கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2001.02

Page 1

|
*、

Page 2
&B5 835 y?dö. . . . .
கவிதைகள் சோ.பத்மநாதன் கல்வயல் குமாரசாமி த.ஜெயசீலன் கோகுலராகவன்
பவித்திரன் ஜெயா
சிறுகதைகள்
உடுவில் அரவிந்தன் சி.சிவானி
கட்டுரைகள்
கலாநிதி.சபா.ஜெயராசா பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா ஜெ.சற்குருநாதன் லெனின் மதிவானம்
சூரியன்
பிற.
கலையன்பன் உலகன்
 

தாயகம் கண்
புதிய நாகரிகம்
பெப்ரவரி 2001 m இதழ்: 41
சமாதானமும் சுயநிர்ணயமும்
சுயநிர்ணய உரிமை என்பது இனங்களுக்கிடையே சமத்துவ உணர் வையும், ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதிக்கும் உயர்ந்த அரசியல் கலாச்சாரத்தையும் கட்டி வளர்க்க அடித்தளமாய் அமைவது. பல்லின மதப் பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழும் நாட்டில் உயிரோட்டமுள்ள ஜனநாயகப் பண்புகளை பேண வகை செய்வது. தேசங்களை பிளவுபடுத்துவதல்ல இறுக்கமாக ஒன்றிணைக்கும் சக்தியும் சுயநிர்ணய உரிமைக்கு உண்டு.
ஐ.நா.சபையின் சாசனத்திலும் இடம் பெற்றிருக்கும் சுயநிர்ணய உரிமை எனும் இக்கருத்தியல் வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் தேசங்களின் உருவாக்கத்துடனும், காலனித்துவத்துக்கு எதிரான தேசிய எழுச்சிகளுடனும் உருவானது. லெனின், ஸ்டாலின் றோசா லக்சம்பேக் போன்ற பொதுவுடமைப் புரட்சியாளர்களால் விவாதங்களுக்கும் விரிவாக்கத்துக்கும் உட்பட்ட இக்கருத்தியல் சோசலிச அரசுகளின் உருவாக்கத்தில் செயல்வடிவம் பெற்றது.
இலங்கை போன்று இனப்பாகுபாடுகளும், இனஒடுக்கல்களும் யுத்தங்களாக வெடித்து தொடரும் நாடுகளில் சுயநிர்ணய உரிமை பற்றிய அறிவையும் தெளிவையும் அனைத்து மக்களிடமும் ஏற்படுத்துவது நிரந்தர சமாதானத்தை ஏற்ப்டுத்துவதற்கு உதவியாக அமையும்.
மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதை தமது ஆளும் வர்க்க நலன்களைத் தொடர்ந்து பேணிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள் விரும்பு வதில்லை. அவர்கள் மக்களை அறிவியல் அடிப்படையில் வழிநடத்துவதற்கு பதிலாக, எளிதாக துாண்டிவிடக்கூடிய உணர்வுகளை வைத்தே தமது பதவி களையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வதுடன், சுயநல அரசியல் இலாபங்களையும் ஈட்டிக்கொள்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இனங்களுக்கிடையே அச்சத்தையும் பகைமையையும் ஏற்படுத்தி வந்ததில் பேரினவாதிகளின் பங்கு முக்கியமானதாகும்.
அண்மையில் ஒரு பெளத்த பீடாதிபதி “பெளத்த தர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் நாட்டை பிரித்துக் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். பெளத்த தர்மத்தின் அடிப்படையில் நாடு வழிநடத்தப் பட்டிருந்தால் பிரிவினை என்ற பேச்சே எழாமல் இருந்திருக்கும். ஆனால் யதார்தத்தில் பெளத்த தர்மமோ அல்லது ஏனைய மதங்களின் தர்மங்களோ அல்ல வர்க்க தர்மமே அரசியலை எங்கும் வழிநடத்துகிறது.
பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக பெரும் உயிர் அழிவுகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தி வரும் போரை புத்த பெருமான் வெறுத்தது போலவே மக்கள் அனைவரும் உளப் பூர்வமாக வெறுக்கின்றனர். சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்குமான பேராவல் அவர்களது கனவாக நீள்கிறது. இத்தகைய ஒரு

Page 3
உணர்வின் வெளிப்பாடாகவே யாழ். பல்கலைக்கழக சமூகமும், அரசசார்பற்ற நிறுவனங்களும், மத கலாசார அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த “பொங்குதமிழ் எழிச்சி நிகழ்வு அமைந்தது.
யுத்தத்தை உடன் நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் ஓர் அரசியற் தீர்வை எட்ட வேண்டும். அந்த அரசியற் தீர்வு அச்சத்துடன் ஏற்படுத்தப்படும் அரைகுறைத் தீர்வாக இல்லாமல் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஏற்படுத்தப்படும் முழுமையான அரசியற் தீர்வாக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வாக - அமைய வேண்டும். அத்தகைய ஒரு தீர்வே நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும் என்பதே அந்த எழிச்சியின் அடிநாதமாக அமைந்தது. ஆனால் சமாதானத்தின் குரல்வளையையே நசுக்கத் துணிந்த அரசின் செயல் அதன் ஜனநாயக முகத்திரையை கிழிப்பதாகவே அமைந்தது.
‘சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதல்ல" என பத்திரிகைகளி வெளிப்படுத்தியது மட்டுமன்றி, பாடசாலைகள், கிராமங்கள் தோறும் சென் பல்கலைக்கழக மாணவ மாணவியர் அவ்வாறே மக்களுக்கு அறிவியல அடிப்படையில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தமை அண்மைக்கால வரலாற்றில் முன்னுதாரணமான செயலாகும். w
தென்னிலங்கை புத்திஜீவிகள், மாணவர்கள், மத்தியிலும் இச் செய்தியை எடுத்துச் செல்வது பயனுள்ளதாகும்.
இயலாமையால் ஏற்படும் மக்களின் மெளனங்கள் நிரந்தரமானவை அல்ல. தம்மேல் அழுத்தப்படும் நீண்ட போர்ச்சுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு ‘புலிகள்’ என முத்திரை குத்துவது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய வேறுபாடுகளுமின்றி எத்தகைய ஒடுக்குமுறைகளுமின்றி சுதந்திரத்துடனும், சுயகெளரவத்துடனும் வாழவே விரும்புகின்றனர். சுதந்திரத்திற்கான மனித தேவைகளும் விருப்புக்களும் விரிவ டையுமே அன்றி சுருங்கி விடுவதில்லை. எனவே சுதந்திரமான ஒரு அரசியற் சூழலை அனைவருக்கும் ஏற்படுத்துவதே நிரந்தர சமாதானத்திற்கு ஒரே வழி.
- ஆசிரியர் குழு
உங்கள் ஆக்கங்களையும், விமர்சனங்களையும் அனுப்பிவைக்கவேண்டிய.முகவரி;-
தாயகம, வசந்தம் புத்தக நிலையம், 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
தாயகம் பெப்ரவரி 2001

ஊரைக் குளிர்வித்த ஒளிதவழும் குளத்தினிலே நீர்வற்றிச் சேறு நிறைந்து பெருகியத
சேறோடு சாக்கடையும் சேர்ந்ததனால் சில மீன்கள் வேறுஇடம் பேர.பல செத்து விழுந்தனகாண். உறுமீன் வருமென்று உட்காந்த கொக்குகளும் “வருமென்ற “ நம்பிக்கை வற்றப் பறந்தனவாம். நல்ல குளம் வரள நலிந்த வயல் தார்ந்து கள்ளி படர்ந்தது .முள் நெருஞ்சியினம் பெருகியத. வற்றிக் குளம்வெந்தது மண்பிளந்து பள்ளமாச்சு சுற்றிவர எல்லாஞ் சுடுகாடாய் மாறியத. என்றாலும் இந்தநிலை மாறும் .மழைகாலம் நின்ற பொலிந்திருந்தால் நேர்ந்தஇடர் தீர்ந்தபடும். ஆம் .தேங்கும் மழைவெள்ளம் அழகுகளை மீட்டுவரும். மீன் கொக்கைக் கூட்டிவரும் .வயல் பிறக்கத் தாலாட்டும். மழை ஒர்நாள் வரும் மண்ணைக் குளிப்பாட்டும் , இத நடக்கும்! மழைவந்த சேருமுன்னே வயலுழுது எனன:யன: வரட்டும் .மழை வரட்டும்! கள்ளிகளை அது விரட்டும்! உறங்குநிலை வித்தக்களை உசாருட்டி முளைக்க வைக்கும்.
பிறகென்ன .அயல் சிரிக்கும், பெருவயல்கள் கதிர் விரிக்கும்! எரி வகலும் பிறகு ஏரோடெழின் .எங்கள் நிலம் ஜெயிக்கும்.
த.ஜெயசீலன்
தாயகம் 3 பெப்ரவரி 2001

Page 4
5ATu asb
ஊரின் நினைப்பு
கல்வயல் வே.குமாரசாமி
தங்கத்தை அரைத்து பூசித் தளிர்களில் அழகு பார்க்கும் செங்கதிர்ச் செல்வா நேற்றெம் தேசத்தைப் பார்த்த சேதி இங்குநீ எடுத்தச் சொன்னால் இவர் நம்ப மாட்டார் என்றா குங்குமக் குழம்பாய் மாறி மேற்கில் போய் கொடுகுகின்றாய் மாமரக் கிளைகள் தாவும் மந்திகள், மணியின் ஒசை தாமரைக் குளத்த நீரில் தளம்பிட வரையும் கோலம் சாமரை வீசும் தென்னங் கீற்றுகள் அணில் தரத்தி பூமரக் கிளைகள் சாயும் போதிலே பாயும் கொஞ்சல் செவ்வரிப் பலாப் பழத்தைக் கொந்திய அண்டங் காகம் கவ்விய சுளைக்குக் காவல் இருக்கின்ற நாய்கள், கொப்பில் பவ்வியமாகக் கூவிப் பரவசமூட்டும் புள்ளிச் செவ்விழிக குயில்கள் எல்லாம் சிதறியே ஒடிப் போக கொப்பொடு மரங்கள் பாறித் தலை குத்தக் கரணமாகக் கப்பொடு கொட்டில் மாடிக் கட்டடம் குடிசை அன்புக் கொப்பிலாக் கோயில் பாட சாலைகள் பேத மின்றி சிப்பிக்குள் அழிந்த முத்தாய்ச் சிதைந்ததோ பார்த்துச் சொல்வாய்
4 பெப்ரவரி 2001

தாயகம்
முகமற்று முழுமையற்று முதசொமும் இருப்பும் சொத்தும் அகம் புற உழைப்பும் வாழ்வின் அர்த்தமும் தொலைந்த போக,
சுகம் உயிர் பிழைத்த தென்று
சொல்லிக் கொண்டு எங்கோ ஓடி நகம் கடித் தேங்கி வார்த்தை
நாவிலே வரண்டு போகும்
வானுயர் கோபுரத்த மணிஒலி அபயம், நெஞ்சில் ஊன் உயிர் உறுதி பெற்றே ஒளிச் சிறகு உயர்த்தி நிற்கும் ஞானமும் அவை புகட்டும் நன்னெறி விளங்க வல்லார் தானெவர் போவார் அங்கே தரைமட்டம் அனைத்த மாமே
முத்திரை பதித்தாற் போன்ற கலைகளை ஒருங்கே காண பத்திரப் படுத்தி ஆண்டுப் பட்சத்தில் ஒன்று சேர்த்த வைத்த தோர் தேர்முட்டிக்குள் வகை வகை வண்ணமான எத்தனை சித்திரத் தேர் இளசுகள் எழிலை ஒத்த
வயல் வெளி சுமந்த காதல் வனப்புகள் அறுகம்புல்லாய் மயல்கொள விரித்த பச்சை - மரகதத் தரைகள்,வேர்கள் முயங்கிடும் வாசம், வேர்வை மணி விளைவேலி நெல், கல் வயல் புறப் பெருங் குளத்தில் வளர் சணல் மஞ்சள் பூக்கள்
5 பெப்ரவரி 2001

Page 5
தாயகம்
அயலெல்லாம் வண்டின் பாட்டும்
ஆடிடும் தென்றல் காற்றும் இயல்பொடு தழுவிக் கொண்டே இதந்தரும் இனிமை இன்பம் சுயங்கெடச் சூறையாடிச் சுழித்தழித் தெழுந்த சுற்றிப் புயலென வந்த போரால் புழுதியாய்ப் புதைந்த போக்சோ!
வரும்படி தர முன் நின்று வழங்கிடும் செழித்து நீண்ட முருங்கையும், மா பலாவும் முன்பின்னாய் அணில் தரத்த நெருங்கிய நாய் அண்ணாந்தது பார்த்து நா நீளத் தொங்க இருந்திடும் அழகும் அங்கே இன்று போய் யார் பார்ப்பாரோ?
தென்னையின் ஒலைக் கீற்றில் கிளிகளின் ஆரவாரம் என்னவோ செய்யும் நெஞ்சை இரண்டு நா கணவாய் கொஞ் சொன்னவை என்ன என்றே அறிந்திட நிதம் தடிக்கும் 660) fo605 65635s j ( s. 60) இன்று போய்ப் பார்க்க லாமோ?
வண்டுகள் இர்ைந்து கொண்டு வருவதம் பூவில் தேை உண்டபின் உறுமிக் கொண்டே உயரத்தில் எழும்பி மேலும் விண்கடந் தேக எண்ணும் விதவித மலர்கள் கீழே கண் பனி கொள்ளும் கோலம் கதிரவா கண்ட தண்டோ?
எவர் செல வல்லார் உன்போல்
இயல்நிலை ஒழுங்கில் நித்தம் எவர் உன்னைத் தடுக்கத் தக்கார் என்பதை எண்ணி என்னில்
6 பெப்ரவரி 2001

அவதிக ளிடையே சிக்கி அலை கின்ற சரையாய் காற்றில் சுவறிய அவலக் கோலச் சுவடுகள், போர்ச் சுவாலை
உவமைகள் இல்லா வாறெம் உழைப்புக்கள் உறிஞ்சி உண்ட சவங்களாய் சீவன் எங்கோ சந்தக்குள் ஒடுங்கினாற் போல் தவங்கிடந் தனுங்கக் கூடும் தாகத்தால் நாவரண்டு தவிச்சுப் போய்க் கிடக்கும் போய் நீ சஞ்சலம் தீர்ப்பாயோ சொல்
ஊழ் உற்ற நேரம் புத்தி சித்தங்கள் ஒடுங்கி நிற்க பாழ் உற்ற பாதை மேலாம் படியென வழிய நீட்ட வாழ்வுற்ற வளத்தை யெல்லாம் வந்த போர் சுருட்டி அள்ளி சீழ் உற்ற தேசமாக்கிச் சென்றதைப் பார்த்தாயோ சொல்
பண்பாடிடின் சமூகப் பெறுமானம்
“பண்பாடென்பது சடப்பொருள் விழுமியங்கள், ஆன்மீக விழுமியங்கள் என்பவற்றின் உற்பத்தி, ஒன்றுதிரட்டல், பேணல், வழங்கல் ஆகியவற்றையும், மனிதத் தேவைகள் அபிலாசைகள் முதலியவற்றை நிறைவு செய்வதையும் இலக்காகக் கொண்ட சமூக உறவுகளின் வெளிப்பாடாகும். அது ஆக்கத் தொழில் மூலம் உருவாக்கப்படுகின்ற ஆத்மீக பெறுமதிகள் தராதரங்கள் ஆகியவை வரலாற்று ரீதியாக விருத்தியுறுகின்ற முறையுமாகும். அதேபோது உலகத்தை விருத்தியுறச் செய்வதையும் மாற்றியமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பொருளுற்பத்தி முறைமையால் நிர்ணயிக்கப்படுகின்ற சமூகப் பெறுமானமுள்ள மானிடப் படைப்பாற்றலின் செயல் முறையுமாகும்.”
-பவல் கோலிச்
தாயகம் 7 பெப்ரவரி 2001

Page 6
சிறுகதை உறவு
மழை விட்டிருந்தது.
ஆங்காங்கே மரங்களிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளைத் தவிர வேறெது வும் மேலிருந்து விழவில்லை.
ஒருவகை எதிர்பார்ப்புடன் மேலே
பார்த்தேன். வடகீழ் வானத்தில் மிதந்து
கிடந்த கருமை என் முகத்துக்குத் தாவி யது. மழையின் நடுவில் நீர்க்கம்பி களைக் கிழித்துக் கொண்டு பயணம் செய்வது சிரமமான காரியம். மெல்லிய தூறலில் நனைந்தபடி நடப்பதிலுள்ள சுகம் நிச்சயமாக அதில் கிட்டாது.
குடை இருக்கும் தைரியத்தை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டு சைக்கிளை எடுத்தேன்.
இன்று வைரமுத்தம்மானின் மரண வீட்டுக்குச் செல்லவேண்டும். கல்லூரி யிலிருந்து அதற்காக அரைநாள் விடுப் புப் பெற்றிருந்தேன். மதியத்துக்கு முன் னர் : திரும்பிவிட வேண்டும் என்ற நம்பிக்கையை மழை வந்து சிதைத்து விட்டது.
"boosorum LD6) கொள்ளாமல் கவனமாப் போட்டு வாங்கோ’
மனைவியின் வழியனுப்பு வார்த்
தைகளின் அன்பான தள்ளுதலுடன் சைக்கிளில் தாவினேன்.
வைரமுத்தம்மானுக்கு இப்போது எண்பது வயதிருக்கும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக எங்கள் ஊரில் சலூன் வைத்திருந்தார் அவர். சலூன் என்றதும் கவர்ச்சிப் படங்களுடன் கல கலப்பாக இருக்கும் என்ற கற்பனை வடிவம் இவருடையதைக் கண்டதும் நிச்சயம் கலைந்து போய்விடும்.
ஒரு பழைய கதிரை. அதற்கு முன்பாக ஆங்காங்கே இரசம் கழன்ற கண்ணாடி. இன்னொரு பக்கத்தில் சிறுவர்களை அமர்த்துவதற்கென்று பிரத் தியேகமாகத் தயாரிக்கப்பட்டி காலு யர்ந்த கதிரை. கோடை வெப்பத்தை விரட்டவும், ஊறுகின்ற வியர்வையை
தாயகம்
உடுவில் அரவிந்தன்
ஆவியாக்கவும் பயன்படும் 66 யோலை விசிறிகள் இரண்டு மேசை யில் கிடக்கும். இதைவிட அன்றைய தினசரி ஒன்று எப்போதும் விரிந்தி ருக்கும். இதில் வேடிக்கை என்ன வென்றால் அம்மானுக்குப் படிக்கத் தெரியாது. வருபவர்களுக்காகவே அது தூங்கி வழியும்.
எதிர்ப்புற மூலையில் சுருண்டு குவிந்திருக்கும் மயிர்க் கும்பலோடு குலவியபடி தும்புத்தடி சரிந்திருக்கும். அதனுடன் இணைந்த யன்னல் நிலை யில் பிணைக்கப்பட்ட வாரில் இடையி டையே சவரக்கத்தியைத் தேய்துக் கொள்ளுவார் அம்மான். தேய்க்கும் அழகையும், தலைமயிர் வெட்டும் லாவகத்தையும் வெகுவாக ரசிப்பேன். அப்போது எனக்கு ஏழெட்டு வயதி ருக்கும். u616ssissin Lub முடிந்ததும் அவருடன் ஒரு மணித்தியாலமாவது கதைக்காமல் போகமாட்டேன். அந்தள வுக்கு அவர் என்னை வசீகரித்திருந்தார். சின்னச் சின்னக் கதைகள் சொல்லு வார். அவையெல்லாம் பொழுதுபோக் குக்குரியனவாக அப்போது என்னால் கருதப்பட்டாலும், பிற்காலத்திலேதான் அவற்றின் அர்த்தங்களை என்னால் அனுமானிக்க முடிந்தது. அவற்றினுாடு இழையோடும் ஏக்கம் என்னைப் பாதிக்கும். w
அவருடைய கத்தரிக்கோலை எடுத்து ‘டிக்கு டிக்கு’ என்று தட்டிப் பார்ப்பேன். அவ்வேளைகளில் தொழில் பழகும் ஆசை என்னைப் பற்றிப் பிடிக்கும். இதை ஒரு நாள் அம் மானிடம் வெளியிட்டு அதன் பலனாக முதுகில் நல்ல அறையும் வாங்கினேன். அடித்தவர் ஒருகணம் என்னை Ф-ф றுப் பார்த்துவிட்டுத் தணிந்த குரலில் இதமாகக் கூறினார். இப்போது கூட அந்த வார்த்தைகள் என் நினைவு நாடாவில் அழியாமல் பதிந்து கிடக் கின்றன.
பெப்ரவரி 2001

“இஞ்சை பாரடா பொடி, உந்த
எண்ணத்தை இண்டையோட விட்டிடு. எல்லாம் தொழில்தான். ஆனால் நாங்கள் பட்ட கஷ்டத்தை நீங்கள்
படக்கூடாது. என்ரை அப்பரும் இந்தத் தொழில்தான் செய்தவர். இதை விட வேறை வழியிருக்கேல்லை. ஆனால் நான் என்ரை மகனை இந்தப் பக்கம் வரப்படாது எண்டிட்டன். அவன் நல்லாப் படிக்கிறான். எங்களாலையும் ஏலும் எண் டதை உவங்களுக்குச் செய்து காட்ட வேணும்.”
இன்று நான் ஆசிரியப் பணியில் இருப்பதற்கு வைரமுத்தம்மான்தான் கார ணம். அவர் அன்று என்னை ஊக்கப்
படுத்தியிராவிட்டால் இந்நிலை என்னை
எட்டியிராது.
என்றாலும், கல்வித்தேடலில் நான் சந்தித்தவர்கள், அவர்களுடைய வட்டங்கள், பழக்கவழக்கங்கள் என்ப வற்றுக்கேற்ப இசைவுபடுத்திக் கொண் டமையினால் என்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நான் தவிர்த்து வந்தேன். அவ்வாறு நான் இனங்காணப்படுவேனாகில் என்னைச் சூழ்ந்திருப்போர் விலகிச்சென்று விடுவார் கள் என்ற அச்சம் காரணமாக இருக்க
லாம். அதனால் பொன் முலாம் பூசிக் கொண்டு திரிந்தேன்.
இப்போதுகூட மரண வீட்டில்
தெரிந்தவர் எவராவது கண்டால் என்ன செய்வது என்ற பயமும் என்னுள் எழாம லில்லை. எதிர்ப்பட்ட "சென்றி யொன்று என் நினைவோட்டத்தை நிறுத்தியது. இறங்கி உருட்டினேன். நெருங்கியபோது நின்றவன் சிநேகமாகப் புன்னகைத்தான்.
மிருகவில் சம்பவத்தின் தாக்கம் என் நெஞ்சிலே கனன்று கொண்டிருந்த படியால் அதேயளவு சிநேகயாவததைப் பிரதிபலிக்க LogoTub இடங்கொடுக் கவில்லை. மெளனமாக சைக்கிளில் ஏற முயற்சித்தேன்.
“மச்சான்!” என்ற குரல்
என்னைத்தடுத்தது. திரும்பினேன். சுந்தரேசன்.
ஆசிரியகலாசாலையில் என் னுடன் ஒன்றாகப் படித்தவன்.
தாயகம்
நீண்ட நாட்களின்பின் சந்தி க்கும் நெகிழ்வுடன் புன்னகைத்தேன். இடம் பெயர்வின் களைப்பு அவனு டைய தெரிந்தது. தென் மராட்சியின் வளங்களைப் பெரிதும் நம்பி வாழ்ந்தவன் அவன். அவனு டைய 'பாடசாலை வடமராட்சியில் எங்கோ ஒரு மூலையில் மூச்சுவிடச சிரமப்படுவதாக அறிந்தேன்.
“என்ன ரவுணுக்கோ? டைக்கு லீவு போல .?”
வெற்றிலைச் சாற்றைத் துப்பி விட்டுச் சிரித்தான். துருப்பிடித்த பற்கள் மின்ன மறுத்தன. குளிர்ந்த காற்றுடன் கலந்த வெற்றிலையின் மணம் குப் பென்று எண்முகத்தை வட்டமிட்டது.
“ம். சுந்தரேசன்! நீர் உந்த வெத்திலைப் பழக்கத்தை இன்னும் விடவில்லை போல கிடக்கு!”
இண்
“என்னோட ஒட்டின பழக்கத் தை எப்படி விடுகிறது?”
ஒட்டின பழக்கம்! இந்த வார்த்தைப் பிரயோகம் எனக்கு
சுந்தரேசனின் குணமொன்றை நினை ஆட்டியது.
தன்னுடைய பரம்பரைப் பெரு மைகளைப் பேசி அதில் சுகம் காணும்
விசித்திரப்பிறவி அவன்.
மச்சான் என்ரை பேரன் எத்த னையோ குடிமைகளைக் கட்டிஆண்ட வர். அதே இறுக்கத்தை நாங்கள் கைவிடப்படாது. அது அதுகளை அந் தந்த இடத்திலே வைக்கவேணும். அப்பதான் எங்களுக்கு மதிப்பு என்பான்.
GAUngeaf 2001

