கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 1997.03

Page 1
தூக்கியெறியப்பட oliga spoir பிரச
 


Page 2

பண்
தொகுதி I. இல, 1, 1997 மார்ச்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
மட்டக்களப்பு.

Page 3
பெண்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின்
காலாண்டு சஞ்சிகை. 27 A, லேடி மனிங் ட்ரைவ்,
மட்டக்களப்பு.
The Woman - Quarterly Journal.
Published by Suriya Women's Development Centre,
27 A, Lady Manning Drive, Battical oa.
Gàlfuuri : அம்மன்கிளி முருகதாஸ்.
அட்டை ஓவியம் : ஜெ. வாசுகி. Cover Design : J. Vasuki.
அட்டை அச்சு: ரெக்னோ பிரிண்டர்ஸ் , தெகிவளை.
அச்சகம் :
சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்,
விலை : 50/-
மட்டக்களப்பு.

உங்களுடன் ஒரு நிமிடம்.
குரியா பெண்கள் அபிவிருத்தி நிலை யத்தின் வெளியீடான "பெண் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் வெளிவருகிறது.
பெண்களை அவர்களது இரண்டாம் பட்ச நிலையினை உணரப்பண்ணி விழிப் படைவித்தல், சொந்தப் பொருளாதாரத்தில் இயங்கவைத்தல், தமக்கு எதிராக இழைக்கப் படும் குடும்ப, அரசியல், சமூக வன்முறை களை இனங்கண்டு எழுச்சி பெற வைத்தல், பெண் அடிமைத்தனத்தின் சகல தளைகளி லிருந்தும் விடுபடச் செய்தல், பாரம்பரிய மற்ற தொழில்களில் ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பத் துறைகளில் ஊக்குவித்தல், சுயசிந்தனை உள்ளவர்களாக ஆக்கிச் செயற் படச் செய்தல், சட்ட உதவி என்பன சூரியா வின் நோக்கங்களாகும்.
பெண்கள் அரசியல், சமூக, குடும்ப ரீதியாக அடக்கப்படுகின்றார்கள் எ ன் பது

Page 4
சகலருக்கும் தெரிந்த (?) ஒன்றாயினும் அவர் களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு அறிவித்தல் முக்கியமான பணியாகும். அந்த வகையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வன்முறைகள் பெண்கள் அடக்குமுறை யின் பிரதான வடிவங்களாகின்றன. இந்த வன்முறைபற்றிய பயமே பெண்களைக் கூட் டுக்குள் அடங்கச்செய்கிறது. எனவே இந்த வன்முறைகள்பற்றிய கட்டுரைகள் இங்கு வெளியிடப்படுகின்றன. அதன் மூலம் இவ் வன்முறைகள் இனங்காட்டப்படுகின்றன.
பெண்கள் கூட்டைவிட்டு வெளியே வரவும், புதிய சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ளவும் உதவக்கூடிய ஆக்கங்களும் உங் களுக்குத் தரப்படுகின்றன.
இச்சஞ்சிகைக்குப் பொருத்தமான ஆக் கங்கள் கோரப்படுகின்றன. தகுதியானவை பிரசுரித்தற்கு உரியவை ஆகும்.
இனி, நீங்கள் தொடரலாம்.
அம்மன்கிளி முருகதாஸ்.

அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு
ஆங்கிலத்தில் : ருவானி ரணசிங்க தமிழில் : வெ. அழகரெத்தினம்
* பாலியல் தொந்தரவு' எனும் பதமானது தெளிவான வரை விலக்கணம் இல்லாமல் எடுத்த வீச்சில் சாதாரணமான ஒரு பதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாக்கம் புரியப்படாத தால் இதன் அர்த்தத்தைப் புரிவதும் சிரமம். மறுபுறத்தில் இது ‘மேற்கத்தையமயப்படுத்தப்பட்டது, அல்லது இறக்குமதி யானது, எங்கள் கலாசாரத்துக்குப் பொருத்தமற்றது” என அடிக்கடி நிராகரிக்கப்படுகிறது. இச்சொல் வெளிநாட்டி லிருந்து வந்ததாயிருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாகப் பாலியல் தெரந்தரவு எம்மத்தியில் காணப்படுவதாகும். திறந்த வாரியாக இன்னமும் கலந்தாலோசிக்கப்படாத ஒன்றை இருப்பற்றது எனத் தீர்மானிக்கமுடியாது.
போர் அழிவுள்ள ஒரு நாட்டில் மனித உரிமைகளை மீறு கின்ற முரட்டுத்தனத் தாக்குதல் உள்ளிட்ட பாரிய பிரச்சினை களும், அபாயகரமான செயல்களும் இடம்பெறுகின்றன. இந்நிலை யில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சினைகள்பற்றிக் குறைந் தளவு கவனமே செலுத்தப்படுகின்றது. பாலியல் தொந்தரவு பெண்களுக்கெதிரான பலாத்காரத்தின் ஒரு வடிவம் எனப் பரந் தளவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு சமூகத்தின் பிரச்சினை என்பதை விடத் தனிநபர் பிரச் சினை என்றே நோக்கப்படுகிறது. பாலியல் தொந்தரவுக்கான இவ்வகையான அலட்சியம் பொதுமக்களின் ஒருவரின் பின்வரும் கூற்றில் வெளிப்பட்டது. "மக்களுக்கு அவர்களுக்கு அடுத்தநேர உணவு எங்கிருந்து கிடைக்கும் எனத் தெரியாத ஒரு நாட்டில்
- I -

Page 5
இதன் பெறுமானமும் முக்கியத்துவமும் என்ன' என்று கேட்டார். இந்த விமர்சனத்தின் பொருத்தப்பாட்டைக் கவனியுங்கள். எது துன்பத்தைக் கொண்டிருக்கிறது? எது கொண்டிருக்கவில்லை? என் பதைத் தீர்மானிக்கும் நிலையில் யாராவது உள்ளார்களா? நிச்சய மாகப் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை இலகுவாகத் தள்ளிவிடமுடியாது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் பாலியல் தொந்தரவின் பல வகையான வடிவங்களையும், அதன் விளைவுகளையும் பரீட்சிப்ப தாய் உள்ளது. இது கொழும்பில் உள்ள அரசாங்க, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் சில ஆண்களுடனும் பெண்களுட னும் செய்த கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு எழு தப்பட்டதாகும். இது 'அலுவலக நிலைமை" என்பதன் மீதே செலுத்துவதாகும். பாலியல் தொந்தரவுக்குள்ளான, வெளியில் சொல்லமுடியாத பெண்கள், சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் பெண்கள், வீட்டுப் பணிப்பெண்கள் ஆகியோரது பிரச் சினைகள் தற்சமயம் இக் கட்டு ரை யில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை.
பாலியல் தொந்தரவு என்றால் என்ன ?
சமமற்ற அதிகார உறவு நிலையில் பாலியல் தேவையினைப் பூர்த்திசெய்யும் முகமாக நிர்ப்பந்தமாக மேற்கொள்ளப்படும் செயல் என்பது இதற்குரிய பொதுவான வரைவிலக்கணமாக உள்ளது. எவ்வாறாயினும் ஒரு அதிக நடைமுறைசார் மட்டத்தில் இத் தொந்தரவு என்ன என்பது பற்றி ஆண்களும் பெண்களும் வித்தி யாசமான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆண்களுக்குக் கோப மில்லாததாகவும், புகழக்கூடியதாகவும் இருக்கும் ஒரு விடயம் பெண்களுக்கு எதிர்க்கக்கூடியதொன்றாக உள்ளது. புகழ்தல், ஏழ் மையாக நோக்குதல், பாலுறவு உள்நோக்குடனான பார்வை, அல்லது அவர்களுடைய உடையை, தோற்றத்தை விமர்சித்தல் முதலியனமூலம் ஆண்கள் நெருக்கமாவதைப் பெண்கள் உணர்கின் றனர். இவையும்கூடத் தொந் தரவேயாகும். பாலியல் தொந்தரவு சமூகத்தில் நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் தொந்தரவு என்பது விரும்பப்படாத உடல்சார் தொடர்புடன் மட்டுமே ஆரம்பிக்கிறது என்று கருதுகின்றனர். இது நாம் பேட்டி கண்ட வர் களின் கருத்துகளிலிருந்து தெரியவருவதாகும். ஒரு தாக்குதல் அம்சம் இருந்தால் ஒழிய இது பலாத்காரமாகக் கரு தப்படவில்லை.
- 2 -

எவ்வாறெனினும் சட்டம் சார் சிந்தனையின் தற்கால நிலை உளரீதியான தொந்தரவையும் தாக்குதலின் ஒரு வடிவமாகவே வரையறுக்கின்றது. அத்துடன் இத்தாக்குதல் அதனைப்பற்றிய பயத்திற்கு ஒருவரை உள்ளாக்குவதையும் குறிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தினால் 1993 பங்குனி மாதம் 3ஆந் திகதி அங்கீகரிக் கப்பட்ட பெண்கள் சாசனத்தின் 16வது பிரிவானது பெண்களுடன் சம்பந்தமுடைய ஏதாவது தடையுடன் பாதிக்கப்பட்டவரின் பதவி யைக் குறைக்கச் செய்கிற அல்லது தாழ்வுச் சிக்கல் உணர்வை உருவாக்குகிற விடயத்தைக் கவனத்தில் கொள்கிறது. அத்துடன் ஒரு பெண்ணை அவளது தொழிலைப் பிழையாகச் செய்வதற்கு வற்புறுத்துவதன்மூலமும், அவளது வேலையை ராஜினாமா செய்வ தற்கு வற்புறுத்துவதன்மூலமும், ஆக்கினை செய்பவளுக்குப் பொரு ளாதார நலனைக் கொடுக்கின்ற விடயங்களிலும் இது கவனம் செலுத்துகிறது.
பாலியல் தொந்தரவின் பிரதான பிரச்சினைகளுள் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளது அதிகாரம் ஆகும் காமமோ, பாலுணர்வோ அல்ல. பகைமையையும், கோபமூட்டுகின்ற வேலைச் சூழலையும் ஏற்படுத்துவதன்மூலம் 'பெண்களை அவர்களுடைய இடத்தில்’’ வைப்பதற்கான ஒரு வழியாக இது உள்ளது. இந்த வகை யான தொந்தரவு போட்டியுடனேயே உயர்கிறது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் வங்கி ஒன்றின் ஒரு பிரிவிலிருந்து தனது வேலையை ராஜி னாமா செய்தாள். இது பெண்களுக்கே உரித்தான இடமாகக் கருதப்பட்டது. இவள் வேறொரு வங்கிக்கு மாற்றம் பெற்றுக் குறைந்த தரத்தில் தொழில் பார்த்து குறைந்த சம்பளமும் பெற் றாள். அத்துடன் மேற்கண்ட தொந்தரவு முதலிய மேலதிக பிரச் சினை உள்ள அனுபவம் இல்லாமல் இருந்தாள். தொந்தரவு செய் பவர் அதிகார நிலையில் இருக்கும்போது பாதிக்கப்படுபவர் வழ மையாக அவருக்குக் குறைந்த பதவியில் இருப்பார். பாதிக்கப் படுபவர்கள் அவர்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காகவும் அவர்களுடைய நேரடி அதிகாரியைச் சார்ந்துள்ளனர். இது பலாத் காரத்தை உள்ளடக்காதபோதும் பொருளாதார தங்கியிருப்பு அதிக பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்பட உதவுகின் றது. இந்தச் சமனற்ற உறவு அடிக்கடி தீய நோக்குக்காகக் கூடுத லாக உபயோகிக்கப்படுகிறது. தட்டச்சாளராக இருந்த ஒரு பெண் அவளுடைய தொழில் வழங்குனரின் விருப்பத்தினை நிராகரித்த தன் விளைவாக அவளது சம்பளத்தில் அரைவாசி குறைக்கப்பட் டதை ஒரு சட்டத்தரணி விபரித்தார். பின்னர் அவளது வேலை சீர்கெட்டதுடன் இறுதியாக அவளை வேலை நீக்கம் செய்தனர் என்பதும் அறியப்பட்டது. பாலியல் குற்றம் என்பது பதவி உயர்வு,
سسسس 3 س--

Page 6
பரிசு என்பவற்றைச் சேர்க்கும் ஒன்றாகும். ஒருவரது பாலியல் விருப்பங்களுக்கு உடன்பட்டால் பரிசுகள், பதவி உயர்வு என்பன கிடைக்கும். இது அதிகார வேறுபாட்டின் இன்னுமொரு விளை வாகும். இதுகூட வேறுபாடு காணலின் ஒரு வடிவமாகும். ஏனெ னில் தண்டிக்கப்படவேண்டியவர்களை இவர்கள் குற்றம்சாட்டுவ 8 ಟಿ ಇರು Qು.
யார் தொந்தரவு செய்கிறார்கள்?
ஆண்கள் பாலியல் ரீதியாகத் தொந் தரவு செய்யப்படுகிறார் களா ? ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் உள்ள ஆண் பொறுப் பதிகாரி தனக்குக் கீழுள்ள இளம் ஆண்களைத் தொந்தரவு செய்வ தில் பிரபல்யமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆண்கள் பெண்களால் தொந்தரவு செய்ய ப் படுகிறார் க ளா ? அவ்வாறு இல்லை என எங்களால் அனுமானிக்கமுடியாது. எவ்வாறெனினும் பெண்களை விட ஆண்களே அதிகம் ஈடுபடுகின்றனர் எனக் கூறப் படுகிறது. விசேடமாகப் பெண்களால் பெண்கள் தொந் தரவு செய்யய் படுவதை விடவும் குறைவான அளவு ஆண்களே தொந் தரவு செய்யப்படுகின்றனர் எனக் கூறுவது இலகுவாகும்.
வியாபாரம், தொழில், கல்வித்துறை முதலிய எல்லாவகை யான தொழில்களிலும் தொந்தரவு செய்பவர்கள் உள்ளனர் என் பது தெளிவாகின்றது. இது மேலதிகாரிக்கும் உதவியாளருக்கும் இடையில் மட்டும் ஏற்படவில்லை. விளம்பர கொம்பனியில் வேலை செய்யும் ஒரு பெண் அவளுடைய வாடிக்கையாளராலும், சக வேலையாட்களாலும் தொந் தரவு செய்யப்படுகின்றாள். தொந் தரவு செய்பவர்களில் பலர் திருமணம் செய்தவர்களாகவும், மரபு ரீதியான குடும்ப வாழ்க்கையும் கொண்டவர்களாக உள்ளனர். நெருங்கிய நண்பர் ஒருவரால் தொந் தரவு செய்யப்பட்ட ஒருவர் ஒரு உண்மையினால் அதிர்ச்சியடைந்தார். அதாவது பாதுகாப்ப தற்கும், அன்பு செலுத்துவதற்கும் உள்ள ஒருவரது தொடர்பால் தொந்தரவு ஏற்பட்டதாக உணரும்போது இவ்வதிர்ச்சி உண்டா கின்றது.
** எவ்வாறாயினும் ஆண்களிடமிருந்து வரும்போது ஏற்படும் துன்பமும், அதனை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கவேண்டியிருப் பதும் உங்களுக்குத் தெரியும்" என்னிடம் பேசிய ஒரு பெண் பதி லளித்தாள். தொந்தரவு செய்பவர்களுடன் இருக்கும் தொடர்பை முறிக்கமுடியாமல் இருக்கும் இயலாமையும், அவர்களுடன் நெருங்கி யிருந்து வேலை செய்யவேண்டிய அவசியமும் பின்னர் பாதிக்கப் படும் பெண்களுக்கு ஒரு அழுத்தமாகவும், துன்புறுத்தலாகவும் இருக்கின்றது.
- 4

இதனைப் பெண்கள் கையாள்வது எவ்வாறு?
பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களிற் சிலர் தம் மைத் தாமே குற்றம்சாட்டுகின்றனர். அவர்களுடைய சொந்த நடத்தையும், உடையும் இதற்குக் காரணங்கள் எனச் சிந்திக்கின் றனர். பலர் இதனைப் பிழையென நிராகரிப்பதை விட உடன் படுவதுடன் அங்கீகரிக்கவும் செய்கின்றனர். மற்றவர்கள் தொழிலை மாற்றுவதன்மூலம் அல்லது குறைந்தளவு போட்டியுள்ள பகுதிக்கு மாறுவதன்மூலம் இதனைத் தவிர்க்கின்றனர், அதிகமானோர் சகித் துக்கொள்கின்றனர். சிலர் எதிர்த்துத் தொந்தரவு வரவேற்கமுடி யாது என்ற தெளிவைப் பெறுகின்றனர். இருந்தும் மிகக் குறை வானோரே இதைப்பற்றி முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறு வெளியே கூறாமலிருப்பது ஆண்களின் கருத்தை இப்படி மாற்றி யுள்ளது. அதாவது இவ்வாறு வெளியே பாதிக்கப்பட்டவரும் இத னால் இன்பமடைவதாலும், மறைமுகமாக விரும்புவதாலுமே இவை நடைபெறுகின்றன என்பதாகும். பெண்கள் ஆண்களுடைய பாலியல் நோக்கை ரகசியமாக விரும்புகின்றனர் என்ற பொய் யான கருத்தை நிலைநிறுத்தவே பெண்கள் இதுபற்றி வெளியே தெரிவிக்காமலிருப்பது உதவுகின்றது. எனினும் பெரும்பாலான தொந்தரவுக்குள்ளான பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக, கோபப் படுவதாக, குறைத்து மதிப்பிடப்படுவதாக, தரக்குறைவாக உணர் கின்றனர் என்னும் உண்மையை மறுக்கமுடியாது.
அவ்வாறாயின் ஏன் சில பெண்கள் மட்டும் முன்னே வந்து பாலியல் தொந்தரவுக்கு எதிராக முறையாகக் குற்றச்சாட்டைச் செய்யவேண்டும்? ஏனையோர் ஏன் இதுபற்றி வெளியில் தெரி விப்பதில்லை ?
அந்தக் காரணங்கள் வருமாறு :
1. தமது தொழில்கள் இழக்கப்பட்டுவிடும் என்ற பயம்.
2. தொடர்ச்சியான தொந்தரவு அல்லது பழிக்குப்பழி வாங்கு தல்பற்றிய பயம். தொந்தரவு செய்யும் ஆண் தான் நல்ல li பெயரை எடுப்பதற்காகப் பெண்ணைத் தூற்றி அவளது
கடமையிலிருந்து நீக்க முயலல்.
3. களங்கப்படுத்தப்படுவது பற்றிய பயம். தொந்தரவு செய் தல் அடிக்கடி நல்ல நகைச்சுவைக்குரிய சீண்டுதல் என்ற வடிவத்தைப் பெறுகின்றன. இது தொந்தரவினை அற்ப மான செயலாக்குவது, அதனை நிலைத்து வைத்திருக்கக்
- 5 -

Page 7
கூடிய சிறந்த வழியாகும். எனவே இதனைத் தாங்கள் எதிர்த்தால் கட்டுப்பெட்டிகள், நரம்புத்தளர்ச்சியுடையவர், அசாதாரண நிலையுடையவர் எனும் முத்திரை குத்தப்படும் எனப் பெண்கள் சிலர் பயப்படுகின்றனர். தொந்தரவுக்குட் பட்டவர் தொந்தரவு செய்த வரை விட அவரது நண்பர்க ளாலேயே தவறாகக் கணிக்கப்படுகின்றனர். குற்றம் சாட் , டுபவர் குற்றம் சாட்டப்பட்ட நிலைக்காளாகிறார். எனவே பல பெண்கள் தாம் இவ்வாறான ஆழமான ஆய்விற்குரிய விடயமாகுவதை விட அமைதியாக இருந்து வருந்துவதைத் தெரிவு செய்கின்றனர்.
நம்பப்படாமல் இருப்பதுபற்றிய பயம். உதாரணமாக முன் னர் காட்டப்பட்ட வழக்கில், தொழில் வழங்கியவர் தட் டெழுத்தாளரின் பெற்றோருக்கு அவளுடைய தொழில் சார்ந்த குறைவான, பொறுப்பின்மை காரணமாக அவளை வேலையிலிருந்து நீக்குவதாக விளக்கிக் கடிதம் எழுதினார். அவர்கள் அவரையே நம்பினர், அவர்களுடைய மகளை யல்ல. இது தொந்தரவினை நிரூபிப்பதில் உள்ள சிக்கலை எடுத்துக்காட்டுகின்றது. இதுபோன்றே கற்பழிப்பு வழக்கு களிலும் நிரூபணத்திற்குரிய அனைத்துச் சுமைகளும் பாதிக் கப்பட்டவர் மேலேயே விழுகின்றது. வழமையாக அங்கே சாட்சிகள் இருப்பதில்லை. அவ்வாறு இருந்து விட் டா ல் பொருளாதார ரீதியான தங்கியிருப்பு தாக்கப்பட்ட வருடன் இணைந்து ஆதரவளிப்பதிலிருந்து அவர்களை நிறுத்திவிடும்.
குற்றப்படுத்தப்படுதல் பற்றிய ப்யம். பல பெண்கள் 60 لانگ[ வலகத்தில் பெற்ற பாலியல் தொந் தரவுபற்றி அவர்களின் கணவர்களிடமோ அல்லது குடும் பங்களிலோ சொல்வ. தில்லை. ஏனெனில் அவர்களின் நடத்தையாலேயே இது நேர்ந்தது எனக் குற்றம்சாட்டப்பட்டுவிடுவார்கள் எனும் பயமே இதற்குக் காரணமாகும். இதில் தொந்தரவு இடம் பெறுவதற்குத் தூண்டுதல் எனும் கருத்து பிரபல்யமான ஒன்றாகும். இவ்விடயம் திரைப்படங்களிலும், தொலைக் காட்சி நாடகங்களிலும் வெளிக்கொணரப்படுகின்றது. உதா ரணமாக அவற்றில் "மற்ற ""ப் பெண்களுக்கு உரியதெனக் கணிக்கப்பட்டிருப்பதும், ஆத்திரமூட்டக்கூடியதுமான உடை யினை ஒருவரது செயலாளர் அணிந்திருப்பார். மாறாக அவரது மனைவி வீட்டில் கடமையுணர்வுடையதாகவும், பழமை பேணுவதாகவும் உள்ள உடையணிந்திருப்பார். இந்தச் கலாசார ஐதீகம் கண்மூடித்தனமான தொந்தரவு
س- 6 كس

