கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடலும் கரையும்

Page 1
?/ '//
//%////ތ // ഗു/്
Αλαβάλαβα
Z് %)
/ഗ്ഗ /
2. /ഗ്ഗ--
*撃
இவரின் இதுங்கி தி: : 露リム。
لأنه قضية لا يزانيا، جنب الأهمية الرياض
്യ ദ്യ (ബ് ')
 


Page 2

கடலும் கரையும்
சிறுகதைகள்
மு.பொன்னம்பலம்
நண்பர்கள் வட்டம்

Page 3
கடலும் கரையும் (சிறுகதைகள்)
மு.பொன்னம்பலம்
First edition
Printing
Cover Photo
Cover layout :
Published by :
Price
June 1996
Techno Print 6, ЈаџauЈаrdena Rve, DehiuJela.
National Geographic Magazine
M. K.M. Shokeebo
Nanbargal Vattam, 63, Us. Silva MauJOthe, Colombo - 06,
Sri Ucanko.
Rs... 80.00

எவற்றுக்கும் இருப்பான இன்கலையாம் பேர்நிலைக்கே இது.

Page 4

உள்ளே.
மூடுபனி
அரைநாள் பொழுது
தவம்
கடலும் கரையும்
AADAVIDW
கணவன்
காடு குடிபுகல்
யுகங்களை விழுங்கிய கணங்கள்
வேட்டை
பயம் கக்கும் விஷம்
இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது?

Page 5

&:38 டல் உயிரினத்தின் பிறந்தகம். பூர்வீக இல்லம், கரை அவர்கள் புகுந்தகம், கரையின் வந்தேறு குடிகள், உயிர்கள். கரையின் கடுமையில் வெதும் பிப் போன உயிர்கள். கடலை மறந்த கரைவாசிகள் சில. கரையைத் தெரியாத கடல் வாசிகள் சில. கடலிலும் கரையிலும் வாழத் தெரிந்த இருதளவாசிகள் சில. கடலின் அடிமன ஆழமும் கரையின் மேல்மன யதார்த்தமும்;
கடல் பெண் போல் ஆழமாக இருக்கிறது.கரை ஆண்போல் மேலோட்டமாக கடுமையாக இருக்கிறது. கரையில் நிற்பவர்களுக்கு கடல், கரையின் அரண்போல் கையணைக்கிறது. கடலில் நிற்பவர்களுக்கு கரை கடலின் அரண் போல் நீள்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரம், கடலின் குளுமை, கரையின் வெதுமை, கடல் எறியும் அலைத்தாலாட்டில் கண்வளரும், கரையின் இன்சுகம், கரையின் மடியில் கடல் தலைசாய்த்துப் புரள்கின்ற இன்னோர் இன்நிலை. ஒன்றையொன்று தழுவி ஒன்றையொன்று புரிந்து இருத்தலே, வாழககை,
சம்சார சாகரம் ; பிறவிக் கடல் என்பவை எல்லாம் என்ன?
பெண்ணைப் புல்லியனைத்து இருத்தல். பின்னர் அவளோடு கைகோர்த்து, அவள் இச்சையின் ஆழத்தில் புகுந்து அவளையே கடத்தல், வாழ்க்கையின் முத்தெடுத்தல் என்பது இதுவா? இதுதான் விடுதலையா?
* 好 好
Llfiotriotë என்பது விடுதலை முகங்கொண்டது. கூர்ப்புறும் ஒவ்வொன்றும் கூர்ப்புற வைக்கும், ஒன்றை ஏற்கனவே உள்ளிட்டது. அந்த உள்ளீடு அதன் விடுதலை
& Lgth 5 RD Outh
1 மு.பொ

Page 6
முகமுடையது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் கூர்ப்புறும் ஒவ்வொன்றும் ஈற்றில் பூத்திருப்பது தன் விடுதலையையே தன் விடுதலை உருவத்தையே! அதாவது தன் சுயத்தையே! இந்தவிதத்தில் பார்க்கும்போது, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் விடுதலையை நோக்கியே எழுகின்றது எனலாம். அதனால் ஒருவனுக்கு தன் சுதந்திரம் பற்றிய பிரக்ஞை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அவன் அதை நோக்கியே செல்கிறான் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒருவித்தியாசம், சுதந்திரம் பற்றிப் பிரக்ஞை கொண்டவனது பயணம் தன் இலக்கு நோக்கிய ஒளிபெற்ற பயணம், மற்றவனது, இலக்குப்பற்றியோ தன் இருப்புப் பற்றியோ எதுவும் தெரியாது, கால் போன போக்கில் செல்லும் குருட்டுப் பயணம், இலக்கை அடைய நெடுங்காலம் தேவைப்படும்.
இந்த வித்தியாசம் இரு போக்காளரது அனுபவத்திலும், வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. முன்னவன் யானையை யானையாகப் பார்ப்பவன், பின்னவன் யானையைப் பார்த்த குருடர்களுக்குச் சமமானவன். யானையைப் பார்த்த குருடர்களின் அனுபவம், அவர்களுக்கு உண்மையானதே. ஆனால் குருட்டு அனுபவம். உண்மையின் ஒளியில் அந்த அனுபவம் நகைப்புக்கிடமானது.
霹 好 好
ਏenau நமது இலக்கிய உலகிலும் இத்தகைய இரண்டுவித போக்குகளைக் காண்கிறோம். முதலாவது, இலக்கியப் படைப்பாளி தனது இலக்குப் பற்றிய பூரண தெளிவோடு சிருஷ்டியில் ஈடுபடும் ஒளிபெற்ற போக்கு. இரண்டாவது எந்தவித தெளிவுமற்று, அவ்வவ்போது தான் தனது குருட்டுப்பார்வையால் பெறும் அனுபவங்களை உண்மையென நம்பி, அவற்றின் குருட்டொளியில் இலக்கியம் படைக்க முயல்வது. முன்னவன் மக்களை உண்மையின் தரிசனத்திற்கும், அதன்வழிவரும் விடுதலைக்கும் அழைத்துச் செல்லும் போது, பின்னவன் மக்களைப் பொய்மையில் விழுத்தி அவர்களை விடுதலையை நாடவிடாது விலங்கிடுகிறான்.
முன்னவன், சாதாரண அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றி கதைகள் எழுதும் போதும், தான் காலூன்றியிருக்கும் பார்வைப் பரப்பின் விசாலத்தால் தன் ஆக்கங்களிலும், கலை ஆழத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்துகிறான். பின்னவனோதனது குருட்டுப்பார்வையின் பிறழ்வுகளால் உண்மைக்குப் பதிலாகப் பல அபத்தங்களை ஏற்படுத்துகிறான். சுற்றும் பம்பரத்தின் உக்கிரத்தை அறியாது அதைச் ஸ்தம்பிதம் என்று ஒருவன் கூறுவது போன்ற பேர் அபத்தம். இந்த அபத்தம் பின்னவனது பார்வைக் குறுக்கத்தால் ஏற்படுவது.
ஆழமான சிருஷ்டியாளன் படைக்கும் ஒவ்வொன்றும் அவன்
கடலும் கரையும் 2 (p.Gluff

அவாவும் விடுதலையின் முகங்கள் உடைய்வை. விடுதலை ஒன்றேயாயினும் அவன் அவ்வவ் போது நிற்கும் தளங்களினாலும் அங்கு நிகழும் நிகழ்வுகளுக்கு அவன் கொடுக்கும் அழுத்தங்களினாலும் அவன் வரிக்கும் விடுதலை முகத் தோற்றங்கள் மாறுபடலாம். ஆனால் இந்தத் தோற்ற வேறுபாடுகளே முக்கியமாவை, காரணம் இந்த தோற்ற வேறுபாடுகளே கலையழகைத்தரும் கலைமுகங் கொண்டவை பரவசமூட்டுபவை: ஆத்மார்ந்த தன்மையைப் புகுத்தி, கலைப்படைப்புகளை அமரத்துவப் படுத்துபவை. இதன் மூலமே ஒரு ஆழமான கலைஞனின் பார்வை, ஆளுமை வெளிப்படுத்தப்படுகிறது. அகலிகை பற்றி எழுதிய புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனமும்', மஹாகவி எழுதிய 'அகலிகை"யும் ஒரே புராணக் கதையின் வெவ்வேறு கலைமுகங் கொண்டவை, கலையாளுமை படைத்தவை. புராணக் கதைகளில் ஒன்றான சாவித்திரி பற்றி பலர் எழுதியிருக்கலாம். ஆனால் அரவிந்தர் எழுதிய 'சாவித்திரி காவியமோ தன்னோடு ஒப்பிடற்கொன்றில்லாத பேர்கலை முகங்கொண்டது. ஒருவனது கலைப்பார்வையின் ஆழம், பல கலைக் கோட்பாடுகளையே செயலிழக்கச் செய்துவிடுவதுண்டு. ஆம் ஸ்றோங் சந்திரனில் காலடி வைத்தபோது, அதுகாலவரையிருந்த சந்திர வர்ணனைகளும் அங்கிருந்த ஒளவைக் கிழவிக் கதைகளும் அர்த்தம் இழந்து போனதுபோல்,
* * *
இன்று தமிழில் நம்பிக்கை தரக்கூடிய பல படைப்பாளிகள் பரவலாகக் காணப்படுகின்றனர். வெற்றியின் எல்லைக் கோட்டை அடைய, முகத்தை முன்னிட்டும் குதிரைகள் மாதிரி அசுரவேகத்தில் தம் சிறந்த ஆக்கங்களை முன்வைப்பதில் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். பாலகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, தோப்பில்மீரான், வண்ணநிலவன், வண்ணதாசன், என்று இவர்களில் பலர். காவ்கா ரக, ஒர்வெல் ரக, மிஸ்ரிகல் றியலிஸ் ரக, Anti short story ரக, கட்டுரைக் கதை ரக, விஞ்ஞானக் கதை ரக என்று பலவித முன்னைய இன்றைய உலகப்புனைகதைப் போக்குகளின் உள்வாங்கலின் பரிச்சயம் இவர்கள் கதைகளில் மினுக்கங்காட்ட அவை நமது மண்ணின் பேர்விளைச்சலாகநிமிர்ந்துநிற்பதே இவர்களின் ஆற்றலின் சாதனையாகும். இன்றைய ஓர் கீழைத்தேய விவசாயி, இன்றைய நவீன வெளிநாட்டு அல்லது தனது உள்ளுர் கண்டுபிடிப்புக்களான கருவிகளைக் கொண்டே தனது மண்ணின் பயிர்களில் பேர் விளைச்சலைக் காண்பது போன்றதே இவர்களது ஆற்றலாகும்.
ஆயினும் இவர்களது கலைச்சிருஷ்டிகளின் வெற்றிக்குக் காரணம் இவர்களுக்குள்ள உலக இலக்கியப் போக்கின் பரிச்சயமும், இவர்களுக்குக் கைவந்துள்ள எழுத்தாற்றலுமே (Craftmanship) என்று கூறிவிடமுடியாது.
äLh äsmuth 3 Gyp, GUIT

Page 7
மேற்குறிப்பிட்ட காரணங்கள் தனது கலைச்சிருஷ்டிகளின் வெற்றி தோல்விகளை அல்லது தரத்தை சீர்தூக்கிப் பார்க்க ஒருவனுக்கு உதவுமே தவிர வெற்றியைக் கொண்டுவந்துவிடாது. அப்படியாயின் இவர்களது படைப்பாற்றலின் வெற்றிக்கு உண்மையான காரணமாய் இருப்பது எது என்பதே கேள்வி.
உயர்ந்த கலைப் படைப்புகள் ஒவ்வொன்றும் ஆத்மார்த்த தளத்தில் வேர்கொள்பவையாக இருப்பதால், இத்தகைய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட இப்படைப்பாளர்கள் தமது ஆக்கங்களின் வெற்றிக்குக் காரணமாய் இருக்கும் இந்த ஆத்மார்த்த தளத்தைக் கண்டறிந்து அதை நோக்கிச் சுழியோடும் ஆற்றல் பெற்றிருப்பதே இவர்களின் வெற்றியின் ரகசியமாகும்.
நமது கலை இலக்கிய வரலாற்றுப் பின்னணியில், சிறுகதை, குறுநாவல், நாவல், நவீன கவிதைகள் போன்றவை அந்நியமானவையே என்று கூறப்படுவது உண்மையே. இதனால் ஏற்கனவே இவ்வகை இலக்கியங்களில் சக்கைபோடு போட்ட மேற்குலகோடு போட்டி போடுவது என்பது கஷ்டமே என்றும், தற்போதுதான் நாம் அவற்றுக்குச் சமதையான ஆக்கங்களைப் புனையத் தொடங்கியுள்ளோம் என்றும் இன்று சொல்லப்படுவது மேற்போக்காகச் சரியாக இருந்தாலும், ஆழமான நோக்கில் அது அர்த்தமற்றுச் சொல்லப்படும் வாய்பாடாகவே கொள்ள வேண்டும்.
பண்டைய உலக இலக்கியங்கள் பற்றிப் பேசும் போது அவற்றுக்குச் சமதையாகவும், அவற்றை விட உயர்ந்த சிகரங்களை எட்டியவையாகவும் நமது கீழைத்தேசத்து கலை இலக்கியங்கள் இருப்பது கண்கூடு. இராமாயணம், மகாபாரதம், காளிதாஸனின் ஆக்கங்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று இவற்றுக்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். இத்தகைய பண்டைய படைப்புகளின் அமரத்துவத்துக்கு எந்தப்பண்பு காரணமாய் உள்ளதோ அதே பண்புதான் இன்றுவரையுள்ள நவீன கலை, இலக்கியங்களின் அமரத்துவத்துக்கும் காரணமாய் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். இந்த அறிவின் தெளிவு, நமது கலை இலக்கியங்களின் வெற்றி, வரலாறு என்கிற முன்பின் கற்பிதங்களில் அல்ல, அது காலூன்றியிருக்கும் ஆத்மார்த்த தளத்திலும் அந்தத் தளத்தின் ரகசியத்தைக் கண்டறிந்து அதில் தன் படைப்புகளைக் காலூன்ற வைக்கும் கலைஞனிலுமே தங்கியுள்ளது என்பதை நமக்கு உணர்த்தும்,
உண்மைப்படி சொல்வதானால் எமது கீழை நாட்டுக் கலை கலாசார ஆன்மீகப் பின்னணியும் அதன் மையப்பண்பான ஆத்மார்த்த தளமுமே இன்றைய மேலைநாட்டு நவீன கலை இலக்கியப் புனைவுகளின் உச்சவெளிப்பாட்டுக்கும் வெற்றிக்கும் காரணமாய் இருந்துள்ளனவென்றால் அது மிகையாகாது.
கடலும் கரையும் 4 (y). Głu

ஒருமுறை எனது நண்பர் ஒருவரோடு நான் உரையாடிய போது அவர் ஈ.எம். பொஸ்ரரின் Passage to India வைப் புகழ்ந்ததோடு அது இந்திய ஆத்மீகப் பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடாகவும் நிற்பதாகக் கூறி, இத்தகைய ஒருகதையை இந்தப் பண்பாட்டில் ஊறி வந்துள்ளநம்மவர்களால் எழுத முடியவில்லையே என்றும் குறைப்பட்டுக் கொண்டார். அவர் கூற்றுச் சரியே. ஆனால் அவர்காணத்தவறியது என்னவெனில் பொஸ்ரரின் கதையை உன்னதமாக்குவது, அவரின் கைவண்ணத்தோடு அவர் கதையின் கருவாக எடுத்துக் கொண்ட கீழைநாட்டுப் பண்பாட்டின் ஆத்மீக ஆத்மார்த்த தளமே. இதனால்தான் அவரின் ஏனைய கதைகளைவிட இதில் உன்னத கலைத்துவ நிமிர்வு தெரிகிறது.
இந்த நோக்கை நாம் கட்டுப் பெட்டித்தனத்திற்கு இடங்கொடுக்காது மேலும் விரித்தால் அவற்றின் இறுக்கமற்ற வெளிக் கோடுகளில் மேலும் பல விளக்கங்கள் தரிசனமாகலாம். அதாவது மேலைநாட்டு புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கீழைத்தேசஇந்து, பெளத்த, சூபி ராவோ தத்துவங்களோடு மிகுந்த பரிச்சயமுள்ளவர்கள். இத்தரிசனங்களின் உன்னத அம்சமான ஆத்மார்த்த பண்பின் உள்வாங்கல் இவர்களது கலை, இலக்கிய ஆக்கங்களின் வெற்றிக்கு வழிவிட்டுள்ளன என்றால் அதிலும் நிரம்பிய உண்மை உண்டென்றே சொல்ல வேண்டும். G5 TLDai) LDTanflait "The Magic Mountain" Gapi upai Glapaip Gaiuu9lait "Siddharth'ரும் ஏனைய கதைகளும் ஹக்ஸ்லியின் நவீனங்கள் றோமன் றோலன்டின், ஜேம்ஸ் யொய் சின் படைப்புகள், எலியட்டின், யேற்சின் கவிதைகள் இன்னும் ஐயனெஸ்கோ, பெகட் போன்றோரின் நாடகங்கள் போன்ற சகலவற்றிலும் இப்பண்பின் கீற்றுக்கள் நின்று மினுக்கங்காட்டிப் பரவசப்படுத்துவதை நாம் காணலாம். Arthur Kotester இந்தக் கீழை தேயப் பண்பால் அதிகங் கவரப்பட்டபோதும் அதே அளவு அதில் வெறுப்பை ஏற்றிய Grudging Affection கொண்டவர். அதனால் அவருக்கு அதைக் கண்டித்துThe Lotus And The Robot என்ற பிரயாணக் கட்டுரை எழுத முடிந்த அளவுக்கு அரசியல் தவிர்ந்த ஏனைய ஆழமான நாவல்கள் அவரால் எழுத முடியாமல் போனது இப்பார்வையின் குறைபாடே எனலாம். ரஷ்யா மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கீழைத்தேயப் பண்புகளாலேயே அதிகம் கவரப்பட்டதாகும். அதனால்தான் ஆத்மார்த்தப் பண்பின் சிகரமான நாவல்களை அந்நாட்டு எழுத்தாளர்களே தந்துள்ளனர். ரோல்ஸ் ரோய், தோஸ்தயவ்ஸ்கி செகோவ், பஸ்ரநாக், அலெக்ஸான்டர் சொல்ஸ் செனிஸ் டின் போன்றவர்கள் இதன் சிறந்த உதாரணக் கலைஞர்கள்.
மனங்கடந்தியங்கும் பரவசங்களின் உறைவிடமாய் இயங்குவது இந்த ஆத்மார்த்த தளம், உயர்ந்த இசையின் உயிர்நரம்புகளாலும் உயர்ந்த கலைச் சிருஷ்டிகளின் காந்த முனைகளாலுமே ஈர்க்கப்படக் கூடிய இத்தளமே எமது கலை கலாசாரச் சூழலின் விளைநிலமாய் உள்ளது எமது பாக்கியமே.
கடலும் கரையும் 5 (p. GJIT

Page 8
ஆகவே நம்மிடம் உள்ள இந்தப் பின்னணியில் வேர் கொண்டெழ வல்ல எந்தப் படைப்பும் சிறந்த கலைப்படைப்பாய் - அது கன்னிப் படைப்பாய் இருந்தாலும் கூட -எழக்கூடிய ஒன்றாகவே இருக்கும். இதனால் புனைகதைத் துறையில் மேற்கு நாட்டின் முன்னோடித் தன்மையைச் சுட்டிக்காட்டி, நமது பின்னடைவுக்கு இதையும் ஒரு காரணமாகக் காட்டுவது ஒருவித பேதைமை என்றே கூறவேண்டும், பேதமையெல்லாம் உயர்கலை அனைத்தும் உயிர்ப்புறும் ஆத்மார்தத்தளம் பற்றிய அறியாமையாலேயே. உதாரணமாக இன்றொரு விஞ்ஞானி எங்கிருந்தாலும் அவன் இன்றைய விஞ்ஞானஉலகின் கண்டுபிடிப்புகள் சகலவற்றையும் தனக்கு தனது கண்டுபிடிப்பு களுக்கு - சாதகமாக்கிக் கொள்ளக் கூடியனவாகவே இருக்கிறான். இவ்வாறே கலை, இலக்கிய கர்த்தா ஒருவனும் தான் எங்கிருந்தாலும் இன்றைய உன்னத கலை, இலக்கிய படைப்புகள் பற்றி அறிவுடையவனாகவே இருக்கிறான். ஆனால் விஞ்ஞானியும் சரி இலக்கிய கர்த்தாவும் சரி என்னதான் தமது காலப்படைப்புகளோடும் கண்டுபிடிப்புகளோடும் பரிச்சயமுடையவர்களாய் இருந்தாலும் புதிய கண்டுபிடிப்புகளுக்குரிய தரிசனம் (Insight) இல்லையென்றால் அவன் எங்கிருந்தாலும் ஒரு மலடே. ஆகவே நாம் கூறுவது என்னவெனில் எக்கால கட்டத்திலும் ஒரு கலைஞன் எங்கிருந்தாலும் - அவன் ரிம்புக்ட்டூரில் இருந்தாலும் சரி-அவனது சிருஷ்டி மேன்மை என்பது அவனது பார்வை ஆழத்தாலும் அந்தப் பார்வையாழம் தொட்டு நிற்கும் ஆத்மார்த்த தளத்தாலுமே பெறப்படுகிறது என்பதே. அமரத்துவ கலை இலக்கியச் சிருஷ்டிகள் என்பவை மனங்கடந்தியங்கும் ஆத்மார்த்த தளத்தின் கிளர்விலேயே நடைபெறுகின்றன. இதனால்தான் முன்னொரு சமூக, பொருளாதார, அரசியல் கால கட்டத்தில் தோன்றிய ஒரு கலைச்சிருஷ்டி அக்காலகட்டம் கடந்து பிறிதொரு சமூக அரசியல், பொருளாதார காலகட்டம் நிலவும் சமயத்திலும் அதே சுவையுணர்வு குன்றாது கோலோச்சுகிற வீர்யம் உடையதாய் நிற்கிறது. காரணம் இத்தகைய கலைச்சிருஷ்டிகளை வெளிக் கொணரும் ஆத்மார்த்ததளம் என்பது புறக் காரணிகளால் பாதிப்படையாத மனதின் ஆழப்பகுதிக்குரியதாகும்.
好 好 好
6Tனது யதார்த்தமும் ஆத்மார்த்தமும்' என்னும் நூலில் இக்கோட்பாடு பற்றியே விளக்கியிருந்தேன். இந்நூலில் இடம்பெற்றுள்ள எனது பல்வேறு கட்டுரைகள் அனைத்தும் ஒவ்வொருவகையில் இக்கோட்பாட்டைத் தொட்டுக் காட்டுபவையாகவே உள்ளன. எனினும் இந்நூலின் கருத்துக்கள் எவையும் நாம் நினைத்தமாதிரி நமது எழுத்தாளர்களாலோ, விமர்சகர்களாலோ உள்வாங்கப்படவில்லை என்றே
தோன்றுகிறது.
கடலும் கரையும் 6 (p.GUT

1984ல் அச்சுக்குக் கொடுக்கப்பட்டு 1991இல் அச்சகத்தைவிட்டு வெளிவந்த இந்நூல் எண்பதுகளில் நிலவிய மார்க்சீய அழகியல் -அல்லாத அழகியல் போன்ற முரண்பட்ட கோட்பாடுகளுக்கும் மஹாகவி பற்றிய நுஃமான், சண்முக சிவலிங்கம் ஆகியோரின் விமர்சன நோக்கற்ற அதிதீவிர பற்றுதலுக்கும் ஓர் பதிலாக வெளிவந்த அதேவேளை, மஹாகவியும், நீலாவணனும் எப்படி இன்றைய இருவித உலக கலை இலக்கியப் போக்கின் யதார்த்த, ஆத்மார்த்த -தன்மையைக் காட்டுபவர்களாக உள்ளனர் என்பதையும் காட்டுவதாய் இருந்தது. அத்தோடு கலை. இலக்கிய அழகியல் மேன்மைக்குக் காரணமாய் இருப்பது ஆத்மார்த்தத்தளமே என்பதை விளக்கி அதுபற்றிய ஒரு கோட்பாட்டை இந்நூல் மூலம் முன்வைத்துள்ளேன்.
ஆங்கிலத்தில் Metaphysical Poets என்று ஒரு சிறு தொகைக் கவிஞர்கள் பற்றிய பிரிவுண்டு. ஆனால் அப்பிரிவினால் அக்கவிஞர்கள் காட்டும் கலையாழமோ, அவர்களது அழகியல் பங்களிப்போ பெறப்பட்டதில்லை. இதைச் சுட்டிக் காட்டியதோடு, உண்மையில் இந்த ஆத்மார்த்த பண்புதான் உலகப் பேரிலக்கியத்தின் தோற்றுவாயாக உள்ளதென்பதையும் சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன்.
ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஆத்மார்த்த தளத்தை ஊடுருவிநிற்கும் சிறந்த கவிஞராக நீலாவணன் உயர்ந்துநிற்கிறார். ஆனால் நீலாவணன் பற்றி இன்று பலநூல்கள் வெளியிடும் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் எனது இக்கட்டுரை சம்பந்தமாக ஒரு வார்த்தை கூடத் தொடாதது பெரும் வியப்புக்குரிய ஒன்றே. ஆனால் அவர் போலல்லாது விரிவுரையாளர் செ. யோகராச அவர்கள் பேராசிரியரின் நூல் பற்றிய (வீரகேசரி) விமர்சனத்தின் போது 'மு.பொன்னம்பலம்நீலாவணன்பற்றிகுறிப்பிடக்கூடிய ஒரு கட்டுரைஎழுதியுள்ளார் என்றாவது குறிப்பிட்டிருந்தாரே'அந்தவகையில் நான் அவருக்கு நன்றிசொல்ல வேண்டும். கவிஞர் நீலாவணன் இன்றைய ஈழத்துக் கவிஞர்களில் ஆத்மார்த்ததளத்தின்தலையாய கவிஞராக நிற்கிறார். அவரின் கவிதைகளைப் படிக்கும் போது ஸ்பானியக் கவிஞர் லோர்க்காவின் நினைவு வருவதுண்டு. கிராமியத்தில் ஒன்றிய, பாரம்பரிய மரபிலும் நாட்டார் கலைகளிலும் ஊறிய தன்மை இருவருக்கும் பொது, இத்தகைய ஆத்மார்த்த தன்மை மேலோங்கி நிற்கும் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் யார் உள்ளனர்?
இக் கேள்விக்குப் பதில் காண முற்படுகையில் எம்.எல்.எம். மன்சூர், சண்முகம் சிவலிங்கம், ரஞ்சகுமார், உமாவரதராஜன், க.சட்டநாதன், பூரீதரன் கவியுவன் போன்றோரே தேறக் கூடியவராய் உள்ளனர். இவர்களின் கதைகள் எவையும் இன்று தமிழ்நாட்டில் எழுதும் எழுத்தாளர்களின் கதைகளோடு போட்டி போடக் கூடியன. சில அவற்றையும் மிஞ்சிநிற்கவும் வல்லன என்று கூடச் சொல்லலாம்.
கடலும் கரையும் 7 (p.Gulf

Page 9
ஆத்மார்த்த தன்மை என்பது நமது ஆத்மிக கலை, கலாசாரப் பின்னணியோடு அதிக தொடர்புடையதாய் இருந்த போதும் அதில் ஊறியவர்களுக்கே அது சித்திக்கும் என்றில்லை. ஒரு நாஸ்தீகன் கூட தன் சிந்தனையின் -கலை உணர்வின் ஆழ ஒன்றுதலால் இத்தளத்தின் தரிசனம் பெற்றவனாய் இருக்கலாம். அதனால்தான் இத்தகைய எழுத்தாளர்களின் படைப்புகளும் இந்த ஆத்மார்த்த தளத்தின் அழகியல் எனப்படும் உயர்பரவசத்தை தருவனவாய் உள்ளன என்பது குறிப்பிடப்படவேண்டியது. உதாரணமாக சண்முகம் சிவலிங்கம் தீவிர மார்க்சீயவாதியாய் முகம் காட்டுபவர். ஆனால் ஆக்க இலக்கியம் என்று வரும் போது ஆழமான உள்ளுணர்வில் இயங்குபவர். அதனால் தனது மார்க்சீயப் பார்வைக்குரிய சோஷலிச யதார்த்தச் சொர சொரப்புகளையும் மீறி ஆத்மார்த்த தளம் நோக்கிப் பாயும் வீச்சுடைய படைப்பாற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது. ஆனால் ஒன்று மனங்கடந்தியங்கும் ஆத்மார்த்த தளம் நுண்ணுர்வுகளின் மின்னூடுருவலால் வெளிச்சமேற்றப்படுவது. இந்த வெளிச்சமேற்றலே அறிவாகவும், ஆனந்தமாகவும் மெய்மறந்த பரவசமாகவும் கலை, இலக்கிய அனுபவம் பெறுகிறது. அதனால் இயல்பாகவே ஆத்மீகம், இசை, கலை,இலக்கியம் போன்றவற்றில் ஆழமான ஈடுபாடு உடையோர்க்கு இது எளிதில் லயப்படும் துறையாக அமைகிறது.
இறுதியாக இந்நூல் வெளிவர உதவிய என் நண்பர்களுக்கும் என் நன்றி.
* * *
கடற்பெண்ணே கடற்பெண்ணே நீஓயாது பாட்டிசைக்கும்
ஓர் அற்புதப் பாடகி ஓங்கியெழும் நின் அலைக்குரல் உமிழும் அமிர்தப் பொழிவில் தீந்தமிழ் கரையநின் உவர் உடல்
தேனாகுமோ? அத்தேனுண்ட பெருங்களியில் நாம் தேவரென நிமிரோமோ? கடற்பெண்ணே நீஎம் வாழ்க்கைத்தேன், ஞானத்தேன் நின்னை மாந்தி மாந்தியுண்டே நாம் நீந்திக் கரைசேரோமோ! நீந்திக் கரைசேரோமோ!
கடலும் கரையும் 8 (p.GUIT

க்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். தலை வலித்தது. மீண்டும் படுப்பதற்கே உடல் கெஞ்சியது. ஆனால் படுத்து என் செய்வது? காலை ஏழு மணியாகி விட்டிருந்தது. வானொலியில் சென்று போன சூறாவளியைப் பற்றிய செய்திகள். ஆவனுக்கு எரிச்சல் எடுத்தது. தலை கூடுதலாக வலித்தது. எதிரே ஏகப்பட்ட வேலைகள் அவனை நோக்கிக் காத்துக் கிடப்பது போன்ற பிரமை. வெறும் பிரமைதான். அப்படி எந்த வேலையுமே அவனுக்கு இதுவரை இருந்ததாக இல்லை. ஆனால் ஒவ்வொருநாள் காலையும் அவன் விழித்துக் கொள்ளும் போது அந்தப் பிரமையும் கூடவே விழித்துக் கொள்ளும். அதைப் பற்றி அவன் சீராகச் சிந்தித்ததில்லை. ஒரு வேளை வேலையே இல்லாதிருந்ததால், அப்படி அவன் மனம் தன் குற்ற உணர்வை மறைத்துக் கொள்கிறதோ? கண்ணாடி எதிரே போய் நின்றான். முகம் காய்ந்து போய்க் கிடந்தது. அதிக நேரம் கண்ணாடிக்கெதிரே நிற்க அவனுக்குப் பிடிக்கவில்லை. சட்டையை எடுத்து மாட்டியவன் கைகளால் தலையைச் சரிப்படுத்திய வண்ணம் அறையைப் பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டான்.
மூடுபனி தெருவை மூடிப் பெய்து கொண்டிருந்தது. வெயிலின் மினுக்கம் விழ பத்துமணிக்கு மேல் ஆகும் போலிருந்தது. அவன் பனியோடு பனியாகக் கடைக்குப் போய்க் கொண்டிருந்தான். அந்தக் கடையில் தான் அவனது கால் நூற்றாண்டு வயதின் பாதி நூற்றாண்டைக் கழித்திருந்தான். இப்பொழு தும் அப்படித்தான் ஒரு நாளின் அரைப் பொழுதை கடையிலும் அடுத்த அரைப் பொழுதை அறையிலுமாகக் கழித்து வந்தான். அந்தக் கடையில் அவனுக்கு சம்பளமில்லாத உத்தியோகம் அவனது அண்ணரோ அத்தானோ அந்தக் கடையில் ஏதோ பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒத்தாசை
கடலும் கரையும்
9 (p. GLIT

Page 10
என்ற பெயரில் இவன் சம்பளம் வாங்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவன் அவரிடம் சம்பளம் வாங்கத் துவங்கியிருந்தால் கடையில் போட்டிருந்த முதலின் லட்சணத்தில் அவர் எப்பவோ பின்னால் போயிருக்க வேண்டும் . அதனால் இவன், தான் ஏதோ உத்தியோகம் பார்க்க முயற்சிப்பதாகவும் எதற்கோ படிப்பதாகவும் பெயர் பண்ணிக் கொண்டு அங்கு சம்பளம் வாங்காமல் சாப்பிட்டுக் கொணடிருந்தான்.
அவனுக்கு எப்படியோ சாப்பாடு கிடைத்து வந்தது உத்தியோகத்தைப் பற்றியும் படிப்பைப் பற்றியும் அவனுக்குக் கவலை இல்லை. இருந்தும் உத்தியோகம் தருவதாகச் சொல்லும் சில பரீட்சைகளுக்கு இவன் உட்கார்ந்திருக்கிறான். கூடவே குறித்த காலத்தை தவறவிட்டு, அரைத் தூக்கத்தில் விழித்துக் கொண்டிருந்தவன் போல் தராதரம் வழங்கும் சில சோதனைகளுக்கும் இவன் குந்தியிருக்கிறான். ஆனால் பெறுபேறு பற்றி யார் கவலைப்பட்டார்கள்? எனவே பழைய கதை தொடர்ந்தது.
காலையில் வந்ததும் வராததுமாக ஒட்டல் ஒன்றுக்குள் நுழைந்து ஓர் ஆறு சதத்தை வீசியெறிந்து பிளெயின் டீ ஒன்றைக் குடித்து தொண்டையை நனைத்துக் கொண்டான். நனைக்கும்போது உடலில் ஒரு நடுக்கம். புளிப்போடு தொண்டையுள் இறங்கிய பிளெயின் டீ அவனது உடலின் வெறுமையை இன்னும் கூட்டியதா அல்லது குறைத்ததா? வாந்தி வருவது போன்ற உணர்வு. அவன் பிளெயின் டீயை காலையில் குடிப்பதை வெறுத்தான். முன்னர் அவன் கோப்பி தான் குடித்து வந்தான். ஆனால் கோப்பி 12 சதத்திலிருந்து 20 சதமாக தன்னை உயர்த்தி எக்ஸ்பென்சிவ் ஆக்கிக் கொண்ட பின்னர் அவன் அதை மேலும் மேலும் தழுவ விரும்பவில்லை. ஒரேயடியாக வர்க்கம்மாறி ஆறுசதத்திற்கு இறங்கி அதை வஞ்சம் தீர்த்துக் கொண்டான். அதனால் வாந்தி, பித்தம், பஸ்ஸில் போகும் பிரயாண உணர்வு, வர்க்க மாற்றம் வயிற்றுக்குள்ளும் மாற்றம்!
காறித்துப்பிக் கொண்டு கடைக்குள் புகுந்தவன் அன்றைய காலைப் பத்திரிகையைக் கையில் எடுத்தான். எங்கும் சூறாவளி பற்றிய செய்திகள். அடிவயிறு வற்றுவது போலிருந்தது அவனுக்கு பக்கங்களைப் புரட்டினான். அன்றைய காலபலன் அவன் கண்ணில் குத்தியது. மகரம் வெறுப்பு, வெறுமை என்று போட்டிருந்ததைப் படித்தபோது அவனுதட்டில் ஒரு சிரிப்பு. கவூர் அவன் நினைவில் ஓடி வந்தார். அவர் மந்திரம், பெல்லி, பிசாசுகளுக்கெதிராக நடத்தும் பிரச்சாரங்களும் பந்தயங்களும் கூடவே ஓடி வந்தன. பத்திரிகைச் சாத்திரங்களைப் படிக்கும் போது அவனுக் கென்றைக்குமே சிரிப்பு. அதே மாதிரி கவூரின் அரைகுறை விஞ்ஞானப் படிப்பு. சாத்திரம், பேய், பிசாசுகளுக்கெதிராக நடத்தும் புரட்டுக்களை நினைக்கும் போது இன்னும் கூடுதலாக சிரிப்பு. அன்றைய ஆங்கிலப் பேப்பரில் கவூருக்கெதிராக யாரோ ஒருவர் எழுதியிருந்தார்.
கடலும் கரையும் 1 O (p.Gull

கடந்த இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஆங்கிலேயரும் ஜேர்மனியரும் சோதிடர்களைத்தானாம் நாடி ஓடினார்கள். வெளியேதான் விஞ்ஞான யுத்தம். பின்னால் சோதிட மந்திரந்தான் சேனைகளை நடத்திற்று. அரைகுறை விஞ்ஞானமெல்லாம் ஆபத்து வரும்வரைதான். அண்மையில் இறந்த ஆங்கிலக் கவிஞன் லூயிமக்னிஸ் சோதிடத்தைப் பற்றி நூலே வெளியிட்டுள்ளாராம்! கவிஞர்கள்! கலைஞர்கள் ஒன்றின் உண்மையைப் பற்றி அவர்களுக்கிருக்கும் உள்ளுணர்வுக்கு முன் இந்த அரைகுறை விஞ்ஞானிகள் எந்த மூலைக்கு? அவனுக்குத் தன்னை எண்ணிப் பார்த்த போது திடீரென உவகையின் பேரலைகள் உலக மனித வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தான் நிற்பது போன்ற பேருணர்வு, ஒரு கணந்தான். மீண்டும் பேப்பரைப் பார்த்தான். எழுத்துக்கள் வெள்ளெழுத்துக்களாகின. தலைவலித்தது. அடிவயிறு வற்றுவது போன்ற உணர்வு. பேப்பரை வீசிவிட்டு முகம் கழுவ எழுந்து போனான்.
காலை பத்து மணியாகிய போது அவனுக்கு நாக்கு வரளத் தொடங்கியது. காலையில் அவன் நன்றாகச் சாப்பிடவில்லை. ஹோட்டலில் காலைச் சாப்பாட்டின் போது அவனெதிரே அமர்ந்து சாப்பிட்டவரை நினைத்துக் கொண்டான். ஐந்தாறு ரொட்டிகளை ஒன்றாகப் பிய்த்துப் பிய்த்து பருப்பு, கிழங்கு, மீன் எல்லாவற்றையும் அவற்றோடு கலந்து அவர் வீமன்பிடி' பிடித்தார். இவனுக்கு அருவருத்தது. உடலில் நடுக்கம். அதனால் இரண்டு அப்பத்தோடு இவன் தனது சடங்கை முடித்துக் கொண்டான். அதன் பயன் இப்போ தெரிந்தது. ஆனால் பசியல்ல. நாக்கில் ஒரு வரட்சி. ஒரு பிளெயின்டீ, ஒரு சிகரட்! இவை போதும் அதைத் துரத்தி விட, சட்டைப் பையில் கையை விட்டுத் துழாவினான். ஏமாந்த கையை அவன் எடுக்கவில்லை. சும்மா அப்படியே கையை விட்டுத் துழாவிக் கொண்டிருந்தபோது அவனெதிரே ஒருத்தன் கிற்பாக்கும் கையுமாக வந்து சிரித்தான். அவனைக் கண்டதும் 'வக்கே' என்றான் இவன் உற்சாகமாக. அவனும் 'மச்சான் வட் கல்பனாவ?' என்றான் கேலியாக, அவன் கேள்வியில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் பயின்று வந்து, சம அந்தஸ்துப் பெற்றன. வக்கே இவனுடைய பள்ளி நண்பன், ட்ரொட்ஸ்கியவாதி, பட்டதாரி. பக்கத்தூரில் படிப்பித்துக் கொண்டிருந்தான். இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் பள்ளிக்கூடத்துக்குப் போக முதல்நாளே வந்திருந்தான்.
'என்ன யோசனை?' என்று மீண்டும் கேட்டான் பதிலை எதிர்பார்க்காமலேயே, 'வா, டி குடிக்கப் போவம் , நான் இன்னும் சாப்பிடவில்லை' என்று தொடர்ந்து கூறி இவனை இழுத்துக் கொண்டு ரோட்டில் இறங்கி விட்டான்.
ஹோட்டலின் ஒதுக்குப் புறத்தில் இவர்கள் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். வக்கே பணிஸ் ஒன்றைக் கடித்து தேனீரைச்
கடலும் கரையும் 11 - மு.பொ

Page 11
சுவைத்தான். அடுத்தவன் சிகரட்டோடு தேனீர் இருவருக்குமிடையே இரு நிமிட மெளனம். வக்கே தேனீர்க் கோப்பையை கையில் எடுக்காமல் மேசையிலேயே வைத்து குனிந்து குனிந்து சுவைத்தான். அந்த இடைப்பொழுதில் அடுத்தவன் அவனை அளந்தான், வக்கே இவனோடு படித்தவன். இப்போ பட்டதாரி. சம்பளம் , சந்தோஷம் , அவனோடு ஒப்பிட்டால் இவன் ஒரு "தோற்றுப்' போனவன். திடீரென்று அவனுக்கு தன்மேல் ஒரு வெறுப்பு தோற்றுப் போனதால் அல்ல. சும்மா ஒரு வெறுப்பு. நாக்கைத் தீய்த்துவிட்ட சுடுபிளெயின்டீ அதை இன்னும் கூட்டியது. அதனால் சிகரட்டைச் சுவைக்க முடியவில்லை. அதன் வெள்ளைப் புகைகளில் இவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவற்றையேன் உள்ளுக்கிழுத்து வெளியில் தள்ளிக் கொண்டிருக்க வேண்டும்? அரைச் சிகரட்டை அப்படியே கீழே போட்டு நசுக்கினான். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி எதிரே இருந்தவனை அளந்த போது ஒரு மிடறு தேனீரைக் குனிந்து வாய்க்குள் அனுப்பிக் கொண்டு திடீரென நிமிர்ந்து அவன் இவனை ஒரு விதமாகப் பார்த்தான். இவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. அதை மறைக்கும் முகமாக 'மச்சான் வக்கே, இப்போ எப்படி உனது கட்சி வேலை போகுது?' என்றான் வெகு இயற்கையாக,
வக்கே பதில் அளிக்கவில்லை. அவனொரு ட்ரொட்ஸ்கியவாதி, என்.எம் தாசன். குறிப்பாக ஒரு மாக்ஸியன் இன்டெலெக்ஷ0வல். படிப்பு, பட்டம் இவற்றை விடக் கட்சியே அவனுக்குக் கடவுள். கூட்டரசாங்கம் அவனிடத்தில் சில கோளாறுகளை விளைவித்திருந்தது லேசாகத் தெரிந்தது. ஆனால் இலகுவில் அவனை அளக்க முடியாது. "புரட்சியைவிட எதுவும் சரிவராது' வக்கே திடீரென பதில் கொடுத்தான். கட்சியில் ஏற்பட்டிருந்த வேதனையும் வெறுப்பும் அந்தப் பேச்சில் தொக்கி நின்றது. அந்த நேரத்தில் அவ்விருவரும் ஏதோ விதத்தில் ஒரேநிலையில் இருந்தனர். தோற்றுப் போன நிலை? இருவரும் லேசாகச் சிரித்துக் கொண்டனர்.
'காமினி வந்தானா?' வக்கே கேட்டான். இப்போ இருவரும் ரோட்டில் நடந்து கொண்டிருந்தனர். லைப்பிரரியை நோக்கிநடை சென்றது. 'இல்லை. ஆனால் இரண்டு தரம் என்னோடு போனில் தொடர்பு கொண்டான். உனக்கு பி.சி போட்டானாம். நீதான் அவனுக்கு பணம் அனுப்பவில்லையாம். அதனால் அவன் இங்கு வரமுடியாமல் கிடக்கிறான். பாவம் அவன். ஒரே பறோக்.'
'இப்போ அவன் என்ன செய்கிறானாம்?' வக்கே முன்னதிற்குப் பதில் அளிக்காமலே இன்னொரு கேள்வியைக் கேட்டான்.
'இப்போ அவன் படிப்பை எல்லாம் ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டான். இனிமேல் அவனுக்கு ஒன்றுமே வேண்டாமாம். ஆனால் செக்ஸ் உலகை ஒரு கை பார்க்கப் போவதாகச் சொன்னான். நோர்மன்
கடலும் கரைபும் 12 மு.பொ

மெய்லரின் 'ஹிப் படிக்கிறானாம்.
வக்கே பெரிதாகச் சிரித்தான். அடுத்தவனும் அதில் சேர்ந்து கொண்டான்.
இருவரும் லைபிரரிக்குள் நுழைந்தனர். வக்கே செய்தித்தாள் இருந்த பக்கமாகச் சென்றான். மற்றவன் சஞ்சிகை இருந்த பக்கத்துக்குப் போனான். ஒரு சஞ்சிகையை முன்னால் விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். படிப்பதில் நாட்டம் செல்லவில்லை. உள்ளே நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் நுழைவாயிலில் பேரேடு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அதில், நுழைவோரும் போவோரும் தமது பெயரையும் நேரத்தையும் பதிந்து கொண்டிருந்த காட்சி வேடிக்கையாயிருந்தது. மடையர்கள் மடத்தனமான சட்டம் , அந்தப் பேரேட்டில் இவனும் இவனது நண்பர்களும் தமது பெயருக்குப் பதிலாக சத்ரே, கொலின், வில்சன் , மெயிலர் என்.எம் பெரேரா, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் என்று எழுதியவை அவன் நினைவில் ஓடியது. அவன் சிரித்தான். இருந்தாற்போல் சக்கிலியர்கள் யாரோ சந்தியில் சண்டை போடுவது கேட்டது. தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! பார்த்துக் கொண்டு நின்றவர்கள் கூக்காட்டிச் சிரிப்பது கேட்டது. யாரோ ஒரு சிங்களவன், ‘தெமல கறதறே' என்று கத்தினான். அந்த ஓசை விழுந்த போது உள்ளே இருந்த பல முகங்களில் ஒரே நேரத்தில் சிரிப்பு மலர்ந்தது.
வக்கேயும் சிரித்தான். இவனுக்கு இருந்தாற்போல் அதில் ஒரு ஆச்சரியம். எப்படி அவர்கள் ஒரேமாதிரிச்சிரித்தார்கள்? இது என்ன சிரிப்பு? இங்கு ஏன் எல்லோரும் வருகிறார்கள்? என்னத்தை அப்படி விழுந்து கிடந்து படிக்கிறார்கள்? ஏன் படிக்க வேண்டும்? இவர்களுக்குப் பைத்தியமா? இது என்ன புத்தகங்கள், பத்திரிகைகள்? இது எல்லாம் எதற்கு? இதை யார் எழுதுகிறார்கள்? எழுத்தாளர்கள், கவிஞர்கள். அவர்களுக்கும் பைத்தியமா? திடீரென்று அவன் நினைவில், அவன் அறைக்கெதிரே காக்கா வலிப்பால் விழுந்து கிடந்து துடித்த ஒருவனின் காட்சி ஓடி வருகிறது. அவன் கடைக்கு இரண்டு கடைகளுக்கப்பால், ஒருவோச் மேக்கர், உடம்பில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தன்னைப் பற்ற வைத்துக் கொண்டான். கோர ரயில் விபத்து. வெட்டுண்டு, சிதையுண்டு ஆண்களும் பெண்களும் சூறாவளி சுக்குநூறான படகுகள், பிரேதங்கள். தமிழர்கள் பாவம் செய்தவர்களாம். தெய்வ கோபமாம். அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. அவன் நண்பனைப் பார்த்துக் கைகாட்டி விட்டு லைப்ரரியை விட்டு வெகுவேகமாக வெளியே வந்து நடந்தான்.
எஞ்சிய பகல் முழுதும் வெறுமையில் மிதந்தது. இரவு பத்துமணிபோல் அவன் தனது அறைக்குள் வந்து அடைந்து கொண்டான். அவனது குண்டியில் வீக்கம் கண்டு வலித்தது. கலரி வாங்குகளில் இருந்த மூட்டைப் பூச்சிகள் அவன் குண்டியைப் பதம் பார்த்து விட்டிருந்தன. தெரியாத்தனமாக ஒரு தமிழ்ப்படம் பார்க்கப் போய் நேர்ந்த கதி. அவர்கள்
äL-glh šRDJujú 13 (9,Qu

Page 12
சிரித்த போது இவன் அழுதும், அவர்கள் அழுத போது இவன் சிரித்தும் படம் தன் வழியில் செல்வதற்கு மிகுந்த கஷ்டப்பட்டது. இவன் வேதனையோடு எழுந்து வந்து விட்டான். இருந்தும் ஒன்றரை மணித்தியாலம் மூட்டைப்பூச்சிகளுக்கு தாராளத்திலும் தாராளம். அதனால்குண்டி வலித்தது. கூடவே நேரம் போய் விட்டதனால் நாயர் கடைச் சாப்பாடும் சாப்பாடாய் இருக்கவில்லை. எதையோ இரண்டு தரம் அள்ளி வாய்க்குள் வீசி விட்டு வந்து விட்டான். இனி?
எஞ்சியிருந்த அரைச் சிகரட் துண்டை உதட்டில் பற்ற வைத்தான். அதிலாவது இன்பங்காணலாம் என்ற ஒரு திருப்தி. ஆனால் சிகரட் தணல் கையைச் சுட்டபோதுதான் அவன் திடுக்கிட்டான். இன்ப உணர்வைத் துறந்து அவன் எண்ணங்கள் எங்கெல்லாமோ அலைந்து விட்டதால் அநியாயமாகச் சிகரட் எரிந்து போய் விட்டிருந்தது. அதைக் கீழே போட்டு கசக்கி விட்டு புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்தான். ஹoகும், அது படிப்பதற்கான நேரம் இல்லை. இருந்தாற் போல் அவனிடத்தே ஓர் உள்தூண்டல் ஏற்பட்டது. உள்ளம் மலர்ந்தது. அதன் மலர்ச்சி உடலெங்கும் சுவறுவது போன்ற உணர்ச்சி. உடனே அவன் அருகிருந்த குறிப்புக் கொப்பியை எடுத்து, அதன் புதிய ஒற்றையின் மேலே "புயல்' என்று தலைப்பெழுதிச் சில கவிதைகளை கிறுக்கினான். தமிழர்கள் அந்த யூதர்களைப் போல் சபிக்கப்பட்டவர்களா? அவர்கள் மேல் தெய்வ கோபமா? அன்று முழுக்க அவனைக் குடைந்த கேள்விகள். அவற்றுக்குப் பதில் காணும் முகமாகவே அவன் கவிதைகளை எழுத எண்ணினான். ஆனால் அவையோ அவன் எண்ணங்களைக் கடந்து எங்கேயோ சென்றன. இருந்தும் சில இடங்களில் ஏதோ விதத்தில் அவ்வெண்ணங்களைப் புணர்ந்தும் நின்றன. சிலவரிகள்.
'மனித இயக்கமோர் யந்திர மாகையில் இயற்கை புகுந்துடன் இன்னுயிர் பாய்ச்சுவான். சிதை ஒழுங்கினைச் செய்த அனர்த்தங்கள் புது ஒழுக்கத்தில் பூத்திடும்! ஆர்த்தெழும் துயர்கடலிலோர் துடிப்புச் சுழித்திடும்.' பேனை கிறுக்கிக் கொண்டிருந்த அந்த வேளையில் அவன் உலகமெல்லாம் நிறைந்துகொண்டிருந்தான். ஆனால் அந்த உணர்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அனாவசியமாக அவனது கவியுள்ளம் திடீரென வேறு விஷயங்களில் இறங்கித் தன்னை விரயப்படுத்திக் கொண்டது. ஐந்து கவிதைகளுக்கு மேல் உள்ளம் ஓய்ந்து போய் விட்டது. இவற்றையெல்லாம் எழுதி எதற்கு? யார் பிரசுரிக்க இருக்கிறார்கள்? இலங்கையில் எங்காவது நேர்மையுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் ஏதாவது இருக்கின்றனவா? முன்னர் நான்கு வருடங்களுக்கு முன்பு அனுப்பிய வளரிளம் பருவத்துக் கவிதை யொன்றைப் போனவாரந்தான் யாரோ ஒரு பத்திரிகைக்காரன் போட்டு கழுத்தை அறுத்திருந்தான். இவர்களுக்கென்ன கவிதையும் கட்டுரையும்?
கடலும் கரையும் 14 (p.0u

இவற்றையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? பைத்தியக் காரத்தனமான வேலை. பிரசுரத்தலங்கள் எல்லாவற்றுக்கும் நெருப்பு வைக்க வேண்டும். அதன் நீற்றை எடுத்து பத்திரிகை ஆசிரியர் நெற்றியில் பூசி மொட்டை அடித்து தெருத்தெருவாக கொடும்பாவி இழுக்க வேண்டும்.
அவனுக்கு வியர்த்தது. குறிப்புக் கொப்பியைத் தூக்கி வீசிவிட்டு மேசையில் குப்புற முகத்தைப் புதைத்தான். இருள் இருள். ஆஸ்பத்திரியில் டி.பி நோயாளியாகக் கிடக்கும் அவன் அக்காவை நினைத்தான். கண்களில் கண்ணீர், டி.பி நோயால் செத்துப் போன அவனது அப்பா! இருமல், கொக்கல், இரத்தம், அம்மாவின் உருக்குலைந்த முகம், அதன்பின் பல முகங்கள் ஓடிவந்தன. அதிருப்தியில் தவிக்கும் ட்ரொட் ஸ்கியவாதி வக்கேயின் முகம் , ஹிப் ஸ்ரறிஸம் படிக்கும் காமினியின் கசந்த முகம் , காக்காவலிப்பால் சுழன்ற ஒருத்தன், தன்னை நெருப்பாக்கிய வோச்மேக்கர், சக்கிலியரின் தமிழ், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், இவன் எழுதிய கவிதை, மங்கிப் போன பள்ளிக் கூட நாட்கள், அவன் அழுதான். வெறும் சுயபச்சாத்தாபம். அவனுக்கு தன்மேலேயே வெறுப்பு. இருந்தாற் போல் அவன் சிரத்தை எடுத்த ஒருத்தியின் முகம், அவள் இப்போ என்ன செய்து கொண்டிருப்பாள் ? பிறகு பெண் களைப் பற்றிய நினைவோட்டம் , அவர்களை ஆண்களிடமிருந்து பிரித்து வைக்கும் உளுத்துப் போன கட்டுப்பாடு, பெண்களைப் பற்றி அவன் நண்பன் காமினி பொருளாதார ரீதியில் சொன்னவை நினைவுக்கு வந்தன. Supply யும் இருக்கிறது Demandம் இருக்கிறது. இருந்தும் அவர்களை ஆண்களால் பெற்றுக் கொள்ள முடியாத Scarcity.! லேசாகச் சிரித்தான். எங்குமே சூன்யம். விழுந்து விடப் போகிறவன் போல் உடல் தள்ளாடிற்று. எதுவோ அவனுக்கு உயிரூட்டத் தேவைப்பட்டது. எது? எது? எதையுமே காணான். திடீரென உடல் எதையோ கண்டு விட்டது போல் வேகங் கொண்டது. தன்னை வெளிக்காட்டும் ஒரு இன்ப வேட்கை. எது? எது?
உடலுறவா?
ஆக்க இலக்கியச் சிருஷ்டியா?
இவற்றைறையும் கடந்தழைக்கும் ஓர் இந்நிலையா?
கரமை துனமா?
அது எது? எது? எது?
அவன் சுயகாம கரமைதுனத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த போது எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த புத்தரின் படம் அவனை எள்ளுதல் போல்பட்டது. உடனே அவன் அனைத்து மனவிகர்ரங்களையும் ஒதுக்கி அவக்கென எழுந்து விளக்கை அணைத்தான். தொப்பென கட்டிலில் குப்புற விழுந்தான். அவனை இப்போ பூதாகரமான சூன்யம் கை பரப்பி கெளவிற்று.
19вз (1966 இலங்கை வானொலி சிறுகதை மஞ்சரியில்
Sugih än vuh 15 (y).0LM

Page 13
ಜ್ಡ T மினி காலையிலேயே வந்து விட்டிருந்தான். அவன் எனது சிங்கள நண்பன் ஒரு மாதத்திற்கு நான்கு ஐந்து தடவையாவது என்னைச் சந்திக்க எனது அறைக்கு வருவான். அன்றும் அப்படித்தான் ஒரு வருகை, அவன் முகம் வெளுப்பேறி இருந்தது. கொஞ்சம் மெலிந்திருந்தான். அவனை நினைத்தாலே மெலிவுதான் நினைவுக்கு வரும். ஆனால் அன்று அந்த மெலிவில் கூடுதலான அழுத்தம், காரணம் ஒரு குதூகலமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தானாம். கூடவே தேவைக்கு அதிகமாக புத்தகங்களையும் வாசித்தானாம்.
வந்தவுடனேயே எனக்கு எதிரே யிருந்த ஈசிசெயரில் உடம்பை வளர்த்திவிட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் மெளனம்.
'பிறகு மச்சான்' நான்தான் மீண்டும் கதையைத் தொடங்கினேன். இந்த முறை கொஞ்சம் கூடுதலாகத்தான் வீட்டில் தங்கி விட்டாய், என்ன?
அவன் சொன்னதையேதான் கேள்வியாகக் கேட்டேன், காரணத்தையறிய, இங்கு வருவதற்கு காசில்லை அதனால் நின்று விட்டேன்' அவன் பதில் சொன்னான்.
மீண்டும் மெளனம். 'டீ குடிக்கப் போவோமா? நான் மெளனத்தைக் கலைத்துக் கொண்டே சிங்களத்தில் கேட்டேன்.
தற்ஸ் ஏ குட் ஐடியா. மச்சான்' ஆங்கிலத்தில் விளையாட்டாக ஆமோதித்தான். இருவரும் வெளியே வெளிக்கிட் GLTub.
தெருவில் காலடி வைத்தபோது,
அவன் காற்சட்டைப் பைக்குள் கையைப்
&Lath & DJ Lyth
1 6 மு.பொ
 
