கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளோட்டம்

Page 1


Page 2


Page 3

வெள்ளோட்டம்
( இரு குறுநாவல்கள் )
I ẩ|-
வெளியீடு:- ழ், இலக்கியவட்டம்,
யாழ்ப்பாணம்

Page 4
Title - VELLODDAM
(Two Short Novels)
Author - P. Sivananda sarma
(Kopay - Sivam )
Adress - Near Sivan Temple
Avarangal
Puttur.
Published by - Yarl Ilakkiya Vaddam,
JAFFNA.
Copyright ... To the Author.
Printed At - Sarvasakthi Gurukulam
Kilinochchi 986 March
Date of Publication
Price - 6 fr :
யாழ், இலக்கியவட்ட வெளியீடு - 31, , வெள்னோட்டம் பக்கம் 1
(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன *வாலிபவட்டம்
நிகழ்ச்சியில் தொடர் நாடகமாக ஒலித்தது) 2. கரைசேரும் கட்டுமரங்கள் பக்கம் 45
(1985 ஆம் ஆண்டு யாழ் இலக்கியவட்டம் ‘ஈழநாட்" டுடன் இணைந்து நடத்திய இரசிகமணி கனக செந்தி நாதன் குறுநாவல் போட்டியில் பாராட்டுப்பரிசு பெற் றது. ‘ஈழநாடு வாரமலரில் வெளியாகியது) ---

பதிப்புரை
மரபுவழிநின்று புத்திலக்கியம் படைக்கும் தூய நோக் கத்துடன் நிறுவப்பட்ட யாழ். இலக்கிய வட்டம், இருபது ஆண்டுகளுக்குமேலாக இலக்கிய சேவை செய்து வருவதைத் தமிழுலகம் நன்கு அறியும், இலக்கியத் தரம் மிக்க நூல்களை வெளியிட்டும் அறிமுகப்படுத்தியும் எழுத்தாளர்களுக்கு ஆக் கமும் ஊக்கமும் அளித்துவருகிறது.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் குழுவிற்குத் தனியிடமுண்டு. அவ்வியக்கத்தின் உறுப்பினராகச் செயலாற் றிய பண்டிதர் ச. பஞ்சாட்சரசர்மா அவர்களின் தநயன் கோப்பாய் - சிவம் எழுதிய வெள்ளோட்டம் என்ற குறுநாவல் தொகுதியினை வெளியிடுவதில் யாழ். இலக்கிய வட்டம் பெரு மிதம் கொள்கிறது.
இவர் ஏற்கெனவே, நியாயமான போராட்டங்கள், இலங் கையில் தமிழ்ப்பத்திரிகைகள் சஞ்சிகைகள், அன்னை பராசக்தி, சைவகற்சிந்தனை, “கணவுப் பூக்கள்’ ஆகிய நூல்களினை வெளியிட் டுள்ளார். −
புதிய த்லைமுறை எழுத்தாளரான கோப்பாய் - சிவம் பலதுறைகளிலும் எழுதிவருபவர். நாடறிந்த எழுத்தாளர் பழகுவதற்கு இனியவர்.
இவரது கதைகளில் தெளிவுண்டு. நல்ல கருத்துண்டு. சிந் தயைத் தூண்டும் ஆற்றலுண்டு.
இரு தசாப்தங்களாக எமது வெளியீடுகளுக்கு ஆத ரவு நல்கும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் யாழ். இலக்கியவட் டத்தின் வெளியீடாக இந் நூலை வெளியிட்டுவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வணக்கம்.
மாநகரசபை அலுவலகம், um þar svorsi.
யாழ்ப்பாணம், இணைச்செயலாளர்.
24- 3-1986.

Page 5
ஈழத்துத் தமிழிலக்கியத் தின் இ ன்  ைற ய ஆரோக்கிய மான போக்கிற்கு இளந்தல்ை முறையினர் கணிசமான அளவு பங்கினைச் செலுத்திவருகின்ற னர் என்ற மெய்ம்மையின் அடிப்படையில் நோ க் கும் போது அவர்களுள் முதன்மை வ கி க் கி ன் ற ஒரு வ ரா க * கோப்பாய் - சிவம் ” விளங்குவ தைக் காணலாம் "
- செங்கை ஆழியான் .
( நியாயமான போராட்டங்கள் "
முன்னுரையில்)
* பழைமையில் ஊறித் திளைத்த பண் டி த ரி ன் மகன் கோப்பாய்-சிவம். தந்தை பழைய இலக்கியத்தின் பிரதி நிதி யாக இருப்பதைப்போல மகன் நவீன இலக்கியத்தின் வாரி சாகத் திகழ்கிருரர். கோ ப் பா ய் சிவத்தின் கதைகளில் மனிதாபிமானம் மேலோங்கி நிற்கிறது ”
— soñ556ufa gaur. (தினகரன் 19-1-1986)
* மெளனி, ஜெயகாந்தன் ஆகியோரின் உத்திமுறை சிவத் திற்கு நன்கு கைவந்திருக்கிறது. ”
- சோணு (ஈழநாடு 15-9-85)
* சாதிப்பிரச்சினைகளை வைத்துப் படைக்கப்பட்ட எத் தனையோ கதைகளைப் படித்தவர்கள் நிச்சயம் ஒரு முற்றிலும் வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ள கோப்பாய் - சிவத்தின் கதைகளைப் படித்து வியந்துபோவார்கள் "
- எஸ். எஸ் அச்சுதன்பிள்ளை .
(வீரகேசரி 11-8-85) கோப்பாய் சிவத்தின் கதைகள் யாவற்றிலுமே மனிதாபி மான உணர்வு இழையோடியிருக்கும். அவரதுபார்வை விசா லமானது, ஆழமானது, கலைத்துவம் மிக்கதும் கூட, - எஸ். வன்னியகுலம்
(மல்லிகை, நவம்பர் 1985)
 

வெள்ளோட்டம்
1.
“சின்னஞ் சிறு பெண் போலே
சிற்ருடை இடையுடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ழரீ துர்க்கை சிரித்திருப்பாள்"
அதிகாலைப் பணி மெல்ல விலகிக் கொண்டிருக்க அதனை விாட்டிக் கொண்டே ஆதவனின் பொற்கிானங்கள் விச ஆாம் பித்தன. அன்னையின் ஆலய மணியோசை கேட்டு அந்தப் பாரிய ஆலமரத்திலிருந்து பறவையினங்கள் சட சட வென இறக்கைகளை அடித்துக் கொண்டு எழுந்து பறந்தன. சலசலப் புற்ற ஆலமிலைகளிலிருந்து பனித்துளிகள் கீழே சிந்தின. இடை யிடையே பழுத்த சில ஆலம் பழங்களும் ஆங்காங்கே விழுந்து சிதறின.
ஆலமரத்தின் கிளைகளில் தொங்கும் விழுதுகளிலிருந்து பணி நீர் சொட்டுவது போல, காலைப்பனி கீரில் குளித்து விட்டு வந்த கருங் கூந்தலிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் வழிந்து கொண்டிருக்க கோபுர வாசலினைத் தாண்டி உள்ளே நுழைந்தாள் பாழினி.

Page 6
மணியை அடித்துக் கொண்டிருந்த ஆனந்தையர் அவளைத் திரும்பிப் பார்த்துக் கனிவான ஒரு புன்னகையை விசிவிட்டு மறுபடியும் ஆலயத்துள் நுழைந்தார். அந்தப் புன்னகையில் அவள் கோயில் எசமானின் மகள் என்பதால் ஏற்பட்ட ஒரு மரியாதையும் அவளது தந்தையின் ஸ்தானத்தில் இருக்கக் கூடிய வயதின் காரணமான பாசம் கலந்த ஒரு கருணையும் அவளுடைய இயல்பான அந்த தெய்வீகக் தோற்றத்தினல்
38.
ஏற்பட்ட ஒரு பக்தியும் கூடக் கலந்திருந்தன.
உதய காலப் பூஜைக்கான சகல ஆயத்தங்களும் உள்ளே ஏற்கனவே செய்யப் பட்டிருந்தன. பலமுகங்களிலும் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப ஒளியில் ஜரிகைப் பட்டாடை ஜொலிக்க முதஅமாரி அம்மன் கருவறையுள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சாமகானப் பிரியையான அந்த சர்வலோக காயகியை நோக்கி அன்புருகப்பாடி 'வாமதேவர் மகிழ் சுந்தரி செளந்தரி என்று தனக்குப் பிடித்த ஆனந்தபைரவி ாாகப்பாடலால் அவளைத் துதித்து பூஜை தரி சித்துக் கொண்டு ஃபிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு புறப் பட்டாள் யாழினி.
3 y
ஸ்யாமளாங்கி ஆனந்தபைரவி. : a
“ဂျူရို့ီး: அன்று செவ்வாய்க்கிழமை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை யும் உதயகாலப் பூஜைக்கு வந்து வணங்கிச் செல்வது அவள் வழக்கம். அவள் கோபுர வாசலை அட்ையும்போது அவள் தங்தை ம்ாணிக்கவாசகர் அங்கு வந்து கொண்டிருந்தார். கோயில் எச மான், ஊரில் பெரிய பணக்காரர், கெளரவமான குடும்பத்தவர் என்ற விஷயங்களைப் பறைசாற்றக்கூடிய தோற்றம். வாட்டசாட் ட்மான வண்டி தொந்தியுடன் கூடிய செக்கச் சிவந்த உடல மைப்பு. தலையில் சில வெண்மயிர்கள் தலைகாட்ட ஆரம்பிக் திருந்தன. கழுத்திலே ஒரு தங்கச் சங்கிலி அட்சரக் கூட்டு டன் தொங்கியது. கையிலே மோதிரங்கள் டாலடித்தன. ஆனல் இத்தனேக்கும் மேலாக =படித்தவர்-பண்பானவர் -அன்பானவர் என்பவற்றுக்குரிய அமைதியான - சாந்தம் தவழும் முகம். பரந்த செற்றியில் பளிச்சிடும் விபூதிப் பூச்சு.
2

கோபுர வாசலில் நின்றபடியே சந்நிதானத்தை நோக்கிக் கசம் குவித்து வணங்கிவிட்டு மகளிடம் இருந்த விபூதி பிரசா தங்களை வாங்கி அணிந்து விட்டு ஒரு பூவையும் கண்களில் ஒற்றிக்கா தில் செருகிக் கொண்டார். மாசி அம்மனின் பாதகம லங்சளிலிருந்து தனது கரகமலங்களிற்குக் கிட்டியிருந்த ஒற்றை ரோஜாவை நீர் சொட்டும் கரும் கூந்தலில் செருகிக் கொண்டு தந்தையைத் தொடர்ந்தாள் யாழினி, கோபுரவாசல்ோடு ஒட்டி ஈசான மூலையில் அந்தப் பெரிய ஆலமாத்திற்கும், மணிக்கோ புரத்திற்கும் அருகில் போடப்பட்டிருந்த அந்தத் தற்காலிக
மான ஒலைக்கொட்டகையை நோக்கி கடந்தார் மாணிக்கவாசகர்.
ஆனந்த ஐயர் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியேவந்தார். அவருக்குத் தலேசாய்த்து மரியாதை செலுத்தி விட்டுத் தன்கை யைத் திருப்பி சரியான 6ேரம் பூஜை நடந்திருக்கிறதா என்பதை யும் பார்த்துக் கொண்டார். ஒலைக் கொட்டகைக்குள் தந்தை யும் மிகளும் நுழைந்தபோதி கந்தசாமி ஆசாரியாரும் அவர் மகன் சா சங்கனும் ஆயுதங்களை எடுத்து வேலைக்கான ஆயத் தங்க்ளில் ஈடுபட்டிருந்தனர். ம்ற்ம் ஆசாரிம்ார்களும் உதவிய்ர் ளர்களும் இன்னும் வந்து சேரவில்லை." இல்ர்கள் நேரத்திற்கே வந்து விட்டதில் எசமானுக்குத் திருப்தி.
மாரி அம்மன் கோவிலிற்கு ஒரு தேர் இல்லாத குறையை நீக்கி விடவேண்டுமென்று அவ்வூர்மக்கள் எல்லாருமாகக் சேர்ந்து சில வாரங்களுக்கு முன்னர்தான் தீர்மானித்தனர். அதன்படி புதிய சித்திரத் தேர்வேலைகள் உடனேயே ஆரம்பிக் கப்பட்டு விட்டன. அதிகாலை உதயப் பூஜை மணி ஒலிக்கும் போதே ஆபிம்பமாகும் உளிகள வாள்கள் சுத்தியல்கள் இவற் றின் ஒசைகள் சிலவேளைகளில் இரவு அர்த்த ஜாமப் பூஜை மணி ஒலிக்கும்வரைகூடத் தொடர்ந்து, ஒலிப்பதுண்டு. அத்தனை துரி தமாகத் தேர் வேலைகள் கடந்து கொண்டிருந்தன. கந்தசாமி ஆசாரியார்தான் பிரதான ஆசாரியாாாக அந்த வேலையைப் பொறுப் பேற்றிருந்தார். ஒரு வருடத்திற்குள் வேலையை முடித்து விடலாம் என்பது அவர்கள் திட்டம்.

Page 7
வேலைத்திட்டங்கள் பற்றிக் கந்தசாமியுடன் மாணிக்கவாசக பேசிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த பட்டறையில் அர்ச் சனத் தட்டை வைத்து விட்டு அங்கே நடந்திருந்த கலையம்சம் மிகுந்த வேலைப்பாடுகளை ஆர்வத்துடன் கோட்டமிட்டாள் யாழினி. வெறும் மாக்கட்டைகள் சிற்பங்களாக அழகுருக் கொள்வதும் அவை ஒன்று சேர்ந்து தோாகுவதும் அவளுக் குப் பிரமிப்பாக இருந்தது. நாள் பூராவும் அங்கேயே இருந்து ஒவ்வொரு அங்குலமாக அந்தக்கலையாக்கத்தை இாசிக்க வேண் ெேமன்று அவளுக்குத் தோன்றியது. V.
3 : . . 'அம்மா கான் இதிலை விபூதி பூசலாமோ?” என்ற குரல் கேட்டுத் திரும்பினுள் அவள். கந்தசாமி ஆசாரியின் மகன் சாாங் கன் அர்ச்சனைத் தட்டின் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது தான் முகம் கழுவிவிட்டுத் துவாயினுல் முகத்தைத் துவட்டியபடி அவன் கின்று கொண்டிருந்தான். அவள் வெறு மனே தலையாட்டினுள். அவன் தன்னை அம்மா என்று அழைத் தது அவளுக்கு ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. தான் ஒரு தொழிலாளி என்பதாலும் தன் எசமானரின் மகள் அவள் என் பதாலும் ஏற்பட்டமரியாதை காரணமாக மட்டுமல்லாமல் பொது வாகவே பெண்களை அம்மா' என்று அழைக்கின்ற தன் வழக்கம் காரணமாகவும் அவன் அப்படி அழைக்கிருந்தான்.
ஆனல் அவள் அப்படி நினைக்கவில்லை. அவன் வயதால் தன்னை விட சற்று மூத்தவன். கட்டுமஸ்தான- சிவந்த- உயர்ந்த, அவனது அழகிய தோற்றமும் கருகருவென்று அடர்ந்து, வளர்ந்த மீசையும் கலைஞனுக்கேயுரிய குறுகுறுத்த பெரிய விழி களையும் பார்த்தபோது அவனுக்குத் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவன அவள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவன் விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டு தட்டிலிடுந்த ஒருபூவை எடுத்து அரு கில் கிடுகுத்தட்டில் கொளுவப்பட்டிருந்த அம்மன் படத்திற்கு வைத்துவிட்டு வணங்கினன். அதில் ஏற்கனவே செருகப்பட்டு வாடியிருத்த பழைய பூவைக் கண்ட யாழினி தினசரி அவன் இந்தப் பிரார்த்தனையை முடித்துவிட்டே தன் வேலைகளை ஆரம் பிக்கிறன் என்பதைத் தெரிந்து கொண்டாள்.
4.

அவன் உளியையும் சுத்தியலையும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு திரும்பினன். அவ்வளவு நேரமும் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த யாழினியைக் கண்டதும் அவன் சற்றே வியப்படைந்ததோடு நாணமும் அடைந்தான். ஒரேகணம் அவளை நோக்கி கிமிர்ந்து பார்த்து விட்டு வேலைகளை அவன் ஆரம்பித் தான் கொடிபோல் மெலிந்து உயர்ந்த சிவந்த உடலை மயில் சீலக்கரை போட்ட செம்மஞ்சள் வண்ண கைலெக்ஸ் சேல் இறுக அணைத்திருக்க-அதே மயில் நீலவண்ண பிளவஸ் அவள் செந்நிற மேனியின் வனப்பை வெளிக்காட்ட அவள் கின்றி ருக்காள். நீலகிறப் பொட்டின்மேல் அம்பாள் பிரசாதமான சென்னிறக் குங்குமம் ஜொலித்தது. மஞ்சள் குளித்த )فاه ملل வெயிலில் மினுமினுக்தது. அ2ல அலையாய் நெளிந்த கருங்கூர் கலில் அந்தவெண்ணிற ஒற்றை முேஜா சீல வான்பரப்பில் வெண்மதிபோல் பிரகாசித்தது. அகன்ற கருவிழிகளால் அவள் ஆவலோடு தன்செயல்களைக் கவனிக்கின் முள் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியதி. துரித மாசுத் தன் கரங்களை இயக்கினன் அவன்.
அப்போது சைக்சிள் மணி ஓசை கேட்டு அவர்கள் திரும் பியபோது கொட்டகை வாசலில் முருகானந்தம் மாஸ்டர் கின்று கொண்டிருந்தார். "அப்பா, மாஸ்டர் வந்திட்டார். நான் போறன்’ என்று தந்தையிடம் சொல்லிவிட்டு அர்ச்சனைத் தட் டையும் எடுத்துக்கொண்டு விரைந்தாள் அவள். அவளைத் தொடர்ந்து மாணிக்கவாசகரும் புறப்பட்டார். அவர்களுடன் சைக்கிளை உருட்டியவாறே நடந்துகொண்டு,
“என்ன இலக்கிய பாடத்தை விட்டிட்டுச் சிற்பக்கலை படிக் கிற எண்ணம் போலை இருக்கு” என்று மாஸ்டர் கேட்டபோது மாணிக்கவாசகர் நேரத்தைப் பார்த்தார். வழக்கமாக எழரை மணிக்கு மாஸ்டர் வந்து பாடம் ஆரம்பிப்பார். இன்று பூஜை முடிந்ததும் தேர்க்கொட்டகையில் தாமதித்ததால் கோம்போய் விட்டது. அவர்கள் கோயிலின் வடக்குப்புறமாக இருந்த சிறிய விதியில் இறங்கி நடந்தனர். r

Page 8
2
s குலதெய்வமே உன்னேக் கெண்டாடினேன்,
இழக்குசோக்கி அமைத்த அந்த ஆலயத்தின் தென்புறம் முழுவதும் செல்வயல்களும், கிழக்கே அன்னையின் முகதரிச னத்தைப் பெற்றவாறு சில தோட்டங்களும் இரண்டொரு oTLHLib இருந்தன. வடக்குப்புறமாக பிரதான வீதியிலிقهL واژه ருந்து வருகின்ற சிறிய பாதை கோயில் 62 مa{ அணைத்துக் கொண்டு தோட்டங்களை நோக்கிச் சென்றது. கோயிலுக்கு வடகிழக்கு மூலையில் இருந்து ஆனந்த ஐயரின் வீட்டைக் தாண்டி அதற்கு தேததாக மேற்குப்புறக்கில் சில யார் தூரம் தள்ளி ழகிய சுற்றுமதிலினுள் அமைந்த “ அம்மன் அருள்” என்ற அழகிய சிறிய வீடுதான் மாணிக்கவாசகருக்" குரியது.
“அம்மன் அருள்” என்ற அந்தப் பெயர் அவருடைய விட்டிற்கு மிகவும் பொருத்தமானது தான். விட்டிற்குமட்டு மல்ல அவருடைய அந்த வாழ்க்கையின் சிறப்புகளுக்கெல்லாமே அந்த மாரி அம்மனின் அருள்தான் காரணமென்று கூறுவார் வர். அவருடைய பாட்டனருக்கு முந்திய பாம்பரையின. ரெல்லாரும் பெரிய பணக்காரர்களாக வசதியோடு: வாழ்ந்து, வந்தவர்கள். பாட்டனர் காலத்தில் ஆரம்பித்து அவரது தந்தை Lu T i காலத்தைக் கடந்து மாணிக்கவாசகரின் இளமைப் பருவம் வரை கஷ்டகாலம் பிடித்துக்கொண்ட-அறி தொடர்ந்து வறுமை யிலும் கஷ்டத்திலும் உழன்றனர். *
மாணிக்கவாசகரின் பாட்டனர் செல்வநாயக முதலியார் தான் மாரியம்மன் கோயிலின் காரணகர்த்தா. அவர் தனது கடைசிக்காலத்தில் அக்த இடத்தில் ஏதோ ஒரு மகத்துவம்
6

