கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2000.12

Page 1
匈 § 历 仍 少 衡
 

25 Dec. 2000
班 § 历 RS 分类 历. 历 列

Page 2
6TDg
உள்ளங்களில் நஞ்சை ஊட்டும் ஏகாதிபத்திய சார்பு
நசிவு இலக்கியங்களுக்கு எதிராக
எமது - மக்களின்
மனங்களில் மானுடத்தின் துளிர்ப்பையே வேரனுக்கும் நுகர்பொருள் கலாசார | முனைப்புகளுக்கு
எதிராக்
புதிய கலாசாரம் புதிய ஜனநாயகம் புதிய வாழ்வை கட்டியெழுப்ப எமது கரங்களை
இளைய தலைமுறையின்
ஒன்றிணைப்போம். ܓ
இந்த இதழில்.
இ. முருகையன் சோ. பத்மநாதன் ഴിഖr கல்வயல் குமாரசாமி எஸ். ஆறுமுகம் அழ, பகீரதன் தணிகையன்
சிறுகதை:
தாட்சாயணி ஞானசீலன்
கட்டுரை:
சி. சிவசேகரம் முருகையன் லெனின் மதிவானம்
பிற.
குமாரன்
சுவைப்பான் உலகண்
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய நாகரீகம்
25.2-2000 இதழ் 40
O O O பண்பாடும் சீரழிவும் கால மாற்றத்தைக் கருத்திற் கொள்ளாமல் பழைய கனவுகளில் மிதக்கும் கிராமத்த முதியவர்கள் "காலம் கெட்டுப்போச்சு’ என்று குறை கூறுவத வழமையான ஒன்று. தலைமுறை இடைவெளியின் வெனிப்பாடு இது எனலாம். ஆனால் கணனி, தகவல், தொழில்நுட்ப ஊடகங்களின் வளர்ச்சியால் உலகமயமாக்கப்படும் கிராமங்களுக்குள் உள்நழையும் ஆதிக்கக் கலாசாரம் மக்களின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்திவரும் வேகமான தாக்கங்களுக்கு எதிரான குரல்கள் அவ்வாறானவை அல்ல.
பாலியல் ஒழுக்கக்கேடுகள், போதைவஸ்தப் பாவனை, நீலப்படங்கள் மட்டுமல்ல தொலைக்காட்சிக்கூடாக வீடுகளுக்குள்ளேயே நழைந்தவிடும் ஆபாசச் சினிமாக்கள் இப்படி நீண்டு செல்லும் சமூகச் சீரழிவுகளுக்கெதிராக இன்று விழிப்புணர்வுள்ள பெற்றோர், ஆசிரியர், இளம் தலைமுறையினர் தமக்குள் குமுறுகின்றனர். நீண்டு செல்லும் யுத்தச் சூழலும் இதற்கு எதிர்ப்பற்ற சாதக நிலையை தோற்றுவித்துள்ளது.
இவைகளுக்கு எதிராக பரந்தநோக்குள்ள ஆன்மீகவாதிகளின் குரலும், அறிவியல் அடிப்படையில் மானுடத்தை நேசிக்கும் மனிதாயதவாதிகளின் குரலும் சிறிய அளவிலாவத ஒலிக்க ஆரம்பித்தள்ளன.
வளர்ச்சியடைந்த நாடுகளால் மக்கள்மேல் திணிக்கப்படும் நகர்பொருட் கலாசாரம், அன்பும், உறவும், எளிமையும், அடுத்தவரை நேசிக்கும் உயர் பண்பும் நிறைந்தமானுடப் பண்பாட்டுக்கு எதிராக மலைபோல் வளர்ந்த செல்கிறத.
உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளையே பூர்த்திசெய்ய முடியாத நிலையில் வாழும் மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் அதற்கு அப்பாலும் பன்மடங்காகப் பெருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நகர்பொருட் தேவைகருக்காக, சொந்த மண்ணிலும், வீட்டை, உறவை, நாட்டைத்தறந்து உலகம் முழுவதும் ஆலாய்ப் பறக்க வைக்கப்படுகிறார்கள். நகர்வியக் கனவுகளுக்குள் இவர்களை மிதக்கவைப்பதன்முலம் நவகாலனித்தவம் இம் மக்கள் மீதம், நாடுகள் மீதும் தனத பிடியை மேலும் இறுக்கிக்கொள்கிறது.
பொருளாதார வாழ்க்கைத் தரத்தை எட்டுவதற்கான போட்டியில் ஒருவரை ஒருவர் முண்டியடிக்க முனைவதுடன் தள்ளி விழுத்தி மிதிப்பதற்கும் தயங்காத மனப்போக்கு மனிதர்களுக்கிடையில் மட்டுமல்ல, நாடுகளுக்கிடையேயும் வளர்க்கப் படுகின்றத.
அறக்கருத்துக்களும், ஆன்மீக சிந்தனைகளும்கூட இவர்களத மனச்சாட்சியை உறுத்தவதில்லை. அவைகளெல்லாம் வழிபாட்டுக்குரிய ஓரிரு மகான்களுக்கு உரியவையே அன்றி வாழ்க்கைக்கு உகந்தவை அல்ல என்ற அனுபவ ஞானமும் இவர்களிடம் வெளிப்படுகின்றத. ஆனால் சடங்குகள், விழாக்கள் சம்பிரதாயங்களை
duas

Page 3
நவீன வசதிகளுடன் காலம் தவறாது பன்மடங்கு ஆடம்பரத்துடன் செய்வதற்கு இவர்கள் என்றும் தயாராக உள்ளனர்.
மதத்தலைவர்களில் பெரும்பாலானோர் கூட மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை மக்களிடம் பரப்புவதில் அக்கறை கொள்வதிலும் பார்க்க, மத அடையாளங்களை அரச அதிகாரங்களுடன் இணைத்துப் பேணிக்கொள்வதிலேயே மிகுந்த அக்கறையாக உள்ளனர்.
இதனால் இந்த நாற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடையாத மத அடிப்படையிலான பண்பாட்டுச் சிந்தனையின் தேக்கம், இன்றைய இளம் தலைமுறையினரின் கருத்தியல் வளர்ச்சியில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துகிறது.
இந்த கருத்தியல் இடைவெளியும் இப்பண்பாட்டுச் சீரழிவுக்கு பெரிதம் துணைபோகின்றன. எனவே அறிவியலாளர்கள், ஆன்மீகவாதிகள், மக்களின் மேம்பாட்டில் அக்கறையுடையோர் அனைவரும் இப்பண்பாட்டுச் சீரழிவுகளுக்கெதிராக பல்வேறு முனைகளிலும் செயற்பட வேண்டும்.
- ஆசிரியர் குழு -
ճiIIIEd:IEnglեմ:5! :
° தயாகம் 25 வது ஆண்டு மலரை திட்டமிட்டபடி எம்மால் வெளியிட
முடியவில்லை. தாயகத்தை நெருக்கடிகள் மத்தியிலும் உங்களது ஒத்துழைப்புடன் தொடர்ந்து வெளியிடம் உள்ளோம். தாயகத்தில் வெளியாகும் படைப்புக்கள் பற்றிய 12:ங்களது விமர்சனங்களையும், ஆக்கங்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
தாயகம்,
அசந்தம்புத்தக இந்நிலையம், இந் :405 எப்ரான்லி வீதி ந்யாழ்ப்பாணம்:
J.S. Printers, Sillalai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவும் நியூயோர்க்
ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு உயர எழும் கறுப்பு, கொங்கிறீட் சுவர்கள் மட்டுமே வர்ணஜாலம் செய்யும் வானமில்லை S506) fiss
மரமில்லை
கண்குளிர ஏதுமில்லை! இந்த நியூயோர்க் நகரின் நாறாவது மாடியில் கதவுகள் ஜன்னல்கள் அடைத்த சிறையில் ஒரு படுக்கே
ஒரு கதிரை
ஒரு மேசை
நான்!
இந்தப் பாரிய பூமியின் மறுபுறத்தில் - என் மண் அரங்கில் வரும் அண்புக்குரிய பெற்றோர்.உறவினர்,நண்பர்கள், மனைவி மக்கள்! இந்தப் பாழும் வெறுமையைப் போக்க ஒரு கவியை உரத்துப் பாடுகிறேன் அந்தச் சத்தம்
് பாதில்
மீள வந்து மோதுகிறது
போகும் வழி அறியேண் ஜன்னலைத் திறந்த அதல பாதாளத்தை ஊடுருவிப் பார்க்கிறேன் க்டரிய குளிர் முட்கள்
விரைந்து
முகத்தைக் கிழிக்கின்றன மீன்விளக்கின் ஒளிவெள்ளத்தில் அகப்பட்டு
- E -
நகரும்

Page 4
திசையெல்லாம் வாகனங்கள் குளறிக்கொண்டு விரைகின்றன எறும்பளவு தறக்கணித்த மனித யந்திரங்கள் பொறுமையிழந்தனவாய் இங்கும் அங்கும் ஓடுகின்றன ஒருகணம் தரித்த என்னை அன்போடு நோக்கி நலம் விசாரிக்க பரிச்சயமுள்ள ஒரு ஜீவன் இல்லை, இங்கில்லை! மறந்தவிட்டேன் அவர்கள் இப்பூமியின் மறுபுறத்தில்
ஆற்றாது மேலே பார்க்கிறேன் வட்டப் பொற்தட்டாய் வானில் ஒளி வீசும் எனக்கு நன்கு பரிச்சயமான மதியம்!
எங்கள் கிராமத்த நெல் வயல்கள்மேல் காயும் மதியம்! எங்கள் தேவாலய முன்றிலின் அரச மரத்தில் ஒவ்வொரு பூரணையும் ஒளியேற்றும்
மதியம்!
சங்களமுலம்: மஹகம சே ஆங்கிலத்தில்: ரஞ்சினி ஒபயசேகரி தமிழில்: சோ.பத்மநாதன்

முருகையன்.
அறியாப் பராயம் - அய்ம்பதுகளுக்கும் முந்திய காலம் முருகையன் என்னும் நானும் இன்று நம்மவர் எல்லாம் அறிஞர் என்றும் ஆன்றோர் என்றும் போற்றிடுகின்ற கைலாஸ் அவர்களும் பள்ளிச் சிறுவராய்ப் பயின்ற பராயம் எட்டாம் ஒன்பதாம் பத்தாம் வகுப்பிலே யாழ்ப்பாணத்தே, இந்துக் கொலிச்சிலே விடுதிச் சாலையில் வதிந்த வேளைகள் - அந்தப் பழைய அழகிய பொழுதுகள் சிந்தையில் நிரம்பித் ததும்புகின்றன.
மாணவர் மன்ற ஏடுகள் முழுதும் பல பல புனைபெயர் தாங்கி, நமது கைலாஸ் எழுதிய கட்டுரை இருக்கும் குத்தலும் கிண்டலும் கேலியும் மட்டுமா? எத்தனை சிந்தனை எழுத்திலே புலப்படும் அரியும் பிரமனும் அடி முடி தேடிய அந்தக் கதையை அருமையாய் எழுதி இறுதி வசனம் எப்படி எழுதுவார்? “அகந்தையும் பொறாமையும் அற்பமானுடர் மத்தியில் மாத்திரம் உள்ளவை அல்ல; தேவரிடையும் இவைகள் இருந்ததைப் புராண நூல்கள் போதிக்கின்றன’ - இந்தப் போக்கில் இருக்கும் ஓர் வாக்கியம் விமரிசன நோக்கின் வித்துக்கள் அல்லவோ சிறுவரின் கட்டுரை இறுதியில் இருந்தன.

Page 5
இந்து வாலிபர் சங்க நிகழ்விலும் இவரது பேச்சுகள் இடையிடை நடைபெறும் "வள்ளுவனின் வழுவற்ற கொள்கை’ என்ற மகுடம் இட்டு வரும் ஒரு பேச்சு. ‘அண்ணாத்துரையின் கடவுட் கொள்கைகளே இக்காலத்துக்கு ஏற்றவை’ என்ற பொருளில் நடைபெறும் விவாத அரங்கிலும் விளாசித் தள்ளுவார், விறுவிறுப்பாக. நண்பர் நடன சபாபதி சர்மா எதிர்த்தரப்பினிலே எடுப்பாய்ப் பேசினால் கைலாஸ் தருவார் கடியதோர் பதிலடி “பார்ப்பனியம் பறிபோகிறதே என்ற பதைப்போ?’இப்படிச் சாடுவார். திருமந்திரத்திலும் மேற்கோள் காட்டித் தமது கட்சியை நிறுவ முந்துவார். இளமைத் துடுக்கிலே இனிமைச் செந்தமிழ் அடுக்குத் தொடர்களாய் அன்று பிறந்தன.
பள்ளிச் சிறுவராய்ப் பயின்ற வேளையும் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதி அச்சிட வைத்தே அவற்றைப் பேணுவார். இந்து சாதனம், இந்து இளைஞன் சுரபி, தமிழ் மணி, சுதந்திரன் முதலாம் இதழ்களுக்காக எழுதுவதுண்டு. எவற்றைப்பற்றி எழுதினார் என்று சொல்லி வைப்பதும் சுவையாய் இருக்கும். ‘தமிழர் சமுதாயத்துக்கு விமோசனம் உண்டா? ‘பரமன் சந்நிதியா, படுகொலைக்களமா? ‘இன்னிசையும் இறைவனும்’ மேலே கண்டவை சிற்சில தலைப்புகள் சீர்திருத்தச் சிந்தனைகளையே எடுப்பாய், மிடுக்காய் எழுதிக் காட்டினார்.
அந்த நாளில் அண்ணா தலைமையில் திராவிடக் கட்சியார் சிறு சிறு நூல்களை இயற்றிப் பரப்பினர்; எங்கும் பரப்பினர். மாணவர் மத்தியில் வழங்கி வந்த அச்சிறு புத்தகம் அனைத்தும் பயின்றார். பாரதிதாசன், ச.து.சு. யோகியார் சுத்தானந்தர், சுந்தரம்பிள்ளை சேதுப்பிள்ளை, சிதம்பர ரகுநாதன் புதுமைப்பித்தன், சோமு, துறைவன்
 

இப்படியுள்ள இலக்கியக்காரரின் படைப்புகள் தமையும் படித்துச் சுவைத்தார். இவ்வாறாக இருந்து வருகையில் பண்டிதர் ‘காணாச் செல்லத்துரையும் வித்துவான் கார்த்திகேசு அவர்களும் கைலாஸ் திறமையைக் கண்டுணர்ந்தார்கள். ஊக்கம் வழங்கி உயர்ந்திட உதவினர்.
மற்றொரு பெரியார் கார்த்திகேசனார், பொதுவுடமை தனைப் போற்றிய ஞானியார், கைலாஸ் வளர்ச்சியிற் கண்களைத் திருப்பினார். அவருடன் அற்புதரத்தினம், ஏ. எஸ். கனகரத்தினம் ஆகியோர் பரப்பிய எண்ண எழுச்சியின் இனிய சூழலால் அங்குலம் அங்குலமாக,
* இந்து வில் அறிஞர் ஒருவரின் ஆளுமை வளர்ந்தது.
அய்ம்பத்தோராம் ஆண்டு தொடக்கம் மேற்படிப்பினிலே மேலும் சிறந்திடக் கொழும்பு, றோயலில் சேர்ந்து விடுகிறார். அங்கே 'கீனா’ லகஷ்மண அய்யரும் நாவற்குழியூர் நடராசாவும் தமிழ் ஆசான்களாய்ச் சார்ந்தனர் என்ப றோயலிற் படித்த ஓரிரு வருடமும் பொது வாசிப்புப் பொங்கி விரிந்தது. ஆங்கில மொழியிலும் தமிழிலுமாகப் பெருந்தொகை இலக்கியம் பிழிந்து பருகினார் விமரிசன நூல்களை மிகவும் விரும்பினார். வரலாறுகளை வாங்கிப் படித்தார் பொருளியல் விளக்கப் போதம் எய்தினார். தத்துவ தரிசனப் பரிசயம் பெற்றார். நாடகம் நாவல் நயந்து பயின்றார். வாசித்தமையால் மனிதர் விரிந்தார். விரிந்த மனந்தனில் மென்மையான கலைப்படைப்பூக்கச் செழுமையும் இருந்தது. வானொலிக்காக நாடகம் எழுதினார். நாற்பதோ அய்ம்பதோ ஞாபகம் இல்லை. அந்த நாடகத் தலைப்புகள் சில இதோ“கல்லறைக்கு எதிரில்’
“கவிஞனின் காதலி'
'85UTLLJubo
- 07 -

Page 6
"குரல்கள் ”
“புயல்’ கவிதைகள் கூடக் கைலாஸ் எழுதினார். ஆயினும் கட்டுரை என்னும் வடிவமே தமக்குரித்தென்று வரித்துக் கொண்டார். ‘வீரகேசரியில் ” விமரிசனக் கட்டுரை தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினார். ‘எழுத்தும் மதிப்பும்
‘வாழ்வும் எழுத்தும்’ ஆகிய தொடர்களில் ஆங்கில உலகின் புதுமை இலக்கியப் பொலிவினை நம்மவர் உணரும் வண்ணம் அறிமுகம் செய்தார்.
பல்கலைக்கழகம் புகுந்த பின்னரோ தமிழ் நாவல்களின் தரத்தினை விளக்கும் கட்டுரைத் தொடர் அவர் கைகளிற் பிறந்தது. பட்டப்படிப்பின் நிறைவுக்கிடையிலே நாடகப் படிப்பும் நடிப்பும் நடந்தன. ஆய்வு முறையிலே ஆசை பிறந்தது.
இவற்றுக்கிடையில் இலங்கைத் தரையிலே முற்போக்கியக்கம் முகங்காட்டிற்று முற்போக்கிலக்கிய முளைமுகத்துடனே இளைஞர் கைலாஸ் இணையலானார்.
பின்னர் நடந்தது பெரிதோர் சரித்திரம்.
'தினகரனின் ’ தலைமையினை ஏற்றுக் கொண்டு திசை காட்டி எழுத்தாண்மைப் புரட்சி கண்டும்
கனகசிவன்’ எனும் இந்தக் கயிலாசத்தார் . கலாநிதியாய் மாறியபின் மதிப்புப் பெற்றுத் தினமும் ஒரு புது மெருகு கொண்டு மின்னித் திகழ்ந்தமையும் உலகறிந்த செய்தியாகும் புனைகனவுப் பாதையினைப் புறக்கணித்துப் புதுமெய்ம்மை நெறியதனைப் பலர் மேற்கொண்டார்.
பண்டிதத்தின் மரபு - மதம் முறியடிக்கப் படை திரண்டு வந்தமையும் தேசியத்தின் மண் மணக்கும் ஆக்கத்தை வரவேற்கின்ற மதிப்பீட்டு நெறி தலைமை பெற்ற பாங்கும் உண்மையிலே பண்பாட்டின் அடியில் ஒடும் ஊற்றுகளைத் தேடுகிற ஆய்வுப் போக்குத்
- 08 -
 

திண்மையுடன் தலை தூக்கும் நிகழ்வும் எல்லாம் செந்தமிழர் காண்பதற்கு வழி வகுத்தார்.
நிகழ்காலத் தமிழிலங்கைக் கலைகள் செல்லும் நெறியினுக்கோர் குறியீடாய்க் கைலாஸ் உள்ளார் அதனாலே அவருடைய நினைவு யாவும் அஞ்சலிக்கத் தகுந்தவையே என்று சொல்வேன் பலவாறு முயன்ற அவர், யாழ்ப்பாணத்திற் பல்கலைகள் வளர்க்கின்ற கழகம் தோன்றி நிலையூன்ற வைத்துவிட்டார், அறிஞர் பூண்ட நேர்வழியின் நீதியினை மதித்தல் வேண்டும்.
விபத்தினைப் போல் ஒரு நோய் வந்து கொன்றதே, மேலவரை திகைப்பின்னும் மாறவே இல்லையே என்ன திடீர் மறைவு தொடங்கிய தொண்டுகள் நின்றனவே அட, துண்டு பட்டு விலக்கவோ மாற்றவோ ஏலா நிகழ்வு விளைந்ததுவே. சீர் மிக்க ஆய்வறிஞர் சென்றார் இடை நடுவில் ஆருக்குச் சொல்லி அழ
8X
பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் மறைவை அடுத்து யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில நடைபெற்ற நினைவஞ்சலி யின் போது “ஆருக்குச் சொல்லி அழ’ எனும் தலைப்பில் கவிஞர் முருகையனால் படிக்கப்பட்டது.
9 நீ யாருக்காவது உதவி செய்தால் அதை உடனே மறந்துவிடு : நீ யாரிடமிருந்தாவது உதவி பெற்றால் அதை ஒரு பொழுதும் மறக்காதே.