 

போட்ட வண்ணம், இரண்டு குதிகளையும் உயர்த்தியவனாய் 'இஸ்" என்று நாக்கை இழுத்தான் பிறகு ‘என்னைப் போல ஒருவன் இருப்பானா? என்றான் அமைதி இழந்தவனாய்,
‘என்ன விஷயம்? 'கண்டக்டரிடம் ஐந்து ரூபாவைக் கொடுத்துவிட்டு மிச்சச் சல்லியை வாங்காமல் மறந்து போய் வந்துவிட்டேன். இன்றோடு இப்படி மூன்று தடவை; நான் ஒரு முட்டாள். அவன் தன்னையே திட்டிக் கொண்டான்.
'அப்போ என்ன செய்யலாம்?"
'ஒருக்கால் பஸ்ராண்டுக்கு ஓடிவிட்டு வருவோம். இன்னும் அந்த பஸ் எங்கும் போயிருக்காது'
நாங்கள் பஸ்நிலையத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந் தோம். திடீரென்று அவன் தன் நடையின் வேகத்தைத் தளர்த்தி, "மச்சான், அந்த பஸ் எங்காவது போயிருக்கும். நாங்கள் ஓடுவதில் அர்த்தமில்லை' என்றான்.
'ஏன்? s 'நான் உன்னிடம் வருவதற்கு முன், அரை மணித்தியாலமாக லைப்பிரரியில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். அது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அந்த பஸ் எங்காவது போயிருக்கும்.'
‘எப்படியிருந்தாலும் போய்ப் பார்ப்போமே. ஒருவேளை அந்த பஸ் இன்னும் அங்கேயே நின்று விட்டால், அதிஷ்டமல்லவா? அவன் தலையை அசைத்துக் கொண்டே நடந்தான். பஸ் நிலையத்தில் அந்த பஸ் அங்கே நிற்கவில்லை. அருகிலிருந்த அலுவலகத்தில் விசாரித்தோம். அந்த பஸ் கொஞ்சம் முந்தியாகத்தான் நிலையத்தைக் காலி செய்திருக்கிறது. இப்போது அது இதங்கொடைக்கு போயிருக்கிறது. திரும்பிவர 12.15 ஆகும். அவர்கள் சொன்னார்கள். இப்போது நேரம் 10.20.
அங்கிருந்து திரும்பினோம். #్క நிலையத்தை விட்டுவந்து நெடுந்தெருவில் விழுந்தபோது தாகம் எடுப்பதுபோல் இருந்தது.
- நான் டீக்கடை ஒன்றுக்குள் நுழைந்தேன். அந்தக் கடை, எங்களுக்குப் பழக்கமானதுதான். காமினி டீக்கடையின் படிகளில் ஏறியபடி, காற்சட்டைப் பைகளுக்குள் கையைவிட்டுத் துழாவியபடி 'என்னிடம் ஒற்றைச் சதம்கூட இல்லை' என்றான்.
நான் பதிலளிக்காமலே உள்ளேபோய் உட்கார்ந்தவனாய் ஒருபிளேன் டீக்கு ஒடர் பண்ணினேன். காமினி எனக்கு எதிரே வந்து உட்கார்ந்து கொண்டான்.
கடலும் கரையும் 17 (p.Gulf

Page 14
ஒரு பிளேன்டீ இருவருக்குமிடையே பங்காடப்பட்டது. அவன் கோப்பையோடு குடித்தான். எனக்கு கோப்பையின் கீழிருந்த தட்டோடு. வெறும்டீ இன்னும் வெளிறியிருந்தது, வெள்ளைத் தட்டில்.
'ஒரு சிகரட் கொண்டு வரவா? ஹோட்டல் பையன் கேட்டான். அவனுக்கு எங்களைப் பற்றித் தெரியும்.
ஒரு திறீறோஸஸ் கொண்டு வரப்பட்டது. கூடவே அதைப் பற்றவைக்க ஒரு சின்ன விளக்கையும் கொண்டு வந்து வைத்தான். அந்த சின்ன விளக்குக்கு சிமினி இருக்கவில்லை. அது ஒரு ஆழமான பெட்டிக்குள் அதிகப்படியாகத் தூண்டிவிடப்பட்டு வளைந்து வளைந்து எரிந்தது.
சிகரட்டுக்கும் பிளெயின் டீக்கு நேர்ந்த கதி. பாதிபாதி! 'படுமுட்டாள்தனமாக எரிகிறது' என்றான் காமினி, சிகரட்டைப் பற்றவைத்து விட்டு எரிந்த விளக்கைச் சுட்டிக் காட்டி, அதில் ஒரு நகைச்சுவை லேசாக நின்றது.
அது ஒரு கழைக் கூத்தாடி மாதிரி' என்றேன் நான். 'இல்லை யாரோ அனாவசியமாகத் தன் கெட்டித்தனத்தை விளம்பரப்படுத்துவது போல் இருக்கிறது. எனக்கு எரிச்சல்தான் வருகுது' என்றவன் ஆத்திரத்தோடு அதை ஊதி அணைத்தான்.
நான் சிரித்தேன். எனக்கு அதை உணர முடிந்தது. ஆனால் விளக்கு செத்தும் மண்ணெண்ணெய் புகையின் குமைச்சல் எம்மை வஞ்சம் தீர்த்துக் கொண்டது. எழுந்து ஹோட்டல் முன்மேசைக்கு வந்தபோது, ‘சத்தாஹசயாய், மாத்தையா' என்ற குரல் பின்னால் கேட்டது. எங்களுக்குப் பரிமாறிய பையனில் குரல்.
'முதலாளி, கணக்கை எழுதி வையுங்கள், பிறகுதாறன்’ என்றேன். 'முந்தியும் கொஞ்சம் இருக்கு' என்றார் அவர். ‘எல்லாத்தையும் சேர்த்து தாறன்’ என்று நான் கூறியபோது அவர் முகம் ஒரு பக்கம் நீண்டு கோணலாகியது.
சரியாகப் 12 மணிக்கு நாங்கள் மீண்டும் பஸ் நிலையத்துக்குப் போனோம். இதங்கொடையிலிருந்து அந்தப் பஸ் இன்னும் வரவில்லை. அலுவலகத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அந்த அலுவலகத்தின் குட்டிச் சுவர்களில் கைகளை முட்டுக் கொடுத்து முகத்தைத் தாங்கியபடி எதிரே கலகலப்பாய் கிடந்த பஸ் நிலையத்தைப் பார்த்துக் கொண்டு நின்றோம். அங்கும் இங்குமாக கிற்பாக்குகளோடு ஆடவர்களின் நடமாட்டம். சில இடங்களில் க்கியூ வரிசைகள் சளிந்தும் சடைத்தும் ஆட்களின் போக்குக்கு ஏற்ற தோற்றம் எடுத்துக் கொண்டிருந்தது. அரை நேரத்தோடு மூடப்படும் பள்ளிக்கூட மாணவ மாணவிகள், திடீரென எங்கிருந்தோ படையெடுத்தவர் களாய் , பஸ்களை நோக்கிப் பந்தயம் பிடித்தவர்கள் போல் ஓடிக்
கடலும் கரையும் 18 (p. Lu T

கொண்டிருந்தனர். ஒருவித விடுபட்ட பார்வையில் எல்லாமே பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.
அங்கே பாரேன், பண்டா படும்பாட்டை! திடீரெனக் காமினி எங்கள் அமைதியைக் கலைத்துக் கொண்டே கத்தினான். அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்வையை விட்டேன். எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் கைநிறையப் பார்சல்களோடு ஆஸ்பத்திரிக்குப் போகும் பஸ்ஸலக்கு க்கியூவில் நின்று கொண்டிருந்தார்.
ஆஸ்பத்திரியில் அவனுடைய மனைவி பிரசவத்துக்காய் விடப்பட்டிருக்கிறாள் இவன் அங்கு போகிறான்' என்று கூறிவிட்டு அவன் லேசாகச் சிரித்தான்.
இவனுக்கேன் இந்த அவஸ்தை? காசுள்ளவன் டாக்ஸியில் போகலாமே? நான் பதிலை எதிர்பார்க்காமலே கேட்டேன்.
இப்பதான் பிறிமிட்டிவ் அக்கியுமிலேஷன் (ஆரம்பச் சேகரிப்பு) நடக்குது. அதனால் அவஸ்தைப்படுகிறான்'
காமினி பதில் சொன்னான். நான் சிரித்தேன். ஆனால் எனது சிரிப்பையும் மேவிக் கொண்டு இன்னொரு சிரிப்பு எனக்கு அண்மையில் கேட்டது. நான் எனது பார்வையை அருகிழுத்தேன்.
எதிரே ஒரு மாணவி, சிரிப்போய்ந்த முகத்தோடு தனது தோழிக்கு கைகாட்டிவிட்டு நடந்து கொண்டிருந்தாள்.
'காமினி, அதோ ராணி போகிறாள்' என்றேன். எதிரே கைகாட்டி விட்டுப் போனவளைக் காட்டி.
எந்த ராணி? எங்களோடு சிவனொளிபாத மலைக்கு வந்தாளே, அவள்', 'ஒ, அவளா! கூப்பிடன்'
கூப்பிட்டு என்ன பயன், கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? அதுவும் இந்த நேரத்தில் நான் கூறினேன்.
காமினி சிரித்துக் கொண்டே அவளின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டுச் சொன்னான்.
'டிக்கி அபாரமாக இருக்கிறது'. நாங்கள் காத்திருந்த இதங்கொடைக்குப் போயிருந்த பஸ் ஒருபடியாக வந்து சேர்ந்தது. அன்று வழக்கத்துக்கு மாறாக சுணக்கம். 12.15க்கு வரவேண்டியது சரியாக 1.15க்கு வந்தது. அதே கண்டக்டர் தானாம். காமினி கண்டக்டரிடம் விஷயத்தை விளக்கியபோது அவன் ஒருக்கால் நெற்றியைச் சுழித்துவிட்டு பிறகு ஒப்புக்கொண்டான். அவனிடம் மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு நகரின் நடுப்பகுதிக்கு வந்தபோது
கடலும் கரையும் 19 மு.பொ

Page 15
நேரம் இரண்டுக்கு மேலாகிவிட்டது. வயிற்றைப் பசி நிரப்பியது. வழக்கமான எங்கள் டீக்கடைக்குள் நுழைந்தோம். இருவர் சாப்பிடக் கூடிய ஒருரூபா சாப்பாடு அங்கேதான் உண்டு. ஆனால் நாங்கள் நேரத்தைத் தப்பவிட்டதால் சோறு காலியாகியிருந்தது. மத்தியானமும் பாண் சாப்பிடுவதற்கு இன்னும் பயிற்றப்படவில்லை. பழைய பழக்கம் இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அடுத்த கடைக்குப் போனோம். அங்கும் அப்படி இன்னொரு கடையில் ஈக்களின் 'ங்ொய்' என்ற இரைச்சல், பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. திரும்பினோம். எங்களுக்கு எதிரே கொஞ்சம் பசையுள்ளவர்களுக்குரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. எங்கள் கையிலிருந்த நான்கு ரூபாவின் தைரியத்தோடு அங்கு போனோம். சாப்பாட்டைத் தவிர மற்றவை எல்லாம் வசதியாய் இருந்தன. சாப்பாடு முடிய எதிரே தட்டில் வைக்கப்பட்டிருந்த பழம் ஒன்றை எடுத்து அவன் உரித்தான்.
'அது கோளிகூட்டுப் பழம்' என்று எச்சரித்தேன் நான். 'இல்லை, புளிவாழை' என்றான் அவன். இல்லை அது நன்றாகப் பழுக்காததால் உனக்குத் தெரியவில்லை. கடித்துப்பார் தெரியும்' என்றேன் நான்.
'வீணாக இருபதுசதம் காலி' என்று முகத்தைச் சுழித்தான். கவலைப்படாதே" என்று நான் கூறியபோது, எங்களுக்குச் சற்றுத் தொலைவில் பூட்ஸ் கால்கள் சப்திக்கும், ஓர் உருவம் தெரிந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன். அந்த உருவம் எங்களைப் பார்த்து விட்டுக் காணாதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டது. ஆனால் நான் விடவில்லை. அவனை அடையாளங் கண்டு கொண்டு வேண்டுமென்றே "ஹலோ லம்பெட்’ என்று கத்தினேன். அவன் எங்கள் பக்கம் திரும்பி யோசிப்பவன் போல் பாசாங்கு செய்துவிட்டு, அப்போதுதான் எங்களை அடையாளங் கண்டு கொள்பவன் போல் "ஹலோ!' என்று போலியாகச் சிரித்துக் கொண்டு அருகே வந்தான்.
'வா மச்சான் வா, கன காலத்துக்குப் பிறகு என்று கூறிக் கொண்டே காமினி அவனை அருகே அமரவைத்தான். அவன் மிகுந்த அசெளகரியத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான்.
லம் பெட் எங்களோடு பள்ளியில் படித்தவன். ஓர் பிரபல தேயிலைத் தோட்டச் சொந்தக்காரன்.
'டீ குடிப்போமா?' என்று கேட்ட அவன் குரலில் ஒரு அவசரம் நின்றது.
'இல்லை, இப்போதுதான் சாப்பிட்டோம். புறுட்சலட் என்றால் நல்லாய் இருக்கும்' என்றான் காமினி சிறிதும் கவலையில்லாமல்,
எதுவித பேச்சுமில்லாமல் இரண்டு புறுட் சலட்டுக்கும் தனக்கு ஒரு டீக்கும் ஒடர் கொடுத்தான். கூடவே சிகரட்டுகளும் வரவழைக்கப்பட்டன.
algh & DJ Lyth 2O (p.GuT

காமினி என்னைப் பார்த்துக் கண்ணைக் காட்டினான். நான் விஷமமாகச் சிரித்தேன்.
டீயைப் பருகிய லம்பெட் மேல் விழிகளால் எங்களை நோக்கினான்.
எங்கள் உடையும் தோற்றமும் அவனை ஆறுதலாய் இருக்கவிடவில்லை என்பது அவனது மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. நான் சேர்ட் அணிந்து சாரம் உடுத்தியிருந்தேன். காமினி வேர்வை ஏறிய சேட்டும் மங்கற் கால்சட்டையுமாய் குந்தியிருந்தான்.
லம் பெட்டின் அசெளகரியத்தை ரசித்துக் கொண்டே நாம் புறுட்சலட் அருந்தினோம்.
சிகரட்டை பற்றவைத்தபோது எங்கள் 'பில்லை'க் கொண்டு வந்து வைத்தான் சேர்வர். எங்களது சாப்பாட்டுக்குமாக இரண்டு பில் இருந்தது. இரண்டு பில்லையும் லம்பெட்டே எடுத்துக் கொண்டான். அவற்றுக்குரிய பணத்தைக் கட்டியவன் தாமதிக்கவில்லை. 'எனக்கொரு அவசரமான விஷயம்" என்று கூறிக் கொண்டு வெளியேறியவன் காரிலே போய்விட்டான்.
‘எப்படி திருப்தியா?" என்றேன் நான் காமினியைப் பார்த்து. 'லம் பட்டும் அவர்கள் சம் பிரதாயங்களும்' என்று பகிடி பண்ணியவன் 'இனி இரவுச் சாப்பாட்டுக்கு கவலையில்லை' என்றான் அதே உற்சாகத்தோடு,
'அதற்கும் இன்னொரு லம்பட் கிடைப்பான்' என்றேன் நான். அவன் சிரித்தான். 'இப்படியே எல்லா லம்பட்டுகளையும் சாப்பிட்டு விடலாம்'
வெளியே வந்தபோது வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது.
(1970மல்லிகையில் வெளிவந்தது)
கடலும் கரையும் 2 (p.GUT

Page 16
தி டீரென அறுபட்ட வீணையின் தந்திபோல், வீசியடித்த காற்று அன்று விழுந்து விட்டிருந்தது. எதிரே கிடந்த கடலிலும் அந்த அமைதியின் விழுக்காடு, அங்கே ஓங்கியெழும் அலைகள், அன்று தம் ஓங்காரத்தை அடக்கித் தமக்குள் குறுகுறுக்கும் : புங்குடுதீவு மக்களின் பாஷையில் சொல்லப் போனால் கடல் 'ஈராட்டி' போட்டிருந்தது. மீனவர்களுக்கு வேட்டை மீன்களுக்கோ பொல்லாத காலம். இரண்டொருவள்ளங்களைத் தவிர எல்லாமே கடலுக்குப் போயிருந்தன, பறியெடுத்துவர, எஞ்சி கரையில் நின்ற தோணிகளோ மீனவர்களுக்குச் சொந்த மானவை அல்ல, அவை வெள்ளாளருக்கு உரியவை.
நேரம் அப்போது காலை ஒன்பதரை மணிக்கு மேலாக இருக்கலாம். காற்றின் வீழ்ச்சி வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்தது, கடலோ தனது வரம்பை விடுத்து சிறிது உள்விழுந்து வற்றிக் கிடந்தது. அதனால் அதன் கரைகிழித்த வீதியில் ஒரு விரிவும் அழகும் வளைந்தோடின. அந்தக்கரையில் இரண்டொரு நிழலூட்டும் பூவரச மரங்கள், கடற்காற்றின் பிசுபிசுப்பு அவற்றின் இலைகளிலும் ஏறி விட்டிருந்தன. அதனால் அவையூட்டிய நிழலிலும் ஏறிய ஒருவித பாரம் குளிர்ச்சியாக வழிந்தது.
நின்ற மரங்களுள் சடைத்த ஒன்றின் கீழ் சிலர் குந்திக் கொண்டிருந்தார்கள். நான்கு பெண்கள். ஐந்தாறு ஆண்கள், எல்லோர் முகங்களும் கடலை நோக்கித்தான் இருந்தன. நெய்தல் நிலத்தவர்களின் இரங்கல் அவர்களிடம் இல்லாவிட்டாலும் இருத்தல்' அவர்களிடம் குடி கொண்டிருந்தது. ஆமாம், காத்திருந்தார்கள். கடலில் போயிருக்கும் தோணிகள் கரைக்குத் திரும்பவேண்டும்.
கடலும் கரையும்
22 மு.பொ
 
 

அப்போதுதான் அன்றையச் சோற்றுக்கு அவர்களுக்கு மீனுண்டு. அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அப்போதைய உடமையாக ஐம்பது சதமோ ஒரு ரூபாவோ இருந்தது. பெண்கள் அவற்றைச் சேலைத் தலைப்பில் முடிந்திருந்தார்கள். ஆண்களோ ஐம்பது சதக் குத்திகளை வெகு அலட்சியமாக தங்கள் செவிகளின் உட்புறத்தில் சொருகி விட்டிருந்தனர். தோணிகள் கரைக்கு வந்ததும் அதே அலட்சியத்தோடு காசை வீசிவிட்டு ஒவ்வொரு மீன் கோர்வையை தூக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவற்றுக்கெல்லாம் தோணி கரைக்கு வர வேண்டும். அதுவரை அவர்கள் காத்திருந்தார்கள்.
தூரத்தே தோணிகள் கடலட்டைகள் போல் மிதந்தன. குந்தியிருந்தவர்களின் கற்பனைக்கேற்றவாறு அவை வருவதும் போவதுமாக மிக அற்பமாக நெளிந்துகொண்டிருந்தன. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் அவை சிதறலாகக் கிடந்தன. சில பாயிழுத்துப் போய்க் கொண்டிருந்தன. குனித்த புருவம் போன்ற அடிவானம். அதைக் குடைவன போன்று தோணிகளின் ஏகாந்த சஞ்சாரம்.
பூவரசின் கீழ் குந்தியிருந்தவர்களில் சில ஆண்கள், கைகளை நெற்றியின் மேல் வைத்து கடல் வெளியை நோக்கினர். நீரில் ஏற்பட்ட வெயிலின் எதிரொளி கண்களைக் கூச வைத்ததோடு எரிய வைத்தது. கடலுக்குமேல் இன்னொரு கடல், கானல் வரிகள். நோட்டம் விட்டவர்களில் ஒருவர், 'இந்தா நேர கிழக்க கிடக்கிற தோணி முருகன்ர எண்டு நினைக்கிறன்' என்றார்.
'அப்படித்தான் நானும் நினைக்கிறன்' என்றார் தலைப்பாகை கட்டியிருந்த ஒருத்தர்.
'அப்படியெண்டா நாகேசன்ர தோணி இஞ்சால தாழையடியில் கிடக்கிறதா?' என்றார் ஒரு வெள்ளை வேட்டிக்காரர்.
"ஒமாக்கும் அவன்தான் தாழையடியில் பறி எடுக்கிறவன்' என்று ஆமோதித்தார் முன்பு முருகனைப் பற்றிப் பிரஸ்தாபித்தவர்.
'அப்ப ஐயன்ர தோணி எங்கே?' என்று கேட்டு அவர்கள் பேச்சில் தானும் கலந்து கொண்டாள் பச்சை சேலையணிந்த ஓர் நடுத்தர வயது அம்மாள். 'அவன்ர தோணி தெற்கால போயிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்' அருகிலிருந்த பல்மிதந்த கிழவி அவளுக்குப் பதில் கொடுத்தாள்.
முருகன், நாகேசன், ஐயன். அவர்கள் அந்தப் பகுதியின் முக்கியமான மீனவர்கள். பூவரசின் கீழ்க் குந்தியிருந்தவர்கள் அவர்களிடந்தான் வழமையாக மீன்வாங்குவது. முன்னவர்கள் பின்னவர்களின் இஷ்ட தெய்வங்கள். சிலர் ஏற்கனவே பணங்கட்டிக் 'கட்டு மீன்' வாங்குகிறார்கள். சிலர் அப்போதைக் கப் போது காசை வீசியோ கடன் சொல்லியோ மீன் கோர்வைகளைத் தூக்குபவர்கள். ஒருத்தருக்கு முருகன். இன்னொருத்தருக்கு நாகேசன், அடுத்தவருக்கு ஐயன். இவர்களுக்கு அவர்கள் இஷ்ட தெய்வங்கள். ஆனால்
கடலும் கரையும் 23 (p. GJIT

Page 17
அந்த இஷ்ட தெய்வங்களிடம் அங்கிருந்தவர்களுக்கு பக்தியோ அன்போ இருக்கவில்லை. அதிகாரந்தான் இருந்தது. சில நேரங்களில் எதுவுமே இல்லாத வெறும் பல்லிளிப்பும் காட்ட வேண்டி வருவதுண்டு.
'டேய் தம்பி’ திடீரென அங்கிருந்த தலைப்பாகைக்காரர் தனக்கு முன்னாலிருந்த இளைஞனைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அவன் திரும்பிப் பார்த்தான். தோற்றத்தில் படித்தவன் போல் தெரிந்தது. திரும்பிப் பார்த்த அவன் வாய் திறவாமலேயே 'என்ன?' என்பதைப் பார்வையில் ஏற்றினான்.
'ஆரட்ட நீ மீன் வேண்டிறனி நாகேசனட்டையா? என்ன, கட்டுமீனா?" மூன்று கேள்விகளை அவர் ஒரேயடியில் கேட்டு வைத்தார்.
"ஆரெண்டில்ல. ஆரு மீன் கொண்டுவாறாங்களோ அவங்களட்ட வாங்கிறதுதானே?' என்ற அவனது பதிலில் அவரது இரண்டு கேள்விகள் பதில் தேவையின்றியே விழுந்தன.
'ஓ, அதுவும் சரிதான். அப்பிடித்தான் நானும்' என்று ஆமோதித்த அவர் அத்துடன் தனது விசாரணையை நிறுத்திக் கொண்டார்.
அந்த இளைஞன் மீண்டும் கடலின் பக்கம் திரும்பிக் கொண்டான். அவன் பார்வை திரும்பவும் முன்பு விட்ட இடத்தில் ஒட்டிக் கொண்டது. அவன் கண்ணெதிரே, கடலுக்குள் முழங்காலளவு நீரில் ஓர் கட்டை நட்டுக் கொண்டு நின்றது. தோணியைத் தொடுத்து விடும் கட்டை, அதன் மேல் ஓர் நரை விழுந்த கொக்கின் மோனத்தவம். அதன் இஷ்ட தெய்வம் எது? திருவனா? அரியலா? முரலா? எல்லா மீன்களுமே அதற்கு ஒன்றுதான். அவன் விழித்த கண் இமைக்காது கொக்கிலேயே பார்வையைக் குவித்துக்கொண்டிருந்தான். அந்தக் கொக்கு வெறும் புள்ளியாகி, பொட்டுத்துளியாகி அடிவானை நோக்கி ஓடியது. பின்னர் திடீரென அவன் மூக்கின் மேல் ஒட்டிக் கொள்வது போல் ஓடி வந்தது. அவன் கண்களை இமைத்து வெட்டினான். கண்களில் கசிவு, மீண்டும் மங்கலாக கொக்கு, கட்டையின் மேல் குந்திக் கொண்டிருந்தது. திரும்பவும் அவன் பார்வை அடிவானை நோக்கி ஓடியது. பார்வையின் இறுதி அடுத்த கரையைத் தொட்டது. அடுத்தகரை மண்டதிவின் ஆரம்பம். அதன் கரையில் பனைமரங்களின்நிரை புகைமண்டலமாகத் தெரிந்தது. அவன் பார்வை வடக்கை நோக்கி வளைந்தது. அங்கே வேலணைக்கரை. அதன் கரையோரம் சுவரெழுப்பிய சில வெளிறிய கட்டிடங்களின் தோற்றம். அவற்றோடு கடலின் குறுக்கே விழுந்தோடும் வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் தார் ரோட்டு. அதன்மேல் திடீரென ஒர் பஸ் வண்டு மாதிரி ஓடிவந்தது. நயினாதீவை நோக்கிப் போகும் சிங்கள் யாத்திரிகளின் பஸ்ஸாக இருக்க வேண்டும். அதன் தோற்றம் அப்படிச் சொல்லியது. இப்போது அவன் பார்வை நேருக்கு வந்தது. அது கிழக்கு பின்னர் வலப்பக்கமாகச் சென்றது. அது தெற்கு, கீற்றுக்களாகத் தெரிந்த தோணிகள் கூட இப்போ அங்கு காணப்படவில்லை. எல்லாம் எங்கே போய் விட்டன? எங்கும் ஒரேசூன்யம்.
கடலும் கரையும் 24 (go). Gaur

இருந்தாற்போல் கரையில் கட்டிக் கிடந்த தோணியொன்றின் பக்கம் இருந்து சத்தம் எழுந்தது. அவன் பார்வை அங்கு தாவியது. அங்கே இருவர் தோணியொன்றின் அருகே நின்று அதற்குள் ஊறிவிட்டிருந்த நீரை பட்டையால் கோலி கடலுக்குள் இறைத்துக் கொண்டிருந்தனர்.
'ஆரு அதில நிக்கிறது, கந்தரும் சுப்பையருமோ?' பல் மிதந்த கிழவி வெள்ளை வேட்டிக்காரரைப் பார்த்துக் கேட்டாள்.
'ஒ, கந்தரும் சுப்பருந்தான். இவைதான்நம்ம வெள்ளாளத்திமிலர்' வெள்ளை வேட்டிக்காரரின் பதிலில் நையாண்டி கலந்து நின்றது.
'ரெண்டு பேருமாச் சேர்ந்து இந்த நேரத்தில எங்க போகப் போயினம்?' இது பச்சைச் சேலைக்காரியின் கேள்வி,
'ஏன் இப்பதானே கடல் வத்தித்தெளிஞ்சு போய் கிடக்கே, அதுதான் அவை வத்துக் கடலுக்கு வலையோடப் போயினமாக்கும், இண்டைக்கு அவைக்கு நல்ல உழைப்பெண்டு நினைக்கிறன்' பல் மிதந்த கிழவிதான் பதில் கொடுத்தாள்.
'தூ, வெக்கங்கெட்டநாயன், அவையின்ர உழைப்பும் பிழைப்பும்.' தலைப்பாகைக் காரர் ஒருமுறை காறித் துப்பினார். அவர் முகம் பல கோணங்களைக் காட்டி ஓய்ந்தது. அவர் தொடர்ந்தார். 'இவங்களேன் வெள்ளாளர் எண்டு சொல்லி திரியிறாங்கள்? இவங்களும் திமிலரோட போய் இருக்கிறதுதானே?. தூ. நாயன். வெக்கமில்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு திரியுதுகள். அதுக்குள்ள விபூதிப் பூச்சு வேற.' என்று கூறிவிட்டு அவர் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தார்.
'ஒ, பொடியன் சொல்றது உண்மைதான்' என்று ஆமோதித்தனர் அங்கிருந்த பெண்கள்.
'உண்மையில்லாமல் பொய்யா? தலைப் பாகைக்காரர் சொன்னதை வேறு ஒரு தினுசில் ஆமோதித்தவராய் ஆரம்பித்தார் வெள்ளை வேட்டிக்காரர். 'இந்த வெள்ளாள திமிலரால் இந்தப் பக்கத்தில் எங்களுக்கும் மரியாதையா இருக்கேலாமல் இருக்கு. திமிலங்கள் கூட எங்களை மதிக்கிறாங்கள் இல்லை. ஏன்மதிக்கப் போறாங்க? இந்த வெள்ளாள திமிலர் அவங்களோட சேர்ந்து சாப்பிட்டு குடிச்சு கொண்டாடினா அவங்கள் எங்களை ஏன் மதிக்கிறாங்க? வெக்கங் கெட்ட நாயஸ்' என்று அவர் முடித்தபோது அங்கிருந்த பெண்களும் ஆண்களும் சிரித்தனர்.
'அது மட்டுமா, செய்யிறதையெல்லாம் செய்து போட்டு அவைதானே சாதிக்காறர் எண்டு எல்லாத்துக்கும் முன்னிக்கினம். தாங்க செய்யிற நாத்தங்களைப் பற்றி நினைக்கினமா?' இன்னொரு அம்மாள் தனது கருத்தைத் தெரிவித்தாள்.
'ஓமண அவையின்ர சாதியும் குலமும் . அந்த நாயளின் ர பேச்சைவிடு' என்று அந்தப் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பதுபோல்
கடலும் கரையும் 25 Qg.GLI

Page 18
வெளிக்கிட்ட ஒரு கொண்டைக்காரர், 'என்ன இண்டைக்கு கந்தரும் சுப்பையருந்தானே நிக்கினம், பசுபதியரும் மகனும் இண்டைக்கு எங்க போயிற்றினம்?' என்று பேச்சை வேறு திசையில் கிளறிவிட்டார்.
'அவை நேரத்தோடயே (கடலுக்குப்) போயிற்றினமாக்கும் என்று பதிலளித்த தலைப்பாகைக்காரர் அந்தப் பேச்சில் அலுப்புத்தட்டியவராய், நெற்றியில் கையை வைத்து கடலைநோட்டம் விட்டார். பிறகு 'தம்பி டேய், ஏதாவது தோணி வருதாவெண்டு பார், என்ர கண்ணுக்கெண்டா ஒண்டும் தெரியேல்ல" என்றார் முன்னால் இருந்த இளைஞனைப் பார்த்து.
இத்தனை நேரமும் அவர்கள் பேச்சில் பங்கெடுக்காது வெறும் புன்னகையை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்த அவன், அவர் கட்டளையை வாங்கிக் கொண்டு கையை நெற்றிமேல் வைத்துப் பார்த்தான். பிறகு, 'அப்படி ஒரு அறிகுறியும் இல்ல' என்றான் வெகு சுருக்கமாக.
அவன் மனம் சற்றுமுன் அங்குநடந்த உரையாடலைப் பற்றி எண்ணிப் பார்த்தது. அவன் பார்வை சிறிது தூரத்தில் கடல் பிரயாணத்துக்கு தோணியை தயார்படுத்திக்கொண்டுநின்ற கந்தரையும் சுப்பையரையும் நோக்கி ஒடியது. அவர்கள் வெள்ளாளத் திமிலர், அவனுக்குச் சிரிப்புவந்தது. கந்தரும் சுப்பையரும் அவன் சொந்தக்காரர். அங்கிருந்தவர்களுக்குந்தான்.
ஏன் வெள்ளாளர் மீன்பிடிக்கக்கூடாதா? அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
கந்தரும் சுப்பையரும் தோணியைத் தாங்கத் தொடங்கினர். தோணி நீரை ஊடுருவிக் கொண்டு பாயத் தொடங்கிற்று. அப்போது அவர்கள் பார்வை பூவரசின் கீழ் குந்தியிருந்தவர்களின் மேல் விழுந்தது. ஓர் அலட்சியப் பார்வை. கூடியிருந்தவரை தூசத்தனை அளவு கூட மதிக்காத பார்வை. பூவரசின் கீழ் இருந்த அவனுக்கு அந்தத் தோணியில் தானும் போய்த் தாவவேண்டும் போல் ஆவல் உந்தியது. கந்தரும் சுப்பரும் போகும் அந்த ஆழக் கடலுக்கு, அந்தக் குனிந்த புருவ அடிவானுக்கு தானும்போய் அங்கு தாவியெழும் மீன்களாய் துள்ளிவிழ அவனுக்கு ஆவல் பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் அவனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பக்குவமில்லாத பயல் என்று தள்ளிவிட மாட்டார்களா? இல்லை, அவர்கள் இவனது பக்குவமின்மையைப் பொருட்படுத்தாது தோணியில் கைதுக்கிவிட்டாலும் இவனுக்கு அவர்களோடு போகத்துணிவிருக்கிறதா? ஊரார்தரும்பட்டத்தையும் பரிகாசத்தையும் தாங்கிக் கொண்டு இவனுக்கும் மீன் பிடிக்கப் போகத் திராணி இருக்கிறதா? அவனுக்கு தன்மேலேயே ஒரு வகையறியாத ஆத்திரமும் வருத்தமும் ஓடி வந்தன. அதன் பிரதிபலிப்பாய் அவனின் கையில் அகப்பட்ட சிறுசங்கொன்றை எடுத்து கடலுக்குள் வீசினான். விழுந்த சங்கு நீரில் வட்டங்களை விளைவித்தது. வட்டங்கள், வளையங்கள், முடிவும் தொடக்கமும் அற்ற வட்டங்கள், சக்கரம், திருமாலின் சக்கரம். அவன் அவற்றையே இமைக்காது நோக்கிய போது
கடலும் கரையும் 26 p.sur

பின்னாலிருந்த வெள்ளை வேட்டிக்காரரின் குரல் ஒலித்தது.
'இந்தா வெள்ளாளத் திமிலர் புறப்பட்டினமாக்கும் போய்க் கொண்டிருந்த கந்தரையும் சுப்பையரையும் நோக்கி எய்யப்பட்ட நையாண்டிச் சொற்கள் அவை. எழுந்து போய் சொன்னவரின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும்போலிருந்தது இளைஞனுக்கு. இவர்களின் வாழ்க்கை கரையில் வந்து குந்தியிருந்து காற்றைக் குடிப்பதோடு முடிந்து விடுகிறது. ஆழக் கடலைப் பற்றி அறியாத வெறும் மோலோட்ட பேர்வழிகள். அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். இல்லை, அறிந்தாலும் ரகசியமாய் முயன்று பார்த்து தோல்வி கண்டவர்கள். அதனால் அதன்மேல், அதில் வெற்றிகண்டவர் மேல் அத்தனை வெறுப்பு. அதனால் வெள்ளைவேட்டி வேஷம், அதனால் கரையில் நின்று மீன் பிடிக்கும் ஜாதிக்காரர்கள். அவனது உதட்டை சிரிப்பொன்று கிழித்தது.
'இதுக்குக் கீழ் இருந்து எத்தின மட்டுக்குத் தவம் செய்யிறது, போய் ஒரு போத்திலாவது வயித்துக்க இறக்காட்டி சரிவராது',
அத்தனை நேரம் அங்கு காத்திருந்த தலைப்பாகைக் காரருக்கு அப்போதுதான் வேறொரு ஞானோதயம் வெளிச்சது. ஞானம் வேண்டித் தவஞ் செய்த ஆதிகாலத்து ரிஷிகள் மனத்தை ஒருநிலைப்படுத்த சோமா என்னும் பானத்தை அருந்துவார்களாம். இப்போ பூவரசின் கீழ் இருந்த இவருக்கும் 'தவத்'திலிருந்து தப்புவதற்கு இரண்டு போத்தல் கள்ளுத் தேவைப்பட்டது. அவன் மீண்டும் முறுவலித்தான்.
'தம்பி, மீன் வந்தா எனக்கும் ஒரு கோர்வை வாங்கிவை, நான் இப்ப வாறன்' என்று முன்னாலிருந்த அந்த இளைஞனுக்கு கூறிவிட்டு தலைப்பாகைக்காரர் எங்கோ அருகில் இருந்த கள்ளுத்தவறணைக்கு எழுந்து போனார்.
மேற்குப் பக்கமாக நீண்டிருந்த பூவரசின் நிழலும் வரவர தன்னைச் சுருக்கி தன் காலுக்கு கீழேயே தன்னைக் கொணர்ந்தது. நிழல் குறுகக் குறுக பரவியிருந்த கூட்டமும் பூவரசின் அடியை நோக்கிக் குறுகியது.
'ஊஹ0, என்ன வெயில்' என்றவராய் கள்ளுத்தவறனைக்குப் போயிருந்த தலைப்பாகைக்காரர் அரை மணித்தியாலத்துக்குப் பிறகு அங்கு திரும்பி வந்தார். வந்தவர்நின்ற நிலையிலேயே கையை நெற்றியில் ஏற்றி கடலை ஒரு நோட்டம் விட்டார். பிறகு முகம் மலர்ந்தவராய், "இந்தா முருகன்ர தோணி வருகுதுபோல இருக்கு' என்றார். எல்லோர்பார்வையும் ஆவலோடு அப்பக்கம் மிதந்தது. இளைஞனும் அந்தப் பக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். ஒரு தோணி கரையை நோக்கி வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவனுக்கு அதில் அக்கறை அதிகம் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, முன்னால் முழங்காலளவுநீரில்நண்டுபிடித்து விளையாடிய வெள்ளாளச் சிறுவர்களையும் அவர்கள் பிரதிபிம்பம் தெளிந்த நீரில் விழுந்து நெளிந்ததையும், நெளிந்து அது
கடலும் கரையும் 27 (U).BLII

Page 19
கரையை நோக்கிப் படர்ந்ததையும் அவன் அதிக அக்கறையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில் தோணி அக்கரையை அண்மித்துக்கொண்டிருந்தது. வெயிலின் வேகத்தில் தோணியில் நின்றவர்கள் புகைப் பிண்டங்களாய் தெரிந்தனர். அதனால் யூகிக்க முடியவில்லை. 'ஆற்ற தோணி அது? முருகன்ரயாநாகேசன்ரயா?" கொண்டைக்காரர் தனது ஐயத்தைக் கிளப்பினார். 'நாகேசன்ர போலத்தான் இருக்கு' தலைப்பாக்காரர் பதில் கொடுத்தார். ஆனால் அதிக நேரம் இந்தப் பிரச்சினை அவர்களிடம் இருக்கவில்லை.’தோணி கரைக்கு வந்தது. அது வந்ததுமே 'இது நம்ம வெள்ளாளத் திமிலற்ற பசுபதியரும் மகனும்' என்றார் வெள்ளை வேட்டிக்காரர். எழுந்த ஆவல் ஓடிவற்ற, ஆத்திரத்தோடு, தோணியை விட்டிறங்கி மீனும் பறியும் மரக்கோலுமாகப் போய்க் கொண்டிருந்த பசுபதியரையும் மகனையும் பார்த்தனர் கூடியிருந்தவர். அவர்கள் கூடியிருந்தவரை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தனர். பிறகு அந்தப் பக்கம் முகத்தை திருப்பவே இல்லை. கூடியிருந்தவரின் கையாலாகாத்தனத்தை தலையில் குட்டிக் காட்டுவதுபோல் அவர்கள் மீன் பறிகளைக் காவிக் கொண்டு சென்றார்கள். அந்த இளைஞன் முகத்திலே மீண்டும் பழைய சிரிப்பு. அந்தச் சிரிப்பின் சுவடு மறையமுன் அங்கேயிருந்த தலைப்பாகைக்காரர் திடீர் என ஏதோ நினைத்துக் கொண்டவராய், பசுபதியரையும் மகனையும் நோக்கி எட்டி மிதித்து நடந்தார். என்னதான் சொன்னாலும் இந்தச்சுத்த வெள்ளாளருக்கு அந்த வெள்ளாளத் திமிலரான பசுபதியரைச் சந்திக்கும் திராணி இருக்கவில்லை. அதனால் அவர், பசுபதியரின் பின்னால் போய்க் கொண்டிருந்த மகனைத்தான் அணுகினார். போனவர் பல்லிளிப்பது தூரத்தில் சாடையாகத் தெரிந்தது. சிறிது தாமதம். அதன்பின், "பகைவனுக்கருள்வாய்' என்ற காட்சியில் பசுபதியரின் மகன் இரண்டொரு மீனைப் பறிக்குள் இருந்து வெகு அலட்சியமாக வெளியில் தூக்கிப் போடுவது தெரிந்தது. வெளியில் விழுந்த மீனைநாய்க்குட்டி கெளவுவது போல்தூக்கி வைத்து பனையோலைக்குள் சுற்றிக்கொண்டு தலைப்பாகைக்காரர் திரும்பவும் பூவரசடிக்கு வந்தார்.
"வாய்ச்சிற்று போல இருக்கு' வெள்ளை வேட்டிக்காரர் அவரைப் பார்த்து கூறினார்.
'ஓ, ஒருமாதிரிப் பல்லிளிச்சுச் சரிப்பண்ணிப் போட்ட போலிருக்கு' கொண்டைக்காரர் குத்தலாகக் கதைத்தார்.
தலைப்பாகைக்காரருக்கு அது எரிச்சலையே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைப்பூசிமெழுகியவராய், "என்ன அப்படிஇளக்கமாகக் கதைக்கிற? எனக்கு மீன் குடுக்காமல் இந்த வெள்ளாளத் திமிலர் இந்தப் பக்கத்தால போவாங்களோ?' என்று வீராப்பை விட்டெறிந்த போது 'ஒ, அல்லாட்டிவிடமாட்ட' என்று மீண்டும்தலையில் குட்டினார் கொண்டைக்காரர்.
கடலும் கரையும் 28 (p. Lu

முகத்தில் அசடுவழிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட தலைப்பாகைக்காரர் 'இனி நானேன் உங்களோட நிண்டு காயிறன்? அவங்கள் எப்பவாறாங்களோ, நான் போறன்' என்றவராய் அங்கிருந்து நடையைக் கட்டினார். பின்னாலிருந்தவர்களின் சிரிப்பை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
மீண்டும் கூட்டம் கடலை நோக்கித் திரும்பியது. இப்போ பூவரசின் நிழல் கிழக்கை நோக்கித் திரும்பியது. கூட்டம் அந்தப் பக்கமாக அரையத் தொடங்கிற்று. இருந்தாற்போல் அங்கிருந்தவர்களில் ஒருத்தி 'கடவுளே, பொழுதுபட்டுப் போச்சு. முருகனையுங் காணேல்ல, நாகேசனையுங் காணேல்ல. நான் போகப் போறன்' என்றவளாய் எழுந்து நடக்கத் தொடங்கினாள். மற்றவர்களுக்கும் அதே சபலம். நம்பிக்கையின்மையின் விழுக்காடு. 'எல்லாம் பொய், முருகனும் நாகேசனும் கடலுக்குப் போகேல்லியாக்கும், போனால் இவ்வளவு நேரத்துக்கும் வராமலா இருக்கிறாங்கள்?' அங்கிருந்த கூட்டத்தின் முக்கால்வாசி எழுந்து நடந்தது, எஞ்சியிருந்தவர்கள் அந்த இளைஞன், வெள்ளை வேட்டிக்காரர், கொண்டைக்காரர்.
'டேய் தம்பி, எல்லாம் பொய்யடா’ வெள்ளைவேட்டிக்காரர் முன்னாலிருந்த இளைஞனுக்கு குரல் கொடுத்தார். 'அவங்கள் கடலுக்குப் போயிருந்தால் இத்தறிக்கு வந்திருப்பாங்கள். அவங்கள் போகேல்ல, நான் வீட்ட போகப் போறன்' என்று கூறிய அவரும் எழுந்து நடந்தார்.
எல்லாம் பொய்யா? என்ன எல்லாம் பொய்? இளைஞன் சிரித்தான். அவர்கள் எல்லோரும் கடலுக்குப் போகாவிட்டால் அவர்களின் தோணிகள் எங்கே? அது ஒன்றே போதாதா அவர்கள் கடலுக்குப் போயிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல? ஆனால் பாவம் நேரத்தால் கட்டுண்ட இவர்களுக்குப் பச்சை உண்மையே பொய்யாகத் தெரிகிறது. இளைஞன் மீண்டும் சிரித்தான். அவனைப் பொறுத்தவரையில் இப்போ தோணிக்காரர்களுக்காகக் காத்திருப்பதை விட அந்தக் கடலைப் பார்த்திருப்பதே பெரிதாகப் பட்டது. நாகேசன் வராமலா போகப் போகிறான்? அல்லது வந்தால்தான் என்ன வராவிட்டால் தான் என்ன?
வெள்ளை வேட்டிக் காரரைப் பின்பற்றிக் கொண்டைக்காரரும் எழுந்து நடந்தார். போகும்போது அவரும், 'தம்பி நீ வரேல்லியா?" என்றார்.
கடலைப் பார்த்த பார்வையை எடுக்காமலேயே அவன் பதிலளித்தான்.
'நான் வரேல்ல'
5 Ligih sinyuluh 29 · (y).0ur

Page 20
ல் இரைந்து கொண்டிருக் கிறது.
அவள் துயின்று கொண்டிருக் கிறாள், அவளுக்கு அருகிலும் சற்றுத்தள்ளியும் அவளது பிள்ளைகள் அவளைப் போலவே ஆழ்ந்த நித்திரையில்,
அவன் அவர்களையே வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டிருக்கிறான். கடலின் இரைச்சல் அவர்கள் ஆழ்துயிலுக்கு தாலாட்டாய் அமைய, அவர்கள் தம்மை மறந்தநிலையில் உறங்கிக் கொண்டிருந் தார்கள்.
அவன் மனைவியும் , அவள் பெற்றெடுத்த அவன் பிள்ளைகளும், அவனது செல்லமான கடைக்குட்டி ரூபா, தாயை இறுகக் கட்டியணைத்து காலையும் தூக்கி தாயின் மேலே போட்டவளாய் கிடக்கிறாள்.
ஏதோ துயர் அவன் நெஞ்சை நெருடிச் செல்கிறது.
திடீரென அவன் கண் முன்னே அவனும் அவளும் காதல் வயப்பட்டிருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
கடலைத் தன் அண்ட்ையத் தோழியாக அணைத்துள்ள அக் கிராமம் , அதன் கூப்பிடு தொலைவில் குரல் கொடுத்த வாறு கிடக்கும் அக்கடல்.
குடிசைக்கு முன்னால் சடைத்துக் கிளை பரப்பி, தன் முறுகிய வேர்களின் முதுகுப் புறத்தை நாலாயக்கமும் பரப்பி ஆசனம் அமைத்து நிற்கும் வேப்பமரம் . அதன்கீழ், அவனும் அவளும் இரவிரவாகச் சல்லாபித்திருந்த காலங்கள்.
கடல் இரைச்சல் காதுக்கு இதமூட்ட, வேம்பில் வந்து விழும் கடல் காற்று, போக வழியற்று கீழிறங்கி, அவர்கள் முகம் தடவிச் செல்ல, காதல் வயப்பட்டுக் கனிந்த இரவுகள்.
கடலும் கரையும்
3O (p.0u
 
 

கீழ் வானில் எழும் நிலவின் கன்னிக்கதிர்கள், வேம்பால் வடிக்கப்பட, எஞ்சியவை முற்றமெல்லாம் சிதறி பொட்டுப் பொட்டாய் பூப்போட்டிருக்க எழும் மோகன இரவில் அவனும் அவளும் கனவு கண்ட காலங்கள்.
'இப்படியே உலகம் விடியாமல் இருக்குமெண்டால்' - அவள் அவனில் சாய்ந்தவாறே கூறுவாள்.
'இப்படியே விடியாமல் இருந்தால் என்ன செய்வ?' - அவன் அவள் ஆழ்ந்து கொண்டிருக்கும் சுகப்பெருக்குள் இன்னும் முற்றாக முழுகாத வெளிநிலையில் நின்று கேட்பான்.
'நீங்க என்ன கதைக்கிறியள் இப்படி அபத்தமாக." அவள்தன் சுகநிலையைக் கெடுக்க விரும்பாதவள் போல் தன் பேச்சை சுருக்கமாக கத்தரித்துக் கொள்வாள்.
'ஏன் அப்படிச் சொல்லிற?' 'வேற என்ன, செயல் எல்லாம் ஒழிந்த சுகமல்லவா இது? போகத்தைவிட காதல் வசப்பட்ட இருப்பு அதைவிடப் பெரியதவம் எண்டு ஒருத்தன் சொன்னானே, அவன்ர வாய்க்கு சக்கரைதான் போடவேணும்'
'நாளைக்கு எனக்கு எத்தனையோ வேலையிருக்கு ராணி' - அவன் அபசுரம் தட்ட மீண்டும் கதைப்பான்.
'நீங்க இன்னம் வெளியிலதான் நிக்கிறியள்' - அவள் சிறிது சினம் மேலேறிவரக் கதைப்பாள்.
'கோவிக்காத ராணி, நீ தாற சுகத்திலை அப்படியே நான் மெய்மறந்து போகேக்க ஏதாவது ஒரு பிரச்சினை வந்து என்னைத் தட்டி எழுப்பிவிடுகுது.' அவன் அவளிடம் மன்றாடுவதுபோல் கதைப்பான்.
'பிரச்சினை எப்பதான் இல்லை, ஆருக்குத்தான் இல்ல? பிரச்சினையிக்க சந்தோசமாய் இருப்பதிலதான்ே தனிச் சுகம்? நாளைக்கு வாறதை நாளைக்குப் பார்ப்பம்; இப்ப சந்தோசமாய் இருப்பம்' என்று அவள் கூறிவிட்டு லேசாக சிரிப்பாள்.
இருட்டில் அவள் முகம் தெரியாவிட்டாலும், அவள் சிரிப்பால் இருள் மோகனம் கொள்வது போல் இருக்கும். அச்சிரிப்பின்போது அவள் அழகிய பற்களில் நிலாக்கதிர் பட்டுத்தெறிப்பது போன்ற ஓர் ஒளிர்வு.
அவன் அப்படியே அவளை அள்ளி அணைப்பான். அவன் வாஞ்சை அள்ளலில் அவள் வெண்பட்டுத் துகிலென அவன் பிடியுள் அடங்கி ஒடுங்கிக் குழைவாள்.
திடீரென அவர்கள் இருவரையும் இறுக்கிய மெளனப் பேரணைப்பில் சற்றுத்தள்ளியிருக்கும் கடலன்னையின் கூப்பிடுதல் கேட்கும்.
கடலும் கரையும் 31 . Lu

Page 21
இருவரது இதயமும் ஜோடிக் குதிரைகள் போல் விரையும் குளம்போசையின் அதிர்வு .
இந்நேரங்களில் திடீரென அவன் அடிமனதில் இனந் தெரியாத பீதி,
அது பீதியா, துயரா? பனிப் படலம் விலக, மெல்ல மெல் லத் தெளிவுறும் தூரத்து முகம்போல் அடிவயிற்றில் நெளிந்த பீதி, துயராகக் கசிவுறும்.
பீதியின் போர்வையில் வரும் துயர். அப்போதெல்லாம் அவன் வயிற்றை அளைவதுபோல், வயிற்றை அளைந்து வாந்தி வருவது போல் - ஓர் உணர்வு.
ஆழமாக அவன் சந்தோசத்தில் ஆழ்ந்துபோகும் ஒவ்வொரு சமயமும் எங்கிருந்தோ திடீரென ஓர் இனந்தெரியாத பீதியின் வாடை. நள்ளிரவமைதியில் திடீரென கதவைத் தட்டும் அந்நியன் போல் அதன் வருகை
எதிர்பாராத விதமாக ஒரு சந்தோசம் ஏற்பட்டு, அதைக் கொண்டாடும் முகமாக அவன் சிகரட் ஒன்றைப் பற்றவைத்து, ஆழமாக இழுத்து புகையை வெளித் தள்ளும் போது, புகையின் கடைசி எச்சச் சுருள்களோடு அவன் நெஞ்சில் நெளியும் பீதியின் சுருள்.
எப்போதாவது விருந்து வைபவத்தில், நண்பர்களோடு சேர்ந்து நிறையக் குடித்து, அந்தக் குடியின் போதையால் தூண்டப்பட்ட தற்காலிக மனவிரிவின் ஆனந்தத்தில் அவன் அள்ளுப்படும்போது, எங்கிருந்தோ அவனுள் மிதந்து வரும் அந்தப் பீதி. அடுத்தவினாடி அவன் தன்னைக் சூழ நிகழும் கொண்டாட்டத்தையும் கும்மாளத்தையும் மறந்து, அவற்றிலிருந்து விடுபட்டு, இவன் யாரும் அணுக முடியாத தனித் தீவாகச் சமைத்து போக
ஏன் அந்தப் பீதி? அதன் அறிகுறி என்ன? ஆனந்தத்தின் மத்தியில் ஏன் இந்தப் பீதி எழுகிறது? எந்தக் குற்றவுணர்வு அமுக்கத்தின் மாறுவேட வெளிக்கிளம்பல் இது? முதலில் பீதி, பின்னர் அது துயரமாகமாறும் ஒரு ரசவாதம்.
அந்தப் பீதியையும் துயரையும் அவன் ஆழமாக ஆய்வு செய்த ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் எதையோ அவன் இழந்து போனதை ஞாபகப்படுத்துவதுபோல் அது மெல்ல மெல்ல அருட்டல் காட்டி ஓய்வுறும், இத்ததைய சந்தர்ப்பங்களில் எல்லாம் அவன் மனம் அவனை அறியாமலே, ' எல்லாம் மாயை' என்று பெரிதாகவே கத்திவிடும்.
அன்றும் அப்படித்தான். கூப்பிடு தொலைவில் கடல்காவல் இருக்க, வெள்ளி இறைத்த நிலாக்கதிரின் வேப்பமர விரிப்பின் கீழ், அவன் அவளை இறுக அள்ளி
கடலும் கரையும் 32 (p.GUT

அணைக்க, அவள் அவன் அணைப்பில் துவண்டு குழைந்து அழிந்துபோக, அவனும் அவளோடு சேர்ந்து அக்கனவு இருப்பில் கரைந்துபோக திடீரென அப்பீதியின் வருகை.
அவன் நெஞ்சுள் அது அரவுபோல் நெளிந்து மேலேறுகிறது. அவன் குரல்வளையை இறுக்குவது போல்.
அவள் தந்த சுகத்தில் அவளோடு சேர்ந்து கரைந்து கொண்டிருந்தவன் திடீரென வெளியே தூக்கியெறியப்படுகிறான். பனிக்கட்டி போல் கரைந்தவன், திடீரென மீண்டும் உறைபனியாகிறான். யாரும் தீண்ட முடியாத ஒரு தீவாக சமைகிறான். அவனை அறியாமலே அவன் வாய், 'எல்லாம் மாயை' என்று கத்திக் கொண்டபோது, அவன் அவள் அணைப்பிலிருந்து தன்னையும் தன் அணைப்பிலிருந்து அவளையும் விடுவித்துக் கொள்கிறான்.
'என்னப்பா, இப்ப என்ன நடந்திற்று?' - அவள் தன்னை மெதுவாகச் சமநிலைப்படுத்தி அழுத்தமாகக் கேட்டாள். அவளுக்கு அவனது விசித்திரப் போக்குகளில் நல்ல பரிச்சயம்.
இருந்தாலும் தனது கைகளால் அவன் முகத்தை தன் பக்கம் திருப்பியவாறு மீண்டும் கேட்டாள்:
'இப்ப, என்னப்பா நடந்தது? ' 'ஒண்டுமில்ல, ராணி' என்று கூறியவன், கூப்பிடுதொலைவில் இருக்கும் கடலின் அழைப்புக்குக் காது கொடுப்பதுபோல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
'உங்களுக்கு நிலையில்லாத மனமப்பா' என்று கூறியவள் ஒருவித வேதனைச் சிரிப் போடு, வேப்பங்கிளைகளால் இடைக் கிடை துண்டாடப்படும் நிலவின் தோற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
* 普 普
முன்னே அவன் மனைவி ராணி துயின்று آئی اہم9H கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அவள் மேல் மேலும் மேலும் ஓர் துயர் கூடிய அனுதாபம்,
பழைய நினைவுகள், மீண்டும் மீண்டும் அவனை அறியாமலே மடை திறந்து பெருகிக் கொண்டிருந்தன.
எதிலும் அதிக அளவு காலூன்றாத, எந்த ஆழ்ந்த உணர்விலும் தான் மூழ்கிக் கொண்டிருக்கும் போது தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் அவனது போக்கு அவளைப் பலவிதத்திலும் அந்தரநிலைக்குள் ளாக்கியிருக்கிறது.
SLgh GRID Tujuh 33 (J. GLJI