இடம்பெறுவதற்காகத் தொந்தரவுக்குட்படுபவரைக் குற்றப்
படுத்துகின்றது. இது கண்மூடித்தனமான மேலாதிக்கம் ஆழ
மாக வேரூன்றியதன் விளைவாகும். உதாரணமாக 23-03-1994
அன்றைய ஐலண்ட் பத்திரிகைக்கு திரு. லயனல் ஜயசிங்க
என்பவரால் அனுப்பப்பட்ட பாலியல் தொந்தரவுபற்றிய கடிதத்தை எடுப்போம்.
மனித இனத்தில் பெண் இனத்தினர் தொந்தரவு செய்யப் படுவதற்குப் பிறக்கின்றனர். பெண்கள் வழிதவறச்செய்யக் கூடிய உடையணியும்போது அவர்களைப் பார்க்கும் வண்ணம் அழைக்கின்றனர். பெண்களுக்குக் காதலையும் அன்பையும் கொடுப்பதற்காகவும், அவர்கள் அவர்களின் அழகினால் எவ்வளவு தவறான வழிக்கு இட்டுச்செல்கின்றனர் என்று கூறும்போதும் ஆண்கள் கண்டிக்கப்படமுடியாது. முஸ்லீம் பெண்களை வேலை செய்யும் இடங்களில் அவர்கள் உடலின் டாகங்களைத் தவறான வழியில் செலுத்தக்கூடிய அளவு காட்டுவதற்கு அனுமதிப்பதில்லை. இதனால் உயிரியல்சார் தொல்லை ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பதுமில்லை. அதன் காரணத்தால் சிலவேலைகளில் இஸ்லாமிய வாழ்க் கைப் பாணியில் பாலியல் தொந்தரவு ஒரு பிரச்சனையாக இல்லை. பெண்கள் ஒழுக்கமான உடை உடுக்கவேண்டிய துடன் மேலதிகாரிகளுக்கு மரியாதையாகவும் இருக்கவேண் டும். பெண்களின் உடையும் செயலும் கூடாத வழிக்குச் செலுத்துமளவிற்கு இருக்கின்றபோது தொந்தரவு என்று சொல்லப்படுகின்ற எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பிக்கின் றன.
இந்த உதவக்கூடிய பங்களிப்பு ஒரு மிகச் சாதாரணமான உதாரணமாக இருக்கலாம். ஆனால் பிரச்சனையை உருவாக்கு கின்றதும், சிக்கலாக்குகின்றதுமான ஒரு பக்கச்சார்புடைய சமூக நோக்குகள் பற்றிய குறிப்புக்களை இது தருகின்றது. மேலே பட் டியல் செய்யப்பட்ட பயங்கள் பெரும்பாலும் எப்பொழுதும் உண்மைத்தன்மையில் நிச்சயிக்கப்பட்டதாகும்.
சட்டரீதியான நோக்கு :
சட்டத்தில் உதவி நாடுதல்பற்றிய அறிவு இல்லாமலிருத்தல் பெண்களைச் சிலவேளைகளில் பாலியல் தொந்தரவுக்கெதிராக
முறையான முறைப்பாடு செய்வதிலிருந்து தடுக்கின்றது.
- 7

Page 8
பரிகாரம் தேடுகின்ற பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?
தற்கால நிலையில் மொத்தத்தில் வழக்கத்தில் இல்லாத எண் ணக்கருக்களைப்பற்றியே இலங்கையின் பீனல் கோவை (Penal code) பேசுகிறது. "யாராவது ஒருவர் எந்தவொரு பெண்ணை யாவது கொடுமைப்படுத்துவதற்கு முரட்டுத்தனமாகத் தாக்கி னால் அல்லது பலத்தைப் பிரயோகித்தால் அல்லது ஒருவர் இவ் வாறான செயல்களினால் அவளுடைய மனிதத்துவத்தைத் தாக்கு வதுபோன்ற சம்பவங்கள் தெரியவந்தால்’’ 345வது சட்ட விதி தண்டிக்கின்றது.
இங்கு தனியே 'மனிதத்துவம்" என்பதனை வரையறுப்பது பிரச்சனையுடன் பயம் நிறைந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இது எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுகின்ற பெறு மான தீர்ப்பினைப் பிரதிபலிக்கின்றது. இரண்டாவதாக மிக நுண் ணியதும், உடல்சார்பற்றதுமான கட்டாயப்படுத்தல் வடிவங்களி லிருந்து எவ்விதமான பாதுகாப்புக்களும் இல்லை. எவ்வாறாயினும் முன்னரேயே பெண் கள் சாசனத்தில் குறித்துக்காட்டப்பட்ட பெண்களுக்கெதிரான பலாத்காரம் பற்றிய விஷேட பிரிவில் இப் பலவீனம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
*சமூகத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், இளம் நபர்கள் முதலியோருக்கு ஏதிரான பலாத்கார தோற்றப்பாட்டைத் தவிர்ப்ப தற்கு அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும். வேலைத் தளம், பாதுகாப்பில் இருப்பதான குடும்பம் போன்றவற்றில் குறிப்பாக நிகழுகின்ற பலாத்காரம், தகாத பாலுறவு, பாலியல் தொந்தரவு, உடல்சார், உளம் சார் துஷ்பிரயோகம், சித்திரவதை, கொடுரம், மனிதத்தன்மையற்ற அல்லது அவமதிக்கும் முறை போன்றவை இப்பலாத்காரம் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும்"
எவ்வாறாயினும் இந்தச் சர்வதேச விதிமுறைகளுக்கு வெறு மனே ஒப்பமிடுதலும், பக்கங்களில் இருக்கின்ற வாசகங்களை மீளாய்வு செய்வதும் மட்டும் போதாது. இதனைச் சமூகத்தில் நடைமுறை ரீதியான உண்மைத்தன்மையின் பொருட்டு செயற் படுத்தவேண்டிய பொறுப்புடமை அரசாங்கத்திற்கு உள்ளது. இது காலத்திற்கேற்றாற்போல் சட்டத்தை மாற்றுதல், மாற்றப்பட்ட தனைப் பிரசுரித்தல், இதனை அமுல்படுத்துவதற்குரிய நுட்பங் களை உருவாக்குதல், இச்சட்டத்தை நிறைவேற்றுவதும், கண்
س- 8 --س
 

காணிப்பதும் என்பவற்றை உள்ளடக்குகின்றது. தண்டனை வழங்கு கின்ற கூறு கடுமையாக நிறைவேற்றப்படாவிட்டால் பெண்கள் முறைப்பாடு செய்கின்ற அமைப்பின்மீது நம்பிக்கைகொள்ளமாட் u nT rhassír.
எவ்வாறாயினும் சாதகமான குறிப்பு என்னவென்றால் பெண்
கள் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவாகப் பெண்கள் தேசிய குழு நிறுவப்பட்டதாகும். இதன் நோக்கம் என்னவென் றால் எடுத்துக்கொள்ளப்பட்ட நோக்கங்கள் உண்மையில் நிறை வேற்றப்படுகின்றனவா என்பதனைப் பரிசோதித்தலும் அதன் வளர்ச்சியைக் கண்காணித்தலுமாகும். ஒரு பெண்கள் ஆணைக் குழுவானது பாலியல் தொந்தரவு பற்றிய முறைப்பாடுகளைப் பெறுவதற்கும், அதனைப் பொருத்தமாகக் கையாள்வதற்குமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
செயற்படமுடியுமானது வேறு என்ன?
தற்போதுள்ள சட்டமுறைமையின் போதாமையை எதிர்ப்ப தற்கும் அப்பால் பிரச்சனையின் காத்திரத்தன்மையை அடையா ளம் காண்பதில் சமுதாயத்திற்குக் கூட்டான பொறுப்பெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. தொந்தரவுக்குள்ளானவர்களின் துன்பங்களுக்கு அறிவுக் குறைபாடும், உணர்வின்மையும் மாற்றத் திற்குரிய முக்கியமான சக்தியுள்ள தடையாக உள்ளது.
இவ்வாறான உணர்வு நிலை, வீடு, பாடசாலை, வேலைத் தளம் முதலிய சகல மட்டங்களிலும் கட்டாயம் உருவாக்கப்படு தல் வேண்டும். கல்வி முறையும், பல்துறை தொடர்பு சாதனங் களும் பாலியல் தொந்தரவுடன் தொடர்புடைய பிரச்சனைகளை விளக்குவதற்கும், கலந்துரையாடப்படுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். பெண்கள் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், பெண்கள் ஆய்வு நிலையம், உதவி நாடும் பெண்கள் போன்ற பெண் அமைப்புக் கள் பொதுமக்களுக்குப் பால் நிலைப்பாடு பற்றிய அறிவைக் கொடுக்கக்கூடிய நிகழ் ச் சித் திட்டங்களை வழங்கவேண்டும். ஆனால் பாலியல் தொந்தரவு என்பது அரசசார்பற்ற நிறுவனங் கள், பெண்கள் அமைப்புக்கள் முதலியனவற்றால் மட்டுமன்றி தொழில் வழங்குனர், நிர்வாகிகள், கொள்கை உருவாக்குபவர் முதலியவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய அவசியம் உள் ளது. தொந்தரவுக்குள்ளானவர்கள் கொண்டிருக்கின்ற உளரீதி யான, உடல்ரீதியான பிரச்சனைகளையும் சிரேஷ்ட முகாமைத் துவ உத்தியோகத்தர் கவனத்தில் எடுப்பதில்லை என்பதனை
سنس 9 سے

Page 9
உயர் நிலையிலுள்ள பணிப்பாளர் ஒருவர் அவதானித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் ஈடுபட்த் தவறி இவர்கள் நடவடிக்கை எடுக்கா மல் இருப்பது இவர்களிடையே உள்ள நிறுவனம்சார் பொறுப்புடமை யைக் குறைப்பதுடன் பெறுமதியான தொழிலாளர்களை இழப்பதற் கும் இட்டுச்செல்கிறது. அதன்விளைவாகப் பொருளாதார முன்னேற்ற மும் பாதிக்கப்படுகிறது. இதனை வழிகாட்டுகின்ற விதியும், விசாரிக் கின்ற குழுவும் தண்டனை வழங்குதல் இல்லாமல் முறைப்பாடு களைச் சாதாரணமாக ஆராய்கின்றன. இது விசாரணை நடக் கின்றது என்பதை உறுதிசெய்வதாக மட்டுமே கொண்டுள்ளது. இவ்வழிமுறைகளே வெளிநாட்டில் காணப்படுகின்றன. வேலை செய்யும் பெண்களின் தொகை அதிகரிக்கும்போது வேலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஊடாட்டம் தவிர்க்க முடியாததாகும். பரவலான இந்தப் பிரச்சனை பற்றி நாங்கள் ஏதோவொன்றைச் செய்கிறோம் என்பது ஒவ்வொருவருடைய அக்கறைக்கும் உரியதாக இப்பிரச்சினை உள்ளது என்பதனையே காட்டுகிறது.
(இவ்விடயம் சம்பந்தமான தகவல் தந்தமைக்காக
மகளிர் ஆராய்ச்சி நிலையம், பெண்கள் ஆய்வு நிலையம், உதவி நாடும் பெண்கள்
ஆகியனவற்றுக்கு எமது நன்றிகள்.)
- 5 gũi nói: “Coptions” No. I 1994, Go) đi (T (tp th+! •
一10一
 

கவிதை warraria
*இலக்குப் புள்ளியை நோக்கி."
ஒட்டடை தொங்கும் மூலையிலே முடங்கிக் கிடக்கின்ற வீணையே!
6/ f7 , சுதந்திரத்தின் கரங்கள் - உன் நரம்பினைத் தொடாவண்ணம் அறுத்துவிட்டு, விடுதலையின் எழுச்சி கீதத்தை இசைத்திடு;
பரிதாபம் பெண்ணே உன் நிலைமை ! உன் சிறை உடைக்க - அந்த முண்டாசுப் பாவலன் குரல் எழுப்பி, ஒரு நூற்றாண்டு விடைகொள்ளும் இன்றைய பொழுதிலும் - is,
சிந்தனைச் சுதந்திரம் அற்றவளாய், பொருண்மிய சுயத்தை இழந்தவளாய். மிதிக்கப்படும் கால்களின் கீழ் - நைந்து போனது அபிவிருத்தி மட்டுமல்ல, பெண்மையின் விஸ்வரூபமுந்தான். ! தெய்வம் என்று, போலிக் கெளரவம் தீட்டியவர்கள், சாமானிய மானுட உரிமையைக்கூட பறித்து விட்டார்கள்..!
நீ - கங்கா பிரவாகம்; சங்கினுள் அடங்குவது ஆகாது. நீ - பிரபஞ்சத்தின் சக்தி நிலையம்; பேதைமை உனக்குச் சொந்தமன்று. குறுக்கப்பட்ட பரப்புக்குள் - அவர்கள் உன் ஆற்றலை, சுயத்தை அப்படியே அமுக்கி விட்டார்கள்...!
- 1 -

Page 10
ஓ! உலகின் உற்பத்தி ஆக்கியே மெளனித்து, மெளனித்து, கண்ணிரிலே இதயத்தைக் கழுவியது போதும். ! அந்த ஆகாயமே எல்லையாய் விரித்திடு நின் சிறகுகளை. எல்லைச் சுவர்களும், இற்றுப்போன வேலிகளும் தகர்க்கப்படட்டும் உன் சிறகசைப்பால்.
ஆளுதல் அடக்குதல், தீர்மானித்தல் அவர்களுக்கு: சகித்தல், அடங்குதல், வீழ்தல் என்பது உனக்கு ! யார் வரைந்த யாப்புகள் இவை ? விழிச் சுடர்கொண்டு, தீவளர்த்து கொளுத்திவிடு அந்தக் கட்டுகளை.
ஆரோக்கியமான மீறல்களுக்கு உரிய காலம் இது பெண்ணே.
நெகிழ்ச்சி என்பது காலவிதி: தேங்கிய மரபுகளை நெகிழ்த்திவிட்டு,
FLD 5 ft 6) 5 FG) in a 56 at சந்திக்கப் புறப்படு.1 உனது மெய்யான விடுதலை வேட்கையைக் கூட,
அரை வேக்காட்டுக் கோஷமாகப் புரிந்து கொள்ளும் அவர்களுக்கு, உன் கோரிக்கையின் தொணியை, அதன் வலுவான பரிமாணத்தை உரக்கக் கூறு. நலிந்த நடைக்கு வேகம் கூட்டு, உனது இலக்குப்புள்ளியும், அதன் ஒளிக்கீற்றும் இதோ வெகு சமீபத்தில்...!
- நிலாபாரதி
முறக்கொட்டாஞ்சேனை.

ஒரு புதிய பெண் விம்பத்தை நோக்கி.
- மைத்திரேயி,
இன்றைய உலகின் சந்தைப் பண்டமயமாக்கல், மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கலாசாரத்திற்குப் பதிலீடு ஆகவும், கலா சாரத்தைத் தேக்கமடையாமல் நகர்த்திச்செல்வதாகவும் மாற்றுக் கலாசாரம் அமைகிறது. இது மாற்றுக் கருத்துக்களை முன்வைக் கும் பொதுசன தொடர்புசாதனங்கள், மாற்று விஞ்ஞானம் சூழல் இயக்கம், பெண்ணிலைவாத அமைப்பு, மூன்றாம் உலக விடுதலை ஆதரவு இயக்கம், ஒன்றுபட்ட இடதுசாரி இயக்கம் போன்றவற்றி னுாடு தனது கருத்துக்கள், செயற்பாடுகளை முன்வைக்கிறது. இவற்றுள் பெண்ணிலைவாத அடிப்படையில் எமது கலாசாரத்தை மீளாய்வு செய்வதும், அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வுபற்றிச் சிந்திப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆண் மையப்பட்ட தமிழ்க்கலாசாரத்தில் பெண்ணின் நிலை I மதிப்பு இரண்டாம் தரத்தில் இருப்பது வியப்புக்குரியதன்று. எனி னும் ஒப்பீட்டளவில்
- மதம் போன்ற அடிப்படைவாதங்கள் குறைந்த - கல்வி, பொருளாதார ஸ்திரமுடைய மத்திய வகுப்புப்
பெண்கள் கூடிய - யுத்தம் காரணமாகப் பல்வேறு நாடு / கலாசாரங்களிடையே உதிரியா கச் சிதறியிருப்பதால் எமது பாரம்பரியத்தைப் (விரும்பினால்) பேணும் நிர்ப்பந்தம் குறைந்த - வேறு கலாசாரம்பற்றி அறிய வாய்ப்புக்கூடிய எம்மிடையே குறிப்பாகப் பெண்கள் நிலை குறித்த விழிப்புணர்வு குறைவாய் இருப்பது வியப்புக்குரியதே. இவ்வகையில் புலம்பெயர்
س- 13، -

Page 11
தமிழ்ச் சமூகத்தினிடையே விரல்விட்டு எண்ணக்கூடிய அங்கத்தவ ருடன் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் பாராட்டுக்குரியவை. எனினும் அவர்கள் எதிர்நோக்கும் பணி அளப்பரியது.
1. பாரம்பரிய தமிழ்ப்பெண் விம்பம்
எமது பெண் வளர்ப்புமுறை பெண்ணை வீட்டின் எல்லைக் குள் வரையறுப்பதாயும், வளரும் வயதில் 'திருமணமே இலட்சி யம்" என்று ஒழுக்க விலங்கு மாட்டி அவர்களின் ஆத்மாவைச் சிதைப்பதாயும், மாறாகப் படித்து வேலைபார்க்கும் பெண் மீது மேற்படி வரையறைகளுடன் கூடவே வேலை - வீடு எனும் இரட் டைப் பழுவைச் சுமத்தி அவளது ஆளுமை வளர்ச்சியை ஒழிப்ப தாயும் அமைகிறது. இங்கு பெண் தனக்கென விருப்பு, வெறுப்புக் களைக்கொண்ட தனி மனுஷியாக அன்றி, குடும்பத்துக்காக, குடும்ப கெளரவத்திற்காக அவற்றைத் தியாகம் செய்யும் ஒரு "சுய" மற்ற யந்திரமாக ஆக்கப்படுகிறாள். விளைவு "பெண்புத்தி பின் புத்தி" என முத்திரை குத்தப்பட்டதுதான்.
மேலும் ஆண் மைய சமுதாயத்தில் கருத்து - மொழி, கலாசார விதிகள் ஆண்களாலேயே ஆக்கப்படுகின்றன. விதியாக்கங்களில் பெண்களின் இருப்போ, தேவைகளோ, அபிப்பிராயங்களோ கருத் தில் எடுக்கப்படவில்லை. இதனாலேயே கல்லுகளும், புல்லுகளும் கணவராக அங்கீகரிக்கப்பட்டுத் தாலி, அம்மி, மஞ்சள், குங்கு மத் தால் பெண் பிணைக்கப்பட்டுள்ளாள். ஆண், பெண் இருவரும் பங்கேற்கும் அதேவேளை "கற்பு" மட்டும் பெண்களுக்காயிற்று. பாலியல் பலாத்காரம் புரிந்தவனை விட்டுப் பெண்ணைக் குற்றம் சாட்டும் கருத்துரீதியான கயமைத்தனம் மொழிfதியான " " கற் பழிப்பு" என உருவகிக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளின் நன்மைகள் ஆணையும், தீமைகள் பெண்ணையும் சென்றடையு மாறு விதிகள் எழுதப்பட்டன.
முழு மானுட சமுதாயத்தையும் குறிக்க " "மனிதன்" எனும் சொல்லைப் (உதாரணம்: மனிதன் ஆதிகாலத்தில் ஓர் இடத்தில் நிலையாக வாழவில்லை. பின்னரே அவன்.) பாவிப்பதன்மூலம் மானுட சமுதாயத்தின் மறுபாதியான பெண்ணின் இருப்பு கருத்து ரீதியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
பாரம்பரியப் பெண் விம்பத்தை நிலை நிறுத்துவன
ஆதிக்கம் செலுத்தும் கலாசாரத்தை ஆக்கி, நிலை நிறுத்துப வர் ஆண்களே. மேலும் சந்தைமயச் சமுதாயத்தில் பெண்ணும்
ー14ー

