கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1991.04-05

Page 1
இ9 அம்மன் கிளி
முருகதாஸ்
骑 சிலாபம்சின்னையா
:8 J9 b Jan OLoj
8 தணிகையன் இசகாதேவன்
இ ஸ்வப்னா 18 செந்திரு
9 நரேன் 69 Intյնf]
புதிய ஜனநாயகம் புதிய
 

விலை ரூபா 10.
சித்திரை. வைகாசி 1991
تــصبی======ی
( ) { ) 22
گئـــــــــ۔ت۔""ئیے گئے۔
வாழ்வு புதிய நாகரிகம்

Page 2

தாயகம் சித்திரை مفاهه :
1991
69 கலை இலக்கியமும்
போராட்டமும்
கலை இலக்கியம் பரந்துபட்ட மக்களுக்குரியது. இதனை மறுப்பவர்கள் மக்கள் சார்பு அற்றவர்கள். மக்களின் சமூக வாழ்வு மாற்றத்தை - வளர்ச்சியை மறுக்கின்றவர்கள் ஆகின்றனர்.
சமூக முரண்பாடுகளும் அவற்றின் விளைவான சமூகப் பிரச் சனைகளும் நாளாந்தம் வளர்ந்துகொண்டே செல்கின்றன.
பொருளாதாரச் சுரண்டலும், அரசியல் அடக்குமுறைகளும் மக்கள்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
அவை வர்க்க அடக்குமுறையாக, இன அடக்குமுறையாக சாதி அடக்குமுறையாக, பெண் அடக்குமுறையாக இன்னும் பிற வடிவங்களிலான அடக்குமுறைகளாக செயல்படுகின்றன
மக்கள் ஒருபுறமாகவும் மக்களின் எதிரிகள் மறுபுறமாகவும் அணி பிரிந்து நிற்கின்றனர்.
மக்கள் எதிரிகளில் பொது எதிரி மேன்மேலும் தன்னைத் துலக்கமாக்கிக் கொள்கிறான்.
இப் பொது எதிரி பற்றியும், அவனை உருவாக்கிய சமூக
முரண்பாடுகளின் ஆழ அகலத் தன்மைகள் பற்றியும், அவற்றின் விளைவான அடக்கமுறைகள், துன்பங்கள், வேதனைகள், கொடு

Page 3
மைகள் பற்றியும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தல்கள், அறி வூட்டல்கள், அணிதிரட்டல்கள் பரந்தளவில் தேவைப்படுகின்றது.
இப் பணியில் கலை இலக்கியமும் அதன் படைப்பாளிகளும் மக்கள் பக்கத்தில் நின்று தம் பங்களிப்பினை வளங்குகின்றனர்"
இன்று வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைக்கான போராட் டம் உச்சநிலைக்குச் சென்றுள்ளது.
அது எதிர்நோக்கும் பொது எதிரி பெருமுதலாளித்துவ பேரின சி"மாகும். இப் பொது எதிரிக்கான போராட்டத்தில் கலை இலக்கியத் தனது உயர்ந்த பங்களிப்பை வழங்கியே ஆகவேண்டும். *லை இலக்கியப் படைப்பாளிகள் பல்வேறு படிநிலைகளிலே
சித்தமது பேனா முனைகளை பயனுள்ள வழிகளில் பிரயோ சிக்க வேண்டும்.
தெற்கில் உள்ள மக்களும் இதே பொது எதிரியையே எதிர் கொள்கின்றனர். அங்கே தேசிய ஜனநாயகத்திற்கான போராட் டத்தில் மக்கள் அணிதிரள கலை இலக்கியம் தனது பங்க ளிப்பை வழங்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கும், தேசிய ஜனநாயகத்திற்குமான பரந்த மக்கள் போராட்டத்தில் கலை இலக்கியம் தனது குறிப் பான பங்களிப்பினை வழங்க வேண்டும். அதற்குரிய வரலாற் றுத் தேவையின் அவசியத்தை கலை இலக்கியப் படைப்பாளி கள் உணர்ந்து கொள்வதும் அவசியமாகின்றது.
15- 05- 99. ஆசிரியர் குழு
*T111年1丛 22

முன்னுற விரையும் வரலாறு ------------ áfa) n Lð éf) sér 606öru sr
பாரக் கற்களைத் தூக்கியுள்ளீர்கள் அார நிற்கும் எங்களைத் தாக்க; ஆயினும் அவை வீழவிருப்பது என்னவோ உங்கள் கால்களின் மேலேதான்!
நேற்று, பஸ்ஸில் ஏறியபோது இஸறாட்ட யண்ட, இஸறாட்ட யண்ட (முன்னே போ, முன்னே போ) என உந்தித் தள்ளப்பட்டோம். இன்று, மினிபஸ்கள் பஸ் ஸ்ட்ட யண்ட, பஸ் ஸ்ட்ட யண்(பின்னே டோ, பின்னே போ) என எம்மை அழுத்துவன.
உங்கள் பிரிய முதலாளிகளிடம் இபோசவையும் கையளித்தவாறு குதூகலிக்கும் இவ்வேளை மென்மேலும் பாரமேற்றினும் மக்கள் சகிப்பரெனத் தவறாக எடைபோட்டுள்ளீர்கள். தாங்கும் சுமையின் எல்லை கடந்தபின் ஏற்றப்படும் ஒரு மயிற்பீலிகூட வண்டிலச்சைத் தகர்க்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்!
வரலாற்றைப் பின்னுறத் தள்ளும் உங்கள் முயற்சியில் ஒர் நாள் ஐம்பத்துமூன்று ஓகஸ்ட்டின் விடியல் தோன்றும். அது வெறும் மறுபதிப்பாய் அமையாதென்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள்,
அப்போது ஆழ்கடலில் கப்பலில் உங்கள் மந்திரிசபைக்கு
ஏப்ரல் 1991 3

Page 4
ஓரிடம் இருந்தது மெய் இனிக் கிளர்ந்தெழும் வெகுஜன அலையில் தாண்டு போகையில் நீர்மூழ்கிக் கப்பலிற்கூட உங்களுக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள்.
பழமையின் மீட்சியில் நம்பிக்கை வைத்துத் தூக்கிய பாரக் கற்களின் அழுத்தத்தில் மறைந்துவிடப்போகும் உங்களையும் கடந்து முன்னுற விரையும் வரலாறு
தீர்வு
ஊர்கள் நகரங்கள் எல்லாம் பொடியாய் உதிர்ந்திருக்க, கூரைச் சிலாகை
8 செந்திரு
திருத்திப் பயன் என்ன? குண்டுகளின் மாரி தடுக்க வகை ஒன்று காண வழியும் உண்டோ?
தீர்வு வகுக்க உதவுவீரோ ஒன்று தேர்ந்தெடுத்தே.
4. 5 Tui is 23

இ9 யமலோக
இந்தக் காலத்தவர் எவர" வது யமலோகம் வரை போய் திரும்பி வகுகிறார்களா? ஒரு தூசுத் தாக்கத்தில் பொசுக் கென்று போய்விடுகிறார்கள். அந தக்கால மனிதர்களின் உடற்பலம் இவர்களுக்கு அமையாததுபோல ஆத்மாவும் சோடைபோன நிலை யில்தான் இந்தக் காலத்தவர்கள் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னமெல்லாம் மார்கழி மாத மாரிமழைதான் இப்படி சோவென்று பொழிந்து தள் ளும். தையில் வானம் வெளித்து விடும். மணிசர் மாறுவதைப் போல மாரியும் மாறித்தான் விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று இனிச் சொல்ல முடியுமா? தைபிறந்து நாலைந்து நாளான பின்னும் இப்படி அடை மழை பொழிவது கலியின் விளை யாட்டுத்தான்.
சந்தைக்கு எதிரேயிருந்த பூட்டிய கடையின் விறாந்தையில் மழைக்கு ஒதுங்கி , நின்ற பர்ட்டி யின் மூளையில் இந்த தினைவோட் டங்கள் வட்டமிட்டுக் கொண்டி ருந்தன. அவளுடைய கவனத்தை இடையிடை சந்தைக் கூச்சல் தன்னிடம் ஈர்த்தாலும், கால
மாற்றங்கள் பற்றிய இந்த நினைவிட்டுது.
ஏப்ரல் 1991
சஞ்சாரம்
சகாதேவன்
6
வோட்டங்கள் அவளை ஆக்கிர மித்து நிற்பதை முழுதாய் தடுக்க முடியவில்லை.
“மண்ணெண்ணை 35ւմո՞.........
5/Tտl ethւմrrսն ’ ”
மண்ணெண்ணை
'சீனி எண்பது. சீனி எண் பது'
'தேங்காய் முப்பது ரூபா. தேங்காய் முப்பது ரூபாய்"
“கொஞ்சத்துக்கு முந்தி வித்த விலை இப்ப இல்லை. ஏன் அதுக்கிடையிலை கூட்டினவங் கள்?"
"கொஞ்சத்துக்குமுந்தி நிண் டவர், நடந்தவர் பலபேர் இப்ப 307th எங்கெங்கையோ போடுற குண்டிலை. ஈராக்கிலை யும் குண்டுமழை பொழியுதாம். அங்கை சண்டை துவங்கின கவ லையிலை வியாபாரிகள் இஞ்சை சாமான் விலையளைக் கூட்டிப் போட்டினம்’’
யுத்த நிறுத்தம் சரிவராமல் போனதிலையிருந்தே விலைவாசி ஹெலி உயரத்துக்கும் பொம்பர் உயரத்துக்கும் ஏறத் தொடங்கி பொம்பர் குத்திக்
5

Page 5
கொண்டு இறங்கிறமாதிரி கா மை விலை ஒரூக்கா இறங்கும்: பேந்து, மத்தியானத்துக்குப் பிறகு, குண்டுபோட்ட குதியிலை பொம்பர் ஏறிஒடிறமாதிரி விலை யும் ஏறிக்கொண்டு போகும். பின்னேரம் மண்ணெண்ணை நூற்றிருபது - நூற்றிமுப்பது விக் காட்டிப்பார்?"
"பொழுதுபட்ட உடனை குண்டு விழுந்துவிடும் எண்ட பயத்திலை சாமான்களெல்லாம் பங்கருக்குள்ளை ஒழிக்கும்! பல சாமான்கள் நிரந்தரமாயே பங் சுருக்குளைதான் குடும்பம் தடத் தும். சில சாமான்களைத் தேடி ஆலாய்ப் பறந்தாலும் கிடைக் இதில்லையே?’’
**இஞ்சை காலநிலை சரி யில்லாதகாலை வான்தாக்குதல் ஒத்திப் போடப்பட்டிருக் கெண்டு பேப்பரிலை கிடக்கு'
"ஒமோம்! எண்டாலும் ஈராக்கிலை போடிற அமெரிக் கன்ரை குண்டு வழுக்கிக்கொண்டு இஞ்சை வந்து விழுந்தாலும் விழலாந்தானே? வியாபாரி கவ னமாய் இருக்காட்டில் எப்பிடி?"
பதுக்கல் பேர்வழிகளை இலக் கிய நயத்தோடு நக்கலடித்துக் கொண்டு போனது ஒரு கூட்டம். எழந்தமானமாய் அவற்றைச் செவிமடுத்த பாட்டியும் கொடுப் புக்குள் சிரித்துக்கொண்டாள்.
திடீரென்று சயிக்கிளொன்று பாட்டியின் முன்னால் வந்துநின் றது. தன்னைச் சுதாகரித்துக்
கொண்டு வந்தவனே ஏறிட்டுப் (sg Trff 355 T Gir E. JITL --Lg. •
"என்ன பாக்கியமக்கா, சந் தையை விழுங்குமாப்போலை முறைச்சுப் பார்த்தவடி நிக்கி றியள்?"
'மழை விடாமைக் கொட் டிக்கொண்டிருக்கு கொஞ்சம் குறையட்டன் எண்டு பாத்துக் கொண்டு நிக்கிறன்'
** மண்னெண்ணை 66 விலை கொஞ்சம் குறையட்டும் எண்டு பாத்துக்கொண்டு நிக்கிறி யளாக்கும் எண்டு நினைச்சன்"
"ஒ . அககும் நிமிசத்துக் கொரு கோலம் போடுது, மழை குறைஞ்சாலும் விலைவாசி குதிச்சுக் கூத்தாடிறது நிக்காது. அதெல்லே சந்திக்கடை முதலா ளியின்ரை மச்சான் தூங்கிச் செத்திருக்கிருன்’
'பட்டினிச் சாவெண்டா வயித்துக்கு வாய்க்கொண்டுமில் லாமல் வாடிச் சாகிறது மட்டு மில்லை.இதுவும் ஒருபட்டினிச்சா தான். நாலு பிள்ளையளையும் பெண்டாட்டியையும் வாழவைக்க முடியேல்லையெண்டு அவன்பாவி கயித்திலை தொங்கிப் போட் டான்.இனி அதுகளெல்லோ நாய் படாப் பாடுபடப்போகுதுகள்’
'அவன்ரை பிரேதத்திலையும் அந்தக் கவலை அப்பிக்கிடந்திது. இன்னும் இப்பிடி எத்தினை நடக் கப் போகுதோ'
கா புக 22

ہے .--محم۔ وہ جم_ : جہنمی ”وہ“" தேப் போய் தற்கொலை செய்யப் படாது. அரசாங்கம் வெடிகுண் கிெளாலை சாதிக்கமுடியாததை பட்டினிக் குண்டாலை சாதிக்க முடியுமெண்டு நினைக்குது. கோ ழையள் போலைத் தற்கொலை செய்தா அதுக்குப் பணியிற மாதிரித்தானே?
”“ gyu fuqh Gunrprrr La? போறாய் போலை'
"இப்ப நாங்கள் வாழ்க் கைப் போராட்டத்தை வெற்றி கொண்டு தலைநிமிர்ந்து நிண்டு காட்டுவோம்; ஒருநாள் மாதிரி இன்னொரு நாள் இருக்காது, ஒரு நேரம் எல்லாரும்தான் போராட வேண்டியிருக்கும். அது சரி செத்த வீட்டாலைதான் வாறி யள் போலை கிடக்கு"
உணர்ச்சி வசப்பட்டுப் பேசு கிருன் என்பது குரலில் தெரிந் திதி
'ஒமப்பு எனக்கு அதைத் தாங்கேலாமல் கிடக்கு. அவள் பெஞ்சாதியையும் விபரம் தெரி யாத நாலு பிள்ளையஞம் சவத் திலை புரண்டு கதறினது இப்ப வும் கண்ணுக்கை நிக்குது'
பாட்டியின்
பனித் திருந்தது.
குரல்
சற்று நேரம் அமைதி - இருவரிடையிலும், சந்தைப் பின்
னனி சோகம் சேர்த்தது.
"சரி நேரமாச்சிது. மழை
யைப் பார்த்தால் சரிவராது.
ஏப்ரல் 1991
நான் போடடுவாயன் டாககய மக்கா"
விடை கொடுத்துவிட்டு தனக்கு எம் போது வழிபிறக்கும் என்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் பாட்டி. அப்படியே தனக்கு ஒதுக்கிடம் தந்த கடை யையும் ஒருதரம் திரும்பிப்பார்த்
5ft art.
இருவார ஆயுள் கூடப்பெ றாத புதுவருட யுத்த நிறுத்தம் முறிந்து சண்டை தொடங்கிய தற்கு முன் யாழ்வந்த நூற்றுக் கணக்கான லொறிகளிலிருந்து மொத்தமர்ய்ச் ୫f (TLDRT କ୍ଳିt୫, ୩ ଜୀt இறக்கிப் பதுக்கிய பெரிய முத லாளிகளுடனும், ஒடியாடி பொரு ளெடுத்து வந்து நேரத்துக்கொரு விலையை நம்பி வியாபாரம் செய் யும் அங்காடி வியாபாரிகளுடனும் போட்டிபோடமுடியாமல் முடங் கிப் போய்விட்ட நிலையில் முடங் கிப் போய்விட்ட ஒரு சிறிய கடை அது
சந்திக் கடையும் இந்த நிலைக்கு விரைவில் வரலாம். இப்போது சேடம் இழுக்கும் மெலிந்த கிழவனைப் போல சாமான்கள் வற்றிப்போய்விட்ட நிலையிலும் இருக்கிறேன் என்று காட்டுவதற்காகத் திறந்து மூடப் படுகின்ற கடை அது. சந்திக் di 68) . முதலாளி மச்சானை நினைத்து பொறாமைப்பட்டிருப் பார் - விசயத்தில் முந்திவிட்ட தைக் கண்டு; செத்த வீட்டில் அவரைப் பார்த்தபோது அப்ப
7