Page 22
அவள் ஆசையோடு எடுத்து, தன் மார் போடு அணைத்து அழகுபார்க்கும் சிறு சிறு சந்தோசங்களை, எந்தநேரம் அவனது போக்கு அறுத்து சிந்திவிடுமோ என்று தெரியாத மனப்பிராந்தியோடுதான் அவள் வாழ்ந்து வந்தாள். அவனது இத்தகைய விசித்திர குணாம்சங்களால் மொத்தத்தில் அவனிடமிருந்து அவ்வவ் போது அவள் தொட்டந் தொட்டமாகக் கறந்தெடுத்த இன்பங்கள் கூடதேன்பூசப்பட்ட வெற்றிலையில் தரப்பட்ட நாட்டு வைத்திய மருந்தாகவே நெடி வீசியது.
இருந்தாலும் இத்தனைக்கும் மத்தியில் அவன் வாடை படாமல் அவளால் சிறிது நேரம் கூட தரித்திருக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். அவனது விசித்திரங்கள், அவனது ஈடுபாடுகள், அவனது விடுபடல்கள் எல்லாம் அவளுக்குப் பழக்கப்பட்டவை மாத்திரமல்ல, அவற்றில் ஓர் உள்ளார்ந்த ஈடுபாடும் பிடிப்பும் அவளை அறியாமலே அவளிடம் உள்ளோடியிருந்ததையும் அவன் அறிவான்.
வெளிப்படையாக அவைபற்றி அவள் அலுத்துக் கொண்டாலும் அவை எல்லாரிடமும் காணப்படாதவையாகவும் இவனுக்கே உரியனவாகவும் அவையே ஒருவித பால் கவர்ச்சியை அவன் பால் ஏற்படுத்தும் தனித்தன்மையும் ஆண் மையும் கொண்டவையாகவும் இருப்பதை அவள் நுணுக்கமாக உள்வாங்கியிருந்தாள்.
அவள் எப்போதாவது நாடகம், சினிமா என்று போய்விட்டு வந்தால் அதில் வரும் பாத்திரங்கள் அவனது குணச் சாயல்கள் கொண்டவையாக இருந்து விட்டால் போதும் , அவை எத்தகைய மட்டரகமான படைப்புகளாகத்தான் இருந்தாலும், அவை அவளைப் பொறுத்தவரை ஒப்பற்ற கலா சிருஷ்டியாகவே போற்றப்படும்.
'அதில் வாற கதாநாயகன் அச்சொட்டாக உங்களைப் போலவேதானப்பா." அவளுக்குப் பிடித்தமான நாடகமோ சினிமாவோ பார்த்துவிட்டு வந்தால் அவளது விமர்சனம் முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும்.
'ஏன் அப்படிச் சொல்லிற?' அவன் காரணம் தெரிந்தாலும் ஒப்புக்காக இதைக் கேட்டுவைப்பான்.
'அவன் தாமரை இலைத்தண்ணீர் மாதிரி, எதிலும் நிலையாக இல்லாமல் ஓடிறதைப் பார்த்தால் அச்சொட்டாக உங்களைப் போலத்தான்.'
"படம் எப்படி?' 'கனகாலத்துக்குப் பிறகு ஒரு நல்ல படம். அந்த மாதிரி பாத்திரத்தை மறக்கேலாது. உங்களோட இருந்து அந்தப் படத்தை இன்னொருக்கா பாத்தாத்தான் எனக்கு திருப்தி வரும் போல இருக்கு. அப்பத்தான் ஒவ்வொரு கட்டத்திலும் கதாநாயகனட்ட தெரியும் உங்கட சுபாவத்தை உங்களுக்குச் சொல்லி ரசிக்கலாம்' என்று அவள் நீட்டிமுழக்கிக்
கடலும் கரையும் 34 மு.பொ

கொண்டு போகும் போது அவன் மனம் பெரிதாகவே தனக்குள் சிரித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு சமயமும் அவள் பேச்சில் பளிச்சிடும் கண்ணாடி போன்ற குழந்தை உள்ளத்தில், அவள் முன்நிற்போர் எவரும் தம் பிரதி பிம்பத்தை கண்டுகொள்ளலாம் போன்ற தூய்மை இருக்கும்.
அவனும் அப்படித்தான். அவளைப் பிரிந்திருப்பது என்பது அவனுக்குப் பெரிய பகீரதப் பிரயத்தனமாகவே இருக்கும். சிறிது நாட்கள் பிரிந்திருந்தால் கூட, யுகம்யுகமாய் அவளைப் பிரிந்து விட்டது போன்ற காலத்தின் போலி நீட்சி அவனை ஆட்கொள்ளும்,
அவனுக்கு அவளது களங்கமற்ற மனம் , தெளிந்த நீரோடை போன்ற சிரிப்பு, எதையும் மறைக்காது, அவனது நெஞ்சின் உள்ளிறங்கி, அவனோடு கைகோர்க்கும் ஆழமான இணைவு அவனை எப்போதும் கிறங்க வைக்கும்.
அவன் எப்போதாவது திரைப்படம் பார்க்கும்போதோ, ஏதாவது நல்ல கதைபடிக்கும் போதோ அவளது இத்தகைய இயல்புகளைக் கொண்ட பாத்திரங்களை அதில் கண்டதும், அவனுக்கே உரிய உளவியல் சிக்கலாய் அவன் மனம் அலைபாயும், பின் அதைத் தொடர்ந்து அவனுக்கே உரிய அந்தப் பீதி, அந்தப் பீதி மெல்ல மெல்ல அடியழிந்துபோக அதன் எச்சமாய் இனந்தெரியாத அந்தத் துயரின் விரிவு.
ஏன் அந்தத் துயர்? அவள் அவனைவிட்டு எங்கோ எங்கோ நெடுந்தூரம் போவதுபோல் . அவன் அவளை இழந்து எங்கோ எங்கோ
தனிமைப்பட்டுப் போவதுபோல்.
அவ்வேளைகளில் அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு சுயநிலைக்குத் திரும்பும் போது, அவள் அங்கே, அவனருகே அமர்ந்து ரி.வி. 1ார்த்துக் கொண்டிருப்பதையோ, கதைப் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதையோ காணுவான். இருந்தபோதிலும் அவன் நெஞ்சின் மூலையில் ஊற்றுக்கண்டதுயர், அவனைச் சூழ்ந்து வெகுநேரம் வரை மிதந்து கொண்டிருக்கும்.
ஏன் அந்தத் துயர்? அந்தத் துயரின் வடிவை நுணுகி நுணுகி ஆய்ந்து சென்றால் எதையோ இழந்து போவதுபோன்ற துயர், அவன் மனைவி அவனருகே அழகும் சதையுமாக இருக்கும் போதும் அவள் தொடர்பாகப் பரவும் அந்தத்துயர்?
அவன் மனைவி அத்துயரின் உயிர்த்தூண்டி! அவள் அவன் இழந்து போன ஒன்றின் குறியீடு?
L-gh 5 SD Tuqih 35 மு.பொ

Page 23
அதுதான் உண்மையா? எது எப்படி இருந்தாலும் அவன் நெஞ்சில் ஊற்றிடும் பயமும் துயரும் அவன் அவளில் கொண்டிருந்த இறுக்கமான காதலையும் பற்றையும் காட்டும் சமிக்ஞைகள் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.
தொலைவில், வெகுதொலைவில் , வான் வெளியின் கோடி மூலையில் வெகு அற்பமாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பருந்து, கண்ணிமைக்கும் கணப்பொழுதில் பளார் என மண்ணில் விழுந்து, இரையைக் கெளவவரும் பூதாகரத் தாக்குதல் போல், அவன் அவள்மேல் கொண்டிருந்த பற்றும் பாசமும் திடீரென ஆக்கிரமித்து, பெரும் பரிமாணம் கொள்வதை அவனே கண்டு வியந்திருக்கிறான்.
நாளாந்த நடைமுறையில் , வழமையான சலிப் போடும் ஜீவனோபாய அந்தரங்களோடும் வாழ்க்கை கழிக்கப்படும் போது எங்கோ, அடிமனதின் கோடி மூலையில், ஒரு தணல் பருக்கையாகச் சாடை காட்டும் அவ்வுணர்வு திடீரென சில சந்தர்ப்பங்களில் விஸ்வரூபம் எடுத்துத் தாக்கும் விந்தையை அவன் கண்டிருக்கிறான். குறிப்பாக, வீட்டை விட்டு அவன் பிரிந்துபோகும் சந்தர்ப்பங்களில் இவ்வுணர்வுகள் சிறிது சிறிதாக கனதி கொள்ளத் தொடங்கி, பின்னர் பிரிவின் இடைவெளி எதிர்பார்த்ததை விட அதிகரிக்கத் தொடங்கிவிட்டால், உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் அவையாகவே மாறி அவனை ஆட்டிப்படைக்கத் தொடங்கும் போதுதான் அவை எவ்வளவு ஆழமாக அவனில் வேர்பாய்ச்சி உள்ளன என்பதை அவன் அறிந்து தன்னிலேயே வெறுப்பும் கோபமும் கொள்ளத் தொடங்கி யிருக்கிறான்.
இச்சந்தர்ப்பங்களில் உடல் பெரும் பாரமாகி, பாறாங்கல்லைப் போல் அவனை அழுத்தத் தொடங்குவதை உணர்கிறான். உடலைக்கொண்டு செயல்படுவதென்பதே பெரும் வேலையாக மாறுகிறது. அதனால் செயல் அனைத்தும் ஒழுங்குகெட்டுச் சிதறி அரைகுறை வேலைகளாய் அந்தரத்தில் விடப்படுகின்றன.
அப்போதுதான் எல்லாப் பாரங்களையும் விட பற்றும் பாசமுந்தான் பெரும் பாரமாய் இருப்பதை அவன் அறிகிறான்.
அதன் விளைவு, உடனேயே இவற்றை எல்லாம் தலைமுழுகி விடவேண்டும் என்ற கங்கணம் கட்டல், அதற்கான தயாரிப்புகள், முஸ்தீபுகள் என்று மனச்சமப்படுத்தலுக்கான ஒரு தொடர் ஓட்டம். இதன் அடிப்படையில் எவ்வளவோ பரிசோதனைக்ள் அவன் செய்து பார்த்திருக்கிறான். எத்தனையோ விதத்தில் உடல் ஒறுப்பு வேலைகளிலும் அது தரும் வேதனைகளிலும் உள்ளாழ்ந்திருக்கிறான்.
ஆனால் முடிவு?
al-gúil an Tuiú 36 (p, Gu

ஏதோ பெரும் சாதனைபோல் ஆரம்பித்து, கடைசியில் வெற்றி கரமாக தோல்விக் கம்பத்தையே அவன் முயற்சிகள் தொட்டிருக்கின்றன.
தன் முயற்சியில் வெற்றிபெற்றுவிட்டதாக அவன் நெஞ்சு அகமகிழ்ந்து தனக்குள் பெருமிதம் உற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தப்பற்றுகள், வெட்ட வெட்டத் தழைக்கும் சூரன் போல் ஒவ்வொரு தோற்றங்கொண்டு புதுவித முகங்களோடும் புதுவிதக் காரணங்களோடும் அவனை ஆக்கிரமிப்பதை அவன் கண்டு களைத்திருக்கிறான்.
பற்றுக்களின் ஒவ்வொரு தோற்றந்தான் வாழ்க்கையா? பின்னர் மாயை என்பதும் அதுதானா? அப்படியானால் உனக்கு இனி மீட்சியே இல்லை? இச்சந்தர்ப்பங்களில் மூச்சு விட முடியாத இருட்டறைக்குள் தள்ளப்பட்டவன் போல் அந்தரித்திருக்கிறான். அதிலிருந்து வெளியேற முடியாமல் போவதே வாழ்க்கையாகவும் அதுவே பெருஞ்சிறையாகவும் கண்டு எதுவும் செய்வதறியாது மாயையின் முகங்களோடு அள்ளுப்படுவதே தஞ்சமெனக் கண்டிருக்கிறான்.
ஒருமுறை அவனுக்கும் அவளுக்கும் இடையே அற்ப 'வீக்க தாக்கத்தின்' விளைவாய் ஏற்பட்ட சிறுபூசல், பெரிதாக வெடித்தது. அவனுக்குப் பிய்த்துக் கொண்டுவந்த ஆத்திரத்தில் அவள் அப்போதுதான் காலை உணவை சாப்பிட ஆரம்பித்திருந்தாள் என்பதையும் பார்க்காது ஓங்கி அறைந்து விட்டான். காலை உணவான பிட்டு நாலாபுறமும் சிதறுண்டு போக அவளது பாத்திரம் தூரப்போய் விழுந்தது.
அவ்வளவுதான். அவனைப் போலவே அவளும் மோசமாக உணர்ச்சி வசப்பட்டாள். அந்த உணர்ச்சி வசப்பட்ட கோப முனைப்பில் அவள் இதுகாலவரை அவனுக்கு காட்டி வந்த மரியாதை வார்த்தைகள் சில சிதைவு கண்டன. அதைக் கேட்க அவனுக்கு மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. 'பற்றிக் கொண்டு வந்தது' என்ற சொல்லர்த்தத்துக்கேற்ப, ஒவ்வொரு தலைமயிரும் நெருப்புக் கம்பிகளாய் நிமிர்ந்து எரிந்து நிற்க, உச்சந்தலை பற்றி எரிவது போன்ற கோபக் கனல் கண்கள் மூலம் அவை வெளிவருவது போல் அழல் தெரிந்தது. அவளை ஓங்கி ஒரே உதையாய் உதைக்க வேண்டும் போன்ற மூர்க்க உச்சம். அவளை அப்படியே எத்தி விடுவதற்குக் கால்கள் துருதுருத்துக் கொண்டுவந்த அந்தக் கணத்தில் திடீரென அவனுள் ஒன்று ஓடி வெளித்தது.
அப்போ இவ்வளவுதானா இவள்? இவளுக்காகத்தானா நான் இவ்வளவு தியாகம் செய்தேன்?
இவ் ஒளவுதானா இவள் என் மேல் வைத்திருக்கும் அன்பும்
கடலும் கரையும் 37 (p.Glur

Page 24
மரியாதையும்?
இப்படிப்பட்டவளுக்காகத்தான், நான் பிரிந்திருக்கும் ஒவ்வொரு சமயமும் ஏதோ குடிமுழுகிவிட்டதுபோல் தவித்தேனா?
என்ன மாயை!
அவன் அவளோடு காதல் கொண்டிருந்த காலத்தில், அவளைக் கைப் பிடிப்பதற்கு எதிராக குறுக்கே நின்ற எத்தனையோ தடைகளை யெல்லாம் ஒதுக்கித்தள்ளி அவளை மணந்து கொண்ட அவனது போராட்டம் அவன் கண் முன்னே வந்து வந்து மோதிற்று.
ச்சே, என்ன வியர்த்தம்! எல்லாம் மாயை! நான் வெறும் பேயன்! இந்தக் கணத்தில் அவன் நெஞ்சை இதுகாலவரை அழுத்தி வந்த பாறாங்கல்லு பட்டெனக் கழன்று வீழ்ந்தது போலாயிற்று. அக்கணத்திலேயே அவனில் பற்றியெரிந்த பெருங்கோபம் தண்ணீர் வார்க்கப்பட்டதுபோல் தணிந்து போயிற்று.
அப்பாடா, அவன் மனதில் பெரும் நிம்மதி கவிந்தது. நெஞ்சில் பெரும் வைரம்பாய்ந்தது போன்ற ஒரு மனக் கோணம் வீணான பற்றும் பாசமும் இனித் தேவையில்லை. ஒரு விஞ்ஞானி ஆய்வுகூடத்தில் இருப்பது போல், வாழ்க்கை என்னும் பொருளை விடுபட்டு நின்று அணுகுவதுதான் இனி அவன் வேலை. அதனால் வீண் அவஸ்தை, அந்தரம், விரக்தி எல்லாம் இல்லாமல் போகிறது. குடும்பத்தலைவன் என்ற ரீதியில், அவரவர்க்குரிய கடமையைச் செய்வது, அதற்கு மீறிய பற்றும் பாசமும் எனக்கு மட்டுமல்ல குடும்ப அங்கத்தினர் சகலருக்குமே ஆபத்தானது. அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடியது. அவன் தனக்குள்ளே சொல்லி தன்னைத்திடப்படுத்திக் கொண்டான். குடும்பத் தலைவன் ஒரு விஞ்ஞானி போல் இருக்க வேண்டும். விஞ்ஞானி தனது ஆய்வுப் பொருளில் பற்றுவைத்தால் அவன் எந்தப் புதிய ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது போய்விடும். அதனால் மிஞ்சுவது சமூகத் தேக்கம், பின் னடிப்பு, பற்று வைக்கும் குடும் பத் தலைவனால், குடும் பத்துக்கு நன்மைக்குப் பதில் சஞ்சலமே அதிகம் ஏற்படுகிறது.
அவன் புதிய சித்தாந்தம் வகுத்துக் கொண்டான். அதற்கேற்ப நெஞ்சில் வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டு, தனது பற்றற்ற வாழ்க்கையை ஆரம்பித்தான். அப்படியே சிறிது நாட்கள் செயல்பட்டான்.
ஆனால் அவனது புதிய விடுபடல் , அவனை விட அவளுக்கே புதிய அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்திற்று. அவனது இயல்புக்கு மாறான புதிய போக்கை அவளால் தாங்க முடியவில்லை. அது முதலில்
கடலும் கரையும் 38 (p. GLIT

டி ரிச்சல், சினம், விரக்தி என்னும் வடிவங்களில் அவளது செயலிலும் சொற்களிலும் வெளிப்பட்டன.
ஆனால் அவன் தளரவில்லை. அவன் தனது விடுபடலையே தொடர்ந்து கடைப்பிடித்தான். சினம், விரக்தி, எரிச்சல் என்பவற்றின் மூலம் தனது ஆற் றாமையை வெளிக்காட்டிய அவள், அதில் தோல்வியுற, இரண்டொருநாள் ஏதோ நோய்வாய்ப்பட்டவள்போல் ஒரு மூலைக்குள் கிடந்து அனுங்கினாள். இதை அவள் வேண்டுமென்றே செய்யவில்லை. உண்மையில் அவனது விடுபடலை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் உடல் சோர்வுற்று வாழ்க்கை அர்த்தம் கெட்டதுமாதிரி, அதில் எந்தவித பிடிப்பும் அற்று அவளை முடங்க வைத்தது.
அவன் அப்போதும் அசையவில்லை. முன்னர் என்றால் அந்நேரங்களில் அவன் ஓடிப்போய் அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்து, முதுகைத்தடவி விட்டு, பனடோலையோ டிஸ்பிறீனையோ தானே கொடுத்து அவளைக் குடிக்கவைப்பான். அப்படி அவன் செய்யும் போது, மருந்து குடிக்க முந்தியே அவளுக்கு உடம்பு சுகமாகி விடும். அவள் பழைய நிலைக்குத் திரும்பி கலகலக்கத் தொடங்கி விடுவாள்.
ஆனால் இந்தமுறை அவன் அதை ஒன்றும் செய்யாது உண்மையாகவே விடுபட்டு நின்றான். தான் அவளுக்கு வழமையாக கொடுக்கும் மருந்தை தனது கடைக்குட்டி மகள் மூலம் கொடுத்தனுப்பினான். இச்செயல் அவளுடைய வருத்தத்தை குறைப்பதற்குப் பதில் இன்னும் கூட்டிவிட்டது போலவே இருந்தது. கூடவே ஆத்திரமும் அந்தரமும் வேறு. அவளது எல்லா ஆற்றாமையும் ஒன்றுசேர, கொடுத்தனுப்பிய பனடோலை துக்கி வீசினாள். அவை ஒவ்வொன்றும் , அவனும் அவளும் போல் வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடின.
அப்போதும் அவன் அசையவில்லை. மாறாக, அதைப் பொருட்படுத்தாது, ஏதோ அலுவலாக வீட்டை விட்டு வெளியே இறங்கி நடந்தான்.
அப்போது அவன் பின்னால், மெதுவாக ஆனால் ஆழமாக கூவியழும் அழுகுரல் கேட்டது. அவள்தான் அழுகிறாள். அது அவளின் கடைசி ஆயுதம், எல்லாவற்றிலும் தோல்விகாணும் சந்தர்ப்பங்களில் அவள் தன் வழக்கை வெல்ல முன்வைக்கும் கடைசி விவாதமுறையும்
ஆயுதமும்தான் இது:
அழுகை அவனுக்கு பின்னால், கேட்ட அவளது குழந்தைப் பிள்ளைத் தனமான தேம்பல் அவன் நெஞ்சை என்னவோ செய்தது. பாவம் அவள் அவள் மட்டும் என்ன யந்திரமா? அவளுக்கு மட்டும் கோப தாபங்கள்
esL-gh SistDVuqh 39 (yp. Lur

Page 25
விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாதா? எனக்கே இன்னும் சரியான பக்குவம் இல்லாதபோது அவளிடம் அதை எதிர்பார்ப்பது எவ்வளவு சரி?
அவன் மனம் அலைபாய்ந்தது. வழியில், அவனெதிரே ஒரு அகதிப் பெண் வந்துகொண்டிருந்தாள். அவள் தன் இரண்டு குழந்தைகளை அருகருகே வரவிட்டு, ஒரு கைக் குழந்தையைக் காவியவளாய் வந்தகாட்சி, அவன் மனதில் ஏதேதோ கற்பனைகளைத் தோற்றுவித்தது. முகத்தில் வேர்வை பிசுபிசுக்க, கண்களின் கருவளையங்கள் பசியின் கொடுமையைப் பறை சாற்ற அவள் வந்து கொண்டிருந்தாள். நான் இல்லாவிட்டால் என் மனைவியும் பிள்ளைகளும் இப் படித்தான் ரோட்டில் அனாதைகளாத் திரிவார்களோ?
எதுவித சம்பந்தா சம்பந்தம் அற்ற இந்தக் கேள்வி அவன் நெஞ்சில் வந்து வந்து மோதிற்று. அந்த நினைவை அவன் எதுவித அர்த்தமும் அற்றது என்று ஒதுக்க ஒதுக்க, அது இன்னும் வேகங்கொண்டு அவனைத் தாக்கிற்று. எந்தவித அர்த்தமோ சம்பந்தமோ அற்ற அந்தக் கற்பனையின் நிழலில் அவன் தள்ளி வைத்த பற்றும் பாசமும் ஒதுக்கிடம் தேட முயல்கின்றது என்பதை அவன் பூரணமாக அறிந்தும் அதைக்கட்டுப்படுத்த முடியாத நிர்கதிக்குள்ளாகிக் கொண்டிருந்தான். அதற்கு ஏற்றாற்போல் அவன் வீட்டைவிட்டு வரும்போது அவன் பின்னால் கேட்ட அவளின் தேம்பல் ஒலி சுருதி கூட்டிற்று. அவன் மனம் மெல்ல மெல்ல இளகிக் கரைவு கண்டது.
பாவம் அவள், எப்படியாவது அவளை ஆறுதல் படுத்த வேண்டும். அவன் மனம் முடிவெடுப்பதில் துரிதம் கொள்கிறது. இச்சந்தர்ப்பத்தில் பூரீராமகிருஷ்ணர் உபதேசங்களில் ஒன்று அவன் நினைவுக்கு வருகின்றது. அவர் சகல பெண்களையும் தாயாகக் காணவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஒமோம். அதுதான் உண்மையான வழி. நான் அவளில்ருந்து விடுபட்டு நிற்பதைவிட, அவளைத் தாயாகப் பாவித்து அன்பு செலுத்துவது மிக இலகுவானதும் நேர்த்தியானதும் எவருக்கும் மனப் பாதிப்பை ஏற்படுத்தாதும் கூட அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். ஒமோம் அதுதான், அதுதான் சரி, விடுபட்டு நிற்றல் பற்றற்று வாழ்தல் என்று அதிகம் அலட்டிக் கொள்ளாமலே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி எவருக்கும் பறைசாற்றாமலே விடுபட்டு நிற்பதற்கு இதுதான் சிறந்தவழி.
அவன் தனது விடுபட்டு நிற்றலின் புதிய சிந்தாந்தத்தை தனக்குள் உருவேற்றிக் கொள்கிறான். ஆனால் வேடிக்கை என்னவென்றால், எவ்வளவு வேகமாக மாயை அவனைத் தன் கைக்குள் போட்டுக் கொள்கிறது என்பதையோ, அது, ஆத்மீகபோதனையைக் கூடத் தனக்கேற்ற ஒப்பனையாக பாவித்து அவனை ஏமாற்றுகிறது என்பதையோ அவனால் அப்போது உணர்ந்து கொள்ள முடியவில்லை.
கடலும் கரையும் 4O (p.GuT

அவன் வீட்டுக்குத் திரும்பியபோது, அயல் அட்டத்தில் உள்ள இரண்டொரு பெண்கள் அவன் வீட்டுக்கு வந்திருந்தனர். முதலில் அவன் நெஞ்சு திக்கென்றது. ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்பது வீட்டுக்குள் போனதும் தெரிந்தது.
‘எங்க தம்பி திரியிற, பொடிச்சிக்கு காய்ச்சலாய் இருக்கு. வாயாலை எடுத்துப் போட்டுக் கிடக்கிறாள். உன்ர பிள்ளையஸ் பயந்து அழுதாப்போல வந்தனாங்க..' என்று உள்ளேயிருந்து பக்கத்து வீட்டுக் கிழவி கூறினாள்.
அவன் அவளைத் தொட்டுப் பார்த்தான். லேசான காய்ச்சல், அதுவும் காலையிலிருந்து சாப்பிடாததால் வெறும் வயிறு வயிற்றைப் பிரட்டியிருக்கும். ஆனால் எதுக்கும் அவளை வைத்தியரிடம் காட்டுவது நல்லது. அது நோய்க்குரிய பரிகாரம் என்பதைவிட அவளைப் பழைய சகஜநிலைக்கும் சந்தோசத்துக்கும் கொண்டுவர மிக உதவியாய் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்,
'ஏன் தம்பி பாத்துக்கொண்டு நிக்கிற, பொடிச்சியை டாக்குத்தரட்டக் கொண்டுபோய்க் காட்டியெண்டு வா' முன்னர் கதைத்த கிழவியே மீண்டும் அவனைத் தூண்டினாள்.
முதலில் அவன் கேட்டபோது அவள் ஒப்புக்கு மறுத்தாலும் சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் அவள் அவனோடு வைத்தியரிடம் போவதற்கு வெகுஉற்சாகமாக கிளம்பி விட்டாள்.
எவ்வளவு வேகமாக அவனை அந்தமாயை கெளவியது!
* 骨 *
Lற்றற்று வாழுதல், இல்லறத்தில் இருந்து கொண்டே துறவறம் புகுதல் பற்றி எல்லாம் அவன் ஏராளமாகப் படித்திருக்கிறான். அவை பற்றிபடிக்கும் போது, அவனது நெஞ்சின் மூலையில் ஏதோ இனந்தெரியாத கிளுகிளுப்பு நிகழ்வதை அவன் கண்டிருக்கிறான். தூரத்தே அடிவான் தொலைவில், ஒரு சிறு கொக்குப் போல் பாயிழுத்துவரும் வள்ளத்தைக் கண்டு கிளுகிளுப்படையும் மீனவப் பெண்போல் நெஞ்சக் கரையில் ஒரு கிளுகிளுப்பு. Α
ஆனால் புத்தகங்களில் படிக்கும்போது, கருத்துரூபத்தில் கிளுகிளுப்புத்தந்த அந்த 'விடுபடல்' செயலில் எவ்வளவு கஷ்டமானது என்பதை அவன் பலதடவை உணர்ந்து விட்டான். அவன் அது சம்பந்தமாக எடுக்கும் ஒவ்வொரு தீவிரமான சங்கல்பமும் மாயையின் பன்முகத் தோற்றங்களால் விழுங்கப் பட்டுப்போவதை அவன் பின்னர் உணர்ந்து விரக்தியடைந்திருக்கிறான்.
கடலும் கரையும் 41 * , →ベ ・ ・ × - (gp. Gaur

Page 26
இத்தொடர் அனுபவங்களுக்குப் பின்னர் அவன் பெரிதாக இதுபற்றித் தீர்வு எடுப்பதை நிறுத்திவிட்டான். ஆனால் அதற்காக அவனிடம் அது பற்றிய பிரக்ஞை அறவே அடிபட்டுப் போய்விட்டது என்றும் இல்லை. அது அவனது நெஞ்சமூலையில், தனக்கென ஒரு படுகை விட்டு, வாழ்க்கைப் பெருக்கின் தனியான பிரக்ஞை ஒட்டச் சுழியாகச் சென்று கொண்டுதான் இருந்தது. அதனால் வழமைபோல் அவன் ஆத்மீகம் பற்றிய புத்தகங்கள் படிக்கும்போது, அந்தத் தனியான பிரக்ஞை சுழியிலிருந்து ஒர்வகை ஆனந்தக் கிளுகிளுப்புக் குமிழ்கள், மேலாடி அடங்கத் தவறுவதில்லை. அவ்வளவே. அதற்குமேல் அவைபற்றிய வேறு அழுத்தங்கள் இல்லை. ஆனால் திடீரென்று ஒருநாள் அது நிகழ்ந்தது. அதுபற்றி அவன் துப் புரவாகவே மறந்துபோய் விட்டிருந்த நேரத்தில் திடீரென அது அவன் முன் ஒரு புதுவிதத் தோற்றத்தில் வந்து குதித்தது. அதைத் தொடர்ந்து அது அவனை ஆட்கொண்ட விதமும் வியப்புக்குரியதே. - மாலை நேரம். அன்று அவன், வழமைக்கு மாறாக, ரோட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் தனது வீட்டு விறாந்தையில், சிறிது ஓய்வெடுக்கலாம் என்பதுபோல் வந்தமர்கிறான்.
ரோட்டில் சனங்கள் இடைக்கிடை போய் வருவது தெரிகிறது. அவர்களில் அவன் மனதை அதிகம் பதியவிடாது, நுனிப்புல் மேய்வது போல் அமர்ந்து கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது. இருந்தாற்போல் அவன் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் அந்த உணர்வு அவனை உலுக்கி எடுத்தது.
மரணம்! உருவற்ற வெறும் கருத்து, உருக்கொண்ட உயிர்ப் பொருளாய் அவன் முகத்தில் அறைந்து சிரித்தது. அவன் வெலவெலத்துப் போனான்.
அடுத்தகணம் அவன் முன் தோற்றங்கொண்டவை எல்லாம் கரைவனபோல் மிதந்தன. கரைந்து கரைந்து, வெறும் பனிப்புகையாய் அழிந்து அழிந்து போவது போல்.
முன்னால் ரோட்டில் சைக் கிளில் சமாந்தரமாக இரண்டு இளைஞர்கள் பெரிதாக சிரித்துக் கதைத்துக்கொண்டு போகிறார்கள். அவர்கள் என்ன இளமையோடு இருந்தென்ன, அவர்களை விட இன்னும் இளமையாய் அவர்களுக்கு முன் இருப்பது மரணம்! அது அவனுக்குப் பளிச்சிட்டது. அவர்கள் மரணத்தால் கரைக்கப்படப் போகிறவர்கள். அவர்களுக்கு எதிரே தண்ணீர் குடம் தாங்கி வரும் கன்னிப் பெண்கள் சிலர். காற்றில் மிதந்து வரும் அவர்கள் வெங்கல நகைப் பொலி மரணத்தின் ஒலியாகவே வருகிறது. அந்தக் கன்னிப் பெண்களும் மரணத்தின் கரைவுகளே. அதோ ரோட்டின் ஓரமாக போளை அடித்து விளையாடிக்
கடலும் கரையும் 42 (p.Gulf

கொண்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு வாண்டுகள். அவர்களும் மரணம் தாங்கும் உருவங்களே. அவன் பார்க்கும் ஒவ்வொன்றும் மரணத்தின் பல்வேறுபட்ட தோற்றங்களாகவே பளிச்சிட்டன.
எங்கும் மரணத்தின் வியாபிப்பு, மரணம் பற்றி அவன் எத்தனையோ வியாக்கியானங்கள் வகுத்தபோதோ, அது பற்றி ஆழமாகச் சிந்தித்தபோதோ தோற்றாத, பிடிபடாத புதுப்புதுப் பரிமாணங்கள் இப்போ திடீரென அவன் முன், அவன் கேட்காமலே, சிந்திக்காமலே வந்து குதித்தன. அப்போ இதுகாலவரை சிந்தித்ததும், இப்போ சிந்திப்பதும் அவனா, வேறொன்றா?
அவன் மனைவி, அவன் பிள்ளைகள், எல்லாமே, எல்லாரும் சாவின் தோற்றங்கள். அவர்கள் இன்றைக்கோ, நாளைக்கோ, எப்பவோ சாகவிருக்கும் தோற்றங்கள், சாவின் கைப்பிடிகள்.
சகலரும் சாவின் பின்னணியில் நிழலாடும் பொம்மைகள், சமாந்தரமாகச் சிரித்துக் கொண்டு போகும் சைக்கிள் இளைஞர்கள், தண்ணீர் குடம் காவும் கன்னிகள், போளை அடிக்கும் சிறுவர்கள், அவன் மனைவி, பிள்ளைகள், அயல், அட்டம் அனைத்துமே எதிர் வரும் சாவின் நிழல் எறியங்கள்!
எல்லாம் நிரந்தரமற்ற மாயை அந்தக் கணத்தில் அவனது ஆசைகள், லட்சியங்கள், கற்பனைகள் எல்லாமே அர்த்தம் கெட்டுப் போகின்றன. ஓர் அந்தரத்தில் விடப்பட்டவையாய் ஆகின்றன.
அப்போ அர்த்தமுள்ளது எது? மரணத்தின் பின்? மரணத்தின் பின்? மரணத்தின் பின், 'முன்னும் ' 'பின்னும் ' பார்க்க யார் இருக்கிறார்? யாருக்கு வேணும் அந்த முன்னும் பின்னும்?
அவனுக்கு அந்தக் கணத்திலேயே தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் போன்ற் ஓர் உந்துதல், ஆனால் அதையும் செய்துகொள்ள முடியாத அந்தரம் வேறு.
அன்றிரவு முழுக்க அவனுக்கு நித்திரையே இல்லை. அவன் பித்துப் பிடித்தவன் போலானான். எல்லாரையும் தூங்க விட்டு, விளக்கை அணைத்துவிட்டு இவன் மட்டும் தனியே கொட்டக் கொட்ட ஆந்தைபோல் விழித்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம் சேவல் ஒன்று திடுக்கிட்டு விழித்துக் கூவியதும் சாக்குருவி இரண்டு தலைக்கு மேலால் கத்திக்கொண்டு போனதும் அவன் நிலைக்கு ஏற்ற சரியான சுருதிபோலவே அவனுக்குப் பட்டது.
அவன் மனைவி பயந்து போனாள்.
கடலும் கரையும் 43 U.LIn

Page 27
அவனது அன்றைய புதுவித நடத்தைகளைக் கண்டு தான் ஏதும் பிழை விட்டாளோ என்று பயந்து, எதை எதையெல்லாம் யோசித்து, அப்படி எந்தவிதத் தவறும் தான் செய்யவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பின்னர், அவள் அவனருகே வந்தாள்.
'என்னப்பா உங்களுக்கு, உடம்புக்கு ஏதும் சுகமில்லையா? என்ன யோசிச்செண்டு இருக்கிறியள்?' - அவள் அவனை மெல்லவாக தோளைப்பற்றி அசைத்தாள்.
அவன் அவளை சாடையாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு லேசாகப் புன்னகை செய்தான்.
அந்த புன்னகையில் அவன் அவளை விட்டு எவ்வளவோ தொலைவில்போய் நிற்பது தெரிந்தது.
'என்னப்பா அப்பிடி யோசிக்கிறியள்? இருந்தாப் போல என்ன நடந்தது உங்களுக்கு?' அவள் அவனைத் தொடர்ந்து உலுக்கினாள்.
'ஒண்டும் இல்லையப்பா' என்று சொல்லிவிட்டு மீண்டும் அவன் அவளைப் பார்த்தான்.
அந்தப் பார்வையில் ஒரு அசாதாரண அமைதியும் அவளில்ருந்து அவன் அந்நியப்பட்ட தன்மையும் தெரிந்தது. அது அவளைப் பயமுறுத்தியது. அதனால் அவள் மேலும் பேசாது அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவன் பார்வை தூர வெறித்திருந்தது. என்றாலும் இருட்டில் அவன் அருகில் நிற்கும் அவன் மனைவி, கருந்திரளாய் அவன் ஒர விழிகளில் பட்டாள். மரணம், மனைவி என்ற பேரில் அவன் அருகில் நிற்கிறது. அருகே உள்ள அறையில் பிள்ளைகளின் குறட்டை ஒலி லேசாகக் கேட்கிறது. பிள்ளைகள் என்ற இன்னொரு பேரில் மரணம். அவன் அருகில் நிற்கும் மனைவி, பிள்ளைகள், இனம், சுற்றம், சமூகம், உலகம் சகலதும் மரணம் அணிந்து விட்டெறியும் வேடங்களா?
அவனுக்கு என்றைக்குமில்லாத விதத்தில் அவன் மனைவி, பிள்ளைகள் அனைவரிலும் ஓர் அனுதாபமும் இரக்கமும் பெருகியது.
மரணந்தான் வாழ்க்கையின் அர்த்தமா? அதற்குமேல் ஒன்றுமில்லையா? அவன் மனம் ஆழமாக எங்கோ நுழைவது போல் இருந்தது. தூரத்தே கடல் கூப்பிடும் ஒலி கேட்டது.
Jh1. <> <>
கடலும் கரையும் 44 * Cyp. GLUT

விட்டு ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டிருக் وتوجيه إك கின்றன. கழன்று, கழன்று அவை அவனை விட்டுத் தூரப் போய்க் கொண்டிருப்பது போன்ற தோற்றம்.
தோணியில் செல்லும்போது கடலில் மிதந்து வரும் அலைகள், அவ்வலைகளின் முதுகில் தோணிவிட்டுச் சவாரி செய்து வரும் தாழை இலைகள், கடற்பாசித் துணுக்குகள் எப்படி ஆடி ஆடி, ஒரு சமவேக கதியில் தோணியைத் தாண்டிச் செல்லுமோ அவ்வாறே அவன் இறுகப்பற்றியிருந்த விருப்பு வெறுப்புக்கள், ஆசைகள், கனவுக்கோட்டைகள் யாவும் மெதுவாகக் கழன்று, கழன்று அவனைவிட்டுத் தூரப் போய்க் கொண்டிருப்பதை அவன் கண்டான்.
திடீரென அவன் நெஞ்சை நிலத்தில் அழுத்திய பாரம் நீங்குவது போன்ற ஓர் நிம்மதி.
அவனது பிரயாணம் கடலில், அதுவும் யந்திர விசை எதுவும் பூட்டாத தோணி, பாயிழுத்துச் செல்வது போல் அவன் உணர்கிறான். அதில் அந்தரம் இல்லாத ஒரு சுகம், யந்திரம் பூட்டப்பட்ட அந்தரம் அவனுக்குப் பிடிக்காது. அதனால் தரையில் யந்திர வாகனங்களில் செல்லும்போது நம்மை விட்டு டக் டக் கென்று கண்வெட்டும் கணப்பொழுதில் சென்று மறையும் மின்கம்பங்கள் போல் எதுவும் அவனைவிட்டுக் கழன்றோடவில்லை.
அவை ஆடி, ஆடி அலைகளின் தாலாட்டோடு தாலாட்டாய் மெல்ல மெல்ல அவனை விட்டுக் கழன்று போகின்றன. ஒரு கணம் அவனுக்கு சந்தேகம், உண்மையாகவே அவை கழன்று போகின்றனவா அல்லது திரும்பவும் அவை அவனிடம் வந்து ஒட்டிக் கொள்கின்றனவா என்பதை பிரித்தறிய முடியாத மயக்கம். அலைகளின் தாலாட்டுக்கேற்ப அவற்றின் முன்னோடலும் பின் வாங்கலும், அத்தகைய பயணம் அவனது.
இடைக்கிடை அவன் ஆழப்புதைவிலிருந்து அவனது பழைய இன் கிளுகிளுப்பின் மேலாடல்.
அப்போதெல்லாம் அவன் உறங்காததோடு சுக்கானில் கைபோட்டவனாய், காற்றுதைக்க எழும் தோணியின் கும்பகப் பாய்விரிப் பின் ஏகாந்தத்தில் தன்னை மறந்து சஞ்சாரம்,
பாசித்துணுக்குகள் மெல்ல மெல்ல கடந்து செல்கின்றன. கடலின் தொப்பூழ் கொடியாய் நின்றாடும் தாழங்கொடிகள் அறுபட்டும் அறுபடாமலும் நெளிகின்றன. அவனுக்கு அவைபற்றிய பிரக்ஞையின் தொடர்பும் துண்டிப்பும் மாறி மாறி நிகழ்கின்றன. அவன் ஒரு புதிய பிரக்ஞையுள் மிதக்கிறான்.
Slgh & DJ Lyth 45 மு.பொ

Page 28
கடல்.
எல்லையற்ற நீல விரிப்பு.
இப்போ அவன் தோணி, ஏறிய கரையை விட்டு எவ்வளவோ தூரம் வந்துவிட்டது. புகைமண்டலம் போல் தூரந்தெரிந்த, அவன் விட்டு வந்த கரையும் இப்போ இல்லை.
எங்கும் எப்பக்கம் திரும்பினாலும் பளபளக்கும் நீல நீர்ப்பரப்பு.
அவன் முன் பாய்விரித்த ஏகாந்த சஞ்சாரம், திடீரென அச்சமாய் மாறுகிறது.
ஏன் அச்சம்? அப்படி யாரோ நடுக் கடலில் இருந்து குரல் கொடுப்பது போல் கேட்கிறது.
நடுக்கடல், திசை தெரியாத நீர்ப்பரப்பின் நீட்சி, வியாபிப்பு.
அதன் உணர்ச்சி உருவகமாய் அச்சம்.
ஏன் அச்சம்.
மீண்டும் அதே குரல் கடலில் இருந்தா? அவனுள் இருந்தா?
அவன் செல்லும் திசை சரியா?
கடல்நீர் தழுவிவரும் குளிர்காற்று அவன் நெஞ்சைத் தடவிச் செல்கிறது.
உடல் நெளிந்து விறைக்கிறது.
ஏன் அச்சம்?
சற்றுமுன் சாகத் துணிந்த உனக்கு அச்சமேன்? சாகத் துணிந்தவனுக்கு செல்லும் திசை பற்றிக் கவலையேன்?
மேற்கை நோக்கி சூரியன் சரிந்து கொண்டிருக்கிறது. போக்கு வெயில், தோணியில் இருந்தவாறு அண்ணாந்து பார்க்கிறான்.
அங்கே வான் வெளியின் தாலாட் டாய் வெகுதொலைவில் வட்டமிடும் பருந்துகள். அவை பருந்துகளா அல்லது அவன் விடும் பட்டங்களா? அவன் நெஞ்சில் விண் கூவும் பட்டங்களாய் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
நெஞ்சில் விண் கூவும் பட்டங்களின் கயிறுகள் இன்னும் பூரணமாக அறுபடவில்லை.
அதுதான் அச்சம்?
கடலின் தொப்புழ் கொடியாய் இரண்டொரு நரம்புகளில் இன்னும் நின்றாடும் தாழங் கொடிகள்.
சூரியன் வேகமாக மேற்கில் விழுந்து கொண்டிருக்கிறான்.
தூரத்தே பெருகிவரும் இரவின் கரியவாடை, கடல் காற்றில்
&lgh & DJ Lyth 46 (p.CLII

கனத்து வருகிறது.
கடலும் இரவும் ஒன்றாகக் கலக்கின்றன. அவன் தோணியில் இருந்தவாறே, கண்களை மூடி, கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்து, தன் முழங்கால்களை இரண்டு கைகளாலும் கட்டிக் கொள்கிறான்.
பீதியின் தாக்குதல். பீதி தாக்கும்போது, அவன் உடல் அதை எதிர் கொள்ளும் முறையின் இருப்பு அது.
அவன் உடல், குளிரால் நடுங்குவதுபோல் நடுங்குகின்றது. வானில் அவன் விட்ட பட்டங்களாய் பறந்த பருந்துகள் திடீரென கழுகுகளாய் மாறி அவன் தோணியில் வந்து குந்துகின்றன.
பிணந்தின்னிக் கழுகுகள்! அவன் உடல் இன்னும் வேகமாக நடுங்குகிறது. அப்போது ஒரு குரல்: பருந்துகளும் சரி கழுகுகளும் சரி எல்லாம் ஒன்றுதான். எல்லாம் உன்னைத்தின்ன வந்தவைதான்!
எங்கிருந்து அந்தக் குரல்? வேறெங்கும் இல்லை. அவனுக்குள் இருந்தே வருகிறது. சிறிது நேரத்தில், அவன் மனம் குலைந்து அந்தரப்பட்ட நிலை மாறி சிறிது சிறிதாக அமைதிக்குள் ஆழ்கிறது.
அவன் இப்போ பெருகிவந்த பீதியைக் கையில் எடுத்துப் பார்ப்பதுபோல் அமைதியாக விடுபட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென ஒரு பேரிரைச்சல் எழுகிறது. அவன் முன்னே நேவிப்படகு பெரிதாக இரைந்து கொண்டு அவனைச் சுட்டுத்தள்ளுவது போல் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இப்போ அவன் அசையவில்லை. அதே அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்தான். வந்த நேவிப் படகு திசை திரும்பி வேறு பக்கமாகச் சென்று. மறைகிறது.
அது மறைந்து போகும் கடல்வெளி, அவன் நெஞ்ச வெளியாக மாறுகிறது.
பீதி மறையஅந்த வெளியிலிருந்து பெருகிவரும் பெருந்துயர்
கடலும் கரையும் 47 yp. Lur

Page 29
படம் விரித்தாடும் பாம்பு அவனில் கவிவது போல் அத்துயர் அவனைச் சூழ்கிறது.
ஆனால் அவன் அசையவில்லை. முன்னர் போல் அவன் அத்துயரால் உணர்ச்சி வசப் பட்டு அள்ளுப்படாமல் நிதானமாய் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவி பெரிதாக வாய்விட்டு அழுவது கேட்கிறது. அதைத் தொடர்ந்து அவன் பிள்ளைகளின் ஒலம் அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் முன்னே இன்னும் பல காட்சிகள் எழுகின்றன. பாம்பு கடித்து காட்டில் அனாதரவாக இறந்து கிடக்கும் லோகிதாஸன்.
சுடலையில் லோகிதாஸனைக் காவிக்கொண்டு நிற்கும் சந்திரமதி. அவன் நெஞ்சு இளகிவிடும் போன்ற கசிவு. ஆனாலும் அவன் அசையவில்லை. திடீரென இன்னொரு காட்சி எழுகிறது. நடுக் காட்டில், நள்ளிரவில், பாழடைந்த மண்டபத்தில் தமயந்தியை தனியே விட்டு நழுவிப் போகும் நளன், அவனைக்காணாது தவிக்கும் தமயந்தி போல் அவன் மனைவியின் முகம் வந்து வந்து மறைகிறது.
திடீரென இன்னொரு காட்சி. ராணுவ நடவடிக்கைகளால் சிதறிக் கிடக்கும் சடலங்கள் : இளைஞர்கள், பெண்கள், பிள்ளைகள், வயோதிபர்.
அவன் நெஞ்சுக்குள் ஏதோ திரண்டு கொண்டுவருகிறது. ஆனால் அவன் அசையாது பார்த்துக் கொண்டே இருக்கிறான். சிறிது நேரத்தில் - எல்லாம் அடங்கி, இரவின் பேரமைதி எங்கும். அவ்வேளை அவனை அருட்டுமாப்போல் ஓர் உணர்வு. அவன் உணர்வுகள் கூர்மையடைந்தபோது, வெகுகாலமாக அடங்கிப் போயிருந்த அந்த இன் கிளுகிளுப்பு, அவனது ஆழப்புதைவிலிருந்து மீண்டும் மேலாடிவருவதை அவன் உணர்ந்தான்.
* 骨 *
šLgúň šRDJuyh 48 (p.Gur

.தலை நிமிர்ந்து பார்க்கிறான் فعلموكى காலைப்புலர்வின் வெண்கோடு அடிவானில் தெரிகிறது. அவன் தான் வந்த தோணியை விட்டிறங்கி, கடலின் மறுகரையில் புதுமனிதனாக குந்திக் கொண்டிருக்கிறான்.
அவன் வந்த தோணி, சற்றுத்தூரக் கடலில் , துயரில் மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது.
அந்தத் தோணியில், அவன் மனைவியும் பிள்ளைகளும் இன்னும் தெரிந்த சில முகங்களும் கண்ணீரில் நீந்துகின்றன.
அப்போது, ஆற்றுநீரில் அள்ளுப் பட்டுச் செல்லும் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அகத்திய முனிவரின் காட்சி அவன் முன்!
அகதிகளை ஏற்றிய தோணிபோல் அவனது பிள்ளைகளும், மனைவியும் நிற்கும் படகு, துயரில் மிதந்து மிதந்து செல்கிறது.
அவர்கள் பின்னால் அவர்களை நோக்கி உறுமிக்கொண்டு வரும் நேவிக்கப்பல்.
அவனை நோக்கி அவர்கள் பரிதாபமாகக் கைகாட்டி அலறுவது தெரிகிறது.
மீண்டும் துயர். அவன் கடலில் இறங்கி, அவர்களை நோக்கி நடக்கிறான். அவர்களை நோக்கி அவன் நடக்க நடக்க, இப்போ அவனில் நீர் ஒட்டாமல் இறங்கி இறங்கி அவனுக்கு வழி விட்டுச் செல்கின்றது.
19so
கடலும் கரையும் 49 (go. Gaur

Page 30
நான் வீட்டின் பின் விறாந்தை யிலிருந்து மேற்குவானைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கதிரவன் விழுந்து கொண்டிருக் கிறான்.
வீழும் கதிரவனால் ஏவப்பட்ட கதிர்கள், அடிவானில் ஆயிரம் கோலங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
எங்கோ தூரத் தெரியும் அடிவான வெளி என்னில் துயரைக் கவிக்கிறது.
ஏன் துயர்? இனம் தெரியாது உள்ளிருந்து பரவிவரும் துயரக் கசிவில் ஊறிய மனம் , நிலைகொள்ளாது மீண்டும் மீண்டும் வான்வெளியில் சென்று மோதுகிறது.
அடிவானின் குங்குமப் பின்னணி யில் முகில் கூட்டங்களின் பலவித உருவங் களின் அரங்கேற்றம்.
மலை உச்சியிலிருந்து பாய்கின்ற குதிரை.
பெரிய சிவலிங்கத்தில் இழுக்கப் பட்ட விபூதிக் குறிகள். போர்க் களத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டு குப்புறக் கிடக்கும் ஓர் அசுரன்.
திடீர் திடீர் என முளைத்தெழும் சிறுசிறு மலைமுகடுகள்.
சிறிதுநேரம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்க, அவை மெல்ல மெல்ல கரைந்து புதுத் தோற்றங்களில் ஜனனம்.
நிஷ்டையில் இருக்கும் முனிபுங்கவர் போல் சிவலிங்கம் மாறுகிறது.
பாயும் குதிரை பல்லக்குக் காவி களாய் பரிணமிக்கிறது.
SLg Lh SRO Julih 5 O (p.Gur
 
 

குப்புறக் கிடந்த அரக்கன் குட்டி அருவிபோல் மெல்ல மெல்லக் கரைந்து நீள்கிறான்.
இப்புது மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவையும் சிறிது நேரத்தில் வேறொன்றாய் சூல் கொள்ளும் தோற்றம். எந்த உருவமும் நிலைப்பதாய் இல்லை. ஒரே மாற்றம்.
மாற்றங்களின் அரங்காகத் திகழ்ந்த பின்னணித் திரை இப்போ குங்குமச் சிவப் பிலிருந்து செம்மஞ்சளாகிறது. பின்னர் குருத்துப் பச்சையாகிறது. திடீரென குருத்துப் பச்சையின் ஓரங்கள் கருமையால் கெளவப்படும் சாயல், கவியவிருக்கும் இரவின் சமிக்ஞை முதலில் அந்த ஓரங்களில் வந்து உரசிக் கொள்வது போல். . . .
மாற்றங்களின் அரங்காகத் திகழ்ந்த பின்னணித் திரையே மாறுகிறதா? எனக்குள் மீண்டும் அந்த துயர் தலையெடுக்கிறது.
ஏன் துயர்?
குருத்துப் பச்சையாய் செவ்வொளி காட்டிய அடிவானம் , கருமையோடு கருமையாகிறது. அதையும் விடக் கருமை தடிப்பேறிய தூரத் தெரிந்த பனைமரங்கள் அடிவான வெளியில் ஜன்னல் கிராதிகள் போல் கோடுகள் காட்டுகின்றன. அவை எனக்கு சிறைச்சாலை கம்பிகளை நினைவூட்டுகின்றன.
என் சிறைப்பட்ட மனம்.
என் துயரின் காரணம் ஒரு துரும்பளவு பிடிபட்டது போல் தெரிவதற்குள் அது நழுவிப்போய் விடுகிறது.
எல்லாம் மறைந்த கும்மிருட்டு.
இது எனக்குச் சாவை நினைவூட்டுகிறது.
தோற்றம் காட்டிய உருவங்கள், மாற்றங்காட்டிய உருவங்கள் எல்லாம் எங்கே போயின?
அவற்றின் அரங்காக இருந்த பின்னணி வெளி? சாவில் எல்லாம் மறைகிறதா? சாவில் எல்லாம் மறைகிறதாக, எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதாக சாகாதவன் நினைக்கிறான். இது சாவைப் பற்றிச் சாகாதவன் வைத்திருக்கும் பார்வை.
செத்தவனுக்கு எல்லாம் சாவோடு முடிந்து விடுகின்றனவா?
இது என்ன, ஒரு அபத்தமான கேள்வி?
செத்தவனுக்கு எல்லாம் சாவோடு முடிந்து விடுகின்றதா இல்லையா என்பதை அறிய நாம் செத்துப் பார்க்க வேண்டும்.
மீண்டும் ஒரு அபத்த வியாக்கியானம்.
செத்தபின் எப்படிப் 'பார்க்"கிறது. யார் 'பார்க்"கிறது?
SLSh SD Tujuh 51 (p.sum

Page 31
திடீரென்று அடிவானில் ஒரு மின்னல் கிழிப்பு அந்தக் கிழிப்பில் வான் வெளியின் இருப்பும், அதில் உருக்கொள்ளும் தோற்றங்களும் பளிட்டுச் சிரித்தன.
இருளுக்கு உயிரூட்டிய மின்னல். சாவுக்கு உயிரூட்டுவது எது? கணத்துக்குக் கணம் மறையும் தோற்றங்கள், குலையும் கோலங்கள். இவற்றுக்கிடையில் அந்த இருப்பு.
மின்னல் சுழிப்பில் பழைய உருவங்கள் மறைந்து, புதிய உருவங்கள் குடியேறியிருப்பது தெரிந்தது.
அப்போ நிலைத்திருப்பது ஒன்றுமில்லை. அப்படியா? அந்த வெளி? அது மாறவில்லையா? அதன் நிறம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோலம் கொள்கிறது. அது மாற்றமில்லையா?
வெளி என்பது நிறமா? வெளிநிறங்களைக் கடந்தது. அப்படியெனின் நிறங்கள் என்பவை வெளியின் நிகழ்வுகளால் நிழற்றப்படும் குணங்கள்? திரையிடப்படும் தோற்றங்களுக்கேற்ப, வான்வெளியில் எறியப்பட்டு எதிரொளிக்கும் நிறங்கள்.
அப்போ வெளி மாறவில்லை? வெளி வெளியாகவே தான் இருக்கிறது. அதில் காலூன்றும் தோற்றங்கள் தான் அதில் தூசும் தேசும் ஏற்றி விகல்ப்பங்கள் புரிகின்றன?
வெளியில் அமையும் தோற்றங்களுக்கேற்ப வெளியின் இருப்பு பளிரிட்டும் மங்கியும் காட்சி தருகிறது?
இல்லை, வெளிதன் தூய்மையின் உக்கிரத்தால் தோற்றங்களின் தூசையும் தேசையும் இருப்பாக்கிக் காட்டுகிறது.
骨 骨 骨
ன்ெனத்தை அப்பிடிபார்த்துக் கொண்டிருக்கிறீங்க?" என்று கேட்டவாறு என் மனைவி என் முன்னே நிற்கிறாள்.
நான் திரும்பி அவளைப் பார்க்கிறேன்.
இவள் ஒரு தோற்றம்.
கடலும் கரையும் 52 yp. Lur

இவள் எந்த வெளியில் தோற்றுகிறாள்? இவள் என் புறவெளியில் இருந்து அகவெளிக்குள் நுழைகிறாள். என் அகவெளியில் இருந்து புறவெளிக்கும் புகுகிறாள்.
அகம் புறம் என்ற பிரிவு வெளிக்கு உண்டா? இல்லை. எமக்குத்தான் அந்தப் பிரிவு. நாம் அந்த வெளியைப் பிரித்து பங்குபோடும் பங்குதாரர்கள். நமது பங்கு தீர்ந்ததும் வெளியிலிருந்து நமது தோற்றம் மறைந்து விடுகிறது?
வான்வெளியில் படரும் முகில் கூட்டங்களின் தோற்றங்கள் போல் நாமும் தோன்றித் தோன்றி மறையும் தோற்றங்கள்.
எனக்கும் மீண்டும் அந்தத் துயர் சுழித்துச் செல்கிறது. நமக்கு இருப்பென்பது இல்லையா? இருப்பு அந்தவெளி மட்டுந்தான். நமது இருப்பென்று நாம் பேசுவது நமது நிலையாமையைத் தானா?
மீண்டும் வான்வெளியில் மின்னல் ஒன்றின் பளிரிடல். ஓர் கண மின்னல், மின்னல்நிலையாமையின் குறியீடு. மின்னல் தன் நிலையாமையின் ஒரு கண இருப்பில், நிலைத்த வெளியின் மகோன்னதங்களைக் காட்டிச் செல்கிறது.
அந்த மகோன்னத ஒளிவீச்சால் தன் நிலையாமைக்கு நித்திய இருப்புத் தேடுகிறது மின்னல்?
நமது நிலையாமை இருப்பும் இப்படி வெளியை எடுத்துப் பளிரிடும், வெளியை தன் இருப்பாய் மாற்றும் இந்த மின்னலின் மகோன்னதமாய் இருந்துவிட்டுப் போக வேண்டும். அப்படியா?
வெளியோடு நாம் கொள்ளும் தொடர்பின் உக்கிரத்தில் எமது இருப்பின்நிலைப்பும் நிலையாமையும் தங்கியிருக்கிறது.
வெளியோடு நாம் தொடர்பு கொள்ளாமல், வெளியைத் துண்டு துண்டாக வெட்டி பங்கு போடுகிறோமா? நாம் ஒவ்வொருவரும் வெளியை எமக்குள் வைத்துக் கொண்டு இருளை அடைகாக்கிறோமா?
நான் வெளியோடு தொடர்புகொள்ள முயல்கிறேனா? இருளை அடைகாக்கிறேனா?
suguh Syih 53 yp. Lur

Page 32
நான் வெளியை நோக்கித் தாவியெழ முனையும்போது என் மனைவியின் தோற்றம் முன்னெழுகிறது? அதேபோல் அவள் எழ முயலும் வெளிக்குத் தடையாக நான் நிற்கிறேனா?
骨 骨 *
6 6
முன்னுக்கு நிற்கும் உன் காளியை வெட்டு. அப்போதான அப்பால் செல்லலாம் ' தோத்தாபுரி பூரீராமகிருஷ்ணருக்கு கட்டளை யிடுகிறார்.
திரும்பத் திரும்ப காளிதான் தன் கண்ணுக்கு முன் தெரிவதாக பூரீராமகிருஷ்ணர் அவருக்கு முறையிடுகிறார்.
'அந்தக் காளியை வெட்டு' என்று திரும்பக் கூறிய தோத்தாபுரிக்கு பூரீராமகிருஷ்ணர் அதே பதிலைத் திரும்பத் திரும்பக் கூறவே, தோத்தரிபுரி ஒரு போத்தில் ஒட்டை எடுத்து பூரீராமகிருஷ்ணரின் நெற்றி நடுவில் கீறி, அவ்விடத்தை மனதிருத்தி தியானிக்கும்படி மீண்டும் கட்டளையிடுகிறார்.
அதன்படி பூரீராமகிருஷ்ணர் தியானிக்கிறார். அவ்வளவுதான் அடுத்தகணம் தோற்றம் காட்டிய காளியை வெட்டிக் கடந்த வெளியில் அவர், அந்நிலையிலிருந்து அவர் வெகுநேரம் எழும்பவில்லை.
கட்டளை பிறப்பித்த தோத்தாபுரியே மலைத்து நிற்கிறார்.
* * 骨
5Tளியை வெட்டு
ஏன்?
அது ஒரு மாயைத் தோற்றம். ஓர் இடைத் தரிப்பு.
வெளியை மறைக்கும் மாயை.
தோத்தாபுரியின் குரல் மீண்டும் எனக்குள் ஒலிக்கிறது.
தூய்மையின் இருப்பிடமான மகா காளியே வெளிக்குத் தடையான மாயை என்றால், என் மனைவி, என் பிள்ளைகள் மொத்தத்தில் என் குடும்பம் எல்லாமே மாயையின் கூட்டு மொத்தப்பழு.
இவற்றை முன்னால் வைத்துக் கொண்டு வெளியை நோக்குவதென்பது கல்லைக் கழுத்தில் கட்டிக் கொண்டு நீந்தப் பழகுவதற்கு ஒப்பதாகும். அப்படியா?
எனக்குள் ஏதோ இடறுப்படுவது போல் பட்டது.
என் மனைவி யார்?
கடலும் கரையும் 543 R மு.பொ

என் மனைவி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து கோடி ஜீவராசிகள் நிலையென்ன?
அத்தனையும் இந்தக் காளியின் சிலிர்ப்பில் ஜனனித்தெழும் தோற்றங்கள் தானே?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணரூபம். அக்குணரூபத்துக்கு ஏற்ப மாயையின் கனரூபம்,
காளியார்?
வெளிக்கும் அவளுக்கும் என்ன உறவு?
காளியை நீக்கி - அதாவது தோற்றங்களை நீக்கி வெளியின் இருப்பை சுகிக்க முடியுமா?
அதேவேளை வெளியை மறந்து தோற்றங்களை மட்டும் கண்டால் அது மாயை. வெளிதரும் சுகத்தை சுகிக்கவிடாது மறைத்து நிற்கும் மாயை. அப்படியா ?
இரண்டின் தன்மையையும் உணர்ந்தவன் ஒவ்வொரு தோற்றத்துக்குள்ளும் வெளி புகுந்துள்ளதை உணர்கிறான்.
இந்த அறிவு -
தோற்றங்களை மாயையாகக் காணாது, வெளிவரையும் ஒவியங்களாகக் கண்டு மெய்சிலிர்க்கிறது.
ஒவ்வொரு தோற்றமும் வெளியை மொண்டு வைத்திருக்கும் சற்பாத்திரங்கள்.
ஒவ்வொரு தோற்றமும் வெளியை வழிபட வைக்கும் எழில் ரூபங்கள்.
என் மனைவி
என் பிள்ளைகள்
நான் - என்னோடு சம்பந்தப்பட்ட சகலதும் என் கழுத்தை அமுக்கும் மாயையின் பழுவல்ல.
மாறாக எல்லாம் தூயவெளியை மொண்டு வைத்திருக்கும் சற்பாத்திரங்கள், வெளி ஏந்திகள். எனது மெய் சிலிர்க்கிறது.
எனது அந்தத் துயர்?
வெளியிடமிருந்து வெகுதூரம் பிரிந்து வந்து விட்டதாகிய என் எண்ணமும் அதன் துயரும் மெல்ல மெல்ல மறைகிறது.
* 普 骨
தோதாபுரிக்கு வயிற்றுவலி.
வயிற்றுவலி மாயைக்குட்பட்டதல்லவா?
கடலும் கரையும் 55 g.u.