ஒரு சந்தைப் பொருளே. விபச்சார, நீலப்படச் சந்தையில் மட்டும் பெண் விற்கப்படவில்லை; ஏனைய பொருட்களை விற்கும் ஊக்கி யாக விளம்பரங்களில் வருகிறாள். இதுவும்கூட சந்தையில் கொள் வனவு சக்தி கொண்ட ஆண்களுக்காகவே. மேலும் விளம்பரங்கள் பெண்ணின் பாரம்பரிய பாத்திரத்தை ஸ்திரப்படுத்துகின்றன. (உதாரணம் : உணவு, சோப்பு விளம்பரங்கள், மற்றும் ஆணுக் கான நுகர்வுப் பொருட்கள்.) இதுவே நாளாந்த நியமமாகி, வாழ் வின் - கலாசாரத்தின் ஒரு பகுதியுமாகிப் போனதால் அது ஒருவர் கண்களையும் உறுத்துவதில்லை. (பெண் அமைப்புக்கள் உட்பட இவர்களும் எதிர்ப்புக்குரல் கொடுத்து அலுத்துவிட்டார்களோ என்னவோ!) சந்தை விதிமுறையையே தலைகீழாக்கிய பெருமை எமது சீதனக் கலாசாரத்திற்கே உரித்தானது. இங்கு மட்டுமே பெண்ணை வாங்குவோருக்குக் காசும் (சீதனம்) வழங்கப்படுகிறது. இதில் துக்கப்படக்கூடிய விடயம் இந்தப் பாரபட்சமான விதிமுறை களுக்கு எதிராகப் பெண்கள் பரந்த அளவில் நிறுவன ரீதியாகக் குரல் கொடுக்காமையே. பெண் விடுதலைக்குப் பாரதியும், பெண் கல்விக்கு வேதநாயகம்பிள்ளையுமென ஆண்களே குரல் கொடுத் தனர். (அல்லது பெண்கள் கொடுத்த குரல் ஆண்களின் அளவிற்கு முதன்மைப்படுத்தப்படவில்லை.) பெண் வாக்குரிமையும், உடன் கட்டை ஒழிப்பும் போராட்டமின்றியே வழங்கப்பட்டன. உதா ரணமாக நோர்வேயில் 1968 தலைமுறையினர் என அழைக்கப்படும் அக்காலகட்டத்தினரின், குறிப்பாகப் பெண்களின் போராட்டத்தின் விளைவாகப் பல பெண் சமத்துவச் சட்டவிதிகள் எழுதப்பட்டன. (1968 - தலைமுறையினரின் போராட்டம் பெண்ணிலை உட்படப் பல மாற்றுக் கலாசார அம்சங்களைக் கொண்டிருந்தது.) இவ்வா றான ஒரு பரந்துபட்ட பெண் விழிப்புணர்வு / எழுச்சி எமது வர லாற்றில் குறைவே.
II. ஒரு புதிய பெண் விம்பம்
பெண்ணின் இன்றைய இரண்டாந்தர நிலைக்கு முக்கிய கார ணம் பொருளாதார ரீதியில் இன்னொருவரில் தங்கி வாழ்வது எனப்படுகிறது. எனின் வேலை பார்க்கின்ற பொருளாதார சுதந் திரம் கொண்ட பெண்ணின் நிலையில்கூடப் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்ற கேள்வி எழுகிறது. (எப்படி உடை அணி வது, உழைத்த காசை எப்படிச் செலவிடுவது போன்ற சிறு விட யங்கள் தொடங்கி, யாரைத் திருமணம் செய்வது போன்றவை வரை பல பெண்கள் சுயமாகத் தீர்மானிக்க விடப்படுவதில்லை). இதற்கு முக்கிய காரணம் கலாசார, கருத்து - மொழி ரீதியான
--۔ 15 مسس

Page 12
பெண் விம்பம் மாறாதிருப்பதாகும். இதை மாற்றாத வரை பொருளாதார சுதந்திரம் வந்தும் பிரயோசனம் இல்லை.
இன்று பெண்ணுக்குச் சம அந்தஸ்தைத் தருகின்ற ஒரு மாற் றுக் கலா சாரத் தை வரையறுக்கவேண்டிய ஒரு வரலாற்றுக் கடமை எமக்குண்டு.
இதன் முதற்படி பெண்ணை இரண்டாம் தரமாக்கும் அம்சங்
களை - அவை கண்ணுக்குப் புலனாகக்கூடியனவையாகினும் சரி, மறைமுகமானவையாயினும் சரி, கருத்துரீதியானவையாயினும் சரி இனங்காணுதல் ஆகும்.
இரண்டாம் படி இவற்றை எதிர்த்துப் போராடுதல் ஆகும். ஒன்றை இனங்காணாத வரை அதற்கெதிராகப் போராடுதல் சாத்தியமற்றது.
கண்ணுக்குப் புலனாகக்கூடியவற்றை இனங்காணலும் அதனால் போராடலும் இலகு. உதாரணமாக, சீதனம் கொடுத்துத் திரு மணம் செய்யாது விடுவதோ, அல்லது பிடித்த உடை அணிவதோ சிலவேளை இலகு (!?) ஆனால் 'பெண்புத்தி பின்புத்தி** அல்லது இலட்சியப்பெண்' (பொம்மை) அழகும், அடக்கமும், கீழ்ப்படி வும் கொண்டவள் போன்ற பெண் படிமங்களை மாற்றுவதே மிக வும் அடிப்படையான தேவையாகும். இவற்றை இரண்டு தளங் களில் அணுகலாம். (பல தளங்களில் ஆராய்தல் சாத்தியமானதே.)
(அ) தனி ஆளுமையை வளர்த்தல்
பொதுவாகப் பெண்கள் தம்மைக் கல்வி, வேலைவாய்ப்புக் களில் ஈடுபடுத்தித் தமது சுய ஆளுமையை, பொருளாதார சுதந்திரத்தை உறுதிசெய்தல்.
(ஆ) விழிப்புணர்வு பெறுதல் :
சமூகத்தில் பெண்களின் இரண்டாந்தர நிலை, இதற்கான வரலாற்றுக் காரணங்கள், இந்நிலையை ஸ்திரப்படுத்தும் கலாசார, கருத்து நிறுவன ரீதியான அம்சங்கள், நாளாந்த வாழ்வில் பெண் எதிர்நோக்கும் பெண்ணைப் பாரபட்சப் படுத்தும் செயற்பாடுகள் பற்றிய விளக்கமும் விழிப்புணர் வும் பெறுதலும், அவற்றை இயன்றவரை எதிர்த்தலும்.
- 16

(அ) தனி ஆளுமையை வளர்த்தல் :
கல்வி, வேலைவாய்ப்புக்களில் பெண்கள் பெருமளவில் ஈடு படுதல் ஒரு அடிப்படைத் தேவை மட்டுமே. "பெட்டைக் கோழி கவி விடியாது' போன்ற கருத்து ரீதியான (இழி) படிமங்களை மாற்ற இதுமட்டும் போதாது. எவ்வளவிற்குக் கல்வி, பதவிகளில் உயரமுடியுமோ அவ்வளவிற்கு நல்லது. கொள்கை வகுப்பு, தீர் மானம் எடுக்கும் அதிகாரத்தைத் தரும் உயர்மட்ட நிர்வாக, முகாமைப் பதவிகளில் பெண் ஈடுபடுவதால் 'கோழி கூவியும் விடியும்' நிலை கருத்து ரீதியாக ஏற்படுத்தப்படும். பாரம்பரிய மற்ற துறைகளில் பெண் ஈடுபடுதலும் அவசியம்.
மருத்துவ, பராமரிப்பு மற்றும் சேவைத்துறைகள் பெண் செறிவானவை, பெண்ணின் பாரம்பரிய விம்பத்தைப் பலப்படுத்து பக3) வ; குறைந்த சம்பளமும் விளைவாகக் குறைந்த கெளரவமும் கொண்டவை. இதனால் ஏனைய (ஆண் செறிவுத்) துறைகளான ஆராய்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பம் போன்றவற்றில் பெறுமள வில் பெண்கள் கால் பதிப்பதும் பாரம்பரியப் பெண் விம்பத்தில் இருந்து விடுபட ஒரு வழியாகும்.
இதற்குத் தனியே பெண்களின் முதலீடு மட்டும் ஆரம்பத்தில் போதாது. பாரம்பரிய விம்டத்தை உடைக்க ஒரு பெருந்தள்ளுகை முதலில் தேவை. இங்கேயே (சமூகநல) அரசின் பங்களிப்பு வேண் டப்படுகிறது.
உதாரணமாக:
1. பெண் கல்வி, வேலை போன்றவற்றிற்குத் தன்னைத் தயார்ப்படுத்தத் தேவையான நிதி வசதிகளை ஊக்குவிப் புக்களை வழங்குதல். 2. சட்ட, சமூக, கலாசார, கருத்து ரீதியாகப் பெண்களின் அந்தஸ்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தல். 3. ஆண் செறிவுத் துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தலும், சட்டப்படி வலியுறுத்தலும். (உதாரண மாக நோர்வேயின் சம அத் தஸ்துச் சட்டப்படி ஒரே தகுதிகளுடன் ஒரு வேலை வெற்றிடத்திற்கு ஒரு பெண் ணும் ஆணும் போட்டியிடும்போது அந்நிறுவனத்தில், அத் துறையில் இதுவரை பெண்களின் பங்கு குறைவாயின் போட்டியிட்ட பெண்ணுக்கே அவ்வேலை வழங்கப்பட வேண்டும். இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பெண் செறி வான துறைகளில் ஆண்களின் பங்களிப்பைக் கூட்டவேண் டும் என வாதிடுவோரும் உண்டு.)

Page 13
வீடு - பிள்ளை பராமரிப்பில் ஆண்களின் பங்கைக் கூட்ட ஊக்குவித்தல் (நோர்வேயில் பேறுகால விடுமுறையை ஆண், பெண் இரு வரும் சமமாகப் பகிரும் சட்டம் பற்றி விவாதம் நடைபெறுகிறது) போன்றன.
பெண்ணின் தரத்தை உயர்த்தப் பாடுபடும் அதேவேளை பெண் அமைப்புக்கள் கூட்டாக இதற்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்கும்படி அரசை வற்புறுத்தலாம். அரசின் கொள்கை வகுப்பு மட்டங்களில் தமது அங்கத்தவரை / ஆலோசனைகளை முன் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தலாம். இதனடிப் 11டையில் நோக்கின், நா டின்றி, அரசின்றி புலம்பெயர்ந்து சிதறி வாழும் தமிழ்ப் பெண்களாகிய எமது சக்தி வரையறுக்கப்பட்டது போல் தோன்றுகிறது. நாம் வாழும் நாடுகளில் உள்ள அந்நாட்டுப் பெண் அமைப்புக்களுடன் இணைவது ஒரு வழி ஆயினும் எம் தமிழ்ச் சமுதாய மட்டத்தில் நாம் செய்ய வேண்டிய அடிப்படைப் பணிகள் பல உள. அவற்றுள் முக்கியமானது நாம் வாழும் நாடு களில் கல்வி, வேலைவாய்ப்புக்குத் திறவுகோலான மொழி பயில உதிவு வது,
பின்னர் மொழியின் உதவியுடன் (உயர்) கல்வி, வேலை வாய்ப்பு நோக்கி நகருவது. எனினும் புலம்பெயர்ந்த முதல் சந்ததி யினரான எமக்கு இதில் ஒரு தடை உள்ளது. எம்மில் பலர் சற்றே பிந்திய வயதுகளில் வந்ததாலும், பல குடும்பச் சுமைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததாலும் மேற்படி பாதையில் நடக்கமுடியா மற் போய்விட்டது. எனினும் காலம் கடந்துவிடவில்லை. அதைவிட முக்கியமான இன்னுமொரு வாய்ப்பும் எமக்குக் கிடைத்துள்ளது. அதுதான் இரண்டாம் சந்ததியை மேற்படி மாற்றுக் கலாச்சாரத் தில் வளர்க்கும் வாய்ப்பு. எமது பெண் பிள்ளைகளை, பெண் இணுக்கு ஒரு புதிய விம்பத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் வளர்த் த ல், தமிழ்ப் படங்களால் வலியுறுத்தப்படும் அம்மியும், தாலியும், சடங்குகளும், நகைகளும் அவர்களின் காலை விலங்கிடாமல், அவர் களின் சுய ஆளுமையை வெளிப்படுத்தும் விதத்தில், வாழும் நாட் டில் பாரம்பரிய மற்ற துறைகளில் முன்னணிக்கு வரும் வகையில் அவர்களை மொழி, கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக வளர்த் த ல், இதற்குப் புதிய பெண் விம்பம் பற்றிய விழிப்புணர்வு முத லாம் தலைமுறைக்கு அவசியம். இவ்வறிவு இரண்டாம் தலை முறைக்குக் கொடுக்கப்படுவதன்மூலம் இவர்களை இவ் இலட்சி யத்தை நோக்கி நகர்த்தலாம்.
(ஆ) விழிப்புணர்வு பெறுதல்:-
பெண் சமூகத்தில் தனது நிலை, கருத்து பற்றிய அறிவு பெறாமல் வெறுமனே உயர்கல்வி, உயர் பதவி, பாரம்பரியம் அற்ற
ー18ー

துறைகளில் நுளைவதால் பெரும் பயன் ஏற்படாது. பெண் தனது
இடம்பற்றி வரலாற்று விளக்கமும், விழிப்புணர்வும் பெறுதல்
•yanı 44 .
மேலும் நாளாந்த நடைமுறை வாழ்வில் எம்மைப் பாரபட்
சப்படுத்தும் , தரக் குறைவாக்கும் அம்சங்களை அடையாளம் காண m) , அவற்றை நிராகரிக்கவும் பழகிக்கொள்ளவேண்டும்.
(i) எம்மில் எத்தனை பேர் கணவர் தம்மை ஒருமையில்
அழைப்பதையிட்டு எரிச்சல்ப்பட்டிருக்கிறோம். அல்லது பன் மையில் அழைக்கு மாறு வலியுறுத்தியிருக்கிறோம்? (தமிழப்படங்களில், காதலி * அத் தான் நீங்கள் என்னை
நீ என்றே அழைக்கலாம்’ என்பது எமது கருத்து வெளி யிலும் மிகவும் பதிந்து இயல்பாகிவிட்டது.)
(ii) எம்மில் எத்தனை பேர் பெண்ணைத் தரம் குறைக்கும் விளம்பரங்களை அ டை யா ள ம் கண்டுகொண்டு அப் பொருட்களை வாங்காது இருக்கிறோம்.
(iii) எம்மில் எத்தனை பேர் தமிழ்ப்படங்களில் பெண்ணை இழிவுபடுத்தும் வசனங்களையும் காட்சிகளையும் இனங் கண்டு எரிச்சல்பட்டிருக்கிறோம் ? அதுபற்றி ஏனையோ ருக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்? (படத்தைப் பகிஸ் கரிக்குமாறு அல்லது விற்பனையிலிருந்து எடுக்குமாறு சண்டை போட்டிருக்கிறோம்.)
தனி ஆளுமை வளர்ப்பு, விழிப்புணர்த்தல் எனும் மேற்படி இரு தளங்களிலான அணுகுமுறைகளையும் எம்மத்தியில் அறிமுகப் படுத்தலில் பெண் அமைப்புக்களின் பங்கு இன்றியமையாதது. நாம் பல விடயங்களை அதுபற்றி யோசிக்காமலேயே செய்துவருகிறோம். அவ்வாறு பெண்ணை இழிநிலைப்படுத்தும் கட்புலனாகா கருத்து ரீதியான அம்சங்களைப்பற்றிய கலந்துரையாடல்களை ஏற்படுத்தி அவைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலும், அவற்றுக்கெதிரான செயற்பாடுகளைச் சீர்தூக்கி ஆராய்தலும் முக்கிய பணிகளாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மாற்றுக் கலாசார உருவாக்கலில் ஆண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் அவசியமானது. மானுட சமுதாயத்தின் சரி பாதியான அவர்களைச் சேர்க்காது விட்டோ மாயின் அவர்கள் விட்ட அதே தவறை நாமும் செய்தவராவோம்.
- நன்றி : பெண்கள் சந்திப்பு மலர் - 1994,
- 19

Page 14
இயக்குனை செளதாமினியுடன் ‘சூரியா’ ஏற்பாட்டில் விளைந்த சொல்லாடல்
தொகுப்பு : பத்மினி சிதம்பரநாதன்.
அண்மையில் இந்தியாவில் இருந்து செளதாமினி என்னும் விவரணத் திரைப்பட இயக்கு னை இலங்கை வந்தார். இவர் சென்னை அடையாறைச் சேர்ந்தவர். " சிரத்தா" என்ற நிறுவனத் தின் அமைப்பாளர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றபின் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்று இன்று ஒரு இயக்கு னை யாக விளங்குகின்றார். கண்ணகி வழிபாடுபற்றி அறிய மட்டக் களப்புக்கு வந்திருந்தபோது "சூரியா" என்னும் பெண்கள் அமைப் பும் அவருடன் அனுபவங்களைப் பகிர்வதில் ஆர்வம் காட்டியதன் விளைவாக அங்கு வருகை தந்திருந்தார்.
இன்று பெண்கள் தமது ஆற்றல்களை வெளிவிடுதல், ஆண்க ளோடு சேர்ந்து இயங்குதல் தொடர்பாகப் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இவ்வேளையில் பல்வேறு தரப்பினருடனும் வேலை செய்யும் / செய்ய விரும்பும் இப்பெண்ணுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல் பயனுள்ளதாய் அமையும். இவர் இதுவரை *Vimohar", (Fiction), பிதுரு சாய' என்று இவ்வாறு நான்கு படங்களைத் தயாரித்துள்ளார். அகில இந்திய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இடம்பெற்ற திரைப்பட விழாக்களில் பங்குபற்றியதுடன் விவரணத் திரைப்படம் தொடர்பான விரிவுரை களையும் ஆற்றியுள்ளார். விவரணத் திரைப்படத் தர நிர்ணயக் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார். இதுவரை இத்துறையில் பெண் கால் வைத்தது மிகக் குறைவு. செளதாமினி ஒரு வித்தியாசமான கலைத்துறையைத் தெரிவுசெய்துள்ளார் என மெள. சித்திரலேகா அறிமுகம் செய்தார்.
- 20

இவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்களில் முக்கியமானதாகப் பட்டதை விவரணப் படத்துறை, அதில் பெண்களுக்கான இடம், கண்ணகி குளிர்த்திபற்றிய மீள்பார்வை என்ற அடிப்படையில் இங்கு தர விரும்புகின்றேன். மன்னிக்கவேண்டும். அந்த உணர்ச்சி களுடன் கூடிய (அசைவுகள், சைகைகள், முகபாவம், சிரிப்பு, தொனி) சொல்லாடலை இயன்றவரை அவரின் ஆங்கிலங் கலந்த வசனங்களிலேயே தர முயன்றபோதும் வெறும் சொற்களால் அதே அனுபவத்தைப் ப கி ர லா ம் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பொருத்தமோ தெரியவில்லை முயற்சிக்கிறேன். சற்று நேரம் அந்த வெற்று வசனங்களின் பின்னே நின்று பாருங்கள்.
விவரணத் திரைப்படத் துறை :
என் விவரணப் படத்துறைத் தெரிவு.
சந்தர்ப்பம்தான் அந்த நேரத்தில் Short Fiction (குறுநாவல் களுக்கு) நல்ல எதிர்காலம் இல்லை. இப்ப உண்டு. Feature Films இயக்குவதற்கு அப்ப நான் தயாராக இல்லை. இப்பவும் நான் தயார் இல்லை.
இத்துறையில் பணியாற்றும் காலம்.
82 இல் இருந்து மூன்று வருடம் படித்ததற்கப்புறம் இதில் ஈடு பட்டேன். 91க்குப் பிறகு தடங்கல். காரணம் எனக்குப் பையன் பிறந்தான். இப்ப அவனுக்கு 5 வயசு, மீண்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளேன்.
இத்துறை அனுபவங்கள்:
சுதந்திரமாக வேலை செய்யும்போது பணம் இல்லன்னாலும் மனத்திருப்தி உண்டு. இலட்சியத்தோடு ஈடுபடுதல் முக்கியம் - ஆனா பணம் பண்ணுறதுக்காகத் தயாரிக்கிறவங்களும் ஏதோ இலட் சியம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அப்படி வேறுபடுத்திப் பார்ப்பது Unnatural (செயற்கையானது) பணமும் வேணும், இலட்சியமும் வேணும். நான் இம்மாதிரி வேறுபடுத்திப் பார்க்க விரும்புறதில்ல. பெரிய ஆடம்பரம் இல்லாத வாழ்வு வாழ இத் துறையில் வரும் பணம் போதும்.
விவரணத் திரைப்படங்களின் எதிர்காலம்.
இன்று மிகவும் தேவைப்படும், வளர்ந்துவரும், நல்ல எதிர் காலம் உள்ள துறை. அரச நிறுவனங்களும் இதைச் செய்கின்றன,
ー21ー