Page 7
பிறிதொரு கவிதை
KG 90) மரம் ஒரு பறவை ஒரு பொழுது
ஒரு பாடல்”
G அதே மரம் அதே பறவை
பிறிதொரு பொழுது பிறிதொரு பாடல்”
- ஏ. கோ. ராமானுஜன் கவிதை -
சீருடையில் ஒரு பெண்
ஒரு தெரு சீருடையில் ஒரு பெண் நிமிர்ந்த நடை கூரிய நோக்கு குறிதவறா ஒரு தப்பாக்கி ஒரு பயங்கரவாதி
அதே தெரு அதே சீருடை அதே பெண் அதே கடை அதே நோக்கு அதே தப்பாக்கி ஒருவிடுதலைப் போராளி.
- சி. சிவசேகரம் -
disulds
நிமல்ராஜன்
fauosummonsTab.......
தப்பாக்கிகள் மட்டுமே உரத்துப் பேசும் எமத மண்ணில்
உன் நியாயத்தின் குரலை
நீ உரத்தப் பேச நினைத்தாய்
நடுநிலையான செய்தியாளன் நீ ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் செய்தியை நீ சொன்னபோத அவர்கள் பார்வையில் அத பக்கச்சார்பானத.
எழுதகோலுக்கெதிராக தப்பாக்கிகளே நீழும் நாகரிகம் தொலைந்த மண்ணின் அதிகாரப் பசிக்கு
இரையாக்கப்பட்டவன் நீ
உன்போன்றவரின் உயிர்ப் பலிகளினால் உண்மையின் குரலை ஒடுக்க நினைப்போர்க்கு உன் சாவுக்கெதிராய் எதிர்த்தெழுந்த மக்கள் குரலே ஒரே சாட்சி
தணிகையன்
O -

தாட்சாயினி
இவளுக்கு முடிவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை இருந்தாலும் எழும்ப வேண்டியிருந்தது பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான். இவள் அயர்ச்சியை மறந்து அவனை ஒரு கணம் பார்த்தாள். இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லை. மணமான பிறகு ஒரு நாளுமே இப்படி வருத்தம் என்று வந்ததில்லை. மணமான முதல் மூன்று மாதங்களும் மகிழ்வின் உச்சக்கட்டங்களையே அனுபவித்த காலங்கள் அவை. இப்படி உடல் வருத்தத்தால் கடமைகள் பின் தள்ளப்பட்டு முகம் சுழிக்கப்படக்கூடிய இது மாதிரித்தருணங்கள் அவர்கள் வாழ்வில் இன்னும் நேரவில்லை. இனி நேரக்கூடும் அதற்கு ஆரம்ப தருணமாக இதுவே இருக்கவும் கூடும். அவன் இதனை எந்த மாதிரி அணுகக்கூடும்? பிரச்சினைகள் ஏற்படுகின்றபோதுதானே மனிதர்களின் சுய குணங்கள் அம்பலத்துக்கு வருகின்றன.
அந்த வேளையை அவள் ஒருவித இரக்கத்தோடு சுயபச்சாதாபத்தோடு எதிர் கொள்ள வேண்டுமோவென அவள் அஞ்சினாள். இது நாள் வரை போலான இனிய நாள்களென்ற சொல்லில் கொஞ்சம் கூட பிசகுவரக்கூடாதென்பதில் அவதானமாயிருந் தாள். அதன் விளைவாயே நெற்றியில் புரள்கின்ற அவன் கேசத்தை வழமைபோலவே வருடிவிட்டு எழுந்தாள். அப்போதும் கூட இந்தத் தலைவலிக்கு இதமாய் அவன் அவளது நெற்றியை 6(519 விட்டாலென்ன?, என்ற ஏக்கமான எண்ணம் தோன்றாமல் இல்லை. அவன் உறக்கம் கலையவில்லை. வழக்கமாயே இவள் எழுந்து ஒரு மணி நேரம் கழித்து எழுவதே அவன் வழக்கமாயிருந்தது. இப்போது அவள் கூட சற்றுப்பிந்தி எழும்பியதால் அவன் எழும்ப இன்னும் அரைமணி நேரம் இருக்கும் போல் தோன்றியது.
இவ்விதம் காய்ச்சல்க் குணம் உணர்ந்தால் அவன் நெற்றியில் கைவைத்துக் காய்ச்சல் இருக்கிறதாவெனப் பார்க்கக் கூடும். ஆனால் அவளது முகபாவத்திலிருந்தே அவளது வேதனை உணர்ந்து நெற்றி வருடானோ? என்பதிலேயே ஏக்கம் இருந்தது. சின்ன முகவேறுபாட்டிலிருந்து இவள் உள்ளத்தையே உணர்ந்து கொள்ளமாட்டானா? அவனது சின்னக்கண்ணசைவு ஒன்றிலேயே
- 11 -

Page 8
இவளால் அவனைப் புரிந்து கொள்ளமுடிகிறபோது அந்தக் கண்களின் ஆழத்திலிருந்து மகிழ்ச்சியோ, வேதனையோ எது அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது என இவளால் உணர முடிகிறபோது . அவனால் மட்டும் அவளது தலைவலியைப் புரிய முடியாது ாேகுமோ?
இவளுக்கு அவன் மனதிலிருந்து பீறிடக்கூடிய பரிவு தேவையாயிருந்தது. ஒரு கணப்பார்வையில் அவன் அவளை அளந்து வார்த்தைகளற்ற மெளனத்தில் விரல்களால் முகம் வருடி அணைக்கும் ஒரு சின்னச் செய்கையில் அவன் பாசம் உடலெங்கும் பரவுவதாய் உணர்ந்து அந்த உற்சாகத்திலேயே எல்லா வேலைகளையும் சுமந்து விடலாம் போலிருந்தது.
மனசு லேசானால் எந்தக் கடினமான வேலையும் இலகுவில் சுமக்கப்பட்டு விடும். ஆனால் மனது கனத்திருக்கும் போது சுலபமான வேலையைக் கூடச் சுமந்து முடிக்க முடிவதில்லை.
அவனோ இவளது எதிர்பார்ப்புக்கள் எதுவுமே புரியாமல் உறக்கத்தில் இருந்தான். இவள் கிணற்றடி லைற்றுகளைப் போட்டு கிணற்றடிக்குப் போய்வந்து சமையலறைக்குள் நுழைந்து அடுப்பில் கேத்திலை வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்கினாள். வெங்காயம் வெட்டிய போது காத்திருந்த மாதிரி கண்ணிர் வெளிப்பட்டது. இதற்கு மேல் தாங்காது போல் தோன்றவே பேசாமல் கட்டிலில் போய் விழுந்தாள். தலைவலி மண்டையைப் பிய்த்தது. அணுக்கங்களோடு படுத்தவளின் குரல் அவனை உசுப்பியிருக்க வேண்டும்.
“என்ன வத்சி . ?” என்றபடியே திரும்பிப் படுத்தான். அவள் எழும்பாததால் எழும்புவதற்குரிய நேரம் வரவில்லை என்று நினைத்தானோ?
அவன் கண்கள் தாமாகவே இந்த வருத்தங்கண்டு விசாரிக்க வேண்டும் என்று பிடிவாதமாயிருந்தவள் அதைத் தளரவிட்டபடி சொன்னாள் .
“ ஒரே தலையிடி, ஏலாமக் கிடக்கு .99 அவன் அவள் புறம் திரும்பினான்.
‘ஏன் ...? அவன் அவள் முகம் திருப்பி விசாரித்தான். ‘ஏனோ தெரியா...' இவள் மெல்ல எழும்பி அடுப்படியில் பாதிவேலை கவனிக்க நகாநதாள.
“ஏலாதெண்டா பேந்தேன் வேலைக்கு லீவு போடுமன். “ஏற்கனவே லிவு கணக்க எடுத்தாச்சு, பாப்பம், பனடோல் போட்டுட்டுப் போவம்.”
99

தன்னுடைய வேதனையான முனகல்தான் அவனை அக்கறை கொள்ள வைத்ததே தவிர தன் முகத்திலிருந்தே அவன் தன்னை உணர்ந்து கொள்ள வில்லையேயென அவளுக்குள் சற்றே மனத்தாங்கல் ஏற்பட்டது. தலைவலியைக் கூடத் தாங்கமாட்டாமல் அனுங்கல் வந்துவிட்டதேயெனத் தன்மீதே வெறுப்புப் பற்றிக் கொண்டு வந்தது.
அடுப்படி வேலை கவனித்துக் கொண்டிருந்த போது அவனே குளித்து விட்டு வந்தான்.
'ஏலாதெண்டா விடும் சமைக்கவேண்டாம் * என்று சொல்லி பால்மாவும் சீனியும் வைக்கப்பட்ட போத்தல்களை நகர்த்தி மூடி திறந்தான். இவள், சட்டென்று எழுந்தாள்.
“நீங்கள் விடுங்கோ நான் போடுறன் தேத்தண்ணி ...” என்றவாறே அவனை விலக்கி பிளாஸ்கைத் திறந்தாள். “əgəqüLum"LT” என்றொரு மூச்சு அவனிடமிருந்து கிளம்பினாற் போலிருந்தது. அவளுக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு முறை அவன் தேனீர் கலந்து வந்ததும் தான் போட்டதேனீரையே குடிக்கமாட்டாமல் அவன் சிரமப்பட்டதும் ஞாபகத்தில் தெரிந்தது. இருந்தாலும் அவன் இந்த நேரத்தில் தானே வற்புறுத்திப் போடாமல் விட்டானே என்ற நினைப்பு லேசாய் முள் குத்தியது. அதிலும் தன் வருத்தத்தின் தீவிரத்தை அவன் உள்ளபடியே இன்னும் புரியவில்லை என்பதாலும் வேதனையாயிருந்தது.
ஒன்றும் பேசாமல் அவள் தேனிர் கலக்கிக் கொடுக்க வாங்கியவன் அவளுக்கும் கலந்திருப்பாள் என்று எதிர்பார்த்திருந்தான் போலும்.
இவள் தான் அருந்தாமல் திரும்பவும் மீதி வேலையை கவனிக்கப் போவதை உணர்ந்து,
“என்ன வத்ஸி ஒண்டும் குடிக்காமல் என்ன செய்யிற . சூடா ஏதேனும் குடிச்சாத்தானை சுகமாக் கிடக்கும் ...” என்றான்.
“இல்லை எனக்கொண்டும் மனமாயில்லை”
“அப்ப எனக்கும் வேண்டாம்.” அவன் தேனிர்க்கோப்பையை மேடையில் வைத்துவிட்டு நகர்ந்தான். s
“நீர் குடிக்காட்டி நானும் குடிக்கன்.”
அவள் அவனைப் பரிவோடு பார்த்தாள். எழும்பித் திரும்பவும் தேனிர் கலக்க வெறுப்பாய் இருந்தது. அவன் போட்டுத் தந்தால் நன்றாயிருக்கும் போலிருந்தது. ஆனால் தான் போடும் தேனின் மகிமையைப் பற்றி நன்கறிந்திருந்த அவனோ அப்படி 69(5 சோதனையில் தன்னை ஈடுபடுத்த விரும்பவில்லை. இவள் திரும்பவும் எழும்பி தேனிர் கலந்தாளர். முனகல்களுடே நெற்றி சுருங்கி பயங்கரமாய் வலித்தது. அவன் அதற்கிடையில் உள்ளே போய் “விக்ஸ்’ எடுத்து வந்திருந்தான். நெற்றி நரம்புகளிடையே அழுத்தமாய்த் தேய்த்து
விட்டான்.

Page 9
* வேண்டாம் வத்ஸி ஏலாதெண்டா போய்ப்படும் இண்டைக்கு சமையலும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம். போய்ப்படும் . oو என்றான்.
‘அப்ப சாப்பாடு.’ இவள் கேள்வியாய் இழுத்தபடி தேனிரை மனமின்றியே உறிஞ்சினாளர்.
“சாப்பாடென்ன சாப்பாடு நான் ஏதேன் கடையிலை வாங்கி வாறன் . ’ இவள் சுவரோடு சாய்ந்து கொண்டாள்.
மனப்பாரம் லேசாய் விலகின மாதிரியிருந்தது. அப்படியே அவன் தோளில் சாய்ந்து காலம் முழுதும் ஆறுதலுற்றிருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஆனால் அது முடியாது. அலுவலகத்தில் தலைக்குமேல் வேலையிருக்கப் போகிறது.
இவள் குடித்து முடிந்தவுடன் அவன் தன்னுடையதோடு சேர்த்துக் கொண்டுபோய் டம்ளர்களைக் கழுவி அலம்பி வைத்து விட்டு வந்தான்.
“நீர் படும் என்ன..” சொல்லிக் கொண்டே குளிப்பதற்காக அவன் கிணற்றடிக்குப் போனான். இவள் லேசாய் தலைப்பாரத்தைக் குறைக்க கொஞ்சநேரம் படுத்துக் கொண்டாள் நேரம் அவசர அவசரமாய் விரைவது போற்படவே அவளும் எழுந்து சுடுநீர் கலந்து உடலைக் கழுவிக்கொண்டு அலுவலகத்துக்கு வெளிக்கிடலானாள்.
இவளைக் கேள்விக்குறியோடு ஏறிட்ட அவன் “ஒரு நாள் லிவெடுத்தா ஒண்டும் குறைஞ்சிடாது.” என்றான். மறுபடியும்.
அவன் பரிவுதாங்காமல் “இப்ப பரவாயில்லை, ஆகலும், ஏலாதெண்டா அரைநாளோடை வாறன் ...” என்றாள்.
“ஓம் அரை நாளோடை வந்திடும் ...” என்ற வாறே அவனும் கிளம்பி விட்டான். இவள் பஸ்ஸிற்காய்க் காத்திருக்க நேரிட்டது இங்கே வந்தபிறகு அலுவலகம் தொலைதுாரமாய்ப் போய்விட்டது. இடமாற்றத்துக்கு எழுதிப் போட்டிருந்தாள். அது கிடைப்பதற்கு இன்னும் நாளாகலாம்? அவனுக்கும் இவளுக்கும் ஒரே ஊரில் வேலை என்றால் பரவாயில்லை அங்கேயே ஒரு வீடு பார்த்துக் குடியேறியும் விடலாம். இது இரண்டு பேரும் இரண்டு வேறு திசைகளில் எங்கென்றுதான் வீடு எடுப்பது. இங்கே அவனுடைய வீடு இருந்ததனால் இங்கே தங்கவேண்டியதாகி விட்டது.
அவளுக்கு அம்மாவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. வீட்டில் தலைவலியாயிருந்தால் பேசாமல் படுத்து விடுவாள். அம்மா தான் தேடித்தேடி உள்ள கை வைத்தியங்களெல்லாம் செய்வாள். இப்போதும் அந்த அன்பை நாடி ஏங்கியது மனம்.
பஸ் நிறைய சனங்களோடுதான் வந்தது. வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணம் போகும் எந்தவொரு பஸ்ஸ"மே இப்போது சனம் குறைச்சலாகப் போவதில்லை. இவள் ஒரு மாதிரி ஏறிக் கொண்டாள். அலுவலகம் போய்ச்சேரும் வரை ஏதோ ஒரு மாதிரிச் சமாளிக்க முடிந்தது.