இருப்பதை உணர்ந்தார். வெறும் கற்ருளைப் புதர்களும் சிறு பற்றைகளும் நிறைந்திருந்த அந்த இடத்தில் ஒரு தனிப் பாருங் கல்லும் அதற்கருகே மெல்ல முளை விட்டு வரும் சிறிது ஆலங் கன்று ஒன்றையும் கண்ட முதலியார் அந்த இடத்தைப் புனி தம? கக் கருதிஞர். அந்தக் கற்பாறையிலே கற்பூசம் கொழுத்தி வருவதை வழக்கமாக்கினர். அங்கே சிறு கொட்டிலொன்றை அமைத்து துப்புரவு செய்து கோயிலாக்கினர்.
ஊர்ச்சனங்களும் இடையிடையே வந்து வணங்கிப் பொங் கலும் பொங்கினர். மாணிக்கவாசகரின் தந்தையார் கனகரத்தி னமும் பலகாலம் அந்தக்கோயிலைக் கவனிக்கா திருந்து விட்டுத் தனது பிற்காலக்திலேதான் அவ்விடத்திலே கல்லா லமைக்த சிறு கோயிலைக் கட்டி ஆனந்த ஐயரின் தகப்பனரைக் கொண்டு முத்து மாரி அம்மன் விக்கிாகமொன்றைப் பிரதிஷ்டை செய்வித் துத் தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
கனகரத்தினம் இறக்கும் தறுவாயில் மகனே வேண்டிக் கொண்ட ஒரே விஷயம் கோயில் பற்றியதுதான் 'மாரிஅம்மன் கோயிலைக் கைவிட்டுவிடாதே’ என்ற வசனத்தோடு அவர் போய் விட்டிார். மாணிக்கவாசகரின் இளமைக்காலம் ஒழுங்காக இல்லை. ஏதேதோ வியாபாரங்களும் - கடத்தல் முயற்சிகளும் செய்து நொடித்துப் போய் விட்டதுடன் கடுமையான நோயி லும் விழுந்து விட்டார். அந்தவேளையில் - முப்பக்தைந்து வயதுக் குப் பிறகுதான் அவருக்குத் தந்தையின் இறுதி வார்த்தைகள் கினவுக்கு வந்தன. அதற்குப் பிறகு அம்மனுக்கு அவரது தொண்டுகிடைத்தது. அவளுக்கு அம்மன் அருள் கிடைத்தது. நல்ல முறையில் வியாபாரம் செழித்தது. நல்ல பெயரையும் பெற்றுக் கோயிலையும் வளம்படுத்தினர். புதிதாக யாராவது கோயில் பக்கம் கண்டால் உடனே அவர்களை அந்த ஆலமரத் தின்கீழ் அழைத்திப் போய் அமர்த்திவிடுவார். தனது பழைய கதை எல்லாம் கூறி “ அம்மன் அருள் ' என்று முடிப்பார். அன்னேயின் அற்புதங்கள் பலவற்றையும் விபரிப்பார். பொது வாகவே அந்த ஆலயத்திற்கு ஒரு முறை வருகிறவர்களை மீண் ம்ெ மீண்டும் வரவழைக்கின்ற ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி இருந்தது. . . S:

Page 9
முருகானந்தம் மாஸ்டர் இவர்களுக்கு அறிமுகமானது கூடஇப்படித்தான். ஒருமுறை அந்த ஆலயத்தில் ஏதோ ஒரு விசேஷ கிகழ்ச்சியின் போது முருகானந்தித்தின் நண்பனும் அபிமான கவிஞருமான தவத்தின் கவியரங்கு இடம்பெற்றிருந் தது. அதனல் அவர் அங்கு வங்கிருந்தார். கவியரங்கு முடிந்த பின்பு தவமு முருகானந்தமும் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது மாணிக்கவாசகர் வழக் கம் போல இவர்களிடம் ஆலய வரலாற்றை அவிழ்த்து விட் டார். அதன் பிறகு அவ்வப்போது இருவரும் ஆலயத்திற்கு வருவதும் அப்படியே மாணிக்கவாசகர் வீட்டிற்குப் போய்க் கதைத் திக் கொண்டிருப்பதும வழக்கமாகி விட்டது.
முருகானந்தம் பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலை இல் லாததால் டியூஷன் மாஸ்டராக இருப்பதை அறிந்த மாணிக் கவாசகர் அவரைத் தன் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடும் செய்து விட்டார். சென்ற மாதம் முதல் வகுப்புக்கள் ஒழுங்காக நடக்கின்றன.
மாணிக்கவாசகரின் மூத்த மகள் யாழினி வெளிவாரியாகப்
பட்டப்படிப்புப் படிக்கிமுள் பொதுவாக எல்லாப் பாடங்
களிலும் 6 கோச் அப் ’
தேவைப்பட்டாலும் முக்கியமாகத் தமிழ்இலக்கியத்தில் தான் தனிக்கவனம் எடுத்துப் படிக்கத் தேவைப்பட்டது, இரண்டாவது மகள் பத்மினி உயர்தர வகுப் பில் படிக்கிமுள். எனவே இவரது கோச்-அப் அவளுக்கும் பெரிதும் உதவியது. பெரும்பாலும் இருவருக்குமே சேர்த் தும் சிலவேக்ளகளில் தனித்தனியேயும் பாடம் சொல்லிக் கொடுப்பார்.
இவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது பத்மினி பாடத் துக்குக் கியாராக இருந்தாள். 'குட்மோணிங்' என்ற அவளது வணக்கக்கிற்கு வேண்டுமென்றே "வணக்கம்” என்று தமிழில் பதில் மரியாதை செலுத்திவிட்டு அமர்ந்தார் முருகானந தம். அவள் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொள்ள, மாணிக்க, வாசகர் இதைப்பார்த்துச் சிரித்தபடியே உள்ளேசென்றர். யாழினியும் உடைமாற்றிவிட்டு வருவதற்காக உள்ளேசென்ருள். முருகானந்தம் புத்தகத்தைப் புரட்டியபடி இருக்க பத்மினி அவனையே பார்த்தபடி இருந்தாள், s
s

* யாரோ இவர் யாரோ - என்ன பேரோ - அறியேனே ?
அடுத்த செவ்வாய்க்கிழமை யாழினி கோயிலில் பூஜை முடிந்ததும் திரும்பியவள் தேர்க்கொட்டகைக்குள் நுழைந்தாள். வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. சாரங்கன் ஏதோ ஒரு நுட்பமான சிற்பமொன்றைச் செதுக்கிக்கொண்டி ருந்தான். அவள் அருகில் கின்று அதைக் கவனித்துக்கொண் டிருந்தாள். சாரங்கன் அவளை நிமிர்ந்து பார்த்து ஒரு புன்ன கையை வீசிவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினன். கொட்ட கையின் ஒரு மூலையில் ஒரு மரக்குற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் இவள் கண்களில் பட்டது. இங்கிருந்தபடியே அது ஜெயகாந்தனின் “ஊருக்கு நூறுபேர்’ என்ற காவல் என்பதைக் கவனித்தவள் சாரங்கனிடம் மெல்ல விசாரித்தான்.
“ pia. . . . . . அதிலைஇருக்கிற புத்தகம் ஆருடையது?"
* அது லைபிறரிப் புத்தகம் நான்தான் எடுத்தந்தனன் படிச்சிட்டன். இன்டைக்குப் பின்னேரம் வேலை முடிஞ்சு போகேக்கை குடுக்கவெண்டு கொண்டந்தனன். '
* ஐஸி. அதை ஒருக்கா எனக்குத் தருவியளே P-m.
நான் படிச்சிட்டுத்தாறன் .'
6ஒ! இன்னும் ரண்டு நாளிலை டேற் முடியுது அதுக்கிடை யிலை பாத்திட்டுத் தாங்கோவன்." என்று சொல்லிக்கொண்டு அதை எடுக்க எழுந்தான். அதற்கிடையில் அவளே அங்கு போய் எடுக்கும்போது அதனேடு இன்னெரு புத்தகமும் இருப் பதைக் கண்டு அதிசயித்தாள். கி. லசஷ்மணன் எழுதிய ‘இந்திய
9.

Page 10
தத்துவ ஞானம்' என்கிற அந்தக் கனமான புத்தகத்தைப் புரட் டிக்கொண்டே - இந்தப் புத்தகங்களைக்கூட நீங்கள் படிக்கிற துண்டா ? ? என்று வினவினுள் “ என் படிக்கக்கூடாதா ? பட்டப்படிப்பு படிக்கிருக்கள் மட்டும்தான் படிக்கலாமோ ? ?? என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்டபோது யாழினி கல கலவென்று சிரித்துக்கொண்டே,
* இல்லை இல்லை. நாங்கள் சோதனைக்காகப் படிக்க வேணுமே எண்டு சகிச்சுக்கொண்டு படிக்கிறம். இந்தத் தத் வங்களையெல்லாம் நீங்கள் கதைப்புத்தகம் மாதிரிப்படிக்கிறியளே என்டுதான் கேட்டனன்.” என்ருள். தான் கேட்ட விதம் அவன் மனதைப் புண்படுத்தியிருக்குமோ "சாதாரண சிற்பா சாரி பாகிய நீ இந்தப் பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறியா?" என்ற தொனியில் கேட்டுவிட்டதாக அவன் நினைத்துவிடக் கூடாது என்ற நினைவுடன் - மன்னிப்புக் கேட்கின்ற பாவனையில் அவ சரமாக அவள் இவ்விதம் சொன்னபோது,
நீங்கள் இந்தப்புத்தகம் படிச்சிருக்கமாட்டியள் எண்டு கினைக்கிறன். இதிலை தத்துவ ஞானங்கள் எல்லாம் நல்ல இலகுவான முறையிலை - சுலபமாய் விளங்கக் கூடியதாய்த்தான் எழுதியிருக்கிறர். கே. எம். பி. மஹாதேவன் எழுதின புத்த கம் கொஞ்சம் கடினம். அதை 6ான் இன்னெருமுறை படிக்க வேணும்.”
6 அப்படியா, அப்ப நல்லதாய்ப் போச்சு, என்னட்டை மஹாதேவன் ைபுத்தகம் இருக்கு. நாளைக்கு நீங்கள் இந்தப் புத்தகம் வாக்க வரேக்கை நான் அதைத்தா றன். s
இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டே வேலையில் கவனமாயிருந்த கந்தசாமி ஆசாரியார், எழுந்து சென்று வெற் றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு ' தங்கைச்சி, உவன் பள்ளிக்கூடத் திலை ஏ. எல். வரையும் படிச்சுப் பாஸ்பண்ணிப் போட்டான். பேந்து வாசிற்றிக்கும் போப்போறனெண்டு கிண்டவன். கான் தான் தடுத்து எங்கடை தொழிலைப் பழகட்டு மெண்டு விட்டிட்டன். வேலை நேரம் முடிஞ்சால் உப்பிடித்தான் புத்தக மும் எழுத்தும் - சங்கங்கள் - கூட்டங்கள் எண்திம் திரிவான்.' என்று மகனின் பெருமைகளை எடுத்துாைத்தார்.
10

தன் மகனைப் பற்றி அந்தத்தந்தை கூறும் போது அவருக்கு ஏற்படும் பெருமிதத்தையும் . my Gas G 2 r ti அதைக்கேட்கும் போது மெ ன ன மாக . அ  ைமதி யாகக் குனிந்து தன் வேலையில் கவனமாக இருந்த சாரங்கனின் முகத்திலும் அதே பெருமிதமான ஒளிவீச்சையும் அவள் அவதானித்தாள். அதேநேரம் தன் மேற்படிப்பை இவர் தடுத்து விட்டாரே என்ற கோபமோ - கவலையோ இல்லாமல் அவன் நடந்து கொண்டமுறையும் இவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத் தியது. அதற்கு விடைகொ டுப்பவன் போல அவனே பேசினன,
"படிப்பை நிறுத்தின உடனே முதலில் எனக்கு வகுத்த மாயும் கோபமாயும் கூட இருந்தது, பிறகு என்னுடைய கல் வியறிவையும் கைத்திறனையும் பயன்படுத்தி இந்தக் கலைத்தொழி லிலை ஈடுபட்ட பொழுது எனக்கு மகிழ்ச்சியாயும் திருப்தி யாயும் இருந்தது. இப்பகூட ஈரான் பெருமைப்படுகிறன். இப்ப உத்தியோகத்தைத் தேடி எங்கடை ஆட்கள் எல்லாரும் போயிடு றகாலை இந்தக்கலையை வளர்க்க ஆக்களில்லை. இது ஒரு குலத் தொழிலாய் இருக்கிற திாலை வேறை சாதி ஆக்களும் இதிலை ஈடுபடமாட்டினம். இந்த நிலையிலே எங்சடை நாட்டிலை இந்த அருமையான சிற்பக்கலையை வளர்க்கிறதுக்கு வலு கொஞ்சப் பேர் தான் இருக்கினம். எங்கடை பண்பாடுகள் கலாச்சாரங் களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோற ஒரு பாலமாய் தாங்கள் இருக்கிறம்” என்று நெஞ்சை நிமிர்த்தி அவன் சொன்ன போது அவனுடைய அந்த அபாரமான நம்பிக்கையும். தொழி லில் உள்ள ஆர்வமிக்க விசுவாசத்தையும் உணர்ந்து போற் றிய படி புறப்பட்டாள் யாழினி. அப்போது அவனுடைய அந்த அம்மன் படத்கில் அன்றுகாலை செருகப்பட்டிருக்த செவ்வரத் தம் பூவினருகில், தன் அர்ச்சனைத் தட்டிலிருந்த வெள்ளை ரோஜாவையும் சொருகிவிட்டு இரண்டு புத்தகங்களையும் எடுத் துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டில் முருகானந்தம் மாஸ்டரும் மாணிக்கவாசகரும் அரசியல் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். புத்தகங்களை மேசையில் வைத்துவிட்டு அவசரமாக உள்ளே நுழைந்த யாழினி உடை மாற்றி விட்டுப் படிக்க உட்கார்ந்த போது இங் திய தத்துவ ஞானத்தைப் புரட்டிக் கொடிண்ருந்தார் மாணிக்க வாசகர். ஊருக்கு நூறுபேர் முருகானந்தனின்கையில் இருந்தது.
11

Page 11
4.
* சுந்தரவதனி சுகுண மனேகரி
மந்தஹாச முக மதிவதனி '
*ஜெயகாந்தனின் புதிய போக்கைப் பற்றி, அதாவது இப்ப கொஞ்சக் காலமாய் அவரிலை ஏற்பட்டிருக்கிற மாற்றங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள் முருகானந்தம்.” கையிலே தேர்ேத்தம்ளரை எடுத்துக்கொண்டு முருகானந்தத்தைப் பார்த் துக் கேட்டார் மாணிக்கவாசகர். அவர் சொல்லப்போகிற பகிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு அருகில் இன்னெரு கதிரை யில் அமர்ந்திருந்தாள் யாழினி. இவர்களிடம் தேநீரைக் கொடுத்துவிட்டு மற்ருெரு கதிரையில் அமர்ந்தாள் பத்மினி.
எேன்ன? பத்திரிகை நிருபர் பேட்டி காணிற மாதிரி முரு கானந்தத்தைத் திறணடிக்கிறியள்” என்று கேட்டுக்கொண்டே அப்போது வாசலில் வந்து நுழைந்தான் தவம்.
«! நம்ம கவிஞரும் வந்தாச்சு. நல்லது தான் வாரும்
வாரும்’ என்று அவன்ன வரவேற்ரு?ர் வாசகர்.
*நான் ஆனந்தனைத் தேடிப் போனன். விட்டைசொல்லிச் சினம் ஆள் இங்கை எண்டு. உடனே வந்திட்டன். இஞ்சை பெரிய கலந்துரையாடலொண்டு கடக்குது போலை” என்று தவம் சொல்லிக் கொண்டிருக்கையில் பத்மினி உள்ளே போய் இன் ணுெரு தம்ளரில் தேநீர்கொண்டு வந்து அவனிடம் கொடுத் தாள். நன்றி” என்று சொல்லிக் கொண்டே பள பளக்கும் அந்த எவர் சில்வர் தம்ளரைத் தூக்கிப் பார்த்தபடி,
இந்தத்தம்ளரிலை தேநீர் குடிக்கிறதுக்காக இஞ்சை எத் தனை தாமும் வரலாம்” என்று சொன்னன் தவம்.
12

'அப்ப, டீ மாக்கிரம் கல்லதில்லை எண்டு கருச்தோ ? என்று பத்மினி பொய்க் கோபத்துடன் கேட்டதை y Gnu Fra LD w s
மறுத்தான் தவம்
'இல்லை, இல்லை. நீங்க போடிற டீ யைப்பற்றி எனக்கு நல்ல திருப்தி. நான் சொல்ல வந்தது இப்பெல்லாம் எந்த விட் டிலே போனலும், கப் அன் சோசர் தான் வரும். இப்பிடி யான தம்ளர்களைக் காணவேமுடியாது. தம்முடைய பண்பாடு மறைஞ்சு போய் ஆங்கிலேயரைப் போலை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிற பண பாடு எல்லா இடத திலையும் வந்திட்டுது எண்ட தைத் தான் நான் சொல்ல வந்தனன்’
தப் முடைய வீட்டின் பண்பாட்டையும் தமிழ் வழக்கத் தையும அவர் பாராட்டிய மகிழ்ச்சியோடு வாசகத்தார் புன்
னகை பூத்த 1ள்.
*காணும் இந்த விஷயத்தில் உங்களைப் போலத்தான் நினைக் கிறன். சில வீடுகளுக்குப் போனல் தேநீர் வருமுன்னர் கான் அவசரமாகத் திரும்பி விடுவதும் உண்டு. ஏனெண்டால் எனக் கும் கோப்பையிலை உறுஞ்சிக் குடிக்கற வழக்கம் பிடிக்காது.” இது யாழினியின் ஆமோதிப்பு.
“என்? கோப்பையிஜல அல்லது கிளாசிலை குடிக்கிறதாலை என்ன கட்டம் ? காலத்துக் கேற்றமாதிரி தாங்கள் மாறிற திலை பிழை ஒண்டுமில்லையே! ’ பத்மினியின் எதிர் வாதம் இது. பொதுவாகவே தடுக்குத்தனமும் நாகரீக மோகமும், குறு குறுப்பும் நிறைந்தவள் பத்மினி. ஒரு வகையில் யாழினியை விட அவள் அழகி என்றும் சொல்லலாம். யாழினி பெண்மை யின் மென்மையும் - அமைதியும் கொண்டவள். பத்மினி பளிச் சென்ற கவர்ச்சியும் -தடுக்கும் மிக்கவள். அவளுடைய கேள் விக்கு முருகானந்தம் பதில் கொடுத்தான்.
‘அதைத்தான் நமது பண்பாடு எண்டு சொல்லிட்டாரே தவம், பண்பாடு மட்டுமல்லாமல் சுகாதாரமும் கூட இந்த
விஷயத்தில் அடங்கியிருக்குது'
13

Page 12
*ஜெயகாந்தனிலை ஆரம்பிச்ச விவாதம் தேநீர்க்கோப்பையிலை போய் முடிஞ்சிருக்கு, நாங்கள் அவரை அந்தளவிலை விட்டிட்டு வந திருக்கக் கூடாது.” என்று கலந்துரையாடலைத் திசை
* அது சரி அவரை அப்படியே விட்டிருக்கக் கூடாதுதான். நீங்களே அவரைப் போய்க் கூட்டிக்கொண்டு வாங்கோ, 'ஊருக்கு 'நாம பேர்’ புத்தகத்தைப்பற்றி நேரையே கேட்டிடலாம்” என்று அவள் நகைச்சுவையாய்க் சொல்லப்போக,
‘ஆரை என்னையோ?” என்ற கேட்டுக்கொண்டு வாசலில் நின்முன் சாரங்கன். எல்லோரும் கொல் என்று சேர்ந்தி சிரிக்க அவன் எதுவும் புரியாமல் விழித் தான்.
*பத்மினி' ஊருக்கு நூறுபேர்’ புத்தகத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமென்று சொன்னதும், பேர் சொல்லாமல் அவரக்ை கூட் டிக்கொண்டு வாங்கோ’ என்று சொன்னதும் அப்போது தான் வந்துகொண்டிருந்த சாரங்கனின் காதில் விழுந்ததால் அப்படி கினைத் துவிட்டான். பிறகு மாணிக்கவாசகர் கடந்ததை அவ னுக்கு விளங்கப்டுத்தினர்.
அவன் நின்றுகொண்டிருப்பதை அவதானித்த யாழினி அவனை இருக்சச்சொன்னுள், ஏற்கனவே அவனிடம் புத்தகம் வாங்கிய விபரத்தையும் அவனது அறிவாற்றல் - ஆளுமை களைப் பற்றியும் இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் யாழினி சொல்லியிருந்ததால் அங்கு எல்லோர் மனதிலும் ஒரு நல்லபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. ܐ
அவன் சங்கோஜத்தோடு தூரத்திலிருந்த வாங்கொன் றில் உட்காாப் போகும் போது வாசகர் தம்ம ருகே இருந்த கதிரையிலேயே அவனை அழைத்து அமரச்செய்தார். யாழினி தான் முன்பு குறிப்பிட்ட மஹாதேவனின் இந்து தத்துவ ஞானப் புத்தகத்திைக் கொடுத்தாள். பத்மினி மறுபடியும் ஒரு தேநீர் கொண்டுவந்து அவனுக்குக் கொடுத்தபோது
14

