பிட்டவற்றின் காரணமாக சிங்களப்பேரின வாதத்துடன் கூட்டுச் சேர்ந்து தம் சுயலாபத்தைப் பேண முனையும் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களை ஏமாற் றும் வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. எவ்வாறாயி னும் இன்றைய முஸ்லிம் சமுதாயம் முன்னைவிட அதிகம் விழிப்புணர்வுடையது. பிற்போக்குவாதிகளையும் சந்தர்ப்ப வாதிகளையும் எ தி ர் த் து க் குரல்

Page 25
46
கொடுக்கும் சக்திகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றன. தமது மதத்தையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் தமது தனித்துவத்தையும் உயர்வாகக் கருதும் முஸ்லிம்களை மதத்தின் பேரால் ஏமாற்ற முனையும் அரசியல்வாதிகளையும் சுரண்டல் காரர்களையும் அம்மக்கள் அடையாளங்காண வல்லவர் கள். முஸ்லிம்களது அடிப்படை உரிமைகளையும் தனித் துவத்தையும் சுயநிர்ணயத்தையும் தமிழ்த் தலைமைகள் மதித்து நடப்பதன் மூலமே, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள நல்ல சக்திகளை வளர்த்து இனஒடுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது ஆதரவைப் பெறமுடியும். அதேவேளை, மத அடிப்படையிற் தம்மை ஒரு தேசிய இனமாகக்கருத இலங்கையின் வேறுபட்ட முஸ்லிம் மக்களும் விரும்பினால், அக்கருத்து மதிக்கப்பட்டு, அதன் அடிப்படையிற் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கான ஆலோசனைகள் வரவேற்கப்பட வேண்டும்.
4) முஸ்லிம் மக்களின் சுயநிர்ணயம் பற்றிய பிரச்சனை கள் மேலும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் முஸ்லிம் கள் நாட்டின் சகல பகுதிகளிலும் வாழ்ந்தாலும் அவர் களின் சனத்தொகைச்செறிவு வேறுபடுகிறது. அவர் கட் குரிய ஒரு தொடர்ச்சியான நிலப்பிரசேத்தை வரையறுக்க இயலாமை காரணமாக அவர்கள் இன்னொரு தேசிய இனத்தினர் மத்தியில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் அவர் களது தேசிய இன உரிமைகட்கும் வதிவிட உரிமை உட் பட பிற அடிப்படை உரிமைகட்கும் தடையாகக் கூடிய அபாயத்தை வடக்கினின்றும் வெளியேற்றப்பட்டமை எடுத்துக்காட்டியுள்ளது. எனவே முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமென்ற அடிப்படையில் அவர்களது இருப்பை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய உத்தரவாதத்தைத் தரவல்ல தீர்வுகட்காக முற்போக்குச் சக்திகள் முன்னின்று போராட வேண்டும்.

47
சலுகைகளைப் பொறுக்கித் தம் தனிப்பட்ட வசதி களைப் பெருக்கும் பழைய தலைமை சோனகர், இஸ்லாம் என்ற பேர்களில் பரந்துபட்ட முஸ்லிம் மக்களது, குறிப் பாகத் தொழிலாளர், கூலி விவசாயிகள், ஏழை விவசாயி கள் போன்ற பகுதியினரது நலன்களைத் தொடர்ந்து அலட்சியம் செய்து வந்தது. இன்றைய டோராட்டச் சூழலில் தலைதூக்கியுள்ள சில புதிய சக்திகள் மத்தியிலும் வெறுமனே மத அடிப்படையில் மட்டுமே முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சனையைப் பார்க்கும் தன்மையும் ஒடுக்கப் பட்ட பிற தேசிய இனப் பிரிவுகளினின்று முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் முனைப்பும் உள்ளன. இத்தகைய சக்திகளிற் சில ஏற்கனவே இனஒடுக்கல் ஆட்சியின் கைப் பாவைகளாகி விட்டன. இவ்வாறான தவறுகட்குத் தமிழ்த் தேசியவாத சக்திகளின் நடத்தையும் பங்களித் துள்ளது உண்மையேயாயினும் இத்தவறுகளால் நன்மை பெறுவோர் நிச்சயமாக முஸ்லிம்கள் அல்ல.
முஸ்லிம்களின் தனித்துவம் பற்றிப் பேசும்போது மத அடிப்படையிலான தனித்துவத்தை மட்டுமின்றிக் கலாச் சாரரீதியான பிற பண்புகளையும் நாம் கருதிக்கொள்ள வேண்டும். அவர்களது மொழியுரிமை அவர்கட்குத் தமிழிற் கற்கவும் தொழில் செய்யவும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளவுமான உரிமையாக மட்டுமே பார்க் கப்பட முடியாது. மிகச் சிறுபான்மையானோராயினும், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் சிங்களத்தைத் தமது வீட்டு மொழியாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களது மொழியுரி மையும் தமிழ்பேசும் முஸ்லிம்களது உரிமையளவுக்கு முக்கியமானது.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும் பரவலாகச் சிதறியுள்ள பிரதேசங்களிலும் அவர்களது