அலுவலகத்தில் கடமை ஏற்கத் தொடங்கியவுடன் மறுபடியும் விண் விண்ணென்று அதிபயங்கரமாய் வலிக்கத் தொடங்கியவுடன் இவள் பல்லைக்கடித்தவாறே தன் கடமைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
யாராவது பரிவோடு விசாரிக்கமாட்டார்களா என்றிருந்தது.
பக்கத்து மேசைகளில் சேலையைப் பற்றியும் உமாவின் தோட்டு டிசைன் பற்றியும் கண்கள் விரியக் கதைத்துக் கொண்டிருக்கும் கலாவும், மாலதியும் கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பி,
“என்ன வத்சலா முகம் காஞ்சு கிடக்கு...” என்று விசாரித்தால் பரவாயில்லைப் போலிருந்தது. அவர்களின் கதை தோட்டையும் சேலையையும் விட்டு அசைவதாயில்லை. இவள் கைப்பைக்குள்ளிருந்த விக்ஸ் குப்பியை எடுத்து விக்சை நன்றாய் நெற்றியில் தேய்த்து விட்டுக் கொண்டாள். அதிகாலையில் அவன் அன்போடு தேய்த்து விட்டது ஞாபகம் வந்தது. அந்த விரல்களின் தேய்ப்புக்காய் மனம் மறுபடியும் ஏங்கத் தொடங்கியது. இப்போது மூக்குக்குள் சளி கரைந்து வழிந்து விடும் போலிருந்தது. “Ff போதாக்குறைக்கு தடிமனாக்கியும் போட்டுது.” மனதுக்குள் உரத்த அதட்டல் போட்டு வருத்தங்களைப் பின் தள்ளி கடமையில் ஈடுபட முயன்றாள். மேலதிகாரியிடம் சில பைல்களைக் காட்டக் கொண்டு சென்றபோது அவராவது அவளது முகத்திலிருந்து வருத்தத்தை உணர்ந்து தானாகவே லிவெடுக்கச் சொல்லமாட்டாரோ என்றிருந்தது. மேலதிகாரிக்கு இரக்க குணம் இருந்தது. ஆனால் அவர் இப்போது மிகவும் தீவிரமாய் வேலையில் ஆழ்ந்திருந்தார். வேறு பிரச்சினைகளுக்கு அவர் முகம்கொடுப்பதாய் இல்லை.
இவள் வெறுமையோடு தன் மேசைக்குத் திரும்பிவந்தாள். “ என்ன மிஸ் இண்டைக்கு டல்லாயிருக்கிறீங்கள் வீட்டுக்காரரோடை ஏதும் பிரச்சினையோ..”
கேலியாய் ஊடுருவிய சந்திரமூர்த்தியை (886/TULDTuÜ முறைத்தாள். அவனைப் பிடிப்பதில்லை. போயும் போயும் அவன் கண்களுக்கா என் வேதனை தெரியவேண்டும் என வெறுப்பு வந்தது.
இனிமேலாவது தைரியமாய் வருத்தத்தை மறைத்து இருக்க வேண்டுமென முயன்று தன் கடமைகளுக்குள்ளே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
தன்னுடைய வருத்தத்தைச் சொல்வதில் தன்மானம் இடம் தராமற் போகவே அரைநாள் லிவு கூட எடுக்காமல் முழுநாளும் வேலை செய்தாள். மத்தியானம் அவன் தனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துவைத்துக் காத்திருக்கக் கூடும் என்பது உறுத்தியது.

Page 10
யாரோடும் மனமொன்றிக் கதைக்கமுடியாமல் பஸ்ஸிக்காய்க் காந்திருந்தாள். தடிமனின் வீரியம் கூடக்கூடத் தும்மல் அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. “அவர் நினைக்கிறார் போலை.” வேதனையையும் மீறி இதழ்களில் ஒரு முறுவல் எட்டிப்பார்த்தது. இரண்டு கைக்குட்டைகள் முற்றாய் நனைந்து போயின.
“நல்லவேளை ரெண்டு மூண்டு லேஞ்சி எப்பவும் ஹான்ட் பாக்கிலை கிடக்கிறது.” தனக்குள் முணு முணுத்துக் கொண்டாள்.
பஸ் கிறவுட்டாகத் தான் வந்தது. அது எப்போதும் போற் பழக்கப்பட்ட விஷயம் தான். ஆனால் வாசல் கரையோடு நிற்பதே கொஞ்சம் அசெளகரியமாய் இருந்தது. தலை ஒரேயடியாய் சுற்றிக் கொண்டு வந்தது. நெரிசலுக்குள் அங்குமிங்கும் திரும்பவோ அசையவோ முடியவில்லை. தலைச் சுற்று என்று சொன்னால் யாராவது இடம் தரமாட்டார்களா என்றிருந்தது. ஆனாலும் கேட்க மானம் இடம் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்லி ஏன் இருக்க வேண்டும். யாராவது பார்க்கிற ஓரிருவருக்கு என் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாதா? என்றொரு ஏக்கம் எட்டிப்பார்த்தது.
நிச்சயமாய் இங்கு தலை சுற்றி விழும்படியாய் நேராது. ஏனென்றால் ஒட்டிப்பிடித்தபடி சனங்கள் விழாவிட்டால் சரிதானே. நின்றேபோய் விடலாம் என்று எண்ணிக் கொண்டாள். கால்வழியே சூடு நரதரவென்றது. இவள் இடைக்கிடையே கம்பியைப் பற்றியிருந்த 60556) எடுத்துக் கைக்குட்டையால் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். பஸ் போய்க் கொண்டிருந்தது.
திடீரென்று அவள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் ஆணோ Gugoir(360RTT யாரோ எவரோ என்றில்லாமல் நெருங்கியிருந்த கூட்டத்திடையே இவள் மார்பில் ஒரு கரம். இப்போது அவளுக்கு வாந்தி வரும் போலிருந்தது. கொஞ்சம் அசைந்து தன்னைச் சரிப்படுத்தி அந்தக் கரத்துக்குரிய முகத்தை ஏறிட்டுத் திடுக்கிட்டாள். ஒரு விடலை பதின்மூன்று பதினான்கு வயதிருக்கும். எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான். இவளுக்கு ஞாபகம் வந்தது பஸ்ஸில் ஏறி உள் நுழைய முயன்ற வினாடியில் பக்கத்து சீட்டைக் கையால் பிடித்தபடி * அங்கால போகேலாதக்கா உதிலையே நில்லுங்கோ.” என்றவன்.
இவள் திரும்பவும் அவன் கையையும் முகத்தையும் பார்த்தாள். முகம் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க கை இங்கே மேய்ந்து கொண்டிருந்தது. இவள் தோள் சிலிர்த்து அந்தக் கரத்தை அப்புறப்படுத்த முயன்றாள். அவனோ சீற்றில் கை பிடிப்பது போல சாவதானமாய்ப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“பால் வடியுது முகத்திலை. பிள்ளைக்கு அம்மாண்டை
நினைப்புப் போல.” கோபம் எகிறிக் குதிக்க தலைவலி இன்னும் பிரமாண்டமாய் வளரும் போல் உணர்வு தொங்க எதுவும்

செய்யமாட்டாமல் அவஸ்தையுற்றாள். சில நொடிப் பொழுதில் அவன் போலவே அவளும் எங்கோ பார்த்தபடி அருகே அவன் காலைத் தேடிக் குதியுள்ள தன் செருப்பால் இறுக்கி மிதித்தாள்.
“ஆ.” அவன் வலியில் துடிப்பது தெரிய சட்டென்று அவன் கை விலகி அவனது முகமும் விகாரமாய் போகவே இவள் காலை எடுத்தாள். மறு நொடியே அவன் காணாமற் போனான்.
“சீ... இந்த மண்ணிண்டை இளசுகளெல்லாம் இப்பிடிப் பிஞ்சிலையே வெம்பிப் போச்சுதுகளே ...” மனது முணுமுணுக்க எங்காவது இறங்கி ஓடிப் போய்விட வேண்டும் போலிருந்தது. மனதின் அருவருப்பு இன்னும் நீங்கவில்லை. தலைவலியின் நினைப்பு தலைச்சுற்றல் தடிமல் எல்லாவற்றையும மறந்து இந்தச் சமுதாயத்தை பீடித்திருக்கின்ற இந்த நோய்கட்கு எங்கே மருந்து தேட முடியும்.? என்பதாய் மனது கேள்வி எழுப்பத் தொடங்கியிருந்தது.
* செக்கிங் பொயின்ற் ஒருக்கா இறங்கிப்போட்டு ஏறுங்கோ?” கண்டக்டரின் வெண்கலக்குரல் கேட்க இறங்கி நடக்கத் தொடங்கியவள் ஆண்கள் கூட்டத்தினுள் அந்த விடலையைத் தேடினாள். இன்னும் எத்தனை பெண்களிடம் தன் கைவரிசை காட்டப்போறானோ என மனம் பதறிற்று. இதைவிட அதிகமாய் எப்படித் தண்டனை கொடுக்கலாமென மனது அலசிற்று. பெண்கள் எதிர்ப்பக்கமாய்ப் போக அவர்களோடு போய் இணைந்து கொண்டாள் மாலைச் சூரியனின் வெயில் பட்டதும் எரிவது போல் இருந்தது. கண்கள் மீண்டும் கலங்கி, மூக்கில் நீர் பளபளத்தது. இவள் குடையை விரித்து வெயிலைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
பின்னாலிருந்து பஸ் தன் செக்கிங்கை முடித்துக் கொண்டு முன்னால் நகரத் தொடங்கியிருந்தது. ஆண்கள் முன்னாலேயே ஏறிவிட்டார்கள். இவளுக்கு எரிச்சலாய்க் கிடந்தது. இப்ப வடிவா நிண்டாத் தானே பொம்பிளையஸ் ஏறினாப்பிறகு வசதியாப் பக்கத்திலை நிண்டு உரஞ்சலாம்.
அந்தமுகம் தெரியாத பிரகிருதிகள் மேல் கோபம் பொங்கியது. இவளுடைய முறை வந்து விட்டது. குடையைச் சுருக்கி மடக்கி விட்டு ஹாண்ட் பாக் திறந்து ஐ.சியை எடுத்தாள். சோர்வாயிருந்தது. ஐ.சி பார்த்துவிட்டு இவள் முகத்தை ஏறிட்டவள் “சுகமில்லே .” என்றாள்.
இவளுக்கு ஒரு நிமிடம் குரல் அடைத்துப் போயிற்று. ܗܝ “சுகமில்லே .சுகமில்லே.” அவளுடைய கொச்சைத் தமிழ் மனதின் பாறைகளில் மோதி எதிரொலித்தது. *
“ம்.” தலையாட்டினாள். “அப்ப ஏன் இருக்கல்லே ...ஏன் வந்தது?” இவள் ஒன்றும் பேசாமலே மெதுவாய்ச் சிரித்தாள். பின் பஸ்ஸை நோக்கி நடந்தாள். அந்தப் பெண் சிப்பாய் கையைத் தட்டிக் கொண்டக்டரைக் கூப்பிட்டாள். “கெதியே வாங்கக்கா.” என்று அவசரப்படுத்தியபடியிருந்த கொண்டக்டர் அங்கிருந்து ஓடி வந்தான். பஸ்ஸிலிருந்தவர்கள் வரப்போகிறவர்களின்

Page 11
தாமதத்துக்காய் முணுமுணுத்தார்கள். இவள் வேண்டுமென்றே ஆறுதலாய் நடந்தாள். கொண்டக்டரிடம் இவளுக்கு இடம் கொடுக்கும்படி அவள் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
இவள் கண்ணில் இப்போது எதுவுமே தெரியவில்லை. அந்த பஸ்.அதிலே காத்திருக்கிறவர்கள்., இடம் தராதவர்கள், மார்பை உரசிய அந்த விடலைப் பையன, வேளைக்கு வரும்படி கத்திய கொண்டக்டர் எவருமே கண்ணில் விழவில்லை. மாறாய் ஆயுதம் ஏந்திய அந்தப் பெண், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று உறவுகளை விட்டு எங்கிருந்தோ எந்தத் தூர தேசத்துக்கோ வந்திருந்து, யாருக்காகவோ, எதற்காகவோ போராடிக் கொண்டிருக்கிற அந்தப் பெண், ...எப்பவோ ஒரு நாள் இந்த மண்ணில் அவள் குருதிசிந்தும் போது பரிவாய் அவள் காயம் துடைத்து வருட. அடி பாவிப் பெண்ணே உன்னிடம் யார் கேட்பார்கள் 'சுகமில்லே.’என்று உனக்கு சுகமில்லா விட்டால் யார் உனக்கு ஆறுதல் சொல்வார்கள்.
“ஆருக்கு சுகமில்லையாம் .” பஸ்ஸ"க்குள் பயணிகள் குசுகுசுத்தார்கள்.
இவள் கண்களில் மின்னி, மின்னி ஒரு துளி எட்டிப்பார்த்தது. தடிமன் இப்போது கூடிவிட்டது போல.
C3S)
உண்மையான மனிதன் வசதியிருக்கும் IIT60)g560) நாடமாட்டான். DgBFT86, கடமையிருக்கும் பாதையைத் தான்
தேடுவான். அவன்தான் செயல் திறனுள்ள மனிதன். அவன் வரலாற்றின் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பாாக்கிறான். காலத்தின் கொப்பரையில் எரிந்து வரும் மக்கள், இரத்தம் தோய்ந்தபடி பொங்கி வருவதை அவன் காண்கிறான். எனவே சிறிது கூடத்தயக்கமின்றி எதிர்காலம் கடமையின் பக்கத்தில் தான் இருக்கிறது என்பதை அறிகிறான்.
ஜோசே மாட்டி
 

அக்கா தம்பிஉறவுகள் அல்லத அதிகாரங்கள்
கல்வயல் வே.குமாரசாமி
எப்படியோ நீங்களும்
எங்களத மேய்ப்பர்கள் தப்பிவிடாமல் தடி கொண்டு சாய்ப்பதிலே இப்போது நீங்கள் அனுப்பிவைத்த உங்களத மேய்ப்பர்கள் எங்களை மேய்ப்பர் அறிவீரோ?
இப்போதோ எங்களுக்கு இங்கே வருமானம் எப்போதும் இல்லை எனினும் அவர் மேய்ப்பர் சப்புச் சவர்கள் சரிக்கட்டி விட்டவற்றை 2üцü ц6їиїsйф
உண்ணத் தொடங்கியதால் இப்போதம் எங்களுக்கு இங்கே வருமானம் இல்லை எனினும் அவர் மேய்ப்பர் தடிகொண்டார்; நெஞ்சம்போல் எங்க(ள்) மடி தடவி குடி கொண்டு கோல் ஒச்சி எல்லாம் குடிபோக அடிகிண்டி. . . . . ஆரார் அழுதாலும் செத்தாலும் குலையோடு வட்டுதிர குட்டி, பனை தென்னை, மலை போல கோயில், மணிக்கூடு, கோபுரங்கள் நிலை குலைந்த முற்றும் பொடி சாம்பல், ஆனாலும் எங்களை மேய்ப்பர்
எங்களத மேய்ப்பர் குறிசுடுவர், சாய்ப்பர், அவர் விருப்பம் கொண்டால் மறி கிடாய் என்றில்லை மனம் வைச்சு விட்டாரோ பால் கறப்பர், காய்ச்சுவர் ஆடை எடுப்பர் அப்பால் வெண்ணெய் திரட்ட அடிப்பர், கறிவைப்பர் உரிப்பர்,சுடுவர்புதைப்பர் நினைத்தபடி,

Page 12
ஆரேனும் கேட்டுவிட்டால் “அப்படியோ” என்பார் பின் பேரெழுதி ஊரெழுதி பேராயம் உண்டாக்கி தேடுவர் ஆராய்வர் தோண்டி எடுத்தும் தடைத்தம் அடையாளம் காண்டல் எனவும் சடங்கு பல நடத்தி மீண்டும் அதையே தொடர்வர் நாணயம் குத்திச் செடில் பிடிப்பர். . . . . .
ஆர் எங்கே என்று ஆரை ஆர் கேட்பர்?. ஊர் எங்கை எங்கை நீ போறாய் என உலுப்பிக் காவடி ஆட்டிக் கடுவெயில் ஆனாலும் நா அடியும் வற்ற நமை மேய்ப்பர்.
sk ke ஓர் கண்ணே எங்கள்மேல் உங்களத பாசம் ஆர் கண்ணே தான் அறிவார்? ஆதலினால் எங்கள்மேல் உண்மையிலே ஓர் கண்ணே! உலகம் அறியாதது
தீரும் ஒருநாள்-ஓர் மாரியிலோ கோடையிலோ, நீரும் அறியாமல் நாமும் புரியாமல்
தீரும் ஒருநாள் திகைக்கும் உலகெல்லாம்
நாளை-நடுத்தெருவில் நாய்கடடத் தேடாமல் ஆளை ஆள் காணாமல், ஓர் வேளை, அதிகாலை செத்தச் சிதறிக் கிடப்பீர் வருந்தாதீர்
பாளை அடிவிட்டால்
i Trini,
 

கீழே (கீழை) வரத்தானே செய்யும் பகிடி என்ன? நீர் செய் வதை(க்) செய்யும் சிறு வேரும் கல் பிளக்கும் பொய்யாமோ இந்தப் பொடி
冰米米
அக்கா அதிகாரம்
அண்ணா மதிகாரம் தம்பி அதிகாரம் தாம் தாம் அதிகாரம் அக்காரமெல்லாம் அவரவரே அள்ளித் திக்குமுக்காடத் தின்னவைத்ததால் நாங்கள் குடல் சுருண்டு வாடிக் குறண்டி அலைகின்றோம்
米米米
எலி பெருகி எங்கள் இருப்புகளைத் திண்னுகுத
பலிபீட முன்னாடாய் பட்டியுடன் நிற்கின்றோம் சுக்கா மிளகா சுதந்திரம் ஏத
எங்களுக்கு முக்குளிச்சு மூச்சுவிட மாட்டாமல் திண்டாடி திக்குத் திசைகள் தெரியாமல் கண்கெட்டுப் பக்குவப் பட்டிருக்க. . . . . . பரதேசிக் கடட்டங்கள் பொக்குள் அழகாம் பூச்சூட்டத் தாறோமாம் அக்காவின் பிள்ளைகளாம் தம்பி தலைமுறையாம் நம்பிக்கை வைத்தோம் நடுத்தெருவில் நிற்பதற்கும் வெம்பி விழுகின்றோம் விதி:
‘கூற்றிடை வைத்த குறிப்பு (தொல் ~ செய்யுள் 158)