Page 33
வயிற்றுக்குத்தானே வலி? ஆத்ம வெளிக்கல்லவே? தோற்றங்களைக் கடந்து, ஆத்ம வெளியாய் நிற்கும் தோத்தாபுரியை வலி தொட முடியுமா?
வலி வயிற்றில் ஏற்படத் தொடங்கியதுமே, தோத்தாபுரி 2 -l .6Ꮘ0Ꭷb உதறி வெளியில் கலந்துவிடுவிார்.
ஆனால் வயிற்றுவலி தொடர்ந்து நிற்கிறது. தோத்தாபுரியும் வலி ஏற்படும் ஒவ்வொரு சமயமும் வெளியில் கலந்து அதில் இருந்து தப்புகிறார்.
ஆனால் அன்று - வெளியில் கலக்கும் முயற்சியைக் கூடி செய்யமுடியாதவாறு வலி அவரைத் தாக்குகிறது, வெளியோடு ஒன்றிவிட முடியாதவாறு கீழே இழுக்கிறது. ܀ ܀
தோத்தாபுரிக்கு ஆத்திரம் அத்துமீறுகிறது.
இந்த உடலால் தானே இந்த உபாதை? வெளியில் சதா ஐக்கியமாகி நிற்கக்கூடிய எனக்கேன் இந்த உடல்? இதை அழித்துவிட்டால் எல்லாம் தீர்கிறது' என்று எண்ணிய தோத்தாபுரி தனது உடலை அழித்துவிட, கங்கையில் தன்னை மூழ்கடித்து தற்கொலை செய்யப்போகிறார். கங்கையின் ஆழமான பகுதியில் இறங்கி நடக்கிறார். அவர் ஆழமான பகுதியில் இறங்கி நடக்க நடக்க, அவர் ஆச்சரியப்படும் விதத்தில் கங்கை நீர் வடிந்து வடிந்து அவர் முழங்காலுக்குக் கீழே செல்கிறது.
தோத்தாபுரி தன் தற்கொலை முயற்சியில் களைத்துப் போகிறார். அவர் களைத்துப் போய் தலை நிமிர்கையில் அங்கே அவர் முன் காளி நின்று சிரிக்கிறாள்.
'நீ நினைக்குமாப் போல் எதையும் செய்து விட முடியாது. எதையும் எனது ஆக்ஞைக்கு உட்பட்டே கடக்க வேண்டும்'
தோற்றங்களை கடந்த தோத்தாபுரிக்கு காளியின் தோற்றம் விளக்குகிறது.
வெளி என்பது என்ன? காளியிலிருந்துவேறான ஒன்றா? காளியின் தோற்றத்தை வெட்டும்படி கூறிய தோத்தாபுரி, காளிஉபாசகரான பூரீராமகிருஷ்ணர் முன்னே சென்று மண்டியிடுகிறார். தான் அங்கிருந்து செல்வதற்கு காளியிடம் அனுமதி கேட்டுத் தரும்படி,
'நீ பிரம்மவெளி ன்ன்று அழைத்ததைத் தான் நான் காளி
கடலும் கரையும் 56 (yn. Gur

என்கிறேன்' என்று பூரீராமகிருஷ்ணர் பலருக்கு விளக்கிச் சொல்வது போல் என் காதுகளில் ஒலிக்கிறது.
பூரீராமகிருஷ்ணர் விடை கொடுக்க பிரம்மஞானியான தோத்தாபுரி திகம்பரக் கோலத்தோடு அங்கிருந்து சோர்ந்து போய் நடந்து செல்வது என் கண்முன்னே விரிகிறது.
என் நெஞ்சில் இனந்தெரியாத துயர்,
பிரம் மவெளியின் உச்சத்தைத் தொட்ட தோத்தாபுரிக்கு, தோற்றங்களில் மறைந்திருக்கும் அதே வெளியின் சக்தியை அறிய முடியாது மறைத்த மாயை எது?
ஞானச் செருக்கு?
ஞானச் செருக்கு உடைந்த தோத்தாபுரியின் நடை தூரத் தூரச் சென்று மறைகிறது.
தோற்றங்கள் மாயையா?
இப்போ பிரம்ம வெளியின் உச்சத்துக்கு ஏறிய தோத்தாபுரி, கீழிறங்கி தோற்றங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் இறங்கி நடந்து கொண்டிருக்கிறார்.
கடலும் கரையும் 57 (p. Our

Page 34
முன்னே கைகூப்பியவளாய், கண்களை மூடி மெய்மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது. சுவாமி அறையில் பல சுவாமிப் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் அவள் நிற்பது அவளுக்குப் பிடித்தமான அவளது இஷ்ட தெய்வமான விநாயகர் முன்னிலை யில், விக்கினங்கள் தீர்க்கும் விநாயகன். படங்களின் முன்னே இருக்கும் மேசையில் தூண்டாமணி சுடர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அதை அவள் தூண்டி விட்டிருந்தாள். சதா அடிையாது எரிந்து கொண்டிருக்கும் விளக்கு. எண்ணெய் விடும் சமயங்களைத் தவிர அது அனைவதே இல்லை. அந்தளவு ஆழமான கவனிப்போடு அதை அவள் நிறைவேற்றி வந்தாள். மற்றவர்கள் செய்வதுபோல் காலையில் கும் பிடும்போதும் மாலையில் கும் பிடும் போதும் ஏற்றிவிட்டு அனைத்து விடுகின்ற விஷயமல்ல அது. ஆண்டவனில் அன்பு செலுத்துகின்றதென்பது அப்படி காலையிலும் மாலையிலும் நாங்கள் சாப்பிடுகிற மாதிரி, எங்கள் காலைக் கடன்களைத் தீர்த்துக் கொள்கிற மாதிரியான ஒரு விஷயமா? அப்படி ஒரு சடங்கா? ஆண்டவன் எங்களுக்கு யார்?
முன்பு ஒருகாலம் அவளுக்கு இந்தப் பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன, காலையிலும் மாலையிலும் விளக்கேற்றிக் கும்பிட்டபின் விளக்கை அனைத்துவிடும் அல்லது அணைந்துபோக விடும் வழிபாடுகள் இவளுக்கு விநோதமானவையாக இருந்திருக் கின்றன. இவளுடைய அம்மா, அப்பா, அண்ணா, அத்தான் எல்லோரும் அந்தமாதிரித்தான் கடவுள் படத்தெதிரே நின்றிருக்கிறார்கள். அந்தக் காலங்களில்
கடலும் கவாபும்
58 மு.பொ
 
 

எல்லாம் இவள் இந்த வழிபாட்டுப் பக்கமே தஸ்ைவைத்துப் படுத்ததில்லை. இவர்களெல்லாம் கடவுளை ஏமாற்றுபவர்களாகவே அவளுக்குப் பட்டது. அவர்கள் அப்படி சுவாமி படத்தெதிரே போய் நிற்கும் சமயங்களை இவள் காண நேரும் போதெல்லாம் அவள் தனக்குள்ளே குலுங்கிக் குலுங்கிர் சிரித்திருக்கிறாள். தப்பித்தவறி இவளுடைய அம்மா சாமி அறையை விட்டு விபூதிப் பூச்சோடு வரும் சமயங்களில் வெளிவாசலில் இருக்கும் இவளின் முகத்தில் அப்போதான் படர்ந்து மறைந்து விட்டிருந்த கேலி நகைப்பின் வெளிச்சத்தைக் கண்டே, அம்மா எரிந்து விழுந்த சமயங்கள் எத்தனையோ உண்டு, "இவள் ஒரு நேரமாவது சாமியைக் கும்பிட்டிருக்கிறாளா? சதா சாப்பிடுறதும் புத்தகம் வாசிக்கிறதும் தான் வேலை. என்ன கர்மம் என் வயித்தில வந்துபிறந்ததோ?" என்று திட்டிக் கொண்டு போகும் போது இவள் கோபப்பட்டதில்லை. மாறாக தாயின் அற்றாமையைக் கண்டு இன்னும் அநுதாபப்பட்டிருக்கிறாள். இன்னொரு வேடிக்கை, அது இன்னும் சுவையானது. வீட்டில் ܘܐ ஏதாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டால், யாருக்காவது சுகபீனம் ஏற்பட்டு விட்டால் அல்லது காசு இழப்புகள் நீேர்ந்துவிட்டால், அல்லது யாராவது வீட்டை விட்டு நெடுந்தூரப் பயணத்திற்கு அடுக்கு பண்ணுகிறார்கள் என்றால் சாமிப்படத்தின் முன்னே விசேடக்கும்பிடல்கள் நேர்வதுண்டு. வழமையான காலை, மாலையோடு இடைநேரத்தில் மதியத்தில் என்று ஏதாவது நெருக்கடி வந்தால்தான் கடவுள் நினைப்பு விசேட ஆராதனைகள், இல்லை என்றால் விளக்கேற்றி அணைக்கிற மாதிரியான காலை மாலைச் சடங்கு வழிபாடு. அதன் பிறகு கடவுள் நினைப்பே எழுகிறதில்லை. எல்லாம் நான்தான், சர்வ வல்லமையும் எனக்குண்டு. எல்லாம் என்னால்தான் நடக்குது என்ற தோரணையில் நடப்பு. செத்த வீட்டுக்குப் போனால் கூட "எல்லோருக்கும் சாவுண்டு, ஆனால் எனக்கில்லை' என்ற பாவனையில்தான் கதை காரியங்கள் அப்படிப்பட்டவர்களை அவள் பரிதாபமாகப் பார்த்திருக்கிறாள்.
இந்த நேரத்தில் தான் திடீர் என்று ஒரு மாயக்கை குட்டுகிறது. ஒவ்வொரு ஆளுக்கும் ஏற்றமாதிரி அவரவர் நிற்கும் நிலைப்பாட்டிற்கு "பொருந்துகிறமாதிரி தலையிலோ, பிடரியிலோ, சள்ளையிலோ குட்டு விழுகிறது. அவரவர் நிற்கும் நிலையைக் கணக்கெடுத்த குட்டென்றபடியால் குட்டுவாங்கிய அனைவரும் தம்நிலை தளர்ந்து போகின்றனர், திடீரென்று எல்லோரையும் ஒரு பயம் கெளவிக் கொள்கிறது. மரணபயம், நீருக்கு வெளியே முதலை விழிகளை மட்டும் காட்டி மிதப்பதுபோல் ஏதோ ஒன்றின் மரத்த பார்வை. அவ்வளவுதான். "ஐயோ, கடவுளே' என்று நாக்குளற நீருக்குள்ளே ஆழ்பவன் எதையாவது எட்டிப்பிடிக்கிற அவசர கோலத்தில் இறைவன் முன்னே போய் விழுகின்றனர். ஒரு நேரமும் கும்பிட நேரமற்றவர் இரண்டு நேரமும் கும்பிடுவர். இரண்டு நேரக் கும்பிடு கள்ளர் நாலு
கலும் aацій 59 மு.பொ

Page 35
நேரமாக்குகின்றனர். விநாயகர் முன்னே தோப்புக்கரணம் போடும் ஒருவர், அடிக்கடி நெஞ்சிலே சிலுவைக் குறியைப் போடும் இன்னொருவர். சர்வாங்கமும் நிலத்தில் பட விழுந்தெழும்பும் வேறொருவர். அப்படி அவசர அவசர கோலங்களில் பெருக்கெடுக்கும் பக்தி வெள்ளம்.
அவளுடைய அம்மாவிற்கும் அப்படி ஒரு மாயக்கையின் குட்டு விழவே செய்தது. அதுவரைக்கும் அந்த வீட்டின் ராணியாக அதிகாரம் செய்து கொண்டு வந்தவள் அதன்பிறகு திடீரென கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவள் போல் அந்தரித்துப் போனாள். தானும் தன் அறையுமாக முடங்கிக் கொண்டாள். இல்லை, அறைக்குள் முடங்கிக் கொள்ளக்கூட முடியாமல் திணறினாள். திடீரென எதையோ இடையில் கண்டு விழித்தெழுந்த குழந்தையின் மிரள்வு. அங்கு எதைக் கண்டு பயந்தாள்? அந்த முதலையின் மரத்தச்ார்வை?
அம்மாவுக்கு விழுந்த அந்தக் குட்டு! அது எவ்வளவு நுட்பமாக நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் கோட்டை ராணுவத்தின் ஷெல் வீடுகளில், கடைகளில் விழத் தொடங்கியிருந்த காலம். அக்கம்பக்க வீடுகளில் எல்லாம் அது விழுந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அவளுடைய அம்மா கலங்கவில்லை. காரணம் கடவுளின் மேல் இருந்த பக்தியினால் அல்ல. எப்பொழுதுமே தனக்கொன்றும் நேராதென்ற அவளுடைய தற்போக்கான சுபாவம். 'மற்றவர்களுக்குத்தான் மரணம் எனக்கு மட்டும் அது இல்லை' என்ற அதே சுபாவம். ஷெல் விழுந்த வீடுகளுக்கெல்லாம் சென்று, தனது துக்கத்தைத் தெரிவித்து விட்டு வரும்போது கூட 'உங்கள் வீடுகளில்தான் ஷெல் விழும், என் வீட்டில் அல்ல' என்ற பெரும்போக்குத்தான் அவள் முகத்தில் ஒட்டியிருக்கும்.
அப்போதுதான் அந்தக் குட்டு விழுந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா குசினிக்குள் நின்று தடயுடலாகச் சமைத்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது. திடீரென காதுச் சவ்வு சிதறுவது போன்று பேரிடி, அம்மா அடுப்பில் வைக்கக் கொண்டு போன குழம்புச் சட்டி கைநழுவிச் சிதற, அப்படியே தடாலென்று கீழே விழுந்து விட்டாள். ஆனால் வீட்டுக்கு அப்படி ஒன்றும் நேரவில்லை. சமையலறையின் புகைபோக்கி சிதறியது மட்டும்தான். எஞ்சிய அனைத்தையும் அதன் அருகே நின்ற சிறிய தென்னங்கன்று உள்வாங்கிப் பொருமிச் சிதறியது.
ஆனால் அம்மாவுக்கு அவ்வளவும் போதும், அதிலிருந்து அவள் மீளவில்லை. எதையோ சாகக் கொடுத்தவள் போல் உயிரற்றுத் திரிந்தாள். கூட்டுவது, படத்துக்கு விளக்கு வைப்பது போன்ற எல்லா அடிப்படை அலுவல்களையும் பெரும் உற்சாகமாக நடத்திக் கொண்டுவந்தவள் இப்போ எல்லாவற்றையும் கைவிட்டு ஆழமாகத் தனக்குள் புதைந்து கொண்டாள்.
அம்மாவின் இந்த நிலை அவளை முன்னுக்குத் தள்ளியது.
கடலும் கரையும் 60 Up.OLJr.

தானுன்டு தன் வாசிப்புண்டு என்று பொறுப்பற்று திரிந்தவள் இப்போ வீட்டுக் கடமைக்குள் தள்ளப்பட்டாள். இந்த வேளையில் தான் அவளுடைய கணவனும் வந்து சேர்ந்தான், வவுனியாவில் கடை வைத்திருந்தவன் ஆமிக்காரரின் அட்டகாசம் கூடியதால் கடையைப் பூட்டிவிட்டு வீட்டில் ஷெல் விழுந்ததையும் பார்த்து விட்டுப் போக வீட்டுக்கு வந்திருந்தான். வீட்டுக்கு வந்தவன் வழமைக்கு மாறாக இரு விஷயங்களைக் கண்டான். முதலாவது அவனது மாமியின் முகம் இருண்டு கிடந்தது. மாமி கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைப்பது தெரிந்தது. இரண்டாவது அவன் மனைவி கமலம் புத்தகமும் வாசிப்புமாக இருப்பவள் இப்போ திடீர் என எல்லாப் பொறுப்புகளையும் தன் மேலேற்றிக் கொண்டு வளைய வளைய வந்தாள். ஆனால் அவள் மேற்கொண்ட எல்லா வேலைகளிலும் ஒரு கச்சிதமும் ஒளியும் தவழ்வது போல் அவனுக்குப் பட்டது. அது அவனை ஏதோ பரவசத்தில் ஆழ்த்தியது. அவன் மனைவிதான் இப்போ படத்து விளக்கை ஏற்றினாள். ஆனால் ஒரு மாற்றம். அதுவே பெரிய மாற்றம், படத்து விளக்கு முன்போல் அணைக்கப்படுவதில்லை. சதா எரிந்து கொண்டிருந்தது. எண்ணெய் விடும் சமயங்களில் மட்டும் அது அணைக்கப்பட்டாலும் பின்னர் விளக்கு மினுக்கப்பட்டு தீபத்தை அது ஏந்தத் தொடங்கும்போது ஏதோ ஓர் தூய ஆனந்தச் சுடர் துளிர்ப்பதை அவன் புதிதாக உணர்ந்தான். இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் காலையில் குளித்துத் திலகமிட்டு கூப்பிய கரங்களுடன் படத்தின் முன்னே நிற்கும் அவள், ஓர் புதிய மனைவிளக்கு அவன் அவளைக் கலியாணம் முடித்த காலத்தில் அவள் படுக்கை அறையில் எத்தனையோ கதைகள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். தான் வாசித்த புத்தகங்களிலிருந்து தனக்குப் பிடித்தமானவற்றை சொல்லத் தொடங்குவாள். அவற்றுள் எப்பவும் ஆத்மீகம் சம்பந்தப்பட்ட உண்மைக் கதாபாத்திரங்களே முதன்மை பெறுவதைக் கண்டிருக்கிறான். ராமகிருஷ்ணர் சாரதாதேவி ஜோடி, சுவாமி ராமதாஸரைப் பின் தொடர்ந்த ஒரு அம்மையார், அரவிந்தரோடு இணைந்து பணி செய்த பிரஞ்சு அன்னை, ரமணரின் மடியில் உயிர் துறந்து முக்தி கண்ட அவரது தாய், யேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அருகில் நின்று தரிசித்த மேரி மக்தேலேனா, முகமது நபி அவர்களை மணந்து கொண்ட அவரை விட இருபது வயது மூத்த கதீஜா அம்மையார் என்று அவள் இவனுக்கு அடுக்கிக் கொண்டே போவாள். இவனுக்குக் கொட்டாவி வரும். ஆனால் நிறுத்தமாட்டாள். இவன் கடைசியில் சலிப்பத் தட்டி பொறுமையின் எல்லையை மீறிய நிலையில் 'கமலம் நீகல்யாணம் கட்டாமல் கன்னியாஸ்திரி மடத்தில் தான் சேர்ந்திருக்க வேணும்' என்பான்.
'ஏன் அப்படிச் சொல்றீங்க' அவள் திருப்பிக் கேட்பாள் திகைத்தவளாக.
கடலும் கரையும் 61 (yp. Lur

Page 36
'அவையருக்குத் தான் இந்தக் கதை சரி' என்பான் சினம் மேலிட்டவனாய்,
"இல்லை, கவியானம் முடிச்சவைக்குத்தான் இந்தக் கதைகள் உதாரணமாக இருக்க வேணும்" என்று அவள் ஓர் அருமையான விவாதத்துக்குள் புருஷனை விழுத்தலாம் என்று தயாராகும்போது அவனிடமிருந்து குறட்டை ஒலி எழுந்து கொண்டிருக்கும்.
அவன் அதிகம் படிக்காதவன். கல்வித் தராதரப் பத்திர அளவுகோல்படி பார்த்தால் அவனுக்கும் அவளுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதற்கில்லை. இரண்டொருவருடம் அவனைவிட பல்கலைப் புகுமுகப் பரீட்சைக்காக அவள் முயற்சித்திருந்தாள். அவ்வளவுதான். அதற்குள் இவனை அவள் கல்யாணம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அவள் அழகிய முகத்தில், அதிகம் துருதுருக்காதுமெளனித்துநின்று அசையும் அந்த விழிகளின் கூர்ந்த ஊடுருவலில், பலவித பட்டங்களையெல்லாம் அடுக்கிய எத்தனையோ படிப்பாளிகளுக்குப் புரியாத விஷயங்களெல்லாம் வெகு எளிதாகவே புரிந்து விடும் என்பது மட்டும் அவன் உள்ளுணர்வுக்கு அவளைக் கல்யாணம் கட்டிய சில நாட்களிலேயே புரிந்து விட்ட ஒன்று. அவனே தன் மனைவியின் தனித்த பார்வையை நேருக்கு நேர் சந்திக்க விரும்புவதில்லை. அவளது கூர்ந்த ஊடுருவலில் அவனுள்ளேயே இருப்பவை எல்லாம் வெளிவந்துவிடும் போன்ற பயம். அந்நேரங்களில் அவன் வேறு தேவையற்ற கதைகளில் அவளை திருப்புவான். செக்ஸ் கதைகளில் கீழிறக்கப் பார்ப்பான். அவள் திமிறினால் அதை விட்டு ஆமிக்காரர்களின் ஷெல்லடி பற்றி பயமூட்டுவான். இது அவளுக்கு இன்னும் சிரிப்பையே மூட்டும். இச் சிரிப்பினால் அவன் உள்ளாந்தரங்கம் நிர்வாணமாக்கப்படப் போகிறதென்ற அபாய விளிம்பில், தன் கதையை மாற்றி தன் உடம்பிலே உள்ள வியாதிகள் பற்றி அளக்கத் தொடங்கி விடுவான், உடனேயே அவளின் விடுபட்ட நிலை மாறும் . அவனில் அக்கறையும் ஆதரவும் பெருகும். அவ்வளவுதான். அவன் அதற்குள் புதையுண்டு போவான். ஆனால் சில வேளைகளில் எக்கச் சக்கமாக எதிர்பாராதவிதமாக அவளின் தனித்த பார்வைக்குள் விழ நேர்ந்துவிட்டால் அவளைத் திசைமாற்ற அவனுக்குவேம்பாகக் கசக்கிற ஆனால் அவளுக்கு கரும்பாக இனிக்கின்ற அந்த விஷயத்தை தன் கவசமாகப் பாவிப்பான் அதுதான் ஞானிகள் பற்றிய வாழ்க்கை, அல்லது அவை பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்.
'ராமகிருஷ்ணர் உபதேசங்கள் எழுதிய அந்தச் சீடர் ஆரப்பா?" என்றுகம்மா கேட்டு விட்டால் போதும். அவள் கண்களில் ஆனந்தம் கூத்தாட சங்கிலித் தொடராக அவிழ ஆரம்பித்து விடும். பத்து வார்த்தைகள் அவள் பேச முன்னரே கேள்வி கேட்ட அவள் புருஷன் கொட்டாவி தள்ளத் தொடங்கி விடுவான், அவள் மெய்மறந்த நிலையில் பேசிக்
கடனும் காயும் மு.பொ

கொண்டிருப்பாள். ஆனால் திடீரென எழும் கணவனின் "கர்புர்" என்ற குறட்டை ஒலி அவளை அவள் நிலைக்கு கொண்டுவரும். அப்போது அவள் க-ைஇதழ்முறுவலில் ஆயிரம் அர்த்தங்கள் வந்து மறையும். 'என்னிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ளப் பாடுபடும் என் அன்புக் கணவன்'
இப்படி எத்தனையோ விஷயங்கள் எத்தனையோ தடவை நடந்திருக்கின்றன. அவனுக்கு புத்தக்கள் படிப்பதென்பது பிடிக்காத ஒன்று. அவன் வீட்டில் வந்து நிற்கும் போது அவனை நித்திரை கொள்ள வைக்க வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தைப் படி என்று கொடுத்து விட்டால் போதும். ஒரு பந்திபடிக்க முன்னரே அவன் விழிகள் மேல்திசையில் சொருக ஆரம்பித்து விடும். ஆழமான விஷயங்களை அவள் விக்கிக் கொண்டிருக்கும்போது அவன் மனம் வவுனியா பசாரில் அறவிடவேண்டிய நிலுவையையும், அமரசிங்கம் பற்றியதையும், சிவராசா கொடுத்ததையும் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும், அது அவளுக்கு பழகிப்போன வி 11ம் ஆனால் அதற்காக அவள் அவனோடு ஆழமான விஷயங்கள் 3 க்காமல் நிறுத்தி விடவில்லை. 'கடமையைச் செய், பலனை ராதே" என்ற ரீதியில் அவள் அதைச் செய்து கொண்டே வந்தாள். அவளுக்குத் தெரியும், தான் ஊதிவிடும் பொறிகள் என்றைக்காவது ஒருநாள் இன்றைக்கோ நாளைக்கோ அல்லது அடுத்த ஜன்மத்திலோ கனன்று பரவும் என்று.
அவனுக்கும் தன் மனைவி பற்றி நன்றாகத் தெரியும். அவளுக்கு கடவுள் மேல் இருந்த ஆழமான நம்பிக்கையையும் அதனால் ஞானிகளிடம் அவள் வைத்திருக்கும் மாறாத வாஞ்சையையும் அவன் அறிவான். ஆனால் அவனுக்கு ஒன்று புரியாமல் இருந்தது. இவ்வளவு ஆழமாக கடவுளிடம் காதல் வைத்துள்ள தன் மனைவி ஒருநாளாவது சுவாமி படத்துக்கு விளக்கேற்றியதையோ அதன் முன்னேநின்று மெய்யுருகக்கும்பிட்டதையோ அவன் கண்டதில்லை. காலை மாலை முகம் கழுவிய பின்னர் மட்டும் சுவாமி படத்தருகே சென்று திருநீறு பூசிக்கொள்வாள். அந்தத் திருநீற்றுப் பூச்சுத்தான் அவள் தன் பக்திக்கு கீறிவிட்டிருந்த வாய்க்காலோ என்னவோ,
அவன் பயனம் வெளிக்கிட்டால் கூட அவள் அம்மாதான் படத்துக்கு விளக்கேற்றி ஒரு 'ஸ்பெஷல்' கும்பிடு போட்டு இவனையும் கும்பிட வைப்பாள். ஆனால் அவளோ திருநீற்றை மட்டும் தொட்டு நெற்றியிலும் தாலியிலும் பூசிக் கொண்டு அவன் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு "அப்ப வாருங்கவன் போவம்' என்று சொல்லிக் கொண்டு முன்னே நடக்கத் தொடங்கி விடுவாள்.
ஆனால் இந்த முறைதான் அவன் எதிர்பாராத திடீர் மாற்றம், அவன் தங்கள் வீட்டில் ஷெல் விழுந்ததாகக் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தபோது அவன் தன் வீட்டு நிலைமை முற்றாக மாறி அதிகாரங்கள் கைமாறப்பட்டிருந்ததை உணர்ந்தான். சதா இயங்கிக் கொண்டிருந்த அவன்
கடலும் கரையும் 63 மு.பொ

Page 37
மாமி ஷெல் விழுந்ததோடு இயக்கம் குன்றி அழுக்குத் துணி போல் ஓர் மூலையில் குவிந்து போய்க் கிடந்தாள். அவன் மனைவியோ மாமி புரிந்த சகல வேலைகளையும் தான் ஏற்று மிகக் கச்சிதமாகவும் பூரணமாகவும் செய்து கொண்டு வந்தாள். அவள் தனது ஒவ்வொரு செயலின் முடிவிலும் புதுப்புது ஒளி தரித்து திரைநீக்கி வெளிவருவதுபோல் வந்து கொண்டிருந்தாள்.
அவள் இப்போ முன்பைவிட பன்மடங்கு அழகாக இருந்தாள். அந்த அழகு அவனுக்கு ஏதோ ஆபத்தையே தந்தது. அவளது விழிகள் முன்பை விட ஒளி காலித்தன. இவனுக்கு அவற்றை எதிர்கொள்ளுதல் என்பதையே நினைக்க முடியாமல் இருந்தது. முன்பு வந்து நிற்கும் சமயங்களில் அவளோடு முனையும் செக்ஸ் ரீதியான தாம் பத்திய உறவுக்குரிய அணுகுமுறையை இம்முறை அவனால் ஏனோ நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அந்த ரீதியில் அவளை நினைத்துப் பார்க்கவே அவனது ஆண்மை சுரத்துக்கெட்டது போல் நின்றது.
ஆனால் அவளோ மாறாக அவனிடம் மிக நெருங்கி குழைந்து குழைந்து பழகினாள். அவள் மிக நெருங்கி அவனோடு குழையும் ஒவ்வொரு கணமும் அவள் உள்ளாத்மா எங்கோ கண்ணுக்கெட்டாத் தொலைவில் ஓர் மலையின் கொடுமுடியில் சஞ்சரிக்கும் விடுபட்ட தன்மையை அவன் அவளில் ஸ் பரிசிப்பது போல் ஒரு கணம் , ஆனால் அடுத்த கணம் "இஞ்சாருங்கோ அப்பா' என்று அவள் அழைத்து, அவனுக்காக இம்முறை அவள் ஸ்பெஷலாக செய்த லட்டு ஒன்றை அவன் வாயுள் திணித்து விட்டுச் சிரிக்கும்போது, எங்கோ கொடுமுடியில் கண்ணுக் கெட்டாத் தொலைவில் நின்ற அவள், "க்ளுக்' என்று அவன் இதயத்துள் புகுந்து கிக்கிணித்த ஸ் பரிசம் அவன் கபாலமனைத்தும் பனிக் கட்டி வெள்ளிச் சிதறலாய் சில் லிடும். அதுவும் ஒரு கணமே. அவள் தன்னோடு தானா அல்லது வெளியிலா, தொலைவிலா என்று புரியாத ஒர் அல்லலில் அவன் கண்கள் பனிக்கும்.
'இஞ்சாருங்கோ, ஏன் அழுகிறியள்?' என்பாள் அப்போது. 'நான் அழேல்ல, ஆனால் என்ர மனம் நினைக்கிறதை உன்னை மாதிரி எனக்கு சொல்லத் தெரியாது. அதனால் அழுகிறன். ஆனா எனக்கு உன்ர மடியில குழந்தைப் பிள்ளை மாதிரி படுத்துக் கிடந்து புரளோணும் மாதிரி இருக்கு' அவன் தன்னுடைய மன அவசத்தை கொட்ட முனைவான். 'உங்களோட போட்டி போட்டெண்டு மடியில புரள இன்னும் கொஞ்சக் காலத்தில ஒண்டு வரப்போகுது. அப்ப என்ன செய்யப் போறேங்க?' என்று கேட்டு விட்டு அவள் லேசாகச் சிரிப்பாள்.
இவனுக்கு அவளின் அந்தப் பேச்சு, அவளைச் சுற்றிச் சுற்றி அமானுஷய கோலம் பூணும் பல நிகழ்வுகளையும் பூமியில் இறக்கி வைத்தது
கடலும் கரையும் 64 (yp. GUIT

போல் ஆறுதலைத் தரும். இவன் அவளை வாஞ்சையோடு பார்ப்பான். அவள் அந்தப் பார்வையை எதிர் கொள்வாள். அவ்வளவுதான். இவனிடம் உள்ளே இருப்பனவெல்லாம் வெளிவந்து விடும் போன்ற அந்தப் பார்வையினால் இவன் கூனிக் குறுகி எங்கோ முகம் புதைப்பான். மீண்டும் அவளைச் சுற்றிய சூழல் அனைத்தும் அமானுஷ்ய தளவட்டங்களாய் ஏறிஏறி விரிவன போல சுழலத் தொடங்கும்.
இவன் அச்சூழலில் அள்ளுப்பட்ட துரும்பாய் எங்கோ எங்கோ வீசப்பட்டுக் கொண்டிருப்பது போல்,
அவளுக்கு கவலையாகப் போய் விடும். அவனைப் பற்றித் தெரிந்தும் தான் ஏன் அப்படிப் பார்க்க வேண்டும் என்று அவள் தன்னையே கடிந்து கொள்வாள்.
அவனது வாஞ்சை நிறைந்த பார்வையை வளர விட்டு, அதன் நிழலில் அவனைச் சிறிது இளைப்பாற வைத்திருக்கலாமே என்று தன்னுள் வருந்துவாள்.
அவன் வீட்டுக்கு வந்தாலும் பாவம், அந்தரப்பட்டவன் போலவே வரவரத் தெரிகிறான். அவனை அமைதிப்படுத்தி மெல்லமெல்லவாக அவனைத் தனது பார்வை மூலம் தனக்குள் இழுத்து தானும் அவனும் ஒன்றென்பதை புரிய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தும் அவள் தவறிவிடுகிறாள்.
மீண்டும் அவன் எப்போ அந்த வாஞ்சையோடு பார்ப்பான்? அவள் காத்திருப்பாள். ஆனால் அவன் பார்க்கவே இல்லை. அதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் வராமலே போய் விட்டது.
அவன் இந்த முறை வவுனியாவில் இருந்து வந்து வழமைக்கு மாறாகக் கொஞ்சக் காலம் கூடுதலாகவே தங்கி நின்றான். காரணம் அவனுக்கு . அவளில் தன்னை நெருக்கமாக்கி விட்டுப் போக வேண்டுமென்ற ஆசை. அது அவனுக்கு அவளைக் கலியாணம் முடித்த காலத்தில் கைகூடியிருந்தது போல் பட்டது. அந்த நெருக்கம் எப்படி அப்போது கைகூடுவதாக இருந்தது? அதுபற்றி அவன் பலவாறாகச் சிந்தித்தபோது அவனுக்குத் தட்டுப்பட்டது அதுதான். அவளில் அவன் நெருக்கம் என்பது, ஆமாம் அதனால்தான் என்று முடிவுக்கு வந்தான். எதனால்?
உடலுறவு! இந்தமுறை அவன் வந்து நின்றபோது அவன் அதற்குரிய சூழலை கூட்டுவித்து, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்கு வலைவிரித்தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அவள் இவன் விரித்த வலையை, குடையைச் சுருக்குவது மாதிரிச் சுருக்கி இவனிடமே நீட்டி "இதுக்கு
கடறும் கரையும் 65 (p. Lu T

Page 38
அவசியமில்லை' என்பது போல கண்களால் கூறிவிட்டு அவன் நினைவுக்கு ஏற்ப அவனுக்காகவே அன்று காத்திருந்தாள்.
அன்று அவன் அவளைக் கூடியபோது என்றைக்குமில்லாத ஆனந்தத் திளைப் பில் அவன் முதலிரவன்று கூட அப்படி களிவெறி கொண்டிருக்கமாட்டான் போலவே பட்டது. தான் அவாவிய நெருக்கத்தை ஸ்தாபித்துவிட்டதாகவே குதூகலித்த அவன், அன்றைய இன்பக் கலவியின் எச்சப்பொழுதில் -୬ରା ଗାଁ முகத்தை தைரியத்துடன் எதிர்கொண்டபோது அவள் இதழ் கோடியில் சுழித்த அந்தப் புன்னகை, அவனை எங்கோ அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு அவளை எங்கோ எங்கோ அவன் எட்டமுடியாத தொலைவிற்கு இட்டுச் சென்றது. நெருக்கத்தை ஸ்தாபிக்க அவன் எடுத்த வழிமுறை, இருந்த அற்ப சொற்ப நெருக்கத்தையுமே அள்ளிச் சென்றுவிட்டது போல் பட்டது. அவன் தனது உடலை அவளிடமிருந்து பிரித்தெடுத்தபோது அவன் தனது நெஞ்சுக் கூட்டிலிருந்து 'வீர்' என வெளிப்பறந்து செல்லும் கிளியை றாஞ்சிப் பிடிக்க எத்தனித்துச் சோரும் ஒருவனின் ஆற்றாமையைத் தன்னில் கண்டான்.
அதன் பின் அவனது சின்ன மூளையால் அவளோடு நெருக்கமுறும் மார்க்கங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்குப் பின்னர் அவன் அதிகநாள் வீட்டில் நிற்கவில்லை. ஆமிக்காரரின் அட்டகாசம் வவுனியாவில் சிறிது ஓய்ந்து விட்டதாகக் கேள்விப்பட்டதும் அவன் புறப்பட்டுவிட்டான்.
ஆனால் புறப்பட்டவன் புறப்பட்டதுதான். அவன் புறப்பட்ட நேரம் என்ன நேரமோ வவுனியா மீண்டும் கலவரப்பட்டது. ஒரு போராளியின் குண்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியின் கோர மரணம் மீண்டும் இராணுவத்தை வவுனியாவில் கட்டவிழ்த் திருந்தது. கலவரத்தில் வியாபார ஸ்தாபனங்கள் பல தகர்க்கப்பட்டன. இன்னும் பலர் தெருக்களில் சுடப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு ரயர்களால் கொழுத்தப்பட்டனர். இரவோடிரவாக பல இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் கைது செய்யப்பட்டு பூசாவுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் சிலர் வேறு இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வவுனியாவிற்கு வந்த இவனும் இதற்குள் சிக்கிக் கொண்டான். இந்தத் தண்டனைகளில் ஏதாவது ஒன்றுக்குள் அவன் வீழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று. அவனது கடை உடைத்துத் தகர்க்கப்பட்டு சூறையாடப்பட்டுக் கிடந்தது.
அதைத்தேடி அவன் பின்னர் வரவில்லை.
அதன் பின்னர் அவன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்குப்
கடலும் கரையும் 66 (p.CLIII

போகவுமில்லை. அவன் சுடப்பட்டுவிட்டானா? அல்லது பூசாவுக்கோ வேறு ராணுவ முகாமுக்கோ எடுத்துச் செல்லப்பட்டானா?
(2)
.eir சுவாமிப் படத்தருகே கூப்பிய கரங்களோடு நிற்கிறாள்ل9Haگ மெய்மறந்த நிலை. கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அன்றொருநாள் அந்தச் செய்தி வந்த போதும் அவள் கூப்பிய கரங்களோடு கண்களில் நீர் மல்க சுவாமிப் படத்தருகே ஏற்றிய தீபத்தோடு போட்டி போடும் இன்னோர் தீபமாய்த்தான் நின்று கொண்டிருந்தாள்.
அவள் அம்மாதான் அவளிடம் மேலும் கீழும் மூச்சுவாங்க ஓடோடி வந்து கூப்பிட்டுச் சொன்னாள்.
'எடி புள்ள, எடி புள்ள’ அவள் அம்மா சுவாமி அறையின் வாசல்படியருகே நின்று கொண்டு ஓலமிட்டாள்.
அந்தமாதிரியான சமயங்களில் அவள் யார்கூப்பிட்டாலும் பதில் கொடுப்பதில்லை. அவள் அவளாய் அப்படியே நிற்க, அவள் இருப்பு அவளிடமிருந்தே வழுவிக் கொண்டோடும் அந் நேரங்களில் வெளிப்புற ஊடுருவல்கள் அவளைச் சென்றடைவதில்லை. ஆனால் அன்று தன் வழிபாட்டை முடித்துக் கொள்ளும் சமயத்தில் தான் அவள் வந்து கூப்பிட்டாள்.
' என்னம்மா?' என்ற கேள்வியில் எதையும் யூகிக்க முடியாதவளாய் வெளியே வந்தாள் அவள்.
'எடியுள்ள வவுனியாவில் பெரிய குழப்பமாமடி ஆமிக்காரர் கனபேரை சுட்டுப் போட்டாங்களாம். உன்ர அவரையும் காணேல்லயாம். அவற்ற கடையையும் உடைச்சு நெருப்புவைச்சுப் போட்டாங்களாம்' அவள் அம்மா நாக்குளற கூறிக் கொண்டு போனாள்.
'இதெல்லாம் உனக் காரம் மா சொன்னது?' அவள் அமைதியாகவே கேட்டாள்.
'இப்பதான் வவுனியாவிலிருந்து தப்பியோடி வந்த சோமற்ற கிளியன் சொல்லிக் கொண்டு நிக்கிறான்' என்று அம்மா சொன்ன விதம் 'எடி மோன நீ போய் எல்லாத்தையும் வடிவா கேட்டன்டு வாடி' என்று கெஞ்சுவது போலப் பட்டது.
அவள் அம்மா சொன்ன இடத்துக்கு கேட்டுவரப் புறப்பட்டாள்.
கடலும் கரையும் 67 (p. GUIT

Page 39
ஆனால் அவள் ஒரு அடி எடுத்து வைத்திருக்க மாட்டாள். திடீரென்று அவள் உள்ளங்காலின் மையத்தில் உப்புக்கல்லை வைத்துச் சுட்டது போல் அவளுக்கு ஒன்று சிரசில் உறைத்து வெளித்தது.
அது அவள் கணவனைப் பற்றியதுதான். நீ ஏன் போகிறாய்?" அவளுக்குள் எழுந்த அந்தக் கேள்வி, அவளைப் போகவிடாமல் திருப்பிவிட்டது.
அம்மாவுக்கு அந்தரம், அவளைவிட அவள் அம்மாதான் நிலை கலங்கி நின்றாள். மீண்டும் அந்த மாயக்கையின் குட்டு. இந்த முறை யாருக்கு? நிச்சயமாக அவளுக்கல்ல. இம்முறையும் அவள் அம்மாவுக்குத்தான். அம்மாதான் மருமகனின் உழைப்பிலும் பணத்திலும் மனங் கொழுத்துக் கிடந்தவள். மற்றவரின் சாவையும் சரி வாழ்வையும் சரி தூசாக நினைத்தவள்.
இப்போ மருமகனின் கடை உடைக்கப்பட்டு விட்டது. மருமகனையும் காணவில்லை. ஒரு மூலையில் குந்தியிருந்தபடி அம்மா அழத்தெரியாமல் அரற்றிக் கொண்டு கிடந்தாள்.
மகள் முற்றத்து வாசற்படியில் குந்திக் கொண்டிருந்தாள். முற்றத்து மாமரங்களுக்கூடாக தெரிந்த வானவெளியில் இடைக்கிடை தோன்றிய கருமுகில் திரள்கள் ஒன்றையொன்று பிடித்துக் கொள்ள ஒடுவனபோல் ஓடிக் கொண்டிருந்தன.
கடைசியாக அவளிடமிருந்து பிரிந்து சென்ற கணவனின் முகத் தோற்றம் அவள் கண் முன்னே மிதந்து மிதந்து வந்தது.
இவள் அவனை தன்னோடு நெருக்குவிக்க கடைசியாக எடுத்துத் தோற்ற முயற்சி ஒன்று அவள் முன்னே விரிந்தது.
ஏதாவது மனதுக்கு ஆழமான விஷயங்களுக்குள் அவனை இழுத்ததும் அவன் அவளிலிருந்து விடுபட்டு அவனாகவே அந்நியப்பட்டுப் போவான். நுண்ணிய விஷயங்கள் என்றால் அவன் தூண் போல் எண்ணமில்லாது இருப்பான். அன்று மதிய உணவை முடித்துவிட்டு அவன் கட்டிலில் வந்தமர்ந்தபோது அவள் பாரதியாரின் 'நந்தலாலா’ பாட்டைப் பாடிக் காட்டிவிட்டு அதில் ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா' என்ற வரிகளை சற்று ராகம் இழுத்துப் படித்து விட்டு 'பாத்தீங்களாப்பா, தீக்குள் விரலை வைக்கின்ற போதுகூடப் பாரதியாருக்கு இறைவனை தொடுகிற மாதிரி இன்பம் வருகுதாம். அந்த மாதிரி மனம் ஒன்றி எனக்கும் நெருப்பை தொடவேண்டும் போல இருக்கப்பா' என்றாள்.
algh & DJ Lyth 68 (p.Our

அவன் பேசவில்லை. 'இந்தமாதிரி பாரதியாரின் மனநிலையில் தீக்குளித்தால் அது வெறும் தீக்குளிப்பாக இராது. ஒரு பெரிய தெய்வீக குளிப்பாகவே இருக்கும். இல்லையாப்பா?' என்று அவள் தொடர்ந்தபோது,
'உனக்கும் விசர்; பாரதியாருக்கும் விசர்' என்று கூறிவிட்டு அவன் தனது வழமையான கொட்டாவி ஊதலுக்குள் விழுந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவள் அவனை தன்னுள் நெருக்குவிக்க எடுத்த முயற்சிகள் அவனை அந்நியப்படுத்துவதாகவே அமைந்தது. அதே நேரத்தில் அவன் அவளை நெருக்கமுறுத்த எடுத்த முயற்சிகள் அவளுக்கு அவன் மேல் அனுதாபத்தையே ஏற்படுத்தின.
ஒவ்வொரு முறையும் அவன் வவுனியாவிலிருந்து வரும் பொழுது அவளுக்கு ஏதாவது விலைஉயர்ந்த பொருட்கள் வாங்கிவருவான். வாங்கி வந்து விட்டு அதை உடனேயே அவளுக்குக் காட்டமாட்டான். எங்காவது ஒளித்து வைத்து விட்டு சாப்பாட்டை முடித்துக் கொண்டு சற்று ஒய்வெடுத்துக் கொள்ளப் போகும்போது மெதுவாக அவளை நெருங்கி,
"இஞ்ச வா கமலம், உனக்கு ஒரு ரகசியம் காட்டிறன்' என்று சொல்லி அவளை தனியாக அழைத்துப் போய் தான் அவளுக்கு மிக அக்கறையாக எடுத்துக் கொண்டு வந்திருக்கும் பொருளைக் காட்டுவான். அவள் அப்போது அவன் பாடுபட்டுக் கொண்டு வந்திருக்கும் பொருளை வேடிக்கை பார்க்கும் குழந்தைபோல் எட்ட நின்று விடுபட்டுப் பார்க்கும் தோரணையை பார்த்ததுமே, அவனுக்கு உடம்பே தொய்ந்து போய்விடும்.
ஒருமுறை அவன் அவள் பிறந்த தினத்தை ஞாபகம் வைத்து ஒரு வைரக்கல் மோதிரம் கொண்டு வந்திருந்த நிகழ்ச்சி அவள் நினைவில் ஓடிற்று. அவன் அன்போடு அவளை அழைத்துப் போய் அந்த ரகசியத்தைக் காட்டியபோது, இச்சந்தர்ப்பங்களில் வழமையாக அவள் முகத்தில் தெரியும் விடுபட்ட புன் முறுவலோடு அந்த மோதிரத்தைக் கையிலே எடுத்து அப்படியும் இப்படியும் பார்த்து விட்டு மேசையிலே வைத்துவிட்டு அம்மா கூப்பிட்டதாகச் சொல்லிவிட்டு அவள் போக எத்தனித்த போது அவன்முகம் மழைவானம் போல் இருண்டு வந்ததுஇன்னும் அவளுக்கு நினைவிருந்தது. இப்போ அவள் முகத்தில் அதே இருள். கண்கள் கண்ணீரை நெஞ்சுக்குள் திருப்பி விட்டன போல் மெளனமாய் பளபளத்துக் கொண்டிருந்தன.
அவளும் அவனும் வெவ்வேறு தளங்களில் நின்று ஒருவரை ஒருவர் நெருங்க முயன்றனர் என்பதை அவன் அறியாவிட்டாலும் அவள் அறிவாள். அவனை எப்படியாவது கடைசியில் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்பதில் அவளுக்கு பூரண நம்பிக்கை இருந்தது. காரணம் அவன் அவளை
கடலும் கரைபும் 69 (p. Our

Page 40
உடலாலும் பொருளாலும் வசீகரிக்க முயன்றான். அவன்நின்ற பொருள்தளத்தை விட தன்னுடைய மனத்தளம் சக்திமிக்கது என்று அவள் அறிவாள். அவன் பற்றிய பொருள்நிலை மெல்ல மெல்லக் கரையதன் தளத்துக்கு அவனைத் தூக்கி விடக்கூடிய சக்தி தனக்கு இருக்கிறது என்பதை அவள் நன்றாய் தெரிந்திருந்ததால்தான் அவள் அவனது போக்குக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தாள்.
அவன் முகம் அவள் முன்னே மிதந்து மிதந்து வந்தது. அவனை தன்நிலைக்கு இழுத்தெடுத்து விடுவதற்கு முதல் அவன் எங்கே போய்விட்டான்? அவன் அவளோடு கொண்ட கடைசி உடலுறவும் அப்போது அவன் முகம் அடைந்த குதூகலப் பொலிவும்.
அவளுக்கும் அவனுக்கும் நடந்தது காதல் கல்யாணம் அல்ல. பேச்சுக் கல்யாணமே. ஜாதகம் பார்த்தவர்கள் பொருத்தம் நன்றாயிருக்கிறதென்றார்கள். சூத்திரருக்குப் பிரதானம் யோனிப் பொருத்தம் என்ற முறையில் அவர்கள் மிகப்பொருத்தமான ஜோடி என்றார்கள். மாங்கல்யப் பொருத்தமும் மிக நன்றென்றனர். அவள் சுமங்கலி. ஆகவே எல்லா விதத்திலும் பொருத்தமான ஜோடி என்று கூறியே விவாகம் நடந்தது.
ஆனால் அவன், அவளை உடலால் நெருங்க முயன்ற ஒவ்வொரு சமயமும் அவள் பொருந்தாது செட்டையைக் கழற்றிவிட்டுப் பறந்த பாம்பு போல அவள் மனதை எங்கோபாழில் மிதக்கவிட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு தன்மையை அவன் உணர்ந்திருந்தான். ஆனால் அவனால் அதை விளங்க முடியவில்லை. அத்தோடு அது அவனுக்கு ஏனென்றும் புரியவில்லை. ஆனால் அவளும் அதை வேண்டுமென்று செய்யவில்லை. அது அவளுக்கு இயல்பாக வந்த ஒன்று. இந்நேரங்களில் அவள் தமக்குச் சாதகப் பொருத்தம் பார்த்த காலம் நினைவு வர, "நான் சூத்திரனா?' என்று கேட்டுவிட்டுத் தனக்குள் சிரித்திருக்கிறாள். 'அப்போ அவர்?' என்று மீண்டும் ஒரு கேள்வி எழும். 'பிராமணனாகப் போகும் சூத்திரன்' என்று அவளே அதற்கும் பதிலளித்துவிட்டு இளநகை பூப்பாள். ஆனால் இப்போ? அவர் என்னை ஏமாற்றி விட்டுப் போய்விட்டாரே? அவன் எங்கே போய் விட்டான்?
அன்று ஆமிக்காரர் வவுனியா நகரில் அட்டகாசம் புரிந்தபோது இவள் கணவனும் அவர்கள் கையில் சிக்கியிருக்கலாம். சிக்கியவனை அவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்று டயர் போட்டுக் கொளுத்தியிருக்கலாம். அல்லது இவனை கைது செய்து பலரோடு பூசாவுக்கு அனுப்பியிருக்கலாம். அல்லது இவனைக் கைது செய்து விசாரணைக்காக வேறு ஆமிக்காம்புக்கு அனுப்பியிருக்கலாம்.
அவள் அம்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. அவன் எப்படியாவது திரும்பி வருவான் என்று. அவனது கடையில் வேலை செய்த வேலைக்காரப் பொடியன் நான்கு நாட்களாகக் காட்டில் பதுங்கியிருந்து விட்டு மெல்ல மெல்ல
கடலும் கரையும் 7o (p. GLIII

