கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1988.04

Page 1
ISBE U
சிறுகதையில் அக்கரைக்கு இக்கரை
இந்திரன் கட்டுரை
சிறுகதைகள் - புத்தக விமர்ச
 

நட்புறவு
गाणी
DGU U 2
ஹோமர் பற்றிய
வரலாறு ப்ரகாஷ் கட்டுரை
TIEG I GEN GRIGOJEG

Page 2
gy.TG86f
பிரிண்டர்ஸ் 12, முதல் பிரதான சாலை நேருநகர் அடையாறு சென்னை-20
 

திறமான தூய்மையான அச்சு வேலைகளுக்கு

Page 3
0 ஏப்ரல் 22 0
லெனின் வாழ்க்கைக் கதைநூலை படிப் பகத்தில் தேடியபொழுது புத்தகம் பூஞ்சனம் கட்டியிருந்தது. மார்க்சியமும் லெனினியமும் இந்திய மொழிகளில் எப்படியோ? தமிழில் பூஞ்சனம் கட்டித்தான் இருக்கிறது. லெனி னையும் பூஜை அறையில் மாட்டிவிடத்தான் தமிழிலும் முயற்சிகள் நடக்கின்றன. உல கெங்குமான வரலாற்றில் புரட்சிகரச் சிந்தனை யாளர்கட்கும் போதனாசிரியர்களுக்கும் இவ் வகையான வழிபாட்டு முயற்சிகள் எப்பொழு தும் நடந்தே வந்திருக்கின்றன. தத்துவ ஆசான் "மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைப் படித்து அலறிய முதலாளி வர் க் க மும் அதன் சிந்தனையாளர்களும் மார்க்சை அபாயமற்ற பூசை அறை வழிபாட்டுப் படங்களாக்கினர். இந்த வழிபாட்டுக்கெதிராக லெனின் அவர்கள் இவ்வாறு எச்சரித்தார்கள்: 'முதலாளித்துவ வர்க்கத்தாரும் தொழிலாள இயக்கத்தில் உள்ள சந்தர்ப்பவாதிகளும் இன்று மார்க்சியத்தை பதனம் செய்வதில் ஒன்றுபடு கிறார்கள்” என்கின்றார்.
லெனின் அடையாளம் காட்டியவர்களை தமிழில் நாமும் அடையாளம் காணவேண்டிய காலக்கட்டம் இது. மார்க்சியம் லெனினியம் பற்றி நாம் பூஞ்சனம் தட்டித் தெரிவதற்கு முன்னால் லெனினின் வாழ்க்கைக் கதையைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.
"பாலம்’ இதழின் இரண்டு மூன்று பக்கங் களுக்குள் லெனினை அறிந்து கொள்வதென் பது முடியாததொன்றே ஆயினும், தெரிந்து கொள்ளத் தூண்டுவதற்கான அறிமுகத்தைச் செய்வதென்பது கூட மலையைக் கெல்லி எடுக்கும் முயற்சியேயாகும்.
லெனினைப் பற்றி மூன்று நவீனங்கள் இயற்றிய பின்னர், லெனினின் வாழ்க்கைக் கதையை எழுத முயற்சிக்கையில் அதன் ஆசிரி யர் மரியா அவர்கள் தனது மனநிலையை இவ்வாறு பதிவு செய்கின்றார்: 'எவ்வளவோ தயக்கங்களும் பதட்டங்களும் ஏற்பட்டன. இந்த மாபெரும் வாழ்க்கை பற்றி விவரிக்க) எனக்கு வலிமை போதுமா?” லெனினின் வாழ்க்கைக் கதையைப் படித்தால் எவருக்குத் தான் இந்த எண்ணம் தோன்றாது.
1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் திகதி வால்கா நதிக்கரையில் சிம்பீர்க் நகரில் விளாதிமீர் உல்யானவ் என்னும் நமது நேசம் மிகுந்த லெனின் பிறந்தார். 6 குழந்தைகள் கொண்டதான குடும்பத்தில் இவர் மூன்றாவ' தாக இருந்தார்.
லெனினின் 17 வது வயதில் அவரது அண்ணன் அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட் டார். "ஜார்’ மன்னனைக் கொல்ல முயன்ற தற்காக தண்டனை விதிக்கப்பட்டது. இச் சம்பவம் லெனினை உலுக்கியது; சிந்திக்கத் தூண்டியது. தமையனாரின் பாதிப்பு லெனினி டம் ஆழமாகவே பதிந்திருந்தது.

() லெனின் பிறந்த நாள் ()
தோழனே லெனினே நீ பூஜையறை வழிபாட்டுக்குரியவனல்ல புரட்சிகர கொள்கைக் குரியவன்
கி. பி. அரவிந்தன்
மார்க்சிய இலக்கியம்பற்றி அலெக்சாண்டரே லெனினுக்கு அறிமுகம் செய்து வைத் தார். ஆயினும் லெனின், அண்ணன் அலெக்சாண்டர் காட்டிய போராட்டப் பாதையை நிராகரித்தார். அண் ண ன் சார்ந்திருந்த *நரோத்னியாவோல்யா' என்னும் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகளையும நிராகரித்தார். தனிமனிதப் பயங்கரவாதம் என்பதனைத் தம்பி லெனினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Page 4
புரட்சிப் பாதையைக் கண்டறிய வேண்டு மென்பதில் ஆர்வம் கொண்டு அதிகமாய் கற்கத் தொடங்கினார். அண்ணனின் மறை வுக்குப் பின்னால் லெனின் குடும்பத்தினரால் ஊரில் குடியிருக்க முடியவில்லை. ஊரில் உள் ளவர்கள் ஏளனத்துடனும் பயத்துடனும் இவர் களை ஒதுக்கியே வைத்தனர். இதனால் ஊரை விட்டுக் குடிபெயர வேண்டியது லெனினுக்கு அவசியமாயிற்று. அன்றைக்குத் தொடங்கிய அவரது புலம் பெயரும் வாழ்வு, ருஷ்யாவின் பல பகுதிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தது. மக்களின் அவலங்களை அவர் நேரி லேயே காணலுற்றார். ருஷ்யா எங்கெணும் லெனினை அலைய வைத்த ஜார் அரசாங்கத் தினால் அவர் புரட்சி செயல் வீரராய் உருவா வதைத் தடுக்கவே முடியவில்லை.
பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தி லேயே லெனின் அவர்கள் ஜார் அரச உள வாளிகளின் கண்காணிப்பிற்கு உள்ளாகி இருந் தார். படிப்பை முடித்து வழக்குரைஞராய் பணி யாற்றத் தொடங்கியதும், தனக்கு முன்னால் ருஷ்யாவுக்குள் பிளக்னோவினால் அறிமுகப் படுத்தப்பட்ட மார்க்சியம்-அவற்றைப் பயிலு வோர்-இவர்களுடன் தன் தொடர்புகளை ஏற்படுத்துவதிலும், கருத்துக்களைப் பரிமாறு வதிலும் முயன்றார். ருஷ்யாவில் மார்க்சியம் பயிலும் தத்துவமாகவும், விவாதத்திற்குரிய பொருளாகவும், தொழிலாளருக்கான குழுக் களை அமைப்பதற்கான செயற்பாடுகளை மட்டுமே கொண்டுடிருந்தது.
லெனின் அவர்கள் அதற்கு அப்பாலும் மார்க்சியம் கொண்டு செல்லப்பட வேண்டும் என விரும்பினார். அதனை நடைமுறைத் தத்துவமாக மாற்ற வேண்டும் என்பதிலும் உறுதி கொண்டிருந்தார். ஏனெனில் மார்க்சியம் விஞ்ஞானம், ஆகும். அது வளரும் தத்து வம், அது வாழும் தத்துவம் என்பது லெனி னுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
அவர் பணியாற்றிய ருஷ்யாவின் "சமேரா" பகுதி, பணிகள் விரிவடைவதற்கான தளமாக லெனினுக்குத் தென்படவில்லை. அதனால் ருஷ்யாவின் முதலாளித்துவம் தோற்றம் பெற் றுக் கொண்டிருக்கும் தொழிலாளர் பகுதியில் தான் தன் தொடர்புகளையும் பணிகளையும் விரிவாக்கும் தளம் உள்ளதென எண்ணினார். ஆதலால் பீர்டர்ஸ்பர்க் நகருக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு இயங்கிய மார்க்சியத் தொழிலாளர் குழுக்களை இணைத்து தொழிலாளர் விடுதலை போராட்டச் சங்கத்தை அமைத்தார். இந்தப் பணியின் போதுதான் இறுதிவரை வாழ்க்கைத் துணையாய், நண்பராய் விளங்கிய தன் வய திலும் மூத்த "குரூப்ஸ்காயா'வைச் சந்தித்தார். இவரும் மார்க்சிய புரட்சியாளராய் இறுதி வரை ருஷ்யாவில் பங்காற்றினார்.
இவ்வேளையில் லெனின் அவர்கள் ஒடுக்

பாலம்
கும் ஜார் ஆட்சிக்கு எதிரான ருஷ்ய தொழி லாள - விவசாயிகள் இணைந்த மார்க்சியப் போராட்டத் திட்டத்திற்கு தான் ஆற்ற வேண் டிய பணிகுறித்த இறுதி முடிவிற்கு வந்தார். புரட்சியை ஒழுங்குபடுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு கட்சியே வழியென மார்க்சிய நடைமுறை அவருக்குக் கற்றுத் தந் தது. ஆதலினால் தொழிலாளர் குழுக்கள் இணைந்ததான போராட்டச் சங்கத்தின் முன் னால் கட்சியை அமைக்க வேண்டுமென வலி யுறுத்தினார். ஆனாலும் அம்முயற்சி கைகூடா மலேயே ஜார் அரசாங்கத்தினால் கைது செய் யப்பட்டு குளிர் நிறைந்த தொலைதூர சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார். தண்டனைச் சிறையை அனுபவித்தவாறே வெளியே தன் தோழர்களை கட்சி அமைப்பதற்காய் தூண்டிய வண்ணமே இருந்தார். தொழிலாளர்கள், தொழிலாளர் குழுத் தலைவர்கள் விவாதிப்ப தற்காய் கூடியபொழுது ஜார் அரசு அத்தலை வர்களை எல்லாம் கைது செய்தது. இதனால் லெனினின் கட்சிகட்டும் கனவு தள்ளிப் போய்க் கொண்டேஇருந்தது.
இந்த அனுபவங்கள் தான் புரட்சியாளர் அமைப்பை-புரட்சிகரக் கட்சியை எ ல் வா று கட்டுவது அதற்கான அடிப்படைகள் என்ன ? முறைமைகள் என்ன ? என உலகெங்குமான புரட்சியாளர்களுக்கு ' என்ன செய்ய வேண்டும்? என்ற நூலில் அவரால் கற்பிக்க முடிந்தது. கட்சி அமைத்து புரட்சிப் பிரகடனங்கள் செய்ய முடியாது. புரட்சிகரச் சூழ் நி ைல மைகளே கட்சிகளைத் தோற்றுவிக்கின்றன; புரட்சியைப் பிரகடனம் செய்கிறது. தொலைதூர சைபீரி யாவில் சிறையிருந்த வேளை மென்மயிர்க் கோட்டுக்குள் தன்னைப் புகுத்தி உ ற க் கம் கொள்வதைத் தவிர்த்து, ஸ்பிரிட் அடுப்பில் கொதிக்கவைத்த தேனீரைப் பருகியபடி இரவு களில் நெடுநேரம் விழித்திருந்தார்; ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சிபற்றி கணிப்பிட்டார். நூல் எழுதினார். நிறையப் படித்தார். தண் டனைக் கைதிகளுடன் உரையாடினார். விடுதலையாகும் பொழுது அவர் எண்ணத்தில் முகிழ்ந்திருந்தது-கட்சி அ  ைமப் ப த ந் கு ஊடகம் தேவை. ஒரு பத்திரிக்கை தேவை. இதற்கான திட்டங்களுடனேயே லெனின் சிறை யில் இருந்து வெளியே வந்தார்.
சட்ட விரோதமான மார்க்சியப் பத்திரிகை ஒன்று மட்டுமே ருஷ்யாவில் சிதறிக்கிடக்கும் மார்க்சியர்களை இணைக்கும் சாதனம், அது * இஸ்காரா' (தீப்பொறி)வாக இருக்க வேண்டு மெனவும் முடிவு கொண்டார். இதனை தொழி லாளர் விடுதலைப் போராட்ட சங்கத்தின் வைத்தார். அதனைச் செயலாற்றுவதென போராட்ட சங்கம் முடிவெடுத்தது. திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாற்றுக் குழுவின் தலைவ ராய் லெனினே தேர்ந்தெடுக்கப்பட்டார். பத் திரிக்கையை ருஷ்யாவுக்குள் கொண்டு வருவது

Page 5
Lu fT6a)ib
சாதகமானதில்லையெனவும், அதனால் ருஷ்யா வுக்கு வெளியே இஸ்காரா'வை அச்சடிப்ப தெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆதலால் லெனின் ருஷ்யாவை விட்டு வெளியேறினார். நாடு விட்டு நாடு புலம் பெயரும் வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. நாடற்றவரானார். தத்துவ வித்தகன் மார்க்சுக்கும் ஏற்பட்ட கதிதான். அவ்வகையில்தான் மார்க்ஸ் நாடற்றவராய் லண்டனில் உயிர் துறந்தார்.
இப்படி நாடு விட்டலையும் போதுதான் லெனின் அவர்கள் தனது ஆசான் மார்க்ஸ் அவர்களை லண்டனில் அவரது கல்லறையில் சந்தித்தார். 'இஸ்காரா’ பத்திரிகை ஜெர்ம னின் லீப்சிக் நகரில் இருந்து வெளி வ ரத் தொடங்கியது. முதல் இதழானது ஜெர்மனி யில் இருந்து பால்டிக்கடல் வழியே பின்லாந் ற்கு ஊடாக ருஷ்ய எல்லையைத்தாண்டி புகை வண்டிப்பாதை வழியே பீட்டர்ஸ்பர்க் நகரம் வந்து சேர்ந்தது. மிக சொற்ப பிரதிகளே ஆயினும் ருஷ்யாவில் உள்ள மார்க்சியத் தொழிலாளர்கள் அனைவரும் ஏதோ ஒருவகை யில் படித்தனர். லெனின் அவர்கள் இப்பத் திரிகையையும் பத்திரிக்ை விநியோகத்தை யும் கைதேர்ந்த தொழில் முறையான இராணு வக் கலையுடனேயே திட்டமிட்டு செயலாற்றி னார், பத்திரிகை, பத்திரிகைக்கான கட்டு ரையாளர்கள், முகவர்கள், பத்திரிக்கைக்கும் வாசகர்களுக்குமிடையிலான கடிதப் போக்கு வரத்துக்கள் பத்திரிக்கையைச் சட்டவிரோத மாய் நாட்டுக்குள் கடத்தி முகவர்களின் கையில் சேரச் செய்தல்-இவை அனைத்தையும் மிக நுணுக்கமாக பரீட்சாத்தமாகச் செய்து வெற்றி ஈட்டினார். "இஸ்காரா' என்னும் சிறுபொறி பெரும் தீயாய் ருஷ்யாவில் கொழுந்துவிட் டெரிந்தது. இந்த இதழில்தான் "எங்கிருந்து தொடங்குவது", "என்ன செய்ய வேண்டும்’ என்னும் மாபெரும் போதனையை மார்க்சியப் புரட்சியாளருக்கு கற்பித்தார். என்ன செய்வது என்னும் நூலின் உள்ளடக்கத்தை எவர்களால் சரியாக செரித்துக் கொள்ள முடியாமல் போ கின்றதோ அவர்களின் புரட்சியும் புரட்சிகர மும் புரட்சிகரக் கட்சியும் புரட்சிகரப் பிரகடனங் களும் **புதிய புரட்சிகரவாய்ச் சொற்களா’ கவே அமையும்.
** இஸ்காரா இதழானது புரட்சிகரமான வாய்ச்சொற்களை மட்டும் உதிர்க்கவில்லை. அவ்விதழ் ருஷ்யாவின் தொழிலாளர்களை ஒன்றிணைத்தது. தொழிலாளர்களும் விவசாயி களும் இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. ஒவ்வொரு தொழிலாளர் குழுக் களையும், இன்னொரு தொழிலாளர் குழுவுக்கு அறிமுகப் படுத்தியது. ஒரு தொழிற்சாலை யில் நிகழ்வதை இன்னொரு தொழிற்சாலை யின் தொழிலாளிக்கு தெரியப் படுத்தியது. ருஷ்யாவில் என்ன நிகழ்கிறது என்பதனை