Page 13
படைப்புச் சுதந்திரம்
சூழலுடன் கலவி செய்த கர்ப்பமானாலும் நெருப்பென தகிக்கும் நிலைகண்டு கருவை கலைத்தவிடுகின்றேன்
ஏனெனில்
கரு சிசுவாகி பிரசவித்தால் ~ அதவே எமனாகி என்னை கொன்று விடும் என்பதால்
ஒவ்வொரு கருவையும் கலைக்கும் போதம் ஜீவ மரண போராட்டமே எனக்குள் நடக்கும் வேசி கூட கருக்கலைப்பில் களிப்படைவதில்லை நான் மட்டும் எப்படி?
கருவை கலைக்கும் போதெல்லாம் நான் கொலையாளியாகி குற்றவாளிக் கூண்டில் நிற்கிறேன் நான் கொலையாளியாகும் ஒவ்வொரு தடவையும் தமிழ்த்தாய் தன் சொந்தத்தை இழக்கிறாள்.
இப்போதெல்லாம்
என் கருப்பை அடிக்கடி கருவை தீட்டாக
வெளியேற்றிய வெறுப்பில் சுருங்கிக் கிடக்கிறத.
பிரசவ வலியுந்தாங்கி பெற்றெடுத்த மகவை கொஞ்சி மகிழ கொள்ளை ஆசை பெற்று - நாளை ஊருக்கு வழிகாட்டியாக உலவ விட ஆசைதான்
ஆனால் இரணியன் விந்தில் ஜனனித்த பிரகலாதன் தந்தைக்கே எமனாகிப் போனத போலாகாமல் தற்காலிக கருக்கலைப்பு தவிர்க்க முடியவில்லை ஏற்ற காலம் வருமட்டும் என் கருப்பை தீட்டை
தொடர்ந்த இறைக்கும்.
சிவப்பு சமிச்சைக்காக கொலைகள் செய்யும் கொடியவன் எனக்கு முன் ஓர் வினா பூதமாக எழுந்த நிற்கிறத
என் நிலை சரியா?
~ எஸ் . ஆறுமுகம் -
- 22 -

மக்கள் இலக்கிய கோட்பாட்டை
விளங்கிக் கொள்வத பற்றி.
சி.சிவசேகரம்
மக்கள் இலக்கியம் என்பதற்குப் பல வேறு பக்கங்கள் உள்ளன. மக்களை மந்தைகள் என்று கருதும் “சான்றோர்’ சிலரது நோக்கை விலக்கி மக்கள் இலக்கியம் என்பதைப் பல்வேறு நிலைகளினின்றும் நிலைப்பாடுகளினின்றும் நோக்க இடமுண்டு. நம் ஒவ்வொருவரது சமூகப் பார்வையும் வர்க்க நிலைப்பாடும் மக்கள் இலக்கியக் கோட்பாட்டைப் பற்றி ஒவ்வொருவரதும் பார்வையை வேறுபடுத்தும். முற்றிலும் ஒருங்கிணைவானது காலத்தாலும் சூழலாலும் மாறுபடாத ஒரு மக்கள் இலக்கியப் பார்வையை வழங்கும் நோக்கம் LDIT&6m5us சிந்தனையாளர்களிடம் இருந்ததாக நான் எண்ணவில்லை. எந்த ஒரு விறைப்பான பார்வையும் மாக்ஸியத்துக்கு உடன் பாடானது அல்ல. மறுபுறம் சமூக நீதிக்காகவும், சமுதாய மாற்றத்துக்காகவும், மனித சமத்துவத்துக்காகவும் போராடுகிற சக்திகளிடையே மக்கள் இலக்கியம் பற்றி அடிப்படையான ஒரு இணக்கதிற்கு இடம் உண்டு அதை எவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்ற ஒரு வலுவான கருவியாக்குவது என்ற கேள்வியின் அடிப்படையிலே அதை அணுகும் போது நமக்குச் சில தீர்வுகள் கிட்டுகின்றன. இத்தீர்வுகள் வெளிவெளியாகவே இவ்வாறான உணர்வுபூர்வமான நோக்கின்றிப் படைக்கப்படும் சமூகசார்பானதும் மக்களது நலன் சார்ந்ததுமான ஆக்கங்களுடன் முரண்பட்டு நிற்க அவசியமில்லை. ஏனெனில் ஒவ்வொரு படைப்பாளியினதும் சமூகப்பார்வை அவரது ஆக்கங்களிற் தன் முத்திரையைப் பதித்தே இருக்கும். அப்படியானால் விடுதலைப் போராட்ட இலக்குடைய ஒரு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு என்று சிறப்பான ஒரு அணுகுமுறை தேவையா என்ற கேள்வி எழுகிறது.

Page 14
முற்போக்கானதும் புரட்சிகரமானதுமான படைப்பாளிகள் எவ்வளவுதான் சமூகப்பார்வையைக் கொண்டிருந்தாலும், அவர்களுடைய ஆக்கங்கள் புரட்சிகர மாற்றத்திற்குப் பங்களிக்க வேண்டுமானால், அவை சமூக நடைமுறையின் அடிப்படையில் விமர்சனத்துக்கும் மீள்பரிசோதனைக்கும் ஆளாக்கப்பட வேண்டும். முற்றிலும் சரியான ஒரு பார்வையையுடைய எவரும் இம்மண்ணிற் பிறந்ததில்லை. எங்கும் எப்போதும் தவறுகள் நிகழ்கின்றன. அவை திருத்தவும் இயன்றளவுக்குத் தவிர்க்கப்படவும் வேண்டும் என்ற உணர்வுடனும் பணிவுடனும் செயற்படுவோரே குறைவான தவறுகளை செய்கின்னர். தமது நிலைப்பா டுகளில் வரட்டுத்தனமாகவும் மூர்க்கத்தனமான பிடிவாதத்துடனும் நிற்போர் அதிகளவிலான தவறுகளைச் செய்ய இடம் உண்டு. எனவே மக்கள் இலக்கியம் என்று வரும்போது மற்ற எந்த இலக்கிய நடைமுறையையும் விட முக்கியமான அளவில் தன்னடக்கமானதும் சுய விமர்சனப் பண்புடையதுமான ஒரு அணுகுமுறைக்கான தேவை உள்ளது. இந்த வகையில் மாஒசேதுங் சீனச் செஞ்சேனையில் போராளிகட்கு வழங்கிய ஆலோசனைகட்கும் புரட்சிகரப் படைப்பாளிக்கு வழங்கிய ஆலோசனைகட்கும் அடிப்படையான ஒற்றுமை பெரிது. இரண்டு விடயங்களிலும் வெகுசன மார்க்கம் என்பதே அழுத்தம் பெறுகிறது.
மக்கள் இலக்கிய கோட்பாடு அதன் எதிரிகளால் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. சில இடது அதிதீவிரவாதிகள் சுலோகத் தன்மையான எழுத்தை மட்டுமே புரட்சிகர இலக்கியமாகக் கருதியதும் அவ்வாறான பிரசாரத்துக்கு வசதி செய்தது. அழகியலைப் புறக்கணித்து வெறும் அரசியற் சுலோகங்களை இலக்கியமாக்கி விட முடியாது இது கலை இலக்கியம் பறறி மாக்ஸியச் சிந்தனையாளர்கள் அனைவருமே வலியுறுத்தி வந்துள்ள கருத்து. அழகியலைப் புறக்கணித்து வெறும் அரசியலைப் புரட்சிகர இலக்கியமாக மக்கள்முன் வைப்பது மக்களுடைய அழகுணர்வை அவமதிப்பதாகும். எனவே மக்களுக்கான இலக்கியம் என்பதை நாம் அணுகும் போது சில விடயங்களை மனதில் வைத்திருப்பது பயனுள்ளது.
9 நாம் வாழுகின்ற சமூகம் ஒரு சுரண்டற் சமுதாய அடிப்படையிலானது. அதில் ஆதிக்கம் செலுத்துகின்ற சித்தனைகள் ஆளும் வர்க்க நலன்சார்ந்தன.
stian - 24 -
 

9 வெகுசனங்களின் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் முனைப்பையுடைய நலிவு இலக்கியங்கள் மட்டுமன்றிச் சமூக நலன்கட்குப் பகைமையான நச்சு இலக்கியங்களும் நம் மத்தியில் நிலைபெற்றுள்ளன. 9 வெகுசனங்களின் ரசனையையும் அழகுணர்வையும் கீழ்மைப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே வணிகக் கலை இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன.
• சமுதாயத்தில் எவருமே எழுந்தமான முறையிற் சரியான நடைமுறையை வந்தடைவ்தில்லை. 9 அரசியலிற் போன்று கலை இலக்கியத் துறையிலும்
ஸ்தாபனரீதியான வேலைக்கான தேவை உள்ளது. (ஒரு போராட்ட அரசியல் இயக்கத்தினது போன்ற இறுக்கமான கட்டுக் கோப்பு இல்லாவிடினும் ஒரு வெகுசன அமைப்பினது போன்று பார்வைத் தெளிவு, இலக்கு வேலைத் திட்டம் ஆகியவற்றுக்கான தேவையை நாம் மறுக்க முடியாது) 9 முதலாளிய சமூகத்தின் தனிநபர்வாத மயக்கங்கள் அதன் உறுப்பினர்கள் அனைவரையும் வேறுபடும் அளவுகட்குப் பாதிக்கின்றன. (இது புகழ் மீதான ஆசை, சுயநலன், விளம்பர மோகம், தம்மையே உயர்ந்தோராகக் கருதும் போக்கு விமர்சனங்கட்கு முகங்கொடுக்க இயலாமை போன்று பல்வேறு வழிகளில் தன்னை அடையாளங்காட்டிக் கொள்ளக் கூடும்). மேற்தரப்பட்டுள்ள பட்டியல் எவ்வகையிலும் முழுமையானதல்ல. எனினும் நமது சமுதாயத்தில் உள்ள படைப்பாளிகள் தாம் வாழும் சமுதாயத்தின் தன்மையாற் பாதிக்கப்பட்டிருப்பர் என்பதை அதிலிருந்து அடையாளங் காண்பது சிரமமானதல்ல. சமூக விடுதலைக்காகவும் சமுதாய மாற்றத்திற்காகவும் செயற்படும் போது ஒரு படைப்பாளி தன்னுடைய இருப்பையும் சிந்தனையையும் விடுதலைக்கும் அதை ஒட்டிய மாற்றத்திற்கும் ஏற்றதாக்கிக் கொள்கிறார். இம்மாதிரியான மாற்றம் ஒரு பொழுதில் ஏற்படும் ஞானோதயமாக இருக்க முடியாது. மாற்றம் என்பது படிப்படியாக ஏற்பட்டு முடிவின்றித் தொடர்கின்றது.

Page 15
எனவே மக்களுக்கான கலை இலக்கியம் பற்றி சிறிது நெகிழ்வான ஒரு பார்வை அவசியமாகிறது. நெகிழ்வு என்பதை நலிவு இலக்கியங்களுடனும் நச்சு இலக்கியங்களுடனும் போட்டியிடுகிற நோக்கில் அந்த இலக்கியவகைகட்கே உரிய தீங்கான போக்குக்களை உள்வாங்கிக் கொள்வதாக நாம் கருத முடியுமா? அது தோல்விக்கான வழியாகவே இருக்கும். மறுபுறம் வெகுசனங்களைக் கவருவதற்கான தேவையை நாம் புறக்கணிக்க இயலுமா? “நாமே புனிதர்கள்” என்றவாறன நிலைப்பாட்டைச் சிலர் எடுக்கும் போது யாருமே நெருங்க இயலாத தொலைவிற்கு அவர்கள் போய் விடுகிறார்கள். எனவே நடைமுறையில் இருக்கிற கலை இலக்கிய வடிவங்களில் மக்களைச் சென்றடைய உதவும் எந்த வடிவத்தையும் அதன் குறை நிறைகள் பற்றிய கணிப்புடன், பயன்படுத்த நாம் தயங்க அவசியமில்லை. எந்த 9(5 சரியான கருத்தும் நல்ல சிந்தனையும் மக்களைச் சென்றடையாவிட்டால் பயனற்றதாகும். உதாரணமாக முப்பத்தியொரு ஆண்டுகட்கு முன்பு என். கே. ரகுநாதனால் எழுதப்பட்ட “கந்தன் கருணை’ நாடகப் பிரதியை எடுத்துக் கொள்வோம. அது எழுதப்பட்ட வடிவிலேயே நாடகமாக்கப்பட்டிருந்தால் எத்தனை பேரை எட்டியிருக்கும்? அது நூலாக வெளியிடப்பட்டுப் பரவலாக வெளியிடப்பட்டிருந்தால் கூட, எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? அது நாடகமாக்கப்பட்ட காலச்சூழலும் ‘அம்பலத்தாடிகள்’ நாடகக் குழுவினர் அதற்குத் தெரிந்தெடுத்த நாடக வடிவமும் அதற்கேற்றவிதமாகப் பிரதியிற் செய்த மாற்றங்களுமே அதைப் பயனுள்ள ஒரு மக்கள் கலை இலக்கியம் என்ற மட்டத்திற்கு உயர்ர்த்தின. மூலப் பிரதியின் சிறப்பை மறுக்காமலே, ஒரு கட்டுமுயற்சி அதை எவ்வளவு தூரத்துக்கு ஒரு போராட்ட இலக்கியக் கருவியாக விருத்தி செய்தது என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதே நாடகத்தினின்று, குறிப்பாக அதன் வெற்றியினின்று நாம் கற்க வேண்டிய வேறு பாடங்களும் உள்ளன. “கந்தன் கருணையின் வெற்றியும் சி. மெளனகுருவின் “சங்காரம்” நாடகத்தின் வெற்றியும் “நமது நாட்டார் கூத்து முறையின் அடிப்படையில் மட்டுமே புரட்சிகர நாடகங்கள் அமைய முடியும்”என்ற
விதமான கருத்துக்கும், “நாட்டார் கூத்தை அடிப்படையாகக் கொண்டே

ஒரு தேசிய நாடக மரபை உருவாக்க முடியும்” என்ற விதமான கருதுக்கும் வழி சமைத்தன. இவை மிகவும் குறுகலான பார்வைகள். இவ்வாறான அணுகுமுறையின் அபாயத்தைப் பிற்காலத்திலும் நாம் கண்டோம். வடக்கின் போர்ச் சூழலில் மேடை வசதிகள் குறைந்த நிலைமையுள் உருவான திறந்த வெளி அரங்க முறை ஒன்றன் வெற்றிக்குப் பின்பு, இதை விட்டால் நாடகம் இல்லை என்னுமாறான ஒரு பிரகடனத்தை நாம் கேட்டுள்ளோம். ஒவ்வொருவரும் தான் அறிந்ததற்கு அப்பால் மக்கள் வேறு எதையும் அறிய வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதன் அபத்தத்தையும் அபாயத்தையும் இங்கு விவரிக்க அவசியமில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிடுவது தகும். எதிரியை வெல்லும் போர் முறைகள் எத்தனையோ உள்ளமை போல, மக்கள் கலை இலக்கியத்தில் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு சூழலிலும் சில கலை இலக்கிய வடிவங்கள் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை எவை என்பதை முன் கூட்டியே தீர்மானிப்பதை விடச் சமூக நடைமூலம் அறிய முயல்வது கூடப் பொருந்தும்.
சில சமயங்களில் வெகுசனங்களின் ரசனையின் தரம் சீரழிவுக்குள்ளாகியுள்ள சூழ் நிலைகளை நாம் சந்திக்கிறோம். இதற்கு முகங்கொடுப்பது பற்றி இரண்டு எதிரெதிரான தீவிர நிலைப்பாடுகளை நாம் காணலாம். ஒன்று 'தரமானது' என்று தாம் கருதும் இலக்கிய வடிவங்களை விட எதையும் மக்களுக்கு மறுப்பது. மற்றது மக்களுக்கு அழகுணர்வு போதாது என்று வாதிட்டுக் கீழ்த்தரமான படைப்புக்களின் பாணியில் மட்டுமே படைப்புக்களை ஊக்குவிக்கும் போக்கு. ஒருவருக்கும் எட்டாத ஒளியும் எல்லாருக்கும் எட்டுகிற இருளும் பயனின் அடிப்படையில் அதிக வேறுபாடற்றவை. இங்கே தான் மக்களுக்காக எழுதுகிறவர்கள் தமது எழுத்தின் சீரையும் செம்மையையும் மட்டுமே கணிப்பிற் கொள்ளாது யாருக்காக எழுதுகிறார்களோ அவர்களை எவ்வாறு எட்ட முடியும் என்பதிலும் கூடிய கவனம் காட்டுவது பயனுள்ளது.
மக்கள் இலக்கியம் என்பதை மக்களின் நன்மைக்கான இலக்கியம், மக்களின் சார்ப்பான இலக்கியம், மக்களைச் சென்றடையும் இலக்கியம், மக்களை விழிப்பூட்டும் இலக்கியம், மக்களைக் கிளர்ந்தெழுந்து பேராடத்துாண்டும் இலக்கியம், மக்களால்

Page 16
உருவாக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக்கியம் என்று பலவாறாக நாம் நோக்கலாம். இவற்றுள் அதி முக்கியமானது கடைசியாகக் குறிப்பிடப்பட்ட பண்பையுடையதாகும். அதை நாம் வந்தடைவதாயின் மக்களின் ஆளுமை முதன்மைப் படுத்தப்பட வேண்டும். இரண்டு சூழ் நிலைகளில் அதற்கான வாய்ப்பை நாம் பெற இடம் உண்டு. ஒன்று உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழல் மற்றது வெகுசனப் போராட்டம் ஒன்று உருவாகி வலுப் பெறும் சூழல். இவற்றுக்கு அத்திவாரம் இடும் வகையிலான இலக்கியப் பணிகளாக மற்ற இலக்கியப் பணிகள் செயற்பட முடியும்.
எனவே மக்கள் இலக்கியம் என்பது இன்னவகையினது மட்டுமே என்று மட்டுப்படுத்துவது முற்றிலும் நியாயமாகாது. மக்கள் இலக்கியத்தின் அவசியமான தேவையாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமாயின், அது அந்த இலக்கியம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நில்லாமை எனலாம். மக்களை விடத் தன்னை உயர்வாகக் கருதுகிற படைப்பாளி மக்கள் இலக்கியம் படைப்பது கடினம். ஏனெனில் அவருடைய கருத்தில் மக்கள் அவரை ஒத்த படைப்புத்திறன் அற்றவர்கள் மட்டுமல்லாமல் அவருடைய படைப்பைச் சரியாக உணரும் திறனும் அற்றவர்களாகவே இருப்பர்.
இதற்கு நேர்மாறான ஒரு உதாரணம் நிக்கராஹவாக் கவிஞர் ஏர்னெஸ்ற்றோ கார்தினால், நிக்கராஹவாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட எழுத்தறிவற்ற மக்களிடையே செயற்பட்டுப் போராளிக்கவிஞர்களாக அவர்கள் வளர்வதற்கு மிகவும் உதவிய ஒரு உன்னதமான மனிதர் அவர். அவருடைய கவிதை உன்னதமானது. அதைவிட உன்னதமானது போராளிக் கவிஞர்கள் உருவாக உதவியதன் மூலம் கவிதையுலகுக்கு அவர் ஆற்றியசேவை. மக்கள் மனதில் உள்ள அழகுணர்வை அவர்களே அடையாளம் காணுகிற போது அவர்கள் அருமையான படைப்பாளிகளாகின்றனர். அவர்களது வாழ்வின் அனுபவங்கள் கலை வடிவு பெறுகின்றது. மெய்யான மக்கள் இலக்கியம் அங்கு உருவாகிறது.
முற்போக்கான புரட்சிகரமான சிந்தனை உடைய படைப்பாளிகள் எல்லாராலுமே நேரடியாக மக்களைச் சென்றடையக் Ց6ւլջա 1 இலக்கியங்களைப் படைக்க முடிவதில்லை. அவர்களுடைய செயற்பாடு வெகுசனங்களுடைய தளத்தில் நிகழாத போது, அவர்கள்

