கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1983.04

Page 1
பேராசிரியர் நினவாக - கதிரவன்
கலப்பைகளும் சேர்ந்: - குறிஞ்சிமை கால மாற்றங்களும்
முருகையன் உறவுகள் தெரிகின்ற
குமுதன் நரியின் நீதி
செண்பகன்
சங்கம் முதல் இன்று
பேராசிரிய
ஒரு நல்ல படைப்பின்
லுTசூன் - பேச்சு மொழியும் ! சி. சிவசேக
சித்திரை 1983
 

துவிட
பாரதியும்
து)
|1һI571Ј
கைலாசபதி
இரகசியம் நுஃமான் பூக்க இலக்கியமும் தொடர்பாக ரம்

Page 2

LD6) : 1 சித்திரை 1983
தாயகம் மீண்டும் வருகிறது
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 1974 சித்திரையில் உதய மிான தாயகம் திரும்பவும் மிளிர்வது மகிழ்ச்சியைத் தரும்.
தாயகம் உதயமான காலகட்டத்தில் இருந்தவற்றி னின்று இன்றுள்ள தேசிய சர்வதேசிய நிலைமைகள் பெரிதும் வேறுபட்டுள்ளன.
இந்த இடைக்காலத்தில் தாயகம் பல நெருக்கடிகளையும் அனுபவங்களையும் கண்டுள்ளதுடன் அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார மாற்றங்களையும் கவனத்தில் கொண்டுள்ளது.
ஆயினும், துயரத்தின் ரேகைகள் அதன் முகத்தில் இல்லை. தனது அனுபவங்களைத் தொகுத்து, ஆய்ந்து, தவறு களேத்திருத்தி சரியானவற்றை மேலும் முன்னெடுக்கும் முக மலர்ச்சியையே அதனிடம் காணலாம்.
இன்று எமது நாடு, பாரிய பொருளாதார நெருக்கடி, மோசமான வாழ்க்கைச்சுமை, தேசிய இனங்களுக்கிடையே பகைமை, இளைஞர் - மாணவர்களிடையே அமைதியின்மை, உழைக்கும் மக்கள் தாம் போராடிப் பெற்ற ஜனநாயகதொழிற்சங்க உரிமைகள் படிப்படியாகப் பறித்து எடுக்கப் பட்டமை, கலாச்சாரச் சீர்குலைவு, அந்நிய கலாச்சார ஊடுருவல்கள் போன்றவற்றைக் காண்கிறது.

Page 3
மொத்தத்தில் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு வாக் குச் சுதந்திரம், பேச்சு எழுத்துச் சுதந்திரம், நீதிச்சுதந்திரம் இவையெல்லாம் புறக்கணிப்புக்கும் பயமுறுத்தலுக்கும் உள் ளாக்கப்படுவதுடன் அரச பயங்கரவாதத்துடன் கூடிய தனி நபர் சர்வாதிகார முனைப்பின் கீழ் அரசு செயல்படுவதை அவதானிக்கிறது.
இதற்கெதிராக நாட்டுமக்கள் அனைவரும் பல முனைகளி லும் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை தாயகம் உணர் கிறது.
அவர்களை ஒன்றுபடச் செய்வதும் கிளந்தெழச் செய்வ தும் ஜனநாயக சக்திகளையும் இயக்கங்களையும் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைப்பதும் முன்னெடுப்பதும் அதற்காகச் செயல்படுவதும் தாயகத்தில் இன்றைய கடமையாகிறது.
அதையே தாயகம் துணிவோடு முன்னெடுக்கத் திடசங் கற்பம் பூண்டிருக்கிறது.
மேற்கூறிய கடமைகளை முன்னெடுப்பதில் எழுத்தாளர் கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்களின் பங்கையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது.
இதனை மனதிற் கொண்டே லூசூன், பாரதி நூற்ருண் டுகளை கடந்த ஆண்டுகளில் நினைவுகூர்ந்தோம்.
நூற்ருண்டு விழாக்கள் வெறும் ஆண்டு இறுதிச்சடங்கு களல்ல. தாம் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல், பொருளா தார, கலாச்சாரத் தாக்கங்களுக்கு எதிர்நின்று, தாம் சார்ந்தி ருக்கும் வர்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றும் தமது வாழ்க் கைப்போராட்ட அனுபவங்களை - தத்தமது ஆளுமைகளுக் கேற்ப தந்து சென்றவர்களின் பல்வேறு அறிவியற் கருத்துக் களையும், கலை, இலக்கியப் படைப்புக்களையுமே நாம் இங்கு நினைவுகூருகிருேம். இத்தகைய அநுபவங்களை தொகுத்துச் செழுமைப் படுத்துவதன் மூலமே மனித குல வரலாறு வளர்ச்சியடைந்து வந்தருக்கிறது. ...,'
2

கலை இலக்கியத்தின் கடந்த காலமே வெறும் இருட்டுத் தான் நாங்கள் மட்டுமே பகலில் நிற்கிருேம் என்ற இலக்கிய மமதையுடன் ஆய்வுரை என்ற பெயரில் காலத்தால் சூழலால் ஏற்படும் பலயினமான அம்சங்களை மட்டுமே தூக்கி நிறுத்தி நிராகரிப்பதல்ல எமது நோக்கம். அந்த இருண்ட காலங்களிற் கூட எத்துணை பலத்துடன் எழுந்து நின்று மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்தார்கள் என்பதை உண ரும்போதுதான் பட்டப்பகலிலேகூட ஏற்பட்டுவிடும் குருட்டுத் தனங்களையும் குணப்படுத்தமுடியும். w
கடந்த ஆண்டு மாதந்தோறும் நடைபெற்ற பாரதி நூற்ருண்டு ஆய்வரங்கை நினைவுகூரும்போது மறைந்த பேரா சிரியர் கைலாசபதி அவர்களின் நினைவால் எமது நெஞ்சங் கள் கனப்பதை நாம் உணர்கிருேம். அந்த அளவிற்கு ஆய் வரங்கு பயனுற அமைவதற்கு மட்டுமல்ல, மேன்மேலும் பல புதிய பங்களிப்புக்களைச் செய்வதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த பல்வகை ஆற்றல்கள் கைவரப்பெற்ற, செய லூக்கமுள்ள, மனித நேயம் கொண்ட ஒரு தமிழறிஞரை, இலக் கியவாதியை இழந்தமை மாதங்கள் பல கடந்தபின்னும் எமது மனதை உறுத்துவதை நாம் உணர்கிருேம். அவரது “ பாரதி யும் மறுமலர்ச்சிக் கோட்பாடும் - ஒரு மறுமதிப்பீடு' என்ற ஆய்வுரை கூட கட்டுரை வடிவில் முழுமைபெருதது எமது துர்ப்பாக்கியமே
பாரதி ஆய்வுகள் நூலுருப் பெறுவதை அவர் விரும்பி ஞர்; ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தினர்; அதற்காக எம்மு டன் ஒன்றுபட்டு உழைத்தார். தாயகத்தின் வருகையோடு அவரது விருப்பை ஓரளவிற்காவது நிறைவேற்றி வைப்பதில் நாம் ஆறுதல் அடைகிருேம்.
தாயகம் உங்கள்முன் விரிந்து கிடக்கிறது. அதன் உயர்ச் சியும், வளர்ச்சியும் விழிப்புணர்வு பெற்ற தேசபக்த சக்தி களிலும், பரந்துபட்ட வெகுஜனங்களின பலத்திலும் பங்களிப் பிலுமே தங்கி நிற்கிறது.
உங்கள் தாயகம் தலைநிமிர உங்களது அயராத உழைப் பினை ஒத்துழைப்பினை தொடர்ந்தும் நல்குவீர்.

Page 4
கைலாஸ் அவர்கள் மறைந்து
நான்கு மாதங்களாகிவிட்டன. கலை இலக்கியத்துறையில் ஆய் வறிவியல் துறையிலும் அவரது இழப்பால் ஏற்பட்ட தாக்கம் மேலும் மேலு ம் உணரப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடு தான் நாடு தழு விய முறையில் சிகல மட்டங்களிலும் நடை பெற்ற அஞ்சலிக்
T ங்கலுரைகள்,
கூட்டங்கள்,
கைலாஸ் பல எழுத்தாளரை ஊக்குவித்து உருவாக்கியவர்: தமிழ் கலைஇலக்கிய ஆய்வறிவியல் துறையில் புதிய பரிமாணத்தை
யும், புதிய இந்தனைப் போக்கை •
պւb புகுத்தியவர். இதன் காரண மாக புதிய எழுத்தாளர் பரம் பரையும் ஆய்வறிவில் ஈடுபடும் மாணுக்கர் பரம்பரையும் அவருக் குண்டு. இந்த பரம்பரை சோர் வின்றி கைலாஸ்வழியில் உழைக்க வேண்டும். கைலாஸ் அவர்கள் செய்ய விரும்பிய, ஆனல் அவரது மறைவு காரணமாக நிறைவேற்ற
பேராசிரியர் கைலாஸ் நினைவாக.
முடியாது போன இலக்கியப்பணி களை இந்தப் பரம்பரை செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். கைலாவின் சிந் தன ச்ைசி" ஸோடு அற்றுப் போகாமல் மக் களோடு வாழ்வதற்கு இப்பணி மிகவும் அவசியம்.
அவரது சிந்தனை அவர் எடு திய நூல்களிலும், கட்டுரைகளி லும்,நூல்கள் எழுதுவதற்கென்று சேர்த்துவைத்தி குறிப்புகளிலும் மாணவர்க்கு அவர் வழங்கிய fl வுரைகளிலும் சொற்பொழிவுகளி லும் பரவிக் இடக்கிறது. ஏற்க னவே வெளிவந்த நூல்கள் தவிர அவ்வப்போது அச்சில் வந்த கட் டுரைகளையும் அச்சில் வராத கட் டுரைகளையும் தொகுத்து நூல் வடிவில் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் இதற்கு முதற்படியாக இவற்றைத் தேடியெடுத்தலும் பாதுகாத்தலும் அவசியமாகும்
STLog FLDébsr6 அறிஞரொரு வரின் ஆக்கங்களே எவ்வித திரி பும் இன்றி, எமது வருங்கால சந் ததியினருக்காகபாதுகா த்துவைப் பதும், அவற்றை அதன் உண்மை யான அர்த்தத் இல்வளர்த்தெடுப் பதும் முன்கொண்டு செல்வதும் வரலாறு எமக்கு இட்டுள்ள சடமையாகும்
கைலாஸின் நினைவாக நாம் அதைச் செய்து முடிப்போமாக.
ட கதிரவன்
 

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 1.
கால மாற்றங்களும் பாரதியும்
முருகையன்
மனித குலத்தின் வாழ்க்கை வரலாற்றினை நெடுங் கால நோக்கிலே பின்னுேக்கிப் பார்க்கும்போது, அது மாற்றங்களின் வரலாழுகவே உள்ளமை கண்கூடு . இந்த மாற்றங்கள், பெளதிக உலகியற் சூழ்நிலையில் மிகப் பெரிய வித்தியாசங்களைத் தோற்று வித்துள்ளன என்பது சிறு குழந்தைக்கும் தெற்றனப் புலப்படும். உதாரணமாக, தமிழகத்திற் பல்லாண்டுகளின்முன் வாழ்ந்த பாரி காரி போன்ற குறுநில மன்னர்களோ அல்லது கபிலர், பரணர் ஒளவையார் போன்ற புலவர் ஒருவரோ திடீரென இன்றை: தமிழ் நாட்டின் தலைநகரை - அதாவது சென்னை பட்டினத்தை வந்து பார்க்கிருர் என்று கற்பனை செய்வோம். அப்படி வந்து பார்த்தால், அண்ணு சாலையில் உள்ள கட்டிடங்களையும் மேம் பாலங்களையும் தியேட்டர் வாசல்களிலுள்ள சினிமா விளம்பர பானர்களையும், கற்றவுற்றுகளையும் (Cut-Outs) பார்த்து வியட்ட திகைப்பும் அடைவார்கள் என்பது நிச்சயம். ஒளவையார் படத தை ஒளவையார் பார்த்தால் என்ன நினைப்பார்? “திரைப்படம் காட்டியும் திரவியம் தேடு' என்று பாடியிருப்பாரோ என்னவோ! தொலைக்காட்சி, தொலைபேசி, விண்வெளி கடக்கும் வேறுள கரு விகள் முதலியன எல்லாம் அந்த பழைய மனிதர்களுக்கு எல்லை யில்லா ஆச்சரியத்தைத் தருமன்ருே ?
பெளதிக உலகு தழுவி நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள் இவை எல்லாம் நாகரிகத்தின் தொடக்க காலத்து நிலைமைகளை யும், நவீன காலத்து நிலைமைகளையும் அக் கம்பக்கமாக வைத்துப் பார்க்கும்போது இந்த வித்தியாசம் மிகவும் துலக்கமாகவும், எடுப் பாகவும் தோன்றுகின்றன. பழம் பண்டைக் காலத்து நிலைமை: ளைத் தொல்மணிதவியலாளர் ஆராய்ந்து காட்டியுள்ளனர். நவீன காலத்து நிலைமைகளை நாம் நேரடியாகக் காண்கிருேம். பாரதி யார் தம் காலத்துப் புறவுலக நிலைமைகளைக் கண்டு அவற்றின் இயல்பான நோக்கும் வருங்கால இலக்குகளும் எவ்வாறு இருக்
5

Page 5
கும் என்று தன் நுண்ணறிவின் துணை கொண்டு கண்டு காட்டுகி முர். இவ்வுண்மைக்குச் சான்றுக அவருடைய கவிதைகள் சில விளங்குகின்றன.
* 'இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடுவீரே கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே
张 激
மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே உண்ணக் காய் கனி தந்திடுவீரே உழுது நன்செய் பயிரிடுவீரே எண்ணெப் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல்லாடை செய்வீரே. '
என்றெல்லாம் பாரதியார் பாடுகையில், அவர் தன் காலத்துத் தொழில்களையும், அக்காலத்துப் பொருளுற்பத்தி முறைகளையும் மனதிற்கொண்டு பாடுகிறார். ஆணுல், பாரத தேசத்தின் வருங் காலத்தைக் கற்பனை செய்யும்போது அவருடைய மனுேவேகம் நிகழ் காலத்தைத் தாண்டி வெகு தொலைவுக்கு மிக விரைவாகச் சென்று விடுவதனை நாம் காண்கிருேம்.
'நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் ' எனவும்,
**காசி நகர்ப்புலவர் பேசுமுரை தான்
காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ எனவும்,
** மந்திரங் கற்போம் வினைத் தந்திரங் கற்போம் வான அளப்போம், கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்
எனவும் பாரதியார் பாடும்போது அவருடைய தூரதரிசனம் அல் லது தொலைநோக்கு, பளிச்சிட்டு மின்னுகிறது, வினைத் தந்திரம் என்று அவர் கூறுவது , தொழினுட்பவியல் (Technology) என இன்று நாம் வழங்கும் அதனையே ஆகும் என்பதை அவதானித் தல் இந்த இடத்திலே பொருத்தமாகும். தொழில் துறைகளிலும் தொழினுட்பவியலிலும் விளைந்த இந்த முன்னேற்றங்களையெல்லாம்
6

பார்த்து வியந்ததுடன் அவர் அமைந்தாரல்லர். அவற்றை அவர் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்ருர், குதூகலத்தோடு கூவிய ழைத்தார்; அவை வருங்காலத்தில் இன்னும் முன்னேறும் என்று நம்பினர்; இன்னும் முன்னேறல் வேண்டும் என்று விரும்பினர். காலமாற்றங்கள்பால் அவர் நோக்கு எவ்வாறிருந்தது என்பதை மிகச் சுருங்கியதோர் அளவிலே மேற் சொன்ன செய்யுள் அடிகள் எமக்கு உணர்த்துகின்றன. ஆணுல் இது பாரதி தரிசனத்தின் ஒரு சிறு துளியே ஆகும். மனித வாழ்வின் பெளதிகச் சூழல் மாற் ஐம்பற்றிய ஒரு நோக்கு இங்கு கோடி காட்டப்படுகிறது.
(2) பெளதிகச் சூழலுக்கும் அப்பால், வேறும் சில சூழல்கள் மனித வாழ்வின் அம்சங்களாக உள்ளன. இவற்றுள், சமுதாய ஊடாட் டச் சூழலும், அதன் அடியாக எழும் உளவியல் ஆளுமைச் சூழ லும், இதன் பிரதிப்பலிப்பாக வெளிப்படும் ஆன்மீக தத்துவச் குழலும் முக்கியமானவை. இவை ஒவ்வொன்று பற்றியும் பாரதி யார் க்ொண்டிருந்த எண்ணங்கள் எவை என்றும் கைக்கொண்ட நடைமுறைகள் எப்படிப்பட்டவை என்றும், பூண்டிருந்த கொள் கைகள் எவை என்றும், நம்பியிருந்த தத்துவங்கள் எவை என் றும் தனித்தனியாக நோக்குதல் வேண்டும். அவ்வாறு நோக்கி எய் தப்படும் தெளிவே பாரதியாரை முழுமையாக உணர்த்திவைக்கும்
சமுதாய ஊடாட்டச் சூழலை நாம் முதலில் எடுத்து நோக் குவோம், மனிதன் தன் சுற்றத்தாரோடும், நண்பரோடும் அயலா ரோடும் பிறருடனும் - ஏன் பகைவருடனும் - கொள்ளும் தொடர் புகள், உறவுகள் என்பன இங்கு நம் கவனத்துக்கு உரியன இத் தொடர்புகளையும் உறவுகளையும் பாரதியார் எவ்வாறு நோக்கினர் என்பதே நமது கேள்வி.
தமிழ் இலக்கிய மரபிலே சில சான்ருேர்கள் உலகியல் வாழ்வு முழுவதையும் நிராகரித்தும் இழித்தும் ஆற்றல் வாய்ந்த இலக் கியங்களைப் படைத்துள்ளனர். W
** உற்ருரை யான் வேண்டேன்
ஆஹர் வேண்டேன், பேர் வேண்டேன் கற்ருரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்’’ என்று முறையிடுகிருர் மணிவாசகர்.
“ஊரும் சதம ல்ல, உற்ருர் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும்
சதமல்ல, பெண்டிர் சதமல்ல...”*

Page 6
என்று வெறுப்புடனும் வி) க்தியுடனும் பாடிய பாட்டுகளும் த டபி ழிலக்கிய மரபில் உண்டு. ஆனல் பாரதியார் உலகியல் வாழ்வி6ே தோய்ந்து ஈடுபட்டுத் துய்க்கவேண்டும் என்ற பேரார்வம் உள் ளவர்.
எத்தனை கோடி இன்பம்.’’ என்று ஆர்வவேகத்துடன் டா வசப்பட்டுப் பாடியவர் பாரதியார். உலகம் முழுவதையும் ஒரு மகிழ்ச்சிப் பெருவிளையாட்டாக, 'இன்பக் கேணி' யாக அவர்
சண்டார்.
'அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை. நாணுதலில்லை, 秦 米 来 米 யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம். வானமுண்டு. மாரியுண்டு ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே தின்னப் பொருளுஞ் சேர்ந்திடப் பெண்டும் கேட்கப் பாட்டும் காண நல்லுலகும் களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்றுமிங்குள்வாம்.'
என்று உறுதி கூறுவார் பாரதியார். அவ்வளவில் நின்றுவிடாது.
*மாதரோடு மயங்கிக் களித்து:
மதுர நல்லிசை பாடிக் குதித்தும் காதல் செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம், கலைகளின் இன்பம் பூதலத்தினை ஆள்வதில் இன்பம், - பொய்மையால் - இவ்வின் பங்களெல்லாம். யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம், இளேய துய்ப்பும் இதயம் மகிழ்ந்தே.
என்று, ஞானி கூற்றக ஒரு பாட்டை அமைத்துன்ளார், மேலும்
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர், எண்ணம தைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு தின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்”, என்றும் பாடியுள்ளார்.
இவையெல்லாம் உலகியல் வாழ்வுபற்றிப் பாரதியாரின் உடன் பாட்டு நோக்கினை நமக்குக் காட்டுகின்றன. தமிழ் இலக்கிய மர பின் பெரும்பகுதியிற் காணப்படும் எதிர்மறை நோக்கு பாரதியி
8