3
ருஷ்சியாவுக்கு வெளியே இருந்த மார்க்சிய சிந்தனையாளர்களுக்கு படம்பிடித்துக் காட்டி யது. மொத்தத்தில் ருஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உருவாக்கத்தில் நிர் ணயமான பாத்திரத்தை வகித்தது. இக் கட் சிக்கான நகல் வேலைத் தி ட் டத் தி  ைன இஸ்காராவின் ஆசிரியர்குழுவே தயாரித்து வழங்கியிருந்தது. இப் பத் தி ரி க்  ைக யி ன் தலைமை ஆசிரியர் ஆகவும் நிர்வாகியாகவும் லெனின் செயலாற்றினார். இவ்விதழில்தான் லெனின் அவர்கள் இன்றைய புரட்சியாளர்கள் கையேடாக பயன்படுத்த வேண்டிய "என்ன செய்ய வேண்டும்? என்ற நூலுக்கான அடிப் படைப் பொழிப்புகளை எழுதினார், அது **பொருளாதார வாதத்தை ஆதரிப்பவர் களுடன் ஓர் உரை” என இஸ்காராவில் வெளி வந்திருந்தது.
அக்டோபர் புரட்சி நடைபெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னால் ருஷ்யாவில் பொருளாதாரவாதம் எனும் தத்துவம் தலை தூக்கத் தொடங்கியது. அதுவும் மார்க்சின் பெயரால் மார்க்சிய சிந்தனையாளர் என கூறிக் கொள்பவர்களால் பொருளாதார வாதமே மார்க்சியமென முன்வைக்கப்பட்ட பொழுது தான் என்ன செய்யவேண்டும்? என்ற நூலினை லெனின் அவர்கள் எழுதினார்கள்.
இந்நூல் விமர்சனம், விமர்சன சுதந்திரம், தொழிற்சங்கவாத அரசியல், பொருளாதார வாதம், பொருளாதாரவாதிகளின், பக்குவ மின்மை, புரட்சியாளர் அமைப்பு, அமைப்பின் முறைமை, பொருளாதாரவாதிகளின் மா ய் மாலங்கள் என்பன பற்றி மிகத் துல்லியமாக லெனின் எடுத்துரைக்கின்றார். ஏனெ னில் பொருளாதாரவாதிகள் தொழிலாளர் அரசியல் எனும் கோஷத்தை முன்வைத்தனர். கூலி உயர்வு கேட்டுப் போராடுவதே அரசியல் என பொருளாதார வாதிகள் தொழிலாள அரசியல் என வரையறுத்தனர். அதற்கப்பாலான அரசி யல் போராட்டங்களுக்கு தொழிலாளியை நிராகரித்தனர். போராட்டம் ஒன்று இல்லா மலே தன் இயல்பாகவே சமுதாயம் அடுத்த கட்டத்திற்கு மாறிச் செல்லும் என தொழி லாளியை கருத்து முதல் வாதத்திற்குள் மூழ் கடித்தனர். இவர்களை லெனின் உறுதியாக எதிர்த்தார். இவர்களின் கோசங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என இளம் கம்யூனிஸ்ட்டு களுக்கு அறிவுறுத்தினார். தமிழில் இவர்களை நாம் அடையாளம் காணவேண்டும். −
இஸ்காரா இதழானது சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மத்திய பத்திரிகையாக பிரகடனப் படுத்தப்பட்டு 1900ல் இருந்து 1903 வரை தனது காத்திரமான பங்களிப்பை 52 இதழ் கள் முலம் சோவியத் போராட்டத்தில் அக்டோ பர் புரட்சியில் வழங்கியது.
(தொடரும்)

Page 6
அப்பாவி
சிறு
ரோ
அப்பாவின் மரணம், முழுஆ ண் டு த் தேர்வுக்காய் உட்கார்ந்து சினிமா பாடல் கேட்டுக் கொண்டு புத்தகம் புரட்டுகிறபோது தான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுதுதான் அம்மா குளித்துவிட்டு வந்திருந்தாள். உச்சந்தலை வகிடுஎடுத்து குங் குமம் வைக்கப்போனாள். அத்தனை நேரம் வியர்க விருவிருக்க வந்து நின்று எப்படிச் சொல்வதுஎன்று திணறிக் கொண்டிருந்த குடும்ப நண்பர் ஒரு மாதிரி அம்மாவிடம் திக்கி திணறி விஷயம் சொல்லி முடித்தார்.
அப்பா இறந்து போனார், கேட்டபோது நின்றிருந்த தரை வழுக்கிவிட்ட மாதிரி நெஞ் சுக்குள் ஒரு பக். அவ்வளவு தான் மற்றவை களோடு எனக்குத் துளியும் சம்மந்தமிருக்க வில்லை.
அம்மா தலையில் அடித்துக் கொண்டு தரையில் புரண்டாள். சொன்ன மனிதர் கண் கசக்கி நின்றார். நான் என்ன செய்ய வேண்டும்? அம்மா இப்படி அலறி அடித்து உருண்டு புரள்வது மனசுக்கு பிடிக்கவில்லை.
அந்த நண்பர் வந்து சொன்னது கல்லை வாயில் போட்டு முழுங்கு என்றால் எப்படி யிருக்குமோ அப்படியிருந்தது. இவர் ஏன் இப்படி பளிச்சென்று முகத்தில் அ  ைற கிற மாதிரி சொன்னார்? பிற்பாடு அவரே ஒரு வரிடம் இது பற்றிச் சொல்லிக் கொண்டிருந் தாா.
**அந்த அம்மாவுக்கு விஷயத்தை உடனே சொல்லக் கூடாதுன்னு நெனைச்சு போனேன். ஆனாப்பாரு அந்தம்மா அப்பதா குளிச்சுட்டு வந்து குங்குமம் வைக்கப் போறாங்க.நா உடனே சொல்லலேன்னா அந்த அம்மா குங் குமம் வைச்சிடும்.நா என்ன பண்ணுவே.விஷ யத்தை சொல்ரதுக்குள்ள நா பட்ட பாடு.”
உண்மையான வேதனையில் ஏ தோ சாதித்து விட்ட திருப்தியில் சொல்லிக் கொண் டார். **இந்த விஷயத்தை நா போய். சொல்
லும் படியா ஆயிடுச்சே.”நேரத்தைக் கடிந்து கொண்டார்.

ன் மரணம்
O
|ፈ5
தை
காந்த்
அம்மா விழுந்தடித்து ஆர்ப்பாட்டம் பண்ணு கிறாள். தெருப்புடவைகளில் கணிசமானவை அம்மாவைச் சுற்றிக் கொண்டிருந்தது. கூட சேர்ந்து நீள நீளமாய் ஒப்பாரி வைத்தது.
நாளை எப்படி நான் பரிட்சை எழுது வேன். இது முழு ஆண்டுத் தேர்வாயிற்றே. அப்படியானால் நான எ ட் டா வ தி லேயே இருக்க வேண்டியதுதானா.சுந்தர், சங்கர் எல் லோருடனும் சேர்ந்து ஒன்பதாம் வகுப்புபோக முடியாதா.
வீட்டில் அம்மாவும் நானுந்தான்.விஷயம் கேட்டு வந்தவர்கள் பாதி பேர் அம்மாவிடம் போனார்கள். கொஞ்சம்பேர் என்னை பரிதாப
முகத்துடன் சூழ்ந்து கொண்டார்கள். நான்
ஏன் இப்படி மாட்டிக் கொண்டேன்,
முதலில் வந்து விஷயம் சொன்ன நபரே கார் பிடித்துக் கொண்டு வந்தார். வீட்டு வாசலில் கார் நிற்க சின்னதாய் யானை பார்க்கிற கூட்டம். அம்மாவை நிறை யப் புடவைகள் தாங்கிக் கொண்டு காரில் ஏற் றி னார்கள். என்னை யாரோ ஆதரவாய் பிடிப் பதாய் நினைத்துக் கொண்டு என் இடதுகை சிறிது வலிக்கும் அளவுக்கு பிடித்து உட்கார வைத்தார்கள்.
கார் புறப்பட எத்தனித்து நின்றது.
நீ கூடப்போ . நாகூடப்போ ... என்று அம்மாவை பிடித்துக் கொண்டிருந்த புடவை கள் எல்லாம் காருக்குள் ஏற பிராயத்தனப் பட்டுக் கொண்டிருந்தது.
தெருப் பையன்கள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க சிறிது உடல் கூசியது.
கார் கிளம்பித் தொலைத்தால் தேவலாம்.
ஐயோ, புடவைகளே! வர இஷ்டப்பட்ட வர்கள் தொற்றிக் கொள்ளுங்கள். வாய்ப்பிளக் காதீர்கள். இது குழாயடி இல்லை.
கார் கிளம்ப அம்மா அடிவயிற்றில் இருந்து ஒலம் எழுப்பினாள்.

Page 7
பாலம்
பளிச்சென்று யாரோ தலைமுடி பிடித்திழுக் கிற வலி.
காரில் ஸ்பீடாமீட்டர் முள் நகரவில்லை அது நகர்ந்தால் கார் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என்றாவது பார்த்துச் கொண்டு போகலாம்.
கட்சி அலுவலகத்தில் அப்பாவின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. நிறைய கூட்டம். கண்களில் சோகமும் கைகளில் சிரித்த ரோஜா மாலையுமாய் வந்தார்கள். மாலை சாத்தி கண்ணீர் சிந்தி சிலர் தொட்டு வணங்
கிப் போனார்கள்.
**இது தான் அவருடைய பையன்.”
நான் காட்சிப் பொருளானேன். நான் இன்னும் அப்பாவின் பக்கம் போய் பார்க்க வில்லை. கூட்டத்தோடு கூட்டமாய் சுற்றிச் கொண்டிருந்தேன். தெரிந்தவர்களின் கண் களில் படாதிருக்க நிரம்ப பிராயத்தனப்பட்டுச் கொண்டிருந்தேன்.
எங்கு திரும்பினாலும் அப்பாவின் இறப்டை எனக்குள் திணித்த வண்ணமே இருந்தது. எதிர்படுகிற சுவர் எல்லாம் "தோழர் WSC மரணம்’ என்று பெரிதும் சின்னதுமாய் போஸ் டர்கள். பஸ்களுக்கு அங்கங்கே ப்ளாஸ்டர் போட்ட மாதிரி போகிற வருகிற பஸ்களில் எல்லாம் போஸ்டர்கள்,
மாலை பத்திரிகையில் அப்பாவின் பாஸ் போர்ட் சைஸ் ஃபோட்டோவோடு செய்தி வர் திருந்தது. ஒரு பேப்பர் குறைந்தது ஐந்து தலைகளை மறைத்துக் கொண்டிருந்தது. அங் கங்கே குழுமி பேப்பரும் கையுமாய் நின்றா
56.
உறவினர்கள் நிறையப்பேர் வரத்தொடங்கி விட்டார்கள். தவறாமல் அழுது கொண்டுதான்
என்னை யாரோ தேடுவது எனக்குப் புல பட்டது. நழுவப்பார்த்தேன். என் கையை அந்த மனிதர் பிடித்துக் கொண்டார்.
"சும்மா அங்கயும் இங்கயும் திரியாத, அப்பா பக்கத்துல போய் உக்காரு.”
கையைப் பிடித்து இழுத்துப் போ னார் அப்பாவின் தலைமாட்டில் கொண்டு போய் உட கார வைத்தார். கட்டிலின் அந்தப்பக்கம் அம்ம தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண் டிருந்தாள். ஒரு நரைக்கிழவி பக்க வாத்தியம் பின்னால் கோரஸ் கொஞ்சம் பேர். இது போக தவணை முறையில் வேறு மாற் ற மாற்றிக் கொஞ்சம் பேர்.

5
;
தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் அப்பாவின் முகம் பார்த்தேன். சிகரெட் பிடித்து பிடித்து கருத்துப்போன உதட்டின் ஓரத்தில் சி ன் ன தாய் ஒரு புன்முறுவல் தேங்கி நின்றது. மூடிய விழிகளைப்பார்க்க ஆழ்ந்த தூக்கத்தில் லயித்துப்போன மாதிரி தோன்றியது. நாடி யில் மூன்று நாள் வயது கொண்ட தாடி.
ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தேன். கடைசியாய் அன்று இரவு அப்பா வந்திருந்த போது அரைகுறைக் தூக்கத்தில் எழுந்து ஓடி அப்பா மார்பில் சாய்ந்து கொண்டது நினை வுக்கு வந்தது. அல்வா கேட்டு கன்னத்தில் திருகு வாங்கிக் கொண்டது. கனமாய் அழுத் தியது ஒரு நிமிடம் அவ்வளவு தான்.
இந்த ஒலமும் கூட்டமும் பார்க்க பார்க்க எங்காவது ஒடிப்போய் விடலாமா எ ன் று தோன்றியது. திடுமென முழு ஆண்டுத்தேர்வு எழுத முடியாமல் போய் விட்டதே.எப்படி பாஸ் செய்வேன்...? சுழற்றி சுழற்றி அடித் தது. முட்புதராய் நெருடியது.
**தம்பி இப்படி திரும்பி உக்காரு...” தலை உயர்த்தினேன். கேமரா சகிதமாய் ஒரு மனிதர்.
நிறைய இடங்களில் நின்று கோ ண ம் பார்த்தார். மெதுவாய் எழுந்து போய்விடத் தோன்றியது. என்னை பிடித்து இங்கே உட் கார வைத்த மனிதர் கேமரா மேனுடன் நிற்க நான் பேசாமல் சகித்துக் கொண்டு இருந்தேன். அம்மா கட்டில் விளிம்பில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். அம்மாவின் முகம் கேமராவிற்குள் வரவில்லை போலும் அம்மா வின் முகம் தெரிய வேண்டும் எ ன் று ஃபோட்டோ கிராஃபர் பி ரிய ப் ப ட் ட ர். அம்மாவை கேமரா பார்க்கச் சொன்னார். அம்மா வேண்டாம் வேண்டாம் என்று கட்டி லுக்குள் நுழைந்து கொண்டாள்.
கேமராமேனுக்கு அம்மாவின் மு க ம் தேவைப்பட்டது. திரும்ப திரும்பக் கேட்டார். அம்மா தலை உயர்த்தவேயில்லை.
பக்கத்தில் இருந்த நரைகிழவி அம் மா
தலையை வலுக்கட்டாயமாய் உயர் த் தி ப்
பிடித்தாள்.
**கொஞ்சம் இப்படியே இரு 위 6위 ங் க கேக்கருங்கல்ல பேப்பர்ல போடுறதுக்கு : எத்
தனை பேருக்கு இது கிடைக்கும்.”
கிழவி தானும் தெரியும்படி நெருக்கமாய்

Page 8
6
உட்கார்ந்தாள். இறுக்கமாய் அ ம் மா வி தலையை குனிய விடாமல் பிடித்துக் கொ6
டாள்.
அம்மா இறுக கண்களை மூடிக் கொள் டாள்.
ஃபளாஸ் வந்து முகத்தில் அறைந்தது. கை கால் எல்லாம் கட்டிப் போட்டு யாரே முகத்தில் துப்பிய மாதிரி இருந்தது.
சிறிது நேரத்தில் வெளியில் வந்து மூச் விட்டேன்.
பெரிய அக்காவின் கணவர் பார் க் கி நபரிடம் எல்லாம் திரும்ப திரும்ப ஒருபாட்ை பாடிக் கொண்டிருந்தார்.
**அவளுக்கு முதல்ல நா விஷயத்தைே சொல்லல.சும்மா ஊருக்கு போகலாம்னுதான் கிளப்பிட்டு வந்தேன். கோவில்பட்டி பள் ஸ்டாண்ட் வந்ததும் அவளுக்கு விஷ ய | தெரிஞ்சு போச்சு பஸ் பக்கத்து போஸ்ட் தட்டி எழுதி வச்சுருக்கறத பாத்துட்டா அப் பிடிச்ச அழுகை.ம்.நா எவ்வளவு கஷ்ட பட்டு விஷயத்த சொல்லாம கூட்டி வந்தேன்.
என் மாமா பையனும் பொண்ணும் என னைப் பார்த்ததும் முகத்தை ஒரு மாதிரி வை: துக் கொண்டார்கள். அசட்டுத்தனமாய் என குத்தான் அவர்களை பார்த்ததும் புன்ன.ை ரேகை முகத்தில் ஓடியது. கஷ்டப்பட்டு உத டைக் கடித்துக் கொண்டேன். இரு வ ரு எதுவும் பேசாமல் பக்கத்தில் நின்றார்கள் பிறகு கடந்து போனார்கள்.
'பாரு.அவுங்க அப்பா செத்துப் போய் ருக்காங்க. அழாம ரோட்ல வந்து நின்னு கிட்டுருக்கா...”
மெல்லிசாய் என் காதுகளுக்குள் புகுந்தது
அட, அழுகையே 1 வந்து தொலையேன்.
எனக்கு பசித்தது. காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. நன்றாய் இருட்டி விட்டது. நேரம் ஆக ஆக நிறைய கூட்ட வந்தது.
**தம்பி இங்க வா.”
அப்பாவுக்குதுக்கம் அனுஷ்டித்த பிறகு இளைப்பாறிக் கொண்டிருந்த குழுவில் ஒரு குழு கூப்பிட்டது.
மெதுவாய் தலை தாழ்த்திப் போனேன்.
**உனக்கு அண்ணன் உண்டா.”

Luftsub
-
b
*இல்லை”
**தம்பி.?
*ம்ஹாம்.”
*மொத்தம் எத்தனை பேரு.”
'ரெண்டு அக்கா நா ஒரு பையன்.”
நீ தா கடைசியா.”
“b.'
** என்ன படிக்கிற.”
**எய்த். நாளை அனுவல் எக்ஸாம்.”
சொல்லும்போது கொஞ்சம் கலக்கமாய் இருந்தது.
*ஊர்ல சொத்து எவ்வளவு இருக்கு?”
**கிடையாது”
**வயல்.நிலம்.”
*ம்ஹாம். கிடையாது”
“வீடு சொந்த வீடு தான.”
**இல்லை” கேள்வி கேட்டவர்களின் முகத்தில் சலனமே இல்லை.
**சரி போய் ஒரு இடத்துல உட்காரு.”
நகர்ந்தேன்.
**நாந்தா முதல்லயே சொன்னேனே. பதினேழு வருஷம் இந்த போஸ்ட்ல இருந் துருக்காரு ஒரு நயாப்பைசா கூட சொத் து சேக்கல.ஆச்சர்யமில்ல.”
கூட்டம் விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன்
*என்னை தெரியுதா.”
*ம் தெரியுக.எங்க குட்டி அக் கா வை கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க நீங்க.”
"என்னை' எப்ப பார்த்த.” "நிச்சயதார்த்தம் பண்ணின அன்னைக்கு”
*அது என்ன குட்டி..உங்க அக்கா பேரு லட்சுமி தான.” -
**ம்.வீட்ல எல்லாரும் அப்படித்தா கூப் பிடுவாங்க...” t
'சரி சாப்பிட்டியா.”