Page 7
மீசாலைக்கும் இளவாலைக்கும் உள்ள இடைத்தூரம், என்னைப் பற்றிய உண் மையை நான்வாழும் சமூகத்தைப் பற் றிய விபரங்களை சுந்தரேசன் அறிந்து
கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத் தவில்லை. அதனால் அவனுடைய
“சுந்தரேசன் டிகிறி முடிச் சிட்டிரே?
எம்மிடையே நிலவிய மெளனத் தைக் கலைப்பதற்கு ஏதேனும் வேண்டு மென்ற எண்ணம் உதிக்க அதை வார்த்தைகளாக்கினேன்.
வீதியோரத்தில் சிவப்புச் சாயத் தைத் தெளித்து அலங்கோலப்படுத்திய சுந்தரேசன் திரும்பினான்.
“அது ஒருபக்கம் இழுபடுகுது. ஒருக்கா பைனல் எடுத்தன். பிழைச்சுப் போச்சுது. இப்ப திரும்ப ட்ரை பண்ணிறன். நீ . p
“நான் முடிச்சிட்டன். இப்ப எஸ். எல். ஈ. ஏ. எஸ் எடுக்கலாம் எண்டு இருக்கிறன்.” பேச்சின் துணை தூரத் தையும் களைப்பையும் வெகுவாகக் குறைத்துவிட்டது போலிருந்தது. இலுப் பையடிச் சந்தியால் திரும்பினோம்.
அம்மானின் வீடு அண்மிப்பதை உணர்ந்து சுந்தரேசனிடம் கூறினேன்.
“நான் திரும்பப் போறன்
சுந்தரேசன். பிறகு சந்திப்பம்"
சுந்தரேசனின் முகத்தில் வினாக் குறி தெரிந்தது.
“உந்த ஒழுங்கையாலை எங்க?"
“தெரிஞ்ச ஒருத்தரைப் பாக்க
að
வேனும் வாறன் “
போகுமிடத்தை மறைத்த உணர்வில் என்மனம் குறுகியது.
திரும்பிப் பார்க்காமல் சைக்கிளை முறித் துத் திருப்பி ஒழுங்கைக்குள்ளே சரித் தேன். ஒரு வளைவிலிருந்து ஆரம்பித்த தோரணங்கள் என்னை வரவேற்றன. விதியோரமாக இருபுறமும் நிரையாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களின் நடுவே என்னுடையதையும் செருகினேன்.
வீடு 606TT அமைதியா யிருக்க, வெளிப்புறம் ஆரவாரங்களால் அமளிப்பட்டது.
தாயகம்
நோக்கில் நானொரு உயர் சாதிமானாக
சிந்தனை வயப்பட் டவாறே சுந்தரேசனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் தன்பாட்டில் அசை
போட்டபடி வந்து கொண்டிருந்தான்
என்னைக் கண்டதும் உதவிக் கல்விப்பணிப்பாளர் செல்வநாதன் எழுந்து வந்தார். கைகளைப் பற்றி
அவருடைய மனக் கவலையை என்
னுள்ளே சிறிது வாங்கி ஆறுதல் படுத்திவிட்டு வைரமுத்தம்மானை நோக்கி நடந்தேன். அந்தப் பெரிய வீட்டின் நடுவிறாந்தையில் போடப்பட்டிருந்த அழகான வாங்கில், வேலைப்பாடுகள் நிறைந்த
பெட்டியினுள் அவர் படுத்தி ருந்தார்.
ஒரு கரையிலே கூடியிருந்த பெண்களிடையே விம்மலொலிகள் ஒன்று கூடி அலைபோலக் கிளம்பி அடங்கின. வைரமுத்தம்மானின் கண் கள் முடியிருந்தாலும் முகத்தில் மாறாத முறுவல் தென்பட்டது. அந்த மென்
முறுவல் 6T60g5GuJIT எனக்கு
Gor
“பார்த்தாயாபெடி என் சடலம் எத்தனை ஆடம்பரமாக, எத்தனையோ
பேரின் வழியனுப்புதலுடன் தீயைநோக்கி நகரப்போகிறது. நான்பிறந்த நாள்முதல்
எவ்வளவு வசவுகளைக் கேட்டிருப் பேன். எத்தனை தரம் கும்பி டுபோட்டுக் குறுகி நின்றிருப்பேன்.
எங்கோ எந்த வடலிக்குப் பின்னாலோ கருகவேண்டிய நான், இன்று அந்தப் பொது மயானத்தை நோக்கிப் ாேகப்
போகிறேன். இது எதனால் விளைந்
தது?
என்று கூறுவது போலிருந்தது.
ஏதோ ஒன்று என்னுள்ளே
உடைப்பெடுத்தது. உள்ளம் நெகிழ
வெளியே வந்தேன். மாமரம் தலை
விரித்துக்கொடுத்த நிழலில் அடுக்கப் பட்டிருந்த கதிரைகளில் ஆசிரியர்கள், பர்கள் என்று ஒரு கூட்டமே நிரம்பியிருந்தது. யாழ்ப்பாணத்தின் உயர்மட்டங்கள் கதிரைகளை நிறைத் துக் கொண்டிருந்தன. ஏழ்மையும், அறியாமையும் நிரம்பிய இடங்களிலே தான் சாதி அடக்குமுறைகள் செல்லு
பெப்ரவரி 2001

படியாகி வலுப்பெறுகின்றன என்பதை உணந்தேன். பூஞ்சணம் பிடித்த சமூகக் கோட்பாடு தகர்ந்த சமத்துவ உலகு
ஒன்றினை நேரிலே கண்ட நிறை வெனக்கு. என்றாலும், இதை மட்டும் வைத்துக்கொண்டு கால ஒட்டத்தில்
ஏற்பட்ட நிரந்தரமாற்றம் என்ற முடிவுக் குவர என்னால் இயலவில்லை. ஏனென் றால், உறவுக் கலப்புகளுக்கு அவர் கள் தயாராகி விட்டால் மட்டுமே சாதி முறைமையை முற்றாக ஒழித்துவிட (Մ)ւգարֆ.
சிந்தனையைப் எல்லோரையும்
புறந்தள்ளி நோட்டமிட்டபோது, வாசலில் தென்பட்ட உருவமென்று என்னை வியப்புக்குள்ளாக்கியது. வந் தது வேறுயாருமல்ல. சுந்தரேசன்.
ஏ. டி. ஈ செல்வநாதனைப் பார்த்து தலையை நன்கு சாய்த்து மரியாதை செலுத்தியவன் வீட்டினுள்ளே சென்றுவிட்டு வந்தான்.
என் விழிகளைச் சந்தித்ததும் அவனுடைய பார்வையைத் திகைப்பு மூடிக்கொண்டது. தயங்கியவாறு அருகே வந்தவன் அமர்ந்தான்.
“கருணா! நீ. ஏன் அப்போது சொல்லேல்லை இங்கபோறனெண்டு?
“நீரும் தான் சொல்லேல்லை
சுந்தரேசன்.” 616 goj60Lu குரலிலே பரிகாசம் இருந்தது.
“நான். ரவுணுக்கு ஒரு
அலுவலாகப் போட்டுவாறன்”
பொய் என்பதை முகம் காட்டி யது. ஒருகணம் ஏதோ , சிந்தித்தவன், பின்னர் நிமிர்ந்தான்.
“சும்மா தெரியாதே! ஏ. டீ. ஈ. எல்லே. எங்கட வலயம்தான். பேந்து குறைநினைக்கும். அதுதான் தலையைக் காட்டிப்போட்டுப் போவ மெண்டு. இல்லாட்டி இந்த வீட்டையும் நான் வருவனோ?”
ġ5Tulabb
அந்தாள்
தோற்றுவிட்ட உணர்வுடன் சுய கெளரவமும் குரலில் சேர்ந்திருந்தது.
“அதுதான் பிழை சுந்தரேசன். இப்பநீர் பதவி உயர்வையும், காரியங் களைச் சாதிக்கலாம் எண்ட எண்ணத் தையும் மனதிலை வைச்சுக் கொண்டு
தான் வந்திருக்கிறீர். எண்டாலும், இந்தச்
சாதிமுறைக் கட்டுப்பாடுகளை உடைக் கிறதிலை கல்வி ஒரளவுக்கு உதவியி ருக்கு. அது பெருமைக்குரிய விஷயம் தான். அது தான் பெரிய சாதிமானான உம்மை இங்க வரப்பண்ணியிருக்கு.”
என்னுடைய வார்த்தைகளில் என்னையறியாமலே கடுமை புகுந்தது.
“கருணா. g என்ன சொல்லுறாய்? நீ. ၇• என்தலை நிமிர்ந்தது. கண்களில் பெருமிதம் குடிகொண்டது. குரலில் நிறைந்த கம்பீரத்தைத் தடவிக் கொண்டு சொன்னேன்,
"tb ......... ! ஏ. டி. ஈ செல்வநாதன் என்ரை சொந்த மச்சான்!”
{)
சமூகஅமைப்பும் சிந்தனையும்
ஒரு சமூக அமைபபு எப்படி இருக்கிறதோ, ஒரு சமூகத்தின் பெளதீக வாழ்நிலைமைகள் எப்படி இருக்கிறதோ அவ்வாறு தான் அச்சமூகத்தின் அரசிய லும மதமும் ஏனைய அறிவுப்பு லங்களும் அவை தொடர்பான கருத்துக்களும், கோட்பாடு களும் இருக்கும்.
மார்க்ஸ்
பெப்ரவரி 2001

Page 8
2.Goals LouLDTđồasaladt di “Leagerydai” gugahang
பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள ag TLDLi சான்கேட். ஆசியா, ஆபிரிக்கா, தென்
அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் போல அந்தக் கிராமத்தில் குழுமியிருக்கிறார்கள். ஒரே கூரையின் கீழ் உலகின் அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும் உயிருடன் காணக் கிடைக்கும் அருங்காட்சியகம் அது. உண்மையான உலக கிராமம்.
கடவுச்சீட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கும், அங் கிருந்து அமெரிக்காவுக்கும் செல்லக் காத்திருக்கும அந்தப் பயணிகளுக்காக
செஞ்சிலுவைச் சங்கம் ஒரு மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பெட்டகச் சாவுகளைப் பார்த்த பிறகும் இத்தகைய gəUTu 86JLDTGOT LuuJ60Tib குறித்து அவர்கள் அஞ்சவில்லையா?
இந்த மரணங்கள் மரத்து விட்டன. எல்லைக் காவற்படையிடமி
ருந்து தப்பிப்பதற்காகப் படகின் எடை யைக் குறைத்து, உறைபனி நீரில் வீசியெறியப்பட்டு விறைத்துச்சாவோர் ஒவ்வொரு -ஆதிண்டும் பலநூறு பேர். இவை கணக்கி:*வராத சாவுகள். இத் தாலியின் கடற்பரப்பில் மட்டும் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 180 பேர்.
டோவர் நகரின் இந்தப் பெட்டகச் சாவு நடப்பதற்கு நான்கு நாட்கள் முன்
ஒரு டச்சு அமைப்பு “ஐரோப்பாவில் நுழைய முயன்று இறந்தோர் இதுவரை 2000 (3 is என்று புள்ளிவிபரம் வெளியிட்டிருந்தது. டோவர் சாவுடன் சேர்த்து 2054.
ஐரோப்பாவிலோ இச்சாவுகள்
அப் போதைக்கு ஒரு பரபரப்புச் செய்தி. தாயகம்
திருவிழாவில் கூழ் ஊற்றும் பண்ணை யாரின் பேரப்பிள்ளைகள், கூழுக்கு அடித்துக் கொள்ளும் ஏழைகளை எப்படிப் பார்க்கிறார்களே, அப்படிப் பார்ப்பதற் குத்தான் அமெரிக்க, ஐரோப்பிய மக்களைப் பழக்கியிருக்கின்றன தகவல் தொடர்பு சாதனங்கள்.
“உலகத்தில் உள்ள களுக்கெல்லாம் நாங்கள் உயிர் காக்கும் படகாக முடியாது” என்று சலித்துக் கொள்கிறார் பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஆசிய, ஆபிரிக்க நாடு களின் உழைப்பையும் இயற்கை வளங்களையும் இரண்டு நூற்றாண்டு காலம் சூறையாடிச் சேர்த்த சொத்தின் மீது அமர்ந்து கொண்டு இவ்வாறு பேசுவதற்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்? உலகத்தையே பரிபாலனம் செய்யும் பெரும் பொறுப்பைக் கடுகளவும் விருப்பமில்லாமல் தன் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் ஏகாதிபத்தியவாதியின் கருத்து இது.
ஏழை
18, 19-ஆம் நூற்றாண் டுகளில்
ஆசிய ஆபிரிக்க அடிமைகளை வைத்துத்தான் தம் 4:திய சாம்ராச் சியத்தை உருவாக்கிக் கொண்டன
அமெரிக்காவும் பிரிட்ட லும். இருபதாம் நூற்றாண்டில் 85tg80TLDT 607, 'தரம் தாழ்ந்த” வேலைகளைச் செய்ய கறுப்பு, பழுப்பு நிற மக்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போருக் குப்பின் காலனி நாட்டு மக்கள் விடுதலைக்குப் போராடத் துவங்கிய பின், குடியேற்றத்தைத் தடுத்தது ஐரோப்பா. ஆசிய,ஆபிரிக்க மக்கள் FDD6 குடிமக்களாக தம்முடன்
பெப்ரவரி 2001

அவர்கள்
Csonannululout.
togsnedes undeså விரும்பி மனமுவந்து அடிமைகள், "Cong
brod Свиci வேணலப்பாசாங்கு செய்கிறார்கள் ஏகாதி பத்தியவா YA
நுழையும் ஏழை நாட்டு உழைப்பாளர் C 36 ye k . கள்ளச் சாராயத்தைப் shqaistb Churcoosů GUITO) Jogồsù u šasub gubuš GasTest கிறார்கள். அவ்வப்போது கணக்குக்கு "கேனல்” பிடிக்கிறார்கள். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தாங்கள் விரும்பாத தைப் போல நடிக்கிறார்கள்,
"CAFreysoleureute) இந்தச் சட்டவிரோதக் குடியேற்றத்தால் அவர் களது பொருளாதாரத்திற்கு லாபம்தான். அவர்களுக்கு udsdanæ swasusid தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். எதற் காக இந்த பிரிட்டிஷ்காரர்கள் கம்மா அலட்டுகிறார்கள்?"என்று சர்வசாதார Guruotras gourou a GaoLidšalŝprňr artTalkClasu கிராமத்தில் காவல் இருக்கும் ஒரு போலிகக்காரர்.
ஏழைநாடுகளின் தொழிலாளர்க
கிராமம் ஆக்கிவிட்டதாகச்
Curit. aeropÙu on at
ற்றுக்கொள்ளக் கள்ளத்தோணி Garð Jae SgòDub!
sissarosant உள்ளுர்
போலிஸ்காரன் நேசிப்பதைப் போலவே உலகப் போலீஸ்காரனும் நேசிக்கிறான். அவர்கள் அளிக்கும இலஞ்சம் மலிவான aloupùu.
a-soasupuluptăapb தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே சொல்கி sportassir. alabasub Grapprodò
நம்மைப் போன்ற நாடுகள் அந்தக்கிரா
ளைக் డి கூலிக்கு (வேலை மத்தின் சேரி.
வாங்க முடி *பதால் அங்கெல்லாம்
மூலதனத்தை ஏற்றுவிதி செய்கின்றன - சூரியன்
பன்னாட்டு நிறுவனங்கள். தம் சொந்த s'Good shal.
நாட்டில் குறைந்த கூலிக்கு எடு gsakí6: "LigSusaeté4Fugub”
சூழலும் மனிதமும்
மனிதன் அவன் வாழும் சூழலால் *ருவாக்கப்படுகிறான, ஆகவே அவனது சூழல் உடையதாக ஆக்கப்பட வேண்டும், மனிதன் இயற்கையில் இயல்பினன். அவனது உண்மையான இயல்புகள் . அவனது இயல்புகளின் சக்தி தனிப்பட்ட
வனின் சக்தியால் மதிப்பிடப்படக்கூடாது. மாறாக சமூகத்தின்
ordulaureò
-Lordhat
gSuruahab
3
வப்ரவரி 200 slik

Page 9
சமகாலபாரதி ஆய்வுகள் ஒர் விமர்சனக் குறிப்பு
&ബ്
பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு, பதினேழு ஆண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையில் பாரதி பற்றிய முழுநிறைவான ஆய்வுகள் தோன்றவில்லை என்பது ஒருப்புறமிருக்க, இத்துறையில் நம்பிக்கை தரக்கூடிய பல காத்திரமான ஆய்வு முயற்சிகள்
தோன்றியுள்ளன என்பதும் குறிப்பி டத்தக்க ஒன்றாகும். பாரதி ஆய்வுகள் பல்வேறு கோணங்களிலும், பல்வேறு
தளங்களிலும் இடம் பெற்று வருகின்ற
இத்தருணத்தில், இக் கருத்துக்களை சுருக்கமாக கூறவேண்டியது சமகால தேவையாகும்.
அண்மையில் ‘நந்தலாலா சஞ் சிகை குழுவினர் பல இலக்கிய கர்த் தாக்களையும், அறிஞர்களையும் சந் தித்து பாரதி பற்றிய அவர்களின் பார்வைகளை பேட்டி கண்டபோது தத்தம் நிலைப்பாட்டில் நின்று பாரதி பற்றிய கருத்துக்களை முன்வைத் துள்ளனர். அவற்றில் முனைப்பான மூன்று தளங்களை வெளிப்படுத்திய எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளை எடுத்துக்காட்டி அதன் வழி சமகால பாரதி ஆய்வுகள் தொடர்பான கரு த்தினை கூறமுற்படுவது கட்டுரையின் நோக்கமாகும்.
(1) பாரதி பற்றி ஜெயமோகன் “நான் பாரதியை மகாகவியாக ஏற்றுக் கொள்வதில்லை. மகாகவி என்பவன் ஒரு காலகட்டத்தின் ஒருமக்கள் சமூ கத்தின் கவித்துவ நுண்ணுணர்வை அவர்கள் வாசிக்கும் முறைமையி லேயே மாற்றியமைக்க கூடியவனாக இருக்க வேண்டும்.”
கோமல் “பாரதியை
(2) Siljuds issTT சுவாமிநாதன்
ஆசிரியர் பார்வையில்
தாயகம்
லெனின் மதிவானம்
நவீன இலக்கியத்தின் பிதாமகன்னு நான் உறுதியாக நினைக்கறேன்.”
(3) கவிஞர் இன்குலாப் பார்வையில் “கவித்துவத்தின் சிகரத்தை தொட்ட வன் அவன், சிகரத்தை தாண்டியும் செல்ல முயற்சித்தவன். ஆனால் அவ னுக்கும் மறுபக்கம் என்று ஒனறுண்டு.”
இவ்வாறான மூன்று தளங் களில் பாரதிய ஆய்வுகள் நடந்தேறி வந்துள்ளன. அவை குறித்து நோக்கு வோம்
பாரதி பற்றிய முதலாவது நிலைப்பாடானது ‘கலை கலைக்கா கவே” என்று துாய கலைக்கோட்பாட்டு நிலை நின்று நோக்க முற்பட்ட முயற் சியாக காணப்படுகிறது. கலை இலக்கி யத்தின் உள்ளடக்கம, உருவம் என் பது வர்க்க சார்பு கொண்டதாக வெளிப்பட்டு வந்திருப்பதுடன், இவை இரண்டும் இசைவுபட்ட சிறந்த இலக்கியப் படைப்புகள் படைக்கப் பட்டுள்ளன. இந்த அடிப்படையில் தான் பாரதியாரின் இலக்கிய கோட்பாடுகள்,
படைப்புகள்" என்பன அமைந்து காணப்படுகின்றன. "
*
மக்கள் இலக்கியத்தின் வரலாற்றினை நோக்கும்பொழுது அவ்விலக்கியத்தை படைப்பதிலும், பேணிவளர்ப்பதிலும் முனைந்து நின்றவர்கள், பல வட்டாரங்களிலிருந் தும், தளங்களிலிருந்தும் அடிக்கடி
தாக்கப்பட்டு வந்துள்ளமையை உணரக் கூடியதாக உள்ளது. இந்தவகையில் பாரதி இவ்வாறானதோர் தாக்குதலுக்கு உட்பட்டமை வியப்பிற் குரியஒன்றல்ல, யதார்த்த நிகழ் தளத்தை நிராகரித்து விட்டு உளப் பிறழ்ச்சி அடைந்து மனநோய்க்கு ஆட்படும் தத்துவமான துாய அழகியல் வாதத்தின்
பெப்ரவரி 2001