டம் இல்லை. ஆகையால் சமுதாய ஊடாட்டச் சூழலில் உள்ள தீமைகளும், இழிவுகளும், கொடுமைகளும், அநீதிகளும் ஒழிக்கப் படுதல் வேண்டும் என்ற எண்ணமும் பாரதி சிந்தனையில் முனைப் புடன் நின்று ஒளிர்கிறது. சமூக அநீதிகள் முழு வ ைதயும் எதிர்த்துச் சாடியது மட்டுமன்றி அன்றைய இந்தியச் சமூக வாழ் விலே புரையோடிக் கிடந்த மூன்று நோய்களையிட்டு, குறிப்பான அக்கறை கொண்டு அவற்றைத் தீர்க்கவேண்டும் என ஆவேசம் கொண்டு நின்ருர்,
வறுமையும், சாதிக்கொடுமையும் பெண்ணடிமையும் அம்மூன்று அநீதிகளும் ஆகும், இந்த அநீதிகளையிட்டுப் பாரதியாரின் எண் ணம் எவ்வாறிருந்தது? அதனை நாம் சற்று விபரமாகப் பார்த் தல் தகும்.
முதலிலே வறுமையை நோக்குவோம். வறுமையினுல் விளையும் துன்ப துயரங்களைப் பண்டை த் தமிழ் இலக்கியங்களும் பலபட விரித்துப் பாடுகின்றன கொடிது கொடிது வறுமை கொடிது' என்னும் வாசகம் உடன் நம் நினை வுக்கு வருகிறது. புறநானூற்றுப் புலவர் பலர் தமது சொந்த வறுமையினையே சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர்.
“பெருஞ் செல்வர் இல் லத்து நல்கூர்ந்தார் போல வருஞ் செல்லும் பேரும் என் நெஞ்சு’’ என அகப்பாட்டொன்றிலே தலைவி கூறும்போது, உரிய பொரு ளாயன்றி, உவமையாகவே வறுமைத் துன்பந் தரும் அலைச்சலும் உலைச்சலும் காட்டப்படுகின்றன.
இவ்வாறு வறுமை கொடியதெனக் கூறப்பட்டதாயினும் அது சமுதாய அநீதியின் விளைவு என்று பழங்காலத்திலே கருதப்பட வில்லை. நல் வினை ப் பயன் செல்வம் என்றும், தீ வினைப் பயன் வறுமை என்றும் கருதப்பட்டது”
“அறத்தாறு இது என வேண்டா, சிவிகை
பொறுத்தானேடு ஊர்ந்தான் இடை’’ என்று திருக்குறள் பேசும் கருத்து இதுவேயாகும். இன் ஞெகு விதத்திற் கூறுவதான ல், வறுமை என்பது தலைவிதி, அதனை மாற் றுதல் இயலாது என்பதே பழைய கருத்தாகும்.
ஆனல் பாரதியார் இதுபற்றி வேறு விதமான சிந்தனைகள் கொண்டிருந்தார்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதில்லையே

Page 7
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின்ருரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே' என்றும்
'எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார் நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங்கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்’ என்றும் பாரதியார் பாடுகையில் அவருடைய எண்ண ஓட்டத் தின் திசையினை நாம் இணங்கண்டு கொள்ளுகிருேம்.
இல்லாமையின் காரணங்கள் இவை இவை என விளங்கிக் கொள்ள இயலவில்லையே என்று தம் நாட்டு மக்கள்மீது இரக்கங் கொள்ளும்போது அந்தக் காரணங்கள்பற்றிய உணர்வு தமக்கு நிறைய உண்டென்னும் திடநிச்சயம் அங்கு உட் கிடையாக க் கிடக்கின்றதல்லவா? இந்தத் திடநிச்சயத்தைச் சாத்தியமாகிய காரணிகள் எவை? பாரதியார் காலத்திலே நடந்தேறிவிட்ட சமுதாயப் புரட்சிகளும், அவற்றுக்கு முன்னேடியாய் அமைந்த பொருளியல் ஆய்வுச் சிந்தனைகளும், மெய்யியல் விளக்கங்களுமே அந்தக் காரணிகள் என்று கூறுதல் பிழை ஆகாது. இவற்றையெல் லாம் கிரகித்துக்கொண்டு தமது சிந்தனை நெறியுடன் இணைத்து விட்ட பாரதியாரின் மதிநுட்பம், காலமாற்றங்கள் பற்றி அவரது அணுகல் முறை எது என்பதனைத் தெற்றெனத் தெரிவிக்கிறது.
சமதரும நாடுகளில் மலர்ந்து மணம் பரப்பிய அரசியல் - பொருளியல் - மெய்யியற் கொள்கையைச் சமத்துவம் என்றும் அபேதம் என்றும் விளக்கிக் காட்டியதோடு அமையாமல், அவ் வகைப் பெருமாற்றத்துக்குப் புரட்சி என்றும் பாரதியார் பெயர் சூட்டினர். புாட்சிகரமான அக்கொள்கையைப் பொதுவுடமை என்று அவர் வழங்கினர். ‘முப்பதுகோடி ஜனங்களின் சங்கம்
10

முழுமைக்கும் பொது உடைமை | ஒப்பிலாத சமுதாயம் / உலகத் துக்கொரு புதுமை’ என அவர் முழங்கினர். மேலும்
'மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?
என்றும் கேட்டவர், பாரதியார். இங்கு வர்க்கரீதியான சுரண் டலே வறு ைம  ைய தோற்றுவிக்கிறது என்னும் நவீன கருத்து கவித்துவ வீச்சும் உயிர்த்துடிப்புமுள்ள சொற்கள் மூலம் ஆணித் தரமாக வெளிக்கொணரப்படுகிறது.
வறுமையென்னும் அநீதி “வேரும் வேரடி மண்ணும் இல்லா மல்’ ஒழிக்கப்படல் வேண்டுமென்னும் உறுதி பாரதியாரிடம் இருந் தமைக்கு வேறும் பல சான்றுகளை நாம் காட்டலாம். திருமகளைப் பாடும் தோத்திரப் பாடலிற்கூட இந்த உறுதி வலிமையுடன் ஒலிக்கிறது. ‘திருவேட்கை’’ என்னும் பாட்டில், இலக்குமியை நோக்கி பாரதியார் சொல்லுகிருர் - “செல்வம் எட்டும் எய்தி/நின் ஞற் |செம்மை ஏறி வாழ்வேன்/இல்லை என்ற கொடுமை ! உலகில் |இல்லையாக வைப்பேன்’ என்று, வறுமையை எதிர்க்கும் போர்க் குரல், தோத்திரப் பாட்டிற்கூட ஒலிப்பது, பாரதி பாட்டில் மாத் திரமே நாம் காணக்கூடியதொரு புதுமை ஆகும். புதிய நீதிகள் பலவற்றைப் பிரகடனஞ் செய்வது “முரசு" என்னும் பாட்டு. அதில்
'வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்”*
என்னும் நீதியும் பேசப்படுகிறது. பாரதியார் நமக்களித்த கவிதைகளெல்லாமே நீதி போதனைகள் என்று கூறிவிட முடியாது ஆயினும் அவற்றிடையே ஆங்காங்கே பல்வகை நீதிகள் பேசப் படுகின்றன. அவையெல்லாம், காலமாற்றங்களின் போக்கினைக் கிரகித்துக்கொண்டு வகுக்கப்பட்ட புதிய நீதிகளென்பதை எவரும் மறுக்கத் துணியார்.
அடுத்து சாதிக் கொடுமைபற்றி பாரதியார் கொண்டிருந்த கொள்கைகள் எவை என்று காண்போம்

Page 8
“இந்தியாவில் விசேஷ க் கஷ்டங்கள் இரண்டு. பணமில்லாதது ஒன்று, ஜாதிக் குழப்பம் இரண்டாவது' என ஒருதடவை பாரதி யார் எழுதினர். பாரதியாரும் சமூக சீர்திருத்தமும், என்னும் நூலை எழுதியுள்ள பெ. சு. மணி அவர்கள், மேற்படி கூற்றுக்குப் பின்வருமாறு விளக்கம் தருகிருர்,
t *வறுமை எதிர்ப்புப் போராட்டமும் சாதி எதிர்ப்புப் போராட் டமும் இணைந்து நடந்தால் தான் சமத்துவம் ஏற்பட வழி பிறக்கும் என்றெல்லாம் பொருள் விரித்துக் கூறும் அளவிற் குச் சூத்திரமாக அமைந்துள்ளது, பாரதியாரின் இந்தக்கருத்து' சாதிபற்றிப் பாரதியார் தமது கதைகளிலும் கவிதைகளிலும்
கட்டுரைகளிலும் மிகவும் உறுதியான கருத்துகள் பலவற்றை வலி புறித்தியும், வற்புறுத்தியும் கூறியுள்ளார். ஆறில் ஒரு பங்கு”
என்பது பாரதியார் எழுதியதோர் குறு நாவல். இந்திய சனத் தொகையில் ஆறில் ஒரு பங்கு, சாதியின் பெயரால் ஒடுக்கி ஒதுக் கப்படும் நிலைமையே இக்குறு நா வலி ன் மையப் பொருளாகக்
கையாளப்பட்டுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா' பாப்பாவுக்கு ஒரே வீச்சில் அடித்துக் கூறுவது தொடக்சம்
“சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேருெரு நீதி சாத்திரம் கூறிடுமாயின் - அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்'
என்று முழங்குவது வரைக்கும், சாதியமைப்பை வெறுத்து ஒதுக்கி நிராகரித்த பாரதியாரின் வயிரமுடைய நெஞ்சத்திலிருந்து எழும் உறுதியான குரலை நாம் கேட்கிருேம. "பாஞ்சாலி சபதம்’ என்னும், காப்பியத்தைப் பாடிக்கொண்டிருக்கும்போதும் சாதிக் கொடுமை பற்றிய விழிப்புணர்வோடு அந்த இதிகாசக் கதையை அவர் கையாள்வதனை நாம் கவனிக்கலாம். அத் தின புரத் தை வருணிக்கும்போது அங்குள்ள நான்கு வருணத்தாரையும் வரிசை யாக சொல்லி வருகிருர், அப்போதுகூட, அது பழங்கதையே எனி னும், நாலாம் வருணத்தாரைச் “சூத்திரர்’ என்று கூருமல், மாச னம் என்றே பாரதியார் சுட்டுகிருர், அதற்கு ஒரு விளக்கத்தையும் பாரதியார் கொடுத்திருக்கிரு?ர். அது பின்வருமாறு
12

**: த ர னு  ைடத் தொழில் செயு மாசனமும் - மாசனம், மஹாஜனங்கள்; பொதுப்படையான, குடிகள். இவர்களே தேசத்திற்கு உயிராவர். இவர்களைச் “சூத்திரர்’ என்பது தற்கால வழக்கு. சூத்திரர் என்னும் பெயரைச் சில மூடர் இழிவான பொருள்பட வழங்குவதுபற்றி, நூலில் அப்பெயர் தரவில்லை’
சாதி எதிர்ப்புணர்வு பாரதியாரின் ஆவியுடன் இரண்டறக் கலந்து நின்ற ஒன்று என்பதற்கு வேறும் சான்றுகள் வேண்டுமோ?கண் 7ேன் பாட்டிலிருந்து இன்னுமோர் உதாரணத்தை மட்டும் எடுத் துக்காட்டி அப்பாற் செல்வோம். 'கண்ணன் என் தந்தை” என் :* பாட்டில் இந்த வரிகள் வருகின்றன,
'நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மரிைதர் சீலமறிவு தருமம் - இவை சிறந்தவர் குலத்தினிற் சிற்ந்தவராம் மேலவர் கீழவர் என்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை எல்லாம் - இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டென்பான்.
"தியைவலியுறுத்துஞ் சுவடிகள் யாவும் போலிச் சுவடிகள் என் லும் தெளிவு கவனிக்கத்தக்கது.
பாரதியாருக்கு மிகவும் விருப்பமான மற்றுமொரு கருத்து, பெண் விடுதலை ஆகும். காலமாற்றங்களின் சாராம்சத்தையும் அவற்றின் திசை வழியையும் உணரும் முன்னுேக்கின் நுணுக்கம் இங்கு மிகவும் துவ்லியமாகத் தெரிகிறது.
* தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’’ என்று முழங்கிய பாரதியார், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'
என்றும் பாடினர்.
“உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஒது பற்பல நூல் வகை கற்கவும் இலகு சீருடை நற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வானுதலார் தங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்

Page 9
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்”* என்று புதுமைப் பெண்ணின் கூற்முகப் பாரதியார் பாடுகி ருர் அத்துடன்
“பெண்ணுக்கு விடுதலை என்று ஆங்கோர் நீதி பிறப்பித்
தேன் . . . . ’’
என்றும் மொழிகிருர், காலமாற்றத்தின் போக்கிலே புதிய நீதி கள் பிறத்தலும் அவற்றைப் பிறப்பித்தலும் கூடும் என்ற கருத் தோட்டம் இங்கு காணப்படுகிறது.
(3)
இதுவரை கூறியன எல்லாம். பாரதியாரின் கொள்கைகளையும் நடமுறையையும் அடியாகக் கொண்டு காலமாற்றங்களை அவர் நோக்கிய பாங்குபற்றிய அனுமானங்கள், ஆனல் காலமாற்றங்கள் பற்றிப் பாரதியார் நேரடியாகவும் சில கருத்துக்களை வெளியிட் டுள்ளார். அவற்றையும் நாம் காணுதல் வேண்டும்.
இதன் பொருட்டு, ‘தமிழச் சாதி” என்னும் பாட்டையும்
உயிர் பெற்ற தமிழர்பாட்டையும் எடுத்து நோக்குதல் தக்கதாகும்
'விதியே விதியே தமிழ்ச் சாதியை
என் செயக் கருதி இருக்கின்ருயடா?
என்னுங் கேள்வியே 'தமிழச் சாதி” என்னும் பாட்டுக்கு உயிர் நிலையாய் உள்ளது தமிழினத்தின் வருங்காலம் எவ்வாறிருக்கும்? அந்த இனத்தின் ஒழுக்கமும் வழக்கமும் எத்திசையை நோக்கிச் செல்கின்றன? இவை பாரதியாரின் நெஞ்சகத்தை உலைத்த கேள் விகள். அவர் பாடுகிருர்,
‘இந்த நாள் எமது தமிழ் நாட்டிடையே
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டோர்
தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்’ ஒருசார்
‘மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை யவற்றினும் சிறந்தன; ஆதலின் அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் தமிழ்ச் சாதி தரணி மீதிராது.
14.

பொய்த்தழிவெய்தல் முடிவு எனப்புகலும் நன்றடா நன்று! நாம் இனி மேற்றிசை வழியெலாம் தழுவி வாழ்குவம் எனிலோ ‘ஏ, ஏ ! அஃதுஎமக் கிசையாது என்பர். *உயிர் தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை பல, அவை நீங்கும் பான்மைய அல்ல என்றருள் புரிவர் இதன் பொருள் சீமை மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழ்ச் சாதியின் நோய்க்குத் தலை அசைத்து ஏகினர் என்பதே ஆகும், இஃதொரு சார்பாம்"
மற்றுமொரு சார்பாரைப் பற்றியும் பாரதியார் கூறுகிருர், அவர்களை "நாசங் கூறும் நாட்டு வயித்தியர் என்று சற்றுக் கேலி யாகவே குறிப்பிடுகிருர்.
‘'நமது மூதாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் கலி தடை புரிவன் கலியின் வலியை வெல்லலாகாது’’
என்று விளம்புகிறர்களாம். ‘நமது மூதாதையர் என்போர் யார்? ‘என்று முக்கியமானதொரு விஞவைப் பாரதியார் முன் வைக்கிரூர்.
‘நமது மூதாதையர் (நாற்பதிற்ருண்டின் முன்னிருந்தவரோ, முந்நூற்ருண்டிற்கு அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் ஆண்டின்முன் னவரோ, ஐயாயிரமோ? பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்தவரோ? புராணம் ஆக்கிய காலமோ? சைவரோ, வைணவ சமயத்தாரோ? இந்திரன் தானே தனிமுதற் கடவுள் என்று நம் முன்னுேர் ஏத்திய வைதிகக் காலத்தவரோ? கருத்திலாதவர் நாம் எமது மூதாதையர் என்பதிங் கெவர் கொல்?
5

Page 10
என்று பாரதியார் கேட்கிருர் மக்களின் ஒழுக்கமும் நடை யும் கிரின்யயும் கொள்கையும் காலத்துக்குக் காலம் வேறுபடுகின் றன என்னும் உணர்வு விழிப்பு இங்கு உள்ளது. அத்துடன் ஒரே காலத்திலுங்கூட பெளத்தம், பெளராணிகம். சைவம், வைண வம், வைதிகம் எனவெல்லாம் வெவ்வேறு கொள்கைகள் வெவ் வேறு சமூக பிரிவினரிடையே வழங்குவதுண்டு என்னும் தெளிவும் இங்கு காணப்பட்டது.
சூழ்நிலைகளின் தொடர்பினலே கொள்கைகளும் கிரியைகளும் வேறுபடும் என்னும் எண்ணம், இயங்கியல் வழிச் சிந்தனையின் பேறு என நாம் கருதலாம். காலமாற்றங்கள் பற்றிய சிந்தனையின் முடிவாகப் பாரதியார் கூறுவதென்ன?
“மேலை நீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து, நன்மையும், அறிவும்
எத்திசைத் தெனினும், யா வரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சமொன்றில்லை’ என்பது பாரதியார் காட்டும் முடிவு ‘உயிர்பெற்ற தமிழர் பாட்டிலே’
காலத்திற்கேற்ற வகைகள் - அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்ருய் - எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை’ என அவர் வற்புறுத்துகிரு?ர்.
(3)
இதுகாறும் கூறியவற்றிலிருந்து பெளதிகச் சூழலில் நிகழும் மாற் றங்களையிட்டும், சமூக ஆசாரங்களில் நிகழும் மாற்றங்களையிட்டும் இயங்கியல் நோக்கிலே பாரதியார் விளக்கங் கண்டார் எனவும் சமூக ஆசாரங்களைப் பொறுத்தவரை, வறுமை எதிர்ப்பு, சாதி மறுப்பு, பெண்விடுதலை ஆகிய உள்ளடக்கங்கள் "அவருடைய சிறப் பான கவனத்தைப் பெற்றன எனவும் தெளிந்தோம். இவைதவிர காலமாற்றம்பற்றிய நேரடியான கருத்துரைகளையும் அவர் தத்து வார்த்த மட்டத்தில் வழங்கியுள்ளார். காலமாற்றங்களைப் பகுத் தாய்ந்து பார்த்தால் மக்களின் கிரியைகள் மட்டுமல்லாமல் அவர் களுடைய கொள்கைகளுங்கூட, சூழ்நிலையின் தொடர்பால் வேறு படும் தன்மை உடையன என்பதும் பாரதியாரின் கருத்தாகும்.
Kelias: iš keisinszk
16