வெளிவந்து ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் கடையைப் பூட்டிக் கொண்டு பின்கதவால் ஓடிய போது இவள் கணவன் இருக்கவில்லை என்று பையன் சொன்னான்.
அப்படியானால் அவன் கடைக்குப் போகும் இடை வழியிலேயே ரோட்டில் ஏதாவது ஒன்று நடந்திருக்க வேண்டும்.
அவள் கணவன் பூசாவில் இருப்பதாக பூசாவில் இருந்து வந்த சிலர் கூறியதைக் கேட்டு அவள் அம்மா பெரிதாக முகம் மலர்ந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இவளிடமிருந்து வரண்ட புன்னகையே வெளிவந்து கொண்டிருந்தது. ஆயினும் அம்மாவின் தூண்டுதலில் அவள் பூசா இராணுவப் பொறுப்பாளருக்கு'எனது கணவன் சதாசிவம் நிரபராதி' அவர் இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவர் அல்ல' என்று எத்தனையோ அப்பீல்கள் எழுதி அனுப்பியிருந்தாள். இதற்கிடையில் அவள் கணவனை மீட்டுத் தருவதாகக் கூறிய இடைத்தரகர்களுக்கு ஆயிரக்கணக்கில் அவள் அம்மா இறைத்துக் கொண்டிருந்தாள்.
அவளும் இவற்றில் குறுக்கிடவில்லை. அவள் பார்வையும் புலனும் எங்கோநிலைத்துவிட்ட மாதிரியான தோற்றம்.
அவளது போக்கில் அவளது அம்மாவோ மற்றவர்களோ குறுக்கிடவில்லை. அவளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எவ்வளவுக்கெவ்வளவு அவள் அமைதியாக இருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் நிலை ஆழமானது என்று அவர்களுக்குத் தெரியும். என்றாலும் சிலருக்கு அவளின் போக்கு எரிச்சலையே கொடுத்தது. 'சும்மா முண்டம் மாதிரி. இவளும் ஒரு பெண்ணா?' என்று சிலரும், 'மற்றவளவையெண்டா புருஷனைக் காணாத மாதிரிக்கு எப்படித் துடிச்சுப் பதறிப் போயிருப்பாளவை. இவள் புடிச்சு வைச்ச புள்ளையார் மாதிரி திரியிறாள். இவளும் ஒரு பெண்ணா?' என்று வேறு சிலரும் தமக்குள்ளே குசுகுசுத்துக்கொண்டனர்.
ஆனால் அவள் போக்கில் மாற்றமில்லை. ஆனால் அவள் அம்மா அவளை விடவில்லை. எப்படியாவது அவள்புருஷன் பூசாவில் இருக்கிறானா என்பதை நேரிலேயே போய் விசாரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டினாள். மகளையும் அங்கு இழுத்துக் கொண்டு போய்விட்டால் வேலை சுலபமாகி விடும் என்ற ரீதியில் அவள் மகளைத் தூண்டினாள்.
அவள் அதற்கும் மறுக்கவில்லை. பயணத்திற்குத் தயாரானாள். ஆனால், அவர்கள் பயணத்திற்கு தயாரானபோதுதான் அவள் எழுதியனுப்பி யிருந்த அப்பீல்களுக்கு பூசாவிலிருந்து பதில் வந்திருந்தது.அதில் அவள் கணவன் 'எஸ் .சதாசிவம் என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்னரே பூசாவிலிருந்து விடுதலை செய்து அனுப்பப்பட்டு விட்டதாக'
கடலும் கரையும் 71 (yn. Cur

Page 41
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கேட்டதும் அவள் அம்மா கலவரம் அடைந்தவளாக தலையிலேகையை வைத்துக் கொண்டு இருந்து விட்டாள்.
மூன்று மாதத்திற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்றால் அவர் இன்னும் ஏன் வீடு வந்து சேரவில்லை? அவள் அம்மாவிற்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பின்னர் விஷயம் அறிந்தவர்களிடம் விசாரித்தபோது அவள் பெரிதாகத் தலையில் அடித்து அழத் தொடங்கி விட்டாள்.
கைது செய்த ஒருவரை எப்பவோ சுட்டோ அடித்தோ சாகடித் பின்னர் இப்படியும் இராணுவ முகாம்களிலிருந்து கடிதங்கள் வீட்டாருக்குப் போவதுண்டு.
அம்மாவின் அரற்றல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால் அவளோ எங்கோ ஸ்தாபித்து விட்ட தனது இருப்போடு முன்னர்போல் இயங்கிக் கொண்டிருந்தாள்.
ஏற்கெனவே அவளில் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு இந்தச் செய்திக்குப் பின்னரும் அவள் தனது முன்னைய நிலையில் இருந்து மாறாதது இன்னும் எரிச்சலையே ஏற்படுத்தியது. அந்த எரிச்சலுக்கும் அதையொட்டி எழுந்த பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்துக்கும் அவர்கள் செயலுருவம் கொடுக்க ஆசைப்பட்டனர். அவர்களது ஆசைக்கேற்ப அவர்களுக்கு இலகுவாக ஒன்று கிடைத்தது.
அதுதான் அவள் விதவை என்னும் புதிய உருவாக்கம். அவள் பற்றிய இந்த உருவாக்கத்தை தமது நடத்தை மூலம் அவளுக்குப்புரிய வைக்க வேண்டுமென்று அவர்கள் செயல்பட்டனர். அப்படிச் செய்வதன் மூலமாவது அவளுக்குச் சுரணை ஏற்படாதா? அப்படிச் சுரணை ஏற்படுவதன் மூலம் அவள் தன் புருஷனை இழந்ததற்காக மற்றப் பெண்களைப் போல் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து தாம் உள்ளூரச் சந்தோஷிக்கக் கூடாதா என்ற பெண்களுக்கே உரிய பொறாமையின் குரூர ஆசை அவர்களிடையே பல்லைக் காட்டிற்று.
அவர்களின் இந்த ஆசைக்கு மேலும் தூபம் போட்டது, அவள் இன்னும் தனது கழுத்தை விட்டுக் கழற்றாத தாலி.
புருஷனைப் பறிகொடுத்த பிறகும் இவளுக்கென்னதாலி? இவள் தன் புருஷனுக்கு உயிரை மீட்டுக் கொடுத்த சாவித்திரி என்ற நினைப்பாக்கும்.
இந்தவிதமான பேச்சுக்களை அவள் காதில் படக்கூடியதாக அவர்கள் காற்றில் மிதக்க விட்டனர். இவற்றை அவளிடம் கடத்திச் சேர்ப்பிப்பதற்கும் ஊடகமாக அவள் அம்மாவையே பயன்படுத்தினர். இன்னும் எல்லாவித சுப, நல்ல பொதுக்காரியங்களுக்கு முன்னிற்கக்கூடாத ஓர் அமங்கலப் பெண் அவள்
கடலும் கரையும் 72 g). GUT

எனப் பலவழிகளாலும் அவளுக்கு அறிவுறுத்த முற்பட்டனர்.
ஆனால் இவை எவையும் அவர்கள் எதிர்பார்த்த சுரணையை அவளுக்கு ஏற்படுத்தவுமில்லை, துயர் மேகங்களை அவள் முகத்தில் கொணர்ந்து கவிக்கவுமில்லை. மாறாக இன்னும் அவள் வைராக்கியம் உற்றவளாய் இவர்களால் அவளை அணுகமுடியாத அந்த விடுபட்ட இருப்பில் தன்னை ஸ்தாபித்தவளாகவே நின்றாள். அந்த ஸ்தாபிப்பு அவளிடம் இறுக இறுக, அவள் முகத்தில் சிந்திப் பரவிய இளநகை, அவளை எதிர்கொள்வோர் அனைவரையும் தம்மை அறியாது அவளுக்குமரியாதை செலுத்தத் தூண்டியது. அவளது இந்தப் போக்கு அவளுக்கு சுரணை ஏற்படுத்த முயன்றவர்களுக்குதாங்க முடியாத குமைச்சலையும் கொண்டு வந்து சேர்த்தது. இதனால் அவளுக்கு நேரடியாகவே ஏதாவது சுடச்சுடச் சொல்லிவிடவேண்டும் என்ற ஆத்திர நிலைக்கு அவர்களைத் தள்ளியது.
இவர்களில் கொஞ்சம் தைரியம் கொண்டவளான பக்கத்து வீட்டுக்காரிகளுள் ஒருத்தி ஒருநாள் அவளை தான் எதிர்பார்த்தது போலவே நேரடியாகச் சந்தித்தபோதுதான் எப்படிக் கேட்க வேண்டும் என்று மனப்பாடம் செய்து வைத்திருந்தவற்றை அப்படியே கேட்டுவிட்டாள்.
'தங்கச்சி கமலம், ஏனடிஇன்னும்தாலியும்போட்டென்டு நிறச்சீலை கட்டியண்டு திரியிற? இதைப் பார்க்கிறவை உன்னைப் பற்றி ஏதாவது கூடாம நினைக்கப் போயினம்' இப்படிப் பக்கத்து வீட்டுக்காரி கேட்டாளோ இல்லையோ அவள் எந்தவிதமான உணர்வலைகளையும் முகத்தில் எழுப்பாது சட்டென அவளைத் திருப்பிக் கேட்டாள்.
'அக்கா, என்ர புருஷன் செத்துப்போயிருக்கலாம் சரி, ஆனாஅந்தக் கடவுளுமா செத்துப் போயிற்றார்?'
கேட்டவள் ஒன்றும் விளங்காது 'என்ன தங்கச்சி சொல்லிற?" என்றாள் அவள் முகத்தை நேராக நோக்குவதற்குப் பயந்தவளாய்.
"நான் என்ர புருஷனில கடவுளைத் தானக்கா கண்டனான். அந்தக் கடவுள் செத்தா போயிற்றேர்?' என்ற பதிலின் பூரண அர்த்தம் கேட்டவளுக்கு விளங்கிற்றோ என்னவோ. கமலம் போய் விட்டாள்.
* 骨 *
66ão aoT விக்கினங்களுக்கும் காரணமான விநாயகன் முன் நெஞ்சுருக கண்ணீர் வடித்து நின்ற அவள், தன் பிராத்தனையை முடித்துக் கொண்டு இப்போ வெளியே வந்தாள்.
கடலும் கரையும் 73 (p.GLT

Page 42
மா’ சீதை கூப்பிட்டாள்.
சமையலறையில் அலுவலாய் இருந்த உமா, வெளியே வந்து, மிகுந்த பணிவோடும் பயபக்தியோடும் என்ன? என்னும் பாவனையில் சீதையின் முன்னே வந்து நின்றாள்.
'கொஞ்சம் மஞ்சளும் உப்பும் எடுத்து வை. நான் கொண்டு போகவேனும்'
'சரி என்னும் பாவனையில் தலையாட்டிய உமா, யந்திர கதியில் சமையலறைக்குள் நுழைந்து, இட்ட பணியை நிறைவேற்றுவதில் ஈடுபட்டாள்.
சிறிது நேரத்தில் கொஞ்ச உப்பை
ஒரு சிறு பாத்திரத்தில் ஏந்தியவளாய் சீதை முன்னே கொண்டு சென்று, 'இது நல்லதா? என்று கேட்கும் அர்த்தத்தில்நின்றாள்.
உப்பைப் பார்த்த சீதை 'இதைக் கொஞ்சம் தண்ணீரில் கழுவி எடுத்து வைத்தால் நல்லது' என்றாள்.
மஞ்சளையும் எடுத்து வந்து காட்டினாள்.
சீதை திருப்தியோடு தலையசைத் தாள்.
அதன் பின் மஞ்சளையும் உப்பை யும் வெவ்வேறாகச் சுற்றி, எடுத்துச் செல்லக் கூடிய விதத்தில் ஒரு பாத்திரத்தில் உமா இட்டு வைத்தாள்.
உப்பும் மஞ்சளும் ஏன்?
நாளை இராமரோடு சீதை காட்டுக்குப் போகப் போகிறாள்.
இந்த விஷயத்தை சீதை அங்கு யாருக்கும் வாய் திறந்து சொல்லவில்லை. உமாவுக்குக் கூட அது சொல்லப்படவில்லை. ஆனால் அது சொல்லப்படாவிட்டாலும் அந்த வீட்டைச் சுற்றி, அந்த விஷயம் காற்றில்
கடலும் கரையும்
74 (p.Gur
 
 

மிதப்பது போல் உமாவின் சுவாசங்களில் ஏறி உள்ளுணர்த்திற்று.
நாளை இராமரோடு காடு குடிபுகப்போகும் சீதை, மஞ்சளும் உப்பும் தன்னோடு எடுத்துச் செல்லப்போகிறாள்.
இது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த உமாவின் நினைவில், இன்னொரு விஷயம் இடைக்கிடை வந்து நெஞ்சைச் சுட்டது. அடுப்பு வெக்கை விட்டு விட்டு சுழற்றி மூஞ்சியையும் நெஞ்சையும் தீய்ப்பது போல், அந்த நினைவு வந்து வந்து அவள் நெஞ்சைச் சுட்டது.
அவள் அந்த நினைவுக்கு உருக்கொடுத்துப் பார்க்கிறாள். வீட்டின் நடுவறையில் உள்ள கட்டிலில் கைகேயி கையை ஊன்றியவளாய் , யோசனையோடு படுத்திருப்பது போல் அவளுக்குப் பட்டது. இராமரைக் காட்டுக்கு அனுப்பும் வரை அவள் மனம் அமைதி அடையாது போன்ற நிலை.
இத்தனைக்கும் உமா கைகேயியைப் பார்க்கவில்லை. கைகேயி படுத்திருப்பதாக ஊகித்த தன்னுடைய வீட்டு அறைக்குள் அவள் செல்லவில்லை. ஆனால் ஏனையவற்றைப் போல் அதுவும் சூழலில் இணைந்து, அவள் உணர்வின் ஈர்ப்பால் உள்நுழைந்தது.
இதற்கிடையில் உமாவுக்கு தனது கணவனின் நினைவும் அவனோடு நேற்றுக் கதைத்தவைகளும் நினைவில் எழுந்தன. அவன் இன்னும் தனது அறையில் இருந்து எழுதிக் கொண்டிருக்கலாம்.
சீதை காட்டுக்குக் கொண்டு போவதற்கு மஞ்சளும் உப்பும் எடுத்து வைக்கச் சொன்னது பற்றி அவளது கணவனுக்குக் கூறி, அவனது விளக்கத்தைக் கேட்க வேண்டும் போல் அந்நேரம் பட்டது. ஆனால் அவளுக்கெங்கே நேரம்? சமையலறையில் பலவிதமான வேலைகள். குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அது தோதாக வற்றும்வரை காத்திருந்து இறக்கி வைக்க வேண்டும். அவள் பிரதானமாகக் கவனிக்க வேண்டியவற்றை பொறுப்புடன் செய்து கொண்டிருந்தாள். இன்னும் பலர் அங்கே அவளோடு கூடமாட பல உபவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பலகார வேலைக்கான அடுக்குகள் நடந்து கொண்டிருந்தன. சீதை இராமரோடு போகும்போது கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவள் அவற்றையும் இடைக்கிடை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்.
இவற்றுக்கிடையில் அவளுக்குள்ளோர் புதிர் இழைந்தது. ஒவ்வொரு வேலையாக அவள் செய்து முடிக்க, அடுத்த வேலை 'இதுதான்' என்று யாரோ சொல்வது போல் அது அவள் முன் விரிந்தது. சிலவேளை அவள் பின்னே அவளது கணவன் நின்று குரல் கொடுப்பது போலவும் கேட்டது.
அந்தப்புதிர், எலுமிச்சம்பூப்போல் அவளுக்குள்ளேயே மலர்ந்து,
sLgth &ayuh 75 (yn. Gaur

Page 43
அவள் வேலைகளுக்கிடையே மறைந்து மறைந்து தலை காட்டிற்று. அப்போதெல்லாம் அவள் கணவன் அவள் பின்னால் நிற்பது போலவும் உணர்வேற்பட்டது.
உமாவுக்கு தனது கணவன் பற்றிய நினைவு இராமரைப் பற்றிய நினைவை இழுத்து வந்தது. இராமர் எங்கே போய்விட்டார்?
நாளைக்குத் தனது வனவாசத்தைத் தொடங்குவதற்கு முதல் அதுபற்றி நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் சொல்லி விடைபெற்று வர இராமர் வெளியே போய்விட்டிருந்தார்.
இது பற்றியும் யாரும் அங்கே கதைத்ததாய் இல்லை. எனினும் முன்னவைபோல் இதுவும் அவளுக்கு உள் விரிந்த உணர்வில் பட்டுத் தெளிந்தது.
எனக்கு என்ன நடக்கிறது? நான் எங்கே இருக்கிறேன்? இப்படி உமா தன்னையே கேட்டுக் கொண்டபோது அவளுக்கு அப்படி ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் வழமைபோலவே இருந்தாள். தன் வீட்டிலேயேதான் இருந்தாள்.
அப்படியானால் அவள் ஒரு வித்தியாசமான கனவு காண்கிறாளா?
அப்படியும் இல்லை. அது கனவாய் அவளுக்குப் படவில்லை. கனவெனில் அவளுக்கு அதை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும்.
கனவெனில் நேற்று, முந்தநாள் என்று நடந்த நிகழ்வுகள் பிரக்ஞை கொள்வதில்லை. ஆனால் உமாவுக்கு அந்நேரத்தில் நேற்றுக்காலை கணவனோடு நிகழ்த்திய விவாதம் சதையும் குருதியுமாக நினைவுக்கு வந்தன. "இந்தக் காலத்தில் எங்களைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு ஆத்ம ஞானம் அடைய முடியுமா, அப்பா'உமா வீட்டு விறாந்தையில் ஏதோ புத்தகமும் கையுமாகக் குந்தியிருந்த தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள்.
'ஏன் முடியாது, அதற்கென்ன தடை?' அவள் கணவன் திருப்பிக் கேட்டான். வெகு அனாயசமாக,
'என்ன வெகு லேசாக சொல்லிப் போட்டீர்கள், முந்தியெல்லாம் ஞானிகள், ரிஷிகள் காட்டுக்குப் போய் கடுந்தவம் செய்துதானே ஞானம் பெற்றார்கள்? இப்ப அது முடியக் கூடிய விஷயமா?' அவள் தனது உண்மையான சந்தேகத்தையே வெளிப்படுத்தினாள்.
"ஏன் இப்ப ஞானிகள், ரிஷிகள் இல்லாமலா போய் விட்டார்கள்? ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர், ராமதாஸ் என்டு ஒரு பெரிய பட்டியலே போடலாமே?' அவன் மீண்டும் வெகு அலட்சியமாகச் சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.
கடலும் கரையும் 76 (yn. Our

'எனக்கெண்டால் அவையளை எங்களோடை ஒப்பிட முடியாதெண்டுதான் படுகுது. அவர்கள் விசேடப் பிறவியள். எங்களைப் போன்ற சாதாரண ஆக்களுக்கு இது முடியுமா?"
'நீ ஏன் அப்பிடிச் சொல்லிற?" 'பிரமச்சரியம், கிரஹஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் என்று வந்த வழிமுறைகள் இப்போ இல்லை. அவைகளைக் கடைப்பிடிக்கிறதுக்கான வசதிகளும் இப்ப இல்லை. இந்த நிலையில எங்களைப் போல ஆக்களுக்கு ஞானம் அடைவது கஷ்டந்தான்.'
f 'இல்லை நீதவறாக நினைக்கிறாய். இன்று அந்த வழிகள் எல்லாம் ஒன்றாக கலந்து விட்ட காலம். ஒரு விதத்தில் பார்க்கப் போனால் ஞானம் அடைவது இன்று லேசாக்கப்பட்டிருக்கு என்றுதான் சொல்ல வேணும்'
'அதெப்படி?" - அவள் கேள்வியில் ஆவல் மின்னுகிறது. 'பிரமச்சாரியம், கிரஹஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் எல்லாம் இன்று கிரஹஸ்த வாழ்க்கைக்குள் அடக்கம். அதாவது இல்லறத்தில் இருந்துகொண்டே நாம் இவற்றைக் கடைப்பிடித்து ஞானம் அடையலாம்' - அவன் பதிலில் அழுத்தம் இருந்தது.
'அப்ப காட்டுக்குப் போகத் தேவையில்லையா?' அவள் கேள்வியில் மீண்டும் ஆவல். 'இப்ப வீடுதான் காடு. எல்லாத் தர்மங்களையும் வீட்டிலிருந்து செய்வதற்குரிய காலம் இது' அவன் பதிலில் அதே அழுத்தம்.
'ஆனால் இது நீங்க சொல்வது போல லேசாக எனக்குத் தெரியவில்லை, சரியான கஷ்டமான வேலை என்றே எனக்குப்படுகுது.' அவள் சோர்வுடன் பதில் கூறினாள்.
'அப்படிப் பார்த்தால் எதுதான் கஷ்டமில்லை? ஆனால் கால ஓட்டத்தை விளங்கியவர்களுக்கு இதைவிட லேசானது வேறு இருக்கமுடியாது' - அவன் பதிலில் உற்சாகம் கரைபுரண்டது.
உமாவுக்கு நேற்றுக்காலை தன் கணவனோடு கதைத்த இவ்வுரையாடல் எங்கிருந்தோ எதிரொலிப்பது போல் கேட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவள் திடீரென சூறையால் அள்ளுப்பட்டு மேலே உயர்ந்து இன்னோர் தளத்தில் காலூன்றியது போல் பட்டது.
அவள் இப்போ நிற்பது புதிய இடமா? அவள் சுற்றும் முற்றும் நிதானித்துப் பார்த்தாள். இல்லை. இடம் பழைய இடமாகவே பட்டது. ஆனால் எண்ணங்களின் கனதி குறைந்து, பரவசம் மேலிட்டு நின்ற உணர்வலைகள், அவ்விடத்திற்கு ஓர் புதிய பரிமாணத்தை சூழ்வித்திருந்தன. அதனால் அது புதிய தோற்றம் கொள்வதுபோல் தெரிந்தாலும், அது அவளுடைய வீட்டின்
SLgh SDJulh 77 G.Pu

Page 44
பின்புறமே என்பது தெள்ளெனத் தெரிந்தது.
ஆனால் திடீரென அவ்விடத்தில் ஓர் அசெளகரியமான உணர்வின் வாடை வீசத் தொடங்கிற்று; அடுத்த கணம் அங்கே அவள் கண்ட காட்சி அவள் இதயத்தை வேகமாக அடிக்கச் செய்தது. அவள் நெஞ்சில் இனந்தெரியாத பீதியின் கசிவு. இந்நேரங்களில் அவளுக்கு அவள் கணவனின் பக்கத்துணை பெரிதாகத் தேவைப்படும். இப்போது கூட, அவள் கணவன், அவள் கூப்பிட்டதும் வீட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் விழுந் தடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவான். அவள் கணவனைக் கூப்பிடுவதற்கு வாயெடுத்தாளோ இல்லையோ, மறு வினாடி, அங்கு நடந்த நிகழ்ச்சிகளால் அள்ளுப்பட்டுப் போகிறாள்.
முற்றத்தில் இராமரும் இலக்குமணரும் எதிரும் புதிருமாக நிற்கின்றனர்.
இலக்குமணரை சுட்டெரித்து விடுவது போல் பார்க்கும் இராமரின் கண்கள் கோபத்தால் கனல்கின்றன.
அப்பார்வையில் நீண்ட சாட்டையே இலக் குமணனை உட்தளர்த்திக் கூனவைக்கின்றன.
'நீ பாவி, பெரிய துரோகம் செய்து விட்டாய்' என்று கூறிய இராமர், கையிலிருந்த சவுக்கை நீட்டியவாறே இலக்குமணனை நோக்கி முன்னேறுகிறார்.
'நான் பாவியுமல்ல. யாருக்கும் துரோகம் செய்யவுமில்லை' இலக்குவன் பெருங்குரல் எடுத்து எதிர்த்தான். ஆனால் அந்த எதிர்ப்பில் உயிர் இருக்கவில்லை.
'வாயை மூடு, உனக்கு அந்த மாயமானின் குரல் பெரிதாகப் போயிற்று. அந்த மாயமான் போட்டகூச்சலை நம்பி அதற்குப் பின்னால் ஓட வெளிக்கிட்டு விட்டாய், உனக்கு வெட்கமில்லை?'
இலக்குவன் பேசாமல் நின்றான். இராமர் தொடர்ந்து கோபாவேசத்தோடு கத்தினார்.
'நீ மாயமானுக்குப் பின்னால் ஓடினாய். இங்கே சீதை எம்மிடமிருந்து பறிபோய் விட்டாள். அந்த அரக்கன் அவளைக் கொண்டுபோய் சிறைவைத்துவிட்டான்.'
இலக்குவன் அப்போதும் பேசவில்லை. இராமரே தொடர்நதார். 'சீதை மட்டுந்தான் பறிபோனாளா? அடப் பாவி, உன் துரோகத்தால், இதோ பார் என் உயிருக்குயிரான சடாயுவை குற்றுயிரும் குறை உயிருமாய் சாகும் நிலையில்..'
இராமர் காட்டிய திசையில் உமாவின் கண்கள் பதிகின்றன. அங்கே சடாயு என்னும் கழுகை அவள் காணவில்லை. மாறாக அவளுக்குத்
கடலும் கரையும் 78 மு.பொ

தெரிந்த தர்மேஸ் என்னும் பாடசாலைத் தோழி துடித்துக் கொண்டு கிடக்கிறாள்.
மீண்டும் அங்கே இராமரின் குரலே ஓங்கி ஒலித்தது. 'இலக்குமணா, நீ என் கட்டளையை மீறி வெளிக்கிட்டதால் எத்தனை நாசங்கள் நடந்து விட்டன! குருத்துரோகம் செய்த உன்னை சும்மா விடமாட்டேன்! என்று கத்திக் கொண்டே இராமர் இலக்குவனை நோக்கி சவுக்கை ஓங்கி விசுக்குகிறார்.
இலக்குவன் பின்வாங்குகிறான். என்றாலும் ஓங்கிய சவுக்கின் சுழற்சி ஒருதரம் அவனைக் கெளவி விலகுகிறது. அந்த ஒரே ஒரு அடி அதற்கு மேல் எந்த அடியும் அவனில் விழவில்லை. ஆனால் சவுக்கின் ஒசை மட்டும் செவிப்பறைகள் அதிர்வது போல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அஞ்சி நிற்கும் இலக்குவன் முன் திடீரென யாரோ வெண்தாடி வளர்த்த கிழவர் ஒருவர் தோன்றுகிறார். அவர் இடையில் புகுந்து சவுக்கின் அடிகள் விழாது அவனைக் காப்பாற்றுகிறார்.
யார் அவர்? உமா தனக்குள் கேட்டுக் கொள்கிறாள். அது வசிட்டரா? இராமரின் குரு வசிட்டர்தானே? வசிட்டருக்குத்தான் இராமர் கட்டுப்படுவார். ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சியும் இராமாயணத்தில் இல்லையே?
இராமர் எந்தக் காலத்தில் இலக்குவனைத் தாக்கினார்? உமாவின் மனம் மாறி மாறி இரு தளங்களுக்குள் இயங்கிற்று. அவள் மேலும் அது பற்றிய தன் சிந்தனையைத் தீவிரப்படுத்து முன் திடீரென இன்னோர் நிகழ்ச்சி.
இராமர் கையிலிருந்த சவுக்கை எறிந்து விட்டு கீழே கிடக்கும் அந்தச் சடாயு என்று அவரால் கூறப்பட்ட தர்மேஸ் என்னும் உமாவின் " பாடசாலைத் தோழியை மடியில் தூக்கி வைத்து தலையைத் தடவுகிறார். பின்னர் சிறிது நிமிர்ந்து உமாவைப் பார்க்கிறார். தண்ணீர் கொஞ்சம் செம்பில் கொண்டு வா’ என்னும் கட்டளை அவர் பார்வையில் இருந்ததை இவள் தானாகவே விளங்கிக் கொண்டு, செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். அவர் தண்ணீரை சிறிது கையில் அள்ளி ' சடாயுவில்' . தெளிக்க, அவர் மடியில் சடாயுவாய்க் கிடந்த தர்மேஸ் உயிர் பெற்றெழுகிறாள். பின்னர் திடீரென ஒரு சடாயுவாக மாறி இராமரின் கையிலிருந்து எழுந்து விண்ணில் வட்டமிடுகிறாள்.
உமாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
5 gih SD Julh 79 மு.பொ

Page 45
'தர்மேஸ் , தர்மேஸ்' என்று வாய்க்குள் கூறிக் கொண்டே அண்ணாந்து பார்த்தபடி கையை ஆட்டிக் குதியிடுகிறாள்.
உமாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதென்ன நம்பமுடியாத காட்சிகள். இவற்றையெல்லாம் தன் கணவனுக்குச் சொல்ல வேண்டும் என்பது போல் ஓர் ஆவல். ஆனால் இத்தனைக்கும் 'அவர் தன்னைத் தேடி வராமல் தன் வேலைக்குள் மூழ்கி விட்டாரே என்கிற ஆதங்கம் வேறு.
இந் நினைவுகளிலிருந்து அவள் விடுபடுவதற்குள், இராமர் கையிலிருந்த செம்பை அவளை நோக்கி நீட்டுகிறார்.
அவள் ஓடிப்போய் செம்பை இராமரின் கையிலிருந்து வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழையும்போது அவள் நெஞ்சு ஒருக்கால் பெரிதாகத் துடித்துச் சில்லிடுவதுபோல் . அங்கே அவள் கண்ட காட்சி.
சமையலறைக்குள் நிற்பது யார்? அவள் இதயம் மீண்டும் உறைந்து விடுவது போல். சமையலறைக்குள் ஒரு பெரிய குரங்கு சாப்பாட்டுத் தட்டை ஏந்தியவாறு நிற்கிறது!
'ஐயோ வீட்டுக்க குரங்கு' என்று உமாவின் வாய் உரத்துக்கூவியபோது, குரங்கின் கனத்த குரல் குறுக்கிட்டது.
'நான் சாதாரண குரங்கல்ல. என்ன வடிவா பார்' அவள் அதை நன்றாகக் கவனித்தாள். முகம் குரங்கின் முகந்தான். ஆனால் குரங்கல்ல.
'அனுமான்' அவள் வாய் அலறிற்று. 'நீ ஏன் இங்கே வந்தாய்?" அவள் வாய் அவளை அறியாமலே தொடர்ந்து கத்துகிறது.
'இராமர் இருக்கும் இடந்தானே, என்னுடைய இடம்' என்று ஒருவித சாகசப் புன்னகையோடு கூறிய அனுமன், தன் விழிகளை ஜன்னலை நோக்கி எதையோ காட்டுவது போல் திருப்புகிறான்.
தெருவைப் பார்த்திருந்த ஜன்னல் பக்கமாக உமா விழிகளை ஒட்டுகிறாள்.
அவள் உடல் வியப்பால் ஆடிற்று. அங்கே தெருவின் இருகரையிலும் அணிவகுத்து ஏராளமான வானரப்படை வந்து கொண்டிருக்கிறது.
அவள் நெஞ்சிலிருந்து எழுந்த புல்லரிப்பு உடல் முழுவதும்
aL-suth an Tuth 8O Gy. Cur

பரவிற்று. அவள் உடல் ஊசலாடியது.
'பயப்படாதே, அங்கே பார்' என்று அனுமன் மீண்டும் ஜன்னல் பக்கம் சுட்டிக் காட்டிக் குரல் கொடுப்பது போல் பட்டது.
மீண்டும் அவள் ஜன்னல் பக்கம் பார்க்கிறாள்.
அது ஜன்னலா?
இல்லை.
அது அனுமனின் நெஞ்சு!
மெல்ல மெல்ல ஜன்னல் கிராதிகள் போல் தெரிந்த கோடுகள் அழிந்து, அனுமனின் நெஞ்சின் வலதுபக்கத்தில் ஓர் பெரும் ஜோதி எரிந்தது.
அவள் கண்கள் அகல விரிந்தன.
அந்த ஜோதிக்குள் இராமர் துயின்று கொண்டிருக்க, அவர் தொப்பூழ் கொடியில் முளைத்தெழுந்த தாமரையின் மேல், பிரம்மாவுக்குப் பதில் லங்காபுரி தெரிந்தது. அங்கே பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
'யாருக்கு பட்டாபிஷேகம், ராமருக்கா?'
உமா தன்னையும் மறந்து கேட்கிறாள்.
'இல்லை இது விபூஷணனுக்கு' என்று அனுமன் கூறுகிறான்.
உமாவின் கண்கள் ஆவலோடு விரிகிறது.
அங்கே உமாவின் பள்ளித்தோழி தர்மேஸ் விபூஷணனுக்கு குடை பிடித்து நிற்பது தெரிகிறது.
பின்னால் ஏதோ அரவம் கேட்டது.
உமா திரும்பிப் பார்த்தாள்.
'என்ன வீட்டிலிருந்தே, காட்டுக்குப் போனவர்கள் காணக்கூடியதெல்லாம் காண்கிறாயே!' என்றவனாய் அவள் கணவன் அங்கே வந்து கொண்டிருந்தான்.
älgh Dyuh 81 (p.łu

Page 46
கணங்கள்
LfD ஸ்ரர், உங்கட பிரச்சாரம் எல்லாம் எப்பிடிப் போகுது?'
யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடு தீவை நோக்கி ஓடிவந்த பஸ், அராலிச் சந்தி யில் திடுதிப் பென்று தலையை முன்னால் குத்துவதுபோல் எகிறிவிழுந்துநின்றது. அதன் யந்திரஒலி அடங்குவதற்கு முன்னரே, அப் பிரதேசத்தையே நிசப்தமாக்கி உள்ளதிர வைப்பதுபோல் அவனை நோக்கி எழுந்தது அந்தக் குரல்.
' மாஸ்ரர், உங்கட பிரச்சாரம் எல்லாம் எப்பிடிப் போகுது?'
அவனுடல் சில்லிட்டு பனிக்கட்டி யாய் உறைவது போல் இருந்தது.
பஸ் ஸின் முன்னால் இருவர் ஏ.கே.துப்பாக்கிகளுடன் கொலைகாரர் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பஸ் முன்னிருக்கையில் இருந்த "மாஸ்ரரை' நோக்கி இடப்புற முன் ஜன்னலருகே வந்து மீண்டும் பலத்த குரலில் 'என்ன மாஸ்ரர், என்னைத் தெரியுதா ? உங்கட பிரச்சார மெல்லாம் எப்பிடிப் போகுது?' என்றான் அதே குரூரமும் கேலியும் கலந்த குரலில்,
அந்தக் கேள்விக்கு இலக்கான "மாஸ்ரரை நோக்கி பஸ்சுக்குள் இருந்த சகல பிரயாணிகள் மட்டுமல்ல சதா காற்றோடு கதைப் பறையும் அந்த வல்லை வெளியே ஒருக்கால் ஸ்தம்பித்து அவனை நோக்கி தன் பார்வையைக் குவிப்பதுபோல் இருக்க, அவனது உடல் வெலவெலத்து வேர்க்கத் தொடங்கியது.
மாஸ்ரரை நோக்கி கேள்வியை எறிந்து அதட்டியவன் தனக்குச் சற்று தள்ளி எதிர்ப்பக்கமாக நின்ற தனது சகாவின் பக்கம் பார்வையைத் திருப்பினான். ஆனால், அவனது சகாவோ இவனைப் பாராது பஸ்ஸின் பின்னால் இருப்பவர்கள் மேல் நோட்டம்
вLuli бауцi
82. (yn. CLUTT
 
 
 

விட்டுக்கொண்டு நின்றான்.
இனி நான் தப்பிக்கொள்ள வழியில்லை. பஸ்சை விட்டு இறக்கப்பட்டு இந்தச் சந்தியில் வைத்துச் சுடப்படப் போகிறேன். அது நிச்சயம்.
மாஸ்ரரின் எண்ணங்கள் தறிகெட்டுப் பாய்ந்தன. கணப்பொழுதுகள் யுகங்களாக நீளும் பிரமை, திகிலும் பீதியும் அவதியும் அவனுக்குள் அரக்கர்போல் ஒன்றை யொன்று கட்டிப்பிடித்து புரள்கின்ற அந்தரம். அந்த உணர்வுகளின் மற்போர் அங்கிருப்போருக்கும் காட்சிப்படுத்தப்படுவது போன்ற அவஸ்தை.
மாஸ்ரரின் பக்கம் அந்தக் கொலைகாரன் போல் நின்றவனின் பார்வை மீண்டும் திரும்புகிறது.
மாஸ்ரர் அசட்டுத்தனமான புன்சிரிப்புடன் அவனை வெறித்துப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் சிகரட் புகைபோல சாவின்களை மிதந்து பஸ்சுக்குள் நெளிவது எல்லோருக்கும் தெரிகிறது.
மாஸ்ரரின் பார்வையை வாங்கிய அவன், ஒருமுறை தன் உதட்டால் பற்களைக் கடித்துவிட்டு ‘ஹா ஹா' வெனப் பலமாகச் சிரித்தான். அவன் சிரிப்பினால் மாஸ்ரரின் நடுக்கம் வெளியெடுக்கப்பட்டு எல்லார் முன்னிலையிலும் காட்சிக்கு வைக்கப்படுவதுபோல் இருந்தது.
இதுவரை பஸ் சின் பின்னால் தன் நோட்டத்தை எறிந்து கொண்டிருந்த அவன் சகா, அவன் சிரிப்பினால் தட்டிவிடப்பட்டு இவன் பக்கம் திரும்பி 'என்ன விஷயம்' என்பது போல் பார்த்தான்.
உடனே தன் சைகையால் தன் சகாவை அருகே அழைத்த அவன் \மாஸ்ரரைச் சுட்டிக்காட்டி 'சுபாஸ், இவர்தான் அவங்கட பிரச்சாரப் பீரங்கி, ஆளைக் கவனி' என்றான். மேலும் சத்தம் போட்டு. பின்னர் ரகசியமாக ஏதோ சொன்னான்.
மாஸ்ரரின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. 'ஆளைத் தட்டுவமா?' என்று அவன் சகாவிடம் சொல்லுகிறான் போலவே அவருக்குப்பட்டது.
இனி மாஸ்ரரை பஸ்ஸைவிட்டு இறக்குவதற்கு கட்டளையிடுவது தான் பாக்கி,
அவன் சகா மீண்டும்தன் பார்வையை மிக அக்கறையாக பஸ்ஸின் பின்னால் ஒடவிட்டுக் கொண்டிருந்தான். அப்படி அவனை ஈர்ப்பது என்ன என்றறியும் ஆவல் அந்நிலையிலும் மாஸ்ரருக்குத் தோன்றியது. இருந்தாலும் அவர் திரும்பவில்லை. நேரே வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.
தோளில் தொங்கிய துப்பாக்கியை கைக்கு மாற்றியவாறே மாஸ்ரருக்குக் குரல் கொடுத்தவன் பஸ்ஸின் முன்னால் நின்று அக்கம்பக்கம் சுற்றி நோட்டம் விட்டான்.
a Luth aaruli 83 மு.பொ

Page 47
வழமையாக பஸ்சுக்குள் ஏறி யாராவது சந்தேகநபர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து 'செக்' பண்ணி விட்டு பஸ்ஸை அனுப்ப வேண்டியவன் அதற்கு மாறாக இன்று மாஸ்ரரைக் கண்ட மாத்திரத்தே அவற்றையெல்லாம் மறந்து "பெரிய காய்' ஒன்று அகப்பட்ட களிப்பில் முகம் மகிழ்ச்சியால் பொங்க, அங்குமிங்கும் பார்ப்பதிலிருந்தே அவர் ஆயுள் இன்றோடு முடியப்போகின்றதென்பதுதானே அர்த்தம்?
அவன் பார்வை திடீரென்று மாஸ்ரர் மேல் வந்து குத்திட்டது. அவன் குரல் கொடுக்கப் போகிறான். ஒய் மாஸ்ரர், இஞ்சால இறங்கி வாரும்! அவன் இன்னும் கட்டளை பிறப்பிக்கவில்லை. அதற்குள் மாஸ்ரரின் மனம் முந்திக் கொண்டு, அவன் குரலை குத்தகைக்கு வாங்கி ஒத்திகை பார்த்து.
ஒய் பிரச்சாரப் பீரங்கி, இப்படி இறங்கி வாரும்! அவர் தன் மனதை எவ்வளவு கட்டுப்படுத்தியும் அது கட்டறுத்துக்கொண்டு முந்தியது. அவரை ஓர் நிலையில் இருக்கவிடாது மனம் அலைபாய்ந்தது. கடைசியில் அவரை அவராலேயே கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற ஓர் அந்தரநிலை. மனம் போடும் 'கலை ஆட்டத்தின் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்சநேரத்தில் அவன் கட்டளை பிறப்பிக்காமலேயே தானாகவே அவர் அவனிடம் போய்த் தலையைக் கொடுத்துவிடுவாரோ என்பதுபோன்ற பீதியின் அமர்க்களம்.
'ஐயோ, என்னை யாராவது இறுக்கிப் பிடித்துக் கொள்ள மாட்டார்களா?' என்று அவர் மேல் மனம் ஓலமிட, உள்மனத்தின் கொந்தளிப்பைத் தாங்கமுடியாத அவர் தனக்கருகில் இருப்பவரை 'வளர்த்த நாய் எஜமானரைப்பார்ப்பதுபோல் பார்த்தார். அருகில் இருப்பவர் அப்படி ஒரு அந்நியரல்ல. மாறாக அவருக்குநல்ல பழக்கமுள்ள, அவரில் அன்புடைய ஒரு நண்பர்தான். ஆனால் அவ்ர் இவரைப்பார்ப்பதாய் இல்லை. அவர் முகத்திலும் ஈயாடவில்லை. மேற்கில் வீழும் மாலைச்சூரியனின் கதிர்களால் அவர் கறுத்த முகம் காமாலைக்காரனது போல் வெளிறிப்போக, அவர் தூர வெறித்த பார்வையோடு அசையாதிருந்தார். -
அவர் மட்டுமல்ல. பஸ்ஸில் இருந்த அனைவரும் இப்படித்தான் இருந்தனர். திடீரென யாரோ ஒரு முனிவர் போட்ட சாபத்திற்கு இலக்கானவர்கள் போல் வெறித்த பார்வையும் அசையாத உடல்களுமாய் அப்படியே விறைத்துப் போயிருந்தனர்.நிற்பாட்டப்படாத பஸ் என்ஜினின் 'கிர் கிர்' என்ற கரகரப்பைத் தவிர எங்கும் ஜட அமைதி.
ஆனால் அந்த அமைதி அதிகநேரம் நீடிக்காது போல் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில், பஸ்ஸில் உள்ள அனைவரும் ஏககாலத்தில் பீதியால் பெருங்குரலெடுத்துக்கத்திவிடுவார்கள் போல் மாஸ்ரருக்குப்பட்டது. இல்லாவிட்டால்மாஸ்ரரேஅப்படிச்செய்து விடுவார்போல் அவர்நாக்கின்நுனி
கடலும் கரையும் 84 (U.Burl

துடித்தது. வாயை அவர் மென்று மென்று விழுகினார். இருந்தாலும் அவரால் முடியாமற் போகவே எல்லோருக்கும் வழிகாட்டுவதுபோல் அவரே குரலை வெளிவரவிடாது தனக்குள்ளேயே கத்தினார். எங்கோ ஆழக்கணற்றின் அடியிலிருந்து அது வெளிவந்து மீண்டும் அதன் தொண்டைக் குழிக்குள் திரும்பிப்போகும் ஒசை.
'ஐயோ கொலைகாரர் ஐயோ கொலைகாரர்! என்னைக் காப்பாற்றுங்கள்! யார் யாரைக் காப்பாற்றுவது?
'சீகத்தாதே! ஏன் இப்படிப் பயந்து சாகிறாய்? சாகப்போகும் நேரத்திலாவது அதைத் தைரியமாக எதிர்கொள்
மனதின் மேல்முனை எதிர்க்குரல் கொடுத்தது. இதுகாலவரை உயிரோடு வாழ்ந்தும் உயிரென்பது எதுவென்று தெரியாது வாழ்ந்த அவருக்கு முதன்முதலாக ஒரு அனுபவம் கிட்டியது. அவருக்குள் இருக்கும் உயிரைக் கையில் எடுத்துத் தடவிப்பார்த்து, அதன் கனதியையும் கையில் வைத்து எறிந்து எறிந்து எடை பார்க்கும் புதிய அனுபவத்தளம் அவருக்குக் கிட்டியதுபோல.
உயிர் இப்படிக்கனக்குமா? விைத்துவிளையாடும் பொருளை யாராவது பறிக்கப்போகும்போது குழந்தைப் பிள்ளைகள் அந்தப் பொருளைப் பறிக்கவிடாது தன்னுடல் முழுவதாலும் அணைத்து கூனிக்குறுகிக் கொள்வது போல், மாஸ்ரர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளக் கூனிக்குறுகினார். அது பெரும் பறாங்கல்லொன்று கழுத்தில் தொங்குவதுமாதிரிக் கனத்தது.
மாஸ்ரருக்கு நினைவு வந்தது. சில கிழடுகள் சாகாது கனநேரம் கிடந்து 'சேடம் இழுப்பதை அவர் பார்த்திருக்கிறார். உயிர் இருப்பதே பெரும்பாரமாக அவர்கள் உயிரோடு போராடும் அவஸ்தை, மாஸ்ரரும் அப்படியா?
அவர் உயிர் பாறாங்கல் மாதிரி கனக்க அவர் மேலும் கூனிக் கூனிக் குறுகிக் குறுகி. அவருக்கு இனிமேலும் தாங்கமுடியாது, இனிமேலும் தாங்க முடியாது. அவர் மனம் தன்பாட்டில் கத்தியது.
ஐயோ இறைவா, இந்த அவலம் ஏன் எனக்கு? என்னைக் காப்பாற்றமாட்டாயா, நான் தப்ப வழி இல்லையா? அவர் மனம் பெருங்குரலெடுத்துக் கத்தியது. ஆனால் அதற்கு நேர்மாறாய் அவருக்கு வெளியே - பஸ்சுக்குள்ளும் அதற்கு அப்பாலும்- எல்லாம் ஸ்தம்பித்ததுபோல் மயான அமைதி நிலவியது. திடீரென அந்த அமைதியைக் கிழிப்பதுபோல் 'ஏய் சுபாஸ்' என அந்தக் கொலைகாரன் போல் நின்றவன் தன் துப்பாக்கியின் அடிப்புறத்தை நிலத்தில் ஊன்றியவனாய் தன் சகாவை நோக்கி கத்தினான்.
கடலும் கரையும் 85 Qp. Our

Page 48
மாஸ்ரருக்கு சன்னமொன்று அவர் காதோடு ஒட்டிய கன்னத்தைக் கிழித்துக்கொண்டு போவது போல் இருந்தது.
ஆனால் அவனது சகா திரும்பிப் பார்க்கவில்லை. அவன் இன்னும் பஸ்ஸின் பின்புறநோட்டத்திலிருந்து மீளவில்லை. கூடவே இப்போ நகத்தை வேறு கடித்து கொண்டிருந்தான். அவனை அப்படி பின்னால் இழுப்பது என்ன?
மாஸ்ரர் அந்நிலையிலும் தன்நிலையை மறந்து ஒரு மின்வெட்டுப் பொழுதில் தன் முகத்தைப் பின்னால் திருப்பிப் பார்த்துவிட்டு மீண்டார். அந்தக் கணப்பொழுதில் நகத்தைக் கடித்தவாறு பார்வையை மேயவிட்டவனுக்கு பதில் அளிப்பதுபோல் ஓர் அழகி பின்னால் இருந்து முறுவலித்துக் கொண்டிருந்தாள். கத்தியவனுக்கு அவனது சகா பதிலளிக்காமல் போகவே தன் திட்டத்திற்கு ஆதரவு தர ஆளில்லாது போனநிலையில் அவன் தொண்டையைக் கனைத்துப் பலமாகச் செருமினான். ஆனால் பலனில்லை. பஸ்ஸின் என்ஜின் மட்டும் இன்னும் ‘கர் கர் கர்' என்ற இரைந்து ஓர் அவலச் சுருதி கூட்டியது.
பெண் மோப்பத்தில் ஈடுபட்டிருந்தவனும் தன் மயக்கம் தெளிந்து "அப்படியா சங்கதி, இவர் அவங்கட ஆளா?' என்று கூப்பிட்டவனோடு சேர்ந்து மாஸ்ரரை ஒரு பார்வை பார்த்திருந்தால் போதும், அவர் பஸ்ஸைவிட்டு இறக்கப்பட்டு அவ்விடத்திலேயே வைத்து சுடப்பட்டிருக்கலாம். இருந்தாலும் இன்னும் நிலைமை சுமுகமாகவில்லை. அவர் உயிர் மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதட்டியவனின் சகாவின் மோகம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவன் மோப்பத்திற்கு ஏற்றவாறு அவள் தீனி போட்டுக் கொண்டிருந்தாள்.
குதியுயர்ந்த செருப்பும் ஆளுமாய் தளுக்குமினுக்கோடு அவள் பஸ்ஸில் ஏறியபோது இவருக்கு ஏற்பட்ட எரிச்சல் இன்னும் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அந்த எரிச்சலை ஏற்படுத்தியவளால் தான் அவர் உயிர் இன்னும் இழுத்துப் பிடிக்கப்பட்டிருப்பதுபோல். என் முன்னே விஸ்வாமித்திரரைக் கலக்கிய மேனகை, இந்திரனைக் கீழிறக்கிய அகலிகை ஆகியோரின் கற்பனை முகங்கள் ஓடிவந்தன. எது நன்மை? எது தீமை? ஒருவரின் நல்லியக்கம் மற்றவருக்குத் தீமையாகவும் இன்னொருவரின் தீய இயக்கம் அடுத்தவருக்கு நன்மையாகவும் மாறி மாறி முடிவில் எல்லாம் நன்மையும் தீமையுமற்ற ஒன்றாய் முடிவதாய் அவருக்கு அந்நேரத்தில் ஓர் மின்வெட்டு ஞானோதயம்.
மாஸ்ரர் ஒரு முடிவுக்கு வருகிறார். அந்தத் துப்பாக்கிக்காரர் பஸ் ஸலக்குள் வந்து தன்னை வலிந்திழுத்துக்கொண்டு போய் நாய் போல் சுட்டுத்தள்ளுவதை நினைக்கவே அவர் மனம் அருவருத்தது. சாகமுன்னர்தலை நிமிர்ந்துசெல்லவேண்டும். அந்த அற்பர்களோடு எந்த வித சமரசக் குழைவும் இல்லாமல் அவர்கள் முகத்தில்
கடலும் கரையும் 86 (p.Our

காறித்துப்பாத குறையாக சாவை வரவேற்க வேண்டும்.
அவர் பொறுமையிழந்த அந்த நிலையில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இருந்தும் ஏனோ மனம் அலைபாய்ந்தது.
துப்பாக்கியைக் குத்தவைத்தவாறு குரல் கொடுத்தவன் மீண்டும் அதைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸைச் சுற்றிவரத் தொடங்கினான். அவன் பெரிதாகக் கத்தி, பறைசாற்றி பஸ்ஸில் இருந்தவர் விறைக்க, அவர்களைப் பயமுறுத்த எதையோ ஹீரோ பணியில் செய்யும் வேட்கையில் நடந்தான். ஆனால் அதை அவனாலே செயல்படுத்த முடியாத பதற்றம், அதை வெளிப்படுத்த முடியாது நாக்கு உள்விழுந்து போய்விட்டது போல் வெறும் வாயைச்சப்பும் உதட்டசைவு.
துவக்கைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸை வலம்வந்தவன் மாஸ்ரர் இருந்த ஜன்னல் அருகே வந்ததும் துவக்கை தோளிலிருந்து சுழற்றி கையில் எடுத்தான். • O
இனி சரி, அவன் பெரிதாகக் கத்தி என்னை கீழிறக்கப் போகிறான். 'நான் அதற்குத் தயாராக வேண்டும்' - மாஸ்ரர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவரது இதயம் அடிக்கும் ஓசை பஸ்ஸில் உள்ள எவர்க்கும் கேட்பது போல் உலக்கை போட்டு இடித்தது.
இரண்டு நாட்களுக்கு முந்தி இவர்களின் கூட்டத்தால் கொல்லப்பட்டு மாஸ்ரரின் வீட்டுக்கு அருகில் நூறு யாருக்கு ஒருவராக போடப்பட்டிருந்த மூவரின் முகங்கள் அவர் கண்முன் விரிந்தது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்த அவர்களின் முகங்கள், புதுவீடுகளின் முன் தோஷ நிவர்த்திக்காக மாட்டப்பட்டிருக்கும் 'கீர்த்தி முகங்கள்' மாதிரி வீங்கி பருத்து அகோரமாகக் காட்சியளித்தன.
இவற்றோடுஒன்றாய் மாஸ்ரரின்முகமும் அராலிச்சந்தியில் கிடக்கப் போகிறது. புதிய 'கீர்த்திமுகம்'.
அவர் ஜன்னலின் கண்ணாடிக்கருகே வந்தவன் அவரை குரோத வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பது போல் பட்டது.
அவர் அவனைப் பார்க்கவில்லை.
மாஸ்ரரின் பார்வை, அவர் அருகில் இருக்கும் நபரைப் போல் வலுவிழந்து வரவழைத்த சாந்தமுறுவலோடு மறைந்துகொண்டிருக்கும் மாலைச் சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. பென்னம் பெரிய தீப்பந்து, அரக்கனொருவன் வாய்க்குள் போவதும் பின்னர் வெளிவருவதும் போல் அந்தரப்படும் சூரியப்பந்து.
மாஸ்ரரின் நண்பருக்கு அருகிலிருந்த பஸ்சாரதி ஸ்ரியரிங்கில் தலைவைத்தவனாய் பீதியை மறைத்தபடி தன் இடக்கையில் இருந்த நேரத்தைப் பார்க்கிறான். ஐந்து நிமிடத்திற்குள் திணிக்கப்படும் ஆயிரம் நிகழ்வுகள் ஆயிரம் நிமிடம் போன்ற நேரச் சுமையில் இழுபட.
கடலும் கரையும் 87 (p.GluT

Page 49
மாஸ்ரர் அருகில் நின்றவன் தொண்டையைக் கனைக்கிறான். சரி இனி அவன் கத்தியவாறே அவரை வந்து வெளியே இழுத்தெறியப்போகிறான்.
மாஸ்ரர் இருந்தது போதும் இறங்கி வெளியே வாரும்! அப்படிச் சொல்லியவாறு அவரை வந்து பிடரியில் தள்ளிவிடப் போகிறான்.
இப்போ எல்லோர் பார்வையும் அவரையே நோக்கிக் குவிவது போன்ற உணர்வு.
ஆனால் இன்னும் அவன் தொண்டையைவிட்டு எந்த வார்த்தையும் வந்ததாக இல்லை.
அவன் தொண்டைக்குள் தான் அந்தச் சூரியப்பந்து போய் அடைத்துக் கொண்டது போன்ற ஒரு உறுத்தலின் வெளிக்காட்டலாய் 'கோர்க்' என்று பெரிதாக உள்ளிழுத்து ஒரு காறல் காறினான். அதைத் தொடர்ந்து வந்த ஒரு கண இடைப்பொழுதின் பின் 'து.' வென்று பெரும் வெறுப்பை உமிழ்ந்த ஒரு துப்பல்,
இனி? அவன் அவரை ஜன்னல் வழியாக ஒரே அலக்காகத் தூக்கி வெளியே எடுக்கப் போகிறான் போலும்.
மாஸ்ரரின் அந்தரமும் ஆற்றாமையும் தம் எல்லைக்கோடுகளுக்கே சென்றுவிடுகின்றன. இனிமேலும் பஸ்ஸுக்குள் இருக்க முடியாது. வெளியே எழுந்து போவது தான் புத்தி. அவன் எதுவானாலும் செய்து கொள்ளட்டும். மாஸ்ரர் தயாரானார்.
அவர் கண்கள் மங்குகின்றனவா அல்லது அவர் பார்வை விழும் வெளியிடங்கள் தான் மங்கிக் கரைந்து கொண்டு போகின்றனவா?
அவர் பார்வை விழும் அந்த மங்கல் வெளியிலே அவர் மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் அனைவரும் வந்து வந்து போகின்றனர். அவர்கள் கண்களில் கண்ணீர். இன்னும் சிறிதுநேரத்தில் அவர் கண்ட 'கீர்த்தி முகங்'களில் ஒன்றாய் அவரது தலையும் அராலிச் சந்தியில் கிடப்பதை இந்த பஸ்ஸில் போகிறவர்கள் வீட்டாருக்கு அறிவித்துவிட்டுப் போக, அங்கே.
வேர்வையால் மாஸ்ரரின் உடல் தெப்பமாக, கண்கள் இருண்டு கொண்டு வந்தன. அவர் தலையை மெதுவாக சீற்றின் பின்னால் சாய்த்தார். ஆனால் அந்த நேரந்தான் அவனின் குரல் படுபயங்கரமாக ஒலித்தது.
"மாஸ்ரர்' அவர் நெஞ்சில் யாரோ பலமாக அடித்தது போல தாக்கம். அவர் இதயம் துடிக்காமல் நின்றுவிட்டதுபோல் ஸ்தம்பித்து மீண்டும் படுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
கடலும் கரையும் 88 (p.Gulf