Page 26
48
தனித்துவந்தையும் உரிமைகளையும் பேணுவதற்கான தீர்வுகள் பற்றி முஸ்லிம் வெகு ஜனங்களின் சார்பாக இயங்கும் புதிய சக்திகள் யோசனைகளை முன்வைப்பது டன் அவற்றை எவ்வாறு பிற சிறுபான்மை இன உரிமை களுடன் சேர்த்துக்கருதுவது என்பது பற்றியும் மேலும் கவனமெடுப்பது அவசியம்.

3
மலையகத் தமிழரின்
சுய நிர்ணயத்தின் பிரச்சினைகள்
மலையகத் தமிழர் தனியொரு தேசிய இனத்தவரா என்ற கேள்வியும் மலையகத் தமிழர் என்ற சொற்றொடர் யாரைக் குறிக்கிறது என்ற கேள்வியும் சமீபகாலத்தில் அதிகம் விவாதத்துக்கு உள்ளாகி வந்துள்ளன. இவை பற்றிப் பூரண உடன்பாடு இல்லாத போதும், மலையகத் தமிழரின் தனித்துவம் பற்றிய பரவலான உடன்பாடு உள்ளதெனலாம். இக்கேள்விகள் ஏற்படுத்தும் கருத்து வேறுபாடுகள் பலவற்றுக்குத் தேசமும் தேசிய இனமும், சுயநிர்ணயமும் பிரிந்து போகும் உரிமையும் என்பன தொடர்பான தெளிவீனங்கள் காரணமாக இருக்கலாம். இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக ஒவ்வொருவரும் கருதும் தீர்வுகளும் மலையகத் தமிழரதும் சோனகர்களாலும் தேசிய இனத் தகுதி பற்றிய முடிவு களைப் பாதிக்கின்றன.
மலையகத் தமிழர் என்ற சொற்றொடரின் அடிப் படையில் மட்டுமே, மலையகத் தமிழர் என்ற இனப் பிரிவை வரையறுக்க வேண்டும் என்ற வாதம் இன்று எழுந்துள்ளது. மலையகத் தமிழரது சுயநிர்ணய உரிமை

Page 27
50
பிரிவினைப் போக்குக்களை ஊக்குவிக்கும் என்ற அச்சம் சிலராற் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தனியொரு தேசிய இனமாக அங்கீகரிப்பது தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைக்கும் விடுதலைக்குமான போராட்டங்களைப் பலவீனப்படுத்தும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. வரலாற்றுக் காரணங்களால் மலையகத் தமிழர் இலங் கையின் வடக்குக் கிழக்கின் தமிழர்களினின்றும் வேறு பட்ட அரசியல் சமுதாய விருத்திகளையே அனுபவித்தனர். வடக்கின் சாதி அமைப்பின் வலிமையும் மேற்சாதிச் சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கமும் மலையகத் தமிழரையும் வட க்குக் கிழக்கின் தமிழரையும் ஒருமைப் படுத்துவதற்குத் தடையாகவே நின்றன. அதைவிட, மலையகத் தமிழர் வடக்குக் கிழக்குடன் தொடர்ச்சியற்ற மலைநாட்டில் வாழ்ந்தமையும் அவர்களது தனித்து வத்தை மேலும் வலியுறுத்தியது.
மலையகத் தமிழரின் தனித்துவத்தை மாக்ஸியவாதி கள் வலியுறுத்தாதது அவர்களை வடக்குக் கிழக்கின் தமிழ ரிடமிருந்து பிரிக்கும் முயற்சியல்ல. மாறாக நிசமான ஒரு நிலைமிையை அடையாளம் கண்டு அதை அங்கீகரிப் பதன் மூலம் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு சமுதாயப் பிரிவின் நலன்கட்கான போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியே அது. எல்லாவற்றிலும் முக்கியமாக, வடக்குக் கிழக்கில் வாழும் தமிழரின் உரிமைப் போராட்டம், பேரள வில் மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் உள்ள டக்கிய போதும், நடைமுறையில் வடக்குக் கிழக்கைச் சார்ந்தத் தமிழரது நலன்களையொட்டியே தன் பாதையை அமைத்துக்கொண்டது. பழைய தமிழ்க் காங்கிரஸ் தலை மையின் கீழ் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அத்தலைமையின் வர்க்க நலன்களை ஆதார மாகக்கொண்டது. தமிழ்ப் பேசும் மக்கள் என்ற பேரில் அரசியலைத் தொடங்கிய தமிழரசுக் கட்சியும் காலப்