மாவலியின் மார்கழியில்.
மாவலியின் மார்கழியில் நீருயரும் கரை அமிழும் கரையமர்ந்த புல் அழுகும் சேருக ஒடுகிற மாவலியில் மாமலைகள் மெதுவாக கடல் தேடும்
நேற்றிரவு நீரருந்தும் பாவனையில் கரையோரம் குனிந்திருந்த பசுமூங்கிற் புதரொன்று வேரனுந்து, வெகுதொலைவில் பாறையிடைப் பிணமாகப் படுத்திருக்கும் துண்டுகளாய்
நேற்றிரவு ஆற்றினிலே காலூன்றி நின்றதொரு நிழல்வாகை கால் முறிந்து, disapprotungth சேற்றினிலே சரிந்திருக்கத் SATT அலைகளிடை தலைநீட்டும் கிளையொன்று அதிவிரைவாய் ஆருேடும்.
அரசாங்க வாகனங்கள் ராப்பகலாய் ஒடும்
யாழ்ப்பாண வீதிகளில் வீதிக் கரையோரம் நேற்றிரவு நின்றவனுே
*று கடியில்
இல்லையெனில் வாய்க்காலில்
49aoruors –
ஒன்ருயோ துண்டாயோ'
ஊர்தேயும்,
ஆஞலும்
வீதிவழி விரைந்தோடும் வாகனங்கள்
ഒ !
ரேய்மிகுந்த uprreave), கரையோரப் புதர்மூங்கில் கையசைக்க, நேசமுடன் நிழல்வாகை மலர்சிரிக்க காற்றினிலே புல்வளைய மலைகிடக்க, மார்கழியில் நீ நடக்க - நாம் உலகை மாற்றிடுவோம்
- மணி

Page 11
உறவுகள தெரிகின்றன
வழமைபோல அன்றும் ஊர். அடங்கி ஓய்ந்தபின்னர்தான் வீடு திரும்புகின்றேன். தெருப்பபtலை திறந்தே இருக்கிறது. எனது ச்யிக் கிளின் சத்தத்தைக் கேட்டு அவல் வீட்டு நாய்கள் குரைத்தாலும் பின்னர் அ டையாளங் கண்டு அடங்கி விடுகின்றன.
வழமை யாக அந்தச் சிறிய விருந்தையில் அரிக்கன் விளக்கு குறைத்து வைத்தபடி தொங்கிக் கொண்டிருக்கும்.அதன்கீழ் எனது தாயார் தனது முந்தானைச் சேலை யை வெறுந் தரையில் வி ரித்து கைகளை தலையணையாக மடித்து வுைத்தபடி எனதுவரவ்ை எதிர் பார்த்து தெருப்படலை யைப் பார்த்தபடியே படுத்திருப்பாள்.
எத்தனையோ நாட்கள் * ப் படி எனக்காகக் காத்திருக்க வேண்டாம்" என்று செரல்லியும் தாயார் கேட்கவில்லை.
நான் சேருகின்ற நண்பர்க ளின் நல்ல தன்மைகள் தான் தவ முனபாதையில் செ ல்லமாட்டேன் என்ற நம்பிக்கையை அவளுக்கு ஊட்டி இருந்தாலும் இன்று நாடு இருக்கும். நிலையில் ஏதாவது
th
- குமுதன்
பிரச்சினைகளுக்குள் நானும் அகப் பட்டு விடுவேனே என்ற அச்சம் அவளை ஆட்கொண்டிருக்க வேண் டும். Y V−
எனக்காக இப்படித் தாயர் காத்திருக்கும் நாளர்ந்த நிகழ்ச்சி நான் எங்கிருந்தாலும் எனது அலுவல்கள் மூடிந்தபோது என் மனதைஉறுத்தி வீட்டுக்கு என்னை இழுத்து வந்துவிதிமீ
அவளது எதிர்பார்ப்புக்கும் கார ணமில்லாமலில்லை. தந்தையார் இறந்த நாள்முதல் எனது குடும் பத்தின் ஒரே ஆண்துணை நான் தான். என்ருலும் இதுவரை குடும் பத்தின் பொருளாதாரச் சுமை களை நான் பொறுப்பேற்கவில்லை ஏ. எல் வரை படித்து புள்ளிகள் போதாமையால் படிப்புக்கு முழுக் குப் போட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
குடும்பத்தின் நாளாந்த வாழ்க்கையே மிகுந்த சிரமத்து துடன் கழிகிறது. மூத்த சகோத ரிகள் இருவருமே குடும்ப வருமா னத்திற்காகத் தம்மால் இயன் றதைச் செய்கின்றனர். திருமண வயதைத் தாண்டிவிட்ட மூத்த சகோதரி விமலா - நெசவுக்குப் போய் வருகிருள் , திருமண
வயது வந்துவிட்ட இரண்டாவது

சகோதரி வித்யா ஊரிலுள்ள சிறுபிள்ளைகளைச் சேர்த்து பாலர் வகுப்பு நடத்துகிருள். அத்துட்ன் ஒரு பழைய தையல் மெஷினை
வ்ைத்து ஆடைகள் தைத்து
கொடுப்பதின் மூலம் சிறிது வரு மிானத்தைப் பெறுகிருள் அம்மா gt. வீட்டுவுேலைகளுடன் ஆடு மாடு, கோழிகள் வளர்த்துத் தன் னல் இயன்றதைத் தேடுகிருள். இத்தனைக்கும் தந்தையார் உயிரு டன் இருதந்போது கழுத்தில் மின்
னிய சிறிய நை ககளும் எனது ரியூ
சன் படிப்புச் செலவுகளோடு கரைந்து விடுகிறது.
இருபது வயது இளைஞ்ஞகிய எனக்கு எனது குடும்பத்தின் பொறுப்புகள் தெரியா தவை அல்ல. எனது தந்ைதயாரின்இறப்பி
லிருந்து ஒரு நோக்கத்திற்காகவே
வாழவேண்டும் என்ற வைராக்கி யத்தை வளர்த்துக் கொண்ட எனக்கு, ஏறுகின்ற காணிவிலைகள் சீதனறேற்றுக்களைச் சமாளித்து எனது சகோதரி களுக்கு நல்ல (gT# வாழ்க்கையை அமைத்துக் கோடுக்கலாம் என்ற நம்பிக்கை !! தகர்ந்தபோது மேலும் ஓர் தீவிர உணர்  ைவ என்னுள் வளர்க்க அது உதவுகிறது.
இன்றும் வழமைபோல திறந் தி(Fந்த தெருப்படலைக்கூடாக இறங்காம்லே சயிக்கிளைச் செ லுத் தியபடி விருந்தையைப் பார்க்கி றேன். விருந்தையில் கண்ட காட்சி. வுழமையைவிட ஏதோ நடந் திருக்கிறது என்டிதை
எனக்குஉணர்த்துகிறது குறைத்து
வைக்கப்பட்டிருக்கும் அந்த அரிக் கன் விளக்கின கீழ் மூலைக்கொரு வராக அம்மாவும் சகோதரிகளும் குந்தியிருக்கினறனர். ஏதோதமக்
குள் கதைத் துக்கெர்ண்டிருந்தவர்
கள் கதையை நிறுத்தி மெளன மாகின்றனர். மூவ்ர்து பார்வை களும் என்ன்ை நோக்கித் திரும்பு கின்றன. எனது கையில் சில நோட்டீஸ்க்ளைத் தவிர் வ்ேறெது வுமில்லை அவர்களது மெளனம் எனது ஆவலைத் தூண்டுகிறது.
“ஏன் எல்லாரும் படுக்காமை இருக் கிறியள் ** சயிக்கிளைத் தூண்ேடுச்ாத்தியபடிகேட்கிறேன்
'உம்மைத்தான்" பார்த்துக் கொண்டிருக்கிறம்" மூத்த சகோ தரியின் வீார்த்தைகள் சற்று அழுத்தமாகத்தான் விழுகின்றன *தன் மூலம் என்ன நடிந்திருக் கிறது என்பதை நான் ஓரளவிற் காவது ஊகித்துக் கொள்கிேறன். தாயார் மெளனமாகத்தான் இருக் கிருள், அவளுக்கு. எனது பிடி வாதகுணம் நன்கு தெரியும். அதுதான் சகோதரிகளை க்கதைக்க விட்டு விட்டு பேசாமல் இருக்கி ருள். இருந்தாலும் என்ன்ை 96 iff கள் கட்டுப்படுத்துவைத நான் விரும்பவில்லை.
‘என்னை ஏன் நீங்கள் பார்த் துக் கொண்டிருப்பான் நாங்கள் மற்றவர்களைப் போலை முட் கள் இல்லை. எந்தப் பிரச்சிஜனக்க லையும் தப்பி வருவம்'
கொஞ்சம் இறுக்கமாக ப் போட்டு வைத் தால்தான் இனி

Page 12
வரப்போகும் வாதங்களுக்கு உத வியாக இருக்கும் என்பதற்காக வார்த்தைகளை உறுதியாக சொல் கிறேன்.
""ஒ. உங்கை பிடிபடுறவங் கள் எல்லாம் முட்டாள்கள் மடை யங்கள். நீங்கள்தான் புத்திசாலி யள். எங்களுக்கு நீர் உழைச்சுத் தரவேண்டாம். சோலியளுக்கை மாட்டுப்படாமல்சும்மாஇருந்தால் போதும். இனியும்நீர் உதுகளிலே ஈடுபடுறதெண்டா. எங்களை உயிரோடை காணமாட்டீர்'
வார்த்தைகளைச் சொல் லி முடிக்கும் போது அக்காவுக்கு அழுகை வருகிறது. என்ன உது களிலை இருந்து தடுக்கேலாது. . என்று சொல்ல வாயெடுத்த நான் அக்காவின் அழுகையைக் கண்ட தும் 'நிறுத்திக்கொள்கிறேன்.
“எம் பி ஆக்களோடைநிண்ட மாதிரி நிண்டிருந்தால் சீ. ஒ வேலைக்குத்தான் வயது கணு தெண்டாலும் எங்கை யாவது பாங்கிலையாவது போட்டிருப்பாங் கள்”*
மலையக சம்பளம்
எந்த நாளும் எலும்புக் கூடுகள் ஏறியுழைக்க பானை வயிற்று யானைக் குட்டிகள் வீசி எறிந்திடும் பாசித் துண்டுகள்
- மலையாண்டி
f
சின்னக்காவுக்கு வழமையா கவே மெதுவாகக் கதைப் பது சிரமம். இரவின் அமைதியைக் குலைக் கும் அவளது குரலும் சொல்லுகின்ற விசயமும் எனது ஆத்திரத்தைக் கிளப்புகின்றது.
**மெல்லமா கதைக்க தெரி யாட்டிப் பேசாமை இருங்கோ ந7ங்கள் ஒருத்தரும் சலுகைகளுக் காண்டி அவையின்ரை பின்னலை திரியேல்லை லெக்சனிலைகூட நாங் கள் லட்சியத்துக் காகத் தான் வேலை செய்தநாங்கள்’’
* அப்ப இருக்கிற காணியை ஈடுவைச்சாதல் தா றம் வெ நாட்டுக்குப் போமன்'
வெளிநாட்டுப் பணத்தால் ஏற்படும் தாக்கங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல.இலட் சிய எண்ணங்கொண்ட இளைஞர் களுக்கும் பலயினத்தைத் தரு கிறது. என்று. நண்பர்கள் கதைத்த கதைகள் நினைவுக்கு வருகிறது.
'அக்கா நீங்கள் நினைச்ச மாதிரி நா ன் ஆடுகிறதுக்கு. நான் பொம்மையில்லை. வேறை ஏதாலும் தேவைக்கெண்டால் பறவாயில்லை காசுழைக்கிறதுக் காண்டி ஒருக்காலும் வெளிநாடு
போகமாட்டன்"
அப்ப வேலைவெட்டி இல்லா மல் உதுகளிலை ஈடுபடப் போநீர் என்ன?
'நான் அதுகளிலை ஈடுபடு றது. வே லை யில் லாமலில்லை பொழுதுபோக்குக்காண்டியில்லை.

அப்பா அநியாயமாகச் செத்ததை நான் இன்னும் மறக்கேல்லை’
உணர்ச்சி வசப்பட்டுக் கூறி விட்டு உடைகளை மாற்றுகிறேன். அம்மா விக்கலெடுத்து அழுகிருள் சகோதரிகளும் அழுகின்றனர் சத் தம் அயல் வீடுகளுக்குக் கேட்கா மல் இருப்பதற்குச் சிரமத்துடன் அவர்கள் அழுகையை அடக்க முயலுகின்றனர். இருந்தும் அது விம்மல்களாக வெடித்து வெளி யே கேட்கின்றன.
வகுப்பு கலவரத்தில் வெட்
டுக்காயங்களுடன் உயிர் தப்பி வந்த தந்தையார். மூன்றுமாதங் களாக - மனநோயால் அவதியுற் முர். "ஐயோ என்னை வெட்ட வாருங்கள். ஆமிக்காறர் வாருங் கள். என்னை குத்த வாருங்கள்
என்று பயத்துடன் புலம்பிக்
கொண்டு இருந்தவர் ஒரு நாள் நாங்கள் நன்முக உறங்கிக்கொண் டிருந்தபோது. வீட்டின் பின்புற முள்ள மாமரத்தில். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
எனக்குக்கூட அப்பா வின் சாவை நினைத்தபோது. கண்கள் கலங்குகின்றன . அப்பாவின் சாவை மனதில் வைத்தே இவை களில் ஈடுபடுகிறேன் என்பதை நினைத்தபோது உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதுபோல் தேகம்
புல்லரிக்கிறது. அந்த இலட்சியம்
எனக்குள் மேலும் - ஆழமாகவே பதிகிறது.
'அம்மா. நான் சின்னப் பிள்ளையில்லை. நான் புத்தியில்லா மல் நடக்கமாடடன். நேரம்.
ஒருமணிக்கு மேலையாகுது எழும் புங்கோ சாப்பிட்டு விட்டு படுப் பம்’ A
நிலைமை யைச் சமாளிக்க வேண்டும் என்ற உணர்வுடன் அழுது கொண்டு குந்தியிருந்த அம்மாவின் தோள்களைத் தட்டிக் கொண்டு சொல்கிறேன். நான் இவை களிலை ஈடுபடுவதற்குச்
ஏற்றுமதிப் பண்டங்களா?
ஒடுங்கள் ஒடுங்கள் உலகமெங்கும் ஒடி go fig6. உடலுழைப்பை மட்டுமல்ல உடலை, மானத்தை உங்களிடம் உள்ளவைகள் அனைத்தையுமே சுதந்திரமாய் விற்றுப் பிழையுங்கள் என்று விட்டு விட்டார் தர்மிஸ்டர் உலகச் சந்தையிலே இலங்கை மாதாவன இளைய தலைமுறைகள் என்ன ஏற்றுமதிப் பண்டங்களா?
அம்புஜன்
17

Page 13
சொன்ன நியாயமும். கடைசி யாகச் சொன்ன உறுதிமொழியும் ஒரளவிற்கு அவர்களது மனத்தை ஆற்றி இருக்கவேண்டும்.எழுந்து அடுப்படிக்கு செல்கின்றனர். எல் லோரும் ஒன்ருக இருந்து சாப் பிடுகிருேம்.
'இரண்டு குமர்களையும் விட் டிட்டு அவர் போயிட்டார். நீயும் என்னைக்கலங்கவைக்காதைதம்பி’ அம்மா தான் உணவைப் பரி மாறிக்கொண்டு சொல்கிருள்.
ILb LDIT.. அண்டைக்குச்ھو “* செல்லத்துரை மாமா சொன்ன வர். முருகேசற்றை அச்சுக்கூடம் கொழும்பிலை இருக்காம்.அதிலை தம்பியைச் சேர்க்கலாம் எண்ட வர், தம்பி விருப்பமெண்டால் அங்கை போகட்டுமன்'
மூத்தக்கா சொல்கிருள்.
அச்சுக்கூடம் என்றதும்எமது வேலைகளுக்கு உதவியாக இருக் கும் என்று எண்ணுகிறேன்.ஆனல் இதற்காக கொழும்புக்கு போவ தற்கு எனக்குப் பிடிக்கவில்லை.
"என்ன தம்பி படிப்போடை சம்பந்தப்பட்ட வேலைதானே.” மூத் தக்கா என்னிடம் முடிவு கேட்கிருள்.
'ஒ. பாப்பம். கொழும்புக் குப் போய்த்தான் வேலை பழக வேணுமே. இஞ்சையும் பழக 6UTLic"
சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் உறங்குகின் றனர்.
18
நான் விழுந்தையில் போடப் பட்ட பாய்மீது படுத்து உருள் கிறேன். நித்திரை வரவில்லை. அம்மாவினதும், சகோதரிகளின தும் கதைகளுக்கு விட்டுக்கொடுக் காமல் கதைத்தபோதும் அவர் களது உணர்வுகள் தேவைகள். எதிர்பார்ப்புக்ளும் நியாயமான தாக, உண்மையானதாக எனக் குப் படுகின்றது. இவைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் என் GofL ř இல்லாததனுல்த்தான் இவைகளை நான் நிராகரிப்பதாக உணர்ந்தபோது அதினின்றும் தப் பிக்கொள்ள மீண்டும். கொள் கையை விடாத அந்தப் பிடிவாத குணத்தையே உதவிக்கு நாடுகி றேன். நாள் எனது இலட்சியத் துக்காகவே வாழ்வேன்.
亲 秦 率
கொழும்பிலுள்ள முருகேசண் ணரின் அச்சகத்துக்கு வேலைக்குச் சேர்ந்து இரண்டு கிழமைகளுக்கு மேலாகிவிட்டது வீட்டாரின் வற் புறுத்தல்களும் எனது நண்பர்க ளின் முடிவும் என்னை இங்கு வரு வதற்குத் தூண்டியது.
முருகேசண்ணருக்கு ஊரிலும் பெருந்தொகையான காணிபூமி கள். நெல்வயல்கள், அரிசி ஆலை கள், என்று இருந்தாலும் கொழும்பிலுள்ள அவரது வீட் டில்தான் குடும்பமாக வாழ்ந்து வருகிருர், ஏதாவது அவரே முன் னின்று பார்க்கவேண்டிய அலு வல்களுக்காக - அன்றி முருகே சண்ணையை ஊரில் பார்க்கமுடி யாது. அவருக்கு என்னைத் தெரி யாவிட்டாலும் லெக்சனில் எம்

பிக்காக வே ஆல செய்யும்போது சிவரையும் எம்பி வீட்டில் அடிக் கடி கண்டிருக்கிறேன்.
அச்சகத்தின் ஒரு மூலையில் மெஷினறையின் கால்வாசி இடத்
தையே பிடித்திருக்கும் பழைய
பெரிய சிலிண்டர் மெஷின் - பெரிய இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது அடித் துத் தள்ளும் விளம்பரப் போஸ் டர்களை மை அழுந்துப்படாமல் காயப்போட்டு எடுத்துக்கொடுப் பதுதான் எனது பிரதான வேலை யாக இருக்கிறது. வேலை பழகுப பவன் என்ற அடிப்படையில் மைநிறைந்த கழிவு கடதாசிகள். குப்பைகள் உட்பட மெஷின் அறையைக். கூட்டித் துப்பரவாக் குவதும் எனது வேலைதான்.
வந்த முதல்நாளே இந்த
மெஷினடியில் என்னைக்கொண்டு
வந்து விடும்போது அதை ஒட்டும் மெஷின் மைண்டர். என்னைப் பார்த்து உபசாரத்திற்காகச்சிரித் தபோது நானும் பதிலுக்குச் சிரித்தேன். பின் சிங்களத்தில் ஏதோ என்னைக் கேட்டபோது தான் அவன் ஒரு சிங்களவன் என்பதைப் புரிந்துகொண்டேன்.
எனது முகம் கறுத்துவிட்டது
நான் ஒரு பதிலும், சொல்லாம லே முகத்தைத் திருப்பிக்கொள் கிறேன்.
தேர்தல் காலங்களில் தலை
வர்களின் பேச்சுக்களும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவ
ரச் சம்பவங்களும் எனது தந்
தைக்கு ஏற்பட்ட துயர முடிவும்
அந்த இனத்த வர் மீது. ஓர்
வறுப்பையும் படியாதவர்கள் நாகரிகமற்றவர்கள் என்ற உணர் வையும் என்னுள் ஏற்படித்தியி ருந்தது.
ஆணுல் அவஞேடு தொடர்ந் தும் வேலை செய்யவேண்டி இருந் ததால் அவன் எனக்குச் சிங்களம் தெரியாதது என்பதை அறிந்து பாதித்த மிழில்கேட்டன்பேரனெ? ஊரென்ன? என்ற அறிமுக வினுக் களுக்கெல்லாம் முகத்தைத் திருப் பியபடியே பதில்கூறி இரண்டு நாட்களைக் கடத்தி விடுகிறேன்.
நான் அச்சகத்துக்கு வரும் போதே அச்சுக்கோர்க்கப் பழகு வது தான் நல்லது என்று நண் பர்கள் சொல்லியிருந்தார்கள்.
எனவே இரண்டு காரணங்க்ளுக்
காகவும் மூன்ரும் நாள் இந்த வேலையில் இருந்து விடுபடும் நோக்குடன் முருகேசண்ணரிடம் செல்கிறேன்.
* என்ன சங்கதி"
is நான் அச்சுக் கோர்க்கப்
பழக போறன்’
“அது க்கு இப்ப ஆக்கள் கன பேர் இருக்கிருங்கள் இப்போதைக்கு பைண் டிங்கிலை நில்"
அவர் பேசியவிதம் முதன் முறையாக அவர்மீது வெறுப்பை ஊட்டுகிறது. மீன்டும் அந்த சிலிண்டர் இயந்திரத்தோடு ஒர் இயந்திரமாகிவிடுகிறேன். பத்து நாட்களுக்கு மேல் உருண்டோடி விடுகின்றன. ம்ெ ஷின் மைண் டர் சில்வா மீது எனக்கிருந்த
19