Page 9
பாலம்
பேசாமல் நின்றேன்.
* * ағf өшпr...”
**வேண்டாம்.”
எனக்குக்கூட கேட்காத குரலில் சொன் னேன்.
அவர் என்னை கையைப்பிடித்துக் கூட்டிப் போனார்.
ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தபோது கட்டிலில் கிடத்தியிருக்கிற அப்பாவின் முகமும் பக்கத்தில் கதறித் கொண்டிருக்கிற அம்மாவின் முகமும் முன்னால் வந்தது.
நெஞ்சுக்குள் வலி.
வயிற்றுக்குள் பசி.
*சாப்பிடு.
அவரது வார்த்தையைத் தொடர்ந்து சாப் பிட்டேன்.
வெளியே வந்ததும் ஆறுதல் சொல்கிற மாதிரி தோளில் கைபோட்டு பேசினார். குட்டி அக்கா பற்றி நிறையவே கேள்வி கேட்டார்.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தனிமை கிடைத்தது. பஸ் ஸ்டாண்டில் போய் உலாத் தினேன். ܫ
வரிசையாய் இரும்புக் கம்பங்கள் நெட்டை யாய் நின்றது. நீண்ட கழுத்து வளைந்து நிலம் பார்த்திருந்தது. நுனியில் தலைக்கவசம் மாதிரி சோடியம் வேப்பர் லேம்ப் மெல்லிசாய் ஒரு மஞ்சள் ஒளிப்படலம் பஸ் ஸ்டாண்ட் முழுக்க விரவிக் கிடந்தது.
சட்டையின் நிறம் மாறியிருந்தது. இது அழகு, பிடித்திருந்தது. இந்த இட த்  ைத விட்டு நகர்ந்தால் மங்கி மறையப் பார்க்கிறது. இரண்டு முறை நகர எத்தனித்து சட்டையில் அந்த மஞ்சள் ஒளிப்படலம் மங்க அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.
இதுவும் நிரந்தரமில்லாதது.
அப்பாவை நினைக்க முழுமையாய் இருந் தது. குறைவோ...வெறுமையோ இல்லை.
அப்பா சேர்த்து வைத்திருக்கிற சொத்து புத்தகம் மட்டுமே. எவ்வளவு புத்தகம்? தலை யணை மாதிரி புத்தகத்தில் இருந்து, விசிறிக் கொள்கிற அளவு மெல்லிசான புத்தகம் வரை விதவிதமாய் பெட்டி பெட்டியாய் புத்தகங்கள்.
அப்பா, அம்மா மாதிரி கண்ட கண் ட புத்தகங்களை படிக்காதே என்று அலற மாட்

டார். அப்பா கொண்டு வருகிற எந்த புத்த கத்தை எடுத்துப் புரட்டினாலும் சத்தமே போட மாட்டார். அடுக்கி வைத்த மாதிரி இருக்க வேண்டும். அவ்வவவு தான்.
** என்ன புக்டா படிக்கிற.”
é é s
தாய். அகல கண் விழித்தார். “யார் எழுதினது.?” மக்ஸிம் கார்க்கி." *தமிழ் மொழி பெயர்ப்பு யாரு?” *தெரியாது.”
'புக்ல இருக்கும் பாரு...” புரட்டிப் பார்த்துச் சொன்னேன். *ரகுநாதன்”
“ஒரு புக் படிச்சா இதெல்லாம் தெரிஞ்சு கிட்டுதான் படிக்கணும்”
6°gf.'
“ “Luqi...”
அப்பாவை ஒரு வாரத்தில் ஒரு முறை பார்ப்பது அபூர்வம். அப்பாவின் வரவு இனிப் பாய் இருக்கும். வரும் பொழுது எல்லாம் அல்வா வாங்கிக் கொண்டு வருவார். h−
நான் நின்றிருந்த இடத்தில் பேப்பர் பார் சல் கொண்டு வந்து போட்டார்கள். பேப் பரின் முதல் பதிப்பு வந்து விட்டது. இரண்டு மூன்று பேர் பிரிக்க அப்பா பற்றிய செய்தி ஃபோட்டோவோடு இருந்தது. நான் கூட இருந்தேன். இப்பொழுது போட்டிருக்கிற அதே நிக்கர் சர்ட் சகிதமாய் அப்பாவின் தலைமாட்டில் நா ன். பக்க வாட் டி ல் தலைவிரி கோலமாய் அம்மா. கூடவே நரை கிழவி. அந்தக் கிழவி இதைப்பார்த்தால் சந் தோஷப்படக் கூடும். -
* விடிந்தது.
அநேகமாய் வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாகி விட்டது.
என்னை கொஞ்சம் பேர் சூழ்ந்து ஆற்றங் கரைக்குக் கூட்டிப் போனார்கள். காகாக்காய் குளியலில்எழுப்பி நெஞ்சு கைகள் எல்லாம் விபூதி குழைத்து பட்டைபோட்டு விட்டார்கள். எனக்கு கூச்சமாய் இருந்தது. நெற்றியில் போ ட முயன்ற போது நெற்றியை மறைத்துக் கொண்டு தலைமுடி கிடந்தது. அவர் ஒதுக்கி

Page 10
8
விட்டு நெற்றியில் பட்டைபோட முயன் போது மறுபடியும் என்தலைமுடி நெற்றில மறைத்துக் கொண்டது. அவர் சலித் து கொண்டார். நானே தலைமுடியை ஒதுக் பிடித்துத் கொண்டேன். அவர் என் நெற் யில் கை ஒற்றி எடுத்தார் மார்பின் குறுக் பூணுரல். கூச்சமாய் இருந்தது. என்னை இந் கோலத்தில் கண்ணாடியில் பார்த்துக் கொள் வேண்டும் போல் இருந்தது. ஒரு செம்பு சுமந்து நடந்தேன்.
மறுபடியும் நபர்கள் சூழ ஆற்றங்கை இழுத்து வரப்பட்டேன். இந்த முறை அப் கூடவே வானம் பார்த்து வந்தார். தீ சட் நான் சுமந்து வரவில்லை. சிறுவன் என்கி ஏதோ ஒன்று போலும்.கூட்டம் ரொம்ப நீ மாய் இருந்தது. என்னை உறவினர்கள் சூழ்ந் வந்தார்கள்.
என்னை தனியாய் விட்டு விட்டால் தே லாம் போல் இருந்தது.
அப்பாவை தூக்கி எரு, விறகு எல்லா அடுக்கி வைத்திருந்த ஆசனத்தில் கிடத்தின.
56
என் சகல நரம்புகளிலும் வலி எ டுக் ஆரம்பித்தது. கனமாய் அழுத்தியது. ஏனே அழமுடியவில்லை.
தள்ளி வந்ததும் திரும்பிப் பார்த்தேன் அப்பா எரிந்து கொண்டுருக்கிறார் என்பன நினைக்கவே தீயாய் சுட்டது. புகை சுழன் சுழன்று வான் தோக்கிப் போனது. அப்ட அங்கே அமர்ந்து சிகரெட் பிடித்து, புகை வி வதாய் தோன்றியது. .
தாமிரபரணியில் த  ைல முழுகியது வீட்டுக்கு இழுத்து வரப்பட்டேன்.
தினமும் மாலை வேளையில் கூடிக் கூடி ஒ பாரி வைக்கிறார்கள். முறைவைத்து மாறி மா, ஏதாவது படைத்து நாவின் ருசியை வள படுத்திக் கொள்கிறார்கள்.
"ஏம்பா தலைமுடியெல்லாம் வச்சிருக்க.
ஒரு நடுத்தர வயது அம்மா மறித் நின்றாள். நான் விழித்தேன். ۔۔۔۔۔
“இல்லை. அப்பா இறந்துட்டா மொட்ை அடிப்பாங்கல்ல.”
*இல்லையே." “ஒங்கல்ல அந்த வ ழ க் கம் இல் போலுக்கு.”
அப்பாடி. இப்படி ஒன்று இல்லாம போனதே.நிம்மதி.

பாலம்
ற
க்
]றி 35 தக்
6
峪斤
'அம்மா இன்னும் அப்படியே இருக்கு.”
*எப்படி...”
தன் கழுத்தில் கிடந்த தாலியை தொட்டு காண்பித்தாள் அந்த அம்மா.”
*அது எத்தனாவது நாள் செய்வாங்கன்னு தெரியல.”
ஓடி விட வேண்டும் போல் இருந்தது. பிய்த்துக் கொண்டேன். முடிந்தவரை என்னை தனிமையில் இருத்
திக் கெர்ண்டேன்.
முடிந்தது. சகலமும் முடிந்தது.
அப்பா! நான் பாஸ் செய்து விட்டேன். ஒரு பெரிய பாரம் இறங்கியது. என் காலாண்டு அரையாண்டு மார்க்குகளைக் கொண் டு ம், என்னால் பரிட்சை எழுதமுடியாமல் போன காரணம் முன்னிட்டும் என்னை பாஸ் யெய்து
விட்டார்கள். நிம்மதி.
இன்று ஸ்கூல் போக வேண்டும். எல் லோரையும் பார்க்கலாம். சுந்தர், சங்கர்,
பூணிலேகா, சாந்தி, இன்னும் இன்னும்.
ஸ்கூல் காம்பெளண்ட் நுழைய இரண்டு பையன்கள் ஓடி வந்து கை பிடித்துக் கொண் டார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு மாதிரி விழித்தார்கள்.
*" என்னப்பா இப்படியாயிருச்சு.”
நான் உதடு பிரியாமல் சிரித்தேன்.
க்ளாஸ் பையன்கள் கூடினார்கள். மன
செல்லாம் லேசாய் இருந்தது.
தூரத்தில் வந்த பையன் என்னைப் பார்த் ததும் ஓடி வந்தான். வந்து தோள் தட்டி **உன் போட்டவ பேப்பர்ல பாத்தேன். ஜம்னு சும்மா ரஜினி மாதிரி நெத்தில முடி விழ உக் காந்திருந்தியே.”
அமைதியானேன். அந்த பையன் சொன்
னது.எனக்கு அந்த பேப்பர் ஃபோட்டோ பார்க்க வேண்டும் போல் இருந்தது.
நெஞ்சுக்குள் கைவிட்டு பிசைகிற மாதிரி ஒரு வேதனை, கண்கள் கலங்கியது, விசும்பல் எட்டிப் பார்த்தது. ஐயோ எனக்கு அழவேண் டும் போல் இருக்கிறதே. தோள் குலுங்கி, கதறி, பெருங்குரல் எடுத்து அ ழ வேண் டு ம் போல் இருக்கிறதே. அப்பா.அப்பா. O

Page 11
இன்றைய தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் களின் முன்னால் எழுந்து நிற்கும் பெரிய வினா இதுதான் : "தற்கால சமூக அமைப் பில் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்ற வகை யில் நான் வகிக்கும் பங்கு என்ன?” இந்த வினாவிற்கு படைப்பாளி அளிக்கும் விடையின் சிறப்பைப் பொறுத்து, அவனது படைப்புகள் உன்னதம் அடைகின்றன. இன்னும் சொல்லப் போனால் இந்த வினாவுக்கு அளிக்கப்படும் விடையின் தன்மையைப் பொறுத்தே, அப் படைப்பாளியின் படைப்புகளின் உருவமும், உத்தி முறைகளும் கூட அமைகின்றன. நேர்மையான நம்பிக்கைகளும், ஆழமான சமூ கக் கடமைகளும் கொண்ட கலைஞர்களை, போலிகளிலிருந்து வேறுபடுத்தி இனம் காண்ப தற்கும் கூட இந்த வினா உதவுகிறது.
இவ்வாறு தனக்கான ஒரு சமூகப் பாத்திரத் தைத் தேடி அலையும் கலைஞர்கள் பிற நாடு களில், பிற பண்பாட்டுச் சூழல்களில் இயங்கும் சிறுகதை எழுத்தாளர்கள் எத்தகைய பங்கை வகிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளத் துடிப் பது ஆரோக்கியமானதாகும். '
இன்றைய தமிழ்ச் சிறுகதை ஆசிரியர் களுக்குள் இருப்பது போலவேதான், இன்றைய வெளிநாட்டுச் சிறுகதை ஆசிரியர்களிடையே யும் இரு பெரும் பிரிவுகளை நான் காண் கிறேன். ஒரு பிரிவு, தனது கலைப் படைப்பு களின் மூலமாக சமூகத்திற்குப் பயன்படக்கூடிய ஒன்றையே அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. மறுபிரிவு, கலைஞனாகிய தனக்கு இத்தகைய சமூகக் கடமைகள் ஏதும் கிடை யாது என்று மறுதலிப்பவர்கள். இன்றைய தமிழ்ச் சிறுகதையாளர்களில் சிலர் தமது ஆரம்ப காலத்தில் இத்தகைய கடமைகளைத் தோளில் தாங்கியிருந்து, பிற்காலத்தில் இவற் றைத் துறந்தவர்கள். வேறு சிலர் தொடக்க நாளில் இது பற்றிய கவனம் செலுத்தாம லிருந்து, பின்னாளில் இத்தகைய கடமையாற்ற முன்வந்தவர்கள். 'எட்டு கதைகள்’ தொகுதி யில் காணப்படும் இராஜேந்திரச் சோழனுக்கும், "பறிமுதல்’ தொகுதியில் காணப்படும் அஸ்வகோஷாக்கும் வேறுபாடுகள் உள்ளதை நாம் காண முடியும்.

சிறுகதையில்அக்கரைக்கு இக்கரை
- இந்திரன்
ன்றைய உளவியல் ரீதியில்-எரிக் பெர்னி uísör (ERIC BERNE) GJITřiš6o556fisio 96 விரு போக்குகளையும் புரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும். எரிக்பெர்னி, மனிதனுக் குள் இருக்கும் உளவியல் கட்டமைப்பை 3 பிரிவுகளாகப் பிரிக்கிறார்.
1) தனது தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களிட மிருந்து சுவீகரித்துக் கொண்ட கருத்துக் களால் உருவாகிய ஒரு பகுதி. இதனை அவர் “பெற்றோர் மனநிலை' (Parent Ego) என்று அழைக்கிறார்.
2) குழந்தைத்தனமான ஆசைகள், விளை யாட்டுப் போக்கு, அறிவுபூர்வமாக ஆராய விருப்பப்படாத பண்பு ஆகியவை கொண்ட மற்றொரு பகுதி. இதனை “(5 pissog LD60Ts6606)' (Child Ego) 6T6ir கிறார். የ ..
3) இந்தப் பெற்றோர் மனநிலை, குழந்தை மனநிலை கொள்ளும் உணர்வுகளையும் கூட நடுநிலைமையுடன் ஏற்று, பரிசீலித்து அறிவுப்பூர்வமாக அலசி ஆராய்ந்து அதன்படி செயல்பட முனையும் பகுதி. இதனை "வயது வந்த மனநிலை (Adult Ego) என்று அழைக்கிறார்.
இந்த மூன்று பகுதிகளில் பெற்றோர் மன நிலையிலிருந்து விடுபட வேண்டுமென்று முயற் சிக்கும் எழுத்தாளிர்கள், பழமைப் பிடியிலி ருந்து தனது எழுத்துக்களை மீட்டெடுத்து விடுகிறார்கள். இத்தகைய எழுத்தாளர் களையே நவீன எழுத்தாளர்கள் என்னும் பகுதியில் சேர்க்கிறோம்.
ஆனால் தமிழ் போன்ற இலக்கிய பாரம் பர்யம் கொண்டதொரு மொழியை கையாண்டு சிறுகதை படைக்கும் எழுத்தாளர்களின் முதுகில் இந்தப் பழமை ஒரு பெரும் சுமையாகக் கனப் பதை யாரும் மறுக்க முடியாது. இந்த வர லாற்று ரீதியான சுமையை இறக்கி வைத்து விட்ட எழுத்தாளர்கள் உளவியல் ரீதியாகப் பெற்றோர் மனநிலையிலிருந்து விடுபட்டவர்

Page 12
10
கள். இதற்குப் பிறகு இவர்கள் முன்னெழு பிரச்சினை தாங்கள் தங்களுக்குள் இருக்கு ‘குழந்தை சொல்வதைக் கேட்டு இலக்கிய படைப்பதா அல்லது தனக்குள் இருக்கு *வயது வந்தவன்’ (Adult) சொல்வதைக் கேட் படைப்பதா என்பதுதான்.
இந்த இடத்தில் எரிக்பெர்னி சொல்வ: என்னவெனில், மனநலத்துடன் விளக்குவதற் தனக்குள் இருக்கும் பெற்றோரையும் குழந்ை யையும் மறுதலிக்காமல் ஏற்றுக்கொண்டு ஆனால் அவ்விரு மனோநிலைகளின் தேை களை அறிவுப்பூர்வமாகப் பரிசீலித்து ஏற்புை யதை மட்டும் செயல்படுத்துவது. இந்த முை யில் சிறுகதைகள் படைக்கப்படுமானால் அை மிகவும் ஆரோக்கியமானவையாக இருக்கும்
இதில் முற்போக்குச் சிந்தனைகளா கவரப்பட்டவர்கள் பேய் பிடித்தல், தெய் வழிபாடு போன்ற பகுத்தறிவுக்கு ஒத்துவரா, வற்றைப் பற்றி எழுதுவது மிகவும் பிற்போ குத்தனமானது என்று ஒட்டுமொத்தமாக நிர கரித்து விடுகின்றனர். அவ்வளவு ஏன்? த6ை சிறந்த கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயண னின் மணிவிழா மதுரையில் நடந்தபோது அவ்விழாவில் நானும் கலந்துகொள்ள நேர் தது. அப்போது பல முற்போக்கு விமர்சகர்கள் அவர் சில உணவு வகைகளின் சுவைகளை (மாந்தருள் ஒரு அன்னப்பறவை எனும் நூலில் சிலாகித்து எழுதியதுகூட பூர்ஷ்வாத்தன மானது என்று சொல்லி விமர்சித்தனர். இ தகையப் போக்கு வலிமையான பெற்றோ மனநிலையிலிருந்து பெறப்ப்ட்டதாகும். மணி உணர்வுகளுக்கு இடம் கொடுக்காத வரட்டு தனமான இதுபோன்ற விமர்சனங்கள் நமது சிறுகதை எழுத்தாளர்களில் சிலரை முடமாக்க விட்டிருக்கிறது.
ஆனால் அக்கரையில் பார்த்தால், ஐச Glu66f6řiv frissíř (Isaac Bashevis Singer எனும் நோபல் பரிசு பெற்ற யூத எழுத்தால் ரின் கதைகளில் பல, பிணத்துடன் தூங்கிய மனிதன், மேசையில் போட்டு கழுத்தை வெட டும்போது மனிதக் குரலில் பேசும் வாத்து ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. இதன் மூலமாக மனித வாழ்க்கையின் பல்வேறு பட டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இன்னமும் தனக்கு பேய் பிடித்திருப்பதா நினைக்கும் மனிதர்கள் வாழும் வரையிலும் அவர்களைப் பற்றியும் அவர்களது உளவியல் கோளாறுகள் பற்றியும் எழுதுவது எந்தவித தில் தவறுடையதாகும்? மாறாக, அது மனி: வாழ்வின் சிக்கல்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு சிறந்: உத்திமுறையாகும்.