அவ%ள நிமிர்ந்து பார்த்தான் சாரங்கன். வாசகர் அவளையும் மற்றவர்களேயும் முறைப்படி அவனுக்கு அறிமுகம் செய்து
வைததாா.
சாரங்கனின் கலைக்கண்கள் பக்மினியை அளவெடுத்தன. அவளுடைய குறுகுறுத்த விழிகளும், கூரிய நாசியும், சிறிய சிவந்த உதடுகளும் குழங்கைத் கனமான முசமும் செழிப்பான உடல் வனப்பும் அவன் பனத்தில் படிந்தன. அத்தகைய உடல் வாகு யாழினியிடம் இல்லை என்பதை அவன் கவனித்தான். ஆனல் பச்மினியிடமிருந்த கவர்ச்சிக்கும், செழிப்புக்கும் யாழினியின் பண்பாட்டையும், அடக்கத்தையும் இணைத்துக் கொண்டால். அந்த இணைப்பின் மூலம் ஒரு அம்மன் விக்கிரகம் அவன் மனக்கண்ணில் வரையப்பட்டது.
மறுபடி ஜெயகாந்தனை விட்டு நழுவிய விவாதம் இப்போது தத்துவ ஞானத்தில் இறங்கியது. எத்தனை படிக்கிருந்தாலும், கைத்திறன் வாய்த்திருந்தாலும் தான் மாணிக்கவாசகரிடம் சம்பளம் வாங்கும்ஒரு தொழிலாளி என்ற அடிப்படையான தாழ்வு மனப்பான்மை சசாங்கன் மனத்தில் இருந்து அவனை சங் கோஜப்பட வைத்தது. ஆனலும் வாசகரின் தாராளமான போக் கும் அவனுேடு இழந்ைது பேசி விவாதித்த யாழினியின் பண்பும் அடிக்கடி கலகலத்த சிரிப்போடு அவனுடன் நெடுநான் பழகியது போன்ற உரிமையோடு பேசிய பத்மினியின் இயல்பும் அவனை இயல்பான கிலைக்குக் கொண்டுவந்து விட்டன. அந்தவிடு நீண்டநேரம் கலகலப்பாகக் காணப்பட்டது.
5

Page 13
*வண்டாடும் சோலைதனிலே
வந்தெனதுள்ளம் கவர்ந்தான்”
இப்போதெல்லாம் தவம், முருவானங் கம் இவர்கள் போல சாரங்கனும் அந்தக் குடும்பக்கின் நெருங்கிய நண்பர்களில் ஒரு வனுக ஆகிவிட்டான். அடிக்கடி அங்கே வந்து உரையாடிச் செல் வான். வாசகருடன் அரசியல், சில்ப சாஸ்கிரம் இவற்தைப் பற் றியும் யாழினியுடன் தக்துவஞானம் இலக்கியம் இவை பற் றியும், பத்மினியுடன் திரைப்படங்கள், வானெலி நிகழ்ச்சிகள் இவை பற்றியும் பேசிக் கொள்கிற அளவுக்கு அவன் பல்துறை
ஈடுபாட்டைக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் உதயகாலப் பூஜை முடிந்தவுடன் தேர்க்கொட்டகையில் நின்று அந்த சிற்பங்களைப் பற்றி அவனேடு ஒரு ஐந்து கிமிடமாவது பேசி விட்டு வரு வது யாழினியின் வழக்கமாகி விட்டது. முன்பானுல் ஏதாவது திருவிழா விசேஷங்களின் போது மட்டும் கோயிலுக்குப் போகும் பத்மினி இப்போதெல்லாம் இடையிடையே கோயி லுக்குப் போவதும், ஆனந்தையரின் மகள் பைரவியைச் சந் கித்து விட்டு வருகின்ற போதெல்லாம் தேர்க் கொட்டகைக் குப் போய்ப் பார்ப்பதும் வழக்கமாகி விட்டது. தேர் வேலை செய்பவர்கள் யாவருமே இவர்களை எசமானரின் மகள் என்று மரியாதையோடு வரவேற்பதும் இவர்சள் அந்தத் தொழிலா ளர்கள் யாவருடனும் கலகலப்பாகப் பேசிவருவதும் சசஜமான கிகழ்சியாயிருந்தது.
மகியபோசனத் தின் பின் வெற்றிலை குதப்பிக் கொண்டு அமர்ந்திருக்கின்ற வேளையில் அவர்களில் சில இள வட்டங்கள் இந்த இரு பெண்களைப்பற்றிய சுவாரசியமான பேச்சில் ஈடு
16

படுவதை சாரங்கன் வேலைகளில் மூழ்கியவாறே அவதானிப்பம் தண்டு. சாதாரணமாகவே இளைஞர்களுக்குரிய முறையில் அவர் களின் நடையுடை பாவனைகள் அங்கலாவண்ணிய வர்ணனைகள், அளவீடுகள், மதிப்பீட்டுப் புள்ளிகள். என்று இவற்றை யெல்லாம் அவன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருப்பான்,
ஆனல், அவர்கள் பத்மினியின் அதிகாகரீகத்தையும், கவர்ச்) சியான தோற்றத்தையும் அசிங்கமாகவும் அப்பட்டமாகவும் வர்ணித்துக் கொண்டிருந்ததை ஒரு நாள் கேட்டபோது அவன் மிகவும் வேதனைப்பட்டான். அதன் பிறகு அவளை ஒரு நாள் தனியே சந்திக்க வாய்ப்பு நேர்ந்தபோது அதைப்பற்றி மறைமுக மாகக் குறிப்பிட்டதோடு அவளுடைய நடத்தையை உரிமை யோடு கண்டிக்கவும் செய்தான். பத்மினி அன்று அவனேப் புரிந்துகொண்டாள்.
பத்மினியின் நடை உடை பாவனைகளிலும், சிந்தனைகளிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின, சாரங்கன் எதை விரும்புகிமுன், எதை ரசிக்கிருன் என்பதை ஆராய்வதிலும் அதற்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதிலும் அவள் ஈடுபாடு கொண்டாள். அடிக்கடி ஆலயத்திற்கு வருவதும் வேண்டுதல்கள்
செய்வதும்கூட வழக்கமாகிவிட்டது.
ஏற்கனவே அவளுடைய போக்குகளால் கவலை யடைந் திருந்த மாணிக்கவாசகர் இப்போதைய அவளுடைய மாற்றங்க ளால் மகிழ்ச்சியடைந்தார். பொதுவாக, முருகானந்தம், சாரங் கன், தவம் இவர்களின் வாவும் கலந்துரையாடல்களும் அவளை அப்படி மாற்றி வருகின்றன என்பதைத் தவிரச் சிறப்பான காா ணம் எதையும் அவரால் ஊகிக்க முடியவில்லை. ஆனல் அவளு டைய இந்த மாற்றங்களைச் சிறிது சிறிதாக அவதானித்ததோடு அதற்கான உண்மைக் காரணகர்த்தா சாரங்கன்தான் என்பதையும் புரிந்துகொண்ட இன்னெரு இதயம் இருந்தது. அது யாழினி புடையதுதான். அதைப் புரிந்துகொண்டபோது அவளுக்கு
1.

Page 14
ஓரளவு ஏமாற்றமாகவும் வேதனையாகவும் கூட இருந்தது என்ருலும்கூட அந்த ஊகம் எவ்வளவு தூரம் சரியானது
என்பதில் அவளுக்கும் நிச்சயமில்லை.
அந்த உருவத்திலே அமைந்திருந்த தெய்வீக ஒளியை, ஓரளவுக்கு இந்த உருவத்திற்கு ஏற்றிவிட்டேன் என்ற திருப்தி சாரங்கலுக்கு ஏற்பட்டதாகவும் கூறமுடியாது. இந்த இரு பெண்களின் நடத்தைகளையும் ஈன்கு அவதானித்தபடி - ஆனல் அதில்-இந்த நாடகத்தில் தன் பங்கு என்ன என்பதை நிர்ண யித்துக்கொள்ள முடியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான்.
18

6
*ான் ஒரு விளையாட்டுப் பொம்மையா - ஜெகன்
நாயகியே உமையே - உந்தனுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"
* ஏன் மாஸ்டர், இப்பெல்லாம் தவத்தை இஞ்சாலப்பக்கம் காணேல்லை. ஆள் ஊரிலை இல்லையோ р э?
மாரியம்மன் கோயிலடி ஆலமரத்தின்கீழ் தனியாக அமர்ர் திருந்து பேசிக்கொண்டிருந்தனர் சாரங்கனும் முருகானந்தனும் திடீரென்று சாரங்கன் இப்படியொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு முருகானந்தத்தை நோக்கினன். முருகானந்தம் இவ ஜனத் திரும்பிப் பார்க்கவில்லை. கேரே தூரத்தில் தெற்கே தெரிந்த செல் வயல்களை அவர் கண்கள் வெறித்துக்கொண்டிருக் தன. தென்றற் காற்று ஜி.அ ஜிலுவென்று அந்த நெல் வயல்களி னுாடு புகுந்து வரும்போது அவைகள் அழகாக அசைந்து கொண்டிருந்தன.
" ஆள் உங்கைதான். ஏதோ பிஸிபோலை இருக்கு." என்று அக்கறையில்லாமல் வந்தது மாஸ்டரின் பதில், சாாக்க இனுக்கு அந்தப் பதில் மட்டுமல்ல, அவருடைய முகமும் ஆச்சரி யத்தை ஏற்படுத்தியது. அவ்வளவுகோமும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், தவத்தைப்பற்றிப் பேசியதும் முகம் மாறிப் போய் அலட்சியமாய்ப் பதில் சொல்வதேன்? ஒரு வேளை தவத் துக்கும் இவருக்குமிடையில் ஏதாவது பிரச்சினையோ. என்று மனம் குழம்பினன. அவன் மறுபடி பேச்சைக் கிளறினன்.
* இல்லை மாஸ்டர், இடையில் ஒருநாள் மட்டும் கோயிலடிப் பக்கம் வந்து கும்பிட்டிட்டு உடனையே போட்டான். என்னேடை
19

Page 15
கதைக்கேல்லை. பத்மினி வீட்டுப்பக்கமும் போகேல்லை. வேறை ஒருநாள் முேட்டிலை கண்டபொழுதும் காணகமாதிரிப் போட் டான். அதுதான் என்னுேடை ஏதாவது மன ஸ்தாபமோ தெரி யேல்லை." என்று இழுத்தான் சாரங்கன்.
முருகானந்தம் இவன் முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பாாத்து விட்டு மணலில் கைகளைத் துளா வினர். கையில் அகப் பட்ட இரண்டு கற் துணிக்கைகளை எடுத்து ஒன்ருே?டொன்று தட்டினர். அர்த்த மில்லாத அவர் செய்கைகளையும் அர்த்தம் கிறைந்த மெளனத்தையும் மிகக்கவனமாகப் பார்த்துக்கொண் டிருந்தான் சாரங்கன். கையிலிருந்த கற்களை எதிாே இருந்த கிணற்றை நோக்கி வீசினர் மாஸ்டர். இரண்டும் கிணற்றுக் கட்டில் மோதிவிட்டுக் கீழேயே விழுந்தன. ஒன்றுகூட கிணற் றுக்குள் விழவில்லை,
அவர் மனதில் பெரியபோராட்டம் கடந்துகொண்டிருந்தது. முக்கியமான ஒரு பிரச்சினையை சாரங்கனிடம் சொல்வதா ? விடுவதா ? சொல்லவேண்டிய ஒரு சந்தர்ப்பம் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. அதை எப்படி ஆரம்பிப்பது ? எப்படிச் சொல்வது?,
"சாரங்கன் ! நீ ஒரு பெரிய பிரச்சினைக்குள்ளை மாட்டுப்பட் டிருக்கிருய், அதைப்பற்றி நான் முந்தியே சொல்லியிருக்கோ இணும். எப்பிடிச் சொல்லுறதெண்டு தெரியாமல்தான்.”
A சாாங்கன் திடுக்கிட்டான். தவத்தைப்பற்றிக் கேட்கப்போக இவர் ஏதோ தன்னையே பிரச்சினைக்குள்ளை இழுக்கிறரே என்று அவன் திகைத்தான். கால்களை மடக்கி சற்று உசாாாக உட் கார்ந்து கொண்டு மாஸ்டரை உறுத்து நோக்கினன்
மாஸ்டர் இப்போதும் வயலில் வளைந்து தலைசாய்ந்து கிற்கும் பொன்னிற செல்மணிகள் அந்த மாலை வெய்யிலில் மின்னுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறர். சில நெற்கதிர்கள் வளர்ச்சியுரு மல் அரைவாசியில் தலை நீட்டியபடி நிற்கின்றன. * அறுவடையின்போது அவை அகப்படக்கூடும். தப்பிவிடவும் கூடும் ' என்று அவர் கிண்த்தார்.
20

* சாரங்கன், நீ உன்னை யறியாமலே உன்னைச் சுற்றி ஒரு வலைச்சுருக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிரு?ய். அந்த வலை உன்னை எந்த விதத்தில் பாதிக்குமோ எனக்குத் தெரியாது. வலையிலை இருந்து தப்பிக்கொள்ளிற சந்தர்ப்பம் இனி இல்லை. ஆல்ை அங்த வலையை ஆர் இழுக்கப்போகினம் எண்டதுதான் பிரச்சினை ?
* என்ன மாஸ்டர் புதிர் போடிறியள். எனக்கு ஒண்டும் விளங்கேல்ஜல.
* நீ தெரிஞ்சோ தெரியாமலோ இரண்டு பெண்களின்ாை வாழ்க்கையோடை விளையாடிக் கொண்டிருக்கிருய். அதுகும் பெரிய இடக் துப் பிள்ளையன். இது எங்கை போய் முடியப் போகுதோ தெரியாது!" -
இப்போது சாரங்கனுக்கு ஒரளவு விஷயம் புரிந்தது.தனக்கும் மாணிக்கவாசகரின் பெண்களுக்குமிடையே எற்பட்டிருக்கிற நெருக்கத்தைப் பற்றித்தான் அவர் பேசுகிருர் என்பதைப் புரிந்து கொண்டான். தனக்கே பிரச்சினையாக - தானே தனக் குள் விவாதித்து விவாதிக் துச் சலித்துப்போயிருக்கின்ற ஒரு பிரச்சி%னயை இன்று இவர் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டிருக் கிருரர். அதுவும் கூட ஒரளவுக்கு நல்லது என்றே சாரங்கனுக்குக் தோன்றியது. ஏனென்ருல் தன்னுடைய ம ன தி க்குள் கிடந்து குமைந்து சுமையாகக் கனத்துக் கொன்டிருந்த ஒரு பிரச்சினையை இன்று இவருடன் பேசுவதன் மூலம் ஒரு ஆறுதல் பெற முடியுமோ என்று எண்ணினன். ஆணுல் இதற்கும் தவத் திற்கும் எங்கே முடிச்சு விழுகிறது என்று அவன் யோசித்த
போது மாஸ்டமே சொன்னர்,
6 மாணிக்கவாசகரின் பெட்டையளுக்கும் தேர் வேலை செய் யிற நச்சுப் பெடியன் சாரங்கனுக்கும் ஏதோ தொடுப்பு இருக்கு தாம் எண்டு ஒரு சின்னச் சலசலப்பு ஊருக்குள்ளை உலாவத் தொடங்கியிருக்கு. உன்னுேடை வேலை செய்யிற பொடியளே இந்தக்கதையை உலாவ வைத்திருக்கக் கூடுமெண்டு நான் நினைக் கிறன். அது என்ரை தனிப்பட்ட 5šA.
21

Page 16
* இந்தக்கதை தவத்தின்ாை காதிலையும் விழுந்ததாலை அவன் இங்கை அடிக்கடி வாறதை விரும்பேல்லை. இந்தமாதிரி ITT பிரச்சினையளுக்குள்லை தலையிட விரும்பாததாலே ஆன் மெல்ல விலகிப்போட்டுது. கான் இதைப்பற்றி உன்னட்டை எப்பிடிச் சொல்லிற தெண்டு யோசிச்சுக் கொண்டுதான் இவ் வளவு நாளும் இருந்திட்டன். இந்தக் கதை வாசகருக்கும் சாடையாய்த் தெரியும்போலை கிடக்கு. ஆனல் தேர் வெள் ளோட்டம் முடியும் மட்டும் ஒரு குழப்பமும் வரக்கூடாதெண்டு பேசாமல் இருக்கிறர் எண்டு நான் கினைக்கிறன்.
சாரங்கன் இப்போது மெனனமாக இருந்தான். அவ னுடைய முகபாவத்தை அவதானித்தபடி மாஸ்டரும் மெளனத் தையே கடைப்பிடித்தார்.
இப்படி ஒரு பிரச்சினை வரும் என்பதை முன்கூட்டியே சாரங்கன் தெரிந்து வைத்திருந்த போதிலும் இப்போது திடீ ரென்று அந்தப் பிரச்சினை தலை நீட்டியபோது அதற்கு எப்படி முகம் கொடுக்கலாம் என்று யோசிக்க முற்பட்டான். மாஸ்டரு டன் இவ்விஷதத்தைப் பூரணமாக விவாதிக்கலாம் என்று அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
முருகானந்தம் மாஸ்டர் அவன் முகத்தையே பார்த்த படி - அதிலிருந்த எதிையோ படித்தறிவது போல உற்றுநோக் கிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தார். சற்றுமுன் அவன் தவம்பற்றிப் பேசியபோது 'தவம் பக்மினி வீட்டிற்குக்கூடப் போகவில்லை” என்று சொன்ன வசனத்தில் பத்மினி விடு' என்ற சொற்முெடரை ஆராய்ந்து கொண்டிருந்தது அவர்
Labort).
யாழினி - பத்மினி இருவருக்குமே அவர் பாடம் சொல் விக்கொடுப்பவர் என்கிற முறையில் மட்டுமல்லாமல் அவர்களு டைய குடும்பத்தின் நெருங்கிய நண்பனுகவே அவர் அவர்களு டன் சகஜமாகப் பழகியதிலிருந்து அவர் அநேக விஷயங்களை அவதானித்துக் கொண்டு வந்திருக்கிருர்,
22

சாரங்கனுடைய தொடர்பு ஏற்பட்ட நாளிலிருந்தே இரண்டு பேரிலும் கிறைய மாற்றம் ஏற்படத் தொடங்கியிருந்தது. இரு வரும் அவல்ை கவரப்பட்டிருக்கின்றனர். இருவருமே அவ னில் அக்கறை காட்டினர். வாவரப் பாடங்கள் படிப்புகளில் கூட அவர்களுக்கு அக்கறை குறைந்து வருவதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. இதைப்பற்றி நேரடியாகவே கூறிக்கண் டித்ததோடு மாணிக்க வாசகரிடமும் சாடையாகக் கூறியிருக் கிமுர். அப்போது அவர் கூறிய பதிலிலிருந்தே இவர்களது ஊக்கமின்மைக்கான காரணத்தை - இவரைப்போலவே - அவ
ரும் ஒரளவு ஊகித்திருப்பதாக உணந்தார் மாஸ்டர்.
அதற்கேற்றபடி மாலை கோங்களில் கடந்து வந்த கலந்து ரையாடல்களைக் குறைப்பதற்கான வழிவகைகளை மறைமுகமாக எடுத்து வந்தார். தவமும் விஷயத்தைப் புரிந்துகொண்டு இந்த சந்தர்ப்பத்தில் தனது வருகையைக் குறைத்துக் கொண்டான். முருகானந்தமும் அத்தகைய சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்வது சுலபமாக இருந்தது.
ஆணுல், எதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே காரியத்திற்கு இந்த எற்பாடு எதிர்மறையாகப் பயன் பட்டதை முருகானந்தம் சாடையாக உணர்ந்து கொண்டார். எதோ ஒரு வகையில் இவர்கள் தனிமையில் சந்தித்துக் கொள் கிருர்கள் என்பது தான் அது, அதேகோம் உண்மையாக சாரங் கனக் கவர்ந்து கொண்டவள் இவர்களில் யார்? என்பது இவ ருக்குப் புதிராகவே இருந்தது.
பத்மினியின் நடை உடை பாவனைகள் ரசனைகளில் ஏற் பட்ட திடீர் மாறுதல்களையும், அப்போதுதான் பருவமுற்ற வள் போலத் திடீரென்று ஏற்பட்ட ஒருவகை முதிர்ச்சியையும் அவளது பேச்சு வார்த்தைகளையும் அவதானித்த மாஸ்டர் அவள் நிச்சயமாக சாரங்கனைக் காதலிக்கின்ருள் என்று புரிந்து கொண்டார்.
யாழினியோ சுபாவத்திலேயே அடக்கமானவள். வெளிப் படையாக அவள் எண்ணத்தை உணர்ந்துகொள்ள முடியாது.
என்ருலும் அவளுக்கும் அவனில் அக்கறை உண்டு.
23.