51
போக்கில் வடக்குக் கிழக்கின் வசதி படைத்த உயர்சாதித் தமிழரின் பிரதிநிதியாகிவிட்டது. மலையக மக்கள் மத்தி யில் தொண்டமானுடைய தலைமைக்கு ஈடுகொடுத்து அரசியல் நடத்தும் ஆற்றல் தமிழ் இடதுசாரிகட்கு இருந் தளவுக்குத் தமிழ்த் தேசியவாதிகட்கு இருக்கவில்லை.
மலையகத் தமிழரின் நலன்களையும் வடக்குக் கிழக்கின் தமிழரது நலன்களையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்களை எழுபதுகளின் முற்பகுதியில் மலையகத் தமிழருக்கெதிராக எடுக்கப்பட்ட சிங்களப் பேரினவாத நடவடிக்கைகள் அளித்தன. ஆயினும் வடக்கில் மேலோங்கியிருந்த தமிழ் உயர் நடுத்தர வகுப்பு மனோபாவம் ஒடுக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர் மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியது. 1970களிற் காந்தியம் போன்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப் பட்ட நற்பணிகள் சிறுபான்மைப் போக்காவே இருந்தன. இந்த நிலையின் சகல தமிழ்ப்பேசும் மக்களது நலன்கட் காவும் போராடக்கூடிய ஒருதமிழ்த்தேசியவாதத் தலைமை முற்றிலும் அசாத்தியமாகிவிட்டது. பழைய தமிழ்த் தேசியவாதிகளது குறுகிய பார்வையையே அவர்களது போராளி வாரிசுகளும் சுவீகரித்துக் கொண்டனர். எனவே, தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரு குரலாகப் பேசவேண்டும் என்ற தமிழ்த் தேசிய முதலாளித்துவக் கருத்து நடைமுறைக்கு இசையாத ஒன்றாகி விட்டது.
இதன் அர்த்தம், தமிழ்ப்பேசும் மூன்று முக்கிய இனப் பிரிவுகளும் பிளவுபட்டு நிற்க வேண்டுமென்பதல்ல, ஒவ்வொரு பிரிவிற்குமுரிய தனித்துவம் தமிழ்ப்பேசும் இனம் என்ற ஒரு பகுப்பின் மூலம் மறைக்க முடியாதது என்பதால், அவ்வேறுபாடுகள் பகைமையான உறவுக்குக்