பாலம்
சோவியத் ரஷ்யாவின் புரட்சிக் காலங்களில் வேர் பிடித்து எழுந்த "கன்ஸ்ட்ரக்டிவிசம்’ நவீன கலை இயக்கங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாக கலைஞனின் சமுதாயப் பணியை வலியுறுத்தியதாகும். 1920-ബ அலெக்சி கேன் (Alexi Gan) வெளியிட்ட கன்ஸ்ட்ரக்டிவிச அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்: “கலைஞனின் பணி நிதர் சனத்தை பிரதிபலிப்பதோ, பிரதிநிதித்துவப் படுத்துவதோ அர்த்தம் சொல்வதோ அல்ல. * உழைப்பாளிகள்’ எனும் புதிய வர்க்கத்தின் பெருஞ்செயல்களை வெளியிடுவதும் அதை Sl6ouD6spæil G6ug5 LOTG5ub” ("Task of the artist is not to reflect, not to represent and not to interpret realiity, but really to build and express the task of the new class, proletariat' - Quoted in Gray-1962)
இதற்கு நேர் எதிரான ஒரு போக்கு டாடாயிசம். இது தன்மேல் விதிமுறைகளை யும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், மதநம்பிக் கைகளையும் திணிக்கும் சமுதாயத்தின் மீது ஒரு குழந்தை கொள்வது போன்ற கோபா வேசம் கொள்கிறது. கலை இனிமேலும் உங் கள் அழகியல் வேட்டையைத் தணிக்கும் ஒன் றாக இருக்காது என்று மறுக்கிறது. சமூகம் இந்த டாடாயிச ரீதியில் படைக்கப்பட்ட படைப் புகளை கண்டிப்பான பெற்றோரைப் போல வும், சில நேரங்களில் தன் குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்கும் பெற்றோர் போலவும் நடந்து கொள்கிறது. ஆனால் கன்ஸ்ட்ரக்டிவிசத்தாரிகளும், டாடாயிசத்து கலைஞர்களும் தற்போது நிலவும் சமூக அமைப்பைத் தங்கள் கலைப்படைப்புகளின் மூலமாக ஒருசேர எதிர்க் கிறார்கள். தத்துவ, கலை இயக்கங்கள் மேலை நாடுகளில் இலக்கிய இயக்கங்களைப் பாதிக்கின்றன. இலக்கிய இயக்கங்கள் கலை இயக்கங்களைப் பாதிக்கின்றன. இதனால்தான் ஜேம்ஸ்ஜாய்சை நன்கு அனுபவிக்க வேண்டு மானால் உளவியல் மேதைகள் ப்ராய்டையும், ஜங்கையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. நியெட்சேயின் தத்துவக் கோட்பாடு களை எர்னெஸ்ட் ஹெமிங்வேயும், ஆல்பெர்ட் காமுவும் எந்த அளவுக்கு எடுத்துக்கொண்டுள் ளனர் என்று அறிவது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஹெய்டெக்கரின் எக்சிஸ்டென்விழியலிசத் தத்துவங்களின் தொடர்பாக *ழின்பால் சார்த்ரூ’வைப் படிக்கிறபோது அது மேலும் மேலும் அர்த்தமுள்ளதாகிறது.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் கலை இயக்கங்கள் என்று எதுவும் இங்கு கிடையாது. அப்படி ஏதேனும் இயக்கம்போல் ஒன்று தோன்றுமாயின் அது வரட்டுத்தனமான கோஷம் சார்ந்ததாக அமைந்து இருக்கிறது.

Page 13
பாலம்
இங்கு ஒவிய, சிற்ப கலைஞர்களுக்கும், இலக் கியக் கலைஞர்களுக்கும் இடையே ஒருமித்த உறவுகள் கிடையாது. திரைப்படங்களுக்கான மூலக் கதைகளை வழங்கியுள்ள முறையில் சில சிறுகதைகளும், சிறு க  ைத ஆசிரியர்களும் திரைப்படக் கலையுடன் தொடர்பு கொண்டுள் ளனர் என்பதைத் தவிர்த்து வேறு கலைகள் சிறுகதைகளைப் பாதித்துள்ளனவா என்பது வினாக்குறியே.
நவீன ஓவியக்கலை இந்த உலகத்தை ஒரு புதிய கண்கொண்டு பார்க்கத் தொடங் கியது. புதிய இதயம் கொண்டு உணரத் தொடங்கியது; இது புதிய எதார்த்தத்தை உருவாக்கி இந்த உலகையே புதிய முறையில் படைத்தது என்பதுகூட உயர்வு நவிற்சி அல்ல.
இந்த அளவுக்கு இன்றைய தமிழ்ச் சிறு கதை வாழ்க்கையை புதிய கண்கொண்டு பார்க்கத் தொடங்கி இருக்கிறதா? இல்லை. மென்மேலும் கொடூரமானதாக மாறிக்கொண்டு போகும் இன்றைய கீழ்த்தர அரசியல் தமிழ்ச் சிறுகதைகளை பாதித்திருக்கிறதா? இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா மனிதத் தன்மையற்ற செயல்களும் நமது சிறுகதை எழுத்தாளனைப் பா தி த் து இருக்கிறதா? இல்லை. காரணம், எழுத்தாளன் என்பவன் இங்கு தன்னைச் சுற்றிலும் ஒரு கண்ணாடிக் கோட்டையை எழுப்பிக்கொண்டு வாழ்கிறான் என்பதுதான். அண்மையில் பயணம்’ இதழில் வெளிவந்த பூமணியின் ‘நாக்கு’ எனும் சிறு கதை நமது காவல்துறை அப்பாவி மக்களுக்கு இழைக்கும் அநீதியையும், அதை எதிர்க்க சக்தியற்ற ஒரு இயலாத மனிதனின் நிர்க்கதி யான நிலைமையையும் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதனைப் படித்த நண்பரொருவர் இந்தச் சிறுகதை சற்று கூடு தலான நாடகத்தன்மை கொண்டதாக உள் ளது என்று கூறினார்.
ஆனால் கதைகள், நாடகத்தன்மை யுடனோ, நிதர்சனம் மீறிய அதீத கற்பனை களுடனோ சர்ரியலிசப் பண்புக் கூறுகளுடனோ இருந்தால் அதில் ஏதும் குறையில்லை. சிறு கதையானது, சொல்லவரும் கரு த்  ைத, உணர்வை, ஆழமாக வாசகனின் மனத்தில் பதிக்குமாயின்அதுவே அவனது வெற்றி.
6ù Ti6iu63T giogé6o (Langston Hughs) எனும் ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் எழு திய "இருட்டுக்கு நிழல் இல்லை’ எனும் சிறு கதை ஒன்றில் (இது 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ என்ற எனது நூ லில் உள்ளது) குளிரில் நடுங்கும் வீடற்ற ஒரு நீக்ரோ ஒரு கிருத்துவ தேவாலயத்தில் ஒதுங்க இடம் தேடி அத் தேவாலயத்தின் க த  ைவத்

திறக்க முனைகிறான். இதைக் கண்ட பல வெள்ளையர்கள், வெள்ளையர்களுக்கே உரிய அத் தேவாலயத்தில் ஒரு கறுப்பன் நுழையக் கூடாதெனப் பிடித்து அவனது மண்டையில் அடிக்கிறார்கள். ஆனால் நீக்ரோவின் தளராத பலமான பிடியினால் அந்தத் தேவாலயமே நொறுங்கி விழுகிறது. தேவாலயத்தின் இடி பாடுகளுக்கு கீழே மொத்த வெள்ளையர்களும் புதையுண்டு போகிறார்கள். நீக்ரோ அங்கே பார்க்கிறான். சிலுவையில் அறையப்பட்ட, கல்லால் செய்யப்பட்ட இயேசுநாதர் தனியே கிடக்கிறார். அவர் எழுந்து வந்து தன்னை சிலுவையிலிருந்து விடுவித்தற்காக நன்றி கூறு கிறார். இருவரும் 'உரையாடிக் கொண்டு நடக் கிறார்கள்.
இந்தச் சிறுகதையில் வரும் அதீதமான கற்பனை ஓர் உன்னதமான உணர்ச்சியைத் தெரிவிக்க துணை வருகிறது. இந்த அதீத மான கற்பனை வளத்தை வெளிநாட்டு இலச் கியங்களில் பரக்கக் காணலாம். இந் த கற்பனை வளத்தை நாம் பெறவேண்டுமாயின் நமக்குள் இருக்கும் குழந்தையின் இயல்பான கற்பனைகளை அடக்கிவைக்காமல் படைப்பு களில் விளையாட விடவேண்டும். இத்தகைய கற்பனைகள் வாசகர்களின் அனுபவங்களை மேலும் ஆழப்படுத்தும்.
இன்றைய ஆங்கிலச் சிறுகதைகளை எடுத் துக் கொண்டோமானால், அவை அடுக்கடுக் கான நிகழ்ச்சிப் பின்னல்களோடு ஒரு சிகரம் அல்லது முடிவை நோக்கி நகரும் பாணியி லிருந்து மாறிவிட்டன. ஒரு மனோதத்துவ விஷயத்தை அ ல் லது த த் துவ த்  ைத தியானிக்கிற அல்லது கனவு காண்கிறவை களாக அமைகின்றன. 1960க்குப் பிற கு கிரஹாம் ds if 6f 65T (Graham green) சிறுகதைகளை இதற்கு எடுத்துக்காட்டாக் கலாம்.
இத்தகைய போக்குகள் தமிழின் இன்றைய சிறுகதைகளிலும் அமைந்து வருவதைக் காண லாம். சில எழுத்தாளர்கள் இதனை தமிழில் சிறப்பாகவேச் செய்கின்றனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் புதுமைப்பித்தனின் 'கயிற் றரவு’ எனும் சிறுகதை. இது உலக இலக் கியங்களோடு சமதையாக நின்று பெருமை பேசக் கூடியது. புதுமைப்பித்தன் காலத்தில் தோன்றிய இந்த பரிசோதனை வேட்கை இன் னும் தணிந்தபாடில்லை. பல இளம் சிறு கதை ஆசிரியர்கள் பல பரிசோதனை முயற்சி களை மேற்கொண்டே வருகிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்
களில் நாஞ்சில் நாடன், த மி ழ் ச் செல்வன், விமலாதித்த மாமல்லன், கோணங்கி, கோபி

Page 14
12
கிருஷ்ணா, பாவண்ணன், சுப்பிரபாரதிமணிய ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஆயினு இந்த இளைஞர்கள் அற்றை நாளில் புதுமை பித்தன் தொட்ட சிகரங்களை இ ன் ன மு
தொடவேண்டியவர்களாக இரு க் கிறார்க என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. இதி கோணங்கியின் "கருப்பு ரயில்’ எனும் சிறுகை சிறுவயதிலேயே தீப்பெட்டி தொழிற்சாலைக் வேலைக்குப் போய்விடும் சிறுவர்கள் இழந் சோகத்தை மிக நவீன முறையில் நெஞ்சி பதிக்கிறது. இதே பின்னணியின் தொடர்ச் யான வேறொரு சோகத்தைச் சொல்லும் தமிழ் செல்வனின் ‘குரல்கள்’ எனும் சிறுகதை மி உன்னதமான வேறொரு முறையில் எழுத பட்டிருக்கிறது. இக்கதையில் தமிழ்ச்செல் னின் எளியநடை கிராமத்து நிழல்களுக்கு உயிரூட்டி எழுந்து நிற்க வைப்பவை. இவர: எழுத்துக்கள் தனது காலுக்குக் கீழேயே தன: படைப்புகளின் கருவைத் தேடும்; ஆப்பிரிக் எழுத்தாளர்களைப்போல, முழு அடையாள துடன் வாசகர்களின் மனதில் வந்து அம
606).
இந்த புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தாங்கள் எழுதுவதற்கு எடுத்துக் கொள்ளு பொருள்களைப் பற்றி நிறைய கவனம் எடு துக் கொள்கிறார்கள். இதே க வ ன த்  ை இவர்கள் மென்மேலும் வளர்த்துக் கொள்வா களெனில், இவர்களின் முந்தைய தலைமுை எழுத்தாளர்களான சா. கந்தசாமி, பூமணி அஸ்வகோஷ், பிரபஞ்சன், அசோகமித்திரன்
பொன்னி புக்க
சென்னை புக்ள்
அன்ன
ரசனா புக்ஹவுஸ்
கிரிய
கார்க்கி நூலக
முதலிய நிறுவனங்களில்
நூல்கள் கிடைக்கு
473, கூடல்நகர் (அக்ரோ சென்

பாலம்
ஜெயப்பிரகாசம், வண்ணநிலவன், ஆ. மாத வன் ஆகியோரையும் மீறி, அவர்கள் தொடாத புதிய எல்லைகளைத் தொடுவார்கள் என்கிற நம்பிக்கை நெஞ்சில் எழுகிறது.
அக்கரைச் சிறுகதைகளில் என்ன நிகழ் கிறது என்று அறிந்து கொள்கிற அதே நேரத்தில், அந்த அயல்நாட்டுச் சிறு க  ைத களின் நிழல்களாக, மேல் நாட்டுச் சூரியனிடம் ஒளிவாங்கி தேய்ந்து போகிற நிலவுகளாக நீங்கள் இருக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் சிறுகதைகளுக்கான கருவை புத்த கங்களில் தேடாதீர்கள்.
நீங்கள் ஒரு உழவனாக இருப்பீர்களா னால், உங்கள் கொழு முனைக்குக் கீழேயே அது இருக்கிறதா என்று தேடிப் பார்த் து விடுங்கள்.
நீங்கள் ஒரு மீனவனாக இருந்தால்,
உங்க்ள் வலைகளுக்கிடையே அது சிக் கி க்
கொண்டிருக்கிறதா என்று பார்த்து விடுங்கள்,
r உங்கள் சிறுகதைக் கருவை, உங்கள் ம் கண்களாலேயே தேடிக் கண்டு பி டி க் கத் த் தொடங்கிவிடுவீர்களெனில், அக் கரை யைக் த காட்டிலும் இக்கரை பசுமையாகிவிடும்.
O
s --சென்னையில் “வேர்கள்’ நடத்திய சிறு ா, கதைப்பட்டறையில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
ஸ் மதுரையில்
ஸ் தமிழின்
ம் நல்ல புத்தகங்களை
ஸ் உங்கள்
ா இல்லத்திற்கே
ம் கொண்டு வந்து
ன் சேர்க்கும்
ம் புதிய நிறுவனம்
ன்டர் எதிர்புறம்) மதுரை - 625 018.