Page 15
வாங்குகின்றன. இதற்குரிய Machinary யும் (பொறிகளும் நன்கு வளர்ந்திருக்கு. எனது 1வது படத்தை நான் பெற்ற கடன்களுக் காக விற்கவேண்டி இருந்தது. மற்றையவற்றுக்கு எனக்கு (கமிசன்) கிடைத்தது. எம்மை நிலைநிறுத்திக்கொண்டால் விற்பனைப் பிரச் சினை இல்லை. ஆனால் பணத்துக்காகப் பார்வையாளரிடம் இத னைத் திணிக்கமுடியாது என்பது மட்டும் உண்மை.
திரைப்படங்களின் சந்தை நோக்கிய போக்கு .
நான் எதை நினைக்கிறேனோ அதைச் செய்யக்கூடியதாக 3)(555 609/Lb. Audiance Force (tu Tri65) au Urr6Trio 6/8)), Market Force (சந்தை வலு) இரண்டும் இருக்கு. இரண்டையும் கவனத் தில் எடுக்கவேண்டும். ஆனால் அதிலேயே ரொம்பக் கவனம் செலுத்தவேண்டும் என்பதில்லை.
எடுத்த படங்களுக்கிடையிலான தொடர்பு.
எல்லாமே கலாசார ரீதியான தொடர்புடையது. இரண்டு படங்கள் ஹரி கதை பற்றியது. தொல் சீர் மரபைச் சார்ந்தது. கதை சொல்லும் பாங்கில் அமைந்தது. மற்றையது மலை (Hi11 Tribe) p5 T L L rritř g) 670 SF, el fið spy 30) 5 (Music & Performence) பற்றியது. 4வது M. D. இராமநாதன் என்னும் இசைக்கலைஞர் பற்றியது. இனி எடுக்க இருக்கும் கண்ணகிபற்றியதும் அவ்வாற்ே Culture Related arr Går.
விவரணப் படத்துறையும், பெண்ணும் :
பெண்களுக்குக் கருத்துக்கள் சொல்லல்.
என்னைப் பொறுத்தமட்டில் செய்தி சொல்றதை நான் விரும் புற இல்லை. ஒரு விடயம்பற்றிய முழு மை யா ன உணர்வை ரொம்ப விழிப்புடன் பார்வையாளர் நோக்கில் ஒரு பெண்ணாக என்னால் பார்க்கமுடிகிறது. அந்தத் துணிவு இருக்கு. அப்படி இல்லாமல் எனது பார்வையாளர் பெண்கள், நான் செய்தி சொல் வது பெண்களுக்கு, நான் எதிர்கொள்வது பெண்களை என்றால் நாங்களே ஒரு Sub cast (உப சாதியை) உருவாக்கிற மாதிரிப் போயிடும். ஆனால் பொதுத்தளத்தில் நின்று வேலை செய்யும் போது பெண்கள் என்ற தளமும் உள்ளடக்கம். எவ்வளவு wide approach (பரந்து அணுகமுடியுமோ) முடியுமோ அவ்வளவுக்கு முயற்சி பண்ணுகின்றேன்.
一22一

இத்துறையில் பெண்களின் ஈடுபாடு.
நிறையப்பேர் ஈடுபடுகிறார்கள். Issue Based Films க்கு நிறை யப் பணம் உண்டு. அதாவது சூழல், சுகாதாரம், பெண்கள், மிறுவர், கல்வி தொடர்பான விடயங்கள் சம்பந்தமான விவரணத் கிகாரப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. நிறையப்பேர் இப் படியான படங்களைத் தயாரிக்கிறார்கள். தொழில்நுட்பம் ஒரள வுக்குத் தெரிந்திருந்தால் போதும். படம் எடுக்கிறது என்பது ஒரு (w (p (nu 630 60. Camera Person, Editor, Sound Recorder, Director சான் போர் Main crew. நிறையத் தொழில்நுட்பப் பொறுப்புக்கள் குவிமையப்பட்டிருப்பதால் ஒரு அனுபவத்தில் ஈடுபட்டால் ஓர் அளவுக்குத் தெரியமுடியும், உண்மையில் சொல்லப்போனால் Dircctor ö ø5 65 Concept clear -3 5 ) Bjö35 TG3 IU SP (5 LU L- iš 50)45 ாடுக்கமுடியும். பலர் திரைப்படக் கல்லூரியில் படிக்காமலே படம் எடுக்கிறார்கள். கொஞ்சம் பரந்த அளவில் பண்பாடு என்று வந் தால் குறைந்த எண்ணிக்கையினரே இத்துறையில் ஈடுபடுகின்ற னர். ஏனெனில் இதற்கு நீண்ட அனுபவம் வேண்டும். கள அனு பவமும்கூட. இது செய்தி அல்லது ஒரு விடயத்தைச் சொல்வது போல் அல்ல. படம் எடுப்பதற்கு முன்னர் முழுமையாக வடி வடிமைக்கப்படவேண்டும், உதாரணமாக: Music (இசை) பற்றி கடுக்கவேண்டும் என்றால் அதுக்கு ஒரு Form (வடிவம்) இருக்கு, Theatre (அரங்கு) பற்றியென்றால் அதற்கு ஒரு வடிவம் இருக்கு. Film பண்ணும்போது Film Form இற்கும் இதுக்கும் என்ன தொடர்பு இருக்கு என்ற கேள்வி தோன்றும். இப்படியான கஷ் ரங்களினால் அதிகம் பேர் இதில் ஈடுபடுறதில்ல. ஆனால் தொழில் நுட்ப ரீதியில் அவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இத்துறையில் பெண்களின் ஈடுபாடு .
நிறையப் பெண்கள் ஈடுபடுகிறார்கள். தொலைக்காட்சியில் பாதிப்பேர் பெண்களாகவே இருக்கிறார்கள். அங்கு பெண்களுக்கு இது தடைசெய்யப்பட்ட ஒரு துறை அல்ல. கணிசமான அள வுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். (நகைச்சுவையாக) மாமன் மாரும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
கண்ணகி குளிர்த்தி ஒரு மீள்பார்வை :
வரையறைக்குள் நின்று படங்களை இயக்குதல்.
எனது ஆர்வத்தைப் பொறுத்துத்தான் படங்களை இயக்கு ன்ெறேன். கொஞ்ச நாளா ஒரு திரைப்படம் Script (திரைப்
ー23ー

Page 16
படப் பாடம்) தொடர்பாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். அப்போ கண்ணகி பற்றிய விடயங்களை வாசித்தேன். கண்ணகி எமது நாட்டில் நெருப்பை உருவாக்கும் Figure (தோற்றம்). அதற்கு நேர்மாறாக இலங்கையில் கோபத்தைத் தணிக்க Try பண்ணுறாங்க. அது எனக்குப் பிடித்துக்கொண்டது.
இலங்கையில் கண்ணகி வழிபாட்டின் குளிர்த்தி அம்சம் பிடித்துக்கொண்டதற்கான காரணம்.
1. கோர ரூபம் நாம் Identity (இனங்காணக்கூடிய) பண்ணக் கூடிய ரூபம் இல்லை, அதுக்காக அவங்க பண்ணுறது தப்பு என்கிறது.மல்ல. Unfeminin என்றும் அல்ல. கோரளுபம் good, 6titái) Image of Women's Power ( al 16in 6tafs) a) Lu சக்தியின் ஒரு படிமம்) ஆகப் பார்க்கப்படலாம். எனக்கு அப்படித் தோணல்ல, அதில் desperation (விரக்தி) தான் காணப்படுகிறது. வழிபாடு என்பதன் பேரில் அவங்க பயத் தைத் தான் வெளிப்படுத்துவதாக எனக்குத் தோணுறது. அதற்குப் பதிலா குளிர்த்தியில் பார்க்கும்போது Perfect Balance (பூரண சமநிலை) தெரியுது. நீங்கள் உக்கிரத்தை எடுத்தீர்களானால் மதுரையை எரிக்கிறதை மீறி உங்களையே எரிக்கிறீர்கள். பெரும்பாலான Violence உம், Aggression உம் பயத்தினால்தான் ஆரம்பிக்கிறது. ஆய்ச்சியர் பாடு வதும் பயத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. "எந்தச் சேரி எரிந்தாலும் இடைச்சேரி எரியவேண்டாம்' என்கிறாங்க. ஆனால் அதே Fear (பயம்) Compassion (பரிவு) ஆக மாறு கிறது. இப்படி Direct (நெறிப்படுத்த) பண்ணமுடியுது இவங்களால் (இலங்கையரால்) அது முக்கியம் என்று எனக் (55 Gas (T6095. In terms of Man-Woman Relationship.
2. இன்று Violence Situation (வன்முறை நிலைமை) இலங் கையில் உள்ளது. இந்த சமயத்தில் இந்த மாதிரியான ஒரு Sai, 607 Practice (1560) L-Qp 60 p) gai Related Philosophy (தொடர்பான தத்துவம்) உள்ளதாக எனக்குப் படுகிறது. எங்களிட்ட இது இல்லை. இங்கு மக்களுக்குள்ளி ஏதோ ஒரு உணர்வு Natural ஆக வருகிறது. எங்களிட்ட வரல்ல. ஆனா எங்களுக்கு அது வேணும். இலங்கையில் அது High 1ight (மேலே கொண்டுவரப்பட) வேண்டும். விசேடமாகக் கேர ளாவில் கண்ணகியைப் பகவதியாகப் பார்க்கிறார்கள். தெய் வங்களை இழிவுபடுத்தி அதன் Power ஐ (சக்தியை) குறைக் கப்பார்க்கிறது. Power என்பது உண்மையில grew with
ー24ー

Love (அன்புடன் வளர்கிறது). இந்த மாதிரியான Response (gy aufij & do) 15 (355 560 L. L9 sij (safiri i 6 Unbelivable Beauty ஆக உள்ளது.
கண்ணகி வழிபாடு இலங்கை - இந்தியா.
இந்தியாவில் கண்ணகி வழிபாடு கிடையாது. ஆனால் கண் ணகி கதை எல்லாருக்கும் தெரியும். இங்கு அது வழிபாடாக உள் ாது. அந்த Shift ஏ (மாற்றம்) எனக்குப் பிடித்தது. இராமாய னக் கதையை எடுத்தா பாட்டி கதை கதையாகச் சொல்லியிருப்பா. அல்லது படித்திருக்கிறோம். அதே சமயத்தில் அது ஒரு தெய்வம் என்றும் சொல்லப்படுகிறது. ரொம்ப நாளாக இந்த Script க்கு (திரைப்படப் பாடத்திற்கு) வேலை செய்துவருகிறேன். அதில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. ஒரு சமயமும் கண்ணகியைத் தெய்வ மாகப் பாவித்ததே கிடையாது. ஆனால் இங்கு இராமனுக்கு, சிவனுக்கு எப்படிப் பூசை பண்ணுகிறார்களோ அப்படிப் பண்ணு கிறார்கள். Very deep root (ஆழப் பதிந்துள்ளது). எத்தனையோ வருடமாகச் செய்துவருகிறார்கள். அதிலேயே ரொம்ப Basic shift (அடிப்படை மாற்றம்).
ஆகமம் சாராத கோயில்களில் மெளனப் பூஜை இடம்பெறும். தம்பிலுவில் என்னும் இடத்தில் மெளனப் பூஜை முடிவில் கண் ணகி அம்மன் காவியம் பாடினார்கள். இங்கு பூஜை என்பது அவ ரின் வரலாற்றைச் சொல்வது. கதையே பூஜை ஆகிறது. இலக் கியத்திற்கும் சமயத்திற்கும் என்ன தொடர்பு என்பது ரொம்ப சுவராஸ்யமானது. நாம் கதை சொல்லும்போது அப்படிச் சொல்ற நில்ல. அவங்க அதே கதையை அதே Involvement (ஈடுபாடு) உடன் சொல்லும்போது பூஜையாகிறது.
திரைப்படத்தினூடாகச் செய்தி சொல்லல்.
ஆரம்பத்தில் Message என்றாலே சலிப்பு. ஏதோ ஒரு Expertnnce Levc1 இல்தான் வரணும் என்று ஆரம்பிச்ச நிலையில் இருந்து செய்தி சொல்லல் பக்கம் நகர்ந்துவருகிறேன். ஆனால் இப்பவும் 'xperience Leve1 வர லைன்னா எந்தச் செய்தி கொடுத்தும் பயன் இல்லை என்ற நம்பிக்கை உண்டு.
கோபம் என்ற உணர்வு இருக்கு. அதை நாம் கட்டுப்படுத் நிறதா? அல்லது அதுக்கு இடம் கொடுத்திட்டு நம்மையும் எரிச்சு உலகையும் எரிக்கிற சூழ்நிலை வந்தா அதுக்கு உலகம் என்ன செய்யக்கூடும் ? இப்போ சிறிலங்கா Situationஐ (நிலைமையை)

Page 17
எடுத்தா சண்டை போடக்கூடாது என்று சொல்றது சுலபம். ஆனால் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. up G.5 dm 5.if Man - Women Relationship gai) seg, 67-au657 a sp6) General Question Burning issu 5Taiw (urraison) Q) i G56îr 62 62 a5 எரியும் பிரச்சினை) எவ்வளவோ நிலைகளில் எல்லாரும் முகங் கொடுத்துக்கொண்டு வருகிறோம். அதனால் ஆணும் பெண்ணும் சம உரிமை என்பதையும் மீறி சண்டைபோடாமல் இருக்கணும் என்று சொல்லலாம். ஆனால் நாம் சண்டை போட்டுக்கொண்டு தான் வாறம். அந்தச் சண்டையும் இரண்டு பக்கத்திலும் நியாயம் தான். J G607 Goiás May be we are moving towards a new equation. ஏற்கனவே கொடுக்கப்பட்ட நீதி சரியில்லை. அதை வந்து Unbalance என்று நினைத் திட்டு சண்டை போட்டுத்தான் வாறம். அது கூடாது என்று சொல்லமுடியாது. இந்த மாதிரியான Conflict situations (முரண் நிலமைகள்) கூடிக்கொண்டு வருகிறது. Jo, j55&& LDugë 6 gij Gë S T ulb Grair ugl its a way of life for us now (இன்று ஒரு வாழ்க்கைமுறையாக உள்ளது). இந்த வேளையில் குளிர்த்திமூலம் நமக்குப் பல விடயங்கள் வெளிவருகிறது.
1. கோபத்தை direct (நெறிப் படுத் தி) பண்ணவேண்டிய தொன்று. யாரிட்டை கோபம்? எதனாலை கோபம்? இந் தக் கோபத்தை எப்படி Constructive ஆக (ஆக்கபூர்வமாக) பயன்படுத்துவது? இது ஒரு விடயம்.
2. அந்தக் கோபம் எந்தச் சூழலில் உருவானதோ அது தீர்ந்த பின்னும் சிலசமயம் கோபம் இருக்கும். Consious Level or Unconsiouse Level - gọ (15 tổì ỡ) 6) ở (5 từ L?sồi s995 Gề 3568) 6ư Lui) நறது. அதைத் தணிக்கத் தெரியிற தில்ல. எனவே அந்தச் சூழலில் குளிர்த்தி என்பது முக்கியமானது.
3. நாம் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயப்படுகின்றோம். அந் தப் பயத்தில் இருந்து நாம் Act பண்ணும் Options நிறைய இருக்கு. அந்தச் சூழலில் இருந்து பின்வாங்கலாம். அல்லது அவங்க அடிக்கிறதுக்கு முன்னாலை நாம் அடிச்சிடலாம். அல்லது எது நமக்குப் பயத்தை உண்டாக்கிறதோ அதை இழிவுபடுத்தி அதன் Power ஐக் குறைக்கலாம். அல்லது குளிர்த்தி option அந்த உக்கிர ரூபத்தை நேரே Confront பண்ணி நமக்குள்ளையும் இந்த உக்கிரம் இருக்கு. அது தான் இப்படி பீறிவந்திருக்கு என்று, அவளது Power ஐ sy fi) to di Gón 67G (D5 Compassion and Tenderness D-L-6ir 9q5 Liloé 560oflăgi sună *. Let us speak to each other
-س- 26 --

ான்று இப்படிக் கேட்பது அவர்களின் Power ஐயும் எடுத் துக்காட்டுகின்றது. இதுவும் பயத்தில இருந்துதான் அனுப்பு கின்றது. ஆனால் இந்த உணர்வை அடைந்தால் அதுதான் நாகரிகம்.
பொதுவாக abstract ஆக (கருத்துருவமாக) ச மா தா ன ம் (n) கண்டும், பரிவு வேண்டும் என்பது ஒரு நிலையில் வழமையாகச் சமயவாதிகள் சமாதானம்பற்றிப் பேசும்போது They are talking of abscence of war. Abscence of Anger. u 1ğ3* Gölp Gölgi / கோபச் சூழலில் எப்படித் தணிந்து வாங்க என்று சொல்றது. அந்தமாதிரிச் செய்தி சொல்லலை என்னால் புரிய முடியவில்லை. எனவே செய்தி சொல்லலில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று எனக்குப் படுகிறது.
முரன்பாடுகளைத் தீர்த்தலில் புதிய நாகரிகத்தை வேண்டிநிற்கும் ாமக்கு செளதாமினியுடனான சந்திப்பு ஒரு நல்ல அனுபவம். O

Page 18
கிழக்குப் பிராந்திய பெண்கள் நிறுவனங்களின்
கூட்டமைப்பு
5டந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள திருகோண மலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் செயற்
பட்டுவரும் பெண்கள் நிறுவனங்களை ஒன்றிணைத்து “கிழக்குப் பிராந்திய பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு' ஒன்றை உரு வாக்கியது.
கிழக்குப் பிராந்தியப் பெண்களின் அரசசார்பற்ற நிறுவனங் களின் கூட்டமைப்பை உகுவாக்கும் முயற்சியில் ஈடுபட சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் முன்வந்தமைக்குப் பல காரணங் கள் உள்ளன.
கடந்த சுமார் பத்து வருடங்களுக்குள் பெண்கள் அமைப்பு கள் பல கிழக்குப் பிராந்தியத்தில் ஆங்காங்கு உருவாகியுள்ளன. பெரும்பாலும் போரால் பா தி க் க ப் பட்ட பெண்கள், தமது வாழ்க்கை ஆதாரங்களை இழந்த பெண்கள் போன்றோரை மைய 1ாக வைத்து இவை உருவாகின. இவ்வாறு ஆங்காங்கே தனித் தனியாக இயங்கும் பெண்கள் அமைப்புகள் தமது சுயாதீனத்துட இணும் சுதந்திரத்துடனும் இயங்கும் அதேவேளை கூட்டமைப்பாக வும் இயங்குதல் அவற்றுக்கு வலுவளிக்கும் என நம்பினோம்.
கிழக்குப் பிராந்தியத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச் சனைகளைப் பற்றிய விபரங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும், இவை தொடர்பாக நடவடிக்கைகள், ஆலோசனை கள் பற்றிக் கலந்துரையாடவும், அதன்மூலம் ஒரு பொதுக்குரலை வெளிப்படுத்தவும் இத்தகைய அமைப்பு ஒரு இடமாக அமையும் என எண்ணினோம்.
ー23ー

மேலும் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களி லும், நடவடிக்கைகளிலும் ஒரு அமைப்பு செய்வதை மற்றையது திரும்பச் செய்யாமல் இருப்பதற்கும், தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு ஏற்ற வகையில் செயற்படுவதற்குப் இத்தகைய ஒரு கூட்டமைப்பில் பெண்கள் ஒன்றுசேர்வது உதவியாக இருக்கும் என நினைத்தோம்.
அத்துடன் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், முடிந்த இடத்து வளங்களைப் பரிமாறிக்கொள்ள வும், பெண்கள் என்ற முறையில் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இத் தகைய ஒரு கூட்டமைப்பு ஆதாரமாக அமையும் என்பது எமது எண்ணமாகும்.
இத்தகைய காரணங்களை மனதில் கொண்டு கூட்டமைப்பு பற்றிய கருத்துகளை நாம் முன்வைத்தபோது ஏனைய பெண்கள் அமைப்புகள் மிகவும் உற்சாகமாக ஆதரித்தன. மேலும் பல ஆலோசனைகளையும், செயற்படக்கூடிய முறைமைகளையும்பற் றிப் பல கருத்துகளை வழங்கின.
இத்தகைய ஒரு பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கிழக்குப் பிராந்தியப் பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பில் பின்வரும் 12 அமைப்புகள் அங்கத்தவர்களாக இணைந்து செயற் பட்டுவருகின்றன.
- இந்து மகளிர் மன்றம் , திருகோணமலை. - பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், அக்கரைப்பற்று. -- உழைக்கும் மகளிர் அபிவிருத்தி மன்றம், மட்டக்களப்பு. - அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பு,
அக்கரைப்பற்று. - மட் / நட்புறவாளர் ஒன்றியம், மட்டக்களப்பு. - கணவனை இழந்தோர் சங்கம், பாண்டிருப்பு. - பெண்கள் அபிவிருத்தி அரங்கு, மட்டக்களப்பு. - மகா சக்தி நிறுவனம், அக்கரைப்பற்று. - உழைக்கும் மாதர் சங்கம், நாவற் குடா கிழக்கு. - கனேடிய உலக பல்கலைக்கழக சேவைகள், மட்டக்களப்பு. - அம்பிகா மாதர் சங்கம், காரைதீவு, -- இளம் கிறிஸ்தவ மகளிர் அமைப்பு, மட்டக்களப்பு.
-سنما 29' ----

Page 19
இந்த கிழக்குப் பிராந்திய பெண்கள் நிறுவனங்களின் கூட்டமை பின்வரும் நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டுவருகின்றது:
- பெண்கள்பற்றிய அறிவை ஊட்டலும், பாதுகாப்பதும். - நிறுவனங்களிடையே தொடர்பை ஏற்படுத்தல். - ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் எதிர்நோக்கும் பி சனைகளனைத்தையும் சகலரும் அறிவதோடு அதற்கா தீர்வுகளையும் காணுதல். - கிராமங்களிலுள்ள தேவைகளை இனங்கண்டு வளங்கை
விரிவுபடுத்தல். - வளங்களைப் பரிமாறுதல். - குடும்பங்களிலும், வெளியிலும் பெண்களுக்கு ஏற்படக்கூடி வன்முறைகளுக்கெதிராக எல்லோரும் ஒன்றிணைந்து குர கொடுப்பது. - தீர்வு காணமுடியாத சில பிரச்சனைகளுக்கு உயர்மட்
ரீதியில் சென்று தீர்வு காண்பது. - பலமற்ற பெண்கள் அமைப்புகளை முன்னேற்றப் பாடுபட - கிழக்குப் பிரதேசப் பெண்களின் விசேட பிரச்சனைகை
தேசிய / சர்வதேச ரீதியில் வெளிக்கொணரல். - இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், ஒற்றுமையையு
ஏற்படுத்தல். - இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் பொதுப் பிரச்சை
கள் தொடர்பாக அக்கறை செலுத்துதல்.
இந்த கிழக்குப் பிராந்திய பெண்கள் நிறுவனங்களின் கூ டமைப்பு அது ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் நாட்டின் வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழலில் அவ்வப் பகுதிகளில் பெள களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கெதிரா தேசிய மட்டத்தில் குரல் கொடுத்துள்ளதோடு, இவ்விடயங்களி தெற்கில் இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்களுடன் ஒன்றிணைந் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மேலும் கடந் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தின விழாவையும் இக்கூட்டமைப் அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வரும் காலங்களிலும் இந்தக் கூட்டமைப்பு ப ஆக்கபூர்வமான செயற்பாடுகள்மூலம் கிழக்குப் பிராந்தியப் பெண் களின் முன்னேற்றத்துக்கும், அபிவிருத்திக்கும், அவர்களது அமை யான வாழ்வுக்குமாய் பாடுபடும் என்று உறுதியாக நம்புகிறோம்
- யுமுனா இப்ராஹிம்.
سیسے 30 سس