Page 17
அப்படியானல் சாரங்கனின் பங்கு இதில் என்ன? இரண்டு பேரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டு வெள்ளோட்டம்" முடிந்தவுடன் ஒடி விடப்போ கிருன ? அல்லது பக்மினியை மட்டும்தான் அவன் உள்ளன்போடு காதலிக்கிறனு? அதுவும் அல்லாமல் அவனது வெளிப்படையான மனம் திறந்த போக்கை விபரீதமாகக் கருகி இரண்டு பெண்களுமே தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரா ?
இப்போது சற்று முன் இவன் ‘பத்மினியின் வீடு” என்று சொன்னனே! மாணிக்கவாசகர் வீடு, அல்லது யாழினியின் வீடு என்று சொல்லாமல் ‘பத்மினி வீடு' என்று சொல்கின்ற அளவுற்கு இவனுக்குப் பத்மினியின் மேல்தான் ஈடுபாடு அதி கம் இருக்கிறது என்பதை இப்போது தனக்குள் நிரூபிக்க முயற்சிக்கிறர் மாஸ்டர்.
(இதிலை ஒரு முக்கியமான விசயம் சாரங்கன்! மாணிக்கவாச கருக்கு ஒரு பெட்டை இருந்து அவளை நீ காதலிச்சு அதைப் பற்றி ஊருக்கை ஒருகதை வந்தது எண்டால் என்னேப்பொறுத்த வரைக்கும் நான் பிரச்சினையாக எடுக்க மாட்டன். வேணுமெண் டால் நானும் கூட வந்து சாட்சிக் கையெழுத்துப் போட்டுக் கலி யாணத்தை முடிச்சுவைப்பன். ஆனல் .
sy
* ஒஹோ ! இவர் தனக்கு ஒரு துணையாக இருப்பாமோ” என்று நினைத்துத் திருப்தியுற்ற அதேவேளே யில் அவருடைய ஆனல் என்பது இவனைக் கொக்கி போட்டு கிமிர்த்துகிறது.
* மாணிக்கவாசகருக்கு ஏாலைஞ்சு பெட்டையள். இப்ப ஒரு பெட்டை சாதிமாறிக் கலியாணம் செய்தால் மற்றப் பிள்ளைய னின்சை வாழ்க்கை பிரச்சினையாய்ப் போம். அது மாத்திரமல்ல பத்மினி- யாழினி ரண்டு பேரிலை நீஆரைக் காதலிக்கிருய் எண்ட ஒரு கேள்வியை தான் கேட்கிற பொழுதே, அந்த ரண்டு பேருமே உன்னைக் காதலிக்கினம் எண்ட உண்மையையும் கான்
சொல்லியாகவேனும்”.
24°

* அதுதான் மாஸ்டர் எனக்கும் பிரச்சினையாயிருக்கு ” என்று அவன் அழுவாரைப்போலச் சொன்னபோது பரிதாப மாக இருந்தது மாஸ்டருக்கு.
* எது? எ ன்  ைர கேள்வியிலையா, மறுமொழியிலையோ உனக்குப் பிரச்சினை?
* கேள்வியிலையே பிரச்சினை. ?
ஒரு கலைஞனின் உனர்ச்சி மிகுந்த உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது முருகானந்தத்திற்கு. தா ன் அந் த தேரிலே செய்துள்ள இரண்டு அழகிய சிற்பங்களைப் பார்த்து அவற்றில் எது சிறந்தது என்று சொல்ல அவனல் முடியாது ! இரண்டுமே அவனுக்கு அழகாகத்தான் தோன்றும்.
கலைஞனின் உணர்ச்சிகள் மதிப்பளிக்கப்பட வேண்டியவை தான். ஆனல் அவை தவறு செய்து விடக்கூடிய அளவுக்கு அதிகப்பட்டு விடக்கூடாது என்று கினைத்தார் அவர்,
6 அப்ப, நீ ஆரைக் காதலிக்கிமு ய் எண்ட விசயத்தை நீயே இன்னும் தீர்மானிக்கேல்லை. அப்பிடியெண்டால் அந்தப பெண்களின்ாை வாழ்க்கைக்கு எ ன் ன முடிவு ? நீ இரண்டு பெண்களின் வாழ்க்கைக்கு மறுமொழி சொல்ல. வேண்டிய கட்டாயத்திலிருக்கிருய் ! அதுமட்டுமல்ல, அதுக ளுக்குப் பிறகும் ரண்டு பெட்டையள் இருக்குதுகள். s
மாஸ்டர் உண்மையில் சற்றுக் கோபமும் கண்டிப்புமாகத் தான் சொன்னர். சொல்லிக்கொண்டே எழுந்து கின்று நேரத் தைப் பார்த்தார். இரவு எழசையாகிவிட்டது. அர்த்தஜாமப் பூஜைக்குரிய நைவேத்தியத்தை எடுத்துக்கொண்டு ஆனந்தைய ரின் மகன் பைரவி ஆலயத்துக்கு வந்துகொண்டிருந்தாள்.
நீந்தத் தெரியாதவனை ஈடுக்கடலில் இழுத்துக் கொண்டு வர்து அப்படியே விட்டுவிட்டு ஒடி விட்டாற்போல் இருந்தது சாங்கனுக்கு அவன் தன் பங்குக்குரிய நியாயங்களை இன்னும் சொல்லவில்லையே. தன்னேடு மனம் விட்டுப் பேசக்
25

Page 18
கூடிய ஒரே ஒருவர் இந்த முருகானந்தம் மாஸ்டர். நிறையப் பேசி ஒரு முடிவை எடுக்கலாமென்ருல் அவர் அவசரமாகப் புறப்படுகிறர். அவருக்கும்கூட இப்படிப் புறப்பட விருப்ப மில்லைதான். இன்று ஒரு நல்ல முடிவை எடுத்துவிடத்தான் விரும்பினர். ஆனல் அவருக்கு அவசர வேலை ஒன்றிருந்தது.
* சாரங்கன், நான் நாளைக்குக் கொழும்புக்குப் போறன் இப்பவும் அது சம்பந்தமாய் ஒரு அவசர வேலையாய்த்தான் போறன். ஆறுதலாய்க் கதைக்க முடியேல்லை. மன்னிச்சுக் கொள்ளு. நான் வர காலைஞ்சு நாள் செல்லும். வந்து எல்லாம் ஆறுதலாய் யோசிப்பம். நீயும் கிதானமாய்ச் சிந்திச்சுப்பார். அதுசரி தேர் வேலையள் எந்தளவிலை இருக்கு
* எல்லாம் முடிஞ்ச மாதிரித்தான். இன்னும் மூன்று) கிழமைதானே இருக்கு வெள்ளோட்டத்துக்கு."
6 ஓ ! அப்ப எங்கடை பிரச்சினையையும் கெதியிலை முடிக்க வேணும். தேர் வேலை முடிஞ்சால் நீ ஊருக்குப் போயிடுவாய் அல்லோரி'
* கோயிலிலை வேறையும் வேலை இருக்கெண்டு கதைச்சவை
சிலகோம் பேந்தும் இருக்கவேணும். ’
சான் அப்பிடி கினைக்கேல்லே இப்ப இருக்கிற மாதிரியிலே தேர் வேலைக்குப் பிறகு வேறை வேலை நடக்காது. ஊருக்குள் ஆள சாதிப்பிரச்சினை ஒண்டு கிளம்பியிருக்குது, வெள்ளோட்டமே எக்கச்சக்கமான குழப்பத்தோடைதான் நடக்கும்போலை.
சரி ரான் வாறன். '
அவர் போய்விட்டார். சாரங்கனை விட இரண்டு வயது . தான் மூத்தவர் மாஸ்டர். ஆனல் அவருடைய அனுபவமும் அறிவும் அவனை வியக்கவைத்தன. அன்றைய அவருடைய வார்த்தைகள் அவனது சிந்தனையைச் கிளற அவன் கோபுர வாச லில் நின்று கருவறையை கோக்கிக் கரம் குவித்தான். பூஜைக்கு ஆயத்தம் கடந்து கொண்டிருந்தது.
26

7
* கண்ணனே என் கணவன் - வேறு
கருத்துமில்லை. y
திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தபெளர்ண மிக்குக் தீர்க்கம்.பக்துநாள் கிருவிழா.இன்னும் சரியாகளண்ணி மூன்றும் நாளில் கொடியேற்றம். ஒன்பதாம் நாள் தேர்த் திரு விழா, நாளை மறுதினம் வெள்ளோட்டம், தேர் வேலைகள் யாவும் பூர்க்கியாகிப் பூச்சுவேலைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்க் திருவிழாவையும் ஒப்பேற்றி முடித்து விட்டால் அந்த ஊரை விட்டே போய்விடலாம். பிரச்சினை தீர்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டார் கந்தசாமி ஆசாரியார்,
அவருக்கும் தன் மகனைச் சூழ்ந்திருக்கின்ற பிரச்சினைகள் பற்றி ஒரளவு தெரிந்திருந்தது. ஊர்ப்பேச்சுக்கள் அவர் காதி லும் ஒரளவு விழுந்திருந்தது. மாணிக்கவாசகரும் குறிப்பாகச் சொல்லியிருந்தார். அதனல் இந்த இரண்டொரு வாரங்கள் ,dir முள்ளின் மேல் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்ه yع வேலை முடிந்து புறப்பட்டால் போதும் என் றிருந்தது.
ஆனல் அது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகிவிடாது என்பதும் அவருக்குத் தெரியும், அங்கிருந்து தப்பி ஓடிவிடுவ தால் தீர்ந்து விடக்கூடிய பிரச்சினையா அது? வயதுக்கு வந்து விட்ட மகன். கண்டித்துப் பேச முடியாத நிலை. நன்மை தீமை தெரிந்தவன் அவன். இவர் சொல்லி அவன் கேட்கும் 67&ad gấidžadGU... • • •
சாரங்கன் இன்னமும் மதில்மேல் பூனையாகத் தத்தளித்துக் கொண்டிருந்தான். இரண்டொரு நாளில் வந்து விடுவதாகக்
27

Page 19
கூறிப்போன முருகானந்தத்தை இன்னமும் கண்டபாடில்லை. முக்கிய அலுவலால் தாமதமேற்படுவதாயும் திருவிழாவின் போது எப்படியும் வந்து விடுவதாயும் இரண்டொரு காளின் முன் அவனிடமிருந்து கடிதம் வங்கிருந்தது. தவம் இப்போது அந்தப் பக்கம் வருவதையே நிறுத்தியிருந்தான். தன் மனக் குழப்பத்தைத் தீர்க்க வழிதெரியாமல் சா சங்கன் த வித்தான்.
இப்பபோதெல்லாம் சாவகாசமாக பத்மினியுடனே யாழினியுடனுே பேசுவதற்கு சந்தர்ப்பம் நேருவதில்லை. எப் படியும் இது குறித்து அவர்களிடம் நேரடியாக விவாதித்துத் தீர்மானம் எடுத்து விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். எப்படியும் அந்த இருவரில் ஒருவர் தியாகம் செய்தாக வேண்டு மென்பதை மட்டும் அவன் புரிந்து கொண்டான். அது யார்?
யாழினியில் அவன் தெய்வத்தைக் கண்டிருக்கிருரன். பத்மி னியில் அவன் படுசுட்டித்தனமான ஒரு வெகுளிப்பெண்ணைக் கண்டிருக்கிருரன். இரண்டும் அவன் அவர்களை முதன் முதல் சந்தித்த போது. இப்போதும் யாழினி தெய்வத்தன்மையோடு தான் அவனுக்குத் தோன்றுகிருள், அவளைக் காணும்போது ஏதோ ஒரு வித மரியாதையும் பாசமும் தன்னுள் எழுவதைத் தான் அவன் உணர்கிறன்.
பத்மினியை முதன் முதல் கண்டபோது கவர்ச்சிகரமான அந்தக் குழந்தை முகமும் - கட்டித்தனமும் அவனைக் கவர்ந்த போதும் அவளுடைய அடக்கமற்ற தன்மையும் கவர்ச்சிகரமான
நாகரிகப் போக்கும் வெறுப்பை அளிததிருந்தன.
இப்போது. ? பத்மினி மாறிவிட்டாள். எதற்காக ? இவனுக்காக அடக்க ஒடுக்கமாக - பக்தியும் பண்பாடும் மிக்க ஒரு குடும்பப் பெண்ணுக மாறியிருக்கிருள். இவனுடைய கூட் டுறவால் - இவனுக்காக வேண்டி இப்படித் தன்னுடைய சுயத்தை இழந்து தன்னை மாற்றிக் கொண்டவளை - ஒரளவு வெளிப்படை பாகவே தனது காதலை இவனிடம் கட்டிக்கொண்டவளை - இவன் மனத்தை உண்மையாகவே கவர்ந்து விட்ட பத்மினியை
இனி ஒரு தியாகம் செய்யச் சொல்வது பொருந்தாது.
28

" நான் உண்மையாகவே பத்மினியைக் காதலிக்கிறேன் - அவளும் என்னைக் காதலிக்கிருள். அவன் இதில் உறுதி கொண் டான். ஆனல் யாழினியை அவன் மதிக்கிருரன். போற் றி வணங்கச் தயாராக இருக்கிருன். ஆனல் காதலிக்கத் தயாராக இல்லை. இதையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்கிருன்.
மிகவும் காலம் கடந்த ஞானம். இதை எப்போதோ புரிந்து கொண்டு யாழினியையும் புரிந்து கொள்ளச் செய்திருக்க வேண்டும். தெரிந்துகொண்டே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி விட்டு.
“ . . . . . .ஆனல் அவள் இத்தகைய ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடியவள். தங்கைக்காக அவள் ஒரு தியாகத்தைச் ’ தன் மனத்தைத் தானே திருப்தி செய்து கொள்வதற்காக அவளுக்கு இப்படி ஒரு ஈற்சாட்சிப் பத்திரத்தைத் தனக்குள் தயார் செய்து கொண்டு.
செய்யக் கூடியவள்.
யாழினிக்குப் பரிசளிப்பதற்காக ஒரு * குறிஞ்சி மலரை வாங்கிக் கொண்டான் சாரங்கள். நா. பார்த்தசாரதி எழுதிய அந்த காவல் அவன் மனத்தைக் கவர்ந்தது. பெண்மையின் இலக் கணமான அந்த நாயகி பூரணியை எண்ணி அவன் வியந்திருக் கிள் முன், யாழினியும் அப்படி ஒரு காவியத்தின் நாயகியாக வேண்டியவள். அவளுக்கு இந்த நாவலைப் பரிசளித்துவிட்டு அதே நேரம் எப்படியாவது தன் உள்ளக் கருத்தையும் சொல்லி விடவேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்டான்.
29

Page 20
B
* வேலவன் ஏன் என்னை வருத்துகிருன்-என்
வேதனையாலவன் பெறுவதென்ன ”
மாணிக்கவாசகர் கோயில் திருவிழாவிற்கான ஆயத்தங் களிலும் அன்று காலை நடந்த முடிந்த வெள்ளோட்டம் சம்பந்த மான நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டிருப்பதால் விடடில் கிற்கமாட் டார் என்பது அவனுக்குத் தெரியும். வாசகரின் மனைவியும் இளைய பிள்ளைகளும் எங்கோ பஸ்ஸில் புறப்படுவதையும் அவன் கண்டுகொண்டு யாழினியின் வீட்டிற்கு முன் வந்து கின் முன் , உள்ளே நுழையும்போது சற்றுத் தூரத்தில் பத்மினி பைரவியின் விட்டிற்குள் நுழைவதையும் கண்டான். அவன் எதிர்பார்த்த சாதகமான சந்தர்ப்பம அது தான் என்று எண்ணியபடி யாழி னியை அழைத்தான் சா சக்கன். ஆனல் அது அவன் எதிர் பார்த்திராத - மிகவும் பாதகமான ஒரு சந்தர்ப்பம் என்பதை அவன் அங்கிருந்து புறப்படும்போது வேதனையோடு புரிந்து
கொண்டான்.
அவன் வந்தபோது குளித்துவிட்டு அப்போது தான் வந்தி ருந்த யாழினி அழகுத் தேவதையாக மினுமினுத்தாள். சரியாக ஆடை அணியாமல் தலையைத் துவட்டியபடி கின்றவள் இவனைக் கண்டவுடன் திகைத்தாள். அவனும் ஒருகணம் திடுக்கிட்டான். எதிர்பாராத சந்திப்பு. வார்த்தை எழவில்லை. அவன் மெளனமாக * குறிஞ்சி மலரை நீட்டினன். அவள் அதை வாங்கும்போது அவன் கரங்களில் சூடான இரண்டு சொட்டுக் கண்ணிர் விழுந்தன. அவன் கிமிர்ந்து பார்த்தான். அவள் கண் கலக்கத் கலை குனிந்தாள். அவள் மிகவும் உணர்ச்சிவசப் பட்டாள். கண்கள் படபடத்தன. உதடுகள் துடித்தன. உடல் தகிங் கயது. முகம் வெளிற அவனை ஒருமுறை கிமிர்ந்து பார்த்துவிட்டு,
30.

* ஊர்க்க கை அறிஞ்சிருப்பியள், எனக்கு அவசரமாய்க் கலியான ஆயத்தம் நடக்குது." கட்டுத் தடுமாறி விம்ம லுடன் கூறியவள் குலுங்கினுள். அவன் மெளனம் கலையவில்லை. என்ன சொல்வதெனத் தெரியாமல் அவனும் துடித்திான். உணர்ச்சிவசப்பட்ட அவன் காங்கள் மட்டும் அவனது கட்டுப் பாட்டையும் மீறி இயங்கின. அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட அவன் கைகளை அவள் கசங்கள் பற்றின, அவன் தன் தீரமானத்தை மறந்தான். சொல்லவந்ததைச் சொல்ல முடியா மல் தவித்தான். அவன் எதிர்பாராத விதமாக அத்தியாயம் புதிய திசையில் திருப்பப்பட்டுவிட்டது.
அவன் ரெஞ்சம் கிறைந்த சுமையோடு அவசரம் அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தபோது அவன் முதுகைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் பத்மினி, அவன் போகும் அவசரத்தை யும் அவனது பதட்டத்தையும் பார்த்தபடி அவனே அழைக்கத் தோன்கு மல் உள்ளே நுழைந்தவள் யா ழினியின் பதட்டத்தையும் பார்த்தபோது எதையோ புரிந்துகொண்டாள். எ  ைதயும் அவள் பேசவிலலை. அறைக்குள் சென்று தாழிட்டுவிட்டுக் குமுறினுள். அவளுக்கு அந்த கோம் என்ன உணர்ச்சி இருக்க தென்று தெரியவில்லை. கோபமா ? ஆற்றமையா? கவலையா ? எமாற்றமா ......
இதே குழ்கிலையில் இத்தனை உணர்ச்சிகளையும் சேர்த்துக் குமுறியது யாழினியின் இதயம். அவளும் தன் தனியறையில் அழுதுகொண்டிருந்தாள்.
வெறித்த பார்வையுடன் - வெறிபிடித்த தடையோடு - எங்கு போகிறேன் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் நடந்து கொண்டிருக்தான் சாரங்கன்.
ஈடக்கக் கூடாதது ஈடந்துவிட்டது. அது எப்படி ஈடக் தது? ஏன் நடந்தது ? யாரால் கடந்தது ?
இதன் விளைவு என்ன ? இனி என்ன கடக்கப் போகிறது? மூன்று உள்ளங்களையும் இதே கேள்விகள் குடைந்து கொண்டி ருந்தன. கடந்து விட்ட காரியத்தின் விளைவு இப்போதுதான் அவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்து கொண்டிருந்தது.
3.