Page 15
நூல கதைச்சிற்பி விமர்சன நூலாக அ6 LiJ8
சரத் சந்திர சட்டர்ஜி தமிழுக்கு அரை நூற் றாண்டுப் பழக்கமுள்ள கலைஞர். ‘சரத்பாபு என்று சொன்னாலே தமிழகத்தில் புரியும் அள வுக்கு இலக்கிய மற்றும் நாவல் ரசிகரிடையே பழகிப்போன மனிதர். அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றினை வங்க மண்ணிலே வாழும் கிருஷ்ணமூர்த்தியவர்கள் எழுதி வெளியிட்டிருக் கிறார்கள். சென்னை புக்ஸ், அழகிய முகப் புடன் தெளிவுடன் அச்சாகியிருக்கிறது.
மிக விரிவான செய்திகள் கொண்ட புத்தகம். சரத்சந்திரர் இந்திய இலக்கிய சிற்பி களிலேயே தனித்துவம் வாய்ந்த படைப்பாளி. திரு. கிருஷ்ணமூர்த்தியும், சென்னை புத்தக நிலையத்தினரும் 1988-ல் சரத்பாபுவைப் பற்றிய இந்த புத்தகத்தை வெளியிடும்போது வெறும் வரலாறாக ஜீவிய சரித்திரமாக இந்த நூல் அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண் டும். ஏற்கனவே சரத்சந்திர சட்டர்ஜியின் வாழ்க்கை வரலாற்றினை ருத்ர துளசிதாஸ் எனும் எழுத்தாளர் தமிழில் புத்தகமாய் எழுதி வெளியிட்டது மட்டுமின்றி சாகித்திய அகாடமி வெளியீடாய் நா. பார்த்தசாரதி எழுதி மொழி பெயர்க்கப்பட்டு சரத்சந்திரரின் விரிவான வர லாறும் வெளிவந்துள்ளது. புத்தகமாய் படங்க ளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குமுன் சரத்பாபுவைப் பற்றி கு. ப. ராஜகோபாலன், அ. கி. ஜெயராமன், த. நா. குமாரசாமி ஆகி யோர் தமிழில் விரிவான செய்திகளுடன் “மஞ்சரி’ பத்திரிகையிலும் கிராம ஊழியன கலா மோஹினி நவயுகப்ரசுராலயம் ஆகிய வெளியீடு களிலும் சரத்பாபுவைப் பற்றி வாழ்க்கை விளக் கமாய் நீண்ட கட்டுரைகளைத் தமிழில் தந்திருக் கிறார்கள். மீண்டும் சரத்பாபுவின் நாவல்கள் தமி ழில் வெளியிடப்பட்டபோது முன்னுரைகளாக வும் இப்பத்திரிகைகளிலிருந்து எடுத்து மறு பிரசுரங்களும் மறு பதிப்புகளும் வெளியிடப் பட்டிருக்கின்றன. சென்னை புக்ஸின் கதைச் சிற்பி சரத்சந்திரர் என்ற இந்தப் புதிய நூலில் விமர்சனரீதியான கருத்தோட்டமே இல் லாதது, மீண்டும் ஒரு சரத்சந்திரர் வரலாறே ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவே சொல்ல வேண்டும்.
நிறைய வாழ்க்கையின் சுவாரசியமான சம்பவங்கள் ஆதாரத்துடன் சொல்லப்பட்டிருக்

0
DöSa
சரத்சந்திரர்: மைந்திருக்க வேண்டும்
ாஷ்
கின்றன. கடிதங்கள் சரத்பாபுவின் நண்பர்கள் மற்றும் நேரடியான செய்திகளை கண்கூடாகக் கண்டவர்கள் மூலம் ஆய்வு செய்த செய்திகளை தொகுத்து புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது. கதைச்சிற்பி சரத்சந்திரர் என்ற நூலின் தலைப் புக்கேற்ற விமர்சனம்-அவரது வாழ்க்கை அடிப் படையிலோ அவரது இலக்கியப் படைப்புகள் அடிப்படையிலோ இந்திய இலக்கியத்திலோ அல்லது வங்க இலக்கியத்திலோ அவரது இடம் என்ன என்பதனை விமர்சன ரீதியின் அடிப்படையிலோ இந்த நூல் எழுதப்பட வில்லை. ஹிந்தியைத் தவிர வேறு எந்த இந்திய மொழியிலும் ‘கதைச்சிற்பி சரத் சந்திரர்” என்ற இந்தத் தமிழ்நூல் அளவுக்கு வெளிவரவில்லை என்று இதன் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தன் முன்னுரையில் வியந்து கூறுகிறார். மிகத் தவறான பிழையான கருத்து இது.
தெலுங்கு மொழியில் 1945 வாக்கிலேயே சரத்சந்திரரைப் பற்றி மூன்று தனித்தனிப் புத்த கங்கள் வெளிவந்தன. வரலாறு-வாழ்க்கைவிமர்சனம் என்று மூன்று புத்தகங்களை நீலகண்டம் எனும் எழுத்தாளர் எழுதி வெளியிட்டது மட்டுமின்றி இன்று வரை பல பதிப்புகளை வென்று இன்றும் விற்பனைக்குக் கிடைத்து வரு கிறது. இவை போக வம்சீப்ரசுரம் என்ற வெளி யீட்டு நிறுவனம் விஜயவாடாவில் சரத்சந்திர சட்டர்ஜியின் இலக்கியங்களை மட்டுமே வெளி யிட்டு தனிப்புகழ் பெற்றிருக்கிறது. இந்த நிறு வனம் சரத் சாஹித்யம்-சரத் வியாசலு-சரத் லிகிதமுலு-சரத் லேகலு-சரத் சரித்ரமு என்று சரத்பாபுவின் கட்டுரைகள், கதைகள், கடிதங் கள், சிந்தனைகள், வாழ்க்கை விமர்சனங்கள் என்று தனித்தனியே நூல்களை வெளியிட் டிருக்கின்றனர். இந்தியாவின் எந்த மொழி யிலும் இல்லாத அளவில் தெலுங்கில்தான் சரத்சந்திர சட்டர் ஜியின் நூல்களுக்குப் பல பதிப்புகள், பல அச்சுகள், பல வெளியீடுகள், பல வரலாறுகள் வெளிவந்துள்ளன என்பது மட்டுமல்ல சரத் இலக்கியம்-*சரத் சாஹித்ய விமர்சனமு” என்ற நானூறு பக்க விமர்சன நூலினை அல்லூரி சிவராமகிருஷ்ண சாஸ்த்ரு வெளியிட்டிருக்கிறார். இந்த நூலும் பல பதிப்புகளைக் கண்ட புகழ்பெற்ற விமர்சன நூலாகும். சரத்பாபுவைப் பின்பற்றி இலக்

Page 16
4
w. --
கியம் படைத்தவர் பட்டியல் ஒன்றினையே தரலாம்! தெலுங்கு மொழியின் பெண் எழுத் தாளர்கள் பெரும்பாலும் சரத்பாபுவின் பாணி யைப் பின்பற்றி நூற்றுக்கணக்கில் நாவல்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள். எனவே இவை களை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அலசிப் பார்க்க வேண்டும். சென்னை புக்ஸ்காரர் களும் கவனம் பெறவேண்டும்.
மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட சரத்சந்திரர் பற்றி புத்தகங்கள் வெளிவந்துள் ளன. விரிந்த அளவில் இவை சொல்லாவிட் டாலும் கூட விமர்சனரீதியில் வெளிவந்திருக்
கின்றன என்பது உண்மை.
சரத்பாபுவைப் பற்றிய ஒரு புகழ்மாலை போல் கதைச்சிற்பி சரத்சந்திரர் நூல் தொகுக் கப் பட்டிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கும் பின் னரும்கூட தமிழில் சரத்சந்திர சட்டர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை புகழ் பெற்ற சம்பவங் கள், அவரது சுவையான உரையாடல்கள் அவரைப் புகழ்ந்தவர்களின் உரைகளுடன்தான் வெளியிட வேண்டுமா? சரத்சந்திரரைப் பற்றி அவர் சமகாலத்து கலைஞர்களான லியோ டால்ஸ்ட்டாய், விக்தர்ஹ்யூகோ, சார்லஸ் டிக்கன்ஸ், கால்ஸ்ஒர்த்தி போன்ற அயல் நாட்டு நாவலாசிரியர்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கலாம். இந்தியப் படைப்பாளிக ளான பிரேம்சந்த் சதுரசேன சாஸ்திரி, வி. ஸ. காண்டேகர், பாரதி, நாஸி. பட்கே, பி. கேஸவ
யாழ்ப்பாணம் பற்றிய
டாக்டர். ஆ
யாழ்ப்பாணத்தின் த ந் போ  ைத ய நிலைமைகளின் மீது அனைவரது கவனமும் திரும்பியிருக்கும் இவ்வேளையில், யாழ்ப் பாணத்தில் ஆரம்ப காலத்தில் குடியேறிய மக்கள் குடியேற்றங்களைப் பற்றி அருமை யான, ஆதாரபூர்வமான, சார்பற்ற, விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சி நூல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு யாழ்ப்பாணப் பகுதியான சிறு புவியியல் பகுதியில் மேற்கொள்ளப் பட்டது. யாழ்ப் பாணத்தின் கலாச்சார, சமூக, பொருளா தார முறைகளைப் பற்றியதாகும். கிறித்து வுக்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய காலப் பகுதியிலிருந்து யாழ்ப்பாண சாம்ராஜ்யங்கள் தோன்றிய காலம் வரை யிலான காலப் பகுதி அதாவது தற்போ தைய ஆயிரமாவது ஆண்டின் தொடக்கக் காலப் பகுதி (1001) வரையிலான ஆராய்ச்சியாகும் இது. தீவுகள் அமைந்

Luntab
தேவ் போன்றோருடன் ஒப்பிட்டு விமர்சித்துக் காட்டியிருக்கலாம். சொல்லப் போனால் மேல் காட்டப்பட்ட இந்தப் படைப்பாளிகள் சரத் சந்திரரை விடவும் அறிவார்த்தமானவர்கள். புகழ் உலகை நிர்மாணித்தவர்கள். தமிழ் மொழியின் வறுமை, கதைச்சிற்பி சரத்சந்திர ரோடு நிற்கிறது. காரணம் தமிழில் சுயமான கருத்தோட்டம் மிக்க விமர்சனபூர்வமான எழுத் தாளர்கள் இல்லை.
கதைச்சிற்பி சரத்சந்திரர் என்ற இந்த நூல் சுவாரசியம் மிக்க நூலாய் உருவாகியிருப் பதைவிட விமர்சன ரீதியான நூலாய் அமைந்திருக்கலாம். எழுதிய நூலுக்கு எழுதிய விதத்தைப் பற்றிச் சொலவதை விட்டு இப்படி எழுதியிருக்கலாமே அப்படி எழுதியிருக் கலாமே என்று யோசனை கூறுவது அதிகப் பிரசங்கித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் அதுதான் ஆக்கபூர்வமான விமர்சனமும் வழி யும் ஆகும். ஏற்கனவே உள்ள இரண்டு புத் தகங்களுக்கு மேல் மீண்டும் ஒரு சரத்பாபு வாழ்க்கை விரிவாகக்கூட எதற்கு என்றே தோன்றுகிறது. இனியேனும் விமர்சனரீதியி லான நூல்களை வெளியிட கிருஷ்ணமூர்த்தி யையும் சென்னை புக்ஸ்ஸையும் தூண்ட வேண்டும் என்பதே நம் எண்ணம். கதை சிற்பி சரத் சந்திரர் () சு. கிருஷ்ணமூர்த்தி () விலை ரூ 35. () சென்னை புக்ஸ், தாயார் சாகிப் தெரு, 2வது சந்து, சென்னை-2.
சிறந்த ஆய்வு நூல் ர். நாகசாமி
துள்ள இடங்களைப் பற்றியும் அகழ்வா ராய்ச்சி இடங்கள் பற்றியும் இவற்றிற்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையி லான வரைபடங்கள்-ஏறக்குறைய 35 படங்கள்-இந்த ஆராய்ச்சியைத் தெளி வாக விளக்குவதாக உள்ளது. மனிதன்சுற்றுச்சூழல் இவற்றுக்கிடையிலான தொடர்புகளைச் சிறப்பாக விளக்குகின்ற இடவரைவு முறையைப் பயன்படுத்தியதற் காக ரகுபதியைப் பாராட்ட வேண்டும். அகழ்வுகளின் போதும் ஆராய்ச்சிகளின் போதும் அகப்படக்கூடிய மட்பாண்டங்கள் போன்ற, அகழ்வாராய்ச்சியாளர்களின் முக்கிய சாதனங்களைப் பற்றி, இந்த நூலின் அறிமுக அத்தியாயங்களில் நூலா சிரியர் விவரிக்கிருர்,
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட

Page 17
பாலம்
மிக முக்கியமான மையங்களில், கந்தரோடையும் ஒன்று. இது வியாபாரத் தலமான சுன்னுகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிறித்துவுக்கு முன் 500 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில்பழைய கற்காலத்தில் தொடங்கி-புத்த மத காலம் வரை இவ்வாராய்ச்சி விரி கிறது. யாழ்ப்பாண சுண்ணும்புக் கற்களா லும் பவளக் கற்களாலும் கட்டப்பட்ட புத்தர்கால முறைக் கட்டமைப்புகளின் மிச்ச சொச்சங்களின் தொகுதிகள் இந்த இடத்தில் இருக்கின்றன. கி. மு. 2-ம் நூற்ருண்டு காலத்தியதைச் சேர்ந்த, பிராமி மொழி வாசகங்களைக் கொண்ட உடைந்த மட்பாண்டத் துண்டுகளும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன. கி. மு. இரண்டாம் நூற்ருண்டு முதல் கி.பி. 13-ம் நூற்ருண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நாணயங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லகூடிமி உருவம் பொறித்த செவ்வக வடிவமான நாணயங் களும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளது ஒரு முக்கிய விஷயமாகும். கணிசமான எண்ணிக்கையில் ரோமானிய நாணயங் களும் முத்திரைகளும் கந்தரோடைப் பகுதியில் கிடைத்துள்ளது. அகழ்வா ராய்ச்சி நடந்த இடங்களில் ஆனைக் கோட்டை மிக அதிக முக்கியத்துவமுடைய இடமாகும். பேராசிரியர் இந்திரபாலா வுடன் இணைந்து இங்கு நூலாசிரியர் அகழ் வாராய்ச்சி நடத்தியுள்ளார். பழைய கற் காலக் கல்லறைகள் இங்கு காணக் கிடக் கின்றன. வாசகங்கள் பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரைகளும் இங்கு கிடைத் துள்ளன. பழைய கற்கால ஈமக்கிரியைச் சடங்குகள் பற்றி இவை பெருமளவு தெளிவுபடுத்துகின்றன. மற்ருெரு முக்கிய அகழ்வாராய்ச்சி மையமான வள்ளிபுரத் தில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட தங்கத் தகடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சி. 14 காலவரையறுப்பு முறையின் அடிப்படையில் சுமார் 28 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருந்த பல இடங்கள் கண்டுபிடிக் கப்பட்டிருப்பினும் யாழ்ப்பாணத்தில் சிறு கற்களைப் பயன்படுத்தி அமைக்கப்படக் 36n. Lq uu 35Lʻliq. L— 9|60)LD[`ilq356ir (micro!iths) எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இத ணுல் யாழ்ப்பாணப் பகுதியில் அக்காலத் 5s) (microlithic age) LD6of 5ids6ir 6), Irpi, திருக்கவில்லை என்று தெரிகிறது. எனவே தென்கிழக்குத் தமிழ்நாட்டில் அமைந் துள்ள திருநெல்வேலி வட்டாரத்தின் தேரி பகுதியிலிருந்து, சுமார் கி.மு. இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில வழி (இணைப்பு) மூலம் இலங்கையின்

15
வடக்கு-மேற்குப்பகுதியில் முதலாவதாக மக்கள் குடியேறி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கி. மு. ஐநூருமாவது ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பழைய கற்கால (megalithic) மக்கள் குடியேற்றம் குறிப்பிடத்தகுந்த இரண்டாவது குடியேற் றமாகும். "இலங்கையின் பழைய கற்கால பண்பாடு முழு வளர்ச்சியடைந்திருந்து சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் பொது வானதாகவும் இலங்கையின் பண்பாட்டு வரலாற்றுடன் ஒருங்கிணைந்ததாகவும் இது இருந்தது’ என்று இந்த குடியேற்றம் பற்றிக் கூறும்பொழுது நூலாசிரியர் குறிப் பிடுகிருர், யாழ்ப்பாணத்தின் மனிதக் குடி யேற்றக் காலம் கி. மு. ஐநூருமாவது ஆண்டைச் சேர்ந்தது என்று பென்சில்வேனியிா பல்கலைக்கழகம் காலவரையறை செய்துள்ளது. கந்தரோடை அகழ்வாராய் வுகள் இதை வெளிப்படுத்துகின்றன.
"இந்தத் தென்னிந்தியக் கலாச்சாரம் இலங்கையின் வடக்கு-மேற்குப் பகுதியி லிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆணுல் பழைய கற்கால கலாச்சாரத்தின் முன்னுேடிகளாக யாழ்ப் பாணத்திற்கு நாகர்கள் குடியேறினுர்களா அல்லது அங்கிருந்த கலாச்சாரத்தின் பாதிப்புக்கு அவர்கள் உள்ளானுர்களா என்ற கேள்வி எழுகிறது. இதற்குப் பதி லளிப்பது கடினம்’ என்று நூலாசிரியர்
கூறுகிருர், 'ஆரம்பகால யாழ்ப்பாணக்
குடிகள் தென்னிந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று மட்டுமே இவை பற்றிக் கூறமுடியும்’ என்று மேலும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பக்-182).
தமிழ்மொழி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள நாட்டுப்புற சமயங்கள் ஆகியவற் றின் மூலங்கள் புராதன வரலாற்றுக் காலத்திலிருந்து காணக் கிடைக்கின்றன என்று நூலாசிரியர் தெரிவிக்கிருர், தென் னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய கலாச்சார முறைமை கள் தோன்றியதற்குக் காரணமாயிருந்த தைப் போன்ற அதே சுற்றுச்சூழல், வாழ்க்கை நிலைமைகள், சமூகச் சூழ்நிலை
களின் தாக்கந்தாமே இலங்கைத்தீவின்
சிங்கள மற்றும் தமிழ் அமைப்புகளின் மேம்பாட்டுக்கும் காரணமாயின. நகர்மய மான நடுவில் அமைந்துள்ள இடமாகக் கந்தரோடை உருவாகியது. இதன் காரணமாக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியாக யாழ்ப்பாணத் தின் இதரக் குடியேற்றப் பகுதிகளைக் கட்டுப்படுத்தக் கூடியதாகக் கந்தரோடை உருவாவது சாத்தியமானது. ஏறத்தாழ கி. மு. முதலாம் நூற்ருண்டுவாக்கில்,