அடிப்படையில் பாரதியை மறுத்துரைப்பது தற்செயல் நிகழ்ச்சியல்ல. U6) ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி, ராஜாஜி முதலானோர் பாரதி மகாகவி அல்ல என வாதிட்ட போது உருவவாதக் கோட்பாட்டினையே தமக்கு ஆதர்சனமாக கொண்டிருந்தனர் என்பது மனங்கொள் ளத்தக்கதாகும். இப்பார்வையின், இன் னொரு பரிணாமத்தினையே நாம் இன்று ஜெயமோகனிலும் காணக் கூடியதாக உள்ளது.
இவ்விடத்தில் நாம் நின்று நிதானித்து நோக்க வேண்டிய ஒன்று உண்டு. பழமை வாதமும் அதிநவீனத் துவமும் தங்களிடையே நேர்எதிர் மாறான சிந்தனைகளை கொண்டிருந்த போதும், மக்கள் இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களை தாக்குவதில் ஒற்றுமை கொண்டோராகவே இருந்து வந்துள்ளனர். இவ்வம்சத்தினை பாரதி பற்றிய இவர்களின் பார்வைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் இவ்வாறு கூறுவது உண்மையை அறியாமல் அன்று, மாறாக தேசிய, ஜனநாயக, முற்போக்கு சக்திகளை மட்டந்தட்டுவதற்கும், தாக்குவதற்குமே இவ்வாறான கருத்து தளத்தை அமைத்து கொள்கின்றனர். இவர்களின் ஆய்வுகள், சிந்தனைகள் என்பன பாரதி
பற்றிய ஆய்வுத்துறையை முடக்கியுள் ளது எனலாம்.
பாரதி பற்றிய இரண்டாவது பார்வை குறிப்பாக முற்போக் காளர்களாலும், LDTä6Su அறிஞர்
களாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியப் பரப்பினுள், இவர் களின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை உருவாக்கு வதில் பாரதி கணிசமான அளவு தாக்கம் செலுத்தியுள்ளான் என்பது புறநிலைப் பட்ட யதார்த்தமாகும். பாரதியாரிடம் குடிகொண்டிருந்த தொழிலாளர் எழுச்சி, பெண்விடுதலை, சாதிய எதிர்ப்பு, தேசவிடுதலை, முதலான சிந்தனைகள்
இவ்வணியினரை கவர்ந் திழுத்தது 6T60TsorTub.
பாரதியாரின் பல்துறை சார்ந்த ஆளுமைகளை வெளிக்கொணர்ந்த தாயகம்
இவர்களின் ஆய்வு முயற்சி அரசியல் ஆதாயத்திற்காகவும், தனிப்பட்ட நலன் களுக்காகவே பாரதியின் பெயரினை உபயோகித்தவர்களின் கபடத்தனங்க ளையும், தோலுரித்துக்காட்டவும் செய் தன. அவ்வகையில் பல்வேறு கோணங் களில் பாரதி தவறாக அடையாளம் காட்டப்பட்டுள்ளான். அப்பிரிவினரை பின்வருமாறு நோக்கலாம்.
1. பார்பனிய நிலை நின்று பாரதியை
நிராகரித்தவர்கள். 2. துாய கலைவாத கோட்பாட்டு நிலை
நின்று பாரதியை நிராகரித்தவர்கள். 3. பாரதியை பார்ப்பனக் கவிஞர் என மறுத்தவர்கள் (சாதியம்பற்றிய சிறு முதலாளித்துவப் பண்பு நிலை நின்று) 4. பாரதியை வைதீக கவியாக்காட்டிய
இந்து தீவிரவாதிகள் 5.பாரதியை ஆன்மீகவாதியாக காட்டிய
அதிதீவிர புரட்சியாளர்கள்.
இத்தகையோரின் பார்வைகளி லிருந்து அந்நியப்பட்டு பாரதியை வரலாற்று சூழலில் வைத்து இனங் காண்டதுடன், அவனது ஆக்கங்களை வரலாற்று அடிப்படையிலும், இயக்க வியல் அடிப்படையிலும், நோக்கி வெளிக்கொணர்ந்ததில் இப்பிரிவினரின் முக்கியமான பங்களிப்பாக கொள்ளலாம் வரலாறு, சமூகவியல், அழகியல்,உளவி யல் இவையெல்லாவற்றையும் தனித் தனியாக மிகைப்படுத்தியும், கூறுபடுத் தியும், காணாமல் இத்துறைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து முழுமை யாக பாரதியை காட்ட முனைந்திருப்பது, இவர்களின் ஆய்வுக ளுக்கு திடுக்கிட வைக்கும் அளவுக்கு வளம் சோர்ப்பதாக அமைந்துள்ளன. இந்தவகையில் பாரதி யறிஞர் பெ.சு.மணி முதல் ந.இரவீந்திரன் வரையிலான இவர்களின் பங்களிப்பு விதந்தோ தத்தக்கது.
இருப்பினும் பாரதிக்கு வழிபாடு
செலுத்துகின்ற பண்பும் இவர்களின் ஆய்வுகளில், நேரடியாகவும், மறை முகமாகவும் இழையோடியுள்ளதையும்
காணக்கூடியதாக உள்ளது. இவ்வம்சம்
பாரதி ஆய்வுத்துறையின் வளர்ச்சிக்கு
தடையாக அமையும் என்பது இவ்
பெப்ரவரி 2001

Page 10
விடததில் றாகும்.
மனங்கொள்ளத்தக்க ஒன்
மூன்றாவது பிரிவினரின் பாரதி பற்றிய பார்வையினை நோக்குகின்ற போது பாரதியின் பல்துறை சார்ந்த பங்களிப்புக்களை புரிந்து கொள்ளத் தலைப்பட்டுள்ள அதே சமயம் பாரதி Այլք விமர்சனத்துடன் உள்வாங்கக் கூடியவரே என்ற சிந்தனையை முன் வைக்கின்றது.
குறிப்பாக பாரதியின் பங்களிப் புகளை புரிந்து கொண்டதில் இவ்வணி யினர் மேற்குறிப்பிட்ட இரண்டாவது பிரிவினருடன் ஒப்புநோக்கத்தக்கவர்களே, என்ற போதும் பாரதியை புறநிலை நின்று, காய்த்தல், உவத்தல் அற்ற நிலையில் நோக்குவதில் அவர்க
ளிலிருந்து கணிசமான அளவு வேறுப டுகின்றனர்.
ருசியப் புரட்சி பற்றியும்,லெனின் பற்றியும், சில சமயங்களில் பாரதிக்கு
மயக்க, தயக்கம் இருந்தே வந்துள் ளது. அவரது கருத்தின் சாரம்சம் பின்வருமாறு,
“ருசியாவிலும்கூட இப்போது ஏற்பட் டிருக்கும் “சோஷலிஸ்ட் ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல் புடையதென்று கருதவழியில்லை. சமீ
பத்தில் நடந்த மகாயுத்தத்தால் ஐரோப் பிய வல்லரசுகள் ஆள்பலமும், ஆயுத பலமும் ஒரேயடியாகக் குறைந்துபோய் மஹாபலவீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்ரர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் ‘கூட்டு வாழ்க்கை”
குடியரசை அழிக்க மனமிருந்தும் வலி மையற்றேராகி நிறகின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்திலே ருசியாவின் மீது டாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும், நிலச்சுவான் களும், இந்த அரசுகளுக்கு துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான
யுத்தங்களும் ஏற்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழியில்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே
தாயகம்
கட்டான
இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்யாஸாத்யங்களைக்கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும. முதலா 6) Igb இந்தியாவிலுள்ள நிலஸ் வான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய நிலஸ்வான்கள் முதலாளிகளைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குருர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உட 6DD6DUU பிடுங்க வேண்டுமானால் நியாயமாகாது. அதற்கு எம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள் எனவே கொள்ளைகளும், கொலைகளும், சண்டைகளும், பலாத் காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடி கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும்.” (மகாகவி பாரதியார் கட்டுரைகள்-சென்னை வானதிபதிப் Luasub- l98l uis-453)
இவ்வாறான LDuUais தயக் கங்கள் உலக இலக்கிய கர்த்தா க்களாக போற்றப்படும், லுாசுன் (சீனா)
மார்க்ஸிம் கோர்க்கி(இரசியா) முதலா னோரிடமும் காணப்பட்டது. லுாசுன் ராணுவ கல்லுாரி ஒன்றில் ஆற்றிய உரையின் பந்தியொன்றினை இங்
கொருமுறை குறித்துக்காட்டுவது அவசி யமான தொன்றாகிறது.
“நான் சலிப்புற்றிருக்கிறேன். இருந்தும் துப்பாக்கிகளை ஏந்தும் நீங்கள் இலக்கியம் LubÓ அறிய அவாக்கொண்டுள்ளிர்கள். ஆனால் நானோ, துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தையே கேட்க விரும்புகிறேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுக்களின்
சத்தம் இலக்கியத்தை விட கேட்பதற்கு நன்றாக இருக்கும. ”
அன்றைய சீனாவின் . இக்
சூழலே லுாசுனை இவ்வாறு விரக்தியில ஆழ்த்தி குழம்ப செய்தது.
இருப்பினும் 1917ம்ஆண்டு ரசியாவில் இடம் பெற்ற ஒக்ரோபர் புரட்சியின் தாக்கம் சீனாவிலும் வேர்கொண்டு கிளை பரப்பிய போது லுாசுனும்
தன்னை சமூக மாற்றத்திற்கு கட்டியங்
பெப்ரவரி 2001

கூறும் எழுத்தாளராக பட்டைதீட்டிக்
கொண்டார்.
இதே ஊசலாட்டத்தில் மாக்சிம் கார்க்கியும் உள்ளானார் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் லெனினுடன் இருந்தவர். புரட்சியைக் கண்டவர். இருந்தும் சமூகமாற்றம் நிகழ்கிற போது எதிர்புரட்சிக் கலவரங்களை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டவுடன் கலக்கமடைந்தார். “கிறிஸ் துவ கம்யூனிசம்’ என்ற ஒன்றைப் பற்றிக்கூட பேசத்தொடங்கினார். ஆனால் கட்சியில் இருந்ததாலும், லெனினுடன் விவாதித்தாலும் விரைவில் தெளிவு பெற்று மீண்டும் புரட்சி வழியில் நடை Gurr LFTir. பாரதிக்குப் பக்கத்தில் லெனினும் இல்லை. பாரதி சேர்ந்து கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் இல்லை. எனவே நடைமுறை பற்றிய கருத்து வித்தியாசம் பாரதியிடம் நீடித்தது. (தா. பாண்டியன் பாரதியும் யுகப்புரட்சியும் - 1981 பக்56)
இவ்வகையில் பாரதியின் தவறுகள் காலச் சூழலில் வைத்து நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ரசிய புரட்சி பற்றியும், லெனின் பற்றியும் குழம்பிய சிந்தனைகளைக் கொண்டிருந்த பாரதி ஒர் சமயத்தில் ரசியப் புரட்சியினை வரவேற்றும் பாடியிருக்கின்றான். சரித்திரத்
துாரிகை கொண்டு புதிய சித்திரம் வரைய முற்பட்ட போது ரசியப் புரட்டசியானது இவ்வாறு அவனது
உணர்வுகளில் பிரவாகம் கொள்கின்றது.
மாகாளி பராசக்தி உருசிய நாட்டில் கடைக்கண் வைத்தாள் அங்கே ஆகா! என்றெழுந்து பார் யுகப்புரட்சி! கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!
இவ்வாறாக ரசிய புரட்சியை வரவேற்ற முதல் தமிழ் கவிஞராக மட்
டுமன்று, புரட்சியின் உள்ளார்ந்த ஆற் றலினையும் முக்கியத்துவத்தினையும் உணர்ந்தவனாகவும், பாரதி விளங்கு
கின்றான். இவ்வம்சம் எதனை உணர்த் துகிறது? பாரதி ஓர் சமயத்தில் கூறிய
தாயகம்
கருத்துக்களையே பிறிதெரு சமயத்தில் மறுத்துரைக்கின்றான் என்பதனை பாரதி ஆக்கங்களை நுண்ணயத்துடன்நோக்கு கின்றவர்களுக்கு புரியும்.பாரதி தன்னை தானே ஒர் விமர்சனத்திற்குட்படுத்தி வளர்ந்து வந்துள்ளான் என்பதனையே இவ்வம்சம் உணர்த்தி நிற்கிறது.
இவ்வாறானதோர் பாரதி பற்றிய ஆய்வுப்பார்வையை தமிழ் இலக்கியப் பரப்பில் வலியுறுத்திய பேரா சிரியர் க. கைலாசபதி குறிப்பிடுவது போல “பாரதி பற்றிய முற்போக்காளர் மத்தி யில’ எப்பொழுதுமே வாதப்பிரதிவா தங்கள் இருந்து வந்துள்ளன. அது எதிர்பார்க்க கூடியதுமாகும். பாரதியை அப்படியே ஏற்றுப் போற்றுவோரும், முற்றாக நிராகரிப்போரும் என இரு சாரார் முற்போக்கு அணியில் காணப்ப டுகின்றனர். இவ்விரு சாராரின் கருத் தும் ஒருதலைப்பட்சமானவையே. விமர் சித்து விளக்குவதே உகந்த முறை யாகும். ” (பாரதிய ஆய்வுகள்-1982 ud-268)
இவ்வாறானதோர் ஆய்வு முறை பாரதியியல் துறையில் வளர்ச்சியடைய வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். இவ்வாய்வுகள் வெறுமனே ஏட்டுச்சுரக் காயாக அல்லாமல் இன்றைய ஒடுக்கு முறைகள் அனைத்திற்கும் துணை நிற் கும் ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் முதலானவற்றுக்கு எதிரான போராட்டமாக திகழவேண்டும். இதுவே பாரதிக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடன்.
பெப்ரவரி 2001

Page 11
இருபதாம் நூற்றாண்டு
1948
சுதந்திரத்திற்கு பின்னர் ஈழத்து கவிதை வளர்ச்சியானது நவீனத்துவ அம்சங்களை உள்வாங்கி வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த நவீனததுவ அம்சங்க ளானது முன்னைய T தொடர்ச்சியின் பரிணாமத்தையும் பெற்று வளர்ந்து வந்ததையும் சிந்திக்க தயங்கக்கூடாது. ஈழத்து தமிழ் கவிதை பாரம்பரியம் நீண்ட கால மரபினை கொண்டுள்ளது. வரலாற்றுக்காலம் தொடக்கமாக மருத்து வம், சோதிடம், தலபுராணங்கள், பள்ளு இலக்கியங்கள்
போன்ற பல வடிவங்களில் ஈழத்து கவிதை இலக்கியம் இயங்கி வநதுளளது. தமிழகத்திற்கும்
ஈழத்திற்கும் தமிழ் பொதுமை மரபுகளை ஈழத்துதமிழ் கவிதைகள் பேணி வந்தாலும் உள்ளடக்க ரீதியில் ஈழத்து பாரம்ப ரியத்தை (Bus வந்துள்ளமையை 36 னிக்க தவறக்கூடாது. தமிழகத்தை போலவே இங்கும் அதிகாரத்துவ கவிதைகள் வாசிக்கப்பட்டன. தமிழகத்தில் பிராமண வேளாள சிந்தனை மரபுகள் DfELITs வெளிப்பட்ட கவிதைகள் போலவே ஈழத்தில் சைவ வேளாள மரபில் ஈழத்து கவிதிைகள் வாசிக்கப்பட்டு வந்துள்ளது.
போர்த்துக்கேய ஒல்லாந்தர் காலத்தில் அடிநிலை மக்களின் உணர் வுகள் கிறிஸ்தவ சமய இலக்கியங்களில் பிரதிபலிக்கத் தொடங்கின. சைவத் தமிழ் செய்யுள் மரபின் தொடர்ச்சியாக இருந்து வந்த ஈழத்து தமிழ் கவிதை இலக்கியம் கிறிஸ்தவ மதவருகையின் மூலம் சில உடைவுகள் ஏற்பட்டன. தொடர்ந்து ஆங் கிலேயர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய
பாரம்பரியம் சில சீர்திருத்த வடிவங்களில்.
தொடர்ந்தன. செய்யுள் அமைப்பிலும்
தாயகம்
அமைப்பில்.
ஈழத்து தமிழ்க்கவிதை
-1978
-ஜெ.சற்குருநாதன்
உள்ளடக்க ரீதியிலும் ஆங்காங்கே L-60L வுகள் ஏற்படத்தொடங்கின.
சைவமும் தமிழும் என்ற வரையறையில் தொன் மையான கவிதை மரபுகளை பேண, கிறிஸ்தவ இஸ்லாமிய சமயங்களில் அடி நிலை மக்களின் உணர்ச்சிகள் ஆங் காங்கே பிரதிபலித்தன. சமூக பொருளா தார அரசியலில் வர்க்க ரீதியான உணர் வுகள் மேலெழும்பக்கூடிய வரலாற்று சூழ்நிலை காணப்படாத போது அடிநிலை மக்களின்
உணர்ச்சிகள் மதசீர்திருத்த பணியின் ஊடாக வெளிப்பட்டன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு
திருகோணமலை ஆகிய பிரதேசங்
களை முனைகொண்டு எழுந்த ஈழத்து தமிழ் கவிதை இலக்கியம் இருபதாம்
நூற்றாண்டு ஆரம்பத்தில் அரசியல் சிந்தனைகள் ஊடாக அடுத்த கட்டத்தை அடைகிறது. யாழ்ப்பாண சமூகச்
சூழலில் ஆங்கில கல்வியினை பெற் றுக் கொண்ட மத்தியத்தர வகுப்பினர் சீர்திருத்தத்தினை வேண்டி பல கழகங் களை தோற்றுவித்ததோடு அக்கருத் துக்களை மக்களிடையே பரப்பினர். இலங்கை தேசிய இயக்கத்தின் தலை மை சேர் பொன். இராமநாதனிடம் வந்தடைந்த போது தேசிய கருத்து ருவாக்கம் அடுத்த கட்டத்தினை அடை கிறது. ஏற்கனவே நாவலர் தோற் றுவித்த சுதேசிய, தேசிய பண்பாட்டு தளத்திலிருந்து அடுத்த கட்ட நகர்வா னது இலங்கை தேசிய இயக்கத்தின் TS வெளிப்பட்டது. தவிரவும் தமிழகத்தில் பாரதியின் சமூக அரசியல் பொருளாதார தளத்தில் முகிழ்ந்த கவிதை இலக்கியம் மக்கள் சார்ந்த எண்ணக் கருவை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருந்தன.
18 பெப்ரவரி 2001

பாரதியின் தாக்கம் ஈழத்து கவிஞர்களை பாதித்தாலும் 935 சமூகசீர்திருத்த வடிவிலே வெளிப்பட்டது. 1930 காலப்பகுதியில் முழு நாட்டிலும் சாதாரண மக்கள் சமூக வாழ்விலும்,
அரசியல் வாழ்விலும் இணைந்து அக்கறை செலுத்திய போது ஈழத்து கவிதை வளர்ச்சியானது அடுத்தக் கட்டத்தை வந்தடைந்ததும் பாரதியின் நவீனத்துவ அம்சங்கள் உள்வாங் கப்பட்டன. மக்களை சென்றடையக்
கூடிய கவிதைகளை படைக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது அது மத்தியதரவர்க்க கவித்துவ பாணியில் வெளிப்பட்டது. அந்த அணி யில் ஈழத்து முதலாம் தலைமுறை நவீனத்துவ நோக்கில் உருவாக்கியது. அ.ந. கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், சாரதா, மஹாகவி போன்றவர்களின் வருகையானது ஈழத்து கவிதை துறைக்கு நவீன கவிதை மரபினை தோற்றுவித்தது.
பாரதி,பாரதிதாசன்,திராவிட இயக்க கருத்துக்களில் கவரப்பட்ட இவர்களது
கவிதைகள் சமூக சீர்திருத்தத்தினை நோக்கிய 6,60600TLD இருந்தன. அ.ந.கந்தசாமியின் கவிதை பாரதியின் அரசியல் உணர்வுடன் செயற்பட்ட கவிதையின் வடிவங்களை உள்வாங் கியதாக இருந்தது. ஈழத்து சமூக வாழ்வில் வர்க்க ரீதியான அணுகு
முறையை இவர் பின்பற்றியிருந்தாலும் பல்துறை ஆற்றலை வளர்த்திருந்தாலும் இவரது கவிதைகள் சமூக உண ர்வுகளை, சமூகவளர்ச்சி சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இத
னைப் போல சமூக சார்பினை தனிமனித நிலையில் நின்று வெளிப்படுத்திய கவிஞர் மஹாகவி குறிப்பிடத்தக்கவர்.
இந்த நவீன கவிதை மரபின் தொடர்ச்சியாகவே 1948 சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ்க்கவிதையினை காண வேண்டியுள்ளது. 1950 களில் இலங்கை யின் தமிழ் இலக்கியத்துறை பாரதூர
UD விளைவுகளை சந்தித்தது. இலக்கியக் கொள்கை பற்றிய தத்துவார்த்த மோதலில் இருபெரும் அணியினை உருவாக்கிவிட்டது.
மரபுவாதிகளும் தமிழ் தேசியவாதிகளும் தாயகம்
ஒரு புறமும் முற்போக்குச் சிந்தனை இடதுசாரி கருத்துக்களைக் கொண்டி ருந்தோர் மறுபுறமுமாகவும் நின்று இயங்க வேண்டிய நிலை
உருவாகியது.
தமிழ் தேசியத்தை முன் நிறுத்தியவர்கள் தமிழகத்தில் தோன்றியிருந்த திராவிட இயக்க கருத்துக்களில் கவரப்பட்டிருந்தனர். முடியுமான அளவிற்கு தனித்தமிழ் பயன்படுத்திய நோக்கில் தமிழ்த் தேசிய தூய்மை பேணியது. மரபு வாதிகள் இவர்களுடன் இணைந்து பழைமையானசெய்யுள் மரபுகளை பின் பற்றி கவிதைகளை படைத்தனர். தமிழ் தேசிய தன்மையில் வெளிப்பட்ட வர்க்கச் சார்பை சுட்டிக் காட்டிய இடதுசாரி அணியினர் ஏனைய பிரதேச தேசிய இனங்களுடனும் முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியப்பட்ட தேசிய கோட்பாட்டை முன்நிறுத்தினர். இவ்வா றான விளைவுகள் சுதந்திரத்தின் பின்னர் ஈழத்து கவிதை துறையினை பாதித்தது. இத்தகைய சூழ்நிலையில் 5LDS தேவைக்காக ஈழத்து கவிதைகளை பின்வருமாறு பாகுபடுத்திக் கொள்ளலாம்.
X தமிழ் தேசிய சிந்தனைகளை
வெளிப்படுத்திய கவிதைகள்.
X முற்போக்கு, வர்க்கச் சிந் 6666 விதைத்த கவி தைகள்.
X தத்துவார்த்த வாழ்க்கை நடை முறையனுபவங்களை வெளிப்ப டுத்திய கவிதைகள்
X பழைய செய்யுள் இலக்கிய மரபினை தொடர்ந்த கவிதை கள்.
தமிழ் தேசியவாத கவிதைகள்
தமிழ் தேசிய வாதத்தினை உயர்த்திப்பிடித்து அதன் இயக்க போக்குகளுடன் இணைந்த கவிஞர்களை இதற்குள் உள்ளடக்கலாம். நீலா வாணன்,மஹாகவி வ.ஐ.ஜெயபாலன், சேரன் போன்றவர்களைக் குறிப்பிட லாம். இவர்களுள் தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழ் தேசிய வாத
பெப்ரவரி 2001