Page 14
வெறுப்பு அவனது அன்பான நடத் தைகளால் படிப்படியாக
குறைந்து சாதாரண நிலைக்கு
வந்து விடுகிறது.
இன்று காலையில்தான் எதிர் பாராத அந்த விபத்து எனக்கு ஏற்பட்டது. வழமைபோல (UPqệ அளவிலான விளம்பரப் போஸ் ரர்க3ன சிலிண்டர் GLDoidir பெரிய இரைச்சலோடு அடித்துத் தள்ளிக்கொண்டிருந்தது. அதன் வே கத்தோடு ஈடு கொடுத்துஅடித்துப் போடும் போஸ்ரர்களை எடுத்துப் பிரித்துப் போடுகிறேன் இழ் அறைகள் முழுவதும் ஒரு இ டமுமில்லாமல் பரப்பிவிடுகிறேன் மாடியில்தான் இனிப் போட வேண்டும். ஒருஆள்மட்டுமே F தியாக ஏறி இறங்கக் கூடிய வளைந்து செல்லும் மூன்றடி அக லமானமாடிப்படியில் ஏறித்தான் மாடிக்கு ச் செல்லவேண்டும் அங்குதான் எனது தங்குமறையும் இருக்கிறது.
பளபளப்பான வெள்ளைத் தாளில் சிவப்பு, நீலநிற மைக ளால் அடிக்கப்பட்ட சிந்த ப் போஸ்ரர் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. காணி ஏல விற்பனை பற்றிச் சிங்களம், தமிழ், ஆங்கி லம் ஆகிய மூன்று மொழிகளிலும் விளம்பரப் படுத்தப்பட்டிருந்த அவைகளை ம்ை அழுந்துப்படா மல் மிகவும் பக்குவமாக இரு கைகளாலும் முன்புறமாக LDrtti போடு அணைத்துத் தாங்கியபடி படிகளில் ஏறுகிேறன். படிகளைக் கண்களுக்குத் ெ த ரியாதபடி போஸ்ரர்கள் மறைக்கின்றன.
20
போஸ்ரரை தாங்கிப்பிடித்திருப்ப தால் படிகளோடு வளைந்து செல் லும் அந்தக்கைப்பிடியிலும் பிடிப் பதற்கு வாய்ப்பில்லை. இருந்தும் இப்படிப் பலமுறை நிதானமாக ஏறி இறங்கி விடுகிறேன்.
ஆணுல் இந்தத் தடவை நடு வழியில் கால் இடறிவிடுகிறது தடுமாறி படிகளில் வீழ்ந்து விடு கிறேன். கீழே உருண்டு விடாமல் ஒரு கையால் பிடித்துக்கொண்ட போதும் முழங்காலின் கீழ் ஏற் பட்ட உராய்வின் வலி உயிரை யே வாங்கி விடுகிறது.
நான் விழுந்த சத்தம் இயந் திரங்களின் இரைச்சலையும் மீறி அந்த, அச்சகம் முழுவதும் கேட் டிருக்கவேண்டும் சிலிண்டர் இயந் திரத்தைச் சடுதியாக நிற்பாட்டி விட்டு ஒரே தாவில் ஏறிவந்த gigi) வா கைகளால் இறுக்கிப் பிடித் தபடி எழும்ப முடியாத நிலை யிலிருந்த என்னைத் தூக்கி நிமிர்த் துகிருன். கைகளால் பிடித்த படி என்னைக் கீழே இறக்கி வரு கிருன்.
முருகேசண்ணரை தவிர அங்கு வேலை செம்யும் எல்லோரும் தத் தமது வேலைகளை நிறுத்திவிட்டு அந்தந்த இடங்களில் நின்முவது எட்டிப்பார்த்துவிட்டுவேலேகளைத் தொடர்கின்றனர்.
காலில் ஏற்பட்ட உராய்வில் இருந்து இரத்தம் வழிகின்றது. சில்வா அருகில் இருந்த ஸ்ரூலில் என்னை அமர்த்திவிட்டு கை கழு வுவதற்காக வைக்கப்பட்டிருந்த

வெட்டுத் துணிகளால் வழிகின்ற இரத்தத்தைத் துடைத்து விடு கி ருன்,
*தம்பி கொஸ்பிட்டலுக்குப் போகவேணும்'
என்னிடம் முருகே சரிடம் போய் ஏதோ சிங்களத்தில் சொல்கிருன், பேப் பர் வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்யும் ராசா வந்து என்னை டிஸ்பென்சரிக்கு கூட்டிச் செல்கிருன்.
'ஏன்ராப்பா படியிலை கவ னமா ஏ றத் தெரியாதே? பல மன கயமோ'? முருகேசர் கேட்கிருர்,
நான் பதில் சொல்லாமலே முகத்தைத் திருப்பியபடி செல் கிறேன்.
**சி அவ்வளவு பெரிய காய மில்லை சின்ன உராய்வுதான்'
நான் பதில் சொல்லாதது அவரை அவமதிப்பதுபோலராசா வுக்குப் பட்டிருக்க வேண்டும். காயத்தையே சரியாக பார்க்காத அ வ ன் மரியாதைக்காக கூறி விட்டு வருகின்ருன். ராசா தன்னை முருகே சருக்கு உறவுக்காரன் என்று அடிக்கடி உறவுமுறை சொல்விப் பெருமைப் பட்டுக் கொண்டாலும் அவனைக்கூட
அவர் ஒர் அடிமையை போலவே
நடத்திவருகிருர் என்பதை நான் உணர்ந்தபோது, 'பந்தம்" என்று மற்றத் தொழிலாளர்களால் பரி கசிக்க படும் அவன்மீது எனக்கு ஒரு பரிவுணர்ச்சிதான் ஏற்படுகி մ051.
சொல்லிவிட்டு.
*சீநாக்களோடை கொஞ்சம் கவனமாய் பிளங்க வேணும்'
சில்வா எனக்கு ஆபத்து நேரத்தில் உதவிய செய்கை அவ னது மனதில் என்ன உணர்வை ஏற்படுத்தியதோ, நடந்து வரும் போது நான் கொழும்புக்கு புதிய வன் என்ற நினைவில் கூறும் பல அறிவுரைகளில் இதுவும் ஒன்ருக அமைகிறது. w
தனது நிலையையே உணராத ஏதுமறியாத அப்பாவிகளின் உள் ளங்களில் வசதி படைத்தவர்க ளால் ஊட்டிவிடப்படும் இந்த உணர்வுகள் தான் எவ்வளவு கொடுமையானது என்பதைநான்
உணர்கிறேன்.
மருந்து கட்டிவிட்டுத் திரும் பும்போது முருகேசர் மேசையில் இல்லை. போய் மீண்டும் வேலை யைத் தொடங்குகிறேன்,
'றெஸ்ற் எடுங்க்ோ தம்பி வேலை செய்ய வேணும்'
சில்வாதான் சொல் கி மு ன் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளில் அவர் நடந்துகொண்ட விதம் என் நெஞ்சை அழுத்துகிறது வந்த முதல்நாள் நான் அவனைப் பார்த்துச் சிரித்ததும் அவன் சிங் களத்தில் பேசியதும் வெறுப்பு டன் தலையைத் திருப்பிய அந்த மனேநிலையை எண்ணி வெட்கப் படுகிறேன்
முருகேசர்சொல்லிஇருந்தால் ஒய்வெடுக்கலாம் சில் வாவுக்கு
எனது நிலை தெரிந்தாலும் எது
21

Page 15
வித அதிகாரமுமில்லாத அவனது சொல்லைக் கேட்டுஎப்படி நான் வேலை செய்யாமல் விடுவது.
நான் வேலையைத் தொடர்கி
றேன். சமதரையிலானல் வேலை செய்யலாம். மாடிப்படியேறுவது கஸ்டமாக இருக்கிறது. ஒருமுறை கூட என்னல் ஏறமுடியவில்லை.
அப்படியும் ஏறுகிறேன். கட்டை யும் மீறி காயத்தில் இருந்து இரத் தம் ஊறுகிறது. அதை யும் பொருட்படுத்தாமல் ஒரு போர் வீரனின் உணர்வோடு ஏறிப் போஸ்ரர்களைக் காயப்போடுகி றேன். எனக்குப் பின்னல் தான் அடித்து முடித்த மிச்சப் போஸ் ரர்களை அள்ளிக்கொண்டு வந்த ஒல்வா கட்டுக்கு வெளியே ஊறும் இரத்தத்தைக் கண்டுவிடுகிருன்.
'தம்பி சொன்னக் கேளுங் கோ. நீங்க வேலைசெய்ய வேணும் முதலாளி கேட்டா நா சொல்லி
றது.'
கொண்டுவந்த போஸ்ரரை
மேசைமீது போட்டுவிட்டு பின் புறமாக என்னைப் பிடித்துத் தள்ளி அங்கிருந்த வாங்கில் அமர்த்தியபடி கூறுகிருன். *
சற்றுமுன்னிருந்த இராணுவ விரனின் உணர்வு மாறி தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட குழந் தைபோல அவர் அமர்த்திய இடத்திலேயே அமர்ந்தபோது தனித்து நின்று வெல்ல முடியாத பலமான ஓர் அமைப்பை. உடைக்க முடியாத எனது பல யீனத்தை நான் உணர்ந்தேனே. என்னவோ. துக்கத்தால் எனது
22
தொண்டை அடைத்துக்கொள் கிறது. கண்கள் குளமாகி கன்னங் களில் கண்ணிர் வழிந்தோடுகிறது
சில்வா பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக முகத்தைத் திருப்பி மேசைமீது தலையைக் கவிழ்த்துக் கொண்டு படுத்துவிடுகிறேன்.
சுதந்திரமாக அலைந்து திரிந்த பள்ளிப் பருவ நினைவுகள்! இந்த அச்சகத்துக்கு வரும்வரை என்னை விட்டு அகலவில்லை. என்றுமே ஒரு தனிமனிதனின் கீழ் உடல் வருத்தி வேலை செய்யாத நான் இன்று ஒரு தொழிலாளியாகி வேலைக்கமர்ந்தபோதுதான் அடி மைத்தனத்தின் அர்த்தத்தைப் மிகச் சரியாகப் புரிந்துகொள்கி றேன், ஊரில் நெச வடிக் கப் போகும் பெரியக்கா முதல் உடல் வருத்தி உழைக்கின்ற அனைவருமே என் கண்ணில் தெரிகின்றனர். காலிலே பட்ட நோவுக்காக. இயலாமைக்காகக் கூட ஒய்வெ டுக்கமுடியாத இதுபோன்ற அவல நிலைகளில் நின்று தனிமனிதனின் கீழ் மாடாகி உழைத்தும் ஒரு விடி வுமில்லாத வாழ்க்கைதான் தமி ழன் சிங்களவன் முஸ்லீம் என்ற எல்லைகளையே மீறி தேசமெங்கும் விரிவடைந்திருப்பதை உணர்கி றேன்
சில்வா மீண்டும் மேலே வரு கிருன் இப்பொழுது தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்துச் சிரிக்கிறேன். கண்ணீரைத் துட்ை த்திருந்தாலும். சிவந்து வீங்கியி ருந்த கண்கள்ை என்னல் மறைக்க முடியவில்லை: ' *

“என்ன தம்பி வீட்டு ஞாப கம் வந்துதா.
எனக்கும் இரண்டு குழந் தைங்க இருக்கு மூத்தது கொஞ் சம் வயசுதான் பீடி சுத்தப் է մեք குது என்னதம்பி சம்பளம் சீவிக்க ஏலாது தம்பி மிச்சம் கஸ்டந் தான ,
வாழ்க்கையின் வெறுமை
அவன் வாயிலிருந்து வருகிறது.
எனது நண்பர்களும் இதே
போன்ற பிரச்சினைகளைப் பற்றிக்
கதைப்பார்கள் ஆனல் நடைமு றையில் ஊரிலுள்ள தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்த இளைஞன் அடிக்கடி சொல்வது போல சதிபடைத்தவர்கள் போ டும் இனவெறிக் கூச்சல்க ளின் மத்தியில் எங்களைப்போன்றசாதா ரண மக்களின் அவலக்குரல்கள். அமுக்கப்பட்டு விடுகின்றது என் பதை நான் உணர்கிறேன்.
கீழே. முருகேசண்ணரின் . இல்லை. முருகேசு முதலாளியின் குரல் சிங்களத்தில்தான். கடு மையான தொனியில் கேட்கிறது மாடிப்படியில் இறங்கிக்கொண் டே சில்வாவும் அதற்குப் பதில் சொல்கிருன். எனக்குச் சிங்களம் தெரியாததற்காக நான் மனவ ருத்தப் படுகிறேன். என்ருலும் என்னுடைய வேலையைச் சில்வா செய்ததற்காகத்தான் பேச்சு வாங்குகிருன் என்பதை பேச்சுத் தோனிகளிலிருந்தே உணர்ந்து கொள்கிறேன்.
எனக்காக சில்வா பேச்சு வேண்
டுவது என் மனதைவருத்தியது.
அதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என்று துடிப்புடன் எழும்புகிறேன். நெஞ்சின் ஒரு துணிச்சலும், வைராக்கியமும் ஏறுகிறது மாடியில் இறங்கு படிகளை நான் அண்மித்தபோது முருகேசர் படிகளில் ஏற முனை வதைக் கண்டு அப்படியே நின்று விடுகிறேன் , அவரும் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அப்ப டியே நின்று விடுகிறர்.
* என்ன. வே லை செய்யே லாட்டி என்னட்டைச் சொல்ல GT6)(Saurr (Sau
GB வேணும் 'நீங்கள். அப்ப இல்லை."
‘அப்ப. வ ந் த உடன. சொல்லக் கூடாதே"
‘'நீங்கள் வந்தது. எனக்குத் தெரியாது’’
நிமிர்ந்து நின்றபடியே உறு தியாகத்தான் சொல்லுகிறேன் . எ ல் லாத் தொழிலாளர்களும் வேலையை விட்டுவிட்டு என்னை யும், முருகேசு முதலாளியையும் பார்க்கின்றனர்.
* ஒ . அப்படியோ வேலைக்கு சரிவரமாட்டீர்'
நீர்
நான் சொன்ன பதில்கள். அவரது வாயை அடைக்க ஆத்தி ரத்துடன் என்னைப்பற்றி தனக் குள் ஒரு முடிவு கட்டியவராய் கடைசி வார்த்தையாகச் சொல் லிவிட்டுப் போகிருர்.
நானும் எனக்குள் ஒர் முடிவு கட்டிவிட்ட உறுதியோடு திரும் பிச்செல்லும் முதலாளியைச் சிறி
23

Page 16
துநேரம் பார்த் த ப படி நின்று விட்டு. அன்றைக்குத் திரும்புகி றேன்.
வீட்டில் நான் இலட்சியம். கொள்கையொன்று இரவெல்லாம்
விருந்தையில் அரிக்கன விளக் கின் கீழ் வாழ்வின் சுமைகளை மன திலே தாங்கியபடி. எனக்காக விழித்திருக்கும் தாயாரின் ஏக்கம்,
தவிப்பு, எதிர்பார்ப்புக்கள். இந்
தேசமெல்லாம். . . வியாபித்திருப் பதை உணர்ந்தபோது, , , எனது இலட்சியத்தின் பரப்புக்கள் விரி வடைவதை நான் உணர்கிறேன் ஒருசில இரவுகள் அல்ல. என் வாழ்நாள் முழுவதும். .இந்த நிலைமைக்கு எதிராக நான் வாழ வேண்டும். . . என்ற உறுதி என் னுள் வளர்கிறது. V
தோற் பையை எடுத்துத் .. தோளிலே மாடிப்படிகளில் இறங்குகிறேன்.
மாட்டிக்கொண்டு
‘என்ன தம்பி"
சில்வா வியப்படைகிருன் எல்லோரிடமும் விடைபெறு
கிறேன்
*வெளிக்கிட்டாச்சோ?* முருகே சர் முதலாளி. . .
முகத்தை உப்பென்று வைத்தப படி கேட்கிருர்.
'நாங்கள் உங்களுக்குச் சரி வர மாட்டம்'
அசட்டையாக . . . சற்று. . . கிண்டல உணர்வுடன் சொல்லு கிறேன். . .
சில்வா வாசல்வரை வருகி முன் அவனது கரங்களை இறுகப் பற்றுகிறேன்
“உங்களை நான் மறக்கமாட்
டன்’ r
* சுகமா போய்வாங்க தம்பி
ஒரு புதிய உணர்வையும் வேகத்தையும் பெற்றவனுக ஊர் திரும்புகிறேன்
爱※
KRYK
ஒரு கையால் கொடுத்து
*திகரிக்கும் ஒவ்வொரு வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கும் இரண்டு ரூபா வழங்கப்படவேண்டும் என 1978 ம் ஆண்டு வரவு செ வுத்திட்டத்தில் அரசாங்கம் தீர்மானித்தது. W
இப்போது எவ்வித விளம்பரமும் இன்றி இச்சலுகை மார்ச்
மாதத்திலிருந்து இவ்வருடத்திய வரவு செலவுத் திட்டத்தில் நீக்கப் பட்டுவிட்டது, மார்ச் மாதத்தில் மட்டும் முப்பது வீதம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு அரசாங்க ஊழியரில் ஒரு பகுதியினரின் வாழ்க்கைச் செலவுப் படியை நிறுத்தியே, ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக சம்பளம் பெறுவோருக்கு நூறு ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வழங்கி யுள்ளது.
ஏறும் விலைவாசியில் நூறு ரூபா எந்த மூலைக்கு- ஆனல் அதை யும்கூட ஒரு பகுதியினரிடமிருந்து அபகரித்தே மறு பகுதியினருக்கு வழங்கப்படுகிறது. .
24

நீதிக்கதை நரியின் நீதி.
ஒரு நாள் மாலை மஞ்சள் வெய்யில்
மங்கிய வேளை காட்டுராசா சிங்கமொன்று காலை மடக்கி - நிலத்தில் புரண்டு நிம்மதியாகத் துயில்கின்றது;
யானை ஒன்று அவ்வழியாக போன போது சிங்கத்தின் வயிற்றடியில் சிறிதாக மிதித்துவிட சிங்கம் சிகிறிப்பாய்ந்து யாரடா அவன் என்னை மிதித்தவன் இறுமாப்புடையவன்" கர்ச்சனை செய்தது சிங்கம்
யானை தனது சிறிய கண்ணுல் சற்று சீரியசாக சிங்கத்தைப் பார்த்தது சிங்கம் தன் சிலிர்த்த மேனியில் சிற்றெறும்பொன்று ஊருதல் கண்டு * ஒகோ எறும்பாரே நீரோ சுறுசுறுப்பாய் சொறிச் சேட்டை விட்டீரோ? ** மழுப்பி லேசாய் சிரித்தது சிங்கம் யானையைப் பார்த்தது யானை தனது சிறிய கண்ணுல் சீரியசாகத்தான் இன்னும்பார்த்தது சிங்கத்துக்கு ரோசம் வந்தது எறும்பை அதட்டி எதிரியை வென்றதாய் கருதிய சிங்கம் உருக்கொண்டெழுந்தது உரத்துச் சொன்னது
25