Page 21
வேகமாக நடந்துகொண்டிருந்த சாரங்கனை எதிரே வந்து கொண்டிருந்த முருகானந்தம் மாஸ்டர் பிடித்து உலுக்கிய போதுதான் சுயகிணைவு பெற்று கின்றன். அவன் தோற்றத் தைக்கண்டு பயந்துவிட்டார் மாஸ்டர். அன்று வெள்ளோட்டம் என்று அவருக்குத் தெரியும். ஏற்கனவே சாகிப்பிரச்சினை ஒன்றின் காரணமாகத் தேர் வெள்ளோட்தில் பிரச்சினைகள் ஏதும் எற்படக் கூடும் என்று எதிர்பார்த்த மாஸ்டர் இப்போது அப் படித்தான் ஏதாவது கடந்திருக்குமோ ? என்று எண்ணினர்.
பதற்றத்துடன் வினவினுர், ' என்ன சாரங்கன் இந்தக் கோலம். வெள்ளோட்டம் முடிஞ்சுதே ?”
* ஒ ! . இப்பத்தான் நடந்தது. ” என்று தடுமாறி ஞன். ' என்ன ? இப்பவோ ? காலமை எண்டல்லோ.”
*ஒமோம் . காலமைதான் நடந்தது. ’ அவனது தடு
மாற்றத்திலிருந்து வேறு ஏதோ நடந்துள்ள தெனப் புரிந்து கொண்ட மா ஸ் டர் அவனை ஆசுவாசப்பதித்தி அழைத்துக் கொண்டு அருகே ஒரு தனியிடத்தை நாடிச் சென்றன். சா சங் கன் குமுறிக் குமுறி அழக்தொடங்கினன். V,

9
“தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைப் பாராய்';
வெள்ளோட்டம் முடிந்து விட்டது. தேர்த் திருவிழா சரியானபடி நடக்குமா என்பதில்தான் இப்போது சந்தேகம் ! ஊரில் எங்கும் இதே பேச்சு. இத்தனை செலவில் செய்து முடித்த பென்னம் பெரிய தேரிலே சரியான முறையில் அம்பாள் ஆரோகணித்து வலம் வருவாளா, இல்லையா என்று ஊரில் எல் லோருமே கேட்டுக்கொண்டனர்.
ஊர் இசண்டுபட்டிருந்தது. அந்தக் கோயிலுக்கு உரிம்ை பாராட்டிக்கொண்டிருப்பவர்கள் இரண்டு பிரிவினர். தாழ்க் தப்பட்டவர்கள் அல்ல என்ருலும் கூட சாதியால் குறைந்தோர் என்று கணிக்கப்படுகிற ஒரு வகுப்பினர் பெரும்பான்மையின ராக அந்தக் கோயிலுக்கு உரிமை கொண்டாடி வந்தனர். உயர் சாதியினரென்று சொல்லிக்கொள்ளும் வேருெரு வகுப்பினரும் நாம்தான் உரிமையாளர் என்று சொல்லிக்கொண்டனர். இவ் விரு சாராரிடையே அடிக்கடி பிரச்சினைகள் போட்டிகள் எழுந் காலும்கூட அவர்களின் போட்டி காரணமாக ஆலயம் படிப் படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. அதன் இறுதிக்கட்டம் இந்தத் தேர்த்திருப்பணி.
பிரிவினை இரண்டு இருந்தாலும் ஆலயத் திருப்பணி நிர்வாகங்களில் மாணிக்கவாசகரின் வார்த்தையையும், உள் நிர் வாகத்தில் ஆனந்தையரின் வார்த்தையையும் இதுவரை யாரும் கட்டியதில்லை. அந்த இருவரும் இருசாதி மக்களோடும் ஒத்து கின்று பிரச்சினைகளைச் சரிப்படுத்தி அன்னையை வளம்படுத்திக் கொண்டிருந்தனர்.
33

Page 22
தேர்த் திருப்பணிக்கென்று சபை அமைக்கப்பெற்று வேலை கள் ஆரம்பிக்கப்பட்டபோது பிரச்சினை முளை விட்டது. grapu யிலே தங்களுக்கு, சரியான பாதிப்பங்கு அதிகாரமும் - பதவி களும் தரப்படவில்லையென்று ஒரு சாரார் சபையையும் திருப் பணியையும் புறக்கணித்தனர்.
அதுவே சிறந்ததென்று கூறி மேல் சாதிக்காரர் தாமே”
முன் கின்று எல்லாவற்றையும் நடத்தினர். இந்தி சந்தர்ப் பத்தை கல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் என்பது அவர்கள் திட்டம் இதில் தாமே முன்னின்று தேர் வேலையை ஒப்பேற்றி வைப்பதன் மூலம் ஆலயத்தின் உரிமையில் தரம் ஒருபடி உயர்ந்து விடுவதற்கு வகை உண்டு என்பது அவர்கள் எண்ணம். இதை உணர்ந்த மற்றவர்கள் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாகப் பெரும் தொகை நிதி சேகரித்துக்கொண்டு வந்து அதைத் தேர் விதியில் சேர்க்க வேணுமென்று கோரினர். ஆனல் சபை அதை ஏற்கவில்லை. அவர்களைப் புறக்கணித்துத் தேரைச் செய்து முடித்து வெள்ளோட்டமும் நடத்தியாகிவிட்டது. தம்முடைய பங்கு ஏற்றுக்கொள்ளாதவரையில் தேரில் அம்மனை ஏற்ற விட மாட்டோம் என்று இவர்கள் போராட்டம் கடத்த ஆரம்பித்த னர். தகுந்த ஆயத்தம் இல்லாததால் வெள்ளோட்டத்தை இடையூறின்றி நடக்கவிட்டனர். தேர்த் திருவிழாவிலன்று காஜலக்கிடையில் தங்கள் கிகி ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால் அம்மனைத் தேரில் ஏற்ற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.
கிலைமை பொலிஸ்வாையும் போகாமல் சமாளித்து விட வேண்டுமென்ற ஆவலில் ஆனந்தையரும், மாணிக்கவாசகரும் இருசாராரையும் சமாதானப்படுத்த முயன்றனர். பிரச்சினை திரவில்லை. இந்த நிலையில் நாளை கொடியேற்றம். இன்று இதோ, கிராம சாங்கி கடந்து கொண்டிருக்கிறது. இரவு நோம் மின் ஒளி விளக்குகளில் ஆலயமும் கேரும் அழகு பொலிய அன்னை கருவறையில் சுந்தர வதனத்துடன் பு ன் ன கை வீசுகிருள். நாரதர் கலகம் போல் இந்தப் பிரச்சினையும் நன்மையில் முடித்து விடும் என்ற கிம்மதியில் அவள் இருக்கிருளா ?
34

கோயிலின் பின்புறத்தில் கிராமசாந்தி நடந்துகொண்டிருக் கிறது, அனல் கிராமத்தில் சாந்தி நிலவுவதாகத் தெரியவில் ஆல
எரிமலைதான் குமுறிக் கொண்டிருக்கிறது. கிராமத்தில் மட்டுமா ? மூன்று உள்ளங்களிலும் அல்லவா அந்த எரிமலை குமுறுகிறது. அது வேறுவகையான எரிமலை.
கொடியேற்றத் திருவிழா விமரிசையாக நடந்துகொண் டிருந்தது. கொடி ஏறியவுடன் அதற்குமேல் கிற்க முடியாமல் வசர காரியம் ஒன்றிற்காகப் புறப்பட்டார் முருகானந்தம். ஆலயத்தில் யாழினி, பத்மினி இருவருமே காணப்படவில்லை என்பதை அவர் அவதானித்திருந்தார். வழக்கமாக ஆலய விழாக்களில் பெண்கள் பகுதியில் முன் வரிசையில் அழகுப் பதுமைகளாக கின்று மின்னுவதோடு தந்தைக்கு உதவியாக லய நிர்வாகங்களைக் கூடக் கவனித்துக் கொள்கின்ற அந்த இரு செல்வியரும் அங்கு காணப்படாதது சோபை இழந்து விட்டது போலிருந்தது. ஊர்க்கதைகள்தான் அவர்கள்வராச தற்கு முக்கிய காரணம் என்பதைப் புரிந்து கொண்டபோதும் அது பற்றி விசாரிக்கும் கோக்கத்துடன் போகும் வழியில் அவர்கள் வீட்டிலும் நுழைந்தார். இருவரும் சோகப் பதுமை களாக அமர்ந்திருந்தனர். கடந்த சம்பவங்கள் யாவும் அவருக்
குக் தெரியும் என்பதை அவர்களும் அறிவர்.
என்ன இண்டைக்குக் கோயில்பக்கமே காணேல்லை? *
என்று அவர் கேட்டபோது,
'அம்மனைத்தவிர வேறு சில தெய்வங்களையும் சேர்த்துத் தரி சிக்கநேரும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் நான்போகவில்லை’ என்று யாழினி கூறிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டான். அவர் பத்மினியை நோக்கித் திரும்பியபோது,
தெய்வங்களாக இருந்து வெறும் கருங்கல்லாக மாறிவிட்ட வைகளையும் தரிசிக்க நேரும் என்பதாலை அதைத் தவிர்ப்பதற் காக நான் போகவில்லை” என்று சொன்னுள்
அந்தப் பதிலில் வ்ருத்தத்தையும் மீறி ஓரளவு குரோதமும் கலர் திருந்தது. யாழினியின் பதிலில் அளவற்ற சோகமும் தவறி ழைத்துவிட்ட பச்சாத்தாபமும் கலந்திருந்தன. மாஸ்டருக்கும் கண்கள் கலங்கின பதில் ஏதும் சொல்லாமல் புறப்பட்டார்.
35

Page 23
1)
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து ே இன்பம் சேர்க்க மாட்டாயா?"
தேர்க்கிருவிழாவிற்கு முதல் நாள் இரவு. அன்னையின் ஆலய வாசலில் போடப்பட்ட மேடையில் அன்றைய விசேஷ கிகழ்ச்சியாக இசையரசி சந்திரா தேவியின் இன்னிசைக் கச்சேரி ஈடந்து கொண்டிருந்தது. ஊரே திரண்டு வந்திருந்து அவள் இசைண்ய ரசித்துக் கொண்டிருந்தது.
*ஆசபிமானம் வைத்தாதரிப்பார் என்னை ஆனந்தபைரவி” என்ற அவள் பாடிக் கொண்டிருந்த போது யாழினி தான் வழமையாகப் பாடித் தொழுகின்ற அவளுக்குப் பிடித்த அந்தப் பாடலைக்கேட்டு உருகி நின்முள். அந்த இசையை நேரில் சென்று சிக்க முடியாத நிலையை எண்ணி வருந்தியபடி அந்த இரு பெண் உள்ளங்களும் வீட்டில் இருந்தவாறே இசையைப் பருகின.
முருகானந்தம் இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஈழுவ விட விரும்ப வில்லை. சாரங்கனையும் அழைத்துக் கொண்டு யாழினி விட்டிற்குப் புறப்பட்டார். இன்று எப்படியும் ஒரு நல்ல முடிவை எடுத்து விட வேண்டும் என்பது அவர் திட்டம். ஆல மாத்தடியில் தனியாக அமர்ந்து மிகவும் வசதியான கோணத் தில் சந்திராவையும் ரசித்துக் கொண்டு அவள் இசையையும் ரசித்துக் கொண்டு கின்ற தவத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டனர். அரைகுறை மனத்தோடு மேடையைத் திரும்பிக் திரும்பிப் பார்த்தபடி வந்த தவத்தைப் பார்த்து மாஸ்டர் சொன்குர்.
*உன் சந்திரா எக்கும் ஒடிப் போய் விட மாட்டாள். பிறகும் பார்த்துக் கொள்ளலாம். ஆனல் சாரங்கள் காளைக்கே
36

ஊரை விட்டுப் போக வேண்டியவன். அவனுடைய பிரச்சினை தான் முக்கியம்” அவருடைய அந்த வார்த்தை அந்த கோத் கின் இறுக்கமான சூழ்நிலைக்கு ஒத்ததாக இல்லை. என்ரு அலும் தவம் அசட்டுச் சிரிப்போடு அவர்களைப் பின் தொடர் ங் சான்.
ஐக்தி மெளனங்கள் சில கணங்கள் ஒன்றை யொன்று பார்த்துக் கொண்டன. இடையில் மூன்று அனல் மூச்சு ஸ்கள். சாரங்கனை அந்த நேமத்தில் பார்த்த போது அந்தப் பெண்க ளிடம் எக்தகைய மாற்றம் ஏற்படுகின்றது என்பதை அவதா னிச்த மாஸ்டருக்கு எமாற்றம் தான். அவனைக்கண்ட சங்தோ ஷமோ அல்லது நடந்து விட்ட காரியங்களால் ஏற்பட்ட வெறுப்போ இனி நடக்கப்போகின்றவைகள் பற்றிய சவலேயோ எந்த உணர்ச்சியையும அங்கு படித்தறிய முடியவில்லை. பெண் களின் மனம் ஆழங்காண முடியாத கடல் என்று சொல்வது உண்மைதான் என்று கினைத்துக் கொண்டார். கடைசியில்
அவர்தான் மெளனத்தைக் கலைத்தார்.
'இதிலை இருக்கிற ஐஞ்சு பேருக்குமே கடந்து போன சேடகம் முழுதும்தெரியும். நாளைக்கு எப்பிடியும் சாரங்கன் (5uturas வேண்டியவன். அதினுலை இதிலே ஒளிச்சு மறைக்கிற விஷயம் எதுகும் இல்லாமல் நீங்கள் உங்கடை கருக்துக்களைச் சொல்லுங்கோ, ஒரு கல்ல முடிவை எடுக்கப் பாப்பம்.
தவத்திற்கு, தன் பங்குக்கு எதாவது சொல்ல வேணு மென்று தோன்றியது. ** இந்தவரைக்கும் நடந்து போன பிழை யளுக்குக்கூட ஒருத்தரை ஒருத்தர் சரியாகப் புரிஞ்சு கொள்ளா ததி தான் காரணமாயிருந்திருக்கு, நாங்கள் எப்பவும் மனம் விட்டுப் பேசத் தயங்கிறதாலைதான் பிரச்சினையே தோன்று து. இப்ப எங்களுக்குக் கிடைச்சிருக்கிற இந்தக் கொஞ்ச கோத்துக் குள்ளை நீங்க கினேக்கிறதை நினைக்கிறபடி சொல்லுங்கோ ” என் முன் அவன்.
இந்த இரு வேண்டுகோளும் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்
குமே சொல்லியதாக அமைந்தன. சில வினுடிகள் மெளனத்தில் கரைக்தன. ஹோலில் போடப்பட்ட மேசையின் அருகில்தான்
37

Page 24
சாரங்கன் அமர்ந்திருந்தான். மேசையில் கிடந்த “குறிஞ்சிமலர், அவன் கண்களில் பட்டது. அதை அவன் காங்கள் சாதாரண மாகப் புரட்டின. முதற் பக்கத்தில் அவன் அதனை அன்பளிப் பாகக் கொடுத்தபோது எழுதப்பட்ட வசனங்களுக்குக் கீழ் சில கவிதை வரிகள் எழுதப்பட்டிருந்தன. அவன் அவற்றைப் படித்தான்.
அவன் அதனைப் படித்துப் பார்ப்பதை அவதானித்து அவன் கண் கலங்குவதையும் கண்ட யாழினிக்கும் கண் கலங் கின. அவள் மெல்லச் சொன்னுள்
* தவறு நடந்து விட்டதென்னவோ உண்மை, சந்தர்ப்ப குழ்கிலைகள்தான் பெரும்பாலும் தவறுகளுக்குக் காரணமாய் இருக்கின்றன எண்டு நாங்கள் சமாதானம் சொல்லப் பார்த்தா அலும், கடந்து முடிஞ்சுபோன இந்தத் தவறிலை பெரும் பங்கு என்னுடையது. அதை ஒப்புக் கொள்ளிற அதே நேரத்திலை நான் அந்தத் தவறுக்குப் பிறகு இந்தக் குறிஞ்சி மலரைப் படிச்ச பொழுது - அகிலை இவர் எழுதியிருக்கிற பொன்மொழியும்தான் எனக்கு சரியான உண்மையைப் புரிய வைச்சுது, அவர் என் னுடையவரல்ல என்று ஏற்கனவே ஒரளவு எனக்குச் சந்தேகமிருந் தாலும் கூட நான் அதை ஊர்ஜிதம் செய்ய நினைச்ச நாளிலையே என்னையறியாமல் தவறு நடந்திட்டுது அதுக்காக நான் இன்னு மொரு பிழையைச் செய்யத் தயாராயில்லை. அந்த ஒருநாள் வாழ்க்கை எனக்குப் போதும். அவரை அவருக்கு உரியவளே பெற்றுக்கொள்ளிறதுக்குக் தடையாய் நான் இருக்க மாட்டன். உண்மையாய்ச் சேரவேண்டியவர்களை நீங்க சேர்த்து வைக்க வேணும்” அவள் விம்மல்களுக்கிடையே இதைச் சொல்லி முடித்த பொழுது கண்ணிர் வழிந்து கொண்டிருந்தது. நீண்ட ஒரு பெருமூச்சு அவள் வசனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
‰ኜሑ፡ '
இப்போது மூவர் பார்வையும் பத்மினியை நோக்கித் திரும்பியது. “நானும் ஒரு தமிழ்ப் பெண் தான். அதுவும் இந்துப் பெண். நான் எப்படி நேர்மையானவளாயிருக்கிறனே அப்பிடியே எனக்கு வாறவரும் இருக்கவேணும் எண்டு நான் ஆசைப்பட்டன். அப்பிடிப்பட்ட ஒருத்தரை கான் அடைஞ்
38

சிட்டதாயும் பெருமைப்பட்டன். ஆனல் அவர் தவறிழைச்ச பிறகு - அதுவும் என்னுடைய சகோதரிக்கே அந்தத் தவறைச் செய்தபிறகு கான் அவரோடை வாழத் தயாராயில்லை. அக்கா அவரோடை ஒருநாள் வாழ்ந்த திரு ப் கி போதும் என்று சொன்ன. நான் அவரைக் கண்ட நாளிளை இருந்து அந்த ஒருநாள் வரைக்கும் மா ன சி க ம + க வாழ்ந் திட்டன். அந்த வாழ்க்கை எனக்குப் போதும். என்னுடையவர் புனிதமானவர் என்கிற அந்த மன எண்ணம் சிதையாமல் இப்படியே வாழ்நாள்
பூசா வும் நான் வாழ்ந்திடுவன்.
ஆனல் அந்த ஒருநாள், ஒருசில கிமிடங்கள் மூலம் அவளுக் குரியவராகிவிட்ட அவரை அக்காவிடமே சேர்த்து வைக்கிறது நான் நீங்க செய்யிற நல்ல காரியமாய் இருக்கும் ".
மீண்டும் மெளன இருள் கப்பியது. * சாரங்கன் என்ன சொல்கிருய்” மாஸ்டர் கேட்ட கேள்வி அவன் முகத்தை நிமிர் வைத்தது. தவமும் மெளனமாக அவனையே பார்க்கிருன்,
பெண்களின் (ຄ) கிமிரவே இல்லை.
* எல்லாப் பிழைகளுக்கும் நான் காரணமாயிருந்திட்டன். ஒரு சரியான தீர்மானத்தை எடுக்க முடியாமல் தயங்கிக் கொண் டிருந்ததும், அதுபற்றி வெளிப்படையாய் பேசமுடியாமலிருந்த என்னுடைய பலவீனமும் மட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாத என்னுடைய உணர்ச்சிகளும் சேர்ந்து என்னைக் குற்றவாளியாக் கிணுப் பிறகு நான் சொல்லிறதுக்கு எதுகுமில்லை.
* கான் மனசார பத்மினியைக் காதலிச்சது உண்மைதான். யாழினிக்கு தவறிழைச்சதும் உண்மைதான், இந்த ரீதியிலை சான் ஒவ்வொரு வகையிலை ஒவ்வொருவருக்குத் துரோகம் பண் ணிட்டன். நான் ஒரு பாவி. அதினலை எனக்குரிய ஒரு வாழ்க் கையை தான் அமைச்சுக்கொள்ளப் போறதில்லை. இண்டைக்கு இலந்சை எடுக்கிற முடிவிலை இந்த இரண்டு பேராலையும் நான் தள்ளி வைக்கப்படுறதுக்கும் நியாயம் இருக்குது. நான் உள்ளத் காலையும் வாழ்ந்திட்டன். உடலாலையும் வாழ்ந்திட்டன். அது 6 கணக்குப் போதும்,
39

Page 25
*ஆனல், என் ஒருத்தினலே இந்த சண்டு பெண்களின் வாழ்க்கையும் அதன்பிறகு இவர்களின் தங்கையறையும் பாதிக் கும் எண்டு தெரிஞ்சு கொண்டு எப்பிடி நான் இந்தளவிலே கை விட்டிட்டு வெளிக்கிட முடியும் என்டு தான் யோசிக்கிறன்.”
நாலு பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்து விட்டு தன்னுடைய கருத்து தவறன தொரு அபிபபிராயத்தை எழச்
செய்யுமோ என்கிற தயக்கத்துடன் தவம் சொன்னன்,
**இதிலை உணர்ச்சிகளே ஒதுக்கி வைச் சிட்டு லெளகீகரீதி யிலை பார்த்தால் எதிர் காலப் பிரச்சினைகளை ஒரளவுக்காவது குறைக்க வேணுமெண்டால் சாரங்கன் யா ழினியைக் கலியானம் செய்கிறதைத் தவிர வேறு வழியில்லை.” அவன் வசனத்தை முடிக்க وهة ق) تكرم
“என்னுடைய முடிவிலை இனி மாற்றமில்லை. என்னைத்தயவு செய்து கிம மதியாய் இருக்க விடுங்கோ. ” au என்ற யாழினி குலுங்கி அழுதபடி தலையை முழங் கால்களுக் கிடையில் புதைத்தாள். மற்றவர்கள் பார்வை தன் மீது படி வதை உணர்ந்த பத்மினி உறுதியாக
'என்னுடைய முடிவிலையும் மாற்றமில்லை. s அவளும் பொங்கி வந்த கண்ணீரை அடக்க முயற்சித்து உதடுகளைப் பற்
களால் கடித்தபடி குனிந்திருந்தாள்.
“எனக்குக் கிடைச்சிருக்கிற கண்டன கியாயமானது தான் மாஸ்டர். என்னைத் தேடி வந்த செல்வங்களைத் தெரிவு செய்து ஒண்டை எடுககத்தவறி இரண்டிலுமே ஆசை வச்சன், இரண் டுமே என்னே மறுபடியும் கிரந்த சமாய் ஏழையாக்கி விட்டுப் போயிட்டு துகள் மாஸ்டர்.” அவன் மாஸ்டரின் தோளில்
முகத்தைப் புதைத்து விம்மினன்.
40

