கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1998.09

Page 1

20/-

Page 2

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
oI - oQ - I o98 இசழ் 36
பண்பாட்டு விழிப்புணர்வு
நவீன தொடர்பு சாதனங்களுக்கூடாக பெருகி வரும் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களும், இதனால் ஏற்பட்டு வரும் பண்பாட்டுச் சீரழிவுகளும் எமது இளைய தலைமுறையினரை மிக வேகமாகப் பாதித்து வருகின்றன. இதுபற்றிய கவலை பெற்றோர்களை மட்டு மல்ல சமூக அக்கறை உடையவர்கள் அனைவரையுமே இன்று பற்றிக் கொண்டுள்ளது.
இது வெறும் பண்பாட்டுச் சீரழிவு மட்டுமல்ல; ஆதிக்க சத்திகளின் நுகத்தடியின் கீழ், தமது தலைகளை தாமாகவே தாழ்த்தி, அடிமைத்தனங்களை ஆராதித்து ஏற்பவர்களாக மக்களை பக்குவப்படுத்தும் உள்நோக்க மும் இதனால் ஈடேற்றப்படுகிறது. இத்தகைய ஒரு ஆதிக்கக்கருவியாகவே ஏகாதிபத்திய கலாசாரம் இன்று உலகெங்கும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
சுய சிந்தனையும், அறிவியல் விழிப்பும் அற்றவர்க ளாக மக்களை ஆக்கும் இத்தகைய பண்பாட்டுச் சீரழிவு களுக்கு எதிராக சமூக விஞ்ஞான நோக்கிலும், மத அடிப்படைவாத உணர்விலும் நின்று உலகெங்கும் இதற்கு எதிர்வினைகள் புரியப்படுகின்றன . உலகெங்கும் ஏற்பட்டு வரும் மத அடிப்படைவாத எழுச்சிகள் இதற்கு உடனடியாக எதிர்ப்பு வடிவங்களாக தோற்றம் பொறுகின் றன. ஆனாலும் வரலாற்றைப் பின்நோக்கி இழுக்க முயலும் இவர்களது கருத்தியல் நிலைப்பாடு காரணமாக நீண்ட கால நோக்கில் இவர்களது எதிர்ப்புக்கள் பல மிழந்து விடுவதுடன் ஏகாதிபத்திய நலன்களுக்கே

Page 3
தொடர்ந்தும் துணைபுரிவதாக அமைகின்றன. பண்பாடு என்பது வழிவழிவந்த வாழ்க்கை முறை என்பதனால் பழமையானது என கருதும் மரபு எம்மிடம் இறுகப்பதிந் துள்ளது. ஆனால் இது தேங்கிய குட்டையாக என்றும் இல்லாமல் மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதையும், வெறும் வாழ்வியலாக மட்டும் இல்லாமல் பொருளியல் அடிப்படையில் எழும் சிந்தனை மாற்றங்களையும் உள் ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. எனவே பண்பாட்டு விழிப்பு என்பது பழமையை இறுகப்பற்றுவதல்ல.
காலமாற்றத்துக்கு ஏற்ப தள்ள வேண்டியவற்றை தள்ளி ஏற்கவேண்டியவற்றை ஏற்கும் மனநிலையை நாம் பெறவேண்டும். இன்றேல் நவீன அறிவியல் விஞ்ஞானப் பார்வைக்கூடாக உலகைப்பார்க்கும் இன்றைய இளைய தலைமுறையினர் அவற்றால் பொய்யாக்கப்பட்ட பழமைக் கருத்துக்களை வெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என் பதற்காக இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஏற்கப்போ கிறார்கள். இவர்களது அறிவியலுக்கும் வாழவியலுக்கும் உள்ள இசைவின்மையை - இடைவெளியையே நசிவுக் கலர் சாரங்கள் நிரப்பி வருகின்றன. -
இருபதாம் நூற்றாண்டு காலனித்துவத்துக்கு எதிரான உலகம் தழுவிய விடுதலை எழுச்சியுடன் ஆரம்ப மானது. அன்று இறுகிக்கிடந்த ஆசியப் பண்பாடுகளின் ஒடுக்குதலுக்கு உதவும் பலகூறுகள் அதனால் தகர்க்கப் பட்டு, பாரிய பண்பாட்டு விழிப்புணர்வு ஏற்பட அது வழிசெய்தது. /
அதுபோன்றே நவகாலனித்துவத்தின் விரிவாக்கம் இன்று உலகமயமாதல் (Globalization) என்ற மகு டத்துடன் அரசியல் பொருளாதார, பண்பாட்டு ஒடுக்கு முறைகளை வெவ்வேறு வடிவங்களுக் கூடாக உலகெங்கும் விரிவாக்கியுள்ளது. எனவே இருபத்தோராம் நூற் றாண்டை உலகமயமாதலுக்கும், அதன் நுகர்பொருள், நசிவுக் கலாசாரங்களுக்கும் எதிரான ஒரு புதிய பண் பாட்டு விழிப்புடன் எதிர்கொள்வோம்.
02 தாயகம் 36

விலை மதிப்பு
- O சேபோன *மனித உயிர் விலை என்ன? ‘ஒன்றும் இல்லை’ மண்வெட்டிக் கட்டைகளால் இடிப்பதாலோ, குனிய விட்டுப் பின் கழுத்தை உடைப்பதாலோ, கூர்க்கம்பி கொண்டு துளை துளைப்பதாலோ, தனிமையிலே, குடில், கொட்டில் ஒதுக்கில் வைத்துத் தகதகத்து முளாசுகிற நெருப்பை மூட்டி உயிர்களை நீர் உடம்பை விட்டுப் பிரிச்சுப்போட்டால் ஒரு சதமும் பெறாதய்யா மனித ஆவி.
மயிர்களுக்கும் பெறுமானம் உண்டு காணும். வடிவழகுப் பொருட்கடையில் தொங்குகின்ற முடிமயிரைக் கூட,
ஒரு தொகை காசுக்கே முதலாளி வியாபாரம் பண்ணுகின்றார். தயிர் வடைக்கு விலை உண்டு; துடைப்பக் கட்டைத் தடிகளுக்கும் விலை உண்டு. மென்று துப்பும், “பொயிலை நெட்டுத் துண்டுக்கும் விலையுண்டய்யா. புழுதி மண்ணும் பெறாதிங்கே, மனித ஆவி.
அகப்பட்டால், கடத்திப்போய் எங்கென்றாலும் அந்தியகாலச் சடங்கைச் சுருக்கமாக்கிச் சதுப்பு நிலம் வசதியாய்க் கண்டு கொண்டால், சட்டமென்ன - சாத்திரமும் தோற்றுப் போகும்.
யுகப்புரட்சி வாசலில் நாம் நிற்கின்றோமாம்! உண்மை தான். அடுத்தவனை மிதித்துத் தள்ளி வதைப்பதென்று துணிந்து விட்டால் - மனித ஆவி மதிப்பெதுவும் இல்லாத துரும்பு, பாரும்.
தாயகம் 36 ts 3

Page 4
e
(T
ஆங்கில மூலம் :
5, á ég, frif
கோஸ்
தமிழில் :
கவிஞர் சோ, ப.
கிரி கங்கள், கண்டதுக்குள் எல்லாம் - தம் சொண்டுகளைச் செருகும் காகங்கள்! அவலட்சணமே கவசமாக உலாவரும் காகங்களை குழந்தைகள் கொஞ்சுவதில்லை! அவை
மரத்தில் அமர்கையில் கழுகுகள் அமைதி தேடி ஒதுங்கிப் போய் விடும்!
உப்பரிசையில் அமர்ந்தபடி
போக்குவரத்தை விமர்சிக்கும் கTகங்கள் !
காகக் கூட்டத்தின் ஆயுதம்
பேச்சு, பேச்சு, சதா பேச்சு
அதை அவர்களுடைய கறுத்த மேலங்கியாலும் மறைக்க முடிவதில்லை! விண்ணிலிருந்து விழும் - ஒரு நட்சத்திரம் பற்றிய விவாதத்தால் ஆவேச முற்றவை போல் திடீரென்று உரைத்துக் கரைந்து இரவின் அமைதியை அவை குலைக்கக் கேட்டிருக்கிறேன்!
ஆதாரம் கிடைக்கும் போது விஞ்ஞானிகள் போல ஆய்வில் மூழ்கினாலும் அவர்களுடைய விஜயங்கள் பூஜ்யத்தில் முடிவதைக் காண்கையில் அவர்கள்
தீவிர அர்ப்பணிப்புள்ள,
அரசியல்வாதிகளாக தென்படுகிறார்கள்!
தாயகம் 36

தாத்தா எவளவு கேட்டும்
எங்களுடன் வருவதிற்கு சம் மதிக்கவில்லை. இடப்பெயர்வு தவிர்க்க முடியாததாகி, அதுவே நிச்சயமாகிவிட்ட கடைசிக் கணங்களிலும், தாத்தாவின் பிடிவாதத்தை ஒருவராலும் தளர்த்த முடியவில்லை.
வரவிரும்பேல்லை என்னை விடுங்கோ வன். பாடுபட்டுக் கட்டின இந்த வீடுவாசல், தண்ணி ஊத்தி வளத்த இந்த பச்சை மரங்கள் - இதுகளை விட்டிட்டு
நான் எண்டா,
சு. கண்ணன்
என்னாலை எப்படி வரேலும் கொஞ்சம் )$u ו"ו 96. & 68 חו i unr gresör Tinto
தாத்தா சாதாரணமாகவே பதிலளித்தார்.
'நீ சாக விரும்பிறாய் எண்
டால் நாங்கள் ஒண்டும் செய்யே லாது அப்பா முணுமுணுத்
5rfř.
தாய்கம் 38
LSLSLSSLSLSSLSLSSLLLLSLSLSLSLSLS
யாழ் பல்கலைக் கழக விவசாய பீடத்தால் நடத்தப்பட்ட “Agros Week 89 நிகழ்ச்சியின் போது நடந்த சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.
"இன்னும் இரண்டு மூண்டு நாளிலை திரும்பி வருவீங்கள், இருந்து பாருங்கோ"
கடைசி நேரம் தாத்தா என்னை அணைத்து உச்சி
மோர்ந்து, இப்படிக் கூறித்தான்
வழியனுப்பி வைத்தார். எங்க
ளது வீட்டு வாசலில் நின்றபடி
வீதியின் திருப்பத்தில் மறையும் வரை தாத்தா எனக்குக் கைய சைத்து வழியனுப்பி வைத்தார்
அந்தப் பயணம் ஒரு தவிர்க் கப்பட வேண்டிய அதிகாலைக் கனவைப்போல மனப்பதிவை ஏற்படுத்தி இருந்தாலும் எனக் குப் பின்னால் தாத்தா வருகி றாரா வருகிறாரா என்று ஏங்கி
ஏங்கி திரும்பிப் பார்த்தபடி
05

Page 5
சென்ற அந்தக் கணங்களை இன்றும் என்னால் மறக்கமுடிய வில்லை.
இடம் பெயர்ந்த ஆரம்ப நாட்களில் தாத்தா வருவார்
நாட்கள் செல்ல செல்ல நம் பிக்கை தளர்ந்து வெறுமையே மண்டிக்கிடந்தது.
அப்பாவும் அம்மாவும் தாத் தாவைப் பற்றி இடம் பெயர்ந்த ஆரம்ப நாட்களில் கவலைப் பட்டனர். ஆயினும் காலப் போக்கில் அவர்க்ள் அதிலிருந்து
மீண்டு விட்டனர். என்னால் மட்டும் தாத்தாவின் நினைவு களை மறக்க முடியவில்லை.
தாத்தா ஒரு அற்புதமான மனிதர் எப்படித்தான் தாத்தா வின் முகம் எப்போதும் மனதை தொடும் ஒரு புன்னகையுடன் மிளிர முடிகிறது. என்றாலும் அம்மாவாலும் அப்பாவாலும் தாத்தாவை நன்றாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே எனக்குப் படுகிறது. w
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உலகத்தில் எல்லோரையும் விட, எனக்கு தாத்தாவிடமே அதிக அன்னி யோன்னியம் இரு ப் பதா கப் படும்.
தாத்தா எனக்கு அதிகா லைச் சூரிய உதயத்தை வயல் வெளிக்கு அழைத்துச் சென்று
காட்டுவார். ப ற வை க ளின் விதம் விதமான ஒலிகள் வெள வா ல் க ளின் நீண்ட
(6
தொடர்ச்சியான பயணங்கள் வலசை வரும் பறவைகள், நெல், வாழை, தென்னை, இவைகளின் பயன்கள் பற்றி
கதைகள் பாட்டுக்களோடு சுவா ரிசமாக சொல்லித் தருவார்.
தாத்தா ஒரு கடின உழைப்
அதிகாலை மூன்று மணிக்கு எழும்பி இரவு பத்து ம ணி வரை புன்னகையுடன்
உழைக்க அவரால் தான் முடி யும். விதைப்புக்காலங்கள் அறு வடை காலங்களில் பாடசாலை விடுமுறை நாட்களாக இருந் தால் என்னையும் அழைத்துச் செல்வார். அவைகளைப் பற்றி யும் எனக்குச் சொல்லித் தர வேண்டும் என்று அவர் எண் ணும் ஏராளமான விஷயங்களை எ ன க் கு சொல்லித்தருவார். அப்படிச் சொல்லும் போதும் அவர் செய்யும் வேலையில் எந் தக் குறையும் இருக்காது. அத் தோடு என்மேல் வீசும் பார் வையின் தீ ட் சண் ய த் திலும் குறைவிருக்காது.
தாத்தாவுக்கும் எனக்கும் இடையில் உள்ள பிணைப்பு முடிவற்ற ஒரு மென்மையான பனிப்புகார் சூழ்ந்த பாதையில் பிணைக்கப்பட்டு விட்டதாகப் படுகிறது. இப்போது தாத்தா வின் ஞாபகங்களில் தொலையும் போது, நானும் தாத்தாவும் மென்மையான பனிப்புகாரினுாடு மறைந்து மறைந்து தொடர்ச் சியான முடிவற்ற பாதையினு டாக நடந்து செல்வதாக6ே தெரிகிறது.
தாயகம் 36

எங்கள் வீட்டுக்குமுன்னால்
க்கும் மாமரங்கள், பலா ವ್ಹೀಲ್ಡ್ರ பின் வளவில் இருக்கும் தென்னை மரங்கள், சுறி p(5 iš 6035, அகத்திக்கீரை, தவசி முருங்கை கொய்யா, வாழை எல்லாமே தாத்தாவின் கைங் கரியம் தான். தாத்தாவின் வாழ்க்கை எப்போதும் ஒரு புன் னகையுடன் கழிவதற்கு அவருக் கும் மரங்களுக்கும் இண்டயே உள்ள உறவும்தான் காரணம் என்று எனக்குத் தோன்று கிறது.
சனிக்கிழமைகளில் தாத்தா வுடன் சேர்ந்து முழுகுவது என பது ஒரு சுவாரிசியமான அனு பவம். முழுகுவதற்குரிய ஆயத் தங்கள் காலை 6 மணிக்கே ஆரம்பமாகிவிடும், அரப்பு பத மான தேசிக்காய், பழங்கஞ்சி என்று எல்லாவற்றிலும் நுட்ப மான தெரிவுடையவராக அவர் இரு ப் பார். சனிக் கிழமை முழுக்கு எ ன் றா ல் அனறு இறைச்சி, ஒடியற்கூழ் எனற அடுக்கு களும் அதனுடன் சேர்ந்து இருக்கும். எட்டு மணிக்கு முழுக்குத் தொடங் கினால் பத்து மணிவரை அது நீடிக்கும். வெள்ளியால் செய்த அரைஞாண் கயிற்றில் வெளிறிப் போன வெள்ளைக் கோவணத் துண்டுதான் தா த் தா வின் முழுக்கு உடை. அந்த அரை ஞாண் கயிற்றில் அழகான இரு சோகிகள் கட்டப்பட்டிருந்தன. அதன் வரலாறு என்ன என்று கேட்கவேண்டும் என்று தனையோ தரம் நினைத்து
தாயகம் 36
எத்
கடைசிவரை நான் அவரிடம் அதைப்பற்றிக் கேட்கவில்லை.
எங்கள் வீட்டிற்கு முன் னால் இருக்கும் சூரியகாந்தி, செவ்விளநீர் மரங்களைப்
பார்த்து இடப் பெயர்வுக்கு இரண்டு elp Girg) நாட்களுக்கு முன்னர்தான் தாத்தா சொன் GÖTT fir
‘நல்ல காய்மரம் நீ பிறக் கேக்கை வைச்சது. இப்ப இதுக் கும் உனக்கும் ஒரு வயது. இந் தக் காயைப் போல இப்ப ஓரிட மும் எடுக்கேலாது. இதிலை ஐஞ்சாறு கண்டு எடுக்கவேணும்.
வருங்காலத்திலை உன்ரை பிள்
ளையள் குடிக்குங்கள் தானே,
நான் ஒன்றும் சொல்ல
வில்லை. வெட்கம் க G ந் 点 சிரிப்பு மட்டும் எ ன் னிடம் இருந்தது.
மீண்டும் வீட்டுக்குச் செல் லக்கூடிய நிலைமை வந்த போது என்னை விட யாரும் சந்தோ ஷப்பட்டிருக்க மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றும் அளவுக்கு நான் சந்தோஷமாக இருந்தேன். தாத்தாவை மீண்
கொண்டிருந்தது.
நாங்கள் வீட்டை அடைந்த போது வீட்டின் முன் நின்ற குறோட்டன் பூ மரங்கள் எல் லாம் வாடிபட்டுப்போய் இருந்
தன. "அம்மாவும், அப்பாவும்
வீட்டிற்கு ஒரு சேதமும் இல்லை
நான் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்த கணத்திலேயே
0 ፖ  ́

Page 6
"தாத்தா, தாத்தா, என்று கத் தினேன். எனது குரலே மீளவும் ஒலித்தது.
அப்பாவின் எச்சரிக்கையை யும் மீறி வீட்டின் கோடிப்பக்கம் கூப்பிட்டபடி நான் சென்ற போது தூரத்தில் கிணற்றடிக்
கரையில் ஏழெட்டு செவ்விள
நீர் நாற்றுக்கள் நடுகை செய்யக் கூடிய பருவத்தில் வளர்ந்திருந்
பலஸ்தீனக் கவிதை · ·
அது தெரிந்தது. அதன் அரு கில் சென்று "பார்த்து எனக்கு உடல் சிலிர்ந்தது. அந்த நாற்று களுக்கிடையே ஏதோ ஒன்று அது என்ன? வெள்ளையாகத் தெரிந்த ஒரு எலும்புக்கூட்டின் சிதறல்கள், அவற்றோடு அந்த அழகான சோதிகள் Gastiás, பட்ட வெள்ளி அரைஞாண் துயிக . தாத்தா . எனது
ரல்கு எங்கும் ஒலிக்கிறது.
அலுப்புத் தட்டும் பாதை
ஹகார் எனும் பேருக்குரியவனும் இன்னும் பிறவாதவனுமான என் மகள் என்னைக் கேட்டான்: ‘அப்பா, பூமி ஏன் சுழல்கிறது?" ‘கடவுள் ஒருநாட் காலை துயிலெழுந்தார்.
அவரது காலை நேரக் கோப்பியை
கேப்ரியல் சம்மனசு கொண்டுவந்தது.
தயவுசெய்து ஒரு சீனி தன் தங்கக் கரண்டியால் கடவுள் சீனியைக்
கலக்கினார்
சோர்வான வெறிதான வட்டங்கள் சோர்வான வட்டங்கள் சோர்வான வெறிதான வட்டங்கள்
அதுமுதலாக, என் குழந்தாய்,
உலகம், தன் அலுப்புத் தட்டும் பாதையிற்
சுழல்கிறது
08,
- ஸ்மி அல் கசிம்
error
தாயகம் 36

குளிர் பிரதேச சிறுவர் கதை
பாங் ஜிகுவான்
தமிழில் : பாட்டி
சூரியன் நாள் தவறாமல் ஒவ்வொரு நாளும் வானத்தில் தோன்றி காட்சி தருகிறான்; இளையவர், முதியவர் ஏழை பணக்காரன், பல்வான், பல வீனன் என்ற மானுட உலகத் தின் பேதங்கள் பாராது எல் லோருக்கும் தனது ஒளியையும் இதமான வெப்பததையும் வழங் குகிறான். இதனால் தனது தொடர்ச்சியான ஒய்வற்ற இப் பணி பாரபடசமற்றது. நியாய மானது என சூரியன் உண்மை யாகவே நம்பி இருந்தான். அவன் காலம் தவறாமல் ஒழுங் காக பூமியிலுள்ள் மலைகள் ஒவ்வொன்று மீதும், ஒவ்வொரு கடல்கள் மீதும் ஒவ்வொரு ஆறுகள் மீதும் ஒவ்வ்ெர்ரு மூண் முடுக்குகளுக்கும்
சென்று வந்தான். புற்றரைகள்
அவனது அன்பையும் அரவ
ணைப்பையும் பெற்று மேலும் உறுதியுடனும், பசுமையுடனும்
பற்றிப்படர்ந்தன. அவனது ஒளிக்கீற்றுக்களின் கீழ் மலர்த்த
தாயகம்.36
மலர்கள் ஒவ்வொருநாளும் மேலும் மேலும் அழகாக மலர்ந்து மகிழ்வுடன் சிரித்தன: விலங்குகள் அவனது ஒளியில் குளிர்காய்ந்து இதமான வெப் பத் தை அனுபவித் தன. பறவைகள் தம் சிறகுகளை விரித்து அலகுகளால் கொத்தி ஒழுங்குபடுத்தின.
ஒரு நாள் நீண்ட நேரம் நடந்து களைத்துப்போன ஒரு நடைபயணி த்ெருவோரத்தில் இருந்த் கல்லொன்றில் அமர்ந் தான். தனது தொப்பியைக் கழற்றி, கால்களை உருவிக் கொண்டே வாய்விட்டுக் கூறி
fg
* “சூரியன் எவ்வளவு இத மான-சூட்டையும், சுகத்தையும் தருகிறான். உலகிலுள்ள ஒவ் வொருவரும் அவனது அன் பையும் தயாா சிந்தையையும் பெறுகிறோம். எப்படிப்பட்ட பொதுநல உணர்வுள்ள நீதி யா ள னாக அவன் இருக் கிறான் !
09