மாஸ்ரர் சமாளித்துக் கொண்டு, செத்துக் கொண்டு போன தன் முகத்தை கூப்பிட்டவன் பக்கம் திரும்பி நேர்பார்வை எறிந்தார். அவன் பார்வை மாஸ்ரரின் பார்வையைச் சந்தித்த போது, அவன் வாய் ஏதோ கொடூரமாகச் சொல்லத் துடிப்பதும் அவன் கைகள் ஏதோ செயலில் இறங்கபதறுவதும் போல் தெரிந்தன.
மாஸ்ரர் அவன் பஸ் ஸoக்குள் நுழைந்து விடுவானோ என்ற ஐயத்தில் இருக்கையை விட்டு எழுவதற்கு நுனிக்கால் பாதங்களை உயர்த்தினார். w
ஒர் கணந்தான். இதுவரை ‘காதல்’ சமிக்கைகளில் கட்டுண்டு கிடந்த அவனது சகா திடீரென உஷார் பெற்றவனாய் 'ஏய் திலீப், அவங்கள் வாறாங்கள்ளடா' என்று பலமாகக் குரல்கொடுத்து தன் முன்னால் வந்து கொண்டிருப்பவர்களைக் காட்டினான்.
தூரத்தே இருவர் அருகருகே துப்பாக்கிகளைக் காவிக் கொண்டு தாடி மீசை தலைப் பாகையோடு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வரமுன்னரே சப்பாத்தி வாடை வீசுகிறது.
"தொலைவான்கள் வந்தா உபத்திரவம். அதை இதைக் கேட்டண்டு நிற்பாங்கள் கெதியா வெளிக்கிடு' என்றான். திரும்பவும் அழகியில் ஐக்கியமாகியிருந்த அவனே.
குத்தவைத்திருந்த துவக்கை மீண்டும் தூக்கினான் மற்றவன். ‘என்னைப் பஸ்ஸுக்குள் வைத்தே சுடப்போகிறான் போல' என்று எண்ணி இறங்க ஆயத்தமாகி மாஸ்ரர் அவக்கென சீற்றை விட்டெழுந்த அதேநேரத்தில், அவரது காற்சட்டையை பலமாக இழுத்து அமரவைத்தார் அருகேயிருந்த நண்பர்.
'மாஸ்ரர், இனிமேலாவது உங்கட பிரச்சாரங்களை வீட்டிட்டு ஒழுங்காக இருக்கப் பாருங்க' என்று கூறியவன் 'உம் பஸ்ஸை எடும்' என்றான் சாரதியைப் பார்த்து.
பஸ் புறப்பட்ட போது இதுவரை பாறாங்கல்லாக கனத்துத் தொங்கிய மாஸ்ரரின் உயிர், இப்போ எங்கே போயிற்று என்றே தெரியாத நிலையில் அவர் காற்றில் மிதப்பது போல் இருந்தார்.
கடலும் கரையும் 89 (J. Gum

Page 50
தர் மறைவிலிருந்து அந்தக் னயே பார்த்துக் கொண்டி ருந்தன. கண்கள் மட்டுந்தான் தெரிந்தன. ஏனைய பிரதேசங்களை செடிகொடிகள் மறைத்திருந்தன. அந்த மறைப்பால் அந்தப் பார்வையின் அகோரம் கூடுவது போல் தெரிந்தது. கண்களில் தெறித்த வேட்கை அவனை வேட்டை ஆடிவிடும் போல் பட்டது. ஆயினும் அவனுள் அச்சம் எழவில்லை. ஆனால் அந்தப் பார்வையைச் சந்திக்கக் கூடாதென்ற ஒரு சிறு குறுக்கம் மட்டும் மேலெழுகிறது. இருந்தும் அந்தக் குறுக்கம் கூட வலுக்கொண்டிருக்கவில்லை. ஏனெனில்
கண்கள் அ
வழமையான வேட்டைக்காரன் போல், அந்தக் குறுக்கத்தை உதறிக்கொண்டு அதன் பார்வையை எதிர் கொண்டு வெறித்து நோக்க வேண்டும் போன்ற வேட்கை அதன் பார்வை யால் தூண்டப்படுகிறது. அதன் தூண்டுதலால் கிளர்வுற்று அவன் தனது கள்ளப் பார்வையை எறிந்தபோது, அதன் விழிகளில் குரூரமான வெற்றி முறுவல் தெரிந்தது. அப்போதெல்லாம் அதன் மீசையின் கம்பிமயிர்கள் சிலிர்த் தெழுந்து மின்னுவதை அவனால் கற்பனை பண்ண முடிந்தது.
அதிகாலையிலிருந்தே அது அப் பிரதேசத்தில் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் அதைக் கண்டு கொண்டது காலை வெயில் ஏறிய பின்னர் தான். காலையிலிருந்தே யாரோ அவனைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு எழுந்து கொண்டுதான் இருந்தது. வழமையாக அவன் போன்ற வேட்டைக்காரர்களுக்கு ஏற்படும் உணர்வு இது. அவன் இந்த உணர்வு'களின் பித்தலாட்டங்களை நன்கு அறிந்தவன். அதனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காது அவனது வேலையில் கருத்தாய் இருந்தான். இருந்தாலும் அவனை ஏதோ முன்னால்
கடலும் கரையும்
9 O (p.łu
 
 
 

கனமாக அழுத்துவது போன்ற உணர்வு அடிக்கடி எழுந்ததும் நிமிர்ந்தான். அவ்வளவுதான். அந்தக் கண்கள்! ஒரு பத்து யார் தூரத்துக்கப்பால் ஆழமான புதர் மறைவில் அவனையே குறிவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவன் நிலை தர்ம சங்கடமாய் போய்விட்டது. அவன் தேடிக் கொண்டு வந்த, அவனால் குறிவைக்கப்படவேண்டிய ஒன்று, அவன் எதிர்பார்த்திராத வழியில் அவனில் குறிவைத்துக் கொண்டிருந்தது! அதன் விழிகளில் இருந்து பாய்ந்த நரைத்த குரூரம் அவனை நிலைதளர செய்தது. அவனது பாதுகாப்புக்கான சகல ஆயுதங்களும் அவனிடம் அந்நேரம் இருந்தும் அவற்றை நீட்ட முடியாது போய்விட்ட எதிர் பாராத இக்கட்டு. காரணம் அவன் தன்னை சுதாகரித்துக் கொள்ள முன்னரே, அது தயார் நிலையில் தன்னை நீட்டிக் கொண்டு நிற்பதை அதன் விழிகள் அறிவித்து விட்டன. இன்னும் அதனிடமிருந்து ‘ஹான்ட்ஸ் அப்' என்ற குரல் எழ வேண்டியதுமட்டுந்தான் பாக்கி. அதற்குள் அவன் தனது தற்பாதுகாப்பிற்கான தந்திரோபாய பின்னடிப்புகளைச் செய்யலாம்.
என்றாலும் அவனுக்குப் பயம் எழவில்லை. இது ஒரு பெரும் சவாலாகவேபட்டது.
ஏனென்றால் இந்த அனுபவம் அவனுக்கு புதிதல்ல. அத்தோடு அவனது எதிரியும் புதியவரல்ல அவனுக்குப் பழக்கப்பட்ட எதிரி. அதே போல் இது எதிர்பாராத எதிர்கொள்ளல் ஆயினும் இதுவும் 'முன்னர்’ நிகழ்ந்த ஆயிரம் எதிர்பாராத நிகழ்வுகள் போல், பழக்கப்பட்ட ஒரு எதிர்பாராத நிகழ்வு. அவன் உஷாரானான்.
அவன் அதைத் தாக்க முன் அது அவனை நோக்கி வைத்திருக்கும் குறியிலிருந்து தப்ப வேண்டும். அதன் குறியிருந்து தப்புவதற்கு அவனது நிலைதளம் பாத மனோதிடம் தேவை. அதன் பின்னர்தான் அதைத் தாக்குவதற்குரிய நிலையைத் தீர்மானிக்கலாம். ஆரம்பத்தில் மனோதிடம் ஏராளமாக இருப்பது போலவே படும். அதை எதிர்பாராது சந்தித்தால் கூட சமாளித்துவிடலாம் என்கிற பலத்த நம்பிக்கை எப்போதுமே இருக்கும். ஆனால் அதை இப்படி திடீர் என சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் அவனது அந்த நம்பிக்கை சொல்லாமல் கொள்ளாமல் காலைவாரி விடுவது அவனது அனுபவங்களில் ஒன்று. காரணம், அதன் பார்வையே அதன் ஆயுதங்களில் பலமான ஒன்று. பாய்ந்து அது எவரையும் கீறிக்கிழித்து குதறுவதற்கு முதல் அதன் பார்வையாலேயே செயலிழக்கச் செய்துவிடும். அத்தகைய ஒரு மனோவசிய சக்தி அந்தப் பார்வைக்கு திட்டிப் பாம்பின் விடம் என்பார்களே, அது மாதிரி அதை எதிர்கொண்டவுடனேயே தலைக்கு விஷம் ஏறுவது போல் கிறு கிறுவென தலை சுழல ஆரம்பித்துவிடும்! அதன் பின் அதற்கு தாக்குதல் இலகு.
இதில் அவனுக்கு நிரம்ப அனுபவம்.
GLOla Gaotuli 91 g.U.

Page 51
அவன் அதன் பார்வையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயமும் அதற்கு எதிராக தன்னை சுயமனோவசியம் செய்து கொள்ளுவான். அது அவனுக்கொரு சவால்|ஒருபலப்பரீட்சை வேண்டுமென்றே அதன்பார்வையை எதிர்கொண்டு தன்னை சுய மனோவசியப்படுத்திக் கொள்ளுவான்.
அவனையும் அதற்கு நன்றாகத் தெரியும்.
அவன் கொஞ்சம் கஷ்டமான பேர்வழி என்று அதற்குத் தெரியும். மேலும் அவனது வேட்டையாடல் முறை மற்றவர்களில் இருந்து வித்தியாசமானது என்றும் அது அறியும். அவனது பொறியில் பல தடவை சிக்கி தோல் உரிபடமுன் தப்பித்தோடியிருக்கிறது. அதே போல் அவனும் வேட்டையாடத் தொடங்கிய நாளிலிருந்து அதனிடம் சிக்கி குற்றுயிரும் குறை உயிருமாய் தப்பிப் பிழைத்த நாட்களும் உண்டு.
அவன் தனது பால் பண்ணையைச் சுற்றி கட்டை நாட்டி முள்ளுக்கம்பி வேலி அறைந்திருந்தான். காட்டுப் பிரதேசமானதால் விலங்குகளின் தாக்குதலை எதிர்பார்த்தே அவன் அப்படி கட்டுக் கோப்பாக வேலி போட்டிருந்தான். எனினும் கறவைகளின் மொச்சையில் மோப்பம் கொண்டு அவற்றைத் தாக்க விலங்குகள் வருவதுண்டு. ஒநாய், கரடி, சிறுத்தை, இன்னும் இவற்றுக்கு பின்னால் நரிகளின் பரிவாரம் தொடர்வதும் உண்டு. அவைகள் விட்ட எச்சங்களைச் சுவைபார்க்க.
அவனது மிகுந்த பாதுகாப்பு அடைப்புக்களையும் மீறிக்கொண்டு இது ஒருநாள் அவனது பண்ணையைத் தாக்கிற்று. இனிமேல் எந்த வித விலங்குகளின் தாக்குதலும் நடைபெறாது என்று அவன் திடமாக நினைத்த போதுதான் அது தாக்கிற்று. அந்தத் தாக்குதல் அவனை வெகுவாகப் பாதித்தது. அது அவனையே மொட்டை அடித்து சாணிதப்பி சந்தியில் நிறுத்தியதுபோல் அவனுக்குப்பட்டது. அவ்வளவு அடைப்புக்களையும் மீறி அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அதன் தாக்குதல்.
காவல் போட்டதையும் மீறி ஒரு உடைப்பு நிகழ்ந்த பின்னர், அதில் அது ஒரு சுவை கண்டது. தொடர்ந்து இடைக்கிடை அதன் தாக்குதல். அவனுக்கு தன் மேலேயே ஆத்திரம் பீறிடுகிறது. அதன் ஒவ்வொரு தாக்குதலோடும் அவனது இயலாமையும் வலுவின்மையும் நிர்வாணம் ஆக்கப்படுவது போல்.
அது எப்படி பதுங்கிப் பதுங்கி வருகிறது!
அது பதுங்கும் போது சிறுத்தை மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் அது எப்போதுமே சிறுத்தையாக இருந்துவிட்டால் விட்டது தொல்லை. அதை வேட்டை ஆடுவது சுலபம். சிறுத்தைக்குரிய தடங்களிலேயே வைத்துத் தீர்த்து விடலாம். ஆனால் இதுவோ எல்லா விலங்குகளின் தந்திரங்களையும் நேரத்துக்கேற்ப, சூழலுக்கேற்ப தனதாக்கிக்
கடலும் கரையும் 92 (p. Lu

கொள்கிறது. ஆயுதமாகப் பாவிக்கிறது! அதுதான் எல்லா முட்டுக்கட்டைகளுக்கும் முக்கிய காரணம்.
ஒருமுறை அதை அவன் துரத்திக் கொண்டு போன போது அது பார்த்திருக்கக் கூடியதாக ஒரு புதருக்குள் மறைந்தது. அவன் உடனே சிறிதும் தாமதியாது, வெகு பிராயத்தனப்பட்டு, அடிக்கு மேல் அடிவைத்து, நழுவி நழுவிச் சென்று அந்தப் புதரை நோக்கிக் குறி வைத்த போது, திடீரென அது நரிபோல் இன்னொரு புதர்வழியே வெளிவந்து கூக்காட்டி அவனைக் கேலி செய்தது!. இன்னொரு முறை, அதை மிக லாவகமாக வளைத்து உச்சந் தலையில் ஒரே போடாப் போடலாம் என்று ஆயத்தமான போது, திடீரென அது அவன் வளர்ப்பு நாய் போல் வாலைக் குழைத்துக் கொண்டு அவன் கால்களை நக்கவரும் தோரணையில் நின்றபோது, 'அப்பாடா விட்டது தொல்லை! ஒருபடியாக ஆளை அமத்தி விட்டேன்' என்று அவன் பெருமூச்சு விட்டு ஒய்வதற்குள், அது ஒரு சுழிப்பு சுழித்து, அடுப்பில் காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த பால்சட்டியைக் கவிழ்த்துநக்கிவிட்டு ஓடிற்று நள்ளிரவில் அது திடீரென தாக்கும் போது கரடிபோல் அது தன் குரூர நகங்களைக் காட்டத் தவறாது. எதிர்பாராதவிதமாக இப்படிப் புதர் மறைவில், நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் போது அது அந்தத் திட்டிப் பாம்புபோல் தன் பார்வையாலேயே யாரையும் செயலிழக்க வைத்துவிடும்!
இது என்ன மிருகமா? அல்லது வேறேதாவதா? இதை வேட்டையாடுவதற்குரிய வழிமுறைகள் என்ன? இவைதான் இதனோடு அவன் போராடிய ஆரம்ப காலத்தில் அவனைப் பிய்த்தெடுத்த கேள்விகள்.
அது மிருகந்தான் என்பதை பின்னர் அறிந்தான். அத்தோடு அது மிருகங்களில் எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்த ஓர் புதுப் பிறவி என்பதையும் அறிந்தான்.
அதுமட்டுமல்ல அது எத்தனையோ பண்ணைகளைத் தாக்கி அனுபவப்பட்டது; கள்ளப்பட்டது.
அதனால் அது தன்காரியத்தை சாதித்துக்கொள்ளும் முயற்சியில் பலவிதமான தந்திரங்களையும் பலவற்றின் தந்திரங்களையும் சூழலுக்கேற்ப தனதாக்கிக்கொள்ளும் திறமைமிக்கது. இதை அவன் அதனை வேட்டையாடத் தொடங்கிய நாளிலிருந்து படிப்படியாகப் புரியத் தொடங்கியிருந்தான். அத்தோடு, அதன் தந்திரோபாய நுணுக்கங்களில் சுவையும் கண்டிருந்தான், அதனால் அதற்கெதிராக ஆயுதம் தூக்கும் ஒவ்வொரு சமயமும் அவனுக்குள் ஒரு கிளர்ச்சி.
அவன் இதற்கு அனுபவப்படாத ஆரம்பகாலத்தில், அதன் தாக்குதல்களைத் தாங்க முடியாதபோது, எல்லாரும் செய்வதுபோலவே, ஒரு
alth Sarth 93 Cyp, uT

Page 52
உயர்ந்த மரத்தின் மேல் கொட்டில் ஒன்று அமைத்துஇரவும் பகலும் அதற்குள் இருந்து காவல் புரிந்தான். அதனை முறியடிப்பதற்காக தவம் கிடந்தான். அது ஆயுதம் சகிதமாக அவன் இருக்கும் காவல் தலத்தைக் கண்டிருக்க வேண்டும். உயர ஒரு மரத்தின் மேல் கொட்டிலமைத்து, தன்னைக் கொல்லுவதற்காக அவன் தவம் கிடப்பதை கண்டதாலோ என்னவோ, அதன் தலைகாட்டல் அவன் பண்ணைப் பக்கம் நிகழவில்லை. இது அவனுக்கு ஒரு தைரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது, இனி ஆள் தலைகாட்ட மாட்டார். அவன் தனக்குள் நம்பிக்கை கொண்டான். ஆனால் அவனுக்குள் அந்த நம்பிக்கை பலமாக இறுகிக் கொண்டு வந்தபோது, ஓர் நாள் நள்ளிரவு திடீரென பற்றைகளின் பக்கமிருந்து “சரேலென்று ஒரு சத்தம். அவன் திடுக்கிட்டு விழித்து துவக்கைத் தூக்குவதற்குள் அது அவன் மரக்கொட்டிலை நோக்கி பாய்ந்து எழுவது அவனது மங்கிய கொட்டில் விளக்கொளியில் ஆடியது. ஆனால் அடுத்த வினாடி அதன் பாய்ச்சல் அவனிருந்த கொட்டிலை எட்டமுடியாது சிறிதளவு வழுவிப்போக, அது அந்தரித்து மீண்டும் 'தொபீர்' என்று நிலத்தில் விழுந்தது, அதன் அந்த விழுக்காட்டு ஓசையே அதைப் பயமுறுத்த அது காட்டுள் பாய்ந்து மறைந்தது.
எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்தேறின. இத்தனைக்குள் அவன் வாய் அவனை அறியாது தேவாரம் பாடி, கைகள் ஆகாயத்தை நோக்கி சப்தவெடி எழுப்பி அவனை அவனாக தெளிவித்துக் கொண்டிருந்தன.
மீண்டும் ஓர் நள்ளிரவு இப்படி நிகழ்ந்தது. இம்முறை கொட்டிலை நோக்கிய அதன் பாய்சல் தவறிய போது அவன் தயாராய் இருந்து அதற்கு குறி வைத்தான். ஆனால் அது தப்பிவிட்டது.
அதன் பின்னர் அது அவன் மரக்கொட்டில் பக்கமோ, அவன், பண்ணைப்பக்கமோ தலைகாட்டவே இல்லை.
இந்த நிலை ஆரம்பத்தில் அவனுக்கு சந்தோசத்தை அளித்தாலும் பின்னர் போகப் போக அவனுக்கு அது சந்தோசமின்மையையும் ஒரு தரக்குறைவையும் தருவது போலவே பட்டது.
அது ஏன் தலைமறைவாயிற்று? உண்மையில் அது தன் தோல்வியால் சூடுபட்டு பின்வாங்கிற்றா அல்லது உயரத்தே மரத்தில் கொட்டில் போட்டிருக்கும் இவன் தன் தாக்குதலுக்கு தகுதியற்றவன் என்ற புறக்கணிப்பா?
அவனுக்கு ஏனோ பின்னதே அதன் வராமைக்கு காரணமாகப்பட்டது. ‘என்னைத் தோற்கடிக்கவிரும்பினால் என்னை என் தளத்திலேயே சந்திக்கவும். அங்கே மேலேயுள்ள மரத்திலல்ல. இறங்கிவா, இந்த நிலத்திலே போட்டிபோடுவோம்' என்ற அது அவன் பின்னால் வந்து அடிக்கடி குசுகுசுப்பது போல் பட்டது.
கடலும் கரையும் 94 o gy.

இந்தக் குசுகுசுப்பு அவன் மனதை அதிகம் தொல்லைப்படுத்தத் தொடங்குவது போல்பட்டதும் அவன் தனது மரக் கொட்டில் காவல் தலத்தை மூடிவிட்டு கீழே இறங்கி ஊடாட வெளிக்கிட்டான்.
பல நாட்கள் ஒன்றுமே நடக்கவில்லை. அப்போ அது போய் விட்டது? இனி அது வர மாட்டாது? அவனைத் தொந்தரவு செய்த அந்தக் குசுகுசு'ப்பெல்லாம் வெறும் மனப்பிராந்தி?
அப்படியானால் அவனளவில் அதை ஜெயித்து விட்டான். இனித் 'தம்பிப்பிள்ளை தலை காட்டமாட்டார்.
அவனது நம்பிக்கை உறுதி கொண்டது. ஆனால் எதில் அவன் உறுதியாக நம்புகிறானோ அதில் ஒட்டை விழுவதுபோல், அதற்கு எதிராக ஒன்று நிகழும். அந்த ஓட்டையில் கண் வைத்துப் பார்த்தால் உலக இயக்கமே தெரிவதுபோல்! எல்லாவற்றையுமே நிறைவாகச் செய்து விட்டோம், எல்லாம் மங்களமாகவே முடிந்து விட்டது என்று நிம்மதியாக மனம் ஒயும்போதுதான் எங்காவது ஒரு குறை அல்லது ஒரு அமங்கல நிகழ்வு துருத்திக் கொண்டு வெளிவரும் . அது எமக்கு அப்போது ஒரு குறையாக அல்லது அமங்கலமாகத் தெரிந்தாலும் அதுவே அடுத்த கட்ட வளர்ச்சியின் மங்கல கும் பமாக அல்லது மங்கலத் திருப்புமுனையாக அமையப்போவதை பலர் அறிவதில்லை. அவனும் அதை அப்போது அறியவில்லைதான்.
அது போய் விட்டது என்று அவன் உறுதியாக நம்பத் தொடங்கியபோதுதான் அது திரும்ப வந்து அவன் பண்ணையை மிக மோசமாகத் தாக்கிற்று. கனகால இடைவெளியின் பின் நேர்ந்த தாக்குதலாதலால் வட்டியும் குட்டியுமாகச் சேர்த்து வைத்துத் தாக்கிற்று. அடுத்தடுத்துத் தாக்கிற்று. ஆனால் இந்தத் தாக்குதலின் போதுதான் அவன் அது பற்றி, அதன் தந்திரங்கள் பற்றி அறிந்துகொள்கிறான். அனுபவம் கொள்கிறான். அத்தோடு அதை வேட்டையாடும் நுணுக்கங்கள் பற்றியும் தேர்ந்து கொள்கிறான்.
அதன் பின்னர் இப்போது அதை நேருக்குநேர் சந்திக்கும் திராணி. முன்னர் மரவீடு கட்டிக் கொண்டு அதை வேட்டையாடத் தவங் கிடந்த காலம் அவனுக்கு ஒரு குழந்தைப் பிள்ளைத்தனமாகவே பட்டது. இன்றைய நிலையில் நிலத்தில் இறங்காமல் ஒதுங்கியபடி உயர இருந்து கொண்டு அதை வேட்டையாட நினைத்தது ஆண்மையாகவோ அல்லது மனித வாழ்க்கையாகவோ அவனுக்குப் படவில்லை. அந்த மிருகத்தை, அது பதுங்கிப் பதுங்கிப் பாயும் மண்ணிலேயே, அதன் தளத்திலேயே சந்திக்க வேண்டும். அவனை சதா நச்சரித்துக் கொண்டிருந்த அந்த குசுகுசுப்பில்
கடலும் கரையும் 95 மு.பொ

Page 53
அர்த்தம் இருப்பதையே இப்போ அவன் கண்டான். அந்தக் குசுகுசுப்பு அவனை மனிதனாக்கும் மங்கல அழைப்பாகவே இப்போதுபட்டது. அதனால் இப்போ அதனை நேருக்குநேர் சந்திக்கும் மனோவலிமை. இந்த மனோவலிமை அடுத்தடுத்து அதன் ததாக்குதலுக்கு இலக்கான பின்னரே அவனுக்கு சித்தித்தது. இது அப்போது அவனது மரவீட்டுக் காவல் அனுபவத்தோடு ஒப்பிடுகையில் தோல் வியாகவும் துக்கமாகவும் தோற்றினாலும் அது அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை மட்டுமல்ல, ஒரு முற்போக்கான பெரும் பாய்ச்சல் என்றுதான் இப்போது அவன் எடுத்துக் கொள்கிறான்.
இதன்பின் இதன் வேட்டையில் அவனுக்குச் சுவை பிறக்கிறது.
அதைச் சந்திப்பதில் ஒரு திகில் நிறைந்த பெரும் ஆவல். அதை அதன் தளத்திலேயே சந்திக்கும் வைராக்கியம், வீரம். அதற்கான நுணுக்கங்களில் தேர்வு.
என்றாலும் அவனுக்கு அதனை பூரணமாக அடக்கி வெற்றி கொள்ள முடியவில்லைதான். அது தனது தந்திரங்களில் மிகுந்த நெகிழ்வும், நுட்பமும் கொண்டதாகையால் அவன் அடிக்கடி அதற்கு களப் பலி கொடுத்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் முன்னையப் போலல்ல. சாதாரண சில்லறை இழப்புகளே. அந்த ரீதியில் அவனது இன்றைய நிலை வெற்றியை அண்மித்த நிலையே என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்குப் பெருமைப்படலாம். ஆயினும் எதிலும் அவன் அறுதியிட்டு கூற முடியாத நிலை. இந்த நிலையே மேலும் தொடரும் என்றும் அவன் கூறமாட்டான். அந்தளவுக்கு இந்த வேட்டையாடலில் அவன் சூடு கண்ட அனுபவசாலி.
இதோ இப்போ அதன் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது ஒர் எதிர்பாராத சந்திப்பு. ஆனால் இதையே அவன் சதாஎதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இந்த எதிர்பாராத சந்திப்பில் அது ஒரு நிமிஷம் அவனை முந்திக் கொண்டு விட்டது. அதனால் அது அதற்குரிய தயார்நிலையில். எந்தக் கணத்திலும் அது அவன்மேல் பாயலாம். முந்திய ஆளாக அவன் இருந்திருந்தால் அது இப்போ அவனில் பாய்ந்து அவனைக் குதறி அவன் பாற்பண்ணையைச் சூறையாடியிருக்கும். அது தன் மிருகக் குணத்தை உடனே காட்டியிருக்கும். ஆனால் அவன் இப்போ அதனால் இலகுவாக மடக்கப்படக்கூடியவனல்லன் என்பதை அது அறியும். அது இப்போ புதுத் தந்திரோபாயங்களை நேரத்துக்கு நேரம் மாற்றிக் கொள்வதால் அதன் நுணுக்க அசைவுகளையும், அதன் விழிகளையும் தவறவிடாது பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அதன் விழிகளிலிருந்து எழும் ஆக்கிரமிப்புச் சக்திக்கு எதிராக அவனிடமிருந்து இன்னோர் மாற்று, சைக்கிக் பொம்பாட்மன்ற் தொடர்ந்து
šLgih šDJugih 96 (у.OJI

அவன் எதிர்மனோதாக்குதல். அது அதற்குப் புரிந்திருக்க வேண்டும். திடீரென அதன் பார்வை அவனைவிட்டு, விலகி மறைந்தது; அது எங்கே போய்விட்டது? பாய்வதற்காகப் பின்வாங்குகிறதா? அல்லது உண்மையாகவே அவன் எதிர் மனோதாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அது ஒளிந்து கொண்டதா? எதுவும் அதைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. எந்தப் பழுத்த வேட்டைக்காரனாலும் அது பற்றி ஆருடம் கூறமுடியாது.
அவன் அதன் பார்வை வந்த திக் கையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவ்வேளைகளில் தான் அவன் இன்னும் உஷாராக இருக்க வேண்டும்.
ஆபத்து எப்போதும்வரலாம். மறைந்த அதன் தடங்கள் எங்கே என்று இலகுவாகத் தெரியாத வேளை. மறைந்த எதிரி எங்கே இருக்கிறான், என்ன செய்யக்கூடும் என்று யூகிக்க முடியாத கஷ்டமான நிலை இது. ஆகவே இந்நேரங்களில் இரட்டித்த விழிப்புத் தேவை.
அவன் வெகு உற்சாகமாகவும் உன்னிப்பாகவும் வெகுநேரம் காத்திருந்தான், மறைந்த அதன் தலைக்கறுப்பே அங்கு இல்லை. திரும்பி வருவதற்கான எந்தச் சின்ன அறிகுறியும் அங்கு தென் படவில்லை. உண்மையாகவே ஆள் தன் தாக்குதலை ஒத்திப்போட்டுவிட்டு ஓய்வுக்குப் போய் விட்டார் போலும், அப்போ அவனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; கொஞ்சம் சகஜநிலைக்குத் திரும்பலாம். அவனுக்குள் ஓர் சந்தோசம் ஊறுவது போல் தெரிகிறது. ۔۔۔۔
அப்படியானால் மீண்டும் அவனுக்கே வெற்றி? அப்படியா? அவன் வழமையான பெருமித ஊட்டத்தோடு, சகஜநிலையில் இயங்கத் தொடங்கினான். இப்போ அவனது வேட்டையாடல் பற்றிய பிரச்சினையே அவன் பிரக்ஞையில் இருந்து கழன்று போயிருந்தது. அப்போதுதான் திடீரென அவன் பண்ணைப் பக்கம் 'சரே'லென ஏதோ ஒரு சத்தம். தொடர்ந்து கறவைகளின் கமறலும் குதி அதிர்வுகளும்.
அவன் நிலை தடுமாறினான். இந்நேரங்களில் நிலைதடுமாறுவது ஆபத்தாக முடியும். அவன் நிலைதடுமாறிக் கொண்டே, மெல்ல எழுந்து, 'பட, படவென இடிக்கும் இதயத்தோடு கதவைமெதுவாகத் திறந்தானோ இல்லையோ சரேலென அது சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் அறைக்குள் பாய்ந்து வந்தது.
அவன் பயந்துபோய் திறந்த கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவன் இதயம் படபடவென வேகமாக இடித்துக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
அப்போதுதான் அவன் மனைவி தன்னை அழகாக அலங்கரித்துக்
il-gth SİRDyuqh 97 (p. GLJI

Page 54
கொண்டு அவன் அறைக்குள் வந்திருந்தாள்.
உள்ளே திடுதிப்பென பாய்ந்து வந்த அது, நேராக அவளில் பாய்ந்தது, அவளது ஆடை, அலங்காரம் அனைத்தும் சிதைக்கப்பட்டு அவள் நிர்வாணமாக்கப்பட்டாள். ஓர் உன்மத்தம் கொண்ட உக்கிரமான தாக்குதல். கதவின் பின்னால் மறைந்து நின்ற அவன், அந்த உன் மத்த விரிவின் அகோரத்தில் இல்பொருள் ஆனான்.
ஒரு மணித்தியாலத்தின் பின் அது கறவைகளின் பால் மொச்சை வீச அங்கிருந்து அகன்றபோது, ஆடைகள் கலைந்த நிலையில் கண்களை மூடியவளாய் கட்டிலில் கிடந்த அவன் மனைவி, சிறிது அசைந்து அவனை ஒருமுறை பார்த்து விட்டு மறுபுறம் திரும்பிப் படுத்தாள்.
அவன் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து, அது வந்து போன தடங்களை வலுகவனமாக ஆய்வு செய்து கொண்டு நின்றபோது, அவன் கண்முன்னே, ராணுவத்தால் சுடப்பட்டுத் தெருக்களில் கிடந்த இளைஞர்கள், கற்பிழந்து கதறிய கன்னியர், சிதறப்பட்டு கிடந்த சிசுக்கள், தீயிடப்பட்டு எரிந்த வீடுகள், சித்திரவதைக்குள்ளான அப்பாவிகள் எல்லாம் விரிந்து அது வந்துபோன தடங்களாக மாறின.
கடறும் கரையும் 98 Gy.ßur
 

- ம்பு பாம்பு, ஐயோ வீட்டுக்க பாம்பு.’ என் மனைவி அலறினாள். பின் விறாந்தையில் புத்தகம்
ஒன்றை வாசிப்பதில் மூழ்கியிருந்த நான் முன் ஹோலை நோக்கி ஓடிவந்தேன்.
எனது பிள்ளைகள் புடைசூழ, தும் புத்தடியும் கையுமாக என் மனைவி ஹோல் கதவுக்கு வெளியே நின்று கொண்டிரு ந்தாள்.
அவளது உடம்பு பயத்தால் நடுங்குவது போல் தெரிந்தது.
பிள்ளைகளோ அதே பீதியால் தாக்குண்டவராய், 'அப்பா பாம்பு, பாம்பு' என்று என்னைக் கண்டதும் ஒரேயடியாகக் கத்தினர்.
'பாம்பா, எங்கே?' என்று கேட்டவனாய் நான் முன்னுக்குப் பாய்ந்தேன்.
'ஐயோ உங்களுக்கென்ன விசரா, இஞ்சால வாங்க' என்று என் மனைவி என்னை பின்னுக்கு இழுத்தாள்.
‘எங்கயப்பா பாம்பு?' என்று நான் அவள் கையை உதறிக்கொண்டே கேட்டேன்,
'அங்கதான். அந்தாப் பாருங்க,
அந்தா ஹோல் மூலைச் சிவரோட
படமெடுத்தெண்டு நிக் குது.' என்று என் மனைவி பதைபதைப்போடு கூறினாள்.
நான் சிறிது முன்னே சென்று அவள் காட்டிய திசையில் நோட்டம் விட்டேன்.
அங்கே ஒரு வயிரக் குவியலாய், அக்குவியலுக்கு கோபுரம் அமைத்தாற்போல் படமெடுத்து நின்றது பாம்பு, நான் சற்றுப் பின்வாங்கி அதை மீண்டும் கவனித்தேன். என் பின் வாங்கல் ஏற்படுத்திய ஓர் கண அமானுஷ்ய அமைதி வட்டத்தில் பாம்பின் படம் அதிர்ந்தது.
கடலும் கரையும்
99 (p, Our

Page 55
அதற்குப் பீதியா? அல்லது கோபமா? அல்லது இரண்டுமா? 'கீர்ஷ்' பூனையொன்றின் உள்ளடங்கிய சீறல்போல் பாம்பின் சீற்றம். 'கொண்டு வாப்பா அந்தத் தும் புத் தடியை' என்று கூறிக் கொண்டே நான் என் மனைவியின் கையிலிருந்த தும் புத்தடியை இழுத்தெடுத்தேன்.
'ஐயோ கிட்டப் போகாதேங்க, இது பறநாகம் போல இருக்கு. ஆக்கள்ள பாஞ்சாலும் பாயும்' என் மனைவி என் பின்னால் நின்று என்னை பின்னால் இழுக்காத குறையாகக் கூக்குரல் வைத்தாள்.
அவளுக்கு ஒத்திசை வழங்குவதுபோல் 'அப்பா, அப்பா கிட்டப் போகாதேங்க' என்று என் பிள்ளைகள் ஒலமிட்டனர். என் கடைக்குட்டி மகள் துளசி, இவற்றிலிருந்து விடுபட்டுப் போய் முற்றத்தில் நின்று கொண்டிருந்தாலும், பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டு நிற்பவள் போல் பெருங்குரல் எடுத்து அழுது கொண்டிருந்தாள்.
எங்கள் வீட்டு ஜிம்மி எனது வீட்டார் போட்ட கூப்பாட்டில் யாரோ அந்நியர் வீட்டுக்குள் நுழைந்து விட்டனர் என்பதைச் சூக்குமமாக உணர்ந்து கொண்ட அருட்டலில் நாம் நின்ற ஹோல் அறைக்குள் வரமுயற்சிப்பதும் பின்னர் எமக்குப் பயந்து வெளியே போய் உறுமுவதும், அதன் முடிவில் திடீரென எதனாலோ தூண்டப்பட்டது போல் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து குரைத்துவிட்டு நாக்கை வெளியே தொங்கப் போட்டு இரைத்துக் கொள்வதுமாய் நின்றது.
வீட்டுக்குள்ளும் வெளியும் பாம்புப் பின்னலென நெளியும் பீதி. நான் முன்னேறினேன். "இஞ்சாருங்கோ, ஐயோ கவனம்.' என் முன்னேறலுக்கேற்ப என் மனைவியின் சுருதிகூட்டல். என் கையிலிருந்ததும்புத்தடி என் தலைக்குமேல் உயர்ந்தது. ஓர் கணம் அவ்விடத்தையே தன்கையில் அள்ளியெடுத்த பேரமைதி.
அக்கணத்தில் பாம்புதன்படத்தைச் சுருக்கி என் அடியை வாங்கத் தயாரானது போல் தன் தலையைத் தாழ்த்தி, தன் கண் இமைகளை இடுக்கியது போன்ற பிரமை.
நான் தாமதிக்கவில்லை.ஒரே அடி.
Utori.
வெற்றுச் சீமேந்தின் ஒசை, என் இலக்கு சோரம் போனதைச் சுட்டமுன்னரே,
'அடி படேல்ல, அடி படேல்ல, அந்தாப் போகுது அந்தா
கடலும் கரையும் 1 OO Cy), Cur

போகுது' என்ற கோரஸ் என் பின்னால் ஏக காலத்தில் எழுந்தது.
'கிர்ஷ்' என்ற இரைச்சலுடன், மின்னல் வழுக்கலாய் பாம்பு கணப்பொழுதில் ஹோலின் அடுத்த மூலைக் குத் தாவி தன் முதுகை அதனோடு முட்டுக்கொடுப்பது போல் ஒதுங்கி படமாடும் தலையை மட்டும் உயர்த்தி எனது தாக்குதலை எதிர்கொள்ளத் தயாரானது போல் நின்றது."
அடி பிழைத்த ஆத்திரம் எனக்கு. தும்புத்தடியின் ஒருபகுதி எனது சோரத்தைப் பறைசாற்றுவது போல் தொங்கிக் கொண்டிருந்த நிலை, எனது அடுத்த தாக்குதலுக்குத் தீவிரம் கொடுத்தது.
"ஐயோ பத்திரம், பத்திரம். ஆகக் கிட்டப் போகாதேங்க. கட்டவீழ்ந்துபோன எனது ஆவேசத்தைச் சிறிது கட்டுப்படுத்துவது போல் எனது மனைவி பின்னால் நின்று நாணயக் கயிறெறிந்தாள்.
நான் இரண்டு கைகளாலும் தும் புத்தடியை இறுகப் பற்றி ஓங்கினேன்.
"ஐயோ அடிக்காதேங்க, அடிக்காதேங்க' நான் எனது ஓங்குதலை அவக்கென நிறுத்தி, சற்றுப் பின்வாங்கி என் மனைவியைப் பார்த்து 'ஏன் அடிக்கவேணாமெண்டு சொல்லிற?' என்றேன் சீற்றத்தோடு, s
'உங்களுக்கென்ன விசரா? நான் ஏன் சொல்லிறன் அடிக்க வேணாமெண்டு' என்று பதிலுக்குச் சீறிய அவள் "ஐயோ பாம்பு போகப் போகுது, கெதியா அடியுங்க, கெதியா அடியுங்க" என்று என்னை மேலும் முடுக்கினாள்.
நான் சோர்ந்து போனதும்புத்தடியை மீண்டும் தூக்கினேன்.
ஒரே அடியில் பாம்பின் தலை சப்பளிய வேண்டும். தவறினால் எதுவும் நேரலாம்.
என் பின்னால் பிள்ளைகள், மனைவி என்று அவர்கள் பாதுகாப்பும் எனது தும்புத்தடியின் ஓங்கலில் அரண் கொண்டது. ஆனால் ஏற்கெனவே தொங்கிக் கொண்டிருந்ததும்புதடியின் ஒருபகுதிச் சிலும்பல், என் ஓங்குதலுக்கு நிதானம் கொடுத்தது. நான் பலமாக ஓங்கினேன்.
'அப்பா அடிக்காதேங்க, அடிக்காதேங்க' நான் ஓங்கியது ஓங்கியபடியே இருக்க மீண்டும் அவக்கென முற்றத்தில் அழுதுகொண்டு நின்ற என் கடைக்குட்டி துளசியின் பக்கம் நோக்கினேன்.
'ஏன் துளசி அடிக்கவேணாமென்டிற?' - நான் துளசியைப் ,
SL-sih akabih 1 O1 (yp. Lur

Page 56
பார்த்து ஒருவித ஆச்சரியங் கலந்த சினத்தோடு கேட்டேன்.
'நான் சொல்லேல்ல அப்பா. கெதியா அடியுங்க, எனக்கு பயமாய் இருக்கு' கணிரென அவள் பதில் கொடுத்தாள்.
அப்போ யார் வேண்டாமென்று சொன்னது? என் மனைவியின் கண்கள் ஜிவுஜிவுவெனச் சிவந்துவர அவளது நீண்ட மூக்கு பாம்புபோல் படமெடுக்க அவள் கத்தினாள்.
'உங்களுக்கென்ன விசரா பிடிச்சிற்று. குழந்தையேன் அடிக்கவேணாமென்டிறாள்? உங்களுக்கு அடிக்கேலாட்டிச் சொல்லுங்க, நாங்களாவது அடிக்கிறம்'
எனக்கு அவளது கூக்குரல் அளவு கடந்த ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அந்தரநிலை. பின்னே யார்தான் இந்தநேரத்தில் இப்படி நடந்து கொள்வார்கள்?
நான் என்னைச் சுதாகரித்துக்கொண்டு பாம்பின் பக்கம் முழுக்கவனத்தையும் பாய்ச்சுமுன், 'ஐயோ, அந்தா அது போகப் போகுது. நீங்க என்ன யோசிச்செண்டு நிக்கிறீங்க?' என்று என் மனைவி தொடர்ந்து கத்தினாள், ஏதோ பேய் தொட்டுக் கொண்டவள் போல்.
அடக்க முடியாத ஆத்திரம் என் கைகளை உலுக்கிற்று. இந்தா செத்தொழிந்து போ. இந்த அடியோடு பாம்பு உடல் வேறு தலைவேறாக வேண்டும். படீர்.
ஆனால் பாம்பு தப்பிவிட்டது. அதன் வால்பகுதிதான் சிறிது சப் பளிந்தது. ஒரு சின்ன முனகல் எங்கிருந்தோ எழுவதுபோல் எனக்குப்பட்டது.
இப்போ பாம்பு முன்னைய இடத்திலிருந்து சற்றுத்தள்ளி, ஆனால் அதே படமெடுத்த கோலத்துடன் 'சர்' என இரைந்து கொண்டு நின்றது. அதன் 'சர்' என்ற இரைச்சல் பீதியா சீற்றமா?
சீற்றம் போல் அது எனக்குப் படவில்லை. அதன் படமெடுத்த கோலம் போருக்குரிய சவாலா? ஹoக்கும். அதுவும் அப்படித் தெரியவில்லை. மாறாக யாரோ நிராயுதபாணியான ஒருவன் கையிரண்டையும் தூக்கி அபயம் என இறைஞ்சுவது போல் பட்டது.
ஆனால் கற்பனை பண்ணிக்கொண்டிருக்க நேரமில்லை. 'என்ன யோசிச்செண்டு நிக்கிறீங்க?' பின்னால் இருந்து வந்த எனது மனைவியின் பீதிச் சவுக்கு சொடுக்கியது.
கடலும் கரையும் 1 O2 G.Bun

'இல்லையப்பா...' என்று இழுத்த என் குரலில், இந்தப் பீதியின் கெளவுதலில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவற்குரிய வழி நசிந்துதலைகாட்டிற்று.
'இஞ்ச உமா, இந்தத் தும்புத்தடி சரிவராதப்பா. கிணத்தடியில் கிடக்கிற மம்பெட்டிப் பிடியைக் கழட்டிக்கொண்டு ஓடி வா' என்று பாம்பைப் பார்த்தபடியே பின்னால் பீதியை மடியில் கட்டிக்கொண்டு நின்ற மனைவியை விரட்டினேன்.
அவள் சூப்பிய மாங்கொட்டை கையைவிட்டு வழுக்கிக் கொண்டு போவது போல விசுக்கென விரைவது தெரிந்தது.
இப்போ நெருக்கடி நீங்கினாலும் பீதியும் பொறுப்பும் என்கழுத்தில் தொங்கிக் கொண்டு என்னை முன்னே தள்ளின.
நான் தும்புத்தடியை மீண்டும் ஓங்கினேன். மண்வெட்டிப்பிடி வரமுன்னரே வேலையை முடித்து விட்டால் தொல்லைவிட்டது. கைகள் தும்புத்தடியை இறுக்கிக் கொண்டு மேலெழுந்தன.
'அடிக்காதேங்க, அடிக்காதேங்க, நான் உங்களை கடிக்க வரேல்ல'
ஓங்கிய தும் புத்தடி ஓங்கியவாறே உயர்த்தப்பட்டு நிற்க, என்னுடம்பு ஒருமுறை சில்லிட்டுதலை கீர் என்றது. யார் அப்படிக் கதைக்கிறது? நான் அக்கம் பக்கம் விழிகளை ஒடவிட்டேன். என் பிள்கைள் ஹோல் வாசலில் பீதி அறைந்த ஆணியில் அப்படியே நிசப்தித்து நின்றனர்.
அப்போ கதைத்தது யார்? பாம்புதான். 'நீ என்ன சொல்லிற?' என்வாய் முணுமுணுக்க என் விழிகள் பாம்பில் குத்திட்டன. ; :
‘என்னை அடிக்காதேங்க, உண்மையாச் சொல்லிறன் நான் உங்களைக் கடிக்க வரேல்ல'திரும்பவும் அதன் குரல், பாம்புதான் கதைத்தது. 'மம் பெட்டியைக் காணேல்ல அப்பா' என் மனைவி கிணற்றடியிலிருந்து குரல் கொடுப்பது கேட்டது.
மாலை மங்கிக்கொண்டு வந்தது. மாலையின் மங்கலிலும் பீதியின் உந்தலிலும் மண்வெட்டி முன்னுக்கிருந்தாலும் அவள் கண்டிருக்கமாட்டாள். 'மம்பெட்டிப்பிடி வேண்டாமெண்டு அம்மாவிட்டச் சொல்லு' வாசலில் நின்ற என் மூத்தவனுக்குக் கட்டளையிட்டேன்.
என் பெரிதான இரைச்சலைக் கேட்ட பாம்பு மீண்டும் சர் என்று சீறிற்று.
என்ன நீ சீறுகிறாயா? அப்போ சற்றுமுன் நீ என்னைப் பார்த்துக்
கடலும் கரையும் 1 O3 மு.பொ

Page 57
கெஞ்சியது என் கற்பனையா? உங்களை நம்பமுடியாது. பற்களை நறும்பிய என் முணுமுணுப்போடும் பயத்தோடும் பாம்பை நோக்கி என் தும்புத்தடி மீண்டும் உயர்ந்தது.
‘என்னை அடிக்காதேங்க, உங்களைக் கெஞ்சிக் கேக்கிறேன். என்னை அடிக்காதேங்க. உங்களை நான் கடிக்க வரேல்ல. ' பாம்பு உண்மையாகவே என்னைப் பார்த்து பரிதாபமாகக் கெஞ்சியது.
நான் சற்று நிதானித்தேன். இடம், சூழல் எல்லாவற்றையும் மறந்த நிலையில் 'அப்ப ஏன் நீ இங்க வந்தாய்?' என்ற என் அதட்டல் எழுந்தது.
'நான் இங்க வரவேணும் எண்டு வரல்ல. தெரியாமல் வந்திற்றன்' பாம்பு தன் நிலையை விளக்கத் தொடங்கிற்று.
'நீங்க கோடிப் பக்கத்தில் கிடந்த குப்பை பத் தையளைக் கொழுத்தினேங்க. அதுக்குள்ள கிடந்த நான் பயந்து போய் தெரியாமல் இங்க வந்திற்றன்.'
நான் ஒருகணம் அதை உற்று நோக்கினேன்.
புதைந்து போன என் நினைவுகள் சில திடீரென மேலெழுந்து நெளிந்தன.
என் தம்பி முறையான சேகர் இந்த மாதிரிப் பாம்பு தீண்டித்தானே செத்தான்.
முன் வீட்டு ஆறுமுகத்தாற்ற பேரன் ரத்தப் புடையன் கடிச்சுத்தானே மூக்காலும் வாயாலும் ரத்தம் கக்கிச் செத்தான். எனக்குப் பிரியமான ரகு கூட. எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. தும்புத்தடியை ஓங்கியவாறே கத்தினேன்.
'இப் படித்தானே என்ர தம்பி சேகர் உங்களட்ட கெஞ்சியிருப்பான். ஆறுமுகத்தாற்ற பேரனும் உங்களட்ட இப்படித்தானே அழுது குளறியிருப்பான். அந்தரகு கூட. ஐயோ...' அடி வயிற்றிலிருந்து கிளம்பிய என் ஆற்றாமையால் என் முழு உடம்பும் நடுங்கிக் கொள்ள என் தும்புத்தடி உயர்ந்த போது பாம்பும் அதே வேகத்தில் என்னை நோக்கி பரிதாபமாக கத்தியது.
"இவையளை நாங்க கடிக்கேல்ல. இவையளைக் கடிச்சவ விரியன் பாம்புகள்.'
பாம்பு நான் சுமத்திய குற்றத்திலிருந்து தப்பப்பார்த்தது. 'விரியன் பாம்புகளா?' நான் ஏளனமாகச் சிரித்தேன்.
'உங்களுக்கதான் எத்தனை விஷப்பிரிவுகள். உங்களை விட்டு வைக்கக் கூடாது'
கடலும் கரையும் 1 O4 (p.CLII

'நீங்களும் எங்கட இனந்தானே? நீங்க இப்படிக் கதைக்கலாமா?" 'ஓ, நானும் பாம்புதான். அதனாலதான் சொல்லிறன் உங்களை விட்டுவைக்கக் கூடாதெண்டு. பாம்பின் கால் பாம்பறியும் எண்ட பழமொழி உங்களுக்குத் தெரியாதா?'
'நீங்க இப்படிக் கதைக்கலாமா? கொஞ்சம் நீதி நியாயம் எண்டு பார்க்கக் கூடாதா?'
'நீதி நியாயம் பார்க்கிற காலமல்ல இது. பீதிதான் இப்ப எங்களை இயக்குது. விஷமுள்ளவையை விட்டு வைச்சால் எங்களுக்குத்தான் ஆபத்து' என்று கூறிக் கொண்டேதும்புத்தடியை உயர்த்தினேன்.
'ஐயோ என்னட்ட விஷமில்லை. விஷப்பல்லை எப்பவோ கழட்டிப் போட்டாங்க' பாம்புதன்குரலை பதிலுக்கு உயர்த்திக் கத்தியது.
'என்ன விளையாடிற, விஷப்பல்ல கழட்டிப் போட்டாங்களா? யாரு கழட்டினது?' நான் மீண்டும் ஏளனத்தோடு கேட்டேன்.
'நான் கொஞ்சக் காலத்துக்கு முந்தி தெரியாத்தனமாக இந்தியாக்கார குறவரட்ட அகப்பட்டுப் போனேன். அவங்க தங்கட கூடாரத்துக்க கொண்டு போய் என்ர பல்லைக் கழட்டி என்னைச் சித்திரவதை செய்ததோட என்னை ஒரு பெட்டிக்க வைச்சு அடைச்சு பாம்பாட்டப் பார்த்தாங்க, நான் ஒருநாள் தப்பி வந்திற்றன்.' ‘எப்படி தப்பி வந்தே?' "என்னைக் காவல் காத்துக்கொண்டு நிண்டவனுக்கு என்னட்ட இருந்த பீடி ஒண்டக் குடுத்தன். விட்டிட்டான்.'
'இப்ப நீ என்ன செய்யிற?' 'நானுன்டு என்ர வயித்துப் பிழைப்புண்டு எண் டு ஒதுங்கி இருக்கிறன்.'
'இப்ப அப்படித்தான் சொல்லுவேங்க, பிறகு சந்தர்ப்பம் வாறபோது விஷத்தை கக்குவேங்க. உங்களுக்கு அப்ப விஷப்பல்லு எப்படியாவது முளைச்சிடும். இப்பகூட நீ சொல்லிறதை எப்படி நான் நம்பிறது.? நான் இரக்கப்படாமலே எடுத்தெறிந்து கேட்டேன்.
பாம்பு திடீரென மெளனமாயிற்று. அதன் அர்த்தம் விஷப்பல்லிருந்தா நான் எப்பவோ உங்களைக் கடிச்சிருப்பேன் என்பதா அல்லது என்னைக் கொன்று விட்டு என் பல்லைப் பரிசோதித்து பாருங்கள் என்பதா?
'இந்தாருங்கள் மம்பெட்டிப் பிடி' என் மனைவி மண்வெட்டிவாயிலிருந்த பிடியை பிடுங்கியதன் களைப்பில் மூச்செறிந்தவளாய் பிடியை என்னிடம் நீட்டினாள்.
&Lg SRTL 1 Ο5 மு.பொ

Page 58
பிடிஎன் கைக்கு மாறிற்று. தும்புத்தடி அவள் கைக்குப் போயிற்று. பிடிஎன் கைக்கு மாறியபோது படமெடுத்துநின்ற ப்ாம்பு திடீரென படத்தைச் சுருக்கி தலையைத் தரையில் வைத்து பதுங்கிய விதம் என்னுள் பீதியைப் பாய்ச்சிற்று.
என்மேல் அது பாயப் பதுங்குகிறதா? விஷ ஜந்துக்கள் எப்பவுமே ஆபத்தானவைதான். விட்டுவைக்கக் கூடாது.
புதிதாக வெளியிலிருந்து கிடைத்த ஆயுதப்பிடி, என் கைக்கு உரம் ஏற்றிற்று. அந்த உரம் விஷம்போல் தலைக்கேறிற்று. பிடியை உயர்த்தி ஒரே போடு. அவ்வளவுதான், அதன் நடுப்பகுதி தகர்ந்தபோது 'கார்க்' என்று பாம்பு காறுவது போலக் கேட்டது.
'என்ன, என்னைப் பார்த்துக் காறித் துப்புகிறாயா?" 'இல்லை என் தொண்டைக்குள் ரத்தம். அதைத்தான் வெளியே துப்புகிறன்' பாம்பு முனகிக் கொண்டே கூறிற்று.
பாம்பின் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. ரத்தத்தைக் கண்டதும் எனக்கு இன்னும் ரத்தவெறி ஏறிற்று. நான் விடவில்லை. தொடர்ந்து போட்டேன். ஆனால் மண்வெட்டிப்பிடி தவறித் தவறி அதன் தலையைச் சப்பளிப்பதற்குப் பதில் அதன் உடலைத் தகர்த்தது.
பாம்பு இரண்டாகியது. "ஆ, பாம்பு ரெண்டு துண்டாப் போச்சு' என் மனைவி ஆர்ப்பரித்தாள். அதைத் தொடர்ந்து 'அந்தா பாம்பு ரெண்டாப் போச்சு' என்று அவளின் பின்னால் நின்ற பிள்ளைகள் கைகொட்டி கூக்குரல் இட்டனர்.
இப்போ மனைவி பயம் தெளிந்தவளாய் முன்னே பாய்ந்து தன் கையிலிருந்ததும்புத்தடியால் அதன் தலையில் ஒரு போடு.
பாம்பின் இடது கண் சிதைந்து தொங்கியது. ஆரவாரம் மேலும் மேலும் ஓங்கி ஒலித்தன. 1983 வெலிக் கடைச் சிறைச்சாலை என் கண்ணில் மின்னி மறைந்தது.
என் வயிற்றுள் ஏதோ குமட்டுவது போலிருந்தது. திடீர் என்று இன்னோர் நினைவின் கிழிப்பு. கொழும்பிலிருந்து யாழ் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ்,
கடலும் கரையும் 1 O6 (p.Glu1