ஆலயத்தில்- இசைக்கச்சேரியில் தனியா வர்த்தனம் நடந்து முடிந்து சந்திரா மீராபஜன் பாட ஆரம்பிப்பது கேட்டது. கச்சேரி முடியப் போகிறது. கோயிலின் பின்புறத்தில் தனியான ஓரிடத்தில் நாளைய தேர்த் திருவிழா பற்றிய பிரச்சினையைத் நீர்ப்பதற்கான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை இன்னும் முடிந்த பாடில்லை.
இனி அங்கிருப்பதில் பயனில்லை என்றுணர்ந்த மாஸ்டர், * இனி அம்பாள் விட்டவழி, காங்கள் போட்டு வாறம்” என்று சொல்லிக்கொண்டு சாரங்கனையும் ஆசுவாசப்படுத்தி அழைத்துக் கொண்டு வெளியே இறங்கி நடந்தார். தவமும் பின் தொடர்ந் தான். கடைசி முறையாக விடைபெறும் நோக்கில் தல்ைகிமிர்ந்த
சாாங்கனை நோக்கி அந்தப் பெண்களின் தலை கிழிாவில்லை.
தன்னைப் பார்க்கக்கூட அவர்கள் விரும்பாத அளவுக்கு என்னை இப்போது அவர்கள் வெறுக்கிரு?ர்களோ ' என்று அவன் கினைத்தான். ஆனல் அவனை கிமிர்ந்து வழியனுப்புவதன் மூலம் அவனைத் தம் இதயத்திலிருந்து அகற்றிவிட விரும்பாமல் - கால மெல்லாம் அவனுடைய கினேவுகளுடனேயே வாழ்ந்துவிடுகின்ற முடிவுடன் அவர்கள் தம் இருதயத்தையும் கண்களையும் இறுகப் பூட்டிக்கொண்டு உள்ளே அழுது கொண்டிருந்தனர்.
இவர்கள் வாசலில் இறங்க - அவர்களது கடைசித் தங்கை வாசகரின் கடைசி மகள் உள்ளே நுழைந்தாள். அவள் கேட்ட
கேள்வி இவர்கள் காதில் விழுந்தது.
* அக்கா நாளைக்குத் தேர்த்திருவிழா நடக்குமே ?"
மெல்ல கடந்துகொண்டிருந்த மூவரின் காதுகளிலும் இந்த
ஒரு கேள்விக்கான இரு பதில்கள் தெளிவாக விழுந்தன.
41

Page 26
* தெரியாது. வெள்ளோட்டம் மட்டும் நடந்திட்டுக் காலம் பூசாவும் கொட்டகையிலை இருக்கிற தேர்களும் இருக்கு” இது யாழினியுடையது.
“வெள்ளோட்டமே கடக்காமல் அரைகுறைத் தேராகவே காலம் பூராவும் இருக்கிற தேர்களும் இருக்கு' இந்தப்பதில் பத்மினியி
Qalliga.
* துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மட்டாயா?” என்று இசைக்கச்சேரியின் இறுதிப் பாடலாக எழுந்த தேஷ் ' ராகப் பாடலக் கேட்டுக் கண்கள் கலங் கியபடி இந்த இரு பதில்களையும் கேட்டு இதயம் கனக் அந்த மூவரும் ஆலயவாயிலை கோக்கி கடந்து கொண்டிருந்தனர்
42.
 

கரைசேரும்
கட்டுமரங்கள்

Page 27

கரைசேரும் கட்டு மரங்கள்
ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கொப்பிகள் அத்தனையும் ஒருசில நிமிடங்களில் மேசைமுழு வதும் பரவியாய் விட்டது. ஆனல், அவள் அவற்றில் ஒரு வசனத்தைத் தானும் படிக்கவில்லை. மறுபடி எல்லாவற்றையும் அடுக்கத் தொடங்கினுள் அவள், புத்தகங்களைப் போலவே நினைவின் இதழ்களையும் ஒமுங்காக்க முடிந்தால் .
ஜானகி மெல்லத் திரும்பி மற்றவர்களை நோட்டம் விடுகி (?ள். காந்தியும், சுதாவும் படிப்பிலே முழுக்கவனமாக இருந் தனர். நீரஜா ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். ஏதாவது *நோட்ஸ் எழுதிக் கொண்டிருக்கலாம், அல்லது ஜெகந்நாத னுக்குக் காதல் கடிதம் எழுதிக் கொண்டும் இருக்கலாம்.
அவர்கள் மூவரும் சலனமில்லாமல் ஒழுங்ககாத் தத்தமது கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காண அவளுக்குப் பொருமையாகவும் சிறிது கோபமாகவும்கூடஇருந்தது. எதிர் காலம் பற்றிய சிந்தனைகள் மனத்திலே குழப்பமான திரைப் படங்களை ஒடதியிட்டுக்கொண்டிருந்தன.
ஜானகி அன்றுதான் ஊரிலிருந்து வந்திருந்தாள். அந்த நாலு பேரும் பல்கலைக்கழக மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே ஒர் அறையை அவர்கள் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். இது பல்கலைக்கழக இறுதியாண்டு என்பதால் பரீட்சைக்குப் படிப்பதற்குப் பிரயாணங்கள் இடையூறில்லா மல் இருக்கவேண்டு மென்பதற்காக இந்த ஏற்பாடு.
45.

Page 28
அது மாத்திர மா? இன்றைய நிலையில் வீட்டிலிருந்து புறப் பட்டால் ஒழுங்காகக் கலாசாலைக்கு வந்து சேர முடியுமா என் பது ஐயத்துக்கிடமான விஷயமாக வல்லவா இருக்கிறது. எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். திடீரெனப் போக்கு வரத்து வசதிகள் மட்டுமல்லாமல் குடாநாடே ஸ்தம்பிதம் அடைய வும் நேரலாம் என்ற திகில் யாருக்கும் இருப்பதால் இந்த ஏற் பாட்டை இவர்களின் பெற்றேரும் வரவேற்றிருந்தனர்.
இன்னும் ஒருவருடம் கூட இல்லை. ஐந்தாறு மாதங்களில் பல்கலைக் கழக வாழ்க்கை முடிந்துவிடும். இந்தக் கடைசிக் காலத்தை கொஞ்சம் சந்தோஷமாகக் கழிக்கலாமென்ருல் . வீட்டுக்காரர்கள் விட்டால்தானே!
அவர்களும் தான் என்ன செய்வது? வயிற்றில் நெருப் பைக் கட்டிக்கொண்டு எவ்வளவு காலத்துக்குத்தான் இருக்க முடியும்? வயதுக்கு வந்துவிட்ட மகள். பல்கலைக் கழகப் படிப்பும் முடியப்போகிறது. எங்கவாது நல்ல இடத்தில் ‘மலி வா’கக் கட்டிக் கொடுத்து விடவேண்டும் என்று பெற்ருேர் நினைப்பதிலும் நியாயமிருக்கிறது தானே,
அதுவுமல்லாமல் பல்கலைக் கழகம் என்பது பயங்கர மிரு கங்களின் குகை என்று நினைக்கப்படும் இந்த வேளையில் - வேட் டைக்காரர்கள் வலை விரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் - கலா சாலை மாணவர்களுடன் கதைக்கும் போதே அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கதைக்கவேண்டிய நேரத்தில் - மகளைப் பற்றிய கலக்கம் பெற்றேருக்கு இருப்பது நியாயம் தானே ?
மெல்லிய நீள வெண்டைக்காய்கள் தன் தோளில் படி வதை உணர்ந்து சுய நினைவடைந்த ஜானகி மறுபடியும் சகல புத்தகங்களும் குப்பையாகச் சிதறுண்டு கிடப்பதைக் கவனித் தபடி நிமிர்ந்தபோது நீரஜாவின் பரிவான விழிகள் இவள் முகத்தை அளவிட்டன,
* வட் ஹப்பிண்ட்டு யூ ? " என்று கேட்டபடி குனிந்து மேசையில் முழங்கைகளை ஊன்றிக் கைகளில் நாடியை முட் டுக் கொடுத்தபடி ஜானகியின் விழிகளை ஊடறுத்து நோக்கி ள்ை நீரஜா.
46

" நானும் அப்போதை தொடக்கம் LJIT گرنی(D6ڈT 6 مس۔۔۔۔۔۔T6är . னவோ ஒவ்வொரு புத்தகமாய் எடுத்துப் பிரிக்கிறதும் மூடி
வைக்கிறதும் யோசிக்கிறதுமாய் - ஏதோ பிரச்சினையை மனசுக்கை வைச்சுக் குடையிருய் ஜானகி . பிளிஸ் . ஸ்பீக் அவுட் °.
மெலிந்து நீண்டிருந்த நீரஜாவின் முன்கையினைத்தன் கை 1ளுக்குள் எடுத்துத் தடவியபடி அவளை நோக்கிய ஜானகி ஒரு மீண்ட பெரு மூச்சைத்தான் அவளுக்குப் பதிலாகக் கொடுத்
htг 6іт.
" கம்! வீ வில் கோ .ேபார் ஏ வோக்” நெடுக இதுக்குள்ளை அடைஞ்சு கிடந்தால் விசர் பிடிக்கும். நாங்கள் கொஞ்சம் வெளியாலை போட்டு வருவம் . . நான் ஒரு தபாலும் போஸ்ட் பண்ண வேணும்”
ஜானகி மெளனமாக எழுந்து உடைமாற்றினள். குமார சாமி ஒழுங்கையினூடாகப் புறப்பட்டு பல்கலைக் கழக வீதியில் நடந்து பிரதான வாயிலை அடைந்தனர். தபாலை ஒடிப் போய்ப் போட்டு விட்டு வந்த நீரஜா வைத் தொடந்தாள் ஜானகி, சிவன் கோயிலின் முன்னுல் இருந்த புல் வெளியில் அமர்ந்தனர்.
* பிளிஸ் கம் அவுட்! ஒரு நாளும் கவலையள், பிரச்சினை யாள மனசுக்குள்ளேயே வைச்சுக் குமுறக் கூடாது. ஆருக்கா வது செல்லி அழவேணும், இப்ப உனக்கு . பைனல் எக்ஸ்ாம் வந்து கொண்டிருக்குது. இந்த நேரத்திலை நீ வீண் பிரச்சினை யளிலே மனத்தை அலைய விடக்கூடாது. இப்ப என்ன பிரச் னெ? முகுந்தன்ரை விசயத்திலையா? ஏதேன் கடிதம் வந்ததே?”
நீரஜா அந்த மாணவிகளுக்குள் ஒரு தனிப்பிறவி. எந்த நேரமும் கலக்லப்பாக இருப்பதோடு மற்றவர்களையும் அதே போல் இருக்கச் செய்ய முயல்வாள். யாராவது முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தால் பிடிக்காது நீரஜாவுக்கு. அவர்களின் பிரச்சினையை அறிந்து அதைத் தீர்ப்பதற்கு உதவு வாள், அல்லது பிரச்சினைகளையே மறந்து கொஞ்சநேரம் கிரித் துக் கொண்டிருக்க வைப்பாள். ..,
இப்போது ஜானகியின் பிரச்சினையை வெளிக்கொணர முயல்கிருள். அவளுடைய இழைந்து பழகும் பண்பு ஜானகியை நெகிழ வைத்ததோடு முகுந்தன் விசயத்திலா?’ என்று கேட்டு
47

Page 29
நேரடியாக - வெளிப்படையாகவே பிரச்சினையைத் தொட்டி ழுத்து விட்டதும் சேர்ந்து ஜானகியைப் பேசவைக்கின்றன.
" நாலைஞ்சு மாதமாய்க் கடிதமொண்டும் வரேல்லை நீரஜா அதுக்கிடையிலை வீட்டிலை கலியாணப் பேச்சு நடக்குது.”
99
" (2 ...... g65 . . . என்று யோசனையோடு ஜானகியின் முகத்தில் தன் விழிகளை ஒட விட்டு அவள் அங்கங்களைப் பார் வையால் வருடினள். குறுகுறுப்பான அவள் விழிகள் தன் அங் கங்களில் தவழ்வதனுல் ஒருவித கூச்ச உணர்வோடு தன் முகத் தைத் திருப்பிப் பல்கலைக் கழகக் கட்டிடங்களை நோட்டம் விட்டாள் ஜானகி.
முகுந்தனுக்கும் ஜானகிக்கும் அவ்வளவு நெருக்கமான தொடர்பு இருந்ததில்லை ஒரே ஊரவர்கள், அடிக்கடி சந்திப் புக்கள் என்ற அளவில் இருவருக்கு மிடையில் ஏதோ ஒரு வகைப் புரிந்து கொள்ளல் ஏற்பட்டது, சந்திப்புக்கள் அதி கரித்த போது அது காதலாக ம்லர்ந்தது. அதற்கிடையில் முகுந்தன் வெளிநாடு போய் விட்டான். வேலை தேடும் இளை ஞர்களின் வெளிநாட்டுப் படை எடுப்பில் அவனும் புறப்பட் டுக் கப்பலொன்றில் வேலை செய்யப் போன போது விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தாள் ஜானகி.
காதலையும் கஸ்தூரியையும் ஒளித்து வைக்க முடியாது என்று சொல்வார்கள். ஜானகியின் காதலும் பகிரங்க ரகசி யமாகி விட்டது. முகுந்தன் . ஜானகி விஷயம் மெல்ல மெல் லப் பல்கலைக் கழகத் தோழிகளிடையே பரவியது. ஜானகி வீட்டில் கூட இது ஓரளவு தெரிந்த செய்தியாக இருந்தது.
காதல் என்பதை வரவேற்றுக் கைகொடுக்கக் கூடிய அள்வுக்குப் பெற்றேர்கள் எல்லோரும் இன்னும் மனவளர்ச்சி அடைந்துவிடாவிட்டாலும், தங்களுடைய சீதனப்பிரச்சினை கள் ஒரளவு குறைந்து விடாதா என்ற நப்பாசையும், ஒரு குமர் கரை சேர்ந்து விடுமே என்ற நிம்மதியும் காரணமாகக் தாதலின் எதிர்ப்பு ஓரளவு குறைந்து வருகிறதுதானே.
காதல் நாடகம் முடிவுக்கு வந்து, கல்யாணச் சந்தை கூடி யவுடன் தமது மகனுக்கு விலை கூற முற்படும் பெற்றேர்களும் இல்லாமல் இல்லை. இந்த நேரம் விரும்பியோ விரும்பாமலோ மெளனமாகி விடுகிற மாப்பிள்ளைக் காதலர்களும் உள்ளனர்,
48

இவ்வளவு கேளுங்கள் " என்று காதலனிடம் தூண்டிவிட்டு மெத்தனமாக இருந்து விடுகிற புத்திசாலிக் காதலிகள் கூட இருக்கிருர்கள். 1.
மகனுக்குப் பிடித்து விட்டால் மறுபேச்சில்லை. சீதனமும் வேண்டாம் சீரும் வேண்டாம் என்று சொல்லி மகனின் காத லியை மருமகளாக வரவேற்றுவிட்டு நாலைந்து வருடம் போன பிறகு ‘ நீ கொண்டு வந்த சீதனத்தில் நாங்கள் ‘எப்படி வாழ் வது?" என்று குத்திக்காட்டும் மாமியார்களும் இங்கேதான் இருக்கிருர்கள்.
ஜானகியின் பெற்ருேரும் மெளனமாகவே அவளது காதலை அங்கீகரித்தபடி முகுந்தனின் சாதி சமயம், இனஞ்சனம் எல் லாவற்றையும் கொஞ்சம் விசாரித்து வைத்திருந்தார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதும் அவர்களுக்கு வலு திருப்தி யாக இருந்தது.
ஒரு வருடத்தில் திரும்பி வருவதாகப் போன முகுந்தன் ஓராண்டு முடிவில் ஜானகிக்கு எழுதிய கடிதத்தில் மேலும் ஒரு வருடம் கழித்தே தான் நாடு திரும்பப் போவதாக எழுதி யிருந்தான். இன்னும் ஒரு மாதத்தில் முகுந்தன் போய் இரண் டாவது வருடம் முடியப்போகிறது. ஆனல் கடந்த மூன்று நாலு மாதங்களாக அவனிடமிருந்து ஜானகிக்குக் கடிதம் எதுவும் வரவில்லை.
ஜானகியின் மனக் கோட்டைகள் யாவும் ஓரளவு ஆட்டம் காணத் தொடங்கின. ஜானகியும் முகுந்தனும் சந்தித்து மனம விட்டுப் பேசியதோ பழகியதோ மிகக்குறைவு. ஒருவரை ஒருவர் தமக்குள்ளே நேசிக்கத் தொடங்கிய அவர்கள் காதல் பின்னர் கடிதமூலம் தழைத்து வளர்ந்தது. ஜானகியால் முகுந் தனை மறக்கவே முடியவில்லை. அவள் அவனை ம ன தா ர நேசித்தாள்.
இதோ விரைகின்றன மாதங்கள். இதோ நாள் நெருங்கி விட்டது. இதோ என் முகுந்தன் வரப்போகின்றன். வந்த வுடன் தன்னிடம் ஒடிவருவான் என்ற கற்பனையுடன், அப்படி யொரு அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் காத்திருந்தாள் ஜானகி.
கனவுகளே வாழ்க்கையாக, கற்பனையே துணையாக வாழ் வதற்கு ஒரு கன்னிக்கு மட்டுமே முடியும். அவளுடைய பெற்
4.

Page 30
ருேருக்கு அது முடியுமா ? அவர்கள் முன் அவள் ஒரு பிரச்சினே அவர்களது கனவுகள் வரண்டவையாகவே அமைய முடியும் அவர்களது கற்பனைகள் பயப்பிராந்திகளினுல் ஆனவை.தானே அவநம்பிக்கைகள்தான் அவர்களைப் பயமுறுத்துகின்றன.
வெளிநாட்டுக்குப் போய் வருபவன் எப்படி வருவான் என்பது சொல்ல முடியாது. நல்ல படியாகத் திரும்பி வந்தா லும் அவனுடைய செல்வச் செழிப்புடன் இவர்களது ஏழ்மை நிலை பொருந்த முடியுமா ?
“இவ்வளவு சீதனம் கொண்டுவா" என்று அவன் கேட்டால் அல்லது அவனை மீறி அவனது பெற்றேர் வற்புறுத்தினுல் என்ன செய்வது? இந்த நிலையில் அவர்கள் ஜானகிக்கு அவசரமாகத் திருமணம் செய்யும் &ாற்பாடுகளில் ஈடுபடலாயினர்
* சொல்லு ஜானகி, எங்கை கலியாணம் பேசுப்படுகுது? சீரஜா தூண்டிக் கேட்டாள்.
* முரளி எண்டு ஒருத்தர் கொழும்பிலை ஏதோ கொம் பணியிலை நல்ல உத்தியோகமாம். இரண்டாயிரத்துக்குக் கிட் டச் சம்பளம், எங்களுக்கும் ஏதோ வழியிலை சொந்தக்காரர் தான் 99
" அவருக்கு உங்கடை காதல் விவகாரம் தெரியாதே?
பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். ஆனல் அதைப் பெரிசு படுத்த அவர் விரும்பமாட்டார். எங்கடை குடும்பத்திலை அவ ருக்கு வலு மரியாதை."
* இஞ்சை பார் ஜானகி, இந்த முரளி நல்ல உத்தியோகத் திலை இருக்கிறவர், உங்கடை செந்தக்காறர். உன்னுடைய பிரச்சினை தெரிஞ்சும் கூட உன்னைப்பற்றிப் பிழையாய் எடுக் காமல் தானுய்க் கலியாணத்துக்குச் சம்மதிக்கிருர். அதினுலை உன்னிலை அவருக்கு எவ்வளவு அன்பு இருக்கவேணும்?"
நீரஜாவின் கேள்வி ஜானகியிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மெளனமாக நகங்களை மாறி மாறிக் கடித் தபடி எங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள்,
* ஜானகி, உனக்குத் தெரியுமே . ஒரு பொன்மொழி சொல்லிறவை . நீ காதலிக்கிறவரை விட உன்னைக் காதலிப்
50