Page 6
4态函厅茵 நினைக்கத் தோன்ரி
சந்தை இரைச்சலின் உரப்பு அதிகரித்ததாய் உணர்ந்தபோது வெளியே கவனித்ததில் மழை விட்டிருப்பதைப் பாட்டி கண் டாள். இறங்கி அடுத்த தூறல் தொடங்குவதற்குள் வீட்டுக்குப் ாேய்விடுகிற அவதியில் வேக மாய் நடந்தாள்.
'இவ்வளவு நேரமும் எங்கை கிடத்து போட்டு வாறாயெணை இஞ்சை பிள்ளையோடை நான் மாரடிச்சுக் கொண்டிருக்கிறன் உனக்கு கதைக்க ஆள் கிடைச்சு, இருந்து வம்பளந்துபோட்டு ஆடி யாடி மத்தியானஞ் செண்டபிறகு 6) πΟηγεί
படனையைத் திறப்பதற்குள் மகளின் பலமான வரவேற்புரை பாட்டி எதிர்பார்த்ததுதான். ஒருவகையில் இரண்டரை வயசுப் பேத்தி ஒரு வயசுப் பேரன் என்ற இரண்டு குழந்தைகளினதும் அலைக்கழிப்பிலிருந்து கிடைத்த தற்காலிக ஓய்வைப் பயன்படுத் தும் நோக்கத்தோடுதான் பாட்டி சாவதானமாக நின்று நிதா னித்து வந்தாள் என்பது go 6јот மை. அதனால் மகள் ஏறிவிழுந் ததை அவள் பறவாய் பண்ண வில்லை.
இப்போதும் பிள்ளைகளைப் பொறுப்பேற்கும் நிலையில்பாட்டி இல்லை. இருந்தாலும் நீண்ட நேரமாக அவர்களின் துறுதுறுப் பைக் காணாத அவதி உள்ளூர
8
ஊற்றெடுத்து பிரவாகித்தது. பிள்ளைகளும் பாட்டியை கண்ட குதூகலிப்பில் "பாட்டி பாட்டி" என்றவாறு ஓடியும் தவண்டும் வந்தனர்.
அந்த ஆர்வத்தில் ஒருதரம் தூக்கி அரவணைத்து முத்தங் கொடுக்க விருப்பம் இருந்தபோ தும் அவர்களிடமிருந்து விலகிக் கொண்ட பாட்டி மகளைப் பார்த்து 'செத்தவீட்டுத் துடக்கு பிள்ளையளைக் கொஞ்ச நேரம் வைச்சிரு. போட்டுக் கொண்டு பேர்ண உடுப்புகளை தோய்ச்சுத் தலைக்குத் தண்ணி ஊத்திக் கொண்டு வாறன்' என்றாள்.
அந்தநேரம் தூக்கினல் "பின் னேரம் குளியென்" எனக் கூறி மகள் தன்னிடம் செலுத்திவிடு வாள் என்ற நியாயமான பயம் பாட்டிக்கிருந்தது. அதனால் மகள்
ஏற்கக் கூடிய காரணத்தைக் காட்டி மெதுவாய் நழுவிக் கொண்டாள்.
மகளின் திருமணம் முடிந்து ஏழெட்டு வருடங்கள் ஓய்ந்து, தான் அறுபது வயதை எட்டிய போது வராததுபோல் வந்து "பாட்டி' என்று மனம் நிறைய அழைக்கும் பேரப் பிள்ளைகளிட மிருந்து இப்படித் தப்பியோட வேண்டிய தள்ளாத உடல் தனக்கு வாய்த்ததே என்ற வருத் தம் பாட்டிக்கிருந்தது. இருந் தென்ன, கொஞ்ச நேரம் தூக் கலாம் என்று முன்வந்தால் முறித் தெடுத்துவிடுகிற பிள்ளைகளாயு
தாயகம் 22

மல்லவா இந்த வாண்டுகள் இருக்கின்றன.
பிள்ளைகளின் 'பாட்டி
பாட்டி’ என்ற மழலைக் குரலை ரசித்ததோடு நிறுத்திக் கொண்டு dysuitaset)6ir id46th L-b செலுத்தி விட்டு ஒரு வாறு தப்பினேன் பிழைத்தேன் என்று கிணற்ற டிக்கு நழுவிவிட்டாள் பாட்டி.
"இந்த தோம் தோச்சுக் கொண்டிருக்க வேண்டாம்: கெதி வாய் குளிச்சும்போட்வோணை,
உடுப்புக்களைப் தோய்க்கலாம்"
மகளின் குரல் கொக்கி
போட்டு இழுக்க முயன்றது.
மேகம் வெளிச்சுக்கெ எண்டு
வருகுது தோய்ச்சுப்போட்டால் காய்ஞ்சு விடும். பிறகு தோய்க் ச்வெண்டு வைச்சா கிடந்து புளிக் கும். நோய்க்க நேரம் கிடைக் காது"
பாட்டி இப்போதைக்கு கிணற்றடியை விட்டு வரப்போவ தில்லை என்பது வேண்டும் - அதற்கு மேல் கதிை கொடுக்காமல் மகள் பிள்ளை களைத் தூக்கப் போய்விட் டாள். அந்த நேரம் பக்கத்து விட்டு ஏழுவயது "வேணி அக்கா" வருவதைப் பாட்டி MUSIAI SfT னித்துவிட்டாள்.
sija "3a m syAsrr6 b. நேரே பாட்டியிடம் வந்தாள்.
**பாட்டியைக் கனநேரமாய் காணேல்லை. எங்கை போன னிங்கள்'"
6J 'i si) 1991
Lliff5fed Gwydiau
பேரப் பிள்ளைகள் அம்
மம்மா என்று கூறிக்கொள்வதில்
படும் அவஸ்தையை தவிர்க்கவும் பாட்டி என்ற மனம் நிறைந்த பழைய தமிழ்க் குரலைக் கேட்க விரும்பியதாலும் பேரப்பிள்ளை களுக்கு பாட்டியாகிய போதிலும் உலகுக்கு இன்னமும் பாக்கியமக் காவாய் இருக்கத்தான் விரும்பி னாள். இப்போது குழந்தைகளை பார்த்து அயல் வீட்டுப் பிள்ளை க்ளும் கோட்டி என்று கூப்பிடத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்ச மாய் அயலில் புதிய பேராகத் தனக்கு ‘பாட்டி ஒட்டிக்கொள் வதை கவனிக்காமல் இல்லை. ஆரம்பத்தில் இந்தப் புதுப்பெயர் தன்னைக் குடுகுடு கிழவியாகக் காட்டிவிடுமோ என்று அஞ்சி னாலும் இப்போது அயல் பாட்டி என்று அழைப்பதை பெருமை யாகத்தான் எடுத்துக் கொள் கிருள்.
. "செத்தவீட்டுக்குப் போட்டு வந்தனான் வேணியக்கா நான்
குளிச்சுப்போட்டு வருமட்டும் ஒருக்கா ஓடிப்போய் குழந்தை பூளைப் பாரெனை. அங்கை
அவையும் வேணியக்கா வேணி யக்கா எண்டுகொண்டு ஓடிவரு
Sorbo“
வேணி அக்காவை மகளும் குத் துணையாக அனுப்பிவிட்ட திருப்தியில் பாட்டி தோய்க்க வேண்டியிருந்த குழந்தைகளின் உடுப்புகளையும் எடுத்துக்கொண்
டாள். இரண்டு மணித்தியாலங் களை இதில் கடத்திவிட முடி
9

Page 7
யும் என்ற கணக்கை தனக்குள் இட்டுக் கொண்டாள்
வேலைக் கள்ளிக்குப் பிள்
ளைப்பராக்கு’ என்ற பழமொழி
இங்கு மாறி'பிள்ளை தூங்கப் பஞ் சிக்கு வேலைச்சாட்டு என்றாகி விட்டதே என்ற வருத்தம் Luryடிக்கு இல்லாமலில்லை. பிள்ளை கள் அவ்வளவு சுளுவன்கள் என் பதோடு பாட்டியின் உடல்நிலை
யும் தாங்கும் வல்லமையற்றதா?
யானது என்பதுதான் இதற்குக் காரணம்.
பத்து வருடங்களுக்கு முன் வயிற்றில் செய்த பாரிய ஒப்பி ரேஷனிலிருந்து வெளிக்குத் திட காத்திரமான தோற்றமும் உள் ளூர தொதுமலுமாய்ன் Guri tij விட்டது பாட்டியின் உடல். அந்த ஒப்பிரேஷனுக்குத் திகதி நிர்ணயிக்கப்பட்ட- உடனேயே ஆள் முடிந்துவிடும் என்ற வதந்தி ஊர் பூராவும் பரவத் தொடங்கி விட்டதை ஒப்ரேஷனுக்கு ஒரிரு நாட்களுக்கு முன் பாக்கியமக்கா தெரிந்துகொண்டு விட்டாள்.
ஒப்பிரேசன் வெற்றிகரமாக பூர்த்தியாகிய பின்னரும் மயக்க நிலை நீடித்தது. "பாக்கியமக்கா விலை அசைவே இல்லையாம்;
ஆள் எழும்பிறது கஷ்டம். ரண்டு
நாளாய் அறிவு திரும்பேல்லை யாம்" என்று ஊர் முழுக்கள் கதைபரவி, எல்லோகும் as 65 5அஞ்சலி செலுத்த ஆஸ்பத்திரிக் குப் படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள். .
10
தெளிந்து சுயநினைவு
மயக்கம் மீண்ட பாக்கியடிக்காவுக்கும் புதிய பிறப்புப் டோலந்தானிருந் தது. தான் யமலோகம் வரை போய்வந்ததாய் ஒரு அசுமத் தம். செத்துப்போன நாகப் க் கிழவன், ஆத்தை, வியாழாச்சி, காதல் தோல்வியில் தூங்கிச் செத்த பக்கத்து வீட்டுப் பரி மளா போன்றோர் வந்து ஊர்ச் சேமம் விசாரித்ததாக ஒரு ஞாப கம். அவர்கள் பத்து இருபது வருடங்களுக்கு முந்திச் செத்தி
மூன்றும் நாள்
بقوirمحمد ٹ)
ருந்தாலும், சிெத்த நேரம் இருந்த தோற்றம் மாறாமல் இருந்தது பாக்கியமக்காவுக்கு
அதிசயமாக இருந்தது. பூவுலகின் பல வருட இயக்கம் யமலோகத் தின் ஒரு கண நகர்வுதானே என்று சமாதானமடைந்தாள்.
மெள்ளமெள்ள அறிவு தெளி வடைந்தபோது யமலோகத் திலிருந்து தன்னை எப்படியோ திரும்பப் பூவுலகிற்குக் கொண்டு வந்து விட்டது தெரிந்தது. கொஞ்ச நேரம் உற்றார் உறவி னரைப் பார்க்காமல் யமலோக நினைவுகளை மீட்ட முயன்று பார்த்தாள். சில தட்டித்தடக்கி வந்துபோயின. வந்தவரை வாய்
விட்டுப் பிதற்றிய சிறுமுனகல் ஆஸ்பத்திரிச் சுவர்கள்ையும் பத்து மைல் தூரத்தையும்
தாண்டி ஊர்முழுக்கக் கேட்டது. "பாக்கியமக்கா யமலோகம்
போய்த்தான் திரும்பி வந்திருக்
கிறா!' *
5 rudas . . 22

ஊர்பூராவும் ஒரு மாதத்துக்கு மேலாக பாக்கியமக்கா வீட்டுத் திண்ணையில் கூடிக் கலைந்தது பாக்கியமக்காவும் தன் அனுபவங்
களை எல்லோருக்கும் ஒழிவு மறைவின்றி விஸ்தீரணமாய் விளக்கினான்.
"இஞ்சாரணை அப்ப என்ரை அப்புவை நீ கண்ணேல் anava umri “”
பலரும் தத் தமது உறவுக
ளைக் கேட்டுக் கேட்டுக் குடைந்'
தஈர்கள். சில ரைப் பார்த்த நினைவு சிலனிர எப்படி முயன் றும் கண்டாய்த் தெரியவில்லை.
"சிலவேளை மற்றப் பிறவி.
ாடுத்திருப்பினம்"
சமாதானங் காணக்கூடிய
விசயந்தான்.
இப்போதும் செத்தவீட்டுக் குப் போய்வந்த காரணமாயோ என்னவோ பத்து வருடத்துக்கு முத்திய அந்தநாட்களின் நினைவு பாட்டியைச் , சூழ்ந்திருந்தது. தோய்ப்பதில் மனம் முழுதாய் ஈடுபட மறுத்தது, தூங்கிச் செத் சத்திக்கடை முதலாளியின் மச் சான் யமலோகம் போயிருப் பானோ, அகால மரணமென்ற தாம் ஆவி அந்தரத்தில் உல வுமோ என்ற கேள்விகள் பெரி தாய் எழுந்தன.
நாகிப்புக் கிழவன், ஆத்தை" வியாழாக்சி, பரிமளம் nோன்  ேேறார் பிறகு மறுபிறப்பு எடுத் திருக்கக் கூடுமே ? பின்னர் இருதடவைகள் பாட்டி பாடாய்
ஏப்ரல் 1991
படுத்தபோது மீண்டும் யமலே "க சஞ்சாரம் வாய்க்காகோ என ஏரங் கிகதுண்டு. ஒரேயடியாய் போய் விடுவதில் பயனில்லை! தனக்கு ஒரு முறை வாய்த்ததுபோல சென்று திரும்பிவந்த 7 ல் அது பெரிய விஷயந்தான். என்ற அங்கலாய்ப்புப் பாட்டிக்கு நெடுக இருந்தது.
அந்த வாய்ப்பு அநேகமாய்
தனக்கு இப்போதைக்கு இல்லை
என்பது பாட்டிக்கு ஊட்டியது.
சலிப்பை ஐம்பது வயதில் சாதகப் பலனின்படி பெரியதத்து இருந்ததென்று சாததிரியார் பிறகு கண்டு பிடித்துச் செல்லி யிருந்தனர். அந்தத் தத்தைத் தாண்டி விட்டதால் இனித் தொண்ணுறு வயதில்த்தான் சாவு என்பது சாத்திரம்.
பின்னர் கடுமைப் படுத்திய இரண்டு தரமும் சாத்திரியார் இதுபற்றி பிரஸ்தாபித்ததுண்டு. "பாக்கிமக்கா, இப்ப நஞ்சு குடிச் சாலும் நீ சாகமாட்டாய். அந் தத் தத்திலை தம்பினனி, இனி எதுக்கும் பயப்பிடத் தேவை யில்லை.
பாட்டிக்கு மரண பயமில்லை என்பது மெய், யலோகத்தின் நிலையைக் காண முடியாமலிருப் பது மட்டும் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
தனக்கு இப்போதைக்கு சாவில்லையென்ற சாக்கத்தில், கொண்ட அசைக்க புPடியாத நம் பிக்கையின் கர்ரணைமாக lurr g. ஷெல் கூவிக்கொண்டு கிடந்து
l