Page 12
அரசியலையும் இணைத்துக் கொண்ட கவிஞர் நீலாவாணன் குறிப்பிடத்தக்க கவிதைகளை படைத்துள்ளார். இவ ரைப் பற்றி பேராசிரியர் மெளனகுரு பின்வருமாறு கருத்துரைக்கின்றார்.
“பழமையிலும்,மரபிலும் அதீத பற்றும் புதுமையில் நாட்டமும், அக்கறையும் கொண்ட உணர்ச்சிகரமான கவிஞன். உணர்ச்சி ரீதியான அணுகல்முறை முன்னின்றமையால் அறிவு ரீதியாக பார்க்கும் குணாம்சம் இவரிடம்குறை வாக இருந்தது.”
என இரத்தினச் சுருக்கமாக கருத்துரைத்து இவரை அடையாளப் படுத்தியமை கவனிக்கத்தக்கது. மஹாகவி இக்கட்டத்தில் முக்கியத் துவம் பெற்ற கவிஞராக கணிக்கப்படு கின்றார்.
இன்றைய இன்றைய இன்றைய இன்றைய
காலத்திருக்கும் மனிதர்கள் காலத்தியங்கும் நோக்குகள் காலத்திழுப்புகள் எதிர்ப்புகள்
காலத்தின் கட்டுகள்
என்பதைக் கொண்டு ஈழத்து கவிதை துறைக்கு புதிய வளம் சேர்க்கின்றார். ஈழத்து நவீன கவிதை மரபுகளை கற்றுக் கொடுத்தவர் என்றவகையில் இவரது படைப்புகள் ஆழமான பார் வைக்குரியன. தமிழ் தேசிய அணி சார்பாக நின்று சமூக சீர்திருத் தத்தினை வேண்டிய இவரது கவிதைகள் உருவ அமைப்பிலும் உள்ளடக்க ரீதியிலும் ஈழத்து கவிதை மரபுக்கு புதிய சிந்தனைகளை கொண்டு
வநதன. ஆனால் பிரதான முரண்பாடுகளை மூடி மறைத்து சமரசம் செய்து கொள்ளும் போக்கும் அங்காங்கே இவரது கவிதை களுள் இழையோடி காணப்படுவதை Gbirds&6pmb சாதாரண கிராமிய மக்களின் வாழ்க்கையை இலட்சியப்
படுத்துவதோடு அக்கிராமத்தில் இருக் கும் சாதாரண சம்பவங்களை தனிமனித நிலையிலிருந்து பார்க்கும் நிலையை இவரது கவிதைகளில் காணக் கூடியதாக
உள்ளது. “தேரும் திங்களும்” “அகலிகை”, - “சடங்கு”, “கந்தப்ப சபதம்”, போன்றவற்றிலும் அவரது
நெடும்பாடல்களிலும் இதனைக் காண
தாயகம்
"Tஏற்றுக்
20
போராசிரியர் கா. இவ்விடத்தில்
லாம். தவிரவும் சிவத்தம்பி கூறுவதும் நோக்கத்தக்கது.
“மஹாகவி ஈழத்தின் மிக முக்கியமான.கவிஞர்களுள் ஒருவர். ஆனால் இவரை முற்போக்கு கவிஞன் என்று கொண்டுவிட முடியாது. அவர் வாழ்க்கையை நோக்கிய முறையும் பிரச்சினைகளை அணுகிய முறையும் அவர் சமூக முரண்பாடுகளின் வன் மையை அதிகம் உணர்ந்திராத ஒரு புனைவியல்வாதி என்பதை நிருபிக்கி ன்றன’
இலங்கை அரசு காலத்திற்கு காலம் எடுத்த பேரினவாத நிலைப் பாடுகள் தமிழ்தேசியத்தின் எழுச் சிக்கு துணையாக அமைந்ததை காணத்தவ றக்கூடாது. இத்தகைய நிலைப் பாடுகளும் மஹாகவியைப் பாதித்திருக் ககூடும். இருப்பினும் இடதுசாரிகள் 6,6060Tuu முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு நின்று யதார்த்த நிலை யை உணர்ந்த மஹாகவி தமிழ் எங்கள் ஆயுதம் என்ற கவிதையில்
“கரை யிலாத்தமிழ் தெருக் கணிகை
மாதெனவெறி கயவரின் தயவிலாக் காலிடைப் பாடுவதோ முறையிலா வழிகளில முரடர் எம்முடிவையே முயல நாம் மூடியோர் மூலையில் துயில்வதா பறை யெலாம் அதிர்கநம் பலமெல்லாம்
திரள்கவே பாதி நாடெங்களுக்காக என்றெ முகவே அறமெலாம் ஒரு கரைப்படினிவர் வெல்லுதல் அணு பிளந் தெறினும் ஆவ தொன்றல்லவே"
என அழுத்தமான குரலில் தமிழ் தேசியத்தை முன்நிறுத்து கின்றார். குடும்பம், காதல் தனி மனித
உணர்வுகளையும் சாதிய கொடுமை களையும் பாடும் இவர் அவற்றுக்கான தீர்வுகளை நோக்கிச் சொல்லாது அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும்
போக்கையே நோக்க முடிகிறது. இருப் பினும் மஹாகவி ஈழத்து கவிதையில் பிரிக்க முடியாத அங்கமாக திகழ் கின்றார். அவரது கவிதைகள் வடிவரிதியில் ജpIDTങ്ങ് பார்வைக் குரியதாக இன்னும் காணப்படுவதை கொண்டே ஆக வேண்டும். தவிரவும் ஈழத்து கவிதை துறையில் பல படிப்பினைகளை ஏற்படுத்திச் சென்றவர்
பெப்ரவரி 2001

என்றவகையிலும் முக்கிய மாணவராக கருதப்படுகின்றார்.
மஹாகவியினைத் தொடர்ந்து காசியானந்தன் தமிழ் தேசிய கவி தைகளை தீவிரப்படுத்தியவர். தனது கட்சி இயக்கம் சார்ந்த கொள்கை பிடிப்போடு கவிதைகளைப் படைத் திருக்கின்றார். சேரன் மஹாகவியின் பாரம்பரியத்தில் நின்று தமிழ் தேசியத் தின் மற்றொரு பரிணாமத்தை தொடர்
கின்றார். இவர்களின் கவிதை மக்களுக்கு புரியக்கூடிய முறையில் எளிமைப்படுத்தப்பட்டிருந்தன.
பேச்சோ சைக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மரபுகளையும் உள்வாங்கி கவிதை ങ്കണിന്റെ வெளிப்படுத்தினர். குறியீடு, படிமம். பாணியில் கவிதைகள் படைத்திருந்தாலும் Լ160լքս (2.
மரபுகளை தொடர்கின்ற அழகியல் பண்புகளை தொடர்ந்து கடைப்பிடித்தனர். பாரதி தாசனின் பாதிப்பு இவர்களை பாதித்திருந்தது. மக்களின் மொழியின் SL5 கவிதையின் உயிர்த் துடிப்பை சமூக நிகழ்வாக்குவதில் இவர்களிடம் அக்கறை குறைவாக காணப்பட்டது.
முற்போக்கு வர்க்கச் சிந்த னைகளை விதைத்த கவிதைகள்
1950 களில் தீவிரமாக எழுந்த இடதுசாரி அரசியல் அலைகள் ஈழத்து கவிதை துறையில் . கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தவிரவும் பாரதியின் தாக்கமும் தமிழ் மரபு வழிக்கவிதைகள் தீவிர விமர்சனத் திற்குட்பட்ட வேளையிலும் ஈழத்து கவிதை துறைக்கு புதிய கருத்தும் கொடுக்க வேண்டிய தேவை எழுந் தமிழ்மரபுவழி கவிதைகளை • نازوال பண்பாட்டு அரசியல் பொருளாதார தளத்தில் வைத்து பார்க்க வேண்டிய தேவையும் கூடவே இருந்து வந்தது.
D-6)85 அளவிலும் முற்போக்கு சிந்தனை உள்ள கவிதைகளும் இக்காலப் பகுதியில் படைக்கப்பட்டன. செவ்வியல் நெறிசார்ந்த இலக்கியங்
களை கேள்விக்குட்படுத்துகின்ற போக்கு தாயகம்
தமிழகத் திலும, ஈழத்திலும் இக்காலப் பகுதியில் காணப்பட்டன. ஈழத்து நவீன கவிதை மரபுகளை தேடவேண்டிய அவசியமும் புதிய கவிதை வீச்சினை உள்வாங்க வேண்டும் என்ற சிந்தனை
ஓட்டங்களும் எழுந்தவேளையில் அதற்கு வலுசேர்க்கும் வகையில் முற்போக்குச் சார்ந்த கவிதைகள் முனைப்பு பெற்றன. இதனைவிட
தமிழகத்தில் ஆங்காங்கே முளைத்த சிற்றிதழ் களும் கூடவே வானம்பாடி
கவிஞர்களின் தோற்றமும் ஈழத்து முற்போக்கு கவிதைத் துறைக்கு வளம்சேர்த்தன. ஈழத்தில் முற்போக்கு கவிஞர்களை இரண்டு 665 பாகுபடுத்தலாம்.
1) பார்வையாளன் என்ற நோக் கில் கவிதைகளை படைத்தவர்கள்.
2) போராட்டக் களத்தில் நின்று கவிதைகளைப் படைத்தவர்கள்.
முதல்கட்டத்தில் இ. முருகையன், எம். ஏ. நுட்மான், சிவசேகரம், சில்லையூர் செல்வராசன் ஆகியோரை குறிப்பிடலாம். இரண்டாவது அணியில் சுபத்திரன்,
பசுபதி, புதுவை இரத்தினதுரை போன்ற வர்களை அடையாளங்காணலாம்.
முருகையன் மரபுக் கவிதை யூடாகவும் புதுக்கவிதை வடிவத்தின் ஊடாகவும் சமூக நிகழ்வுகளைக் காட்டியவர். நேரடி சொல்விச்சும் விஞ்ஞான தர்க்கரீதியான சிந்தனை
களும் இவரது கவிதைகளில் விரவி வருகின்றன எனலாம். தான் வரித்துக் கொண்ட மாக்சிய 6)85 கண்ணோட்டத்துடன் தமிழ் மரபுகளை
அனைத்து கவிதைகளை படைத் துள்ளார். “நாங்கள் மனிதர்” என்ற கவிதை தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை பின்வருமாறு அமைகின்
D3.
“இக்கவிதைகள் எல்லாம் மனிதகுல மேம்பாட்டை நோக்கிய உந்தல்களாகவும், தேடுதலாகவும் விசாரணைகளாகவும், அங்கலாய்ப்பு களாகவும், தோற்றமாகவும் இடைய றாத பரிசீலனைகளின் ஆவணங்
பெப்ரவரி 2001

Page 13
களாகவும், அமைகின்றன. மனிதனைப் பிணைத்துள்ள தளைகள் நீங்கவே வேண்டும். தடங்கள் அகல வேண்டும்.”.
என கூறியிருப்பது அவதானத்திற் குரியது. அவரின் இவ்வாறான சிந்தனைகளின் வெளிப்பாடாகவே
கவிதைகள் அமைந்துள்ளன."நெடும் பகல்” “ஆதிபகவன்” போன்ற கவிதை நாடகங்களிலும் “மாடும் கயிறுகள் அறுக்கும்,” “நாங்கள் மனிதர்’ கவிதைத் தொகுதிகளிலும் தனிக் கவிதைகளிலும் இத்தகைய போக் கினை காணலாம்.
எம்.ஏ.நுட்மான் தான் வாழ்ந்த காலச்சூழ்நிலைகளில் காணப்பட்ட சமூக நிகழ்வுகளின் ஊடாக கவிதை துறைக்கு வந்தவர். அவர் எழுதிய “தாத்தாமாரும் பேரர்களும்” என்ற கவிதை ஆழ்ந்த கவனத்திற்குரியது. தனது கவிதைகளுக்கு செய்யுளை ஊடகமாக கொண்ட போதிலும் செய்யுள் மட்டுமே கவிதையின் ஊடகமல்ல என்ற சிந்தனையில் கவிதைகளைப் படைத் தவர். தவிரவும் அன்று கவிதை துறையில் காட்டிய சமூக அக்கறை இன்று (pQgGouDuras வெளிப்படா மைக்குரிய காரணங்களைத் தேடுவதும் அவசியமாகும்.
சிவசேகரம் பொறியியல் துறை யைச் சார்ந்தவர் இக்காலப் பகுதியில்
குறைவான கவிதைகளைத் தந்திருந் தாலும் நிறைவான அறுவடைகளை தந்தவர் மாவோ. சேதுங் கவிதை தொகுதியை மொழிபெயர்ப்பு செய் தவர். அதன் தன்னை மாக்சியவாதியாக துணிவுடன் இனங் காட்டிக் கொள்ளும் இவர் எழுதிய கவிதைகள் ஆழமானவை. LIgLDář சிறப்புகளை கொண்ட இவரது கவிதைகள் இக்காலகட்டத்தில் முக்கி யத்துவம் பெறுகின்றன. சில்லையூர் செல்வராசன் தமிழ் மரபுடன் இணைத்து முற்போக்கு சிந்தனைகளைகொண்ட கவிதைகளைப் படைத்தவர். இவரும் "
கவனத்திற் குரியவர்
தமிழ் தேசியம் ஒருபுறமாகவும் இடதுசாரி முற்போக்கு சிந்தனைகள் ஒரு புறமாகவும் நின்ற காலப்பகுதியில்
தாயகம்
ஈழத்து தமிழ்க் கவிதை அதன் தாக்கத்திற்கு உட்பட்டது. அறுபதுகளில் தமிழ்தேசியத்தை விட இடதுசாரி முற்போக்கு அணியினரின் செல்வாக்கு முனைப்புப் பெற்றது. இடதுசாரி கட்கிடையே சில பிளவுகளும் ஏற்பட் டன. தமிழ்தேசியத்தை உதட்டளவில் பேசிய தலைவர்கள் தங்களது வர்க்க நலனை அதிகார பிடியை தொடர்ந்த போது இடது சாரியினர்க்கு சாதிய எதிர்ப்பு போராட்டம் ஒரு வரலாற்றுச் சமூகத் தேவையாக இருந்தது. இதன் விளைவாக 1967 அக்டோபர் தீண்
வெகுசன சாதி ஒழிப்பு போராட்டம் வடபகுதி கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்கள் மட்டுமல்ல உயர் சாதியினர், புத்திஜீவிகள், மாணவர்கள் இளைஞர்கள், பொதுமக்கள் போன் றோரைக் கொண்டு ஒரு வெகுஜன
போராட்டமாக அது அமைந்தது. அதில் 6) இழப்புக்களையும் எதிர்ப்புக் களையும் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த போராட்டக்களத்தில் இருந்து எழுந்த கவிஞர்களான பசுபதி, சுபத்திரன் புதுவை இரத்தினதுரை விசேட கவனிப்புக்குள் உள்ளடக்கப்படுகிறார்கள்.
சங்கானைக் கென் வணக்கம்
சரித்திரத்தில் உன் நாமம்
மங்காது யாழகத்த
மண்ணில் பல காலம்
செங் குகுதிக்கடல் குடித்தச்
செழித்த மதத்துக்குள்
வெங் கொடுமைச் சாக்காடாய்
வீற்றிருந்த சாதியினைச்
சாகாரஞ் செய்யத்
தளைத் தெழுந்து நிற்கின்ற
சங்கானைக் கென் வணக்கம்
கோயிலெனும் கோட்டைக்குள்
கொதிக்கும் கொடுமைகளை
நாயினிலும் மீக்க
நன்றிப் பெருக்கோடு
வாயினிலே நின்ற
வாழ்த்தும் பெருஞ்சாதி
நாய்கள் - லை
நறுக்கி - எழுந்தாய்
சங்கானை - அந்தச்
பெப்ரவரி 2001

சங்கானைக் கென் வணக்கம்
எச்சாமம் வந்தது எதிரிநழைந்தாலும் நிச்சாமக் கண்கள் நெருப் பெறிந்து நீறாக்கும் குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன் சங்கானை மண்ணுன் மலர்ந்த மற்ற வியட்நாமே உன் குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மச்சுகிறேன் ! மெச்சுகிறேன்.
66 சுபத்திரன் பாடும்போது கவிதையில் நிகழ்காலத்தின் சமூக வர்க்க பரிணாமங்களை 356
முடிகிறது. போராட்டக்களத்தில் நின்று இயங்கியல் சமூகவிடத்தை இயல்பாக சுட்டிக்காட்டுகின்ற சுபத்திரன் பார்வைக் கும் மஹாகவியின் பார்வைக்கும் இடை யிலான வேறுபாடு துல்லியமாக காண
முடிகின்றது. இதனை காணத்தவறு பவர்கள் கைலாசபதி இவரை ஏன் அடையாளம் காணவில்லை 66
கூறுவதன் பின்னணியையும் விளங்கிக் கொள்ளவேண்டும். வீரியம்மிக்க சொல் வீச்சுடன் சமூகத்தை பாடுபொருளாக கொண்ட இக்கவிதைகள் இக்கால கட்டத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. தத்துவார்த்த வாழ்க்கை நடை முறை அனுபவங்களை வெளிப்படுத்திய கவிதைகள். தமிழகத்தில் புதுக்க விதை அங்கீகாரம் பெற்ற 84. பின்னரே ஈழத்தில் புதுக் கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்தது. 66 கூறப்படுகின்றது. தோன்றிய எழுத்து பிச்சமூர்த்தி எழுதிய கவிதைகளின் தாக்கம் ஈழத்துக் கவிஞர்களையும் பாதித்தது. தீவிர மாக்கிய எதிர்ப்பாளர்களாக விளங்கிய (UD. தளையசிங்கத்தின் ஆக்க இலக்கியப் போக்கில் இதனைத் தெளிவாக கண்டு தெளியலாம். மு. பொன்னம்பலம், த.இராமலிங்கம், சண்முகலிங்கம் போன்றவர்கள் வாழ்க் கையின் தத்துவார்த்த விடயங்களை முன்வைத்து கவிதைகளை எழுதினர். தாயகம்
சஞ்சிகையில் தத்துவார்த்த
தமிழகத்தில்
இவர்களில் சிற்சில காணப்படினும் B. செல்வாக்கு இவர்களை ருந்தது என்பதையும் சில ளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூக நிகழ்வுகளுக்கு அடிப்படைக் கார ணங்களைத் தெரிந்து கொள்ள விரும் பாத மனநிலையும் வாசகர்களுக்கு புரியாத கவித்துவபாணியும் இவர்களைச் சார்ந்தது.
வேறுபாடுகள் பிச்சமூர்த்தியின் பாதித்தி
ஆய்வா
J60).pt செய்யுள் மரபினைத்
தொடந்தவர்கள்
இவர்கள் தமிழ் மரபினை தொடர்ந்தும் பேணி வருபவர்களாக காணப்பட்டாலும், அதனை எளிமைப் படுத்தும் பாங்கும் இவர்களை சுற்றியே அமைந்திருந்தது. புலவர்மணி பெரியதம் பிப்பிள்ளை, பேராசிரியர் கணபதிப் பிள்ளை, காரை. சுந்தரம்பிள்ளை போன்றவர்களை குறிப்பிடலாம்.
எனவே மேற்குறிப்பிட்ட பாகு பாட்டின் அடிப்படையில் ஈழத்து கவிதை வளர்ச்சி 1948 - 1976 வரையிலான சுருக்கமாக நோக்கப்பட்டுள்ளது. இக்கா லக்கட்டத்தில் எழுந்த கவிதைகள் சமூகச்சார்பினை வலியுறுத்தியிருந்தாலும் சமூகச்சார்பு என்பது அவர்கள் வகுத்துக்கொண்ட உலக கண்ணோட் டத்திற்கு அமையவே ஏற்படுகின்றது. சமூக சார்பு என்ற விடயத்திற்குள்ளே தனிமனித உணர்ச்சி நிலையும் அமைந் துள்ளது. இத்தகைய அம்சங் களை ஈழத்து கவிதைகளிலும் காணமுடிகிறது. இலங்கையில் இனல்ர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்த காலப்பகுதியில் வெளி
வந்த கவிதைகள் தரமானவை என்றாலும் ஒப்பீட்டு அடிப்படையில் போராட்டக் களத்தில் நின்று எழுதிய கவிதைகளே தரமிக்கவையாக உள் ளன. படிமம்தான் கவிதை, குறியீடுதான் கவிதை, தனிமனித புலம்பல்தான் கவிதை என்பதை விட மக்கள் மொழியில் மக்களைப் பற்றிபாடிய
கவிதைகளுள் இக்காலப் பகுதியில் சில கவிதைகள் ஆழமானவையாக உள் 56.
இடதுசாரிப் பார்வையின் நடை முறையும் கவிதையில் மக்கள்
பெப்ரவரி 2001

Page 14
தொடர்பான அழகியல் அம்சங்கள் தேசியம் வந்தது. அதனது தாக்கத உள்வாங்கப்படாமையும் தரமான கவி தினை அடுத்துவரும் 66), தைகள் உருவாவதற்கு தடைக்கல் கவிதைகளில் காணக்கூடியதாகவுள்ளது. லாக இருந்தது. அதனைநிரப்ப தமிழ்
காயமுற்ற மனது
மழை விட்ட இரவு
வான் வெளித்த பெளர்ணமிநாள். வழுக்கி விழாமல் அடிவைத்த நான் நடந்தேன். வெள்ளத்தின் தேக்கத்தில்
வீழ்ந்திருந்தது நிலவு! தள்ளிசையில் ...சோடிகளை சுகித்தபடி தவளைகள்!
கல்லெடுத்து எறிந்தேன் நான் வெள்ளத்தில், நிலா ..கலைந்து
இல்லாமல் போச்சு தவளை இசை நின்றது .சீ பாதியிலே தவளைகளின் கலவியதம் குழம்பிற்று
கலங்கியநீர் தெளிவடையும். கலைந்த நிலா மீண்டுதிக்கும் தவளைகளின் கலவி சிலகணத்தின் பின் தொடரும். கலைக்க எண்ணும் .என்மனத எக்கணத்திற் தான் தெளியும்?
6ægus
தாயகம் 24 பெப்ரவரி 2001