Page 7
நடைபயணியின் அந்த வார்த்தையைக் கேட்டட் சூரியன் பெருமிதத்துடன் அருகில் வந்த காற்றுக் கன்னியைப் பார்த்துச் சொன்னாள் அவன் சொன் னதைக் கேட்டாயா? உலகி
லேயே மிகுந்த பொது நல
உணர்வுள்ளவனாகவும் நீதியா ளனாகவும் நான் இருக்கிறே னாம்,
காற்று க் க ன் னி சிறிது பின்பு ஒரு
மெளனமானாள். பெருமூச்சை விட்டுக்கொண்டு அவள் கூறினாள்.
"ஆம் எனக்குத் தெரியும் நீ ஒரு பொதுநல உணர்வுள்ள நீதியாளனாக நடக்க முயற்சி செய்கிறாய் ஆனால். உன் து அன்பையும் அரவணைப்பையும் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளவில்லை.
காட்டிலுள்ள பெரும்பா லான மிருகங்களும், பறவை களும் ஓரளவு சுதந்திரமாக இருப்பதனால் ஆனது அன்பை, யும் இதமான வெப்பத்தையும் பெற்று மன நிறைவுடன் மகிழ்ச்சி கொள்ள முடிவது போல, அனேகமான மனிதர்க ளால் அப்படி நன்றாக வாழ முடியவில்லை. நான் உலகம்
முழுவதும் அலைந்து திரிவத
னால் கீழே நிலைமைகள்" உண்
மையர்க எப்படி உள்ளன என்று
எனக்குத் தெரியும், “இங்கே பார்" என்று கீழே காட்டிய வாறு கர் ற் று க் கன்னி
தொடர்ந்து சொன்னான்.
வானத்தை மறைத்து நிற் உயர்ந்த கட்டங்கள்
கும்
10
வெளிகள்
G3F f'Lu disés LDT35
நின்றந்த அந்த நகரம் இருக் கிறதே, அங்கு போதிய இடை இல்லை. இதனால் சிறிய தொகையினரே உனது இதமான வெப்பத்தை பெறுகி றார்கள் ஆம் அங்கு பூங்காக் கள் பல உண்டு. ஆனால் அவை ஒரு சில வசதி படைத்த மனி தர்களுக்கே சொந்தமானது எ ல் லோ ரு ம் விரும்பியபடி அங்கு 'நுழையமுடியாது
அந்த குளத்தங் கரையிலுள்ள !ழகான இயற் கைச் சூழலில் அமைந்துள்ள மருத்துவமனையைப் штi Grci . வள்வு இதமான ஆாய காற்று அங்கு வீசுகிறது. உனது சூரிய வெப்பத்தில் குளித் த படி சிகிச்சை பெறும் குழந்தைகளை ண்கிறாயா? அவர்கள் எல் லோரும் வசதியான குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் தான்
அதோ
இப்பொழுது அங்கு நகரத் இன்று பக்கத்தில் தெரியும் சிறிய குடிச்ைகள் நிறைந்த ” s Gör ur fi
வையை திருப்பு. அந்தச் சிறிய
குடிசையில் படுக்கையில் கிடக்
கும் அந்தக் குழந்தையைப்பார்
அந்தக் குழந்தை நோயுற்றுக்
இடக்கிறது. சுத்தமான காற்றும் வெளிச்சமும் அதற்குத் தேவை ஆனால் அது கேள்விக்கு அப் பாற்பட்ட-து: வடக்குநோக்கி இருக்கும் சிறிய வாசலூடாக அந்த வீட்டுக்குள் உனது ஒளி அக்குழந்தையை ச்ெ ன் றடை
u Irrġ) .
தாயகம் 36

இ ன் னு ம் கீழே பார். ஒரு பெரிய நீச்சல் தட க்ம்'
தெரிகிறதல்லவா, உனது வெப்
பத்தால் இ த மா க் கப்பட்ட தெளிந்த நீர்த் த டா கத்தில் ஆண்களும் பெண்களும் நீந்தி விளை யா டுகின்றனர். அவர் களிற் சிலர் தட்டையான நீண்ட கதிரைகளில் நிமிர்ந்து படுத்துக் கொண்டே உனது ஒளியில் குளிக் கிறார்கள். அவர்கள் ஒய்வு
எடுத்துக் கொ ன் டி ரு க் கி
றார்கள், W
ஆனால் அதோ குறுக்கே
தெரிகிறதே உயர்ந்த புகைப்
போக்கியுடன் கூடிய அழுக்கு நிறைந்த தொழிற்சாலை, அத னுள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சுவாசிப் பதற்கு அழு க்கு நிறைந்த காற்றே உண்டு. இருள் அடைந்த அத் தொழிற் கூடத்தை ஒளியூட் டுவதற்கு உனது ஒளி இல்லை. உனது இதமான ஒளிக்கீற்றுக் கள் அவர்களை ஒரு போதும் எட்டுவதில்லை. உனது பார்வை படுவதற்கிடையில் அவர்கள் எழுந்து வேலையை ஆரம்பித்து வி டு வா ரீ க ள் நீ அ ப் பா ல் மறைந்த பின்தான் மகிழ்ச்சி யற்று வெறுப்புடன் வீடு திரும்பு 8 ITITSG ,
மக்கள் எல்லோரும் உன் ஒளியையும், வெப்பத்தையும்
வேண்டி நின்றாலும் நீ கொடுப் பதில்லை. மேலும் அங்கே பார்த் தாயானால் oеоммичк.
snuusib 36
காற்று தேவதை மேலும் தொடர் சூரியன் அவளைத் தடுத்து நிறுத்தி".
'போதும் இப் பொழு து எனக்கு எல்லாம் புரிகிறது"நான் இங்கு உயரத்திலிருக்கிறேன் எப்படி எனக்குக் கீழே மக்கள் ஆழமான துன்ப துயரங்களில் அழுந்தியுள்ளார்கள் என்பதை என்னால் பார்க்கமுடியும்; நான் மக்கள் நலம் சார்ந்தவனுமல்ல நீதியாளனுமல்ல; ஆனாலும் எனது ஒளியைத் தொடர்ந்து வழங்குகிறேன்,
புன்னகை
காற்றுக்கன்னி
யுடன் மெல்ல நகர்ந்தா ள்
தாயகம்
கலை இலக்கிய இதழுக்கு
சிறுகதை, கவிதை கட்டுரைகளுடன்
தாயகத்தில் வெளியாகும் ஆக்கங்கள் பற்றிய விமர்சனங்களும்
எதிர்பார்க்கப்படுகின்றன,
தொடர்பு முகவரி
ஆசிரியர் : தாயகம் வசந்தம் புத்தக நிலையம் 405, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்

Page 8
-u ang தெரியுது பார்
குண்டுகளைப் போடு குடி மனனகளை காடுகளை அழி பாதை தெரியுந்தான்!
ஆனால Luulasorth தொடர்ந்தும் அவலந்தான்!
அன்றி,
குண்டுகளை அழித்து குடிகளையும் மதித்து பேசிப் பறைந்து பார் புதுப் பாதை சுகமாய் திறக்கும் பயணமும் சுபமாய் அமையும்
இன்றேல்,
எல்லாப் பாதைகளும் எல்லார் பாடுகளும் தொடர்ந்தும் அவலந்தான்!
2
---sata: சண்முகபாரதி ... ...
தாயகம 36

இ மரபுக்கும் நவீனத்துவத்திற்கும்
ஒரு கவிஞர்
சி. சிவசேகரம் ح
சிலைகளை விஞ்ஞானத்துடன் உறவற்றனவாக மட்டுமன்றி விஞ்ஞானத்திற்குப் பகைமையானவையாகவும் நோக்கும் பண்பு நம் மிடேைய இன்னமும் உண்டு. விஞ்ஞானத் துறைகள் தமது பொருள் முதல் வாதத்தினாலும், தர்க்க ரீதியான ஆய்வு முறைகளாலும் அடையாளம் காணப் பெறுவன. ஆயினும் விஞ்ஞானப் பார்வை என்பது யாந்திரிகமான அணுகுமுறையாலானதல்ல. விறைப்பான விதிகளாகக் காணப்படும் விஞ்ஞானம் வளர இயலாதது. விஞ் ஞானம், அது ஆராய முனையும் புற உலகம் போன்று, இயங் கியல் விதிகட்கு அமையவே வளர்கிறது. விஞ்ஞான நடைமுறையில் தெளிவானவிதிகட்கு இடமுண்டு. ஆயினும் அவ்விதிகள் மீள்பரிசோ தனைக்குரியன. நடைமுறையும் கொள்கையும் கொண்டுள்ள இயங் கியல் உறவு, விஞ்ஞான அறிவின் ஆதாரமாக உள்ளது. விஞ் ஞான அறிவின் வளர்ச்சியும், மாற்றமும் மனித சமுதாயத்தைப் Ꭵ Ꭵ ᎧᎧ வழிகளிலும் மாற்றத்துக்கு iளாக்குகின்றன. இவ் வகையில் மனிதச் செயற்பாடுகள் அனைத்திலும் விஞ்ஞானம் தனது முத் திரையை ஆழப்பதிக்கிறது. இங்கே விஞ்ஞானம் எனும்போது நாம் மேனாட்டு நவீன விஞ்ஞானத்தை மட்டுமே கருத அவசிய மில்லை .
கலைஞர்கள் அபூர்வப் பிறவிகள் எனுங் கருத்தும் நமது மர பில் ஊக்கிவிக்கப்பட்டுள்ளன. கலைஞர்கள் பிற மனிதரிலும் மேம்பட்டோர் என்றவிதமான கருத்துஞ் சிலரால் முன்வைக்கப் படுகிறது. கலைகளிற்:கல்வியினதும், பயிற்சியினதும், கருத்துப் பரிமாறலினதும் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். கலைகள் தனக்கெனச் சிறப்பான அழகியல் விதிகளை உடையன எனவும் அறிவோம். கலைகள் விஞ்ஞானப் பாங்கான விமர்சனங்கட்கு உட்படுத்தப்படக் கூடியன எனவும் அறிவோம். விறைப்பான விதிகளாக, விஞ்ஞானத்தைச் சுருக்குவது போல விமர்சனத்தை யும் கையாளும் போது அது தோல்வியடைகிறது. இங்கே அமைப் பியலைப் பிரயோகிக்கிறதாகக் கூறிக்கொள்ளும் சில விமர்சகர்கள் படைப்புக்களைக் கூறுபோட்டுச் சிதைப்பதை நினைவு கூராாமல்
3)
தாயகம் 3é 13

Page 9
இருக்கமுடியாது. இவ்வாறான குழப்பங்களினின்று விலகிக் கலை கட்கும் மனித வாழ்வுக்கும் மனிதரது சமுதாய இருப்புக்கும் உள்ள உறவை விளங்கிக்கொள்வோமாயின்; கலைகட்கும் விஞ் ஞான ரீதியான பார்வைக்குமுள்ள சினேக உறவை உணர்வது இயலுமாகும்.
கவிதை, மொழி சார்ந்தது. அது மொழியின் விதிகளின் அடிப்படையில் இயங்குவது. ஆயினும், அது மொழியின் ஒவ் வொரு அம்சத்தினையும் பரீட்சைக்குட்படுத்துவதுடன் மொழியின் வழமையான இயங்கு தளத்தின் பரிமாணங்களை விஸ்தரிக்கிறது. மொழியின் விதிகளின் அறிவுடன் அவற்றை மீறவும் முற்படுகி றது. இது அறியாமை மூலம் நடைபெறும் மீறல் போன்றதல்ல. ஒரு மொழியின் வெற்றி அதன் விஞ்ஞான ரீதியான தன்மையி லும் தன்னை மாற்றத்திற்கு ஆளாக்கும் ஆற்றலிலும் பெரிது தங்கியுள்ளது. எனவே மொழி சார்ந்த கலையான கவிதைக்கு ஒருவரது விஞ்ஞான அறிவும் பயிற்சியும் தடையாக நிற்க அவ சியமில்லை. யாந்திரிகமான முறையில் விஞ்ஞானத்தை அணுகு வோர் நல்ல விஞ்ஞானிகளுமல்லர். விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறைகளில் உள்ளோர் கலைத் துறைகளில் இயங்குவது குறை வாக இருப்பதன் காரணம் அவர்களது தனிப்பட்ட வாழ்வின் நெருக்குவாரங்கள் தொடர்பானது. இந்த இயந்திர யுகம், மனிதர் களை இயந்திரங்களாக்க முற்படுகின்றது. விஞ்ஞானம் மட்டு மன்றி மனிதரது சகல செயற்பாடுகளும் மனித உறவுகளுங்கூட விற்பனைப் பண்டங்களாகின்றன. கலைகள் கூட வியாபாரப் பொருட்களாகி நலிகின்றன. இங்கே மனித இருப்பை மீட்பதில் அனைவருக்கும் பொறுப்பும் அவசியமும் உள்ளன. அதிகார அமைப்புடன் தன்னைப் பிணைத்துக் கொண்ட விஞ்ஞானத்தால் இந்த விடுதலையைப் பெற்றுத் தர இயலாது. வியாபாரமாகி விட்ட கலையாலும் முடியாது. மனித வாழ்வுடன் தன் தொடர் பை மறுக்கும் எந்த அறிவுத் துறையும், கலையும் மனித விடுத லைக்கு உதவTதன.
மனித விடுதலை ஆர்வத்தால் உந்தப்பட்ட கலைஞரின் கையில், விஞ்ஞான அறிவு அவரது கலையை ஒரு வலிய கருவி யாக்கும் ஆற்றல் உடையது. மனித விடுதலைக்காகக் குரல் கொடுத்த மகா கவிஞர் கமா தெளிவான சிந்தனையும் அறிவுக் கூர்மையும் உடையோராயும் சமுதாயச் சார்பான பார்வை உடையோராயும் இருந்துள்ளனர். அவர்கள் உள்ளடக்கத்திற்குத் தொடர்பற்ற ஒரு அழகியலை வலியுறித்தியதுமில்லை, தேடியது மில்லை. தமது படைப்புக்கள் தமது சூழலையும் காலத்தையுங் கடந்த காலத்தால் அழியாத தூய இலக்கியங்களாக அமைய
4. தாயகம் 36

வேண்டும் என்ற வேட்கையை அவர்கள் கொண்டிருக்கவுமில்லை; அவர்களது ஆக்கங்களின் பொதுமை, மனித இருப்பின் பொது மை சார்ந்தது. அவை மனிதத்துடன் கொண்டாடிய உறவே அவற் றின் பரவலான ஏற்புக்குக் காரணமாகியது. காலத்தால் அழிந்த இலக்கியங்கள் எல்லாமே ஏதோ தகுதிக் குறைவால் இழக்கப்பட் டவையல்ல. வர் லாற்றின் தெரிவு சமுதாயத்தில் யாருடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது என்பதால் நிர்ணயிக்கப்பட்டதாக உள்ள போது, அந்தத் தெரிவை மீறிய அமரத்துவம் விபத்தான ஒன்றாக இருக்க இடமு 3ண்டு. நல்ல கலைஞர் தன்னைச் சூழ உள்ள மனிதத்தை மனதிற் கொண்டே படைக்கிறார். கலை ஞர்க்கு எதிர்காலம் பற்றிய பார்வை உண்டு. ஆயினும் அது நிகழ்காலத்தினின்று பிரிந்த கற்பனாவாத எதிர்காலமல்ல. இதுவே மக்களைச் சார்ந்த கலைஞர்களது சிறப்பு. அவர்கள் தமது பட்ைப் புக்களை மனித மேம்பாட்டிற்கான பங்களிப்புக்களாகக் காண்கின் றனர். மாறாக தம்மை மேம்படுத்தும் சாதனைகளாக அவற் றைக் கருதும் போது அவர்கள் அந்தளவிற்கு மக்களிடமிருந்து அந்நியப்படுகின்றனர்.
இவ்வகையிலேயே முருகையனது பங்களிப்பை நான் இங்குகருது
கிறேன். அவரது அக்கறைகள் பல்வகைப்பட்டன. தமிழை ஒரு வள
மான நவீன மொழியாக்கும் ஆர்வமும், பஞ்ச பூதச் செயல்களின்
நுட்பங்கள் கூறும் ஆற்றலை அதற்கு வளங்கும் முயற்சியும் அவ
ரிடம் இருந்தன. தமிழிற் புதிய கலைச் சொற்களின் புனைவில் அவரது பங்களிப்பு முக்கியமானது. தமிழிற் அயற்பேர்களை சரி வர எழுதுவது பற்றியும் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந் தார். நாடகத் துறையிலும் அவரது பங்களிப்புகள் உள்ளன. விமர்சனத் துறையிலும் அவர் பல முக்கியமான பங்களிப்புக்க ளைச் செய்துள்ளார். •
கைலாசபதியுடன் இணைந்து அவர் எழுதிய ‘கவிதை நயம்' நூலும் அண்மையில் அவர் எழுதிய * 'இன்றைய உலகில் இலக்கியம்' எனும் நூலும் படைப்பாளிகட்கும் படிப்ப வர்கட்கும் மிகவும் பயனுள்ளவை. கவிதை பற்றிய தெளிவை மேம்படுத்துவதற்கு அவர் யாழ்ப்பாணத்தில் சில ஆண்டுகள் முன் னம் நடத்திய கலந்துரையாடல்கள் குறிப்பிட வேண்டியவை. கவிதை டற்றிய அவரது ஆழமான ஈடுபாடு அவரது கவிதை விமர்சனங்களில் கவிதை நயப்பையே அதிகம் வலியுறுத்தச் செய்
தது என்பது என் எண்ணம், என் மதிப்பீடு. ஒரு வேளை எனது
விமர்சனங்களின் கடுமையின் விளைவானதாயும் இருக்கலாம். ஆயி
னும் பசப்பும் பம்மாத்தும் அவரது ஏளனமான தாக்குதலுக்குத்
தாயகம் 35

Page 10
தப்பியதில்லை. அவரது பங்களிப்புக்கள் அனைத்திலும் ஓங்கி நிற் "பது அவரது கவிதை. எனவே அவரைக் கவிஞர் முருகையனா கவே நாம் அறிவோம். அவரது கவிதைகள் அவரது பல்வேறு அக்கறைகளை உள்ளடக்குவன. அது அவரது கருத்து வெளிப் பாட்டிற்கான பிரதான வாகனம்.
முருகையனின் கவிதைகளிற் பெருவாரியானவற்றை வாசித்தி ருக்கிறேனென்றே நினைக்கிறேன். நெடும் பகல்" என்ற அவரது முதலாவது கவிதைத் தொகுதியில் அவர் எட்டிய உச்சத்தி னின்று அவர் கீழிறங்கவில்லை. அவரது “அது அவர்கள் பற்றிய சிறு விமர்சனக் குறிப்பொன்றை 1986ல் எழுதினேன். அது தவிர, அவரது நகைச்சுவைப் பாங்கான ஒரு கவிதையான "ஒரு வரம் என்ற கவிதை பற்றிய குறிப்பொன்றை அண்மையில் எழுதினேன். மற்றப்படி அவரது கவிதைகள் பற்றி விரிவாக நான் எழுதவில் லை. அண்மைக் கால ஈழத்துக் கவிஞருள் நான் மிகவும் மதிக் கும் மஹாகவி, முருகையன், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரது கவிதைகளை என்றாவது விரிவாகத் திறனாய்வுக்குட்படுத்தும் என் எண்ணம் தற்போதைக்குக் கைகூடும் என நான் எண்ணவில்லை.
நவீனத்துவத்தை உருவத்துடன் குழப்புவோர் உள்ளனர். நவீ னத்துவத் தோற்றத்துடன் உக்கிப் போன சிந்தனைகள் உலா வர முடியும். அதே வேளை மரபு சார்ந்த வடிவில் நவீன சிந்த னைகள் பாட்டாகவும், கூத்தாகவும், கவிதையாகவும், காவியமா கவும் வர இயலும். தமிழ்க் கவிதை மரபு பற்றிய அறிவு, கவிதை எழுதுவதற்கு அவசியமில்லை. மரபை அறியாமல் மரபுக் கவிதையின் யாப்பு விதிகளை மட்டுமே அறிந்து அந்த விதிகட்க மைய எவரும் எழுதலாம். அந்த ஆர்வமே இல்லாது புதுக் கவி தையும் எழுதலாம். ஆயினும், தமிழ்க் கவிதை பற்றி மரபு சார்ந்த வடிவிலேயே உள்ள அதன் பெரும் பகுதியை விடுத்து, எழுத முற்பட்டால், தமிழ்க் கவிதை மிகவும் வறியதாகவே தோன்றும். தமிழ்க் கவிதையின் நவீன யுகத்தின் பெரும் சிகரம் பாரதி. அவரது கவிதைகள் மரபினுாடு எட்டிய உயரங்களை புதுக் கவிதை இப்போதுதான் அண்ணாந்தேனும் பார்க்க முடிகி றது. தமிழகத்தில் தோன்றிய புதுக் கவிதை அங்கு ஒரு மஹா கவிஞனைத் தோற்றிவிக்கும் நிலையில் இல்லை. நல்ல கவிஞர் கள் பலர் உள்ளனர். ஆயினும் புதுக் கவிதையின் ஆற்றலை முழு மையாகப் பயன்படுத்தும் முனைப்புடைய கவிஞர் இன்னமும் உரு வாகவில்லை. ஈழத்துக் கவிதையில் ஆரோக்கியமான புதிய போக் குகள் உள்ளன. ஆயினும் மரபுக் கவிதை மூலம் மஹாகவியோ முருகையனோ செய்தளவுக்கு இன்றைய புதுக் கவிஞர்கள் இன் னும் செய்யவில்லை. சண்முகம் சிவலிங்கம் மரபை அறிந்தவர்.
16 தாயகம் 35

se حساس عسيبسسسسسس مسسيس
நவீன கோலியாத்
விவிலிய வேத காலத்தில் இராட்சதனான கோலி யாத்தை சிறு பையனான தாவீது எதிர்கொண்டு அவ னைக் கொன்றான். இன்றைய தாவீது-ஆயிரம் மடங்கு சின்னஞ் சிறு தீவான கியூபா - கோலியாத்தை விட பெரிய வல்லரசான அமெரிக்காவை எதிர்கொள்கின்றது. இந்த கோலியாத் எமது வளர்ச்சியைத் தடைப்படுத்தி பட்டினி மூலமும், நோய்கள் மூலமும் எம்மை அடிபணிய | வைக்க முனைறெது. இது வெல்லப் போவதில்லை. கோலி யத்தின் வராலாறு எழுதப்படாவிட்டாலும் இன்று நாம் அதனை எழுதுகிறோம்.
பிடல் காஸ்ரோ (போப் விஜயத்தின் போது ஆற்றிய உரையிலிருந்து)
Minnen v
மரபையொட்டியும் மரபு சாராமலும் எழுதும் அவர் ஒரு பால்ம் போல மரபுக் கவிதையையும் புதுக் கவிதையையும் இணைக்கி றார். இந்த வகையில் முருகையனும் மரபு மீறிச் சில கவிதைகள்ை 80களில் எழுதியிருக்கிறார். ஆயினும் அவரது இதயம் மரபின் சந் தத்திலேயே துடிக்கிறது. எனவே அவரால் மரபு வடிவிற்கு மீளா மல் இருக்க முடியவில்லை.
ஈழத்துக் கவிதைக்கு முருகையனது பங்களிப்பின் முக்கிய்த்து வம் அவரது கவிதைகளின் உள்ளடக்கம் சார்ந்தது. அவரது கவி தைக, வாழ்வின் பலவேறு அம்சங்களையுந் தொடுவன. அங்கே காதலும் உண்டு. கொடுமை கண்டு பொங்குகிற கோபமும் உண்டு. ஆராய்வுப் பண்பும் உண்டு. அமர்க்களமான கிண்டலும் உண்டு. ஆயினும் அனைத்தையும் இணைக்கும் ஒரு வலிய இழை போல அவரது சமுதாயப் பார்வை அவரது கவிதைகளை ஊடுருவுகி றது. அவர் கசட்டுகிற நவீனத்துவம் தோற்றஞ் சார்ந்ததல்ல. புதிய உலகுக்கான சமத்துவச் சிந்தனையுடன் இணைந்த அறிவு சார்ந்த பார்வை அவரது கவிதைகட்கு வலுவூட்டுகிறது. இதை அவரது தனிப்பாடல்கள் முதலாக அவரது நெடுங் கவிதையான ** அது அவர்கள்" வரையிலும் நாம் காணலாம்.
கவிதைகளில் குறிப்பான ஒரு சமுதாயப் பார்வையோ சமு தாய நீதிக்கான கருத்துக்களோ வருவதை வெறுக்கும் ஒரு
தாயகம் 36 17