Page 8
சென்ற போதும், ஹெவி வட்டமிட்டு வட்டமிட்டு சுட்டுத்தீர்க் கும் யோதும், பொம்மர் பயங் கரமாய் உறுமி வந்தபோதும் கூறும் விசயம் ஒன்றுதான்.
'பிள்ளையன் வந்து, எனக் குப் பக்கத்திலை இருங்கோ. என்னை நெருங்கி யமன் கடைசி வரை வரமாட்டான்'
முதுகு உறைத்தபோதுதான் பாட்டி கவனித்தாள்,
வாரியிறைத்துக் கொண்டிருந் தான். இனி அதிகம் மினைக் டெக் கூடாதென்ற நினைப் போடு பாட்டி வேலையில் கவ ணத்தைக் குவித்துக் கொண் டாள்.
வெய்யில் வந்ததும் தல்ல தென்ற எண்ணத்தோடு . . மிக குரக்குக் குரல் கொடுத்தாள்.
பிள்ளை, வெய்யில் நல்லா எறிக்குது. காயப்போட வேண் டியதுகளை கொண்டந்து காயப் போடன். எல்லா உடுப்புகளும் புளிச்சு மணக்குதெல்லே"
இஞ்சை பிள்ளை மடியிலை நீ சுறுக்காக் குளிச்சுப்போட்டு வந்து இவனைத் தூக்கிவளத்திப்
போட்டுக் கெதியாச் சாப்பி டணை, மழையிலையும் வெய் யிலிலையும் நிண்டு வருத்த முழைக்கப் போறியே? தலை
யிடிச்சாப் போடுறதுக்குப் பண டோல் இல்லை. இதுக்குள்ளை பாடாக்கினால் எங்கை போறது’
மகளின் எச்சரிக்கையை இதற்கு மேல் உதாசீனம் செய்
12
சூரியன் முழு' மலர்ச்சியோடு வெய்யிலை
வது சரியில்லை என்ற உணர் வோடு பாட்டி அவசர அவசர மாய்க் குளித்தாள். குளித்து முடித்து வந்த கையோடு பேர் னைத் தாக்கித் தொட்டிலில் வளர்த்தினாள் பாட்டி. வேனி யக்காவுடன் பேத்தி மாமரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந் தாள். மகள் மாவடிக்குப் போன போதும் பாட்டி சாப்பிடப் Gumarruolo G3, tra 6 M Gia Lumri iš துக் கொண்டிருத்தாள்.
"முழிச்சிருந்தா உடம்டை முறிச்சுப்போடு வாபெண்டு எனக் குப் பயம். இப்ப அடங்கி தித் திரை கொள்ளேக்கை தூக்கி ஆசை தீர வைச்சிருக்க வேனும் போலை கிடக்கு"
தனக்குள் சொல்வதைப் போல வாய்விட்டுக் கூறியவள், சற்றுநேரம் தன்னை மறந்த வளாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருத்துவிட்டு குசினியை நோக்கி நடந்தாள்.
பாட்டி சாப்பிட்டு முடித்து கிணற்றடியிலிருந்த உடைகளைப் பிழிற்து கொடியில் போட்டுக் இரண்டிருக்கிறவரை பேரன் எழவில்லை.தொட்டிலில் ஆனந்த பணம் தொடர்ந்தது. Larsair இழே இன்னமும் பேத்தி வேணி ாவோடு "குடித்தனம்" ந~த் நிக் கொண்டிருந்தாள். மகள் ாவின் கீழ் வைக்கப்பட்டிருத்த வாங்குகளில் ஒன்றில் ஒய்வா ப் படுத்திருப்பதைக் as6dä7L.- பாட்டி தன்னும் கையில் எடுத்த உடுப்புகளைக் காயப்போட்ட (80ம் பக்கம் ri dias)
தாயகம் 22

அம்மன்கிளி முருகதாஸ்
V
தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்திவரும் பேரா சிரியர் க. கைலாசபதி நினைவு ஆய்வரங்குத் தொட ரில் சமர்ப் பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.
கைலாசபதியும் நாவலர் ஆய்வுகளும்
'சைவர்கள் தாவலர் அவர்களை ஐந்தாம் குரவர் என்று பாராட்டி, இதுகாறும் விழா எடுத்து வந்தார்கள். இப்போது தமிழர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள், இத்தேசத்தவர் இத் தசத்தவர் அல்லாதவர்கள், யா பேரும் ஏகோபித்துக் கொண் டாடும் நிலை தோன்றியிருக்கிறது"
இக்கூற்று 1972 இல் நாவலர் சபையால் ந வலர் பெரு மான் ஜயந்தி விழாமலர் வெளியிடப்பட்ட போது பண்டித மணி சி. கணபதிப்பிள்ளையினுற் கூறப்பட்டது. இக்கூற்றிற் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கும் கைலாசபதிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
நாவலர் வாழ்ந்த காலம் கி. பி. 1822-1879 ஆண்டு வரையிலானது ஆகும். 57 ஆண்டுகள் நாவலர் ஆங்கில ஆட்சி
፲ 3

Page 9
யின் கீழ் வாழ்ந்து மறைந்திருக்கிருர், கைலாசபதி 1933 1982 வரையிலான காலப் பகுதியில் 49 ஆண்டுகள் வாழ்ந்திருக்கி ருர். இவரின் பதினைந்தாவது வயதில் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து விடுகிறது. இருவருக்கும் இடையே ஏறத்தாழ ஒரு நூற்ருண்டு கால இடைவெளி உண்டு.
நாவலர் ஒரு தமிழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பா சிரியர், பாடசாலை நிறுவாகர், பாடநூலாசிரியர், உரையாசிரி யர், சமய சீர்திருத்தவாதி, பிறசமய எதிர்ப்பாளர் என அவ ரைப் பற்றிச் சுருக்கிக் கூறலாம். அவரது பணிகள் பல் துறைப் பட்டன. அதனுல் அவரைப் பற்றிப் பல்வேறு அறிஞர்களும் எழுதியுள்ளனர். 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவலர் நூற்றண்டு மலரில் நாவலரால் எழுதப்பட்டனவும் பதிப்பிக்கப் பட்டனவும் போக அவரைப் பற்றி முழுமையாக எழுதப்பட்ட னவும் குறிப்பிடப்பட்டமையுமான கட்டுரைகள் 277 உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பேராசிரியர் கைலா சபதி 13 கட்டுரைகளை எழுதியுள்ளார். நாவலரைப் பற்றி, பண் டிதமணி கணபதிப்பிள்ளையை அடுத்து அதிகமான கட்டுரையை எழுதியவர் கைலாசபதியே என்பது இவ்விடத்திற் குறிப்பிடற் குரியது. அந்த 277 ஆக்கங்களினுள்ளும் 18 ஆக்கங்களே 1950 இற்கு முன் ஆறுமுக நாவலரைப் பற்றி வெளிவந்தவை. ஏனை யவை 1950 இற்குப் பின் வெளிவந்தவையே.
இதற்கான காரணங்கள் யாவை 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின் ஈழத்து இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. 'ஈழத்து இலக்கியங்களில் ஆர்வம் ஏற்பட்டமைக்குப் பல கார ணங்கள் இருந்தன. சுதந்திரத்துக்கு முன் இலங்கைத் தமிழக மும் இந்தியத் தமிழகமும் 'தாய்நாடு-சேய்நாடு" எனக் கூறப் பட்டதனல் இலங்கை இலக்கியம் தனியாக நோக்கப்படுவதற்கு எந்த முயற்சியும் இருக்கவில்லை. இந்தியத்தமிழ் இலக்கியமே இலங்கைத் தமிழ் இலக்கியமாகவும் கொள்ளப்பட்டது. 1956 இல் ஈழத்திலே தமிழர் சிறுபான்மையினர் என்ற நிலைமை ஏற் பட்ட போது ஈழத்துத் தமிழர் முதன் முதலாகத் தாம் இலங் கையர் என்று எண்ணத் தொடங்கினர். இவ்வெண்ணத்தினலே தமிழகத்தோடு கொண்டிருந்த ஆத்மார்த்தத் தொடர்பு பலவீ னமடையத் தொடங்கிற்று. தேசியப்பண்பு பொருந்திய இலக் கியம் படைக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஈழத்துப் பண்டைய இலக்கியங்களைப் பேண வேண்டும் என்ற உணர்வும் பிறந்தன. இக்காலத்திற் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழ் மக்களையும் தூண்டிற்று. பல்கலைக்கழகத் தமிழ்த்துறை
14

யைச் சேர்ந்த மூவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே பணிபுரிந்த இலக்கிய கர்த்தாக்கள் சிலருடன் சேர்ந்து ஈழத்துத் தமிழிலக்கி யத்தின் நெறியை வகுப்பதிலே முன்னின்று உழைத்தனர். ஈழ மண்டலப் புலவர் சரித்திரம் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் என்பவற்றின் வழியே இலங்கையில் இன்பத் தமிழ் ஈழமும் தமி ழும் என்பன தோன்றின*". (கலாநிதி பொ பூலோகசிங்கம் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள்,)
இந்தத் தொடர்ச்சியில் ஈழத்தில் அந்நிய மதத்திணிப்பு, கலாசாரத் திணிப்புகளுக் கெதிராகக் குரல் கொடுத்தவர் போற் றப்பட வேண்டியவராகின்றனர். சிங்கள பெளத்தத்தைப் பேணி யமைக்காக அநகாரிக தர்மபாலவும் சைவத்தமிழைப் பேணிய மைக்காக ஆறுமுக நாவலரும் போற்ப்றபட்டனர்.
இந்த எழுச்சியினுாடாக ஆறுமுக நாவலர் தேசிய மட்டத் திற்கு உயர்த்தப்படுகிருர். இதற்கு மேற்குறிப்பிட்ட காரணங் களுடன் வேறும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 1946 இல் தோற்றுவிக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாவலர் தேசிய மட்டத்தில் உயர்த்தப்படுவதற்குக் காரணமாயிருந்தது. 1954 இல் மு. எ. ச. விரைவாகப் பணியாற்றத் தொடங்கிய போது அது ஈழத்து இலக்கியத்தைச் சமய இனப் பாகுபாட் டுக்கு அப்பாலான ஒரு முயற்சியாகக் கருதியது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்ற கோஷம் அதன் முக்கிய கோட்பாடாக இருந் தது. அதாவது ஈழத்து மண் வாசனையை இலக்கியம் பிரதி பலிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்நேரத்தில் க. கைலாசபதி தினகரன் பத்திரிகையிற் சேர்ந்து அதன் ஆசிரி யரானர். ஈழத்துத் தமிழ் இலக்கிய இயக்கம் தினகரனில் முக் கியம் பெறத் தொடங்கிற்று. இதன் விளைவாக தேசிய இலக்கி யம் என்ற நிலைப்பாடு வளரத் தொடங்கிற்று. கைலாசபதியும் இதுபற்றிய கருத்துகளை தினகரனில் வெளியிட்டார். அந்த நேரத்தில் (1960) கங்கை ஆசிரியர் பகீரதனின் 'ஈழத்துச் சிறு கதைகள் தமிழ் நாட்டுச் சிறுகதைகளை விட 10 வருடங்கள் பிந்திய நிலையில் இருக்கின்றன" என்ற கருத்துப் பல வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பி ஈழத்து இலக்கியக் கோட்பாட்டை இன்னும் அழுத்தமுறச் செய்தது. இ. மு எ. ச. தனது வெளி யீடாக புதுமை இலக்கியத்தில் ‘நமது பரம்பர்ை' என்ற பகுதி யைத் தொடங்கி ஆறுமுக நாவலர், சித்திலெப்பை, யாழ்ப்பா ணத்துச் சாமியார் பற்றிய கட்டுரைகளை வெளியிடத் தொடங் கிற்று. இது "எமது இலக்கிய ஆக்கத்தின் பாரம்பரியத்தையும்
15

Page 10
தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிவதற்காகவும் நமக்கென ஓர் இலக்கிய வழியை வகுப்பதற்காகவும் ஈழத்து எழுத்தாளன் இலக்கிய அனுதையல்லன் என்பதை உணர்த்துதற்காகவும்" தொடங்கப்பட்டது.
இவ்வாருன ஒரு பின்னணியில் பேராசிரியர் கைலாசபதியும் தமது கட்டுரைகளில் ஆறுமுக நாவலரைப் பற்றி எழுதத் தொடங்கினர், பேராசிரியர் கைலாசபதி நாவலர் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள முனைந்தமைக்கு அவரது யாழ், இந்துக் கல்லூரிச் சூழல் முக்கியமானதாக இருந்தது என்பது கவிஞர் முருகையனின் கருத்து. ஆறுமுக நாவலர் பணிகளின் பேருகவே இந்துக் கல்லூரி ஸ்தாபிதமாயிற்று. மேலும் இந்துக் கல்லூரியுடன் சேர்ந்திருந்த இந்து சாதனம் இதழில் கைல7 ச பதி தமது கட்டுரைகளை மாணவனுக இருந்த காலத்தில் எழுதி யிருக்கிருர், அந்தச் சூழல் நாவலரைப் பற்றி அறிய அவருக்கு உதவியிருக்கிறது. மேலும் ஈழத்து இலக்கிய ஈடுபாடு காரண மாக இவர் ஈழத்து இலக்கியத்தின் பண்பாட்டு வேர்களைக் கண் டறிய வேண்டும் என்ற ஆவலினல் உந்தப்பெற்றே ஈழத்து இலக்கிய முக்கியஸ்தர்களில் கவனம் செலுத் தி யுள்ளார். (இ. முருகையன் கைலாசபதி கூறியதாக கூறினர்).
கைலாசபதி நாவலர் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளை நோக்குமிடத்து அவருக்கு முன் நாவலர் பற்றி எழுந்த ஆய்வுக னின் பண்புகளையும் அவர் காலத்தில் அவராலும் அவரது சகாக்களாலும் 1 அவரது பணிப்பினலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும் நோக்குதல் பயன் தருவது.
(இ. மு. எ. ச. வின் "புதுமை இலக்கியத்தில் இ. முரு கையன் பழைய ஆய்வுகளைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிருர்.
'நாவலர் பற்றி விரிவான ஆய்வுகள் பல மேற்கொள்ளப் படுவதற்கும் மாநாடுகள் கூட்டப்படுவதற்கும் இ. மு. எ. ச. எடுத்த முதல் முயற்சியே ஆரம்பப்புள்ளியாய் அமையலா யிற்று.
"அதற்கு முன் நாவலர் நினைவுகள் போற்றப்படவில்லை என்று எவரும் சொல்லத்துணியார் W
'நாவலர் போற்றப்பட்டார். அவருக்குப் பூசைகள் செய் யப்பட்டன. அவர் ஒரு சமய போதகர் என்ற நிலையிலே மதிக் கப்பட்டார். அவருடைய ஆளுமை சைவம் என்ற சட்டத்தி
6