Page 17
26
* உங்களிருவரையும் கோட்டில் ஏற்றிக் கூண்டில் நிறுத்தி நீதியை நாட்டுவேன் , இது என் ஆணை’’ என்றுரைத்து; இளைத்துக் களைக்க நரியைத் தேடிச் சென்றது சிங்கம். ஆனையும் என்ன ஆளா சிறிது? பாப்போம் ஒரு கை பந்தயம் பிடித்து முன்னே நடந்தது எறுமபும ஒருவாறு ஊர்ந்து சென்றது நரியைக் கண்டு நடந்ததைச் சொன்னது முறைப்பாட்டாளர் சிங்கம் எதிரி யானையென்ருல் சங்கடந்தான் திகைத்த நரியோ சமாளித்து மீள
* அப்படியா சங்கதி
சிங்கத்தின் துயிலைக் கெடுத்தவர்கள் இருவருந்தான்' யானை தனது சிறிய கண்ணுல் சீரியசாகத்தான் நரியைப் பார்த்தது.
நரியார் நடுங்கி
சட்டத்தின் முன் சகலரும் சமம் நீதியை நாட்டுவேன்" தீர்! ப உரைத்தது து ைடன் சொன்னது. * யாரையும் எறும்பும் சிங்கத்தின் துயிலைக் கெடுத்தன என்பது

நிகழ்விலிருந்து
தெரிய வருவதால். சிங்கம் தனது சிறிய நகத்தால் சின்ன மெல்லிய நுள்ளுக் கொடுப்பதே இருவருக்கும் இதுவே தீர்ப்பு' உடனே தண்டனை
இனிதே நிறைவேற சின்ன - மெல்லிய நுள்ளால் எறும்பு இரண்டு துண்டானது. இறந்தது என்னவோ உண்மைதான் சின்ன - மெல்லிய நுள்ளு யானையைச் சிறிது கூச்சப்படுத்தியது. இதுவும் என்னவோ உண்மைதான் சட்டத்தின் முன்
சகலரும் சமம்’ *" - செண்பகன்
6.
సిబిసి-T-- his:
அறியத்தருகிறேம்
சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பதுபற்றி எமது தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரையும் உள்ளடக்கி ஒர் கூட்ட றிக்கை பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது யாவரும் அறிந்ததே.
இது பற்றிய ஒரு கூட்டத்துக்கு அழைப்பு வந்திருந்தது. எமது எழுத்தாளர் கலைஞர்களிடையே இருந்துவரும் அவசியமற்ற இடைவெ ளிகளை நீக்குவதற்கும், ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில் பரஸ் பர புரிந்துகொள்ளலை ஏற்படுத்த உதவவேண்டும் என்ற நோக்குடனும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பது பற்றிய எமது கருத்தை நாம் அங்கு கூறியிருந்தோம். கூட்டறிக்கை விடுவது பற்றி நாம் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு தனிப் பட்ட முறையில் காட்டப்பட்டபோதும் கலை இலக்கிய பேரவையைக் கூட்டியே முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். கால அவ காசமின்மையைக் காரணங் காட்டி அவசர அவசரமாக அறிக்கை வெளியிடப்பட்டது.
எமது தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு ஓர் உறுதியான அடிப் படைக் கொள்கையும், அதனைச் செயற் படுத்துவதற்கான ஒழுங்கு விதிகளும் உண்டு. அதற்கு மாறுபாடான முறையிலேயே இவ்வறிக்கை வெளிவந்துள்ளது என்பதை கலை இலக்கிய நண்பர்களுக்கு அறியத் தருகின்ருேம் -
- தேசிய கலை இலக்கிய்ப் பேரவை
27

Page 18
சங்கம் முதல் இன்றுவரை
ஏறத்தாழ இருபத்தைந்து நூற்ருண்டுகளுக்கு மேலாக வள ர்ந்துவரும் தமிழிலக்கிய வரலாற் நிஜனச் சங்க காலத்திலிருந்து கணக்கிட்டுப் பார்ப்பது நம்மவர் மரபாக இருந்து வந்திருக்கிறது. உண்மையில் தமிழ் இலக்கிய வர லாற்றிலே ஒரு குறிப்பிட்ட கா? கட்டத்திலேயே சங்கம் என்ற நிறுவனம் உருப்பெற்று நிலவிய தாயினும், பல்வேறு காரணங்க ளால் அது மிகத் தொன்மை வாய்ந்த தொன்முகக் கருதும் நம் பிக்கை தமிழிலக்கிய மரபில் ஆழ வேரூன்றியுள்ளது. தமிழின் தனிச் சிறப்பியல்புகளிலே ஒன்முக சங் கத்தில் அது ஆரயப்பட்டமை குறிப்பிடப்படுவதுண்டு. பழந்த மிழ் நூல்கள் சிலவற்றுக்கு நுட்ப மான உரைகள் எழுதிய பேராசி ரியரிலிருந்து இன்றைய பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்வரை எத் தனையோபேர் முச்சங்கங்கள் பற் றியும் சங்கத்தமிழ் குறித்தும் எவ் வளவோ எழுதியிருக்கின்றனர்.
அண்மையில் திரு. கோ. கேசவன்
மண்னும் - மனித உறவுகளும் என்ற நூலிலே சங்கம்பற்றிய கருத்துக்களை மறுமதிபீடு செய் துள்ளார். கி. பி. ஏழாம் எட்டாம் நூற்ருண்டுகளுக்குப் பின்னரே சங்கம் பற்றிய ஐதீகம் முழுவடி
28,
- கலாநிதி க. கைலாசபதி
வம் பெற்றது என்பதை நடுநேர் மைவாய்ந்த நவீன ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயி னும் பெரும்பாலான தமிழ்க் கல் வியாளரும் மொழியார்வலரும் தொன்றுதொட்டே சங்கம் இருந் துவந்தது என்னும் மரபுக்கதை யை - ஐதீகத்தை - வரலாற்றுச் செய்திபோலவே ஏற்று வருகின் றனர். வரலாற்றுத் தரவுகளிலும் பார்க்க ஐதீங்கள் வலிமையடை வாய்த் திகழ்வதைப் பல நாடுக ளின் சரித்திரத்தில் நாம் அவதா னிக்கலாம்.
சங்கம் பற்றிய நம்பிக்கை களின் அடிப்படையில் இரு கருத் துக்கள் தமிழிலக்கிய மரபில் நிலைத்துவிட்டன: “கண்ணுதற் பெரும் கடவுளும் கழகமோட மர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பசுந்தமிழ்" என்பது ஒன்று. இது தமிழிற்குத் தெய்வீகத் தொடர் பினைக் கூறுகிறது. பரஞ்சோதி முனிவரின் இக்கூற்றுஎத்தனையோ புலவர்களால் எடுத்துரைக்கப்பட் டிருக்கிறது. சான்றேர் செய்யுள் களிலேயே தமிழ் முருகனுடன் தொடர்புடையதாய்க் கூறப்பட் டது; களவியல் உரையெழுந்த காலமுதல் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தாருள் சிவன் தலையான
வராய்க் கூறப்பட்டு வந்திருக்கி
ருர், சிவன், முருகன் ஆகிய கட

வுளர்களும் அகத்தியர், தொல் காப்பியர், முதலிய இருடிகளும் போதித்து வளர்த்த தமிழ் தெய் வீகமானதாய்க் கருதப்பட்டதில் வியப்பு எதுவுமில்லை.
தமிழை துறைபோகக்கற்ற பேரறிஞர்களும் பெரும் புலவர் களுமே சங்கத்தில் அமர்ந்திருந்து இலக்கண வரம்புகளுக்கு உட ப த்தமிழிலக்கியத்தை ஆராய்ந்து வளர்த்தெடுத்தனர் என்பது மற் ருெரு கருத்து. சின்னமனூர்ச் செப்பேட்டில் "நற்சங்கம் இரீ இத் தமிழ் வளர்த்தும்' என்று *ாணப்படும் கூற்று இதனைப்புலப் படுத்தும். ஒன்பதாம் நூற்ருண் டிலே வாழ்ந்தவரான திருவாதவூ ாரும் ‘உறைவாள் உயர்மதிற் கடலில் ஆய்ந்த ஒண் தீந் தமிழ்' சில டெ இலக்கண வல்லுநரும் தமிழை ஆராய்ந்து வளர்த்தனர் என்ற கருத்து இத ல்ை வலுவுடையதாய் இருந்து வந்துள்ளது. இதன் பிரதிபலிப் 1.ாகவே தொல் காப்பியரும் மர பைப் பற்றிக் கூறும்பொழுது,
என்று குறுப்பிட்டார்.
ரும்புலமையாளரும்
வழக் கெனப்படுவது உயர்ந் தோர் மேற்றே நிகழ்ச்சியவர்
LT856) 60
என்று உயர்ந்தோரே இலக்கிய இலக்கண ஆக்கத்திற்கும் ஈடுபா ட்டுக்கும் உரியவர்கள் என்பதை உரைத்துள் சான் ருேரிலக்கியத்திலி
வெளிப்படையாக
(ருந்து இன்றைய நவசான்ருே?ரிலக் கியம் வரை நேரடியாகவும், மறை முகமாகவும் வலியுறுத்தப்படும்
றும்,
சமூகச் சார்பை - வர்க்கச் சார் பினை - தொல்காப்பியரின் சூத்தி ரத்தில் ஐயத்துக்கிடமின்றி கண்டு கொள்ளலாம்.
தெய்வீகத்தன்மை, சான்
ருேர் வழி வரும் மரபு என்பவற் றின் அடிப்படையிலேயே சங்கத் திற்கும் சங்கத் தமிழுக்கும் பெரு மை கற்பிக்கப்பட்டது. மரபு என் பதை வளர்ச்சியின் தொகுதி அல் லது திரட்சி என்று கொள்ளாமல் முடிந்த முடிபாகக் கொண்டனர் பிற்காலத்தவர். உதாரணமாக மேலே எடுத்தாளப்பட்டுள்ள மர பியற் சூத்திரத்திற்கு உரையாசி ரியர் பின்வருமாறு விளக்கம் கூறினுர்,
'வழக்கென்று சொல்லப்பட்
டது உயர்ந்தோர் மேலது
மாட்டாதலான் எ ன் ற வாறு; ஆண்டு (பாயிரத் துள்) வழக்கென்று சொல் லப்பட்டது உயர்ந்தோர் வழக்கினை எனவும் இழித் தோர் வழக்கு வழக்கெ னப் படா தெனவும் கூறி
யவாறு’
இக்கூற்றில் ‘உயர்ந்தோர்’ இழிந் தோர்" ஆகிய இரு சொற்களும் உன்னிப்பாய்க் கவனிக்க வேண்டி யவை. 'உயர்ந்தோரெனப்படு வார் அந்தணரும் அவர் போலும் அறிவுடையோருமாயினர்’ என் *அறிவரெனப்படுவார் மூன்று காலமுந்தோன்ற நன்கு ணர்ந்தோரும் புலனன் குணர்ந்த
29

Page 19
புலமையோரும் ஆயினர்' என் ம்ே செய்யுளியலிலே பேராசிரியர் அரை கூறியிருப்பினும், தொல் காப்பியத்துக்கு முன்னே எழுந்த சான்ருே?ர்செய்யுள்களையும் அவற் றிற் பயிலும் பதப்பிரயோகங்க ளையும் உற்று நோக்குவார்க்கு மேற்கூறிய இரு சொற்களும் சமு தாயத்திலே உயர் நிலையில் இருந் தோரையும் தாழ்நிலையில் இருந் தோரையுமே குறித்தன என்பது புலணுகும். அவ்வாறு நோக்கும் பொழுது ‘உலகம் என்பது உயர்ந்
புப் பொருள் இலக்கியக் கோட் பாடு மட்டுமன்றிச் சமுதாயநெறி யுமாகும் என்பது உறுதிப்படும்.
சான்ருேர் செய்யுள்களிலே துறக்கத்தை "உயர்ந்தோருலகம்’ என்று வழங்குவர். அது அத்தரு ணம் அறிவருமன்றிப் பெருஞ் செய்யாடவர் அதாவது உயர் குடிப் பிறந்த வீரபுருஷர். சென்று வாழ்ந்த மேலுலகம் என்றே எழு தப்பட்டது. எனவே “உயர்ந்தோர் வழக்கு’ என்று கூறும்பொழுது அவ்வார்த்தைப் பிரயோகத்திலே சமூக நிலையும் உள்ளடங்கியுள் ளது.இந்த அர்த்தத்தையும் மனத் திற்கொண்டே தொல்காப்பியர் வழிவந்த பவணந்தியாரும்.
"எப்பொரு ளெச்சொலின் எவ்வாறுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்பு தன் மரபே' எனக் கட்டுறுதியாய்க்கூறிச்சென் ருர், இக்கூற்றிலே மரபின் கட்டி றுக்கத்தைக் காணக் கூடியதாய்
艾们
கியமும்
உள்ளது. இவ்வுணர்விற்கு மூ வட படிவம் போன்றிருக்கிறது. தொல் காப்பியரது மற்றுமொரு சூத்தி
if it.
மரபுநிலை திரியிற் பிறிது பிறி தாகும். இவ்வாறு சங்கத்தமிழ் மரபில் வரும் 'தொல்லாணை நல்லாசிரி யர்களின் கூற்றுக்களைத் தொ குத்து நோக்குமிடத்து, முழுது ணர்ந்த மேதைகள் சிலர் ஏலவே கூறியுள்ள வரம்புகளைக் கடைபி டித்தாலன்றி மொழியும் இலக் தகுதியுடையனவாகா என்ற விடாக் கண்டிப்பான கு லைக் கேட்டலாம.
முரண்பாடுகளை மூடி f றைத்து பழம் பெருமைபேசு கின்ற போக்கு
இத்தகைய உயர்ந்தோர் குழப்
போற்றும் நெறியே சங்கத்தமிழ்
வழிவருவதாகும். மக்கள் தழுவிய நெறி அங்கு இருந்ததோ என்று கூட ஐயுறவு கொள்ளுமளவிற்கு தெய்வீகத்தன்மையும் உயர்ந் தோர் சார்பும் சங்ககலேத் கிரி ருந்து விடாப்பிடியாகப் பேot ) பட்டும் போற்றபட்டும் வருவது அவதானிக்கத்தக்கது. அத்தகைய ஒரு காலத்தையே பத்தொன் 11 தாம் நூற்றண்டுகளில் எழுந்த தமிழ் 'மறுமலர்ச்சி' இயக்கத் தைச் சார்ந்தவர்களில் ஒருபகுதி யினர் தமிழரின் பொற்காலமாகச் சித்தரித்து வந்துள்ளனர்.
மனுேன்மணியம் ஆசிரியர் சுந்
ரம்பிள்ளையிலிருந்து ம. ரா. போ,

குருசாமி வரை சங்கத் தமிழைப்
பற்றியும் சங்ககாலத் தமிழரைப் பற்றியும் பற்ருர்வத்துடன் எழு தும்பொழுது பழந்தமிழ்ச் சமு தாயத்தையும் நாகரிகத்தையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் வேணவாவினல் தூண் டப்படுகின்றனர் என்பதை மறுப் பதற்கில்லை சி. என். அண்ணுத் துரை அவர்களை எடுத்துக்கொண் டால்கூட, பகுத்தறிவு, நாத்திகம் வைதீகமறுப்பு, வருணு சிரம எதிர்ப்பு முதலியவற்றை வலியு றுத்திஇயக்கம்நடத்திச்சீர்திருத்த வாதியாய்த் தோற் றமளித்த அவர், சங்ககாலத்தை திரும்பவும்
நிலைநாட்ட விரும்பிய மீட்டுயிர்ப் புவாதியாய் விளங்கியமையைக்
காணலாம். தொன்மை எ ன் ற காரணத்துக்காகவும், முரண்பாடுகளை மூடிமறைத்து பழம்பெருமைக்குள் பிரச்சினை களை மடக்கி அடக்கிவிடுவதற்கா கவும் நம்முன்னே நிறுத்தப்படும் சங்ககாலம் மற்றைய வர்க்க சமு தாயங்களைப் போலவே சுரண்ட லும், அடக்குமுறையும், குறையா டலும்,அதிகாரத்துவமும் நிறைந் திருந்தது என்பதை நாம் மறந்து விடமுடியாது. இருபதாம் நூற் ருண்டுக் கவிஞரும், எழுத்தாள ரும் அதற்கு எத்தனையோ வகை களில் பொன்முலாம்பூசி பூலோக சுவர்க்கமாக - இன்பலோகமாக - விவரித்து வந்திருக்கின்றனர். தெய்வீகத்தன்மையை நிராகரிப்ப தாகக் கூறிக்கொள்ளும் “பகுத்தறி வு’ப் பாவலர்களிற் பலர் சங்கம் பற்றிய ஐதீகத்தை உண்மையாக ஏற்றுக் கொண்டுள்ளமையைக்
வர்க்க
காண்கிருேம். பிரச்சனைகள் எதுக வுமே அற்ற பேரின்ப உலகை அன்றைய உலகை அவர்சள் தீட் டிக்காட்டுகின்றனர். உதாரண மாக, பாவேந்தர் மரபில் வந்த வாணிதாசன் ‘வாழ்க இளம்பா ரதி என்ற கவிதையிலே சங்கத் தமிழ்பற்றிப் பின்வருமாறு பாடு βδrηγή.
கொண்டுவாயாழை! குழந் தைகளைப் பாடவிடு! பண்டைத் தமிழ் வீரம் LuftLLGub; G35 G3urti). அரசர் மடிமேல் அரும்புல
Gift செந்நாவில் ஓங்கி வளர்ந்த உயர்தமி ழைப் LinTLUG) blo”
இவ்வாறு கற்பனையுலகைப் பாடி யிருப்பினும் அது பண்டைத் தமி ழுலகமாகவே கூறப்படுறது.
சங்க காலம் என்ற வாய்ப் பாட்டை ஒருகணம் நாம் கருது கோளாகக் கொண்டு இருபதாம் நூற்ருண்டுவரை வரலாற்றடிப் படையில் நோக்கினுல் பல மாற் றங்கள் நிகழ்ந்து வந்திருப்பது கண்கூடு. அவற்றை எல்லாம் இங்கு விவரித்தல் இயலாது. தனி உடமைச் சமுதாயத்தின் வளர்ச் சியை நாம் சங்க இலக்கியங்கள் என்று விவரிக்கப்படும் சான்ருேர் செய்யுள்களிலே தெளிவாகக்கண் டுகொள்ளலாம். புராதன சமுதா யத்தின் மீதமிச்சங்களாக இருந்த குடிகளும் கிளைகளும், குலங்க ளும், குழுக்களும் வீரயுகத்திலே நடைபெற்ற 'மாடுபிடி, நாடுபிடி சண்டைகளினுடே அழிவுற்று உறுதியான அரசுகளும்ருநிெபலப்