:
பாலியல் வன்முறைக்கு எதிராக சூரியாவினால் மேற்கொள்ளப்படும்
நடவ டிக்கைகள்
குரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் பெண்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற் படுத்தி வருவதுடன் பெண்களுக்கெதிரான வன் முறைகளுக்கெதிராகவும் தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இப்போராட்டத்திற்கு இலங் கையிலுள்ள ஏனைய பல பெண்கள் நிறுவனங் களும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. அந்த வகை யில் 24-11-96இல் கிருசாந்தி குமாரசாமி கொலை தொடர்பாக ஒரு கூட்டறிக்கையைக் கிழக்குப் பிராந்திய பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஒரு அறிக்கையை அனுப்பிவைத் தமைபற்றிய விபரம் எமது முதலாவது இதழில் வெளிவந்திருந்தது.
தொடர்ந்து நடைபெற்றுவரும் பெண்களுக் கெதிரான வன்முறைகளுக் கெதிராகவும் எமது நிறுவனம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித் துள்ளது. அண்மையில் கிழக்கிலங்கையில் நடை பெற்ற பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை கள் தொடர்பாகக் கிழக்கிலங்கையின் பெண் கள் நிறுவனங்களுடன், தென்னிலங்கைப் பெண் கள் நிறுவ ன ங் க ள் சில உட்பட இணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கூட்டறிக்கை இங்கு தரப்படுகிறது.
- 31 سب

Page 20
மே 23, 1997
அதி மேதகு ஐனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள், ஜனாதிபதி செயலகம் ,
கொழும்பு.
மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே,
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறைகள்.
அம்பாறையில், முருகேசுபிள்ளை கோணேஸ்வரி (வயது 35) என்ற 4 பிள்ளைகளின் தாயாரான ஒரு பெண்மணி கடந்த மே மாதம் 17ம் திகதி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய் யப்பட்டுள்ள சம்பவத்தையிட்டு நாம் அதிர்ச்சியும் வேதனையு மடைந்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறோம்.
அம்பாறை மட்டக்களப்பு எல்லையிலமைந்துள்ள 11ம் கொலனி, மத்திய முகாம் பகுதியைச் சேர்ந்த இவர், முன்னிரவு 9 30 மணி யளவில் நான்கு பொலிஸ்காரர்கள் அடங்கிய ஒரு குழுவொன்றி னால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொடு ர மாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் அவரது பிறப்புறுப்பினுள் வைத்து வெடிக்க வைக்கப்பட்ட கைக்குண்டினாலேயே (Grenade)
மரணம் சம்பவித்துள்ளதாகவும், மிகவும் சிதைவுற்றிருந்த சடலம் க ல் மு னை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அங்கு எவ்வித சோதனையும் செய்யக்கூடிய நிலையில் இருக்க வில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி சடலத் தைப் பிரேத பரிசோதனைக்குட்படுத்தாது தகனம் செய்யுமாறு: குடும்பத்தார் மிரட்டப்பட்டுள்ளனர்.
கோணேஸ்வரி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுக் கொல்லப் பட்டது தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளு மாறும், இக்குற்றத்தைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முழுதான த ண் டனை க்கு உட்படுத்தப்படவேண்டுமெனவும் நாம் கோரு கிறோம்.
سے 32 سست

திருமதி. கோணேஸ்வரி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவம், அண்மைக் காலமாகக் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் பெரும் எண்ணிக்கை யான இத்தகைய பாலியல் வன்முறைகளை மீண்டும் வெளிச்சத் திற்குக் கொணர்ந்துள்ளது. இவ்வருட ஆரம்பத்திலிருந்தே இவ் வாறான பல சம்பவங்கள் அரச ஆயுதப் படை யின ரா லும், பொலிஸாராலும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சில சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளபோதும், சம்பந் தப்பட்ட பெண்களின் பாதுகாப்புக் கருதி அநேகமானவை முறை யிடப்படாமல் செவிவழிக் கதைகளாகவே இருந்துவிடுகின்றன. பல சமயங்களில், அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப் பட்டவர்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டிவிடுகின்றனர். அவ்வாறான மூன்று வழக்குகள் உள்ளதாக அறிகிறோம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையத்திற்கு முறையிடச் செல்கின்றபோது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்கிளில் பொலி ஸார் முறைப்பாட்டை ஏற்று வாக்குமூலத்தைப் பதிய மறுத் துள்ளனர். பாலியல் வன்முறையிலீடுபட்ட கோ ஷ் டி யி ன ரே முறைப்பாடு செய்யவேண்டாமென்று மிரட்டிவிட்டுச் செல்கின்ற
பல சம்பவங்களும் உள்ளன.
பாலியல் வன்முறை சுள் நிகழ்கின்ற பிரதேசங்கள் யாவும் இரா ணுவ நடவடிக்கைக்குட்பட்ட கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகவும், சம்பந்தப்படுகின்றவர்கள் யாவரும் ஒன்றில் பொலிஸாராகவோ விசேட அதிரடிப் படையினராகவோ அல்லது இராணுவத்தின ராகவோ இருப்பதையும் இங்கு அவதானிக்கக்கூடியதாயுள்ளது, பாலியல் வன்முறை ஒரு பெண் ணின் சுயாதீனத்திற்கும் கெளர வத்திற்கும் குந்தகமானது. அத்துடன் இலங்கை பீனல் கோட் (Penal Code) சட்டப்படி பாரதூரமான குற்றமாகவும் கருதப்படு கிறது. இராணுவ நடவடிக்கைப் பிரதேசங்களில் வாழும் அப்பா விப் பொதுமக்கள் பாலியல் வன்முறைக்காளாக்கப்படுகின்றமை, யுத்தம், உள்நாட்டு யுத்தம் போன்ற நிலமைகளின்போது மனித உரிமையினடிப்படையிலும் , பனிதாபிமானத்தினடிப்படையிலும் வகுக்கப்பட்டுள்ள ஜெனீவா ஒழுக் காற்று விதிகளை (Genewa Conventions) மீறுவதாகவும் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச aldab ' t || GM g u GSP Gir GMT (International Covenant) FI 3 LD diò gì b sygt சியல் உரிமைகளை மீறுவதாகவுமுள்ளது.
பாதுகாப்புப் படையினரால் கிழக்கில் மேற்கொள்ளப்படும் பாலி யல் வன்முறைகள்பற்றி நாம் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளோம். முறையிடப்படும் ஒவ்வொரு சம்பவமும் தயவு
- 33 -

Page 21
தாட்சணிய மின்றி விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டுமென்று நாம் வலியுறுத்துகின்றோம். அரச ஆயுதப் படையினர் தாம் சட்ட த் திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ, எவ்விதமான தண்டனைக்கும் புறம்பான வர்கள் என்றோ தம்மைக் கருதிக்கொள்ளும் நிலமை மாறவேண்டுமெனில் கால தாமதமின்றி இச்சம்பவங்கள் விசாரிக்கப்படவேண்டுமென்று நாம் கருதுகிறோம். உடனடியானதும் தெட்டத்தெளிவானதுமான நீதி வழங்கப்படுவது மாத்திரமே இனிமேலும் இவை நிகழாதிருக்க வழிவகுக்கும். பெண்களுக்கெதிரான குற்றங்கள் இழைக்கப்படாதிருக்க அரச ஆயுதப் படையினரிடையே கடுமையான கட்டுப்பாடும் ஒழுக் காற்று விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஆவன செய்யுமாறு நாம் வலியுறுத்துகிறோம்.
உங்கள் உண்மையுள்ள,
பெண்கள் தொடர்பு ஊடக கூட்டு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம். இலங்கை அரச சார்பற்ற பெண்கள் நிறுவனங்களின் கூட்டு. "இன்போ (f) ர்ம்" . அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பு. மகளிர் ஆராய்ச்சி நிலையம். உழைக்கும் மகளிர் அபிவிருத்தி மன்றம், மட்டக்களப்பு. அக்ரோ மார்ட் அமைப்பு. சகல பாரபட்சங்களுக்கும் , இனத்துவத்துக்கும் எதிரான சர்வதேச அமைப்பு.
10. இந்து மகளிர் மன்றம், திருகோணமலை. 11. பெண் விமோசன ஞானோதயம், ஹற்றன். 12. முஸ்லிம் மகளிர் ஆராய்ச்சிச் செயல் முன்னணி. 13. இளம் கிறிஸ்தவ மகளிர் அமைப்பு, மட்டக்களப்பு. 14. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம். 15. பெண்கள் அபிவிருத்தி அரங்கு, மட்டக்களப்பு. 16. ஊவா சமூக அபிவிருத்தி நிலையம். 17. சமூக விஞ்ஞானிகள் கழகம், பெண்கள் பிரிவு. 18. நாவற்குடா கிழக்கு உழைக்கும் மகளிர் சங்கம்: 19. சமூக பொருளாதார அபிவிருத்தி நிலையம் - பெண்கள் பிரிவு.
-- 34"سس

20,
2.
22.
23.
24,
25.
26.
37.
28.
29.
30.
3.
S2.
33.
34.
35.
36.
37.
சமூக கல்வி நிலையம், மாலபே. சமாதானத்திற்கான பெண்கள். பெண்கள் அபிவிருத்தி நிலையம், கண்டி. பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், அக்கரைப்பற்று.
பெண்கள் அபிவிருத்தி அமைப்பு, குருநாகல்.
நிர்மானிகாவய. இலங்கை முஸ்லிம் பெண்கள் காங்கிரஸ். காந்தா சக்தி.
தாபிது கூட்டமைப்பு. தேசிய கிறிஸ்தவ சபை - பெண்கள் குழு . மகா சக்தி, அக்கரைப்பற்று. பெண்கள் நிலையம், ஜா - எல. குடும்ப சேவைகள் நிலையம். அம்பிகா பெண்கள் புனர்வாழ்வுக் கழகம், காரைதீவு. கணவனை இழந்தோர் சங்கம், பாண்டிருப்பு. X தேசிய கிறிஸ்தவ சபை-நீதிக்கும் சமாதானத்துக்குமான குழு. நட்புறவாளர் ஒன்றியம், மட்டக்களப்பு. தேவ சரண - பெண்கள் பிரிவு.
tGR 28oüUtsoeura إصلاكتملاك -
121D.

Page 22
"டெய்லி நியூஸ்” கோணேஸ்வரி தொடர்பான செய்தித்தவறு
சுட்டிக்காட்டலும், கண்டனமும்
கடந்த 17-05-97 இல் அம்பாறை மாவட்டத்தில் சென்றல் முகாம் பொலிசாரினால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட் டுக் கொலை செய்ய ப் பட்ட கோணேஸ்வரி முருகேசுபிள்ளை தொடர்பாக 01-07-97 இல் டெய்லி நியூஸ் பத்திரிகையில் திரிபு படுத்தப்பட்ட செய்தி வெளிவந்தது.
அதாவது "மரணமானவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படவில்லை" என்பதே அந்தச் செய்தியாகும். இந்தக்கூற்று டாக்டர் அல்விசின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பிழையாக விளங் கிக்கொண்டதன்மூலம் ஏற்படுத்தப்பட்டதாகும்.
அல்விஸின் அறிக்கையின்படி "சடலம் மிகவும் சிதைந்தழிந்த நிலையில் காணப்பட்டமையால் கோணேஸ்வரி பாலியல் வன் முறைக்கு உட்படுத்தப்பட்டாரா அல்லது இல்லையா என்று தீர் மானிக்கமுடியாமல் உள்ளது" என்பதாகும்.
இதனைச் சாட்டாகக்கொண்டே டெய்லி நியூஸ் முற்கூறப் பட்ட செய்தியை வெளியிட்டது.
ஆனால் கோணேஸ்வரி அவளது பெண்ணுறுப்பில் கிரனேட் வைத்துத் தாக்கப்பட்டதன் மூலமே கொல்லப்பட்டாள். அவள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாளா அல்லது இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கமுடியாததை வைத்துக்கொண்டு இந்த மாதிரியான செய்திகளை வெளியிடவேண்டாம் என்று மனித உரிமைகள் இல்லம், இன்போம், இனத்துவ ஆய்வுக்கான சர்வ தேச நிலையம், பெண்கள் தொடர்பூடகக் கூட்டு என்பவற்றுடன் இணைந்து கிழக்குப்பிராந்திய பெண்கள் கூட்டமைப்பும் தனது வேண்டுகோளை டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு விடுத்துள்ளது.
அத்துடன் கொலை, பாலியல் வன்முறை போன்ற கொடூர மான நிகழ்ச்சிகளைப் பற்றிய பிழையான தகவல்களைக் கொடுத்து மக்களைத் தவறாக வழிநடத்தும் எல்லா முயற்சிகளையும் கண் டிப்பதுடன் அரசாங்கத்தின் சரியான நீதி வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் டெய்லி நியூஸ் பத் திரிகை தனது செய்தியைத் திருத்தி அமைக்கவேண்டும் என்றும் , அரசாங்கம் விசாரணையின் முழு விபரத்தையும் வெளியிடவேண் டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. C)
سسسسس- 36" --سد

பெண்ணே - நீ
பெண்ணே
காவியம் தொட்டு புதுக்கவிதைவரை உவமை அழகால் அலங்கரிக்கப்பட்டு அழகு பார்ப்பதற்கு மட்டும் - நீ அவதரித்தவளல்ல. உன் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் குரல் கொடுக்க வேண்டியவள் - நீ
தாய்மையே
உங்களின்
பலவீனங்கள்தான் பலருக்குப்பலங்களாகிவிட்டதை
È.
9) Asian Tulu mt
உங்களின்
சரித்திரங்கள் உதிர்ந்திடும் சருகுகளல்ல நிலைத்திருக்கும் இரும்புத்தூண்கள்
பெண்மையின் ஒருமித்த எழுச்சி வித்துக்களாய் மண்ணில் விழவேண்டுமேயொழிய விறகுகளாய் எரிந்திடக்கூடாது
இறுதியாய் ஒன்று உன் அடக்குமுறைகளை அடக்கிட முன்னே கல்லறைக்குள் அமிழ்ந்துவிடாதே
ஏ. கே. தயானந்தன்

Page 23
யுத்தச் சூழலில் வன்முறையை எதிர்கொள்ளும் வடக்கு, கிழக்குத் தமிழ்பேசும் பெண்கள்,
- சி. சந்திரசேகரம்.
போர், படையெடுப்பு, சாதி, இன வன்செயல்கள் என்ப வற்றின் போது நேரடியாக மட்டுமன்றி மறைமுகமாகவும் அதிகள வில் பாதிப்புக்குள்ளானவர்கள் பெண்களே. இதற்குக் காரணம் பெண்கள் எதிரியின் முக்கிய சொத்தாகவும், சொத்தின் பாது காவலர்களாகவும், இரண்டாந்தரப் பாலினராகவும், இனப்பெருக் கக் கருவியாகவும், போக நுகர்ச்சிப் பொருளாகவும், பலயினப் பட்டவர்களாகவும் நோக்கப்படும் கருத்து நிலையினது வெளிப் படுத்தலாகும்.
"போரின்போது முதலாவது பாதிக்கப்படுபவள் பெண்னே;
இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண்னே’’ என்று கூறப்படுகிறது. அமெரிக்க - வியட்னாம் யுத்தம், பங்களா தேஷில் பாகிஸ்தான் படையெடுப்பு, லெபனான் உள்நாட்டு யுத் தம் ஆகிய யுத்தச் சூழல்களின்போதான நிகழ்வுகள் மேற்போந்த கூற்றை ஆதாரப்படுத்தும். மேலும் இரண்டாம் உலகப்போர்க் காலகட்டங்களில் யப்பானிய ரா னு வ த் தா ல் பிறநாட்டுப் (கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்வான், இந்தோ னேசியா, நெதர்லாந்து) பெண்களும், சிறுமிகளும் பாலியல் அடி மைகளாகப் பயன்படுத்தப்பட்டமையும், பின்னர் அவர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட தாக் குதல்கள், வன்முறைகளும் இவ்வகை யுள் அடங்குவன. w
இலங்கையின் இனப்பிரச்சினையும், புத்த செயற்பாடுகளும் வடகிழக்குப் பிராந்தியத் தமிழ்பேசும் பெண்களுக்கு எதிரான வன்முறைத்தளத்தை அமைத்துள்ளது. குறிப்பாகத் தமிழர்களுக்

கெதிரான இன வன்முறைகள், ராணுவ பொலிஸ் ஒடுக்குமுறை, அத்துமீறல்கள் என்பவற்றின்போது இப்பிராந்தியப் பெண்கள் பல் வேறு வன்முறைகளையும், இன்னல்களையும் எதிர்நோக்குகின்ற னர்.
இலங்கையில் தமிழ் அரசியல் இயக்கங்களின் போராட்டங் களும் அதற்கெதிரான அரசின் நடவடிக்கைகளும், வட, கிழக்கு மக்களிடையே பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தின. இந்நிலையில் பெண்கள் மிக மோசமான முறையில் நேரடியாகவும், மறைமுக மாகவும், உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய பங்கு வகிப்போர் இராணுவத் தினரே.
இவற்றில் ராணுவ வன்முறைகளும், துன்புறுத்தல்களும் பிர தான அம்சங்களாக உள்ளன. இவற்றை நாம் பாலியல் சார்ந் தவை, பாலியல் சாராதவை எனவும் இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலோ, நட மாட்டத்திலோ உள்ள ஒரு பிரதேசம் ராணுவ ஊடுருவலுக்குள் ளாகும்போது அல்லது கட்டுப்பாட்டில் வரும்போது அங்குள்ள பெண்கள் பலவித துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். விடுத லைப் புலிகளுக்கு உதவியளித்தல், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் யாராவது அவ்வியக்கத்தில் இருத்தல், இயக்க உறுப் பினர்களுடன் உறவு வைத்திருத்தல், கதைத்தல் ஆகிய குற்றச் சாட்டுக்களின் பெயராலும், சந்தேகத்தின் பெயராலும் பெண்கள் அடி , உதை, பாலுறவுச் சித் திரவதைகளுடன், கெட்ட ஆபாச துர்வார்த்தைப் பிரயோகங்களாலும் நிந்திக்கப்படுகின்றனர். அதே வேளை இத்தகைய குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் இன்றி இன வேறுபாட்டின் அடிப்படையிலும் அவர்கள்மேல் இவ்வித இன்ன் ல் கள் சுமத்தப்படுகின்றன. இப்பிரவேசங்களின்போது ஆண்களை விடப் பெண்களே கூடுதலான தாக்கத்திற்கு உட்படுவதற்கான காரணம் என்னவெனில் இவ்வேளைகளில் அச்சம் காரணமாக ஆண்கள் வேறு இடங்களுக்கு ஒடித் தப்பித்துக்கொள்ளும் நிலை யில் பெண்கள் தம்முடைமை, சொத்து, குழந்தைகள் ஆகியவற் றைக் காப்பாற்றும் பொருட்டும், இ ய லா மை காரணமாகவும் வீட்டிலிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுவதாகும். இங்கு எதிரிமே லுள்ள ஆவேசம் பெண்கள்மேல் சுமத்தப்படுகிறது.
சிலவேளை ஆண்களோடு பெண்களும் அவ்வாறு வேறு பாது காப்பான இடங்களுக்கு ஓடவேண்டிய நிலை ஏற்படும்போதும் பெண்கள் பல துயரங்களை அனுபவிக்கவேண்டியுள்ளது. இச்சந் தர்ப்பங்களில் தம் குழந்தைகளையும், பொருட்களையும் காவிக்
مسس 39 سے