Page 11
போக்கு இன்று உள்ளது. கவிதை பற்றிய குழப்பமான புரிதலின் விளைவானதே இது என்று கருதுகிறேன். பாரதியும், பாரதிதா சனும் சம காலத் தமிழ்க் கவிதைக்கு அரசியற் பரிமாணம் வழங் கியோரில் முக்கியமானவர்கள். அவர்களது கவிதைகள் போலவே முருகையனது கவிதைகளும் பிரசாரம் செய்கின்றன. தனி மனித அனுபவங்களையும் உணர்வுகளையும் முருகையன் அலட்சியம் செய்வதாக எவரும் கூற இடமில்லாதவாறு அவரது கவிதையில் அன்றாட வாழ்வின் பல்வேறு கூறுகள் வெளிப்படுகின்றன. அவ ாது கவிதைகள் கூறும் தனி மனித அனுபவம் அவரது பிரத்தி ய்ேக அனுபவம் என்ற வரம்பை மீறிப் பொதுமையான பண்பு களை வெளிப்படுத்துவதை நாம் உணரலாம். முருகையனுடைய பொருள்முதல்வாத நோக்கு, ஆன்மீக வறுமையுடைய வரட்டுப் பொருள்முதல்வாதத்தினதல்ல. அது மனித சமத்துவத்தின் விழு மியங்களை உள்வாங்கிக் கொண்டதும், மரபின் வளத்தாற் செழு மையூட்டப்பட்டதுமாகும். மரபை முற்றாக நிராகரிப்பதே நவீ னத்துவம் என்று கருதும் மூர்க்கத்தனம் அவருக்கு உடன்பாடற் றது. எனவே, மரபின் மீதான அவரது ஈடுபாடு, அதன் வலி மையை நவீன சிந்தனையின் வசமாக்கும் முனைப்பை உடைய தாக இருப்பது அதிசயமில்லை.
அவர் புதுக்கவிதை என்று கூறக்கூடிய கவிதை வடிவங்கள்மீது அதிக நாட்டமுடையவராயில்லாமைக்கு அவர் கவிதையின் உச் சங்களை எட்டிய காலப் பரப்பில் வெளி வந்த புதுக் கவிதையின் வறுமை காரணமாயிருந்திருக்கலாம். அண்மைக் காலங்களிற் புதுக்கவிதை தன் உள்ளடக்கத்தாலும் புதிய பார்வைகளது வரு கையாலும் செழுமை பெற்று வருகிறது. முருகையனும் மரபி னின்று சற்று விலகிய கவிதைகள் சிலவற்றைக் கடந்த தசாப்தத் தில் எழுதியுள்ளாராயினும்; மரபின் சந்தம் மீது அவர் கொண் டுள்ள பிடிப்பு வ்லியது. மரபின் பல்வேறு சந்த அமைதிகள் மீதான ஆளுமையை வெளிப்படுத்தும் அவரது சொற்பிரயோகம் சமகாலத் தமிழில் உள்ள அயற்சொற்களையும் தேவை தெரிந்து பயன்படுத்தும் தன்மையுடையது. அவ்வாறே, பேச்சு வழக்கில் உள்ள சொற்களையும் அளவறிந்து பயன்படுத்துவதை நாம் காணலாம்.
தமிழ்க் கவிதை மரபில் நகைச்சுவை இருந்துள்ளது. பல தனிப்பாடல்களில் அதை நாம் காணமுடியும். பிற்காலங்களில் இப் பண்பு வளமுடன் விருத்தி செய்யப்படவில்லை. வசையும், சிலேடையும் பண்டித மரபினுள்ளும் பேணப்பட்டுள்ளன. மோடி யாகவும் அங்கதமாகவும் அமைக்கப்பட்ட இசைப் பாடல்களையும்
18 தாயகம் 36

அறிவோம். பாரதியின் அரசியற் கவிதைகளிலும் அங்கதம் இருந் தது. நகைச்சுவை உணர்வு நல்ல கவிஞர்களிடம் காணக் கூடிய ஒரு பண்பாக இருந்தாலும் கனதியான விஷயத்துடன் நகைச் சுவையை இணைக்கும் ஆற்றலை எல்லாரிடமும் காண முடிவ தில்லை. முருகையனின் நகைச்சுவை எவரையும் தனிப்பட்ட முறையில் ஏளனஞ் செய்யும் நகைச்சுவையல்ல. மனித இருப்பின் அவல நிலைமைகளைச் சித்தரிக்கும் ஆழமான எழுத்திற்கு ஆதா ரமாக அவரது நகைச்சுவை உள்ளது. அது சமுதாய உணர்வு மிக்கது என்ற அளவிற் சராசரியான பகடிகளின் தளத்திற்கும் அப்பால் நின்று இயங்குகிறது.
** இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு" என்று துவங்குகிற கவிதை வரியில் இழையோடுகிற நகைச்சுவை குருட் டுத்தனமான, பழமைவாதத்தின் மீதான் அவரது கடுமையான விமர்சனத்தைச் சற்று இதமாக்கும் தன்மையுடையது. 'ஒரு வரம்' சனீஸ்வரரிடம் சுருட்டுக் கடை வேண்டும் எனக் கேட்கும் கவிதை, நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அலுப்பைச் சுட்டிக் காட் டும் ஒரு அழகான கவிதை அது. இது எஸ்றா பவுண்ட் எழுதிய லேக் ஜல் (தடாகத் தீவு) கவிதையைத் தழுவி பும் பாரதியின் * "காணி நிலம் வேண்டும்’ ’ கவிதையினை ஒத்த ஓசையமைதியுட னும் எழுதப்பட்டது, " " கடவுளுக்கு விளையாட்டு' என்ற கவி தையில் " " கடவுளுக்கு விளையாட்டு கவுண்மென்றுக்கு சீவன் போகுது' என்ற வரிகள் அரசாங்க அலுவலரது மன உளைச்ச லையும், அலுப்பையும் சுவையுடன் கூறுவன. இவ்வாறு, முரு கையனது நகைச்சுவையுணர்வு மிகுந்த கவிதைகளை அவரது ஒவ் வொரு கவிதைத் தொகுதியிலும் காணலாம். அவரது கவிதை 'நாடகமான 'வெறியாட்டு 80 களின் முற்பகுதிகளில் யாழ்ப் பாண மக்கள் முகம் கொடுத்த அடக்குமுறைச் சூழல் பற்றிய தேயாயினும் அங்கும் முருகையனது எழுத்தில் நகைச்சுவையை நாம் காணலாம். விமர்சகர்கள் சிலரிடையே நகைச்சுவையுணர் வின் போதாமையும் முருகையனது அரசியல் நிலைப்பாட்டுட னான பகைமையும் இணைந்து மூர்க்கத்தனமான விமர்சனங்கட்கு வழி வகுத்தன. இது போலவே 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பில் அவரது 'சடுதி அகிக்குகள்' ** முனைப் பும் முயற்சிபும்' போன்ற கவிதைகள் சேர்க்கப்மடாமை குறித்து நான் விமர்ச்சித்து எழுதிய போது அதற்குப் பதில் எழுதிய தொகுப்பாளர்களில் ஒருவர் முருகையனது கவிதை போராட்டத் தைக் கொச்சைப்படுத்துவதாகப் பதில் எழுதியிருந்தார். ஈழத்துப் புதுக்கவிதையில் குறைவாக உள்ள ஒரு அம்சம் முருகையன் மஹாகவி போன்றவர்களிடமிருந்த அலாதியான ஆழமான நகைச்
தாயகம் 36 · 9

Page 12
சுவை உணர்வு. எள்ளலையும், ஏளனத்தையும் வலிந்து திணிக் கப்படும் பகடிகளையும் விட, துட்பமான நகைச்சுவை வலிமை மிக்கது. முன்னையவை சிலவேளை சிரிப்பை வரவழைக்கலாம். பின்னையது சிந்தனையைக் கிளற வல்லது.
புதுக்கவிதை மரபு மீறலால் இழப்பவை ஒசை நயம் தொடர் பான சில அழகியற் கூறுகளாக மட்டுமே இருப்பின், அது பாரிய கெடுதலல்ல. மரபை அறியாமல் அதை நிராகரிக்கும் போக்கு கவித்துவத்தின் வறுமைக்கே வழி கோலும். இன்று வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இது நல்லதல்ல. தமிழிற் கவிதை எழுதுவோர் பழந்தமிழ் இலக்கியங்களுடன் பூரண பரிட்சயமுடை யவர்களாக இருக்க அவசியமில்லை. ஆயினும், அவை பற்றிக் கொஞ்சம் அறிவும் மரபு சார்ந்த சம காலக் கவிதையுடனான பரிச்சயமும் இருப்பது பயனுள்ளது. பாரதியையே பழைய கவி ஞர் என்று கூசாமல் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். எனவே, * 'முருகையன் கவிஞரல்ல’’ என்று சில காலம் முன்பு யாரோ ஒரு இளங்கவிஞர் பேசியதாகச் 'சரி நிகர்' சஞ்சிகையில் நான் வாசித்தபோது அதிசயப்படவில்லை. நம் அறியாமையையிட்டு நாம் பெருமிதமும் அகம்பாவமும் கொள்வோமாயின் அது நிச்ச யமாக நமது நன்மைக்கல்ல.
கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், மொழியி யல் போன்ற பல துறைகளின் பங்களிப்புக்களைச் செய்துள்ள முருகையன் ஏன் புதுக்கவிதையில் முனைப்புடன் இறங்கவில்லை என்ற கேள்வி எனக்குள் எழாமலில்லை.
"மூட்ட்ை முடிச்ச் முதலியன இல்லாதார் ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும் பாதை நடையின் பயணத் துயர் உணரா மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள் ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள். மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள் பற்றி, முயன்று, பகை களைந்து மேலேறி விண்வெளியை எட்டி வெளிச்செல்லும் முன்பாக மண்தரையில் வானவனப்பைச் சமைப்பதற்கும் வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும் ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும் நெஞ்சம் இசைந்தார். நிகழ்த்தினார் நீள் பயணம் பின்முதுகிற் பாரப் பெருமை இலாதவர்கள்
20 தாயகம் 36

இத்தனையும் செய்தார், இனியும் பல செய்ய எத்தனிப்போ மென்றார்'
ாதத ற (" "இரண்டாயிரம் ஆண்டுப்
பழையசுமை எங்களுக்கு') ** மற்றொரு நாள் மாலை சற்றே இருந்தான் தனி மனிதன் சுற்று முற்றும் பார்த்தான் அருகே பனங் கூடல் ஓர் சுடலை மேற்கே அடுக்கு விறகு ’’
(அது அவர்கள் 1, 5, 1)
இந்த மாதிரித் தெளிவாக எளிமையான மொழி நடையில் மரபின் விதிகட்கமையச் சீரான சந்தத்துடன் எழுத வருமென் றால் வேறுவிதமாக எழுத என்ன தேவை என்று தான் நினைக் கிறேன். பல்வேறு யாப்பமைதிகட்கு ஏற்ப எழுதும் ஆற்றலை விட, எந்தச் செய்யுள் வடிவத்தினுள்ளும் அவராற் தெளிவாக வும் அழகுணர்வுடனும் கருத்துச் செறிவுடனும் எழிய முறையில் எழுத முடிகிறது என்பதுதான் இன்றுள்ள மரபுக் கவிஞர்கள் பல ரிடமிருருந்து முருகையனை வேறுபடுத்துவது. அவரது கவித்துவ மும் அவரது சிந்தனையின் முற்போக்கான பண்பும் அவரை ஒரு உயர்ந்த கவிஞராக்குகின்றன.
முருகையன் "அது அவர்கள் நெடுங் கவிதையில் வெண்
பாவைப் பயன்படுத்தியமை அக் கவிதை பரவலான வாசிப்புக்கு உட்படுவதற்குத் தடையாக இருக்கும் என்ற கருத்தை எனது
உலக அறிவு என்பது மனிதனை நல்லவனாக்குவதை விட தந்திர சாலி ஆக்குவதில்தான் பெரும்பாலும் வெளிப்ப
டுகிறது.
சாமுவேல் ஜோன்சன்
**வக்கிர புத்தி மனித உள்ளத்தின் காட்டுமிராண்டித்
தனமான உணர்ச்சிகளில் ஒன்றாகும்.
எட்கார் ஆலன்போ
தாயகம் 36 2 II

Page 13
விமர்சனக் குறிப்பில் வெளிப்ப டுத்தியிருந்தேன். என் கருத்தை மாற்றுந் தேவை இன்னமும் ஏற் படவில்லை. ஆயினும், அவர் அதை மரபு சாராத வடிவில் எழுத முனைந்திருப்பின் அது முருகையனுடைய கவிதைமாதிரி இருந்திராது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மர இல் லையா என்ற விவாதம் அபத்த மானது. புதிய கவிதை வடிவங் கட்கு ஒரு தேவை இருப்பது மரபின் கவிதை வடிவங்களது
புக் கவிதை அவசியமா
தேவையையும் பயனையும் இல் லாததாக்கி விடாது.
மாஒ சேதுங்கிடம் கவிதை யில் நவீன வடிவங்க்ள் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது, புதியவடிவங்கட்கானதேவையை அவர் ஏற்ற போதும், அவருக் குப் பழக்கப்பட்ட மரபு வடி வங்களையே ப யன் படுத் த
விரும்புவதாகத் தெரிவித்தார்.
மாஒவின் விகத்துவமோ நவீ னத்துவமான சிந்தனையோ புரட்சிகரமான பண்பையோ
பற்றி எனக்கு ஐயமில்லை. புதுமை புதுமைக்காகவே என்று கருதுவோர் இது பற்றிச் சிந் திப்பது நல்லது.
ம ர. புக் கவிதையுடனான
பரிச்சயத்தின் அவசிய த்தை நான் வலியுறுத்தப் பல கார ணங்கள் உண்டு. முருகையனின் கவிதை அவற்றுள் ஒன்று. *
22
மழலை முகம்
a 33 33
A
Dழலைகளே மானுடத்தின் முகத்தழகை காட்டும் முக அளவை.
அதனால் தான் எம் முன்னோர் கண்களால் காணாத கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை குழநகைள D-al)G51D fTSS கனவு கண்டார்.
ஆனாலும்
எம்மிடையே பொருளுக்காய் ஏற்படும்
இழுபறி ஆவேசத்தில் அள்ளி வீசும் அழுக்குச் சேறுகளில் அகப்பட்டு தோய்வது. மனிதம் மட்டுமல்ல மழலைகளின் முகங்களும்தான். *
தாயகம் 33

ருபிடிமண்
ச சாந்தன்
ஆங்கில வடிவம் 1989
‘போவமா?. , காலணி களை மாட்டிக் கொண்டே ராஜா கேட்டான்.
* "ஓ ...' ' ut 60i.
என்றாள் கல்
9 s
** பை?.
ஒரு முறுவலுடன், தன்
கையிலிருந்த நைலோன் கூடை
யைத் திறந்து அதனுள் ஒழுங் காக மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய பொவித்தீன் பைகளை எடுத்து விரித்துக் காட்டினாள், கல்யாணி.
அவள் வெளியே வந்ததும் கதவைப் பூ ட் டி க் கொண்டு ராஜா பின்னால் வந்தான்.
அவர்களுடைய அனெக்சுக் கும் வீட்டுச் சொந்தக்காரருக் கும் பொதுவான , ஒடுங்கிய பாதையால் நடந்து தெருவிலி
றங்கினார்கள்.
தாயகம் 36
தமிழில் மீளுருவாக்கம் 1998
மாலை நேரத்து நெருசலில் தெருவில் நடப்பதே சிரமமாயி ருந்தது. ராஜா முன்னாலும் கல்யாணி பின்னாலுமாய் காலி வீதியை நோக்கி நடந்தார்கள்.
* போதுமான நேர மி ருக்கு ' அவன் திரும்பி மெல் லச் சொன்னான்;
** .இருட்டவே இன்னும்
ஒரு ம ணித் தி யா லமாகும். அதுக்கு முதல் அங்க போயும் என்ன செய்யிறது?’’
** அ ப் பி டி  ெய ண் டா , மோகன் வீட்டுக்குப் போய்விட் டுப் போகச் சரியாயிருக்கும்.”* என்ற கல்யாணி,
* ? . கண்டு எப்ப கிடைக்
கும்?' என்று கேட்டாள்.
* சாடி ஆயத்தமெண்டா, தாளைக்குக்கூட எடுக்கலாம்."
23

Page 14
வழமையாக இந்த நேரத் தில் கொழும்பிலிருந்து இரத்ம லானைக்கு பஸ்ஸில் போவதை நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால் இன்றைக்கு ஏதோ அதி சயம் போல, அவர்களுக்கு இருக்க இரண்டு இடங் கிடைத் தது. நெரிபடாமல் போய் விட லாம். **
அவர்கள் அனெக்சுக்கு குடிவந்து மூன்று மாதமாகிறது. புதுக்குடித்தனத் திற்கேற்றதாய், அமைதியாய், தொல்லைகளில்லாத இடமாயி ருந்தது, அது. வாடகை கூட அதிகமென்று சொல்லமுடியாது.
புது இடத்துக்கு வந்ததும், எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி அழகுபடுத்தினாள், கல் யாணி, ஆனால், யாழ்ப்பா ணத்தின் ஒரு கிராமத்தின் விட் டாத்தியான வாழ்விலிருந்து இந்த அனெக்ஸ் சீவியத்திற்குள் புகுந்திருந்தவளுக்கு, வீட்டில் எங்காவது ஒரு பசுமையைக காண முடிந்தால் நன்றாயிருக் கும் என்று பட்டது. ஒரே யொரு பூச்சாடியாவது வைக்க முடிந்தால் அந்த இடம் முழுவ துமே தனிக்களை பெற்றுவிடும். வரவேற்பறை ஜன்னலருகில் காலை வேளைகளில் நல்ல வெய்யில் பிடிக்கிறது. ஜன்னல் கூட, ஒரு சிறிய பூச்சா டி வைக் கக்கூடிய அகலம்.
ராஜா ஒரு செடியைப்பற்றி
சொன்னான். பூக்கிறதில்லை, அலங்காரச் செடிதான். நல்ல
24
இப்போதைய
வடிவு. அவன், அலுவலகத்திற் கருகில் ஒரு பூஞ்செடி விற்பனை நிலையத்தில் கண்டிருக்கிறான். இலைகள் கடும் பச்சையில் வெல் வெற் மாதிரி. இடைக்கிடை வெள்ளைப் பொட்டுக்கள். அவன் அதை விபரித்த விதத்தில் கல்யாணியின் ஆவல் பன்மடங் காகிற்று.
ஒரு நல்ல பூச்சாடி வாங்கி விட முடியும். ஆனால் அத னோடு மண்ணும் வாங்க முடி யுமா என்பது ராஜாவுக்குத் தெரியவில்லை. இவர்களின் அனெக்ஸ் இருக்கிற காணி முழு வதுமே நில ந் தெரி யா ம ல் சீமேந்து பூசி வைத்திருக்கிறார் கள் வீட்டுக்காரர்கள்.
மோகன் வீட்டிலை கேட் டுப்பாத்தா என்ன?’’
* எப்பிடிக் கேட்கிறது? . மோகனும் பிறகு தன்ர வீட்டுச் சொந்தக்காரரைத்தானே கேட்க வேணும்?"
மண்தான் பிரச்சனையாயி ருந்தது. அது மட்டும் கிடைத் திருக்குமென்றால், இரண்டு கிழமைக்கு முந்தியே செடி வீட் டுக்கு வந்திருக்கும்.
F இன்றைக்கு ராஜாஅலுவலகத் திலிருந்து வந்தபோதே ஒரு திட் டத்துடன்தான் வந்திருந்தான்.
t மோகனுக்கும் அவன் மனைவி பிள்ளைகளுக்கும் இவர் க ளைக் கண்டது சந்தோஷமாயி
தாயகம் 3)

ருந்தது. இரவு சாப்பிட்டுவிட் டுப் போகலாமென்று வற்புறுத் தினார்கள்"
* இன்னொருநாள் வாறம் கடைகள் பூட்ட முதல் கொஞ் சும் ஷொப்பிங் செய்ய வேண் டியுமிருக்கு."
சொல்லிக் கொண்டு புறப் பட்டபோது இருட்டத்தொடங் தியிருந்தது. மெல்ல நடந்தார் கள்.
தார் போடாத uDGår ஒழுங்கை, வழமைபோல, ஆள ரவமின்றி அமைதியாய்க் கிடந் 凸gj·
"அந்தத் தூணடியிலை தான். '' , ராஜா காடடி னான்
நல்ல மண். விளக்குந் தள்ளியிருக்கு " நெருங் கி னார்கள்.
* "பின்னுக்கு ஆரும் வருகி னமா பாரும். முன்னாலை ஒருத்தருமில்லை. ’’
* பின்னாலு மில்லை.", பார்த்துவிட்டு, கூடைக்குள்ளி ருந்த பொலித்தீன் பைகளையும் SPGB l. s GØopulu பேணியையும் எடுத்தாள் கல்யாணி,
பேணியைக் கணவனிடம் கொடுத்தாள்.
**ஷ்ஷ். ஒரு சைக்கிள்.'"
விளக்கில்லாத ஒரு சைக்கிள் அவர்களை நெருங்கி வந்தது. ராஜா, குனிந்து, ளைச் சரிப்படுத்துகிற பாவனை காட்டினான். சைக்கிள் தாண்
tý.
சரி. ". அவன் சொன்ன போது, கவ்யாணிக்கு இதயம் Lillu-55g:
காலணிக
குனிந்த குனியி "חgחת லேயே மண்ணை விறுவிறென்று வறுகத் தொடங்கினான். கல் யாணி பையொன்றை விரித்துத்
தயாராய் அருகில் பிடித்துக் கொண்டாள்.
ஒன்று . இரண்டு . மூன்று so fift g)...
*"இன்னுமொன்று" என் றான், ராஜா.
* 'இன்னொரு  ைச க் கி ஸ் பின்னாலை ? ? . பரபரத்துக்
கல்யாணி எச்சரித்தாள்.
ராஜா சட்டென்று எழும் பித் திரும்பிப் பார்த்தான்.
அது தூர வருகுது மீண்டுங் குனிந்து, குவிந்திருந் ததை அள்ளிப் பையில் போட்
l fr GiT.
*" போதும், வாங்கோ...' கல்யாணி அந்தரப்பட்டாள்.
ராஜா நிமிர்ந்து காலால் நிலத்தை மட்டம் பண்ணினான்
"போவம் , " என்றான்.
* .அவசரப்படாம అU தலா நடவும் ’’ -
பின்னால் வந்த சைககிள் அவர்களை நெருங்கித் தாண் டிப் போனது. கல்யாணி பெரு மூச்சு விட்டாள்.
ராஜா, அவளிடம் இருந்த பைகளை வாங்கி ஒழுங்காக மடித்துத் துடைத்து, கூடைக் குள் வைத்தான்.
வைச்சிரும் ." யைக் கொடுத்துவிட்டுக் ளைத் துடைத்தான்.
“ ‘பூச்சாடிக் கடை பூட்ட முதல் போய்ச்சேர வேணும்.'
$. ଦୈd L. --
მშ)ტffნტჭ;
" "ஒமோம்.' கல்யாணி.
என்றாள்,
女