Page 18
8
ரோமானியருடன் வியாபாரம் தொடங்கிய காலத்தில் இந்த நகர்மயமாதல் நடை பெற்றுள்ளது அனைத்து மாகடல் வழி களும் இதர வியாபார போக்குவரத்துட் பாதைகளும் இலங்கைத்தீவின் பிரதான நிலப்பகுதியுடன் யாழ்ப்பாணத்தை இணைத்தன. இந்த இணைப்பு மேலக்கடற் கரை மற்றும் கீழக்கடற்கரை வழியே நிகழ்ந்தது. ரோமர்களுடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டதையும் தமிழ்நாட்டின் கீழக்கடற்கரையோரப் பகு தி யு டன் தொடர்பு ஏற்பட்டதையடுத்தும் இலங்கை யைச் சுற்றிக்கொண்டு போவதை விடுத்து மன்னுர் வளைகுடா மற்றும் பாக் நீரிணைவு வழியே ரோமானிய மற்றும் இந்தியக் கப்பல்கள் செல்லத் தொடங்கின. ரோமானிய வியாபாரத்தோடு தொடர் புள்ள சுழல்பாண்டம் (rouetted ware) என்ற வகை மட்பாண்டங்கள் யாழ்ப் பாணப் பகுதியில் உள்ள பத்து அகழ்வா ராய்ச்சி மையங்களில் கிடைத்துள்ளன. பிராமி மொழி வாசகங்கள் பொறிக்கப் பட்ட இவ்வகை மட்பாண்டங்கள் சூளைக் கோட்டையில் கிடைத்துள்ளன. இவை கி.பி. இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந் தவை. கந்தரோடையிலோ ரோமானிய நாணயங்கள் மற்றும் முத்திரைகள்கூட பெருமளவில் கிடைத்துள்ளன.
கிறித்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற் ருண்டு காலப் பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படக்கூடிய பாலி மொழியிலான கால வரிசைப்படி அமைந்த நூல்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் 'நாகநாடு” (Naganadu) அல்லது "நாகத்விபா” (Nagadvipa) என்று யாழ்ப்பாணம் குறிப் பிடப்படுகிறது. வள்ளிபுரத்தில் கி.பி. நான்காம் நூற்ருண்டைச் சேர்ந்த தங்கத் தட்டு ஒன்று கீண்டுபிடிக்கப்பட்டது. அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் **நாகதிவா” (Nagadiva) என்று யாழ்ப்பாணத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராத, புரம் மேல் நிலைக்கு வருவதற்கு முன்பு இலங்கையின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த பல்வேறு சாம்ராஜ்யங்களைப் பற்றி செய்திகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களில் பிராமி மொழியில் செதுக் கப்பட்டுள்ளன. இவற்றில் நாகத்விபா (யாழ்ப்பாணம்) பிரதேச ரீதியான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. யாழ்ப் பாணத்தின் கலாச்சார வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக புத்தமதம் விளங்குகிறது. இங்கே கிடைத்துள்ள சிறியதும் பெரியதுமான புத்த (கலாச்சார)

பாலம்
வகை ஸ்தூபிகளின் தொகுதி இதை எடுத்துக்காட்டுவதாகும். பிற்காலத்தில் ‘ஐய்யனருடன் புத்தர் (வேறுபாடின்றி) இணைக்கப்பட்டு விட்டார். இருப்பினும் “அனுராதபுரம் தனது செல்வாக்கைச் செலுத்தும் அளவுக்கு உருவாகிவிடவில்லை. ஆனல் அதற்கு முன்பாகவே தனித்துவ மிக்க பரிமாணங்கள் கொண்டதாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அம்சங்கள் உருப்பெற்று விட்டன. எனவே அனுராத புரத்தின் முற்ருன ஆதிக்கத்தின்கீழ் இந்தக் குடாநாடு இருந்ததற்கான நிரூ பண ஆதாரங்கள் இல்லை” என்று இந் நூலாசிரியர் குறிப்பிடுகிருர், கி.பி. ஆரும் நூற்ருண்டுக்கு முற்பட்ட வரலாற்றை பாலி மொழி (புத்தமத மொழி)யில் கால வரிசைப்படி அமைந்துள்ள இலக்கியங்கள் விவரிக்கின்றன. அவற்றில், அரிதாக எங்கோ ஓரோவிடத்தில் இந்தக் குடா நாட்டைப் பற்றிய குறிப்புகள் இருக்கின் றனவே தவிர மற்றப்படி அநேகமாக இப்பகுதியை (யாழ்ப்பாண)ப் பற்றி ஒன் றும் கூறப்படவில்லை. தெற்கே வெகு தூரத்தில் உள்ள ‘ரு ருகுணு (Ru Ruhuna) வைப் பற்றிய குறிப்புகள்கூட (மேற்கூறிய இடத்தைவிட) அதிகமாக உள்ளன. ஆணுல் யாழ்குடாப் பகுதி ஒரு எதிரி நாடு போலவே கருதப்பட்டுள்ளது (பக் 184) என்று மேலும் தெரிவிக்கிருர் இந்நூலா சிரியர். பதினுேரும் நூற்ருண்டில் இந்தப் பகுதியைச் சோழர்கள் வெற்றி கொண்ட னர். அனுராதபுரத்தைக் கைப்பற்றினர். பொலனருவை பகுதியில் ஜனநாதபுரா என்ற தலைநகரை நிறுவினர். இது பிந் தைய கால வரலாருகும். பெரும் எண் ணிக்கையில் “வெள்ளாள’ (Vellala) இனக் குழுத் தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து சேர்ந்ததும் இதைப் போன்றதே.
ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட் டுள்ள, இருமொழி முத்திரை என்று தற் பொழுது குறிப்பிடப்படுகின்ற கண்டு பிடிப்பைப் பற்றியும் ஒரு சுவையான விவாதத்தையும் இந்நூல் கொண்டுள்ளது. பேராசிரியர் இந்திரபாலா மற்றும் பிறரு டைய கருத்துக்களுடன் தன்னுடைய சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து நூலா சிரியர் இந்நூலில் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்த மதங்கள், இடப் பெயர்களைப் பற்றிய குறிப்புகள், சி. 14 காலவரையறை பற்றிய அட்டவணை ஆகி யவை பயனுள்ள இந்நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன. கவனத்துடனும்

Page 19
சிறுகதை ஸாரதி
அவர்கள் இரண்டு பேரும் இந்த மாதிரி யான ஒரு வெயிலை சந்திந்ததேயில்லை. இருந்தாலும் அவர்களால் தாங்க முடிந்தது.ஒரு ஏத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார் கள். முன்னால் செல்லும் முதியவர் அவ்வளவு வெயிலையும் அடக்கிக் கொண் டு நிழல் கொடுத்தார். அந்த நிழலில்தான் அவர் மகள் வந்தாள். அவள் குழந்தையை வெயிலுக்குப் பயந்து துணியால் சுற்றியிருந்தாள். அந்த முதியவரின் சட்டை உடம்போடு ஒட்டி யிருந்தது. அவர் போட்டிருந்த பேண்ட் என்ன நிறத்தில் இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அந்தப் பெண் கையில் ஒரு பை மட்டும் வைத்திருந்தாள்.
முகத்தை மீண்டுமொருமுறை துடைத்துக் கொண்டார். அது ஒரு வளைவான ரோடு. அதன் நுனியிலிருந்து பார்த்தார். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் தெரியவில்லை. பக்கத்தில் அவர் மகள் மட்டும் நின்றிருந்தாள். ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. சிலர் வேகமாக வீட்டை நோக்கி ஓடிக்கொண் டிருந்தனர். அங்கங்கே கிடைத்த ஒரமான நிழலில் நின்று வேடிக்கை பார்த்தனர். வெயில் தன் ஆகிருதி முழுவதையும் காண் பித்துக் கொண்டிருந்தது.
முதியவர் சொன்னார்
**ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கும், தண்ணீர் வேணும்னா குடிச்சிக்கோ.”
அவள் அவருடைய முகத்தைப் பார்த்தாள்
எச்சரிக்கையுடனும் அச்சிடப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் இந்த நூல் தயா ரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பணி வர இருக்கும் ஆண்டுகளிலும் தரமான பங் களிப்பாக இருந்து கொண்டிருக்கும்.
நன்றி : இந்து, 12-1-1988

工
ஒரு மதிய
வெயிலில்
ந்த மாதிரி பார்த்ததே கிடையாது. கண்க ಟ್ಲಿ:CÑ சொருகி விடும் போல் இருந்தது. அவர் பலம் முழுவதும் கண்ணில் தெரிந்தது. திரும்பவும் அவர் என்ன? என்பது போல் பார்த்தார். அவரால் பேச முடிய வில்லை. கடைசி கடைசியாக பஸ்ஸைவிட்டு இறங்கும் போது கொடுத்த 'ஐந்து காசு” ஞாபகம் வந்தது அ வ ளு க் கு. துணியை விலக்கி குழந்தையை ஒரு முறை பார்த்தாள். இந்த வெயிலே தெரியாமல் தூங்கிக் கொண் டிருந்தது. வடிந்திருந்த வியர்வையை துணியால் துடைத்தாள். அவன் எழவில்லை. அப்பாவைப் பார்த்து ‘போய் பார்த்துக் கொள் வோம்” என்றாள். அவள் வார்த்தையில் நம்பிக்கையிருந்தது.
வெயிலை மீறி நடக்க ஆரம்பித்தார்கள். ரோட்டின் ஓரங்களிலெல்லாம் வீ டு கள். ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட வீடு முழு வதுமே வெயில், அதற்காக பயந்து கூரை மேய்ந்திருந்தார்கள். கூரையில் இடையின் வழியே வெயில் பீறிட்டு அடித்தது. அதற்குள் கிடைத்த நிழலில் இருந்து பேசிக் கொண்டிருந் தார்கள். இந்த கொடுமையான வெயிலைப் பற்றித்தான். பேசிப் பேசி சிலர் தாங்க முடியாமல் படுத்து விட்டனர். எப்படியானா லும் வெயில் தன் இரு ப்  ைபக் காட்டியது. ரோட்டின் ஒரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்த வெயிலைப் பற்றியெல்லாம் கவலையில்லை.
அந்த ரோட்டைக் கடந்த போது பெரிய வீடுகளாய் தெரிந்தது. வெயிலுக்குப் பயந்து
f
Early Settlements in Jaffna an Archaeological Survey. () பொன்னம்பலம் ரகுபதி
விலை ரூ 300 D வெளியீடு: தில்லை மலர் ரகுபதி,
5 ஜூபிலி ரோடு
மேற்கு மாம்பலம், சென்னை-33.

Page 20
எப்படியெல்லாமோ மறைப்பு வைத்திருந் தார்கள். அதையும் மீறி வெயில் உள்ளே நுழைந்துதான் இருந்தது. உள்ளேயும் அவர் களால் இருக்க முடியவில்லை. வீட்டில் ஏதா வது ஒரு மூலையில் இருப்பார்கள். திடீ ரென்று குடையுடன் நடக்க ஆரம்பிப்பார்கள். அல்லது சைக்கிளில் வேகமாக போய்க் கொண்டிருப் பார்கள். யாருக்கும் எந்த நிதானமும் பிடிபட்ட மாதிரி தெரியவில்லை. அந்த மாதிரியான வெயில்.
ரோடு முடியப் போகிறது. அரசாங்க அலுவலகங்களாக தென்பட்டன. ரோட்டில் இருந்து பார்த்தால் வெயிலில் ஒன்றுமே தெரியாது. இந்த வெயிலிலும் அவசர அவசர மாக வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் தெரியும். வீட்டுக்குப் போவ தாக நினைப்பே இல்லை. நிறைய பேர் வெயிலுக்குப் பயந்தே ஆபீஸிற்குள் இருந்
தனா.
கொஞ்ச தூரத்தில் நிறையக் கடைகள் தெரிந்தது. இருவரும் அங்கு போனார்கள். முதியவர் கடையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அவள் எதுவும் சொல்லா மல் குடித்துக் கொண்டாள். முதியவரும் குடித்துவிட்டு அங்குஇருந்தவடம் கேட்கவா? வேண்டமா? என்று யோசிரித்தார். ரொம்ப நாளாகி விட்டது இந்தப்பக்கம் வந்து. முதல் முதல் தன் மகள் கல்யாணம் முடிந்த புதுசில். அடுத்து அவளுக்கு மகன் பிறந்த போது. கேட்டே விட்டார். வலது பக்கம் கையை காண்பித்து போ கும் படி அந்த ஆள்
சொன்னார்.
“சரி” என்பது போல் நடக்க ஆரம்பித்தார் கள். இந்தப் பாதையில் உள்ள வீடுகள எல்லாம் பாதையை விட்டு கொஞ்ச தூரம் தள்ளியேயிருந்தது. வெயிலிடமிருந்து எல்லா வகையிலும் தங்களை பாதுகாத்துக் கொண் டிருந்தார்கள். எப்பவாது வெயிலைப் பார்த்தால் சலித்துக் கொள்வார்கள். அல்லது வெயிலில் யாராவது தனியாகப் போய்க் கொண்டிருந்தால் கிண்டல் செய்வார்கள். ଗ6 Juff) தன் கொடுரம் முழுவதும் காண்பித்து விட்டால், வீட்டிற்குள் ஓடிவிடுவார்கள். பின்
தன் பக்கம் வராமல் பாதுகாப்பார்கள்.
முதியவருக்கு வீடு ஞாபகம் வந்ததுபோல் நின்றார். அவளும் அவரை நம்பிக்கையோடு பார்த்தாள். இதுதான் என்று நிற்கச் சொன் னார். அவள் காம்பவுண்ட் சுவர் ஒர நிழலில் நின்றாள். வாச லி லி ரு ந் து உள்ளே எட்டிப்பார்த்தார். வீட்டில் எந்த சத்தமும்

ιμπ6υώ
இல்லை. வீட்டின் ஒவ்வொரு பாகத்துக்கும் வெளியில் வெயில் தீயாய் எரிந்து கொண் டிருந்தது. ஒரு மரத்துக்குள்ளிருந்து வந்தது போல் ஒருவன் வந்தான். வெயிலில் வந்ததும் அவன் முகமெல்லாம் மாறி விட்டது. ‘என்ன?” என்று கேட்டான்.
முதியவர் வாட்ச் மேனாக வேலை செய்யும் ஒரு பெயரைச் சொல்லிக் கேட்டார். அது அவர் மருமகன். மூன்று மாதமாக வர வில்லை. எப்பமும் அப்படியிருக்க மாட்டான். மாதம் ஒரு தடவையாவது வந்து போவான். நல்லவன். அதற்காகவே அவர் தன் மகளைக் கொடுத்தார். அவன் இங்கு வேலை செய்கி றான் என்று தெரிந்ததுதான். முதியவர் பார்த்த வேலையும் நின்றாகி விட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. வந்திருப்பது யார் என்று தெரியாமல் அவன் முழித்தான். சுவரோரத் தில் நின்ற பெண்ணைக் கண்டதும்.
:ಸ್ಥ್ಯTr" **அவர் போய் ரெண்டு LOf SF LDis"ECSSF
ரொம்ப சாதாரணமாகத்தான் சொன்னான். முதியவருக்கு மயக்கம் வந்து விடும் போலிருந் தது. அவளும் கேட்டு விட்டாள்.
* "எங்க போயிருக்காங்க?”
தொண்டைக்குழி ஒரு முறை உள்ளே போய் வந்தது.
**தெரியலையே?”
அதற்குள் யாரோ அவனை கூப்பிட்டதாக போய்விட்டான்.
அவன் போவதையே பார்த்துக் கொண் டிருந்தார்கள். இரண்டு பேருக்கும் மேலெல் லாம் வியர்த்து வடிந்தது. அவளுக்கு தலை சு ற் றி யது . வெயில் கொ தி த் தது. கொஞ்ச நேரம் எல்லாமும் மறந்து விட்டது. அவர் மகள் பக்கம் வந்தார். என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. இருவருக்கும் முகத்தைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை, இருவரையும் வெயில் உணர்த்தியது. கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தடிக்கு போனார்கள். போன தும் குழந்தை அழ ஆரம்பித்தது. வெயிலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தையின் அழுகைச் சத்தம் அதிகமாகியது. அடக்கப் பார்த்தாள். முடியவில்லை. மாராப்புப் பக்கம் குழந்தையை வைத்தாள். அப்பமும் அதன் சத்தம் நின்ற பாடில்லை.