சார்வாக மெய்யியல் வேதமரபுக்கு எதிராக எழுந்த ஒரு உலகாயத பார்வை
இந்தியச் சிந்தனை மரபில்
சார்வாக மெய்யியல் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இதனை சடப் பொருள்வாதம் என அழைப்பர். அவை
தீக மரபைச் சார்ந்ததாகவும், வேதமர பின் எதிர்ப்பியக்கமாகவும் கருதப்பட்ட பொழுதும், பிராமணியச் சிந்தனையின் ஒரு பகுதியான தருக்க, பெளதீகவாத ஊகங்களினூடாக தோன்றி வளர்ந்த தொரு சிந்தனையாகவே சார்வாகம் காணப்படுகிறது. சார்வாக மெய்யியலை விரித்துரைக்கும் மூலநூல்கள் எவையும் கிடைக்காமையும், சார்வாகம் என்ற சொல் உட்பட உலகாயதம், நாஸ்திக மதம் பூதவாதம் போன்ற சொற்களின் அர்த்தம் பற்றிய தெளிவின்மையும் சடப் பொருள்வாதமான சார்வாக மெய்யியல் பற்றிய புரிந்து கொள்ளலிற்குத் தடையா கவுள்ளது.
இந்திய மெய்யியல் தொடர்பாக
இன்று கிடைக்கக் கூடியதாயிருக்கும் நூல்களில் * சார்வாகம் சார்பான நூல்கள் எதுவுமில்லாத நிலைமையே இன்றுவரை உளது. ஜெயராசிப்பட்டர் என்பவரால் எழுதப்பட்ட “தத்வோப் லவசிம்ஹா” என்ற நூலொன்று
1930களில் கண்டுபிடிக்கப்பட்டு பிரசுரிக் கப்பட்டதும் பதிப்பாசிரியர்கள் கூறுவது போல் இந்நூல் சார்வாக தரிசனம் பற்றியதாயிருந்த பொழுதும், அதன் பேசுபொருள் பிரமர்ணம் பற்றிய ஆய்வேயாதலினால், மூலநூல் இல்லாக் குறையை முற்றிலுமாக இந்நூலின் கண்டுபிடிப்பு தீர்த்துவிட்டதாகக் கூறமுடி யாது. தத்வோப்லவசிம்ஹாவின் முன்னு ரையில் பிரகஸ்பதியம் பற்றிய குறிப் பொன்று காணப்படுகிறது. பிரகஸ்பதியே சார்வாக மெய்யியலில் ஸ்தாபகரென்பது இந்தியமரபிற் காணப்படுமொரு நம்பிக் கையாகும்.
மேற்குறிக்கப்பட்ட நூலைத் தவிர, இந்தியமெய்யியல் நூல்களில்
தாயகம்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா சார்வாகம் இன்னதுதானெனக் கூறப்பட்ட கருத்துக்களும், மேற்கோள் வாசகங் களும் கிடைத்துள்ளன. மேலதிகமாக நாடக நூல்கள், அரசியல் நூல்கள், இலக்கண நூல்கள் ஆகியவற்றிற் காணப்படும் குறிப்புகளும் 6. இவற்றில் மாதவாச்சாரியின் சர்வதரிசன சங்கிரகம், சங்கரரின் சர்வசித்தாந் தசாரம், இராமாயணம், மகாபாரதம், பத்மபுராணம், விஷ்ணுபுராணம், மநுஸ் மிருதி, கெளடில்யரின் அர்த்தசாஸ் திரம், பிரகஸ்பதிய அர்த்தசாஸ்திரம், வாத்சாயனரின் காமசூத்திரம் கிருஷ்ண மிஸ்ரரின் நாடக நூலான பிரபோதய சந்திரோதயம், ஜெய்மினிசூத்திரம், தீக நிக்காயம், பிரமசூத்திரத்தின் சங்கர பாடியம் பாஸ்பரபாடியம் என்பனவற் றிலும் மற்றும் தமிழ்நூல்களான மணி மேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களிலும் சார்வாகம் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி நூல்களிற் தெரிவிக்கப்ப ட்டுள்ள விபரங்களிலிருந்து குறைந்த பட்சம் பிரகஸ்பதி சூத்திரம், உலோ காயத சூத்திரமென இரு நூல்களாவது சார்வாகமெய்யியல் பற்றி இருந்திருத் தல் வேண்டுமென்ற முடிவுக்கு வரலாம்.
எவ்வாறாயினும் சார்வாகமெய்யியலை அதன் மறுப்பாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்தே அறியவேண்டி
யிருப்பது துரதிஷ்டமானதே. மாதவாச் சாரியார் காலத்திற்கு நான்கு நூற் றாண்டுகள் முன்பதாகவே சார்வாக மெய்யியல் மிகவும் செழிப்புற்ற நிலை யிற் காணப்பட்டதென்பதை சலிரோர் (B. A. Saletore) 6T6örum assòQ6JG6ě சான்றுகளின் அடிப்படையில் எடுத் துக்காட்டியுள்ளார்.
பிரபோதயசந்திரோதயம் நாடகநூல் (1b நூற்றாண்டு) சார்வாகன் பிரகஸ்பதியின் மாணவன் என்றும், அவன் சடப்பொருள்முதல் வாதத்தைப் போதித்தான் என்றும் குறிப் பிடுகின்றது.
என்ற
Giga 2001

Page 15
பிரபோதய சந்திரோதயம் தரும் தகவல்களின்படி, புலன்வழிப் பெறப்படும் அறிவை மட்டுமே ஏற்றுக்கொண்ட சார்வா கர்கள் நிலம், நீர், காற்று, தி என மூலப் பொருட்கள் நான்கே என்றும், பூவுலக இன்பங்களை அனுபவிப்பதே மானிட இலட்சியமென்றும் போதித்தனர். இவர்கள் மறுஉலகக் கோட்பாட்டை மறுதலித்ததுடன், இறப்பின்பின் எதுவுமே யில்லை என்ற நம்பிக்கையுடையவராய்க் காணப்பட்டனர். பூதவாதிகளான சார்வா கர்கள் நிலம், நீர், வளி, தி, வெளி என்ற ஐம்பூதங்களை ஏற்றவர்களாய், பொறி புலன்களின் தோற்றம் பூதச் சேர்க்கையாலானதென்றும், அறிவும் இன்பமும் உடலழிய இவையும் அற்றுவிடுமென்றும், உயிர் உடலின்வேராயுள்ளதல்லவென் றும் வாதிடுவதாக நீலகேசி குறிப்பிடு கிறது. (நீலகேசி, பூதவாதச்சருக்கம், 700-727)
இந்தியமரபில் அறிவாராய்ச்சி யியலென்பது பிரமாணம் பற்றிய பிரச்சி னையுடன் தொடர்புடையது. சார்வாகர் காட்சிப் பிரமாணத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டனரென்றும், அனுமானம், சுருதி யுட்பட ஏனைய அனைத்துப் பிரமாணங் களையும் நிராகரித்தனரென்றும் பொது வாகக் கருதப்படுகிறது. சார்வாக மெய்யி யலாளரின் இந்நிலைப்பாடு, அவர்கள் தமக்கென்று எத்தகைய கோட்பாட்டு அடிப்படைகளும் இல்லாதவர்கள் என் றும், விதண்டாவாதிகளென்றும் எதிரா ளிகள் விமர்சிப்பதற்கு மிகவும் ஏதுவாக விருந்தது. மாதவாச்சாரியாரும் மற்ற வ'தளும், காட்சியை மட்டும் ஏற்று க்கொள்ளும் தத்துவமாக சார்வாகத்தை வரையறுத்துக் கொண்டால் அது அதன் அறிவாராய்ச்சியியல் பற்றிய தவறான தொரு விளக்கமாகவே காணப்படுகிறது. சார்வாகர் யதார்த்தவாதிகளும், பகுத் தறிவுசார் அனுபவவாதிகளுமாவர். மனிதர் 5LDg கட்புலக் காட்சிக் குட்படுவதை ஐயுறத்தொடங்குவார்களே யானால், அவர்களது நாளாந்த வாழ்க்கையே மிகவும் பாரதூரமாகப் பாதிக் கப்படுமென உதயணர் கூறுவது சார்வாகர்களிற்கும் ஏற்புடையதொரு நிலைப்பாடாகும்.
தாயகம்
உடலிற்கேயுரியதென்றும்
சார்வாகர் அனுமானத்தை முற்றாக நிராகரித்தனரென்று கூறுவதற் கில்லை. அனுமானத்தின் நடைமுறைப் பயன்பாட்டை அவர்கள் மறுதலிக்க வில்லை. அனுமானிக்கப்படு பொருளிற் கும் (சாத்தியம்) அதற்கேதுவாக இரு க்கிற நியாயத்திற்கும் (சாதனத்தி ற்கும்) இடையிலிருக்க வேண்டிய வியாபகத் தொடர்பை ஆதாரமாகக் கொண்டு இறைவன், ஆன்மா, மறு உலகு பற்றிய நிரூபணத்தை தருதலையே ஐயுற்று நிராகரித்தனர். இது போலவே ஆப்தவாக்கியத்தை சார்வாகர் (p(L960)LDurT85 நிராகரித்தனரென்று வாதிப்பதும் ஏற்புடையதாகாது. அனுப வத்தில் உண்மை காணமுடியாத கூற் றுக்களை ஆப்த வாக்கியமாகத் தருவ தையே சார்வாகர் ஏற்கமறுத்தனர். அதாவது ஆப்த வாக்கியத்தைச் சுயா தினமானதொரு அறிவின்வாயிலாக ஏற்பதை சார்வாகர் எதிர்த்தனர்.
தோற்றப்பாட்டியல் அல்லாத வழிமுறையில் காட்சியைப் புரிந்து கொண்ட சார்வாகர், காட்சியின் மூலம் சார்பற்ற அறிவுபெறப்படலாமென்ற கருத்துடையவர்களாயிருந்தனர். கியூமி னது போன்ற தனியான்மவாத நிலைப் பாடு இவர்களாற் தவிர்க்கப்பட்டது. காட்சி ஒரு வலிதான அறிவின் வாயில்
என்றவகையில், அதனை ஏற்றுக் கொண்டும், காட்சியின் வரையறை யினுள் அனுமானத்தையும், ஆப்தவாக்
கியத்தையும் ஏற்றுக் கொண்டு சார்வா
கர் செயற்பட்டனர். எனவே தான் சார்வாகர்களின் அறிவாராச்சியியல் யதார்த்தவகமாகவும், பகுத்தறிவு சார்ந்த அனுபவவாதமாகவும் இருக் கிறதென்று முடிவு கிடைக்கிறது.
சார்வாகர் பகுத்தறிசார் அனுப
வவாதிகளானபடியால் கடந்த நிலைக் குரியதான கடவுள், ஆன்மா, மறு உலகம் என்பனவற்றின் இருப்பை நிராகரித்தனர். இவற்றை காட்சி யினுாடாகவோ அல்லது காட்சியின் வரையறைகளிற்குட்பட்ட அனுமானத் தினாலோ அல்லது ஆப்தவாக்கியத் தினாலோ நிறுவமுடியாதென்ற நிலைப் பாடுடையவர்களாய் இருந்தனர். சார்வாக தரிசனம் பற்றிக் குறிப்பிடும்
பெப்ரவரி 2001

அனைத்து ஆதாரங்களிலும் சார்வாகர் களது மேற்படி நிலைப்பாட்டைக் காணக் கூடியதாயிருக்கிறது. மேலும் இத்தகையதொரு நிலைப்பாடே சார்வா கர்களை விதண்டாவாதிகளென்றும், யதேச்சாவாதிகளென்றும், நாஸ்தீகர் என்றும் மற்றவர்கள் பெயரிட்டழைக்க ஏதுவாயிற்று."
சடப்பொருளுலகின் இருப்
பையும் இதன்மெய்மையையும் சார்வாகர் ஏற்றுக் கொண்டவர்கள். இவ்வுலகு நான்கு பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, வாயு என்பனவற்றாலான தென்றும்,(சமண நுால்கள், நீலகேசி ஆகிய நுால்களின்படி ஐந்து பூதங்களாலாகியது.) அப்பூதங்களின் சேர்க்கையும் பிரிவுமே ஆக்கமும் அழிவென்றும் சார்வாகர் ஏற்றுக் கொண் டிருந்தனர். சார்வாகத்தினரின் இந்நி லைப்பாடு அவைதீக மார்க்கத்தினரான சமணர் பெளத்தர்களிற்கும், வைதீக மார்க்கத்தினரான நியாயவைசேடிகர், சாங்கியர், யோகமார்க்கத்தினர், மீமாம் சகர் ஆகியோர்களிற்கும் ஏற்புடைய தொரு நிலைப்பாடேயாகும்.
அகம், உயிர், பிரக்ஞை என்பன பற்றிய சார்வாக நிலைப்பாடே இவர்க ளிற்கும் மேலே குறிப்பிட்ட பிறத ரிசனங்களிற்குமிடையிலான பிரதான முரண்பாடாகும். எத்தகையதொரு அவ தானனும் உயிர் தென்ற வாதத்தை நிறுவுவதாயில்லை. புலனுணர்வும் அதனடியான பிரக்ஞையும் உடலியக்கத்தின் பெறுபேறேயாம். உட லியக்கத்திற்கும், உளவிருத்திக்கும் உணவும், மருந்தும் உதவியாயிருப்பது உடலின் வேறாய் உயிரென ஒன் றில்லை என்பதையே எடுத்துக் காட் டுகிறதென சார்வாகர் வாதிடுவர்.
ஆன்மா அல்லது உயிர் இறப்புடன் அற்றுப்போகிறதென்ற சார்வாகரின் நிலைப்பாடு பெளத்தர், நையாய்கர், மீமாம்சகர் ஆகியோரால் பலத்த விமர்ச னத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும், அவையனைத்தும் பின்வரும் அடிப்படை களில் சார்வாகரால் நிராகரிக்கப்பட்டன. 1. மாற்றத்திற்குள்ளாகும் உடலில் மாற்ற
முறாத நான் என்ற முற்றொருமை
இருப்பதை விளக்குவதற்கு உடலின்வேறாகிய
தாயகம்
உடலின் வேறாயுள
உயிரின் இருப்பு பற்றிய அனுமானம் அவசியமற்றது. 2. புலனனுபவத்தை திசைப்படுத்தி இயக்கும் மனம் ஒரு சடப்பொரு ளேயாம். அது இறப்பினால் அற்று விடுகிறது. 3. சுயத்தின் பிரக்ஞை புலனனுபவ
மேயன்றி வேறல்ல. 4. ஞானமென்பது முன்னனுபவத்தின் சுவடுகளேயன்றி வேறல்ல 5. தனியாள் வேறுபாடுகளை
வதற்கு கன்மக்கோட்பாடு அவசிய மற்றது. வேறுபாடுகள் சுபாவவேறு பாடேயன்றி வேறல்ல. சார்வாக உள்பொருளியலானது இறைவன், மறுஉலகம், இறப்பின் பின்பான வாழ்க்கை என்பனவற்றை நிராகரிப்பதாயும் சடப்பொருட்கூறுகளின்
விளக்கு
கலப்பாலாகிய உடலின் செயற்பாடே உணர்வு நிலையென்றும் ஏற்றுக் கொள்கிறது.
பிரபஞ்சத்திற்கு எத்தகைய நோக்க முமில்லை. அது தனக்கேயுரிய சுபா வத்தால் இயங்குகிறது. அதனை இயக்க ஒருகருத்தா தேவையென்ற அவசியமற்றது. சித்துப்பொருள் பிரபஞ்ச இயக்கத்திற்கு மூலகாரணமாக இருக் கிறதென்பதை சார்வாக அண்டவியல் நிராகரிக்கிறது. பூதங்களின் சேர்க்கை யும், பிரிவுமே உலகின் ஆக்கமும் அழிவுமெனக் கூறுகிறது. இதுவே சார்வாகர் கூறும் சுபாவவாதமென்ற இயற்பண்பு வாதமாகும். படைப்புக் கொள்கையைச் FTfGuiress நம்புவ தில்லை. இதனால் அவர்களின் அண்ட வியலுக்கு சித்துப்பொருளென்றின் தேவை அவசியமற்றதாய்விடுகிறது. சார்வாகர் இறைவனை மட்டும் நிராகரிக்கவில்லை, கூடவே அதிஷ்ட (விதிவாதம்), கர்மம், நியதி, யதேச்சம் என்பனவற்பனவற்றையும் நிராகரிப் பதுடன், இவற்றிற்குப் பதிலீடாக இயற்கை அல்லது சுபாவம் என்ற கோட்பாட்டை முன்மொழிகின்றனர். இருத்தலும், இலதாதலும் சடத்தின் சுபாவமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சார்வாகரின் சுபாவவாதம் யதேச்சா வாதத்தினின்றும் வேறுபட்டது. தற்கால விஞ்ஞான பரிபாஷையிற் கூறுவதாயின், இயந்திரவியல் நிர்ணயவாதம் என்று
பெப்ரவரி 2001

Page 16
கூறலாம். நால்வகைபூதங்களை சடக் காரணமாகவும், அதன் நிமித்தகாரண மாக சுபாவத்தையும் சார்வாகர் ஏற்றுக் கொண்டனரெனலாம். இங்கு 9T6 த்தை நியதியென்ற கருத்தில் புரிந்து கொள்ளாது, இயற்கையின் இயல்பு என்ற கருத்தில் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
சுபாவத்தை அதற்கேயுரிய அர்த்தத்திற் புரிந்துகொண்டால் அது அண்டவியல் நோக்கக் கொள்கை மறுப்புவாதமாக இருக்குமதேவேளை செயல் நோக்கமுடைய தனிமனித நடத்தையை மறுதலிக்காதிருப்பதையும் அவதானிக்கலாம். பிரக்ஞைபூர்வமான விருப்பங்கள் U6) மனிதற்குண்டு. எனவே உடல்ரீதியான தேவைகளை, விருப்புகளை பூர்த்தி செய்யும் வகை
யிலான ஒழுக்கப் பெறுமானங்களே சார்வாக ஒழுக்கவியலின் அடிப்படை களாகிறது.
ஒப்பீட்டளவில் சார்வாக மெய்யி யல் பற்றி இலக்கியநூல்கள் கூறுவதிலும் UsT5 is85, மெய்யியல் நூல்களிற் கூறப்படுவது ஓரளவிற்குப் பயனுடையது. மாதவாச்சாரியார் சார்வாகம் பற்றிக் கூறுவதை உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். சார்வாகத்தின் நிலைப்பாடு பற்றி அவர் கூறுவதைப் பின்வருமாறு சுருங்கக் கூறலாம்.
சார்வாகர்களான பொருள் முதல்வாதிகள் நிலம், வாயு, நீர், நெருப்பு ஆகிய நான்கு பூதங்களின் இசைவிணக்கமான சேர்க்கையின் கார ணமாகவே அனைத்தும் தோன்றி வளர்ச்சியடைந்ததென வாதிட்டனர். அவர்கள் சுபாவவாதிகளானபடியால் (இயற்பண்பு வாதிகள்) இயற்கைக் கப்பாற்பட்ட இறைவன், ஆன்மா என்பன வற்றையும், ഥനൃഉ-ബാക്ക வாழ்க்கை யையும், சுவர்க்கம், நரகம் என்பன வற்றின் இருப்பையும், கர்மபலன், விதி என்பனவற்றையும் நிராகரித்தனர். மகிழ்ச்சியையும், நன்மையையும் அடைவதற்கான மனித முயற்சியிலும், பலத்திலும்நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்த பொழுதும், கலப்பின்றிய மகிழ்ச்சியைப் பெறுதலில் மனிதர் எதிர் கொள்ளக்கூடிய சிரமங்களை உணர்ந்த யதார்த்தவாதிகளாகவும் இருந்தனர். தாயகம
துன்பத்தைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறினர். gigD6AD வாழ்ககையையும் உடலைத் துன்புறுத்தும் தவத்தையும் பலன்தராத முயற்சிகளென வாதிட்டனர். வேதங்கள் வேள்வியையும், பலனற்ற கிரியைகளையும் போதிப்பதனால் அவற்றை சார்வாகர் எதிர்த்தனர். மனிதன் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டசமூகம் இன்றியமை யாததென சார்வாகர் உணர்ந்ததால், அவர்கள் அர்த்த சாஸ்த்திரத்தையும், நீதி சாஸ்த்திரத்தையும் பின்பற்றுபவர்
களாயிருந்தனர்.
இன்பத்தை ஒழுக்கவியல் இலட்சியமாக சார்வாகர்கள் ஏற்றுக்
கொண்டதினால் அவர்களை இன்பவாதி களென அழைப்பது சரியேயாயினும், அவர்கள் தன்முனைப்பான இன்பவாதி களல்லர். இன்பம் தனிமனித இலட்சி யமாக இருப்பினும், அவ்இன்பத்தை சமூக வாழ்க்கையினூடாகவே அடைதல் சாத்தியமாகும். சமூகப் பங்கேற்பு கூட்டுறவு சமூகநிறுவனங்கள் என்பன மனிதரின் சுமுகமான வாழ்விற் குரியனவாக சார்வாகரால் ஏற்றுக்கொள் ளப்பட்டதுடன், சாதியினடிப்படையிலான வேறுபாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள் ளவில்லை.
தொகுத்துநோக்கின்,சார்வாகர்க ள்; அறிவாராச்சியடிப்படையில் U(35 த்தறிவாதிகளும் யதார்த்த நிலைப்பட்ட அனுபவவாதிகளுமாவர். உள்பொருளிய லடிப்படையில் அவர்கள் ஆன்மப் பொருளை நிராகரித்ததுடன், நிலம், வாயு, நெருப்பு, நீர் என்ற நான்கு மூலப்பொருள்களை ஏற்றுக் கொண்டி ருந்தனர். அடிப்படையியல் நிலைப் பாட்டில் இயற்பண்புவாதிகளாகவும், நோக்கக்கொள்கை மறுப்பாளர்களா கவும் காணப்படுகின்றனர். ஒழுக்கவிய லடிப்படையில் உலகியலான மனிதத் தேவைகள், அபிலாசைகள் என்பன வற்றிற்கு ஏற்றவகையில் உலகியல்சார் விழுமியங்களைப் போற்றியதுடன், ஒழுக் கவியல் இன்பவாதிகளாகவும் விளங் கினரெனலாம்.
பெப்ரவரி 2001

சிறுகதை
சிவுக்குக் காட்டின் “மெத்"தென்ற மஞ்சள் பூக்கள் மங்கலாக சிரித்துக்
கொண்டிருக்கும் இதமான 366) வேளை. யன்னலுாடாக தெரிந்த மஞ்சள் பூக்களை ரசித்துக் கொண் டிருந்த விழிகளைத் தாழ்த்தி யன்ன லோரம் போடப்பட்டிருந்த கட்டிலை நோக்குகின்றாள் மாலதி.
சாதாரணமாக ஆறுமணிக்கெல் லாம் தன்னை தயாராக்கிக் கொண்டு கடைக்கு செல்வதற்கு ஆயத்தமா கிவிடும் முரளி இன்னமும் எழுந்து கொள்ளவில்லை.
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை
என்பதற்கும் மேலாக மாலதி வீட்டில் இருக்கிறாள். இன்றைக்கு அவனுக்கு பிடித்த பால்ப்புட்டுக் கிடைக்கும் என்ற அளவு கடந்த மகிழ்ச்சி வேறு. வாய் ஒலக்கிக் கொள்ளாமல் "அவள் கொடுக் கும் கோப்பிக்காகவென துாங்குபவன் போல நடித்துக் கொண்டிருப்பவன் அவளது கணவன் முரளி.
85.606) ஒவ்வொன்றையும்விட இந்த ஞாயிற்றுக்கிழமை வருவதென் றால் இருவருக்கும் கொண்டாட்டம். வேலைக் களைப்பை தீர்த்துக் கொள் ளுகிற நாள் என்பதைவிடவும் மாலதி யிடம் கோப்பித் தண்ணிர் குடிப்பதற்
கென்றே இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு
காத்திருப்பது முரளியின் வழக்கமாகி விட்டது தாயகம்
geneuromuellas
சி. சிவானி
தாயைப் போல தாரம் எல் லோர்க்கும் கிடைத்துவிடாது என்பதை முரளி தனது அனுபவத்தில் நம்பி னானோ என்னவோ?
மாலதி அவனுக்குத் தாயாகவே தெரிந்தாள். காதல்த்திருமணத்தில் பாசம் சொரியும் தம்பதிகள். இளம் வயதினரின் காதல் அநுபவத்தோடு, திருமணபந்தமும் இணையும் போது சொல்லவும் வேண்டுமா?
மனதுக்குப் பிடித்தவன் கிடைத்த
மகிழ்வு 966TTg, வாழ்க்கையின் பிரகாசமான செயற்பாடுகள் பிரதிப லித்தன.
சவுக்குக்காடு இன்று மிகவும் அழகாக இருப்பதாக அவனுக்குத் தெரி கிறது. பச்சை வெல்வெட் நிற சேலைக்கு மஞ்சள் பூக்களாய் தெறித் துக் கிடக்கும் அந்த அழகு கண்க ளுக்கு வியப்பாகத் தெரிகிறது.
மாலதியின் வீட்டின் கொல் லைப்புறத்தையும் முரளியின் திண்ணை அமைந்திருந்த முன்பக்கத்தையும் பிரித்து நிற்கின்ற சவுக்குக் காடு முன் பொருகாலத்தில் அவர்களின் காதல் சந்திப்புக்கள் நடைபெற்ற இடமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் இந்தக் காடு இத்தனை அழகானதாக அவனுக்குப் புலப்படவில்லை. 93ü பொழுது இந்தக்காடு புதுமணப்
பெப்ரவரி 2001