Page 15
ஒரு பாவையின் வீடு 1879-ம் ஆண்டு 1998-ம் ஆண்டில்
- ஓர் அபிப்பிராயம்
- க. ரதீதரன் -
"ஒரு பாவையின் வீடு" என்ற நாடகம் 16. 06, 1998 முதல் 26. 07. 1998 வரை நான்கு தடவைகள், இரண்டு இடங்களில் மேடையிடப்பட்டது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்தில் மூன்று தடவைகளும்; கலையரசு சொர்ணலிங்கத்தின் நினை வாக மானிப்பாயில் நாற்சார் வீட்டில் ("எந்தையும் தாயும்" போல) ஒரு தடவையும் மேடையேற்றப்பட்டது. இதில் மூன்று தடவைகள் பிரவேசம் அறவிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.
நாட்டு நிலைமை ஒன்றரை மணித்தியாலங்களை தின மும் ஒத்திகைக்கு ஒத்துழைக்க, 92 நாட்கள் ஒத்திகை நடந்த தோடு ஒரு "அபிப்பிராய ஆற்றுகை"யாக இடையிலும் செய்யப் பட்டது. அதற்கு காரணம் இப்பெரிய படைப்பின் மீது நம் பிக்கையீனம் தோன்றியதேயாகும். முதலாவது ஆற்றுகை பார் வையாளர் (இதில் மாணவர்களே அதிகம்) முன் மேடையேறிய பின் ஈனம் மறைந்து நம்பிக்கை தோன்றியது. அதாவது சாதா ரண அனேக பார்வையாளருக்கு நாடகம் திருப்தி கொடுத்தி ருந்தது. இந்நாடகத்தை மேலும் பூரணத்தை (பரிபூரணத்தை அல்ல) நோக்கி நகர்த்துவதில் சில நடைமுறை இடர்கள் இருந் தன. 1. தேர்ச்சிமிக்க நடிகரின்மை 2. யதார்த்த நடிப்பு புதிய தாய் இருந்தமை 3. குறித்த கட்டத்திற்கு மேல் நகர்த்த ஏற்ற வளவசதியீனம் இருந்தமை 4, 1879 ல் இருந்த நேர அளவு 1998 இல் சுருங்கி இருந்தமை (இதில் 34 மணித்தியால ஆற் றுன்க 24 மணித்தியாலமாக சுருக்கப்பட்டது) இந்நாடக ஆற் றுகையையும் பார்வையாளரையும் பற்றி சுருக்கமாய் கீழ்வரு மாறு குறிப்பிட முடியும் .
சினிமாத்தனமான கண்களோடு இருந்த பார்வை யாளர் சிலர் : திரை திறந்து நோறா எனும் பாத்திரம் மேடைக்கு வந்து தன் குளிரங்கியை கழற்றும்போது பார்வை யாளர் ஆரவாரித்தனர்; குறிப்பாய் உயர்தர மாணவர்கள், சாதாரண வசனங்களுக்கு இரட்டை அர்த்தம் பூசி சிரித்தனர்
26 தாயகம் 36

'இதுதான் இனிமாத்தன்மான கண்கள். புதிய இரசனை மட்டத் துடன் ஒரு சந்ததி மாறி வந்ததன் விளைவாக அடுத்த ஆற்று கையில் பார்ப்போர் சிலரின் இரசனை மட்டம் முறைகேடாக மேற்கிளம்பாது இருக்க கண்காணிப்பாளரும் கூட நியமிக்கப்பட் டிருந்தனர். கதையோட்டம், எதிர்பார்க்கை, ஒரு ஆட்டம், மனித மெய்யியல் என்பன பார்வையாளர் பலரை மடக்ை வைத்திருந்தது.
கதையின் வீச்சைக் காட்டும் நடிப்பு - எடுத்த எடுப் பிலேயே உணர்ச்சியை புலப்படுத்தி விடும் நடிப்பு முறைமைக்கு மாறாக இது இருந்தது. இங்கு படிப்படியான வளர்ச்சியே இருந்தது. எந்த வரையறைக்கு முட்படாத நோறா எனும் பாத் திரமேற்ற அருட்செல்வியின் நடிப்பு, யதார்த்த வாதத்தின் பூ னத்தை நோக்கி நகர்ந்ததைக் காண முடிந்தது. கிறிஸ்ரீனா (ரஞ்சிதமலர்) பாத்திர நடிப்பு, இயல்பான சுபாவ வெளிப் பாடாய் இருப்பினும் யதார்த்ததுடன் ஒட்டியது. இப்சனின் ஆக்க முறைமையிலேயே மிகைப்பாடாய் இருக்கும் ராங்க் (தியா கலிங்கம்) பாத்திரம் நடிப்பின் இன்னோர் தளத்தில் சுவை பிடிப்போடு நின்றது. குறோக்ஸ்ரட் (தேவானந்) பாத்திரம் சற்று ஒனிமாவின் வில்லத்தனம தட்டும்படி நின்றாலும் பார்வை யாளர் விரும்பி இரசித்தனர். கெல்மர் (றெஜினோல்ட்) பாத்தி ரம் அனேக பங்கு தனிப்பட்ட முறையில் முயற்சியுடன் யதார்த்த நெறிக்கு மாறிய போதும் இறுதிக் காட்சியில் ஏற்ற அளவிற்கு போக முடியாதிருந்தது. மானிப்பாயில் நாற்சார் வீட்டில் <鹦血 றுகையிட்ட போது "மேடை யதார்த்தம் வாழ்வு யதார்த்தத்தை நெருங்கி இருந்தது.
உரையாடலின் மொழிச்சிக்கல் :- ஹென்றிக் இப்சனின் A Dol's House" என்ற ஆங்கில நாடகத்தை அதே பிரமாணத் தில், பொருட் செறிவு பிறழாமல் "ஒரு பாவையின் வீடு" என குழந்தை மி சண்முகலிங்கம் மொழி பெயர்த்தார். ஆங்கிலம் தமிழாகும் போது இருக்கும் சிக்கல் பார்வையாளரின் செவிப்புல புரிதலில் இருந்ததை பலர் சுட்டிக் காட்டினர். (இதில் ஒத்திகை யில் நானும் நின்றமையால் அந்த நிலைப்பாடு எனக்கில்லை) இப்சனின் வசனங்கள் கட்டிறுக்கம் வாய்ந்ததோடு நிரூபிக்கப் பட்டது போன்ற தத்துவார்த்த உள்நோக்கம் உடையவை; கதையோட்டமும் அது தருகிற அனுபவத்தை புரிதலும் உரை யாடல்கள் மூலமாக நிகழ்வதால், சீரிய மொழி நடையை சற்று ப்ண்பாட்டு தளத்திற்கு இறக்கலாமா என்பதை ஆராய வேண்டும்.
தாயகம் 36 27

Page 16
விதானிப்புக்களுடன் வெளியும், அசைவுடன் நேரமும் :- மெல்லிய ஒளிக்கீற்றுடன் திரைதிறந்ததும், ஒழுங் கமைவான மேடை பொருட்களும், திட்டமிடப்பட்ட அசைவுக ளும், இருளில் மெழுகுதிரிக்குவியலின் காட்சியும் விதம், விதமான பாத்திரவரவுகளும் - ஈர்ப்பும் ! கவர்ச்சியும் அழகும் கொடுத்தன. யதார்த்தபாங்கில் காட்சியமைப்பு முக்கியம் எனினும் வளவச யீனம், வெளியை மொட்டைப்படுத்தி வைத்திருந்தது. திட்ட மிடல் குறைந்த ஒளியமைப்பு யதார்த்த இரசிப்பை தடைப் படுத்தியது. ஒட்டு மொத்தமான பாத்திர அசைவில் தோன்றும் முழுமை இடையிடையே தொய்வுகள் இருந்தன. இதற்குஅசை வில் நேர இறுக்கம் தேவைப்படுகிறது.
தமிழ் சமூகத்துள் மேற்கத்தய முறைமை : அச்சொட்டான மொழி பெயர்ப்பு, வேட உடை, இசை, ஆட் டம், உடலசைவு என்பவற்றில் மேற்கத்தய முறைமை ஓரளவு தழுவல் செய்யப்பட்டது. அதனை தமிழ்ப்பார்ப்போர் ஏற்ற போதும் நாடகத்தின் உள்ளடக்க வாயிலாக வெளிப்படும் முடி வில் பார்ப்போர் சிலர் முரண்பட்டு நின்றனர். அதாவது கன வன் மனைவியை விட்டு பிரிந்து செல்வதை ஏற்போரும் ஏற்கா தோரும் என இரு பகுதிகளாய் விவாதம் நடந்தது. அதேவேளை இணைகின்ற கிறிஸ்ரீணாவையும் குறோக்ஸ்ரட்டையும் இளைஞர் மட்டம் வரவேற்றனர். மேற்கத்தைய "பிரிதலை மேற்கத்தைய நிலையில் மட்டும் ஏற்கலாமே தவிர நமது பண்பாட்டிற்கு தேவை இல்லை என்று சிலர் வாதிட்டனர். எனினும் இதன் நெறியாளரான குழந்தை ம. சண்முகலிங்கம் கூறுவது யாதெனில் கெல்மரின் நடிப்பு மாற்றம்தான் கெல்மர் மீது பார்வையாளருக்கு பச்சாதாபம் வரக் காரணம் என்கின்றார்.
நாடக அரங்கக் கல்லூரி தயாரிப்பிற்காக குழந்தை ம. சண்முகலிங்கம் மொழி பெயர்த்து, நெறியாள்கை செய்ய, உதவிகளையும் ஆலோசனைகளையும் வைத்திய கலாநிதி சா.சிவயோகன் வழங்கி இருந்தார். முடிவாக சாதாரண அனேக பார்வையாளரிடத்தே நாடகம் இரசிப்பிற்குட்பட்டிருந் ததை அவதானிக்க முடிந்தது. O
அட்டைப்படிம் நன்றி, ' இன்னும் ஒரு காலடி "
路8 தாயகம் 38

 ெஆசிரியனாவது சாவதாவது
- சேகர்
“ஆசிரியன் இறந்து விட்டான்' என்ற ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு அமைப்பியலின் பேரால் ந ட ந் து வரும் "மறுவாசிப்பு அபத்தங்கள் இப்போதைக்கு ஒயப் போவதில்லை. அரைப் படிப்புப் பண்டிதர்களது பொழுதுபோக்குச் சமாசாரம் என்ற நிலையின்று அ மை ப் பி ய ல் இப்போதைக்கு விடுபடH போவதுமில்லை.
அமைப்பியல் அணுகுமுறை மூலம் எதையெல்லாமோ வெட்டிப் பிடுங்கி வேரோடு களைந்தெடுக்க முடியும் என்றவர் கள், இதுவரையில் எதையும் தமிழில் உருப்படியாகச் சாதிக்க வில்லை. விறைப்பான யதார்த்தவாதிகளது தத்துவ வறுமையை அமைப்பியல் தான் த கர்த்த தா என்றால், அந்தக் காரியம் அமைப்பியல் வரமுன் எப்போதோ நடந்துபோன ஒன்று. ஆயி னும், அமைப்பியல், சில புதிய சொற்பிரயோகங்களைக் கவர்ச் சிகரமான த க்கியுள்ளது. கட்டவிழ்த்தல் கட்டுடைத்தல், மறு கட்டமைத்தல் போன்ற பதங்களையெல்லாம் பிரயோகிப்பதன் மூலம் தம்மை விஷயம் தெரிந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளது. இதையொத்த போக்கு, முன்பு, அன்னியமாதல், இருத்தலியல் என்பன தொடர்பாகவும் இருந் தது இவையாவும் தெளிவான சிந்தனைக்குப் பிரதியீடுகளாக உள்ள அளவில், இவை தொடர்பான கோமாளித்தனங்களைப் பற்றிப் பேசாமல் இருப்பது சிரமம். ஆயினும் இச்சிறுகட்டுரை படைப்புக்களை ஆய்வதில் உள்ள அகச்சார்பு பற்றியது. படைப் புக்களைச் சரிவர அறியப் படைப்பாளியையும் படைப் பின் பகைப்புலத்தையும் அறிவது அவசியமானது தான். ஆயினும்: படைப்பாளியின் நோக்கமும் படைபின் பகைப்புலமும் பற்றி நமது அகச்சார்பான எண்ணங்கள் நம் ஆய்வில் ஆதி க்க ஞ் செலுத்த அனுமதிப்போமாயின் அதன் விளைவுகள் ஆபத்தான வையாயிருக்கும்.
இவ்வாறான அகச்சார்பைப் பற்றி நாம் இன்று நேற்றுத் தான் அறிந்திருக்கிறோம் என்பதில்லை. நமது மரபில் உள்ள பழமொழிகளிலும் நீதிக் கதைகளிலும் இதுபற்றிய ஞானம் உள்
தாயகம் 36 29

Page 17
ளது கன்னாற் காண்பதும் பொய்யே, காதாற் கேட்பதும் பொய்யே" என்ற முதுமொழியில் உள்ள உண்மை, அகச்சார் புடன் தொடர்புடையது தான். வாசிப்பின் பிரச்சனைகள் பற் றிய பல வேடிக்கைக் கதைகள் நம் மரபில் உண்டு. ஒரு சபைக்கு வந்த கர்வம்மிக்க பண்டிதரை ஒரு முரடன் வாதில் வென்? கதை சிலருக்கு நினைவிலிருக்கலாம் அந்தப் பண்டிதர் ஒரு ?ே டனுடன் வாதத்தில் இறங்கியதும், முதலில் கையில் ஒரு விர" உயர்த்திக் காட்டினார். முரடன் பதிலுக்கு இரண்டு விரல் களைக் காட்டப், பண்டிதர் மூன்று விரல்களைக் காட்டினாா. முரடன் நான்கு விரல்களைக் காட்டியதையடுத்துப் பண்பிசி ஐந்து விரல்களை விரித்ததும், முரட ன் கைவிரல்களைப் பொத்தி முஷ்டியை உயர்த்தியதும் பண்டிதர் தனது தோல்வியை ஒப்* கொண்டார். பண்டிதரிடம் அவரது சீடர்கள் விளக்கங் கேட்ட போது, அவர், "நான் ஒன்றே கடவுள் என்று ஒரு விரல் காட்ட, அவரோ சிவமும் சக்தியும் என்று இரண்டைக் காட்டி னார்; நான் மும்மூர்த்திகள் என்று மூன்று விரலாற் குறிக்க அவர் நால் வேதம் என்று நாலு விரல் காட்டினர் ஐந்து விரல் கள் காட்டிப் பஞ்ச பூதம் என்று நான் குறிக்க, அவரோ கையைப் பொத்திப் பிடித்து யாவும் பிரம்மம் என்று ஒரு போடு போட்டார். அந்த மகா ஞானியுடன் என்னால் வாதிக்க முடி யுமா? என்று விசனப்பட்டார். முரடனிடம் சபைத் தலைவி" அவனது விளக்கத்தைக் கேட்டபோது, "அவன் எனக்கு ஒரு அடி போடுவேன் என்றான். நான் திரும்ப இரண்டு அடி போடுவேன் என்றேன். அவன் பதிலுக்கு மூன்று அடி தருவேன் என்றான் விடுவேனா நான். நாலு அடி கிடைக்கும் என்றேன். அவனும் விடாமல் ஐந்து அடி போடுவேன் என்றான். முஷ்டியை இறுக்கி முகத்தில் ஒரு குத்து விடுவேன் என்றேன். ஆள் பயந்தே போய் விட்டான்" என்று விளக்கமளித்தான்.
இத்தன்மையான பல நீதிக் கதைகள் சீன மரபிலும் உண்டு; ஒரு நாள் ஒருவருடைய கோடரி தொலைந்து விட் டது. தொலைத்தவருக்கு அடுத்த வீட்டுப் பையன் மீது சந்தே கம், அவனது ஒவ்வொரு செயலையும் கூர்மையாகக் கவனித்துப் பார்த்தார். ஒவ்வொன்றுமே அவன் ஒரு திருடன் என அவருக்கு உறுதிப்படுத்தின. சில நாட்களின் பின், கோடரி, கைத்தவறு தலாக வைத்த இடத்திற் காணப்பட்டது அதன் பின் அந்தப் பையனின் ஒவ்வொரு செயலுமே அவருக்குச் சிறுவனை நல்ல வனாகவே காட்டின.
உரையாடல்களின் போது சொற்கள் பல வேறு விதங் களிற் புரிந்து கொள்ளப்பட இடமுண்டு. எழுத்திற் காட்ட முடியாத சில மனநிலைகள், அங்கும் சொற்களை வேறுபட்ட
30 தாயகம் 36

முறைகளில் விக்ாங்கிக் கொள்ள இடமளிக்கின்றன: சொற் சிக் கனம் மிகுதியான கவிதை போன்ற ஆக்கங்களில் இப்பிரச்சினை
அதிகம். அதனாற் கட்டுரைகளில் மாறுபட்ட வாசிப்புக்கட்கு
இடமில்லை என்று கூறிவிட முடியாது ஆயினும் இத்தனை இடர்கட்கு மத்தியிலும் கூறுபவருக்கும் கேட்பவருக்குமிடையில் ஏதோ வகையில் வெற்றிகரமான முறையிற் கருத்துப் பரிமாறல் நிகழ்கிறது.
எவ்வளவு தெளிவாக எழுதப்பட்ட ஒரு படைப்பும், அதன்
கால இடச் சூழல்கட்கு வெளியே வாசிக்கப்படும் போது மூலத் தில் அது குறித்தவாறே விளங்கிக் கொள்ளப்படுவது கடினம்,
ஏனெனில், மொழி காலத்துடனும் இடத்துடனும் மாறுபடுல்
றது; சொற்களும் சொற் தொடர்களும் காலத்துடன் தமது பொருளில் மாறுபடுகின்றன. இதை ஏற்பதில் நமக்கு அதிகம் பிரச் சினைக்கு இடமில்லை. நம் உடனடியான சூழலிலேயே பிறரை
விளங்கிச் கொள்வதில் நமக்கு உள்ள பிரச்சினைகள் மொழியின்
ஒக்கலான தன்மையுடன் தொடர்புடையது. வாக்கியங்களைக் கட்டுடைத்தும் மறு கட்டமைப்புச் செய்தும் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது மிகுந்த ஐயத்துக்குரியது. ஏனெனில், வாசிப்பு என்பதில் உள்ள அகச்சார்பான பண்பு இதற்குத் தடையாகவே இருக்கும்.
ஒரு படைப்பின் ஒட்டு மொத்தமான தன்மை பற்றிய அனுமானம் இல்லாமல் அதை எவரும் ஆராய்வது அருமை, நமது ஆய்வு அந்த அனுமானத்துடன் முரண்படும் போது, நாம் நமது ஆய்வின் முடிவுகளையும் அதன் அடிப்படையையும் கேள்விக்கு உட்படுத்த அவசியமாகிறது. மனித அறிவு என்றுமே பூரணமான தல்ல. ஆயினும் அதன் வரையறைகட்குட்பட்டு, ஒருவர் அறிய விரும்புவதைத் தனது தேவைகட்கேற்ப அறியவும் பயன்படுத்தவும் இடமுண்டு.
மனித அறிவுக்கான தேடுதல் வெறுமனே அறிவுக்கான ஒன்றல்ல, அது மனித வாழ்வுடனும் மனிதரது தேவைகளுட னும் நெருக்கமாக உறவுடையது. மாக்ஸிய அணுகுமுறையில் இது மிகவும் வலியுறுத்தப்படுகிறது. "மெய்யியலாளர்கள் இது காறும் பல்வேறு விதங்களில் உலகை விளக்கியுள்ளார்கள். முக் கியமானது ஏதெனின் உலகை மாற்றுவதே" இந்த நிலைப்பாடு காரணமாகவே, மாக்ஸிய உலகநோக்கும் அறிவியலும், இலக்கி யம் போன்ற பல துறைகளிலும் சமுதாயப் பார்வையை வலியு றுத்தி வந்துள்ளன.
... f. ,
தாயகம் 36 母应一

Page 18
மாக்வியத்தினுள்ளும் விறைப்பான பார்வைகள் சாத்தியம் இதை மிகவும் வன்மையாகக் கண்டித்தவர் மாஒ சேதுங். அதனா லேயே, அவரால் மாக்ஸியத்தைப் புரட்சிகர நடைமுறைகளுடன் மேலும் நெருக்கமாகப் பிணைக்கமுடிந்தது. விறைப்பான பார் வைகளாற் தம்மைச் சிறைப்படுத்திக் கொண்டவர்கள், தாம் கற் பனை செய்த உலகும் யதார்த்தமும் முரண்படும் போது, அதிர்ச்சி யுறுகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் புதிய மிரட்டற்காரர் கள் முன் ஒடுங்கி நிற்க நேருகிறது. அண்மையில், மாக்ஸியவாதி கள் எனத் தம்மைக் கருதிக் கொள்ளும் சிலர், அமைப்பியல் வாதிகளது பரிபாஷையில் தமது வாதங்களை முன் வைக்குமாறு தம்மை நிர்ப்பந்தித்துக் கொண்டுள்ளதும் இதன் விளைவானது தான். தமக்கு அமைப்பியல் தெரியாது என்று பிறர் நினைத் தால், தம்மை ஒருவேளை அலட்சியம் செய்வார்களோ என இவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே, அமைப்பியல்வாதப் பண்டி தர்களையும் அமைப்பியல்வாத அறிவில் மிஞ்சியவர்களாகத் தம் மைக் காட்டிக் கொள்ள, படாத பாடு படுகிறார்கள். ஆயினும் இத்தனைக்கும் மேலே இவர்களது ஆய்வுகளில் எல்லாம், எழுதி uari uLumr rif 6T6öTLu 6Ö?,5 வைத்தே எழுத்தை மதிப்பிடும் நிலை மையை நாம் காணலாம். ஒரு குறிப்பிட்ட கருத்து எந்த முகா மிலிருந்து வருகிறது என்பதை வைத்தே அதன் "உண்மையான நோக்கத்தை ஆராய முற்படுகிற ஒருவர். ஒருபடைப்பைக் கட்டு 60一ég மறுகட்டமைப்புச் செய்யும் போது, தன் அகச் சார்புக்கு ஏற்பவே அதைச் செய்கிறார் என்பதை நாம் மறக்கலாகாது.
அமைப்பியல் என்பது அண்மைவரை நாமறிந்தவற்றினின்று வித்தியாசமான ஆய்வுமுறை என்பது உண்மை ஆயினும், அது தவறுகட்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. மிகையாக எளிமைப் படுத் தப்பட்ட அமைப்பியல் அணுகுமுறையாயினும் வேண்டுமென்றே ஒக்கலானதாக்கப்பட்ட அணுகுமுறையாயினும், ஆய்வாள ரின் அக நிலைமை எவ்வாறு கடக்க முடியும் என்ற கேள்வி முக் இானது, இதுவரை தமிழகத்திலும் (அண்மையிலும்) ஈழத் திலும் அமைப்பியலின் பேரால் நிகழ்ந்து வரும் ஆய்வுகள், மேலை நாட்டுச்சூழலில் எப்போதோ எழுந்து எப்போதோ விழுந்து போன ஒரு ஆய்வு முறையின் மலிவுப்பதிப்புக்களாகவே உள்ளன என் பது வருத்தத்துக்குரிய உண்மை.
முதலில் எல்லாரும் விளங்கிக்கொள்ளக் கூடிய மொழியில் வர்கள் எழுதவும் பேசவும் பழக வேண்டும். ஆய்வுகளின் நோக்கம் புதிய தகவல்களை வழங்குவதே யொழியப் புரியக்கூடி யதெல்லாம் புரியாத விதமாக குழப்பியடிப்பதில்லை. அமைப்பி
92 தாயகம் 36