Page 20
சுதந்திரக் காற்றை.
பங்குனியின் பகற்பொழுது பாலை வெயில் வெப்பம் எங்குமே காற்றினசைவில்லை இராப்பகலாய் ஒரே புழுக்கம் இருக்கச் சகிக்காமல் எழுந்து நடக்கிறேன் உண்மை தெரிகிறது விண்ணைத் தொடுகின்ற விலைவாசி ஏற்றங்கள் வாங்கும் வலுவிழந்த வருமானம் சம்பளங்கள் இறங்கு நிரையில் குறைந்தே இருப்பதனல் ஏழைகள் விடுகின்ற ஏக்கப் பெருமூச்சும் காற்றில் கலக்கிறது வருந்திப் பல வெளிகள் நடந்து திரிந்தாலும் சுதந்திரக் காற்றை என்னுல் சுவாசிக்க முடியவில்லை
--தணிகையன்
பரப்புகளும் உதயமாகிய கால கட்டத்தை சான்ருேர் செய்யுள் கள் நமக்குக் காட்டுகின்றன. அந் தக் காலகட்டத்திலிருந்து, அடி மைச் சமுதாயம், நில்மானிய சமு தாயம், முதலாளித்துவ சமுதா யம் என்ற மாபெரும் வரலாற்
32
றுக் கட்டங்களுக்கூடாகத் தமிழ்ச் சமுதாயம் வந்து இன்று சோஷ லிஸ் சமுதாயத்தின் அமைப்புக் 4;fTøðl' போராட்டத்தின் மத்தியில் இருப்பதையும் காண்கிருேம் இது நீண்ட வரலாற்றுப் பயணமாகும்
எல்லைகளைக் களமாகக் கொண்டு நோக்குமிடத்து சங்கம் மு க ஸ் இன்று வரை இரண்டொரு (புக் கியமான வளர்ச்சிகள் நிகழ்ந்து வந்திருப்பதையும் நாம் கவனிக் கக்கூடியதாய் இருக்கிறது.
பல்லவர் காலப்பகுதியிலி ருந்து சங்கம் தெய்வ சம்பந்த LT னதாகக் கூறப்பட்டு வந்தமையை இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டேன். சோழர் காலத் திலே உச்ச நிலையை அடைந்த
இப்போக்கு வைதீக சமய நெறி
யாகப் பல நூற்ருண்டுகளா' இருந்து வந்தது. மத்தியகால ஆஃப் யங்கள் இப்போக்கிற்கு உறுதுணை யாய் அமைந்தன. இலக்கிய உல கில் நிலவிய இவ்வைதீகச் 4ெ ல் வாக்கிற்கு எதிராகக் காலத்துக் குக் காலம் குரல்கள் எழுந்திருக் கின்றன. சமய வட்டத்திற்குள் ளேயே பல சந்தர்ப்பங்களில் இக்
குரல்கள் எழுந்தனவாயினும், சாதித்திமிர், சமயச்சடங்குகள்,
போலி ஆசாரங்கள், அடக்குமு றை முதலியவற்றுக்கு எதிராக இவை ஆங்காங்கேசெயற்பட்டன என்பதை மறுக்கவியலாது.
திருக்குறள் திருமந்திரம் முதலிய முற்பட்ட நூல் சளிலும் தேவாரங்களிலும் ஒருவகையான

3ェアg あ与sV* இை ழயோடுவ தைக் 571 SISI SvTub எனினும் , கபி ஐகவல், பல்வேறு சித்தர் رIT نثة بـ # T, நாட்டார் பாடல்கள் I Gö LjGG' வற்றில் ஓரளவு வைரம் பாய்த்த வைதீக எதிர்ப்பை இனங்கண்டு கொள்ளக்கூடியதா' தாயுமானவர், ப்ட்டினத்தார்வழி வந்த இராமலிங்கசுவாமிகள் முதி ஜியோர் ாடல்களிலெல்லாம் வைதீகத்திலிருந்து ஆன்மீக மனிதாயத்தை நாம் தரி சிக்கலாம். af(pg5 Tu மாற்றத்துக்கு இவை வழிவகுக்கக் 互āg °DD போதும், இருH 5 frti நூற்றண்டில் எழுந்த மனி 5fruLu - முற்போக்கு - இயக்கங்க ளூக்கு இவை த்ார்மீகப் பின்னணி
மாறுபட்ட
வையாயிருந்த
ாக விளங்கின் என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதே, ஏறத்தாழ பதினன்காம் நூற்றண்டிலிருந்து பதினெட்டாம் நூற்ருண்டுவரை Gl- இந்தியாவிலும் தென்னகத் திலும் தோன்றிய சாதுக்களும் தெருப்பாடகர்களும் சமயப் பிரி வுகளைக் கடந்த சமரச கத்தையும் எளிமையான மனித
gaišr LDITridi
நேயத்தையும் வளர்த்தனர்.
அரியுஞ் ஒவனும் ஒண்ணு
இதை
அறியாதவன் வாயில் மண்ணு'
என்பன போன்ற பாடலடி கள் கீழ் மட்டத்தில் உருவாகிய யதார்த்த உணர்வையும் வைதீ கப் பிரிவுகளுக்குள்ளான போட் டிகளின் அனர்த்தத்தையும் மக் ஆள் மொழியில் இன்றன.
வெளிப்படுத்து பெருநிலக்கிழார்கள் வைதீகத்தை ஆதரித்துவந்தனர்
உள் ளது
வாழ்ந்த ஏஜனயோரையும்
என்பதும் னங்கொள்ளவே" டியதே வைதிக சமயங்களுக்கு திராக மெல்ல மெல்ல உருவாகி வந்த எதிர்ப்புணர்ச்சியே. இருட தாம் 5IöGrpGö7 il 4-6 * G6 g) -* காரணிகளின் g、上@éG5庁* ால் சமு தT ! இலக்கியங்கள் தோன்றுவதற்கான ஏதுக்களில் செயற்பட்ட-தி- பன் சமயங்களின்
ഉങ് രൂക് னெடுங் காலமாகச் வழி வந்த இலக்கிய நெறி இருட தாம் நூற்றண்டிலே சமுதாய வழி நிற்ப து குறிப்பிடத்தக் Gତ Lu୯୭ மாற்றமாகும்"
வைதீக சமயங்களை 57鯨f岳亞 பக்கங்களின் உடனிகழ்ச்சிய கவே, இடைக்காலத்தில் மற்று: மொரு மாற்றம் நிகழத் தொடங் கியது, பெருநிலக்கிழாரையும் குறு நிலத்தலைவர்களையும் அவர்போன் ருேரையும் வியநாயகராசி ஏத் இப்போற்றிவந்த தமில் மரபு பதினரும் பதினேழாம் Η Τεύ சமுதாயத் இல் சித்த 、万556
சங்சத்
முண்டுகளில்
வீழ்ச்சியுற்று, ‘கு 6ổỳ 1-- நிழலிலி ருந்து குஞ்சரம்ஊர்ந்தோர் நடை மெலிந்து நாடுவிட்டகன்ற காலப் பகுதியில்,
ரையும், கோவலரையும்,
குறவரையும் பள்ள பிறை பாடமுற்பட் தெருக் இத்த @)ótLi படைப்புக்களிலே மொழி நடையும் பேச்சுவழக்கிற்குநெருங் இபதாக அமைந்ததில் வியப் பில்2ல. அருணசலக் விராயரின்
யும் பிரபந்தங்கள் டன. நொண்டி J5T L — 55 Lb,
கத்து என்பன எழுந்தன.
இராம நாடகம் Cκαι η π Γτεί திருஸ்ண பாரதியாரினி 5あ与@s
33

Page 21
கீர்த்தனை முதலியவற்றிலே பொ ருள். மொழி நடை என்பவற்றில் ஏற்பட்டு வந்த மாற்றங்களே அவ தானிக்கக்கூடியதாய் இருக்கிறது
உண்மையில் சமுதாய நாட் டம் , மக்கள் மொழியில் ஈடுபாடு என்பன தற்கால இலக்கியங்களி லேயே அதிகமாகக் காணப்படு வன. கடந்த சில காலமாகவே மக் சமுதாயம், சமூக நலன், புரட்சி, சோஷலிச மாற்றம் முத லிய கருத்துப் படிவங்கள் நேரடி யாகவும் மறைமுகமாகவும் இலக் இயங்களில் எடுத்துரைக்கப்படு
கள்,
கின்றன. இவை நவீன காலத்துக்
இருப்பதனுலேயே இலக்கியத்தி லும் தவிர்க்க இயலாதவாறு பிர திபலிக்கின்றன. குறிப்பாக 1917
ஆம் வருடம் ருஷ்யாவில் நடந்
தேறிய மசுத்தான அக்டோபர் புரட்சிக் குப் பின்னர் மெல்ல மெல்ல பொதுவுடைமைச் சிந்த னைகளும், இயக்கங்களும் பரவிய தைத் தொடர்ந்து, தமிழ் இலக் கியத்திலும் அவற்றின் தாக்கம் வேகம்பெற்று வந்துள்ளது. இத ணுல் இக்கால இலக்கியங்கள் பல
வற்றில் மார்க்சீய தத்துவமும்
அதன் பரம்பலும் குறிப்பிடத்தக் கனவாய் இருக்கின்றன. சங்கம் முதல் இந்நூற்ருண்டுவரை வந்த நமது தமிழிலக்கியம்காலத்துக்குக் காலம் சிற்சி ல மாற்றங்களைக் கண்டு வந்திருப்பினும், இந்நூற் முண்டிலே மார்க்சீயம் தமிழில் பயிலத் துவங்கிய பின்னரே, வர லாற்றுணர்வுடனும், இயக்கவியல்
34
அடிப்படையிலும் சமுதாயப் பிரச்சினைகளை எதிர்நோக்கிநடை முறைக்குத் தேவையான மார்க் கங்களைக் கூறும் இலக்கிய நெறி வளர்ந்து வந்துள்ளது எனலாம்.
2
நன்றி:
தீக்கதிர் உலகத்தமிழ்மாநாட்டு மலர்
1980-81
女
உங்கள் கவனத்திற்கு
தாயகத்தின் பக்கங்களை புரட்டுகிறீர்கள். இத்தகைய ஒரு இலக்கிய இதழின் அவசியத்தை உங்களால் உணரமுடிகிறது. தாய கத்தின் பல்வேறு பக்கமெல்லாம் பரந்திருக்கும் இலக்கிய நெஞ்சங் களை ஒன்றிணைக்க நீங்கள் சந்தர் தாரராகியிருந்தால் உங்களுக்கு நன்றி. மேலும் பல நண்பர்களை இணையுங்கள். நீங்கள் சந்தாதாத ராகாவிட்டால் . . . நீங்க ளு பி இணைந்து கொள்ளுங்கள்.
தொடர்பு முகவரி:-
க. தணிகாசலம் 15/1, மின்சாரநிலைய வீதி
யாழ்ப்பாணம்.

கலப்பைகளும் சேர்ந்துவிட.
தை மாசி பங்குனியின் தலை சுற்றும் வெய்யிலிலே வெங்குச்சான் கல்லதனல் விரல்பட்டு ஊனமுற்றும் வேகாத வெய்யில்தனில் விரல் வெடிக்கத் தளிர் பறித்து
ஆடிமாதக் காற்றினிலே உயிர்பறிக்கும் இடியோசை உருண்டு வரும் கற்பாறை காலணுய் மாறிவிடும் காலங்களும் உண்டு உண்டு
விம்முதலும் பெருமூச்சும் விடிந்தவுடன் மாறதோ கோடையின் பின் மாரி என்றும் காலை பின் மாலை என்றும் மாறிவரும் காலமாற்றம் - எம் வாழ்வினிலும் வந்திடாதோ எத்தனை நாள் எண்ணமிது ஏங்கி நாம் வாழுகிருேம்
காலமாம் ஒட்டத்திலே கலியுகம் வீழ்ந்து விடும் உணவு தரும் கடவுள்களாம் கலப்பைகளும் சேர்ந்துவிட கிருதயுகம் எழுந்துவிடும் வரலாற்றுச் சக்கரமும் வழிதொடரும் வாழ்வுவரும்.
குறிஞ்சிமைந்தன்
35

Page 22
பேச்சுமொழியும்
ஆக்க இலக்கியமும் தொடர்பாக
சீமுதாயத்திற் போன்று, இலக்கியத்திலும் நிரந்தரமான அளவுக்ோல்கள் என்று எதுவும் இல்லை. சமுதாயத்தில் ஒவ்வொரு விஷயமும் இறுதி ஆராய்வில் அதன் சமுதாயச் சூழலையும். சமு தாயத் தேவையையும் வைத்தே *ளவிடப்படுகிறது. ஒ வு வி ஷ
யங்கள் குறுகிய காலத் தேவை
களேயொட்டி ஏற்படுவன, வேறு சில நீண்டகாலத் தேவைகளைத் தழுவியன. எது அவசியம், எது உயர்ந்தது என்ற கேள்விகட் கான பதில் ஒவ்வொருவரதும் நிலேப்பாட்டையும், தேவையை பும் அணுகு முறை யை யும் சார்ந்தே அமையும். முற்போக்கு இலக்கியம் எனும்போதுகூட எதனை நாம் முற்போக்கு என்று கருதுகிருேம் என்பதைப் பற்றிய தெளிவு இல்லாது ஆய்வுகளையும் மதிப்பீடுகளையும் செய் வ தி ல் ப்யன் இல்லை. காலம், குழல் நோக்கம், தே ைவ போன்ற வ ற்  ைற ப் புறக்கணித்துவிட்டு வெவ்வேறு கலைவடிவங்களையும், கலைப்படைப்புக்களையும் @ G* [T தராசில் போட்டு மதிப்பிடுவது மிருதங்கமா மிளகாய்ச் செடியா சிறந்தது என்று கேட்கிறமாதிரி இருக்கும்.
36
- சி .சிவசேகரம்
இலக்கியத்தில் வெவ்வேறு வடிவங்கள் சமுதாயச் கு ழ லே யொட்டி உருவாகின்றன, மொழி
யின் தன்மை காலத்தையொட்டி
மாறுபடுகிறது. சொற்பிரயோகம் வசன அமைப்பு என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் குழலுக்கும் படைட்பாளிக்குமிடையில் உள்ள உறவால் பெரிதும் பாதிக்கப் !டு கின்றன. சில படைப் க்களில் மொழி, நடை, உள்ளடக்கம் போன்ற யா @! G ւԸ FLD ej, fra, iš துடன் இசையாதவை என்ருலும் கூட அவை அவற்றின் வரலாற் Ք0/ முக்கியத்துவம் காரணமாகவும் அவற்றின் கலைத்துவத்துக்காக வும் ம தி க் கப் படுகின்ற ன. அவற் றை மதிப்பிடும்ே ாது சமகால நிலவரங்களது அ டி. ப் படையில் அளவிடுவதில் lf്ക,b மில்லை. தமிழில் கம்பனுக்கும், சங்க இலக்கியத்துக்கும் உயர்ந்த இடம் உண்டு என்பதால் அதை யொத்த நடையில் யாரும் இன்று எழுதுவதை நாம் ஏற்றுக்கொள்
வதில்லை.
மொழி வளர்ச் ஒ (சமுதாய வளர்ச்சியைப் போன்று) இரு
முரண்பாடான தன்மைகளை உள்
ளடக்கியது. வ ள ர் ச் சிக் கான மாற்ற மும் மாற்றத்திற்கான விழைவும் ஒரு புறமும் ம7 ற்றங் கள் சீரழிவுக்கான கா ர ை Ιήι 96FF} பேர்காதவாறு டேணு

வ தும்
தேவையும் மறுபுறமும் மறைகிளாக அமைகின்றன ஸ்திரமான ஆனல் ஸ் த ம் பி மான சமுதாய அமைப்பு தேக் கத்திற்கு வழிகோலி வளர்ச் சி யின்மை மூலம் ஒரழிவுக் கு க் காரணமாகலாம். எனவே ஸ்தி ரத்தன்மைக்கும் கூட மாற்றம் அவசியமாகிறது. ஸ் திர மற்ற ஒரு அமைப்பில் மாற்றங்கள் திசைகெட்டுக் குழப்பமான சூழ் நிலைகளை ஏற்படுத்தும் போது
எ தி ர்
அதுவே வளர்ச்சிக்கு உதவாது .
எனவே ஸ்திரமான ஒரு அமைப்பு வளர்ச்சிக்கான மாற் றத் த்ை ஆதரிக்கிறது. மாற்றமும் ஸ்தி ரத்தன்மை வேண்டி மாற்றத்தை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் தன்மையும் சேர்ந்தே சமுதாய ளர்ச்சியை முன்னெடுத்து செல்கின்றன. இந்த உ - ன் பாடான உறவு என்ன்றக்கும் நிரந்தரமானதல்ல. வ GIT ri ji SF யானது அதன் போக்கில் புதிய நெருக்கடிகளைச் சிருஷடிக்கிறது. பழைய அமைப்பின் ஸ்திரமான வரையறைகட்குள் அந்த நெருக் கடி சமாளிக்க (up Lq uu fT LD ôi) போகும்போது துரித மாற்றமும் ஸ்திரத்தன்மையும் நிகழ்கின்றன. அதன் முடிவில் ஒரு புதிய அமைப்பு ஏற்பட்டு அது ஒரு புதிய ஸ்திரத்தன்மை யை அடைந்து அந்த அடிப்ப-ை யில். மீண்டும் வளர்ச்சி ஏற்படு கிறது. இதை நாம் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக் ஒருேம். சமுதாய மாற்றம், அடிப்படையில் அதன் அக க் காரணிகளது தன்மையை ஒட்
ஸ்திரத்தன்மைக்கான
குழப்பமும் ,
தம்) பண்டிதர்கள் கூறும்
டியே நிகழ்கிறது: எனினும் புறத்தாக்கங்களது முக் கி ய த் துவம் மறுக்கமுடியாதது இது சமுதாயத்துக்கு ம ட் டு ம ன் றி மொழிக்கும் பொருந்துவதாகும்.
மொழியில் ஏற்படும் மாற் றங்கள் பெருமளவும் சமுதாயம் சார்ந்தளவே, சமுதாய Gau GITri' புதிய நிலைமைகளையும் தேவை களையும் உருவாக்கி மொழிக்குச் முவால் விடுகிறது: மொழி அவற் றுக்குப் புதிய வார்த்தைகள் குறி யீடுகள், சொற்பிரயோக முறை கள், வாக்கிய அமைப்புக்கள் G3 urtGörD சாதனங்களூடு முக ங் கொடுக்கிறது: இவ்வாறு மாற் றங்கட்கு முகங்கொடுக்க மு. டி. யாதவாறு பரந்துபட்ட சி சிே தாயத் தேவைகளினின்று பிரிந்து நிற்கும் ஒரு மொழி ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று சிலகாலம் தன்னைத் தன் பழைய வடி திலேயே பேணிவாழ முடிகிறது ஆனல் இத் தனிமைப்படுதல் மொழியை மேலும் மேலும் பரந்துபட்ட சீ முதாய ந-ை முறையினின்று. பிரிந்து மொழி யால் புதிய சூழலுக்கு முக ங்
கொடுக்க முடியாமலே செய்து
விடுகிறது. இதனலேயே தி ல மொழிகள் 'இறக்க” நேர்ந்தது: (உதாரணம்: லத்தீன், சமஸ்கிரு செந் தமிழ்' ‘சங்கத்தமிழ் என்பன வெல்லாம் கூடத் தமிழ்மொழி பின் இறந்துவிட்ட அ ல் ல து இறந்து கொண்டிருக்கும் வடிவங் களே. வாழும் தமிழ் வேறு: அது “கன்னியாகக் குமரிருந்து கிழடான’ மொழியல்ல. அது
37