வவுனியா காட்டுப் பிரதேசத்தில் சிங்கள ஆமிக்காரரால் மறிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டபோது, அதிலிருந்து பின் ஜன்னலால் பாய்ந்து பஸ்ஸின் அடியில் பாம்புபோல் புகுந்து நழுவிய ஓர் தமிழரின் நினைவு திடீரென என் கண்முன் நெளிந்தது.
'என்னப்பா பாம்பு அடிச்சு களைச் சா போனேங்க? காத்துப்பட்டா அது நல்லா உயிர்த்திரும். ஒரே அடியில முடிச்சிருங்க' என் மனைவி பின்னால் நின்று ஆமிக்காரன்மாதிரி முடுக்கினான்.
பிள்ளைகள் நின்று கும் பலாய் ஆர்ப் பரித்தனர். கும் பல் மனோநிலைக்குள் விழுந்த நான் பாம்பைப் பார்த்தேன். அது இன்னும் நெளிந்துகொண்டுதான் இருந்தது. என் மண்வெட்டிப்பிடி அதை நோக்கி உயர்ந்தபோது, இரண்டு பாம்புகள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கும் கம்பிவளையக் காட்சி என்கண்முன் தோன்றி மறைந்தது.
ஆனால் பின்னால் நின்ற கும்பலுக்குத் தலைமை தாங்கிய நான், அதன் உற்சாக வெறியில் கதாநாயகனானேன். அந்தக் கதாநாயகக் கோலத்துக்கு இழுக்கு நேராதவாறு நான் ஓங்கி அதன் தலையை நோக்கி இன்னொரு போடு.
ஆனால் எனது இலக்கு மீண்டும் சிறிது தவறிற்று.
உடனே பாம்பு தன் இயல்புக்கு இழுக்கு நேராதவாறு அந்நிலையிலும் 'சர்ர்' எனச் சீறியபடி என் மண்வெட்டிப் பிடியைத் தன் வாயால் கெளவிற்று.
'பாத்தியா, நீ உன்ர குணத்தைக் காட்டியிற்றியே. சீறிக்கொண்டு கடிக்கவா வாற? நல்லாக்கடி, நல்லாக்கடி' என்று கூறிக்கொண்டே நான் மீண்டும் மண் வெட்டிப்பிடியை உயர்த்தியபோது, 'நான் சீறேல்ல, இப்படித்தான் எனக்கு அழத் தெரியும். நான் கடிக்கேல்ல. இப்படித்தான் எனக்கு தடுக்கத் தெரியும்' என்று பாம்பு வேதனையோடு அனுங்கிற்று.
அந்த அதன் அனுங்கல் என் அடிவயிற்றில் எதையோ சுண்டி விடுவதை நான் நிதானிக்குமுன் 'அந்தா அது நெளியுதப்பா, பாத்தெண்டு நிக்காம தலையைப் பாத்துப் போடுங்க' என்று என்பின்னால் நின்ற பீதியின் பரிவாரங்கள் என்னை தாமதிக்கவிடாது ஏவின.
நான் அவற்றின் நெருக்கடியில் என்னை இழந்து செயல்பட்டேன். மீண்டும் மீண்டும் என் மண்வெட்டிப்பிடி மேலெழுந்து பாம்பின் தலையில் விழுந்தது.
'ஐயோ என்னைக் கொல்லாதேங்க, கொல்லாதேங்க, கொல்லாதேங்க...' - தீனக்குரலில் அது கத்திக்கொண்டே இருந்தது. எல்லாம் அடங்கிவிட்டதாக நினைத்த போது 'தண்ணி தண்ணி' என்று அதன் குரல் மீண்டும் எழுந்து இழைந்தது.
கடலும் கரையும் , 1 Ο7 மு.பொ

Page 59
நான் விடவில்லை. தொடர்ந்து போட்டேன்.
ஈற்றில் அதன் தலை தாறுமாறாய் சப்பளிந்தபோது அதன் கத்தலும் ஓய்ந்தது.
செத்த பாம்பின் அங்கச் சிதறல்களில் ஈ மொய்க்கத் தொடங்கியது. செத்த பாம்பைத் தூக்கிக் கொண்டு போய் என் பீதியின் பரிவாரங்கள் கோடிப்புறத்தில் வைத்து எனது பழைய சைக்கிள் ரயரைப் போட்டுக் கொளுத்தி மீண்டும் ஆரவாரித்தன.
பாம்பின் இறுதிக்கிரிகைகளை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த என் மனைவி 'இதைத் தேடிக் கொண்டு இதின்ர சோடி வந்தாலும் வருமாமப்பா' என்று சத்தம் போட்டுச் சொன்னாள்.
என்னை மீண்டும் இனந்தெரியாத பீதி கெளவிற்று. ஒமோம் பழிவாங்க இன்னொண்டு வரலாம். அந்த ஒன்றை ஒன்று விழுங்கும் கம்பிவளையப் பாம்புக் காட்சி மீண்டும் என் கண்முன்,
இனிவரப்போகும் அடுத்த தாக்குதலுக்காக மண்வெட்டிப் பிடியைத் தயார் நிலையில் விறாந்தையில் நான் சாற்றிவைத்த போது எரியும் பாம்பின் நெடியும் அங்கு கவியும் இரத்த வெறியும் காற்றில் கனத்தன.
கடலும் கரையும் 1 O8 (p.GLT
 

N
அது, எங்கே போய்க் குந்தலாம் என்று யோசித்தது. அது போய்க் குந்துவதற்குரிய எந்த ஆதாரமும் இருப்பதாய்த் தெரிய வில்லை. ஆதாரம் எல்லாம் சிதைந்து வெறும் வெண் முகிற் சிதலங்களாய் மிதந்து கொண்டு போவதுபோல் தெரிந்தது. அதனால் விழித்த நிலையிலேயே மீண்டும் கண்ணை மூடியபடி கிடந்தது. அதன் அருகில் அதன் சோடி, மூச்சுவிடும் அரவம் கூடத் தெரியாத நிலையில் கிடப்பது தெரிந்தது. சோடி 'தூங்குகிறதா விழித் திருக்கிறதா என்று எவராலும் சொல்லிவிட முடியாது. தான் கண் விழித்தும் எந்தப் போக்கிடமும் இல்லாததால் மீண்டும் கிடந்த இடத்திலேயே கிடந்தபடி கண்ணை
மூடிக் கொண்டு சோம்பல் முறிப்பத்ைப்
பார்த்து அது தனக்குள் சிரிக்கிறதா என்று இது தன் சோடியை ஓரக் கண்ணால் பார்த்தது. சோடியிடம் எந்த உணர்வுகளையும் எதிர்பார்க்க முடியாதென்று இதற்குத் தெரியும். எந்த அந்தர நிலையில் இது கிடந்து உழன்ற போதும் அது ஒரே மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டிருக்கும்; ஒரு விசித்திரப் பிறவி 'இதுக்குக் கொண்டு போய் என் கழுத்தை நீட்டினனே' என்று இது அடிக்கடி அங்கலாய்க்கும்.
ஆனால் அது வழமையான வெறும் அங்கலாய்ப்புத்தான்.
மற்றப்படி இது தன் சோடியில்லா மல் ஒருபோதும் இயங்குவதில்லை
தன் சோடியின் வெறுமனே பேசாத அவதானிப்பே இதற்கு ஆதார சக்தியாய் ஊற்றெடுப்பதாகவே அதற்குப் படும். பேசாதிருக்கும் அதன் சோடியும் இதுவும் ராசாவும் மந்திரியும் போல. மழைக்காலத்தில் மரங்களிடையே தம் நீண்ட வால்கள் மின்னலிட பறந்துவரும் பட்டிக் குருவிகள்
algih sarugih
1 O9 (p. Luar

Page 60
மாதிரி, நீண்ட இரண்டடி வால்களைத் தொங்க விட்டபடி வெள்ளையும் கடும்மண் சிவப்புமாய், தலையில் கருமயிர்கள் கிரீடமிட தாவித்திரியும், அக் குருவிகள்! வெள்ளை ராசாக் குருவி, சிவப்பு மந்திரி. ராசாவும் மந்திரியும் பொறுப்பில்லாமல் இருக்கும் ராசா பொறுப்பு முழுவதையும் தன் தலையில் காவிக் கொண்டு அந்தரப்படும் மந்திரி! நான் அந்தரப்பட்டுத்தான் என்னத்தைக் கண்டன்? அந்தரப்படாமல் வெறுமனே உம் மென்று குந்தியிருக்கும் என் ராசாவின் அவதானிப்புத்தானே என் அந்தரத்தைக் குறைப்பது போல் படுகிறது? எனக்கு ஆறுதல் தருவது போல் தெரியுது? இப் படி அந்த மந்திரிக் குருவி இடைக் கிடை நினைப்பதுண்டு. என்றாலும் இந்த உணர்வு அதற்கு அதிகநேரம் நிலைப்பதில்லை. பாரம் முழுவதையும் என் தலையில் தூக்கி வைத்துக் கொண்டால்தான் நான் இங்கே இருக்கிறேன் என்பது போல் எனக்குப் படுகிறது. மந்திரி யோசித்தது. அப்படியானால் நான் ராசாவில் பிழை சொல்ல முடியாது. நான் அதுக்காக இந்தப் பாரத்தை தூக்கிக் கொள்ளவில்லை. அது அப்படி என்னைக் கேட்கவும் இல்லை. நான் எனக்காகத் தான் என் இருப்புக்காகத் தான் இதைச் செய்கிறேன். உண்மையில் இன்று பொதுச்சேவை, தானம், தர்மம் என்று அலட்டிக் கொள்பவர்களெல்லாம் தம் மை தம் இருப்பைக் காப்பாற் றிக் கொள்ளத் தான் செய்கிறார்கள் போலப் படு குது. உண்மையான சேவையாளன், தர்மவான் என்பதெல்லாம் பொய்
நான் இல்லாவிட்டால் என்சோடிக்கு என்ன நடக்கும்? மந்திரி தன்னைக் கேட்டுக் கொண்டது. சோடிக்கு என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. நான் இல்லாவிட்டால் நான் பார்க்கும் கண்ணாடிக்கு என்ன நடக்கும்? அது எதையாவது பார்த்துக் கொண்டுதான் இருக்கும்?
மந்திரி எழுந்து போய்க் குந்த இடமில்லாமல் தவித்தது. அது குந்த எத் தனித்த கிளைகளெல்லாம் ஒடிந்தொடிந்து விழுவது போல் . ஒன்றும் நிலைத்து நிற்காதது போல் . மாறிக் கொண்டும் ஒடிக் கொண்டு மிருப்பதுபோல் . புத் தரும் , கிரேக்க தத்துவஞானி ஹெரா கிறிற்றசும் அதன் நினைவில் வந்தனர். அவர்கள் கூறிய நிலையற்ற மாற்றம், நிலையற்ற லெளகீக ஓட்டம். அவர்கள் தத்துவார்த்தமாகக் கூறிய மாற்றங்கள் எல்லாம் யதார்த்தமுற்று, பஸ்ஸில் போகும் ஒருவனுக்கு மரஞ்செடிகள் ஓடுவதுபோல் , ஒடிக் கொண்டிருந்தன, மாறிக் கொண்டிருந்தன. சிவப்பு எங்கும் குந்தமுடியாமல் அந் தரப் பட்டது. களைத் துப் போன பருந்து குந்தமுனையும் ஒவ்வொரு சமயமும் கொப்புடைந்துபோக சிறகை மேலும் மேலும் அடித்து அந்தரப்படுவதுபோல் அது. ... *
சாரி சாரியாக யாழ்ப்பாணத்து மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். மந்திரி வைத் தகண் வாங்காமல் பார்த்துக்
கடலும் கரையும் 110 Qp. Our

கொண்டிருந்தது. அகதித் திரள், அகதித் திரள் !! அதில் போய்க் குந்த எத்தனித்தது. ஹoகும் , முடியவில்லை. அதையும் மே விக் கொண்டு இன்னொரு அலை வருவதுபோல் மற்றொரு காட்சி! தீவுப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மக்கள் திரள் அதன் முன்னெழுந்தது! 'சிவ சிவா சிவ சிவா' என வாய் ஓயாது புலம்ப முன்னர் கலையாடிக் கொண்டு கதிர்காமத்துக்குப் போகும் பக்தர் கூட்டம் போல் தீவுப் பகுதி மக்கள் அந்தரித்து யாழ்ப்பாணம் நோக்கி இடம் பெயர்ந்த காட்சி! அதில் குந்த அது முனைந்தபோது அதை இடறிக் கொண்டு மற்றொரு காட்சி! யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாய் வெளியேறிய முஸ்லிம் மக்கள்! தேடிய தேட்டம், பொருள், நகை அனைத்தையும் விட்டுவிட்டு ஏன் ஆக்கிய உணவையே ஆறுதலாய் உண்பதற்கு அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் அகதிகளாய் வெளியேறிய அவர்கள்.
மந்திரிகுந்த முடியாமல் தவித்தது. இதன் பின்னர் ஒருநாள், யாழ்ப்பாணத்தில் புதிதாகத் திறந்த கடையில் டிஃபன் கறியர் ஒன்றை அது வாங்கி வந்து, வீட்டில் அதைத் திறந்து பார்த்த போது அதற்குள் பொரித்தமீன் இருக்கக் கண்டு அது பயந்துபோனது. பின்னர் அதன் காரணம் அதற்குப் புரிந்தபோது அதன் உடலனைத்தும் வெந்துவெதும்பி பொரித்த மீனிலும் கேவலமாய்ப் பொரிந்து போயிற்று. மேலும் மேலும் மந்திரியின் தவிப்பு அதிகரித்தது. பல பக்கங்களில் இருந்து மின்னோட்டங்கள் பாய்வதுபோல் பல காட்சிகள் ஓடிவந்தன. ஒருமுறை போராளி ஒருவன் வயிற்று வலியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவன் வயிற்றிலிருந்து சோடாப் போத்தல் ஒப் பிறேஷன் மூலம் வெளியெடுக் கப்பட்டது! சோடா போத்தலை அவன் விழுங்கியிருக்க முடியாது. அவன் வயிற்றுக்குள் சோடாப் போத்தல் போன துவாரம் எது? ஏன் அது அவனுக்குள் புகுத்தப்பட்டது?
வீர் எனப் பறந்து கொண்டிருந்த வெளவால் சடார் என மின்கம்பியில் சிக்குண்டு எரிந்து தொங்குவதுபோல் மந்திரியின் மனம் எரிந்துபோயிற்று. தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் எல்லாம் எரிந்து தொங்குவது போல் அதுக்குப்பட்டது.
தமிழர் பாவம் செய்தவர்களா? திரள் திரளாக தம் சொந்த இடங்களை விட்டு அகதிகளாய் வெளியேறும் தமிழர்கள்! மந்திரிக்கு யூதர்களின் நினைவு ஓடிவந்தது. மோஸஸ் காலத்தில் எகிப்தை விட்டு இடம் பெயர்ந்த யூதர்கள்! ஹிட்லர் காலத்தில் நச்சுவாயு ஊட்டப்பட்டிறந்த 40 லட்சம் யூதர்கள் உலகெங்கும் திக்குத் திக்காய் சின்னா பின்னப்பட்டுச் சிதறி ஓடிய யூதர்கள்! யூதர்களும் தமிழர்களும் ஒன்றா? மந்திரிக்கு தான் 1960ல் எழுதிய சிறுகதை நினைவுக்கு வந்தது. அதில் இதே கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அன்று வெள்ளம், புயல் என்று இயற்கை சீறி
கடலும் கரையும் 1 11 (p.Gur

Page 61
தமிழ்ப் பகுதிகளை அழித்தது பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய அழிவு இயற்கையின் சீற்றம்! இன்றைய அழிவு யாரின் சீற்றம்? யாரிட்ட சாபம்? தம்மினத்திலேயே பிறந்து, தம்மை ரட்சிக்க வந்த அவதார புருஷரை கல்லால் அடித்து, முள் முடி ஏற்றி, சிலுவை சுமக்கவைத்து, சிலுவையில் அறைந்து கொன்ற யூதர்கள். அவர்களைப் போலவே உண்மையான யோகிகளும் அவதார புருஷர்களும் தம்மை நாடி வர அடித்துத் துரத்தியும் , பரிகசித்தும் ஏளனம் செய்தும் நின்ற யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், இப்போ போலிகளுக்கும், வியாபாரச் சாமிகளுக்கும், மனிதர்களுக்கும் ஆராத்தி எடுத்து, பட்டுக்குடை பிடித்து பஜனை செய்தால் எதுதான் வராது? எதுதான் சீற்றங் கொள்ளாது?. ஆனால் எல்லாச் சீற்றங்களும் உதைப்புகளும் தாழ அமுக்கத்திலிருந்து மையம் கொள்ளும் புயல் போல் எங்கோ மறைந்திருக்கும் எல்லாமான, ஒன்றில் மையங்கொள்ளும் இழை மந்திரிக்குப் பிடிபடுவது போல் மின்னித் துடித்தது.
அதுதான் எவருக்கும் ஆறுதல் தரும் விஷயம் எனலாம். Y ஆனால் அதுதான் மந்திரிக்கு அந்தரத்தை ஏற்படுத்திற்று; மனதை அலைபாய வைத்தது.
அப்படியானால் இந்த அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் நானும் ஒரு காரணமா? என் நடத்தையும் ஒரு காரணமா? மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டது?
இத்தனைக்கும் ராசா அதனருகே நிர்மலமான வானம் போல் பார்த்துக் கொண்டிருந்தது. இவ்வேளை மந்திரியின் முகம் சோகை பிடித்த பகல் நிலாவைப் போல் வெளிறிக் கொண்டு போனது: . . இதற்கு முன்னரும் மந்திரியின் முகம் வெளிறிப் போன சம்பவம் ராசாவுக்கு நினைவு வந்தது. தீவுப்பகுதியில் மனைவி மக்களோடு மந்திரி இருந்த காலத்தில் போராளிகள் தீவுப்பகுதியைக் கைவிட்டோட, இராணுவம் அங்கு புகுந்த போது சாமி அறைக்குள் மனைவி, மக்களோடு இருந்து தனக்கு என்ன நேர்ந்தாலும் அங்கிருந்த சிறுசுகளுக்கு எதுவும் நேரக்கூடாதென நினைத்து அவலப்பட்டுக் கொண்டிருந்தபோது அதன் முகம் பேயறைந்ததுபோல் வெளிறிப் போனது இன்னும் இன்றுபோல் நினைவில் நின்றது.
ராசாவின் நினைவுகள் மந்திரியைப் பாதிக்கின்றன? அதாவது ராசாவின் திரையில் விழுபவைதான் மந்திரியைப் போட்டு ஆட்டு விக்கின்றனவா? ராசா கையில் நூலை வைத்துக் கொண்டு மந்திரியை பொம்மலாட்டம் ஆட வைக்கிறதா?
மந்திரிக்கு தன் சொந்தத் தீவைப் பற்றிய எண்ணங்கள்
šLh 560 UUh 1 12 (p.Bu

திடுதிப்பென முன்னெழுந்து கூத்தாடுகின்றன. அந்த எண்ணங்களின் நீச்சல்களிடையே ஓர் அசாதாரண ஆறுதலும் ஆனந்தமும் கசிவதுப்ோல் அதற்குப்படுகிறது. அந்தரித்துச் சிறகடித்த பருந்து, ஒருக்கால் அப்பாடா எனக் குந்தலாம் என அங்கு தாவுகிறது. ஆனால் முடியவில்லை. மீண்டும் கொப்பு முறிந்ததுபோல் தவிக்கிறது. அங்கு அது கண்ட சின்னத்தனங்கள், துயரங்கள், பரிதாபங்கள் அதைப் பந்தாடி விடுவதுபோல் மேலெழுகின்றன. ராணுவம் ஊருக்குள் நுழைந்தபோது, தான் அரணாக நின்று ஓயாது உதவி செய்து நேசித்த தன் அன்புக்குரியவர்கள் தனக் கிழைத்த துன்பங்கள்! அதனால் தான் சென்று வழிபட்ட தெய்வஸ்தலமே நரகமாக மாறிய அவலங்கள்.
மந்திரிகுந்தமுடியாமல் அந்தரிக்கிறது. மேலும் எண்ணக் காட்சிகள் அதை வந்து சூழ்கின்றன. அதனோடு ஊரில் படிப்பித்த இளமட்ட வாத்திமாரின் அறியாமைகள், காதல்கள் மோதல்கள் கற்றுக் குட்டித்தனங்கள் . . . . ஒருநாள் அந்தப் பாடசாலைக்கு முன்னால் நிகழ்ந்த மரண தண்டினை அப்போது பீறியடித்த இரத்தம் இன்னும் பசுமையாக அந்த வேப்பமரத்துக் கட்டிடத்தின் வாசல் படியில் வழிந்தோடியிருக்க. அதே இடத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட இயக்கமொன்று நெடுந்தீவு 'சமூக விரோதிக்கு வழங்கிய மரணதண்டனை!
ஐயோ இந்த இரத்தச் சிந்தல்களுக்கெல் லாம் நானும் பொறுப்பா?
எதற்குத் தான் நாங்கள் பொறுப் பில்லை என்று உதறித் தள்ளலாம்? விடுபட்டு நிற்கலாம்?
மந்திரியால் சிறகுகளையே அடிக்க முடியாத அந்தரம். மீண்டும் காட்சிகள் முட்டி மோதுகின்றன. ஊரில் எஞ்சிக் கிடந்த அறுநூறு சனங்கள் சனிக்கிழமைகளில் நிவாரணம் எடுக்க, ஒவ்வோர் இடமாக நின்று நின்று கதையளந்து கொண்டு போகும் காட்சி நிவாரணம் வழங்கும் இடத்தில் மந்திரி இருந்து தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களுக்கு அதற்கான சிட்டைகள் வழங்க, அவ்வேளைகளில் அச்சனங்களின் மத்தியில் நின்று அதன் நண்பன் பெரிய குரலெடுத்துச் சொல்லும் பகிடிக் கதைகள். அதே நண்பன் ஒருநாள் விதிவசப்பட்டு தன்முகத்தைத் தானே எதிர்கொள்ள முடியாதவாறு செய்து கொண்ட பரிதாப நிகழ்ச்சி. அதற்காக இது நாட்கணக்காக நித்திரையின்றி வருந்திச் சாம்பிப் போன காலங்கள்.
மந்திரியின் இறக்கைகள் மேலும் அடிக்க முடியாதவாறு உள்ளோய்ந்து போகின்றன.
äLGILh 5RDVujú 113 (p.Gu

Page 62
மந்திரி தான் வாழ்ந்த தீவை விட்டு மனைவி மக்களோ, புறப்பட வேண்டிய காலம் வந்தது.
மந்திரி கும் பிட்டு வந்த தெய்வம் இதற்கு முன்னரே குடிபெயர்ந்து போய்விட்டது.
கோயிலில்லா ஊரில் குடியிராதே. தெய்வம் கிளம்பிவிட்டால் இதுகால் வரை அதன் கருஃை3 அடைகாப்பில் வாழ்ந்து வந்த தீவுச்சனங்கள் சின்னாபின்னப்பட போவதுபோல மந்திரிக்குப் பட்டது.
தெய்வத்தின் பிரதிநிதிகளாக அங்கு வாழ்ந்த பிராமணர்கள் மனித ராணுவத்துக்குப் பயந்து தாம் நம்பிய தெய்வத்தையே கைவிட் விட்டு ஓடிவிட்டார்கள். தான் நம்பிய தெய்வத்தை விட்டோடாது ராணுவம் வந்தபோது அதை எதிர்கொண்டிருந்த மந்திரி உண்மையா? பிராமணனாகவே வாழ்ந்தது.
இப்போ அது நம்பிய தெய்வமே குடி பெயர்ந்தது மந்திரியையும் தன்னோடு கூட வரும்படி சமிக்ஞை கொடுத்து விட்டு,
இதைப்பற்றி அங்கிருந்த மக்களுக்கு என்ன தெரியும்? யாரால் இதைப்பற்றி அவர்களுக்கு விளக்க முடியும்? அனாதைக் கூட்டமாய் கிடந்துழலும் தீவுப் பகுதி மக்கள் மந்திரியின் அடிவயிறு பற்றியெரிந்து கொண்டு வந்தது.
போக்கற்றுப்போன கைது செய்யப்பட்ட கிராமம் கூப்பிடு தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தின் கதவும் பூட்டிக் கிடந்தது.
அங்கும் போக முடியாது குடாநாட்டை விட்டு மந்திரி கப்பலில் திருகோணம%ைக்க பயணமாயிற்று.
இதற்கு முன்னரும் இவ் வழிக் கடற் பயணத்தை மந்தி' மேற்கொண்டிருக்கிறது. ராணுவம் தீவுப் பகுதிக்குள் புகுந்ததன் பின்னா அது கொழும்பு செல்வதற்காக திருமலை நோக்கி சாமான்கள் ஏற்று: தாராக் கப்பலில் புறப் பட்ட பயணத்தை நினைத்தால் இப் போது: அதற்குத் தலை சுற்றும் இரண்டு பகலும் இரண்டு இரவுமாக கப்பலின் வாந்தி வாந்தியாக எடுத்து காற்றோடு காற்றாக பறந்து போகும் நிலை54, உடலை மாற்றிய அந்தப் பயணம்.
ஆனால் இப்போது அந்த அபேஸ் தை இல்லை :ா, இரவுப்பயணம் மட்டுமே.
கப்பல் புறப்படத் தயாரான போது, மந்திரியின் அருகே வநது
L-gh sayqih 14 மு.பொ

'என்ன மாஸ் ரர் , குடும் பத்தோட வெளிக் கிட்டாச் சுபோல - இனித் திரும்பிற யோசனை கீசனை.? ' என்றவாறு தனது ஒருபக்கத் தோளை அடிக்கடி உயர்த்தியவாறு இழுத்தான் சிவசாமி.
'இல்லை போயிற்று வருவம் ' - பொய்யும் மெய்யும் மந்திரியின் பதிவில் கலந்திருந்தன.
'சோடா ஒன் டு குடியுங்கோவன் ' என்றவாறு சிவசாமி கண்டீன் பக்கம் போக ஆயத்தமானான்.
'வேனாம் சிவசாமி. பிறகு குடிப்பம்" என்று கூறிய மந்திரி "எங்க நீயும் கொழும்புக்கா?" என்றது அவனைப்பார்த்து.
'ஓம் மாஸ்ரர் எத்தன நாளைக்கு அண்ணேற்றை வீட்டைப் பாத்தெண்டு கிடக்கிறது? கையில் காசும் இல்ல. போய் அவையளட்டை கொஞ்சக் காசு வேண்டியரலாம் எண்டு போறன்" என்று கூறிய சிஐசாமி ஒருவித வரட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் தன் தோளைத்துக்கித் தூக்கி விட்டு நடந்து போவதைப் பார்த்த மந்திரிக்கு தீவுப் பகுதியின் அனாதைத்தனம் அவன் தோளில் தொங்கிக் கொண்டிருப்பது போல்பட்டது.
தீவுப் பகுதியிலிருந்து கொழும்புக்கென்றும் , யாழ்ப்பானத் திற்கு என்றும் போனவர்களின் வீடு போசல்களைக் கவனிப்பதற்காக உளரில் விடப்பட்டு எஞ்சிக்கிடந்த கிழடுகட்டைகள் படும் அவலம் மந்திரியின் முன் விரிந்தது. காசில்லாமல் தவிப்பவர்கள் ஆக்கித்தின்னப் பஞ்சிப்பட்டுக் கிடப்பவர்கள், பூட்டற்ற வீடுகளுக்குள் புகுந்து ஏதோ புதையல் எடுப்பவர்கள் போல் எதையெதையெல்லாமோ அள்ளிக் கொண்டு வருபவர்கள் ஆவிகள் நடமாடுவதுபோல சில கொட்டில்களை விட்டு வெளி வருபவர்கள்.
அப்படித்தான் சிவசாமியும் திரிந்தான். நயினாதீவுக்கு தேங்காய் கொண்டுபோய் விற்றிருக்கிறான். உறவினரைப் பார்க்க வருவதுபோல் சில புங்குடுதீவு வீடுகளில் வந்திருந்து கொண்டு. பூட்டற்றுக் கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து சேலையென்றும், சில்வரென்றும் அள்ளிக்கொண்டு போகும் ஏனைய தீஃபாரோடு சேர்ந்து 'வியாபாரம்' செய்திருக்கிறான். இப்போ எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொழும்புக்குப் போகிறான். வீடு பார்க்கச் சொன்னவர்களிடம் செலவுக்கு காசு வாங்கி வர!
மந்திரி கொழும்பு வந்ததன் பின்னர் மாதக் கணக்காக சிவசாமியைச் சந்திக்கவில்லை.
ஒருநாள் கொட்டாஞ்சேனைப் பகுதியில் பந்திரி சென்று கொண்டிருந்தபோது "மாஸ்ரர்' என்று அழைக்கும் குரல் கேட்டது.
கடலும் கரையும் 5 மு.பொ

Page 63
திரும்பிப் பார்த்த மந்திரிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சிவசாமி அழுக்குடைகளோடு பிச்சைக்காரர்களில் ஒருவனா ரோட்டோரமாகக் குந்திக் கொண்டிருந்தான்.
'என்ன சிவசாமி இந்தக் கோலத்தில்?’ மந்திரி அவனைப் பார்த்துக் கேட்டது.
'அண்ணரவை வீட்டை வரவேணாம் எண் டு துரத்திப் போட்டினம்'
'அப்ப ஊருக்குப் போறது தானே, அங்க நிவாரணமாவது கிடைக்கும்'
'அங்க போகத்தான் பாத்தனான். ஆனா தீவுப்பகுதி கப்பல் போக்குவரத்து நிண்டு போச்சாம்'
ஒன்றும் பேசாது தனது சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாவை அவன் கையில் திணித்து விட்டு மந்திரி நகர்ந்தது.
அவ்வேளை "நான் இந்த சிவசாமியை விட என்ன உயர்த்தி?’ என்ற கேள்வி அதற்குள் எழுந்தது.
அவன் பகிரங்கமாகப் பிச்சை எடுக்கிறான். நான் பிச்சை எடுத்தும் எடுக்காததுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது தனக்குள் சொல்லிக் கொண்டது.
கொழும்பு, மந்திரியை, எலும் புத்துண்டை நாய் போட்டு அப்படியும் இப்படியும் நன்னி நன்னித் தின்ன முனைவது போல் நன்னிக் குதறியது.
மந்திரி திக்கு முக்காடிற்று. ரோட்டிலும் பஸ் ஸிலும் போகுமிடமெல்லாம் செக்ஸ0 ம் பணத் தடிப் பின் வாடையும் அதன் மூச்சைத் திணற வைத்தது. வாகனங்களில் ஆண்களும் , பெண்களுமாய் நெரிபடும் போது வெளித் தள்ளப்படும் வேர்வை நாற்றம் அதற்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டுவரும்.
தமிழரைப் பொறுத்தவரை ஆங்காங்கே, ரோட்டு ரோட்டாக நிற்கும் காக்கிச் சட்டைகளின் தலைக் கறுப்பு இன்னும் அதை இறுக வைத்தது. அப்போதெல்லாம் அவர்களை அறியாமலே சட்டைப் பைக்குள் கிடக்கும் அடையாள அட்டைகளை வருடும் விரல்களில் ஓர் நடுக்கம். ஏற்கனவே ஆஸ்த்துமாத் தன்மையுடைய மந்திரியை அது மேலும் அந்தரப்படுத்தியது.
சூழலில் மாசு! ஒசோன் படலத்தில் ஒட்டை விழுந்ததா? மனித நாகரிகத்தில் பெரும் ஓட்டையா?
äLh ämluh 1 16 Cy. Cu

மந்திரிக்குள் அடங்கிப் போய்க் கொண்டிருந்த அவதி மேலெழச் தொடங்கிற்று.
என்ன வாழ்க்கை என்ன உலகம்! மந்திரிக்கு எல்லாவற்றிலும் விரக்தியும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.
இன்றோடு சிவசாமியைப் பார்த்து ஒரு கிழமை இருக்கும். மந்திரி சிவசாமியில் குந்தியிருந்து நேரத்தை மினக் கெடுத்த விரும்பவில்லை. இது ராசாவை ஒரக்கண்ணால் நோட்டம் விட்டது. ராசாவின் கண்கள் மூடப்பட்டிருந்தன. அப்படியானால் அது இன்னும் கூடுதலான விழிப் போடு இருக்கிறதென்பதே அர்த்தம்.
சிவசாமியின் முகம் அடிக்கடி மந்திரியின் முன் தோன்றியது. வழமைக்கு மாறாக அவன் முகம் முன்னே வந்து வந்து மந்திரியின் மூக்கில் ஒட்டிக் கொள்வதுபோல் மிதந்து. ஏன் ஏன்?
அருகில் கிடந்த ராசாவை நோட்டம் விட்டது. ராசா வழமைபோல் மெளனம் காத்தது. ஆனால் அதனிடமிருந்து ஏதோ செய்தி வெளிப்பாய்ச்சப்படுவது இதற்குப்பட்டது.
சிவாசாமி செத்துப் போய்விட்டானா? அப்படித்தான் அதற்குப்பட்டது. ஏன் ஏன்? அதன் மனம் திடீரென அலைபாயத் தொடங்கிற்று. அப் போது, வீட்டு வாசலில் ஊரவர் ஒருவர் மந்திரியின் மனைவிக்கு செய்தியாகச் சொல்வது கேட்டது.
'உங்களுக்குத் தெரியுமா நம்ம சிவசாமி செத்தெல்லோ போனான்?"
'என்ன சிவசாமி செத்துப் போச்சா?' மந்திரியின் மனைவி ஆச்சரியத்தோடு கேட்பது தெரிந்தது.
'நேற்று ரோட் டில செத்துக் கிடந்து, கொட்டாஞ்சேனை பொலிஸ் வந்து பார்த்தவங்களாம். அரசாங்க செலவில அடக்கஞ்செய்ய ஒழுங்கு படுத்தினவங்களாம்.'
'ஐயோ பாவம், இஞ்ச அண்ணன் ஆமர் வீதியில் வசதியா இருக்கிறார். தம்பி ரோட்டில் செத்துக் கிடக்குது'
'என்ன பகிடி எண்டா இண்டைக்கு அண்ணர் நடராசர் தம்பி செத்ததுக்கு துக்கங் கொண்டாடிறாராம்'
'அடி செருப் பால, பசியால தம் பி ரோட்டில செத்துப் போனான். இவர் இப்பதான் துக்கங்கொண்டாடிறேர்.'
aiLgiú a ann Lú 117 (yn. COUNT

Page 64
'சிவசாமி செத்ததுக்கு உண்மையான காரணம் ஒரு சிங்களப் பிச்சைக்காரன் அடிச்சதாம். தான் வழமையா படுக்கிற இடத்தில சிவசாமி கிடந்ததைக் கண்டு சிங் களப் பிச் சைக் காரனுக்கும் இவனுக்கும் வாக்குவாதம் வந்ததாம் . சிங்களப் பிச்சைக் காரன் கைக்கு கிடைச்ச எதனாலேயோ அடிச்சுப் போட்டானாம். அதுபடாத இடத்தில் பட்டதில சிவசாமி செத்துப்போனான் எண்டுதான் அங்கால கதைக்கீனம்.'
'அட அநியாயமே.'
அட பிச்சைக்காரர் மத்தியிலுமா இந்த இனவாதம்? இந்த இடம் பிடிக்கிற போட்டி?
மந்திரிக்கு மீண்டும் அந்தரநிலை. அது பலவற்றை எண்ணியவாறு அப்பாலும் இப்பாலும் உழன்றது.
ராசாவின் பார்வை அமைதியே உருக் கொண்டது போல் இருந்தது. ஆனால் அதன் முன்னே பல காட்சிகள் தோன்றின.
ஏற்கனவே தோன்றி மறைந்தவை அதன் மனத் திரையில் பதியப்பட்டிருந்தன.
普 * *
élagra தான் 'செத்துப்' போனது பற்றி கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் தவித்தான். அதாவது தன் ஸ்தூல் உடலைவிட்டு எப்படித் தான் வெளியேறினான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் 'அந்தரப்பட்டான்' - அவன் அந்தரப்பட்டதும் அதைத் தொடர்ந்து அவன் நடந்து கொண்ட விதங்களும் சுவையானவை. ராசா சதா கண்டு கொண்டிருக்கும் பல்வேறு காட்சிகளுள் இதுவும் ஒன்றாக அதன் பார்வையில் அவ்வப்போது விழுந்தது.
முதலில் சிவசாமி தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல் தன் உடலைப் பார்த்துக் கொண்டு நின்றான். அதன் பின்னர் தன் உடல் பொலிசாரால் அப்புறப்படுத்தப்பட்ட போது அதன் பின்னால் ஓடினான். சுடுதண்ணீர் ஊற்றப்பட்ட நாய் போல் அங்குமிங்கும் ஓடினான். தன் உடலைச் சுற்றிநின்றவர்களோடு தன் 'இருப்பை' வெளிப்படுத்துவதற்கு மிகுந்த பிரயத்தனப்பட்டான். ஆனால் ஒருவரும் அவன் இருப்பைக் கண்டு கொண்டதாய் இல்லை. சிறிது நேரத்திற்குப் பின்னர் அவனது உடல் தூர எடுத்துச் செல்லப்ப்ட்டு வெட்டிப் புதைக்கப்பட்ட போதுதான் அவன்
தான் 'செத்துப்' போனதை உணர்ந்தான்
அது சிவசாமிக்கு இன்னும் அந்தரத்தை ஏற்படுத்திற்று. 'உயி' ரோடு இருந்த தன் பிச்சைக் காரச் சகாக்களோடு தொடர்பு கொள்ளப் பெரும் முயற்சி எடுத்தான். முடியவில்லை. அவர்கள்
கடலும் கரையும் 118 (yp. UT

அவனைப் 'பார்ப்ப'தாய் இல்லை. மீண்டும் சுடுமணலில் நடப்பவன் போல் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடினான். பின்னர் வெள்ளவத்தையில் இருந்த அவன் அண்ணர் வீட்டுக்கு ஓடினான். அவர் அங்கே அவன் செத்துப் போனதற்காக'துக்கங்' கொண்டாடிக் கொண்டிருந்தார்1.
அப்போதுதான் வீட்டுக்கு வந்த ஒருவரோடு தன் 'கண்ணீரை'த் துடைத்துக் கொண்டிருந்தார்.
'ஐயோ எனக் குத் தெரியாது. இவன் கொழும் பிலதான் நிக்கிறான் எண்டு' - அண்ணர் அப்பட்டமான பொய் சொன்னார்.
'ஏன் அவன் இங்க உங்களிட்ட வரேல் லியா? ' கேட்டுக் கொண்டிருந்த ஒருத்தர் கேட்டார்.
'வந்தவன். நானும் அவனை ஊருக்குப் போகச் சொல்லி காசு குடுத்தனான். அவன் அதை சிலவழிச்சுப் போட்டு எனக்குத் தெரியாமல் இங்கதான் நிண்டிருக்கிறான்.'
மேலும் பல பொய்களை அவிழ்த்து விட்டார் அண்ணர், "கர்மமே. இதான் அவன்ர விதி' - வந்தவர்களில் ஒருவர் அனுதாபப்பட்டார்.
"எண்டாலும் எனக்கு இது ஆறாத கவலை. கொஞ்சம் முந்தித் தெரிஞ்சிருந்தர் அவன் பிரேதத்தையாவது கொண்டு வந்து நல்லமுறையில் அடக்கஞ் செய்திருப்பன். அவன் தீட்சை கேட்டவன்.
சிவ சிவா! சிவ சிவா! 'கேட்டுக்' கொண்டு நின்ற சிவசாமிக்கு ஆத்திரம் பொங்கி வர, அண்ணரை ஓங்கி 'உதைத்'தான். ஆனால் அண்ணரை அவன் உதை பாதிக்காதது ஆச்சரியமாய் இருந்தது.
சிவசாமி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அவன் இறந்து போனதற்கு இரண்டு நாளைக்குப் பிறகு, அவன் படுத்திருந்த இடத்தில் அவன் சாவதற்குக் காரணமாய் இருந்த அந்தச் சிங்களப் பிச்சைக்காரன் நித்திரை செய்வதைக் கண்டு, அவன் கழுத்தைச் சிவசாமி ஆவேசங் கொண்டு பலதடவை 'நெரித்'தான். அலறிக் கொண்டு விழித்தெழுந்த சிங்களப் பிச்சைக்காரன், தான் பயங்கரக் கனவு கண்டதாக நினைத்தான். அதன் பின்னர் அவன் அங்கு படுப்பதே இல்லை! இப்போது சிவசாமிக்கு ஆறுதல் தரக் கூடியதும் ஆனந்தம் தரக் கூடியதுமான ஒரே ஒரு விஷயம் போக்குவரத்து ஒன்றுதான். காலோயும் மட்டும் நடந்தும் இடைக்கிடை வாகனத்தில் நெரிபட்டும் போக்குவரத்துச் செய்த சிவசாமிக்கு இப்போ நின்னத்தவுடன் நினைத்த இடத்துக்கு காற்றாய் ப்றந்து போய் வரக்கூடிய ஆற்றல் எவ்வாறு சித்தது என்பது
கடலும் கரையும் 119 (p. Our

Page 65
பெரும் புரியாத புதிராக இருந்தது. பின்னர் அது தன் இயல் பென நினைத்துக் கொண்டான்.
அவன் இப்போ அடிக்கடி தீவுப்பகுதிக்குப் போய் வந்தான்.
அவன் தீவுக்குப் போனதும் முதன் முதலாகச் செய்த வேலை தான் வாடிக்கையாகக் கள்ளுக் குடித்து வந்த ராசன் வீட்டுக்குப் போனது தான். 'வாய்' நிறைய கொழும்புக் கதைகளோடு போயிருந்தான். ஆனால் அங்கே ஒருவரும் அவனைக் 'கண்டு' கொண்டதாய் இல்லை. பின்னர் அங்கிருந்து வழக்கமாக பீடிவாங்கும் சூரி கடைக்குப் போனான். அங்கும் இதே கதைதான்.
இவர்களுக்கெல்லாம் கண் குருடாகிப் போச்சா?
சிவசாமி க்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அப்போதுதான் தீவுப் பகுதிக் கோயிலொன்றுக்கு பூசகராக இருந்து இடையில் விட்டிட்டு ஓடி யாழ்ப்பாணம் போன சண்முகநாதக் குருக்கள் சிவசாமிக்கு எதிரே வந்து கொண்டிருந்தார். நோய் க்கு வைத்தியம் செய்யப் போவதாகப் போனவர் கொழும் பிலிருந்து யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து தீவுக் கோயில்களுக்குத் திருவிழாச் செய்யப் போவதாக காசு திரட்டிக் கொண்டு போனவர். திரும்பவே இல்லை. சிவகாமிக்கு இவை 'நினை'வில் ஓடின.
என்ன ஐயா, இந்தப் பக்கத்தால? சிவசாமி தன்னோடு கதைக்க ஒருவர் கிடைத்த உற்சாகத்தில் அவரை ஆரவாரமாக வரவேற்றான்.
'நான் இடைக்கிடை இந்தப் பக்கத்தால வாறனான். நீதான் என்னைக் காணேல்ல. அப்ப நீ இங்க உயிரோட இருந்தனியாக்கும். அதுதான் காரணமாய் இருக்கும்.'
'நீங்க விபத்தில செத்துப் போனதை நான் பேப்பரில பார்த்தனான் ஐயா.
அது சரி, நீ எப்ப கூப்பனை குடுத்திற்று வந்தனி?' போன மாசந்தான். ஒரு சிங்கள பரதேசி அடி வயித்தில உதைஞ்சு போட்டான். பிறகு எனக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது. கொஞ்ச நேரத்தால பாத்தா என்ர உடம்பைச் சுத்தியண்டு பொலிசும் ஆக்களுமா. நான் எவ்வளவோ குளறிப் பாத்தும் ஒருவனுக்கும் என்னைக் கண்ணுக்குத் தெரியேல்ல. இவங்கள் பூமியில உயிரோட இருக்கிற எண்ட பேர்தான் எல்லாரும் சுத்தக் குருடுகள். எங்களை போல அவங்களையும் பார்த்து எங்களையும் பார்க்கிற வெளிச்சம் கிடையாது." 'அதுதான் எனக்கும் உள்ள பிரச்சினை. கொஞ்ச சாமான்களை மறைச்சு வைச் சிற்று வந்தனான். அதை என்ர வீட்டாருக்கு சொல்லுவ
கடலும் கரையும் 12O (p.Gulf

மெண்டா முடியாமல் இருக்கு என்ர வீட்டாருக்கு என்னை தெரியேல்ல. அதைப்பாக்கத்தான் இஞ்சால அடிக்கடி வாறனான்.'
'அது சரி யாழ்ப்பாணச் சனத்துக்கு நடந்ததைப் பார்த்தியளோ. எல்லாம் என்னமாதிரி நடந்து முடியுது.
'இப்படி வருமெண்டு ஆரு கண்டது? பெரும் பாவம்! வீடு வாசல் எண்டு வாழ்ந்த சனம். இப்ப ரோட்டு ரோட்டாக குந்தி எழும்புது.' 'எச்சில் கையால காகம் கலைக்காத யாழ்ப்பாணத்தாருக்கு, ஏழையளுக்கு குடுத்தறியாத யாழ்ப்பாணத்தாருக்கு இதைவிட வேறென்ன வரும்? எங்கட அண்ணர் செட்டி மாதிரி இருக்க நான் சாப்பாடில்லாமல் ரோட்டில பிச்சை எடுத்து செத்தன். அப்பிடிப்பட்ட எங்களுக்கு இதைவிட வேறென்ன வரும்?
'எண்டாலும் இப்படி யாழ்ப்பாணத்து சனத்தின்ர வயித்தில ஆரும் ஏறிமிதிக்கக் கூடாது.'
'உண்மைதான் ஐயா. ஆரெண்டா என்ன, வயித்தில அடிச்சவன் வாழமாட்டான். என்ர வயித்தில உதைஞ்சவன் இப்ப குடி எழும்பிப் போனான்! அவன் இப்ப அந்த இடத்தில படுக்கிறதும் இல்ல. எங்கேயும் படுக்கவும் பயந்து நடுங்கி நடுங்கி செத்துக் கொண்டிருக்கிறான். ஒமோம் எல்லாருக்கும் இதுதான் மாறி மாறி நடக்கப் போகுது. ஆண்டவன் தீர்ப்பெண்டு ஒண்டு இருக்கல்லே.
'இப்ப இலங்கை எங்கையும் யாழ்ப்பாணமாய் மாறிப் போச்சு. இந்தப் போர் வந்தாலும் வந்திது பிள்ளையளை பறி குடுத்த தாய்மாரின் அழுகைதான். எங்கையும். சரி சரி பசிக்குமால் போல் இருக்கு வா கோயில் பக்கம் போவம், இண்டைக்கு பிரதோச விரதம் , சண்முகம் பொங்கி படைச்செண்டு நிப்பான். ஒரு பிடி பிடிப்பம்.'
'ஐயா முந்தி எங்கட அம்மா, படைப்பு சோறுகளை சாப்பிடாதையடா. கண்ட ஆவியள் வந்து உமிஞ்சிருக்குமடா எண்டு சொன்னா நான் நம்பிறேல்ல. இப்பதான் அதில எவ்வளவு உண்மை இருக்கெண்டு புரியுது.'
குருக்கள் ஐயா கெக்களம் கொட்டிச் சிரிக்கிறார்.
普 兽 *
சோம்பல் முறித்துக்கொண்டு கிடந்த மந்திரி மீண்டும் கண்ணையயர்ந்து கனவு கண்டுவிட்டு விழித்துக் கொண்டதுபோல் , விழித்தது.
வானொலி போரில இறந்துபோன போராளிகளின் எண்ணிக் கையை ஒன்றுக்கு இரண்டாகப் பெரிதுபடுத்திக் கூறிக்கொண்டிருந்தது.
கடலும் கரையும் 121 (p. GLIT

Page 66
.பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புடையினருக்கும் இடையில் நடந்த மோதலில் பதினெட்டுப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏனையோர் காயமுற்ற தமது சகாக்களையும் தூக்கிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இம்மோதலில் பாதுகாப்புப் படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை.
எங்கும் போரும் அழிவும் அகதிகளும்! மந்திரிக்கு அந்தரநிலை ஏறிக் கொண்டு வந்தது. அரசாங்கம் சமாதானத்துக்கான போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆறுதலாய் குந்த ஒரு இடமில்லை. போர் இல்லாமல் இந்த உலகே இயங்காதா? போர் எதற்கு? ஒவ்வொன்றிடமும் தன் அடையாளத்தைப் பற்றிய அழுத்தம் இருக்கும் மட்டும் போர் இருந்தே ஆகும். மந்திரிக்கு ஏனோ எரிச்சல் எடுப்பதுபோல் இருந்தது.
ஒவ்வொரு கணமும் பலமுள்ளது பலவீனமானதை விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
பலவீனமானது தனது அடையாளத்தை இழக்கிறது. பலமுள்ளது தனது அடையாளத்தை எல்லாவற்றிலும் திணிக்கிறது, விஸ்தரிக்கிறது.
மந்திரிக்கு இரண்டு உலகப்போர் நினைவுக்கு வருகிறது. தூய ஆரிய இன அடையாளத்தை ஸ்தாபிக்க முனைந்த ஜேர்மனியின் முனைப்பே இரண்டு யுத்தமும்! Kultur Race.
ஆனால் இந்த யுத்தங்கள் மார்க்சீய பொருளாதாரக் கோட்பாடு களின் மனித இயல்பூக்கங்கள் பற்றிய ஆழமின்மைகளை புட்டுக்காட்டிச் சென்றது. மந்திரிக்கு நினைவு வந்தது.
பொருளாதாரப் பொதுவுடமை என்று கத்திய ரஷ் ஷியாவே நாஸிப்படை வந்து ஸ்ரலின் சிராட்டை ஒரு உலுக்கு உலுக்கிய போது, பொதுவுடமைச் சுலோகங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வீர ரஷ்ஷிய நாட்டையும் ஸ்லாவ் இன உணர்வுக் கோஷங்களையும் தான் கூவியழைத்தது! என்ன பொருளாதாரக் காரணங்களுக்காகப் போர் ஏற்பட்டாலும் அது ஈற்றில் தன் வெற்றிக்காக தன் இனம், தேசியம் என்னும் அடையாளங்களை -கருத்துக்களைத்தான் மாட்டிக் கொள்கிறது.
மந்திரிக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் மந்திரியின் தோள்களுக்கு மேலால் யாரோ பெரிதாக்ச்
கடலும் கரையும் 122 (y.Gur

சிரிப்பது போல் கேட்டது.
யார் சிரிப்பது? மந்திரி ராசாவைப் பார்த்தது. ராசா வழமைபோல் மூஞ்சி முழுக்கக் கண்ணாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த ராசாவுக்கு என்ன அடையாளம்? இது எதன் அடையாளம்? அடையாளங்களுக்குள்தான் மனிதனின் இருப்பு. அடையாளங்கள் இல்லாவிட்டால் மனிதன் செத்துவிடுவானா? பலமான ஒரு சிரிப்போசை எழுந்தது. ராசாதான் சிரிக்கிறதா? - அந்தரித்துத் திரியும் நீ, எந்த அடையாளத்துக்குள் போய் குந்தத் தவிக்கிறாய்?
மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டதா? இல்லை, மந்திரியின் அருகே கிடந்த ராசா தான் அக்கேள்வியை எழுப்பி விட்டதா?
சொல் எது உன் அடையாளம்? மீண்டும் அக்குரல் சவுக்குப்போல் மந்திரியைச் சுற்றி இழுத்தது. நான் ஓர் ஈழத்தமிழன் மந்திரியிடமிருந்து வந்த பதிலை, மந்திரியே வேறு யாரிடமிருந்தோ வருவதுபோல் ஆச்சரியத்தோடு விடுபட்ட நிலையில் கேட்டது.
ஈழத்தமிழன் மந்திரியே பெரிதாகச் சிரித்தது. இல்லை, அது ராசாவின் சிரிப்பாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மந்திரி தன்னை அறியாமல் பின்னணி கொடுக்கிறதா?
அவ்வாறே திடுதிப்பென ஒர் காட்சி மந்திரியின் முன் விரிகிறது. ஒரு கல்லெறிபட்ட தும் கூட்டமாய் இருந்த காகங்கள் எல்லாம் சிதறி திக் குத் திக் காய் பறந்தோடுவதுபோல் எங்கெல்லாமோ பரதேசிகளாய் பறந்து கொண்டிருக்கும் . ஈழத் தமிழர்கள்! நேற்று யாழ்ப்பாணம் என்னும் பனங் கூடலில் இருந்து கூழ் குடித்து, அருவி வெட்டி, துலாமிதித்து, தோட்டம் செய்து வாழ்ந்திருந்த கூட்டம் இப்போ எங்கோ எங்கோ எல்லாம் திக்குத்திக்காய். இந்த லட்சணத்தில் நான் ஒர் ஈழத்தமிழன்' −
'கட கட' வென்ற பெருஞ்சிரிப்பு ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி வவுனியாவைக் கடந்து கொழும் பை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள்! எப்படி
கடலும் கரையும் 123 மு.பொ

Page 67
யாவது பனங் கூடலை உதறிவிட்டு வருவதில் காட்டும் வேட்கை கொழும்பில் வந்து, அங்கு குந்தி, இங்கு குந்தி பொலிஸ் நிலையங்களைத் தரிசித்து திடீரென ஒருநாள் பிறநாட்டுக்கு பிளேன் எடுக்கும் ஈழத்தமிழர்.
மந்திரியின் கண் முன்னே அதுவிட்டு வந்த பனங் கூடலில் இப்போ கொஞ்ச இளமட்டங்கள் ஆயுதங்களைத் தூக்கியவாறு ஈழத்தமிழர் என்னும் அடையாளங்களாக பதுங்கியும் நிமிர்ந்தும் திரியும் காட்சி ஓடிவருகிறது. அதன் நெஞ்சு துயரால் கனக்கிறது.
நான் ஓர் ஈழத்தமிழன்! மந்திரிக்கு மீண்டும் துயர் கவிவதுபோல் இருக்கிறது. நான் ஓர் ஈழத்தமிழன் அடையாளம்! பொருள்! இவற்றைத்தான் மனிதன் கட்டிப்பிடிக்கிறான். ஆனால் ஆபத்து வரும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டு உயிர்த்தப் பினால் போதுமென ஓட்டமெடுக்கிறான். சிறிது சுமூகநிலை ஏற்பட்டதும் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டு பொருளைக் குவிக்கும் ஆசை
அடையாளம் என்னும் கருத்துக்குள் அவன் ஆணவத்தின் இருப்பு. பொருளின் சேகரிப்புள் அவன் ஆசையின் இருப்பு.
கருத்தையும் பொருளையும் கட்டிப் பிடிக்கும் மனிதன் எல்லாவற்றுக்கும் காரணமாக நடுவில் இருக்கும். மனிதனை மறந்து விடுகிறான்! இன்று கருத்தும் பொருளும் மாறி மாறி மனிதனை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றன.
40 லட்சத்துக்கு மேலான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லர்!
அதற்கும் மேலான மக்களை பொதுவுடமையின் பேரில் கொன்றொழித்த ஸ்ரலின்
எல்லாவற்றுக்கும் ஒரு அடையாள முலாம்! அடையாளந்தான் மனிதனா? அடையாளம் இல்லாவிடில் மனிதன் இல்லையா? அண்மைக் கால இலங்கை அரசியலில் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் தம்மைப் பழங் கால இலங்கை அரசர் அரசிகளோடு அடையாளம் காண முனைந்தது. மந்திரிக்கு நினைவு வந்தது.
56ல் தியசேன குமாரயா. 62ல் விஹாராமகாதேவி
77ல் ஜயவர்த்தன புரக்கோட்டை அரசன்.
கடலும் கரையும் 124 (p.Glu1

95ல் செண்பகப் பெருமாள்.
ஒவ்வொரு அடையாளங்களும் ஈழத்தமிழர் அடையாளங் களுக்கு பேரழிவோடுதான் வந்தன!
இதற்குப் போட்டியாக தமிழ்ப் பகுதிகளிலும் சேர, சோழ, பாண்டிய அடையாளங்கள் நிழல் எறிந்தன. களம் பல கண்ட காளைகள் நூலுருப்பெற்றன!
உனது அடையாளம் என்ன?
மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டதா?
அல்லது ராசாதான் மீண்டும் அதனுள் குரல் கொடுத்ததா?
நான் ஓர் ஈழத்தமிழன்!
நான் ஓர் சிங்களவன்!
நான் ஓர் முஸ்லிம்!
நான் ஓர் கிறிஸ்தவன்!
நான் ஓர் பெளத்தன்!
நான் ஓர் கொம்யூனிஸ்ட்
நான் ஓர் சோஷலிஸ்ட்!
நான் ஓர் ஜனநாயகவாதி!
எத்தனை அடையாளங்கள்! மந்திரி தனக்குள் சொல் லிக் கொண்டது. சொல்லிவிட்டு இடையில் பெரிதாகச் சிரித்தது.
ஏன் சிரிக்கிறாய்?
மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டதா?
சிரிக்காமல் என்ன செய்வது? எல்லாவற்றுக்குள்ளும் நான்தான் கொழுத்து நிற்கிறது. மனிதனைக் காணவில்லை!
* 骨 骨
நான் ஈழத்தமிழன், நான் சிங்களவன், நான் பெளத்தன், நான் கொம்யூனிஸ்ட். நான் நான்.
மீண்டும் சிரிக்கிறது, பைத்தியக்காரன் போல்! எத்தனை அடையாளங்கள்! இவை தேவையா? இந்த அடையாளங்கள் மனிதனுக்கு விடுதலையா? விலங்கா? மந்திரிக்குள் இக்கேள்விகள் எழுந்தன. இவையெல்லம் இப்போ பெரிய விலங்குதான்!
BLih iацh 125 (), UT