Page 21
LI JT
காதல்னை அறியாது காதலனை வேறு உயிராய்க் காணும் அழகி பெனிலோப்பி - தந்தை என உணர முடியாது தந்தையைச் சந்திக்கும் தனையன் - டெலிமாக்ஸ் மகனென அறிந்தும் மகனை, மகனே என்று அழைக்க முடியாத ஒடிஸியூஸ் - மரணமடையும் வேளை யிலும் த னது எஜமானனை எ த் த  ைன மாற்றத்திலும் இயற்கை உற்பாத சிதிலங் களிலும்கூட மறவாத அந்த அற்புத நாய்எத்தனை அற்புதமான சித்தரிப்பு 1 இப்படி எண்ணற்ற மோதல்களின் மூலம் நேரு ம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் காவிய அனுபவம் அபூர்வம். இன்றைய எந்த நாவலுக்கும் பின் தங்காத புதுயுகக் குரல்ை ஹோமர் நாலா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே தம் காவியக்குரல் மூலம் சாதித்து விட்டார். ஹோமர் இதிகாசங் களைப் பற்றி காவிய அழகையும் பெருமை யையும் சொல்லச் சொல்ல அது பெருகியபடியே இருக்கும்.
ஹோமரின் இதிகாசங்களின் மூலம் எழுச்சி பெறாத ஐரோப்பிய மக்கள் இனமேயில்லை. ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிஸ்ஸி, இரண்டும் மனித நாகரீக வள ர் ச் சி  ைய எண்ணிப் பார்க்கும் ஒரு தனி விஞ்ஞானத் துறையையே புதிதாய் உலகில் நிறுவக் காரண மாயிற்று என்றால் நம்பக்கூடுமா ?
ஹோமர் விந்தைகளின் விளைநிலம். இப் போதுநிஜங்களின் வெற்றிகளைக் குவித்த கதை யையும் பார்க்கலாம். ஆம். அகழ்வாராய்ச்சி என்ற புதிய துறையையே ஹோமர் படைப்புகள் வளப்படுத்தியிருக்கின்றன. பூமிக்கடியில் புதை ந்து கிடக்கும் நகரங்களைப் பற்றி தேடி ஆய்வு செய்து, மனித நாகரிகத்தின் பூர்வீகம் காணும் முயற்சி, இந்த இரு இதிகாசங்களாலேயும் எழுந்துள்ளது என்ற மகத்தான உண்மை ஆச்சரியமானது.
ஹோமரின் இதிகாசங்களில் காணும் கற் பனையைவிட அவர் காட்டும் யதார்த்தம் யாரை யும் அயர அடிக்கும். இலியட் இதிகாசத்தில் வரும் கோட்டை இல்லியம் 1 இல்லியத்தில் பேரழகி ஹெ ல  ைன பாரீஸ் எ ன் ற

காஷ் 0
இளைஞன் சிறை வைத்தான். இந்த இல்லியம் கோட்டையைத்தான் பிற்காலத்தில் ரோமர்கள் (TROY) ட்ராய் என்று உலகுக்கே அறிமுகம் செய்வித்தனர். அந்தக் கோட்டை ட்ராய் நகரத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. அதை அழித்துத் தீர்த்து கிரேக்கர்கள் அழகி ஹெலனை மீட்டனர். இந்தக் காவிய இதி காசத்தில் வரும் ட்ராய் ந க ர ம், அதன் கோட்டை அமைப்பு, அகழிகளின் தன்மை, கோட்டைச் சுவரின் அகலம், ரகசிய வழிகள் என எல்லா விபரங்களையும் தத்ரூப யதார்த்தத் துடன் ஹோமர் சித்தரித்து விட்டார் தம் இதி காசத்திலே !
இந்த இதிகாச யதார்த்தம் இன்றும் கூட பலரை ஆகர்ஷிக்காத போதும், வியப்பிலாழ்த் திக் கொண்டிருக்கிறது என்றாலும், அன்றைய இந்த விபரங்கள் கற்பனை என்றே பலரையும் மயக்கி வந்திருக்கிறது. ஜெர்மனியின் ஒரு மூலையில் இருந்த அங்கக்ஷேகன் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் வாழ்ந்த ஷென்றிக் வில்லிமான் என்ற சிறுவனுக்கு மட்டும் இவ் விதிகாசம் ஹோமரின் கற்பனை அல்ல. இவை யாவும் எங்கோ நிஜமாய் கண்ணுக்கு நேரே யதார்த்தமாய் நிகழ்ந்தவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்தது. உண்மையில் இல்லியம் கோட்டையும் (TROY) ட்ராய் நகர மும் இருக்கிறது என்றான் வழில்லிமான். எல் லாரும் சிரித்தார்கள். முட்டாள் என்று பட்டம் கட்டப்பட்டது அவன் தலைமேல் !
ஏழைச் சிறுவன் அ ய ர வில்  ைல, மூல மொழியான கிரேக்க மொழியை தானாகவே தன் முயற்சியால் ஆசிரியர் எவருமின்றிக் கற்று ஹோமரைப் பூரணமாய் அவரது கி ரே க் க மொழியிலே படித்து ரசித்துக் கலந்துவிட்டான். ஜெர்மனியனான ஹென்றிச் வழில்லிமான் தன்னை ஒரு கிரேக்கனாகவே கருதினான். வாழ்நாளின் பெரும்பகுதியில் ஹோமரைப் பற்றியும், அவரது இதிகாசங்களைப் பற்றியுமே படித்தான். பல மொழிகளிலும் ஹோமரையே தேடி ஆராய்ந்தான் வாழ்வதற்காக அல்ல; ஹோமரை அறிந்து கொள்வதற்காகவே வியா பாரம் செய்து ஏராளமான பணம் சம்பாதித்து, சம்பாதிக்கும் போதே படித்துத் தெளிந்தான்.
ஹோமர் 3
வாழ்க்கை
இதிகாசம் விமர்சனம்

Page 22
20
ாற்பக் ைதர் ஆண்டுகள் ஹோமரைத் G"???? பதினேழு மொழி களைக் கற்று த் தேர்ந்தான். ஏராளமான குறிப்புகளைச் சேகரித்தான். வியாபாரத்திலும் வெற்றி, ஏராளமான பணம் கைவசம் வந்து விட்டது. இனியென்ன ஹோமரைத் தேடிப் புறப்பட வேண்டியதுதானே 1 இல் லி ய ம் கோட்டை இருந்ததாய்ச் சொல்லப்படும் இடங் களுக்கெல்லாம் சென்று ஆழ்ந்து ஆய்வு செய் தான். பல சோதனைகளுக்கும் தோல்விகளுக் கும் பின்னர் சிறிய ஆசியா என்றழைக்கப்படும் துருக்கியின் சமீபத்தில் சமுத்திர கரையோரம் பழம் கிராமம் ஒன்று ஹென்றிச் ஷில்லிமானைக் கவர்ந்தது. அவனது கூரிய ஆய்வுக் கண்கள் அவனுக்கு எதையோ உணர்த்தின.
இல்லியம் கோட்டை சமுத்திரக் கரையில் தான் இருந்ததாய் வர்ணிக்கிறார் ஹோமர். ஹென்றிச் ஷில்லிமான் கண்டுபிடித்த இந்தப் புராதன கிராமமான புனர்பாவழி என்று பெயர் கொண்டு கடலுக்கு வெகுதூரம் உள்ளே நாட்டுக்குள் இருந்தது. கடற்கரை ஓரமாகவே தன் ஆராய்ச்சியைச் செய்து கொண்டே போன போது ஒரு பெரிய குன்றை-மண்மேட்டைக் கண்டார். அந்த இடத்தை புது இல்லியம் என்று மக்கள் அழைத்ததாய் அறிந்தார். புது இல்லியம் இது என்றால், பழைய இல்லியம் எங்கே? அந்தக் குன்றின் பெயர்தா ம்
ஹிஸ்ஸார்லிக் குன்று. சரித்திரத்தில் பல
மன்னாதி மன்னர்கள் இந்த ஹிஸ்ஸார்லிக் குன்றில் உள்ள கோவில் ஒன்றுக்கு வந்து போயிருப்பதை வில்லிமான் அறிந்திருந்தார். கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் அஸ்ஸிரியா, பாக்கிரியா, எகிப்து, எத்தியோப்பியா போன்ற நாடுகளை எல்லாம் வென்று பேரரசனாய் விளங்கிய பாரசீக மன்னன் ஜெர்ஜெக்ஸ் (XERXEX) இந்த பழம் கிராமத்துக்கு வந்து, இந்தச் சின்னஞ்சிறு கோ வி லில் ஆயிரம் மாடுகளை பலியிட்டு வழிபாடு நடத்துவானேன்? இந்த மாவீரனுக்கு இங்கு ஈர்ப்பு ஏற்பட
என்ன காரணம்? உலகம் புகழும் மாவீரன்
மகா அலெக்சாண்டர் 9 665 வெல்ல
முதலில் கிளம்பியபோது இந்த குக்கிராமமான ஹிஸ்ஸார்லிக் குன்றுக் கோவிலுக்கு வந்து வழிபட்டு போருக்குப் போனதாய் வரலாறு சொல்வதேன்? பின்னர் ரோமாபுரி எழுந்து உலகையே தனக்குள் ஈர்க்கத் துடித்தபோது ரோம அரசன் கான்ஸ்ட்டாண்டைன் தன் தலைநகரை இந்தக் குன்றின் மேல் நிறுவத் திட்டமிட்டானே அத்தனை சிறப்பு இந்த கிராமத்துக்கு என்ன இருந்தது? இந்தக் கேள்விகள் ஹென்றிச் ஷில்லிமானை உலுக் கியது. அவர்கள் எல்லோரும் இங்கு வந்ததன் காரணம் பெ ரும் வெற்றிகளைத் தந்து

பாலம்
உலகையே மயக்கிய (TROY) ட்ராய் நகரம் இங்கு இருந்ததன் காரணத்தால்தான். தன்
வற்றிகளை மீண்டும் எழுப்ப, இங்கே வழிபட அப்பேரரசர்கள் வந்திருக்க வேண்டும். இதுவே இல்லியம் இருந்த இடம் என்று வழில்லிமான் தீர்மானித்தார். அவரது எண்ணம் வீண்போக வில்லை.
துருக்கி அரசாங்கத்தின் அனுமதியோடு ஏராளமான தொழிலாளர்களுடன் வஷில்லிமான் ஹிஸ்ஸார்லிக் குன்றினைத் தோண்ட ஆரம்பித் தார். 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10ஆம் தேதி தோண்டும்பணி துவங்கியது. கிரேக்கம் பேசும் இந்த ஜெர்மானியரை அந்த கிரேக்க கிராமவாசிகள் வியப்புடன் பார்த்தனர். ஒரு மரத்தடியில் நின்றபடி ஹென்றிச் ஷில்லிமான் ஹோமரின் கிரேக்க இதிகாசத்தை பாடலா னார். ஏழை கிராம மக்கள் அந்த இனிய காவிய வரிகளை சுற்றி நின்று கேட்டனர். கண்ணிர் வடித்தனர். ஆவேசங் கொண்டனர். உலகத்தையே வழி நடத்திய மக்கள் வாழ்ந்த இடம் என்று அவர்களுக்குக் காட்டினார் வழில்லிமான், ஹோமரின் காவியம் முழுமையும் கேட்ட கிராமத்து மக்கள் வழில்லிமானை தங்களுள் ஒருவனாக்கி விட்டனர். உதவிகள் தயங்காமல் கிடைத்தன. அந்த மக்களின் உதவியும் ஏராளமான செ ல வு ம் அவரை வெற்றிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தன. கோட்டைச் சுவர்கள் முழுவதும் மண்ணுக்குள் இருந்து தோன்றின. ஓயாத உழைப்பில் வில்லிமான் கண்ட கனவு நிஜமாகியது. முதலில் கோட்டை அமைப்பைக் கொண்டே அது ரோமர்களின் புது இ ல் லி ய ம் என்கிற கோட்டை என்று கண்டுபிடித்தார் விழில்லிமான். அதிசயம்! ஒன்றன்பின் ஒன்றாக நகரங்கள் மண்ணுக்குள்ளிருந்து வந்த வண்ணம் இருந் தன. கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல் எண்ணிறைந்த பொருட்கள், கட்டில்கள், மேசைகள், கூஜாக்கள், பானபாத்திரங்கள் என்று அந்தக் காலப் பொருள்கள் வெளிவந்தன. வில்லிமான் 12ஆண்டு இடையறாத முயற்சி யால் ஏழு பிரம்மாண்டமான நகரங்களை அதன் கோட்டை கொத்தளங்களோடு கணடுபிடித்து அந்த இடம்தான் (TROY) இல்லியம் இருந்த இடம் என்பதை நிரூபித்தார்.
ஹோமர் இதிகாசத்தில் கண்ட வர்ணனை களே அவருக்குத் துணை . உலகம் முழுவதும் வியந்தது. ஹோமரின் இதிகாசம் கற்பனை அல்ல என்பதை ஆய்வில் நிறு வின ர ர் ஷில்லிமான். ஏராளமான பொற்குவியல் வேறு கிடைத்தது. தன்னிலும் 30 வயது குறைந்த ஒரு கிரேக்கப் பெண்ணழகியை அந்தக் கிராமத் திலேயே தேர்ந்து எடுத்து மணந்து கொண்

Page 23
Luirgh
டார் வில்லிமான். ஹெலன் அணிந்த பொற் கிரீடத்தை அவளுக்குச் சூட்டி மகிழ்ந்தார். அவளது ஆபரணங்கள் மனைவி சோஃபியா வழில்லிமானுக்கு கிடைத்த அதிசயத்தை என்ன வென்று சொல்ல?! ஏ ரா ள மா ன கிரேக்க சிற்பங்கள், சுனைகள், உலோகப் பாத்திரங்கள், நீர்த்தொட்டிகள், வனங்கள், தோட்டத்து நீச்சல் குளங்கள், பொது மேடைகள், நாடகச் சாலைகள் என்று தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருந்தன.
ஹென்றிச் ஷில்லிமான் என்ற இந்த ஜெர்மானியர்தான் அகழ்வாராய்ச்சித் துறைக்கு மூலவர். ஹோமரின் நகரங்களையெல்லாம் இவர் மீட்டதுடன் அதற்கான அழுத்தமான ஆதாரங்களை எடுத்துக் கா ட் டி னா ர். ஹோமரின் ட்ராய் (இல்லியம்) நகரம் தீக்கிரை யானதையும் காவிய வர்ணனைகளையும் அப்படியே கண்டுபிடித்து உலகின்முன் வைத் தார். எரிந்து கரிந்துபோன அரண்மனைச் சுவர்களையும், கோட்டை வாயில்களில் தீச் சுவடுகளின் கறைகளையும் தீ நாக்குகள் எட்டித் தொட்ட உப்பரிகையின் மேல் தளங் களையும் இவர் எடுத்துக் காட்டியபோது உலகமே வியந்தது ! தொண் ணு று சங்கிலிகள், 12723 மோதிரங்கள், 4066 இதய வடிவான அட்டிகைகள், பதினாறு தெய்வப் படிமங்கள், 24 தங்கச் சங்கிலிகள் எல்லாம் பொன்னால் செ ய் த  ைவ கிடைத்தன. ஏராளமான தட்டு முட்டுச் சாமான்கள் வேறு. இவைகள் எல்லாம் கற்பேழைகளில் வைக்கப் பட்டிருந்தன. பேழைகள் கரிபடிந்து எரிந் திருந்தும் பொன் ஆபரணங்கள் உருகவில்லை. கற்பேழை அ வ் வள வு பெரிது. இந்தப் பேழைக்கு ஒரு தாமிரச் சாவியும் இருந்தது.
ட்ராய் நகருக்குக் கீழும் நகரங்கள் இருந் தன. ஏழு ட்ராய் நகரங்களை வழில்லிமான் கண்டு பிடித்தார். கிரேக்கர்களின் சம காலத் தில் மைசீனியர்கள் கிரீட் தீவில் அவர்களை விடவும் நாகரிகத்தில் உயர்ந்து விளங்கி னார்கள். ஹோமர் இந்த இரு நாகரிகங்களை யும் துய்த்த கிரேக்கர் வரலாற்றுக்குத் துணை செய்யும் அரிய காரியங்களையும் வழில்லிமான் சாதித்தார்.  ைம சீனிய நாகரிகத்தையும் அவரே அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்துக் கொடுக்க ஹோமரே அவருக்குத் துணை நின்றார்! அவர் கண்டுபிடித்த இதர பெரும் நகரங்கள், க ன T ஸ ஸ் , மைசீனே டைரன்ஸ் ஆகும். அவர் தோண்டிய இடங் களில் எல்லாம் ஏராளமான பொற் குவியல் களும் கிடைக்கவே உலக ஆராய்ச்சி அறிஞருக் கிடையில் சூடுபிடித்து விட்டது. உலக முழு வதும் பல இடங்களில் தோண்டு கலை விருத்தி

2.
யடைந்தது. ஆகழ்வாராய்ச்சி வளர்ந்தது. இன்று அது ஒரு விஞ்ஞானத் துறையாக உலக முழுவதும் உள்ள அறிஞரால் அங்கீகாரம் பெற்றுவிட்டது. "ஜியாலஜி' என்னும் காலம் உணரும் கற்படிவக் கலையும் இதனடியாகவே
பிறந்தது எனலாம். எண்ணற்ற உண்மை களும் விஞ்ஞான அறிவும் வளர்வதற்கு மூலக்
கனவாய் 55 6T 63) IT U காரணகர்த்தராய் ஹோமர் விளங்கினார்.
நவீன இலக்கியத்தில் ஒரு தனிச் சுடராய் நிற்கிறது ஹோமரின் ஒடிஸ்ஸி. நவினக் கலை உருவமான நாவல் பிறக்க அதன் போக்கில் காவ்யானுபவம் தர முக்கிய வழி காட்டியாய் இருந்தது ஹோமரின் ஒடிஸ்ஸி தான். உலக நாவல் இலக்கியத்தைத் தொடும் எந்த விமர்சகனும் ஹோமரைப் பற்றித் துவங் காமல் முடியாது. உலகின் முதல் நாவல் இலக்கியம் என்று புகழப்படும் 'கெஞ்சி முஸராகி” ஜப்பானிய இலக்கியம் முப்பது வால்யூம்களில் நீண்டு கிடக்கிறது. இதிலும் கூட நாவல் என்ற இலக்கிய உருவம் நீர்த்துப் போய்த்தான் கிடக்கிறது! கட்டுறுப்பின்றி (நம் இந்திய இலக்கியங்களைப் போல கீழ்த் திசை இலக்கிய மரபின்படி நீர்த்து அகண்டு போய்க்) கிடக்கின்றது!"
நமது ராமாயணம், பாரதம் இதிகாசங் களும் கூட கதைகளின் தொகுதிகளே என்பதை மறக்கலாகாது. 500 கதைகள் (உபாக்யானங் கள்) தான் ராமாயணமாய் விரிந்திருக்கிறது. இவைகளிலும் சிக்கனமோ கட்டுறுப்போ இல்லை. கிரேக்கத்துக்கு மு ந்  ைத ய  ெம ஸ ப டே (ா மிய ஆதி இதிகாசமான *இல்காமெஷ் ஷிலும் கூட நாவல் என்ற நவீனக் கலையமைதியோ உருவக்கட்டுமா னமோ கிடையாது! இதிகாசத் தன்மையும் கட்டுறுப்பின்றி வள வளத்துத்தான் கிடக் கிறது. நாவல் என்ற இலக்கிய உருவம் அதன் முந்திய காலத்தில் அமைவது அதிசயம் உலகம் தொடங்கிய காலம் முதல் இருப்பதாய்க் கருதப்படும் யூதர்களின் இலக்கியமான "பைபிளும் கூட கதைகள் கட்டுரைகள் உபதேசங்கள் கவிதைகள் இசைப்பாடல்கள் கடிதங்கள் நிருபணங்கள் பயணக் கட்டுரைகள் புலம்பல்கள் எல்லாம் கொண்ட இலக்கியத் தொகுப்புத்தான்.
காவிய இதிகாச அழகுகள் இருந்தாலும் நவீன யுகத்தைத் தொட்டுக் காட்டிய நவீன நாவல் தன்மை உருவம் இவைகள் எதிலும் இல்லை. இவை யாயும் காலத்தினை வெற்றி கொண்டு இன்றும் நிலவினாலும் இவைகளில் நவீன இலக்கியத்துக்கு அடிகோலி அடி