Page 24
கொண்டு பல இன்னல்களையும் தாங்கியவண்ணம் ஒடவேண்டி இருப்பதுடன் சென்ற இடங்களிலும் தங்குவதற்கு ஏற்ற இடங்கள், வசதிகள் இல்லாமையால் பல அசெளகரியங்களையும் இக்கட்டுக் களையும் பெண்கள் கூடுதலாக அனுபவிக்கின்றனர். மேலும் இவ் வாறான நிலைமைகளின்போது கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளின் தாய்மார்கள், மாதவிடாய்க்காலப் பெண்கள், நோய்வாய்ப்பட்ட பெண்கள் இன்னும் மோசமான இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. மட்டக்களப்பின் படுவான் கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பல கிராம மக்கள் அடிக்கடி இத்தகைய நிலைமைகளை அனுபவித்து வருவதைக் காணலாம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் அண்மைக்காலப் பிரவேசங்களின் போதும் இக்கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.
இத்தகைய ஊடுருவல்களின்போது ஆண், பெண் வேறுபா டின்றி மிக மோசமாக அடித்துத் துன்புறுத்துவதும். அதனால் மீண்டும் மக்கள் போராளிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவர் என்பதும் ராணுவத் தந்திரோபாயமாக இருந்துவருகிறது.
உடற் துன்புறுத்தல்களையோ, தண்டனைகளையோ அடைந்த பெண்களிற் பெரும்பாலானோர் மருத்துவரையோ, சட்டத்தையோ நாடமுடியா நிலைக்கு ஆளாகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இத்தண்டனைப் பிரயோகிப்பு பெரும்பாலும் அவர்சளால் வெளி யில் காட்டமுடியாத - காட்டக் கூசுகின்ற உறுப்புக்களில் மேற் கொள்ளப்பட்டிருப்பது. மற்றது ராணுவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சமூகம் சந்தேகக் கண்ணோடும், அவமானப்பட்டவ ளாகவும், மானம் இழந்தவளாகவும் நோக்குவது. தனது உடற் காயங்களுக்கே மருத்துவம் பார்க்கமுடியாத ஒரு கொடூரமான ஒடுக்குதலுக்குப் பெண் உள்ளாக்கப்படுகிறாள். இது உடலியல் தாக்கத்தோடு மாத்திரமன்றி உளவியல் தாக்கத்திற்கும் பெண் களைக் கூடுதலாக இட்டுச்செல்ல வல்லது.
மேலும் சோதனைச் சாவடிகளிலும், தெருக்களிலும் வைத்துப் பெண்கள் ராணுவச் சேட்டைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் உட் படுத்தப்படுவது இன்று சக சமாகிவிட்டது. அதேவேளை ராணுவ, பொலிஸ் முகாம்களுக்கு அண்மையிலோ, அவ்வூரிலோ உள்ள இளம் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குச் சில இராணுவத்தினரும் பொலி சாரும் அடிக்கடி சென்று அவர்களுடன் அலுப்பை ஏற்படுத்தும் வகையிலும், தேவையற்ற விதத்திலும் கதைத்துக்கொண்டிருத்தல், கதைக்க முயலுதல் ஆகியவற்றால் அப்பெண்களைத் தொல்லைப் படுத்துகின்றனர். இதேவேளையில் உயிர்ப்பயம் காரணமாக அப்
سسسيس 40 -س-

பெண்களால் அவர்களை எதிர்க்கமுடியாது சமாளித்து நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
தவிர, ராணுவமுகாம் அமைப்பு, விஸ்தரிப்பு நடவடிக்கை களின்போது முகாம் எல்லையினுள்ளோ, எல்லை ஓரங்களிலோ உள்ள குடும்பங்கள் கட்டாயத்தின் பேரில் தங்கள் வீடுகளில் தங்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெண்கள் பல் வேறு இன்னல்களையும் அனுபவிப்பதோடு பயங்கரமான சூழ் நிலையில் அஞ்சி அஞ்சி வாழவேண்டியவர்களாக உள்ளனர்.
மேற்கூறியபடி ராணுவச் சேட்டை, தொந்தரவுகளில் பாலி யல்சார் சேட்டைகளும், தொந்தரவுகளும் பெருமளவில் இடம் பெற்றுக்கொண்டு வருகிறது. சோதனைச் சாவடிகளில் பெண்கள் சோதனை என்ற பெயரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின் றனர். இங்கு குறிப்பிடவேண்டிய ஒரு அம்சம் சோதனைச் சாவடி களில் 'பெண்களை அதிகம் சோதனை இடுபவர்கள் ஆண் ராணு வத்தினராகவே உள்ளமையாகும். நகர்ப்புறங்களிலும் ஒருசில இடங்களிலேயே பெண் பொலிசார் இக்கடமையில் ஈடுபட ஏனைய இடங்களிலும், கிராமப்புறங்களிலும் ஆண் பொலிசாரே பெண் களைச் சோதனையிடும் வழக்கம் இருப்பதனால் பெண்கள் பல பாலியல்சார், பாலியல் சாரா இன்னல்களுக்கு இலக்காகவேண்டி யுள்ளது. இவற்றுடன் சுற்றிவளைப்பு, தேடுதல் வேட்டை என்ப வற்றின்போதும் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு உட் படுத்தப்படுகின்றனர். இராணுவச் சேட்டைகளின்போது அப்பட்ட மான தூஷண வார்த்தைகளும பிரயோகிக்கப்படுகின்றன. இவ்வா றான சொற்பிரயோகங்களை அவர்கள் அனேகமாகத் தம் தாய் மொழியில் கூறிச் சேட்டை பண்ணுவதையும் காணலாம். அத் தோடு சில பாவனைச் சேட்டைகளையும் தினம் செய்வது வழக் காகிவிட்ட அதேவேளை அவற்றை எதிர்க்கமுடியாத நிலையில் சகித்துக்கொண்டு நடக்கவேண்டிய இக்கட்டான் நிலைக்கு உள் ளாகியுள்ளனர்.
யுத்த, சாதி, இன வன்செயல் ஒடுக்குமுறைச் சூழலில் பெண் கள் எதிர்கொள்ளும் வன்முறைச் செயற்பாட்டுக் கூறுகளில் பாலி யல் பலாத்காரமும், படுகொலைகளும் மிக முக்கியமானவை. இலங்கையில் ஆரம்பகால தமிழருக்கெதிரான ராணுவ வன்முறை கள் தொட்டு இன்றுவரை இது தொடர் செயற்பாடாக உள்ளது. அதிலும் இப்பாலியல் பலாத்காரச் செயற்பாட்டின் உக்கிரம் நில விய காலகட்டங்களை; 1987 - 1989 வரையான காலகட்டம், 1996 - 1997 வரையான காலகட்டம் என அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
- 41 =

Page 25
இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் இந்திய அமைதிகாக்கும் படையினரும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் இலங்கையில் நிலை கொண்டிருந்த 1987 - 1989 வரையான காலகட்டங்களில் தமக் கெதிரான தாக்குதல்கள், சுற்றிவளைப்புகள், விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றல், ஊடுருவல்கள், சோதனையிடல் ஆகிய சந்தர்ப்பங்களில் அவர்கள் மிருகத்தன மாகத் தமிழ்ப் பெண்களது முகம், தொடை, பாலியல் உறுப்பு கள் என்பவற்றைக் கடித்துக் குதறியும், உடைகளைக் கிழித்தும் வயது வேறுபாடின்றிப் பாலியல் வல்லுறவு மேற்கொண்டமைக் குப் பல உதாரணங்களைக் காட்டலாம்.
- 1987 நவம்பர் 12ம் திகதி 38 வயது தொழில் சார் பெண் மணியை 3 இந்திய ராணுவத்தினர் மாறிமாறிப் பாலியல் வல்லுறவு மேற்கொண்டமை. - 13 வயது இளம்பெண் தேடுதல் என்ற பெயரில் பாலியல்
வல்லுறவுக்கு உட்பட்டமை. - நவம்பர் 18 இல் வறிய ரோமன் கத்தோலிக்கர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் 22 வயதுப் பெண்ணும், 55 வயது விதவை யும் இரு படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி
a) Ltd. - டிசம்பர் 23 இல் க. பொ. த. (உயர்தரம்) கல்விகற்ற சுருட் டுத் தொழிலாளியின் மகளான இளம் பெண் (18 வயது) இராணுவத்தினரால் தாயின் முன்னிலையில் பாலுறவுக்கு உள்ளான மை, - நவம்பர் 16 இல் ஒரு புகைப்படம் சம்பந்தமான விசாரணை மிரட்டலைத் தொடர்ந்து ஒரு விவசாயின் மகள் பாலியல் வன்முறைக்கு ஆளான மை . - 1988 ஜனவரி 29ம் திகதி தந்தையும் மகளும் கோயிலுக்குச் சென்றபோது அங்கு 22 வயது மாணவியான அப்பெண் துப்பாக்கிமுனையில் இரு படையினரால் பாலியல் வல்லுற வுக்கு ஆளான மை, . - 1988 ஜனவரியில் 30 வயது இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதோடு பின்னர் அவள் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டமை. 义
(முறிந்த பனை - 1995 : 384-390)
இவையனைத்தும் யாழ்ப்பாணப் பிரதேசங்களில் மேற்கொள் ளப்பட்ட பாலியல் வன்முறைகளாகும். இவற்றைத் தவிர,
- 42

- கொழும்புத்துறை மணியம் தொட்டப்பகுதியில் படையின
ரால் ஆறு பெண்கள் பாலுறவுக்கு உட்பட்டமை.
(தினமுரசு - மார்ச் 2-8 : 1997)
- மானிப்பாய் இந்துக் கல்லூரி அகதிமுகாமில் பெண்கள் மான
பங்கம் செய்யப்பட்டமை.
(தினமுரசு -மார்ச் 23-29 : 1997)
போர் அனர்த்த விளைவால் மனநோயுற்று யாழ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண் அங்கு கடமையாற்றிய இந்தியப் படையினரால் நான்கு இரவுகள் தொடர்ந்து பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டமை"
(தினமுரசு - மார்ச் 30 - ஏப்ரல் 05: 1997) களுவாஞ்சிகுடியில் தமக்கெதிரான ஒரு தாக்குதலின்போது கணவனைச் சுட்டுவிட்டு மனைவியைப் பாலியல் வன்முறை செய்தமை.
dmv
- மட்டக்களப்பில் இரு பெண்கள் தொடை, முகம் போன்ற உறுப்புக்கள் கடித்துக் குதறப்பட்டு பாலுறவு செய்யப்பட்
60.
- பெரிய கல்லாற்றைச் சேர்ந்த வயதுபோன பெண் ஒருவரை
பாலியல் பலாத்காரம் செய்தமை.
எனப் பல்வேறு பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை - பலாத் காரச் செயற்பாடுகளை இந்திய அமைதிகாக்கும் படையினர் மேற்கொண்டமையைக் காட்டலாம். இவற்றைத் தவிர சோதனை யின்போதும் பல்வேறு பாலியல் வன்முறைச் செயல்கள் மேற் கொள்ளப்பட்டன.
அடுத்து 1996ம், 1997ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண ராணுவ நடவடிக்கைகளின் போதும், அதன் தாக்கமாகவும், தொடராகவும் கிழக்கிலங்கையிலும் தமிழ்பேசும் பெண்கள்மீது மேற்கொள்ளப் பட்ட பாலியல் வல்லுறவுச் செயல்களைக் குறிப்பிடலாம். இக் கட்டத்தில் மனித உரிமைகள் மிருகத்தனமாக மீறப்பட்ட அதே வேளை இப்பிரதேசங்களில் இளம் பெண்கள் சோதனைச்சாவடி, திடீர் சுற்றிவளைப்புக்களில் கைது செய்யப்பட்டுப் பா லி ய ல் கொடூரங்களுக்கு உட்படுத்தப்பட்டதோடு அவர்கள் படுகொலை யும் செய்யப்பட்டமை நாடறிந்தது. இவை பற்றிய சில தகவல்கள் கள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
- 1996 - செப்டம்பர் 7ம் திகதி 18 வயது நிரம்பிய சுண்டுக்குளி மகளிர் கல்லூரி க. பொ. த. (உயர்தரம்) வகுப்பு மாணவி
سیس 43 سس۔

Page 26
கிருசாந்தி குமாரசாமி யாழ் நகர எல்லை ராணுவ சோதனை முகாமில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை. செப். 27ம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டியில் 32 வய துடைய மேகலா என்பவர் படையினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுக் காணாமல் போனார்.
செப். 27ம் திகதி வாழைச்சேனையில் தமிழ்க் கடைக்காரர் ஒருவரின் மனைவி ராணுவத்தினர் பலரால் பாலியல் வல் லுறவுக்கு உள்ளாக் சப்பட்டமை.
செப். 30ம் திகதி கோண்டாவில்லைச் சேர்ந்த 23 வயது ராஜினி எனும் இளம்பெண் அவ்வூர்ச் சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்டுப் பல ராணுவத்தினரால் பாலியல் வதை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டமை. நவம், 3ம் திகதி மட்டக்களப்பு - பட்டியடிச்சேனையில் 42 வயதுப் பெண் படையினரால் பாலியல் பலவந்தத்திற்கு உள்ளாக்கப்பட் டமை. நவம். 12ம் திகதி அச்சுவேலி பத்தைமேனியைச் சேர்ந்த புத்தூர் சோமஸ்கந்த வித்தியாலய 5ம் ஆண்டு 10 வயதுச் சிறுமியான தேனுகா செல்வராசா படையினரால் பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டமை. திருமலை (இனப்படு கொலை அனர்த்தத்தில்) கிளிவெட்டியில் 16 வயது யுவதி தர்மலக்ஷ்மி காடையரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்பட்டார்.
(சரிநிகர் இதழ் 111, டிச. 05 - டிச. 18 : 1996) அரியாலை ராணுவ சோதனை நிலையத்தில் ஒரு ஆசிரியை கடத்திச்செல்லப்பட்டுக் காணாமல் போனார். மீசாலையில் ராணுவத்தினர் ஒரு பெண்பிள்ளையை அவளது தந்தையின் முன்னிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
(சரிநிகர் இதழ் 109, நவ, 07 - நவ. 20 : 1996)
1996 டிசம்பர் 31இல் மண்டூரைச் சேர்ந்த 30 வயதுப் பெண் 3 அதிரடிப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்பட்டார். 1997 ஜனவரி 9 இல் வாழைச்சேனை தியா வட்டுவானைச் சேர்ந்த சதாசிவம் தவமணியும், மகள் ஜெயந்தியும், பக்கத்துவீட்டுப் பெண்ணும் 3 படையினரால் வல்லுறவுக்கு உள்ளானார்கள். மார்ச் 17 இல் மயிலம்பா வெளியைச் சேர்ந்த வேலன் இராசம்மா, வேலன் கோணேஸ் வரி இருவரும் 4 படையினரால் பாலியல் பலாத்காரம் செய்
- 44 -

யப்பட்டனர். மார்ச் நடுப்பகுதியில் நா வ ற்கு டா வை ச் சேர்ந்த கள்ளியங்காடு ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் பெண் கடத்திச்செல்லப்பட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்.
(சரிநிகர் இதழ் 123, ஜூன் 05 - ஜூன் 18: 1997)
- மே 19 இல் மத்தியமுகாம் - 11ம் கொலனியைச் சேர்ந்த 35 வயதுக் குடும்பப்பெண் முருகேசபிள்ளை கோணேஸ்வரி 10 பொலிசாரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு அப் பெண்ணின் பிறப்புறுப்பில் கிரனைட்டை வெடிக்கப்பண்ணிக்
குரூரமாகக் கொல்லப்பட்டார்.
(வீரகேசரி - 01-06-1997)
இதனோடு இனப்பிரச்சினையின் விளைவால் ஆங்காங்கு இன வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கும்போது பெண்கள் கொடுமைப் படுத்தப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், பாலியல் வன்முறை கள் செய்யப்பட்டும், பாலுறவின் பின் கொலை செய்யப்பட்டு முள்ளனர். இவ் வன்முறைக் கொடூரங்களுக்கு மூலம் படையினரிட மும், காடையர்களிடமும் ஆழ்ந்துகிடக்கும் ஆணாதிக்கத் தந்தை வழிச் சமூகக் கருத்து நிலையின் வெளிப்பாடே ஆகும்.
இனப்பிரச்சினையின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை தமிழ்ப் பெண்களுக்கெதிரான ராணுவ, காடையர் பாலியல் பலாத்கார வன்முறைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவந்த அதேவேளை அவற்றில் 90 % மானவை வெட்கம் காரணமாகவும், பலாத்காரத் திற்கு உள்ளான பெண்ணைக் கற்பிழந்த பெண்ணாகச் சமூகம் எடைபோடும் கொடூரத்திற்குப் பயந்தும் மூடிமறைக்கப்பட்டே வந்துள்ளன. வெளிப்படுத்தினாலும் அவற்றிற்குத் தகுந்த - கடுமை யான சட்டநடவடிக்கைகள் அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும் எடுக்கப்படுவதில்லை. அலட்சியப்படுத்தல், விசாரணைகள், சிறு தண்டனைகள் என்பவற்றோடு தீர்ந்துபோகும் சாதாரண விட யங்களாக அமைந்துவிடுகின்றன. பாலியல் பலாத்காரம் தொடர்வ. தற்கு அவை ஊக்குவிப்பாகவே அமைகின்றன. இதுவரை இப் பிரதேச தமிழ்பேசும் பெண்களைப் பாதுகாப்பதற்கான எதுவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இன்னுமொரு பெண்களுக்கெதிரான வன்முறைச் செயற்பாடு மோதல், தாக்குதல்களில் கொல்லப்படும் பெண் வீரர்களின் சட லங்களின் உடைகள் நீக்கப்பட்டு நிர்வாணக் காட்சிக்கு உள்ளாக் கப்படுவது. உதாரணமாக 1996 முற்பகுதியில் வெலியோயாவில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின்
سی۔ 45: سی

Page 27
சடலங்களின் உடைகள் நீக்கப்பட்ட நிலையில் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட மனித நாகரிகத்தைப் புறந்தள்ளிய பெண்களுக்கெதிரான ஆணிலை ஆதிக்க அநாகரிகச் செயற்பாட்டைக் கூறலாம்.
இவ்விதம் ஆணாதிக்க உணர்நிலை மேலோங்கியுள்ள அரசியல் மட்டத்தில் யுத்தச் சூழலைப் பயன்படுத்தி பெண்களுக்கெதிரான பல்வேறு வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனலாம். இங்கு ஆணாதிக்க மனோநிலைப் பிறழ்வு பாலியல் பலாத்கார மாகவும், பாலியல் துன்புறுத்தல்களாகவும் வடிவம் எடுத்துள்ளது.
கைதுகள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என்பவற் றால் ஏற்படும் நேரடித்தாக்கம் ஒருபுறமிருக்க அவற்றின் பாதிப் பால் பெண்கள் மனநோய்களாலும் பாதிப்புறுகின்றனர். யுத்தத் தில் கணவன், சகோதரன், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்படும் மரணம், படுகாயம் ஆகியவற்றால் பெண்கள் கூடுதலான மனப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ராணுவ கைதுகள், காணாமற்போதல் ஆகிய பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ராணுவ முகாம்களில் தாய், மனைவி, சகோதரி போன்றோரே கூடுதலாக அல்லலுறு கின்றனர். அவ்வேளைகளின்போது பெண்களை ஒரு பொருட் டாகக் கருதாமல் நடந்துகொள்ளல், அடித்தோ, மேல்நோக்கித் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துப் பயம் காட்டியோ, கெட்ட வார்த்தைகளால் அதட்டியோ விரட்டல் ஆகிய துன்புறுத்தல் களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவர்கள் உளவியல் தாக்கங்களுக் கும் உட்பட்டுள்ளனர்.
பெண்ணிலைவாதச் சிந்தனைகள் முனைப் புற்றுள்ள இன்றைய சூழ்நிலையில் பெண்கள்மீதான சில கட்டுப்பாடுகள் இன்னும் இறு குவதற்கான, நலிவடைந்து செல்லும் சில கட்டுப்பாடுகள் மீண் டும் அவர்கள்மேல் திணிப்பதற்கான ஒரு களத்தை இப்போர் நிலைத் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது எனலாம். திடீர் தாக்குதல், ராணுவ அச்சுறுத்தல்கள், ராணுவ பாலியல் வன்முறைகள், சேட் டைகள் ஆகிய நடைமுறை அனர்த்தங்களால் குடும் பத்தில் கண வன்மாராலும், பெற்றோர் சகோதரங்களாலும் பெண்கள்மேல் இவ்வாறான பல சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த வசையில்,
- இரவில் பிரயாணம் செய்தல், வெளியே நடமாடல். - சுதந்திரமாக வெளியே செல்லல். - தூர இடங்களுக்குத் தனியே செல்லல். - விரும்பிய உடைகளை அணிதல். - கல்வியைத் தொடர்ந்தோ, உயர் கல்வியையோ கற்றல்,
ー45ー