Page 68
மந்திரிக்குள் தானாகவே எழுந்த பதில் ராசாவிடம் இருந்தே வந்ததுபோல் பட்டது. மேலும் அது தொடர்ந்து விளக்குவது போல் தெரிந்தது.
இன்றைய மனித முன்னேற்றம் என்பது மனிதன் பற்றிய அகப்புற அறிவின் ஆழத்திலும் அதை வெளிக்காட்டும் மொழியின் கூர்மையிலும் தான் உள்ளன என்றால் அந்த அறிவைப் பெறுவதும் அதை வெளிக்காட்டும் மொழியைக் கற்பதுமே அவசியமாகும். இவை தவிர்ந்த ஏனைய மொழி, சமய, இனப்பற்றுக்கள் எல்லாம் தேவையற்றவை. மனித முன்னேற்றத்திற்குத் தடையானவை இல்லையா? .
மந்திரி பேசாமல் இருக்க, இக்கருத்துக்கள் எல்லாம் தானாகவே மந்திரிக்குள் குமிழிகள் போல் வந்து வந்து உடைந்தன.
அப்படியானால் தேசம் தேசமாய் பரதேசிகளாய்த் திரியும் ஈழத்தமிழர் இந்த முற்போக்கான வேலை தான் செய்கிறார்களா?
மந்திரி ஏளனமாகக் கேட்டது; பின்னர் சிரித்தது. இல்லை, அவர்கள் உயிருக்குப் பயந்து ஓடுகிறார்கள். அவர்கள் தங்களைக் காப்பாற்ற ஓடுகிறார்கள்.
ராசாவிடம் இருந்து பதில் வருவதுபோல் இருந்தது. அப்படிப் பயந்து ஓடச் செய்வது எது? அப்படி மக்களை ஓடச் செய்யும் ஒடுக்குமுறை எது? இந்த ஒடுக்குமுறை எங்கிருந்தாலும் என்ன பேரில் இருந்தாலும் அதற்கெதிராகப் போராட வேண்டாமா? மந்திரி இப்படிக் கேட்டது.
போராடத்தான் வேண்டும்! ஆனால். என்ன ஆனால்? ஆனால் நான் ஈழத் தமிழனாகவோ, சிங் களவனாகவோ முஸ்லிமாகவோ, கொம்யூனிஸ்டாகவோ எந்த அடையாளத்துக்குள்ளும் நின்று போராட மாட்டேன்.
அப்போ? மனிதனாக நின்றுதான் போராடுவேன். எனது போராட்டம் எந்த அடையாளத்துக்குள்ளும் புதைக்க முடியாதது. அப்போதான் அது எல்லா மனிதருக்கும் உரியதாய் இருக்கும்.
மந்திரி பேசாமல் இருக்க இந்த வார்த்தைகள் அதற்குள் வந்து விழுவன போல் பட்டது. ராசா தனக்குள் படிப் படியாக மந்திரியை உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறதா?
மந்திரி மெளனமாகி ராசாவின் ஈர்ப்பு நீரோட் டத்தோடு கலந்தோட தயாராகுவது போல் பட்டது.
கடலும் கரையும் 126 (yn. Cur

அப்போது தூரத்தே பேரிடிபோல் ஏதோ வெடித்து சிதறுவது கேட்டது. -
திடீரென வெளியே அமைதி கெட்டு அந்தரம் பற்றிக்கொள்வது தெரிந்தது. சனங்கள் ஓலமிட்டவாறு ஒடுவது கேட்டது. வாகனங்கள் அந்தரப்பட்டு ஹோர்னை அழுத்திச் சப்தமிட்டவாறு விரைவது கேட்டது. எங்கும் ஓர் அந்தரம் புயலாக வீசுவது தெரிந்தது. எங்கும் இனி அமைதியாகத் தரிக்க முடியாது.
வெளியில் வீசிய அந்தரம் மந்திரியையும் தன் கைக்குள் இறாஞ்தி எடுத்து நிலத்தில் ஓங்கி அறைந்தாலும் அறையலாம்.
மந்திரி பயத்தாலும் பீதியாலும் சிறகை விரித்து எங்கும் பறக்க முடியாது உள்ளோய்ந்து போகிறது.
இனி மந்திரியின் அடையளாத்தை கேட்டு பொலிசார் வீடு தேடி வருவார்கள்.
மந்திரி தன் தேசிய அடையாள அட்டையைக் காட்டினாலும் விடமாட்டார்கள்.
ஒருவேளை தேசிய அடையாள அட்டை அவர்களால் கிழித்தும் எறியப்படலாம். மந்திரியின் இனத்தைப் பற்றி அவர்கள் வைத்திருக்கும் அடையாளம் என்ன? அது வேறுவகையானதாக இருக்கலாம். இனி அந்த அனெக்ஸ்ஸிலும் மந்திரியால் நிம்மதியாகப் போய்த் தரிக்க முடியாது. எந்நேரம் வந்து பொலிசார் தட்டுகிறார்களோ, யார் கண்டது? 'பயங்கரவாதி' என்ற அடையாளம் குத்தப்பட்டு மந்திரி இழுத்துச் செல்லப்படலாம்.
நடுங்கும் உடலை சிறகுகளால் இறுக்கியபடி கிடுகிடுக்கும் பற்களை சொண்டுகளால் மறைத்தபடி மந்திரி ராசாவைப் பார்த்தது.
ஏன் நடுங்குகிறாய்? ஏன் அந்தரப்படுகிறாய்? ஏன் பயப்படுகிறாய்?
ராசா வழமையான அமைதியை விட இன்னும் இரட்டித்த அமைதிச் செறிவோடு அப்படியே இருந்தது. ஆனால் அதன் குரல் மந்திரிக்குள் உள்ளொலிப்பதுபோல் பட்டது.
ஏன் அந்தரப்படுகிறாய்? ஏன் பயப்படுகிறாய்? நீ பயப்படும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது?
மீண்டும் ராசாவின் குரல் உள்ளொலித்தது.
மந்திரி சிறிது யோசித்தது. நீ என்னைப் பார்!
ராசா கட்டளையிட்டது. அதை ஏற்று மந்திரி ராசாவைப்
கடலும் கரையும் 127 (y).CLII

Page 69
பார்த்தது.
என்னையே பார்த்துக் கொண்டிரு மனதை அலையவிடாதே! மந்திரி அப்படியே செய்தது. இவ்வளவு நேரமும் பலதை எண்ணி நடுங்கிக் கொண்டிருந்த மந்திரி இப்போ நல்ல வாய்ப்பான இடம் தன்னோடேயே இருப்பதைக் கண்டுவிட்டதுபோல் ஆனந்தமாய் ராசாவில் போய் குந்தியது. உடனே அதற்கு முன்னைய போக உணர்வின் எச்சங்கள் தலைதூக்கியது. ஆனால் கணப்பொழுதில் ஓர் புது உணர்வு வெடித்து விசாலித்து பழைய போகக் கிறுக்கங்களையெல்லாம் அற்பமாக்கியது. ஓர் அமைதியும் இதமும் எழுந்தன. பின்னர் அப்படியே ஓர் பெருவெளிக்குள் புகுவதை மந்திரி உணர்ந்தது. தனது தலையில் இதுகாலவரை தூக்கிவைத்திருந்த பாரங்கள் நீக்கப்படும் சுகம் தெரிந்தது. இப்போ அவை அர்த்தமற்று இதுகாலவரை சுமக்கப்பட்டதாகப் பட்டது.
ஆனால் அவ்வேளை திடீரென அதற்கொரு பயம் எழுந்தது. தான் மெதுவாக இல்லாமல் போகப் போவது போல் பட்டது. தன் அடையாளத்தை தான் இழக்கப்போவது போல் அது பயந்தது.
நான் எங்கே? நான் எங்கே? மந்திரி பீதியால் உந்தப்பட்டுக் கத்தியது. தனக்கருகே இருந்த ராசாவின் உருவம் மறைந்து வெளியாக மாறுவது போல் மந்திரிக்குப் பட்டது.
அந்த வெளியோடு வெளியாக தானும் கரைவது போல் மந்தரி உணர்ந்தது.
நான் எங்கே? நான் எங்கே? கரைந்துபோகும் தன் அடையாளத்தை கரைக்கவிடாது. தன் அடையாளத்தின் நாயகனாக இருக்கும் நானை இறுகப்பிடித்தபடி மந்திரி கத்திற்று.
துகில் உரியப்படும் பாஞ்சாலி ஒற்றைக் கையால் சேலைத் தலைப்பை அணைத் தபடி மறு கையால் கண்ணனைக் கூவியழைத்த நிகழ்ச்சி மந்திரியின் நினைவில் தெறித்தது.
அடுத்த வினாடி தான் தன் அடையாளத்தை இழந்து கரைந்து போவதை விரும் பாத மந்திரி அந்நிலையிலிருந்து விடுபட திமிறிக் கொண்டு எழுந்தது.
ஆனால் அப்போது ராசாவை எங்கும் காணவில்லை. எங்கும் எல்லாம் வெளியாய்த் தெரிந்தது.
நீ ஏன் பயப்படுகிறாய்?
alsh SRD (4th 128 (9.Our

அந்த வெளிக்குள் இருந்து ராசாவின் குரல் கேட்டது.
நீ எங்கே இருக்கிறாய்?
மந்திரி கத்தியது.
நான் இங்கே இருக்கிறேன்.
ராசா பதில் கூறிற்று.
இங்கே என்றால் எங்கே?
மந்திரி துருவித் துருவிக் கேட்டது.
நான் இங்கே இருக்கிறேன். எல்லாமாக இருக்கிறேன் . எல்லாமாக வியாபித்திருக்கிறேன். நீயும் என்னிடம் வா. எல்லா அடையாளங்களும் என்னிடமிருந்துதான் வருகுது.
ராசா கூறிற்று.
என்னைச் சாகச் சொல்கிறாயா?
மந்திரி கேட்டது.
இது சாதல் அல்ல. உன் அடையாளத்தை விடுதல். உன் தனி அடையாளத்தை விட்டு விட்டு எல்லா அடையாளங்களின் மூலமாக இருத்தல். வா என்னிடம் ,
ராசா விளக்கியது.
என்னால் முடியாது. என் அடையாளத்தை எனக்கு விடமுடியாது.
மந்திரி எதிர்த்தது.
அப்படியானால் நியாயமான உன் அடையாளத்துக்காகப் போராடவும் முடியாது.
ஏன்?
உன் அடையாளத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உன் அடையாளத்துக் காகப் போராடினால் மேலும் பல தேவையற்ற அடையாளங்கள் பெருகுமே ஒழிய உன் அடையாளத்துக்கு விடுதலை வராது. பயங்கரவாதம் , பாஸிசம் , அராஜகம் என்னும் தேவையற்ற புதுப் புது அடையாளங்கள் தான் பெருகும். ஆனால் உன் நியாயமான அடையாளத்துக்கு விடுதலை வராது! வீணாக போராட்டம் நீண்டு கொண்டு போகும்.
இதெல்லாம் எனக்கு விளங்காது. ஆனால் நான் என் அடையாளத்தை விட மாட்டேன். நான் என் அடையாளத் தோடு நிம்மதியாக எனக்குரிய இடத்தில் குந்தியிருக்க வழி சொல்!
அதுதான் நான் சொல்லி விட்டேனே!
கடலும் கரையும் 129 (y.sum

Page 70
அது எனக்கு விளங்காத வழி வேறு வழி சொல்லு. அதுதான் ஒரே வழி. இனிவரப் போகும் வழி! எனக் கது விளங்காது. எனக்கு அதை விளங்கிக் கொள்ள பொறுமையுமில்லை. வேறுவழி சொல்!
அதுதான் ஒரே வழி. பொறுமையாக இருந்து யோசித்துப்பார். அப்போ என்னைக் கைவிட்டு விட்டாயா? நான் கைவிடவில்லை. நீதான் என்னோடு கைகோத்துவர மறுக்கிறாய்! வா என்னோடு போராடுவோம்.
முடியாது! முடியாது! உன்போராட்டம் எனக்குப் புரியாது! நீ என்னை ஏமாற்றுகிறாய்! ஐயோ.
மந்திரி அப்படியே குந்தியிருந்து அழத் தொடங்குகிறது. கைவிடப்பட்ட அகதிபோல்!
அப்போது ரோட்டோரமாகக் குந்தியிருக்கும் அகதிகளும் அகதி முகாம்களில் கிடந்து அல்லல்படுவோரும், கையிழந்தவர்களும், கால் இழந்தவர்களும் , கைவிடப்பட்டவர்களும் , சடைத்த பேர் விருட்சத்தில் வந்து விழும் வெளவால்களைப் போல் மந்திரியைச் சூழ்ந்து மொய்ப்பது போன்ற ஓர் தரிசனம் ராசாவுக்கு ஏற்பட்டது. மொய்த்தவர்கள் 'நாங்கள் எங்க போறது? எங்க போறது? எங்களைக் கைவிட்டிட்டியா? எங்களுக்கினி ஒரு வழியில்லையா?" என்று மந்திரியை உலுக்குவதுபோல் பட்டது.
அவ் வேளை கனகாலமாக மந்திரியைக் காணவேண்டும் என்னும் ஆசையைத் தேக்கி வைத்திருந்த 'சிவசாமி அங்கே மிதந்து வருவதை ராசா கண்டது. வந்தவன் கலவரமடைந்தவனாக, மந்திரி முன்னே நின்று, 'மாஸ்டர் வெளியே பொலீஸ் 1 மாஸ்டர் வெளியே பொலீஸ்?' என்று கத்தினான். ராசா வரட்டுச் சிரிப்புச் சிரித்தது.
மந்திரி நிமிரவில்லை! வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.
sugih SDJuqh 130 Qp. Our

X ப்பத்திக்கும் இச்சிறுகதைத் தொகுதிக்கும் என்ன தொடர்பு என இதைப் படித்தவுடன் நீங்கள் நினைக்கக்கூடும். உண்மைதான், இந்நூலின் ஆசிரியருடன் நான் ஈழத்துச் சிறுகதை பற்றிய ஒரு கலந்துரை யாடலில் ஈடுபட்டதையே இங்கே பதியப் போகிறேன் என்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லைதான்.
அறுபதுகளில் இருந்தே காத்திர மான ஒரு படைப்பாளியாகவும், விமர்சகனாக வும், பத்திரிகை ஆசிரியராகவும் அடக்கமாக அறியப்பட்ட ஒரு முன்னைய தலைமுறை இலக்கியவாதியுடன் கலந்துரையாடப் போகிறேன் என்பதை எண்ணியபோது, அந்த ஞாயிற்றுக்கிழமை கொளுத்தும் வெயிலும் என்னைப் பாதித்ததாக தெரியவில்லை.
மூன்று மணிக்கே சொன்னது போல் நான் மு. பொவின் வசிப்பிடத்தை அடைந்து விட்டேன். சிறிது நேரம் செல்ல மதுவும் வந்துவிட்டார். மது, எனது இனிமையான நண்பர்களில் ஒருவர். இலக்கிய, சமூக ஆர்வலர் உடைப்புக்களுக்காகவும் மாற்றங் களுக்காகவும் ஏங்குபவர். 60களில் தோற்றம் பெற்ற மு. பொவையும் 90களில் தோற்றம் பெற்ற என்னையும் இணைத்துவிட்டவர் நண்பர் மது தான். என்னைவிட, மு. பொவை விட மதுதான் இதில் கூடிய அக்கறை யெடுத்துக்கொண்டவர் என்று சொல்ல வேண்டும். வந்த வேகத்திலேயே 'தொடங்கு வோமா?' என்று கேட்டார். எனக்குள் அச்சம், ஏராளமான கேள்விகள் என்னுள் கிளர்ந் திருந்தாலும், மூத்த தலைமுறையொன்றுடன் சம்பாஷிக்கும் போது எதையாவது கோட்டை விட்டு விடுவேனோ என்ற பயம், ஆனாலும், எந்தப் பயமும் என்னைத் தொற்றிக் கொள்ளாதவாறு, இயல்பாய், மிக இயல்பாய், 線 இது ஒரு இலக்கியக் கலந்துரையாடலே அல்ல,
தொட
கடலும் கரையும் 131 (p.Gur

Page 71
குடும்ப நண்பர் ஒருத்தருடனான சம்பாஷணை என்று சொல்லுமாற் போல் மு.பொ மிக உற்சாகத்துடன் பங்கு கொண்டார்.
நான் ஏலவே யோசித்து வைத்திருந்ததன் படி 60களில் வெளிவந்த
ஈழத்துச் சிறுகதைகளுக்கும் 90களில் வெளிவந்து கொண்டிருக்கும் சிறுகதைகளுக்குமிடையே உருவம், உள்ளடக்கம், உத்தி தொடர்பான வேறுபாடுகளை ஆராயும் நோக்கிலே எனது முதலாவது கருத்தை முன்வைத்தேன்.
நான்:
மு.பொ.
பொதுவாக அறுபதுகளில் வெளிவந்த அநேக சிறுகதைகளில் கருவாசகனுக்கு வாழ்தல் தொடர்பாய் நம்பிக்கையூட்டும் விதத்திலும் அண்மைக் காலங்களில் வெளிவரும் அநேக படைப்புகள் வாழ்தல் தொடர்பாய் ஒரு அவநம்பிக்கையை அதாவது ஒரு விரக்தி தன்மையை வெளிக் கொணர்வது போலவும் ஒரு வேறுபாடு எனக்குத் தோன்றுகிறது. இந்த இருகாலப் பகுதிகளிலும் வந்த அனேக கதைகளைப் படித்திருக்கும் ஒருவர் என்றவகையில் இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளதுதான். அதற்குக் காரணம் என்னவெனில், அப்போது படைப்பாளிகளில் அனேகம் பேர் முற்போக்கு இலக்கியவாதிகளாய் தங்களை இனங்காட்டிக் கொள்ள முற்பட்டனர். இதனால் அவர்களுக்கு வாழ்தல் தொடர்பாக ஒருவிதமுற்போக்கான கோட்பாடுகளை முன்வைக்க வேண்டிய தேவையேற்பட்டது. இதைவிடச் சாதிக் கொடுமைகளினாலும், வர்க்க பேதங்களினாலும் பாதிக்கப்பட்டு வெகுண்டெழுந்த வேறுபல படைப்பாளிகளும் இந்த விதத்திலேயே அதாவது நீங்கள் சொன்ன விதத்திலேயே வாழ்தல் தொடர்பாய் நம்பிக்கையளிக்கும் விதத்தில் தங்கள் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார்கள். எனினும் இந்த இருபாலரையும் தவிர, தத்துவார்த்த ரீதியில் அதாவது வாழ்க்கை அர்த்தமற்றது என்ற ஒரு விரக்திநிலையில் தங்களுக்குள்ளேயே தேடலைச் செய்யும் விதமான படைப்புகளும் வெளிவந்துள்ளன. இவர்கள் முற்போக்கு அலைக்கு மாறுபட்டு எழுதியவர்கள். இவர்கள் தாம் வரித்திருந்த வாழ்வியல் பார்வைக்கு, தத்துவக் கோட்பாடுகளுக்கு ஏற்ப கதைகள் எழுதினார்கள். மு.த. வின் 'புதுயுகம் பிறக்கிறது' தொகுதியில் அமைந்த அனைத்துக் கதைகளும் ஒவ்வோர் தளத்தில் வாழ்க்கை பற்றிய இத்தேடலை வெளிக் காட்டுபவையாகவே உள்ளன என்பதை ஆசிரியரே தனது பிற்குறிப்பில் கூறியுள்ளார். மேலும் சாந்தினியின் 'நீறுபூத்த நெருப்பு", அ.முத்துலிங்கத்தின் சில கதைகள், இத்தொகுதியில்
கடறும் கரையும் 132 மு.பொ

ԼD5/:
நான்
மு.பொ.
நான்:
அமைந்துள்ள "மூடுபனி', 'அரைநாள் பொழுது' போன்றவை யெல்லாம் அக்காலத்துக்குரிய இத்தகைய வேறுபட்ட வெளிப்பாடுகளே. இவையெல்லாம் பூரண வெற்றி பெற்றவை என்று சொல்ல முடியாவிட்டாலும் கலாரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தியவை என்பதை மறுக்க முடியாது. அத்துடன் இப்போது நீங்கள் குறிப்பிட்டது போல் தேடல் சம்பந்தமான அனேக படைப்புகள் வெளிவருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. . . .
இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு பக்கத்தையும் கூறத்தான் வேண்டும். முற்போக்குச் சிந்தனையின் தர்க்கரீதியான வளர்ச்சி மார்க்சீயச் சிந்தனையாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு இது நடைபெறவில்லை. இவர்கள் முற்போக்குவாதிகளாய் இருந்தார்களேயொழிய உண்மையில் மார்க்சீய வாதிகளாய் அதன் வழிநின்று வாழ்வியலை அணுகியவர்களாய், தேடுபவர்களாய் இருந்ததில்லை. இதனால் இவர்களது படைப்புகள் செயற்கைத்தன்மையிலும் கூடிய வெறும் சுலோகப் பாங்கான கதைகளை அடுக்கி கதை பண்ணுதல் என்ற
கட்டத்திலேயே இருந்தன. வாழ்வியல் குறித்த, அதனது பன்முகப்
பாங்கிலான தீவிர விசாரணை ஒன்றை இவர்கள் முன்வைக்க முடியாதவர்களாய் அமைந்தனர். குறிப்பாக எமது படைப்பாளர் பலரிடம் தத்துவப் பார்வை இல்லை என்றே கூறலாம். இப்படி வாழ்தல் தொடர்பாய் நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று முற்படும்போது, பாத்திரங்களுக்காக கதை படைத்தல் என்ற நிலையிலிருந்து கதைக்காகப் பாத்திரங்களைப் படைக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை எமக்கு ஏற்படுகிறது. அதாவது நான் விரக்தி நிலையிலிருந்து ஒருகதையை எழுத முற்படுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, நான் ஒரு பாத்திரத்தையும் புதிதாய் படைக்க முற்பட மாட்டேன். என்னைச் சூழ உள்ள மனிதர்களே பாத்திரங்களாய் உயிர்ப்புப் பெறுவர். ஆனால் நம்பிக்கைதரும் விதத்தில் கதையைப் படைக்க முற்படும்போது என்னைத் தாண்டி இல்லாத பாத்திரங்களுக்காக என் கற்பனை நீளமுடியும். இது கதையின் எதார்த்தத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். இதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஆம் நிச்சயமாக. அடுத்தது மொழி தொடர்பானது. அப்போதே இதுபற்றிக் காரசாரமான விவாதங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். பேச்சுமொழியைப் பாவிப்பதை இழிசனர் வழக்கெனக் கேலி
கடலும் கரையும் 133 (p. UT

Page 72
மு.பொ.
நான்
மு.பொ.
மது:
செய்தவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி மொழி
தொடர்பான விதியை உடைப்பதில் அப்போது முனைந்து நின்ற விதிவிலக்கான படைப்பாளிகள் யாராவது. ? இதுபற்றி ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை பலவாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. இபோ புதிய உடைப்புகளின் தேவை, புதிய உருவாக்கங்கள் என்பவை பற்றிய சிந்தனை அதிகரித்துள்ளது. புதிய எழுத்துமுறைகளே அறிமுகப்படுத்தப் படவுள்ளன. கொம்பியூற்றர், கலைவடிவங்கள் முகங்காட்டும் இக்காலங்களில், நம்மை நாம் மனிதனாக நிறுவும் புதுச் சொல்லாக்கங்களுக்குநிர்ப்பந்திக்கப்படுகிறோம். அதாவது இது நம் வாழ்வியலின் புதிய நெருக்கடிகள், இறுக்கங்கள் நமக்கு புதிய அனுபவங்களைத்தர அதன்மூலம் சாத்தியப்படும் புதிய உடைப்புகள் வெளிப்பாடுகள் எனலாம். இதுபோக, அக்காலத்தில், அதாவது அறுபதுகளில் இந்தப் பேச்சுமொழி உடைப்பில் எஸ்.பொன்னுத்துரைக்கும் கணிசமான பங்கு நாம் கொடுக்க வேண்டும்.
(குறுக்கிட்டு) டானியல்..? டானியல் - டானியலையும் குறிப்பிடத்தான் வேண்டும். டானியலின் ஆரம்ப காலப் படைப்புகளில் இத்தகைய பேச்சுமொழித்தன்மை அதிகளவு இல்லையென்றாலும் பின் வந்த படைப்புகளில் அவரும் அதைக் கணிசமான அளவு வெளிக் கொணர்ந்தார். இன்னும் சொல்வதானால் இடதுசாரிக் கொள்கையை உடையவர்கள் படைப்புகளில் மொழி தொடர்பாக ஒரு புரட்சி செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அக்காலங்களில் பேச்சுத்தமிழை அப்படியே படைப்புகளில் கொண்டுவருவதை பலர் எதிர்த்ததுமுண்டு. பேராசிரியர் சதாசிவம் போன்றவர்களும் மரபுவழி வந்த சிந்தனை யாளர்களும் இழிசனர் வழக்கு நல்ல வழக்கு என்று வகுத்துக் கொண்டு இப்படியான பேச்சுத்தமிழைக் கொண்ட சிறுகதைகளை யெல்லாம் இலக்கியம் என்று கொள்ளலாமா என்ற ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர். அத்தோடு எமது ஆக்க இலக்கியங்களின் மொழிநடை குறித்த ஒரு அறிவார்ந்த ரீதியிலான பரிசீலனை ஒன்றை இன்னும் நாம் காத்திரமாக முன்வைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். பல்வேறு படைப்பாளர்களுக்கிடையில் உள்ளநடையியல் குறித்த ஒப்பீட்டு ஆய்வுகள் கூட இங்கு குறிப்பிடப்படும் வகையில் அமையவில்லை. பிரதேச மொழி வழக்காறுகளின் பின்னணியில்
கடலும் கரையும் 134 மு.பொ

நான்:
மு.பொ.
கூட எமது படைப்புகள் இன்னும் பரிசீலிக்கப்பட முடியாமலே உள்ளன. தமிழக எழுத்தாளர்களின் மொழிநடைக்கும் எமது எழுத்தாளர்களின் மொழிநடைக்கும் உள்ள தனித்துவ வேறுபாடுகளை இனங்காண்பதும் வளர்ச்சியை மதிப்பிடுவதுங் கூட இன்னும் செய்யக் கூடியவைதான். இவையாவும் இன்னுங் குறிப்பிடக் கூடியளவு இங்கு நடைபெறவில்லை என்றுதான் கூறவேண்டும். மொழியியல் என்பது இன்று தனித்த அறிவுத்துறையாக வளர்ந்துள்ளது. அதன் வழிநின்று எமது ஆக்க இலக்கியப் பார்வைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் ; மதிப்பிடப்பட வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலப் படைப்புகளின் மொழி நடை குறித்த எமதுபார்வை துல்லியமாகும். அப்படியானால் எமது இலக்கிய முயற்சிகளின் பின்னணியில் வைத்துப்பார்க்கும் போது முற்போக்கு எழுத்தாளர்களின் சாதனை அதிகம் என்கிறீர்களா? முற்போக்கு இயக்கம் எமது கலை இலக்கியப் பரப்பில் சாதித்தவை அதிகம். இதனை நாம் மறுக்கக் கூடாது. வரலாற்றில் அவர்களுக்குரிய இடம் எப்போதும் உண்டு. இவர்கள் இவர்கள்தான் எழுதவேண்டும். என்றிருந்த போக்குகளுக்கு மாறாக எல்லோரும் எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியவர்கள் முற்போக்கு இயக்கத்தவர்கள்தான். இலக்கிய ஜனநாயக மயப்பாடு விரிவாக்கம் பெற்றதும் இவர்களின் காலத்தில்தான். இவையெல்லாம் வரலாற்று உண்மை. முன்னர் நான் குறிப்பிட்டதுபோல் இவர்கள் முற்போக்குத்தளத்திலிருந்து மார்க்சீயத்தளத்திற்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழாததால் பின்வந்த காலப்பகுதிகளில் குறிப்பிடக் கூடியளவு சாதனை எதுவும் செய்ய முடியாதவர்களாகிவிட்டார்கள். குறிப்பாகத் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை குறித்து தெளிவான புரிதலுக்கும் நிலைப்பாட்டுக்கும் வர மறுத்ததுண்டு. இதுசம்பந்தமாக ஒருவித இரண்டக நிலை அவர்களைத் தொடர்ந்து பீடித்திருந்தது. இந்த இடத்தில் மு.த இவர்கள் பற்றி தனது '7 ஆண்டு இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடுவதை ஞாபகமூட்டுவது பொருத்தமானது: "1962ல் இருந்து இன்றுவரை அனேகமாக ஒவ்வொரு தமிழனது மனத்தையும் அரித்துக் கொண்டிருக்கும் மொழிப் பிரச்சினையை, பிரதேச நிர்ணயப் பிரச்சினையை எத்தனை எழுத்தாளர்கள் சீரியஸ்ஸாக அணுகியிருக்கிறார்கள். தேசியம் என்றால் இங்கு ஓர் இனத்தின் தேசியம், ஐக்கியம் என்றால் இங்கு ஒர் இனத்தின்
கடலும் கரையும் 135 (p.Gulf

Page 73
நான்
மு.பொ
நான்
ஆதிக்கம். என்னைப் பொறுத்தவரையில் மொழியுரிமை சமஷ்டி ஆட்சியெல்லாம் என் ஆத்மீக வளர்ச்சிக்கும் என் இனத்தின் ஆத்மீக வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள். எனக்கு வகுப்பு வாதம் பிடிக்காது. ஆனால் அதற்காக அடிமைத்தனத்தை ஆதரிப்பவனுமல்ல. தேசியம் பேசியவர்கள் ஓர் இனம் (இந்தியத் தமிழர்) நாடற்ற பிரஜைகளாக ஆக்கப்பட்ட போது பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். சமஷ்டி கேட்பது தேசியத்தை எதிர்ப்பதல்ல. அதை அறிந்தும் மறுப்பவர்கள் அதை ஒப்புக்கொள்ளத் துணிவற்றவர்கள் தான். அந்தத் துணிவற்ற தன்மையைத் தான் சிலர் இங்கு முற்போக்குவாதமாக்கி விட்டிருக்கிறார்கள்'மு.தவின் இக்கூற்று அவர்கள் பற்றிய சிறந்த எடை போடலாகும். நீங்கள் தமிழ்த் தேசியவாதம் ஆயுதப் போராட்டமாய் முனைப்புப் பெறுமுன், முனைப்புப் பெற்ற பின் என்ற இருகாலப்பகுதிகளிலும் வெளிவந்த சிறுகதைகளைப் படித்த ஒருவர். தமிழ்த் தேசியவாதம் ஆயுதப் போராட்டமாய் உருவெடுத்து, ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தில் எத்தகைய மாறுதல்களை தோற்றுவித்தது என்று சொல்ல முடியுமா? அது தொடர்பான எனது கருத்து பூரணமாக இதுவரை யாரும் ஆயுதப் போராட்டத்தை சிறுகதைகளில் வெளிப்படுத்த வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் ஒருவித அச்சம், இயக்கங்கள் தங்களைக் கண்டிக்கக் கூடும் அல்லது தண்டிக்கக் கூடும் என்ற பயம், தமிழ்த் தேசிய வாதத்திற்கு இயக்கங்கள் பாரியளவு பங்களிப்பு செய்திருக்கின்றனதான். எனினும் நாம் நம்மையே பார்த்து நமக்குள்ளேயே தேடி சுயவிமர்சனம் செய்வதுபோல் ஆயுதப் போராட்டத்தை யாரும் படைப்புகளில் விமர்சனம் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். மற்றப்படி ஆயுதப் போராட்டம் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்தில் ஒரு வளர்ச்சியை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இயக்கங்களை விமர்சிக்காத வரைக்கும் ஆயுதப் போராட்டம் வேறுபல வழிகளில் வளர்ச்சியடையச் செய்துள்ளது என்பது உண்மை. குறிப்பாக தமிழர்களின் அரசியல் நிலை நின்று விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது என்றவொரு போக்கிலேயே ஆயுதப் போராட்டம் குறித்தும் அமைய வேண்டும். நீங்கள் சொல்வது போல் அது ஒரு வளர்ச்சியைக் கொடுத்திருந்தாலும் வேறுபல வழிகளில் பாதகமான
SLg Lh GFDLJih 136 (p.Gulf

நான்:
மது:
விளைவுகளும் ஆயுதப் போராட்டத்தின் பின் தோன்றிற்று என்பதையும் நாம் சிறிது யோசிக்க வேண்டும். என்னவெனில் ஆயுதப் போராட்டத்தின் பின்வந்த அவல வாழ்வை, அதாவது மரணம், கைது, ஊனம், காயம் இப்படியான அவலவாழ்வை தங்கள் படைப்புகளில் கருப்பொருளாய்க் கொண்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்குள்ளேயோ அல்லது கதை நகரும் புலத்திற்குள்ளேயோ நுழையாமல் 6гц ц- நின்று வெளிப்பார்வையில் பின்னிய பல அபத்தமான போலியான படைப்புகளும் இந்த ஆயுதப் போராட்டத்தின் பின் வெளிவந்திருக்கின்றன என்பது என்கருத்து. நீங்கள் சொல்லும் கதை பின்னுதல் அல்லது பண்ணுதல் என்பது ஆயுதப் போராட்டத்தின் பின் மட்டுமல்லாது சிறுகதை இலக்கியம் தோற்றம் பெறத் தொடங்கிய வளர்ச்சிக் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகின்றது. அறுபதுகளிலும் சரி, சாதிப் போராட்டம் படைப்புகளில் முனைப்புப் பெற்ற போதும் சரி, பின்னர் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் முனைப்புப் பெற்ற போதும் சரி இத்தகைய போலிக் கதைகள் வெளிவந்துதான் உள்ளன. சமூகத்தில் மாற்றம் கொண்டுவரத் தாங்கள் உழைப்பதாகவும் சமூகத்தை ஒரு மாற்றம் நோக்கி உந்தித்தள்ளி விடுவதாகவும் காட்டிக் கொள்வதற்காக இப்படியான கதைகளைப் பண்ண வெளிக்கிட்டார்கள். அதேபோன்றுதான், ஆயுதப் போராட்டத்தின் பின்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையாயினும் சாதிப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களும் கொடுத்த அவலங்களை விட ஆயுதப் போராட்டம் கொடுத்த அவலம் அதிகமானது. இதனால் ஆயுதப் போராட்டத்தின் பின்பு தரமான படைப்புகள் அதிகம் வந்திருக்கும் அதேவேளை அபத்தமான படைப்புகளும் வந்திருக்கின்றன என நினைக்கிறேன். அத்தகைய அபத்தமான படைப்புகளைப் படைத்தவர் யாரெனில் 60 களிலும் 70 களிலும் தோன்றிப் பிரபலமாயிருந்த படைப்பாளிகளில் சிலர்தான். அவர்கள் 80 களிலும் அதன் பின்பும் சமகாலத்தில் இலக்கியத்தில் தங்களது இருப்பை உறுதி செய்யவும் சமூகத்தின் மீது தமக்கு அக்கறை இருப்பதாய்க் காட்டிக் கொள்ளவுமே இப்படி அபத்தமான படைப்புகளைப் படைத்தார்கள். மற்றப்படி, ஈழத்தின் தரமான சிறுகதை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்கள் எப்போதும் வளர்ந்து வரவேண்டியவர்கள். இதனை அவர்களது படைப்புகளும்
asLgün aslavlıq 137 (y.Gun

Page 74
மு.பொ
ԼԸ3/:
இனங்காட்டும். ஆனால் உண்மையில் இது இங்கு நடைபெறுவதாய் இல்லை. ஒரு கட்டத்துக்குமேல் எழுத்தாளர்கள் வளராது நின்று விடுகிறார்கள். இவர்களிடமிருந்து படைப்புகளும் வெளிவருவதில்லை. இப்படி திடீரென எழுத்தாளர்கள் ஏதும் எழுதாது மெளனமாகி விடுவதை தத்துவார்த்த உளவியல் ரீதியில் சொல்வதானால் inCubation Period என்பார்கள். அடைகாக்கும் காலம் அது முடிந்ததும் ஆக்கங்கள் வேகமாக வெளிவரும். எனது ஆக்கங்கள் வெளிவராது இருந்த காலங்களில் நான் நிறைய எழுதியுள்ளேன். மு.தவும் அப்படித் தான். அப்படி நாம் எழுதாத காலங்களில் பாரிய ஆக்கங்களுக்கான கருக்கட்டல் எமக்குள் நடந்து கொண்டிருக்கும். அதை எழுத்தில் வடித்துவிட்ட பின்னர் அது இன்னும் பூரணமாக வெளிக்காட்டப்படாத மனோநிலை எனக்குள் இருந்து கொண்டு இருக்கும். அதனால் மேலும் மேலும் சிருஷ்டியில் மூழ்கும் ஆனந்தம், புதிய புதிய உத்திகளில் ஊடகங்களில் சிருஷ்டிக்கும் முனைப்பு. இன்றும் என்நிலை அதுதான். ஆனால் சில எழுத்தாளர்கள் தமது கையிருப்பு தீர்ந்து போவதால், மாறும் சூழலுக்கேற்ப தமது தரிசனம் விரியமுடியாது மலடுதட்டிப் போவதால், அறளை பெயர்ந்து போவதால் மெளனமாகிப் போவதும் உண்டு. இன்று நம் எழுத்தாளர்கள் வளர முடியாமல்தான் உள்ளார்கள். இன்று 'பாதுகை' 'தண்ணீரும் கண்ணிரும்' எழுதிய ஜீவாவைக் காண முடியாது. மல்லிகை ஜீவாவைத்தான் பார்க்கிறோம். 'நிலவிலே பேசுவோம்' எழுதிய ரகுநாதனை இன்று பார்க்க முடியாது. செ.கதிர்காமநாதன் இளமையிலேயே போய்விட்டார். செ. யோகநாதன் செங்கை ஆழியான் போன்றோர் நிறைய எழுதிக்குவிக்கிறார்கள். இவர்களது ஆரம்பப் படைப்புகளில் இருந்த இலக்கிய உருவாக்கம் இன்றைய இவர்களது படைப்புகளில் இல்லை. யேசுராசா ஒருதொகுதிக்குப் பின்னர் எழுதியதாக இல்லை. சிலர் குறிப்பிடக் கூடிய படைப்பாளிகளாய் இருந்தும் தொடர்ச்சியாக எழுதுவதில்லை. எம்.எல்.எம் மன்சூர், 'சொர்க்கம்' தந்த பூரீதரன் கூட. இப்படியே கூறிக் கொண்டு
போகலாம். இது பின்னர் வந்த இளந்தலைமுறைக்கும்
கைமாறியுள்ளது போலவே படுகிறது. 'கோசலை', 'காலம் உனக்கொரு பாட்டெழுதும்' போன்ற படைப்புகளைத் தந்த ரஞ்சகுமாரைக் கூடஇன்று நாம் பார்க்க முடியாது. இவர்கள் நீண்ட
யோகம் எதிலும் மூழ்கியுள்ளார்களோ என்னவோ தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. சில குறிப்பிட்ட படைப்புகள்,
கடலும் கரையும் 138 J.Du

நான்
மு.பொ
நான்
மு.பொ.
ԼD5]:
நான்:
தொகுதிகள் மூலம் கணிப்புக்குரியவராக வந்து பலரது கவனத்தையும் பெற்று விட்டால் பின்னர் அவர் அச்சப்படும் சூழலுக்குள் அகப்பட்டு விடுகிறார் போலத்தான் தெரியுது. எங்கே தாம் முன்னர் எழுதிய படைப்புகளில் இருந்து குறைந்த தரப் படைப்புகள் எழுதிவிடுவோமோ என்ற பயத்துக்குள் விழுந்துகிடக்கிறார்கள் போலத்தான் தெரியுது. இதன் சரி பிழை ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இந்த மனநிலை கவலைக்குரியது. ஒரு படைப்பாளநண்பர் எனக்கு இதைத்தான் கூறினார்.
இந்த அச்சம் தமது சிருஷ்டி பற்றிய சுய ஆய்வு இன்மையாலேயே ஏற்படுகிறது. தொண்ணுறுகளில் இன்றைய இந்த வாழ்வியல் நெருடல்கள், நெருக்கடிககளை தமக்கே உரிய அனுபவத்தளங்களில் இருந்து படைப்பாக்கம் செய்பவர்களும் இல்லாமல் இல்லை. கவியுவன், பார்த்திபன், கலைச்செல்வன், ரவிவர்மன் என்று பலரைக் கூறலாம். இங்கு தலைமுறை இடைவெளிகளும் அவை தரும் வாழ்வியல் அனுபவங்களும் மாறுபடுவதும் மாறுபடுவதோடு அவை எவ்வாறு படைப்பியலைப் பாதிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குமேலே குறிப்பிட்டவர்களின் படைப்புகளைக் கூறலாம். சில எழுத்தாளர்கள் எப்போதோ நடந்து முடிந்த சாதாரண நிகழ்வுகளையும் தற்போதைய போர்க்குண, பதற்ற நிலையுடன் இணைந்து அதற்கோர் பெரிய புராணம் கொடுத்து வரலாற்று தகவல்களைத்திரித்து மோசமான படைப்புகளைத் தருகிறார்கள்.
உண்மைதான் செ. யோகநாதனின் 'நேற்றிருந்தோம் அந்த
வீட்டினிலே' என்ற நாவலை எம். ஏ. நுஃமான் அவர்கள் விமர்சிக்கையில் அத்தகைய ஒரு வரலாற்று போலித்தன்மையைத் தான் அந்நாவல் உருவாக்கியுள்ளதாக கூறியிருக்கிறார். இத்துடன் செங்கை ஆழியானின் 'குவேனி' நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக இவர்கள் இலக்கிய நேர்மையற்ற வரலாற்றை ஊறுபடுத்துகின்ற படைப்புகளை படைக்க ஆரம்பிக்கின்றனர் என்றுதான் கூறலாம். நீங்கள் சொல்வது போல் அவர்கள் பிரபல்யத்தையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திஇலக்கிய நேர்மையற்ற வரலாற்று
மோசடியைச் செய்து கொண்டிருந்தாலும், அபத்தமான
கதைகளைப் பண்ணிக் கொண்டிருந்தாலும் ஒப்பீட்டளவில்
தரமான எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்களின்
вLgh aацh 139 (p.Gulf

Page 75
மு.பொ.
படைப்புகளைவிட, இந்தப் பிரபலமானவர்களின் படைப்புகள் தான் மக்களிடம் அதிகம் சென்றடைகிறது என்று நினைக்கிறேன். இதனால் அவர்கள் தமக்கிருக்கும் இலக்கிய வியாபாரத்தை செய்து வருகின்றார்கள். அத்துடன் தரமான படைப்பாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் அழுத்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ படைப்புகளைப் படைக்காமல் விடுகின்றனர். அல்லது மிகக் குறைவாக படைக்கின்றனர். இதன் காரணமாகநல்ல படைப்புகளை படிக்கும் வாய்ப்பு ஈழத்து வாசகர்களுக்கு மிக அரிதாகவே கிடைக்கிறது. எனவே ஒரு வாசகனைத் தேர்ந்த வாசகனாய் மாற்றுவதில் எவ்வளவுதூரம் முன்னேறி இருக்கின்றோம் என்பது கேள்விக்கு உரிய ஒன்றாகவே இருக்கின்றது. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்குகையில் சிறுகதைத்துறையில் நாம் எங்கோ பின்னுக்குத்தான் நிற்கின்றோம் என்று தெளிவாகின்றது. இந்தப்பின்னடைவில் இருந்து மீள்வதற்குநாம் என்னென்ன வழிகளை கையாளலாம் என்பதை ஆராயவேண்டிய ஒரு கட்டாயத்தில் நிற்கிறோம். இந்த வழிமுறைகள் பற்றி உங்கள் கருத்தென்ன? இந்தப் பின்னடைவில் இருந்து மீள்வதென்பதில் விமர்சனப் போக்கு முன்னிலைப்படுகின்றது. இதுகாலவரை ஈழத்து விமர்சனப் போக்கு முழுத்திருப்தி, தரக்கூடியதாக தெரியவில்லை. விமர்சகன்தான் ஒரு படைப்பாளியை வழிப்படுத்துபவன் என்பார்கள். ஆனால் ஈழத்தில் அது எவ்வளவு தூரம் நேர்மையானதாகவும் இதயசுத்தியுடனும் செய்யப்பட்டிருக்கிறதென்பதும் ஆய்வுக்குட்பட வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. இதனால்தான் மு.த. தான் ஒரு படைப்பாளியாக இருந்தும் விமர்சனத்துள்புகவேண்டியநிலைக்குள் தள்ளப்பட்டார். அவர் எழுதிய விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிய பின்னரே முற்போக்கு எழுத்தாளர்களை மட்டுமே இலக்கியப் படைப்பாளிகள் எனப் போற்றப்பட்ட கோஷ்டி மயப்பட்ட போலி விமர்சனங்கள் தகர்க்கப்பட்டன. அவர் இறந்த பின்னர் மீண்டும் பாசிவந்துமூடி விட்டது போல் ஈழத்து விமர்சன உலகில் கோஷ்டி மனப்பான்மை காழ்ப்பு, சீரிய விமர்சனமின்மை திரும்பவும் தலைதூக்கியுள்ளன. செ. யோகநாதனின் அனுசரணையோடு வெளிவந்த 'வெள்ளி பாசரம்' , 'ஒரு கூடைக் கொழுந்து' போன்ற ஈழத்து எழுத்தாளர் சிறுகதைத் தொகுதிகளில் மு.த. போன்ற சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்
கடலும் கரையும் 14O (p.GLIT

Լ05/:
மு.பொ.
մ25/:
நான்:
மு.பொ
ஒதுக்கப்பட்டு, இலக்கிய நபுஞ்சகங்கள் இடம்பெற்றமைக்கும் காரணம் இன்னும் பழைய கோஷ்டி மனப்பான்மை நிலவுவதே அறுபதுக்கும் எழுபதுக்குள்ளும் வெளிவந்த ஈழத்தின் சிறந்த படைப்புகளாகக் கருதப்படக்கூடிய மு.தவின் 'கலைஞனின் தாகம் ' (முதல் பாகம்) 'உள்ளும் வெளியும் ' (குறுநாவல்) 'புதுக்குரல்கள் அண்டை வீடுகள்' (சிறுகதைகள்) 'போர்ப்பறை' (கவிதை) போன்றவை எந்தவித பிரஸ்தாபத் துக்கும் உள்ளடக்கப்படாமைக்குரிய காரணம் திரும்பவும் நமது விமர்சன உலகை வந்து கெளவியுள்ள வரட்சியே. இதனால்தான் 'காற்றுவழிக் கிராமம்' என்னும் தரமான கவிதை நூலை வெளியிட்ட கவிஞர் சு.வி. தமது கவிதைகள் விமர்சிக்கப்படாமை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நமது விமர்சனப் போக்கே விமர்சனத்துக்குட் படுத்தப்பட வேண்டியதொருநிலைதான் தோன்றியுள்ளது. இதுவும் புதிதல்ல. இதையும் ஏற்கனவே மு.த. தனது 'விமர்சக விக்கிரங்கள்' மூலம் செய்துதான் உள்ளார். இதை இன்றைய காலத்துக்கேற்ப உங்களைப் போன்ற இளந் தலைமுறையினர் இதய சுத்தியுடன் செய்ய வேண்டும். சிறுகதை இலக்கியம் குறித்தோர் வரன்முறையான ஆய்வை நோக்கி சகல தர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் உள்ளடக்கிய பன்முகப்பாங்கிலான கலந்துரையாடல்கள் உருவாக்கப்பட வேண்டும் , அதோடு இங்குள்ள படைப்பாளிகளில் அதிகம் பேர் தாம் படைப்பதற்கும் தம் படைப்புகளைப் பற்றி மற்றவர் கருத்துக்களை அறிவதற்கும் காட்டும் ஆவலில் ஒருபகுதியைத்தானும் மற்றவர்களின் நூல்களைப் படிப்பதில் காட்டுவதில்லை. வெளிவரும் படைப்புகள் குறித்து அறிமுகங்கள் கூட இவர்கள் செய்வதில்லை. அது தங்கள் பணியல்ல என்றுதான் இவர்கள் நினைக்கிறார்கள் போலும், தரமான சிறு சஞ்சிகைககளைக் கூட பலரின் கவனத்திற்கு கொண்டு வரும் தேவையுண்டு. இவையெல்லாம் குறிப்பிடப்படுமளவு எமது தரப்பிலிருந்து செய்யப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்தவகையில் அந்தனிஜீவாதினகரனில் தொடராக எழுதிவரும் பார்த்ததும் படித்ததும் கேட்டதும் என்னும் பத்தி காத்திரமான பங்களிப்பைச் செய்து வருகின்றது என்பது என்கருத்து. உண்மை. அதுமட்டுமல்ல. "சரிநிகரில்' 'வரவு' என்ற பகுதியும், இந்த விடயத்தில் கணிசமான பங்களிப்பைச் செய்கின்றது.
SLS 3DVLüh 141 (y). Bu

Page 76
மது:
நான்
ஆனால் இவை மட்டும் போதாது. இன்னும் பல காரணிகள் இலக்கிய வளர்ச்சியில் தாக்கத்தை செலுத்துகின்றன. அவற்றில் முக்கியமான புகலிட இலக்கியமும் மொழி பெயர்ப்பும் இலக்கியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகலிட இலக்கியம் என்பது எமது இலக்கியப் பரப்பில் புதிய அனுபவங்களையும் படைப்புகளையும் ஒருவர் தான் புகுந்த நாட்டுச் சூழலில் எதிர்கொண்டு குழைத்து தருகிறார். புகலிடம் இலக்கியம் குறித்து நமது பார்வையை விரிக்கும் வகையில் முழுமையாக அவை கிடைக்கக் கூடியதாய் இல்லை. அ.முத்துலிங்கத்தின் 'திகட சக்கரம்' அண்மையில் படிக்கக் கிடைத்தது. இது அ.முத்துலிங்கத்தின் மனப்பதிவுகளாக மட்டுமே இருந்தது. படைப்பியல் ஆக்கமாக அமையவில்லை என்றே கூறலாம். ஆயினும் அவர் புதிய அனுபவங்களை இங்கு கொண்டுவர முற்படுகிறார் என்பது மட்டும் உண்மை. அடுத்து மொழி பெயர்ப்பு இலக்கியம்: இவை எப்பொழுது வாசகனைச் சென்றடையுமென்றால், மொழி பெயர்ப்பாளர் வெறுமனே ஒரு படைப்பை ஒரு மொழியினிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்வதாய் மட்டும் இருக்காது, தன்னை ஒரு படைப்பாளியாய் கருதி, அப்படைப்பை தனக்குள் முழுமையாக உள்வாங்கி பின் தனது மொழியில் ஒரு படைப்பாகக் கொண்டு வரும்போதே, இன்று தமிழில் நிறைய மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. இவை குறித்த முழுமையான அறிமுகங்கள் எம் மத்தியில் இல்லை. எவ்வாறாயினும் ஒரு தேர்ந்த வாசகன் என்பவன் பன்முகப்பாங்கிலான படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் போது அவர் ஒரு தேர்ந்த வாசகராக வரும் வாய்ப்புகள் அதிகம். ஒரு படைப்பாளியுங் கூட ஒரு தேர்ந்த வாசகனாக இருக்க வேண்டும். இறுதியாக இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? ஈழத்து இலக்கிய உலகில் பல்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்தம் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளனர். இவற்றை வரலாற்றுரீதியில் பின்னோக்கிப் பார்க்கும் போது சரி பிழைகள் தென்படலாம். எவ்வாறாயினும் அந்த குறித்த காலப்பகுதியில் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை நாம் பறித்து விட முடியாது. சமூகம் வளர்ச்சிக்குரியது. ஒவ்வொரு காலத்தின் வளர்ச்சிஇப்படி இன்னொரு காலத்தின் வரலாறாக மாறுகிறது. நாம், அதனால் அந்த வளர்ச்சிப் படியின்தளத்தில் நின்றுதான் ஒவ்வொன்றையும் பார்க்கிறோம். அதுவே சகலதையும் நடுநிலைமையில் வைத்து
SL-ih 560 yuqú 142 up. Our

நான்
மு.பொ.
பரிசீலிப்பதற்குரிய நிலையாகவும் மாறுகிறது. இத் தோடு இன்னொன்றையும் கூறவேண்டும். இதில் குறிப்பிட்ட எழுத்தாளர்களை வைத்துக் கொண்டு இவர்கள் மட்டுந்தான்நமது இலக்கியத்துக்கு தொண்டாற்றியவர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் அனேக தரமானவர்களின் பேர் விடுபட்டுப் போயிருக்கலாம். இன்றைய சூழலால் எம்மோடு தொடர்பற்றுப் போன மட்டக்களப்பு, யாழ், மலையகப்பிரதேச கலைஞர்கள் எழுத்தாளர்கள் பலரையும் இதில் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். மேலும் நாம் இதில் முன்வைத்த கருத்துக்களும் கூட முடிந்த முடிவானவையல்ல. இக்கருத்துக்களை ஒட்டியும் வெட்டியும் ஓர்விரிவான இன்னோர் தொடர் வளர்ச்சிக்குரிய சிந்தனையை உருவாக்குவதே ஆரோக்கியமானதும் எமது நோக்கமும் ஆகும். ஆம் நாம் வேண்டுவது உரையாடல் தொடரவே. (மு.பொ. விடம்) நீங்கள் உங்கள் படைப்புகள் பற்றியும் இலக்கியம் பற்றியும் என்ன கூறுகிறீர்கள்? கலை இலக்கியம் பற்றி சொல்வதானால் இவற்றின் உருவ உள்ளடங்கங்கள் பாரிய மாற்றத்துக்குள்ளாகப் போகின்றன. அதற்குக் காரணம் மொழியில் ஏற்படப் போகும் மாற்றம். இந்த மொழியில் ஏற்படப் போகும் மாற்றம் என்பது ஒவ்வோர் கலைஞனும் எதிர்கால மனித வளர்ச்சி எடுக்கப் போகும் மாற்றம் பற்றிக் கொண்டுள்ள தரிசனத்தைப் பொறுத்தே துரிதமடையும். மேலும் இன்றைய சமகால உலக இலக்கியப் போக்குகள் பற்றிய பிரக்ஞையும் எமக்கு இருக்க வேண்டும். இன்று தமிழில் குறிப்பிடும் வகையில் லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க இலக்கியம் மொழிபெயர்க்கப்பட்டு எம்மவர்மத்தியில் ஊடாட்டம் கொண்டு வருவதையும் அவதானிக்கலாம். இவை செழுமையான சிந்தனைப் படைப்பாக்கங்கள் வெளிவருவதற்கு உதவலாம். ஆகவே இவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஏதும் புதிய சாதனைகள் புரிய முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். எனது படைப்புகள் தொடர்பாகச் சொல்வதானால் நான் இப்போ இன்றுள்ள கவிதை, கதை, நாவல், நாடகம், கட்டுரை என்னும் வழமையான ஊடகங்களை உடைத்து எனது கலை நோக்கை வெளிக் கொணர முயல் பவன். இச்சிறுகதைத் தொகுதியே பலகால உறை போடலுக்குப் பின்னர் வெளிவருகிறது. இத்தொகுதியில் உள்ள ஒரு கதையைத் தவிர ஏனையவை பத்து வருடங்களுக்கும் அதற்கும் முற்பட்டவை. இதற்கு முன்னர் எனது
aiLigth &6nJuli 143 (p.0ur

Page 77
கவிதைத் தொகுதி (அகவெளிச்சமிக்ஞைகள்) 15 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டு தொலைக்கப்பட்டது. அதேபோல் எனது கட்டுரைத் தொகுதி (யதார்த்தமும் ஆத்மார்த்தமும்) பத்து வருடங்களாக பிரசுராலயத்தில் தூங்கிவிட்டு 1992இல் வெளிவந்தது. மீண்டும் ஒரு கவிதைத் தொகுதி (காலிலீலை) இரண்டு வருடமாக பிரசுராலயத்தில் தூங்குகிறது. இச் சிறுகதைத் தொகுதி இரண்டு வருடமாக ஓர் பிரசுராலயத்தில் தூங்குவதைக் கண்ட எனது இளைய தலைமுறைக்குரிய நண்பர்கள் இதை வெளியிட முன்வந்தனர். அவர்களின் இப்பணிக்கு நான் என்றும் தலைசாய்ப்பும் நன்றியும் உடையவன். இதன் மூலம் இளந்தலைமுறையினருடன் பழகும் வாய்ப்பும் கருத்துக் கலப்பும் ஏற்பட வாய்ப்பேற்பட்டது. at 607 g5! பார்வைக்கும் அவர்களுடையதற்குமிடையே பற்பல முரண்பாடுகள் பொருந்தாமைகள் இருந்தாலும் கலைச் சிருஷ்டி என்னும் பேர் இயக்கத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் வண்ணந்தீட்டும் பரஸ்பர பங்களிப்பாளராக ஐக்கியமுறுகிறோம்; ஆனந்திக்கிறோம்.
இவ்விதமாய் எங்கள் கலந்துரையாடல் நீண்டு முற்றுப் பெற்றது.
மு.பொவிடமும், மதுவிடமும் விடைபெற்றுக் கொண்டு வரும் போதுமுடிவாக என் மனதில் தோன்றியதெல்லாம் இதுதான். நமது படைப்பு ஆற்றல் முன்பை விட வெகுவாக முன்னேறி இருந்தாலும் புகலிட இலக்கியத்தின் மூலமும் இங்குள்ள சில காத்திரமான படைப்பாளிகளின் மூலமாகவும் நாளைய இலக்கிய உலகில் நம்பிக்கை தரக்கூடிய நவீன இலக்கியத்தின் ஒருவெட்டு முகம் இப்போ தோற்றம் கொடுத்தாலும் பொதுவாக நாம் சிறுகதை இலக்கியத்துறையில் வெகு தொலைவில்தான்நிற்கின்றோம். ஆக அதை வெகு அருகில் அழைத்து வருவது எப்போது? எங்ங்னம்? யார் மூலம்?
திருக்கோவில் கவியுவன் Ꭴ5/05/9Ꮾ
கடலும் கரையும் 144 gp.Gur