யல் என்பது தமது பாண்டித்தியத்தை பலருக்குக் காட்டும் அளவு கோலாகக் கருதுகிறவர்களால் அமைப்பியலும் விருத்தி பெறப் போவதில்லை அதன் மூலம் கிடைக்கக்கூடிய சொற்ப பயனும் கிட்டப்போவதில்லை.
இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதி தந்த மனித விடு தலைக்கான நம்பிக்கைகள் இதே நூற்றாண்டின் முடிவில் ஓரளவு தளர்ந்து போகிற நிலைமைகளில் மனித வரலாற்றில் முற்போக்குச் சக்திகளது வளர்ச்சி என்றுமே நேர் கோட்டில் நிகழ்ந்ததில்லை என்ற உண்மையை நாம் மனதில் இருத்துவது நல்லது. இதை உணர்ந்த மாக்ஸியவாதிகளுக்கு, மக்களே வர லாற்றின் பிரதான உந்து சக்தி என்பதில் ஐயமில்லை. அவர் கள் பிற்போக்கின் தற்காலிக எழுச்சியின் முன்பு நடுங்க அவசி யமுமில்லை தகவல்களினின்று உண்மைகளை அறியவும் குழப்பத் தினின்று தெளிவைப் பெறவும் அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். அமைப்பியலைப் பற்றி அறிவதும் அதனைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை நிர்ணயிப்பதும் ற்றி மாக்ஸியவாதிகள் அசட்டையாக இருக்க அவசியமில்லை. அதே வேளை, அமைப்பியலை ஒரு சர்வரோக நிவாரணியாகக் காடடும் வித்தைக்காரர்களது புரளிகளுக்கு முன் மயங்குவதற் கான ஒரு நியாயமும் இல்லை.
தேடல்
இருளில் ஒரு கிழவி எதையோ தேடிக்கொண்டிருப் பதைப் பார்த்து சிலர் கேட்கிறார்கள் *எதையாவது தொலைத்து விட்டாயா?* ‘சாவியைத் தொலைத்து விட்டு சாயங்காலத்தி லிருந்து தேடுகிறேன்" ‘எங்கே தொலைத்தாய்" *தெரியவில்லை வீட்டுக்குள் போட்டிருக்கலாம்" *பிறகேன் இங்கு தேடுகிறாய்? ‘உள்ளே இருட்டாகி இருக்கிறது. விளக்சில் எண் ணெயும் இல்லை. தெருவிளக்கில்தான் நன்றாகப் பார்க்க முடிகிறது!..?
-நாட்டுப்புறக்கதை
r *Nyerup
தாயகம் 36 - 33

Page 19
ஆற்றுவோர் - பார்ப்போர் உறவாடும் அரங்கு
- ஓர் அலசல்
- தே. தேவானந்
விரிசையாக பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் ஓர் ஊர் பாங்கில் வருகின்றன. முன்னால் வரும் சைக்கிளில் ஒரு பெரிய தாளவாத்தியம் ஒன்றை வைத்து அடித்துக் கொண்டு வரும் ஒருவர். அவர் பின்னால் வருபவர்கள் நீலம், பச்சை, இவப்பு, மஞ்சள் எனப்பல நிறங்களில் உடையணிந்துள்ளார்கள். தலைப்பாகை அணிந்துள்ளார்கள் சேலைகள் அவர்களின் உட இல் பல வர்ணங்களில் காணப்படுகின்றன. ஒரு லயக் கோலத் தில் (ஆ ஆ -) சத்தம் எழுப்பிக்கொண்டு வருகின்றார்கள். ஆம். இவர்கள் யார்? சமூகத்தின் மீது விருப்புக் கொண்ட சிலர். சமூகத்தில் விருப்புக் கொண்டவர்கள் ஏன் இப்படிப் போகி றார்கள்? அவர்கள் படையெடுத்துப் போகிறார்கள் ஏன் படை யெடுக்கிறார்கள்? மக்களை உயிரூட்டி, துடிப்போடு செயற்பட தூண்டுவதற்காக. அப்படியானால் அவர்களின் ஆயுதம் என்ன? அரங்கு படச்சட்டத்தில் ப்ோதாமை காரணமாக, அதனு டைய சில மட்டுப்பாடு காரணமாக மக்கள் இருக்கும் இடங் களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் சென்று அடைந்த இடம் ஓர் இடம்பெயர்ந்த முகாம். வரிசையாக மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட வீடு களில் வாழ்வு மறுக்கப் பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக் கும் இவர்களிடம், சைக்கிள்களை ஒரு கரையாக வைத்துப் பூட்டி விட்டு சென்றார்கள். இவர்களின் உடை, வேடமுகம், சத்தங் கள், தாளங்கள் என்பவற்றைப் பார்த்து ஓடிவந்தவர்களில் முத லில் வந்தவர்கள் சிறுவர்கள் தான். வந்தவர்களில் சிலர் அவர் களுக்கு விளையாட்டு காட்டுகிறார்கள். தங்களோடு சேர்ந்து ஒரு லயத்திற்கு சுற்றச் சொல்லுகிறார்கள். சிறுவர்கள் கத்து கிறார்கள். தாளத்திற்கு ஏற்ப கைதட்டுகிறார்கள். தாளவாத் திய இசைக்கேற்ப ஆடுகிறார்கள் இங்கு நிகழ்ச்சியொன்று நடப்
34 தாயகம் 37

பதற்கான இடம் / களம் தயாராகின்றது. அங்கு இருக்கும் சிறு வர்கூட்டத்தோடு அவர்கள் இருக்கும் முகாமைச் சுற்றி வருகி றார்கள். இவ்வேளை சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்கள் சிலதை சொல்லிக்கொடுக்க பாடுகிறார்கள். தயங்கி நின்ற சிறுவர்கள் படிப் படியாக இணைந்து கொள்கிறார்கள். துள்ளிப் பாய்ந்து து' போடு முகாமை வலம் வருகிறார்கள். தாள வாத்தியத்தோடு நிற்பவரும் பாடவும், ஆடவும் கூடிய சிலர் இப்படி செய்து கொண்டிருக்க, ஏனையோர் ஒவ்வொரு குடிசையாகச் சென்று "நாங்கள் ஒரு நிகழ்ச்சி செய்யப்போகிறோம் வாரீங்களா' என்று கேட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களு டன் இயல்பாக பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இருந்து (குடிசையில் வசிப்போர்) கேட்கப்படும் ஒரே கேள்வி நீங்கள் யார்? என்பது தான். அதற்கு விளக்கம் கொடுத்து கதைக்க வாரம்பித்தால், சில நடிகர் ஆற்றுகை ஆரம்பித்த நீண்ட நேரத் தின் பின்னும் வந்து இணைந்து கொள்வார்கள். இவ்வாறு கதைப்பதன் ஊடாக அவர்கள் மனங்களில் ஆற்றுவோர் மீது நம்பிக்கை ஏற்படுவதை அவதானிக்க முடிந்தது. ஒரு முதியவ ரின் அருகில் சென்று எப்படி ஐயா இருக்கிறீர்கள்’ என்று ஒரு நடிகர் கேட்டு அருகில் அமருகிறார். பெரியவர் பூரித்துப் போய் தனது கதைகளை, கஷ்டங்களை சொல்லிக் கொண்டே போகிறார். இந்த இடத்தில் ஒரு கவுன் சிலர் ஆகிறார். பெரி யவர் மனவமைதியடைகிறார். இந்த மக்களின் பிரச்சினையே இது தான். ஒதுக்கப்பட்டவர்களாக, யாராலும் அணைக்கப்பட-ா தவர்களாக, யாருமே அன்பாக பேசாதவர்களாக காணப்படு கின்றது தான். அந்த விடயத்தை இனம் கண்டு, அங்குள்ள வேறும் பல பிரச்சினைகளை இனங்கண்டு, மக்களை வலுவூட் டவே இந்த கலாச்சார அணியினர் வந்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுசினங் கள் சிலவற்றின் அனுசரனையுடன், மானிப்பாய் பகுதியில் காணப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 1994 - 95 காலப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட " அரங்க நடவடிக்கையை பார்த்து பங்குபற்றி பெற்ற அனுபவத்தின் அடியாகவே இதனைக் கூற முற்படுகின்றேன்.
இது ஒரு கலாச்சார படையணியின் அரங்க நடவடிக்கை யென” இதன் உயிரூட்டுனரான திரு. சிதம்பரநாதன் இது பற் றிக் குறிப்பிடுகின்றார்.
படையணியென்றால் என்ன என்பதற்கு அவர் என்ன விளக்கத்தை கொடுக்க முற்படுகிறாரோ தெரியாது. நான் அதன்
தாயகம் 36 35

Page 20
விளக்கத்தை இப்படித்தான் கொடுக்க முயல்கிறேன். ஒரு படை யணி தாக்குதலுக்காக செல்ல முன் தனது "உளவுப் படையை' அனுப்பி நிலைமையை அறியும். பின் அந்த நிலைமை ஃபி தனது படையணிக்கு விளக்கும். அதில் இருந்து எப்படி தாக்க லாம் என்ற திட்டம் உதிக்கும் * அதன்படி தாக்கப் போவார்கள்.
● இங்கும் அதே நடைமுறைதான். ஆற்றுகைக்கு முன் மூன்று நான்கு பேர் அந்த இடத்திற்குச் சென்று பல்வேறு தரப்பட்ட
**ளுடனும் உரையாடி தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கேற்ப அரங்க வடிவத்தை திட்டமிட்டு ஆற்றுகை செய்ய வருவார்கள். இங்கு விடயம் இப்பகுதியில் வேலை செய்த அரசசார்பற்ற நிறுவனத்தால் (TRRO I SCF) கொடுக்கப்பட்டது. அதாவது இம்முகாம்களில் இருக்கும் மக் கள் சுகாதார சீர்கேடாக வாழ்கிறார்கள். மலசலகூடம் அமைத் துக் கொடுத்தாலும் அதை ஒழுங்காகப் பாவிக்கிறார்கள் இல்லை’ இதனால் பல நோய் உள் பாவுகின்றன. இதனைத் தடுக்க அவர் *ள் அது பற்றிய உணர்வைப் பெறக்கூடியதாக ஆக்க வேண்டும்.
இதற்கான ஒரு அரங்க வடிவத்தோடு வந்தவர்கள் முன்பே திட்டமிட்டதன் பிரகாரம் எல்லோரையும் ஓர் இடத் திற்கு அழைத்து வந்ததன் பின் ஆற்றுகையின் மையத்துக்கு செல்லுவார்கள். இதற்கிடையில் சிறுவர்களில் ஆரம்பித்த பங்கு கொள்ளல் தன்மை பெரியவர்களிலும் தொற்றிவிடும். பெரியவர் களும் சிறியவர்களின் பாடல்களைப் பாடுவார்கள், ஆடுவார் *ள் *ைதட்டுவார்கள், இந்தப் பங்குபற்றலுக்கு ஏற்கனவே முன்னம் வலம்வரும்போது பரீட்சயமானதும் உதவும். அத் தோடு ஒருவர் பாடல்களை சொல்லிக்கொடுப்பவராக நடுவில் நிற்பார், அவரோடு சிலவேளைகளில் தாளவாத்தியக்காரரும் நிற்பார். ஏனைய எல்லோரும் பார்ப்பவர்களோடு இருந்தும், நின்றும் கலந்துவிடுவர் சிறுவர்களை அணைத்தபடியும் சேர்ந்து பாடியும் ஆடியும் நிற்பர். இது ஏனையோரைப் பங்குகொள்ளத் தூண்டுகிறது இந்த இடங்கள் பார்வையாளரைப் பொறுத்து வெவ்வேறு சூழலைக் கொடுக்கும். உதாரணமாக ஒருமுகாமில் தலைவர் என்று சொல்லப்படுபவரின் இறுக்கமான கட்டுப்பாடு காரணமாக சிறுவர்களையும் பெரியவர்களையும் தயார் நிலைக்கு கொண்டுவருவது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் தலைவர் ஆடு தல், பாடுதலை அநாகரிகமாக கருதுபவர். இப்படியான சூழ் நிலையில் நடிகர்கள் கூடியளவு வீரியமான சக்தியை செலவிட வேண்டி இருக்கும். தமது முயற்சியை கைவிடாது தொடர்ந்து செய்ய வேண்டும். தளர்வு மனப்பாங்கை நீக்கி புதிய உற்சா கத்தை பெற வேண்டும். பார்வையாளரின் துலக்கங்கள் கணம்,
36 தாயகம் 3

கணம் வரும் என்று நம்பி அவர்களின் இறுககங்களை உடைக்க வேண்டும். அவ்வாறு உடைத்து விடுவதற்சாக நீண்ட நேரங் களை செலவிட வேண்டும். இதில் ஒரு நடிகன் பெண் போன்று நடந்து சென்று கதைப் பார். அவரைப்பற்றி பார்வையாளர் மத் தியில் இருப்பவர் ஏதாவது கூறுவர். முகமூடி அணிந்த இருவர் இலம்படி வித்தை காட்டுவர். ஒருவர் தோற்று விட்டால், ஒடிப்போய் பார்வையாளர் மத்தியில் ஒளிந்து கொள்வார். பார்வையாளர் அவரை பாதுகாப்பார். சில வேளைகளில் இறு வர்கள் மத்தியில் சென்றால் அவர்கள் தங்களிடம் வரவேண் டாம் என்று கத்துவார்கள். அவர் எதிரில் உள்ளவர்களிடம் செல்வார். தன்னைக் கலைத்தவர் பற்றி சொல்லுவார். அவர் களைத் தூண்டி விடுவார் இநபகுதியினருக்கும் இடையில் வாக்கு வாதம் நடைபெறும். இப்படியான பலவகைப்பட்ட சம்பவங்கள் ஊடாக பார்வையாளர் இறுக்கங்கள் உடைக்கப்படும்.
இதற்கு ஆற்றல் உள்ள கலைஞர்கள் தேவை. அதற்காக இந்த மக்களை நேசிக்காத கலைஞர்கள் தேவை என்பதல்ல. இதில் பங்குபற்றும் நடிகர் மண்ணில் விழுந்து புரளவும், மக் களை அணைக்கவும், தனது உடலை விகாரப்படுத்தவும் தயா ராக இருக்க வேண்டும். நடிகர்கள் எந்த நேரமும் துடிப்பாகவும், கற்பல வளம் நிறைந்தவர்களாகவும், கொடுத்துவாங்கி மையப்படுத்தவேண்டிய நிகழ்வுகளை மையப்படுத்தி செயற்படும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த நிகழ்வின் ஊடாக நன்மை கிடைக்கும் என்பதை முற்றுமுழுதாக நம்ப வேண்டும். தனது செயலில் நம்பிக்கையில்லாத எந்த நடிகனும் இந்த நடவடிக்கையில் ஈடுபட முடியாது. 'தன்னை இழக்க. தயாராக இருக்கும் நடிகர்களே சாதனைகளைப் படைப்பார்கள்,
இந்த சுகாதாரப் பிரச்சினைக்கான மூல ஆற்றுகை இங்கு சைஆகிள்களில் தாளவாத்தியத்தை தட்டிக்கொண்டு புறப் ப்டும் போதே ஆற்றுகை ஆரம்பித்துவிடுகிறது. "மூல ஆற்றுல்க, ஒரு முகாமில் புதிதளித்தல் மூலமாக உதித்தது. அங்கு இருந்த பிரச்சினைகள் வருமாறு;
1. குடிபோதையில் வருபவர்கள் வெளியான இடங்களில்
மலம் கழித்தல். m
2. \நெருக்கமாக இருக்கும் குடும்பங்கள் சண்டை பிடித்தல்.
3. கழிவு நீரை அயலவரை கவனியாது ஊற்றுதல்.
4. சிறுவர்கள் மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல்.
5. பொது இடத்தில் துப்புதல், வெற்றிலை போட்டு
துப்புதல்,
தாயகம் 36 37

Page 21
. . . இப்பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு இதன் உறு ரூட்டுனராக இருந்த திரு. சிதம்பரநாதன் வெறிகாரனாக வரு கிறார் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது ஏனைய pilg. கர்களுக்குத் தெரியாது. அவர்கள் எல்லோரும் அவரை தங்கள் அசைவின் ஊடாக மையப்படுத்துகின்றனர். இங்கு ஒரு விட யத்தைக் குறிப்பிட வேண்டும் வட்டவடிவில் மக்கள் குழ்ந்து இருக்க ஆற்றுகை நடைபெறும், ஒரு பக்கத்தில் தாளவாத்தியக் காரர் இருப்பார்கள் இவ்வாறு இருக்கும் போது நடிகர்கள் ஒவ் வொருவரும் ஒவ்வொரு பகுதியில் தமக்கென ஒரு Listriaoauurt ளர் குழுவை உருவாக்கி விடுவார்கள் சிவர்களுடன் ஆற்றுகையை பார்ப்பவராகவும், ஆற்றுவோராகவும் கலந்து கிடப்பார்கள் இந்த நடிகர்கள் மூலமாகவே ஆற்றுகை குழப்பத்தின் மத்தியில் ஒரு ஒழுங்குக்கு வரும். இவர்களே மையப்பகுதியை நோக்கி எல்லோரையும் திருப்பிவிடுவார்கள்.
இங்கு வெறியில் வருபவரை எல்லோரும் பார்க்கிறார்கள். அவர் ஏதோ பாடிக்கொண்டு எல்லா இடத்திலும் காறித்துப் பிக் கொண்டு வருவார். சிலவேளையில் பார்வையாளர் பக்கமும் துப்ப எத்தனிப்பார். அவ்வேளை அந்தப்பகுதி பார்ப்போ மத் தியில் இருக்கும் நடிகர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். உடனே பார்வையாளர் எல்லோரும் குடிகாரனுக்கு எதிராக திரும்பிவிடு வர் குடிகாரன் கேட்பார், நான் இதில் துப்பினா என்ன? நீங்க ளும் துப்பினனிங்கள்தானே? உடனே சிறு வர் க ள் சிலரிடம் இருந்து இல்லை நாங்கள் செய்கிறதில்லை என்று பதில் வரும்; குடிகாரன் பெரியவர்களை பார்த்து கேட்பார். சிலர் சங் கடப்படுவார்கள், சிலர் ஏனையோர் மீது குற்றம் சாட்டி தாங் கள் அப்படிச் செய்கிறதில்லை என்று சொல்வார்கள். ஒ. செய்தாலும் பிழையான அலுவல் நீர் செய்ய முடியாது என்று கூறுவார்கள். இதனைக் கேட்டுக் கொண்டு குடிகாரன் வயித் தைப் பிடித்துக்கொண்டு தெளிவார். பார்வையாளர் 26HL, IT, a வெளியே செல்ல எத்தனிப்பார் அதற்கிடையில் அவசரமாக வந்துவிட சரத்தை தூக்கி அந்த இடத்தில் இருப்பார். இந்த நேரம் பார்வையாளர் எல்லோரும் கத்துவார்கள். சிறுவர்கள் கலைப்பார்கள். சில வேளை மண்ணால் தூக்கி எறிவார்கள். இவர் அவசரத்தில் எழும்புவார். குடிகாரன் ஏற்கனவே கையில் கொண்டு வந்த பானையில், மலம்’ போன்று மஞ்சள் நிறத் தில் களிபோன்ற ஒன்றைக் கொண்டு வருவார், அதை தான் இருந்த இடத்தில் ஊத்திடுவார். பார்வையாளர் முகம் சுழிப் பார்கள். சீ சீ என்பார்கள், மணம் இல்லாமல் சிலர் மூக்கைப் பொத்துவார்கள். குடிகாரன் பார்வையாளர் ஊடாக வெளியில்
38 தாயகம் 36

செல்ல எத்தனிப்பார். பார்வையாளர் விடமாட்டார்கள். இவர் சண்டை பிடிப்பார் இவரது சட்டையை பிடித்து இழுத்து நடு வில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். மானிப்பாயில் அமைந் துள்ள "சச்சி முகாமில் வித்தியாசமான ஒரு அனுபவம் ஏற்பட் டது. குடிகாரன் தப்பி ஒடும்போது ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண் வாழைத்தடல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போடா உள்ளுக்கு போய் அள்ளடா அள்ளாமல் விட மாட் டம்" என்று வாழைத்தட லால் அடிக்கிறார். இதில் குடிகாரனாக செய்தவர் திரு. கிரிதரன். அவர் உணர்ச்சியோடு ஈடுபடும் ஒரு நடிகன். அவர் திருப்பிக் கேட்கிறார் "நீயாரடி அதைக் கேக்கி றத்துக்கு இங்க எல்லோரும் ஒழுங்காகவோ இருக்கிறியள் எல் லோரையும் கேட்கேலாது வந்துட்டா" என்று கூறிக்கொண்டு போக எத்தனிக்கிறார். பார்வையாளர் விடுவதாக இல்லை. நடு வில் கிடக்கும் மலத்தை அள்ளாமல்விடமாட்டோம் என்று நிக் கிறார்கள். நடிகர் கேட்கிறார். அப்ப எல்லோரையும் சொல்லச் சொல்லு இனிமேல் செய்யமாட்டோம் என்று இல்லாட்டி. நான் அள்ளமாட்டன் பார்வையாளர் எல்லோரும் கத்துகிறார்கள் "நாங்கள் செய்யமாட்டோம் பின்பு நடிகர் மண்வெட்டி கேட் கிறார். மண்வெட்டி ஒன்று கொண்டு வந்து கொடுக்கிறார்கள். மலத்தை எடுத்துக்கொண்டு எல்லோருமாகச் சென்று வெட் டித் தாக்கிறார்கள். கிணத்தடிக்கு அழைத்துக்கொண்டு Guitti Gas T கொடுத்து கைகழுவுகிறார்கள். எல்லே ரூமே பங்கு கொள்கிறார்கள். இறுதியில் எல்லோரும் சந்தோஷமாக கைதட்டி அவரிடமே ஒரு பாட்டுக்கேட்டு பாடி ஆடுகிறார்கள்.
இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஆடிப்பாடுவார்கள். அவ் வேளை "புழுதிப்படலம் ஒன்று மேலெழும் மனித மனங்களில் காணப்பட்ட புழுதிப்படலம் துடைக்கப்பட்டு தெளிவோடு இருப் * Tர்கள் ஆற்றுகை முடிவில் குழுக்கள் குழுக்களாக நி ன் று *விதிப்பார்கள். தங்கள் குடிசைக்கு வந்து தேநீர் குடிக்குமாறு கேட்பார்கள். திரும்ப வருமாறு அழைப்பார்கள். ஒ வ் வொ ரு இடத்திலும் குந்தியிருந்து கதைத்து நீண்டநேரத்தின் பி ன் பே புறப்படுவார்கள்.
இங்கு போதனை இருக்கவில்லை. அறிவுடையோரும் அறி வில்லாதவர்களும் இருக்கவில்லை. பார்வையாளருக்கும், பங்குபற் றுபவர்களுக்கும் இடையில் பணம் இருக்கவில்லை. எல்லாவற் துக்கும் மேலாக செயல் காணப்பட்டது. தெரிந்த வி-18°சி சேர்ந்து செய்ததன் ஊடாக உணர்ந்து கொண்டார்கள். இது தான் இந்த அரங்கின் சிறப்பு:
5ITLush 36 39