தம்முடையதல்லாத அனுபவங்களைத் தங்களுடையதாகப் பாவனை செய்ய இயலாது. சமூக உணர்வால் உந்தப்பட்டு மக்கள் நலன் சார்ந்தும் மக்களிடையே விழிப்பையும் போராட்ட உணர்வையும் தூண்டும் முறையிலும் அவர்கள் எழுத முடியும். அத்தகைய எழுத்து ஒரு நடைமுறை இயக்கம் சார்ந்து உள்ள போது, யதார்த்தப் பண்புடையதாகவும் மக்களது உணர்வுகட்கு நெருக்கமாகவும் அமைய முடியும். அல்லாத போது அது கற்பனாவாதப் பாங்கில் அமைய நேரிடும். பாரதியின் தேசிய எழுச்சிப் Lustlebassir ஏன் உயிரோட்டத்துடனும் நமது ஆண்டபரம்பரைக் கவிராயர்களது தேசியவாதப் பாடல்கள் ஏன் பொற்காலக் கனவுகளில் புதைந்தும் கிடக்கின்றன என்பதைக் கவனித்தால் மேற்கூறியதன் உண்மை சிறிது தெரியும்.
CD
மக்களை விடத் தன்னை உயர்வாகக் கருதுகிற படைப்பாளி மக்கள் இலக்கியம் படைப்பது கடினம். ஏனெனில் அவருடைய கருத்தில் மக்கள் அவரை ஒத்த படைப்புத்திறன் அற்றவர்கள் மட்டுமல்லாமல் அவருடைய படைப்பைச் சரியாக உணரும் திறனும் அற்றவர்களாகவே இருப்பர்.
D
மக்கள் இலக்கியக் கோட்பாட்டை நாம் முதலாளிய சமூகத்தின் விழுமியங்களின் அடிப்படையில் மட்டுமே நோக்குவதில் அபாயங்கள் பல உள்ளன. கலைவடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் இலக்கணங்களும் அழகியல் நெறிகளும் உள்ளன.
இந்த வழிகாட்டல்கட்கு வர்க்கப் பண்பு உண்டு. அதற்காக அவற்றை அப்படியே தூக்கி எறிய முடியுமா? நம்மிடையே உள்ள கலை வடிவங்களில் அப்படியே பயன்படுத்தக் கூடியன இருப்பின் அவற்றின் இலக்கணங்களிலும் அழகியற் கொள்கைகளிலும் பாரிய மாற்றங்கள் தேவைப்படா. மாறுதல் தேவையானவற்றில் எத்தகைய மாறுதல்கள் என்பது பற்றிய தெளிவு அவசியம். தம்முடைய தனிப்பட்ட இயலாமைகளையும் பலவீனங்களையும் மூடிக்கட்டும் ஒரு கருவியாக இத்தகைய மாற்றங்களை நாம் கையாள முடியுமா? இங்கு நாம்
- 29 -

Page 17
தெளிவான அழகியல் நெறிகளை வகுக்க வேண்டிய தேவைக்குள்ளாகிறோம்.
மக்கள் கலை இலக்கியக் கோட்பாடென்பதைப் பழமை புதுமை, தேசிய-விதேசிய, எளியநுட்பமான என்றவாறான தனித்தனி விவாதங்கட்குள் முடக்கி விடுவது பொருந்தாது. ஒரு தேசிய விடுதலைப் போராளி சுதேசிய ஆயுதங்களை விட வேறெதையும் பாவிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை. எந்தப் போர்க் கருவி எவரால், எதற்கெதிராக, எவருடைய நலனுக்காக எவ்வாறு பயன்படுகிறது என்பதே அங்கு முக்கியமாகிறது. எனவே மக்களுக்கு உகந்தது என்பதை மக்களுக்காகத் தீர்மானிக்கும் பூரண அதிகாரத்தை ஒரு படைப்பாளி தன் கையில் எடுத்துக் கொள்வது பொருந்தாது. மக்களுடைய நலனையும் உணர்வுகளையும் மதிப்பதற்கு நாம் முதலிற் கற்றுக் கொள்ள வேண்டும்.
மக்கள் இலக்கியம் என்பது இறுதி ஆய்வில் மக்களின் அங்கீகாரத்தை விட மேலாக ஒன்றையும் வேண்டி நிற்பதில்லை. அந்த அங்கீகாரம் எப்போது எந்த வடிவிற் கிடைக்கிறது என்பது படைப்பாளியின் கையிலேயே உள்ள ஒன்றல்ல. எனினும் விமர்சனம் சுயவிமர்சனம் என்ற அணுகுமுறை மூலம் ஒரு படைப்பாளியால் மாநிலம் பயனுற வாழும் ஒரு மக்கள் படைப்பாளியாக உயர முடியும். நம் ஒவ்வொருவரது இலக்கும் அவ்வாறே அமைய வேண்டுகிறேன்.
acee
 

பின்னவீனவியம் பற்றி
தெரி ஈகிள்ந்றன்
~முருகையன் முதலாளியம், விஞ்ஞானம், தொழிலிநட்பம் ஆகியவை எழுச்சிபெற்ற காலத்தை வரலாற்று அறிஞர்கள் ‘நவீன காலம்’ என்பர். நவீன காலத்தின் இயல்புகள் அல்லத தன்மைகள் ‘நவீனத்தவம்’ (மொடேணிற்றி) எனப்படும். இந்த மொடேணிற்றியின் ஓர் இன்றியமையாத அம்சம், முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் மக்கள் கொண்டிருந்த அசையாத நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கை தந்த ஊக்கத்தினால் பத்தொண்பதாம் நற்றாண்டின் நடுப்பகுதியில் "மொடேணிஸம்" எனப்படும் நவீனவியம் உதயமாயிற்று, நவீனவியம் பொதுவாகச் சில அறிவியக்கக் கோட்பாடுகளையும் சிறப்பாக, சில கலைக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியத. அறிவியற் கோட்பாடு என்ற வகையில் முதலாளிய ஒழிப்பு என்ற மாக்சிய இலட்சியமும் அதற்கான திட்டங்களும் நவீனவியத்துள் அடங்குவன. கலைப்புலத்திலே, மனப்பதிவியம் (இம்பிறெஷனிஸம்), குறியீட்டியம், கனவடிவியம் (கியூயிஸம்), எதிர்வியம் (வியூச்சறிஸம்) படிமவியம் என்பன நவீனவியத்தள் அடங்கும். ‘நவீனத்தவம்’ என்ற சொல் அகப்புறச் சூழல்களின் தன்மைகளைக் குறிக்க, ‘நவீனவியம்’ என்பது நவீன காலத்தில் முதன்மை பெற்ற சில கோட்பாடுகளைக் குறிக்கும். இந்த வித்தியாசத்தை மனத்தில் இருத்துவது முக்கியமாகும்.
நவீனவியத்தின் எழுச்சியுடன் கருத்தியல் மட்டத்திலே பல பிளவுகளும் பூசல்களும் பிணக்குகளும் சரிவுகளும் தோன்றின. இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்ற சிந்தனைகளின் கூட்டு விளைவே “பின்னவீனவியம்’ எனலாம். பின்னவீனவியச் சிந்தனையாளர்களில் ஒருவர் ஒக்ஸ்ஃவேட் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் தெரி ஈகிள்ந்றன் ஆவார். இவர் பின்னவீனவியத்தை விமரிசனப் பாங்கில் நோக்கி, கருத்துகள் பலவற்றைத் தெரிவித்தள்ளார். அக்கருத்தக்களிற் சிலவற்றைச் சுருக்கித் தொகுத்தத் தமிழாக்கஞ் செய்தது காண்போம்.
பேராசிரியர் ஈகிள்ரனின் கருத்துப்படி பின்னவீனவியத்திலே முரண்பாடுகள் பல உள்ளன. அவற்றுட் பெரும்பாலானவை, ஏலவே தோன்றி நிலவிய அமைப்பியம் என்னும் கொள்கையின் பிரதான முரண்பாடுகளை ஒத்தன.
நவீனவியத்தின் ஒரு கருவியாகப் பகுத்தறிவு முதன்மை பெற்றிருந்தது. இந்தப் பகுத்தறிவு, ஆன்மாக்கள் (அல்லத அகங்கள்) என்றால் என்ன என்று ஆராய முற்பட்டத. அந்த ஆய்வு அமைப்பியத்தின் சிறப்பானதொரு கூறாயும் உள்ளது. இவ்வாறு தொழிற்பட்ட பகுத்தறிவு, அதவரைகாலமும் தெய்வ பீடத்தில் அமர்ந்திருந்த ஆன்மாவை இழுத்து விழுத்தி விட்டத. இந்த வகையில், அமைப்பியமானது புரட்சிப் போக்குடையதாய் இருந்தது எனலாம். ஆனால் அதே சமயம் அது பழமை பேணும் காரியத்தக்கும் தணைபோயிற்று. எப்படி? மனித மனப்பிரதேசங்களிலும் நணுக்கவாதங்களைப் பிரயோகித்த அமைப்பியம், தனி மனங்களை வெறும்

Page 18
வாய்ப்பாட்டுக் குறியீடுகளின் கோவைகளாகச் சுருக்கிக் காட்டிற்று. இந்த வகையில், அமைப்பியமானத நவீன (முதலாளிய) சமூகத்தை நகல் செய்தவாறே, அப்படிச் செய்யாத ஒன்று போலவும் நாடகமாடிற்று. அதாவது, அமைப்பியம் நவீனவியத்தின் தருக்க உபாயங்களை ஏற்றுக்கொண்டாலும், அக்கோட்பாட்டின் முடியுகளைப் புரட்டிக் காட்டிற்று. நவீனவியத்தின் முடிபுகளை ஏற்காதபடியால், அமைப்பியம் பழமை பேணும் தன்மையையும் பெற்றத. இத, அமைப்பியத்தின் முரண்பாடு.
இதனை ஒத்ததொரு முரண்பாடு, பின்னவீனவியத்திலும் உண்டு. இதவம் புரட்சிகரமாய்க் காணப்பட்ட அதேவேளை, பழமை பேணுவதாயும் இருந்தத. முதலாளியச் சமூகங்களின் முரண்பாடுகள் பலவும் இப்படிப்பட்டவைதான். அவற்றில், விடுதலை நோக்கும் அதிகாரக் கெடுபிடியும், இன்பநாட்டமும் எதேச்சாதிகாரமும், பன்மைப்பாங்கும் ஒற்றைத்தனமும் ஒருங்கே அடங்கியுள்ளன. இதில் வியப்பேதம் இல்லை. சந்தைக்கடையின் தருக்க நியாயங்கள், தாறுமாறாகவும், ஆசை வெள்ளத்தில் அடிபட்டு உலையும் தனியாட்களை வெறும் தரும்பாக்கித் தரமிறக்குவனவாயும் உள்ளன. அதே வேளை, இந்த அல்லோல கல்லோலங்களைச் சமாளிப்பதற்கு, திடமான அரசியல் நிறுவனமும் உறுதியான அடிப்படைகளும் தேவைப்படுகின்றன. இதன் பொருட்டு மரபுவழி நெறிமுறைகளை வலியுறுத்தி நிலைநிறுத்தவதம் அவசியமாகிவிடுகிறத. அப்படிச் செய்யும்போது முதலாளிய அமைப்பின் போலித்தனங்கள் அம்பலமாகிவிடுகின்றன. முதலாளிய ஆட்சிகள், மாறாநிலைத் தத்தவங்களைக் கைவிடமாட்டாதன ஆகவும், அதே வேளை அவற்றைப் பேணிக்கொள்ள இயலாதன ஆகவும் உள்ளன. எனவே இந்த ஆட்சிகள் தமக்குத்தாமே எமன்களாகி விடுகின்றன.
GELIJATóffurf ஈகிள்ரனின் கருத்துப்படி பின்னவினவியத்திலே முரண்பாடுகள் பல உள்ளன. அவற்றுட் பெரும்பாலானவை, ஏலவே தோன்றி நிலவிய அமைப்பியம் என்னும் கொள்கையின் பிரதான முரண்பாடுகளை ஒத்தன.
இனி, பின்னவீனவியத்தின் தடுமாற்றங்கள், அதன் முரண்பாடுகளுடன் ஒத்துப்போவன ஆகவே இருக்கின்றன. இதனைப் பருமட்டாகப் பின்வருமாறு விளக்கலாம். பின்னவீனவியம் பெரும்பாலும் அரசியல் நிலையில் எதிர்க்குரல் எழுப்பினாலும், பொருளியல் நோக்கில் முதலாளியத்துடன் ஒத்துப்போகவே செய்கிறத. இதை இன்னும் செப்பமாய்ச் சொல்வதானால், மாறாநிலைத் தத்துவங்களையும் திடமான அகங்களையும் வேண்டிநிற்கும் சமூக அமைப்புக்குச் சவால் விடும் பொருட்டு, பின்னவீனவியமானது பன்முகக் கோட்பாடுகளையும், நொருங்குண்ட அகங்களையும், அடிப்படைவாத மறுப்புகளையும், சார்பியலான பண்பாடுகளையும்பற்றிப் பேசுகிறது. இதன் பலனாக மேலாதிக்கம்பெற்ற

நெறிமுறைகளை, கொள்கை மட்டத்திலாயினும், வெற்றிகரமாக மட்டந்தட்ட முடிகிறத. ஆனால், கொள்கை மட்டத்துக்கும் சந்தைக்கடை மட்டத்தக்குமிடையே உள்ள ஏறுமாறான வேறுபாடுகளைப் பின்னவீனவியம் கண்டுகொள்வதில்லை. ஆட்சி அமைப்புக்களைப் பொறுத்தவரையில், நீதிமன்றுகளிலும் தேர்தற்சாவடிகளிலும், சிதைவற்ற முழுமையான அகங்கள் தேவை. ஆனால், சந்தைக்கடைகளுக்கோ, ஆசைவசப்பட்டுப் பறக்கும் தண்டு தணுக்கான நொறுங்குண்ட அகங்கள்தான் வேண்டும். முதலாளியமோ பல்வித அத்தமிறல்களும் அடாத்தகளும் உச்ச நிலையை எட்டிவிட்டதொரு வரலாற்றுக் கட்டமாகும். அதே வேளை இந்த அத்துமீறல்களும் அடாத்துகளும் கடுமையான வரம்புகளுக்கு உள்ளே அடங்க வேண்டியனவாய்த் தான் உள்ளன.
சுருங்கச் சொன்னால் முன்னேறிய முதலாளியத்தின் பிரதான வாத நியாயங்களைத் தோண்டி எடுக்கும் பின்னவீனவியம், அதே நியாயங்களினால், முதலாளிய ஆன்மிக அடிப்படைகளின் முகத்தின் மீது திருப்பி அடிக்கிறத. இந்த வகையிலே அத அமைப்பியத்தினை ஒரளவு ஒத்ததாக உள்ளது. பின்னவீனவியம் தன் ஆதி குருவான நீற்சே பேசியத போலவே பேசுகிறத எனலாம். அதாவத முதலாளியம் தனது மாறாநிலை அடிப்படைகளைத் தாக்கி வீசிவிட்டு, “கடவுள் செத்தப்போனார்’ என்பதை ஏற்றுக்கொள்ளலாம் என்று பின்னவீனவியமும் கூறுகிறது என்று கருதலாம். அப்படி வெளிவெளியாய்த் தெரிவிப்பது எவ்வளவோ நல்லத. ஏனையோரின் நெறிமுறைகள் போலவே, உங்கள் நெறிமுறைகளும் அடிப்படை இல்லாதவை என்று உண்மையைச் சொல்லிவிடலாம். முன்னேற்றம், நீதி, நியாயம் என்று பசப்பிக்கொண்டிருப்பதை விட அத நல்லதல்லவா?
அப்பட்டமான உண்மையைத் தெரிவிக்கும் அறிஞர்கள் இப்படி எல்லாம் தத்தவம் பேசலாம். ஆனால் ஆட்சியை நடத்தகிறவர்களுக்கோ, தம் செயல்களை நியாயப்படுத்தவதற்குத் தத்தவம் தேவையாகும். தத்தவம் செயல்களைப் பிரதிபலிக்காமல் விட்டாலும் பரவாயில்லை. ஆளுவோர் தமத உன்னதமான மந்திர முழக்கங்களைக் கைவிட விரும்பார்கள். ஏனென்றால், இப்போதங்கூட மிகப் பலர் இந்த முழக்கங்களை உறுதியாய் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் சந்தைச் சரக்குகள் மாத்திரமே தம்மளவில் ஒரு கருத்தியல் ஆக முடியாத, ஆட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, மக்கள் சம்மதமோ ஆதரவோ அவற்றுக்கு அவசியமில்லை. மனித உணர்வின் உதவி இன்றி, தம்மைத்தாமே மீளுற்பத்தி செய்யும் வல்லமை அந்த நிறுவனங்களுக்கு உண்டு என்றும் சொல்லுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பின்னவீனவியமே ஓர் இடைக்கால ஏற்பாடுதான். இந்த இடைக்காலத்திலே மாறாநிலைத் தத்தவங்கள் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் கிடந்த தவிக்கின்றன.
நாம் ஓர் எச்சரிக்கைத் தொனியுடன்தான் இந்தப் பரிசீலனையை முடிக்கவேண்டியுள்ளத என்கிறார், ஈகிள்ந்றன். பின்னவீனவியத்தின்படி வரலாறு இறந்தவிட்டத. நமக்கு இனி எதிர்காலமே இல்லை. இதபற்றி நாம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று பின்னவீனவியம் கருதுகிறது.
நம்முன் உள்ள எதிர்காலத்தின் பல்வேறு மாற்று வடிவங்களுள் ஒன்று பாசிசம் எனப்படும் வல்லாட்சி. இதனை எங்கள் அரசியற் கோட்பாடுகள் எப்படிச் சமாளிக்கப்போகின்றன? இத தான் கேள்வி. பின்னவீனவியத்தில் ஆய்வு வளத்துக்குக்