Page 17
பெண்ணாய் பச்சை நிறச் சரிகை கட்டி நிற்கிற மாதிரி இருக்கிறது.
இன்னமும் முரளி இருந்து விடுபடவில்லை. “என்னப்பா எழும்புங்கோவன் நேரம் ஏழுமனி குழந்தைப்பிள்ளையஸ் மாதிரி ...tb இந்தாங்கோ கோப்பி .இண்டைக்கு ரவுனுக்கு போறதை மறந்தாச்சா? ”
நடிப்பில்
தலையணையில் முகம் புதைத் துக்கிடந்த முரளி மனைவியின் கெஞ் சுதல் மொழிக்காகவே காத்திருந்தவன் போல கைகள் இரண்டையும் ஒரே வேகத்தில் திருப்பி அவளை அணைக்க கைகளை நீட்ட,
அவனையறியாமல் வந்த அந்த
வேகம் கோப்பிக் கிண்ணத்தில் தட்டுப்பட, மாலதியின் சேலை குளித் தது. இவள் பட்டென்று சிரிக்க தனது நோக்கம் நிறைவேறாமல் போன
ஆதங்கத்தில் அவன் வேகமாக எழுந்து கொள்ள,
சவுக்குக் காட்டுக்குள் சூரியன் எட்டிப்பார்த்து வெட்கப்பட்டுக் கொண் l-3-
மிக அவசரமாக எட்டுப் பக்கங்களுக்கு எழுதி முடித்த கடிதத்தினை மடித்து காற்சட்டைப் பையில் வைத்தவன் அதே வேகம்
மாறாமல் சைக்கிளில் ஏறி. மிதிக்கத் தொடங்குகின்றான் சமிந்த.
சைக்கிள் முன்னோக்கிய வேகத் தில் சென்று கொண்டிருந்தாலும் அவ
னது நினைவுகளும் வேகங்களும் பின்னோக்கி ஓடி பல மைல்களுக்கு அப்பால் அவனுக்கென்று வாழ்ந்து
கொண்டு தினமும் அவனுக்காக காத்தி ருக்கும் அவனது மனைவி சோமாவிடம் நிலைத்து நிற்கிறது. போன வாரம் அவளிடமிருந்து வந்த கடிதம் மூன்று நாட்கள் தாமதமாக கிடைத்த போது அவனுக்கேற்பட்ட அளவிடமுடியாத கோபம். அதை வெளிக்காட்டிக்கொள் ளாமல் ஆழ்ந்த பொறுமையோடு அதை தாயகம்
வாசித்து முடித்த போது வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தான் சுமிந்த,
நெஞ்சமெல்லாம் சோமாவின் நினைவுகளோடு முச்சந்தி வேலியோ ரம் பகல் முழுவதும் சாய்ந்து நிற்கின்ற சமிந்த சிலவேளைகளில் நீர் கசியும். விழிகளை தட்டிக் கொண்டதை எவரும் பார்த்திருந்தார்களோ என்னவோ?
வேலியோரம் அடிக்கடி வந்து போகிற ஒணான் கூட்டங்கள் அவனிடம் எதையும் விசாரித்துப் போகிற மாதிரி சிலவேளைகளில் இவனும் தலையாட்டி யிருக்கின்றான். மெளனமாக விலத்திச் செல்லும் மனிதரிடம் இவன் நடந்து கொள்ளுகிற கடுமை இவனுக்குள் உறங்கிக் கிடக்கும் இந்த வேத னையை உணரவிடாமல் செய்திருக் குமோ? என்று எவரும் சிந்தித்தி ருக்கலாம்.
கடுமையான மழைநீர் வாய்க் கால் வழி ஒரம் ஓடிச்சென்று இவன் கால்களைக் கடந்து போகும் போதெல் லாம் வேரூன்றிவிட்டி மரமாக இவன் நிற்பதைப் பார்த்து மண்ணில் விளைந்து நிற்கும் மரம் கூட வியந்தி ருக்கலாம்.
அவனது பிறந்தநாளை கோடு
காட்டி நிற்கும் சோமாவின் முத்து முத்தான கையெழுத்துக்களை தடவும் போது கைவிரல்கள் அவனையறியா மல் நடுங்கும்.
கூலி வேலை செய்யும் தாய் இவன் வளர்ந்து பெரியவனான போது, வறுமையை ஈடுகட்ட முடியாமல் தவித் தாள். இரண்டு தங்கைகளையும், தாயையும் காப்பாற்றக் கூடிய தொழில் தேடி அலைந்து திரிந்து தோற்றுப் போய், சோமாவைச் சந்தித்து அவளு டைய தயவில் கொஞ்சம் வறுமை திரவும், சோமாவின் தகப்பன் இறந்து போக, அவளைக் கைப்பிடித்து அந்தக் குடும்பத்தை காப்பாற்ற இவன் இராணுவத்தில் சேர்ந்து கொண்டான்.
மாதம் தோறும் பணத்தோடு சோமா
அனுப்புகின்ற &Arüu856Tü Urtu
பெப்ரவரி 2001

சாலை ஒன்றில் கல்விகற்பிப்பதாக
எழுதி யிருந்தாள்.
தங்கைக்கு மாப்பிளை பார்த்தி ருக்கிறார்கள். வருகிற வெசாக் பெளர் ணமிக்கென்றாலும் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனது நெஞ்சை நெருடுகின்றது.
அந்த ஆனந்தத்தில் சைக்கிள் மிதிக்கின்ற வேகம், அதிகரிக்க சிட் டாய்ப் பறந்து போகின்றான். இடையி டையே காற்சட்டைப் பையில் இருக்கும் கடிதத்தை தடவிப் பார்த்தவன் சோமாவின் நினைவில் இருந்து மீள முடியாமல் தவிக்க,
அவனுக்காக SJésults சூரியன் வெப்பத்தை அள்ளிக் கொண்டு எழுந்து நிற்கிறான்
கந்தசாமிக்கு இரண்டு நாட்க Tss நித்திரையில்லை தினமும் எலித்தொல்லையால் அவரது துாக்கம் தடைப்பட்டிருந்தது. ஊதித்தள்ளும் சுருட்டுப்புகையோடு வெளித்தினன்னை
யில் அமர்ந்திருந்தவருக்கு எலித்தொல் லையை தீர்ப்பதற்கான வழி பெரிய சிந்தனையாக இருந்தது.
வெளியே ஒரே இருள். முன் பெல்லாம் மாரி, கோடை என்றால் மிகவும் அழுத்தமாக சொல்லக் கூடிய விதத்தில் இயற்கை சீராக இருந்தது. இப்போது கார்த்திகையிலும் ஒரே வெயிலின் புழுக்கம்.
விதைத்துக் கிடந்த நெல் வயலுக்கு இறைப்பபுப் போதாமல் ஒரு பக்கத்தால் வயல்க்காணி கருகிக் கிடந்தது. இதைவிட எலித்தொல்லை வேறு.
போனதடவை சூடுமிதித்த நெல் மூட்டைகளை அரித்துக்கொண்டு இரவில் தங்களுடைய விருப்பத்திற்கு ஒடித்திரிகின்றன.
நடுச்சாமத்தில்- எழுந்து வெளிச் .
சம் பிடித்துபார்க்கும் போது, படுத்துக் தாயகம்
கிடக்கும் பேரன் திடுக்கிட்டு விழித்துக் கொள்வான் என்று கந்தசாமி எதுவுமே செய்வதில்லை,
எலித்தொல்லை விடிந்தால் போய் விடும் என்றில்லாமல் இப்போது பகலிலும் நுழைந்து அட்டகாசம் செய் கின்றன.
‘மூன்று பூனைகளும் காவல்
காப்பதாக இல்லாமல் எலிகளுக்குப் பயந்து கொள்வதாகப்படுகிறது.
கூட்டம் &n LLDfT as வந்து
தொல்லை கொடுக்கும் எலிகளை விட, பகலில் ஒன்றிரண்டு எலிகளாய் வந்து மூடிக்கிடக்கும் சாப்பாட்டுக்கு கெடுதல் பண்ணி அன்று முழுவதும் பட்டினி கிடக்கும் பயங்கரத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
“இந்த எலிக்கூட்டங்களுக்கு முடிவில்லையேயப்பா” என்று சலித்துக் கொள்ளும் மனைவிக்கு தினமும் உறுதியளித்திருக்கின்றார். ஆனால் எலியை முற்றாக ஒழிப்பதென்பது (Մ9լգաո5 ஒன்றாகவே அவருக்குப் ull-gil.
“ஏன் தாத்தா எலி பாவந் தானே அதுக்கும் பசிக்கு மெண்டா, கொஞ்ச நெல்லு குடுத்தா என்ன” கந்தசாமியின் பேரன் மிக அழகாக குறிப்பிடும் அந்த spidst 601 விருப்பம் அவருக்குப் புரிந்ததோ என்னவோ? எலி தொடர்பாக பேரனுக்கு நம்பிக்கையை ஏற்படுத் தவில்லை. 兹
சுருட்டுப்புகையூடாக வெளிப் பட்ட அவருடைய அமைதியான சிந்த னையின் வெற்றியாக எதையோ உறு
திப்படுத்திய அவரது முகம் பிரகா சமடைய, மகிழ்ச்சியுடன் நித்திரைக்கு போகின்றார்.
நாளைய இரவு எலித்தொல் OSU வெகுவாக குறைக்கும்
எலிப்பொறியை நாடுவதே சரியான வழி என்ற சிந்தனையில் உறங்கி விடுகிறார்.
பெப்ரவரி 2001

Page 18
0. റൂ
மாலதிக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. நாளை அவளுக்கு ஆசிரியர் தேர்வுக் கான பரீட்சை, இவளுக்கு இந்த வேலை கிடைத்தால் இப்போதிருக்கும் ஆசிரியத் தொழிலில் நிரந்தரம் கிடைத் துவிடும்.
முரளியின் துன்பத்தில் шгБі கேற்று வாழ்க்கைச்சுமையினை குறைத் துக்கொள்ள உதவுவதில் அப்படியொரு மகிழ்ச்சி.
"6T66OTUUIT வரேக்க ரதி குங்குமம் ஒரு பெட்டி வாங்கவேணும். நாளைக்கு பின்னேரம் நான் பஸ்சில வாறன். நீங்கள் கஸ்ரப்பட வேண்டாம்”.
சொல்லி முடித்தவள் முரளி யின் விழிகளில் தன் பார்வையை செலுத்த, எப்போதும் போல அவளது
வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பவனாகி அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண் டிருந்தான்.
“மாலதி கைச்செலவுக்கு இருக்கா”
கேட்டுக் கொண்டே அவனது கைப்பையைத்துளாவி தேவைப்பட்டதை வைத்துவிட்டு புறப்படத்தயாரானான்.
மாலதி யாழ்ப்பாணத்தில் பாட சாலையென்றில் படிப்பித்துக் கொண்டி ருந்தாள். முரளி சிறிய கடையொன் றைத் தொடர்ந்து நடாத்திக்கொண்டி ருந்தான்.
6T,
வடமராட்சியிலிருந்து வந்து போவது சிரமம் என்பதால் மாலதி துாரத்து உறவினர் வீட்டில் கிழமை நாட்களில் தங்கிவிட்டு விடுமுறையில் மட்டும் வீட்டுக்கு வருவது வழமை. இது முரளிக்கு சிரமமாக இருந்தாலும், சமாளித்துக் கொள்ளக் கூடியதாக
இருந்தது, மாலதி வழங்கிய உறுதி மொழிதான்.
இந்தப் பரீட்சையில் சித்திய டைந்துவிட்டால் பின்னர் சொந்த
ஊருக்கு மாற்றல் பெறுவது சுலபம்.
தாயகம்
பரீட்சை தொடர்பான நம்பிக்கைக்கும் மேலாக மாலதி தன்னைப் பிரிந்திருக் கப் பிரியப்படாதவள் என்பது அவ ணுக்கு மிகவும் தெரிந்த ஒன்று.
O
சோமாவின் நினைவுகள், முள் 6Tes அரித்துக் கொண்டிருக்கும் மேனியோடு, வேகமாக மிதிபடும் அவனது கால்களுக்குள் தேங்கிக் கிடக்கும் மழைப்பிசுபிசுப்புக் கலந்த காலணியை நன்றியுடன் பார்த்த விழிகள் அவனைப் போன்றவர் களுக்காக அமைந்திருந்த தபால் பெட்டியை நோக்கி விரைகின்றான். “மகே சமிந்”.... . என்று தொடங்கும் அந்த வரிகளுக் குள்ளே தன்னை 69(5 நொடிக்கு மறந்து கடிதத்தை முத்தமிட்டு பெட்டிக்குள் போடுகின்றான்.
பிரிந்திருக்கும் கணவன், மனைவியின் வேதைைன இத்தனை கடுமையானதா என்று இத்தகைய கடிதங்களை சுமந்து செல்லுகின்ற
பொதிகள் உணர்ந்திருப்பதால் தானோ என்னவோ பேசும் சக்தியல்ல பேசாமல் இருக்கின்றன.
சமிந்த 6ugp6o Duff 607 தன் முச்சந்தியைக் கடப்பதற்கு அதிக துாரமில்லாது விட்டாலும் சோமாவின் நினைவில் தேங்கிக்கிடந்த மனதுக்கு இதமளிக்க கசப்பான அந்த சிகரெட்
புகைக்காக தனது காற்சட்டைப் பை:ைத் துளாவியபடி அந்த நடுத் தெருவில் நிற்கின்றான். வழமைக்கு மாறாக அங்கே அவனைப்போல
கடமையில் இருந்த பலரும் நிதானம் தவறாமல் நின்ற நிலை அவனுக்குள் எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். மெதுவாக அவனது இதழோரம் தெறித்த இளநகை வறட்சி கலந்த வெறுப்பையோ விருப்பையோ ஏற்படுத் தியது என்பது புரிந்து கொள்ள முடியா திருந்தது.
0.
முரளி வேகமாக
தனது வாகனத்தை ஒட்டுகின்றான். பின்புறம்
பெப்ரவரி 2001

அமர்ந்திருக்கும் மனைவியின் கைகள் தோள்களில் பதிந்திருந்த தன்மையும் அவள் இடையிடையே சலங்கையாய் சிரித்ததும் அவனுள்ளே ஏற்படுத்திய இன்பமயமான உணர்வுகளை துாண்ட எதிர்த்திருப்பத்தில், சை மண்டபத்தை அடைந்து விடை பெற்றுக் கொண்டபோது வெகு நேர மாகியிருந்தது. கழுத்து வலித்ததையும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவன் எதிரில் சோத னைச்சாவடியைக் கண்டதும் சுயநினை வுக்கு வருகின்றான்.
வழமையை விட அதிக சோத னையிடலுக்காக காத்திருந்த சோத னைச் சாவடியைக் கடக்கும் போது அவனுக்குள் எழுந்து மறைந்த ஏதோ வித உணர்வு அவன் முகமாற்றங் களாய் பிரதிபலிக்க,
தமிழருக்கு மட்டுமே உரித்தான அந்த பயமாற்றத்தினை பிரதிபலிக்கும் அவனது முகம் அந்த நொடிப்பொழு தில் எதை நினைத்துக் கொண்டதோ தன்னைப்போன்ற மெல்லிய காதல் உணர்வுடன் கைப்பையை சோதனை செய்து கொண்டிருந்த சமிந்தவின் கண் களை நேரில் சந்தித்துக் கொண்டவன், அவனையும் மீறி இரக்கப்படும் மனிதா பிமானத்தை எண்ணி கணப்பொழுது அதிசயித்துப் போனான்.
ஆனால் அந்தக் கணத்தில் இரு வரும் அறியாத விதமாகமாறுதல் நிக ழும் என்பதனை எவருமே இந்த நேரத் தில் எதிர்பார்த்திருக்க வில்லை.
«oo
வயல் அறுவடையில் மிகுந்த களைப்போடு திரும்பிய கந்தசாமி வீட்டின் வாயிலை அண்மித்ததும்
மனைவியிடம் இருந்து வெளிக்கிளம்பிய துக்ககரமான ஒலியைக் கேட்டதும் மிகப்பயங்கரமான பீதி மனதை ஆட் கொள்ள விடு விடு என்று வாயிலை
அண்மிக்கிறார்.
மனைவியின் கூக்குரல் அவ ரைக் கண்டதும் மேலும் அதிகரிக்க
கண நேரத்திற்குள் ஆங்கு நடந்து விட்ட நிகழ்வுகளை ஊகித்துக் கொண்
தாயகம்
அவனுக்காக பரீட்
டவர், திக்பிரமை பிடித்தவராகி சிலை யாக நின்றுவிட்டார்.
எலிக்காக பொறியை தன் அளவுக்கு நிகழ்ந்த ணும் போது நெஞ்சு வெடித்துவிட்ட நிலை அவருக்கு. அவர் வைத்த நஞ்சுத் துண்டங்களைக் கொறித்த நான்கைந்து எலிகள் செத்துக் கிடந் தன. வழமையில் எலிகளைப் பற்றிய பாசம் கொண்ட தன் பேரன் அவை இறந்து போன ரகசியத்தை அறிய முயல்வான் என்று இவர் ஏன் எண்ணிப் பார்க்கவில்லை?
வைத்த நஞ்சுப் பேரன் ருசிக்கும் விதியை எண்
ஒலம் கலந்திருந்த அந்தவிட்டுப் படிகளில் காலுான்றி நின்றவர் வெப்பம் சொரியும் சூரிய வெளிச்சத்தையும் மீறி கண்கள் இருளடைந்ததை உணர்ந்து கொண்
மரண
டவர், தனக்கிருந்த முழுசக்தியையும் திரட்டி பெரிதாக வாய்விட்டு அழத் தொடங்கினார்.
Ο
•
சில நிமிடங்களுக்கு முன்னர் நிகழ்ந்திருந்த அசம்பாவிதத்தை நிரூ பிப்பதாக, வீதியின் பல இடங்களில் இரத்தக்கறைகள். மறிக்கப்பட்டிருந்த அத்தெருவின் திசையெங்கிலும் பீதி யால் வெளுத்த பல்வேறு முகங்க ளும் சுவர்களில் ஒட்டிக்கிடந்த கிழிஞ் சல்களை உற்றுநோக்கிக் கொண்டி ருந்தன.
பல்வேறு உயிர்களை LT6 கொண்ட அந்த முச்சந்தி மாத்திரம் தண்டிக்கப்படாத துணிவோடு கலங் காமல் நீண்டிருக்கிறது.
இருப்பிடங்களிலிருந்து எட்டிப் அச்சப்பட்ட - விழிகள். தங்க முகமூடிகளை அணிந்து அமைதியாக அடங்கிக
uTsitrašas ளுக்குள் கொண்டு கிடந்தன.
வெறித்த வானம் மட்டும் எதை
யோ நினைத்ததாக, இருண்ட மனத்
பெப்ரவரி 2001

Page 19
தோடு ஆங்காங்கே அலைக்கழிந்து கொண்டது.
மூன்று முக்கிய சந்திகளைப் பிணைத்து நிற்கும் அந்தச் சந்தி இரண்டு வாகனங்களுக்காக மட்டும் அடுத்த பல மணி நேரத்தில் திறந்து விடப்பட்டது.
வாகனங்கள் இரண்டிற்கும் இடை யில் இருந்த ஒற்றுமை, மனிதப் பிணங் களை அடக்கியிருந்த சவப்பெட்டிகளை சுமந்திருந்த தன்மைதான்.
பிணங்கள் இரண்டுக்கும் இடை யில் வித்தியாசங்கள் இருந்தாலும், அவற்றை தாங்கி நின்ற பிரேதப் பெட்டிகள் ஒற்றுமையை காட்டி நின்றன. இரு வாகனங்களும் ஒன்றை ஒன்று எதிரெதிராக சந்தித்துக் கொண்டு
செல்ல வேண்டிய பாதையில் பிரவேசித்தன. ஒன்று நேர்வீதியைத் தொட்டு பருத்தித்துறைக்கும், மற்றயது மேற்குப் பக்கமாக பிரிந்து பலாலி வீதிக்கும் பயணப்பட்டன.
இறுதிச்சந்திப்பில்அந்த மரணங் கள் எதை வெளிப்படுத்துவதற்கு
ஆசைப்பட்டுக் கொண்டனவோ, என்ப தனை புரிந்து கொள்ள இயலா விட்டாலும் இரு மரணங்களின் மனங் களிலும் தங்கள் உயிரை நேசிக்கும், வெவ்வேறு இனத்தின் பெண்மைகளின்
விதவை முகங்களை எண்ணிய வேதனை மண்டிக்கிடக்கும் பிரதிமை தோன்றியிருந்தது.
0.
மனச்செயல் (நினைப்பது
தருணங்களில், சமயங்களில்
சடமும் சிந்தனையும்
“மூளையில் நினைவுகள் திரண்டு சேர்வதற்கும், ஒருவகை தொடர்பு இருப்பது நிறுவப்பட்டுள்ளது.(C20 H280)
(Sustairpo6i,mind) உடலின் செயல் அது பெளதீகமான சடமான பூமியில் இருந்து 4 1\2 இலட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் உயிருள்ள இயற்கையில் தோன்றி வளர்ந்தது.”
கலையும் வாழ்வும்
“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நீாம் நம்பிக்கை இழந்திருக்கும்
நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும் போது, ஒரு திரைப்படம் நம் நினைவுக்கு வந்து நம் உள்மனதை
புரதம் உண்டாவதற்கும் மனிதனுடைய
அவனுடைய பெளதீகமான
எ. ஸ்பிரிக்கின்
சில
ஒளிர்விக்கும். ஒரு காட்சியோ ஒரு வசனமே போதும் நமக்கு தைரியம் அளிப்பதற்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படுத்துவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு.”
-Jean Collet
தாயகம் 34 பெப்ரவரி 2001