Page 22
இங்கு பார்வையாளர் பங்குகொள்ளல் என்பது அவர்கள் உடலை அசைத்து, பாடி ஆடுவதையா குறிக்கும். உடலை அசைக்காது, அவர்கள் மனதால் பங்குகொள்வது என்ன ? என்று பலர் கேட்கிறார்கள். அதற்கு நான் கூறும் பதில் எப்படி ஒரு பாடசாவைக்கு செயல்முறைக்கான ஆய்வு "கடம்" தேவையோ அப்படித்தான் பங்குகொள்ளலுக்கு ஆடுதலும், பாடுதலும், கத் துதலும் அவசியம். இதைவிட பல சர்ச்சைகள் எழுப்படபடுகின் றன. இதை ஒரு "அரங்கு" என்று சொல்லலாமா ? இ ங் கு அரங்கின் மூலகங்கள் பயன்படுத்தப்படுகின்றதே பன்றி இது ஒரு அரங்கு அல்ல என்று சிலர், இதைவிட இது ஒரு நாடகம் அல்ல இதில் அழகியல் இல்லை எனப்ப பிரச்சினைகள்.
இவற்றுக்கு விடையாக நான் இதைத்தான் சுறமுற்படுகின் றேன்; நாடகத்தில் எனவ கானப்பட வேண்டும்.
1. எழுத்துர ரீ. உணர்வு 3. நடிகன் 7. இயக்கம் 3. காண் பிடங்கள் 8. ஆரம்பம் - இடை-உச்சம் 4. இசை 9. >t[i]; 5. வார்த்தைகள் J (), i ffFri:31 GL J J FT GITrif
இவை அனைத்தும் இங்கு குறிப்பிட் - பங்குடற்றல் அரங்கில் உண்டு,
இங்கு எழுத்துரு நிச்சயமாக உண்டு. இதன் எழுத்துகு இரண்டு தளங்களில் காணப்படும்.
1. கலந்துரையாடல் மூலம் சில இயக்கங்கள், வசனங்கள்
என்பவற்றை வரையறுத்தல். இதில் முழு ஆற்றுகை பும் கானப்படமாட்ட து
ஆற்று: தொடர்பான எண்னத்தை பெற்றுக் கொண்டு. ஆற்று கை களத்தில் கற்பனையில் எழுதத் தயாராக இருத்தல்,
இவ்வாறு எழுத்துரு காணப்பட்டாலும், முற்றுமுழுதான ஒரு எழுத்துரு ஆற்றுகை மடிவில்தான் பெறப்படும் ஆகவே பங்கு கொள்ளல் அரங்கில் ஒரு put - Ir எழுத்துருவுடன் 势向 றுகை ஆரம்பமாகி ஆற்றுவோர், பார்ப்போர் சந்திப்பின் உணடாக பலர்ந்து விரிந்து ஆற்றுகை முடிவில் முழுமை பெறும்,
பல வர்ணங்களால் ஆக்கப்பட்ட வேட உடை பாத்திரத் திற்கு ஏற்ற வேடஉடை, உதாரணமாக குடிகாரன் சரம் சேட்
卓闻 தாயகம் 38

இல்லாமல் வருதல், வேடமுகம், இசை, காண்பியங்கள் என்ப வற்றோடு வார்த்தைகளும் காணப்படும். இங்கு வார்த்தைகள் தான் பிரதானமாக ஆற்றுகையை நகர்த்திச் செல்கின்றது. நடிகன் பார்வையாளன் முரண்' வார்த்தைகள் irst Lt. Gau வெளிப்படுகின்றது இத்தோடு வார்த்தைகள் புத்தளிப்பு மூலம் பிறக்கிறது. சாதாரண பேச்சுத்தமிழ் இங்கு காணப்படுகிறது. இப் படியாயின் இதன் நடிப்பு எப்படி இருந்தது? ஆற்றுவோன் பார் வையாளராகவும், நடிகராகவும் காணப்படுகின்றார். நிச்சயம் மோடிப்படுத்தப்பட்ட நடிப்பை முழுமையும் செய்ய முடியாது. அப்படியாயின் பார்வையாரின் துலங்கல் போன்று இருந்ததா? அப்படியும் இல்லை. இதன் நடிப்பு சாதாரணத்திற்கும் அசாதி" ரனத்திற்கும் இடையில் காணப்பட்டது. சில வேளை இரண்டை பபும் மாறி, மாறி செய்வர். இங்கு நடிப்பின் ஊடாக பார்வை பாளர்களை உணர்ச்சி தளத்தில் நின்று உரையாடி அதில் இரு ந்து இறங்கி வந்து உணர்ச்சி நிலையில் செய்ததுபற்றி கதைப் தாக நன்மை தீமை பற்றி ஆராய்வதாக உள்ளது.
உடல் இயக்கம் காணப்படுகின்றது. வெளியில் கோலங்கள் போட்டு அசைகிறார்கள். மிகவும் கவர்ச்சியான மனோரதியப் பாங்கான இயக்கமான ஆரம்ப ஊர்வலம், பாங்கு அமைந்தி ருந்தது. இதைவிட உணர்ச்சி இயக்கம் காணப்படுகிறது. ஆற்று வோர், பார்ப்போர் மனங்களில் கணம், கனம் இயக்கம் நடை பெறுகின்றது. ஆற்றுகை முடிந்த பின்னும் இருசாராரிடமும் உடலிலும், மனதிலும் இயக்கம் காணப்படும். அதுவே பங்கு கொள்ளல் அரங்கு பிரதானமானதாகும்.
பங்குகொள்ளல் அரங்கில் திட்டவட்டமாக ஒரு ஆரம்பம், இடை, உச்சம் என்ற அமைப்பு காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பார்வையாளர் இறுக்கத்தில் இருந்து விடுபட்டு படிப்படியாக ஆற்றுகைக்குள் சென்று பின் பார்ப்போர் ஆற்றுவோரக வருகின் றனர் இங்கு இதுதான் உச்சம் ஆகும்.
பங்குகொள்ளல் அரங்கில் எடுத்துக்கொள்ளப்படும் விட பம் எப்படி பானதாக இருந்தால் பார்ப்போர் பங்து கொள்வர்
1. பார்போருக்கு அண்மையில் இல்லாத தூரப்படுத்தப்பட்ட
பிரச்சி:ை விடயம்
2. பார்ப்போருடைய பிரச்சினை / விடயம்
3. பார்ப்போருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத பிரச்
சினை விடயம்
தாயகம் 38 兰马

Page 23
தூரப்படுத்தப்பட்ட பிரச்சினையை கொண்டதாக அமைக் கப்பட்ட ஒரு ஆற்றுகையில் பார்வையாளர் வியப்புடன் பார்த் துக் கொண்டிருந்தார்கள், அல்லது ஆற்றுகையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக மனிதனது கெட்ட குணங்களை எல்ல்ாம் இணைத்து ஒரு பாத்திரம் உருவாக்க பட்டிருந்தது. அப்பாத்திரம் வெள்ளை வேட்டிக் கள்ளர்' என பார்ப்போரால் அழைக்கப்பட்டது. இதில் வெள்ளை வேட்பி அணிந்த சிலர் தங்களுக்குள் சண்டை போடுதல, பின்னால் நின்று குழிபறித்தல், போலியான அன்பு என்பவற்றில் வாழ்வர்" தான் தான் பெரியவர் என்று கூறித்திரிவர் வெள்ளை உடை உடுத்தி வெள்ளை மனம் எனக்காட்டிக் கொள்வர். இப்ப? இருப்பவர்கள் சிறிய ஒரு சத்தத்துக்கு பயந்து ஓடி கூனிக்குறுகி பெரியவர் ஒருவரிடம் கெஞ்சிக்கொண்டு நிற்பர். இதை ஒரு படி மமாக நெறியாளர் காட்டுகின்றார். கைத்தடியுடன் நிற்கும் போது “ஊருக்குப் பெரியவன் நானே" என்று கூறுபவர் கைத் தடி இல்லாதுபோது "ஐயோ என்னால் ஒண்டும் இயலாது" என்று நிற்பார். இதைப் பார்வையாளர் தங்கள் மனங்களுக்குள் இருக்கும் ஒரு விடயமாக பார்க்காது "இது நானல்ல என்று தப்பித்தல்" மனோபாவத்தோடு பார்ப்பர். அந்தநிலைதான் இவர்களை ரசிக்க வைக்கிறது. \
அவர்களுடைய பிரச்சினை அது நேரடியாக அவர்களிடம் போடப்படுகின்றபோது அதை அவர்கள் எடுத்தேயாகவேண்டும்: அதைக்கையாளவேண்டும் என்ற நிலை உண்டாகும். இதனால் பங்குகொள்ளல் அரங்கிற்கான விடயம் பார்ப்போரின் பிரச் னையாக / விடயமாக இருக்க வேண்டும்.
அரங்கு சமூகத் தேவைக்கு பயன்பட வேண்டும் மக்களை பிரச்சினைகளை எதிர்கொண்டு அதற்காக செயற்படுகிற துடிப் புள்ளவர்களாக்க வேண்டும். மக்கள் வலுவடைய வேண்டும் அப் போதுதான் புதியன படைக்கப்படும். இதற்காக பங்கு கொள்ளு வதும், செயற்படுவதுமான ஆற்றலுள்ள அரங்கு என்றென்றும் தேவை.
உங்களுக்கு எந்தெந்த உரிமைகள் தேவை என்று கருது கிறீர்களோ அதே உரிமைகளை எல்லா மனிதர்களுக்கும் வழங்குங்கள் - இங்கர்சால்
Y. allad,7 ܣܫܩܫ subuage
42 தாயகம் 36

நாமேயறியாத நம்மைப் பற்றியது
தெருநாய்களின் ஊழையொலி நிறைந்த நிலவெறித்த முன்னிரவொன்றில் காதல் எம்மிடம் தோற்ற கதை அழுதேன் அன்பே
நம்மைப் பிரித்திடவும் நாம் பிரிந்திடவும் காரணமில்லையென்ற கற்பிதங்கள் சிதைந்ததை என்னவென்போம்? சித்திரையின் பகலொழித்து மழை பெய்த முழு நாளும் நீயழுத கதை கேட்டேன்; குற்றஞ் சொன்னாய் என் மீது.
நான் என் பெற்றோர் மீதும் அவர்கள்
தாலிக் கனவுடனிருக்கும் என் சகோதரிகள் மீதுமாய் மாற்: க் கொண்டோம் குற்றத்தை,
‘தாள்’களின் பின்னால்தான் இந்த உலகமும் உறவுகளும் என்பதை அறியாதிருந்தோம் நாம், அன்பே அறிந்திடில் நமக்குக் காதல் வாய்த்திராது அன்றேல் பிரிவு நேர்ந்திராது.
-இயல்வாணன்
தாயகம் 36 4战

Page 24
அதிகாரக் கனவுகள்
பூட்டினார் காலத்தில் புதுவைரம் கைப்பிடியில் பதித்து வைத்து பாட்டனார் கைக்கு பரம்பரையாய்
வந்த
பழம் பொல்லு
அடையாளம் மட்டும் இன்னும் அகலாமல்
பொன்னாலிட்ட பூண்
ஐம்பொன்னாலாகி அப்புவின் கையில் அழகாய் ஒளிர்கிறது.
அதை நீட்டி
செய்த அதிகாரம் கதை கதையாய் ஆச்சியின் வாயில் இன்னும் அடிக்கடி வருகிறது
கேட்கும் மனிதர் தரமறிந்து கூச்சத்துடனும் பல கதைகள்
44
பூட்டன்போல் முகமுடைய கடைசிப் பேரன் பழங்காலம் மீட்பானென்ற பெருங் கனவு ஆச்சிக்கும் அவர் தமக்கும்,
ஆதிக்கங்களால் அடிபட்டு மிதிபட்டு முகமிழந்த மூத்த பேரன் அதிகாரத்தை கட்டவிழ்த்ததில்
அவனது பரம்பரையின் நிர்வாணம்
நிழலாய் அவன் முன் நீள்கிறது.
(༡ང་།།སེམས་ནས་སྤྱི་
- ஞானசீலன்
தாயகம் 36

தீர்த்தக்கரை கதைகள்'
- ஓர் அறிமுக நோக்கு
. லெனின் மதிவானம்
விரிவுரையாளர் - அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை
“lupamayu, இலக்கியம்’ எனும் தொகுதி ஈழத்து தமிழ் இலக் கியத்தில் முக்கிய கூறாக போற்றப்பட்டு வருகின்றது. இலக் கியத்தில் ஜனநாயக பண்பு வளர வளர இதன் அவசியம் சிறப் பாகவே உணரப்பட்டுள்ளது. இவ்வடிப்படையில் பெருந்தோட்ட பயிர் செய்கைக்கு களமாக உள்ள மலைநாட்டை பகைப்புலமாக கொண்ட இலக்கியபடைப்புகளாக இவை திகழ்கின்றது. மலையக இலக்கியம் குறித்து ஆய்வு செய்கின்ற போது அதற்கு களமாகவும், தளமாகவும், உள்ள மலையக வாழ்நிலை குறித்த தெளிவு அவசிய மானதொன்றாகின்றது.
இலங்கையில் அந்நிய முதலாளித்துவம் நிலைக்கொள்ளத் தொடங்கியதும், அதன் உடன் விளைவாக பெருந்தோட்ட பயிர்செய்கை அறிமுகம் செய்யப்பட்டது. இப்பெருந்தோட்ட பயிர் செய்கையை மேற்கொள்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து ஒப் பந்த பிணைப்பு செய்துகொண்டு இங்கு வந்த தொழிலாளர் களும், அகவணுடன் இணைந்து வந்த வர்க்கமும் "மலையக தமிழர்” என்று அழைக்கப்படுகின்றனர். தென்னிந்திய தமிழ் கிராம நில வுடமை சமூகமைப்பில் விவசாயிகளாக கட்டுண்டு கிடந்த இம் மக்கள் விவசாய வர்க்கத்திற்குரிய குணாதிசயங் கொண்டவர்களாக காணப்பட்டனர். இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கையின் கீழ் இவர்கள் உட்படுத்தப்பட்டவுடன் ஓர் முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழ் பரந்துபட்ட தொழிலாள வர்க்கமாக மாற்றப் பட்டனர். இவ்வகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்டதோர் சமூகத்திலிருந்து ஜீவிதம் பெறுகின்ற இலக்கிய படைப்புகள் யாவும் ஏதோ ஒருவகையிலும், அளவிலும் வர்க்கப் பார்வையை பிரதிப்பலித்து நிற்பது வரலாற்று நியதியாகும். இந்த வாழ்நிலையின் காரணமாகத் தான் மக்கள்
görruusb 3 6 45

Page 25
இலக்கியப்பண்பிற்கு எதிராக தோன்றிய அமைப்பியல் வாதம் பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்ற கோட்பாடுகள் இம் மண்ணில் வேரூண்றி செல்வாக்கு பெற முடியாதுள்ளது.
இவ்வாறாக மலையக இலக்கியம் பற்றி நோக்குகின்ற போது ஓர் உண்மை புலனான்றது, சிறுகதிைநாவல், கவிதை, நாட கம் போன்ற இலக்கிய பிரிவுகளில் சிறுகதையே மலையக மக்களின் வாழ்க்கையம்சங்களையும், உணர்ச்சிகளையும், பிரதிப்பலித்து நிற்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. இவ்வளர்ச்சி போக்கில் "தீர்த்தக்கரை கதைகள்" என்ற சிறுகதை தொகுப்பு எத்தகைய இடத்தினை வகிக்கின்றது என்பதை தர நிர்ணயம் செய்ய முற்படுவதே இக் கட்டுரையின் நோக்காகும்.
கிட்டத்தட்ட 157 பக்கங்களை கொண்ட இந்நூல் 80 களில் முகிழ்த்த தீர்த்தக்கரை சஞ்சிகையிலும், அது தொடக்கி வைத்த இலக்கிய போக்கின் விளைவாக 90 களில் முகிழ்த்த நந்தலாலாவிலும் வெளிவந்த பதின்மூன்று சிறுகதைகளை உள் டடக்கிய தொகுதியாக வெளிவந்துள்ளது. நந்தலாலா வெளி யீட்டகத்தின் வெளியீடான இந்நூல் மிக நேர்த்தியான அமைப் பினை கொண்டு காணப்படுகின்றது. இலக்கிய நோக்கிலும், போக்கிலும், ஒற்றுமை கொண்ட எழுத்தாளர்கள் பலர் சேர்ந்தி ணைந்து இவ் வா று நூல் வெளியிடுவது நமது சூழலுக்கு பொருத்தமானதும், பழக்கமானதும் ஆகும்.
தொகுப்பில் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. மொத்தம் மூன்று கதைகளை தவிர ஏனையவையாவும் 1980 - 82 காலப் பகுதியை உள்ளடக்கியதாக அமைந்துக் காணப்படுகின்றது, நூலில் அடங்கியுள்ள எழுத்தாளர்களினதும், சிறுகதைளினதும் விபரம் வருமாறு:
(S) ஆனந்தராகவன்
உதய காலத்து ஜனனங்கள் நண்பனே என்றும் உன் நினைவாக வீணை மேவும் விரல்கள் நாகசேனைத் தோட்டத்து நரசிம்மன் கங்காணி
(*) பிரான்சிஸ் சேவியர்
விடியாத இரவுகள் தடம்மாறும் சுவடுகள்.
தாயகம் 36

13 ஏ. எஸ். சந்திரபோஸ்
என்று தணியும் இந்த.
கேகாலை கைலைநாதன் தண்ணீர் வற்றிடும் குளங்கள் மீண்டும் வசந்தம் வரும் . காதலிலே இரு கண்கள். வெண்ணிறத் தாமரைகள் தூரிகை.
(அ) ராமையா முருகவேல்
சிறுவன்.
நந்தலாலா வெளியீட்டகம் தொகுத்து வெளியீட்டுள்ள இந்நூலை கற்கையில் மலையக வாழ்வியலை புரிந்துகொண்டு அதன் உள் நின்று எழுதுகின்ற எழுத்தாளர்களின் உள்ளங்களை யும், உணர்வுகளையும் காணக்கூடியதாக உள்ளது. இச்சமூகத்தை சாராத பிரான்சிஸ் சேவியர் கூட இத்தகைய வாழ்வியலின் பின்னணியிலிருந்து எந்தளவில் தனது எழுத்தினை பட்டைத் திட்ட முயன்றார் என்பதனையும் அவரது சிறுகதைகள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது.
சிறுகதை என்பது தமது பெயருக்கும், உள்ளார்ந்த ஆற்ற லுக்கும் ஏற்ப சிறிய சம்பவங்களையும், நிகழ்வுகளையும் சலனங் களையும் கருவாக கொண்டது. இதன் மூலமாக உலகின் உண்மை களையும், உணர்வுகளையும் விளக்கலாம். 70, 80 காலப்பகுதியில் இனக்குரோதம், இனவெறி என்பன கேவலமானதோர் அரசிய லின் பின்னணியில் மோசமானதோர் நிலையை எட்டியது இத் தகைய இன வாதத்திற்கு பலியாகின்ற மனிதத்துவத்தைப் பற்றி கூறுவதாக "நண்பனே என்றும் உன் நினைவாக” என்ற கதை அமைகின்றது.
"அவனது கைகள் இரண்டும் வெட்டப்பட்டு பக்கத்தில் கிடக்கின்றன. ஒரு கண் பாதி வெளியில் வந்த நிலையில் வெகுத்து நிற்கிறது. உடல் முழுவதும் குத்தி குதறிய நிலையில் மானுடத் தின் உயிர்ப்பும், உயர்ந்த உள்ளமும் கொண்ட ஓர் உன்னத நிர்மாணம் என்னமாய் கணப்பொழுதில் சிதைந்து சிதறுண்டு போனது."
இனவாத வெறியாட்டத்தில் பலியான கோதாண்டியின் பாத்திரத்தை இவ்வாறு சித்திரித்து காட்டுகின்றார்ஜ்
தாயகம் 36 4?

Page 26
* நாகசேனைத் தோட்டத்து நரசிம்மன் ? கங்காணி என்ற் கதையின் மூலமாக மலையக சமூக அமைப்பின் இருப்பினை, ஒர் இனத்துவ அடையாளத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்ற மலை யக வாழ்வியலை சித்திரிப்பதாக அமைகின்றது. மலையக சமூகத் திலிருந்து அந்நியப்பட்டு செல்லும் இளைய தலைமுறையினருக்கு எதிராக வெளிப்படுகின்ற நரசிம்மன் கங்காணியின் உணர்வு மேற்குறிப்பிட்ட கருத்திற்கு தக்க எடுத்துக்காட்டாகும்.
கேகாலை கைலைநாதனின் "தண்ணிர் வற்றிடும் குளங்கள்? மீண்டும் வசந்தம் வரும்" "காதலிலே இரு கண்கள்" ஆகிய சிறு கதைகள் 80களின் ஆரம்ப காலப்பகுதியிலும், ஏனையவை யாவும் 90களின் எழுதப்பட்டவையாக அமைந்து காணப்படுகின்றது 1970, 80களின் இடம் பெற்ற கோரமான வன்முறையின் பின்னர் துளிர்க்ககூடிய வசந்தத்துக்கான நம்பிக்கையுணர்வினை சித்திரிப் பதாக தண்ணிர் வற்றிடும் குளங்கள் மீண்டும் வசந்தம் வரும் கதைகள் அமைகின்றது. இக்கதைகள் கண்டி பிரதேசத்தை பின்புல மாகவைத்து எழுதப்பட்டன என நூலில் குறிப்பிட்டுள்ளமை பொருத்தப்பாடுடைய ஒன்றே ஆகும்.
ஏகாதலிலே இரு கண்கள் கதையானது புனிதமான காதல் கூட பொருளாதாரத்தை அடித்தளமாக கொண்டமைந்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றது. கதையில் வருகின்ற திலிப் என்ற இளைஞனின மானசீகமான உணர்வுகள் கூட மறுக்கப்பட்டுள் ளதை காணலாம். இது வர்க்க சமுதாயத்தின் அநீதியை கட்டு வதாக அமைகின்றது. இவ்வம்சமானது ஒர் கோட்பாடாக விவரிக் கப்படாமல் மனிதவுறவுகளின் அடிப்படையில் சித்திரித்துள்ளமை இக்கதையின் வெற்றிக்கு வழிகோலியது எனலாம்.
வெண்ணிற தாமரைகள் " என்ற சிறுகதை பிறிதொரு காலக் கட்டத்தில் எழுதப்பட்ட கதையாகும். இது இலங்கையின் தேசிய இலக்கியத்தில் ஓர் முத்திரையாக விளங்குகின்றது. ஜே. வி. பியின் காலத்தையும் சிங்கள இளைஞர்கள் மீது அரசு மேற்கொண்ட கோரமான படுகொலைகளையும் சித்திரிப்பதாக உள்ளது. உள் ளடக்கம், உருவகத்தில் கதை நேர்த்தி பெற்று விளங்குவது இதன் சிறப்பாகும்.
மலையக மண்வாசனையை முழுமையாக வெளிப்படுத்தி நிற்கும் கதையாக என்று தணியும் இந்த ." என்ற கதை அமை கின்றது. வீட்டு வேலைக்காக செல்லும் தோட்டத்து சிறுவர்களின் துன்பத்துயரங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. கதையில் வரு
48 5Tuuasth 36