னுள் வகுத்து நிறுத்தப்பட்டது". ஆறுமுக நாவலருடைய பணி
களின் பயனகத் தோன்றிய தமிழ்ச் சைவப் பள்ளிகளில் அவ
ருக்குக் குருபூசைகள் நடைபெறுகின்றன. நாவலர் பற்றி உபநி யாசங்கள் நடந்தன. ஆறுமுக நாவலரின் சமயப் பணிகளைத் தொடரும் நோக்குடன் நிறுவப்பட்ட சைவ பரிபாலன சபை நடத்திய இந்து சாதனம் போன்ற ஏடுகள் நாவலர் ஆற்றிய சமயத் தொண்டுகள் பற்றிக் கட்டுரை எழுதின.
* ஆனல் சைவமென்னும் வட்டத்திற்கு வெளியே நாவலரின் முக்கியத்துவம் உணரப்படவில்லை'.
கைலாசபதி நாவலரின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்
தார். நாவலர் வகுத்த புதுப்பாதை என்ற அவரது கட்டுரை
யில் நாவலரின் 5 முக்கிய பணிகளை எடுத்துக் கூறுகிருர், 1. தமிழிலே முதன் முதலாகப் பிரசங்கம் செய்தார். 2. தமிழிலே கட்டுரை என்பது முதன் முதலில் இவரால் நல்ல
முறையில் எழுதப்பட்டது. 3 தமிழில் எழுந்த பாடநூல்களுக்கு இவரே வழிகாட்டி. 4. வசன நடையிற் குறியீடு முறையை முதன் முதலிற் புகுத்
தினுர், 5. சைவ ஆங்கில பாடசாலையை முதன் முதலில் ஆரம்பித்
தார்.
என்பன அவை. நாவலர் காலத்தில் தமது காலச் சமுதாய உணர்வு எதுவுமின்றித் தம்மளவில் நிறைவுணர்வுடன் பிரபுக்க ளுக்குப் பிரபந்தங்கள் செய்து வயிறு வளர்த்த வித்துவான்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆதீனங்களிலும் பட்டம் பதவிகளுக் குக் குறைவில்லை. அவர்கள் கம்பீர நடை போட்டுத் திரிந்த னர். ஆயின் நாவலர் அவ்வாறல்ல. அவர் முற்கூறப்பட்ட வித் துவான்களைப் போல ஆதீனங்களை அணுகி சின்னப்பட்டமா கவோ, வித்துவானகவோ வர விரும்பவில்லை. அதே நேரம் தம் சக்திக்கேற்ற உத்தியோகமும் பெற்றுத் தம்மையாண்ட வெள் ளையரைப் பின்பற்றியும் அவரை முன் மாதிரியாகக் கொண்டு குட்டித் துரையாகவும் வாழ விரும்பவில்லை. பார்சிவல் துரைக் குத் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாவலர் துரை பல தரம் வற் புறுத்தியும் அத் தொழிலைப் பெற விரும்பவில்லை.
இவை இரண்டையும் ஒதுக்கித் தள்ளி பிறர் நலம் என்ற மகோன்னதமான பணிக்குத் தம்மை அர்ப்பணித்தார் நாவலர்.
அதிலிருந்து பிறந்தனவே முன் கூறப்பட்ட ஐந்து முதன் முயற் சிகள் என்று கைலாசபதி கூறுவர். இந்த ஐந்து முயற்சிகளையும்
17

Page 11
சைவம் - தமிழ் என்ற கோட்பாட்டிற்குள் பழுதறச் செய்து முடித்தவர் நாவலர் என்பது கைலாசபதியின் கருத்து. நாவல ரின் வசன பாடப் புத்தகங்கள் அக்காலத்து வெளியிடப்பட்ட பாடப் புத்தகங்களைக் காட்டிலும் சிறந்தவையே என்பதனை "Native Public Opinion" என்ற ஆங்கிலப் பத்திரிகை மதித்துக் கூறியதை எடுத்துக் காட்டியுள்ளார். அதனைவிட நாவ லர் வெளியிட்ட "இலங்கைப் பூமி சாத்திரம்' எழுதத் தொடங் கியிருந்த தமிழ் - ஆங்கிலம், வடமொழி, - தமிழ் அக ராதிகள் என்பன நாவலரின் கல்விப் பணியின் பற்றுதலினல் உருவான செய்கைகள் என்பது அவர் கருத்தாகும். நூல்க ளைப் பதிப்பிக்கும் முறையிலும் ஆறுமுக நாவலர் மக்களை நோக் கிப் பதிப்பித்தார் என்பது அவர் கருத்து. பெரிய புராண வச னத்தில் 'வாசிப்போருக்கு எளிதிலே பொருள் விளங்கும்படி பெரும்பான்மையும் சந்தி விகாரங்களின்றி அச்சிற் பதிப்பித் தேன்?" என்று நாவலர் கூறியுள்ளமையே அவர் தமது கூற்றுக்கு, ஆதாரமாக வைத்தார். சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக் குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் ' என்ற பேராசையால் உந்தப்பெற்ற நாவலர் பெரிய புராணம் போன்ற சமய நூல்கள் அவற்றை வாசிப்போர்க்கு விளங்கவேண்டு மென்று எதிர்பார்த்தது தவிர்க்க முடிய"ததே.
'நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்" என்ற கட்டுரையில் கைலாசபதி நாவலர் இலக்கியங்களை எவ்வாறு வகுத்துக் கண் டார் என விளக்கமாகக் கூறியுள்ளார். ஆற்றல் இலக்கியம், அறிவிலக்கியம் என்ற நவீன இலக்கியப் பிரிப்பு ஆறுமுக நாவ லரிடம் அவரையறியாது ஊன்றியிருந்தமையை விளக்கியுள்ளார் இதில் க. நா. சு. வையும் புதுமைப்பித்தனையும், டி. கே. சி. ஐயும் நாவலருடன் ஒப்பிட்டு ஆற்றல் இலக்கியம் அறிவிலக்கி யம் என்ற கோட்பாடு அவரை அறியாமலேயே அவரை இயக் கிய செய்தி அவரது தமிழ்ப் புலமை என்ற கட்டுரையிலிருந்து தெளிவாக்கப்பட்டமையைக் கூறியுள்ளார். ஈழத்து இலக்கிய முன்னுேடியாகவும் நாவலரைக் கண்டுள்ளார். (ஈழத்து இலக் கிய முன்னுேடிகள்) மேலும் இந்நூலில் அவரது உரைநடைச் சிறப்பினைக் கூறுகையில்,
"கல்வியிலும் சமய சீர்திருத்தத்திலும் கருத்துடையராயிருந்த
நாவலர் அன்றைய நிலையில் கிடைத்த துண்டுப்பிரசுரங்கள்
பத்திரிகைகள் நூல்கள் வாயிலாகவும் பிரசுரங்கள் மூலமாயும்
மக்களுடன் தொடர்பு கொண்டு உழை த் த மை மனங்
கொள்ள வேண்டிய தொன் ரு கும். அவர் ‘வசன நடை
8

கை வந்த வல்லாளர் எனப் போற்றப்படுதற்கு ஏதுவாக இருந்தது. இந்த உரைநடைத் தேவையை இனங்கண்டு அதற்கேற்றவாறு எழுதியமையேயாகும் என்கிருர்.(P 19)
மேற் கூறப்பட்டவற்றைப் பார்க்கும் போது அவர் காலத் துக்கு முந்தியவர்கள் ஆறுமுக நாவலரைக்! கடவுளாக வழிபாடி யற்ற, கைலாசபதி வேருெரு கோணத்திலே நாவலரை நோக்கி னர் என்பது விளங்கும். கைலாசபதியின் மேற்குறிப்பிட்ட ஆய் வுகளால் நாவலர் பற்றிய கருத்துகள் விளக்கப் பெற்றுள்ளன. 1979 ஆம் ஆண்டு கைலாசபதி பதிப்பாசிரியராக இருந்து வெளி யிட்ட நாவலர் நூற்ருண்டு மலர் இந்த விகசிப்பை எ டு த் துக் காட்டும். நாவலர் நூற்றண்டு மலர் வெளி யீ ட் டு க்கு முன் வெளியிடப்பட்ட நா வலர் மா நா ட் டு விழா மலர் (1969) போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இவ்வேறுபாடு துல்லியமா கத் தெரியவரும் .
நாவலர் மாநாட்டு மலர் 1963
முதலாம் பகுதி நாவலரை விமரிசிப்பதுடன் அவரை தேவ ஞகப் போற்றுகின்றது. அதில் வரும் சில தலைப்புகள் இதற்கு எடுத்துக்காட்டாய் அமைவன. ஞான ஞாயிறு நாவலர் பெரு மான், ஒப்புயர்வில்லா நாவலன், நாவலர் எழுப்பும் முதல் விஞ ஆகியன.
இரண்டாம் பகுதி நாவலர் காலப் புலவர் அவருக்குப் பிந் திய ஈழத்து உரையாசிரியர் பற்றிய எழுத்தாக்கங்களையும் நாவ லருடன் தொடர்புபடாத வேறு சில கட்டுரைகளையும் உள்ள டக்கியுள்ளது.
மூன்ரும் பகுதி நாவலர் பற்றிய வாழ்த்து மடலாக உள் ளது.
நான்காம் பகுதி நாவலர் களஞ்சியம் , அது நாவலர் வாழ்க் கைத் திகதிகள், ஆறுமுக நாவலரின் வரலாற்றுடன் தொட்ர்பு டையோராக நாவலர் காலத்தில் வாழ்ந்த பெரியார், நாவலர் காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவங்கள் சில, ஆசிரியர் மாணுக்கர் பரம்பரை, நாவலர் நூல்கள் என்பன தொகுக்கப் பட்டுள்ளன.
இதில் உள்ள நாவலர் களஞ்சியம் பகுதியை பொ. பூலோக சிங்கம் தாமும் கைலாசபதியும் சேர்ந்து தயாரித்ததாகக் கூறி
9

Page 12
யுள்ளார். நாவலர் களஞ்சியத்தின் செல்வாக்கை 1979 நாவ லர் நூற்றண்டு மலரில் காணக்கூடியதாக உள்ளது. அதிற் பதிப்பாசிரியராக இருந்த க. கைலாசபதி இதன் பதிப்புரை யில் 'ஈழத்தறிஞர் குறிப்பாக தாமோதரம் பிள்ளை செந்திநாதை யர், துரையப்பாபிள்ளை, விபுலானந்தர், சோமசுந்தரப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் முதலானேர் ஆய்வுக்கட்டுரைகள் நாவ லர் ஆய்வைத் தெளிவாக்கியுள்ளன" எ ன் றும் ' வேறு ப ல நினைவு மலர்களும் நூற்ருண்டு மலர்களும் உதவியாய் அமைந் தன' என்றும் கூறியுள்ளார். அத்துடன் "யாழ்ப்பாணத்திலே பல்கலைக்கழக வளாகம் ஆரம்பிக்கப்பட்டதால் கிடைத்த வசதி கள் அவ்வாய்வுகளுக்கு இன்னும் உறுதுணையாய் அமைந்தன’’ 6Tait unit.
அதன் காரணமாக அவரது மேற்பார்வையின் கீழ் வெளியி டப்பட்ட இம்மலர் நாவலரின் பல்வேறு பணிகளையும் ஆராயக் கூடியதாக அமைந்தது.
முதலாம் பகுதி பல்துறை நோக்கில் நாவலர் எ ன் பதா கும். கல்வியியல் நோக்கில் நாவலர் (இ. முருகையன்) சமூகவி யல் நோக்கில் நாவலர் (க. சிவத்தம்பி) மொழியியல் நோக்கில் நாவலர் (அ. சண்முகதாஸ்) வெகுசனத் தொடர்பு, சமயம், தத் துவம், இலக்கியம் என்ற அடிப்படையில் இவரின் ஆளுமையை இக்கட்டுரைகள் கணித்தன. இப்பகுதி கைலாசபதியே கூறிய வாறு நாவலரது சிந்தனைகளையும் போதனைகளையும் சாதனைகளை யும் திறனுய்கிறது.
இரண்டாம் பகுதி நாவலரும் அவர் வழி வந்தோரும் பற்றி யது. அது நாவலரின் வழி வந்தோர் இயங்கிய முறை யை யும் அவர்களின் சிறப்பியல்புகளையும் அவர்கள் நா வல ரிட மிருந்து மாறியும் மாருமலும் செயற்பட்ட விபரத்தைக் கூறுவது.
மூன்ரும் பகுதி வரலாற்றுப் பின்னணியில் நாவலரை, மதிப் பிடுகிறது. இதில் இந்திய மறுமலர்ச்சி இயக்கப் பின்னணியில் நாவலர், காலத்தின் பின்னணியில் நாவலர், போன்ற கட்டுரை கள் இடம் பெற்றுள்ளன.
நான்காம் பகுதி நாவலர் திரட்டாகும். நாவலர் வாழ்க்கை யின் முக்கிய சம்பவங்களும், நாவலரியல் என்ற பகுதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட நூல் விபரப் பட்டியலும் இடம் பெறுவதை க் காணலாம். இப்படியான பெருமுயற்சி நா வல ரு க் கே மேற் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடற்குரியது.
20.

கைலாசபதி மேற்குறிப்பிட்ட வகையில் நா வலர் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் அவரை ஈழத்து இலக்கியம் சம்பந்த மான ஆய்வுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள உதவின. அவர் காலத்தில் ஈழத்தறிஞரான சி. வை. தாமோத ரம்பிள்ளை, குமாரசாமிப் புலவர் பற்றிய ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன. அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது B. A., M. A. தேர்வுக்கான ஆய்வுக் கட்டுரைகள் ஈழம் சார்ந்தன வாக அளிக்கப்பட்டன. கா. சிவத்தம்பி, க கைலாசபதி இரு வருமாக இத்தலைப்புகளை எமக்குத் தந்தனர்.
வடமராட்சிக் கல்விப் பாரம்பரியம் (எஸ். சிவலிங்கராசா) ஈழத்தறிஞரின் இலக்கிய இலக்கண சர்ச்சைகள்
(க. அம்மன்கிளி) ஈழத்து ஊஞ்சற் பாடல்கள் (இ. கண்ணம்மா)
ஈழத்துப் பழமொழிகள் சு. சுபத்திரா) ஈழத்துக் கல்வெட்டுப் பாடல்கள் (சர்வஜீவதயாபரி)
இந்தக் கட்டுரைகளெல்லாம் ஈழத்திலக்கியம் பற்றியனவாய் உள்ளமை கவனிக்கத் தக்கது. இவ்வாருக அவரது ஆய்வுப் பரப்பு ஈழத்தை நோக்கி விரிவடைவதற்கு நாவலர் ஆய்வுகள் உதவியிருக்கின்றன.
சாதியம் சம்பந்தமான நாவலர் கருத்துப்பற்றியும், பெண் கள் நிலைபற்றிய நாவலர் கருத்துப்பற்றியும் கைலாசபதி எந்தக் கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. , எனினும் தீண்டாமை ஒழிப்பி யக்கப் போராட்டத்திற் கைலாசபதி பங்குபற்றியுள்ளார். மேலும் பெண்கள் பற்றிய கருத்துகளை "அடியும் முடியும்" என்னும் நூலில் அகலிகை கதையின் தமிழ் இலக்கிய நிலைப்பட்ட வளர்ச் சியை ஆராயும் பொழுது ஓரளவு விளக்கமாக எழுதியுள்ளார். ஆயினும் இந்த இரு விடயங்கள் பற்றியும் நாவலர் கொண்டி ருந்த எண்ணங்கள் பற்றிக் கைலாசபதி எதுவும் குறிப்பிடாமல் விட்டதேன் என்பது ஆராயத் தக்கது.
தொகுத்துநோக்கும் போது நாவலரின் இலக்கியப் பணிகளைப் பல்வேறு கோணத்திலும் ஆராய்ந்தவர், ஆராய வைத்தவர் கைலாசபதி, அவரின் அந்த ஆராய்ச்சி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஈழத்து இலக்கிய ஆய்வுகள் வளர்ச்சி அடைவதற்கு அடித்தளமானது என்பதில் ஐயமில்லை.
2.