Page 28
52
காரணமாகிவிடா. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர் கட்கெதிரான போராட்டத்தின் சகல சிறுபான்மைத் இனங்களும் இணைய வேண்டிய தேவையாலும் பொது மொழியாலும் வரலாற்றுரீதியான உறவுகளாலும் அவர்களிடையே நெருக்கமும் நல்லுறவும் மிகவும் சாத்தியமாகிறதுடன் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகிறது.
வடக்குக் கிழக்கில் உள்ள தமிழரது தேசியப் பிரச் னையின் தீர்வு பிரதேச அடிப்படையிலான சுயாட்சி யையோ அல்லது சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தாற் தனி அரசையோ கூட- அவசியமாக்கக்கூடும். எவரேனும் அத்தகைய தீர்வு மலையகத்தமிழரது நலன்கள்ை முற்றாக உள்ளடக்குமென்பது சுத்தமான பித்தலாட்டம். இந்தள வில், மலையகத் தமிழரது நலன்களைப் பேண அவர்கள் இன்று வாழும் பிரதேசங்களையும் அவர்களது தொழில் வசதிகள் வாழ்க்கை முறை என்பனவற்றைக் கணிப்பிற் கொண்டேயாக வேண்டும். எனவேதான் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனமென வலியுறுத்து வோர், மலையகத் தமிழர் தமது சுயநிர்ணய உரிமையைத் தமிழ்ப் பேசும் இனம்' என்ற அடிப்படையிற் பேணு வதற்கு வட-க்குக் கிழக்கிலுள்ள பாரம்பரியப் பிரதேசங் களின் சுயாட்சியோ பிரிவினையோ போதாது என்பதை உணரவேண்டும். மலையக மக்களின் இருப்பும் நலன்களும் உறுதிப்படுத்தப்பட அவர்களது தனித்துவம் தெளிவாக அடையாளங் காணப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதும் அவசியம்.
மலையகத் தமிழர் என்ற சொற்றொடர் எவ்வாறு வழக்கத்துக்கு வந்தது என்பதை நாம் மறந்து விடுவதால் மலையகத்தில் வாழ்வோரை மட்டுமே அது குறிக்கிறது என்று எண்ண நேருகிறது, பிரித்தானியர் ஆட்சியின்

53
போது இந்தியாவிலிருந்து வந்த மக்கள் அனைவரையும் இந்தியர் என்று அடையாளங் காட்டும் வழமை இருந்தது. இந்தியத் தமிழர், இந்தியச் சோனகர் போன்ற சொற் றொடர்களால் மலையகத்திலும் பிற பகுதிகளிலும் கூலி உழைப்புக்காக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட மக்களும் அவர்களது வரவையொட்டி இங்கு வந்த பிறகும் அழைக்கப்பட்டனர். "இந்திய' என்ற அடை மொழி அவர்களை அந்நியராகவே அடையாளங் காட்டி யமையால், அவர்கட்கு இலங்கை மண்ணில் உள்ள உரிமையை வலியுறுத்தும் நோக்கிலேயே அவர்களை மலை யகத் தமிழர் என அழைக்கும் வழக்கம் உண்டாயிற்று.
தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட தமிழரிற் குறிப்பிடத்தக்க தொகையினர் கொழும்பிற் கூலி உழைப்பாளராக வாழ்ந் தனர். தென்னிந்தியாவிலிருந்து தமிழ்ப் பேசும் வணிகர் களும் வந்தார்கள். இவர்களைவிட, மலையாளிகளும் பிறப்பிற் தெலுங்கர்களான அருந்ததியர் குலத்தவரும் வந்தார்கள். மலையாளிகள் பலவேறு தொழிற் துறை களிலும் தொழிற் சங்க அரசியலிலும் முக்கியப் பங்கு வகித்தனர். அருந்ததியர் பெரும்பாலும் நகரசுத்தித் தொழிலிலும் குறைந்த வருமானம் தரும் கூலி உழைப் பிலும் அமர்த்தப்பட்டனர்.
சுதந்திரத்தை யொட்டிய காலப்பகுதியில் இலங்கை யின் சிங்களப் பேரினவாத அரசியலுக்கு முக்கிய இலக்கா னோர் இந்திய வம்சா வழியினரே, தமிழ்த் தேசியவாத அரசியல், நடைமுறையில், இந்திய வம்சா வழியினரை ஒதுக்கி வைத்தது. இதன் விளைவாக இந்திய வம்சா வழித் தமிழர் தம்மை ஒரு சமுதாயமாகக் கருதும் சூழ் நிலை மேலும் உறுதியாயிற்று. இதிற் கவனிக்கத்தக்க
(up-4. -