ஆகிய பல்வேறு விட யங் களி ல் கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
பின்தங்கிய கிராமப்புறங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் அனேகமாக 4ம் அல்லது 5ம் ஆண்டிற்கு உட்பட்டவை. படுவான் கரைப் பிரதேசங்கள் இதற்கு நல்ல உதாரணம். அப்பிரதேச மாணவ, மாணவியர் அங்கு தம் ஆரம்பக் கல்வியை முடித்ததும் அக்கிராமங்களுக்கு அண்மையிலுள்ள நகர்மயப்படுத்தப்பட்ட கிரா மங்களுக்கோ அல்லது நகர்களுக்கோ சென்று தம் கல்வியைத் தொடரும் நிலையைக் காணலாம். ஆனால் இப்பின்தங்கிய கிரா மங்கள் அனேகமாக விடுதலைப் புலிகளது நடமாட்டத்திற்கு, கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பிரதேசங்களாக இருப்பதனால் அவர் கள், கல்வியைத் தொடரும் பிரதேசங்களில் கூடுதலான சோதனை, விசாரணை, அதட்டல், துன்புறுத்தல் ஆகிய பல இன்னல்களுக்கு ராணுவத்தினரால் உள்ளாவதனைக் காணலாம். சிலவேளை கைது களுக்கும் உள்ளாகின்றனர். இவற்றால் கூடுதலாக மாணவியரே ப7திப்பை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. சிலவேளை வரும் வழி களிலும் பாலியல் துன்புறுத்தல், சேட்டைகளுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையினால் பெண்பிள்ளைகளை நகரப்பகுதிகளுக்குக் கல்வி கற்க அனுப்பாது பெற்றோர் அவர்களை ஆரம்பக் கல்வியினுட னேயே நிறுத்திவிடுகின்ற நிலையைக் காணலாம். இதனால் இப் பிரதேசங்களில் தொடர்ந்தும் பெண்கள் மரபுகளுக்கு அடிமை யானவர்களாக, சம்பிரதாயங்களுக்கெல்லாம் கட்டுப்பட்டவர்க ளாக பண்டைச் சமூக நிலைக்குள்ளேயே அமிழ்ந்துகிடக்கும் நிலை தொடர்கிறது.
அத்தோடு பெண்களின் சில நடைமுறைகளே அவர்களுக்கு எதிரான இவ் வன்முறைகளைத் தூண்டுகின்றன எனும் கருத்தின் அடிப்படையில் குடும்பத்தில் பெண்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இவ்வகையில் பெண்கள் தாம் விரும்பியபடி ஆடை அணியவோ, சுதந்திரமாக நடமாடவோ முடியாமல் கட் டுப்படுத்தப்படுகின்றனர்.
மேலும் மேற்கூறிய பெண்களுக்கெதிரான வன்முறைகள், ராணுவ நடைமுறைகள் என்பவற்றால் பெண்களுக்கு ஏற்கனவே இடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமடைகின்றன. சுதந்திரமாக வெளியில் செல்லல், தனியே செல்லல், இரவில் நடமாடல், பிரயாணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யா ம ல் தடுக்கப்படுகின்றனர். இவை பெண்களை அடைபட்ட நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
=47=

Page 28
இலங்கையின் இனப்போர், யுத்தச் செயற்பாடு என்பவற்றால் தம் பிரதேசங்களை விட்டு - வீடுகளை விட்டு இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் அகதிமுகாம்களிலும், நலன்புரி நிலை யங்களிலும், நண்பர், உறவினர், உறவினரல்லாதவர் வீடுகளிலும் தமது அகதி வாழ்வை அனுபவிக்கின்றனர். இவ்வாறு இடம் பெயர்ந்தவர்களில் வடகிழக்குப் பிராந்திய மக்களே அதிகம் என் பதும், அதிலும் 50 % ஆனவர்களும், அதிக பாதிப்புக்குள்ளான வர்களும் பெண்களே என்பது குறிப்பிடக்கூடியது. அரச ராணுவத் தாக்குதல்களுக்கு அ ஞ் சி யே இவ்விடப்பெயர்வுகள் கூடுதலாக நிகழ்ந்தன. இது 90 இலும் பின்னர் 96, 97 இலும் (யாழ்ப்பாண ராணுவ நடவடிக்கைகள்) உச்சநிலை அடைந்தது. உதாரணமாக ஜயசிக்குறுய் ராணுவ நடவடிக்கையின்போது ஜ"ன் ஆரம்பம் வரையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி வன்னியில் உள் மாவட்டங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் இடம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 11 ஆயிரத்து 202 பேர் என மதிப்பிடப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஆயிரக் கணக்கான அதிகரிப்பு ஏற்பட்டுக்கொண்டு வருவதும் அவதானிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும்போதும், தங் கும் இடங்களிலும் பெண்கள் பல இன்னல்களை எதிர்நோக்கு கின்றனர். A0
மட்டக்களப்பில் தற்போது 7438 தமிழ், முஸ்லிம் குடும்பங் கள் அகதிமுகாம்களிலும், நண்பர், உறவினர் வீடுகளிலும் அகதிக ளாக வாழ்கின்றனர். அகதிமுகாம் வாழ்வை எடுத்துக்கொண்டால் பொதுப் பிரச்சினைகளைத் தவிரப் பெண்கள் பலவித அசெளகரி யங்களைத் தினமும் அனுபவிக்கின்றனர். அந்தரங்கங்களைப் பேண முடியாமை, ஒரே மண்டபத்தில் இருபாலாரும் தங்கவேண்டிய நிலை, பாலியல் சேட்டை, பாலியல் வன்முறை, வெளியில் உலா வித்திரியச் சுதந்திர மின்மை, வெளியில் ராணுவத்தால் கூடுதலான விசாரணைக்கு உள்ளாதல் (வெளியூர் எனும் காரணத்தால்), பாது காப்பின்மை, உடற்சுகாதாரத்தைப் பேண முடியாமை, போசாக் கான உணவின்மையால் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாரும், குழந்தைகளும் கூடுதலான பாதிப்புறல், மகப்பேறு, கர்ப்பம் தொடர்பான இன்னல்கள், திருமண நடைமுறைச் சிக்கல்கள், சமூக அந்தஸ்தில் தாழ்நிலையில் மதிக்கப்படல், குறைந்த கூலி யில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படல் எனப் பல்வேறு இடர் களை அகதியான பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
இவற்றையெல்லாம் விட உளவியல் தாக்கங்களுக்கும் கூடுத லாக உட்படுபவர்களாக இவர்கள் உள்ளனர். தம் ஊர், வீடு,
ー48ー

சொத்து, சுகம் என்பவற்றை இழந்தமை, உயிரிழப்பு, தாக்குதல் களுக்கு உட்பட்டமை ஆகியவற்றால் அவர்கள் கூடுதலாகப் பாதிக் கப்பட்டமையால் அவைபற்றியதும், எதிர்காலம் பற்றியதுமான ஏக்க நிலைக்கு அதிகம் உட்பட்டவர்களாக உள்ளனர்.
இந்த யுத்த வன்முறைச் செயற்பாடுகள் வட, கிழக்குப் பிராந் தியங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்களை இன்று விதவைக ளாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு மாவட்டச் செய லகம் இறுதியாக (31-08-98) எடுத்த புள்ளிவிபரப்படி 2681 பெண் கள் இம்மாவட்டத்தில் வன்செயல் காரணமாக விதவைகளாகி யுள்ளனர். இவ்வாறு விதவையானோரில் அதிகபட்சமான வர்கள் இளம் வயதினராக இருக்கும் அதே வேளை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாகவும் உள்ளனர். கணவனின் இழப்பு அப் பெண் ணுக்கு "விதவை என்ற நிலையின் கீழ் பல்வகை சம் பிரதாய அழுத் தங்களைத் திணிப்பதோடு வேறு சமூகத் துன்புறுத்தல்களையும் அளித்துவிடுகிறது. கணவனின் இழப்பு, ஆண்பிள்ளைகளின் இழப்பு என்பன குடும்பத் தலைவிமீதோ, பெண் பிள்ளைகளின் மீதோ குடும்Aச் சுமையினைச் சுமத்தி விடுகின்றன. இவ்வழுத்தத்தினால் அவர்கள் வேளாண்மை வெட்டுதல், கட்டுதல், சூடுபோடுதல், களை பிடுங்குதல். கதிர் பொறுக்குதல், மாவிடித்தல், அரிசி குற் றல் ஆகிய பல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கஷ்டமுறுவ துடன் "கள வட்டிக்குப் பிச்சை கேட்டுச் செல்லல்’ என்னும் வழக்கு இன்று கிராமப்பகுதிகளில் அதிகரித்துள்ள பரிதாப நிலை யினையும் காணமுடிகிறது.
யுத்த நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட, ஊனமுற்ற அப்பாவிகளுக்கு அரசாங்கம் வழங்கும் சிறுதொகைப் பணத்தைப் பெறுவதிலும் கிராமியப் பெண்களே மிக அலைச்சலும், ஏமாற்ற மும் அடைகின்றனர்.
இறுதியாக இந்த யுத்த அனர்த்தங்கள் பெண்கள் மேல் சுமத் திய வன்முறைகளிலிருந்தும், இன்னல்களிலிருந்தும் அவர்களை மீட்கப் பல்வேறு ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் முனைப் படைந்து செல்கின்றபோதிலும் அவை தொடர் நிகழ்வாகவே உள்ளன. எனவே இவ்வழுத்தங்களுக்கெல்லாம் மூலமாக உள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய முன்னெடுப்புக்கள் செய லூக்கம் பெறுவதனூடாகவே அவற்றிலிருந்து பெண்களை முழுமை யாக மீட்கமுடியும். O
--سہ 49 --سس

Page 29
கோடுகள்
நான் ஜடமல்ல உணர்வுகளும் ஆசைகளும் உள்ளவள் யுத் தத்தின் பரிசு என் வாழ்வு சூனியத்தில்
எனக்கு
வெள்ளைச் சேலை கட்டி தருகிறார் பட்டம் **விதவை'' என.
தாலி, பொட்டு, பூவை பறித்தெடுத்தார் அடுத்த பட்டம் 'அறுதலி'
மங்கள சபையினிலே நான் ஒர் அங்கமில்லை என் முகத்தில் முழித்தால் அபசகுனமாம்.
நிவாரணம் எடுக்கப் போனால் - என்னை நிர்வாணம் ஆக்குகிறார் போம் நிரப்பப் போனால் போதைப் பொருளாய் பார்க்கிறார்.
பட்டுச் சேலை அணிந்தால் பட்ட மரம் உனக்கேன் இது என்கிறார் பொட்டு வைத்தால் பொறுக்கிப் பெண்ணாம் நான் . வீதியில் நான் சென்றால் விபச்சாரி என்கின்றார் உதவிக்கு ஆளைக் கேட்டால் ஜோடிகட்டி வேடிக்கை பார்க்கிறார் வாய்விட்டு நான் சிரித்தால் சிங்காரி என்கிறார்.
--سس۔ 50 : نسس۔

தாங்கும் இதயம் எனக்கில்லை குடும்பம் முதல் சமூகம்வரை என்னை ஒதுக்கியே வைக்கிறார் எனவேதான்
உடன் கட்டை
நன்று என s இன்று நான் நினைக்கிறேன்.
பொல்லாத சமூகத்திற்கு கூறுகிறேன் ஒரு செய்தி
அழியுங்கள் கோடுகளை புது வாழ்வு காணுங்கள்
- ஜெயந்தி தளையசிங்கம்.

Page 30
சிறுகதை
‘எல்லையைத் தொடாத
எத்தனங்கள்’
- 'நிலாபாரதி”
நிறைமாதக் கர்ப்பிணியாக வந்துநிற்கிறது பஸ். அலுவலகச் சுமையோடு, காத்திருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறு கிறார்கள். போட்டி இல்லாத இடமே இல்லை என்று நினைத்துக் கொண்டு, நான் இறுதியாகத் தாவி ஏறிக்கொள்கிறேன். தோளில் ஒரு "பேக்"குடனும், கைகளில் ஃபைல்களுடனும் தள்ளாடியவாறு பஸ்ஸில் நிற்பது சிரமமாக இருக்கிறது. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ணிடம் ஃபைல்களைக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்த என் விழிகளில் வியப்பு . அவளைக் கண்டதும், சட்டென்று மூளையில் ஒரு ஞாபக க்கீற்று. அந்த முகத்தைச் சாதாரணமாக மறந்துவிடமுடியுமா.. ? இந்தக் காலநதியின், வேகமான ஒட் டத்தை எதிர்கொண்டு நினைவிலே உறைந்துபோன முகம் அது. "ஹாய் மிருணா ! யூ றி மெம்பர் மீ..?' என் குரல் உற்சாகம் தட வியதாக, சற்று உச்சஸ் தாயியில் வெளிப்படுகிறது. இலேசான திடுக்கிடலுடன் என் முகத்தை ஆராய்ந்தவள். *"ம் . நீங்க தானே மிஸ்டர் கோகுலன் ..? அவளுக்கே கேட்காத படி மிகவும் மெது வாகக் குரல் தருகிறாள். இந்தத் திடீர்ச் சந்திப்பு என்னை ரொம்ப வும் பாதித்துவிட்டது. என்னைப் பற்றி ஏதாவது கேட்பாள் என்று உள்ளூர ஒரு எதிர்பார்ப்பு; ம்கூம் கண்ணாடியை இழுத்துவிட்டு, வெளியே குழலை வெறித்துக்கொண்டு வந்தாள்.
பஸ்ஸின் ஒட்டத்துடன், என் சிந்தனையும் "காலச் சவாரி' செய்கிறது.
அந்தக் கல்லூரிக் காலங்கள் . ஒ! அவை எத்தனை ரம்மிய மானவை? பருவத்தின் பொற்காலம் இளமையின் துள்ளல் எதை யாவது சாதிக்கத் துடிக்கும் இளைய மனங்கள் பூலோக சொர்க்
கத்தை ரசிக்கின்ற காலம். எங்கள் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்
--بست 52 سس۔

பில் வரலாற்றுத்துறையை ஒருசில மாணவர்களே தேர்ந்து, எடுத் திருந்தனர். புதைபொருள் ஆராய்ச்சி, கல்வெட்டு, சாசனவியல். பற்றிப் படிப்பதற்கும், காலப்பரப்புக்கள், சம்பவங்கள், பெயர் களை மனனம் செய்வதற்கும் பிடிக்காத காரணத்தாலோ, என் னவோ, பலர் விஞ்ஞானம், கலை, வணிகம் என்று படிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கள் வரலாற்றுத்துறை வகுப்பில், சுழல் காற்றுக்குப் பின் எஞ்சிய தளிர்களாய் செர்ற்பமான மாணவர்கள். அவர்களுள் பல விதத்திலும் தன்பால் ஈர்த்தெடுத்தவள் மிருணாளினி என்றே சொல்லவேண்டும். அவள் படிப்பில் மட்டுமன்று, நடனம், பேச்சு, எழுத்து என்று சகல துறைகளிலும் முத்திரை பதித்தவள்.
கல்லூரி விழாக்களில் இடம்பெறும் "விவாத அரங்கு" களில் கலந்துகொண்டு, முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தவள். அதன்வழியாக, ஆசிரியர், மாணவர்களில் பலரது பார்வையைத் திருப்பியவள். சராசரி டீன் ஏஜ் பெண்களுக்குரிய கனவுகள், பல வீனங்களில் இருந்து விலகி, வித்தியாசமாகத் தென்படுவாள். நானும், அவளும் இணைந்து, கல்லூரியில் பல புறக்கிருத்திய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் இருவருக்குமே இருந்த ரசனை, இலக்கிய ஆர்வம், அந்த முயற்சிகளில் புரிந்துணர்வுடன் உற்சாக மாகச் செயற்பட வைத்தது. இதழ் வெளியீடு, நாடக நெறியாள்கை, வரலாற்று ஆய்வு என்று இருவரும் சேர்ந்து திரிந்த நாள்கள்
1. fö; Sð) () {l J fT GðJ 6ð) að •
கண்களைக் கட்டி இழுக்கின்ற யெளவனம், கருத்தைக் கவர் கின்ற அறிவுக்கூர்மை - இவை இரண்டும் கூட்டுச்சேர்ந்து, மாண வர்கள் பலருக்கும் "நடமாடும் ஏஞ்சலாக’ உருவகித்தது மிருணாவை. அந்த வலுவான ஈர்ப்பில் எவ்விதத்திலும் சலனப்படாமல், சத் தியமான அறிவார்ந்த பண்போடுதான் நான் பழகினேன் என்று சொல்லமுடியாது. ஆழ்மனதில், இனம் புரியாத ஒரு உணர்வை அவள் நட்பு ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அது சராசரியான - வெறும் விடலைக் காதல் இல்லை என்பது நிச்சயம். அதனையும் கடந்த - வகைப்படுத்தமுடியாத ஒன்று.
கல்லூரி வட்டாரங்களில் என்னையும் - மிருணாவையும் சோடி சேர்த்துப் பலர் கிசுகிசுக்கவே செய்தனர். ஆனால் அவளை அந்த "புனைகதைகள்" துளிகூடப் பாதித்ததாக இல்லை. 'ஒரு புரிந் துணர்வு இல்லாத சனங்கள். ஆண் - பெண் உறவ ஒரே பார்வை யில பார்த்துப் பழகிப்போச்சுது. கோகுல், என்னப் பொறுத்த

Page 31
வரையில எனக்கு என்றைக்குமே நீங்கள் சகோதரன்தான் . இந்தக் கட்டுக்கதைகளுக்காக எங்கட சினேகிததத்த முறிச்சுப் போட்டால், அதுவே அவையஞக்கு வெற்றியாப் போகும்." இயல்பாக - துணிவாக அவள் கூறும் வார்த்தைகள் எனக்குப் பாரதி யின் புதுமைப்பெண்ணாகக் காட்டும்.
எளிமையான சொற் களி ல், சக்திவாய்ந்த கருத்துகளைக் கவிதையாக வடிப்பது மிருணாவுக்கு கைவந்தது. அவளது எழுத் துக்களை நான் விரும்பி ரசிப்பதுண்டு. அன்றைய நாள்களில், அவள் தினசரிகள் நடத்தும் கவிதை, சிறுகதைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு, பரிசுகளை வாங்கி இருக்கிறாள். "பாரதி நூற் றாண்டு விழாவில் கல்லூரி மேடையில், அவளது உணர்ச்சிப் பிர வாகமான சொற்பொழிவில் பலரும் கரைந்துபோனதுண்டு, நான் உட்பட. பத்திரிகைக்கு அனுப்புமுன்னமே ஆக்கங்களைக் காட்டி என் விமர்சனங்களைக் கேட்பாள். இத்தனை நெருக்கமாகப் பழகி யும், அவளது நட்புறவில், அதன் வெளிப்படுத்தலில் ஒரு சிறு அபஸ்வரம்கூட இல்லை.
கால ஓட்டத்தில் உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எனக்குச் சர்வகலாசாலை அனுமதி கிடைத்தது. மிருணாளிக்கும் கிடைத்தது; ஆனால் அவளது குடும்பத்தின் கொள்கைச் சிறை யின், இறுக்கமான மனோபாவங்கள் அவளைப் பல்கலைக்கழகப் படிகளில் ஏற்றவில்லை. எனக்கு உள்மனதில் ஒரு வேதனையே!
*கன் கிராஜுலேஸன்ஸ் கோகுல். நீங்கள் ஒரு சிறந்த ஹிஸ்ற்றறி புரொஃபஸராக வர வேணும், என் ஆசை இது கம்பஸ் போகாட்டால் என்ன, என் எழுத்துகளால, சிந்தனையால இந்த சமூகத்தின் தேக்கநிலைய உடைக்க முற்படுவன். என் ஆத்மார்த்த இலட்சியம் அதுதான். !' ஒரு சத்திய வேட்கையுடன் அவள் சொல்கிறாள். அவளுடனான கடைசிச் சந்திப்பின் நினைவுச் சுவடு இன்னும் அப்படியே.
அதன் பின் நான் பல்கலைக்கழகம் புகுந்து, முயன்று படித்து வரலாற்றுத்துறையில் என் புலமை, ஆர்வம் அத்தனையையும் செலுத்தி, இதுநாள் வரை சாசனங்களுடனும், தொல்பழங்காலத் அதுடனும் உறவாடிக்கொண்டிருக்கிறேன்.
பஸ்ஸின் 'கிணிங், என்ற மணியோசை என் சிந்தனையைக் *லைக்கிறது. அவள் என் கைகளில் ஃபைல்களைத் தந்துவிட்டு, "சிேந்து நிற்கிறாள். அவளது சேலையைப் பிடித்துக்கொண்டு அவ ளுடைய மறுவார்ப்பாக ஒரு சிறுமி. கால் முளைத்த றோஜாப்
- 54 -

பூப்போல. ஒ! அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. 'மிருணா, ப்ளிஸ் டெல்மீ யுவர் அட்ரஸ்' " அவசரமாகக் கேட்கிறேன் நான்.
'கோகுல். ஐ எம் சொரி. நான் இப்போ மிஸிஸ் ரகுநாத் அவருக்கு இந்த மாதிரி சினேகிதங்கள் பிடிக்காது. அதனால .'" அவள் வார்த்தைகளைத் தேட, "ஓ புரியுது. புரியுது மிஸிஸ் ரகுநாத். உங்கள் புரட்சிகரமான சிந்தனைகள இன்றைக்கும் மறக்க முடியல்ல; இப்பவும் எழுதிறீங்களோ..?’’ ஒரு நப்பாசையுடன் கேட்டுவைக்கிறேன். "அவருக்கு பப்ளிசிட்டியில விருப்பமில்ல. ஸோ, எப்பவோ அதையெல்லாம் விட்டிட்டன். நான் இப்போ வெறும் ஹவுஸ் வைவ்(f). '' ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தி விட்டு, மகளுடன் இறங்குகிறாள்.
எனக்குள் சிந்தனைகள் பல. எத்தனை பெண்கள் இப்படி இன்று தங்கள் இயலுமையை, பார்வையின் விசாலத்தைக் குறுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.? ஆண்களின் பார்வை - எப்போதும் பெண்ணை ஆதிக்கம் செய்வதாகவே அமையுமா? திருமணம் என்பதே ஆண்களுக்கு ஏற்றாற்போல பெண்களை வடிவமைப்பது தான் போலும்! எத்தனை 'மிருணாளினிகள்" தங்கள் ஆற்றலை, சித்தாந்தங்களைப் பலி கொடுக்கிறார்கள் ? வினாக்கள், அரை மாத்திரைகளாய். மனதை அரிக்கின்றன. விடைதான் கிடைக் காமல், சிந்தனை எங்கோ , எங்கோ புகுந்து, துழாவி. சலித்து மீண்டும் திரும்புகிறது, சுவரில் எரியப்பட்ட பந்தாக.
ஒவியம்: அருந்ததி.