Page 13
மறுதாய்
அல்அஸ5மத்
என் கண்ணைத் திறந்து வைத்தான் அவன் "நடப்ப தெல்லாம் நன்மைக்கே" என்று வாழ்ந்திருந்த என் "ஒப்ட்டிமி ஸம்" கூடச் சரியான தத்துவமல்ல என்பதை ஒரு கூர்ங் கோணத்திலிருந்து செல்லத்துரை நிரூபித்து விட்டான்.
இதில் வேடிக்கை என்னவென்ருல், அந்தக் குருடன் என் கண்களைத் திறந்தான் என்பதுதான். மடுவென்று எல்லாராலும் இன்னுமே கணிக்கப்படும் அவன், எனக்கு மட்டும் மலையை விட உயர்ந்து போனனே!.
அவனை இனிமேலும் நான் கீழ்த்தரமாகக் கணிக்க முடி யாது - முந்தி மாதிரி.
ஏழெட்டுத் தோட்டங்களை அத்தக் கூலிகளாகச் சுற்றிய பிறகு, தங்களின் ஐந்து குழந்தைகளோடும் பஞ்சப்பாட்டோ டும் இந்தத் தோட்டத்தில் என் பெற்றேர்கள் குடியேறிய போது, எனக்குப் பத்து வயது. எங்கள் பெரட்டுக் கங்காணி யாரின் தனி வாரிசுதான் அவன். ஒரு வசூல் கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தான். எனக்குச் சாதாரணமான கல வன் பாடசாலையொன்று கிடைத்தது.
கிழியும் வரையில் ஒரே கென்வஸை அணிந்தவன் தான்" கைக்குட்டை நிறத்துக்குத் தகுந்தபடி ஜோன்வைட்டுகளாக அணிந்தவன் அவன். அவனுடைய நாகரீகத்துக்கு நானும் என் னுடைய படிப்புக்கு அவனும் பயம். அவனுடைய பாட்டனர் அவனை மொத்துவதெல்லாம் என்னைப் பிள்ளையார் சுழி ஆக்கித் தான். ஒரு மழைநாளில், என்னைக் கூட அவன், தனியான இடத் துக்கழைத்து என் வெறுப்பைச் சம்பாதித்தவன்.
அவனைப் பற்றி இன்னுமின்னும் என்னென்னவெல்லாமோ சொல்லலாம். வாய் கூசிக்கூசி.
நான் என் இருகை விரல்களளவு சுற்றிருந்த காலத்தில் அவனது வலக்கைப் பெருவிரல் ஊனமாகி விட்டது. நான் உத் தியோகத்துக்குக் கிளம்பினேன்; இவனை மலைநாட்டுக்குள் தேயி லை பில் திணித்து வைத்தார்கள். அவனுக்குப் பெருவிரல் தான்

ஊனமாக இருந்தாலும் குரல் ஒரு தானமாகக் கிடைத்திருந்த தால், சுப்பர்வைஸ்ராகிக் கணக்குப் பிள்ளையாகிக் கண்டக்ட்ட ரும் ஆகினன்.
கள்ளப்பேர், சாராயப் போத்தல், பழிவாங்குதல், பொம் பளைக் கேஸ் என்பனவாக, அவனது பால்ய காலத்து லீலைகள் பரிணுமப்பட்டிருந்தன - கல்யாணம் கட்டியும். அவனே இவற் றையெல்லாம் என்னிடம் அளந்திருப்பதால் தான் இவ்வளவும் அழுத்துகிறேன்.
நான் கொழும்புக்கு வந்த பிறகு, ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள், கோட்டை றெயில்வே ஸ்ட்டேஷனுக்கருகில் கண்டேன். நான்காவதுவும் பெண்பிள்ளைதான் என்று தெரிய வத்தது. என் அம்மா குடும்பமும் அவனுடைய பெற்றேர்களும் இன்னும் ஒரே தோட்டத்தில் தான் இருந்தாலும், இருந்தி ருந்து நானும் அங்கே போய் வந்திருந்தாலும், அம் மா வும் இங்கே அடிக்கடி வந்து போனலும் - அவனைப் பற்றி விசா ரிக்கும் நினைவு எனக்குள் குறுகுறுத்ததில்லை. எனவே, அன்று அரை மணித்தியாலம் வரையில் பரிமாறிக் கொண்டோம்.
திடீரென்று, என் வீட்டுக்கு வரப் போவதாக நெருங்கி னன். அதைத் தட்டிக் கழித்து விட்டு நான் தப்பித்துச் செல்வ தை விட வேறு உபாயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனல் இன்றைய நிலை வேறு. w
அப்படிப்பட்ட செல்லத்துரை என் கண்ணைத் திறந்து விட்டான் என்பதில் வேடிக்கை இல்லாமல் வேறென்ன இருக்க முடியும்? ஆனல் அதுதான் உண்மை.
ஓர் உரும தேரத்தில், 'மருதாயி எக்ஸ்பயர்ட் என்ற தந்தி கிடைத்தது. தம்பி அனுப்பியிருந்தான்.
“இது யாருப்பா, மருதாயி?** என்ருெரு நிமிஷம் எனக்கு.
“யாராவது நீங்க மறந்து போன சொந்தக்காரங்களா இருக்கும்!" என்ற குத்தல் மனைவிக்கு.
தந்தியை இவளும் புதிதாகப் பரிச்சயப்படுத்தினள். “வேற எதயோ ஒரு பேர மருதாய் னு எழுதீட்டானு களோ?' என்று அநாவசியமாகத் தாக்கிய எனக்குள் பளீரென்று வெட்டியது. 'அட, நம்ம மருதாயி!"
<9, • • • ldt! . அவுங்க தாம் போல ரு க் கு! ... ச்சீ பாவம்" என்ருள் இவள்.

Page 14
"வயசுதாம் எம்பதுக்கு மேலருக்குமே, அப்பறம் என்ன பாவம் !"
"எப்ப செத்தது, எப்ப அடக்கம் னெல்லாம் ஒண்ணுமில் 65) G3u u?ʼʼ
"நமக்குந் தெரியப்படுத்தனும்னு ஒரு கடமைக்கி அடிச்சி ருக்ருங்க போல நம்ம வரவா போறம்னு ஒரு நெனப்பு.'
"இப்ப என்ன செய்யப் போlங்க?" “என்ன செய்றது; போறேன்! ... பொ தை க்கலே ன்ன மூஞ்ச பார்ச்கலாம்; பொதச்சிட்டா குழியப் பார்க்கலாம்."
நான் பிறந்ததுவும்!றபர்த் தோட்டம் ஒன்றில் தான். அம்மாவுக்குத் தலைப்பிள்ளை - அவளுக்குப் பராமரிப்பைப் படிப் பிக்க வந்தவன் மாதிரி. அம்மாவின் அம்மாவுக்கும் அம்மா மட் டுந்தான் பிள்ளையாதலால் அவருக்கும் அவ்வளவு பரிச்சயம் இல் லையாம். எல்லாமே அடுத்த வீட்டைஅண்டாத குறை மூன்று பிரசவித்திருந்த மருதாயி தொங்கக்காம்பருவில் இரு ந் தா ள். பால் கொடாக் குறைதான்; என் செவிலித் தா யா கி ன ள் - யாரையும் கேளாமல் யாரும் பணியாமல்,
"அடேங்கப்பா ! இந்தக் கரும்பய கொஞ்சம் அழுது ட் டான்ன போதும்! “என்ன ஆத்தா இப்புடிப் புள்ளை அழு க உடுறிங்க!" ன்னுட்டு மலைல நின்னக்கூட ஒடியாந்துறுவா! அவ வூட்டு செத்துப்போன பயதான் இவன்னு ஒரு நெனப்பு அவ ளுக்கு . " என்று கோபால் தாத்தா அடிக்கடி சொல்வார்.
மருதாயியின் வம்சத்துக்கே ஒரு "மாபெரும் சமூகக் குறை பாடு இருந்தது. தோட்டத்தில் யார் செத்தாலும் வீடு வீடா கக் கேதம் சொல்வது மருதாயியின் புருஷன் தான். செத்த வீட்டில் தப்பும் அடிப்பான். இந்தக் கேதம் சொல்லும் சமாச் சாரத்தை இன்று மாஸ் மீடியாக்கள் கூடச் செய்கின்றன. கரு வாட்டு நாற்றம் பட்டிருந்தால் கூட அந்த நீரைக்குடியாத மாட்டைத் தின்னும் அவர்களின் இரத்தத்தில் இருந்தது அடங் கிப் பணியும் அணு. கண்ட கண்ட நரகல்களையும் தின்னும் கோழி சாப்பிடும் எங்களின் இரத்தத்தில் இருந்ததுவோ ஆளு னகயால் நிமிரும் அணு! இல்லாவிட்டால் என் அகம்புடியர்கள் மருதாயியின் பாலையும் குடிக்க அனுமதித்திருப்பார்கள்!
மருதாயி எனக்கிட்ட பெயர் தான் துரை. வெள்ளைக் காரத் துரைமாருக்கு இதெல்லாம் தெரியாது.
நான் பாதுகாக்கப்பட்ட இரண்டாவது வருஷம் தொடக் கம், எங்கள் குடும்பத்தின் தோட்டக்காட்டு யாத்திரைகள்
24

ஆரம்பித்தனவாம். வருஷத்துக் கொரு தோட்டம். அப்போதெல் லாம், சம்பளம் எடுத்த கையோடு என்னைப் பார்ப்பதற்காக ஒடியாந்து விடுவாளாம் மருதாயி.
இந்தத் தோட்டத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது நேர்ந்திருந்த அதிசயம் என்னவென்றல், எங்களுக்கு முன்பே மருதாயியின் குடும்பம் அங்கே குடியேறி இருந்தமை தான். அவளின் புருஷன் இறந்திருந்தான். இனிக் கேட்க வேண் டாமே! மேட்டு லயத்துக்கும் ஒண்ணும் நம்பர் ஒட்டு லயத்துக் குமாக மருதாயி தொங்கோட்டம் தொறுக்கோட்டமாகத் தான் இருந்தாள். - .
நான் அவள் பெற்ற பிள்ளைதானே என்று பிற்காலத்தில் நானே ஆழ்ந்ததுண்டு . அவளுடையது ஒரு உயர்ஜாதிய
unr F h ! ...
எங்கள் கல்யாணத்தன்று இவளிடம் மருதாயி கண்கலங் கக் கூறியிருந்தாள்
“தொரசானிங்களே! . இவுரு அப்பிடியிப்பிடி தொர இல் லீங்கம்மா! தொரயிலயும் பெரிய தொரைங்க! . கண்ணு மணி மாதிரி பாதுகாக்கணுங்க! . மருதா யிவுட்டு வேலயயும் இனி நீங்கதாங்க பாரமெடுக்கணும்! . "
இவளைச் சிலகாலம் நான் புதிய மருதாயி என்று கூட அழைத்ததுண்டு.
நாலு பஸ்களிடம் அகப்பட்டிருந்த என் நூறு மைல் பய ணத்தின் போது, மருதாயியின் நினைவுகள் மேலாதிக்கம் பெறவே இல்லை. தாத்தா, பாட்டி, அப்பா, தம்பி ஆகியோரின் இறுதிக ளுக்குச் சென்ற பயணங்களின் போதிருந்த கசிவு இப்போதில்லை. ... "நான் மருதாயியை ஆக்கிரமித்திருந்தது எப்படிச் சாத் தியமானது? . அவள் என்னை ஆக்கிரமியாதது எதனுல்? . சாகும் காலத்தில் என் நினைவு அவளுக்கு இருந்திருக்குமா? அவ ளுடைய ஆறு பிள்ளைகளும் அதற்கு இடம் கொடுத்திருப்பார் 56mrt?...
இவ்வாருண சில சம்பிரதாயங்களோடு சரி,
நாலாவது வண்டிப்பயணம் எங்கள் தோட்டத்து வாச லில் முடிந்த பின்பு இரவு பத்தேகால் இருக்கலாம். கோவிலடி ஒத்தக் கடையையும் எப்போதோ அடைத்துத் தூங்கிக் கொண் டிருந்த பார்வை. டவுனிலேயே ஒரு மெழுகுத்திரியையாவது வாங்கியிருக்க வேண்டும் ,
25

Page 15
பாதைக்கப்பால் இடுகாடு. அங்கேதான் எங்காவது மருதா யியைப் புதைப்பார்கள் அல்லது புதைத்திருப்பார்கள். எங்கள் குடும்பத்து நால்வரும் மங்கிப் போனது அங்குதான்.
ஒரு பெருமூச்சின் பிறகு நடந்தேன். வாகனம் போகும் சரளைக்கல் பாதை. சிகரெட்டைப் பற்றவைத்த பிறகு வந்த ஞாபகத்தில் நெருப்புப் பெட்டியைக் கையிலேயே வைத்துக் கொண்டு நடந்தேன்.
நாங்கள் இந்தத் தோட்டத்துக்கு வந்த போது வெள்ளைக் காரன் போய் இரண்டு வருஷங்கள். பிறகொரு நாலைந்தில், சிங் கள முதலாளியும் போய் முஸ்லிம் முதலாளிமார் வந்தார்கள். வெட்டுவதற்காகக் கேக்கின் மேல் கோடு போட்ட மாதிரி நிர் வாகம் நடந்தாலும், ஜனங்களுக்கு ஆபத்திருக்கவில்லை. ஒரு பதி ணைந்து வருஷத்துக்குப் பிறகு, கோடுகளின் மேல் வேலிகள் அடைக்கப்பட்டுத் தொழிலாளர்கள் திண்டாடத் தொடங்கி இப்போது ஒரு வருஷமாக எல்லாமே படு நாசமாகி விட்டது. தோட்டமே இல்லை!
ஐந்து, பத்தேக்கர்களாகத் தோட்டம் கொலனியாகியது. தொழிலாளர்கள் தங்கள் தங்கள் பாட்டில் இயங்கத் தொடங் கினர்கள். எத்தனையோ இழுபறிகளுக்குப் பிறகு, லயக்காம்ப ருக்கள் மட்டும் அவரவர்களுக்குச் சொந்தமாகின - புதைகுழி மாதிரி. -
ஐம்பதறுபது யார்களில் சரளைச்சாலை, இட - வலமாகப் பிரிந்தது. இடப்பக்கச் சாலை, நாலாம், எட்டாம், பத்தாம் நம் பர்களுக்குப் போனது. ஒப்பீஸ், ஸ்ட்டோர், பங்களா, லயங் கள் எல்லாவற்றுக்குமே வலப்பக்கச் சாலை தான்.
இந்தச் சந்திக்குச் சமாந்தரமாக ஒரு குறுக்குப் பாதை நேரே தேரியில் ஏறுகிறது. கால் மைலில் எங்கள் லயம். வேலி அடைத்ததில் இந்தப் பாதை மூடப்பட்டதாக ஒரு முறை அம்மா சொன்ன ஞாபகம். பாதையளவுக்கு மட்டும் வேலியைத் திறந்திருப்பதாகத் தம்பி அதன் பிறகு, சொன்னதுவும் ஞாபக மாகியது. வலப்பக்கத்துச் சாலையில் போவதானல் ஒன்றரை மைல்.
குறுக்குப் பாதையிலேயே போய்ப் பார்க்கலாமென்று தீக்
குச்சியை உரசினேன்.
வீட்டுக்குக் கள்ளமாக ஆறுமணி ஷோவுக்குப் போனல் இப்படித்தான் அந்தக்காலத்தில் . கடைசி பஸ்ஸஅம் கருங்கும்
26