Page 29
54
ஒரு விஷயம் ஏதெனில், வடக்குக் கிழக்கில் போலல்லாமல் ஒரு இஸ்லாமியரான அஸிஸின் தலைமையில் முக்கிய மான ஒரு தொழிற் சங்கம் அமைவது மலையகத்திற் சாத்தியமாக இருந்தது. அதே வேளை, மலையகத் தொழிலாளர் இலங்கையின் மற்றைய தொழிலாளரை விடப் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டமையால் அவர்களது தொழிற் சங்க, அரசியற் தலைமைகளை வசதி படைத்த பெரிய கங்காணி வியாபாரிப் பரம்பரைக் காரர்கள் கைப்பற்றிக் கொள்ளவும் இயலுமாயிற்று என்பதும் கவனத்துக்குரியது.
இலங்கையின் சுதந்திரத்தின் பின் இந்திய வம்சா வழியினரில் இந்தியப் பிரசைகளாக இருந்தவர்கள் பலர் இந்தியா திரும்பிப்போக ஆரம்பித்தனர். வியாபாரிகளில் ஒரு பகுதியினர் இலங்கையின் பலவேறு நகரங்களிலும் தொடர்ந்து வாழ்ந்தனர். உதிரிகளாகச் சிதறிய இந்திய வம்சாவழியினர் , தமது பிரதேசத்தின் மக்களில் ஒரு பகுதி யினராயினர். அதே வேளை கொழும்புச் செட்டி, பரவர் போன்ற சமுதாயப் பிரிவினர் தமது சுய அடையா ளத்தைப் பேணினர். இன்று இவர்களிற் பெரும்பாலோர் சிங்களத்தைத் தமது முதலாவது அல்லது இரண்டாவது மொழியாக்கிக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நூற்றாண்டுக் கால இடைவெளியிற் தென்னிந்தியாவிலிருந்து வந்த பல்வேறு சமூகப் பிரிவினர் சிங்களத்தையே தமது வீட்டு மொழியாக்கியதற்குக் காரணங்கள் பல. வடக்கில் நிலவிய இறுக்கமான சாதிய சமுதாயமும் மேற்சாதியினரது அகம்பாவமான மனோ பாவமும் இந்த மக்களிற் கணிசமானோரைத் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பகுதினராகக் கொள்வதை ஊக்கு விக்கவில்லை என்பது ஒரு முக்கிய காரணமில்லாவிடினும் நாம் கணிப்பில் எடுக்க வேண்டிய காரணமாகும்.

55
மேற்குறிப்பிட்டவாறு சிங்களத்தைத் தமது மொழி யாகச் சுவீகரித்துக் கொண்டவர்களது நிலைக்கும் இந்திய வம்சாவழித் தமிழராகத் தம்மைக் கருதுவோருக்குமிடை யிலான முக்கிய வேறுபாடு தமது மொழி பற்றிய கண் ணோட்டம் எனலாம். அரசியற் சூழ்நிலைகளும் இவர் களிடையே ஒரு பொதுமையை ஏற்படுத்தியுள்ளன. அந்த அளவில்,வடக்குக் கிழக்கின் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியாகத் தம்மைக் கருத முடியாத நிலையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர் அனைவரும் தம்மை ஒரு தேசிய இனப்பிரிவாகவோ ஒரு தேசிய இனமாகவோ கருத இடமுண்டு. இவ்விஷயத்திற், குறிப்பிட்ட ஒவ் வொரு சமுதாயப்பிரிவினரதும் மனநிலையும் சமுதாயப் பிரிவினரிடையிலான உறவும் முக்கியமானவை. இம்மக்கட் பிரிவினர் அனைவரும் தம்மை ஒரே தேசிய இனத்தவராகக் கருத விரும்பினால் அதற்கு அவர்கள் தொடர்ச்சியான ஒரு பிரதேசத்தில் வாழாமை ஒரு தடையாக முடியாது.
கொழும்பிலோ கண்டியிலோ அல்லது தென்னிலங் கையில் வேறெங்காயினுமோ நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட வடக்குக் கிழக்கின் தமிழர் தம்மை வடக்குக் கிழக்கின் தமிழ் இனத்தவராகவே கருத இயலுமாயின், மலையக மக்களுடன் தமது பின்புலங் காரணமாக நெருங்கிய உறவுடைய மக்களை மலையக மக்களுடன் சேர்த்துக் கருதுவதற்கும் நியாயம் இருக்கிறது. இதற்கு ஆதாரமாக அமெரிக்காவின் கறுப்பு இனமக்களையோ ஸ்பானிய இனத்தவர்களையோ கொள்ள முடியும். பல்வேறு பின்னணிகளின்றும் வந்த இம் மக்கள் பிரிவினர் இன ஒடுக்கலின் அடிப்படையிலேயே தம்மைத் தேசிய சிறுபான்மை இனங்களாக அடையாளங் காண்கின்றனர். எவ்வாறாயினும் குறிப்பிட்ட மக்கட் பிரிவுகள் தம்மை ஒரு தேசிய இனமாகவோ இனப் பிரிவாகவோ அடை யாளங்காண விரும்புகிறார்களா என்பதே முக்கியமானது