Page 23
சமகாலத் தேவைகட்கு, முகங் கொடுக்கும் ஒரு மொழி. ஆயி னும் அது பேச்சு வழக்கில் சீவிக் கும் அளவில் எழுத்தில் சீவிக்க வில்லை. இது தமிழ்மொழியின் இன்றைய மு க் கி ய நெருக்கடி என்று நினைக்கிறேன்.
மொழியின் மரபு சார்ந்த அம்சங்கள்(குறிப்பாக, இலக்கணக் கட்டுப்பாடுகள், சொற்பிரயோக மும் புதிய சொற்களின் ஆக்கமும் பற்றிய விதிமுறைகள் ஆகியன) ஒருபுறம் மொழிக்கு ஸ்திரத் தன்மையை வழங்க முனைகின்றன மறுபுறம் சமகாலத்தின் புதிய தேவைகளை மொழியின் தன்மையிலும், பயன்பாட்டிலும் பல பெரும் மாற்றங்களையும், ஆக் கங்களையும் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு புதிய தேவையையும் ஒட்டி மொழியானது எதுவித கட்டுப்பாடுமின்றி மாற்றங்களை உடனுக்குடன் புகுத்திக்கொண் டால் காலப்போக்கில் பல வேறு கிளைகளாகப் பிரியவும் மொழியில் தெளி வீனங்களுக்கும் குழப் பத்துக்கும் வழிகோலவும் முண்டு. மறுபுறம், ஏற்கனவே உள்ள சாதனங்கள் மூலமும் மொழியால் அதன் சமகாலத் தேவையை நிறைவுசெய்ய முயல் வது அதன் இயக் கத்துக்கும் வளர்ச்சிக்கும் மிகுந்த கெடுத லையே விளைவிக்கிறது. இவ்வித மான விறைப்பான மொழிக் கொள்கையே அண்மைக்காலத் தில். தமிழன் தேய்வுக்குத் துணை நின்றது.
38
இட
மொழியின் இரு பிரதான
கூறுகளான பேச்சிலும் எழுத்தி
லும், முன்னையது சம கா ல. மொழியின் தன்மையை எப்போ துமே கூடுதலாகப் பிரதிபலித்து வருகிறது என்னும் பேச்சுமொழி யில் குறுகியகால அளவில் பயன் படும் அம்சங்கள் எழுத்திலுள்ள தைவிட அதிகமான அளவில் இருப்பதை அவதானிக்கலாம்
எழுத்து ஏற்றுக்கொள்ளப் பட்ட ‘முறையான மொழியைக் கூடு தலாகப் பிரதிப் பலிக்கிறது. எனவே மெ ழி மாற்றங்களைப்
பொறுத்தளவில் பேச்சுவழக்கு அவற்றுக்கு அதிகம் துணை (" "ாகி றது. ஆயினும் இம்ம கள் நிரந்தரமான தன்மை அ Այւb போது அவற்றை அ பதி லும் பரவலாக்குவதிலு ந்து
பெரும் பங்கு வகிக்கின்றது.
சில சூழ்நிலைகளில் எழுத்து வழியே புதிய சொற்களும் சொற் பிரயோகங்களும் புகுத்தப்படுவ தும் அவை காலப்போக்கில் பேச் சிலும், எழுத்திலும் பரவலான அளவில் பயன்படுவதும் உண்மை ஆயினும் தமிழில் உருவாக்கப் பட்ட பல கலைச் சொற் க ள் வெறுமே பாடப்புத்தகங்கட்கும் பரீட்சைக்கும் தமிழில் வலிந்து எழுதப்படும் கட்டுரைகட்கும் (பலசமயங்க்ளில்அடைப்புக்குறிக் குள் ஆங்கில வார்த்தையுடன்) வரையறுக்கப்பட்டு நின்றுவிடு கின்றதைநாம்காணமுடியும். இது நடைமுறை சாராத மொழிப்பிர யோகத்தின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு. இவ்வாஞ்ன சொற்

ளும் சொற்பிரயோகங்களும் ஒரு
புதிய சமஸ்கிருதமாக (山函55 வழிபாட்டுக்கு மட்டும் பயன்படும் ஒரு மொழியாக) விறைத்து விடு கின்றன.
கள் துறைக்குத்துறை வெவ்வேறு விதமான கருத்துக்களில் பயன் படுவதும் வட்டாரவழக்கு, குசிே வழக்கு என்று பல்வேறு விதமான 19ЈGштећ வேறுபாடுகள் இருப்ப தும் தவிர்க்கமுடியாதது.சமுதாய வளர்ச்சியில் வேறுபாடுகள், ச9 தாய ஏற்றத்தாழ்வுகள் சூழலில் வித்திய ா சங்கள், 5ar母于T订中 ாரம்பரியம் ஆகியன சமூக, அர தொழில் நுட்பக் காரணிகளை மொழிப் பிர G ulu ft 5 iš SS 657 வேறுபாடுகளில் பேக்சுமொழி
ஒபல், பொருளாதார
உணர்த்துகின்றன. இவ்வேறுபாடுகட்குப் அழுத்தம் தருகிறது. 569] [9ے[L۶۹ س” ஒப்பிடுகையில் GT(马g5g மொழி அடிப்படையான ஒருமையையும்
பெரிதும்
மரபையும் கூடுதலாக வலியுறுத் ,
துகிறது. இது நாம் எதிர்ப்பார்க்க C36165öTq-tit ஒன்றே. பேச்சுமூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்கு குரல் வேறுபாடுகள் s சைகைகள் போன்ற பல துணை போவதால் பேச்சுமொழியை சில சமயம் ஒரு வாக்கியத்துக்கு சீவி ஓயமான கூறுகள் இல்லாமலே விளங்கிக்கொள்ள முடி கிறது கந்தன்” என்று ஒரு வர் G)gFT6ór
ஞல் கந்தா என்று அழைப்பதா
கவோ கந்தன் என்று அடையா ளங் காட்டுவதாகவோ கந்தன
என்று வினவுவதாகவோ, கந்தனை ஒனப்பதாகவோ, கந் தனை எண்ணி வியப்பதாகவோ, அல்லது கேலி செய்வதாகவோ w அல்லது வேறுவிதமாகவோ 966) D யலாம். சைகைகள் என்பன மூவி மும் தெளிவாக சி றி கிருே ம். எழுத்தில் கந்தன் என்று கூறப் தனிச்சொல்வாக்கியத்தின் ساسكال கருத்தை நாம் முற்றுப்புள்ளிகள்
Gகள் விக் குறி
துணையுடனும் வேறுசில சமயங்களில் மேலும் விளங்கங்களுடனும்ே ഉഞ്ഞTi59 முடிகிறது.எனவே எழுத்துமொழி மொழியினுடை! துணைக்
இவ் லா  ைம ய ல்
எண்ணிச்
கருவிகள் (ருத்துத் தெளிவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட- ஓல மரபு முறிை 2ளப் பேணல் அவசியமாகிறது எழுத்தின் 'நிரந்தரமான தன் மைக், கருத்தைத் தெரிவிப்பவ ருக்கும் படிப்பவருக்குமிடையில் ஒரு நிச்சயமான உறவுஇல்லாமை Grøði LGðI எழுத்துமொழியில் ஒல விதிகளதும் டுப்பாடுகளதும் தேவையை வலியுறுத்துகின்றன.
ச்ேசுமொழி சமுத" வேறு பாடுகளையும், மக்காலத் தேவை களையும் பிரதிபலித்துக்கொண்டு வளரவும் G&Tá5G中 அதன்மூலம் தன் டுவர்களினின்றே பிரிந்து செல்லவும் முனையும்.
@施凸 அடிப்படையில் இலக் தியத்தில் பேச்சுமொழி பற்றிச் ஒறிது எழுத முனைகிறேன். இலக் கியம் பற்றி எத்தனையாயிரம் வியாக்யானங்கள் இருந்தாலும் இறுதி ஆராய்வில் அது மி னி த 39

Page 24
னது சமுதாய வாழ்க்கை பற்றி யது. ஒரு படைப்பாளியின் சமு தாயக் குறிக்கோள்களும் சமூதாய நிலையும் படைப்பின் உள்ளடக் கத்தையும் தன்மையுையும் நிர்ண
யிக்கின்றன. சமுதாயத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் மூலம் சமுதாயத்தை மாற்றியமைக்க
வும் முனையும் இலக்கியம் சமுதா யத்தைச் சரியாகப் பிரதிபலிக் கவும் கருத்துக்களைத் தெளிவாகப் பரிமாறவும் அவசியமாகிறது(இவ் விஷயத்தில் ஒரு படைப்பு ஏற்ப டும் சமுதாயச் சூழலில் மொழி வழக்கின் தன்மையையும் கணிப் பில் எடுத்துக்கொள்ள வேண்டும்)
பேச்சு மொழியை ஆக்க இலக்கியப் படைப்புக்களில் பயன் படுத்துவது பற்றிய ஆட்சேபனை
கள் இன்னும்கூட மங்கலாகக்
காதில் விழவேதான் செய்கின்றன ஆயினும் இன்று இப் பிரச்சினை நடைமுறையில் தீர்வாகிவிட்ட ஒன்று. பேச்சுமொழியிலேயே இன்று புனைகதைகள் (பெரும் பாலும் எல்லாமே) கின்றன, கவிதையிலும் கூடப் பேச்சுமொழிப் பிரயோகம் தலை நீட்டிவிட்டது. ஆயினும் பேச்சு மொழி பற்றிய சில பிரச்சினைகள் எளிதில் தீர்க்க முடியாதன.
பேச்சு மொழியிலே எழுதிய புனை கதைகளைப் பிரசுரிக்கும் இந்தியப் பத்திரிக்க ைகாரர்கள் ஒருகாலத்தில் இலங்கைத் தமிழை விளங்கிக்கொள்ள வேண்டுமாஞ்ல் அடிக்குறிப்புக்கள் அவசியம்என்று பகிரங்கமாகவே பேசிஇருக்கிருர் கள். இதில் உண்மை இருக்கிறது ஆணுல் மதராஸ் தமிழும், அக்கிர 40 ·
எழுதப்படு
காரத்துத் தமிழும் அடிக்குறிப் பில்லாமலே எல்லாரும் விளங்கிக் கொள்ளகூடியனவா என்று அவர் கள் கவனித்ததில்லை. காரணம் என்ன? சினிமா, வானெ லி போன்ற பல ஊடகங்கள் மூலம் பரிச்சயமாக்கப்பட்டு விட்ட சில பேச்சுவழக்குகளைப் பலரும்புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மறுபுறம் பதிப்பக வசதிகள், சந் தைப்படுத்தலில் ஆதிக்கம் என் பனவும் எதைப் பிரசுரிக்கலாம் எனும் தீர்மானத்தை ஒருசிலரது கையில் விட்டு விடுகின்றன , எனவே ஆதிக்க நிலையில் உள்ள குழு க்களின் மொழிவழக்கும் பெரும்பான்மையான வாசகர்கள் பயன்படுத்தும் (அல்லது ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்ட) மொழி வழக்கும் இலகுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆதிக்க நிலை யிலில்லாத சிறுபான்மைக் குழுக் களதும் எழுத்தறிவு பின்தங்கிய நிலையிலுள்ள குழுக்களதும் பேச்சு மொழி எழுத்து வடிவம் பெறு வது மிகவும் குறைவாகவே இருக் கும். அவ்வாறு எழுத்துவடிவம் பெற்றலும் அதுமாதிரிக்கு ஒன் முக அல்லது ஒருபடைப்பாளியின் ஒரு விசேஷ முயற்சியாக நின்று விடுகிறது. v,
எழுத்துக்களைப் பிரசுரிப்ப தன் பொருளாதாரப் பிரச்சினை
குறிப்பிட்ட பேச்சு வழக்கை
விளங்கி அனுபவிக்கக் கூடிய வாச கர்களது எண்ணிக்கை, அவர்க ளது பின்தங்கிய பொருளாதார வசதிகள்போன்றனவற்றின் தாக் கத்தை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

பிரதேச, வர்க்க அடிப்ப-ை பிலான குழுக்களுள் உள்ள Gujar வழக்கிற்கு ஏறத்தாழ ஒரு தனி ன மொழியின் தன்!ை உண்டு இப்பேச்புவழக்கை எழுத்தில்,பிர யோகிக்கும் காரியம் அந்த அந் தஸ்தை மேலும் வலியுறுத்தும்
நோக்கை ஈடேத்துகிறது இன்
னென்று ஒரு குறிப்பிட்ட சமுத" யத்தையோ சமுதாயப் Gia.06 போ படைப்பிலக்கிய மூலம் சித் தரிக்கும்போது அந்தச் சமுதாயத் தினதோ: பிரிவினதோ பேச்சு வழக்குமூலம் அக்சமுதாயத்தின் சில முக்கியமான தன்மைகளும் தனித்துவமும் வலியுறுத்தப் படு கின்றன. இவற்றுக்கும் GDG) IT is உரையாடல்களை உயிர்த்தன்மை யுடையனவா க்கி, காட்டமுனே யும் உணர்ச்சிகட்கு வலிவூட்டவும் பேச்சுமொழி பயன்படுகிறது முற் குழுவுக்குரிய பேச்சு மொழியில் ஒரு படைப்பு முக்கிய மாக எழுத்து வடிவங்கள், அம்ை யும்போது அ தனை அக்குழுவின் பேச்சுவழக்குடன் பரிச்சயம் இல் லாதவர்கள் விளங்கிக்கொள்ள முடியாமல்போய்விடுகிறது. குறிப் பிட்ட ஒரு படைப்பு ஒரு குழுவுக் குள் மட்டுமே புழக்கத்துக்கும் கருத்துப் பரியாறலுக்கும் உரிய தென்ருல்அங்கே பிரச்சனை இல்லை ஒருபடைப்பு அந்த வட்டத்தை விட்டு வெளியே வரவும் சூழ்நிலை
யைச் சரியாகப் பிரதிபலிக்கவும்
வேண்டுமானல், ஒரு புறம் பரவ
லாக விளங்கிக் கொள்ளக் கூடிய சொற்களும் சொற்பிரயோகமும் அவசியம். மறுபுறம் குசி லின் இயல்பான தன்மையைச் சித்தரிக்
கவும் உரையாடல்கள் இயற்கை
utd, அமையவும் தேவையிருக்கி
றது. மேடை நாடக ங் கள்: வானெலி,சினிமா போன்ற இடங் களில் இப்பிரச்சினையைக்கையாள் வதில் ஏற்பட்டுள்ளபிரச்சினைகளை நாம் அறிவோம். இவை கையாள (uplq- uLurTğ5 விஷயங்கள் T6ör LGBT லன்றி கையாள்பவர் தன் Luntri வையாளர்களுடன் டுகாண்டுள்ள உறவு பற்றிய தெளிவீனம் கார ணமாகவே பெரும்பாலான பிரச் இனைகள் ஏற்படுகின்றன,
பேச்சுமொழி பற்றிய ஒரு தாழ்மை, 2 - 6007 f 6) இருக்கவே. செய்கிறது. வானெலியிலும் மேடையிலும் நீண்டகாலமாகவே கேலிக்கும், திண்டலுக்கும் பேச்சு மொழி பயன் படும் அதேசமயம் பாரதூரமானதும் நாடகத்துக்கு மையமானதுமா? விஷயங்கள் மொழியில் தரப்படு இந்த நிலைமை இன்று
==
தாயகத்துக்கு உதவுங்கள்
தரமான'
இன்றன.
தாயகம் தொடர்ந்து வர வேண்டும். தாயகத்தின் தேவை யை ஈடுசெய்யும் لك قرقور L.6الأ ST வேண்டும். அதற்கு தாயகத்தின் பல திக்கிலும் இருந்து தரமான ஆக்கங்களே வரவேற்கிருேம்:
வெளிவரும் ஆக்கங்களுக்கு ஆக்கபூர்வமான விமர்சனங்களே யும் எதிர்பார்க்கிருேம்.
எனவே கவிதை கட்டுரை, சிறுகதை, விமர்சனங்களை 岳防gá GydLL- வேண்டுகிருேம்.
41

Page 25
பெருமளவும்ந் திருத்திவிட்டது எனினும் இதன் தாக்கங்களை இன் னும் காணமுடியும்.
பேச்சுமொழி எழுத்தின்ன்று பல வகைகளில் வேறுபடுகிறது சிலவேறுபாடுகள் தனிப்பட்ட மனிதர்களது பேச்சுமுறை சார்ந் தவை, சில பரவலாகவே புழக்கத் தில் இருந்தாலும் குறிப்பிட்ட பேச்சுமொழியின் இலக்கணவழுக் களுக்கு அல்லது தவருண பிர யோகத்துக்கு உரியவை. இவை அ டிப் படைப் பேச்சுமொழியி னின்றுபிரித்து அறியப்பட வேண் டியன. இவற்றின் பிரயோகம் வேண்டுமென்றே, தர்க்கங்களை ஏற்படுத்து முகமாக சேர்த்துக்கொள்ளப்பட்டாலன்று பாதகமான விளைவுகளையே தரு
கின்றன, பேச்சுமொழியின் தன்
மையை வலியுறுத்த வழுக்களும் (வழு என்பது மரபுவழி மொழிக் குச் சார்பாக அல்ல) விகாரங்க ளும் அதிகம் உதவமாட்டா.
பேச்சுமொழியின் ஒலி அம் சங்களை எநதமொழியின் எழுத்து வடிவமும் முற்றகவே சரியாகப் பிரதிபலிக்க முடியாது (சர்வதேச ஒலியடையாள முறைகூட இத் தேவையை முழுமையாக * நிறை வேற்ற முடியாது.) தமிழில் போன்று சமகாலப் பேச்சுமொழி யை முரண்பாட்டுக்கிடமின்றி எழுதமுடியாதபோது, பிரதேச வாரியான ஒலிவேறுபாடுகளை எழுத்தில் குறிப்பது சிரமமானது. எந்த எழுத்துவடிவமும் அதன் மரபுவழியான வடிவில் வந்து அல் லது படிப்பவருக்குப்பரிச்சயமான
42
குறிப்பான
பேச்சுமொழியின் அடிப்படையி
லேயே ஒலியுருவம் பெறமுடியும் இதற்கும் மேலாக தமிழன் பேச்சு மொழி வடிவங்களுட் புகுந்துள்ள அயல்மொழிச்சொற்களும் சொற் ருருெடர்களும் எழுத்தில் குறிக்க மிகவும் சிக்கலானவை. (இவை ஏற்படுத்தியுள்ள தவிர்க்க முடி யாத நெருக்கடி ஒரு பாரதூர மான எழுத்துச் சீர்திருத்தமூலமே தீரக்கூடியதேயொழிய திராவிடர் இயக்கத்தினரின் ஒட்டுவேலைக ளால் அல்ல!)
இத்தனையையும் மீறிப்பேச்சு மொழியின் பிரயோக த்தை எழுத்து இலக்கியத்தில் நியாயப் படுத்துவது என்ன? எழுத்து வடி வத்தில் * முறையான தமிழ் மொழி சமகால நடைமுறையி னின்று மிகவும் பின்தங்கியுள்ளது சமகால வாழ்வைப் பிரதிபலிக்க அதனல் இ ய ல |ா து உள்ளது. எழுத்துமொழியை நவீனமயப் மடுத்தவும் அதற்கு ஜீவனுரட்ட வும் பேச்சுவழக்கில் உள்ள சொற் களும் சொற்பிரயோகங்களும் மெருகூட்டப்பட்டு எழுத்துள் புகுத்தப்படவேண்டும். பேச்சு மொழி சமகால சமுதாயத்தைப் பிரதிப்பலிப்பதிலும் மொழி வளர்ச்சியிலும் அவசியமானபங்கு வகிக்கிறது அதேசமயம் எழுத்து வடிவத்தில் புகுவதன் மூலம் அங்கு அது ஒழுங்குபடுத்தப்படுவ தன்மூலமும்மொழிச்சிதறலுக்கும் குழப்பத்துக்கும் வழிகோலாமல் ஸ்திரமான ஒரு அடிப்படையை மொழிக்கு வழங்குகிறது. பேச்சு மொழிக்கும் எழுத்துமொழிக்கு

மிடையிலான முற்ருகவே பகை முரண்பாடாகக்
கருதும் ப்ோக்கு பத்தாம்பசலிக
ளுக்கு உரியது. அதேநோய் வேறு
வடிவத்தில் சில நவீன எழுத்தா ளர்கட்கும் ஏற்படாவிட்டால் நல்லது.
இங்கே இறுதியாக மண்வா சனை பற்றிச் சில வார்த்தைகள். மண்வாசனை என்பது வெறுமே ஒரு பிராந்தியப் பேச்சு மொழி யை அப்படியே தருவதல்ல. மண் வாசனைக்கு அதைவிட ஆழமான
அர்த்தமும் அகலமான பார்வை யும் உண்டு. ஆழமான சமூகப்
பார்வையும், குறிக்கோளும் இல்
முரண்பாட்டை
லாமல் வெறுமே பிராந்தியபேச்சு மொழி வழக்கை மட்டுமே அடிப் படையாக வைத்துப் படைக்கப் படும் விஷயங்களில் எதுவுமே இல்லை. ஒரு பிராந்திய மொழி வழக்கை மையமாக வைத்து மொழி ஆராய்ச்சி செய்யலாம் ஆனல் அதுவே இலக்கியமாகி விடாது. இலக்கியப் படைப்பா
விரியின் நோக்கத்தின் நிறைவேற்
றலில் அதுஒரு வலியகருவி, அதன் மிகையான பிரயோகம் சிலசமயம் நோக்கத்தையே முறியடிக்கவும் இடமுண்டு ஒவ்வொரு கருவியை யும் உரிய அளவில் பயன்படுத்துவ திலேயே படைப் பாளி யின் மேன்மை தங்கியுள்ளது.
தாயகத்தின் பழைய வாசகர்களுக்கு ஓர் நினைவு றுத்தலாக, புதிய வாசகர்களுக்கு ஒர் அறியத்தரு தலாக.1974ம் ஆண்டின் ஆரம்ப இதழ்களின் ஆசிரிய்த் தலையங்கங்களைம் மறுபக்கத்தில் மறு
பிரசுரம் செய்கிருேம்.
44
/
- ஆசிரியர்குழு