Page 32
பெண்களின் பிரச்சினைகளை
விளங்கிக்கொள்ளலும்,
பெண்கள் அமைப்புகளாக இணைவதன் அவசியமும்,
- அம்மன்கிளி முருகதாஸ்.
பெண்களைப்பற்றிய மரபு ரீதியா ன கருத்து நிலைகளை உடைத்துப் பெண்கள் வெளியே வருவதென்பது மிகவும் கஷ்ட மான காரியமாகும். ஆனால் கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக இலங்கைப் பெண்கள் அனுபவித்துவரும் இன்னல்களும், துன்பங் களும் அதற்கு முன்னிருந்த துன்பங்கள், இன்னல்களிலிருந்தும் மிக அதிகரித்தனவாக இருந்ததுடன், பாதிக்கப்பட்ட பெரும் பான்மைக் குழுவினராகவும் பெண்களை ஆக்கியுள்ளது வட - கிழக்குப் பிரதேசங்களில் இந்தந் தொகை மிக அதிகரித்ததுடன் கைவிடப்பட்டவர்கள், அனாதரவானவர்கள், திடீரெனக் குடும்ப பாரத்தைச் சுமப்பவர்கள் எனப் பல நிலைகளுக்குத் தள்ளப்பட் டமையானது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பெண்கள் நிறுவனங் களும், பெண்களுக்கான நிறுவனங்களும் தோன்ற வழிவகுத்தன. விதவைகள் சங்கங்கள், பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கங்கள் போன்ற பெயர்கள் யாவும் பெண்களின் அனாதரவான் நிலை யைச் சுட்டி நிற்பதாகவே உள்ளன.
எனினும் பெண்கள் சங்கங்கள், பெண்களுக்கு விழிப்புணர்வு என்ற விடயங்கள் அதனைப் பற்றி நோக்குவோரின் கண்களுக்கு தேவையில்லாத வேலைகள் ஆகவே தெரிகின்றன. இதற்குக் கார ணம் பெண்களின் பிரச்சினைகளைச் சரியாக இனங்காணாமையும், அதனை இனங்காண விரும்பாமையுமாகும், அல்லது பெண்களை மனிதரே அல்ல என்று ஒதுக்கியதன் விளைவு எனலாம். உலகத் தில் உள்ள சகல சமயங்களும் பெண்களை ஆணின் "வாழ்க்கைத் துணை"யாகவே காண்கின்றன. அவளை ஒரு 'தனி' மனிதப்

பிறவியாகப் பார்ப்பதே இல்லை. பிறப்பிலிருந்து இறப்புவரை அவள் தனக்காக வாழ்தல் என்ற பிரக்ஞையே இல்லாது மூளைச் சலவை செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறாள். அவளுக்குக் கல்வி அளிக்கும் முறை தொடக்கம் வீட்டில் அவளுக்கான கடமைகள் நிர்ணயிக்கப்படுதல், தன்னை அழகுபடுத்தல், வீட்டை அழகு படுத்தல் என்பன எல்லாம் அவள் தனக்காகச் செய்வன அல்ல என்பதைக் காணமுடியும். இந்த நிலையில் பெண்களுக்கான பிரச் சினைகள் யாவை என இனங்காணப்படவேண்டும்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் உரிமைக் கான அடிப்படைப் பிரச்சினை பெண்களால் ஆண்களுக்கு அல்லது ஆண்களின் குடும்பத்தவருக்கு வழங்கப்படும் வரதட்சினை அல் லது சீதனம் எனவே பெரும்பாலும் இனங்காணப்படுகிறது. இதற்கு மப்பால் பல பிரச்சினைகள் பெண்ணுக்கு உள்ளன என்பது இனங் காணப்படவேண்டும். முதலாம் உலக நாடுகளிலும் சரி, மூன்றாம் உலக நாடுகளிலும் சரி / அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தி அடையாத நாடுகளிலும் சரி பெண்களின் நிலை இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. பெண்களின் உடல் நிலையை வைத்து உடலியல் நிலை காரணமாக எவ்வகையிலும் அவளைப் பலாத்காரப்படுத்த / வன்முறைக்குள்ளாக்கமுடியும்; பெண் என்ப வள் வெறும் போக நுகர்ச்சிப் பொருள் மட்டுமே என்ற கருது கோள்களை முன்வைத்து இந்த இரண்டாம் பட்ச நிலை நிலை நிறுத்தப்படுகிறது. இது முன்னே நான் குறிப்பிட்டவாறு அவள் பிறந்ததிலிருந்து இறப்பது வரை தொடர்கிறது. இதற்கான அடிப் படை தந்தை வழிச் சமூகமும், ஒரு பாற் கற் புக் கோ ட் பாடும் (பெண்களுக்கு மட்டும் கற்பு வலியுறுத்தப்படல்) நிலைநிறுத்தப் பட்ட அன்றிலிருந்தே தொடங்கிவிட்டதெனலாம். பெண்ணின் மாதவிடாய்க் காலங்கள், கருத்தரிப்புக் காலங்கள், பிள்ளைப் பேற்று நிலை போன்ற காலங்களை அவள் இந்த மனித சமூகத் துக்கு இன்னொரு மனிதக் குழந்தையைச் சுமக்கிறாள் என்ற நிலை யிற் போற்றப்படாது அதுவே அவளது பவவின நிலையாகக் கரு தப்படுகிறது. ஆன்ம ஈடேற்றம் பற்றிக் கூறும் சமயங்கள் மூன்று ஆசைகளை ஒரு மனிதன் விட்டொழிக்கவேண்டும் என்று கூறுகின் றன. அதாவது, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற ஆசைகளே அவை. இதில் என்னுடைய கேள்வி என்ன என்றால் பெண் எந்த ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்பதாகும். அந்த மறுகேள்வி பெண்ணால் கேட்கப்பட்டிருந்தால் இந்த ஆன்ம ஈடேற்றம்பற்றிய சிந்தனையே வந்திருக்காது என நம்புகிறேன். உண்மையில் பெண் தனி உயிரா சக் கருதப்படவில்லை என்ப தையே இது காட்டுகிறது. பிற்கால ஒளவையார் தனது பாடல்
- 57 -

Page 33
ஒன்றில் அரியதுபற்றிக் கூறும்போது,
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது - அதனிலும் அரிது கூண், குருடு, செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் என்கிறார். பெண்ணாகப் பிறத்தல் என்பது பாவஞ் செய்த பிறவி எனவே கருதுகிறார் போலும். காரணம் அவர் வாழ்ந்த காலத்துப் பெண்பற்றிய கருத்துநிலை அவரைப் பாதித்திருக்கலாம் அல்லது அவரே பெண்ணாக இருந்து அனுபவித்த கஷ்டங்கள், கொடுமை கள் ஆகலாம். (ஒளவையார் தனது அழகிய உருவை மாற்றிக் கிழ உருவம் வேண்டிப் பெற்றார் என்பது ஐதிகம்.) இளம் பெண் ணாக வாழ்தலின் துன்பத்தை இக்கதை காட்டுகிறது. கன்னிப் பெண் உருவில் இருந்திருந்தால் ஊரூராகத் திரிந்ததாகச் சொல்ல முடியாது. இந்தக் கருத்துநிலை இன்றும் தொடர்கிறது.
கல்வியைப் பொறுத்தவரை இன்று கூடிய விகிதாசார அள வில் பெண்கள் கல்வி கற்கின்றனர் என்பது உண்மை. ஆனால் இதற்கான அடிப்படைக் காரணம் என்னவெனில் ஆரம்பத்தில் பெண் கல்வியை வற்புறுத்திய வேதநாயகம் பிள்ளை. பாரதி போன் றோர் போன்று கல்வி கற்ற ஆணுக்கு வாழ்க்கைத் துணையாக அமைபவள் கல்வி கற்றிருத்தல் சிறந்தது எனக் கருதியமை ஆகும். அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவரும் இந்த நிலையில் பெண்ணின் உழைப்பு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்குமிஞ்சி பெண் "தன்னைப்பற்றிய தேடலில் வெற்றி கொண் டிருக்கிறாளா எனில் இல்லை என்றே கூறவேண்டும், பெண்ணின் உயர் கல்வி பற்றிய சிந்தனைகள்கூடப் பெரும்பாலும் கல்வியில் கொண்ட நாட்டம் காரணமாக அல்லாது சம்பள உயர்வு பால் கொண்ட கவர்ச்சியாகவே அமைகின்றன.
மூன்றாம் உலக நாடுகளின் சமூக அமைப்பில் பெண்களில் 99 வீதமானோர் பொருளாதாரத்தில் தங்கி வாழ்வோராகவே உள்ளனர். அதாவது இவர்கள் ஆண்களின் வருமானத்தில் தங்கி இருப்பதென்பது சமுதாயத்தின் கருத்தியல் ரீதியாகக் கட்டியெழுப் பப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கையில் பல மட்டங்களிலும் பால்ரீதியான பாகுபாடு காட்டப்படுவதனாலேயே இவர்கள் தங்கி வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெண் ஆணின் சொத் தாகவே மதிக்கப்படுகிறாள். தானாக இயங்கும் உரிமை அவளுக்கு இல்லை.
பெண்ணின் வீட்டுழைப்பு பொரு ளா தா ர பெறுமதியற்ற தாகவே கணிக்கப்பெறுகிறது. பெண்களின் சிறு கைத்தொழில்கள் கூட வீட்டு வருமானத்தில் கணக்கெடுக்கப்படுவதில்லை. மேலும்
一58一

பெண்கள் அதிகநேரம் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய வேண்டி ஏற்படுகிறது. கிழக்கிலங்கையில் வயல்வேலை, நெசவு வேலை, மட்பாண்ட வேலையில் ஈடுபடும் பெண்கள், தையல் தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் (தொலைத்தொடர்பு நிலை யங்கள், முகவர் தபாலகங்கள், புடவைக்கடைகள், மற்றும் சில் லறைக் கடைகள்) களில் வேலைசெய்யும் பெண்கள் மற்றும் சில நிறுவனங்களில் வேலைசெய்யும் பெண்களை இதற்கு உதாரணங்க ளாகக் கொள்ளலாம். முக்கியமாக வெளிக்கள உத்தியோகத் தர்க ளாக மிகக் குறைந்த கூலியுடன் (500/- மட்டும்) அல்லது "தொண் டர்" என்ற நிலையில் அதிக வேலை வாங்கப்படும் பெண்களும் இங்கு உள்ளனர். "சும்மா இருக்கிற உங்களுக்கு வேலை தந்திருக் கிறோம், அதுவே உங்களுக்குப் போதும்’ என்ற மனோநிலை வேலை கொள்வோரிடம் காணப்படுகிறது.
மேலும் குறைந்த வசதிகளுடன் ஆண்களை விடவும் பாது காப்புக் குறைந்த சூழலில் இவர்கள் வேலை செய்யவேண்டியுள்ளது.
தங்கி நிற்றல் என்பது பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது சமய கலாசார ரீதியாகவும் ஆண்களைச் சார்ந்து நிற்கின்ற நிலை யைக் குறிக்கிறது. பெண்கள் ஆண்களுக்கு அல்லது வீட்டிலுள்ள வர்களுக்கு, வெளியிலுள்ளவர்களுக்குப் பணி ந் து நடக்காவிட் டாலோ கட்டுப்பட்டு நடக்க மறுத்தாலோ சமுதாயத்தால் ஒதுக் கப்படுகின்றனர். பெண் என்பவள் தனது சொந்தத் திறமைகளை யும், ஆற்றல்களையும், மற்றவர்களின் தேவைகளையும், விருப் பங்களையும் நிறைவேற்ற உதவும் படிச் சமுதாயத்தில் பழக்கப் பட்டிருக்கிறாள்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர் விலாள் பெண் என்ற வரைவிலக்கணம் அதனையே காட்டுகிறது. இதனால் பாலி யல் வன்முறைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகும்போது பெண்கள் தமது தவறு காரணமாகத் தாங்கள் தண்டிக்கப்படு கிறோம் என்று தம் மீதே தவறைப் போட ஊக்கு விக்கப்படுகின்ற னர். உ+மாக: பள்ளிக்கு அல்லது டியூசனுக்குப் போகும் சிறு பெண்ணின் பின்னால் சுற்றும் / பல்லிளிக்கும் ஆண்களைப்பற்றிக் கவலைப்படாத சமூகம் அவள் போட்டிருக்கும் உடை காரணமாக / அலங்காரம் காரணமாகவே ஆண்கள் பின்தொடர்கிறார்கள் எனப் பேசிக்கொள்வதையும் காணலாம். அவளுக்கெதிரான வன்முறை கள் அவள் அழகாக / கவர்ச்சியாக இருப்பதனால் மேற்கொள்ளப் படுகிறது என்று கருதும் நிலை நம்மிடையே உண்டு. இவ்வாறான
سيس 59. جسم

Page 34
வன்முறைகளைச் சமுதாயமயப்படுத்தல் கலாசார ரீதியாகத் திணிக் கப்படுகின்றது. முக்கியமாகப் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணாகக் காட்டாத எந்த ஒரு தமிழ்ப்படமும் வந்ததாக நினைவில்லை. கல்லூரிப் பெண்கள், குடும்பப் பெண் கள், வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வில்லனிடம் அகப் படுவார்கள் அல்லது கணவனால் கொடுமைப்படுத்தப்படுவார்கள், கதறக் கதற அடித்துத் துன்புறுத்தப்படுவாள். இவ்வாறான கலா சார அழுத்தங்கள் வன்முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்துகின் றன. வீட்டினுள்ளே வந்துவிட்ட தொலைக்காட்சி நாடகங்களும், மற்றும் தொடர்புச்சாதனங்களும், சினிமாப் படங்களும் இவ்வகை வாழ்க்கையையே காட்டுகின்றன. இதற்குப் பழக்கப்பட்டுப்போன குழந்தைகளுக்குப் பாலியல் வன்முறை என்பது மிகச் சாதாரண மான விடயமாகத் தோன்றும். கண்முன்னே நடக்கும் வன்முறை யைப் பார்த்துக்கொண்டு நிற்க அவன் பழக்கப்பட்டுவிடுகிறாள். இவற்றின் காரணமாகப் பெண்கள் தம்மை முன்னெடுத்துச்செல் வது அல்லது முன்னே செல்வது என்பது குறைந்து செல்கிறது. அவளது பால்ரீதியான பாகுபாடு எப்போதும் விற்பனைப் பொரு ளாகப் பார் க் க ப் படுகி றது. அவளது வேலையும், பணியும் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன.
பெண்கள் சமூக - பொருளாதார மனோவியல் ரீதியில் ஆண் களில் அல்லது தந்தைவழிச் சிந்தனை முறையில் தங்கிநிற்றல் என்பது குடும்பத்தில் அல்லது அவளது கிராமத்தில் நடைபெறும் அவர்களுக்கெதிரான வன்முறையிலிருந்தோ, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலிருந்தோ விடுபட்டுச் செல்வதைச் சிரமமாக்கு கிறது. இந்த நிலைகளில் பெண்கள் செல்வதற்கு என்று ஒரு இடமும் இல்லை அல்லது இப்பிரச்சினைகளிலிருந்து விலகிப்போக வழிவகையும் இல்லை. இதனை நாம் இன்றுவரை அவதானிக்கத் தக்கதாக உள்ளது. "தமிழ்ப் பண்பாட்டின் சிறந்த தமிழ்ப் பெண் ணுக்கு உதாரணமாகக் கருதப்படும் கண்ணகியின் நிலையும் இவ் வாறானதுதான். கோவலனுடன் தனது வாழ்க்கையை அவள் மீண்டும் தொடர நினைத்ததென்பது சமூகத்தில் அவளுக்கு அடைக் கலம் கொடுக்க யாருமில்லை என்பதாலாகும். 'நான் இவ்வளவு பழிகளையும் செய்துவிட்டேன் எழு என எழுந்தாய் என்ன செய் தாய்" என்ற முறையில் கண்ணகியைக் கோவலன் இடைச்சேரி யில் வினவுகிறான். அப்போது கண்ணகி கொடுத்த பதில் இத னையே காட்டுகிறது.
"போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றாவுள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தன ன் யான்"
سے 60 سے

ான்று எனக்கு நியமிக்கப்பட்ட இந்த வாழ்க்கையை விட எனக்கு வேறு வாழ்க்கை இருக்கவில்லை. அதனால்தான் நீ சொன்னபடி நான் வந்தேன் எனக் கூறுவதே அந்தப் பதில். பெண்கள் இப் பிரச்சினையிலிருந்து விலகிப்போக எந்தச் சேவையும் கிடைக்கக் கூடியதான வழியும் இல்லை.
இலங்கையைப் பொறுத் தவரை யுத்தகாலங்களில் பெண்களுக் கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. அகதிமுகாம்களில் வாழுதல், அனாதரவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத் திற்குக் குடிபெயர்ந்து செல்லுதல், பெண் தனியாள் ஆன நிலை யில் வேறு நண்பர்களிடமோ, உறவினரிடமோ சென்று தங்கி யிருத்தல், நிவாரண உதவிகளுக்காகப் பல அதிகாரிகளையும் சந் தித்தல், பெண்கள் கைது செய்யப்படுதல், சோதனை முகாம்களுக் கூடான பயணம் போன்றவை பெண்களுக்கெதிரான வன்முறை களுக்கான சந்தர்ப்பங்களாக அமைகின்றன. இந்த வன்முறைகளி லிருந்து பெண் தப்பித்துக்கொள்வதென்பது இயலாத காரியமாக அமைகிறது. யுத்தம் நடைபெறும் சகல நாடுகளிலும் இந்த நிலை நிலவுகிறது.
பெண்கள் பல்வேறு தரப்பில் முன்னேறியுள்ளனர் எனக் கூறப் படுகிறது. உதாரணத்திற்கு நாடுகளின் தலைவர்களாக விளங்கிய இந்திரா காந்தி, பெனாசிர் பூட்டோ, பூரீமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரரணதுங்க எனப் பலர் கூறப்படு கின்றனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்துக்காக அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை விட அவர்களின் தந்தையர் / கணவர் வகித்த இடங்களில் இடைவெளிகளை அதிகாரப் போட்டி யின்றி நிரப்பவந்தவர்களாகவே இருந்தனர் என்பது முக்கிய மாகும். உண்மையில் பெண் அரசியலில் ஈடுபடுதல் என்று மிகக் குறைவானதாகவே உள்ளது. அத்துடன் அரசியல் தலைமைத்து வத்தில் இருக்கும் எத்தனை பேர் பெண்களுக்காகக் குரல் கொடுக் கின்றனர் என்பது முக்கியமானதாகும். சர்வதேச ரீதியாகப் பார்க் கும்போது பெண்கள் அர்சுத் தலைமை வகிக்கும் நாடுகளில் பெண் களுக்கெதிரான வன்முறை நடைபெறுகின்றன. சுரண்டலுக்குள் ளாதல் நடைபெறுகிறது. பெண் குழந்தை என்று அறிந்ததும் பெண் சிசுக் கருச்சிதைவு செய்யப்படுகிறது. பெண்குழந்தைகள் உயிரோடு புதைக்கப்படுகின்றனர். பெண்ணைப் பெற்றவள் வீட் டுக்கு வரக்கூடாது என்று தடுக்கப்படுகிறாள். எனவே ஒருசிலரை வைத்துக்கொண்டு பொதுவான எடுகோள்களை வைப்பது தவ றானதாகும். மேலும் பாராளுமன்றத்தில் எத்தனை பிரதிநிதிகள் பெண்களாக உள்ளனர் என்ற கேள்வியையும் உள்ளடக்கவேண்டும்.

Page 35
அல்லது தீர்மானங்கள் எடுப்பதில் இவர்களின் பங்கு என்ன என் பதும் முக்கியமானதாகும்.
எனவே, பெண்களைப் பொறுத்தவரை இவ்வாறான பல பிரச்சினைகளும் உண்டென்பது விளங்கிக்கொள்ளப்படவேண்டும். அதை விளங்கிக்கொள்வதன் மூலம் தான் பெண்களின் பிரச்சினை இனங் காணப்பட்டுத் தீர்வுக்கான / பெண்களை இப்பிரச்சினைகளி லிருந்து விடுவிப்பதற்கான ஒரு ஆரம்ப எழுச்சியையேனும் ஏற் படுத்தமுடியும். இவ்வகையில் விழிப்பு ஏற்படுத்துவது பெண்கள் இயக்கங்களின் அவசிய பணியாகும். தனியே பெண் போராடுதற்கு இந்த அமைப்புகளே இறுதி வடிவத்தைத் தரமுடியும். எனவே பெண்கள் அமைப்புகளில் இணைந்து செயலாற்றுதல் மிகவும் அவசியமும் அவசரமுமான காரியம் ஆகும். O
 

சூரியா ஆலோசனைக்குழு:
அம்மன் கிளி முருகதாஸ் ஒட்றி றிபேரா கமலினி கதிர்வேலாயுதபிள்ளை குமுதினி சாமுவேல் சரளா இம்மானுவேல் சித்திரலேகா மெளனகுரு சுனிலா அபேயசேகரா சூரியகுமாரி பஞ்சநாதன் நதீரா மரியசந்தனம் இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி வாசுகி ஜெயசங்கர்.
சூரியா அலுவலர்கள்:
சிறிவஸ்ளியம்மன் சிதம்பரப்பிள்ளை விஜயகுமாரி முருகையா யுமுனா இப்ராஹிம் ஜெயந்தி தளையசிங்கம் கிரிஜா இரத்தினசிங்கம்.

Page 36
s
རྒྱུ་
鼠
影
s
를
 

±
シ 戦旧』 *風岛—nrsé斗 8日—) 圆点ná