கின்ற வீட்டுக்கார எஜமானின் மனோபாவம், செயல் ஆகிய வற்றின் மூலம் வர்க்க முரண்பாடுகளும், அவற்றினடியாக எழும் கருத்தோட்டங்களும், உணர்வுகளும் நுண்ணயத்துடன் தீட்டப் பட்டுள்ளன.
இத்தொகுப்பில் இறுதியாக அமைந்துள்ள 'சிறுவன்" கதை இன்றைய தலைமுறையினரையும், காலகட்டத்தையும் பிரதி பலித்து நிற்கின்றது. ஒரு வகையில் இந்தொகுப்பினை நிறைவு செய்கின்றது எனலாம். பலவிதமான சுரண்டல்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் அடிமைப்பட்டதாயும், சோகமே நித்தியமாகவும் நிரந்தரமாகவும் உள்ள சமூகமைப்பில் இருந்து வளர்கின்ற சிறுவன் ஒருவனின் போர்க்குணம் துரைக்கு ( ) எதி ராக எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதையும், உழைக்கும் மக்களின் உணர்வுகளை நேசிக்கின்ற ஒர் ஆசிரியனின் பார்வையில் அவன் எவ்வாறு தரிசிக்கப்படுகின்றான் என்பதையும் சித்திரிப்பு பதாக கதை அமைகிறது. தத்துவ தெளிவும் சிருஷ்டிகர திறனும் ஒருங்கிணைந்து காணப்படுவதே கதையின் சிறப்புக்கு வழி வகுத்தது எனலாம். தொண்ணுறு வின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இக் கதை மலையக சிறுகதை இலக்கியத்திற்கு மேலும் நம்பிக்கை ஒளிவூட்டுவதாக உள்ளது.
பிரான்சிஸ் சேவியரின் ‘விடியாத இரவுகள், "தடமாறும் சுவடுகள்" ஆகிய சிறுகதைகள் வடகிழக்கு மக்களின் உக்கிரமான தேசிய இயககத்தின் முதற்கட்டத்தை சித திரிப்பதாக அமைதின் றது. அறுபதுகளில் யாழ்ப்பாணததில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்க போராட்டமானது எவ்வாறு தேசியத்தின் வடிவமாக இருந்ததோ அதுபோன்றே தமிழ் தேசிய விடுதலைப்போராட் ட(மம் முனைப்பு பெற்று புதியதொரு பரிணாமத்தை எட்டியது. இத்தகைய கா லக்கட்டத்தில் ஆரம்பத்தினை இவரது எழுத்துக்கள் மிக நேர்த்தியாக சித்திரிக்கின்றது. இந்த காலப்பின்னணியை இவ்வளவு அழகாய், விவேகத்துடன் படம் பிடித்த எழுத்துக்கள் சிலவாகத்தான் இருக்க கூடும் என உறுதியாக கூறலாம். மலையக வாழ்நிலை இருப்புகளிலிருந்து பிரான்சிஸ் சேவியர் தனது எழுத் துக்களை பட்டைத்தீட்ட முனைந்துள்ளமையே இத்தகைய நேர்த்திக்கு அடிப்படை என்றுக் கூறலாம்.
ஆனந்தராகவன் வீணை மேவும் விரல்கள் "கதை காட்டு மிராண்டிதனமாக வாழ்கின்ற ஓர் பொலிஸ் அதிகாரியின் மனை விக்கும் மனிதத்தையும், அதன் கம்பீரத்திற்கும், திராணிக்காகவும் பாடுபடுகின்ற ஓர் இனளஞனுக்கும் இடையில் ஏற்படுகின்ற
5ITuLlésub 3 6 49

Page 27
காதலை சித்திரிப்பதாக அமைகின்றது. கதையின் இறுதியில் எதிர்பாராத விதமாக இரயிலில் திலீபனும் (கதையில் வருகின்ற இளைஞன்) பொவிஸ் அதிகாரியின் மனைவியும் திடீரென சந்திப் பதாக கதை அமைந்துள்ளமை யதார்த்தமாக இல்லை. இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளில் யதார்த்த நிறைவினை கொண்ட கதையாக இது அமைந்து காணப்படுகின்றது.
நூலின் உள்ளடக்கம் பற்றி அறிமுகம் செய்கின்ற பகுதியில் ஆனந்தராகனனின் நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங் கானி" கதை பிரான்சிஸ் சேவியர் எழுதியுள்ள கதைகளில் சேர்க் கப்பட்டுள்ளமை திருத்தி அச்சிடப்பட வேண்டிய ஒரு விடய மாகும்.
மனிதவுறவுகள் எல்லோருக்கும் பொதுவானவை என எல்லோரும் தத்துவம் பேசினாலும் கூர்ந்து நோக்கினால் அவை பும் வர்க்க நிலைப்பாடுகளுக்கு ஏற்ப செயற்படுவதும் தெரிய வரும். யதார்த்தமான பாத்திர படைப்புக்கு இவ்வம்சம் முக்கிய மான ஒன்றாகும். தொகுப்பில் அடங்கியுள்ள சிறுகதைகள் யாவும் இவ்வம்சத்தினை ஏதோ ஒரு வகையிலும், அளவிலும் புலப்படுத்தி நிற்கின்றது. இதில் அடங்கியுள்ள பெரும்பாலான கதைகள் மலையக உழைக்கும் மக்களின் வாழ்க்கையிலிருந்து முகிழ்த்ததால் அவர்களின் வாழ்க்கையில் கானப்படுகின்ற அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் சோகத்தை வெளிப்படுத்தினாலும், அதற்கு மத்தியிலும் வாழத்துடிக்கின்ற மனிதத்துவத்தையும் காணலாம். இதனை இவ்வெழுத்தாளர்கள் அழகுடனும், விவேகத்துடனும் சித்திரித்துள்ளனர். இக்கதைகள் குறித்து தமிழக எழுத்தாளர் வல்லிக்கண்னன் அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்.
"மலையக மக்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்துள்ளன.
திறமையுள்ள பல எழுத்தாளர்களின் படைப்புகள் அவை"
(தமிழில் சிறுபத்திரிகைகள்)
இக்கூற்று தீர்த்தக்கரை சஞ்சிகையில் வெளிவந்த கதை களுக்கு மட்டுமல்லாது நந்தலாவாவில் வெளிவந்த கதைகளுக்கும் பொருந்தும். இவ்வெழுத்தாளர்களின் படைப்புகளில் காணப் படுகின்ற வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கை நேர்மை என்பன திடுக்கிட வைக்கும் அளவுக்கு வளம் சேர்ப்பதாக அமைகின்றது. இந்த வகையில் கருத்தியலையும், வாழ்வியல் அம்சங்களையும் பிரதி பவித்து நிற்கின்ற இக்சிறுகதைகள் தமிழ்இலக்கிய் வளர்ச்சி பரி ணாமத்திலிலும் முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகின்றது. ()
高门 தாயகம் 36
 

ஒரு கோடையின் முடிவில்
------- க. ஒ என். எஸ். வாகீசன்
எதிர்பார்த்தது போல இல்லை. பொங்கித் திரண்டு, பால் வெள்ளைத் திவலைகளை எதிர்ப்பட வீசியடித்தபடி உத்வேகத் துடன் வீழும் டெவன் இன்றில்லை. ஆழ்மன் தில் நிரந்தரக்குடி கொண்ட டெவன் நீர்வீழ்ச்சியின் அந்தப் பேரிரைச்சலும் களவு போனதோ மார்சுழி மாதத்து முதல் வா ரத்தின் நிறைவுதான் நினைவுத்திரையில் பதிந்திருக்கிறது.
நளாயினி ஒரு கனந்தான் இன்றைய டெவனில் கண் பதித் திருப்பாள் நோய்பீடித்து, வாடிவதங்கி மெலிந்துவிட்ட இந்த டெவன் அருவி மனத்தினுள் இறங்கிவிட வேண்டாம் என்ற அவசரத்தில் மூஞ்சையைத் திருப்பிக் கொண்டுவிட்டாள்.
*ாதுகளை மட்டும் சுட்டுப்படுத்த முடியவில்லை விேந்து வாண்ட நெஞ்சுக்கட்டை நொருக்கியபடி வெளிப்படும் ஆஸ்த் துமா நோயாளியின் அவஸ்த்தை மிகுந்த சுவாசத்தின் ஒலம்போன்ற *ன் ஸ்வரம் டென்னிலிருந்து வழிந்தோடி வந்து காதுகா:1ள குண்ட வதைத் தடுக்கமுடியவில்லை.
இளந்தேயிலைக் குருத்துகனின் பகமைபோர்த்திய மலை முகடுகளில், இடைவெளிகள் தாண்டிவந்து தாவணி போர்த் தியது போன்று படிந்திருக்கும் பசியமஞ்சள் இளவெயில் கோலம் கண்களால் பருகப்படுமாறில்லை, இயற்கை யழகுச் சுவையை நுகரும் தாகம் மறைந்துளிடும்படி ஆனதெப்படி? வாலிபம் செத்து உள்ளம் கிழடுதட்டிப் போகுதோ?
தன்னை எத்தியெறிந்த கால அரக்கனின் நீண்டுவிளையும் தாக்குப்போல், ஏறிச்செல்லும் சாலையில் தள்ளாடியபடி அசைந்து செல்லும் நளாயினி, இப்படியே கால அரக்கனின் வாயெனப் பிலாந்துகிடக்கும் கல்லூரி மு:ப்பை யடைந்துவிட்டால் இரண்டு மி கிங்களுக்கு முந்திய நாட்களையும் சென்றடைந்து விடோமா
தாயகம் 36

Page 28
வென ஏங்கினாள், இந்த இடத்தைவிட்டுக் கால்களைப் பெயர்த்து -பஸ்ஸினால் எடுத்து வீடுநோக்கி வீசப்பட டு - ஐம்பது நாட்கள் கடந்தோடியபின் இன்று மீண்டும் கா லடிபதிகிறது, கொத்திப் போன பருந்து மீண்டும் அதே இடத்தில் கொண்டுவந்து போட்டு விட்டுப்போன கோழிக்குஞ்சைப்போல, ஒருபக்கம் வலி, இன் னொரு பக்கம் இனம்புரியாத ஆனந்தம். இரண்டு வருடங்களாய் அடைகாத்த கல்லூரித் தாயைக் காணப்போகிறோம் என்ற குதுரகலம்; மலர்ராஜ் வருமா, வந்தால் எப்படி மூஞ்சையில் முழிக்கப் ப்ோ கிறோம் என்ற வலி.
மீண்டுவந்த கோழிக் குஞ்சாய்த் தன்னை எண்ணிய நினை வோட்டத்தோடு "தூக்கிப் போனது பருந்தா, இல்லையே பேரூந்து" என மனம் குதர்க்கம் செய்ய இது மலர் ராஜின் எதிர் வாதங்கள் எனக்குள் தொற்றிவிட்ட அறிகுறி யென்ற நினைப்பும் சேர, தன்னை மறந்த சிரிப்போடை ஒன்றை இதழ்க் கோடியில் வழிந்தோடி வீழவிட்டு, மறுகணமே வெற்றுப் பாறையாய் மனம் இறுக நடக்கத் தொடங்கினாள்.
அதற்குள் அவளது தனிமையைக் கலைத்துவிட தலவாக் கலையிலிருந்து அட்டன் நோக்கிவந்த டஸ் அந்தத் தரிப்பிடத்தில் அவளது சக ஆசிரிய பயிலுனர்கள் சிலரை இறக்கிச்சென்றது. இறங்கியவர்களைத் திரும்பி ஆளாளாய்ப் பார்த்து ஒப்புக்குச் சிரித்தாளாயினும் யாரையும் இனங்காண நளாயின யால் முடிய வில்லை மலர்ராஜ் இல்லையென்பது மட்டும் உறுதிப்பட்டது. இவர்களோடு வரவில்லையெனில் இன்றைக்கு மலர்ராஜ் வரலே வராதோ என்ற நினைப்பு மனதை உறுத்தியது.
"ஹலோ 1 நளாயினி . என்ன கண்டிக்குப் போனதோடை கூட்டுறவெல்லாம் விட்டுப்போச்சோ ; சகபாடிகள் யாரையும்
காணலையே?
என்னையே நான் காணாமலாக்கிய கொடுமையால் அப்படி யென்று சொல்ல முடியாத அவஸ்த்தையோடு "நா வந்த பஸ்ஸில யாராச்சும் வருவாங்கன் னுதான் பாத்தே(ன்) ஆரும் வரல. முன்னால வந்திருப்பாங்க' என்றாள்.
சலசலவென ஒடும் நீரோடை போறை அவளது இயல்பான சொல்வீச்சைக் காணவில்லை. இதைச் சொல்லியபோதும் குரலில் தொனித்த வழக்கத்துக்கு மாறான சோக இழை பலரும் எதிர் பார்த்ததாய்த் தெரிந்தது, புரியாது விழித்த ஒரிருவரும் மற்றவர் களின் முக இறுக்கத்தில் எதையோ படித்துத்தாமும் மெளனத்து
52 தாயகம் 36

எதற்கோ அஞ்சலி செலுத்தியபடி. *ஓ! மலரிராஜ் வராமப் போனது இதனாலதானோ?
நடைத் தடங்களின் சத்தம் டெவன் நீர்வீழ்ச்சியின் ஒலத்தை விடவும் அதிகமாய் இதயங்களை அதிரவைத்தன, தன்னாலே கதைக்க முடியாமல் முடங்கிப் போய் விட்டதற்குக் காரணங்காண முடிந்த நளாயினிக்கு இப்போது, எல்லோரும் மெளனம் பேணிய 11டி நடப்பதற்கான காரணத்தை விளங்கிக்கொள்வது கடினமா யிருந்தது. ஒன்றுபட்டுச் சங்கமித்தல் செயல் முனைப்பிலே மட்டு மல்ல இயக்கமற்று ஒடுங்கி உணர்வுகள் அவிந்தடங்குகையிலும் நிகழுமோ?
விர்ரெனக் காற்றைக் கீறிக் கிழித்து விரைந்த வால் நீண்ட கருங்குருவியொன்று நிழலுக்கிருந்த முருங்கமரத்தின் மீதமர்ந்து சிறகுகளைக் கோதிக்கொடுத்து "கீச், கீச்" என்று கத்திக்கொண் டிருந்தது, தனது துணையைக் காணாத தனிமையிரக்கமோ அதன் பாடல்? அதன் துணை அருகே இல்லாத போது கீழே கொழுந்து பறிக்கும் கூட்டமும் பறந்து செல்லும் மற்றப் பறவை களும் எந்த அர்த்தத்தையும் கற்பித்து விடப்போவதில்லையே! எத்தனை பேர் இருந்தென்ன, அதற்கு, அதன் துணையே தேவை. பறவை போதித்த வேதாந்தத்திலிருந்து விலகி வேலையில் மூழ்கி யிருந்த பெண்களை ஆராய்ந்தபடி நளாயினியின் நடை தொரும். "இந்தப் பெண்களுக்கு மட்டும் என்னைப் போன்றோ, அந்த முருங்க மரத்துக் கருங்குருவி போன்றோ தனிமையிரக்கம் வரவே வராதோ?
எப்படி வரும்? வருவதற்கெங்கே அவர்களுக்குக் கால அவ காசம் அமைந்துகிடக்கிறது? பனியை இறுக அணைத்துத் தன்னுள் அத்வைதமாக்கும் சூரியக்கதிர் பேசும் இரகசியம் கேட்கும் இங்கிதம் தெரியாமலே நிரைபிடிக்க விரைந்தோடி, இயந்திர மாய்க் கொழுந்து பறித்துக் கூடையை நிரப்பியும் மனம் நிறையாத ஒரு நாளையும், தேயிலையின் வேரடியில் புதைத்து விட்டு, அந்திசாயும்போது இதோ எதிர்ப்புறத்தில் நீண்டு கிடக்கும் லயக்காட் டில் ஒரறைக்குள் முடங்கி, அலுப்பில் தூங்கி, என்றைக்கோ ஒருநாள் தொலைத்த எல்லாநாட்களோடும் சாவ காசமாய் உறவாடப்போவதுபோல், அதே தேயிலை வேரடி மண்ணினுள் புதைந்துபோய் நிரந்தரமாய்த் கப் போகும் இவர் களுக்கு பிரிவுத்துயரை அனுபவிக்கக்கூடக் கொடுப்பனை இருக் காதுதான .
* 'இதைப்பாத்தா என் . எஸ் . எம் : இராமையா ஊட்டு * ஒரு கூடைக் கொழுந்து" சிறுகதை தா(ன்) ஞாபகத்துக்கு வருது’’
2 snrarasubi : 36 53

Page 29
நீண்டநேர அமைதியை ஒரேயடியாய் மூழ்கடித்தவாறு தந்தகுமார் கூறியதைக் கேட்ட அதிர்ச்சியில் தன் கவனத்தை நந்தகுமாரிடமும் பின்னர் ஏனைய தோழர்களிடமும் திருப்பினாள் நளாயினி. நந்தகுமாரை அர்த்தமிக்க பார்வையொன்றால் உண்டு ருவிவிட்டு அவன் வெறித்துப்பார்த்த மலை முகட்டுப் பக்கத் திரும்பினான் பழனிச்சாமி. அங்கே கண்ணிமைக்கும் நேரத்தில் தேயிலைச் செடியிலிருந்து கூடைக்குள் பாயும் கொழுந்துகளின் நடனம், அதற்கு சமாந்தரமாயும் எதிரிலும் மாறிமாறி வந்து போய்க்கொண்டிருந்த கொழுந்து பறிக்கும் பெண்களின் கைகள், ஒரு நடனத்தின்'லயத்துடன் அசைந்தபடி. அந்த இயந்திரக் மரங்களின் அசைவுக்கும்"கணப்பொழுதில் கூடைக்குள் பாய்ந்து விடும் கொழுந்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? தேநீர் கொடுக்க மலைக்காட்டுக்குப் போன சில நாட்களில் அம்மாவின் காழுந்து பறிக்கும் வேகங்கண்டு மலைத்த சின்னவயசு, பழனிச் சாமியின் மனசை நிறைத்தது? அந்த நினைப்பில் நெஞ்சம் விம்மிப் பொருமிச் சுருங்கியபின்,
*ஏதோ துரை ஊட்டு பங்களாவில வளந்த பய மாதிரி யில்ல பேசறான், இந்தக் கொலிஜ் கிடைக்காமப் GLifr Gðlíf அநேகமா இந்நேரம்”தேயிலைக் காட்டிலதா நம்ம பொளை! இருந்திருக்கும். சிறுகதையிலயா இதை நாம பாக்கணும்?" என்றான் பழனிச்சாமி.
* அதில்ல, பாடத்திட்டத்தில ஒருகூடைக் கொழுந்து சிறு கதைத்தொகுதி இருந்துங் கூட அப்ப படிக்க Pேபி-!?" இப்ப தான் ஆறுதலாப் படிக்க முடிஞ்சிது. என்ன இருந்தாலும் இலக்கியத்தில வாழ்க்கையைப் பாக்கிறது வித்தியாசமான சீஜூH வந்தானே?" W
பனி விலகாத மைம்மல் பொழுதோடு இங்கு வரப்புறப்பட்ட வேளையை இரைமீட்டுப் பார்த்தான் நந்தகுமார். தன்னைக் குசலம் விசாரித்தபடி விலகி வேகமாய் நிரை பிடிக்க ஓடிக்கொண் டிருந்த தனது சுற்றத்தையும் உறவுகளையும் எண்ணிப்பார்த்தான். அப்போதும் தனக்குள் ஒரு இலக்கிய கர்த்தாவை அவன் இனங் கண்டான். அந்தக் கர்த்தா இப்போது மன ஏட்டில் எதையோ எழுதத்தொடங்கி விட்டான்.
'லயங்களைப் பிரிந்து தோட்டக்காட்டை நோக்கிச் சிற கடித்துப் பறக்கும் இவர்களின் மனிதவெக்கை விரவப் பனி விலகி ஒடும், மலையேறிய கையோடு திரைபிடித்து வேலையைத் தொடங்கி விடவேண்டுமே கொழுந்துச்சாமியும், ரோதை
54 தாயகம் 36

முனியும், கவ்வாத்துச்சாமியும் இன்னமுள்ள எல்லாத்தெய்வ களும், இவர்களது இறைஞ்சலில் வந்துகூடி வாழ்த்துக்கூற, முதற் கொழுந்துகள் • பொலி பொலி " என்ற ஓசையோடு கூடைக்குள் போயடங்கும். தொடர்ந்து வேகம்பெறும் வேலைச் சூட்டால் எழும் வெப்பத்தைக் காணிக்கையாய்ப் பெற்றுச் சென்று சூரியனிடம் கையளிப்பர் கொழுந்துச்சாமி, கவ்வாத்துச்சாமி, றோதைமுனி முதலான தேவதையர் :
தனது லயத்துப் புறப்பாட்டிலிருந்து இந்த மலைக் காட்டுக் காட்சிவரை ஏற்படுத்திய எண்ண ஓட்டங்களையும் அதிகரித்தபடியிருக்கும் வெய்யிற் கொடுமையையும் இணைத்துத் தனக்குள் கோர்வைப்படுத்தி மனதினுள் எதையெதையோ எழுதிப் போனான் நந்தகுமார். அவனது மன ஏடு வளராதபடி அவர் களுக்கே யான யதார்த்தம் ஒன்று முன்னே நிதர்சனமாய்!
நினைத்து வந்ததைவிடவும் நிறையச் சகபாடிகள் வந்திருக் கிறார்கள் சரி, ஏன் எல்லோரும் வெளியே நிற்கவேண்டும்? இராட் F359/ 60) — Lu கைகளின் நகக்கொடுக்குகள் போல உயர்ந்த பெரிய இரும்புக்கேட்"இறுக மூடியபடி வழியை மறித்துக் கிடந்தது.
""ஒவ்வொருத்தனும் நமக்குத்தான் செக் வரலைன்னு நெைைச்சு வந்தோம் இங்க பாத்தா ஒருத்தனுக்குமே வரல. உள்ள போய்க்கேட்டு கையோட வாங்கிப்போக வேண்டியது தானே? ஏ(ன்) எல்லாரும் வெளிய நிக்கிறீங்க?
உள்ள போக யாருக்கும் அனுமதிதர முடியான்னு செக் குறுட்டிகாட் சொல்றாங்க, அவங்க உள்ள போயி பேசீட்டு வந்தாங்க, மேல சொன்னாங்களாம், "இப்போ போவீங்களா(ம்) அடுத்த வாரம் ஸ்கூலுக்கு செக் அனுப்பிவைக்கிறாம்" அப்டீன்னு'
நந்தகுமார் தனது இலக்கிய முயற்சியை ஓரங்கட்டி வைத்து விட்டு எதிரில் நடப்பதில் கவனஞ் செலுத்தலானான். அவனோடு விவாதித்துக்கொண்டு வந்த பழனிச்சாமி இப்போது செக்குறுட் டிக் காட்டுடனான தர்க்கத்தில் இறங்கிவிட்டான், ஏன் நாமே உள்ளே சென்று கதைக்கக் கூடாதென்ற கேள்விக்கனையும், தங் கள் இருப்பின் நியாயத்தை விளக்கும் பதிலுரையுமென நீடித்த சர்ச்சையில் பழனிச்சாமிக்கு முதலில் உதவும் குரலாய் இணைந் தது நந்தகுமாரின் ஆக்ரோஷமான வாதாடல் தான்.
இரண்டு வருடங்கள் உள்ளகப் பயிற்சியை முடித்த பின், இந்த ஜனவரியிலிருந்து ஒரு வருடத்துக்கான களப்பயிற்சிக்கென