வாசகர் கடிதம்
*தாயகம்" தனது கருத்து நிலையில் உறுதியாக
சுதந்திரத்துக்கும் இடம் தருகிறது.
புதிய படைப்பாளிகளை
LuaDLÜLJarossassa ஊக்குவிப்பதற்கும்,
இருப்பதுடன்
வாய்ப்பாடுகளுக்குள் நாம் சுருங்கிப் போவதை தவிர்ப்பதற்கும் இது துணையாகும் என
-
கருதுகிறது. பற்றிய
படைப்புக்கள்
வாசகர்களின் விமர்சனங்களும்,
ஆரோக்கியமான இலக்கியச் சூழலை உருவாக்கும் என நம்புகிறது.
தாயகம்" புதிய வடிவத்தில் வருவது கண்டு மகிழ்ச்சி. தொடந்து வரவேண்டும்.
கவிதைகள் யாவும் நன்று. “கருக்க லைப்பு' குறிப்பிடத்தக்கது. ‘முடியும் முண்டாசும் கனவு கலைக்கப்படாமல் இருந்தால் ஒரு நல்ல சிறுகதை.
“பெண்’ சிறுகதை நன்றாக அமைந்
துள்ளது. கட்டுரைகளும் பயனுள்ளவை.
நேர்காணல்களும் இடம்பெற்றால் மேலும் சிறப்பாக அமையும்.
க. பரஞ்சோதி
கொழும்பு-11
தாயகம்” பார்த்தேன்,பயனுள்ள வெளி யீடு, நன்றி உறுத்தும் விடயம் தாட்சாய ணியின் “பெண்’சிறுகதை. தனக்கு அனு தாபம் காட்டிய ஒரு “பெண்சிப்பாயுக்காக’, நாயகி இரங்குவதே கரு. இக்கரு மூலம் எழுத்தாளர் வெளிப்படுத்த விளைந்தது எதனை?
மிக மோசமான அடக்குமுறைக்குளி ருக்கும் சமூகத்திற்கு அவர் வழங்கும் கருத்து என்ன? மனிதநேய அடிப் படையில் நாமெல்லோரும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இராணுவத்திலுள்ள தனி நபர்களின் "பாடுகளுக்காய் இரங்கித் தானிருப்போம். நாம் ”இன்றிருக்கும் நின்யிைல், ஒரு படைப்பாளியினால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயம் இதுதானா? எம் மக்கள் வீதிகளில் மிருகங்களாக நடத்தப்படுகின்ற, பெண்கள் வேண்டு மென்றே அதிக நேரம் தடுக்கப்பட்டு “இரசிக்கப்படுகின்ற பாலியல்ரீதியான சேஷ்டைகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற
தாயகம்
இந்த நாட்களில் எழுத்தாளர் இக் கருத்தை முதன்மைப்படுத்த வேண்டிய அவசியந்தானென்ன? இச்சிறுகதையினை தேர்ந்தெடுத்தமைக்கான நோக்கந்தான் புரியவில்லை.
செ. பிரணவநாதன்.
syGang.
இலத்திரனியல் ஊடகங்களின் ஆதிக்கம் பெருகிவரும் இன்றைய நிலையில் பண்பாட்டுச் சீரழிவு பற்றிய விழிப்புணர்வு மிக அவசியமானது. எழுத்துக்களால் மட்டும் இதனை ஏற்படுத்த முடியாது. இசை, நாட்டியம், நாடகம் போன்ற மக்களை எளிதிற் சென்றடையும் கலாசார நிகழ்வுக
ளுக்கூடாகவும் இதனை மேற்கொள்ள வேண்டும். மக்கள் இலக்கியம் பற்றிய
போராசிரியர் சிவசேகரம் அவர்களின் கட்டுரை படைப்பாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது.
லி. நகுலன்
மானிப்பாய்
பேராசிரியர் கைலாசபதி அவர்கள்
பற்றிய கவிஞர். முருகையன்.
அவர்களின் கவிதை 18வது ஆண்டு
நினைவாக என்று போடப்பட்டிருந்தால்
நன்றாக இருந்திருக்கும். “GuGossi'
சிறுகதை பற்றி நண்பர் ஒருவருடன் விவாதிக்க வேண்டி நேர்ந்தது.
மு.திருக்குமரன்,
சுளிபுரம
பெப்ரவரி 2001

Page 20
莺
தொ ன்மையான நடனங்கள் சமூக இயல்புகளோடு நேரடியாக
இணைந்திருந்தன. வாழ்க்கையின் பவங்களோடும், தொழிற்பாடுக 036mm(Sub நடனக்கல்வி துல்லியமாக தொட்ர்பு பட்டிருந்தது. வரன் முறையான நடனக் கல்வி என்ற அமைப்பும் ம்பத்திற் காணப்படவில்லை. நடனக்கல்வி என்பது பொதுவாக சடங்குகளோடும், மாயவித்தைகளோடும், கருவளப்பெ முக்க முயற்சிகளோடும், சமூகத்தில் நிகழ்ந்த தொடர்பாடல்களோடும் இணைந்திருந்தது. சடங்கு நிகழ்த்து பவரால் அறிவுக்கையளிப்பும் அனுபவக் கையளிப்பும் மேற்கொள்ளப்பட்டன.
5L6GTOpub விளையாட்டுக்களும் ஒன்றை ஒன்று வளம்படுத்தி வந்து ள்ளன. கிரேக்கர்களது நடனங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் நேரடியான தொடர்புகள் காணப்படுதலை ஆய்வா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்: -கிரேக்கர்க ளிடத்து தொன்மையான விளையாட் டுக்கள் நான்த காணப்பட்டன. அவை
Tss.
(1) ஒலிம்பிக் (OLYMPIC) (2) பைத்தியன் (PYTHIAN) (3) இஸ்தமின் (ISTHIMIN) (4) pussai (NEMEAN) மேற்குறித்த பொது விளையாட்டுக் களோடு இணைந்த நடனங்களும், பாடல்களும் இணைந்து Gusm前亭虏
upper. (LEWIS SPENCE, MYTH AND RITVAL IN DANCE, GAME AND RHYME, WATTs, LONDON, P.II)
STILLSb
36
Gg6Fretteotourra நடனக் கல்வியின் காணப்படுவது ஆடலுக்கும் லுக் குழுள்ள தொடர்பாகும். இயற்கையின்
*" இறைவன் ர்களை தல் முதலியவை ஆடல்களில் இல் பெற்றன. தொன்மங்களும் தேடலின் இன்னொரு வடிவங்களாக அமைந் தன.
ஆடலினால் விலங்குகளையும் பறவைகளையும் வசப்படுத்தலாம் என்றும் அவற்றின் இனப்பெருக்க வலுவை அதிகரிக்கலாம். என்றும்
நம்பினர். பகல் இரவு என்பவற்றின் சுழற்சி பருவ காலங்களின் சுழற்சி அசைவுகளும், நீர் காற்று முகில் ኔ அசைவுகளும் தொல்குடியினரது 為 னைகளில் ஆட்லுக்குரிய மீளவலியு றுத்தல்களைக் கொடுத்தன. இதன் தொடர்ச்சியாக ஆடலால் பயிர்வளப் பெருக்கு நிகழும்" என்ற நம்பிக்கை மேலோங்கியது.
தொல்குடிமக்களது கருவி இளுக்கும் ஆடல்க்ளுக்கும் நேரடி யான இணைப்புகள் காணப்படுகின்றன. கருவிகளைக்கையாளும் பொழுது மேற்கொண்ட அசைவுகள், கருவிகளைப் l: 660 செய்த பொழுது மேற்கொண்ட அசைவுகள் முதலியவை நடனங்களாக வளர்ச்சிபுற்றன.
தோற்றங்களோடு வாழ்க்கையோடு தொடர் luu, வே ளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றுள் பூர்விக அசைவுகள் (PRIMITIVE MOVEMENTS) typisai குறிப் பிடத்தக்கவை. உண்ணும் அசை ஆகள், நிர்அருந்தும் Tஅசைவுகள் அணைக்கும் அசைவுகள் துயிலும்
Gulagaan 2001
 

அசைவுகள் முதலியவை பூர்விக அசைவுகளுக்குச் சில எடுத்துக் காட்டுகளாகும். ,பூர்விக அசைவுகளின் செம்மைப்பட்டவடிவங்கள் பிற்காலத் 605uj வரன்முறைக்கல்விசார் 5Lனங்களில் பெரிதும் இடம்பெறலா யின. ஆனால் பெரும்பாலான கிரா
மிய நடனங்களில் பூர்விக அசை வுகள் பெரும்பாலும் நேரடியாகவே எடுத்தாளப்படுகின்றன.
தொன்மையான நடனக்கல் வியும் விளையாட்டுக்கல்வியும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் என்ற
ஐந்து பூதங்களின் இயல்புகளையும் வழிபாடுகளையும் தழுவியதாக அமைந் ததும் குறிப்பிடக் கூடியதாகும். (LADY A GOMME, TRADITIONAL GAMES,
11) நீர்வழிபாடு என்ற செயற்பாடு, ஆடலாக, பாடலாக, விளையாட்டாக மலர்ச்சி பெறுதலைப் பின்வரும்பாடல்
தெளிவு படுத்துகின்றது.
DRAW A PAIL OF WATER FOR A LADYS DAUGHTER HER FATHER" S A KING, HER MOTHER'S QUEEN, HER TWO LITTLE SISTERS ARE DRESSED IN GREEN
தமிழ் இலக்கியங்களிலே குறிப்பிடப்படும் நீராடலும், மண் பாவை புனைந்து வழிபடலும், நீர் வழிபாட் டோடும், நிலவழிபாட்டோடும் தொடர்பு 606. ፵ቃ ́, "முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடை யாள்
இட்டிடையின் மின்னில் பொலித்து எம்பிராட்டி திருவடிமேல் பொன் அம் ப்புருவம் எண்ணச் சிலை குலவி நம்தம்மை ஆள்உடையாள் தன்னில் பிரிவுஇலா எம்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்கரக்கும் இன் அருளே என்னப் பொழியாய் மழைஏல் ஓர் எம்பாவாய்."
தமிழர்களுடைய வரன் முறை யான நடனக்கல்வியில் ஐந்து பூதங்க
ளையும் உள்ளடக்கிய ஆடலாக சிவதாண்டவம் அமைந்தது. சிவதாண்ட வத்தின் பிரபஞ்ச உள்ளடக்கம்
தாயகம்
செல்வாக்குகளை
சமயக்
ஆடிய
கலாயோகி ஆனந்தகுமாரசாமியி னால் மேலைஉலகுக்கு விளக்கப் பட்டது.
சமூகத்தில் ஏற்பட்ட தொழிற் பிரிவுகளின் வளர்ச்சியும் ஆண் பெண் நடிபங்குகளின் வளர்ச்சியும் 5L60T ஆக்கங்களிலே செல்வாக்குச் செலு த்தின. தொழில்சார் நடிபங்குகளிலும் ஆண் பெண் நடிபங்குகளிலும் ஏற் ull glai 6iutub (EXCITEMENT)
D_smalsö 6öObüLtd (CURIOCITY) அவற்றுடன் தொடர்புடைய ஆடல் களை ஏற்படுத்தின.
சமூக அசைவியக்கம் சமூக இடைவினைகள், சமூக நம்பிக்கை கள், சமூக நிரற்கட்டுமானம் முதலி 606 நடனங்களில் நேரடியான ஏற்படுத்துதல் மானிடவியல் ஆய்வுக தெளிவாகக் &ITLIUGS
அறிகை ளிலே கின்றன.
நடனக் கல்விக்கும்
கல்விக்குமிடையே கிய உறவுகள் காணப்பட்டன. மனிதரைப் பீடித்த பயமுறுத்தும் தேவதைகளை விரட்டியடிக்க நடனம் கோலங்களை சைபீரியா, மாங்கோலியா முதலிய பிரதேசங் களின் பழங்குடி மக்களின் பண்
பூர்வீக நெருங்
i urgG36 8660TCuptqutb. (E. TYLOR, PRIMITIVE CuLTORE II PP 133,
420) தமிழ் மரபில் இவ்வகை நடனங்கள் “பேயோட்டிக் கூத்துக்கள்” எனப்பட்டடன. கடினமானதும் வேகமா
னதுமான விறல் அசைவுகளை (VIGOROUS MOVEMNTS) அவ்வகை நடனங்கள் கொண்டி ருக்கும்.
தீமைகளை இனங்காணுதல் விரட்டுதல், சாந்தியடைதல் என்ற முன்று தளங்களில் இவ்வகை நடனங்கள் இடம்பெறும். முகர்தல்
அசைவுகள், பார்த்தல் அசைவுகள், கேட்டல் அசைவுகள் முதலியவற் றால் தீமைகள் இனங்காணப்படும்.
தீமையை விரட்டல் மிகுந்த வீரியமான அசைவுகளைக் கொண்டிருக்கும். சாந்தி
பெப்ரவரி 2001

Page 21
யடைதல் என்பது மெதுவான மெல்ல சைவுகளைக் கொண்டு அமைக் கப்படும்.
நல்ல தேவதைகளுக்கு மகிழ் ச்சியூட்டும் நடனங்களும் தொல்குடி மக்களால் ஆடப் பெற்ற வலப்ப க்கமாகச் சுழன்றாடுதல் கை கோர்த்து ஆடுதல், நல்வரவு முத்திரைகள் முதலியவை இவ்வகை ஆடல்களிலே கூடுதலாகக் காணப்படும்.
தொல்குடியினரது க்கு நடனங்கள் (FERTILITY DANCES) epsip isfeurs glub பெற்றன. அவையாவன:
வளப்பெரு
பால் ஆடும் 96.Old விரைந்து
1. பட்டி பெருக வேண்டும், பெருக வேண்டும் என்று நடனங்கள், முதல்வகையாக கின்றன. மந்தைகள்
கருத்தரிக்க வேண்டும் UsT6)6.6Tub பெருக வேண்டும் என்று பட்டி அடைக்கும் இடத்துக்கு அண்மையில் நின்று பழங்குடியினர் நடனம் ஆடினர். திருமணமான ஆண்களும் பெண் களுமே இவ்வகையான நடனத்தில் பங்குபற்றுவதற்கு அருகதை உடை யோராயிருந்தனர். வரணி, கரவெட்டி முதலிய ஊர்களுக்கு நடுவில் உள்ள தில்லை அம்பலம் îloñ6bsmutñ கோவிலில் இவ்வகை நடனம் இடம் பெற்றதாக செவி வழிச் செய்தி உண்டு. (பேட்டி எஸ்.தினகரப்பிள்ளை ஆசிரியர்,
கரவெட்டி) 2. பயிர்வளம் பெருக வேண்டும். தானியம் பெருக வேண்டும் என்று
வயல்களின் நடுவே நின்று நடனம் ஆடுதல் - இரண்டாவது வகையாகும். பயிர் நடுவதற்கு முன் ஆடும் நடனம்,
பயிர் அறுவடையின் போது ஆடும் நடனம் என்ற இருவகை நடனங்கள் இப்பிரிவில் இடம் பெற்றன. Juli
நடுவதற்கு முந்திய நடனங்கள் தாழ் நடனங்களாகவும் (அரைமணடி, கால் மண்டி) அறுவடையின் போது ஆடும் நடனம் எழு நடனங்களாகவும் (பாய்ந் தும், குதித்தும்) பொதுவாக அமைந்தன. ஆபிரிக்காவின் அறுவடை நடனங்கள் மதுவுண்டு ஆடும் நடனங்களாகவும், திருமண நிச்சயிப்பு நடனங்களாகவும் அமைந்தன. (LEWIS தாயகம்
SPENCE, OPCIT, P. 114) glóþ uDg6ö குனிந்தாடும் கும்மி நடனம் விதைப்புக்கு முந்திய நடனமாகவும், சுளகு நடனம்
அறுவடையுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. உகண்டாவின் தொன்மையான அறுவடைநடனத்தில்
மழைத் தெய்வத்துக்கு நன்றி செலுத் g5|LD (1p6opg|D60)LDuy D &bsT609TLJULL-35). 6TLD5) மரபிலும் இதற்கு ஒப்புமை காணப்ப டுகின்றது. அறுவடை நடனங்களில் முத்துமாரி, கருமாரி, பூமாரி முதலாம் தெய்வங்களை வேண்டி ஆடும் மரபு &sTGRTUULg).
3. வளப்பெருக்க நடனங்களில் அல்லது வளமிய நடனங்களில் மூன்றாவது வகையாக இடம் பெறுவது குடும்பம் பல்கிப் பெருகிப் பெருங்குடியாய் வளர வேண்டும் என்று வேண்டி ஆடும் நடனமாகும். இவ்வகை நடனங்கள் வீட்டு முற்றங்களில் நிலாக் காலங் களில் ஆடப் பெற்றன. கசியா மலைகளின் (KHASSIA HILLS) வாழும் தொல்குடியினர் இவ்வகை நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது விதம் விதமான காப்புகள் அணிந்து ஆடுவதாக ஸ்பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் மரபுவழி நடனங் களிலும் இதற்கு ஒப்புமைகளைக் 35mGOOTOptgub. தமிழர் மரபிலுள்ள “வளை காப்பு” நடனங்களில் கருத்த ரித்த பெண்களுக்கு ஆடுவோர் காப்
பணிவித்து ஆடுதலாகக் காணப் பட்டது.
தொல்நடன கல்வியின் பிறி தொரு பரிமாண்ம் இறந்தோரின் ஆவிகளுக்கும் முதிர்ந்த மூத்தோ ருக்கும் கெளரவமளித்து ஆடும் நடனமாகும். ஜப்பானியப் штJub பரியத்தில் இவ்வகை நடனம் பொன் 9CBT gÓ (BON ODORI) 6T6IOTůUGSub. தமிழ் மரபில் இறந்தோரின் ஆவி களைக் கெளரவிக்கும் நடனங்களில் நடனம் ஆடிச்சென்று மரக்கிளைகளை முறித்தல் என்ற கட்டம்இடம் பெற்ற தாகக் குறிப்பிடப்படுகின்றது. மனித வாழ்வு ஒரு கட்டத்தில் முடிவடையும் Gutí (b6oi6ouD(DECAYING SGNIFI
பெப்ரவரி 2001

CANCE) இதனால் உணர்த்தப்படுவ தாக ஆய்வாளர் குறிப்பிடுவர். இந்தியா வின் சோற்றா நாகப்பூர் பகுதியில் உள்ள கொல்ஸ் (KOLS) toś86fia டத்துக் காணப்பட்ட இவ்வகை நடனம் “asgogibogipfruDIT” (KARATARAMA)66oTů படும்.
மனிதரின் வளர்ச்சிப்படி நிலைக ளைத் தழுவிய வகையில் தொன்மை யான நடனங்கள் வளர்ந்தன. முக்கி யமாக பூப்புச் சடங்குகளில் நிகழும் நடனம், திருமணச் சடங்கில் இடம் பெறும் நடனம் மனிதயாத்திரை
முடிவுறும் போது இடம்பெறும் நடனம்
என்ற வகையில் தொல்குடியினரது நடனங்கள் வளர்ச்சியுற்றிருந்தன. பூப்பு நடனங்களில் வளர்ந்தோர்ருக்குரிய ஆடை அணிகலன்கள் பூப்படைந்தவர் களுக்குக் கொடுக்கப்பட்டும். அவற்றை அணிந்து கொண்டு நடனமாடும் பொழுது அவர்கள் வளர்ந்தோராக அங்கீகரிக் கப்படுவர்.
தமிழ் மரபில் திருமண ச்சடங்கு நடனங்களில் ஊஞ்சல் வழிநடனங்கள் சிறப்புப் பெற்றிருந்தன. அதாவது மண மகனும் மணமகளும் ஊஞ்சலில் ஆட ஏனையோர் ஊஞ்ச லைச் சுற்றி வலம்வந்து ஆடுதல் திருமணச் சடங்கில் இடம்பெற்றது.
தொன்மையான நடனக் கல்வியின் வேறொரு “ பரிமாணமாக அமைவது விலங்குகள் பற்றிய அறிவை யும், நம்பிக்கைகளையும் நடனங்கள் வாயிலாக அறிவுறுத்துதலாகும். *ண்டுத்
துக்காட்டாக மண்டன் இந்தியர்கள் (MANDAN INDIANS) மத்தியில் வழங்கிவந்த எருமை நடனத்தைக் குறிப்பிடலாம். தம்மைப் பாதுகாக்கும்
ssia,6061T (PROT-ECTIVE SPIRITS) வசப்படுத்துவதற்கு அவர்கள் எருமை நடனம் ஆடினர். தமிழர்களுடைய பண்பாட்டில் பாம்பு நடனம் இவ் வகையில் ஒப்பிட்டுக் கூறத்தக்கது "நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே" என்ற தொடர் நன்மை செய்யும ஒரு காவல் பொருளாக தாயகம்
நாகத்தைக் குறிப்பிடுகின்றது. தமிழர் களது நடனங்களின் தொன்மையை அறிவதற்குப் பாம்பு நடனம் ஒரு சிறந்த எடுத்துக் assTLITs அமைகின்றது. எருது நடனம், குதிரை நடனம், மயில் நடனம் முதலியனவும் தமிழர்களது பாரம்பரியத்திலே காணப்படுகின்றன. இந்நடனங்கள் மேலும் மெருகு பெற்று பொய்க்கால் குதிரை நடனம், பொய்க் கால் நந்தி நடனம், தோகைமயில் நடனம் என வளரலாயிற்று.
கோபம், Uub, ஆத்திரம் முதலாம் பூர்விக உணர்வுகளை (PRIMITIVE FEEUNGD) GasTsits தலும் அவற்றுக்குப் பயிற்சிதந்து இசைவுமிக்க ஆளுமையை உருவாக்கு தலும் தொன்மையான நடனக்கல்வியில் இடம்பெற்றன. பேய் நடனம்,முகமூடி நடனம் முதலியவை இவ்வகைச் செயற் பாடுகளுக்கு உதாரணங்களாகக் கூற லாம். வேட்டையாடலுடன் பேய் நடனங் கள் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதைமானிடவியற் கண்ணோட்டத்தில் விளக்கமுடியும். பெரும்பாலான பழங் குடிமக்கள் பேய் நடனம் ஆடிய பின்னர் இறைச்சி பரிமாறிக் கொள்வதில் ஈடுப்டடனர் என்ற தகவலும் உண்டு. விலங்குகளை வீழ்த்துவதற்குரிய பலம் பேய் நடனத்தின் வாயிலாகத் திரட்டிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் தொல்குடியினரிடத்து நிலவிவந்தது. பயிர்ச். செய்கைப் பண்பாட்டில் பேய் நடனம் வேறொரு வடிவம் பெறலா யிற்று பயிர்பபாதுகாப்பு, பயிர் அழிவு செய்யும் விலங்குகளை விரட்டல், மனப்பாதுகாப்பு முதலியவற்றை ஈட்டுவதற்குப் பேய் நடனம் ஆடப் பட்டது. பேய் நடனத்தின் பிறிதொரு வளர்ச்சி மனிதவுடலில் எலும்புச் FL-565 (SKELETON) வரைந்து ஆடுதலாகும். அவுஸ்திரேலியாவின் பண்டைய நடனங்களில் எலும்புச்சட்டம் வரைந்து ஆடுதல் மூதாதையோரின் வணக்கத்தோடு இணைந்திருந்தது. (C.M.DEE DES, THELA BYKIN TH.,PP 24-5) asteypasib UGöı(ypassuorra5 வளர்ச்சியடைய சடங்குகளும் நடனங் களும் பன்முகமாக வளர்ச்சியடைந்தன.
பெப்ரவரி 2001