Page 26
ஒரு நல்ல படைப்பின் இரகசியம் என்ன? லூகுன 1931 தமிழில்: எம். ஏ. நுஃமான்
அன்பார்ந்த ஐயா
நீங்கள் உங்களது விஞவை அமெரிக்க எழுத்தாளர்களிடம் அல் லது ஷங்காயில் உள்ள சீன மொழிப் பேராசிரியர்களிடம் கேட்டிருக்க வேண்டும். அவர்கள்தான் தங்கள் தலைநிறைய இலக்கிய விதிகளையும் 'புனைகதைகளைப் பற்றிய சங்கதிகளையும் வைத்துள்ளார்கள், சுமார் இருபதுக்கு அதிகமான சிறுகதைகளை நான் எழுதி இருக்கிறேன். எனி லும் இதுபற்றி ஒருபோதும் என்னிடம் எந்தவிதமான விதிமுறை களும் இருந்ததில்லை. என்னல் சீனமொழியைப் பேச முடியும் ஆயி ணும் சீன இலக்கணத்துக்கு ஒரு அறிமுகம் என்னும் ஒரு நூலை என்னல் ஒருபோதும் எழுதமுடியாது, அதுபோன்றதுதான் இதுவும் ஆயினும் என் னிடம் இந்த வின வைக் சேட்டதன்மூலம் நீங்கள் என்னைக் கெளரவித்துள்ளீர்கள். அதனல் என் அனுபவத்தில் இருந்து சில ஆலோசனைகளை இங்கு தருகின்றேன்.
l. எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டு. உன்னல் முடிந்த அளவு அவ தானி. சிறிது பார்த்த உடனேயே எழுதத் தொடங்கிவிடாதே 2. உகந்த மனநிலை இல்லாதபோது எழுதுவதற்கு உன்னை நிர்ப்
பந்திக்காதே" メ 3. உனது கதாபாத்திரங்களுக்குத் திட்டவட்டமான மாதிரிகளைத் தெரிவு செய்யாதே. ஆனல் நீர் பார்த்த எல்லோரிடம் இருந்தும் அவற்றை உருவாக்கு. 4. எழுதி முடிந்தபிறகு உனது க  ைத  ையக் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது பூரணமாக படி, அவசியமற்றவை என்று படுகின்ற சொற்கள். சொற்தொடர்கள், பகுதிகள் அனைத்தை யும் ஈவிரக்கமின்றி வெட்டு. ஒரு சித்திரத்துக்கான விசயத்தை ஒரு கதையாக தீட்டிஇருப்பதைவிட ஒருகதைக்கான விசயத்தை ஒரு சித்திரமாக செறிவாக்கி இறுக்குவது சிறந்தது. 5. பிறமொழிக் கதைகளைப் படி, குறிப்பாககிழக்கு, வடக்குஜரோட்
பியக் கதைகளையும் ஜெப்பானியக் கதைகளையுப் படி. 6. ஒருவராலும் விளங்கிக் கொள்ள முடியா த அடைகளையுக தொடர்களையும் ஒருபோதும் உருவாக்காதே · 7. ‘இலக்கிய விதிகள் பற்றிய எந்தக் கதையையும் ஒருபோதும்
நம்பாதே. ܗ 8. சீன இலக்கிய விமர்சனங்களில் ஒருபோதும் நம்பிக்கைவையாதே ஆனல் நம்பகமான வெளிநாட்டு விமர்சசர்களின் எழுத்து களைப் படி. A.
இதுபற்றி நான் சொல்லக்கூடியது இவ்வளவுதான். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
(திடிப்ப என்ற சஞ்சிகையின் வினவுக்கு லூசூன் அளித்த பதில்)

цD6һЈї : 1 சித்திரை 1974 இதழ் 1
தாயகம் உதயமாகிறது
தாயகம் உதயமாகிறது. அது உங்களுடையது. முதலில் பத்திரிகையை ஆரம்பிப்போம்: பிறகு கொள்கை வகுப்போம்! என்று போடிபோக்கில் தாயகம் தோன்றவில்லை தனக்கென ஒரு கொள்கையுடன் தலநிமிர்ந்து உதயமாகிறது தாயகம்.
கலை இலக்கியத்து றையில் தேசிய - சர்வதேசிய தேவை க%ள உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புக்களையும், பல மான அணியையும் உருவாக்க வேண்டிய அவசிய தேவையை உணர்ந்தே தாயகம் தோன்றியிருக்கிறது.
முற்போக்கு விஞ்ஞானக் கண்ணுேட்டத்துடன், சரித்திர மாறுதல்களைப் பிரதிபலித்தும், அதற்காக வேண்டியும் நிற்கிற தேசிய சக்திகளின் ஆயுதமாக தாயகம் விளங்கும். கலை இலக்கியத் துறையில் எந்தவொரு படைப்பும் சமுதாய நோக்கு பொதிந்துள்ளதென்ற வாதம் மறுக்கமுடியாதது. படைப்புக்கள் இரண்டு மார்க்கங்களாகப் பிரிகின்றன.
ஒன்று, புதிய ஜனநாயகம், மனிதகுலத்தின் நல்வாழ்வு, புதிய நாகரிகத்தை வேண்டி புத்துலகத்தை உருவாக்கும் சக் திகளின் மார்க்கம் இந்த மார்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஜனநாயக சக்திகளால் முன்னெடுக்கப்படுவது.
இரண்டாவது, முன்னைய சரியான மார்க்கத்திற்கு நேரெ திரானதும், அழிந்து கொண்டிருப்பதுமான பழைய சுரண்டல் சமுதாய அமைப்பைக் கட்டிக் காக்கும் மார்க்கமாகும். இது ஏகாதிபத்திய சக்திகளாலும் முதலாளி வர் க் கத்தாலும் தலைமை தாங்கப்படுவது.
முதலாவது மார்க்கமும் புத்துலகமுமே தாயகத்தின் நோக் கமும், அதன் அபிலாஷையுமாகும்.
45

Page 27
சர்வ தேசிய ரீதியிலும், தேசிய ரீதியிலும் தீர்க்கமான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இத்தாக்கம் கலை இலக் கியத்துறையிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையிலே இதனை மூன்று கட்டங்களாக வகுக்கலாம். ஒனறு: பாஸிச எதிர்ப்பு, இரண்டாவது உலகயுத்தமும், தேசியவிடுதலைப் போராட்டங்களும் இலங்கையின் தேசிய எழுச்சிகளும் இங்கு கலை இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்ப டுத்தின.
இரண்டு: 1952 - 56 ம் ஆண்டு காலஇடைவெளியில் உள் நாட்டு வெளிநாட்டுப் பிற்போக்குக் கெதிரான துப, அந்நிய மொழி, கலாச்சார, பொருளாதாரப் பிடிப்புகளுக் கெதிரான துமான மக்களின் எழுச்சியும், மாபெரும் ஹர்த்தால் போராட் டமும் இன்னெரு கட்டத்தை ஏற்படுத்தின. இக்காலகட்ட படைப்பாளர்கள் பலர் இச்சமுதாய அமைப்பைக் கண்டிப்ப திலும், அம்பலப்படுத்துவதிலும் வெற்றி கண்டனரே தவிர, இச் சமுதாய அமைப்பை மாற்றுவதற்கும், அதற்கு வேண்டிய சரியான மார்க்கத்தைக் கோடிட்டுக் காட்டுவதிலும் வெற்றி காணவில்லை.
மூன்ருவது: 1966 ம் ஆண்டைத் தொடர்ந்த காலங்களில் வெளிநாட்டு - உள்நாட்டு பிற்போக்குச் சக்திகளுக்கெதிரான மக்கள் இயக்கம், மலைநாட்டில் தோட்டத் தொழிலாளரின் போராட்டங்கள்,வடபகுதியில் தீண்டாமைக்கும் சாதி ஒடுக்கு முறைக்கும் எதிரான வெகுஜன இயக்கங்களும் போராட்டங் களும் இன்னெரு கால கட்டத்தைஏற்படுத்தின.
இப் போராட்டங்களும் இயக்கங்களும், நாட்டின் தொழி லாளர், விவசாய, இதர உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக் திகளையும் தனதுநடவடிக்கைகளுடன் ஐக்கியப்படுத்தியதுடன் அவர்களுடைய போராட்டங்களுக்கும். இயக்கங்களுக்கும் நம் பிக்கையும் உறுதுணையும் தருவதாக இருந்தன.
இக் காலகட்ட கலை இலக்கியப் படைப்புக்கள் சில மக்க ளின் இயக்கங்களிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் பிறந் தவையே. இவை சரியான மார்க்கத்தையும் பாதையையும் முன் வைக்க ஓரளவு உதவின. ሰ
படைப்புக்களிலிருந்துதான் விமர்சனங்கள் பிறக்கின்றன. விமர்சனங்களால் படைப்புக்கள் மேலும் செழுமை அடைகின் றன. இந்த நோக்கில் , இப்படைப்புகள் மேலும் விமர்சனத் துக்குள்ளாக்கப்பட வேண்டும். இத்தகைய விமர்சனங்கள் பல புதிய படைப்புகளுக்கு உதவும்.இப் பணியைத் தாயகம் முன் னெடுக்கும்.
46

கலை இலக்கியப் படைப்புக்களில் மக்கள் விரோத, ஜனநா யக விரோத, தேச விரோத கருத்தோட்டங்களைத் தாயகம் எதிர்க்கும். - புதிய படைப்புக்களும்,படைப்பாளிகளும் நாட்டிற்குத் தேவை ஒரு காலத்தில் முற்போக்காளர்களாக இருந்த சிலர் கனவான் களாகி ஒதுங்கிவிட்டனர். மக்கள் மத்தியில் பெருமளவு ஆற் றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறர்கள். அவர்களை தாயகம் அணு கும். புதிய படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களை யும் முன் கொண்டு வரும்.
தாயகத்தின் உதயம், பிற்போக்கு வர்க்கத்தினதும், மார்க்கத் தினதும் எடுபிடிகளாகி கலையையும் தம்மையும் சிறுமைப்ப டுத்திக் கொள்ளும் பேர்வழிகளுக்கும் அவர்களின் எஜமான வர்க்கத்திற்கும் பீதியை ஏற்படுத்தக் கூடும்.
புதிய ஜனநாயகத்தையும், புதிய வாழ்வையும், புதிய நாக ரிகத்தையும் தோற்றுவிக்கும் சக்திகள், தாங்கள் எதிர்பார்த்த அல்லது எடுத்த முயற்சி காலம் அறிந்து தங்களிடம் வந்திருப்
பதைக்காண மகிழ்ச்சியடைவர்.
தாயகம் உங்களுடையேதி
- ஆசிரியர் குழு
மலர் : 1 வைகாசி 1974 w இதழ் : 2
படைப்பாளி பற்றி
படைப்பாளி படைப்பாளி என்பவன் யார்?
அவன் உண்பதற்காக, உடுய்பதற்காக, உறங்குவதற்காக தன் ஜீவனத்துக்காகப் படைப்பவனல்லன். தான் வாழ்வதற் காக மாத்திரம் உழைப்பவனல்லன்.
47

Page 28
சமுதாயத்திற்காக உழைக்கவும் சமுதாய்த்திற்காகப் படைக் கவும், தன் பட்ைப்பிற்காக தேவையேற்பட்டால் தன்ன்ையே தியாகம் செய்யவும் தயார் படுத்திக் கொள்பவன்.
மக்களுடன் இணைந்து சமுதாயத்தையும் இயற்கையையும் மாற்றி அமைக்க புதிய வடிவம் சமைப்பவன்.
முற்போக்காளரில் சிலர், தம்மையும் தமது படைப்புக்களை யும் மக்களுககு மேலாக முன்வைக்கின்றனர். இதனல் இவர் கள் தன்னகங்காரம் கொள்கின்றனர்.
இவர்கள் தாம் சமுதாய ஊழியர்கள் என்பதை மறுத்து தாம் பெரும் சிருஷ்டிகர்த்தாக்கள் என்று ஆணவம் கொள்கின் றனர். w
தமது படைப்புகள் முற்போக்கின் பொக்கிஷம் எனப பெருமை கொள்கின்றனர் சோஷலிசத்திற்கான படைப்புகள் என்று கூறி வர்க்க சமரசத்தை முன்வைக்கின்றனர்.
இவர்கள் கலை1ை'ம் இலக்கியத்தையும் மட்டுமல்ல, தம் மையும் சிறுமைப்படு ன்றனர். இது இவர்களின் தத்துவ சூனியத்தினதும் சுயந தினதும் வெளிப்பாடாகும். மக்கள்தான் சரித்திரததை உருவாக்குகிறர்கள். கலை இலக்கியம் ஒரு சமுதாய சாதனம். அது சமுதாயப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்கான ஒரு போர் வடிவம். படைப்பாளிகள் மக்களுடைய இயக்கங்களில் உரிமைப் போராட்டங்களில் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் தொழிலாளரினதும் அவர்களது நேசசக்திகளினதும்,ஆக் கசக்தியைப் பற்றியும், குணவிஷேசத்தைப் பற்றியும் ஆழ்ந்த ஞானம் கொள்ள வேண்டும்.
எதிரி வர்க்கத்திடம் வர்க்க வெறுப்பும், அவர்களை எதிர்த் துப் போராடும் அஞ்சா நெஞ்சுறுதியும், மக்களிடமும் மக்கள் இயக்கங்களிடமும் ஆழ்ந்த பணிவும் தேவை என்பதை நடை முறையில் பேணவேண்டும். V−
இவற்றைப் பெற மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். பார்வையாளராகவோ, கொண்டோடியாகவோ அல்ல- அவர் களுடைய துயரங்கள், இயக்கங்கள், போராட்டங்களில் இணை யவேண்டும். அவர்கள் மத்தியில் வாழவேண்டும்.
48

சமுதாய மாற்றமின்றி மனிதத்துவத்தைக்காணமுடியாது இதுவே சரித்திரம் தரும் உண்மை.
தான் வாழுகின்ற காலகட்டத்தில் சமுதாய முரண்பாட் டின் தன்மையை விஞ்ஞானபூர்வமான வர்க்கப் போராட்ட வளர்ச்சியின் அடிப்படையில் ஆராய்ந்து முன்னேறும் சக்திக ளின் பக்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்.
சோஷலிச-ஏகாதிபத்திய நாடுகளிடையே உள்ள முரண் பாட்டை மட்டும் பார்த்துக்கொண்டு, இதர முரண்பாடுகளை யும்,அதன் வர்க்க உள்ளடக்கத்தின் வளர்ச்சியையும் புறக்க ணிக்கக்கூடாது.
ஒருநாட்டின் தொழிலாளி வர்க்கத்தினது தலைமையிலான ஜனநாயக, சக்திகளின் சமுதாயப் புரட்சி மாற்றமில்லாமலே தொழிலாளி வர்க்கத்திற்கும்,முதலாளிவர்க்கத்திற்கும் இடை யிலான முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள முடியுமென்றும் வீணுக அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை.
இன்றைய தேவை முதலாளித்துவ சமுதாய அமைப்பை சீர்திருத்துவதல்ல. இதனை மாற்றியமைப்பதாகும்,
முதலாளித்துவ சமுதாய அமைப்பை சீர்படுத்த கடந்த
காலங்களில் பலமுயற்சிகள் நடைபெற்றுள்ளன. முதலாளித் துவ கொடுமைகள் போதிய கண்டனங்களுக்கு உள்ளாகி உள் ளன. அதுபற்றிய போதிய அனுபவம் நமக்குண்டு. அதனை சீர்திருத்த முடியாது, அது அழிக்கப்பட்டு புசய ஜனநாயக சமுதாய அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும்.அதுவே மக் களின் தேவை.
படைப்பாளர்களின் இன்றைய கடமை சமுதாய மாற்றத் துக்கான உள்நாட்டு- வெளிநாட்டு பிற்போக்குக்கு எதிரான மக்களின் பரந்துபட்ட வெகுஜன அணியைக் கட்டி எழுப்பவும் முன்னெடுக்கவும் சரியான மார்க்கத்தை, தமது படைப்பின் மூலம் கோடிட்டுக் காட்டுவதும், உழைப்பாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வைக் கூர்மைப்படுத்துவதும். இணைந்து போரள டுவதுமாகும்.
இந்த நோக்கில்தான் பிறந்த நாட்டினதும் முழு உலகத்தி னதும் மாற்றத்துக்காக படைப்பவனே உன்னதமான சமுதாய ஊழியன்.
அவனே படைப்பாளி. இதுவே தாயகத்தின் கருத்து. *
49

Page 29
*தாயகம்’ இதழில்
தொடர்ச்சியாக வெளியாக இருக்கும்
ஆய்வுக் கட்டுரை விபரங்கள்
* காலமாற்றங்களும் பாரதியும்??
- இ. முருகையன் 2. ' தேசிய இயக்க நெறிகளும் பாரதியும்’
- கே. செந்திவேல் 3. * பொருளியற் சிந்தனைகளும் பாரதியும்’ - அ. ஜெயரட்னம் 4. * வர்க்கங்களும் பாரதியும்’
- மா. சின்னத்தம்பி 5. ** பெண் விடுதலையும் பாரதியும்’
சித்திரலேகா மெளனகுரு - ܐܝ ܢܝ ` - 6. * அரசியல் இலக்கியமும் பாரதியும்’
ዶ - ந. இரவீந்திரன் 7. * கலைகளும் பாரதியும்*
- ਸੈ. மெளனகுரு 8. * கல்வியிற் சிந்தனைகளும் பாரதியும்’
- எஸ் இராஜேந்திரன் 9. * நவீனத்துவமும் பாரதியும்’
- எம். ஏ. நுஃமான் 10. ** இலங்கை கண்ட பாரதி”
- சி. தில்லைநாதன்
தாயகம் சந்தா விபரம்
ஒரு வருடம் ரூபா 60-00 ஆறு மாதங்கள் ரூபா 30-00
(தபாற் செலவு உட்பட)


Page 30
விசேட
* சொனி
(SONYOOI
(GN தாலேக்கா
வர்ண கறுப்பு-வெள் தெரிவுசெய்
2 வ (5.1 P. த்தா ( GUARANT
ழங்கப்
சென்னே - ரூபவாகி
ஒரு வருட
மங்கள் வைபவங்க பிடித்துக் கெ
வரவே
வீன
266 ஸ்ரான்லி வி
நியூ வி
79 1 கஸ்தூரிய
இப் பத்திரிகை தேசிய க பாணம், 15 1 , மின்சார நிலேய களால் யாழ்ப்பாணம், பிரப்பங் சகத்தில் அச்சிட்டு வெளியிடப்ப,

N
கழிவுடன்
* நாஷனல் NATIONAL)
ட்சிப் பெட்டிகள்
ாளே விரும்பிய வண்ணம் ய விரையுங்கள்
வாதப்பத்திரம்
EE CARD )
படும்
:னி ஏரியல் அமைப்பதற்கு
உத்தரவாதம்
ளே விடியோவில் படம் ாள்ளலாம்
ற்கிறது
Siu)
பீதி, யாழ்ப்பாணம்.
i 6 6 T6 l)
ார் விதி, யாழ்ப்பாணம்.
லே இலக்கியப் பேரவைக்காக யாழ்ப் வீதியிலுள்ள க தணிகாசவம் அவர் குளம் விதியிலுள்ள எஸ் , ஜே அச் = ilگئی۔ اL