Page 19
குறைவில்லை. இனபேதம், தன்-மையச் சிந்தனை, முற்றாட்சியின் ஆபத்த, அன்னியங்கள் பற்றிய அச்சம் - இவை குறித்தெல்லாம் பின்னவீனவியம் ஆழமாய் ஆய்ந்தள்ளத. அத்தடன் அதிகாரக் குயுக்தி பற்றிய தெளிவும் அதன் வலிமை எனலாம்.
பின்னவினவிபத்தில் ஆய்வு வளத்துக்குக் குை * Xause: ; அதிகாரக் குயுக்தி பற்றிய தெளிவும் அதன் வலிமை எனலாம். ஆனால், அதன் பாதகமான அம்சங்களையும் நாம் பார்க்கவேண்டும்.
貓 2882
ஆனால், அதன் பாதகமான அம்சங்களையும் நாம் பார்க்கவேண்டும். பண்பாடுகளிடையே உள்ள வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தம்போக்கு, மரபு சார்ந்த அறப்பார்வை, எதையும் நம்பத்தயங்கும் குணம், உடன்பயன் நோக்கு, பிரதேச அக்கறை, ஒருமைப்பாடு பற்றியும் நிறுவனக் கட்டொழுங்குபற்றியுமான வெறுப்பு, அரசியற் களத்திலே சிறப்பாக இயங்க வல்லவர்கள் யார் என்பது குறித்த தெளிவின்மை ~ இவை எல்லாம் பின்னவீனவியத்தின் பலவீனங்கள். போதாக்குறைக்கு, இப்பொழுது பின்னவீனவியம் தன் எதிரிகளாகக் கருதவது இடதசாரிகளைத்தான். இந்த அம்சங்கள் எல்லாம் சுட்டிக்காட்டும் உண்மை என்ன? பின்னவீனவியம் நமது இன்றைய பிரச்சினையின் இறுதிப்பாகமே தவிர, அத பிரச்சினையின் தீர்வாக முடியாதது.
பின்னவினவியம் நமது இன்றைய பிரச்சினையின் இறுதிப்பாகமே தவிர, அது பிரச்சினையின் தீர்வாக
(Diggl.
இங்கு நாம் கண்டவை, பேராசிரியர் ஈகிள்ந்றன் பின்னவீனவியம்பற்றி ஆய்ந்து கண்டு கூறும் கருத்தரைகள். புத்தாயிரமாண்டு (புத மிலேனியம்), தொழில்நுட்பவியலின் வெற்றி, உலகமயமாதல், சந்தைப் பொருளாதாரம், தகவல் தொழில்நட்பத்தின் அற்புத சாதனைகள், கணனியின் பரவல் என்றெல்லாம் மந்திர முழக்கங்கள் கேட்கும் காலம் இத. இந்த மாயாவாதங்களின் நடுவே, ஈகிள்ந்றன் அவர்களின் குறிப்புரைகள், பல வழிகளிலே பெறுமதி வாய்ந்தனவாய் உள்ளன. (9b5ssJüd: illusions of Post modernism by Terry Eagleton)
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவீனஓவியர் மாற்கு நினைவாக. எண்ணமும் உணர்வும்
பலபேருக்குத் தலையிடியைக் கொடுத்த சங்கதிகளில் ஒன்று இந்த நவீன ஓவியம். எந்த ஒரு கலையோடும் குறைந்தளவு காலப் பரிச்சயமாவது இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அதுபற்றிய எண்ணமும் உணர்வும் தொற்றுதலும் சாத்தியப்படும். மரபுகளை விலத்திக் கொண்டோ விலக்கிக்கொண்டோ எந்தக்கலையும் வளரமுடியாது. அதாவது பழையன சிலவற்றை உரித்துக் கொண்டும் புதியன சிலவற்றை வரித்துக் கொண்டும் தான் அதன் போக்கு நிகழ்கின்றது. அண்மையில் அமரரான ஒவியர் அ. மாற்கு இதற்குப் புறம் போக்கானவர்.
யாழ்ப்பாணம் குருநகரில் (1933) பிறந்த இவர் பள்ளிப்பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டி வந்திருக்கின்றார். ஒவியர் ச. பெனடிக்ற் (பெண்) இவரது ஆர்வத்துக்கு அடித்தளமிட்டவராகக் கருதப்படுகிறார். அமைதியான சுபாவம் கொண்ட இவர் 1953 இல் கொழும்பு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து 1957இல் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் போது மங்கலவர்ண ஒவியங்களை (கழுவுதல் பாணி) சித்திரிப்பவராகக் காணப்பட்டார். 1970 களுக்குப் பின்னர் “கோடுகளாலும் வடிவத்தாலும் வர்ணத்தாலும் ஆக்கப்படுவதே ஒவியம்” என்ற தன் கருத்துக்கு வலுவூட்டும் இரேகைச்சித்திரப் பாணியையும் அதிலிருந்து வளர்ந்து சற்றேமாறுபட்ட கேத்திர கணித வரைகளின் சாயையைக் கொண்ட தனித்துவமான கனபரிமாணக் கோட்டுரு ஒவியங்களையும் வரையலானார்.
இன்றைய பல புதிய தலைமுறையினரை வளர்த்தெடுத்த பெருமைக்குரிய மாற்கு அவர்களின் ஒவியங்களில் வன்கா, பிக்காஸோ, எல். கிறேக்கோ றுாஒல்ற் ஆகியோரின் செல்வாக்கை அவதானிக்கலாம் இயற்கையுடனான ஈடுபாடும் இணைப்பும் பிணைப்பும் கணிப்பும் அவை ஊட்டிய உணர்வும் மனதிலிருந்து கநற்தெடுக்கப்படும்போது தூரிகையின் தொழிற்பாட்டினால் ஓவியமாகும்” என்பதற்கு மாற்கு அவர்களின் பிற்காலப்படைப்புகள் சாட்சியமாகின்றன. இந்த மண்ணின் உணர்வுகளையும், அவலங்களையும் துாரிகையால் வெளிப்படுத்தியமை அவரது சிறப்பாகும்.
சுவைப்பான்.
- 35 -

Page 20
நிறையும் குறையும்
*உனக்கு எப்பவாவது ஒரு கறியை எண்டாலும் நல்லாய்ச் சமைக்கத் தெரியுமே? கணவனின் நித்திய நச்சரிப்பு நாச்சவுக்கின் விளாசல் நாள்தோறும் பட்டும் பட்டு மரத்துப்போன உணர்வு. ‘போய் அக்கா வீட்டில் ஏதேனும் கிடக்கும் வாங்கியா’ ஆம்படையான் உத்தரவைச் சிரமேற் கொண்டு. அந்த முன்நிலவு வேளையில் தன் நாயகன் சகோதரி வீடு நோக்கி அப்பாவை நடக்கிறாள். எத்தனை கரிசனையுடன் நான் கற்ற மனையியல் அநுபவத்துடன் நுணுக்கமாகச் சமைத்தும் சரியில்லை என்றால். ஒற்றையடிப்பாதையில் நடக்க மனமாடு கயிறை அறுத்துக்கொண்டாலும் இரை மீட்டு அசை போடுகிறது. “இந்த மனுசனுக்கு ஏன் தான் இந்தக் குணம்’ எத்தனை விதமாய் வாய்க்கு ருசியாய் மணங்குணமாய் சமைத்தும். எனக்குச்சமைக்கத் தெரியா தாம். என்னை இவருக்குக் கட்டிவைத்த அப்பாவை நோவதா? விதியை நோவதா? அப்பாவை நொந்து கொண்டாள். கால்கள் அவர் அக்கா வீட்டில் கொண்டு வந்து விட்டன.
"LD&SFT6 ‘என்ன மச்சாள்? தம்பியின் வேலைதான் இவனை என்ன செய்ய என அக்கா மனதுள் ஒரு நினைப்பு.
‘ஏதும் கறி கிடந்தால் தாருங்கோ’ “உண்மையாய் மச்சாள் ஒண்டும் இல்லை வெறுஞ்சட்டியும் கழுவிக் கவிழ்த்துப் போட்டன்’ அப்போ பிரளயம் தான். அடிவயிற்றில் ஏதோ செய்தது. திரும்பி நடந்தாள். நிலவின் ஆட்சியில் நினைவில் மோதல் நடந்துகொண்டிருந்தாளர். கன்னம் கரேலென்ற புவிகறுப்புச் சாணம் கண்ணில் பட்டது. மின்னல் வெட்டியது போல் ஒரு நினைவுத் தெறிப்பு மேய்ச்சல் மாட்டின் சாணியைப் பூவரசம் இலை ஒன்றில் எடுத்தாள். மண்பட்ட பாகத்தைத் தவித்துக் கொஞ்சமாய். - ‘அங்கே கறியள் முடிஞ்சுதாம் இந்தக் கீரைக்கறிதான் மிச்சம்” அவன் அத்தோடு சாப்பிட்டான். “ பாத்தியா, அக்காளின் இந்தக் கீரைச் சம்பலை இது ஒண்டே போதும், நீயும் சமைக்கிறாய்” அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது முன்தானையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.
குமாரன்

கிளாக்கர் சிவராசருக்கு கால்கள் நிலத்தில் இல்லை. அவரது உரிமைப் பிரச்சி னைக்கு தீர்வு கிட்டிவிட்டது. என்ற உணர்வோடு “நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் பாடல் வரிகளை வாயில் அடிக்கடி இராகத்தோடு ഗ്രബ്രാഇളgug விதானையார் வீட்டை சைக்கிளில் விரைந்தார். பாரதியின் அந்தக் கனவு இவ் வளவு விரைவாக அதுவும் யுத்தமும் அழிவும் தெடரும் இந்த மண்ணில் பலித்துவிடும் என்று அவர் கனவிற் ඊntஎண்ணவில்லை.
நோக்கி
எல்லோரும் புரிந்து
விதானையார்
வீட்டில் Gy சனக்கூட்டம். வீடு வளவெல்லாம் நிறைந்து
தெருவிலும் மக்கள் திரள் கூடி
நின்றது. அங்கு நின்ற பலரது உதடுகளிலிருந்தும் பாராதியின் அந்த வரிகள் வெளிவந்தது
அவருக்கு வியப்பாக இருந்தது.
பதினெட்டு வயது எட்டிய அனைவருக்கும் 82 "6пuш6ufї முதியவர் ஆண், பெண் என்ற பேதங்கள். எவையும் இன்றி ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு முடியும் வாளும் வழங்கப்படும் ബസ്സ് அறிவிக்கப்பட்டிருந்துது. அதன் நோக்கம் பயன்பாடு பற்றி கொள்ளா விட்டாலும் தருவது எதுவா னாலும் தமக்குரியதைப் பெற்று விட வேண்டும் என்ற ஆவலில்

Page 21
முந்தியடித்தபடி அங்கு கூடி நின்றனர்.
பார்வையற்றவர், படுக் உள்ளவர் bLLOstஎல்லோரையும் வண்டிகள், சையிக்கிள்கள், ஒட்டோக்கள். கார்கள் என்று அவரவர் தகுதிக்கேற்ப ஏற்றிக் கொண்டு வந்திருந்தனர். அங்கு Gong சனங்களைக் விதானையாருக்கு கொள்ளவில்லை.
“ஒண்டுக்கும் லீவு போடாதவை எல்லாம் இன்டைக்கு
கையில் முடியாதவர்
நின்ற கண்டதும் இருப்புக்
லீவு போட்டிட்டு வந்திருக்கினம்.”
அங்கு &nt LuDT& கூடிநின்ற ஊர் பிரமுகர்கள் மத்தியில் நின்ற விதானையார்
கிளாக்கர் சிவராசரைக் கண்டதும் கூறு கிறார்.
“அடியைத்தேடாட்டிலும்
இண்டைக்கு முடியைத்தான் தேடவேண்டிக் கிடக்கு. என்ன இன்னும் கொண்டு வரேல் லையே”
“அது நேற்றைக்கே கொண்டு வந்தாச்சு நீங்கள் காணேல் லையே இரவிரவா காவல். இப்பவும் இரண்டுபேர் குந்திக் கொண்டிருக்கினம்”
”ஒம் பொலிஸ் காவல் இல்லாட்டி சும்மாவே ஒடுகளை பிரிக்கிறவங்கள் அப்ப ஏன்
மினக் கெடுத்திறியள்”
இதென்னப்பா கூப்பன் காட்டே நான் குடுக்க
இது அதிகாரத்தை
- 38 -
பகிர்ற விசயம் ஏ.ஜி.ஏ வந்துதான் தொடக்கி வைப்பார்.”
எல்லோரையும் போல ஒவ்வொருவரும் முண்டியடித்துக் கொண்டு அங்கு வந்திருந் தாலும் ஏன்? எதற்கு? இதெல்லாம் என்ற புரிதல்கள் எல்லோரிடமும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூட்டம் கூட்டமாக அவர்களிடம் எழுந்த விமர்சனங்கள் பலவகையாக இருந்தது.
மடத்தனமான لقب ه" வேலை முடியைக் குடுத்தாலும் பரவாயில்லை கண்டநினிடது களிட்டை எல்லாம் வாளைக் குடுக்கிறதே. உது பெரிய. குழப்பத்தைஏற்படுத்தப் போகுது”
“அதுதானே இப்பே சனத்திட்டை ஒற்றுமை இல்ை ஆளை ஆள் அமத்துறதெண் நிக்குதுகள். 6TUT606) 656 UT 6) 60 அடிபடுறதுகள் இனி வாளை எல்லே தூக்கிக் கொண்டு நிக்கப் போகுதுகள்”
“ஏன் வீடுகளிலையே பிரச்சனை வரப்போகுது பெண்டுகளுக்கும் வாள் பெடி பெட்டையஞக்கும் வாள் எண்டால். இப்பவே தாய் தேப்பனை பிள்ளையஸ் மதிக்கிறேல்லை”
அவர்களது o 6000 யாடல்களை கேட்டுக் கொண்டு நின்ற கிளாக்கர் சிவராசருக்கு தனது எதிர்பார்ப்புக்களுக்கு எதிராக 9606 செல்வதைக் கண்டதும் ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது
 

"நீங்கள் நினைக்கிற மாதிரி விசயம் விளங்காமல் இவங்கள் உதுகளை கொண்டு வரேல்லை...... அமெரிக்கா. விலையே ஜனநாயகம் அவலப் படுகுது. ஏன் இஞ்சசையும் தொங்கவிலிலைதானே வந்து நிற்கிறம். அதுதான் அதிகாரத்தை பரவலாக்கி நீங்கள்தான் மன்னரெண்டு உணரவைக்கத்தான் முடியும் வாளும் தருபடுது” “ஓம். அண்ணை சொல்லுற மாதிரித்தான் முடியை எப்படிப் பாவிக்கிற 6T66 எப்படிப் பாவிக்கிற எண்டு நோட்டீஸ் போட்டிலையும் போட்டிருக்கு”
"அப்பிடியே நான் இன்னும் பாக்கேல்லை" கிளாக்கர் சிவராசர் நோட்டிஸ் போட்டை நோக்கிச்செல்கிறார். அங்கு இடிபட்டுக் கொண்டிருந்த &F65町
நெரிச்சலில் புகமுயன்று தோல்வி கண்டவராய் மரக்கி ளைகளில் தொங்கி நின்றபடி எட்டிப்பார்ப் பவர்களுடன் தானும் இணைந்து கொள் கிறார்.
தூரத்தில் நின்று பார்த்ததால் எழுத்துக்கள் அவருக்கு தெளிவாக தெரியவில்லை வாள் பாவிப் பதற்கான ஒழுக்கக் கோவை இலக்கம் இரண்டில் பெரிய எழுத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும். “பொருளாதாரப் பிரச்சினை தவிர்ந்த” என்ற வரிகள் மட்டும்
م- 39 -
தூலாம்பரமாக அவருக்குத் தெரிகிறது.
கோடிட்டுக் காட்டப்பட்ட
அந்தவரிகளின் அர்த்தத்தை அவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கு இடையில் இரைச்சலின்றி மெதுவாக அங்குவந்து நின்ற பஜரோவின் வருகையோடு அங்கு நின்றவர் களிடம் ஏற்பட்ட பரபரப்பு அவரையும் குழப்புகின்றது.
தலையில் முடியுடனும் இடையில் வாளுடனும் அரச அதிகாாரி பஜரோவில் இருந்து இறங்குகிறார். தோற்றத்திலும் நடையிலும் ஒரு கம்பீரம். கார்ச் சாரதியும் அதே முடியுடன் இருந்ததால் இறங்கி வரும் வரை யார் அதிகாரி என்பதை காணமுடியாதிருந்தது. அங்கு கூடி
நின்றவர்களுக்கு அதிசய மாக இருந்தது.
முதல் முறையாக முடியணிந்து வருபவரைக் காண்பதற்காக எட்டி நிமிர்ந்து
முண்டியடித்து பார்த்ததில் தாங்கள் தாங்கள் நின்றதுதான் கியூ என்று
உருவாக்கிய நாலைந்து வரிசைகள் வளைந்து குளம்பி நிமிர்கிறது.
தூரதர்சன் மகா பாரதத் தொடரில் வந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவு படுத்தி கியூவில் நின்ற சிலர் கதைக்கின்றனர்.
* தாறுபாச்சி சருகை வேட்டி கட்டி மார்பிலை முத்துவடங்களும்போட்டிருந்தால் கண்ணனேதான்.”