Page 22
சடங்குகளுக்காக நடனம், சடங்குகளில் நடனம் நடனத்துக்கான சடங்குகள் என்ற பன்முகப்பாடுகள் வளர்ச்சியடைந்தன. மனிதவளர்ச்சி யோடிணைந்த சடங்குகள் நடனங்கள், பருவகாலங்களோடு இணைந்த சடங்கு நடனங்கள், . வளப்பெருக்கத்தோடு இணைந்த சடங்கு நடனங்கள் என்ற வாறு பன்முகப்பாங்கு ஏற்பட்டன. ஒவ்வோர் இனக்குழுவினரும் தத்தமது குலக்குறிகளைச் சடங்கு நடனங்களிலே இணைத்து ஆடியமையும் பன்முகப் பாங்குகளை நடனங்களிலே ஏற்படுத் தின. தானியக்கதிர்களை, பொம்மை களை மரக்கிளைகளை, உழைப்புக் கருவிகளை ஏந்தி ஆடும் மரபும் சடங்கு நடனங்களிலே இடம் பெறலாயிற்று.
மந்தைமேய்ப்பு
நடனக்கம்பு, கொடிக்கம்பு முதலியவற்றை நாட்டி அதனைச் சுற்றி நடனமாடும் மரபும் வளரலாயிற்று ஆங்கில மரபில் அது மேபோல் (MAYPOLE) என அழைக்கப்பட்டது. (VILOT ALFORD, THE MAYPOLE, Journal of English Folk Dance And Song Society, NO 4, P. 146)
பூர்விக வேட்டுவாழ்க்கை, வாழ்க்கை நிலவழி ஆட்சிமுறைமை என்பவற்றோடு கலை களும், கலைக்கையளிப்பும் எவ்வாறு நிகழ்ந்து வந்துள்ளன என்பதை ம்கு நடனங்கள் பற்றிய ஆய்வு பயனுள்ளதாக அமைகின்றது.
ஒவ்வொரு தேசியப்பண்பாட்டிலும் முதலாளித்துவ மற்றும் சோலிசப் பண்புக்கூறுகள் உள்ளன. அவைகள் ஆரம்ப அடிப்படைக் கூறுகளின் வடிவிலேயே இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உழைக்கின்ற சுரண்டப்படுகின்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நிலமைகளில் ஜனநாயகம் மற்றும் சோசலிசம் பற்றிய கோட்பாடுகள் தவிர்க்க முடியாதபடி தோன்ற வழி பிறக் கின்றன. ஆனால் ஒவ்வொரு தேசிய இனமும் வடிவத்தில் முதலாளித்துவப் கொண்டுள்ளது. அநேக நாடுகள் சமயம் சார்ந்த பண்பாடு களையும் கொண்டுள்ளன. அவைகள் வெறும் பண்பாட்டுக் கூறுகள் அன்று அவை ஆதிக்க பண்பாடாகும்.
பசண்பாட்டையும்
-லெனின்
தாயகம்
40
பெப்ரவரி 2001

ஒர் ஆசியன் கிழக்காபிரிக்கன் ஆகிறான்
ஜக் ஜித் சிங் உகண்டாவில் பிறந்தவர். அவர் முன்னோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். உகண்டாவிலும் இந்தியாவிலும் கல்வி கற்றவர். விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகளில், மெல்ல மெல்ல இந்திய வெறுப்புணர்வு தலைதுாக்கியதும் கென்யா போன்ற இடங்களில் வன்முறை வெடித்ததும் வரலாறு. உகண்டா நாட்டுக் கறுப்பர்கள் ஆசியர்களை அழையா விருந்தாளி களாகக் கருதிப் புறக்கணிக்கும் அவலத்தைச் சொல்லும் ஜக் ஜித் சிங் இன் இக்கவிதை நெஞ்சைத் தொடுகிறது.
கடந்த காலம் பொங்கிச் சரிந்து விட்டது நாம்
பறக்க வேண்டிய நீராவி என் இனத்தின் தொன்மையான ஆவிகே உங்களை அழைக்கிறேன் மண்நிறமாய் பிறந்துள்ள என் குடியுரிமையை அமைச்சருக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
றெயில் பாதைகளை அமைக்கச் சிந்திய வியர்வை உலர்ந்துவிட்டது பசுமையாய்க்கிடந்த சதுப்புநிலம் இந்திய கடைத்தெருவாய் மலர்ந்ததை கறுப்புக் குருதி மறந்துவிட்டது மண்நிற யூதனை வணிகத்துறையில் உழலுமாறு சபித்துவிட்டு அவர்கள் பகைமையோடு முகஞ்சுளித்த போது
நாம்
சிரித்து மழுப்ப வேண்டியதாயிற்று.
சுதந்திரக் கறுப்புக் குருதி விரைவில் உன் குனிந்த நிழலை முறிக்கும் ஏனெனில்
நீங்கள் அவர்கள் பணத்தை உறிஞ்சிய வணிகக் குற்றவாளிகள்!
இப்பொழுது
கறுப்புநிற ‘சூட்’ அணிந்த, விஸ்கியில் நனைந்த குரலுடைய, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும், மெர்சிடிஸ் _ பென்ஸ் அரசியல்வாதிகள் கல்லாவுக்கு பின்னால் மண்ணிற, தாராளக் கோட்பாட்டாளர்களைத் தேடுகிறார்கள்.
தாயகம் 4. பெப்ரவரி 2001

Page 23
உறங்கிக் கிடந்த சதுப்பு நிலத்தை பச்சைக் காடாய் மாற்றிய உன் குருதி உலர்ந்து போனதால் அவர்கள் அர்ப்பணிப்புப் பற்றி உன்னை நச்சரிக்கிறார்கள்
குச்சொழுங்கைகளிலும் அரசாங்கப் பணிமனைகளிலும் பூதனும் குடிமகனே என்று பிரகடனம் செய்யும் நட்புறவை நாடும் ஆசியப் புன்னகைக்குப் பதில் பழைய பகைமை தொனிக்கும் பார்வை: குடிமகனா? ... இருக்கலாம், ஆனால் ஆசிய வம்சாவளி
இனத்தின் தொன்மையான ஆவிகளே உங்களை நான் சபிக்க வேண்டியுள்ளது தவறான வம்சாவளிக்காக
ii
ஆனால் அப்பனே என் கண்கள் மீண்டும் மண்ணிறப் பெருமையால் கனல்கின்றன ஆம், நீ விக்ரோறிய சிலுவையை பிரித்தானிய பேரரசின் குப்பைத் தொட்டியில் வீசுவதைக் காண்கிறேன்.
உன் மார்பில் மின்னும் இப் போலிக் கெளரவம் உன் வீரத்துக்கல்ல நேற்றைய வெள்ளையர் போர்களில் * சிந்திய குருதிக்காகவும் சிதைந்த உடல்களுக்காகவும் ! ஆயின், உன் வாரிசாகிய நான் வவுச்சர்கள் கோட்டாக்களோடு திருப்த்தியடைந்து வணங்கி வாழவேண்டுமா?
iii
என் கனவுகளே, விடை பெறுகிறேன் ஆபிக்காவின் கால்விரல்கள்தாம் கிருமித் தொற்றுக்குள்ளானதாக நம்ப விரும்பினேன்
ஆனால் நிறப்புற்று நோய்
தாயகம் 42 பெப்ரவரி 2001

பல புதியவர்களைப் பலியெடுத்துள்ளது.
கறுப்பு அறுவை வைத்தியர் புதிய மருந்துகளை பிரயோகிக்கிறார்கள் ‘கெட்ட கலங்களாகிய நாம் விரைவில் வலுவிழந்து விடுவோம்.
என் இனத்தின் தொன்மையான ஆவிகளே புளிப்பாய் மாறிய இனிமைக்காகப் புலம்பும் லாவினோ போல நீங்கள் அழுவது எனக்கு சம்மதமல்ல என் மண்ணிறத்தின் பாவங்களுக்கு என் மேலைத்தேய மனமே ஒரு சமாதானம் தேட வேண்டும்.
விரைவில்
பிணந்தின்னிக் கழுகுகளாகிய நாம் அழையா விருந்தாளிகளாக
உலகெங்கும் பறப்போம் t தரையிறங்கும் போதெல்லாம் கோபத்துக்காளோவோம்
கறுப்பு அமைதியிலும் வெள்ளை இனத்தின் பொய் இரக்கத்திலும் எங்கள் வேர்கள் தப்பியிருந்தாலும் நாம் முளைவிடக் கூடாத பச்சை இலைகள்! .
ஒருபாபமும் அறியாது கெட்டுப்போனவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் தேவையில்லை! பலிபீடத்திற்கு கடாவை இட்டுச் செல்லுங்கள் வரலாற்றின் பாவங்களைக் கழுவுங்கள்!
0
மூலம் : ஜக்ஜித் சிங்(உகண்டா)
தாயகம் 43 GAUsingeang 2001

Page 24
திரைப்பட விமர்சனம்
LITU27
தமிழ்த் திரைப்படங்களில் தலைப்பாவும், மீசையுமாக ஒரு உயிர்த்துடிப்புள்ள இலட்சியக் கவிஞனாகவே பாரதி காட்டப்பட்டுள்ளான். அவனது கவிதைகளில் வெளித்தெரியும் இலடசியக் கனவுகளுக்காக பழமையில் ஊறி இறுகிக் கிடந்த சமூகத்துடனும், அதன் அங்கமான குடும்பத்துடனும், அரச அதிகாரங்களுடனும், ஊடாடி, மல்லாடி, தோற்று, துயரப்பட்டு, மனமுடைந்து இறந்து போகும் சாதாரண மனிதனாக “பாரதி' படத்தில் அவன் காட்டப்படுகிறான்.
பாலர் பிரிவுக் குழந்தை முதல், பெரியவர்கள் வரை கண்டு வந்த பாரதியின் இலட்சிய உருவம் வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் கலைக்கப்படும்போது எழும் மனஅதிர்வுகளை பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும் காணமுடிகிறது. இந்தியாவை விட இலங்கையில் சமூகவிடுதலைத்தளத்தில் பாரதியை முன்னேடியாகக் கருதிவந்தவர்களிடமிருந்து திரைப்படம் தொகுக்கப்பட்டமுறைபற்றி சூடான விமர்சனங்கள் கூட வெளிவந்துள்ளன.
ஞான ராஜசேகரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் சயாஜி சின்ைடே பாரதியின் பாத்திரத்தையும், தேவயானி செல்லம்மாள் பாத்திரத்தையும் சிறப்பாக செய்துள்ளனர். பாடல்கள் திரைப்படத்திற்கு ஏற்றபடி அமைதியான மெட்டில் அமைந்துளளன.
சுடுகாட்டில் பதினான்குபேருடன் வந்துசேரும் மரண ஊர்வலத்துடன் ஆரம்பமாகும் இத்திரைப்படம் அதேசுடுகாட்டில் அவனது உடல் தியுடன் சங்கமமாவதுடன் முடிகிறது. ஆரம்பத்திலும் முடிவிலும் எடுத்துரைப்பாக முன்வைக்கப்படும் பாரதியை புறக்கணித்த சமூகத்துக்கு எதிரான குற்றச்சாட்டு இன்றைய பாரதிகளையாவது "அங்கீகரியுங்கள்’ என்ற வேண்டுகோளுடன் முடிவடைகிறது. .-י
பாரதியை புறக்கணித்தது அன்றைய சமூகம் மட்டுமல்ல. இன்றைய தமிழக இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவ, தலித்திய, கட்டவிழ்ப்பு விமர்சகர்களாலும் பாரதியின் உருவம் கிழிக்கப்பட்டிருக்கிறது. ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்ற பாரதி பார்ப்பானியத்தின் பிதாமகனாக காட்டப்பட்டிருக்கிறான். யேசுவையும் அல்லாவைம்பும் பாடி இருந்தாலும் இந்துத்துவத்தின் காவலனாக உருக்கொடுக்கப்பட்டிருக்கிறான்.
தாயகம் 44 பெப்ரவரி 2001
 

இத்தகைய விமர்சனங்கள் கூர்மையானவைதான், ஆனால் கடுங்கூர் முழு மொட்டை என்பது போல இயங்கியற் பார்வையின்றி, எல்லாவற்றையும் கட்டவிழ்த்து, பிரித்து, எல்லோரையும் எல்லா முனைகளில் நின்றும் தோலுரித்து பார்த்தால் எஞ்சுவது சூனியம்தான். பாரதி வேதாந்தத்தை தனது சிந்தனைத்தளமாகக் கொண்டவன். அவன் மாயா வாதத்திற்குள் மூழ்குவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இதனை விமர்சிக்கப் புறப்பட்டவர்களே முடிவில் மாயாவாதத்துக்கு துணையாகி விடுவதுதான் வியப்பு.
காசிக்கு சென்ற பாரதி அங்கு நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங் களையும் அவற்றில் உள்ள மூடத்தனங்களால் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களையும் கண்டு கொதிப்படைந்து பூனுாலை அறுத்து கங்கையில் வீசுவதும், பின்பு தனது மகளின் திருமணத்துக்காக மீண்டும் பூனுாலை அணிய வேண்டிய சமூக கலாசார அழுத்தம் அதிகாரம் அவன்மீது திணிக்கப்படும் போது பாரதி ஓவென்று வாய்விட்டு அலறி அழும் காட்சி நெஞ்சைத் தொடுகிறது.
காலம், இடம், சூழலில் வைத்துப்பார்க்கத் தவறும் போது, அரிஸ்டோட்டிலைவிட ஐந்தாம் ஆண்டு மாணவன் அறிஞன்தான். பாரதியின் பலவீனம் என்பது தனியே பாரதி என்ற தனிமனிதனின் பலவீனம் தானா? அவன் வாழ்ந்து மடிந்து ஒரு நூற்றாண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பாரதி எதிர்கொண்ட பிரபுத்துவ, சாதிய, கலாச்சார சிந்தனைகளிலிருந்து எவ்வளவுதுாரம் விடுபட்டுள்ளோம்.
இத்தகைய விமர்சனங்களுக்கு எதிராக பாரதியை துாக்கி நிறுத்துவது போல "அங்கீகரிப்பு ” கோரிக்கையுடன் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் வெகுஜன ஊடகத்துக்கூடாக மக்களின் மனங்களில் ஒரு முன்னோடியாக பதிந்துவிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொணரும் போது-மிகுந்த பொறுப்புடன் அவை மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆரம்பத்தில் கருவிலே திருவுடையோனாக ஒரு அவதார புருஷன் போல சற்று மிகைப்படுத்திக் காட்டப்படும் பாரதியை மரணத்தின்போது “காலனைக் காலால் உதைப்பதாக” வரும் காட்சி அவனது முழு ஆளுமையையுமே அவமதிப்பது போல அமைந்துவிடுகிறது.
“கடலினைத் தாவும் குரங்கும் - வெங்கனலிற் பிறந்ததோர் செவ்வி தழ்பெண்ணும். திறல் வீமனும் கற்பனைக் கதையென்று கண்டோம்” என்று புராண இதிகாசப் பாத்திரங்களையே கற்பனையாகப் பார்த்த பாரதி உள்ளுர நம்பியிருக்கக்கூடும் என்று வீம்புக்கு எவராவது வாதிட்டாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலம் குறிப்பாக ‘பாரதி மூலமே நாம் கொடுக்கும் செய்தி எது? நம்பிக்கை எது?
-கலையன்பன்
தாயகம் 45 பெப்ரவரி 2001

Page 25
issu &nd
பவித்திரன்
பல்லாயிரம்பல்லாயிரம் ஆண்டுச் சுமைகள் மனதில் அழுந்தி செய்நேர்த்தி முடக்கும் படியாய் ஆனதென்ன? யோ சற்றே பொறும் மெய்யாய் உமக்கென் வந்தனங்கள் ஐயமேன் காணும்?
தர்க்கிக்காதே
தரவுகள் கேட்காதே
என்றீர்
தர்க்கிப்போம்
தரவுகள் கேட்போம் கூர்த்த அறிவின் முனை திறந்து ஆய்வோம்
வையப் பரப்பை மனதால் தளாவி ஆயின் கிட்டாதோ பயன்? சிந்தைகள் ஏன் படைத்தோம்? செம்மறியாடுகள் போல்
பள்ளத்தள் வீழ்ந்து பதை பதைக்கவா? &யம் தெளிந்து அறிவோம். வையப் பரப்பை புதுக்கி ബ്ബഞptium, எய்தம் பயன் பகிர்வோம் அன்பு ஆளட்டும்
விசாலித்த சிந்தை புவியை அணைக்கட்டும். மண்ணின் தயர் களைந்து மனிதம் செழிக்கப்
பணி புரிவோம்.
கண்ணின் மணியென வையம் போற்ற கால் பதிப்போம்
ികഞ്ഞമേ இலக்கு எனினும் மூடம் களைந்து விரைவோம்.
பல்லாயிரம் சீ5ண்டு மூடச் சுமைகள் கல்லாய் இறுகட்டும்
உண்மைக்காய் கதவு திறக்க பொய்மை போய் ஒழியட்டும் போயே ஒழியட்டும்
அதுவே வேண்டும் விருப்பு.
46 பெப்ரவரி 200

சமூகவிஞ்ஞானப் படிப்பு வட்டம்
சார்வாகரும் மாக்சியரும் (உலகாயதம் பற்றிய ஒரு வரலாற்று நோக்கு)
கடந்த மாதம் (09.1.2001) பெளர்ணமி தினத்தன்று காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ‘சார்வாகரும் மாக்சியரும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. கவிஞர் இ. முருகையன் அவர்கள் விஞ்ஞானத்தின் ஆரம்பகால வடிவம் மெய்யியல்தான். மெய்யியல் என்பது எந்த ஒரு துறையினதும் ஆய்ந்து அறிந்து தெளிந்த முடிவே எனவும் மாக்சிய மெய்யியலுக்கு ஒப்ப, சார்வாகரின் மெய்யியல் வரன்முறை வெளிக்கொணரப்படவில்லை, என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் சோ. கிருஷ்ணராசா அவர்கள் சார்வாகரின் உலகாயதக் கொள்கைகள் வேதநூல்களில் மூடிமறைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. உலகாயதத்திற்கேயுரிய மூலங்கள் அழிக்கப்பட்ட நிலையில், வேதநூல்களின் எதிர்விமர்சன கருத்துக்களில் இருந்தும், மேற்கோள்களிலிருந்தும் உய்த்தறிய வேண்டிய நிலையிலேயே இந்தியத் தத்துவ மரபில் உலகாயதம் காணப்படுகிறது.
மாக்சியத்தை பொறுத்தவரை மாக்ஸ், லெனின், மாவோ என காலத்துக்குக் காலம் இடத்துக்கிடம் மீள்வரையறை செய்யப்பட்டு வந்த இயங்கியல் பொருள்முதல் வாதம் எண்பதுகளின் இறுதியில் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியுடன் தோல்வி கண்டு விட்டதாகக் கூறுவது அபத்தமானது. முன்பு தொழிலாளர் பிரிவினர் மீது மட்டும் ஏற்பட்டிருந்த பொருளாதார அழுத்தங்கள் இன்று உலகமயமாக்கலின் கீழ் ஏனைய பிரிவினரையும், ஏன் நாடுகளை நோக்கியும் நகர்த்தப்பட்டுள்ளது.
உலக மக்கள் அனைவரையும், தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப சுரண்டிக் கொள்ளவும், அதன் தாக்கத்தை உணராதவண்ணம் தட்டிக் கொடுக்க உலகளாவிய ரீதியில் தன்னார்வக் குழுக்கள் போன்ற அமைப்புக்களை உருவாக்கி நன்கொடைகள், வறுமை தணிப்புத் திட்டம் (வறுமை ஒழிப்பு அல்ல) பயனாளிகள், பங்களிப்பு, மதிப்பீட்டுத் திட்டம் எனபவற்றை மேற்கொள்கிறது. மூன்றாம் மண்டல நாடுகள் பல்தேசிய கம்பனிகளின் உற்பத்திகளை வாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை மட்டும் பேணிக் கொள்ளவே உலகமயமாக்கல் முறை இடந்தருகிறது. இந்நிலையில் மாக்சிய. உலகாயதப் பார்வையின் அவசியம் மீண்டும் உணரப்படுகிறது என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் உலகாயதர்களின் தொடர்ச்சியாக சித்தர்களை காணமுடியாதா? என்றும் இதுபற்றிய வரன்முறையான ஆய்வுகள் அவசியம் எனவும் கூறப்பட்டது. இறுதியாக தென்னாலிராமன் இறந்துபோன தனது தாயாருக்கு தானம் கொடுத்த கதையை கவிஞர் முருகையன் அவர்கள் கூறி கலந்துரையாடலை முடித்து வைத்தார்.
also
0x0
g5sful labb 47 பெப்ரவரி 2001

Page 26
- எனது சாம்பலின்துே உனது மதில்களை கட்டுவதன் அர்த்தமின்மையை
உனது ưTửa 9485 giga
அடையாளம் தேடி அலைகிறாய்
என்னிடம் எதுவுமில்லை
உன்னை நிரூபிப்பதற்கு!
எனக்கு ஸ்ப்போதிநான்தின்
உனது ஊர்வலத்தை நிறுத்திவிடு
கோகுலராகன்
48 பெப்ரவரி 2001
உப்புத்திற்றும்
 

மாணவ மாணவிகளே!
லாலா சோப், சன்சயின் சோப் 10,10 ஆக சோப்பின் எவ்வளவு மேல் உறைகளையும் அனுப்பலாம். உங்கள் பெயர், பாடசாலை விலாசம் ஆகியவற்றை எழுதி உங்கள் கடைகளில் அல்லது எமது காரியாலயத்துக்கு அல்லது எமது வியாபார வாகனத்தில் அனுப்பி வையுங்கள்.
அதிஸ்டத்தில் வெல்பவர்களுக்கு
ஒருவருக்கு 1000 ரூபா வீதம் ஐந்து பேருக்கு வழங்கப்படும்.
இன்று தொடக்கம் ஆரம்பியுங்கள்
DTSDI GöTŮ 65rý5T6)60
அச்சுவேலி.

Page 27
செய்திப்பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்ட Registered as a Me Ws Paperim Sri Larka.
சே தரமான போட்டோ
- -916OLLITGT
சிே 60 வருட றைக்க
இம்மூன்றும் இனை ஒரே இடத்தில் ெ நாடு
சண்சிைந் நை
பளல்நிலையம்,
célbLIETTéHEITT:
ÉFELiTELIEufij LDEüI சன்லைற் தொலை
கச்சேரியடி,
T. P.
இச்சஞ்சிகை தேசிய கலை இலக்கிய எப்ரான்லி விதி, வசந்தத்திலுள்ள க.தன் 407, ஸ்ரான்லி வீதியிலுள்ள யாழ்ப்பான
 

ஸ்ரற் பிரதிகள்
அட்டை கவரிடுதல்
கிளினர்ஸ்
னந்த சேவைகளை பெற்றுக்கொள்ள ங்கள்
க்கிலீனர்ஸ்
யாழ்ப்பாணம்.
f BF6ി த் தொடர்பு சேவை
யாழ்ப்பாணம்.
274.1
பேரவைக்காக யாழ்ப்பாணம் 405, விகாசலம் அவர்களால் யாழ்ப்பாணம் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.