Page 30
பாடசாலைகளுக்குப் போனவர்களுக்கு முறைப்படி இங்கே, கல் லூரியில் வைத்தே, அலவன்ஸ் கொடுக்கப்பட வேண்டும். u0 TAnora5, செக் அனுப்பப்படும் எனச் சொல்லியும் நாட்கள் கடந்து விட்ட நிலையில் இவர்கள் இங்கே வரநேர்த்திருக்கிறது. அப்படியும் உள்ளே செல்ல முடியாததால் விவாதத்தில் இறங்கிவிட்ட பழனிச் சாமி, நந்தகுமார் ஆகியோருடன் அநேகமாய் எல்லோரும் கலந்து கொண்டுவிட்டார்கள்.
ஒருவகையில் நந்தகுமாருக்கு பழனிச்சாமி ஆதர்ஷபுருஷன் போல வெறும் இலக்கியக் கனவுகளுக்குள் மூழ்கிக்கொண்டிருந் தவனை நிதர்சனங்களை நேர்கொண்டு போராடத்துண்டியவன் பழனிச்சாமி, அதுவரை, அனுபவித்தபடியுள்ள கஷ்டங்கள் தீர முடியாதவை என்ற எண்ணமேயிருந்தது; அவற்றிலிருந்து ஓடி யொழிந்து தீக்கோழித்தனமாய் முகம் புதைக்கும் இடமாய் இலக் கியம் விளங்கிற்று. .
அவனைப் பட்டைதீட்டிய கல்லூரி எதிரே மாயைபோல , கடந்த இரண்டு வருடங்களும் கனவுதானோ ? எப்படிக் கனவாக முடியும்? பலங்கொண்ட எஃகுபோல உருமாறிய புதிய மனிதனாய்,
புதிய சிந்தனை வீச்சோடு வெளிப்பட்டது இங்கிருந்து தானே ?
அத்தகைய மாற்றத்தின் செம்மையைச் சோதிக்கும் களமாக அதோ காரியாலயத்தின் முன்னுள்ள அந்த இடத்தில் ஒரு நாள் பூராகவும் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு மாதங் களின் முன் அமைந்திருந்ததே ! அதிகாலையிலேயே கொட்டும் பனியில் பற்கள் கிடுகிடுக்க நடுங்கிய படி வந்தமர்ந்தோம் s கொழுத்தும் வெய்யில் உச்சந்தலையைத் தாக்கிய போதிலும், மாலையில் கொட்டிய மழையில் நனைந்து கொண்டும் உறுதிகுலை யாமல் இருந்து, இறுதிய்ாய்த் தொலைபேசி வாயிலாய் அமைச் சகத்திலிருந்து கல்வியமைச்சின் செயலாளர் நேரில் வந்து பிரடி சினைகளை விசாரித்தறிந்து தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தைப் பெற்றபின்னர் தானே உண்ணாவிரதப் போராட்டம் முடித்து வைக்க்ப்பட்டது - நள்ளிரவில் தானே நாரி நிமிர்த்திப் படுக்க முடிந்தது ?
அந்தப் போராட்டத்துக்குக் காரணமாயிருந்த கோரிக்கை
களில் முதன்மையானதொன்று இந்தக் தலைமைப்பீடம் மாற்றப் lill- வேண்டுமென்பது: S S S S S S S S S SH SLLkzkTkeeq S AqLALA SLSLLSeSASALASLSLLTLLLLSSSLLLLSSLLLSS
'இப்போது ஒரு மாதத்தில் இறுதிப்பரீட்சையை எதிர் நோக்கியுள்ளீர்கள், அது தொடர்பான கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றுவோம், தலைமைப்பிடம் தொடர்பான முடிவைப்
56 தாயகம் 36

பின்னர் எடுக்கலாம் என்று வருகைதந்த கல்வியமைச்சின் செயலாளர் கூறியவோது மற்ற எல்லாக் கோரிக்கைகளுக்கும் கிடைத்த சாதகமான பதிலில் திருப்திப்பட்டது தவறோ? அடிப் படையே தலைமைப்பீடத்தின் கோளாறெனக் கண்டு அதை
அப்புறப்படுத்தி விடுவதை முதன்மைப்படுத்தியிருக்க வேண்டுமோ?
அன்றைக்கு எல்லாவகையாலும் தான் அவமானப்பட்டதன் விளைவாய் இன்று இங்கே இருக்கக் கிடைத்த வாய்ப்பைவைத்து நாங்கள் இரண்டு வருடங்களாய் உருண்டு புரண்ட நிலத்தில் கால் வைக்க மறுத்து நிற்கிறதே இந்த ஐந்து,
கண்களால் காண்பதும் பொய் என்பது இந்தவிடயத்தில் உண்மைதான். தலைமைப்பீடத்தில் இருந்தபடி நெளியும் S2C5H(p... பாவம் புழுவுக்கேன் அப்படியொரு கேவலம் : தன் உயரதிகாரி களின் முன் அஞ்சியொடுங்கி அறிவுகெட்டு வெறும் ஜடமா ஆகிவிடு கிற புழுவிலுங் கேவலமாய் உள்ள ஒரு பிடி அசிங்கம்இது. உணர் விழந்த எத்தனைபேர் முன் இது அசிங்கப்பட்டு நின்றதைக் கண்டிருகிறோம். புழுவுக்காவது சிறு அசைவைக் காட்டும் உயிர்ப்பிருக்குமே மேலதிகாரி முன் அஞ்சியொடுங்கி அசை வற்ற அசிங்கமாகிவிடும் இதுகூட மனிதவுருவில் தானே. உலவுகிறது இதையோர் உலக அதிசயமாய் ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது.
இன்றைக்கோ சர்வவல்லமை வாய்ந்த இரண்யகடாட்சங் கிடைத்த இராட்சதத்திமிர், அப் டியொரு வரம்பெற்று வந் திருக்கிறது; ஒருநிலையில் அசிங்கக் குவியலாய், சாதாரண வேளை களில் மனித வடிவில் உலாவி, மறுபக்கத்தில் வாய்ப்புக்கிடைத் தால் இராட்சதத்தோற்றத்தைக் காட்டத்துடிப்பது என்ற மாறு படு சூரத்தனங்கள் வாய்க்கப்பெற்ற புதியவகை வரம்.
இராட்சதக் கூட்டத்தில் இது ஒரு கண்ணிதான். சென்ற நவராத்திரியின் போது இந்த இராட்சதக் கண்ணியின் இரட்சிப் பால் ஒரு பேரினப் பேய்க்கணம் அதோ அந்தச்சந்திப்பில் பயங் கர வெறியாட்டொன்றை நிகழ்த்தியதே.
கோரத்தாண்டவம்! நவராத்திரி விரதப் புனித உணர் வோடு பலரும் விழித்த ஒரு அதிகாலைப் பொழுகில் கொட்டும் அடைமழையில் அந்தப் பேய்க்கணம் கெ. டிய வெறியாட்டில்; இரத்தப்பலி கேட்டுக் கோரப்பற்களை வெளிக்காட்டிக் கால் களை எத்தியெத்தியெறிந்து, ஒன்று சிறியாதவில் மற்றது ஜம்பு கோளத்தில், ஒன்று பீதுருதாலகாலவில் மற்றது தெவிதுவரவில் என மாறி மாறி ஏதோவொரு பின்னணி லயத்துக்கிசைவாய்
35A (45th 36 57

Page 31
ஆடியகோரத்தாண்டவம்! ஒருதரம் கால்தடம் பதிக்கையில் ஷெல்லும் குண்டுமாரியும் பொழியும், மறுபுறம் கால் பெயரும் இடம் எரியும் ரப்பர் புகை நாற்றத்தை உமிழும்.
கொட்டும் பெருமழையோடு சுருதி சேர்ந்த வெறியாட்டு: பிரளய வெடிப்பு, மழையடங்குமென நினைக்கையில் வை வெடித்தே வீழ்ந்தது. பொங்கிப் பிரவாகித்த வெள்ளப்பெருக்கில் புகையின் நெடில் நாற்றமும் இரத்தப் பிசு பிசுப்பும் கரைந்து அலையெறிந்து ஓடியது. கிழிந்த தசைகளும் எலும்பும் நெருப்புக் கோளமும் புரண்டோடின, எங்கும் நினவாடை. கடைவாய்ப் பற்களில் நரமாமிசத் துண்டங்களோடு வெளிப்பட்டது இராட் சதக் கண்ணி, "நவராத்திரியா வேண்டும் உங்களுக்கென்றொரு பண்பாடா . ஒடுங்கள் வெளியே' எனக்கெக்கலித்தபடி விரட்டி யது. அலறி ஓடியவர்கள் மீண்டும் நுழையவொட்டாமல் இராட் சத நகக்கொடுக்குகள் கடகடவென இறுகித்தடுத்தன:
சாவதானமாய் மீண்டும் திறந்த கல்லூரிக்குள் கல்வியற் கற்கையோடு இந்தப்பேய்க்கண வரலாறு பற்றிய கல்வியும்: இராட்சதக்கண்ணியும் அதன் தொடர்புகளும்; மூல, அதை யடுத்த மிகப்பெரிய, பெரிய இராட்சதக்கண உறவுகள் பற்றிய படித்தல், இந்தப் பவளமாளிகைகூடக் கண்ணை மறைத்துச் சிறைப்படுத்தும் மூல - இராட்சதக் கண்ணியின் சதியென்ற அறிதல் . பலரதும் ஒன்றுகூடல்; உறுதிப்படல். விளைவாய் வெடித்த வெற்றியளித்த ஒன்றுபட்ட போராட்டந்தான் இரண்டு மாதங்களின் முந்திய உண்ணா விரதப் போராட்டம்,
இப்போது பிரித்துத் தூர வீசியெறியப்பட்டுள்ளோம் என்ற தைரியத்தில் இராட்சதக் கொடுக்குகள் தம் பயங்கரத்தைக் காட்ட எத்தனிக்கின்றன, இந்த ஒருநாள் திடீர் ஒன்றுகூடல் இராட்சதக்க கண்ணி எதிர்பார்த்திருக்காத நிகழ்வாய் இருக் கலாம்; இப்படி சாத்தியப்படினும் முன்னர்போல ஒன்றுபட்ட பல மான சக்தியாக ஒருங்கு திரளமுடியாதென்ற தைரியம் அதற்கு!’
அன்றைக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் மலர்ராஜ் என்னமாய் முழங்கினான்,
"நவராத்திரியும், தீபாவளியும், கந்தசஷ்டியும் அசுரர்கள் வீழ்த்தப்பட்ட தினங்களாய்க் கொண்டராடுகிறோமே! எத்தனை கேவலம்? நமக்கு முன்னால நின்னு இன்னைக்கும். இராட்சதக் கூட்டம் வெறியாட்டம் போடலியா? இவையெல்லாம் இறுதியாய் வீழ்த்தப்படாமல் ஆங்காங்கே ஒவ்வொரு அசுரரின் அழிப்புக்காக
58 Strusth 36

என்ன கொண்டாட்டம்? பாரதி சொன்னது போல் இனியொரு விதி செய்வோம் . இல்லை, சில விதிகள் செய்வோம், தனியொரு வனும் பசியால் வாடாதபடி, அனைவருக்கும் உணவும் உறை யுளும் பண்பாட்டுயர்வுக்கான வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும்வகையில் இந்த இராட்சதக் கணங்களை வீழ்த்தியழிப் பதை அவற்றுள் முதல் விதியென ஆக்குவோம்
அன்று அந்த ஆக்ரோஷமான பேச்சால் இறுதியில் | LD ш 518.) வீழ்ந்தானே மலர்ராஜ்; அவனுடைய வீரஞ்செறிந்த உணர் வலைகள் உச்சத்தில் ஏறிப்போய் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்து விடுமோ? அதுதான் காதல் நிறைவேறாதெனக் கண்டதும் து வண்டுபோய் இன்று வராமலே இருந்துவிட்டானோ? அவன் இன்றைக்கு வந்திருந்தால்
* மலர்ராஜ் பேச்சையே எடுக்காதடா. அவ(ன்) ஒரு கோழை, பெரிசா வீரமாப் பேசுவா(ன்) . ஆனா சின்னத்தோல்வி அப்பிடீன்னு ஆச்சுன்னா சோர்ந்து போயிடுவா (ன்). இன்னைக்கு இந்த இடத்தில நின்னாக்கூட ஆவேசமாய் பேசுவான் தா.'
பழனிச்சாமியின் ஆத்திரப்பட்ட குரலால் மீண்டும் யதார்த்ததில் கால்பதித்தான் நந்தகுமார். சர்ச்சைக்குள் தான் இல்லாமல் சில கணங்கள் விலகியிருந்ததை விளங்கிக்கொண் டான். ஆயினும் தான் மலர்ராஜ் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போதே பழனிச்சாமியும் இதைச் சொன்னான் எனக் கண்டதில் தமது தோழமை பூர்வமான ஒருங்கிணைந்த அபிப்பிராயங்களில் ஒரு திருப்தி நந்தகுமாருக்கு. مقننه.
நளாயினிக்குப் பலத்த அடிபோலாகிவிட்டது, பழனிச்சாமி தன்னை மறைமுகமாகத் தாக்க வென்றேதான் இப்படிச் சொல்லி யிருப்பான், மலர்ராஜை இழந்துவிடுகிறோமோ என்ற நினைப் பின் அதிர்வாலேயே என்னை உள்ளூர அழித்துக்கொண்டிருக்கிற அவதியைச் சொல்லுவோமா பழனிச்சாமிக்கு? அவனோடு @岛GT55 மாய்க் கதைப்போமா? முடியாது, இப்போதே 9ی{)LpgژI 60 تاسیسا போ கிறேன்; பின் எப்படிக் கதைக்க முடியும்? s
அப்பாவின் வெற்றுவேட்டு அச்சுறுத்தலை வைத்து மலர் ராஜுக்கு அப்படி ஒரு விரக்திப்பட்ட கடிதத்தை எழுதியிருக்** கூடாது. எங்கள் காதல் கைகூடாது என்று சிபித்தி எழுதி விட்டேனே; அப்படி எழுதிய எனக்கே கேவலமாய்ப்படும்போது மலர்ராஜ் எவ்வளவு மோசமாய் உடைந்துபோயிருக்கும்? மலர் ராஜ் கோழையில்லையென்று இவர்களுக்கு எப்படிப்புரியவைப்பது?
தாயகம் 36 * 59

Page 32
பலர்ராஜ் சமூகப்பிரச்சினைகள் குறித்தும் மனித உறவுகள் பற்றியும் உணர்வுகலந்து விளக்கியதை உட்செரித்துக்கொண்டு தானே பழனிச்சாமி கூட்டிய கூட்டங்களில் கலந்துகொ ைடேன். இப்போதும் பெண்களில் முன்னிலையில் நின்று விவாதிப்பவர்கள் நாங்கள் உருவாக்கிய மாதரனிதானே. மனம் வெதும்பிப் போனதில் வழக்சம் போல் முன்னணியில் நின்று குரல்கொடுக்க முடியாமற்போய்விட்டமை குறைதான் .
"ஒரு தோட்டக்காட்டானை - லயத்துப் பயலை - நீ கலியா விணம் ப ைரிைக்கமுடியாது. அப்படியொரு நெனைப்பிருந்தா ஒன்னையும் வெட்டிப்போட்டு நானும் செத்துப்போவேன். ஆமா! மத்த தங்கச்சிார நெனைச்சுப்பாத்தியாடி?
சிறிய கடையொன்றை வைத்துக்கொண்டு பெரும் முதலாளி யாட்டம் அப்பா பலர் ராஜை இகழ்ச்சி செய்வதை இனியும் பொறுக்கப்போவதில்லை. இன்றைய அமானம் மிக்க அமைதி எதைவிடவும் பெரிய இழிவு.
மலர்ராஜ், நீ சோர்த்துவிடலாகாது. இராட்சதக்கணங் Wளை வீழ்த்தியழித்து எல்லோருக்குமான இருப்பிலும் உயர் விலும் எங்களை இணைக்க உன்னுள் இயக் மாப் நானிருப்பேன்.
எப்படியும் செக் வாங்கியே செல்வது என்று நினைத்து வந்து வாதாடிய போதிலும், இன்றைய இந்தத்தடையும் அதற் கெதிரான போராட்டமும் எதிர்பார்த்து திட்டமிட்டு வடி வமைக்கப்படாதது என்றவகையில் இவ்வளவில் வெளியேறுவது சான்ற முடிவுக்கு எல்லோரும் வந்தனர். இந்த மண்ணின் ஒவ் வோரடியும் வனாந்தரமாய் கிடந்து பார்ப்பாரற்றிருந்த நூறாண்டு முந்திய காட்சி நிழலாடியது. எத்தனை அண்ணனைத் தோற்ற பின் இந்த மலைகள் பசுடையைப்போர்த்திப் பணத்தை இறைச் சுத் தொடங்கின என்பதுபற்றிய பிரக்ஞை இராட்சதக்கனங்களுக்கு அவசியமற்றதாகலாம்; நமக்குமா அற்றுப் போகும்?
'இது நம்ம பிள்ளைகள் படிக்கறதுக்காகக்கட்டப்பட இருக்கிற கல்லூரி ஒங்கதோட்டக் காணிப கல்லூரி கட்டறதுக் காக சுவீகரிக்கிறத எதிர்த்துப் போராட வேண்டாம்."
கல்லூரிக்கெனத் தமது மண்ணைப் பறிக்க எடுத்த எத் தனிப்பைத் தடுக்க முயன்ற போது, இப்படிப் பொறுப்பான "பெரியதலை" சொன்னதைக்கேட்டுத் தானே இந்தத் தோட்டத் விதச்சேர்ந்த எங்கள் மூத்தவர்களும் சோதரர்களும் சம்மதித் பார்கள்! அதென் ைபெரிய தலை" , அதை அப்பிடி நம்பினதுதா
தாயகம் 36

நம்மி முட்டாள் தனம், அது பெரிய இTட்சதன் இப்படிச் சொன்ன அந்தப்பெரிய இராட்சதன் மிகப்பெரிய இராட்ச ጋ; 3ùùሃ rr Œ கூட்டுச்சேர்ந்து அணுக்கிரகம் வழங்கியதாந்தானே இந்த இராட் தக்கண் அணி நகக்கொடுக்குகளை நீட்டி நிற்கிறது. எது மண்ணில் எம்மையே கால்பதிக்கவெண்னாtல், - ** திணிவிக்கக்கூட முடியால் , கொண்டுவந்த உ ை უჯა MTh நிமிடம் குந்தியிருந்து உண்ணவும் os) rorisorti, 7 Iri II நிலையில் திரும்புவதோ?
எமது முன்னோடிகளுள் ஒரு ராய்த் தி *ழ்ந்து பாடப் 'ப் பிலும் இடம்பெற்றுவிட்ட சி. வி. எேஒப்பின் 1ள சொன்னாரே அதுபோல், எமது தந்தையரின் புதைகுழியின் பவே நாம் இன்று நிற்பதும் நடப்பதும் அறிவோம்; இது புனிதமிக்க பண் . இதை இழக்க ஒருப்படோர். இது நேர்ந்தது வெறும் அமைான மல்ல, எமது ஒர்த்தை வளர்ப்பதற்கு எடுக்கப்பட்ட சோதனை முயற்சி;
ள்ேவானே. நாம் தேறுவோம் என்பது உறுதி.
பாஸ்லோருள் பஸ்திரிப்பிடத்தை வந்தடை ந்தபோது, மீண்டும் ஈத்திப் சை. அத்து ஒரடி :ன்னேற்றத்துக்கான நடவடிக் கையை வகுப்பது குறித்ததிட்டத்தை உருப்போட்டபின் அவரவர் பஸ் பெரும்போது ஏறத்தொடங்கிார். இதற்குள் நளாயினி உற் சாகமடைந்து புதிய தெம்பைப் பெற்றுக் கலகலத்ததில் எல்லோ திக்குந் திருப்திதான் .
"நாபெருவேன் கண்டிப்பா, முக்கியமான வெசமபங்கள் "தைக்க இருக்கில்லையா பலர் ராஜை கட்டாயமா வரச்சொல் லுங்க" என்பது அவள் பலதரமாய் ஒவ்வொருவருக்கும் சொல்லிக்
el F f GiaT I || 557, Gurr ர்த்தைகள்,
is first 32 இன்னும் ஒரிரு தினங்களில், வருகிற ஞாயிறு. சந்திக்கப்போகிற திருப்தி நளாயினிக்கு அவள் பஸ் ஏறும்போது ாழி விச்சாமியும் தந்த குமாரும் கீழே நின்று ஆனந்தாய்க் கை .கிழ்வைத் தந்தது لم يتم بي آى) م 3) ل (دم فتت حول التي قد تأثرة الات الا
? " என் இனிய டெவன் துயரம் வேண்டாம், இளமைப் ஆரிப்டோடு நம்பிக்கைபொங்க பாய்ந்தோடு, உன்னின் படர்ந்த ! -' + s*sl/{3}}; it if । நிரந்தரமானதில்லை. நாளையே உன் இனியவன் உன்னோடு இனை வான். சரிந்தை குட்டினோடு நீயுந்தான் பொங்கிப் பிரவாக ஆப் போகிறாய்,
凸Tu与岳 f 门岛

Page 33
ஏழைகள் வயிற்றில் அடி
தம் உழைப்பில் தாமுண்ணும் மக்களுக்கு திருவதற்கு உங்களிடம் ஏதும் உண்டா?
உழைக்கின்ற மக்களுக்கு உங்களைப் போல் உல்லாசம் உப்பரிகை எதுவும் வேண்டாம்
சோற்றுக்கவர் உழைக்க சுதந்திரமாய் விட்டுவிட்டு நிறுத்துங்கள்
உங்கள் நிவாரணத்தை.
நேற்றுவரை இவைகளையா நம்பி வாழ்ந்தார்
தீராத இனப்போரை தொடக்கி வைத்து ஊரூராய் தெருத்தெருவாய் அலைய வைத்தீர்.
தேடிவைத்த சிறு தேட்டம் வீடுவாசல் எல்லாமே தொலைத்தழித்தீர்.
62
O தணிகையன்
ஊரரிதிக் கஞ்சியேனும் குடித்துக் கொஞ்சம் உரமாக இருந்தவரை கூப்பனுக்கும் கோறா அரிசிக்கும் பழக்கி வைத்தீர்
திருவோட்டில் உணவேந்தி தின்றும் புத்தர் போரில்லா அன்பு வாழ்வை போதித்தாரே.
fÈGrrr r
உலகெல்லாம் கைநீட்டி காசுபெற்று
உயிர்க் கொலையை
(81 frrř வெறியை வளர்க்கின்றீரே.
நீளும் கொடும்போரை நிறுத்த முயலாமல் ஏழைகள் வயிற்றில் அடியென்று ளவர் சொன்னார்
8. எம் எவ்(F) ஆ?
35 rTULI 35 36
 


Page 34
செய்திப் பத்திரிகையாக Registered as a News F
தரமான தங்க
மெசின் கட்டிங்
LI II a)35562 BALAKRS
உரிமையாளர்கள்: பா. ஜெகதி இல. 86, நல்லூ நல்லு
யாழ்ப்ப
SSLSLSSLSLSSLSLSSLSLSS SLLSS ==========
இச்சஞ்சிகை தேசிய கல்ை இலக்கி 40, ஸ்ரான்லி வீதி, வசந்தத்திலும் யாழ்ப்பாணம் 407, ஸ்ரான் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்
i +=
 

ப் பதிவுசெய்யப்பட்டது "a per in Sri Lanka.
-----------
நகைகளுக்கும் செய்வதற்கும்
==========
GOOT HINA #3
ஸ்வரன், பா, கேதீஸ்வரன்
ர் குறுக்கு வீதி, லூர் ானம்
_=二_二、 - E.
பப் பேரவைக்காக யாழ்ப்பாணம் ள்ள க. தணிகாசலம் அவர்களால் வி வீதியிலுள்ள யாழ்ப்பான
பட்டது.
l