Page 22
(plg6Suutb செய்திருப்
"உவளவு வாளையும் எப்படிச் பாங்கள்”
“முதல் (P560)6OLDFTs லண்டனிலை
Stibtor
மண்வெட்டி தானே செய்தது அவங்கள் கொம்பியூட்டரிலை டிசையின் பண்ணிப் போட்டு விட்டால் செக்கனுக்கு நாலைஞ்சு வந்து விழும்”
“ஆரேன் நாடகக் காரருக்கு இதுகளை தட்டிவிடுவம் எண்டா சிப்பாக்கு சேவகனுக்கு நடிக்கிற வைக்கும் (pliquid வாளும் கிடைக்கப்போகுது”
嫁魏 பாத்தியே சனியன்
பிடிச்ச உனக்கு அரிசி சீனி வித்து கசிப்படிக்கிற புத்தி வந்துட்டுது.”
“இனிக் கரைச்சல்தான் கசிப்படிச்சுப் போட்டு கண் தெரியாமை நிக்கிறவை கையிலை வாளையும் " உருவிக் கொண்டு நிண்டால் ஒழுங்கை தெருவெல்லாம் வில்லங்கம் தான்” “அதுதான் ♔[ടങ്ങിങ്ക போட்டிலை போட்டிருக்கு தேர்தல் வோட்டு மாதிரி இல்லை போகேக்கை காட் ஒப்படைக்கிற ஒப்படைச்சு. செத்த
கொழும்புக்கும் குடும்பக்
Omgif
தந்த
- 40 ܗ
-L-60)6O. வேணும்"
அதிகாரியுடன் அறைக் க்குள் நுளைந்த விதானையார் முடி அணிந்து வாளை இடுப்பில்
திருப்பிக் குடுக்க
distiquutg வருகிறார். அதிகாரியிடம் இருந்த அதே கம்பீரம் அவரிலும் தொரிகிறது. வாளை உறையிலிருந்து உருவி பக்கத்தில் இருந்த அறிவித்தல் பலகையைச் சுட்டிக் காட்டுகிறார்.
“இதிலை உள்ளதை
எல்லாரும் படிச்சிருப்பியள் எண்டு
நினைக்கிறன். படிக்கா தவை நல்லாப் படிச்சு விளங்கிக் கொண்டு போக வேணும் இல்லாட்டி வில்லங்கங்கள் வரப்பாக்கும் சரி குடும்பக் காட்டையும் ஐசியையும் கொண்டு ஒவ்வொருத்தரா ஒழுங்கா 6JTFE (35s'
உரத்துச் சொல்லி விட்டு 666 உறையில் செருகிக் கொண்டு இருக்கையில் அமர்கிறார். C2
ஒவ்வொருவரும் (plg. 60)u பெற்று தாங்களே அணிந்துகொண்டு வாளையும் இடுப்பில் மாட்டிக் கொண்டு வெளியேறுகின்றனர் கியூவில் நிற்கும்போது கூச்சமும் சிரிப்பும் சிலர் முகங்களில் எழுந்தாலும் (Dig.60). அணிந்து கொண்டு
வெளியே வரும் போது அதே கம்பீரத்துடன் திரும்புகின்றனர்.
 

வெளியே வரும் போது அதே கம்பீரத்துடன் திரும்புகின்றனர்.
கடைத் தெருவில் பிச்சை எடுக்கும் தாமுக்கிழவனும் முடியை அணிந்து 6T66 இடையில் செருகியபடி அழுக்கேறிய அரை ஆடையுடன் அவிழ்ந்த கோவ ணமும் தெரிய வருகிறார். மற்றவர்களிடம் காணப்பட்ட அதே
கம்பீரத்துடன் சட்டை யின்றி உழைக்காமல் பருத்த தோள்களுடன் வந்த அவரது தோற்றம் முடிக்கும் வாளுக்கும் மிகப்பொருத்தமாகவே இருக்கிறது.
அந்த நீண்ட வரிசைக்
கூடாகச் செல்லும் போது தனது வாடிக்கையான முகங் களைக் கண்டதும் அவரது கை நீள்கிறது. ஆனால் தலையைமட்டும் நிமிர்த்தியபடி அதே கம்பீரம்.
“என்னப்பா (ypņ(BuLUIT டையும் நிண்டு பிச்சை எடுக்கிறாய்”
“என்னைய்யா முடி சோறு போடுமா? அடுத்த வருஷம் பாருங்கோ என்னைப்போலே பத்துப் பேருக்காவது பிச்சை போடுறன்”
.குரலிலும் அதே கம்பீரம் حي”
கியூவில் நின்ற பலரிடமிருந்து வழமையை விட அதிகம் பணம் சேர்கிறது.
கிளாக்கரும் StatDL பையைத் துளாவுகிறார். சில்லறை இல்லை பத்து ரூபாய் நோட்டை எடுத்து கிழவனின் கையில் திணிக் கிறார். .
அவரது முறையும் வருகிறது முடியுடனும் வாளுடனும்
- 41 -
வெளியே வந்த அவர் நேராக குதிரையில் தாவி ஏறுவது போன்ற உணர்வுடன் சயிக் கிளில் தாவி ஏறுகிறார். சுதந்தி ரமாக கைவிசி நடந்த அந்த தெருவில் இரவிலும் பகலிலும் நிலவிலும் தடையின்றி திரிந்த அந்த தெருவில் ஒரு பறவையைப் போல சுதந்தி ரமாக
காற்றோடு காற்றாக பறந்து
செல்ல விரும்பும் ஆவலில்
சயிக்கிளில் விரை கிறார்.
பிள்ளையார் கோவில்
கிணற்றடியில் இருந்த வாழைமரம் ஒன்று நாலைந்து துண்டுகளாக நிலத்தில் சரிகிறது. கோயில் ஐயர் கம்பீரமாக சிரித்தபடி வாளின் கூர் முனையை திருப்தியுடன் திருப்பிப்
பார்க்கிறார்.
西T@ சந்திக்கருகே இருந்த சந்தை வெளி குரு சேத்திரப் போர்முனை போல
காட்சி அளிக்கிறது. முடிகளுடன் நின்ற சனத்திரள் சந்தை வெளி நிரம்பி தெருக்களிலும் நிறைந்து நிற்கிறது. நடுவே இளவட்டங்கள் பலர் வேகமாக வாட்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறனர். ஊர்க் கோயில் களில் சூரன் போர்களில் சிலம்பு, வாள் சுழற்றும் பயில்வான் சண்முகம் வயதானகாலத்திலும் முடுக்கோடு நின்று பயிற்சி அளிக்கிறார்.
சயிக்கிளில் (36.5LDITs வந்த கிளாக்கர் சந்தியில் நின்ற
சனங்களை விலத்து வதற்காக தூரத்திலிருந்தே மணியை அடித்தபடி வருகிறார். அவரது அவசரத்தை புரிந்து கொண்டவர்களும் வேகத்தைக் கண்டு மோதுவதை தவிர்க்க

Page 23
விலத்தி வழிவிட்டவர்களுமாக சற்று ஒதுங்கிநின்ற அவர் களைப் பொருட்படுத்தாமலே அவர் விரைகிறார்.
வழமையாக அவர் அஞ்சி ஒடுங்கி கூனிக் குறுகிப் போகும் அந்த இடம் வருகிறது. ஒரு பறவையைப் போல் சுதந்திரமாக காற்றில் பறக்கும் உணர்வோடு கம்பீரமாக நிமிர்ந்து செல்கிறார். இன்னும் சொற்ப தூரம். இன்னும் சொற்ப தூரம் தான். இடத்தை தாண்டி வேண்டும்.
“ஓய்.முடி.முடி’ “ஆத்திரத் தோடு கூப்பிட்ட அந்தக் உரத்த குரலைக் கேட்டதும் வேகமாக சென்ற சயிக்கிளின் பிரேக்கை அழுத்தி சிரமத்துடன் அதை நிறுத்துகிறார். உடைவாளில் கையைப் போட்டபடி “என்ன?. என்று கேட்டபடி ஆத்திரத்தில் திரும்புகிறார்.
அங்கே அவர் கண்ட காட்சி. அவரது உயரத்துக்கு மேலாக இருந்த UTfuU சப்பாத்துக்கள். அண்ணார்து பார்க்கிறார். கிருஷ்ண பரமாத் மாவின் விசுவரூபக் காட்சி போல் முடியோடும் வாளோடும் பெருமலைபோல உயர்ந்து நின்ற
உருவத்தின் கண்களில் தெரிந்த கோபக்கனல்.
அச்சத்தால் நடுநடுங்கி
கத்துவதற்கு அவர் முனை கிறார்.
குரல் அடைத்துப் போய் துடித்து
முனகுகிறார்.
“என்னப்பா.என்னப்பா
இருக்க
- 42 - .
உப்பிடி பட்டுக்
கத்துறியள்.”
அந்தரப்
96).J.5 மனைவி அவலத்துடன் இவரைத் தட்டி உருட்டி அவரது உறக்கத்தை கலைத்த போதுதான் கண்டது கனவென்பதை உணர்ந்து ஆறுதல் பெருமூச்சு விடுகிறார்.
“என்னப்பா என்ன கனவு கண்டனீர்களே...வழி தெருவிலை
கழிப்பு கிழிப்புகள் கிடந்திருக்கும் வந்த SL60)60 காலைக் கழுவிப்போட்டு வீட்டுக்கை வாறேல்லை ”
* ஒ. வழி தெரு விலைதான் இண்டைக்கு
தொப்பியைக் கலட்டச் சொல்லிப் போட்டான்”
“படுக்கையில் சாய்ந்துவர் மீண்டும் ஒரு ஆழ்ந்த பெரு மூச்சுடன் அன்னார்ந்து விழித்த படி கனவை அசைபோடுகிறார்.”
 

தேடல்: வாசிப்பு தொடர்பான ஓர் அறிமுகக்குறிப்பு
லெனின் மதிவானம்
“வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக்குகின்றது” எனும் கூற்று பாடசாலை முதல் உரையரங்குகள் வரை வாய்ப்பாடாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் 9606 இப்பொருளின் உள்ளார்ந்த
ஆற்றலினையும் முக்கியத்துவத்தினையும் வெளிக்கொணரத் தவறிவிட்டது எனலாம். இதன் விளைவாக இப்பொருள் பற்றிய மேல் நோக்கான பார்வை வெளிப்படுவதனையும் இச்சமுதாய
பிரச்சனைகளிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் விடுபட்டு நிற்க முனைகின்ற ஓர் அம்சமாகவே வாசிப்பு அமைந்துள்ளதையும் காணலாம்
இவ்வாறானதொரு சூழலில் வாசிப்பு பற்றி சிந்திக்கின்றபோது “நெல்லுக்குள் அரிசி” என்ற பரமரகசியத்தை கூறுவது போல தோன்றும்
ஆனால் இத்தரவினையே அடிப்படையாக கொண்டு நுண்ணயத்துடன் நோக்குகின்றபோது பல புதிய விடயங்களையும், உண்மைகளையும் கண்டறியலாம். “விஞ்ஞானபூர்வமான சிந்தனை என்பதே சர்வசாதாரணமான சாமானிய விடயங்களை கூட மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு இது தானே தெரிந்த விடயம் என முடிவு கட்டிவிடாமல் அதனையே ஆழமாகவும் uTfriss வேண்டும் என்பதாகும்” (கே , பாலதண்டாயுதம் -1975)
வாசிப்பு குறித்த தலைப்பினையும் ஒரு விஞ்ஞான பூர்வமான பார்வைக்குட்படுத்தி ஆய்வு செய்வதன் மூலம் இத்துறை சார்ந்த பல உண்மைகளை வெளிக்கொணரலாம். “நெல்லுக்குள் அரிசி’என்பது சிறுவர் முதல் பெரியோர் வரை வெளிப்படையாகதெரிந்த விடயமாகும். இவ்விடயத்தினையே ஆழ அகலப்படுத்தி நோக்குகின்ற போதுதான் அரிசி இல்லாத நெல்லும் உண்டு என்ற உண்மையினையறியமுடியும். அதனை பதர் என்று குறிப்பிடுகின்றோம். தேடலுக்குட்படுத்தப்படும் விடயங்களிலும் பதர்களை இனம் கண்டு அவற்றினை நீக்கிவிடுவதற்கும் வாசிப்பு பற்றிய தெளிவு அவசியமாகின்றது .
மேற்குறித்த கருதுகோளின் அடிப்படையில் இத்தலைப்பினை
ஆய்வுக்குட்படுத்துகின்ற இக்கட்டுரை அதன் முனைப்புற்ற சில போக்குகளை சுட்டிக்காட்டுவதாகவே அமையும். அவ்வகையில் இதனை நிரூபிப்பதற்காக நீண்ட பட்டியலிட்டு நீட்ட விரும்பவில்லை அட்டவணை போட்டு இலக்கிய கணக்கெடுக்கும் விமர்சகர்கட்கு அப்பணியினை விட்டுவிட்டு இலக்கிய வாசிப்பின் அவசியத்தினையும் அதற்கு அனுசரணையாக இலக்கிய குறிப்புகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் மட்டும் காட்டிச் செல்வது இதன் சாராம்சமாக இருக்கும் என்பதனையும் கூற விழைகின்றேன் .

Page 24
வாசிப்பு ஏன் அவசியம்....?
உலகில் தோற்றம் பெற்ற அனைத்துப்படைப்புகளிலும் மனிதனே மேலான படைப்பாகும் . மனிதனின் ஆளுமை, கம்பீரம், மேன்மை குறித்து உலக இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான கோர்க்கி இவ்வாறு குறிப்பிடுகின்றார். ベ
“மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கின்றது. எனக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை . மனிதன் மட்டும் தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லாக்கருத்துக்களுக்கும் படைப்பாளி. அற்புதம் செய்வோன் அவனே. இவ்வுலகில் அற்புத அழகுப்பொருட்கள் எல்லாம் அவனது உழைப்பால் ஆனவை. திறன்மிக்க மனிதகரங்களால் ஆனவை. நான் மனிதனுக்கு தலை வணங்குகின்றேன். ஏனெனில் மனித அறிவுக்கும், கற்பனைக்கும் அப்பால் நான் இவ்வுலகில் வேறொன்றையும் காணவில்லை. ஒரு பக்தனுக்கு மனிதனை விட சிறந்த கடவுள் இருக்கலாம் ஆனால் எனக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை.
மனிதனே எல்லாக் கருத்துக்களுக்கும், பொருள்களுக்கும்
படைப்பாளி”
புத்தகங்கள் என்பது மனிதனைப் பற்றி மனிதனால் எழுதப்பட்டவையாகும். இதனால் தான் இவை மகத்தான ஆற்றல்
பெற்றவையாக அமைந்து காணப்படுகின்றது. மனித குலத்தினை வரலாற்றினை, அனுபவத்தினை, பரிணாமத்தினை, எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. இன்றைய மனிதன் என்பவன் திடீரென வானத்திலுருந்து குதித்தவன் அல்ல. படிப்படியாக மனிதகுலம் தன் உழைப்பாலும், அனுபவத்தாலும் கற்ற விடயங்களை கொண்டே இன்றைய நாகரிகமான வாழ்வினை சிருஷ்டித்துள்ளது.
ஐசக் நியூற்றன் புவியீர்ப்பு விசையினை கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பினிலே அவரது வாழ்நாள் கழிந்து விட்டது. ஆனால் இன்றைய மனிதன் தன் வாழ்நாளை செலவழித்து இதனை கண்டறிய வேண்டிய அவசியமில்லை. அவன் நியூட்டனின் அனுபவங்களை சிந்தனைகளை உள்வாங்கி அதன் வளர்ச்சி போக்கினை அல்லது அத்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி முன்னேறி G86)6)6)stub.
"மனிதன் எத்தனை க ாக இச்சொல் 3. எனக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இ மனிதன் மட்டும் தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி அற் அவனே?
888
X&ჯაჯჯჯ«ჯ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனவே “தேடல்” “வாசிப்பு’ என்ற பதங்களை மனிதன் வாழ்க்கையின் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றிலிருந்து விடுபட்டு நிற்காமல் அவற்றினை எதிர்கொண்டு புதியதோர் நாகரிகத்தினை நோக்கி மனித வாழக்கையினை நகர்த்துவது அதன் தலையாய அம்சமாகும். வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு, நேர்மை, என்பன புதிய நாகரிகத்தின் உள்ளடக்கமாகும்.
எவற்றை வாசிக்க வேண்டும்.?
மேற்குறித்த கருத்தினை அடிப்படையாக கொண்டு நோக்குகின்றபோது “வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக்குகின்றது” என்ற கருத்து வெளிப்படும். அப்படியாயின் வாசிக்கின்றவர்கள் அனைவரும் பூரண மனிதர்களா ? புத்தகங்கள் அனைத்தும் மனித ஆற்றலை வெளிப்படுத்துகின்றனவா? என்ற வினா எழுகின்றது. '. S.
மனிதநேயத்தின் ஆணிவேர்களை தின்று தீர்த்துவிட்டு மனிதனின் ஆற்றல்களை, பண்புகளை எந்தெந்த வகையில் சிதைக்க முடியுமோ அந்தந்த வகையில் சிதைக்கின்ற நசிவு இலக்கியங்களும் நம்மத்தியில் பல்கிப் பெருகிக்கொண்டிருக்கின்றன.
நெல்லுக்குள் அரிசி என்ற உதாரணத்திற்கு வருவோம் அரிசி இல்லாத நெல்லும் உண்டு. இதனை பதர் என அழைப்போம். இவ்வாறு தான் மனிதத்தன்மை இல்லாத புத்தகங்களும் காணப்படுகின்றன. அவற்றினை இனம் கண்டு நீக்குவதற்கு வாசிப்புடன் கூடிய ஒரு விஞ்ஞான பூர்வமான பார்வையும் அவசியமாகின்றது.
விஞ்ஞான பூர்வமான பார்வை என்றவுடன் எனது
மாணவப்பருவ சிந்தனை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் நானும் எனது நண்பர்களும் மர்மக்கதைகளையும், துப்பறியும் நாவல்களையும் அதிகமாக வாசிப்பதுண்டு. இதனால் ஆசிரியர்களிடத்தில் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டோம். இந்நூல்களை வாசிக்க வேண்டாம் என்று சட்டம் போட்ட அவர்கள் தண்டனையை வழங்கினார்களே தவிர ஏன் வாசிக்கக்கூடாது? அதன் பாதிப்பு என்ன ? என்பவை குறித்து விளக்க தவறிவிட்டனர். எனவே தவறும் தண்டன்ையும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
பாடசாலை கல்வி முடிந்து வாழ்க்கையில் காலடி வைத்த போது தான் நாங்கள் புததகங்களில் வந்த மனிதர்களுக்கும் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களுககும் இடையிலான இடைவெளியை உணர முடிந்தது . எனவே அக்கால கட்டத்தில் இடம்பெற்ற வாசிபபினால் வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கோ அல்லது புதியதோர் சிந்தனை தளத்தினை நோக்கி செல்வதற்கோ எங்களால் முடியாமல் போய்விட்டது.
- 45 - 鷲莎st道弦i