பவரைக் கல்யாணம் செய்வது மேல்" எண்டு. அதிலை எவ் வளவு உண்மை இருக்குது தேரியுமே - இந்த முரளி உன்னை விரும் பிற தாலை அவர் உன்னைப் பூப்போலை வைச்சுப் பாப்பர் தானே.”
"என்னுலை முகுந்தனை மறக்க முடியேல்லையே நீரு.”
* முகுந்தன் அவ்வளவு தூரம் உன்னைக் கவர்ந்திருக்கலாம். ஆனல். அவர் உன்னை எவ்வளவு தூரம் விரும்பினர் எண்டதை யு மல்லோ யோசிக்க வேணும் உனக்கு அவர் நாலேஞ்சு மாசமாய்க் கடிதமே போடேல்லை, உன்னுலை அவரை மறக்க முடியேல்லை என்பது மெய். ஆனல், அவர் வலு சுலபமாக உன்னை மறந்திட்டார்தானே.
"இனி அவர் எப்ப வாருரோ தெரியாது. . இந்த நிலை லை அவர் உனக் ல் லொ(h வாழ்கையை வார் எண்டு யிலை அ கு நல்லொரு வாழ் த் தரு நீ நினைக் கிறியோ ஜானு?"
கீரஜாவின் கடைசிக் கேள்வி ஜானகியைக் கொக்கி போட்டு நிமிர்த்துகிறது. ஆழ்ந்த சிந்தனையோடு நீரஜா வையே பார்த்துக் கொண்டிந்தவள்,
* இன்னுமொரு கொஞ்ச நாள் அவரை எதிர்பார்க்கிறது நல்லது போலை தோன்றுது எனக்கு. எங்கடை சோதனைக்கும் இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு . அது முடியுமட்
டும் பார்க்கலாமெண்டால்."
சில கணம் இடைநிறுத்தி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த வள் தொடர்ந்தாள்.
"சாதகத்திலை ஏதோ பிரச்சினையாம். இப்ப செய்யாட்டில் இனி நா லேஞ்சு வரியத்துக்கு என்ரை சாதகத்திலை கலியானப் பலன் இல்லையாம். அதுதான் வீட்டுக்காரர் அவசரப்படுகினம்.”
* எனக்கென்னவோ ஜானகி, வலியவாற வாழ்கையை ஏற்கிறது நல்லது போலைபடுகுது. யோசிச்சுச் செய் . என்ருல், இந்த யோசனையிலை படிப்யைப் பாழ்படுத்தாதை இத்தனை வரியம் மினக்கெட்டது வீஞய்ப்போகும்.’
என்று சொல்லிக்கொண்டு ரேஜா எழுந்தாள். ஜானகியும் மெளனமாக எழுந்து அவளைப் பின் தொடர்ந்தாள்.
5լ

Page 31
ஜானகி போய் ஒரு வாரமாகி விட்டது. கடந்த வார இறு தியில் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிப் போன வளி டமிருந்து எந்தவித தகவலையும் காணவில்லை, அறைத் தோழி கள் மூவருக்கும் வியப்பாகவும் கவலையாகவும் இருந்தது. என்ன நடந்ததோ என்ற திகில். கடிதம் எழுதவும் யோசனையாக இருந்தது. வீட்டில் ஏதாவது பிரச்சனை நடந்திருந்தால் இவர் களின் கடிதம் இன்னும் விபரீதத்தை ஏற்படுத்தி விடலாம்
என்ன நடந்திருக்கலாம் என்று விதவிதமான கற்பனை களைத் தமக்குள்ளேயே வளர்த்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள். ஒருவேளை முகுந்தன் திடீரென வந்திறங்கியிருக்கலாம் அல்லது பெற்றேரின் வற்புறுத்தலால் முரளியுடன் திருணமமே நடந்திருக்கலாம்" அல்லது ஜானகி ஒரு வேளை தற்கொலை செய்திருப்பாளோ?. இந்த நினைவுகளே அவர்கள் நெஞ் சைக் குடைந்த வண்ணம் இருக்க நாட்கள் நத்தையாக நகர்ந்தன.
அடுத்த வாரத்திலும் இரண்டு நாட்கள் கழிந்தன: அன்று மாலை“லெக்சர் முடிந்து நீரஜாவும், சுதாவும், காந்தியும் அறைக்கு வந்த பொழுது அங்கே ஜானகி அவர்களுக்காகக் காத்திருந் தாள். வியப்பும் ஆர்வமும் பொங்க அவளை நோட்டம் விட் டவர்களுக்கு அவளுடைய பொலிவிழந்த முகம் வருத்தத் தைக் கொடுத்தது.
சோகமே வடிவெடுத்தவளாக - எதையோ பறிகொடுத் தவள் போல் - மெளனமாகப் புன்னகைத்த அவளருகில் வந்த ரேஜா அவள் கைகளைப் பற்றினுள். திடீரென ஏதோ
52

If >, ou GITT S அவளது இடதுகையை மேலே தூக்கி விரல் நண் நோக்கினுள். "முரளி என்று சின்னஞ்சிறு அழகிய எழுத் துக்கள் பொறித்த புதிய மோதிரம் மின்னியது.
' கொங்கராஜுலேஷன்ஸ் ஜானு' என்று கலகலப்பாகச் சொல்லி அவள் கையைக் குலுக்கி அவளை மகிழ்விக்க முற்பட் டாள் நீரஜா. மற்றவர்சளும் அவளைச் சூழ்ந்து கைகளைப் பற் றித் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆஞல், நீரஜா வின் தோள்களில் முகம் புதைத்துக் குலுங்கினுள் ஜானகி.
எந்தவித முடிவையும் சுயமாக அவள் எடுக்கமுடியாத நி%லயில், முகுந்தன் விஷயத்தில் அவளுக்கு எந்த விதமான நம் பிக்கையும் ஸ்திரப்பட முடியாத நிலையில். வீட்டுக்காரரின் தவிர்க்க முடியாத கெருக்கடி நிலையில், வேறுவழியின்றி முரளி யுடனுன திருமண ஒப்பந்தத்தில் அவள் கையொப்பமிட்டாள் மிக எளிமையான முறையில் திருமணப் பதிவு நடந்தது. பரீட் சை முடிந்த மறு மாதத்திலேயே திருமணம் நடத்துவதாகத் தீர்மானித்தனர்.
பழைய நினைவுகளைக் சுளைந்து விடவழிதெரியாமலும், புதிய உணர்வுகளை வேரூன்றச் செய்ய வகையறியாமலும் தத்தளித் நாள் ஜானகி. நெருங்கி வருகிற பரீட்சையும், சூழ்ந்து நிற் கும் படிப்பின் அவசரமும் மெல்ல மெல்ல ஜானகியை மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தன.
அவ்வப்போது முரளி அவளைத்தேடி அங்கு வந்தான் புத்தம் புதிதாகப் பொங்கிப் பிரவசிக்கின்ற அவனது காதல் உணர்வுக்கு இவளது சோக வடிவம் தடைபோடப் பார்த்தது ஆளுல் முரளி மணிதத்துவம் நிறைந்த மனிதனுக - பொறுமை போடு அவளை அணுகினுன். அவளை அவளுடைய பலத்துடனும் பலவீனத்துடனும் முழுமையாகவே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை அவன் பெற்றிருந்தான்.
* முகுந்தனை என்னுலை மறக்க முடியேல்லே யே y pa cf. ” என்று அவனிடமே சொல்லி அவன் மார்பில் முகம் புதைத்துக் குமுறி அழுகின்ற அவளை ஆதுரத்தோடு அணைத்துத்தேறுதல் சொல்வான் முரளி, எந்தவிதமான கோபமோ பொரு மையோ இல்லாமல்,
'ஜானு, சந்தர்ப்பம் சூழ் நிலையள் இப்படி ஆயிட்டுது. ஒரே படியாய் அவனை மறந்திடு எண்டு நான் சொல்லேல்லை. அவனே
53

Page 32
உன்ரை ஒரு பழைய நண்பருகதினைச் சுக் கொள்ளு. படிப்படி யாய் உன்ரை இதயத்திலை எனக்கும் ஒரு கொஞ்ச இடம்த7, போகப் போகச் சரியாயிடும் " என்று முரளி சொல்லும் போது, தன்னிடம் அவன் யாசிக்கின்ற அந்தப் பரிபூரணமான அன்பை முன்னமே பறி கொடுத்து விட்டதற்காக - அவனு டைய பாதங்களில் முழுமையாகச் சரணுகதியடைய முடியா மல் இருப்பதற்காக மனம் கசிவாள். முதலிலேயே முரளியைச் சந்திக்கா திருந்த தன்னுடைய துரதிர்ஷ்டத்தை எண்ணி வேதனைப் படுவாள்.
முரளியின் இந்த மனிதத்தன்மைக்காகவாவது தான் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் . அந்தப் பழைய பென்சிற் கோடுகளை அழித்து விடவேண்டுமென்று யோசிப் பாள். முகுந்தன் என்கிற அந்த எழில் வடிவம் அழியாத வண் னச் சித்திரமாகத் தன்னுள் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன் ?
முரளியின் பெருந்தன்மையை நினைத்துப் பூரித்துப்போய் விடுகின்ற கணங்களில் அவனுடைய விஸ்வரூபத்தின் நிழலையா வது தனது இதயத்தில் புகுத்த வேண்டுமென்று யோசிப்பாள்.
இரண்டு விதமான மன நிலைகளுக்கிடையில் தத்தளித் தாள் ஜானகி. ஸ்டீவன்ஸனின் இரட்டை மனிதன் நாவலில் வரும் கதாநாயகன் மாதிரித் தன்னுள் தான் முரண்பட்டு நின் ருள். மிஸ்டர் ஹைட் விழித்தெழுந்தால் டொக்டர் ஜெகில் மறைந்துவிடுகிருர், ஜெகிலாகவே இருக்க வேண்டுமென்று தான் அவள் நினைக்கிருள். ஆணுல் அடி மனம். - ? அடிக்கடி முரளியோடு பேசிப் பழகிப் பழைய நிலையை மெல்ல மெல்ல மறக்க முயன்று கொண்டிருந்தாள். முரளியுடன் வேளியே புறப்பட்டு சினிமாவுக்கும் கடைத்தெருவுக்கும் போய்வரத் தொடங்கிளுள். ,
54

அறைக்குத் திரும்பிய ஜானகி திடுக்கிட்டாள். அறை வாசலில் அவளுக்காகக் காத்திருந்த வன்-முகுந்தன்! ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள். பழைய குறும்புத்தன மன பார்வையும் கொஞ்சும் குறும் சிரிப்புமாக நின்ற அவன் அவள் நடந்து வரும் அழகை விழுங்கிக் கொண்டிருந்தான் அவன் விழிகள் அவள் உடலெங்கும் தவழ்ந்தன. அருகில் இவள் நெருங்கி வந்ததும் கையை எட்டிப் பிடிக்கப்போஞன். இவள் அவசரமாக உள்ளே ஓடிப்போய்ப் படுக்கையில் விழுந் தாள். தலையணையில் முகம் புதைத்துக் முகுறிக் குமுறி அழு தாள் - விபரம் புரியாமல் திகைத்து நின்றன் முகுந்தன்.
என்ன ஜானு என்ன நடந்தது? என்று ஆதரவுடன் கேட் டபடி அருகில் வந்து ஜானகியின் தோள்களில் கை வைத்தான். சரே லென்று கையை விலக்கிச் சற்று எட்டவிலகி நின்ற அவளை வியப்புடனும் வேதனையுடனும் பார்த்தபடி,
' ஜானகி, நான்தான் வந்திட்டனே. இனி ஏன் அழுகை? அழுகையை விட்டிட்டு என்ன பிரச்சினை எண்டு சொல்லு! நானும் எனக்கு நடந்த கஷ்டத்தைச் சொல்லிறன் ."
அடிபட்ட வேங்கையைப் போல் திரும்பிய ஜானகியின் கண்களைக் கண்டு பயந்தான் முகுந்தன். கண்ணிர் மல் கிச் சிவந்து தோன்றிய அந்த விழிகள் அவனைத் துளைத்தெடுத்தன.
* இப்போ ஏன் இஞ்சை வந்தியள் ?”
"என்ன ஜானகி இது? நான் என்ரை ஜானகியை விட் டிட்டு வேறை எங்கை போவன்?”
55

Page 33
ஓ ! எத்தனை சங்கடமான நிலை இது. எனக்கு மட்டுமல் லாமல் இவருக்குக் கூட எத்தனையோ ஏமாற்றத்தை ஏற்படுத் தியிருக்கிறது இந்த நிலைமை. "நான் என்ரை ஜானகியை விட்டிட்டு வேறை எங்கை போவன் ’ என்று கேட்கிருனே இவன். இவனுடைய நம்பிக்கைக்கு நான் துரோகமல்லவா செய்து விட்டேன் பாவம் இவர் எப்படி இதனைத் தாங்கப்போகின்ருர்?
முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு கண்ணிர் உகுத்தாள் ஜானகி, ழுகத்தின் மேல் மூடியிருந்த அந்தக் கைகளில், அந்த விரலில் ஓ! அது என்ன? "ழுரளி என்ற எழுத்துக்களுடன் மின்னிய அந்த மோதிரம்
"ஜான!ே" என்று மறுபடி அழைத்தான் முகுந்தன். அவன் குரலில் ஏமாற்றம், வேதனை, வெறுப்பு. விரத்தி uurreny ub குமிழியிட்டன.
" என்னை ஏமாத்தி இந்த நிலைக்குத் தள்ளிப்போட்டு இப்ப வந்து ஏன் என்னைச் சாகடிக்கிறீங்கள் மூகுந்தன் ? "
'இல்லை ஜானகி. நான்ஏமாத்தேல்ல. சேமாந்திட்டன். தோன் என்னை ஏமாத்திட்டாய். திடீரென்று வந்து உன்னைத்திகைக்க வைக்கோனுமெண்டு கடிதம் கூடப்போடாமல் ரண்டரை மாசத்துக்கு முன்னமே வெளிக்கிட்டனுன், இடையிலை கப்பல பழுதுபட்டு எங்கெங்கையோ அல்லஞ்சு இஞ்சை வந்திறங்கின உடனேயே உன்னட்டை ஓடியந்தன் ஜானு. நீ . கீ இப்படி என்னை மோசம் பண்ணிட்டாய் முகுந்தன் கண்கலங் கினன். இங்கு நடந்ததை - எதுவும் செய்ய இயலாத நிலையில் தான் சிக்கி வேதனைப் படுவதைச் சொன்னுள் ஜானகி.
அறைக்குத் திரும்பி வந்த தோழிகள் மூவரும், முகுந்த னைக்கண்டு திகைத்தனர். என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்த வாறு மெல்ல நழுவி விட்டனர்.
ஜானகி மிகவும் பயத்தாள், தன் இதயத்தை எண்ணி அவள் பயந்தாள், இனி என்ன செய்வது. அழிந்து கொண் டிருந்த வண்ணச் சித்திரம் மீண்டும் புதுப்பிக்கப் படுகிறது. இறந்து கொண்டிருந்த மிஸ்டர் ஹைட் மீண்டும் உயிர் பெற் றுக் கொண்டிருக்கிருணுே ?
56

முகுந்தன் போய் விட்டான். அவன் போன நேரம் தொடக்கம் மெளனத்தையே அரணுக்கி மறுகிக் கொண்டிருந் தாள் ஜானகி. வாழ்க்கையே சூனியமாகி விட்டதாகக் கலங் கித் தவித்தாள்.
மனத்தராசு நிறுத்தப்படுகிறது. ஒரு தட்டிலே,முகுந்தன் மறுதட்டிலே முரளி, தட்டு சீசோ ஆடுகிறது. முள் துடிக்கிறது. ஜானகியின் இதயம் வலிக்கிறது. நெஞ்சைப் பிடித்துக் கொள் கிருள். இவனு, அவன? இதயம் கவர்ந்தவன் இவன். கரம் பற் றியவன் அவன். உள்ளமா ? உடலா ? கைவிரலில் மோதிரம் உறுத்தியது. காரணமில்லாமல் அதனை உறுத்துப் பார்த்தாள் முரளி . முணுமுணுக்கின்ற உதடுகளைத் தடுக்க முடியவில்லை. அவனது ஆளுமை அவளைக் கவிந்துகொள்கிறது. தன் முன்னே, நின்று புன்னகைக்கும் அந்த மென்மையான முகம் . கண் ஞறடியினூடக நோகாமல் நோக்கும் அந்தக் கருணை விழிகள் p so a அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டே போகும் அவனது விஸ்வரூபம் - ஒ அன்று பகவான் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் காட்டிய விஸ்வ ரூப தர்சனம் என்பது இதுதானே? மேலே உயர்ந்து கொண் டிருக்கும் அவனது தோற்றம் . . அவள் விழிகளும் மேலே படிப் படியாக உயர்ந்து கலங்கித்துளும்பி . . பார்வையை நீர்த் திரை மறைத்ததோது அந்த நீர்த்திரையில் ஒளிரும் அந்தச் சின்னஞ்சிறிய வண்ணச் சித்திரம் . . அதில் தெரியும் குறும் புச் சிரிப்பு . நளினமான அந்த விழிகள். முகுந்தனின் அந்த உருவம் எத்தனை இலகுவாக அவளது இதயத்துள் நுழைந்து விடுகிறது. நாடி நரம்புகளில் ஊடுருவி, உணர்வு களுள் பரவி உற்சாகமூட்டும் அந்த அன்பு, கிறங்கவைக்கும் அந்த நேசமும் நெருக்கமும் .
ஆண்டவனே எனக்கேன் இந்தச் சோதனை? உள்ளம் முழு தும் முகுந்தனை நாடினலும், உடல் இந்த முரளிக்குத்தானே சொந்தம்.
அவன் இன்னும் இந்த உடலை ஆளத்தெர்டங்க வில்லைத் தானே? உடலையும் முகுந்தனுக்கே சொந்தமாக்கி விட்டால்? அதெப்படி முடியும்? கைவிரல்களைப் பற்றி அந்த மோதிரத்தை அணிவித்த கணத்திலிருந்து அவள் அவனுக்குரியவள்தானே! உள்ளத்தைப் பற்றி உலகம் என்ன கவனிக்கப் பேர்கிறதா? சட்டம் சொல்வதைத் தான் உலகம் கேட்கும். சட்டம் உட சிலப் பற்றித்தான் சொல்லும். அப்படியானுல் .
57

Page 34
கதவு தட்டும் ஒன்ச்யில் திடுக்கிட்டுச் சுயநினைவு கொண்ட ஜானகி கதவைத் திறந்தாள். அறைத் தோழிகள் மூவரும் வாசலில் பதற்றத்துடன் நுழைந்தனர். அவர்களது வெளிறிய மு சங்களைப் பார்த்து இவள் திடுக்கிட்டாள். இவளுடைய வெறித்த பார்வையை அவர்கள் வேதனையோடு உள்வாங்கிக் கொண்டனர்.
* கொழும்பிலை கலவரமாம் " நடுக்கத்துடன் சொன்ன சாந்தியின் கரத்தை அழுத்தினுள் நீரஜா. சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஜானகியைக் குழப்பத்தில் ஆழ்த்துவதை அவள் விரும்பவில்லை. ஆனல், நிலைமை தவிர்க்க முடியாதது. மெல்ல விஷயத்தை விளக்கினுள் நீரஜா.
ஐம்பத் தெட்டும் எழுபத்தேழும் பழங்கதைகளல்ல. மீண் டும் ஒரு இனக்கலவரம் நாடெங்கிலும் புகையத்தொடங்கி விட்டது. பல்லாயிரம் அனுமார்களின் வாலில் இலங்கையரசன் கொழுத்தி விட்ட நெருப்பு லங்கா தகனத்தை * ஒழுங்காக” நடத்தியது. மீண்டும் இலங்கை மக்கள் பலர் இலங்கையிலேயே அகதிகளாகி . -
மெல்ல மெல்ல ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த பிரச் சினைகள் இவர்களுக்கு முதலே தெரிந்திருந்ததுதான். ஆணுல் இப்படி மீண்டும் ஒரு எழுபத்தேழாக இது உருமாறும் என இவர்கள் நினைத்திருக்கவில்லை. இப்போது வெளியே போய் வந்த மூன்று தோழிகளும் நிறையக் கதை' களைக் கொண்டு வந்திருந்தனர். கதைகளா அவைகள் ?
அங்கே அப்படி நடந்ததாம். இங்கே இப்படி நடந்ததாம். எத்தனை பேர் கொல்லப்பட்டனர். எத்தனை வாகனங்கள் எரிக் கப்பட்டன. எத்தனை கட்டடங்கள் நொறுக்கப்பட்டன, எத் தன பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள். என்று . நீண்டு கொண்டு போன செய்திகள் . .
தான் தனக்குள்ளே மூழ்கித் தனது துயரங்களையே நினைத்து இங்கே அடைந்துகிடந்த வேளையில் வெளியில் எத்தனை சம்ப வங்கள் நடந்துவிட்டன. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேர் சொன்னவைகள் என விதவிதமான வேதனைச் சம்பவங் களை சீரஜா சொன்னுள்.
தமிழனுக்கென்று நடந்த அநியாயத்தைப் பற்றிப் பேசிய கையோடு ஒவ்வொருவரும் தனக்குத் தனக்கென்று நேரக்
58