இருட்டும். இடுகாடு சில நோங்களில் பிடரியைப் பிடித்துத் தள் ளும். நாயன்மார்களை மனப்பாடம் செய்வதிலேயே தேரிக்குறுக்கு வீட்டுக்குள் புகுந்து விடும்.
அடிவயிறு கணத்ததால் ஒரு றபர் மரத்தடியில் நின்று ஜிப்பை இழுத்தேன். அப்படி மர மறைவிலிருந்து தான் அந்த வாகனங்கள் இரண்டையும் கண்டேன்.
தார்ப்பாதையிலிருந்து தோட்டத்துப் பாதையில் அவை ஒன்றன்பின் ஒன்ருக நுழைந்தன. முதலாவது வாகனம் ஒரு பேஜருே லேண்ட்ருேவர் என்பதைப் பின் வாகன ஒளியில் கண் டேன். பின்வாகனமும் ஒரு ஜீப்பாக இருக்க வேண்டும். இரண் டுமே நாலாம் நம்பர்ப் பாதையில் மறைந்தன. . புதிதாகவீடு கள் முளைத்திருக்கலாம். நான் ஜிப்பைப் பொருத்தியபிறகு நடந் தேன். W
நான் வீடடைந்த பிறகு 'லயமே விழித்துவிட்டது. அம்மா கதவைத் திறக்கத் தங்கைமார் இருவரும் சுறு சுறுப்படையத் திண்ணையில் கிடந்த தம்பியும் கும்ப கர்ண னிடம் ஏதோ சமாதானம் சொல்லிவிட்டு வந்தான்'
"தந்தி எப்பக் கெடச்சிச்சு?" 'ரெண்டரமணி இருக்கும்" ' 'தம்பி அடிச்ச தந்தியா?",
** வேறயாவும் யாரும் அடிச்சாங்களோ?" * அதயேங் கேட்குறீங்க, போங்க" 'எல்லாமா பத்தொம்பது தந்திய எழுதிக்குடுத்து நாத் தாஞ் சல்வியுங் கொடுத்தேன்," என்ருன் தம்பி 'எனக்குக் கொஞ்சம் வேலயா இருந்திச்சி. செட்டிகிட்டதாங் குடுத்தேன். அவன் ரெண்டுமூணு தந்திய அடிச்சிட்டு மத்ததெல்லாத்துக் குஞ் சாராயங் குடிச்சிட்டான்!?
'அந்தப் புண்ணியவதி மருதாயிக்கி இப்படி ஒரு மகேன்" என்ருர் அம்மா.
"பொதச்சாச்சா?" என்றேன் "ம்!. இன்னைக்கி நாலு மணியப் போலத்தாம் பொதச் சோம்.பொனமும் நாயித்துக்கெழம ராத்திரியே வீச்சம் அடிக்கத் தொடங்கீறிச்சு. அப்பறம் ' வச்சுகிட்டிருக்கேலுமா?. வெள்ளிக்கிழம அந்திக்கு மூன்று மணியப்போல உசுரு போயிருக்கு. செட்டிதான் ஒடியாந்தான். அப்பறந் தம்பிதான் முன்னுக்கு நின்று செலவுஞ் செஞ்சி எல்லாத்தையும்முடிச்சிவச் சிருக்கு சனிக்கழெம கேதஞ்சொன்னங்க. செட்டிதாஞ் சொன்

Page 16
னன். அன்னைக்குக் காலைலதாந் தந்தியும் அடிச்சது. தூரத்த உள்ள தாய் புள்ளைங்க ஒருத்தருமே வல்ல. ந” யித்துக் கெழமயும் பார்த்தோம். அப்பறந்தாஞ் செட்டிப்பயட குடி பண்ணியிருப்பா ன்னு தம்பி இந்தத் தந்திய ஓங்களுக்கு இன்னைக்கிக் காலைல அடிச்சிச்சி ."
• அண்ணேன் நென்ஷ்லதான் மருதாயாச்சிக்கு உசுரு போயி ருக்ககண்ணேன்" என்ருள் மூத்த தங்கை.
ஒரு விரல் என் நெஞ்சுக்கூட்டைத் தடவிப் பார்ப்பதுபோல் இருந்தது.
'உசுரு போகப்போகுதுன்னு கெழவிக்கு நல்லாத் தெரிஞ் சிருக்கும் போல, மகேன்" என்று அமைதியாகச் சொன்னர் அம்மா. ? ? மீன புள்ளகிட்ட ரெண்டுதரஞ் சொன்னதாம். "பெரிய தொரைக்கித் தந்தி அடிங்க! அவரு வந்து தான் என்னயத் தூக்கிப் பொதைக்கனும் னு! . ஹ்ம்! இந்த செட்டிப்பய மகு டியில அதுக்குத்தாங் குடுத்து வைக்கலியே!...”
சின்னத்தங்கை விசும்பினள். யாரோ எனக்குள் விசும்புவ தைப் போலிருந்தது. கூடவே ஓர் உலைச்சலும். 'வந்துட்டீங் களா தொர!' என்று மருதாயாச்சி என்னைக் கட்டிப் பிடித்து உச்சி முகர்வதைப் போல. x .
நான் நினையாமலே பேச்சு மாறியது: "நாலாம் தம்பர் பக்கமா இப்ப ஊடு கட்டியிருக்கிருங்களோ?"
"அந்தக் காட்டுள்ளுக்கு யாரு ஊடு கட்றது?’ என்ருர் அம்மா. .
"இந்த நேரத்தில ரெண்டு ஜீப் அந்தப் பக்கமாய் போச்சி?', ‘எப்ப இப்பவா?" என்ருன் தம்பி அவசரமாக. 'பஜ்ாருே ஜீப்பா? " ** அப்பிடித்தாந் தெரிஞ்சி." "செவப்பு நெறம்?" 'நெறம் என்னுன்னு தெரியல்ல. முன்னுக்கு பேஜருே'; பின்னுக்கு ஜீப்."
"அப்ப அவனுகவுட்டுத்தாம் போல!" என்று தம்பியிடம் பரபரத்தார் அம்மா.
"என்னமோ நடக்கப் போகுது நாஞ் செட்டிய கூட்டிக் கிட்டு வாறேன்!” என்று வெளியில் பாய்ந்தான் தம்பி.
"என்ன இப்பிடி ஒடுருன்? " என்று அம்மாவைப் பார்த் தேன்.
அடுத்த காம்பரு செவத்தியானும் நாலாங் காம்பரு ராஜ ரட்னமும் "அண்ணேன்" என்றபடியே உள்ளே வந்தார்கள்.
28

@ 魏 *தேசி கூத்த ஏங்கேட்டிங்க போங்க! என்றார் அம்மா.
இப்ப பொதகுழி றோட்டோரமா இல்லியே! முந்துன பயணம் அந்தத் துண்ட வித்த நேரம், பொதகுழிய நாலாம் நம்பருக்கு "த்துனாங்க. நான் முந்தி பால் வெட்டுனனே?. அந்தக் கல்லுத் *சிக்குக் கீழ - வறக்கட்ல! அதயும் இப்ப அந்தத் தொப்பிக்காரத் துவான்கிட்ட வித்து ஆறு மாசமாவுது. அவென் அந்தத் துண்ட வாங்கின பொறகு, இதுதான் மொதப்பொணம்! குழி கிழியெல்
லாம் வெட்டியா ச்சி! இத்தா!. ஒரு ஏழெட்டுக் sin llí lluel ளோட, துவான் 'சீப்"பில வந்துட்டானே! இங்க பொதக்காத
தேசிய மூடு"ன்னுகிட்டு நிக்கிறான்! நம்ப பழைய தலவரும் எம் புட்டோ சொல்லிப் பாத்துட்டாரு! கேப்பனான்னு நிக்கிறான்! அப்பறம் தம்பிதான் பொலீசுக்குப் போயி, இனுஸ்பெட்டர் அய்யா கிட்ட கதச்சி, அவருட்டுக் காயிதம் எடுத்துக்கிட்டு வந்து துவா லுகிட்ட காட்டீட்டுப் பொதச்சாங்க்!
ஒரு பெருமூச்சை நான் விட்டபோதுதான், 'எப்பைலே வந் தனிர்?' என்றபடியே வந்தான் செல்லத்துரை.
“ஐ .ஸ்ே.’’ என்று பலபாக அவனை வரவேற்க வேண்டியதா கிவிட்டது.
எனுவல் லீவில் வந்து நிற்கிறானாம் பிள்ளைகள் அனைவரும் மாமியார் வீட்டிலாம். மனைவி மறுபடியும் டுபாயிலாம். மருதா யியின் கிரியைகளுக்கு வந்த "மயக்கம் இன்னும் தலையை இடிக் கிறதாம்.
இதற்குள் வாசலில் கூட்டம் கூடியது. மேட்டு லயத்துக்கு போயிருந்த தம்பி, செட்டியுடனும் இன்னும் ஐந்தாறு பேர்களோ டும் வந் நிருந்தான். என்ன ன உயர்மட்டமாக நினைத்தார்களோ என்னமோ, செவத்தியானும் ராஜரட்ணமும் அவர்களுடன் சேர்ந் தார்கள்.
செட்டி உள்ளே வந்தான். நான் செத்துப்போன மாதிரி அவன் என்னைக் கட்டிப்பிடித்து வைத்த அந்த அகால ஒப்பாரியின் பே து வெளிவந்த இரண்டெ ரு பழமைகள், முதன் முதலாக என் கண்களையும் துளிர்க்க வைத்தன.
மனம் சிலிர்த்துப்டோகும் படி மருதாயியின் எத்தனையோ சம்பவங்களிலிருந்தும் ஏன் என்னால் அவளின் இழப்பை ஒரு சப்ஜெக்ட்டாக்க முடிந்திருக்கவில்லை?.
@
நியாயமான சாராயக்கவிச்சி செட்டியைப் போர்த்தியிருந்தது,
(மிகுதி அடுத்த இதழில் தொடரும்)
} } { { {991 29

Page 17
கையோடு அங்கே போய் வாங் கொன்றின் மீது நீட்டி நிமிர்ந்து
படுத்து நாரிநிமிர்த்த வேண்டு மென்று நினைத்துக் கொண் டாள்.
அதற்கு அவசியமிருக்க
வில்லை. உறுமிக் கொண்டு வந்து வட்டமிட்டன இரு பொம்மர் கள். அவற்றில் ஒன்று வேக மாய் இறங்கியதைக் கண்ட பாட்டி பேரனைத் தொட்டிலி லிருந்து தூக்கும் வெறியோடு தொட்டிலை நோக்கி ஓடினாள். மகள் தன்னகுகே இருந்த பிள் ளைகளைத் தன்னோடு சாய்த் துக் கொண்டு கத்தியது பாட்டி யின் காதுகளில் விழவில்லை.
*"அம்மா ஒடாதயணை . படெணை. படு. ஐயோ. ஐயோ...'
காது செவிடுபடும்படியாய் குண்டொன்று வீழ்ந்து வெடித் தது எல்லாம் கணப்பொழுதில் நடந்து முடிந்து விட்டது. தொட்டிலைப் பாட்டி ஏறத் 5n էք நெருங்கிவிட்ட நிலை தான். கடைசி ஒரிரு அடிகள் வைப்பதற்குள் சாய்க்கப்பட்டு விட்டாள்.சேறோடு கலந்துவிட்ட அவளுடைய இரத்த வெள்ளத் தில் பாட்டி,
Gusbull - அதிர்ச்சியில் தொட்டிலில் எழுந்து குந்தி யிருந்தபடி அலறினான் பேரன். பயிரிழையில் அவனைக் கடந்து சென்றிருக்கக் கூடிய சிதறல்கள் சுவரைத் துளைத்து வெளியேறி இருக்கிறது.
30
அருகே வந்து கதறிய மக ளின் அழுகுரல் கூடப் பாட்டியின் செவிகளில் விழவில்லை. ஒரசை வுக்கும் இடமற்ற வகையில் சீவன் பிரிந்துவிட்டது.
ஒரு சில நிமிடங்களில் ஊர்
கூடத் தொடங்கி விட்டது. பத்
திரிகைகளில் விசேட செய்தி யாய் விஷயம் வெளிவந்ததில் அடுத்த நாட் காலையில் யாழ் குடாநாடு முழுவதும் பேசப்படும் புதினமாகி விட்டது.
'விதியின் வலி என்னே' என்று தலைப்பிட்டு வியந்திருந் தது ஒரு பத்திரிகை. "குழந் தையின் அருகே விழுந்து வெடித்த குண்டில் வீடு த7க்கப் பட்டது: குழந்தையைக் தாக்கு வதற்கு ஓடிவந்த பேத் தி குண் டுச் சிதறலில மரணித்தார். ஆயி னும் குழந்தை சிராய்ப்பு எதுவு மின்றித் தப்பியது விதி வலிது" என்று முடிந்தது அந்தச் செய்தி
சாத்திரியாரும அந்தப் பத் திரிகையோடு கH ன் வந்து ஒரு கதிரையில் அமர்ந்திருந்து மெள னத்துள் அடைக்கலமாகி யிருந்
தார். வழக்கமாக உற்சாகமாய் விவாதித்து செத்தவீடுகளைக் களைகட்ட வைக்கும் அவரு
டைய மெளனத்துக்கான கர ணம் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.
இருந்தாற் போல் பத்திரி படிப்பதும்
கையை விரிப்பதும்,
மூடுவதுமாய் இரு,
மீண்டும் தார், "எந்த விதி வலியது?
சாதக பலனின் படி பாக்கியமக்
Šኦ ጦr tL! ቴ tb 22

காவுக்கு நல்ல காலம். - இப் போது மரணம் எந்தவகையிலும் காணப்படவில்லை. அப்படியி ருக்க பாக்கியமக்கா எப்படி கட் டையாகிக் கிடக்கிறாள்? என்ற சிந்தனை சாத்திரியாரின் மூளை யைக் குடைந்து கொண்டிருந்
திது .
"பத்துப் பதினொரு வருசங் ளுக்கு முந்தியும் இப்பிடித் தானே, பாக்கியமக்கா செத்துப் பிழைத்தாள். இனியும் யமனால் திருப்பி அனுப்பப்படலாம். கீச் சிட்டழும் உச்சஸ்தாயி அழுகுரல் சாத்திரியாரின் இந்த நினைவைத் துண்டித்தது.
"ஐயோ அம்மா, உன்னை விட்டுப போகன் எண்டு நெடுகச் சொன்னியே. இப்ப எப்பிடி யெனை போக மனம் வந்து து.
ஐயோ .
பெட்டி மூடப்பட்டுக்கொண் டிருந்தது. பெண்களில் சிலர் மூடியைப் பறித்தபடி - அவர் கனை பவ்வியமாய் விலக்கியவாறு பெட்டியை மூடும் எத்தனிப்பில் ஆண்கள். எதையும் கண்டுகொள் ளமால் பெட்டியினுள் நீட்டி நிமிர்த்து படுத்தபடி ьЈтL-1} .
இன்னமும் நேரம் கடந்து விடவில்லை. நெஞ்சாங் கட்டைவக்கப்பட்ட பின்னரும், கொள்ளிவைத்த சுவாலை கொ முந்துவிட்டெரியப் போகிறவரை தில் சாத்திரியார் தன் நம்பிக் கையைத் தளரவிடப் போவ பில்லை. waw
3 g do 19o
女 மீட்சியை
நோக்கி.
காலை இருளைக் கிழித்தெழுந்த கதிரவன் மாலைக் கருக்கலில் மெல்ல மறைந்து பின் நாளைக் கெழும்.
மானுடத்தின் மீட்சியை நோக்கிய மீளாத் தொடர் பயணம் நீளத் தொடரும் நிற்காமல்,
ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை வரலாறும்
செல்லும் வழி இதுவே.
அடிமைத் தனங்களை ஆராதனை செய்து பழகிப் போனவர் நன்றாய் ஆழத் துயில்வர்.
அடிமைத் தளைகளின் ஆழத் துயர்களில் அழுந்துவோர் என்றும் மீளத் துடிப்பர்.
மீட்சியை நோக்கி
நெடும் போரைத் தொடுப்பர்.
தணிகையன்
3.