Page 25
எனவே வாசிப்பு, பூரணத்துவம் என்பது பற்றி சிந்திக்கின்ற போது புத்தகங்களில் கற்ற விடயங்களை யதார்த்த வாழ்க்கையுடன் இணைத்தும் அவற்றினை வரலாற்றுடன் இணைத்தும் தமது அனுபவங்களை பட்டைதீட்ட முனைகின்ற போது தான் அவை அர்த்தமுள்ளதாகின்றது.
எவ்வாறு வாசிக்க வேண்டும்...?
வாசிப்பினை மேல் நோக்காக - தகுந்த அடிப்படையற்ற நிலையில் மேற்கொண்டு மனம் போன போக்கில் புரிந்து கொள்வத னால் எவ்வித பயனும் இல்லை. சில சமயங்களில் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை விட தீமை அதிகமாயிருக்கும் எனலாம். எனவே வாசிப்பில் ஆழ்ந்து கற்றல், கிரகித்துக்கொள்ளல், குறிப்பெடுத்தல் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது
கேத்திர கணிதப்பாடத்தில் ஒரு தேற்றத்தினை உதாரணமாக எடுத்து நோக்குவோம். ‘ஒரு முக்கோணியின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை 180° ஆகும்” என்ற தேற்றத்தினை நிறுவுவதற்கு முக்கோணியை மேலோட்டமாக அறிந்து வைத்திருப்பதாலோ அல்லது முக்கோணியின் உருவினை சிந்தனையில் கொணர்ந்து சிந்திப்பதனாலோ பூரணத்துவமான விடை இலகுவாக கிடைக்காது. ஒரு தாளில் ABC அல்லது PQR (ஏதாவது மூன்று எழுத்துக்களை பயன்படுத்தலாம்) என்ற முக்கோணியை வரைந்து நோக்குகின்றபோது ஏதாவது ஒரு பக்கத்திற்கு சமாந்திரம் வரைதல் வேண்டும் என்ற சிந்தனை தோன்றும். சமாந்தர கோட்டினை துணைக்கொண்டு தேற்றத்தினை நிறுவலாம் .
இவ்வாறு தான் புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்த நிலையில் வாசிப்பதனால் எந்தப்பயனும் பெற முடியாது. ஆழ்ந்து வாசித்தல், வாசித்தவற்றுள் மையக்கருத்தினை கிரகித்து குறிப்பெடுத்தல், அதனை சமுதாய யதார்த்தத்துடன் இணைத்துப் பார்த்தல் போன்ற செயற்பாடுகளினூடாக ஒரு புதிய சிந்தனையை நோக்கி நகரவும் வாழ்வினை இன்றைய நிலையினை விட முன்னேற்றகரமானதோர் நிலைக்கு எடுத்துச்செல்லக் கூடியதாகவும் அமையும் .
வாசிப்பதற்கான நேரம் உண்டா..?
நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எனவே வாசிப்பதற்கான நேர அவகாசம் இல்லை என நம்மில் பலர் முறையிட்டுக் கொள்கின்றனர். இவர்களின் இக்கூற்று எந்தளவு பொருத்தப்பாடுடை
- 46 -
 

யது என்பதனை கோர்க்கி, பாரதி முதலானோரின் வாழ்க்கையில் இடம் பெற்ற சில சம்பவங்களை உதாரணமாக கொண்டு நோக்குவோம் .
கோர்க்கியின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது . அவர் பாடசாலை சென்று கல்வி கற்கவில்லை. மிக இளமைக்காலத்திலேயே தாய் தந்தையரை இழந்து தாத்தாவின் வீட்டில் வளர்ந்தவர். அவர் கடைச்சிப்பந்தியாக , சுமைக்கூலியாக, ஹோட்டல் தொழிலாளியாக, ரொட்டி சுடுபவனாக, பறவை பிடிப்பவனாக இவ்வாறு பல தொழில்களை செய்திருக்கின்றார். அவர் தன் வாழ்க்கையையே பல்கலைக்கழகமாகவும் , பயிற்சிக் களமாகவும் கொண்டு கல்வி கற்றவராவார். அவரது வாழ்வில் இடம் பெற்ற சிறிய சம்பவம் ஒன்றின் ஆய்வினை தேவை நோக்கி எடுத்தாளுகின்றேன்.
கோர்க்கி சிறுவயதில் ஒரு கொடுமை மிக்க எஜமானியிடம்
வேலை செய்தார். இக்காலக்கட்டதில் அவர் புத்தகங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறுவனாக காணப்பட்டார். கடவுளுக்காக கொழுத்தப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்கும் கோர்க்கி சில சமயங்களில் அவற்றில் ஆழ்ந்து போய் மேசை மீதே தூங்கி விடுவதும் உண்டு . இரவு நேரத்தில் அதிகமாக கண விழித்துப் படிதததனால் எஜமானியம்மாவின் வேலைகளை சரிவரச்செய்ய முடியாது என்பதற்காக அவர் பல தடவைகள் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார்.
கோர்க்கியின் புத்தக வாசிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே அவர் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார் பழைய பொருட்களை பாதுகாக்கும் அறையாக அது காணப்பட்டது அதிஸ்டவசமாக கடவுளுக்காக கொழுத்தப்பட்டு எஞ்சிய மெழுகுவர்த்திகளும் அங்கு போடப்பட்டிருந்தது. எல்லோரும் தூங்கிய பின்னர் அவற்றினை கொழுத்தி அதன் வெளிச்சத்தில் தனது புத்தக வாசிப்பினை தொடர்ந்தார். இதனிலும் எஜமானிக்கு சந்தேகம் ஏற்பட மெழுகுவர்த்தியின் உயரத்திற்கு ஏற்ப பலகைக் கீலங்கைளை அதனுடன் இணைத்து வைத்துவிட்டார். கோர்க்கி அவற்றினை உபயோகித்து விட்டு பின்னர் தந்திரமாக பலகை கீலங்களை அதனுடன் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கு ஏற்ற வகையில் சமன்செய்து விடுவார். இவ்வாறு வாழ்க்கையில் பல இன்னல்கள் தலைகாட்டிய போதும் அவற்றினை எதிர்கொண்டு புத்தக வாசிப்பினை தொடர்ந்தவர் கோர்க்கி (My University and Apprentice by M. Gorky)
பாரதியின் வாழ்க்கை வரலாற்றினை கூற வேண்டிய அவசியமே இல்லை. துன்பியலில் உழன்றும் ஏறாய் நின்ற பாரதி தன் வாழ்வில் எவ்வளவோ அவலங்களைச் சந்தித்துள்ளான். வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் எதிர்கொண்டபோதும் அவற்றினால் அடித்துச்செல்லப்படாமல், விரக்தியில் மூழ்காமல் அவற்றினை அவர்கள் எதிர்கொண்ட விதம் திடுக்கிட வைக்கும் அளவுக்கு அவர்களின் சிந்தனைகளுக்கு வளம் சேர்த்துள்ளது.
als,
- 47 -

Page 26
இந்நிலையில் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற முறையீடு எந்தளவுக்கு பொருத்தப்பாடுடையது? இன்றைய இயந்திர யுகத்தில்
மனிதனது வேலைப்பளு வாழ்க்கைப் பிரச்சனை என்பன அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் வாசிப்பதற்கு நேரமில்லை என்று கூறுமளவுக்கு அவன் இயந்திரங்களோடு இயந்திரங்களாகிவிடவில்லை.
(A9660)
வாசிப்பு, தேடல் எனும் விடயங்கள் கல்வி, நாகரிகப் போக்காக சிற்சில விடயங்களை கற்று தலை வீங்கித் திரிகின்ற உளநோயாளராக அல்லாமல், மாறி வரும் சமூகச் சூழலை புரிந்து கொள்ளவும், நாகரிகமான மனித வாழ்வை வாழ்வதற்கும் அவசியமாகின்றன.
“நாங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்கின்றோம்
அதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டோம் அதற்காகவே சாகின்றோம்! எங்கள் பெயர்களை துக்கத்தின் சாயல் ஒருபோதும் அனுகாதிருக்கட்டும்.”
- யூலயஸ் பூசிக் தூக்குமேடைக் குறிப்பு 1943
சரித்திரத்தின் இந்தத் தீர்ப்பினை மதித்து நடக்க வாசிப்பினை துணைக்கொள்வோமாக.
feese
தற்கால புதிய முன்னேற்றங்களால் வரும் செல்வப் பெருக்கங்கள் அனைத்தும், பெருஞ் செல்வர் செல்வத்தைப் பெருக்கவும் இனிய வாழ்வினர் இன்ப மிருக்கவும், உடையோர் இல்லோர் &augègy&ele KlassNLKEDUAugu மாறுபாட்டையும், assassiréasey is outu FM&M's နှီး နွာ-၏☎atu### முன்னேற்றமாகவோ
முன்னேற்றமாகவோ இருக்க முடியாது.
 
 
 

சமூக விஞ்ஞான படிப்பு வட்டக் கலந்தரையாடலில்
மதமும் மனிதனும்
கடந்த மாதம் (11.11.2000) போயா தினத்தன்று காலை, திருநெல்வேலியில் அமைந்துள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், சமூகவிஞ்ஞான படிப்பு வட்டத்தின் கலந்தரையாடல் ‘மதமும் மனிதனும்’ எனும் பொருளில் நடைபெற்றத. திரு.ப.சிவநாதன், (தலைவர்,பொருளியற்தறை, யாழ்பல்கலைக்கழகம்) அவர்கள் தலைமையுரை ஆற்ற, வைத்திய கலாநிதி சி.குமரவேள் (யாழ்.போதனா வைத்தியசாலை) அவர்கள் தொடக்கவுரையை நிகழ்த்தினார். தலைமையுரையில் திரு.ப.சிவநாதன் அவர்கள் குறிப்பிடும்போத “இதபோன்ற விடயங்கள் மிகவும் കൃIങ്ങഥക பரிசீலிக்கப்படவேண்டியவை, இதபற்றிக் கலந்து பேசுவதற்கு மிகவும் பொருத்தமான இடமாக சமூகவிஞ்ஞானப் படிப்பு வட்டம் விளங்குகின்றது” என்றார்.
வைத்திய கலாநிதி.சி.குமரவேள் அவர்கள் தனத தொடக்க உரையில் மதவழிபாடுகளின் தோற்றம், வரலாற்று ரீதியான அதன் வளர்ச்சிப்படிகள், கோட்பாட்டு ரீதியான அதன் உருவாக்கம் என்பவை பற்றிக் குறிப்பிட்டதடன் நிறுவனமயப்பட்ட மதங்களை ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு அன்றிலிருந்து இன்றுவரை தமத அதிகாரங்களைப் பேணுவதற்குப் பக்கபலமாக வைத்தவருகின்றன என்பத பற்றியும் குறிப்பீட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்தரையாடலில் “மதக் கருத்தக்களும், மத நம்பிக்கைகளும் முற்றிலும் மாற்றமுடியாதவையாக என்றும் இருந்ததில்லை எனவும் யேசு, புத்தர், முகமது நபி போன்ற இறையாளர்கள்கூட முன்பிருந்த மத வழிபாட்டுக் கருத்தக்களை விமர்சித்து மாற்றுக் கருத்தை முன்வைத்தவர்களே” எனவும் குறிப்பிடப்பட்டத.
மதநம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் அவலம் நிறைந்த உலகில் உளநெருக்கடிகளை தணித்து ஆறுதலளிக்கும் பணியை அவை ஆற்றுகின்றன என்ற கருத்தம் அங்கு முன்வைக்கப்பட்டத. இக்கருத்தை ஏற்றுக்கொண்டபோதம், அத்தடன் நின்றுவிடுவத சமூக, அறிவியல், பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடையாகிவிடும் எனவும், மனிதன் தனக்குத்தானே போட்டுக்கொண்ட விலங்குகள்தான் - பணம் பொருள்களுக்கான இழுபறியும், ஏற்றத்தாழ்வுகளும், அடிமைத்தனங்களும், யுத்தங்களும் அழிவுகளும் என்பதை சமூகவிஞ்ஞான நோக்கில் மக்கள் புரிந்த கொள்ளும் நிலை ஏற்படும்போதே ஒரு புதிய நிலை தோன்றும் எனவும் குறிப்பிடப்பட்டது. இத்தகைய அறிவியற் சூழலை ஏற்படுத்த சமூக, அறிவியல், பண்பாட்டுத் தளங்களில் செயற்படும் அறிஞர்களும் கல்வியாளர்களும் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்யபட்டத.
-உலகன்

Page 27
நாளைய மனிதர் நன்றாய் வாழ்வர்
ஏழையென எண்ணி ஏற்க மறுத்ததாய் தவறாய் கொள்வாய், தலைவன் நீயென மனமத சொல்லும் விளக்கம் புரியாய் கம்பீரப் பொலிவிலும் கவினுறு அழகிலும் மனதினை பறிகொடுத்த பாங்கினை அறியாய் தாயவன் நீயெனக்கு தணையென இருந்தால் தயரமே இலையென மகிழ்ந்த தறியாய் பேதையென் காதலை பேணிட முடியாப் பெதம்பையர் தடுத்தனர் குலைத்தனர் மனத்தை நொட்டை சொன்னனர் ஊருள பேர்கள் மொட்டாய் விரிந்த காதல் கருகிற்று சமத்துவம் இல்லாச் சமூகம் தன்னில் எப்படி வெல்லும் எம் ஒப்பருங் காதல் தந்தைதாய் சோதரர் சுற்றம் எல்லாம் சூழ்ச்சிகள் செய்தே சுட்டனர் மனத்தை .
அரிவைநான் அறிவுடையள் தான் அன்பே பாசமன்பு நேசமென்ற வலைக்குள் வீழ்ந்தேன் மித்திரம் செய்தற்கு சாத்திரம் எதற்கு ஒத்தநாம் வாழ்வதற்கு ஓரைகள் எதற்கு சித்தம் அழகிய தனதென்ப தறிந்தேன் கோத்திரம் பார்ப்பதில் பாத்தியதை ஏதுமில்லை வித்துவம் இருக்கிறத விவேகம் போதுமுனக்கு பத்தாவாய் ஆக்க எண்ணம் கொண்டேன் பாசமென்னை தடுத்தது பாசவலை விரித்தது சொந்தம் காக்கவென தாரதேசம் தரத்தியத சொந்த நாட்டில் உந்தனை இழந்தேன் இந்த நிலைக்கு எம்மை ஆளாக்கிய சமூக அமைப்புச் சாலச் சிறந்ததோ? சமத்துவம் மலர பொதமை பூத்திட புது நீதி வாராதோ ! மாற்றோமோ உலகை, மாற்றிடில், நாளைய மனிதர் நன்றாய் வாழ்வார்,
* அழ. பகிரதன் -
- 50 -

/
6ே ஒவ்(F)செற் பிறிண்ட்
8 றோணியோ வேலைகள் | 99 தட்டச்சு தமிழ், ஆங்கிலம்)
-டி-போட்டோ-பிரதிகள்
se safGg5sü (I.C, Photo)
Longing gynghylib என்றும்நிரந்தரம்
சாய்ராம் புத்தக நிலையம் பிரதான ഖ്, சங்கானை.
*一 ·
S)
Rசாந்தி அச்சகம்
உங்களின் அனைத்து
நிகழ்ச்சிகளையும்
உங்களின் எண்ணம்
போல் வண்ண வண்ணக்
கலர்களில் சிறந்த முறையில் அச்சுப்பதித்திட நீங்கள் நாடவேண்டிய இடம்
Rசாந்தி அச்சகம் இல, 216, கஸ்துாரியார் வீதி, யாழ்ப்பாணம்.
AS ERWANN HAM STORS stationcre & paper (2erchante
பாடசாலை உபகரணங்கள் காரியாலைய காகிதாதிகள்
மொத்த சில்லறை வியாபாரிகள்.
ஆசீர்வாதம் ஸ்ரோர்ஸ்
305, 307, மணிக்கூட்டு வீதி, 61, நவீன சந்தை யாழ்ப்பாணம். ஆஸ்பத்திரி வீதி, U யாழ்ப்பாணம். ク
J.S.Printers, Sillalai.

Page 28
செப்திப் பத்திரிளகயாகப் பதிவு Registered as a News Pope in
ECDL
என்றென்றும் உய இளமை பு
இவை g_b TTTIE6 (157f76. TiCU
[FT
சேட்டிங் சூட்டிங் முகூர்த்தத்திற்கே காஞ்சிபுரம் சே கிறேசில்க் மங்களம் பொங்கு
இச்சஞ்சிகை தேசி யாழ்ப்பானம் 405, ஸ்ரான்லி வி அவர்களால் யாழ்ப்பானம் 40 அச்சகத்தில் அச்சிட்டு வெளி
 
 

செய்யப்பட்டது. Sri LOk.
IEEE
if
ர்தரம், நிதான விலை துமை இனிமை மூன்றிற்கும் ர் டிசைன்களில் ல் தெரிவுசெய்ய
டுங் கள்
றெடிமேற் ஆடைகள், iற கூறைச் சேலைகள் லைகள், றோஸ்சில்க் , மைசூர்சில்க், ம் பட்டுச்சேலைகளுக்கு
பணிடத்தரிப்பு.
ய கலை இலக்கியப் பேரவைக்காக tதி வசந்தத்திலுள்ள க. தணிகாசலம் 7, ஸ்ரான்லி வீதியிலுள்ள யாழப்பான பிடப்பட்ட I