Page 24
சென்ற இதழ்த் தொடர்ச்சி
அறிவுமதி
உன் கோபங்களைச் நான் சேமித்து வை. சிரித்துக் என் சிதைக்குத் தீமூட்ட கொண்டிருக்க பயன்படலாம் m
O ஏலத்திற்கு வ என்னைப் புதைத்த இடத்தில் # ဂျီးနှံစာ #.
ஒரு 8
ரோஜாச் செடியை எமனுக்கு முன் நட்டு வையுங்கள். என்
வரும்போது நாளைக்குத் ெ
எடுத்துத் தந்த எந்தப் புதுமையும் இவைகள் எவற்றிலும் இல்லை. இந்திய சமஸ்க்கிருத மொழிக்கும் முந்திய மொழியான பைசாச மொழியில் எழுதப்பட்ட, கவிகுணுட்யனின், *ப்ருஹத்கதா’ என்ற கதைக்கடல் என்னும் கதாசரித்சாகராவிலும் கூட கதைகளின் கூட்ட மைப்பே காண முடியும். ஆகி.உலக இலக் கியத்தின் மிகப் பழம் பெரும் பூர்வீகமான எந்த மொழியிலும் நவீனத்துவத்தை நாவல் தன்மையை, புதுயுகத்தின் போக்கினை, உரை நடை இலக்கியத்தின் வழியினை, தொட்டுக் காட்டிய திறமுள்ள இதிகாசம் வேறு எந்த மொழியிலும் இல்லை. கிரேக்கம் அதனைக் கொண்டிருந்தது. அந்த மகத்தான தீர்க்கதரிசி ஹோமர் என்ற அந்தகர், ஹோமரை அவர் தம் இதிகாசங்களை உலகப் பொதுமை ஆக்கி விட்டது அவர்தம் இந்த தீர்க்கதரிசனம்தான்.
முன்னைப் பழமைக்கும், பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் திகழ்ந்த ஹோமர் இன்றைக்கும் நாளைக்கும் புதுமை யாய், வழியாய், இலக்கியமாய் நிற்பது உறுதி, ஹோமரை உலகுக்கு மீட்டுத்தந்த லைக்கர்க்ஸ், அதிகார பூர்வமாக்கி பல பதிப்புக் களை ஆய்ந்து ஆதாரபூர்வமான பதிப்பை வெளியிட்ட ஃப்பிஸிஸ்ட்ராட்டஸ், மக்களுக்கு அதன் பெருமை உணர்த்தி அவர்கள் தினசரி வாழ்வுடன் ஹோமரை இணைத்துப் பாட வைத்த ஸோளன், தன் வெற்றிக்கே ஹோமர் தான் மூலக்காரனர் எனக்கருதி தான் போரிடச்

ஆயுளின் அந்திவரை கஸல் பாணியிலான இக் கவிதையின் இரண்டாம் பகுதி. அறிவுமதியின் காதல் பறவை கள் மனசால் மட்டுமே மறு தலித்துக் கொள்கிறார்கள். இத்தொடர் அடுத்த இதழில்
நிறைவுபெறும்.
Y
நான்
யாருக்கென்று! வேண்டும்.
O
தோழி!
ந்துவிட்டது சந்தைக்குப் போனால்
எனக்காகக் கொஞ்சம்
- தூக்கம் வாங்கி வா.
60 கனவுகள் ஒன்றிரண்டு
கலந்திருந்தால் வரும் வழியிலேயே
தரிந்துவிடும் பொறுக்கிப் போட்டு விடு.
செல்லுமிடம் எல்லாம் ஹோமரை எடுத்துச் சென்று போர் முனையில் இருக்கும்போதும் அதனைப் படித்து, வீரர்களையும் படிக்கச் செய்துதான் தலை சாய்த்து உறங்கும்போதும் தன் தலையின் கீழ் இதிகாசத்தை வைத்துத் துயின்று உலகத்தை வென்று கிரேக்க கலாச் சாரத்தை ஹோ ம ரி ன் மூலம் உலகம் முழுமைக்கும் சொந்தமாக்கிய மாவீரன் மகா அலெக்சாண்டர், அதன் பின்னர் கிரேக்கத்தின் ஒளி ஒடுங்கியதும் ஹோமரைத் தங்கள் வழி காட்டியாய் ஏற்று மீண்டும் உலகை வளைத்து அதிர அடித்த ரோமர்கள், எண்ணற்ற அறிஞர்கள், இதன் பின்னும் ரோம் விழ்ந்த தும் இருண்டகாலம் பரவி மத்தியதரைக் கடலகம் இருண்டதும் உலகமே ஹோமரை மறந்து காவிய இதிகாசங்கள் அழிந்து கிரேக்க ரோம மொழிகள் சிதைந்து எல்லாம் மாறி வேறு இனமக்கள் எழுச்சி பெற்றதும், மீண்டும் உலக இலக்கிய மரபுக்கு மறுபடியும் ஹோமர் தேவை என்றுணர்ந்து ஒரு குடிகாரன் (ரஃப்பியோன்டி பிலாட்டஸ்) மூலம் மீட்டுத் தந்த கிய்யோவானி பொக்காஷ்யோ, டாண்ட்டே, பெற்றார்க், என்றுமே ஹோமர் அழியமுடியாதபடி அவரது இதிகாசத்தை உலக முழுவதும் பரப்பிய ஆங்கிலமொழிக் கலைஞர்கள் - யாவரும் உலக இலக்கிய வரலாறு உள்ளவரை மறக்க முடியாதவர் களாய் ஹோமரைக் காத்து நிற்கிறார்கள். ஹோமர் ஒரு மஹாப்ரபஞ்சம்.

Page 25
Lμιτ6υ ί
நம் கவிதைகளை வானத்திற்குக் காண்பித்தேன். வானவில் கொடுத்து மழை தூவி விட்டது.
மனிதர்களிடம் காண்பித்தேன் கண்களை மூடிக் கொண்டு எச்சில் துப்பி விட்டார்கள்.
O
எனது பெயரைத் தெரித்து கொள்ள ஞாபகம்
ஆசைப்படுகிறது.
கடிதம எழுதேன்.
D
என் தனிமையைப்
பழித்து விட்டுப் போகிறது அந்தி.
விழுந்து விழுந்துச் சிரிக்கிறது முதல் நட்சத்திரம்,
தள்ளிவிடத் துடிக்கிறது காற்று.
உன்னால் எத்தனை பேரின் கேலிக்கு ஆளாகிறேன் பார்.
என் உயிரை நீ காப்பாற்றினாய் உண்மைதான்.
ஆனாலும் என்ன. நம் வாழ்க்கை
செத்து விட்டதே !
。ロ
எத்தனைத் தட உன்னை நான் எச்சரிப்பது ?
எதற்காக அவ6 மறுபடியும் இங்கே இழுத்து வர ே
கருணை இல்ல பழகிப்
பழகி கருணையுள்ள உன்னையும் கூ
கோபித்துக் கொ
கனவே ! என்னை மன்னி
O
வண்ணத்துப் பூ தருகிறேன். விளையாடிக் ெ
ஒவியங்கள்
வரைந்து வைக் Lu Tř. ,
பாடல்கள் பாடு கேள்.
நிசப்தமான இ அமர்த்து கொள் முகம் புதைந்து அழுது விடு.
இப்பொழுது எ
பேனா தருகிறேன். கவிதைகள் எழு
அங்கேயாவது உன் னோடிருக் வாழ்க்கையைக்
O
நான் மயங்கத்தான்

23
W.
வை தான் நீ அள்ளித் தந்த
வாக்குறுதிகளில்
னை நீ அரசியல் வாதியாக
ஆவதற்கு.
என்னிடம்
வண்டும்? ஒத்திகைப் பார்த்திருக்கிராய்.
அப்படித் தானே.
தவனிடம்
மக்கள் வாழ்க !
口
مسا.
“ள்கிறேன் பார். பெண்ணே !
என் முகம் பார்த்து நீ
த்துவிடு. :
அழுவாய். கொலை செய்யப்பட்ட எனக்காக அன்றி
பூச்சிகள்
காண்டிரு. கொலை செய்த
உனககாகத தான இந்த உலகம் அதிகமாய்
கிறேன் அனுதாபப்படப் போகிறது.
குற்றங்களை மறைக்க கிறேன் கண்ணிரை விட
கனத்த போர்வை
என்ன இருக்கிறது ?
டத்தில் ர்கிறேன்.
நண்பனே ! அவள் (9. இரக்கம் இல்லாதவள் தான். அதற்காக மழையில் நான்
• நனைந்து கொண்டே போவதைப் பற்றிக் எனககு - పేr@. கவலைப் படாதே.
அவளது முந்தானையின் கருணையைப் பற்றி
எனக்குத் தெரியும்.
செய்தேன் 0

Page 26
ஈழ நண்பர் கழக மாத இதழ்
口
ஆசிரியர் நதி
ஆசிரியர் குழு இரா. திரவியம்
சமந்தா
ச. மா. பன்னீர்ச் செல்வம்
D
ஆண்டு சந்தா ரூ. இருபது
Π
படைப்புகள் சந்தா நன்கொடை அனுப்புதல் முதலிய அனைத்துத் தொடர்புகளுக்கும்
பாலம்
12, முதல் பிரதான சாலை நேரு நகர்
அடையாறு சென்னை-20
இலங்ை கள் என்பது போராடினா `என்பதும் நீ
இலங்ை நிதித்துவப் வாத வெறி ஒட்டுக்களை தேர்தல் சூ: கொண்டு இ
தமிழகத் யாட்டில் இ பேசி பேசி உண்டு.
தமிழக தேர்தல், ( லாம் என்ற
இந்தத் 52,5 ċ5 I - L-Iqபிரச்சினை.
ஈழத்து O 6
பொது கல கிறது. இ;
எனவே என்பது தே விடாது நிய படுத்த வலி அமைய விே
போரா காக ஒட்டு
தமக்குள் ப களின் ஏவ6 படாத பாடு
தேர்தல் கணித்த-பே ஒட்டுமொத், தமிழகத்தை
 

s§usTLILOT60Tš தீர்வே தேவை
கயில் தமிழர்கள் இனரீதியில் ஒடுக்கப் படுகிறார் ம். அவர்கள் தம் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் ர்கள் என்பதும் இன்றும் போராடுகிறார்கள் தெர்சனம். W
கயில் பெரும்பான்மையான மக்களைப் பிரதி படுத்துவதாகக் கூறிக் கொண்டசிங்களப் பேரின
பிடித்த அரசியல் வாதிகள், சிங்கள மக்களின் மட்டும் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு தாட்டத்தை ஆடிப்பார்த்தார்கள், இன்னும் ஆடிக் இருக்கிறார்கள்.
த்திலும் கூட பதவிப் போட்டித் தேர்தல் விளை லங்கைத் தமிழர்களின் இரத்தம் சிந்துதல் பற்றிப் தியாக வியாபாரம் செய்த அரசியல் கட்சிகள்
த்திலும் தேர்தல். இலங்கையிலும் ஜனாதிபதி இந்தியப் பாராளு மன்றத்திற்கும் தேர்தல் வர
யூகம் பரவிக்கிடக்கிறது.
தேர்தல் சூதாட்ட பலி பீடத்தில் பலிக்கடாவாக ருக்கும் பிரச்சி  ைன இலங்கைத் தமிழர்
இனப்பிரச்சினை அரசியல் வாதிகளின் சூதாட்ட ன்படுத்தப் படுகிறது. இதுவே எதிர்காலத்தில் ாச்சாரமாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக் தற்கு நாம் இடம் தரலாகாது.
ஈழத்து இனப்பிரச்சினைக்கானத் தீர்வுப்பாதை ர்தல் அறிக்கை வாக்குறுதியாக மட்டுமே நின்று பாயத் தீர்வைக்கொண்டு வரவும், அதை அமல் பியுறுத்தும் அரசியல் வேலைத்திட்டமாகவும் வண்டும்.
டும் இயக்கங்களும் தம் குறுகிய நோக்கங்களுக்
மொத்தத் தமிழர் பிரச்சினையை ம ற ந் து லப்பரிட்சை செய்து கொள்வதும், அந்நிய சக்தி ஸ்படி நடந்து தம்மை நிலை நிறுத்திக் கொள்ள ) படுவதும் ஆழ்ந்த கவ்லைக்குள்ளாக்குகிறது.
சூதாட்ட உடனடிப் பயன்பாட்டைப் புற க் ாராடும் இயக்கங்களின் குறுகிய நலன் தவிர்த்த த, தமிழர்களுக்கான நியாயமான தீர்வுகாண ச் சேர்ந்த நாம் வலியுறுத்த வேண்டும்.

Page 27
பெண் நிலை வாதம் (Fe இதனை ஓர் அண்மைக் காலக்
பெண்நிலைவாதம் (Feminism) என்றால் என்ன? இதனை ஒர் அண்மைக்காலக் கிறுக்குத்தனம் எனக் குறிப்பிடலாமா?
பெண்நிலைவாதம் என்ற சொல் 19ஆம்
நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பித்திலும் முதன் முதலாக உபயோகிக்கப் பட்டது. அப்போது பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையே அது குறித்தது.
அவை,
கல்வி, வேலைவாய்ப்பு, உரிமைகள் சொத்துடைமைக்கான உரிமை வாக்களிக்கும் உரிமை பாராளுமன்றத்திற்குச் செல்லும் உரிமை பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் உரிமை விவாகரத்து செய்யும் உரிமை போன்ற ஏனைய உரிமைகள் ஆகும். மேற்குறிப்பிட்ட உரிமைகள் யாவும் இப்போது எமக்குக் கிடைத்துள்ளன. எனவே இன்று பெண் விடுதலை எனக் கருதப்படுவது யாது? இன்று ப்ெண்நிலைவாதம் பாரபட்சமான
தன்மைகளுக்கெதிரான சட் ட ரீ தி ய ர ன சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகிய எல்லைகளைக் கடந்து விட்டது.
பெண்கள் வீ ட் டி ல் ஆண்களுக்குக் கீழ்ப்படிதல்
குடும்ப அமைப்பினால் பெண்கள் சுரண்டப்படுதல்
தொழிலிலும், சமூகத்திலும், நாட்டின் கலாச்சாரத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்து உடையவராய் இருத்தல்
பெண்கள் உற்பத்தியிலும் சந்ததி உற்பத்தியிலும் ஈடுபடுவதால் ஏற்படும்
இரட்டைச்சுமை
ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்
களையும் உள்ளடக்கியதாக இன்று பெண்நிலை வாதம் அமைந்துள்ளது. இதனால் பெண்கள்
நன்றி: பெண்நிலைவாதம் பொருத்தமானதே
வட்டம், யாழ்ப்பாணம்.

minism) 676ÖTspT6) 66ÖTGOT? றுக்குத்தனம் எனக் குறிப்பிடலாமா?
கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவதற்காக மட்டுமன்றி, அரசினாலும், சமூகத்தினாலும் ஆண்களாலும் விதிக்கப்படுகின்ற சகல அடக்கு முறைகளுக்கு எதிராகவும் போராடி விடுதலை
பெற வேண்டியவர்களாக உ ஸ் ள  ைர். பெண்கள்,
சுரண்டல் (உ+ம் சமனற்ற சம்பளம்,
குறைந்த சம்பளம்) கீழ்ப்படிதல் (உ+ம் ஆண் ஆதிக்கத்
திற்கு உட்படுதல்) அடக்குமுறை (உ+ம் பெண்களுக்கு
எதிரான வன்முறைகள்
ஆகியவற்றிற்கு இரையாவதுடன் அவர் கள் இவ்வாறான பிரச்சனைகளை ஏனைய பெண்களும் எதிர் நோக்குகின்றார்கள் என்ப தனை உணர்ந்துள்ளனர். அத்துடன்தமதுஇந்த நிலைமை மாறுவதற்கும் சமுதாயத்தை மாற்று வதற்கும் தாமே ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனையும் உணர்ந்துள்ளனர்.
ஆனால் அனேகமானோர் பெண்நிலை வாதமானது, ஒரு மேற்கத்தைய கோட்பாடு எனவும், அது எந்தவிதமான விமர்சன நோக்குமின்றி ஆசியப் பெண்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் கூறுகின் றனர். இது உண்மையா?
அவ்வாறில்லை. பெண்நிலைவாதமானது * அன்னியக் கருத்தமைவின்’ ஒரு பகுதியென் றோ, செயற்கையான முறையில் ஆசியப் பெண் களில் திணிக்கப்பட்டது என்றோ கூற முடியாது. ஆசியாவில் ஜனநாயக உரிமைகள் பற்றியும், அரைவாசி மக்கட் தொகையினருக்கு அடிப் படை உரிமைகளே வழங்கப்படவில்லை என்ற நியாயமற்ற நிலை பற்றியும ஒரு விழிப்புணர்வு தோன்றி வளர்ந்த போதே பெண்நிலைவாத மும், பெண்நிலைவாதப் போராட்டங்களும் எழுச்சியடைந்தன. ஆசியாவில் அ ர சி ய ல் விழிப்புணர்வு உச்சக்கட்டத்தை அடைந்த குறிப்பிட்ட வரலாற்றுக் காலக்கட்டங்களில் பெண்நிலைவாத விழிப்புணர்வும் ஏற்பட்டது. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், உள்ளூர் சர்வாதி கார, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளருக்கு எதிராக வும் போராட்டங்கள் ஏற்பட்ட போதே பெண் நிலைவாத உணர்வும் ஏற்பட்டது.
எனும் நூல் () வெளியீடு: பெண்கள் ஆய்வு

Page 28

= 5
க்ளின் திரும் இந்தி