Page 18
666, if “89
8 சேகர்
புகையிரதப் பாலத்தின் இரும்புக் கேடர்கள் இளகி உருகும் வரை அழுத்தும் அதிகாலைப் பணியிலும் சூரியன் சுட்டு வெந்த தார்ச்சாலைகளில் மனிதர்கள் தவிக்கும் பகற்பொழுதுகளிலும் கொங்கிறீற் பாலத்தில் நின்றபடி சோடியம் விளக்குகள் இருளைக் கொறிக்கையிலும் இரண்டாயிரம் வருஷ அரசியல் கண்ட களனி கங்கை பாயும் கம்பீரமாக நிதானமாக, வேனில் மணல் சுமக்கும் ஒடங்கள் மெல்ல மிதக்கையிலும் மழைக்கால வெள்ளத்தில் குடிசைகள் அமிழ்ந்து வாழைகள் விழுந்து மானிடர் குளிரில் நடுங்குகையிலும்
களனி கம்பீரமாக நிதானமாக, மனித உடல்கள் தினந்தவறாது மிதந்துவரும் இன்றைக் காலங்களிலும் களனி مـسـعـ
சந்திக்குச் சந்தி மோனத்தமர்ந்திருக்கும் போதிசத்துவர் போல கம்பீரமாக நிதானமாக,
1971 ஏப்ரல் கிளர்ச்சிக் காலத்தே புராதன புத்தர் சிலையொன்றன் பீடத்தில் கிளர்ச்சிக்கார வஈலிபன் ஒருவன் எழுதியதாக சொல்லப்பட்ட வசனம்:
'இரண்டாயிரம் வருஷம் அமர்த்திருந்தது போதும் இனி:ாயினும் எழும்!"
'' 2 ,8 ;4r r u i „gr„ محمح&
 

@ EF D நிலை
AS TSqS qSASiSASASiAiqSMSASA AASASAASAMMiMiSSA SiSASASASA S SH S S SSJS S S S 68
கணிசமான தூரத்தில் வரும்
போதே சுகுமாரால் புரிந்து கொள்ள முடிந்தது; வருவது சாந்தனும் மனைவியும் தf ன் -
அவர்களுடைய கலந்துரையாடல் கள் நடுவீதியிலும் தொடரக் கூடிய அளவுக்கு அப்படி என்ன அடிப்படையைக் கொண்டி குக் கிறதோ தெரியவில்லை? பரஸ் பரப் புரிந்து கொள்ளல் நிலவு மென்றால் பேசப்படுகிற விசயம் என்னவென்ற கேள்வி யெது வுமே அவசியமில்லை யென்று
தோன்றியது.
சுகுமாரின் ஆராய்ச்சி தொ டர முடியாமல் அவருடைய சைக் கிளை உரசிக்கொண்டு சாந்த னின் சீ - நைன்ரி நின்றது.
என்ன சைக்கிள்ளை வெளிக் கிட்டுவிட்டீர், துலைக்கோ 6007 EP''
till
'ஹொஸ்பிற்றலுக்கு வோ றன். கார் வந்து.'
"என்னப்பா ஹொஸ்பிற்ற லுக்கு இன்னும் ஆறேழு மைல் இருக்கு; என்னண்டு 6) Fi கிள்ளை போவீர்?"
உண்மைதான். இந்த மூன்று மைல்களைத் தாண்டவே சுகு
ஏப்ரல் 1991 ,
நரேன்
மார் பெரிதும் சிரமப்படவேண்டி
யிருந்தது. இதற்குமேல் தாங் காதெனத் தெரிந்தபோதிலும் 'பரவாயில்லை, போவிடுவன்'
என்றுதான் சொல்ல முடிந்தது.
அப்படிச் சொல்லியபோது தன்னு:9டய குரல் உள்ளேயே நொருங்கிச் சிதைந்து வந்ததை சாந்தன் அவதானித் திருப் பானோ என்ற மனக் கிலேசம் சுகுமிாரை வாட்டியது. சாந்த னைப் பொறுத்திவரையில் அந் தப் பதில் அவசியமற்றதாயிருந் 5堡曲。
எதையும் லட்சியம் பண் ணாமல் சாந்தன் மனைவியிடம் சொன்னான் "தான் இவரை ஹொஸ்பிற்றலிலை கொண்டு போய் விட்டுவிட்டு வாறன், இவற்றை சைக்கிள்ளை நீர் வீட்டை போமன்'
‘'வேண்டாம் சாத்தன், எனக்கொரு கஸ்டமு மில்லை. இந்த நெளுக்கடியான காலத் திலை. இனிமேல் காரே ஒட முடியாமல் வரலாம். சைக்கிள் தான் கதிய 'யிருக்கும். இண் டையிலையிருந்தே பழகிக்கொள்
ளுவோம்”*
‘‘அதை தாளையிலை யிருந்து பழகுங்கோவன். இப்ப
33

Page 19
கதைத் துணையாய் மோட்ட சைக்கிள்ளை இவரோட போங் கோ. போய்க் கொஞ்ச நேரத் திலை திரும்புவீங்க ளெண்டா இவரோடையே திரும்பலாம்: நான் உங்கடை வீட்டிலை பார்த் துக்கொண்டு நிக்கட்டோ?"
சைக்கிள் கிட்டத்தட்ட பறிக் கப்பட்டதால் அதற்குமேல் சுகு மாரால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
* 'இல்லை, உங்கடை வீட்டி லை கொண்டுபோய் வைச்சிருங் கோ' என்னைவிட்டவுடனை சாந்தன் வந்துவிடுவார். ஹொஸ் பிற்றல் நிலைமையைப் பொறுத் துத்தான் நான் எப்ப வரலாம் எண்டு சொல்ல முடியும். வழமை போல எல்லா டொக்ரேஸும் வரமுடியாமலிருக்கும். என்னை அம்புலன்ஸிலை கொண்டந்து விடுவினம். உங்கடை வீட்டிலை
வந்தே சைக்கிளை எடுக்கிறன்' .
சுகுமார் சீ.தையின்ரியின் மின்னே ஏறி அமர்ந்து கொண் டார். சாந்தன் மனைவியிடம் **கவனமாய்ப் பார்த்துப்போம்; ஹெலிவந்தா எங்கையன் நிண்டு விடடுப் போகவேனும்' என் முன்.
"நான் கவனமாய்ப் போ வன். நீங்க தனியத் திரும்பி வரேக்கைதான் ஹெலிச் சத்த மும் கேளாது என்னசெய்வியள்?’’
றோட்டிலை ஆக்களைப் பாத் தாத் தெரியும்.
34
ஹெலி டொம் ருக்காகச்
மிர் வந்தால் ஆக்களெல்லாம் அண்ணாந்து பாப்பினம்’’
'சரி போவிட்டு வாறன்’ என்றவளுக்கு ஒரே நேரத்தில் சாத் : லும் சுகுமாரும் விடை கொடுத்தனா.
இந்தக் காலம் இப்படி ஒரு வரில் ஒருவர் கரிசனை காட்ட வேண்டிய அவசியம் நிறைய உண்டு. இருந்தாலும் சாந் தன் குடும் த்தின் அக்கறை அபரிமித மாய்த் தெரிந்தது; தன்னுடைய சொத்துக்குச் சேதம் வந்து விடுமோ என்றெண்ணுகிறவர் கள் மலிந்துவிட்ட இந்த உலகில், பரஸ்பரம் பாசத்தோடு வாழ்கி றவர்களும் இருக்கத்தான் செய் Spirisai l'' என்றெண்ணிக் கொண்டார்.
**நீர் அவவை சரியாக் கஸ் ரப் படுத்திறீர்: மூண்டு மைல் சைக்கிள்ளை என்னண்டு போதே லும்?’’
*சுகுமார் இப்ப பெட்டை யள் முப்பது மைலும் சைக்கிள் ஒடுற காலம்'
சுகுமார் காலவேறுபாட்டை புரிந்துகொள்ளாமலில்லை. இந்த சுஷ்டம் பற்றித்தான் மிகையாக நினைப்பது ‘இட வேறுபாடு? குறித்துத் தான் என்பதும் விளங்
கியது. "சாந்தனின் மனைவி தேவையென்றால் பத்து மை லுக்கும் சைக்கிள் ஓடத் தயா
அதை மற்றவர் செய்யும் போதும்
ராய் உள்ளவர்.
5 T u , ið 22

சந்தோஷத்தோடு ஏற்கிறார். என் மனைவி சொந்தத் தேவை யென்றாலும், அரை மைல் தூரத் துக்கும், காரேகதியென்று வாழ் பவள்' என்று சலித்துக் கொண் டது சுகுமாரின் மனம்.
அதே நினைப்போடு 'இப்ப
காலம் கெட்டுப் போச்சு, வீட் டிலை புருஷ னை அடக்குகிற பெண்கள் றோட்டிலையும் ஒவ ரேக் பண்ண வருகினம்’ என்
றார்.
தன்னுடைய குடும்பச் சூழல் ஏற்படுத்திய பாதிப்பினால் இப் படிச் சுகுமார் சொல்வதை சாந் தனால் கிரகிக்க முடிந்தது. இதே விசயம் வேறிடத்திலிருந்து வந்திருந்தால் சாந்தன் இந்நேரம் பெரிய விரிவுரையே நிகழ்த்தி யிருப்பான், பெண்ணடிமைத் தனத்தின் தோற்றம் - இன்று வரை அதன் வரலாறு, வேறு படும் அதன் வடிவங்கள் என்று கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி யிருப்பான். இயல் பாக எல்லோகுடனும் பழகுவ தும், தன் கருத்தை ஆணித்தர மாய் வலியுறுத்துவதும் னின் மாறாக சுபாவம்.
சுகுமார் தன் மனைவி தன்னை அடக்குவது பற்றி மிக நெருங்கிய நண்பனாகிய சாந்த
ஆறுதலுக்காகக் கூட- அதை விரும்பியதில்லை. இங்கேயும் தனது அந்தஸ்து தடை- போடுகி றதே என்றெண்ணிக் குமைந்த
ஏப்ரல் 1991
சாந்த
·西曼 ·
போதிலும் அதை வெளிக்காட்ட விரும்புவதில்லை.
விரும்பினாலும் விரும்பா விட்டாலும் முகம் சாப்ட்டிகோ அவரை அம்பலட் படுத்தி விடு கிறது. சாந்தனுக்கு வேறெவ ரைக் காட்டிலும் அதிகமாகவே அது தெரியும்; ஆதலால் சுகு மார் குறிப்பிடும் "பெண்ணாதிக் கத்தின் உண்மைச் சாரத்தை சாந்தனால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
*சுகுமார் இந்தச் சமுதா யம் சமத்துவமற்றது. இன்றைக் கிருக்கிற சகல பிரச்சனைகளுக் கும் தனியுடமை அமைப்புத் தான் காரணம். எங்களுக்கு மேலாலை பறக்கிற அவ்ரோ விலை இருந்து அடுப்படிப் பிரச் சனைவரை அனைத்துக்கும் மூல காரணி தனியுடமை அமைப்புத் தான் பொதுவுடமைச் சமுதா
யத்திலை ஆாை ஆர் ஓவரேக்
பண்ணுறதெண் - அவதி இருக் காது.""
மோட்டபைக் வேகத்தில்
சாந்தனின் பிரசங்கம் தொடர்ந் ஆயினும் இதற்கப்பால் சொல்பவை எவையும் சுகுமா பின் சிந்தனையைத் தொட வில்லை. ‘சமத்துவமில்லை. பொதுவுடமை' என்ற இந்தச் சிறிய எல்லைக்குள் மட்டுமே சுகுமாரின் எண்ணவோட்ட 5sir வட்டமிட்டுக் கொண்டிருந் து. W

Page 20
aA岛卒山 போலவென்றால் என்ன சமத்துவம்? சிது ቃ fr ቃ தியமில்லாதது" தனிமனித முன் னேற்றத்துக்கு இன்றைக்கிருக்கிற செற்றில்மென்ற்தான் சரி என்று விவாதித்திருப்பர்ச்
எப்போதாவது சாந்தனோடு செய்கிற வாதப்பிரதிவாத விஷ யதானங்கள்தான் சுகுமாருக்கு மிஞ்சுகிற பொது அறிவு. சமூ கத்தைப் புரிந்துகொள்ள அப்ப தர்க்கித்த போதிலும் ஒரு போதும் பொதுமுடிவை அவர் கண்டதில்லை. H? அம்சங்கள் தனக்கு உடன்பாடற்றவை என் பதுதான் அவர் எண்ணம்.
பேசாமல் ஆழ்ந்த சிந்தனை யில் சுகுமார் இறங்கிவிட்டதை artuzy Gius" ணர்ந்துகொண்சாந்தன் ஏதோவொரு கட்டத் துக்குப் அன் தன் அறுவையை நீந்திக்கொள்வோம் ଛt fit go! பெரிய மனதுபண்ணிக் டு தாண் இரண்டுபேரும் ஒரே ஒரே பாடசாலையில் ●@ வகுப்பில் இலவசக் கல்வி வழங்  ைவாய்ப்பைப் பயன்படுத்திப் படித்தவர்கள் அப்போது இரண்டுபேருடைய குடும்பநிலை மைகளுங்கூட- ஒன்றுதான்
சுகுமார் டொக் ஏ எல்லுக்குமேல் plg-un Lbá போய் வெறும் 'பாங்கர்’ ஊருக்கு பாங்கர்’ என்றாலும் உள்ளுக் குள் வெறும் இளாக்கர்" .
இப்போது, Lர். சாந்தன் Gas ITt-g
36
துவ
குடும்ப வாழ்விலும் சாதி தன் தன்னுடன் வேலை செய்த வளை மணமுடித்து சீரான முன் னேற்றத்தையே நாடினான். சாந் தன் குடும்பத்தின் பரஸ்பர புரிந்துகொள்ளலுக்கு இகுவருக் கிடையிலுமிருநத ஏற்றம் தாழ் வின்மை உதவிபுரிவதாயிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, சமத் & ae. Gorff Eyb, சமூகத்தை ஆய்ந்தறியும் ஆற்றலும் சாந்த னிடம் திகழ்ந்தமைதான் கார TD என்பதை அவனுடைய மனைவி அறிவாள்.
சு குமாரைப் பொறுத்தவரை லையுடன் மடுவுக்குள்ள இs 2۔۔۔ வெளிபோலிருந்த Tತಿ. புடைய பணக்காரக் குடும்பத் தில் வாழ்க்கைப் பட்டுக்கொண் டான தன்னுடைய தொழில் அந்தஸ்துக்கு அப்படிப்பட்ட குடும்ப மேன்மை அவசியம் எனக் கருதினார். சுகுமாரின் மனைவி யைக் கேட்டால் மிக மலிவா ஒரு டொக்ரரை காதலித் கையில் போட்ட தன் தனத்தை அளந்துத ள்ளு”
சுகுமாருக்கு ன் w திருமணஞ் ്ട് : U೦೧ என்ற உண்மை ೯og - புரிந்துகொள்ள சில வ யைப் வேண்டியிருந்தது. டுடங்கள்
தன்னுடைய தொழில் தஸ்துக்கு ஏற்ற
nr nr , 1 GOT A F هou bت கருதி Cಳಿ:: பத்தில் வாழ்வைத் )رق குடுக் திலும் சுகுமார் ?" 6)”
չծ T Այ ֆւֆ 22