கூடிய கஷ்ட நஷ்டங்கள், தங்கள் உறவினர்களைப் பற்றிய கவலை கள் பற்றியும் பேசிக்கொண்டனர்,
காந்தி தன் சிறிய தகப்பஞர் கொழும்பிலும், மாமா குடும் பத்தினர் பண்டாரவளையிலும் என்ன கஷ்டப்படுகிருர்களோ என்று கவலைப்பட்டாள். நீரஜா தனது காதலனை நினைத்துக் கொண்டாள். " ஜெகனுடைய தமையனும் பெண் சாதியும் வெள்ளவத்தையிலைதான் இருக்கிறவை.? என்று அவள், இழுத்தபோது, சுதா,
* இந்த முறை வெள்ளவத்தையும் சரியான மோசமெண் ட ல்லே கதைக்கினம் ' என்ருள் தொடர்ந்து,
* என்ரை அண்ணியின்ரை தேப்பன் எஸ்ரேற் பக்கத்தில் தான் எங்கையோ. ஆள் சரியான சுகமில்லாத ஆள் நல்ல காசு பணத்தோடை இருக்கிருர், படுபாவியள் என்ன பண்ணி சூறங்களோ " என்றும் வேதனைப்பட்டாள். s
மெளனமாக இருந்த ஜானகி * கொட்டாஞ்சேனைப் பக்கம் ான்ன மாதிரியெண்டு தெரியாது ଗtଗାଁtଗot ?” என்று கரகரத்த குரலில் கேட்டாள். அவள் விழிகள் கலங்கத் தொடங்கியிருந் தன. அப்போதுதான் திடீரென முரளியைப்பற்றி நினைத்துக் கொண்ட மூவரும் அவளை அனுதாபத்துடன் பார்த்தனர்.
அப்போது முகுந்தன் பரபரப்போடு அங்கு வந்து சேர்ந் தான் பரபரப்போடும் களைப்போடும் வந்த அவன் ' கலவரம் பற்றிக் கேள்விப்பட்டணியளே?' எ ன் று பொதுவாகக் கேட்டான். அவனை ஒருதடவை நிமிர் ந்து பார்த்துவிட்டு மெளனமாகத் தலை குனிந்தாள் ஜானகி, நீரஜா தான் அவ பறுக்கு விடை சொன்னுள்.
* இப்ப அதைப்பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருந்த ”.......... ۔۔۔ 0.86ir
1 ஜானகி, முரளியின்ரை அட்ரஸ், டெலிபோன் நம்பர் ேெதன் இருக்கே?' என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் முகுந்தன்.
எழுந்து மேசையருகில் சென்ற ஜானகி கொப்பியொன்றி
லிருந்து முரளியின் விலாசம் முதலியவற்றை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தாள். கலங்கியிருந்த அவளது கண் களை ப்
59

Page 35
பார்க்க அவனுக்கு வேதனையாக இருந்தது. எந்த அளவுக்கு அவள் தன்னைக் காதலித்திருந்தாலும் கணவன் என்று சட்டப் படி வந்துவிட்ட முரளிக்காக அவள் துடிப்பதை அவளுல்ை உணர முடிந்தது, கீழைத்தேயப் பண்பாட்டிற்கே உரிய அந்தப் பெருமையை வியந்துகொண்டு சிறிது நேர உரையாடலின் பின் அங்கிருந்து புறப்பட்டான் முகுந்தன்,
ஜானகியின் மனப் போராட்டத்தையும், இரட்டை மன நிலைகளையும், அந்தச் சிறிது நேர உரையாடலில் முகுந்தனல் உணர முடிந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்லவும் முடியாத நிலை அவனுக்கு தான் ஒரு முடிவுக்கு வந்து அவளது அமைதி பூான வாழ்க்கைக்கு வழிசெய்ய வேண்டும் என அவன் உணர்ந் தான். முரளியை அவன் நேரில் சந்தித்துப்பேசலாமா வேண் "டாமா என்ற இரட்டை மனநிலை அவனுள்ளத்தில் போரை திகழ்த்தியது. இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க முடியாமல் இப் போது அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன.
கப்பலில் ஒடியாடி வேலைசெய்து பழகிப் போயிருந்த அவ னது கைகளும் கால்களும் துறுதுறுத்தன. இ த யம் ஏ விக் கொண்டிருந்தது. செய் ! அல்லது சேத்து மடி சொந்தச் சகோதரர்களுக்கு இன்னல் நேர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்காக அவன் ஏதாவது செய்தாக வே ண் டு ம் எ ன முனைந்து நின்றன், வெளியூரிலிருக்கும் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதையே அறிய முடியாமல் இங்கு தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லி அந்த விபரங்களை அறிந்து உதவுவதில் ஈடுபட்டான். அகதிகளாக வரத் தொடங்கியிருந்த பலருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து தன் மன உளைச்சல்களைப் போக்கிக் கொண்டிருந்தான்.
முரளியைப் பற்றிய விபரங்களையும் சேகரிக்க முயன்றன். கடைசியில் கப்பல் மூலம் காங்கேசன்துறையில் வந்திறங்கிய அகதிகளில் முரளியும் ஒரு வகுக வந்துள்ளதாகக் கேள்விப்பட்டு நிம்மதியடைந்தான், தகவலை ஜானகிக்கு அனு ப் பி விட் டு அவன் காங்கேசன்துறைக்குப் புறப்பட்டுவிட்டான்.
காங்கேசன்துறையில் அவன் அகதிகளுக்கான உதவிகளை விரைந்து செய்து கொண்டிருக்கையிலே முரளியை அப்போ துள்ள நிலைமையில் சந்திப்பதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
60

கொழும்பிலேயே ஒரு சொந்த வீட்டை வாங்கி அங்கேயே தனது முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டிருந்தவன் முரளி, யாழ்ப்பாணத்தில் நெருங்கிய உறவினர்கள் என்ருே சொத்து சுகங்கள் என்றே எதுவித பிடிப்புமில்லாமல் தலைநகர் வாழ்க்கையில் ஊறி விட்டிருந்தது அவனது குடும்பம். இப் போது முரளியும் அவனது குடும்பத்தினரும் எதுவு மற்றவர் களாக - அகதிகளாக வந்திறங்கி முகாமிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில் “நான்தான் உங்கள் மனைவியின் முன்னுள் காத லன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு எப்படி அவன் முன் போவது? இந்தத் தயக்கத்தினுல் முகுந்தன் எட்டவே நின்று கொன்டான்.
முரளி அகதியாய் வந்திறங்கியிருப்பதை ஐ ஈ ன கி யின் தந்தை அறிந்தவுடன் தான் நேரில் போய் சந்திக்க விருப்ப மில்லாமல் தூரத்து உறவினரொருவரை முகாமுக்கு அனுப்பி யிருந்தார், அவர் வந்து முரளியுடன் "கு சலம் விசாரித்த பொழுது முகுந்தன் வெளிநாட்டிலிருந்து திடீரென வந்திறங் கிய செய்தியையும் கூறி அவனைத் தூரத்தில் வைத்து அடையா னம் காட்டவும் செய்தார்.
முரளியும் முகுந்தனைச் சந்தித்துப் பேச ஆர்வமிருந்தும் சந்தர்ப்பம் சரியாக அமையாததால் அ த னை த் தவிர்த்துக் கொண்டான். நாலைந்து நாட்களில் முரளி ஜானகியைத்தேடி வந்தான், இப்போதைய மனநிலையில் ஜானகி தன்னை எவ்விதம் வரவேற்பாள் என்பது அவனுக்கு ஒரு பரீட்சை விஞ. முகுந் தன் வந்துவிட்டான் என்பது ஒரு புறத்தில் ஏற்பட்ட தாக்கம். முரளி ஒன்றுமில்லாதவனகி விட்டான் என்பது இன்னெரு புறத்தில், தாக்கங்களின் விளைவுத்திசை எத்தகையது?
ஜானகி ஒரு ஜடமாகவே மாறிவிட்டிருந்தாள். தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஏன்தான் இப்படித் தொல்லை மேல் தொல்லைகளாக வந்துகொண்டிருக்கின்றன? முகுந்தன் வந்து சேர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் புதிய திருப்பம், இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிப்பது . முகுந்தன் வந்துவிட்ட செய்தியை முரளி அறியும்போது என்ன திருப்பம் ஏற்படலாம்? அவ ன் இவளது மனப் போராட் ட த்தை எவ்விதம் அணுகுவான் ? என்றெல்லாம் குழம் பி யி ரு ந் த ஜானகிக்கு முரளி எல்லாம் இழந்து அகதியாக வந்து சேர்ந்த செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்
61

Page 36
போது முரளி தன்னருகில் வந்து நின்றவுடன் - இருவர் கண்க ளும் கலங்கின. கனத்த மெளனத்திரை நடுவில் நின்றது. சில நாட்களாக வற்றிப் போயிருந்த கண்ணீர் வெள்ளம் கரை புரண்டது ஜானகிக்கு. அவளைத் தேற்றுவதற்குரிய உரிமை யும் தகுதியும் தனக்கு உண்டா என்ற சந்தேகத்துடன் மெது வாக வார்த்தைகளை அளந்து பயன் படுத்தினுன் முரளி.
*ஜானு, ஒரு பெண்ணின்ரை வாழ்க்கையிலை நடக்கக் கூடாதது எல்லாம் உன்ரை வாழ்க்கையிலை நடக்குது, விதியை நாங்கள் என்ன செய்யலாம்? ஜானகி, நடந்தது நடந்திட்டுது. இனி நடக்கப்போறதை நினைச்சுப் புது வாழ்க்கைக்கு எங்களை நாங்கள் சித்தப் படுத்திறதைத் தவிர வேறு வழியில்லை "
கலங்கிய அவனது கண்களில் படிந்த கண்ணிர்த் திரையிலே கரைந்த ஒவியமாகத் தெரியும் மு கு ந் த னை ப் பார்த்தபடி மெளனித்திருந்தாள் ஜானகி. முரளி துயரம் ததும்ப அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மெளனமாக விடைபெற்றன்.
62

முதிய தலைமுறை தன் நரை மயிர்களைக் கருமயிர்களுக் கிடையில் மறைக்க முயற்சித்தது. தொப்பையைத் த ட வி விட்டுக்கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குப் பார்த்தது. வெறும் இ லக் கங்க ள், வெறும் வார்த்தைகள், வெளிவேஷங்கள். உள்ளே அமுக்கப்படும் உஷ்ணப் பெருமூச்சுக்கள், பூச்சுகளுக் குள் ஒளித்திருக்கும் விகாரங்கள். நெளியும் உணர்ச்சிப் புழுக் களைத் துச்சமாக மதிக்கும் வெளித் தோல்கள். . ஓ! சமு தாயமே 1 இளைய தலைமுறையின் உணர்ச்சிகள் நிறைந்த உள் ளங்களை நீ எவ்வளவு சுலபமாக மிதித்து நசுக்க முயற்சிக்கிருய்!
ஊரிலே ஜானகியின் பெற்றேர் அ வளு  ைட ய எதிர் காலத்தை நிர்ணயிப்பதற்காகத் தரவுகளை வகைப்படுத்தித் தேற்றங்களைப் பயன்படுத்தி, புதிர்களை விடுவிக்க முனைந்து கொண்டிருக்கின்றனர்.
முகுந்தன் திரும்பி வந்து விட்டான், லட்சாதிபதியாக அவனுடைய சொத்துக்கள் வங்கிக் கணக்குகளில் இலக்கங்களா கவும், தொலைக்காட்சிப்பெட்டியாகவும், குளிர்சாதனப் பெட் டியாகவும் மோட்டார் சைக்கிளாகவும் இதுபோன்ற பிற பொருட்களாகவும் பத்திரமாக இருக்கிறது. அவன் யார் ாங்கள் மகளின் பழைய காதலன் . . சீ! இப்படி நாங்கள் முதிய தலை முறையினர் சொல்வதா? அவன் அவளை மணம் முடிக்க விரும்பியவன், இவளுக்கும் அவனைச் செய்யத்தான் விருப்பம்.
இடையில் தவறு நடத்துவிட்டது. முரளி யார்? வெறும் மணி கன். சொத்துக்கள் சுகங்களைப் பறிகொடுத்து விட்டுப் பெn றுப்புக்களையும் நம் பிக்  ைக யற் ற எதிர்காலத்தையும்
63

Page 37
சுமந்து கொண்டு எங்கள் இனத்தைப் போலவே திக்கற்ற நிலையில் நிற்கும் அகதிதான் முரளி, அவனை மணந்து எங்கள் மகள் நிர்க்க தியாகத் தவிப்பதா? காலம் கடந்துவிடவில்லையே. திருமணப் பதிவு மட்டும்தானே நடந்தது. அதைத் தள்ளி விட்டு
* பெரியோர்களே! நீங்கள்தானே சடங்குகள் சம் பி ர தாயங்கள், நீதி, நியாயங்கள் பற்றியெல்லாம் வாய் கிழியக் கத்துபவர்கள். இப்படி ஒரு முரண்பாடான காரியத்தைச் செய்யலாமா? காலங்காலமாகக் கட்டிவந்த உங்கள் குலப் பெருமை என்னுவது?’ மெல்ல முணு முணுக்கும் பலவீனமான மனச்சாட்சியின் குரல்,
மூச்1 சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது சம்பிரதாயமாவது குலப்பெருமையாவது . - நரைத்துச் சடைத்த மீசையின் அடியில் காவியேறிய பற்கள் சிரிக்க முயன்றன.
ஜானகியின் பெயரைச் சுமந்து கொண்டு தந்திச் செய்தி யொன்று தபாலில் பிரயாணம் செய்தது,
* புது வாழ்க்கைக்கு எங்களை நாங்கள் சித்தப்படுத்திற தைத் தவிர வேறு வழியில்லை” என்று என்ன துணிச்சலில் நான் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், ள்ன்னிடம் என்ன இருக்கிறது? எல்லாம் இழந்து. தொழில் கூட என்ன வாகும் என்ற நிச்சயமில்லாமல் . . .
ஒரு இருண்ட எதிர்காலத்தையுடைய நான் அவளுக்கு என்ன வாழ்க்கையைக் கொடுக்கப் போகின்றேன்" முரளியின் இதயம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
*அவள் பூரணமாக எனக்குரியவளல்லவே! அவளுடைய உடலை சட்டம் எனக்குத் தரச் சம்மதித்தாலும் அவளுடைய உள்ளம் முழுமையாக என்னை நாடமுடியாது. அந்தக் காத லுள்ளத்துக்குச் சொந்தக்காரன் வேருெருவன். அவன் வந்து விட்டான். முகுந்தனும் ஜானகியும் ஒன்று சேர வைப்பதுதான் நான் செய்ய வேண்டியது. ”
எனக்கே உரிமையான . என்னுடைய உடைமைகளையே இழந்துபோய் வந் தி ரு க்கு ம் நான் இன்ளுெருவனுடைய பொருளை எதற்காக அபகரிக்க வேண்டும். அவளை மணந்து தான் நான் இனி என்ன வாழ்க்கையை வாழப்போகின்றேன்.
64

என்னுடைய வாழ்க்கையின் ஒரு முழுமையான அத்தியாயம் நிறைவாகிவிட்டது. இனி நான் வேருெரு புதிய வாழ்க்கை யை மேற்கொள்ள வேண்டும்.
முகுந் தன் செய்யும் பணி எத்தகையது? அவனது மனவு றுதிதான் எப்படிப்பட்டது, தன்னுடைய விலைமதிக்க முடி யாத சொத்தை இன்னெருவன் அபகரித்துவிட்டான் என்று அறிந்த பின்பும் அதற்காக ஆத்திரமோ பொருமையோ கொள்ளாமல் தனது மக்களுக்காகத்தன் வாழ்க்கையை அர்ப் பணித்து விட்ட அவனது மனப்பான்மை தான் எனக்கு வழி காட்டி, நான் எனது மக்களுக்காகச் சேவை செய்யவேண்டும். மக்களுக்காக ஏர் எடுப்பவன் உழவன். அவன் வயிற்றுக்குச் சோறு போடுபவன். மக்களுக்காக எழுதுகோல் எடுத்தவன் எழுத்தாளன். அவன் அறிவுக்கும் சிந்தனைக்கும் சோறு போடு கிருன். மன உணர்வுகளுக்கும், ஏக்கங்களுக்கும் தீனிபோட்டு எதிர்கால வாழ்க்கையை உருவாக்குவதற்கு நான் எதையா வது எடுத்தாக வேண்டும். ஆம் நான் அவர்களை இணைத்து வைத்து விட்டுப் புறப்படுவேன்.
ass S
முகுந்தனை நாடி அவன் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவனது செய்தியைத் தாங்கிய கடிதம் ஜானகியை நோக்கி
நகர்ந்தது,
துன்பப்பட்டவர்களுக்காக உழைக்கும் போது அதில் எத் தனை இன்பம் இருக்கிறது. வெறுமனே சொத்து சுகங்களும், பெண்டிர் பிள்ளைகளும் என்று வாழ்வதுதான வாழ்க்கை. எங் களுக்கு மட்டுமே என்று வாழாமல் பிறருக்காகவும் வாழும் இந்த வாழ்க்கையையே எனது வாழ்க்கை பூராவும் நீடிக்கச் செய்யவேண்டும். முகுந்தனின் சிந்தனை வளர்ந்தது.
காதல் சுருகி விட்டதும் துன்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான். ஆளுல், அவள் இனிய வாழ்க்கையை வாழட் டும், முரளி நல்லவர், அவரோடு ஜானகி வாழவேண்டும், என்னை மறந்து. நான் எங்காவது ஒடிப்போய் விடவேண்டும் அப்போதுதான் அவர்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும்.
முகுந்தனின் செய்தியைத் தாங்கிய கடிதம் ஒன்று ஜான கியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
ஜானகி குழம்புகிருள் -
ZSZS
22.
RØR
65

Page 38
வாழ்க்கை என்பது இதுதான? ஏமாற்றங்களே எதிர் கொண்டிருந்தால் எப்படி முன்னேறுவது; எனக்குஏமாற்றம். முகுந்தனுக்கு ஏமாற்றம், முரளிக்கு ஏமாற்றம். நான் முகுந் தனை இழந்து முரளியை ஏற்கும்படி நிர்ப்பந்தம். முகுந்தன் என்னை இழந்து சொத்து சுகங்களைத் தேடி என்னத்தைக் கண் டார்.? முரளி தனது உடைமைகள் வேலை. சகலதையும் இழந்து என்னையடைந்து என்னத்தை எதிர் பார்க்கப் போகிருர்? நாம் எல்லோருமாக எதை இழந்து கொண்டிருக்கிருேம் ?
2S2 NSR NØR
ஜானகியின் வீட்டிலிருந்து வந்த தந்தியும், முகுந்தனின்
கடிதமும், முரளியின் கடிதமும் ஜானகியின் அறைக்கு வந்து சேர்ந்த போது - V
அந்த மூன்றிற்கும் பதிலாக -
** என்னைத் தேடவேண்டாம் ” என்ற ஜானகியின்
கடிதம் காத்திருக்கிறது.
நிறைந்தது
6f
 

இவர்களும் நானும் -
சோர்வுற்ற என் கரங்களுக்குச் சுறுசுறுப்பை ஊட்டிப் புதிய படைப்புகளை ஆக்கவும், அனுப்பவும், போட்டிகளில் வெல்லவும் காரணமாயிருக்கும் எனது வாழ்க்கைத்துணை தாக்ஷாயணிக்கும்,
இந்நாவல் நூல்வடிவில் வருவதற்காக இவற்றைப் பொறு
மையோடு பிரதிசெய்து உதவிய எனது உடன்பிறவா ச் சகோதரிக்கும்,
அழகிய அட்டையை அமைத்துத்தந்த ஒவியர் மு. விவே கானந்தன், நண்பர் மு, இரவீந்திரன் ஆகியோருக்கும்:
இந்நூலை வெளியிட்டு வைக்கும் யாழ். இலக்கியவட்டத் தினருக்கும்,
தொடர்ந்து என்னை உற்சாகமூட்டி என்னை இலக்கிய வானில் பிரகாசிக்கச்செய்கின்ற “செங்கை ஆழியான்’ அவர்கட்கும்,
தமது விளம்பரங்களுக்காக அல்லாமல் எனது நூல் வெளி
யீட்டுமுயற்சி சிறப்பதற்காக மனமுவந்து அன்பளிப்புக்களை வழங்கியவள்ளல்களாகிய வர்த்தகப்பெருமக்களுக்கும்,
வெளியீட்டிற்கான ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் நல்கிய நண்பர் எஸ். எஸ். அச்சுதன்பிள்ளைக்கும்,
அழகுற அச்சிட்டு வழங்கிய குருகுலம், சர்வசக்தி அச்சகத்தாருக்கும்.
மனமார்ந்த எனது நன்றிகள் உரித்தாகுக

Page 39
ஆசிரியரின் பிற நூல்கள் -
1. கனவுப்பூக்கள் (புதுக்கவிதைகள்) (செள மினி - சிவம்)
2. அன்னே பராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
3, இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
(தமிழியல் ஆய்வுக்கையேடு)
4. நியாயமான போராட்டங்கள்
(ரூ. 5,000). பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி) சைவநற்சிந்தனை (ஆன்மீகக் கட்டுரைகள்)
6. சைவாலயக் கிரியைகள் (அச்சில்)
o Awar»«******«* : «.«********100****************
JVith the best Compliments from
|
(tarkandu & cons
KANDY ROAD, KILINOCHCHI. General Hardware Merchants & Commission Agents
Rice Millers, Paddy Purchaser & Lorry Transporters Tophone 339
BRANCHES Dambulla Road, Mill Road, GALAWIELA. . VAVUNIYA. Tphone: 896
&
&
88.88& 888 & & 8888-8-8-8-88088.888 & X& 8888.88-888-888


Page 40


Page 41