Page 30
56
இத்தகைய தெரிவுகள் அரசியல் நிலவரங்களாலும் சமுதாய நிலைமைகளாலுமே நிர்ணயமாகின்றன.
வெவ்வேறு பிரதேசங்களில் சிதறிக்கிடப்பது ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களின் சுய அடையாளத்தின் மறுப் பாகிவிடாது. சீனாவின் உள்நாட்டு யுத்தங்களாலும் நெருக்கடிகளாலும் உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடந்த சீனமக்களுக்குச் சீனப் பிரசைகளாகும் உரிமையை மக்கள் சீனக் குடியரசு அளித்தது. இவ்வாய்ப்பு, சீன விடுதலையையடுத்து நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது. இவ்வாறே, இன்று உலகமெல்லாம் சிதறிக்கிடக்கும் வடக்குக் கிழக்கின் தமிழருக்கும் கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்க அனுப்பப்பட்ட மலையகத் தமிழருக்கும் சிங்கள, சோனக மக்களுக்கும் பறங்கியருக்கும் தமது தாய் நாட்டுக்குத் திரும்பும் உரிமை இருக்கவேண்டும். அவர்கள் தம்மை இலங்கையின் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர் களாகக் கருதும் வரை அந்த உரிமை அவர் கட்கு மறுக்கப் படக்கூடாது. இலங்கைக்கு மீளும் வாய்ப்பும் சாதகமான சூழ்நிலைகளும் இருந்தும் நாடு திரும்ப விரும்பாதவர் களது நிலை வேறு. அவர்கள் தமது புகலிடங்களைத் தமது நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்டவர்கள். அவர்களது தெரிவு தாம் வாழும் அயல் நாட்டின் ஒரு பகுதியினராகுவதாயின் <9 G@互 எவரும் மறுக்க இடமில்லை. மலையக மக்கள் எனப்படும் மக்கட்பிரிவினர் கோரும் தேசிய இன அந்தஸ்து சுயநிர்னய உரிமையும் உள்ளடக்குமாயின் அச் சுயநிர்ணயம் எவ்வாறு நடை முறைப்படுத்தப்படும் என்பதும் இன ஒடுக்கலுக்கெதிரான போராட்டத்தின் மீதும் இலங்கையின் தேசிய இனங் களிடையிலான ஐக்கியத்தின் மீதும் அதன் பாதிப்பு என்ன என்பதும் முக்கியமான கேள்விகள்.
ஒரு தேசிய இனத்தில் சுயநிர்ணய உரிமை என்பது அந்த இனம் தன் இருப்பைத் தீர்மானிக்கும் உரிமையா