மாவை விலைபேச விரும்பவில் லை. வெளிநாடு போய் சுளை சுளையாய்க் காசு கொண்டுவந்து குவிக்கவேண்டும்" என மனைவி தச்சரித்த போதெல்லாம் சுகு மார் ஆவேசத்தோடு மறுத்து வந்திருக்கிறார். &
"இந்த மக்களின் வரிப்பணத் தில் வழங்கப்பட்ட இலவசக் கல்வியால் டொக்ரர் ஆனவன் நான்; இந்த மக்களுக்குத்தான் கடைசிவரை சேவை செய்வேன்" என்று அடித்துச் சொல்லிவிட் டார். அவளும் அடிக்குமேல் அடி அடித்தால் அம்மிபும் நக ரும் என்ற நம்பிக்கையில் தன் விடாமுயற்சியை தொடர்வாள்.
"அவரைப் பாருங்கோ ஆ. எவ்வளவு உழைச்சுப்போட்டார். இவரைப் பாருங்கோ - என்ன படிச்சுக் கிளிச்சுப்போட்டு வெளி நாடு போனவர்? ஏ. எல் கூடப் படிக்கேல்லை: நகைபோட இனி உடம்பிலை இடமில்லை எண்டு திண்டாடிற நிலையிலை பெண் டாட்டியை வைச்சிருக்கேல்லை யே? நீங்களொரு வைச்சுக்கொண்டு உழைக்க
பட்டத்தை ஊருக்கு வெளிக்கிட்டதுதான் மிச்சம்'என்ற ஆராதனை நாள் தவறாமல் தொடரும்.
இன்றைய காலைப் பொழுது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தது போ லாகிவிட்டது.
இப்பொழுது கொஞ்ச நாட் ' எாவே நாட்டு நிலமை மோச வரவர, பர்தேசம் போகும் தன் உபதேசத்திற்கு
فیفا سه (هلی سه
ஏப்ரல் 1991
புதிய பலம் கிடைத்த திருப்தி யோடு "ஹெலியும் பெர்ம்மரும் சுத்தேக்கை எப்படி வேலைக்குப் போகேலும்' என்ற நாகாஸ்தி ரத்தைப் பிரயோகிக்கத் தொட ங்கிவிட்டாள். காலை புறப்பட்ட
போதும் இந்த தேவாரம் தவ றாமல் வந்தது.
*வேறை வேலை எதுக்கா வது இதைச்சொல்லி வீட்டிலை நிக்கலாம். எங்கடை தொழில் பல உயிர்களோடை தொடர்
பானது. நாங்கள் இந்த நேரம்
கட்டாயம் ஹொஸ்பிற்றலுக்குப்
போகவேணும் இரத்தப் பெகு
க்கை உடனை கட்டுப்படுத்தாத தாலை அதியாயமாய் எத்தனை சீவன் போகுது?’
ஆரோ வக்கில்லாததுசு ளைக் காக்கப்போறன் எண்டு எங்கடை பெறுமதியான உயி ரைக் குடுக்கிறதோ? அதிலையும் இண்டைக்கு ரவுண் பக்கத்திலை வெள்ளண்ணவே பொம்மர் வந்து குண்டு போட்ட சத்தம் கேட்ட தெல்லே? காரைக்கண்டா விடு வனோ? கலைச்சுக் கலைச்சுச் சுடுவன்’
என்ன சொல்லியும் சுகுமா சின் உறுதியைக் குலைக்க முடி யவில்லை. கார்ச்சாவியை எடுத் துக்கொண்டு காரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தர்
"நான் ஒருத்தி இதிலை. அலட்டிக்கொண்டிருக்கிறன. நீங்
கள் எங்கை பேர்றியள்'
'ஹெஸ்பிற்ரலுக்குத் தான் போறன் நாளைக்கும் ઈને 636, 68) 67T
37

Page 21
வீட்டுக்கு வரமுடி யாமலிருக்கும் ரேணுக்கு வேறை டொக்டர் வஈறநேரம் வகுவன்'.
"நில்லுங்கோ இண்டைக்கு
நீங்கள் போகக்கூடாது. நீங்கள்
மற்ற டொக்ரேஸ் வாறதைப் பாக்கிற மாதிரி ம்ற்றவை இண் டைக்கு நிண்டு பாக்கட்டும்”
"அது அவசியமில்லாதது! என்னாலை போகக்கூடியதாய் இருக்கேக்கை நான் போகவே ணும்'
சொல்லிக்கொண்டே காரை நெருங்கி கதவைத் திறந்து உள்ளே நுழைய, எத்தனித்தவர் *நில்லுங்கோ காரைத் தொடக் கூடாது," என்ற மனைவியின் ஆணையைக் கேட்டு திகைத்து நின்றார்.
**ஏன்??
"ஆற்றை காரிலை சேவை செய்யக் கிளம்புறதாய் நினை ւնւկ’ ”
ஒகுகணம் திக்பிரமை பிடித் தவர் போல் நின்ற சுகுமார் சுயநினைவுக்கு வந்ததும் கோபா
வேசத்தோடு கார்ச் சாவியை தூர வீசி எறிந்தார்.
‘'என்ரை சீவியத்திலை
உன்ரை காரை இனிமேல் தொட மாட்டன்’ என்றவர் தன் சொந்த உழைப்பில் வாங்கிய சைக்கிளை நோக்கி நடந்தார்.
காலைப் பொழுதின் இந்த அவல நினைவும் "சமத்துவ மில்லை . பொதுவுடமை என்ற
38
சாந்தனின் தர்க்கவாதமும் மாறி
மாறி சுகுமாரின் உள்ளத்தி னுள்ளே மோதி நுரைகக்கிக் கொண்டிருந்தன. -
வைத்தியசாலை நுழைவாயி லில் திரும்பிய போதுதான் சாந் தன் கூடப் பேச்சு மூச்சில்லாமல் வந்ததை அவதானிக்க முடிந்தது கடுமையான சோகத்திடையே யும் சுகுமாரின் இதழ்களிடையே
புன்னகை மின்வெட்டிச் சென்
றது, 'எட, சாந்தன் கொள் கைப் பிரச்சாரம் செய்யாமல் இவ்வளவு நேரமும் அமைதியாய்
வந்திருக்கிறான்’ என்ற எண் ணத்தினால்,
அதேவேளை, தன்னை
மறந்த நிலையில் வானத்தில் ஹெவி பொம்மர் வருகிறதா என்று பார்க்கவேண்டிய தன்
பொறுப்பை உணராமல் ஏதோ
நினைவுகளில் ஆழ்ந்துவிட் டோமே என்ற வெட்கமும் தோன்றியது. அப்படி வந்து சுட் டுச் செத்தாலென்ன குடிமுழுகி விடப்போகிறது என்ற விரக்தி யும் முளைவிட்டது. மோட்ட பைக் நிற்கவும் சுகுமார் இறங் கினார்.
டொக்டர் சுகுமாரைக் கண் டதும் ஒ. பீ. டீ. வாசலில் நின்ற நேர்ஸ் முதல் வார்ட் லேபர் வரை விழுந்தடித்து அவசர வேலைகளில் இறங்கினர். ஏதோ எமேஜென்ஸி வார்ட் வேலை என்பது டொக்ரர் சுகுமாருக்கு உடன் புரிந்தது. சாந்தனிடம்
விடைபெற்றுக்கொண்டு உள்ளே
5 T!! - E 1ð 22

புதிதாய் வெளிவந்தவை
சென்னை புக்ஸ் ஊடாக வெளிவந்த தேசிய கலை
இலக்
கியப் பேரவையின் புதிய நூல்கள்:
முருகையனின்
1. மாடும் கயிறுகள் அறுக்கும்”
(கவிதைத் தொகுதி)
2. **தாயகம் கவிதைகள் அறுபத்தாறு'
(25 கவிஞர்களின் ஆக்கங்கள்) கணேஷ் மொழிபெயர்ப்பில்
3. "கூனற் பிறை
4. 'இளைஞன் ஏர்கையின் திருமணம்’
(சீனக் குறுநாவல்கள்)
வந்தவரை அவசரமாய் எமே ஜென்ஸி வார்ட்டுக்கு நேர்ஸ் ஆற்றுப்படுத்தினாள்.
* "என்ன விசயம்?' "
'பத்துப் பதினைஞ்சு நித் திரைக் குளிசையளை ஒண்டாய் போட்டுவிட்டு RC5 குமர்ப் பெட்டை வந்திருக்கிறாள். இந் தக் காலத்திலையும் இப்பிடி’
"நேர்ஸைப் பொறுத்தவரை
அது காலப் பொருத்தம் இல் லாதது நான் கூட சாதாரண மானவனாய் இருந்திருந்தால் இன்றைக்கு இதையே செய்தி சூப்பேன். எனக்கென்றொரு
கடமை இருந்ததால் வந்தேன். ஏன் இப்போது ஹெலி சுட்டால் சுடட்ட்ன் என்ற விரக்தி வீறாப் பொன்று எனக்கும் ஏற்படத் தானே செய்தது. ஒருவகையில் இது கூட தற்கொலை முயற்சியில் \சேநதிதானே?’ என்று டொக்
டா சுகுமார்
ஏ" ல் 1091
ணிக்கொண்டார்.
எமேஜென்ஸி அறையினுள் தின் உடல் சமநிலையை குலைத் துவிட்ட ஒருத்தி, மீண்டும் பழைய சமநிலையைப் Guesôr Ar விட்டால் உயிரற்றுப் போய்வி டப் போகிற அவதிக்குள் மாட் டுப்பட்டிருக்கிறாள்.
உடல் சமநிலை குலைவ தால் உயிர்ப்பை இழக்கிற அள வுக்கு உடல் பதறுகிறதென்றால் சமூகக் கொந்தளிப்புகளுக்கும் ஏதோவொரு சமநிலைக்குலைவு ஏற்பட்டுவிட்டமைதானே கார ணமாக முடியும்? சமூகத்தில் அவை திநிலைபேண எந்தச் சமநிலை யை மீள ஏற்படுத்திக் கொள் ளுதல் வேண்டும்? சுகுமாருக்கு அறியவேண்டும் என்ற ஆர்வம் வலுத்துவந்தது.
இப்போது தன் கடமையை பொறுப்பேற்க அவர் விரைந்
தன்னுள் எண்தார்.

Page 22
இன்ெ னாருகால்
பொறுமையாய் யன்னலில் இள நீலமாய் ஒரு வானவெளி தீட்டித் தூரிகை முனையில் ஒளிசம் நிறம் பல தொட்டு மரக்கிளைகள் மீது தெளித்து இளம் பச்சை இலைகளும் வரைந்து ஒடி மறைந்தது வஸந்தம் தொடர்ந்து வந்த வேனிலோ வானத்தை ஆழ்நீலமாக்கி ரஸனையற்று
மரமெங்கும் அப்பிய கடும்பச்சை உலர்வதற்கு முன்னமே இலையுதிர்ப் பருவம் கிளைகளிற் செம்பும் பொன்னுமாய் ஒளியூட்டி வானத்து நீலத்தைத் துடைத்தழிக்கும் வேளை கைதவறி இலைகளையும் அழித்து வெறுப்புடன் பிரியவும் மங்கிய ஒளியில் கள்வர்போல் வந்தது கொடிய குளிர் வானத்தில் கடுஞ்சாம்பல் இருண்ட கிளைகள் மேற் கோணல் வெண்கோடுகள்
குமுறலுடன் யன்னற் திரையை இழுத்துமூடி மீண்டும் திறக்கையில் யன்னலில் இளநீலமாய் ஒரு வானவெளி பொறுமையாய்
வஸந்தம்,
x ஸ்வப்ன?


Page 23
Registered as a Newspap செய்திப் பத்திரிகையாகப்
இ மெளன (
மல்லிகைப் பந்தலின் கீழ் ஏ, லக்ஷ்மம்மா
இத்தனை சோர்வுடனே உன் ஒலைக் குடிசைத.ை பனிக்குளிர் வந்தும் பா ே இளமையின் களையை இ ஏ , லக்ஷ்மம்மா
நடு நடுங்குகுறாய் குளிரி ஏ , லக்ஷமம்மா
உன் பிள்ளை உயிருடனே
தசரா பண்டிகையை நீே கொண்டாடிடவில்லை .
தீபாவளித் தினத்தே தீப சிவராத்திரி தினத்தில் வி ஏ லக்ஷ்மம்மா
உன் வாழ்வு முழுவதுமே உன் வாழ்வு முழுவதுமே
எத்தனை நாள் அழுவா எதனை வெர் றிடுவா ? உன் சோதரர் சோதரியர்
தூக்கினர் தம் அரிவாள், தீட்டுன் அரிவாளை ஏ. லக்ஷ்மம்மா உந்தன் மகனுடனே நீயும்
(கட்டார் என அழைக்கப்படு வாதிக் கவிஞனின் பாடல்.
இச்சஞ்சிகை தேசிய கலே இலக் 18/1, மின்சார நிலேய வீதியிலுள் யாழ்ப்பானம் 407, ஸ்ரான்வி வி தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட

ir in Sri Länka
பதிவு செய்யப்பட்டது
வேதனை
இ9 மணி குந்தியிருப்பவளே
தோன்றுவதேனடியோ? னக் காற்றுப் பிடிங்கியது, பொன்றுனக்கில்லை,
ழந்த துன் முகமே
r Gáboa, இறந்தானோ?
மீ உனக்கில்லை, ரதம் பேணுகிறாய்
சிவராத்திரி உன்றாச்சு 9 LD E F G 3- 61.50 All T.J. j.
* புலம்பி
சேர்ந்தனர் செம்படையில்
நீயும் "
இணைந்திடுவாய், ம் ஜி. விட்டல்ராவ் எனும் புரட்சி ஆங்கில வாயிலான தமிழாக்கம்.)
கியப் பேரவைக்காக யாழ்ப்பானம்
rள சு. தணிகாசலம் அவர்களால் ரீதியிலுள்ள யாழ்ப்பான அச்சசுக்
* . ان