57
கும். அதற்கு நடைமுறை சார்ந்து வரையறைகள் இல்லாத பட்சத்தில், அது பிரிந்து போகும் உரிமையா கவே பொருள்படும். பூகோள ரீதியாக ஒரு தொடர்ச்சி யான பிரதேசம் உள்ள ஒரு தேசிய இனம் தன் சுயநிர்ணய உரிமையை அவ்வாறு நடைமுறைப்படுத்த இடமுண்டு. ஒன்றன் தெரிவுக்கான உரிமையும் அதன் தெரிவும் ஒன்றே யல்ல என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டும்.
மலையக மக்கள் ஒரு தனிநாடோ ஒரு சமஷ்டி அரசோ கேட்பது இன்று நடைமுறையில் சாத்தியப் படாது. முஸ்லிம்கள் போன்று அவர்கள் தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில் வாழாமையால் அவர்களது சுய நிர்ணய உரிமையைப் பிரிந்து போகும் உரிமை என்ற வாறு நடைமுறைப்படுத்த இயலாது. ஆயினும் அவர் களது நலன்களை உறுதிப்படுத்துவதான சுயாட்சிப் பிர தேசங்களை நிறுவமுடியும். அது மட்டுமின்றி, அவர்கள் சிறுபான்மையாகச் சிதறி வாழும் பகுதிகளிலும் அவர் களது காணி, தொழில், மொழி, மதம். கலாச்சாரம் போன்ற உரிமைகட்கான உத்தரவாதங்களைத் தரவல்ல சுயாட்சி அமைப்புகளை ஏற்படுத்த முடியும்.
இதுவரைகாலமும் நடந்து வந்துள்ள தேசிய இனப் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல்களும் அது பற்றிய கருத்துரைகளும் ஆலோசனைகளும் வடக்குக் கிழக்கின் தமிழரது தேசிய இன ஒடுக்கலை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. முஸ்லிம்கள் தமது இருப்பு பற்றிய அச்சங்களை வெளிப்படுத்தியும் கூட அவர்களது சுயநிர்ணய உரிமை பற்றிய அக்கறை பல தமிழர் விடுதலை இயக்கங்கள் கவனமெடுக்கத் தவறியமை நம் கவனத்துக்குரியது.
மலையகத் தமிழரது பிரச்சனை தமிழ்ப் பேசும் இனத் தின் பிரச்சனை என்ற தலைப்பினுள் புறக்கணிப்புக்குள்

Page 31
58
ளாகுவது, வடக்குக் கிழக்கின் தமிழரது நலன்கட்கும் உகந்ததல்ல, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் சுமூகமான தீர்வுக்கும் உதவுவதல்ல. அந்த வகையில் மலையகத் தமிழரது பிரச்சனை அந்த மக்களது தனித்துவ மான அரசியற் சமுதாயப் பின்னணியின் அடிப்படையில் ஒரு தேசிய சிறுபான்மையினத்தின் பிரச்சனையாக வேணும் தீர்க்கப்பட வேண்டும். மலையக மக்கள் தம்மை ஒரு தனியான தேசிய இனமாகக் கருதுவார்களாயின் அதற்கு அவர்கள் தொடர்ச்சியான பிரதேசத்தில் வாழா மையும் இலங்கையிற் பலபாகங்களிற் சிதறி வாழ்கின்ற மையும் அவர்களது நியாயமான விருப்பத்திற்குத் தடை யாக அமையக் கூடாது.
* மலையகத் தமிழரும் முஸ்லிம்களும் வடக்குக் கிழக் கின் தமிழினத்துடன் சேர்த்துக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வெவ்வேறு நோக்கங்கட் காகப் பலரும் தெரியப்படுத்தலாம். அவ்வாறே, அவர்களை ஒன்றாகக் கருதுவதை வேறுபட்ட நோக்கங்கட்காக எவரும் எதிர்க் கலாம். தேசிய இன ஒடுக்கலுக்கு இம் மூன்று தமிழ்ப் பேசும் இனத்தவரும் முகங்கொடுக்கும் விதங்கள் வேறு படுகிற காரணத்தால், அந்த ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்களும் பிரச்சனையின் தீர்வுகளும் தம் அணுகுமுறைகளிற் குறிப்பிடத்தக்களவு வேறுபடக் கூடும். மூன்று இனத்தவரும் தமது பொதுமொழியடிப் படையில் ஐக்கியப்படுவது நீண்ட காலத்திற் சாத்தியமா கலாம். அவ்வாறு நடப்பது இலங்கையின் தேசிய இனங் களின் ஐக்கியத்திற்கு நல்லது. எவ்வாறாயினும், இவ் வாறான ஐக்கியத்தை எவரும் நிர்ப்பந்திக்க முடியாது. இன்றைய சூழலில் அத்தகைய நிர்ப்பந்தம் பாதகமான விளைவுகளையே தரும்.

எமது பிற வெளியீடுகள்
மரபும் மார்க்சீயவாதிகளும்
-சி சிவசேகரம்
சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி
1979-1992 -க. கைலாசபதி
க்ருசொவ் முதல் கொர்பச்சொவ் வரை
--தேசபக்தன்
புதிய ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும் --சி. கா- செந்திவேல்
சு. வே. சீனிவாசகம் நினைவுச் சுவடுகள்
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சண்முகதாசன்
விமர்சனக் கண்ணோட்டம்
-வெகுஜனன், இமயவரம்பன்
8-00
30-00
10-00
12-00
17-00
7-OO